1. Who Asked You to Take Birth
உயிரோவியம் கண்ட நாளில் ...
நான் குடித்த சாதாரண நீரைக் குடித்த நீ 'அமுதம் !' என்றாய்
நான் உண்ட சாதாரண உணவை உண்ட நீ 'அமிர்தம் !' என்றாய்
கட்டாந்தரையில் வெறுமனேதான் நீ படுத்தாய் ! ஆனால்... பார்ப்பதற்கு வெண் பஞ்சால் தடித்த சொகுசுக் கட்டிலில் படுத்துக் கொண்டாற்போல் சுகமாய்ப் படுத்துக் கொண்டாய் நீ
என்ன ஆயிற்று உனக்கு !
காரணமேயில்லாது முகம் மலர்ந்திருக்கிறாய் !
என்னைப் போல்தான்
இரண்டு காலால்
நடக்கிறாய்
ஆனால்…
என்னவோ ஒரு நயம்
நுழைந்திருக்கிறதே !
உன் நடையில்
எப்படி உனக்குச் சாத்தியமானது இதெல்லாம் ?
உன்
குரலைக்
குழலாக்கியது
எது ?
உன்
கண்ணைக்
காந்தமாக்கியது
எது ?
எல்லாம் சேர்ந்து
என்னை
என்னவோ செய்கிறதே! ஏன்?
மன்னித்துவிடு ...
கேள்விகளைத் தொடர்கிறேன்
உன் பதிலுக்கு இடைவெளியில்லாமல்,
என்றார்.
புத்தரிடம் புத்தரின் அண்ணன் ஆனந்தன் முதன் முதலாக புத்தரைப் பார்த்த நாளில் ஐயம் கேட்டவரிடம் புத்தர் "ஞானமடைந்து விட்டல் அமிர்தம் அழகு சொர்க்கம் ஆதி முதல் தெய்வம் ஆகிய அணைத்தையும் காண்பாய் அனுபவிப்பாய் நீயும் ! என்னிடம் நீ கண்டதெல்லாம் முக்தியின் சக்தி ! என்னில் படைத்த அழகுக் கோலங்கள் உயிர்நிலை தொட்ட தியானசக்தி உயிரோவியமாக்கும் முக்தியடைந்த ஒருவணை ஏன் நீயும்கூட உயிரோவியமாகலாம்'' எனக் கூறி முடித்தவரின் காலில் விழுந்த ஆனந்தன் 'ஏற்றுக் கொள்ளுங்கள் என்னைச் சீடனாக' என்றார். பின்னாளில் அவரும் ஓர்
உயிரோவியமானார்.
ஆணழகன், அறிவாளி, தியானி
வெள்ளைச் சுண்ணாம்பு பூசியதால் கல்லறை வெள்ளை மாளிகையாகிடாது.
காட்டு மிருகங்கள் வாழும் மனம் பூந்தோட்டமாகிட மனநேயம் வாழும் மாளிகையாகிட மனம் தூர்வாரப்பட வேண்டும்.
வெள்ளையடிக்கப்பட்ட சுவராய் எல்லாருமே இருப்பதால்
யார் மனம் காடு, யார் மனம் வீடு, யாருக்கு கவலையில்லை.
இதோ ! கவலைப்பட வேண்டிய காலம் வந்து விட்டது.
★
சுயம்வரத்தில் ஒரு ஆணழகன் ஒரு அறிவாளி ஒரு தியானி
யாரது ? . . . ஆவல் அதிகரிக்க ... வந்தாள் இளவரசி மாலையிட்டாள் தியானிக்கு
தோழி கேட்டாள் 'ஏன் மறுத்தாய் ஆணழகனை'
இளவரசி சொன்னாள் 'அவன் கட்டுடலுக்குள் எத்தனை மிருகங்கள் தூங்குகிறதோ தெரியாது. அதற்கு என் தந்தை சாட்சி'
தோழி அறிவாளி ?
இளவரசி
வாழ்வுக்கு உதவா,
வாதத்துக்கு மட்டுமே உதவும்
மூளை பெருத்தவன் உறுத்தல்களை
யார் தாங்குவது. இதற்கு
நம் மந்திரிகள் சாட்சி!
தோழி
'தியானி ?'
இளவரசி
அவருக்குள்
மிருகங்கள் இல்லை என்பதற்கு
அவரின் சாந்தமான கண்கள் சாட்சி.
அவரிடம்
வாதமிட வாதம் குறைவு.
வருத்தத் தூண்டும் பந்தம் குறைவு. இதற்கு
அவரின் உடலின் நளிணம்
முகத்தின் பொலிவு சாட்சி.
சுருங்கச் சொல்வேன் கேள்
தியானி
வம்பு தும்பில்லாதவர்
வம்பு தும்பிழுக்கத் தெரியாதவர்
ஆனால்,
வாழத் தெரிந்தவர்
என கவி பொழிந்து
கலகல... சிரிப்பை
ஆனந்தத் தெளிப்பாய்!
அள்ளித் தெளித்தாள்
தியான மகத்துவம் புரிந்த
இளவரசி
உடல் பலம் மட்டும்
மிகுந்தால் முரடன்.
மன பலம் மட்டும்
மிகுந்தால் நல்லவன்.
ஆத்ம பலத்தைத் தரும்
தியானம்
தேவையான
மனபலத்தையும்
உடல்பலத்தையும்
உடனே தரும்.
அது பறக்கப் பிறந்தது
ஜென் சீடனாகி தெளிந்த மனிதனாகி வாழ்ந்த நண்பனிடம் நண்பன் கேட்டான் என் காதல் உயர்ந்ததுதானே ஜென் சீடன் : உன் காதல் மட்டுமல்ல எல்லோருடைய காதலும் உயர்ந்ததுதான். காதலெனும் பறவை பறக்கப் பிறந்தது. அது நிஜத்தைத் தொடும்போது செத்து விழுகிறதே ! விவாகரத்தில் முடிந்த காதல் கல்யாணங்களாய் ?
வாழ்வில் எதனோடெல்லாம் ஈர்க்கப்படுகிறீர்களோ அதனோடெல்லாம் காதல் கொள்கிறீர்கள். உங்களிடம் நீங்கள் ஈர்க்கப்பட்டால் அது தான் தெய்வீகக் காதல்! மற்றதெல்லாம் மங்கும் மாயக் காதல்களே!
நிச்சயம் யோசிப்பாய்
முல்லா சொல்வார் உண்மை வாழ்வறியத் துடிப்பவரிடம், சில வயதே ஆன காதலுக்காக பல வயதான நீ படாதபாடு படலாமா? புத்திசாலி நீ !
நிச்சயம் யோசிப்பாய்!
பல ஜென்மங்களாய் சில சிக்கல்களில் சிக்கிக்கொண்டு சீரழியும் சக்தித்தொகுப்பு மனிதன். காதலும் ஒரு சிக்கலே. நீங்கள் ஏற்க மறுத்தாலும் மறைக்கப்பட முடியாத உண்மையிது!
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
நீ மாளிகையில் மகிழ வேண்டியவன்
வா! மனிதா வா! உன் வாழ்க்கை உன்னுடையதுதான் வா ! வாழ்ந்து பார். தட்டுத் தடுமாறித் திரட்டும் அனுபவங்களில் கட்டும் ஞான மாளிகையில் வாழ்ந்து பார் ... தேங்கிக் கிடக்கும் குட்டையல்ல நீ ஒரே மாதிரியான வாழ்வு வாழ் ! துள்ளியோடும் நதி நீர் நீ ! விதம் விதமாய் வாழ வேண்டும். வாழ்வை அனுபவிக்காது வீடில்லா அனாதையாய் திரியாதே! உள்ளுலகில். மாளிகையில் மகிழவேண்டியவன் நீ. நீதி நெறியில் வரையறை விதித்து – உன் வாழ்வை நெறித்து விடாதே. நீதி நெறிகள் இடத்துக்கு இடம் மனிதனுக்கு மனிதன் குலத்துக்குக் குலம் உருமாறி நிறம் மாறி நம்மை நெறிக்கும் பச்சோந்திகள் !
உனக்கும் மற்றவருக்கும் சந்தோஷமளிக்குமெல்லாமே – நீதி ! உனக்கும் மற்றவருக்கும் துக்கமளிக்குமெல்லாமே - அநீதி ! இவற்றை மீறிய நீதியில்லை. நீ கட்டுப்பாட்டுகளுக்குள் கட்டுப்பட்டு விடாதே ! கட்டுப்பட்டால் – வாழ்க்கை கடிக்க ஆரம்பித்து விடும். கவனமாக கவனித்து கட்டவிழ் ! கட்டுக்கடங்காத காளை கட்டுப்பட்டுக் கிடக்கிறது உன்னுள். வாழ்க்கையின் வர்ண ஜாலங்களுக்குள் குதி !
வித விதமான அனுபவங்கள் உன்னை வளர்க்கவே வசித்துக் கொண்டிருக்கிறது.
புதுப்புது அனுபவங்கள் புது மனிதனாகப் பொலிவுறச் செய்யும், புதிதாக உருவான அகமாளிகையில் உன்னை !
கடவுள் தர மறுப்பது ஏன் ?
மனிதன்: நான் கேட்டதையெல்லாம் கொடுக்கத் தெரியாதவன் கடவுளா ?
குரு: நல்ல கேள்வி நீ தான் கடவுள் ...
நீங்கள் ஆசைப்படுவதெல்லாம் நிறைவேற்றத்துவைரத்துவயானதென்றால்... நிச்சயம் அவை கடவுளிடமிருந்து வந்தவையல்ல. சைத்தானிடமிருந்து!
போர்வைக்குள் விடிந்த மகிழ்ச்சி
'போர்வைக்குள் புரண்டு புழுங்கிய நீண்ட இரவுகள் ...
இதயம் பிழிய வடிந்த இரத்தத்தில் ஈரமான இரவுகள்
மனதின் வெட்டிச் சத்தம் கேட்டு வெறித்துப் பார்த்தபோது வெளுத்திருந்தது வானம்- ஆனால்
இன்னும் விடியவேயில்லை வாழ்வு.
கவிதையாய்க் கேட்டவன் - மனதுக்கு உதையாய்ப் பதில் கிடைத்தது குருவிடமிருந்து ...
'எப்படி விடியும் ! ! ! எப்படி விடியுமென்று தேடாதவரை எப்போதும் விடியாது வாழ்வு.
அழகிய பூங்காவில் முட்களை மாத்திரம் தேடிப் பிடித்து அதிலேயே அழுந்தக் காலூன்றி நட! - என்று கட்டளையிடப்பட்ட கணினி மனிதன்போல், அழகிய வாழ்வில் வேதணைகளை மாத்திரமே தேடிப்பிடித்து அதிலேயே அமிழ்ந்து போவென்று சொல்லும் மன அமைப்பு மாறாத வரை மாற்றாத வரை விடிவில்லை. போய்வா!'
வேதனையில் ... மீண்டும் போர்வைக்குள் புரண்டான். இதயம் பிழிந்தான். விடிவு தேடி இரவு முழுவதும் !
விடிவு வடிவெடுத்தது ...
மன அமைப்பின் அமைப்புதான் மாந்தரை, மாளவும் ! மகிழவும் ! செய்யுமென்ற குட்டிச் சத்தம் கசிந்தது ... உள்ளிருந்து.
'மாற்றினாலென்ன மாளச் செய்யும் மன அமைப்பை ?' சிந்தனை உதிக்க ! உதிக்க ! மாற்றினான் மகிழ்ந்தான் வெளுத்த வானம் விடிந்தது !
இதயத்தில் ஈரக்காற்று வீச எவ்வளவு தூரம் நோக்கினும் வாழ்வில் மகிழ்ச்சியே கண்ணுக்குத் தெரிந்தது.
உங்கள் உருவத்தை நிர்ணயிப்பது உடலமைப்பு. உங்கள் குணத்தை நிர்ணயிப்பது மனஅமைப்பு. உங்களின் வாழ்வை நிர்ணயிப்பது உடலமைப்பல்ல மனஅமைப்பு!
எல்லாம் புரிந்தது எப்படி ?
இப்படியொரு வாசகம் சொல்வார் ஜொராஸ்ட்ரிய ஞானி மிகத் தெளிவாய் ...
உலகைப் புரிந்து கொண்டவன் சொல்கிறேன் உலகைப் புரிந்து கொள்ள முடியாது
இதைப் புரிந்து கொண்ட அன்றுதான் எனக்கு எல்லாமே புரிந்தது.
என்ன பதில் சொல்வீர்கள் ?
இன்னும் கேட்டுக்கொண்டேயிருந்தால் எப்படி ? கொடுத்ததைக் கொண்டு கொண்டாடினாயா ? இப்படிக் கேட்டுக் கொண்டேயிருந்தால் ... எப்போதுதான் கொண்டாடுவாய் ? உத்தேசமாகவாவது சொல் ! என – நீங்கள் வேண்டிக் கொள்ளும்போது கடவுள் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?
கேட்டதையெல்லாம் கொட்டிக் கொடுக்கும் சக்தி படைத்தவன் கடவுள் என நம்பும் மனிதன் எப்படி எப்போது எப்படித் தரவேண்டும் என்ற புத்தி படைத்தவன் கடவுள் என நம்ப மறுக்கிறான்
இறைவன் கேட்கும் கேள்வி
சொர்க்கம் சென்றால், இறைவனைப் பார்த்தால், இது நடக்கும்.
'யாருக்கு என்னென்ன செய்தாய் ? ' எனக் கேட்க மாட்டார்
'நீ என்ன செய்தாய் உனக்கு' என்றே கேட்பார் முதல் கேள்வியாய்
நீ ஒன்றுமில்லையென சொன்னால் 'ஈவு இரக்கமில்லாதவனே!' எனத் திட்ட மறக்க மாட்டார்.
பின் குறிப்பு :
உங்களுக்குத்தான் வாழ்கிறீர்கள் என நினைக்கிறீர்கள். அது சுயநலம்! என்பர் உம் அன்பர். காரணம், 'நீங்கள் செய்யும் சேவையெல்லாம்' உங்களுக்கு என நினைத்து, உங்களையே உறிஞ்சி வாழும் 'உயிர்குடிப்பான்' அகங்காரத்திற்கே செய்கிறீர்கள்! சுயநலம் தாண்டி சுயம் நலமாக ஏதாவது செய்யுங்கள் ! அப்படிச் செய்தால் ... 'தியானமா செய்தாய் ... நல்லது கண்ணே!' என்பார் இறைவன்
சொர்க்கத்தில்
உங்களைச் சந்திக்கையில்.
அன்று உருகியவன் இன்று உற்சாகமாக ...
'நான் பேசுவது தமிழ் என்ன மொழி பேசுவாய் என்னைப் போல் இருப்பாயா? ஏனென்றால் என்னை உருவாக்கியது நீதானே. அறநூறு கோடிக் குழந்தைகளை அனாதைகளாக்கிவிட்டு எங்கு போய்த் தொலைந்தாய் நீ ? படைத்ததுதான் படைத்தாய் கொஞ்சம் நிம்மதியையும் சேர்த்துப் படைத்திருக்கக் கூடாதா? படைத்ததும் வேலை முடிந்ததென்று உடைத்துக் கொண்டாயோ உறவை !!' 'உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது ... முகுந்தா இதுபோல் உளறி உருகுபவர்களை" எனச் சொன்ன நிட்டி தொடர்ந்தார் ... ஆனால் நானும் உருகுவேன் நான் யார் ? நான் யார் ? நான் யாரென்று ! சமீபத்தில் தான் தெரிந்துக்கொண்டேன்
என் கேள்வியே ரமண மகரிஷியின் தியான முறையென்று ... என் கேள்விக்குப் பதிலில்லாத போதும் ஏதோ ஒரு சந்தோஷம் நெஞ்சோரத்தில் தொற்றிக் கொண்டது. கொடர்ந்தேன் தியானத்தை ஞானப் பாதையில்..
இன்று பதிலுக்கருகில் நெருங்கிவிட்டேன் !
அது… நான் யாரென்ற கேள்விக்கு பதில் – கடவுளென்றும் ! கடவுள் யாதெரன்ற கேள்விக்குப் பதில் – நானென்னும் வந்தது ?
வார்த்தைகளாக வந்த பதில் வார்த்தைகளைத் தாண்டிய அனுபவமாகுமென்ற நம்பிக்கை நெஞ்சோரத்தில் உதித்திருக்கிறது"
உற்சாகமாய் உதிர்த்தார் நிட்டி.
உங்களுக்கு ஒரு போட்டி… உங்களையே ஒரு பேட்டி காணுங்கள். நான் யார் ? நான் யார் ? நான் யார் ? என ஓயாமல் கேளுங்கள் 'நான்' ஓயட்டும் "ஞானம்" விழித்துக்கொள்ளட்டும்.
யாரை ஏமாற்ற ... ?
ஒருவர் புலம்பினார்...
'என்ன செய்வது கடவுள் கொடுத்து விட்டான் பத்து குழந்தைகளை' அவரிடம் சொன்னேன் ... பிள்ளை இல்லாவிட்டால், பெண் மலடி என்பது அக்காலம். ஆண் ? ? ? என்பது இக்காலம் பிள்ளைகள் நிறைய பெற்றால், 'கடவுள் கொடுத்தான்' என்பது எக்காலமும் கடவுளா கொடுத்தான் ?
தனியாய்ச் செய் புரட்சி
'தாவரங்கள் விழித்துக்கொண்டே தூங்குகிறதா? – இல்லை தூங்கிக்கொண்டே விழித்திருக்கிறதா ? *
கேட்ட பகுத்தறிவாளனிடம் குரு,
'தெரிந்தென்ன பயன் ? விழித்துக்கொண்டே தூங்கும் உனக்கு ?'
என்றாவது பகுத்தாயா உன் அறிவை !
உலகைப் பகுத்து அறி! யார் குறை சொன்னது?
உன்னைப் பகுக்காமல் மற்றவரைப் பகுக்கப் புறப்படுவதேன் என்றாவது யோசித்தாயா?
முறைப்படுத்து பகுத்தறிவுப் பயன்பாட்டை
முறைபடுவாய்
முறைக்கும் குணம் வெறிக்கும் மனம் நெறிக்குள் வரும் தானாய்...
சமுதாயப் புரட்சிக்கு நாட்டிய அடிக்கல் நல்லதே யார் குறை சொன்னது ?
இதைவிட முக்கியமானது தனிமனிதப் புரட்சி விட்டுவிட்டாயே அதை !
வெளியே விழித்து உள்ளே தூங்குவதால் துக்கம் வழியும் இதயத்தை இதப்படுத்து ! செய் தனிமனிதப் புரட்சி! பகுக்காதே ! வகுக்காதே ! மற்றவர்களைப் பகு வகு உன்னைப் புகு புது சுக வாழ்வுக்குள்' எனச் சொன்னார்.
ஆடவிட்டதே ... ஆஹா! பாடவிட்டதே ... ஓஹோ!
குடும்பஸ்தன்: உலகம் என்னை நசுக்குகிறது. உறவுகள் என்னைப் பொசுக்குகின்றன. சொல்லுங்கள் என்ன உலகம் இது ! அத்வைத ஞானி: உலகம் அப்படித்தான் கூண்டுக்குள் அடைத்துதான் பறக்கச் செய்யும் இன்னும் அது காலை உடைக்கவில்லையே... ஆடு இன்னும் அது கழுத்தை நெறிக்கவில்லையே ... பாடு உலகம் இப்படித்தான் நீ ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் ! ஆடவிட்டதே ... ஆஹா பாடவிட்டதே... ஓஹோ என்றே ஆடு! பாடு! கொண்டாடு! தொல்லைகள் ஒடும் பார் ... இன்பவெள்ளம் பாயும் பார் ... கிடைத்ததைக் கொண்டு கொண்டாட !
ஏ! மாற்று கேட்டதை
சனாதன ஞானியிடம் ஒருவர், உரிமைகள் கிடைப்பதில்லையே என்ன செய்ய ? ஞானி யார் கொடுப்பார் யாரும் கொடுக்கமாட்டார், கொடுக்கவும் முடியாது. ஏனென்றால் ... உரிமைகள் உன்னுடையது ! அந்த நபர் 'அப்படியென்றால் ?' ஞானி 'உரிமையைக் கேட்காதே!' எடுத்துக்கொள். அவை உன்னுடையவை நீ கேட்பதாய் நடிக்கும்வரை, தரமுடியாது எனச் சொல்லி அவர்களால் உன்னை ஏமாற்ற முடியும் ஏ! மாற்று ... கேட்பதை.
யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?
சுகமான அவஸ்தை
'இதென்ன புது அவஸ்தை ! தானுண்டு தன் கவலையுண்டு என்றிருந்தவனுக்கு' – என வினோதமாகக் கேட்டவனை சாதாரணமாகப் பார்த்த ஆன்மீகன்
'தியான முகாம் ஏதும் சென்று வந்தாயா ?' எனக் கேட்டான்.
'ஆமாம்' என்றவன் தொடர்ந்து
'எப்படி வாழவேண்டும் என எனக்கு நேற்றுவரை தெரியாது என்பதையே நேற்றுதான் தெரிந்து கொண்டேன்
கள்ளுண்டவன் காலுங்கையும் கல்லில் பட்டாலும் முள்ளில் பட்டாலும் கள் தெளியும்வரை கவலையேயில்லை அவனுக்கு.
எப்படி வாழ்வதென தெரியாதவரை கவலைப்பட்டாலும் துன்பப்பட்டாலும் புத்தி தெரியும்வரை பிரச்சிணையேயில்லை எனக்கு.
வாழத் தெரியாமல் கள்ளுண்டவன் உடல் போல் மந்தமாயிருந்த மந்த மனம் விழித்துக்கொண்டதே ! என் செய்வேண் நான் ! '
கள்ளடித்தவனின் கள் தெளிந்த பின்தான் கல்லும் முள்ளும் எவ்வளவு ஆழமாக உடலில் கவிதை எழுதியிருக்கிறதெனத் தெரியும்.
தெளிந்தவன் தன் ரணங்களைப் பார்ப்பது போல என் மன குண ரணங்களைப் பார்க்கிறேன் நான்
என்றவனிடம் ஆன்மீகன்
'முதல் நாள் முதல் அனுபவம் இப்படித் தானிருக்கும் அந்த சுகமான அவஸ்தை
முதல் முறை
என் உள் அசிங்கங்கள் உணர்வுக் கண்ணாடியில் தெரிந்த போது எனக்கும் இப்படித்தானிருந்தது
தொடர்ந்து செய்த தியானத்தால் அவஸ்தை நீங்கியின்று சுகமாயிருக்கிறேன்' - என்றான்.
'நல்லவேளை தியான முகாம் சென்றேனே மிச்ச வாழ்க்கையாவது மிச்சம் மீதி வைக்காது வாழ்வேனே' - என
நம்பிக்கைக் குரலில் மலர்ந்த கண்களோடு பார்த்துச் சொன்னான் 'நன்றி!' என்று புது ஆன்மீகன்.
குருவின் வார்த்தை
அன்றோடு ஆஸ்ரமத்திற்குள் நுழைந்து ஆயிரம் நாட்களைத் தாண்டிவிட்டது அலையோசை போல் காதில்விழ - உதிர்த்து விட்டுச் சென்றார் குரு 'கடவுள்' என்ற வார்த்தையை … கடவுள்!... கட-வுள்... 'கட''உள்' !!! என்று தியானித்து தியானித்தே கடந்து உள்ளிருந்து அனுபவித்து விட்டான் ஆனந்தத்தை அரை நொடிக்குள் ஆயிரம் நாட்களுக்கு முன் வந்த சீடன்.
பின் குறிப்பு :
குரு ஒரு வார்த்தை சொன்னாகூட உண்மையாகத் தானிருக்கும் உண்மையின் உள்ளர்த்தமும் உள்மகத்துவமும் புரிந்துவிட்டவனுக்குச் சொல் கூட ஆயுதமே !
முக்கியத்துவம்
குரு முன் வரிசையில் அமர்ந்திருந்த அழகிய பெண்ணுக்கு அளித்த பதிலின் கடைசி வரி 'நீ மிகவும் அழகானவன் தனித்துவம் பெற்றவள்' சான்றிதழாக வந்த பதிலில் பூரித்துப்போனவள் 'அப்படியா, சுவாமி!' என்றாள் மலர்ந்த முகத்தோடு. 'ஆம், நீ மிகவும் அழகானவள் தனித்துவம் பெற்றவள் இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரைப்போல!' குருவின் நியாயமான பதிலுக்குப் பதிலாகச் சுருங்கிப்போனது அவளின் மலர்ந்த முகம் தன் முக்கியத்துவம் முறிந்துபோனதால் தன்னை எப்படியாவது முக்கியமானவராகக் காட்டிக்கொள்ளத்
துடிக்கும் துடிப்பே – தன் முனைப்பு !
யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?
ஞானத்தைப் படிக்காதே ! குடித்துவிடு ...
என்றோ செய்த தப்புத்தவறுக்கு இன்று அழுதான். அழுவதை 'அழாதே!' என்று கண் துடைத்து விடாமல் 'அழுதென்ன பயன் ? கண்ணீரால் கழுவிவிட முடியாது கள்ளத்தனத்தை! தவறுக்கு வருந்தாதே! திருந்து'. 'சுருக்' என்று தைத்துவிட்டது குருவின் இவ்வரிகள். குருவின் வரிகளை விரித்துப் பார்த்தான் அழுகையும் தவறும், சுருங்கி எங்கோ போய் 'விழுந்தது' விழுந்த இடத்திலிருந்து பிறந்தது 'தெளிவு!' ஒளிந்து கொண்டிருந்த புத்திசாலித்தனம் விழித்துக்கொண்டு சொன்னது 'வருந்தாதே! திருந்து !' கற்றுக் கொண்டான் வருத்திக்கொள்ளாமல் திருத்திக்கொள்ள.
ஒளிந்து கொண்ட இறைவனைக் கண்டுபிடி…
'பார்க்க வேண்டும் காட்டு உன் கடவுளை' கேட்ட நாத்திகனுக்குப் பதில் சொல்லாது வேர்த்திருந்தான் ஆத்திகன். 'மடையா ! ஒட ஓட ஓடறஇறைவனை நீ துரத்திவிட்டு, காட்டு கடவுளையென்று கிண்டலா செய்கிறாய் ? ' கேட்ட ஆன்மீகனின் புதிர்கேள்வியில் உதிரம் துடித்துப்போனது நாத்திகனுக்கு. 'வேதக் கூற்றுப்படி கண் காது மூக்கு வாய் தோன்று முன்னேயே ... உருவமேயில்லாத - மனிதக் கூட்டத்தோடு கடவுள் கொஞ்சிக் கொண்டிருந்தாரமே! சாத்தியமா இதெல்லாம்' வாதமிட்டு வம்பென்னும் அம்பெய்தினான் நாத்திகன்.
யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?
ஆன்மீகன் 'கடவுள் இல்லை நிரூபித்து விட்டோம்' கொக்கரித்த ரஷ்யாவின் ஜெயத்தொனியை கத்தரித்தது 'முதல் ஒரு செல் உயிரான அமீபாவை உயிரூட்டியது எது ?' என்ற கேள்வி.
கடவுள் இல்லவே இல்லை பரபரப்பு அறிக்கையிட்ட அறிவியல் ஆராய்ச்சிக் குழுவே மீண்டும் அறிக்கையிட்டது ...
'பூலோகத்தில் தோன்றிய முதல் உயிருக்குக் காரணமானது எதுவென்று தெரியவில்லை ஒருவேளை அது கடவுளாக இருக்கலாம்'.
'ஒருவேளை அது கடவுளாக இருக்கும்'. என நீங்கள் சந்தேகிப்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன் 'அதுதான் கடவுள்' கடவுளால் உயிரூட்ட முடியும்போது, உருவற்றதோடு கொஞ்ச முடியாதா ?
என ஆன்மீகன் கேட்டு நிறுத்தியதும் வம்பெனும் அம்பைத் தடுத்த குஷி ஆத்திகனுக்கு.
தொடர்ந்த ஆன்மீகன் 'கடவுளைக் காட்ட முடியாது காண மட்டுமே முடியும்
கடவுளை விளக்க முடியாது விளங்கிக்கொள்ள மட்டுமே முடியும்.
வகுப்புவாதத்திற்கும் சண்டைக்கும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பெயர் நாத்திகன் ஆத்திகன்
வாதமிடும்வரை வேதம் புரியாது இருவருக்குமே. ஆராய்ச்சிக்கும் அறிக்கைக்கும் அப்பாற்பட்டவன் ஆதிமுதல் தெய்வம் அனுபவத்தால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் அவனை ஆழ்ந்துசெல் உண்னுள்ளே அங்கே காத்துக் கொண்டிருக்கிறான் அருவ இறைவன்' ஆன்மீகனின் அதிரும் அதரச்சொற்களில் அமைதியாய்க் கரைந்தது ஆத்திகமும் நாத்திகமும் 'உனக்குப் பேசக் கற்றுக் கொடுத்த முதல் நாளிலிருந்து (நீ பேசியவை) ஆப்பிள் கொடு ! ஆடை கொடு ! ஆசீர்வதி என்னை ! என்று உன்னையே அன்றிலிருந்து மையமாக்கி இதைக் கொடு அதைக் கொடு என்று சதா இறைவனைத் தொந்தரவு செய்த அன்றிலிருந்து தப்பிக்க யோசித்த இறைவனுக்குத் தான் பதுங்கிக் கொள்ள ஒரிடம் கிடைத்தது ! ' அவ்வளவு எளிதில் எவனுமே கண்டுபிடிக்க முடியாத இடம் அது. ஆஹா என்ன அற்புதமான இடமிது ஒளிந்து கொள்ள! எண்றெண்ணி ஒளிந்து கொண்டான் உன் இதயத்துக்குள் ! இறைவனையும் உன்னையும் தொந்தரவு செய்யும் வெளிஉலக ஆசைகளைத் தாண்டாமல், உள்ளுலகில் ஒளிந்திருக்கும் இறைவனைக் கண்டே பிடிக்க முடியாது - இது தந்திரம் படித்த மனதுக்கு இறைவன் வைத்த 'செக்' இறைவனைக் காட்ட முடியாது காண மட்டுமே முடியும் அதுவும் அவனே அவனுள் பார்க்கும்போது மாத்திரமே' ' B
நாத்திகனாயிருந்தாலென்ன ஆத்திகனாயிருந்தாலென்ன வெளியே பார்க்கும்வரை பதிலில்லை உள்ளே பார்க்கும் போதுதான் பதிலிருக்கு '.
- இருவருக்கும் குட்டு வைத்துக் கருத்துக் கதை கூறி முடித்தான் இறைவனைக் கண்ட ஆன்மீகன்.
செதுக்க வா மனதை! ?
- சிற்பி நெருங்காத வரை சும்மா கிடக்கும் ஒவ்வொரு பாறைக்குள்ளும் அழகிய சிற்பங்கள் ஒளிந்து கொண்டிருக்கிறது. சும்மாயிருக்கும் மனிதனின் மனம் சும்மாயிருக்கும் பாறை !
பாறையிலிருந்து பரவசச் சிலையைப் பிரசவிக்கும் சிற்பியின் உளி போன்றது மனித விழிப்புணர்வு.
- உணர்வெண்ணும் உளியினால் உருவாக்கிவிடலாம் ஆரோக்கிய மனதை ! பாறையைப் போன்றே மனதையும் செதுக்கி வடிவமைக்க முடியும் உணர்வெனும் உளியால்.
யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?
உங்களைப் போலவே
நாகரீக மணைவியிடமிருந்து கணவனுக்குக் கடிதம் 'உங்களின் கவனத்திற்கு ! நீங்கள் சொன்னதை நான் கேட்கவில்லை. கேட்பதில்லை' கணவனின் கடிதம் 'ஏன் ?' மனைவி கடிதம் 'ஏனென்றால் நானும் உங்களைப் போலவே, அதாவது, நான் நிறைய சொல்ல விரும்புகிறேன்.
ஆனால் செய்ய முயற்சிப்பதுகூட இல்லை
உன்னோடு நீ
தாவோ மாணவன்... என் வாழ்வு பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள். குரு... உன்னோடு நீ வாழ முடியாததால், வாழத் தெரியாததால் எல்லோரோடும் வாழ முயற்சித்து முயற்சித்துத் தோற்றுக் கொண்டேயிருக்கிறாய். ஆரம்பி வாழ்வை
உன்னோடு நீ - என ஆசிர்வதித்தார்.
யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?
சுக சொர்க்க வண்டி
ஏ மனிதா ! û சிங்கம் ரீ ! நீ சிங்கம் ! ஏ மனிதா ! நீ ராஜா ! ரூ ! நீ ராஜா ! கூஜா தூக்காதே உன் சோம்பேறித்தனத்திற்கு காரணம் நரியாகி விடுவாய் ! சிங்கமாக உழை ... ராஜாவாக வாழ்... இல்லாவிட்டால் வெம்பிப்போகும் மனது உன் தந்திர குணத்தால் சைத்தானைப் பார்க்க வேண்டுமா குடித்தனம் நடத்து சுறுசுறுப்பாகி விடாதே. நரகத்தை ருசிக்க வேண்டுமா! தப்பித் தவறியும் சுறுசுறுப்பாகி விடாதே. ஏ மனிதா! û இரண்டே வாய்ப்புகள்தான் சிங்கமாகு - இல்லை நரியாகுவாய். வாழ்வாய் இல்லை வீழ்வாய் ! சுறுசுறுப்பால் சிங்கமாகாவிடில் ஏமாற்றுவாய் இல்லை ஏமாறுவாய்.
ஏ மனிதா ! சுக சொர்க்கத்திற்கு நீ பிரயாணம் போய் வர புதுவண்டி ஒன்று பல காலமாய்க் காத்துக் கொண்டிருக்கிறது. அவ்வண்டியான் பெயர் தெரியுமா ... 'சுறுசுறுப்பு'.
விறுவிறு எனச் சுறுசுறுப்பு வண்டிஓட, சரசரவென வரவேண்டும் சக்தியெனும் எரிநெய் !
பிரயாணியும் தயார் ! எரிநெய்யும் தயார் ! வண்டியும் தயார் !
எதிலும் குறையில்லை இருந்தும் பயணமாகவில்லை சொர்க்கம் ...
அச்சச்சோ! அது குறையால் அல்ல.. எக்கச்சக்கமாக சோம்பேறித்தனம் நிறைந்ததால், உறைந்ததால் அடைத்துக் கொண்டது - உன் சக்தி ஒட்டப்பாதை.
ஏ மனிதா! 'ஓ' வென்று அழாதே. 'போ' என்று துரத்து சோம்பலை. 'வா'வென அழையாமல் வந்து சேரும் சக்தி.
சுக சொர்க்கம் சென்று சேர்க்கும் சுறுசுறுப்பாய்.
அன்று அங்கே
மைல் கல் மேல் மயில் அமர்ந்திருந்தது அற்புதம் !
அருகே குடிசையில் ...
கால்சட்டையணிந்த இளம்பஞ்சு சம்மணம் போட்டு முயல்போல் அமர்ந்திருந்தது தியானத்தில் ... அதுவும் அற்புதம் !
குடிசை வெளியே…
நாய் ஒன்று வாய் பிளந்து குரைத்தது வால் ஆட்டிக் கொண்டே தன் எஜமானனைப் பார்த்தது என்ன கிடைக்கும் என்று ! நம்பிக்கையாய் ...
குடிசை உள்ளே ...
தியானம் ஒன்று கற்றுக்கொண்டு செய்தான் தியானத்தால் என்னவோ கிடைக்கும் என்று ! நம்பிக்கையால் ...
பின் குறிப்பு :
ஒரு நாள் நம்பிக்கை நிஜமாகும் அந்நாளில் நாய்போல் குரைக்கும் மனம் வாலாட்ட ஆரம்பிக்கும் பின்னாளில் அதுவே அழகாய் ஆடும் மயில் போல !
வசை பாராட்டு
'கேட்டுங் கிடைக்கவில்லை பாராட்டு. கேட்காமலேயே கிடைத்தது திட்டு. எதிர்பாரா சமயம் கிடைத்த பாராட்டும் எதையோ எதிர்பார்க்கே உதிர்ந்தது திருட்டுத்தனமாய்! என்னவொரு கேவலச் சமுதாயமிது ? - என அவலத்தை அரற்றியவனிடம் – குரு 'உன்னை விடவா கேவலமானது சமுதாயம் ?' வருடும் பதிலை எதிர்பார்த்தவன் திடுக்கிட்டான். 'உன்னை விடப் பெரிய திருடன் எங்கே இருக்கிறான் காட்டேன்...' மீண்டும் கேட்டார் குரு. அம்பென வந்த முதல் கேள்வியையேயே கிரகிக்க முடியா நிலையில் கதாயுதமாக வந்து தாக்கிய இரண்டாவது கேள்வியில் குரு முகம் பார்க்க தைரியமில்லாததால் கிறங்கிப் போய் நிலம் பார்த்தான் இடைவெளிவிடாது தொடர்ந்த குரு 'தெரிந்து கொள்ளப்பா எப்போதுமே பாராட்டு பாழாக்கும். திட்டு திடப்படுத்தும்.
மிகைப்படுத்தப்பட்ட சரிகள் பாராட்டுகள் !
மிகைப்படுத்தப்பட்ட தவறுகள் திட்டுகள் !
தொடர்ந்து பாராட்டப்பட, பாழாய்ப்போன மனம் பறக்க ஆரம்பித்து விடும் – பிண் மறக்க ஆரம்பித்து விடும் தன் குறைகளை!
விளைவு – கொடிது ! குறை மாசக் குழந்தையாய்ச் சூம்பிப் போய் விடும் மனித குணம் !
தொடர்ந்து திட்டப்பட பாழாய்ப் போய்விட்ட மனம் ஏன் இவ்வளவு திட்டுகள் ? – எனத் தன்னையே திரும்பிப் பார்க்குங்கால் தெரிய ஆரம்பிக்கும் - உள்ளிருக்கும் தன் குறைகள்.
கேவலமும் திருட்டுத்தனமும் செறிவு மிகுந்திருக்கிறது வெளியில் இருப்பதைவிட உள்ளே.
அதனால்தான் எதிர்பார்க்கிறாய் பாராட்டை. எதிர்பார்க்கவேயில்லை திட்டுகளை !
நீ தலைகீழாய் இருப்பதால் தலைகீழாய்த் தெரிகிறது சமுதாயம்.
பாராட்டுகளை எதிர்பார்க்காதே பாராட்டாதே
வசைகளை எதிர்பார், பாராட்டு இரண்டில் ஒன்று செய் வளர்வாய் ! '
எனக் கூறி முடித்தார்.
உணர்ச்சிகள்
'போர்க்களத்தில் சட்டென்று இதயத்தில் இறங்கிய வாளாய் இறங்குகிறது -உணர்ச்சிகள் போர்க்களம் எவ்வளவோ மேல்,
உயிர் உடனே பிரிந்து விடுகிறது - ஆனால் இதயத்தில் இறங்கிய வாள் ! ! ! வாழ்க்கை எவ்வளவு கொடுமை ! உயிர் இருக்கும்வரை போராட்டம். நெஞ்சில் நுழைந்த உணர்ச்சிகள் ! ! ! உணர்ச்சிகளால்
பொங்கும் வேதனை என்று அடங்கும் ?'
உணர்ச்சிவசப்பட்டுக் கேட்ட சீடனுக்கு
'இது போன்ற உணர்ச்சிவசப்படுவதை என்று நிறுத்துகிறாயோ அன்று ! '
குருவின் பதிலில் நெஞ்சே நெறிகட்டிக் கொண்டதைபோல வலித்தது !
'வெந்த புண்ணிலே வேலா... வழி கேட்டால் வலி தருவதுதான் திருவிளையாடலா? - சீடன்
'புண்ணிலே சீழ் கோர்த்து விட்டது ... வலித்தாலும் சரி, வழி இதுவே சென்று வா' – குரு
யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?
வீட்டுக்குச் சென்றவன் எட்டி உதைத்தான் தூண்டப்பட்ட வேதனையில். துடிதுடித்துத் துள்ளி விழுந்தான். தூணில் உதைபட்ட கால் பெருவிரலில் இருந்த புண்ணால். விழுந்தவன் சிந்தித்தான் 'சின்ன உதைக்குத் துடித்துப் போனது தூணாலா? ? ? புண்ணாலா ? ? ? பதில் 'புண்ணால்தான்' - என்று வந்தது. அடுத்த நொடியே உதித்தது 'உணர்ச்சிகள் வேதனைப்படுத்துவது, உள்ளிருக்கும் புண்ணுக்குத் தியானமென்னும் மருந்திட்டான்
புண் மறைந்தது.
அதே உணர்ச்சிகள் நிறைந்த சமுதாயம் அதன்பின் ஒருமுறை கூடத் தீண்டவில்லை அவனை'.
காதல் இன்றி வாழலாம்
கல்லூரி மாணவன்: காதல் இன்றி வாழமுடியுமா? ஞானகுரு: கண்ணை மூடி கணவில் வாழும் மானிடா! தெரிந்து கொள் நீ செய்யும் காதல் இன்றி மணிதனால் வாழ முடியும். ஏற்கனவே அப்படித்தான் வாழ்கிறாய் காதல் பற்றி என்ன தெரியும் என கடவுள் கேட்டால் சில கற்பனைகள் சில சோகங்கள் சில சந்தோஷங்களைத் தாண்டி என்ன சொல்ல முடியும் உன்னால் காதல் என்பது கனவுகள் தாண்டிய பின் மலர்வது.
நீ வாழ்வது போலவே வாழ் ! காதல் இன்றி வாழ்வாய்.
முன் அல்ல.
Part 2: Who Asked You to Take Birth
வீட்டுக்குள் தொலைத்து விட்டேன்
சூரியன் சென்றுவிட்டானென்ற தைரியத்தில் தன்னை முழுமையாக வெளிப்படுத்திவிட்டது இருள். இருளில் இங்குமங்குமாய் எதையோ தேடிக் கொண்டிருந்தார் ஜென் பெண் ஞானியான சியோனோ ஆர்வமிகுதியால் அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் 'என்ன தேடுகிறாய்? ஒரு மணி நேரமாய்' எனக் கேட்டார்கள். தேடுவது எதுவென்றே தெரியாமல் – நீ இருளில் தேடுவது முட்டாள்தனமில்லை? ' எனக் கேட்டவர்களிடம், 'எதுவென்றே தெரியாமல் முழு சுகத்தை எங்கெங்கோ நிம்மதி திருப்தி அமைதி வடிவில் கிடைக்காதா – என்று தேடுவது முட்டாள்தனமில்லையா? – என்ற சியானோவின் கேள்வி சிலிர்க்க வைத்தது. அத்தோடு சிதறிப் போனார்கள் அவரவர் வீட்டுக்கு. சீர்மிகு சிந்தனையில் மூழ்கியவர்களாய் அடுத்த நாள் காலை ... சூரியன் வந்துவிட்டானே என்ற பயத்தில் தன்னை முழுழமையாக மறைத்துக் கொண்டது இருள். ' காலை வெளிச்சத்தில் உற்சாகத்தின் உச்சியில் துள்ளலோடு மீண்டும் எதையோ தேடிக்கொண்டிருந்த குரு சியானோவிடம் 'இப்போது என்ன தேடுகிறீர்கள்' அவர்கள் கேட்டதற்கு
'என் வீட்டுக்குள்' என் வைர மோதிரத்தைத் தொலைத்து விட்டேன் அதைக் கண்டுபிடிக்கவே நம்பிக்கையோடு இங்கு தேடிக் கொண்டிருக்கிறேன்'
குரு சியானோ தெளிந்த பதிலால்
புதுக் கேள்வியொன்று பிறந்தது அவர்களுக்குள். அதனால் கேட்டார்கள் மீண்டும்.
'மோதிரம் தொலைத்ததும் உள்ளே தொலைந்த மோதிரமிருப்பதும் உள்ளே -இதில் வெளியே தேடுவானேன் ... எவ்விதத்திலாவது இது புத்திசாலித்தனமாகுமா? எனக் கேட்டவர்களிடம்
முழுக்கத்தைத் தொலைத்ததும் உள்ளே தொலைந்து போன முழுகுகமிருப்பதும் உள்ளே - இதில் வெளியே சுகம் தேடி அலைவதேன் எவ்விதக்கிலாவது இது புத்திசாலித்தனமாகுமோ?' என்ற
சியானோவின் கேள்வியால், சிரிப்பின் கேலியை நிறுத்திச் சிந்தித்தார்கள்.
சிந்தித்தவர்களின் சிந்தனையைத் தடுத்து 'அகத்தில் சுகம் அடைந்தவனே இகத்தில் சுகம் அடைய முடியும் முழுமையாக ' எனக்கூறி கூரைவீட்டுக்குள்ளே புகுந்து கொண்டார் சியானோ.
நிஜம் தெரியுமா
ஞானக்கருத்துக்கள் தியானம் செய்தவனிடம் சொன்னது ... நிம்மதிகளை மனம் தேடுதென உன்னிடம் சொல்லவந்தேன். எனவே, தியானம் செய்! கண்டுகொள்ள, தியானம் அந்தத் தியானியிடமே சொன்னது ... பார்! மனிதா பார்! உன் உடலென்னும் தொட்டிக்குள் தத்தித் தத்தளிக்குது உயிர் ! அதைப் பார்! விட்டுவிட்டு வாட்டும் உணர்ச்சிப் பகிவுகள் உள் மனமென்னும் ஏட்டில் ஏகமாயிருக்கிறதே ! அதைப் பார். கோபக் கனலையும் துக்க புகையையும் கக்க தயாராயிருக்கும் தூங்கும் எரிமலையான உன் குணக்குன்றின் முகடு தெரிகிறதே அதைப் பார். பின் குறிப்பு: உள்ளே இவ்வளவும் நிகழ்! எதுவும் நிகழாதது போல் ... அதாவது இப்போது நீங்கள் எப்படி அமைதியாய் இருப்பதாய் உங்களுக்குத் தெரிகிறதோ ... அப்படி அமைதியாய்த் தெரிந்தான் அந்தத் தியானி – பார்க்க !
நரக வாசல்
நிட்டி 'சௌக்கியமா!' முகுந்த் 'ஏதோ பரவாயில்லை'. நிட்டி 'ஏதோ சௌக்கியம் பரவாயில்லை எனக் சொல்வது வாழ்க்கையல்ல நரகவாசல்'.
நீ வேறு
மனம் வேறு, மாயை!
சீடன்: மனதை என்ன செய்ய ? குரு: உன் மனதைத் தாலாட்டினால்தான் மனம் உன்னைத் தாலாட்டும் பாவம் ! அப்பாவி மணதை நீதான் தாலாட்ட வேண்டும். நீ என்பது மனதுதானே உன்னைத் தாலாட்டும் ! உன்னைத் தாலாட்டத் தாலாட்ட உனக்கும் மனதுக்கும் உள்ள இடைவெளி பள்ளத்தாக்கு பாலமாகும் பாலம் பாதையாகும் பாதை அடியாகும் அடி ஜானகி... உனக்கும் மனதுக்கும் இடையில் 'வெளி' இல்லாது போகும். அப்போது உன்னால் மனமும் மனதால் நீயும் சுகமாயிருப்பீர்கள். வித்தியாசமில்லாததால் சுகித்திருப்பீர்கள். பின்குறிப்பு : மனதை உடலும் உடலை மனதும் கண்டுகொள்ளாதே - உன் கஷ்டங்களில் கரு. முதலில் உங்களைச் சீராட்ட, பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்.
புரிகிறதா என் தவிப்பு
இப்படிக்கு, நான் ஆன்மீகன் பேசுகிறேன் ... என் பெயர் நிட்டி ராஜன். ஆச்சரியமாகப் பார்த்தேன் ! குருவின். . . நடையில் நடனம் ! குரலில் கவிதை ! கண்ணில் கடவுள் ! இதையெல்லாம் தாண்டி என்னையும் மீறிய ஒர் ஈர்ப்பு கன்றுக் குட்டியாகக் கட்டிப் போட்டது தியானத்தில் என்னை. அழுத்திப் பார்த்தால் தெரியும் தசையும் எலும்பும் தாண்டிய ஒரு மண்டலத்தையே என்னுள் கண்டேன் குரு அருகே (அ) முன்னிலையில் தியானித்ததில் நரம்பு மண்டலத்தையும் இரத்த ஒட்ட மண்டலத்தையும் தாண்டிய ஒன்றுண்டு. அதுதானடா சக்தி ஒட்ட மண்டலம் - என என் புத்திசாலி நண்பனொருவன் சொல்லக் கேட்டிருக்கிறேன். இன்று தியானத்தில் கண்டேன் உணர்ந்தேன் சக்தி ஒட்ட மண்டலத்தை. என்ன சுகமிகு நிமிடங்கள் அவை ! !
முக்தி விழிச்சாலையான நிலையான சக்தி ஒட்டப்பாதைகளை என்னுள் உணர்ந்த நிமிடத்தில் எப்படி... வர்ணிப்பேன்!!!
தேடிப் தேடிப் பார்க்கிறேண் வார்த்தைகளே கிடைக்கவில்லை இருந்தும் முயற்சிக்கிறேன் சுகம் மிகு நிமிடங்களை விளக்க ...
அது தென்றலைவிட இதமாய் வருடிவிட்டது உள்ளுக்குள்ளே ...
அது சுகமென நாம் கண்டிருப்பவைகளைச் சுக்கு நூறாய் உடைக்குமளவுக்குப் பெரிய சுகம் ...
அது வாசனைத் திரவியத்தைவிட இனிமையான உணர்வைப் பொங்கச் செய்தது ...
அது
இவ்வுலகமே நம் சொந்தமானாலும் கிடைக்காத பெரும் திருப்தி ... மன்னிக்கவும் தொடர்ந்து பொய்களே சொல்லியிருக்கிறேன்
உண்மையாகச் சொன்னால் சொல்ல முடியவில்லை என்னால், தியானத்தில் கிடைத்த ஆழ்ந்த அனுபவத்தை !
என் தவிப்பு உங்களுக்குப் புரிகிறதா?
இல்லை நிச்சயமாக உங்களுக்குப் புரியாது என்னை போன்று - தியானம் செய்யாதவரை உங்களுக்குப் புரியவே புரியாது.
பின் குறிப்பு:
சுகச் சுரங்கம் உங்களுக்குள் இருக்கிறது அதற்கு நானே சாட்சி.
ஞானம் புரிபட வேண்டியது
'ஞானம் என்றால் என்ன ?' 'அது புரியாதப்பா. விட்டுவிடு' இல்லையில்லை. சொல்லுங்கள். 'ஞானக் கோணத்தில் ... அழகாயிருக்கிறது எல்லா அசிங்கங்களும். அசிங்கமாயிருக்கிறது எல்லா அழகுகளும் புரிந்ததா? ஞானம் பற்றி…'
જ குரனம் என்பது தியானம் செய்யச் செய்ய வரும் விளைவு, கேட்கக் கேட்க வரும் விளைவு அல்ல. ક્ಕಾ
உள்ளிருக்கும் பெண்
'எப்போதும் ஆண் பெண்ணையே பெண் ஆணையே அடையத் துடிப்பது இயற்கையா? செயற்கையா ?' வெட்கம் மீறி வெட்டவெளியில் துணிந்து விட்டான்! கேட்டுவிட்டான்! சீடன். ்துடிப்பு இயற்கையுமல்ல. செயற்கையுமல்ல. அது இயல்பு. ஆணுக்குள்ளிருக்கும் பெண் - வெளிப் பெண்ணையும், பெண்ணுக்குள்ளிருக்கும் ஆண் – வெளி ஆணையும் அடையத் துடிப்பது இயல்பு. காரணம் ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஓர் பெண்ணும் பெண்ணுக்குள் ஓர் ஆணும் ஒளிந்து கொண்டிருப்பது உண்மையென்ற இயற்கையைச் செயற்கையாக நீ மறந்து விட்டதுதான் - இயல்பாகக் கூறினார் குரு.
எப்படி நீ துன்பமாகவே இருக்கிறாய் ?
'துன்பத்தையே மனிதன் அனுபவிப்பது மனிதனைப் படைத்த இறைவனால்தானே! கேட்ட பக்தனுக்கு'
'மனிதன் படைத்த மனதின் பக்குவமே காரணகர்த்தா!' குரு.
'அப்படியா!... எப்படி?' என்று மீண்டும் கேட்ட பக்தனுக்கு
'இரண்டே பக்குவம்தான் சாத்தியம் துன்பத்தையே அனுபவிக்கும் பக்குவம் ஆனந்தத்தையே அனுபவிக்கும் பக்கும்'.
மனதின் பக்குவத்திற்கேற்றபடி துன்பத்தில் கூட ஆனந்தமாக இருக்கலாம்.
இல்லாவிட்டால் சொர்க்கத்தில் கூடச் சுகத்தை அனுபவிக்கத் தெரியாத 'துன்ப மனப்பக்குவம்' - ஏதாவதொரு காரணங் கண்டுபிடித்துத் துன்பப்படுத்திக் கொண்டேயிருக்கும்.
கனவே கலையாதே
சீடன்: ஏன் கனவுகள் கலைவதில்லை. குரு: கனவே கலையாதே என அலையாதே கனவு கலையாகணும் இல்லை, கலையணும். இரண்டும் உன்னைக் கடவுளிடம் கூட்டிச் செல்லும்.
உயரப் பறக்க தாழாதே
श्री
| நீங்கள் |
|---|
| ஏறினால் |
| இறக்கப்படுவீர்கள். |
| இறங்கினால் |
| ஏற்றப்படுவீர்கள் |
| உங்களை |
| உயர்த்தினால் |
| தாழ்த்தப்படுவீர்கள் |
| தாழ்ந்தால் |
| உயர்த்தப்படுவீர்கள். |
| - இது உலக நாடக மேடை விதி. |
| உயரப் பறக்க |
| தாழ நினைக்காதே ! |
| உயர்ந்தாலும் தாழ்ந்து போவாய் |
| – இது வாழ்க்கை விதி |
| உயர்ந்தாலும் |
| தாழ்ந்தாலும் |
| ஒரே மாதிரி இருக்கிறதா |
| உன் ரம்யமான உள்ளுணர்வு? |
| இருந்தால் |
| வாழ ஆரம்பி ! |
| எங்குச் சென்றாலும் |
| என்ன ஆனாலும், |
| நிம்மதியாயிருப்பாய் |
– இது கடவுள் விதி.
உயரலாம் ! தாழலாம் வாழலாம் ! எல்லாம் சாத்தியம் உன்னுள். - இது தியான விதி.
விதி
சொன்னதோடு நில்லாது உன் விதியையே திருத்தி எழுதும் தியானம்.
சதி விலக, விதி விடிய, மதி கொடி சூட ரம்மியமாயிரு உன்னுள் ! உயரப் பறந்தாலும் தாழக் கிடந்தாலும். எனவே ரம்மியமாயிரு.
ஆசைப் பாம்புகள்
ஆசை தவறா ... ஆசையில்லாமல் எப்படி வாழ்வதாம் ? ஆசை தவறுதானே... அப்பப்பா ஆட்டிப் படைக்கிறதே இந்த ஆசைகள்... இப்படி ஓசைப்படாமல் உள்ளே புலம்புவர்களுக்கு மருந்திடும் இசைமிகு வார்த்தைகள் ...
குரு சிஷ்யன்
'ஆசை தவறா' 'இல்லை தவறில்லை' 'அன்று ஆசைப்படுவது தவறென்றீர்களே! ' 'அன்று மட்டுமில்லை இன்றும் சொல்கிறேன் ஆசைப்படுவது தவறு' 'அப்போ! கொஞ்சநேரம்முன் ஆசை தவறில்லை என்றீர்களே'
'இப்போதும் சொல்கிறேன் ஆசை தவறில்லை'
'ஐயய்யோ!
என்ன சாமி குழப்பமாயிருக்கிறதே ஒன்றுமே புரியலையே ! '
மீண்டும் சொல்கிறேன் கேள்! ஆசை தவறில்லை ஆசைப்படுவது தவறு'
『『『』『『』『『』『『』『『』『『』『『』『』『『』『』『』『』『』『』『』『』『』『『』『『』『』『』『』『『』『『』『『』『』『『』『』『『』『『』『『』『』『『』『『』『』『『』『『』『『』『』『』『』『『』『』『『』『『』『『』『』『『』『』『』『』『』『』『』『』『』『』『』『』『』『』『』『『』『』『』『『』『』 ..... ....
'இப்பிரபஞ்சத்தில் நீ வாழ உரிமையிருக்கிறது அதேபோல் ஆசைக்கும் வாழ உரிமையிருக்கிறது 'தெய்வத்தாய்' தடுப்பதில்லை !
'என்ன சொல்கிறீர்கள் ? ஆசையை ஒரு தனிப் பொருளாய்ச் சித்தரிக்கிறீர்கள்'
'அம் ! நெருப்பு போல் காற்று போல் சக்தியோல்
ஆசையும் தனியே ! இருந்தும் இல்லாதிருக்கும் அது வாழ்கிறது'
。。。。 .... " ....
'மந்தத் தன்மையிலிருப்பவன் வலியச் சென்று ஆசைகளை ஏற்றிக் கொள்கிறான்.
மனப் போதைக்காக -ஏறியதும் அவை ஆட்டிப்படைக்கின்றன அவனையே! ' விழிப்புணர்வு குறையப் பெற்றிருப்பவனுக்குள் வீரியமான ஆசைகள் புகுந்து விடுகிறது. சில நேரம் புகுத்தப்படுகிறது.
இது புரியா மனிதன் இந்த ஆசைகளைத் தன் ஆசைகளாய்த் தத்தெடுத்து பால் வைத்து முட்டை வைத்து வளர்க்கிறான் ! வளர்கிறது ! ஆசைப்படுகிறான்.
ஆசைகளுக்காய் வாழ ஆரம்பித்து தனக்காய் வாழப் பிறந்ததை மறந்து விட்டான்.
.............................................................................................................................................................................. ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
'அதனால்தான் ஆசைப்படுவது தவறு ஆசை தவறில்லை.
உனக்காய் வாழ உனக்கென ஒரு சில ஆசைகள் எடுத்து வந்தாய் – நீ உடல் எடுக்கும்போது.
அந்த ஆசைகள் அனுபவிக்கப்பட வேண்டும். அனுபவித்ததும் ஆசைப் பாம்புகளால் பின்னப்பட்ட வலையிலிருந்து விடுதலையடைவாய்
சுதந்திரமடைவாய்
ஆனந்தமடைவாய்'
'அப்படியா சொல்கிறீர்கள்! எனக்காய் வாழ நான் எடுத்து வந்த ஆசைகளை ஆசைப் பாம்புகளிலிருந்து இனங்காணுவது எப்படி ?' 'எளிது
மிக எளிது !
யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?
எடுத்து வந்த ஆசைகளில்.. எது உன்னை ஒருமுறையாவது முழுதிருப்தியுறச் செய்தது ?
எது உன்னை மீண்டும் மீண்டும் 'என்னை அனுபவி' 'என்னை அனுபவி' எனத் தூண்டவில்லை ?
அதுவே ! அதுவே ! உன் ஆசைகள்'
★★★
ஒரு தாவோ கீதம்… ஆசைகள் விடாது கொக்கிப் பிடிக்கும் உடும்புகள் நீ உதறாத வரை நீ உலுங்காத வரை. கவனி ! கவனி ! கவனி ! உடும்பும் உலுக்கப்படும் நீயும் சுதந்திரம் பெறுவாய்.
நீ தீ மான்
| C | மனிதா! மனிதா! |
|---|---|
| முரட்டுக்காளையாகத் துடிக்காதே! தீ போல எரிந்து விழாதே ! | |
| ஏன் ? | |
| ஏனென்றால் நீ தீயல்ல நீ துள்ளியோடும் கஸ்தூரி மான்! | |
| C | இறுக்கமானவனாகாதே, இளகியவனாயிரு. |
| தலைக்குக் கனம் சேர்க்காதே உள்ளத்துக் குணம் சேர். |
ஜென் சீடன்: சின்னத் துரோகம் செய்ய, பெரிய புண்ணியம் கிடைக்கும் அது என்ன ? இன்னொரு ஜென் சீடன்: விழித்துக் கொல் ! இன்னொரு ஜென் சீடன் : எதை ? ஜென் சீடன் : அகங்காரத்தை.
C
மனதை வைத்து வித்தை காட்டுபவர்கள் மனிதர்கள். அந்த மனதுக்கே வித்தை காட்டியவர்கள் ஞானிகள்
-જિ
வித்தியாசம் சொல்க ஞானி, மனிதன் கேள்! வித்தியாசம் இரண்டை... 'செத்துப் பிழைத்தவர்' ஞானி. 'பிழைத்தும் சாகிறவர்' மனிதர்
(நாக )ரிக மனம்
மனிதன் மயங்கும் மனத்திற்கே மயங்குவதேன் ? – முதல் ஜென்சீடன் 'வாசமில்லா மலரானாலும் அழகாயிருக்கிறேனே' என்றது. பிளாஸ்டிக் ரோஜாவான, ராஜாவென நம்பும் நாகரிக மனம் – இரண்டாவது ஜென்சீடன்
பொய்களைத் தின்று வாழும் மனம்
நிட்டிராஜன் கேட்டது: என்னைத் தவறுகளோடு ஏற்றுக்கொள்ளுங்கள் கெஞ்சுகிறான் மனிதன் ஏன் ? அகங்காரம் சொன்னது: பொய்களைப் பறிக்காதீர்கள் நான் செத்து விடுவேன் நிட்டிராஜன் கேட்டது: அடுத்தவர் தவறுகள் மட்டும் பளிச்செனத் தெரிகிறதே ஏன் ?
நிஜமாய்த் தெரிவது எல்லாமே பொய்கள்
ஆத்மா சொன்னது:
நிட்டிராஜன் கேட்டது:
ஞானிகள் சொல்வதில்லை. உண்மைகள் எப்போதும். ஏன்?
புத்தி சொன்னது:
உண்மை பேசுபவனுக்கு ... மறுஉலகில் இடமுண்டு
ஆனால் இவ்வுலகில்
சிலுவையில்தான் இடமுண்டு கண்டவர் விண்டதில்லை இது பொய். கண்டவர் விண்டால் விண்டு போவாய்.... அடுத்து விண்டவரைக் கொன்றுவிடுவாய்... அதனால்தான் கண்டவர் விண்டதில்லை
- இது மெய்.
அஷ்ட்டவக்ர கீழை குடும்பஸ்கரால் படிக்கப்படக் கூடாது என்பது சதியல்ல அது மதி. 'அவ்வளவு பெரிய உண்மைகளைப் பெற என்ன செய்ய வேண்டும் உயிரையா ? உடலையா ? எதைவிட வேண்டும் ?' எனப் பயம் துறந்த துறவிக்கு மட்டுமே அந்தக் கீதைப் பாதை சொந்தம் உண்மை அறிய உண்மையில் உன் மையம் வலுப்பெற வேண்டும்.
ஒரு குரு பேச்சு
| t | கேட்டேன் | |
|---|---|---|
| ஆசை மனது | ||
| தந்தான் | ||
| இறைவன் | – பக்தன் | |
| t | இதை விடப் | |
| பெரிய தண்டனை | ||
| தரமுடியாது போ! | - குரு |
ન્જિ வாழ்வின் ஒரு துளி இன்பம் வாழ்வே அளவிலா நித்ய ஆனந்தம் ಟ್
எடையை மனம் தாங்காது
'இறுதி உண்மை... எது ? என்ன ? எங்கே ? எப்படியிருக்கும் ? எப்படியடைவது ? ' ஏராளமாய்க் கேட்டவனுக்கு 'கண்ணை மூடு' என்ற கட்டளை வந்தது குருவிடமிருந்து ... 'உண்மையாம். உண்மை... ஹா ஹா ஹா...' வெடித்துச் சிரித்த குரு... உண்மையென்ற வார்த்தையே பொய். 'இது உண்மை' என்று காட்ட அது பொருளல்ல. பொருள்! உண்மையின் பொருள் உறைந்து போயிருக்கிறது உள்ளுக்குள் வெகு காலமாய் ! உணரத்தான் முடியும் உரைக்க முடியாது. என்ற குரு, தொடர்ந்து 'சீடா!... உரைக்க முடியா உண்மைக்கு உவமை சொல்வேன், கேளடா!'
| ா | ஒளியின் |
|---|---|
| உண்மையான நிறம் | |
| இருள் | |
| t | ஒலியின் |
| உண்மையான சப்தம் | |
| நிசப்தம் | |
| t | பேச்சின் |
| உண்மையான உணர்வடிவம் | |
| மௌனம். | |
| t | உண்மையின் |
| பிரயாண தூரம் | |
| இங்கேயே இதற்குள்ளேயே | |
| நீண்டிருக்கிறது. | |
| t | உண்மையை |
| அடைய ஆகுங்காலம் | |
| இப்பொழுதில் அக்கணத்தில் | |
| ஒளிந்து கொண்டிருக்கிறது. | |
| ா | உண்மையான |
| உயரம் | |
| மிக மிக ஆழமானது. | |
| t | உலகிற்கே அதிபதி, |
| அடுத்த வேளை உணவு | |
| எங்கிருந்து வருமென்று | |
| தெரியாதவனே! | |
| அதைப் பற்றிக் கவலைப்படாதவனே! | |
| இது உண்மை | |
| 0 | பணக்காரனைப் போன்ற |
| பிச்சைக்காரன் இல்லை | |
| பிச்சைக்காரனைப் போன்ற | |
| பணக்காரன் இல்லை (பிரபஞ்சத்தில் ) | |
| இதுவும் உண்மையே ! | |
| C | உண்மையைச் சொன்னால் |
| உண்மை என்பதே | |
| உண்மையல்ல. | |
| இதுதானடா இறுதி உண்மை | |
| புரிந்ததா? என்றார் செல்லமாய். | |
| 'புரிந்தது!' என்றான் சீடன். |
'என்ன புரிந்தது ! ? ! ? ? ? ? ' ஆச்சரியமானார் குரு. உண்மை புரியவில்லை என்பது மட்டும் புரிந்தது. 'உண்மை உண்மையிலேயே உயர்ந்தது, என்பது மட்டும் உணர்ந்தது' என்றான் சீடன் நம்பிக்கையோடு.
பின் குறிப்பு:
உண்மையாய் உண்மை இவ்வளவு கடினமானதல்ல. இவ்வளவு எளிமைமிகு உண்மையை ; உண்மையாய் விளக்க முயற்சித்தால் ... வரும் விளக்கமே கடினமாய்த் தெரிகிறது. கடினமாய்த் தெரிந்தாலும், உண்மை உண்மையில் மிக எளிமையானதே !
தியானம் செய்வது எப்படி ?
இந்த தலைப்புக்கு பதில் தெரிந்து கொள்ள இன்று பலர் ஆர்வமாக இருக்கிறார்கள்.
காரணம், இவர்கள் தியானத்தில் அமர்ந்தால் சாதாரண நேரங்களில் அதிகமான எண்ணங்கள் வருவது போலவே தோன்றுவதுதான்.
அப்படித் தோன்றக் காரணம், அப்போதுதான் தங்கள் வாழ்வில் முதல் முறையாகத் தன்னுள் தொடர்ந்து ஒடிக்கொண்டிருக்கும் மனக்குதிரையை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.
'இயல்பாக இருக்கிறேன்' என்றெண்ணிக் கொண்டிருந்தவர்களின் (உள்ளே இருக்கும்) 'இயல்பற்ற தன்மைதான்' தியானத்தில் அமரும்போது தெரியவரும்.
ஒரு சுவராஸ்யமான சம்பவம்...
Bharat சுதந்திரம் பெற்ற இருப்பத்தைந்தாவது நாள், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் நோக்கி, ஆந்திராவில் இருந்து ஆன்ம சுதந்திரம் தேடி தியானம் கற்க வந்திருந்தான் ஒரு இளைஞன்.
என்றும் போல் அன்றும் காலார நடந்துவர ரமண மகரிஷி புறப்பட்டு விட்டிருந்தார்.
உள்ளே சுதந்திரத் தீ கொழுந்துவிட்டு எரிவதால் நிமிட நேரத்தையும் வீணாக்க அந்த இளைஞன் தயாராக இல்லை.
ரமண மகரிஷியை வழிமறித்து, 'சாமி, நான் தியானம் செய்வதற்காக வெகுதூரத்திலிருந்து புறப்பட்டு வந்திருக்கிரேன்.
ஆஸ்ரமத்தில் தியானம் செய்ய உகந்த இடம் எது என்று எனக்குத் தெரியவில்லை. தாங்கள் எங்கே தியானம் செய்ய சொல்கிறீர்களோ அங்கேயே செய்கிறேன்' என்று கேட்டுக் கொண்டான் இளைஞன்.
கேட்டவனின் கேள்வியை ரமணர் கண்டுகொண்ட மாதிரியே காண்பிக்கவில்லை. அவரின் உடல் அசைவுகள் அப்படி இருந்தது.
ரமணா சிரித்துக் கொண்டே கால்களையும், கணுக்களையும் தேய்த்துக் கொண்டு நடப்பதற்குப் புறப்பட்டார்.
இளைஞனின் பொறுமை சோதிக்கப்பட்டது.
ரமணர் தமது ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு கேள்வி கேட்ட இளைஞன் முன்னே நிற்க! பின்னால் இருந்தவர்களை நோக்கித் திரும்பி, எந்த இடத்தில் தியானம் செய்ய வேண்டுமென்று கேட்டால் என்ன சொல்வது ?! தான் இருக்கும்' இடத்திலேயே இருப்பது தான் நல்லது. மிகச்சரியானது. அந்த இடத்திலேயே இருந்து தியானம் செய்" என்ற வரிகளைச் சிரித்துக் கொண்டே உதிர்த்துவிட்டு நகர்ந்தார்.
கேள்விக்கு கிடைத்த பதில் புரியாததால் இளைஞன் எரிச்சலடைந்து விட்டான்.
பக்கத்திலிருந்தவர்களிடம், என்னங்க இவர்? நீ இருக்கும் இடத்திலேயே இரு என்கிறார். இதைக் கேட்கவா நான் ஆந்திராவிலிருந்து வந்தேன்.
இவர் பெரியவர், அதனால் எனக்கு தகுந்த இடம் பார்த்துச் சொல்வாரென்று கேட்டால்,
'தானிருக்கும் இடத்திலேயே இரு' என்கிறாரே! 'இந்த சோபாவின் அருகில் நான் இருக்கிறேன். அப்போ நான் இங்கேயே இருக்கட்டும் என்றா அர்த்தம் கொள்வது ?' இதென்ன வீண் விளையாட்டு! என்று நொந்து போய் பேசினான்.
ரமண மகரிஷி எவ்வளவு பெரிய ரகசியத்தை மிக எளிமைப்படுத்தி அவனிடம் சொன்னார் என்பது அப்போது அவனுக்குப் புரியவில்லை. பின் பக்தா் ஒருவர் அந்த இளைஞனை தனியே அழைத்துச் சென்று,
'நண்பா, பகவான் தமாஷாகச் சொன்னாலும் சரி, விளையாட்டாகச் சொன்னாலும் சரி, அவர் பேசுவது சத்தியத்தை மட்டுமே.
'நான்' என்கிற அகங்காரம் எங்கு இருந்து கொண்டிருக்கிறதோ அதுவே 'நீ' இருக்கும் இடம்.
இருக்கும் அகங்காரம் இடத்தை விழிப்புணர்வோடு சென்று, பார்வையாளனாக விலகி நின்று பார்த்துக் கொண்ருந்தலே தியானம்.
(அகங்காரம்) இருக்கும் இடத்தில் விழிப்புணா்வோடு இருப்பதுதான் தியானம்.
அதை விட்டுவிட்டு, இங்கே உட்கார்ந்தால் நன்றாக தியானம் செய்ய முடியுமா ? அங்கே உட்காரலாமா? என்று கேட்பது எல்லாம் நேர விரையம்' என்று விளக்கம் கூறி முடித்தார்.
'ஓவேறா! 'தியானம்' என்ற பெயரில் தியானத்தில் ஈடுபடாமல் வெளிவிஷயங்களில் நான்
விளையாட்டுத்தனமாக இருப்பதைத்தான் மகரிஷி விளையாட்டாய் குத்திக் காண்பித்திருக்கிறார்' என்பதை இளைஞன் உடனேயே புரிந்து கொண்டான்.
பிறகு, தியானத்தில் முழுமையாக ஈடுபட்டான்.
தியானத்தில் ஈடுபடுவது சுலபம்.
சில சூட்சுமங்களை சரியாகப் புரிந்து கொண்டால் தியானத்தில் வேகமாக முன்னேறலாம்.
'உங்களுக்குள்ளே இருக்கும் சலனமற்ற அமைதியான உணர்வு நோக்கி ஊடுருவுங்கள்'
இதைப் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்தால் ...
ஒரு பார்வையாளனாக மாத்திரம் உங்கள் -எண்ணங்களை, மனதைப் 'பார்க்க' முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.
இதை இன்னும் எல்லோரும் நன்றாகப் புரிந்து கொள்ள ஒரு உதாரணம்.
சினிமாவைத் தியேட்டரில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். சினிமாவில் உங்களுக்குப் பிடித்த காட்சி ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கிறது என்பதற்காக அதே காட்சிகள் தொடர்ந்து வராது.
உங்களுக்குப் அதேபோல பிடிக்காத ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு காட்சி பிடிக்கவில்லை என்பதற்காக சினிமாவின் காட்சிகளை அந்த நேரம் தடுக்க முடியாது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
இந்த படம் சரியில்லை, போர் அடிக்கிறது என்பதற்காக அந்த நிமிடமே புது சினிமாவை அங்கே திரையிட முடியுமா? முடியாது.
சினிமாவில் என்ன வெந்தாலும் வரட்டும் என்று மூன்று மணி நேரம் உட்கார்ந்து, வெறுமனே பார்த்துவிட்டுத் தானே வருவீர்கள்.
அதே காரியத்தைத் தியானத்திலும் செய்யுங்கள். சும்மா பாருங்கள்.
சாட்சியாகப் பாருங்கள்.
30 நிமிடம் உள்ளேயே ஒரு சினிமாவைப் பாருங்கள்.
ஒருவேளை வந்த எண்ணங்கள் உங்களுக்கு பிடித்த எண்ணங்கள் என்பதற்காக, அந்த எண்ணங்களை, காட்சிகளை நிறுத்த வேண்டாம்.
வந்த எண்ணங்கள் உங்களுக்கு பிடித்த எண்ணங்கள் என்பதற்காக, அந்த எண்ணங்களை, காட்சி களைத் தொடர வேண்டாம்.
புதிதாக எந்த ஒரு எண்ணத்தையோ, காட்சியையோ உருவாக்க முயற்சிக்க வேண்டாம். அவ்வளவுதான்.
இந்த மூன்று விதிகளைக் கடைப்பிடித்தால் போதும், சாட்சியாகப் பார்ப்பது சுலபமாகி விடும்.
தியானத்தில் ஆழ்ந்து நன்றாக ஈடுபட முடியும்.
தியானித்து பாருங்கள்! பலன் புரியும்.
"இப்போது வாழ்வது போல் குறைந்தது ஆயிரம் மடங்கு ஆனந்தமாய் வாழ உரிமை உங்களுக்கும் உண்டு"
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM