KAILASA Library/பகவத் கீதை/ஸ்லோகங்கள்Sign in
பகவத் கீதை

ஸ்லோகங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அத தச’மோऽத்யாய: பத்தாவது அத்தியாயம்

விபூதியோக:

விபூதியோகம்

ஸ்ரீபகவாந் உவாச

பூய ஏவ மஹாபாஹோ ச்’ரு’ணு மே பரமம் வச: /
யத்தேऽஹம் ப்ரீயமாணாய வஷ்யாமி ஹிதகாம்யயா // 10.1

ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீபகவான் சொன்னார்; பூய: ஏவ - மீண்டும் நிச்சயமாக; மஹாபாஹோ - வலிமையான கைகளை உடையவனே; ச்’ரு’ணு - கேள்; மே - என்னுடைய; பரமம் - மிகவும் உயரிய பொருள் பொதிந்த; வச: - வாசகத்தை; யத் - எதை; தே - உனக்கு; அஹம் - நான்; ப்ரீயமாணாய - அன்பு கொண்டவனான; வஷ்யாமி - சொல்வேன்; ஹிதகாம்யயா - உன் நலன் விரும்பி

ஸ்ரீபகவான் சொன்னது

10.1 ஓ அர்ஜூனா! கவனமாகத் திரும்பவும் கேள். நீ என் ஆத்ம நண்பன், நான் உன்னுடைய நலனுக்காகவே பேசப்போகிறேன். ........................................................................................................

ந மே விது: ஸுரகணா: ப்ரபவம் ந மஹர்ஷய: /
அஹமாதீர்ஹி தேவாநாம் மஹர்ஷீணாம் ச ஸர்வச’: // 10.2

ந - இல்லை; மே - என்னுடைய; விது: - அறிவது; ஸுரகணா: - சிறுதெய்வங்கள்; ப்ரபவம் - மகிமைகள்; ந - இல்லை; மஹர்ஷய: - மஹரிஷிகளும்; அஹம்- நான்; ஆதி: - அதிகாரணம் ; ஹி - நிச்சயமாக; தேவாநாம் - தேவர்களுக்கும்; மஹர்ஷீணாம் ச - மஹரிஷிகளுக்கும்; ச - மேலும்; ஸர்வச’: - எல்லா விதங்களிலும்

10.2 கடவுளை வணங்குபவர்களுக்கும், மிகப்பெரிய துறவிகளுக்கும்கூட என்னுடைய 'மூலம்', என்னுடைய பெருமை தெரியாது. தெய்வங்களுக்கும் ஞானிகளுக்கும் நான் ஆதாரமாக இருக்கிறேன்.

யோ மாமஜமநாதிம் ச வேத்தி லோகமஹேச்'வரம் /
அஸம்மூடஃ ஸ மர்த்யேஷு ஸர்வபாபைஃ ப்ரமுச்யதே // 10.3

யஃ - எவன்; மாம் - என்னை; அஜம் - பிறப்பற்றவன்; அநாதிம் - தொடக்கமற்றவன்; ச - மேலும்; வேத்தி - அறிகிறானோ; லோகமஹேச்'வரம்

  • உலகங்களுக்கெல்லாம் தலைவன்; அஸம்மூடஃ - சந்தேகமின்றி; ஸஃ - அவன்; மர்த்யேஷு - மனிதர்களில்; ஸர்வபாபைஃ - அனைத்துப் பாவங்களிலிருந்தும்; ப்ரமுச்யதே- விடுபடுகிறான்.

10.3 யார் ஒருவர், என்னைப் பிறப்பும் தொடக்கமும் இல்லாதவன் என்றும் எல்லா உலகங்களுக்கும் கடவுள் என்றும் தெரிந்துகொள்கிறாரோ, அவருக்கு மட்டுமே அறிவில் தெளிவு கிடைக்கிறது. அவர் எல்லாப் பந்தங்களில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார்.

......................................................................................................

புத்திர்ஜ்ஞானமஸம்மோஹஃ க்ஷமா ஸத்யம் தமஃ ச'மஃ /
ஸுகம் துஃகம் பவோ'பாவோ பயம் சாபயமேவ ச // 10.4

புத்திஃ - தீர்மானம் செய்யும் திறன்; ஜ்ஞானம் - உண்மையான அறிவு; அஸம்மோஹஃ - சந்தேகமற்ற; க்ஷமா - மன்னிக்கும்தன்மை; ஸத்யம் - உண்மை; தமஃ - புலனடக்கம்; ச'மஃ - மனவடக்கம்; ஏவ - அப்படியே; ஸுகம் - இன்பம்; துஃகம் - துன்பம்; பவஃ அபாவஃ - பிறப்பு இறப்பு; பயம்

  • பயம்; ச - மேலும்; அபயம்; பயமின்மை; ஏவ - மட்டுமே; ச - மேலும்

அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ்தபோ தாநம் யசோ'யசஃ /
பவந்தி பாவா பூதாநாம் மத்த ஏவ ப்ருதக் விதாஃ // 10.5

அஹிம்ஸா - அகிம்ஸை; ஸமதா - ஸமபாவனை; துஷ்டிஃ - திருப்தி; தபஃ

  • தவம்; தாநம் - தானம்; யசஃ - கீர்த்தி; அயச'ஃ - அபகீர்த்தி; பவந்தி - உண் டாகின்றன; பாவாஃ - மனப்பாங்குகள்; பூதாநாம் - உயிரினங்களுடைய; மத்தஃ - ஏவ - என்னிடமிருந்து தான்; ப்ருதக்விதாஃ - வெவ்வேறான

10.4,5 வாழும் உயிர்களுக்குள் இருக்கும் புத்திசாலித்தனம், அறிவு, சந்தேகத்திலிருந்தும் மூடநம்பிக்கையிலிருந்தும் விடுதலை, மன்னிக்கும் மனோபாவம், ஸத்யத்தோடு வாழ்வது, புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, மனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, சந்தோஷம், மனக்கவலை, பிறப்பு, இறப்பு, பயம், பயமின்மை, சாத்வீகம், துன்பம் வரும் போதும் மன அமைதியோடு இருத்தல், திருப்தி, துறவறம், ஈகை, புகழ், பற்றின்மை என இந்த எல்லாத் தகுதிகளும் என்னால்தான் உருவாக்கப்பட்டன.

..........................................................................................................

மஹர்ஷ்ய: ஸப்த பூர்வே சத்வாரோ மநவஸ்ததா /
மத்பாவா மாநஸா ஜாதா யேஷாம் லோக இமா: ப்ரஜா: // 10.6

மஹர்ஷ்ய: - மஹரிஷிகளும்; ஸப்த - ஏழு; பூர்வே - அவர்களுக்கும் முந்தியவர்களான; சத்வார: - ஸனகர் முதலிய நான்கு முனிவர்களும்; மநவ: - ஸுவாயம்புவர் முதலிய பதினான்கு மனுக்களும்; ததா - அவ்வாறே; மத்பாவா: - என்னுடைய இயல்புகளை உடையவர்களாய்; மாநஸா: - என் மனத்திலிருந்து; ஜாதா: - தோன்றியவர்கள்; யேஷாம் - அவர்களிடமிருந்து; லோகே - உலகில்; இமா: - இந்த; ப்ரஜா: - உயிர்கள் அனைத்தும்

10.6 ஏழு மிகப்பெரிய ஞானிகளும், அவர்களுக்கு முன்னால் இருந்த நான்கு மிகப்பெரிய மனுக்களும் என்னுடைய இயல்புகளை உடையவர்களாய் என்னிடமிருந்து வந்தவர்கள்தான்.

அவர்கள் என்னுடைய மனத்தில் இருந்து வந்தவர்கள், பிறகு அவர்களிடம் இருந்து இந்தப் பூமிகிரகத்தில் வசிக்கும் உயிர்கள் எல்லாம் வந்தன.

..........................................................................................................

ஏதாம் விபூதிம் யோகம் ச மம யோ வேத்தி தத்தவத: /
ஸோடவிகம்பேந யோகேந யுஜ்யதே நாத்ர ஸம்ச'ய: // 10.7

ஏதாம் - இந்த எல்லா; விபூதிம் - மேலான தன்மை; யோகம் - ஆற்றல்; ச - மேலும்; மம - என்னுடைய; ய: - எவன்; வேத்தி - அறிகிறானோ; தத்தவத: - சத்தியத்தை; ஸ: - அவன்; அவிகம்பேந - அசையாத; யோகேந - யோகத்துடன்; யுஜ்யதே - கூடியவனாக ஆகிறான்; ந - இல்லை; அத்ர - இவ்விஷயத்தில்; ஸம்சய: - சந்தேகம்

10.7 யார் ஒருவன் என்னுடைய இந்த எல்லா மகிமைகளையும் சக்திகளையும் அறிந்திருக்கிறானோ, நிஜமாகவே, அவன் என்னுடன் இணைந்தே இருக்கிறான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

.......................................................................................................

அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே /
இதி மத்வா பஜந்தே மாம் புதா பா வஸமந்விதா: // 10.8

அஹம் - நானே; ஸர்வஸ்ய - எல்லா; ப்ரபவ: - தோன்றுவதற்குக் காரணம்; மத்த: - என்னிடமிருந்து; ஸர்வம் - அனைத்து; ப்ரவர்ததே

  • இயங்குகிறது; இதி - என்று; மத்வா - புரிந்துகொண்டு; பஜந்தே - பிரார்த்தித்து வணங்குதல்; மாம் - என்னை; புதா - அறிஞர்களான பக்தர்கள்; பாவஸமந்விதா: - சரணடைந்த

10.8 பொருள் சார்ந்த இந்த உலகத்திற்கும் ஆன்மீக உலகத்திற்கும் நானே 'மூல'மாக இருக்கிறேன். எல்லாமே என்னில் இருந்தே தோன்றுகின்றன.

இதனை அறிந்த அறிவாளிகள், என்னிடம் பக்தி செலுத்துவார்கள்; அவர்கள் தங்கள் இதயங்களை என்னிடம் சரணாகதி செய்கிறார்கள்.

.......................................................................................................

மச்சித்தா மத் கதப்ராணா போதயந்த: பரஸ்பரம் /
கதயந்தச்'ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச // 10.9

மச்சித்தா: - இடைவிடாது என்னிடமே மனம் செலுத்தியவர்களான; மத்கதப்ராணா: - மனத்தையும் வாழ்வையும் என் மேல் செலுத்தியவர்கள்; போதயந்த: - ஞானமடையச் செய்துகொண்டு; பரஸ்பரம் - தங்களுக்குள்ளே; கதயந்த: ச - என்னுடைய குணங்களைப் பேசி க்கொண்டும; மாம் - என்னைப்பற்றி; நித்யம் - எப்பொழுதும்; துஷ்யந்தி - திருப்தியடைகிறார்கள்; ச - மேலும்; ரமந்தி - ஆனந்தத்தை அனுபவிக்கிறார்கள்; ச - மேலும்

10.9 மனத்தையும் வாழ்வையும் என் மேல் செலுத்தி ஒருவரையொருவர் ஞானமடையச் செய்து கொண்டும், எனது பெருமைகளைப் பேசிக்கொண்டும் இருக்கிற புத்திசாலிகள், மன நிறைவோடும் பேரானந்தத்தோடும் இருக்கிறார்கள்.

.......................................................................................................

தேஷாம் ஸததயுக்தானாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம் /
ததாமி புத்தியோகம் தம் யேந மாமுபயாந்தி தே // 10.10

தேஷாம் - அந்த; ஸததயுக்தானாம் - எப்பொழுதும் என்னிடமே ஈடுபடுகிற; பஜதாம் - வழிபடுகிற; ப்ரீதிபூர்வகம் - பேரன்போடு; ததாமி - அளிக்கிறேன்; புத்தியோகம் - ஞானத்தை; தம் - அந்த; யேந - எந்த; மாம்

  • என்னை; உபயாந்தி - வந்தடைகிறார்கள்; தே -அவர்கள்

10.10 யார் என்னோடு எப்போதும் அன்பால் இணைந்து இருக்கிறார்களோ, அவர்களுக்கு ஞானத்தை அளிக்கிறேன். அதன்மூலம் அவர்கள் என்னை வந்தடைகிறார்கள்.

...........................................................................................................

தேஷாமேவானுகம்பார்தமஹமஜ்ஞானஜம் தம: //
நாச'யாமி யாத்மபாவஸ்தோ ஜ்ஞானதீபேந பாஸ்வதா // 10.11

தேஷாம் - அவர்களுக்கு; ஏவா - மேலும்; அனுகம்பார்தம் - கருணையின் காரணமாக; அஹம் - நான்; அஜ்ஞானஜம் - அறியாமையினால் உண்டான; தம: - இருளை; நாச'யாமி - அழிக்கிறேன்; ஆத்மபாவஸ்த:

  • அவர்களுக்குள்; ஜ்ஞானதீபேந - ஞான புத்தி வடிவான விளக்கினால்; பாஸ்வதா - ஒளிமயமான

10.11 அவர்களிடம் நான் வைத்திருக்கும் கருணையினால், அவர்களுடைய அறியாமையிலிருந்து தோன்றிய இருளை மெய்யுணர்வு என்ற ஞான ஒளியால் அழித்து விடுவேன்.

...........................................................................................................

அர்ஜுந உவாச

பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவாந் /
புருஷம் சா'ச்'வதம் திவ்யமாதி தேவமஜம் விபும் // 10.12

அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னார்; பரம் ப்ரஹ்ம - உயர்ந்த சத்தியத்தை; பரம் தாம - மேலான புகலிடத்தை; பவித்ரம் - புனிதம்; பரமம் - மேலான; பவாந் - நீங்கள்; புருஷம் - புருஷன்; சா'ச்'வதம் - என்றும் உள்ளவர்; திவ்யம் - தெய்வீகமான; ஆதிதேவம் - முதற்கடவுள்; அஜம் - பிறப்பற்றவர்; விபும் - எங்கும் நிறைந்தவர்

அர்ஜுனன் சொன்னது

10.12 நீரே மேலான ஸத்யம் மேலான புகலிடம், மேலான புனிதம், ஆதியானவர், நிலையானவர், மேலான மகிமைகள் கொண்ட கடவுள்.

.......................................................................................................

ஆஹுஸ்த்வாம்ரு’ஷ்ய: ஸர்வே தேவர்ஷிர்நாரதஸ்ததா /
அஸிதோ தேவலோ வ்யாஸ: ஸ்வயம் சைவ ப்ரவீஷி மே //

ஆஹு: - சொல்கிறார்கள்; ததா - அவ்வாறே; த்வாம் - உங்களை; ருஷ்ய: - ரிஷிகளும்; ஸர்வே - எல்லா; தேவர்ஷி: நாரத - தேவரிஷியான நாரதரும்; அஸித: தேவல: - அஸிதர் , தேவலர்; வ்யாஸ: - வியாஸர்; ஸ்வயம் - நீங்களுமே; ச - மேலும்; ஏவ - நிச்சயமாக; ப்ரவீஷி - விளக்குகிறீர்கள்; மே - என்னிடமே

10.13 நாரதர், அசித, தேவல, வியாஸர் போன்ற எல்லா ஞானிகளும் அதை விளக்கி இருக்கிறார்கள். இப்போது நீங்கள் எனக்கு அதை நேரடியாக விளக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

.......................................................................................................

ஸர்வமேதத்ரு’தம் மந்யே யந்மாம் வதஸி கேஸ’வ /
நஹி தே பகவன்வ்யக்திம் விதுர்தேவா ந தாநவா: //

ஸர்வம் - எல்லாவற்றையும்; ஏதத் - இந்த; ரு’தம் - சத்தியங்கள்; மந்யே - ஏற்றுக் கொள்கிறேன்; யந் - எதை; மாம் - என்னிடம்; வதஸி - சொல்கிறீரோ; கேஸ’வ - கேசவா; ந - இல்லை; ஹி - நிச்சயமாக; தே - உங்களுடைய; பகவந் - கடவுள்; வ்யக்திம் - வெளிப்படுத்தும்; விது: - அறிந்து கொள்ளுதல்; தேவா: - தேவர்கள்; ந - இல்லை; தாநவா: - அஸுரர்கள்

10.14 ஓ கேசவா, நீங்கள் சொன்ன எல்லா ஸத்யங்களையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.

ஓ பிரபு, தேவர்களும் அசுரர்களும் உன்னை அறிய மாட்டார்கள்.

.......................................................................................................

ஸ்வயமேவாத்மனாத்மானம் வேத்த த்வம் புருஷோத்தம /
பூதபாவந பூதேஶ' தேவதேவ ஜகத்பதே //

ஸ்வயம் - சொந்த; ஏவ - மட்டுமே; ஆத்மனா - உன்னாலேயே; ஆத்மானம் - உன்னை; வேத்த - அறிந்து கொள்ள முடியும்; த்வம் - நீங்கள்; புருஷோத்தம - முழுமையான மனிதர்; பூதபாவந - உயிரினங்களின் தோற்றத்திற்குக் காரணம்; பூதேஶ' - உயிரினங்களின் தலைவரே; தேவதேவ - தேவர்களுக்கு தேவனே; ஜகத்பதே - ஜகந்நாயகனே

10.15 ஓ முழுமையானவரே, உயிர்களின் ஆரம்பமே, உயிர்களின் இறைவனே, கடவுள்களுக்கெல்லாம் கடவுளே! ஓ இவ்வுலகின் நாயகரே, நிச்சயமாக, உங்களை உங்களால் மட்டும்தான் அறிய முடியும்.

........................................................................................................

வக்தும்அர்ஹஸ்யஶே'ஷேண திவ்யாஹ்யாத்மவிபூதய : /
யாபிர்விபூதிபிர்லோகானிமாம்ஸ்த்வம் வ்யாப்ய திஷ்டஸி//

வக்தும் - விளக்கு; அர்ஹஸி - தகுதி வாய்ந்தவர்; அஶே'ஷேண - முழுமையாக; திவ்யா: - தெய்விகச் சிறப்புடைய; ஹி - நிச்சயமாக; ஆத்மவிபூதய: - உங்களுடைய சிறப்புகளை, பெருமைகளை; யாபி: - எந்த; விபூதிபி: - மேன்மைகள்; லோகாந் - உலகங்களை; இமாந் - இந்த; த்வம் - நீங்கள்; வ்யாப்ய - வியாபித்து; திஷ்டஸி - நிற்கின்றீர்களோ

10.16 நீங்கள் எந்த முறையில் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கிறீர்கள் என்கிற உங்கள் பெருமைகளை உங்களால் மட்டும் விவரிக்க முடியும்.

........................................................................................................

கதம் வித்யாமஹம் யோகிம்ஸ்த்வாம் ஸதா பரிசிந்தயந் /
கேஷு கேஷு ச பாவேஷு சிந்த்யோடஸி பகவன்மயா //

கதம் - எவ்வாறு; வித்யாம் - அறிவேன்; அஹம் - நான்; யோகிந் - யோகியே; த்வாம் - உங்களை; ஸதா - எப்போதும்; பரிசிந்தயந் - சிந்தனை செய்து; கேஷு கேஷு - எந்தெந்த; ச - மேலும்; பாவேஷு - ஸ்வரூபங்களில்; சிந்த்ய: - தியானம் செய்யத்தக்கவராக; அஸி - விளங்குகின்றீர்கள்; பகவந் - பகவானே; மயா - என்னால் 10.17 ஆழ்ந்து சிந்தனை செய்வதன் மூலம் நான் உங்களை எப்படி அறிய முடியும்?

ஓ பிரபு, எந்த மாதிரியான உருவத்தை நான் உம் மேல் சிந்தனை செய்து பார்க்க வேண்டும்?

..........................................................................................................

விஸ்தரேணாத்மனோ யோகம் விபூதிம் ச ஜனார்தந /
பூய: கதய த்ருப்திர்ஹி ச்ரு'ண்வதோ நாஸ்தி மேऽம்ரு'தம்//10.18

விஸ்தரேண - விரிவாக; ஆத்மந: - உங்களது; யோகம் - யோக சக்தி; விபூதிம் ச -சிறப்புகளையும்; ஜனார்தந - ஜனார்தனா; பூய: - மீண்டும்; கதய - கூறுங்கள்; த்ரு'ப்தி: - திருப்தி; ஹி - நிச்சயமாக; ச்ரு'ண்வத:

  • கேட்கிற; ந அஸ்தி - ஏற்படவில்லை; மே - எனக்கு; அம்ரு'தம் - அமுதமொழியை

10.18 ஓ ஜனார்தனா! உங்கள் சக்திகளையும் மகிமைகளையும் விரிவாகச்சொல்லுங்கள், தயவுசெய்து என் திருப்திக்காகச் மீண்டும் சொல்லுங்கள், உங்கள் இனிமையான வார்த்தைகளைக் கேட்டு நான் சோர்வடையவில்லை.

..........................................................................................................

ஸ்ரீபகவாந் உவாச

ஹந்த தே கதயிஷ்யாமி திவ்யா ஹ்யாத்மவிபூதய: /
ப்ராதாந்யத: குருச்'ரேஷ்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே //10.19

ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீபகவான் சொன்னது; ஹந்த - இப்பொழுது; தே - உனக்கு; கதயிஷ்யாமி - கூறுகிறேன்; திவ்யா: - தெய்வீகமானவைதான்; ஹி - நிச்சயமாக; ஆத்மவிபூதய: - என்னுடைய மேன்மைகள்; ப்ராதாந்யத:

  • அவற்றில் முக்கியமானவற்றை; குருச்'ரேஷ்ட - குருவம்சத்தவர்களுள் சி றந்தவனே; ந அஸ்தி - இல்லை; அந்த: - முடிவு; விஸ்தரஸ்ய - விரிவுக்கு; மே - என்னுடைய

ஸ்ரீபகவான் சொன்னது

10.19. கிருஷ்ணர் சொல்கிறார், "ஓ குருசிரேஷ்ட, நிச்சயமாக நான்

எனது தெய்வீக மகிமைகளைப் பற்றி உன்னிடம் சொல்வேன். ஆனால் முக்கியமானவற்றைப் பற்றி மட்டுமே சொல்கிறேன். ஏனென்றால் என் மகிமைகளைப் பற்றிய விளக்கத்திற்கு எல்லை இல்லை.

...........................................................................................................

அஹமாத்மா குடாகேச' ஸர்வபூதாஸ'யஸ்தித : /
அஹமாதிச்'ச மத்யம் ச பூதாநாமந்த ஏவ ச // 10.20

அஹம் - நான்; ஆத்மா - ஆத்மா; குடாகேச' - தூக்கத்தை வென்றவனே; ஸர்வபூத ஆஸ'யஸ்தித: - எல்லா உயிரினங்களின் உள்ளதிலும் இருக்கின்றேன்; அஹம் - நான்; ஆதி: - ஆதியாகவும்; மத்யம் ச - நடுவாகவும்; அந்த: ச - முடிவு; பூதாநாம் - உயிரினங்களுக்கெல்லாம்; ஏவ - நிச்சயமாக; ச - மேலும்

10.20 ஒ குடாகேச! வாழும் உயிர்கள் அனைத்துள்ளும் நானே ஆத்மாவாக இருக்கிறேன். எல்லாவற்றின் தொடக்கத்திலும், மத்தியிலும், முடிவிலும் நானே இருக்கிறேன்.

...........................................................................................................

ஆதித்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ச'மாந் /
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ச'சீ' // 10.21

ஆதித்யாநாம் - பன்னிரு ஆதித்தியர்களுள்; அஹம் - நான்; விஷ்ணு:

  • விஷ்ணு; ஜ்யோதிஷாம் - ஒளிர்பவைகளுள்; ரவி: - சூரியனாகவும்; அம்ச'மாந் - ஒளிரும்; மரீசி: - மரீசியாகவும்; மருதாம் - மருத்துக்களுள்; அஸ்மி - இருக்கின்றேன்; நக்ஷத்ராணாம் - நக்ஷத்ரங்களுள்; அஹம் - நான்; ச'சீ' - சந்திரனாகவும்

10.21. ஆதித்யர்களில் நான் விஷ்ணு. கோள்களில் நான் சூரியன். மருத்துக்களில் நான் மரீசி, நட்சத்திரங்களில் நான் சந்திரன்.

...........................................................................................................

வேதாநாம் ஸாமவேதோஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ : /
இந்த்ரியாணாம் மனச்'சாஸ்மி பூதாநாமஸ்மி சேதநா //10.22

வேதாநாம் - வேதங்களுள்; ஸாமவேத: - ஸாமவேதமாக; அஸ்மி - இருக்கின்றேன்; தேவாநாம் - தேவர்களுள்; அஸ்மி - இருக்கின்றேன்; வாஸவ: - இந்திரனாக; இந்த்ரியாணாம் - பொறிப்புலன்களுள்; மந: - மனதாக; ச - மேலும்; அஸ்மி - இருக்கின்றேன்; பூதாநாம் - உயிரினங்களுள்; அஸ்மி - இருக்கின்றேன்; சேதநா - உணர்வாக

10.22 வேதங்களில் நான் ஸாமவேதமாக இருக்கிறேன். கடவுள்களில் நான் இந்திரன். புலன்களில் மனமாகவும், வாழும் உயிர்களில் உயர்ந்த பிரபஞ்ச உணர்வாகவும் இருக்கிறேன்.

.......................................................................................................

ருத்ராணாம் ச'ங்கரச்'சாஸ்மி வித்தேஶோ' யக்ஷரக்ஷஸாம் /
வஸூநாம் பாவ்கச்'சாஸ்மி மேரு : ஶி'கரிணாமஹம் // 10.23

ருத்ராணாம் - ருத்ரர்கள் பதினொருவருள்; சங்கர: - பரமசிவனாக; ச - மேலும்; அஸ்மி - இருக்கின்றேன்; வித்த ஈச: - செல்வத்திற்கு அதிபதியான குபேரனாகவும்; யக்ஷரக்ஷஸாம் - யக்ஷர் ராக்ஷஸர் இவர்களுள்; வஸூநாம்

  • எட்டு வஸுக்களில்; பாவிக: - அக்னியாகவும்; ச - மேலும்; அஸ்மி - இருக்கிறேன்; மேரு: - மேரு மலையாகவும்; ஶி'கரிணாம் - சிகரமுடைய மலைகளுள்; அஹம் - நான்

10.23 உருத்திரர்களில் நான் சங்கரனாக இருக்கிறேன். யக்ஷ, ராக்ஷஸர்களில் நான் செல்வத்தின் அதிபதியான குபேரனாக இருக்கிறேன். வசுக்களில் நான் நெருப்பாகவும், சிகரங்களில் நான் மேருவாகவும் இருக்கிறேன்.

.......................................................................................................

புரோதஸாம் ச முக்யம் மாம் வித்தி பார்த ப்ருஹஸ்பதிம் /
ஸேநாநீநாமஹம் ஸ்கந்த: ஸரஸாமஸ்மி ஸாகர: // 10.24

புரோதஸாம் - புரோஹிதர்களுள்; ச- மேலும் ; முக்யம் - முக்கியமானவரான; மாம் - என்னை; வித்தி - அறிந்துகொள்; பார்த - பார்த்தனே; ப்ருஹஸ்பதிம்

  • பிரஹஸ்பதி என்று; ஸேநாநீநாம்- படைத்தலைவர்களுள்; அஹம் - நான்; ஸ்கந்த: - ஸ்கந்தனாகவும்; ஸரஸாம் - நீர்நிலைகளுள்; அஸ்மி - இருக்கிறேன்; ஸாகர - கடலாகவும்

10.24 புரிந்துகொள், ஓ, பார்த்தனே! பண்டிதர்களில் நானே தலைமை பிரகஸ்பதி. போர் வீரர்களில் நான் ஸ்கந்தன், நீர்நிலைகளில் நான் கடல்.

.......................................................................................................

மஹர்ஷீணாம் ப்ருகுரஹம் கிராமஸ்ம்யேகமக்ஷரம் /
யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோऽஸ்மி ஸ்தாவராணாம் ஹிமாலய: //
10.25

மஹர்ஷீணாம் - மஹரிஷிகளுள்; ப்ருகு: - ப்ருகு மஹரிஷியாகவும்; அஹம் - நான்; கிராம் - சொற்களுள்; அஸ்மி - இருக்கின்றேன்; ஏகம் அக்ஷரம் - ஓரெழுத்தான் ஓம்காரமாகவும்; யஜ்ஞாநாம்- வேள்விகள் அனைத்துள்ளும்; ஜபயஜ்ஞ: - ஜபம் என்கிற யக்ஞமாகவும்; அஸ்மி - இருக்கின்றேன்; ஸ்தாவராணாம் - அசையாப் பொருட்களுள்; ஹிமாலய:

  • இமயமலையாகவும்

10.25 சிறந்த ஞானிகளுள் நான் ப்ருகு, அதிர்வுகளில் நான் ஓம். யாகங்களில், நான் புனிதப் பெயர்களின் உச்சரிப்பான ஜபமாகவும் அசையாத பொருட்களில் நான் இமயமாகவும் இருக்கிறேன்.

.......................................................................................................................

அச்'வத்த: ஸர்வவ்ரு'க்ஷாணாம் தேவர்ஷீணாம் ச நாரத: /
கந்தர்வாணாம் சித்ரரத: ஸித்தூநாம் கபிலோ முநி: // 10.26

அச்'வத்த: - அரசமரமாகவும்; ஸர்வ வ்ரு'க்ஷாணாம் - மரங்களனைத்துள்ளும்; தேவர்ஷீணாம் - தேவரிஷிகளுள்; ச - மேலும்; நாரத: - நாரதராகவும்; கந்தர்வாணாம் - கந்தர்வர்களுள்; சித்ரரத: - சி த்ரரதன் என்ற கந்தர்வனாகவும்; ஸித்தூநாம் - ஸித்தர்களுள்; கபில: முநி:

  • கபில முனிவராகவும்

10.26 மரங்களில் நான் ஆல மரமாக இருக்கிறேன். முனிவர்களில் நான் நாரதனாக இருக்கிறேன். கந்தர்வர்களில் நான் சித்ரரதன். தம்மையுணர்ந்த ஞானிகளில் நான் கபிலன்.

.......................................................................................................................

உச்சை: ச்'ரவஸமச்'வாநாம் வித்தி மாமம்ரு'தோத்பவம் /
ஐராவதம் கஜேந்த்ராணாம் நராணாம் ச நராதிபம // 10.27

உச்சை: ச்'ரவஸம் - உச்சைச்'ரவஸ் என்ற குதிரையாகவும்; அச்'வாநாம் - குதிரைகளுள்; வித்தி - அறிந்துகொள்; மாம் - என்னை; அம்ரு'த உத்பவம்

  • அமுதத்துடன் தோன்றிய; ஐராவதம் - ஐராவதம் என்ற யானையாகவும்; கஜேந்த்ராணாம் - யானைகளுள்; நராணாம் - மனிதர்களுள்; ச - மேலும்; நராதிபம்ப - அரசனாகவும் 10.27 குதிரைகளில், பாற்கடலில் அமுதம் கடையும்போது வெளிப்பட்ட உச்சைச்’ரவஸ் நான் என்று தெரிந்துகொள். யானைகளில் ஐராவதம், மனிதர்களில் நான் அரசன்.

.......................................................................................................................................

ஆயுதநாமஹம் வஜ்ரம் தேனூநாமஸ்மி காமதுக் /
ப்ரஜநச்’சாஸ்மி கந்தர்ப: ஸர்பாணாமஸ்மி வாஸுகி: // 10.28

ஆயுதநாம் - ஆயுதங்களுள்; அஹம் - நான்; வஜ்ரம் - வஜ்ராயுதமாகவும்; தேனூநாம் - பசுக்களுள்; அஸ்மி - உள்ளேன்; காமதுக் - காமே தனுவாகவும்; ப்ரஜந: - பிரஜைகளைப் பிறப்பிக்கிற; ச - மேலும்; அஸ்மி

  • இருக்கின்றேன்; கந்தர்ப: - மன்மதனாக; ஸர்பாணம் - ஸர்ப்பங்களுள்; அஸ்மி - இருக்கிறேன்; வாஸுகி: - வாஸுகியாகவும்

10.28 ஆயுதங்களில் நான் வஜ்ராயுதமாக இருக்கிறேன். பசுக்களில் நான் காமதேனு. இனவிருத்தியாளர்களில் காதல் கடவுளான மன்மதனாக இருக்கிறேன். நாகங்களில் நான் வாஸுகி.

.......................................................................................................................................

அநந்தச்’சாஸ்மி நாகநாம் வருணோ யாதஸாமஹம் /
பித்ரூ’ணாமர்யமா சாஸ்மி யம: ஸம்யமதாமஹம் // 10.29

அநந்த: - ஆதிசேஷனாகவும்; ச - மேலும்; அஸ்மி - இருக்கின்றேன்; நாகநாம் - நாகங்களுள்; வருண: - வருணனாகவும்; யாதஸாம்

  • நீர் தேவதைகளுக்குள்; அஹம் - நான்; பித்ரூ’ணாம் - பித்ரு தேவதைகளுள்; அர்யமா - அர்யமா என்ற பித்ரு தேவதையாகவும்; ச - மேலும்; அஸ்மி -இருக்கின்றேன்; யம:
  • யமனாகவும்; ஸம்யமதாம் - அடக்கி ஆள்பவர்களுள்; அஹம் - நான்

10.29 மிகப்பெரிய சர்ப்பங்களில் நான் அனந்தா. நீர்க்கடவுளில் நான் வருணன். மூதாதையர்களில் நான் ஆர்யமா. ஒழுக்கத்தை உறுதி செய்வதில் நான் யமன்.

.......................................................................................................................................

ப்ரஹ்லாதச்’சாஸ்மி தைத்யாநாம் கால : கலயதாமஹம் /
ம்ரு’காணாம் ச ம்ரு’கேந்த்ரோऽஹம் வைநதேயச்’ச பக்ஷிணாம் //
10.30

ப்ரஹ்லாத: ச - பிரகலாதனாகவும்; அஸ்மி - இருக்கிறேன்; தைத்யானாம் - தைத்யர்களுள்; கால: - காலமாகவும்; கலயதாம் - காலம் கணிப்பவர்களுள்; அஹம் - நான்; ம்ருகாணாம் - விலங்குகளுள்; ச - மேலும்; ம்ருகேந்த்ர: - சிங்கமாகவும்; அஹம் - நான்; வைநதேய: ச - கருடனாகவும்; பக்ஷிணாம்

  • பறவைகளுள்

10.30 தைத்யர்களில் (அரக்கர்களில்) நான் பிரஹ்லாதன். கணக்கீடுகளில் (மதிப்பீடு) நான் காலம். விலங்குகளில், நான் விலங்குகளுக்கெல்லாம் அரசனாகவும், (சிங்கம்) பறவைகளில் நான் கருடனாகவும் இருக்கிறேன்.

.........................................................................................................

பவந: பவதாமஸ்மி ராம: ச'ஸ்த்ரப்ரு'தாமஹம் /
ஜஷாணாம் மகரச்'சாஸ்மி ச'ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ // 10.31

பவந: - காற்றாகவும்; பவதாம் - தூய்மைப்படுத்துபவனற்றுள்; அஸ்மி

  • இருக்கின்றேன்; ராம:- ஸ்ரீராமனாகவும்; ச'ஸ்த்ரப்ரு'தாம் - ஆயுதம் தாங்கியவர்களுள்; அஹம் - நான்; ஜஷாணாம் - மீன் இனங்களுள்; மகர:
  • மகரமாகவும்; ச - மேலும்; அஸ்மி - இருக்கின்றேன்; ச்ரோதஸாம் - நதிகளுள்; அஸ்மி - இருக்கின்றேன்; ஜாஹ்நவீ - பாகீரதி கங்கையாகவும்

10.31 தூய்மைப்படுத்துபவற்றில் நான் காற்றாக இருக்கிறேன். ஆயுதம் ஏந்துபவர்களில் நான் இராமனாக இருக்கிறேன். நீர்வாழ் உயிரினங்களில் நான் மகர மீனாக இருக்கிறேன். பாயும் நதிகளில் நான் ஜாஹ்னவி (கங்கை).

.........................................................................................................

ஸர்காணாமாதி ரந்தச்ச அத்யாத்மவித்யா வித்யானாம்
மத்யம் சைவாஹமர்ஜுந /
வாத: ப்ரவததாமஹம் //10.32

ஸர்காணாம் - படைப்புகளில்; ஆதி: - ஆரம்பமாகவும்; அந்த: ச - முதலாகவும்; மத்யம் ச - நடுவாகவும்; ஏவ - நிச்சயமாக; அஹம் - நான்; அர்ஜுந - அர்ஜூனா; அத்யாத்மவித்யா- ஆத்மவித்தையாகவும்; வித்யானாம் - வித்தைகளுள்; வாத: - தர்க்க வாதமாகவும்; ப்ரவததாம் - வாதங்களுள்; அஹம் - நானே

10.32 எல்லாப் படைப்புகளிலும் உறுதியாக நான், தொடக்கமாகவும் மையமாகவும் முடிவாகவும் இருக்கிறேன். ஒ அர்ஜுனா, அறிவுகளில், நான் 'தன்னை அறிதல்' என்னும் ஆன்மீக அறிவாக இருக்கிறேன். வாதப்பிரதிவாதங்களில், நான் பகுத்தறிவாக இருக்கிறேன்.

.......................................................................................................

அக்ஷராணாமகரோऽஸ்மி த்வந்த்வ: ஸாமாஸிகஸ்ய ச /
அஹமேவாக்ஷய: காலோ தாதாஹம் விச்'வதோமுக: // 10.33

அக்ஷராணாம் - எழுத்துக்களுள்; அகார: - அகாரமாகவும்; அஸ்மி - இருக்கி றேன்; த்வந்த்வ: - இருமை வார்த்தைகளில் (விருப்பு வெறுப்பு, இன்ப துன்ப); ஸாமாஸிகஸ்ய ச - ஸமாஸம் அதாவது தொகை வார்த்தைகளாக; அஹம் ஏவ - நானே; அக்ஷய: - அழிவற்ற; கால: - காலமும்; தாதா - எல்லாவற்றையும் காத்துப் பேணுபவனும்; அஹம் - நான்; விச்வத: முக: - எல்லாப்புறங்களிலும் முகம் கொண்ட விராட்ஸ்வரூபனும்

10.33 எழுத்துக்களில், நான் 'அ' வாக இருக்கிறேன். கூட்டுச் சொற்களில் இருசொற்கூட்டாக நான் இருக்கிறேன். உறுதியாக, நானே முடிவற்ற காலமாக இருக்கிறேன்.

அனைத்தையும் ஸாக்ஷியாகப் பார்த்துக்
கொண்டிருப்பவனாகவும், எங்கும் நீக்கமற
நிறைந்திருப்பவனாகவும் இருக்கிறேன்.

.......................................................................................................

ம்ரு'த்யு: ஸர்வஹரச்'சாஹமுத்_ப_வச்'ச _ப_விஷ்யாதாம் /
கீர்தி: ஸ்ரீர்வாக்ச நாரீணாம் ஸ்ம்ருதிர்மேதாத்ரு'தி: க்ஷமா //
10.34

ம்ரு'த்யு: - மரண தேவதையாகவும்; ஸர்வஹர:- எல்லாவற்றையும் அழிக்கிற; ச - மேலும்; அஹம் - நான்; உத்_ப_வ: ச - காரணமாகவும்; _ப_விஷ்யாதாம் - இனி உண்டாகப்போகிறவற்றிற்கு; கீர்தி: - கீர்த்தி; ஸ்ரீ: - செல்வம்; வாக் - சொல்; நாரீணாம் - மாதர்களுள்; ச - மேலும்; ஸ்ம்ருதி:

  • நினைவு; மேதா - புத்தி; த்ரு'தி: - துணிவு; க்ஷமா - பொறுமை

10.34 நானே எல்லாவற்றையும் விழுங்குகிற மரணமாகவும், எதிர்காலத்திற்கான பொருட்கள் அனைத்தையும் படைக்கும் படைப்பாளியாகவும் இருக்கிறேன். பெண்மையில் நான் புகழாக, அதிர்ஷ்டமாக, அழகிய பேச்சாக, நினைவாற்றலாக,

நம்பகத் தன்மையாக, பொறுமையாக இருக்கிறேன்.

ப்ரு'ஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம் /
மாஸாநாம் மார்கசீர்ஷோsஹம் ரு'தூநாம் குஸுமாகர: //10.35

ப்ருஹத்ஸாம - ப்ருஹத்ஸாமம் என்ற ஸாமவேதப் பகுதியாகவும்; ததா - அவ்வாறே; ஸாம்நாம் - கானம் செய்யத் தகுந்த வேதப் பகுதிகளுள்; காயத்ரீ - காயத்ரீ என்ற சந்தமாகவும்; சந்தஸாம் - சந்தங்களுள்; அஹம் - நான்; மாஸாநாம் - மாதங்கள்; மார்கசீர்ஷ: - மார்கழியாகவும்; அஹம் - நான்; ருதூநாம் - பருவங்கள் ஆறினுள்; குஸுமாகர: - வசந்த ருதுவாகவும்

10.35 ஸாம வேதப் பாடல்களில் நான் ப்ருஹத்ஸாமவாக இருக்கிறேன். நானே காயத்ரீ.

மாதங்களில் நான் மார்கழி. பருவ காலங்களில் நான் வசந்த காலம் (இளவேனிற்காலம்).

த்யூதம் சலயாதமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம் /
ஜயோடஸ்மி வ்யவஸாயோடஸ்மி ஸத்த்வம்
ஸத்த்வவதாமஹம் // 10.36

த்யூதம் - சூதாட்டமாகவும்; சலயதாம் - வஞ்சகர்களுள்; அஸ்மி - இருக்கிறேன்; தேஜ: - திறமையாகவும்; தேஜஸ்விநாம் - திறமை படைத்தவர்களுள்; அஹம் - நான்; ஜெய: - வெற்றி; அஸ்மி - இருக்கிறேன்; வ்யவஸாய - தீர்மானமாகவும்; அஸ்மி - இருக்கிறேன்; ஸத்த்வம் - ஆற்றல்; ஸத்த்வவதாம் - உறுதியானவற்றுள்; அஹம் - நான்

10.36 ஏமாற்றும் வேலைகளிலேயே நான் சூதாட்டமாக இருக்கிறேன். ஒளிரும் பொருட்களில் நான் சுடராக இருக்கிறேன். நானே வெற்றி, நானே முயற்சி, நானே நல்லவற்றில் எல்லாம் நன்மையாக இருக்கிறேன்.

வ்ரு'ஷ்ணீநாம் வாஸுதேவோடஸ்மி
பாண்டவாநாம்தநஞ்ஜய: /
முநீநாமப்ப்யஹம் வ்யாஸ: கவீநாமுச'நா கவி: // 10.37

வ்ருஷ்ணீநாம் - வ்ருஷ்ணி குலத்தோருள்; வாஸுதேவ: - வாஸு தேவனாகவும் ; அஸ்மி - இருக்கிறேன்; பாண்டவாநாம் - பாண்டவர்களுள்; தநஞ்ஜய: - தநஞ்ஜயனாகவும்; முநீநாம் - முனிவர்களுள்; அபி - கூட; அஹம் - நான்; வ்யாஸ: - வியாஸராகவும்; கவீநாம் - கவிஞர்களுள்; உச'நா- சுக்ராசார்யரான; கவி: - கவியாகவும்

10.37 வ்ருஷ்ணியாக இறங்கியவர்களில் நான் வாஸுதேவ கிருஷ்ணனாக இருக்கிறேன். பாண்டவர்களில் நான் தநஞ்ஜயன். ஞானிகளுக்குள் நான் வியாஸராகவும் சிந்தனையாளர்களில் நான் உசானாவாகவும் இருக்கிறேன்.

..........................................................................................................

தண்டோ தமயதாமஸ்மி நீதிளரஸ்மி ஜிகீஷதாம் /
மௌநம் சைவாஸ்மி குஹ்யாநாம் ஜ்ஞாநம் ஜ்ஞாநவதாமஹம் //

தண்ட: - செங்கோலாகவும்; தமயதாம் - தண்டிப்பவர்களுள்; அஸ்மி - இருக்கிறேன்; நீதி: - நியாய உணர்வாகவும்; அஸ்மி - இருக்கிறேன்; ஜிகீஷதாம் - வெற்றி பெற விரும்புபவர்களின்; மௌனம் ச

  • மௌனமாகவும்; ஏவ - மட்டுமே; அஸ்மி - இருக்கிறேன். குஹ்யாநாம்
  • மறைந்து வைக்கப்பட வேண்டியவற்றை; ஜ்ஞாநம் - ஞானமாகவும்; ஜ்ஞாநவதாம் - ஞானிகளுடைய; அஹம் - நான்

10.38 ஆட்சியாளர்களுக்கு நான் செங்கோலாக இருக்கிறேன். வெற்றியாளர்களில் நான் மேதைத்தன்மையாக இருக்கிறேன். எல்லா ரகசியங்களிலும் நான் மௌனமாக இருக்கிறேன். அறிவாளிகளிடத்தில் அறிவாக இருக்கிறேன்.

..........................................................................................................

யச்சாபி ஸர்வபூதாநாம் பீஜம் ததஹமர்ஜுந /
ந ததஸ்தி விநா யத்ஸ்யாந்மயா பூதம் சராசரம் //

யத் - எது; ச - மேலும்; அபி - கூட; ஸர்வபூதாநாம் - எல்லா உயிரினங்களுக்கும்; பீஜம் - விதையோ; தத் - அது; அஹம் - நான்தான்; அர்ஜுந - அர்ஜுனா; ந - இல்லை; தத் - அத்தகைய; அஸ்தி - இல்லை; விநா - இன்றி; யத் - எது; ஸ்யாத் - இருக்கக்கூடுமோ; மயா - நான்; பூதம்

  • பூதங்கள்; சராசரம் - இயங்குவதும் இயங்காததுமான

10.39 ஓ அர்ஜுனா! அதுமட்டுமல்ல, இருக்கும் எல்லா ஜீவன்களுக்கும் நானே விதையாக இருக்கிறேன்.

அசையும் மற்றும் அசையாப் படைப்புகள் அனைத்தும் நான் இன்றி நிலைத்திருப்பதில்லை.

..........................................................................................................................

நாத்தோऽஸ்தி மம திவ்யாநாம் விபூதீநாம் பரந்தப /
ஏஷ தூத்தேஶ'த: ப்ரோக்தோ விபூதேர்விஸ்தரோ மயா // 10.40

ந - இல்லை; அந்த: - முடிவு; அஸ்தி - இருக்கிறது; மம - என்னுடைய; திவ்யாநாம்- தெய்வீகமான; விபூதீநாம் - பெருமைகளுக்கு; பரந்தப - எதிரிகளை வாட்டுபவனே; ஏஷ: - இந்த; உத்தேஶ'த: - உதாரணங்கள்; ப்ரோக்த: - சொல்லப்பட்டது; விபூதே: - விபூதிகளினுடைய; விஸ்தர: - விரிவும் கூட; மயா - என்னால்

10.40 ஓ பரந்தப! என்னுடைய தெய்வீக மகிமைகளுக்கு ஒரு முடிவே கிடையாது.

என்னால் சொல்லப்பட்ட எல்லாமே, என்னுடைய எல்லையில்லா மகிமைகளின் எடுத்துக்காட்டுகள் மட்டும்தான்.

..........................................................................................................................

யத் யத் விபூதிமத்ஸத்த்வம் ஸ்ரீமதூர்ஜிதமேவ வா /
தத்ததேவாவகச்ச த்வம் மம தேஜோம்ஶ'ஸம்பவம் // 10.41

யத் யத் - எது எது; விபூதிமத் - சிறப்புடையதோ; ஸத்த்வம் - இருக்கிற பொருள்; ஸ்ரீமத் - அழகுடையதோ; ஊர்ஜிதம் - சக்தி படைத்ததோ; ஏவ

  • கூட; வா - அல்லது; தத் தத் - அந்த அந்த; ஏ - நிச்சயமாக; அவ கச்ச - அறிந்து கொள்ள வேண்டும்; த்வம் - நீ; மம - என்னுடைய; தே ஜாம்ஶ'ஸம்பவம் - ஒளியின் பகுதி வெளிப்பாடே;

10.41 என்னவெல்லாம் பெருமையாக வெளிப்படுகிறதோ அல்லது அழகாக, ஒளி மிகுந்ததாக வெளிப்படுகிறதோ அவையனைத்தும் என் பேரழகின் ஒரு பகுதிதான் என்பதை நீ உறுதியாக அறிந்துகொள்வாயாக.

..........................................................................................................................

அதவா பஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந /
விஷ்டப்யாஹமிதம் க்ருத்ஸ்நமேகாம்ஸே'ந ஸ்திதோ ஜகத் // 10.42

அதவா - தவிரவும்; பஹுநா - பல; ஏதேந - இந்த வகைகள்; கிம் - என்ன பயன்; ஜ்ஞாதேந - அதிகம் தெரிந்து கொள்வதால்; தவ - உனக்கு; அர்ஜுந - அர்ஜுனா; விஷ்டப்ய - முழுவதுமாக; அஹம் - நான்; இதம் - இந்த; க்ருத்ஸ்நம் - எல்லா வெளிப்பாடுகளையும்; ஏகாம்ஸேந - ஓர் அம்சத்தினால்; ஸ்தித: - இருக்கிறேன்; ஜகத் - உலகம்

10.42 ஓ அர்ஜுனா, பல வகையான தோற்றங்களை அறிந்து கொள்வதால் என்ன பயன்? என்னுடைய ஒரே ஒரு அம்சத்தினாலேயே, நான் இந்த உலகம் முழுவதிலும் ஊடுருவி பரவி இருக்கிறேன்.

.........................................................................................

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸுபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசா'ஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
விபூதியோகோ நாம தச'மோऽத்யாய: //

ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய 'விபூதி யோகம்' எனப் பெயர் படைத்த பத்தாவது அத்தியாயம்.