ஸ்லோகங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
அத நவமோऽத்யாய:
ஒன்பதாவது அத்தியாயம்
ராஜ வித்யா ராஜகுஹ்ய யோக:
ராஜவித்யா ராஜ குஹ்ய யோகம்
ஸ்ரீபகவாநுவாச
இதம்துதேகூஹ்யதமம்ப்ரவக்ஷ்யாம்யநஸூயவே/
ஜ்ஞாநம் விஜ்ஞாநஸஹிதம் யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேऽசு'பாத்//
9.1
ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீ பகவான் சொன்னார் ; இதம் - இந்த ; து - ஆனால் ; தே - உனக்கு ; குஹ்யதமம் - மிகவும் இரகசியமான ; ப்ரவக்ஷ்யாமி - விளக்கிச் சொல்லப்போகிறேன் ; அநஸூயவே - பொறாமை இல்லாத ; ஜ்ஞாநம் - ஞானத்தை ; விஜ்ஞாந - அனுபவ அறிவை; ஸஹிதம் - உடன் ; யத் - எதை ; ஜ்ஞாத்வா - அறிந்துகொள்ளுதல் ; மோக்ஷ்யஸே - விடுதலை பெறுவாயோ ; அசு'பாத் - துக்கவடிவான உலகியலிலிருந்து
ஸ்ரீபகவான் சொன்னது
9.1 "அர்ஜூனா, நீ என்னை நம்புகிறாய். நீ என்னிடம் பொறாமைகொள்ளாத காரணத்தால், நான் உனக்கு இந்த இரகசியமான அறிவையும் உணர்தலையும் தருகிறேன். இதனை அறிந்துகொள்வதன்மூலம் நீ இந்தப் பொருள் சார்ந்த உலகின் துன்பங்களில் இருந்து விடுதலை அடைவாய்.
........................................................................................................
ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்ரமிதமுத்தமம் /
ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம் ஸுஸுகம் கர்துமவ்யயம்//
9.2
ராஜவித்யா - அனைத்து வித்யைகளுக்கு அரசு ; ராஜகுஹ்யம் - மறைத்துப் போற்றப்படவேண்டியதில் சிறந்தது ; பவித்ரம் - மிகப் புனிதமானது ; இதம் - இந்த விஞ்ஞானத்துடன் கூடிய ஞானம் ; உத்தமம் - மிகச் சிறந்தது ; ப்ரத்யக்ஷாவகமம் - கண் கூடாக உணர்வதற்குரியது ; தர்ம்யம் - தர்மநெறிக்குட்பட்டது ; ஸுஸுகம்- மிகவும் எளிதானது; கர்தும் - கடைப்பிடிப்பதற்கு ; அவ்யயம் - அழிவற்றது
9.2 இந்த ஞானமே எல்லா அறிவிற்கும் அரசன் போன்றது. இதுதான் எல்லா ரகசியங்களுக்கும் மேலான இரகசியம். இதுவே தூய அறிவு, புனிதமானது. மேலும் 'தன்னைத்தானே உணர்தலு'க்கு நேரடியாக வழி நடத்திச் செல்லக்கூடியது.
இது முடிவில்லாதது, நடைமுறைப்படுத்த எளிதானது.
..........................................................................................................
அச்'ரத்ததாநா: புருஷா தர்மஸ்யாஸ்ய பரந்தப /
அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ரு'த்யுஸம்ஸாரவர்த்மநி // 9.3
அச்'ரத்ததாநா: - நம்பிக்கையற்ற ; புருஷா: - மனிதர்கள்; தர்மஸ்ய- இந்தச் செயல்முறையினுடைய ; அஸ்ய - இந்த ; பரந்தப - எதிரிகளை வாட்டுபவனே; அப்ராப்ய - அடையாமல் ; மாம் - என்னை ; நிவர்தந்தே - சுற்றிக் கொண்டே இருக்கின்றார்கள்; ம்ரு'த்யு ஸம்ஸார வர்த்மநி - மரண வடிவான ஸம்ஸார சக்ரத்தில்
9.3 இத்தகைய ஞானத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் என்னை அடைய முடியாது. ஒ எதிரிகளை வென்றவனே! அவர்கள் இந்தப் பொருள் சார்ந்த உலகில் மீண்டும் மீண்டும் பிறப்பையும் இறப்பையும் எடுக்கிறார்கள்.
..........................................................................................................
மயா ததமிதம் ஸர்வம் ஜகதவ்யக்தமூர்திநா /
மத்ஸ்தானி ஸர்வபூதானி ந சாஹம் தேஷ்வவஸ்தித:// 9.4
மயா - என்னால் ; ததம் - பரவி உள்ளது ; இதம்- இந்த ; ஸர்வம் - அனைத்து ; ஜகத் - பிரபஞ்ச சக்தியின் வெளிப்பாடு ; அவ்யக்தமூர்திநா - உருவமற்ற பரமாத்மாவான ; மத்ஸ்தானி - என்னுள் நிலை பெற்றுள்ளன ; ஸர்வபூதானி - எல்லா உயிரினங்களும் ; ந - இல்லை ; ச - மேலும்; அஹம் - நான் ; தேஷு- அவற்றில் ; அவஸ்தித: -நிலைபெற்றிருத்தல்
9.4 என்னால் ஊடுருவி பரவப்பட்டுள்ள இந்த மொத்தப் பிரபஞ்சமும் எனது உருவமில்லா இருப்பில் நிலைத்திருக்கிறது.
எல்லா இருப்பும் என்னையே சார்ந்துள்ளது. நான் அவற்றைச் சார்ந்திருக்கவில்லை.
ந ச மத்ச்தாநி பூதாநி பச்'ய மே யோகமைச்'வரம் /
பூதப்ரு'ந்ந ச பூதஸ்தோ மமாத்மா பூதபாவந:// 9.5
ந- இல்லை; ச - மேலும்; மத்ச்தாநி - என்னுள் இருப்பவை ; பூதாநி - அந்த சராசரங்கள் அனைத்தும் ; பச்'ய - பார் ; மே - என்னுடைய; யோகம் - யோக சக்தியை ; ஐச்'வரம் - ஈசுவரத்தன்மையுடைய; பூதப்ரு'த் ச - அனைத்து உயிரினங்களையும் தாங்குகின்றவன்; ந - இருப்பதில்லை; ச - மேலும்; பூதஸ்த: - உயிரினங்களில் நிலைபெற்று ; மம ஆத்மா - என்னுடைய ஆத்மா ; பூதபாவந: - உயிரினங்களை உண்டாக்குகின்றவன்
9.5 என்னிடம் உள்ள ஈச்'வர தன்மைகளை, யோக சக்தியைப் பார்.
நானே எல்லா உயிருள்ளவற்றையும் படைத்து, அவற்றைத் தாங்கியும் நிற்கிறேன். நான் அவற்றைச் சார்ந்தும் இல்லை, அவை என்னைச் சார்ந்தும் இல்லை.
யதாகாச்'ஸ்திதோ நித்யம் வாயு: ஸர்வத்ரகோ மஹாந் /
ததா ஸர்வாணி பூதாநி மத்ச்தாநீத்யுபதாரய// 9.6
யதா - எவ்வாறு ; ஆகாச்'ஸ்தித: - ஆகாசத்தில் உள்ளதோ; நித்யம் - எப்பொழுதும் ; வாயு: -காற்று ; ஸர்வத்ரக: - எங்கும் செல்கின்ற ;மஹாந் - பெரும்; ததா - அவ்வாறே ; ஸர்வாணி - எல்லா ; பூதாநி - உயிரினங்களும்; மத்ச்தாநி - என்னிடம் உள்ளன ; இதி - என்று ; உபதாரய - அறிந்துகொள்
9.6 எங்கும் சஞ்சரிக்கிற எல்லாம் வல்ல பெருங்காற்று எப்பொழுதும் நிலையான பெருவெளியில் இருப்பதுபோல், எல்லா இருப்பும் என்னிலேயே இருக்கின்றன.
ஸர்வபூதாநி கௌந்தேய ப்ரக்ரு'திம் யாந்தி மாமிகாம் /
கல்பக்ஷயே புநஸ்தாநி கல்பாதௌ விஸ்ரு'ஜாம்யஹம் // 9.7
ஸர்வபூதாநி - எல்லா உயிரினங்களும் ; கௌந்தேய - குந்தியின் மைந்தனே அர்ஜூனா ;ப்ரக்ரு'திம் - இயற்கையை ; யாந்தி - அடைகின்றன; மாமிகாம் - என்னுடைய ; கல்பக்ஷயே - கல்பங்களின் முடிவில் ; புந: - திரும்பவும் ; தாநி - அவற்றை ; கல்பாதௌ - கல்பத்தின் ஆரம்பத்தில் ; விஸ்ரு'ஜாமி
- தோன்றச் செய்கிறேன்; அஹம் - நான்
9.7 குந்தியின் மகனே! ஒவ்வொரு யுக முடிவிலும் எல்லாம் என்னிலேயே கலக்கின்றன.
ஒவ்வொரு புது யுகத்திலும் நானே அவற்றை மீண்டும் படைக்கிறேன்.
.......................................................................................................
ப்ரக்ரு'திம் ஸ்வாமவஷ்டப்ய விஸ்ரு'ஜாமி புந: புந: /
பூதக்ராமமிமம் க்ரு'த்ஸ்நமவசம் ப்ரக்ரு'தேர்வசா'த் // 9.8
ப்ரக்ரு'திம் - உலகியல் சார்ந்த இயல்புகள் ; ஸ்வாம் - என்னுடைய ; அவஷ்டப்ய - ஏற்றுக் கொண்டு; விஸ்ரு'ஜாமி - படைக்கிறேன் ; புந: புந:
- திரும்பத் திரும்ப ; பூதக்ராமம் - உயிர்தொகுதிகளையும் ; இமம் - இந்த ; க்ரு'த்ஸ்நம் - அனைத்து ; அவசம் - தன் வசமிழந்த ; ப்ரக்ரு'தே:வசா'த்
- இயல்பின் ஆற்றலினால்
9.8 எனது பொருள் சார்ந்த இயல்பு இந்த உயிர்களையெல்லாம் மீண்டும் மீண்டும் படைக்கிறது; எனது பொருள் சார்ந்த இயல்பினால் அவை கட்டுப்படுத்தவும் படுகின்றன.
.......................................................................................................
ந ச மாம் தாநி கர்மாணி நிபத்நந்தி தநஞ்ஜய/
உதாஸீநவதாஸீநமஸக்தம் தேஷு கர்மஸு// 9.9
ந - இல்லை ; ச-மேலும்; மாம் - என்னை ; தாநி - அந்த ; கர்மாணி - செயல்கள் ; நிபத்நந்தி - பந்தப்படுத்துதல்; தநஞ்ஜய
- அர்ஜூனா ; உதாஸீநவத் - ஒதுங்கியவனைப் போன்றும் ; ஆஸீநம் - இருக்கின்ற ; அஸக்தம்- பற்றண்ணாமலும் ; தேஷு - அந்த ; கர்மஸு- கர்மங்களில்
9.9 தனஞ்ஜயா, இந்தச் செயல்களெல்லாம் என்னைக் கட்டுப்படுத்தாது. நான் எப்போதும் பற்றற்றும், வேறுபாடு இல்லாமலும் இருக்கிறேன்.
.......................................................................................................
மயாத்யக்ஷேண ப்ரக்ரு'தி: ஸூயதே ஸசராசரம் /
ஹேதுநாநேந கௌந்தேய ஜகத்விபரிவர்ததே// 9.10
மயா - என்னால் ; அத்யக்ஷேண - தலைவனான ; ப்ரக்ரு'தி: - உலகியல் சார்ந்த குணங்கள் ; ஸூயதே - தோற்றுவிக்கின்றது; ஸசராசரம் - அசைவன, அசையாதனஇவற்றோடுகூடியஉலகமனைத்தும் ; ஹேதுநா - காரணத்தினால் ; அநேந - இந்த ; கௌந்தேய - குந்தியின் மைந்தனே ; ஜகத் - இந்த ஸம்ஸார சக்கரம் ; விபரிவர்ததே - செயல்பந்துகொண்டிருக்கின்றது
9.10 ப்ரக்ரு'தியின் பொருள்மயமான தன்மை எனது வழிகாட்டுதலின் படியே வேலை செய்கிறது.
ஓ, குந்தியின் மகனே! எனது மாயா சக்'தியின் மூலம் அசையும் மற்றும் அசையாப் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.
இதன் ஆட்சியாலேயே பொருட்கள் மீண்டும் மீண்டும் படைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.
அவஜாநந்தி மாம் மூடூா மாநுஷீம் தநுமாச்'ரிதம்/
பரம் பாவமஜாநந்தோ மம பூதமஹேச்'வரம்// 9.11
அவஜாநந்தி- அற்பமாக நினைக்கின்றார்கள்; மாம் - என்னை ; மூடா: - அறிவிலிகள் ; மாநுஷீம் தநும் - மனித உடலை ; ஆச்'ரிதம்
- தாங்கிக் கொண்டிருக்கும் ; பரம் - மேலான ; பாவம் - இயல்பை ; அஜாநந்த:- அறியாதவர்களான ; மம - என்னுடைய ; பூதமஹேச்'வரம் - உயிரினங்களுக்கு எல்லாம் தலைவனான
9.11 நான் மனித உருவில் அவதரிக்கும்போது முட்டாள்கள் என்னைக் கேலி செய்கின்றனர்.
எல்லாவற்றையும் கடந்து நிற்கிற எனது இயல்பான தன்மையையும் எல்லாவற்றின் மீதான எனது மேலான ஆட்சியைப் பற்றியும் அவர்கள் தெரிந்துகொள்வதில்லை.
மோகாசா' மோககர்மாணொ மோகஜ்ஞாநா விசேதஸ: /
ராக்ஷஸீமாஸுரீம் சைவ ப்ரக்ரு'திம் மோஹிநீம் ச'ரிதா: // 9.12
மோகாசா' : - வீணான நம்பிக்கை ; மோககர்மாண: - பயனற்ற செயல்களைச் செய்பவர்களும் ; மோகஜ்ஞானா: - வீணான அறிவு உடையவர்களுமான ; விசேதஸ: - உறுதியற்ற மனமுடைய அறிவிலிகள் ; ராக்ஷஸீம் ஆஸுரீம் ச - அரக்கத் தன்மையையும், நாத்திகத்தன்மையையும்; ஏவ - நிச்சயமாக; ப்ரக்ரு'திம் - இயல்பையே ; மோஹிநீம் - குழப்புகிற ; ச்'ரிதா: - சார்ந்துள்ளார்கள்
9.12 தவறான நம்பிக்கையால் திருப்திகொள்ளும் இவர்கள், அசுரத் தன்மை உடையவர்களாகவும் நாத்திகம் பேசுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.
இவர்களது இந்த தவறான நம்பிக்கையால், இவர்கள் ‘விடுதலை’ அடைவதற்கான சாத்தியமும், பலன்கருதி இவர்களால் செய்யப்படும் செயல்களும், இவர்களது பண்பட்ட அறிவும் தவறாகின்றன, பயனற்றுப் போகின்றன.
மஹாத்மானஸ்து மாம் பார்த தைவீம் ப்ரக்ரு'திமாச்'ரிதா: /
பஜந்த்யநந்யமநஸோ ஜ்ஞாத்வா பூதாதிமவ்யயம் //
மஹாத்மான: - பெரியோர்கள் ; து - ஆனால் ; மாம் - என்னை ; பார்த - பார்த்தா ; தைவீம் - தெய்வீக ; ப்ரக்ரு'திம் - இயல்பை; ஆச்'ரிதா: - கைக் கொண்டவர்களான ; பஜந்தி - இடைவிடாது சேவை செய்கின்றார்கள்; அநந்யமநஸ: - வேறு எதிலும் நாட்டமில்லாத மனதுடன்; ஜ்ஞாத்வா - அறிந்து ; பூதாதிம் - எல்லா உயிரினங்களுக்கும் என்றுமுள்ள நிலைத்த காரணம் என்றும் ; அவ்யயம் - அழிவற்றவனென்றும்
9.13 ப்ரீதாவின் மகனே! மாயையால் மயங்காத சிறந்த ஆன்மாக்கள், நான் மாற்றமில்லாதவன் என்பதை அறிந்துகொள்கிறார்கள். நான்தான் சிருஷ்டியின் கர்த்தா என்பதை உணர்ந்துகொள்வதால் எப்போதும் அவர்கள் என்னிடம் புனிதமான பக்தியுடன் இருக்கிறார்கள்.
ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தச்'ச த்ரு'டவ்ரதா: /
நமஸ்யந்தச்'ச மாம் பக்தயா நித்யயுக்தா உபாஸதே //
ஸததம் - இடைவிடாது ; கீர்தயந்த: - என்னுடைய நாமங்களையும் குணங்களையும் கீர்த்தனம் செய்து கொண்டும் ; மாம் - என்னை ; யதந்த: ச - என்னைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டும் ; த்ரு'டவ்ரதா: - உறுதியான நிச்சயம் கொண்டவர்கள் ; நமஸ்யந்த: - வணங்கிக் கொண்டும் ; ச - மேலும் ; மாம் - என்னை ; பக்த்யா - வேறு ஒன்றிலும் நாட்டம் இல்லாத அன்புடன் ; நித்யயுக்தா: - எப்பொழுதும் என்னுடைய தியானத்திலேயே நிலைத்திருந்தும் ; உபாஸதே - வழிபடுகின்றார்கள்
9.14 ஸ்திரமான உறுதியுடன் இருப்பவர்கள் எப்போதுமே என்னை பக்தியுடன் வழிபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என் மஹிமையைப் பாடிக்கொண்டும், உறுதியான தீர்மானத்துடன் கடினமான சாதனைகளைச் செய்து கொண்டும் என்னையே சரணடைகிறார்கள்.
.........................................................................................................
ஜ்ஞானயஜ்ஞேந சாப்யந்யே யஜந்தோ மாமுபாஸதே /
ேகத்வேந ப்ரு’தக்த்வேந பஹுதா விச்’வதோமுகம் //
ஜ்ஞானயஜ்ஞேந - அறிவை வளர்த்துக்கொள்வதன்மூலம் ; ச - மற்றும் ; அபி - நிச்சயமாக; அந்யே - வேறு சிலர் ; யஜந்த: - வழிபட்டுக் கொண்டும் ; மாம் - என்னை ; உபாஸதே - வழிபடுகிறார்கள் ; ஏகத்வேந - தான் வேறு என்ற எண்ணமில்லாமல் ஒன்றிய பாவத்தோடு; ப்ரு’தக்த்வேந - இருமைத்தன்மையில் எண்ணி ; பஹுதா - பல தோற்றங்களில் விளங்கும் ; விச்’வதோமுகம் - பிரபஞ்ச ரூபத்தில்
9.15 சிலர், தங்கள் திறமையாலும் அனுபவத்தாலும் தேடிப்பெற்ற ஆத்ம ஜ்ஞானத்தை உலகில் பரப்புவதன் மூலம் என்னை வழிபடுகிறார்கள்.
மற்றவர்கள் என்னை ஒரே பொருளாக அதாவது அத்வைத கருத்துப்படி ஒரே தத்துவமாகவோ அல்லது த்வைத கருத்துப்படி இருபொருள் தத்துவமாகவோ அல்லது விசிஷ்டாத்வைத கருத்துப்படி மொத்தப் பிரபஞ்ச வடிவாகவோ வழிபாடு செய்கிறார்கள்.
.........................................................................................................
அஹம் க்ரதுரஹம் யஜ்ஞ: ஸ்வதாஹமஹமௌஷதம் /
மந்த்ரோऽஹமஹமேவாஜ்யமஹமக்நிரஹம் ஹுதம் //
அஹம் - நானே ; க்ரது: - க்ரதுவும் ; அஹம் - நானே ; யஜ்ஞ: - யஜ்ஞமும் ; ஸ்வதா - அர்ப்பணிக்கும் நைவேத்யம் ; அஹம் - நானே ; அஹம் - நானே; ஔஷதம் - மருந்து ; மந்த்ர: - மேலான மந்திரமும் ; அஹம்நானே ; அஹம் - நானே ; ஏவ- நிச்சயமாக; ஆஜ்யம் - நெய்யும்: அஹம்
- நானே; அக்நி: - அக்னியும் ; அஹம் - நானேதான்; ஹுதம் - ஹோமம் என்ற செயலும்
பிதாஹமஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ: /
வேத்யம் பவித்ரமோங்கார ரு'க்ஸாம யஜுரேவ ச // 9.17
பிதா - தந்தையும் ; அஹம் - நான் ; அஸ்ய - இந்த ; ஜகத: - உலகமனைத்தையும் ; மாதா - தாயும்; தாதா - தாங்குபவனும், கர்மங்களுக்கும் பயனளிப்பவனும் ; பிதாமஹ: - பாட்டனாரும் ; வேத்யம் - அறியத்தக்கவனும் ; பவித்ரம் - தூய்மைப்படுத்துகின்றவனும் ; ஓங்கார: - ஓம்காரமும் ; ரு'க் ஸாம யஜு: - ருக், சாம, யஜுர் என்ற மூன்று வேதங்கள் ; ஏவ - நிச்சயமாக ; ச- மேலும்
கதிர்பர்தா ப்ரபு: ஸாக்ஷீ நிவாஸ: ச'ரணம் ஸுஹ்ரு'த்/
ப்ரபவ: ப்ரலய: ஸ்தாநம் நிதாநம் பீஜமவ்யயம்// 9.18
கதி: - இலட்சியம் ; பர்தா - காத்து ரக்ஷிப்பவன் ; ப்ரபு: - எல்லோரையும் ஆள்பவன் ; ஸாக்ஷீ - சாட்சியாகப் பார்ப்பவன் ; நிவாஸ: - எல்லாவற்றிற்கும் இருப்பிடம் ; ச'ரணம் - எல்லாவற்றிற்கும் புகலிடம் ; ஸுஹ்ரு'த் - கைம்மாறு எதிர்பாராமல் உதவி புரியும் நண்பன் ; ப்ரபவ: ப்ரலய: - அகில உலகமும் தோன்றுவதற்கும், ஒடுங்குவதற்குமான காரணம் ; ஸ்தாநம் - நிலையாகத் தாங்குமிடம் ; நிதாநம் - ஒடுங்குமிடமும் ; பீஜம் - விதை ; அவ்யயம் - அறிவில்லாத
தபாம்யஹமஹம் வர்ஷம் நிக்ரு'ஹ்ணாம்யுத் ஸ்ரு'ஜாமி ச/
அம்ரு'தம் சைவ ம்ரு'த்யுச்'ச ஸதஸச்சாஹமர்ஜுந // 9.19
தபாமி - வெப்பம் அளிக்கிறேன் ; அஹம் - நான் ; அஹம் - நான் ; வர்ஷம் - மழையை ; நிக்ரு'ஹ்ணாமி - உள்ளிழுத்துத் தடுத்து நிறுத்துகிறேன் ; உத்ஸ்ரு'ஜாமி ச - பொழியவும் செய்கிறேன் ; அம்ரு'தம் ச - இறவாப் பெருநிலையும் ; ஏவ - நிச்சயமாக ; ம்ரு'த்யு: ச - படைத்தவற்றை அழிப்பவனும் ; ஸத் - அழியாததும் ; அஸத் ச - அழியக் கூடியதும் ; அஹம் - எல்லாமே நான்தான் ; அர்ஜுந - அர்ஜுனா
9. 16. , 17, 18, 19
நானே சமயச் சடங்குகள், நானே யாகம், நானே ஆகுதி, நானே யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் திரவியப் பொருட்கள், நானே மந்திரம், நானே நெய், நானே அக்னி, நானே ஹோமம்.
நானே இந்தப் பிரபஞ்சத்தைத் தாங்குபவன், நானே தந்தை, நானே தாய், பாட்டனும் நானே, அறியத் தக்கவனும் நானே, அறிவின் பொருளும் நானே, ஓங்காரமும் நானே, புனிதமான வார்த்தையான ரிக், ஸாம, யஜுர் என்ற மூன்று வேதங்களும் நானே.
இலக்கும் நானே, தாங்குபவன் நானே, கடவுளும் நானே, சாட்சியும் நானே, இருப்பிடமும் நானே, அடைக்கலமும் நானே, நண்பனும் நானே, பிறப்பிடமும் நானே, ஒடுங்குமிடமும் நானே, புகலிடமும் நானே, ஆதாரமும் நானே, களஞ்சியமும் நானே, அழிவற்ற விதையும் நானே, வெயிலைத் தருபவன் நானே. மழையைப் பொழிவிப்பவனும் நானே, அதை நிறுத்துபவனும் நானே.
நானே அழிவற்றவன். மரணமும் நானே, நிலையானதும் நானே, நிலையில்லாததும் நானே ஒ! அர்ஜூனா.
த்ரைவித்யா மாம் ஸோமபா: பூதபாபா:
யஜ்ஞைரிஷ்ட்வா ஸ்வர்கதிம் ப்ரார்தயந்தே /
தே புண்யமாஸாத்ய ஸுரேந்த்ரலோகம்
அச்'நந்தி திவ்யாந் திவி தேவபோகாந் // 9.20
த்ரைவித்யா: - மூன்று வேதங்களையும் நன்கு அறிந்தவர்கள் ; மாம் - என்னை ; ஸோமபா: - ஸோமம் என்ற ரஸத்தை அருந்தி ; பூதபாபா: - பாவங்கள் அகன்று தூய்மை பெற்றவர்கள் ; யஜ்ஞை: - யாகங்களால்; இஷ்ட்வா - உபாஸித்து ; ஸ்வர்கதிம் - ஸ்வர்கலோகம் அடைவதை ; ப்ரார்தயந்தே- வேண்டுகின்றார்கள் ; தே - அவர்கள் ; புண்யம் - புண்யத்தின் பயன் வடிவான ; ஆஸாத்ய - அடைந்து ; ஸுரேந்த்ரலோகம் - அமரர் உலகை ; அச்'நந்தி -அனுபவிக்கின்றார்கள் ; திவ்யாந் - தெய்விகமான ; திவி - ஸ்வர்கத்தில் ; தேவபோகாந் - தேவதைகள் அனுபவிக்கும் போகங்களை
9.20 எவர்கள் வேதச் சடங்குகளைச் செய்து, சோமபானம் அருந்தி என்னைப் பூஜிக்கிறார்களோ, அவர்கள் மறைமுகமாகச் சொர்க்கலோக சுகங்களை அடைய விரும்புகிறார்கள்.
அவர்கள் தேவலோகத்தை அடைந்து மிகவும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய புலனின்பங்களை அனுபவிப்பார்கள்.
....................................................................................................................
தே தம் புக்த்வா ஸ்வர்கலோகம் விசா'லம்
க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விச'ந்தி /
ஏவம் த்ரயீதர்மமனுப்ரபந்நா
கதாகதம் காமகாமா லபந்தே // 9.21
தே - அவர்கள் ; தம் - அந்த ; புக்த்வா - அனுபவித்துவிட்டு ; ஸ்வர்கலோகம்- ஸ்வர்கலோக ஸுகத்தை ; விசா'லம் - பரந்து விரிந்துள்ள ; க்ஷீணே - தீர்ந்து போனவுடன் ; புண்யே - புண்ணியம் ; மர்த்யலோகம் - இறப்புக்குரியதான மண்ணுலகை ; விச'ந்தி - அடைகின்றார்கள் ; ஏவம் - இவ்வாறு ; த்ரயீதர்மம் - மூன்று வேதங்களில் சொல்லப்பட்ட கர்மங்களை ; அனுப்ரபந்நா: - சார்ந்திருக்கின்ற ; கதாகதம்
- பிறப்பு இறப்பை ; காமகாமா: - புலன் இன்பங்களில் பற்றுள்ளவர்கள் ; லபந்தே - அடைகின்றார்கள்
9.21 அவர்கள் ஸ்வர்க்கலோக சுகபோகங்களை அனுபவித்த பின்னர், இந்த மனித உலகிலேயே மறுபடியும் பிறக்கிறார்கள்.
பலன்களைக் கருதி வேத தர்மங்களைக் கடைப்பிடிப்பவர்கள் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் சிக்கிக்கொள்கிறார்கள்.
....................................................................................................................
அநந்யாச்'சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே /
தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம் //
9.22
அநந்யா: - வேறு எதிலும் நாட்டமில்லாமல்; சிந்தயந்த: - தியானித்துக் கொண்டு ; மாம் - என்னை ; யே ஜநா: - எந்த மனிதர்கள் ; பர்யுபாஸதே - சிறப்பான முறையில் வழிபடுகின்றனரோ; தேஷாம்
- அவர்களுடைய ; நித்யாபியுக்தாநாம் - இடைவிடாது பக்தியில் நிலைபெற்று ; யோகக்ஷேமம் -தேவைகளை ; வஹாமி - எடுத்துச் செல்கிறேன் ; அஹம் - நானே
9.22 என்னுடைய உணர்வில் நீ நிலைத்திருப்பாய் என்றால், உன்னிடம்
என்ன குறைகிறதோ, அதை நான் தருகிறேன். உன்னிடம் எது இருக்கிறதோ அதைப் பாதுகாக்கிறேன்.
.......................................................................................................
யேऽப்யந்ய தேவதா பக்தா யஜந்தே ச்'ரத்தயான்விதா: /
தேऽபி மாமேவ கெளந்தேய யஜந்த்யவிதிபூர்வகம் // 9.23
யே - அவர்கள் ; அபி - கூட; அந்ய தேவதா: - மற்ற தேவதைகளை ; பக்தா: - பக்தர்கள் ; யஜந்தே - வழிபடுகின்றார்களோ ; ச்'ரத்தயா அன்விதா: - சிரத்தையோடு ; தே அபி - அவர்களும் ; மாம் - என்னை ; ஏவ - இருந்த போதிலும் ; கெளந்தேய - குந்தியின் மைந்தா ; யஜந்தி - வழிபடுகின்றார்கள் ; அவிதிபூர்வகம் - தவறானமுறையில்
9.23 குந்தியின் மகனே, உண்மையில் மற்ற தெய்வங்களைப் பூஜை செய்பவர்கள்கூட என்னையேதான் பூஜை செய்கிறார்கள். ஆனால் உண்மையான புரிந்துகொள்ளுதல் இல்லாமல் இதைச் செய்கிறார்கள்.
.......................................................................................................
அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போக்தா ச ப்ரபுரேவ ச /
ந து மாமபிஜாநந்தி தத்த்வேநாதச்'ச்யவந்தி தே // 9.24
அஹம் - நான் ; ஹி - ஏனெனில் ; ஸர்வயஜ்ஞாநாம் - எல்லா யாகங்களையும் ; போக்தா ச - ஏற்றுக்கொள்பவனும் ; ப்ரபு: ச - தேவர்களை அடக்கி ஆளும் மஹேஸ்வரனும் ; ந - இல்லை ; து - ஆனால் ; மாம் - என்னை ; ந அபிஜாநந்தி - அறிவதில்லை ; தத்த்வேந - உண்மை நிலையில் ; அத: - ஆகையால் ; ச்யவந்தி - வீழ்ச்சி அடைகிறார்கள் ; தே - அவர்கள்
9.24 யாகத்திற்குரிய சிறந்த பொருளும் நானே, அதைச் சிறப்பாக அனுபவிப்பவனும் நானே.
மனித மனத்திற்கு அப்பாற்பட்ட என்னுடைய உண்மையான தெய்வீகத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள்.
.......................................................................................................
யாந்தி தேவவ்ரதா தேவாந் பித்ரூ'ந்யாந்தி பித்ரூ'வ்ரதா: /
பூதாநி யாந்தி பூதேஜ்யா யாந்தி மத்யாஜிநோऽபி மாம் // 9.25
யாந்தி - அடைகின்றார்கள்; தேவவ்ரதா: - தேவதைகளை வழிபடுபவர்கள் ; தேவாந்-தேவதைகளை ; பித்ரூ'ந்-பித்ருக்களை ; யாந்தி-அடைகின்றார்கள் ; பித்ரூ'வ்ரதா: - பித்ருக்களை வழிபடுபவர்கள் ; பூதாநி - பூதங்களை ; யாந்தி - அடைகின்றார்கள் ; பூதேஜ்யா: - பூதங்களை வழிபடுபவர்கள் ; யாந்தி - அடைகின்றார்கள் ; மத்யாஜிந: - என்னை வழிபடுபவர்கள் ; மாம் அபி - என்னையே
9.25 தேவர்களை வழிபடுபவர்கள் தேவர்களையே அடைந்து அங்கேயே பிறக்கிறார்கள். பேய், பூதம் இவற்றைத் தொழுபவர்கள் அத்தகையவர்களை அடைந்து அங்கேயே பிறக்கிறார்கள். முன்னோர்களை வழிபடுபவர்கள் முன்னோர்களை அடைகிறார்கள்.
என்னை வழிபடுபவர்கள் என்னை அடைந்து, என்னுடனே வாழ்கிறார்கள்.
..........................................................................................................
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி /
ததஹம் பக்த்யுபஹ்ரு'தமச்'நாமி ப்ரயதாத்மந: // 9.26
பத்ரம் - இலை ; புஷ்பம் - மலர் ; பலம் - பழம் ; தோயம் - நீர் ; ய:
- எவன் ; மே - எனக்கு ; பக்த்யா - பக்தியோடு ப்ரயச்சதி- அர்ப்பணம் செய்கின்றானோ ; தத்- அதை ; அஹம் - நான்; பக்த்யுபஹ்ரு'தம்பக்தியுடன் அர்ப்பணம் செய்யப்பட்டவையான ; அச்ச்'நாமி - அருந்துகி றேன் ; ப்ரயதாத்மந: - தூய விழிப்புணர்வுடன்
9.26 ஒரு இலை, ஒரு பூ, ஒரு பழம் அல்லது நீரை அன்படனும் பக்தியடனும் எனக்கு யார் அளித்தாலும், தூய்மையான மனத்துடன் அளிக்கப்படும் அவற்றை நான் (திருப்தியுடன்) ஏற்று புசிக்கிறேன்.
..........................................................................................................
யத்கரோஷி யதச்'நாஸி யஜ்ஜுஹோஷி ததாஸி யத் /
யத்தபஸ்யஸி கெளந்தேய தத்குருஷ்வ மதர்ப்பணம்// 9.27
யத் - எந்தக் கர்மத்தை ; கரோஷி- செய்கின்றாயோ ; யத் - அதை; அச்'நாஸி - உண்கின்றாயோ; யத் - எதை ; ஜுஹோஷி - ஹோமம் செய்கின்றாயோ ; ததாஸி - தானமளிக்கின்றாயோ ; யத் - எதை ; யத்
- எந்த ; தபஸ்யஸி - தவம் செய்கின்றாயோ ; கெளந்தேய - குந்தியின் மைந்தனே! ; தத் - அவையனைத்தையும்; குருஷ்வ - செய்துவிடு; மதர்ப்பணம் - எனக்கு அர்ப்பணம்
குந்தி மகனே! நீ எதைச் செய்கிறாயோ, எதைப் புசிக்கிறாயோ,
எதைப் படைக்கிறாயோ எதைத் தானம் செய்கிறாயோ எந்தத்
தவம் செய்கிறாயோ அதையெல்லாம் எனக்கே அர்ப்பணம் செய்!
........................................................................................................
சு'பாசு'பபலைரேவம் மோக்ஷ்யஸே கர்மபந்தனை: /
ஸந்ந்யாஸயோகயுக்தாத்மா விமுக்தோ மாமுபைஷ்யஸி // 9.28
சு'ப அசு'ப பலை: - நல்லவும் தீயவும் ஆன பயன்களாகிய; ஏவம் - இவ்வாறு ; மோக்ஷ்யஸே - விடுபடுவாய் ; கர்மபந்தனை: - கர்மங்களின் கட்டுக்களிலிருந்து ; ஸந்ந்யாஸ யோக யுக்தாத்மா: - ஸந்யாஸ யோகத்தில் உறுதியாக நிலைபெற்ற மனதுடைய நீ ; விமுக்த: - விடுபட்டு ; மாம் - என்னையே ; உபைஷ்யஸி- அடைந்துவிடுவாய்
பலன்களைத் துறப்பதின் மூலம் நல்லது, தீயது என்ற பலன் தரும்
கருமங்களின் தளைகளிலிருந்து விடுபடுகிறாய்.
நீ விடுதலை பெற்று என்னையே வந்தடைவாய்.
........................................................................................................
ஸமோऽஹம் ஸர்வபூதேஷு ந மே த்வேஷ்யோऽஸ்தி ந ப்ரிய: /
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் // 9.29
ஸம:- ஒரே ஸமமாக நிறைந்துள்ளேன் ; அஹம் - நான் ; ஸர்வபூதேஷு
- எல்லா உயிரினங்களிலும் ; ந - இல்லை ; மே - எனக்கு ; த்வேஷ்ய: - வெறுக்கத்தக்கவன்; அஸ்தி - இருப்பது ; ந ப்ரிய: - வேண்டியவன் இல்லை; யே - எவர்கள் ; பஜந்தி - வழிபடுகின்றார்களோ ; து - ஆனால்; மாம் - என்னை ; பக்த்யா - பக்தியுடன் ; மயி - என்னிடம் ; தே - அவர்கள் ; தேஷு அபி - அவர்களிடம்; ச - கூட ; அபி - நிச்சயமாக ; அஹம் - நான்
நான் யாரையும் வெறுப்பதும் இல்லை ; யாரிடமும்
பாரபட்சமாகவும் இருப்பதில்லை. நான் எல்லோரிடமும்
சமமாகவே இருக்கிறேன்.
என்னிடம் பக்தியாக இருப்பவர்கள், என் நண்பராகி என்னோடு
இருக்கிறார்கள். நானும் அவர்கள் நண்பராக இருக்கிறேன்.
....................................................................................................
அபி சேத்ஸுதுராசாரோ பஜதே மாமநந்யபாக் /
ஸாதுரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக்வ்யவஸிதோ ஹி ஸ: // 9.30
அபி - இருந்தாலும் ; சேத் - இருந்தானேயானால் ; ஸுதுராசார: - மிகவும் தீய நடத்தையுள்ளவனானாலும் ; பஜதே - பக்தி சேவையில் ஈடுபடுகின்ற; மாம் - என்னை ; அநந்யபாக்- வேறு எதிலும் நாட்டமின்றி ; ஸாது: ஏவ - ஸாது என்றே; ஸ: - - அவன்; மந்தவ்ய: - கருதப்படத்தக்கவன் ; ஸம்யக் வ்யவஸித: - நன்கு ஸ்திரமாக நிலைபெற்ற ; ஹி - ஏனெனில் ; ஸ: - அவன்
9.30 பாபியான ஒருவர்கூட, தம்மை புக்திபூர்வமான சேவையில் ஈடுபடுத்திக்கொண்டாரேயானால், அவர் ஸாதுவாகவே கருதப்படுகிறார். ஏனென்றால் அவர் சரியான இடத்தில் நிலைகொண்டுள்ளார்.
....................................................................................................
க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ச'ச்'வச்சான்திம் நிகச்சதி /
கௌந்தேய ப்ரதிஜாந்ீஹி ந மே பக்த: ப்ரணச்'யதி // 9.31
க்ஷிப்ரம் - விரைவிலேயே ; பவதி - ஆகின்றான் ; தர்மாத்மா - தர்மாத்மாவாக ; ச'ச்'வத் - நிலையான ; சா'ந்திம் - அமைதியை ; நிகச்சதி- அடைகின்றான் ; கௌந்தேய - அர்ஜூனா; ப்ரதிஜாந்ீஹி - ஸத்யத்தை உறுதியாக அறிந்துகொள்; ந - இல்லை : மே - என்னுடைய ; பக்த: - பக்தன் ; ப்ரணச்'யதி - அழிவது
9.31 அவர் மிக விரைவிலேயே தர்மவானாகி, முடிவில்லா அமைதி நிலையைப் பெறுகிறார். குந்தி மைந்தனே, என் பக்தனுக்கு என்றும் அழிவில்லை என்று துணிவோடு அறிவிப்பாயாக!
....................................................................................................
மாம் ஹி பார்த வ்யபாச்'ரித்ய யேஅபி ஸ்யு: பாபயோநய:/
ஸ்த்ரியோ வைச்'யாஸ்ததா சூ'த்ராஸ்தேஅபி யாந்தி பராம் கதிம்// 9.32
மாம் - என்னையே ; ஹி - ஏனெனில் ;பார்த - அர்ஜூனா ; வ்யபாச்'ரித்ய - தஞ்சமடைந்து ; யே அபி- எவர்களாக ; ஸ்யு: - இருந்தாலும் ; பாபயோநய: - கீழான பிறவி அடைந்தவர்கள் ; ஸ்த்ரிய: - பெண்கள் ; வைச்'யா: - வைசியர்கள் ; ததா - அவ்வாறே ; சூ'த்ரா; - நான்காம் வர்ணத்தவர்கள் ; தே அபி - அவர்களும் ; யாந்தி - அடைகின்றார்கள் ;பராம் - மேலான ; கதிம் - இலக்கை
9.32 பரீதாவின்மகனே! என்னை சரணடைந்தவர்கள் யாராக இருந்தாலும்சரி, - பெண்கள், வைச்யர்கள், வேலை செய்பவர்கள் மட்டுமல்ல பாவிகள்கூட உயர்ந்த நிலைபேற்றைப் பெற முடியும்.
........................................................................................................
கிம் புநர்ப்ராஹ்மணா: புண்யா பக்தா ராஜர்ஷயஸ்ததா /
அநித்யமஸுகம் லோகமிமம் ப்ராப்ய பஜஸ்வ மாம் // 9.33
கிம் புந: - சொல்வதற்கு என்ன உள்ளது ; ப்ராஹ்மணா: - பிராம்மணர்கள் ; புண்யா: - புனிதமான இயல்பு வாய்ந்த ; பக்தா: - பக்தர்கள் ; ராஜர்ஷய: - ராஜரிஷிகள் ; ததா - அவ்வாறே ; அநித்யம்- நிலையில்லாததும் ஆன ; அஸுகம் - ஸுகமில்லாததும் ; லோகம் - மனித உடலை ; இமம் - இந்த ; ப்ராப்ய - அடைந்து ; பஜஸ்வ - வழிபடுவாயாக; மாம் - என்னை
9.33 (பாவிகள்கூட உயர்ந்த நிலைபேற்றைப் பெற முடியும் எனும்போது) இந்த நிலையற்ற, சுகமற்ற உலகில் இருந்தாலும் எனக்கே அன்பான சேவை செய்துகொண்டிருக்கும் கற்றவர்கள், தர்மவான்கள், பக்தர்கள், ராஜரிஷிகள் போன்றவர்களுக்கு இந்த நிலையை அடைவது எவ்வளவு எளிதான காரியம்!
........................................................................................................
மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு /
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண: // 9.34
மந்மநா: - என்னையே நினைத்துக்கொண்டிருப்பவனாக ; பவ - ஆகிவிடு ; மத்பக்த: - என் பக்தனாக ; மத்யாஜீ - என்னை வழிபடுபவனாக; மாம் - என்னை ; நமஸ்குரு - வணங்கு ; மாம் ஏவ - என்னையே ; ஏஷ்யஸி - அடைவாயாக; யுக்த்வா - ஈடுபடுத்தி ; ஏவம் - இவ்விதம்; ஆத்மாநம் - மனம், புலன்களோடு கூடிய உடலை ; மத்பராயண: - என்னையே அடையத்தக்க ஒரே புகலாகக் கொண்டு
9.34 உன்னுடைய மனத்தை என்னிடம் சரணாகதி செய்து விடு. என்னிடம் பக்தி செய், எனக்கே பூஜை செய். என்னையே வணங்கி இரு.
நீ அடைய வேண்டிய லட்சியமாகவும் ஒரே அடைக்கலமாகவும் என்னையே நிர்ணயித்துக்கொண்டு, என்னுடன் இணைவதன்
மூலம் நிச்சயமாக நீ என்னையே அடைவாய்.
ஓம்ப தத்ஸதிதி ஶ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஶா’ஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே ராஜவித்யாராஜகுஹ்ய யோகோ நாம நவமோऽத்யாய: //
ஓம் தத் ஸத், ஶ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் எனப் பெயர் படைத்த ஒன்பதாவது அத்தியாயம்.
ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள்
| அநந்யாச்'சிந்த | 9-22 |
| அபி சேத்ஸுதுரா | 9-30 |
| அவஜாநந்தி மாம் | 9-11 |
| அச்'ரத்ததாநா: புருஷா | 9-3 |
| அஹம் க்ரதுரஹம் | 9-16 |
| அஹம் ஹி ஸர்வ | 9-24 |
| இதம் து தே குஹ்ய | 9-1 |
| கிம் புநர்ப்ராஹ்மணா: | 9-33 |
| க்ஷிப்ரம் பவதி தர்மா | 9-31 |
| கதிர்பர்தா ப்ரபு: | 9-18 |
| ஜ்ஞாநயஜ்ஞேந | 9-15 |
| தபாம்யஹமஹம் | 9-19 |
| தே தம் புக்த்வா ஸ்வர் | 9-21 |
| த்ரைவித்யா மாம் | 9-20 |
| ந ச மத்கஸ்தானி | 9-5 |
| ந ச மாம் தானி கர் | 9-9 |
| பத்ரம் புஷ்பம் பலம் | 9-26 |
| பிதாஹமஸ்ய ஜக | 9-17 |
| ப்ரக்ரு'திம் ஸ்வாம | 9-8 |
| மந்மநா பவ மத் | 9-34 |
| மயா ததமிதம் ஸர்வம் | 9-4 |
| மயாத்யக்ஷேண | 9-10 |
| மஹாத்மாநஸ்து | 9-13 |
| மாம் ஹி பார்த | 9-32 |
| மோகாஸா' மோககர் | 9-12 |
| யத்கரோஷி யதச்'நாஸி | 9-27 |
| யாந்தி தேவவ்ரதா | 9-25 |
| யதாகாச்'ஸ்திதோ | 9-6 |
| யேऽப்யந்ய தேவதா | 9-23 |
| ராஜவித்யா ராஜகுஹ்ய் | 9-2 |
| சு'பாசு'பபலைரேவம் | 9-28 |
| ஸததம் கீர்தயந்தோ | 9-14 |
| ஸமோऽஹம் ஸர்வ | 9-29 |
| ஸர்வபூதாநி கெளந் | 9-7 |