பகவத் கீதை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
hagavad Gita Tamil )
பாகம் 3

பகவத் கீதை
விளக்கவுரை ( அத்தியாயம் 13 - 18 )
- பரமஹம்ஸ நித்யானந்தர்
பகவத் கீதை
விளக்கவுரை
-பரமஹம்ஸ நித்யானந்தர்
உலக முழுவதிலும் உள்ள நித்யானந்த தியானபீடத்தின் சன்யாசிகளுக்கும், ஆஸ்ரமவாசிகளுக்கும் வழங்கப்பட்ட சொற்பொழிவு
பகவத் கீதை
பாகம் - 3
அத்தியாயம் - 13-18
நித்யானந்த தியானபீடம்

Translitration and Pronunciation guide
பொருளடக்கம்
i பகவத்கீதை சாராம்சம்
ii முன்னுரை
13. களமும், களத்தை அறிந்தவரும்
களமும், களத்தை அறிந்தவரும்
நீங்கள் உங்களைப் பற்றி நினைத்திருப்பது போல் நீங்கள் இல்லை
விழிப்புணர்வும், மனசாட்சியும்
உள்ளுலக விஞ்ஞானத்தின் நுட்பம்
விழிப்புணர்வு முடிவில்லாதது
சக்தியைப் புரிந்து கொள்ளுங்கள்
பல மனிதர்கள், பல பாதைகள்
நாம் பிராமணர்கள்
ஆன்மாவும், உடலும்
14. உங்கள் கட்டுறு மனப்பாங்கை விடுங்கள்
உங்கள் கட்டுறு மனப்பாங்கை விடுங்கள்
கிருஷ்ணர் ஏன் மீண்டும் மீண்டும் சொல்கின்றார்?
இயல்பான தெய்வீகமான பண்புகள்
உணர்ச்சிகளைக் காத்தல்
வெற்றியால் வரும் மன அழுத்தம்
இங்கிருந்து நாம் எங்கே போவது?
குணங்களைத் தாண்டிக் செல்லுங்கள்
தெய்வீகத்தின் வெளிப்பாடு
15. கேள்விகள் இல்லை, சந்தேகங்கள் மட்டுமே
கேள்விகள் இல்லை சந்தேகங்கள் மட்டுமே
காரண சரீரத்திற்கான பயணம்
மரத்தை வெட்டிச் சாய்த்தால்
நுட்பங்களைத் தூய்மையாக்குங்கள்
கட்டுறு மனப்பாங்கு
நீங்கள் தான் உங்களின் சம்ஸ்காரங்கள்
விழிப்பே, சாதனை இல்லை
நம் மனம் செயல்படும் வழி
கூட்டு விழிப்புணர்வு
16. நீங்களும், நானும்
நீங்களும், நானும்
தெய்வீகத்தின் தகுதிகள்
நீங்கள் அரக்கனாக இருந்தால்
நம் கோளை எப்படிக் காப்பாற்றுவது?
நம்மை நாமே எப்படிக் காப்பாற்றுவது?
உணர்ச்சிகளின் பொறி
துக்கத்தால் தூக்கி எறியப்படுதல்
தங்கமும், பெண்களும்
17. சிரத்தை - விடுதலைக்கான நேர்வழி
சிரத்தை - விடுதலைக்கான நேர்வழி
வழிபடுதலின் பாதை
என்னைச் சித்ரவதை செய்யாதீர்கள்
நம்புகள், பயிற்சி செய்யுங்கள்
நாம் என்பது நாம் உண்பது தான்
எதிர்பார்ப்பில்லாத தானம்
செயல்கள், வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள்
எப்படிக் கொடுப்பது?
நீ அதுவே ஆகும்.
18. எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் சரணடையுங்கள்
எல்லாவற்றையும் விட்டு விட்டுச் சரணடையுங்கள்
செயலும், செயல்படுத்த பவரும்
தானம் சுயநலமில்லாதாக இருக்க வேண்டும்
மூட நம்பிக்கை இல்லாத கடமை
சரணடைதலின் நுட்பம்
இறுதியான வாக்கியம்
செயலின் உட்பகுதி
வாழ்க்கையின் பொருள்
உணர்ச்சிகளின் மூடநம்பிக்கை
சரியான நடத்தை, பூரணத்துவத்திற்கு அழைத்துச் செல்லாது
ஜீவன் முக்தராவதற்கான வழிமுறைகள்
உங்கள் விதிக்கு நீங்கள் தலைவர் இல்லை
சம்ஸ்காரங்கள் உங்களைத் துரத்துகின்றது
சக்தி தரிசனம்
என்னிடம் சரணடையுங்கள்
நான் போக மாட்டேன்
கிருஷ்ணர் நிகழ்காலத்தில் இருக்கின்றார்
iii சுலோகங்கள்
வழிபாட்டுச் சுலோகங்கள்
ஞான விஞ்ஞான யோகம்
அக்ஷரப்ரஹ்ம யோகம்
ராஜ வித்யா ராஜகுஹ்ய யோகம்
விபூதி யோகம்
விஸ்வரூப தரிசனயோகம்
பக்தி யோகம்
iv பின் இணைப்பு
குரு வம்சம்
பகவத் கீதையின் முக்கிய கதாப்பாத்திரங்கள்
அருஞ்சொற்பொருள்
பகவத் கீதை
விளக்கவுரை - நித்யானந்தர்
பகவத் கீதை - ஒரு பின்னணி / பகவத் கீதை, நமது வேதப் பரம்பரையத்தின், ஒரு புனித நூல் எல்லா சமய நூல்களைப் போலவே, பகவத் கீதையிலும் அனுபவ அறிவானது வாய் மொழியாகவே நேரிடையாக தரப்பட்டுள்ளது. அதை சமஸ்கிருத்தில் 'ஸ்ருதி' (குணாதணடி) என்பார்கள். ஸ்ருதி என்றால் 'கேட்டது' என்று அர்த்தம்.
பகவத் கீதையை, பொதுவாக 'கீதை' என்றே சொல்வார்கள் இந்த சமஸ்கிருத வார்த்தைக்கு 'புனிதப் பாடல்' என்று அர்த்தம். வேதங்களும் உபநிடதங்களும் தனியாகத் தோன்றியவை.
அப்படியில்லாமல், பகவத் கீதை,ஹிந்து மத இதிகாசப் புராணக் கதையான மஹாபாரத்தில் எழுதப்பட்டுள்ளது. இதைக் கதையின் ஒரு பகுதி என்றும் சொல்லலாம். வேதப் பாரம்பரியத்தில் வந்த ஆயிரமாயிரம் ஞானிகளின் அனுபவங்களின் வெளிப் பாட்டினை, அடிப்படையாகக் கொண்ட புனித நூல் 'கீதை'.
'ஸ்ருதி' என்கிற புனித நூல்களின் அஸ்திவாரம் வேதங்களும் உபநிஷத்துக்களும். மிகப் பெரிய ஞானியர்களும் ரிஷிக்களும், மனமற்ற நிலையில் இருக்கும் பொழுது, அவர்களது உள் முகப் பார்வையில், முழுவிழிப்புணர்வில் எழுந்தவையே தேவங்களும் உபநிஷத்துக்களும்.
இவை மனிதகுலம் (எத்துனை) பழமை வாய்ந்ததோ (அத்துணை) பழமையானது; மனிதகுலத்தின் சத்தியத்தைத் தேடும் பாதையில் முதலும் சத்தியமும் வெளிப்பாடுகள்.
அனுபூதியாக உணர்ந்த பெறம் ஞானிகளால் சொல்லப் பட்டவை 'வேதங்கள்' அந்த ஞானிகளால் போதிக்கப்பட்டவை உபநிஷதங்கள். அப்படி இல்லாமல், கீதை, ஞானிகளில் ஒருவரான முனிவரால் விவவிக்கப்பட்ட கதையின் ஒரு பகுதியாகும். அது தெய்வத்தின் நேரடி வெளிப்பாடாக விவவிக்கப்பட்டிருக்கிறது. கீதைக்கு இருப்பதைப் போன்ற ஒரு சிறப்புத் / நிலை வேறு எந்த இதிகாசத்திற்கோ அல்லது இதிகாசத்தின் பகுதிக்கே கா இல்லை. கீதையின், இருப்பின் பலனால் தான் மஹாபாரதம் ஹிந்துக்களின் புனித நூலாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின் விழிப்புணர்வு என்ற இருந்து தோன்றியதால் தான் கீதை புனித நூலாகக் கருதப்படுகிறது.
‘மஹாபாரதம்’ என்றால் மிகப் பெரிய பாரம் என்ற அர்த்தம். தற்போது ' இந்தியா' என்று அறியப் படுகின்ற நாட்டின் மக்களைப் பற்றியும் , அவர்களது நாகரீகத்தைப் பற்றியும் மஹாபாரதம் விவரிக்கின்றது.
அப்போழுது 'பரதன்’ என்கிற மன்னனாலும், அவனது வம்சாவளியினர்களாலும் அது ஆளப்பட்டு வந்தது. இந்த இதிகாசத்தின் கதை கெளவர்கள், பாண்டவர்கள் என்ற நெருங்கிய இரண்டு உறவு முறைக் குடும்பங்களுக் கிடையே நிகழும் சண்டை சச்சரவுகளைப் பற்றியது.// ஹஸ்தினாபுரத்தின் அரசர் திருதராஷ்டிரன், பார்வையற்றவர். அவருக்கு கௌரவர்கள் என்ற 100 பிள்ளைகள் இருந்தனர். அவரது தம்பி பாண்டு அவருக்க பாண்டவர்கள் என்ற 5 பிள்ளைகள் தந்தை வழி சகோதரர்களான இவர்களுக்கள் நிகழும் போட்டி, பூசல், ஒற்றுமையின்மையை விவரிப்பதே இக்கதை.
திருதராஷ்டிரன் பார்வை அற்றவரான இருந்தால் அவரது தம்பி பாண்டு, அரசராக முடிசூட்டப்பட்டார். பாண்டுவுக்கு ஒரு மஹா முனிவரின் சாபம் இருந்தது. அதாவது பாண்டு, தன் மனவியருடன் உடலால் உறவு கொண்டால், இறந்து விடுவார் என்று அதனால் அவருக்க பிள்ளைகள் இல்லை.
பாண்டவர்கள் ஐவரும், அவர்களது அன்னை குந்திக்கும் மாத்ரிக்கும் தெய்வ அருளால் பிறந்ததாக வியாச முனிவர் விவரிக்கிறார். பாண்டு தனது அரசையும், பிள்ளைகளையும், பார்வையற்ற தனது அண்ணன் திருராஷ்டிரனிடம் ஒப்படைத்து விட்டு, தவம் செய்ய காட்டிற்கு சென்றார்.
குந்தி, தனது இளமைப் பருவத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு வரம் பெற்றிருந்தார் அதன்படி அவள் நினைத்த பொழுது எந்த தெய்வ சக்தியையும் அழைத்து அதன் மூலம் குழந்தை பெற முடியும் என்று.
இளம் பருவத்தில் திருமணத்திற்கு முன் அதை சோதித்துப் பார்க்க விரும்பினாள். அதன் சூரிய தேவதை தோன்றினார். அவர் ஆசிர்வாதத்தால் குழந்தை பிறந்தது.
சமூகக் குற்றச்சாட்டுகளுக்கு பயந்து, பிறந்த குழந்தையைப் பெட்டிக்குள் வைத்து சந்தி நதியில் விட்டு விட்டாள். யுதிஷ்டிரர், பீமன், அர்ச்சுனன் ஆகிய மூவரும், திருமணத்திற்குப் பிறகு அதே வரத்தின் மூலமாக குந்திக்குப் பிறந்தார்கள். பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கும் அப்படியே நகுலன், சகாதேவர் இருவரும் இரட்டையர்களாகப் பிறந்தார்கள்.
யுதிஷ்டிரர், தர்மத்திற்கும், மரணத்திற்கும் அதிபதியான யமராஜன், (குந்தியின் இடுப்பை' ஆசிர்வதித்தன் பலனால் பிறந்தார்). பீமன், காற்றுக்கு அதிகதியான வாயுவின் சக்தியாலும், தேவதைகளுக்க அதிபதியான இந்திரனின் சக்தியால் அர்ச்சுனனும் குந்திக்குப் பிள்ளைகளாகப் பிறந்தர்கள். அஸ்வினி சகோதர்கள் என்ற தேவர்கள் மூலம் மாத்ரிக்கு நகுலன், சகாதேவன் என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தார்கள்.
திருதராஷ்டிரருக்கு அவரது மனைவி காந்தாரி மூலமாக நூறு பிள்ளைகள் பிறந்தார்கள் கௌரவ இளவரசர்களில் மூத்தவர் கெயர் துரியோதனன் ஒன்று விட்ட பாண்டவர் சகோதரர்கள் துரியோதனனுக்கு சிறிதும் அன்பில்லை.
தனது தம்பி துச்சாதனனுடன் சேர்ந்து பாண்டவர்களை அழிக்க பல திட்டங்கள் தீட்டினான். ஆனால் ஒன்றும் பயனளிக்கவில்லை. குந்தியின் முதல் மகனான, நதியில் விடப்பட்ட கர்ணன், அரண்மனை தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வந்தார். விதியின் வினோத விளையாட்டினால் கர்ணன், துரியோதனுடன் இணைந்தார்.
பாண்டு விட்டுச் சென்ற அரசின் முறையான வாரிசு யுதிஷ்டிரர் என்பதால், திருதராஷ்டிரன், 'குரு’ என்ற நாட்டின் பாதியை, யுதிஷ்டிரர் உரிய வயதை அடைந்தது, கொடுத்தார் யுதிஷ்டிரர் (தர்மர்) இந்திரப்ரஸ்தந்தை என்ற தலைநகரக நிறுவி தனது தம்பியர், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவனுடன் ஆண்டு வந்தார்
அர்ச்சுனன் பாஞ்சால தேசத்து இளவரசி திரௌபதியை, அழகிய இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக இளவரசர்கள் போட்டியிடும் சுயம்பரப் போட்டியில் வென்றார். எது கிடைத்தாலும், ஐவரம் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்ற அன்னை குந்தியின் விருப்பப்படி, திரௌபதி ஐவருக்கும் மனைவியானாள்.
துரியோதனன், யுதிஷ்டிரனா சூதாட்டத்திற்கு இணங்க வைத்தான். அதில் அவனது மாமா சகுனி வஞ்சகமாக பாண்டவரை வென்றார். ஆடத்தில் யுதிஷ்டிரர் அனைத்தையும் இழந்தார். அவரது நாடு, தம்பிகள், மனைவி, மேலும் தன்னையுமே இழந்தார்.
துச்சாதனன் எல்லோர் முன்னிலையிலும் திரௌபதியை துகிலுரிந்து மானபங்கப் படுத்த முயற்சித்தான். பாண்டவர்களும் திரௌபதியும் பதினான்கு ஆண்டுகளுக்கு நாடு கடத்தப்பட்டனர். அதில் பதினான்காவது ஆண்டு பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும்.
பதினான்காண்டு முடிவில் தங்களின் இராஜ்ஜியத்தை மீண்டும் பெற பாண்டவர்கள் முயற்சித்தனர் இந்த முயற்சியில் யாதவர்களின் தலைவனும், மாகவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமுமான 'கிருஷ்ணர்' அவர்களுக்கு உதவி செய்தார்.
ஆனால் துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலமும் கூட தர மறுத்துவிட்டான் இதன் விளைவாக பெரிய யுத்தம் மூண்டது. 'மஹா பாரத யுத்தம்' அது.
இப்பொழுது 'இந்தியா' எனப்படும் அந்த தேசத்தின் அனைத்து அரசர்களும், அவர்களின் விருப்பப்படிப் பாண்டவருடனோ அல்லது துரியோதனனுடனோ இணைந்து போரிட தயாரானர்கள்.
கிருஷ்ணர் இரண்டு குடும்பங்களில், ஏதே ஒன்றுடன் சேர ஒப்புக் கொண்டார்.
நிராயுதபாணியாக தான் மட்டும் ஒருவருடனும் அனைத்து போர் தளவாடங்களுடன் கூடிய தனது யாதவ சேனை முழுவதும் ஒருவருடனும் இணைவதாகக் கூறினார். முதலில் துரியாதனனுக்கு அளிக்கப்பட்ட இந்த வாய்ப்பில், எதிர் பார்த்தபடி துரியோதனன், நிறைய ஆயுதங்களுடன் கூடிய யாதவ சேனையைத் தன் பக்கம் சேர்த்துக் கொண்டான்.
அர்ச்சுனன் மகிழ்வுடனும், நன்றி உணர்வுடனும், தனது நண்பனும் அனுபவமிக்க ஆலோசகருமான கிருஷ்ணரைத் தனது தேரோட்டியாக பெற்றுக் கொண்டான்.
இரு சேனைகளும் குருக்ஷேஷ்த்திரத்தின் மிகப் பெரிய போர்க்களத்தில் கூடியது தற்பொழுது 'குருக்ஷேத்திரம்' என்ற ஊர் இந்தியாவில் 'ஹரியானா' மாநிலத்தில் உள்ளது.
எல்லா அரசர்களும் இளவரசர்களும் ஒருவருக் கொருவர் உறவு முறையினரே ஆனால் அவர்கள் எதிரெதிர் அணியில் இருந்தனர். கௌரவ சேனையில் இருந்த தனது நண்பர்கள், உறவினர்கள், மற்றும் ஆச்சாரியர்களைக் கண்டு, அர்ச்சுனன் குற்ற உணர்வினாலும் மன உளைச்சாலும் தளர்வடைந்தான். போரிலிருந்து விலகிச் செல்ல விரும்பினான்.
குருக்ஷேஷ்த்திரத்தின் போர்க்களத்தில் அர்ச்சுனனுடன் ' கிருஷ்ணர்' நடத்திய உரையாடலே பகவத் கீதையாகும்.
'கிருஷ்ணர்', போர் ஆயுதங்களைக் கையிலெடுத்துப், போரிட்டு எதிரிகளை வெல்லுமாடாறு அர்ச்சுனனுக்குக் கூறி இணங்க வைத்தார்.
முன்னே என்ன செய்ய வேண்டுமோ அதைத் தயங்காமல் செய் என்று சொன்னார். 'அது மட்டுமே உனத / கடமை. போரின் முடிவைப் பற்றிக் கவலைப்படாதே. அதை என்னிடம் விட்டுவிடு எதிரில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கனவே இறந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டவர்கள் தான்,' என்று 'கிருஷ்ணர்' அர்ஜீனனிடம் கூறினார்.
உள்ளுலகவிஞ்ஞானம்என்கின்றஆன்மீகத்தில், கீதையே இறுதியான அனுபூதியான சாரங்கள் சில பண்டிதர்கள் கூறுவது போல, கீதை (வன்முறையைத்) தூண்டும் நூல்ல்ல. அது மனதின், உடலின் தன்மைகளை பற்றியது. தர்க்கம், உடல், மனது, எண்ணம் என்ற நிலைகளைத் விதர்க்க நிலைக்குச் செல்ல வேண்டியதன் தேவையைப் பற்றியது.
கண் பார்வையற்றதனால் அரசர் திருதராஷ்டிரர் போரில் பங்கு பெறவில்லை. அவரது மந்தியின் பெயர் சஞ்சயர். அவர் மன்னருக்கு போர்க்களத்தில் நடப்பவற்றை உடனுக்குடன், தனது புலன்களுக்கு அப்பாற்பட்டவற்றைக் காணும் திறமையைப் பயன்படுத்தி தெரிவித்தார். சஞ்சயனின் குரல் மூலமாகவே நாம் கீதையை, அர்ச்சுனனுக்கும் கிருஷ்ணறுக்கும் நடக்கும் உரையாடலைக் கேட்கிறோம்.
போரில் எல்லா கௌரவ இளவரசர்களும், அவர்களது சேனைத் தளபதியான பீஷ்மர், துரோணர், கர்ணன் அனைவரும் கொல்லப் பட்டனர். இறுதியில் பாண்டவர்கள்
ஐவரும் போரை வென்றன போரின் முடிவில் அவர்கள் மட்டுமே எஞ்சி இருந்தார் . ஒன்று பட்ட தேசத்தை அரசாண்டனர். அர்ச்சுனறுக்கும் கிருஷ்ணருக்கும் இடையேயான உரையாடல், மனிதனுக்கு கடவுளுக்குமிடையேயான உரையாடலாகும். சமஸ்கிருத்தில் அதை நர-நாராயண உரையாடல் என்பர். அர்ச்சுனனது கேள்விகளும். எழும் .சந்தே தகங்களாகும்.
தெய்வமான, கிருஷ்ணரின், பதில்கள் காலம், இடம் கடந்து நிற்கின்றது. கிருஷ்ணரின் போதனைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பேர் அழிவைத் தந்த அந்த போர்க் களத்தில் எந்த அளவிற்கு சத்தியத்தை ஆதாரமாகக் கொண்டதாக இருந்ததோ அதே அளவு இன்றும் சத்தியமாக உள்ளது.
நித்யானந்தர்
மஹாபாரத்தின் உருவகமான உட் பொளை பின் வருமாறு நான் விளக்குகிறேன்.
மஹாபாரதப் போர் என்பது, சமஸ்காரங்கள் எனப்படும் நமது மனதில் உள்ள நேர்மறை, எதிர்மறை எண்ணங்களுக்கிடையேயான போராட்டமே! நேர்மறை எண்ணங்கள் பாண்டவர்கள். எதிர்மறை எண்ணங்கள் கௌரவ இளவரசர்கள். குருக்ஷேஷத்திரம், அர்ச்சுனன் என்பது தனி மனித உணர்வுநிலை கிருஷ்ணர் என்பது ஞானமடைந்த குரு.
கௌரவப் படையை நடத்திச் சென்ற பல்வேறு தளபதிகளும், தனிமனித உணர்ச்சி தான், அவரின் தனது ஞானத்தேடுதல் பாதையில் சந்திக்கும் தடைகள். பீஷ்மர், குரு வம்சத்தின் மதிப்புமிக்க, வணக்கத்துக்குரிய முதியவர், குலபதி, பீஷ்மர் என்பது பெற்றோ றார் மற்றும் சமுதாயம் நமக்களித்த கட்டுறு மனப்பாங்கு.
கௌரவர், பாண்டவர்களின் ஆசிரியரான துரோனன் என்பது, நமக்கு அறிவையும் ஆன்மீக வழியையும் காட்டிய 'கட்டுறு மனப்பாங்கு' 'கர்ணன்' என்பது தடைகளை ஏற்படுத்தக் கூடிய தானம், இரக்கம் போன்ற நல்ல செய்கைகள்; இறுதியில் வீழும் துரியோதனன் என்பத அஹங்காரம். பெற்றோராலம், சமூகத்தாலும் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கை, மரபுகளையும் வழக்கங்களையும் எதிர்த்து நடப்பதால் வாழ்வை வெல்லலாம். ஆகவே, ஞானப் பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள் வழக்கமாக, உலகை விட்டு விலகி, சன்யாசிகளாக இருக்கும்படி பாரம்பரியமாக கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
இவ்வகை கட்டுறு மனப்பாங்கு உடல் வாழும் அளவு உடன் வாழும் இறப்பதில்லை. ஆனால் அதன் தாக்கம் குறைந்து விடும். துரோணர் என்பது ஒருவர் உள்வாங்கிய அனைத்து அறிவுகளும், நம்மை வழி நடத்தி ஆனால் நம்மை ஞானமடையச் செய்யாத ஆசிரியர்கள் நாம் அவர்களுக்கு கடமைப் பட்டவர்களாக உணர்வதால் அவர்களை விடுதல் மிகவும் சிரமமமாக உள்ளது. ஞானமடைந்த குரு இங்கே வந்து நம்மை வழி நடத்துகிறார்.
