KAILASA Library/ஜீவன் முக்தி/நான் ஜீவன் முக்தர்Sign in
ஜீவன் முக்தி

நான் ஜீவன் முக்தர்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

இதைத் தைரியமாய்ச் சொல்லுங்கள், வாழுங்கள்

காணாமல் போனதால், ஆட்டுக் குட்டிகளோடு வளர்ந்த சிங்கக்குட்டி ஆட்டுக்குட்டியாகிவிடுமா?! அது அப்படி நம்பினால்தான்... அது தகுமா?

தான் ஒரு ஆட்டுக்குட்டிதான் என நம்பிக்கொண்டு இருக்கும் சிங்கக்குட்டி என்றாவது ஒரு நாள் நிச்சயம் நீர் நிலையை நெருங்க நேரிடும்.

நீர் நிலையில் தன் முகத்தைப் பார்க்கும்போது, அந்த நன்னாளில் அது, தான் சிங்கம் என உணர்ந்து கொள்ளும் நாளும் வரும். பின் அது சிங்கமாகவே வாழத் துவங்கிவிடும்.

நீங்கள் ஒவ்வொருவரும் ஏற்கெனவே, உங்களின் சுபாவத்தினாலேயே ஜீவன் முக்தர்தான்!

நம்பினாலும் நம்பாவிட்டாலும், ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இது சத்தியமே.

உண்மை மறந்து போனதால் பத்தோடு பதினொன்றாய் வாழும் நீங்கள், நான் சராசரி மனிதன் என நம்பினால் அது நிஜமாகி விடுமா?...

தியானத்தில் என்றாவது ஒரு நாள், உங்களின் உண்மை நிலை பிரதிப்பலிக்கப் படும். நீங்கள் ஒரு ஜீவன் முக்தர் என்று நன்றாக உணர்ந்து கொள்வீர்கள் . இது நீண்டகாலம் எடுத்துக் கொள்ளும்.

உடனடியாய் உண்மையை உணர்ந்திட உடனடியாக ஜீவன் முக்தி அனுபவமாகிட எளிய வழி .... ஜீவன் முக்தி என்ற நிலையை அடையும்வரை காத்திருக்காதீர்கள். எப்போதோ அடைவோம் என்று சொல்லிக் காத்திருக்காதீர்கள்.

இன்றே ஞானத்தையும், ஆனந்தத்தையும் வெளிப்படுத்த ஆரம்பித்து, ஜீவன் முக்தர்களாக வாழ ஆரம்பியுங்கள். அப்போது இதுவரை கேட்டதெல்லாம் உண்மையே என்பது புரிய வரும். இது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல.

சும்மா

கன்னத்தில் தட்டிச்

சொல்லுங்கள்...

“இன்றிலிருந்து நான் ஜீவன் முக்தர்,"

இன்றே ஞானத்தையும்
ஆனந்தத்தையும்
வெளிப்படுத்த
ஆரம்பித்து ஜீவன்
முக்தர்களாக வாழ
ஆரம்பியுங்கள்.

“இதை நான் கொண்டாடப் போகிறேன்.” இதை மட்டும் செய்யுங்கள். ஜீவன் முக்தர்களாய் வாழ்வீர்கள்

இதுவரை படித்தது புதிராய்த் தெரிந்தால், இன்னும் நீங்கள் ஆட்டுக்குட்டியாகவே நீ ங்கள் இருக்கிறீர்கள் எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

இருந்தாலும், நீங்கள் சிங்கக் குட்டிதான் என்பது மாற்ற முடியாத உண்மையே. இந்தப் புரட்சிக் கருத்துகள் உங்களையே புரட்டிப் போடும் அளவிற்கு உள்வாங்குங்கள். வாழுங்கள். நீங்கள் ஜீவன் முக்தர்தான்.