உங்கள் சிந்தனையில் சிரத்தையை வரவழைத்து வாருங்கள்
உங்கள் சிந்தனையில் சிரத்தையை வரவழைத்து வாருங்கள்
சிந்தனையில் சிரத்தையை எடுத்து வருதலில் இரண்டு படிகள் உள்ளன. முதலில், நீங்கள் உண்மையிலேயே எதை விரும்புகிறீர்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள். இது, உங்கள் 4 பரிமாணங்களும் எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்பதைக் குறித்து சிரத்தையுடன் ஆழ்ந்து ஆராய்ந்து, சிந்திப்பதன் மூலம் மட்டுமே சாத்தியப்படும்.
அகங்காரம், மமகாரம், அன்யகாரம், ஸ்வ- அன்யகாரம் இந்த நான்கு அடையாளங்களிலும் உயர்ந்த அடையாளங்களைப் பட்டியலிட்டு, படுக்கைக்கு அருகில், அலுவலக மேஜையில் என்று காலை எழுந்தவுடன் பார்க்கக்கூடிய இடமாக, அல்லது நாள் முழுக்க அடிக்கடி நாம் உபயோகிக்கும் இடமாகப் பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்களுக்குத் தடைகளாக இருப்பவற்றை அதாவது நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்களோ, யாராக இருக்க விரும்புகிறீர்களோ, எப்படி இருக்க விரும்புகிறீர்களோ அவற்றை அடைய விடாமல் உங்களைத் தடுப்பவை எவை என்பதைக் கண்டுபிடியுங்கள். பெரும்பாலான மக்களுக்கு அப்படித் தடையாக இருப்பது சுய-சந்தேகமே. சுய-சந்தேகம், கடந்தகால தோல்விகளின் காரணமாக நமக்குள் எழும் ஒரு எதிர்மறை மனப்பாங்குதான் இந்த சுய-சந்தேகம்.
உங்கள் உச்சபட்ச சாத்தியக் கூறுகளோடு ஒத்திசைந்து செல்லும் எண்ணப் போக்கு களை ஊக்குவியுங்கள், வளப்படுத்துங்கள், வரவேற்பளியுங்கள்; ஒத்திசைந்து செல்லாத எண்ணப் போக்குகளை முழுமைப்படுத்துங்கள். விழிப்புடனும், தீர்மானத்துடனும் அந்த மனப்பாங்கை முழுமைப்படுத்துங்கள். நாள்தோறும், உங்கள் உச்சபட்ச சாத்தியக்கூறுகளை அடையவிடாமல் தடுக்கும் அந்த மனப்பாங்குகளைப் பற்றி ஆழமாக ஆராய்ந்து, அந்த மனப்பாங்குகளை முழுமைப்படுத்துங்கள்.
நீங்கள் சிரத்தையை வாழ்க்கை முறையாக வாழ ஆரம்பிக்கும்போது, சரியான வழியில் சிந்திக்கத் தெரிந்துகொள்கிறீர்கள்; எதை உங்கள் வாழ்க்கையில் அடைய விரும்புகிறீர்களோ அதை அடைவதற்கு உங்கள் சிந்தனையைப் பயன்படுத்துவீர்கள். சிரத்தை, authentic thinking என்றறியப்படும் இதுவே இந்து மத ஆன்மிகப் பயிற்சியில் இரண்டாவது படியாக விளங்குகிறது.
உங்கள் சிந்தனை 'சிரத்தை'யில் நிலைக்கட்டும், தொடர்ந்து உங்களை உச்சபட்ச சாத்தியங்களை நோக்கி விரிவடையச்செய்யட்டும். உங்கள் எண்ணங்களில் ஆழமிக்க தெளிவை நீங்கள் அடையும்போது, நீங்கள் நினைப்பதையெல்லாம் அது வெற்றியடையச் செய்கிறது, நீங்கள் சிந்தனை சக்தியை விடுவிக்கிறீர்கள்.