1. அவதாரம்
1. அவதாரம்
உண்மையான தேடுதல் இருந்தால் நிச்சயம் ஞானம் கிடைக்கும் என்பதைத் தொடர்ந்து நிரூபிக்க பூமியில் அவ்வப்போது மகர்ன்கள் ஆன்மீக மலர்களாக மலர்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி மலர்ந்த ஓர் அற்புத மலர்தான் நமது - THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
உண்மையான குருவிற்கு எந்தக் காலத்திலும் பஞ்சமிருந்ததில்லை. உண்மையான சீடர்களுக்குத்தான் எல்லாக் காலங்களிலும் பஞ்சம்.
மனிதர்களின் இயல்பே தான் கெட்டுப் போவதற்கான 99 வழிகளை தெரிந்து வைத்திருப்பது. உருப்படி ஆவதற்கான வழிகளை அறிந்திருந்தும் ஒரு வழியையும் பயன்படுத்தாமல் இருப்பதுதான் விந்தை!
நாம் மவித உருவெடுத்ததற்கான ஒரே ஒரு காரணம் நிலையான, நித்தியமான ஆனந்தத்தை அடைவதற் காகத்தான். இந்த நிலையான நித்தியானந்தத்தை நாம் அடைவதற்காக உன்னதமான ஒரு வழியைக் காட்டி, 99 தவறான் வழிகளையும் ரத்தினச் சுருக்கமாக கட்டிக் காட்டி மாபெரும் ஆன்மீகச் சேவையைச் செய்து வருகிறார் நமது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. இவர் ஆன்மீக உலகின் ஒர் ஒப்பற்ற நக்ஷத்திரம்.
இவர் அக ஒளியைக் கண்டு கொண்டவர்; இறை சக்தியை அனுபவமாக உணர்ந்தவர்; காலத்தையும், உடலையும் தாண்டும் தெய்வீக அனுபவம் பெற்றவர்;