யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!
அது பறக்கப் பிறந்தது
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
⇨ ஜென் சீடனாகி
தெளிந்த மனிதனாகி
வாழ்ந்த நண்பனிடம் நண்பன் கேட்டான்
என் காதல் உயர்ந்ததுதானே
ஜென் சீடன் :
உன் காதல் மட்டுமல்ல எல்லோருடைய காதலும் உயர்ந்ததுதான்.
காதலெனும் பறவை பறக்கப் பிறந்தது.
அது நிஜத்தைத் தொடும்போது
செத்து விழுகிறதே!
விவாகரத்தில் முடிந்த
காதல்
கல்யாணங்களாய்?
வாழ்வில்
எதனோடெல்லாம்
ஈர்க்கப்படுகிறீர்களோ
அதனோடெல்லாம்
காதல் கொள்கிறீர்கள்.
உங்களிடம்
நீங்கள்
ஈர்க்கப்பட்டால்
அது தான்
தெய்வீகக் காதல்!
மற்றதெல்லாம்
மங்கும்
மாயக்
காதல்களே!