ஷம்பாலா
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
முதல்முறை இமயமலை யாத்திரைக்கு பக்தர்களோடு சென்றிருந்தபோது... கோமுக்கில் இருந்து திரும்பி வந்த அன்று மாலை பரமஹம்ஸர் பேசியது...
ஆசையும், பயமும் இருக்கும் வரைதான் ஒரு
மனிதனால் இயங்க முடியும். காரணம் ஆசையும்,
பயமும் மனதின் இரு கால்கள்.
பயத்தின் உந்துதலும், ஆசையின் ஈர்ப்பும் தான் மனிதனை ஓடி ஆடி வேலை செய்ய வைக்கிறது.
12 வயதில் கிடைத்த முதல் ஆனந்த அனுபவத்தை தாண்டி படிப்படியாக கிடைத்த ஆன்மீக அனுபவங்கள் மிக மிக ஆழமான அனுபவங்கள்.
ஐம்புலன்களால் கிடைக்கும் மேம்போக்கான
சுகங்கள் தான் மனிதனுக்குள் இருக்கும்
ஆசைநரம்புகளை மீட்டி விடுகின்றன. ஆன்மீக
அனுபவங்கள் இவற்றை போல் ஆயிரம் மடங்கு
ஆழமான, அருமையான அனுபவங்கள்.
இந்த ஆழமான அனுபவங்கள் ஆசை நரம்புகளை எப்போதும் தொடுவது கூட கிடையாது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால், மனிதனை சுருக்கும் சில்லறைத்தனமான எல்லா ஆசைகளையும் அந்த ஆனந்த அனுபவங்கள் நிகழும் போது உருவாகும் ஆனந்த சக்தியானது எரித்துவிடும்.
என்னொள் நிகழ்ந்து முடிந்திருந்த மகா
அனுபவங்கள் இதுபோன்ற எல்லா ஆசைகளையும்
எரித்து விட்டன.
ஓம்காரீஸ்வர் மலை வாழ்க்கை, நர்மதை பரிகிரமம் மற்றும் மணிகார்ணிகாகாட்டில் நிகழ்ந்த மரண அனுபவங்கள் என்னுள்ளிருந்த பயங்களையெல்லாம் துடைத்தெரிந்து விட்டன.
பயமும், ஆசையும் இல்லாவிட்டால் மனம் இயங்க மறுக்கும். வாழ்வே மிகப்பெரிய புதிராக தோன்றும். அப்போது உருவாகும் வெறுமைதான் விரக்தி எனும் சொல்லால் சொல்ல முயற்சிக்கிறேன்.
இந்த விரக்தி விசித்திரமானது. சாதாரண மனிதனின் விரக்திக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை.
வாழ்வே அர்த்தமற்றதாக தெரிய ஆரம்பித்ததும்... மனம் படிப்படியாக அதற்கான காரணங்களை எடுத்து முன்நிறுத்த ஆரம்பித்தது.
வீட்டை விட்டு வீராப்பாய் வெளியே வந்தாயிற்று. இனி வீடு திரும்ப செல்வதும் இயலாதது. ஞானம், ஞானம் என நம்பி... ஞானிகள் என பலர் சொல்லியதை நம்பியதுதான் தவறோ.
ஒருவேளை ஞானமடைதல் என்ற ஒன்றே இல்லையோ..
ஒரு மனிதனால் எவ்வளவு தவங்கள் செய்ய
முடியுமோ அவ்வளவு தவங்களையும்
செய்துவிட்டோமே? இப்போது ஞானம்
கிடைக்காவிட்டால் எப்போது ஞானம்
கிடைக்கப்போகிறது.
ஒரே மாதிரியான கதைகளை தொடர்ந்து சொல்லிய பலரை தான் ஞானிகள் என நம்பி ஏமாந்துவிட்டோமோ. அடடா...வாழ்க்கையே திரும்பி விட்டதே.
தங்கள் வேலைகாக, தங்களுக்கு சில காரியங்களை நிகழ்த்த வேண்டும் என்பதற்காக ஞானமடைதல் எனும் மாய கருத்தை வைத்து அப்பாவி மக்களை ஒரு கூட்டம் ஏமாற்றிக்கொண்டிருக்கிறதோ
"ஞானமடைதல்" எனும் கருத்து மனித குலத்துக்கு இழைக்கப்பட்ட பெரிய தீங்கு, சதி என்ற முடிவுக்கு வந்ததும்... முழுமையாக தளர்வடைய ஆரம்பித்தேன்.
யாரை கோபித்துக் கொண்டு, என்ன
பிரயோஜனம் இனி என்ன நடக்க இருக்கிறதோ அது
நடக்கட்டும் என ஓய்ந்துபோனேன்...
பூரண ஓய்விலேயே ஏழுநாட்கள் கழிந்தது... அப்புறம் அந்த அற்புதம் நிகழ்ந்தது. ஷம்பாலாவிற்கு இழுக்கப்பட்டேன். நான் அந்த கூட்டத்துக்குள் சேர்ந்து விட்டேன்....
ஞானமடைதல் நிகழ்ந்த கணத்தில்!
அப்புறம் அவர்கள் மனிதகுலத்துக்கு என்ன
செய்தார்களோ அதை தான் தொடர்ந்து செய்து
கொண்டிருக்கிறேன்
பகவத் கீதை பேருரையில் Eat before you are eaten என சொல்வார்.
'ஷம்பாலா' என்றால்
Metaphysical தளத்தில்
ஞானிகள் ஒன்றாய் வாழும்
இமயமலையின்
உச்சிப் பகுதி
காற்றின் சுவடுகள் புத்தகத்தில் ஏமாற்றுவ ஏமாற்று... அது நீதி, தியான விதி என பரமஹம் குறிப்பிடுகிறார்.
"நாம் யார்? மனம் எது?" பிரிக்கமுடியாமல் கலப்படமாகிவிட்ட நம்மை நம் பட அது இஷ்டப்படி அழைக்கழிக்குறது.
ஆனால் நாமோ... நம் விருப்ப வாழ்வதாகவே நம்பிக்கொண்டிருக்கும். இந்த கண் விளையாட்டிலிருந்து விடுவிப்பதே ஞானியரின் வெ அவர்கள் ஏமாற்றும் மனதை ஏமாற்றுவார்கள் என அழகாய் சொல்வார் நம் பரமஹம்ஸர். ஞானி புரிந்து கொண்டு அணுகினோமான காப்பாற்றப்பட்டுவிட்டோம் என்பது உறுதி.
ஷம்பாலா
முதல் பதிப்பு: ஏப்ரல் 2006
ஒளியச்சு அட்டை வடிவமைப்பு தியான பீடம்
விநியோகம்: DHYANAPEETA CHARITABLE TRUST
பக்கம் - 56 விலை - Rs.100/- Ebook ISBN: 979-8-88572-939-0 Publisher : DHYANAPEETA CHARITABLE TRUST Dhyanapeetam, Nithyananda Puri, Mysore Road, Bidadi - 562 109, Bangalore District Phone : 080 -7202085 / 56691844 Cell : 9341803444 / 9341469170 / 9442635394 Email : [email protected] Website : www.dhyanapeetam.org
திருவண்ணாமலை ஞானத்திற்கான Incubator.
குறைமாத குழந்தையை கத கதவென காக்கும் Incubator போல...
ஞானமடைய காத்திருக்கும் கடவுளை, கடவுளாக்கும் வரை காத்தருளும் தியான சக்திமிகு Incubator தான் திருவண்ணாமலை.
- பரமஹம்ஸ நித்யானந்தர்

Dhyanapeetam, Nithyananda Puri, Mysore Road, Bidadi - 562 109, Bangalore District Phone : 080 -7202085 / 56691844, Cell : 9341803444 / 9341469170 / 9448058598, Email : [email protected], Website : www.dhyanapeetam.org