KAILASA Library/நெருக்கம்/Sign in
நெருக்கம்

நெருக்கம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Front cover portrait of Nithyananda playing tabla

நெருக்கம்

அதிகரிக்க...

உள்ளே...

  • முன்னுரை

1. இது தப்பு வழியல்ல,
தப்புவிக்கும் வழி

2. உரையாடல் எனும்
போர்வைக்குள்...

3. தவிப்பின் உச்சி
சென்றால்

4. பாவம்
புனிதமாகட்டும்

5. நம்மவரின் குணங்கள்
தெரியும் போதுதான்...

6. நல்லத்தனங்களும்
கள்ளத்தனங்களும்

7. பீனியல் சுரப்பியை
தூண்டிவிடுங்கள்.

நித்யானந்த தியானபீடம்

இந்த புத்தகம்
நித்யானந்த வேத அறிவியல் பல்கலைகழகத்தின் வெளியீடாகும்
( நித்யானந்த வேத அறிவியல் பல்கலைகழகம், ப்ளோரிடா, USA )

Ebook ISBN: 979-8-88572-346-6

விலை ரூ.15/-

Photograph of Paramahamsa Nithyananda by a banyan tree

நெருக்கம் அதிகரிக்க...

-பரமஹம்ஸ நித்யானந்தர்

நித்யானந்த தியானபீடம்

இந்த புத்தகம் நித்யானந்த வேத அறிவியல் பல்கலைகழகத்தின் வெளியீடாகும் ( நித்யானந்த வேத அறிவியல் பல்கலைகழகம், ப்ளோரிடா, USA )

நூலின் பெயர்: நெருக்கம் அதிகரிக்க...NERUKKAM ADHIGARIKKA...
ஆசிரியர்: பரமஹம்ஸ நித்யானந்தர்.Author : Paramahamsa Nithyananda
முதல்பதிப்பு: ஜுன் 2006First Edition : June 2006.
இரண்டாம் பதிப்பு: மார்ச் 2008, 3000 பிரதிகள்Second Edition : March 2008, 3000 Copies
ஒளியச்சு, வெளியீடு: தியானபீடா சேரிடபிள் டிரஸ்ட்Published By : Dhyanapeeta Charitable Trust,
நித்யானந்தபுரி,Dhyanapeetam,
கல்லுகோபஹஹல்லிNithyanandapuri, Mysore road,
மைசூர் ரோடு, பிடதி-562 109Bidadi, Ramanagaram Taluk
அட்டை வடிவமைப்பு: தியானபீடா சேரிடபிள் டிரஸ்ட்Bangalore - 562 - 109
அச்சிட்டோர்: பவானி பிரிண்டர்ஸ், சென்னை.Designing &
பதிப்பகத்தார்: தியானபீடம், பெங்களூர்Composed By : Dhyanapeeta Charitable Trust,
Printed At : Bhavani Printers,
பக்கம்: 24Chennai.
விலை: ரூ.15/-Pages : 24
Price : Rs. 15/-
Ebook ISBN: 979-8-88572-346-6

நித்யானந்த தியானபீடம்

நித்யானந்தபுரி, கல்லுகோபஹல்- , மைசூர் மெயின்ரோடு, பிடதி - 562 109. பெங்களூர், கர்நாடகா போன் : 080-27202085, 080-65591844

நெருக்கம் அதிகரிக்க...

முன்னுரை

இவ்வுலகில் மது, மாது, லாஹிரி வஸ்துகள் இல்லாமல் வாழ்ந்தால்... சொர்க்கத்தில் சோமபானம், ரம்பை, மேனகையோடு, கற்பதரு மரத்தடியில் இருந்து நினைத்தபடியெல்லாம் ஆடிப்பாடி வாழலாம் என கற்பனை செய்யாதீர்கள். அது நடக்காது.

அறையில் ஆடமுடியாதவனால் எப்படி வீதியில் ஆட முடியும்?

இவ்வுலகைக் கொண்டாடுவதற்கே பக்குவமும், புத்திசாலித் தனமும் பற்றாக்குறையாக இருக்கும்போது; மறுவுலகைக் கொண்டாட மட்டும் எங்கிருந்து பக்குவம், புத்திசாலித்தனமும் வந்து சேரும்?

முதலில் சொர்க்கத்தை இவ்வுலகில் காண வழி செய்யப்பட வேண்டும்.

இவ்வுலகில் சொர்க்கத்தைக் காண உள்ளுலகம் ஒன்று தான் வழி. உள்ளுலகப் பயணிக்கத் தெரிந்து கொண்டு விட்டால் மறுஉலகின் கதவு தானாய் திறந்து கொள்ளும்.

சொர்க்கமும், சொர்க்கத்தைத்
தாண்டிய ஆச்சரிய அனுபவங்களையும்
கண்டுகொள்வீர்கள்.

எல்லா ஞானக்கருத்துக்களும்
உள்ளுலகிற்கான விசாக்கள். எல்லாத்
தியான முறைகளும் உள்ளுலகிற்கான
ஊர்திகள்.

இந்தப்புத்தகம் உள்ளுலகின் சிம்லா,
டார்ஜிலிங், நயாகரா வரை உங்களை
அழைத்துச்செல்லும்.

ஆனந்தமாயிருப்பவர்
அடுத்தவர்களை
ஆனந்தமாயிருக்கவிடுவார்.

இது நிகழ ஆரம்பித்துவிட்டால்
அங்கு காரணமேயில்லாமல் நெருக்கம்
அதிகரிக்க ஆரம்பித்துவிடும். இறுக்கம்
கரைந்துவிடும்.

வருத்தமில்லா வசந்த வாழ்வு ஒரு
உள்ளுலக விசா-தான் நெருக்கம்
அதிகரிக்க எனும் இப்புத்தகம்.

படியுங்கள், இடைவெளிகள் குறையட்டும். நெருக்கம் அதிகரிக்கட்டும்.

இப்படிக்கு
நித்யானந்தத்தில்
தியானபீட சேரிடபிள் டிரஸ்ட்

மிகவும் பிடித்த
தியான அகவிதை ...
"ஒரு செல்
குழந்தையாகும்
புனிதமான காலம்
கற்காலம்.

ஒரு மனிதன்
தெய்வமாகும்
புனிதமான காலம்
தியானகாலம்."

ஏனென்றால், ஆழ்மனதில் நாமும் சந்தோஷமாயிருக்க விரும்புகிறோம்.

ஆனால், மற்றவர்களின் சுதந்திரத்தைப் பறிக்கிறோம்.

ஏனென்றால், ஆழ்மனதில் நாம் சுதந்திரமடைவதில் நமக்கே விருப்பம் இல்லை. இதுதான் பயமாக வெளிப்படுகிறது.

ஏதோ ஒரு வகையில் நெருங்கியவரை கட்டுப்படுத்தும், அல்லது கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் ஒருவரைச் செயல்பட இது தூண்டுகிறது.

"ரொம்ப இடம் கொடுக்கக் கூடாது",

"எப்போதும் நம் கட்டுப்பாட்டுக்குள் தான் மற்றவரை வைத்திருக்க வேண்டும்".

"ஆடவிடாதே!..."

"என் சொல் பேச்சு மீறக்கூடாது..."

  • இதுபோன்ற பல எண்ணங்கள் மனதில் முளைத்தால், நீங்கள் உங்களின் சுதந்திரத்தை விரும்பாதவர் என்று பொருள்.

உள்சுதந்திரத்தில் நாட்டமில்லாதவருக்குள் மட்டுமே இதுபோன்ற எண்ணங்கள் முளைக்கும்.

உங்களின் உறவுதானே!

விட்டுக்கொடுத்தால் தவறில்லையே!? கொஞ்சம் ஆடினால் என்ன... உங்களுக்கு பதில் அவர் ஆடட்டுமே.

யாராவது ஒருவராவது சுதந்திரமாயிருக்கட்டுமே. இது தப்பு வழியல்ல. தப்புவிக்கும் வழி.

நெருங்கியவரிடம் நீங்கள் திருப்தியை உணர முதல் காரியமாக அவர்களின் சுதந்திரத்தை ஊக்குவியுங்கள்.

Portrait