KAILASA Library/தியானம்/முன்னுரைSign in
தியானம்

முன்னுரை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பரமஹம்ஸ நித்யானந்தர், காரைக்குடி தியான சத்சங்கத்தில் 'தியானம் ஒரு மருந்தாக' என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவை புத்தகமாகத் தொகுத்து வெளியிடுகிறோம்.

பல நோய்களுக்கு முழுமையான காரணிகளையும், (Etiology) முழுமையான தீர்வையும் (Cure) தரமுடியாத மருத்துவ ஆராய்ச்சிகள், தொண்ணூறு சதவிகிதத்திற்கும் மேற்பட்ட நோய்கள் மனோரீதியானவை என்று முழக்கமிடுகின்றன.

மனிதன் நவீன மருத்துவ அறிவால் மனம் வரை புரிந்து கொண்டான்.

ஆனால் மனதைத் தாண்டி இன்னும் சூட்சுமான விஷயங்கள் உடலுக்குள் ஒளிந்திருக்கிறது.

அவற்றை வெளிச்சத்துக்குக்கொண்டு வரும் அளவு மருத்துவ அறிவியல் இன்னும் வளரவில்லை.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஞான வெளிச்சத்தில் உடலை நுணுகி, நுணுகிப் பார்த்தவர்கள் ரிஷிகள்.

ரிஷிகள் மெய்ஞான விஞ்ஞானிகள்.

இந்த மெய்ஞானிகளின் நுட்பமான விழிப்புணர்வால் உடலை ஐந்து கோஷங்களாகப் பிரித்திருக்கிறார்கள். என்றோ ஐந்தாக பகுக்கப்பட்ட உடலை இன்று பகுப்பாய்வு செய்திருக்கிறார் நம் பரமஹம்ஸர்.

கோஷங்கள் பற்றிய ஞானாய்வு அறிக்கையே இச்சிறிய நூல்.

இன்றைய மருத்துவ முறைகளால் அன்றைய மெய்ஞான கண்டுபிடிப்பை... ஏதோ நேற்றுதான் கண்டுபிடிக்கப்பட்டதுபோல் நாம் எல்லோரும் உணரும் அளவுக்கு எளிமையாக பரமஹம்ஸர் விளக்கியிருப்பது படிப்பவருக்கு விருந்து.

வகைவகையான மருத்துவ முறைகளை ஒரு பாக்கெட் சைஸ் புத்தகத்தில் பகுத்து, வகுத்து, தொகுத்தளிப்பதில் ஆனந்தமடைகின்றோம்.

இப்படிக்கு
நித்யானந்தத்தில்
நித்யானந்த தியானபீடம்