KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/மகா சக்தி படைத்தவர்கள் நீங்கள்Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

மகா சக்தி படைத்தவர்கள் நீங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

விறுவிறுப்பான மூன்று கேள்விகளுக்கு பதில் கண்டுபிடித்து எழுதிவிட்டு கட்டுரைக்குள் நுழையலாம்.

1. எல்லா சாதனையாளர்களும் மிகக் குறுகிய காலத்தில் மாபெரும் சாதனை படைத்தவர்களே!... அவர்களுக்கு மட்டும் இது எப்படிச் சாத்தியமாகிறது?...

2. கோடீஸ்வரர்களாக மாறியவர்களில் பலர் சிறுவயதில் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் வெற்றிகளை எளிதில் குவித்திருக்கிறார்கள்! அவர்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன?

3. பேர், புகழைத் தொட்டவர்களில் பலரின் வாரிசுகள் அதேபோல் உச்சத்தை தொட்டதில்லை. இதுபோல் சமூகத்தின் உச்சத்தினைத் தொட்டவர்களில் பலர் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களாகவே இருக்கிறார்கள்! எவருடைய உதவியையும் பெறாமலேயே இவர்களை முன்னணிக்கு வரவைத்தது எது? ...

இக்கேள்விகளுக்கு பதில் சொல்லும் அருமையான ஜென் கதையொன்று...

இளைஞரொருவர், ஜென் ஞானியிடம் கேட்டார்.

"குருவே! நான் தொழில் செய்யவும் விரும்புகின்றேன். தியானம் செய்யவும் விரும்புகின்றேன். வெளியுலகில் சாதிக்கவும் விரும்புகின்றேன். உள்ளுலகில் சாதிக்கவும் விரும்புகின்றேன்.

இதில் எதைச் சாதிக்க விரும்பினாலும், அதற்காகவே முழுநேரத்தையும் செலவு செய்ய வேண்டும். அப்போதுதான் ஏதாவது ஒன்றில் சாதிப்பது சாத்தியம் என்பதும் எனக்குத் தெரியும்.

இருந்தாலும் இரண்டிலுமே சாதிக்க விரும்புகின்றேன் அது முடியுமா? அதற்கு வழி இருக்கிறதா?"

"முடியுமப்பா"

"முடியுமா!?"

"இரண்டிலுமே சாதிக்க முடியும். அதுவும் மிகக் கடினமாக உழைக்காமல் வெகு லேசாக சாதித்துவிட முடியும். இந்த ஒன்றே ஒன்றை அதிகரித்துவிட்டால்..."

"எதை? எதை?"

"அதன் பெயர் நம்பிக்கை"

இன்னொரு அருமையான சொற்றொடர் ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். பலரால் கோடீஸ்வரராக முடிவதில்லை. ஏனென்றால் தங்களின் வாழ்க்கையில், 'என்னால் கோடீஸ்வரராக முடியும்,' என ஒருமுறைகூட அவர்கள் நம்பியதில்லை. ஏன்! அப்படிச் சிந்தித்தது கூட இல்லை."

நம்புபவர்களெல்லாம் சாதித்துவிடுகிறார்கள்.

"எதைச் சாதிக்க முடியும்' என நீங்கள் ஆழமாக நம்புகிறீர்களோ அந்த எண்ணத்திற்கு உங்களின் நம்பிக்கையானது சக்தியைத் தந்துவிடுகிறது. இந்த சக்தியே உங்களின் சாதனைக்கான வழிவகைகளை காட்டும் குருவாக மாறிவிடும்.

நம்பிக்கை (Belief) பற்றிய மருத்துவ ரீதியான ஆராய்ச்சிகள் இன்னும் அதிசயத்தக்க விதமான செய்திகளை நமக்கு தருகிறது. அவற்றில் சில...

நம்புபவர்கள் எல்லாம் சாதித்து விடுகிறார்கள்.

நம்புபவர்கள்
எல்லாம்
சாதித்து
விடுகிறார்கள்.

1. நம் உடலின் எல்லாவற்றையும் நிர்ணயிக்கும் DNA வையும், அதன் ஜீன்களையுமே நம்பிக்கை சக்தியை அதிகரிப்பதின் மூலமாக மாற்றியமைக்க முடியும்.

2. நம்பிக்கை சக்தியை அதிகரிப்பதினால் கேன்சரைக்கூட சரிசெய்ய முடியும்.

3. ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிப்பதுகூட நம்பிக்கை சக்தியில் சில மாற்றங்களை செய்வதின் மூலமாக சாத்தியமாகின்றது.

ஒவ்வொருவருக்கும் உற்சாகத்தை தரக்கூடிய ஆராய்ச்சி இது...

Genetical disease, அதாவது பாரம்பரிய நோய்கள் என வகைப்படுத்தப்பட்டிருக்கும் நோய்கள், பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு வருபவை. இந்த நோய்களை தடுக்கவே முடியாது என்பதுதான் இதுவரை இருந்துவரும் வாதம்.

ஆனால், நான் படித்த இந்த ஆராய்ச்சியில், இடம்பெறும் நபர்கள் அவர்களின் பெற்றோர்களிடம் வளரவில்லை. பிறந்ததிலிருந்தே வேறு பெற்றோர்களிடம் வளர்ந்தார்கள். அவர்களைப் பொறுத்தளவிற்கு, அவர்கள்தான் அவர்களின் பெற்றோர்கள்.

வேற்று பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகளுக்கு, அவர்களைப் பெற்றவர்களிடமிருந்து வர வேண்டிய பாரம்பரிய நோய்கள் வரவில்லை என்பது ஆச்சரியமல்ல.

அவர்களை வளர்த்தவர்களின் குழந்தைகளுக்கு வரவேண்டிய பாரம்பரிய நோய்கள், இக்குழந்தைகளுக்கு வந்துவிட்டது என்பதுதான் ஆச்சர்யம்.

பாரம்பரிய நோய்கள்கூட உடல்ரீதியானவை அல்ல. அவை சமூகரீதியானவை, மனோரீதியானவை, எனும் இந்த ஆராய்ச்சியின் ஆதாரப்பூர்வமான கூற்று, சாதிக்க விரும்பும் ஒவ்வொருவருக்குமான ஊக்க மருந்து.

நம்பிக்கை சக்தியை அதிகரிப்பதினால் கேன்சரைக்கூட சரிசெய்ய முடியும்.

'இவர்கள் என்னுடைய பெற்றோர்கள்' எனும் நம்பிக்கை மட்டுமே சில நோய்களை வர விடாமல் தடுத்திருக்கிறது. சில சம்பந்தமில்லாத நோய்களை வரவழைத்திருக்கிறது, என்பதிலிருந்து நம்பிக்கைக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்று ஆழமாக உள்வாங்கிக் கொள்ளுங்கள்.

நம்பிக்கையால்... உள்ளுலகத்தை மாற்றி, உடல் ஆரோக்கியத்தையே மாற்ற முடியும், வெளியுலகத்தை மாற்றி மாற்றி உலகத்தையே மாற்ற முடியும்.

நம்பிக்கை ஒரு சக்தி. அதை வளர்ப்பது ஞானம். இதுவரை இரண்டையும் எளிதாய் அதிகரிக்க உதவுவது தியானம்.

நீங்கள் எதில் வெற்றி பெறவிரும்பினாலும், முதலில் நம்பிக்கை எனும் சக்தியை அதிகரிப்பதற்காக உழைக்க ஆரம்பியுங்கள். வெற்றி நிச்சயமாகும். வெற்றிக்கான உங்களின் முதலீடுகளிலேயே மிக உன்னதமான முதலீடு இது.

ஆத்ம தியானம்

மகா சாதனைக்காக மிக எளிய தியானம் இது.

எல்லாவிதமான சக்திகளைப் பெற்றிருப்பவர் நீங்கள்!

மனிதன் மனிதனாகவே இருக்கக் காரணம், மனிதன் தன்னை மனிதன் என்று நம்புவது தான்.

உங்களின் ஆறடி உடம்பிற்குள் அடைக்கப்படுமளவிற்கு சிறியவரல்ல நீங்கள். நீங்கள் மகாசக்தி படைத்தவர்கள்.

'நான் உடல்' என்று, நம்புவதால்தான் இன்னும் சாதாரண மனிதராகவே இருக்கின்றீர்கள். அதனால்தான், பெரிய சக்திகள் உங்களிடமிருப்பது உங்களுக்கே தெரியவில்லை. நீங்கள் ஏற்றுக்கொள்ளவும் மறுக்கிறீர்கள்.

இந்தத் தியானம் உங்களுக்குள் இருக்கும் மகா சக்திகளை உங்களுக்கே அடையாளம் காட்டும்.

முதலில் கண்களை மூடி உங்களுக்குள் கரையுங்கள்.

'நான் உடல்' என்ற நம்பிக்கைதான் உங்களின் முதல் எதிரி.

அந்த எண்ணத்தையும், நம்பிக்கையையும் கீழே போடுங்கள்.

அடுத்து...

"நான் உடல்' என்ற உணர்விலிருந்து விடுதலை பெறுங்கள். நீங்கள் எங்கும் நிறைந்திருக்கும் சக்திபெருக்கு என்பதை உணருங்கள். இதிலேயே தொடர்ந்து வாழுங்கள்...

நீங்கள் எல்லாம் வல்ல சக்தி படைத்தவர் என்பதைக் கண்டுகொள்வீர்கள்...