1. Sri Nithyananda - An Introduction
நித்யானந்த ஸ்புரணா தியான முகாம் (Nsp)
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நேரடியாக நடத்தும் நான்கு நாள் தியான முகாம். நமக்குள் இருக்கும் 7 உடல்களை பற்றிய வேத ரகசியங்களையும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, தான் ஞானமடைவதற்கு பயன்படுத்திய தியான முறைகளையும் NSP-ல் கற்றுத் தருகிறார்கள்.
ஆத்ம ஸ்புரணா தியான முகாம்
ஞானி யார் ? நான் எங்கிருக்கிறேன் ? நான் எப்படியிருக்கிறேன் ? என்ற மிகப் பெரிய ஆன்மீக தத்துவ விளக்கங்களை நமக்குள் இருக்கும் ஐந்து கோஷங்களை அடிப்படையாக கொண்டு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நேரடியாக நடத்தும் நான்கு நாள் தியான முகாம்.
தியான சிகிச்சை தீக்சை (HEALER INITIATION)
இரண்டு ASP இயான முகாம்களில் பங்கு பெற்ற பின் உலக மக்களுக்கு ஆனந்த சேவை செய்ய மனப்பூர்வமாக விரும்புபவர்களுக்கு 'தியான சிகிச்சை தீக்சை' ஆசிரமத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஆன்மீக சொற்பொழிவுகள்
இலவச ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியானமுகாம் ஆஸ்ரமத்திலிருந்து முன் அனுமதி பெறும் பள்ளி, கல்லூரி, சங்கங்களுக்கு ஆச்சாரியர்கள் நேரடியாக சென்ற வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனந்த அனுபவம்
ஒரு வருட இலவச குருக்குல கல்வி. பெற்றோரின் அனுமதி பெற்ற ஆன்மீக விருப்பம் கொண்ட இளைஞர், இளைஞிகளுக்கு வாழும் கலை பற்றிய ஆனந்த கல்வி குருக்கல கல்வி முறையில் இலவச உணவு, உடை, இருப்பிடத்தோடு தியானபீடம் சார்பாக நித்யானந்த புரியில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழ் நூல்கள்
- கதவைத் திற ... காற்று வரட்டும்!
- நித்யானந்தா ஓர் அறிமுகம்
- அறிவு அனுபவம் அனுபூதி
- ஏன் பாத யூஜை?
- பாத பூஜையின் மகத்துவம்
=
u
=
அனந்தம் என்னும் பெருங்கடலைத் தன்னகத்தே கண்டு கொண்டவர். இவர் நோயாளிகளுக்கு நோய் தீர்க்கும் மருத்துவர், பிரச்சினைகளோடு வருவோர்க்குச் சிறந்த ஆலோசகர், வாழும் கலை கற்க விரும்பவோர்க்குச் சிறந்து வழிகாட்டி, ஆன்மீகத் தேடுதலோடு வருவோர்க்கு அருமையான குரு
இந்த நூற்றாண்டில் வாழும் ஒரு சிறந்த மகான் (Contemporary Master) தென்னிந்தியாவின் அன்மீக நகரான திருவண்ணாமலையில் அவதரித்தார். 1978ஆம் வருடம் ஜனவரி முதல் தேதி, நள்ளிரவு சரியாக 12.32 மணிக்கு அஷ்டமி திதியில், அருணாசலம், லோகநாயகி தம்பதியருக்கு மூன்று மகன்களில் இரண்டாமவராகப் பிறந்த இவருக்கு பூவுலகில் பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் ராஜசேகரன்.
2. பிறப்பின் ரகசியம்
முக்காலத்தையும் உணரும் நான அனுபவம் கிடைத்த பின் அவருடைய பிறப்பைப் பற்றி ஞான தரிசனத்தில் தெரிந்து கொண்டதை பக்தர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவர் சொன்னது, "என்னுடைய உடலில் பகுந்து கொள்வதற்கு முன்பும், புகுந்த பொழுதும் இருந்த நிலைகள் எல்லாமே எனக்குத் தெளிவாக நினைவில் இருந்து தெரிகிறது. எல்லாம் நானாக இருக்கும் நினைவில் இருந்து பூமியைப் பார்த்தேன். பூமி இருளால் கவ்வப்பட்டிருந்தது. காற்று மண்டலம் அமைதியாக இருந்தது. அப்போது தென்னிந்தியாவின் ஒரு மூலையில் நட்சத்திரம் போன்ற ஓர் ஒளியைக் கண்டேன். அடுத்த
வினாடியே அந்த ஒளியில் புகுந்தேன். கண் விழித்துப் பார்த்தேன். அது திருவண்ணாமலையில் பிறந்திருப்பது தெரிந்தது. அந்த க்ஷனத்தில் தான் நான் உடலில் புகுந்து இந்தப் பிறவியை எடுத்தேன்."
தன் சூட்சும உடலிலிருந்து ஸ்தூல உடலில் புகுந்த பிறகு திருவண்ணாமலைக் குன்றில் தன் ஞானக் கண்ணால் கண்ட காட்சிதான் மேலே தரப்பட்டுள்ள பிறப்பின் ரகசியம்
குடும்ப வழக்கப்படி அவர் பிறந்த பத்தாம் நாள் ஜாதகம் கணிக்கப்படுவதற்காகக் குடும்ப ஜோதிடர் அழைக்கப்பட்டார். அவரது ஜன்ம திதியில் நசுஷத்திரங்களின் போக்கை மிகவும் கவனத்தோடு கவனித்து, "இவர் கன்யா ராசி, கன்யா லக்னத்தில் பிறந்தவர். இந்த ஜாதகத்துக் கணிப்பின்படி இவர் ஒரு நாள் உலக வாழ்க்கையைத் துறந்து சந்நியாசியாகி விடுவார்" என்று சொன்னார்.
தங்கள் மகன் சந்நியாசியாகப் போய்விடுவான் என்று தெரிந்து கொண்ட கணம் பெற்றோர்கள் மிகவும் மனக் க்ஷ்டத்திற்கு ஆளானார்கள்.
"இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா" என்று ஜோசியரைக் கேட்டத்த்த "இந்த கணிப்பு இம்மி அளவு கூடப் பிசகாது, நான் கூறிய படி நடந்தே தீரும் தன் ஜாதகம் பற்றி தெரிந்து கொள்ளாதவரை - சந்நியாசி அவது கொஞ்சம் தாமதப்படும்; அவ்வளவுதான்" என்று முடித்துக் கொண்டார்.
இப்படித்தான் நடக்கும்; இதுதான் இறைச் சித்தம் என்று தெளிவாகத் தெரிந்த பின் பெற்றோர் தங்களைத் தேற்றிக் கொண்டு, தங்கள் பிள்ளை சன்னியாசியாகத்தாவ் போக வேண்டியிருந்தால் அப்படியே நடக்கட்டும். நாம் நமது பிள்ளையின் எந்தச் செயல்களிலும் குறுக்கிட வேண்டாம் என்று தெளிவான முடிவுக்கு வந்தார்கள்.
1. பாட்டனார்க்டன்
பாட்டனார் ராஜி முதலியார் பேரன் ராஜசேகரனை தனக்கு கிடைத்த பொக்கிஷமாகவே நினைத்து கொண்டாடினார்கள்.
ராஜசேகரன் நடக்க ஆரம்பித்த காலத்திலிருந்து பாட்டனாரும், பல அன்மீகக் கதைகளைச் சொல்லி வளர்த்தார்கள். வளரும் போதே, ஒர் ஆன்மீகச் கும்நிலையில் வளர்ந்தார்.
ராஜசேகரனுக்கு முதன் முதலில் கிடைத்த அன்பளிப்பு "விநாயகர் விக்ரகம்!". பிறந்த நாள் பரிசாகக் கிடைத்த இந்த விக்ரகத்தை ஏதோ ஒர் உயிரை பாவிப்பது போல பாவித்துப் பாதுகாத்து வந்தார்.
பால்ய பொழுதில் அந்த விக்ரகத்தை வைத்து பூஜை செய்ய அரம்பித்துவிட்டார். சிறுவன் அவனுக்கே உரிய பால்ய மொழியில் விக்ரகத்திற்கு பூஜை செய்து. படையல்கள் படைத்துவிட்டு, "நாளைக்கு காலையில் வரும் போது எல்லாத்தையும் சாப்பிட்டிருக்கணும், இல்லனா உன்ன கிணத்துல தூக்கிப் போட்டுடுவேண்!" என்று பேச உரிமையும், பக்தியும் கலந்த கலவையாக ஆன்மீகப் பாதையில் காலடி எடுத்து வைத்தான்.
் சிறுவனைப் பாட்டனார் அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச் சென்று கண்ணப்பர், மார்க்கண்டேயன், பிரகலாதன் போன்ற மகான்களின் கதைகளைச் சொல்லுவதுண்டு. இது போன்ற கதைகளைக் கேட்டு முடித்தவுடன் சிறுவன் வீட்டிற்குச் சென்று குடும்பத்தில் உள்ள எல்லோரையும் அழைத்து, தான் கேட்ட கதைகளை ரசனையோடு சொல்லும் விதத்தையும், அர்வத்தையும் இன்று நினைத்தாலும் குடும்பத்தார் புரிப்படைகிறார்கள்.
- பாட்டியிடன் ட
பாட்டி தனுக்கோடி அம்மாளுக்கு பேரனின் மீது கொள்ளைப் பிரியம். துருதுருவென இருக்கும் கட்டிப் பேரனுக்குப் பரிசளிக்க நினைத்தார். ராஜசேகரணைக் கூப்பிட்டு வீட்டின் நகைப் பெட்டியைத் திறந்து காண்பித்து "உனக்கு வேண்டியதை எடுத்துக் கொள்" என்றார். சிறுவனுக்கு ஒரே குஷி.
தங்க நகைகளில் எந்த நகையைப் பேரன் எடுக்கப் போகிறான் என்று பாட்டி ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்.
நகைப் பெட்டியை உற்சாகத் துள்ளலோடு பார்க்க ராஜேஸ்வரன் தங்க நகைகளுக்கு நடுவே இருந்த ருத்ராட்ச மாலையை அதே துள்ளவோடு தாவி எடுத்துக் கொண்டான். பாட்டிக்கு ஒரு கணம் ஒன்றுமே புரிய வில்லை. இந்தச் சிறுவயதில், ருத்ராட்ச மாலை மேல் எப்படி ஆசை வந்தது என்பது பாட்டிக்கு மிகப் பெரிய வியப்பாக இருந்தது.
- ரகுபதி யோகியுடன்
திபெத்திலும், பர்மாவிலும் யோகமூம், தாந்திரிகமும் கற்றுத் தேர்ந்து மற்றவர்களுக்கும் கற்றுத் தந்து கொண்டிருந்த ரகுபதி யோகியுடன் சுமார் ஐந்து வயதில் அறிமுகம் ஏற்பட்டது.
யோகி என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்தாற்போல் உடலமைப்பு கொண்டிருந்தார் ரகுபதி யோகி. சிறுவன் ராஜசேகரனை தினம் கோயிலுக்கு அழைத்துச் செல்வதும் அங்கு தினம் "யோகம்" கற்றுக் கொடுத்துச் செய்ய வைப்பதுமாய் இவர்களின் நட்புறவு தொடர்ந்தது.
கிருத்திகை மண்டபத்தில் யோகி இவருக்கு சக்தி தீட்சை கொடுத்தார். தீட்சை பெற்ற அதே கணம் ராஜசேகரனுக்கு பராசக்தியின் தரிசனம் கிடைத்தது. யோகியும் நடந்ததை உணர்வுபூர்வமாக அறிந்து கொண்டார். சிறுவனிடம் "பராசக்திதான், இனி உன் இஷ்டதேவதை" என்று கூறினார்.
வீட்டிற்கு வரும் வழியெங்கும் தரிசனத்தில் தோன்றிய பராசக்தியின் நினைவாகவே சிறுவன் நடந்து வந்தான். வீடு வந்ததும் முதல் வேலையாக ஒரு மாவுக்கல்லை எடுத்து, வெறும் கோணி ஊசி கொண்டு, தரிசனத்தில் பார்த்த அம்பிகையின் சிலையை உருவாக்கினான்.
"பிற்காலத்தில் நீ ஒரு பெருந்துறவி" அவாய் என்று ரகுபதி யோகி ஆரூடம் கூறினார்.
பவளக் குன்றில் சுவாமிகள்
"இதையெல்லாம் எப்படி நம்புவது?" என்று கேட்ட சிறுவனுக்கு யோகி ஒரே சொடக்கில், வெறுங்கையில் இருந்து ஒரு சங்கை உருவாக்கிக் கொடுத்தார். என்ன நடக்கிறது இங்கே என்று வியப்போடு சிறுவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
"அகங்காரம் அற்றுப் போனால் உயரே பறக்க முடியும்" என்று யோகி கூறினார். சொன்னது மட்டு மில்லாமல் செய்தும் காட்டினார். யோகி ஆசனத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்து புமியில் இருந்து அரை அடி உயரத்தில் எழும்பிக் காண்பித்தார். 'என்ன?' நாம் பார்த்துக் கொண்டிருப்பது நிஜம்தானா! என்று சிறுவன் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான். "நேரம் வரும்போது எல்லாம் புரியும்" என்று புன்முறுவலோடு யோகி கூறினார்.
4. சிறுவனின் புழை
தனக்குப் பரிசாக கிடைத்த விக்ரகம், தான் செய்த விக்ரகங்கள் என்று விக்ரகங்களைத் தனியே ஒரு பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்திருந்தான். களி மண்ணைக் குழப்பி, உழப்பி விளையாடும் வயதில் ராஜசேகரன் தான் கோயிலில் பார்த்த தெய்வ விக்ரகங்களின் உருவத்தைக் களி மண்ணில் செய்து பார்த்து மகிழ்நீது கொண்டிருந்தான்.
்ட நேரம் போவது தெரியாமல் சில நேரம் மணிக்கணக்கில் ராஜசேகரன் பூஜையில் ஈடுபடுவதுண்டு. சில நேரங்களில் சிறுவன் குடும்பத்தில் உள்ளவர்களையும் பூஜையில் கலந்து கொள்ளும்படிக் கேட்டுக் கொள்வான். குடும்பத்தார் இந்தச் சிறு பிள்ளையின் ஆர்வத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டு அகம் மகிழ்ந்து கலந்து கொள்வார்கள்.
- மாதாஜி குப்பம்மாளுடன்
அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்று சிறுவன் ஜெயம், பிரார்த்தனை என்று ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, ஒர் அற்புத முக்கோண வடிவம் தரிசனத்தில் தெரிந்தது. வீட்டிற்கு வந்தவுடன் தான் தரிசனத்தில் கண்ட வடிவத்தை வரைபடமாக்கி விட்டான் சிறுவன்.
தங்கள் குடும்பத்திற்கு நட்பு முறையில் அறிமுகமாகி இருந்த மாதாஜி குப்பம்மாளிடம் ராஜசேகரனின் பாட்டி தன் பேரன் வரைந்த வரைபடத்தை காண்பித்தார். பார்த்த மாத்திரத்தில் வெகு ஆச்சரியத்தோடு, "இது "ஸ்ரீ சக்கரம்! ஸ்தபதிகளும், ஆச்சாரியர்களுமே வரையக் கஷ்டப்படும் இந்த ஸ்ரீ சக்கரத்தை இந்தச் சிறுவனால் எப்படி இவ்வளவு தெளிவாக வரைய முடிந்தது?" என்றார். சிறுவனுக்கோ தான் வரைந்திருப்பது "ஸ்ரீ சக்கரம்" என்ற விஷயம் தெரியாது. மாதாஜி குப்பம்மாள் ஆச்சர்யம் நிறைந்த பார்வையோடு சிறுவனை, "நாங்கள் எவ்வளவோ தியானம், பூஜைகள் செய்தும் கிடைக்காத தரிசனம் உனக்கு எப்படிக் கிடைத்தது?" என்று பக்தி கலந்த குரலில் கேட்டார்கள். இது போன்ற கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வதென்று அப்போது சிறுவன் ராஜசேகரனுக்குப் புரியாது.
அதன் பின் மாதாஜி குப்பம்மாள் சிறுவனுக்கு "சக்தி மந்திரத்தையும்", 'ஸ்ரீ சக்கர பூஜை" செய்யும் விதத்தையும் கற்றுக் கொடுத்தார்கள்.
6. யோகி ராம் சூரத் குமாருடன்
திருவண்ணாமலை கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள சின்ன நந்திக்கு எதிரே இருக்கும் படிக்கட்டில் அமர்ந்து கொண்டிருப்பது யோகி ராம் கூரத்குமாருக்கு வழக்கமான ஒரு விஷயம். இளம் மாணவர்கள் யோகியை வணங்கி, "சாமி, நான் இந்தப் பரீட்சையில் தேறி விடுவேனா?" என்று கேட்பது வழக்கம். யோகி சிலசமயம் ஏதாவது பதில் கூறுவார். பெரும்பாலும் பதில் கொடுக்க மாட்டார். சில சமயங்களில் "ராம், ராம்" அல்லது "போய் வா" என்பார். இதனால் அவரை ஒரு புரியாத புதிராகவே எல்லோரும் நினைத்தனர். ஒரு முறை ராஜசேகரன் வணங்கி எல்லோரும் போல் "சாமி, நான் பரீட்சையில் தேறி விடுவேனா?" எனக் கேட்டார். அவரோ, "நீ வாழ்க்கைப் பரீட்சையில் தேறிவிடுவாய்" என்றார்.
ராஜசேகரனுக்கு ஏதோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் பகில்ளிப்பது போல தோன்றியது. என்வே விளக்கம் கேட்டு நின்றார். யோகி சொன்னார், "போ, போ, இது இப்போதைக்குப் புரியாது; ஆனால் போகப் போக இந்த வார்த்தைகளை நீ மறக்க மாட்டாய்" என்றார்.
மெல்ல மெல்ல யோகியின் வார்த்தைகளில் இருந்த அர்த்தம் சிறுவனுக்குப் புரிய ஆரம்பித்தது. இன்றளவும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அந்த வார்த்தைகளை நினைவில் வைத்திருக்கிறார்.
7. வகுப்பறையில் ஜயப்பன் தரிசனம்
ஒரு நாள் வகுப்பிற்குத் தாமதமாக வந்தததால் அனுமதி வேண்டி வகுப்பு வாசலில் நின்று கொண்டிருந் தார் ராஜசேகரன். அது கணித வகுப்பு. கணித ஆசிரியர் ஏதோ குனிந்தபடி எழுதிக் கொண்டிருந்தார். அவர் ஐயப்ப பக்தர். உள்ளுணர்வு தூண்டப்பட்ட வராய் வாசலை நோக்கித் திரும்பிப் பார்த்தார். பார்த்ததும் திடீரென்று ஏதோ மாயக் காட்சியைக் கண்டது போல் செயலற்றுச் சில வினாடிகள் எழுந்து நின்றார். பின் ராஜசேகரனுக்கு வணக்கம் தெரிவித்தார்.
வகுப்பு முடிந்ததும் ஆசிரியர் சிறுவனைத் தன் வீட்டுக்குச் சாப்பிட வருமாறு அழைத்தார். அழைத்திருந்தபடி ராஜசேகரன் ஆசிரியர் வீட்டிற்கு வந்தார். மாணவன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவர் காலில் விழுந்த ஆசிரியர் "நீங்கள் என் குருநாதர்" என்றும் "நான் தங்கள் சிஷ்யர்" என்றும் கூறினார். மேலும் "நான் உங்களைப் பார்க்கும்போது சுவாமி ஐயப்பனைத் தரிசனத்தில் கண்டேன்" என்றார். அந்த நிமிடம் ராஜசேகரனால் 'என்ன நடக்கிறது, என்ன பேசுகிறார் இவர்' என்று தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.
1. சந்நியாசிகளோடு நட்பு
தன்னை ஒத்த வயதுடைய சிறுவர்களுடன் விளையாடுவது, அரட்டை அடிப்பது போன்ற விஷயங்களில் ராஜசேகரன் நேரத்தை வீண்டித்ததே இல்லை. சிறிய வயதிலேயே தன்னை விட வயதில் பெரிய தெரிந்து கொண்டார்.
2. அண்ணாமலை சுவாமிகளோடு
ஸ்ரீ ரமண மகரிஷியின் சீடர்களில் ஒருவர் தான் இந்த அண்ணாமலையார் சுவாமிகள். திருவண்ணாமலையில் பிலாக்கொத்து என்ற இடத்தில் சுவாமிகள் வாழ்ந்து வந்தார். ஆன்மீகம் சம்பந்தமான விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக ராஜசேகரன் அடிக்கடி சுவாமிகளைச் சென்று பார்த்துவிட்டு ரமண மகரிஷி மடத்தில் தியானம் செய்வது வழக்கம்.
அப்படி ஒருமுறை சென்றிருந்தபோது, சில பக்தர்களுக்கு வேதாந்த உரையாற்றிக் கொண்டிருந்தார் சுவாமிகள். "நான் சரீரமல்ல, ஆன்மா" என்றார். மேலும், "வலி என்பது சரீரத்திற்குத்தான், ஆன்மாவிற்கு அல்ல" என்று உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதைப் பற்றித் தீவிரமாக யோசித்தவண்ணம் வீடு வந்து சேர்ந்தார்.
'நான் ஆன்மா', 'வலி சரீரத்திற்குத்தான்' என்றால் "எனக்கு வலிக்கக் கூடாது அல்லவா?" என்று தனக்குத்தானே கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார். எதையும் சோதித்து உண்மை என்று தெளிவாகத் தெரிந்த பின்னரே நம்பும் இயல்பு கொண்டவர் ராஜசேகரன்.
எனவே இந்த உபதேசக் கருத்தையும் சோதித்துப் பார்த்து விடுவது என்ற முடிவுக்கு வந்தார். சுற்றிமுற்றிப் பார்த்தார். கண்ணில் கத்தி தென்பட்டது. அது கூர்மையாகட்டும் என்று துளியும் பயமே இல்லாமல் கத்தியை எடுத்து, சுண்டு விரல் நீளத்துக்கு வலது தொடையில் ஒரு கிழி கிழித்து விட்டார்.
இரத்தம் கொட்டுகின்றது! வலி எடுக்கிறது! எரிச்சல் தெரிகிறது! இருந்தும் சத்தமோ கூச்சலோ போடவில்லை. மாறாக அதே தீவிரத்தோடு மனதில் திரும்பத் திரும்ப, "நான் சரீரமல்ல, ஆன்மா என்றால் ஏன் எனக்கு வலிக்க வேண்டும்"? என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.
தொடையில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. ராஜசேகரன் "எங்கு தப்பு நடந்தது? எப்படி எனக்கு வலிக்கலாம்?" என்று மீண்டும் அதே சிந்தனையில் மூழ்கிப் போயிருந்தார்.
குடும்பத்தார் பார்த்துப் பதறிப்போய் உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்று தேவையான சிகிட்சை அளித்தார்கள். சிகிட்சை முடிந்த கையோடு நேரே அண்ணாமலை சுவாமிகளைப் பார்க்கக் கிளம்பி விட்டார். சுவாமிகளிடம், "நான் ஆன்மா என்றால் எனக்கு ஏன் வலித்தது? கிழிந்தது சரீரம்தானே," என்று ராஜசேகரன் கேட்டார். அண்ணாமலை சுவாமிகள் சரீரம், ஆன்மா பற்றி மீண்டும் தெளிவாக விளக்கிவிட்டு, "இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அது உன் சொந்த அனுபவத்தால்தான் முடியும்" என்று கூறினார். பின்னர் எண்ணங்கள் எங்கிருந்து உருவாகின்றன என்பதைக் கண்டுபிடிக்கத் தியானம் ஒன்றைச் சொல்லிக் கொடுத்தார். "இந்தத் தியானத்தை முழுமையாகச் செய் உன்னுடைய கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்" என்றார். ராஜசேகரன் தியானத்தை முழு மூச்சாகத் தொடர்ந்து செய்தார். பதில் கிடைத்தது. சந்தேகம் தெளிந்தது.
3. மகத்தான ஆன்மீக அனுபவம்
வைகாசி மாதத்தில் பவளக்குன்று என்ற இடத்தில் ஒரு சிறிய பாறையின் மீது அமர்ந்தபடி தியான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த 12 வயதில் தியானம் என்றால் என்ன என்று கூடத் தெளிவாகத் தெரியாத பருவத்தில் தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அன்றைய தினம் முழுப் பௌர்ணமி, விசாக நக்ஷத்திரம். தியான முயற்சியில் அவருக்கு ஒரு மகத்தான ஆன்மீக அனுபவம் ஏற்பட்டது. அது பற்றி சுவாமியே சொல்கிறார், "சூரியன் மறைந்து முழுச்சந்திரன் எழும் அழகான சாயங்கால வேளையில் பவளக்குன்றில் தளர்வாக அமர்ந்தபடி எனக்குள் மூழ்கும் தியானத்தில் ஈடுபட்டேன். சிறிது நேரத்திற்குப் பின் சற்றும் எதிர்பார்க்க முடியாத அனுபவம் ஏற்பட்டது. திடீரென்று, கொஞ்சம், கொஞ்சமாக நான் உடல் என்ற உணர்வு மறைய ஆரம்பித்தது. சட்டென்று! ஏதோ திறந்து கொண்டதைப் போன்று, ஏதோ உள்ளே உடைந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. நான் தனி மனிதன் என்ற உணர்வும் முழுவதுமாக மறைந்து விட்டது. பிரானே எல்லாமாக உணர்ந்தேன்.
என்னைச் சுற்றி இருந்த எட்டுத் திசைகளையும் ஒரே நேரத்தில் மிகத் தெளிவாகப் பார்க்கவும் உணரவும் முடிந்தது. எனக்கு முன்னால் இருந்த மலையும், பின்னால் இருந்த கோவிலும், இடது பக்கத்திலிருந்த பாறைகளும், வலது பக்கத்திலிருந்த மரங்களும், மேலிருந்த வானமும், நான் உட்கார்ந்திருந்த பாறையும் மிகத் தெளிவாகத் தெரிந்தன. என்னைச் சுற்றி இருந்த எல்லாம் நானாகவே உணர்ந்தேன்."
(இதுதான் Out of body experience என்று பின்னாளில் சுவாமிகள் உணர்ந்து கொண்டார்.)
அந்த ஆனந்தமான ஆன்மீக அனுபவம் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நீடித்தது. மீண்டும் உடலுக்குத் திரும்பிய பின் அவரை ஆனந்த ஜூரம் பற்றிக் கொண்டது.
தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உடனே யாரிடமாவது பகிர்ந்து கொள்ள விரும்பினார். மாதாஜி குப்பம்மாவை சந்தித்தார். தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை விளக்கினார். மாதாஜி, "இது ஒரு மிகப்பெரிய ஆன்மீக அனுபவம், இப்போது உனக்கு இருக்கும் இந்த ஜுரம் ஆனந்த ஜுரம்" என்று விளக்கம் கொடுத்தார். அவர் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆனந்த நிலையை யாரும் கெடுத்துவிடக்கூடாது என்பதற்காக ராஜசேகரனைத் தன் முழுப் பொறுப்பில் ஏற்றுக் கொண்டார். கிட்டத் தட்ட ஆனந்த ஜுரம் அவருக்கு மூன்று நாட்கள் நீடித்தது. அப்போது அவர் உடல் நிலைக்கேற்ற உணவை மாதாஜி குப்பம்மாள் தயாரித்துக் கொடுத்தார்.
சில நாட்கள் கழித்து அந்த அனுபவத்தை மீண்டும் பெற வேண்டும் என்று தீவிரமானார். அது அவரது ஆன்மீகத் தேடலின் வேகத்தைப் பல மடங்கு அதிகரித்தது.
4. சுடுகாட்டில் தியானம்
எப்படியும் இவர் சந்நியாசியாகப் போகிறார் என்று தெளிவாகத் தெரிந்த பின், அவரது பெற்றோர் "நாம் இவருக்கு வெறும் பாதுகாவலர்களே" என்று உணர்ந்து கொண்டனர். அதன் காரணமாகப் பல நாட்கள் நடுநிசி தாண்டி அவர் வீடு திரும்பினால் கூட எதுவும் கேட்க மாட்டார்கள்.
சுடுகாட்டில் அமர்ந்து வெகு நேரம் மயான அமைதியில் தியானம் செய்வதும் நள்ளிரவிற்கு மேல் வீடு திரும்புவதும் ராஜசேகரனின் வழக்கமாயிற்று. ஒரு முறை கூட அவரது பெற்றோர் அவரது நடவடிக்கைகள் குறித்து வருத்தமோ, கோபமோ, சலிப்போ கொண்டதில்லை.
தன்னுடைய எந்த விதமான ஆன்மீகச் செயலுக்கும் சிறிது கூடத் தடங்கல் செய்யாமல் இருக்கும் தன் பெற்றோரை நினைக்கும் போதெல்லாம் நன்றி உணர்வே மேலிடும். ஏன்? இன்றும் கூட THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தன் பெற்றோரை மிகுந்த நன்றி உணர்வுடன் நினைவு கூர்கிறார்.
5. மரண அனுபவம் 1986
பல்வேறு ஆன்மீகப் பாதையில் வழி நடத்தியவர்களில் ஒருவரான அவரது பெரிய பாட்டியின் மரணத்தை சிறு வயதில் அருகில் இருந்து பார்த்தார். அப்படி மரணத்தைப் பார்த்தபின் "வாழ்க்கையில் என்னதான் இருக்கிறது என்று எப்பாடு பட்டாவது உணர்ந்தே ஆக வேண்டும்" என்று அவரது ஆன்மீகத் தேடல் என்னும் தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.
6. கல்லூரி வாழ்க்கை
பத்தாம் வகுப்பு முடித்த கையோடு சுவாமிகள் குடியாத்தம் நகரில் விடுதி ஒன்றில் தங்கி ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார். அங்கும் சக மாணவர்களோடு சேர்ந்து ஊர் சுற்றி நேரத்தை வீணாக்கவில்லை. ஆட்டம், பாட்டம், சினிமா, சேட்டை, கூத்து என்று வாழும் சக மாணவர்களின் வாழ்க்கை இவரைச் சிறிதும் ஈர்க்கவில்லை. "நீரின் மேல் இருக்கும் தாமரை" போன்று விடுதி வாழ்க்கையைக் கழித்தார்.
"நீ ஏன் எங்களோடு வெளியில் சுற்ற வருவதில்லை? இப்படித் தியானம், தியானம் என்று செய்து அப்படி என்னதான் சாதிக்கப் போகிறாய்?" என்று கேலி செய்தார்கள். சக மாணவர்கள் "என்னிடம் ஆசிர்வாதம் வாங்க நீங்கள் எல்லாம் வரிசையில் நிற்க வேண்டிய காலம் வரும் அப்போது புரியும் உங்களுக்கு" என்று ஏதோ ஒரு உத்வேகத்தில் கூறினாரே தவிர, பின்னாளில் இப்படியெல்லாம் ஞான அனுபவம் கிடைக்கும் என்றோ, கேலி பேசிய அந்த நபரே வரிசையில் நின்று ஆசிர்வாதம் வாங்குவார் என்றோ அவர் அப்போது நினைக்கவில்லை.
நேரம் கிடைத்த போதெல்லாம் தியானம், தியானம் என்றே ஏதாவது ஆன்மீக முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். படிப்பிற்காகப் பெரிதாக நேரம் எதுவும் ஒதுக்கவில்லை. பாடம் நடத்தும் போது கவனிப்பதிலேயே கருத்தைப் புரிந்து கொண்டுவிடுவார். "அது போதும் தேர்வுத் தாளை எதிர்கொள்ள" என்பது அவரது அனுபவம். அதிக மதிப்பெண்களை எடுத்து அவர் தன் கல்லூரிப் படிப்பை முடித்தார்.
7. கிரிவலத்தில் கழுதைப் புலிகள்
ஒரு முறை தொடர்ந்து 108 நாட்கள் கிரிவலம் செல்வது என்று உறுதியாக முடிவு செய்துவிட்டார். (எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கக் கூடாது என்பது சுவாமிகளின் அடிப்படை குணம்.) முடிவு செய்தபடி தொடர்ந்து கிரிவலம் சென்று கொண்டிருந்தார்.
ஒரு நாள் தான் ரசித்துப் படித்த பக்திப் பாடல்களை மனதில் பாடியபடி சென்று கொண்டிருந்தார். ஏதோ உள்ளுணர்வு மேலிடக் கவிதை பாடுவதை நிறுத்தி விட்டுக் கூர்மையாகப் பார்த்தார். பார்த்தவர் திகைத்தார்! எதிரே ஐந்து கழுதைப் புலிகள் நின்று கொண்டிருந்தன. என்ன செய்வது என்று எந்த முடிவும் எடுக்க முடியாத மனநிலையில் அப்படியே நின்று விட்டார்.
அப்போது அவரது உள் துடிப்பிலிருந்து "அருணாச்சலா ..." என்ற வார்த்தை வெளிப்பட்டது. எங்கிருந்தோ உரத்த குரல் கேட்டது. முதியவர் ஒருவர் கம்போடு ஓடி வந்தார். அந்த மிருகங்கள் அங்கிருந்து ஓடிவிட்டன. இதை அதிசயம் என்பதா? தெய்வச் செயல் என்பதா?
1. பரிவராஜக வாழ்க்கை
பதினேழு வயது முடிந்து ஆறு மாதம் ஆன நிலையில் தன் ஆன்மீகத் தேடுதலின் மிகத் தீவிரமான கட்டத்தை நெருங்கி விட்டார். வீட்டை விட்டு வெளியேறினார்.
சில காலம் ஆன்மீக ஸ்தாபனங்களிலும், சில காலம் மலைகளிலும் கழித்தார்.
இறைவனை நோக்கித் தவம்; தியானம்; சாஸ்திரங்களைப் படிப்பது வேதங்களைப் படிப்பது. ஞானிகள் பலரைச் சந்திப்பது, ஞான வழிகள் என்று பல்வேறு தெய்வீக, ஆன்மீக விஷயங்களில் ஈடுபட்டார்.
இமயம் முதல் குமரி வரை பல தீர்த்த ஸ்தலங்கள், கோயில்கள், புராதனச் சிறப்பு மிக்க இடங்கள் என்று யாத்திரை செய்தார். பாரதத்தின் குறுக்கும் நெடுக்குமாக 2000 கிமீக்கு மேல் நடந்து சென்றார்.
2. ஸ்ரீ ராமகிருஷ்ணர், சாரதா தேவியின் தரிசனம்
இடுப்புக்கு ஒரு காவித் துணி தோளுக்கு ஒரு காவித் துணி கையில் ஒரு காவித் துண்டு கழுத்தில் ஒரு ருத்ராட்ச மாலை கமண்டலம் என்று ஒரு பாத்திரம் இவையே பரிவராஜக வாழ்க்கையைத் துவங்கிய போது அவரிடம் இருந்த உடைமைகள். கையில் ஒரு பைசா கூட இல்லாமல் அடுத்த வேளைக்கு உணவு சேமிக்கக் கூடாது என்ற மனக் கட்டளையோடு ஆன்மீகத் தேடுதலை மேலும் தீவிரப்படுத்தினார்.
பல புத்தகங்கள், வேதங்கள், சாஸ்திரங்கள் என்று படித்துக் கொண்டிருக்கும்போது, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் 'அமுத மொழிகள்' என்ற புத்தகம் அவரை மிகவும் கவர்ந்தது.
ஒரு விஷயம் தன்னைக் கவர்ந்துவிட்டால் அதில் அவர் காட்டும் ஈடுபாட்டுக்கும், ஆர்வத்திற்கும் அவரே இணை. என்னை இவ்வளவு ஈர்க்கிறதே இந்த புத்தகம்! என்று ஒரே மூச்சில் உட்கார்ந்த இடத்தை விட்டு எழாமல் பத்து மணி நேரம் தொடர்ச்சியாகப் படித்து முடித்தார்.
அதன் பின் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் போதனைகளில் லயித்து மூன்று நாட்கள் கழித்த பின் மீண்டும் ஒரு எதிர்பாராத அற்புதம் நிகழ்ந்தது. அதை அவர் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.
மூன்று நாட்கள் கழிந்த பின் ஸ்ரீ ராமகிருஷ்ணரும், சாரதா தேவியும் தரிசனம் கொடுத்தார்கள். இந்த தரிசன அனுபவம் ஆன்மீகத் தேடுதல் என்னும் அவரது யாக்கையில் நெய் ஊற்றியது போல் ஆயிற்று. அதன் பின் ராமகிருஷ்ணர் அவரது இதயக் கோவிலில் நீங்காத இடம் பிடித்துவிட்டார்.
3. இமயமலையில் சுவாமிகள்
வடக்கே சாதுக்களிடம் டிக்கெட் கேட்பதில்லை, அவர்கள் எங்கு வேண்டுமானாலும் ரயிலில் செல்லலாம். சுவாமிகள் ஏதாவது ஒரு ரயிலில் ஏறுவார். மனதுக்குப் பிடித்தமான இடத்தில் இறங்கிக் கொள்வார். ஏதாவது ஒரு திசையில் பயணப்படுவார். நடந்து நடந்து களைத்துப் போனால் அடுத்த ரயிலில் ஏறி வேறு இடத்திற்கு போவார். இந்த ரயில் எங்கே போகிறது, இது எந்த இடம் என்று எதையுமே தெரிந்து கொள்ளமாட்டார். ஜன்னலுக்கு வெளியே பார்ப்பார். இடம் பிடித்திருந்தால் இறங்கிவிடுவார்.
1. மஹா அவதார் ஸ்ரீ பாபாஜியோடு
இப்படியாக, தேடுதல் என்னும் தீ அவரை இமயமலை வரை அழைத்துச் சென்று விட்டது. அங்கே கங்கோத்ரிக்கு அப்பால் உள்ள தபோவனம் அருகில் தவமேற்றுக் கொண்டிருந்தார். அப்போது அவர் இருந்த இடத்தை ஜடாதாரியான, கட்டுடலும், நீண்ட தலைமுடியும், தெய்வீகத் தன்மையைப் பிரதிபலிக்கும் முக அமைப்பும் பாவமும் கொண்டவராக ஒரு மனிதர் கடந்து சென்றார். அவரது இளமை மிளிரும் உடலும், நடையும்; வெளிப்பட்ட தெய்வீகத் தன்மையும் நமது சுவாமிகளை "இவர் நிச்சயம் ஏதோ ஒரு பெரிய மகானாகத்தான் இருக்க வேண்டும்" என்று உணரவைத்தது.
அந்த மனிதர் சுவாமிகளை தாண்டும் போது "பரமஹம்ஸ ... நித்யானந்த ..." என்ற வார்த்தைகளை உதிர்த்தவாறு கடந்து சென்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு தாடியோடு வந்த ஒரு வயதானவர் சுவாமிகளைப் பார்த்து, "நீங்கள் பாபாஜியை சந்தித்தீர்களா?" என்று கேட்டார். (தன்னைக் கடந்தது மகா அவதார் பாபாஜி என்ற விஷயம் சுவாமிக்கு அப்போது தெரியாது)
"பாபாஜியா! யார் அவர்? அப்படி யாரையும் நான் சந்திக்கவில்லையே", என்றார் சுவாமிகள்.
"இல்லை இல்லை! உங்களைப் பார்த்த உடனேயே நீங்கள் பாபாஜியின் தரிசனம் பெற்றவர் என்பதை உணர முடிகிறது. நான் பாபாஜியின் சிடன்" என்றார்.
பாபாஜி உதிர்த்த "பரமஹம்ஸ . . நித்யானந்த" என்ற வார்த்தைகளுக்கு என்ன பொருள் என்று அப்போது அவரால் உணர முடியவில்லை. பின்னர் சுவாமிகள் சந்நியாசம் பெற்றுக் கொள்ளும் போது அவருக்கு நித்யானந்த என்று பெயர் அருளப்பட்டபோது பாபாஜியை நினைத்து ஆச்சர்யப்பட்டார், பரவசம் அடைந்தார்.
2. ஓம்காரீஸ்வர் மலையில்
இப்படி ஞானத் தேடுதலில் பல மலைகளில் அவர் அனுபவங்களை பெற்றிருந்தாலும் ஜன நடமாட்டமே இல்லாத ஓம்காரீஸ்வரா மலையில் ஏற்பட்ட அனுபவம் குறிப்பிடத்தக்கது. அந்த மலையில் இயற்கையிலேயே தியானம் செய்ய வசதியாக உட்காரும் வகையில் சிறு பிளவுள்ள ஒரு பாறை இருந்தது. வெகுநேரம் அந்தப் பாறையில் அமர்ந்தபடியே தியானம் செய்வார். ஒரு நாள் சாயங்கால வேளையில் ஜன நடமாட்டமோட்டமே இல்லாத அந்த மலைப் பகுதியில் தூரத்தில் மரத்தடியில் யாரோ ஒருவர் வருவது போல் தெரியவே ஆச்சரியம் தாளாமல் யார் அது என்று பார்க்க அந்த நபரை நோக்கி ஓடினார்.
அருகே சென்ற பிறகு அது மனிதன் இல்லை கரடி என்று தெரியவே சற்று திகைத்தார். என்ன செய்வது என்று தெரியாததால் வெறுமனே அமைதியாக அந்தக் கரடியைப் பார்த்தார். இவ்வளவு அருகே வந்தபின் தப்பிக்க முடியாது எனவே என்ன நடக்கிறதோ நடக்கட்டும் என்று அமைதியோடு கரடியைப் பார்த்தார். சில நொடிகள் கரடியும் என்ன செய்வதென்று தெரியாமல் பார்த்து விட்டு, வலதும், இடதுமாக உடலை ஆட்டித் திரும்பிச் சென்று விட்டது, அமைதியாக.
3. பஞ்ச தபஸ்
குரனப் பாதையில் பல தபஸ்களைச் செய்து வந்தார். அதில் ஒன்று பஞ்சதபஸ். விழிப்புணர்வை அதிகப்படுத்த தன்னைச் சுற்றித் தீயை எரியச் செய்து, தலையில் ஒரு தீச் சட்டியை வைத்துக் கொண்டு, தீ அணையாமல் இருக்கச் சில சிறுவர்களை அமர்த்திவிட்டுக் காலையில் இருந்து மாலை வரை செய்வார். இதுபோன்ற மிகக் கடினமான தபஸ்களை ஏன் செய்கிறீர்கள் என்று சிலர் கேட்ட தற்கு, "வெளியில் உள்ள தீ சுடுவதை விட, என்னுள் இருக்கும் தீ சுடுவதை என்னால் பொறுக்க முடியவில்லை, அதனால் தான் இப்படி" என்று சாதாரணமாகப் பதில் அளித்து விட்டார்.
4. எலும்பு முறிவும் அதிசய குணமும்
தபோவனிலிருந்து திரும்பும் பொழுது சுவாமிகள் ஒரு ராணுவ வாகனத்தில் பயணம் செய்தார். அதில் வசதியாக உட்காருவதற்கான இருக்கைகளுக்கு பதிலாக மரப் பலகைகளை இருந்தன. திடீரென எதிர்பாராத ஒரு பள்ளத்தில் இறங்கி ஏறியதில் வாகனம் கொஞ்சம் தடுமாறியது. சுவாமிகளின் இடுப்பெலும்பில் ஏதோ ஒரு விரிசல் ஏற்பட்டது போன்ற உணர்வும், வலியும் தெரிந்தது. அந்த இராணுவ முகாமைச் சேர்ந்த மருத்துவர் மாவுக்கட்டு போட்டு விடுவதாகக் கூறினார். சுவாமிகள் அதை ஏற்கவில்லை. உள்ளங்கையால் தடவிவிட்ட படியே எல்லாம் சரியாகிவிடும்" என்றார்.
ஹரித்வார் சென்றதும் ஒரு மருத்துவமனையில் Radiograph எடுக்கப்பட்டது. அதைப் பார்த்த மருத்துவர் திகைத்துப் போனார். எலும்பு முறிவு இருந்தும், சுவாமிகள் எதுவும் நடக்காதது போல் இயல்பாக வலி இல்லாமல் இருந்ததைப் பார்த்து உடனே மிகவும் ஆச்சர்யப்பட்டுப் போனார். சுவாமிகள் முதன் முதலில் தனக்கே Healing செய்து கொண்டு, இன்று அதை உலக மக்கள் பலருக்கும் ஒரு பெரும் சேவையாகச் செய்து வருகிறார்.
5. மரண பயத்தை வெல்லுதல்
தேடுதல் தீவிரம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருந்தது. தவம், தியானம் என்றே 24 மணி நேரமும் வாழ்ந்து வந்தார். பயணம் திடீர் திடீர் என்று மாறிப் பல்வேறு இடங்களுக்குச் சென்று கடைசியில் காசியில் வந்து நின்றது.
காசியில் மணிகர்னிகா காட் என்ற இடத்தில் நூற்றுக் கணக்கான பிணங்கள் எரிந்து கொண்டிருந்தன. அதைப் பார்த்ததும் சுவாமிகளின் மனதில் ஒரு உத்வேகம் தோன்றியது. "மரண ரகசியம் பற்றித் தெரிந்து கொள்ளாமல், உணராமல் இந்த இடத்தை விட்டு எழுந்திருக்கப் போவதில்லை" என்று உறுதி பூண்டார். மரண பயத்தை வெல்ல இரண்டரை நாட்கள் மௌன நிலையில் பொறுத்திருக்க வேண்டியிருந்தது.
அந்த நாட்களில் அவரது உடல் காலில் இருந்து மெல்ல மெல்ல இறக்க ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக மரண பயம் தெளிந்தது. முழு மௌன நிலையில் முழு விழிப்புணர்வோடு இருந்ததால் அந்த பயத்தை இரண்டரை நாட்களில் தாண்டிவிட்டார். அதற்குப் பின் பயம் என்பது ஏற்பட்டதே இல்லை.
6. ஞானம் அடைதல்
மர்ண பயத்தைத் தாண்டிய அனுபவத்தோடு அவர் மீண்டும் தெற்கு நோக்கிப் பயணம் செய்தார்.
ஆழ்ந்த தவம், ஆழ்ந்த தியானம், அநேக தபஸ் ஆகியவற்றில் தூய்மை அடைந்த உடலையும்; தனிமை, வெறுமை, பசி, பட்டினி, 100 சதவிகிதம் பாதுகாப்பில்லாத வாழ்க்கை, ஆகியவற்றால் கிட்டதட்ட ஒரு கட்டுப் பாட்டிற்குள் வந்துவிட்ட மனத்தையும் உடலையும் விட்டு வெளியேறிய அனுபவம், இயற்கையோடு வாழ்ந்த அனுபவங்கள், தரிசனங்கள், மரண பயத்தைத் தாண்டிய அனுபவங்கள் அகியவற்றால் சில துளிகள் ஆத்மாவின் ஆனந்த நிலையைப் பற்றிய அனுபவங்களோடு -சுவாமிகளின் ஆன்மீகப் பயணம் பூரண ஞானத்தை நோக்கி மேலும் மேலும் செல்லத் துவங்கியது.
தியானத்தின் உச்சம் நோக்கி மனமும் உடலும், பக்குவப்பட் ஆரம்பித்தது. அதன் பிறகும் கூட வாழ்க்கையில் பூரண அனுபவம் கிடைக்கவில்லை. ஞானப் பாதை வெற்றி தவறிக் கொண்டே போவது போல் தோன்றியது.
தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவும் செய்த பின்பு ஞான அனுபவம் "ஏன் தள்ளிப் போகிறது?" என்று ஒரு மாதிரியான குழப்பம் ஏற்பட்டது. ஞான அனுபவம் கிடைக்கும் என்ற நம்பிக்கையே ஒரு கட்டத்தில் ஆட்டம் கண்டது.
கிட்டத்தட்ட விரக்தியின் உச்சத்தையே அடைந்து விட்டார். ஞானம் பற்றிய போதனைகள் எல்லாம் பிரமையோ, இல்லை தொடர்ச்சியாக சித்தரிக்கப்பட்ட பொய்களோ என்று எண்ணும் அளவுக்கு விரக்தி அவரை ஆட் கொண்டது.
"வாழ்க்கையின் ஏமாற்றங்களால் நான் தோற்கடிக்கப் படமாட்டேன்" என்று அவரது ஸ்திரமான மனஉறுதியும் குலைந்தது. தன் இலக்கினை எட்ட எவ்வளவு தீவிரமாக முயன்றாரோ அந்த அளவுக்கு இலக்கு அவரை விட்டு விலகிச் செல்வதைத் தெளிவாக உணர்ந்தார்.
"இனிமேலும் இப்படித் தீவிரமாக முயற்சிப்பதில் என்ன பயன்" என்று "இனி எல்லாத் தேடுதல் முயற்சிகளையும் கை விட்டு விடலாம்" என்ற முடிவோடு முழு விரக்தியில் செய்வதறியாது அப்படியே, அமைதியாகி விட்டார்.
அந்த விரக்தி வந்து சரியாக ஏழாம் நாள் பூரண ஞான அனுபவம் கிடைத்தது. சுவாமிகள் ஞான அனுபவம் பற்றி விளக்கும் போது சொன்னார், "திடீரென்று, சற்றும் எதிர்பாராத தருணத்தில், எனக்குள் ஒரு ஆனந்தமான சக்தி பெருகியதை உணர்ந்தேன்.
ஆனந்தமயமான உணர்வு அதிகமாகிக் கொண்டே சென்றது. நான் உணர்ந்து அனுபவித்த ஆனந்தக் கடலில் நான் கரைவதைத் தெளிவாக உணர்ந்தே நான் மறைந்து, தான் என்ற தெய்வீக உணர்வு வெளிப்பட்டது. காலம், நேரம்; உடல், மனம்; இடம், பொருள் தாண்டி 'தானே எல்லாமாகவும், எப்போதுமாகவும் இருத்தல்' போன்ற உணர்வையும், அனுபவத்தையும் பெற்றேன்."
"என் பலவருடக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைத்தது, பிரபஞ்ச உண்மைகள் தெளிவாகப் புரிந்தன. ஆனந்த அனுபவத்தை இதற்கு மேல் விளக்க வார்த்தைகள் இல்லை" என்றார். அதன்பின் அந்த அனந்த சுகத்திலேயே, தெய்வீக நிலையிலேயே நான் என்று தனி உணர்வற்ற. பொது உணர்விலேயே கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் கடுத்தார்.
மீண்டும் ஆனந்தப் பெருக்கில் ஆனந்தமாக முழுமையாக இருந்தபோது தமிழ்நாடு வரை வந்து, பிறகு மகாராஷ்டிரவுக்குச் சென்றார்.
ஒன்பது மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக மனதிலிருந்து வார்த்தை வர ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிருந்த சக்தி அதிகமாகிக் கொண்டே வந்தது. "ஆனந்தமாக இருங்கள்" என்ற முதல் வார்த்தைகள் வந்தன.
பின்பு தமிழ்நாட்டில் மக்களுக்கு நோய்களைக் குணப்படுத்தினார். ஆன்மீக அற்புதங்களையும், போதனைகளையும் நிகழ்த்திக் கொண்டிருந்தார். பிறகு இறைசக்தியின் சித்தப்படி பெங்களூரில் தியானபீடம் என்ற ஆசிரமத்தை உருவாக்கினார்.
ஒரு முறை சேலம் பக்தர்களுக்கு ஆன்மீகச் சொற்பொழிவு நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் ஆர்வம் மேலிட, "சுவாமி, நீங்கள் எங்களுக்கு ஏதாவது ஒரு அதிசயத்தைச் செய்து காட்டுங்கள்" என்று வேண்டினார்கள். சுவாமிகள், '' அதிசயம் என்பது செய்வது கிடையாது, அதிசயம் என்பது தானாக நடப்பது." "நீங்கள் அதிசயம் என்று நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் சித்து வேலைகளே.
உண்மையான அதிசயம் எப்போதுமே தானாகவே நடந்தேறும்" என்று அதிசயம் பற்றிய ஆன்மீக உண்மையை விளக்கி விட்டு, ஒரே சொடக்கில் வெறும் கையில் இருந்து ஒரு லஷ்மி விக்ரகத்தை வரவழைத்துக் கொடுத்தார்.
"அஹா_ என்ன அதிசயம், என்ன ஆச்சரியம்!" என்று வியந்தனர். சுவாமிகள், "மீண்டும் சொல்கிறேன், இது அதிசயம் அல்ல. இது சாதாரண சித்து வேலைதான், இதனால் உங்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை" - என்று ஒரு மிகப் பெரிய விஷயத்தைச் சாதாரணமாக விளக்கினார்.
VI உலக மக்களுக்கு ஆன்மீகப் பணியில்
தான் பெற்ற அந்த ஞான அனுபவத்தையும், அனந்தத்தையும், வாழ்க்கைத் தெளிவையும் இன்னல்களில் சிக்கித் தவிக்கும் மானிட குலத்திற்குச் சேவை செய்ய இறைசக்தியின் வழிகாட்டுதல் என்று தன்னை ஆன்மீகப் பணிக்கு அர்ப்பணித்துக் கொண்டார்.
இதுவரை ஒரு லட்சம் பேருக்கு மேல் சுவாமிகளிடமிருந்து ஆன்மீகத் தொடுதலையும், ஆன்மீகக் கருத்துக்களையும் பெற்றிருக்கிறார்கள். ஏராளமான நோயாளிகள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMகளால் தொடப்பட்டு குணப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இவ்வளவு பணிகளையும் தியானபீடம் என்ற ஆசிரமத்தின் மூலம் செய்து வருகிறார். தியானபீடம் எனும் ஆன்மீக மையம் பெங்களூரில் இருக்கிறது. இந்த ஆசிரமம் அமைந்ததே ஓர் அதிசயம்தான்.
1. சுவாமிகளின் தரிசனம்
தமிழ்நாட்டில் அசிரமம் அமைக்கக் கோரி பக்தர் ஒருவர் நன்கொடையாகக் கொடுத்த நிலத்தில் காலடி வைத்ததில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMக்குத் தரிசனம் கிடைத்தது. அதில் பெரிய ஆலமரத்தோடு கூடிய நிலம் ஒன்று பெங்களூரில் இருப்பதாகவும், அதுதான் தலைமையகமாக அமையும் என்றும் தெரிந்ததாகச் சுவாமிகள் கூறினார்.
சில நாட்கள் கழித்து பெங்களூரில் நோயாளி ஒருவருக்கு சிகித்சை அளித்துக் கொண்டிருக்கும் போது, அன்பர் ஒருவர் தட்சணாமூர்த்தியைத் தான் தரிசனத்தில் கண்டதாகவும், அவர் நிலத்தை தானமாகக் கொடுக்கச் சொல்லிப் பணித்ததாகவும் கூறினார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "என்னப்பா உண்மையா என்னைத் தான் தரிசனத்தில் பார்த்தாயா? இது விளையாட்டு விஷயமல்ல. ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலம்." அன்பர் "இல்லை சுவாமிஜி உங்களை நேரில் பார்க்கும் முன்பே நான் இந்த தரிசனத்தைக் கண்டுவிட்டேன். எனக்கு உறுதியாகத் தெரியும் அது சாக்ஷாத் நீங்கள்தான்" என்று கூறி ஆசிரமத்திற்கான நிலத்தைத் தானமாகக் கொடுத்தார். பார்வையிடுவதற்காக அந்த நிலத்திற்கு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வந்தபோது தரிசனத்தில் தான் பார்த்த அதே ஆலமரம் அங்கே இருப்பதைப் பார்த்தார். வியந்து போனார்!
2. ஆசிரமத்தில் நிகழ்ந்த முதல் அதிசயம்
ஒருமுறை ஆசிரம நிலத்தைச் சுற்றிப் பார்வை யிடுவதற்காக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வந்திருந்தார். அங்கே மக்கள் கூடி நின்று எதையோ வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தார்கள். ஒரு குழியில் நிறை கர்ப்பமாக இருக்கும் பசு மாடு ஒன்று விழுந்து விட்டது. அதைக் காப்பற்றுவதற்காக கயிறுகளை அங்கும் இங்குமாகப் போட்டு மேலே சிலர் இழுக்க, சுற்றி இருக்கும் மக்கள் கூட்டத்தைப் பார்த்த மிரட்சியில் மாடு ஒரு கட்டுப்பாடே இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இந்த முழு நிலைமையையும் தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டே வந்தார்கள். முதலில் மாட்டைச் சுற்றியிருக்கும் கயிறுகளை அகற்றக் கட்டளையிட்டார். பின் சுற்றி நின்று கொண்டிருந்தவர்களைக் கொஞ்சம் விலகி நிற்கச் சொல்லிவிட்டுப் பசுவின் கண்களை நேருக்குநேர் பார்த்து "வெளியே வா" என்ற ஒரே ஒரு மனக்கட்டளையைப் பிறப்பித்து விட்டு "பசு தானாக வெளியே வந்துவிடும்" என்று கூறிவிட்டுத் திரும்பி நடக்க ஆரம்பித்து விட்டார்.
என்ன ஆச்சரியம்! அந்தப் பசு தானாகவே குழியில் இருந்து வெளியேறி விட்டது.
இது எப்படிச் சாத்தியம் சுவாமிஜி என்று உடனிருந்தோர் வினவ_
"அதனுடைய இயற்கையான ஞான சக்தியை வெளிப்படுத்த உதவினேன். அவ்வளவே" என்றார்.
3. ஆசிரமம்
தியாளபிடம் ஆசிரமம் மற்றும் தியான சிகித்சை மையம் 2003 ஜனவரி 1ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.
ஒரு வருடத்திற்குள் அசிரமம் வளர்ந்திருப்பதைப் பார்த்தால் - இது முழுக்க முழுக்க இறை சக்தியின் நடத்துதல் என்று உணர முடியும்.
உலகம் முழுவதும் இன்று நூறு தியான சிகித்சை மையங்கள் உள்ளன.
் இதுவரை 200 'தியான சிகித்சை அளிக்கும் யோகிகள் ஆசிரமத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஏராளமான நோயாளிகள் தியான சிகித்சையால் குணப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மூலம் ஆன்மீக அனுபவத்தையும், ஆன்மீகத் தொடுதலையும் பெற்றிருக்கிறார்கள்.
குமுதம் வார இதழில், "கதவைத் திற, காற்று வரட்டும்" என்ற தொடரின் மூலமாகவும், பல்வேறு முத்துக்கள் மூலமாக ஒரு கோடிக்கு மேலான மக்களின் இதயத்தைச் சுவாமிகள் தொட்டிருக்கிறார்கள்.
Vii ஆனந்த தியான சிகிச்சை (Anandha Healing)
புத்தர், பதஞ்சலி, இயேசு போன்றவர்கள் ஞானம் அடைந்த பின் - மனித சமுதாயம் 'ஆனந்தமாக வாழ்' அநேக தவங்களின் மூலம் அவர்கள் கண்டறிந்த உண்மைகளை நமது சுவாமிகள் இறை சக்தியின் வழி நடத்துதலால் தானும் உணர்ந்து, உணர்ந்ததை
ஆன்மீகச் சொற்பொழிவின் மூலம் (Spirtual Courses) ஞானத்தையும், ஆனந்தத்தையும் (Residential Programme) வாழ்க்கைக்குத் தேவையான யோகக் கலையையும் ஆனந்த தியான சிகித்சை மூலமாக (Anandha Healing) தெய்வீக சுகத்தையும் அளித்து வருகிறார்.
ஆனந்த தியான சிகித்சையால் குருடர்கள் பார்க்கிறார்கள் செவிடர்கள் கேட்கிறார்கள் முட்வர்கள் நடக்கிறார்கள். கேன்சர் மறைகிறது. நீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு சரியாகிறது சிறு வலிகள் முதல் Skin Disease வரை எல்லாமே சரியாகிறது.
இங்கு அளிக்கப்படும் ஆன்மீக சிகித்சையும், தியான முறைகளும் - காலத்தால் சோதித்து (Time tested) நிரூபிக்கப்பட்டவை. இவ்வளவு நோய்கள் குணம் அடைந்ததற்கான எல்லா Medical Evidences ஐயும் பதிவு செய்து வைத்திருக்கிறோம். Medical Miracles ஐ தனிப் புத்தகமாக வெளியிட்டி ருக்கிறோம்.
அத்துடன் நோய்களிலிருந்து நிவாரணம் பெற்ற பலர் ஸ்வாமிகளுக்கு நன்றிக் கடிதங்கள் எழுதி வருகிறார்கள். இங்கே சில_
ஆனந்தமாக இருங்கள்
T.T. கனசேகர், தொழிலதிபர் மானேஜிங் டைரக்டர், குட்டி குரூப் கம்பெனிகள், இருச்செங்கோடு.
எனக்குச் சுமார் 12 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட காமாலை நோயினால் ஈரல் பாதிக்கப்பட்டு சிறுகச் சிறுக செரிமானம் குறைந்து கொண்டே வந்தது. சரியான பசி இல்லாமை, செரிமானம் இல்லாமை ஆகியவற்றால் மிகவும் கவும் கவுட ப்பட்டேன்.
இதற்காகச் சென்னையிலுள்ள மிகப்பெரிய மருத்துவமனை, உலகளவில் புகழ்பெற்ற செரிமான
மண்டல சிறந்த மருத்துவ நிபுணர் மற்றும் டில்லியில் உள்ள புகழ்பெற்ற ஆயுர்வேத, மேலும் ஹோமியோபதி மருத்துவ நிபுணர்களிடம் பல லட்ச ரூபாய்களுக்கு வைத்தியம் நீண்ட நாட்களுக்குப் பார்த்துக் கொண்டும் சரிவரவில்லை. 68 கிலோ எடை இருந்தேன். 38 கிலோவாகக் குறைந்து பலமிழந்து போனேன்.
மேலும் நெடுநாள் பலவிதமான மருந்துகள் சாப்பிட்டதால் கடுமையான குடல்பூண் வந்தும் ஈரல் புற்றுநோய் (Liver Cancer) ஏற்பட்டும் மிக மிக உடல் துன்பமும் மன உளைச்சலும் பெற்றேன். ஒரே ஒருவேளை சாதாரணமாக உணவு சாப்பிடமாட்டோமா, ஒரே ஒரு மணி நேரமாவது முழு அமைதியிலும்; ஆரோக்கியத்திலும் இருக்க மாட்டோமா, என்று மிகவும் ஆதங்கப் பட்டி ருந்தேன்.
எல்லா மருத்துவர்களும் என்னை முழுமையாகக் கைவிட்டு விட்டார்கள். அப்போது, இரண்டு வருடம் நான்கு மாதங்களுக்கு பிறகு, அதாவது 2001 ஜனவரி மாதம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMகளைச் சந்திக்கும் மறுவாழ்வான வாய்ப்பு கிடைத்தது. முதல் சந்திப்பில் அவர் என் தலையின் மீது கை வைத்து அசிர்வாதம் செய்து உனது குறைகளை நான் நிவர்த்தி செய்து விட்டேன். நீ இனி சாதாரணமாகச் சாப்பிட்டு ஆரோக்கியமாக இரு என்று கூறினார்.
அன்று எனது உடலிலும், மனதிலும் ஒரு சுகமான உணர்வும், தெளிவும் ஏற்பட்டது. வயிற்றில் ஒரு புதிய சந்தோஷமான ஆரோக்கியமான நிலையை உணர்ந்தேன். மனதில் சொல்ல முடியாதளவு ஒரு ஆனந்தத்தை உணர்ந்தேன். இது ஒரு மறு பிறப்பைப்போல எனக்குப்பட்டது. அன்றிலிருந்து நான் முன்னையையும்
விட அதிகம் சாப்பிட முடிந்தது. நல்ல சத்தான உணவையும் செரிக்க முடிந்தது. இருபது நாட்களுக்குள் உடலிலும் முழு அரோக்கியத்தைப் பெற்றேன். அப்போதே உள்ளத்தில் முழு அரோக்கிய உணர்வை உணர்க்கேன்.
இந்த வெளிப்புற அரோக்கியம் தவிர உள்ளம் ரீதியாக நான் அடைந்தது மிகவும் பெரிய சொத்தாகும். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கொடுத்த தியான முறையைச் செய்து . முழுமையான அமைதி, அளவிடமுடியாத அன்பு உணர்வு மேலும் எப்போதும்மான அனந்த உணர்வு அகியவற்றையும் பெற்றேன்.
சாதாரணமாக விதிவிலக்கே இல்லாதபடி, எல்லா மனிதர்களிடமும் இருக்கும் குறைபாடுகளான பயம், வெறுப்பு, பொறாமை, கோபம் ஆகிய துன்பப்படுத்தும் குணங்களே மறைந்து போய் என்னுள் எப்போதும் அனந்த உணர்வே இருக்கிறது.
இந்த நிலைக்காக எவ்வளவோ முயலும் சாதகர்களுக்கே சீக்கிரம் அமையாத இந்த ஆனந்த உணர்வு, எனக்கு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கருணையால் வாய்த்து நிற்பது ஒரு தெய்வக் கொடை ஆகும். அவருக்கு என து நன்றி முடிவில்லாதது.
இப்படிக்கு, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பக்தன் டி.டி. தன்சேகர்
டாக்டர் K.K. ராஜகோபால் எம்பியிளஸ், டிசிகச் மேலாண்மை இயக்குநர், கமலா மருத்துவமனை கே.எஸ்.பி. மருத்துவமனை, சேலம் - 636 001.
பதினைந்து படுக்கைகள் கொண்ட அவசர சிகித்சைப் பிரிவும் பத்து வெண்டிலேட்டர்கள் கொண்ட தீவிர சிகித்சைப் பிரிவும் நூறு படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை நடத்தி வருகிறேன். மயக்க நிலை மற்றும் சிக்கலான நோய் உள்ள நோயாளிகளுக்கு சிகித்சை அளிப்பதில் தனி கவனம் செலுத்தி வருகிறேன்.
எனது மகன் திரு. மதன்குமார்: வயது 27; திருமணம் ஆகி ஒரு வருடம் ஆனவர். துரதிர்ஷ்டவசமாக மூளைபடர் நோயால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகித்சை பிரிவில் 105 நாட்கள் சிகித்சை பெற்றார்.
நாள் ஒன்றுக்கு மருத்துவச் செலவு ரூ. 30,000/-செலவிடப்பட்டது. மேற்கண்ட மருத்துவத்தில் என் மகனின் உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. இந்த சிகித்சை பெற்று மருத்துவமனையை விட்டு வரும்போது எவ்வித உணர்வும் இல்லாமல் படுக்கையில் இருந்தபடி, கண்களை மட்டும் திறந்து பார்க்கக் கூடிய அளவிலேயே இருந்தார்.
ரூ. 50 இலட்சத்திற்கான மருந்துகளைச் சோதனை அடிப்படையில் பரிசோதனை செய்து கொடுக்கப் பட்டதால் குறிப்பிட்ட அளவு உடல் நிலை முன்னேற்றம் சீராக இருந்தது. இம்மாத்திரைகள் அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டன. மேற்கண்ட நிலையில் நான் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டதால்
என்னுடைய டாக்டர் தொழிலை நன்கு செய்ய இயலாத நிலையில் இருந்தேன். இந்நிலையில் நான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMகளைச் சந்தித்தேன்.
அவர் பெங்களூரில் ஆசிரமத்திற்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கச் சொன்னார்கள். பெங்களூர் மகாவிர் ஜெயின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பல்வேறு அலுவல்களிடையே சுவாமிஜி அவர்கள் தினமும் தியான சிகிச்சை அளித்தார்கள். பிறகு ஒரு மாத காலமாக என து மகன் சுவாமிஜியின் ஆசிரமத்தில் தங்கி தியான சிகித்சை பெற்று வருகிறார்.
தற்சமயம் எனது மகன் நல்ல நிலையில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறார். தன்னுடைய உண்வைத் தானே எடுத்துக் கொள்ளுதல், சதுரங்கம் விளையாடுதல், 45 நிமிடம் பேசுதல் என்று முன்னேற்றம் அடைந்துள்ளார்.
இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் முழுமையான குணம் அடைவார்.
என்னுடைய குடும்பம் முழுவதும் சுவாமிஜிக்கு மிகவும் கடமைப்பட்டவர்கள் என நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பக்தன் கே.கே. ராஜகோபால்
T. புனிதவதி தங்கவேல்,
உரிமையாளர் : நேஷனல் வேறாட்டல், 94, கிரின் வேஸ் ரோடு, செந்தில் இல்லம், பேர்லண்ட்ஸ், சேலம் - 636 016.
நான் சேலத்தில் வசிக்கிறேன். எனக்கு வயது 67. எனக்கு ஏற்கெனவே மூன்று முறை அறுவை சிகித்சை நடந்துள்ளது. மறுபடியும் ஹெர்னியா நோய் ஏற்பட்டு மிகவும் கஷ்டத்துக்குள்ளானேன். என்னுடைய டாக்டர் நான்காவது முறையாக அறுவை சிகித்சை செய்ய முடியாது என்று கூறிவிட்டார். ஏனெனில் எனக்கு சோரியாசிஸ் நோயு இருந்ததால் அறுவை சிகித்சையில் தையல் ஒட்டுவது சிரமம் என்று கூறிவிட்டார்கள்.
நமது ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMகளிடம் எனது நிலையைக் கூறினேன். சுவாமிகள் என்னைப் பார்த்துக் கொள்வதாக தைரியம் கூறினார். 2002 செப்டம்பர் மாதம் பெங்களூர் மணிப்பால் மருத்துவமனையில் நான்காவது முறையாக ஹெர்னியா அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டேன். அறுவை சிகிச்சை முடிந்து வரும்போது மிக அதிக வலியால் துடித்தேன். சுவாமிஜி எனக்கு உடனே Healing செய்தார். உடனே எனக்கு வலி நின்று நார்மல் ஆகிவிட்டேன்.
நான்கு நாட்கள் கழித்து நான் வீடு திரும்பும் போது எனக்கு வலியோ, சோர்வோ இல்லை. எனக்கு வைத்தியம் செய்த டாக்டரே ஆச்சர்யப்பட்டுப் போனார். "உங்களை சுவாமிகள்தான் காப்பாற்றினார்" என்று டாக்டரே தலைக்கு மேல் கையெடுத்துக் கும்பிட்டுக் கூறினார்.
Part 2: Sri Nithyananda - An Introduction_Tamil_part_2.md
தன் சொந்தத் தாய்க்குச் சமமாக என்னை நினைத்து இந்த அன்பையும், Healingஜயும் எனக்கு வழங்கிய சுவாமிகளை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க மாட்டேன்.
எனக்கு அறுவை சிகித்சை செய்த இடத்தில் ஏழு தையல், சரியாக ஒட்டவில்லை. இது முழுமையாக குணமடைய அறு மாதங்கள் வரையாகும் என டாக்டர் கூறினார். ஆனால் சுவாமிகளின் கருணையால் அவரிடம் சில நாட்கள் Healing செய்து கொண்டதால் ஒரு மாதத்திலேயே தையல் சரியாகக் கூடிவிட்டது.
அதிலிருந்து நான் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் சுவாமிகளின் நினைவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMளோடு எனக்கு ஏற்பட்ட தொடர்பு மிகப் பெரிய பாக்கியம். ஒரு பெரும் நன்மை. நான் சுவாமிகளிடம் பக்திப்பூர்வமாகச் சரணடைந்திருக்கிறேன்.
எங்கள் குடும்பத்தில் உள்ள பேரன், பேத்தி உட்பட அனைவருமே இம்மாதிரிச் சரணடைந்து அவரது கருணையால் ஆரோக்கியமும், சந்தோஷமுமாக இருக்கிறோம்.
இப்படிக்கு, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பக்தை அல்ல அடிமை டி புனிதவதி தங்கவேல், சேலம்
K. அன்பமகன்
நான் அரோக்கியம் சம்மந்தப்பட்ட பொருட்களை விநியோகம் செய்யும் ஒரு ஏஜெண்ட் எனக்கு 2002 நவம்பர் மாதம் ஒரு நாள் காலையில் மயக்கம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் சேலம் கோகுலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். டாக்டர்கள் மூளையில் இரத்தக்குழாய் வெடிப்பு ஏற்பட்டு இரத்தக் கசிவ ஏற்பட்டதால் உயிருக்கு மிகவும் ஆபத்தாக இருப்பதாக என் மனைவியிடம் கூறினார்கள். என் மனைவி உடனே நாங்கள் மிகவும் அன்பு செலுத்தும் "THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM" அவர்களுக்கு எனது நிலை பற்றித் தகவல் சொன்னார்கள். பெங்களூரிலிருந்து வரும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்கள் அந்த போனிலேயே என் மனைவிக்கு அறுதலும், உறுதியுமாக "நான் அன்பழகனை சுவனித்துக் கொள்கிறேன்; கவலை வேண்டாம்" என்றும் மருத்துவ முறைப்படி முயற்சிக்க வேண்டியதைச் செய்யும்படியும் கூறினார்கள். என்னை அன்றே சேலத்திலிருந்து சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மல்டிஸ்பெஷாலிடி மருத்துவ மனைக்கு மாற்றினார்கள். அங்கும் டாக்டர்கள் நான் ஐந்தாம்நிலை கோமாவில் தொடர்ந்து இருப்பதால் பிழைப்பது கடினம் என்று கூறிவிட்டார்கள்.
விமானம் மூலம் பெங்களூரிலிருந்து மேற்படி ராமச்சந்திரா மருத்துவமனைக்கு உடனே வந்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எனக்குத் தன்னுடைய ஆசியையும் Healingஐயும் கொடுத்தார்கள்.
அதற்கடுத்த 12 மணி நேரத்தில் டாக்டர்களே மிக அச்சரியப்படும் அளவிற்கு என்னுடைய உடல் நிலையில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்பட்டது.
பிறகு டாக்டர்கள் எனது மூளையில் Open Surgery மூலம் இரத்தக் கசிவை அகற்றினர்கள். இந்த மாதிரி அபரேஷன் மூலம் பிழைப்பது கூட மிக அரிது என்று கூறினார்கள். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பத்து நாட்கள் தினமும் பெங்களூரிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்து எனக்கு Healing செய்தார்கள். பிறகு நான் குணமடைந்து Discharge ஆகி பெங்களூருக்குச் சென்று THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களுடன் மேலும் பத்து நாட்கள் தங்கியிருந்து Healing எடுத்துக்கொண்டு முற்றிலும் குணமடைந்து ஆரோக்கிய மாக உள்ளேன்.
இது எனக்கு மறு பிறப்பு தான். நவீன ஆங்கில மருத்துவத்தின்படி பிழைக்க சாத்தியமே இல்லாத நிலையிலிருந்து என்னை மீட்டுக் கொண்டு வந்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களின் பாதங்களை நான் வணங்குகிறேன். அவர் குடியிருக்கும் என் இதயத்தில் என்றும் நன்றி சுரந்து கொண்டே இருக்கிறது. நான் தற்சமயம் இருக்கும் ஆரோக்கியத்திற்கும், ஆனந்தத்திற்கும் அவரது கருணையே முழுக் காரணம்.
இப்படிக்கு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பக்தன்,
அன்பழகன், ேலம்.
ஞானம் அடைதல்
-
- மஹா அவதார் ஸ்ரீ பாபாஜியோடு
-
- ஓம்காரிஸ்வரர் மலையில்
-
பஞ்ச தபஸ்
-
எலும்பு முறிவும் அதிசய குணமும்
-
- மரண பயத்தை வெல்லுதல்
- ஞானம் அடைதல்
உலக மக்களுக்காக ஆன்மீதப் பணியில்
-
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தரிசனம்
-
ஆசிரமத்தில் நிகழ்ந்த முதல் அதிசயம் 3.ஆசிரமம்
ஆனந்த தியான சிக்சை அன்பர்களின் அனுபவங்கள்
-
டி.டி. தன்சேகர்
-
டாக்டர் கே.கே. ராஜகோபால்
-
டி.புனிதவதி தங்கவேல்
-
கே. அன்பழகன்
1. அவதாரம்
உண்மையான தேடுதல் இருந்தால் நிச்சயம் ஞானம் கிடைக்கும் என்பதைத் தொடர்ந்து நிரூபிக்க பூமியில் அவ்வப்போது மகர்ன்கள் ஆன்மீக மலர்களாக மலர்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி மலர்ந்த ஓர் அற்புத மலர்தான் நமது - THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
உண்மையான குருவிற்கு எந்தக் காலத்திலும் பஞ்சமிருந்ததில்லை. உண்மையான சீடர்களுக்குத்தான் எல்லாக் காலங்களிலும் பஞ்சம்.
மனிதர்களின் இயல்பே தான் கெட்டுப் போவதற்கான 99 வழிகளை தெரிந்து வைத்திருப்பது. உருப்படி ஆவதற்கான வழிகளை அறிந்திருந்தும் ஒரு வழியையும் பயன்படுத்தாமல் இருப்பதுதான் விந்தை!
நாம் மவித உருவெடுத்ததற்கான ஒரே ஒரு காரணம் நிலையான, நித்தியமான ஆனந்தத்தை அடைவதற் காகத்தான். இந்த நிலையான நித்தியானந்தத்தை நாம் அடைவதற்காக உன்னதமான ஒரு வழியைக் காட்டி, 99 தவறான் வழிகளையும் ரத்தினச் சுருக்கமாக கட்டிக் காட்டி மாபெரும் ஆன்மீகச் சேவையைச் செய்து வருகிறார் நமது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. இவர் ஆன்மீக உலகின் ஒர் ஒப்பற்ற நக்ஷத்திரம்.
இவர் அக ஒளியைக் கண்டு கொண்டவர்; இறை சக்தியை அனுபவமாக உணர்ந்தவர்; காலத்தையும், உடலையும் தாண்டும் தெய்வீக அனுபவம் பெற்றவர்;
சத் குருவுக்கு சமாப்ப்பணம்
நித்யானந்தம் பரமஸ் ஹதம் கேவலம் ஞானமூர்த்திம் த்வந்த்வாதீதம் கஹன சத்ருஸம் தத்வ மஸ்யாதி லக்டியம் ஏகம் நித்யம் விமலமசலம் ஸர்வதீ ஸாக்ஷி பூதம் பாவாதிதம் த்ரிகுண ரஹிதம் ஸத்குரும் தம் நமாமி.
The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam அறிமுகம்
பொருளடக்கம்
ஜனனம்
1 அவதூரம்
- பிறப்பின் ரகசியம்
பால்ய பருவம்
1 பாட்டனாருடன் 2. பாட்டியுடன் 3. ரகுபதி யோகியுடன் 4. சிறுவனின் பூறை 5. மாதாஜி குப்பாம்மாளுடன் 6. யோகி ராம்கூரத் குமாருடன்
- வகுப்பறையில் ஜயப்பன் தரிசனம்
முதல் அனுபவம்
-
- சந்நியாசிகளோடு நட்பு
-
- அண்ணாமலை சுவாமிகளோடு
-
- மகத்தான ஆன்மீக அனுபவம்
-
- சுடுகாட்டில் தியானம்
-
- மரண அறுபவம்
-
- கல்லூரி வாழ்க்கை
-
- கிரிவலத்தில் கழுதைப் புலிகள்
தவ வாழ்க்கை
- 1 பரிவராஜக வாழ்க்கை
-
- ஸ்ரீ, ராமகிருஷ்ணர் சாரதா தேவி தரிசனம்
-
- இமய மலையில் கவாமிகள்