KAILASA Library/பரமஹம்ச நித்தியானந்தர்/யார் இந்த பரமஹம்ஸர்?Sign in
பரமஹம்ச நித்தியானந்தர்

யார் இந்த பரமஹம்ஸர்?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அவன்தானும் மும்மூர்த்தி தேவரிஷிகள்
அகிலத்தில் சூரிய சந்திரனாக
தவழ்கின்ற பஞ்சபூதம் அவனே ஆகும்
தவமுனிவன் பிரமரிஷி நித்யானந்தன்

நித்யானந்த பரமகம்சர் உலகம் காக்க
நிலத்திலே மானிட உருவில் வந்தாரப்பா
இது காலம் பலகோடி மாந்தர்களை
இறைவதத்தால் காப்பாற்றி வாழுகின்றார்

அப்பனே இல்லறத்தில் வாழ்வுமில்லை
அது உனக்கு அமைந்தாலும் விலகிபோகும்
எப்போதும் நித்யானந்த பரசிவத்து
ஏகாந்தம் பெற்றிடுவாய் திருமகனே

திருமகனே பரமகம்சர் தோன்றுமுன்னே
தரணியிலே உனைபோன்று பலரையிான்று
அருள் பெற்ற ஞானிகளை படைத்திருக்கார்
அருகிலே நீதானும் குருவிடத்தில்

குருவிடத்தில் நீதானும் வாழுகின்றாய்
குவலயம் எங்கும் குருமொழி பேசிட வேண்டி
அருள் பிறப்பு ஞானிகளை தோற்றுவித்தார்
அவதாரம் உனது பிறப்பு நித்யானந்தத்தில்

நித்யானந்தத்தில் உலகோரை ஒன்று சேர்த்து
நித்யானந்தம் எல்லோருக்கும் கிட்டிட வேண்டி
சத்தியத்தில் நிலைபெறவே இதுபிறப்பை
சற்குருவுக்கு சமர்ப்பணம் செய்திடப்பா
அப்பனே ஈரேழு உலகம் கண்ட
ஆதி யந்தம் நித்யானந்த பரமகம்சர்
எப்போதும் அகிலமதை ஆண்டு நிற்கும்
ஏகாந்த சக்கரவர்த்தி இறைவனவனே

இறைவனுடன் வாழுகின்ற உந்தனுக்கு
உலகிலே என்ன வேண்டும் உற்றுபாறு
நிறைவுடன் அறம் பொருள் இன்பம் வீடு
நித்தியானந்தர் உந்தனுக்கு அளித்துவிட்டார்

உன் தனக்கு உலகிலே உறவுமில்லை
உறவு என்றால் ஒன்றுமட்டும் நித்தியானந்தம்
அன்னையும் பிதாவும் உனக்கு அவனே
அருளும் பொருளும் வாழ்வும் அவனே

ஆகவே பஞ்சபூத சீற்றங்களை
அருந்தவத்தால் தடுத்துமே உலகம் காத்தார்
ஆக்கமும் காத்தலும் அவனே ஆகும்
ஆனந்தம் அளிப்பவனும் அவனேயாகும்

அவன்தனக்கு சித்தர்களும் தேவர்களும்
அருள்பணிகள் தினம் தினம் செய்துவாரார்
தவரிஷியான் திருவாக்கு தானும் கேட்டு
தவப்பணிகள் செய்திடவே வேண்டும் வேண்டும்

வேண்டியதோர் வரமருள்வார் தவகுருவும்
விரும்பிடும் பலநன்மை அடைவாயப்பா
கண்டுரைக்க பாவபிணி இல்லையப்பா
கலியுகத்தில் மகாதெய்வம் பரமகம்சர்
பரசிவத்துள் தான் கலந்து வாழும்போது
பெற்றிடுவாய் சதா சிவ நித்யானந்தம்
தீராத தெவிட்டாத இன்பமதுவே
திருக்கயிலை இன்பமதும் நித்யானந்தம்

ஆனந்தமாய் உலகில் நீ வாழ்வதற்கு
ஆழிவில்லா நித்தியானந்தத்தில் இடமும் உண்டு
காணவே சொர்க்கமோட்சம் சதாதருணம்
கலியுகம் காக்கவந்தாய் பரமோன் கூடி

கூடியே உலகத்தை காத்திடப்பா
கருணையே வடிவான சக்தி சொரூபன்
அடிபணிந்து அகிலத்தில் புண்ணியம் செய்வாய்
ஆனந்தமாய் கோடிபல உயிர்கள் வாழ

வாழவைக்க உனது பிறப்பு பூலோகத்தில்
வினையால் வாழும் மாந்தர்களை அருள்வழிகாட்டி
ஊழ்வினையில் தவித்திடாம் வளமும் காண
உத்தமனே எல்லோரை காத்திடப்பா

அப்பனே நீ வந்த காரணமே
அகிலத்தில் பரமகம்சர் கூடி நீயும்
தப்பில்லா கோடி உயிர்கள் காத்திடவே
தோன்றியே அருள் நிலை பெற்றிருக்காய்

அருள் வாழ்வில் பல்லோரை தான்கலந்து
ஆனந்தம் பரமானந்தம் நித்யானந்தம்
திருவடியில் சேர்ந்திடவே ஆசிதாரோம்
தவமகனே பரிசுத்தம் அடைந்துவிட்டாய்

அடைந்திட்ட பரிசுத்தம் சோதியாக
அகிலத்தில் பந்தம் பற்று ஊணுரக்கம் அற்று
கடைதேர்ந்த உனது பிறப்பு மகா பாக்கியம்
காலமின் பரிசுத்த வாழ்வுதனை

வாழ்வுதனை நித்தியானந்த பரமகம்சருக்கு
விட்டுவிட்டு வழிநடந்தால் போதுமப்பா
வாழ்கின்ற உலகமக்கள் தன்மக்களாய்
வணங்கியே வளம் பெறவே காத்திடப்பா

அப்பனே நித்தியானந்தம் அளித்திடப்பா
அகிலத்தில் திருவிளக்காய் வாழுகின்ற
சுப்ரமணிய சிவசக்தி சொரூபன் அவரே
சச்சிதானந்த நிலைகளுடன் அட்டமாசித்தி

சித்திகளும் கம்சரும் உனக்கருள்வார்
சிவத்துள்ளே தனது வாழ்வு அடக்கமாகும்
சத்தியமான நித்யானந்த பரமகம்சரோடு
சாகாமல் கோடி காலம் வாழ்வதுண்டு

வாழ்கவே அந்தவரை பரமனோடு
வாழ்கவே நித்தியானந்தம் மாறா நீயும்
வாழ்கவே குரு நெறிதான் பரப்பி
வாழ்கவே ஞானமோட்சம் நித்யானந்தத்தில்

வாழ்கவே நித்யானந்தர் அருள்நினைவில்
வாழ்கவே நித்தியானந்த பரமனைபோல்
வாழ்கவே நிலை மாறா நித்தியானந்தத்தில்
வாழ்கவே வாழ்கவே நித்தியானந்தம் பெறுகும் முற்றே

சுபம் சுபம் சுபம் சுபம் சுபம் ...........................................

இது ஸ்ரீ ஆனந்த கலோலாவுக்கு மட்டும் வாசிக்கப்பட்ட ஓலைச் சுவடி அல்ல. பரமஹம்ஸரின் பக்தர்கள் அனைவருக்கும் அகத்தியர் செய்த போதனையாக தான் நாங்கள் உணர்கிறோம் - நித்யானந்தத்தில் தியானபீடம்

ரகசியமாய்... புனிதமாய்... இறைவனின் இதய மையமாய்... உலகின் ஆன்மீக மையமாய் அருணாச்சலமலை ஆன்மீக தலைநகரமாய் உள்ளது.

இவ்வளவு மகத்துவம் பொதிந்த அண்ணாமலைக்கும் பரமஹம்ஸருக்கும் உள்ள உறவை வார்த்தைகளால் வடிக்க முடியாது. உறவுமுறை என்ற வார்த்தையே இரண்டாக பிரித்து காட்டும்.

ஒரு மின்சாரம் இரண்டு விதமாக வெளிப்படாது. ஒரு பிரபஞ்ச சக்தியினால் உருவாக்கப்பட்டு, உயிர்ப்பிக்கப்பட்டவர்களுக்குள் வேறுபாடுண்டோ?

அருணாச்சலரின் நிழலில் பிறந்து, குழந்தை பருவத்தின் பெரும்பகுதியை அவர் கரங்களில் செலவிட்டார்.

ஒரு ஜீவனுள்ள மலைக்கும் மேலாக, தந்தைக்கும் மேலாக, தெய்வத்தன்மைக்கும் மேலாக பாவித்தார். தானும், அருணாச்சலரும் வேறல்ல! ஒன்றே என்ற உணர்வை சிறுவயதிலேயே பெற்றார்.

பரமஹம்ஸர் சொல்கிறார்

“நானே அருணாச்சலம்”

அருணாச்சலம் என்பது இயல்பான, பிரசன்னமான, - அசைவில்லா தன்மையே அன்றி வேறில்லை

விழிப்புத்தன்மைதான் அருணாச்சலம்
உள்ளே இருப்பது
அல்லது
இல்லாமல் இருப்பது -
அருணாச்சலம்.

அருணாச்சலரை நோக்கிய பயணம் - என்னை நோக்கிய உங்கள் பயணத்தை ஒத்தது.

அனைத்து தரப்பினரையும் மீண்டும் மீண்டும் ஈர்க்கும் சக்தியை அருணாச்சலரின் அழைப்பு என்று தேடுதல் உடையவர்கள் கூறுகிறார்கள்.

இதனால் நீங்கள் ஈர்க்கப்படுவது ஆச்சரியப்படுவதற்கில்லை.