பரமஹம்ஸ நித்யானந்தர்-ஓர் அறிமுகம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நாம் ஆனந்தமாக வாழ்வதற்காக நம்மோடு வாழ்ந்து, நம்முடைய வாழ்வின் இலக்கான ஜீவன் முக்தியை அடைவதற்கான பாதையைக் காட்டுவதற்கும், இலக்கை அடையும்வரை உடனிருந்து நேரடியாக வழிநடத்துவதற்காகவும் பிரபஞ்ச சக்தி மானுட உருவெடுத்து அவதார சக்தியாக வருகிறது. நமக்குள்ள நிரந்தரமான தேடுதலையும் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவதற்காக வரும் அவதார சக்திகளைத் தரிசிப்பதும், அவர்களுடைய வழிநடத்துதலின்படி வாழ்க்கையை வாழ்வதும் நம்முடைய பிறவிப் பயனான ஜீவன் முக்தியை வாழும் பொழுதே கிடைக்கச் செய்யும்.
'நான் கடவுள்' என்பதை நிரூபிக்க நான் வரவில்லை.
'நீங்கள் கடவுள்' என்பதை நிரூபிக்கவே நான் வந்துள்ளேன்.
என்று சொல்லும் கருணை சக்தி...
இன்று நம்மோடு வாழும் அவதார சக்தியாம்
பரமஹம்ஸ நித்யானந்தர். ஒரு அவதார
புருஷர் வாழும் காலத்திலேயே வாழும்
பாக்கியம் பெற்றிருப்பதால் நாம் எல்லோரும்
பாக்கியவான்களே!!!
'தெய்வீகமே உங்களின் இயல்பு.
ஆனந்தம் உங்களின் பிறப்புரிமை.
உங்களை ஜீவன் முக்தராக வாழச்செய்வதே
என்னுடைய குறிக்கோள்...
என்னுடைய வாழ்வு...
என்னுடைய ஆசீர்வாதம்...என எல்லாமுமே'
என்று தன்னுடைய பிறப்பின், வாழ்வின்,
செய்தியின், செயலின் நோக்கத்தையும்
இலட்சியத்தையும் பரமஹம்ஸர் எளிமையாக
விவரிக்கின்றார்.
உலகம் முழுவதும் பல்வேறு தியான சத்சங்கங்களை நிகழ்த்தி, தியான முகாம்களை வடிவமைத்து வழங்கி, பிறப்பு-இறப்பு எனும் சுழற்சியிலிருந்து, இந்த சம்சார சாகரத்திலிருந்து மீட்கும் சக்திவாய்ந்த தீக்ஷைகளை யாவருக்கும் பேதமின்றி வழங்கும் இளைய ஞானகுரு பரமஹம்ஸர் ஆவார்.
நம்முள் ஆசைகள் பலவிதமாக இருந்தாலும்,
அவை எல்லாமே, 'நிரந்தரமான ஆனந்தத்தைப்
பெற வேண்டும், அனுபவிக்க வேண்டும்'
என்கிற நம்முடைய நீண்ட நாள் ஆசையின்
பிரதிபலிப்புகளே எனும் பேருண்மையை
உணரச் செய்கிறார். அதை அடைவதற்காக நாம்
செய்யும் பல்வேறு முயற்சிகளையும் முறையாக
ஒருமுகப்படுத்தி, உள்நோக்கித் திருப்பும்
சூட்சமத்தை வகுத்துத் தருகிறார். இந்தக்
காலட்டத்தில் வாழும் மனிதர்களுடைய
மனநிலைகளுக்கு ஏற்ப தியான நுட்பங்களை
வடிவமைத்து வழங்குகிறார்.
'துக்கத்திற்கு மூலகாரணமான மனத்தைக் கடப்பதுதான் நிச்சயமான நிரந்தரமான ஒரே தீர்வு. வெளியிலிருக்கும் எதனாலும் எவராலும் எதுவொன்றினாலும் நீங்கள் தொல்லையுறுவதில்லை, துன்புறுவதில்லை. உங்களுக்குள் நீங்கள் பிடித்து வைத்திருக்கும் மனத்தினால்தான் துன்புறுகிறீர்கள். இதுதான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் துக்கத்திற்குமான மூலகாரணம். மூலகாரணத்தைப் புரிந்து கொள்ளாமல், அதைச் சரிசெய்யாமல் எவ்வளவுதான் பிரச்சனைகளுக்கு தனித்தனியாக ஜென்மம் ஜென்மமாகத் தீர்வைப் பெற முயன்றாலும், மீண்டும் அவை வேறு ஏதேனும் ஒரு ரூபத்தில் முளைத்தே தீரும்' எனும் ஆழ்ந்த வேதாந்த ரகசியங்களை எளிமையாக நமக்குப் புரியும்முறையில் கற்றுத் தருகிறார் பரமஹம்ஸ நித்யானந்தர்.
நம்முடைய மனத்தைக் கடப்பதற்கு... ஏற்கெனவே தம் மனத்தைக் கடந்த ஒருவரால்தான் நமக்கு உதவ முடியும். மனத்தைக் கடந்த ஞான குருமார்களின் வழிகாட்டுதலைப் பெற்று, நம் மனநிலைக்கு ஏற்றவாறு அவர்கள் வகுத்துத் தரும் பாதையில் பயணிக்கும் போது, நாம் நம்முடைய இலக்கை உறுதியாக அடைகிறோம். இதுநாள்வரையிலும் உங்களின் ஜீவன் காத்திருந்த, எதிர்பார்த்திருந்த, பெறத் தவித்துக்கொண்டிருந்த அக விழிப்பை ஜீவன் முக்த தீக்ஷையால் தரும் பரமஹம்ஸ நித்யானந்தரை- வாழும் அவதார சக்தியைச் சந்தித்திடும் வாய்ப்பைத் தாருங்கள்...உங்களுக்கு நீங்களே!

தசாப்தத்தில் (10ஆம் வருடத்தில்) நுழைகின்றது 'நித்யானந்த தியானந்தபீடம்' பரமஹம்ஸ நித்யானந்தர் பங்களித்த பரிமாணங்கள்...
| மனிதருக்கு... | சமுதாயத்திற்கு... | சரித்திரத்திற்கு... |
|---|---|---|

|

|

| | பக்தர்களின் பாசமலர் | பரிவுடன் பண்பை ஊட்டும் தந்தை | சத்தியமே வாழ்க்கை | |

|

|

| | குடும்பங்களுக்கு குலகுரு | புதுயுகம் படைக்கும் பேரொளி | அநீதியை தாங்கும் திண்மை | |

|

|

| | கடைத்தேற்றும் கருணைக் கடல் | வேத பாரம்பரியத்தைப் பரவச் செய்பவர் | சமுதாயத்தை வலிமையாக்கும் சக்தி | |

|

|

| | அன்னமிடும் அன்னை | வேதனைகளைப் போக்குபவர் | அதர்மத்தை அகற்றிடும் சக்தி |