Chapter 43

உங்களை நிரைவுசெய்ய பிரபஞ்சம் காத்துக் கொண்டிருக்கிறது

1 sections

உங்களை நிரைவுசெய்ய பிரபஞ்சம் காத்துக் கொண்டிருக்கிறது

பிரபஞ்சம் ஒருபோதும் உங்கள் பிரார்த்தனைகளைக் கேட்பதில்லை என்றோ அல்லது உங்கள் கனவுகளைப்பற்றி கவலைப்படுவதில்லை என்றோ நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் கனவு காணத்தொடங்கியவுடன், உங்களுடன் இணைந்து பிரபஞ்சமும் கனவு காணத்தொடங்கிவிடுகிறது. நீங்கள் கனவு காணத்தொடங்கியவுடன், வாழ்க்கையும் உங்களைப் பற்றிய தன்னுடைய கனவுகளைக் கட்டமைக்க ஆரம்பித்து விடுகிறது. பிரபஞ்சம் உங்களை நிறைவுசெய்யக் காத்திருக்கிறது. அது உங்கள் மூலமாகக் கனவு காண்கிறது. அவற்றை நிதர்சனமாக்குவதற்கு உங்களுக்காக அது ஏங்குகிறது. ஒரு தாய் தன்னுடைய குழந்தை ஒரு ஆணாகவோ, பெண்ணாகவோ ஆவதற்கு எப்படி ஏங்குவாளோ, அப்படி நீங்கள் உங்கள் உச்சபட்ச சாத்தியக்கூறாக மாறுவதற்கும், உங்களுடைய சொந்த இயல்பாக மாறுவதற்கும் பிரபஞ்சம் ஏங்குகிறது. வாழ்க்கை உங்களுக்காகக் கொண்டிருக்கும் கனவுகள், உங்களுக்காக நீங்கள் கொள்ள முடிந்த கனவுகளைக் காட்டிலும் நூறு மடங்கு பெரியது.

அதனால் உங்களுடைய சிறந்த சாத்தியக் கூறுகளைக் கனவு காணுங்கள்: அவற்றைப் பிரகடனப்படுத்துங்கள். உங்கள் பிரகடனங்கள் ஏற்கெனவே நிதர்சனமாகிவிட்டதாகவே நினைக்கவும், வாழவும், செயல்படவும் ஆரம்பியுங்கள். அதைச் செய்யுங்கள்! பிறகு, நீங்கள் உங்களுடைய வார்த்தைகளின் சக்தியையும், சிந்தனை சக்தியையும், உணர்வின் சக்தியையும், வாழ்க்கையின் சக்தியையும் புரிந்துகொள்வீர்கள்! இதுவே தர்மம் - உங்களை,

ப்ரபத்ச ஓட்டத்தோடு ஒருங்க்ணைத்துக் கொள்ளதல்.