பூர்ணத்வம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஞானத்திற்கான நுட்பமான, ஆனந்த வாழ்வின் இரகசியமான 'பூர்ணத்வம்' பகவத்கீதையின் அனைத்து அத்தியாயங்களிலும் அளிக்கப்பட்டுள்ளது. இங்கு அனைவருக்கும் புரியும்வகையில், 'பூர்ணத்வம்' என்பதின் தாத்பரியம் விரிவாக வழங்கப்பட்டுள்ளது. 'பூர்ணத்வம்' எனும் வார்த்தைக்கு இப்பகுதியில் வரும் விளக்கத்தைப் படித்துணர்ந்து கொண்டீர்களானால், புத்தகத்தின் உள்ளே நீங்கள் 'பூர்ணத்வம்' பற்றிப் படிக்கும்பொழுது, அந்த சத்தியத்தின் ஆழத்தை அருமையாக உணர்வீர்கள்.
பூர்ணத்வம் - ஓர்அறிமுகம்
ஒவ்வொரு ஜீவனும் அடைய விரும்புவது
- ‘பூர்ணத்வம்’
வாழ்வின் மிக உயர்ந்த சத்தியம், மிக உயர்ந்த இலட்சியம்
- ‘பூர்ணத்வம்’
ஒவ்வொரு ஜீவனும் பூர்ணத்தன்மையை அடைய வேண்டும் என்பதே வாழ்வின் நோக்கம் - பிரபஞ்சத்தின் நோக்கம். அதனால்தான் நம் வேதங்களும் சாஸ்திரங்களும் இறுதியில் பூர்ணத்துவ நிலையையே வலியுறுத்துகின்றன. இப்புத்தகத்தின் நோக்கமும் -நீங்கள் அனைவரும் பூர்ணத்தன்மையை உணர்வதே.
இங்கு, வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர்...
நம் அன்றாட வாழ்வில், நாம் மிக உயர்ந்த சத்தியமான பூர்ணத்துவத்தைக் கடைபிடிப்பது எவ்வாறு? பூர்ணத்துவத்தை உணர்வது எவ்வாறு? பூர்ணத்துவத்தை அனுபவிப்பது எவ்வாறு? பூர்ணத்துவத்தில் வாழ்வது எவ்வாறு? என்பதை எளிய நடையில், அனைவரும் புரிந்துகொள்ளும் முறையில் வழங்கியுள்ளார்.