மனத்தைக் கட்டுப்படுத்துதல்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

5.10 எவரொருவர்பற்றுதல்களைத்துறந்துவிட்டு,நிலையானபிரபஞ்ச விழிப்புணர்வைச் சரணடைந்து செயல்படுகிறாரோ, தாமரை இலை தண்ணீரினால் பாதிப்படையாமல் இருப்பதைப்போல, அவர் பாவங்களால் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை.
5.11 பற்றைத் துறந்த யோகிகள் சித்தத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக உடல், மனம், புத்தி மற்றும் புலன்களாலுமே செயல்படுகிறார்கள்.
5.12 தம்முடைய செயல்களினால் வரும் விளைவுகளில் பற்றுகளைத் துறந்துவிட்டு பக்தியில் ஈடுபட்டுள்ள ஒருவர், தன்னுள் மையம்கொள்ளும் ஒருவர் அமைதியில் நிலைக்கிறார்.
தம்முடைய செயல்களினால் வரும் பலன்களின் மீது பற்றுக்கொண்டு பக்தியில் ஈடுபடாத ஒருவர், துன்பத்தில் சிக்கிக் கொள்கிறார்.
5.13 புலன்களைக் கட்டுப்படுத்தி, மனத்தின் எல்லாச்
செயல்பாடுகளையும் விட்டு விட்டு, எதையும் செய்யாமலும் எதையும் செய்விக்காமலும் இருக்கும் ஒருவர் ஒன்பது வாயில்களைக் கொண்ட இந்த உடலில் நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கிறார்.
உணர்ச்சிகளால் அலைகழிக்கப்படாத நிலை கிருஷ்ண நிலை
கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் பற்றில்லாமல் இருப்பதைப் பற்றிப் பேசுகிறார். கீதையில், இதுதான் தீர்வு காண்பதற்குக் கடினமான ஒரு விஷயமாகவும் புதிராகவும் இருக்கிறது. இங்கே 'பற்றில்லாமல் இருப்பது' என்பது 'துறத்தலை'க் குறிக்கிறது.
பற்றுகளைத் துறப்பதே உண்மையான துறவு!
நீங்கள் உங்களிடமுள்ள பொருள் சார்ந்த உலகின் உடைமைகளை எல்லாம் விட்டு விட்டு, ஒரு காட்டிற்கோ அல்லது ஆச்ரமத்திற்கோ சென்றுவிடலாம். ஆனால் மனம் இன்னமும் அந்த உடைமைகளைப் பற்றியே தொங்கிக் கொண்டிருக்குமேயானால், அங்கு துறவு நிகழவே இல்லை. அது உடலில் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் மனத்தில் நிகழவில்லை.
ஒருவர் இந்தப் பொருள் சார்ந்த உலகத்திலிருந்துகொண்டே, சுறுசுறுப்பாக அனைத்துக் காரியங்களையும் செய்துகொண்டு விளைவுகளை எதிர்நோக்காமல் பற்றற்று வாழ முடியும். பற்றுதல் இல்லாத செயல்பாடுதான் துறவு. இந்தத் துறவுதான் விடுதலைக்கு வழி வகுக்கும்.

அந்தத் தாமரை மலரைப் பாருங்கள், அது அசுத்தமான குட்டையில் வளர்கிறது. அதனுடைய தண்டுப்பகுதி முற்றிலுமாக அந்த அசுத்தமான தண்ணீரிலேயே இருக்கிறது. ஆனாலும் அந்த மலர் மிகவும் அழகாக தண்ணீருக்கு மேலே இருந்து கொண்டிருக்கிறது. அது மிகவும் அழகாக இருக்கிறது. அதைப் பார்க்கும்பொழுது, நீங்கள் அந்த மலருடைய அழகைத்தான் பார்க்கிறீர்கள். அதைச் சுற்றியுள்ள அசுத்தத்தை நீங்கள் கண்டு கொள்வதில்லை.
அதேபோலத்தான் உலகியல் செயல்பாடுகளில் நீங்கள் முழு வீச்சாக ஈடுபட்டிருக்கும்பொழுது, என்ன நடந்தாலும் அதனால் எவ்வித பாதிப்பும் அடையாமல் இருக்கும்போதும், உங்களுடைய உள் மையம் அமைதியாக இருக்கும்போதும், நீங்கள் துறவு எனும் லட்சியத்தை அடைந்து விட்டீர்கள்.
ஒரு சின்ன கதை.
ஒரு குரு, அவருடைய சீடருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர்கள் ஒரு நதிக்கரையை வந்தடைந்தார்கள். சீடர் கேட்டார், "நாம் இப்பொழுது இந்த ஆற்றைக் கடக்கப் போகிறோமா குருவே?"
"ஆமாம். கடக்கப் போகிறோம். மிகவும் ஜாக்கிரதை, நீ உன் பாதங்களை நனையாமல் பார்த்துக்கொள்," என்று குரு பதிலளித்தார்.
சீடருக்கு குரு என்ன சொல்கிறார் என்று புரிந்துகொள்ள முடியவில்லை.
ஆன்மீகம் என்பதே வாழ்க்கை என்னும் பெருங்கடலைப் பாதங்கள் நனையாமல் கடப்பதைப் பற்றியதுதான் என்று குருநாதர் அவருக்குச் சொல்ல முயற்சி செய்து கொண்டிருந்தார்.
ஆன்மீகம் என்பது உலக விஷயங்களிலிருந்து ஓடிவிடுவது அல்ல. இதில் தெளிவாக இருங்கள்.
இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் நேரடியான சீடரான சுவாமி பிரம்மானந்தரின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்.
ஒரு நாள் சுவாமி பிரம்மானந்தர் தியானம் செய்து கொண்டிருந்தார். ஒரு பக்தர் விலை உயர்ந்த கம்பளம் ஒன்றைக் காணிக்கையாக வைத்துவிட்டுச் சென்றார். சுவாமி பிரம்மானந்தர் எதுவும் சொல்லவில்லை.
அவர் மிகவும் அமைதியாக என்ன நடக்கிறதென்று கவனித்துக் கொண்டிருந்தார்.
ஒரு இரண்டு மணி நேரம் கழித்து, ஒரு திருடன் அங்கே வந்தான். அந்தக் கம்பளத்தை நோட்டமிட்டவன், அதனை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான். அப்போதும் எந்தவிதமான உணர்வும் இல்லாமல், சுவாமி அதே முறையில் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.
இளைய சீடர்கள் சிலர், பக்தரால் கொடுக்கப்பட்ட விலை உயர்ந்த கம்பளம் திருடு போனதற்காக மிகுந்த மனக் கலக்கமடைந்தார்கள். இருந்த போதிலும், பிரம்மானந்தருக்குள் அது எந்த ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. பகவான் இரமண மகரிஷியின் வாழ்க்கையில் நடந்த இன்னொரு சம்பவம்:
ஒரு நாள் இரமண மகரிஷியின் ஆச்ரமத்திற்குள்
திருடர்கள் சிலர் நுழைந்தார்கள். அவர்கள்
கண்ணில் பட்ட எல்லாவற்றையும் எந்த
ஒரு சிறிய பொருளையும்விடாமல் எடுத்துக்
கொண்டதோடு மட்டுமல்லாமல், போவதற்கு
முன்பாக அவரையும் ஒரு அறை அறைந்து
விட்டுப் போனார்கள்.
பகவான் எந்தவிதமான எதிர்ச்
செயலும் செய்யவில்லை. அந்தச்
சம்பவத்தின்பொழுது அவர் விடுகிற
மூச்சில்கூட எந்த ஒரு சிறிய மாற்றமும்
ஏற்படவில்லை.
ஞானிகள்,
வெளி உலகில் நடக்கிற
எந்த ஒரு சம்பவத்தையும்
அவர்களுடைய
உள் மையத்தைப்
பாதிக்க
அனுமதிப்பதில்லை.
இப்படிப்பட்ட தம்மை உணர்ந்த ஞானிகள், வெளி உலகில் நடக்கிற எந்த ஒரு சம்பவத்தையும் அவர்களுடைய உள் மையத்தைப் பாதிக்க அனுமதிப்பதில்லை, தங்களுடைய மையத்திலேயே ஆனந்தமாக இருக்கிறார்கள்.
நாமும் இந்த மாதிரியாக மாற முடியும். அப்பொழுது இந்த வெளி உலகச் சம்பவங்களை நம் உட்செல்ல நாம் அனுமதிக்க மாட்டோம். நாம் இந்த உணர்ச்சிகளின் ஊசலாட்டத்திலும், ஆசை மற்றும் அச்சத்தின் அலைக்கழிப்பிலும் சிக்கிக்கொள்ளமாட்டோம்.
உங்களுக்கு முழுச் சுதந்திரமும் உண்டு
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்,'இருப்பின் மையத்தை உணர்ந்துகொள்ளுதல்' என்னும் இந்தக் கருத்தை உள் வாங்குதலுக்குப் பின்னால் உள்ள அடிப்படையான கொள்கை, அடிப்படையான ஸத்யம் இதுதான்: பிரபஞ்ச இருப்புத் தன்மை என்பது நமக்குத் தேவையானவற்றை எல்லாம் அளித்து, ஒவ்வொரு கணமும் நம்மை அன்புடன் கவனித்துக் கொள்கிற தாயாக இருக்கிறது. இந்தப் புரிந்துகொள்ளுதல் நமக்குள் மலரும்பொழுது, நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மையை சரணடைகிறோம்.
பெருங்கடலுக்குள் எழுந்து விழுகிற அலை, தான் பெருங்கடலின் ஒரு அங்கம்தான் என்பதை ஆனந்தமாக உணர்கிறது. அந்தப் பெருங்கடலை, அந்த முழுமையான இருப்புத் தன்மையை தன்னுடைய எதிரியாகக் கருதிக்கொண்டு, அதனுடன் போரிட முயற்சி செய்வதற்கு தனக்கென்று தனி ஸ்தூல இருப்பு இருப்பதாக ஒருபோதும் அது நினைத்ததே இல்லை.
ஆழமான புரிந்துகொள்ளுதலினால்தான் சரணாகதி நிகழ வேண்டும். தவிர்க்க இயலாத நிலையில் மேம்போக்கான, ஆழமற்ற ஏற்றுக்கொள்ளுதலினால் அல்ல. ஏற்றுக்கொள்ளுதலால் சரணாகதி நிகழ்ந்தால், அது ஒரு விட்டுக்கொடுத்தல் மட்டுமே. "ஓ, அது என்னுடைய தலையெழுத்து. அது என்னுடைய நெற்றியில் எழுதப்பட்டுள்ளது, ஜாதகத்தில் முன் கூட்டியே சொல்லப்பட்டு விட்டது. ஜாதகப் பலன்," என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. இது உண்மை அல்ல.
நமக்கு முழுச் சுதந்திரம் உண்டு. நாம் நினைப்பதை நம்மால் செய்ய முடியும். நாம், பிரபஞ்ச சக்தியினால் அக்கறையுடன் கவனித்துக்கொள்ளப்படுகிறோம் என்ற உண்மையைப் புரிந்துகொண்டு வாழ்க்கையின் ஓட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆழமான புரிந்துகொள்ளுதல் மூலம் இந்த விழிப்பு நிலை ஏற்பட்டால், அது அழகாக இருக்கும். அதுதான் முழுமை. அதுதான் உண்மை.

பிரபஞ்சத்திடம் சரணடைவதே புத்திசாலித்தனம்
சரணாகதி பற்றி இன்னொரு முக்கியமான விஷயம், யாரிடம் அல்லது எதனிடம் சரணடைகிறோம் என்பது முக்கியம் அல்ல. எது முக்கியமென்றால், சரணாகதி மட்டும்தான்.
சுவாமி விவேகானந்தர், பதஞ்சலி யோக சூத்திரம் பற்றிய விளக்க உரையில், "நாம் கடவுளிடம் செய்யும் பிரார்த்தனைகள் எல்லாம் ஒரே ஒரு விஷயத்தைத்தான் செய்கின்றன. அவை நமக்குள் மறைந்திருக்கிற சக்தியைத் தட்டி எழுப்பிவிடுகின்றன. நாம்
> ஆழமான புரிந்துகொள்ளுதலினால் மட்டுமே சரணாகதி நிகழ வேண்டும்.
ஆழமாகப் பிரார்த்தனை செய்யும்பொழுது, நம்முள்ளே மறைந்துள்ள நம்முடைய சொந்த சக்தி எழுப்பப்பட்டு, நாம் எந்த உருவில் வழிபட்டாலும் நாம் நம்புகிற அந்த உருவில் வந்து, நம்மீது ஆசீர்வாதத்தைப் பொழியும்," என்று சொல்கிறார்.
பிரபஞ்ச இருப்புத் தன்மை நம்மைக் கவனித்துக் கொள்கிறது என்பதைப் புரிந்து கொள்கிற புத்தியைப் பெற்றிருப்பதும் பிரபஞ்ச இருப்புத் தன்மையிடம் சரணடைவதும்தான், இறுதியான புத்திசாலித்தனம். பிரபஞ்ச இருப்புத் தன்மை ஒரு மனிதத் தன்மையற்ற மிருகத்தனமான சக்தி அல்ல என்பதையும், அதுதான் நம்முடைய ஆனந்த வாழ்க்கைக்குத் திறவுகோலாக இருக்கிற புத்திசாலித்தனமான சக்தி என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
வாழ்வை நோக்கும் பார்வையே புதுமையாகிவிடும்
மீண்டும் மீண்டும் கிருஷ்ணர் இதுவரை சொன்ன ஸ்லோகங்களில் எல்லாம் 'பற்றுதல் இல்லாமல் செயல்படுதல்' என்ற இந்த ஒரே கருத்தை பல வழிகளில் திரும்பத் திரும்பச் சொல்லியுள்ளார்.
நம்மைச் சுற்றி நடப்பவற்றுக்கு எல்லாம் நாம் சாட்சியாக மட்டுமே வாழும்போதும, வெளிச் சம்பவங்களை நாம் உள்வாங்கிக் கொள்ளாமல் இருக்கும்போதும்தான்,வாழ்க்கை நிகழ்கிறது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.
நம்மைச் சுற்றி நிகழ்பவற்றை நாம் 'பார்க்க' மட்டுமே செய்ய வேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார். வெளியில் நடப்பவை நம்மைப் பாதிக்காமல், நம்முள் இருக்கிற உள்வெளியைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த சூட்சுமத்தை உணர்ந்து, இந்த முறையில் வாழ்க்கையை நாம் வாழத் தொடங்கிவிட்ட மாத்திரத்திலேயே, நம்முடைய துக்கங்கள் சுலபமாக மறைந்துவிடும். அது ஏதோ வெளியில் உள்ளவற்றில் ஏற்பட்ட மாற்றம் அல்ல. அது சூழ்நிலைகளில் ஏற்பட்ட மாற்றமும் அல்ல. மக்களிடம் ஏற்பட்ட மாற்றமும் அல்ல. அது நாம் பார்க்க விரும்புபவற்றில் ஏற்பட்ட மாற்றம்தான். நம்முடைய பார்வையில் ஏற்பட்ட மாற்றமேதான்.
யாரிடம்
அல்லது
எதனிடம்
சரணடைகிறோம் என்பது
முக்கியமல்ல.
சரணாகதி மட்டும்தான்
முக்கியம்.
நாம் வாழுகிற முறை மற்றவர்களிடமும்
தானாகவே ஒரு விளைவை, ஒரு
உணர்வுமாற்றத்தை, ரசவாதத்தை
ஏற்படுத்திவிடும்.
நம்முடைய விருப்பங்களுக்கும்
எண்ணங்களுக்கும் இசைந்த நிகழ்ச்சிகளை
நாம் வசீகரித்துக் கொள்கிறோம்.
நமக்குள்ளே ஆனந்தமாக இருக்கும்பொழுது,
நமக்கு வெளியே என்ன நடந்தாலும்
அதுவும்கூட ஆனந்தமாகவே இருக்கும்.
அதனால்தான், நாம் வெளியே என்ன
பார்க்கிறோமோ, அது நம் உள் நிலையின்
பிரதிபலிப்பாக இருக்கிறது. அது ஒரு கண்ணாடியாகவே இருக்கிறது.
ஒரே நிபந்தனைக்குட்பட்டு, ஒரே விதமான சூழ்நிலையில் மேற்கொள்ளப்படும் ஒரே வகையான சோதனைகூட, பல்வேறு ஆராய்ச்சியாளர்களால் செய்யப்படும்பொழுது, அதன் முடிவுகள் வேறு வேறு விதமாக அமைகின்றன. காரணம் சோதனை மேற்கொள்ளும்பொழுது, அந்த விஞ்ஞானிகளுக்கு இருந்த மன நிலையைப் பொறுத்தே அதன் முடிவுகளும் அமைகின்றன என்பதை நவீன விஞ்ஞானம் நிரூபித்துள்ளது.
'குவார்க்' போன்ற 'அடிப்படை துகள்களைப்' பற்றிய ஆராய்ச்சி ஒன்றில், வெவ்வேறு பார்வையாளர்களுக்கு ஏற்றபடி இந்தத் துகள்கள் செயல்படும் முறையும் வேறு வேறாக மாறுபட்டிருந்ததைக் கண்டு விஞ்ஞானிகளே அதிசயித்துப் போனார்கள்.
நாம் என்ன பார்க்கிறோமோ, அது
நம்முடைய உண்மை. நாம் எதையுமே
மாற்ற விரும்பாமல் உள்ளதை உள்ளபடியே
பார்த்தோமேயானால், உண்மையுடன் நாம்
இசைந்து இருக்கிறோம். அவ்வளவுதான்.
அதனால் வெளியே என்ன நடந்தாலும்
எப்போதும் அது நம்முடைய நன்மைக்கே
என்ற புரிதலுடன் கவனிக்க வேண்டும்.
அவ்வாறு இருக்கும்பொழுது எப்போதும்
ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதையும்
சூழ்நிலையைக் கட்டுப்படுத்த செய்ய முயற்சி
செய்து கொண்டிருப்பதையும் விட்டு விட்டு,
நாம் அமைதியாக இருப்போம்.
நாம்
வாழ்கிற முறை
மற்றவர்களிடமும்
தானாகவே
ஒரு விளைவை,
ஒரு உணர்வுருமாற்றத்தை
ஏற்படுத்திவிடும்.
நாம் ஒரு சாட்சியாக இருந்து பார்க்கும்பொழுது, அதே சூழலைக்கூட முற்றிலும் வித்தியாசமான முறையில் பார்ப்போம். அப்பொழுது இயற்கையாகவே, நம்மை எந்த ஒரு உணர்ச்சியும் அசைக்க முடியாது. ஏனென்றால் நாம் இப்பொழுது சாட்சியாக மட்டுமே இருந்து கொண்டிருக்கிறோம். இந்தச் சூழ்நிலையில் நமக்கென்று எந்த ஒரு சுயநலமும் இல்லை.
அதன் பிறகு நாம் நம்முடைய மனத்திலிருந்து இயங்குவதில்லை, பகுத்தாய்வு செய்வதில்லை; தரம் பிரிப்பதும் இல்லை. அந்தச் சம்பவம் அங்கே இருக்கிறது. அந்த நபர் அங்கே இருக்கிறார். நாமும் அங்கே இருக்கிறோம். அவ்வளவே. மற்றவர்கள் சொல்வதைப் பொறுத்தும் செய்வதைப் பொறுத்தும் நம்முடைய நிலையில் எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. பிறகு, நமக்கு நாமே தலைவர் என்றாகிவிடுவோம்.