1. Small Stories of Paramahamsa
பதிப்புரை
"என்னை மட்டும் இப்படித் திண்டாட வைக்கிறாயே, இதுவா உன் கருணை, கல் நெஞ்சா உனது?" என யோசித்த குடியி சீடனின் கனவில் தோன்றிய கடவுள்,
"இரத்தம் வரவர், தோலைக் கிழித்து, தசையை அறுத்து, உள்ளிருக்கும் கட்டியை எடுத்தெறியும் மருத்துவனின் நெஞ்சு கல் நெஞ்சா?" எனக் கேட்டார் கடவுள்.
மேலும் தொடர்ந்த கடவுள் ...
"கொஞ்சம் பொறு. அதிக விழிப்புணர்வோடிரு. திண்டாட்ட காலத்தைத் தாண்டி விடுவாய். உன் கா்மங்கள், எதிர்மறை நினைவுகள், கரைந்து காணாமல் போக தியானம் செய். கொண்டாட்ட காலத்தை தொட்டு விடுவாய்" எனச் சொன்னார் சீடனிடம்.
உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்! திண்டாட்டத்தைத் கூட கொண்டாட்டமாய் தாண்டிவி(டுவீர்கள்!
- THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
இப்புத்தகத்தில் வரும் கதைகள் ஒவ்வொன்றும் திண்டாட்டத்தை கொண்டாட்டமாக மற்றும் தியான குத்திரங்கள். ஆழமாய் படித்து உண்மையை புரிந்து கொள்ளுங்கள். ஆனந்தமலராக மலருவீர்கள்.
- நித்யானந்த தியானபீடம்.
ளையாடையும் முன் குடனமையைந்த பின் ...
"ராஜாவாக இருந்த நீங்கள், திருவோடேந்தின பிச்சைக்காரன் போல ஏன் வாழ வேண்டும்?" எனப் புலவர் ஒருவர் கேட்டபோது புத்தர் சொன்னார்...
ஞானமடையும் முன், எல்லாம் என்னோடு இருந்தும் துக்கமாயிருந்தேன். ஞானமடைந்த பின், எதுவும் என்னோ(டு இல்லாது இருந்தும் ஆனந்தமாக இருந்தேன். இருக்கிறேன். இருப்பேன். இந்த நிலைக்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம்" என்றார்.
கொண்டாடப்பட்ட உணர்வு ஒருவனுள் உதயமாகிவிட்டால் C அவனுடைய கண்களுக்கு எல்லாமே கொண்டாட்டமாகத் தெரியும்.
- THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இப்புத்தகத்தில் வரும் கதைகளை ஆழ்ந்து படியுங்கள். உள்ளுலக ராஜாவாக உங்களை வாழ்க்கையை இந்த கதைகள் மாற்றும் என்பதை இந்த முன்னுரையின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
- தியான பீடா சேரிடபிள் ட்ரஸ்ட்
ஜனனத்திற்கும் மரணத்திற்கும் இடையில்தான் எல்லா வேறுபாடுகளும் தெரிகிறது. இருக்கிறது. அப்புறம் இல்லை. மனிதன் மரணிக்கும்போது உடல் இறக்கிறது. மனம் தன் கதையைத் தொடர்கிறது. மீண்டும் ஜனனம்! மீண்டும் மரணம்! சாம்பல் கூட மிஞ்சாத அளவுக்கு உடலை எரித்தாலும், சாகாத மனம் வேண்டும் இந்த நிகழ்வுதான் நிஜமான மரணம். இந்த சுபநிதழ்வு நிகழும்போதுதான் மனிதன் தெய்வமாகின்றான். பித்தன் புத்தனாகின்றான்.
மனம் உயிரோடிருக்கும் வரை நீங்கள் வாழ்வதில்லை. மனமே உங்கள் மூலமாக வாழ்கிறது. மனம் மரணிக்கும் போதுதான் முதல் முறையாக நிஜமாய் நீங்கள் பிறக்கிறீர்கள்.
1. யாாளுக்காக உழைக்கிறிர்கள்?
இரு பெண்களுக்குத் தந்தையான அந்தக் குடும்பஸ்தர் தன் குருவிடம், 'என் இரத்தத்தை வியா்வையாக்கி இன்று பல இலட்சங்கள் சொத்து சேர்த்து வைத்திருக்கிறேன்" என்று பெருமையோடு சொன்னார்.
குரு, "ஊர், "ஊர், முகம் தெரியாத அந்த அதிபதிகளுக்காகவா உங்கள் இரத்தத்தையே வியா்வையாக்கினீர்கள்.!
உயிரைக் கொடுத்து உழைத்த உங்கள் சொத்தை, உங்களோடு உழைக்காமலே அனுபவிக்கப் போகிறவர்களுக்காகவா உங்கள் வாழ்வையே தியாகம் செய்தீர்கள்" என கேட்டதும்,
குடும்பஸ்தர் கோபமாக, "யார் அந்த அதிபதிகள்?" என கேட்டார். குரு, "மருமகன்கள்!" என்றார்.
வாழ்வு இறைவனளித்த பரிசு -இந்த வாழ்வு வீணாகிட கூடாது. மேலுள்ள கேள்விகளுக்கு உங்கள் வாழ்க்கை என்ன பதில் சொல்லும்?
2. தியாணம் செய்ய நீங்கள் தியாகம் செய்யத் தேவையில்லை
பீடிகையோடு, ரமணரிடம் ஒருவர் கேட்டார், "தியானம் செய்வதற்கு என்ன தகுதி வேண்டும்?' என்று, ரமணர் கேட்டார், "உன்னால் மூச்சுவிட முடிகிறதா?'' ''முடிகிறது. பகவான்' "தியானம் செய்ய இந்த தகுதி போதும். கியானம் செய்" என்றார்.
● தியானம் என்பது ஜாதி, மதம், கலாச்சாரம் மற்றும் உங்கள் பழக்க வழக்கங்கள் ஆகிய அனைத்திற்கும் அப்பாற்பட்டது. தியானத்திற்காக உங்கள் வழக்கங்களை மாற்ற வேண்டியதில்லை.
3. உறவுகள் உங்கள் வசமாக
திருவண்ணாமலையில் பொது இடமொன்றில் எதிர்பாராக விபத்தொன்று ஏற்பட்டது. விபத்துக்குள்ளானவர் மயங்கிக் கிடந்தார்.
இதைப் பார்த்து ஒடிவந்த அந்தப் பெண்மணி அடிபட்டவரை நெருங்கி, எதோ உதவிகள் செய்து கொண்டிருந்தார். கூட்டம் அந்த இடத்தைச் சுற்றிக் கொண்டது.
அப்போது திடகாத்திரமான ஒரு மனிதர் கூட்டத்தைக் கலைத்து உள்ளே நுழைந்தார். உதவி செய்து கொண்டிருந்த பெண்ணை விலகுமாறு சைகை செய்துவிட்டு, "நான் விபத்துக்கு முதலுதவி செய்வது பற்றி டிப்ளமோ படித்தவன். நான் இனி பார்த்துக் கொள்கிறேன்" என்றார்.
கீடீரென சத்தமிட்டார், "உடனே ஒரு டாக்டரை கூப்பிடுங்கள்! இதற்கு மேல் என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லையே ... "
மெல்ல அப்பெண்மணி சொன்னார், "சத்தமிடாதீர்கள். நான் இங்குதான் இருக்கிறேன்'' என்றார். அவர் ஒரு டாக்டர் எனத் தெரிந்ததும் அந்த மனிதர் தலைகவிழ்ந்தார்.
- எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்படும் மனிதர்கள் எப்போதும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். உலகில் இப்படி நடந்து கொண்டால், அவமானத்தோடு நின்றுவிடும். அதேப்போல் உறவுகளிடம் நடந்து கொண்டால் ... ?
4. அந்த இரகசியத்தை சொல்லட்டுமா?
லைலாவிடம் மற்று கேட்டதற்கு,
" அன்பே! எல்லோருக்கும் தெரிந்த, யாருக்கும் புரியாத அது எது? என நேற்று நீ கேட்ட விடுகதையின் பதில் என்ன?"
புன்னகைத்த லைலா
"அது அன்பு" என்றாள்.
1 அன்பு மலர - நீங்கள் வளர - நேசியுங்கள்
5. எது சரி? எது தவறு?
ஜென் ஞானியிடம், "எது தவறு?" எனப் பேராசிரியர் கேட்டார். பதிலுக்கு ஞானி, "எது சரி?" என்றதும், தீவிரமாக யோசித்த போரசிரியர்,
''எதுவெல்லாம் எனக்குத் தவறெனப்படவில்லையோ, அதுவெல்லாம் என்னைப் பொருத்தளவு சரி' என்றார்.
ஞானி, "பார், உன் கேள்விக்கு பதில் உன்னிடமேயிருக்கிறது. உனக்கு சரியெனப்படாத எல்லாமே தவறுதான்! என்றார்.
'எது தவறு?' என்ற கேள்விக்கு குரனி பதில் சொல்லி முடித்தவுடனே பேராசிரியர் மீண்டும் ஆழமாய்க் கேட்டார்,
"எது உண்மையிலேயே தவறு?"
அதற்கு ஞானி, விரும்புகிறீர்களா?'' எனக் கேட்டதற்கு,
"ஆமாம்" என்றார்.
ஞானி, "இப்படிக் கேள்விக் கேட்பதே தவறுதான்" என்றார். பேராசிரியர், "இப்படிச் சொன்னால், பின் எப்படித்தான் நான் தெளிவடைவதாம்?'' எனத் தாழ்ந்த குரலில் கேட்க,
ஞானி செரன்னார் ....
"உன்னைக் குழுப்புவதற்காக, நான் இப்படிப் பேச வில்லை. உன்னைக் குழப்பிக் கொண்டிருப்பதை குழுப்பத்தான் இப்படிப் பேச வேண்டியிருக்கிறது. எது தவறு என ஆராயாதே.
உண்மையில் தவறு என்ற ஒன்றே இல்லை. தப்பு தவறு, நீதி, நியாயம் தோண்டி இயல்பாய் வாழு, உஉன்னைக் குழுப்புவதை குழுப்புவதை குழுப்பு. தெளிவடைவாய்!'' என்றார்.
0 நாம் மற்றவர்களிடம் தவறுகளைச் கட்டிக் காட்டுவதே கிட்டத்தட்ட தவறு தான். ஒருவன் தன்னை மனதளவிலோ, உடலளவிலோ புண்படுத்திக் கொள்வதிலிருந்து தவிர்க்க, சமுதாயத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வார்த்தை, அவ்வளவே.
6. திருத்தவா? திருந்தவா? உங்கள் சாய்ஸ்
பொது இடத்தில் அசுத்தம் செய்த தவறுக்காக, அந்தக் குழுந்தையை அடித்த கோபக்கார தாயிடம் ஜுமல்கி சொன்னார் …
"அது என்ன செய்கிறது என அதற்கே தெரியாத நிலையிலிருக்கிறது. 'தப்பு' என்ற வார்த்தையைக் கூடத் தெரியாத குழந்தையையாவது தப்ப விடுங்கள். அதற்குள் 'குற்ற உணர்ச்சி' தூண்டப் புறப்படாதீர்கள். வாழவி(டுங்கள்''
கிருத்துவதாய் நினைத்து வருத்துவது முடிவுக்கு வரவேண்டும். வருமா?
7. வருத்தத்தின் விருத்தங்கள்
புத்திக்கெட்டவன் ... எப்படித் தூறுமாறாக வண்டி ஓட்டுகிறான் பார்" என, தன்னைத் தாண்டி பைக்கில் சென்றவனைப் பற்றி, பின்னால் அமர்ந்திருந்த நண்பரிடம் திட்டிய முகுந்தனின் பைக் தடுமொறிப் போனது!
முகுந்தனின் செயலால் ....
அவரின் பின்னால் வந்த பைக்கும் தடுமாறிப் போனது!
நண்பர், "அவனைக் குறைச் செர்ல்லி, நீயும் அதே தவறை செய்து விட்டாயே" என்றார்.
"இல்லை. அவன் அப்படித் தாறுமாறாக முகுந்தன், செல்லாவிட்டால் அது நடந்திருக்காது" என்றார்.
நண்பர், "பார். உன்னால்தான் நமக்குப் பின்னால் வந்தவர் கடுமாறிப் போனார்.
ஆனால், அவர் நம்மைக் குறைச் சொல்லவில்லை. சும்மா சிரித்து வைத்தார். அதனால்தான் அவருக்குப் பின்னால் வந்த வாகனங்கள் துமொறவில்லை' என்றார்.
முகுந்தன், "இல்லையில்லை ... " எனத் தன்னை நியாயப் படுத்தி தொடர்ந்து விவாதம் செய்ய ஆரம்பித்தார். கடைசியில், முகுந்தனின் நண்பர் கோபித்துக் கொண்டதுதான் மிச்சம்.
1 எல்லா விவாதங்களும் வருத்தத்தின் விருத்தங்கள்.
8. விவாகம் Vs விவாதம்
பிரபல வக்கீலின் குழந்தை விக்கிரமிடம், டீச்சர் கேட்டார் .... "marry என்ற வினைச்சிசால்லின் எதிர்கால வினைச்சொல் என்ன?" குறும்பாய் சிரித்த விக்ரம், "divorce" எனச் சொன்னான்!
விவாகரத்து கூட விவாதம் தரும் பரிசே! வளரும் சமூகமானது சரியாய் வளர் வேண்டும்.
9. கடவுளாக கணல்லுமையாகுங்கள்
ஒரு ஜப்பானியக் கதை ....
தாய் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கையில் ...
மகன், "அம்மா! அம்மா! என்னை விட்டுப் போகாதே ... நீ என்னச் சொன்னாலும் செய்கிறேன்" என அழுது புலம்புவதைப் பார்த்த தாய் சொன்னார்,
"உன் அப்பா என்னிடம் சொன்னதைச் சொல்கிறேன். அதைக் கடைப்பிடித்தால் உடலில் உயிர் இருக்கும்வரை ஆனந்தமாயிருப்பாய்" என்றார்.
அவ்வளவு துக்கத்திலும் மகன் ஆர்வமானான், "என்ன அது!" எனர்க் கேட்டான்.
அதற்கு அம்மா "கலைஞனாகு! பெரிய கலைவித்து வானாகத்தான் ஆக வேண்டுமென்ற அவசியமில்லை.
உனக்குக் கழிவறை கத்தம் செய்யும் பாக்கியம் கிடைத்தாலம் சரி. கவலைப்படாதே. நீ சுத்தம் செய்வது போல இன்னொருவர் சுத்தம் செய்யக் கூடாது. உன்னுடைய வேலைப்பாடு அவ்வளவு தனித்துவழும், கலைநயமும் மிகுந்ததாகவும் இருக்க வேண்டும்" எனச் செரல்லி முடித்ததும் கண்முடினார் நிம்மதியாக!
கலை என்பது .... நம்மிடமிருக்கும் மிருதுத் தன்மையை வெளிக் . கொண்டு வரும் ஒரு அருமையான முறை.
10. கவலை நிவாரணி
அந்தப் புகழ்பெற்ற ஒவியார், எவ்வளவு பணம் தருவதரகச் செரன்னாலும் தான் வரைந்த ஓவியங்களைத் தரமாட்டார். "அப்படி நடந்துகொள்வது எதனால்?" எனக் கேட்டபோது,
்நான் வரைவது எனக்காக. உனக்காக அல்ல. என் உயிரை கலந்து வரைந்த கலை இது. அது பொருளல்ல. என் பிள்ளை! பிள்ளையை எவன் காசுக்காக விற்பான்?" எனக் கேட்டார்.
கலை என்பது, வாழ்வில் திருப்தி அலையைச் சேர்ப்பது.
0 கலை என்பது கவலையைக் களைவது.
11. நிஜத்திர்கு வாருங்கள்
சிறுவன் முகுந்தன் கிராமத்திலிருக்கும் அவன் தாத்தாவின் வீட்டிற்கு முதல் முறையாகச் சென்றிருந்தான். அந்த கிராமத்தின் ரம்யமான குழல் சிறுவனைச் சுறுகுறுப்பாக்கியது.
வீட்டின் பின்புறத்திலிருக்கும் தோட்டத்திற்குள் சந்தோஷத்தோடு துள்ளிக்குதித்து ஒடினான். "முகுந்தா அது தோட்டம், வீதியல்ல ... " என சத்தமிட்டார் தாத்தா. "அதெல்லாம் எனக்குத் தெரியும்" எனப் பதில் சொல்லிக் கொண்டே ஓடினான் முகுந்தன்.
தாத்தா, "தோட்டத்தில் பெரிய மண் குன்று ஒன்று இருக்கிறது" எனச் சொல்லி முடிப்பதற்குள், "அதெல்லாம் எனக்குத் தெரியும்" என செரல்லிக்கொண்டே தோட்டத்தின் மண் குன்று மேல் ஏறி ஒடினான் முகுந்தன்.
"மடையா! சொல்வதைக் கொஞ்சமாவது நின்று கேட்கிறாயா? அந்த குன்றைத் தாண்டியதும் ... ' என தாத்தா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, "அதெல்லாம் எனக்குத் தெரியும்" எனச் செரல்லிக் கொண்டே பலத்த சத்தத்தோடு குன்றைத் தாண்டியிருந்த குட்டையில் குதித்து, சகதித்து, சகதியானான்.
1 குன்னைப் புத்திசாலி என நினைத்துக் கொண்டிருப்பவர்கள் மற்றவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள். புத்திசாலி தொடர்ந்து வாழ்விலிருந்து கற்றுக் கொண்டேயிருப்பான்.
12. குதி! விழித்துக்கொள்வாய்
ரீ-சென் தன் குருவிடம் கேட்டார். "புத்திசாலித்தனத்தை எப்படிக் ்கற்றுக் கொள்வது. விளக்குங்கள்' குரு, "சைக்கிள் ஓட்டுவது எப்படி? விளக்கிச் சொல்" எனத் திரும்பக் கேட்டார்,
ரீ-சென், "அது ... அது ... " எனத் தடுமாற ... குரு கேட்டார், "உனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியும். ஆனால், விளக்க முடியாது. இருந்தும், புதிதாய்க் கற்றுக்கொள்ள நினைப்பவனிடம் என்ன சொல்வாய்?"
ரீ-சென், "கற்றுக்கொள் என்பேன்" என்றார். குரு சிரித்தார். ரீ-சென் மலர்ந்தார்.
புத்திசாலித்தனத்தை விழிக்கச் செய்ய முடியும். எதுவுமே ஆரம்பத்தில் மலைப்பாகத்தான் தெரியும். குதியுங்கள். முடியும். இப்பிறவியிலேயே வாழ்ந்திடலாம்.
13. உலகில் வாழுக் கற்றுக் கொள்ளுங்கள்
ITI- யில் இன்றினியரிங் முடித்து மாதம் லட்சக்கணக்கில் அமெரிக்காவில் சம்பாதிக்கும் அந்த நபர், என்னோடு பேசிக் கொண்டிருக்கும்போது, "என்னை சாதனையின் உச்சியை தொட வைத்த என் தந்தை ஒரு ஏமாளி. நானும் ஒரு ஏமாளி' என்றார்.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?' என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தூர்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் சேர்த்து விட்ட நாங்கள், உலகில் வாழக் கற்றுக்கொள்ளவேயில்லை. 'வாழ்க்கை என்றால் என்ன?' என்ற கேள்விக்கு 'நாங்கள் ஏமாளி!' என்ற பதில்தான் கிடைக்கிறது. இதற்கு வழி சொல்லுங்கள்" என்று கேட்டார்.
ஒரு உண்மையை உறுதி செய்து கொள்ளுங்கள் ... உங்களின் எல்லா உழைப்புகளும் உங்களின் உடலைப் பிழைக்க வைக்க மட்டுமே உதவும். அவற்றால் மன்தை பிழைக்க வைக்க முடியாது!
- உடலைத் தாண்டிய மனதையும், உணர்வையும் பிழைக்க வைக்க, தழைக்க வைக்க குணமுதிர்ச்சி பெற வேண்டும். அதற்காகத் தனியாய் உழைக்க வேண்டும்.
14. குணமடுதிர்ச்சியிண் மக்துவம்
பரத ரிஷியிடம் குடும்பஸ்தர் "நான் துறவியாக விரும்புகிறேன்" என்றார்.
ரிஷி "பொய். உலகைச் சந்திக்க விருப்பம் இல்லை என்பதை நாகக்காகச் சொல்கிறாய்" என்றார். மேலும்,
"சம்சாரியாய் இருப்பதற்கான அதிகபட்ச தகுதிதான் சந்தியாஸியாய் இருப்பதற்கான குறைந்தபட்ச தகுதி. இப்போது சொல் துறவியாகிறாயா?" என்றார்.
நீங்கள் யார் என்பது முக்கியம் அல்ல. குணமுதிர்ச்சியே முக்கியமானது.
15. எளிமையாய் வாழ ஒரு காரணம்
நோயாளிக்கு உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கி விட்டது.
ரோயாளியிடம் மருத்துவர் ...
"துக்கப்படாதீர்கள். உங்கள் நிலை கவலைக்கிடமாகி இருக்கிறது. அதிகபட்சம் இன்னும் இரண்டு நாள் இந்த உடல் உங்களுக்கு சொந்தமாயிருக்கலாம்.
கடைசிகால நடவடிக்கைகளில் நீங்கள் பலவற்றையும் செய்ய விரும்பலாம்.
அதோடு, உங்களுக்கு யாரையாவது பார்க்க வேண்டும் என்று ஆசையிருக்கிறதா?" என்று கேட்க,
"ஆமாம்" என மெல்லிய குரலில் மருத்துவரின் கண்களைப் பார்க்கு சொன்னார் நோயாளி.
"யார் அது?" என ஆர்வத்தோடு மருத்துவர் கேட்டதற்கு, நோயாளி, "வேறொரு நல்ல டாக்டரை" என்றார். மருத்துவர் இடிந்து போனார்.
மனிதன் தான் இடிபட்டதாய் உணரும் எல்லாச் சூழ்நிலைகளிலும் அவன் அடிபடுவது இந்தப் பெருமையுணர்வில்தான்!
பெருமைப்பட ஆயிரம் காரணமும், சிறுமைப்பட ஆயிரம் காரணமும் சொல்வது எளிது. ஆனால் எளிமையாய் வாழ ஒரு காரணம் சொல்வது கூட மனதுக்கு மிகக் கடினமானது.
16. பெருமை வெறுப்படையத் தரும்
நாய்களின் பொதுக் கூட்டத்தில் இப்படிப் பெருமை பேசப்பட்டதாம். தலைவர் சொன்னது "நமக்கும் கடவுளுக்குமுள்ள வித்தியாசம் மிக மிகச் சிறியது"
"அப்படியா!" கேட்டக் கூட்டத்திடம், "ஆம்! நம் பெயர் DOG அதை திருப்பிப் போட்டால் GOD" எனப் பெருமையோடு தலைவர் சொன்னது.
பெருமை பேசுவது எளிது. ஆனால், அது நேர விரயம்! தனிமனித வளர்ச்சிக்கு எதிரி.
17. ஒருவருக்குள் ஒராயிரம் மனிதர்
மெரினா கடற்கரையில் விளையாடிவிட்டு வந்த குழந்தை நிட்டியிடம், அவன் அம்மா கேட்டார், "எத்தனை பெண் குழந்தைகள் உன்னோடு இன்று இருந்தார்கள்".
"ஏன் தேடுகிறாய்?" எனக் கேட்ட நிட்டியிடம், அம்மா சொன்னார், "பக்கத்து வீட்டு ஆன்ட்டி சொன்னார்.... அதனால்தான்!"
"என்னால் இன்று எத்தனை பெண்கள் வந்தார்கள் என்று சொல்ல முடியாது" என்றான் நிட்டி.
" ஏன்? "
"இன்று யாருமே கவுன் போட்டுக் கொண்டு வரவில்லை. எல்லோரும் ஒரே மாதிரி சுவிம்மிங் டிரஸ்தானே போட்டிருந்தோம்.
எல்லோரும் ஒரே டிரஸ்ஸில் இருந்ததால், என்னைப் பொருத்தளவிற்கு இன்று எங்களோடு ஆண்களோ, பெண்களோ விளையாட வரவில்லை. சரிதானே?" என்றான் குழந்தை நிட்டி.
குழந்தையைப் பொருத்தளவிற்கு ஆண், பெண் வேறுபாடு என்பது உடையளவிலானது. வளரவளர் வேறுபாடுகளும் வரையறைகளும் மனதில் வளரும்.
மனிதனுக்கு தான் பார்க்கும் ஒவ்வொன்றையும் பகுத்து, பிரித்து வேறுபார்க்கும் அளவுக்கு மனம் வளர்ந்து விடுகிறது.
விளைவு - ஒருவருக்குள்ளேயே பலவிதமான மனப்பான்மைகள் குடிகொள்ள ஆரம்பித்து விடுகிறது!
18. எளிமையாக இருக்க கடைபிடிக்க வேண்டும்?
கா பிடதி ஆஸ்ரமத்தில் பிரம்மச்சாரி ஒருவர் கேட்டார், "சாமி, எளிமையாய் இருப்பது எப்படி? எளிமையாய் சொல்லுங்கள்''.
" அது மிக எளிதப்பா .... இந்த இரண்டையும் கடைப்பிடித்தால் எளிமையாகி விடுவாய்.
-
- எதையும் மிகைப்படுத்தாதே!
-
- எதையும் குறைப்படுத்தாதே!
நீ கேட்டதை, பார்த்ததை அப்படியே கலப்படம் செய்யாமல் பேசு. பகிர்'' என்றேன்.
சிரத்தையோடு செய்த பிரம்மச்சாரி எளிமை நிறைந்து அருமையானவராக சில நாட்களுக்குள்ளேயே மாறிவிட்டார்.
19. ஆசை அசுரனிடம் சிக்கிக் கொள்ளாதீர்கள்
ஆனந்தி மதபோதகரைச் சந்தித்தார்.
தன் செல்ல நாய்குட்டி பப்பி அகால மரணமடைந்து விட்டதால் மதவிதிப்படி தன் பப்பிக்கு ஈமச்சடங்கு செய்ய வேண்டும் என உருக்கத்தோடு கேட்டுக் கொண்டார்.
''என்ன இது! ஒரு நாய்க்காக நான் இறைவனிடம் பேசுவதா? இது முழு மடத்தனம்" என வெறுப்புக் குரலில் வெடித்தார் மத போதகர்.
ஆனந்தி, "ஐநூறு டாலர் கூட கொடுக்கத் தயாராக இருக்கிறேன். நீங்கள் முடியாதென்று சொல்லி விட்டீர்கள். உங்களுக்குத் தெரிந்த வேறு யாராவது இந்தச் சடங்கு செய்வதாய் இருந்தால் சொல்லுங்கள். என் பப்பி எனக்கு முக்கியம்" என்றார்.
ஐநூறு டாலர் என ஆனந்தி சொன்னதும், "நீங்கள் ஆரம்பத்திலிருந்து தெளிவாகப் பேசவே இல்லை. உங்களுடைய நாயும் நம் மதத்தைச் சேர்ந்தது என்று சொல்லாமல் மறைத்து விட்டீர்கள். நம் மத நாய்களுக்கு நானே எல்லாம் செய்வேனென்பது உங்களுக்குத் தெரியாது போலிருக்கிறது. பக்கத்து ஊரிலிருப்பவர் ஐநூறு டாலருக்கு மேல் கேட்பார். அவர் வேண்டாம்" என தன் விருப்பத்தைத் தெரிவிக்கும் குரலில் சொன்னாராம்!
வெற்றிக்கு ஒரு காரணம். வெறுப்புக்கு ஒரு காரணம்.
இரண்டுமே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம். எதன் மீதும் ஏற்படலாம்.
காரணம், இரண்டுமே ஆசை என்னும் அசுரனுக்குப் பிறந்த குழந்தைகள்.
20. நடுநிலையில் நிலைத்திருங்கள்
அந்த அத்வைத ஞானி, 'புத்தரின் மத்தியில் வாழ்' என்பதை புரிந்துக் கொள்ளச் சொல்லும் உதாரணம்,
"வீணையின் கம்பி இழைகளை இறுக்க முடுக்கினால் அது அறுந்துவிடும். முடுக்காவிட்டால் வீணையை இசைக்க முடியாது. இசையை எழுப்ப, வீணை மத்தியில் முடுக்கப்பட வேண்டும்''.
எல்லாவற்றிலும் நடுநிலையிலிருங்கள். ஆனந்த இசை வெளிப்படும்.
21. மலர்களைப் போல் நீங்களும் ஆனந்தமானவரே
விவேகானந்தரிடம் குருபக்தி பற்றி வில்லங்கமாக ஒருவர் கேட்டார்.
"ஏன் சீடர்கள் இவ்வளவு அடங்கி இருக்கிறார்கள். இதென்ன விதமான அடிமைத்தனம்?"
கொஞ்சமும் தாமதிக்காத விவேகானந்தர், "இல்லாவிட்டால் உன் புலன்களுக்கு அடிமையாயிரு. (Otherwise be a slave for your senses)'' எனச் சொன்னார்.
புலன்களுக்குள் சிக்கிக் கொண்டான் மனிதன். தியானம், ஞானம், பக்தி போன்றவை மனிதனை சிக்கலிலிருந்து விடுவிக்கும் அருமையான வழிமுறைகள்.
22. வாழ கற்றுக் கொள்ளுங்கள்
இரு நண்பர்கள் மூன்றாம் நபரைப் பார்த்து இப்படி பேசிக் கொண்டார்களாம் ...
- பொங்கல் பம்பர் பரிசாக பத்து இலட்சம் பரிசு நண்பர் 1 : விழுந்தது ... இவருக்குத்தானே! ?
- நண்பர் 2 : ஆமாம் ... ஏன் கேட்கிறாய்?
- நண்பர் 1 : ஏன் இப்படி கப்பல் கவுத்த மாதிரி உட்கார்ந்திருக்கிறார். குஷியாக இருக்க வேண்டாமா...
- நண்பர் 2 : அட, உனக்கு விஷயமே தெரியாதா. அவர் வாங்கிய ஒரு கோடி ரூபாய் லாட்டரி சீட்டில் ஒத்த ரூபாய் கூட விழவில்லாயாம்.
● பெரிய பெரிய எதிர்பார்ப்புகளுக்காக, சின்னச் சின்ன சந்தோஷ மலர்களை குடி வரும் வாழ்வென்னும் அழகு குழந்தையைத் கண்டிக்காதீர்கள்.
எதிர்பார்ப்புகளைத் தாண்டி ஆழ அனுபவித்து வாழ்பவர்… சின்னச் சின்ன நிகழ்வுகளிலேயே பேரின்பத்தில் மூழிகிப் போவார். அப்படி வாழத் தெரியாதவருக்கு பெரிய பெரிய நிகழ்வுகள் கூட சிற்றின்பம் வரைதான் கூட்டிச் செல்லும்.
23. ஆனந்த தாகம் பொங்கட்டும்
சிற்றின்பங்களை விளக்க அந்த குடி குரவன் அடிக்கடி சொல்லும் கதை ...
"பாலைவனத்தில் தாகத்தால் தள்ளாடியவனின் கண்ணில் ஒரு கூஜா நிறைய நீர் தென்பட்டது. மடமடவென அதைக் குடித்தவனுக்கு, இன்னும் கொஞ்சம் தாகம் அதிகமானது. காரணம், அது உப்புக் நீர்!"
உங்களின் ஆனந்த தாகம் மிக ஆழமானது. சின்னச் சின்ன சுகங்கள் தாகத்தை இன்னுங்கொஞ்சம் தூண்டவே செய்யும்.
24. 'தெரியாது' என்பதை தெர்விப்பவரா நீங்கள்?
ஜெராஸ்ட்ரிய சீடன், "என் குரு பெரிய ஞானி" என்றான். பண்டிதர், "உன் குருவுக்கு என்ன தெரியும்?" என்றார். றொராஸ்ட்ரிய சீடன், "தனக்குத் தெரியாதவற்றை, தெரியாது' என்று தைரியமாய் சொல்லத் தெரியும்" என்றான்.
● "எனக்கு என்ன தெரியும்!" என்ற ஆச்சரியம் அரும்பிய பின்புதான் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும்.
25. சின்ன வட்டத்திற்குள் சிக்கிக்கொள்ளாதீர்
ஒவியக் கல்லூரியில் தான் பயின்றபோது வரைந்த ஒரு ஒவியத்தை, பல வருடம் கழித்து வீட்டிற்கு வந்திருந்த தன் நண்பரான டாக்டரிடம் காட்டினார் நிட்டி.
தன் நண்பர் ஓவியத்தின் சிறப்புப் பற்றி என்ன சொல்லப் போகிறார் என ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
நண்பர் பதிலேதும் சொல்லாததால், "ஒவியத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று நிட்டி ஆர்வம் பொங்கக் கேட்டதற்கு, "இந்த படத்திலிருக்கும் மனிதருக்குத் தோல் வியாதி இருக்கிறது" என்றார். அந்த பதிலால் நிட்டி நொந்து போனார்.
நண்பரின் பதில் உண்மையானது என்றாலும், அது முழுமையானது அல்ல. "தெரியும்" என்ற எண்ணம் இருக்கும் வரை இதுபோன்ற சிறிய வட்டத்துக்குள் சிக்கிக் கொள்வோம். வளர்ச்சி தடைப்பட்டு விடும். ஆனால் நாம் வளர்ந்தவராகவும், மிகச் சரியாக எல்லாவற்றையும் செய்பவராகவும் நம்ப ஆரம்பிப்போம். "எனக்குத் தெரியாதது, என்ன இருக்கிறது" எனும் சிறுவட்டத்துக்குள் சிக்கிக் கொண்டால்! வாழ்வின் சுவையான பகுதிகளைக் கசக்கி எறியும் ஒருவராக மாறிவிடுவோம் ...
26. உங்களை நீங்களே உழ பண்படுவீர்கள்
ஜேத வனத்தில் புத்தரிடம் கேட்கப்பட்டவைகளில் சில ... "மிகவும் இருள் நிறைந்த இரவு எது?" "அறியாமை?" "மிகவும் கூர்மையான வாள் எது?" "கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள்" 'என்ன தெரியும் நமக்கு?'
என்ற கேள்வியை மந்திரம் போலப் பயன்படுத்தி உங்களை உடுமுது பாருங்கள். பண்படுவீர்கள்.
27. நீஜத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்
பார்ப்பதற்கு இரவு வானத்து நட்சத்திரங்கள் போலத் தெரியும், பல பொத்தல்கள் நிறைந்த அந்த இத்துப்போன குடை வழியே வரும் ஒளிக்கதிர்களைப் பார்த்த சிறுவன் டாம், தாத்தாவிடம் கேட்டான்,
"இந்த குடையை நான் பிடிக்கிறேன். நம் வீட்டு கூரையை சுவர்கள் பிடித்துக் கொண்டிருக்கிறது. சாயங்காலமானதும் எல்லா இடமும் இருட்டாகுமளவுக்கு பெரிய குடையைப் பிடிப்பது யார்?'' எனக் கேட்டதற்கு, "இறைவன்" என பதில் சொல்லித் தப்பித்த தாத்தா அடுத்த கேள்வியில் மாட்டிக் கொண்டார்.
"தாத்தா அவர் என்ன ரொம்ப கஞ்சமா?" என்றான்.
சிறுவனின் கேள்வி புரியாததால் பதில் சொல்லாமல் திகைத்த டாமின் தாத்தா, "ஏன் அப்படிக் கேட்கிறாய்?" என்று கேட்டதற்கு, "தாத்தா! உன்னைப் போலவே இத்துப்போன குடைதான் அவரும் வைத்திருக்கிறார்" என்றான்.
- நிலம் வேறு. டாம் புரிந்து கொண்டது வேறு. அவனுக்கு அவன் பேச்சு நியாயம். இல்லாத இறைவனை, இருப்பதாய் நினைத்து, "அவர்" கஞ்சம் எனச் சிறுவன் தீர்ப்பிட்டது - சிறுபிள்ளைத் தனம்.
மற்றவரிடம் இல்லாத தவறுகளை, இருப்பதா குறை சொல்லி, அதை நியாயம் என வாதிடும் சிறுபிள்ளைத்தனம் எல்லா மனிதரிடமும் இருக்கிறது.
இதை ஏற்றுக்கொண்டால், திருத்திக் கொண்டால், தப்பித்தீர்கள்.
28. நீ ஓட, மனம் ஓயும்
பிரச்சனைகளோ(டு வருபவர்களுக்கு ரமணர் சொல்லும் தீர்வுகளை நியாயமானதென ஒப்புக்கொள்ள முடியாதவர் கேட்டார்,
"பலரின் பிரச்சனைகளுக்கு தீர்வாக திருவண்ணாமலையை நீங்கள் சுற்றச் சொல்வது, ஒரு தீர்வா! இதனால் என்ன பயன்?"
"நீ ஓய்வாயிருந்தால் மனம் ஓடும். ஓடினால் மனம் ஓய்வடையும். விழிப்போடு மலை சுற்றும்போது வேதனைகளின் வேரான மனம் ஒயும். மனம் சரியாக எல்லாம் சரியாகும். என்னவோய் ... புரிந்ததா?" ரமணர்.
நியாயம் கூட அநியாயமானதாக மனிதனுக்குத் தெரியும் இது புரிந்தாலே பெரும் புண்ணியம்!
29. அறிவிற்கு அளவுகோல்
நம் பெங்களூர் பிடதி ஆஸ்ரமத்திற்குக் குதூகலமான குடும்பம் ஒன்று அன்று வந்திருந்தது.
அக்குடும்பத்தின் சுட்டிச் சிறுவன் சிறுதவறொன்றைச் செய்து விட்டான். கொஞ்சம் கோபப்பட்ட பாட்டி, "அறிவிருக்கா?" என்றார். சிறுவனின் தந்தையும், "புத்தி கொஞ்சமாவது இருக்கா?'' என்றார் அச்சிறுவனிடம்.
திட்டுவாங்கிய சிறுவன் அடங்கி ஒடுங்குவதற்குப் பதில், அவர்கள் இருவரையும் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தான், ஏன் அப்படிச் சிரித்தான் எனக் கேட்டதற்கு,
"சாமி, எங்க வீட்டுல சமையலுக்கு ஏதாவது பத்தாம போகும்போதுதான், பக்கத்து வீட்டுக்காரர்களிடம், அது இருக்கா, இது கொஞ்சமாவது இருக்கா என்று என் அம்மா கேட்பதை பார்த்திருக்கிறேன்.
இன்று என்னிடம் 'அறிவு இருக்கா' என்று இவர்கள் கேட்கிறார்கள். பாவம் அவர்களிடம் அறிவு போதுமான அளவு இல்லைபோல் தெரிகிறது!" என சொல்லி மீண்டும் சிரிக்க ஆரம்பித்து விட்டான்!
குதூகலமானவனுக்கு குதூகலம் என்பது வாழ்க்கைத் திடலில் முழுவதும் கொட்டிக்கிடப்பது தெளிவாய்த் தெரியும்.
- அணுகும் வீதத்தை வித்தையாய் மாற்றுங்கள் முல்லா நஸ்ரூதினிடம் ஒருமுறை, "வாழ்க்கையை அணுகுவது எப்படி? எனச் சொல்லுங்கள்" என நண்பர் கேட்டார். நஸ்ரூதின் அழகாய்ச் சொன்னார், இரண்டு விதமாய் அணுகலாம். ஒன்று, வாழ்வே துன்பமயமானது".
முயற்சிப்பதேயில்லை. காரணம், அவன் சந்தோஷமாய் இருப்பதாக அவனுக்கொரு idea இருந்து கொண்டிருப்பதே! இந்த idea உடைந்தாக வேண்டும்.
31. அகங்காரம் மரணித்துப் போகட்டும்
பெண் ஜென் ஞானியான ஷலானாவிடம், தாக்கவாதி ஒருவர்... "மனிதனால் தவிர்க்கவே முடியாதது எது?" எனக் கேட்டதற்கு, "மரணம்" என்றார் ஷலானா.
''மனிதன் நிச்சயம் ஜெயிக்க வேண்டியது எது?' எனக் கேட்டதற்கும்,
"மரணம்" என்று சொன்னார் ஷலானா.
" மனிதன் பல பிரச்சனைகளில் தானே சிக்கிக் கொள்ளக் காரணம் எது" எனக் கேட்டதற்கும்,
"மரணம்" என்றே சொன்னார் விலானா.
உடலின் மரணம். தவிர்க்க முடியாதது
மனதின் மரணம். ஜெயிக்க வேண்டியது
சரிசெய்யப்பட வேண்டியது - உயிரின் மரணம்.
உடல், மனம், உயிர் என்ற மூன்றையும் ஆட்டிப் படைக்கும் அகங்காரம் மட்டும் மரணித்துப் போனால் எல்லாம் சரியாகிவிடும். அகங்காரத்தை அழிக்கும் மருந்து புரிந்து கொள்ளுதல்.
32. காரணத்தை தேடு
எது அகங்காரம் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் ஜென் கதை ...
சந்திரன் சென்று திரும்பிய விண்வெளி வீரர், அங்கிருந்து எடுத்துவந்த கற்களைத் தன் குருவிற்குத் தந்தார்.
"அடமடையா! இதுபோலே நிறைய கற்கள் நம் வீட்டு தோட்டத்திலேயே இருக்கிறதே. இதையெடுக்கவா ராக்கெட்!" எனக் குரு கேட்டபோது, வீரருக்கு எங்கோ கருக்கென வலித்தது. "வலிக்க காரணமாயிருப்பதுதான் அகங்காரம்" என விளக்கினார்.
(B) காரணத்தைத் தேடு. அகங்காரத்தைக் கண்டுகொள்வாய்.
33. எப்படிப் பேசினாலும் உண்மை உண்மையே
ஏரிக்கரைக்குச் சென்ற நான்கு பேரின் வாக்குவாதம் முற்றி சண்டையானது.
முதல் நபர் ...
ஹிந்தி கலந்த தமிழில் சொன்னார், "வாருங்கள்! ஏரிக்குள் இருக்கும் பானியை குடித்து தாகம் தீர்க்கலாம்''.
இரண்டாம் நபர் ...
செந்தமிழில் சொன்னார், ''தாகத்தை தீர்க்க தண்ணீரால் மட்டும்தானே முடியும். அங்கிருக்கும் பானி, தோணியெல்லாம் எப்படி தாகம் தீர்க்கும் ".
மூன்றாம் நபரான ஆங்கிலேயர் ...
ஆங்கிலம் கலந்த தமிழில் சொன்னார், "உள்ளாதீர்கள். 1920ல் இந்த ஏரியைத் தோண்டியது என் தாத்தா வாட்சன் பிரபுதான்.
அவர் 'இந்த ஏரி முழுவதுமிருக்கும் வாட்டர் (Water) ஏழு கிராமத்தின் தாகம் தீர்க்கும்' என்று சொல்லியிருக்கிறார். எனவே வாட்டர் மட்டும்தான் தாகம் தீர்க்கும்" என்றார்.
நான்காம் நபர் ...
பெங்காலி கலந்த தமிழில் சொன்னார், "என்ன மடத்தனம்! மூவருமே பொய் பேசுகிறீர்கள்.
கடந்த பத்து வருடமாக என் அப்பாதான் இந்த ஏரியை காண்ட்ராக்ட் எடுத்திருக்கிறார். அவர் சொன்னார். 'இந்த ஏரியில் இருக்கும் ஜல்தான் நம்மைக் கோடைக்காலத்தில் காக்கிறது. தாகம் தணிக்கிறது என்றார்.
எனவே ஜல்தான் தாகம் தீர்க்கும்" என்றார்.
வாக்குவாதம், "பானிதான் ... தண்ணீர்தான் ... வாட்டர் தான் ... ஜல்தான்…'' என மீண்டும் பேசப் பேச பேச்சு சண்டையானது. யாரும் ஏரிக்குச் செல்லவில்லை.
வாக்குவாதமில்லாமல் ஏரி சென்றிருந்தால், நான்கு பேருக்கும் உண்மை புரிந்திருக்கும். நான்கு பேரும் பேசுவது ஒரே உண்மையைப் பற்றியே என்பது புரிந்திருக்கும்.
வார்த்தைக் கலகங்களைத் தாண்டி, மதம் என்னும் ஏரிக்குள் குதியுங்கள். உண்மை விளங்கும்.
34. எங்கிருக்கிறார் குரு?
கபீரின் குரனகவி வரிகள் ... "கேள் நண்பா! கேள்! என் நேசத்திற்குரிய குரு என் உள்ளே வாழ்கிறார்' - கபீர்
இது கபீருக்கு மட்டுமல்ல உங்களுக்கும் உண்மையானதே!
35. யார் சொல்வார்கள்? மனம் ஒரு குரங்கென்று
அறுபது வயது தாத்தாவுக்கும், ஆறு வயது பேரனுக்கும் நடந்த சுவையான உரையாடல் ...
பேரன், "தாத்தா, மனம் ஒரு குரங்காமே! என் டீச்சர் சொன்னார்கள். மனதை அடக்கிவிட்டால் நல்லா படிக்கலாமாம். மனதை ஜெயிப்பவன் உலகையே ஜெயிப்பானாம். முயன்றால் இது முடியுமாம். மனதைக் கட்டுப்படுத்த எவ்வளவு நாள் ஆகும் தாத்தா?" எனக் கேட்டதற்கு,
கோபப்பட்ட தாத்தா, 'எவ்வளவு நாள் என்றா கேட்டாய்? உன் டீச்சர் உங்களுக்கெல்லாம் தவறான செய்திகளையே கற்றுத் தருகிறார். அவரை நம்பாகு.
நாட்களில்லை .... அறுபது வருடங்களானாலும் ஒருவனால் மனதைக் கட்டுப்படுத்த முடியாது" எனச் சொன்ன விதத்தை வினோதமாக பார்த்தான் ஆறு வயது பேரன்.
● இது விசித்திரமான பிரயாணம். பிரயாண வேகம் அதிகமானால், எண்ணங்களின் வேகம் குறையும்.
36. ஆனந்தம் நிலைக்க ...
தியானம் செய்ய ஆரம்பித்தக் கொஞ்ச நாளிலேயே மிகவும் சந்தோஷமாயிருப்பதாகச் சொன்ன நிட்டியின் வார்த்தைகள்... "தேடித் தேடிப் பார்த்தேன் என்னுள், கவலைப்பட ஒரு காரணங்கூட இல்லை. இதை விடப் பெரிய சந்தோஷம் என்ன இருக்கிறது''. தியானப் பாதையின் வெளிப்பாடுகள் இவை: முதலில், கவலைகள் கலையும். அடுத்து, சந்தோஷம் பொங்கும். கடைசியாக, ஆனந்தம் நிலைக்கும்.
37. ரசவாதம் நிகழ அனுமதியுங்கள்
நவீன காலத்து ஜென் ஞானியிடம், "பரிணாம வளர்ச்சி பற்றிய உங்களின் கருத்து என்ன?'' என நிருபர் ஒருவர் கேட்டதற்கு, உடனடியாக பதிலேதும் சொல்லாமல் சிரித்தவர், அங்கிருந்த பக்தர்களிடம் சொன்னார்,
"ஆனந்தத்தை அழிப்பவன் மிருகம் ஆனந்தமாக இல்லாதவன் மனிதன் ஆனந்தமாக இருப்பவர் ஞானி ஆனந்தத்தை அளிப்பவர் குரு அந்த ஆனந்த நிலை கடவுள்
என்னைப் பொருத்த அளவிற்கு இதுதான் பரிணாம வளர்ச்சி' என்றார்.
இந்தப் பட்டியல்படி அடுத்த நிலைகளுக்கு நீங்களும் செல்ல முடியும். ஆனால், ரஸவாதம் நிகழ நீங்கள் அனுமதிக்க வேண்டுமே! உடலின் ஒவ்வொரு செல்லும் தித்திக்குமளவுக்கு ஆனந்தத்தில் திளைப்பதிருப்பதே ஞானம், தியானம், ஆனந்தம்.
38. உங்களுக்குத் தெரியும்
ஒக்லஹாமோ யுனிவர்சிட்டியில் ஒரு மருத்துவர் என்னிடம் கேட்டார் "நான் ஞானமடைந்து விட்டேனா இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது, உறுதிசெய்வது?''
"நீங்கள் ஞானமடைந்து விட்டால், ஞானமடைந்தேனா இல்லையா என்ற சந்தேகம் இருக்காது. துளியளவு கூட சந்தேகமில்லாத அனுபவம் அது! இந்தச் சந்தேகம் இருக்கும்வரை நீங்கள் ஞானமடையவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்" என்றேன்.
ஞானமடைய உங்களுக்குள் நிகழும் ரசவாதங்கள் ஆழமானவை. தெளிவானவை.
39. நிரூபணமற்றவர் கடவுள்
விவேகானந்தரிடம், "எல்லாவற்றையும் ஆதாரத்தோடு பேசுகிறீர்களே. கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்க உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?" என வம்பிழுக்கும் தொனியில் கேட்டார் ஒருவர்.
கணீர் குரலில் விவேகானந்தரிடமிருந்து பதில் வந்தது, "கடவுள் இருக்கிறார் என்பதை, இதுவரை ஒருவராலும் நிரூபிக்க முடியாததே, கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்!" கேள்வி கேட்டவர், இந்த பதிலால் ஆடிப்போனார்.
சில நிமிடங்கள் தாமதித்துக் கேட்டார்,
"எப்படி? விளக்கமாகச் சொல்லுங்களேன்"
"ஒருவேளை கடவுள் இருக்கிறார் என்பதை அறிவியல் நிரூபித்து விட்டால் அறிவியல் கடவுளை விடப் பெரிய விஷயமாகி விடும். அறிவியலால் நிரூபிக்கப் படுமளவுக்கு விளையாட்டுப் பொருளல்ல கடவுள்.
கடவுள் பெரியவர். பிரம்மாண்டமானவர். கடவுள் இருப்பதை நிரூபிக்க முடியாததே, கடவுள் இருப்பதற்கான நிரூபணம்" என சொல்லி முடித்தார் விவேகானந்தர்.
● ஒரு ஞான குருவால்தான் இதுபோன்ற சிக்கலான கேள்விகளுக்குக் கூட நயமாகவும், எளிமையாகவும், அதே நேரத்தில் நறுக்கென்றும் செரல்ல முடியும். புதிர் கேள்விகளுக்கு புதுப்புது பதிலளிப்பதற்காக மட்டும் ஞான குருமார்கள் பிறப்பெடுக்கவில்லை.. வம்பிழுக்கும் மனிதனைக் கூட அன்பொழுகும் ஆனந்த குணமுடையவனாக மாற்றப் பிறப்பெடுத்தவர்கள் தான் ஞான குருமார்கள்.
40. மனம் திறந்தவன் - சீடன்
பத்தாயிரம் துறவிகளையும் பல லட்சம் பக்தர்களையும் கொண்ட தென் மடாலய குருவைப் பார்க்கச் சென்ற அரசர் கேட்டார். "உங்களிடம் எத்தனை சீடர்கள் இருக்கிறார்கள்?"
ஜென் குரு செரன்னார், ''ஓ, சீடர்களா! அதிகபட்சமாக நான்கைந்து பேர் இருக்கலாம்'' சீடனாவது, குருவின் நேரத்தை மிச்சப்படுத்துவதை விட, உங்களின் நேரத்தைத் தான் அதிகம் சேமிக்கும். சீடனாவது குருவின் நலனுக்காக அல்ல. உங்களுக்காக. அதற்காக மனம் திறவுங்கள்.
41. கேடிச் செல்
மரத்தடியிலிருந்த ஞானியிடம் வரம் கேட்டு வந்த குடும்பஸ்தரிடம், "காட்டுக்குள் வடக்கு நோக்கிப் போ, ஒரு பெரிய குகை காண்பாய். நீ விரும்புவது அங்கேயிருக்கிறது" என்றார்.
அவர் செரன்னதை நம்பிச் சென்றவர் ...
கொட்டிக் கிடந்த வெள்ளிச் சாமான்களை அங்கே அள்ளிக்கொண்டு வந்து நன்றி செரன்னார். ஞானியோ "நாளை இன்னும் கொஞ்சம் தூரம் செல்" என்றார்.
நம்பிச் சென்றவர் பொற்காசுகள் நிறைந்த இன்னொரு குகையைக் கண்டுபிடித்து, அதை அள்ளிக் கொண்டு வந்து மீண்டும் நன்றி சொன்னார்.
"இன்னும் முன்னேறிச் செல்" என்றார் மீண்டும்.
இம்முறை வைரங்கள் நிறைந்த குகையைக் கண்டு வேண்டிய மட்டும் அள்ளிக் கொண்டு வீடு திரும்பும் போது குடும்பஸ்தருக்கு புது யோசனை பிறந்தது ...
"இவ்வளவு பொக்கிஷங்கள் இருக்குமிடம் தெரிந்தும், குரு ஏன் இவற்றைச் சீந்தாமல் மரத்தடியில் நிம்மதியாக இருக்க காரணமானது எது?" என்ற கேள்வி பிறந்தது.
இம்முறை ஞானியிடம் நன்றி சொல்லாமல் அவரின் காலடியில் விழுந்தார். "உங்களிடமிருக்கும், பொக்கிஷங்களை தாண்டிய அந்த ஏதோ ஒன்று எது? அது எனக்கு வேண்டும்" எனச் சொல்லி ஞானியிடம் சரணடைந்தார்.
● துக்கத்தைத் தாண்டி, கவலையில்லாத ஆனந்த வாழ்விற்கு துரிதமாக அழைத்துச் செல்லும் ராக்கெட்தான் சரணாகதி
42. துக்கத்தை துடைத்தெறியுங்கள்
' ஞானமடைவது மிக எளிது' என ஞானிகள் சொன்னால் மனிதர்கள் புரிந்துகொள்ளத் தடுமாறுகிறார்கள். ஏன்?
Dr. நிட்டி இலவச கண்மருத்துவ முகாமில் குருடரிடம் "சிறியதாக ஆபரேஷன் செய்தால் ... உன்னுடைய பல வருட குருடு சரியாகிவிடும். இனி கைத்தடி இல்லாமல் நடக்கலாம்' எனச் சொன்னதும், குருடர்...
"ஆப்ரேஷ்னுக்கு அப்புறம் என்னால் பார்க்க முடியும், என நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால் கைத்தடி இல்லாமல் நடக்க முடியும் எனச் சொல்வதுதான் புரியவேயில்லை" எனச் சொன்னாராம்.
அக்குருடருக்கு கைத்துடியானது உடலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. இதேபோல் துக்கம் மற்றும் இயலாமை நிறைந்த மனமானது மனிதனின் ஒரு அங்கமாக இருப்பதாக நம்புவதே தடுமாற்றத்தின் மூலக்காரணம்.
43. எதிரியும் நண்பனாவான் .... நீங்கள் அன்பு செய்தால்
சனாதனர் நூனியிடம்,
குடும்பஸ்தர் ஒருவர் கேட்டார்,
"சாமி, நான் அன்பு செலுத்துவது சரியான விதத்தில்தான் செய்கிறேன், என் அன்பு தவறல்ல என்பதை எப்படி நான் கண்டுபிடிப்பது? உபாயம் சொல்லுங்கள்"
ஞானி, "உன் எதிரியை நேசிக்குமளவுக்கு பக்குவம் பெறும்போது உன் அன்பானது தவறல்ல எனும் பக்குவ நிலையை அடைகிறது.
எப்போது உன் எதிரிகளின் மகிழ்ச்சிக்காக ஒரு நண்பனைப் போல் செயல்பட ஆரம்பிக்கிறாயோ ... அன்று உன் அன்பானது சரியானதாகிறது".
எதிரியை நண்பனாக்கும் வல்லமை சரியான அன்பிற்கு உண்டு. நண்பனையே எதிரியாக்கும் வல்லமை தவறான அன்பிற்கு உண்டு.
உண்மையான அன்பு 'சரி தவறுக்கு' அப்பாற்பட்டது.
அன்பு என்ற பெயரில் மனிதன் நிகழ்த்தும் பாச நாடகம் சரி தவறுக்கு உட்பட்டது.
44. அழப் பிறந்தாயா? ஆளப் பிறந்தாயா?
சீரியல் பார்த்த மனைவியிடம் முகுந்தன் கேட்டார். "சீரியலை விட விறுவிறுப்பானது வாழ்க்கை! வாழப்பிறந்தாயா? அழப்பிறந்தாயா? இப்படி மூழ்கிப்போக அதில் என்ன இருக்கிறது!". அடுத்தநாள் முகுந்தன் செய்தித்தாள் படிக்கையில், "செய்தித்தாளை விடக் கலவரமானது வாழ்க்கை! நான் மனைவியா? செய்தித்தாள் மனைவியா? அதில் மூழ்கிப்போக அப்படி என்னதான் இருக்கோ!" என்றார் மனைவி.
பிடித்தவரிடம் வரும் சச்சரவுகளுக்கு காரணமும் 'இது சரி', 'இது தவறு' எனும் நம் வரையறைகள்தான்.
45. எதற்காகப் போரிடுகிறீர்கள்
ரோகிணி நதி நீருக்காக சாக்கியர்களும், கோலியர்களும் போட்டியிட்டு போருக்கே தயாராகி விட்டனர்.
பரபரப்பின் நடுவே வெகு அமைதியோடு நுழைந்த புத்தர், "ரோகிணி நதி நீர் என்பதால் இந்த நீரை மதிக்கிறீர்களா? அல்லது இந்த நீர் தரும் நன்மைகளுக்காக இந்த நீரை மதிக்கிறீர்களா?" எனக் கேட்டதற்கு,
"வெறும் நீரை யார் மதிப்பார்கள்? அது செய்யம் நன்மைக்காகத்தான் மதிக்கப்படுகிறது. விரும்பப்படுகிறது என்றார்கள்.
"இருதரப்புக்கிடையே போர் உருவாகக் காரணமான இந்த நீர், இந்தச் சூழலில் நன்மை செய்கிறதா, தீமை செய்கிறதா ... இரத்தக் களறியாக்கும் போரைத் தூண்டும் நீருக்காகவா போரிடப் போகிறீர்கள்" எனக் கேட்டுவிட்டு புத்தர் கலைந்து சென்றார். போரும் கலைந்தது. ● நெருங்கியவரிடம் இருக்கும் சில தவறான செய்கைகளுக்காக நீங்கள் சண்டையிடுகிறீர்கள் என்றால் .... யாரை மதிக்கிறீர்கள்? நெருங்கிய வரையா? தவறுகளையா .... யோசியுங்கள். தப்பித்துக் கொள்ளலாம்.
46. அனுமதிய்த்துப் பாருங்கள்
ஒரு வாசகரின் கேள்வி "தினம் செய்யும் சிறிது நேரத் தியானம், கடினமான மனதை எப்படி வலுவிழக்கச் செய்யும்?" பதில் ... "தியானமும், மனமும் - இந்து மாமியார் மருமகள் போன்றவை. இரண்டுக்கும் ஒத்துப் போகாது. யாராவது ஜெயித்தாக வேண்டும். தியானம் உங்களுக்குப் புது வரவு! தினம் அனுமதியுங்கள்! உங்களையும் உங்கள் மனதையும் கைக்குள் கொண்டு வரும் வித்தை தெரியும். தியானத்தை அனுமதித்து பாருங்கள்".
இனிய வாழ்வு கனிய ... 'எளிய தியானத்தை' வலியப் போய், செய்தாலும் நல்லதே.
47. கூண்டுக்குள்ளே குறுகிவிடாதீர்கள்
அமேசான் காட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட அபூர்வ சிம்பன்ஸி குரங்கு ஒன்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தாரால் தொடர்ந்து மூன்றரை வருடங்களாகத் தீவிர ஆராய்ச்சிக்குட்படுத்தப் பட்டது.
ஆராய்ச்சியில் இருபத்தைந்தடி கூண்டுக்குள் அதன் வாழ்க்கையும் நடவடிக்கையும் சுருக்கப்பட்டு விட்டது.
ஆராய்ச்சி முடிந்த பின் அதன் ஜோடி குரங்கும் வரவழைக்கப்பட்டது. இருபத்தைந்துடி, அறுபதடி கூண்டாக மாற்றப்பட்டது.
மாற்றப்பட்ட பின் தான் ஆராய்ச்சியாளர்கள் இன்னொரு ஆச்சரியத்தைக் கண்டுபிடித்தார்கள்.
கூண்டு அறுபதுடி பெருகினாலும், அந்தக் குரங்கு இத்தனை வருடமாகத் தான் வாழ்ந்து பழகிய அந்த இருபத்தைந்துடி இடத்தை மட்டுமே மீதமுள்ள வாழ்நாளெல்லாம் பயன்படுத்தியது.
குரங்கின் நடவடிக்கைகள் இருபத்தைந்தடிக்குள் சுருங்கிப் போனது.
இறுகிப் போனது.
மனித மனம், அது முதலில் கிரகிக்கும் கருத்துக்கள் மற்றும் சம்பவங்களைக் கொண்டு தன்னை உருவாக்கிக் கொள்கிறது. அவற்றிற்குள் உறைந்து இறுகிப் போகிறது. அது நல்லதானாலும், கெட்டதானாலும்! வாழ்க்கையில் ஒரே மாதிரியான சுகதுக்கங்களை மனிதன் தொடர்ந்து அனுபவிக்கக் காரணமானது இந்த மனித எலும்புகள்
48. குவித்தது போதும்
தத்துவப் பேராசிரியருக்கு கோபம்! "ஏற்கனவே ஷூ போட்டிருக்கிறேன். அதுமேலேயே ஷூ போடச் சொன்னால் எப்படி முடியும்?" என வெடித்தவரைப் பார்த்துச் சிரித்த ஜென்ஞானி, "இன்னொருவரின் எண்ணங்களை உங்கள் தலையினுள் நீங்கள் சுமந்து திரிவது சாத்தியமாகும்போது, இன்னொரு ஷூ போடுவதை வினோதமாகப் பார்ப்பது ஏன்?" எனக் கேட்டார்.
- சிறு உதவி செய்வதை விரும்பாதவர்கள் வண்டி வண்டியாய் குப்பையான எண்ணங்களை குவிக்கிறார்கள். வெட்கப்பட வேண்டியதுக்கு வெட்கப்படுவதேயில்லை.
49. தனக்காக உயிர்வாழ்பவன்
ஒரு காதலிக்கு வந்த சுவாரஸ்யமான ஈமெயில் ஒன்று ... என் அன்பே! உயிரே! முச்சே! வரும் வெள்ளி, உனைக் காண வருவேன். அப்போது, கடற்கரை மணலை நாராய்த் திரித்து - அதில் நட்சத்திரங்களையெல்லாம் கொய்து செய்த மாலையோடு, நீலவானத்தை உரித்து உனக்கு அதைச் சேலையாக மடித்து, உன் நெற்றிக்கு பொட்டிட்டு அழகு பார்க்க சூரியனையோ! சந்திரனையோ!
நிச்சயம் பறித்து வருவேன்
உனக்காக உயிர்வாழ்பவன்
பின்குறிப்பு : வெள்ளிக்கிழமை மழை பெய்யும் போல் வானிலை இருந்தால் நான் வரமாட்டேன். நன்றி.
உணர்ச்சி பொங்க வசனம் பேசுவது எளிது. வாழ்வது??? "அதைச் செய்வேன்', "இதைச் செய்வேன்" என சொல்வது எளிது, சரிசெய்வதாகுமா?.
50. காத்தாழ போலாடுது எது?
கிருஷ்ண தேவராயரின் அரண்மனை வெளியே, "மனம் காத்தாடி போலாடுகிறது ... அதற்கு நான் என்ன செய்வேன்" எனத் தப்பிக்கும் பாவனையில் சொன்னவனிடம் தெனர்லி,
"மனம் காத்தாடி போல் ஆடுமளவுக்கு ஏன் விட்டாய்? - பதில் சொல்! எனக் கடவுள் கேட்டால், என்ன பதில் செரல்வாய். சொல்!" எனக் கேட்டார்.
"………" பதில் சொல்ல முடியாமல் அவன் திணறினான்.
● உச்சத்தில் வாழ்பவனின் மனம் உச்சத்தில் இருக்கும். அரைகுறையாக வாழ்பவனின் மனதிற்கு, வேறு வேலையில்லாததால் அதற்கு சிறகுகள் முளைக்கும். பறக்கும். காத்தாடி போல் ஆடும்.
51. துரத்துவதை துறந்து விடுங்கள்
ஆண்ட்ரு கார்னகி மிகப் பெரிய சாதனையாளர். உலகத்தின் பெரிய செல்வந்தர்கள் பட்டியலில் இடம் பெற்றவர். இதற்கு மேல் சாதிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லாத அளவுக்கு இமாலய சாதனை படைத்தவர்.
ஒரு முறை பேட்டியளிக்கையில்,
அவர் சந்தித்த சிந்தனையைத் தூண்டும் கேள்வி,
"ஓய்வேயில்லாமல், சம்பாதித்துக் கொண்டிருப்பதிலிருந்து நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஓய்வெடுத்திருக்கலாம். இளைப்பாறியிருக்கலாம். உங்களைச் சுற்றி எல்லாம் இருந்தும், ஏன் இன்னும் சாதிக்க வி ஓடிக் கொண்டே யிருக்கிறீர்கள் ? ' என கேட்கப்பட்டதற்கு,
கார்னகி சொன்னார், "சரியாகக் கேட்டீர்கள், நீங்கள் சொன்னது போல் ஓய்வெடுத்திருக்கலாம்தான். ஆனால், என்னால் அது முடியவில்லை.
'ஓடுவதை நிறுத்தி ஓய்வெடுப்பது எப்படி' என்பதை நான் மறந்து விட்டேன். இதன் விளைவு - ஓடிக்கொண்டேயிருக்கிறேன்''.
● ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சக்கரமும் ஒவ்வொரு விதமானது. அச்சக்கரத்தை ஒரு முறை மேட்டிலிருந்து கற்றி விட்டால், அச்சக்கரம் அதன் கட்டுப்பாட்டை இழந்து விடும். வேகமாய் ஓடும் சக்கரம் தானாய் நிற்க நினைத்தால் கூட நிற்க முடியாது. யாராவது தடுத்து நிறுத்த வேண்டும்.
52. உண்மையின் வெளிப்பாடு
பத்திரிக்கையொன்றில் வந்த வித்தியாசமான சம்பவக் குறிப்பு ... அவருடைய குடும்பம் பற்றி சொல்லச் சொல்லி மனநல மருத்துவர் கேட்கிறார்.
அவர், "என் மகன் ஒரு செயின் ஸ்மோக்கர், என் மகள் ஒரு ட்ரக் அடிக்ட். என் மனைவி ஒரு பெரிய குடிகாரி" என்றார்.
- மருத்துவர், "உங்கள் குடும்பத்தில் பாஸிட்டிவான ஆள் ஒருவர் கூட இல்லையா? எனக் கேட்டார். அவர், "என்ன அப்படி கேட்டுட்டீங்க! நான் ஒரு எச்.ஐ.வி. பாஸிட்டிவான ஆள் டாக்டா!" என்றாராம் உறுதியான குரலில்.
● அந்த மனநோயாளிக்கு, அவர் பேசுவது நியாயமான பேச்சாகவே தெரிந்தது. காரணம் மனத் தெளிவின்மை. நம் நியாயமான பேச்சுகளிலும் செயல்களிலும் நம் மனத் தெளிவின்மை வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். யார் கண்டுபிடிப்பது?
53. தவறை ஏன் தவறாக புரிந்துகொள்கிறீர்கள்
ஊர் வெளியே தபஸ்வி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு கடுமையான ஒழுக்கவாதி. நீதிநெறிப்படி தவறாமல் வாழ முயற்சிப்பவர்.
ஒரு நாள் இரவு அவரின் குடிசைக்கு வெளியாள் ஒருவன் வந்தான். அவன், "ஐயா இன்று இரவு மட்டும் நான் இங்கு தங்க அனுமதிப்பீர்களா?" எனக் கேட்டான். தபஸ்வி அதற்கு அனுமதி கொடுத்ததோடு, இரவு உணவும் சேர்த்துக் கொடுத்தார்.
அவர் எழும் முன்பே அவன் எழுந்து சொல்லிக் கொள்ளாமல் நழுவி விட்டான். விடிந்ததும் அங்கு காவலர்கள் வந்தார்கள். நேற்றிரவு இங்கு யாராவது வந்தார்களா என்பது பற்றி விலாவாரியாக விசாரித்தார்கள். விசாரணையின் முடிவில், தபஸ்வி, "அவன் யார்? எதற்காக இவ்வளவு விசாரிக்கறீர்கள்" எனக் கேட்டதற்கு, "திருடன்" என்றனர்.
"ஐயோ! திருடனுக்கு உதவியது பாவமாயிற்றே ... " என அந்த நீதிநெறியாளர் புலம்பிக் கொண்டிருக்கும்போது, அவரை விட சப்தமாக இன்னொருவர் புலம்பும் சப்தம் கேட்கவே, தான் புலம்புவதை நிறுத்திவிட்டு "யார் அது?" எனக் கேட்டார்.
"கடவுள்" எனப் பதில் வந்தது.
"கடவுளே! நீங்கள் ஏன் புலம்ப வேண்டும்?" எனக் கேட்டதற்கு, "ஒரு நாள் இரவு நீ அவனைப் பாதுகாத்து உதவியதே தவறென்றால், முப்பது வருடங்களாக அவனை காக்கும் நான்தானே பெரும் தவறு செய்தவன். நான்தானே பெரும்பாவி!?" எனக் கேட்டார்.
● தவறு பற்றிய தவறான அபிப்பிராயம், அந்த தபஸ்வி மனதிலிருந்து அன்றே உடைந்து போனது. உங்கள் மனதிலிருக்கும் தவறு பற்றிய தவறான அபிப்பிராயங்களை கண்டுபிடித்து உடைத்தெறியுங்கள்.
54. பிடித்ததும், பிடிக்காததும்
நிட்டியின் மனைவி கேட்டார், "என்னிடம் பிடித்தது எது?" "நீ செய்யும் தவறுகள்?" "என்னிடம் பிடிக்காதது எது?" "நீ திரும்பத் திரும்ப செய்யும் அதே தவறுகள்"
இனி தவறு செய்யும்போது அது திரும்ப செய்யும் தவறா என காணத் தவறாதீர்கள். வளர்வீர்கள். வாழ்விர்கள்.
55. நாகர்கமா? நரகமா?
கேள்விக்குப் பதிலாய் ஒரு கதை,
விலங்குகள் ஆராய்ச்சியாளன் ஒருவன் நரமாமிசம் உண்ணும் ஒரு கும்பலிடம் சிக்கிக் கொண்டான். பிடிப்பட்ட வெள்ளையனை உயிரோடு வறுத்துக் தின்பதற்காகக் காட்டுக்குள்ளே கூச்சலோடு அந்தக் கும்பல் இழுத்துச் சென்றது.
புது விருந்துக்கு ஆள் கிடைத்த குஷியில் கும்பல் வெள்ளையணை தங்கள் தலைவனிடம் இழுத்துச் சென்றது. தலைவனுக்கு அருகிலேயே தலைமுடி சரியாக வெட்டி, நாகரிக மனிதன் போன்று உடையணிந்த ஒரு காட்டுவாசி உட்கார்ந்திருக்க ... வெள்ளையனுக்குப் புது நம்பிக்கை பிறந்தது.
'ஒருவேளை அவனுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால் தப்பித்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே...
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவன் போல் அந்த மனிதன் ஆங்கிலத்தில் வெள்ளையனிடம் பேசினான்.
வெள்ளையனிடம், "உன் கடைசி ஆசை என்ன? சொல். முடிந்தால் நிறைவேற்றி வைக்கிறேன். இங்கே இருக்கிறவர்களுக்கு பார்மாலிட்டீஸ் எல்லாம் தெரியாது" என்றான்.
வெள்ளையன், "ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறாய், நாகரீக உலகில் வாழ்ந்திருக்கிறாய் இதெல்லாம் உன்னிடம் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவே இல்லையா?" என்று வெகுண்டு கேட்டான்.
அதற்கு அவன் உடலை உலுக்கிக் கொண்டு, "என்ன அப்படி கேட்டு விட்டீர்கள். நான் எவ்வளவு மாறிவிட்டேன் தெரியுமா? இவர்கள் போன்று அநாகரிகமாக நான் நடந்துக் கொள்வதில்லை.
இப்பக் கூட உன்னை வறுத்தப் பின்பு, நான் உன்னை ஸ்பூன், கத்தி, போர்க்கோடுதான் சாப்பிடுவேன்! விரல்களைப் பயன்படுத்தவே மாட்டேன். நான் நிறைய மாறிவிட்டேன்" என்றானாம்.
நாகரீகம் என்ற பெயரால் வெளிவேஷம் வேண்டுமானால் மாறலாம். மனிதன் மாறுவதற்கும் நாகரீகப் பூச்சுக்கும் சம்பந்தமில்லை. இதை உணர்த்தத்தான் இந்தக் கதை.
56. மனிதர்கள் மறக்கக் கூடாதது
புலவர் ஒருவரும் சாக்கிய முனியும் பேசிக்கொண்டது ...
"நீங்கள் மகாத்மாவா" "இல்லை" "நீங்கள் ஞானியா?" ''இல்லை'' "நீங்கள் அவதாரமா?" ''இல்லை'' "பின்னே நீங்கள் யார்? கடவுளா?" "மனிதனாய் வாழும் மனிதன்" மனிதர்கள் மனிதர்களாய் வாழ மறந்ததே, உலக வேதனையின் மூலவேர். பிடுங்கப்பட வேண்டியது இது!.
57. உடல் சொல்வதைக் கேளுங்கள்
காளையால் இழுக்க முடியாத அளவுக்கு அதிகச் சுமையை வைத்து, "இழு!" என ஏவும்போது அது தடுமாறினால் அது தவறு செய்வதாக ஆகுமா?
உடலின் தகுதிக்கும் தேவைக்கும் அதிகமான அளவு உணவை உள்ளே தள்ளிவிட்டு .... "எனக்கு ஜீரணக்கோளாறு!" என உடல் மேல் பழிபோட்டால் என்ன அர்த்தம்! ? யார் பொறுப்பு ... சொல்லுங்கள்.
"YOU ARE FOOD" என ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். YOUR EATING HABIT TELLS 'WHO YOU ARE' எனச் சொல்கிறது தாவோ தத்துவம்.
"உணவுக்கும் மனித குணத்துக்கும் நேரடித் தொடர்புண்டு. நாவைக் கட்டுப்படுத்தியவன், நவ குணத்தையும் கட்டுப் படுத்தியவன்' எனச் சொல்கிறது வேதாந்தம்.
● உண்ணும்போது சாந்தமாய், நிதானமாய் உண்ண முடிகிறதா ... "'போதும்'' என்ற உணர்வு வந்ததும், காரை பிரேக் போட்டு நிறுத்துவது போல உண்ணுவதை நிறுத்த முடிகிறதா ... . நாக்கிற்கு மட்டும் மதிப்பளிக்காமல் "என் உடலுக்கு இந்த உணவு, இவ்வளவு உணவு பொருந்துமா" என உடலை மதித்து உணவருந்துகிறீர்களா ...
உடல் கோயில். உணவு பிரசாதம். நீங்கள்தான் அர்ச்சகர். உங்களின் இரைப்பை என்னும் கற்பகிரகத்திற்குச் செல்லும் பிரசாதங்கள், பிரசாதங்கள்தானா ... ஒரு நாளின் மூன்று வேளையும் பூஜை புனிதமாக நடைபெறுகிறதா ....
கோயிலுக்குள் அராஜகமோ, துஷ்பிரயோகமோ கூடாது. கோயிலின் புனிதம் காக்கப்பட்டால், அங்கு தெய்வ சக்தி விழித்துக் கொள்ளும். எல்லாம் சுபமாகும்.
58. எதுவும் தியானமாகும் ...
வாசகர் ஒருவர் கேட்டிருந்த கேள்வி ... "எது தியானம்?"
பதில் ... "உங்களின் உடல் உங்களோடு மிக ரம்யமாக இருக்கும் நிலையையும், அப்படி இருக்கச் செய்யும் முறையையும் தியானம் எனச் சுட்டிக் காட்டுகிறேன்.
1 உடலை மதித்து, மனதை மதித்து உயிரைத் துதித்து, வாழ்வைத் துதித்து நீங்கள் செய்யும் செயல் எதுவானாலும் அது தியானமே! அது தியானமே!"
59. எதிர்பாராத திருப்பம்
அன்று மிகப்பெரிய பல்கலைக்கழகத்தில் ஐன்ஸ்டீன் E = mC2 பற்றி விளக்கவுரையாற்ற வேண்டும். வேறொரு ஊரிலிருந்து வரவேண்டிய ஐன்ஸ்டீன் நெரத்திற்கு வராததால், சமயோசித புத்தியை பயன்படுத்துவதாக நினைத்துக் கொண்ட ஐன்ஸ்டீனின் கார் டிரைவர், ஐன்ஸ்டீனின் உடையணிந்து மேடையேறி விட்டார்!
அது புதிய ஊர். டிரைவரும் பட்டப்படிப்படிப்பு முடித்தவர். விளக்கவுரையை நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஐன்ஸ்டீன் E = பற்றி விளக்கும்போதெல்லாம் உடனிருந்து கேட்ட டிரைவர்... mc2
ஐன்ஸ்டீன் பேசுவது போலவே, ஒரு பாய்ண்ட் கூட விடாமல் எல்லாவற்றையும் மனப்பாடமாய் பேசி விட்டார்!
ஐன்ஸ்டீன் பேசுவதாய் நம்பிய கூட்டம் பேச்சின் கடைசியில் ஆரவாரத்தோடு டைத்தட்டியது.
அடுத்ததுதான் வம்பாகி விட்டது. ஐன்ஸ்டீனிடம் E = mc2 பற்றி மிக சிக்கலான கேள்வி ஒன்றை பல்கலைக்கழக பேராசிரியா் ஒருவர் கேட்டார்.
படபடப்பானார் டிரைவர். இது புதியது. எதிர்பாராதது. இந்தப் புதிய சூழ்நிலையைச் சந்திக்க எந்த ரெடிமேட் வசனமோ, பகிலோ இல்லாததால் டிரைவர் துடுமாற ஆரம்பிப்பதற்கும், ஐன்ஸ்டீன் அந்த அறைக்குள் நுழைவதற்கும் மிகச் சரியாக இருந்தது.
இதுபோன்ற சாதாரண கேள்விக்களுக் கெல்லாம் நான் பதிலளிப்பதில்லை. இதற்கு என் கார் டிரைவரே மிக அழகாக பதில் சொல்வார்" எனச் சொல்லி ஐன்ஸ்டீனை மேடைக்கு அழைத்து தப்பித்துக் தொண்டார் டிரைவர்!
● ஐனஸ்டீன் வர கால தாமதமாகியிருந்தால் டிரைவரின் கதி என்னவாகியிருக்கும்? டிரைவரின்குட்டு, அவரின் துடுமாறும் உடல்மொழி மலமாக வெளிப்பட்டிருக்கும். ரெடிமேடான வசனங்களோ, புத்திசாலிதனமோ இல்லாத நெருக்கடியான குழ்நிலைகளில் நம் சுயுரூபம் நம்மையும் மீறி நம் உடல்மொழிகள் மூலமாக வெளிப்பட்டு விடுகிறது.
60. உடல் பேசும் பெராமிகவு
தெனாலியின் மனைவி, "நீங்கள் சிலவற்றைத் திருத்திக் கொள்ள வேண்டும். பலரிடம் புத்திசாலியாகப் பேசும் நீங்கள், சிலாிடம் அச் நி போல் நடந்து கொள்கிறீர்கள்" கண்ணைசைவிலேயே 'யாரிடம்?' எனத் தேட்டார்.
"என்னிடமும், என் பிள்ளையிடமும்" என்றார்.
'அட அச்டே!' என முகபாவனையாலை சொன்னார். "எங்களிட்டும், இனி நீங்கள் புத்திசாலியாக நடந்துக்கொள்ள வேண்டும்" எனப் பிதற்றிய மனைவியை பெருமிதத்தோடு பார்க்குரர்.
தெனாலியின் கண்களில் வந்த அன்பும், முகத்தில் வெளிப்பட்ட பரிவும், அவரின் உடல்மொழிகள் சொன்ன கனிவுகளுக்காகவும் இப்படி ஏதாவது பேசி மகிழ்வதும், நெகிழ்வதும் தெனாலியின் மனைவியின் வழக்கம்.
0 நீங்கள் உரையாடும்போது உங்களின் வார்த்தைகள் 7% செய்தியையும், உங்களின் குரலும் உணர்வும் 35% செய்தியையும்; உங்களின் உடல்மொழிகள்தான் மீதமுள்ள 58% செய்தியையும் செரல்கின்றன. என்பது ஆராய்ச்சியாளர்களின் தருக்கு.
61. எப்படி நிறுத்துவது?
புதிய சேன்ட்ரோ கார் ஒன்றை வாங்கியிருந்தார் நிட்டி. அக்கம்பக்கத்தாரைப் பார்த்து ஏதோவொரு மோகத்தில் கார் வாங்கி விட்டார். ஆனால் கார் ஓட்டுவதைப் பற்றி நிட்டிக்கு முழுமையாகத் தெரியாது.
ஏற்றத்தில் நின்றிருந்த காரில் அமர்ந்து ஏதேதோ நிட்டி முயற்சி செய்து கொண்டிருந்தபோது, காரின் பிரேக் ரிலீசாகி, இறக்கம் நோக்கி கார் ஓட... ஏதேச்சையாக கியரிலும் கிளட்சிலும் கால், கை பட, கார் ஸ்டார்ட் ஆகிவிட்டது.
கார் ஓடுவதை குஷியாகக் பார்த்த நிட்டி ஸ்டியரிங்கை பிடித்து ஆட்ட, அவர் திருப்பும் திசையில் கார் திரும்பியது.
காலியாக இருந்த ஹைவேயில் அதே குஷியோடு கார் ஒட்டிக்கொண்டு சென்ற நிட்டிக்கு திடீரென ஒரு சந்தேகம் வந்தது, ஆது ... 'எப்படிக் காரை நிறுத்துவது!!!'
எவ்வளவு யோசித்தும் நிட்டிக்குத் தெரியவில்லை. நிட்டியைப் படபடப்பும் பயமும் பற்றிக் கொண்டன.
அதிகபட்சம் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தது ஸ்டியரிங் மட்டுமே!
அவருக்கு எதிரே தெரிந்த ஒரு புளிய மரம் நோக்கி வண்டியைத் திருப்பினார். பெரிய குலுக்கலோடு வண்டி மோதி நின்றது.
● இக்கதையில் நிட்டி காரை ஓட்டினாரா? இல்லை கார் நிட்டியை ஒட்டியதா? கிளா்ந்தெழுவதும், பொங்கியெழுவதும் முழுக்க முழுக்க உங்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தால் நீங்கள் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லாவிட்டால் கொந்தளிக்கும் உணர்ச்சிகள் அவை வளர், உங்களைக் கருவியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்று அர்த்தம்.
62. எப்படி அண்டு செய்யக்கூடாது
ஞாயிறு வகுப்பில் போதகர் சொன்னார், "அன்பு செய்யுங்கள். வாயில்லாப் பிராணிக்குக் கூட ஊறு செய்யக் கூடாது. நீங்கள் அன்பு செய்த சம்பவங்களைச் சொல்லுங்கள் ... "
ஜான் முறை வந்தபோது வேகமான குரலில் "ஒரு முறை, ஒருவன் நாயை எட்டி உதைத்தான்... நான் அவனை எட்டி உதைத்தேன்" எனத் தன் அன்பை நினைவுகூர்ந்தானாம்.
கிளர்ச்சியாளனின் அன்பில் கூட அடாவடித்தனம் எட்டிப்பார்க்கும். இவன் சாந்தமாக வேண்டும்.
63. சொல் பேச்சை கேட்க எதுவும் சொல்லாதீர்கள் ...
ஆஸ்ரமத்திற்கு வந்திருந்த பெண்மணி வெகு கலக்கத்தேரி பேசினார், "சாமி, என் பையனைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அடிவயிற்றில் கிலி பற்றிக் கொள்கிறது".
"கவலைப்படாதீங்கம்மா ... தைரியமா என்ன பிரச்சினை என்று சொல்லுங்கள்" என்றேன்.
"சாமி அவன் என் சொல்பேச்சு கேட்பதேயில்லை. அடிக்கடி பக்கத்து வீட்டு பெண்களிடம் வம்பு செய்கிறான். பக்கத்து தெருவில் இருக்கும் பையன்களோடு போன வாரம் சண்டை. சின்னப் பிரச்சனைக்குக் கூட சீறுகிறான். அடிதடி வரை சென்றுவிடுகிறான்.
வீட்டில் தங்கமாட்டேன்கிறான்... தெருமுனையில் இருப்பதையே விரும்புகிறான். இப்படியே போனால் அவன் நான் பார்த்து வைக்க போகும் பெண்னைக் கல்யாணம் செய்து கொள்ள மாட்டான். ஏதரவது ஒரு பெண்னை எதிர்காலத்தில் இழுத்துகிட்டு என்னை விட்டு ஒடிப்போய் விடுவானோ எனப் பயமாக இருக்கிறது. இதை நினைக்கும் போதெல்லாம் வயிறே கலங்குகிறது சாமி" என்றார்.
மகனை விட, மகனின் திருமணம் மூலம் தனக்கு கிடைக்கும் சமுதாய அந்தஸ்திற்கு அதிக முக்கியத்துவம் தந்து பேசிய அந்த பெண்மணியிடம், "பயப்படாதீங்கம்மா ... உங்கள் பையனை ஒரு நாள் ஆஸ்ரமத்திற்கு அழைத்து வாருங்கள். உங்கள் பையனோ(டு) தனியா உட்கார்ந்து பேசுகிறேன். உங்கள் பையனின் மனம் சரியானால் எல்லாம் சரியாகிவிடும்" எனச் சொன்னவுடன்,
சாமி, இன்னொரு நாள் எதற்கு! என் பையனை கையோடு அழைத்து வந்திருக்கிறேன். இப்போதே அவனோடு நீங்கள் பேசலாம் எனச் சொல்லி, தன் இடுப்பில் இருந்த நான்கு வயது சிறுவனை இறக்கி விட்டார் அப்பெண்மணி. அங்கு நடப்பது எதுவும் புரியாமல் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தான் சிறுவன்.
● ஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு வகையில் இது போன்ற ஒரு பயத்திற்குள் சிக்கி அந்த பயத்தில்தான் வாழ்கிறான். இது மிகைப்படுத்தல் அல்ல. அந்த பெண்ணுக்கு, அதுதுதான் பயம்.
64. பயப்பும் பொட்டியி பாட்டியாக .....
"பயத்தை தைரியமாய் எதிர்கொள்வதெப்படி விளக்குங்கள்" என பக்தர் ஒருவர் கேட்டார். "இரவில் தனியே வரும்போது நாய் ஒன்று துரத்தினால், எவ்வளவு வேகமாய் ஒடுவீர்கள். அந்தச் குழ்நிலை பயம்! ஆனாலும் தைரியத்தோடு எகிர்கொள்ளவில்லையா? எங்கிருந்தோ உங்களுக்குள் சக்தி பொங்கியது நினும்தானே! ஏன் நாயும், பேயும் மட்டும்தான் நம்முள்ளிருக்கும் சக்தியை பொங்கச் செய்ய வேண்டுமா? அதை நாமே செய்யலாமே. பயக்கை தைரியத்தோடு அணுகுங்கள். பயம் மறையும்" என்றேன்.
● பயத்தை கண்டு பயந்து விடாமல் பயமே பயப்படுமளவுக்கு பயத்தை விழிப்புணர்வோடு அணுக ஆரம்பியுங்கள். பிரச்சனை தீர்ந்தது.
65. திறந்துபார் ..... தித்திக்கும்
பரபரப்பூட்டும் புதியதொரு ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை முதுகலை மாணவன், பல்கலைக்கழகத்தில் வாசித்தான். அரங்கமே அதை ஆர்வமாகக் கேட்டது. உரை முடிந்ததும், கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது.
ஆனால், முன்வரிசையில் இருந்த முனைவர் முகத்தில் மட்டும் ஈ ஆடவில்லை.
முனைவர் முகத்தைக் குழப்பமாய் பார்த்த மாணவன் அருகே சென்று, "கட்டுரையை நன்றாக உருவாக்கியிருக்கிறேனா?" என கேட்டதற்கு, "இது பொய் கட்டுரை. இந்தக் கட்டுரையில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் ஏற்கனவே ஒரு நூலில் வெளிவந்துவிட்டது. என்னை ஏமாற்ற முடியாது" என்றார் முனைவர்.
மாணவன் அதிர்ச்சியில் ஆடிப்போனான். காரணம் அந்த கட்டுரை முழுக்க முழுக்க அவனே உருவாக்கியது. "நாளை அந்தப் புத்தகத்தோடு வருகிறேன்" என முனைவர் சொன்னதின் விளைவு, மாணவனின் அன்றிரவு தூக்கம் கலைந்து போனது.
அடுத்த நாள் காலை வந்த முனைவர், "இதைத் திறந்து பார்" எனச் சொல்லி அந்த நூலை தந்தார்.
திறந்த மாணவன் அதிர்ந்தான். அது ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி. ● மாணவனின் படைப்பாற்றலைக் கூட மட்டந்தட்டிப் பார்த்த முனைவர் போலவே .... எல்லோரையும், எல்லாவற்றையும் மட்டந்தட்டும் குறைகாணும் முட்டாள்தனம் கண்டுபிடிக்கப்பட வேண்டும். கரைக்கட்பட வேண்டும்.
66. நாம் புத்திசாலியா?
பெற்றோர் பிள்ளையிடம் ... "உன்னை விட சிறியவன் டாம். ஆனால், உன்னை விட அதிக மதிப்பெண்களையே டாம் தொடர்ந்து வாங்குவது எப்படி?" எனக் கேட்டதற்கு,
சிறுவன், "டாமின் பெற்றோர் புத்திசாலிகள்" என்றான்.
நாம் நம்புமளவுக்கு நாம் புத்திசாலிகளா? விடை காணுங்கள்.
67. கூடதல் சாகுங்கிணால் ....
ஒரு இளம்பெண்ணை காதலித்த பணக்கார குல்ஜீத், ஒரு பிறவிக் குருடன். தன் காதலியின் குணம், பேச்சு, நடவடிக்கை பற்றி தன்னுடைய நண்பனிடம் சந்தோஷத்தோடு விளக்கினான்.
அடுத்த நாள் தன் நண்பனை காதலிக்கு அறிமுகம் செய்து வைத்தான். சந்திப்பிற்குப் பின் நண்பன் சொன்ன செய்தியால் உடைந்து போனான்.
"குல்ஜீத்! நீ நீ சொல்வது போல் அவள் அழகியல்லை. என்னைப் பொறுத்தளவிற்கு அவள் அவள் உனக்கு எத்த வகையிலும் பொருத்தமானவளல்ல" என நண்பன் சொன்ன நிமிடம், இதுவரை மகாராணி போல் அவன் மனதில் வாழ்ந்த காதலி சுருங்கிப் போனாள். அவன் காதலும் கருங்கிப்போனது!
● 'வரவேற்றல்' என்ற நற்குணமில்லாதவர்களுக்கே அதிர்ச்சிகளை வாழ்க்கை பரிச்ளிக்கிறது.
68. மனப்பாரம் இறங்க ...
மிகுந்த வருத்தத்தோடு ஒருவர், "எல்லாவற்றையும் வரவேற்க, ஏற்றுக்கொள்ள என்னால் முடியவில்லை. என் மனம் கல்லா? என்ன செய்யலாம்?" என என்னிடம் வழி கேட்டார். "கவலையை விடுங்கள். என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, என்பதை முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றேன்.
அடுத்த நாள் காலை, "நன்றி" என்றவர், "இயலாமையை ஏற்றுக்கொண்டபின் மிகப்பெரிய பாரத்தை இறக்கினாற் போல் லேசாயிருக்கிறேன்" எனச் சந்தோஷமாய் சொன்னார்.
● உங்கள் வாழ்க்கையை அது உள்ளபடியே வரவேறுங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள். நிம்மதி வரும். செய்து பாருங்கள்.
69. பொய் தன்னால் வெளிவரும்
விடிந்தால் இரு நாடுகளுக்கும் பெரும் யுத்தம். மன்னரும் மந்திரியும் பக்கத்து நாட்டு அரசனின் உதவி பெறுவது பற்றி பேசும்போது,
மன்னர், "என்ன லஞ்சம் கொடுத்தால் பக்கத்து நாட்டு அரசன் நமக்கு மயங்குவான்" எனக் கேட்டதற்கு,
"மன்னரே! தப்பித்தவறி அந்தத் தவறை மட்டும் செய்து விடாதீர்கள். அவன் ஒரு ஒழுக்கவாதி. லஞ்சம் கொடுத்தால் நமக்கு எதிரானவனாகி விடுவான்" என மந்திரி சொன்னார்.
. ஒரு வாரம் கழித்து அரசவையில், போரில் வெற்றி பெற்றதை கொண்டாடிக் கொண்டிருக்கும் போது, மந்திரி மது மயக்கத்தில் மன்னரிடம் கேட்டார். "மன்னா! அப்படி என்ன செர்க்குபொடி போட்டீர்கள். பக்கத்து நாட்டு மன்னன் நம் காலைச் சுற்றும் பூனையாகி விட்டானே".
"எதிரி நாட்டு அரசன் கொடுக்கச் சொன்னதாகச் செரல்லச் சொல்லி, நம் ஒற்றனிடமே லஞ்சம் கொடுத் தனுப்பினேன்.
அவன் நமக்கு நண்பனாகி விட்டான் எனக் கண்ணடித்து, மது மயக்கத்தில் உளறியதை, பக்கத்து நாட்டு அரசன் கேட்டு விட்டான்.
அப்புறம் என்ன! அடுத்த ஒரு வாரத்திற்குள் நிலைமை தலைகீழாகி விட்டது".
● ஏமாற்றப்பட்டவர்களுக்கு ... அது பாடம். பண்படுவார்கள். ஏமாற்றுபவர்களுக்கு அது படமெடுக்கும் பாம்பு. ஆபத்து! கள்ளம் கொண்ட உள்ளம், அது மற்றவர்களை தீண்டுவது போல் குறைந்தது இரண்டு மடங்கு தீண்டப்படும், துன்பப்படும்.
70. காட்டிக் கொடுத்து கூழுதை
குல்ஜித் ஒரு கருமி. அவரின் கழுதையைக் கடனாய்ப் பெற அவ்வூர்காரர் வந்தார். அவரிடம், "மன்னிக்கவும். கழுதையை ஏற்கனவே ஒருவரிடம் கடன் தந்துவிட்டேன்' என குல்ஜித் சொல்லிக் கொண்டிருக்க ... குல்ஜித்தின் கழுதை கத்தியது! "ஆனால், நான் கழுதை கத்தும் சத்தத்தை கேட்கிறேனே!" என்றார் ஊர்க்காரர்.
குல்ஜித், ''அப்படியென்றால், இப்போதே சொல்லுங்கள். நீங்கள் யாரை நம்பப் போகிறீர்கள்? கழுதையையா! என்னையா!" என்றார். கள்ளம் பேசினால் தப்பிக்கலாம். ஆனால் உள்ளத்திடம் மாட்டிக் 0 கொள்வீர்கள்.
71. உரையாடல் ஒரு உண்ணதக் கலை
கிரகம் பெல்லின் தொலைபேசி முறை அப்போதுதான் புழக்கத்திற்கு வந்து குடுபிடித்துக் கொண்டிருந்தது. புதியது என்பதால் தெரலைபேசிக் கட்டணம் வெகு அதிகமாக இருந்தது.
எப்போதும் படபடப்பாக இருக்கும் அந்த ஜெர்மானிய தூதுவர் ஜப்பான் தூதரகத்திற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "நான் பேசி முடிக்க மூன்று நிமிடங்களுக்கு மேல் ஆகாது. நான் பேசும்போது நீங்கள் குறுக்கே எதுவும் கேட்கக் கூடாது. கவனமாகக் கேட்க வேண்டும். எனக்கு ஏதேனும் பதில் சொல்ல விரும்பினால் அதை இப்போது செரல்லக் கூடாது. தந்தி மூலமாக பதில் சொல்லலாம். புரிந்ததா" என முன்னுரை அளித்துத் தான் சொல்ல வேண்டிய அலுவலகச் செய்திகளை வேகவேகமாகச் சொல்லி முடித்தார்.
மேலும் தொடர்ந்த ஜெர்மானிய தூதுவர், "செஎல்ல வேண்டியலைக் யெல்லாம் சொல்லி விட்டேன். 3 நிமிடம் முடிய இன்னும் 3 0 6) சால்ல
ஜப்பான் தூதரகத்திலிருந்தவர் சொன்ன பதில், ''அமாம் ... எல்லாம் சொன்னிர்கள். மிக வேகத்தோடு படபடப்பாக நீங்கள் சொல்லி முடித்த செய்தியின் ஒரு வார்த்தை கூட என்னால் புரிந்து கொள்ள மடியவில்லை".
ஜெர்மானிய தூதுவர், "இதை ஏன் முன்பே சொல்ல வில்லை?" எனக் கேட்க, ஜப்பான் தூதரகத்திலிருந்தவர், "குறுக்கே பேசக் கூடாதென்று சொன்னது நீங்கள்தானே!" என்று சொன்னவுடன் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.
படபடப்பும், தேவையற்ற பரபரப்பும், சுறுசுறுப்பு அல்ல. சுறுசுறுப்பு என்ற பெயரில் பதட்டத்தைத்தான் மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
பதட்டத்தால் நடுங்கும் விரல்கள், சிக்கலான நூல் கண்டை விடுவிப்பதற்கு பதில் இன்னும் கொஞ்சம் சிக்கலை அதிகப்படுத்தும். அவ்வளவே, அகநடுக்கம் தான் உங்களின் சாதா பிரச்சனைகளை உடல் மன வேதனைகளாக மாற்றுகின்றன.
72. அதந்(நக்கம் ஆக்கர்த்தால் ....
குல்லித்திடம் நிட்டி கேட்டார், "திருமணத்திற்கு முன், பின் அனுபவமென்ன?''
- "முன் : அவனைக் கண்டாலே எனக்கு நடுங்கும்" என என்னைப் பற்றி மற்றவர்கள் குறிப்பிடுவார்கள்".
- "பின் : 'அவளைக் கண்டாலே அவன் நடுங்குதிறான்! என என்னைப் பற்றி மற்றவர்கள் குறிப்பிடுகிறார்கள்'.
- ஆம்! நிஜவாழ்வில் மனிதனின் அகநடுக்கம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. உணர்கிறீர்களா?
73. புரியாத பாலகர்கள்
கண்ணாடிக் கோப்பையில் மட்டுமே ப்ளூட் சலாட் சாப்பிட்டு பழகிய இஸ்ரேலிய சிறுமி தன் குடும்பத்தோடு பாரதத்திற்கு வந்திருந்தாள். பெட்டிக்கடையில் தொங்கிய வாழைத்தாரை முதன்முறையாகப் பார்க்க, அச்சிறுமிக்கு மிக ஆச்சரியமாக இருந்தது.
''கண்ணே! நீ விரும்பிச் சாப்பிடும் ப்ரூட் சலாட் போலவே இதுவும் சுவையாய் இருக்கும்' எனச் சொல்லி ஒரு வாழைப் பழத்தை அச்சிறுமிக்கு தந்தை உரித்துக் கொடுத்தார்.
அதைச் சுவைத்துச் சாப்பிட்டு முடித்த சிறுமி, கடைக்காரரிடம் வாழைப்பழத்தோலை நீட்டினாள்.
கடைக்காரர், "பாப்பா, உனக்கு என்ன வேண்டும்" எனக் கேட்க, சிறுமி, ''எனக்கு இந்த தோலை மீண்டும் நிரப்பித் தாருங்கள்'' என்றாள்!
● கடவுளை காண முடியும்
கடவுளை உணர முடியும்
கடவுளை அனுபவிக்க முடியும்! - நீங்கள் கடவுளான மறுநிமிடமே
74. உணர்ந்தால் உயரலாம்
ஒரு மாமரத்தின் இரு கிளைகள் பேசிக் கொண்டன. வேகமாய் வளரும் மாங்கிளையைப் பார்த்து, மெதுவாய் வளரும் மாங்கிளை கேட்டதாம் ...
"ஏன் நீ மட்டும் இவ்வளவு வேகமாக வளரத் துடிக்கிறாய்?''
"நான் ஒரு மாமரமாக மாற விரும்புகிறேன். அதனால் தான் ... " என்றதாம், வேகமாய் வளரும் மாங்கிளை.
● மாங்கிளை தனி மாமரமாக முடியாது. அது மாமரம் தானென உணர வேண்டும். அதே விதிதான் மனிதன் எனும் கடவுளுக்கும்
75. பித்தனும் புத்தனாவான்
'நான் எப்போது புத்தனாவேன்?'' எனக் கேட்ட சீடனின் கன்னத்தில் பளாரென அறைந்தார் ஜென் குரு!
''புத்தா எப்படி புத்தாவாக முடியும்? உள்ளே தூங்கும் நீ விழிக்கும்போது, பித்தனான நீ புத்தனாவாய்' என ஆசீர்வதித்தார்.
● மனித மனத்தால் கடவுளை கற்பனை செய்ய முடியாது. அப்படி கற்பனை செய்ய முடிந்தால் அது கடவுளாக இருக்க முடியாது. நீங்கள் கடவுளாக, தனி அவதாரம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் கடவுளாக மாற இந்தப் பிறவியே போதுமானது.
76. ஜலதோஹமா? ஜன்னியா?
முகுந்தனுக்கு ஜலதோஷம் மிகுந்திருந்தது. மருத்துவரை பார்க்கச் சென்ற முகுந்தன் தன்னுடைய தொந்தரவுகளை விளக்கி முடித்ததும், பயந்த விழிகளோடு சுற்றும் முற்றும் பார்த்தார்.
அவர் ஊசி போட்டு விடுவாரோ என்ற பயத்தில் டாக்டரின் கைகளையே பார்த்துக் கொண்டிருந்த முகுந்தனின் சிந்தனையைத் தடுத்து மருத்துவர், "மருந்து தரும் முன் நீங்கள் ஒரு காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமே" என்றார்.
முகுந்தன், "என்ன அது? சொல்லுங்கள்".
' குறைந்தது ஒரு பத்து நிமிடமாவது, உங்களின் உச்சந்தலையில் நீர் விழுமாறு டேப்பை திறந்து விட்டு நனையுங்கள். பின் குளிர்காற்று உடலில் படுமாறு ஒரு பத்து நிமிடமாவது நில்லுங்கள். இதை முடித்த உடனே என்னை வந்து பாருங்கள். மருந்து தருகிறேன்'.
"என்ன சொல்லுகிறீர்கள்! அப்படிச் செய்தால் ஜலதோஷம் போய் வீசிங் அல்லவா வந்து விடும்''.
ீஎன்ன செய்வது .... எனக்கு வீசிங்குக்குதான் மருந்து கொடுக்கத் தெரியும்'.
மருத்துவர் அரைகுறையாக இருந்தால் உடல் ஆரோக்கியம் 0 கேள்விக்குறியாகிவிடும். கடவுளைப் பற்றிய உங்களின் கருத்துக்கள் அரைகுறையானதாக இருந்தால் வாழ் வே கேள்விக்குறியாகிவிடும்.
77. யார் பெரியவர்? சேலம் தியான சத்சங்கம் ஒன்றில் ... 'தன்னைப் போல் மனிதனைக் கடவுள் படைத்தாராம் - இதை பற்றிய உங்களின் கருத்து என்ன?'' என ஒருவர் கேட்டார். 'தன் உருவில் கடவுள் மனிதனைப் படைக்கவில்லை. தன் உருவில் மனிதன் தான் கடவுளைப் படைத்திருக்கிறான்' எனப் பதில் சொன்னேன்.
உன்னை உருவாக்கியது நான். என்னை உருவாக்கியது நீ. இருவரில் யார் பெரியவர்? சொல் மானிடா!' எனக் கடவுள் கேட்டால், என்ன பதில் சொல்வீர்கள் ...
78. மாயாவில் மாட்டிக் கொள்ளாதீர்கள்
B-க்காக காத்துக் கொண்டிருந்த இரண்டு நண்பர்களும் குடிபோதையின் உச்சத்திலிருந்தார்கள். இரவு மணி இரண்டு என்பது தெரியாததால், ''ஏன் B இன்னும் வரவில்லை' என விவாதித்த நண்பர்கள், நேரடியாக பஸ் டிப்போவிற்கே சென்று விட்டார்கள்.
''பஸ்டிப்போவிலிருக்கும் B பஸ்ஸை நாமே எடுத்துக் கொண்டு நம் வீட்டிற்கு ஓட்டிச் செல்லலாம்" எனப் பேசிக் கொண்டே B பஸ்ஸைத் தேடினார்கள்.
பஸ் டிப்போவில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் நின்றிருந்தன. ஒவ்வொரு பேருந்திலும் ஏறி இறங்கி ''இது B இல்லை ... இது B இல்லை ... '' எனச் சொல்லி, தட்டுத் துடுமாறி ஒவ்வொரு பல்லாக அராய்ந்தார்கள்.
இரண்டு மணி நேரத் தேடுதலுக்குப் பின், "ச்சே... ஏமாந்து விட்டோம். இங்கு ஒரு B கூட இல்லையே!" என நொந்து கொண்டு வீட்டுக்கு நடந்தே சென்றார்களாம்.
மயங்கியிருந்தவர்களுக்கு எந்த பேருந்தை வேண்டுமானாலும் ஓட்டிச் செல்லலாம் என்பது உதிக்கவேயில்லை. B-ஐ மட்டுமே தீவிரமாய்த் தேடியிருக்கிறார்கள்.
மாயாவும் இதைப் போன்றதே. வாழ்வின் ஏதாவதெரு அம்சத்தை மட்டுமே பிடித்துக்கொண்டு மனிதனைச் சிக்க வைத்து விடும். விளைவு - வாழ்ந்து முடிந்தபின்தான் ஏமாந்து போனதாக ஒவ்வொரு மனிதனும் உணர்வான்.
- நிர்வாண சக்தி நிர்வாண நிலையை விளக்குமாறு புத்தரிடம் ஒரு மாணவன் கேட்டதற்கு, ''சிறுவனாயிருக்கும் போது நீ கட்டிய மணல் வீட்டை,
விளையாட்டிலிருக்கும் உன் ஆர்வம் குறையாதவரைதான், அதை நீ கட்டிக்காப்பாய். உண்மையா?'' என்று கேட்டார்.
'ஆமாம் சாமி'' என்றான் மாணவன்.
"வாழ்வதில் ஆர்வம் உள்ளவரை வீடு, உறவு எல்லாம் ஈர்க்கும். ஆர்வம் குறைந்ததும் ஈர்ப்பு கலையும். பின் எல்லாவற்றிலிருந்தும் விடுபடுவாய். நிர்வாண சக்தியாவாய்' என்றார் புத்தர்.
விளையாடுங்கள். அது, விளையாட்டு என்பதை உணர்ந்து விளையாடுங்கள். இது அடுத்த படி செல்லும் சூத்திரம்.
80. ஊருக்கு உபதேசம் வேண்டாமே ...
ராமகிருஷ்ணர் சொன்ன அழகான கதையொன்று...
அந்த அரசருக்கு பகவத் கீதையை தினம் போதிக்கும் பண்டிதர், கேட்கும் கேள்வி, "அரசே! நான் இன்று சொன்னதையெல்லாம் புரிந்து கொண்டீர்களா?" என்பதே.
இதற்கு எப்போதும் அரசர் சொல்லும் பதில் கேள்வி, "முதலில், நீங்கள் இதையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?'' என்பதே! எவ்வளவோ தயார் செய்தும், எவ்வளவு அழகாக விளக்கியும் அரசர் அதே கேள்வியையே எப்போதும் கேட்பதால் மனதுக்குள் சஞ்சலப்பட்டுக் கொண்டேயிருந்தார் பண்டிதர்.
அன்று காலை கீதை வகுப்பிற்கு பண்டிதருக்கு பதில் அரசரைப் பார்க்க ஒரு ஓலை வந்தது. அதில், ''அரசே! இன்று புரிந்து கொண்டேன். இனி வரமாட்டேன்'' என எழுதியிருந்தது.
பற்றற்று இருப்பது பற்றியும், புலன்களின் சிக்கலிலிருந்து விடுபடுவது பற்றியும் மணிக்கணக்காய் பேசியவருக்கு, தான் பேசும் வார்த்தைகள் தனக்கே இன்னும் அனுபவமாகவில்லை என்பது அன்றுதான் துல்லியமாய்ப் புரிந்தது. ஊருக்கு உபதேசம் செய்வதை நிறுத்தி, அன்றிலிருந்து தான் உருப்படுவதற்குச் செயல்பட ஆரம்பித்தார் அவர்.
பண்டிதர் 'தான் புரிந்துகொள்ளவில்லை' என்பதைப் புரிந்து கொள்வதற்கே அவ்வளவு காலமானது என்றால் .... நம் நிலை! உலகைப் பற்றி நான்கு வார்த்தை பேசத் தெரிந்ததால் உலகம் நமக்கெல்லாம் புரிந்ததாகுமா?
81. சக்தியைப் பெருக்குங்கள்
குல்ஜித்திடம் பல் மருத்துவர், 'உங்களுக்கு ஒரு நல்ல செய்தியையும், ஒரு கெட்ட செய்தியையும் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்" என்றார்.
"சரி. நல்ல சேதியை முதலில் சொல்லுங்கள்" "உங்கள் பற்கள் மிக உறுதியாக இருக்கின்றன" " 'ரொம்ப சந்தோஷம்! கெட்ட செய்தியைச் சொல்லுங்க …. " "உங்களின் இரு தாடை எலும்புகளும் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. அதனால் உங்களுடைய எல்லா பற்களையும் பிடுங்கியாக வேண்டும்!"
திட உடலாலும், பெருத்த மூளையாலும் என்ன பயன்? அவற்றை இயக்கும் சக்தியும், புத்தியும் மோசமாகியிருந்தால் அந்தப் பற்களின் கதிதானே அவற்றிற்கும். சக்தியைப் பெருக்குங்கள்.
82. தியான சக்தி
Dr. முரளி கிருஷ்ணா ஒரு முறை கேட்டார், "சுவாமிஜி, தியானம் எந்தெந்த நோய்களைக் குணப்படுத்தும் எனப் பட்டியலிடலாமா?" என்று என்னிடம் கேட்டபோது ...
"சிரத்தையோடு செய்யும் தியானம், உங்களால் பெயரிட முடிந்த மற்றும் உங்களால் பெயரிட முடியாத எல்லா நோய்களையும் குணப்படுத்தும்" எனச் சொன்னேன்.
எல்லா நோய்க்கும் ஒரேயொரு மூலகாரணம்தான். அது சக்திகுறைவு! தியானத்திற்கும் ஒரேயொரு செயல் மட்டுமே செய்யத் தெரியும். அது சக்தி குறைவை நிறைவாக்குவது. சக்தி சரியாக நோய் சரியாகும்.
83. சுகமா? சுதந்திரமா?
முல்லா நஸ்ருதீன் தன் கால் அளவை விடச் சின்னதா யிருக்கும் ஷூவையே விரும்பி அணிவார். நாள் முழுவதும் அந்த இறுக்கமான ஷூ தரும் வலியோடுதான் எல்லா வேலையும் செய்வார். இரவு வீடு திரும்பும்வரை ஷீவைக் கழட்டவே மாட்டார்.
நஸ்ருதீனின் வினோதமான செயலால் ஆச்சரியமடைந்த எதிர்வீட்டுக்காரர், ஏன் அவர் இப்படிப்பட்ட ஒரு ஷூவை உபயோகிக்கிறார் எனக் கேட்டதற்கு,
"நாள் முழுக்க அந்த ஷூ தொல்லையைத் தரும். தொடர்ந்து இறுக்கமாயிருக்கும். ஷூ சிலநேரம் வலிக்குமளவுக்கு கூட அழுத்தும்" என நஸ்ருதீன் சொன்னார். "என்ன மடத்தனம்! இதற்காகவா அந்த ஷூவை அணிகிறீர்கள்?" என வருத்தத்தோடு எதிர்வீட்டுக்காரர் கேட்டதற்கு,
"ச்சேச்சே.. அதற்காக இல்லை. ஒரு நாள் முழுவதும் ஷூவோடு போராடிவிட்டு, இரவு வீடு வந்தவுடன் அந்த ஷூவை கழட்டும்போது ஒருவித சுகம் உண்டாகும் பாருங்கள்... அந்த சில நிமிட சுதந்திர சுகஉணர்வுக்காக ஒரு நாள் கஷ்டப்படுவது தவறே இல்லை!" என்றார் நஸ்ருதீன்.
● 'மனிதன் பிறந்தது ஏன்' என்பது புரியாததால், சில நிமிட சுகத்தைத் தரும் பேர், பணம், காசுக்காக வாழ்நாள் முழுவதும் உழைப்பதுதான் 'மனித வாழ்வு முறை' என்றாகி விட்டது. அதனால்தான் பேர், பணம், மது மற்றும் எல்லாம் மனிதனுக்கு திருப்தியைத் தருகிறது.
மனிதன் சில நிமிடங்கள் மட்டும் ஆனந்தமாயிருக்கப் பிறந்தவனல்ல. அதற்காக வாழ்க்கையை வீணடிப்பது புத்திசாலித் தனமல்ல.
84. ஏன் ஏமாற்றுகிறோம் ....
ஒரு கண்டிப்பான பேராசிரியருக்கு அன்று பிறந்தநாள் விழா. எல்லா மாணவர்களும் அவரிடம் வந்து வந்து பிறந்துநாள் வாழ்த்துக்கள் சொன்னபோது அவர் நன்றி என்று சொல்லாமல், "Same to you ... Same to you" என்றே சொன்னார். இது வினோதமாகப் பட்டதால் புதிதாய் வந்த பேராசிரியர் கேட்டார். "ஏன் நன்றி சொல்லாமல், இப்படிச் சொல்கிறீர்கள்"
அவர் சொன்னார், "நானும் மாணவனாய் இருந்து வந்தவன் தானே! எனக்கு வாழ்த்துக்கள் சொல்லும்போது. அவர்கள் மனதில் என்னைப் பற்றி என்ன சொல்வார்கள் என்பது கூடவா தெரியாது!" என்றாராம்.
ஏன் பிறந்தேன்? என்ற கேள்விக்கான பதில் அமைவமாகாத வரை, இது போல் ஒருவரையொருவர் ஏமாற்றி வாழும் போலி வாழ்வு தொடரும். தவிர்க்க முடியாதது.
85. வேண்டாம்பா இந்த வம்பு
சியாட்டெல் தியானக் கருத்தரங்கில், ஒரு அமெரிக்கத் தம்பதியினர் தங்கள் மகனை என்னிடம் அழைத்து வந்தார்கள்.
தம்பதியினர், 'இவன் எங்களின் சொல்பேச்சைக் கேட்பதே யில்லை. அதையும் தாண்டி உறவினர்கள் ஏதாவது அறிவுரை சொன்னால், அவர்களைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்துவிட்டு, எங்களிடம் கண்சிமிட்டுகிறான்.
என்ன நினைக்கிறான், என்ன செய்கிறான் இவன் என்பது எங்களுக்குப் புரியவேயில்லை. இதற்கு என்ன தீர்வு" எனக் கேட்டார்கள்.
அந்தச் சிறுவனிடம் தனியாகக் கேட்டபோது, அவன் சொன்ன பதில் ஆச்சரியத்தைத் தந்தது. "ஏன் சொல் பேச்சு கேட்க வேண்டும்… என் தாயும், தந்தையும் நிம்மதியாக ஆனந்தமாக இல்லை. எப்போதாவது உபதேசம் செய்யும் உறவினர்களும் இவர்களைப் போலவே பாடுபடுபவர்கள்தான்.
ஆனந்தமாக வாழத் தெரியாத இவர்கள் சொல்லும் உபதேசங்களைக் கேட்டு நடந்தால், நானும் இவர்களைப் போலவே எதிர்காலத்தில் துக்கப்பட வேண்டியிருக்கும்தானே!
அப்பப்பா! எனக்கு வேண்டாம் இந்த வம்பு. இவர்களை விட நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். அதை கெடுத்துக் கொள்ள வேண்டுமா?" என்றான்.
● நமக்கு தெரிந்த வாழ்வின் ஒரு சிறு பகுதிதான் மேலுள்ளது. அந்த தம்பதியரைப் போலவே, உங்களுக்குத் தெரிந்த வாழ்வின் 'தெரியாத பகுதிகள்' ஏராளம் இருக்கலாம். ஆராய்ச்சி நோக்கோடு கட்டுரையைத் தொடருங்கள்.
86. 'தெரியாது' என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்
- ஐன்ஸ்டீன் விஞ்ஞானத்தின் உச்சி தொட்டபோது சொன்ன வார்த்தைகள் 'இதற்கு மேல் எனக்குத் தெரியாது... '
- அடுத்து சொன்னார், "இங்கு விஞ்ஞானம் முடிவடைந்து, மெய்ஞானம் ஆரம்பமாகிறது ... '
- மேலும் சொன்னார், "'மெய்ஞானம் சேர்க்கப்படாத விஞ்ஞானம் is lame ... "
- 'தெரியாது' என்ற இலக்கை அடையத்தான் 'தெரிந்து கொண்டே இருக்கிறீர்கள்'.
87. வேதனையை தாண்டி வாருங்கள் ...
தேவனஹல்லி ASPல் கிடைத்த ஓய்வு நேரத்தில் சில வாழ்வியல் ஆலோசனைக்காக என்னைச் சந்தித்தார்கள்.
மேனேஜராகப் பணிபுரியும் அந்த நபர், வங்கியில் ''திருமணமாகிப் பத்து வருடமாகிறது. இன்னும் எனக்குக் குழந்தையில்லை. என்னுடைய கவலையெல்லாம் எனக் கொரு குழந்தையில்லையே என்பது தான்...'' என ஆரம்பித்து தன்னுடைய மற்ற மனப் பிரச்சினைகளைப் பகிர்ந்து தெளிந்து விடைபெற்றார்.
சிறிது நேரத்திற்குப் பின் அதே வங்கியில் கிளார்க்காக பணிபுரிபவர் வந்தார். "திருமணமாகிப் பத்து வருடம் முடிந்து விட்டது. பத்து வருடத்திற்குள் ஆறு குழந்தைகள். ஒன்று கூட சொல்பேச்சு கேட்பதில்லை ... '' என ஆரம்பித்தார்.
இருந்தாலும் வேதனை. இல்லாவிட்டாலும் வேதனை. எல்லோரும், எல்லா வாழ்க்கைக் கட்டத்திலும் சந்திக்கும் பிரச்சினை இது. கொஞ்சம் கவனத்தோடு வாழ்வை அலசிப் பாருங்கள். இது உண்மை என்பது புரிய வரும்.
சாதித்தாலும், சாதிக்காவிட்டாலும் வேதனை தொடர்கிறது. முதலில் தாண்டப்பட வேண்டியது வேதனை. இதையடுத்து தான் சாதனை பற்றியே யோசிக்க வேண்டும்.
88. தவற விட்டு விடாதீர்கள் ....
''ஜெயிக்க வழி சொல்ல ஞானி தேவையில்லை' என்று சொன்ன குருவிடம் நிரூபர், "அப்புறம் எதற்கு ஞானிகள்?" எனக் கேட்டார்.
'ஜெயிக்கும் முன்னும், ஜெயிக்கும்போதும், ஜெயித்த பின்னும் திருப்தியோடு ஆனந்தத்தோடிருப்பது எப்படி?'' என வழி சொல்ல ஞானிகள் அவசியம் என்றார்.
ஞானிகளும் குமார்கள் உங்களுக்காகவே பிறப்பு எடுத்தவர்கள். தவறவிடாதீர்கள்.
89. கல்லறை விளக்கம் ....
ஒரு முறை பக்தர் ஒருவர், ''சாமி, இந்தக் கல்லறை களிலெல்லாம் பிறப்பு, இறப்பு என்பதை மட்டும் எழுதி வைக்கிறார்களே ஏன்?" என்று என்னிடம் கேட்டபோது ...
"பிறப்பிற்கும், இறப்பிற்கும் நடுவில் குறிப்பிடும் அளவுக்கு மனிதன் எதையும் சாதிப்பதில்லை. அதனால்தான் பிறப்பு இறப்பு தேதியை மட்டும் எழுதி வைக்கிறார்கள்'' என்றேன்.
● சாதனை எதற்கு? வாழ்வின் சோதனைகளிலிருந்து மீளவா, இல்லை பேர் படைக்கவா, இல்லை வாழ்வைக் கழிக்கவா!
90. இன்ப சாதனை செய்யுங்கள்
ப்ரசன்ஜித் புத்தருடைய தந்தையின் நண்பர். அவர் புத்தரை சந்தித்த போது ... புத்தரிடம் "நாடோடி பிச்சைக்காரன்போல் வாழும் வாழ்வை விட்டு அரண்மனைக்குச் செல்" என்று வற்புறுத்தினார்.
புத்தர், "உண்மையைச் சொல்லுங்கள். அந்த அரச வாழ்க்கை ஒரேயொரு நாளாவது உங்களுக்கு ஆனந்தத்தைத் தந்ததா?''எனக் கேட்டவுடனே... ப்ரசன்ஜீத் தலைகுனிந்தார். சில நிமிடங்களுக்குப் பேசவேயில்லை.
்துன்பப்படுகிறோம்' எனத் தெரிந்தும் துன்பப்படுவது, அதைப் பூசிமெழுகுவது… என்ற இரண்டும்தான், மீண்டும் மீண்டும் மீண்டும் உங்களை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. துன்பத்தை துடைத்தெறிந்து இன்ப சாதனை செய்யுங்கள்.
Part 2: Small Stories of THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM_Tamil_part_2.md
91. எது அவமானம்?
பிரான்ஸில் குழந்தைகளின் படிப்புச் செலவைக் கூட அரசாங்கமே செய்கிறது. அங்கே சோம்பேறியாய் வாழும் குல்ஜித்திடம் அவர் மனைவி சொன்னார், "'எனக்கு அவமானமாக இருக்கிறது''.
உடனே "எனக்கும்தான்" என்றார். "நான் எதைப்ப பற்றி சொல்கிறேனென்பதே தெரியாமல், எனக்கும்தான் என்று எப்படிச் சொல்கிறீர்கள்'' என மனைவி கேட்டதும், பதில் சொல்ல முடியாமல் திருதிருவென விழித்த குல்ஜித், ''சரி சரி… சொல்ல வந்ததை முதலில் சொல்" என்றார் அழுத்தமான குரலில்.
''குழந்தைகளை அரசாங்கம் வளர்க்கிறது. வேலைக்கு போகாத உங்களுக்கு கருணை பென்ஷனை உங்களின் கம்பெனி தருகிறது. வீட்டுச் செலவை என் தந்தை பார்த்துக் கொள்கிறார். உடைகளை உங்களின் அண்ணன் வருடா வருடம் வாங்கித் தருகிறார். கார் செலவை என் அண்ணன் பார்த்துக் கொள்கிறான்.... உங்களுக்கு இதில் ஏதும் அவமானமாகத் தோன்றவில்லையா?'' என மனைவி கேட்டதற்கு,
குல்ஜித், ''ஆமாம்! எனக்கு கூட அவமானமாகத்தான் இருக்கிறது. இவ்வளவு பேர் இவ்வளவு செய்தும் உன் தம்பி மட்டும் நமக்கு ஒத்த காசுகூட செலவு செய்வதேயில்லை. இது பெருத்த அவமானம்தான்!" என்றாராம்.
ஏற்றுக் கொள்வது என்னுடைய கருணை! எனும் நோக்கில்தான் ஒவ்வொருவரின் ஆழ்மனமும் இயங்குகிறது. கடமை, கருணை வலைகளில் சிக்கிக் கொள்வது போன்ற மடமை வேறெதுவுமில்லை. கடமை செய்ய, மடமை தண்டிக்கப்பட வேண்டும்.
92. யார் ஆண்மீகவாதி?
வங்காளத்தில் மதபோதகர் ஒருவருக்கு முப்பது வருடங்களாக சேவையைத் தன் கடமையெனக் கருதிச் செய்த அப்பெண்மணிக்கு ''இவர் உண்மையான ஆன்மீகவாதிதானா?'' என்ற சந்தேகம் திடீரெனத் தோன்றியது.
உடனே அவரைச் சோதிக்க ஒரு விலைமாதுவிடம் ஒப்பந்தம் செய்தார். ஒப்பந்தப்படி அன்றிரவு அந்த மதப் போதகரை விலைமாது தொந்தரவு செய்ய வேண்டும். மனம் தடுமாறச் செய்ய வேண்டும்.
முடிவு செய்ததுபோல் இரவு அந்த இளம்பெண் வந்து சேர்ந்தாள். யாரை சோதிக்கிறாய். மூடப்பெண்ணே... போ வெளியே. நான் நெருப்பு! உடனே இந்த இடத்தைக் காலி செய்" எனக் கொதித்தெழுந்து, உடல் நடுங்க அப்பெண்ணை திட்டி இரவென்றும் பாராமல் வெளியே அனுப்பிவிட்டார்.
விலைமாதுவிடமிருந்து நடந்ததை அறிந்த பெண்மணி மிகக் கோபத்தோடு, 'ஐம்பது வயதானவர் பக்குவமடைந்திருக்க வேண்டாமா? இவ்வளவு நாள் கருணையைப் பற்றி அவர் செய்த போதனைகளை அவர் கொஞ்சமாவது கடைப்பிடித்திருக்க வேண்டாமா?
உன் தவறைத் துடுப்பதாக நினைத்து, அவர் சுயக்கட்டுப்பாடில்லாமல் கோபப்படும் சராசரி மனிதனைப் போல் நடந்து கொண்டது எவ்வளவு பெரிய தவறு.
கருணை என்ற அடிப்படை ஆன்மீகக் குணம் கூட இல்லாதவருக்காகவா இவ்வளவு நாள் கடமை செய்தேன். இப்படிப்பட்டவர் இருந்தாலென்ன, இறந்தாலென்ன" என சொல்லி சலித்துக் கொண்டு அன்றிரவோடு அந்த இடத்தைக் காலி செய்து சென்று விட்டார் அப்பெண்மணி.
● வெறும் கடமை போலி. கருணையில்லாத கடமை ஏதாவதொன்றாகு ஆழ்மனக் குறிக்கோளை மையமாக வைத்தே செயல்படும். அது இன்றோ நாளையோ சலிப்பைத் தரும்.
93. உங்களுக்கு நீங்களே நீதிபதியாய் இருங்கள் ...
"யார் ஏமாளி?'' என்ற தலைப்பில் தியானச்சொற்பொழிவாற்றிய ஆசிரியர் மீண்டும் சொன்னார் ...
"நீங்கள் பிறந்தது உங்களுக்காக. நீங்கள் வளர்ந்தது உங்களுக்காக. ஆனால் வாழ்ந்தது மட்டும் யாருக்காகவோ, எதற்காகவோ என்றால் என்ன அர்த்தம்! யார் ஏமாளி? நீதி வேண்டாமா... "
● சமூகம், மனம், நீதிநெறி இவற்றில் சிக்கிய மனிதனின் நிம்மதி மும்முனைகளிலிருந்தும் தாக்கப்படும். அவனின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும்.
94. நன்றியுணர்வோடு இருங்கள் ...
நண்பர்களோடு பிக்னிக் செல்ல நூறு டாலர் தர வேண்டுமென வெகு உருக்கத்தோடு ஜானி வேண்டிக் கொண்டான். மேலும், தன்னுடைய முகவரியைச் சப்தமாகக் கடவுளிடம் சொல்லி வீட்டுக்குப் பணம் அனுப்பும்படி உரிமையோடு சொன்னான்.
'இன்னும் ஏன் அனுப்பவில்லை?' என மறுநாள் ஆலயம் வந்தவன், கடவுளிடம் கோபித்துக் கொண்டான்.
ஜானியின் செயலை ரசித்த மதபோதகர் தன் பணத்திலிருந்து ஐம்பது டாலரை ஜானி வீட்டுக்கு "இப்படிக்கு - கடவுள்" என எழுதி மணியார்டர் செய்தார்.
அடுத்த நாள் மாலை, ஆலயத்திற்கு வந்த ஜானி கடுகடுப்போடு கடவுளிடம் சொன்னான், ''அடுத்த முறை பணம் அனுப்பும்போது மணியார்டர் மூலமாக அனுப்ப வேண்டாம். அந்த போஸ்ட் ஆபீஸில் ஐம்பது டாலரை லஞ்சமாக எடுத்துக் கொண்டு, ஐம்பது டாலர் மட்டுமே எனக்கு அனுப்பினார்கள்".
கிடைத்தவைகளுக்கு மனிதன் மதிப்பளிப்பதில்லை. அதோடு நில்லாமல், கொடுக்கப்பட்டதில் குறை சொல்லிக் கொடுத்தவரையே கொட்டுவதும், "இன்னும் கொடு" எனச் சொல்லி பெற்றுக் கொண்டதை அவமதிப்பதும் நன்றியுணர்வற்றவர்களின் குணாதிசயங்கள்.
95. இது சாத்தியமே!
சீன பல்கலைக்கழகமொன்றில் 'எது மாபெருஞ்செல்வம்?' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு வந்திருந்த தாவோ சொற்பொழிவாளரைத் தீர்பளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்ட போது, "தன்னிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியடையும் பக்குவத்தை விட பெரிய செல்வம் இவ்வுலகில் இல்லை. இப்படிப்பட்டவர், செல்வச்சீமானை விட பல மடங்கு திருப்தியோடிருப்பார்" என்றார். நன்றியுணர்வு மிக்கவனுக்கே இது சாத்தியம். நன்றியுணர்வு மிக்கவராக மாறுங்கள்..
96. காதில் சொன்ன கிசுகிசா
தாய் மகனிடம், "பிளம் கேக்கை திருடிச் சாப்பிட்டாயா?" என வெகு கோபத்தோடு கேட்டார்.
மகன் "ஆமாம். சாப்பிட்டேன்" என்றான் எந்த தடுமாற்றமும் இல்லாமல்,
"நீ அந்த கேக்கைத் திருடும்போது கூட, கடவுள் அங்கேதான் இருந்தார் என்ற விஷயம் உனக்குத் தெரியுமா?" எனக் கேட்டு, தன் மகன் குற்றம் செய்திருப்பதைச் சுட்டிக் காட்ட முயற்சித்தார்.
"ம்ம் .... தெரியும்" என்றான் மகன் வெகு இயல்பாக. தாய்க்கு மகனின் பதில்கள் மேலும் மேலும் எரிச்சலைத் தந்தது ...
"நீ என்ன செய்தாலும், உன்னைக் கடவுள் கவனிக்கிறார் என்பது தெரியுமா?''
"ம் ... ம் ... தெரியும்மா"
"நீ திருடும்போது உன் செயலைப் பார்த்து அவர் என்ன சொல்லிக் கொண்டிருந்தார் என்று உனக்குத் தெரியுமா" எனக் கேட்டதற்கு,
மகன் ''கிசுகிசுவென மெல்ல கடவுள் சொன்னார் ... சமையலறையில் நம் இருவர் மட்டும்தான் இருக்கிறோம். அதனால், பயப்படாதே. எனக்கும் சேர்த்து இரண்டு பிளம் கேக்காக எடுத்துக் கொள் என்றார்!" எனச் சொன்னான்.
பொய் சொன்னதால் வாய் அடைத்து நின்றார். எது மெய்? எது பொய்? என இங்கு தீர்ப்பிட முடியுமா ...
● யாரையும் எதையும் எப்போதும் தீர்ப்பிட முடியாது என்பது உண்மை - 'தீர்ப்பிடக் கூடாது' என்பது அறிவுரை. - 'தீர்ப்பிடாமல் இரு' என்பது தியானம்.
97. வியாய்ப்பா வொய்புலர்கள்
உலகின் எல்லா தீர்ப்புகளுக்கும் புத்தரின் வைரம் பாய்ந்த விளக்கம்: இ கொள்கைகளும் நிஐத்தைப் பற்றிய பொய்யான விரிவுரைகள்''.
98. அந்தரத்தில் தொங்கினாலும் ஆணந்தமாய் இருக்கலாம்
அந்த மனிதன் புலியிடமிருந்து தப்பிக்க மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தான். ஓடி ஓடி மலையின் விளிம்புக்கே வந்து விட்டவன்... பதட்டத்தில் துடுமாறி விழுந்தான்!
மலையிலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தவன் கையில் சிவப்புப் பழங்கள் நிறைந்த பெரிய புதர் அகப்பட்டது. அதைப் பற்றிய அந்த மனிதன் அந்தரத்தில் தெரங்கிக் கொண்டிருந்தரன்.
மேலே புலி, கீழே பள்ளதாக்கு! இதையெல்லாம் தாண்டி, பிடித்திருக்கும் புதரோ வலுவிழுந்து கொண்டிருந்தது.
அந்த ஊசலாடும் கணத்தில், அந்த மனிதனின் கண்களில் புதரில் பழுத்துத் தொங்கிய சிவப்புப் பழங்கள் தென்பட்டது. ஒரு கையால் சிவப்புப் பழுத்தை பறித்து வாயில் போட்டுக் கொண்டார். சுவைக்க ஆரம்பித்தார். 'என்ன ருசி! என்ன இனிமை!' அதுவரை அவரின் வாழ்வில் ஒரு சிவப்புப் பழம் அவ்வளவு இனிமையாக இருந்ததில்லை.
"ஐயோ கீழே விழுந்தால் என்னாவோம்". என்ற கற்பனைகள் அந்த மனிதனிடம் அந்த நிமிடத்தில் இல்லை. அதனால்தான் பயத்திலேயே சாக வேண்டிய குழலில் கூட ஒரு பழத்தின் இனிமையை இனிமையாக ருசிக்க முடிந்தது.
உங்களின் பயம், எரிச்சல், துக்கம் எல்லாமே யாரோ அல்லது ஏதோ ஒன்றைச் சுற்றி உருவான கற்பனைகளால் உருவாகுபவைதான்.
நடந்த அல்லது நடக்கப் போகிற ஒரு காரியத்தை நாம் கற்பனை செய்யும் கோணத்தைப் பொருத்து நிம்மதியும், நிம்மதியின்மையும் நிர்ணயமாகிறது.
99. கலையாத கனவுகள்
டி.வி. நிகழ்ச்சியொன்றில் முகுந்த் மனைவியிடம், "உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்" எனக் கேட்டதற்கு, "என் இரண்டு மகன்களும் நல்ல வேலையிலிருக்கிறார்கள்" எனச் சொன்னார். நிரூபர், "மகன்களின் வயது என்ன?" 'டாக்டருக்கு வயது ஆறும், இன்ஜினியருக்கு வயது மூன்றும் ஆகிறது' எனச் சொன்னார் கலையாத கற்பனைகளோடு! கற்பனை வலைக்குள் சிக்கிக்கொண்ட மின்மினிப் பூச்சிதான் மனம். தப்புவிக்கப்பட வேண்டும்.
100. மோசத்தை - மோட்சமாக்க
தியான சிகிச்சையின்போது, "நானொரு பாவி. முரடன். ஒரு காலத்தில் திருடன்! நானெல்லாம் புனிதமான தியானத்தை செய்யலாமா?'' என ஒரு நபர் என்னிடம் கேட்டார்.
அவரிடம், "நீங்கள் கேட்பது…. 'ஒரு மருத்துவரிடம் சென்ற நோயாளி, என் உடல் மோசமாயிருக்கிறது. உங்களின் புனிதமான மருந்துகளை நானெல்லாம் எடுத்துக் கொள்ளலாமா?' எனக் கேட்பது போலுள்ளது" என்றேன். அந்த நபரின் கண்களில் சந்தோஷம் பொங்கியது!
101. பகிர்தலும் பாடமாகும்
இளம் எழுத்தாளராக வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில், தனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தை அந்த எழுத்தாளர் பகிர்ந்து கொண்டார்.
"சாமி, அது நான் எழுதிய முதல் புத்தகம். அந்தப் புத்ததம் பற்றி மற்றவரின் விமர்சனங்களைக் கேட்பேன். என் பக்கத்து வீட்டுக்காரரிடம் ஏதோ பேச்சுவாக்கில் இப்படிச் செரன்னேன்...
கதை எழுதுவதற்குப் பெரிய புத்திசாலித்தனுமெல்லாம் தேவை இல்லை', எனப் பேசியதற்கு அவர் தந்த பதில் -
'ஆமாம் சார்! உங்களுடைய கதைப் புத்ததத்தைப் படித்தவுடன் நானும் அதே முடிவுக்குதான் வந்தேன்' என்றார்.
இந்தப் பதிலால் நான் ஆடிப்போனாலும், அதைப் பாடமாக்கிக் கொண்டேன்" என்றார்.
● பகிர்தல் உங்களின் வாழ்க்கைப் பாடத்தில் புதுப்புது பக்கங்களை திருப்பிக் காட்டவும் வல்லது! பகிர்தல் ஒருவித வளர்ச்சி.
102. பண்படப் பகிர்ந்து கொள்ளுங்கள்
90 வயது முதாட்டியிடம் முதியோர் தினத்தன்று, டி.வி. நிகழ்ச்சியில் பின்வருமாறு கேட்கப்பட்டது.
"இந்த வயதிலும் உங்களை சந்தோஷப்படுத்துவது எது?" என்ற கேள்விக்கு, "என் தொழில்!" எனச் சொன்னார்.
ஆச்சரியமடைந்த நிரூபா், "என்ன தொழில் அது?" என்று கேட்க, "என்னை விட வயதில் மூத்த இரு மூதாட்டிகளைக் கவனித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு உதவும்போது நான் பகிர்ந்துக்கொள்ளும் நிமிடங்கள் மகத்தானவை. மகிழ்ச்சியானவை" என்றார் மூதாட்டி.
பகிர்தல் கியானம். பகிர்தல் பண்பு. 0 பகிர்தல் ஆனந்தம். பகிர்தல் அன்பு.
103. எப்படிப்பட்டவன் இறைவன் ...
"அவன் செய்யும் தவறுகள் கூடப் புனிதமானவை" எனச் சொன்ன ஜென் ஞானியிடம், "யார் அவன்" எனச் சீடன் கேட்டான்.
"இறைவன்" என்றார் குரனி.
எல்லாமே இறைவனின் செயல். அதில் சிலவற்றை மனிதன் 0 தவறு என்கிறான், சிலவற்றைப் புனிதம் என்கிறான். உண்மையில் இறைவன் இரண்டுக்கும் இடைப்பட்டவன்.
104. இந்த வார்த்தைகளுடன் வாழுங்கள்
குং ஃபி ஞானியிடம் நாத்தீகர், "கடவுள் எங்கேயிருக்கிறார், எப்படியிருக்கிறார்?''எனக் கேட்டதற்கு,
"கடவுள்… மலைக்குள் தூங்குகிறார், மலர் மற்றும் தாவரங்களுக்குள் மயங்கிக் கனவு காணுகின்றார், மிருகங்களுக்குள் அசைகிறார், மனிதனுக்குள் விழித்திருக்கிறார்' எனச் சொன்னார் குரனி.
மேலுள்ள வாக்கியங்களை ஆழமாகத் தியானியுங்கள். அது . நிஜமாகட்டும்!
- கிலியிருந்தால் எலியாகவே இருப்பீர்கள் .... புராதண காலத்துக் கதையொன்று...
பூனையைப் பார்த்து பயந்து நடுங்கிக் கொண்டிருந்த எலியைக்
காப்பாற்ற நினைத்த மந்திரவாதி, அதை தன் மந்திர சக்தியால் பூனையாக மாற்றினார்.
பூனையாக மாற்றிய பின் அது நாயைப் பார்த்துப் பயப்பட்டது. எனவே அதை நாயாக மாற்றினார். மறுவுரு எடுத்த நாய், வேட்டைக்காரனைப் பார்த்ததும் பயந்து நடுங்கியது. எனவே அதை ஒரு வேட்டைக்காரனாக மாற்றினார்.
உருமாறிய வேட்டைக்காரன் காட்டுக்குள் வந்தான்.
மந்திரவாதியைப் பார்த்த வேட்டைக்காரனின் மனதைக் கிலிபற்றிக் கொள்ள, 'சரி ஆனது ஆகட்டும்!' என நினைத்து அவனை ஒரு மந்திரவாதியாக மாற்றினார்.
புது உருவிவடுத்திருந்த மந்திரவாதி அருகே ஒரு பெருச்சாளி வந்து நின்றது. கரப்பான் பூச்சியைப் பார்த்ததும் பீதியடைந்து கத்தும் சில பெண்கள் போல, எலியைப் பார்த்த புது மந்திரவாதி கத்தினான்!
"நீ எலியாக இருக்கத்தான் லாயக்கு. எலியாகவே இரு!" என திரும்பவும் எலியாகவே மந்திரவாதி சபித்து விட்டார்.
6 மனகிலிருக்கும் பயம், துக்கம், மனவேதனை போன்றவை நீங்கள் எந்த வேஷமெடுத்தாலும் உங்களை உலுக்கிக் கொண்டேயிருக்கும். நிரந்தரமான நிரந்தரமின்மைகள்.
இவை உங்களிடமிருந்து நிரந்தரமாகத் துரத்தப்படும் வரை என்ன செய்தாலும், எதைச் சாதித்தாலும் அதில் துக்கமானது இழையோடிக் கொண்டேயிருக்கிறது.
106. எதுவும் நடக்கலாம் ...
அமெரிக்காவில் பரபரப்பைத் தூண்டிவிட்ட, ஒரு கன்சியூமா கோர்ட் வழக்கு வினோதமானது.
காரணம் 'வழக்கு தொடுத்தவர்' - திருடன்! 'வமக்கு தொடுக்கப்பட்டது' - திருடப்பட்ட வீட்டின் மேல்! 'வழக்கு' -திருடச் சென்றவர் பயன்படுத்திய வீட்டின் கூரை இடிந்து விழுந்ததால், திருடனுக்கு உடலில் பெருமளவு காயம் ஏற்பட் (நிவிட்டது!
"எனக்கு திருடச் சென்றதற்கான தண்டனையளியுங்கள். அனால், திருடச் சென்ற நான் விபத்துக்குள்ளாகக் காரணமாக இருந்தது ஒழுங்காகக் கட்டப்படாத வீடு, அதனால் நஷ்ட ஈடு தரவேண்டும்'' என்ற திருடனின் வழக்குக்கு, வீட்டின் உரிமையாளர் - பெருமளவு பணத்தைத் தரவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது!
டு நாம் எதிர்பார்க்காத கோணத்தில் வாழ்க்கையை எதிர்கொள்ள வைப்பது - நிரந்தரமின்மை' எனும் நிரந்தரவிதி. எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!
107. நிஜத்தில் நடையோடுங்கள்
வித்தியாசமான ஆசை கொண்டிருந்த அந்த இருபத்தேழு வயது நிறைந்தவர் சென்னையில் நடந்த தியான சத் சங்கம் ஒன்றில் சந்தித்தார். அப்போது ...
"உங்களுக்கு சித்து வேலை கூடத் தெரியுமாமே?' எனக் கேட்டதற்கு, அவர் ஏன் அதுபற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறார் என விசாரித்தேன்.
"சித்து வேலைகள் ஒரு வகையான விளையாட்டு. அதன் குட்குமங்கள் தெரியாததால் மனிதர்களுக்கு அவை ஆச்சரியத்தைத் தருகின்றன. அது ஒன்றும் ஞானவெளிப்பாடல்ல. அது ஒரு சாதாரண வித்தை" என்ற சில அடிப்படை உண்மைகளை விளக்கிய பின்,
அவரிடம், "சரி சொல்லுங்கள். எதற்காக எந்த சித்து வேலையை பயன்படுத்த விரும்புகிறீர்கள்" எனக் கேட்டேன்.
அவரோ, "எனக்குப் பதினெட்டு கைகளையுடைய அந்த காளிமாதேவியை வசியம் செய்யும் கலை அல்லது மந்திரம் செரல்லித் தாருங்கள். காளியிடமிருந்து சில சக்திகளை நான் பெற விரும்புகிறேன்'' என்றார்.
அதற்கு, "பதினெட்டு கைகளையுடைய காளியை வசியம் செய்வது ஒருபுறமிருக்கட்டும். முதலில் உங்களுடைய இரண்டு கை காளியை ( மனைவி ) வசியம் செய்வது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள்" என்றேன்.
● ஏதாவதொரு காரணம் சொல்லி, எதிர்காலத்திலேயே உங்களை மனமானது வாழவைக்கும். எதிரிலிருப்பவர்களையும், இருப்பவை களையும் தொடர்ந்து இழக்கச் செய்து கொண்டேயிருக்கும். இந்த செயல் முடிவுக்கு வரவேண்டிய ஒன்று.
- நிமிடத்தில் ஆத்ம சக்தியைத் தொட .... மலை உச்சியிலிருந்த நிட்டியின் மனைவி பயத்தில் கேட்டார், "ஏங்க! ஒருவேளை இங்கேயிருந்து கீழே விழுந்து விட்டால் …. " அதற்கு விழுந்துவிட்டால், அப்போது உங்களின் இடப்பக்கத்தில் தெரியும் அழகான காட்சிகளை ரசிக்கத் தவறாதீர்கள்'' என்றார்.
● இது வெறும் ஜோக்கல்ல. டெக்னிக். அதிர்ச்சிகளை சந்திக்கும்போது மட்டும் நிகழ்காலத்தில் இருந்துவிட்டீர்களென்றால், அந்த நிமிடத்தில் ஆத்ம சக்தியை நீங்கள் தொட்டு விடுவீர்கள்.
109. கண்டுபிடிக்க முடியாதது ....
மனித எலும்புகள் குவிந்திருந்த இடத்திலிருந்த ஞானி டயோஜீனஸ், அந்தக் குவியலை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த மாவீரன் அலெக்சாண்டருக்கு ஆச்சரியம்.
ஆர்வம் மேலிட அலெக்சாண்டர் கேட்டார், "இந்த குவியலுக்குள், அப்படியென்ன ஆராய்ச்சி, என்ன தேடுகிறீர்கள்?''
குரனி டயோஜீனஸ், "என்னால் கண்டுபிடிக்க முடியாத ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்?" என்றார்.
"அவ்வளவு வினோதமானதா அது?"
''ஆம், இந்தக் குவியலில் உள்ள உன் தந்தையின் எலும்புகளுக்கும், அவரது அடிமையின் எலும்புகளுக்கும் வித்தியாசம் ஏதுமிருக்கிறதா எனத் தேடுகிறேன் ... இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை'' என்றார் குரணி.
110. தியானம் நீகழ
பார்வதிக்கு ரகசியங்களை சிவன் விளக்கும்போது, " ( e p ச் சை கவனிப்பது தூய்மையற்றவனுக்கே மிகக் கடினம்" என்றார். பத்து நிமிடம் கூட அமைதியாக உட்கார்ந்து, மூச்சைக் கவனிக்க முடியாத அளவுக்கு, மனித மனம் மாசடைந்திருக்கிறது.
● மாசு நீக்கப்பட வேண்டும்.
111. சொருக்கிமும் நேரம் போதும்
மேலோட்டமாய் வாழும் அந்த நபர், "என்ன இது! நாற்பது வருடமாகத் தியானம் செய்துவிட்டேன். இன்னும் முக்தி கிடைத்தபாடில்லையே" என நொந்தபடி பேசினார் ஜென் ஞானியிடம். ஞானி, மொதுவாய் சொன்னார், "நாற்பது வருடம் தானே... நாற்பது ஜென்மங்களில்லையே!"
● ஞானமடைய சொடுக்கிடும் நேரத்தை விட குறைவான நேரத்தையே இறைச்க்தி எடுத்துக் கொள்ளும். 99.9°Сல் இருக்கும் நீர் 100°C ல் நீராவியாக மாற எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளுமோ, அவ்வளவு நேரம்தான் திடமான மனம் கரைய எடுத்துக் கொள்ளும்.
112. ஆனந்தமாயிருக்க ஆசையா?
தாந்த்ரீக ஞானியிடம் சீடன், "ஆனந்தமாயிருக்க நான் ஆசைப்படுகிறேன்'' என்றான். குரனி, "உண்மையாகவா?" என்று கேட்க, ்சீடன் "ஆமாம்…. ஆமாம்… " என்றான். "அது மிக எளிது. உன் கோரிக்கையின் இரு கடைசி வார்த்தைகளை நீக்கிவிடு. ஆனந்தமாயிருப்பாய்!" சீடன் "எது .... எது ... " என்று கேட்க,
குரனி, "ஆசைப்படுகிறேன், நான் என்ற இரண்டையும் அழி. எது மிஞ்சுகிறது பார்" என்றார்.
ஞானக்களுத்துக்களை உள்ளே வரவிடுங்கள். அது 9 சண்டையிட்டாவது ஜெயித்து விடும்.
ஆனாத்த ல்பாரண தியான அனுமன (மகாம்
உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் சின்ன சின்னக் கதைகள்.
இப்புத்தகம் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமனையாக அமையும்.
எல்லா பிரச்சனைகளுக்குமான
எளிய தீர்வுகளை
வலிமை மிகு தியானங்கள் மூலம்
உங்களுக்கு அளிப்பதே ஆனந்த ஸ்புரண தியான அனுபவ முகாம்
உங்கள் பிரச்சனைகளுக்கு மூலகாரணமாக உள்ள சின்ன தடைகளை எப்படி தகா்த்தெறிவது? என்பதனை தேர்ந்தெடுக்கப்பட்ட தியான முறைகள் மூலமாக கலபமாக கற்றுத் தரப்படுகிறது.
இதில் ஆரோக்கியம் மற்றும் உயிர்ச்க்தி அதிகளிப்பு மன அழுத்தம் மற்றும் உளைச்சல்களிலிருந்து உடனடி விடுதலை.
ஆனந்தமாய் வாழும் திறன்.
இவற்றை அனுபவமாக உணர உடல், மன, உயிர்சக்தி மூன்றும் நம் உடலுக்குள் ஏழிடங்களில் ஒன்றாய் கலந்திருக்கின்றன. இந்த குட்சமமான இடங்களைத்தான் சக்கரங்கள் அல்லது சக்தி மையங்கள் என்றறிகிறோம்.
"நம்முள் இருக்கும் ஏழு சக்கரங்களை கறுகறுப்பாக இயங்கள் செய்வதே எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு" என்று THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொல்கிறார்கள்.
தியானமீட ஆச்சாரியர்களால் நடத்தப்படும் ASP என்றழைக்கப்படும் 'ஆனந்த ஸ்புரண தியான முகாமில் ஏழு சக்கரங்களுக்கான ஏழு சிறந்த தியானங்கள் அனுபவமாக கற்றுத் தரப்படுகிறது.
உங்களுக்கு ஆனந்த அனுபவங்களை அள்ளித் தரும் தியான முகாம் தான் ASP
அனைவரும் கலந்து பயன் பெற அன்போடு அழைக்கின்றோம்.