KAILASA Library/ஜீவன் முக்தி/பெண்ணின் ரகசியம் - 1Sign in
ஜீவன் முக்தி

பெண்ணின் ரகசியம் - 1

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

•பெண்கள் பூஜைகள் செய்யலாமா? ஆண் உடலில் வாழும் உயிருக்குப் பூஜைகள் போன்ற புனிதச் செயல்களில் ஈடுபட எவ்வளவு உரிமைகள் இருக்கிறதோ... அதே உரிமைகள் பெண் உடலில் வாழும் மனித உயிருக்கும் உண்டு! உடல், உரிமையைத் தடுக்கக் கூடாது.

•பெண்கள் ஞானமடைய முடியுமா? பெண்கள் ஞானமடைய முழுத் தகுதி வாய்ந்தவர்கள். சொல்லப் போனால் ஒரு ஆணைவிட பெண் ஞானமடைவது எளிது.

•அப்படியென்றால், ஆண் ஞானிகள்தான் அதிகமிருக்கிறார்கள். பெண் ஞானிகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியல்லவா இருக்கிறது. மனித வரலாற்றில்.... ஏன் இப்படி? இரண்டு காரணங்கள். ஒன்று : பெண்களுக்கு முழுச் சுதந்திரமளித்த காலக்கட்டங்கள் வரலாற்றில் மிக மிகக் குறைவு. அடுத்து : பெண்கள், ஞானம் நோக்கி தங்கள் வாழ்வைத் திருப்ப வாய்ப்பில்லாததால், ஞானம் அடைவதற்கான நுட்பங்கள் எல்லாமே ஆண்களுக்கு மாத்திரமே வடிவமைக்கப்பட்டு விட்டது.

•பெண்கள் ஞானமடைவது இனி சாத்தியமா? சாத்தியம்தான்.

எதை இழந்திருக்கிறீர்கள் என்பதே தெரியாதது, கொடுமை!

Not being aware of what you have missed is the real misery!

இன்று, வாழ்க்கை முறையால் கற்பனைகளும், கனவுகளும் குழந்தைகளுக்குள்ளே திணிக்கப்படுகின்றன. அந்த மாதிரியான வாழ்க்கை முறையைத்தான் நீங்களும் வாழ்கின்றீர்கள். அதையே உங்கள் குழந்தைகளுக்கும் அமைத்துத் தருகிறீர்கள்.

டி.வி, இன்டர்நெட், மஞ்சள் பத்திரிகை என இவையெல்லாம் குழந்தைகள் வாழ்கிற சமூகத்திற்குள், பரவலாக, இலவசமாக, சுதந்திரமாகப் புழங்குவதும் ஒரு மிகப்பெரிய கொடுமை. இது மனித குலத்திற்கு எவ்வளவு பெரிய கொடுமை இழைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது.

எதிர்கால சந்ததியரைக் காப்பாற்ற, இன்றைய சமூக அமைப்பு யோசித்தே ஆகவேண்டும். ஒரு பிறவிக் குருடருக்கு, அவர் எதை இழந்தார் என்பதைப் புரியவைக்க முடியாது.

அது போன்றே, குழந்தைகளைப் பிறவியிலேயே குருடாக்கும் விதமாகத்தான், இன்றைய சமுதாயம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

காமமும் கற்பனைகளும் குழந்தைகளுக்குச் சென்று சேருகிற மாதிரியான சமுதாயத்தைத்தான், நாம் உருவாக்கி வைத்து இருக்கிறோம்.

பாவம், இன்றைய குழந்தைகளுக்கு வெகுளித்தன்மையோடு, திறந்த கண்களோடு, தூய்மையான கண்களோடு, இந்த உலகத்தைப் பார்ப்பதற்கான வாய்ப்புக்கூட இல்லாமல் போய்விட்டது.

குழந்தைகளே தெரிந்து
கொள்ளுங்கள்! உங்களுடைய
முப்பாட்டனுக்கு இருந்த
சுதந்திரம், இன்று உங்களுக்கு
இல்லை.

இந்த உலகத்தைத் திறந்த
கண்களோடு, எளிமையான
கண்களோடு பார்க்கிற
சுதந்திரம் உங்களுக்கு இல்லாமல்
போய்விட்டது.

நீங்கள் பிறவிக்குருடராக
வளர்க்கப்படுகிறீர்கள். பிறவிக்
குருடனுக்கு உண்மையைப்
புரியவைக்க முடியாது. அவர்

> உங்களுடைய
> முப்பாட்டனுக்கு இருந்த சுதந்திரம்
> இன்று உங்களுக்கு இல்லை.
> இந்த உலகத்தை திறந்த
> கண்களோடு, எளிமையான
> கண்களோடு பார்க்கிற சுதந்திரம்
> இல்லாமல் போய்விட்டது.
> நீங்கள் பிறவிக்குருடராக
> வளர்க்கப்படுகிறீர்கள்.
> பிறவிக்குருடனுக்குத்தான் உண்மையை
> புரியவைக்க முடியாது. அவர் எதை
> இழந்தார் என்பது புரியாது. அதற்காக
> உண்மையையே குருடாக்க முடியாது.

எதை இழந்தார் என்பது புரியாது. அதற்காக உண்மையையே குருடாக்க முடியாது.

வாழ்க்கையின் ரகசியம்

வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியை, அதாவது இருபத்தைந்து வருடங்களைப் படிப்பிற்கே செலவிடுகிறோம். ஏன் என்று கேட்டால் "நல்ல வேலை கிடைக்க," எனப் பதில் சொல்வோம்

எதற்கு நல்ல வேலை எனக் கேட்டால், "நல்லா சம்பாதித்து, நல்ல அறிவோடு அருமையாய் வாழ வேண்டும்," எனச் சொல்வோம்.

அருமையான வாழ்வு பெற இவ்வளவு படித்தீர்களே! வாழ்வுக்காக என்ன படித்தீர்கள்?

வாழ்க்கையை வாழ்வது எப்படி எனக் கற்றுக்கொள்ள என்ன செய்திருக்கிறீர்கள் இதுவரை... எனக் கேட்டால் என்ன பதில் சொல்வோம்.

சமைக்கத் தேவையான எல்லா உணவுப் பொருட்களை வெகு பிரயர்த்தனப்பட்டுச் சேர்த்தவன்... சேர்த்து முடித்த பின்தான் சமைப்பது எப்படி என யோசித்தானாம் எனும் கதையாய் கழிகிறது மனித வாழ்வு!