ஆதிசைவம் ஓர் அறிமுகம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பரமஹம்ஸ நித்யானந்த சுவாமிகள் ஆதிசைவத்தைப் பற்றி அழகு தமிழில் அளித்த சொற்பொழிவுகளின் சாரமே இந்நூல். இதில் ஆதிசைவத்தைப்பற்றிய அறிமுகமும், எம்பெருமான் சதாசி வன் நேரடியாக அளித்த வேதாந்த, சித்தாந்த, ஆகமாந்த சத்தியங்களின் சாரமும், சைவத்தின் மாண்பும், சைவம் வாழ்ந்த அடியார்களின் மாண்பும் தொகுத்தளிக்கப்பட்டிருக்கிறது.
ஆதிசைவத் தமிழில் எனும்போது, நாம் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இப்போது வழக்கிலிருக்கும் தமிழ் வேறு, ஆதிசைவத் தமிழ் வேறு.
இந்நூலில் பெருமானே வளர்த்த, வாழ்ந்து காட்டிய வாழ்க்கைமுறையையே ஆதிசைவம் என்ற தலைப்பில் பரமஹம்ஸர் அருளியிருக்கிறார். மேலும் பக்தர்களுக்காக பரமன் நடத்திய திருவிளையாடல்களையும், பரமனை அடைய ஒரு அற்புத வழியாக சைவத்தை வாழ்ந்த பக்தர்களின் சரிதத்தையும் அழகு தமிழில், அற்புத நடையில் அருளியிருக்கிறார் நம் பரமஹம்ஸர்.
குளவி புழுவைக் கொண்டு சென்று, கூடு செய்து, வாயிலில் அமர்ந்து ஓங்கார பிரணவத்தைச் சொல்லிச் சொல்லிச் சொல்லியே, புழுவைக் குளவியாக்கும். அதைத்தான் குரு செய்கிறார். ஜீவனைக் கொண்டுபோய் பூலோகக் கைலாயமாம் பிடதி க்ஷேத்ரக் கூட்டில் வைத்து, ‘சிவোহம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம்’ என்று சிந்தையே கரைந்துபோகும் அளவிற்குச் சொல்லி, ஜீவனுக்குள் ‘அகம்’ அற்றுப்போகும் வரை கொட்டிக் கொட்டிக் கொ ட்டி, ஜீவன் ‘அகம்’ அற்றுப்போய் சிவோஹம் ஆகின்றவரை இதைச் செய்து ஜீவனை சிவோஹமாக்குகிறார். ஆதிசைவத் தமிழிலே இதனைப் பிரம்மகீட நியாயம் என்று சொல்வோம்.
குளவி, தன்னுடைய ரீங்காரத்தால் ஒரு புழுவை குளவியாக்குவதுபோல, குருவினுடைய வார்த்தைகள், கேட்பவரை ‘நான்’ என்ற நிலையிலிருந்து ‘இருப்புத்தன்மை’ நிலைக்கு உயர்த்தும். குருவினுடைய வார்த்தைகள் எந்த உணர்வில் இருந்து வெளிப்படுகிறதோ அதே உணர்வை, கேட்பவர்களுக்கும்

கொடுக்கும் சக்தி வாய்ந்தது. குருவின் சாநித்தியத்தில் ஒருவர் இருந்து ச த்தியங்களைக் கேட்கும்போது, ஒருவர் எளிதாக ஞானநிலையை அடைய முடியும்.
ஆதிசைவம் - அந்தம் இல்லா ஆதி உடையது
ஆதிசைவத்தை அறிமுகப்படுத்த முயற்சிசெய்வது, ஆண்டவனையே, சி வனையே அறிமுகப்படுத்த முயற்சிப்பதற்குச் சமம். அது சாத்தியம் இல்லாதது என்பது மட்டும் அல்லாது, வாழ்ந்து மட்டுமே பார்த்து, அனுபவித்து மட்டுமே பார்க்கக்கூடியது என்கின்ற தகுதி உடையது ஆதிசைவம்.
ஆண்டவனை அறிமுகப்படுத்த இயலாது, வாழ்ந்து மட்டும்தான் பார்க்க இயலும். ஆதிசைவத்தையும் அறிமுகப்படுத்த இயலாது, வாழ்ந்துதான் பார்க்க இயலும். 'அறிமுகப்படுத்த இயலாது' என்கின்ற அறிமுகத்தை வேண்டுமானால் அளிக்க இயலும்.
ஆதிசைவம், இந்தப் பேரருள் வடிவான ஞானப் பிரபஞ்சத்தில் என்றென்றும் விரிவடைந்துகொண்டே சென்று கொண்டேயிருக்கும். மரணம் இலாத சி ரஞ்சீவியான, நிரந்தரமான இந்தப் பிரபஞ்சத்தில் உயிர் தோன்றியபொழுது, அவ்வுயிர் எவ்வாறு தன் வாழ்க்கையை மேம்படுத்தி, பிரபஞ்சத்தின் எல்லா சக்திகளையும் தன் உள்ளிருந்து வெளிப்படுத்தி, 'கடவுள் துகள்' என்கின்ற நிலையிலிருந்து 'கடவுளாக' மாறுவது எப்படி, தன்னுடைய இருப்பு நிலையை... பிரபஞ்சத்தின் வடிவமாக, அகண்ட சச்சிதானந்த பரிபூரண நித்யானந்த நிலையில் நிலைநிறுத்திக் கொள்வது எப்படி என்கின்ற அறிவியலே ஆதிசைவம், வாழ்வியலே ஆதிசைவம்.
இப்போது நான் கொடுத்த இந்த வரைமுறை - பள்ளியில், ஒரு பக்கக் கட்டுரை வரைக என்று ஒரு கேள்வியைக் கேட்டு, பத்து மதிப்பெண்களுக்கு அந்தக்
கேள்வியை நிர்ணயித்தால், ஒரே வரியிலே நீங்கள் விளக்கம் கொடுக்கற மாதிரி, அறிமுகப்படுத்த முடியாத ஆதிசைவத்தை, சில வரிகளில் சொல்ல நான் செய்த முயற்சிதான் இது.
உயிர் பிரபஞ்சத்தில் மலர்ந்தவுடன், ‘கடவுள் துகள்' என்கின்ற நிலையிலிருந்து 'கடவுள்' நிலையை உணர்வது, கடவுள் தன்மையைத் தனக்குள்ளிருந்து வெளிப்படுத்துவது, கடவுள் நிலையிலேயே இருப்பு கொள்வது என்கின்ற மிகப்பெரிய வழியின் அறிவியல், அதை அடைவதற்கான, வாழ்வதற்கான அறிவியல் ஆதிசைவம்.
வரலாற்றை வைத்தோ, நிலைகொண்ட புவியியல் சூழல்களைச் சார்ந்தோ ஆதிசைவத்தைச் சுருக்குவது சாத்தியமே இல்லாதது. ஏனென்றால், வரலாறு... துவக்கமும் முடிவும் இருக்கின்ற ஒன்றுக்குத்தான் இருக்க முடியும். ஓரிடத்தில் இருந்து, இன்னோர் இடத்தில் இல்லாத ஒன்றைத்தான், புவியல் ரீதியாக நாம்

அடையாளம் காட்ட முடியும்.
அந்தம் இல்லாத ஆதி உடையது, ஒன்று இரண்டாக மாற முடியாத அளவுடையது ஆதிசைவம். அதனால், வரலாறு சார்ந்தோ, புவிஇயல் சார்ந்தோ ஆதிசைவத்தை விளக்குவது சாத்தியமில்லாதது, வரையறுப்பது சாத்தியமில்லாதது.
மதம் உருவாவதற்கு முன்பே மலர்ந்த மலர்
ஒரு காலத்தில் தோன்றி, ஒரு காலத்தில் இல்லாமல் போவது கிடையாது ஆதிசைவம். ஓரிடத்தில் இருந்து, ஓர் இடத்தில் கடைபிடிக்கப்படாமல் போவது கிடையாது ஆதிசைவம்.
புவிஈர்ப்பு விசை எப்படி புவி முழுக்க இருக்கின்றதோ, அதேபோல, பிரபஞ்சம் சில குணங்களால், சத்தியங்களால் முழுமையாக நிறைந்து, அந்தச் சத்தியங்களைச் சார்ந்து இயங்குகிறது. அந்தச் சத்தியங்கள்தான் ஆதிசைவம்.
புவிஈர்ப்பு விசை ஓர் இடத்தில் இருக்கிறது, இன்னொரு இடத்தில் இல்லை என்று சொல்ல முடியுமா? முடியாது. எப்படிப் புவி முழுவதும் புவிஈர்ப்பு விசை நிறைந்திருக்கின்றதோ, அதுபோல பிரபஞ்சம் முழுவதும் சில விதிகள், சத்தியங்கள், சாத்தியங்கள், கருத்துக்கள், உண்மைகள் நிறைந்து இந்தப் புவியே இயங்குகிறது. இந்தப் பிரபஞ்சமே இயங்குகிறது. அந்தச் சத்தியங்களை, அந்தப் பிரபஞ்சமே குறை இலாது, முறைதவறாது வெளிப்படுத்திய வாழ்வியல்முறைதான் ஆதிசைவம்.
பிரபஞ்சப் பேரருள், பிரபஞ்சப் பரம்பொருள் வடிவம், வடிவமின்மை என்னும் நிலைகளைக் கடந்து தன்னுடைய சாந்நித்ய இருப்பின் மாத்திரத்தாலேயே வெளிப்படுத்திய சத்தியங்களைத்தான் வேதங்கள் என்று சொல்கிறோம். வே தங்களின் சாரம் உபநிடதங்கள்.
பிரபஞ்சப் பேரருள், அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரம்பொருள் தன்னுடைய நித்யானந்த நிலையில் இருந்தவாறே, தானே தன் மயமாய் தனக்குள்ளேயே ரசித்துக்கொண்டிருக்கும், தனக்குள்ளேயே அதை வாழ்ந்து கொண்டிருக்கும், தனக்குள்ளேயே தன்னையே ருசித்துக்கொண்டிருக்கும் அந்தத் தன்மயானந்த நிலையில் இருந்தவாறே வெளிப்படுத்திய, உணர்த்திய பிரபஞ்சத்தின் ச த்தியங்கள்தான் வேதங்கள். அதன் சாரம் உபநிடதங்கள்.

தன் இருப்பினாலேயே, தன்னுடைய இருப்பின் சாந்நித்யத்தினாலேயே, சாந்நித்ய பலத்தினாலேயே வெளிப்படுத்திய சத்தியங்கள் வேதங்களும் உபநிஷதங்களும்.
அதே பிரபஞ்சப் பேரருள், அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரம்பொருள் தன்னுடைய நித்யானந்த நிலையிலேயே, தான் இருப்பது மட்டுமல்லாது, உயிர்கள் எல்லாம் உய்வடைய, உத்தம நிலை அடைய, தன் நிலைதனை உயிர்கள் எல்லாம் உணர்ந்திட சதாசிவனாய் திருமேனி கொண்டு உலகத்திற்கு வெளிப்படுத்தியவையே ஆகமங்கள்.
ஒவ்வொருவரும் பிரபஞ்சப் பேரருள் நிலையிலிருந்து சுத்த சிவாத்வைத ச த்தியத்தை வாழ்ந்திட, சுத்த சிவாத்வைத சத்தியத்தில் நிலைபெற்று பொங்கி மலர்ந்திட, திருமேனி தாங்கி சதாசிவனாய் பெருமானே உலகிற்காக வெளிப்படுத்திய சத்தியங்கள்தான் ஆகமங்கள்.
வேதங்களைச் சார்ந்து, உபநிடதங்களைச் சார்ந்து பெருமானே வெளிப்படுத்திய ஆகமங்களைச் சார்ந்து, உலகமெல்லாம் உய்வதற்கான ஜீவன்முக்த விஞ்ஞானமாக, வாழ்வியல் நெறியாக மலர்ந்ததுதான் ஆதிசைவம்.
ஆதிசைவம் ஆதி மதம் மட்டும் அல்லாது, மதம் என்கின்ற கருத்து உருவாவதற்கு முன்பாகவே மலர்ந்த ஒரு ஆன்மீக வாழ்வியல் நெறி. வேறு வேறு நாடுகளில், இடங்களில் இருக்கின்ற மக்கள் கல்லாலே ஆயுதங்கள் செய்து, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு, காட்டு மிராண்டிகளாக வாழ்ந்திருந்த காலத்தில், நாங்கள் 'கல் ஆலயம்' செய்து, ஜீவன்முக்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த வாழ்வியல் நெறி ஆதிசைவம்.
காமிக ஆகமம் - வாழ்வை வழிநடத்தும் விஞ்ஞானம்
மொழி இல்லாத காலத்தில், மேலை நாட்டவர்கள், பல்வேறு கண்டங்களில் இருந்த மக்கள் ஹீன சப்தங்களால் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தி கொண்டிருந்த காலத்தில், முறையான செம்மொழியான தமிழ் என்னும் அருமையான மொழியில், வாழ்வியல் சத்தியங்களை ஆகமங்களாக நாம் வாழ்ந்து கொண்டு இருந்த வாழ்வியல் நெறி ஆதிசைவம்.
பல பேர் கருதுவதுபோல, ஆகமங்கள் சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்டது என் பது பொய். அது மிகப்பெரிய தவறான கருத்து. உண்மையில், சம்ஸ்க்ருத வல்லுனர்களால் ஆகமத்தின் 50 சதவிகித பகுதியைக்கூட மொழிபெயர்க்க இயலவில்லை என்பதுதான், நான் நேரடியாகப் பல சம்ஸ்க்ருத அறிஞர்களோடு தொடர்புகொண்டு வேலைசெய்து பார்த்ததன் இறுதி உண்மையாக அறிந்த ச த்தியம்.
உண்மையில், ஆகமங்கள் சம்ஸ்க்ருதத்திற்கும் தமிழுக்கும் மூல மொழியான தமிழ் என்னும் மொழியில்தான், கிரந்த எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு, தமிழ் என்னும் மொழியின் இலக்கணம் சார்ந்து அருளப்பட்டது. எம்பெருமானே மொழியின் இலக்கணமும் தந்து, எம்பெருமானே வாழ்வியல் நெறியும் தந்து, எம்பெருமானே ஜீவன் முக்த விஞ்ஞானம் மாத்திரம் அல்லாது, உணவு ச மைக்கும் அடிப்படை விதிகளையும், உடை நெய்தல் முறை மாத்திரம் அல்லாது, உடையுடுத்தும் முறைகளையும் - 35 விதம் ஆண்களுக்கு, 35 விதம் பெண்களுக்கென மொத்தம் 70 விதமான உடையுடுத்தும் முறைகளையும் தந்த ருளியிருக்கிறார்.
ஆதிசைவர்கள் தங்களுடைய தொழில் திறமை சார்ந்து - யார் இந்த வாழ்வியல் முறையான ஆதிசைவத்தை உலகிற்கு உபதேசித்து உரைக்கவேண்டிய நிலையில் இருக்கிறார்கள், யார் ஆட்சி செய்து நாட்டின் முறைமையையும் தகைமையையும் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள், யார் வியாபாரம் செய்ய வேண்டிய கடமையில் இருக்கிறார்கள் என்று - ஒவ்வொருவரும் தங்கள் தங்களுடைய விருப்பம் மற்றும் வேலைகள் சார்ந்து தங்களைத்தாங்களே பல்வேறு குழுக்களாக மிகத்தெளிவாக பிரித்துக்கொண்டார்கள்.
இந்தப் பிரிவு முறை, ஒரு நகரம் அமைக்கப்படும்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்குமான இருப்பிடம் இருக்க வேண்டிய இடவரிசை முறை, உணவுமுறை, உடைமுறை மற்றும் அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்கின்ற வாழ்வியல் முறை என அனைத்தையும், எண்ணிக்கூட பார்க்க முடியாத அளவிற்கு மிகத் தெளிவாக வரையறுத்நிருந்தனர்!
வீட்டில் வளர்ப்புப் பிராணிகளைப் பராமரிக்க வேண்டுமென்றால்கூட, எந்த இடத்தில் கோசாலை இருக்க வேண்டும், எந்த இடத்தில் குதிரையாலயம் இருக்க வேண்டும், எந்த இடத்தில் காவலுக்கான நாய்ப் பட்டிகள் இருக்க வேண்டும் என்கின்ற அளவிற்கு மிக நுட்பமாக வகைப்படுத்தினர்.
திருநீறு பஸ்மத்தை உருவாக்க வேண்டும் என்றால், எந்த நிறமான பசுவின் சாணத்தை, எந்தவிதத்தில் எடுத்தும், எப்படித் திருநீற்றை உருவாக்க வேண்டும் என்பதைத் தெளிவாக அறிந்து வைத்திருந்தனர்.
எம்பெருமான் ஏறத்தாழ சில கோடி ஸ்லோகங்கள் மூலமாக மிக மிக நுட்ப மாகவும் நுணுக்கமாகவும் ஆக்கியருளியிருக்கிறார், ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள், சில கோடி... ஏனென்றால் காமிக ஆகமத்தை எம்பெருமான் விவரிக்கும்பொழுது, கோடி கோடி ஸ்லோகங்கள் அருளியதாகச் சொல்லுகின்றார். இப்பொழுது நம்முடைய கைக்குக் கிடைத்திருப்பவை 20 லக்ஷம் மாத்திரமே.
காமிக ஆகமம், காரண ஆகமம் முதலாகிய 28 ஆகமங்களும், அதன் உப ஆகமங்களாக 108 ஆகமங்களும், அதுதவிர இவற்றின் பாகமாக 64 தந்திரங்களையும் பெருமானே நேரடியாக அருளி உள்ளார். வேதம், அதன் சாரமான உபநிடதம், அதை வாழும் முறையான ஆகமம் - இந்த மூன்றையும் சார்ந்த வாழ்வியல் முறையைத்தான் ஆதிசைவம் என்று சொல்லுகின்றோம். வேதங்களைப் பொதுநூலாக வைத்து, ஆகமங்களைச் சிறப்புநூலாய்க்கொண்டு வாழுகின்ற வாழ்க்கைமுறை, ஜீவன் முக்த வாழ்வியல் விஞ்ஞானம்தான்

ஆதிசைவம்.
அவதாரம் - இறைவன் திருமேனி தாங்கி வரும் நிகழ்வு
பிரபஞ்சம் தோன்றிய பொழுதே, உயிரினங்களை உருவாக்கும் பொழுதே எம்பெருமான், மகாதேவன், ஆதிசிவன், ஈசன், அண்ணாமலையான் உலகத்திற்கு அருளிய மிகப்பெரிய நன்கொடை, வாழ்வியல் சாத்திரம், வாழ்வியல் சூத்திரம், வாழ்பவர்கள் அவனை நோக்கிப் பொழியும் தோத்திரம் - இவற்றையெல்லாம் ஒன்று அடக்கி மிகப்பெரிய வாழ்வியல் நெறியாக அருளியதுதான் ஆதிசைவம்.
தானே அந்த உண்மைகளை உலகத்திற்குச் சொன்னது மட்டும் அல்லாமல், எப்பொழுதெல்லாம் மக்கள் அதை மறந்து மாயையிலே சிக்குகிறார்களோ, எப்பொழுதெல்லாம் மூடர்கள்... அரக்கர்கள்... வாழ்க்கையின் அடிப்படை தெரியாதவர்கள் அசுர பலத்தாலே வாழ்வியல் நெறியை அழிக்க முயற்சி த்து, தனக்கும் மற்றவர்களுக்கும் தீங்குசெய்து கொள்ளுகின்ற ராக்ஷஸர்களாக மாறி, உலகத்திற்கு பெருங்கேடு விளைவிக்க முயற்சிக்கின்றார்களோ, அப்பொழுதெல்லாம் தீமையை அழித்து, நன்மையை மலரச்செய்து, சைவத்தைப் புனரமைத்து, வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க மீண்டும் மீண்டும் பெருமானே அவதரிக்கின்றான்.
வேதநெறி தழைத்தோங்க,
மிகு சைவத்துறை விளங்க,
பூதப் பரம்பரை பொலிய
பெருமானே மீண்டும் மீண்டும் அவதரித்து,
தன்னைத்தானே அடையாளம் காட்டி,
தன்மயானந்தத்தில், சின்மயானந்ததில்,
சிவானந்த போதத்தில் ஜீவனெல்லாம் திளைத்திருக்க வழியும் காட்டி, வாழ்வும்
காட்டி, உய்யவும் காட்டி,
உணவாய் ஊட்டி, உணர்விலும் காட்டி, உயிரிலும் காட்டி,
மெய் நினைவும் உயிர் நினைவும் உயிர் உணர்வும் மலர்த்தி,
ஆதிசைவத்தை நம் வாழ்வியல் நெறியாய் மீண்டும் நிறுத்திடவே,
குருவாய் மீண்டும் மீண்டும் வருவாய் எனக் கேட்கும் ஜீவராசிகளுக்காக,
குருவாய் வருவாய் என ஏங்கும் ஜீவர்களுக்காகத்
தன் திருமேனி விட்டு, குருமேனி தாங்கி,
உறும் உலகத்தில் உய்ய வழிகாட்டிடவே,
என்றென்றும் இருந்திருக்கும் அண்டம் இல்லாத ஆதிசைவத்தை

உயிர் கொடுத்துப் புனரமைக்க, மீண்டும் வாழ்வியல் நெறியாய் மாற்றிட, இறைவன் குருமேனி தாங்கி வரும் நிகழ்வுகளைத்தான் அவதாரங்கள் என்றும், விளையாடல்கள் என்றும் ஆதிசைவத்தின் பாரம்பரிய சாத்திரங்கள் தெளிவாய் வகுத்து உலகிற்கு வரைத்து உரைக்கின்றன.
பாலில் நெய்போலே, வேதங்களில் இருக்கும் சத்தியமான நெய்யை, உபநிஷதம் மூலமாய் உயிர்க்குச் சொல்லி, வெறும் நெய்யை உண்பதும் சாத்தியம் இல்லை என்பதனால், ஆகமம் என்னும் உணவாய் சமைத்து, அதில் நெய்யையும் கலந்து, நம் நெஞ்செலாம் இனிக்க, கல் நெஞ்சாய் இருக்கும் மனமெலாம் கரைந்து, நெஞ்சு பஞ்சாக, நெஞ்செலாம் இனிக்க உலகத்திற்கு சொன்ன வாழ்வியல் நெறிதான் ஆதிசைவம்.
ஆகம அங்கங்கள்
ஆகமம் - சரியை, க்ரியை, யோகம் மற்றும் ஞானம் என 4 முக்கிய பகுதிகளாக இருந்து, ஆதிசைவத்தின் வாழ்வியல் முறைகளை நமக்குக் காட்டுகிறது.
சரியை - ஆதிசைவத்தின் வாழ்வியல்முறை. க்ரியை - ஆதிசைவத்தின் வழிபாட்டு இயல் முறை யோகம் - ஆதிசைவ நிலையை உடலையும் மனத்தையும் வைத்து அடைகின்ற முறை. ஞானம் - ஆதிசைவ நிலையில், சிவோஹோம் எனும் ஜீவன்முக்த நிலையில் நிலைபெற்று இருப்பதற்கான சிவபோத, சுகபோத, சிவஞான ரகசிய ச த்தியங்கள்.
சரியை - வாழ்வியல் முறை. துயிலெழுதல், துயிலெழுந்ததிலிருந்து செய்ய வேண்டிய செயல்கள், நாள் முழுக்க உங்கள் உடலும் மனமும் செய்ய வேண்டிய செயல்கள், செய்யக்கூடாத செயல்கள் என்பதில் துவங்கி, உங்கள் உணவுமுறை, உடைமுறை, உறக்கமுறை, உறைவிடமுறை என்னும் எல்லா முறைமைகளையும், வாழ்வியல் சத்தியங்களையும் நெறியையும், சரியை ஆக, சரியாக வாழவேண்டிய முறையைச் சொல்வது சரியை.
க்ரியை - பக்தியால் பொங்கிப் பழுத்து, இறைவனோடு இரண்டற கலந்து இருக்கும் இனிமையான நெறிமுறை க்ரியை. மலர் கொய்வதில் துவங்கி, சந்தனம் அரைப்பது, மாலை சாற்றுவது, ஆத்மார்த்தமாய் இறைவனை வழிபடுவது, பரார்த்தமாக ஆலய வழிபாட்டில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவைவரை, எல்லாவற்றையும் முறையாக, தானே தன்னை வழிபடும் விதியை தவறில்லாது ஜீவன்களுக்கெல்லாம் சொன்ன விதம் க்ரியை.
யோகம் - ஜீவன் சிவனாக மாற, ஜீவன் சிவத்துவத்தை உணர்ந்து, சிவனுடைய அதே உணர்வு நிலையில் சிவமயமாய் ஒளிர்ந்து மிளிர்ந்து, சிவத்துவத்திற்கு தன்னை யோக்கியனாக்கி கொள்ளும் முறை யோகம்.
ஞானம் - சதாசிவனோடு இரண்டறக்கலந்து, இருப்பின் இருப்பினால் இருப்பே இருப்பை உணர்ந்து, உள்ளதை உள்ளபடி உள்ளத்தில் உள்ளி, உள்ளுக்குள் இருந்து, உள்ளே உறைந்திருக்கும் சத்தியத்தை, சதாசிவத்தை, நித்தியத்துவமாய், நினைப்பும் மறப்பும் இலாத நெஞ்சினாய், 'நீர்த்தாரை' போன்று நித்தமும் ச தாசிவத்தில் நிலைத்திருக்கும் நித்தியானந்த நிலையைத்தான் ஞானம் என்று சைவம் விளம்புகின்றது. தாமே சிவமாய், தன்மயமாய், சிவோஹம் என்னும் ஜீவன் முக்த தன்மையில் நிலைத்து இருக்கும் நுட்பம் ஞானம். இதைத்தான் வித்யை என்கின்றோம்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், சைவத்தின் இந்த நான்கு முக்கியமான பாகங்கள், நான்கு படிகள் அல்ல, பாகங்கள். படிகள் என்பது வேறு, பாகங்கள் என்பது வேறு. படிகள் என்றால் ஒரு படியைக் கடந்து மறு படிக்குச் செல்ல வேண்டும், அந்த மறு படியைக் கடந்து மூன்றாம் படிக்குச் செல்ல வேண்டும். மூன்றாம் படி கடந்து நான்காம் படி செல்ல வேண்டும். இது அப்படி அல்ல.

ஒரு படியைக் கடந்து மறு படி செல்வது அல்ல, இவை நான்கும் ஒரே நேரத்தில் வாழ வேண்டியவை.
மனித இனம் - மூடக் கருத்துக்களிலிருந்து வெளியவர வேண்டிய நேரம் இது
மனித இனம், கடந்த சில நூற்றாண்டுகளில் செய்த மிகப்பெரிய தவறு, சரியை, க்ரியை, யோகம் மற்றும் ஞானம் - இந்த நான்கும் ஒன்றிற்கு, அடுத்து ஒன்று அடுத்து படி என்று புரிந்துகொண்டதுதான்.
அதனால்தான் கடந்த இரண்டு மூன்றாயிரம் ஆண்டுகளில், மூடத்தனங்களும் அறிவிலித்தனங்களும் வாழ்வியலை விட்டு மிகவும் ஒதுங்கிய கருத்துக்களாக, மதங்களாக உருவெடுத்தன. சைவம் தவிர வேறு சில மதங்கள் உருவெடுப்பதற்கான மிகப்பெரிய காரணம் மனிதன் செய்த இந்த மூடத்தனமே.
இந்த நான்கும் ஒன்றிற்கு அடுத்து ஒன்று என்று நினைக்கும்பொழுதே, அகங்காரம் பிடித்த சில மனிதர்கள் நான்காவது படிதான் உயர்ந்தது என்று கற்பனை செய்துகொண்டு, அந்தக் கற்பனையினால் முதல் படிகளைக் கடைபிடிக்க வேண்டாம் என்கின்ற மூடத்தனத்தை உருவாக்கிக்கொண்டு, உருவ

வழிபாடே இல்லாத ஒரு மதத்தை உருவாக்க முடியும் என்கின்ற மூடத்தனத் திற்கு, மூர்கத்தனத்திற்கு ‘மதம்’ என்கின்ற கருத்தையும் காட்டி, அதனால் ஏற்படும் மனம் குழம்பிய நிலையினால், உள்ளே இருக்கும் கோபத்தையும் கொந்தளிப்பையும் வெளிக்கொட்டும் நிலைக்கு ‘அறப்போர்’ என்றும், ‘தெய்வப் போர்’ என்றும் பெயரிட்டு, நிஜத்தில் இருந்து மிகவும் விலகி, மாயையில் சிக்கி, எல்லா மூட தன்மைகளையும் மாயைகளையுமே, அஞ்ஞான இருளையே மதமாகவும் காட்டுகின்ற மிகப்பெரும் கொடுமை மனித இனத் திற்கு நிகழ்ந்ததற்கான காரணம், முதல் காரணம்... இந்த நான்கும் ஒன்றிற்கு, அடுத்து மற்றொன்று என்கின்ற தவறான புரிதலாகும்.
இவை நான்கும் அங்கங்கள், படிகள் அல்ல! ஞானியும், திருமேனி வழிபாடு செய்தே தீர வேண்டும். சரியை நிலையிலும் கிரியை நிலையிலும் சொல்லப்படும் திருமேனி தீண்டி வழிபடுவது ஞானநிலை அடைந்தவுடன் தானாய் விட்டுப்போகும் என்று கற்பனைகளையும் கனவுகளையும், ஒன்றை த்தாண்டி மற்றொன்று என்கின்ற மூடக் கருத்துக்களையும் சொல்லி, இல்லல் அளிக்கும் இல்லாத மதங்கள் எல்லாம் இவ்வுலகில் வந்திட, மூடர்களே முதற்காரணம் ஆனார்கள்.
சைவத்திலிருந்து விலகி, பரம்பொருள் சதாசிவன் உலகிற்கு அளித்த ச த்தியமான வாழ்வியல் நெறியிலிருந்து விலகி, ஏற்பட்ட எல்லா மதங்களுக்கும், பணம் சார்ந்த வாழ்க்கை கோட்பாடுகளுக்கும் அடித்தளமே அஞ்ஞானமும் மாயையும்தான்.
ஒரு சின்ன கதை :
ஒரு ஊருக்கு, ஒரு பணக்கார முதலாளி தொழில் தொடங்குவதற்காக வந்தார். இவர் தொழில் தொடங்கப்போவதால் ஊரே வளமாகப் போகிறதென்று ஊரில் இருந்த மக்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள்! தான் பாம்புகள் சார்ந்த ஒரு வியாபாரம் செய்யப்போவதாகவும், ஒரு பாம்பைப் பிடித்து வந்துகொடுத்தால், ரூபாய் 1000 தரப்போவதாகவும் விளம்பரப்படுத்தி, ஊர் முழுக்க சுவரொட்டி ஒட்டினார்.
மக்கள், தங்கள் கண்ணில்பட்ட பாம்பெல்லாம் பிடித்துக்கொண்டுவந்து கொடுத்து, ரூபாய் 1000 பெற்றுச்சென்றார்கள்.
ஒரு வாரம் கழித்து, ஒரு பாம்புக்கு ரூபாய் 2000 தரப்போவதாக அறி வித்து, இரண்டாவது சுவரொட்டி ஒட்டினார். இப்போது மக்கள், கண்ணில் பட்டவை மாத்திரமல்லாது தேடிப்பிடித்துக் கொண்டுவந்து கொடுத்து பணம் பெற்றுச்சென்றார்கள்.
மூன்றாவது வாரம், ஒரு பாம்புக்கு ரூபாய் 5000 தரப்போவதாக அறிவித்து சுவரொட்டி ஒட்டினார். மக்கள், சுற்றியிருக்கும் வயல் காடெல்லாம் துழாவி, இருந்த பாம்பையெல்லாம் கொண்டு வந்தார்கள். இதற்குமேல் சுற்றுப்புறங்களில் பாம்பல்ல, பாம்பு முட்டை கூட இல்லை.
அடுத்த சுவரொட்டி அதிரடியாக வந்தது, ஒரு பாம்புக்கு ரூபாய் 10000 என்று! உடனே மக்கள் சுற்றி இருந்த காடு மேடெல்லாம் திரிந்து, வனம், காடு, ஆரண்யம் என எந்த இடத்திலும் ஒரு பாம்பையும் விட்டுவைக்காமல் கொண்டு வந்தார்கள்.
தமிழில் மட்டும்தான் காட்டுக்கு 3 வார்த்தைகள். மனிதனாலோ வேறு யாராலோ உருவாக்கப்படாமல் வனாந்தரமாக இருப்பது வனம். உருவாக்கினாலும் உருவாக்காவிட்டாலும் கட்டுப்படுத்த முடியாமல் அடர்ந்து கிடப்பது காடு. ரம்யமாக இருப்பதற்காக மனிதன் உருவாக்கியது ஆரண்யம்.
அடுத்து வந்தது அதிரடி அறிவிப்பு, ஒரு பாம்புக்கு ரூபாய் 50000 என்று! சு வரொட்டி ஒட்டிவிட்டு, இரண்டு நாள் முக்கியமான வேலைக்காக வெளியூர் புறப்பட்டுச் சென்றார் முதலாளி. ஊர் மக்கள் எல்லாம், "பாம்பே இல்லையே, 50000 ரூபாய் என்று சொல்லியிருக்கிறார்களே!' என்று புலம்பினார்கள்.
அப்போது, பணக்கார முதலாளியிடம் வேலைபார்க்கும் ஒரு வேலைக்காரன் ஊர் மக்களில் சிலரை அழைத்து, "கவலையேபடாதீர்கள், என் முதலாளி திரும்ப வருவதற்கு இரண்டு நாள் ஆகும். அவர் இதுவரை உங்களிடம் வாங் கிய பாம்புகளெல்லாம் என் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. ஒரு பாம்புக்கு 25000 ரூபாய் கொடுத்துவிட்டு, வேண்டுமென்பவர்களெல்லாம் எடுத்துச் செல்லுங்கள், நாளை காலை, அவற்றைக் கொடுத்துவிட்டு 50000 ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள், அந்த 50000 ரூபாய் வாங்கின பிறகு, எனக்குரிய தர குக் கட்டணமாக 10000 ரூபாய் கொடுத்துவிடுங்கள் என்றதும், வீட்டில் இருந்த 5000 பாம்புகளும் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன. மறுநாள் காலை, பாம்பு வாங்கிப் போனவர்களெல்லாம் வந்தார்கள். ஆனால் வேலையாள்தான் அங்குக் காணோம்.
ஊர் மக்கள் சொந்த ஊர் பாம்பை ஆயிரத்திற்கும் இரண்டாயிரத்திற்கும் விற்று, 25000 ரூபாய்க்கு வாங்கியதுதான் மிச்சம், இதுதான் பணம். இதுதான் பங்குச் சந்தை.
பொருளுக்கு மதிப்புண்டு என்று சொல்பவனும், மதிப்பில்லை என்று சொல்பவனும் உறவாடும் களவாளிகள். அவர்கள் உறவாடும் களவாணிகள் என்று சந்தேகப்படாதவரை நாம் ஏமாற்றப்படுவோம்.
தன்னுடைய பங்களிப்பு எதுவுமே இல்லாமல், பங்குச்சந்தையை உருவாக்கி, எதையோ வாங்கியதுபோலவும், கொடுத்ததுபோலவும் மக்களிடம் கற்பனையை உருவாக்கி, அவர்கள் வாங்கியது, கொடுத்தது இரண்டிற்கும் கற்பனையான


மதிப்பையும் காட்டி, பிறகு கற்பனை மதிப்பிற்கு வரியும் கூட்டி, கடைசியில் விழித்துப்பார்க்கும்பொழுது, கற்பனை பூஜ்ஜியங்கள் கரைந்துபோயிருக்கும். அதற்கு நாம், நம்மையே குறை சொல்லிக்கொள்வோம். வேறு யார் மீதும் குற்றம் சொல்லக்கூட தெரியாத நிலையில் நாம் இருப்போம். இதற்குப் பெயர்தான் முதலாளித்துவ பங்குச்சந்தை.
இருபத்தைந்தாயிரம் கொடுத்து பாம்பு வாங்கியவர்களெல்லாம், திருடனுக்குத் தேள் கொட்டினா மாதிரி, அதைப்பற்றி மூச்சுக்கூட விடாமல், வெளியில் சொல்லாமல் இருந்தார்கள், ஏனென்றால், முதலாளிக்குத் தெரியாமல் அந்த மாதிரி வாங்கலாமா? தப்புத்தானே! தப்பு செய்ததனால்தான் உனக்கு இந்த மாதிரி நஷ்டமாயிற்று என்று மற்றவர்கள் ஏளனம் செய்வார்களே என்று நினைத்து, இப்படி ஏதாவது ஒரு காரணத்தை அவர்களே கற்பித்துக்கொண்டு கேள்வி கேட்காமல் இருக்கின்ற சூழலையும் உருவாக்குவதுதான் பங்குச்சந்தை வர்த்தகம்.
கடவுள் துகள், கடவுளாவதற்கு ஆதிசைவமே கதி
எது உங்கள் இதயத்திற்குள் ஒலித்துகொண்டிருக்கிறதோ, அதுதான் உங்கள் த்வனியிலும் இறுதி எதிரொலியாக இருக்கும். நீங்கள் என்னதான் வார்த்தைகளை மாற்றி விளையாடினாலும், உங்கள் வார்த்தைகளுக்கு இடையில் வருகின்ற செய்தி... உங்கள் இதயத்தில் இருக்கின்ற உணர்வு... அது தானாகவே, நீ ங்கள் என்ன எழுதினாலும், நீங்கள் என்னுரைத்தாலும் அதன் முன்னுரையும் பின்னுரையுமாய் மாறிவிடும். உங்கள் முன்னுரைப்பும் பின்னுரைப்பும் உங்கள் இதயத்திற்குள் ஒலித்துகொண்டிருக்கும் அந்தச் செய்தியின் சாரமாக மாறிவிடும்.
வன்முறை எண்ணம்கொண்ட ஒரு நபர் என்னதான் அன்பைப்பற்றி பேசினாலும், அமைதியைப்பற்றி பேசினாலும், அதன் இறுதி வெளிப்பாடு விகாரமான, வேதனையான, வன்முறையாகத்தான் இருக்கும்.
ஆதிசைவம் தவிர மற்ற எல்லா வாழ்க்கைமுறைகளுமே, மற்ற எல்லா நெறிமுறைகளுமே வாழ்க்கையின் வேறு வேறு படி நிலையில் இருந்தவர்களால் உருவாக்கப்பட்டவையே.
சில பேர் ஆழமான வன்முறை உணர்வில் வீழ்ந்து கிடந்தவர்கள், சில பேர் கொடுக்கல், வாங்கல் எனும் பேரம் மனநிலையில் இருந்தவர்கள், சில பேர் பெயர் புகழ் என்பதையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தவர்கள். இவர்கள் யாருடைய வார்த்தைகளை நீங்கள் வாழ்ந்தாலும், உங்களுக்குள் இருக்கும் ‘கடவுள் துகள்’, கடவுள் நிலையை அடையுமா என்பதில் சந்தேகம் மட்டும் அல்ல, சாத்தியமே இல்லை என்பதுதான் சத்தியம்.
ஒவ்வொரு வாழ்க்கைமுறையுமே, அதை உருவாக்கியவரின் உணர்வு நிலையைச் சார்ந்துதான் உருவாக்கப்படுகிறது. ஒரு வாழ்க்கைமுறையை, ஒரு மதத்தை, ஒரு தத்துவத்தை உருவாக்கியவன் கொடூரமானவனாகவும், தாக்குவதும் போர்புரிவதுமே வாழ்க்கை என்பதுபோன்ற கருத்துக்களை உடையவனாகவும் இருந்தால், அவனைக் கடைபிடிக்கும் எல்லோருடைய கதி யும் அதுவாகவே இருக்கும்.
ஒவ்வொருவருக்குள்ளும் கடவுள் துகளை கடவுளாய் மாற்றிடும் ஒரே வாழ்வியல் முறை ஆதிசைவம், எங்கு நீங்கள் இருக்கிறீர்களோ அங்கிருந்து துவங்கி, எங்கு நீங்கள் செல்ல வேண்டுமோ அங்கு வரை எல்லா உயிர்களுக்கும்
வழிகாட்டும் ஒரே வாழ்வியல் முறை ஆதிசைவம்.
தமிழ் எனும் பெருமொழி புரிகின்ற
உடலும் மனமும் கொண்டதனாலேயே
நீங்கள் புண்ணியவான்கள்
எத்துணையோ நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சம்பிரதாயங்களையும், வாழ்வியல் முறைகளையும், மதங்களையும், தத்துவக் கோட்பாடுகளையும், சித்தாந்தங்களையும், கம்யூனிசம், நாத்திகம் உட்பட எல்லாவிதமான கருத்துக்களையும் பல்வேறு கோணங்களிலும் ஆராய்ந்து, அறிந்து, படித்து, சிந்தித்து அவைகளின் உட்பொருளை உள்வாங்கி இருக்கின்ற தெளிவினாலும் தைரியத்தாலும் உங்களுக்குச் சொல்லுகின்றேன்...
ஆழ்ந்து கேளுங்கள் மக்களே, தமிழ் எனும் பெருமொழி புரிகின்ற உடலும் மனமும் கொண்டதனாலேயே நீங்கள் புண்ணியவான்கள். ஏனென்றால் அந்த ஒரு மொழியில்தான் ஆதிசைவத்தின் சத்தியங்கள் நேரடியாய்த் திறந்து வைக்கப்பட்டு இருக்கின்றன. மற்றவர்கள் எல்லோருமே அதன் மொழிபெயர்ப்பைத்தான் படித்தாக வேண்டும். நீங்கள் ஒருவர் மட்டுமே நேரடியாய்ப் படிக்கவும், அதன் துடிப்பை உங்கள் இதயத் துடிப்பாய் உணரவும், உங்களுக்குள் அதை உள்வாங்கவும், வாழவும், வாழ்வியல் அனுபவமாக மாற்றிக் கொள்ளவும், மிகப் பெரிய வாய்ப்பு உடையவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் மட்டும்தான் இந்த மிகப் பெரிய புண்ணியத்திற்கு ஆளானவர்களாக இருக்கிறீர்கள்.
தெரிந்து கொள்ளுங்கள், தமிழ் மொழி புரிகின்ற மனம் உங்களுக்கு இருந்திருக்குமானால், இருக்குமானால் முன்பு இருந்தோ அல்லது இப்போழுதே தா இருக்குமானால் சைவத்தை இழக்காதீர்கள், சைவத்தை கண்டு கொள்ளுங்கள், கண்டு அறியுங்கள், வாழுங்கள், அது உங்களுடைய வாழ்வியல் நெறியாக மாறட்டும், உங்கள் வாழ்வியல் சத்தியமாக மாறட்டும்.
வேறு எந்தச் சித்தாந்ததிலும் இத்துணை தெளிவாக, கடைநிலை மனிதனுக்கும் கடைத்தேறும் வழியை, இடைச்செருகல் ஏதுமில்லாது, ஒரு இம்மி எடையும் சத்தியத்தில் குறையாது, எடையும் குறையாது மாத்திரையும் குறையாது, ச த்தியத்தை சத்தியமாகவே சத்தியமாய் சதாசிவன் சொல்லி அருளிய வாழ்வியல் முறையான சைவம் பிடியுங்கள்.

வாழ்ந்திட வாழ வைக்கும் பெருவழியான சைவம் வாழுங்கள்.