Books / Unlock Your Four Inner Powers

1. Unlock Your Four Inner Powers

றான்கு உள்ளாற்றல்களைச் சர்தியுங்கள்

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், உங்களுக்குத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் உங்களுள் 4 அளப்பறிய பேராற்றல் மிக்க சக்திகள் உறைந்துள்ளன. அவை உங்கள் வாழ்வின் 4 வெவ்வேறு பரிமாணங்களுடன்- உங்கள் வார்த்தைகள், உங்கள் சிந்தனை, உங்கள் உணர்வுகள் மற்றும் உங்கள் வாழ்வுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. இந்த 4 பரிமாணத்திலும், உங்கள் உச்சபட்ச சாத்தியக்கூறுகளை விழிப்படையச் செய்யும்போது, அது உங்கள் வாழ்வில் ஒரு மிகப்பெரிய சக்தியாக மாறுகிறது ; உங்கள் வாழ்க்கைக்கு ஆதரவளிப்பதாக மாறுகிறது.

நீங்களே பார்க்க முடிகின்ற உங்கள் 4 சக்திகள்: வார்த்தைகளின் சக்தி -சமஸ்கிருதத்தில் வாக் சக்தி சிந்தனை சக்தி - சமஸ்கிருதத்தில் மனோசக்தி உணர்வின் சக்தி - சமஸ்கிருதத்தில் ப்ரோ சக்தி வாழ்வின் சக்தி - சமஸ்கிருதத்தில் ஆத்ம சக்தி என்கிறோம்.

4 சக்திகளை விடுவிக்கும்போது என்ன நிகழ்கிறது ?

வார்த்தைகளின் சக்தியை விடுவிக்கும்பொழுது, உங்களை நோக்கியும், மற்றவர்களை நோக்கியும் சரியான, ஆற்றல் வாய்ந்த, பயன்மிக்க வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தக்கூடிய தன்னிச்சையான புத்திசாலித்தனத்தைப் பெறுகிறீர்கள்.

சிந்தனை சக்தியை வெளிப்படுத்தும்பொழுது, உங்கள் வேலையில், உறவில், கல்வித்துறையில் மற்றும் பொருளாதாரத்தில் மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையையே வெற்றிபெற, உங்கள் எண்ணங்களை ஒருங்குவிக்க உங்களால் முடியும்.

உங்களை வலிமையானவராக்கும் ஆற்றல் மிக்க பொறுப்புக்களை எடுத்துச் செயலாற்றுவதன் மூலம், உங்களை அடுத்த நிலைக்கு உயர்த்திக் கொள்வது எப்படி என்பதைப் பற்றி உணர்வின் சக்தி போதிக்கிறது.

மற்றவர்களுக்காக வாழும்போதுதான், மிகச்சிறந்த வெகுமதிகள் உங்களை நோக்கி வருகின்றன என்பதை நீங்கள் புரிந்துணரும்பொழுதுதான், உண்மையிலேயே நீங்கள் வாழ்வின் சக்தியை உணர்ந்து மகிழ்கிறீர்கள்.

தத்துவங்கள்: – 4 சக்திகளுக்கான திறவுகோல்கள்

4 சக்திகளுமே, தத்துவங்கள் எனப்படும் 4 ஆன்மிகக் கோட்பாடுகளால் வழிநடத்தப்படுகின்றன. ஒவ்வொரு தத்துவமுமே, உங்களுக்குள் உறைந்திருக்கும் அதனதனுக்குரிய சக்தியைத் திறக்கும் திறவுகோலாகத் திகழ்கிறது.

நீங்கள் ஒருங்குவித்தல் என்னும் தத்துவத்தை உங்கள் வாழ்வின் பாகமாக்கும்பொழுது, நீங்கள் வாக்சக்தியைப் பெறுகிறீர்கள். உங்களுக்கு வாக்கு சித்தி வாய்க்கிறது.

நீங்கள் சிரத்தையைப் பயிற்சி செய்யும்போது, சிந்தனை சக்தி உங்களுக்குத் திறக்கப்படுகிறது.

நீங்கள் பொறுப்புகளை எடுத்துச் செயலாற்றும்போது, உங்களுக்கு உணர்வின் சக்தி சாத்தியமாகிறது.

நீங்கள் மற்றவர்களை வளப்படுத்த முடிவு செய்த அக்கணமே, வாழ்வின் சக்தியைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறீர்கள்.

உங்களின் வார்த்தைகளை உங்களின் வாழ்வு!

உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அவற்றை நிறைவேற்றுவது என்பது ஏன் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது ?

நீங்கள் உணர்ந்தாலும் உணராவிட்டாலும், உங்கள் வார்த்தைகளின் மீதும் வாக்குறுதிகளின் மீதும்தான் உங்கள் வாழ்க்கை கட்டப்படுகிறது.

உங்களுக்கும், மற்றவர்களுக்கும் நீங்கள் கொடுத்துக் கொள்ளும் வார்த்தைகள்தான் அடிப்படை கட்டமைப்பு, அதன் மீதுதான் உங்கள் வாழ்வு என்னும் கட்டிடம் கட்டப்படுகிறது! உங்கள் வாழ்க்கையை ஒரு கட்டிடத்துக்கு ஒப்பிட்டால்,

உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுத்துக்கொள்ளும் வார்த்தைகள்தான் அந்தக் கட்டிடத்திற்கான அஸ்திவாரம் ! அஸ்திவாரம், தூசுபடிதலோ துருப்பிடித்தலோ இல்லாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகிறது, 'தூசுபடிதலோ துருப்பிடித்தலோ இல்லாமல்' என்பதன் பொருள், உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுத்துக்கொள்ளும் வார்த்தைகள், விழிப்பற்ற மனப்பாங்குகள் இல்லாமல் இருப்பது அவசியம்.

உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுத்துக் கொள்ளும் விழிப்பற்ற வார்த்தைகளே உங்கள் வாழ்வு என்னும் கட்டிடத்தில் படியும் மாசுக்களும், துருவும்! மாசுக்களும், துருவும் படிந்த அஸ்திவாரத்தின் மீது கட்டப்படும் கட்டிடம் நீண்ட நாட்களுக்கு நீடித்து நிலைக்காது. அது உறுதியான, தூய்மையான மற்றும் நம்பகமான இரும்பினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். அதைப் போலவே, உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நீங்கள் கொடுத்துக் கொள்ளும் வார்த்தைகள் மற்றும் வாக்குறுதிகள் மீது உங்கள் வாழ்க்கை கட்டப்படுவதால், உங்கள் வார்த்தைகளும் வாக்குறுதிகளும் விழிப்பற்ற மனப்பாங்குகளோ, உணர்வற்ற மனப்பாங்குகளோ அற்றதாக இருக்க வேண்டியது

அவசியம். உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நீங்கள் கொடுத்துக் கொள்ளும் வார்த்தைகள் மற்றும் வாக்குறுதிகளின் அடிப்படையில் தான் உங்கள் வாழ்வின் உறுதி அமைகிறது. உங்கள் வார்த்தைகள் விழிப்புமிக்கதாக இருந்தால், உங்கள் வாழ்வும் விழிப்படையும். உங்கள் வார்த்தைகள் விழிப்பற்றதாக இருந்தால், உங்கள் வாழ்வும் விழிப்பறு நிலையிலேயே கழியும்.

அதனால்தான் ஒருங்குவித்தல், உங்கள் வாழ்வின் அஸ்திவாரத்தை வடிவமைக்கிறது. ஒருங்குவித்தல் உங்கள் வாழ்வு சக்தியின் பாகமாகவே இருக்கிறது. நீங்களும் இந்த முழு பிரபஞ்சமும் இயங்குவதே இந்த ஒருங்குவித்தல் சக்தி மீதுதான்!

ஒருங்குவித்தல் என்றால் என்ன?

நீங்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கும் எண்ணங்களையும் வாக்குறுதிகளையும் உயிராகவே நினைந்து நிறைவேற்றி, உங்களோடும் வாழ்க்கையோடும் பூர்ணத்வ நிலையை உணர்தல் !

ஒருங்குவித்தல் என்பது நம் வாழ்க்கையில் கொடுக்கும் பெரிய பெரிய வாக்குறுதிகளைப் பற்றியது மட்டுமல்ல. 'நான் நாளையிலிருந்து அதிகாலை எழுந்து யோகப் பயிற்சிகளைச் செய்வேன்' என்று உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் வாக்குறுதியாகட்டும் அல்லது 'நாம் மாலை ஐந்து மணிக்குச் சந்திக்கலாம்' என்று உங்கள் நண்பருக்குக் கொடுக்கும் வாக்குறுதியாகட்டும் -

இது போன்ற சின்ன சின்ன வாக்குறுதிகளையும் உள்ளடக்கியதுதான். உங்களுக்கும், மற்றவர்களுக்கும் நீங்கள் எந்த மாதிரி வார்த்தையைக் கொடுக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல, அதற்கு மதிப்பளித்து நிறைவேற்றுவதே உண்மையான ஒருங்குவித்தல்.

ந்தைவுற்றப்படாத வார்த்தைகள் உங்களுக்குள் தொக்கி நன்றுவிடும்

பல சமயங்களில், நீங்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுத்துக் கொள்ளுளும் வாக்குறுதிகளை ஞாபகம் கூட வைத்துக் கொள்வதில்லை; ஏனெனில், அந்தளவிற்கு அதைப்பற்றி சிந்திக்கக் கூட இல்லாமல், விழிப்பற்ற நிலையிலேயே வார்த்தைகளைக் கொட்டுகிறீர்கள். அது மற்றவர்களிடம் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக்கூட நீங்கள் புரிந்துகொள்வதில்லை.

நீங்கள் ஒரு வாக்குறுதியைக் கொடுத்து விட்டு அதைக் காப்பாற்றவில்லையென்றால், உங்களுக்குள்ளோ அல்லது மற்றவர்களுக்குள்ளோ அது ஒருவித தொடர்விளைவை விட்டுச் செல்கிறது. இந்தத் தொடர்விளைவு உங்கள்

சுய-நம்பிக்கையையும் அழித்து விடும். மற்றவர்கள் உங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் அழித்து விடும்.

உங்கள் வாழ்க்கையின் எந்த ஒரு பகுதியிலும் - அது உங்கள் உறவுமுறையிலாகட்டும், உங்கள் வியாபாரத்திலாகட்டும், எந்த ஒரு அம்சத்திலும் நீங்கள் விழிப்புணர்வற்ற வார்த்தைகளை உச்சரிக்கும்போது, வாழ்க்கை உங்களுக்கு எந்தவித பின்விளைவுகளைக் கொண்டு வரப்போகிறது என்பதைப்பற்றி நீங்கள் உணர்வதில்லை. வாழ்க்கை உங்களுக்குத் தொடர்ந்து அதிர்ச்சிகளையே கொண்டுவந்து கொண்டிருந்தால், ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் ஒருங்குவித்தலில் வாழவில்லை!

வாக் சக்த்தைத் த்றக்கும் த்றவுகோல் ஒருங்குவித்தல்.

ஒருங்குவித்தல் இரண்டு பரிமாணங்களைக் கொண்டுள்ளது. ஒன்று, உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் வார்த்தைகளை நிறைவேற்றுவது. மற்றொன்று மற்றவர்களுக்கு கொடுக்கும் வார்த்தைகளை நிறைவேற்றுவது.

சரியான வார்த்தைகள் உங்களிடமிருந்துதான் ஆரம்பமாகின்றன.

நீங்கள் உச்சரிக்கும் வார்ததைகளை, முதலில் கேட்கும் நபர் யார்?

நீங்களே!

உங்கள் வார்த்தைகளை நிறைவேற்றும்பொழுது, உங்களுள் தன்னம்பிக்கை வளரும். உங்கள் சுய-சந்தேகங்கள் கரைந்து விடும். நீங்கள் பலமிக்கவர்களாகி விடுகிறீர்கள்.

மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்போது, உங்கள் மீது மற்றவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வளரும். அந்த நபருடனான உங்கள் உறவு பலப்படும் !

வார்த்தைகளை விழிப்படன் உச்சரிக்க வேண்டும், ஹன்?

வார்க்கைகளை உணர்வுடன் உச்சரிப்பதும் விழிப்புடன் உபயோகிப்பதும், அந்த வார்த்தைகள் உங்கள் மீதும் மற்றவர்கள் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

சரியான வார்க்கைகளை உபயோகிப்பது, உடனடியாக உங்களின் சிந்தனை முறையையும், உங்களைப் பற்றிய உணரும் முறையையுமே மாற்றிவிடும். சரியான வார்த்தைகளைக் கொண்டு ஒரு சூழ்நிலையைக் கையாளும்போது, அதற்கு பதில்செயல் புரியும்பொழுது, உங்கள் உடல் மொழியில் கூட ஒரு மாற்றம் எற்படுவதை நீங்கள் கவனிக்க முடியும். சரியான வார்த்தைகள், உங்கள் உள் உலகை முரண்பாடுகளற்ற அமைதி நிலையில் வைக்கும்; உங்கள் உடல் நலத்தை மேம்படுத்தும்; வாழ்நாளை நீட்டிக்கும்! சரியான வார்த்தைகளை உருவாக்கி, உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வெளிப்படுத்திக் கொள்வதன் மூலம், உண்மையில் நீங்கள் தேர்ந்தெடுத்தபடி உங்கள் வாழ்வை நீங்களே வடிவமைத்துக் கொள்ளலாம்.

வார்த்தைகளின் சுத்தி மூலம் உங்கள் நிஜ வாழ்வை நாங்கள் உருவாக்கிக் கொள்ளவாம்

நீங்கள் உச்சரிக்கும் வார்த்தைகளே நீங்கள்!

உங்களிடமும், மற்றவர்களிடமும் நீங்கள் பேசும் வார்த்தைகளாகவே நீங்கள் ஆகிறீர்கள். ''நான் நோய்வாய்ப்பட்டுள்ளேன், நான் நோய்வாய்ப்பட்டுள்ளேன்,'' என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால், நீங்கள் மிக எளிதாக நோயில் விழுவீர்கள். அதேபோல, தொடர்ந்து நீங்கள், "நான் ஆரோக்யமாக இருக்கிறேன். நான் ஆரோக்யமாக இருக்கிறேன்,'' என்று சொல்லிக் கொண்டிருந்தால், உங்களுடைய துணிவும் சக்தியும் விழிப்படைந்துவிடும். நீங்கள் ஆரோக்கியமடைந்து விடுவீர்கள்! உங்கள் உடல் மன அமைப்பில் பிரபஞ்ச சக்தி விழிப்படைந்து, உங்கள் பிரகடனங்களை நிதர்சனமாக்கும். சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் நீங்கள் உங்கள் நிதர்சன வாழ்வைச் சரியான வார்த்தைகளுடன் தொடங்குகிறீர்கள்! உங்களுக்கும், மற்றவர்களுக்கும் கொடுத்த வாக்குகளை நிறைவேற்றுவதே இது!

உங்களை நோக்கிய சரியான வார்த்தைகள் உங்களை நோக்கிய தவறான வார்த்தைகள் மற்றவர்களை நோக்கிய சரியான வார்த்தைகள் மற்றவர்களை நோக்கிய தவறான வார்த்தைகள்

வார்த்தைகளின் சுத்தியைப் பற்றி விளக்கும் ஒரு சின்ன கதை:

ஒரு துறவி, ஒருமுறை ஒரு கிராமத்திற்கு விஜயம் செய்தார். அவர் ஒரு குடிசையைக் கடந்து செல்கையில், அக்குடிசையிலிருந்து வெளிவந்த ஒரு பெண்மணி அத்துறவியைக் கண்டார். உடனே அவர் அந்தத் துறவியை வணங்கி, நோயால் இறந்துகொண்டிருக்கும் தம்முடைய குழந்தையைக் குணப்படுத்தும்படி மன்றாடி வேண்டினார். அத்துறவி அக்கிராமத்திற்குப் புதியவராகையால், அவர் ஏதாவது அதிசயத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற ஆர்வத்தில் அவரைச் சுற்றி ஒரு கூட்டமே கூடிவிட்டது. அந்தப் பெண்மணி தம்முடைய குழந்தையை வீட்டிலிருந்து வெளியே தூக்கி வந்தார். அப்போது கூட்டத்திலிருந்த ஒரு மனிதர், ''மருந்துகள் கொடுத்தும் சரியாகாத ஒரு நோய், உங்கள் பிரார்த்தனை மூலம் சரியாகிவிடும் என்று நினைக்கிறீர்களா?'' என்று கூக்குரலிட்டார். உடனே அந்தத் துறவி அவரைப் பார்த்து, ''முட்டாளே வாயை மூடு. நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதைப் பற்றி நீ அறிய மாட்டாய்!' என்று கத்தினார். 'முட்டாள்' என்ற வார்த்தையைக் கேட்டதும் அந்த மனிதர் கோபத்தால் கொந்தளித்துப் போனார். அவருடைய முகம் சிவந்து விட்டது! ''என்ன ஒரு தைரியம் உனக்கு, என்னையே அவமானப்படுத்துகிறாயா!'' என்று கூச்சலிட்டான். அந்தத் துறவி சிரித்துக் கொண்டே அமைதியுடன் அவரை நோக்கிக் கேட்டார். ''ஒரு வார்த்தை, இந்தளவுக்கு உனக்குள் கோபத்தைமூட்டுமானால், மற்றொரு வார்த்தை ஏன் குழந்தையைக் குணப்படுத்தாது ?''

இதுவே வார்க்கைகளின் சக்கி!

கேட்டல், உங்கள் வார்த்தைகளுக்கு ஒருங்குவித்தலைக் கொண்டு வரும்

உண்மையிலேயே, உங்கள் வார்த்தைகளை நீங்களே 'கேட்ட' கடைசித் தருணம் எது ?

உண்மையில், நாம் ஒருபோதும் 'கேட்பதே' இல்லை. நம்முடைய வார்த்தைகளையும் சரி, மற்றவர்களுடைய வார்த்தைகளையும் சரி, நாம் கேட்பதே இல்லை! உங்கள் வார்த்தைகளையே நீங்கள் கேட்க ஆரம்பிக்கும்பொழுது, இயற்கையாகவே நீங்கள், உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கும் வார்த்தைகளைப் பற்றிய விழிப்புணர்வுள்ளவர்களாகி விடுவீர்கள்; மற்றவர்கள் உங்களிடம் பேசும் வார்த்தைகளையும் ஒருங்குவித்தலுடன் கேட்கும் திறமை உடையவர்களாகி விடுகிறீர்கள்.

கேட்டல்

'கேட்டல்' என்பது நேரடியாகவே நிதர்சனத்தை உள்ளது உள்ளபடியே கையாள்வதுடன் தொடா்புடையது. சரியான 'கேட்டல்' இருந்தால், உங்களுடைய விழிப்பற்ற சொந்த கருத்துக்களையும், தீர்மானங்களையும் உருவாக்காமல் நேரடியாக உள்ளதை உள்ளபடியே அணுகுவீர்கள். 'கேட்டல்' இல்லையென்றால், அந்தச் செய்திகளை முழுமையாகப் புரிந்துணர்வதற்கு முன்பே, ஒரு தீர்மானத்திற்கு வந்து விடுவீர்கள்.

அதனால்தான், ஹிந்து மதத்தில் முதல் ஆன்மிகப் பயிற்சியாக இருப்பது சிரவணம் - ஒருங்குவிக்கப்பட்ட கேட்டல்

சொன்ன வார்த்தையை நிறைவேற்ற முடியாவிட்டால் என்ன ஆகும்?

உங்கள் வாக்குறுதியை நிறைவேற்ற நீங்கள் உங்களால் ஆன எல்லா மயற்ச் களைப் போட்டும், உங்களால் அதை நிறைவேற்ற முடியவில்லையென்றால், அதை முன்கூட்டியே உங்களுடனும், மற்றவர்களுடனும் தெரிவித்து விடுவதன் மூலம், நீங்கள் உங்களுடனும் மற்றவர்களுடனும் முறையேற்றிக் கொள்ளலாம்.

பிறகு நீங்கள் அந்த வாக்குறுதியைப் பற்றிய குற்றவுணர்ச்சியோ, வலியோ, தொக்கி நிற்கும் நினைவுகளோ இல்லாமல், அடுத்தடுத்து தொடர்ந்து சென்றுகொண்டே இருங்கள்!

ஒன்று, சொன்ன வார்த்தையை செய்துமுடித்து நிறைவேற்றுங்கள்; அல்லது செய்துமுடிக்க முடியவில்லையென்றால், அதை முன்கூட்டியே உங்களுடனும், மற்றவர்களுடனும் தெரிவித்து முறையேற்றுங்கள்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், முறையேற்றுதல்கூட ஒருங்குவித்தல்தான்!

உங்களுக்குள்ளும், மற்றவர்களிடமும் நீங்கள் பேசிய வார்த்தைகளை முழுமைபடுத்துதலை நோக்கி ஒழுங்குப்படுத்துவதே ஒருங்குவித்தல் எனப்படுகிறது !

முழுமைப்படுத்துதல் என்றால் என்ன?

முழுமைப்படுத்தல் என்பதன் பொருள், கடந்த கால வாழ்க்கையின் நிகழ்வுகள், வார்த்தைகள், செயல்கள், நினைவுகள் - அவை உங்களுடையதாக இருந்தாலும் சரி, மற்றவர்களுடையதாக இருந்தாலும் சரி, அவற்றைப் பற்றிய தொக்கிய விளைவுகள் இல்லாமல் வாழ்வதும் செயல்புரிவதும்தான்.

'தொக்கிய விளைவுகள் இல்லாமல்' இருக்க வேண்டுமென்பதன் பொருள், நீங்கள் கடந்த காலத்தையே மறந்து விட வேண்டும் என்பது அல்ல. நீங்கள் முழுமையுடன், நிறைவுணர்வுடன் இருக்கும்பொழுது, நீங்கள் கடந்த கால நிகழ்வுகளையும் செயல்களையும் ஞாபகத்தில் வைத்திருப்பீர்கள். ஆனால் அவை உங்களுக்குள் வலியையோ, கோபத்தையோ, குற்றவுணர்ச்சியையோ ஏற்படுத்துவதற்குரிய சக்தியைப் பெற்றிருக்காது.

உங்களுக்குள்ளும் மற்றவர்களுக்குள்ளும் அபூர்ணத்துவத்தை உருவாக்காமல் இருப்பதற்கான உத்திரவாதத்தை அளிக்கும் ஒரே அழகான வழி ஒருங்குவித்தலே!

பூரணத்துவத்திற்கான இரண்டு நுட்பங்கள்:

வாழ்க்கையை அது எப்படி நிகழ்கிறதோ, அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாமல் உங்களைத் துடுக்கும் கடந்தகால நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் அது குறைவுணர்வே. அதனால் உங்களுக்குள் துக்கம் ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கும் உங்கள் கடந்த கால நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்தி, அதை மீண்டும் அப்படியே வாழ்ந்து, அதிலிருந்து உங்களை நீங்களே விடுபடுத்திக்கொள்ளும்போது நிறைவணர்வு அரம்பிக்கிறது.

கடந்த காலத்தை மாற்றியமைக்க, உங்களால் முடிந்த ஒரே வழிமுறை நிறைவுப்படுத்துதலே !

கண்ணாடியின் முன் சௌகரியமாக அமர்ந்துகொள்ளுங்கள்.

  • உங்களுடைய முழு உருவத்தையும் பார்க்கக்கூடிய அளவிற்கு கண்ணாடி பெரியதாக இருக்க வேண்டும்.

கண்ணாடியில் தெரியும் உங்களுடைய பிம்பத்தை கண்ணோடு கண்ணாகப் பாருங்கள்.

ஆழமாக, கண்ணோடு கண் தொடர்பு கொண்ட அந்தக் கணம்மே நடக்கும் முதல் விஷயம் உங்கள் கண்களில் கண்ணீர்த்துளிகள் வழிய ஆரம்பிப்பதுதான்.

  • அதை அனுமதியுங்கள்.

கண்ணாடி முன் அமர்ந்து உங்களுக்கு நீங்களே என்னென்ன சொல்ல விரும்புகிறீர்களோ, அதைப் பேசுங்கள்.

  • உங்களுடன் நேரத்தை செலவழியுங்கள். பேசுங்கள். பேசுங்கள்.

இந்தக் குறையுணர்வை, இந்தக் குறை புரிந்துணர்தலை உங்களுக்குள் உருவாக்கிய முதல் நிகழ்வை அடையாளம் காணுவதற்கு முயற்சி செய்யுங்கள். இதுவே, உங்கள் துக்கங்களுக்கெல்லாம் காரணமான மூல மனப்பாங்கை உருவாக்குகிறது.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முதன் முதன் முரண்பாடுகளை அனுபவித்த சில நிகழ்வுகளுக்குள் செல்லுங்கள் இந்த நிகழ்வுகள் சரியாக உங்கள் 3 வயதிலிருந்து 5 வயதிற்குள் நடந்திருக்கலாம். அந்த நிகழ்வை மீண்டும் வாழுங்கள்.

கண்ணீர் வந்தாலும், கோபம் வந்தாலும், அவற்றை அனுமதியுங்கள்.

  • உங்கள் கடந்தகாலத்தை நேருக்கு நேர் துணிவுடன் சந்திக்கும்பொழுது வலி மறைந்து விடுகிறது, கோபம் மறைந்து விடுகிறது! கோபம் மறையும்பொழுது அது அன்பாக மாறுகிறது. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், சக்தி, கோபமாக வெளிப்படும்போது, அந்தச் சக்தியிலிருந்து கோபத்தை விலக்கி விட்டால், அது அப்படியே அன்பாக மாறிவிடும்.

மூலமனப்பாங்குகளின் மீது வேலை செய்வதன் மூலம் மட்டுமே, உங்களுள் நிறைவுத் தன்மை நிகழ்ந்துவிடுவதில்லை. அந்த மூலமனப்பாங்கிலிருந்து முளைத்த ஒவ்வொரு நிகழ்வையும் நீங்கள் நிறைவுசெய்ய வேண்டும். நீங்கள், உங்கள் நினைவுக்கு எட்டியவரை பின்னோக்கிச் சென்று, உங்கள் குழந்தைப் பருவ நிகழ்வுகளை மேலே எடுத்து வாருங்கள். அதை முழுமைப்படுத்துங்கள். இதேபோல் ஒவ்வொரு மூலமனப்பாங்கையும், அதிலிருந்து இன்றுவரை முளைத்த நிகழ்வுகளின் பதிவுகளையும் நிறைவுசெய்யுங்கள்.

2.'சட்டென்று' தானாகதேவ நிகழ்தின்ற ந்தைவுணர்விற்கான நுட்பம்

நிறைவுணர்வு என்பது, 'உங்கள் வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் அப்படியே கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்பதைக் குறிக்கவில்லை; நமக்கு வாழ்க்கை எப்படி நிகழ்கிறதோ, அதற்கு எதிர்ப்புக்காட்டாமல் இருப்பதையே குறிக்கிறது.

நம்முடைய எல்லாக் குறைவுணாவுகளுக்கும் மூல காரணம், 'வாழ்க்கை இப்படி இந்தக்கூடாது' என்று நாம் கொண்டிருக்கும் கருத்துதான்.

நாம் இந்தக் கருத்தை வைத்திருப்பதால்தான், நம் வாழ்நாள் முழுவதும், 'ஏன்,ஏன்' என்று கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். வாழ்க்கை இவ்வளவு மோசமாக இருக்கிறது? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ? நல்லவர்களுக்கு ஏன் கெட்டதே நடக்கிறது? என்று தொடர்ந்து 'ஏன், ஏன், ஏன்' என்று நாம் கேட்டுக் கொண்டேயிருக்கிறோம்.

தன்னிச்சையான (Spontaneous) அல்லது உடனடியான (instant) நிறைவுணா்வு என்பதன் பொருள், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் உங்களுக்குள் முரண்பாடுகளை, மனப்போராட்டங்களை உருவாக்கும் தவறான புரிதலைக் கீழே போடுங்கள்.

இது சாத்தியம்!

ஏன் வாழ்க்கை இப்படி இருக்கிறது ? என்று கேட்காதீர்கள். அதற்குப் பகிலாக, இப்படிக் கேட்க முடிவு செய்யுங்கள்:

''இதுதான் வாழ்க்கை! இப்போது அடுத்து என்ன செய்வது?'' இதை ஏற்றுக்கொண்டு, அடுத்தடுத்து சென்று கொண்டிருப்பதா ? இதை நீராகர்த்து வீட்டு, அடுத்தடுத்து சென்று கொண்டிருப்பதா? இல்லையென்றால், நான் நினைத்தபடி, விரும்பியபடி அதை மாற்றியமைப்பதா?

இந்தப் புரிந்துணர்தலின் அடிப்படையில், நீங்கள் எந்த ஒரு முடிவை எடுத்தாலும், அது சரியே. நீங்கள் முழுமைத்தன்மையிலிருந்து, நிறைவுணாவிலிருந்து செயல்படும்பொழுது, நீங்கள், உங்கள் உள் உலகிலோ அல்லது வெளி உலகிலோ நிகழும் எந்தவிதமான குழப்பங்களையும், முரண்பாடுகளையும் தீர்ப்பதற்கான ஆற்றல் வாய்ந்தவர்களாக இருப்பீர்கள்.

முழுமையைப்படுத்துதல், உங்களுக்கு என்ன செய்கிறது?

பூரணத்துவ க்ரியா செயல்முறையின்போது, உங்களுக்குள் வலி ஏற்படுத்திய நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் வாழ்வதன் மூலம், உங்கள் மீதான தங்கள் கட்டுப்பாட்டை அவை இழந்து விடுகின்றன.

தன்னிச்சையான (spontaneous), அழுத்தம் அற்ற வாழ்க்கையை வாழ்வதற்கான ஆற்றலை மீண்டும் அடைகிறீர்கள்.

நீங்கள் ஒருங்குவித்த மனிதராக வாழ ஆரம்பிக்கிறீர்கள்; வார்த்தைகளின் சக்தியை முழுமையாகப் பயன்படுத்த ஆரம்பிக்கிறீர்கள்.

நீங்கள், 'ஒருவராக', ஒருங்கிணைக்கப்பட்ட மனிதராக ஆகும்போது உங்களுடைய உள்-உலகம், உடல் மற்றும் மன அமைப்பு அனைத்தும் உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.

உங்கள் வார்த்தைகளுக்குப் பொறுப்பெடுத்துக் கொள்ளுதல்

உங்கள் வார்த்தைகளுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளல் என்பது 'தா்ம'த்தைப் பயிற்சி செய்வதாகும், அதாவது சரியான 'வாழ்வியல் முறை'யைப் பயிற்சி செய்வதாகும்.

மஹாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கும் தாமத்திற்கான ஒரு விளக்கம்: உங்களுக்குச் செய்யப்படும்போது உங்களுக்கு வலியை ஏற்படுத்தும் செயல்களை மற்றவர்களுக்குச் செய்யாதீா்கள். இதுவே தர்மம்!

ஒவ்வொரு முறையும் இந்த தாமத்தை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். 'இந்த வார்த்தைகள் எனக்கு வலியை ஏற்படுத்துமா அல்லது மற்றொருவருக்கு ஏற்படுத்துமா?' என்று உங்களுக்குள் நீங்களே ஒருமுறை கேட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்குள்ளும் மற்றவர்களை நோக்கியும் வார்க்கைகளுக்குள்ள சக்தியைப் பற்றியும், அது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றியும் எப்போதுமே விழிப்புடன் இருங்கள். சரியான வார்த்தைகளை உச்சரிப்பதும், அவற்றை நிறைவேற்றுவதற்கான பொறுப்பெடுத்தலும் உங்களுக்குள் இருக்கும் வார்த்தைகளின் சக்தியை விடுவிக்கும்.

பிரகடனப்படுத்தலின் சக்தி

ஒருங்குவித்தலோடும், நிறைவுணர்வோடும் இருக்க வேண்டும் என்றும் தீர்மானத்தை வலுப்படுத்த வேண்டுமானால், அதை உங்களுக்கு நீங்களே பிரகடனப்படுத்திக் கொள்ளுங்கள்; மற்றவர்களிடமும் பிரகடனப்படுத்திக் கொள்ளுங்கள், நீங்கள் உங்களுடைய தீர்மானத்தைப் பிரகடனப்படுத்தும்போது, அந்தப் பிரகடனம், சிதறிப்போய்க்கிடக்கும் உங்கள் சக்திகளை ஒன்று திரட்டுவதற்கும், ஒன்று திரட்டப்பட்ட அந்த சக்தியை உங்கள் தீர்மானங்களை நிதர்சனமாக்குவதற்குரிய பொறுப்பான செயல்களைச் செய்வதற்குப் பயன்படுத்துவதற்கும் உதவுகிறது.

நீங்கள் தொடர்ந்தும் விழிப்புடனும் உங்கள் வார்த்தைகளை சரியான செயல்களுடன் ஒருங்கிணைக்கும்போது, உங்கள் வார்க்கைகள் சக்திமிக்கவையாக ஆகின்றன. நீங்கள் வாக்கு சித்தி வாய்க்கப் பெறுவீர்கள். நீங்கள் சொல்லும் எந்த ஒன்றையுமே நிதர்சனமாக்கும் வல்லமையை அடைகிறீர்கள். இதுவே வாக்கு சக்கியின் உச்ச அனுபவம்.

வார்த்தைகளின் சக்தி எந்த ஒரு உறவையும் உருவாக்கவும் முடியும், உடைக்கவும் முடியும் என்பதை நீங்களே பார்க்கிறீர்கள்.

சிந்தனை சக்தி, வார்த்தைகளின் சக்தியை விட இன்னும் ஆழமானது. ஏனெனில் அது உங்கள் வாழ்க்கையையே உருவாக்க முடியும் அல்லது உடைக்க முடியும்!

நீங்கள் அறிந்தாலும் அறியாவிட்டாலும், நம்பினாலும் நம்பாவிட்டாலும், எப்படி உங்கள் உடல் அசைவுகளைக் கட்டுப்படுத்துகிறீர்களோ, அதைபோல் நீங்கள் உங்கள் மனத்தையும் கட்டுப்படுத்த முடியும்! நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்களோ, அதைத் தீர்மானிக்கவும் முடியும், பிரகடனப்படுத்தவும் முடியும்.

உங்கள் உச்சபட்ச சாத்தியக்கூறுகளுடன் இசைந்து செல்லும் எண்ணங்களை மட்டுமே ஊக்குவிக்கும்படியும், தாழ்வான கருத்துகளை தடைசெய்து, அவற்றை நிறைவுசெய்யும்படியும் உங்கள் மனத்திற்கு நீங்கள் பயிற்சிகொடுக்க முடியும். இது சாத்தியமே.

உங்கள் சிந்தனை உங்களை உருவாக்கும் அல்லது உடைக்கும். சிந்தனை ஒரு விபத்து அல்ல- அது உங்களுடைய தன்னார்வ ஈடுபாட்டுடன் நிகழ்வது. உங்களுடைய சிந்தனை முறை, உண்மையிலேயே உங்களால் ஊக்குவிக்கப்படுகிறது, வரவேற்பளிக்கப்பட்டு அன்பு பாராட்டப்படுகிறது, வளப்படுத்தப்படுகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் சிந்தனையை ஒரு விபத்தாகக் கருதுகிறீர்கள். உங்கள் மனத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியாது என்றும் நம்புகிறீர்கள்.

சிந்தனை சக்தியை விடுவிக்கும்போது, நீங்கள் இயல்பாகவே உங்கள் எண்ணங்களையெல்லாம் உங்கள் உச்சபட்ச சாத்தியக் கூறுகளை அடைவதற்கு ஒருங்குவிக்கும் ஆற்றலுடையவராகிறீர்கள். தொடர்ந்து உங்கள் உச்சபட்ச சாத்தியக் கூறுகளைச் செயல்படுத்துவதே சிரத்தை.

சிரத்தை என்றால் என்ன ?

உங்களைப்பற்றி உங்களுக்குள் என்ன உணர்கிறீர்களோ (மமகாரம்) அதனுடைய செயல்திறமையின் உச்சத்திலிருந்தும், மற்றவர்களிடம் உங்களை எப்படிக் காண்பித்துக்கொள்கிறீர்களோ (அகங்காரம்)அதனுடைய செயல்திறமையின் உச்சத்திலிருந்தும், மற்றவர்களைப் பற்றி உங்களுக்குள் என்ன உணர்கிறீர்களோ (ஸ்வ-அன்யகாரம்) அதனுடைய செயல்திறமையின் உச்சத்திலிருந்தும், மற்றவர்கள் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்களோ (அன்யகாரம்) அதனுடைய செயல்திறமையின் உச்சத்திலிருந்தும் செயல் புரிந்து, வாழ்க்கையை விரிவடையச் செய்து வாழ்தல் !

கேளுங்கள்! நீங்கள் கற்பனை செய்து வைத்திருப்பதுபோல், நீங்கள் ஒரே ஒரு அடையாளம் மட்டும் கொண்டவரல்ல: நீங்கள் 4 அடையாளங்களைக் கொண்டிருக்கிறீர்கள். எல்லாச் சமயங்களிலும், இந்த 4 அடையாளங்களையும், 4 பரிமாணங்களையும் ஒருசேரப் பெற்றிருக்கிறீர்கள். இந்த 4 அடையாளங்களும் ஒன்று சேர்ந்ததுதான் உங்கள் தனிமனித வாழ்வு; அதுதான் உங்கள் தனித்தன்மை! இந்த 4 அடையாளங்களுக்கும் நீங்களே பொறுப்பு !

முதல் அடையாளம் - மமகாரம்

அதாவது உங்களுக்குள் காட்டிக் கொள்வது. 'நான் ஆரோக்யமானவன், நான் அசிங்கமாக இருக்கிறேன், நான் புத்திசாலி, என்னால் கடினமான வேலைகளைச் செய்ய முடியாது, நான் மக்களை நேசிக்கிறேன்'- இதுபோன்று உங்களைப்பற்றி உங்களுக்குள் நீங்கள் வைத்திருக்கும் கருத்துக்களே மமகாரம். இதுபோன்று உங்களைப்பற்றி உங்களுக்குள் நீங்கள் பல கருத்துக்களைச் சுமந்துகொண்டிருக்கிறீர்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எப்போதுமே இது, நீங்கள் மற்றவர்களுக்கு உங்களை எப்படி

வெளிக்காட்டிக் கொள்கிறீர்களோ அதை விடக் குறைவானதாகவே இருக்கிறது.

இரண்டாவது அடையாளம் - அகங்காரம்

நீங்கள் மற்றவர்களுக்கு உங்களை எப்படிக் காட்டிக் கொள்கிறீர்களோ இதுவே அகங்காரம் எனப்படுகிறது. நீங்கள் எப்போதுமே உங்களை ஒரு பலசாலியாகவும், திறமைசாலியாகவும், நோ்மையானவராகவும், உதவிபுரிபவராகவும், இன்னும் எதுவாகவெல்லாமோ காட்டிக் கொள்ள முயல்கிறீர்கள். துரதிர்ஷ்டவசமாக, இப்படி வெளிக்காட்டிக் கொள்ளும் அகங்காரம், எப்போதுமே நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களோ அதைக் காட்டிலும் அதிகமானதாகவே இருக்கும்.

மூன்றாவது அடையாளம் -அன்யகாரம்

இந்த இரண்டைக்காட்டிலும் மூன்றாவதாக அன்யகாரம் என்ற ஒரு அடையாளம் இருக்கிறது. உங்களைப் பற்றி மற்றவர்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் மற்றும் கருத்துக்கள் அன்யகாரம் எனப்படுகிறது. மற்றவர்கள் உங்களை எப்படி உணர்கிறார்களோ அது, நீங்கள் உங்களை மற்றவர்களுக்கு எப்படிக் காட்டிக்கொள்கிறீர்களோ அதைக் காட்டிலும் வேறானதாக இருக்கலாம். ஏனெனில் மற்றவர்கள், நீங்கள் காட்டும் சூட்சுமமான சமிக்ஞைகளை வைத்துத்தான் உங்களைப்பற்றிய கருத்துக்களை உருவாக்குகிறீர்களே தவிர, நீங்கள் வெளிப்படையாகக் காட்டும் சமிக்ஞைகளை வைத்து அல்ல. நீங்கள் சொல்லாதவற்றையும் கூட புரிந்துகொள்வதில் மனிதர்கள் போதுமான அளவு புத்திசாலித்தனம் மிக்கவர்களாகவே இருக்கிறார்கள்! ஆம், முக்கியமாக நீங்கள் சொல்லாத விஷயங்களைப் புரிந்துகொள்வதில் !

நான்காவது அடையாளம் ஸ்வ-அன்யாகாரம்:

வாழ்க்கையைப்பற்றிய கருத்து அதாவது ஸ்வ-அன்யகாரம், மிகவும் குட்சுமமான ஒரு அடையாளம், ஏனெனில் இது நேரடியாக உங்களோடு சம்பந்தப்பட்டது அல்ல. ஸ்வ-அன்யகாரம் என்பது வாழ்க்கையைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்து; வாழ்க்கை, உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று நீங்கள் உணரும் உணர்வு.

உதாரணத்திற்கு, வாழ்வு தனிமையானதுதான், வாழ்வே முரண்பாடுகள் நிறைந்ததுதான், வாழ்க்கை பயம் நிறைந்தது என்றும் நினைக்கலாம்; வாழ்க்கை புனிதமானது, நான் எதையெல்லாம் விரும்புகின்றேனோ, அவற்றையெல்லாம் எனக்கு அது வழங்குகிறது என்றும் நினைக்கலாம். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் மக்களிடமிருந்தும், சூழ்நிலைகளிடமிருந்தும் பெறப்போகும் அனுபவங்களை இது வரையறுப்பதால், இதுகூட உங்களுடைய அடையாளமே!

எண்ணமனப்பாங்கு - முரண்பாடுகளின் ஆதாரம்

கடந்த காலத்தில் நிகழ்ந்த தோல்வி, நிராகரிப்பு, தண்டிக்கப்பட்ட அனுபவம், அவதூறுக்குட்படுதல், அன்பானவர்களின் மரணத்தைப் பார்த்தது போன்ற ஏதாவதொரு ஆழமான அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, நம் வாழ்வில் நிகழும் எந்த ஒரு சூழ்நிலைக்கும், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட வகையில் பதில்செயல் புரிவதைத்தான் 'எண்ணப்பாங்கு' என்கிறோம்.

நம்முடைய பதில்செயல்கள், ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டவையாகவே இருக்கின்றன. நெருக்கடியான தருணங்களின்போது, நீங்கள் 'நான் பலவீனமானவன், தோல்வியாளன், யாருமே என்னிடம் அன்பாக இல்லை, வாழ்க்கையே அபாயகரமானதுதான், அதனால் நான் மிகவும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்' என்று இப்படிப் பல கருத்துக்களை உங்களைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் உருவாக்குகிறீர்கள்.

கிட்டத்தட்ட எல்லா எண்ண மனப்பாங்குகளுமே எதிர்மறையானவையே, அவை உங்களை வாழ்க்கையில் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றாலும் கூட! ஏனெனில் அவை உங்களை நீங்கள் சக்தியற்றவராக உணர்ந்த சூழ்நிலைகளிலிருந்து எழுந்தவை!

பொதுவான சில மூல மனப்பாங்குகள்:

    1. நான் ஒரு தோல்வியாளன்
  • யாருமே என்னிடம் அன்பாக இல்லை 2.
    1. நான் தனியாள்
    1. நான் அசிங்கமாக இருக்கிறேன்
    1. வாழ்க்கை என்னை ஏமாற்றுவதற்கென்றே இருக்கிறது
  • நான் பலஹீனமாகவும், ஆரோக்கியமற்றும் இருக்கிறேன் 6.
  • நான் சக்தியற்றவனாக இருப்பதால், நான் மற்றவர்களைச் சார்ந்தே 7. இருக்கவேண்டியுள்ளது
  • வாழ்க்கை கடினமானதாகையால், நான் இன்னும் அதிக சாமர்த்தியசாலியாக 8. இருக்க வேண்டும்
  • நான் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு வாழ்க்கை விசாலமானதாக 9. இருக்கிறது.

எல்லா எண்ண மனப்பாங்குகளுமே குறை புரிந்துணர்வுகளின் அடிப்படையிலேயே இருக்கின்றன. ஏனெனில் வாழ்க்கை கணத்திற்கு கணம் வேறுபட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் தன்னிச்சையான இயல்புடன் உடனுக்குடன் பதில்செயல் புரிய வேண்டியுள்ளது. ஆனால் தற்போதைக்கு நீங்கள், ஏற்கெனவே வடிவமைக்கப்பட்ட செயல்கள் மற்றும் மனப்பாங்குகளின் ஒரு தொகுப்பே! ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட செயல்களும் மனப்பாங்குகளும் வாழ்க்கை உங்களுக்கு எப்படி நிகழ்கிறதோ அப்படியே அதனுடன் தொடர்புகொள்ள உங்களை அனுமதிப்பதில்லை.

உங்களுக்கு பல எண்ண மனப்பாங்குகள் இருக்கலாம். ஆனால், உங்களுடைய அறிவுக்கு கொண்டு வராமலேயே உங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும் மூலமனப்பாங்கு ஒன்றுதான்!

உங்கள் அடையாளங்களுக்கிடையிலான முரண்பாடுகள்கூட, மூல-மனப்பாங்கின் விளைவே தவிர வேறொன்றல்ல. உங்களுக்குள் உங்களைப் பற்றி ஒரு கருத்தைக் கொண்டிருந்துவிட்டு, ஆனால் வெளியில் வேறொரு மாதிரி உங்களைக் காட்டிக் கொள்வதே அசிரத்தை.

அசிரத்தை, உங்கள் சிந்தனை சக்தியை எப்படி விழுங்குகிறது ?

நீங்கள் கொஞ்சம் ஆழ்ந்து கவனித்தீர்களானால், உங்கள் 4 அடையாளங்களுக்கிடையில் இருக்கும் முரண்பாடுகளிலிருந்தே உங்கள் பிரச்சனைகள் எழுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளலாம். உங்களுடைய 4 அடையாளங்களும் ஒன்றுக்கொன்று ஒத்திசைந்து செல்லாதபோது, அது உங்கள் வாழ்வில் நோய்களையும் துக்கங்களையும் குறைவுணர்வுகளையும் விளைவிக்கிறது.

ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், உண்மையில் நீங்கள் கொண்டிருக்கும் இந்த அடையாளங்கள் அனைத்துமே, உங்களைப்பற்றி நீங்கள் கொண்டிருக்கும் எண்ண மனப்பாங்குகளே! மற்றவர்கள் உங்களைப் பற்றி கொண்டிருக்கும் அடையாளங்கள் கூட, அவர்களுக்குள் நீங்கள் உருவாக்கியதுதான். அதனால், உங்களுடைய எல்லா அடையாளங்களையும் படைத்த படைப்பாளி நீங்கள்தான்! புரிந்ததா?

இப்போது, ஒரு அடையாளம் மற்றொரு அடையாளத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தால், உங்களுடைய சிந்தனையை எப்படி ஒருங்குவிக்க முடியும் ? உங்களுடைய மொத்த சக்தியுமே, சண்டையிட்டுக் கொண்டிருக்கும் உங்கள் அடையாளங்களைச் சமாதானப்படுத்தவும் சமரசப்படுத்தவுமே பயன்படுத்தப்பட்டுவிடும்.

உங்களுடைய அடையாளங்கள் ஒன்றுக்கொன்று இசைவுடன் இருந்தால், உங்களுடைய சிந்தனை முழுவதையுமே நீங்கள் ஒரே திசையில் குவிக்க முடியும். அப்போது உங்கள் சிந்தனை ஒரு லேசர் தூண் போல் தெளிவானதாகவும், கூர்மையானதாகவும் ஆகிவிடும்; உங்கள் சிந்தனைச் சக்தியை நீங்கள் விழிப்படையச் செய்கிறீர்கள்.

நீங்கள் சிரத்தையில் வாழும்போது, அங்கு விழிப்பற்ற சிந்தனைக்கோ, வாழ்க்கைக்கோ இடமில்லை, ஏனென்றால் நீங்கள் உங்கள் வாழ்வில் விளையாடும் காரண காரியங்களைப் பற்றி முழுமையாக அறிந்தவராகவே இருப்பீர்கள்.

உங்களை நீங்கள் எப்படிக் கட்டமைத்துக் கொள்ள விரும்புகிறீர்களோ, அந்த முறையிலேயே உங்கள் சிந்தனைப்போக்கும் செல்கிறது. உங்கள் விருப்பத்துடன் சிந்தனைப்போக்கு கைகோர்த்துக் கொள்கிறது. அதனால், சிந்தனையின் இந்த 4 பகுதிகளுமே முழுமையாகத் தூய்மையாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது. உங்களுக்குள் பார்த்து, உங்களைப்பற்றி நீங்களே உங்களுக்குள் கொண்டிருக்கும் அடையாளங்களை அடையாளம் காணுங்கள்.

பிறகு, இந்த அடையாளங்களுடைய உச்சபட்ச சாத்தியக்கூறுகள் என்று நீங்கள் உணர்பவற்றையும், உங்களால் உடமையாக்கிக் கொள்ள முடியும் என்று உணர்கின்ற சிறந்த குண நலன்களையும் மீண்டும் எழுதிக் கொள்ள முடியும். உங்களுடைய சிந்தனை எப்போதுமே உங்கள் உச்சபட்ச மமகாரம், உச்சபட்ச அகங்காரம், உச்சபட்ச அன்யகாரம் மற்றும் உச்சபட்ச ஸ்வ-அன்யகாரங்களுடன் ஒருங்கிணைந்ததாக இருக்கட்டும்.

பொதுவாக உங்களைப்பற்றி உங்களுக்குள் நீங்கள் வைத்திருக்கும் கருத்து, உங்களைப்பற்றி மற்றவர்களுக்கு நீங்கள் காட்டும் அடையாளத்தைவிட மிகவும் குறைவானதாகவே இருக்கும். ஆனால் இந்த முக்கியமான சத்தியத்தைப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் மற்றவர்களிடம் உங்களைப்பற்றி ஒரு உயர்வான சிறந்த அடையாளத்தைக் காண்பிக்க முடிகிறதென்றால், அந்த உயர்வான அடையாளம் ஏற்கெனவே உங்கள் பாவனை தளத்தில், உங்கள் சிந்தனை தளத்தில் இருக்கிறது என்பதே அதன் பொருள். 'நீங்கள்' என்று எதைவெல்லாம் நீங்கள் நினைக்க முடிகிறதோ, அதையெல்லாம் சாத்தியமாக்கும் ஆற்றலை நீங்கள் ஏற்கெனவே பெற்றிருக்கிறீர்கள்!

உங்கள் மமகாரத்தையும் அகங்காரத்தையும் ஒருங்கிணைப்பதற்கான பயிற்சி:

  1. மமகாரம், அகங்காரம் என்ற தலைப்பிட்ட இரண்டு பத்திகளை உருவாக்குங்கள்.

  2. முதல் பத்தியில் நீங்கள் உங்களைப் பற்றிக் கொண்டுள்ள முதல் பத்து உள்-அடையாளங்களை, நம்பிக்கைகளைப் பட்டியலிடுங்கள். உதாரணத்திற்கு, நான் பலஹீனமானவன், நான் நட்புடன் பழகக் கூடியவன், நான் துரதிர்ஷ்டசாலி...

இரண்டாவது பத்தியில் நீங்கள் மற்றவர்களுக்கு வெளிக்காட்டும் வெளி-அடையாளங்களைப் பட்டியலிடுங்கள். அதாவது முதல் பத்தியில் எழுதப்பட்டி ருக்கும் உள்-அடையாளங்களுக்குப் பதிலாக நீங்கள் மற்றவர்களுக்குக் காட்டும் வெளி-அடையாளங்களை எழுதுங்கள். உதாரணத்திற்கு, நான் பலஹீனமானவன் என்பது உங்கள் உள்-அடையாளமாக இருந்தால், வெளி-அடையாளமாக என்ன காட்டுகிறீர்கள் என்பதை இரண்டாவது பத்தியில் எழுதுங்கள். சில சமயங்களில் உள்-அடையாளமும் வெளி-அடையாளமும் ஒரே மாதிரியாகக் கூட இருக்கலாம். உதாரணத்திற்கு, உங்கள் உள்-அடையாளம், 'நான் நட்புடன் பழகக் கூடியவன்' என்று இருந்து, வெளி-அடையாளமாகவும் உங்களை 'நட்பு மிக்கவராகக் காட்டிக் கொண்டிருந்தால், இரண்டாவது பத்தியிலும் 'நான் நட்புடன் பழகக் கூடியவன்' என்றே எழுதுங்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், நீங்கள் உங்களை மற்றவர்களுக்கு எப்படி வெளிக்காட்டிக் கொள்கிறீர்களோ அதை எழுதுங்கள்.

3.மமகாரம், அகங்காரம் இரண்டு பட்டியல்களையும் ஒப்பிடுங்கள். இரண்டு அடையாளங்களும் ஒத்திசைந்து இருந்தால், அதைப் புறக்கணித்துவிட்டு, அடுத்த அடையாளத்திற்குச் செல்லுங்கள்.

4.எங்கெல்லாம் இரண்டு அடையாளங்களும் முரண்படுகிறதோ அந்த இரண்டையும் இசைவு செய்யுங்கள். மமகாரம், அகங்காரம் இந்த இரண்டினுள் எது உயர்வான கருத்தாக இருக்கிறதோ, அதையே தேர்ந்தெடுங்கள்.

5.உதாரணத்திற்கு எங்கெல்லாம் உங்களுடைய வெளி அடையாளம், உள் அடையாளத்தைக் காட்டிலும் உயர்வானதாக இருக்கிறதோ, அங்கெல்லாம் உங்கள் உள்-அடையாளத்தை, வெளி அடையாளத்துடன் இசைவு செய்ய முடிவெடுங்கள். உங்களை எப்படி மற்றவர்களுக்கு வெளிக்காட்டிக் கொள்கிறீர்களோ அந்த வெளி அடையாளத்தைக் குறைத்துக் கொள்ளாதீர்கள். உங்களைப் பற்றி உங்களுக்குள் என்ன உணர்கிறீர்களோ அந்த உள் அடையாளத்தை உயர்த்துங்கள். இங்கு, உங்களுடைய வெளி-அடையாளமே அளவுகோலாக இருக்கட்டும்.

  1. இதையே ஒவ்வொரு அடையாளத்துக்கும் தொடருங்கள். இரண்டு அடையாளங்களையும் ஒப்பிடுங்கள், இரண்டில் எந்த பண்பு நலன் உயர்வாக இருக்கிறதோ, அதையே தேர்வு செய்யுங்கள். எந்த உள் அடையாளம் உயர்வானதாக இருக்கிறதோ அதனருகில் நட்சத்திரக் குறியீடு இடுங்கள். அதே போல் உங்கள் வெளி-அடையாளங்களில் எவையெல்லாம் உயர்வானவையாக இருக்கின்றனவோ அவற்றுக்கருகில் நட்சத்திரக் குறியீடு இடுங்கள்.

  2. உங்கள் உள் அடையாளத்தில் சில சிறந்த குணநலன்கள் இருந்தால், அவற்றுக்கு இணையாக உங்கள் வெளி-அடையாளத்தை உயர்த்துங்கள். அதே போல் உங்கள் வெளிஅடையாளத்தில் சில சிறந்த குணநலன்கள் இருந்தால் அவற்றுக்கு இணையாக உங்கள் உள் அடையாளத்தை உயர்த்துங்கள். இந்தப் பயிற்சி பட்டியலை, உங்கள் உயர் அடையாளத்துடன் இசைவு செய்து கொள்ளும் வரை தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

உள் மற்றும் வெளி அடையாளங்களை இசைவு செய்தல்

உள்-அடையாளம்வெளி-அடையாளம்தேர்ந்தெடுக்கவேண்டிய அடையாளம்
நான் பலஹீனமானவன்நான் பலசாலி★நான் பலசாலி
நான் பிரபலமானவனில்லைநான் பிரபலமானவன்நான் பிரபலமானவன்
நான் பொறுப்பானவன்நான் பொறுப்பானவன்நான் பொறுப்பானவன்
நான் சாமர்த்தியசாலி★ நான் முட்டாள்நான் சாமர்த்தியசாலி

உங்கள் சிந்தனையில் சிரத்தையை வரவழைத்து வாருங்கள்

சிந்தனையில் சிரத்தையை எடுத்து வருதலில் இரண்டு படிகள் உள்ளன. முதலில், நீங்கள் உண்மையிலேயே எதை விரும்புகிறீர்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள். இது, உங்கள் 4 பரிமாணங்களும் எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்பதைக் குறித்து சிரத்தையுடன் ஆழ்ந்து ஆராய்ந்து, சிந்திப்பதன் மூலம் மட்டுமே சாத்தியப்படும்.

அகங்காரம், மமகாரம், அன்யகாரம், ஸ்வ- அன்யகாரம் இந்த நான்கு அடையாளங்களிலும் உயர்ந்த அடையாளங்களைப் பட்டியலிட்டு, படுக்கைக்கு அருகில், அலுவலக மேஜையில் என்று காலை எழுந்தவுடன் பார்க்கக்கூடிய இடமாக, அல்லது நாள் முழுக்க அடிக்கடி நாம் உபயோகிக்கும் இடமாகப் பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது உங்களுக்குத் தடைகளாக இருப்பவற்றை அதாவது நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்களோ, யாராக இருக்க விரும்புகிறீர்களோ, எப்படி இருக்க விரும்புகிறீர்களோ அவற்றை அடைய விடாமல் உங்களைத் தடுப்பவை எவை என்பதைக் கண்டுபிடியுங்கள். பெரும்பாலான மக்களுக்கு அப்படித் தடையாக இருப்பது சுய-சந்தேகமே. சுய-சந்தேகம், கடந்தகால தோல்விகளின் காரணமாக நமக்குள் எழும் ஒரு எதிர்மறை மனப்பாங்குதான் இந்த சுய-சந்தேகம்.

உங்கள் உச்சபட்ச சாத்தியக் கூறுகளோடு ஒத்திசைந்து செல்லும் எண்ணப் போக்கு களை ஊக்குவியுங்கள், வளப்படுத்துங்கள், வரவேற்பளியுங்கள்; ஒத்திசைந்து செல்லாத எண்ணப் போக்குகளை முழுமைப்படுத்துங்கள். விழிப்புடனும், தீர்மானத்துடனும் அந்த மனப்பாங்கை முழுமைப்படுத்துங்கள். நாள்தோறும், உங்கள் உச்சபட்ச சாத்தியக்கூறுகளை அடையவிடாமல் தடுக்கும் அந்த மனப்பாங்குகளைப் பற்றி ஆழமாக ஆராய்ந்து, அந்த மனப்பாங்குகளை முழுமைப்படுத்துங்கள்.

நீங்கள் சிரத்தையை வாழ்க்கை முறையாக வாழ ஆரம்பிக்கும்போது, சரியான வழியில் சிந்திக்கத் தெரிந்துகொள்கிறீர்கள்; எதை உங்கள் வாழ்க்கையில் அடைய விரும்புகிறீர்களோ அதை அடைவதற்கு உங்கள் சிந்தனையைப் பயன்படுத்துவீர்கள். சிரத்தை, authentic thinking என்றறியப்படும் இதுவே இந்து மத ஆன்மிகப் பயிற்சியில் இரண்டாவது படியாக விளங்குகிறது.

உங்கள் சிந்தனை 'சிரத்தை'யில் நிலைக்கட்டும், தொடர்ந்து உங்களை உச்சபட்ச சாத்தியங்களை நோக்கி விரிவடையச்செய்யட்டும். உங்கள் எண்ணங்களில் ஆழமிக்க தெளிவை நீங்கள் அடையும்போது, நீங்கள் நினைப்பதையெல்லாம் அது வெற்றியடையச் செய்கிறது, நீங்கள் சிந்தனை சக்தியை விடுவிக்கிறீர்கள்.

நீங்கள்தான் ஆதார சக்தி

உணர்வின் சக்தி என்பது உங்கள் வாழ்வில் நிகழும் அனைத்திற்குமே நீங்கள் தான் மூல ஆதாரம் என்று உங்களை உணரச் செய்வதைத் தவிர, வேறில்லை. இந்தப்புரிதல், உங்கள் சொந்த வாழ்க்கையின் மீதான உங்களுடைய வல்லமையான கட்டுப்பாட்டு ஆற்றலை அளிக்கிறது. மேலும் மற்றவர்களுடைய வாழ்க்கையில் நீங்கள் ஒரு நேர்மறை தாக்கமாக இருக்கக்கூடிய ஆற்றலையும் உங்களுக்குத் தருகிறது.

உங்களை நீங்களே ஒரு தலைவராகக் கண்டுணர்ந்து, உங்களுக்குள்ளும் உங்களைச் சுற்றியும் நிகழும் எல்லாவற்றுக்கும் நீங்களே பொறுப்பெடுத்துக் கொள்ளும்போது உணர்வின் சக்தி வெளிப்படுகிறது.

உணர்வின் சக்தியை விடுவிக்கும் திறவுகோல் பொறுப்பெடுத்தலே.

பொறுப்பெடுத்தல் என்றால் என்ன ?

உங்களுக்குள்ளும், உங்களைச் சுற்றியும் நிகழுகின்ற அனைத்து நிகழ்விற்கும் நீங்கள்தான் ஆதிமூலம் என்னும் சத்தியத்தை உணர்ந்து, அதனால், 'உங்களுக்குள்ளும், உங்களைச் சுற்றியும் நிகழுகின்ற எல்லாவற்றிற்கும் நீங்கள்தான் பொறுப்பு' என்ற உணர்வுத்தெளிவிலிருந்து சிந்தித்தல், பேசுதல், இயங்குதல் மற்றும் மற்றவர்களையும் இயக்குவித்தல் !

முன்னொரு காலத்தில் யாராவது, எவருமே இல்லை, யாராகிலும் மற்றும் எல்லோரும் என்னும் பெயர்களுடைய நான்கு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.

ஒருமுறை ஒரு முக்கியமான வேலை செய்து முடிக்கப்பட வேண்டியிருந்தது. ஆனால் அதை யார் செய்வது ? என்ற கேள்வி எழுந்தது.

'யாராவது' இதைச் செய்ய முடியும், 'யாராகிலும்' இதைச் செய்திருக்க முடியும், ஆனாலும்'எவருமே' இதைச் செய்யவில்லை என்று 'எல்லோரும்' உறுதியாக நம்பினார்.

'யாராவது'க்கு உடனே கோபம் வந்துவிட்டது. ஏனெனில் அது 'எல்லோருடைய' வேலை என்று எண்ணினார்.

'யாராகிலும்' இதைச் செய்ய முடியும் என்று 'எல்லோரும்' நினைத்தார், ஆனால் 'எல்லோரும்' அதைச் செய்யப் போவதில்லை என்பதை 'எவருமே' உணர்ந்து கொள்ளவில்லை.

இறுதியில், 'யாராகிலும்' செய்து முடித்திருக்க முடிந்த ஒன்றை, 'எவருமற்றவா்' செய்து முடித்தபோது, 'எல்லோரும்' யாராவது'வைத் திட்டுவதில் தான் இது முடிந்தது.

மூன்று வகையான மனிதர்கள்:

தன்னுடைய சொந்த செயல்களுக்கு தானேதான் பொறுப்பு என்பதை உணராதவன் மிருகம் போல் வாழ்கிறான்- அவன் தாழ்நிலை விழிப்புணர்வில் வாழ்கிறான். தன்னுடைய சொந்த செயல்களுக்கு மட்டுமே தான் பொறுப்பு என்று உணர்பவன் மனிதன்- அவர் நடுத்தரமான விழிப்புணா்வில் வாழ்கிறான். மற்றவர்களின் செயல்களுக்குக் கூட பொறுப்பெடுப்பவன் இறைவனாகிறான்- அவன் தலைமைப் பண்பு விழிப்புணர்வில் வாழ்கிறான்.

சிலவற்றுக்கு, உங்களுடைய செயல்கள் பொறுப்பாகவிட்டாலும் கூட, மற்றவர்களுடைய அந்த அசிரத்தைக்கும் பொறுப்பின்மைக்கும் பொறுப்பெடுப்பது உங்களை ஒரு தலைவனாக்கும்.

காரணங்கள் Vs பொறுப்பெடுத்தல்

'எல்லாவற்றுக்கும் நீங்களே பொறுப்பெடுப்பது' என்பது பற்றி கேட்டவுடனேயே, உங்கள் மனத்திற்குள் எழும் மிகப்பெரிய கேள்வி இது, 'என்னைச் சுற்றி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் நான் எப்படி பொறுப்பெடுக்க முடியும்?'

''எனக்குள் நிகழ்பவற்றுக்கு நான்தான் பொறுப்பாளி என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் என்னைச் சுற்றி நடப்பவற்றிற்கு, எனக்கு வெளியில் நடப்பவற்றிற்கு நான் எப்படி பொறுப்பெடுக்க முடியும். உதாரணத்திற்கு, எனக்கு ஒரு விபத்து நிகழ்ந்தால், அதற்கு நாம் எப்படி பொறுப்பாளியாக முடியும் ?''

எல்லோரும் கேட்கும் கேள்வி இது!

கேளுங்கள்: ஏதோ ஒன்றுக்கு காரணமாக இருப்பதற்கும், அதற்கான பொறுப்பெருப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது!

சில சமயங்களில், சில நிகழ்வுகள் நிகழ்வதற்கு நீங்கள் காரணமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்நிகழ்வு உங்கள் வாழ்வைப் பாதிக்குமானால், நீங்கள்தான் அந்நிகழ்வுக்குப் பொறுப்பு! உதாரணத்திற்கு, உங்கள் நாட்டில் நிலவும் பொருளாதார லஞ்ச-லாவண்யங்களுக்கு நீங்கள் காரணமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அந்நாட்டின் பிரஜை என்ற முறையில் நீங்கள்தான் அதற்கு பொறுப்பு! உங்கள் தர்க்கத்தின்படி, நீங்கள் அதற்குக் காரணமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் உண்மையில் நீங்கள் அதற்கு பொறுப்பு அல்ல என்பது அதன் பொருள் அல்ல. You may not be the reason, as per your logic, but that doesn't mean that you are not responsible in truth.

நீங்கள் பொறுப்பெடுக்காவிட்டால், நீங்கள் உங்களை மேம்படுத்தப்போவதும் இல்லை, உங்களுடைய உள் உலகை விரிவுப்படுத்திக் கொள்ளப்போவதும் இல்லை என்பதை நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

உங்களுடைய பிரம்மாண்டத்தன்மை உங்களைப் பயமுறுத்துகிறது

நீங்கள் எப்போதுமே, உங்களுடைய சிறிய தன்மையால்தான் திக்கு முக்காடுகிறீர்கள் என்று நீங்கள் நம்புகிறீர்கள். இல்லை! நீங்கள் உங்கள் பிரம்மாண்டத்தன்மையால் தான் திக்குமுக்காடிப் போகிறீர்கள்! எப்போதெல்லாம் உங்களுடைய பிரம்மாண்டத்தன்மை உங்களை விரிவடைய வற்புறுத்துகிறதோ, உங்களை விரிவுப்படுத்த நீங்கள் நிர்பந்திக்கப்படுகிறீர்கள் என்று எப்போதெல்லாம் உணர்கிறீர்களோ, அப்போதெல்லாம் உங்களை உங்களுடைய சௌகரியமான வட்டாரத்திற்குள் மேலும் சுருக்கிக் கொள்கிறீர்கள். உங்களுடைய சோர்வுத் தன்மை, உங்களுடைய பலஹீனம், உங்களுடைய சக்தியற்றதன்மை இவை எல்லாமே உங்களுடைய பிரம்மாண்டத்தைப் பார்க்க நீங்களே கொண்டிருக்கும் எதிர்பார்ப்புத்தன்மையே தவிர, வேறொன்றில்லை.

அதனால்தான் யாராவது உங்களிடம், ''நீங்கள் ஏழை, பலஹீனமானவா், பாவம் செய்தவர்,'' என்று சொன்னால் அதை ஒப்புக் கொள்வதென்பது உங்களுக்கு மிக எளிதாக இருக்கிறது. ஆனால், யாராவது உங்களிடம், 'நீங்கள் தெய்வீகமானவர், நீங்கள் சக்தி மிக்கவர், நீங்கள் முமுமையானவர்,'' என்று சொன்னால், உடனே உங்களுடைய மொத்த அடையாளமும் பயத்தால் நடுங்க ஆரம்பித்து விடுகிறது. ஆனால் வாழ்க்கை உங்களிடமிருந்து எப்போதும் விரிவாக்கலையே எதிர்பார்க்கிறது. எனெனில் விரிவடைதலே வாழ்வின் இயல்பான விதி! அதனால்தான் நீங்கள் வாழ்வைப்பற்றி அவ்வளவு ஆழமான ஒரு பயத்தைக் கொண்டிருக்கிறீர்கள்.

குறிப்பாக, மற்ற மக்கள் வடிவத்தில் இருக்கும் வாழ்க்கையைப்பற்றி அதிக அளவு பயத்தைக் கொண்டிருக்கிறீர்கள்-ஏனெனில் மக்கள்தான், வாழ்வின் சிறப்புமிக்க, உயிர்ப்புள்ள வெளிப்பாடுகள்! நீங்கள் வாழ்க்கையுடன் எந்த அளவுக்கு அதிகமாக உங்களைப் பிணைத்துக் கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கான விரிவாக்கத்தை உங்களிடமிருந்து அது எதிர்பார்க்கிறது. எப்போதெல்லாம் பலஹீனமாகவும், சக்தியற்றும், சோர்வாகவும் உணர்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் இது: 10 பொறுப்புகளை எடுத்து, அவற்றை ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் செய்து முடிப்பதற்கான வாக்குறுதி கொடுங்கள். உங்களுக்குள் பலஹீனமும், சோர்வும், சக்தியற்ற நிலையும் வளர்வதற்கான வழியே இல்லாத வகையில், அந்த ஒப்பிய பொறுப்புக்கள் மூலம், உங்கள் உள் உணர்வை மிக பலமாக உலுக்குங்கள்.

பொறுப்பெடுத்தலை உங்களைப் பலசாலியாக்கும்

பொறுப்பெடுத்தல் என்பது ஒரு சுமை என்றுதான் நாம் எப்போதுமே நினைக்கின்றோம். இல்லை! அது ஒரு சக்தி! பொறுப்பு, நேரடியாகவே உங்களை தலைமைப்பண்பு உணர்விற்கு எடுத்துச் சென்றுவிடும்.

உங்களுடைய குடும்பத்திற்கு மட்டுமே பொறுப்பு என்று உணரும் வரை, நீங்கள் உங்களுடைய வீட்டுக்குத் தலைவராகிறீர்கள். சமுதாயத்திற்குப் பொறுப்பு என்று உணரும்பொழுது, நீங்கள் சமுதாயத்திற்கு தலைவராகிறீர்கள். உங்களுடைய பொறுப்பெடுக்கும் தன்மை விரிவடைய விரிவடைய, உங்களுடைய தலைமைப்பண்பும் விரிவடையும். மொத்தப்பிரபஞ்சத்திற்கே பொறுப்பெடுக்க உணரும் தீர்மானமே ஞானத்தன்மை! எல்லாவற்றுக்குமே நானே பொறுப்பு என்று உணர்வதும், 'அந்த உணர்வுக்கேற்ற வாழ்க்கையை வாழ்வேன்' என்று பிரகடனப்படுத்துவதும்தான் 'பொறுப்புப் பிரகடனம்' (Responsible declaration) எனப்படுகிறது. இதுவே இந்து ஆன்மிகப் பயிற்சியில் நீத்த்யாசனம் என்றறியப்படுகிறது. பொறுப்புப் பிரகடனம், உங்களுள் உள்ள உணர்வின் சக்தியை விடுவிக்கிறது.

நான் பொறுப்பு என்று உணர்வது' என்பதன் பொருள் என்ன ?

உங்களைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றிற்குமே நீங்கள் தான் பொறுப்பு என்று நான் சொல்வதைக் கேட்டவுடன், உடனே நீங்கள், 'தெருவில் கிடக்கும் குப்பைகளுக்கெல்லாம் நான் தான் பொறுப்பு என்றால், அதைச் சுத்தம் செய்வதிலேயே என்னுடைய நாள் முழுவதுமே செலவழிந்து விடுமே! நான் அதற்குப் பிறகு எதுவுமே செய்ய முடியாகே!' என்று நினைக்கலாம்.

கேளுங்கள்: தெருவில் கிடக்கும் குப்பைக் கூளங்களுக்கு நீங்கள் தான் பொறுப்பு என்று நீங்கள் உணர்ந்தால், நீங்களேதான் அவற்றைச் சுக்கம் செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை ;

மேலும் நீங்கள் அதைச் சுத்தம் செய்யக் கூடாது என்றும் நான் சொல்லவில்லை. என்ன வேண்டுமானாலும் நிகழட்டும். ஆனால் உங்களுடைய கற்பனையான சிக்கல்கள் imaginary complications காரணமாக, பொறுப்பெடுத்தலில் குதிப்பதற்குப் பயப்படாதீா்கள். அப்படி உணர்வதற்கே கூட உங்களை நீங்களே தடுத்துக் கொள்ளாதீர்கள்!

அந்தக் கற்பனையான சிக்கல்களை (imaginary complications) முழுமைப்படுத்துங்கள். சிறிதுகால அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள், இந்தப் பொறுப்புணர்வு உங்களுக்குள் மூழ்கவும், உங்கள் செயல்களுடன் ஒத்திசைந்து செல்லவும் அனுமதியுங்கள். இப்படி செய்யும்போது, பொறுப்பே (responsibility) ஒருங்குவிக்கப்பட்ட சக்தியாகிவிடும் (synergy).

உணர்வின் விஞ்ஞானம்

உணர்வின் விஞ்ஞானத்தை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த ஒன்றையும் மகிழ்ச்சியாகவும் உணரலாம் அல்லது வலியாகவும் உணரலாம். அது உங்கள் சுதந்திரம்! சிறந்த வாழ்நாள் சாதனைகள் கூட சில சமயங்களில் உங்களுக்கு வலியைக் கொண்டுவரும். அதேபோல் மிக மோசமான ஒரு அனுபவம் கூட, உங்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான பாடமாக இருக்கலாம். நீங்கள் அதை எப்படி உணர வேண்டும்' என்பதைத் தீர்மானிக்கும் ஆற்றலை நீங்களேதான் பெற்றிருக்கிறீர்கள்.

கேளுங்கள்: எப்பொழுதெல்லாம் உங்களை ஆற்றலுடையவராக உணர்கிறீர்களோ, அப்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீாகள். எப்பொழுதெல்லாம் உங்களைச் சக்கியற்றவராக உணர்கிறீர்களோ, அப்பொழுதெல்லாம் நீங்கள் துக்கத்தையே அனுபவிக்கிறீர்கள். உங்களுடைய எல்லாவிதமான துக்கமுமே - வலி, கோபம், குற்றவுணர்ச்சி, பொறாமை, விரக்தி - இவையெல்லாமே, உங்களுடைய சக்தியற்ற நிலை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பல்வேறு வழிகளே! உங்கள் வாழ்வில் நிகழும் அனைத்திற்குமே நீங்கள் தான் பொறுப்பு என்று உணரும்பொழுது, எல்லாமே மகிழ்ச்சிதான் என்று உணர்வீர்கள்; ஏனெனில் எதுவுமே உங்களைச் சக்கியற்றவாாக்க முடியாது. அதனால், பொறுப்பெடுத்தல் மூலம் உங்களை ஆற்றலுடையவராக்கிக் கொள்ளுங்கள். உணர்வின் சக்தியை விடுவித்துக் கொள்ளுங்கள்.

உணர்வின் சக்தியை விடுவிப்பதன் மூலம், நீங்கள்...

சக்தியும், நிறைவுணர்வும் நிறைந்த ஒரு தளத்திலிருந்தே எப்போதும் செயல்படுவீர்கள்.

உங்கள் கவனத்தைத் தீர்வுகள் மீது செலுத்துவீர்கள்; பிரச்னைகள் மீதல்ல.

உங்கள் உள்உணர்வை விரிவுப்படுத்துவீர்கள். புது சாத்தியக்கூறுகளுக்கு உங்களைத் திறந்து வைப்பீர்கள்.

ு உங்கள் வாழ்க்கை மீது சிறந்த கட்டுப்பாட்டைப் (Gain a high degree of control over your life ) பெறுவீர்கள்.

வெற்றியின் அடுத்த நிலைக்கு உங்களை நீங்களே உயர்த்திக் கொள்வீர்கள். ஒரு ஜீவனாக மலர்வீர்கள்.

உங்கள் உணர்வின் சக்தியை விடுவிக்கும் பயிற்சி முறை:

உங்களை நீங்களே எங்கெல்லாம் சுருக்கிக் கொள்கிறீர்களோ, உதாரணத்திற்கு வேலையில், உறவு முறைகளில் என்று எங்கெல்லாம் உங்களைச் சுருக்கிக் கொள்கிறீர்களோ அவற்றைப் பட்டியலிடுங்கள்.

வாழ்வின் இந்த ஒவ்வொரு அம்சத்திலும், நீங்கள் எந்த மாதிரி எண்ணங்களை எண்ணுகிறீர்கள்: எந்த மாதிரியான செயல்களைச் செய்கிறீர்கள் என்பதைப் பட்டியலிடுங்கள்.

வாழ்வின் அந்த அம்சக்திற்கு நீங்கள் பொறுப்பெடுக்காமல், அதற்குப் பதிலாக வெளிக் காரணிகள் ஏதாவது அந்த அம்சத்தை மாற்றி விடும் என்று வெளிக் காரணிக்காகக் காத்திருக்கும் அம்சங்களை அடையாளம் கண்டு பட்டியலிடுங்கள்.

அற்றுள் ஏதாவது ஒரு அம்சத்தைத் தேர்ந்தெடுத்து, அதை மாற்றுவதற்குரிய புதிய சூழ்நிலையை உருவாக்குவதற்கு நீங்களே பொறுப்பு என்று பிரகடனப்படுத்துங்கள். அது நிகழ நீங்கள் எதை மாற்ற வேண்டுமென்பதை அடையாளம் காணுங்கள். > ஒரு வாரத்திற்கு, உங்களை நீங்களே தொடர்ந்து கவனித்து, உங்கள் முன்னேற்றத்தைக் குறித்து வையுங்கள்.

வாழ்க்கையே ஒரு சக்தி

ஒவ்வொரு நாளும் நீங்கள் நடக்கிறீர்கள், உட்காருகிறீர்கள், சிந்திக்கிறீர்கள், பேசுகிறீர்கள், உணர்கிறீர்கள்-இதுபோல பலவற்றைச் செய்கிறீர்கள். இது அனைத்தும் சேர்ந்ததே வாழ்வு! வாழ்வே ஒரு சக்திதான்! வளப்படுத்துதல் என்னும் வாழ்க்கை முறையை உங்களுடையதாக்கிக் கொள்ளும்போது, உங்கள் வாழ்வில் நீங்கள் வாழ்வின் சக்தியைப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள். (harness)

கேளுங்கள்: நீங்கள் பிறப்பெடுத்ததன் நோக்கம், உங்களையும் மற்றவர்களையும் வளப்படுத்தவே! இந்தப் புரிதலில் இருந்து செயல்பட்டால், நீங்கள் உயிர்ப்புள்ளவராகவும், உங்கள் செயல்திறனின் உச்சத்திலும் ஜீவன்முக்த தன்மையிலும் இருப்பீர்கள்!

வளப்படுத்துதலே உங்களுக்குள் இந்தும், வாழ்க்கை சக்தியைத் திறக்கும் த்றவுகோல்.

வளப்படுத்துதல் என்றால் என்ன?

தொடர்ந்து வளப்படுத்திக்கொண்டே இருப்பேன் என்னும் வாக்குறுதியை ஒருங்குவித்தல், சிரத்தை மற்றும் பொறுப்புணர்வுடன் எடுக்கும்பொழுது, அது உங்கள் வாழ்வையும் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்வையும் தொடர்ந்து வளப்படுத்தி, விரிவடையச் செய்யும்.

உங்களையும் உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களையும் வளப்படுத்துவது என்று பொறுப்பு எடுத்துக் கொள்ளும்பொழுது, வாழ்க்கை உங்கள் மீது எல்லாவிதமான மங்களங்களையும் பொழிகிறது. உங்களுக்குள் இருக்கும் வாழ்வை மட்டுமல்ல, மற்றவர்களுடனான வெளி வாழ்க்கையையும் கூட உணர்வீர்கள். நீங்கள் வளப்படுத்தும்பொழுது, வாழ்வின் சக்தி உங்களுள் விழிப்பிக்கப்படுகிறது.

அனைத்தும் உங்களின் அங்கமே

கேளுங்கள்: மற்றவர்களை உங்களிடமிருந்து வேறானவர்களாக நீங்கள் நினைக்க ஆரம்பிக்கும் அக்கணமே, உங்கள் வாழ்வில் அனைத்துவிதமான போராட்டங்களும் ஆரம்பித்துவிடுகிறது! ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் உங்கள் வாழ்வில் 'மற்றவர்' என்று எவருமே இல்லை. 'மற்றவர்' என்பது மறக்கப்பட்ட, கைவிடப்பட்ட உங்களின் ஒரு பகுதியே! மற்றவர்களுடனான போராட்டம் என்பது, மறக்கப்பட்ட உங்களின் பகுதியுடனான போராட்டமே.

மற்றவர்களை வளப்படுத்தும்பொழுது, இயற்கையாகவே கைவிடப்பட்ட உங்களின் ஒரு பகுதியையும் சேர்த்தே வளப்படுத்திக் கொள்கிறீர்கள். அதனால் மற்றவர்களை எந்தளவிற்கு வளப்படுத்துகிறீர்களோ அந்தளவிற்கு உங்களை நீங்களே வளப்படுத்திக் கொள்கிறீர்கள். எல்லாவற்றையும்விட முக்கியமாக, ஒவ்வொருவரும், ஒவ்வொன்றும் உங்களின் ஒரு பகுதியே என்ற சத்தியத்திற்கு விழித்துக் கொள்கிறீர்கள். Above all, you wake up to the truth that everyone and everything is part of you.

வளப்படுத்துதல், வல்லா சக்திகளுக்கும் உயிரளிக்கிறது

ஒருங்குவித்தலுடன் வாழும்பொழுது நீங்கள் நேர்மறை உணர்வை உணர்கிறீர்கள், சிரத்தையுடன் வாழும்பொழுது நீங்கள் சாத்திய உணர்வை உணர்கிறீர்கள், பொறுப்பெடுத்தலில் தலைமை உணர்வை உணர்கிறீர்கள். வளப்படுத்தலுடன் வாழும்பொழுது, ஞான உணர்வை, ஜீவன் முக்த உணர்வை உணர்கிறீர்கள். ஜீவன் முக்த வாழ்க்கை என்பது உங்களுடைய 4 உள் சக்திகளையும் விடுவித்து, அவற்றை உங்களையும், மற்றவர்களையும் வளப்படுத்தப் பயன்படுத்திக் கொள்வதைத் தவிர, வேறொன்றுமில்லை. அதனால் வாழ்க்கை சக்தி, எல்லா சக்திகளையும் தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது.

ஒருங்குவிக்கப்பட்ட கேட்டலையும் (சிரவணம்), சிரத்தையுடன் கூடிய சிந்தனையையும் (மனனம்), பொறுப்பான பிரகடனத்தையும் (நிதித்யாசனம்) செய்யும்போது, நீங்கள் வளப்படுத்தும் வாழ்வையே வாழ்வீர்கள்.

உங்களையும், மற்றவர்களையும் வளப்படுத்தினால், அது பொறுப்படுத்தலைவிட ஒருபடி மேலானதுதான். வளப்படுத்துதல் ஒன்றே உங்களுள் இருக்கும் எவ்வித ஒருங்குவித்தலின்மை, அசிரத்தை மற்றும் பொறுப்பின்மையையும் எரித்துவிட முடியும்! மற்றவர்களின் ஒருங்குவித்தலின்மை மற்றும் அசிரத்தை உட்பட ஒவ்வொருவருக்கும், ஒவ்வொன்றுக்கும் பொறுப்பெடுப்பதே 'வளப்படுத்துதல்'! ஏனென்றால் அவர்கள் உங்களின் ஒரு அங்கமே!

நான் ஏன் மற்றவர்களை வளப்படுத்த வேண்டும் ?

ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எங்கோ தனித்திருக்கும் ஒரு காட்டிற்குள்ளோ அல்லது ஒரு குகைக்குள்ளோ வாழவில்லை. வாழ்க்கை உங்களுக்கு வெளியே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நீங்கள் மற்றவர்களுடன் இணைந்தே வாழ்கிறீர்கள். வாழ்க்கை மற்றவர்களுடன்தான் நிகழ்கிறது. நீங்கள் நூற்றுக்கணக்கானவர்களுடன் சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள், மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் உங்களுடன் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அதனால் இப்படி உங்கள் வாழ்க்கை நூற்றுக்கணக்கானவர்களுடன் சம்பந்தப்பட்டிருக்கும்பொழுது, இயற்கையாகவே, உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் உணர்வுருமாற்றத்தை விரும்பினீர்களென்றால், நீங்கள் மற்றவர்களின் வாழ்க்கையிலும் உணர்வுருமாற்றத்தைக் கொண்டுவருவதற்கான வேலைசெய்தாக வேண்டும் !

உங்களை கைவிடாதீர்கள்
மற்றவைரை வளப்படுத்துங்கள்உங்களை வளப்படுத்துங்கள்
மக்களை கைவிடாதீர்கள்

இல்லையென்றால், நீங்கள் நாட்கணக்காக, மாதக்கணக்காகத் தொடர்ந்து அமர்ந்து தியானம்செய்து, உங்களை உயர்நிலை இன்பத்திற்கும் ஆனந்தத்திற்கும் உயர்த்திக்கொள்ளலாம், ஆனால் உங்கள் வீட்டுக்குத் திரும்பிய பத்தே நிமிடத்தில், உங்கள் வாழ்க்கைத்துணை உங்களைக் கீழ்நிலைக்கு கொண்டுவந்துவிடுவார். பத்து நிமிடங்கள் என்பதுகூட அதிகம்தான்! ஒரு பார்வை, ஒரு வார்த்தை, ஒரு தொலைபேசி அழைப்பு போதும்! மற்றவர்களை வளப்படுத்தும்பொழுது மட்டுமே, உங்கள் வாழ்க்கையில் எந்தவொரு உணர்வுருமாற்றத்தையும் ஏற்று, அதைக் கடக்க முடியும்.

பொறுப்பெடுத்தல் என்றால், நீங்கள் மற்றவர்களின் ஒருங்குவித்தலின்மையையும் அசிரத்தையையும் ஏற்றுக்கொண்டு, அவற்றுக்கான பழியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பொருள் அல்ல. இல்லை! அவர்கள் வாழ்வில் விடுவிக்காமல் இருக்கும் இந்த 4 சக்திகளையும் அவா்களும் உணர்ந்துகொள்வதற்கு, அவர்களை ஊக்குவிக்கவும், அவர்களைப் பலமிக்கவர்களாக்கவும் பொறுப்பெடுக்க வேண்டும் என்பதே அதன் பொருள்.

மற்றவர்களைப் பலமிக்கவர்களாக்குங்கள்

'பெற்றிருத்தல்' என்பது இயல்பாகவே உங்களைப் பகிர்தலுக்குப் 'பொறுப்பெடுக்கும்'படி செய்துவிடும். இதுதான் இயற்கை விதி. கண்களைப் பெற்றிருக்கும் ஒருவர், இயல்பாகவே, கண்ணற்ற ஒருவருக்கு பார்த்தலினால் ஏற்படும் பயன்களைத் தருவதற்குப் பொறுப்பாகிறார். பலமிக்க ஒருவர், இயல்பாகவே, பலமற்றர்களைப் பலமுள்ளவர்களாக்குவதற்குப் பொறுப்பாகிறார். கல்வியில் சிறந்திருக்கும் ஒருவர், அறியாமையில் இருக்கும் மக்களை அறிவுள்ளவர்களாக்குவதற்குப் பொறுப்பாகிறார். நீங்கள் செல்வந்தரானால், ஏழைகளைப் பணக்காரர்களாக்குவதற்குப் பொறுப்பாகிறீர்கள்.

உங்கள் செல்வத்தையெல்லாம் மற்றவர்களுக்குப் பங்குபோட்டு கொடுத்துவிடுங்கள் என்று நான் சொல்லவில்லை. அப்படியல்ல, நீங்கள் ஒரு 10 ஏழைகளைத் தேர்ந்தெடுத்து, உங்கள் செல்வத்தை அவர்களுக்குக் கொடுத்துவிட்டீர்களென்றால், இப்போது நாம் 11 ஏழைகளைக் கொண்டிருப்போம்! அவ்வளவுதான்.

அதனால் உங்கள் செல்வத்தை அவர்களுக்குக் கொடுக்க சொல்லவில்லை. நான் உங்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம், அவா்களுக்குக் கல்வி கொடுப்பதற்கும், அவர்களைச் செல்வந்தராக்குவதற்குமான பொறுப்பெடுங்கள் என்பதுதான். நீங்கள் சொந்தமாக்கிக் கொண்டிருக்கும் எந்த ஒன்றையும், பகிர்ந்தளித்து, அதை மேலும் மேலும் வளர்ப்பதற்கும் நீங்கள் பொறுப்பாகிறீர்கள்.

வளப்படுத்துதலைப்பற்றிய சில சூத்திரங்கள்

வளப்படுத்துதல்தான் உங்கள் இயல்பே! ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எதைச் செய்தாலும், அது மற்றவர்களை வளப்படுத்தும் செயல்தான். உங்கள் சுவாசம் கூட மரங்களையும், செடி, கொடிகளையும் வளப்படுத்துகிறது.

மற்றவா்களை வளப்படுத்துவது உங்களையும் வளப்படுத்துகிறது. ஏனெனில் அவர்கள் ஒவ்வொருவருமே உங்களின் பாகமே.

உங்கள் வாழ்க்கை மற்றவர்களுக்காகத்தான் என்ற சத்தியத்தை, உங்கள் மனத் திற்கு ஒருமுறை புரியவைத்து விட்டால்போதும், உங்கள் இதயத்தில் பதிந்திருக்கும் அனைத்து துக்கங்களும் உங்களை விட்டுச்சென்று விடும்.

அவரவர்களுடைய உச்சபட்ச சத்தியத்தில் வாழ்வதற்கு மற்றவர்களை வளப்படுத்துவதே, நீங்கள் அவர்களை வளப்படுத்தும் இறுதி, அறுதி வழி.

அதனால் உங்கள் வாழ்க்கை முறையை வளப்படுத்த தீர்மானியுங்கள்.

உங்களையும் மக்களையும் கைவிடாதீர்கள்

இந்த முக்கியமான சத்தியத்தை உள்வாங்கிப் புரிந்துணர்ந்து கொள்ளுங்கள். உங்களையும் மக்களையும் கைவிடாதீர்கள்! மக்கள் 100 முறை தோல்வியற்றாலும், தொடர்ந்து அவர்களுடன் வேலை செய்வதை நிறுத்தாதீர்கள்.

மற்றவர்கள் தோல்வியுறும்பொழுது வெறுப்புணர்வு அடைகிறீர்களென்றால், தெளிவாகப்புரிந்து கொள்ளுங்கள். அது உங்கள் தோல்வியை நோக்கிய வெறுப்புணர்வுதான். நாம் மற்றவர்களுக்கு நம் முதுகைக் காட்டினால்... நாம் தர்மத்தை வாழவில்லை, ஏனென்றால் நாம் மற்றவர்களைக் கைவிடும்பொழுது, தர்மத்தையும்கூட சேர்த்தே கைவிடுகிறோம். அதனால் ஒருபோதும் மக்களைக் கை விடாதீா்கள் !

வாழ்க்கை சக்தியை விரும்பித்தும் நூட்பட்

வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட்டது, உங்களைத் தனக்காகப் பயன்படுத்திக் கொண்டது, அதனால் இனி உங்களை நீங்களேதான் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று முதன்முதலாக எப்போது நினைத்தீர்கள்.

எது உங்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்துகிறது, வேறானவராக உணரச் செய்கிறது என்பதைப் பாருங்கள். அந்த மூல எண்ண மனப்பாங்கை நிறைவுசெய்யுங்கள்.

அடுத்த 48 மணிநேரத்திற்கு நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும், எல்லாவற்றையும் உங்களுடைய நீட்டிப்பாக பாருங்கள். அவர்களுக்கு நிறைவுணர்விலிருந்து சேவை புரியுங்கள்.

உங்களை நிரைவுசெய்ய பிரபஞ்சம் காத்துக் கொண்டிருக்கிறது

பிரபஞ்சம் ஒருபோதும் உங்கள் பிரார்த்தனைகளைக் கேட்பதில்லை என்றோ அல்லது உங்கள் கனவுகளைப்பற்றி கவலைப்படுவதில்லை என்றோ நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் கனவு காணத்தொடங்கியவுடன், உங்களுடன் இணைந்து பிரபஞ்சமும் கனவு காணத்தொடங்கிவிடுகிறது. நீங்கள் கனவு காணத்தொடங்கியவுடன், வாழ்க்கையும் உங்களைப் பற்றிய தன்னுடைய கனவுகளைக் கட்டமைக்க ஆரம்பித்து விடுகிறது. பிரபஞ்சம் உங்களை நிறைவுசெய்யக் காத்திருக்கிறது. அது உங்கள் மூலமாகக் கனவு காண்கிறது. அவற்றை நிதர்சனமாக்குவதற்கு உங்களுக்காக அது ஏங்குகிறது. ஒரு தாய் தன்னுடைய குழந்தை ஒரு ஆணாகவோ, பெண்ணாகவோ ஆவதற்கு எப்படி ஏங்குவாளோ, அப்படி நீங்கள் உங்கள் உச்சபட்ச சாத்தியக்கூறாக மாறுவதற்கும், உங்களுடைய சொந்த இயல்பாக மாறுவதற்கும் பிரபஞ்சம் ஏங்குகிறது. வாழ்க்கை உங்களுக்காகக் கொண்டிருக்கும் கனவுகள், உங்களுக்காக நீங்கள் கொள்ள முடிந்த கனவுகளைக் காட்டிலும் நூறு மடங்கு பெரியது.

அதனால் உங்களுடைய சிறந்த சாத்தியக் கூறுகளைக் கனவு காணுங்கள்: அவற்றைப் பிரகடனப்படுத்துங்கள். உங்கள் பிரகடனங்கள் ஏற்கெனவே நிதர்சனமாகிவிட்டதாகவே நினைக்கவும், வாழவும், செயல்படவும் ஆரம்பியுங்கள். அதைச் செய்யுங்கள்! பிறகு, நீங்கள் உங்களுடைய வார்த்தைகளின் சக்தியையும், சிந்தனை சக்தியையும், உணர்வின் சக்தியையும், வாழ்க்கையின் சக்தியையும் புரிந்துகொள்வீர்கள்! இதுவே தர்மம் - உங்களை,

ப்ரபத்ச ஓட்டத்தோடு ஒருங்க்ணைத்துக் கொள்ளதல்.

பிரபடுச்ச ஓட்டத்தோடு இசைவித்துக்கொண்டு வாழும்போது, நீங்கள்…

சிரத்தையும், சக்தியும், ஆனந்தமும் கொண்ட ஜீவனாகிறீர்கள்.

வாழ்க்கைக்கு தன்னியலார்ந்த வழியிலும் (spontaneously),

அமைதியாகவும் பதில் செயல்புரிவீர்கள்.

உங்களுக்கும் மற்றவர்களுக்கும் அதிசயங்களை நிகழ்த்தும் அளவிற்கு வல்லமையுடையவராகிறீர்கள்.

சிரத்தையும், சக்தியும், ஆனந்தமும் கொண்ட ஜீவனாகிறீர்கள்.

சிரத்தையும், சக்தியும், வாழ்க்லை கக்கு தன்னியலார்ந்த வழியிலும் அமைதியாகவும் பதில் செயல்புரிவீர்கள். கொண்ட ஜீவனாகிறீர்கள்

அதிசயங்களை நிகழ்த்தும் அளவிற்கு வல்லமை உடையவராகிறீர்கள்.

உங்கள் வாழ்வில் அதிசயங்களை நிகழ வையுங்கள்

நீங்கள் உயர்நிலை விழிப்புணர்வை அடையும்போது உங்களுக்குள் செயற்படுத்த தூண்டப்படுகின்ற அசாதாரணமான ஆன்மிக சக்திகளை சித்திகள் என்கிறோம். 4 சக்திகளுடன் நீங்கள் தொடர்ந்தும், சிரத்தையுடனும் வேலை செய்யும்போது, இந்த சித்திகள் உங்களுக்குள் விழிப்படையும்.

உங்கள் வார்த்தையில், எண்ணத்தில், உணர்வில், செயல்களில் தா்மத்தைச் சேருங்கள். 4 சக்திகளுடன் நீங்கள் தாமத்தைச் சேர்க்கும்பொமுது, உங்கள் வாழ்க்கையில் அதிசயங்கள் நிகழ்வதைக் காண்பீர்கள். உதாரணத்திற்கு, நீங்கள் அசாதாரணமான ஒருங்குவித்தலில் வாழும்போது, அந்தப் பிரபஞ்சமே உங்கள் வார்த்தைகளை நிறைவேற்ற ஓடோடி வருகிறது!

சரியான உணர்வை' உருவாக்,குவதைப்பற்றிய நகைச்சுவையான, ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சீன்ன கதை.

அசுர இளவரசனான சிறுவன் பிரஹ்லாதன், விஷ்ணுவின் சிறந்த பக்தன். இது அவனுடைய தந்தையும் அசுர அரசனுமான ஹிரண்யகசிபுக்கு மிகுந்த கோபத்தை மூட்டியது. ஏனென்றால் அவன், கடவுளுக்குப் பதிலாக தன்னையே வணங்க வேண்டுமென விரும்பினான். ஒரு நாள் ஹிரண்யகசிபு, பிரஹ்லாதனை நோக்கி ஒரு சவால் விட்டான். அரண்மனையிலிருந்த தூண்களைக் காட்டி, நீ உன்னுடைய கடவுள் விஷ்ணு எல்லா இடத்திலும் இருப்பதாகச் சொல்கிறாயே, அப்படியானால் அவன் இங்கிருக்கும் தூண்களில் இருக்கிறானா ? என்று கேட்டான்.

'' ஆம், அவர் இங்கிருக்கும் தூண்களிலும் இருக்கிறார்!'' என்றான் பிரஹ்லாதன்.

''ஓ, அப்படியா! எந்தத் தூணில் விஷ்ணு இருக்கிறான் என்று சொல், அதைப் பிளக்கிறேன், அவன் வருகின்றானா என்று பார்க்கலாம், ' என்று ஹிரண்யகசிபு கர்ஜித்தான்.

பிரஹ்லாதன், தூணைச் சுட்டிக் காட்ட தன் பிஞ்சுக்கரத்தைத் தூக்க ஆரம்பித்தான்.

ஹிரண்யகசிபு பிரஹ்லாதனை கேள்வி கேட்கும்போது, விஷ்ணு தன் இருப்பிடமான வைகுண்டத்தில் ஓய்வாகப் படுத்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. பிரஹ்லாதனின் கரம் அசைய ஆரம்பித்ததும், விஷ்ணு துள்ளிக் குதித்து எழுந்து, பூமியை நோக்கி ஒட ஆரம்பித்தார்! இதைக் கண்டு அதியத்துப்போன அவர் மனைவி லட்சுமி, ''என்ன நடந்தது, இவ்வளவு வேகமாகப் போகிறீர்கள் ?'' என்று கேட்டார்.

"என்னுடைய பக்தன், ஒரு தூணைச்சுட்டிக் காண்பிக்கப் போகிறான். அவன் எந்த தூணைச் சுட்டிக் காண்பிக்கிறானோ, அந்தத் தூணில் நான் நுழைந்தாக வேண்டும்!' என்றார்.

களங்கமற்ற பிரஹ்லாதனின் ஒருங்குவித்தலும் சிரத்தையும், அவன் விரல் எங்குச் சுட்டிக் காண்பிக்கிறதோ அங்கு விஷ்ணு தோன்றியே ஆகவேண்டும் என்கிற அளவுக்கு ஆழமானது! சக்தி மிக்க சாத்தியத்தை, சாத்திய உணர்வை நீங்கள் உருவாக்கும்பொழுது, அந்த இடத்தில் தெய்விகம் இறங்கி வருகிறது, உங்களுக்காக !

விருப்பத்தை நிதர்சமையக்குதல்

கேளுங்கள் !

ஏதாவது ஒன்று நிகழ்வதற்கான உணர்வை உருவாக்கும்பொழுதெல்லாம், துரதிர்ஷ்டவசமாக அது நிதர்சனமாகுமா என்ற சந்தேகத்தையும், அதன் சாத்தியத்தைப் பற்றிய சந்தேகத்தையும் சேர்த்தே உருவாக்குகிறீர்கள்! இதுபோன்று நீங்கள் உருவாக்கிய உணர்வைப் பற்றி சந்தேகப்படும்போது, நீங்கள் ஏற்கெனவே அந்த உணர்வை களங்கப்படுத்தி விட்டீர்கள்.

குறிப்பிட்ட ஒரு நோயால் நீங்கள் துக்கப்படுகிறீர்களென்றால், பாதிக்கப்படுகிறீர்களென்றால், நீங்கள் ஆரோக்கியமானவராக ஆவதற்கான உணர்வை உருவாக்குங்கள். ஆனால் நீங்கள் சரியான உணர்வை உருவாக்கத் தொடங்கியவுடனேயே, உங்களுக்குள் எல்லாவிதமான சந்தேகங்களையும் -உணர்வு தளத்தின் சக்தியைப்பற்றிய சந்தேகம், உங்கள் திறமையைப் பற்றிய சந்தேம் - என்று உங்களால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு எல்லா விதமான சந்தேகங்களையும் கொள்கிறீர்கள். சரியான உணர்வை உருவாக்கத் தொடங்கியவுடனேயே, உங்களுடைய கடந்த கால தோல்விகள் அனைத்தும் உங்கள் முன் வந்து நிற்கும், அரக்கர்கள் போல!

மிகவும் துரதிர்ஷ்டமிக்க ஒரு விஷயம் - நீங்கள் உணர்வுதளத்தின் சக்தியைப் பற்றி சந்தேகம்கொள்வதுதான். அதனால் முதலில், சரியான உணர்வை உருவாக்குவதிலுள்ள சிக்கல்களைத்தான் முழுமை செய்ய வேண்டும். அந்த நிறைவுணர்விலிருந்து சரியான உணர்வை உருவாக்குங்கள்.

ந்தைவுணர்விலிருந்து படைத்தலுக்கான நூட்பம்

இப்போது நான், உங்களுள் சரியான உணர்வை உருவாக்குவது பற்றியும், உங்கள் விருப்பத்தை நிதர்சனமாக்குவதைப் பற்றியும் விளக்குகிறேன், மேலும் அந்த அனுபவத்தையும் அளிக்கிறேன்.

நிதர்சனமாக வேண்டுமென்று நீங்கள் விரும்புகின்ற ஏதாவது ஆசையை எடுத்துக் கொள்ளுங்கள்- நீங்கள் செல்வந்தராக விரும்பலாம், ஆரோக்கியமானவராக விரும்பலாம், உறவுமுறைகளைச் சரிப்படுத்த விரும்பலாம், தலைவராக விரும்பலாம் அல்லது எதை விரும்புகிறீர்களோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.

முதலில், உங்கள் ஆழமான சுய சந்தேகத்திலிருந்தும், கடந்த காலத்தோல்விகளிலிருந்தும் எழும் சாத்தியமில்லை என்னும் கருத்தை நிறைவுசெய்யுங்கள். அதனுடன் நிறைவுசெய்யுங்கள். உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள், ''சாத்தியமற்றது என்று ஒன்றுமே இல்லை!''

இரண்டாவதாக, உங்கள் விருப்பத்தை நிதர்சனமாக்குவதற்கான உணர்வை உருவாக்குங்கள். அதற்கு முன், சரியான உணர்வை உருவாக்கும் உங்கள் திறமையைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் சந்தேகத்தை நிறைவுசெய்யுங்கள். கண்களை மூடி அமருங்கள். நீங்கள் கொண்டிருக்கும் அந்தக் கருத்தை மேலே எடுத்து வாருங்கள். சாத்தியமற்றது என்கிற அந்தக் கருத்தை நிறைவுசெய்யுங்கள்.

இப்போது அந்த நிறைவுணர்விலிருந்து செயல்படுங்கள். உங்களின் செயல்களின் மூலம், உங்களின் அந்த விருப்பத்தை நிதர்சனமாக்குவது என்று தீர்மானியுங்கள். உங்கள் விருப்பத்தை நிதர்சனமாக்குவது என்று ஒப்புக்கொள்ளும் பொறுப்பே, அதற்கான பொறுப்பை எடுப்பதாகிறது.

சாத்தியத்திற்கான உணர்வை உருவாக்குவதும், அதற்கான பொறுப்பை எடுப்பதும்தான், உங்கள் விருப்பத்தை உங்கள் வாழ்வில் நிதா்சனமாக்குகிறது.

உங்கள் உணர்வு தளத்தில் எதையெல்லாம் உருவாக்குகிறீா்களோ, அவை அனைத்துமே உங்கள் வாழ்வில் மங்களகரமான நிஜங்களாக ஆகட்டும் என்று ஆசீர்வதிக்கின்றேன்.

அக விழிப்புணாவு முகமான

ஒரு அசாதாரணமான வாழ்க்கையை வாழ்வதற்கான சாத்தியத்தை இப்போது பார்த்து விட்டோம், அடுத்த அடி, இயற்கையாகவே அதை விழிப்படையச் செய்வதைப் பற்றியதாகவும், தர்மதை நோக்கியதாகவுமே இருக்க வேண்டும்.

வாழும் அவதார புருஷர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, ஆழம் மிக்க போதனைகள், கலந்துரையாடல் வகுப்புகள், மூலமனப்பாங்கைப் பற்றிய ஆராய்ந்தறிதல், குண்டலினியை விழிப்பிக்கச் செய்யும் சக்திமிக்க மூலம் உங்களுள் இருக்கும் நான்கு சக்திகளையும் விடுவித்து, உங்களுள் உணர்வுருமாற்றத்தை நிகழ்த்தும் அக விழிப்புணர்வு முகாமை ஒவ்வொரு மாதமும் நடத்துகிறார்.

உங்கள் உணர்வுருமாற்றத்தை இன்னும் ஆழப்படுத்தவும், உங்கள் வாழ்வில் நான்கு சக்திகளும் ஆசீர்வாதங்களைப் பொழியத் துவங்குவதற்குமான வகையில் இந்த நாள் தியான முகாம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் உணர்வு தளத்தில் எதையெல்லாம் உருவாக்குகிறீா்களோ, அவை அனைத்துமே உங்கள் வாழ்வில் மங்களகரமான நஜங்களாக ஆகட்டும் என்று ஆசிர்வதிக்கின்றேன். - வாழும் அவதாற பருஷர் பரம்மூழ்லை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM