சிவ தீக்ஷை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
- ஓர் பின்னணி
நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும், ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாமல் விட்டாலும், புரிந்துகொண்டாலும், புரிந்துகொள்ளாமல் விட்டாலும் இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி என்று ஒன்று உள்ளது.
அந்தப் பிரபஞ்ச சக்தி உருவம், அருவம் இரண்டையும் கடந்தது. பக்தர்களின் பிரார்த்தனைக்கு இறங்கி, திருவுருவமும் தாங்குகிறது. சிவபெருமான் இந்தப் பிரபஞ்சத்தின் மூலப்பொருளாக பிரபஞ்ச சக்தியின் ஸ்வரூபமாக விளங்குகிறார்.
ஆகமம்
‘சீவோஹம்’ என்னும் ஜீவன் முக்த நிலையை அடைவதற்காக வாழ்க்கை முறைகளையும், தீக்ஷை முறைகளையும் சிவபெருமான் உமாதேவியினுடைய வேண்டுகோளுக்கிணங்கி திருவாய் மலர்ந்தருளிய சாஸ்திரங்கள் தான் ஆகமங்கள். சிவபெருமானுடைய திருவாயிலிருந்து வெளிப்பட்டதாலும், தேவியினுடைய திருவாய் வழி நமக்கு கிட்டியதாலும் சிவபக்தர்களுக்கு இது வாழ்க்கை முறை என்பதாலும் இதற்கு ‘ஆகமம்’ என்று பெயர்.
இந்த மூன்றாம் கண் - ஒரு உள் உறுப்பு. நம் புருவத்தின் மத்தியில் அமைந்து, மிக உயர்ந்த அலைவரிசை வெளிப்படுத்துகின்றது.
சதாசிவனின் சக்திகளை அனுபவமாக உணர்வதற்கான முதல்படி மூன்றாம் கண் விழிப்படைவு. இது பிரபஞ்ச சக்தியை உள்வாங்குவதற்கான நுழைவாயில். மூன்றாவது கண் வழியாக அனைத்து சக்திகளையும் உள்வாங்க இயலும். அதேபோல, மூன்றாவது கண் வழியாக எந்தவிதமான ஆணையும் பிரபஞ்சத்திற்கு அளிக்க முடியும். மூன்றாவது கண் மூலமாக பிரபஞ்சத்திற்கு செலுத்தப்படும் எந்த ஆணையுமே, உடனடியாக அனுபவமாக மாறும்!.
அதனால்தான் இந்து மதத்தின் எல்லா தெய்வங்களுமே மூன்றாவது கண்ணுடன் சித்தரிக்கப்படுகின்றார்கள். மூன்றாவது கண் விழிப்படைந்த ஒவ்வொருவரும் “கடவுள்“ என்று பொருள். அதனால் இந்த சிவதீட்சையே உங்களின் மூன்றாம் கண்ணை விழிப்படையச் செய்து உங்களால் சக்திகளை வெளிப்படுத்த முடியும் என்ற சாத்தியக்கூறை உங்களுக்குள் அனுபவமாக மாற்றாகாகவே!
வேத பாரம்பரியத்தின் இந்த தீட்சைகள் அனைத்தும் நமக்குள் புதைந்திருக்கும் அளப்பரிய ஆன்மிக சக்திகளை வெளிக்கொணரச் செய்து.. ‘சிவோஹம்’ எனும் நிலையை அனுபவமாக்குவதற்காகவே!.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.. இந்த அசாதாரண சக்திகளை வெளிப்படுத்தி வாழும்பொழுது உங்களின் உணர்வு நிலை மிகவும் உயர்ந்து.. வாழ்வில் நீங்கள் சந்திக்கும் துக்கங்கள்.. வேதனைகளின் தாக்கம் குறைந்து உங்களின் உண்மை நிலையான நித்யானந்த நிலையில் உயரத்துவங்குவீர்கள்.


ஆன்மீக வாழ்க்கையின் முதல் படி
தென்னாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான சிவாலயங்கள் உத்தர காமிக் ஆகமத்தின் விதிப்படி பூஜைகளையும், ஹோமங்களையும், திருவிழாக்களையும் நடத்தி வருகின்றன. உத்தர காமிக் ஆகமம் என்பது நேரடியாக சிவபெருமானே திருவாய் மலர்ந்தருளியது ஆகும். இதில் பெருமான் சதாசிவன், ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர்களுக்கென்று ஒரு சில தீக்ஷை முறைகளை விளக்குகிறார்.
சிவ தீக்ஷை, விசேஷ தீக்ஷை, நிர்வாண தீக்ஷை, ஆச்சார்ய அபிஷேகம் போன்ற மிக சக்தி வாய்ந்த தீக்ஷைகளையும், தீக்ஷை முறைகளையும் அருளியிருக்கிறார்.
இதில் சமய தீக்ஷை என்னும் இந்த சிவ தீக்ஷையைப் பற்றி உரைக்கும்பொழுது ஆன்மீக வாழ்க்கையின் முதல் படியாக உரைக்கிறார்.
இது சிவனடியார்கள், சிவபக்தர்கள், இந்து மதத்தை, ஆன்மீக வாழ்க்கையை, ஏற்று வாழ்பவர்களுக்கான, ஆன்மீக வாழ்க்கையை துவங்குவதற்கான முதற்படியாகும்.
இந்த சிவ தீக்ஷையை எல்லா மதத்தவரும், எல்லா ஜாதியினரும், ஆண்கள் மற்றும் பெண்கள் மேலும் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவாக உரைக்கிறார்.
இந்த தீக்ஷை பெற்றுக்கொள்ளும் எல்லோருக்கும் ருத்ராக்ஷமும், திருநீற்றுப்பையும் இலவசமாக அளிக்கப்படும். இந்த ருத்ராக்ஷத்தை தொண்டைகுழியில் படும்படி கட்டி மந்திர தீக்ஷை வாங்கும்பொழுது, இந்த ருத்ராக்ஷம் தொடர்ந்து இந்த மந்திரத்தை இயக்கும். மந்திரம் இந்த ருத்ராக்ஷத்தை அதிர வைக்கும்.
இந்தச் சுற்று தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும். இது சீவோஹம் என்ற அனுபூதி நிலையையும், ஜீவன் முக்த நிலையையும் நாம் அடைவதற்குத் துணை செய்யும்.

மாற்ற முடியாத உண்மை
சிவபெருமான் ஆகமத்தை, வாழ்வதற்கான வழியைச் சொல்லத் துவங்கிய உடனேயே, அவர் முதன் முதலாகச் சொல்லுகின்ற சத்தியம்... 'உங்கள் எல்லோருக்குள்ளும் நானே வெளிப்பட்டு, என் மயமாகவே நீங்கள் எல்லோரும் இருக்கின்றீர்கள்.'
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் எல்லோருக்குள்ளும் சிவோஹம் என்கிற அனுபூதியாக சிவபெருமான் இருக்கிறார். சிவோஹம் என்றால் 'சிவ அஹம்'- நான் என்று நீங்கள் எதை நினைக்கின்றீர்களோ, அது 'சிவம்'. 'இந்த அனுபூதியாக உங்கள் எல்லோருக்குள்ளும் இருக்கின்றேன்' என்று சிவபெருமான் சொல்கிறார். சிவோஹத்தை தியானத்தில், சமாதி நிலையில் உணர்ந்தவர்கள் அந்தச் சக்தியை வெளிப்படுத்துகிறார்கள். உணராதவர்கள் அதை வெளிப்படுத்தாமலேயே இறந்து போகிறார்கள். ஆனால் அவருள்ளே சிவோஹம் இருப்பது உண்மை. 'சிவோஹம்' எனும் அனுபூதியை வாழும்பொழுதே நீங்கள் அனுபவித்து வாழலாம். அனுபவிக்காமல் விட்டாலும் விடலாம், ஆனால் 'சிவோஹம்' உங்களுக்குள் இருப்பது உண்மை. இது மாற்ற முடியாத உண்மை.

சிவோஹ அனுபவம் அனுபூதியாகும்
இப்போது பிரச்சனை என்னவென்றால், சிலருக்கு இந்த அளவிற்குப் புரிந்து விடும். ‘ஆமாம் சாமீ. உண்மையில் பார்த்தீர்களென்றால் எனக்குள் இருக்கின்ற ஆத்மா, சிவம் வடிவானது. அது, எல்லா சக்தியும், எல்லா ஞானமும், எல்லா அறிவும், எல்லா ஆற்றலும் உடையது. அது எனக்கு தெரிகிறது. ஆனால் அந்த அனுபூதியை அடைந்தால்தானே, அனுபவத்தை அடைந்தால்தானே சக்தியெல்லாம் வெளிப்படும். அதை அடையும்வரை நான் சாதாரண மனிதன், சவம் தானே. அதை அடைந்தால்தானே சிவம்?’
நீங்கள் என்ன சொல்கின்றீர்கள், ‘எனக்கு அந்த அனுபூதி வரட்டும், அதன் பிறகு சிவன் மாதிரி அந்த சக்திகளை வெளிப்படுத்தி உயர்ந்த வாழ்க்கையை வாழ்கிறேன்.’ அந்த அனுபூதி என்ன சொல்கிறது என்றால்... ‘நீ சிவன்போன்று உயர்ந்த வாழ்க்கையை வாழ ஆரம்பி, அதன்பிறகு நானே உனக்குள்ளிருந்து வெளிப்பட்டு, சக்திகளை எல்லாம் பொங்கிப்பெருக வைக்கிறேன்.
இது எவ்வாறு இருக்கிறதென்றால், மாமியாரும் மருமகளும் சண்டைபோட்டு முடித்த பிறகு, அம்மா மகனிடம் என்ன சொல்கிறார், “ஆமாம், சண்டைபோட்டோம்தான். என்னவாக இருந்தாலும் நான் வயதில் பெரியவள் தானே. உன் மனைவியை வந்து பேசச் சொல்...” என்று.
