தொல்லைகள் ஓடிப்போகும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
தியானம் செய்ய சிறந்த இடம் எது?
உழவர் சந்தைகூட சிறந்த இடம் தான்.
அவ்வளவு கூச்சலுக்கும், சத்தத்திற்கும் இடையில் அமைதியாவது எப்படி சாத்தியம்?
அருமையான சொற்றொடர் ஒன்று...
If meditation at market place is not possible, then meditation at silent place is also not possible.
வெளி கூச்சலல்ல, உள் கூச்சலே உங்களைப் பாதிக்கிறது.
வெளி அமைதியல்ல, உள் அமைதிதான் உங்களின் நிஜத் தேவை.
ஒருவர் தனக்குள் அமைதியை உருவாக்கிவிட்டால், அவர் கலவர பூமியில்கூட கலங்காமல் இருப்பார். கட்டுப்பாடுகள், கெடுபிடிகள் அதிகம் நிறைந்த சமூகத்தில்கூட சுமுகமாய் வாழ்வார்.
அப்படியா?
ஆம்!
உண்மையைச் சொல்ல வேண்டுமானால்,
உங்களை யாராலும் அசைக்க முடியாது, உங்களைத் தவிர யாராலும் உங்களைக் காப்பாற்றமுடியாது.
கடவுளால் கூடவா காப்பாற்றமுடியாது?
கண்களை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிடும்.
முன்னால் இருக்கும் உலகையே ஒரு இன்ச் கண் இமை மூடுவதால் காணாமல் போகச் செய்துவிட முடியும்.

அதேபோல் தான், திறந்த மனமில்லாத ஒரு தன்மையானது, கடவுளே அருகில் இருந்தால்கூட அவரை உணரவிடாது.
திறந்த மனம் கொண்ட ஒருவரால்தான் கடவுளை எளிதில் இனங்காண முடியும். இவர்கள் நிச்சயம் காப்பாற்றப்படுவார்கள்.
கடவுள்களா?
கடவுள்கள்தான்.
பிச்சைக்காரர்கள் என நினைத்து நம்மால் ஒதுக்கப்படும் மனிதர்களில் எத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள் என உங்களுக்குத் தெரியுமா?
அவர்களில் எத்தனைபேர் ஞானிகள் என பொதுமக்களுக்குத் தெரிவதில்லை.
பிச்சைக்காரர்கள் எப்படி ஞானிகளாக இருக்க முடியும்?
கொஞ்சம் திறந்த மனத்தோடு கேட்டால் புரிந்துகொள்வீர்கள்.
புத்தர் பிக்ஷை எடுத்து வாழ்ந்தார். சிவன் கையில் திருவோடு இருக்கும், இப்படிப் பல ஞானிகளைச் சொல்லமுடியும்.
எல்லா ஞானிகளும் தங்களை ஞானிகள் என வெளிப்படுத்திக் கொள்வதில்லை. அதற்கான இறைசக்தியின் ஆணைபெற்ற சிலர் மட்டுமே உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு ஞானத்தை அருளும் அளவுக்கு தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.
வெளிப்படுத்திக் கொள்ளாத ஞானிகள்...
மனத்தைக்கூட பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆனந்தத்தில் இருப்பார்கள். அவர்களால், உடலை பயன்படுத்திப் பேசுவது, வேலை செய்வது, சம்பாதிப்பது என்பதெல்லாம் முடியாது.
இப்படிப்பட்ட சக்திவாய்ந்த மனிதர்களும் நம்மிடையே உலா வருகிறார்கள். இவர்களிடமிருந்து நாம் பெறக்கூடிய சிறந்த பலன்களை இழந்துவிடக் கூடாது.
இப்படிப்பட்ட சக்திவாய்ந்த மனிதர்களை இழக்காமல் இருக்க என்ன செய்வது?
எடுத்த எடுப்பிலேயே யாரையும் அவமதிப்பது, அவரைப்பற்றி ஒரு தவறான முடிவுக்கு வருவது என்ற இரண்டை தடுத்தால் போதும்.
அடுத்து யாரைப் பார்த்தாலும் அவரை நட்புறவோடு பார்ப்பது, வெறுப்பில்லாமல் பக்தியுணர்வோடு பார்ப்பது என்ற இந்த இரண்டைச் செய்தால் போதும், மனம் திறந்து கொள்ளும். திறந்த மனம் கொண்ட ஒருவர், ஆத்மாவையே திறக்கவல்ல மகானை இழக்க மாட்டார். அவர் நிச்சயம் ஆனந்தமடைவார், ஆசீர்வதிக்கப்படுவார்.
திறந்த மனமில்லாத ஒருவர் கூட ஆனந்தமாய் இருப்பதற்கான வழி ஒன்றைச் சொல்லுங்கள்?
நீங்கள் மகிழ்ச்சியாயிருந்த நிமிடங்களை மட்டும் நினைவில் இருக்க அனுமதியுங்கள். நீங்கள் துக்கமாய் இருந்த நிமிடங்களை நினைவில் அல்ல, கனவில்கூட இருக்க அனுமதிக்காதீர்கள்.
> யாரைப் பார்த்தாலும் அவரை நட்புறவோடு பார்ப்பது, வெறுப்பில்லாமல் > பக்தியுணர்வோடு பார்ப்பது என்ற இந்த இரண்டைச் செய்தால் > போதும், மனம் திறந்து கொள்ளும்.
மனிதர்கள் வேறுபடுவது எதனால்?
உங்கள் துக்கங்களுக்கு முக்கியத்துவம் தருகிறீர்களா? இல்லை ஆனந்தம் நோக்கி உங்களை அழைத்துச் செல்லும் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் தருகிறீர்களா? என்பதைப் பொருத்து, ‘நீங்கள் யார்?’ என்பது முடிவாகிறது.
ஆனந்தத்திற்கு முக்கியத்துவம் அளியுங்கள், ஆனந்தமாவீர்கள்.
ஆத்ம தியானம்
சுற்றியிருப்பவர்கள் தரும் தொல்லை தாங்க முடிவதில்லையே ஏன்?
“பூங்காவனத்தில்கூட காதல் தோல்வியால் கவிழ்ந்து கிடக்க முடியும். பாலைவனத்தில் இருக்கும் பாறையில்கூட தன் மழலைச் சிரிப்பைக் காண முடியும்.”
நீங்கள் எந்த நினைவுகளை பிடித்துக்கொண்டிருக்கிறீர்களோ, அந்த நினைவுகள்தான் உங்களைத் தாக்கும்.
அப்படியா சொல்கிறீர்கள்!?
“ஆம்!”
உங்களைச் சுற்றியிருப்பவர்கள் தொல்லை தருவது சில நிமிடங்கள்தான் இருக்கும்.
நிஜத்தில்,
தொல்லைகள் தொல்லைகளைத் தருவதில்லை. தொல்லைகளைப் பற்றிய நினைவுகள் தான் தொல்லை தருகின்றன.
எனவே,
நீங்கள் விடுபடவேண்டியது தொல்லைகளிலிருந்தல்ல, தொல்லை தரும் எண்ணங்களிலிருந்து தான்.
