KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/ஸ்லோகங்கள்Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

ஸ்லோகங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அத பஞ்சமோऽத்யாய:

ஐந்தாவது அத்தியாயம்

கர்ம ஸந்ந்யாஸ யோக:

கர்ம ஸந்யாஸ யோகம்

அர்ஜுந உவாச

ஸந்ந்யாஸம் கர்மணாம் க்ரு'ஷ்ண புநர்யோகம் ச
ச'ம்ஸஸி /
யச்ச்ரேய ஏதயோரேகம் தந்மே ப்ரூஹி ஸுநிச்'சிதம் //

அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னது; ஸந்ந்யாஸம் - ஸந்யாஸத்தைப் பற்றியும்; கர்மணாம்- கர்மங்களுடைய; க்ரு'ஷ்ண - கிருஷ்ணா; புந: - பின்னர்; யோகம் ச - கர்மயோகத்தைப் பற்றியும்; ச'ம்ஸஸி- புகழ்ந்து பேசுகிறீர்கள்; யத் - எந்த; ச'ரேய: - மேன்மையைத் தரக்கூடியதோ; ஏதயோ: - இவை இரண்டில்; ஏகம் - ஒன்று; தத் - அதை; மே - எனக்கு; ப்ரூஹி - சொல்லுங்கள்; ஸுநிச்'சிதம் - நிச்சயமாக

அர்ஜுனன் சொன்னது

5.1 "ஓ கிருஷ்ணா! நீங்கள் என்னிடம் செயலைத் துறந்துவிடு என்றும் சொல்கிறீர்கள். பின்பு பக்தியுடன் வேலையைச் செய் என்றும் சொல்கிறீர்கள்.

எப்படியிருந்தாலும் இந்த இரண்டில் எனக்கு ஏற்றது எது என்பதைத் தயவு செய்து சொல்லுங்கள்."

...........................................................................................................

ஸ்ரீபகவாநுவாச

ஸந்ந்யாஸ: கர்மயோகச்'ச நி:ச்'ரேயஸகாரவுபௌ /
தயாஸ்து கர்மஸந்ந்யாஸாத் கர்மயோகோ
விசி'ஷ்யதே //

ஸ்ரீபகவாநுவாச - ஸ்ரீ பகவான் சொன்னார்; ஸந்ந்யாஸ: - கர்ம ஸந்யாஸம்; கர்மயோக: - கர்மயோகம்; உபௌ - இரண்டு; ச -கூட; நி:ச்ரேயஸகரௌ- விடுதலைக்கான; தயோ: - இவ்விரண்டிலும்; து

  • ஆயினும்; கர்மஸந்நியாஸாத் - கர்மத்தைக் துறப்பதைக் காட்டிலும்; கர்மயோக: - கர்மயோகம்; விசி'ஷ்யதே - சிறந்தது

ஸ்ரீ பகவான் சொன்னது

5.2 "செயலைத் துறந்துவிடுவதும் பக்தியுடன் செயலைச் செய்வதும் ஆகிய இரண்டுமே விடுதலைக்கு ஏற்றவைதான்.

ஆனாலும்கூட இந்த இரண்டில் பக்தியுடன் செயல்படுவது, செயலைத் துறப்பதைவிடச் சிறந்தது.

...........................................................................................................

ஜ்ஞேய: ஸ நித்யஸந்நியாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி/
நிர்த்வந்த்வோ ஹி மஹாபாஹோ ஸுகம் பந்தாத்ப்ரமுச்யதே //

5.3.

ஜ்ஞேய: - அறியத்தக்கவன்; ஸ: - அந்த கர்மயோகி; நித்யஸந்நியாஸீ

  • எப்போதும் ஸந்யாஸிதான் என்று; ய: - எவனொருவன்; ந த்வேஷ்டி - எதையும் வெறுப்பதில்லையோ; ந காங்க்ஷதி - எதையும் விரும்புவதில்லையோ; நிர்த்வந்த்வ: - விருப்பு வெறுப்பு எனும் இரட்டைகள் அற்றவன்;ஹி- நிச்சயமாக; மஹாபாஹோ - பெருந் தோள்களை உடையவனே; ஸுகம் - எளிதாகவே; பந்தாத் - ஸம்ஸார பந்தத்திலிருந்து; ப்ரமுச்யதே - விடுதலை பெறுகிறான்

5.3 எவரொருவர் தம்முடைய செயல்களின் பலன்மீது பற்றோ, வெறுப்போ இல்லாமல் இருக்கிறாரோ அவரே துறந்தவராகிறார். ஓ பெருந்தோள்களை உடையவனே அர்ஜுனா, அப்படிப்பட்டவர் எல்லா இருமைத் தன்மைகளிலிருந்தும் எளிதாகவிடுபட்டு, உலகியல் வாழ்க்கை என்ற பற்றிலிருந்து முழுமையாக விடுதலை அடைகிறார்.

...........................................................................................................

ஸாங்க்த்யயோகௌ ப்ரு'தக் பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா:/
ஏகமப்யாஸ்தித: ஸம்யகுபயோர்விந்ததே பலம் // 5.4

ஸாங்க்த்யயோகௌ - மேலே கூறிய ஸந்யாஸமும், கர்மயோகமும்; ப்ருத'க் - வெவ்வேறு என்று; பாலா: - அறியாதவர்கள்; ப்ரவதந்தி - சொல்கிறார்கள்; ந - அல்ல; பண்டிதா: - அறிஞர்கள்; ஏகம் அபி - இவற்றில் ஒன்றையாவது; ஸம்யக் ஆஸ்தித: - உறுதியாகப் பற்றிக்கொண்டுள்ள மனிதன்; ஸம்யக் - முழுமையாக; உபயோ: - இரண்டினுடைய; விந்ததே

  • அடைகிறான்; பலம்- பலன்

5.4 செயல்படும் பாதையானது துறவறப் பாதையிலிருந்து வேறுபட்டது என்று அறியாமையில் இருப்பவர்கள்தான் சொல்கிறார்கள்.

ஆனால் உண்மையிலேயே கற்றவர்கள், செயல்படுவதும் துறவறமும் ஒரே சத்தியத்திற்குத்தான் நம்மை அழைத்துச் செல்கின்றன என்று சொல்கிறார்கள்.

.......................................................................................................................

யத்ஸாங்க்யை: ப்ராப்யதே ஸ்தாநம் தத்யோகைரபி கம்யதே /
ஏகம் ஸாங்க்த்யஞ்ச யோகஞ்ச ய: பச்’யதி ஸ பச்’யதி // 5.5

யத் : எந்த; ஸாங்க்யை: - ஞானயோகிகளால்; ப்ராப்யதே - அடையப்படுகி றதோ; ஸ்தாநம் - பரமபதம்; தத் - அதுவே; யோகை: அபி - கர்ம யோகிகளாலும்; கம்யதே - அடையப்படுகிறது; ஏகம் - ஒன்றென; ஸாங்க்த்யம் - ஞானயோகம்; ச-கூட; யோகம்ச - கர்மயோகம்; ய: - எவனொருவன் ஒருவன்; பச்’யதி - காண்கிறானோ; ஸ: - அவனே; ச-கூட; பச்’யதி - காண்கிறான்

5.5 துறவாலும் கர்மத்தாலும் அடையப்படுகிற நிலை ஒன்றுதான் என்பதை யார் ஒருவர் அறிந்துகொள்ளுகிறாரோ, அவரே ஸத்யத்தை அறிந்தவராகிறார்.

துறவால் அடையப்படுகிற நிலை, கர்மத்தாலும் அடையப்படும். அவை இரண்டும் ஒரே நிலையில் இருப்பதைத் தெரிந்துகொள். அவற்றை அவை எப்படி இருக்கிறதோ அப்படியே பார்.

.......................................................................................................................

ஸந்ந்யாஸஸ்து மஹாபாஹோ து:கமாப்துமயோகத: /
யோகயுக்தோ முநிர்ப்ரஹ்ம ந சிரேணாதிகச்சதி // 5.6

ஸந்ந்யாஸ: - ஸந்யாஸ நிலையை; து - ஆனால்; மஹாபாஹோ

  • வலிமையான கைகளை உடைய அர்ஜூனா; து:கம் - மிகக் கடுமையானது; ஆப்தும் - அடைவது; அயோகத: - கர்மயோகத்தைக் கடைப்பிடிக்காமலேயே; யோகயுக்த: - கர்மயோகி; முநி: - புத்திசாலிகள்; ப்ரஹ்ம - பரபிரம்ம பரமாத்மாவை; நசிரேண - காலம்தாழ்த்தாமல்; அதிகச்சதி - அடைந்துவிடுகிறான்

5.6 வலிமை வாய்ந்த தோள்களையுடையவனே! பக்தி இல்லாத துறவு ஒருவரை துக்கங்களால் காயப்படுத்திவிடும்.

பக்தியில் ஈடுபட்டுள்ள புத்திசாலிகள் அந்த உயர்வான ப்ரஹ்மத்தை காலம்தாழ்த்தாமல் அடைகிறார்கள்.

யோகயுக்தோ விசும்'த்தத்மா விஜிதாத்மா ஜிதேந்த்ரிய: /
ஸர்வபூதாத்மபூதாத்மா குர்வந்நபி ந லிப்யதே // 5.7

யோகயுக்த: - கர்மயோகி; விசும்'த்தத்மா - மனத்தூய்மை உள்ளவனும்; விஜிதாத்மா - மனக்கட்டுப்பாடுடையவனும்; ஜிதேந்த்ரிய: - புலன்களை வென்றவனும்; ஸர்வபூதாத்ம பூதாத்மா - எல்லா உயிரினங்களுக்கும் ஆத்மாவான பரமாத்மாவைத் தம் ஆத்மா என்று உணர்ந்தவனுமான; குர்வந் அபி - கர்மங்களைச் செய்து கொண்டிருந்தாலும்; ந லிப்யதே - அவற்றில் ஒட்டுவதில்லை

5.7 யார் ஒருவர் பக்திசேவையில் ஈடுபட்டிருக்கிறாரோ, யார் ஒருவர் கருத்துக்கள் சரியா? தவறா? தூய்மையானதா? தூய்மையற்றதா? என்பதையெல்லாம்தாண்டி, தம்மை அடக்கியவராக இருக்கிறாரோ, யார் ஒருவர் தன்னுடைய புலன்களை வென்றவராக இருக்கிறாரோ, அவர் கருணையுள்ளவராகவும் எல்லோரிடம் அன்புடையவராகவும் இருக்கிறார்.

வேலையில் ஈடுபட்டிருந்தாலும் அவர் ஒருபோதும் வேலையில் சிக்கிக்கொள்வதில்லை.

...................................................................................................................

நைவ கிஞ்சித் கரோமீதி யுக்தோ மந்யேத தத்த்வவித் /
பச்யந் ச்'ரு'ண்வந் ஸ்ப்ரு'ச'ந் ஜிஹ்ரந் அச்'நந் கச்சந்
ஸ்வபந் ச்'வஸந் // 5.8

ப்ரலபந் விஸ்ரு'ஜந் க்ரு'ஹ்ணந் உந்மிஷந் நிமிஷந்நபி/
இந்த்ரியாணீந்த்ரியார்த்தேஷு வர்தந்த இதிதாாைந் //
5.9

ந- இல்லை; ஏவ - நிச்சயமாக; கிஞ்சித் - எதையும்; கரோமி - செய்வது; இதி - என்பதை; யுக்த: - ஸாங்கியயோகி; மந்யேத - நினைக்க வேண்டும்; தத்த்வவித் - தத்துவமறிந்த; பச்'யந் - பார்த்தாலும்; ச்'ரு'ண்வந் - கேட்டாலும்; ஸ்ப்ரு'ச'ந் - தொட்டாலும்; ஜித்ரந் - முகர்ந்தாலும்; அச்'நந் - உணவு உண்டாலும்; கச்ச்நந் - நடந்து சென்றாலும்; ஸ்வபந் - உறங்கினாலும்; ச்'வஸந் - மூச்சுவிட்டாலும்; ப்ரலபந் - பேசினாலும்; விஸ்ரு'ஜந் - கழித்தாலும்; க்ரு'ஹ்ணந் - பற்றினாலும்; உன்மிஷந் - கண்களைத் திறந்தாலும்; நிமிஷந் அபி - மூடினாலும்கூட; இந்த்ரியாணிஎல்லாப் புலன்களும்; இந்த்ரியார்தேஷு - பொருட்களில்; வர்தந்தே - செயல்படுகின்றன; இதி - என்று;தாரயந் - உணர்ந்துகொண்டு

5.8, 5.9 சத்தியத்தைத் தெரிந்து கொண்ட ஒருவர், பார்த்தாலும் கேட்டாலும் தொட்டாலும் முகர்ந்தாலும் சாப்பிட்டாலும் சென்றாலும் கனவு கண்டாலும் மூச்சு விட்டாலும் இவை எதையுமேதான் செய்யவில்லை என்பதை அறிவார். பேசும்போதும் வெளியேற்றும்போதும் அடையும்போதும் கண் திறக்கும்போதும் கண் மூடும்போதும் எல்லாப் புலன்களும் நிறைவாக, திருப்தியாகச் செயல்படுவதை உணர்கிறார்.

.......................................................................................................................................

ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதிய:/
லிப்யதே ந ஸ பாபேந பத்மபத்ரமிவாம்பஸா // 5.10

ப்ரஹ்மணி - பரமாத்மாவிடம்; ஆதாய - அர்ப்பணம் செய்து; கர்மாணி - அனைத்துக் கர்மங்களையும்; ஸங்கம் - பற்றுதலை; த்யக்த்வா - துறந்து; கரோதி - கர்மங்களைச் செய்கிறானோ;ய: - எவனொருவன்; லிப்யதே - பாதிக்கப்படுவது; ந - இல்லை; ஸ: - அவன்; பாபேந - பாவத்தினால்; பத்மபத்ரம் இவ -தாமரை இலை ஒட்டாமல் இருப்பதுபோல; அம்பஸா - தண்ணீரில்

5.10 எவரொருவர் பற்றுதல்களைத் துறந்துவிட்டு, நிலையான பிரபஞ்ச விழிப்புணர்வைச் சரணடைந்து செயல்படுகிறாரோ, தாமரை இலை தண்ணீரினால் பாதிப்படையாமல் இருப்பதைப்போல, அவர் பாவங்களால் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை.

.......................................................................................................................................

காயேந மநஸா புத்த்யா கேவலரின்திரியைரபி /
யோகிந: கர்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்மசு'த்தயே //
5.11

காயேந - உடலால்; மநஸா - மனத்தாலும்; புத்த்யா - புத்தினாலும்; கேவலை: - வெறும்; இந்த்ரியை: - புலன்களாலும்; அபி-கூட; யோகிந: - கர்மயோகிகள்; கர்ம - கர்மத்தை; குர்வந்தி - செய்கிறார்கள்;.ஸங்கம் த்யக்த்வா - பற்றைத் துறந்து; ஆத்மஸுத்தயே- மனத்தூய்மையை அடையும் பொருட்டு

5.11 பற்றைத் துறந்த யோகிகள் சித்தத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக உடல், மனம், புத்தி மற்றும் புலன்களாலுமே செயல்படுகிறார்கள்.

.......................................................................................................................

யுக்த: கர்மஃபலம் த்யக்த்வா சா'ந்திமாப்நோதி நைஷ்டிகீம் /
அயுக்த: காமகாரேண பலே ஸக்தோ நிபத்யதே // 5.12

யுக்த: - கர்மயோகி; கர்மஃபலம் - கர்மத்தின் பலனை; த்யக்த்வா - துறந்து; சா'ந்திம் - அமைதியை; ஆப்நோதி - பெறுகிறான்; நைஷ்டிகீம் - பகவானை அடைவது என்கிற; அயுக்த: - பயனில் பற்றுடையவன்; காமகாரேண - ஆசையின் உந்துதலினால்; பலே - பயனில்; ஸக்த: - பற்றுக்கொண்டு; நிபத்யதே - தளைக்கப்படுகிறான்

5.12 தம்முடைய செயல்களினால் வரும் விளைவுகளில் பற்றுகளைத் துறந்துவிட்டு பக்தியில் ஈடுபட்டுள்ள ஒருவர், தன்னுள் மையம்கொள்ளும் ஒருவர் அமைதியில் நிலைக்கிறார்.

தம்முடைய செயல்களினால் வரும் பலன்களின் மீது பற்றுக்கொண்டு பக்தியில் ஈடுபடாத ஒருவர், துன்பத்தில் சிக்கிக் கொள்கிறார்.

.......................................................................................................................

ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்யாஸ்தே ஸுகம் வசீ' /
நவத்வாரே புரே தேஹீ நைவ குர்வந் ந காரயந் // 5.13.

ஸர்வகர்மாணி - எல்லாச் செயல்களையும்; மநஸா - மனத்தால்; ஸந்ந்யஸ்ய

  • துறந்து; ஆஸ்தே - ஆழ்ந்து இருக்கிறான்; ஸுகம் - ஆனந்தமயமாக; வசீ'
  • மனத்தைத் தன்வசப்படுத்தி; நவத்வாரே - ஒன்பது வாயில்களுடைய உடலாகிய; புரே - வீட்டில்; தேஹீ - மனிதன்; ந-இல்லை; ஏவ - மட்டுமே; குர்வந் - செய்தல்; ந காரயந் - செய்விக்காமல்

5.13 புலன்களைக் கட்டுப்படுத்தி, மனத்தின் எல்லாச் செயல்பாடுகளையும் விட்டு விட்டு, எதையும் செய்யாமலும், எதையும் செய்விக்காமலும் இருக்கும் ஒருவர் ஒன்பது வாயில்களைக் கொண்ட இந்த உடலில நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கிறார்.

ந கர்த்ரு'த்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ரு'ஜதி ப்ரபு: /
ந கர்மபலஸம்யோகம் ஸ்வபாவஸ்து ப்ரவர்ததே // 5.14

ந - இல்லை; கர்த்ரு'த்வம்- கர்த்தா என்னும் தன்மையை; ந - இல்லை; கர்மாணி- கர்மங்களையும்; லோகஸ்ய - மனிதர்களுடைய; ஸ்ரு'ஜதி - உண்டு பண்ணுவதில்லை; ப்ரபு: - பகவான்; ந - ஏற்படுத்துவதில்லை; கர்மபலஸம்யோகம் - கர்மத்தின் பயனோடு சேர்ந்து வைத்தலையும்; ஸ்வபாவ: - இயல்புதான்; து - ஆனால்; ப்ரவர்ததே - செயல்படுகிறது. ந

  • இல்லை

5.14 குருவாக இருப்பவர்கள், செயல்களை உருவாக்குவதும் இல்லை அல்லது மக்களைச் செயல்களைச் செய்யுபடி தூண்டுவதும் இல்லை அல்லது அச்செயல்களின் பலன்களோடு தங்களை இணைத்துக் கொள்வதும் இல்லை.

இந்தச் செயல்பாடுகள் எல்லாம் பொருள் சார்ந்த இயற்கையால் செய்யப்படுகின்றன.

நாதத்தே கஸ்யசித் பாபம் ந சைவ ஸுக்ரு'தம் விபு: /
அஜ்ஞானேநாவ்ரு'தம் ஜ்ஞானம் தேந முஹ்யந்தி ஜந்தவ: // 5.15

ந ஆதத்தே - ஏற்பது இல்லை; கஸ்யசித் - யாருடைய, பாபம்

  • பாவச் செயலையும்; ந - இல்லை; ச -கூட; ஏவ - நிச்சயம்; ஸுக்ரு'தம் - நல்ல செயல்கள்; விபு: - எங்கும் நிறைந்திருக் கும் பகவான்; அஜ்ஞானேந - அஞ்ஞானத்தினால்; ஆவ்ரு'தம்
  • மூடப்பட்டிருக்கிறது; ஜ்ஞானம் - ஞானம்; தேந - அதனால்; முஹ்யந்தி - குழப்பம் அடைந்திருக்கின்றன; ஜந்தவ: - உயிரினங்கள்

5.15 பகவான், நிச்சயமாக, யாருடைய பாவங்களையும், புண்ணியங்களையும் ஏற்றுக் கொள்வதில்லை.

உயிரினங்கள் எல்லாம் அறிவை மறைத்துக் கொண்டிருக்கும் அறியாமையினால் குழப்பமடைந்து இருக்கின்றன.

ஜ்ஞானேந து ததஜ்ஞானம் யேஷாம் நாசி'தமாத்மந: /
தேஷாமாதித்யவஜ்ஜ்ஞானம் ப்ரகாச'யதி தత్పரம் // 5.16

ஜ்ஞானேந - தத்வ ஞானத்தினால்; து - ஆனால்; தத் - அந்த; ஜ்ஞானம் - அஞ்ஞானம்; யேஷாம் - எவர்களுடைய; நாசி'தம் - அழிக்கப்பட்டதோ; ஆத்மந: - பரமாத்மாவினுடைய; தேஷாம் - அவர்களுடைய; ஆதித்யவத் - ஆதவன்போல்; ஜ்ஞானம் - ஞானம்; ப்ரகாச'யதி - பிரகாசிக்கச் செய்கிறது; தత్పரம் - மேலான பரமாத்மாவை

5.16 யாருடைய அறியாமை ஞானத்தால் அழிக்கப்படுகிறதோ, அவருடைய அந்த ஞானம், ஒரு உதய சூரியனைப்போல், மேலான விழிப்புணர்வின் மேல் ஒளியைப் பாய்ச்சுகிறது.

தத்புத்தயஸ்ததாத்மாநஸ்தந்நிஷ்டாஸ்தத்பராயணா: /
கச்சந்த்யபுநராவ்ரு'த்திம் ஜ்ஞானநிர்தூதகல்மஷா: //
5.17

தத்புத்தய: - எவர்களுடைய புத்தி பரமாத்மாவில் ஒன்றியிருக்கிறதோ; தத்ஆத்மாந: - எவர்களுடைய மனம் பரமாத்மாவில் ஒன்றியிருக்கிறதோ; தந்நிஷ்டா: - பரமாத்விடம் எவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ; தத்பராயணா: - பகவானை மட்டுமே சார்ந்திருக்கிற அத்தகைய மனிதர்கள்; கச்சந்தி - அடைகிறார்கள்; அபுநராவ்ரு'த்திம்- மீண்டும் திரும்பி வருதலில்லாத நிலையை அதாவது பிறவாப் பெரு நிலையான பரகதியை; ஜ்ஞான நிர்தூத கல்மஷா: - ஞானத்தினால் பாவமற்றவர்களாக ஆகி

5.17 யார் ஒருவர் இறைவனிடம் சரணடைகிறாரோ, யாருடைய அறிவும், மனமும், நம்பிக்கையும் அந்த மேலான இறைவனிடம் ஒன்றியிருக்கிறதோ, அவருடைய அறியாமை அறிவின் மூலம் சுத்தம் செய்யப்பட்டுவிடுகிறது. அவர் முக்தியை நோக்கிச் செல்கிறார்.

வித்யாவிநயஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி /
சு'நி சைவ ச்'வபாகே ச பண்டிதா: ஸமதர்சி'ந: // 5.18

வித்யாவிநயஸம்பந்நே - கல்வியோடும் பணிவோடும்கூடிய; ப்ராஹ்மணே - பிராம்மணனிடமும்; கவி - பசுவிடமும்; ஹஸ்திநி - யானையிடமும்; சு'நி ச - நாயிடமும்; ஏவ - நிச்சயமாக; ச்'வபாகே ச - சண்டாளனிடமும்கூட; பண்டிதா: - தத்வஞானிகள்; ஸமதர்சி'ந: - ஸமநோக்குடையவர்களே

5.18 அறிவும் கருணையும் நிரம்பிய ஒருவர், கற்றறிந்த பிராமணனையும் பசுவையும் யானையையும் நாயையும் நாயை உண்பவரையும் எல்லாவற்றையும் சமமாகவே பார்க்கிறார்.

இஹைவ தைர்ஜித: ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மந: /
நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே
ஸ்திதா: // 5.19

இஹ ஏவ - உயிர் வாழும்போதே; தை: - அவர்களால்; ஜித: - வெற்றிகொள்ளப்பட்டது; ஸர்க: - அகில உலகமும்; யேஷாம் : - எவர்களுடைய; ஸாம்யே ஸ்திதம் - ஸமபாவனையில் நிலைத்துள்ளதோ; மந: - மனம்; நிர்தோஷம் - மாசற்றது; ஹி - நிச்சயமாக; ஸமம் - ஸமமானது; ப்ரஹ்ம - மேலான இறைவன்; தஸ்மாத் - ஆகவே; ப்ரஹ்மணி - ஸத் சித் ஆனந்தமயமான இறைவனில்; தே - அவர்கள்; ஸ்திதா: - நிலை பெற்றிருக்கிறார்கள்

5.19 இந்த வாழ்க்கையில், வேறுபாடில்லாத சாந்தமான மனத்துடன் இருப்பவர்கள் நிச்சயமாக பிறப்பையும் இறப்பையும் வென்றவர்களாகிறார்கள்.

அவர்கள் மேலான இறைவனைப் போன்று மாசற்றவர்கள், அதனால்தான் அவர்கள் இறைவனில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

ந ப்ரஹ்ரு'ஷ்யேத் ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத் ப்ராப்ய
சாப்ரியம் /
ஸ்திரபுத்திரஸம்மூடோ ப்ரஹ்மவித் ப்ரஹ்மணி ஸ்தித: //
5.20

ந ப்ரஹ்ரு'ஷ்யேத் - மகிழ்ச்சியடையாமலும்; ப்ரியம் - விருப்பமான பொருளை; ப்ராப்ய - அடையும்போது; ந உத்விஜேத் - கலக்கம் அடையாமலும் இருக்கும்; ப்ராப்ய - அடையும்போது; ச - மேலும்; அப்ரியம்; விரும்பாததை; ஸ்திரபுத்தி: - நிலைத்த மதியுடைய; அஸம்மூட:- ஐயம் நீங்கிய; ப்ாஹ்மவித் - ப்ாஹ்மஞானி; ப்ாஹ்மணி- பரப்ாஹ்ம பரமாத்மாவில்; ஸ்தித: - நிலைத்து நிற்கிறான்

5.20 யார் ஒருவர் நிலையான அறிவைப் பெற்றிருக்கிறாரோ, மன குழப்பமடையாதவராகவும் இறைவனை அறிந்தவராகவும் இறைவனில் நிலை பெற்றிருப்பவராகவும் இருக்கிறாரோ அவர் விரும்பிய ஒன்றை அடையும்பொழுது மகிழ்வதும் இல்லை, விரும்பாத ஒன்றை பெறும்பொழுது துன்பமடைவதும் இல்லை.

.........................................................................................................................

பாஹ்யஸ்பர்சே'ஷ்வஸக்தாத்மா விந்தத்யாத்மனி யத்ஸுகம் /
ஸ ப்ாஹ்மயோகயுக்தாத்மா ஸுகமக்ஷயமச்'நுதே //

பாஹ்யஸ்பர்சே'ஷ்ீ - வெளியிலுள்ள புலன்நுகர் பொருட்களில்; அஸக்தாத்மா - பற்றற்ற மனமுடைய ஸாதகன்; விந்ததி - பெறுகிறான்; ஆத்மனி - உள்ளத்தில்; யத் ஸுகம் - அந்த ஸுகம் உள்ளதோ; ஸ: - அவன்; ப்ாஹ்மயோகயுக்தாத்மா - பரமாத்மாவிடம் தியானயோகத்தினால் இரண்டறக் கலந்துவிட்ட; ஸுகம் - ஆனந்தத்தை; அக்ஷயம் - அழியாத, குறையாத; அச்'நுதே - அனுபவிக்கிறான்

5.21 வெளியுலகப் புலனின்பங்களில் நாட்டமில்லாத ஒருவர் தம் ஆன்மாவில் நிலைபெற்று மகிழ்வார். அந்த மகிழ்ச்சியில் அவர் சமாதி நிலை அடைந்து பரமாத்மாவோடு இரண்டறக் கலந்து எல்லை இல்லாத மகிழ்ச்சியடைகிறார்.

.........................................................................................................................

யே ஹி ஸம்ஸ்பர்ச'ஜா போகா து:கயோநய ஏவ தே /
ஆத்யந்தவந்த: கௌந்தேய ந தேஷு ரமதே புத: //

யே - எந்த; ஹி - நிச்சயமாக; ஸம்ஸ்பர்ச'ஜா: - புலன்களும், புலன்நுகர் பொருட்களும் ஒன்று சேரும்போது ஏற்படும்; போகா: - போகங்கள் உள்ளனவோ; து:கயோநய: ஏவ - துக்கத்திற்குக் காரணமாகவே உள்ளன; தே- அவை அனைத்தும்; ஆதி அந்தவந்த: - ஆரம்பமும், முடிவும் கொண்டவை; கௌந்தேய - குந்தி மைந்தா!; ந - இல்லை; தேஷு - அவற்றில்; ரமதே - இன்புறுவதில்லை; புத: - அறிவாளி

5.22 ஓ குந்தியின் மைந்தா! துக்கத்திற்குக் காரணமானதும், ஆரம்பமும்

முடிவும் கொண்டதுமான புலனின்பங்களையும், சுகங்களையும் நிச்சயமாக புத்திசாலியான ஒருவர் அனுபவிக்க மாட்டார்.

ச'க்நோதீஹைவ ய: ஸோடும் ப்ராக்ஸ'ரீரவிமோக்ஷணாத் /
காமக்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த: ஸ ஸுகீ நர: // 5.23

ச'க்நோதி - திறன் பெற்றுவிட்டானோ; இஹ ஏவ - இம் மனிதப்பிறவியிலேயே; ய: - எந்த ஸாதகன்; ஸோடும் - பொறுத்துக் கொள்வதற்கு; ப்ராக் - முன்பே; ச'ரீரவிமோக்ஷணாத் - உடல் அழிவதற்கு; காமக்ரோத உத்பவம் - காமத்தினாலும், கோபத்தினாலும் உண்டாகிற; வேகம் - எழுச்சியை; ஸ: - அந்த; யுக்த: - யோகி; ஸ: - அவனே; ஸுகீ - ஸுகம் பெற்றவன்; நர: - மனிதனே

5.23 இந்த உடலை விட்டுச் செல்வதற்கு முன்பே, யார் ஒருவர் பொருள் சார்ந்த புலன்களின் தூண்டுதல்களை வெறுப்பின்றிப் பொறுத்துக்கொண்டு ஆசை மற்றும் கோபத்தின் வேகத்தைத் தடை செய்கிறாரோ, அவர் இந்த உலகில் நல்ல சூழலில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

யோऽந்த: ஸுகோऽந்தராராமஸ்ததாந்தர்ஜ்யோதிரேவ ய: /
ஸ யோகீ ப்ரஹ்மநிர்வாணம் ப்ரஹ்மபூதோऽதிகச்சதி // 5.24

ய: - எவனொருவன்; அந்த: ஸுக: - தமக்குள்ளேயே ஸுகம் காண்கிறாரோ; அந்தராராம: - தமக்குள்ளேயே விழிப்புடன் இருக்கிறானோ; ததா - அவ்விதமே; அந்தர்ஜ்யோதி: - ஆத்மாவிலேயே உள்ளொளி பெற்றவனோ; ஏவ - உறுதியுடன் தீர்மானம் செய்துகொண்டு; ய: - எவனொருவன்; ஸ: - அந்த; யோகீ - ஸாங்க்யயோகி; ப்ரஹ்மநிர்வாணம் - அமைதி நிறைந்த பிரஹ்மத்தை; ப்ரஹ்மபூத: - பிரஹ்மத்தில் ஒன்றிவிட்டவனான; அதிகச்சதி - அடைகிறான்

5.24 எவரொருவர் தமக்குள்ளேயே இன்பம் அடைந்து, தமக்குள்ளேயே விழிப்புடன் செயல்பட்டு, மேலும் தமக்குள்ளேயே உள்ளொளி கண்டு உணர்ந்து இருக்கிறாரோ அவர் நிச்சயமாக ஒரு யோகி. (உடல், மனம் மற்றும் ஆன்மா மற்றும் ஒருங்கிணைந்த தன்மை)

அவர் மேலான விடுதலையை அடைந்தவராகிறார்; அவர் தம்மை உணர்ந்தவராகிறார்; அவர் அந்த மேலான பரபிரஹ்மத்தை அடைகிறார்.

லப॒ந்தே॒ ப்ரஹ்மநிர்வாணம் ரு'ஷய: க்ஷீணகல்மஷா: /
சிந்நத்வைதா॒ யதாத்மாந: ஸர்வபூதஹிதே ரதா: // 5.25

லப॒ந்தே॒ - அடைகிறார்கள்; ப்ரஹ்மநிர்வாணம் -பரமாத்மாவை; ரு'ஷய: - அறிந்தவர்கள்; க்ஷீணகல்மஷா: - எவர்களுடைய எல்லாப் பாவங்களும் அழிந்துவிட்டனவோ; சிந்நத்வைதா॒ - எவர்களுடைய எல்லா ஐயங்களும் ஞானத்தினால் தெளிவாக்கப்பட்டு விட்டனவோ; யதாத்மாந:

  • எவர்களுடையமனம் சஞ்சலமின்றி பரமாத்மாவிடம் நிலைத்துள்ளதோ; ஸர்வ பூதஹிதே - எவர் அனைத்து உயிரினங்களின் நலனிலும்; ரதா: - ஈடுபாடு கொண்டவர்களோ

5.25 பாவங்கள் அழிக்கப்பட்டு, மற்ற உயிரினங்களின் நலனுக்காகப் பாடுபடுகிற புனிதமான மனிதர்கள், புலனின்பங்களை மறுத்தவர்கள், தங்களுடைய சந்தேகங்களையும் இருமைத் தன்மையையும் நீக்கி தெளிவு பெற்றவர்கள் ஆகிய அனைவரும் தெய்வீகமான நித்யானந்தத்தை அடைகிறார்கள்.

காமக்ரோதவியுக்தாநாம் யதீநாம் யதசேதஸாம் /
அபிதோ ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே விதிதாத்மநாம் //
5.26

காமக்ரோதவியுக்தாநாம் - காமகுரோதங்கள் விலகிய; யதீநாம் - ஞானிகளுடைய; யதசேதஸாம்- எண்ணங்களை வசப்படுத்தி வெற்றி கொண்ட; அபித - நாற்புறங்களிலும்; ப்ரஹ்மநிர்வாணம் - முழுமையான விடுதலை; வர்ததே - நிறைந்து இருக்கிறார்;விதிதாத்மநாம் - தம்மை உணர்ந்தவர்கள்

5.26 காமம், கோபம் இவற்றிலிருந்து விடுதலை பெற்றவர்கள், மனத்தையும், புலன்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கத் தெரிந்தவர்கள், தம்மை உணர்ந்தவர்கள் - இவர்கள் எளிதாக விடுதலை பெற்றுவிடுவார்கள்.

ஸ்பர்சா'ந் க்ரு'த்வா பஹிர்பாஹ்யாம்ச்'-

சக்ஷுஶ்சைவாந்தரே ப்ருவோ: /
ப்ராணாபாநௌ ஸமௌ க்ரு’த்வா
நாஸாப்யந்தரசாரிணௌ // 5.27

ஸ்பர்சா’ந் - விஷய போகங்களை; க்ரு’த்வா - தள்ளி; பஹி: - வெளியிலேயே; பாஹ்யாந் - வெளியே உள்ள; சக்ஷு: - கண்களின் பார்வையை; ச - மேலும்; ஏவ - நிச்சயமாக; அந்தரே - நடுவிலும்; ப்ருவோ: - இருபுருவங்களின்; ப்ராண அபானௌ- உள்வரும், வெளிச் செல்லும் சுவாசங்களை; ஸமௌ க்ரு’த்வா - சமமாக்கி; நாஸாப்யந்தர சாரிணௌ - நாசியின் உள்ளே சஞ்சரி,க்கிற

யதேந்த்ரியமனோபுத்திர் முநிர்மோக்ஷபராயண: /
விகதேச்சாபயக்ரோதோ ய: ஸதா முக்த ஏவ ஸ: //
5.28

யதேந்த்ரிய மனோ புத்தி : - புலன்கள், மனம் இவற்றை அடக்கி; முநி: - முனிவனான; மோக்ஷபராயண: - மோக்ஷத்தில் குறியுள்ள; விகதஇச்சா பயக்ரோத: - ஆசை, பயம், கோபம் இவற்றிலிருந்து முற்றிலும்விடுபட்டு; ய - அந்த; ஸதா - எப்போதும்; முக்த ஏவ - விடுதலைப் பெற்றவனே; ஸ: - அவன்

5.27, 5.28 வெளிப் புலன்களாலான எல்லாவற்றையும் தடைசெய்து, கண்களையும், பார்வையையும் இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் ஒரு முனைப்படுத்தி, நாசிவழியாக உட்செல்லும், வெளிச் செல்லும் சுவாசத்தை தற்காலிகமாக நிறுத்தி, அதன் மூலமாக மனத்தையும், புலன்களையும், புத்திசாலித்தனத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, இவற்றைக் கடந்து, விடுதலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் ஒருவர், ஆசையிலிருந்தும் அச்சத்திலிருந்தும் விடுதலை பெறுகிறார். ஆசை, அச்சம், கோபம் இந்த மூன்றின் உப பொருட்களிலிருந்தும் விடுதலை பெறுகிறார்.

..........................................................................................................

எப்போதும் இந்த நிலையிலிருக்கும் ஒருவர், நிச்சயமாக விடுதலை அடையப் பெற்றவர்தான்.

போக்தாரம் யக்ஞதபஸாம் ஸர்வலோகமஹேச்’வரம் /
ஸுஹ்ரு’தம் ஸர்வபூதாநாம் ஞாத்வா மாம் சா’ந்திம்ரு’ச்சதி

// 5.29

போக்தாரம் - ஏற்பவன்; யஜ்ஞதபஸாம் - எல்லாயாகங்களையும், தவங்களையும்; ஸர்வலோகமஹேச்'வரம் - அகிலலோக நாயகர்களுக்கும் மேலான ஈசுவரன்; ஸுஹ்ரு'தம் - நலம் செய்பவர்; ஸர்வபூதானாம் - அகில சராசரத்தில் வாழும் உயிரினங்களுக்கும்; ஜ்ஞாத்வா - தத்துவ ரீதியாக அறிந்து; மாம் - என்னை; சா'ந்திம் - மேலான அமைதியை; ரு'ச்சதி - அடைகிறான்

5.29 யாகங்கள் மற்றும் தவத்தின் மூலமாகஅடையப்படுபவராகவும், எல்லா உலகங்களின் இறைவனாகவும், எல்லா உயிரினங்களுக்கும் நன்மை அளிப்பவராகவும், ‘என்னை’ அறிந்து கொண்டவர் அமைதியை அடைகிறார்.

...........................................................................................................................

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்_பகவக்கீதாஸுபனிஷத்ஸு ப்்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே கர்மஸந்ந்யாஸயோகோ நாம பஞ்சமோऽத்யாய: //

ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய ‘கர்மஸந்யாஸ யோகம்’ எனப் பெயர் படைத்த ஐந்தாவது அத்தியாயம்.

ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள்

இஹைவ தைர்ஜித: ஸர்கோ 5-19
காமக்ரோதவியுக்தாநாம் 5-26
காயேந மநஸா புத்த்யா 5-11
ஜ்ஞாநேந து ததஜ்ஞாநம் 5-16
ஜ்ஞேய: ஸ நித்யஸந்ந்யாஸீ 5-3
தத்புத்தயஸ்ததாத்மாநஸ்த 5-17
ந கர்த்ரு'த்வம் ந கர்மாணி 5-14
ந ப்ரஹ்ரு'ஷ்யேத் ப்ரியம் 5-20
நாதத்தே கஸ்யசித் பாபம் 5-15
நைவ கிஞ்சித் கரோமீதி 5-8
ப்ரலபந் விஸ்ரு'ஜந் க்ரு'ஹ் 5-9
பாஹ்யஸ்பர்சே'ஷ்வஸக்த 5-21
ப்ரஹ்மண்யாதாய கர்மாணி 5-10
போக்தாரம் யக்ஞதபஸாம் 5-29
யத்ஸாங்க்ைய: ப்ராப்யதே 5-5
யதேந்த்ரியமநோபுத்திர் 5-28
யுக்த: கர்மபலம் த்யக்த்வா 5-12
யே ஹி ஸம்ஸ்பர்ச'ஜா 5-22
யோऽந்த: ஸுகோऽந்தரா 5-24
யோகயுக்தோ விசு'த்தாத்மா 5-7
லபLineதே ப்ரஹ்மநிர்வாணம் 5-25
வித்யாவிநயஸம்பந்நே 5-18
ச'க்நோதீஹைவ ய: ஸோடும் 5-23
ஸந்ந்யாஸம் கர்மணாம் 5-1
ஸந்ந்யாஸ: கர்மயோகச்'ச 5-2
ஸந்ந்யாஸஸ்து மஹாபாஹோ 5-6
ஸ்பர்சா'ந் க்ரு'த்வா பஹிர் 5-27
ஸர்வகர்மாணி மநஸா 5-13
ஸாங்க்ையயோகௌ ப்ரு'தக் 5-4