ஆனந்தமாக இருங்கள்!!!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
'உடல் நலம்,
செல்வ வளம்,
இனிமையான உறவுகள்,
ஆனந்தம்,
ஜீவன் முக்தி
மற்றும்
பூர்ணத்துவமான வாழ்வு
- இவையனைத்தையும் உங்களால் உருவாக்க முடியும்!'
நீங்கள் நினைத்தவற்றையும் நினைக்கவே முடியாதவற்றையும் அடைவது சாத்தியமே. அதை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்காகத்தான் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
உங்களின் ஆழமான எண்ணத்தை நிஜமாக்குங்கள்!

நான் இரண்டு விஷயங்களை உங்களுக்கு இங்குத் தரப்போகிறேன். ஒன்று, உங்கள் எண்ணங்களை நிஜமாக்கிடும் கல்பதரு தரிசன விஞ்ஞானம். இரண்டாவது, உங்களின் ஒரு எண்ணத்தை நிஜமாக்கிடும் வரம். உங்களின் ஒரு எண்ணத்தை நான் நிஜமாக்கிக் காட்டுகிறேன். அப்போது நீங்கள் இந்தக் கல்பதரு தரிசன விஞ்ஞானத்தின் சக்தியைப் புரிந்துகொள்வீர்கள்; அதனை உங்கள் வாழ்க்கைமுறையாக்குவீர்கள்.
-பரமஹம்ஸ நித்யானந்தர்
உங்களுக்குள் இருக்கும் தெய்வீக சக்தி


நீங்கள் ஒவ்வொருவருமே... உங்கள் உணர்வுக்குள், அதாவது ஹ்ருதய கர்பத்துக்குள் உங்கள் எண்ணத்தை நிஜமாக்கும் சக்தியைச் சுமந்துகொண்டு இருக்கிறீர்கள்.
உங்கள் உள் உணர்வு, ஒரு தாயின் கர்ப்பப்பை போன்றது. எப்படி ஒரு தாயின் வயிற்றுக்குள் ஒரு குழந்தை வளர்கிறதோ, அதேபோல் உங்கள் எண்ணங்களும் உங்கள் உள் உணர்வுக்குள் வளர்ந்து உருபெற்று, உலகில் பிறக்கிறது.
கல்பதரு தியான வகுப்பில், உங்கள் எண்ணத்தை நிஜமாக்கிடும் வரத்தை உங்களுக்குத் தருவது மட்டுமல்லாமல், தீட்சையின்போது சக்தியை ஆசீர்வாதமாக அளித்து, உங்கள் எண்ணத்தை நிஜமாக்கவல்ல உங்களின் சொந்த சக்தியையும் விழிப்படையச் செய்கிறேன்.
இந்த ஞான சக்தி, உங்கள் குறிக்கோளை அடைவதற்கு உங்களுக்கு அருள்புரிகிறது.
உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே தலைவராக விளங்கவும், உங்கள் எதிர்காலத்தை நீங்களே படைத்துக்கொள்ளும் ஒரு திறன்மிகு படைப்பாளராகத் திகழவும் உங்களை ஆசீர்வதிக்கிறேன்.
> உங்கள் எண்ணத்தை
> நிஜமாக்கக்கூடிய ஆற்றல்
> உங்கள் உணர்விற்கு உள்ளது.
> உங்கள் உணர்வே உங்களின்
> சொந்த தெய்வீக சக்தி.
SDHD (Self-doubt, Self-hatred, Self-denial)-என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் வார்த்தையின் தமிழ் பொருள்: ‘சுயசந்தேகம், சுய வெறுப்பு, சுய மறுப்பு’ என்பதாகும்.
SDHD- இன்றைய மனிதகுலத்தைப் பீடித்திருக்கும் மிகப்பெரிய நோய் இதுவே!
சுய சந்தேகம் (Self-doubt)-உங்களைப் பற்றிய உறுதியான கருத்தோ அல்லது தீர்மானமோ இல்லாததிருத்தல். சுய வெறுப்பு (Self-hatred)- உங்களை எதற்குமே லாயக்கற்றவராக உணர்தல். சுய மறுப்பு (Self-denial)-உங்கள் கனவுகள் ஒருபோதும் நிவேற்றப்படமுடியாதவை என்று உணர்வது மட்டுமல்லாமல், அவை எப்போதுமே நிறைவேறப்போவதில்லை என்றும் தீர்மானிப்பது.
SDHD ன் விளைவாக, இறுதியில் உங்களை நீங்களே கைவிட்டுவிடுகிறீர்கள். இது சுய அழிவுக்கு (Self-destruction) வழிவகுக்கும். துரதிர்ஷ்டவசமாக, ‘நீங்கள்’ என்று எதை நீங்கள் நம்பிக்கொண்டிருக்கிறீர்களோ, அதை ‘சுயசந்தேகம், சுய வெறுப்பு, சுய மறுப்பு’ -இம்மூன்றும்தான் வடிவமைத்திருக்கின்றன. இம்மூன்றைக்கொண்டுதான் உங்களை நீங்கள் வடிவமைத்திருக்கிறீர்கள். ஆனால் ஒரு நல்ல செய்தி, இந்த நோய்க்கான மருந்து இருக்கிறது. அதுவே பூர்ணத்துவ கிரியா; அதனை தமிழில், ‘நிறைவு செய்தல் அல்லது நிறைவேற்றுதல் என்கிறோம்.
