KAILASA Library/பகவத்கீதை/அருஞ்சொற் பொருள்Sign in
பகவத்கீதை

அருஞ்சொற் பொருள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அக்நி - தீ

அங்குலீ-மால் - நெடுஞ்சாலை கொள்ளைக்காரன், அங்குலீ என்றால் விரல்கள். பாதிக்கப்பட்டவர்களின் விரல்களை மாலையாக அணிந்தவன். அவன் புத்தாரால் உணர்வு மாற்றம் செய்யப்பட்டு, புத்த துறவியானார்.

அஞ்ஜந - கண்மை, கண்களுக்குத் தீட்டப்படும் கருமை நிற மை.

அத்வைத - இருமை தன்மையற்ற கருத்து, தனிமனித இருப்பு, பிரபஞ்ச இருப்பு இவை இரண்டுமே ஒன்றுதான் என்று வலியுறுத்திச் சொல்கிறகொள்கை. ஆனால் தனிமனித இருப்பும், பிரபஞ்ச இருப்பும் தனித் தன்மைவாய்ந்தவை என்று ‘த்வைத’ மும் ‘விசிஷ்டாத்வைத’மும் கருதுகிறது.

அநாஹத - உருவாக்கப்பட முடியாத ஒலி, இதய சக்தி மையம்

அப்யாஸ - தொடர்ந்த பயிற்சி

அம்ரு'த - அருந்தினால் சாகாத் தன்மையைக் கொடுக்கக் கூடிய தெய்விக அமிர்தம்

அண்ணாமலை ஸ்வாமிகள் } - ஞான குருவாகிய பகவான் இரமண மஹரிஷிகளுடைய ஞானமடைந்த சீடர், அவருடைய தனி உதவியாளர்

அஹிம்ஸ - துன்புறுத்தாமை

அபரிகீறஹ - மற்றவர்களின் பொருள்களின் மேல் ஆசை கொள்ளாமை

அஷ்டவக்ர - அஷ்டவக்ர சம்ஹிதா என்ற நூலை இயற்றிய, இந்தியாவின் பழங்கால ஞானி.

அஷ்டாங்கயோக - பதஞ்சலியின் யோக ஸூத்ரத்தில் குறிப்பிட்டுள்ள, ஞானமடைவதற்கான எட்டு வகை வழிகள்.

ஆகாச' - வெற்றிடம், வானம், நுட்பமான ப்ரபஞ்ச ச'க்தி.

ஆசார்ய - ஆசிரியர், ‘உடன் வருபவர்’

ஆதார - அடிப்படை

ஆத்ம, ஆத்மந் - தனிமனித இருப்பு நிலை, பிரபஞ்ச இருப்பு நிலையின் ஒரு பகுதி

ஆத்ம ஷட்கம் - ஞான குருவாகிய ஆதிசங்கரரால்
இயற்றப்பெற்ற, அத்வைத கருத்தை விளக்கும்
ஆறுபத்திகளெக்கொண்ட செய்யுள்

ஆநந்த - நித்யானந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம் முதலியவற்றைக் குறிக்கும்

ஆபரண - அணிகலன்

ஆபஸ் - நீர்

ஆரதி - தீபங்களுடன் கடவுளை வணங்குதல்

ஆச்'ரய - உண்மை நிலையில் உறுதியாய் நிலைநாட்டப் பெற்றவர்.

ஆச்'ரய தோஷ - உண்மை நிலையில் உள்ள குறைபாடு

ஆசீர்வாத் - ஆசீர்வாதம்

ஆஹார - உணவு - நமது ஐம்புலன்கள் மூலம் பெறும் உணவு.

ஆஜ்ஞா - ஒழுங்கு முறை, கட்டளை, மூன்றாவது கண் சக்தி மையம்.

இச்சா - ஆசை

இடா - பிங்கள, ஸுஷும்னா இவற்றுடன் பிராண சக்தி பாயும் மெய்மையான சக்தி பாதை

இதிஹாஸ - இராமாயணம், மஹாபாரதம்

உத்தராயண - சூரியனின் வடக்கு நோக்கிய பயணம்

உபநிஷத் - ஞானமடைந்த குருவுடன் அமர்ந்திருத்தல்

க்ரியா - செயல்

க்ரு'ஹஸ்த - கிருஹ - குடும்பத்தலைவர், திருமணமானவர், க்ருஹா என்ற சொல் வீடு என்ற பொருள் கொண்டது

கதாயுதம் - தண்டாயுதத்தைப் போன்ற ஆயுதம், கதாயுதம்

கர்மா - ஆன்மீக விதியின்படி காரண விளைவு

கல்ப - வெகு நீண்ட காலம், யுகம், கல்பத்தின் ஒரு சிறிய பகுதி கல்பநா - கற்பனை

கால - நேரம்

காண்டவ - மஹாபாரதத்தில் அக்னி தேவதையால் அர்ஜுனனுக்குப் பரிசாக வழங்கப்பட்ட தெய்விக வில்

குண்டலினி - மூலச் சக்கரமான 'மூலாதாரத்தில்' உள்ள சக்தி

குண - சத்வ, ரஜஸ், தமஸ் மூன்று வகையான மனித நடவடிக்கையின் பண்புகள்.

கும்பமேளா - பன்னிரண்டு ஆண்டுகளில் நான்கு முறை நிகழும், மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டம். கும்பமேளா நிகழும் நான்கு இடங்கள்

  1. கங்கை, யமுனை, பூமிக்கடியில் உள்ள சரஸ்வதி இவை மூன்றும் சேரும் இடமாகிய அலகாபாத்தில் உள்ள ப்ரயாக்.
  1. ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில்.
  1. உஜ்ஜைியில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில்
  1. நாசிக்கில் உள்ள கோதாவரி நதிக்கரையில்

குரு - ஆசான்; கு (இருள்) ரு (வெளிச்சம்) இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்பவர்

குருகுல் - குருகுலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே, கல்வி கற்பதற்காக குருவிடம் ஒப்படைக்கும் இடம். குரு, அவர்களுக்குக் கல்வியைக் கற்றுக் கொடுத்து, அவர்களை உயர் விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறார்.

குஷ - வேத பாரம்பரியத்தில் மத சடங்குகளுக்காக உபயோகப்படுத்திய புனித புல். இந்தப் புல்லால் அமைக்கப்பட்ட இருக்கையின் மேல் மான் தோலையும் ஆடையையும் போட்டு, அதில் அமர்ந்து தியானம் செய்வது நன்று என்று கருதப்பட்டது.

கைவல்ய - விடுதலை, மோக்ஷம், நிர்வாணம்

கோபிகைகள் - இடையர் குலப் பெண்கள், பகவான் கிருஷ்ணரிடம் விளையாடி அவரிடம் தனிப்பட்ட தங்கள் இருப்பை இழந்த பக்தர்கள்.

கோபுர

  • கோயில் கோபுரம்

கோயந்

  • ஜென் நீதிக் கதைகள், தனியொரு நிகழ்ச்சியை ஒட்டிய நீதிக்கதைகள் அல்லது புதிர்.

கோவிந்த பாத

  • ஞானகுருவாகிய ஆதிசங்கரரின் ஞான குரு.

கோச'

  • நமது உடலில் 5 சக்தி அடுக்குகள் உள்ளன.
  1. அன்னமய அல்லது உடல் அடுக்கு
  1. பிராணமய அல்லது பிராண அடுக்கு
  1. மனோமய அல்லது எண்ண அடுக்கு
  1. விஞ்ஞானமய அல்லது உறக்க அடுக்கு
  1. ஆனந்தமய அல்லது ஆனந்த அடுக்கு

சக்ரம்

  • மன-உடல் அமைப்பில் உள்ள ச'க்தி மையங்கள்

சண்டாள

  • தீண்டத் தகாதவன், விலங்குகளின் தோலை உரித்துநீக்குபவன்.

சந்தந

  • சந்தனமரம்

சக்ஷு

  • கண், நம் புலன்களுக்குப் பின்னால் உள்ள அறிவாற்றல்

சித்த

  • மனம், மேலும் மனஸ், புத்தி

சித்ரகுப்த

  • ஒருவருடைய வாழ்வின் நிகழ்வுகளை கணக்கு எடுத்து, இறக்கும் தருவாயில் வெளியிடும் புராணக் கதையைச் சேர்ந்த கதாபாத்திரம்

சைதன்ய மஹாப்ரபு

  • கடவுள் கிருஷ்ணரின் அவதாரம் என்று நம்பப்படும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஞானி

டாக்டர். ப்ரைன் வெய்ஸ்

  • புகழ்பெற்ற நூலாகிய Many lives Many Masters எழுதிய உள நோய் மருத்துவர்

த்ரி காலம்,

  • முக்காலங்களான கடந்த, நிகழ், எதிர்காலம்.

த்ரி கால ஜ்ஞானி

  • இந்த மூன்று காலத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பவர், ஞானமடைந்தவர், காலம், இடம் இவற்றைக் கடந்தவர்

தந்த்ரா

  • நுட்பங்கள், ஆன்மீக வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும் உத்திகள்

தபஸ்

  • தீவிர ஆன்மீக முயற்சி.

தமஸ்

  • மந்தத் தன்மை அல்லது செயலின்மை போன்ற
குணம்
தீர்த- நீர், தீர்த்தம் - புண்ணிய ஆறு, யாத்திரை மையம்
துரீய, ஸமாதி- சமாதி நிலை, மனமற்ற நிலை
த்ரு'ஷ்டி- பார்வை, மனக்கண்ணால் பார்ப்பது
த்யான- ஆழ்ந்த சிந்தனை
தர்ச'ந்- காட்சி, தெய்விகத்தைக் காண்பதைக் குறிக்கும்
தர்ம- நேர்மையான
தக்ஷிணாயன சூரியனின்- ஜூன் 21-ம் தேதியிலிருந்து தொடங்கும் தெற்கு நோக்கிய பயணம்
தீ- விவேகம்
தீக்ஷை- தீட்சை சமயத்தில் குரு தமது சீடருக்கு அன்பு வழங்கி தமது சக்தியை மாற்றம் செய்தல். இது மந்திரம், தொடுதல், பார்வை அல்லது எண்ணம் மூலமும் செய்யப்படும்
தோஷ- குறைபாடு
நசிகேத- கட உபநிஷத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம். மரணக் கடவுளாகிய யமனிடமிருந்து மரணத்தைப் பற்றிய இரகசியங்களைத் தெரிந்துகொண்டவன்.
நடராஜ- சிவபெருமான் பிரபஞ்ச நடனக் கலைஞர்; புகழ்பெற்ற சிதம்பரம் கோயிலின் பிரதான கடவுள்
நமஸ்கார்- இரண்டு கைகளையும் கூப்பி பரம்பரையாக வரவேற்கும் முறை
நதி- ஆறு
நாக- பாம்பு
நாக ஸாது- உடைகள் அணியாத ஒரு வகை துறவியர்கள்
நாடி- நரம்பு, ஸ்தூலமாக இல்லாத ஒரு ச'க்தி பாதை
நாரீ- பெண்மணி
நாந்த- முடிவில்லாத
நிதித்யாஸநா- வெளிப்படுத்தியவை
நிமித்த- காரணம்
நிமித்த தோஷ- காரணத்தை அடிப்படையாகக்
கொண்ட குறைபாடு
நியம- பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தின் எட்டுவகை பாதையின் இரண்டாவது பாதை. ஆன்மீகப் பாதையில் நாம் செல்வதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாட விதிகள்.
நிர்வாண, ஸமாதி- விடுதலை, மோக்ஷம், ஸமாதி போன்றது
நிஸர்கத்தமஹராஜ்- மும்பையில் வாழ்ந்த ஜ்ஞான குரு செப்டம்பர் மாதம் 8ம் தேதி 1981 ல் அவர்களுடைய 84வது வயதில் மறைந்தார்
ப்ரத்யாஹார- பொதுவாக 'உணவிலிருந்து விடுபட்டு இருத்தல்' என்று பொருள். இங்கு, அனைத்துப் புலன்களில் இருந்தும் விடுபட்டு இருத்தல் என்று பொருள்.
ப்ராண- உயிர் சக்தி, மூச்சுக்காற்றையும் குறிக்கும்
ப்ராணாயாம- மூச்சை அடக்குவது
ப்ருத்வீ- பூமி சக்தி
பதஞ்ஜலி- யோகத்தின் தந்தை, புகழ்பெற்ற யோகத்தின் ஆய்வுக் கட்டுரையாகிய பதஞ்சலி யோக ஸூத்ரத்தை எழுதியவர்
பரமஹம்ஸ- மிக உன்னதமான அன்னப்பறவை, இங்கு ஞானமடைந்த வரைக் குறிக்கும்
பரமஹம்ஸ யோகநந்த- தன்னையுணர்தலுக்கான கிரியாயோகத்தை பரிந்துரைத்த ஞான குரு.
பரிக்ரம- ஒரு மலை அல்லது நீர் நிலை போன்ற புனித இடங்களைச் சுற்றிவரும் ஒரு சடங்கு
பரிவ்ராஜக- ஒரு கடுந்துறவியின் அலைந்து திரியும் வாழ்க்கை (நாடோடி வாழ்க்கை)
பல - பல ச்ருதி- பழம், இறை வழிப்பாட்டின் பலன்கள்
பாப- பாவம்
பிங்கள- இட,ஸுஷும்னா, இவற்றுடன் பிராண சக்தி பாயும் மென்மையான சக்தி பாதை
பிரகாச'நந்த ஸரஸ்வதி- சைதன்ய மஹாபிரபுவின் மரபில் வந்த ஒரு ராசிக் (Rasik) ஞானி. அவருடைய போதனைகள் பெரும்பாலும் பகவக்கீதையை அடிப்படையாகக் கொண்டவை.

புண்ய - சிறப்பு, நன்மை செய்தல்

புத்ர - மகன்

புரோஹித் - அர்ச்சகர்

பூர்ண - முழுமையான, அத்வைத கருத்தின்படி உண்மை நிலை.

பூஜா - ஒரு வகையான சடங்கு வழிபாடு.

ப்ரஹ்மந் - தெய்விகத்தின் முடிவான ஸத்யம், பிரபஞ்சப் பேராற்றல்

ப்ரஹ்ம - ஹிந்து மதத்தில் உருவாக்கும் கடவுளாகிய ப்ரஹ்மன்

ப்ரஹ்மசர்ய - கற்பனைகள் இல்லாமல், நிகழ்காலத்தில் வாழ்பவர்

ப்ரஹ்மசாரீ - இயல்பு நிலையான ஸத்யத்தில் வாழ்பவர்

பக்தர் - பக்தன்

பக்தி - உணர்வு வழிபாடு

பகவாந் - கடவுள், ஞானமடைந்த குருமார்களுக்கு உபயோகப்படுத்தும் அடைமொழி

பாகவதம் - வேத வியாஸரால் தொகுக்கப்பட்ட பகவான் கிருஷ்ணரின் பக்தி கதைகள்

பாவந - கற்பனை

பிக்பேங் (Bigbang) - ஜார்ஜஸ் லிமேய்ட்ரி, ரோமானிய கத்தோலிக்க மத போதகர் முன்மொழிந்த பிரபஞ்ச அமைப்பின் உரு மாதிரி

பீஜ - விதை; பீஜ மந்த்ர- கடவுளை வழிபடுவதற்காக பயன்படுத்தும் ஓர் அசைகொண்ட வார்த்தை.

புத்த - ‘நிர்வாண’ நிலையான மோக்ஷத்தை அடைவதற்கு எட்டு வகை வழியை போதித்த ஞானகுரு

புத்தி - அறிவாற்றல், மனம், மனஸ், சித்தா என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.

புத்து - முட்டாள்

மங்கல - நன்னிமித்தமான

மங்கல ஸூத்ர - திருமணமான ஹிந்து பெண்கள் அணியும் மங்களகரமான மஞ்சள் சரடு அல்லது தங்கச் சரடு

மந்த்ர- ஒரு சப்தம், ஒரு ஸஸ்த்ரம், ஒரு வார்த்தை அல்லது சில வார்த்தைகள். அவைகளின் சப்தங்கள் இயல்பிலேயே சக்தி பண்புகள் கொண்டது. மந்த்ரங்கள் ஓதி கடவுளை வழிபடுதல். மந்த்ர, தந்த்ர, யந்த்ர இம்மூன்றும் ஆன்மீக உயர்வுக்கான அணுகு முறை
மந்திர்- கோயில்
மநந- சிந்தித்தல், தியானம்
மநஸ்- மனம் மேலும் புத்தி, சித்தா
மஹரிஷி- மிகப்பெரிய ஞானி
மஹா- மிகப்பெரிய
மஹாவாக்ய- மிகப்பெரிய வேத வாக்கியம்
மாணிக்கவாசகர்- நாயன்மார்களில் முக்கியமானவர், தமிழ் சைவக் கவிஞர், அவர் கடவுள் சிவனை, புகழ்ந்து பாடிய பாடல்களின் தொகுப்பாகிய ‘திருவாசகம்’ இயற்றியவர்.
மாயா- அது எதுவாகவும் இல்லாதது; உண்மையற்ற, நிலையற்ற மாயத்தோற்றம், அத்வைதத்தின்படி வாழ்வே மாயா.
மாலா- மாலை
மீமாம்ஸா- பழங்கால இந்திய தத்துவத்தின் ஒழுங்கு முறை
மூலாதார்- ஆதாரம்-முதல் சக்தி மையம், மூல-மூலமான
மோக்ஷ- நிர்வாணம், ஸமாதி, விடுதலை, முக்தி, துரியம் இவenumsவும் ஒன்றே
யம- நீதி மற்றும் மரணத்தின் கடவுள்
யம- ஒழுங்கு முறை மற்றும் மரணம். பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிட்ட எட்டு வகைப் பாதைகளில் ஒன்று.
யந்த்ர- கருவி, ஆழ்ந்த உட்பொருள் உள்ள மற்றும் ஆற்றல்வாய்ந்த வரைபடம். உதாரணமாக தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டு, தெய்விக சாந்நித்தியத்தில் அல்லது ஞான குருவின் சாந்நித்தியத்தில் சடங்குகள் மூலம் தெய்வத் தன்மை ஊட்டப்பட்ட ஸ்ரீ சக்ரம்

யோக - இணைத்தல், தனிமனித இருப்பையும் ப்ரபஞ்ச இருப்பையும் இணைப்பதற்கான வழிமுறை.

யுக - இந்து சமய நூல்களில் விளக்கப்பட்டுள்ள காலங்களின் அளவு. நான்கு யுகங்கள் உள்ளன.

  1. ஸத்ய
  1. த்ரேதா
  1. த்வாபர
  1. கலியுகம் (தற்சமயம் நடந்துகொண்டு உள்ள யுகம்)

ரக்த - இரத்தம்

ரஜஸ் - மனிதனின் மூன்று வகையான குணங்களில் இரண்டாவது வகை குணமாகிய தீவிர உணர்ச்சியின் செயல்பாடு.

ரமண மஹரிஷி - திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு ஞானமடைந்த குரு. அருணாச்சல மலையை புகழ்ந்து பாடும் ‘அக்ஷரமணமாலை’யை நமக்குத் தந்தவர்.

ராத்ரி - இரவு

இராமகிருஷ்ண பரமஹம்ஸ - இந்தியாவில், மேற்கு வங்கத்தில் உள்ள தக்ஷிணேச்வரத்தில் வாழ்ந்த ஒரு ஞானமடைந்த குரு.

ராமாயண - இந்தியாவின் மிகச்சிறந்த இதிஹாஸம், வால்மீகி இதனை இயற்றினார்.

ராவண - இலங்கையின் வல்லமை மிக்க பேரரசன், இந்தியாவின் இதிஹாஸமான ராமாயணத்தில் இளவரசி சீதாவை கவர்ந்து சென்ற பாதகன்.

ரிஷி - வேத சத்தியங்களை தங்கள் உள்ளுணர்வில் அனுபவமாக உணர்ந்தவர்கள்.

ரீனே டிஸ்க்ரேடிஸ் - பிரான்ஸ் நாட்டின் தத்துவ மேதையும் கணித மேதையுமான இவர் தற்கால தத்துவத்தின் தந்தை.

லாவோட்ஸ்ீ - ஞானகுருவும் பழங்கால தத்துவ மேதையான டோயிஸ்மேன்னின் தந்தை. ‘மூன்று தூய்மையானவரில் ஒருவர்’ என்று குறிப்பிடப்படுகிறார்.

வர்ண- வண்ணம் மற்றும் ஹிந்து பாரம்பரிய அமைப்பில் உள்ள சாதிக் குழுவையும் குறிக்கும். முதன்புதலில் இது திறமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பிற்காலத்தில், பிறப்பின் அடிப்படையிலான தனிச்சலுகையாக மாற்றப்பட்டு, களங்கப்படுத்தப்பட்டது.
வானப்ரஸ்த- ஒருவருடைய வாழ்வின் மூன்றாவது நிலை. முதல் நிலை மாணவப்பருவம், இரண்டாம் நிலை - குடும்பத் தலைவர் மூன்றாவது நிலை- குடும்பத் தலைவர்களான ஆணும் பெண்ணும் தங்களது உலகாயத வாழ்வை விட்டுவிட்டு ஆன்மீக இலட்சியத்தில் கவனம் செலுத்துதல்.
வாயு- காற்று
வாஸந- நினைவுகள், ஆசைகள் இவற்றின் நுட்பமான சாரம். ஸம்ஸ்காரத்தினால் ஏற்படுவது.
வித்யா- அறிவு, கல்வி
வால்மீகி- புகழ் பெற்ற இதிஹாஸமாகிய இராமயணத்தை எழுதியவர்
விதி- சட்டம். இயற்கையின் சட்டமாகிய ஊழ்வினை, விதி
விபூதி- இந்துக்கள் தங்களின் நெற்றியில் அணியும் புனித சாம்பல். இது நம் வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது. பெருமை அல்லது மஹிமை என்ற மற்றொரு பொருளும் உண்டு
விவேகாநந்த- இந்தியாவில் உள்ள மேற்குவங்காளத்தைச் சேர்ந்த ஞானமடைந்த துறவி. அவர் இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் முக்கிய சீடர்.
விச்'வரூப- எல்லாவற்றையும் உள்ளடக்கிய உருவம்
விஷ்ணு- மும்மூர்த்திகளில் பாதுகாப்பவர். அவருடைய அவதாரங்களான கிருஷ்ணர், ராமர் போன்ற பத்து அவதாரங்களும் சூழப்பெற்ற நிலை என்றும், பத்து அவதாரங்களையும் உள்ளடக்கிய நிலை என்றும் பொருள் படும்.

விஷாத - மனச் சோர்வு, தடுமாற்றம்

வைச்'ய - வணிகர்களின் சாதி அல்லது வர்ணம்

வேத - ச்'ருதி - உபநிஷத்

  • அறிவு, பழங்கால ஹிந்து சமய நூல்கள். ஞானமடைந்த ரிஷிகள் அவர்களது இருப்பு நிலையிலேயே அவற்றை பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. உபநிஷத்துடன் இதனை ச்'ருதி என்பார்கள்.

ஸ்தோத்ர - பக்திக் கவிதைகள், ஸ்லோகங்கள்

ஸ்ம்ரு'தி - 'எது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டதோ அது' என்று பொருள். ஹிந்துக்களின் புராணங்கள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள், ஒழுங்கு முறைகளைச் சொல்லும் மனு ஸ்ம்ருதி போன்ற நூல்களைக் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.

ஸ்மரண - நினைவுபடுத்திக்கொள்ளல், இடைவிடாது தெய்விகத்தை நினைவுபடுத்திக் கொள்வது.

ஸ்ரு'ஷ்டி - உருவாக்குதல்

ஸ்வதந்த்ர - சுதந்திரமான

ஸ்வப்ந - கனவு

ஸ்வாதிஷ்டாந - மூலாதாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலே இருக்கும் சக்தி மையம்

ஸங்கல்ப - முடிவு

ஸந்யாஸீ - துறவி

ஸத்ய - ஆன்மீக ஒழுங்கு முறை

ஸத்வ - ஆன்மீக அமைதி

ஸம்ச'ய - சந்தேகம்

ஸம்யம - முழுமையான கவன ஒருமைப்பாடு

ஸம்ஸ்கார - கர்மச் சக்ரத்தில் சிக்க வைக்கும் எண்ணப்பதிவுகள்

ஸமாதி - மனம் கடந்த நிலை, ஞான நிலை

ஸஹஸ்ரார - ஆயிரம் இதழ்கொண்ட தாமரை, உச்சந்தலையிலுள்ள சக்ரம் ஸஹஸ்ர நாமா - கடவுளின் 1000 நாமங்கள்

ஸாங்க்ய - ஆறு இந்திய தத்துவ முறைகளில் ஒன்று

ஸாதநா - பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி

ஸாது - நல்ல மனிதர், கடுந்துறவி, ஸந்யாஸி.

ஸித்தி - ஆன்மீக பயிற்சியினால் அடையக்கூடிய வியக்கத்தக்க ஆற்றல்.

ஸிம்ஹ - சிங்கம்

ஸிம்ஹ ஸ்வப்நா - பயங்கரக் கனவு

ஸுமேரியன் நாகரிகம் - 2000 BC இல் மெசபடோமியாவில் தோன்றிய நாகரிகம்.

ஸுஷும்நா - 'இருப்புத் தன்மை' நிலை கொண்டுள்ள இடம். மண்ணீரலின் கண் அமைந்துள்ள சக்தி மையம்.

ச்'ரவண - கேட்டல்

ச்'ருதி - 'கேட்டது எதுவோ அது' என்று பொருள். பழங்கால சமய நூல்களான வேதங்களும் உபநிடதங்களும் சுருதிகள் என்றழைக்கப்படுகின்றன. பகவத் கீதை வெளிப்படுத்தப்பட்ட சமய நூலாகக் கருதப்படுகிறது.

ச்'க்தி - சக்தி, அறிவு சக்தி

ச்'ங்கர - கேரளாவின், காலடியைச் சேர்ந்த ஞானமடைந்த குரு, அத்வைத வேதாந்தத்தின் விரிவுரையாளர்.

சா'ஸ்த்ர - புனித நூல்கள்

சி'வ - மும்மூர்த்திகளில் புதுப்பிப்பவர், சிவா என்றே குறிப்பிடுகிறது. சிவா என்றால் காரணமற்ற மங்களத் தன்மை.

சி'ஷ்ய - சீடன்.

சூ'த்ர - உடலால் உழைக்கும் தொழிலாளிகளின் ஜாதி அல்லது வர்ணம்.

சூ'ந்ய - பூஜ்யத்தைக் குறிக்கும். ஆனால் புத்தர் இந்த சொல்லை உண்மை நிலையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார்.

ஜ்யோதிஷ் - ஜோதிடம்

ஜோதிஸி - ஜோதிடர்

ஜனகராஜா - மிதிலையை ஆண்ட உயர்ந்த குலத்தைச் சேர்ந்த, ஈகை குணம் உள்ள அரசர். இதிகாஸமான இராமாயணத்தில் இளவரசி சீதாவின் தந்தை.

ஐசிங் - மிகப் பழமை வாய்ந்த உயர்தர இலக்கிய நூல். இந்நூல் அண்டத்தின் அமைப்பு பற்றி விளக்குகிறது.

ஜப - தொடர்ந்து இறை நாமத்தை அமைதியாக உச்சரித்துக்கொண்டே இருத்தல்.

ஜராதுஸ்ட்ரா - பார்சி மக்களால் பின்பற்றப்படும் ஜோரெஸ்ரியனிசம் என்ற மதத்தை தோற்றுவித்தவர்.

ஜாக்ரத் - விழிப்பு நிலை

ஜாதி - பிறப்பு

ஜாதி தோஷ் - பிறப்பில் உள்ள குறைபாடு

ஜீவ - வாழ்தல்

ஜீவஸமாதி - ஞானமடைந்த குருவை அடக்கம் செய்த இடம், அங்கு அவர் ஆத்மா வாழ்கிறது.

ஹடயோக - யோகாசனத்தின் ஒரு பகுதி, குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருப்பது.

ஹம்மரபீ - Hammarabhi's Code முதல் சட்டத் தொகுப்பு நூல். இதன் மூலம் மெசபடோமிய அரசர் புகழ்பெற்றார்.

ஹோம - அக்னி கடவுளுக்குச் செய்யப்படும் சடங்கு. உருவகமாக ஆகாச சக்தியை... வாயு (காற்று), அக்னி (தீ), ஆபஸ் (நீர்), ப்ருத்வீ (பூமி) இவற்றின் மூலம் மனிதருக்கு மாற்றுவது.

க்ஷத்ரிய - படைவீரர்களின் ஜாதி அல்லது வர்ணம்

க்ஷண - க்ஷண நேரம், இரண்டு எண்ணங்களுக்கு இடையே உள்ள நேரம்

ஸ்லோகங்கள்

அத த்வாதஶோ'த்யாய: பன்னிரண்டாவது அத்தியாயம்

பக்தி யோக: பக்தி யோகம்

அர்ஜுந உவாச

ஏவம் ஸததயுக்தா யே பக்தாஸ்த்வாம் பர்யுபாஸதே /
யே சாப்யக்ஷரமவ்யக்தம் தேஷாம் கே யோகவித்தமா: // 12.1

அர்ஜுந உவாச - அர்ஜூனன் சொன்னார்; ஏவம் - இவ்வாறு; ஸதத - எப்பொழுதும்; யுக்தா: - ஈடுபட்டு; யே - எந்த; பக்தா: - பக்தர்கள்; த்வாம் - உங்களை; பர்யுபாஸதே - வழிபடுகிறார்களோ; யே - எவர்கள்; ச - மேலும்; அபி - மேலும்; அக்ஷரம் - அழிவற்ற ; அவ்யக்தம் -வெளிப்படாத; தேஷாம் - இவ்விரு வகையான உபாஸகர்களிடையே; கே - யார்; யோகவித்தமா: - யோகத்தைச் சிறந்த முறையில் அறிந்தவர்கள்

அர்ஜூனன் சொன்னது

12.1 உங்களுடைய வடிவத்தை சிரத்தையுடன் வழிபடுபவர்கள் மேலானவர்களா அல்லது அழிவில்லாத, கண்ணுக்குத் தெரியாத உங்களுடைய அருவ வடிவத்தை வழிபடுபவர்கள் மேலானவர்களா?

...........................................................................................................

ஸ்ரீபகவாந் உவாச

மய்யாவேஶ்'ய மனோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே /
ச்'ரத்தயா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா: // 12.2

ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீபகவாந் சொன்னார்; மயி - என்னிடத்தில்; ஆவேஶ்'ய - ஒருமுகப்படுத்தி; மந: - மனதை; யே- எவர்கள்; மே- என்னால்; நித்ய - எப்பொழுதும்; யுக்தா: - ஈடுபட்டுள்ள; உபாஸதே - வழிபடுகின்றார்களோ; ச்'ரத்தயா - சிரத்தையுடன்; பரயா - சிறந்த; உபேதா: - கூடியவர்களாக; தே - இவர்கள்; யுக்ததமா: - யோகிகளிலேயே

மேலானவர்; மதா - கருத்து

ஶ்ரீபகவான் சொன்னது

12.2 தங்கள் மனத்தை என் மீது நிலைநிறுத்தியவர்களாக யார் இருக்கிறார்களோ, மேலான சிரத்தையுடன் என்னை வழிபடுவதிலேயே உறுதியுடன் இருப்பவர்கள் எவர்களோ அவர்களை யோகத்தில் பூரணத்தன்மை அடைந்தவர்களாகவும், என்னுள்ஐக்கியமாவதற்குத்தயார்நிலையில்இருப்பவர்களாகவும் நான் கருதுகிறேன்.

யே த்வக்ஷரமநிர்தேஶ'யமவ்யக்தம் பர்யுபாஸதே /
ஸர்வத்ரகமசிந்த்யம் ச கூடஸ்தமசலம் த்ருவம் //

ஸந்நியம்ப்யேந்த்ரியமக்ராமம் ஸர்வத்ர ஸமபுத்தய: /
தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூதஹிதே ரதா: //

யே - எவர்கள்; து - ஆனால்; அக்ஷரம் - அழிவற்றது; அநிர்தேஶ'யம் ச - சொற்களால் விளக்கமுடியாதது; அவ்யக்தம் - உருவமற்றது; பர்யுபாஸதே - உபாஸிக்கின்றார்களோ; ஸர்வத்ரகம் - எங்கும் நிறைந்தது; அசிந்த்யம் - மனம் புத்திகளுக்கு அப்பாற்பட்டது; ச - மேலும்; கூடஸ்தம் - என்றும் ஒரேவிதமாக இருப்பது; அசலம் - அசையாதது; த்ருவம் - நித்யமானது; ஸந்நியம்ப்ய - நன்கு அடக்கி; இந்த்ரியக்ராமம் - புலன்களின் தொகு தியை; ஸர்வத்ர - எல்லாவற்றிலும்; ஸமபுத்தய - ஸமபாவனையுள்ள யோகிகளான; தே - அவர்களும்; ப்ராப்நுவந்தி - அடைகின்றார்கள்; மாம் - என்னை; ஏவ -யே தான்; ஸர்வபூதஹிதே - எல்லா உயிரினங்களின் நன்மையிலேயே; ரதா: - ஈடுபடுபவர்களான

12.3,4 ஆனால் அழிவற்றதும், உருவற்றதும், புலன் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டதும், எங்கும் நிறைந்ததும், சொற்களால் விளக்க முடியாததும், மாற்றமில்லாததும், அசையாததுமான அந்த நித்யமான பரம்பொருளை விழிப்புணர்வோடு வழிபடுகிறவர்; தம்முடைய புலன்களைக் கட்டுப்படுத்தி, சமநிலையான மனத்துடன் மனிதகுலத்தின் நன்மைக்காகவே வேலை செய்கிறவர்; இவர்கள் இருவருமே என்னையே அடைகிறார்கள்.

க்லேஶோ'திகதரஸ்தேஷாமவ்யக்தாஸக்தசேதஸாம் /
அவ்யக்தா ஹி கதிர்து:கம் தேஹவத்பிரவாப்யதே // 12.5

க்லேஶ': - சிரமம்; அதிகதர: - மிக அதிகமாகும்; அவ்யக்த ஆஸக்த சேதஸாம் - உருவமற்ற ப்ரஹ்மத்தில் மனதை ஈடுபடுத்தும்; தேஷாம் - அந்த மனிதர்களுக்கு; அவ்யக்தா - உருவமற்ற ப்ரஹ்மம் விஷயமான; ஹி - ஏனெனில்; கதி: - மார்க்கம்; து:கம் - மிகுந்த சிரமத்துடன்; தேஹவத்பி: - உடலில் பற்றுள்ளவர்களால்; அவாப்யதே - அடையப்படுகிறது

12.5 யார் ஒருவருடைய மனம், மனத்தாலும் வாக்காலும் விளக்க முடியாத அருவ வழிபாட்டில் நிலைபெறுகிறதோ, அவருக்கு 'உருவவழிபாடு' என்பது சிரமமான விஷயமாக இருக்கிறது. உருவத்தில் பற்று கொண்டவர்களுக்கோ மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாத அருவத்தை அடைவது என்பது சிரமமான விஷயமாக இருக்கிறது.

..........................................................................................................

யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பரா: /
அநந்யேநைவ யோகேந மாம் த்யாயந்த உபாஸதே // 12.6

தேஷாமஹம் ஸமுத்தர்தா ம்ரு'த்யுஸம்ஸாரஸாகராத் /
பவாமி நசிராழ்பார்த மய்யாவேஶி'தசேதஸாம் // 12.7

யே - எந்தப் பக்தர்கள்; து - ஆனால்; ஸர்வாணி - எல்லா; கர்மாணி - கர்மங்களையும்; மயி - என்னிடம்; ஸந்ந்யஸ்ய - ஸமர்ப்பணம் செய்து; மத்பரா: - என்னையே கதியாகக் கொண்ட; அநந்யேந - அநந்யமான; ஏவ - ; யோகேந - பக்தியோகத்துடன்; மாம் - ஸகுணமான பரமாத்மாவான என்னை; த்யாயந்த: - இடைவிடாது தியானம் செய்து கொண்டு; உபாஸதே - உபாஸிக்கின்றார்களோ; தேஷாம் - அவர்களை; அஹம் - நான்; ஸமுத்தர்தா - கரையேற்றுபவனாக; ம்ரு'த்யுஸம்ஸாரஸாகராத் - மரண வடிவான ஸம்ஸாரக் கடலிலிருந்து; பவாமி - ஆகின்றேன்; நசிராத் - சீக்கிரமாகவே; பார்த - பார்த்தனே; மயி - என்னிடம்; ஆவேஶி'தசேதஸாம்- மனதை ஈடுபடுத்தியவர்களாக ப்ரேம பக்தி செய்யும்

12.6,7 ஆனால் பார்த்தனே, யாரெல்லாம் ஒருமுகப்படுத்தப்பட்ட மனத்துடன் என்னையே பக்தியுடன் வழிபாடு செய்துகொண்டு, எல்லாக் கர்மங்களையும் என்னிடமே அர்ப்பணித்துவிட்டு, என்னையே அவர்களின் உயர்ந்த லட்சியமாகக்கொண்டு, என் மீதே மனத்தை நிலைநிறுத்துகிறார்களோ, அவர்களை நான்

பிறப்பு இறப்புக் கடலிலிருந்து விரைவில் கரையேற்றுவேன்.

மய்யேவ மந ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேஸ'ய /
நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந ஸம்ச'ய: // 12.8

மயி ஏவ - என்னிடமே; மந: - மனதை; ஆதத்ஸ்வ - நிலைநிறுத்து; மயி - என்னிடமே; புத்திம் - புத்தியை; நிவேஸ'ய -டுத்து; நிவஸிஷ்யஸி - வாழ்வாய்; மயி ஏவ - என்னிடமே; அத: - அதற்கு; ஊர்த்வம் - பிறகு; ந ஸம்ச'ய: - ஐயமில்லை

12.8 உங்கள் மனத்தை என்னிடம் மட்டுமே வைத்து, என்னுள் நிலைநிறுத்துங்கள். நீங்கள் என்னுள்ளேயே எப்போதும் வாழ்வீர்கள். இதில் சந்தேகம் இல்லை.

அத சித்தம் ஸமாதாதும் ந ச'க்நோஷி மயி ஸ்திரம் /
அப்யாஸயோகேந ததோ மாமிச்சாப்தும் தநஞ்ஜய // 12.9

அத - ஒருகால்; சித்தம் - மனத்தை; ஸமாதாதும் - நிறுத்தி வைப்பதற்கு; ந ச'க்நோஷி - முடியாவிட்டால்; மயி - என்னிடம்; ஸ்திரம் - அசையாமல்; அப்யாஸயோகேந - தொடர்ந்து பயிற்சி செய்தல் என்னும் யோகத்தால்; தத - அப்போது; மாம் - என்னை; இச்ச - விரும்பு; ஆப்தும் - அடைய; தநஞ்ஜய - தநஞ்ஜயா

அப்யாஸேऽப்யஸமர்த்தோऽஸி மத்கர்மபரமோ பவ /
மதர்தமபி கர்மாணி குர்வந்ஸித்திமவாப்ஸ்யஸி// 12.10

அப்யாஸே அபி - பயிற்சியில் கூட; அஸமர்த: - திறமையற்றவனாய்; அஸி - இருந்தால்; மத்கர்மபரம:- எனக்காகவே கடமைகளை ஆற்றுவது என்பதையே மேலான லக்ஷியமாகக் கொண்டு; பவ - இரு; மதர்தம் - என் பொருட்டாகவே; அபி - ; கர்மாணி - கடமைகளை; குர்வந் - ஆற்றிக் கொண்டே இருந்தாலும்; ஸித்திம் - முழுமையை; அவாப்ஸ்யஸி - அடைவாய்

12.9,10 மனத்தை என்னிடம் நிலைநிறுத்த முடியாவிட்டால், தநஞ்ஜயா தொடர்ந்து பயிற்சி செய்தல் என்னும் யோகத்தால் என்னை அடைய முயற்சிசெய். ஒருவேளை இந்த யோகத்தைக்கூட செய்ய முடியாவிட்டால், கடமைகளைச் செய்வது என்பதையே மேலான இலட்சியமாகக்கொண்டு, உன்னுடைய எல்லாச் செயல்களையும் எனக்கு அர்ப்பணித்துவிடு, நீ முழுமையை அடைவாய்.

...........................................................................................................

அதைததப்யச'க்தோடஸி கர்தும் மத்யோகமாச்'ரித: /
ஸர்வகர்மபலத்யாகம் தத: குரு யதாத்மவாந் // 12.11

அத- ஒருகால்; ஏதத் அபி - இதைக்கூட; அச'க்த: அஸி - திறமையற்றவனாய் இருந்தால்; கர்தும் - செய்வதற்கு; மத்யோகம் - என்னிடம் சரணடைந்து; ஆச்'ரித: - சார்ந்து நின்று; ஸர்வகர்மபலத்யாகம் - செய்கின்ற எல்லாக் கர்மங்களின் பயன்களையும் துறந்துவிடு; தத: - அப்போது; குரு - ; யதாத்மவாந் - மனம் புத்தி முதலியவற்றை அடக்கி வெற்றி கண்டு

12.11 இந்த வழியில்கூட உன்னால் பயிற்சி செய்ய முடியவில்லை என்றால், என்னிடம் சரணடைந்து, உன்னுடைய கடமைகளைச் செய்து, நீ செய்கிற எல்லாச் செயல்களின் பலன்களையும் அஹங்காரம் இல்லாமல் என்னிடம் விட்டுவிடு.

...........................................................................................................

ச்'ரேயோ ஹி ஜ்ஞானமப்யாஸாஜ்ஜ்ஞானாத்த்யாநம்
விசி'ஷ்யதே /
த்யாநாத்கர்மபலத்யாகஸ்த்யாகாச்ச்ராந்திரநந்தரம் // 12.12

ச்'ரேய: - சிறந்தது; ஹி - ஏனெனில்; ஜ்ஞானம் - அறிவு; அப்யாஸாத்

  • சாஸ்திரப்பயிற்சியைவிட; ஜ்ஞானாத் - அந்த ஞானத்தைக் காட்டிலும்; த்யாநம் - என் ஸ்வரூபத்தைக் காட்டிலும்; விசி'ஷ்யதே-; த்யாநாத்-; கர்மபலத்யாக: - கர்மத்தின் பயனைத் துறப்பது; த்யாகாத் - தியாகத்தின் மூலம்; சா'ந்தி: - மேலான அமைதி; அநந்தரம் - உடனேயே

12.12 வெறும் பயிற்சியைவிட அறிவு பெரியது. அறிவைவிட தியானம் பெரியது. செயலின் பலனைத் துறப்பது தியானத்தைவிட பெரியது. செயலின் பலனைத் துறந்தவுடன், ஒருவர் தாமதமின்றி அமைதியை அடைகிறார்.

...........................................................................................................

அத்வேஷ்டா ஸர்வபூதாநாம் மைத்ர: கருண ஏவ ச /
நிர்மமோ நிரஹங்கார: ஸமது:கஸுக: க்ஷமீ // 12.13

ஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருடநிச்'சய: /
மய்யர்ப்பிதமநோபுத்திர்யோ மத்பக்த: ஸ மே ப்ரிய: // 12.14

அத்வேஷ்டா - வெறுப்பு இல்லாதவனோ; ஸர்வபூதாநாம் - எல்லா உயிரனங்களிடமும்; மைத்ர: - எல்லோரிடமும் நட்பு கொண்டவனோ; கருண: - காரணமின்றி எல்லாப் பிராணிகளிடத்திலும் இரக்கம் காட்டுபவே னா; ஏவ - அவ்வாறே; ச - ; நிர்மம: - மமகாரமற்றவனோ; நிரஹங்கார: - அஹங்காரமற்றவனோ; ஸமது:கஸுக: - இன்பதுன்பங்கள் நேரும் போது நிலை மாறாது ஸமமாக இருப்பவனோ; க்ஷமீ - பொறுமையுடையவே னா; ஸந்துஷ்ட: - எல்லாவிதங்களிலும் திருப்தி உள்ளவனோ; ஸததம்

  • எப்பொழுதும்; யோகீ - யோகியோ; யதாத்மா - மனம் புலன்களோடு கூடிய உடலைத் தன் வசப்படுத்தியவனோ; த்ரு'டநிశ్'சய: - என் மீது திடமான நம்பிக்கை உடையவனே; மயி - என்னிடத்தில்; அர்பிதமன: புத்தி: - மனம், புத்தி இவற்றை அர்ப்பணம் செய்தவனோ; ய: - எவன்; மத்பக்த: - என்னுடைய பக்தன்; ஸ: - அந்த; மே - எனக்கு; ப்ரிய: - பிரியமானவன்

12.13,14 யார் ஒருவர் எந்த உயிர்களிடத்திலும் வெறுப்பும் பொறாமையும் இல்லாதவராகவும், எல்லோரிடத்திலும் நட்புடனும் கருணையுடனும் இருப்பவராகவும், ‘நான்’ மற்றும் ‘எனது’ என்ற உணர்விலிருந்தும் அஹங்காரத்திலிருந்தும் விடுபட்டு, இன்ப துன்பங்களில் மனத்தைச் சமநிலையில் வைத்துக்கொண்டு, மன்னிக்கும் தன்மை உடையவராகவும், எப்போதும் திருப்தியுடன் இருப்பவராகவும், யோகத்தில் இணைந்தவராகவும், என்னிடத்தில் ஒரு உறுதியான கட்டுப்பாடு உள்ளவராகவும், தம்முடைய மனத்தையும் பட்டறிவையும் என் மீது வைத்திருப்பராகவும் இருக்கிறாரோ, அந்த பக்தர் எனக்கு மிகவும் பிரியமானவர்.

...........................................................................................................

யஸ்மாந்நோத்விஜதே லோகோ லோகாந்நோத்விஜதே ச ய: /
ஹர்ஷாமர்ஷபயோத்வேகைர்முக்தோ ய: ஸ ச மே ப்ரிய: // 12.15

யஸ்மாத் - எவனிடமிருந்து; ந உத்விஜதே - பாதிப்படைய மாட்டானோ; லோக: - எந்த ஜீவனும்; ந உத்விஜதே - பாதிப்பு அடைவதில்லையோ; ச

  • ; ய: - எவன்; லோகாந் - எந்த ஜீவன் மூலமும்; ஹர்ஷாமர்ஷ பய உத் வகை: - மகிழ்ச்சி, பொறாமை, பயம், பாதிப்பு முதலியவற்றிலிருந்து; முக்த: - விடுப்பட்டவனோ; ய: - எவனொருவன்; ஸ: - அந்த பக்தன்; ச
  • மேலும்; மே - எனக்கு; ப்ரிய: - பிரியமானவன்

12.15 இந்த உலகம் யாரால் பிரதிகூலமான வகையில் பாதிக்கப்படவில்லையோ, யார் இந்த உலகத்தால் பிரதிகூலமான வகையில் பாதிக்கப்படவில்லையோ, யார் மகிழ்ச்சி, கோபம், கவலை ஆகியவற்றில் இருந்து விடுபட்டு இருக்கிறாரோ அவர் எனக்குப் பிரியமானவர்.

.......................................................................................................

அநபேக்ஷ: சு'சிர்தக்ஷ உதாஸீநோ கதவ்யத: /
ஸர்வாரம்பபரித்யாகீ யோ மத்பக்த: ஸ மே ப்ரிய: // 12.16

அநபேக்ஷ: - எதையும் எதிர்பார்க்காதவனோ; சு'சி: - அகத் தூய்மையும் புறத்தூய்மையும் உள்ளவனோ; தக்ஷ: - பிறவிப்பயனை அறிந்தவே னா; உதாஸீந: - पक्षपातமற்றவனோ; கதவ்யத: - துக்கங்களிலிருந்து விடுதலை பெற்றவனோ; ஸர்வ ஆரம்பப பரித்யாகீ - செயல்களனைத்திலும் நான் செய்கின்றேன் என்னும் அபிமானத்தை நீக்கியவனோ; ய: - எந்த மனிதன்; மத்பக்த: - என் பக்தன்; ஸ: - அந்த; மே - எனக்கு; ப்ரிய: - பிரியமானவன்

12.16 ஆசைகளிலிருந்து விடுபட்டவராகவும், தூய்மையடனும் திறமையடனும் கவலையில்லாமலும் எதனாலும் பாதிக்கப்படாமலும், எதைச் செய்தாலும் அதைத் 'தன்னலம்' கருதாமல் செய்பவராகவும், என்னிடம் பக்தியுடையவராகவும் யார் ஒருவர் இருக்கிறாரோ, அவர் எனக்குப் பிரியமானவர்.

.......................................................................................................

யோ ந ஹ்ரு'ஷ்யதி ந த்வேஷ்டி ந சோ'சதி ந காங்க்ஷதி /
சு'பாசு'பபரித்யாகீ பக்திமான்ய: ஸ மே ப்ரிய: // 12.17

ய: - எவன்; ந ஹ்ரு'ஷ்யதி - மகிழ்வதில்லையோ; ந த்வேஷ்டி - வெறுப்பதில்லையோ; ந சோ'சதி - துயரப்படுவதில்லையோ, ந காங்க்ஷதி

  • ஆசைப்படுவதில்லையோ; சு'ப அசு'ப பரித்யாகீ - நல்லதும் தீயதுமான செயல்கள் அனைத்தையும் துறந்தவனோ; பக்திமாந் - பக்தியுள்ளவன்; ய:
  • எவன்; ஸ: - அந்த; மே - எனக்கு; ப்ரிய: - பிரியமானவன்

12.17 யார் ஒருவர் எதனாலும் மகிழ்ச்சியோ, வெறுப்போ, துயரமோ, ஆசைப்படுவதலோ அடைவதில்லையோ, நல்லதும் தீயதுமான செயல்கள் அனைத்தையும் துறந்தவரோ, யார் ஒருவர் பக்தியால் நிரம்பியவரோ, அந்த பக்தர் எனக்குப் பிரியமானவர்.

.......................................................................................................

ஸம: ச்'த்ரௌ ச மித்ரே ச ததா மாநாபமாநயோ: /
சீ'தோஷ்ணஸுகது:கேஷு ஸம: ஸங்கவிவர்ஜித: // 12.18

துல்யநிந்தாஸ்துதிர் மௌநீ ஸந்துஷ்டோ யேந கேநசித் /
அநிகேத: ஸ்திரமதிர்புக்திமாந்மே ப்ரியோ நர: // 12.19

ஸம: - ஸமபுத்தியுடையவனோ; ச்'த்ரௌ ச மித்ரே ச - பகைவனிடமும் நண்பனிடமும்; ததா - அவ்விதமே; மாந அபமாநயோ:- மதிப்பிலும் அவமதிப்பிலும்; சீத உஷ்ண ஸுக து:கேஷு - தட்பவெப்பம், சுகதுக்கங்களாகிற இரட்டைகளில்; ஸம: - ஸமபுத்தியுடையவனோ; ச - மேலும்; ஸங்கவிவர்ஜித: - பற்றற்றவனோ; துல்யநிந்தாஸ்துதி: - இகழ்ச்சி யையும் புகழ்ச்சியையும் ஸமமாக மதிப்பவனோ; மௌநீ- பகவானை எப்பொழுதும் சிந்திந்திருப்பவனோ; ஸந்துஷ்ட: - மகிழ்ச்சி கொள்பவே னா; யேந கேநசித் - எவ்விதத்தில் உடலைப் பேணுதல் நடைபெற்றாலும்; அநிகேத - வசிக்கும் இடத்தில் 'எனது' என்ற பற்றற்றவனோ; ஸ்திரமதி:

  • நிலைத்த புத்தியுடையவனோ; புக்திமாந் - பக்தியுள்ள; மே - எனக்கு; ப்ரிய: - ப்ரியமானவன்; நர: - அந்த மனிதன்

12.18,19 யார் ஒருவர் நண்பரையும் பகைவரையும் சமமாகப் பாவிக்கிறாரோ, மரியாதை அவமரியாதை, வெப்பம் குளிர்ச்சி, இன்பம் துன்பம், புகழ்ச்சி இகழ்ச்சி இவற்றை யார் சமமாக ஏற்றுக்கொள்கிறாரோ, யார் எப்போதும் பற்றற்ற தன்மையுடன், எப்போதும் மௌனமாக இருந்து, எதிலும் திருப்தியடைந்து, தமக்கென்று ஒரு நிரந்தர வீடில்லாமல் மனத்தில் நிலைகொண்டு, என்னிடம் பக்தியுடன் இருக்கிறாரோ அந்த மனிதர் எனக்கு மிகவும் பிரியமானவர்.

.......................................................................................................

யே து தர்ம்யாம்ரு'தமிதம் யதோக்தம் பர்யுபாஸதே /
ச்'ரத்ததாநா மத்பரமா பக்தாஸ்தேऽதீவ மே ப்ரியா: // 12.20

யே - எவர்கள்; து - ஆனால்; தர்ம்ய அம்ரு'தம் - தர்மமே உருவான அமுதத்தை; யதா உக்தம் - மேலே கூறப்பட்ட; இதம் - இந்த; பர்யுபாஸதே

  • அனுஷ்டிக்கிறார்களோ; ச்'ரத்ததாநா: - என்னிடம் நம்பிக்கை கொண்டு; மத்பரமா: - என்னையே மேலான கதியாகக் கொண்டு; பக்தா: - பக்தர்கள்; தே - அந்த; அதீவ - மிகவும்; மே - எனக்கு; ப்ரியா: - பிரியமானவர்கள்

என்னையே உயர்ந்த இலட்சியமாகக்கொண்டு மிக்க நம்பிக்கையுடன், அழிவில்லாத இந்த தர்ம பாதையை உண்மையுடன் யாரெல்லாம் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.

.......................................................................................................

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸுபனிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே பக்தியோகோ நாம த்வாதசோ'த்யாய: //

ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய பக்தி யோகம் எனப் பெயர் படைத்த பன்னிரண்டாவது அத்தியாயம்.