KAILASA Library/பூங்௯்௪சிட் ங௯்௪சிடபூத/முன்னுரைSign in
பூங்௯்௪சிட் ங௯்௪சிடபூத

முன்னுரை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

"ஊனுடலில் கண்ணால் பார்க்க சாத்தியமான தோல், தசை, எலும்பு, திசுக்களை, கட்டுப்படுத்துவது இரத்தமும் நரம்பும்!" - இது பல ஆண்டுகளுக்கு முன்பு வரை அறியப்படாத உண்மை.

"இரத்தத்தையும், நரம்பையும் கட்டுப்படுத்துவது ஹார்மோன்கள்" - இது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அறியப்படாத உண்மை.

"அந்த ஹார்மோன்களையே கட்டுப்படுத்துகிறது மனம் (ஙஐசஈ)" என்று அறிவியல் ஆராய்ச்சி புதிதாகக் கண்டுபிடித்துள்ளது.

எனவே, "மனம்தான் உடலையே கட்டுப்படுத்துகின்றது" என்று இன்று அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது என்றோ சொல்லப்பட்ட நம் நாட்டு மெய்ஞான உண்மை!

நவீன மனோ-குண விஞ்ஞானத்திற்கு புதிதாக ஓர் சந்தேகம்!

இந்த மனதைக் கட்டுப்படுத்துவது எது?

ஒரு வேளை அது அகங்காரமாக (உஎஞ) இருக்குமோ?

மனோ-குண விஞ்ஞானத்திற்கு மீண்டும் ஓர் சந்தேகம்!

மனத்திற்கும் உடலுக்கும் (ஹார்மோன்கள்) இடைப்பட்டது எது?

ஒருவேளை அது சக்தியாக (உசஉதஎவ) இருக்குமோ?

-இன்னும் இதற்காக பதில் அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. காரணம், ஆதாரங்களை ஆர்வத்தோடு தேடிக் கொண்டிருக்கிறது அறிவியல் ஆராய்ச்சிகள்.

மனம் என்னும் வெண்பஞ்சில், அகங்காரம் என்னும் நஞ்சேறியதால் குணம் மாறிப்போன மனம், இனம் புரியாமல் தரம் கெட்டுத் தட்டுத் தடுமாறுகிறது. அதன் விளைவே மனத் தடுமாற்றம். தடுமாறும் வாழ்க்கை.

தடுமாற்றத்திற்கு திடீர் மாற்றம் ஒன்றே தீர்வு.

"உடல்(ஆஞஈவ), மனம்(ஙஐசஈ), சக்தி(உசஉதஎவ), மூன்றும் ஒன்றாக ஒருடலில் ஏழிடங்களில் சந்தித்து க்கொள்கின்றன. இவைதான் சக்தி மையங்கள்(இஏஅஒதஅந) அல்லது சக்கரங்கள் என்றழைக்கப்படுகின்றன".

5000 வருடங்களுக்கு முன் ஸ்ருதிகள் எழுந்த காலத்திலேயே ரிஷிகள் தனக்குள் உணர்ந்து கூறிய இந்த சத்யத்தை இப்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட உண்மையாக அறிவியல் உலகம் அறிவிக்கப் போகும் காலம் கனிந்துவிட்டது.

உடல், மனம், சக்தி ஆகிய மூன்றும் சக்கரங்களில் பின்னிப் பிணைந்திருக்கின்றன.

ஆராய்ச்சிப் பொறிகளின் கண்டுகொள்ளும் திறனுக்கு அப்பாற்பட்டிருக்கும் சக்கரங்களை அகங்காரம் மறைத்து அதன் செயல்களை பாதித்ததுதான் பாதகத்தின் துவக்கம். உடல்-மன உளநோய்களின் ஆரம்பம்.

பாதகம் அடி வரை பரவிக்கிடப்பதால் அதன் துவக்கப் புள்ளி வரை சென்று, அகங்காரத்தைச் சுட்டெரிக்க, சூட்சுமம் தாண்டிய சூட்சுமத்தைப் பயன்படுத்த வேண்டும்.

கண்ணை மூடி, உள்ளே பார்த்தால் கடும் இருள் அல்லது கண்டபடி ஓடும் மனத்திரைப்படம் ஆகியவற்றை தவிர வேறு ஏதாவது தெரிந்து விடுகிறதா என்ன?

ஏதும் தெரியாவிட்டாலும், ஏகப்பட்ட சூட்சுமங்கள் உள்ளே கொட்டிக் கிடக்கின்றது என்பதை ஒருமுறை கண்மூடி உள்ளே கவனித்திருந்தாலே தெரிந்திருக்கும்.

யுதரியாத சூட்சும சக்கரங்களில் புரியாத அகங்காரத்தின் வேர்களை, வேர் நுனி வரை சென்று அறுத்தெரிய உதவும் அதிசூட்சுமமான முறைகள்தான் சக்கரா தியானங்கள்.

உடலுக்குள் ஏழிடங்களில் இருக்கும் ஏழு சக்கரங்களுக்கும் வெவ்வேறு மதங்களிலிருந்து தேடிக் கண்டெடுக்கப்பட்ட ஏழு வகை தியானங்களைத்தான் ஆனந்த ஸ்பூரணா தியான ( அநட) முகாமில் கற்றுத் தரப்படுகின்றன.

தியானத்தோடு ஞானத்தையும் குழைத்து, விஞ்ஞானம் என்னும் வாசனைத திரவியம் கலந்து, இனிதே எந்தவொரு மனிதனும் கிரகிக்கும் வகையில் ஞானசொற்பொழிவுகளை உலகம் முழுவதும் நிகழ்த்தி வருகிறார் நம் பரமஹம்ஸ ஸ்ரீ நித்யானந்தர்.

பரமஹம்ஸ ஸ்ரீ நித்யானந்தர் முதன் முதலாக நடத்திய இரண்டு நாள் தமிழ் - ஆனந்த ஸ்பூரணா தியான முகாம் வகுப்பிலிருந்து ஏழு சக்கரங்களுக்கும் ஏழு கட்டுரைகள் என தொகுப்பு இப்புத்தகத்தில் அடங்கி உள்ளது.

தன்னுடைய முதல் தியான வகுப்பில்,
விஞ்ஞானத்தின் துணைநாடாமல்,
மெய்ஞானத்தின் தனித்துவத்தை,

எளிய தமிழில் விஞ்ஞானத்தை விளக்குவது போலவே அருமையான விளக்கியிருக்கிறார் நம் பரமஹம்ஸர்.

தியான முகாமில் அவர் மிக எளிதாகக் கற்றுக் கொடுத்த ஏழு தியான முறைகளை பற்றிய முக்கிய விவரங்களை இப்புத்தகத்தில் சுருங்கத் தொகுத்து அளித்திருக்கிறோம். அதனுடன் அந்தந்த தியானத்தை பற்றி பக்தர்கள் பகிர்ந்து கொண்ட தியான அனுபவங்களையும் தொகுத்து அளித்திருக்கிறோம்.

உலகின் வெவ்வேறு பகுதிகளில் ஆனந்த ஸ்பூரண(அநட) தியான முகாம்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றிலிருந்து எல்லோருக்கும் பயன்தரும் சில தியான அனுபவங்களையும் பரமஹம்ஸரின் விளக்கங்களையும் தேர்தெடுத்து இப்புத்தக்கத்தில் தொகுத்திருக்கிறோம்.

தியானத்தில் நாட்டமுடைய ஆன்மீக சாதகர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு கையடக்கப் பரிசுப் பெட்டகம். பரமஹம்ஸரின் வெவ்வேறு சொற்பொழிவுகளிலிருந்து எடுக்கப்பட்ட தியானம் பற்றிய பயனுள்ள துணுக்குகள் நிறைய இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன.

தியானம் ஞானத்தின் திறவுகோல் என்ற பரமஹம்ஸரின் ஒரு வரி ஞானமொழியே இப்புத்தகத்தின் தலைப்பாகியிருக்கிறது.

உடல், மனம், சக்தி சங்கமிக்கும் சக்தி களத்தில் (சக்கரங்களில்) அறுவை சிகிச்சை நிகழ்த்தப்பட்டாக வேண்டிய கட்டாயம் இன்று உருவாகியிருக்கிறது. உங்கள் பங்குக்கு மனதை திறந்து வையுங்கள் அதுவே போதுமானது.

முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும்.

கருத்துக்களால் கறுத்துப் போன அகங்காரத்தை கருத்துக்களாலேயே தோண்டி வெளியே எறிந்துவிடலாம்.

ஞானகுருவின் ஞானக்கருத்துக்களை அப்படியே உள்வாங்கிக் கொள்ளுங்கள்.

அடுத்து நிகழ வேண்டியதை தியான சக்தியும் ஞானக்கருத்துக்களும் பார்த்துக் கொள்ளும்.

திறந்த மனதோடு புத்தகத்தைப் படியுங்கள். அதுவே தியானமாகி உங்களுக்குள் இருக்கும் ஞானக் கதவுகளைத் திறந்து விடட்டும்.

தியானம் ஞானத்தின் திறவுகோல் என்ற தலைப்பு உங்கள் தலைக்குள் அனுபவம் என்னும் பூங்கொடியாகத் தழைக்கட்டும்.

இப்படிக்கு

பரமஹம்ஸ ஸ்ரீ நித்யானந்தர்

பரமஹம்ஸ ஸ்ரீ நித்யானந்தர் இந்த நூற்றாண்டில் வாழும் ஓர் சிறந்த மபான். இல்லற வாழ்வின் இன்னல் நீ க்கி இன்பம் மலர வழிகாட்டும் ஆன்மீக உலகில் இவர் ஓர் ஒப்பற்ற நட்சத்திரம்.

விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட மெய்ஞான தியான முறைகளை உலகெங்கும் இருக்கும் மக்களுக்கு கிடைக்கும் வகையில் தியான சேவை செய்து கொண்டிருக்கும் நம் பரமஹம்ஸ ஸ்ரீ நித்யானந்தர்...

திருவண்ணாமலையில் 1978-ஆம் ஆண்டு ராஜசேகரன் என்ற இயற்பெயரில் அவதரித்தார்.

பல நூறு ஞானிகளின் ஜீவசமாதியை தன்னகத்தே கொண்டுள்ள திருவண்ணாமலை ஒரு ஆன்மீக நகரம். அது ஒரு சக்தி கேந்திரம்.

சிறு வயதிலிருந்தே அருணாச்சல மலைக் குன்றுகளிலும், குகைகளிலும் வெகுநேரம் தன்னை மறந்து தியானத்தில் ஈடுபடுவார் நம் பரமஹம்ஸர்.

முக்தி நோக்கிய தேரடலில் பரமஹம்ஸர் தன்னுடைய 12-ஆம் வயதிலேயே முதல் மகா ஆனந்த அனுபவத்தை அடைந்தார்.

பக்தி நிறைந்த குடும்பத்தில் பிறந்தால் பால வயது முதல் இயல்பாகவே பக்தி மார்க்கத்தை கடைப்பிடித்தார்.

திபெத் வரை சென்று யோகம், தந்த்ரம் கற்றுத் தேர்ந்த ரகுபதி யோகி இவரை பாலனாக இருந்த போதே இனங்கண்டுகொண்டார். ரகுபதி யோகியிடம் இருந்து யோக மார்க்கத்தின் ரகசியங்களையும், நுணுக்கங்களையும் கண்டறிந்து யோகத்தை தன் சிறுவயதிலேயே கடைப்பிடித்தார்.

“பிற்காலத்தில் மிகப் பெரிய ஆன்மீகச் சுடராக நீ மாறுவாய்”, என்று சொன்ன ரகுபதி யோகி தந்த்ர மார்க்க நுணுக்கங்களையும் சிறுவனோடு அப்போதே பகிர்ந்து கொண்டார்.

சிறுவனின் இறை அனுபவங்களையும், அவருக்கு கிடைத்த இறை தரிசனங்களையும் கேட்டு பிரமித்த மாதாஜி குப்பம்மாள், ஞானமார்க்கம் பற்றிய பல ஆழமான உண்மைகளை இவரோடு பகிர்ந்துகொண்டார்.

பால வயதில் பக்தி மார்க்கம்.

இளம் பருவத்தில் யோக மார்க்கம்.

12 வயதில் முதல் மபா ஆனந்த அனுபவம்!

சிரத்தையோடு கடைப்பிடித்த ஞானமார்க்கம்.

இடைவிடாது கடைப்பிடித்த தியானமார்க்கம்

இவை அனைத்தும் சேர்ந்து ஞானத் தேடுதலாகி நம் பரமஹம்ஸருக்குள் தீ போன்று ஞானமடையும் ஆர்வம் பற்றிக் கொண்டது.

காடுமேடெனப் பாராமல் ஞானம் தேடி யாத்திரை செல்வதற்கு பெயர் பரிவ்ராஜகம். இவர் 17-ஆம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி தம் பரிவராஜக வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார்.

கையில் பணத்தைத் தொடுவதில்லை என்ற அகக் கட்டளையோடு தன் பரிவ்ராஜக வாழ்வை ஆரம்பித்தவர்.

இமயம் முதல் குமரி வரை கிட்டத்தட்ட 2000 கி.மீ. பாதயாத்திரையாகவே பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வந்தார்

வட இந்தியா, இமயமலை மற்றும் திபெத்தில் உள்ள பல ஆன்மீக மையங்களுக்கும் சென்று எல்லா மார்க்கங்களையும் முறையாக ஆராய்ந்து பயன்படுத்தினார்.

ஓம்காரீஸ்வரர் மலையில் பல மாதங்கள் தன்னந்தனியே வாழ்ந்து பல கடும் தவங்களில் ஈடுபட்டார்.

பஞ்ச தபஸ், திராடக் போன்ற மிக, மிக கடினமான தபஸ்களில் கூட தன்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் நம் பரமஹம்ஸர்.

மணிகர்னிகாகாட் என்னும் இடத்தில், "நான் மரண அனுபவத்தை பெறாமல் இங்கிருந்து ஏழப் போவதில்லை" என்ற தீர்க்கமான முடிவோடு அமர்ந்துவிட்டார். இஜ்ண்டு நாட்களாக தொடர்ந்து கொஞ்சம், கொஞ்சமாக உடல் உணர்வு இறந்தது. உடல் கொஞ்சம் கொஞ்சமாக மரத்துப் போனது.

இரண்டு நாட்களின் முடிவில் மரண அனுபவம் என்னும் பெரிய ஆன்மீக அனுபவத்தைப் பெற்றார்.

இமயத்தின் பனி நிறைந்த பகுதிகளில் சில காலம் தம் தவ வாழ்வைத் தொடர்ந்தார்.

தபோவனில் இருந்து கோமுக் தாண்டி சென்று கொண்டிருக்கும் போது பரமஹம்ஸருக்கு மஹா அவதார் பாபாஜியின் தரிசனம் கிடைத்தது.

இதன் பிறகு அவர் செய்த தொடர் தியானங்களை அடுத்து ஞானமடைதல் என்னும் பூரண ஆனந்த நிலை பரமஹம்ஸருக்கு ஜனவரி ஒன்று இரண்டாயிரம் ஆண்டில் கிட்டியது.

தொடர்ந்து ஒன்பது மாதங்கள் தனி மனித உணர்வற்று அந்த ஆனந்த உணர்விலேயே பேரியக்கத்தோடு ஒன்றி வாழ்ந்து வந்தார்.

இறைசக்தியின் வழிநடத்துதலின்படி தன்னுடைய தியான சக்தியால் தொடர்ந்து செய்த சேவைகளின் தொடர்ச்சியாக தியான பீடம் என்னும் ஆன்மீக நிறுவனத்தை 2003 ஜனவரி 1ம் தேதி நிறுவினார் நம் பரமஹம்ஸர்.

உலகெங்கும் தொடர்ந்து தியான முகாம்களையும். தியான சிகிச்சைகளையும் பரமஹம்ஸர் நப்தி வருகிறார்.

தமிழ் வாரப் பத்திரிக்கையான குமுதத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கதவைத் திற... காற்று வரட்டும்! என்ற உற்சாகத் தொடர் எழுதி முடித்திருக்கிறார்.

மலேசியாவின் தமிழ் இதழான வானம்பாடியிலும் கடந்த இரண்டு வருடங்களாக உன்னைப் பார் வாழ்வு வளமாக என்ற உற்சாகத் தொடர் ஒன்றை எழுதி வருகிறார் நம பரமஹம்ஸர்.

ஆனந்த வாழ்வு பற்றிய கல்வித் திட்டங்கள் தியான பீடத்தில் இருந்து உருவாக்கப்பட்டு இளைய சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இளைஞர்களுக்கான ஒரு வருட ஆனந்த வாழ்வியல் பற்றிய ஆனந்த அனுபவ் என்னும் குருகுலக் கல்வியும், சிறுவர்களுக்கான குருகுலமும் தியான பீடத்திலிருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. தியான பீடம் உலகெங்கும் தன் தியான சேவையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.