KAILASA Library/காற்றின்/அறிவு அனுபவம்,Sign in
காற்றின்

அறிவு அனுபவம்,

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

எல்லாம் தெரிந்திருக்கும்
எதுவுமே புரிந்திருக்காது
அறிவாளிக்கு

எவ்வளவு தெரிந்ததோ
அவ்வளவும் புரிந்திருக்கும்
அனுபவசாலிக்கு

தெரிதலையும்
புரிதலையும் தாண்டி
ஆனந்த அனுபவமாகியிருக்கும்
அனுபூதியானவனுக்கு

அறிவு வெறும் செறிவு!
அனுபவம் பெரும்பாக்கியம்!
அனுபூதி அளவில்லா ஆனந்தம்!

உள்ளும் புறமும்
எங்கும் நிறைந்திருக்கும்
பிரபஞ்சபேரியக்க பெருஞ்சக்தியில்
திளைத்திருப்பதே - அனுபூதி

வாழ்க!
அடைக!
ஆகுக!
அளவில்லா ஆனந்த அனுபூதியில்...

Portrait