KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

  • வேறு சில பெயர்கள்

கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அச்யுதன்: தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர்
அரிஸூதனன்: பகைவர்களை அழிப்பவர்
க்ரு'ஷ்ணன்: கருப்பு நிறமுடையவர், மன அழுக்குகளை நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர், பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர்
கேச'வன்: அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில் வைத்திருப்பவர்
கேசி' நிஷூதனன்: கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர்
கோவிந்தன்: எல்லா உயிர்களைப் பற்றியும் தெரிந்திருப்பவர்
பகவான்: ஆறுவித குணங்களை உடையவர். அவை 1. பரிபூரண ஞானம். 2. பரிபூரண வைராக்கியம். 3. பரிபூரண பலம் 4. பரிபூரண கீர்த்தி 5. பரிபூரண தேஜஸ் 6. பரிபூரண ஐஸ்வர்யம் (ஸ்ரீ)
புருஷோத்தமன்: மேலான புருஷன்
மதுஸூதனன்: மது என்ற அரக்கனை அழித்தவர்
மாதவன்: லக்ஷ்மிக்குத் தலைவர்
யாதவன்: 'யது' குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர்
யோகேச்'வரன்: யோகத்திற்குத் தலைவர்
வாஸுதேவன்: வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர்
வார்ஷ்ணேயன்: விருஷ்ணி குலத்தில் பிறந்தவர்

விஷ்ணு : எங்கும் வியாபகமாய் நிறைந்து இருப்பவர்

ஜகந்நிவாஸன் : ஜகத்திற்கு இருப்பிடமாகயிருப்பவர்

ஜனார்தன் : ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர்

ஹ்ரு'ஷீகேச'ன் : இந்திரியங்களுக்குத் தலைவர்

அனகன் : பாபம் அற்றவர்

அர்ஜூனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அர்ஜூனன் : நல்ல, தூய்மையான தன்மை உடையவர்

கபித்வஜன் : கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர்

கிரீடி : கிரீடம் தரித்தவர்

குடாகேஸன் : தூக்கத்தை வென்றவர்

குருநந்தனன் : ‘குரு’ வம்சத்தில் பிறந்தவர்

கௌந்தேயன் : குந்தியின் மகன்

தனஞ்ஜயன் : செலவழிக்கப்படாமல் சேர்த்து
வைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ஒன்று
திரட்டுபவர்.

பரந்தபன் : எதிரிகளை வாட்டுபவர்

பாண்டவன் : பாண்டுவுக்கு மகன்

பார்த்தன் : பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன்

_பரதன்_ : பரத குலத்தில் பிறந்தவர்

ஸவ்யஸாசின் : இடது கையால் அம்பு எய்பவர்

குரு வம்சம் - வம்சாவளி வரைபடம்