உலகமே ஒரு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கொண்டாட்ட மேடை

ஆடம்பரமாய், ஏராளமான செல்வத்தோடு நிறைய பணிவிடையாளர்களோடு வாழ்ந்து வந்த சூஃபி ஞானி இவர்.
யாத்ரிகர் ஒருவர் இந்த சூஃபி ஞானியின் ஊர் வழியாகச் செல்ல நேரிட்டது. "ஒரு ஞானி ஏன் இவ்வளவு ஆடம்பரத்தோடு வாழ வேண்டும்?" என்ற கேள்வியோடு அந்த ஞானியைப் பற்றி விசாரித்தார்.
ஒரு சீடரிடம், "ஒரு ஞானி இவ்வளவு சொத்துப்பத்தோடு வாழலாமா?" என்று யாத்ரிகர் கேட்டதற்கு
சீடர், "ஒரு ஞானி கூட இப்படி வாழாவிட்டால், பின் யார்தான் இப்படி வாழ்வதாம்?" என்று சூடான பதில் தந்தார். கொஞ்சம் சுதாகரித்துக் கொண்ட யாத்ரிகர் அந்த ஞானியைப் பற்றி மேலும் விசாரித்தார்.
இந்த ஞானி ஏற்கனவே பெரிய அரசராய் இருந்து சூஃபி ஞானியாய் மாறி இருப்பவர் என்று தெரிந்து, அவர் மீது யாத்ரிகருக்கு மதிப்பு கூடியது.
அடுத்து அந்த ஞானியைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் கூடியது. ஞானியைச் சந்திக்கச் சென்றார்.
குடிலுக்குள் அமர்ந்திருந்த ஞானியின் அருகே ஒரு திருவோடும், ஒரு கைத்தடியும் மட்டுமே இருந்தது. சாதாரண கயிற்றுக் கட்டிலில்தான்
அவர் அமர்ந்திருந்தார். அவர் உடுத்தியிருந்த துணி கூட வெகு சாதாரணமான உடைதான்.
வெளியே பார்த்த ஆடம்பரத்திற்கும், உள்ளே பார்க்கும் எளிமைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமேயில்லாமல் வாழும் ஞானியைப் பார்த்து இன்னும் வியப்படைந்தார்.
அடுத்த சில நிமிடங்களில் இருவரும் பார்வையாளர்கள் அரங்கிற்குள் நுழைந்தார்கள்.

உள்ளே பார்த்துப்
பேசிய ஞானிக்கும்,
வெளியே
ராஜகுருவாய்
அமர்ந்து பேசும்
ஞானிக்கும்
சம்பந்தமே
இல்லையே!
பல வி.ஐ.பி - க்கள் காத்துக்கொண்டிருந்த அந்த அரங்கத்திற்குள் இருந்த அழகிய சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்தார் சூஃபி ஞானி.
இதுவரை தன்னோடு எளிமையாய், ஒரு நண்பராய் பேசிக்கொண்டிருந்த ஞானி, இப்போது சிம்மாசனத்தில் ராஜகுருவாய் பேசிக்கொண்டிருந்தார்.
உள்ளே பார்த்துப் பேசிய ஞானிக்கும், வெளியே ராஜகுருவாய் அமர்ந்து பேசும் ஞானிக்கும் சம்பந்தமே இல்லையே! என்று யாத்ரிகருக்குத் தோன்றியது. இன்னும் கொஞ்சம் குழம்பினார்.
பேசி முடித்து சிம்மாசனத்தை விட்டு இறங்கி வந்த ஞானி, யாத்ரீகரை அழைத்து, "வாங்க கொஞ்ச நேரம் காலார நடந்து வரலாம்" என்று அழைத்தார்.
"சிம்மாசனத்தில் இருந்தவரா இவர்!" என்று யாத்ரீகர் வியப்படைந்தார். சிரிக்கச் சிரிக்க ஞானி பேசிக்கொண்டே மீண்டும் அவருடைய கூடாரத்திற்கு வந்தார்.
உள்ளே மிக எளிமையாய் இருந்த கூடாரத்தின் வெளிப்புறத்தை இப்போதுதான் யாத்ரீகர் ஆழ்ந்து பார்த்தார். கூடாரத்தை இழுத்துக் கட்டியிருந்த கம்பங்கள் வெள்ளிக்கம்பங்கள். அதில் அடிக்கப்பட்டிருந்த ஆணிகள் தங்க ஆணிகள்!
யாத்ரீகர் ஞானியிடம், "நீங்கள் ஒரு சூஃபி ஞானி என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
ஆனால் வெள்ளிக்கம்பங்கள்! தங்க ஆணிகள்! வைர சிம்மாசனம்! ரத்ன கம்பளம்! ராஜதோரணை என்று ராஜ அம்சங்களாகவே உங்களிடம் எல்லாம் இருக்கின்றனவே.
இரண்டையும் பார்க்க ஆச்சரியம் தான் ஏற்படுகிறது" என்று நாசூக்காய் தன்னுடைய சந்தேகத்தைச் சொன்னார்.
அவரைப் பார்த்து புன்னகைத்த ஞானி, "வாருங்கள் நாம் இமயமலை நோக்கி யாத்திரை செல்வோம். இங்கு என்னுடைய வேலையெல்லாம் முடிந்துவிட்டது. மீதமுள்ளதை என் சிஷ்யர்கள் பார்த்துக்கொள்வார்கள்" என்றழைத்தார்.
உற்சாகமாய் பேசிக்கொண்டே பல கிலோமீட்டர் ஊரைவிட்டுத் தாண்டி வந்துவிட்டனர்.
சட்டென ஏதோ ஞாபகம் வந்தவராய் நின்ற யாத்ரீகர், "உச்!" என்று தலையில் தட்டிக்கொண்டார். ஞானியிடம், "நீங்க கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கிறீர்களா? என்னுடைய பையை உங்க கூடாரத்திலே விட்டுவிட்டு வந்துவிட்டேன். நான் வேகமாய் போய் எடுத்து வந்துவிடுகிறேன்.." என யாத்ரீகர் கேட்டுக்கொண்டார்.
யாத்ரீகரைப் பார்த்துச் சிரித்த ஞானி, "இதுதான் உங்களுக்கும், எனக்கும் இருக்கும் வித்தியாசம்."
"என்னுடைய ராஜாங்கத்தையே ஒரு பையை விடுவதுபோல விட்டுவிட்டேன். ஆனால், உங்களுடைய சின்ன பையையே ராஜாங்கத்தைப் போல பற்றிக்கொண்டிருக்கிறீர்கள்.
ராஜாங்கத்தை விட்டுவிட்டு வந்து விட்டேன்.
உங்களால் பையை மனத்தளவில் கூட விடமுடியவில்லை.
"என்னுடைய ராஜாங்கத்தையே ஒரு பையை விடுவதுபோல விட்டுவிட்டேன். ஆனால், உங்களுடைய சின்ன பையையே ராஜாங்கத்தைப் போல பற்றிக்கொண்டிருக்கிறீர்கள்.
ராஜகுருவாய் இருந்தபோது ராஜாவைப் போல இருந்தேன். என் அறையில் இருந்தபோது தனிநபராய் எளிமையாய் இருந்தேன். இப்போது யாத்ரீகனான பின் யாத்ரீகனாகிவிட்டேன்," என்றார்.
வைர சிம்மாசனம், ரத்ன கம்பளம், ராஜ தோரணைகள் என்ற எதுவுமே அந்த ஞானியைப் பற்றவில்லை. ஞானியும் அவற்றைப் பற்றி சின்னப் பற்றுகூட கொண்டிருக்கவில்லை.

பற்றற்ற
நிலையில்
வாழும் ஞானிகள்
செய்வதெல்லாம்
சேவையே.
உடனே, அப்புறம் ஏன் இவ்வளவு ஆடம்பரமாக அவர் வாழ்ந்தார்? என்று கேட்கத் தோன்றும். ஒரு கைப்பிடி மக்க ளுக்கு ஞானத்தையும், தியானத்தையும் தருவதற்கு ஒரு சின்ன குடிசையே போதுமானதுதான். ஆனால் ஒரு சில ஞானிகள் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தியானத்தையும், ஞானத்தையும் தருவதற்காக உடல் எடுப்பார்கள். ஆயிரக்கணக்கான நபர்களுக்கு தர வேண்டுமானால் குடிசை பத்தாது. அரசவைதான் தேவைப்படும்.
பற்றற்ற நிலையில் வாழும் ஞானிகள் செய்வதெல்லாம் சேவையே.
யாத்ரீகர் பற்றோடு உள்ளொன்றும், வெளியொன்றுமாய் வாழ்ந்ததால்தான், அவரின் கண்களுக்கு ஞானியின் செயல்கள்கூட முரண்பட்டதாய் தெரிந்தது.
நாம் முரண்பட்டால், வாழ்வும் முரண்படும். முரண்பட்டுத் தெரியும்.
நாம் கொண்டாடினால், வாழ்வும் கொண்டாடும்.
ராஜாவாக இருக்கவேண்டிய இடத்தில் ராஜாவாகவும், நண்பனாய் இருக்க வேண்டிய இடத்தில் எளிமையான நண்பனாகவும், பற்றற்று இருக்க வேண்டிய இடத்தில் பற்றற்று இருப்பதையும்தான் 'ஜீவன் முக்த வாழ்வு' என்கிறோம். இதைத்தாண்ட உதவும் ஒரு அருமையான தியானம்.
ஆத்ம தியானம்
Inability to play win different masks is ego.
சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் உடனுக்குடன் தன்னை மாற்றியமைத்துக் கொள்ளுமளவுக்கு எளிமைத் தன்மை இல்லாமல் ஒரேமாதிரியாக வாழ்வு வாழ்பவர்களுக்குத்தான் ஜீவன் முக்த வாழ்வு கூட நடிப்பாய் தெரியும்.
வாழ்வோடு நடனமாடத் தெரியாதவருக்குத்தான், வாழ்வில் பலரும் நடித்துக்கொண்டேயிருப்பதாகவும், உலகமே ஒரு ஏமாற்றுக்கார மேடையாகவும் தெரியும்.
நிஜத்தில் அவருடைய இறுக்கம்தான் அவரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
இந்த உண்மையை உணர்ந்து இனிவரும் ஒவ்வொரு சூழலிலும் முழுமையாக உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். அந்தந்தச் சூழலோடு முழுமையாக ஒன்றிவிடும் கதாபாத்திரமாகிவிடுங்கள்.
“ஐயோ! இப்படியெல்லாம் செய்தால் நான் என்னை இழந்துவிடுவேனோ?
என்னுடைய தனித்துவம் போய்விடுமோ?” என்று மனம் அச்சுறுத்தினால் அதனிடம் தைரியமாய் இதைச் சொல்லுங்கள்...
“வாழ்வோடு நடனமாடத் தெரிந்துகொண்டபின் தான் உங்களுடைய தனித்துவமே மலரும்.
அதற்கப்புறம் தான் உங்களின் வாழ்வில் நீங்கள் இழந்த பல பகுதிகள் மீண்டும் உயிர் பெறும்”.
வாழ்வோடு நடனமாட ஆரம்பியுங்கள். ஜீவன் முக்த வாழ்வு பூத்து, ‘வாழ்வே ஒரு கூத்து’, ‘உலகமே ஒரு கொண்டாட்ட மேடை,’ என்பது அனுபவமாகும்.

ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
உள்ளே இருக்கும் ரத்தினங்களில் சில...
- நீங்கள் விலை மதிக்க முடியாத வைரம்
- வாழ்வின் இடிபாடுகளையெல்லாம் ஈடுகட்டிவிடலாம்
- சாதனையின் அறிவியல்
ஐம்புலன்களும் அற்புதமாக இயங்க ▪ அழகாயிருக்க, ஆரோக்கியமாயிருக்க மூன்று நுட்பங்கள் ▪ மனச்சோர்வை எளிதில் தாண்டலாம் ▪
- உடலுக்குள் அமிர்த மழை
- நிம்மதியின் சூட்சுமம்
- நீங்கள் எப்படியிருந்தாலும் சஞ்சலப்பட வேண்டியதில்லை
நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கான தீர்வுகள் ▪ செல்வங்களை அதிகரிக்கும் செல்வம் ▪ ஆசைகளை அடையும் சக்தியை பெறுவதே ஆன்மீகம் ▪
இப்படி முத்து முத்தாய் வாழ்வியல் தீர்வுகளை அளிக்கும் ஆனந்த கருவூலம் இந்த புத்தகம்.
பரமஹம்ஸ நித்யானந்தர் பற்றி...
21-ஆம் நூற்றாண்டில் மெய்ஞானத்தோடு விஞ்ஞானத்தை சமைத்து வழங்கும் ஞான சத்குருநாதர்.
உலக அமைதியை உடனடியாக ஏற்படுத்தும் நேரடித்தீர்வான ஜீவன் முக்தர்களை உருவாக்குவதே என் பிறப்பின் நோக்கம் எனும் அவதாரபுருஷர்.
யோகம், தியானம், தீக்ஷைகள், தியான சிகிச்சைகள் மூலமாக தனிமனிதர்களின் வாழ்வை உயர்த்துவதற்காக, தன்னுடைய ஒரு நாளில் 20 மணி நேரத்தை பொதுமக்களுக்காகவே பயன்படுத்தும் தியாக புருஷர்.
மக்கள் சேவைக்காக 12,000 மேல் தியான சிகிச்சையாளர்களை உருவாக்கி, 300 சன்யாசிகளை உருவாக்கி, சேவைக்காகவே உருவாக்கப்பட்ட 120 தியானபீடங்களின் மூலமாக, 33 நாடுகளில் சேவைகளை செய்துவரும் ஞான புருஷர்.
|

நித்யானந்த தியானபீடம் | நித்யானந்த தியான பீடம், நித்யானந்தபுரி, மைசூர் ரோடு, பிடதி, பெங்களூரு - 562109 கர்நாடகா. | ISBN 1-60607-089-4 Ebook ISBN: 979-8-88572-051-9 978-1-60607-089-5 | விலை ரூ. 200/- |