முன்னுரை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை கேட்பவருக்கு பதிலளிக்கிறேன்.
– பரமஹம்ஸ ஸ்ரீ நித்யானந்தர்.
பரமஹம்ஸரின் பதில் சொல்லும் விதம் தனித்துவம் வாய்ந்தது. கேட்ட கேள்விக்கு பதிலளிப்பது எளிதான விஷயம். அறிவாளியாக இருந்தால் போதும் பதில் சொல்லி விடலாம்.
கேள்விக்கும் கேட்பவருக்கும் சேர்த்து பதில் சொல்வதற்கு அளவு கடந்த கருணையும், மனம் தாண்டிய புரிந்து கொள்ளுதலும் அவசியம். இது ஒரு ஞானியால் மட்டுமே சாத்தியப்படும்.
மனக்குழப்பத்தின் ஒரு சிறு கீற்றுதான் கேள்வியாக வெளிப்படுகிறது. உள்ளிருக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள், ஏக்கங்கள் மற்றும் தேடுதல்களை சில வார்த்தைகளே கொண்ட சில வரி கேள்வியால் முழுவதுமாக வெளிப் படுத்திவிட முடியாது.
தனி மனிதனின் மனதின் ஆழத்தில் புதைந்திருக்கும் மனவேதனைகளுக்கே பதில் தேடுகிறான் மனிதன்.
வேதனையை வெளிப்படுத்த கேள்விகளை துருப்புச் சீட்டாக மனிதன் பயன்படுத்துகிறான்.
எப்போதுமே பரமஹம்ஸர் கேள்வி என்னும் துருப்புச் சீட்டை பயன்படுத்தி - கேட்டவரின் வேதனையை குணப் படுத்த வழி கூறி கேட்டவருக்கும், கேள்விக்கும் சேர்ந்து பதிலளிப்பார்.
இதுவரை பரமஹம்ஸர் அளித்த பதில்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கேள்விகளை மட்டும் தொகுத்து அமைதியின் முழக்கம் என்ற தலைப்பில் சிறிய புத்தகமாக வெளியிடுகிறோம்.
இப்படிக்கு
தியானபீடம்