அதாஷ்டமோSத்யாய:
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
அத்தியாயம் - 8
அக்ஷரப்ரஹ்ம யோக:
அக்ஷரபிரம்ம யோகம்
அர்ஜுந உவாச
கிம் தத்ப்ரஹ்ம கிமத்யாத்மம் கிம் கர்ம புருஷோத்தம/
அதிபூதம் ச கிம் ப்ரோக்தமதிதைவம் கிமுச்யதே// 8.1
அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னார்; கிம் - என்ன; தத் - அந்த; ப்ரஹ்ம - பிரம்மம்; கிம் - என்ன ; அத்யாத்மம் - சுயம்; கிம் - எது; கர்ம - பலனை அடிப்படையாகக் கொண்ட செயல்கள்; புருஷோத்தம
- மனிதர்களுக்குள் சிறந்தவர்; அதிபூதம் - பொருள்சார்ந்த உலகம்; ச - மேலும்; கிம்- எது; ப்ரோக்தம் - அழைக்கப்படுகிறது; அதிதைவம் - சிறு தெய்வங்கள்; கிம் - என்ன; உச்யதே - சொல்லப்படுகிறது
அர்ஜுனன் சொன்னது
8.1 ஓ பரம்பொருளே! மனிதர்களுக்குள் உயர்ந்தவரே, பிரஹ்மம் என்றால் என்ன? 'நான்' என்பது என்ன? 'கர்மா' என்பது என்ன? பலன்களை அடிப்படையாகக் கொண்ட செயல்கள் எவை?
வெளிப்படையாகத் தெரியும் பொருள் சார்ந்த உலகம் என்பது என்ன? சிறு தெய்வங்கள் என்றால் என்ன? தயவு செய்து விளக்குங்கள்.
.......................................................................................................
அதியஜ்ஞ: கதம கோSத்ர தேஹேSஸ்மின்மதுஸூதன/
ப்ரயாணகாலே ச கதம ஞ்யேயோடஸி நியதாத்மபி:// 8.2
அதியஜ்ஞ: - யக்ஞங்களுக்கு இறைவன் என்பவர்; கதம் - எப்படி இருக்கிறார்?; க: - யார்; அத்ர - இங்கு; தேஹே - தேகத்தில்; அஸ்மின் - இந்த; மதுஸூதன - மதுஸூதனா; ப்ரயாணகாலே - மரணத்தறுவாயில்; ச - மேலும்; கதம - எவ்வாறு; ஜ்ஞேய: அஸி - அறியப்படுகிறீர்கள்; நியதாத்மபி: - ஒன்றிய மனத்தோடு 8.2 யாக்க, யக்ஞ வடிவான கடவுள் இந்த உடலில் எவ்வாறு வாழ்கிறார்? ஓ... மதுசூதனரே! உடலின் எந்தப் பகுதியில் அவர் இருக்கிறார்?
பக்திசேவையில் ஈடுபடுபவர்கள், மரண காலத்தில் உன்னை எவ்வாறு அறிகிறார்கள்?
.......................................................................................................
ஸ்ரீபகவாநுவாச
அக்ஷரம் ப்ரஹ்ம பரமம் ஸ்வபாவோऽத்யாத்மமுச்யதே /
பூதபாவோத்பவகரோ விஸர்க: கர்மஸம்ஜ்ஞித:// 8.3
ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீபகவான் சொன்னார்; அக்ஷரம் - அழிவற்றது மானது; ப்ரஹ்ம - பிரம்மம் எனப்படுவது; பரமம் - அனைத்தையும் கடந்தது; ஸ்வபாவ: - நிலைத்த தன்மை; அத்யாத்மம் - சுயம்; உச்யதே
- அழைக்கப்படுகிறது; பூதபாவ உத்பவகர: - சராசரங்களின் இருப்பை உருவாக்குகிற; விஸர்க: - படைப்பு; கர்மஸம்ஜ்ஞித: - கர்மம் என்று பெயரால் அழைக்கப்படுகிறது
பகவான் சொன்னது
8.3 அழிக்க முடியாததும், எல்லாவற்றையும் கடந்ததுமான ஒன்றே ப்ரஹ்மம் என்று அழைக்கப்படுகிறது. அதன் நிலையான தன்மையே ஆத்மா என்று அழைக்கப்படுகிறது.
பொருள் சார்ந்த உலகத்தின் வளர்ச்சி தொடர்பான செயல்கள் அல்லது பலன்களை அடிப்படையாகக் கொண்ட செயல்கள் கர்மா என்று அழைக்கப்படுகிறது.
.......................................................................................................
அதிபூதம் க்ஷரோ பாவ: புருஷச்'சாதீதைவதம் /
அதியஜ்ஞோऽஹமேவாத்ர தேஹே தேஹப்ரு'தாம் வர // 8.4
அதிபூதம்- உடல் சார்ந்த உலகம்; க்ஷர: பாவ: - தொடர்ந்து மாறிக்கொண்டே டயிருக்கும் இயல்பு; புருஷ: - பிரபஞ்ச ரூபம் கொண்ட; ச - மேலும்; அதீதைவதம் - சூரியன் சந்திரன் போன்ற சிறு தெய்வங்கள்; அதியஜ்ஞ: - பரபிரஹ்மம்; அஹம் ஏவ - நானே (கிருஷ்ணர்); அத்ர - இந்த; தேஹே - உடலில்; தேஹப்ரு'தாம் வர - உடல் பெற்றவர்களிற் உயர்ந்தவனே
8.4. உடலின் இயல்பே முடிவில்லாமல் மாறிக் கொண்டிருப்பதுதான். அந்த மேலான இறைவனின் சக்தி வடிவமே இந்தப் பிரபஞ்சம். உடல் எடுத்திருக்கும் எல்லா உயிர்களின் இதயத்திற்குள்ளும் வசிக்கிற பரமாத்மா நானே!
...........................................................................................
அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம் /
ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ச'ய: //
அந்தகாலே ச - மரண காலத்திலும்; மாம் ஏவ - என்னையே; ஸ்மரந் - நினைத்துக்கொண்டு; புக்த்வா - நீத்து; கலேவரம் - சரீரத்தை; ய: - எந்த மனிதன்; ப்ரயாதி - கிளம்புகிறானோ; ஸ: - அவன்; மத்பாவம் - என் ஸ்வரூபத்தையே; யாதி - அடைகிறான்; ந - இல்லை; அஸ்தி - இருப்பு; அத்ர - இதில்; ஸம்ச'ய: - சந்தேகம்
8.5. மரணத்தறுவாயில் யாரொருவர் என்னை நினைத்துக்கொண்டே உயிர் விடுகிறாரோ அவர் உடனடியாக எனது தன்மையை அடைந்து விடுகிறார்.
இதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.
...........................................................................................
யம் யம் வாபி ஸ்மரந்பாவம் த்யஜத்யந்தே கலேவரம் /
தம் தமேவைதி கெளந்தேய ஸதா தத்பாவபாவித: //
யம் யம் - எந்தெந்த; வா அபி - இருந்தாலும்; ஸ்மரந் - சிந்தித்தவண்ணமாய்; பாவம் - ஸ்வரூபத்தை; த்யஜதி - துறக்கிறானோ; அந்தே -கடைசிக் காலத்தில்; கலேவரம் - இந்த சரீரத்தை; தம் தம் ஏவ - அந்தந்த ஸ்வரூபத்தையே; ஏதி- அடைகிறான்; கெளந்தேய - குந்தியின் மைந்தனே; ஸதா- எப்பொழுதும்; தத் - அதே; பாவபாவித: - சிந்தனையில் இருக்கிறான்
8.6. மரணகாலத்தில் தம் உடலைவிடும்போது எதை நினைத்துக்கொள்கிறாரோ, அந்த நிலையையே ஒருவர் நிச்சயமாக அடைவார்.
தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு மாமநுஸ்மர யுத்ய ச /
மய்யர்பிதமநோபுத்திர்மாமேவைஷ்யஸ்யஸம்ச'யம் // 8.7
தஸ்மாத் - ஆகையினால்; ஸர்வேஷு- எல்லா; காலேஷு - காலங்களிலும்; மாம் - என்னையே; அநுஸ்மர - நினைத்துக் கொண்டே; யுத்ய ச - போரும் புரிவாயாக; மயி - என்னிடத்தில்; அர்பித மந: புத்தி: - அர்ப்பணம் செய்யப்பட்ட மனம், புத்தியுடன்கூடியவனாக; மாம் ஏவ - என்னையே; ஏஷ்யஸி - அடைவாய்; அஸம்ச'ய: - ஐயமின்றி;
8.7 அர்ஜுனா, உனக்கு விதிக்கப்பட்ட போர் செய்தலாகிய கடமையைச் செய்துகொண்டிருக்கும் போதும், கிருஷ்ணராகிய என்னை நினைப்பாயாக!
உனது செயல்கள் எல்லாவற்றையும் எனக்கு அர்ப்பணம் செய்து விட்டு மனத்தையும் புத்திசாலித்தனத்தையும் என்னிடமே பதித்தால் நிச்சயமாக நீ என்னை அடைவாய். அதில் சந்தேகமே இல்லை
அப்யாஸயோகயுக்தேந சேதஸா நாந்யகாமிநா /
பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்தாநுசிந்தயந் // 8.8
அப்யாஸயோகயுக்தேந - பகவானைத் தியானிப்பது என்ற பயிற்சியான யோகத்தில் ஈடுபட்டு; சேதஸா - மனத்தாலும் புத்தியாலும்; ந அந்யகாமிநா
- வேறு விஷயங்கள் பால் செல்லாத; பரமம் - மிகவும் உயர்ந்த; புருஷம்
- தேவர்களுக்கெல்லாம் தலைவனை; திவ்யம் - அனைத்தையும் கடந்த; யாதி - அடைகிறான் பார்த - பிரிதாவின் மைந்தனே; அநுசிந்தயந் - எப்போதும் சிந்தித்துக்கொண்டிருக்கும்
8.8 ஓ பிரிதாவின் மைந்தனே! யாரொருவர் என் நினைவிலேயே நிலைபெற்று, பாதை விலகாமல் என்னையே தியானம் செய்கிறாரோ, அவர் நிச்சயமாக என்னை அடைவார்.
கவிம் புராணமநுசாஸிதார-
மணோரணீயாம்ஸமநுஸ்மரேத்ய: /
ஸர்வஸ்ய தாதாரமசிந்த்யரூப-
மாதீத்யவர்ணம் தமஸ: பரஸ்தாத் // 8.9
கவிம் - எல்லாமறிந்தவரும்; புராணம் - அனாதியானவரும்; அனுசா'ஸிதாரம் - எல்லாவற்றையும் ஆள்பவரும்; அணோ: - நுண்ணியதைக் காட்டிலும்; அணீயாம்ஸம் - மிகவும் நுண்ணியவரானவரும்; அனுஸ்மரேத் - எப்போதும் நினைக்கிறானோ; ய: - எந்த மனிதன்; ஸர்வஸ்ய - எல்லாவற்றையும்; தாதாரம் - தாங்கிக் காப்பாற்றுபவரும்; அசிந்த்யரூபம் - சிந்தனைக் கெட்டாத வடிவுடையவரும்; ஆதித்யவர்ணம்- சூரியனைப் போன்று எப்பொழுதும் ஒளிர்பவரும்; தமஸ: - இருளுக்கு; பரஸ்தாத் - மிகவும் அப்பாற்பட்டவரும்;
8.9. அந்த மேலான பரம்பொருளைத் தியானிக்கும் ஒருவர், அவரை எல்லாம் அறிந்தவராகவும், பழமைகளுக்கெல்லாம் பழமையானவராகவும், எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவராகவும், அணுவிலும் அணுவானராகவும், எல்லாவற்றையும் காப்பவராகவும், பருப்பொருள் சார்ந்த உலகாயுதக் கருத்துகளுக்கு அப்பாற்பட்டவராகவும், மனத்திற்கும் கற்பனைகளுக்கும் எட்டாதவராகவும் உணர்ந்து தியானிக்க வேண்டும்.
அவர் உலகப் பொருட்களுக்கு அப்பாற்பட்டவராகவும், இயற்கை ஆற்றல்களுக்கு அப்பாற்பட்டவராகவும், வியக்கத் தக்கவராகவும், சூரியனைப் போன்ற ஒளியுடையவராகவும் விளங்குகிறார்.
........................................................................................................
ப்ரயாணகாலே மநஸாசலேந
பக்த்யா யுக்தோ யோகபலேந சைவ /
ப்ருவோர்மத்யே ப்ராணமாவேச்'ய ஸம்யக்
ஸ தம் பரம் புருஷ முபைதி திவ்யம் // 8.10
ப்ரயாணகாலே - இறக்கும்தறுவாயில்; மநஸா - மனத்தால்; அசலேந - அசையாத; பக்த்யாயுக்த: - பக்தியோடுகூடிய; யோகபலேந - யோகத்தின் வலிமையால்; ச - மேலும்; ஏவ - நிச்சயமாக; ப்ருவோ: - புருவங்களின்; மத்யே - மத்தியில்; ப்ராணம் - பிராணனை; ஆவேச்'ய - நிலைநிறுத்தி; ஸம்யக் - முழுமையான; ஸ: - அந்த மனிதன்; தம் - அந்த; பரம் - மேலான; புருஷம் ஏவ - புருஷனான பரமாத்மாவையே; உபைதி - அடைகிறான்; திவ்யம் - ஆன்மீக சாம்ராஜ்யத்தில்
8.10. எவன் ஒருவன் மரணமடைகிற நேரத்தில், யோகத்தின் பலனாக,
தன் தனது கவனத்தைச் சிதறடிக்காமல், மனத்தையும் உயிர் மூச்சையும் தடுமாற்றம் இல்லாமல் புருவமத்தியில் நிறுத்தி, முழு சரணாகதியோடு என்னை நினைக்கிறானோ அவன் என்னில் நிலைக்கிறான்.
அவன் நிச்சயமாக என்னை அடைகிறான்.
..........................................................................................................
யதக்ஷரம் வேதவிதோ வதந்தி
விச’ந்தி யத்யதயொ வீதராகா: /
யதிச்சந்தோ ப்ரஹ்மசர்யம் சரந்தி
தத்தே பதம் ஸங்க்ரஹேண ப்ரவக்ஷ்யே //
யத் - எந்த; அக்ஷரம்- அழிவில்லாதது; வேதவித: - வேதமறிந்த வித்வான்கள்; வதந்தி - சொல்கிறார்களோ; விச’ந்தி - புகுகிறார்களோ; யத் - எதில்; யதய: - ஸந்யாஸிகளான மஹா புருஷர்கள்; வீதராகா: - பற்று நீங்கிய; யத் - எதில்; இச்சந்த:- விரும்புகிற; ப்ரஹ்மசர்யம் - பிரஹ்மசரிய நெறியை; சரந்தி - கடைப்பிடிக்கிறார்களோ; தத் - அந்த; தே - உனக்கு; பதம் - நிலையை; ஸங்க்ரஹேண - சுருக்கமாக; ப்ரவக்ஷ்யே - சொல்லப்போகிறேன்
8.11 வேதத்தைக் கற்றறிந்தவர்களும், துறவில் மிகச்சிறந்த முனிவர்களும் பிரஹ்மத்தில் நுழைகிறார்கள். அந்த முழுமையை அடைய விரும்பும் ஒருவர் பிரஹ்மசர்யத்தை அனுசரிக்கிறார். ஒருவர் எவ்வாறு பிரஹ்மத்தை, ஜீவன்முக்தியை அடைய முடியும் என்பதற்கான வழிமுறைகளை, நான் இப்போது உனக்கு விளக்கப் போகிறேன்.
..........................................................................................................
ஸர்வத்வாராணி ஸம்யம்ய மனோ ஹ்ரு’தி நிருத்ய ச /
மூர்த்ந்யாதாயாத்மன: ப்ராணமாஸ்திதோ யோகதாரணாம் //
ஸர்வத்வாராணி - புலன்களின் எல்லா வாயில்களையும்; ஸம்யம்ய - அடைத்து வைத்து; மந: - மனம்; ஹ்ரு’தி - இதயத்தில்; நிருத்ய- நிலையாக நிறுத்தி; ச - கூட; மூர்த்நி - உச்சந்தலையில்; ஆதாய - நிலைபெறச் செய்து; ஆத்மந: - பரமாத்மா சம்பந்தமான; ப்ராணம் - பிராணனை; ஆஸ்தித: - நிலைத்து நின்று; யோக தாரணாம் - யோகநிலையில்
8.12 புலன்களின் கதவுகளை அடைத்து, மனத்தை இதயத்தில் நிறுத்தி, உயிர் மூச்சை உச்சந்தலையில் நிறுத்தி, ஒருவர் யோகத்தில் தம்மை நிலைக்கச் செய்கிறார்.
...........................................................................................................................................
ஓமித்யேகாக்க்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரன்மாமநுஸ்மரன் /
ய: ப்ரயாதி த்யஜந்தேஹம் ஸ யாதி பரமாம் கதிம் // 8.13
ஓம் இதி - ஓம் என்னும்; ஏகாக்க்ஷரம் - மேலான அழிவற்ற; ப்ரஹ்ம - பூரணமான உயர்ந்த சக்தி; வ்யாஹரன் - உச்சரித்துக்கொண்டு; மாம் - என்னை; அநுஸ்மரன் - சிந்தித்துக்கொண்டு; ய: - யார் ஒருவன்; ப்ரயாதி
- செல்கிறானோ; த்யஜன் - நீத்து; தேஹம் - இவ்வுடலை; ஸ: - அந்த மனிதன்; யாதி - அடைகிறான்; பரமாம் கதிம் - உயர்ந்த கதியை
8.13 இத்தகையதொரு யோக நிலையில் இருந்துகொண்டு புனித மந்திர ஒலியும் மிக உயர்ந்த மந்திர எழுத்துக்களின் தொகுப்புமான ‘ஓம்’ என்பதை உச்சரித்தபடி, மிக உயர்ந்த சக்தியை நினைத்தபடி யார் தம் உடலை விடுகிறாரோ, அவர் நிச்சயமாக பரம்பொருளுடன் இணைகிறார்.
...........................................................................................................................................
அநந்யசேதா: ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஶ: /
தஸ்யாஹம் ஸுலப: பார்த நித்யயுக்தஸ்ய யோகிந: // 8.14
அநந்யசேதா: - வேறு சிந்தனையற்று; ஸததம் - இடைவிடாமல்; ய: - எவன்; மாம் - என்னை; ஸ்மரதி - நினைக்கிறானோ; நித்யஶ: - எப்பொழுதும்; தஸ்ய - அந்த; அஹம் - நான்; ஸுலப: - எளிதில் அடையக்கூடியவன்; பார்த - பிரிதாவின் மைந்தனே; நித்யயுக்தஸ்ய - எப்போதும் இடைவிடாமல் என்னிடம் ஒன்றிவிட்ட; யோகிந - யோகிக்கு
8.14 பார்த்தா! எப்போதும் என் நினைவாகவே இருப்பவர்களுக்கு நான் எளிதில் அணுகக்கூடியவனாகவே இருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் பக்தியில் கரைந்து, தொடர்ந்து எனக்குத் தொண்டாற்றுபவர்களாக இருக்கிறார்கள்.
...........................................................................................................................................
மாமுபேத்ய புநர்ஜன்ம து:காலயமசா’ஶ்வதம் /
நாப்நுவந்தி மஹாத்மாந: ஸம்ஸித்திம் பரமாம் கதா: // 8.15
மாம் - என்னை; உபேத்ய - அடைந்துவிட்ட பிறகு; புநர்ஜன்ம - மறுபிறவியை; து:காலயம் - துன்பங்களுக்கு உறைவிடமானதும்; அசா’ஶ்வதம்- நிலையற்றதுமான; ந ஆப்நுவந்தி - அடைவதில்லை; மஹாத்மாந: - மஹாத்மாக்கள்; ஸம்ஸித்தேம் - முழுமை நிலையை; பரமாம்
- மிக உயர்ந்த இறுதி நிலையை; கதா: - அடைந்த
8.15 என் மீது பக்தி வைத்துள்ள சிறந்த யோகிகள் என்னை அடைந்த பிறகு, துன்பங்களின் இருப்பிடமும், நிலையற்றதுமாகிய, இவ்வுலகில் மீண்டும் பிறக்காமல் மிக உயர்ந்த முழுமை நிலையை அடைகிறார்கள்.
..........................................................................................................
ஆப்்ரஹ்மபுவநால்லோக: புநராவர்திநோऽர்ஜுந /
மாமுபேத்ய து கெளந்தேய புநர்ஜன்ம ந வித்யதே // 8.16
ஆப்்ரஹ்மபுவநாத் - இந்த பூ உலகிலிருந்து பிரம்மலோகம் வரை; லோகார: - எல்லா உலகங்களும்; புந: ஆவர்திந: - அழிந்து உண்டாகும் தன்மையுடையன; து - ஆனால்; அர்ஜுந - அர்ஜுனா; மாம் - என்னை; உபேத்ய - அடைந்த பின்னர்; கெளந்தேய - குந்தியின் புதல்வனே; புநர்ஜன்ம - மறுபிறவி; ந வித்யதே - கிடையாது
8.16 மிக உயர்ந்த உலகங்களில் இருந்து மிகத் தாழ்வான இந்தப் பொருள்சார்ந்த உலகம்வரை, எங்கெல்லாம் பிறப்பும் இறப்பும் நிகழ்கிறதோ அங்கெல்லாம் துக்கமே உள்ளது. ஓ! குந்தியின் மகனே, என்னை அடைந்தவர் மீண்டும் பிறப்பதே இல்லை.
..........................................................................................................
ஸஹஸ்ரயுகபர்யந்தமஹர்யத்ப்ரஹ்மணோ விது: /
ராத்ரிம் யுகஸஹஸ்ராந்தாம் தேऽஹோராத்ரவிதோ ஜநா: // 8.17
ஸஹஸ்ரயுகபர்யந்தாம் - ஓராயிரம் சதுர்யுகங்களைக் கால வரையறையாகக் கொண்டது; அஹ: - ஒரு பகலோ; யத் - எது; ப்ரஹ்மண: - பிரஹ்மாவுக்கு; விது: - தத்வ ரீதியாக அறிகிறார்களோ; ராத்ரிம் - இரவும்; யுகஸஹஸ்ராந்தாம் - ஓராயிரம் சதுர்யுகங்களை முடிவாகக் கொண்டது என்றும்; தே - அந்த; அஹோராத்ரவித: - பகலிரவு என்ற காலத்தின் தத்துவத்தை அறிந்தவர்கள்; ஜநா: - யோகியர்
8.17 மனிதர்களின் கணக்குப்படி ஆயிரக் கணக்கான ஆண்டுகள் சேர்ந்ததுதான் பிரஹ்மாவின் ஒரு பகல், அவரது இரவும் அப்படியே.
..........................................................................................................
அவ்யக்தாத்வ்யக்தய: ஸர்வா: ப்ரபவந்த்யஹராகமே /
ராத்ர்யாகமே ப்ரலீயந்தே தத்ரைவாவ்யக்தஸம்ஜ்ஞகே // 8.18
அவ்யக்தாத் - வெளிப்படா நிலை; வ்யக்தய:- சராசரமான உயிர் தொகுதிகளும்; ஸர்வா:- எல்லாவிதமான; ப்ரபவந்தி - வெளிப்படுகின்றன; அஹராகமே - பிரஹ்மாவின் பகல் தொடங்கும் போது; ராத்ர்யாகமே - பிரஹ்மதேவனின் இரவு முடியும் போது; ப்ரலீயந்தே - மறைகின்றன; தத்ர - அந்த; ஏவ - நிச்சயமாக; அவ்யக்தஸம்ஜ்ஞகே - வெளிப்படா நிலை என்றழைக்கப்படும்
8.18 ‘தோன்றாத நிலை’யில் இருக்கும் ஆத்மாக்கள் அனைத்தும் பிரஹ்மாவின் பகலின் தொடக்கத்தில் உயிரினங்களாக வெளிப்படுகின்றன. பிரஹ்மாவின் இரவு வரும்போது அவை மீண்டும் ‘தோன்றா நிலை’யிலேயே ஒடுங்கி விடுகின்றன.
பூதக்ராம: ஸ ஏவாயம் பூத்வா பூத்வா ப்ரலீயதே /
ராத்ர்யாகமேऽவஶ’: பார்த ப்ரபவத்யஹராகமே //
பூதக்ராம: - உயிரினங்களின் கூட்டம்; ஸ: ஏவ அயம் - அதே இந்த; பூத்வா பூத்வா - மீண்டும் மீண்டும் பிறந்து; ப்ரலீயதே - மறைகிறது; ராத்ர்யாகமே - இரவின் தொடக்கக் காலத்தில்; அவஶ’: - தன்வசமின்றி; பார்த - பிரிதாவின் மைந்தனே!; ப்ரபவதி - உண்டாகிறது; அஹராகமே - பகலின் தொடக்கத்தில்
8.19 ஓ பிரிதாவின் மகனே! மீண்டும் மீண்டும் பெருந்திரளாக இவ்வுயிர்கள், பகல் தொடங்கும்ப்போது வெளிப்பட்டு செயல்பட்டு, இரவு வரும்போது இயற்கையாகவே மறைந்து விடுகின்றன.
பரஸ்தஸ்மாத்து பாவோऽந்யோऽவ்யக்தோऽவ்யக்தாத்ஸநாதந: /
ய: ஸ ஸர்வேஷு பூதேஷு நஶ்'யத்ஸு ந விநச்'யதி //
பர: - எல்லாவற்றையும் கடந்த; தஸ்மாத் - அந்த; து - ஆனால்; பாவ: - இயற்கை; அந் ய: - வேறான ; அவ்யக்த: - வெளிப்படாத; அவ்யக்தாத் - வெளிப்படா நிலையிலிருந்து; ஸநாதந: - சாஸ்வதமான; ய: - எந்த; ஸ: - அந்த; ஸர்வேஷு - எல்லா; பூதேஷு - உயிரினங்களும்; நஶ்'யத்ஸு - அழிந்த போதிலும்; ந விநச்'யதி - அழிவதில்லை. 8.20 ஆனால் இவற்றிற்கு அப்பாற்பட்ட இயற்கை ஒன்று உண்டு. அது நிலையானது; அது தோன்றிய மற்றும் தோன்றாதவற்றிற்கும் அப்பாற்பட்டது.
அந்த மஹோன்னதமான சக்தி அழிவதில்லை. இந்த உலகங்களெல்லாம் அழிக்கப்பட்டாலும், அது மாறாமல்இருக்கிறது.
.........................................................................................................
அவ்யக்தோऽக்ஷர இத்யுக்தஸ்தமாஹு: பரமாம் கதிம் /
யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம // 8.21
அவ்யக்த: - தோன்றா நிலை; அக்ஷர: - அழிவில்லாதது; இதி உக்த: - என்று சொல்லப்பட்ட; தம்-அதே அக்ஷரம் என்ற பெயருள்ள தோன்றா நிலையை; ஆஹு: - சொல்வார்கள்; பரமாம் கதிம் - மிக உயர்ந்த கதி; யம் - எந்த நிலையை; ப்ராப்ய - அடைந்த பிறகு; ந நிவர்தந்தே - திரும்புவதில்லையோ; தத்தாம - அந்த இருப்பிடத்தை; பரமம் - மேலானா; மம - என்னுடைய
8.21 அந்த மஹோன்னதமான இருப்பிடம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாததாகவும் அழியாததாகவும் முடிவான லக்ஷ்யமாகவும் இருக்கிறது.
ஒருவர் எனது அந்த மஹோன்னதமான இருப்பிடத்தை அடைந்துவிட்டால் அவர் திரும்ப வருவதில்லை.
.........................................................................................................
புருஷ: ஸ பர: பார்த பக்த்யா லப்யஸ்த்வநந்யயா /
யஸ்யாந்த:ஸ்தானி பூதானி யேந ஸர்வமிதம் ததம் // 8.22
புருஷ: - பரமாத்மாவை; ஸ: - அந்த ஸனாதன அவ்யக்தனான; பர : - மிக மேலான; பார்த - பிரிதாவின் மைந்தனே!; பக்த்யா - பக்தியினால் செய்யப்படும் சேவையினாலேயே; லப்ய - அடைய முடியும்; து - ஆனால்; அநந்யயா- வேறு எதிலும் நாட்டமில்லாத; யஸ்ய - எந்த; அந்த:ஸ்தானி - பரமாத்மாவினுள் இருக்கின்றனவோ; பூதானி - எல்லா உயிரினங்களும்; யேந -யாரால்; ஸர்வம்- அகில உலகமும்; இதம் - நம்மால் பார்க்க முடிந்த; ததம் - ஊடுருவி இருக்கிற
8.22 ஓ பார்த்தா! உயர்ந்த அந்தப் பரம்பொருளை மாறாத பக்தியால் அடைய முடியும்.
அவர் தமது இருப்பிடத்திலேயே இருந்தாலும், எல்லாவற்றிலும் ஊடுருவி உள்ளார். அவரிடத்திலேதான் அனைத்தும் நிலைகொண்டு உள்ளன.
.......................................................................................................
யத்ர காலே த்வநாவ்ரு'த்திமாவ்ரு'த்திம் சைவ யோகிந: /
ப்ரயாதா யாந்தி தம் காலம் வக்ஷ்யாமி பரதர்ஷப // 8.23
யத்ர - எந்த; காலே - காலத்தில்; து - ஆனால்; அநாவ்ரு'த்திம் - திரும்பி வராத பெரு நிலை; ஆவ்ரு'த்திம் - திரும்பி வரும் நிலை (மறுபிறப்பு); ச - மேலும்; ஏவ - நிச்சயமாக; யோகிந: - பல்வேறுவிதமான யோகியர்; ப்ரயாதா - உடலை நீந்துவிட்டுச் செல்கிற; யாந்தி - அடைகிறார்களோ; தம் - அந்த; காலம் - காலத்தை; வக்ஷ்யாமி - விளக்குகிறேன்; பரதர்ஷப - பரத வம்சத்தவர்களுள் சிறந்தவனே
8.23 ஓ பரத வம்சத்தவர்களுள் சிறந்தவனே! நான் இப்போது, உலகை விட்டுச் செல்பவர்கள் எந்தெந்த நேரங்களில் சென்றால் மீண்டும் வருவதில்லை, எந்தெந்த நேரங்களில் சென்றால் மீண்டும் பிறக்கிறார்கள் என்பதை விளக்குகிறேன்.
.......................................................................................................
அக்நிர்ஜ்யோதிரஹ: சு'க்ல: ஷண்மாஸா உத்தராயணம் /
தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்மவிதோ ஜநா: // 8.24
அக்நி: - அக்னி; ஜ்யோதி: - ஒளிமயமான; அஹ: - பகல்; சு'க்ல: - வெண்மை; ஷண்மாஸா:- ஆறு மாதங்களின்; உத்தராயணம் - சூரியன் வடக்கு நோக்கிப் பிரயாணம் செய்யும் காலம்; தத்ர - அந்த மார்க்கத்தில்; ப்ரயாதா - இறந்த பிறகு செல்கிற; கச்சந்தி - அடைகிறார்கள். ப்ரஹ்ம - பிரஹ்மத்தை; ப்ரஹ்மவித: - பிரஹ்மத்தை அறிந்த; ஜநா: - யோகிகளான ஜனங்கள்
8.24 ஓ! பார்த்தனே! ‘தீ’க்கடவுள், ஒளிரிருக்கும் நேரம், நல்ல நேரம், வளர்பிறை, சூரியன் வடக்கு நோக்கி நகரும் ஆறுமாத காலம் (உத்தராயண காலம்), இந்தக் காலங்களில் இறப்பவர்கள் முக்தியடைகிறார்கள். மிக உயர்ந்த அந்த பிரஹ்மத்தை
உணர்ந்தவர்கள் திரும்புவதில்லை.
தூமோ ராத்ரிஸ்ததா க்ரு'ஷ்ண: ஷண்மாஸா தக்ஷிணாயநம் /
தத்ர சாந்த்ரமஸம் ஜ்யோதிர்யோகீ ப்ராப்ய நிவர்ததே // 8.25
தூம: - புகை; ராத்ரி: - ராத்திரி; ததா - அப்படியே; க்ரு'ஷ்ண: - தேய்பிறை; ஷண்மாஸா: - ஆறு மாதங்களுக்குரிய; தக்ஷிணாயநம் - சூரியன் தெற்கு நோக்கி பிரயாணம் செய்யும் காலம்; தத்ர - அந்த; சாந்த்ரமஸம் - சந்திரனுடைய; ஜ்யோதி: - ஒளியை; யோகீ - பற்றுடன் கர்மங்களைச் செய்கிற யோகி; ப்ராப்ய - அடைந்து; நிவர்ததே - திரும்பி வருகிறார்
8.25 புகை, இரவு நேரம், தேய்பிறை, சூரியன் தெற்கு நோக்கிச் செல்கிற ஆறுமாத காலம் (தக்ஷிணாயன காலம்), இந்தக் காலங்களில் உடலைவிடும் யோகிகள் நல்ல காரியங்களைச் செய்திருந்தாலும் ஆத்ம சரீரம்வரை சென்று விட்டு, மீண்டும் இவ்வுலகிற்கு திரும்பி வருகிறார்கள்.
சு'க்லக்ரு'ஷ்ணே கதீ ஹ்யேதே ஜகத: சா'ச்'வதே மதே /
ஏகயா யாத்யநாவ்ரு'த்திமந்யயாவர்ததே புந: // 8.26
சு'க்லக்ரு'ஷ்ணே - ஒளி, இருள்; கதீ - வழிகள்; ஹி - நிச்சயமாக; ஏதே - இந்த இரண்டு விதமான; ஜகத: - உலகிற்கு; சா'ச்'வதே - வேதங்களின்; மதே
- கருதப்படுகின்றனா்; ஏகயா - ஒன்றின் வழியாக; யாதி - அடைகிறான்; அநாவ்ரு'த்திம் - எதிலிருந்து திரும்பி வரவேண்டியதில்லையோ அந்த பரமகதியை; அந்யயா - மற்றொரு வழியாகச் செல்கிறவன்; ஆவர்ததே - திரும்பி வருகிறான்; புந: - மறுபடியும்
8.26 வேதங்களைப் பொறுத்தவரை ஒருவர் இறக்கும்போது இரண்டு விதமாகப் பயணம் செய்யலாம். ஒன்று, ஒளியின் பாதை மற்றொன்று, இருளின் பாதை. ஒளியின் பாதையில் செல்பவர் திரும்புவதில்லை; இருளின் பாதையில் செல்பவர் மறு பிறவி எடுக்கிறார்.
நைதே ஸ்ரு'தீ பார்த்த ஜாநந்யோகீ முஹ்யதி கச்'சந /
தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு யோகயுக்தோ பவார்ஜுந // 8.27
ந - இல்லை; ஏதே ஸ்ரு'தீ - இந்த அனைத்து வெவ்வேறுவிதமான மார்க்கங்களையும்; பார்த்த - பார்த்தா; ஜாநந் - தத்வ ரீதியாக அறிந்த; யோகீ - இறைவனுடைய பக்தர்கள்; முஹ்யதி- மோஹம்; கச்'சந - எந்த ஒரு; தஸ்மாத் - ஆகையால்; ஸர்வேஷு - எல்லா; காலேஷு - காலங்களிலும்; யோகயுக்த: - கிருஷ்ண உணர்வில் நிலைத்திருக்கும்; பவ - ஆகி விடு; அர்ஜுந- அர்ஜூனா
8.27 ஓ பார்த்தா! இந்த இரண்டு வழிகளையும் அறிந்தவர்கள் தடுமாறுவதே இல்லை.
ஓ அர்ஜூனா! அதனால் எப்போதும் பக்தியில் நிலைத்திரு.
..........................................................................................................
வேதேஷு யஜ்ஞேஷு தப:ஸு சைவ
தாநேஷு யத்புண்யபலம் ப்ரதிஷ்டம் /
அத்யேதி தத்ஸர்வமிதம் விதித்வா
யோகீ பரம் ஸ்தாநமுபைதி சாத்யம் // 8.28
வேதேஷு - வேதங்களை அத்யயனம் செய்வதிலும்; யஜ்ஞேஷு - யாகங்களைச் செய்வதிலும் ; தப:ஸு - தவம் செய்வதிலும் ; ச - மேலும்; ஏவ - ஐயமின்றி; தாநேஷு - தானங்கள் செய்வதிலும் ; யத் - எந்த; புண்யபலம் - பக்தி சேவையினுடைய பலன்; ப்ரதிஷ்டம் - சொல்லப்பட்டிருக்கிறதோ; அத்யேதி - கடந்து செல்கிறான்; தத் - அந்த; ஸர்வம் - எல்லாவற்றையுமே; இதம்த் - இந்த ரஹஸ்யத்தை; விதித்வா- தத்வ ரீதியாக அறிந்து; யோகீ - யோகியானவன்; பரம் ஸ்தாநம் - பரமபதத்தை; உபைதி - அடைகிறான்; ச - மேலும்; ஆத்யம் - என்றுமுள்ள
8.28 பக்திமயமான சேவை என்ற பாதையை ஏற்றுக்கொள்ளும் ஒருவர் வேதங்களைக் கற்பது, பூஜைகளைச் செய்வது, வேள்விகள் செய்வது, தான தருமங்களைச் செய்வது, பக்தி செய்வது, பலன்களை எதிர்பார்த்து செய்யும் செயல்கள் ஆகிய எல்லாவற்றின் பலனையும் கடந்து செல்கிறார்.
முடிவில் அவர் மஹோன்னதமான இருப்பிடத்தை அடைகிறார்.
..........................................................................................................
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸூ ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே க்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
அக்ஷரப்ரஹ்மயோகோ நாமாஷ்டமோऽத்யாய: //
ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய அக்ஷர பிரஹ்ம யோகம் என்னும் பெயர் கொண்ட எட்டாவது அத்தியாயம்.