வரையறையற்ற வளர்ச்சி ஆரம்பமாகும்...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

“என்னை எவ்வளவோ மாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறேன்.
ஏனோ என்னுடைய முயற்சிகளில் பல வீணாகி விடுகின்றது.
மீண்டும் மீண்டும் என்னிடம் நானே தோற்றுப் போகின்றேன்.
எதனால் இப்படி நடக்கின்றது? இந்தத் தோல்வியை தடுக்க முடியுமா?”
வாழ்வில் முன்னேறிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் உணர்வுக் குரல் இது.
எப்படித் தடுப்பது என்பதை அனுபவமாக்குவதுதான் இந்த கட்டுரை...
சுவையான சம்பவம் ஒன்று...
அந்த மனிதக் குரங்கைப் பார்ப்பதற்காகவே மக்கள் அதிகமாக அந்த விலங்குகள் சரணாலயத்திற்கு வர ஆரம்பித்தார்கள்.
பார்வையாளர்களையும், அதிக ரசிகர்களையும் அந்தக் குரங்கு ஈர்க்க ஆரம்பித்தது. எனவே, இருபதடி நீளத்தில் இருந்த கூண்டை அறுபதடி நீளக் கூண்டாக மாற்றினார்கள்.
இருபதடிக் கூண்டை, அறுபதடிக் கூண்டாக மாற்றிய பின்னர், ஆறு ஆண்டுகள் அந்தக் குரங்கு உயிர் வாழ்ந்திருக்கிறது என்பது ஆச்சரியமல்ல.
இருபதடி அறுபதடியாக மாறினாலும்,
அந்தக் குரங்கு தன்னுடைய பழைய இருபதடிக் கூண்டு இருந்த இடத்தில் மட்டும்தான் அடுத்த மூன்று வருடங்களும் வாழ்ந்தது.
புதிதாய் விசாலமாக்கப்பட்ட நாற்பதடிக் கூண்டுப் பகுதியை அந்தக் குரங்கு பயன்படுத்தவே இல்லை என்பதுதான் ஆச்சரியம்.

வாழ்வு...
நீங்கள்
முன்னேற
தொடர்ந்து
வாய்ப்புகளை
ஏற்படுத்திக்
கொண்டேதான்
இருக்கிறது.
தான் வாழும் இடம் முன்பு இருந்ததை விட மூன்று மடங்கு அதிகரித்திருந்தாலும், அந்த குரங்கு தன்னுடைய உறைவிடத்தையோ, ஓய்வாய் அமருமிடத்தையோ மாற்றிக் கொள்ளவில்லை.
மேலும், அது சுற்றிச் சுற்றி உலவும் இடம் கூட அதே பழைய இருபதடியாகவே இருந்திருக்கின்றது.
ஏன்?
காரணம், அந்த இருபதடிதான் தன் உலகம் என நம்பிவிட்டது.
அதனால் தான் அதன் உலகம் மூன்று மடங்கு பெரிதான பின்பு கூட அதனால் அதை மாற்றிக்கொள்ளவே முடியவில்லை.
நீங்களே கூட உங்களின் வாழ்வில் சந்தித்த பலரைப் பார்த்திருப்பீர்கள்.
பணமிருந்தும் கஞ்சமாயிருப்பார்கள். அன்பு உள்ளுக்குள் இருந்தும் எரிந்து விழுவார்கள். முன்னேற வாய்ப்புகள் பல இருந்தும் ஊதாரியாகவே இருப்பார்கள்.
இப்படி இருப்பவர்களும், தன்னைப் பலமுறை மாற்றிக்கொள்ள முயற்சித்து தோல்வியுற்றவர்களும் சிக்கியிருப்பது மேலுள்ள பிரச்சனையில்தான்.
உங்களின் உலகம் இதுதான், இவ்வளவுதான் எனும் வரையறையைத் தாண்டாத வரை உங்களால் தோல்விகளைத் தாண்ட முடியாது. என்று இந்த வரையறையை ஒருவர் தாண்டி வாழ ஆரம்பிக்கின்றாரோ, அதன்பிறகு அவரால் வெற்றிகளைத் தடுக்க முடியாது.
உங்களின் உலகத்தை மாற்றுவது எப்படி? இதற்கு பதில் கிடைத்து விட்டால்...
மீண்டும் மீண்டும் உங்களிடமே தோல்வியடைய மாட்டீர்கள்.
மீண்டும் மீண்டும் உங்களிடமே வெற்றியடைவீர்கள்.
ஆத்ம தியானம்
ஜென் ஞானி ஒருவரிடம், “மக்கள் எத்தனை வகைப்பட்டவர்கள்?” என்று கேட்ட போது,
“இரண்டே வகை,
1. சிறுவர்கள் 2. பெரியவர்களாகி விட்ட சிறுவர்கள்.” என்று பதிலளித்தாராம்.
சிறுவர்களாக இருந்தபோது அவர்களிடம் இருந்த மிக முக்கியமான இந்த ஒரு குணம் பெரியவர்களாகும்போது காணாமல் போய்விடுகிறது. அதுதான் 'Innocence.' எதையும் எளிதாய் உள்வாங்கும் வெகுளித்தனம், எளிமைத்துவம்.
இழந்ததை மீண்டும் உங்களுக்குள் எடுத்து வந்தாலேபோதும். குழந்தையாய் இருந்தபோது ஒருசில வருடங்களில் மொத்த உலகத்தையும் புரிந்துகொண்டு, புது மொழியைக் கற்றுக்கொண்டு மனிதர்களோடு பழக, நடக்க, பேச, சாப்பிட எனப் பலவற்றையும் கற்றுக்கொண்டு உங்களை முழு மனிதப் பிறவியாக மாற்றிய உங்களின் புத்திசாலித்தனம் விழித்துக் கொள்ளும்.
அப்புறம் உங்களை மாற்றிக் கொள்வதற்கு படும் சங்கடங்கள் சரியாவதோடு மட்டுமல்லாமல் உங்களை வளர்த்துக் கொள்வதற்கான புத்தியும், சூழலும் உருவாகிவிடும்.
இவ்வளவு சக்தி வாய்ந்த Innocence ஐ உங்களுக்குள் எடுத்து வருவதாலேயே, உங்களிடமிருந்து பல கெட்டிக்காரத்தனங்கள் வெளிப்பட ஆரம்பிக்கும்.
இழந்த பொக்கிஷத்தை மீண்டும் பெற உதவும் நுட்பம்...
‘என்னால் இவ்வளவு தான் முடியும்’. என்ற வரையறையைத் தூக்கி எறிவது, அதைத் தாண்டி வாழ ஆரம்பிப்பது, உங்களின் உலகத்தையே புதிதாக்கிவிடும்.
அடுத்து, உங்களின் வாழ்வில் மீண்டும் மீண்டும், எளிமைத் தன்மை, சரளத் தன்மை எனும் மாபெரும் குணத்தை எவ்வளவு எடுத்து வர முடியுமோ அவ்வளவு எடுத்து வாருங்கள்.
இப்படி, “வரையறைகளைத் தாண்டி வாழ ஆரம்பிப்பதே, வரையறை இல்லாத வளர்ச்சி யைத் தந்து விடும்”.
வரையறையற்ற வளர்ச்சி ஆரம்பமாகும்.
தொடர்ந்து இந்தத் தியானத்தை செய்து வாருங்கள்.