இந்தியாவின் பலம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
India's strength
21. இந்தியாவின் பலம் எது?
- சார்லஸ், பெங்கால்
தங்களுக்குள் சத்தியத்தைப் பகிர்ந்து கொள்ளவும், அதன் ஆழத்தைத் தேடுவதற்கும் திறந்த மனத்தோடு இருக்கும் சனாதன தர்மம்தான் இந்தியாவின் பலம்
இதுதான் நம்முடைய பாரத கலாச்சாரத்தின் ஆணி வேர்.
வேறு எந்த மதத்திலும், எந்தத் துறையிலும் இருப்பது போல, பயத்தாலோ ஆசைகாட்டுவதன் மூலமாகவோ வளர்க்கப்படாத தர்மம்.
சத்தியத்தின் தேடுதல் ஒன்றையே ஆணிவேராகக் கொண்டு,... ஆசையாலோ அச்ச த்தாலோ வளர்க்கப்படாமல், சத்தியத்தை உணர்த்துவதனாலேயே வளர்ந்த தர்மம் இது.
நமது இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறது. நமது தர்மத்தில் கடவுளேகூட சத்தியத்தை அடைவதற்கான ஒருபடிதான்.
கடவுள் என்கின்ற கருத்து எதற்காக என்றால், ஞானமடைவதற்காக உபயோகமாகும் ஒரு படியாகத்தான் இருக்கிறது. கடவுள்கூட சத்தியத்தை அடைகின்ற பாதையில் இருக்கின்ற ஒருபடிதான். கடவுளை நாம் இறுதியாக வைக்கவில்லை. சத்தியத்தை உணர்வதைத்தான் இறுதியாக வைத்தோம். அதற்கு ஒரு வழிதான் கடவுள். வாழ்வின் இலட்சியத்தை மீண்டும், மீண்டும் நினைவுறுத்திக் கொண்டே இருக்கும் தர்மம்தான், இந்தியாவின் பலம்
ஏன் இத்தனை மதங்கள்?
Why so many religions?
22. நம்முடைய கலாச்சாரத்தில் ஏன் இத்தனை மதங்கள்?
- தேவதூத், சண்டிகார்
ஏனென்றால், நமது வேத பாரம்பரியம் அவ்வளவு வெளிப்படையானது.
வேத பாரம்பரியத்தைப்போல் திறந்த தன்மை (openess) வேறு எந்த மதத்திற்கும் கிடையாது.
நேற்று வரைக்கும் "புத்தம் சரணம் கச்சாமி,” என்று சொல்லிக்கொண்டு இருந்து, ஒருவேளை இன்றைக்கு வேறு யாராவது ஒருவர், நமக்கு ‘அதைவிட ஆழமான சத்தியத்தை உணர்த்துவேன்’ என்று சொன்னால், உடனடியாக அதைக் கடைப்பிடிப்பதற்கான சுதந்திரம் நமக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது..
சுதந்திரம் மட்டுமல்ல, அது நமக்குக் குறிக்கோளாகவே உரைக்கப்பட்டும் இருக்கிறது.
கோட்பாடுகள் இல்லாத மதம், நமது கலாச்சாரம்.
தேடுதல் ஒன்றையே ஆணிவேராகவும், அடித்தளமாகவும் கொண்டது நம் சனாதன தர்மம்.
யாராவது ஒருவர், நாம் பின்பற்றிக் கொண்டிருக்கும் மதத்தை விட, ஆழமான ச த்தியத்தை உணர்த்துவேன் என்று சொன்னால், உடனடியாக முழுமையாக அவரைக் கடைபிடிப்பதற்கான சுதந்திரம் நமக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.
ஆழமான ஒரு சத்தியத்தைக் காட்டுவார்களேயானால், அவர்களை முழுமையாக பின்பற்றுவதை ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல் உற்சாகப்படுத்துகின்ற உத்வேகப்படுத்துகின்ற தர்மம் நம் தர்மம்.
அதனால்தான், நமது தர்மம் மனித மனத்தின் மிக உயர்ந்த முதிர்ச்சியையும். மிக உயர்ந்த பொறுப்புத் தன்மையையும், மிக உயர்ந்த இனிமைத் தன்மையையும் வெளிப்படுத்துகின்ற தர்மமாக இருக்கிறது.
நேற்று வரைக்கும் புத்தமதத்தில் இருந்து, இன்றைக்கு வேத பாரம்பரியத்தை சேர்ந்த ஒரு ஞானி, உங்களுக்குச் சத்தியத்தை, அதைவிட ஆழமாகக் காட்டுவாரென்றால், வேத பாரம்பரியத்தைத் தழுவுவதை புத்தமதம் எதிர்க்கவில்லை.
அதேமாதிரி, இன்றுவரை வேத பாரம்பரியத்தை சேர்ந்த ஒருவராக இருந்து, நாளை புத்தமதத்தை சேர்ந்த ஒரு ஞானி உங்களுக்கு ஞானத்தின் உச்சியை, உங்களுக்குத் தெரிந்ததைவிட, ஆழமாக ஒரு உச்சிக்கு அவரால் எடுத்துச் செல்ல முடியுமானால், நீங்கள் அவரை முழுமையாகக் கடைப்பிடிப்பதை வேத பாரம்பரியம் ஒருகாலும் மறுக்கவில்லை.மனிதனுக்குத் தேவையான முக்கியமான இந்தச் சுதந்திரத்தை அறிவதற்காகத்தான் இத்தனை மதங்கள் இந்தத் தர்மத்தில் இருக்கிறது.