1. Open the Door... Let the Breeze in! Part 1
பகிப்பரை
பரமஹும்ஸ்ரின் பரவசச் செய்திகளை மக்களுக்குச் சேர்க்கும் மகேச சேவையில் ஆனந்தமடைகிறோம். நிம்மதி பெறுகிறோம்.
'கதவைத் திற ... காற்று வரட்டும்!' பாகம் - 1 புத்தகத்தின் இரண்டாம் பதிப்பின் 50,000 பிரதிகளும் விற்றுத் தீர்ந்த நிலையில், வாசகர்களின் பேராதரவோடு மூன்றாம் பதிப்பு துவங்கியிருக்கிறது.
'தியானம்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட புத்தகம், புத்தக உலகில் மாபெரும் சாதனை புரிந்திருக்கிறது. புத்தகம் வெளியிடப்பட்ட அன்றே 1,00,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்து, இன்று 2,36,274 பிரதிகளைத் தாண்டி இப்புத்தகம் மக்களிடம் சேர்ந்திருக்கிறது என்ற குறிப்பை இங்கு குறிப்பிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
உங்களுள் பெரும் ஆவலைத் தூண்டிக் கொண்டிருக்கும் 'கதுவைத் திற ... காற்று வரட்டும்!' பாகம் - 2 புத்தகம் ஒரு புத்தகம் அல்ல. இது பரமவறம்ஸரால் வடிக்கப்பட்ட ஞானசிலை.
வாழ்வின் சிகரமான ஆனந்தத்திலிருந்து கீழிறங்கி சாதாரண மனிதனைக் கூட நித்ய ஆனந்தத்திடம் அழைத்துச் செல்ல வந்திருக்கும் தியான உருவம் இப்புத்தகம் என்பதை நாங்கள் உணர்ந்துவிட்டோம். படித்து முடித்தபின் எங்களை நோக்கி ஈசல் போல் பறந்து வரப்போகும் உங்களின் உணர்வு மடல்களுக்காகக் காத்திருக்கிறோம்.
உங்களின் ஆனந்தமே எங்களின் இலக்கு!
இப்படிக்கு நிக்யானந்தத்தில்
நித்யானந்த பதிப்பகம்
மன்றுரை
து மனிதராய் மாறுவீர்கள்.
"எப்படி ?'' என்று இந்த வாக்கியத்தை படித்தவுடனே நீங்கள் கேட்டால் அதற்கான பதில்களின் தொகுப்புதான் இப்புத்தகம்.
இரு அனாதைக் குழந்தை, அது வளர்ந்தபின் தன் தாய் நேரில் வந்தால்கூட அவளை அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு, அக்குழந்தை தனித்தீவாக மாறியிருக்கலாம்.
ஒரு குழந்தை அனாதையாக இன்று இருக்கிறது என்றாலே, அந்தக் குழந்தையை பெற்றவள் இருந்தே தீருவாள்!
''இந்த பூமியில் இப்படி தவியாய் தவிக்கிறேனே ?!''
'' என்ன விதமான வாழ்க்கை இது? ? ? ? ? என்றெல்லாம் நீங்கள் தனியாகத் தவித்துக்கொண்டிருந்தாலே, தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள் ...
உங்களை பூமிக்கு அனுப்பிய இறைசக்தி நிச்சயமாக இருக்கின்றது, எல்லோருக்கும் ஆறுதல் அளிக்கவல்ல இந்த இறைசக்தியோடு எல்லோராலும் தொடர்பு கொள்ள முடியும்.அதன் மூலமாக உங்களின் வாழ்வையே புதுப்பித்துக்கொள்ள முடியும்.
அதற்கு உங்களை தயார் செய்வதே தியானம்.
இவை எல்லாவற்றையும் உங்களை புரிந்து கொள்ள வைப்பதே ஞானம்.
இதுவே, இந்த புத்தகத்தின் சாரம்.
தொட்டதும் இருளை விழுங்கும் வெளிச்சத்தைப் போல படித்ததும் பட்டென அகங்காரத்தை சுட்டெரிக்கும் சக்தி வாய்ந்தது இப்புத்தகம்.
இந்தப் புத்தகத்தை படித்துவிட்டு, 'நடைமுறையில் நன்றாக இருக்கிறதா?'' என்று சோதித்து வாழ்க்கையில் பயன்படுத்துங்கள். நிச்சயம் பிரயோஜனம் உண்டு.
இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு நடைமுறைப்படுத்தி, ''நன்றாகத்தான் இருக்கிறது'' என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்லுங்கள். அப்போதுதான் அது ஆன்மீகம்.
திறந்த உள்ளத்தோடு படிக்க ஆரம்பியுங்கள். உலக வாழ்க்கையின் உற்சாகக் கதவுகள் திறக்க ஆரம்பிக்கும். பக்கங்களைப் புரட்டுங்கள். அவை உங்களைப் புரட்டும்! ஆழமாய் படியுங்கள்... அவை ஆழமாய் உங்களை பிடித்துக்கொள்ளும் !
படித்தவற்றை நடைமுறைபடுத்தினால், இப்புத்தகம் புதுசுகம் தரும். புது அகம் படைக்கும். புதுமனிதனாய் மாற்றும். சோதித்துப் பாருங்கள். புதுப் பிறப்பெடுப்பீர்கள்!
ஆனந்தமாக இருங்கள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
நன்றியுரை
தியாண ஞானக்கருத்துக்கள் பொதுமக்களுக்குச் சென்று சேர உதவியாக இருந்த குமுதம் நிறுவனத்திற்கும். அதை நிறுவிய அமரர் எஸ்.ஏ.பி அண்ணாமலை செட்டியார் அவர்களுக்கும் இந்தப் புத்தகம் அர்ப்பணிக்கப்படுகிறது.
(நினைவில் வாழும்) திரு. எஸ். ஏ.பி. அண்ணாமலை செட்டியார் அவர்களும் திருமதி. கோதை ஆச்சி அவர்களும் ...
'கதவைத் திற காற்று வரட்டும்!' தொடர்ந்து உற்சாகமாக வெளிவரக் காரணமாக இருந்த திருமதி கோதை ஆச்சி அவர்களுக்கும் டாக்டர் எஸ். ஏ.பி. ஜவஹர் பழனியப்பன் அவர்களுக்கும் மற்றும் 'கதவைத் திற ... காற்று வரட்டும்!' தொடர் நூறு வாரங்கள் தொடர்ந்து வெளிவர பலவேறு கட்டங்களில் சேவை செய்த எல்லோருக்கும் என்னுடைய உளமார்ந்த நன்றிகள்.
இப்படிக்கு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
நீங்கள் ஆன்மீகவாதியா? கண்டுபிழயுங்கள் !
கீழ்க்கண்ட கோரிக்கைகளில் ஏதாவதொரு கோரிக்கை உங்களது கோரிக்கையானாலும் நீங்கள் ஆன்மீகவாதியே. இந்தப் பத்துக் கோரிக்கைகளை நிஜமாக்க முயற்சிப்பவர்களைத்தான் ஆன்மீகவாதிகள் என்றழைக்கிறோம்.
| ஆரோக்கியம் வேண்டும் |
|---|
| மனநிம்மதி வேண்டும் |
| வீட்டில் அமைதி வேண்டும் |
| நானொரு கலைஞ்னாக வேண்டும் |
| ஆசைப்பட்டதை அடைய வேண்டும் |
| நாட்டில் மனிதநேயம் வளர வேண்டும் |
| வாழ்க்கை ரகசியங்கள் விடுபட வேண்டும் |
| நான் ஞானமடைந்தரக வேண்டும் |
| பிரபஞ்ச ரகசியங்களுல்லாம் புறிய வேண்டும் |
| எப்போதும் ஆனந்தமாகவே உணர வேண்டும் |
மேற்கண்ட எல்லாமே ஆனந்தமாளிகையின் பத்து நுழைவாயில்கள். எந்த வாயில் வழியே வந்தாலும் நீங்கள் வரப்போவது ஒரே மாளிகைக்குத்தான்.
மதம், இனம், கலாச்சாரம், கல்வியறிவு என்ற எல்லாமே மேற்கண்ட பத்து நுழைவாயில்களில் ஏதோ ஒரு நுழைவாயிலுக்கு அழைத்து வரும் தூதுவர்கள்தான்.
நுழைவாயில் வந்ததும் நன்றி சொல்லி விடையெற வேண்டிய நல்ல நண்பர்கள் இந்தத் தூதுவர்கள்.
நன்றி சொல்லுங்கள். தடைகளைத் தாண்டி உண்மை சாதனை படையுங்கள். அதே உணர்வோடு கட்டுரைகளைப் படியுங்கள்!
கதவைத் திற ... காற்று வரட்டும் !
ஜெரு ஜென் ஞானி, மலையை ஒட்டிச் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் நதிக்கரையோரத்தில் நின்று கொண்டு, நிலவின் அழகையும் நட்சத்திரங்களின் மினுமினுப்பையும் கண்டு ஆனந்தமாக ரசித்துக் கொண்டிருந்தார்.
அந்த நதிக்கரையோரத்தில் துன்பங்களை மட்டுமே கண்டு நொந்துபோன ஒருவர், குடிசையில் அடைந்துகொண்டு, "வாழ்க்கை துக்ககரமானது. வாழ்க்கை துக்ககரமானது!" என்று புலம்பிக்கொண்டிருந்தார்.
இதைக் கேட்ட ஞானி, "இல்லையப்பா. வாழ்க்கை ஆனந்தமயமானது. குடிசையைவிட்டு வெளியே வந்து பார். உனக்குத் தெரியும்" என்றார். துறவியின் பேச்சில் அவருக்கு நம்பிக்கை இல்லை.
"முதலில் கதவைத் திறந்துவை. காற்று உள்ளே வரட்டும். உன்னைத் தேடிவரும் தென்றல் உன்னை வெளியே கொண்டுவரும்" என்று சொன்னார் ஞானி. அதையும் அவர் கேட்கிற மாதிரி இல்லை.
உடனே அந்த ஞானி, "அடடோ... ஆபத்து. ஆபத்து! உன் குடிசையில் தீப்பிடித்துவிட்டது!'' என்று கத்தினார். குடிசை எரிகிறது என்றவுடன் பதறியடித்துக் கொண்டு அவர் வெளியே ஒடிவந்தார்.
வந்தவரைப் பிடித்திழுத்து வானத்தைக் காட்டினார் ஜென் ஞானி. மேலே ஒளிரும் நிலவின் அழகையும் நட்சத்திரங்கள் மின்னுவதையும் அருகே சலனமற்று ஓடும் ஆற்றையும் கண்டு பரவசப்பட்டு நின்றார்.
"குடிசையைவிட்டு வெளியே வா… அழகைக் கண்டு அராத்திக்கலாம்" என்று அழைத்தபோது அவர் கேட்கவில்லை. அவரோ கடவுள் நம்பிக்கை இல்லாதவர். எனவே, "பரம்பொருளைக் காணலாம். மோட்சம் அடையலாம்" என்று அவரிடம் சொல்லிப் பிரயோஜனமில்லை. பிறகு அவரை எப்படித்தான் வெளியே அழைத்து வருவது ?
அதற்கு அந்த ஜென் ஞானி பயன்படுத்திய டெக்னிக்தான், 'ஆபத்து! குடிசை தீப்பற்றி எரிகிறது' என்று கத்தியது. அதையும்கூட ரஸவாதம் என்று நான் அழைக்கிறேன்.
ரஸவாதத்தின் மூலம் பல விந்தைகளைச் செய்யலாம். ஒரு மனிதர், ஞானியாக மாற வேண்டுமானால் அவருக்குள் ஆனந்தத்தின் ரஸவாதம் நடக்க வேண்டும். 'அதற்கான வழிமுறைகள் என்ன? டெக்னிக்குகள் என்ன?' என்பதைச் சொல்லத்தான் இந்தத் தொடர்.
ஆனந்தத்தின் ரஸவாதத்தை அனுபூதி அடைந்தவர் மட்டும்தான் சொல்ல முடியும். பகிர்ந்துகொள்ள முடியும். அனுபவம் என்பது வேறு. அனுபூதி என்பது வேறு. சிறிய வயதில் அடுப்பில் எரியும் தீயைத் தொடுகிறோம். அதைத் தொட்டவுடன், 'அடுப்புத் தீ சுடும்' என்று தெரிந்துகொள்கிறோம். மெழுகுத்திரியில் எரியும் நெருப்பைத் தொடுகிறோம். எரியும் மெழுகுத்திரியைத் தொட்டாலும் சுடும் என்று தெரிந்துகொள்கிறோம்.
ஒவ்வொரு நெருப்பையும் தொட்ட பிறகு, 'அது சுடும்' என்று அறிவது அறிவு. ஒரே ஒருமுறை தீயைத் தொட்டு, 'அது சுடுகிறது' என்று தெரிந்தவுடன், எல்லாத் தீயும் சுடும் என்று தெரிந்துகொள்வது அனுபவம். ஒருவர் தீயைத் தீண்டியதும், அவர் வேதனைப்படுவதிலிருந்தே, 'தீ சுடும்' என்ற உண்மையைக் கிரகித்துக்கொள்வது அனுபூதி.
| ஆனந்தத்தின் ரஸவாதத்தை, | |
|---|---|
| அனுபூதி அடைந்தவர் மட்டும்தான் சொல்ல முடியும். | |
| பகிர்ந்துகொள்ள முடியும். | |
| அனுபவம் என்பது வேறு. அனுபூதி என்பது வேறு. | |
சிறிய வயதில் அனுபூதிபெற்ற மகான்கள் பலர்.
ஆதிசங்கரர், தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தில் ஓர் அருமையான ஸ்ருதி சொல்கிறார்.
"தட்சிணாமூர்த்திக்கோ பேரன் வயது. அவரது சீடர்களுக்கோ தாத்தா வயது. ஆனால், குருவின் அனுபூதியினால் சிஷ்யர்களின் துக்கம் விலகுகிறது. அவர்கள் ஞானமடைகிறார்கள்' என்கிறார்.
தட்சிணாமூர்த்தியில் ஆரம்பித்து, அனுபூதிமான்கள் எல்லோரும் இளையவர்களாகவே இருந்திருக்கிறார்கள். பதினாறு வயதிலேயே ஞானமடைந்தார் ஆதிசங்கரர். இயேசு பெருமான், நபிகள் நாயகம், ரமண மகரிஷி, வள்ளலார், ஜே. கிருஷ்ணமூர்த்தி என்று சிறிய வயதிலேயே ஞானவிளக்காக இருந்தவர்கள் பலர்.
வாழ்க்கையை நாம் எப்படி வாழ்கிறோம் ? அதை எப்படிப் பார்க்கிறோம் ? இதை விளக்கும் ஒரு அருமையான சம்பவம்…
யுத்த காலத்தில் சிறிய விமானமொன்றை மலைவாசி மக்கள் வாழும் ஒரு குக்கிராமத்தில் விட்டுச் சென்று விடுகிறார்கள், சில விமானிகள். அந்தக் கிராமத்தில் உள்ள படிப்பறிவில்லாத மக்கள் அதைப் பார்க்கின்றனர். விமானத்தைப் பற்றிக் கேள்விப்படாத அவர்கள், 'இது ஒரு மாட்டு வண்டியாகத்தான் இருக்க முடியும்' என்று கருதி, மாட்டு வண்டியாக அதைப் பயன்படுத்துகிறார்கள்.
விதைக்குள் ஆல விருட்சம். கதைக்குள் ஆனந்த விருட்சம். கதவைத் திற ... காற்று வரட்டும்! உள்ளத்தை திற ... உற்சாகம் பொங்கட்டும்!
அந்தக் கிராமத்தில் ஒரளவுக்குப் படித்த இளைஞர் ஒருவர் அதைப் பார்க்கிறார். 'இது
மாட்டுவண்டி அல்ல. காரணம், இதற்கு கியர் இருக்கிறது. சக்கரங்கள் இருக்கின்றன. எனவே, இது டிராக்டர்' என்று சொல்ல முயற்சி செய்தார். பின் டிராக்டரைப் போல அதைப் பயன்படுத்த ஆரம்பித்தார்.
சில மாதம் கழித்து விமானப்படையில் பணிபுரியும் வீரர் ஒருவர், அந்தக் கிராமத்திற்குச் சுற்றுலா பயணியாக வந்தார். "இது மாட்டுவண்டியும் அல்ல. டிராக்டரும் அல்ல. போரில் பயன்படுத்தப்படும் விமானம்" என்று சொன்னார். அவர் அதை ஒட்டியும் காட்டினார்.
ஒரு மனிதர், ஞானியாக மாற வேண்டுமானால் அவருக்குள் ஆனந்தத்தின் ரஸவாதம் நடக்க வேண்டும்.
இந்த மனிதர்கள், இந்த வாழ்க்கையை மாட்டு வண்டியாகத்தான் கருதுகிறார்கள். சிலர் டிராக்டர் என்று நினைக்கிறார்கள். மிகச் சிலர் மட்டுமே விமானம் என்பதைச் சரியாகப் புரிந்து கொள்கின்றனர்.
பட்டுப்புழு எச்சிலை உமிழ்ந்து, உமிழ்ந்து, தன்னைச் எழுப்பிக்கொள்கிறது. பிறகு அந்தத் தடையை உடைத்துக்கொண்டு வெளியே வரமுடியாமல் தவிக்கிறது. வானத்தில் வண்ணத்துப்பூச்சியாக ஆனந்தமாகப் பறக்காமல், கடைசி வரை புழுவாகவே நெளிந்து இறந்துவிடுகிறது.
மனிதர்களும் மாதிரிதான். அறிந்தோ, அறியாமலோ தன்னைச் எழுப்பிக்கொள்கிறார்கள். துக்கத்திலேயே வாழும் ஒருவர் சுவர்களை எழுப்புகிறபோது அழகான வீட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறார். ஆனால் கட்டி முடித்த பிறகுதான், அது அழகான சிறை என்பது புரிகிறது. அந்தச் சிறையை உடைத்துக் கொண்டு எப்படி வெளியே வருவது என்று அவருக்குத் தெரியவில்லை. உடைக்கும் தைரியமும் இல்லை.
விதை வெடிக்கப் பயந்தால், விருட்சம் எழாது. புழு கூட்டைக் கிழித்து வெளியே வரப்பயந்தால் வண்ணத்துப்பூச்சியாய் வானில் வெளியே பறக்க முடியாது. நீரில் குதிக்கப் பயந்தால் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. கதவைத் திறக்கப் பயந்தால், காற்றை உள்ளே அனுமதிக்க முடியாது. கதவைத் திறந்து வையுங்கள்; காற்று உள்ளே வரட்டும். !
மனிதர்கள் மூன்று வர்க்கம் :
| ★ | உறக்கம் ! |
|---|---|
| ★ | களிப்பு ! |
| ★ | பணம் ! |
| ★ | புகழ் ! |
| ★ | இறப்பு ! |
என்ற அடிப்படை விஷயங்களிலேயே அல்லல் படுபவர்கள் சராசரி மனிதர்கள். இவர்கள், உடலை மாட்டுவண்டி போலப் பயன்படுத்தும் - முதல் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.
| ★ | கலை ! |
|---|---|
| ★ | கவிதை |
| ★ | சிற்பம் ! |
| ★ | நாட்டியம் ! |
என்று காலத்தால் அழியாத காவியங்களைப் படைத்து சராசரி மனிதரால் சாதிக்க முடியாததைச் சாதித்தவர் என்ற நிலையை அடைந்தவர்கள் கலைஞர்கள். இவர்கள், உடலை டிராக்டர் போலப் பயன்படுத்தும் இரண்டாவது வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.
| ★ | தெளிவு | கனிவு ! |
|---|---|---|
| ★ | நிம்மதி | நிதானம் ! |
| ★ | அமைதி | ஆனந்தம் ! |
ஆகிய அற்புதங்களும் ஆச்சரியங்களும் தங்களுக்குள்தான் கொட்டிக் கிடக்கின்றன என்பதை அனுபவித்து அனுபூதி பெற்றவர்கள் மகான்கள். இவர்கள் உடலை விமானம் போல பயன்படுத்தும் மூன்றாவது வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.
| அற்புதங்களும் ஆச்சரியங்களும் | |
|---|---|
| தங்களுக்குள்தான் கொட்டிக் கிடக்கின்றன | |
| என்பதை அனுபவித்து அனுபூதி பெற்றவர்கள் | |
| மகான்கள். |
நீங்கள் என்ன முடிவுக்கு வந்திருக்கிறீர்கள் ?
உங்கள் உடலை நீங்கள் விரும்பினால்,
மாட்டுவண்டியாகவும் பயன்படுத்தலாம்.
டிராக்டராகவும் பயன்படுத்தலாம்.
விமானமாகவும் பயன்படுத்தலாம்.
சராசரியோடு சராசரியாக வாழ்வதா? இல்லை, ஆனந்தம் என்னும் வானில் சிறகடித்துப் பறக்கும் சுதந்திரப்பறவையாக மாறுவதா?
-
முடிவு நிச்சயமாக உங்கள் கையில்.
-
முடிவைப் பொறுத்து விடிவு வடிவெடுக்கும்.
-
பறக்க முடிவு எடுத்துவிட்டால், நிச்சயம் ஆனந்தம் சாத்தியம்.
முடிவெடுங்கள் !
ஏன் ஆன்மீகம் ? ...
★ ஆனந்தம் நோக்கிப் பயணம் செய்யும் மூன்று தரப்பட்ட மனிதர்கள்:
"என்னுடைய வீட்டில் இருப்பவர்களைத் திருப்திப்படுத்தினால் போதும். இவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் போதும். அதுதான் என் வாழ்க்கையின் நோக்கம்" - முதல் வகையினர்.
" வீட்டில் இருப்பவர்கள் எல்லோரையும் திருப்திப்படுத்துவது சாத்தியமில்லாதது. முதலில் நான் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும். நான் திருப்தி அடைய வேண்டும்" - இரண்டாவது வகையினர்.
"வெளிஉலகில் அடையும் மகிழ்ச்சியும் திருப்தியும் நிரந்தரமாக இருப்பதில்லையே. இந்த நிரந்தரத் தன்மையைத்தான் நாம் முதலிலிருந்தே தேடுகிறோமோ ? ஒருவேளை அதுதான் ஆனந்தமா ? அதுதான் நிம்மதியா?" - மூன்றாவது வகையினர்.
வாழ்க்கையின் எல்லை வரை எட்டிப்பார்க்காத வரை, வாழ்க்கையின் நோககத்திற்கான விடை தெரியாது. நோக்கம் புரியாது. ஆனால், ஏக்கம் இருப்பது மட்டும் புரியும்.
★ மனிதப்பிறப்பின் நோக்கமே நிலையான, நித்யமான ஆனந்தத்தைப் பெறுவதுதான். ஆனந்தம் பெறும் வரை ஏக்கம் இருக்கும்.
இப்படி, வாழ்க்கையின் பல புரியப்பட வேண்டிய புதிர்களை விடுவிப்பதுதான் ஆன்மீகம்.
"நாங்கள் ரிலாக்ஸாக உட்காரலாம் என்றால் எங்கேங்க முடியுது ?… பணப் பிரச்சனைகள்! உடல்வியாதிகள் ! மனக்கஷ்டங்கள் ! - இவற்றோடு கொஞ்சம் அயர்ந்தாலும் பின்தங்கி விடுவோமோ என்ற நிலையில் இருக்கும் வியாபாரப் போட்டி! இவ்வளவு நெருக்கடிகளுக்கு நடுவில் ஆன்மீகம் எங்களுக்குத் தேவைதானா?"
ஆன்மீகம் = ஆனந்தம் ஆனந்தமயமான வாழ்க்கைக்குப் பெயர்தான் ஆன்மீக வாழ்க்கை
நான் செல்கிற எல்லா இடங்களிலும் நிச்சயம் இதுபோன்ற கேள்வி கேட்பார்கள்.
இதற்கு ஒரே பதில், - "நமக்கு நிச்சயம் ஆன்மீகம் தேவை".
உங்கள் கேள்விக்கு மிக அருமையான பதிலும் கதையொண்றைச் கேளுங்கள்.
மனுஷ்யாத்ரி காசி நோக்கிப் பயணம் மேற்கொண்டார். 'காசிக்குப் போய்ச் சேர எவ்வளவு நாட்கள் ஆகும் ? என்று ஏற்கெனவே விசாரித்துவிட்டுத்தான் தன் ஊரைவிட்டுக் கிளம்பினார்.
குறிப்பிட்ட காலம் தாண்டியும் காசி வராததால், தான் வழி தவறியிருப்போம் என்ற சந்தேகத்தில் எதிரில் வந்த சாதுவிடம், "சாமி, காசிக்கு இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது?" என்று மனுஷ் கேட்டார்.
சாது, "பதில் சொல்வதற்குமுன் நான் கேட்கும் இரண்டு கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்" என்றார். "பதிலுக்காக இரண்டு கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டுமா? வேடிக்கையாக இருக்கிறது" என்று நமட்டுச்சிறிப்பு சிரித்து, "சரி. கேளுங்கள் உங்கள் கேள்விதளை" என்றார்.
" எதற்காக நீங்கள் காசிக்குப் புறப்பட்டீர்கள் என்று தெளிவாகத் தெரியுமா?" என்று முதல் கேள்வியைக் கேட்டார் சாது.
கொஞ்சும்கூட எதிர்பார்க்காத கேள்வி ஆகையால் சற்றுத் திகைத்த மனுஷ்,
" ஏதோ ! காசி ஒரு புண்ணிய ஸ்தலம். அங்கே சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்றார்கள்... " என்று தெளிவற்ற பதிலைக் கூறினார்.
"புறப்படும் முன் காசியைப் பற்றித் தெளிவாக விசாரித்துவிட்டுத்தான் கிளம்பினீர்களா?" என்று இரண்டாம் கேள்வியைக் கேட்டார் சாது.
இந்தக் கேள்வி சுத்தமாக எந்தச் சம்பந்தமும் இல்லாதது போல மனுஷ்க்குத் தோன்றியது. "கொஞ்சம் விசாரித்துவிட்டுத்தான் கிளம்பினேன். போகப் போக விசாரித்துக்கொள்ளலாம் என்று நினைத்துச் சும்மா இருந்துவிட்டேன்" என்றார் மனுஷ்.
"ஏன் - காசிக்குப் போக வேண்டும் என்ற தெளிவும் காசியைப் பற்றிய தெளிவான விவரங்களையும் நீங்கள் முன்பே தெரிந்துகொண்டிருந்தால், காசிக்கு எவ்வளவு தூரம் போகவேண்டும் என்ற கேள்வியையே என்னிடம் கேட்டி ருக்க மாட்டீர்கள்." - அமைதியாகச் சொன்னார் அந்தச் சாது.
மனுஷ்க்கு ஒன்றுமே புரியவில்லை. ஏதோ வில்லங்கமான ஆளிடம் வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டது போலத் தோன்றியது. தமக்குத் தேவையில்லாத பல விஷயங்களைச் சாது பேசுவது போலத் தோன்றியது. கடைசியில் குழப்பத்தோடு, "நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லவே இல்லை" என்றார் மனுஷ்.
| ஆனந்தமயமாக | |
|---|---|
| வாழமுடியாமல் போனதற்கு | |
| மனிதர்கள் கண்டுபிடித்த | |
| புதுப்பெயர்தான் | |
| சாதாரண வாழ்க்கை! |
சாது, "காசியைத் தாண்டி நாற்பது மைல் நீங்கள் வந்துவிட்டீர்கள். உங்களிடம் தெளிவான விவரம் இல்லாததாலும் வழியில் சிலரது தவறான வழி நடத்துதலினாலும் நீங்கள் வழிதவறிவிட்டீர்கள்" என்றார்.
மனுஷ் அப்போதுதான் தன் தவறை உணர்ந்தார்.
இந்தக் கதை நம் வாழ்க்கைக்கு மிகச் சரியாகப் பொருந்தும். "ஏன் இந்த உலகத்தில் பிறந்தோம் ? எதற்காகத் தொடர்ந்து இவ்வளவு கஷ்டப்படுகிறோம் ?" என்ற அடிப்படைத் தெளிவு நம்மிடம் இல்லாததே, நம்முடைய பல பிரச்சனைகளுக்குக் காரணம்.
எல்லோரும் ஏதோ ஒன்றைத் தேடி வாழ்க்கையைத் துவங்குகிறோம் அது நல்ல படிப்பு, நல்ல வேலை, புகழ், செல்வம், பதவி இவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை இருப்பதற்கு, அவர்களின் மன அமைப்பே காரணம்.
ஆசை பலவாக இருந்தாலும் தேடுதலின் நோக்கம் ஒன்றுதான். நிம்மதி, ஆனந்தம் - இவற்றைப் பெறத்தான் ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்த வகையில் முயல்கிறார்கள்.
உங்களுடைய முயற்சியில் எந்தவிதத் தவறும் இல்லை. முயற்சி செய்யும் விதத்தில்கான் பல கோளாறுகள் உள்ளன.
கதையில் வரும் மனுஷ்யாத்ரி போலத்தான், பலரும் மேம்போக்காக சில விஷயங்களைத் தெரிந்துகொண்டு வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியைச் சந்திக்கின்றன.
் நீங்கள் யார்? உங்களுக்கு உள்ளே அடங்கிக் கிடக்கும் அதிசயங்கள் எவ்வளவு ? வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்வது எப்படி ? ஏன் நாம் நினைத்தபடி வாழ்க்கையும் உறவுகளும் அமையவில்லை? எப்படி அமைத்துக்கொள்வது?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுகொள்வதற்காகத்தான், நமக்கு ஆன்மீகம் தேவைப்படுகிறது. நமக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் மனம், உடல், ஆன்மா சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தெரிந்துகொள்ள உதவி செய்யும் மார்க்கம் தான் ஆன்மீகம்.
வாழ்க்கையில் சாதனைகள் பல சாதித்த பிறகு கிடைக்காத திருப்தியையும் சந்தோஷத்தையும் எளிதாக வழங்கும் மார்க்கம்தான் ஆன்மீகம்.
எவ்வளவு சொத்து, இருந்தாலும் அதை எப்படி அனுபவிப்பது என்பது பலருக்கும் தெரியாது. உங்களின் அனுபவிக்கும் தன்மை அதிகமானால், சின்னஞ்சிறு விஷயங்களில்கூட சந்தோஷம் அடைவீர்கள்.
வாழ்க்கையில் சாதனைகள் பல சாதித்த பிறகு கிடைக்காத திருப்தியையும் சந்தோஷத்தையும் எளிதாக வழங்கும் மார்க்கம்தான் ஆன்மீகம்.
ஒரு நாளைக்கு ஓர் அரைமணி நேரமாவது ஆனந்த வாழ்வு பற்றிய ஆன்மீகத்திற்கு ஒதுக்காவிட்டால், உங்கள் வாழ்க்கையின் அற்புதமான ஒரு பகுதியை இழந்து கொண்டே இருக்கிறீர்கள்.
எனவே, 'ஏன் ஆன்மீகம்? எதற்காக ஆன்மீகம் ?' என்ற கேள்விக்கே இடம் இல்லை.
இயந்திரத்தனமாக ஒடிக்கொண்டிருக்கும் உலகத்தில் ஒவ்வொரு தனி மனிதருக்கும் ஆன்மீகம் என்பது அவசியமாகிவிட்ட ஒன்று. தவிர்க்க முடியாத ஒன்று !
கற்றுக்கொடுக்க முடியாது ... கற்றுக்கொள்ள முடியும் !
வெற்றி தோல்வி ! ★ -சோதனை! சாதனை = கொண்டாட்டம் திண்டாட்டம் ! -
-ஆகியவை ஒருவருடைய புத்திசாலித்தனத்தின் அளவைப் பொறுத்து அவருடைய வாழ்வை ஆட்டிப்படைக்கும் அம்சங்கள்.
புத்திசாலித்தனம் அதிகம் பெற்றிருப்பவரிடம் பணம், பதவி, புகழ், ★ இன்பம் ஆகியன கட்டுப்பட்டுக் கிடக்கும்.
புத்திசாலித்தனம் குறைவாகப் பெற்றிருப்பவர் பணம், பதவி, புகழ், இன்பம் ஆகியவற்றிடம் கட்டுப்பட்டுக் கிடப்பார்.
★ வாழ்வின் எந்தெந்த அம்சங்களில் நம்முடைய புத்திசாலித்தனம் பெருகவில்லையோ, அந்தந்த அம்சங்களுக்குத்தான் நாம் அடிமையாக இருப்போம்.
புத்திசாலித்தனம் பெருகப் பெருக அனைத்தையும் நம் விருப்பப்படி கட்டுப்படுத்தும் அதிபதியாகி விடுவோம்
மகாராஜா போல் ... * மகாராணி போல்... வாழ வேண்டுமா ? புத்திசாலித்தனம் உங்களினுள் பெருக வழிசெய்யுங்கள்.
ஒருவன் முகுந்தன் கிராமத்திலிருக்கும் அவன் தாத்தாவின் வீட்டிற்கு முதல் முறையாகச் சென்றான். ரம்யமான குழல் சிறுவனைச் சுறுசூறுப்பாக்கியது.
வீட்டின் பின்புறத்திலிருக்கும் தோட்டத்திற்குள் சந்தோஷத்தோடு துள்ளிக் குதித்து ஓடினான். "முகுந்தா, அது தோட்டம். வீதியல்ல ... " எனச் சப்தமிட்டார் தாத்தா. "அதெல்லாம் எனக்குத் தெரியும்" எனப் பதில் சொல்லிக்கொண்டே ஓடினான் முகுந்தன்.
தாத்தா, "தோட்டத்தில் பெரிய மண்குன்று ஒன்று இருக்கிறது ... " எனச் சொல்லி முடிப்பதற்குள், "அதெல்லாம் எனக்குத் தெரியும்" என சொல்லிக் கொண்டே தோட்டத்தின் மண்குன்று மேல் ஏறி ஓடினான் முகுந்தன்.
"மடையா! சொல்வதைக் கொஞ்சமாவது நின்று கேட்கிறாயா? அந்தக் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, "அதெல்லாம் எனக்குத் தெரியும்" எனச் சொல்லிக்கொண்டே பலத்த சத்தத்தோடு குன்றைத் தாண்டியிருந்த குட்டையில் குதித்து, சகதியானான்.
புத்திசாலி தன்னை மற்றவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள்.
புத்திசாலி தொடர்ந்து வாழ்விலிருந்து கற்றுக்கொண்டேயிருப்பார்.
அவரவர்
நீங்கள் 'அடிமையா? அதிபதியா?' என்பதை நிர்ணயிப்பது வெளியிலிருக்கும் பணம், பதவி, புகழ் அல்ல. உங்களுக்குள்ளிருக்கும் புத்திசாலித்தனம்தான் நிர்ணயிக்கிறது.
விருப்பம் பொறுத்து புத்திசாலித்தனம் வெவ்வேறு துறைகளில் வெளிப்படும்.
படைப்புத்திறன்,
சிற்பியின் கைகள்! ஓவியரின் விரல்கள்! பாடகரின் குரல் ! கவிஞரின் சிந்தனை! சமைப்பவரின் பக்குவம் ! அறிவாளியின் அறிவு!… - என்று புத்திசாலித்தனத்தின் அபூர்வ வெளிப்பாடுகளை அடுக்கிக்கொண்டே போவார்கள்.
மனோதத்துவ நிபுணர்கள் புத்திசாலித்தனத்தை ஏழுவிதமாக வகைப் படுத்தியுள்ளார்கள்.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், வாழ்க்கையை ஒரு திருவிழாப்போல் கொண்டாடுவது எப்படி என்பதை நடைமுறையில் சாத்தியமாக்கும் உள்உலக உணர்வம்சம்தான் புத்திசாலித்தனம்.
எந்தத் துறையில் எவ்வளவு பெரிய புத்திசாலியாக ஒருவர் இருந்தாலும் சரி, வாழ்க்கையைக் கொண்டாடும் புத்திசாலித்தனத்தைப் பெறாவிட்டால் வாழ்க்கையே அர்த்தமற்றதாகிவிடும்.
நாம் கொண்டாடப் பிறப்பெடுத்தவர்கள்தான்.
இப்படிக்குத் தியானாலயம்
என்ற விளம்பர போர்டைப் பார்த்த பேராசிரியர் தின்சாய்க்கு ஆர்வம் தாளவில்லை. அந்த வாசகங்கள் அவர் மனதில் மீண்டும் மீண்டும் ஓடியது.
எந்த வேலையிலும் ஈர்ப்பு இல்லாமல் தியானாலயத்தின் விளம்பரத்தை பற்றியே யோசித்த தின்சாய், மறுநாள் காலை எழுந்ததும் முதல் வேலையாக தியானாலயம் எங்கிருக்கிறது என்று விசாரித்து, நேரடியாகச் சென்றுவிட்டார்.
ஏதோ பெரிய ஆலயம், மடம் போன்று அது இருக்கும் என்று நினைத்துச் சென்ற தின்சாய்க்கு ஏமாற்றம்!
காரணம், சாதாரண தகரத்தால் உருவாக்கப்பட்ட ஐந்து குடிசைகள் அங்கே இருந்தன. அவ்வளவுதான்!
புத்திசாலித்தனம் அடிமையைக்கூட அதிபதியாக்கிவிடும். புத்திசாலித்தனக்குறைவு அதிபதியைக்கூட அடிமையாக்கிவிடும்!
தியானாலயம் என்ற போர்டுகூட இல்லை.
'இந்த டப்பா குடிசைக்கு அவ்வளவு பெரிய விளம்பர போர்டா!' என்று வியந்து போய் யோசித்துக் கொண்டிருக்க ...
தின்சாய் மௌனத்தைக் கலைக்கும் விதமாய் சிறிய பரபரப்பு அங்கே உருவானது.
அறுபது வயது மதிக்கத்தக்க வயதான ஒருவரைச் சுற்றி மக்கள் கூட்டம். அவர் சாதாரண உடையில் இருந்தார். ஆனால், அவரைச் சுற்றி இருந்தவர்களில் பலர் பணக்காரர்கள் என்பது அவர்களின் உடையிலேயே தெரிந்தது.
முதியவர் ஒரு கல்மேடையில் அமர்ந்ததும் அவரைச் சுற்றிக் கீழே அனைவரும் அமர்ந்துக் கொண்டார்கள்.
தின்சாய் மட்டும் ... "யார் இவர்? எது தியானாலயம் ? அவ்வளவு பெரிய போர்டை வைத்தது யார்?" என்ற யோசனைகளோடு நின்று கொண்டிருந்தார்.
தின்சாயின் குழப்பமடைந்த கண்களைப் பார்த்த மாத்திரத்தில் எல்லாவற்றையும் பெரியவர் உணர்ந்துவிட்டார். அவர் ஒரு ஹஸிட் (Hasid) ஞானி.
ஞானி, "என்னப்பா, விளம்பர போர்டு பார்த்து வந்தாயா?" எனக்
ஏழையாயிருந்து பெரும் பணக்காரனான எல்லோரும் செய்த ஒரே ஒரு முதலீடு, 'புத்திசாலித்தனம்!' உங்கள் முதலீடு என்ன?
கேட்டதற்கு, தின்சாய், "ஆமாம்… ஆமாம்…!" என்றார்.
ஞானி," அந்த விளம்பர போர்டு இந்தக் குறும்புக்காரப்பசங்க செய்த வேலை" என்று அங்கிருந்தவர்களைச் சுட்டிக்காட்டி உரிமையோடு சொன்னார்.
தொடர்ந்த ஞானி, "நீ என்ன கேட்டு இங்கு வந்தாய்?" எனக் கேட்டதற்கு,
தின்சாய், "வாழும் போது வாழ்வது என்றால் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள வந்தேன்" என்றார்.
ஞானி சொன்னார்: "வாழ்க்கையை முழுமையாகக் கொண்டாடுவதுதான், வாழும் போதே என்னிடமிருந்து எதிர்பார்க்கிறாய்?" என்று.
தின்சாய், "வாழும்போதே வாழத் தேவையான புத்திசாலித்தனத்தை எனக்கு நீங்கள்தான் கற்றுக்கொடுக்க வேண்டும்" என்றார்.
"ஹா… ஹா… ஹா… " ஞானியோடு சேர்ந்து அங்கிருந்த அனைவருமே ஒருசேர சிரிக்க, தின்சாய் மிகவும் சங்கடமாக உணர்ந்தார்.
ஒரு மரம் வெட்ட 8 மணி நேரம் எனக்குக் கொடுக்கப்பட்டால், அதில் 6 மணி நேரத்தை என் கோடரியைக் கூர்மையாக்கப் பயன்படுத்துவேன் - Abraham Lingan
உங்களுக்கு அளிக்கப்பட்ட 80 வருட வாழ்நாளில் எவ்வளவு நாட்களை உங்களைக் கூர்மையாக்கப் பயன்படுத்தினீர்கள்!.
"புத்திசாலித்தனத்தைக் கற்றுக்கொடுப்பதில் ஒரு பெரிய தடங்கல் இருக்கிறது. இல்லாவிட்டால் ஆனந்தத்தோடு நானே உனக்கு அதைக் கற்றுத்தருவேன்" என்றார் ஞானி.
தின்சாய், "என்ன தடங்கல் அது?" என்றார்.
ஞானி, "அது - புத்திசாலித்தனத்தைக் கற்றுக்க முடியாது!" என்றார்.
தின்சாய் ஏமாற்றத்தோடு, "அப்படியென்றால், நான் கற்றுக்கொள்ள இங்கே ஏதுவுமே இல்லையா?" என்று கேட்க…
ஞானி, "யார் சொன்னது அப்படி! நீ இங்கே கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது" என்று தீர்க்கமாகச் சொன்னார்.
"We learn by doing" - Aristotle
● செயலில் குதி. யோசிப்பதிலேயே விரயம் எதையும் எப்போதும் கற்க முடியாது.
தின்சாய், "என்ன அது?" என்று ஆர்வம் மிகக் கேட்டார்.
ஞானி, "அது, புத்திசாலித்தனம்தான்" என்றார்.
"ஹா... ஹா... ஹா..." அனைவரும் சிரிக்க, தின்சாய்க்கு ''கிர்ர்'' என்று தலையே சுற்றியது. "இவர் என்ன சொல்ல வருகிறார் புரியவில்லையே!" என்று யோசித்துக் கொண்டே இருக்க, ஞானி, "அப்பனே புத்திசாலித்தனத்தை நீயே உணர முடியும். ஆனால் அதை கற்றுக் கொடுக்கமுடியாது !
நீயும் சிலகாலம் இந்தக் குறும்புக்காரக் பசங்களோடு தங்கியிரு. புத்திசாலித்தனத்தை நீயும் கற்றுக் கொள்வாய்'' என்று சிரிப்போடு சொல்லி முடித்தார்.
ஞானகுருவால்கூட புத்திசாலித்தனத்தைக் கற்றுக்கொடுக்க முடியாது.
ஒவ்வொரு தனிமனிதரும் தானே கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு சாதனை தான் புத்திசாலித்தனம்.
அதிகபட்சம், புத்திசாலித்தனத்தைக் கற்றுக்கொள்வதற்கான சூழ்நிலையையும் குருவால் உருவாக்க முடியும். அவ்வளவே.
இதனால்தான் ஜே. கிருஷ்ணமூர்த்தி ஒரே ஒரு வரியில் சொல்லி முடித்து விட்டார்: "Master is not needed" குரு தேவையில்லை.
ஆம், வாழ்க்கையைக் கொண்டாடும் புத்திசாலித்தனத்தைக் கற்றுக்கொள்ள ஒருவருக்குக் குரு தேவையில்லைதான்.
ஆனால், ஒரு நிமிடம் யோசியுங்கள்!
புத்திசாலித்தனத்தை நீங்களே கற்றுக் கொள்ளும் உத்வேகத்தையும் யார் உங்களுக்காக உருவாக்குவது ?
உங்களுக்கு நீங்களேதான் அதை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஆனால், புத்திசாலித்தனம் என் ஆயுதம் !
- நபிகள் நாயகம்.
வல்லவனுக்குப் பல்லாம் ஆயுதம்!
- நம் ஊர் பழமொழி.
புத்திசாலிக்கு ஆயுதம் அவசியமற்றது.
= ஜென் கூற்று.
Mesial frontal lobe எனப்படும் பகுதி புத்திசாலித்தனத்தோடு நேரடி சம்பந்தப்பட்டது. இப்பகுதியை தியானம் மிக உற்சாகமாக இயங்க வைக்கும் என்பது இன்று மருத்துவத்தால் நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மை. அப்பகுதி உற்சாகமாகும் போது ... ஆயுதம் அவசியமற்றதாகும். அதோடு, எந்தச் சூழலிலும் சுகமாய் வாழ, சுமுகமாய் எதையும் சாதிக்கத் தேவையான சூட்சுமத்தை கற்றுக் கொள்வீர்கள்.
இது எல்லோருக்கும் எளிமையாகச் சாத்தியப்படக்கூடிய காரியமல்ல.
புத்திசாலித்தனத்தைக் கற்றுக்கொள்ளும் சாத்தியக்கூறுகளை உருவாக்குவது கடினம் என்று எண்ணுபவர்களுக்காகவே, புத்தரிலிருந்து... ஜே. கிருஷ்ணமூர்த்தி வரை சொற்பொழிவுகளையும் தியான சத்சங்கங்களையும் நடத்தி வருகிறார்கள்.
வாழும் ஞானியைச் சந்திப்பது, அவரின் தியான சத்சங்கங்களில் கலந்து கொள்வது ... இவை அனைத்தும் புத்திசாலித்தனத்தை நீங்கள் கற்றுக்கொள்ள உதவும் சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தும்.
இவற்றால், 'ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையைக் கொண்டாட வேண்டும்' என்ற ஞானகுருமார்களின் கருணை நோக்கம் முழுப்பலன் பெறும்.
புத்திசாலித்தனத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!
அர்த்தமுள்ள சம்பவம் ...
ரீ-சென் தன் குருவிடம் கேட்டார். "புத்திசாலித்தனத்தை எப்படிக் கற்றுக்கொள்வது. விளக்குங்கள்." குரு, "சைக்கிள் ஓட்டுவது எப்படி ? விளக்கிச்சொல்" எனத் திரும்பக் கேட்டார். ரீ-சென், "அது ... அது ... " எனத் தடுமாற ... குரு கேட்டார், "உனக்கு சைக்கிள் ஒட்டத் தெரியும். ஆனால், விளக்க முடியாது. இருந்தும் புதிதாய் கற்றுக்கொள்ள நினைப்பவரிடம் என்ன சொல்வாய் ?" ரீ-சென், "கற்றுக்கொள் என்பேன்" என்றார். குரு சிரித்தார். ரீ-சென் மலர்ந்தார். புத்திசாலித்தனத்தை விழிக்கச்செய்ய முடியும். எதுவுமே ஆரம்பத்தில் மலைப்பாகத்தான் தெரியும். குதியுங்கள். முடியும். இப்பிறவியிலேயே வாழ்ந்திடலாம்!
எந்த நல்ல விஷயங்களும் கண்டுபிடித்தவர்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. உலகுக்கே அவை சொந்தம்!
பெண்களின் நெற்றிப்பொட்டில் குங்குமம் வைப்பதின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா ?
இது ரிஷிகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு பாதுகாப்பம்சம். ஒரு டெக்னிக்.
ஒருவர் உங்களை வசியம் செய்ய வேண்டுமானால் , உங்களின் நெற்றியிலிருக்கும் சக்திமையம் வழியாக மட்டுமே அதைச் செய்ய முடியும்.
அதனால்தான் 'வசியம் செய்தல்' பற்றி நீங்கள் படித்த புத்தகங்களிலெல்லாம் வசியம் செய்பவர், 'கண்களைப் பார்க்கச் சொல்வார்' எனக் குறிப்பிட்டிருப்பதைப் படித்திருப்பீர்கள்.
குங்குமமிடுவது சம்பிரதாயமல்ல, அது ஒரு டெக்னிக்.
நெற்றிப்பொட்டில் குங்குமம் வைத்தால், நெற்றியிலிருக்கும் ஆக்ஞா சக்திமையம் பாதுகாக்கப்பட்டுவிடும்.
மேலும், குங்குமம் அதன் வேதியியல் பண்புப்படி ஆக்ஞாவை சக்தியூட்டும். அது புதுப் பொலிவூட்டபடும். இந்த ஆக்ஞா சக்தி மையம் - மனிதரின் புத்திசாலித்தனம் சம்பந்தப்பட்டது.
ஆக்ஞா சக்கரம் எங்கிருப்பதாக வேதங்கள் விவரிக்கின்றனவோ, அந்த இடத்தில்
Mesial frontal lobe எனப்படும் பகுதி இருக்கிறது. இதை மனித மூளையின் இன்றைய விஞ்ஞானமும் ஒத்துக்கொள்கிறது.
மருத்துவர்கள், மனிதனின் புத்திசாலித்தனத்தோடு (Intelligence) நேரடியாகத் தொடர்புகொண்டது எனச் சொல்கிறார்கள். இங்கு மெஞ்ஞானமும் விஞ்ஞானமும் இணைகிறது.
குங்குமம் ஆக்ஞா சக்தி மையத்தையும் அதைச் சார்ந்த மூளைப்பகுதியையும் உற்சாகப்படுத்துகிறது.
ஆக்ஞா சக்தி மையம் நல்ல இயக்க நிலையிலிருந்தால், ஒருவரை வசியம் செய்ய முடியாது.
சித்து வேலைகள் அதிகமாயிருந்த காலத்தில், பெண்களை, வசியம் செய்பவர்களிடமிருந்து காக்கவும் அவர்களின் புத்திசாலித்தனத்தை அதிகரிக்கவும் ஆக்ஞா சக்திமையம் இருக்குமிடத்தில் பெண்கள் குங்குமத்தைப் பொட்டாக வைப்பது என்பது ஒரு சம்பிரதாயமாக ரிஷிகளால் வகுத்தளிக்கப்பட்டது. இது ஒரு டெக்னிக்.
தினமும் குங்குமம் வைப்பது எல்லா மனிதர்களுக்கும் மிகவும் நல்லது. குங்குமம் இந்து மதத்துக்கு மட்டுமே சொந்தமானதல்ல.
மருந்து எல்லா மதத்திற்கும் பொதுவானது. "ஒரு கிறிஸ்தவர் கண்டுபிடித்த மருந்தை இந்துக்கள் பயன்படுத்துவது பாவம்" என ஒருவர் சொன்னால் அது எவ்வளவு அபத்தமானதாக இருக்கும்.
குங்குமம் புத்திசாலித்தனத்தை உடல்ரீதியாக அதிகரிக்கச் செய்யும் ஒரு மருந்து. விரும்புபவர்கள் தினம் பயன்படுத்திப்பலன் பெறுங்கள்.
குங்குமப்பொடிக்கு மட்டுமே இந்தச் சக்தி உண்டு. செயற்கையாய், மாற்றாய் தயாரிக்கப்படும் குங்குமச் சாந்துகளுக்கும் ஸ்டிக்கர்களுக்கும் இந்தச் சக்தியில்லை.
குங்குமத்தின் முழுப்பலன் விரும்புவோர் குங்குமப்பொடி மட்டுமே பயன்படுத்துங்கள்.
நல்ல விஷயங்கள் எந்த மதத்தினருடையதாக இருந்தாலென்ன ?
குறுகிய வட்டத்திற்குள் குறுகிப்போகாமல் பரந்தமனதோடு, எல்லோரும் எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொள்வதும் ஒரு புத்திசாலித்தனமே.
பரந்தமனதை, பெறுவதே தியானத்தின் முதல் குறிக்கோள்.
தியானத்தில் கிடைக்கும் முதல் பலனும் இதுதான்.
நல்ல கருத்தை ... ஆரோக்கியமான வழிமுறையை... ஆனந்தம், அமைதி தரும் தியான முறையை... எந்த மதம் சொன்னாலும் சரி, அது சரியானதே.
எல்லா மதத்திலிருக்கும் எல்லா நல்லவற்றையும் உங்களை வளமாக்க உதவும் கருவிகளாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் !
கற்றுக்கொள்ள . . . கற்றுக்கொள்ளுங்கள் !
-
வாழ்க்கையின் ஒவ்வொரு திடீர் திருப்பமும் நீங்கள் கற்றுக் கொண்டே ஆக வேண்டிய பாடங்களை வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறது .
-
வாழ்வின் ஒவ்வொரு சம்பவமும் - வேதம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு உயிரும் - குரு வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் - தியானம்
-
கற்றுக்கொள்ள வேண்டியதை, கற்றுக்கொள்ள வேண்டிய நேரத்தில், கற்றுக் கொள்ளத் தவறியதே, நம் கஷ்டங்களுக்கான காரணகர்த்தா.
ஒரு கதை சொல்கிறேன். அபிசித்தானந்தா என்று புகழ்பெற்ற சமயப் பிரச்சாரகர் ஒருவர் இருந்தார். ஆன்மீகச் சொற்பொழிவு என்றாலே அபிசித்தானந்தாதான் என்கிற அளவிற்கு அவர் புகழ் பரவியிருந்தது. இராமாயணத்தையும் பகவத் கீதையையும் பற்றி அவர் பேச ஆரம்பித்தால், ஆயிரக்கணக்கான மக்கள் ஆடாமல்,அசையாமல் கேட்பார்கள். அறுபது வயதிற்கு மேல் ஆகிவிட்ட அந்தப் பிரச்சாரகருக்குத் திடீரென ஒரு சந்தேகம் ஏற்பட்டது.
'தாம் பூமியில் எதற்காக வந்து பிறந்தோமோ, அதைச் சரியாக நிறைவேற்றிவிட்டோமா?' என்பதுதான் அவரது சந்தேகம்.
அதையே நினைத்தபடி நிம்மதி இல்லாமல் அலைந்தார் துறவி. மனக் கலக்கத்திற்கு மருந்து தேடி மருத்துவர்கள் முதல் மகாஞானிகள் வரை அனைவரையும் கலந்தாலோசித்தார். அவருக்குப் புரியாததால் பயன் ஒன்றும் இல்லை.
அதே ஊரில் கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவரும் இருந்தார். அவரைச் சந்தித்துத் தங்கள் குறைகளைப் பலரும் சொல்லிப் பதில் பெற்றுச் செல்வதுண்டு. அந்தப் பாதிரியாரைப் போய்ப் பார்த்தால், உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கலாம்' என்று பிரச்சாரகரிடம் சிலர் கூறினார்கள்.
'பாதிரியார் என்ன சொல்லப் போகிறார்? பைபிள் புத்தகம் ஒன்றைக் கொடுத்துப் படிக்குமாறு கூறுவார். இருந்தாலும் போய்ப் பார்த்துவிடலாம்' என்று கிளம்பினார் பிரச்சாரகர்.
அபிசிக்கானந்தா சொன்ன பிரச்சனையை மெளனமாகக் கேட்ட பாதிரியார், கடைசியில் ஒரு புத்தகத்தை எடுத்தார்.
" நண்பரே. நீங்கள் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் இதில் விடை இருக்கிறது. இதைப் படியுங்கள். உங்களை நீங்கள் உணர்வீர்கள்" என்று, அந்தப் புத்தகத்தைக் கொடுத்தார். அவர் கொடுத்த புத்தகம் பைபிள் அல்ல. ' பகவத் கீதை !'
அபிசித்தானந்தாவுக்கு ஏமாற்றமாகிவிட்டது. "கடந்த முப்பது ஆண்டு காலமாக பகவத் கீதை பற்றிச் சொற்பொழிவாற்றுவதுதான் என் வேலை. பகவத் கீதையைப் படி என்று என்னிடமே சொல்கிறீர்களே?" என்று கேட்டார்.
முப்பது வருஷமாக நீங்கள் பகவத் கீதை படித்தது உண்மைதான். ஆனால் மற்றவர்களுக்காகத்தான் நீங்கள் கீதையைப் படித்தீர்கள். இப்போது உங்களுக்காகப் படியுங்கள். உங்கள் கேள்விக்கான விடை கிடைக்கும்" என்று அந்த பாதிரியார் பதில் சொன்னபோது, ஆடிப்போனார் அபிசித்தானந்தா. அபிசித்தானந்தா செய்த அதே தவறைத் தான் நீங்களும் பல நேரங்களில் செய்துவிட்டு அல்லல்படுகிறீர்கள்.
Part 2: Open the Door... Let the Breeze in!
வாழ்க்கைச் சம்பவங்களிலிருந்தும் சரி, அற்புதமான நூல்களைப் படிக்கிற போதும் சரி, அது உங்களுக்கு என்ன சொல்கிறது என்று நீங்கள் பார்ப்பதில்லை. உயர்ந்த நூல்களிலிருந்து, அனுபவங்களிலிருந்து கொஞ்ச நஞ்சமேனும் நீங்கள் கிரகித்துக்கொள்கிற விஷயங்களையும் மற்றவர்களிடம் பெருமையாகச் சொல்வதற்காகவே பயன்படுத்துகிறீர்களே ஒழிய, உங்களை நீங்கள் உணர்ந்து கொள்ள முயற்சி எடுப்பதில்லை.
தானம் சிறந்தது என்று சொன்னால் நீங்கள் எவ்வளவு செய்திருக்கிறீர்கள் என்று பார்ப்பதை விட்டு, ''பக்கத்து வீட்டுக்காரன் இருக்கிறானே, மகா கஞ்சன் ! முருகன் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் என்று நன்கொடை கேட்டால் பத்து ரூபாய் கொடுத்து கணக்கு முடித்துவிட்டான்'' என்று புலம்புபவர்கள்தான் அதிகம்.
இந்த உலகத்தில் நிகழும் எவ்வளவு சின்ன விஷயமாக இருந்தாலும் அது உங்களுக்கு என்ன சொல்கிறது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். இப்படிக் கற்றுக்கொள்வதன் மூலம்தான் உங்களை நீங்கள் வளர்த்துக்கொள்ள முடியும்.
வாழ்வின் ஒவ்வொரு சம்பவமும் மிகப் பெரிய இரகசியங்கள் பொதிந்தது. இந்த உண்மை, நாம் மனிதர்களுக்கும் வாழ்க்கைக்கும் முழுமையாக மதிப்பளிக்க ஆரம்பிக்கும்போது மாத்திரமே தெரியும்.
மனிதர்களுக்கும் வாழ்க்கைக்கும் மதிப்பளிக்கக் கற்றுக் கொள்வதுதான் -கற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ளுகல்.
முழுமையாக மதிக்கக் கற்றுக்கொண்ட பிறகு குரு, வேதம், தியானம் அனைத்தும் உங்களைச் சுற்றியே இருப்பதை உணர்வீர்கள். வாழ்வின் இரகசியங்களைக் கற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். உலகையும் உறவுகளையும் மதிக்க ஆரம்பியுங்கள். உண்மை புலப்பட ஆரம்பிக்கும்.
கற்றுக்கெள்ள கற்றுக்கொண்ட பிறகு, கற்றுக் கொள்ள வேண்டிய நேரத்தில், கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம், வாழ்க்கையைப் பற்றிய இரகசியங்களே!
குணமுதிர்ச்சி
ஐஐடியில் இன்ஜினியரிங் படிக்கும்போது, "'என்னை சாதனையின் உச்சியைத் தொட வைத்த என் தந்தை ஒரு ஏமாளி. நானும் ஒரு ஏமாளி''என்றார்.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்த பிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் சேர்த்துவிட்ட நாங்கள், உலகில் வாழக் கற்றுக்கொள்ளவேயில்லை. 'வாழ்க்கை என்றால் என்ன?' என்ற கேள்விக்கு 'நாங்கள் ஏமாளி!' என்ற பதில்தான் கிடைக்கிறது. இதற்கு வழிசொல்லுங்கள்" என்று கேட்டார்.
ஒரு உண்மையை உறுதிசெய்து கொள்ளுங்கள்.... உங்களின் எல்லா உழைப்புகளும் உங்களின் உடலைப் பிழைக்க வைக்க மட்டுமே உதவும். அவற்றால் மனதைக்கூடப் பிழைக்க வைக்க முடியாது!
-
உடலைத் தாண்டிய மனதையும் உணர்வையும் பிழைக்க வைக்க, தழைக்க, குணமுதிர்ச்சிப் பெற வேண்டும். அதற்காகத் தனியாய் உழைக்க வேண்டும்.
-
குணமுதிர்ச்சியைப் பெறுவது, சாதாரண மனிதர் குணமடைவதற்கான மிக முக்கியமான படிகளில் ஒன்று.
குணமுதிர்ச்சியைப் பெறாதவன் வயோதிகனாயிருந்தாலும் சிறுபிள்ளைதான். குணமுதிர்ச்சியைப் பெற்றவன் சிறுபிள்ளையாயிருந்தாலும் அவன் முதிர்ந்த வயோதிகனுக்கு இணையே!
- கோபம் பயம் போன்றழைக்கப்படும் உணர்ச்சிகளைச் சுயக்கட்டுப்பாட்டில் வைத்திருந்து, தானும் மற்றவரும் பாதிக்கப்படாதவாறு உணர்ச்சிகளைக் கையாளும் திறன் குணமுதிர்ச்சி.
- உணர்ச்சிகளைச் சீராக்கி, தானும் மற்றவர்களும் பரவசமடையுமாறு வழிச் செய்யும் குணமுதிர்ச்சியே 'ஞானம்'.
குணக்கோளாறுகளைத் திரட்டிய குணமுதிர்ச்சியைப் பெற ஒருவர் செய்ய வேண்டிய முதல் செயல், தானும் மற்றவர்களும் குணக்கோளாறுகளால் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதைப் பட்டியலிடுவதுதான்.
'பட்டியலிடுவதே' குணக்கோளாறுகளைச் செய்து குணமுதிர்ச்சியை மறையச் செய்யும்.
உணர்வோடு பட்டியலிட்டுப் பாருங்கள், புரியும்.
இருவருக்கிடையேயான
விறுவிறுப்பான
தொலைபேசி
சம்பாஷனைகளின் தொகுப்பு ஒன்று…
ஞாயிறு: மாலை - மணி 6.30 (தொலைபேசியில்)
"என்ன தலைவா! கண்டுக்கவே மாட்டேங்கறீங்க! உங்களுக்கு ஏதாவது வேலையிருந்தா வீட்டுப் பக்கம் வர்ரீங்க, இல்லைனா கண்டுக்கவே மாட்டேங்கறீங்களே! ...
இன்னும் கொஞ்ச நேரம் பேசுங்க தலைவா! உங்க குரலைக் கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு."
★★★
காலை - மணி 7.30 (தொலைபேசியில்) திங்கள் :
"சனியனே, அந்த டி.வி. வால்யுமைக் குறைச்சி வை... போன்ல பேசறது காதுல விழல...
யார் பேசறது ?
ஒ, நீங்களா ?...
சரி சரி 'எதுவா இருந்தாலும் சாயங்காலம் 6 மணிக்கு நான் வீட்டுக்கு வந்த பிறகு பேசிக்கலாம். இப்ப போனை வச்சிடறேன்'.
★★★
மாலை - மணி 6.00 (வீட்டில்) திங்கள் :
"வாங்கோ! வாங்கோ!
உங்கள மாதிரி நல்லவங்க வீட்டுக்கு வர்றதுக்கு நாங்களெல்லாம் ரொம்ப குடுத்துவைச்சுருக்கனும் ... "
| வரிசை | தலையில் இருக்கும் ஒவ்வொரு முடியும் |
|---|---|
| எண் | |
| வரிசை | தினம் தினம் 0.01714 inch வளர்ந்துகொண்டே இருக்கிறது. தலைக்குள் இருக்கும் நீங்கள் ? |
★★★
மதியம் - மணி 3.00 (வழியில்) புதன்:
"சார், வளவளன்னு அறுக்காதீங்க. என்ன சொல்லனுமோ அதைப் பட்டுன்ணு சொல்லுங்க ...
தலைக்குமேல் வேலையிருக்கு ..... "
★★★
வெள்ளி : காலை -
"ஹலோ, Healer ஆனந்த ஸ்ரீதர் இருக்காங்களா ...
காலையிலிருந்து உங்க நினைப்பாவே இருக்கேன். உங்களைப் பார்க்கணும் போல இருக்கு…"
★★★
சாயங்காலம் - மணி 7.00 (தியான சிகிச்சை முகாமில்) சனி :
"எனக்கு ஆறுதல் சொல்லுவீங்கனு நினைச்சு வந்தா.. என்ன இப்படிப் பேசறீங்க ? நான்தான் எல்லாப் பிரச்சனைக்கும் காரணம்னு சொல்றீங்க.
உங்க வேதாந்தத்தை உங்களோடேயே வெச்சுக்கோங்க ... அளவிடுங்க!"
★★★
மாலை - மணி 6.30 (தொலைபேசியில்) ஞாயிறு :
"தலைவா!
'மனிதர்களின் குணம் மாறும் போது நிறம் மாறும். தரமும் மாறும்' என்ற உண்மையை ஒருவர் தன்னுடைய குணமுதிர்ச்சியினால் புரிந்து கொள்ளமுடியும்.
என்ன என்மேல கோபமா! மன்னிச்சுக்கோங்க தலைவா! வேகத்துல அப்படிப் பேசிட்டேன்... இன்னும் கொஞ்ச நேரம் பேசுங்க தலைவா! உங்க குரலைக் கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு!''
★★★
இத்தனை வெரைட்டியான முகங்களும் பேச்சும் தாண்டவமூர்த்தி என்னும் ஒரே ஒரு மனிதர், அனந்தப்ரீதர் என்னும் தியானபீட வரிசையில் சிகிச்சையளிப்பவர் ஒரே ஒரு காட்டியவை.
ஆச்சரியமாக இருக்கிறதா!
உங்களுக்கு ஆச்சரியமாகத் தோன்றினால் ...
நேரத்திற்கு நேரம் மனிதர்களும் நாமும்
முழுக்க முகங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறோம் உங்களுக்குத் தெரியவில்லை என்று பொருள்.
தாண்டவமூர்த்தி அவரின் குணம் போகிற போக்குக்கு, அது போடும் தாளத்திற்குத் தாண்டவமாடியதின் விளைவுதான், ஒருநேரத்தில், "தலைவா!", அடுத்த நேரம் "வளவளன்னு அறுக்காதீங்க, ஆளவிடுங்க" மீண்டும் பழையபடி "தலைவா!" என்று சொல்வதெல்லாம்.
மனிதர்களின் குணம் மாறும் போது நிறம் மாறும்.
நிறம் மாறும் மனிதர்கள், மற்றவர்களின் நிறம் மாறுவதைக் கவனிக்குமளவுக்கு தங்களின் நிறம் மாறுவதைக் கவனிப்பதேயில்லை.
நீங்களாவது கவனிக்கலாமே ...
தரமும் மாறும்' என்ற உண்மையை ஒருவர் தன்னுடைய குண முதிர்ச்சியினால் புரிந்துகொள்ளமுடியும்.
மற்றவர்கள் உணர்ச்சிக்கொந்தளிப்பால் தடுமாறிக் கோபப்படும் போது, பதிலுக்கு நாமும் கோபத்தையோ, வெறுப்பையோ காட்டினால், அது நாம் இன்னும் குணமுதிர்ச்சியைப் பெறவில்லை என்பதற்கான அறிகுறி.
"இவையிவை எனக்குப் பிடித்த விஷயங்கள்" என்று நாம் முத்திரை குத்தும் போதுதான், உணர்ச்சிக்கொந்தளிப்புக்கான வெடிமருந்து தயாராகிறது.
பிடித்த விஷயங்கள் எந்த அளவுக்கு சந்தோஷத்தைத் தருகிறதோ அதே அளவு நமக்குப் பிடிக்காத விஷயங்கள் நம்மைத் துக்கத்தில் ஆழ்த்தும். இதை விளக்கும்…
ஒரு அருமையான ஹஸிட் கூற்று.
கிளர்ச்சியின் ஆழம்தான் துக்கத்தின் உயரம்!
மனமுதிர்ச்சி பெற்ற ஒருவரை 'புகழ்ச்சி' - கிளர்ச்சிக்குள்ளாக்காது. 'இகழ்ச்சி' தளர்ச்சிக்குள்ளாக்காது.
தாண்டவமூர்த்தி கோபத் தாண்டவம், வெறுப்புத் தாண்டவம், சலிப்புத் தாண்டவம் ஆடிய போது ஸ்ரீதர் கொஞ்சம்கூடச் சளைக்கவில்லை.
எப்போதும் எதனாலும் அசைக்க முடியாத கருணை உணர்வோடு இருப்பதே, குணமுதிர்ச்சியின் பூரண வெளிப்பாடு.
இந்த நிலையைத்தான் நீங்கள் ஒவ்வொருவரும் அடைந்து, வாழ்வின் ஆனந்தத்தை ருசிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.
முதிர்ச்சி பெறுவதற்கு ஜென் ஞானி மூரெ-சென்னின் அழகான கூற்று ஒன்று...
காற்றில் சருகாகிவிடு! ஆற்றில் தக்கையாகிவிடு!
- என்ன ஒரு அற்புதமான பொன்மொழி!
சருகு காற்றோடு காற்றாகச் செல்லும். தக்கை நீரோடு நீராகச் செல்லும். ஆனால், சருகு சருகாக இருக்கும். தக்கை தக்கையாக இருக்கும்.
இரண்டுக்குமே கஷ்டம் இருக்காது.
இந்த நிலையைத்தான் முதிர்ச்சி என்று அழைக்கிறேன்.
வாழ்க்கை எனும் ஆற்றில் நாம் தக்கையாக மாறிவிடுவதுதான் குணமுதிர்ச்சி. மாறிவிட்டால்... 'மற்றவர்களும் நம்மைப் போன்றே உணர்ச்சிக்கொந்தளிப்பில் தவிப்பவர்கள்தான். அவர்களும் நம்மைப் போன்றே சுயக்கட்டுப்பாட்டைச் சில நேரங்களில் இழந்து, செய்வதறியாது மற்றவர்கள் மீது கோபத்தைக் கொட்டித் தீர்ப்பவர்கள்தான்' என்ற
உண்மை புரிய வரும்.
கோபத்திற்குப் பதில் கருணை பிறக்கும். வெறுப்பிற்குப் பதில் அன்பு பிறக்கும். சலிப்பு களிப்பாக மாறும். எப்போது ? குணம் முதிர அனுமதித்தால்!
அர்த்தமுள்ள சம்பவம்...
பரத ரிஷியிடம் குடும்பஸ்தர் "நான் துறவியாக விரும்புகிறேன்" என்றார். ரிஷி "பொய். உலகைச் சந்திக்க விருப்பம் இல்லை என்பதை நாசுக்காகச் சொல்கிறாய்" என்றார். மேலும், ''சம்சாரியாய் இருப்பதற்கான அதிகபட்ச தகுதிதான் சந்நியாஸியாய் இருப்பதற்கான குறைந்தபட்ச தகுதி. இப்போது சொல்... துறவியாகிறாயா?" என்றார்.
- நீங்கள் யார் என்பது முக்கியம் அல்ல. குணமுதிர்ச்சியே முக்கியமானது.
எல்லாவற்றையும் துல்லியமாகக் கிரகியுங்கள் – இது ஒரு தியானம்
கட்டைப் பாறையை இறுகப்பற்றித் தூக்கும் விரல்கள், ஒரு டியூப்லைட்டைத் தூக்கும்போது தன்னை மாற்றிக்கொள்கிறது. பதமாகப் பற்றுகிறது. கடப்பாரையை இறுக்குமளவுக்கு டியூப்லைட்டைப் பற்றினால்.. டியூப்லைட்டின் கதி என்னவாகும்!
இந்தப் பொருளுக்கு இவ்வளவு பவுண்ட் பிரஷர் கொடுத்துத் தூக்க வேண்டுமென விரல்களுக்கோ, மூளைக்கோ தனிப்பட்ட பாடம் எதுவும் எடுக்கப்படவில்லை. இருந்தும் ஒரு பொருளைக் கையாள அதற்குத் தேவையான அளவு தாண்டி அழுத்தம் நாம் தருவதில்லை. காரணம் மூளை வளர்ச்சி!
இதேபோல், விதவிதமான மனிதர்களின் குணம் கண்டு கையாளத் தெரிந்து விட்டால்... அதுதான் குணமுதிர்ச்சி, பக்குவம். ஞானம்.
மூளைரீதியாகப் பகுத்து ஆராய்வதால் மனிதர்களின் குணத்தைப் படித்து விட முடியாது. இதற்கு இதயரீதியான, உணர்வுரீதியான அணுகுமுறை தேவை. இந்தக் குணமுதிர்ச்சியைப் பெற சில டிப்ஸ்...
கிரகி ... குணம் முதிரும் !
- முதலில் உங்களின் வார்த்தைகள், குரல், முகபாவம் போன்றவற்றை ஒவ்வொரு பேச்சின் போதும் முடிந்தளவுக்கு கிரகியுங்கள்.
- அடுத்து, உங்களின் பேச்சு மற்றும் அசைவுகளால், மற்றவர்களின் முகபாவம், கண்கள், குரல், வார்த்தைகள் எந்த அளவுக்கு மாறி வெளிப்படுகின்றன என்பதை கிரகியுங்கள்.
கடைசியாக, அதே வார்த்தைகள், முகபாவனைகளை மற்றவர்கள் உங்களை நோக்கி அனுப்பியிருந்தால், உங்களுக்குள் என்ன நிகழ்ந்திருக்கும் என ஆழமாய் உணர்ந்து பாருங்கள்.
இதை எல்லா நல்ல, கெட்ட நிகழ்வுகளுக்கும் செய்து பாருங்கள். மற்றவர்களால் உங்களுக்குள்ளும் உங்களால் மற்றவர்களுக்குள்ளும் ஏற்படும் மாற்றங்களைத் துல்லியமாய் கிரகியுங்கள். இது ஒரு தியானம்.
இந்தச் செயல்களைச் செய்ய செய்ய, நீங்கள் கற்றுக்கொள்ளும் பாடங்களே, உங்களை முதிரச் செய்யும், குணமுதிர்ச்சி பெறுவீர்கள்.
நேசம்
திருவண்ணாமலையில் பொதுஇடமொன்றில் எதிர்பாராத விபத்தொன்று ஏற்பட்டது. விபத்துக்குள்ளானவர் மயங்கிக் கிடந்தார்.
இதைப் பார்த்து ஓடிவந்த அந்தப் பெண்மணி அடிபட்டவரை நெருங்கி, ஏதோ உதவிகள் செய்து கொண்டிருந்தார். கூட்டம் அந்த இடத்தைச் சுற்றிக்கொண்டது.
அப்போது திடகாத்திரமான ஒரு மனிதர் கூட்டத்தைக் கலைத்து உள்ளே நுழைந்தார். உதவி செய்து கொண்டிருந்த பெண்ணை விலகுமாறு சைகை செய்துவிட்டு, "நான் விபத்துக்கு முதலுதவி செய்வது பற்றி டிப்ளமேர் முடித்தவன். நான் இனி பார்த்துக் கொள்கிறேன்" என்றார்.
திடீரென சத்தமிட்டார், "உடனே ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள்! இதற்குமேல் என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லையே ... "
மெல்ல அப்பெண்மணி சொன்னர்: "சத்தமிடாதீர்கள். நான் இங்குதான் இருக்கிறேன் என்று. அவர் ஒரு டாக்டர் எனத் தெரிந்ததும் அந்த மனிதர் தலைகவிழ்ந்தார்.
-
எடுத்தோம் கவிழ்த்தோம் எனச் செயல்படும் மனிதர்கள் எப்போதும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். உலகில் இப்படி நடந்துகொண்டால், அவமானத்தோடு நின்றுவிடும். அதேபோல் உறவுகளிடம் நடந்துகொண்டால் ... ?
-
நேசம் புதிரானது.
அன்பை தியானமாக்கு. தியானத்தை அன்பாக்கு.
உங்களை நீங்களே நேசிக்காமல், மற்றவர்களை நேசிக்க முயல்வது உங்களை நீங்களே வெறுப்பதற்குச் சமம்.
நேசம் என்பது பலர் எதிர்பார்த்தும் கிடைக்காத ஒன்று! பலர் மற்றவருக்குக் கொடுக்க முயற்சித்தும் கொடுக்க முடியாத ஒன்று! என்ன, குழப்பமாக இருக்கிறதா ?
நேசத்தைப் பற்றிப் பலர் பேசியிருந்தாலும் அதில் முக்கியமான சிலரின் கூற்றைத் தெரிந்து கொண்டால் உங்கள் குழப்பம் தீர்ந்துவிடும்.
| புத்தர் | 'உன்னை நேசி'. |
|---|---|
| இயேசு | 'உன்னை நேசிப்பது போல் பிறரையும் நேசி'. |
| ரிஷி | 'உன்னை நேசிக்காமல் பிறரை நேசிக்கவே முடியாது '. |
இந்த மூன்று பேரின் கூற்றையும் தெரிந்து கொண்ட பிறகு, கீழ்க்கண்ட உண்மைகளைப் புரிந்துகொள்வது சுலபம்.
''பிறரை நேசிக்கும் அளவுக்குதான் நீங்கள் உங்களை நேசிக்க முடியும்.
உங்களை நேசிக்கும் அளவுதான் பிறரை நீங்கள் நேசிக்கும் அளவு.
வேஷம் அல்லது உள்வெறுப்பு கலந்த நேசமாக உங்கள் நேசம் இருந்தால் ... அது பிறரைக் தீண்டுவதைவிட
முதலில் உங்களைத்தான் அதிகம் தீண்டும்'.
சர்வ சாக்கிய முனியின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் மூலமாக நேசத்தை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
ஒரு பக்தை சர்வ சாக்கிய முனியிடம் தன் குடும்பப் பிரச்சனைக்குத் தீர்வு தேடி வந்தார்.
சர்வ சாக்கிய முனி கருணை கலந்த குரலில், "என்னம்மா! என்ன பிரச்சனை? ஏன் இவ்வளவு சோகம் ?" என்றார்.
பக்தை, "சாமி! என் கணவரை நான் முழுமையாக நேசிக்கிறேன். ஆனால், அதை அவர் புரிந்துகொள்ளவே இல்லை. இதுதான் பிரச்சனை. இதை எப்படித் தீர்ப்பது ?"
அதுவரை அமைதியாக இருந்த சர்வ சாக்கிய முனி, கோபம் கலந்த குரலில், "பொய் சொல்கிறாய்" என்றார்.
பக்தை, "என்ன பொய் சொல்கிறேன்?" குழப்பமாகக் கேட்டார்.
சாக்கிய முனி, "உன் கணவரை நேசிப்பதாக நீ சொல்வது முழுப் பொய்".
பக்தை, "என்ன சாமி சொல்றீங்க ?" என்றார்.
சாக்கிய முனி, "முதலில் நீ உன்னை நேசி. அப்புறம் உன் கணவரை நேசிப்பது பற்றி யோசிக்கலாம்" என்று கூறி முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டார்.
பக்தை, "இல்ல சாமி ... நான் கூறுவது உண்மை. என் கணவரை நான் முழுமையாக நேசிக்கிறேன்" என்று கூறினார். முழுமையாகத்தான்
யி
உண்மையாய் அன்பு செய்யும் ஒரு மனிதரைத் தேடுகிறேன். ஆனால் கண்டுபிடித்தபாடில்லை ... -சாக்ரடீஸ்
சாக்கிய முனி, "வெறும் வேஷம்…" என்றார்.
பக்தை, "அப்படியென்றால்… என் கணவர் நல்லவர்தான். நான்தான் வேஷம் போட்டு பிரச்சனை உண்டு பண்ணுகிறேன் என்று சொல்ல வருகிறீர்களா?" என்று கேட்டார்.
சாக்கிய முனி, "ஏம்மா, நீகூட ரொம்ப நல்ல பெண்தானே!" என்று தெளிவாகக் கூறினார்.
சாக்கிய முனியின் இந்த வரிகள் பக்தையை யோசிக்க வைத்தது. " தொடக்கத்திலிருந்தே நான் கேட்கும் எல்லா கேள்விக்கும் முரண்படுவது போல இவர் பேசினாலும் ஏதோ ஒரு பெரிய விஷயத்தை எனக்குப் புரியவைக்க முயற்சிக்கிறார் போலத் தெரிகிறதே ...
நான்தான் அது புரியாமல் வீண் விவாதம் செய்து நேரத்தை வீண்டிக்கிறேனோ!" என்ற சிந்தனை உதித்த அடுத்த வினாடியே, வாக்குவாதத்தை பக்தை தன் மனதிலிருந்தே தூக்கி எறிந்துவிட்டார்.
பணிவோடு, சாக்கிய முனி சொல்ல நினைப்பதை முழுமுமையாகக் கேட்பது என்ற முடிவோடு, "சாமி, இதுநாள் வரை நான் நேசித்தது… மற்றவர்கள் என்னை நேசித்தது ... இதெல்லாம் என்ன ?" என்று பணிவோடு கேட்டார்.
சாக்கிய முனி, "எல்லாம் பாச நாடகம்" என்றார்.
பக்தை, "சரி! பாச நாடகத்தைச் சரியாக நடத்த என்ன செய்வது?" என்று திரும்பவும் கேட்டார்.
சாக்கிய முனி, "முதலில் உன்னை நேசி. உன்னை நேசிக்காமல் பிறரை நேசிக்க முயற்சிப்பது, ஆற்றில் தவிக்கும் நீச்சல் தெரியாத ஒருவரை,
| வரிசை | விளக்கம் |
|---|---|
| எண் | |
| வரிசை | ஒருவர் தன்னையே நேசிக்க ஆரம்பிப்பது ஆனந்த மாளிகையின் திறவுகோல். |
நீச்சல் தெரியாத இன்னொருவர் காப்பாற்ற நினைத்து ஆற்றில் குதிப்பதற்குச் சமம்.
உன்னை நேசிப்பது எப்படி என்பதையே தெரிந்துகொள்ளாமல் மற்றவரை நேசிக்கிறேன் என்ற பெயரில் நீ செய்வது எல்லாமே வெறும் வேஷம்தான். பாச நாடகம்தான்!
'நேசத்தை' காட்டி உன் கணவரை உன் கைக்குள், உன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க, 'இவ்வளவு நேசிக்கிறேன்' என்ற பெயரில் முயற்சித்து இருக்கிறாய்.
நீ எதிர்பார்த்தபடி ஏதும் நடக்கவில்லை. எனவே கணவர் மீது பழியைத் தூக்கிப் போட்டு விட்டாய்.
இப்போது பிரச்சனையின் ஆணிவேர் எங்கே இருக்கிறது என்று புரிகிறதா?
நேசம் என்ற பெயரில், பாச வேடமிட்டு நீயும் மற்றவரும் நாசமடைவதற்கு இன்றே ஒரு முற்றுப்புள்ளி வை.
முதலில் உன்னை நேசிக்க ஆரம்பி.
மற்றவை எல்லாம் தானாகப் புலப்பட ஆரம்பிக்கும்" எனச் சொல்லி முடித்தார்.
குருவின் மீதிருந்த பக்தியால், குரு போதித்ததை நடைமுறைப்படுத்த சிரத்தையோடு முயன்ற பக்தை, நேசத்தைப் புரிந்துகொண்டு வாழ்க்கையை வென்றார்.
நேசத்தை முதலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் மற்றவரை நேசிப்பதைப் பற்றி நாம் யோசிக்கவே முடியும்.
நேசிக்க ஆரம்பி ... முதலில் உன்னை!
நேசம் உங்களை நிரப்பிய பின் மற்றவர்களுக்கு வழிந்து செல்லட்டும்!
உங்களின் கஜானாவிலிருக்கும் அமைதியும் ஆனந்தமும் உங்களின் அன்புத் தரத்தை நிர்ணயிக்கின்றன.
நேசம் என்ற உண்மையான அன்பு நம்முள் மலராத வரை ...
நேசம் என்ற பாசவலையால் ஒருவரை ஒருவர் மனதளவில் கட்டிப் போட்டு, மற்றவரை நம் கைக்குள் வைத்திருக்க உதவும் ஒரு தந்திரவலையாகத்தான் நேசத்தை நாம் பயன்படுத்த முடியும்.
பாசம் என்ற உரிமையைப் பயன்படுத்தி நம் நெருங்கிய உறவுகளுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்க அவர்களை வைத்திருக்க முயற்சித்திருக்கிறோமா ? ஆராயுங்கள். உண்மை புரியும்.
உங்கள் உறவுகளுக்கு முழுச் சுதந்திரம் நீங்கள் கொடுக்கவில்லை என்றால், தெரிந்துகொள்ளுங்கள் ... இவ்வளவு காலமாக நேசம் என்ற வேஷமிட்டு 'பாச நாடகங்கள்' தான் நிகழ்ந்திருக்கிறது. உண்மையான நேசம் நிகழவில்லை.
நேசம் என்பது உண்மையான அன்பு மலர்.
ஒருவர் தன்னையே நேசிக்க ஆரம்பிப்பது ஆனந்த மாளிகையின் திறவுகோல்.
இது ஒரு சிறந்த தியான முறை.
நம்மை நாமே நேசிப்பதைப்பற்றி யோசியுங்கள்.
நேசிக்க ஆரம்பியுங்கள். அன்பு என்னும் மலர் உள்ளுக்குள் மொட்டாகக் காத்துக்கொண்டிருக்கிறது.
அன்பு மலர - நீங்கள் வளர - நேசியுங்கள்! வேறு வழியேயில்லை நீங்கள்தான் உங்களுக்கு உதவ வேண்டும்.
அர்த்தமுள்ள சம்பவம்
லைலாவிடம் மஜ்னு கேட்டதற்கு, "அன்பே! 'எல்லோருக்கும் தெரிந்த, யாருக்கும் புரியாத அது எது?' என நேற்று நீ கேட்ட விடுகதையின் பதில் என்ன?" புன்னகைத்த லைலா, "அது அன்பு" என்றாள்.
நேசம் உங்களின் வசமாகப் புரிந்துகொள்ளுதல் விசாலமாகட்டும் !
சில வருடங்கள் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ்ந்ததால், ஒரு நண்பரைப் பற்றி இன்னொரு நண்பரால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியுமா ?
பல வருடங்கள் ஒன்றாய் வாழ்ந்த தம்பதியினரே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளத் திக்கித் திணறும் போது, சில வருடங்களில் இன்னொருவரைப் பரிந்து கொள்வது எப்படிச் சாத்தியம் ?
கொஞ்ச காலம் பழகியபின், ஒருவரை நமக்குப் பிடித்துவிட்டால், அவர்களை முழுமையாகப் புரிந்துகொண்டதாகவே நம்புகிறோம்.
நாம் அவரைப் பற்றிப் புரிந்து வைத்திருப்பதற்கு நேர்மாறாக அவர் நடந்துகொள்ளும்போது, அந்த உறவு புதிராகத் தெரிகிறது. பின் பூசலாக அது வெடிக்கிறது.
விளைவு, நம் நேசம் நாசமாகிறது.
அவரின் நேசம் "மோசம்" என்ற முடிவு உருவெடுக்கிறது.
இந்தக் குளறுபடிகளுக்குக் காரணம் அவர்களின் நடத்தையா, இல்லை அவர்களின் சில பகுதிகளைத் தவறாகச் சுட்டிக்காட்டும் நம் புரிந்துகொள்ளுதலா?
தீவிரமாக யோசித்து தீர்வு காணப்பட வேண்டியது.
மனிதர்களை எந்த அளவுக்குப் புரிந்து வைத்திருக்கிறீர்களோ, அந்த அளவுக்குத்தான் உங்களைப் பற்றி நீங்கள் புரிந்து வைத்திருப்பீர்கள். காரணம், அவர்களை நேசிக்கும் அளவுதான் உங்களை நீங்கள் நேசிப்பதின் அளவு!.
'யோசனைகள்' ஆழமில்லா மேலோட்டமான எண்ணங்கள். 'சிந்தனைகள்' ஆழமான விழிப்புணர்வு மிகு பல்நோக்கு எண்ணங்கள்.
நேசத்தின் புரிந்துகொள்ளுதலின் தரம் உயர வேண்டும்.
புரிந்துகொள்ளுதல் ஆழமாக ஆழமாக நேசத்தின் ஆழம் அதிகமாகும்.
சிறிய ஒரு சிந்தனைத்திறனை முழுமையாகப் பயன்படுத்துங்கள்.
உங்களின் பாசத்திற்குரியவர்களைப் பற்றிய அபிப்பிராயங்களை மனதுக்கு எடுத்து வாருங்கள்.
எவ்வளவு தூரம் உங்களையும் உலகையும் புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். புரிந்துகொள்ளுங்கள். எல்லாம் புரிபடும்.
உள்ளது உள்ளபடி தெரிய ஆரம்பிக்கும் போது ... நேசம் உங்களின் வசமாகும். வாழ்வு வசுந்தமாகும்.
புரிந்துகொள்ளுதல் விசாலமானால், உலகமே விசாலமாவதைக் காண்பீர்கள்.
மனத்தை ... யோசனைகள் இழுத்தடிக்கும். சிந்தனைகள் செதுக்கும் !
என்ன தெரியும் நமக்கு ?
ஜொராஸ்ட்ரிய சீடன், "என் குரு பெரிய ஞானி" என்றார்.
பண்டிதர், "உன் குருவுக்கு என்ன தெரியும் ?" என்றார்.
ஜொராஸ்ட்ரிய சீடன், "தனக்குத் தெரியாதவற்றை, தெரியாது என்று தைரியமாகச் சொல்லத் தெரியும்" என்றார்.
- "எனக்கு எல்லாம் தெரியும்" என்ற எண்ணமிருக்கும் வரை, எதையுமே புரிந்துகொள்ள முடியாது. "ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை ?" என்பதைக்கூட புரிந்துகொள்ளமுடியாது!
- "எனக்கு என்ன தெரியும் ?" என்ற கேள்வி தோன்றிய பின்புதான், ''எதையுமே என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை'' என்பதை ஓரளவாவது புரிந்துகொள்ள முடியும்.
"எனக்கு என்ன தெரியும் !" என்ற ஆச்சரியம் அரும்பிய பின்புதான் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள ஆரம்பிப்பீர்கள்! "தெரியாது" என்ற உண்மை புரிய ஆரம்பிக்கும்.
'எல்லாம் தெரிந்தவன் எல்லாம் தெரிந்ததாக எப்போதுமே காட்டிக்கொள்ள மாட்டான்'. - ஞானம்
'எல்லாம் தெரியாதவன் எல்லாம் தெரிந்தவனாக காட்டிக்கொள்ளவதைத் தவிர்க்க முடியாது'. - அஞ்ஞானம்
வெளியூர்க் கல்லூரியில் தரன் பயின்றபோது ஓவியத்தை, பல வருடம் கழித்து வீட்டிற்கு வந்திருந்த தன் நண்பரான டாக்டரிடம் காட்டினார் நிட்டி.
தன் நண்பர் ஓவியத்தின் சிறப்புப் பற்றி என்ன சொல்லப் போகிறார் என ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
நண்பர் பதிலேதும் சொல்லாததால், "ஓவியத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று நிட்டி ஆர்வம் பொங்க கேட்டதற்கு, "இந்தப் படத்திலிருக்கும் மனிதருக்குத் தோல் வியாதி இருக்கிறது" என்றார். அந்த பதிலால் நிட்டி நொந்து போனார் !
நண்பரின் பதில் உண்மையானது என்றாலும், அது முழுமையானது அல்ல. "தெரியும்" என்ற எண்ணம் இருக்கும்வரை இதுபோன்ற சிறிய வட்டத்துக்குள் சிக்கிக் கொள்வோம். வளர்ச்சி தடைப்பட்டு விடும்.
ஆனால், நாம் வளர்ந்தவராகவும் மிகச் சரியாக எல்லாவற்றையும் செய்பவராகவும் நம்ப ஆரம்பிப்போம். "எனக்குத் தெரியாதது என்ன இருக்கிறது" எனும் சிறுவட்டத்திற்குள் சிக்கிக் கொண்டால்!, வாழ்வின் சுவையானப் பகுதிகளைக் கசக்கி எறியும் ஒருவராக மாறிவிடுவோம் . .
அர்த்தம் பொதிந்த அற்புதமான வரலாற்று நிகழ்ச்சியொன்று...
ஜியார்ஜ் குருதீப் ஆன்மீக உலகின் ஒரு ரத்தினக்கல். அவர் ஒரு ஞானி. அவுஸ்பென்ஸ்கி ஒரு திறமையான கணிதமேதை. ஒரு சிறந்த தத்துவவாதி.
ஜியார்ஜ் குருதீப் மிகவும் வித்தியாசமானவர். அவரிடம் எந்த ஒரு பிரச்சனையை எடுத்துச் சென்றாலும் அதற்கு மிகச் சரியான தீர்வு கொடுப்பார் என்று குருதீப்பைப் பற்றி அவுஸ்பென்ஸ்கி கேள்விப்பட்டார். இதைக் கேள்விப்பட்டதும் அவரின் பல நாள் கேள்விகளுக்கு விடை கிடைக்க, ஜியார்ஜ் குருதீப்பைச் சந்திக்கச் சென்றார் அவுஸ்பென்ஸ்கி.
அவுஸ்பென்ஸ்கி, ஜியார்ஜ் குருதீப்பிடம், "உங்களிடமிருந்து பல விஷயங்களைக் கேட்டுத் தெளிவு பெற நான் விரும்புகிறேன். என்னுடைய கேள்விகளுக்கு விளக்கம் கொடுப்பீர்களா?" என்று கேட்டார்.
குருதீப், "நிச்சயமாக" என்றார்.
மெத்தப் படித்தவர்களுக்கும் நிறைய எனக்குத் தெரியும் என்ற எண்ணம் படைத்தவர்களுக்கும்தான் இயற்கையிலேயே நிறைய சந்தேகங்களும் கேள்விகளும் வருகிறது.
ஏகப்பட்ட விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பது நம்மைப் பொறுத்தளவு பெருமைக்குரியது. 'இதனால் தனிமனித வளர்ச்சிக்கு பலன் என்ன?' என ஆராய்ந்து பார்த்தால், குறிப்பிடுமளவிற்குப் பலனில்லை என்பதே உண்மை.
| தெரிவது | 'தெரியாது' என்பது |
|---|---|
| 0° | புரியாதவரை- |
| யா | வாழ்வின் அர்த்தமும் புரியாது. |
| பிறந்த காரணமும் தெரியாது. |
தேன் இனிக்கும். மாம்பழம் தித்திக்கும். பால் இதமளிக்கும் என்று பலமுறை படித்ததால், அறிவின் செறிவு அதிகமாகலாம்.
ஆனால் தெளிவு பிறக்காது. பலன் கிடைக்காது.
இது மருத்துவம், விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட எல்லா அறிவுக்கும் பொருந்தும்.
ஒரு சொட்டுத் தேன், ஒரு துண்டு மாம்பழம், ஒரு துளி பாலை ஒரே ஒருமுறை சுவைத்துப் பார்த்திருந்தால் போதும், இனிப்பு என்ற அறிவு, 'இனித்தல்' என்ற அனுபவமாக மாறியிருக்கும்.
தெளிவு பிறந்திருக்கும். பலன் கிடைத்திருக்கும்.
அவுஸ்பென்ஸ்கி தன்னுடைய பெரிய படிப்பால் சுயவாழ்க்கைக்குத் தேவையில்லாத பலவற்றையும் அறிந்து வைத்திருந்தார்.
அவ்வளவு அறிந்திருந்தும் அறிவின் பயனாகிய அனுபவம் அவருக்குக் கிடைக்கவில்லை. அதன் விளைவுதான் சந்தேகங்கள்! கேள்விகள்!
ஞானிகளின் அணுகுமுறை எப்போதுமே வித்தியாசமாக இருக்கும். ஆனால், பிரச்சனைக்குச் சரியான தீர்வு தரக்கூடியதாக இருக்கும்.
குருதீப், "அவுஸ்பென்ஸ்கி! நாம் பேச ஆரம்பிப்பதற்குமுன் ஒரு சிறு காரியத்தைச் செய்து முடித்துவிடுங்கள். ஒரு காகிதத்தை எடுத்து உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும் என்பதை ஒரு பெரிய பட்டியலிடுங்கள்.
உங்களுக்கு என்னென்ன தெரியும் என்பதைப் பற்றி ஒரு முடிவுக்கு நாம் இருவரும் வந்துவிட்டால், அது நம் இருவருக்குமே மிகப் பெரிய உதவியாக இருக்கும். உங்கள் நேரம் வீணாகாது. என் நேரமும் மிச்சமாகும்.
உங்களுக்கு உண்மையிலேயே தெரியாகிருக்கும் சில விஷயங்களில் மாத்திரம் நான் என் கவனத்தைச் செலவிட்டு ஒரு நல்ல தீர்வு கொடுக்க முடியும்" என்றார்.
அவுஸ்பென்ஸ்கி பக்கத்து அறைக்கு ஒரு வெள்ளைக் காகிதத்தையும் ஒரு பேனாவையும் எடுத்துக்கொண்டு தனக்குத் தெரிந்த எல்லா விஷயங்களையும் பட்டியலிடச் சென்றார்.
ஒரு நிமிடம்…
இரண்டு நிமிடம்…
நிமிடங்கள் தாண்டத் தாண்ட அவுஸ்பென்ஸ்கிக்கு நடுக்கம் ஏற்பட ஆரம்பித்தது. அவரது நம்பிக்கை, தெளிவு எல்லாம் ஆட்டம் காண ஆரம்பித்தது.
தனக்குத் தெரியும் என்று இதுவரை நம்பிக் கொண்டிருந்த ஒவ்வொன்றையும் "உண்மையாகவே புரிந்து கொண்டிருக்கும் விஷயங்கள் எவ்வளவு ?" என்ற பூதக்கண்ணாடியால் ஆராய்ச்சி செய்யச் செய்ய, அவுஸ்பென்ஸ்கிக்குள் தடுமாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.
இந்த நிகழ்ச்சி நடைபெறும் நேரம் கடுங்குளிர் காலம். அந்தச் சூழலில் ஒருவருக்கு வேர்த்துக் கொட்டுவதற்கான வாய்ப்பே இல்லை. அவுஸ்பென்ஸ்கிக்கு வேர்த்துக் கொட்டியது!
அடுத்தவர்களைப் பற்றிச் தெரிந்திருப்பதில் பாதியளவுக்குக் கூட தன்னைப் பற்றி மனிதர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை. ஏன்? பதில் காணுங்கள். உங்களின் தலைவிதியையே மாற்றியமைக்க சூட்சுமம் இந்தப் பதிலுக்குள் ஒளிந்திருக்கிறது!
காகிதத்தில் ஒரு வார்த்தைகூட எழுத முடியவில்லை.
"எனக்கு இவ்வளவு தெரியும்" என்று நம்பிக்கொண்டிருந்த ஒவ்வொரு விஷயத்திற்கும் "எனக்குத் தெரியவில்லை. இன்னும் தெரிந்துகொள்ள வேண்டியது பல இருக்கிறது. முழுமையாக எனக்கு எதுவுமே தெரியாது"
உங்களுக்கே தெரியாத பெரிய எதிரி மனம்! எதிரிகளையும் துன்பங்களையும் உருவாக்கும் எதிரியை சரியாய் எடை போடுங்கள். இந்த எதிரி நண்பனானால், ஜென்ம விரோதியையும் நண்பனாக்கும் 'வசியகுணம்' உங்களைத் தொற்றிக்கொள்ளும்.
என்ற பதில் மாத்திரமே கிடைத்தது.
45 நிமிடங்கள் கழிந்த நிலையில் ... முழுவதுமாக வேர்த்துக் கொட்டியிருந்த நிலையில்... ஒரு வார்த்தைகூட பேச முடியாத நிலையில், உறுதிபட அவருக்குத் தெரிந்தது. " எனக்கு ஒன்றுமே தெரியவில்லை'' என்று! இந்த உணர்வுத் தெளிவோடு குருதீப் காலடியில் அவுஸ்பென்ஸ்கி விழுந்தார்.
தன்னைப் பற்றி முழுமையாய் தெரிந்து கொள்ளாதவரே அடுத்தவரின் குறைகளைப்பற்றி அவர்களின் குணம், நடை, உடை, பாவணையை அவர் நோக்கப்படி அலசி ஆராயத் துடிப்பார்.
ஜியார்ஜ் குருதீப், அவுஸ்பென்ஸ்கியை மெல்லிய புன்னகையோடு பார்த்தார். "உங்களுக்குள் நிகழ்ந்த இந்த மாற்றத்தால் ஒரு விஷயம் உறுதியாகியிருக்கிறது.
'உண்மையில் தெரியவில்லை' என்ற உணர்வுத் தெளிவு பெற்றதால், எல்லா இடங்களிலும் தேடிய பின்னும் கிடைக்காத அந்த ஏதோ ஒன்றை (உங்களின் எல்லா கேள்விகளுக்கும் பதில் கரும் ஞானத்தை) பெறுவதற்கான அடிப்படைத் தகுதியை அடைந்திருக்கிறீர்கள்'' என்று அதே சிரிப்போடு குருதீப் சொல்லி முடித்தார்.
அவுஸ்பென்ஸ்கி போலவே நாமும் ஒரு சிறிய ஆராய்ச்சியை செய்து பார்த்தால்…
ஒவ்வொருவரும் நிச்சயமாக தெரிந்துகொள்ள வேண்டிய அந்தத் தெரியாததை (Unknown is God) நாம் தெரிந்துகொள்ள முடியும்.
அதிகபட்சமாக நமக்கெல்லாம் என்ன தெரியும் ? சில மனிதர்கள்... சில விஷயங்கள்... சில இடங்கள்...
- "யார், யார் நமக்குத் தெரிந்தவர்கள் ?" என்று ஒரு பட்டியலிடலாம்.
உங்களின் பெயர் மற்றும் உங்களை ஒருமுறை பார்த்து தெரிந்து வைத்திருப்பவர்கள் இரண்டாயிரம் பேர்.
உங்களின் பெயர், விலாசம், பெற்றோர் வரை தெரிந்து வைத்திருக்கும் நண்பர்கள், உறவினர்கள் ஆயிரம் பேர்.
உங்களின் குணம், நடவடிக்கைகள் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பவர்கள் பத்து பேர்.
மொத்தமாக உங்களோடு நேரடியாகச் சம்பந்தபட்டவர்கள் 300-லிருந்து 350-க்குள் இருப்பதே பெரிய விஷயம்! சந்தேகம் இருப்பவர்கள் ஒரு பேப்பரை எடுத்துப் பட்டியலிட்டுப் பார்த்தால் உண்மை புரியும்.
இத்தனை கோடி மக்கள் இருந்தும் அதில் நமக்குத் தெரிந்திருப்பது சில மனிதர்கள் மட்டுமே. அந்தச் சிலரில் நம்மை உண்மையாகப் புரிந்து கொண்டவர்கள் 'யார்? யார்?' என்று எண்ண ஆரம்பித்தால் ஐந்து விரல்களைத் தாண்டுவது பலருக்குக் கடினம்.
| சூட்சுமம் - 1: | தெரிந்ததெல்லாம் 'தெரியாததற்குள்' ஒடுங்குகிறது. |
|---|---|
| சூட்சுமம் - 2: | 'தெரிந்ததற்குள்' தெரியாததெல்லாம் ஒடுங்கியிருக்கிறது. |
நம் கதி இப்படியிருக்க, மற்றவர்களின் கதி ஒரு சிறு ஆய்வு செய்யலாமே! எவ்வளவு விஷயங்கள் நமக்குத் தெரியும் ?
ஒவ்வொரு துறையிலும் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் இருக்க, பன்னிரெண்டாவது வரை வருடத்திற்கு ஐந்தாறு புத்தகங்கள் படித்ததைத் தாண்டி, கல்லூரியில் ஒவ்வொரு வருடத்திற்கும் படித்த ஒரு சில புத்தகங்கள் மற்றும் அவ்வப்போது படித்த பத்திரிகைகள், கதைகள், டி.வி.யில் பார்த்த சில சம்பவங்கள், செய்திகளைத் தாண்டி உண்மையில் நமக்கு என்ன தெரியும் ?
நம்முடைய சொந்த ஊரிலேயே நாம் இதுவரை ஒருமுறைகூட பார்த்திராத தெருக்கள், வீடுகள் நிறைய இருக்கும். சொந்த ஊரே அப்படியிருந்தால் உலகம் ?! ?!
நமக்குத் தெரிந்த சில மனிதர்கள், சில விஷயங்கள், சில இடங்களை மட்டும்தான் மையமாக வைத்து நாம் இயங்குகிறோம்.
உண்மையில், நிஜத்தில் ஒரே ஒரு மனிதரைப் புரிந்துகொள்வது என்பது இமாலய சாதனை! உங்களை முழுமையாகத் தெரிந்துகொண்ட, புரிந்துகொண்ட ஒருவரைக்கூட இதுவரை சந்திக்கவில்லை என்பதுதான் இதற்கு சாட்சி.
ஒரு ஜென் ஞானியின் சுருக்கமான கூற்று இதை நாம் புரிந்து கொள்ள உதவும்.
உன்னைப் புரிந்துகொள்ள வேண்டுமா ? - உலகைப் புரிந்துகொள்! உலகைப் புரிந்துகொள்ள வேண்டுமா ? - உன்னைப் புரிந்துகொள்!
உங்களையும் மனிதர்களையும் பற்றிய பிரமிப்புகள் தெரிய ஆரம்பித்தால் பிரம்மாண்டத்தின் (இறைசக்தியின்) வெளிப்பாடுகள் பற்றி நாம் தெரிந்து கொண்டது எவ்வளவு என்று புரிய வரும்.
கடலுக்கும் ஒரு துளி நீருக்கும் உள்ள வித்தியாசம்தான் அது என்று புரிய வரும். அவுஸ்பென்ஸ்கிக்குக் கிடைத்த தெளிவு நமக்கும் கிடைக்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால்…
நமக்குத் தெரியாது என்கிற விஷயம்கூட நமக்குத் தெரியாத வரை, நமக்குத் தெரியாது என்கிற விஷயம், கடைசி வரை, நமக்குத் தெரியவே தெரியாது .
நமக்கு என்ன தெரியும் என்ற தெளிவுக்கு முதலில் நாம் வந்து விட்டால், அவுஸ்பென்ஸ்கியைப் போல் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அத்தியாவசியமான விஷயங்களைத் தெரிந்துகொள்ளத் தகுதி பெற்றுவிடுவோம். தெரிந்துகொள்ள ஆரம்பியுங்கள்…
இறைவன் இருக்குமிடம் வரை ஊடுருவுங்கள் . . .
ஞான ஒளிகள்
வரைபடத்தை உங்களால் பார்க்க முடிகிறதென்றால், அதற்குக் காரணம் வரைபடமல்ல. வரைபடத்திலிருக்கும் இடைவெளிகளே காரணம். இடைவெளிகளின் மகத்துவம் இதுவரை நமக்குத் தெரிந்திருக்காது.
"இடைவெளி படிப்பதை சாத்தியமாக்குகிறது ."
- இந்த வாக்கியத்தைப் படிக்க முடிகிறதா? இடைவெளி படிப்பதைச் சாத்தியமாக்குகிறது என்ற மேலுள்ள வரியை நீங்கள் படிக்க, புரிந்துகொள்ள உதவுவதே - அதிலிருக்கும் அமைதியும் வெற்று அச்சிடப்படாத வெளியையும் இடைவெளிகள்தான்.
உங்களின் பேச்சுகூட வார்த்தை - இடைவெளி - வார்த்தை - இடைவெளி என்றே வருகிறது. மிக வேகமாக ஒருவர் பேசினால் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. காரணம் - பேச்சின் வேகம் அதிகரிக்கும்போது இடைவெளிகளின் அளவு குறைகிறது.
பேச்சு புரிவதுகூட இடைவெளிகளால்தான்.
இப்படி நீங்கள் ஆராய, ஆராய பல அதிசயங்கள் புலப்படும். உங்களின் வார்த்தைகளுக்கு இடைப்பட்ட அமைதிதான் வார்த்தைகளையே புரிய வைக்கிறதென்றால் எது பெரியது ... சப்தங்களா ? அமைதியா ?
அமைதியிலும் ஒன்றுமில்லா வெற்று வெளிகளிலும் எல்லாம் வல்ல சக்தி ஒளிந்திருக்கிறது. உங்களுக்குத் தெரிந்தவைகளுக்கு உள்ளே ஊடுருவுங்கள்... தெரிந்ததற்குள் ஒடுங்கியிருக்கும் தெரியாதவைகள் [ சூட்சுமம் -2 ] தெரிய ஆரம்பிக்கும். தியானித்துப் பாருங்கள்!
தியானித்துப் பாருங்கள். ஊடுருவல் எளிதாகும்.
உள்ளே ஒரு சுற்றுலா
விழிமயங்கும் மாலைவேளையில், தென்றல் காற்று தொடர்ந்து வீசிக் கொண்டிருந்தது.
அந்த மலையடிவாரத்தில், குதிரைவண்டியில் வந்து சேர்ந்த பக்தர் குதூகலத்தோடு வண்டியிலிருந்து குதித்து, தன் குருவின் குடில் நோக்கி குதூகலத்தோடு ஓடினார்.
அங்கு வாழ்ந்து கொண்டிருந்த ஜொராஸ்ட்ரிய ஞானியின் பக்தராக இருந்த அந்த நடிகர், உலகச் சுற்றுப் பயணம் சென்று விட்டதால் பல மாதங்கள் கழித்து தன் குருவைப் பார்க்கச் செல்கிறார்.
அதனால்தான் அவ்வளவு குதூகலம், அந்த நடிகரின் நடையில்...
நடிகர் "உலகின் ஏழு அதிசயங்களையும் பார்த்துவிட்டேன் சாமி. உங்களின் சாந்தத்திற்கும் ஆனந்த சிரிப்பிற்கும் முன் அவையெல்லாம் வெறும் தூசுக்குச் சமம்.
நீங்கள் எட்டாவது அதிசயம். இல்லையில்லை... அதிசயத்திற்கெல்லாம் அதிசயம்...
பார்க்கும்போதே பார்ப்பவருக்குள் பரவசமாய்ப் பரவும் பரவசம்" என குருவிடம் பக்திப் பெருக்கோடு பேசினார்.
ஜொராஸ்ட்ரிய ஞானி, "பிதற்றாதே! நீயும் ஓர் அதிசயம்தான். ஞானியின் தியானசக்தி வீச்சால் பரவசப்படுவது துவக்க நிலை பக்தனுக்குச் சரி.
எவ்வளவு காலம் என்னையே சார்ந்திருப்பாய் ? விடுபடு!
விடுபட்ட அம்புபோல் உன் உள்ளுலகில் நுழை.
பரவசம் பொங்கும் அதிசய உலகின் வழி கண்டு கொள்வாய். அதிசயமே அசந்து போகும் அதிசயமாவாய். பரவசமாவாய். 'பரம்'வசம் ஆன, மறுநொடியே நீ பரவசமாவாய்!'' என ஆசீர்வதித்தார்.
ஒரே ஒரு முறையாவது உள்ளே ஒரு சுற்றுலா சென்று வாருங்கள். வார்த்தைகளினால் விளக்க இயலாத ஆச்சரியங்களை அணுஅணுவாக ரசித்துத் திரும்புவீர்கள்!
"நம் உள்ளே ... ஏழு கடல் -ஏழு மலை -ஏழு வானம் -இருக்கிறது" எனச் சொல்லப்படுவது பொய்யல்ல மெய். மெய்யைத் தாண்டிய மெய் உணர்வு நிலையில் ... இவையும் இவை தாண்டியவையும் நம்முள்ளேதான் ஒளிந்திருக்கிறது.
உள்ளே ஒரு முறையாவது உள்ளுணர்வுப் பயணம் செய்து பாருங்கள். பொய்யாகத்தான் இவையெல்லாம் தோன்றும். மனம் நம்ப அனுமதிக்காது.
"ஒரு முறையாவது உங்களோடு நீங்களே இன்பச் சுற்றுலா சென்றிருக்கிறீர்களா?" "என்ன கேள்வியிது ? இந்தக் கேள்வியே வினோதமானது" என்றெண்ணுபவர்கள் வாழ்க்கையின் அர்த்தத்தை ஒரே ஒருமுறை கூட அனுபவிக்காத அப்பாவிகள்.
- உள்ளே செல்லும் ஒரே ஒரு சுற்றுலா, வெளியே செல்லும் ஓராயிரம் சுற்றுலாக்கள் தரும் சந்தோஷத் திருப்தியைவிட பலநூறு மடங்கு அதிகமான சந்தோஷத் திருப்தியைத் தரும்.
பெண்களுக்குத் தந்தையான அந்தக் குடும்பஸ்தர் குருவினிடம், "என் இரத்தத்தை வியர்வையாக்கி, இன்று பல இலட்சங்கள் சேர்த்து வைத்திருக்கிறேன்" என்றார் பெருமையோடு.
குரு, "ஊர், பேர், முகம் தெரியாத அந்த அதிபதிகளுக்காகவா உங்கள் இரத்தத்தையே வியர்வையாக்கினீர்கள் . !
உயிரைக் கொடுத்து உழைத்த உங்கள் செல்வத்தை, உங்களோடு உழைக்காமலே அனுபவிக்கப் போகிறவர்களுக்காகவா உங்கள் வாழ்வையே தியாகம் செய்தீர்கள்" எனக் கேட்டதும்,
குடும்பஸ்தர் கோபமாக, "யார் அந்த அதிபதிகள்?" எனக் கேட்டார். குரு, "மருமகன்கள்!" என்றார்.
மற்றவர்களுக்காகச் செலவிடும்
மணித்துளிகளில், சில துளிகள்கூட
தன்னைத்தரன் வாழு,
தன்னைத்தரனே ரசிக்க, ருசிக்க ...
தனிமனிதன் செலவிடுவதேறில்லை.
- உங்களுக்காக வாழ்கிறீர்களா? இல்லை, உங்களுக்கென நினைத்து
ஊருக்கும் உலகுக்கும்
உங்கள் வாழ்க்கையை செலவழிக்கிறீர்களா?
"யார்
| உலகையே மாற்றத் துடிப்பதை | |
| விட்டுவிட்டு, உங்களை மாற்றத் | |
| துள்ளியெழுந்தால் | |
| ஆனந்த வாழ்வு ஆரம்பமாகும். | |
யாரோடு வாழ்ந்தார்? யார் எவ்வளவு சாதித்தார்?" எனக் கேட்பதற்கு யாரும் செரர்க்கத்தில் இல்லை.
- நீ வாழ்ந்தாயா, அந்தத் திருப்தி இருக்கிறதா? நீ ஆனந்தமாக இருக்கிறாயா ? ... என உன்னைக் கேட்டால், என்ன பதில் செரல்ல முடியும்?
- வாழ்வு இறைவன் அளித்த பரிசு இந்த வாழ்வு வீணர்கி விடக்கூடாகு. மேலுள்ள கேள்விகளுக்கு உங்கள் வாழ்க்கை என்ன பதில் சொல்லும் ?
- பதில்கள் தரும் உத்வேகத்தோடு, கட்டுரைக்குள் ஊடுருவுங்கள் ...
சபீதமே இல்லாத அறை …
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அது புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த நேரம். ரீமஸ் கோச் அந்த அறையைப் பார்வையிடச் சென்றார்.
" உலகத்திலேயே முதல் முறையாக சப்தமே வராத அறையை உருவாக்கியிருக்கிறோம். உங்கள் கனவில்கூட கற்பனை செய்ய முடியாத அளவு நிசப்தத்தில் இந்த அறை இருக்கும்" என்று சொல்லி, பல்கலைக்கழகக் குழு ரீமஸ் கோச்சைப் பார்வையிட அனுமதித்தது.
உள்ளே சென்றுவிட்டு வெளியே வந்த ரீமஸ் கோச், வியர்த்த முகத்தோடு குழம்பிப் போய் வெளியே வந்தார்.
பல்கலைக்கழகக் குழுவினர், "ஏன், என்ன ஆயிற்று! ஏன் இப்படிக் கலவரமாகக் காணப்படுகிறீர்கள்?" என்று கேட்டனர்.
ரீமஸ் கோச், "வெளியே இருப்பதைவிட, உள்ளேதான் சப்தம் மிக அதிகமாக இருக்கிறது" என்றார்.
பல்கலைக்கழகக் குழுவினருக்கு பெரிய அதிர்ச்சி! "என்ன சொல்கிறீர்கள்?
| மனிதர்களின் இன்றைய | |
|---|---|
| வாழ்வு முறை (Life style) | |
| ஆனந்தத்திற்கு | |
| நேர் எதிரானதாக இருக்கிறது. | |
உள்ளே சப்தம் இருக்க வாய்ப்பேயில்லை.
உள்ளேதான் சப்தம் அதிகமாக இருக்கிறது என்று நீங்கள் சொல்வது அபத்தமாக இருக்கிறது" என்று கோபப்பட்டார்கள்.
ரீமஸ் கோச் மிக நிதானமாக, "ஆமாம். வெளியே இருப்பதைவிட உள்ளேதான் சப்தம் மிக அதிகமாக இருக்கிறது' என்று கூறினார்.
குழுத் தலைவர் ரீமஸ் கோச்சின் உறுதியான பதிலைப் பார்த்து இவர் கூறுவதில் ஏதோ உண்மை இருக்கிறது என்பதை உணர்ந்தவராய், "உள்ளே அப்படி என்ன சப்கத்தைக் கேட்டீர்கள்?" என்றார்.
ரீமஸ் கோச். "உள்ளே நுழைந்ததும் வெளியில் கேட்ட சப்தங்கள் துளிகூட உள்ளே கேட்கவில்லை.
ஆனால், அதிகமான இரண்டு வித சப்தங்களை என் வாழ்வில் பரிமாணத்தில் கேட்க ஆரம்பித்தேன்" என்றார்
குழுத் தலைவர், "அப்படியா!. என்ன சப்தங்கள்?" என்று கேட்டார்.
ரீமஸ் கோச், "முதல் சப்தம் -கொஞ்சம்கூட ஒய்வே இல்லாமல் சதா இயங்கிக் கொண்டே இருக்கும் என் மனதின் சப்தம்.
இரண்டாவது - எனது உடலுக்குள் ஓடும் இரத்த ஒட்டத்தின் இயக்க சப்தம்.
உள்ளே இருக்கும் இந்த இரண்டு சப்தங்களும் பெற்றவையென்பதை இந்நாள் வரை நான் உணரவில்லை. மனிதர்களின் இன்றைய வாழ்வுமுறை ஆனந்தத்திற்கு நேர் எதிரானது.
ஒவ்வொரு 'பிரச்சனை' எனும் காய்க்குள்ளும் ' தீர்வு' என்னும் குழந்தை காத்துக் கொண்டிருக்கிறது.
மொத்த சக்தியையும் முழு எடுபாட்டையும் முதலீடாக்கிச் செய்யும் ஒரே ஒரு தியானம் ஒருவரை ரு எனமடையச் செய்யும் வல்லமைப் பெற்றது.
முதன்முறையாக இந்த உண்மையை உங்கள் சப்தமில்லாத அறைக்குள்தான்
தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி'' என்று சொல்லி விடையெற்றார்.
மௌனத்தின் மதிப்பை முதன்முறையாக அன்றுதான் உணர்ந்தேன். எனக்குள்ளே, எனக்கே தெரியாத ஆச்சரியங்கள் நிறைய இருக்கிறது என்பதை அன்றுதான் தெரிந்து கொண்டேன்' என்று தன் டைரிக் குறிப்பில் ரீமஸ் கோச் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆம். ரீமஸ் கோச்சின் கூற்று முழுக்க முழுழுக்க நிஜம்.
உங்கள் ஒவ்வொருவரின் உள்நோக்கிய பயணக்கிலும் நிறைய ஆச்சரியங்கள் காக்குக் கொண்டிருக்கிறது. வாய்ப்பு கிடைக்காக வரை இந்த உண்மை தெரிய வாய்ப்பில்லை.
ரீமஸ் கோச்சுக்குக் கிடைத்த வாய்ப்பு எல்லோருக்கும் கூடியதல்ல.
அப்படியே அமைந்தால்கூட, எக்கனை பேர் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறிதான்.
வாழும் ஞானகுருமார்கள்கான் உங்களுக்கு கிடைக்கூக்கூடிய மிக எளிய, அரிய வாய்ப்பு.
உள்நோக்கிய சாவிகளைத் குருமார்களின் பணி.
ரீமஸ் கோச்சின் கூற்று, சப்கமில்லாத அறையை உருவாக்கிய பல்கலைக்கழகத் குழுவுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது.
ரீமஸ் உணர்ந்த அளவுக்குக்கூட, அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. காரணம், உணர்வ கெளிவின்மை கான்.
உணர்வு தெளிவின்மை நம் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு விகிதத்தில் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனைதான்.
உணர்வு பிரச்சனைகளுக்கும் தீர்வும் விமோசனமும் நம்முள்ளேதான் இருக்கிறது' என்ற சத்யம் நமக்குப் புரிவதே இல்லை.
கொடர்ந்து நமது பிரச்சனைகளுக்கு வெளி நபர்களிடமும் பத்தகங்களிடமும் தீர்வு தேடி அலையும் நம் உணர்வுக்குள் கீழ்க்கண்ட உண்மைகள் வருவதே இல்லை.
- உள்ளே இருக்கும் பிரச்சனைக்கு வெளியே தீர்வு தேடுவது மடத்தனம்.
- அப்படியே கஷ்டப்பட்டுத் தீர்வு கண்டுபிடித்தாலும் அந்தப் பிரச்சனை அந்த நேரத்திற்குத் தடுக்கப்படும். மீண்டும் அதே பிரச்சனை வேறு வடிவில் விஸ்வரூபம் எடுக்கும். அது வாழ்க்கையை மீண்டும் அலைக்கழிக்கும்.
"சில தடவைகள் தியானத்தில் ஈடுபட்டேன். பெரிய மாற்றம் ஒன்றும் நிகழவில்லை" என்று சிலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். சில தடவைகள் தியானத்தில் ஈடுபட்ட உடன் பலன் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல.
முதலில், மனதின் சப்தம் கேட்கப்பட வேண்டும். இரண்டாவது, மனதின் இயக்கம் புலப்பட வேண்டும். மூன்றாவதாக, மனதைப் புரிந்து அதைக் கடக்க வேண்டும்.
இவை அணைத்தும் நிகழ உணர்வுத் தெளிவு தேவை. உணர்வுத் தெளிவை அதிகப்படுத்துங்கள். அதற்குச்சில டிப்ஸ் ...
- மனதின் சப்கம் கேட்கப்பட, உங்களோடு நீங்கள் செலவிடும் நேரம் அதிகப்படுத்தப்பட வேண்டும்.
| பிரச்சனைகளுக்கு | |
|---|---|
| உள்ளே | |
| முலகாரணம் | |
| இருக்கிறது. பிரச்சனைகளுக்கு முழுத்திர்வும் உள்ளேதான் | |
காலைக்கடன்கள், உணவு உட்கொள்ளுதல் போன்ற சில மணி நேரங்கள்தான் ரீங்கள் உங்களுக்காகச் செலவு செய்யும் நேரம். அதுகூட உங்கள் உடலுக்காக மட்டுமே!
-
உங்கள் மனதின் இயக்கம் புலப்பட, மனதை வெளிச்சமிட்டுப் பார்ப்பதற்கு உதவும் தியானத்திற்காகத் தினமும் ஒரு அரைமணி நேரமாவது கட்டாயம் செலவிட வேண்டும். உடலளவில் உங்களுக்காக நீங்கள் செலவிடும் நேரங்களில்கூட உடல் அங்கு இருக்கும். ஆனால், மனம் எதையாவது நினைத்துக்கொண்டு ஊர் சுற்றப் போயிருக்கும்.
-
மனதைப் புரிந்துகொண்டு அதைக் கடப்பதற்கு ஞானக்கருத்துகள் பெரிதும் உதவும். உங்களுக்காகச் செலவிடும் நேரங்களிலெல்லாம் முழுக்க முழுக்க உடல், மனம், உயிர் என்ற எல்லாக் கோணத்திலும் உங்களோடு இருங்கள். இவையனைத்தும் கடைப்பிடிப்பவர்க்கு உள்ளே ஒரு கற்றுலா செல்வதற்கான விசா ரெடி !
அர்த்தமுள்ள சம்பவம் ...
பீடிகையோடு ரமணரிடம் ஒருவர் கேட்டார்; "தியானம் செய்வதற்கு என்ன தகுதி வேண்டும் ?" என்று.
ரமணர் கேட்டார்: "உன்னால் மூச்சுவிட முடிகிறதா?" "முடிகிறது, பகவான்."
"தியானம் செய்ய இந்தத் தகுதி போதும். தியானம் செய்" என்றார்.
மதம், ஜாதி, கலாச்சாரம் மற்றும் உங்கள் பழக்க வழக்கங்களுக்குத் தியானம் அப்பாற்பட்டது. தியானத்திற்காக உங்கள் வழக்கங்களை மாற்ற வேண்டியதில்லை.
சொர்க்கம் காண்டிச் செல்லுங்கள் ...
வவ்வுலகில் மது, மாது, லாஹிரி வஸ்துகள் இல்லாமல் வாம்ந்தால் ... சொர்க்கத்தில் சோமபானம், ரம்பை, மேனகையோடு, கற்பதரு மரத்தடியில் இருந்து நினைத்தபடியெல்லாம் ஆடிப்பாடி வாழலாம் என கற்பனை செய்யாதீர்கள். அது நடக்காது.
அறையில் அட முடியாதவரால் எப்படி வீதியில் ஆட முடியும் ?
இவ்வுலகைக் கொண்டாடுவதற்கே பக்குவமும் புத்திசாலித்தனமும் பற்றாக்குறையாக இருக்கும்போது மறுவுலகைக் கொண்டாட மட்டும் எங்கிருந்து பக்குவமும் புத்திசாலித்தனமும் வங்து சேரும் ?
முதலில் சொர்க்கத்தை இவ்வுலகில் காண வழி செய்யப்பட வேண்டும்.
இவ்வுலகில் சொர்க்கத்தைக் காண உள்ளுதான் வழி.
உள்ளுலகுக்குள் பயணிக்கத் தெரிந்து கொண்டு விட்டால் மறுஉலகின் கதவு தானாய்த் திறந்து கொள்ளும்.
சொர்க்கமும் சொர்க்கத்தைத் தாண்டிய ஆச்சரிய அனுபவங்களையும் கண்டுகொள்வீர்கள்.
எல்லா ஞானக்கருத்துக்களும் உள்ளுலகிற்கான விசாக்கள். எல்லாக் தியான முறைகளும் உள்ளுலகிற்கான ஊர்திகள்.
மிகவும் பிடித்த தியான அகவிதை ... "ஒரு செல் குழந்தையாகும் புனிதமான காலம் கர்ப்ப காலம். ஒரு மனிதன் தெய்வமாகும் புனிதமான காலம் தியானகாலம்."
தியான உளிகளை அமைதியுங்கள். அது உங்களின் உள்ளே செல்ல துளைகளை உருவாக்கட்டும்.
எது தப்பு? எது தவறு?
'தீப்பு' என்று சுட்டிக் காட்டுவது ... ஒருவர் தன்னை மனதளவிலோ, உடலளவிலோ புண்படுத்திக்கொள்வதிலிருந்து தவிர்க்க, சமுதாயத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வார்த்தை. அவ்வளவே!
'தவறு' என்பது, ஒரு மனிதர் தன்னைக் கட்டுக்கடங்கா புலன் ஈர்ப்பிலிருந்து காத்துக்கொள்ள, பெரியவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு உணர்வு. ஒரு பாதுகாப்பம்சம் மட்டுமே.
ஆனால் இன்று ... 'தப்பு' துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.
'தப்பு என்ற சொல்லை, தங்கள் தவறுகளை மறைப்பதற்காக, மற்றவர்களின் கண்களை மூட வைக்கும் 'மிளகாய்தூள்' போல் பலர் அவ்வப்போது பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
தவறு செய்யும் போது அல்லது தவறு செய்கிறோம் என்ற உணர்வு வரும் போது தவறுக்குப் பயப்படுவதைவிட, 'மற்றவர்கள் தவறாகப் பேசிவிடுவார்களே!' என்று பயப்படும் கூட்டம்தான் அதிகம்.
- நாம் தவறு என்று சொல்வது நம்மைப் பொறுத்த வரையில் மட்டுமே சரி. மற்றவருக்கு அதே தவறு, 100 % சரியாக இருக்கலாம். ஏனென்றால் ... ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு ஜாதிக்கும் - தவறு என்பது வேறுபடுகிறது.
நாம் மற்றவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதே, கிட்டத்தட்ட தவறுகான்.
விஷயம் இப்படியிருக்க ...
உறவினர்களும் இன்றைய சமுதாயமும் எதைத் தவறு என்று கட்டிக் காட்டுகிறதோ, அதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, அதை அச்சாணியாகக் கொண்டு செயல்படுவது மிகப் பெரிய தவறு.
ின் குரனிடம், "எது தவறு?" என பேராசிரியர் கேட்டார்.
பதிலுக்கு ஞானி, "எது சரி?" என்றதும் தீவிரமாக யோசித்த பேராசிரியர், "'எதுவெல்லாம் எனக்குத் தவறு எனப் படவில்லையோ, அதுவெல்லாம் என்னைப் பொறுத்தளவு சரி" என்றார்.
குரனி, "பார், உன் கேள்விக்குப் பதில் உன்னிடமேயிருக்கிறது. உனக்குச் சரியெனப்படாத எல்லாமே தவறுகான்" என்றார்.
"எது தவறு?" என்ற கேள்விக்கு ஞானி பதில் சொல்லி முடித்தவுடனே பேராசிறியர் மீண்டும் ஆழுமாய் கேட்டார்:
"எது உண்மையிலேயே தவறு?"
அதற்கு ஞானி, "உண்மையாகவே அதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?" எனக் கேட்டதற்கு,
"அமாம்" என்றார்.
குரனி, "இப்படிக் கேள்வி கேட்பதே தவறுதான்" என்றார்.
பேராசிறியர்,
த்ருந்துவதும் த்ருந்த விடுவதும் தியானம் - சுஃபி போதனை.
Menders have to mend. TAO Teaching
● அதாவது திருத்த நினைப்பவர்களே முதலில் த்ருந்த வேண்டும்.
செரன்னால், பின் எப்படித்தான் நான் தெளிவடைவதாம் ?" எனத் தாழ்ந்த குரலில் கேட்க,
ஞரனி செரன்னரர் ...
"உன்னைக் குழுப்புவதற்காக நரன் இப்படிப் பேசவில்லை.
உன்னைக் குழுப்பிக் கொண்டிருப்பதைக் குழுப்பத்தான் இப்படி இப்படிப் பேச வேண்டியிருக்கிறது.
எது தவறு என அறாயாதே.
உண்மையில் தவறு என்ற என்ற ஒன்றே இல்லை.
தப்பு, தவறு, நீதி, நியாயம் தாண்டி இயல்பாய் குழப்புவதைக் குழப்பு. தெளிவடைவாய்!" என்றார்.
இது தப்பு, அது தப்பு' என்று சுட்டிக்காட்டி மற்றவர்களிடம் தவறு செய்கிறோம் என்ற உணர்வை உருவாக்க உதவும் தப்பு என்ற வார்த்தை ஒரு வீச்சரிவாளுக்குச் சமம்.
வீச்சரிவாளைப் பயன்படுத்துவதற்கு - 'அதை எப்போது? எங்கே ? எதை வெட்டுவதற்காகப் பயன்படுத்த வேண்டும்' என்ற தெளிவு வேண்டும்.
பக்கி தெளிவில்லாத பட்சக்தில் கன் சுயவிருப்பு, வெறுப்பகளுக்காகவும், தடுமாறும் எரிச்சல்மனத்திற்காகவும் பல தலைகள் உருளும்.
மற்றவரின் தப்புத்தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கு, வாழ்க்கை பற்றிய அனுபவ ரகசியங்களும் பற்றிய உண்மை நிலவரமும் தெரிந்திருக்க வேண்டும்.
இவர்ரைத் தெரிந்துகொள்ளாமல் நம்மிடம் பல தவறுகளை வைத்துக் கொண்டு மற்றவரின் தவறைத் திருந்த முயற்சித்தால்…
கூரிய வீச்சரிவாளால் குத்திக் குத்தி ரணகளமாக்கப்பட்ட, ஒரு புண்பட்ட மனத்தைத்தான் நம்மால் மற்றவர்களிடம் ஏற்படுத்த முடியும்.
கேவையில்லாத மன. குணப் பிரச்சனைகளை நீக்கி, ஒரு பண்பட்ட மனத்தை உருவாக்க முடியாது. புண்பட்ட மனத்தைத்தான் உருவாக்குவோம்.
மற்றவர்களின் மனதைக் குத்திக் குத்தி ரணகளப்படுத்தும் நிகம்ச்சி தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.
ஈருடல் ஒருயிராக இருந்து, மனம் ஒருமித்து வாழ வேண்டிய கணவன், மனைவி...
வாழ்க்கைத் துணையின் தவறுகளைத் தொடர்ந்து சுட்டிக்காண்பிப்பது அல்லது அவரின் தப்புத்தவறுகளை நினைத்து தன்னைத்தானே புண்படுத்திக் கொள்வது - என்ற இந்த இரண்டு காரியங்களை மட்டும்தான் வாழ்நாள் முழுவதும் பல தம்பதியர் செய்து கொண்டிருக்கிறார்கள். இது வருந்தத்தக்க விஷயம்தான்.
நித்ய சிரத்தானந்தா ஒரு முறை ஒரு மதத் தீவிரவாதியைச் சந்திக்க நேர்ந்தது. சிரத்தானந்தா ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்தி, கிடைக்கும் உணவை உண்டு, கிடைத்த இடத்தில் ஆனந்தமாக உறங்கும் ஒரு சந்நியாசி.
| ' தப்பு' ' தவறு' | |
|---|---|
| கண்டுபிடிக்கப்பட்டது, | |
| உங்களைத் திருத்திக்கொள்ளத்தான். | |
| மற்றவரை வருத்திக்கொள்ள அல்ல! | |
மதத் தீவிரவாதிக்கு சிரத்தானந்தாவின் ஆனந்தத்தைப் பார்த்து ஏகப்பட்ட பொறாமை வந்துவிட்டது.
சிரத்தானந்தா உல்லாசமாகப் பூல்தரையில் படுத்துக்கொண்டு, ஆகாயத்தைப் பார்க்குச் சிரித்தவாறு தன் நன்றியை இரைவரைக்குக் காணிக்கையாக்கிக் கொண்டிருந்தார். எரிச்சலடைந்த தீவிரவாதி, "நீயெல்லாம் ஒரு சன்யாசியா?" என்று கேட்டார்.
சிரத்தானந்தா. "ஏனப்பா... நான் சந்நியாசிதான். அதில் எனக்கேதும் சந்தேகம் இல்லை. உனக்கென்ன சந்தேகம்… ?" என்றார்.
தீவிரவாதி, "ஒரு சன்யாசி என்றால் குருமார்களையும் ரிஷிகளையும் மதிக்க வேண்டும் என்று உனக்குத் தெரியாதா?" என்று திரும்பக் கேட்டார்.
"ம்ம்… கெரியும்".
"மகாவீரரை நீர் மதிக்கிறீரா?"
"ம்ம…"
மகாவீரர் எப்போதும் ஒருக்களித்து ஒரு பக்கம் மாத்திரமே படுத்திருப்பார்.
ரன்றாக கால் விரித்து, கை விரித்துப் படுத்தால் பல நுண்ணுயிர்களும் நுண் கிருமிகளும் பாதிக்கப்படும் என்ற கருணையால் மகாவீரர் தன்னை எவ்வளவு வருத்திக்கொண்டார்.
நீர் ஒரு சன்யாசியாக இருந்துகொண்டு இப்படி கை, கால் விரித்து உல்லாசமாகப் படுக்கலாமா? எவ்வளவு உயிர்கள் பாதிக்கப்படும் ?
இது எவ்வளவு பெரிய தவறு?" என்று தன்னுடைய பொறாமையைத் தணித்துக்கொள்ள சன்யாசி மேல், தவறு என்ற சேற்றை வாரி வீசித் தன்னைத் திருப்தி செய்து கொண்டார் தீவிரவாதி.
சிரத்தானந்தா, "'மகாவீரர் ஒருபக்கமாகப் படுத்துக் தூங்கும் போது, எத்தனை நுண்ணுயிர்களை அவர் தூங்கும் பரப்பளவில் கொன்று குவித்தார்?" என்று
| உங்களின் தீய குணங்களுக்கு | |
|---|---|
| மீண்டும் மீண்டும் | |
| சக்தியைத் தருவது, | |
| உங்களின் குற்ற உணர்ச்சியும் | |
| பயமும்தான்! | |
சிரிப்போடு கேட்டார்.
மகத் தீவிரவாகிக்கு என்ன பதில் சொல்வதென்றே பரியவில்லை.
மகாவீரர் 'எதற்காக அப்படிக் கூறினார்? ஏன் அப்படித் தூங்கினார்?' என்ற எந்த ஒரு விளக்கழும் கெரியாக தீவிரவாகி, மகாவீரரின் அரைபவ உண்மையை தன் குரூரப் பசி தீர்க்கும் வீச்சரிவாளாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டார்.
சிரத்தானந்தாவிற்கு, ' ஏன் மகாவீரர் அப்படி வாழ்ந்தார்?'என்பதற்கான விளக்கம் தெரியும். அதனால் அவர் ஆனந்தமாக இருந்தார். பாகிக்கப்படவில்லை.
இதே இருந்திருந்தால். முதலில்... "நாம் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்வு வந்திருக்கும்."
இரண்டாவது ... இவ்வளவு நேரமாக சந்தோஷத்தோடு படுத்திருந்தவர் விருட்டென்று எழுந்திருந்திருப்பார். அந்தக்குழலே துக்ககரமாக மாறியிருக்கும்.
மற்றவரின் புரியாததால்தான், மற்றவர்கள் நம்மைக் குறை சொல்லும்போது, நாம் மனம் ஒடிந்து போய்விடுகிறோம். மற்றவர்களை நாம் குற்றப்படுத்தும் போது, நம்முடைய குரூர உணர்வு திருப்தி அடைந்து, அது இன்னும் கொஞ்சம் வளர ஆரம்பித்து விடுகிறது.
மற்றவருக்கு நீங்கள் மயற்சிப்பதென்ன
மற்றவருக்குள் குற்ற உணர்வை உரவாக்கும்போதெல்லாம் நீங்கள் குற்றஉணர்விலேயே வாழ்கிறீர்கள்.
மற்றவருக்குள் சுக உணர்வை உருவாக்கும்போதெல்லாப் நீங்கள் சுகஉணர்விலேயே வாழ்கிறீர்கள்.
நல்லத்தைக் கொடுங்க நல்லதாய் வாழ்ந்திருக்க
அது தப்பு, இது தப்பு என்று மற்றவரிடம் குற்ற உணர்ச்சியைத் தூண்டி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைப்பதுதான் உண்மையான தவறு.
இன்றிலிருந்து மற்றவர்களின் தவறைச் சரிசெய்ய நேரத்தை வீணாக்காமல், உங்கள் தவறுகளை மட்டும் கண்டுபிடித்து அதைச் சரிசெய்ய நேரத்தைப் பயன்படுத்துங்கள்.
உங்கள் மீதே உங்களுக்கு மதிப்பு கூடும். உங்கள் மீது மற்றவர்களுக்கும் மதிப்பு கூடும்.
அர்த்தமுள்ள சம்பவம் ...
பொதுஇடத்தில் அசுத்தம் செய்த தவறுக்காக, அந்தக் குழந்தையை அடித்த கோபக்காரத் தாயிடம் ஜுமல்கி சொன்னார்: "அது என்ன செய்கிறது என அதற்கே தெரியாத நிலையிலிருக்கிறது. 'தப்பு' என்ற வார்த்தையைக்கூடத் தெரியாத குழந்தையையாவது தப்ப விடுங்கள். அதற்குள் 'குற்ற உணர்ச்சி' தூண்ட புறப்படாதீர்கள். வாழவிடுங்கள்."
திருத்துவதாய் நினைத்து வருத்துவது முடிவுக்கு வரவேண்டும். வருமா ?
மற்றவருக்குச் சுதந்திரமளிப்பது ஒரு வாழ்வியல் தியானம்
(திமந்தைகள் சந்தோஷமாயிரூப்பதைப் பார்த்து சந்தோஷப்படும் பெற்றோர்கள் ...
அவர்கள் செயல்படுவதைப் பார்க்குப் பயப்படுகிறார்கள். ஏன் ?
நெருங்கியவர்களின் சந்தோஷத்தை ஊக்குவிக்கும் எல்லா மனிதர்களும் நெருங்கியவர்களின் சுதந்திரத்தை நசுக்குகிறார்கள். குற்ற உணர்வுகளை உருவாக்கும்படி நடந்துகொள்கிறார்கள்.
சந்தோஷத்தின் அடுத்த படி, சுதந்திரம்' .
அறிந்தோ, அறியாமலோ சுதந்திரத்திற்கு நாம் தடை விதிப்பது - ஏணியில் ஏற ஒருவரை ஊக்குவித்துவிட்டு, அவர் ஏறிக் கொண்டிருக்கும் போது ஏணியைத் தட்டிவிடுவதற்குச் சமம்.
மற்றவரின் சுகத்திரத்தைப் பொசுக்காதீர்!
மற்றவரின் சுதந்திரத்தைப் பறிக்காதீர்!
ெருங்கியவர்களிடம் நாம் அதிருப்தியை உணரக் காரணம், நம் சுதந்திரம் பறிக்கப்படும்போது கம்முள் உருவாகும் குற்ற உணர்வுகள்தான்!
மற்றவர்களின் சந்தோஷத்தை ஊக்குவிக்கிறோம்.
ஏன் என்றால், ஆழ்மனதில் நாமும் சந்தோஷமாயிருக்க விரும்புகிறோம்.
ஆனால், மற்றவர்களின் சுதந்திரத்தைப் பறிக்கிறோம்.
ஏனென்றால், ஆழ்மனதில் நாம் சுதந்திரமடைவதில் நமக்கே விருப்பம் இல்லை. இதுதான் பயமாக வெளிப்படுகிறது. ஏதோ ஒரு வகையில் நெருங்கியவரைக் கட்டுப்படுத்தும் அல்லது கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் ஒருவரைச் செயல்பட இது தூண்டுகிறது.
" ரொம்ப இடம் கொடுக்கக்கூடாது".
" எப்போதும் நம் கட்டுப்பாட்டுக்குள்தான் மற்றவரை வைத்திருக்க வேண்டும்" .
" ஆடவிடாதே!…."
"'என் சொல் பேச்சு மீறக்கூடாது ...''
இதுபோன்ற பல எண்ணங்கள் மனதில் முளைத்தால், நீங்கள் உங்களின் சுதந்திரத்தை விரும்பாதவர் என்று பொருள். உள்சுதந்தில் நாட்டமில்லாதவருக்குள் மட்டுமே இதுபோன்ற எண்ணங்கள் முளைக்கும்.
உங்களின் உறவுதானே! விட்டுக்கொடுத்தால் தவறில்லையே? கொஞ்சம் ஆடினால்தான் என்ன.... உங்களுக்குப் பதில் அவர் ஆடட்டுமே.
யாராவது ஒருவராவது சுதந்திரமாயிருக்கட்டுமே. இது தப்பு வழியல்ல. தப்பிக்கும் வழி.
சு தெங்திரம் நிறைந்த உலகில் வாழ்கிறீர்கள்!
நெருங்கியவரிடம் நீங்கள் திருப்தியை உணர, முதல் காரியமாக அவர்களின் சுதந்திரத்தை ஊக்குவியுங்கள். உங்களில் ஆழமன பயங்கள் குணமாகும். நீங்களும் அவரும் சேர்ந்து சுதந்திரமாய்.
சுதந்திரமளிப்பது, சுதந்திரம் பெறுவதின் குட்சும வழி' .
கர்மச் சக்கரம்
-
★ பிறக்கும் முன் எப்படி இருந்தீர்கள்? இறந்த பின் எப்படி இருப்பீர்கள்?
-
★ தாயின் கருப்பையில் பலகோடி செல்களால் ஆன ஒரு கட்டிபோன்று உருவானக் கரு எப்போது தனிமனித உயிராக மாறுகிறது? எப்போது அந்தக் கருவில் தனி உயிர் நுழைந்தது ?
-
★ உயிர் என்பது என்ன? அது எப்படி இருக்கும்? அதைச் சேகரிக்க முடியுமா ? ஏதேனும் ஒரு நவீன விஞ்ஞான முறையால் கண்டுபிடிக்க முடியுமா ?
இந்தக் கேள்விகளுக்கு அனுபவப்பூர்வமான பதில் கூற முடிந்தவரால் மாத்திரமே கர்மா போன்ற சூட்சுமமான விஷயங்களுக்கு அனுபவ விளக்கம் தர முடியும்.
ட்ல வாசகர்களின் விருப்பத்திற்காக இந்தக் கர்மச்சக்கரம் என்ற கட்டுரையை எழுதியிருக்கிறேன்.
மனிதர்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கிறார்கள். இதற்குக் கர்மவினைகள்தான் காரணமா? இந்தக் கேள்விக்குத் தற்போது அறிவியல் பூர்வமான விளக்கம் ஏதும் இல்லை. வேதாந்த விளக்கத்தின் ஒரு சிறு பகுதியை விளக்குகிறேன்.
திருப்தி அடையாத ஆசைகளும் முழுமையாக அனுபவிக்கப்படாத அனுபவங்களும் சேர்ந்தவைதான் கர்மா அல்லது கர்மவினை என்று அழைக்கப்படுகிறது.
இதைப் புரிந்துகொள்ள ஒரு சிறிய கதை ....
ஒரு கல்வெட்டுபவர் வாழ்க்கையில், ஒர் அதிசயம் நிகழ்ந்தது. கனவில் ஒரு தேவதை தோன்றி, "இன்றிலிருந்து நீ எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறாயோ அப்படியே நீ மாறிவிடுவாய்" என்றார்.
இராஜா, தனக்கு அரண்மனை கட்டுவதற்காக நிறைய கற்கள் வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருந்ததால் கல்வெட்டுபவருக்கு வேலை மிகவும் கடினமாகி இருந்தது. தன்னை இவ்வளவு இராஜாவாகத் 'தான்' மாறினால் என்ன என்று யோசிக்க, அடுத்த வினாடி அவர் இராஜாவாகி விட்டார். கனவு சந்தோஷமடைந்தார்.
"சரி. தட்டிக்கேட்கவோ, யாருமே இல்லை" என்ற கர்வத்தோடு உறங்கிவிட்டார். காலை எழுந்ததும் தேரில் ஊரைச் சுற்றி வலம் வர இராஜாவாக மாறின கல்வெட்டுபவர் ஆசைப்பட்டு, மந்திரியைக் கூப்பிட்டார்.
மந்திரி, "அரசே, நேற்றிலிருந்து சரியான மழை. இப்பொழுதும் அது தொடர்ந்து பெய்துகொண்டே இருக்கிறது. அதனால் தாங்கள் தேரில் செல்ல முடியாது. என்னை மன்னியுங்கள்" என்றார். இராஜாவுக்கு,
" அப்போ மழை என்னை விட சக்தி வாய்ந்ததா? சரி. நான் மழையாக மாற வேண்டும்" என்று நினைத்த அடுத்த வினாடி மழையாக மாறிவிட்டார்.
மழையாக மாறியுகம் முழைக்குப் பயங்காக் கொண்டாட்டம், சந்தோஷம்,
கன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மழையைப் பொழிந்தது. ஊரெல்லாம் வெள்ளம். கன்னைவிடப் பெரியவன் யாருமே இல்லை என்ற தர்வம் மிகவம் சந்தோஷக்கை எற்படுத்தியது.
கார்மேகங்கள் மூலம் மழை நீரைப் பெய்து கொண்டிருக்கும் போது, எங்கிருந்தோ காற்று, சுழன்று வந்து வீசியது. கார்மேகம் கலைந்து போனது. மழைக்கு செம கோபம். "'என்ன, காற்று என்னை விட வலிமையானதா! சரி நான் காற்றாக மாறவேண்டும்" என்று நினைத்த அடுத்த வினாடி, காற்றாக மாறிவிட்டார்.
காற்றுக்கு ஒரே குஷி. சுழன்று சுழன்று வீசியது. பெரிய மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தது, பல வீடுகளைப் புரட்டிப் போட்டது. ஆனால், எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் மலையைக் காற்றால் ஒன்றுமே முடியவில்லை. " என்ன, இந்த மலைக்கும் இதில் இருக்கும் பாறைக்கும் என்னைவிட வலிமை அதிகமா! சரி. பொறுத்தது போதும் இனி ஒரு வினாடிகூடக் காற்றாக இருக்க நான் விரும்பவில்லை. நான் மலையாக மாற விரும்புகிரேன்" என்று நினைத்த வினாடியிலேயே மலையாக மாறிவிட்டார்.
மலையாக மாறியதும் நிம்மதி அடைந்தது போல் உணர்ந்தார். காற்றோ, மழையோ, நெருப்போ எதுவும் தன்னை இனிப் பாதிக்க முடியாது என்று கெரிந்ததும் ரொம்ப சர்தோஷமடைந்தார்.
பொழுது விடிந்தது. ஒரு கல்வெட்டுபவர் கடப்பாரை, கோடாரி. உளி கொண்டு வந்து மலையைப் பிளக்க ஆரம்பித்தார். மலையால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. எந்த எதிர்ப்பும் காட்ட முடியவில்லை. அவர் வெட்டும் ஒவ்வொரு வெட்டும் இடிபோல் இருந்தது.
" என்ன, இந்தக் கல்வெட்டுபவன் இவ்வளவு வலிமையானவனா! யாராலும் கொஞ்சம்கூட அசைக்க முடியாக என்னை இவ்வளவு சுலபமாக வெட்டுகிறானே! போதும். எல்லாம் போதும். இனி ஒரு வினாடிகூட மலையாக இருக்க முடியாது,
| ஆசை நிராசையால் உந்தப்பட்டு, நிராசையிலேயே முடிவதால்தான் மீண்டும் மீண்டும் ஆசை உருவாகிறது. | |
|---|---|
Part 3: Open the Door... Let the Breeze in! Part 1_Tamil_part_3.md
உடனே கல்வெட்டுபவனாக மாற வேண்டும்" என்று நினைத்த வினாடியிலேயே கல்வெட்டுபவராக மாறிவிட்டார்.
தொடங்கிய இடத்திற்கே வந்துவிட்டார். ஒரு சக்கரம் முடிந்துவிட்டது. இனி எப்படி இருக்க வேண்டும் என்பது அவருடைய ஆசையைப் பொறுத்தது. இதுதான் ஆசையால் தொடர்ந்து நடக்கும் விளைகள்.
கல்வெட்டுபவர் ஏதாவது ஒரு நிலையிலாவது முழுமையாகக் கர்வமில்லாமல், இயற்கை கொடுத்த நிலையை அனுபவித்து வாழ்ந்திருந்தால் இந்தச் சக்கரம் தொடர்ந்திருக்காது.
எந்த ஓர் ஆசையிலும் அவர் ''முழுமுமையாக திருப்தி' அடையாததால்தான் 'அடுத்தென்ன, அடுத்தென்ன!' என்று தேடிக்கொண்டு செல்ல வேண்டியதாயிற்று.
இந்தக் கதையில் அவரது ஆசையும் எண்ணமும் மாற மாற அவர், பல நிலைகளில் மாறிவிட்டார். அதேபோன்றுதான் ஒவ்வொருவரும் அவர்கள் இறக்கும் போது அவர்கள் கொண்டிருக்கும் ஆசை, எண்ணங்கள், கோபங்கள், அனுபவங்களைப் நிர்ணயமாகிறது. (மனிதர்கள் தொடர்ந்து விதவிதமாகப் பிறவி எடுத்தாலும் திருப்தி அடையாவிட்டால் அரசனும் ஆண்டியும் ஒன்றே. )
கல்வெட்டுபவரில் இருந்து ஆரம்பித்து, கல்வெட்டுபவராகவே முடிந்த வாழ்க்கைச் சக்கரத்தில், ஏதோ ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தால், அவருடைய கர்வமும் ஆசையும்தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என்று விளக்கப்பட்டிருந்தால், அவர் புரிந்துகொண்டிருப்பார். கர்மச்சக்கரம் நின்று போய் இருக்கும். ஏதாவது ஒரு நிலையை முழுமையாக அனுபவித்திருப்பார்.
அதேபோல் உங்கள் ஒவ்வொருவருக்கும் கர்மச்சக்கரத்தை நிறுத்தி ஆனந்த நிலை அடையும் கலையை மெல்லச் சொல்லிக் கொடுப்பதற்காகத்தான் அவதாரங்கள் அவ்வப்போது தோன்றுகிறார்கள்.
கர்மாவைப் பற்றிய விளக்கம் புரிந்துகொள்வது கடினம் என்று எண்ணுபவர்களுக்குச் சில கேள்விகள்.
ஏன் ஒரே வீட்டில் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒன்று ★ புத்திசாலியாகவும் இன்னொன்று மண்டாகவும் இருக்கிறது ?
| 'அபாயங்களி'டமிருந்து அபயம் அளி இறைவா!' என | |
|---|---|
| வேண்டமாட்டேன். | |
| அபாயத்தை எதிர்கொள்ளும் பயமற்ற பக்குவத்தைக் கொடு என்றே பிரார்த்திப்பேன். |
- ஏன் சிலருக்கு மட்டும் அதிர்ஷ்டம் கொட்டுகிறது ? ★
- ஏன் சிலர்கை கை வைக்கும் காரியம் மட்டும் விளங்குவதில்லை ? ★
- என் சிலருக்கு மாத்திரம் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதபோதுகூடப் ★ பெரிய பெரிய நோய்கள் வருகின்றன?
இவ்வளவு வேறுபாடுகளுக்கும் காரணம், முன்ஜென்ம வினைகளே! ( முழுமையாக ஆசைகளே! அதிருப்தியே!)
விழிப்புணர்வைக் கொஞ்சம் கொண்டு வந்தால் நிறுத்திவிடலாம். கஷ்டங்களை நிறுத்திவிடலாம்.
அந்த விமிப்புணர்வை ஏற்படுத்தும் ஒர் எளிய முறைதான் தியானம். அந்தந்தக் காலத்து மக்களுக்கு ஏற்றாற்போல், தியானத்தையும் ஆன்மீகச் செய்திகளையும் மக்களுக்குச் சேர்ப்பதற்காகத்தான் ஞானிகள் இவ்வுலகிற்கு வருகிறார்கள்.
விழிப் புணர் வை கொணடுவாருங்கள். ஆனைசை பகுத்து ஆராயுங்கள். சாத் திய மாகக் கூடியவற்றைக் கண்டுபிடியுங்கள். சாத்தியமாகக் கூடிய ஆசைகளையும் அனுபவங்களையும் முழுமையாக அணுபவியுங்கள். நிராசை, அதிருப்தி... நிராசை, அதிருப் தி . . . .
என்ற கர்மச்சக்கரத்தின் ஒட்டத்தை எளிதில் தடுத்துவிடலாம். கர்மச்சக்கரம் என்ற மிகப்பெரிய ஆன்மீகப் பகுதியைச் சில பக்கங்களில் இதற்கு மேல் எளிமைப்படுத்த முடியாது.
முயற்சியை முழுமையாகச் செய்யுங்கள்
எல்லாம் சாத்தியமே !
கூரையைப் பிய்க்குத் கொட்டுவார் கடவுள் எனக் காத்திருக்காதீர்கள்.
ோரி போடுவதே முடியுமென்றால், புள்ளியையும் நீங்களே வைக்கலாமே!
பக்குவத்தைக் கேட்கிறீர்கள். அது உங்களிடமே இருக்கிறது. அதை வெளிய்படுத்த ஆரம்பியுங்கள்.
முதலில் கலைஞனாவீர்கள். கடைசியாய் ஞானியாவீர்கள்!
அன்புக்கு வைக்கப்படும் அணுகுண்டு!
''டுத்திகெட்டவன்….. எப்படித் தாறுமாறாக வண்டி ஓட்டுகிறான் பார்" என தன்னைத் தாண்டி பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த நண்பரிடம் திட்டிய முகுந்தனின் பைக் துடுமாறிப் போனது!
முகுந்தனின் செயலரல் ...
முகுந்தனின் பின்னால் வந்த பைக்கும் துடுமாறிப் போனது!
நண்பர், "அவனைக் குறைசொல்லி, நீயும் அதே தவறைச் செய்து விட்டாயே" என்றார்.
முகுந்தன், செல்லாவிட்டால் அது நடந்திருக்காது" என்றார்.
நண்பர், "பார். உன்னால்தான் நமக்குப் பின்னால் வந்தவர் தடுமாறிப் போனார். ஆனால், அவர் நம்மைக் குறைச்சிசால்லவில்லை. சும்மா சிரித்து வைத்தார். அதனால்தான் அவருக்குப் பின்னரல் வந்த வரகனங்கள் தடுமாறவில்லை" என்றார்.
முகுந்தன், "இல்லையில்லை ...." எனத் தன்னை நியாயப்படுத்தி தொடர்ந்து விவாதம் செய்ய ஆரம்பித்தார். கடைசியில், முகுந்தனின் நண்பர் கோபித்துக்கொண்டதுதான் மிச்சம்.
-
எல்லா விவாதங்களும் வருத்தத்தின் விருத்தங்கள். ●
-
விவாகம் = வீண் வாகம். ★
-
விவாதம் ★
- நாக்கிற்குப் பிடித்த கேடு.
- தொண்டையைப் பிடித்துக் கொண்ட தொல்லை.
- நட்பில் கலக்கப்படும் நச்சு.
- அன்பிற்கு வைக்கப்படும் அணுகுண்டு.
இப்படியெல்லாம் சொல்வது மிகைப்படுத்துவது போலத் தோன்றலாம். கொஞ்சம் ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் உண்மை தெரிய வரும்.
★ விவாதத்தின் மூலம் மற்றவருக்கு ஒரு விஷயத்தைப் புரிய வைக்க முயற்சிப்பது, தீவிரவாதத்தால் முயற்சிப்பது போன்றது.
டுட்டாள் புத்திசாலி ஆகிய இருவருமே விவாதக்கில் இறங்கமாட்டார்கள். காரணம் -டிட்டாளர் அது முடியாது. பத்திசாலிக்கு அது அவசியமில்லை! நீங்கள் யார்?
ஒரு விவாதத்தை நீடிப்பது, ஒரடி வரப்பிற்காக நீதிமன்றத்தை ★ நாடுவது போன்றது. நம்மில் பலரிடம் விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லை. அதை உணராத காரணத்தால்தான். அடுத்தவர் விட்டுக்கொடுக்க வேண்டுமென எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பைரவர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ...
பைரவரும் தர்மராஜரும் விவாகிக்க ஆரம்பித்தால், அந்த விவாகத்திற்கு முற்றுப்புள்ளி அவர்களாக வைத்தால்தான் உண்டு. ஒருமுறை பைரவரும் தர்மராஜரும் தித்திக்கும் வடநாட்டு இனிப்பு வகை ஒன்றை ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
பைரவர், "தர்மா, இந்த இனிப்பைச் சாப்பிடும் போது உங்களுக்கு என்ன
கோன்றுகிறது ?" என்று கேட்டார்.
தர்மராஜர், "இனிப்பு சாப்பிடுகிறேன் என்று தோன்றுகிறது!" என்றார்.
பைரவர், "என்ன தர்மா, அறிவுபூர்வமாக ஏதாவது பதில் கொடுப்பீர்கள் என்று பார்க்கால், வில்லங்கமாகப் பேசுகிறீரே!
- உங்களுக்கு நெருக்கமானவர்களை நோதடிக்க வேண்டுமா?
- நண்பர்களை எதிரிகளாக மாற்ற வேண்டுமா?
- சிறிய சாதனைக்கும் பெரும் வேதனைகளை அனுபவிக்க வேண்டுமா?
- நேரத்தை விண்டிக்க வேண்டுமா?
- எரிச்சலாட்டும் மனிதராக நீங்கள் மாற வேண்டுமா?
ஒன்றே ஒன்று செய்யுங்கள் ..
அதுபோதும், எதற்டுத்தாலும் விவாதியுங்கள்!
நாம் இனிப்பு சாப்பிடுகிறோம் என்ற நினைப்பில் சாப்பிடுவதால்தான், இது சுவையாக கெரிகிறது.
ஒருவேளை சிறு வயதிலிருந்து இனிப்பு என்ற வார்க்கைக்கு, கசப்பின் அர்த்தத்தை நமக்குத் தெரிவித்து வளர்த்திருந்தால், நம்மால் இனிப்பே சாப்பிட முடியாகு" என்றார்.
தர்மராஜர், "பைரவ், அங்கதான் நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.
கசப்பு என்ற வார்த்தையையே நமக்குச் சிறு வயகிலிருந்து இனிப்பற்குப் பகிலாகக் கூறியிருந்தால், நம் மனதில் இனிப்பு என்ற வார்க்கைக்குப் பகிலாக கசப்பு என்ற வார்த்தை மாறி இருக்கும்.
அது வெறும் வார்த்தை மாற்றமாக மாத்திரமே இருக்கும்.
நீங்கள் சொல்வது போல இனிப்பைச் சாப்பிடவே முடியாமல் போகாது" என்றார்.
பைரவர், எல்லாவற்றையும் வைத்திருக்கிறீர்கள்.
இனிப்பு என்றால் கசப்புதான் என்று நம் மனதில் மாற்றிப் பதிய வைத்து விட்டால், அந்த வார்த்தையோடு மற்றவர்கள் நமக்கு உணர்த்தும் உணர்வுகளும் சேர்ந்துகானே மனதில் பகிவாகும்.
பிஞ்சு மனதில் கசப்பதான் இனிப்பு என்ற உணர்வை ஏற்படுத்திவிட்டால், பாகற்காயின் சுவை அந்த மனிதனுக்கு ரொம்ப பிடிக்காப் போகும்.
இனிப்பு வகை, பாகர்காயின் சுவையை விட மாறிய வேறு ஒரு சுவையாகத் தெரிந்தாலும், அது என்ற உணர்வே இனிப்பின் மீது வெறுப்பை ஏற்படுத்திவிடும்" என்றார்.
தர்மராஜர், "ஹா... ஹா... ஹா... ஹா...!
உங்களுக்கு நன்றாகப் பேசத்தெரியும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக நீங்கள் பேசுவகு எல்லாமே சரியாகிவிடாது பைரவ். அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
கசப்புதான் இனிப்பு என்ற மாற்றுப் பதிவால், 'கசப்பு' என்பது ஒரு நல்ல சுவை என்று மனதில் பதியலாம். இயற்கைதான்.
பிஞ்சு மனதில் கசப்பு ஒரு அருமையான சுவை என்று பதிய வைத்தால், பாகற்காய் சுவையாகத் தெரியும். அதுவும் இயற்கையே.
ஆனால், இனிப்பு நாக்கில் பட்டவுடன், அதுவும் ஒரு அருமையான சுவை என்று தெரிந்தாக வேண்டும். அப்படிச் செயல்பட்டால்தான் அந்த உடல் இயற்கையாக செயல்படுகிறது என்று பொருள்.
உண்மை இப்படியிருக்க, இனிப்பின் மீது மனதிற்கு வெறுப்பு வந்துவிடும் என்பதை ஒருக்காலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது" - என்றார்.
பைரவர், "மனோதத்துவப்படி, மனோவசியக் கொள்கைப்படி நான் சொல்வது உண்மை ... மனப்பதிவு அப்படியேதான் உடலின் மூலம் வெளிப்படுத்தப்படும். இனிப்பு கசப்பாகத்தான் தெரியும்".
தர்மராஜர், "இல்லை, இல்லை... மெய்ஞானத்தின்படி உடலுக்கென்று ஒரு தனி ஞானம் உண்டு....
| அமைதிக்காக நாடுகள் யுத்தமிட்டு உயிரைப் பலியிடுகின்றன. | |
|---|---|
| அன்பிற்காக மனிதன் வாதமிட்டு உறவைப் பலியிடுகின்றான். | |
| அதனால்தான் அமையும் அன்பும் எட்டாதக்கனியாய் அன்று முதல் இன்றுவரை தொடர்கிறது. | |
| யார் இதைத் தடுப்பது ? |
' இரைவன் உன்னை நம்பி உடலை விடவில்லை. உன் உடலின் 80%க்கு மேற்பட்ட இயக்கங்கள் தானாக நடைபெறும்படிதான் வைத்திருக்கிறார்.
உடல் அதற்கே உரிய ஞானத்தில் இயங்கிக் கொண்டு இருப்பதால்தான் நீங்கள் என்ன சாப்பிட்டாலும் உடல் செரிமானமும் பெருமூச்சும் இரத்த ஒட்ட மும் தானாக நிகழ்கிறது' என்று சூஃபி ஞானி ஒருவர் சொல்கிறார்.
இப்படி உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் ஞானம் இருக்கும் போது, நாக்கு அதற்கே உரிய ஞானத்தின்படி இனிப்புச் சுவையின் அருமையைக் கண்டுபிடித்துவிடும். நீங்கள் கூறுவது போல இனிப்பு கசப்பாகாது.
விவாகத்தின் அளவு விவேகமின்மையின் அளவு விவேகியால் விவாகித்து வில்லங்கத்தை வளர்க்க முடியாது.
மனதில் வேண்டுமானால் வார்க்கைகள் மாறலாம். ஆனால் உணர்வு மாறாது. இனிப்பைக் கசப்பு என்ற பெயரில் சாப்பிட்டாலும் அது இனிக்கும். மாறாக கசக்காது".
பைரவர், "என்ன ... அளந்துவிடுகிறீர்களா?"
இப்படி இந்த விவாதம் தொடர்ந்துகொண்டே இருந்தது. முடிவு வரவேயில்லை. இருவரும் அவரவர் கருத்தை சுற்றிச் சுற்றி பேசிக் கொண்டேயிருந்தார்கள்.
விவாதிக்கச் செலவிடப்படும் புத்தி, சக்தி, நேரம் மிச்சமானால் ... சாதிக்கத் தேவையான பத்தி, சக்கி, நேரம் அதிகமாகும்!
விவாதத்தின் அழகே விவாதிக்கும் ஒருவர் பேசுவதை கவனிக்கும்போது, அதுவே மிக மிகச் சரியானது என நம்ப வைக்கும். அடுத்தவர் பேச ஆரம்பித்ததும், 'அவர்தான் சரி. முந்திப் பேசியவர் தவறு' என்று நம்ப வைக்கும். மீண்டும் முந்தியவர் பேச ஆரம்பித்ததும், 'இவரே சரி' என்று நம்ப வைக்கும்.
விவாதங்களை அழமாக ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், பெரும்பாலும் இருவருடைய கருத்துகளுமே தவறாக இருக்கும்.
சில நேரங்களில் ஒரே கருத்தை இருவரும் வெவ்வேறு விதங்களில் பேசி, விவாதத்தை வாக்கு வாதமாக்கிக் கொண்டு இருப்பார்கள்.
கொஞ்சம் யோசித்துப் பார்க்கால் உண்மை புரியும், நாம் ஒரு கருத்தைச் சொல்லிவிட்டோம் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக, நம் கருத்தை நிலைநிறுத்த உதவும் எல்லா விஷயங்களையும் வாதங்களாக எடுத்து வைப்போம். ஒருவேளை எதிராளியின் கருத்தை நாம் சொல்லியிருந்தால் அதற்குத் தக்கபடி நாம் பேச ஆரம்பித்திருப்போம். எதிராளியைப் போல் நாம் பேசியிருப்போம். நம்மைப் போல் எதிராளி பேசியிருப்பார்.
உங்களின் எல்லா மனவருத்தங்களுக்கும் மூலகாரணத்தை யோசித்துப் பாருங்கள். விளையாட்டாக ஆரம்பித்த கருத்து மோதல், விவாதமாக மாறி, பின் வாதம் வாக்குவாதமாகி, வாக்குவாதம் சண்டையாகி, மனவருத்தம் வந்திருக்கும்.
பிடிவாதத்தின் வெளிப்பாடுதான் வாக்குவாதம்.. வாக்குவாதத்தின் வர்ணம் பூசப்பட்ட பகுதிதான் விவாகம்.
விவாதத்தின் நெடியை உணர்ந்து, விவாகத்தின் வாதத்தன்மையை அறிந்து, அதிலிருந்து உங்களையும் உங்கள் தன்மையையும் காப்பாற்றிக்கொள்ள, விட்டுக்கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள்.
நேரமும் சக்தியும் பண்பும் மிச்சமாகும். மனவருத்தங்கள் குறையும். நீங்கள் உங்களுக்குள் விருத்தி அடைவீர்கள்.
அர்த்தமுள்ள சம்பவம் ...
பிரபல வக்கீலின் குழந்தை விக்ரமிடம், டீச்சர் கேட்டார்:
"Marry என்ற வினைச்சொல்லின்
எதிர்கால வினைச்சொல் என்ன?"
குறும்பாய்ச் சிரித்த விக்ரம், "Divorce" எனச் சொன்னான்.
விவாகரத்துகூட விவாகம் தரும் பரிசே!
வளரும் சமூகமானது சரியாய் வளர வேண்டும்.
உதவுவீர்களா ?
உறவாடலுக்கு உயிரோட்டம் தரும் ரகசியம் – உறையாடல்!
NSP தியான முகாமில் கர்னல் சந்தோஷ்குமார் கேட்டார்: " விவாதிக்க வேண்டாம் என்று நீங்கள் சொன்னால், நாங்கள் மனிதர்களோடு உறவாடுவது எப்படி ?''
மேலும் கேட்டார்: "விவாதிக்க வேண்டாமென்றால், நாங்கள் பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அர்த்தமா?" என்று.
" ஆம்! அப்படி எடுத்துக்கொண்டாலும் சரியே.
மனிதர்கள் உரையாடி, உறவாடுவதில்லை.
விவாதித்தே உறவாடுகிறார்கள் ....
இது நிச்சயம் நிறுத்தத்திற்கு வரவேண்டும்" எனச் சொன்னேன்.
உண்மையான உரையாடலில் ...
- மற்றவரின் பேச்சுக்கு முக்கியத்துவமளிப்பீர்கள். ★
- பேசுவதைவிடக் கேட்பதையே அதிகம் விரும்புவீர்கள். ★
- அவர் பேசி முடிக்கும் முன்பே, இதைத்தான் சொல்ல வருகிறார் என ★ யூகிக்கமாட்டீர்கள்.
உரையாடல் உறவோடு சரியாகும்.
- வார்த்தைகள் மூலம் வர்ணிக்க பிரயத்தனப்படும் அவர்களின் ★ உணர்வுகளை உணர, நீங்கள் பிரயத்தனப்படுவீர்கள். மேற்கண்ட நான்கு உண்மைகளில் ஒன்று உங்களிடம் இல்லாவிட்டாலும் நீங்கள் செய்வது உரையாடலல்ல.
உபயோகமற்ற விவாதம்தான் என முடிவுசெய்து கொள்ளுங்கள்.
உறவாடலுக்கு உயிரோட்டமளிக்க உரையாட ஆரம்பியுங்கள்.
பேசுவதைவிடக் கேட்பதையும்
வார்த்தைகளைவிட உணர்வுகளையும்
உங்களைவிட மற்றவர்களையும் அதிகம் மதிக்க ஆரம்பித்தால்,
விவாதம் எனும் மனக்கோளாறு இருக்குமிடம் தெரியாமல் மறைந்து போகும். உறவாடல் உற்சாக உருவெடுக்கும்.
உரையாடல் என்ற போர்வைக்குள் இருக்கும் விவாதகாலங்களைச் சுத்திகரிக்க ஆரம்பியுங்கள்.
விவாதகாலம் தியான காலமாகட்டும்.
கலை
டுரு ஜப்பானியக் கதை ...
தாய் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கையில்…
மகன், "அம்மா, அம்மா! என்னைவிட்டுப் போகாதே... நீ என்ன சொன்னாலும் செய்கிறேன்' என அழுது புலம்புவதைப் பார்த்த தாய் சொன்னார்:
"உன் அப்பா என்னிடம் சொன்னதைச் சொல்கிறேன். அதைக் கடைப்பிடித்தால் உடலில் உயிர் இருக்கும்வரை ஆனந்தமாகயிருப்பாய்" என்று.
அவ்வளவு துக்கத்திலும் மகன் ஆர்வமானான். "என்ன அது?" எனக் கேட்டான்.
அதற்கு அம்மா ''கலைஞனாகு! பெரிய கலை வித்துவானாகத்தான் ஆக வேண்டுமென்ற அவசியமில்லை.
உனக்குக் கழிவறை சுத்தம் செய்யும் பாக்கியம் கிடைத்தாலும் சரி. கவலைப்படாதே. நீ சுத்தம் செய்வது போல இன்னொருவர் சுத்தம் செய்யக்கூடாது. உன்னுடைய வேலைப்பாடு அவ்வளவு தனித்துவமும் கலைநயமும் மிகுந்ததாக இருக்க வேண்டும்" எனச் சொல்லி முடித்ததும் கண்மூடினார் நிம்மதியாக!
- கலை என்பது ... ★ கவலையை மறக்கடிக்கும் ஒரு இனிமையான துறை.
- கலை என்பது ... ★ நம்மிடமிருக்கும் மிருதுத்தன்மையை வெளிக்கொண்டுவரும் அருமையான முறை.
- ஒவ்வொரு மனிதரின் கனிக்கன்மையை கயக்கமில்லாமல் வெளியே ★ கொண்டுவர உதவும் ஒரு அருமருந்து கலை.
- ஒரே ஒரு துறையிலாவது கலைத்துவம் பெற்றிருக்க வேண்டும். ★ இல்லையென்றால் வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு அம்சத்தை இழக்கிறீர்கள்.
முக்கியச் செய்தி ...
" பிளாட்பாரத்தில் காய்கறிகள் விற்பது போல, ஜப்பானில் எலக்ட்ரானிக் சாதனங்களை தராசில் 'கிலோ இவ்வளவு பணத்திற்கு' என விற்பார்களாம்" என ஜப்பானின் சாதனைகளை விளக்குவதற்கு இப்படிச் சிலர் விளையாட்டாய் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஜப்பானின் சாதனைக்கான ரகசியங்களைப் பற்றி தொழிலதிபர்கள் சொல்லும் சுவாரஸ்யமான செய்திகளைத் தொகுத்து வெளியிடப்பட்டப் புத்தகம் ஒன்றில், "என் சாதனையின் ரகசியம் இதுதான்" என நீங்கள் மேலே படித்த கதையைக் குறிப்பிட்டிருந்தார் ஒரு தொழிலதிபர்.
செய்யும் செயல்தான் தியானம்.
பூரண கலைத்துவம்தான் ஞானம்.
இயல்பான, மிருதுவான வாழ்வுதான் ஆனந்தம்.
மேற்கண்ட வாழ்வியல் அடிப்படைகளுக்குச் சான்றாக வாழும் ஒரு ஹஸிட் (Hasid) ஞானிதான் ரஸி ஹு மோஸ்.
படைப்பாற்றல் (Creativity) முக்கியமான வெளிப்பாடுகளில் ஒன்று. இதை அனுபூதியாக உணர்ந்தவர் ரஸி ஹு மோஸ். ரஸி ஒரு அருமையான சிற்பி.
சிற்பக்கலை மூலம் இறைநிலையை அடையும் ஆன்மீக குருகுகுலக் கல்வியை ரஸி நடத்தி வந்தார். கார் ஜு என்பவர் ரஸியின் சீடர்களிலேயே மிகச் சிறந்தவர். அற்புதமான சிற்பி.
ஒருமுறை ரஸியை பேராசிரியர் ஒருவர் சந்திக்க வந்திருந்தார்.
இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது, கார் ஜீ அவரே உருவாக்கிய ஒரு அழகான குழந்தையின் சிலையை குருவிடம் காண்பித்து, பாராட்டுப்
'கூரையைப் பிய்த்துக் கொட்டுவான் கடவுள்' எனக் காத்திருக்காதிர்கள். ரோடு போடுவதே முடியும் என்றால் புள்ளியையும் நீங்களே வைக்கலாமே! பக்குவத்தைக் கேட்காதிர்கள். அது உங்களிடமே இருக்கிறது. அதை வெளிய்யெடுக்க ஆரம்பியுங்கள். முதலில் கலைஞனாவிர்கள். கடைசியாய் ஞானியாவிர்கள்!
பெறுவதற்காக கொண்டிருந்தார்.
ரஸி ஹு மோஸ் பேராசிரியரிடம், "அதோ வருகிறாரே அந்த இளைஞர் ஒரு மிகச் சிறந்த கலைஞர். என்னிடம் அந்தாறு வருடங்களாக ஆன்மீகப் கொண்டிருக்கும் பலர் அடையாத ஒரு நல்ல நிலையை ஒரு வருடத்திற்குள் அவர் அடைந்திருக்கிறார்" என்றார்.
பேராசிரியர், "மற்றவர்களைவிட இவ்வளவு சீக்கிரத்தில் ஒரு நல்ல நிலையை இந்த இளைஞரால் மட்டும் எப்படி அடைய முடிந்தது?" எனக் கேட்டார்.
ரஸி "நாம் முழுமையாகச் செய்தால்,
செய்யும் செயலே தியானம்தான் என்ற என்னுடைய ஆன்மீகப் போதனையின் சாராம்ச்த்தை முழுமையாகப் புரிந்துகொண்டு விட்டார்.
க லை
வாழ்க்கைச் சம்பவங்களைச் சுவையான பதார்த்தமாக்கும் தெய்வத்தேன் கலையம்சம்.
சிற்பக்கலையில் அவர் மேலும் வளர நான் கற்றுத் தரும் ஒவ்வொரு பாடத்தையும் அவருடைய வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் நடைமுறைப்படுத்தினார்.
அவரது வாழ்வே கலைகளின் தொகுப்பாகிவிட்டது. இதுதான் அந்த இளைஞரின் துரித வளர்ச்சிக்குக் காரணம்..." என்று ரஸி பேசிக்
கொண்டே இருக்க ... கார்ஜு , அவர் வடித்திருந்த சிலையை குருவின் பாதத்தில் வைத்துவிட்டு, சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து, மலர்ந்த முகத்தோடு எழுந்து குருவின் வார்த்தைக்காக குழந்தைபோன்று சிரித்த முகத்தோடு கைகூப்பி நின்றார்.
ரஸி, "என்ன இது?" என்று இகழ்ச்சி நிறைந்த குரலில் கேட்டார்.
கார் ஜு, "குருவே, சென்ற வாரம் பக்கத்து வீட்டுக் குழந்தை ஒரு லட்டை ரசித்து ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டே இருந்தது. அது கண்கொள்ளா காட்சியாக இருந்தது! அதை அப்படியே தத்ரூபமாக வடித்துவிட்டேன்!" என்றார்.
ரஸி, "ஒருமுறை நன்றாக இந்தச் சிலையை பார்த்துவிட்டு சொல் - நீ தத்ரூபமாக வடித்திருக்கிறாயா என்று ?" என்று கேட்டார்.
கார் ஜு குருபக்தியோடு அந்தச் சிலையை மீண்டும் ஒருமுறை ஆழ்ந்து பார்த்துவிட்டு, "குருவே! தத்ரூபமாகத்தான் வடித்திருக்கிறேன்!" என்றார்.
துன்பக்கடலைப் பார்த்துக் கலங்காதே!
துன்பம் வந்தாலே அதில் முத்துக்குளிப்பவர் போல் துள்ளிக் குதி ... பக்குவம் எனும் பவள, முத்துக்கள் அங்கு கொட்டிக்கிடக்கிறது.
செய்து பார்... துன்பத்தில் முழ்கமாட்டாய். பக்குவம் பெறும் கலையை அறிவாய்.
அவ்வளவுதான். அடுத்த வினாடி குருவின் முகம் மாறிவிட்டது.
ரஸியின் கண்கள் கோபத்தைக் கொப்பளித்தது.
ஆரோக்கிய குணம்கொண்ட
கலையம்சம் சேர சேர,
உங்களின் ...
தோல் மினுமினுப்பாகும்,
தசை மிருதுவாகும்,
முகம் பொலிவடையும்,
நடை நடனமாகும்,
பேச்சு நகைச்சுவையாகும், உடல் லேசாகும்,
மனம் உற்சாகமாகும்,
உயிர் ஆனந்தமாகும்!
குழந்தைச் சிலையை எதிரே இருந்த பாறை மீது தூக்கி வீசினார்…. 'டமார்' என்ற சப்தத்தோடு சிலை நான்கைந்து துண்டுகளாக உடைந்து விழுந்தது.
" முட்டாள்! குழந்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தது- லட்டு. இனிப்பும் எச்சிலும் கலந்து எப்படி ஒரு குழந்தையின் வாயில் இருந்து ஒழுகும்!
லட்டின் உடைந்த சில பருக்கைகள் குழந்தையின் உடலிலும் மடியிலும் ஒட்டிக் கிடக்கும் என எல்லா விவரத்தையும் விழிப்புணர்வோடு வடித்த நீ - குழந்தை எப்போதும் இரண்டு கரங்களால்தான் சாப்பிடும் என்பதைக் கவனத்தில் கொண்டுவர ஏன் மறந்தாய் ?
குழந்தை எந்த உணவையும் பார்த்துப் பார்த்துப், ரசித்து ரசித்துச் சாப்பிடும். அடுத்து குழந்தையின் கண்களில் ரசனையும், பிரமிப்பும் இல்லவே இல்லை!
இதுபோன்ற கேவலமான குறைகளோடு இனி ஒரே ஒருமுறை வந்தாலும் உன்னை இங்கிருந்து துரத்தி விடுவேன்.
போ! என் முன் நில்லாதே!" என்றார் கடுமையாக.
பேராசிரியருக்கு நடக்கிறது என்று புரிந்துகொள்ள முடியவில்லை.
தத்ரூபமாக, பார்ப்பதற்கு ஒரு குழந்தையைப் போன்றே இருக்கும் ஒரு சிலையைப் பேராசிரியர் தன் வாழ்நாளில் இதுவரை பார்த்ததே கிடையாது.
கருணையே வடிவமான குரு, கோபத்தின் உச்சிக்குச் சென்றதும், சிலையை உடைத்தெறிந்ததும் பேராசிரியரைக் குழப்பத்தின் உச்சிக்கே எடுத்துச் சென்றது ...
தலைகுனிந்து அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருந்த ரஸியைப் பார்க்கப் பார்க்க பேராசிரியருக்குக் கோபம் வர ஆரம்பிக்கிறது.
ஒன்றிரண்டு மிகச் சிறிய தவறுகளுக்காக இவ்வளவு மூர்க்கமாக நடந்து கொண்ட ரஸியை ஒரு சில கேள்விகளாவது கேட்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பேராசிரியர்"ரஸி ஹு மோஸ்!" என்றார்.
தலைநிமிர்ந்த ரஸியைப் பார்த்த பேராசிரியர் அதிர்ந்தார். ரஸியின் கண்களிலிருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது.
ரஸி, "பார்த்தீர்களா! எவ்வளவு அழகான குழந்தை சிலை அது! பார்ப்பதற்கு ஒரு குழந்தை உண்மையாகவே உட்கார்ந்திருப்பது போன்று எவ்வளவு அருமையாக கார்ஜு வடித்திருக்கிறான்!" என்று சொல்லி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
பேராசிரியர், "இவ்வளவு சந்தோஷப்படுகிறீர்கள். சிஷ்யன் மீது இத்தனை பாசம் வைத்திருக்கிறீர்கள். அப்புறம் ஏன் இவ்வளவு மூர்க்கமாக நடந்து கொண்டீர்கள்?" என்று கேட்டார்.
ரஸி ஹு மோஸ் மெல்லிய புன்னகையோடு, "நான் பாராட்டியிருந்தால் அவன் திருப்தி அடைந்திருப்பான். சந்தோஷப்பட்டிருப்பான். அகங்காரம் அப்படியே இருக்கும்.
எதிர்பாராத உலுக்கப்படும். இது ஒரு டெக்னிக்.
| வர் | உண்மையான கலைஞர்கள், தங்களுள் இருக்கும் அந்த |
|---|---|
| நர் | ஆனந்த சக்தி மையத்தை அடிக்கடி தொட்டுத்தொட்டுப் |
| வர் | பார்ப்பவர்கள். |
| கள் | நீங்களும் தொடலாம் ஆனந்தத்தை வாழும் |
| ! | கலைக் கலைஞனானால்! |
சிற்பக்கலை மூலம் வாழும் கலையை நான் கற்றுத் தருகிறேன்.
இந்த ஒரு விஷயத்தில் நான் கண்டுபிடித்துக் கூறிய குறைகளை, அவன் அவனுடைய வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் பார்த்துப் பார்த்து தன்னை மாற்றிக்கொள்வான். அவ்வளவு பக்குவம் பெற்றவன்.
பாராட்டைவிட, டெக்னிக்கைத் தருவதுதான் இந்த நேரத்தில் இவனுக்கு சரியானது. இனி சிலை வடிப்பிலும் தன் தனிப்பட்ட வாழ்விலும் அவன் இன்னும் அதிக விழிப்புணர்வோடு நடந்து கொள்வான்.
வாழ்க்கையில் மிருதுத்தன்மை தானாக வந்து சேரும்.
புகழ வேண்டிய சூழ்நிலையில் இப்படி நடந்து கொள்வதற்குத்தான் கருணையும், ஞானமும் தேவை" என்றார்.
சொல், செயல், முகபாவம், சிந்தனை ஆகிய நான்கிலும் கலையம்சம் சேர்.
வாழ்க்கையை கனியாகக் கொண்டாட வேண்டிய அவசியமே இருக்காது. வாழ்க்கையே திருவிழாவாகி இருக்கும். கலை சேருங்கள்
பேராசிரியரின் கண்களிலும் நீர்!
ஒவியம், சிற்பம், காவியம் போன்றவை மட்டுமே கலை அல்ல. கலைநயத்தை நம் வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுத்த முடியும்.
பேசும் கலை,
படிக்கும் கலை,
பழகும் கலை,
ஏன், சமைப்பதுகூட ஒரு கலைதான்!
கலைநயம் கொண்ட ஒருவரின் கலை வெளிப்பாடு எதுவாக இருந்தாலும் அதன் மீது நம்மையும் அறியாமல் ஈடுபாடு வரும்.
கடலில் பெருங்காயத்தைக் கரைப்பதால் கடலுக்கு நறுமணம் கிடைக்கிறதோ இல்லையோ - முதலில் நம் கை முழுவதும் பெருங்காய நறுமணம் மணக்கும்.
நம்முடைய கலை வெளிப்பாட்டால் மற்றவருக்கு நன்மை கிடைக்கிறதோ இல்லையோ - முதலில் நமக்குள் சந்தோஷம் பிறக்கும். திருப்தி மலரும்.
இசை, ஒவியம், காவியம் போன்ற சில துறைகள் மட்டுமே கலைகள் என்று நினைத்துவிடாதீர்கள் !
பாத்திரம் கழுவுவதில் இருந்து... ஷு பாலீஷ் செய்வது வரை... குழந்தைக்குத் தலைவாருவதில் இருந்து ... தொழில் செய்யும் திறமை வரை... என வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் கலைநயத்தைக் கொண்டுவரலாம்.
இந்தக் கலையின் மொத்தத் தொகுப்புதான் வாழும் கலை.
வாழும் கலைநயத்தை நயம்படக் கற்றுக்கொண்டால், வயப்படாததைக்கூட வயப்படுத்திவிடலாம் !
கலை உணர்வோடு ஒவ்வொரு செயலையும் செய்ய ஆரம்பித்தால், சந்தோஷத்திலிருந்து... திருப்தி வரை, நம் 'சுயம்'விரும்பும் எல்லாவற்றையும் வசப்படுத்திவிடலாம்.
துன்பத்தைக்கூட நயமாய் அனுபவியுங்கள் ... அது தடுக்கப்படும் !
சீரில்லை இப்படி திடீரென வளைந்திருக்கக்கூடாது' என சைக்கிளிலிருந்து விழுந்தவன் சொன்னால் அது நியாயமானதாக இருக்குமா . . .
சில வருடங்களுக்கு முன் இது நடந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என சொல்வோம், நமக்கு நல்லது நிகழும் போதெல்லாம்.
இவ்வளவு ஏன் நொந்துகொள்வோம், நமக்குக் கெடுதி நிகழும்போதெல்லாம்.
சைக்கிள் ஓட்டுவது ஒரு கலை.
அந்தக் கலையை முறையாய் பயிலாதவரே 'சாலை கோணல்' எனச் சொல்வார். வாழ்க்கையை நடத்துவதும் ஒரு கலையே.
வாழும் கலை பயிலாதவரே எனக்கு இப்படி நடந்திருக்கக்கூடாது என்பார்.
வாழும் கலை கற்றவர் வாழ்க்கைச்சாலையைப் பற்றி குறை சொல்லமாட்டார்.
வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டுவதில் நயம் சேர்த்துக் கொண்டேயிருப்பார்.
நாம் சந்திக்கும் தோல்விகள், நம் வாழ்வுக் கலையை வளர்க்க உதவும் பயிற்சிக் களங்கள்.
கஷ்டப்பட்டால்கூட, முழுமையாய் கஷ்டப்படுங்கள். அப்படிச் செய்தால் கஷ்டம் அதன் இஷ்டம்போல், உங்களைக் கஷ்டப்படுத்துவது தடுக்கப்படும்.
வாழ்வில் வரும் இன்பமானாலும் துன்பமானாலும் - அதை ஆழமாய் அனுபவியுங்கள்.
நயமாய் அனுபவியுங்கள். காரணம், அந்த நிமிடம் அது தவிர்க்க முடியாதது. துன்ப காலத்தைக்கூட ஆழ்ந்தனுபவித்து ... அதை தியான காலமாக்குங்கள்!
தெரிந்தவைகளுக்கு உள்ளே
அங்கீகாரம்
- அங்கீகார உணர்வு உற்சாக மனதின் அங்கஹீனம். ★
- நம்மை நாம் அங்கீகரித்துக்கொள்ள முடியாமைதான் - மற்றவர்களின் ★ அங்கீகாரத்திற்காக நம்மை ஏங்க வைக்கும்.
- உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் உற்சாகமான மனிதருக்கு ★ வெளி அங்கீகாரம் தேவையில்லை.
அங்கீகாரத்தை உற்சாகமாக இருக்க முடியாது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இளம் தம்பதியர் என்னைத் தேடி வந்தனர். அவர்கள் கையில் அழகான குழந்தை. ஆனால் முகம் நிறைய வருத்தம். ஏன் வருத்தம் ? முதலில் எனக்குப் புரியவில்லை. சில நிமிடங்கள் பேசிய பிறகு வருத்தத்திற்கான காரணம் புரிந்தது.
அந்த இளம் தம்பதியர், அடிக்கடி நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று வருவார்களாம். ஒரு நண்பரின் வீட்டுக்குப் போன போது, புதிதாக வாங்கிய ஃப்ரிட்ஜைக் காட்டி "உங்கள் வீட்டில் என்ன ஃப்ரிட்ஜ் இருக்கிறது?" என்று கேட்டவுடன் சுருங்கிப் போயிருக்கிறார்கள் அந்தத் தம்பதியினர்.
இன்னொரு வீட்டில் விசிடி & எம்பி 3-ப்ளேயரைப் பார்க்கிருக்கிறார்கள். மீண்டும் அப்செட். இப்படி ஒவ்வொரு முறையும் நண்பர்களின் வீடுகளுக்கு சந்தோஷமாகக் கிளம்பிப்போவதும் மற்ற இல்லத்தைத் தங்கள் இல்லத்தோடு ஒப்பிட்டு நொந்து போவதும்தான் அவர்களின் சோகத்திற்கான காரணம். இவர்களின் நிலையை இவர்களாலேயே அங்கீகரித்துக்கொள்ள முடியவில்லை.
காரணம். மற்றவர்களின் வளர்ச்சி, இவர்களுக்குக் கொடுத்த அதிர்ச்சிதான் நம்மை நாம் அங்கீகரித்துக் கொள்ள முடியாமைதான் - மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக நம்மை ஏங்க வைக்கும்.
நம்மில் பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். நமது துக்கத்திற்குக் காரணமே மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்துத் தாழ்த்திக் கொள்வதுதான்.
ஜே. கிருஷ்ணமூர்த்தி ஒருமுறை இலண்டனில் பேசுகிற போது, 'Don't measure' என்றார்.
ஆனால், ஜே. கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டது உடம்பின் அளவை எடுப்பது அல்ல. ஒருவரோடு ஒருவரை மனதில் ஒப்பிட்டு நொந்து போவதைத்தான் அவ்வாறு சொன்னார்.
நாம் யார், எப்படிப்பட்டவர்கள் என்று நாம் நினைப்பதைவிட, மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதற்குத்தான் அதிக மரியாதை கொடுக்கிறோம்.
ஒரு கணவன், 'தான் ஒரு நல்ல கணவன்' என்கிற சான்றிதழை மனைவியிடம் எதிர்பார்த்து நிற்கிறான். ஒரு ஆசிரியர், 'தான் ஒரு நல்ல ஆசிரியர்' என்ற சான்றிதலையும் அபிப்பிராயங்களையும் எதிர்பார்த்து நிற்கிறார். மற்றவர்கள் தரும் "நல்லவர்" என்ற அபிப்பிராயச் சான்றிதழ்களை எதிர்பார்த்தே பலர் ஏங்கித் தவிக்கிறார்கள்.
| வரிசை | கூற்று |
|---|---|
| 1 | "கடவுளே! என் புத்தியில் |
| 2 | ஒரு புள்ளி மட்டும் வை. |
| 3 | ரோடு போடுவது என் வேலை''. |
| 4 | - தவசி கூற்று |
அவ்வப்போது மாறிப்போகிற மனித அபிப்பிராயங்களுக்காக மனிதர்கள் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறார்கள் ?
ஐரோப்பாவில் சில காலத்துக்கு முன்பு வரை ஆஸ்துமாவுக்கு மருந்து தரப்படவில்லை. ஆஸ்துமா, மனிதர்களைத் தண்டிப்பதற்காக இறைவன் அனுப்பிய கடைசித் தண்டனை என நினைத்தார்கள். இப்போது மருந்து தரவில்லையா?
அரிஸ்டாட்டில், 'ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகமான பற்கள் உண்டு' என்று எழுதினார். அதைக் கேள்வி கேட்பதற்கு எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பிறகு பெட்ராண்ட் ரஸ்ஸல் மனைவியின் பற்களையாவது அரிஸ்டாட்டில் எண்ணிவிட்டு எழுதியிருக்க வேண்டாமா?'' என்று ரஸ்ஸல் கேட்டார்.
அபிப்பிராயங்கள் மாறிவிடக்கூடியவை. அங்கீகாரங்களும் அவ்வாறானவைதாம்.
வால்ட்விட்மன், 'புல்லின் இதழ்கள்' என்ற தனது கவிதைத் தொகுதியை அந்நாளில் இலக்கிய உலகில் பிரபலமாக இருந்த டால்ஸ்டாய்க்கு அனுப்பினார். அவரோ விட்மனைப் பொருட்படுத்தாததால், இதழ்களைப் புழுதிக்குக் காணிக்கையாக்கி விட்டார்.
அங்கீகாரத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு, உலகத்தில் வந்திருக்கிறது. அங்கீகாரத்தைப் பொறுத்து பல நிகழ்வுகளின் போக்கே மாறியிருக்கிறது.
ஏணி இருப்பது மாடிக்குப் போகத்தான். ஏணியைப் பிடித்துத் தொங்க ஆரம்பித்தால் மாடிக்கு எப்படிப் போவது?
மற்றவர்களின் அங்கீகாரமே நமது வாழ்க்கையின் அடிப்படையாக பல வேளைகளில் அமைந்துவிடுகிறது. நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்கிற அடிப்படையில் நம் வாழ்க்கை உருவாகவில்லை, நம்மைப் பற்றி மற்றவர்களின் எண்ணங்களை, அபிப்பிராயங்களைக் கொள்முதல் செய்து, நமது வாழ்க்கையை உருவாக்கி வைத்திருக்கிறோம். மற்றவர்கள் நமக்குக் தந்த மதிப்பெண்களின் கூட்டல் தான் நாம்.
நம்மைப் பற்றி மற்றவர்களின் எண்ணங்களை, அபிப்பிராயங்களைக் கொள்முதல் செய்து, நமது வாழ்க்கையை உருவாக்கி வைத்திருக்கிறோம். மற்றவர்கள் நமக்குத் தந்த மதிப்பெண்களின் கூட்டல் தான் நாம்.
நம்மில் ஒவ்வொருவரும் ஏறத்தாழ ஒரு சாக்கு லாரியில் ஏற்றப்படுகிற பார்சலைப் போல ஆகிவிட்டோம், பார்சலின் மீது ஒவ்வொருவரும் அவரவர் முத்திரையைப் போட்டிருக்கிறார்கள். தபால் உறையில், தபால் தலையின் மீது முத்திரை இருந்தால் சரி. விலாசம் முழுழுவதும் அவரவர் முக்கிரையைக் குத்தினால் கடிதம் போய்ச் சேராது. அப்படித்தான் நாம் எல்லோரும் ஆகிவிட்டோம்.
வாஜஸ்பதி என்பவர் முன்னொரு காலத்தில் பிரம்மசூத்திரத்திற்கு விளக்கம் எழுதினார். அவரை அவ்வாறு எழுதக் கேட்டுக்கொண்ட அவர் குரு, தம் மகளான பாமதியை அவருக்கு மணம் செய்து கொடுத்தார்.
ஆனால் மிஸ்ரா, விளக்கத்தை எழுதுவதில் தன் காலத்தையெல்லாம் கழித்தார். பிரம்மசூத்திரம் என்பது மகா வாக்கியங்கள் அடங்கிய பேர்றிவுப் பெட்டகமாகும். ஆகவே உரை எழுதுவதற்கு ஆண்டுகளானது. அன்ன ஆகாரம் இல்லாமல், முக்கியமாக எங்கும் எழுந்து செல்லாமல், மிஸ்ரா எழுதிக் கொண்டிருந்தார்.
இதெல்லாம் சாத்தியமா என்று கேட்கக் கூடாது. ஏனென்றால் உண்மையைச் சொல்வதற்கென்றே அதுபோன்ற வரலாற்றுச் சம்பவங்கள் வருகின்றன. மனிதர்களோ உண்மையை விட்டுவிட்டுக் கதைகளைப் பிடிக்குக்கொள்கிறார்கள்.
ஏணி இருப்பது மாடிக்குப் போகத்தான். ஏணியைப் பிடித்துத் தொங்க ஆரம்பித்தால் மாடிக்கு எப்படிப் போவது?
மிஸ்ரா இறுதியாகப் பிரம்மசூத்திரத்திற்கு உரை எழுதி முடித்துத் தலைநிமிர்ந்து ஏறிட்டுப் பார்த்தார். அவருக்கெதிரே வயதான மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்து "நீங்கள் யார்?" என்று கேட்டார். அவளோ, "நீங்கள் எழுதி முடித்துவிட்டீர்களா?. நீங்கள் எழுதுவதற்குப் பணிவிடை செய்வதே என் பாக்கியம்" என்றார்.
சற்று அதிர்ச்சியுற்ற மிஸ்ரா மீண்டும் "நீங்கள் யார்?" என்று கேட்டார். " நான்தான் உங்கள் மனைவி பாமதி. நீங்கள் எழுதி முடித்துவிட்டீர்களா?" என்று கேட்டார். அதற்கு அவர், "எழுதி முடித்துவிட்டேன். தலைப்புதான் வைக்கவில்லை" என்று சொன்னார். அந்த அம்மாவோ திரும்பவும், "உங்களுக்குப் பணிவிடை செய்வதே என் பாக்கியம்" என்று கூறினார்.
பாமதியின் எந்தவித அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காத சேவையை உணர்ந்த வாஜஸ்பதி மிஸ்ரா, அந்தப் புத்தகத்திற்குத் தன் மனைவியின் பெயரையே பாமதி என்று சூட்டினார். எந்தவித அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காத பெண்மணிக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது.
இந்தக் கதையிலிருந்து கணவரின் கவனத்தைக் கேட்டுப் பெறாத மனைவிகளும் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.
ஆனால் இன்றோ, பத்து நிமிடத்திற்கு மேல் செய்தித்தாள் ஒன்றைக் கணவர் படித்துக்கொண்டிருந்தால், பத்திரிகையைப் பறித்துக்கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள். தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் தங்களை இழுந்து போகிற மனைவிமார்களைப் பார்த்துக்கோபப்படுகிற கணவர்களும் இருக்கிறார்கள்.
இவ்வளவுக்கும் காரணம், ஒருவர் மற்றவரின் அங்கீகாரத்திற்காக ஏங்குவதுதான்.
நீங்கள் உங்களை அங்கீகரித்துவிட்டால் - நிழல் உங்களை ஈர்க்காது. மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக ஏங்கமாட்டீர்கள். உங்கள் சந்தோஷமும் நிம்மதியும் மற்றவர்களால் குலைக்கப்படாது.
அங்கீகாரம்தான் ஏக்கப் பெருமூச்சை உருவாக்குகிறது. மற்றவர்களின் குறைகள் அவர்களின் நிழல்களே. அவர்களின் நிறைகள்காம் நிஜம், நிஜத்தைவிட்டு, நிழலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் ஏக்கப் பெருமச்சுக்குக் காரணம்.
மனைவிமார் எதிர்பார்ப்பதை எதிர்பார்க்கிற விதத்தில் பர்த்திசெய்யாத கணவன்மார்களும் அதேபோல் கணவன்மார் எதிர்பார்ப்பதை எதிர்பார்க்கிற விதத்தில் பர்த்தி செய்யாத மனைவிமார்களும் இருக்கக் காரணம்.. நிஜத்தைவிட்டு நிழலைப் பார்த்து, நிழலை நம்பி வாழ்வதுதான்.
மற்றவர்களின் வசதி வாய்ப்புகள் மூலம், அவர்களின் நிஜவாழ்க்கையை எடைபோட்டு நிஜமாகிவிட முடியாது.
மற்றவர்களின் அபிப்ராயங்கள் உண்மையாகிவிட முடியாது. அவை உங்களைப் பற்றிய மற்றவர்களின் மேலோட்டமான கருத்துகளே. மற்றவர் உங்களைப் புகழ்வது, இகழ்வது - இரண்டுமே பாதி உண்மை.
பாதி உண்மை, பொய்யைவிட மோசமானது. நிஜத்தின் நிழல் மட்டுமே.
நிஜமான வாழ்க்கை என்பது சந்தோஷமும் நிம்மதியும் நிறைந்த வாழ்க்கைதான். நிஜமான வாழ்க்கை வாழுங்கள், உங்கள் மனதைத் திருப்புங்கள். நிழலைப் பார்த்துப் பொறாமைப்பட்டு வருந்த வேண்டிய அவசியமில்லை.
நீங்கள் உங்களை அங்கீகரித்துவிட்டால் - நிழல் உங்களை ஈர்க்காது. மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக ஏங்கமாட்டீர்கள். உங்கள் சந்தோஷமும் நிம்மதியும் மற்றவர்களால் குலைக்கப்படாது.
பெருமை
- பெருமை நல்லது அது ஒருவரைச் சிறுமையில் சிக்கவிடாமல் காக்கும். அது தற்பெருமையாகவோ, வெட்டிப் பந்தாவாகவோ, அகந்தையாகவோ மாறும்போது, அதுவே அவரை அழித்துவிடும்.
- பெருமை தரும் உற்சாகம் போதைமருந்து தரும் உற்சாகத்திற்குச் சமம்.
- போதைமருந்து உடலை அடிமைப்படுத்தும். பெருமையுணர்வு மனதை அடிமைப்படுத்தும்.
- போதைமருந்தால் உடல் மட்டும் வீணாகும். பெருமை என்ற மாய உணர்வு, மனதை வீணாக்குவதின் மூலமாக உடலையும் சேர்த்து வீணாக்கும் .
நோயாளியிடம் உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. நோயாளியிடம் மருத்துவர்:
"துக்கப்படாதீர்கள். உங்கள் நிலை கவலைக்கிடமாகி இருக்கிறது. அதிகபட்சம் இன்னும் இரண்டு நாள் இந்த உடல் உங்களுக்குச் சொந்தமாயிருக்கலாம்.
தன் அருமை புரியாத வரை சிறுமையும் பெருமையும் மாறி மாறி மனிதனைத் தாக்கும்.
பெருமையடித்தல் எனும் மனத்துளை வழியே சக்தி வீணாகியபடியே இருக்கும்.
கடைசிகால நடவடிக்கைகளில் நீங்கள் விரும்பலாம.
அதோடு, உங்களுக்கு யாரையாவது பார்க்க ஆசையிருக்கிறதா?" என்று கேட்க, "ஆமாம்" என மெல்லிய குரலில் மருத்துவரின் கண்களைப் பார்த்து சொன்னார் நோயாளி.
"யார் அது?" என ஆர்வத்தோடு மருத்துவர் கேட்டதற்கு,
நோயாளி, டாக்டரை" என்றார். மருத்துவர் இடிந்து போனார்.
- மனிதன், தான் இடிபட்டதாய் உணரும் எல்லாக் சூழ்நிலைகளிலும் அவன் அடிபடுவது இந்தப் பெருமையுணர்வில்தான்!
பெருமைப்பட ஆயிரம் காரணம் உண்டு. சிறுமைப்படச் சொல்வது எளிது. ஆனால், எளிமையாய் வாழ ஒரு காரணம் சொல்வதுகூட மனதுக்கு மிகக் கடினமானது.
எத்தனைப் புதுப்புது வழிகள் கண்டுபிடிக்கிறான் மனிதன், பெருமை பேசிக் கொள்வதற்கு !
தன்னைப் பற்றித் தானே பெருமைக்காக தம்பட்டம் அடித்துக்கொள்வது ஒரு வகையென்றால், இன்னொரு வகை இன்னும் தந்திரமானது.
இந்த வகை மனிதர்கள் அவர்கள் சம்பந்தப்பட்ட காரியங்களை நேரடியாகப் பேசாமல், மறைமுகமாகப் பேசுவதால்தான் பெருமையடைவதாக நினைப்பார்கள். ஒருவிதக் கர்வத்தில் வாழ்வார்கள்.
தனக்குத் தெரிந்த V.I.P. பற்றி, தன் மதம் பெருமையடிப்பதை தாண்டி பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்களைச் சுற்றிச் சுற்றியே நாம் பெருமையடித்துக் கொள்ளும்போதெல்லாம், நம் அடிமனதில் நம் பெருமையைப் பேசுகிறோம்.
இதைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம்.
சும்மா பெருமை பேசுவது தவறல்ல.
அது நல்ல உரையாடலின் ஒரு பகுதியே.
இரு கரம் தட்டாமல் ஓசை எழுப்பாது. இருவரும் சம அளவில் திட்டாமல், எரிச்சலாகாமல் சண்டை எழும்பாது. வெறும் ஒரு கையால் எவ்வளவு விளாசினாலும் வாய்ப்பில்லை. வீசும் கை வலிக்கும்! எரிச்சலாட்ட ஒருவர் தூண்டுகையில் சாந்தமாக இருக்க, பேச, செயல்பட நீங்கள் கற்றுக் கொண்டால் சண்டை வராது.
எரிச்சலாக்க முயல்பவரோ எரிச்சலாவார்!
ஆனாலும் அவரால் நமக்கும், நம்மால் அவருக்கும் எந்தப் பாதிப்பும் வராது.
இது ஒரு தியானம். எரிச்சல் பட நீங்கள் தூண்டப்படுகையில் விழிப்பாயிருங்கள்.
தொடர்ந்து சாந்தமாயிருங்கள். தியானம் நிகழக் காண்பீர்கள்.
ஏதோ ஒரு வகையில் 'நான் தகுதி குறைந்தவன்' என்ற ஆழ்மன எண்ணம் தரும் தூண்டலால் மீண்டும் மீண்டும் பெருமையடிப்பதற்காக மனிதன் முனைய ஆரம்பித்ததே தவறு.
இது ஒருவித சுயபரிகாசமே.
பெருமை பேசித் திரிவது போன்ற சிறுமை வேறில்லை. காரணம் - உள்ளிருக்கும் சிறுமைதான் வெளியே பெருமையடிக்க, வெட்டிபந்தாவில் இறங்கும் அளவுக்குக் கூட ஒருவனைத் தூண்டுகிறது.
புத்தரை ஒருமுறை ஒருவர் மிக மோசமாகத் திட்டினார். புத்தர் அமைதி காத்தார்.
"இனி திட்ட என்ன இருக்கிறது ". என அவர் ஓயும் வரை அவரைத் திட்டவிட்டு அமைதியாயிருந்த புத்தர் ... 'நீ ஒருவருக்குப் பரிசளிக்கிறாய் ... அவர் அதை வேண்டாம் என மறுத்தால், அப்பரிசு யாரிடம் திரும்பி வரும்! எனத் திட்டியவரிடம் கேட்டார். அவர், "என்னிடம்சு என்றார். புத்தர், "நீ என்னைத் திட்டியதை நான் ஏற்றுக்கொள்ளவில்லைசு என்றார் . அவர் திண்டாடினார்!
ஊ திட்டியதால் திட்டினேன், அடித்ததால் அடித்தேன் எனும் விளக்கம் மடத்தனமானது.
அவர் செய்த அதே தவறை நீயும் செய்வது சிறுபிள்ளைத்தனம்!
சித்து வேலைகள் கொண்டதால், ஏதோ ஏதோ பெரிதாகச் சாதித்துவிட்டோம் என்றெண்ணி பெருமை வலையில் சிக்கிக் கொண்டவர் தாதுங்கீர்.
தன்னுடைய அமானுஷ்ய சக்திகளைப் பற்றி மற்றவர்களிடம் பெருமை அடித்துக் கொள்வதற்கு தாதுங்கீர் கொடுத்திருந்த பெயர் ஆன்மீக 'அலசல்.'
ஞானப்பாதையில், ஒரு கட்டத்தில் அமானுஷ்ய சக்திகள் தேடுபவனுக்குக் கிடைக்கும்.
இறுதி உண்மையான அடைவதை விட்டுவிட்டு, அமானுஷ்ய சக்திகளின் மேல் சிக்கு இறங்கினால் கர்வம் தலைக்கேறிவிடும். ஞானப்பாதையிலிருந்து வழி தவற நேரிடும்.
தான் ஏதோ பெரிய ஆன்மீகவாதி என்ற ரீதியில் எல்லோரிடமும் பேசித் திரியும் தாதுங்கீர், பெண் ஹஸிட் ஞானியான ஷலானாவைச் சந்திக்க நேர்ந்தது.
பெருமை பீடிகையோடு ஆரம்பித்த தாதுங்கீர், "உங்களைப் போன்ற ஒரு ஞானியால்தான், என்னைப் புரிந்துகொள்ள முடியும். இதுவரை நான் ஒரு புத்திசாலியைக் கூடச் சந்திக்கவில்லை. அதனால் உங்களைச் சந்திப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார்.
சிறிதாகச் சிரித்த ஷலானா, "அப்படியென்றால் உங்களைப் பொறுத்தளவு, உங்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே முட்டாள்கள். அப்படித்தானே?" என்று கேட்டார்.
ஷலானாவின் பேச்சு தாதுங்கீரின் பெருமையடிக்கும் உணர்வை நேரடியாகத் தாக்கியது. தாதுங்கீர் தன் உடலுக்குள் எங்கோ அடிபட்டது போல உணர்ந்தார்.
குட்டுப்பட்டதை மறைக்க முயன்றவராய், "இல்லை இல்லை... நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. உங்களைப் போன்ற புத்திசாலிகள் இல்லை என்று சொல்ல நினைத்து வாய் தவறுதலாக அப்படிச் சொல்லிவிட்டேன்" எனச் சமாளித்தார்.
மேலும் தாதுங்கீர், "சரி, சரி, சரி... நான் உங்களோடு ஆன்மீகம் பற்றி அலசி ஆராய விரும்புகிறேன்" என்றார்.
ஷலானா, "நானொரு சாதாரணப் பெண். நான் ஆனந்தமாக இருக்கிறேன். அவ்வளவுதான். மேற்கொண்டு ஆன்மீகம் பற்றி எனக்கெதுவும் தெரியாது. உங்களுக்கு ஏதாவது தெரிந்திருந்தால் எனக்குச் சொல்லிக்கொடுங்கள்" என்றார் வெகு எளிமையாக.
பயன்பாடுகளே நீங்கள் அருமையானவர்கள். பெருமை பேசி உயிர் வாழும் அளவுக்கு இறங்க வேண்டிய அவசியமென்ன ? சிந்தியுங்கள்!
தாதுங்கீர்க்கு குஷி தாளவில்லை. "ஒன்றுமறியா இந்தப் பெண்ணை எல்லோரும் ஞானி என்று நம்புகிறார்கள், ஆனால், என்னைப் போன்று சித்துக் கலையில் தேர்ந்தவனிடம் இவரால் நடிக்க முடியவில்லை..." என்றெண்ணிய தாதுங்கீரின் பெருமை உணர்வு நிமிடங்களில் பல மடங்காகக் கூடிவிட்டது.
தாதுங்கீர். "வாருங்கள் ஷலானா, நம் எதிரே பொங்கியோடும் நதியின் மீது குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டே ஆன்மீகத்தை அலசலாம்" என்றார் கம்பீரமான குரலில்.
தண்ணீரின் மீது நடக்கும் சித்துக்கலையை பல வருடங்கள் செலவு செய்து தான் பெற்றதாக பலரிடம் கூறுவார். கேட்பவரும் வியந்து "அப்படியா!" எனச் சொல்ல, தாதுங்கீர் தண்ணீர் மீது நடந்து காட்டுவார்.
"ஆஹா! ஒஹோ!" என்று மற்றவர்கள் புகழ்ந்து பேச, தாதுங்கீர் தனக்குள் பெருமையடைந்து சிரிப்பார். இது எப்போதும் நடப்பது. ஆனால், ஷலானாவின் பதில் அவரைக் திடுக்கிட வைத்தது.
நதி மீது நடந்துகொண்டே பேசலாம் என்றவரிடம், ஷலானா, "ஓடும் ஆற்றின் மீது நடந்து நடந்து அது எனக்குச் சலித்துவிட்டது, தாதுங்கீர்!
வாருங்கள். வான் மேகங்களில் ஏறலாம். அங்கு மேலும் கீழும் பறந்தவாறு ஆன்மீகத்தை நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுங்கள். நான் தெரிந்துகொள்கிறேன்" என்று எளிமையாகக் கூறினார்.
தாதுங்கீர் உடைந்துபோனார்.
ஷலானா மேகங்களில் பறக்க அழைத்ததில் தாதுங்கீரின் பெருமை சுக்குநூறாக உடைந்தது. தண்ணீரில் நடப்பதையே தான் இவ்வளவு பெருமை அடித்துக் கொண்டிருக்க, ஒரு சாதாரணப் பெண் போல இருந்து கொண்டு "மேகத்தில் பறக்கலாம். வா' என எளிமையாக ஷலானா அழைத்த விதம் தாதுங்கீரை என்னென்னவோ செய்தது.
பெருமை உடைந்து தாழ்ந்த குரலில், " ...அம்மா ... எனக்குத் தண்ணீர் மீது நடக்க மட்டும்தான் தெரியும். மேகங்கள் மீது எப்படிப் பறப்பது?" என்று வினவினார் தாதுங்கீர்.
ஷலானா, "குழந்தாய்! மேகங்கள் மீது உனக்குப் பறக்கத் தெரிந்தால் என்ன தெரியாவிட்டால் என்ன ?
நிலத்தில் நடந்து பேசினாலும் ஆற்றின் மீது நடந்து பேசினாலும் மேகத்தில் பறந்து பேசினாலும் பேசப்போவது என்னவோ ஒரே பேச்சுதானே? இடத்திற்கு இடம் ஆன்மீகம் மாறுமா என்ன?" எனக் கேட்டார்.
தாதுங்கீர்" மாறாதுதான்" என்றார்.
" ஆற்றின் மீது நடப்பதின் மூலமாக, ஆன்மீகத்தில் என்ன தெரிந்து கொண்டீர்கள். என்ன வளர்ந்தீர்கள் ?"
தாதுங்கீர் யோசித்தார். "ஒன்றுமில்லை" என்றார்.
ஷலானா, "இப்படித் தனிமனித வளர்ச்சிக்குப் பிரயோஜனமில்லாதப் அமானுஷ்ய சக்திகளோடு விளையாடினால் வினைதான் மிஞ்சும். பல வருடங்கள் ஒரே ஒரு சித்து வேலைக்குச் செலவழித்த நீங்கள் அத்தனை வருடங்களையும் வீணடித்து விட்டீர்கள்.
பெருமையடித்தல் புற்றுநோய் போல மனதில் வளர்ந்ததுதான் மிச்சம்.
இப்பொழுதுகூட நீங்கள் உங்கள் தவறை உணராமல், அடுத்து மேகங்களில் பறப்பது எப்படியென்றே கேட்கிறீர்கள் ? புரிகிறதா ?' எனக் கூறி தாதுங்கீரின் தவறைப் புரிய வைத்தார்.
சத்யத்தை, அதி உன்னத உண்மையை உணர்வது மட்டுமே இலக்காக இருக்க வேண்டும். இது ஆன்மீகத்தின் சாரம்.
சத்யம் நோக்கிச் செல்லும் ஞானப்பாதையிலிருந்து, ஒருவரை வழி விலகச் செய்வது நேரடியாகவோ, மறைமுகமாகவோ வெளிப்படும் இந்தப் பெருமையடிக்கும் சுபாவம்தான்.
அர்த்தமுள்ள சம்பவம் ...
நாய்களின் பொதுக்கூட்டத்தில் இப்படிப் பெருமை பேசப்பட்டதாம்.
தலைவர் சொன்னது "நமக்கும் கடவுளுக்குமுள்ள வித்தியாசம் மிக மிகச் சிறியது."
"அப்படியா!" கேட்டக் கூட்டத்திடம்,
" ஆம்! நம் பெயர் DOG. அதை திருப்பிப் போட்டால் GOD" எனப் பெருமையோடு தலைவர் சொன்னது.
- பெருமை பேசுவது எளிது. ஆனால், அது நேர விரயம்! தனிமனித வளர்ச்சிக்கு எதிரி.
பெருமையுழுத்தல் முன்னேற்றத்தின் தடைக்கல் ... எளிமை முன்னேற்றத்தின் படிக்கல் !
ஆன்மீகவாதி, ஆத்திகவாதி, நாத்திகவாதி, அரசியல்வாதி - என்று என்ன பெயர் வேண்டுமானாலும் நீங்கள் உங்களுக்கு வைத்துக் கொள்ளுங்கள். எந்த வாதியாக நீங்கள் இருந்தாலும் சரி, உங்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கப்போவது உங்களின் பெருமையடிக்கும் சுபாவம்தான்.
பெருமை என்ற விருக்ஷம் எளிமை, அது வலிமை!
சிறுமை என்ற விதையிலிருந்து முளைத்ததுதான்.
என்றோ, எப்படியோ மனிதனுக்குள் நுழைந்துவிட்ட சிறுமை உணர்வு [ தன்னைப் பற்றிய குறைமதிப்பீடு ] மனிதனைத் தொடர்ந்து குத்திக்கொண்டேயிருக்கும். இதை மறக்க, மறைக்க உருவாவதே பெருமையடித்தல் சுபாவம்.
பெருமையடித்தலின் பக்க விளைவு, இது சிறுமையை இன்னும் கொஞ்சம் ஆழமாக உள்ளுக்குள்ளே தள்ளிவிடும். உறுத்தல் இன்னும் கொஞ்சம் அதிகமாகும்.
நீங்கள் யாராக இருந்தாலும் சரி, நீங்கள் உழைத்த அளவுக்கு நீங்கள் சாதிக்கவில்லையெனில் தெரிந்துகொள்ளுங்கள்... பெருமையடிக்கும் சுபாவம்தான் சாதகப் பாதையிலிருந்து உங்களை விலக்கியிருக்கும்.
எதற்கும் உதவாத பெருமையடிக்கும் சுபாவத்தைக் கண்டுபிடித்து, தூக்கியெறியுங்கள். பெருமை கலைக்கப்பட்டால் அதன் உள்முகமான சிறுமையும் கலைந்துவிடும்.
பெருமை, சிறுமை என்ற இரு தடைக்கல்லையும் தாண்டிவிட்டால் வாழ்வை அருமையாய் வாழலாம். பெருமை, சிறுமை பேசும் காலங்களையெல்லாம் தியான காலமாக மாற்றுங்கள்!
யாரையும் யாருடனும் ஒப்பிடாதீர்கள் !
- வெறுமனே ஒப்பிடுவது வாழ்க்கைக்கு உப்பிடாது.
-
★ மற்றவர்களோடு தன்னை ஒப்பிட்டு நொந்து போவது தாழ்வு மனப்பான்மை. ஒப்பிட்டுக் கர்வப்படுவது
-
★ மற்றவர்களோடு தினம் தினம் தன்னை ஒப்பிட்டு ஒப்பிட்டு மனத்தைச் சிறுமையின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றால், அது பொறாமையாகவும் வெறுமையின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றால், அது ஆதிக்கக் குணமாகவும் மாறும். நம்மில் பலர் ஒட்டகச்சிவிங்கியை நேரில் பார்த்திருக்கமாட்டோம். மிகச் சில பேர் மிருகக்காட்சிசாலையில் பார்த்திருப்பார்கள். ஆனால், டிஸ்கவரி சேனலில் பலரும் ஒட்டகச்சிவிங்கியைப் பார்த்திருப்பார்கள். இந்த ஒட்டகச்சிவிங்கி ஒரு நாள், "நான் ஏன் இவ்வளவு உயரமாக இருக்கிறேன். குள்ளமாக இருந்திருந்தால் முயலைப் போலத் துள்ளி ஓடலாமே" என்று நினைத்து வருந்தியது.
அப்போது நரி ஒன்று குறுக்கிட்டது. அது ஒட்டகச்சிவிங்கியைப் பார்த்து, "ஏன் நீ உயரமாக இருக்கிறாய்?" என்று கேட்டது. "எனது கவலையும் அதுதான்" என்றது ஒட்டகச்சிவிங்கி. அப்போது நரி கவிழ்க்கப்பட்ட ஒரு கூடையின் மேலே ஏறிக் கொண்டு பேசத் தொடங்கியது.
"மனிதன் மாட்டுக்கு வைக்கோல் வைக்கிறான். ஏன்? அது பாலைக் கறக்கும் என்பதால்தான். குதிரை, வண்டியை இழுப்பதால்தான் கொள்ளு வைக்கிறான். நாய் வீட்டைக் காக்கிறது. எனவே சோறு வைக்கிறான். தனக்குப் பயன்படாத எந்தப் பொருளையும் உயிரையும் மனிதன் போற்றுவது இல்லை. ஒட்டகச்சிவிங்கியே, நீ பாலும் கொடுக்கமாட்டாய். வண்டியும் இழுக்கமாட்டாய். வீட்டைக் காக்கவும் மாட்டாய்.
ஆகவே பூமியில் கோடை காலத்தில் புல், பூண்டு வற்றிப்போனாலும், நீ உயரமாக இருந்தால்தான் இலை, தழைகளைப் பறித்துச் சாப்பிட முடியும். எனவேதான் இறைவன் உன்னை உயரமாகப் படைத்திருக்கிறான்" என்று சொன்னது நரி. பிறகுதான், ஒட்டகச்சிவிங்கிக்கு இறைவன் தன்னை உயரமாகப் படைத்ததிலும் ஓர் அர்த்தம் இருக்கிறது என்பது தெரியவந்தது.
இன்று போட்டி, பொறாமையில் பெரியவர்களாக வளர்ந்துவிட்ட ஒவ்வொரு சிறுவர்களுக்கான, வாழ்க்கையின் அர்த்தம் பொதிந்த அருமையான கதை இது.
உலகில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் நோக்கம் உண்டு. பயன்பாடு புரிந்துகொண்டவர்கள் ஆனந்தமாக இருக்கிறார்கள். புரிந்துகொள்ள முடியாதவர்கள் அல்லல்படுகிறார்கள்.
ரோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் 'தவிப்பு'தான் ஒப்பிடுதல், பொறாமை போன்ற எதிர்மறை உணர்வுகளை உருவாக்குகிறது.
அழகான ரோஜா. அதன் கீழே முட்கள். ஏன் இப்படிப் படைத்தான் ஆண்டவன்? அழகான ரோஜாவை ஆடு, மாடுகளிடமிருந்து காப்பாற்றத்தான். முட்கள் மட்டும் இல்லாமல் போயிருந்தால், ரோஜாவுக்கு மரியாதையே இல்லாமல் இருந்திருக்கும். எனவே, இரண்டையும் வேறுபடுத்திப் பேசுவதில் அர்த்தம் இல்லை.
மூங்கில்களில் சில பாடை கட்டப் பயன்படுகின்றன. இன்னும் சில மேடை கட்டப் பயன்படுகின்றன. மிகச் சில மூங்கில்களே புல்லாங்குழலாக மாறுகின்றன. எனவே புல்லாங்குழல் செய்கிற மூங்கில்கள்தான் உயர்ந்தது. மற்றவையெல்லாம் தாழ்ந்தவை என்று சொன்னால், நம் சிந்தனை இன்னும் செம்மைப்படவில்லை என்று அர்த்தம்.
நாம் எப்படியிருந்தாலும் சரி, நாம் நாமாயிருத்தல் வேண்டும். வேறு ஒருவரைப் போல இருக்கக் கூடாது. புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பது பழமொழி. எப்படிப் புழக்கத்தில் இருக்கிறது ?
காரணம், பூனை புலி மாதிரி இருக்கிறது. எலிகள்தான் அவற்றைக் கூட பூனை எதிர் நின்று போரிட்டு வீழ்த்தாது. எலியை ஓடவிட்டு, ஓடவிட்டு அதன் மனவலிமையைக் குன்ற வைத்து இறுதியாகத்தான் எலியைக் கொல்லும். புலி அப்படியல்ல. ஆக இங்கே புலியோடு தன்னை ஒப்பிட்டுக் கொள்கிற பூனை அவமானச் சின்னமாகிறது.
ஒருவரோடு ஒருவர் ஒப்பிட்டுப் பார்க்கிற குணம் தாழ்வுமனப்பான்மையால் வருகிறது. குறைந்தவர்கள் என்கிற எண்ணமே நமக்கு மற்றவர்களோடு ஒப்பிட வைக்கிறது.
'அவனைப் போல நான் இல்லை. என்னைப் போல அவன் இல்லை' என்று ஒப்பிடுவதனால் தோன்றும். சுவாதித் திருநாள் திருவிதாங்கூர் அரசராக இருந்த போது ஒரு நாடகம் நடைபெற்றது. அதில் ஸ்ரீராமர் வேடம் தாங்கி ஒருவர் நடித்துக் கொண்டிருந்தார்.
அரசர் அன்றைக்கு நாடகத்தின் இடையில் வர நேர்ந்தது. இராமர் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த அந்த நடிகர், அரசர் வந்ததும் அவரைப் பார்த்துக் கும்பிட்டார். அரசர் உடனே நாடக அரங்கினை விட்டு வெளியேறினார். அரசரின் கோபத்துக்கு என்ன காரணம் ?
"இராமனாகவே மாறியிருக்க வேண்டிய அந்த நடிகர், தான் ஒரு நடிகர் மாத்திரமே என்று நினைத்து என்னைக் கும்பிட்டுவிட்டார். இதன் மூலம் இராமரையே அவமதித்து விட்டார்'' என்று சொன்னார் அரசர். சுவாதித் திருநாளின் இராமபக்தி, நடிகரை நடிகராகப் பார்க்க விடவில்லை.
மகான்களின் குணங்களை சராசரி மனிதர்களிடம் எதிர்பார்க்கும்போது இது போன்ற சிக்கல்கள் உருவாகின்றன. அரசன் மீது நடிகருக்கிருந்த உண்மையான மரியாதை அரசன் கண்ணுக்குத் தெரியவில்லை. காரணம் -ஒப்பிடும் குணம்தான். மகானை மனிதனோடு ஒப்பிட்டால் சிக்கல்தான். மனிதனை அவனுடைய முழு குறை, நிறைகளோடு ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும். யாரையும் யாரோடும் ஒப்பிட்டுத் தாழ்த்திப் பார்ப்பது தவறு.
ஒப்பிடுவதால் இன்னொரு சிக்கலும் ஏற்படுவதுண்டு. பாலைவனமான ஓர் இடத்தில், ஓர் இரவு, வழிப்போக்கர் ஒருவர் வந்து ஒரு கூடாரத்தின் கதவைத் தட்டினார். வந்த அதிதிக்கு அந்தக் கூடாரத்தின் உரிமையாளர் இரவிலே உணவு சமைத்துப் போட்டார்.
சாப்பிடக் தொடங்குகிற போது கூடாரத்துக்காரர் "விருந்தாளியே, 'இறைவனுக்கு நன்றி' என்று சொல்லிவிட்டுச் சாப்பிடத் தொடங்கு' என்றார். விருந்தாளியோ, "நான் இதுவரை இறைவனின் நாமத்தைச் சொன்னதில்லை. உமக்கு நன்றி என்று வேண்டுமென்றால் சொல்கிறேன்" என்றார்.
கூடாரத்துக்காரரோ "இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டுதான் சாப்பிட வேண்டும்" என்று வற்புறுத்தினார். விருந்தாளி, "சாப்பாடே வேண்டாம்" என்று கிளம்பி விட்டார்.
ஒப்பிட்டு ஒப்பிட்டு நொந்துபோவதும் ஒப்பிட்டு ஒப்பிட்டு ஊக்கப்படுவதும் உங்கள் கையில்!
அன்று இரவில் இறைவன் கூடாரத்துக்காரரின் கனவில் வந்தார். "இத்தனை நாட்களாக என் நாமத்தை ஒருபோதும் சொல்லவில்லை என்றாலும் குழந்தையாகிய அவனுக்கு நான் சோறு போட்டிருக்கிறேன். ஒரே ஒரு நாள் உனக்கு முன்பாகச் சொல்லவில்லை என்பதற்காகப் பசியோடு அனுப்பிவிட்டாயே" என்று கூற, கூடாரத்துக்காரர் வருந்தினார்.
கூடாரத்துக்காரர் தன்னை பரிசுத்தவான்களோடு ஒப்பிட்டுத் தன்னைப் பற்றி ஒரு தவறான இமேஜ் வைத்திருந்ததால் இந்தச் சிக்கல் ஏற்பட்டது. நாம் ஒருவரிடம் குறை கண்டுபிடிப்பதே எது குறை, எது நிறை? என்று நாம் நம் மனதில் கொண்டிருக்கும் ஒப்பீட்டுக் கருத்துக்களைப் பொறுத்தது.
'எது குறை? எது நிறை?' என்பது உங்களுக்கு மாத்திரமே பொருந்தும். உங்களுக்கு மாத்திரமே மற்றவர்களின் குறை, நிறைகளை அளக்க ஆரம்பிக்கும் போதுதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.
இந்த ஒப்பீடுகளால் நாமும் நொந்துபோகிறோம். மற்றவர்களையும் நோகடிக்கிறோம்.
மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு நொந்துபோவதற்கு, இன்றிலிருந்து ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள். மற்றவர்களின் நிறைகளையும் சாதனைகளையும் உற்சாகப்படுத்தும் காரணிகளாக, ஊக்கப்படுத்தும் விஷயங்களாகப் பார்க்க ஆரம்பியுங்கள் !
தாழ்த்திக் கொள்ளாதீர்கள்
பெரீனா கடற்கரையில் விளையாடிவிட்டு வந்த குழந்தைப் பருவ நிட்டியிடம், அவன் அம்மா கேட்டார்: "எத்தனை பெண் குழந்தைகள் உன்னோடு இன்று இருந்தார்கள் ?"
"ஏன் கேட்கிறீர்கள்?" எனக் கேட்ட நிட்டியிடம், அம்மா சொன்னார்: "நேற்று மட்டும் நீ மூன்று பெண் குழந்தைகளோட சண்டையிட்டதாக பக்கத்து வீட்டு ஆன்ட்டி சொன்னார்கள் ... அதனால்தான்! "
"என்னால் இன்று எத்தனை பெண்கள் வந்தார்கள் என்று சொல்ல முடியாது" என்றான் நிட்டி.
"ஏன்?"
"இன்று யாருமே கவுன் போட்டுக்கொண்டு வரவில்லை. எல்லோரும் ஒரே மாதிரி சுவிம்மிங் டிரஸ்தானே போட்டிருந்தோம்.
எல்லோரும் ஒரே மாதிரி என்னைப் பொறுத்தளவிற்கு இன்று எங்களோடு ஆண்களோ, பெண்களோ விளையாட வரவில்லை. சரிதானே?" என்றான் குழந்தை நிட்டி.
குழந்தையைப் பொறுத்தளவிற்கு ஆண், பெண் வேறுபாடு என்பது உடையளவிலானது. வளர வளர வேறுபாடுகளும் வரையறைகளும் மனதில் வளரும்.
மனிதருக்குத் தான் பார்க்கும் ஒவ்வொன்றையும் பகுத்து, பிரித்து வேறுபார்க்கும் அளவுக்கு மனம் வளர்ந்து விடுகிறது
விளைவு - ஒருவருக்குள்ளேயே பலவிதமான மனப்பான்மைகள் குடிகொள்ள ஆரம்பித்துவிடுகிறது!
நேராக உட்கார். தியானம் நிகழும் -பதஞ்சலி.
• யோகப் பிதா பதஞ்சலி சொன்னது உண்மை ... அந்தக் கால மனிதனுக்கு!
இந்தக் கால மனித மனம் அந்தக் கால மனித மனம் போல்' எளிமையாய்' இல்லை.
நேராக உட்கார்வதே பலருக்குக் கடினம் - இதில் தியானம் நிகழ்வது ... ? ? ?
சிக்கி மக்கிப் போன மனம் சிக்க அவிழ்க்கப்பட ரஸவாதம் சீக்கிரம் நீகழ வேண்டும்.
- ★ நான் அழகு நான் அசிங்கம் நான் உயர்ந்தவன் நான் தாழ்ந்தவள் நான் அதிர்ஷ்டக்காரி நான் துரதிர்ஷ்டக்காரன் ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்வது அல்லது தாழ்த்திக் கொள்வது இரண்டுமே அகங்காரத்தின் வெளிப்பாடுகள்.
என்ன! அதிர்ச்சியாக இருக்கிறதா?
உயர்வுமனப்பான்மையை அகங்காரம் எல்லோரும் எளிதாக ஏற்றுக்கொள்வோம். தாழ்த்திக் மனப்பான்மை சொன்னால் ஏற்றுக்கொள்வது கடினம்.
-
★ கர்வம், தாழ்வுமனப்பான்மையை விட பல மடங்கு மேல். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா. . . கர்வத்தால் பேசிய வார்த்தைகளுக்கு இன்றோ நாளையோ சமுதாயம் கொட்டு சமுதாயத்திடம் அடக்கிவிடும்.
-
★ தாழ்வுமனப்பான்மையால் ஒருவர் தன்னைத் தாழ்த்திக்கொண்டால் சமுதாயம் கொட்டாது. மாறாக சமுதாயம் மதிக்க ஆரம்பித்துவிடும். இவற்றால் ஆரம்பித்துவிடும். அகங்காரத்தின் பாதிப்பு வெளியில் தெரியாது. ஆனால், சம்பந்தப்பட்டவரை மட்டும் பாதிக்கும். நிம்மதியைக் குலைத்துவிடும்.
-
★ நீங்கள் யோசித்தபடி அடக்கமாக, ஒடுக்கமாக இருந்தால் நிச்சயம் தவறில்லை. ஆனால் அடக்கிக்கொண்டும் ஒடுக்கிக்கொண்டும் இருந்தால் அது நிச்சயம் தவறு. நீர் தேங்கினால் விஷமாகும். சக்தி தேங்கினால் துர்சக்தியாகும்.
இது பெரும் பாதகத்தையே விளைவிக்கும். அகங்காரம் என்னும் புண், புரையோட ஆரம்பித்துவிடும். மனம் கெட்டு, உள்உலக வாழ்க்கையில், தனிப்பட்ட உணர்வு சம்பந்தப்பட்ட வாழக்கையில் துர்மணம் வீச ஆரம்பிக்கும்.
- ★ தாழ்த்திக்கொள்கிறேன், பவ்யமாக நடந்து கொள்கிறேன் என்ற பெயரில் தம்மையும் அறியாமல் உணர்வுகளை தேவைக்கு மீறி கட்டுப்படுத்தும் போதுதான் சிக்கலாகிவிடுகிறது.
| நீங்கள் எப்படிப்பட்டவர் | |
|---|---|
| நீங்கள் | என நினைக்கிறபடி |
| இல்லை | எனும் உண்மை உங்களுக்குத் தெரியுமா? |
ஒரு அருமையான சம்பவம்...
தாழ்மையாக நடந்துகொண்டால் தன்னை மற்றவர்கள் நல்ல ஆன்மீகவாதி என்று ஏற்றுக்கொள்வார்கள் என்ற யோசனையில் சிக்கிக்கொண்டவர் கிலெளட்.
"நமக்கெண்னங்க தெரியும்…" "பெரியவங்களெல்லாம் இருக்கறப்போ..." "நான் ரொம்ப சாதாரண ஆளுங்க ... " "எல்லாம் உங்கள் ஆசீர்வாதத்தோடு ... "
இது போன்ற சில வரிகளை 'உண்மையாகவே எளிமையாய் இருப்பவர்களிடமிருந்து காப்பி அடித்துச் செயல்பட ஆரம்பித்தார். சமுதாயத்தில் மதிப்பும் கிடைத்தது.
Simplicity Is The Ultimate Sophistication
- Leonardo da Vinci.
• எளிமையை எட்டிப்பிடி. வரம்பில்லா சுகத்தை இகத்திலேயே பெறுவாய்!
கிலெளட் தன்னைக் தாழ்த்திப் பேசப் பேச ...
மற்றவர்கள், "சேச்சே... அப்படியெல்லாம் இல்லீங்க... நீங்க எவ்வளவு பெரிய ஆளு என்று பேச ஆரம்பித்தார்கள்.
மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்று தங்களைத் தாங்களே உயர்த்திப் பேசியவர்கள், மற்றவரிடம் கொட்டு வாங்கி அடங்குவதையும் தான் உயர்த்தப்படுவதையும் கிலெளட் ஒன்றுபடுத்தி ஆராய்ந்தார்.
வாழ்க்கைப்போக்கில் ஒரு நாள்... கிலெளட்டுக்குப் பளிச்சென்று ஒரு உண்மை புரிந்தது. மற்றவர்கள் என்னை உயர்த்திப் பேசுவதால் அடையும் கொஞ்ச சந்தோஷத்திற்காகத்தான் நான் என்னைத் தாழ்த்திக் கொள்கிறேனோ!
என் மனதின் நோக்கம் புரிந்தால், தெரிந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்?' என்று கிலெளட் யோசித்ததும் கொஞ்சம் நடுக்கம் பிறந்தது.
சப்தமின்மை அமைதியாகாது. வெறும் சப்தமின்மை மயான அமைதி!
" என்னை மற்றவர்கள் புகழ வேண்டும். மதிக்க வேண்டும் என நான் விரும்புவது ஏன்?" என்ற கேள்வியால் வாட்டப்பட்ட கிலெளட்க்கு, ஜருதிஸ்ட்ராவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஐருதிஸ்ட்ராவைச் சுற்றி மக்கள் கூட்டம் மிகுந்திருந்தது, திலெளட் மெல்ல கூட்டத்தினுள் நுழைந்து ஜருதிஸ்ட்ரா பக்கத்தில் வந்து பவ்யமாக நின்று கொண்டார்.
கிலெளட் முறை வந்ததும் வெகு பவ்யத்தை வரவழைத்து, தாழ்ந்த குரலில் ஜருதிஸ்ட்ராவிடம், "என் பிரச்சனை..." எனப் பேச ஆரம்பித்தார்.
ஜருகிஸ்ட்ரா, "கொண்டையில் ஏதும் பிரச்சனையார்" என்றார்.
"இல்லை நல்லாதான் இருக்கு!"
"அப்புறம் எதற்காக இவ்வளவு தாழ்ந்த குரலில் பேசுகிறீர்கள். நன்றாகப் பேச சொன்னதும் கிலெளட்டின் பேச்சு தொனியே மாறிப்போனது. ஆனால், இன்னும் கைகட்டி குனிந்தபடியேதான் கிலெளட் 'உங்களுக்குக் குளிர்கிறதா?''
"இல்லை சாமி."'
ஜருதிஸ்ட்ரா, "ஏன் இவ்வளவு இறுக்கமாக கைகளைக் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள் ?" எனக் கேட்டதும் கிலெளட்டின் கைகள் விடுபட்டது.
மேலும் கேட்டார் ஜருதிஸ்ட்ரா, "ஏங்க இடுப்பில் ஏதும் நோவா?"
அமைதி என்பது மனதின் அசைவற்ற நிலை. அது உயிரோட்ட முள்ள உணர்வு மிகுந்த ஆனந்த சக்தி நிலை. அது கடவுள் நிலை.
"இல்லை சாமி."
ஜருதிஸ்ட்ரா, "இடுப்புதான் நல்லா இருக்கிறதே. அப்புறம் எதற்காக இடுப்பு வலிக்க குனிந்தே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?" எனக் கேட்டதும் நிமிர்ந்து கொண்டார் கிலெளட்.
எளிமை ஒரு கலை. எளிமை அது இனிமை, மனதின் வலிமையின் புதுமை! எளிமையானவர்களே வலிமை தெரிந்தவர்கள். புயல் காற்றில் நிமிர்ந்து நிற்கும் திடமான மரங்களே வேரோடு பிடுங்கி எறியப்படுகின்றன. எளிமையான புல் வெறுமனே வளைகிறது. தப்பித்துக் கொள்கிறது. - LAO TZU
முகத்திலும் மட்டும்தான் மிகவும் எளிமையானவன் என்பதை மற்றவருக்குச் சொல்லும் பவ்யத்தோடு நின்று கொண்டிருந்தார் கிலெளட்.
ஜருதிஸ்ட்ரா, "ஏன் இந்த வேஷம்?" என்றார்.
கிலெளட், "எது சாமி ?" என்றார்.
ஜருதிஸ்ட்ரா, "இந்த பவ்யம்…!
உண்மையைக் ஒரு தெரிந்துகொள்ளுங்கள். இருக்கும் அளவுக்கும் தாழ்மையோடு எளிமையாக இருக்கும் அளவுக்கும் -நீங்கள் உயர்ந்தவர் அல்ல.
உணர்வு தெளிவு பெற்றவர் அல்ல" என்றார்.
கிலெளட்டின் மூளைக்குள் ஒரு இடி இடித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது - ஜருதிஸ்ட்ராவின் வார்த்தைகள்!
குனி மாறி, நெஞ்சை நிமிர்த்தி, பவ்யமற்ற பாவனையோடு கிலெளட் பேச முயன்றார்... அது மிகவும் வினோதமான ஒன்றாகக் கிலெளட்டுக்குத் தெரிந்தது.
பல காலமாய் பொது இடங்களில் தன்னை எளிமையானவனாய் காட்டிக் கொண்டிருந்த கிலெளட்டின் வேஷங்களை, சில நிமிடங்களிலேயே உடைத்து தூள் ஆக்கினார் ஜருகிஸ்ட்ரா.
வேஷம் கலைந்த கிலெளட் முரட்டுக் குரலில், "என் பிரச்சனை..." எனக் கொப்பளிக்கும் கண்களோடு பேச ஆரம்பிக்க,
ஜருதிஸ்ட்ரா, "உன்னுடைய நடிப்பு கலந்த பாவனைகளும் தேவையே இல்லாமல் தாழ்ந்து பேசும் குரலும்தான் - உங்கள் அகங்காரம் உங்களை வாட்டுவதற்கான அடையாளம்.
உங்கள் பிரச்சினையின் வேர் ஆழமாக இருக்கிறது.
உங்கள் அகங்காரமானது 'புகழ்ச்சி' எனும் தீனி சாப்பிட்டு திருப்தி அடைய, தாழ்வு மனப்பான்மையைத் தேர்ந்தெடுத்துவிட்டது.
இயல்பு நிலைக்கு முதலில் வாருங்கள், பிரச்சனையில் இருந்து எளிதில் வெளி வந்து விடலாம் ... "
தன்னுடைய பல நாள் கேள்விக்கு முழுமையான விடை கிடைத்துவிட்டதாய் கிலெளட்டுக்குத் தோன்றியது.
ஜருதிஸ்ட்ரா, "'என் பிரச்சனை… என் பிரச்சனை என்று ஏதோ சொல்ல வந்தீர்களே! என்ன பிரச்சனை?'' எனக் கேட்டார்.
கிலெளட், "எதுவும் இல்லை... மிக மிக நன்றி சாமி..." என்று நன்றிப் பெருக்கோடு கண்ணீர் மல்கக் கூறினார்.
அதன்பின் வேஷத்தைக் கலைத்து எளிமையாக வாழ ஆரம்பித்தார். நிம்மதி பிறந்தது.
தன்னை உயர்த்திக்கொள்ளும்போது மனதிற்கு ஒருவகை போலிச் சுகம் கிடைக்கும். சில மனிதர்கள் இந்தப் போலிச் சுகத்திற்காகத்தான் கர்வத்தோடு நடந்து கொள்கிறார்கள்.
மனிதன் தன்னைத் தாழ்த்திக்கொள்ளும் போது பலரால் உயர்த்தப்படுகிறான்.
கர்வத்தைவிட, தாழ்வுமனப்பான்மையோடு நடிப்பவருக்கு பல மடங்கு போலிச் சுகம் கிடைக்கும். அதன் விளைவுதான் தன்னை மற்றவர்களிடம் தாழ்த்திக் கொள்வது. தன்னைத்தானே தரம் குறைத்து பேசிக்கொள்வது... என்ற எல்லாமே.
| வாய் முடிவதும் உடல் ஒய்வும் அமைதியல்ல. | |
|---|---|
| மனம் | ஓயும்போதுதான் முதன்முதலாய் |
| அமைதியை | சந்திக்கிறார். கடவுளாகிறார்! |
| மனப்பான்மைகளை | மீறி மனம் ஓய உழை! |
தாழ்த்திக்கொள்வது வேறு. எளிமையாக வாழ்வது வேறு.
இயல்பாக, இயற்கையாக இருப்பவர்கள் தங்களை உயர்த்தியும் சொல்ல மாட்டார்கள். தாழ்த்தியும் சொல்லமாட்டார்கள். இவர்களிடம் எளிமை நிறைந்திருப்பதைப் பார்க்க முடியும். தங்களின் எளிய நிலையை எளிமையாகவே எப்போதும் வெளிப்படுத்துவார்கள்.
எளிமை என்பது ஒருவரிடம் இயல்பாக வெளிப்படுவது.
புகழ்ச்சிக்காக, மதிப்புக்காக தன்னையும் அறியாமல், தன்னைத் தாழ்த்திக் கொண்டால்கூட அது பாதகமே. அது அகங்காரத்தை வளர்க்கும்.
யாருக்காகவும் எதற்காகவும் தாழ்த்திக்கொள்ளாதீர்கள். யாரிடமும், எந்தச் சூழலிலும் உங்களை உயர்த்திக்கொள்ளாதிர்கள்.
உள்ளதை உள்ளபடியே பேசுங்கள்.
உங்களையும் அறியாமல் உங்களைக் கவ்விக்கொண்டிருக்கும் 'தாழ்வு மனப்பான்மையும்' உயர்வு மனப்பான்மையும்' கழண்டு விழ ஆரம்பிக்கும்.
எளிமை எளிமையாய் உங்களுக்குள்ளிருந்து வெளிப்பட ஆரம்பிப்பதைக் காண்பீர்கள். சோதனை செய்து பாருங்கள் புரியும்.
அர்த்தமுள்ள சம்பவம் ...
பிடதி ஆஸ்ரமத்தில் பிரம்மச்சாரி ஒருவர் கேட்டார்: "சாமி, எளிமையாய் இருப்பது எப்படி ? எளிமையாய் சொல்லுங்கள்."
" அது மிக எளிதப்பா ... இந்த இரண்டைக் கடைப்பிடித்தால் எளிமையாகிவிடுவாய். 1. எதையும் மிகைப்படுத்தாதே! 2. எதையும் குறைப்படுத்தாதே!
நீ கேட்டதை, பார்த்ததை அப்படியே கலப்படம் செய்யாமல் பேசு. பகிர்" என்றேன்.
● சிரத்தையோடு செய்த பிரம்மச்சாரி எளிமை நிறைந்த அருமையானவராக சில நாட்களுள்ளேயே மாறிவிட்டார்!
துக்கமாயிருப்பதும் இறுக்கமாயிருப்பதும் மனித இயல்பு அல்ல ...
6Tன்றாவது இப்படிச் செய்தி வாசிக்கக் கேட்டிருக்கிறீர்களா ? "தலைப்புச் செய்திகள்...
இன்று தமிழ்நாடு ஆனந்தமாக இருந்தது.
பெண்கள் அனைவரும் இன்று சுதந்திரமாக இருந்தனர்.
சென்னையில் தொடர்ந்து முப்பது நிமிடம் தென்றல் காற்று வீசியது!
இறுக்கம் ஒரு நரக அனுபவம்.
இயல்பு வாழ்வில் ... இறுக்கம் இறக்கும்!
இன்று எந்தக் குற்றங்களும் நிகழாத நகரங்கள் இவை, இவை எனக் காவல்துறை பெருமையோடு அறிவித்தது !
நல்லவர்களின் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது?"
செய்தி என்றாலே முதலில் உங்களின் மனதில் பரபரப்பு, சண்டை, கொலை, கொள்ளை ஆகியவற்றைத் தாண்டிய எண்ணங்கள் வருவது அரிதாகவே இருக்கிறது.
மனம் விறுவிறுப்பையே தேடுகிறது.
திகிலுக்கும் சோகத்திற்கும் அதிர்ச்சிக்கும்தான் மனம் அதிக முக்கியத்துவம் தருகிறது.
மனிதனின் மனப்பான்மையே எக்குத்தப்பாகியிருக்கிறது.
நீங்கள் துக்கமாகவோ, இறுக்கமாகவோ இருந்தால் யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள்.
மிகவும் நெருங்கிய சிலர் மட்டும் ஒரிரு வார்த்தைகள் கேட்கலாம்.
Part 4: Open the Door... Let the Breeze in!
ஆனால், நீங்கள் சிரித்துவிட்டாலோ, அல்லது சிரித்த முகத்தோடு எதையாவது வெகுவாய் ரசித்துக்கொண்டிருந்தாலோ, "என்ன ஆயிற்று .. இவ்வளவு நேரமாக நல்லாத்தானே இருந்தாய்?' என உங்களைத் தாண்டும் மூன்றாம் நபர்கூடக் கேட்கத் தவற மாட்டார்கள்.
சும்மா சிரிப்பவரை "மறை கழண்டவர்" என்று குறிப்பிட, நீங்கள்கூடத் தவறமாட்டீர்கள்தானே.
இவையெல்லாவற்றிக்கும் காரணம், "துக்கத்தோடும் இறுக்கத்தோடும் இருப்பது இயல்பு' என ஏற்றுக்கொள்ளும் எக்குத்தப்பாகிப் போன மனப்பான்மைதான்!
" ஆனந்தமாயிருப்பதுதான் மனித இயல்பு" எனும் இயல்பு எக்குத்தப்பாகி மாறிப்போனதின் விளைவுதான் "மீள முடியா" துன்பத்தில் மனிதன் சிக்கிக் கொண்டிருக்கிறான் எனச் சொல்லப்படக் காரணம்.
உங்களின் மனப்பான்மையைப் படியுங்கள். அதில் எக்குத்தப்பாகியிருக்கும் இடங்களையெல்லாம் குறித்துக்கொள்ளுங்கள்.
எப்போதும், ஆனந்தமாயிருக்கவும் செயல்படுங்கள். அப்படி உங்களை இருக்கவிடாமல் தடுக்கும் மனப்பான்மையைத் தடுக்கக் கற்றுக்கொள்ளுங்கள். லேசாவீர்கள்.
உங்களுடைய இயல்பைத் துடுமாறச் செய்யும் நிகழ்வுகள் தொடர்ந்து உங்களைச் சுற்றி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அது இயல்பற்ற துக்கத்தையும், இறுக்கத்தையும் தொடர்ந்து உங்களுக்குள் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.
இறுக்கம் உற்பத்தியாவதை, தடை செய்ய ... இயல்பாகுங்கள். லேசாகுங்கள். நீங்கள் ஆனந்தமாவீர்கள்!
அவமானம்
- அவமானம் என்பது நம் அந்தஸ்து, வயது, குலம், கோத்திரம் பொறுத்து நம் மனதால் கண்டுபிடிக்கப்படும் ஒரு புதிய கண்டுபிடிப்பு.
- பொதுவாக அந்தஸ்து, வயது, பதவியில் நம்மைவிட அதிகமாக இருப்பவர்கள் சற்று மரியாதைக் குறைவாகப் பேசினாலோ, நடந்து கொண்டாலோ அதற்கு நாம் கொடுக்கும் பெயர் - உரிமை (ஆஹா. எவ்வளவு உரிமை எடுத்துக்கிறாங்க! எல்லாம் பாசம்!)
- மாறாக, அந்தஸ்து, வயது, பதவியில் நம்மைவிடக் குறைவாக இருப்பவர்கள் சற்றே மரியாதை குறைவாகப் பேசினாலோ, நடந்து கொண்டாலோ அதற்கு நாம் கொடுக்கும் பெயர் - அவமானம் (கொஞ்சம் இடம் கொடுத்தா என்மேல எவ்வளவு உரிமை எடுத்துக்கறாங்க பார்! எல்லாம் ரொம்ப மோசம்!)
- அவமானம் மனதின் ஒரு மாயத்தோற்றம்தான்.
பல நேரங்களில் நாம் வருத்தமடைவதற்குக் காரணம், நமக்கு ஏற்படும் அவமானங்கள்தான்!
"பார்க்கப் படிச்சவங்க மாதிரி இருக்கீங்க! லோன் அப்ளிகேஷன் எழுதத் தெரியாதா?"
"கல்யாணமாகி ஆறு வருஷமாச்சு… இன்னும் குழந்தை இல்லையா?"
"உன் அனுபவத்தைத் தூக்கிக் குப்பையில் போடு. அந்த சூப்பர்வைஸர் சொல்றதைக் கேளு."
இது போன்று ஒரு நாளைக்குப் பத்துப் பதினைந்து முறையாவது நம்மில் பலர் அவமானப்படுத்தப்படுகிறோம். நம்மை அவமானப்படுத்தி நமக்குத் கலைக்குனிவு ஏற்படுத்திவிட வேண்டும் என்கிற நோக்கத்தோடு நம்மைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம்.
இந்த மத்தியில்தான் நாமும் வாழ வேண்டி இருக்கிறது. வேண்டுமென்றே நம்மை அவமானப்படுத்த நினைப்பவர்களின் முயற்சிகளை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. இது மாதிரியான ஆட்களிடம் நாம் எவ்வளவு அசிரத்தையாக இருக்க முடியுமோ, அவ்வளவுக்கு அசிரத்தையாக இருப்பது நல்லது.
அசிரத்தையாக இருப்பது என்றால் என்ன ? அந்த மனநிலையை உங்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக, கலீல் கிப்ரானின் கதையொன்றைச் சொல்கிறேன்.
முதன்முதலாக ஊர் சுற்றிப் பார்க்கப் புறப்பட்ட ஒருவர், லெபனான் நாட்டுக்குள் நுழைந்தார். அவருக்கு லெபனானைப் பற்றி எதுவுமே தெரியாது.
அரண்மனை மாதிரி ஒரு ஓட்டல். அதற்குள் ஆட்கள் உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருப்பதைக் கண்டார். "ஆஹா தெரிந்தவுடன் என்னை வரவேற்க எவ்வளவு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்" என்று பூரித்துப் போனார்.
ஓட்டல் உள்ளே நுழைந்தார். நான்கு பெண்கள் அவரை வரவேற்றார்கள். நாகரிதமாக அமைத்துச் சென்று பஞ்சு மெத்தையில் அமர வைத்தார்கள், அறுசுவை உணவுகளும் அவருக்குப் பரிமாறப்பட்டன.
மேலும் பூரித்துப் போனார் அந்தப் பயணி, "என் அருமை இவர்களுக்கு மட்டும்தான் தெரிகிறது"
சாப்பிட்டு முடித்தவுடன் பில்லைக் கொடுத்தார்கள் ஓட்டல்காரர்கள், "ஆஹா ! இவ்வளவு மரியாதை கொடுத்தது போதாதென்று, அதை எழுத்து வடிவத்தில் எழுதி வேறு கொடுக்கிறார்களே!'' என்று சந்தோஷப்பட்டு, அந்த பில்லை வாங்கிப் பையில் வைத்துக்கொண்டார்.
ஓட்டல்காரர்களுக்கோ அதிர்ச்சி. "பில்லைக் கொடுத்தால் பணத்தைக் கொடுக்காமல், பையில் வைத்துக்கொள்கிறாரே ! ஒன்று இவர் முட்டாளாக இருக்க வேண்டும், அல்லது நம்மை ஏமாற்றுவதற்கு இப்படி நடிக்க வேண்டும். இவரை ராம் கண்டிப்பதைவிட, நீதிமன்றம் முன் நிறுத்துவோம். நீதிபதி தண்டனை கொடுக்கட்டும்" என்று நினைத்து, காவல்துறையிடம் அவரை அழைத்துச் சென்றனர். இதைப் புரிந்துகொள்ளாத அந்தப் பயணி, "ஓ! அடுத்து நம்மை ராஜாவின் வீட்டுக்குத்தான் அழைத்துப் போகிறார்கள் போல!'' என்று சந்தோஷமாகக் கிளம்பினார்.
நீதிமன்றத்தில் இவர் சொன்னதும் யாருக்கும் புரியவில்லை. நீதிபதி சொன்னதும் இவருக்குப் புரியவில்லை. 'இவர் ஏமாற்றுக்காரரா, முட்டாளா?' என்பது நீதிபதிக்கும் விளங்கவில்லை. முகத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதை மீது உட்கார வைத்து அவமானப்படுத்த வேண்டுமென்று உத்தரவிட்டார்.
ஆனால், அந்தப் பயணியோ அந்த அவமானத்தை அவமானமாகவே நினைக்கவில்லை. லெபனானில் அரசு மரியாதையோடு, இப்படித்தான் சுற்றிக் காட்டுவார்கள் என்று நினைத்துச் சந்தோஷமாகி விட்டார்.
எப்படியெல்லாமோ அவமானப்படுத்தியும் அதைக் கொஞ்சம்கூடச் சட்டை செய்யவில்லை அவர். வேறு வழி இல்லாமல் குண்டுக்கட்டாகத் தூக்கி அவர் சொந்த நாட்டுக்கே கொண்டுபோய்ப் போட்ட பிறகுதான் தீர்ந்தது பிரச்சனை.
பொதுவாக அவமானத்தை மனிதர்கள் மூன்று விதமாக அணுகுவார்கள்.
முதல் வகை : இந்தப் பயணி போல மனிதர்களால், உறவுகளால் எவ்வளவுதான் அவமதிக்கப்பட்டாலும் திரும்பத் திரும்ப அதே மனிதர்களிடம் சென்று மூக்கு உடைபடுவார்கள். அதிலிருந்து வெளியே வருவதைப் பற்றி யோசிக்கக்கூட மாட்டார்கள். மந்த மனம் படைத்தவர்கள்.
இரண்டாவது வகை ; கொஞ்சதற்கெல்லாம் கோபித்துக் கொள்வார்கள், புதிது புதிதாகக் கண்டுபிடித்து, "நீ என்னை இங்கே, இப்படி அவமானப்படுத்தினாய், என் மதிப்பென்ன...'' என்று சதா மதிப்பு கேட்டு அலைபவர்கள், அவமானம் பற்றிய அதிக தற்பனையில் வாழ்பவர்கள்,
மூன்றாவது வகை : அற்புப் பிறவிகள், பண்பட்டவர்கள். அவமானம் என்ற ஒன்றே இல்லை என்பதை உணர்ந்தவர்கள். நம் Ego விற்கு விழும் அடியைத்தான் நாம் அவமானம் என்று கருதிக்கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை உணர்ந்து தாண்டியவர்கள். Egoவைத் தொலைத்தவர்கள். அப்படியே மனிதர்கள் அவமதித்தாலும் அது இவர்களைப் பாதிக்காது.
தான் வேறு, தன் உடல் வேறு என்ற அனுபூதி பெற்றவரை யாராலும் அவமதிக்க முடியாது. அப்படியே அவமதித்தாலும் அது அவர்கள் உடல் மாத்திரமே சம்பந்தப்பட்டது. எதனாலும் பாதிக்கப்படாமல் இருக்கும் உணர்வுப் பக்குவத்தைப் பெற்ற இவர்களுக்கு அவமானம் என்ற ஒன்று ஏற்படாது.
மூன்றாவது வகைக்கு ஒரு சிறந்த உதாரணம் ராம் தீர்த்.
| அவமானம் என்பது நம் அந்தஸ்து, | |||
|---|---|---|---|
| வயது, குலம், கோத்திரம் பொறுத்து | |||
| நம் மனதால் கண்டுபிடிக்கப்படும் | |||
| ஒரு புதிய கண்டுபிடிப்பு! |
ராம் தீர்த்த என்றொரு பெரிய ஞானி அமெரிக்காவில் இருந்தார். இந்த ஞானி தம்மைப் பற்றி குறிப்பிடும் போதெல்லாம், 'நான்' என்கிற வார்த்தையைப் பயன்படுத்தவே மாட்டார். 'ராம்' என்றுதான் தம்மைக் குறிப்பிட்டுக்கொள்வார்.
ஒருமுறை ராம் தீர்த்துக்கு மிகப் பெரிய அவமானம் நேர்ந்தது. ராம் அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை.
'தான் வேறு. தன் உடல் வேறு' என்ற அனுபூதி பெற்றவரை யாராலும் அவமதிக்க முடியாது. அப்படியே அவமதித்தாலும் அது அவர்கள் உடல் மாத்திரமே சம்பந்தப்பட்டது. எதனாலும் பாதிக்கப்படாமல் இருக்கும் உணர்வுப் பக்குவத்தைப் பெற்ற இவர்களுக்கு அவமானம் என்ற ஒன்று ஏற்படாது.
"இவ்வளவு பெரிய அவமானம் நடந்திருக்கிறதே! உங்களால் எப்படி நிம்மதியாக இருக்க முடிகிறது'' என்று ஒருவர் கேட்டார்.
ராம் சிரித்துக்கொண்டே, "அவமானம் என்று நீங்கள் கூறும் நிகழ்ச்சி நடந்தது ராமுவுக்குதான்" என்று கூறினார்.
இது பெரியநிலை, உடல் தாண்டிய உணர்வுநிலை, அவமானம் என்பது Ego இருந்தால் மாத்திரமே சாத்தியம் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் இவர்கள். இது நிம்மதிப் பெருநிலை.
இந்த அடைவதுதான் நம் ஒவ்வொருவரின் இலக்கு. இந்நிலையை அடைய மூன்று விதமாக முயற்சி செய்யலாம்.
-
- அவமானத்தை அலட்சியப்படுத்துவது.
-
- அவமானத்தை எதிர்கொள்வது.
3. அவமானம் என்னும் மாயையைத் தாண்டிச்செல்வது.
மூன்றில் எதைச் செய்தாலும் நீங்கள் புத்திசாலிதான். தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டே இருங்கள்.
அவமானத்தால் பாதிக்கப்படுபவர்கள் அதை அலட்சியப்படுத்தக் கொள்ளுங்கள் !
அவமானத்தை அலட்சியப்படுத்துபவர்கள், அதைக் தாங்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
அவமானத்தைத் தெரிந்தவர்கள், அதைத் தாண்டக் கற்றுக் கொள்ளுங்கள்!
இந்த நிலையை அடைய மூன்று விதமாக முயற்சி செய்யலாம்.
- அவமானத்தை 1. அலட்சியப்படுத்துவது.
-
- அவமானத்தை எதிர்கொள்வது.
- அவமானம் என்னும் மாயையைக் தாண்டிச்செல்வது.
இன்பமெனத் தெரியும் துன்பம்
பரவேகானந்தரிடம் குருபக்தி பற்றி வில்லங்கமாக ஒருவர் கேட்டார்.
"ஏன் சீடர்கள் இவ்வளவு அடங்கி இருக்கிறார்கள். இதென்ன புதுவிதமான அடிமைத்தனம் ? "
கொஞ்சமும் தாமதிக்காத விவேகானந்தர், "இல்லாவிட்டால், உன் புலன்களுக்கு அடிமையாயிரு. (Otherwise be a slave for your sense)" எனச் சொன்னார்.
புலன்களுக்குள் சிக்கிக்கொண்டார்கள் மனிதர்கள்.
தியானம், ஞானம், பக்தியை சிக்கலிலிருந்து விடுவிக்கும் அருமையான வழிமுறைகள்.
- திகட்டாத, எல்லாமே சிற்றின்பங்கள்தான்.
- ஆனந்தத்தை அளிப்பது பேரின்பம்.
ஆனந்தத்தை அழிப்பது சிற்றின்பம்.
- மனம், சிற்றின்பங்களைத்தான் பெரிதும் விரும்பும். காரணம், ஒரே ஒரு முறை பேரின்பத்தை ருசித்தால் போதும், மனம் அழித்துவிடும்.
- தன் தற்காப்புக்காக மனமானது மனிதரைச் சிற்றின்பங்களைக் காட்டிதான் 'அனுபவி!அனுபவி' என்று தூண்டும்.
- ஆகவே, அனுபவிக்க நினைப்பதையெல்லாம் அனுபவி. அப்புறமாவது அவை திருப்தியையும் ஆனந்தத்தையும் தராது எனப் புரிந்துகொள்.
நண்பர்கள் மூன்றாம் நபரைப் பார்த்து இப்படிப் பேசிக் கொண்டார்களாம் ...
- பொங்கல் பம்பர் பரிசாக பத்து இலட்சம் பரிசு விழுந்தது … நண்பர் 1 இவருக்குத்தானே?!
- ஆமாம்... ஏன் கேட்கிறாய் ? நண்பர் 2
- ஏன் இப்படிக் கப்பல் கவிழ்ந்த மாதிரி உட்கார்ந்திருக்கிறார்? நண்பர் 1 குஷியாக இருக்க வேண்டாமா …!
- அட, உனக்கு விஷயமே தெரியாதா?. அவர் வாங்கிய ஒரு கோடி ரூபாய் லாட்டரி சீட்டில் ஒத்த ரூபாய்கூட விழவில்லையாம். நண்பர் 2 :
பெரிய பெரிய எதிர்பார்ப்புகளுக்காக, சின்னச் சின்ன சந்தோஷ மலர்களைக் குட்டி வரும் வாழ்வென்னும் அழகு குழந்தையைத் தண்டிக்காதீர்கள்.
எதிர்பார்ப்புகளைத் தூண்டி அனுபவித்து வாழ்பவர்… சின்னச் சின்ன நிகழ்வுகளிலேயே பேரின்பத்தில் மூழ்கிப் போவார். அப்படி வாழத் தெரியாதவருக்குப் பெரிய பெரிய நிகழ்வுகள்கூட, சிற்றின்பம் வரைதான் கூட்டிச் செல்லும்.
"துன்பம் கூட உன் சுய தேர்வே! உன் விருப்பம் இல்லாமல் 'ஆனந்தம்' கூட உன் உள்ளே வர முடியாது. எனவே'நீயே' தேர்வு செய்".
- தூவோ 'நான்' என்பது அகங்காரம். அது, சிறுசிறு இன்பங்களையே விரும்பி ஏற்கும். துன்பம் வருகிறது உபபொருளாய்!
இன்பம் என்பது வெளிப்பொருட்களைச் சார்ந்ததல்ல. அது உள்ளுணர்வு சம்பந்தப்பட்டது, ஆனால், மனிதர்கள் சம்பந்தப்பட்டதாகத்தான் இன்பத்தைப் பற்றிப் புரிந்து இவைதான் சிற்றின்பங்கள்.
'சிற்றின்பங்கள் சரியா?, தவறா?' என்ற சந்தேகத்திற்கு இதுவரை எந்த ஒரு ஞானியும் தீர்மானமாகத் 'தவறு' என்றும் சொன்னதில்லை. 'சரி' என்றும் சொன்னதில்லை.
மாறாக, அவை தேவையில்லை. அவற்றைத் தாண்டிவிடலாம் என்றே சொல்கிறார்கள்.
ரத்தினத்தை வைத்துக்கொண்டு, கூழாங்கற்களுக்காகத் தேடி அலைவதேன்! கஷ்டப்பட்டுச் சேர்த்த கூழாங்கற்களை மூட்டை மூட்டையாகச் சுமந்தும். பயன் முதுகுவலி மட்டும்தானே உண்மையை உணர்த்தவே ஞானியர் முயற்சிக்கிறார்கள்.
சிற்றின்பங்களினால் கிடைக்கும் சுகங்கள்கூட உண்மைச் சுகம் இல்லை.
நமக்குள்ளே தோன்றும் இது போன்ற சுகங்களுக்கு வெளியே இருக்கும் ஒரு பொருளோ, ஒரு மனிதரோ, நிச்சயம் காரணம் இல்லை. வெளிப்பொருளால் உள்ளே சுகத்தை உருவாக்குவது சாத்தியமே இல்லை.
சிற்றின்பங்களை எளிதாகப் புரிந்துகொள்ள மகாஞானி சொன்ன ஒரு அருமையான கதை,
நாயொன்று பசி தாளாமல் அலைந்து. "எது கிடைத்தாலும் போதும் - என் பசி தீர வேண்டும். அவ்வளவே" என்ற ஒரு நோக்கம் தவிர, வேறெதுவும் அந்த நாய்க்குத் தெரியவில்லை.
பசியில் திரிந்த நாய்க்கு வழியில் பரிசு கிடைத்தது போன்ற சந்தோஷம்.
ஒரு மெலிந்த, காய்ந்த போன எலும்புத்துண்டு தூரத்தில் அதன் கண்ணுக்குத் தெரிந்தது.
பசியோடு துள்ளலும் சேர்ந்துகொள்ள, இரண்டே தாவலில் எலும்பைக் கவ்வியது நாய்.
பசி கண்ணையும் உணர்வையும் சேர்த்து மறைக்க, காய்ந்த எலும்பை அசுரகதியில் நாய் கடிக்கத் தொடங்கியது.
எலும்பைத் தின்னும் போராட்டத்தில் குறியாய் இருந்த நாய்க்கு காய்ந்த எலும்பு தன் கன்னங்களை உள்ளே தொடர்ந்து குத்திப் புண்படுத்துவதும் வலியும் தெரியவே இல்லை.
சிறிது நேரத்திற்கெல்லாம் எலும்பு குத்திக் குத்தி புண் பெரிதாகி நாயின் உள் கன்னத்திலிருந்து இரத்தம் வடிய ஆரம்பித்தது.
அப்பாவி நாய்! எலும்பிலிருந்துதான் இரத்தம் வருகிறது என்று நம்ப ஆரம்பித்த உடனே அதற்கு குஷி தாளவில்லை. மேலும் எலும்பை எவ்வளவு கடிக்க முடியுமோ அவ்வளவு கடித்தது.
'கடிக்கக் கடிக்க இரத்தம்!' ஆனால் நாய்க்கு அந்த நிமிடம் 'கடிக்கக் கடிக்க சுகம் என்று தான் இருந்தது. பசியும் அந்த நேரத்திற்குத் தீர்ந்தது போல்தான் தோன்றியது!
| அனுபவித்ததையே | |
|---|---|
| மீண்டும் மீண்டும் அனுபவிக்கும் உத்வேகத்தை ஊட்டுவது | |
| சிறு அளவில் மட்டுமே அனுபவிக்கப்பட்ட இன்பங்கள். | |
| எனவே அவை சிற்றின்பங்கள்! | |
சிறிது நேரம் கழித்து நாயின் கன்னத்திலிருந்து புது வலியும் எரிச்சலும் தெரிய ஆரம்பித்தது.
அப்போது அந்த நாய் "இதென்ன புதுத் தொல்லை?" என்றுதானே யோசித்திருக்கும்.
நாய்க்கு "சுவை சுகத்தை" கொடுத்தது அதன் இரத்தமே. ஆனால், வலியைக் கொடுத்தது ... ?
கடைசி வரை எலும்பால் நாய்க்கு என்ன பலன் - சில நிமிடங்கள் எலும்பைக் கடித்தது தவிர !
சிற்றின்பங்கள் வலை. பேரின்பம் அலை.
வலையின் இயல்பு சிக்க வைக்கும்.
அலையின் இயல்பு அலைத்துச் சென்று விடும்.
ஆசைக்காக உடலை அழிக்காதே!
சிற்றின்பங்களின் ஆரம்பமும் முடிவும் இப்படி இருக்கும் காரணத்தால்தான், ஞானியர் அது தேவையில்லை என்று சொல்கிறார்கள்.
மனிதர்கள் கெடும் சிற்றின்பங்களில், அவர்களுக்குக் சந்தோஷங்களுக்கான காரணம்கூட வெளிப் பொருட்களே அல்ல.
தன்னுள்ளே தொடர்ந்து பொங்கிக்கொண்டிருக்கும் ஆனந்தத்தின், வடிகட்டப்பட்ட சிறு சிறு துளிகளைத்தான் சந்தோஷமாக அனுபவிக்கிறார்கள்.
மனிதர்கள் இருக்கும் ஆனந்தக் கடலில் மூழ்கிப் பருக வேண்டும் என்ற பிறவி ஆசைக்கு வழி தெரியாமல் தவிக்கிறார்கள்.
விளைவு! எங்கெங்கோ முட்டி மோதிக்கொள்கிறார்கள். பல வாய்ப்புகளைத் தேடுகிறார்கள். சில கூட கிடைப்பதில்லை. அப்படியே சிலருக்கு வாய்த்தாலும் அதிலிருந்து திருப்தி கிடைப்பதில்லை.
திருப்தியின்மையால்தான் மீண்டும் மீண்டும் விட்டில்பூச்சி போலவே மனிதர் சிற்றின்பங்களின் வலையில் சிக்கிக்கொள்கிறார்.
"சிற்றின்பங்களைத் தாண்டுவது எளிது. தாண்டிவிடலாம். முயற்சி செய்" என்று ஞானியர் சொல்லக் காரணம், அவை இன்பம் போன்ற ஏதோ ஒன்றைச் சிறிதாகக் கொடுத்துவிட்டு, கூடவே பெருந்துன்பத்தையும் தந்துவிடுவதுதான்.
இதற்கடுத்த கொடுமை, பலர் சிற்றின்பங்களிலேயே சிக்கி வாழ்வின் ஆச்சரியங்களைத் தொலைத்துவிடுவதுதான். எலும்பிலிருந்து இரத்தம் வருவதாக நம்பியது போல், சிற்றின்பங்கள் சுகம் தருவதாக நினைப்பதுதான் மனிதரை சிக்க வைக்கிறது.
இறைவன் நமக்குப் பரிசாகக் கொடுத்த வாழ்க்கையின் பிரம்மாண்டமான, உள்ளே இருக்கும் ஆனந்தப் பெருங்கடலுக்கு முன் - சிற்றின்பங்கள் சாதாரண கூழாங்கற்களைவிடச் சிறியவை.
பேரின்பம் இறைவன் கொடுத்த இரத்தினம். சிற்றின்பம் இறைவன் கொடுத்த கூழாங்கல்.
நாம் இரத்தினத்தை விட்டுவிட்டு கூழாங்கல்லை வைத்து, ராசிக்கல் வியாபாரம் செய்யும் சமுதாயத்தை உருவாக்கியிருக்கிறோம். அதில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
'கூழாங்கல்லா? இரத்தினமா?' எது தேவை. இரண்டுக்குமே சாத்தியமுண்டு. முடிவு செய்யுங்கள்!
துன்பக் கணக்கெடுப்பு - புரிந்து கொள்ளுதலின் அஸ்திவாரம்!
★ நெருப்பை பெட்ரோல் ஊற்றி அணைக்க முடியுமா ?
★ பத்து லட்டுகளைச் சாப்பிடுவதால். இனிப்பின் மீதான வெறி குறையுமா, மறையுமா ?
நிஜத்தில் சாத்தியமில்லாத, கற்பனை காவியங்களைத் தொடர்ந்து பார்ப்பதால், படிப்பதால், பகல்கனவுகள் திருப்தி பெறுமா ?
எல்லாவற்றிற்கும் பதில்: 'ஆம்' என்றால் வெளியுலகின் கேளிக்கைகள் திருப்தியையும் நிம்மதியையும் தரும். இல்லையென்றால் ... திருப்தி இல்லை என்பது உறுதியாகிறது.
நீங்கள் எங்கெங்கோ செல்கிறீர்கள். ஏதேதோ செய்கிறீர்கள்.
செய்தாலும் என்ன நிம்மதி உங்களிடமிருந்து தூரமாக போய்க் கொண்டேயிருப்பதை கவனித்திருக்கிறீர்களா ?
துன்பம் என்பது தூங்கும் எரிமலைக் குழம்பு!
துன்பத்தின் ஆழம், நீளம், உயரம் அறியுங்கள் ... தூர்வார அது வரைபடமாகும்.
அனுபவிக்கும் தன்மை அதிகமாகாமல், எவ்வளவுதான் சுக போகங்கள் அதிகமானாலும் நிம்மதியோ, ஆனந்தமோ கிடைக்காது.
மாறாக, நிம்மதியின்மையே அதிகமாகும். அதிருப்தி தீயை அணைப்பதற்காக, நீங்கள் ஊற்றும் எல்லா சிற்றின்பங்களையும் கணக்கெடுங்கள்!
வாழ்க்கையின் விளையாட்டு புரிய வரும்.
துன்பக் கணக்கெடுப்பு செய்ய சில டிப்ஸ் :
உங்களுக்கு மிகவும் பிடித்தவை எவை ?
இன்னும் ஒருமுறைகூட நீங்கள் அவற்றை முழுமையாகத் தாண்டி வராததான்தான் உங்களின் டாப் டென் லிஸ்ட்டில் அவை இடம் பெற்றிருக்கின்றன.
திரும்பத் திரும்ப மனதில் நீங்கள் அசைபோடும் சந்தோஷ நிகழ்வுகள் எவை ?
மனமானது அசைபோடும் கலையை கற்றுக்கொண்டு விட்டது என்பதற்கான அறிகுறி இவையே. இன்று மனம் அசை போடுவதை சந்தோஷம் எனச் சொல்கிறீர்கள். நாளை அதே மனம் அசை போடப்போகும் வேறு சிலவற்றை துன்பம் எனச் சொல்லப்போகிறீர்கள். என்னை வாட்டும் எண்ணங்கள் இவை எனச் சொல்லப் போகிறீர்கள்.
இன்பம் இது, துன்பம் இது எனப் பிரித்துப் பார்க்க முடியாத மனதின் இந்த அசைபோடும் செயல் சரிசெய்யப்பட வேண்டும்.
உங்களைக் கஷ்டப்படுத்தும் நினைவுகள் எவை ?
உங்களுக்குச் சுத்தமாகப் பிடிக்காதவை எவை எவை ?
இந்த நான்கு கேள்விகளுக்குள் உங்களின் துயரங்களுக்கான காரணங்கள் ஒளிந்திருக்கிறது. கேள்விகளுக்கான பதில்களை ஒரு தனிப் புத்தகத்தில் எழுதுங்கள். எழுதுவதை மிக சிரத்தையோடும் மிக நேர்மையோடும் செய்யுங்கள்.
கண்டுபிடித்த வெறி, வெறுப்புகளைப் பற்றிய விழிப்புணர்வே, உங்களைப் பற்றிய ஒரு தெளிவான வர்ணனையைத் தரும்.
உங்களைப் புரிந்துகொள்ளவும், உங்களைச் செதுக்கவும் துன்பங்களைத் தாண்டவும் இந்தக் கணக்கெடுப்புகள் உளிகள் போலச் செயல்படும்.
உங்களின் இன்றைய இந்தக் கணக்கெடுப்புகள் ஆனந்த வாழ்வின் அஸ்திவாரமாக மாறும்!
அதிர்ஷ்டமா ? தூதிர்ஷ்டமா?
- துரதிர்ஷ்டம் இரண்டுமே அதனதன் விருப்பப்படி வாழ்வில் வந்து போகும் விஷயங்கள்.
- வாழ்வை எதிர்கொள்ளும் தைரியமும் பக்குவமும் இருந்தால் மாத்திரமே அதிர்ஷ்டத்தை அனுபவிக்க முடியும். துரதிர்ஷ்டத்தை ஜீரணிக்க முடியும்.
- கூர்ந்து ஆராய்ந்தால் ஒரு உண்மை புரிய வரும். "அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் என்ற இரண்டு தனிப்பட்ட நிலைகள் இல்லவே இல்லை'' என்று தெரிய வரும்.
- சுலபமாகக் கைநோகாமல், அதிகம் உழைக்காமல் நல்ல பலனைக் கொடுத்த வாழ்க்கை அம்சங்களை நாம் அதிர்ஷ்டம் என்று கூறிச் சந்தோஷப்படுகிறோம்.
கைநோக, உடல்நோக உழைத்தும், எதிர்பார்த்த பலனைத் தராத வாழ்க்கை அம்சங்களுக்கு, நாம் துரதிர்ஷ்டம் என்று கூறித் துக்கப்படுகிறோம்.
-
துரதிர்ஷ்டம், அதிர்ஷ்டம் என்ற இரண்டு வாழ்க்கை அம்சங்களும் பலனின் அளவைப் பொறுத்தது. மனதின் துக்க, சந்தோஷ நிலையைப் பொறுத்தும் அவை மாறுகின்றன. உங்களுக்குக் கிடைக்கும் பலன்களும் உங்களின் மனநிலையும் சேர்ந்துதான் உருவாக்குகின்றன.
-
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்தத் துடிப்பவருக்கு நீங்கள் கற்பனை செய்யும், 'அதிர்ஷ்டங்கள் பல 'வாழ்வில் காத்துக் கொண்டிருக்கின்றன. நேரத்தைச் வீணடிப்பவருக்கு, நீங்கள் கற்பித்துக்கொள்ளும், 'துரதிர்ஷ்டங்கள் பல' காத்துக் கொண்டிருக்கின்றன.
ஒரு காலத்தில் சீன நாட்டில் விவசாயி இருந்தார். ஓர் ஆண்டில் சரியான மழை இல்லாமல் போகவே, பயிர்களெல்லாம் வாடிக் கருகி விட்டன. ஆனால், அந்தக் குடியானவரின் நிலத்தில் விளைச்சல் அமோகமாக இருந்தது. எல்லோரும் அவரைப் பாராட்டினார்கள். அவரை அதிர்ஷ்டக்காரன் என்று புகழ்ந்தார்கள். அவரோ, "அதிர்ஷ்டமோ, துரதிர்ஷ்டமோ எனக்கு எதுவும் விளங்கவில்லை. அதுபோன்று நீங்கள் கூறுவதற்கான காரணம் எனக்குப் புரியவில்லை" என்றார்.
அவர் அறுவடைக்குக் தயாரான போது, முந்தையநாள் இரவு, மலைப் பிரதேசத்துக்கு குதிரைகள் வந்து, விளைந்து கிடந்த அவரது கோதுமைப் பயிர்களைச் சூறையாடி விட்டன. எல்லாக் குடியானவர்களும் திரண்டு வந்து, "இப்படி ஒரு துரதிர்ஷ்டம் உனக்கு வந்துவிட்டதே" என்றார்கள். அவரோ, "அதிர்ஷ்டமோ, துரதிர்ஷ்டமோ எனக்குத் தெரியாது" என்றார்.
அந்த விவசாயியின் மகன் நான்கு மலைக் குதிரைகளைப் பிடித்துப் பழக்கப்படுத்தி வைத்துக்கொண்டான். மலைப் பிரதேசத்தில் காட்டுக் குதிரை மேல் சவாரி செய்ய, கீழே விழுந்து அவனது கால் ஒடிந்துபோயிற்று.
எல்லோரும் திரண்டு வந்து "குதிரைகள் கிடைத்தது அதிர்ஷ்டம்; உன் மகனுக்குக் கால் ஒடிந்தது துரதிர்ஷ்டம்" என்றார்கள். அந்தக் குடியானவனோ "அதிர்ஷ்டமோ, துரதிர்ஷ்டமோ எனக்குத் தெரியாது" என்றார்.
அன்று மாலையே பட்டாளத்திற்குக் கட்டாயமாக ஆள் சேர்க்க இராணுவம் அந்த ஊருக்கு வந்தது. நொண்டியாக இருந்த அந்த இளைஞனை விட்டுவிட்டு, மற்ற இளைஞர்களைப் பிடித்துக்கொண்டு போனார்கள்.
ஊரில் உள்ள குடியானவர்கள் எல்லோரும் அவனிடம் வந்து "இது உன் அதிர்ஷ்டம்" என்றார்கள். அவரோ, "இது அதிர்ஷ்டமோ, துரதிர்ஷ்டமோ எனக்குத் தெரியாது" என்றார்.
வாழ்க்கையில் எப்போதுமே ஆனந்தமாக இருக்க வேண்டும் என்றால், இந்த
அதிர்ஷ்டம் சோம்பேறிகளின் கனவு! துரதிர்ஷ்டம் பயந்தாங்கொளிகளின் பீதி! சுறுசுறுப்பான தைரியசாலிக்கு இரண்டுமே ஒன்று! இரண்டின் மூலமும் வாழ்வில் முதிர்ந்துகொண்டே இருப்பார்கள்!
விவசாயியின் கதை எல்லோருக்கும் நிச்சயமாகப் புரிய வேண்டும். அதிர்ஷ்டமோ, துரதிர்ஷ்டமோ அது பற்றி நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கத் தேவை இல்லை.
நம் கையில் இருப்பது உழைப்பதுதான். அது கிடைக்கும், இது கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு இல்லாமல், எதுவும் எதிர்பார்க்காமல் உழைத்துக்கொண்டிருக்க வேண்டும். "கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே" கிருஷ்ணர் சொன்னது போல தேக்கமடையாமல் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான்.
உழைப்பதனால் வெற்றி கிடைக்கவில்லையே என்று பலரும் ஆதங்கப் படுகிறார்கள். உழைப்பே ஒருவகை வெற்றி தான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. உழைப்பை ஆழமாக்கினால் அதிர்ஷ்டமாக மாற்றலாம்!
மாவீரன் அலெக்ஸாண்டர், உலகத்தைப் பாதிக்கு மேல் வென்றுவிட்டோம் என்கிற ஆர்வத்தில் திரும்பிக்கொண்டிருந்தான். அவனது நகரத்திற்குப் பக்கத்தில் ஒரு பாதையில் அமர்ந்திருந்த மகாஞானி ஒருவரைக் கண்டார். இந்த உலகத்தையே வென்று கொண்டிருக்கிறேன் என்று அவரிடத்தில் சொல்லப்போனான்.
அவரோ சர்வ அலட்சியமாகத் தமது வலது கையைக் காட்டி, மௌனமாக அவனை "விலகி நில்" என்று சொல்லாமல் சொன்னார். மகா அலெக்ஸாண்டருக்கு, அவர் எதற்காகத் தன்னை விலகி நிற்கச் சொன்னார் என்பது விளங்கவில்லை. கதிரவனின் மஞ்சள் பசி கொண்டிருக்கிற மாலை வெயிலின் மயக்கத்தை அவர் அனுபவித்துக் கொண்டிருந்தார்.
அந்த நிமிடத்தை அனுபவித்து வாழும் ஞானிக்குப் பேரரசனே ஆனாலும், அவனைப் பற்றி இம்மி அளவுகூட பயம் எழாது. எப்போதும் ஆனந்தமயமாக இருக்கிற ஒரு ஞானி, மகா அலெக்ஸாண்டரைக்கூடப் பொருட்படுத்த மாட்டார். காரணம் - அவரிடம் பயம் இல்லை.
பயம் என்ற ஒரு மனப்புண்தான், துரதிர்ஷ்டம் என்ற வாழ்க்கையின் சாதாரண அம்சத்தைப் பெரிதுபடுத்திக் காண்பிக்கும். பயத்தை விட்டொழித்து விட்டுத் தைரியமாக வாழ்க்கையை அணுக ஆரம்பித்தால் துரதிர்ஷ்டம் பயமுறுத்தாது .
'எனக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லையே... எனக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்குமா?' என்ற ஏக்கம் இருக்காது.
பயத்திலிருந்து மனதைத் தைரியத்திற்குத் திருப்பினால் துரதிர்ஷ்டத்தைக் கூட அதிர்ஷ்டமாக மாற்றலாம்.
மனதின் பயமும் உழைப்புக் குறைவும்தான் அதிர்ஷ்டத்தை நோக்கி எதிர்பார்ப்புத் தீயை மூட்டுகிறது. அதே விஷயங்கள்தான் துரதிர்ஷ்டத்தை, உங்களால் ஜீரணிக்க முடியாத - சாதாரண வாழ்க்கை அம்சங்களைச் சுற்றித் துக்கப் புகையைக் கிளப்பி விடுகின்றன.
துரதிர்ஷ்டம் என்பது ஒருவரால் ஜீரணிக்க முடியாத சாதாரண வாழ்க்கை அம்சம்.
| லி | பயத்திலிருந்து மனதை |
|---|---|
| த | தைரியத்திற்குத் திருப்பினால் |
| ஷ் | துரதிர்ஷ்டத்தைக்கூட |
| ட | அதிர்ஷ்டமாக மாற்றலாம்! |
| ம் |
அதிர்ஷ்டத்தை எதிர்பார்ப்பதும் துரதிர்ஷ்டத்தை துக்கப்படுவதும் புத்திசாலி செய்யும் காரியம் அல்ல.
புத்திசாலி, புத்தியைப் பயன்படுத்தி வாழ்வில் எல்லா அம்சங்களிலும் புகுந்து, ஏதோ ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்ட புதுத்தெம்போடு, வெளியே வருவான்.
தைரியமாக சுறுசுறுப்போடு வாழ்க்கையை அணுகுங்கள். சாதாரண வாழ்க்கை அம்சங்கள், அதிர்ஷ்டமாக மாறும். நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று பலராலும் பிரமிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்டத்தின் சூட்சுமம் இதுதான்.
வாழ்வில் சொந்தமாக்குங்கள் அதிர்ஷ்டசாலியாகுங்கள்!
உலகம் உங்களைப் பொறுத்தது !
- உங்கள் மனதைப் பொறுத்து எண்ணங்கள் அமையும் !
- உங்கள் எண்ணங்களைப் பொறுத்து வாழ்க்கை அமையும் !
- உங்கள் வாழ்க்கையைப் பொறுத்து வெற்றி அமையும் !
- உங்கள் வெற்றியைப் பொறுத்து ஆரோக்கியம் அமையும் !
- உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்து மனம் அமையும்!
புரிகிறதா ... இது ஒரு சக்கரம்.
இப்படித்தான் செயல்படும். மக்கள் எப்போதும் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாகவே செயல்படுகிறார்கள். நாம் மரியாதை கொடுத்தால், மரியாதை கிடைக்கும். சீண்டினால், சீண்டப்படுவோம். அன்பு செலுத்தினால், அன்பு கிடைக்கும். எப்போதும் எரிச்சலும் கோபமுமாக இருந்தால் உலகமே தவறு செய்வதாகவும் ஒவ்வொருவரும் திட்டம் போட்டு எரிச்சல்படுத்துவதாகவும் தோன்றும்.
இதை விளக்க, ஒரு சிறுகதை ...
தெருவிலேயே சுற்றிக்கொண்டிருந்த நாய் ஒன்று தவறி அரண்மனைக்குள் நுழைந்துவிட்டது. அரசன் ஆயிரம் கண்ணாடிகளைக் கொண்ட ஒரு விருந்து மாளிகையைக் கட்டியிருந்தான். தனது தெருவிற்குள் எந்த ஒரு நாய் வந்தாலும், 'உர்ர்…. உர்ர்…. லொள்,…. லொள்…' என்று எரிச்சலும் கோபமுமாய்ச் செயல்படும் குணம் கொண்டது அந்த நாய். விருந்து மாளிகைக்குள் நுழைந்த அடுத்த நிமிடம், நாய்க்கு அதிர்ச்சியும் ஏகப்பட்ட கோபமும் எழுந்தது. ஏனென்றால், எங்கு பார்த்தாலும் நாய்கள். கிட்டத்தட்ட ஆயிரம் நாய்கள் கண்ணாடியில் தெரிந்தன.
எப்போதும் போல் நாய் கோபமும் எரிச்சலுமாய் 'உர்ர்... உர்ர்... ' என்றது. ஆயிரம் நாய்களும் வெவ்வேறு கோணத்தில் 'உர்ர்….உர்ர்…' என்றன. நாய் கொஞ்சம் பயந்துவிட்டது.. இருந்தும், கோபம் தாளாமல் 'லொள்... லொள்...' என்று குரைக்க ஆரம்பித்தது. எல்லா நாய்களும் குரைக்க ஆரம்பித்தன. நாய் குரைப்பதை நிறுத்தினால், எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்தின! நாய் குரைத்தால், எல்லா நாய்களும் குரைத்தன. இரவு முழுக்கத் தொடர்ந்து குரைத்துக்கொண்டே இருந்த நாய், தனது சக்தியெல்லாம் இழந்து கடைசியில் இறந்து போனது.
நாய்க்குத் தான் மட்டும்தான் உண்மை, கண்ணாடிகளில் தெரியும் மற்ற எல்லா நாய்களும் தன்னுடைய பிம்பம்தான் என்ற விஷயம் தெரியாது. புரிந்துகொள்வதும் கொஞ்சம் கடினம். நாய், தான் குரைப்பதை நிறுத்திய வினாடி, எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்தியதைக் கொஞ்சம் கவனித்திருந்தால் உண்மை புரிந்திருக்கும் : மாயம் என்றால் என்ன என்பது தெரிந்திருக்கும்.
பூமி எப்போதுமே சொர்க்கமாகத்தான் இருக்கிறது. எல்லா மனிதர்களும் அடிப்படையில் அருமையானவர்களாகத்தான் இருக்கிறார்கள். நீங்கள் கோபப்பட்டால் உலகமே தவறு செய்வது போல் உணருகிறீர்கள். எப்போதுமே எரிச்சலும் சலிப்புமாக இருந்தால், உலகமே சுவாரஸ்யமற்றது போல் உணருகிறீர்கள்.
நீங்கள் வெற்றி அடையும்போது சந்தோஷமாக, திருப்தியாக இருக்கும் போது "ஆஹா ... என்ன அருமையான உலகம்! என்ன அருமையான உறவுகள்! மனிதர்கள்!" என்று ஆனந்தப்படுகிறீர்கள்.
உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். மனம் நாயைப் போன்று எப்போதும் குரைத்துக்கொண்டேதான் இருக்கும். கண்ணை மூடினாலும் கண்ணைத் திறந்தாலும் உங்கள் கோபம், வெறுப்பு, சலிப்பு, பொறாமை ... போன்ற குணங்கள் அப்படியேதான் இருக்கும். எந்த மாற்றமும் நடக்காது!
மேலும் உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் நீங்கள் கண்டுபிடிக்கும் தவறுகள், உங்கள் தவறுகளே. (நாய் பல கண்ணாடிகளிலும் பலவிதமாகப் பார்த்தது அதன் வடிவத்தைத்தான்).
என்ன மனிதர்கள்... கொஞ்சம்கூடப் புரிந்துகொள்ளும் தன்மையே இல்லாமல் இருக்கிறார்கள் ... மடையர்கள் ... அறிவுகெட்டவர்கள் என்று நீங்கள் பாடும் வசைகள் எல்லாம், உங்கள் மனதின் குரல். உங்களின் உண்மையான குரல் அல்ல. மற்றவர்களை, "ஆஹா, எவ்வளவு நல்லவர்கள்! எவ்வளவு பாசமாக இருக்கிறார்கள்! இப்படி அல்லவா இருக்க வேண்டும்!" என்று நீங்கள் நினைப்பதும் உங்கள் மனதின் செயலே.
மக்களையும் உலகத்தையும் அதிகப்படியாகத் தவறாக நினைப்பது மாயத்தோற்றம்.
உண்மையில் எல்லோரும் இயல்பானவர்கள், அருமையானவர்கள். நீங்கள் உலகத்தை அணுகும் விதத்தைப் பொறுத்து உலகம் மாறுபடும். உலகம் அருமையானது.. உணர ஆரம்பியுங்கள். உண்மை புரியும்!
வாழ்வின் விசித்திரங்கள்
எது நியாயம்? எது அநியாயம் ?
துளைகள்ப்போர்த்தப்பட்டு, இரவு வானத்து நட்சத்திரங்கள் போலத் தெரியும் பல ஓட்டைகள் நிறைந்த அந்த இத்துப்போன குடை வழியே, வரும் ஒளிக்கதிர்களைப் பார்த்த சிறுவன் டாம், தாத்தாவிடம் கேட்டான்:
"இந்தக் குடையை நான் பிடிக்கிறேன். நம் வீட்டுக்கூரையைச் சுவர்கள் பிடித்துக்கொண்டிருக்கிறது. சாயங்காலமானதும் எல்லா இடமும் இருட்டாகுமளவுக்கு பெரிய குடையைப் பிடிப்பது யார்?" எனக் கேட்டதற்கு, "இறைவன்" என்று பதில் சொல்லித் தப்பித்த தாத்தா அடுத்த கேள்வியில் மாட்டிக்கொண்டார்.
"தாத்தா, அவர் என்ன ரொம்பக் கஞ்சமா?" என்றான்.
சிறுவனின் கேள்வி புரியாததால் பதில் சொல்லாமல் திகைத்த டாமின் தாத்தா, "ஏன் அப்படிக் கேட்கிறாய்?" என்று கேட்டதற்கு, "தாத்தா! உன்னைப் போலவே இத்துப்போன குடைதான் அவரும் வைத்திருக்கிறார்" என்றான்.
- நிஜம் வேறு. டாம் புரிந்துகொண்டது வேறு. அவனுக்கு அவன் பேச்சு நியாயம். இல்லாத இறைவனை, இருப்பதாய் நினைத்து, அவர் கஞ்சம் என சிறுவன் தீர்ப்பிட்டது -
மற்றவர்களை வெறுக்கிறவர்கள் நரகத்திற்குப் போக மாட்டார்கள். ஏனென்றால் ... ஏற்கெனவே நரகத்தில்தான் அவர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் அப்படி நடந்து கொள்கிறார்கள்!
மற்றவரிடம் இல்லாத தவறுகளை, இருப்பதாய் குறைசொல்லி, அதை நியாயம் என்று நினைக்கும் சிறுபிள்ளைத்தனம் எல்லா மனிதரிடமும் இருக்கிறது. இதை ஏற்றுக்கொண்டால், திருத்திக் கொண்டால், தப்பித்தீர்கள்!
- பற்றுதல் கண்ணை மறைக்கும். நல்லவர்களைக் கெட்டவர்களாகக் காட்டும். ஏன், கேடு செய்பவர்களைக்கூட நல்லவர்களாகக் காட்டும்.
- நியாயம் அநியாயம் பற்றிய, நியாயமற்ற மனஅமைப்பு பெற்றிருந்தால் . . .
நியாயமான உலக வாழ்வில் அனுபவிக்க வேண்டிய சந்தோஷங்களை அநியாயமாக இழந்துவிடுவீர்கள். யோசித்துக் கொள்ளுங்கள்.
-
தனக்கொரு சட்டம். ஊருக்கொரு சட்டம் என்று வாழ்ந்தால் ... கண்றாவியை கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டி இருக்கும். கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டியதை கண்றாவி என்று ஒதுக்கி, இழக்க நேரிடும்.
-
அவர் நம்ம ஆளுப்பா... கண்டுக்காதீங்க ...
-
ஏதோ அவசரத்துல அப்படிப் பேசிட்டாரு....
-
என் பிள்ளை ஆண்பிள்ளை அப்படித்தான்...
-
ரொம்பச் செல்லமா வளர்த்துட்டேன்… நல்லா பாத்துக்கோங்க மாப்ளே…
-
அப்படிப் பேசினாலும் மனசுல எதையும் வெச்சுக்கமாட்டார்...
-
என்று ஏதாவது சாக்குச் சொல்லி, நம்மை நெருங்கியவர்கள் தவறு செய்தால் அதை நியாயப்படுத்துவதும் மற்றவர்கள் அதே தவறை செய்துவிட்டால்...
-
என்ன திமிர்!
-
வாய் ரொம்ப நீளம் !
-
இங்கிதமே தெரியாத ஆள்!
-
என்ன பிள்ளை வளர்த்திருக்காங்க!
-
மனசாட்சியே இல்லாதவன் அவன்!
-
என்று குமுறி, மற்றவர்கள் செய்த சிறிய தவறைக்கூட 'அநியாயம்! மோசம்!' என்று பெரிது படுத்துவதும் சமூக வழக்கில் சாதாரணமாகிப் போன ஒன்று.
நியாயம், அநியாயம் என்பது மனிதநேயத்தின் அடிப்படையில் பிரித்துப் பார்க்கப்பட வேண்டிய விஷயம்.
ஆனால் வழக்கில் நியாயம், அநியாயம் பற்றி நிலவும் கருத்துக்கள் வேடிக்கையானது. இது பற்றுதலை அடிப்படையாகக் கொண்டது...
அதாவது ...
நியாயம் - தனக்குச் சாதகமாக நடக்கும் எல்லாமே நியாயமான விஷயங்கள்தான்.
| 'நியாயம், அநியாயம்' பற்றிய |
|---|
| அநியாயமான ஆழ்மனக் கருத்துக்களே |
| நியாயமானவரையும் |
| அநியாயமானவராக மாற்றிவிடுகின்றன. |
அநியாயம் - தனக்கு சாதகமாக நடக்காத எல்லாமே அரியாயமான விஷயங்கள்தான்.
'மருமக ஒடச்சா பொன்சட்டி, மாமியார் ஒடச்சா மண்சட்டி!' - இந்தப் பழமொழி நியாயம், அநியாயம் பற்றிய கருத்து தலைகீழாக மாறிய பின்தான் சமுதாயத்தில் நுழைந்திருக்கிறது.
இப்படி தனக்கொரு சட்டம், ஊருக்கொரு சட்டம் என்று வாழ்பவர்களால் வாழ்க்கையை அனுபவித்து வாழவே முடியாது.
இதுபோன்ற சூழ்நிலைகளில் பாசம் கண்ணை மறைத்து விட்டதாக என்று கூறித் தப்பிக்கலாம்.
உண்மையில் பாசம் கண்ணை மறைப்பதில்லை. பற்றுதல்தான் கண்ணை மரைக்கிறது.
அது கண்ணை மாத்திரம் மறைப்பதில்லை. சந்தோஷத்தையும் சேர்த்து மரைக்குவிடுகிறது.
பற்றுதல் நமக்கு ஏற்படுத்தும் பாதகத்தை விளக்க தியான்துஷிர் அடிக்கடி சொற்பொழிவில் மகிழ்ச்சியோடு பயன்படுத்தும் உரையாடல் ஒன்று.
தியான்துஷிர் தன்னை அடிக்கடி பார்க்க வரும் பெண்மணியிடம் ஒரு நாள், "உங்க மகள் எப்படியிருக்கா? நல்லாயிருக்காளா?" என்று கேட்க, அந்தப் பெண்மணி, "அவ ரொம்பக் கொடுத்து வச்சவ சாமி. அதிர்ஷ்டக்காரி. அவளுக்குக் கிடைத்த கணவன் மிக மிக அருமையானவர். இராஜாத்தி மாதிரி அவள் கணவன் அவளைக் காங்குகிறார் சாமி.
என் மகளுக்கென ஒரு தனி கார் வாங்கிக் கொடுத்திருக்கிறார். நிறைய நகைகள், வைரக் கடிகாரம், அத்தோடு வேலை செய்ய நிறைய ஆட்கள்...
மனத்தினா வெண்ணித் தானே வந்தவிவ்வுலகை - கைவல்லிய நவநீகம் உங்கள் மனம், உங்களின் உலகை உங்களின் நியாய அநியாய கணக்குப்படி உருவாக்குகிறது. உலகம் மாற, உங்களின் கணக்கு மாறினால் போதும்.
கொடுத்து, குளிக்கச் சொல்லி, சில நேரம் அவரே காலை உணவை ஊட்டி விட்டுக்கான் வேலைக்குச் செல்வார். ரொம்ப பாசமான மனிதர் அவர்!
சில நேரம் மதியம் வரைகூட என் மகள் தூங்கிவிடுவாள். அவள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து, மகாராணி மாதிரி பார்த்துக்கொள்கிறார். அவர் மிக நியாயமான மனிதர் சாமி. இப்படியொரு கணவன் கிடைக்க புண்ணியம் செஞ்சிருக்கணும்'' என்று மகிழ்ச்சியாகக் கூறினார்.
''அதுசரி, ் ் மகன் எப்படியிருக்கான்? ''
"அந்தக் கொடுமையை எப்படிச் சொல்றது! என் பையன் போன ஜென்மத்துல என்ன பாவம் பண்ணினானோ தெரியல சாமி. முழுச் சோம்பேறியைப் போய் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கான்.
அவளுக்கு மகாராணின்னு நினைப்பு! அவ காலையில லேட்டாதான் எழுந்திரிப்பாளாம். என் பையன் பாவம் காலையில அவளை எழுப்பி காபி கொடுத்துட்டு, குளிக்கச் சொல்லி, பின் காலை அலுவலகத்திற்க்குப் போவானாம்!
சில நேரம் அந்தச் சோம்பேறி மதியம் வரை தூங்குவாளாம். போகாக குறைக்கு அவளுக்கு நான்கு வேலைக்காரங்க. தனி கார் வேற . என் பையன் வேலைக்காரன் மாதிரி இருக்கான் சாமி.
அவ கொஞ்சம் உடம்பு வளைந்து வேலை செஞ்சா போயிடுவா ? இதில் அவளுக்கு: பதுசு புதுசா நகைகள், வைரக் கடிகாரம் வேறு!
Brison கியாயமானவார்? அரியாயமானவா? பதில் உடனே சொல்லாதீர்கள். உடனிருப்பவர்களுடன் நன்றாய் கலந்தோலோசியுங்கள். உங்களுக்கே தெரியாத உங்களைப் பற்றி தெரிந்துகொள்வீர்கள். செய்து பாருங்கள்.
என் மகன் அதிர்ஷ்டமில்லாவன். அவனுக்கு வாய்ச்ச பெண் ஒரு அநியாயக்காரி சாமி' என்று புலம்பித் தீர்த்தாளாம் அந்தப் பெண்மணி.
பலர் இந்தப் பெண்மணி அளவுக்கு இல்லை என்றாலும் தனக்கொரு நியாயம், ஊருக்கொரு நியாயம் என்ற குணம் எல்லோரிடமும் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது.
இதுபோன்ற குணங்களால்தான், ஒரு சமயம் கண்ணில் ஒற்றிக்கொள்வதே, மறுசமயம் கண்றாவியாகத் தெரியும். இந்த வினோத நிலைக்குக் காரணம் பற்றுதான்.
பற்று இருக்கும் அளவைப் பொறுத்து உலகமும் மனிதர்களும் பிளவுபட்டுத் தெரிவார்கள். வாழ்க்கையை முழுமுமையாக அதன் எல்லா பரிமாணங்களிலும் வாழ முடியாத தவிப்பு ஏற்படும்.
நியாயம், அநியாயம் பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை ஆராய்ந்து பாருங்கள். அநியாயமாக நியாயம், அநியாயம் பற்றி வைத்திருக்கும் ரியாயமில்லாத கொள்கைகளை தூக்கி எறியுங்கள். உங்கள் கண்களை மறைத்துக் கொண்டிருந்தது அகன்றுவிடும்.
மற்றவரைத் தவிக்கவிடுவதில் சுகம் காணக்கூடாது !
சிறிய தவறை பெரிய அளவில் தட்டிக்கேட்பவர்கள், கியான ★ பெரிய நல்ல செயலை சிறிதளவுகூடப் புகழ முயற்சிப்பதில்லை. உளிகள்
சிறு பிழைகளைப் பெரிதுபடுத்துகின்றனர். பிழைகளின்றி ★ திருத்தமாக அதே செயலைச் செய்யும் போது கண்டுகொள்வதில்லை.
- குறைகளைக் காரணங்காட்டி திட்டும்போது, ஒருவருக்குள் உருவாக்கப்படும் ★ குற்ற உணர்ச்சிகள் அவரைத் திருத்திக்கொள்வதற்குத் தூண்டும். மிகவும் கடினப்பட்டு அவற்றைத் திருத்திக்கொண்டவரின் மனம், தான் எடுத்துக்கொண்ட முயற்சிக்கான அங்கீகாரத்தை எதிர்பார்த்து நிற்கும்.
ஆனால், குறைகளைக் காட்டத் தயாராக இருந்தவர், நிறைகளைக் கண்டும் காணாதது போல் செல்வர்.
இது திருந்த முயன்று, அதன் தொடர் விளைவாய்... திருந்திக் கொண்டிருப்பவரை மனமொடிந்து போகச் செய்யும். திருந்த ஆரம்பித்தவர் ஏமாற்றத்தை உணர்வார்.
'திருந்தாத வரை, திருந்தாதவரைத் திட்டு. ★
திருந்தியபின், திருந்தியவரைக் கொட்டு'
என்றரீதியில் செயல்படும் மனிதரோடு வாழ்வது என்பது நரக வாழ்க்கைக்குச் சமம். என்ன செய்தாலும் ஒருவித நொந்துபோன உணர்வை அருகிலிருப்பவருக்குத் தருவது நிறுத்தப்பட வேண்டும்.
மேற்குறிப்பிட்ட அநியாயமான செயல்களை பலர் உங்களுக்குச் செய்தார்கள். செய்கிறார்கள், என்பது மறுக்க முடியாத உண்மைதான். அதேபோல நீங்கள் பலருக்கு இதே மாதிரி செய்யவில்லை என்பதற்கு என்ன ஆதாரமிருக்கிறது ?
உங்களைப் பாதித்தவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும். ஆனால். உங்களால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாது!
தொடர்ந்து மற்றவர்களைத் தவிப்பிலேயே வாழவிடுவது, தவிக்கும் மனதின் செயல். மற்றவர்களைத் தவிக்கவிடும் செயலை நிறுத்தத்திற்குக் கொண்டுவருவதும், உங்களின் மனத் தவிப்பை நிறுத்தத்திற்குக் கொண்டுவரும்.
உங்களின் தவிப்பிற்கும் தீர்வு நீங்கள்தான். திருந்தும் முன் கவிப்ப வரும் காலங்களிலெல்லாம் மனகின் திட்டு! திருந்திய பின் தவிக்கும் தன்மை எட்டிப் கொட்டு! பார்க்கிறது. தவிப்பு வந்ததும் கலங்காதீர். தவிப்பு க விப்பு வங்குகிம் முழு ழு மையாக தவிர்ப்பது ஆக்கிரமிக்கட்டும். தவம்! ் தவிப்பின் உச்சி சென்றால் ... அது மறைந்து போகும்' என்பது தியான விதி.
இனி தவிக்கப் போகும் காலங்களையெல்லாம் தியான காலமாக்குங்கள். மற்றவர்களைத் தவிப்பில் தள்ளத் தூண்டும் மனஎழுச்சி வரும் காலங்களிலெல்லாம் விழித்துக் கொள்ளுங்கள்.
அந்தத் தவிப்பை விழிப்போடு ஆக்கிரமித்து வெளியே வாருங்கள்.
அநியாயங்கள் மரைந்து, நியாயமான மனிதராய் மலர்வீர்கள்!
தெரியாது
ு யாட்டெல் தியானக் கருத்தரங்கில், ஒரு அமெரிக்க தம்பதியினர் தங்கள் மகனை என்னிடம் அழைத்து வந்தார்கள்.
தம்பதியினர், "இவன் எங்களின் சொல்பேச்சைக் கேட்பதில்லை. அதையும் தாண்டி உறவினர்கள் ஏதாவது அறிவுரை செரன்னால், அவர்களைப் பார்த்துக் கிண்டலாகச் சிறித்துவிட்டு, எங்களிடம் கண்சிமிட்டுகிறான்.
என்ன நினைக்கிறான், என்ன செய்கிறான் இவன் என்பது எங்களுக்கே புரியவில்லை. இதற்கு என்ன தீர்வு?" எனக் கேட்டார்கள்.
அந்தச் சிறுவனிடம் தனியாகக் கேட்டபோது, அவன் செரன்ன பதில் ஆச்சரியத்தைத் தந்தது. "ஏன், சொல்பேச்சு கேட்க வேண்டும் ... என் தாயும் தந்தையும் நிம்மதியாக ஆனந்தமாக இல்லை. எப்போதாவது உபதேசம் செய்யும் உறவினர்களும் இவர்களைப் போலவே படாத பாடுபடுபவர்கள்தான்.
ஆனந்தமாக வாழத்தெரியாத இவர்கள் செரல்லும் உபதேசங்களைக் கேட்டு நடந்தால், நானும் இவர்களைப் போலவே எதிர்காலத்தில் துக்கப்பட வேண்டியிருக்கும்தரனே!
அப்பப்பா! எனக்கு வேண்டாம் இந்த வம்பு. இவர்களைவிட நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். அதை கெடுத்துக்கொள்ள வேண்டுமா?" என்றான்.
நமக்குத் தெரிந்த வாழ்வின் ஒரு சிறுபகுதிதான் மேலுள்ளது. *
கெரியாகு என்பது தெளிவாய்த் தெரிந்தவுடனேயே, இதுவரை தெரியாதகெல்லாம் தெரிய ஆரம்பிக்கும்! பரியாககெல்லாம் புரிய ஆரம்பிக்கும்! இது சூட்சுமமான உண்மை!
அந்தத் தம்பதியரைப் பாலவே, உங்களுக்குத் தெரிந்த வாழ்வின் ஏராளம் தெரியாத இருக்கலாம்.
நோக்கோடு வராய்ச்சி கட்டுரையைத் தொடருங்கள் ....
★ தெரிந்தவைகளுக்கு அப்பால் .... தெரியாதவைகளுக்கு அருகில் ..... நமக்குத் தெரிந்தும் புரியாக ஆனந்தம் நிறைந்திருக்கிறது.
- ★ 'எனக்குத் தெரியும்....' என்ற இந்த எண்ணம் எந்தச் செயலில், என்று உதிக்கிறதோ, அன்றே அச்செயலின் வளர்ச்சி குன்ற ஆரம்பித்துவிடும்
- ★ 'எனக்கு எல்லாம் தெரியும் ... ' என்ற இந்த எண்ணம் பிறந்து விட்ட அடுத்த நொடியே, அச்செயலின்வளர்ச்சி நின்றுவிடும். காரணம், உங்களுக்குத்தான்
எல்லாம் தெரிந்துவிட்டகே! முதிர்ச்சிக்குப் பதிலாக மனிதன் தளர்ச்சியடைய ஆரம்பித்துவிடுவான் ★ 'எனக்குத் தெரியாது .... '
என்ற இந்தத் தெளிவு உதித்த நொடியிலிருந்தே, மனிதரின் வளர்ச்சியில் புது வேகம் பற்றிக் கொள்ளும். ஒரு மலர் போல் மனிதர்கள் தானாக மலர்வார்கள்.
சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த தத்துவாச்சாரியாரைப் பார்க்கக் கர்வம் பிடித்த பண்டிதர் ஒருவர் வந்திருந்தார்.
பண்டிதரின் பார்வை, பாவனையில் இருந்து, "இவர்களுக்கு என்ன தெரியும் ? பாவம்! இவர்களின் அறியாமையை வைத்து இந்த தத்துவாச்சாரியார் ஜம்பம் செய்து கொண்டிருக்கிறார்" என்று நினைத்துக்கொண்டு பண்டிதர்
வருவதை நொடியில் புரிந்துகொண்டார் தத்துவாச்சாரியார்.
" என்ன தெரியும் உங்களுக்கு ? நாலு ஆன்மீகக் கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லாம் தெரிந்தது போல இந்த மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறீரே! சாஸ்திரம் பற்றி உமக்கு என்ன தெரியும்?" என்று கேட்கலாம் என்று நினைத்துக்கொண்டே கோபமாய் பண்டிதர் வாயைத் திறக்க,
தெரியுமா? கஷ்டம், கவலைக்ட .. நீ விடுத்த அழைப்பே!
தத்துவாச்சாரியார், ''எங்கிருந்து உனக்கு இவ்வளவு கோபம் கிளம்பி வருகிறது?'' என்று கேட்க, புறப்பட்டு வந்த இந்தக் கேள்வியில் பண்டிதர் குழம்பிவிட்டார்.
தத்துவாச்சாரியாரின் சாதாரண கேள்விக்கே தனக்குப் பதில் தெரியாகதை நினைத்து பண்டிதர் உடைந்துவிட்டார்.
வெகுரேரம் யோசித்து, ''தெரியாது'' என்று சொல்லி முடிக்க,
| ி | நீங்கள் தெரிந்துகொண்டவையே - |
|---|---|
| را | தெரியாத இறைவனையும், |
| க | புரியாத ஆனந்தத்தையும் தடுக்கின்றன. |
| ह | - ஆதி சூட்சுமமான |
| u | இரகசியம். |
| ம். |
தத்துவாச்சாரியார், ''உன்னால் ஏன் எல்லா நேரமும் சந்தோஷமாய் இருக்க முடியவில்லை?" என்று கேட்டார்.
பண்டிதரின் பாண்டித்யத்தை மீறி, தத்துவாச்சாரியாரின் கேள்வி தனக்குள் எங்கோ "காுக்" என்று குத்துவது போல பண்டிகர் உணர்ந்தார். தான் நிற்கும் போதே நிலம் நமுவுவது போல பண்டிதருக்குத் தோன்றியது.
-
- கோல்வி என்பது 99% வெற்றி... .
- ஜென் கூற்று
● வெளியுலகில்... பல தோல்விகளுக்குப்பின் வெற்றி. உள்ளுலகில்... பல வெற்றிகளுக்குப்பின் தோல்வி,
அதாவது - அகங்காரச் சாவு!
- வறஸிட் கூற்று • 99% தெரிந்துக்கொண்ட பின்தான் ... கனக்கு என்ன தெரியும், என்ன தெரியாது என்ற முடிவுக்கே ஒருவர் வரமுடியும். தெரியாது என்ற 1% சேரும்போது 'தெரிதல்' முழுபக்குவம் பெருகுகிறது. ச இது வெற்றியா, தோல்வியா? சிந்தியுங்கள்!
மெல்ல இயல்புநிலைக்கு வந்து, "தெரியாது" என்ற முடிக்க, கத்துவாச்சாரியார், "உன்னை உன் மனைவி முழுமையாய் கூட்ட கொள்ளவில்லையே ஏன் ? உலகத்திலுள்ள எல்லோருமே முட்டாளா? இல்லை நீ ஒரே ஒருவன்தான் புத்திசாலியா?' என்று கேட்டார்.
பலர் முன்னிலையில் பண்டிகரின் பர்ஸ்னாலிட்டியை தத்துவாச்சாரியார் பிடித்து உலுக்கியதில், பண்டிகளுக்குச் சிக்கம் கலங்கியது போல் கோன்றியது.
"என்ன தெரியும் இவருக்கு என்று வந்தால், இவர் கேட்கும் ஒரு கேள்விக்குக் கூட ''தெரியாது என்ற பதிலைக் தாண்டி, என்னால் எந்தவொரு பதிலும் கொடுக்க முடியவில்லையே!" என்று நினைத்த மாத்திரத்தில் பண்டிதர் கூனிக்குறுகிப் போனார்.
இருந்தும் பதில் கூறியே ஆக வேண்டிய கட்டாயம் இருப்பதால், சப்தம் குறைந்த தொனியில், "தெரியாது" என்று சொல்லி
முடிக்க, தத்துவாச்சாரியார், "வரும் போது திடகாத்திரமான காளை போல் கம்பீரமாய் வந்த நீ, ஏன் இப்படிச் சாகப்போகிற ஆடு மாதிரி நிற்கிறாய் ? எதனால் இப்படி மாறிப்போனாய் ?"
பண்டிதரைப் படபடபடப்பு கொற்றிக்கொண்டது. கால்கள் நடுங்க ஆரம்பித்தன.
குரல் தழுதழுக்க, "சாமி, எனக்கு எதுவுமே தெரியாது. உண்மையா சொல்றேன். எனக்கு எதுவுமே தெரியாது!" என்று தத்துவாச்சாரியார் காலில் விழுந்து பண்டிதர் அழ ஆரம்பித்தார்.
தத்துவாச்சாரியார் கருணை கலந்த சிரிப்போடு, பண்டிதரை எழுப்பி ஆரத்தழுவி விட்டு, "இப்போது பாருங்கள், இங்கு உட்கார்ந்திருப்பவர்கள் அறியாமையில் இருப்பவர்களா ஓ"
பண்டிதர், விடுங்கள்! பாண்டிக்யம் என்ற ஒரே ஒரு துறையில் சில விஷயங்களை மட்டும்தான் தெரிந்துகொண்டேன் என்ற தெளிவில்லாத காரணத்தால், எல்லாம் தெரியும் என்ற கர்வம் இவ்வளவு நாள் என்னைப் பேய் போன்று பற்றிக்கொண்டு, உண்மையைத் தெரிந்துகொள்ள விடாமல் செய்துவிட்டது" என்று சொல்லி முடிக்க,
தத்துவாச்சாரியார், உண்மையை?" என்று கேட்க, பண் டி த ர் , "எனக்குத் 'தெரியாது' என்ற உண்மையை, இப்போகுதான் நான் தெரிந்து கொண்டேன்.
இங்கே இருப்பவர்களும் இந்த உண்மையை எனக்கு முன்பே கெரிந்து கொண்டவர்கள்தான் என்பதை இப்போது புரிந்துகொண்டேன்.
சாமி, இப்பொழுதுதான் என் பெரிய சந்தேகத்திற்குப் பதில் கிடைத்திருக்கிறது" என்று கூறினார்.
தத்துவாச்சாரியார், சந்தேகம் ?'' என்று மீண்டும் கேட்டார்.
"உலகில் தெரியாது என்று தெரிந்து கொண்ட முட்டாள்களை விட, தெரியும் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் மூடர்கள்தான் அதிகம். நான் மூடக்கனத்திலிருந்து வெளி வந்துவிட்டேன்".
துரத்துநிகள் கெரியாகவுரை படகில் அற்றைக் கடக்கையில் இன்னொரு வெற்றுப் படகு இப்படகை மோதினால் ... படகு சவாரி செய்பவருக்குக் கோபம் வர வாய்ப்பில்லை.
அதே அது வெற்றுப்படகாக இல்லாமல், அதில் ஒருவர் இருந்துவிட்டால், "படகைப் பார்த்து ஒட்டத் தெரியாகா! " என்றே கூச்சலிடுவார். கோபப்படுவார். -சுவாங்கல் -
மேலும் உங்களைப்போன்ற வாமும் குரனிகளைச் சுற்றி குறைவான மனிதர் இருப்பது ஏனென்று புரிகிறது. அது தெரியும், இது தெரியும் எனச் சொல்லும் மூடர்களின் எண்ணிக்கை உலகத்தில் அதிகம். அதனால்தான் உண்மையைத் தெரிந்துகொள்ளும் கூட்டம் குறைவாக உள்ளது" என சிரித்துக்கொண்டே சொல்லி (மடித்தார்.
இந்த கட்டுரையைப் படித்த வாசகர்களுக்கு ஒரு சுவையான போட்டி...
நமக்கு என்ன தெரியும் என்று நாமும் ஒரு அலசு அலசி விடுவோம். பதில் தெரிந்தால் கட்டத்தில் டிக் செய்யவும். பதில் தெரிந்தவர், உண்மையிலேயே எல்லாம் தெரிந்தவர்.
| ★ தூங்கும் போது உங்கள் உள்ளுக்குள் எங்கே இருக்கிறீர்கள் ? எப்படி இருக்கிறீர்கள். ? | |
|---|---|
| ★ மனம்தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்று சொல்வோம். மனம் இருப்பது நமக்குத் தெளிவாய் தெரியும். அது எங்கே, எப்படி இருக்கிறது ? | |
| ★ | |
| ★ நம்மையெல்லாம் ஆட்டுவிக்கும் இறைவன் அல்லது இயற்கை சக்தி எங்கே ? | |
| ★ ஏன் இந்தப் பிரபஞ்சம் உருவானது ? |
பண்டிதரைக் கேட்ட எல்லா கேள்விகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
சில புத்தகங்களில் படித்த தத்துவக் கருத்துக்களை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு 'எனக்கு அது தெரியும், இது தெரியும்' என்ற முடிவுக்கு வந்து விட வேண்டாம்.
அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம், மொழி, கலை. வியாபாரம், அரசியல் என்ற எல்லாமே வாழ்வின் சிறு சிறு பகுதிகளே. அந்தத் துறையின் உச்சிவரை ஒருவர் தெரிந்துகொண்டால்கூட, அது முழு வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொண்டதாகாது.
அப்படியே வாழ்வைப் பற்றி நீங்கள் ஏதாவது தெரிந்து வைத்திருந்தாலும்…
நீங்களே உணர்வுப்பூர்வமாக உணர்ந்து பார்க்காத வரை, நீங்கள் தெரிந்துகொண்ட மற்றவர்களின் ஜீரணமாகாத (அனுபவமாகாத) கருத்துகளுக்கும் ஜீரணமாகாத உணர்வுக்கும் பெரிய வித்தியாசமில்லை.
கடைசியாக ஒரே ஒரு ஒரு சத்யத்தைக் கூறி இந்தக் கட்டுரைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.
நமக்குத் தெரியாது என்ற விஷயம் தெரியாத வரை, 'நமக்குத் தெரியாது' என்ற ஒரு விஷயம் நமக்குத் தெரியவே தெரியாது.
நமக்குத் தெரியாது என்ற ஒரு விஷயம் தெரிந்தால், குறைந்தது 'நமக்குத் தெரியாது' என்ற ஒரே ஒரு விஷயமாவது நமக்குத் தெரிய வரும்.
தெரிந்துகொள்ள ஆரம்பியுங்கள் ...
அர்த்தமுள்ள சம்பவம் ...
ஐன்ஸ்டீன் விஞ்ஞானத்தின் உச்சி தொட்டபோது சொன்ன வார்த்தைகள் ''இதற்குமேல் எனக்குத் தெரியாது ... '
அடுத்து சொன்னார்: ''இங்கு விஞ்ஞானம் முடிவடைந்து, மெய்ஞானம் ஆரம்பமாகிறது ... ''
மேலும் சொன்னார், "மெய்ஞானம் சேர்க்கப்படாத விஞ்ஞானம் முடம். Science without spirituality is lame ... ''
● 'தெரியாது' என்ற இலக்கை அடையத்தான் 'தெரிந்துகொண்டே இருக்கிறீர்கள்'.
தெரிந்துகொள்ளுதல் பூரணமாகட்டும்!
' தெரியாது என்ற இலக்கை அடைந்ததும் எல்லாம் தெரிய ஆரம்பிக்கும் என்ற கருத்தைத் தர்க்கரீதியாக ஒருவரால் புரிந்து கொள்ள முடிந்துவிட்டால்....
அவர்'தெரியாது' என்ற இலக்கைத் தொட்டுவிட்டார் உளிகள் என்றர்த்தம் இல்லாவிட்டால் அவரும் நடுவில் எங்கோ ஒரிடத்தில் தொக்கி நிற்பவரே. '
மேலுள்ள கருத்தை எளிதில் புரிந்துகொள்ள உதவும் ஒரு தூவோ தத்துவம், மனிதர்களை நான்கு வகையாகப் பிரிக்கிறது.
தனக்குத் தெரியும் என்பதே தெரியாதவர் - முதல் வகை. ★ இவர் தூங்குபவர் - இவரை எழுப்புங்கள்!
தனக்குத் தெரியாது என்பதே தெரியாகவர் -★ இரண்டாம் வகை.
இவர் முட்டாள் - இவரைத் திருத்துங்கள்!
தனக்குத் தெரியாது என்பதைத் தெரிந்தவர் -★ மூன்றாம் வகை.
இவர் குழந்தை. இவர் சீடன் - இவருக்குப் போதியுங்கள்!
தனக்குத் தெரியும் என்பதை தெரிந்தவர் -★ நான்காவது வகை.
இவர் 0 இவரைப் பின்தொடர்!
இந்த நான்கு படிகளில் இரண்டாவது படியைத் தாண்டத்தான் மனிதர்கள் பெருங் கஷ்டப்படுகிறார்கள்.
கயிறு தொங்குகிறது.
அதைப் பிடித்து ... மேலேறலாமா? தூக்குப்போட்டுக் கொள்ளலாமா?
முடிவுசெய்யுங்கள்.
துக்கக் குழியிலிருந்து மீட்க, உன் வாழ்வு காத்துக்கொண்டிருக்கிறது!
மூன்றாவது படியைத் தொட்டவர் ...
தன் வாழ்வை வாழ முடிவெடுத்துவிட்டவர்,
எல்லா மாயைகளையைம் தாண்டி மன்னனாக மாற ஆரம்பித்துவிட்டவர், இவரின் நிலையை அடைவது ஆனந்தத்தின் நேர்வழிச்சாலை.
தெரிந்துகொள்ள ஆரம்பயுங்கள்.
பூரணமாக , " தெரிந்து கொள்ளுதல்" தொட வேண்டிய படிக்கட்டுகளையும் தொட்டுத் தாண்டுங்கள்!
"தெரியாது" என்ற வார்த்தையின் எல்லாக் கோணங்களிலிருந்தும் ஒரே ஒரு முறை ஆராய்ந்து பாருங்கள்.
புரிந்துகொள்ள ஆரம்பியுங்கள் ....
கியாண
மனசே! மன்சே! குழப்பம் என்ன ?
""யார் நீ?" என்ற கேள்விக்குப் பெரும்பான்மையான மக்கள் கூறும் ★ பதில்கள்,
படிப்பறிவில்லாதவர் - "உடல்தான் நான்" என்று நினைக்கிறார். படித்தவர் - "மனம்தான் நான்" என்று நினைக்கிறார். பண்டிதர்
"ஆத்துமாதான் நான்" என்று நினைக்கிறார்.
இந்த மூன்று நினைவுகளும் மனதின் மாயங்களே. வெறும் கருத்துக்களே. உண்மையான நீங்கள் யார் என்று சுய அனுபவம் கிடைக்காத வரை புரிந்து கொள்ள முடியாது.
வாழ்வே மாயம்
'வாழ்வே மாயம்' - பிரச்சனைகளால் தத்தளிக்கும் சராசரி மனிதர் கூறினால் அது பொய். வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாததற்குக் கூறும் சப்பைக்கட்டு.
'வாழ்வே மாயம்' - பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியசாலி கூறினால், அது உண்மை. வாழ்க்கையின் வலிகளை அனுபவித்து, வாழ்வைப் புரிந்துகொள்வதால் பிறந்த தெளிவான கருத்து!
'வாழ்வே மாயம்' - பிரச்சனைகளால் பாதிக்கப்படாத நிலையை அடைந்த ஞானி கூறினால், அது 'சத்தியம்'. வாழ்க்கையின் இன்ப, துன்பத்தை முழுமையாக அனுபவித்து அனுபூதி அடைந்ததின் வெளிப்பாடு.
'வாழ்வே மாயம் -' என்று ஒரு ஞானி கூறியதை, ஒரு சராசரி மனிதர் 100% தவறாகப் புரிந்துகொள்வார். அவரது தத்தளிக்கும் வாழ்க்கையை நியாயப்படுத்திக்கொள்ள கருத்தாகப் பயன்படுத்திக்கொள்வார். அவ்வளவே. இதுவே சத்தியத்தை மாற்றிப் புரிந்துகொண்டு சத்தியத்தைப் பொய்யாக்குவது. மாயைகளிலேயே மாயை !
சிலர் வருத்தத்தோடு உட்கார்ந்து இருப்பார்கள். "என்ன விஷயம் ?" "என்று கேட்டால், ''மனசே சரியில்லைங்க ... " என்று சொல்வார்கள். இன்னும் சிலர், "மனம் ஒரு குரங்கு. அதைக் கண்டபடி தாவவிடக்கூடாது. கட்டுப்பாட்டில் வைத்திருக்க சொல்வார்கள்.
மனம், மனம் என்று பல இடங்களிலும் சொல்கிறோமே, அது என்ன? மனிதர்கள் மனிதராகவே வாழ்வதற்காக, இறைவனால் பரிசாக அளிக்கப்பட்ட ஒரு கட்டுப்பாட்டு அமைப்பே மனம். மனிதன் என்ற எஜமானன் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்துகொள்ள, வேலையாள்தான் மனம்.
மனிதருடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்த மனம், மனிதரைக் கட்டுப்படுத்தும் அமைப்பாக மாறிவிட்டதுதான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காாணம்.
எஜமானன் அசந்த நேரத்தில், வேலைக்காரன் எஜமானன் போலச் செயல்பட்டால் அந்தச் சூழ்நிலை எப்படியிருக்கும் ?
பக்குவப்படாத வேலைக்காரன், எஜமானாக மாறுவது, குரங்கைப் பிடித்துச் சிம்மாசனத்தில் உட்காரவைத்தது போல் இருக்கும். அதனால்தான் ஞானிகள் எல்லோரும் மனதைக் குரங்கோடு ஒப்பிட்டு "குரங்குமனம்" என்று அழைக்கிறார்கள். சிம்மாசனத்திலிருந்து குரங்கு அகற்றப்படாத வரை, பிரச்சனைகள், கஷ்டங்கள் தொடரத்தான் செய்யும்.
மனம் பல பிரச்சனைகளை, பல போலிகளை உருவாக்கிக் காண்பிக்கும் தன்மை கொண்டது. அவற்றில் ஒன்றுதான் மாயை!
மாயை என்பது இல்லாத ஒன்றை இருப்பதுபோல் காண்பிப்பது. இல்லாத ஒன்றை இருப்பது போல நினைத்து, அதனால் அதிகம் பயப்படுவது, அல்லது அதிகம் ஆசைப்படுவது, இரண்டுமே மாயையின் வெளிப்பாடுகள்.
மாயையை இன்றும் தெளிவாகப் புரிந்துகொள்ளச் சிறிய கதை ஒன்ற ...
இரண்டு சன்யாசிகள் திபெத் நோக்கிப் பயணப்பட்டிருந்தார்கள். போகும் வழியில் பிச்சையெடுத்து பசியாற்றிக்கொண்டே தொடர்ந்து சென்றார்கள். பணக்கார சிவபக்கர் ஒருவர் இல்லத்தில் இருவருமே விருந்து முடித்துவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்ததிலிருந்து, வயதான சன்யாசி கொஞ்சம் பகற்றத்தோடு இருந்தார்.
வயதான சன்யாசி நடக்கும் போது அடிக்கடி பின்னால் திரும்பிப் பார்த்தபடியே நடந்து சென்றார். என்றுமில்லாமல் இன்று சன்யாசி முகத்தில் ஒரு சிறிய கலவரம். நடையில் ஒரு பரபரப்பு. குரலில் சிறு நடுக்கம். அடிக்கடி தோளில் மாட்டிய பையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டார்.
உடன் வந்த இளம் சன்யாசி, 'ஏன் இவர் இப்படிக் கலவரமாக இருக்கிறார்?' என்று யோசித்தபடி நடந்து வந்தார்.
மா யை
மாயை என்பது இல்லாத ஒன்றை இருப்பதுபோல் காண்பிப்பது. இல்லாத ஒன்றை இருப்பது போல நினைத்து, அதனால் அதிகம் பயப்படுவது, அல்லது அதிகம் ஆசைப்படுவது, இரண்டுமே மாயையின் வெளிப்பாடுகள்!
பின்பு ஒரு கிணற்றடியில் இருவரும் தண்ணீர் குடித்துக் கொஞ்சம் ஒய்வெடுத்தார்கள். கொஞ்ச நேரத்தில் வயதான சன்யாசி கண் அயர்ந்து தூங்கி விட்டார். அவரது தூக்கத்தைக் கலைக்காமல் அவருடைய பையை இளம் சன்யாசி எடுத்து விட்டார்.
பையைத் திறந்து பார்த்தார், ஒரு தங்கக்கிரீடம் இருந்தது (தங்கக்கிரீடம், சிவபக்தர் பரிசாகக் கொடுத்தது). வயதான சன்யாசியின் பரபரப்பிற்கும், படபடப்பிற்கும் என்ன காரணம் என்பது இளம் சன்யாசிக்குத் தெளிவாகத் தெரிந்தது.
இளம் சன்யாசி, பையிலிருந்து கிரீடத்தை எடுத்துத் தூர எறிந்துவிட்டுக் கிட்டத்தட்ட கிரீடத்தின் வடிவத்தையொத்த மரத்துண்டை எடுத்து பையில் போட்டு, அதையே வயதான சன்யாசியின் மடியிலேயே வைத்துவிட்டார்.
சிறிது நேரம் கழித்து எழுந்த இருவரும், மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார்கள். வயதான சன்யாசி மீண்டும் அதே படபடப்போடு நடந்து வந்தார். பையை அடிக்கடி தொட்டுப் பார்த்துக்கொண்டே வந்தார்.
இளம் சன்யாசி, "சாமி, ஏன் பதற்றமாக இருக்கிறீர்கள்... ஏதாவது பிரச்சனையா?' என்று அப்பாவி போலக் கேட்டார்.
வயதான சன்யாசி, "இல்ல சாமி. அந்தச் சிவபக்தர் ஒரு தங்கக் கிரீடத்தைக் கொடுத்து காசியில் ஏதாவது ஒரு கோயிலில் தானம் செய்யச் சொன்னார். வழியில் திருடர்கள், கொள்ளையர் யார் வேண்டுமானாலும் வரலாம்! அதனால்தான் ஒரே பதற்றமாக இருக்கிறது'' என்றார்.
இளம் சன்யாசி, "இந்தப் பைக்குள் இருக்கும் ஒரு சிறிய கிரீடமா உங்கள் சுதந்திரத்தைப் பாதித்துப் பகற்றத்தை ஏற்படுத்தியது?" என்று அப்பாவி போல் கேட்டார். வயதான சன்யாசி, "அமாம், ஆமாம்" என்றார்.
"பைக்குள் இருக்கும் அந்தக் கிரீடம்தான் உங்களை இவ்வளவு பயமுறுத்தியது என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?" என்று கேட்டார் இளம் சன்யாசி.
' வாழ்வே மாயம்' - பிரச்சனைகளால் பாதீக்கப்படாத நிலையை அடைந்த ஞானி கூறினால் அது சத்தியம். வாழ்க்கையின் இன்ப, துன்பத்தை முழுமையாக அனுபவித்து அனுபூதி அடைந்ததின் வெளிப்பாடு.
"ஆம்" என்றார் வயதான சன்யாசி.
" அப்படியா. சரி. உங்கள் பையைக் திறந்து பாருங்கள்" என்றார் இளம் சன்யாசி.
பையைக் கிறந்து பார்த்த சன்யாசி அதிர்ச்சிக்கு உள்ளானார். ஒரு சிறிய மரத்துண்டைத் தவிர்த்து அதில் வேறெதுவும் இல்லை. கிட்டத்தட்ட ஆடிப் போய்விட்டார்.
இளம் சன்யாசி, "கிணற்றடியில் நான்தான் கிரீடத்தை எடுத்தெறிந்துவிட்டு, இந்த மரத்துண்டை வைத்தேன். இப்போது புரிகிறதா மனதின் மாயை எந்த அளவுக்கு ஒருவரை அட்டிவைக்கும் என்று'' -உண்மையை உணர வைத்தார்.
மாக்துண்டை கிரீடம் என்று நினைத்து இவ்வளவு தூரம் தேவையில்லாமல் பயந்து கொண்டேயிருந்ததை நினைக்க நினைக்க வயதான சன்யாசிக்குச் சிரிப்பு வந்தது. அதிர்ச்சியைத் தாண்டி வாய்விட்டுச் சிரித்து விட்டார்.
தங்கக்கிரீடத்தைப் போல பதவி, பணம், பொருள் என்ற மாயைகளை, பொக்கிஷம் போல கருகிக்கொண்டு அவற்றைக் காப்பாற்றுவதிலேயே மனம் முழுழச்சாக இறங்கிவிடுகிறது.
நிஜத்தில் இந்தப் பதவி, பணம், பொருள் எல்லாம் தங்கக்கிரீடங்கள் அல்ல ... வெறும் மரத்துண்டுகளே! நீர்க் குமிழிபோல, சில காலம் மட்டுமே உங்களிடம் இருக்கக்கூடியவை !
இந்த உண்மையைப் புரிந்துகொண்டு செயல்பட்டால், கட்டுப்படுத்துவீர்கள். மனம் உங்களைக் கட்டுப்படுத்தாது !
கங்கக் கிரிடத்தைப் போல, பதவி, பணம், பெரருள் என்ற மாயைகளை, பொக்கிஷம் போல கருதிக் கொண்டு அவற்றைக் காப்பாற்றுவதிலேயே மனம் முழ முச்சாக இறங்கிவிடுகிறது.
குழுப்பத்தை வருவற்போம் !
குழப்பத்தை நீங்கள் வெறுக்கத் தேவையில்லை. நீங்கள் வளருகிறீர்கள் என்பதற்கான அறிகுறிதான் அது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
குழம்புவதில் தவறில்லை. குழம்பிக்கொண்டே இருப்பதுதான் தவறு.
- நீங்கள் குழம்புவது நியாயம். அடுத்தவர்களைக் குழப்புவது அநியாயம்.
- இன்றைய குழப்பம் நாளைய தெளிவு.
எது சரி, எது தவறு என்ற தெளிவை ஏற்படுத்தும் மனதின் செயல்முறைதான் குழப்பம்.
மேற்சொன்ன வரிகளை ஒன்றுக்கு இரண்டு முறை படித்து, மனதில் தக்க வைத்துக்கொண்டாலே குழப்பத்தைப் பாதி தூரம் ஓட்டிவிடலாம்.
சிலர் எப்போது பார்த்தாலும் குழம்பிப் போய் நிற்பார்கள். என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் மலைத்துப் போய் நிற்பார்கள். "குழப்பம்தான் என் முதல் எதிரி. என் முன்னேற்றத்திற்குப் பெருந்தடையாக இருப்பது இந்தக் குழப்பம்தான்" என்று புலம்பித் தீர்ப்பார்கள்.
பிரச்சனை குழப்பத்தில் இல்லை. குழப்பத்தை நீங்கள் அணுகும் முறையில்தான் இருக்கிறது. குழப்பம் உங்களுக்குத் தொல்லை கொடுக்க வந்த தீயசக்தி. அதனால் அதைக் கண்டு ஒடிவிடுவதுதான் அறிவு என்று நீங்கள் நினைப்பதுதான் பிரச்சனை.
இப்போது சிறிய கதை சொல்கிறேன். சரோ ஷான் என்ற மன்னருக்கு இரவில் ஏற்பட்ட குழப்பத்தால் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக அரசவையைக் கூட்டித் தன் குழப்பத்தைத் தெரிவித்தார்.
கனவில் கான் மிகப் பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருந்ததாகவும் அந்த இக்கட்டான நேரத்தில் முதல் மந்திரியோ, அரசவை ஆலோசகரோ, தளபதிகளோ அருகில் இல்லை என்றும் கூறினார் மன்னர்.
''இப்படி எனக்கு ஆலோசனை கூற யாருமே இல்லாதபோது, நான் என்ன செய்வுது உதற்கு உடனே பதில் தெரிந்தாக வேண்டும்" என்று ஆணை பிறப்பித்து விட்டார்.
இப்படி ஒரு குழப்பமான காரியத்திற்கு விடை கேட்டதால், அனைவரும் குடிப்பத்தின் உச்சிக்கே சென்று விட்டனர். "இதற்குப் பதில் கூறவே முடியாது" என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருந்த போது ஒரு முதியவர் எழுந்து, "நான் பதில் கண்டுபடித்து விட்டேன்" என்றார்.
தொடர்ந்து, " மன்னா, ஒரு சிறு நிபந்தனை. இதற்குப் பதில் ஒரே வரிதான். ஆனால் அதை நீங்கள் இப்போது படிக்கக்கூடாது. ஏதாவது இத்கட்டான சூழ்நிலை ஏற்படும் போது மட்டுமே அதைப் படிக்க வேண்டும்" என்றார்.
மன்னரும் அந்த நிபர்தனையை ஏற்றுக்கொண்டார். மன்னரைத் தவிர்த்து மற்றவர்கள் அந்தப் பதிலைப் படித்துவிட்டு "ஆஹா, என்ன ஒரு அற்புதமான பதில்" என்று பாராட்டினார்கள்.
மன்னரின் சந்தேகத்தைப் போக்கும் பதிலை, ஒரு வைர மோதிரத்தில் பதித்து, அதை அரசரின் விரல்களுக்கு அணிவித்தார் முதியவர்.
சில மாதங்களுக்குப் பிறகு பக்கத்து நாட்டோடு போர் மூண்டது. போரில் படுதோல்வி ஏற்பட்டது. மன்னர் மட்டும் தப்பித்துக் குதிரை மீது ஏறி ஓட, ஓட எதிரிகளும் துரத்திக்கொண்டே வந்தனர். மன்னரின் குதிரை கடைசியில் ஒரு மலை உச்சி மீது போய் நின்றது.
" அடுத்து என்ன செய்வது ? எனக்கு ஆலோசனை சொல்லக்கூடிய அமைச்சர்களோ, மந்திரிகளோ இங்கு இல்லையே!' என்று மன்னர் வருந்தியபோது, வைரமோதிரத்தில் எழுதப்பட்ட வரிகள் ஞாபகத்துக்கு வந்தன.
உடனே மோதிரத்தைத் திறந்து 'என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று' பார்த்தார்.
This Too Will Pass Away!
"இந்த மாறிவிடும்" எழுதப்பட்டிருந்தது. ஆறுதலைத் தந்தது அந்த வாசகம். சிறிது நேரத்தில் எதிரிகள் வேறு வழியில் விலகிக் சென்றுவிட்டார்கள். மன்னரும் தப்பித்தார்.
தப்பித்த மன்னர், சில மாதங்களுக்குப் பிறகு எதிரி நாட்டின் மீது படையெடுத்து வெற்றி கண்டார். வெற்றிக் களிப்பில் இருந்தபோது மீண்டும் மோதிரத்தைத் திறந்து பார்க்கார்.
'இந்த நிலையும் நிச்சயம் மாறிவிடும்.' வெற்றி பெற்றுவிட்டதால் கர்வம் கொள்ள வேண்டாம் என்று எச்சரிப்பது போல் இருந்தது அது.
நிச்சயம் இந்த நிலைமை மாறிவிடும் என்ற உண்மை தெரிந்து இருந்தால் போதும், எந்தக் குழுப்பத்தையும் எளிதாக அணுகலாம்.
குழப்பம் தலையைப் பிடப்பிடித்து உலுக்குகிற நிலையில் தயவுசெய்து எந்த முடிவையும் எடுக்காதீர்கள். பத்து நிமிடம்
தளர்வான நிலையில் அமர்ந்து கொண்டு, மூச்சை நன்றாக, ஆழமாக இழுத்துவிட்டு, மனம் கொஞ்சம் அமைதி அடைந்தபின் தெளிவான, உற்சாகமான குழ்நிலையில்
குழுப்பமே குழம்புமளவுக்குக் குழப்பத்தைக் குழுப்புவது, குழப்பத்தைக் குழப்பமில்லாமல் எதிர்கொள்ளும்போது தான் சாத்தியம்!
குழுப்பத்தை எதிர்கொண்டு முடிவெடுங்கள். நிச்சயம் நல்ல முடிவு கிடைக்கும். குழப்பம் ஓடிவிடும்.
குழுப்பத்தை முழுமுமையாக வரவேற்றுக் கொள்ளுங்கள். குழுப்பத்தின் உச்சிக்குச் சென்றாலும் பயப்படாதீர்கள். குழப்பத்தைத் தாண்டிய அடுத்த நிமிடம் தெளிவு கிடைத்துவிடும். இது சூட்சுமமான உண்மை. தெளிவு பெற்ற ஒவ்வொருவரும் ஒப்புக் கொள்ளும் உண்மை.
தெளிவு என்ற குழந்தை நம்முள் பிறக்க நாம் படும்பாடுதான் குழப்பம். குழுப்பத்திற்குப் பயந்து குழப்பத்தைக் கலைக்க நீங்கள் முயற்சி செய்வதால் எவ்வளவு முறை தெளிவைப் பிறக்கவிடாமல் கருவிலேயே கலைத்திருக்கிறோம் என்பதைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்!
மன்னரைப் போல் நிச்சயம், "இந்த நிலையும் மாறிவிடும்" என்பது போன்ற "Readymade statement" மூலமாகக் குழப்பத்தை அணுவது முதல் வகை.
அதையும் தாண்டிய ஒன்றுதான் குழப்பத்தை வரவேற்பது. குழப்பத்தோடு போராடித் தெளிவுக்கு வருவது இது இரண்டாவது வகை.
இரண்டாவது வகை முதல் வகையைவிடச் சிறந்தது. ஆனால் கடினமானது. பெரிய விஷயங்கள் எதுவும் சும்மா கிடைக்காது.
எனவே,
குழுப்பத்திற்காகப் பயப்படாதீர்கள் ! குழப்பத்திற்காக வருத்தப்படாதீர்கள் ! குழப்பத்திற்காக நன்றி சொல்லுங்கள். வரவோறுங்கள் !
ெ வி வு
தெளிவு என்ற குழந்தை நம்முள் பிறக்க நாம் படும்பாடுதான் குழப்பம். குழப்பத்திற்குப் பயந்து குழப்பத்தைக் கலைக்க நீங்கள் முயற்சி செய்வதால் எவ்வளவு முறை தெளிவைப் பிறக்கவிடாமல் கருவிலேயே கலைத்திருக்கிறோம் என்பதைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்!
Part 5: Open the Door... Let the Breeze in!
உங்கள் கண்ணோட்டமும் வாழ்க்கையின் ஓட்டமும் ...
100 பெங்களூர் பிடதி ஆஸ்ரமத்திற்குக் குதூகலமான குடும்பம் ஒன்று அன்று வந்திருக்கிறது.
அக்குடும்பத்தின் சுட்டிச் சிறுவன் சிறுதவறொன்றைச் செய்து விட்டான். கொஞ்சம் கோபப்பட்ட பாட்டி, "அறிவிருக்கா?" என்றார். சிறுவனின் தந்தையும், "புத்தி கொஞ்சமாவது இருக்கா?" என்றார் அச்சிறுவனிடம்.
திட்டுவாங்கிய சிறுவன் அடங்கி ஒடுங்குவதற்குப் பதில், அவர்கள் இருவரையும் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தான். ஏன் அப்படிச் சிரித்தான் எனக் கேட்டதற்கு, "எங்க வீட்டுல சமையலுக்கு ஏதாவது பத்தாம போகும் போதுதான், பக்கத்து வீட்டுக்காரர்களிடம் 'அது இருக்கா, இது கொஞ்சமாவது இருக்கா' என்று என் அம்மா கேட்பதைப் பார்த்திருக்கிறேன்.
இன்று என்னிடம் 'அறிவு இருக்கா?' என்று இவர்கள் கேட்கிறார்கள். பாவம், அவர்களிடம் அறிவுபோதுமான அளவு இல்லைபோல் தெரிகிறது!" எனச் சொல்லி மீண்டும் சிறிக்க ஆரம்பித்து விட்டான்!
குதூகலமானவருக்குக் குதூகலம் என்பது வாழ்க்கைத் திடலில் முழுவதும் கொட்டிக்கிடப்பது தெளிவாய் தெரியும்.
- உங்களுக்கு யார் சொன்னது வாழ்வு துக்ககரமானதென்று. யார் சொல்ல முடியும் வாழ்வு ஆனந்தமயமானதென்று. இரண்டையுமே உங்களுக்கு நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
- உங்களை அழிப்பது, உங்களைக் காப்பது இரண்டையுமே உங்களுக்கு நீங்கள் செய்வதைவிட வேறு யாரும் அதிகமாகச் செய்துவிட முடியாது .
- 'நான் இப்படிப்பட்டவன்' 'எனக்குப் பிடித்தது ... பிடிக்காதது ... ' 'என்னைப் பொறுத்தவரையில்' இதுபோன்ற கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் உங்களுக்குத் தெளிவாய்த் தரும் மனத்தின் ஒரு அம்சத்திற்குப் பெயர்தான் பர்ஸனாலிட்டி#Personality 1
கண்கள் வழியாய் எதையும் நீங்கள் பார்ப்பதில்லை. உங்களின் பர்ஸனாலிட்டி வழியாகத்தான் எல்லாவற்றையும் பார்க்கிறீர்கள். புரிந்து கொள்கிறீர்கள்.
அதனால்தான் ஒருவர் கருத்து போல் இன்னொருவர் கருத்து இருப்பதில்லை. காரணம் - பர்ஸனாலிட்டி என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமானது.
ஒரு சின்னக் கதை ...
வெனிஸ் நகரத்தின் வாயிலில் ஒரு மரத்தடியில் வயதான மனிதர் அமர்ந்திருந்தார். அவர் ஒரு ஞானி.
ஒரு வழிப்போக்கன் அவரிடம் வந்து, "ஐயா, இந்த நகரில் உள்ள மக்கள் எப்படிப்பட்டவர்கள்?" என்று கேட்டார்.
வயதானவர், "நீ எங்கிருந்து வருகிறாய் ? உன் ஊர் மக்கள் எப்படிப்பட்டவர்கள்?" என்று கேட்டார்.
மற்றவரின் நடத்தையிலிருக்கும் அசுத்தங்களைப் பற்றி பேசத் துடிப்பதுதான் மிக அசுத்தமான நடத்தை. அவரை அவரும் உங்களை நீங்களும் காப்பாற்றுங்கள். மாற்றிச்செய்தால் இருவருக்குமே அது ஆபத்தானதே!
"நான் குயின் நகரில் இருந்து வருகிறேன்.
அங்கே இருப்பவர்கள் சுத்த மோசம்.
ஒருவருக்குக்கூட அன்பாகப் பழகத் தெரியாது. அவர்களுக்கு அடுத்தவர்களைப் புரிந்துகொள்ளும் குணம் கொஞ்சம்கூடக் கிடையாது" என்றார்.
வயதானவர், "நல்ல வேளை. என்னிடம் கேட்டாய். இங்கே இருப்பவர்களும் சுத்த மோசமானவர்கள்தான். உன்னை யாரும் நிச்சயம் உடனே இங்கிருந்து தப்பித்துப் போய் விடு" என்றார்.
சற்று நேரம் கழித்து மற்றொரு வழிப்போக்கர் அவரிடம் வந்து, "ஐயா, இந்த நகரில் உள்ள மக்கள் எப்படிப்பட்டவர்கள்?" என்று கேட்டார்.
வயதானவர், "நீ எங்கிருந்து வருகிறாய் ? உன் ஊர் மக்கள் எப்படிப்பட்டவர்கள்?" என்று கேட்டார். வழிப்போக்கன், "ஐயா, நான் குயின் நகரில் இருந்து வருகிறேன்.
அவர்கள் மிக அருமையான மக்கள், அன்பானவர்கள்.
அவர்கள் புரிந்துகொண்டு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும் தன்மை கொண்டவர்கள்" என்றார்.
வயதானவர், "அப்படிப்பட்டவர்கள்தான். இவர்களும் அருமையான மக்கள்தான். சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறீர்" என்றார்.
நாம் எப்படி இருக்கிறோமோ, அதே கண்ணோட்டத்தில்தான் மற்றவர்களைப் பார்க்கிறோம் என்பதற்கு இந்தக் கதை ஒரு சிறந்த உதாரணம்.
முதல் வழிப்போக்கன் அவருடைய ஊர் மக்கள் மோசமானவர்கள் என்று தவறாக நம்பிக்கொண்டிருக்கிறார்.
அடிப்படையில், அருமையான குணம் கொண்ட மக்கள் மற்றவர்களையும் அருமையானவர்களாகவே கருதுவார்கள். அதனால்தான் அதே ஊரில் இருந்து வரும் மற்றொருவருக்கு அதே ஊர் மக்கள் அருமையானவர்களாகத் தெரிகிறார்கள்.
'அருமையானவர்கள்' மற்றவர்களிடம் இருக்கும் அருமையான குணங்களைத் தேடிக் கண்டுபிடித்து சந்தோஷமடைகிறார்கள். நல்ல நட்புறவோடு இருக்கிறார்கள்.
'மோசமானவர்கள்' மற்றவர்களிடம் இருக்கும் மோசமான குணங்களைத் தேடிக் கண்டுபிடித்து நொந்துபோகிறார்கள். நல்ல உறவுகளையும் கெடுத்துக் கொள்கிறார்கள்.
ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு நிறம் உண்டு. பார்க்கும் பொருள் எல்லாம் பச்சையாகத் பார்ப்பவர்களிடமா ? பிரச்சனை பார்ப்பவரிடம்.
அவர் அணிந்திருக்கும் பச்சைக் கண்ணாடிதான் பிரச்சனை. இந்த பச்சைக் கண்ணாடிதான் உங்கள் பர்ஸனாலிட்டி
உங்களின் பர்ஸனாலிட்டி எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் மற்றவர்களையும் நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.
க ண் ணர ഗ്ര
இது உங்களின் அந்தரங்கம். மற்றவர்களைப் பற்றி நீங்கள் சொல்லும்- சொல்ல விரும்பும் குறைகள், கேடுகள் உங்களின் அந்தரங்கக் குணத்தைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடிகள். நீங்கள் எந்த தரம் என எளிதில் கண்டுபிடியுங்கள்.
பார்க்கும் பொருட்கள் எல்லாம் பச்சையாகத் தெரிந்தால், - அணிந்திருக்கும் மூக்குக்கண்ணாடிதான் பச்சையாக இருக்க முடியும். பொருட்கள் அல்ல!
அதேபோல் உலகத்தில் உள்ள பலரும் ஏதோவொரு வகையில் தவறானவர்களாக, சரியில்லாதவர்களாக உங்களுக்குத் தெரிந்தால், உங்களுடைய பர்ஸனாலிட்டியில்தான் பிரச்சனை. மற்றவர்களிடமல்ல.
பர்ஸனாலிட்டி சரியாகிவிட்டால், மற்றவர்களை அவாவர் குணங்களின்படி தவறாக எடைபோடாமல் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.
'இது நல்லது, இது கெட்டது, இது தவறு, இதுசரி. '
என்பது ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் வேறுபடும்.
இளைஞர்களுக்கு 'இதுசரி, இது சந்தோஷம்' என்று தோன்றும் பல விஷயங்கள், முதியவர்கள் பலருக்குத் தவறாகவும் தேவையில்லாத விஷயமாகவும் தோன்றும்.
ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் பார்க்கும் போது நல்லவர்கள்தான்.
மற்றவர்களின் நல்ல குணங்கள் பளிச் என்று தெரியாமல், மற்றவரின் கெட்ட குணங்கள் முதலில் ஒருவருக்குத் தெரிகிறது என்றால், பார்க்கும் பார்வையில்தான் தவறு இருக்கும்.
நீங்கள் நல்லவர், அருமையானவர் என்ற உணர்வு உங்களுக்குத் தெளிவாக இருந்தால், மற்றவர்களின் நல்ல குணங்கள்தான் எடுத்த எடுப்பில் பளிச் என்று தெரியும்
மற்றவரிடம் கண்டுபிடிக்கும் தவறுகளில் 90% க்கும் மேல் நம்மிடம் இருக்கும் தவறுகள்தான்.
ஒரு சிறு காகிதத்தை எடுத்து மற்றவர்களிடம் நீங்கள் கண்டுபிடிக்கும்
| குறைகள் | விளக்கம் |
|---|---|
| लियोतोल्स्तोय | इटिज़ मायसेल्फ़ आई फ़ाइंड इंटोलराबले - लियोतोल्स्तोयिन् कूऱ्रु ओरु निजक् कण्णोट्टम्। मुतल् मुतलாய் तन्नुळ् पार्प्पवरால் नम्बमुडियादु। |
| 'एन्नुळ्ळा? एन्नुळ्ळा! इव्वळवु कुप्पैकळ्' एऩ्ऱे वियक्क वैक्कुम्। | |
| उङ्कळैत् तोण्टिप् पारुङ्कळ्। पुरियुम्! |
தவறுகளை எழுதுங்கள். தயாராகும் பட்டியலை நன்கு கவனித்துப் பாருங்கள். மேலே சொன்ன உண்மை புரியும்!
(நம்முடைய பல குறைகள் மனதிற்குள் மிக ஆழமாகச் சென்று விட்டன. அதனால், சிலருக்கு இதை ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கலாம்.
ஏற்றுக்கொண்டாலும் குறைகளைத்தான் காண்கிறீர்கள் என்பது உண்மை).
பட்டியலிலிருந்து கண்டுபிடித்த தவறுகளைக் கிருத்திக்கொண்டால் போதும் ! உங்கள் தெளிவாகிவிடும் ! மற்றவர்கள் எவ்வளவு நல்லவர்கள் என்ற உண்மையும் தெரிய வரும்.
அதன் பின்னே கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்கள் எவ்வளவு நல்லவர்கள், நாம் எவ்வளவு தவறாக அவர்களைப் புரிந்து கொண்டிருக்கிறோம் ஆரம்பிக்கும்.
இயேசுநாதர் இதற்கு ஓர் அருமையான வாசகம் கூறி உள்ளார்.
"முதலில் உன் கண்ணில் இருக்கும் உத்திரத்தை எடுத்துப்போடு. பின் உன் சகோதரன் கண்ணில் இருக்கும் துரும்பை எடுத்துப்போடு" என்றார். (உத்திரம் என்பது மிகப் பெரிய குறுக்கு மரத்தைக் குறிக்கும்).
இந்த வாசகத்தில் அவர் உத்திரம் என்று குறிப்பிட்டு இருப்பது மிகைப் படுத்தப்பட்ட ஒரு விஷயம் அல்ல. அது சாட்ஷாத் உண்மை.
அவன் முட்டாள் என நீ சொல்வாய் என அவன் சொல்வான் ... - ஜென் கூற்று. மற்றவர்கள் கஷ்டப்படுவதாய் நீங்கள் கஷ்டப்படுவதாய் மற்றவர்கள் நினைக்கிறார்கள். வித்தையல்ல உண்மை. யார் உங்களுக்கு நிஜம் சொல்வது?
பெரும்பாலோனோர் அவர்களிடம் மிகப் பெரும் குறைகளையும், தவறுகளையும் உணர்ச்சிக் கட்டுபாடின்மையையும் பொய்மையையும் வைத்துக்கொண்டு அடுத்தவர்களைக் கைகாட்டியே வாழ்க்கையைக் கடத்துகிறார்கள்.
'எனக்கு மட்டும் நல்ல தாய், தந்தை அமைந்திருந்தால் ...
உங்களைப் பற்றிய உங்களின் ஆழ்மன அபிப்பிராயங்களைத்தான் மற்றவரைப் பற்றிய 'உங்களின் அபிப்பிராயமாக' காலத்திற்கும் இடத்திற்கும் நபருக்கும் தகுந்தாற்போல் மாறி மாறிக் கூறிக் கொண்டேயிருப்பீர்கள். இது மனதின் விளையாட்டு. ' - மகா ரகசியம்
இல்லை, நல்ல மனைவி அமைந்திருந்தால்... நல்ல பிள்ளைகள் பிறந்திருந்தால் ... நல்ல நண்பர்கள் கிடைத்திருந்தால் ... வேலை, நல்ல கிடைத்திருந்தால் ... '
என்று அடுத்தவர்கள் மீது பழியைப் போட்டு நமது குறைகளை அப்படியே வைத்துகொண்டிருக்கிறோம்.
உங்கள் குறைகள், உங்கள் மனதில் இருக்கும் கட்டிகள். உங்கள் குறையை ஒப்புக்கொள்வது மனதில் இருக்கும் கட்டியை அறுவை சிகிச்சை செய்வதற்குச் சமம்.
குறைகளை கொஞ்சம் கடினம்தான். அறுவை சிகிச்சை வலிக்கத்தான் செய்யும், ஆனால் வேறு வழி இல்லை.
உங்களின் பதவி, அந்தஸ்து, பெயர், புகழ், அதிகாரம் போன்றவற்றால் தங்கக் கவசங்களைச் செய்து (கட்டி வெளியே தெரியாமல் ) உங்கள் குறைகள் வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்ளலாம்.
இதனால் என்ன பயன் ? கட்டி இன்னும் கொஞ்சம் சீழ் படிக்கும். உங்கள் குறைகள்
இன்னும் கொஞ்சம் மோசமாகும்.
உங்களின்
மனநிலையைப்
பொறுத்துதான் உடல்
ஆரோக்கியம் அமையும். மனதின் குறைகள் நாளுக்கு நாள் சீம் கோர்த்துக் கொண்டே சென்றால், உடலும் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டேதான் இருக்கும்.
இதுதான்வயதாக, வயதாக மனிதர்களுக்கு நோய்கள் அதிகமாவதற்குக் காரணம். உங்களின் இன்றைய உடல்நிலை எப்படி இருந்தாலும் சரி, உங்களிடம் எவ்வளவு குறைகள் இருந்தாலும் சரி - கவலைப்பட வேண்டாம். உங்களுடைய துக்கத்திற்கும் திருப்தியின்மைக்கும் உடல் கஷ்டத்திற்கும் வியாதிகளுக்கும் உங்களுடைய பர்ஸனாலிட்டிதான் பெரும்பான்மையான காரணகர்த்தா என்று புரிந்துகொண்டால் போதும்.
இதுவே உங்களுக்கு மிகப் பெரிய சுதந்திர உணர்வையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். உங்களுக்குள் சுதந்திரமும் சந்தோஷ்மும் ஏற்படும் உணர்வீர்கள்.
உங்களுக்குள் நிறைகள் அதிகமாகும் போது, மற்றவர்களிடம் இருக்கும் நிறைகளும் நல்ல அம்சங்களும்தான் முதலில் தெரிய ஆரம்பிக்கும். உங்களைச் சுற்றி நல்லவர்களும் நிறைந்திருப்பது புரியவரும்.
மனக்கண்ணோட்டம் சீராகும் போது -வாம்க்கையின் ஒட்டமும் சீராகும்! நிம்மதி, சந்தோஷம் பெருகும்!
ஒணானால் ஒரோ நேரத்தில் இரண்டு காட்சிகளை இரண்டு கண்களாலும் கூடண முடியும். மனிதனால் அது முடியாது.
ஒரு மனிதனைக் கொர்சம் நல்லவனகாவும் கொஞ்சம் கெட்டவனாகவும் ஒருபோதும் பார்க்க முடியாது!
அப்படிப் பார்த்தாலும் அது உண்மையாக முடியாது.
கன்னைப் பார்க்க ஆரம்பித்துவிட்டவருக்கு அடுத்தவரைப் பார்க்க ஏது நேரம் ? இது நிகழ அது நிகழும். அது… மனிதர்கள் அருமையானவர்களாய் தெரிவார்கள்!
பாசமும் பகையும் உங்களின் ஜோடனைகளைப் பொறுத்து அமையும் 'நிஜமெனப்படும்' பொய்கள்!
ஒரு முழுநாவலின் இரு பக்கங்கள் மட்டும் உங்களின் கைக்குப் படிக்கக் கிடைக்கிறது.
அந்த இரு பக்கங்களைக் கொண்டு முழுநாவலின் கதையையே நீங்கள் சொல்ல நினைத்தால் அது எப்படிருக்கும். அது கதையாகவா இருக்கும் ?
நிஜ நாவலுக்கும் நீங்கள் ஜோடித்த கதைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இருக்காது. இருக்கவும் முடியாது.
உங்களுக்கு உங்களைப் பற்றி முழுமையாகத் தெரியுமா ? சிந்தியுங்கள் ... உங்களைப் போன்றவர்கள்தானே மற்றவர்களும். அவர்களுக்கே அவர்களைப் பற்றி தெரியாதபோது ... '' அவர் இப்படிப்பட்டவர்... இவர் மோசமானவர் ... அவர் நல்லவர்..." என நீங்கள் சொல்லும் எல்லா அபிப்பிராயங்களும் நிஜமான அந்த மனிதரின் குணம் பற்றிய இரண்டு பக்க அளவு உண்மையாகக்கூட இருக்க முடியாது.
ஒரு மனிதரால் இன்னொரு மனிதரைப் பற்றி வர்ணனை செய்ய முடியாது. மீறி நீங்கள் செய்யும் நல்ல, கெட்ட என்ற இரண்டு வர்ணனைகளுமே பொய்யானவையே. அழகாய், தத்ரூபமாய் தெரியும் ஜோடனைகளே!
உங்களின் பாசமும் பகையும் இந்த ஜோடனைகளை அடிப்படையாகக் கொண்டவையே. உங்களின் மனக்கண்ணோட்டத்தின்படியே மற்றவர்களை ஜோடிக்கிறீர்கள்.
விளைவு:
எதிரியை நண்பர்கள் என நம்பலாம். நண்பர்களை எதிரிகள் என நம்பலாம். காரணம், உங்களுக்குத்தான் நிஜமனிதரைப் பற்றி தெரியவே தெரியாதே! எவ்வளவு காலம் ஜோடணைகளோடு வாழ்வீர்கள் ? . நீங்கள் உண்மையாய் வாழ, வளர விரும்பினால் . .
வர்ணனைகள் மாய மனம் விடும் ஏவுகணைகள்.
எதிரியும் நண்பரும் மாயத் தோற்றங்கள்!
இரண்டு நல்ல, கெட்ட ஜோடணைகளையும் தூக்கியெறியுங்கள். நிஜ ஆண், நிஜ பெண்ணைச் சந்திக்கும் தைரியசாலியாகுங்கள். எல்லா வர்ணனைகளையும் கலையுங்கள். வாழ்வின் வர்ணஜாலங்கள் தெரிய ஆரம்பிக்கும்!
தெளிவு
- நலிவடைந்த மனதைப் பெற்றவரால் வாழ்வின் எதிர்பாராத, திடீர் திருப்பங்களில் புகுந்து வெளிவருவது கடினம். நலிவடைந்த மனதுதான் தெளிவற்ற தெளிவு.
- வாழ்க்கையின் ஒவ்வொருவருக்கும் தெளிவு என்பது மிக அத்தியாவசியமான தேவைகளில் ஒன்று.
- தெளிவு மலிவானதல்ல, ஒரு சில புத்தகங்களைப் படித்த உடன் கிடைப்பதற்கு. பல தனிமனித அனுபவங்களின் தொகுப்புதான் தெளிவை உண்டுபண்ணும்.
ஒரு எறும்புக்குச் சுவரும் பலூனும் பரந்து விரிந்த ஒரு தட்டையான பரப்பு, அவ்வளவே! அந்த எறும்பிடம் சென்று, "எறும்பே! எறும்பே! நீ நின்று
கொண்டிருப்பது நீ ரம்பும் அளவுக்குக் கண்ணுக்கெட்டாத ஒரு பெரிய பரப்பு அல்ல. அது ஒரு சாதாரண பலூன்" என்று 'எறும்புமொழி' யிலேயே விளக்க முயன்றாலும் எறும்பால் அதைப் புரிந்துகொள்ள முடியாது. காரணம் - அதன் சிறிய உடலமைப்கான்.
இதேபோன்று மனிதர்கள், தான் பார்த்த பூமி என்பது கண்ணுக்கெட்டாத ஒரு பெரிய நிலப்பரப்பு என்று உறுதியாக நம்பினார்கள். சிறிது ஆன்மீக உணர்வு கொண்ட கலீலியோ அவரது விரிந்த பார்வையாலும் உள்ளுணர்வாலும் பூமி உருண்டை என்று உறுதிப்படக் கூறினார்.
அன்று மக்களும் அரசாங்கமும் கலீலியோவை நம்பவில்லை. அவர் பொய் சொல்வதாக நினைத்து அவமானப்படுத்தியதோடு, துன்புறுத்தவும் செய்தார்கள்.
இதற்குக் காரணம் என்ன ?
எறும்பைப் பொறுத்தவரை அதன் கண்களுக்குப் பலூன் பூதாகாரமான ஒரு பெரிய விஷயம்தான். அதேபோல் மனிதருக்குப் பூமி. பூமியைவிட பலகோடி மடங்கு சிறியவர்கள் மனிதர்கள். அவர்களால் பூமி உருண்டை என்பதை எப்படிப் பார்க்க முடியும் ?
எறும்பு, ஒரு நாய்க்குட்டி அளவுக்காவது பெரிதாக இருந்தால் பலூன் தன்னைப் போன்ற ஒரு சாதாரண விஷயம் என்பது நாய்க்குட்டிக்குப் புரியும்.
விஞ்ஞானம் தெரியாத வரை, விஞ்ஞானம் புரியாத வரை, எந்த ஒரு மனிதராலும் பூமி ஓர் உருண்டை என்று சுலபமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல மெய்ஞானம் தெரியாத வரை, மெய்ஞானம் புரியாத வரை எந்த ஒரு மனிதராலும் வாழ்க்கை முழுக்க முழுக்க அனந்தமயமானது என்பதைப் புரிந்து கொள்ள முடியாது. துன்பத்தின் பிடியிலிருந்து தெளிவடைய முடியாது.
புத்திசாலித்தனம் எறும்பளவு, கடுகளவு இருப்பதால்தான் வாழ்க்கையில் நாம் தொடர்ந்து கஷ்டங்களையும் துக்கங்களையும் ஏமாற்றங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். எறும்பளவு இருக்கும் புத்திசாலித்தனம் பெரிதாகப் பெரிதாக பல உண்மைகள் தெளிவாகப் புரிய ஆரம்பிக்கும்.
கஷ்டப்படுவதால் எந்த ஒரு கஷ்டத்திலிருந்தும் மீளமுடியாது. கஷ்டத்திற்குத் தீர்வு கஷ்டப்படுவதல்ல.
தெளிவற்ற நிலையிலிருந்து தெளிவது சுலபம். தெளிவற்ற தெளிவிலிருந்து தெளிவது கடினம்!
எந்த துக்கத்திலிருந்தும் துக்கத்திற்குத் தீர்வு துக்கப்படுவதல்ல.
தெளிவு துக்கத்திலும் தொடர்ந்து உழலாமல் 'உண்மை என்ன ? நிதர்சனம் என்ன ?' என்பதைப் வாழ்க்கையின் இயல்பான போக்கில் இவை எல்லாம் மிக மிகச் சாதாரண விஷயங்கள் என்பதைத் தெளிவாக உணர்ந்துகொள்ளும் புத்திசாலித்தனமே தெளிவு.
தெளிவு கிடைத்தால் போதும். எல்லாக் கஷ்டங்களுக்கும் கணரேரத்தில் முடிவு கண்டுபிடித்து வெளிவந்துவிடலாம். ஒருவேளை முடிவு கிடைக்கவில்லை என்றாலும் 'கஷ்டங்கள் சரியாகும் போது சரியாகட்டும். இந்த நிமிடத்தில் நாம் என்ன செய்ய வேண்டு' என்று தெளிவாக யோசித்து, வெகு சீக்கிரத்தில் மனத் தடுமாற்றத்திலிருந்து வெளிவந்து விடலாம்.
இல்லாமல், தெளிவு ஒரு
பிரச்சனையில் இருந்து வெளியே வந்து விடலாம் என்று நினைப்பது, பார்வையற்ற ஒருவர் ஊன்றுகோல் இல்லாமல், வழுக்கும் சகதி நிறைந்த சாலையில் அழகாக நடக்க முயற்சிப்பது போன்றது. தெள்ளத் தெளிவாக வாழ உதவும் தெளிவைப் பெறாமல், வாழ்க்கையைத் தெளிவாக நடத்த நாம் முயற்சிக்கும் போது, தொடர்ந்து கண்டங்களும் இடறல்களுமே பதிலாகக் கிடைக்கின்றன.
தெளிவாக இருப்பதாக நாம் எல்லோரும் நம்பினாலும் நிஜத்தில் தெளிவு என்பது சிறுவயதிலிருந்து பல ஏமாற்றங்களால் கலப்படமாகித் தெளிவற்ற தெளிவாகத்தான் இருக்கிறது.
ஒரு சிறிய கதை....
வாழ்க்கை மீது முழுமையாக வெறுப்படைந்த ஜானி, தற்கொலை ஒன்றே முடிவு என்று மருந்துக்கடையில் சென்று விஷம் வாங்கிச் சாப்பிட்டு விட்டுப் படுத்துவிட்டார்.
"இதோ, இன்னும் ஐந்து நிமிடத்தில் செத்துவிடுவோம் - பத்து நிமிடத்தில் செத்துவிடுவோம்" என்று விடிய விடிய எதிர்பார்த்துக் காண்டே இருந்ததுதான் மிச்சம்.
காலையில் எழுந்து வெகு கோபத்தோடு மருந்துக்கடைக்குச் சென்று, "சார்… என்ன விஷம் கொடுத்தீங்க ? ஒண்ணுமே நடக்கலியே!" என்றார் ஜானி.
மருந்துக்கடைக்காரர் கொஞ்சம்கூடக் கலக்கம் அடையாமல் வெகு இயல்பாக, "எங்க சார், இப்பெல்லாம் கலப்படம் இல்லாத விஷம் கிடைக்குது" என்றார்.
தெளிவாக இருப்பதாக நாம் எல்லோரும் நம்பினாலும் நிஜத்தில் தெளிவு என்பது சிறுவயதிலிருந்து பல ஏமாற்றங்களால் கலப்படமாகித் தெளிவற்ற தெளிவாகத்தான் இருக்கிறது.
இந்த நிகழ்ச்சி சிரிப்பைத் தந்தாலும் ஆழமான சிந்தனைக்குறியது. நம்முடைய தெளிவும் கலப்படம் நிறைந்ததாகிவிட்டது. தெளிவில்லாதவர் தெளிவாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு திரிவது சகஜமாகிப் போய் விட்டது. இது சற்றே வருத்தத்திற்குரியது.
எப்படித் தெளிவற்றத் தெளிவை, தெளிவான தெளிவாக மாற்றுவது ?
எறும்பளவில் இருக்கும் புத்திசாலித்தனத்தை அதிகப்படுத்தும் தியானத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து உங்கள் வாழ்க்கையின் சுவைக்கு உப்பிடுங்கள்.
எப்படி ? எறும்பு, நாய்க்குட்டி அளவு பெரிதானால்தான் பலூன் தன்னைப் போல ஒரு சாதாரண விஷயம் என்பது தெளிவாகத் தெரியுமோ; அதுபோல் புத்திசாலித்தனம் பெருகப் பெருக கஷ்டங்களும் ஏமாற்றங்களும் வாழ்க்கைப் பாதையில் இருக்கும் சாதாரண கற்கள் என்பது புரியும்.
இதழ் இதழாக தெளிவு உங்களுக்குள் மலர ஆரம்பிக்கும். !
எங்கே நிம்மதி ?
- நிஜப்பற்று நிம்மதியையும் சந்தோஷத்தையும் தரும். மனப்பற்று நிம்மதியையும் சந்தோஷத்தையும் திருடும்.
- மனிதர்களை உறவு என்ற பெயரில் உடைமையாக்க முயற்சிப்பது - மனப்பற்று.
- மனிதர்களை உறவு என்ற வாய்ப்பால் உயர்த்தித் தன் உயிர்போலப் பாவிப்பது - நிஜப்பற்று.
- மனப்பற்று, நிஜப்பற்று என்ற இரண்டையும் தாண்டியது பற்றற்ற நிலை. பற்றற்ற நிலையில்தான் தன்னுள்ளும் தன்னைச் சுற்றியிருப்பவர்களின் உள்ளும் தெய்வம் இருப்பதைப் பார்க்க முடியும். உண்மையான நிம்மதி அடைய முடியும் !
" என்ன சார் வாழ்க்கை இது… நிம்மதியே இல்லாம…" என்று வாழ்க்கையையும் தங்களையும் நொந்துகொள்கிறவர்கள் நம்மிடையே ஏராளம்.
"எல்லாம் என் தலையெழுத்து, விதி" என்று விரக்தியின் உச்சத்தில் பேசுகிறவர்கள், ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்வதில்லை. அது உங்கள் நிம்மதியின்மைக்கு நூறு சதவிகிதம் நீங்கள்தான் பொறுப்பாளி.
கோடிக்கணக்கில் பணத்தைச் சம்பாதித்துவிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறவர்களும் உண்டு. மூன்று வேளை சாப்பாட்டிற்கே திண்டாட்டம் போடுகிறவர்கள், சாகிறவரை எந்தக் கவலையும் இல்லாமல் சந்தோஷமாக
- நம் மதி குறைந்தால் நிச்சயம் நிம்மதி குறையும். நம் மதியை அதிகமாக்கினால் நிம்மதியை நிச்சயம் அடையலாம்! இருப்பவர்களும் உண்டு! வாழ்க்கை என்பது பல எதிர்பாராத திருப்பங்களோடும் எல்லோருக்காகவும் விழிப்புணர்வு இல்லாமல் சோம்பேறியாக வாழ வாய்ப்புகளைத் தவறவிட்டு, நிம்மதியை இழந்து தவிக்கிறார்கள்.
வாழ்க்கையில் முதன்முறையாக நாம் எப்போது ஆரம்பிக்கிறோம் ? பாதுகாப்பைத் (Security ) தேட ஆரம்பிக்கிறபோதுதான். அதிகப் பணம், அதிகச்சொத்து, அதிகப் புகழ் இருந்தால் பாதுகாப்பு உணர்வோடு இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பால் நம்முடைய வாழ்க்கைச் சக்கரம் முடுக்கிவிடப்படுகிறது.
எதையும் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டால் பாதுகாப்பு உணர்வு அதிகரிக்கும் என்ற விதை அடிமனதில் தோன்றிவிடுகிறது. பாதுகாப்பின்மையை (Insecurity ) எதிர்த்தே வாழப் பழகியதன் பக்கவிளைவாக, மனிதர்களைத் தொற்றிக்கொண்ட குணம்தான் பற்றுதல். இது 'எனது', 'என்னுடையது' என்ற பிரயோஜனமில்லாத உணர்வுதான் அது.
நிஜப்பற்று, பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. ஆனால், பலரின் மனப்பற்றுதான் பல கஷ்டங்களையும் இன்னல்களையும் உண்டாக்குகிறது.
நிஜப்பற்று - நிதர்சனத்தை, உண்மையை அடிப்படையாகக் கொண்டது -மனப்பற்று - உங்கள் மனதை அடிப்படையாகக் கொண்டது.
நிஜப்பற்று : உண்மையான ஈடுபாட்டோடு உங்களுடைய பொருள்களை, சொந்தங்களை, நண்பர்களை முழுமையாகப் புரிந்துகொண்டு, அவர்களோடு இனிமையான அன்பும் உறவும் கொண்டிருப்பது. இப்படி முழுமையாக வாழ்வதுதான் நிஜப்பற்று.
மனப்பற்று : பெருமைக்காக, புகழுக்காக ஆடம்பரமாக உங்களுடைய பொருள்களை விரயம் செய்வது பொறுமையின்மையால், வெறுப்பால், சலிப்பால், கர்வத்தால் உங்களுடைய சொந்தங்களையும் நண்பர்களையும் முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் கடமைக்காக வாழ்வதுதான் மனப்பற்று. இது மனநிம்மதியைக் குலைத்துவிடும்.
சாதாரணமான விஷயமாகத் தோன்றும் இந்தப் பற்று எந்த அளவுக்கு நிம்மதியைக் குலைக்கும் என்பதற்கு ஒரு சிறிய கதையைச் சொல்கிறேன்.
வெளியூர் சென்று ஊர் திரும்பிக் கொண்டிருந்த வயதானவர், தூரத்திலிருந்து தன் வீட்டைப் பார்த்துப் பதறி அழ ஆரம்பித்துவிட்டார். அவருடைய வீடு பற்றி எரிந்து கொண்டிருந்தது.
முதல் மகன் அருகில் வந்து, அப்பா, அழாதீர்கள். இந்த வீட்டை இரண்டு நாட்களுக்கு முன்பாக நல்ல விலைக்கு விற்றுவிட்டேன்'' என்றார். வயதானவர் " அப்படியா, ரொம்ப சந்தோஷம்" என்று கண்களைத் துடைத்துக் கொண்டு ஆறுதல் அடைந்தார்.
இரண்டாவது மகன் அருகில் வந்து, "அப்பா, இந்த வீட்டை இன்னும் சட்டப்பூர்வமாக விற்கவில்லை. இருபதாயிரம் அட்வான்ஸ் மாத்திரமே வாங்கியிருக்கிறோம்" என்று சொல்ல, "அப்படியா…" என்று மீண்டும் கண்கலங்கி அழ ஆரம்பத்து விட்டார் வயதானவர்.
மூன்றாம் மகன் அருகில் வந்து, "அப்பா அழாதீங்க. வீட்டை வாங்கியவர் ரொம்ப நேர்மையானவர். இப்பத்தான் போன் செய்தார். அவர் கொடுத்த வாக்கை இதுவரை தவறியதே இல்லையாம். எனவே இந்த வீட்டை பேசிய விலைக்கே வாங்கிக்கொள்வதாகக் கூறினார்' என்றார். மீண்டும் வயதானவருக்குச் சந்தோஷம்..
மனப்பற்று, நிஜப்பற்று என்ற இரண்டையும் தாண்டியது பற்றற்ற நிலை. பற்றற்ற நிலையில்தான் தன்னுள்ளும் தன்னைச் சுற்றியிருப்பவர்களின் உள்ளும் தெய்வம் இருப்பதைப் பார்க்க முடியும். உண்மையான நிம்மதி அடைய முடியும்!
- இந்தக் கதையை நன்றாகக் கவனித்துப் படியுங்கள். மற்றொருவர் வாங்கி விட்டதால், இனி அது தன் வீடு அல்ல என்கிற பற்றற்ற உணர்வு எவ்வளவு ஆறுதலையும் நிம்மதியையும் தந்தது! வீடு வாங்கியவர் இருபதாயிரம் ரூபாய்தான் கொடுத்திருக்கிறார். எனவே இது என் வீடுதான் என்கிற பற்று உணர்வு பிறந்த போது, எவ்வளவு கலக்கம் உண்டானது!
கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை, வயதானவருக்கு நஷ்டம் எதும் ஏற்படவில்லையென்றாலும் இரண்டு முறை அந்த வீடு தனதல்ல என்கிற தகவல் வர்கியோது அது எவ்வளவு ஆறுதலையும் நிம்மதியையும் ஏற்படுத்தியது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதா?
நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நம்பினாலும் நம்பாவிட்டாலும் உங்கள் நிம்மதியைக் குலைப்பது உங்கள் பற்றுதல்தான். எந்த அளவுக்குப் பாதுகாப்பு உணர்வை விரும்புகிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் சொத்துக்களையும் சொந்தங்களையும் அதிகப்படுத்த ஆரம்பிப்பீர்கள்.
இந்த உலகில் எல்லாமே மாறும். மாறிக்கொண்டே இருக்கும். எதுவும் எப்போதும் நிரந்தரம் இல்லை. யாரும் யாருக்கும் முழு உடைமையும் அல்ல. எல்லோரும் தனித்துவம் கொண்டவர்கள். எந்த நிமிடமும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே நிதர்சனமான உண்மை. இதைப் புரிந்து கொண்டால் போதும். யாரும் எந்தச் சூழ்நிலையும் உங்கள் நிம்மதியைக் குலைக்க முடியாது.
மனப்பற்றை நிஜப்பற்றாக மாற்றுங்கள். நிம்மதியை நோக்கிக் காலடி எடுத்து வையுங்கள். நிம்மதி அடையுங்கள்!
ஆன்மாவின் போர்வை
நீங்கள் நினைக்கிறபடி … நீங்கள் உடல் அல்ல.
நீங்கள் மனமும் அல்ல. பின் நீங்கள் யார்?
இந்தக் கேள்வி தரும் ஆராய்ச்சி உணர்வோடு கட்டுரையைத் தொடருங்கள்.
- உச்சந்தலை
- புருவமத்தி
- தொண்டைக்குழி
- மார்புமத்தி
- நாபிக்குமேல்
- நாபிக்குகீழ்
- முதுகெலும்புநுனி
இந்த ஏழுமே ஆத்மாவை அடைய உதவும் நுழைவாயில்கள்.
- இந்த ஏழு இடங்களைச் சம்பந்தப்படுத்தித்தான் எல்லா தியான முறைகளும் வேதங்களும் சடங்காச்சாரியங்களும் உருவாக்கப்படுகின்றன. இந்த இடங்கள், சக்கரங்கள் அல்லது சக்திமையங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த சக்தி மையங்களில்தான்
உடல்,
' தியானம்' மனம் தாண்டி, -குணம் தாண்டி ஆனந்தம் வரை கூட்டிச் செல்லும் உள்ளுலக வழிகாட்டி.
மனம்.
உயிர்
ஆகிய மூன்றும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதபடி கலந்திருக்கின்றன.
பார்க்க முடிந்த ஆத்மா, 'உடல்' பார்க்க முடியாத உடல், 'ஆத்மா'.
காரணம் தனித்தனியானவை அல்ல. மனம் என்ற இடைச்செருகலே உடலை, ஆத்மாவை பிரித்துக்காட்டுகிறது.
ஆத்மாவைப் போர்த்தி இருக்கும் மனம் விலக சங்கமித்துக் கொள்ளும்.
ரிக்கரைக்குச் சென்ற நான்கு பேரின் வாக்குவாதம் முற்றியது.
முதல் நபர்...
ஹிந்தி தெரிந்தவர்: "வாருங்கள்! ஏரிக்குள் இருக்கும் பரனியைக் குடித்துத் தாகம் தீர்க்கலாம்".
இரண்டாம் நபர் ...
செந்தமிழில் மட்டும்தானே முடியும். அங்கிருக்கும் பானி, தோணியெல்லாம் எப்படித் தாகம் தீர்க்கும் ?".
மூன்றாம் நபரான ஆங்கிலேயர் ...
ஆங்கிலம் கலந்த தமிழில் சொன்னர்: "உள்றாதீர்கள். 1920ல் இந்த ஏரியைத் தோண்டியதே என் தாத்தா வாட்சன் பிரபுதான்.
அவர் இந்த ஏரி முழுவதுமிருக்கும் வாட்டர் (Water) ஏழு கிராமத்தின் தாகம் தீர்க்கும் என்று சொல்லியிருக்கிறார். எனவே வாட்டர் மட்டும்தான் தாகம் தீர்க்கும்" என்றார்.
நான்காம் நபர் ...
பெங்காலி கலந்த தமிழில் சொன்னார், "என்ன மடத்தனம்! மூவருமே பொய் பேசுகிறீர்கள்.
கடந்த பத்து வருடமாக என் அப்பாதான் இந்த ஏரியை காண்ட்ராக்ட் எடுத்திருக்கிறார். அவர் சொன்னார், இந்த ஏரியில் இருக்கும் 'ஜல் தான் நம்மைக் கோடைக்காலத்தில் காக்கிறது. தாகம் தணிக்கிறது' என்று எனவே ஐல்கரன் தாகம் தீர்க்கும்! ''
வாக்குவாதம், "பரணிதான் ... தண்ணீர்தான் ... வாட்டர் தான் ... ஜல்தரன் ... " என மீண்டும் பேசப் பேச்சு சண்டையானது. யாரூம் ஏரிக்குச் செல்லவில்லை.
வாக்குவாதமில்லாமல் ஏரிக்குச் சென்றிருந்தால், நான்கு பேருக்கும் உண்மை புரிந்திருக்கும். நான்கு பேரும் பேசுவது ஒரே உண்மையைப் பற்றியே என்பது புரிந்திருக்கும்.
| மனதின் வேலை வாய்ப்புகளைப் | ||
|---|---|---|
| க் | பறிப்பதே தியானத்தின் | |
| கோ | குறிக்கோள்! |
-
ஒரே கடவுளின் வார்த்தைகளால் தொகுக்கப்பட்ட வெவ்வேறு மதப்புத்தகங்கள், மூதாதையரின் சடங்காச்சாரியங்கள் மற்றும் மகவிதிகளைப் பிடித்துக்கொண்டுதான் மனிதமனம் வாழ்கிறது. விகல்பத்தைத் தூண்டுகிறது. கலகத்தை வரவேற்கிறது.
-
வார்த்தைக் கலகங்களைத் தாண்டி, மதம் என்னும் ஏரிக்குள் குதியுங்கள். உண்மை விளங்கும்
-
வேதம் விவாதத்திற்கல்ல! அது தெய்வ அனுபவத்திற்கு!
ஆத்மா ஆத்மன், ஆன்மா, ஆத்துமா என்று பல பெயர்களில் எல்லா மதங்களாலும் ஆத்மா ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.
ஆத்மா புருவமத்தியில்தான் இருக்கிறது ...
ஆன்மா தொண்டைக் குழியில்தான் இருக்கிறது ...
ஆத்துமா மார்புக்கூடு மத்தியில்கான் இருக்கிறது…
- என்று பலர் பலவாறு சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
வேதகாலத்து ரிஷிகளின் கூற்றுப்படி, என்னுடைய சுய அனுபூதிப்படி புருவமத்தி, தொண்டைக்குழி, மார்புக்கூடு ஆத்துமாவின் நுழைவாயில்கள் தாம். இது போன்று மொத்தம் ஏழு நுழைவாயில்கள் நம் உடலில் இருக்கிறது.
அழிவில்லாத ஆனந்த ஆத்ம அனுபூதியை ஒருவர் பெற்றுவிட்டால் உலகமே ஆனந்தமயமாகிவிடும். காரணம், தன்னுள் இருக்கும் ஆனந்தக் கடலுக்குள் அம்மனிதர் நுழைந்து விடுவதுதான்.
ஒரு ஆத்ம அனுபூதி அடைந்த ஞானியிடம்தான் தைரியத்தின் முழுப்பரிமாணத்தைக் காணமுடியும். உணர்வுகளின் முழுப்பரிமாணத்தையும் ஞானிகளிடம்தான் காண முடியும்.
இயற்கை எல்லாவற்றிற்கும் அமைதி தருகிறது. வாழ்வதற்கும் நோவதற்கும் ஏன் சாவதற்கும்கூட!
நீங்கள் அனுமதிப்பது எது ?
ருத்ரவேந்தன் புதிதாக எந்த ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டாலும் உடனடியாக அதை அறிந்து கொள்ளத் துடிப்பார்.
நகமுக ரிஷி, ருத்ரவேந்தனின் ஊர் பக்கத்தில் வந்து தங்கியிருப்பதாகக் கேள்விப்பட்டார். அவரிடம் ஆன்மீகம் பற்றி விவாதிக்க ஆசைப்பட்டார் வேந்தன்.
தனது காவலாளிகள் மூலமாக ஒலை வழியாகச் செய்தி அனுப்பினார். அந்தச் செய்தி, "நீங்கள் என்னை வந்து பார்க்கவும். உங்களோடு ஆன்மீகம் பற்றி விவாதிப்பதில் நான் பெருமகிழ்ச்சி கொள்வேன்" என்று எழுதப்பட்டு இருந்தது.
நகமுக பார்ப்பதற்கு எனக்கு எனக்கு நேரமில்லை. முட்டாள்தனமான விவாதத்தை நான் விரும்புவதும் இல்லை" என்று பதில் கூறி அனுப்பனார்.
"என் கைரியமாக உதாசீனப்படுத்தினால், அந்த ரிஷி ஏதோ பெரிய ஆளாகத்தான் இருப்பார்'' என்று கூறிவிட்டு சகல மரியாதையோடு, பொன் பொருள் கொடுத்து அழைத்து வர தன் மந்திரியாரை ருத்ரன் அனுப்பி வைத்தார்.
நகமுக ரிஷி, "இந்தக் குப்பைகளை எடுத்துச் செல்லுங்கள்.
என்னைப் பார்க்க அவசியமிருந்தால் அந்தச் சோம்பேறியை இங்கே வந்து பார்க்கச் சொல்லுங்கள். நீங்கள் போகலாம்" என்றார்.
ஒரு ஞானியின் கோபம் -பக்குவமான சீடனின் அகங்கார வேர்களைச் சுட்டெரிக்க, சரியான நேரத்தில், சரியான விதத்தில் வெளிப்படும் கருணைக் கதிர்கள்!
மீண்டும் உதாசீனப்படுத்தப்பட்டதால் ருத்ரன் வெகுண்டான். கோபம் பொங்க, "உடனே அவர் இங்கு வர வேண்டும்! வாரவிட்டால் அவருக்கு மரணதண்டனையென போய்ச் சொல்" என்று கூறி தன் தளபதியை அழைப்பி வைக்கான் ருத்ரன்.
நகமுக ரிஷி, "நான் ஏற்கெனவே செத்துவிட்டேன். என்னை அந்த முட்டாளால் கொல்ல முடியாது, என்று பதில் கூறி தளபதியை அனுப்பு வைத்தார்.
கடவுள் உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். நீங்கள் கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். விந்தையல்ல உண்மை.
நகமுகரிஷியின் இந்தப் பதிலால் ருத்ரன் திகைக்கப்பட்டான். என்ன இருந்தாலும் வேந்தனாயிற்றே! "அப்படியா…'' என்று சீற்றத்தோடு எழுந்த ருத்ரன் உருவிய வாளோடு ரிஷியைக் நகமுக தேடி படைபரிவாரங்களோடு அரண்மனை வாசல்வரை வந்தவன் அதிர்ந்தான்.
அரண்மனை வாசலில் நகமுக ரிஷி!
நகமுக ரிஷி. "வெட்டு என்னை! நீ என்னை வெட்டுவதை நீயும் பார்ப்பாய்... நானும் பார்ப்பேன்...வெட்டப்பட்ட என் உடல் சரிவதை நீயும் ரசிப்பாய், நானும் ரசிப்பேன் ... வெட்டு!" என்று கணீர் குரலில் ரிஷி பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ருத்ரன் மனதில் இடிபோல இறங்கியது.
தனக்கு இதுவரை தெரியாத, ஆனால் இதற்கு மேல் தான் தெரிந்துகொள்ள வேண்டிய ஏதோ ஒன்றைத்தான் இவ்வளவு ஆணித்தரமாக ரிஷி கூறுகிறார் என்று ருத்ரனுக்குப் புரிந்த வினாடியே சாந்தமானார். கையில் இருந்த, உருவிய வாள் உறுதியிழந்து கீழே விழுந்தது.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் நகமுக ரிஷியின் ஆத்ம உபதேசங்களைப் பெற்று ஆன்மீகவாதியாக மாறி நல்லாட்சி புரிந்தார் ருத்ரன்.
ஒவ்வொரு மனிதரும் அவர் ஞானம் அடையும் பொழுது இறக்கிறார். 'நான்' என்ற அகங்காரம் முழுமையாகச் செத்துவிடுகிறது.
"நான் - என் குலம். என் கோத்திரம். நான் கஷ்டப்படுகிறேன். நான் நல்லாயிருக்கணும். என்னை அவன் அவமானப்படுத்திவிட்டான். நான் சாதிக்கணும்"
- என்ற எல்லா விஷயங்கள் தொடர்பானவைகளைத்தான் மனிதர்கள் 'தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையான நான் என்பது ஆத்மா. 'நான்' என்பது அந்த ஆத்மாவின் மீது போர்த்தப்பட்டிருக்கும் போர்வை - அகங்காரம்.
மனிதன் சராசரி மனிதனாக இருக்கும் வரை, 'தான்'தான் ஆத்மா என்ற உண்மையை உணர முடியாது.
இதுவரை எதுவெல்லாம் நான் என்று நினைத்துக்கொண்டிருந்தானோ அதற்கு மொத்த மூலகாரணமான அகங்காரம் அழிவதும் இந்த உலகில் ஒரு மனிதர் இறப்பதும் சமம். இது இரண்டும் ஒன்றே.
ஞானமடையும் போது அகங்காரம் சாகிறது. மனிதர் இறக்கும் போது உடல் சாகிறது.
உடலில் உயிர் இருக்கும் போதே அகங்காரம் மடிந்துவிட்டால் நிஜமான ்தான்' யார் என்பது ஆத்ம அனுபூதியாக ஒருவருக்குள் மலரும்.
பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து எல்லாவற்றிக்கும் காரணமான அந்த ஆத்மாவின் வெளிப்பாடாக மனிதர் மாறிவிடுவார். அப்போதுதான் மனிதர் ஞானியாக மாறும் ஆனந்த நிகழ்வு நிகழ்கிறது.
ஜென் ஞானி யோக்கா ஒரு முறை சொன்னார். தன் உயிரை உருவும் வாளைப் பார்த்துக் கூட ஞானி புன்னகைப்பார்... மரணத்தறுவாயிலும், வாழத்தெரிந்தால்!
பிரபஞ்சத்திற்கே காரணமான ஒன்றைக் கண்டுகொண்டு, அதுவாகவே மாறிவிட்ட ஞானிக்கு முக்காலமும் ஒன்றே.
ஒரு ஞானிக்கு இந்த உடல் வெறும் சட்டை போன்றது. ஞானியின் உடல் அழிந்தாலும், ஆத்மா அழிவில்லை. அதை உணர்ந்த காரணத்தால்தான் நகமுக ரிஷியால் அவ்வளவு தைரியமாகவும் தெளிவாகவும் நடந்துகொள்ள முடிந்தது.
ஆத்மா அழிவில்லாதது. ஆத்மாவை வெட்ட முடியாது, எரிக்க முடியாது.
ஆத்மா நிலையானது, ஆனந்தமானது. இவ்வளவு வல்லமையும் புனிதமும் பெற்ற ஆத்மா உள்ளே இருக்க, சின்னச் சின்ன விஷயங்களுக்காக மனிதர்கள் பல பிறவிகளை விலையாகக் கொடுப்பது அகங்காரத்தின் விளையாட்டு.
இந்த விளையாட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் முற்றுப்புள்ளி வைக்கலாம். இல்லை, எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விளையாடலாம். இரண்டிற்கும் இயற்கை சக்தி அனுமதி தருகிறது.
அகங்காரத்தோடு அல்லல் பட்டுச் சாவதா? இல்லை ஆத்மாவோடு ஆனந்தமாக வாழ்வதா ? - கனிமனிதன், தானே யோசித்து எடுக்க வேண்டிய முடிவு.
அர்த்தமுள்ள சம்பவம்
கபீரின் ஞானகவி வரிகள்…
'கேள் நண்பா! கேள்! என் நேசத்திற்குரிய குரு என் உள்ளே வாழ்கிறார்' - கபீர்
இது கபீருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் உண்மையானதே!
மனிதன் இன்றும் வாழ ஆரம்பிக்கக்கூட இல்லை ...
தியானுங்கள்
பார்சல். பெங்களூரிலிருந்து இது ஒரு திருவண்ணாமலைக்குச் செல்கிறது. இந்த விலாசத்திற்குச் செல்கிறது - என்கிற விளக்கங்கள், பார்சல் அல்ல. அது அதன் மேல் ஒட்டப்பட்ட லேபிள் மட்டுமே.
நீங்கள் ஒரு ஆண். நீங்கள் இன்னாருடைய மகன் நீங்கள். நீங்களோயல்ல. இவர்களுடைய தந்தை நீங்கள். அப்படியென்றால் நீங்கள் யார்... ? நீங்கள் ஒரு டாக்டர். இன்ஜினியர்... என்ற எல்லா விளக்கங்களும் நீங்கள் அல்ல.
மேற்கண்ட எல்லா விளக்கங்களிலும் இடம்பெற்றிருக்கும் அந்த 'நீங்கள் யார்?'
உங்களைப் பற்றிய எல்லா விளக்கங்களும் வர்ணனைகளும் உங்களைச் சுற்றியிருக்கும் போர்வை மட்டுமே.
போர்வை நீங்களல்ல.
ஆனால், இன்றைய எல்லா குழப்பங்களுக்கும் காரணம் இந்தப் போர்வையே. 'நான் போர்வை மட்டுமே' என்ற உண்மையைத் தாண்டி அந்த மனப்போர்வையே தன்னை மனிதன் என நம்ப ஆரம்பித்து விட்டது. புரிந்துகொள்ளக் கடினமாக இருந்தாலும் இது உண்மையே.
உங்களைப் பற்றிய சில விளக்கங்கள்தான். உங்களுக்குத் தெரிந்த இன்றைய நீங்கள்.
ஆனால், விசித்திரமென்னவென்றால்,
இந்த விளக்கங்களை நீங்கள் தாண்டிச் செல்லாதவரை, நீங்கள் நீங்களேயல்ல.
நீங்களேயல்லாத வேறொன்று உங்களில் வாழ்ந்துகொண்டிருப்பதுதான் வினோதம். அதனால்தான் 'மனிதன் இன்னும் வாழ ஆரம்பிக்கக்கூட இல்லை' எனச் சொல்கிறேன்.
நிஜம் இப்படியிருப்பதால்தான் உங்களைச் சுற்றியிருக்கும் போர்வையை அழிக்க முடிவதில்லை.
போர்வையை அவமானப்படுத்தினால் அவமானப்படுவதாக உணர்வீர்கள்.
உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லாதிருப்பதற்கும் இதுதான் காரணம்.
மாற்ற முயற்சித்தாலும் அது மிகக் கடினம் போல் தெரிவதற்கும் காரணம் இதுவே.
போர்வையைக் களைவது என்பது. நீங்கள் செயல்பட ஆரம்பித்த உடனேயே சாத்தியமாகக்கூடியதுதான். இக்கருத்துகளை ஆழத் தியானியுங்கள்.
நீங்கள் புதுமனிதராக மாற வாழ முடிவெடுத்தவுடன் உங்களுக்கு வழிகாட்டும் ஒளிகாட்டிகளாய் இவை உதவும்.
உங்களை நீங்கள் மாற்ற முயற்சிப்பது கடினமெனத் தெரியும். எளிமை. இக்கருத்தை ஆழத் தியானியுங்கள் ... வாழ ஆரம்பிப்பீர்கள்.
-
அறிவு தரும் செருக்கு ! பதவி தரும் போதை ! பணம் தரும் மிதப்பு! புகழ் தரும் மயக்கம்! இவைதான் ஒரு இறுக்கத்தை அழைத்து வரும் புரோக்கர்கள்.
-
இறுக்கத்தோடு குடித்தனம் நடத்துவதால் ஒருவருக்குக் கிடைக்கும் பலன்கள்.
- சிரிக்கக் கஷ்டப்படும் முகம்!
- வெளியில் பகிர முடியாத சோகம்!
- எதையும் முழுமையாக அனுபவிக்க முடியாத குணம் !
-
அறிவு ஞானமாக வேண்டும். பதவி சேவையாக வேண்டும். பணம் பகிரப்பட வேண்டும். புகழ் ஜீரணிக்கப்பட வேண்டும்.
இப்படி ஒருவர் வாழும் பட்சத்தில், இவை ஒரு மனிதருள் இனிமையை அழைத்து வரும் தேவைகளாக மாறிவிடும். இறுக்கத்தை அழைத்து வரும் புரோக்கராக இருக்க வாய்ப்பே இல்லை.
இறுக்கத்தால் இறுகிப்போன முகத் தசைகளுக்கும் உதடுகளுக்கும் குதூகலமான சிரிப்பும் வாழ்வும் பூரிப்பைத் தரும்.
பிரபரைப் படித்திருக்கிறேன். படித்திருப்பீர்கள். அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சியைச் சொல்கிறேன்.
ஒரு சமயம் அறிவாளி ஒருத்தர் பாபரைச் சந்திக்க வேண்டும் என்கிற ஆசை வந்தது. பாபரைச் சந்திக்க அனுமதியும் வாங்கிவிட்டார்.
குறிப்பிட்ட நாளில் அரண்மனைக்குப் போனார். அரண்மனையில் சாதாரண மனிதர்களோடு சரிசமமாக உட்கார்ந்து கும்மாளமாகப் பேசிக்கொண்டிருந்தார் பாபர்.
இதைக் கண்ட அறிவாளிக்கு ஆச்சரியம். பெரிய பதவியில் இருக்கும் மனிதர்கள் சிரிப்பதே இல்லை.
எவ்வளவு பெரிய தமாஷ் நடந்தாலும் லேசாகப் புன்னகைப்பதோடு சரி. ஆனால், பாபர் மாதிரி இவ்வளவு பெரிய அரசர், தன்னிடம் கைகட்டி ஊழியம் செய்யும் வேலைக்காரர்களுடன் சிரித்துப் பேசுவதைக் கண்டு, அந்த அறிவாளியால் ஜீரணிக்க முடியவில்லை.
" அரசே ! நீங்கள் அறிவாளி என்று கேள்விப் பட்டிருக்கிறேன். புத்திசாலி என்றும் எனக்குத் தெரியும். அதனால்தான் உங்களைச் சந்திக்க விரும்பினேன்.
நீங்கள் அரண்மனையில் அறிஞர்கள், அறிவுஜீவிகள், புலவர்கள், தத்துவமேதைகளுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து ரசிக்கலாம் என்றுதான் வந்தேன்.
ஆனால், இங்கு வந்து பார்த்தால் உங்கள் நட்கையில் எந்தப் புத்திசாலித்தனமும் இல்லை. இதை என்னால் சகிக்க முடியவில்லை. நான் போகிறேன்." என்று சொல்லிவிட்டு, விறுவிறுவென்று வெளியேறிப் போனார்.
" கொஞ்சம் இருங்கள். நான் சொல்வதைக் கேட்டுவிட்டு அப்புறம் வெளியே போக வேண்டுமா, இல்லையா என்பதை முடிவுசெய்து கொள்ளுங்கள்" என்றார் பாபர்.
ஒரு வினாடி திகைத்து நின்ற அறிவாளியிடம் பேச ஆரம்பித்தார் பாபர்...
''அதோ! அந்த மூலையில் ஒரு வில்லை வைத்திருக்கிறேன், பாருங்கள். வில்லின் இரண்டு முனைகளையும் நாணால் இறுகக் கட்டாமல் விட்டிருப்பதையும் பாருங்கள்.
நான் ஏன் இப்படிச் செய்தேன் என்று நினைக்கிறீர்களா? வில்லின் முனைகளை நாணால் கட்டியிருந்தால் அது எப்போதும் இறுக்கமாக இருக்கும். எப்போதும் இறுக்கமாகவே இருந்தால் சில நாட்களில் வில் கண்டிப்பாக உடைந்து விடும்.
வில் என்றால் எப்போதும் வளைந்து கொடுக்க வேண்டும். அந்தக் தன்மையில் இருந்தால்தான் காற்றைப் போல எகிறிக் குதித்து அம்பு செல்லும். அப்போதுதான் வெற்றியும் கிடைக்கும்.
நானும் வளைந்து கொடுக்கும் வில்லைப் போல்தான் இருக்க விரும்புகிறேன். எப்போதும் இறுக்கமாக இருந்தால் எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும். எனவேதான் இப்படி மென்மையாக, கேளிக்கையாக, சந்தோஷமாக இருக்கிறேன். என் வெற்றிக்குக் காரணம் அதுதான்" என்றார் பாபர்.
வில்லின் முனைகளை நாணால் கட்டியிருந்தால் அது எப்போதும் இறுக்கமாக இருக்கும். எப்போதும் இறுக்கமாகவே இருந்தால் சில நாட்களில் வில் கண்டிப்பாக உடைந்துவிடும்!
பாபரின் பேச்சைக் கேட்ட அறிவாளி வாயடைத்துப் போனார்.
நாண் பொருத்தப்படாத வில்லைப்போல, நீங்கள் இலகுவாக, இறுக்கமில்லாமல் இருக்க வேண்டும். இறுக்கமாக இருக்கும்போது நமது உடலிலும் மனதிலும் பலவிதமான மாறுதல்கள் ஏற்படுகின்றன. உடலில் சதைகள் படித்துக்கொள்வது இறுக்கத்துக்கு ஒர் அடையாளம். உடம்பில் ஆங்காங்கே வலியெடுப்பது இன்னொரு அடையாளம்.
இறுக்கமாக இருப்பவர்களுக்கு அடிக்கடி நெஞ்சுவலி வரும். தலைவலிகூட வரும். இந்த மாதிரியான புகார்களோடு என்னிடம் வருகிறவர்களுக்கு, நான் செய்யும் சிகிச்சை, சிரிக்க வைப்பதுதான். அவர்களுடைய கவலைகளை மறந்து, சிரிக்க வைத்துவிடுவேன். சில நிமிஷங்களில், "என் நெஞ்சுவலி பறந்துபோச்சே!" என்று சொல்வார்கள்.
இறுக்கத்தைத் தளர்த்திக்கொள்வதற்கு நிறைய வழிகள் உண்டு. குழந்தைகளுடன் (பக்கத்து வீட்டுக் குழந்தையாக இருந்தாலும் பரவாயில்லை) கொஞ்ச நேரம் கொஞ்சி விளையாடுங்கள். இறுக்கம் சிதைந்து போய்விடும். உங்கள் வீட்டில் உள்ள தாவரங்களைத் தடவிக் கொடுங்கள். இலகுவாக மாறுங்கள். இறுக்கம் உடைந்துவிடும்.
உங்கள் வீட்டில் உள்ள மீன்தொட்டியில் துள்ளி விளையாடும் மீன்களின் அழகைப் பாருங்கள். இறுக்கம் உடைபடும். சின்ன ஜோக்காக இருந்தாலும் பரவாயில்லை. வாய்விட்டுச் சிரியுங்கள். இறுக்கம் அறுந்து விடும்.
ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். தலைகீழாக நின்று தவம் புரிந்தாலும் மனிதர்கள் காக்கை மாதிரி பறக்க முடியாது. தவளை மாதிரித் தண்ணீரிலேயே கிடக்க முடியாது. மனிதரால் எல்லாமே நடத்திக்காட்ட முடியும் என்று நினைப்பது மடத்தனம். எது எப்படி நடக்க வேண்டுமோ, அது அப்படியேதான் நடக்கும்.
இதைப் புரிந்துகொண்டு விட்டீர்களென்றால் போதும். இறுக்கம் தளர்ந்துவிடும்.
'நான் நினைத்தபடி நடக்கவில்லையே! நான் நினைத்தபடி, எதிர்பார்த்தபடி நல்ல மனிதர்கள் கிடைக்கவில்லையே!' என்ற எரிச்சல் பல நாட்களாக மனதில் படிந்து, படிந்து ஏற்பட்ட பிசுபிசுப்புத்தன்மைதான் இறுக்கம்.
பலநாள் எரிச்சலும் பலவித ஏமாற்றங்களும் ஒன்றாகச் சேர்ந்துதான் மன இறுக்கமாக மாறுகிறது.
மன இறுக்கத்திலிருந்து வெளியே வர மிக எளிய வழி - நாம் நினைத்தபடி மற்றவர்களும் சூழ்நிலைகளும் மாற வேண்டும் என்ற மாய நினைவைத் தூக்கி எறிந்துவிட்டு, ஒவ்வொரு நிமிடமும் சந்தோஷமாக இருக்க முயற்சிப்பது ஒன்றுதான் வழி.
வாழ்க்கையில் இயல்போடு கலந்து, இயல்பாகச் செயல்படுங்கள். இறுக்கம் கரைய ஆரம்பித்துவிடும் !
பிடிவாதம் பக்கவாதத்தைவிட மோசமானது. ★
- பக்கவாதம் உடலை மாத்திரம்தான் முடமாக்கும். ★ பிடிவாதம் உடல், மனம் என்ற இரண்டையும் முடமாக்கும்.
- மனிதருக்குள் ஒளிந்துகொண்டு, அவ்வப்போது வெளியில் வந்து ★ மற்றவர்களையும் அந்த மனிதரையும் நாசம் செய்யும் அரக்கன்தான் பிடிவாதம்.
"நிரன் யார் என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்."
"'என்னை விடப் பெரிய ஆளா அவன்?''
"என்னுடைய கவுரவத்திற்காக, கொள்கைக்காக எதை வேண்டுமானாலும் இழப்பேன்' என்ற மனநிலையில் சிலர் தங்களுடைய வாழ்க்கையின் பெரும் பகுதியை இழப்பது இயல்பாகிவிட்டது. இது வருந்தத்தக்க ஒரு விஷயம்.
இது போன்ற பிடிவாதத்தில் வாழ்ந்து வந்த ஒருவரின் கதை...
குப்பன் என்றொரு முரடன். ஒரு கிராமத்தில் ரவுடியிசம் செய்து தாதா போன்று வாழ்ந்து வந்தான். அந்தக் கிராமத்தில் அவன் வைப்பதுதான் சட்டம்.
குப்பனுக்குத் திடீரென்று ஒரு கிறுக்குத்தனமான ஆசை வந்தது. "இனிமேல் இந்தக் கிராமத்தில் என்னைத் தவிர யாரும் தலையில் முடியோடு இருக்கக்கூடாது. எல்லோரும் மொட்டை அடிங்கடா" என்று கட்டளையிட்டான்.
அவனிடம் எதற்காக வம்பு என்று எல்லோரும் மொட்டையடித்தனர். குப்பன் எல்லோரும் மொட்டையோடு ஊரில் திரிவதைப் பார்த்து, "ஹைய்யா! நான் ஒருவன்தான் இந்த ஊரிலேயே தலைமுடியோடு அழகாக இருக்கிறேன்" என்று பெருமிதம் அடைந்தான்.
பரமசிவம் என்ற இசைக் கலைஞன் புதிதாக அந்தக் கிராமத்திற்கு வந்து குடியேறினார். பரமசிவத்திற்குத் தலைமுடி வளர்ந்து கழுத்து வரை தொங்கிக் கொண்டிருந்தது. குப்பனைப் பற்றிப் பரமசிவத்திற்கு எதுவும் தெரியாது.
அழகான தலைமுடியோடு ஒருவர் ஊருக்குள் இருப்பதைக் கேள்விப்பட்ட குப்பன், கோபம் தாளாமல் பரமசிவத்தைத் தேடி ஒடி வந்தான்.
குப்பன், "நீதான் பரமசிவமா? என்ன தைரியம் இருந்தால் எனக்கு முன் நீ தலைமுடியோடு இருப்பாய்?' என்றான்.
பரமசிவம், "தலையில் முடி வளர்வதற்குக் கொஞ்சம் எண்ணெய் தடவினால் போதும். தைரியத்திற்கும், தலைமுடிக்கும் என்னப்பா சம்பந்தம்? ஏன் இப்படிக் குழப்புகிறாய்?" என்றான்.
குப்பன், "இந்த ஊரில் நான் வைப்பதுதான் சட்டம். என்னையே நீ எதிர்த்துப் பேசுகிறாயா? வா, நீயா - நானா என்று பார்த்துவிடுவோம் !" என்று கூறி இரண்டு வாள்களை எடுத்து வந்தான். (ஒன்றை பரமசிவத்திடம் எறிந்து சண்டைக்கு அழைத்தான். )
'இதென்ன வம்பா போச்சு, தலையில் முடி வைத்ததற்காகவா, வாள் சண்டையிடுவது ? சரி ஆனது ஆச்சு ... ஒரு கை பார்த்துவிடுவோம், ' என்று நினைத்த பரமசிவம், குப்பனிடம், "சண்டையைத் துவங்கும்முன் ஒரு சிறு வேண்டுகோள். நான் என்னுடைய வீடு வரை சென்றுவிட்டு வந்து விடுகிறேன். வந்தபின் சண்டையைத் துவங்கலாம்" என்றார்.
பிடிவாதம் உங்கள் மனதை பிடித்துக்கொண்ட வாதம்.
குப்பன் குழப்பத்தோடு, "எதற்காக இப்போது வீடு வரை செல்ல வேண்டும் என்கிறாய் ? " என்றான்.
பரமசிவம், சண்டையிடுவதில் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம், தோற்கலாம். நான் தோற்று விட்டால் என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்து விடும். அதனால், முதலில் என் குழந்தைகளையும் மனைவியையும் வெட்டிவிட்டு வருகிறேன். அப்போது என்ன நடந்தாலும் எனக்குக் கவலையில்லை.
உனக்கும் இப்படித் தோன்றினால், நீயும் போய் இதே காரியத்தைச் செய்துவிட்டு வா. அப்போதுதான் நாம் இருவரும் முழு மனதோடு போரிட முடியும்" என்றார்.
இருவரும் வீடு நோக்கிச் சென்றார்கள். குப்பன் சீக்கிரமாய் வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் சீவி விட்டுத் திரும்பினான். பரமசிவம் கால் மணி நேரமாகியும் வரவில்லை.
அரை மணி நேரம் கழித்துப் பளபள வென்று மொட்டையடித்த தலையில் எண்ணெய் பூசிக்கொண்டு பரமசிவம் திரும்பினார்.
குப்பனுக்கு ஒன்றுமே புரியவில்லை. "என்னய்யா, சண்டைக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு மொட்டையடித்துக்கொண்டு வந்து நிற்கிறாய் ?" என்றான்.
பரமசிவம் நிதானமான குரலில், "வாளோடு வீட்டிற்குச் சென்றேன். தலையில் இருக்கும் முடியை மழிப்பது பத்து நிமிட வேலை. இந்தச் சிறிய விஷயத்திற்காகவா வீட்டிலிருப்பவர்களை வெட்டுவது என்று நினைத்து, நீ கொடுத்த வாளைக் கொண்டே தலைமுடியை மழித்து விட்டேன்." என்றார்.
குப்பனோ திகைத்து நின்றான். என்ன செய்வது என்று புரியவில்லை. "ஒரு சிறு விஷயத்திற்காக எவ்வளவு பெரிய விஷயத்தை இழந்தோம்'' என்று நினைத்தான்.
பரமசிவத்தைப் போல எல்லா மனிதர்களும் நிமிடத்திற்கு நிமிடம் மாறக் கூடியவர்களே. யாரும் ஒரே மாதிரி இருக்கப்போவதில்லை.
"நான் யார்? நான் எவ்வளவு பெரிய ஆள்? என் கவுரவம், என் கொள்கை" என்று வறட்டுப் பிடிவாதம் பிடித்துக்கொண்டு வாழ்க்கை நடத்தினால்...
இந்தப் பிடிவாதத்தால் பல இழப்புகளை நிச்சயம் சந்திக்க நேரிடும் !
பிடிவாதம் என்பது உங்கள் மனதைப் பிடித்துக்கொண்ட வாதம். பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லாத பிடிவாதத்தை விட்டுவிட்டு, ஆயிரக்கணக்கான இழப்புகளிலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்!
ஓம்
வறட்டுப் பிடிவாதம் பிடித்துக்கொண்டு வாழ்க்கை நடத்தினால் ... - உங்கள் பிடிவாதம் மட்டுமே உங்களுக்கு மிச்சம் ! - இந்தப் பிடிவாதத்தால் பல இழப்புகளை நிச்சயம் சந்திக்க நேரிடும் !
வெறி வெறுப்பு
ஆனந்தி மதபோதகரைச் சந்தித்தார்.
தன் செல்ல நாய்குட்டி பப்பி அகால மரணமடைந்துவிட்டதால் மதவிதிப்படி தன் பப்பிக்கு ஈமச்சடங்குச் செய்ய வேண்டும் என வெகு உருக்கத்தோடு கேட்டுக்கொண்டார்.
"என்ன இது! ஒரு நாய்க்காக நான் இறைவனிடம் பேசுவதா? இது முழு மடத்தனம்" என வெறுப்புக் குரலில் வெடித்தார் மதபோதகர்.
ஆனந்தி, "ஐந்நூறு டாலர்கூட கொடுக்கத் தயாராக இருக்கிறேன். நீங்கள் முடியாது என்று சொல்லிவிட்டீர்கள். உங்களுக்குத் தெரிந்த வேறு யாராவது இந்த சடங்கு செய்வதாய் இருந்தால் சொல்லுங்கள். என் பப்பி எனக்கு முக்கியம்" என்றார்.
ஐந்நூறு டாலர் என ஆனந்தி சொன்னதும், "நீங்கள் ஆரம்பத்திலிருந்து தெளிவாகப் பேசவே இல்லை. உங்களுடைய நாயும் நம் மதத்தைச் சேர்ந்தது என்று சொல்லாமல் மறைத்துவிட்டீர்கள். நம் மத நாய்களுக்கு நானே எல்லாம் செய்வேனென்பது உங்களுக்குத் தெரியாது போலிருக்கிறது. பக்கத்து ஊரிலிருப்பவர் ஐந்நூறு டாலருக்கு மேல் கேட்பார். அவர் வேண்டாம்" என தன் விருப்பத்தைத் தெரிவிக்கும் குரலில் சொன்னாராம்!
- வெறிக்கு ஒரு காரணம், வெறுப்புக்கு ஒரு காரணம். ★ இரண்டுமே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம். எதன் மீதும் ஏற்படலாம்.
காரணம், இரண்டுமே ஆசை என்னும் அசுரனுக்குப் பிறந்த குழந்தைகள்.
- நன்றாக இருந்தால் வேரோடு பிடுங்குவது ! ★ இல்லை என்றால் காரித்துப்புவது! வெறுத்து ஒதுக்குவது !
- இது மனதின் முக்கியமான குணங்களில் ஒன்று. -
- வெறியும் வெறுப்பும் மனதின் கறுப்புப் பக்கங்கள். ★
- மற்றவரை ஏமாற்றி, தான் ஏமாறுவது வெறி. ★ தன்னை ஏமாற்றி, மற்றவரை ஏமாற்றுவது வெறுப்பு.
- வாழத் தெரிந்தவர் எதையும் வெறுக்கமாட்டார். வாழத் தெரியாதவர் ★ எதன் மீதும் வெறிகொள்ளவார் - வெகு எளிதாக!
ஆட்டிவிடப்பட்ட பெண்டுலம் தொடர்ந்து இரண்டு பக்கமும் அலைந்து கொண்டே இருக்கும். வலப்பக்கம் நகர்ந்த பெண்டுலம் வலதுமுனையை அடைந்த அடுத்த நொடியே இடதுமுனை நோக்கி நகர ஆரம்பித்துவிடும்.
ஆசை என்ற உந்துதலால் தள்ளப்பட்ட மனமும் வெறி அல்லது வெறுப்பு இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைப் பற்றிக் கொள்ளும்.
சில நேரம் வெறி... சில நேரம் வெறுப்பு ....
-என்ற கணக்கில்தான் பலரின் மொத்த வாழ்க்கையும் சென்று கொண்டிருக்கிறது.
'வெறுப்பிற்கூரியவர் ஏதோவொரு வகையில்
விருப்பத்திற்குரியவர்.
இல்லாவிட்டால்
என் வெறுப்பிற்குரியவர்
எனக் காரணம் சொல்லி
திரும்பத் திரும்ப
அவரையே நினைத்துக்
கொண்டிருப்பீர்கள்?'
- ஆழ்மன ரகசியம்
கிட்டத்தட்ட எல்லா மனிதர்களுமே சமுதாயத்தின் சில அம்சங்களில் வெறியாக இருப்பது. வேறு சிலவற்றை வெறுப்பது என்பது பரவலாகிப் போன பரிகாசம்.
பாசமும் பகையும் சில நேரங்களில் வெறியாகவும் சில நேரங்களில் வெறுப்பாகவும்
பணம் சில நேரங்களில் வெறியாகவும் வெறுப்பாகவும்
காமம் என்பது சில நேரங்களில் வெறியாகவும் சில வெறுப்பாகவும்
பேர், புகழ் போன்றவற்றில் வெறியும், வெறுப்பும் - இப்படி மனித மனம் வெறி அல்லது வெறுப்பைப் பற்றிக்கொண்டு மனிதர்களைப் பாடாகபாடு பட வைக்கிறது.
நீதிநெறிகளைச் சாதகமாக்கி சிலவற்றை வெறுப்பதும் நீதி நெறிகளை தங்கள் மனவெறிக்காக மீறுவதும் துன்பத்தில் மூழ்க வைத்துவிடும்.
வெறி, வெறுப்பை விளக்க ஓர் அருமையான சம்பவம்.
புத்தரிடம் சீடனாக அரசன் ஒருவன் வந்திருந்தார். புத்தர் புன்சிரிப்போடு அரசனை சீடனாக ஏற்றுக்கொண்டார். ஆனால் அங்கிருந்த மற்ற அனைவருக்கும், "இந்த அரசனைப் பற்றி எல்லாம் தெரிந்திருந்தும் ஏன் புத்தர் ஏற்றுக்கொண்டார்" என்ற கவலை.
கவலையோடு இருந்தவர்களை புத்தர் பார்த்து சிரித்துவிட்டு, "போகப் போகப் புரியும்" என்றார்.
மது, மாது, மாடமாளிகை, மக்களைத் தனக்கு அடிமையாக வைத்துத் துன்புறுத்துதல் என்று வாழ்ந்து வந்த அரசன், "தன்னைப் போல் உல்லாசமாக வாழ்ந்தவர்கள் வேறு யாரும் இருக்கக்கூடாது" என்ற கர்வவெறியில்தான் அரச வாழ்க்கையை வாழ ஆரம்பித்தான்.
உல்லாசம் என்ற பெயரில் வாழ்ந்த வாழ்க்கை, சில காலமே சந்தோஷத்தைக் கொடுத்தது. புத்தரைப் பற்றிக் கேள்விப்பட்ட அரசன் திடீரென்று எண்ணத்தை மாற்றிக் கொண்டான். "புத்தர் கூறும் நிலையான ஆனந்தத்தை எப்பாடுபட்டாவது அடைந்தாக வேண்டும்" என்ற முடிவுக்கு வந்தான்.
"இவ்வளவுகாலம் சுகபோகியாக, அயோக்கியனாக கொடுங்கோலனாக வாழ்ந்த இவனால் எப்படித் துறவறம் மேற்கொள்ள முடியும் ? ...
எப்படிக் கடுமையான தவம், தியானங்களில் ஈடுபட முடியும் ?
மது, மாது இல்லாமல் இவனால் இருக்க முடியுமா ?
திமிர் பிடித்த இவனால், ஒரு குருவுக்கு கீழ் அடங்கி, ஒடுங்கி இருக்கமுடியுமா?...'' என்று புத்த துறவிகள் ஒருவர் மாறி ஒருவர், அரசனை விமர்சனம் செய்தபடி இருந்தனர்.
விமர்சனம் செய்த அனைவரும் ஆச்சரியப்பட்டுப்போனார்கள்.
காரணம் விதிமுறைகளையும் அரசன் அணுகிய விதம் ...
துறவிகள் காலில் அணியும் பாதுகை (செருப்பு) இல்லாமல் நடுரோட்டில் நடந்து சென்றால், அரசன் பாதுகையும் இல்லாமல் ரோட்டு ஒரத்தில் முள்ளும், கல்லும் நிறைந்த இடத்தில் நடந்துசெல்வார்...
| வேத ரகசியம் | |
| ஒரு எலெக்ட்ரான் அசைக்கப்பட்டால் இந்தப் பிரபஞ்சமே நடுங்குகிறது. |
தங்களை வருத்திக்கொள்ளத் துறவிகள் ஒரு வேளை உணவு குறைத்து இரண்டு வேளை மாத்திரமே சாப்பிட்டால், அரசன் ஒரே ஒரு வேளை மாத்திரமே சாப்பிட்டான்.
குளிருக்குப் பயந்து போர்த்திக்கொள்வதற்காக கம்பளி எடுத்துச் சென்றால், அது ஒரு பற்றாகிவிடும் என்பதற்காக அந்தத் துறவிகள் போர்வைகூடப் பயன்படுத்துவதில்லை. அரசன் போர்வை பயன்படுத்தாததோடு அந்தக் குளிரிலும் மடாலாயத்திற்கு வெளியே படுக்க ஆரம்பித்தான்.
இப்படி, துறவறத்திற்கு இருந்த விதிகள் அனைத்தையும் எவ்வளவு கடுமையாகக் கடைப்பிடிக்க முடியுமோ அவ்வளவு கடுமையாக அரசன் கடைப்பிடித்தான்.
விமர்சித்தவர்கள் அனைவரும் வாயடைத்துப் போனார்கள். அரசன் மீது எல்லோருக்கும் மதிப்பு வர ஆரம்பத்தது.
நாம் வேறு, நிகழ்காலம் வேறு எனப் பிரிக்கவே முடியாது!
இப்போது புத்தர் அதே புன்முறுவலோடு அனைத்தையும் கவனித்துக் கொண்டு வந்தார்.
அரசனின் கட்டுடல் மெலிந்து பார்ப்பதற்குப் பரிதாபமாக மாறிவிட்டான்.
ஒரு நாள் துறவியாக மாறிய அரசனை அழைத்தார் புத்தர்.
புத்தர், "இப்போது ஆனந்தமாக இருக்கிறாயா?" என்று கேட்டார்.
அரசன், " இல்லை..." என்றான்.
"அப்புறம் ஏன் இன்னும் துறவியாக இருக்கிறாய் ?"
"அது… துறவறம் எடுத்துக்கொண்ட முதல் சில வாரங்கள் மட்டுமே நான் விருப்பங்களை அனுபவிக்காவிட்டால் ... இன்றைய விருப்பு நாளைய வெறி! இன்றைய வெறி நாளைய வெறுப்பு! அனுபவியுங்கள், விடுதலையடைவிர்கள். சந்தோஷமாக இருந்தேன். நாளாக நாளாக அது மறைந்துவிட்டது".
"இதுதான் உன் பிரச்சனை."
அரசனாக இருந்த போது 'மிக உல்லாசமாக வாழ்ந்தவன் நானாகத்தான் இருக்க வேண்டும்' என்ற வெறி இப்போது 'மிகச்சரியாக வாழ்ந்த துறவி நானாகத்தான் இருக்க வேண்டும்' என்ற வெறியாக மாறிவிட்டது.
சுகபோகத்தின் மீதிருந்த வெறி, இப்போது வெறுப்பாகிவிட்டது.
நிலையான ஆனந்தம் அடைய வேண்டும் என்ற உன்னதமான நோக்கம் மறைந்துவிட்டது. மனம், வெறி என்ற ஒரு முணையிலிருந்து வெறுப்பு என்ற அடுத்த முனைக்கு தாவிவிட்டது.
வெறியும் தவறு.
வெறுப்பும் தவறு.
வெறி க்கும் வெறுப்புக்கும் 'மத்தியில் வாழ்'கற்றுக் கொள். பிரச்சனை தீர்ந்துவிடும்" என்று கூறி முடித்தார் புத்தர்.
கண்ணீர் மல்க புத்தரின் காலடியில் விழுந்த அரசன் அன்று முதல் வாழக் கற்றுக் கொண்டார்
வெறிக்குத் தீர்வு வெறியை வெறுப்பது அல்ல.
இந்த அணுகுமுறை பணத்திலிருந்து ... பணம்... காமம் வரை எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
அசைப்படப்பட ஆய்வருந் துன்பம் ஆசைவிடவிட ஆனந்தமாமே!' - தருமலர். துன்பம் கூடு கட்டும். வெறியும் வெறுப்பும் குந்த பொரீக்கும். ஆசையை விடு. அல்லது, அதை அனுபவி. விடு யோகியாவாய்! அனுபவி தியானியாவாய்! எதை நீ செய்தாலும் ஆனந்தமாவாய்!
ஒரு வெறியிலிருந்து தப்பிப்பதற்காக அந்த விஷயத்தை வெறுக்க ஆரம்பித்தால், வெறி மனதில் இன்னும் ஆழமாகச் சென்று மறைந்துகொள்ளும். நிலைமை முன்பை விட மோசமாகிவிடும்.
உங்கள் மனதை ஆராயுங்கள்.
உள்ளுக்குள் இருக்கும் வெறி, வெறுப்பு இரண்டையும் பட்டியலிடுங்கள். இரண்டையுமே தூக்கி எறியுங்கள். விழிப்புணர்வோடு அணுகினால் புத்தர் அரசருக்குக் கூறிய, 'மத்தியில் வாழ்வது' எப்படி என்பது புரிந்துவிடும்.
உங்களின் ஆனந்தம் நோக்கிய பயணம் இனிதே தொடரும்.
அர்த்தமுள்ள சம்பவம் ...
அந்த அத்வைத ஞானி, 'புத்தரின் மத்தியில் வாழ்' என்பதை புரிந்துக்கொள்ளச் சொல்லும் உதாரணம்,
"வீணையின் கம்பி இழைகளை இறுக்க முடுக்கினால் அது அறுந்துவிடும். முடுக்காவிட்டால் வீணையை இசைக்க முடியாது. இசையை எழுப்ப, வீணை மத்தியில் முடுக்கப்பட வேண்டும்".
● எல்லாவற்றிலும் நடுநிலையிலிருங்கள். ஆனந்த இசை வெளிப்படும்.
காத்திருப்புக் காலங்களை தியானக்காலங்களாக மாற்றுங்கள் !
ஒரு பேருந்துக்காக. ஒரு நபருக்காக, ஒரு ரிசல்ட்டுக்காக காக்கிருக்கும் நேரங்களில், உங்களின் மனம் பொங்கியெழும்,
உங்களின் உள்ளே குடியிருக்கும் பொறுமையின்மை எட்டிப் பார்க்கும் காலங்கள் அவை!
நீங்கள் நினைத்தால், இந்தத் காலங்களையெல்லாம் தியானக் காலங்களாக மாற்ற முடியும்.
வெறியும் வெறுப்பும்தான் பொறுமையின்மையின் மனத்தடுமாற்றத்தின் காரணகர்த்தாக்கள்.
நாம் காத்திருக்கும் காலங்களில், நம்முள்ளேயிருக்கும் மேற்கண்ட மனக் குறைகள் கிண்டியெடுக்கப்படும்.
பொறுமையின்மையால் மனம் தடுமாறும் காலங்களில் ...
உங்களின் கட்டுப்பாட்டை இழக்கிறீர்கள்.
விழிப்புணர்வின்மையில் விழுகிறீர்கள்!
இதுபோன்ற காலங்களில் நீங்கள் படும் தடுமாற்றங்களை முழுமையாக அனுபவியுங்கள். சுயக்கட்டுப்பாடு அதிகமாவதை உணர்வீர்கள். விழிப்புணர்வற்ற நிலையிலிருந்து விழிப்பு நிலை நோக்கி நகர்வீர்கள்.
விழிப்புச் சேர ... 'காத்திருப்பு' உன் துருப்புமுனை!
விழிப்பு அதிகமாக அதிகமாக நம்மைத் தடுமாற வைக்கும் மனக்குறைகள் தடுமாற ஆரம்பிக்கும்.
வாழ்வின் சஞ்சலங்கள் மறைந்து, சந்தோஷம் உதிக்கும்.
- நீங்கள் உங்களுக்குள்ளே பெற்றிருக்கும் நிலையான சமாதான ★ உணர்வே - நிதானம்.
- நிதானம் என்ற செய்தியை ★ வெளியிடும் கொள்கைப்பரப்புச் செயலாளர்.
- ஆண்மீகவாதியின் அடையாளச் சின்னம். நிதானம் ★ -
இருந்தால் உங்கள் இல்லத்தின் பிரதமர் நீங்கள் நிதானம் ' தான்.
- கோபத்தை நாம் பயன்படுத்தினால் அது நிதானம். கோபம் நம்மைப் ★ பயன்படுத்தினால் அது நிதானமின்மை.
- கோபத்தை வெறும் சக்தியாகத் தேவைப்படும் நேரத்தில் மட்டுமே ★ பயன்படுத்துவது நிதானத்தின் முதல்படி.
இரு புத்தத் துறவியின் கதையைச் சொல்கிறேன். கேளுங்கள்.
அந்த புத்தத் துறவிக்கு ஒரு எதிர்பாராத அழைப்பு வந்தது. அழைப்புக் கொடுத்ததோ ஓர் அழகான விலைமாது.'' மழைக்காலம் முழுவதும் நீங்கள் என் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும்' என்று கெஞ்சினாள். விலைமாது புத்த துறவியை வழிமறித்துக்கேட்டாள்.
இப்படி ஒர் அழைப்பு ஒரு துறவிக்கு வரும் என்பதைப் பலரால் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது.
உணர்ச்சிகளின் பிடியில் இருந்து, சிற்றின்பத்தின் வலையில் இருந்து எளிதாக விலகி (விட்டுவிட்டு ஓடுதல் அல்ல) வாழ்வின் அடுத்தபடியை நிதானமாக அணுகிய ஒரு மனிதர்தான் துறவி. இப்படிப்பட்ட துறவிகள், எந்த ஒரு சூழ்நிலைக்கும் கலக்கமடைய மாட்டார்கள். இவர்களின் நிதானம் எல்லாச் சூழ்நிலைகளையும் முழுமையாகக் கொண்டாட உதவி செய்யும்.
தாமரையானது நீரின் குளிர்மையையும் இருப்பையும் அனுபவிக்கும். எந்த ஒரு சூழ்நிலையிலும் தண்ணீரில் ஒட்டாது. தண்ணீர் முயன்றால்கூடத் தாமரையில் ஒட்ட முடியாது. தாமரை தாமரையாகத்தான் இருக்கும்.
உண்மையான துறவி இப்படித்தான் இருப்பார். சமுதாயத்தில் இருந்தாலும் காட்டில் இருந்தாலும் அரண்மனையில் இருந்தாலும் சுதந்திரமாகச் சமாதானத்தோடு நிதானமாக இருப்பதால், அவர் யாராக இருந்தாலும் அவர் துறவியே! சந்நியாசியே!
ஒரு சிறிய புன்முறுவலோடு, "உன்னுடைய அழைப்பு உண்மையாக இருந்தால் நான் நிச்சயம் வருகிறேன்" என்றார் துறவி.
" என்ன கேள்வி கேட்டாய்? யாரைப் பார்த்துக் கேட்கிறோம் என்ற சுயநினைவோடுதான் கேட்கிறாயா? நீ ஏற்கெனவே செய்த பாவம் போதாது என்று இப்போது துறவிகளையும் பாவமாக்கக் கிளம்பிவிட்டாயா?", என்று துறவி கோபப்படுவார். அதை நினைத்துச் சிரிக்கலாமே" என்று விளையாட்டாகக் கேட்ட விலைமாதுவுக்கு ஏகப்பட்ட அதிர்ச்சி.
தடுமாற்றத்தை வெளியில் காட்டிக்கொள்ளமல் "ம்ம்…ம். உண்மையாகத்தான் கூப்பிடுகிறேன்" என்றாள்.
நீதானம்தான் B செய்யம் தானங்களிலேயே சிறந்த தானம்!
துறவி, "வருகிறேன். ஆனால் புத்தருடைய அனுமதியைப் பெற்றபின் வருகிறேன். அதுவரை நீ பொறுத்திருக்க வேண்டும்" என்றார்.
விலைமாது, "தாராளமாகப் பொறுத்திருக்கிறேன்" என்றவள்.
"வருகிறேன் என்று வாக்குக் கொடுத்தபின் புத்தரின் அனுமதி தேவையா?" என்றாள்.
துறவியோ, "வருகிறேன் என்று வாக்குக் கொடுத்தது, என் நிதானத்தின் மீதிருந்த எனக்கிருந்த அனுபவத் தெளிவு. அனுமதி கேட்பது என்னுடைய கடமை" என்றார்.
மறுநாள் முடிந்தவுடன் துறவி புத்தரிடம், "ஒரு விலைமாது என்னை வழிமறித்து, இந்த மழைக்காலம் முழுவதும் அவள் மாளிகையில் நான் தங்கும்படி அழைப்பு விடுத்தாள்" என்றார்.
புத்தர், "நீ ஏனப்பா இதற்கெல்லாம் என்னிடம் வந்து கொண்டிருக்கிறாய்! போன்ற ஒரு சாதாரணப் பெண்ணிடம் சலனமடைந்தால் அவன் உண்மையான துறவியாக இருக்க முடியாது.
உண்மையான துறவியை எந்தப் பெண்ணாலும் சலனப்படுத்த முடியாது.
சலனப்படாமல் என்னுடைய அனுமதிக்காக மாத்திரம் காத்திருக்கும் நீ ஓர் உண்மையான சன்யாசி. தைரியமாகப் போய் வா. உனக்கு விலைமாதுவின் மாளிகையும் புத்தமடமும் ஒன்றே. மழைக்காலம் முழுவதும் ஓய்வாக இருந்து திரும்ப வா" என்றார்.
நம்முடைய நிதானத்தால் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்குக் கிடைக்கும் நிம்மதி, திருப்தி, சந்தோஷம் - பல நூறு தானங்கள் செய்தாலும் கிடைக்காது!
துறவி விலைமாது வீட்டிற்குச் சென்றார். விலைமாது அன்போடு வரவேற்று, ஆசைதீர உபசரித்தாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடினாள், விதவிதமான உடைகள், வகைவகையான உணவுகள் புதுப் புதுக் கொண்டாட்டங்கள் என்று தனக்குத் தெரிந்த எல்லா யுக்கிகளையும் பயன்படுத்திவிட்டாள். கொஞ்சம் கொஞ்சமாக மனதிற்குள் நடுங்க ஆரம்பித்து விட்டாள்.
ஏனென்றால், ஒரு சராசரி மனிதன் என்றால் இந்நேரம் அவளுக்கு அடிமையாகியிருக்க வேண்டும். ஆனால் இவரோ, எல்லாச் சூழ்நிலைகளிலும் ஒரே தெளிவோடு இருந்தார். அவருக்குள் இருந்த சமாதானத்தை, நிதானத்தை இம்மி அளவுகூட விலைமாதுவால் அசைக்க முடியவில்லை. என்ன நடந்தாலும் நிதானமாக இருக்க இவரால் மட்டும் எப்படி முடிகிறது என்ற கேள்வி மனதில் எழ ஆரம்பித்தது.
ஒரு நாள் காலையில் துறவியின் காலைப் பிடித்துக்கொண்டு விலைமாது அழுது கொண்டிருந்தாள்.
"பெண்ணே, ஏன் அழுகிறாய்?" என்று கேட்டார் துறவி, விலைமாது, "இதற்கு மேலும் என்னால் நடிக்க முடியாது. எப்படி உங்களால் மாத்திரம் இவ்வளவு நிதானத்தோடு இருக்க முடிகிறது? அதன் ரகசியம் எனக்கு உடனே தெரிந்தாக வேண்டும்" என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.
துறவி அது மிகவும் சுலபம்.
முதலில் எவ்வளவு சலனப்படுகிறாய் என்பதையும் எவ்வளவு மனத்தடுமாற்றம் இருக்கிறது என்பதையும் கண்டுபிடி. பாதிப்பிரச்சனை தீர்ந்துவிடும்.
தே தா ன ம்
நம்முடைய நிதானத்தால் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்குக் கிடைக்கும் நீம்மதி, திருப்தி, சந்தோஷம் பல நூறு தானங்கள் செய்தாலும் கிடைக்காது!
இரண்டாவது, சலனப்படும் பொழுதெல்லாம் விழிப்புணர்வோடு இரு. எவ்வளவு சலனப்படுகிறாய் என்று தெரிந்து, முழுஉணர்வோடு இரு. தொடர்ந்து விழிப்புணர்வோடிருக்கும் உனக்குள் ஒரு மாற்றம் நிகழும்" என்றார்.
விலைமாது துறவி போதித்த போதனைகளைத் தன் நடைமுறை வாழ்வில் உபயோகித்தாள். தொடர்ந்து உபயோகிக்க கொஞ்சம் கொஞ்சமாக நிதானம் வளர்வதை உணர்ந்தாள்.
என்ன ஆச்சரியம்! அடுத்த ஒரு மாதத்தில் மழைக்காலம் முடிந்தது. துறவி "விடைபெறுகிறேன்" என்று சொல்லிக் கிளம்ப முற்படும்போது…
" என்னையும் புத்தரிடம் கூட்டிச் செல்லுங்கள். நானும் ஒரு துறவியாக மாற ஆசைப்படுகிறேன்" என்றாள், வெகு நிதானமாக. நிதானம் என்பது நிஜமான சமாதானம். நிதானம் என்பது நிஜமான சுதந்திரம். நிதானம் என்பது நிஜமான நிம்மதி. நிதானமின்மையிலிருந்து நிதானத்திற்கு மாற 'விழிப்புணர்வு' என்ற விசா இருந்தால் போதும் நிதானத்தை அடைந்துவிடுவீர்கள்.
நிதானத்தின் அருமையை உணர்ந்த நீங்கள் நிச்சயமாக நிதானத்தை அடைய ஆவலோடு காத்துக்கொண்டிருப்பீர்கள்.
நிதானம் O.K. நிதானமின்மை என்றால் என்ன ? நிதானமின்மையிலிருந்து, நிதானத்தை அடைவது எப்படி ? நிதானமின்மைதான் தடுமாற்றமா ?
என்பது போன்ற உங்களுக்குள் தோன்றும் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவேண்டுமென்றால் 'நிதானமின்மை' கட்டுரையைப் படியுங்கள்!
நீதானமின்மை
- கோபம், சீற்றம் என்பவை நிதானமின்மை இருப்பதற்கான வெளி அறிகுறிகள்.
- தடுமாற்ற உணர்வு, நிதானமின்மை இருப்பதற்கான உள்அறிகுறி.
- கோபப்படும் போது, சீற்றப்படும் போது, தடுமாறும் போது முழு உணர்வோடு இருப்பதுதான் விழிப்புணர்வோடு இருப்பது.
பொதுவாக எல்லோருடைய கோபமும் சிறுபிள்ளைத்தனமானது. இது மறுக்க முடியாத உண்மை.
கோபம் நம் வசம் இல்லை. கோபத்தின் வசத்தில்தான் நாம் இருக்கிறோம்.
வெளியில் ஏற்படும் சிறு மாற்றங்கள், உறவுகளின் சில தவறான நடவடிக்கைகள், எதிர்பார்த்தது எதிர்பார்த்தபடி இல்லாமல் போவது எனச் சிறு சிறு விஷயங்களுக்குத்தான் நாம் கோபப்படுகிறோம்.
வெளியில் ஏற்படும் சிறு மாற்றங்கள்தான், நம்மைச் சீற்றமடைய வைக்கின்றன. ! நிலைகுலைய வைக்கின்றன. ! நிதானத்தையே கலைக்கின்றன. ! நிதானமின்மையை உண்டாக்குகின்றன. !
தடுமாறுவது உலகின் இயல்பு. தடுமாறுவது மனதின் இயல்பு. தடுமாறாமல் இருப்பது ஆத்துமாவின் இயல்பு!
சூழ்நிலையிலும் நிதானமாக, முழுமையாக இருப்பதே அப்படிப்பட்ட ஒரு ஞானி கான் ஜு-மல்கி.
ஜு-மல்கியிடம் இருக்கும் சீடர்களெல்லாம் ஆனந்தமாக இருக்கிறார்கள். பலர் ஞானம் அடைந்துவிட்டார்கள் என்ற செய்தி காட்டுத் தீ போல ஊர் முழுவதும் பரவிவிட்டது.
சராசரி வாழ்க்கையிலிருந்து கொண்டு, தனக்கு உடனடியாக ஞானம் கிடைக்க வேண்டும் என்று விரும்பும் கூட்டத்தைச் சேர்ந்தவர்தான் நெகெம்-ஸி.
ஒரு நாள் நெகெம்-ஸி, ஜு-மல்கியிடம் வந்து, "எனக்கு ரொம்ப அவசரமாக ஞானம் தேவைப்படுகிறது. உங்களால் அதை எனக்குள் உடனடியாக ஏற்படுத்த முடியுமா?'' என்று கேட்டார்.
ஜு-மல்கி, "ஏனப்பா இவ்வளவு அவசரம் ? அவ்வளவு அவசரமாக நீ ஏன் ஞானத்தைப் பெற வேண்டும்" என்று நெகெம்-ஸியிடம் கேட்டார்.
" பெரிய முதலீட்டில் புது வியாபாரம் ஒன்று துவங்கி இருக்கிறேன். வியாபாரத்தை நிதானமாகக் கவனிக்கும் பக்குவம் எனக்கு இல்லை. மேலும், எனக்கு உறுதுணையாக இருந்த என்னுடைய தந்தைக்கும் உடல்நலம் ரொம்ப மோசமாகிக்கொண்டே வருகிறது. எனவே, எவ்வளவு சீக்கிரம் ஞானம் அடைய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஞானம் அடைய வேண்டும். அப்போதுதான் என்னால் நிதானமாக வாழமுடியும். நான் சீக்கிரம் ஞானம் அடைவதற்கு ஏதாவது ஒரு வழியைச் சீக்கிரமாகக் கூறுங்கள்'' என்று படபடப்போடு கேட்டார் நெகெம்-ஸி. ஜு-மல்கி சற்றும் மாறாத நிதானமான புன்முறுவலோடு அவரை ஏற -இறங்கப் பார்த்துவிட்டு, "குறைந்தபட்சம் பன்னிரண்டு மாதமாவது தேவைப்படும்" என்றார்.
" நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன். எவ்வளவு கடினமான யோகம், தியானம் செய்யச் சொன்னாலும் செய்கிறேன். ஒரு வருடம் வேண்டாம். கொஞ்சம் சீக்கிரம் ஞானம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்" என்று கெஞ்சிக் கேட்டார் ரெகெம்-ஸி. ஜு-மல்கி, "இந்த அளவுக்கு அவசரமும் தடுமாற்றமும் உனக்குள் இருந்தால் ஞானம் கிடைப்பதற்குக் குறைந்தபட்சம் ஐந்து, ஆறு வருடமாவது உழைக்க வேண்டும்" என்றார்.
நெகெம் - ஸியால் இந்தவிதமான பதிலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் நிலையையும் அவசரத்தையும் இந்த மனிதர் கொஞ்சம்கூடப் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறாரே என்று கோபப்பட்டார்.
ஜு-மல்கியோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் மீண்டும் நிதானமாகச் சொன்னார்.
"இவ்வளவு தடுமாற்றமும் அவசரமும் இருந்தால் ரொம்பக் கஷ்டமப்பா. குறைந்தது பத்துப் பதினைந்து வருடங்களாவது ஆன்மீகப் பாதையில்
தா ன ரி ன் மை
ஒரு விஷயத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு அவசரம் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு கோபமும் சிற்றமும் இருக்கும். கோபமும் சிற்றமும் இருக்கும் அளவைப் பொறுத்து நிதானம் பாதிக்கப்பட்டு, நீதானமின்மை ஏற்படும்!
இல்லாவிட்டால் அனுபவிக்க முடியாது" என்றார்.
நெகெம்-ஸிக்குக் குழப்பம் தாளவில்லை. "அப்போ நான் என்னதான் செய்வது ?'' என்றார் மிகத் தடுமாற்றத்தோடு.
ஜு-மல்கி கருணையோடு, "உன்னை நோகடிக்க வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. உண்மையைப் புரிய வைக்கவே இவ்வாறு பேசினேன்.
விஷயத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு மனிதனுக்கு எவ்வளவுக்கெவ்வளவு அவசரம் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு கோபமும் சீற்றமும் இருக்கும். கோபமும் இருக்கும் அளவைப் பொறுத்து நிதானம் பாதிக்கப்பட்டு, நிதானமின்மை ஏற்படும்.
அவசரப்படுவதை நிறுத்தி, உன்னை நீயே திரும்ப உள்முகமாகப் பார். அவசரம் குறையும். அதுவரை என் அருகில்கூட வராதே!'' என்று கூறி அனுப்பிவிட்டார். அடக்க முடியாத கோபத்தோடு அங்கிருந்து வெளியேறினார் நெகெம்-ஸி.
நிலநடுக்கத்தைப் போல ஒவ்வொரு கோபத்திலும் அகநடுக்கம் ஏற்படுகிறது. நாடி நரம்புகள் உலுக்கப்படுகின்றன. ஒவ்வொரு செல்லும் கொதிக்கிறது.
இதனால் யாருக்கு என்ன பிரயோஜனம் ? கொஞ்சும் யோசியுங்கள்.
நெகெம்-ஸி போலக் கோபப்படாமல், தயவுசெய்து உங்களுக்குள் ஒளிந்திருக்கும் உங்களைக் கொஞ்சம் உற்றுப்பாருங்கள்.
கோபப்படும் போது, சிற்றப்படும் போது, தடுமாறும் போது முழுஉணர்வோடு இருப்பதுதான், விழிப்புணர்வோடு இருப்பது!
தடுமாற்றங்கள் எவ்வளவு ? கோபங்கள் எவ்வளவு ? எரிச்சல் எவ்வளவு என்று புரியவரும்.
நம்முடைய நிதானம் எந்த அளவுக்குக் களங்கப்பட்டு நிதானமின்மையாக மாறியிருக்கிறது என்று தெரியவரும்.
த கண்டுபிடித்துவிட்டீர்களா ? என்றால் நிதானத்திற்கான முதல் அடியை நீங்கள் எடுத்து வைத்து விட்டீர்கள். தடுமாற்றம் தன்னிடம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதற்கே திறந்த மனம் வேண்டும்.
அதையும் தாண்டி, தன்னிடம் தடுமாற்றம் எந்த வகையில், எப்படி என்பதையும் கண்டுபிடித்து விட்டால் தெரிந்து கொள்ளுங்கள், நிதானமின்மையிலிருந்து நிதானம் நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டீர்கள்.
வெளிஉலகில் வாழும் மனிதர்கள் தங்கள் உள்உலகத்தில் செல்வதற்கான பாலத்தைக் கண்டுபிடிப்பதுதான் உள்உலகச் சாதனையின் முதல்படி !
வெளிஉலகில் வாழும் மனிதர்கள் தங்கள் உள்உலகத்தில் செல்வதற்கான பாலத்தைக் கண்டுபிடிப்பதுதான் -உள்உலகச் சாதனையின் முதல்படி!
தடுமாற்றத்தைக் கண்டுபிடிப்பது, பாலத்தைக் கண்டுபிடிப்பதற்குச் சமம். தடுமாற்றத்தைத் தாண்டுங்கள். தடுமாற்றம்
அற்ற நிதானம் உங்களுக்காக உங்களுக்குள்ளேயே காத்துக் கொண்டிருக்கிறது.
தட்டுத்தடுமாறினாலும் பரவாயில்லை என்று தடுமாற்றத்திற்குள் தைரியமாக, விழிப்புணர்வோடு நுழைந்து வெளியே வருவதுதான் தடுமாற்றத்தைத் தாண்டுவதற்கான எளிய வழி.
நிதானமின்மைக்குள் புகுந்து, நிதானம் நோக்கிய பயணத்தை இந்த நிமிடம் முதல் ஆரம்பியுங்கள்.
நிதானம் பெற்றுவிட்டால் நீங்களும் ஒரு ஜு-மல்கியாக மாறமுடியும். நிம்மதியை உங்களுக்கும் உலகுக்கும் தானமாக வாரி வாரிக் கொடுக்க முடியும்!
நிதானமின்மையிலேயே வாழ்ந்தால் நெகெம்-ஸி போல் ஞானியே கூறினாலும் நமது தடுமாற்றமே நமக்குப் பெரிதாகப்பட்டு, நாமும் நொந்து மற்றவர்களையும் நோகவைத்து, நிம்மதியை இழக்க வேண்டியதுதான். யோசியுங்கள். நிதானம் நோக்கி நடக்க ஆரம்பியுங்கள்!
ரஸவாதம்
நவீன காலத்து ஜென் ஞானியிடம், "பரிணாம வளர்ச்சி பற்றிய உங்களின் கருத்து என்ன?" என நிருபர் ஒருவர் கேட்டதற்கு, உடனடியாக பதிலேதும் சொல்லாமல் சிரித்தவர், அங்கிருந்த பக்தர்களிடம் சொன்னார்:
"ஆனந்தத்தை அழிப்பவன் மிருகம். ஆனந்தமாக இல்லாதவன் மனிதன் ஆனந்தமாக இருப்பவர் ஞானி. ஆனந்தத்தை அளிப்பவர் குரு. அந்த ஆனந்தம் கடவுள்!
என்னைப் பொறுத்த அளவிற்கு இதுதான் பரிணாம வளர்ச்சி" என்றார்.
இந்தப் பட்டியல்படி அடுத்த நிலைகளுக்கு நீங்களும் செல்ல முடியும். ஆனால், ரஸவாதம் நிகழ நீங்கள் அனுமதிக்க வேண்டுமே!
இக்கட்டுரை, "எனக்கெல்லாம் ஞானம், ஆன்மீகம் தேவையில்லை" என்று எண்ணுபவர்களுக்கும் ஆன்மீகவாதிகளுக்கும் எழுதப்பட்டது.
விரும்பியதும் வரும் தூக்கம் !
ஞானம் அடைவதற்கான வழிகளை 15 வேதிவினைகள் போல படிப்படியாக விளக்க முடியும்.
சுவாரஸ்யமான பாடமாக எளிதாக கற்றுக்கொள்ள முடியும் ...
உற்சாகமித மாணவராக நீங்கள் மாறிய நொடியிலிருந்து!
- விரும்பினாலும் வராத துக்கம் !
- உள்ளிருந்து பொங்கும் ஆனந்தம்!
வாழ்வைக் கொண்டாட உதவும் குதூலகம் !
இவற்றோடு சேர்ந்து உடலின் ஒவ்வொரு மயிர்க்காலும் இன்பத்தில் திளைத்திருக்கும் !
ஐம்புலன்களும் உற்சாகத்தின் உச்சியில் முழுமையாக இயங்கும்.
சுருங்கச் சொன்னால் மேற்சொன்ன அனைத்துமே ஞானிகளுடைய ஆனந்த நிலையின் ஒரு வெளிப்பாடுகள்.
இதற்கு மேற்பட்டவற்றை விளக்கும் வார்த்தைகள் இன்னும் அந்த அளவுக்கு வளரவில்லை.
உடலின் ஒவ்வொரு செல்லும் தித்திக்குமளவுக்கு திளைத்திருப்பதே ஞானம். தியானம், ஆனந்தம்.
ரஸவாதங்களைத் மற்றும் ஞானக்கருத்துகள் மூலமாக எளிதாக கற்றுத் தரும் மார்க்கம்தான் ஆன்மீகம்.
'ஆன்மீகம் உங்களுக்குத் தேவையா ? தேவையில்லையா ? 'என்பதை உணர்ந்தபின் கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்!
ஒரு மனிதர் தன்னுள்ளே கண்டுகொள்வதற்கான வழிகளையும், உள் உலக மாற்றங்களையும் ஒருசேர 'ரஸவாதம்' என்று அழைக்கிறோம்.
ரஸ்வாதத்தை மக்களுக்குச் சென்று சேர்க்க புதுப்புது முறைகளை ஜூ-மல்கி கையாள்வது வழக்கம்.
நகரின் நாற்சந்தியில் ஒரு அறிவிப்பு பலகையை வைத்தார்.
சிறப்புக் காட்சிகள் இரண்டு! ஞாயிறு காலை 6 மணிக்கு
- காலில்லாதவனின் ஆட்டம் அரங்கேற்றம்.
- கையில்லாதவனின் ஓவியம் வரைதல்.
எதிர்பார்த்தபடியே மக்கள் கூட்டத்தால் அரங்கம் நிறைந்தது. ஜு-மல்கியைக் கடவுளாக மதித்த பக்தர்களும் ஆன்மீகச் சாதகர்களும் குழுமியிருந்தார்கள்.
சரியாக 6 மணிக்கு வந்து சேர்ந்த ஜூ-மல்கி சிறப்புக் காட்சிக்குப் பதிலாகப் சொற்பொழிவை ஆரம்பித்துவிட்டார். அரை மணி நேரச் சொற்பொழிவு முழுவதும், "நீங்களும் கடவுள்கான். உங்களாலும் முழுமையான ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்" என்பதை சுவாரஸ்யம் கலந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்.
ஜு-மல்கி எவ்வளவு விளக்கமாகப் பேசினாலும் அங்கிருந்தவர்கள் "இவர் சொல்வதெல்லாம் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்குச் சாத்தியமில்லை" என்றோ எண்ணிக்கொண்டிருந்தார்கள்.
திடீரென்று அரங்கத்திற்குள் ஒரு முரட்டுக் கும்பல் கத்திக்கொண்டே நுழைந்தது.
கூடவே கூடையில் ஒரு மனிதரையும் பல்லக்கில் இன்னொரு மனிதரையும் அமர வைத்து தூக்கிக்கொண்டு வந்தது அந்தக் கும்பல். அரங்கின் அமைதியைக் கலைத்தது. அரங்கை கலவரத் தோற்றம் பற்றிக்கொண்டது.
கும்பலைச் சேர்ந்த முரடன் ஒருவன், "ஜு-மல்கி! நீர் ஏதோ பெரிய ஞானியாமே, உம்மால் முடியாதது என்ற ஒன்றே இல்லையாமே.
| முடியாததும் முடியும்! | |
|---|---|
| குரு | உங்களால் முடியும் எனச் சொல்ல வந்தவரல்ல ஞானகுரு. |
| ஞானகுரு | உங்களால் முடியாததைக்கூட எளிதாய் முடித்திட புத்தியையும் சக்தியையும் வழியையும் காட்டிட - ஊட்டிட வந்தவரே ஞானகுரு! |
உமது அறிவிப்புப்பலகையைப் பார்த்தோம். உமக்குப் பாடம் புகட்டவே கையில்லாத ஒருவனையும் காலில்லாத ஒருவனையும் அழைத்து வந்திருக்கிறோம்.
எங்கே! இந்த நொண்டியை ஓட வைத்து, கை முடமானவனை வரைய வையும் பார்ப்போம்" என்று சவால்விட்டார்கள்.
ஜு-மல்கி நிதானமாக எழுந்து தன்னுடைய ஊன்றுகோலை கால் இல்லாதவனை நோக்கி நீட்டி, "எழுந்து நட" என்றார். கை முடமானவனைப் பார்த்து, "கைகளை வீசு" என்றார்.
எதுவும் நடக்கவில்லை. அரங்கில் அமைதி.
திடீரென தன் கையில் இருந்த ஊன்றுகோலால் இருவரையும் அடித்து விளாசினார்.
அடிகாளாமல், "ஊய்யோ! அம்மா!" என்று கத்திக்கொண்டே முதலில் கால் இல்லாதவன் கூடையிலிருந்து எம்பிக் குதித்தான்.
அடுத்து கையில்லாதவன் "வேண்டாம்! வேண்டாம்!" என்று அடிகளைத் தடுத்தபடி எம்பிக் குதித்தான்.
கூத்தாடிகளை வைத்து வேஷம் போட்ட முரட்டுக்கும்பலின் கள்ளதோக்கம் கலைந்தது.
உள்உலக ஆன்மீக உண்மைகளைப் பொதுவாக அறிவித்து, பின் மக்களுக்கு விளக்குவது மட்டுமே ஜு-மல்கியின் வழக்கம்.
ஆனால் இன்று, திட்டமிட்டு நாடகமாடி, தங்கள் குருவை கேவலப்படுத்த நினைத்த கும்பலைத் தாக்க பக்தர்கள் முயல... அரை மணி நேரமாகச் சொல்ல முயற்சித்ததை, வெறும் அரை நிமிடத்தில் அழகாக அவர்கள் சொல்லிவிட்டார்கள்' என்றார்.
பக்தர்கள் புரியாமல் பார்க்க, தொடர்ந்து ஜூ-மல்கி, "பல நாட்களாக கால்களையும், கைகளையும் இயக்க மறந்ததால் தன்னை 'முடவன்' என்று நம்பிக்கொண்டு இருப்பவர் ஆடவோ, வரையவோ முயற்சித்தால் முதலில் அவருக்கு அது வேடிக்கையாகத்தான் இருக்கும்.
அவர் முயற்சியைத் தொடர்ந்தால்... விரைவிலேயே எதிர்பாராத ஒரு
தருணத்தில் கைகளோ, கால்களோ இயங்க ஆரம்பித்துவிடும். தான் முடவனல்ல என்பது அனுபவமாகிவிடும்.
ஆனந்தத்தை அடைவதற்கான வாசல் கதவு நம்முள் இதே போன்றுதான் திடீரெனத் திறந்துக்கொள்ளும்.
முடவன் என்று பொய்யாக நம்பிக்கொண்டிருப்பவர், "ஏன் இவர்கள் சொல்வது போல் இருப்பதையே உணர முடியும்."
நம் உள்ளே இருக்கும் பொக்கிஷத்தை நான் ஆனந்தக்கடல் என்கிறேன். முயன்றால் அந்தக் கடலில் நம்மால் குதிக்க முடியும்.
உள்ளே கண்டுகொள்வதற்கான முயற்சிதான் தியானம். தியானம் என்ற குச்சியால் உள்ளே அடித்து விளாச ஆரம்பியுங்கள். திரை விலகும். கடல் தெரியும். செய்து பாருங்கள். புரியும்.
என்னுடைய முடிவை அருமையாகச் சொல்ல உதவிய முரட்டு நண்பர்களுக்கு நன்றி!'' என்று கூறி தன் சொற்பொழிவை முடித்தார்.
ஆனந்தமடைவதற்கான வழிமுறை முற்றிலும் அறிவியல் பூர்வமானது.
வேதியியலில் இந்த ரஸ்த்தோடு இந்த வேகிப்பொருளைச் பொருள்தான் ஆணித்தரமாக எப்படிக்கூற முடியுமோ, அதுபோல் அனந்தத்தையும் கூற முடியும்.
ஆனந்த வழியைப் பகுதி, பகுதியாகப் பிரித்துக் காண்பிக்க முடியும்.
உங்களுக்குள்ளிருக்கும் ரஸம் விட்டால் கிடைக்கும் பொருள்களுக்குப் பெயர் தான் ஆனந்தம். இந்த ஆன்மீகயியல் சம்பந்தப்பட்ட வினைகள்தான் ரஸவாதம்.
தியான ரஸவாதத்தின் சூட்சும விதிகள்
- உள்ளே பார்க்க முடியாதவற்றைக் தொடர்ந்து பார்.
- முயற்சிகள்ற்ற முயற்சி செய்.
- உணரமுடியாதவற்றை உணர். ஆழமாய் உணர்.
நிரூபணம்:
இவற்றைப் படித்ததும் ... புதிர்போல் உங்களுக்கு ஒரு முறைகூட தியான அனுபவம் கிடைக்கவில்லை என்பது உறுதியாகிறது. சிரத்தையோடு தியானம் செய்யுங்கள். ரஸவாதம் நிகழட்டும்!
நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும் நாம் ஆனந்த சக்தி ஓட்டத்தில்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இருந்தும் நமக்கிது தெரியவில்லை. காரணம் -விழிப்புணர்வு விரிந்து பரவவில்லை என்பதே!
மருத்துவக் குணமும் சக்தியும் கொண்ட நவபாஷாணம் என்பது, ஒன்பது விஷங்களை ஒன்றுசேர்த்து செய்யப்படுவது. ஒன்பது விஷங்களைச் சரியான அளவில், சரியான பக்குவத்தில் சேர்த்துவிட்டால், அடுத்த நிமிடமே நவபாஷாணம் ரெடி.
இதேபோல் நம் உடலில் ஏழு சக்திமையங்கள் இருக்கிறது. அவை சம்பந்தப்பட்ட உணர்வுகளின் பக்குவத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கிறது. இந்த ஏற்ற தாழ்வுகளே உடல் - மன நோய்களுக்கு வித்திடுகின்றன.
உடலில் ஏழு சக்கரங்களின் உணர்வுகளைச் சரியாகப் பக்குவப்படுத்தி, ஏழு சக்கரங்களின் சக்தி ஒடுங்கும் இடத்திற்குள் ஒடுங்கிப்போனால், அளப்பெரிய ஆனந்தக் கடலில் நுழைந்துவிடலாம்.
இன்று விஞ்ஞானம் நன்றாக வளர்ந்திருப்பதால், ஏழு சக்கரங்களின் உணர்வுகளைப் பக்குவப்படுத்தும் ரஸவாதத்தை தனி செய்முறை தியானங்களாகவே கற்றுக்கொள்ள முடியும்.
ரஸவாதத்தை உங்களுக்குள் நிகழ்த்திப் பாருங்கள்.
உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் தியானபீடத்தின் தியான சிகிச்சை மையங்களை அணுகினால் இலவசமாகவே தியானங்களைக் கற்றுப் பயன் பெறலாம்.
அர்த்தமுள்ள சம்பவம்
ஒக்லஹாமோ யுனிவர்சிட்டியில் ஒரு மருத்துவர் என்னிடம் கேட்டார் "நான் ஞானமடைந்து விட்டேனா இல்லையா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது. உறுதிசெய்வது?''
''நீங்கள் ஞானமடைந்து விட்டால், ஞானமடைந்தேனா இல்லையா என்ற சந்தேகம் இருக்காது. துளியளவுகூட சந்தேகமேயில்லாத அனுபவம் அது! இந்தச் சந்தேகம் இருக்கும்வரை நீங்கள் ஞானமடையவில்லை என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்" என்றேன்.
ஞானமடைய உங்களுக்குள் நிகழும் ரஸவாதங்கள் ஆழமானவை. தெளிவானவை!
ஒரு கரு பெண்ணைத் தாயாக்குகிறது… ஒரு குரு மனிதனை ஞானியாக்குகிறார்!
நீங்கள் ஞானியாவதற்கும்
நீங்கள் ஆனந்தமடைவதற்கும் கண்டிப்பாக ஒரு குரு இருந்தாக வேண்டுமா ?
இந்த வாசகத்தைப் படித்தபின் முடிவெடுங்கள்!
தனிமனிதன் சுயமாய் முடிவெடுக்காதவரை, ஒரு குருவோடு வாழ்நாள் முழுவதும் தங்கியிருந்தாலும் கூட குருவால் உதவ முடியாது.
தனி மனிதன் சுயமாய் முடிவெடுத்து விட்டால், ஒரு குருவின் உதவி அவனுக்குத் தேவையாய் இருக்காது. ஆனந்தத்தை அவனே அடைந்திடுவான்
அப்படியென்றால் குருவின் உதவி எதற்கு ? இதற்குத்தான்...
ஆனந்தமாய் வாழ முடிவெடுக்காதவனை முடிவெடுக்க வைப்பது சுலபமல்ல. அதற்கு ரஸவாதம் நிகழவேண்டும்.
அது நிகழாவிட்டால், முடிவெடுக்காத ஒரே ஒரு காரணத்தால், பல பிறவிகளை வீணடிக்க வேண்டியிருக்கும்.
தாய் வெறும் சமூக அந்தஸ்து. இன்னொரு புனைப்பெயர் மட்டுமே. ஆனால், தாய்மை என்பது மலர்ச்சி. அது குணமுதிர்ச்சி. தாய்மை குணத்தை எவராலும் பெறமுடியும். ஒரு ஆணால் கூட முடியும்.
காரணம் - அது குணரீதியான மாற்றம். உடல்ரீதியான மாற்றமல்ல.
ஒரு பெண், தாய்மைக் குணத்தைப் பெறுவதற்கு கரு ஒரு எளிய வழி. தாய் எனும் சமூக அந்தஸ்தும்,
குரு, உன் உள் உள்ள குருவை விழிக்கச் செய்பவர்!
சேய் எனும் வாழும் சாட்சியும் சேரச் சேர அப்பெண்ணுள் நிகழும் ரஸவாதங்கள் அவரை தாய்மை நோக்கித் தள்ளும்.
தாய்மையைப் பெறுவது ஒரு கௌரவமான இலக்காக மாறிவிடும். பெண் முழுத்தாயாக மாறுவாள் வெகு எளிதாக... இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டால்!
ஒருவர் ஞானமடைவதற்கு குரு ஒரு எளிய வழி. தியானம் தரும் பரவச அனுபவங்களும் ஞானக்கருத்துக்கள் தரும் பக்குவங்களும் சேரச் சேர - அவருக்குள் நிகழும் ரஸவாதங்கள் அவரை ஆனந்தம் நோக்கிக் தள்ளும்.
A + B = C ரீ + விழிப்பு = ஞானம்.
ஞானமடைவது என்பது குருவின் செயல்களால் ஒரு கௌரவமான இலக்காக மாறிவிடும்.
மனிதன் ஞானியாவான் வெகு எளிதாக ...
.குருவைப் பயன்படுத்திக் கொண்டால்! சுயமாய் முடிவெடுத்துவிட்டால்!
குருவா, சீஷ்யனா ?
வா!
அருகில் வா ! என் அருகில் வா ! என்னோடு கலந்துவிட வா ! நான் நீயாகிவிட, நீ நானாகி விட வா !
-
என்ற நிலையில் உங்களுக்குள் இருக்கும் ஆத்மா காத்துத் கொண்டே இருக்கிறது. அழைப்பை ஏற்பதும் உதாசீனப்படுத்துவதும் உங்கள் கையில்.
-
உங்களுக்குகாகக் காத்துக்கொண்டிருக்கும் ஆத்மாவை நீங்கள் திரும்பிப் பார்க்க, நீங்கள் ஆத்மாவில் கலக்க உதவுவதுதான் ஒரு குருவின் பணி.
-
குருவின் பணியை முழுமையாக அனுபவிப்பவர் சிஷ்யன். ஒரு குருவின் நோக்கம் தனிமனிதருக்குள் ஆனந்தத்தை மலர வைப்பதே.
சேலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்களோடு கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென ஒரு இளைஞர் எழுந்து கேள்வி கேட்க ஆரம்பித்தார். கேள்வி கேட்பதன் மூலம் என்னை மடக்கிவிட வேண்டும் என்பது அந்த இளைஞரின் நோக்கம்.
அந்த இளைஞர் எழுந்து, கேள்வி கேட்ட பாணியைப் பார்த்தவுடனேயே, அவர் நோக்கத்தைப் புரிந்துகொண்டேன்.
" நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?" அந்த இளைஞர் என்னிடம் கேட்ட கேள்வி இதுதான்.
"விவேகானந்தர், இராமகிருஷ்ணரிடம் கேட்டதைப் போல, நீயும் என்னிடம் கேட்கிறாயா?" என்று சிரித்துக் கொண்டே அந்த இளைஞரிடம் கேட்டேன்.
"ஆமாம்" என்றார் அந்த இளைஞர்.
"கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?" என்று விவேகானந்தர் இராமகிருஷ்ணரிடம் கேட்ட போது, "நான் பார்க்கிருக்கிறேன். உனக்கும் காட்டுகிறேன், கடவுளைக் காண வேண்டும் என்றால் என் பின்னாலேயே வா!'' என்று சொன்னார் இராமகிருஷ்ணர்.
குருவின் வார்த்தையின் மீது எந்தவிதமான சந்தேகமும் கொள்ளாமல், அவரையே பின் தொடர்ந்தார் விவேகானந்தர்.
"நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன். என்னுடைய இந்த இரண்டு கண்கள் மூலமாகவும் அதைத் தாண்டியும் நான் இறைவனைப் பார்த்து, அனுபவித்து அனுபூதி அடைந்திருக்கிறேன்" என்று நான் கூறும் வரை மாணவரின் முகத்தில் எவ்வளவு பரபரப்பும் கேள்வி கேட்டேன் பார் என்ற கர்வம் இளம் சிரிப்போடு ஓடிக்கொண்டிருந்தது.
அடுத்து நான் கேட்ட கேள்வியில்தான் இளைஞர் கொஞ்சம் ஆடிவிட்டார். "வா என்னோடு! இறைவனைக் காண்பிக்கிறேன். நீ
வரத் தயாரா?" கர்வம் கலைந்து, இளைஞரைக் கலக்கம் பற்றிக்கொண்டது. அதிர்ச்சி தாங்காமல் கூட்டத்தோடு கூட்டமாக நகர்ந்து மாயமாய் மறைந்துபோனார்.
நாம் எல்லோருமே எதிரிலிருப்பவரின் தகுதியையும் பக்குவத்தையும் ஞானத்தையும் திரும்பத் திரும்ப உரசிப்பார்க்கிறோம். நம் குரு மீது, நமக்கு இருக்கும் சந்தேகம்தான் நம்மை மீண்டும் மீண்டும் உரசிப் பார்க்க வைக்கிறது. ஆனால் நம்முடைய தகுதியையோ, பக்குவத்தையோ ஒருமுறைகூட நாம் அலசி ஆராய்வதில்லை.
உண்மையான குருவிற்கு எந்த ஒரு காலத்திலும் பஞ்சம் இருந்ததே இல்லை. ஆனால், உண்மையான சீடர்களுக்குத்தான் எல்லா காலங்களிலும் பஞ்சம் இருந்துகொண்டே இருக்கிறது.
மற்றவர் முதுகில் இருக்கும் அழுக்கைப் பற்றித் கவலைப்படும் நாம், நம்முடைய முகத்திலிருக்கும் கரியைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
தகுதியான குருவைத் தேடும் நாம், தகுதியான சீடராக இருப்பதில்லை. குருவைத் தரம் பார்க்கச் செய்யும் முயற்சிகளை விட்டு, உங்களுடைய உண்மையான நிறம் பார்க்க முயலுங்கள் உபயோகப்படுத்துங்கள். பிரயோஜனம் உண்டு. நாம் உண்மையிலேயே தகுதியான சீடராக மாறும்போது கடவுள், தகுதியான குருவை நம்மிடம் அனுப்புவார்.
இராமகிருஷ்ணர் உயிரோடு இருந்த போது, ஆயிரக்கணக்கானோர் அவரைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் சில நூறு பேர்தான் அவரின் மகிமையையும் அவர் இறைவனின் வடிவம் என்பதையும் உணர்ந்தனர்.
பக்குவமான சீடர்களால் மட்டும்தான் குருவை உணர முடியும். எனவே நம் கவனம் முழுவதும் நம்மைச் செம்மைப்படுத்திக் கொள்வதில் இருந்தாலே போதும். குரு தாமாகவே வந்து வாய்பார்.
"கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?" என்று என்னிடம் கேட்ட மாணவருக்கு, உண்மையிலேயே கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ளும் எண்ணமோ, சிந்தனையோ இல்லை.
உண்மையான குருவிற்கு எந்த ஒரு காலத்திலும் பஞ்சம் இருந்ததே இல்லை. இதனால், உண்மையான சீடர்களுக்குத்தான் எல்லா காலங்களிலும் பஞ்சம் இருந்துகொண்டே இருக்கிறது!
ஒரிரு ஆன்மீகப் புத்தகங்களைப் படித்துவிட்டு கடவுளைப் பற்றிய தேடுதலோ, சிரத்தையோ இல்லாமல், தங்களுடைய மேதாவித்தனத்தை மற்றவருக்குக் காட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள்தாம் இன்று அதிகம். இப்படிப்பட்ட மேதாவிகள் அதிகமாகிக் கொண்டிருப்பது வருந்தத்தக்கது. கடவுளைக் காணவேண்டும் என்றால், மிகப் பெரிய தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கும். கடவுள் காசைக் கொடுத்தவுடன் டேபிளுக்கு வந்து சேருகிற இன்ஸ்டன்ட் காபயோ, டீயோ அல்ல.
நல்ல குருவின் தகுதியைச் சோதித்துப் பார்க்கும் முன், நாம் நல்ல சீடராக இருக்கிறோமா என்று சோதித்துப் பார்க்க வேண்டியது முக்கியம். நல்ல சீடராக இருந்தால், கல்லும் கடவுளாகி வாழ்வில் ஒளி காட்டும். இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும். " எங்கிருந்து வருகிறாய் ? உன் அடையாள அட்டையைக் காட்டு, நீ கடவுள் என்று நான் நம்புவதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறாய்?" என்போம். கடவுள் என்பவர் நமக்குள்ளே இருக்கிறாரே ஒழிய, வெளியே இல்லை.
குருவைப் பற்றி நாம் அளவுக்கதிகமாகக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் சிரத்தை ஒன்றே இறைவனிடம் வழிகாட்டும். ஏனெனில், இறைவன் சிரத்தை வடிவமானவர். முழுமனதோடு நீங்கள் தேடினால் தேடியது நிச்சயம் கிடைக்கும்.
நீங்கள் ஆனந்தமாக வாழ முடிவு எடுக்காத வரை, குருவே நேரில் வந்தாலும் உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது.
'ஆனந்தமாக வாழ முழுமுமனதாக முடிவு எடுத்துவிட்ட பட்சத்தில்', நீங்கள் தேடாவிட்டால்கூட குரு உங்களைத் தேடி வருவார். இதில் விந்தை என்னவென்றால், அப்படி முழுமனதாக முடிவு எடுத்துவிட்ட பட்சத்தில், உங்களால் ஒரு நொடிகூட சும்மா உட்கார்ந்து நேரத்தை வீண்டிக்க முடியாது.
உங்களின் முடிவு, வாழ்க்கையின் முடிவையே மாற்றி விடும். முடிவை நீங்கள் எடுங்கள்! விடிவை இறைவன் பார்த்துக்கொள்வார்!
ஞான குரு
விவேகானந்தரிடம், ''எல்லாவற்றையும் ஆதாரத்தோடு பேசுகிறீர்களே. கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்க உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?'' என வம்பிழுக்கும் தொனியில் கேட்டார் ஒருவர்.
கணீர் குரலில் விவேகானந்தரிடமிருந்து பதில் வந்தது, "கடவுள் இருக்கிறார் என்பதை இதுவரை ஒருவராலும் நிரூபிக்க முடியாததே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்!'' கேள்வி கேட்டவர் இந்தப் பதிலால் ஆடிப்போனார்.
சில நிமிடங்கள் தாமதித்து கேட்டார்:
"'எப்படி? விளக்கமாகச் சொல்லுங்களேன்!"
'' ஒருவேளை கடவுள் இருக்கிறார் என்பதை அறிவியல் நிரூபித்து விட்டால் அறிவியல் கடவுளைவிட பெரிய விஷயமாகிவிடும். அறிவியலால் நிரூபிக்கப்படுமளவுக்கு விளையாட்டுப் பொருளல்ல கடவுள்.
கடவுள் பெரியவர். பிரமாண்டமானவர். கடவுள் இருப்பதை நிரூபிக்க முடியாததே, கடவுள் இருப்பதற்கான நிரூபணம்" எனச் சொல்லி முடித்தார் விவேகானந்தர்.
ஒரு ஞானகுருவால்தான் இதுபோன்ற சிக்கலான கேள்விகளுக்குக் கூட நயமாகவும் எளிமையாகவும் சொல்ல முடியும். புதிர் கேள்விகளுக்குப் புதுப்புது பதிலளிப்பதற்காக மட்டும் ஞானகுருமார்கள் பிறப்பெடுக்கவில்லை.
வரட்டு வேதாந்தம் பேசுவது பாவம். மனிதத்தன்மையற்ற செயல் முதலில் கோபம், ஆசை, துக்கம் விலக்கப்பட வேண்டும். அடுத்து அவை விலக்கப்படுவதற்கான சரியான டெக்னிக் (தியான முறை) கொடுக்கப்படவேண்டும் உண்மையான ஞானகுரு இதைத்தான் செய்வார்.
வம்பிழுக்கும் கூட அன்பொழுகும் மாற்றப் பிறப்பெடுத்தவர்கள் தான் ஞான குருமார்கள். ஞானகுருமார்களைச் சரியாக அணுகுபவர்கள், மகானாக மாறப் பிறப்பெடுத்த மனிதர்கள். நீங்கள்? ?
-
ஒரு சீடரால், குருவின் வார்த்தையை அப்படியே நம்பமுடியும். குருவின் நேரத்தையோ, தன் நேரத்தையோ சந்தேகங்களில் வீணடிக்கமாட்டார்.
-
ஒரு பக்தரால், குருவின் வார்த்தைகளைக் காது கொடுத்துக் கேட்க முடியும். ஆனால், நம்பி ஏற்றுக்கொள்ள நேரமாகும்.
-
ஒரு பார்வையாளர், இந்தக் குரு உண்மையிலேயே குருதானா ! என்று சோதிப்பதிலேயே நேரத்தை வீண்டித்து விடுவார்.
-
சீடர், பக்தர், பார்வையாளர் என்பது குருவை நீங்கள் அணுகும் விதத்தைப் பொறுத்தது. பரத ரிஷியைச் சோதித்துப் பார்க்கும் நோக்கில் தர்க்கவாதி ஒருவர் வந்தார்.
தர்க்கவாதி, "எனக்கு என்ன கற்றுக்கொடுக்க முடியும் உங்களால்?'' என்று கேட்டார் கர்வக் குரலில்.
பரதரிஷி, பாடங்களைவிட அதிகமாக நான் உனக்குக் கற்றுத் தந்துவிட முடியாது.
ஆனால் நீ கற்றுக்கொள்ள நினைத்தால் சமுதாயத்தால் கனவில்கூட கற்றுத் தர முடியாத பாடங்கள் என்னிடம் நிறைய இருக்கிறது'' என்றார் தீர்க்கமான குரலில். வார்த்தை விளையாட்டு
ஞானக் கருத்துக்களை எல்லோரும் எல்லோருக்குள்ளும் அதைக் கேட்கும் விருப்பம் மலரட்டும்!
அசோக சக்கரவர்க்கி.
ஞானக்கருத்துக்களைத் படிக்காதே. குடி!
- ஜென் கூற்று
ச சிலுசிலுவென இறங்கும் வசீகர வார்த்தைகள் அல்ல ஞானக்கருத்துக்கள். அவை ...
'ஞான அனுபூதி' எனும் வைரம் பாய்ந்த உளிகள்!
தேவையற்ற தர்க்கவாதங்களைத் தாண்டி, திறந்தமனதோடு அவற்றைப் பயன்படுத்தி பார்ப்பதே படிப்பதைத் தாண்டிய 'குடித்தல்'! செய்து பாருங்கள். அது உங்களை அருமையாக செதுக்கும்!
விளையாடலாம் என்று வந்த தர்க்கவாதி வார்த்தை வராமல் நின்றார்!
| யோகம் | மற்றவை |
|---|---|
| தீ | குருமார்களிடம் போகாதிர்கள் |
| என்றும் சொல்லும் | |
| தியானம் | குருமார்களிடம் போகாதிர்கள். |
பரத ரிஷியின் பதிலை எளிதாகப் புரிந்து கொள்ள உதவும் ஒரு சூஃபி கதை… அந்த சூஃபி மத ஞானகுரு பொதுமக்களிடம் வெகு நேரம் செலவழிப்பார். சிரித்துச் சிரித்துப் பேசுவார். பல விஷயங்களை வெகு பிரயத்தனப்பட்டு விளக்க முயற்சிப்பார்.
ஆனால், சீடர்களை மட்டும் கண்டுகொள்ளவே மாட்டார்.
அதே சீடர், முன்பொருநாள் பக்தராக இருந்திருப்பார், அப்போது அவரிடம் வெகு நேரம் பேசியிருப்பார்.
அதே பக்தர், சீடராகிவிட்டால் அவர் அவ்வப்போது பேசுவது சில வரிகளாத்தான் இருக்கும்.
புதிதாக வந்திருந்த சீடர் ஒருவரால், ''குரு ஏன் இப்படி நடந்துகொள்கிறார்?'' என்பதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. எனவே நேரடி விவாதத்தில் இறங்கிவிட்டார்.
சீடர், ''நீங்கள் ஏன் சீடர்களோடு மிகக் குறைந்த நேரம் மட்டுமே பேசுகிறீர்கள் ? நீங்கள் எங்களைக் கண்டுகொள்வது மாதிரியே எனக்குத் தெரியவில்லை. ஏன் இப்படி ?'' என்று கேட்டார்.
"எல்லாம் நீங்கள் உருப்படுவதற்காகத்தான்" என்றார் தீர்க்கமான குரலில். ''அப்படியென்றால்... பொதுமக்களோடு நீங்கள் வெகு நேரம் பேசுவது!'' "அது அவர்களுடைய நலனுக்காக.
ஒன்றைப் புரிந்துகொள். நீ இங்கே வாழ்ந்தாலும் குடும்பத்தில் வாழ்ந்தாலும் ஆன்மீக வாழ்க்கை வாழ முடியும்.
சொல்ல விரும்புவது ... ஆனந்தம்! ஆனந்தம்! ஆனந்தம்! அது சாத்தியம். சாத்தியம்.. சாத்தியம்... எல்லோர்க்கும்... நிச்சயமாய் எல்லோர்க்கும்!
ஆன்மீகம்தான் வாழ்க்கை, ஆனந்தம்தான் எல்லை என்று முடிவெடுத்து விட்டு வந்து விடுபவர் தான் சீடராகிறார்.
ஒரு சீடருக்கு, நான் சொல்லும் வார்த்தைகளை நம்புவதும் அதை வாழ்வில் நடைமுறைப்படுத்தி பார்ப்பதும் எளிது.
நான் சொல்வது அவர் நலனுக்காகத்தான் என்பதைப் பூரணமாக உணர்ந்துவிட்ட காரணத்தால், அவரிடம் சில வரிகள் நான் பேசினாலே போதுமானது.
அதை நடைமுறைப்படுத்த பல நாட்கள் தொடர்ந்து உண்மையாக அவர் முயற்சிப்பார். ஆனால் பொதுமக்களின் நிலை வேறு. தங்களுடைய வாழ்வின் ஒரு பகுதிதான் ஆன்மீகம் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்குத் தங்கள் வாழ்க்கையையே ஆன்மீக வாழ்க்கையாக (ஆனந்தமாக) வாழ முடியும் என்று புரிய வைப்பது கடினம். அவர்கள் மனம் இந்தச் சத்யத்தை நம்பாமல் கஷ்டப்படும். அதனால்தான் பக்தர்களுக்கு நிறைய நேரம் நான் செலவிட வேண்டியிருக்கிறது. பக்தருக்கு குரு கற்றுக் கொடுக்க வேண்டும்.
சீடர் என்னிடமிருந்து கற்றுக்கொள்வார். புரிந்ததா?'' என்று விளக்கம் சொல்லி முடித்தார்.
சீடர், "அதெல்லாம் சரி ... எங்களுக்கும் கற்றுக்கொடுக்க நீங்கள் ஏன் நேரத்தை செலவு செய்யக்கூடாது?'' என்று கேட்டார்.
- குருவைச் சோதிப்பவர் பார்வையாளர். குருவைக் கண்டுகொண்டவர் பக்தர். குருவைப் புரிந்துகொண்டவர் சீடர்! ஞானி தன் சீடர்களைப் பார்த்து, ''ஏ! பசங்களா ... இவர் இன்னும் பக்தனாகவே இருக்கிறார். சீடனாகவில்லை... இவர் சீடராகும்வரை, இவர் இஷ்டப்படி ஆஸ்ரமத்தில் இருக்கட்டும். இவருக்கு ஆஸ்ரம விதிகளைக் கொஞ்ச காலம் தளர்த்திவிடுங்கள்'' என்று கூறிவிட்டு,
நிஜத்தை நம்பமுடியாமல் கஷ்டப்படும் சீடரைக் கருணையோடு பார்த்து, "சரியப்பா… மேலே சொல்லு, உன் பிரச்னையை" என்று காலார நல்வெளியில் நடந்து கொண்டே கேட்டு, அன்று வெகு நேரம் அவருக்காகச் செலவு செய்தார்.
ஆன்மீகத்தை ... கற்றுக்கொள்வது சுலபம். கற்றுக்கொடுப்பது கடினம்.
காரணம், கற்றுக்கொள்பவர் ஞானகுருவிடமிருந்து கற்றுக்கொள்ள மனதளவில் தயாராக இருப்பார். ஆனால், ஒரு பக்தருக்கு ஞானகுரு கற்றுக் கொடுக்க முயற்சிக்கும் போது - பக்தரின் மனதை கற்றுக்கொள்ள தயார்படுத்துவதிலேயே குருவின் நேரம் வீணாகிவிடும்.
கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய்யைத் தேடி அலைபவர் போல், உள்ளுக்குள் பேரின்பம் இருக்க, வெளியே சிற்றின்பத்தை மனிதர்கள் தேடி அலைந்தாலும்,
தேடுபவரிடம், ''மனிதா! நீ தேடுவது உன்னிடம்தான் இருக்கிறது'' என்று எவ்வளவு நேரம் முயன்று புரிய வைக்க முயற்சித்தாலும்,
மனித மனது புரிந்துகொள்ள முயற்சிப்பதைவிட, புரிந்துகொள்ள முடியாதது போல் நடிப்பதிலேயே காலத்தை ஓட்டிவிடும்.
மனிதர்களும், ''அப்பப்பா! ஞானகுரு சொல்வதை எல்லாம் புரிந்து கொள்வதற்கே நாம் போன பிறவியில் பெருந்தவம் செய்திருக்க வேண்டும். நம்மைப் போன்றவர்களுக்கு அவ்வளவு பெரிய ஞான விஷயங்களைப் புரிந்துகொள்வது கடினம்'' என்று கூறி எளிதாகத் தப்பிக்கவே முயற்சிப்பார்.
மனம் போடும் தப்புத்தாளத்திற்கேற்ப ஆடிக்கொண்டிருக்கிறோம் என்ற உண்மை பலருக்குக் கடைசி வரை தெரிவதே இல்லை.
மனம்தான் ஆனந்தத்தை அடையும் வழியைப் புரிந்துகொள்ளவிடாமல் தடுக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால், ஞானகுருவின் பணி எளிதாகிவிடும். சீடராக மாறுவது மனோரீதியான மாற்றம்.
ஒரு ஆஸ்ரமத்தில் தங்குவதால் மட்டுமே சீடராகிவிட முடியாது.
ஞானகுருக்களான சைதன்யர், ராமகிருஷ்ணர், ரமணரிடம் பல சீடர்கள் குடும்பஸ்தர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களின் திறந்த மனம் ஞானகுருவின் வழி காட்டுதலை அப்படியே ஏற்றுக்கொள்ளும். இது போன்றவர்களின் ஆன்மீக வளர்ச்சியும் வேகமாக இருக்கும்.
ஒரு ஞானகுருவிடமிருந்து முழுப்பலனைப் பெற விரும்பினால் மனதளவில் சீடராக இருக்க வேண்டும். மற்றதை ஞானகுரு பார்த்துக்கொள்வார்.
அர்த்தமுள்ள சம்பவம்
பத்தாயிரம் துறவிகளையும் பல லட்சம் பக்தர்களையும் கொண்ட ஜென் மடாலய குருவைப் பார்க்கச் சென்ற அரசர் கேட்டார். "உங்களிடம் எத்தனை சீடர்கள் இருக்கிறார்கள் ?"
ஜென் குரு சொன்னார்: "ஓ, சீடர்களா! அதிகபட்சமாக நான்கைந்து பேர் இருக்கலாம்''.
சீடராவது குருவின் நேரத்தை மிச்சப்படுத்துவதைவிட, உங்களின் நேரத்தைத் தான் அதிகம் சேமிக்கும். சீடராவது குருவின் நல்லுக்காக அல்ல. உங்களுக்காக. அதற்காக மனம் திறவுங்கள்.
நான் ஞானி – இதைத் தைரியமாய் உலகுக்குச் சொல்லுங்கள்!
கியான உளிகள் காணாமல் போனதால் ஆட்டுக்குட்டிகளோடு வளர்ந்த சிங்கக்குட்டி ஆட்டுக்குட்டியாகிடுமா ?! அது அப்படி நம்பினால்தான் அது தகுமா ?
என்றாவது ஒரு நாள், தான் ஆட்டுக்குட்டிதான் என நம்பும் சிங்கக்குட்டி நிச்சயம் நீர்நிலையை நெருங்க நேரிடும். நீர்நிலையில் தன் நிலையைப் பார்க்கும். அந்த நன்னாளில் அது, 'நான் சிங்கம்' என உணர்ந்து கொள்ளும். பின் அறிவிக்கும். சிங்கமாய் வாழும்.
இதைச் சொன்னால் நம்பமாட்டீர்கள் ...
நீங்கள் ஒவ்வொருவரும் ஏற்கெனவே ஞானமடைந்து விட்ட ஞானிகள்.
நம்ப மறுத்தாலும் இது உண்மையே.
உண்மை மறந்து போனதால் பத்தோடு பதினொன்றாய் வாழும் நீங்கள், 'நான் சராசரி மனிதன்' என நம்பினால் அது நிஜமாகிவிடுமா ? ...
தியானத்தில் என்றாவது ஒரு நாள், உங்களின் உண்மை நிலை தியானநிலையில் பிரதிபலிக்கப்படும். 'நான் ஞானி' என அறிந்துகொள்வீர்கள்.
இது நெடுங்காலத் திட்டம்.
உடனடியாய் உண்மை உணர்ந்திட எளிய வழி ...
ஞானம் அடையும் வரை காத்திருக்காதீர்கள்.
இன்றே ஞானத்தையும் ஆனந்தத்தையும் வெளிப்படுத்த ஆரம்பியுங்கள்.
அது உண்மையே என்பது புரியும்.
இது கம்ப சூத்திரமல்ல. சும்மா கன்னத்தில் தட்டிச் சொல்லுங்கள்.
'இன்றிலிருந்து நான் ஞானி.
உணர்ந்துகொள்ளுங்கள் ... உலகுக்குச்சொல்லுங்கள். 'ஞானி' என்று!
இதை நான் கொண்டாடப் போகிறேன்! ' தைரியமாய் இதைச் செய்யுங்கள்.
ஞானியாய் வாழ்வீர்கள்.
இதுவரை படித்தது புதிராய் தெரிந்தால், இன்னும் ஆட்டுக் குட்டியாகவே நீங்கள் இருக்கிறீர்கள் எனத் தெரிந்து கொள்வீர்கள்.
இருந்தாலும், நீங்களும் சிங்கக்குட்டி என்பது மாற்ற முடியாத உண்மை.
இந்த புரட்சி கருத்துக்கள் உங்களை புரட்டிப் போடுமளவுக்கு உள்வாங்குங்கள்.
இளமையில் சன்யாசம்!
உண்மையான சன்யாசிகள் பிறக்கிறார்கள். உருவாக்கப்படுவதில்லை.
இளமையில் இளமையை இழப்பவர், இளைஞன் என்ற போர்வைக்குள் இருக்கும் கிழவன்.
வாழ்க்கையில் சுவை மிகுந்த பகுதி - இளமை!
படிப்பு, வேலை, எதிர்கால வாழ்க்கை பற்றிய பயம், இவற்றால் இன்றைய உலகில் வாழ்க்கையின் சுமைமிகுந்த பகுதி - இளமை என்றாகிவிட்டது.
என்னைப் பார்க்கிறவர்கள் ''இந்த வயதில் சன்யாசமா? ! அல்லது இளமையில் துறவா?'' என்று கேட்கிறார்கள்.
ஒருமுறை, ஒரு கூட்டத்தில் நான் பேசிக்கொண்டிருந்தேன். கேள்வி பதிலுக்கான நேரம் வந்தது. வருணாசிரம தர்மம் பற்றிக் கேள்வி கேட்டவரோ, உடம்பெல்லாம் மூளை படைத்த ஒரு பண்டிதர். "தாங்கள் கிரகஸ்தத்தில் இருக்க வேண்டிய நேரத்தில், சன்யாசத்தில் இருக்கிறீர்களே?' என்று என்னை மடக்கப் பார்த்தார், அந்தப் பண்டிதர்.
நானோ, "தாங்கள் வானப்பரஸ்தம் மேற்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் கிருகஸ்தராக இருக்கிறீர்கள்!" என்றேன். அவர் அதற்குப் பதில் ஒன்றும் பேசமுடியாமல் தலைகுனிந்து அமர்ந்துகொண்டார்.
நாட்டில் எல்லோருமே துறவிகளாகிவிடுவது சாத்தியமில்லை. ஆகவே என்னைப் போலச் சிலர் துறவிகளாகி, நாங்கள் ஆனந்தமயமாவது மாத்திரம் அல்லாமல், பிறருக்கும் ஆனந்தமயுமாவதற்கான வழிகளைக் காட்டுகிறோம். இது ஒரு சமுதாயத் தேவை. இறைச்சித்தம்.
நமது வரலாற்றில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே போர் நிகழ்ந்தபோது, சிறிய அரசர்களையெல்லாம் அங்கொருவர், இங்கொருவராகச் சேர்த்துக்கொண்டார்கள். ஆனால், தமிழகத்தில் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்கிற மன்னன் மட்டும், எந்தப் பக்கமும் சேரவில்லை. 'எல்லோரும் போரிடப்
போனால் மக்களை வயல்களில் பாடுபட வைப்பது யார்? உணவு உற்பத்தியைப் பெருக்குவது யார்?' என்று, அந்த மன்னன் உற்பத்தியில் மாத்திரமே கவனம் செலுத்தினார். அந்தப் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனைப் போல ஒன்றிரண்டு பேராவது, தாங்கள் பெற்ற ஞானத்தை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டியிருக்கிறது.
இளைஞனே! உன்னுடைய ஆனந்த வாழ்விற்கு நீயே முழுப் பொறுப்பு!
இளமையில் முடியாதது, முதுமையிலும் முடியாது. சராசரி மனிதர்களைப் பொறுத்தவரை இது உண்மை. முதுமையில் பணக்காரர்கள் ஆனவர்களும் உண்டு. பதவிக்கு வந்தவர்களும் உண்டு.
பொதுவாக நாம் பின்னால் பெறுகிற வெற்றியின் விதைகள், இளமையிலேயே ஊன்றப்படுகின்றன. இளமை என்பது வாழ்வின் சாரம். இதைப் பிழிந்து அர்ப்பணிக்காவிட்டால் உயர்ந்த நிலைகளை அடைய முடியாது.
இளமையில் உருவாகிற இந்த அர்ப்பணிப்பே ஞானமாகவோ, பணமாகவோ, பதவியாகவோ வந்து அமைகிறது. இளம்வயதில் உலகம் போகிற பொதுவான போக்கிலிருந்து தங்களை ஒதுக்கிக்கொண்டு, அரிய தவங்களால் ஞானம் பெற்றவர்கள் உண்டு.
இறைவனே சிலரைப் பிள்ளைப்பிராயத்திலேயே ஆட்கொண்டதும் உண்டு. ஆனால், அவ்வாறு நிகழ்வதற்கும் எப்போதோ, எந்தப் பிறவியிலேயோ ஒரு தேடுதல் இருந்திருக்க வேண்டும்.
சீர்காமியில் அருள்மிகு கோணியப்பர் கோயில் குளக்கரையில் பார்வதியின் பாலை அருந்தி, தோடுடைய செவியன் என்று பாடியபோது, திருஞானசம்பந்தருக்கு வயது மூன்று அல்லது ஐந்து என்று சொல்லப்படுகிறது.
நம் வரலாற்றில் ஆதிசங்கரர், விவேகானந்தர் போன்றவர்கள் இளமையிலேயே உலகத்தைத் துறந்து, பிறகு தாங்கள் வந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள்.
சன்யாசி ஆவதற்கு வீரர்களுக்கெல்லாம் இல்லாத அடுத்தவர்களை வெற்றி கொள்கிறார். சன்யாசி வெற்றி கொள்கிறார். சன்யாசிகளாகி விட முடியாது.
விதை சின்னதாக இருக்கிறது என்பதற்காக, உள்ளே ஆலமரம் இல்லை என்கிற முடிவிற்கு வந்துவிடக்கூடாது. அல்லாமா இக்பால் என்கிற கவிஞர் அழகாகச் சொல்கிறார்.
'இளம்பிறையே!' வருந்தாதே! உனக்குள்ளேதான் பூர்ணச்சந்திரன் புதைந்திருக்கிறான்!
ஆகவே இளமைதான் வெற்றிக்கான களம். கிரிக்கெட் ஆடுகிற வீரர்களுக்கே வயது வரம்பு உண்டல்லவா ? மனம் இளமையாகவே இருக்கலாம். ஆனால், முதுமையில் உடம்பு ஒத்துழைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இளமையிலேயே தொடங்குவது நல்லது.
இந்த உலக வாழ்க்கையில் இருக்கிற நாம் எல்லோரும் துறவிகளாக இருக்கலாம். எப்படி ? இராமகிருஷ்ண பரமஹம்சர் அழகான கதை ஒன்று சொல்கிறார்.
"ஒரு பணக்காரர் வீட்டில் பணிப்பெண் ஒருவர் வேலைக்கு இருந்தார். அவர் அந்தப்
பணக்காரரின் பிள்ளைகளை 'ஹரி, ராமா' என்றெல்லாம் கொஞ்சுவார். ஆனால் ஊரில் வறுமையில் வாடுகிற, தன்னையே நினைத்து ஏங்குகிற தனது குழந்தைகளையே நினைத்துக் கொண்டிருப்பார்' என்கிறார். அவ்வாறே நாம் இந்த உலகத்தில் இருந்தாலும், இறைச்சிந்தனையோடு இருக்க வேண்டும்.
இளமையை எதற்காக அர்ப்பணிக்கிறோமோ, அதையே வாழ்வில் வெகுமதியாகப் பெறுகிறோம். இளைஞர்கள் மாத்திரமல்ல, எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்.
ஆன்மீக வாழ்க்கை, சாதாரண வாழ்க்கை என்ற இரண்டு வகைப்பட்ட வாழ்வுமுறைகள் இல்லை.
ஆன்மீக வாழ்க்கை என்றால், ஆனந்தமயமான வாழ்க்கை என்று பொருள். மனிதர்கள் தான் ஆனந்தமாக இல்லை என்று உணர ஆரம்பித்தபின், சுயபச்சாதாபத்தால் சப்பைக்கட்டுக் கட்ட உருவாக்கப்பட்ட title தான் சாதாரண வாழ்க்கை.
எல்லோரும் ஆனந்தத்தின் உச்சிக்குச் செல்லவே ஆசைப்படுகிறோம், ஆனால், அதை நமக்குப் பிடித்த வழியில் காதல், பேர், புகழ், பணம், பதவி என்று காளை போல வேகமாக அனுபவிக்க, உழைக்க ஆரம்பிக்கிறோம்.
ஆனால், நாம் தேடும் ஆனந்தத்தை வெளியில் பெற முடியாது என்று புத்தன் முதல் இரமணமகரிஷி வரை, வெவ்வேறு மொழிகளில் புலன் இன்பத்தின் உச்சத்தை அடைந்து தாண்டியவர்கள், கூறிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஐந்து புலன்களின் மூலமாக இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கும் புலன் இன்பத்தில்கூடத் தவறே இல்லை. ஆனால் அனுபவிக்கத் தேவையான சக்தியும் புத்தியும் தேவையான அளவு இல்லாமல் சுகம், திருப்தி தேடி அலைய ஆரம்பிக்கும் போதுதான், பிரச்சனையே ஆரம்பிக்கிறது.
வாழ்க்கையை அனுபவிக்கத் தேவைப்படும் சக்தியை தியானம் எளிதில் உருவாக்கித் தரும். உலகையும், மனிதர்களையும் புரிந்துகொண்டு, நிம்மதியாக இருக்க உதவும். புரிந்துகொள்ளும் தன்மையை வளர்க்க, ஞானக்கருத்துக்கள் பெரிதும் உதவும்.
தியானமும் ஞானமும் வாழ்க்கையை அனுபவிக்காமல் நழுவவிட்ட வயோதிகரைவிட, வாழ்க்கையை அணு அணுவாக அனுபவிக்கத்துடிக்கும் வாலிபருக்குத்தான் மிக மிக அவசியம்.
| குணம் | இன்று அதிகபட்ச சுவை, |
|---|---|
| குறை | அதிகபட்ச சுமை நிறைந்த |
| உடை | வாழ்க்கைப்பகுதி இளமை! |
| மை |
ஞானிகளை நம்பாதே!
-
நம்பினால் 100% முழுமையாக நம்புங்கள். நம்ப முடியாவிட்டால், ஞானிகளின் கூற்றுகளை 100% முழுமையாக நம்பாதீர்கள்.
-
ஞானம் பற்றிய ஞானக்கூற்றுக்கள் அனைத்தும் முக்காலத்திலும் மாறாத சத்தியங்கள்.
-
ஒரு ஞானியின் கூற்றுக்களில் நீங்கள் சிலவற்றை மாத்திரம் நம்பும் போது
-
நீங்கள் உங்களுக்குப் (அகங்காரத்திற்கு) பிடித்த விஷயங்களை மட்டும் ஒரு ஞானியிடம் இருந்து எடுத்துக்கொள்ளும் போது, உங்கள் அகங்காரத்திற்குத் தீனியிடுகிறீர்கள்.
-
காரணம், ஒரு ஞானி என்னதான் சத்தியத்தைக் கூறினாலும் அதை நீங்கள் கண்ணோட்டத்தைப் பொறுத்தும் அதை மனக்கருத்தாகத்தான் புரிந்து கொள்வீர்கள்.
-
அரைகுறையாக ஒரு ஞானியின் கருத்தை நம்பும் போது, உங்கள் மனக் குறைகள் உங்களுக்கு நிறை போலத் தெரிய ஆரம்பிக்கும். அகங்காரம் உயிர் பெறும்.
-
ஞானியின் கூற்றை முழுமையாக நம்பினால் மாத்திரமே சத்தியம், சக்தியமாக உங்களை வந்து சேரும். இல்லையென்றால், சக்தியம் சாதாரண மனக்கருத்தாகவே உங்களுக்குள் நுழையும்.
-
மனக்கருத்தைப் பெற்று அகங்காரத்தை வளர்க்க, ஏழைகள் தேவையில்லை. வீதியில் விற்கப்படும் சில தரம் கெட்ட புத்தகங்களே போதும். தரம் குறைந்து பேசும் சில மேடைப்பேச்சாளர்களின் பேச்சுக்களே போதும்.
-
சத்தியத்தை நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
(சூஃபிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? நம் சித்தர்கள் மாதிரி, ஞானத்தைத் தேடி நாடோடிகளாய் அலைபவர்கள். அவர்கள் கண்டடைந்த ஞானத்தை மற்றவர்களுக்கும் எடுத்துச்சொல்வார்கள்.
பிஸ்கான் என்கிற நகரத்தில் பயாசித் என்ற சூஃபி ஞானி ஒருவர் இருந்தார். சூஃபி ஞானிகளிலேயே மிகவும் புகழ்பெற்றவர் இவர்தான்.
ஒருநாள் அந்த நாட்டு அரசர், பயாசித்தின் சீடராக விரும்பினார். அரசரே நேரில் வந்து அனுமதி கேட்டார். அரசர் அனுமதி கேட்கும்போது இல்லை என்று யாரால் சொல்ல முடியும் ?
அந்த அரசருக்குச் சீடனாவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது என்கிற உண்மை அந்த சூஃபி ஞானிக்கும் தெரியும். என்றாலும் அந்த உண்மையை எப்படிச் சொல்ல முடியும் ?
அரசரின் தகுதியின்மையை நேரடியாக எடுத்துச் சொல்வதைவிட, ஏதாவது ஒரு சம்பவத்தின் மூலம் உணர்த்திவிடலாம் என்று முடிவுசெய்தார் அந்த சூஃபி ஞானி.
"மன்னா, நாட்டில் ஞானிகளுக்குப் பஞ்சமில்லை. நிறைய பேர் சடையும் தாடியுமாய் அலையும் போது, என்னை நீங்கள் நாடி வந்தது ஏன்? நான் மிக மிகச் சாதாரணமானவன் ஆயிற்றே!'' என்றார் அந்த சூஃபி ஞானி.
"ஞானியே, நீங்கள் மிக நல்ல மனிதர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால்தான் உங்களைத் தேடி வந்தேன்'' என்றார் அரசர்.
"என்னைக் கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்துப் பாருங்கள், அப்புறம் ஒரு முடிவுக்கு வாருங்கள்'' என்றார் சூஃபி ஞானி.
சில நாட்கள் கழித்து, அந்த அரசர் காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். அப்போது பயாசித், ஒரு சிறிய ஏரிக்கரையில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார்.
ஞானத்தையும் ஞானிகளையும் தொடக்கத்தில் ஆராய்ச்சி செய்யலாம், தவறில்லை. தொடர்ந்து ஆராய்ச்சி செய்வதுதான் மகா தவறு. அதனால் பிரயோஜனம் ஏதுமில்லை.
பயாசித் மட்டும் தனியே உட்கார்ந்திருந்தால் பரவாயில்லை. கூடவே இன்னொரு பெண்! அந்தப் பெண்ணும் ஒரு தம்ளரில் ஏதோ ஒன்றை ஊற்றி அவரிடம் கொடுத்துக்கொண்டிருந்தாள். என்ன அது ?
அரசர் குழம்பிப் போனார். இவரை எவ்வளவு பெரிய ஞானியாக எண்ணிக் கொண்டிருந்தேன்! ஏரிக்கரையோரம் பெண்ணோடு உல்லாசமாக அல்லவா இருக்கிறார்! நல்லவேளை இப்போதுதாவது அவரைப் பற்றி நேரடியாகவே பார்த்துக் தெரிந்து கொள்ள முடிந்ததே! இனிமேல் அவரின் சீடராக ஆகக்கூடாது என்று முடிவு எடுத்தார்.
ஆனால் உண்மையில் நடந்தது என்ன? அந்த சூஃபி ஞானியோடு இருந்த பெண், அவருடைய சகோதரிதான். பயாசித்துக்கு அவர் ஊற்றிக் கொடுத்தது வெறும் தண்ணீர்தான்.
அருகில் வந்து பார்த்தபின் உண்மையை உணர்ந்த அரசர், ''குருவே அவசரத்தில் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு விட்டேன். என்னை நீங்கள் சீடராக ஏற்றுக் கொள்ள வேண்டும்'' என்று கெஞ்சினார். "உன்னுடைய சீடராவதற்கு உனக்கு எந்தத் தகுதியும் இல்லை'' என்று சொல்லி அனுப்பிவிட்டார் ஞானி.
ஏன் இந்தக் கதை ? நம்பிக்கை வைத்து செயல்பட வேண்டிய இடத்தில், தவறாக ஆராய்ச்சி செய்யக்கூடாது என்பததைச் சொல்லத்தான்.
'ஏன் எதற்கு ?' என்கிற கேள்விகளை எழுப்பவது அறிவின் அடிப்படையான அம்சம்தான். அதற்காக எடுத்ததற்கெல்லாம் வினா எழுப்பிக் கொண்டிருந்தால், உங்களிடம் இருக்கும் நம்பிக்கை வற்றிப் போய் வறண்ட நிலம் போல ஆகிவிடுவீர்கள்.
'வெறும் நம்பிக்கை, அறியாமையில் அல்லவா நம்மைத் தள்ளிவிடும் ?. கேள்விகளைக் கேட்காமல் விட்டுவிட்டால், உண்மையை எப்படித்தான் அறிந்து கொள்ளவது?' என்று கேட்கிறீர்களா? இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியும் தகவல்கள் உங்கள் ஊனக் கண்களினால் (மனக்கண்களால்) நீங்கள் தெரிந்து கொண்டவை.
உங்கள் ஊனக்கண்களைத் தாண்டி உணர்வுபூர்வமாகப்பார்க்க ஆரம்பியுங்கள். பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தைப் பார்த்துப் பிரமிப்பீர்கள். பிரபஞ்சமே புதிராகத் தோன்றும்.
பிரபஞ்சம் எவ்வளவு புதிர் நிறைந்ததோ, அதே அளவுக்குப் புதிர்ப்பெட்டகமாக இருப்பது உங்கள் மனம். உங்கள் மனதில் பயணம் செய்யுங்கள்.
உங்கள் மனதைப் பற்றி நீங்கள் அறியும் உண்மைகள்தான் நிரந்தரமானவை. மற்றவையெல்லாம் தற்காலிகமானவை. தற்காலிகமானதைப் பெறுவதற்காக நிரந்தரமானதை இழப்பவன் முட்டாள்.
நம்புங்கள், நம்புங்கள், நம்புங்கள்! நம்பிக்கைதான் வாழ்க்கை! நம்பிக்கைதான் எல்லாம் !
இல்லையெனில், நம்பாதீர்கள்!
உங்கள் மனதைப் பற்றி நீங்கள் அறியும் உண்மைகள்தான் நிரந்தரமானவை. மற்றவையெல்லாம் தற்காலிகமானவை!
அரைகுறையாக நம்பி, அரைகுறையாகப் புரிந்துகொண்டு, 'அந்த ஞானி இப்படித் தான் சொன்னார்... அவர் சொன்ன கருத்துகளிலேயே இதுதான் சரி. எனக்குப் பிடித்தது. அவர் ஞானிதான்... அதற்காக அவர் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? அந்த ஞானி அதன் மூலம் என்ன சொல்லவருகிறார்னா?' என்று வெட்டி வேதாந்தம் பேசி, உங்கள் பேச்சைக் கேட்டவர் 'அந்த ஞானியால்தான் இவர் இப்படி லூசு மாதிரிப்பேச ஆரம்பித்துவிட்டார்' என்று நினைத்து, ஒரு ஞானியை மற்றவர்கள் இழக்க நாம் காரணமாக இருந்துவிடக்கூடாது.
நம்பினால் 100% நம்புங்கள். வெட்டியாகப் பேசமாட்டீர்கள். வெற்றியை நோக்கி நடக்க ஆரம்பித்துவிடுவீர்கள்!
சரணாகதி ...
ஒரு நள்ளிரவில் இருந்த குருவிடம் வரம் கேட்டு வந்த குடும்பஸ்தரிடம், "காட்டுக்குள் வடக்கு நோக்கிப் போ. ஒரு பெரிய குகை காண்பாய். நீ விரும்புவது அங்கேயிருக்கிறது" என்றார்.
அவர் சரணாகதியை நம்பிச் சென்றவர் ...
அங்கே கொட்டிக் கிடந்த வெள்ளிச்சாமான்களை அள்ளிக்கொண்டு வந்து நன்றி சொன்னார். ஞானியோ "நாளை இன்னும் கொஞ்சம் தூரம் செல் '' என்றார்.
நம்பிச் சென்றவர் பொற்காசுகள் நிறைந்த இன்னொரு குகையைக் கண்டுவிடித்து, அதை அள்ளிக்கொண்டு வந்து மீண்டும் நன்றி சொன்னார்.
"இன்னும் முன்னேறிச் செல்!" என்றார் மீண்டும்.
இம்முறை வைரங்கள் நிறைந்த குகையைக் கண்டு, வேண்டிய மட்டும் அள்ளிக்கொண்டு வீடு திரும்பும் போது குடும்பஸ்தருக்கு புது யோசனை பிறந்தது ...
"இவ்வளவு பொக்கிஷங்கள் இருக்குமிடம் தெரிந்தும் ஞானி இவற்றைச் சீந்தாமல் மரத்தடியில் நிம்மதியாக இருக்கக் காரணமானது எது?" என்ற கேள்வி பிறந்தது.
இம்முறை காலடியில் விழுந்தார். ''உங்களிடமிருக்கும் பொக்கிஷங்களைத் தாண்டிய அந்த ஏதோ ஒன்று எது? அது எனக்கு வேண்டும்" எனச் சொல்லி ஞானியிடம் சரணடைந்தார்.
பொக்கிஷங்களின் நமக்குள்ளிருக்கும் பொக்கிஷத்தைக் கண்டுகொள்ளவே ஒவ்வொருவரும் முயற்சிக்கிறோம். அதற்குச் சரணாகதி ஓர் எளிய வழி.
தெய்வத்தை வணங்குவதாய்ச் சொல்லி சரணாகதி நிகழாமலே காலந்தள்ளலாம். மனிததெய்வத்திடமும் தெய்வ மனிதனிடமும் சரணாகதி நிகழாமல் காலந்தள்ள முடியாது. மனிதெய்வம் - மனிதன் தெய்வமனிதன் - ஞானி
எல்லாவற்றையும் அனுபவித்தப் பின் நிகழலாம். இல்லை, வெறும் பக்தியால், முழுஞானத்தால், புரிந்துகொள்ளுதலால் என எப்படி வேண்டுமானாலும் நிகழலாம். எல்லா தியானமுறைகளும் எல்லா போதனைகளும் முயற்சிப்பது ஒரே ஒரு விஷயத்தை நிகழ்த்தத்தான். அது உங்களுக்குள் சரணாகதியைப் பிறக்கச் செய்வதே!
- ★ 'என் உடலும் தியானத்திற்கு வளையாது. என் மனமும் தியானத்தால் அடங்காது . ஆனால், எனக்கு ஆன்மீகத்தில முழு நம்பிக்கை உண்டு' என்று கூறும் மனிதருக்குச் சரணாகதிதான் எளிய வழி.
- ★ ஆழ்ந்த அன்பும் நிறைந்த மரியாதையும்தான் சரணாகதிக்கு மிக மிகத் தேவையான அடிப்படை அம்சங்கள்.
- ★ துக்கத்தைத் தாண்டி, கவலையில்லாத ஆனந்த வாழ்விற்கு துரிதமாக அழைத்துச் செல்லும் ராக்கெட்தான் சரணாகதி.
- ★ சரணாகதி வெறும் உதட்டிலிருந்து பிறக்கக்கூடாது. உள்ளத்தின் ஆழத்திலிருந்து உணர்வுபூர்வமாகப் பிறக்க வேண்டும்!
சரணாகதி, அதாவது "என்னிடம் உன்னை ஒப்படைத்து விடு! நான் பார்த்துக்கொள்கிறேன்" என்ற நம்பிக்கை எல்லா மனிதருக்கும் வாழ்வின் சில நேரங்களில், ஏதோ ஒரு இயலாத சூழ்நிலையை தாண்டி வர நிச்சயம் தேவைப்படுகிறது.
-
யாமிருக்க பயமேன் ★
-
என் மீது உன் கவலைகளையெல்லாம் இறக்கி வைத்துவிடு! ★
-
பயம்வேண்டாம், 'நாம் பார்த்துக் கொள்வோம். ★
-
எல்லா மதங்களிலும் இதுபோன்ற மனதுக்கு மருந்திட்டு இதமளிக்கும் வாசகங்கள் உருவானது சரணாகதியின் அடிப்படையில்தான்.
ராமகிருஷ்ணர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு அருமையான சம்பவம். கிரிஷ் சந்திரகோஷ் என்ற பக்தர் ராமகிருஷ்ணரை, குருவாக பூர்ண விருப்பத்தோடு ஏற்றுக்கொண்டு விட்ட நேரம் அது.
கிரிஷ், ''இதற்கடுத்து என் வாழ்வில் நான் செய்ய வேண்டியது என்ன ?'' என்று ராமகிருஷ்ணரிடம் கேட்டார்.
ராமகிருஷ்ணர், ''நீ வாழும் உலகம், இறைவன் என்ற இரண்டையுமே வைத்துக்கொள். தொடர்ந்து இறைவனை காலையும், மாலையும் நினைத்துக் கொண்டிரு.
பின் இறைவன், உலகம் இதில் ஏதாவது ஒன்று எளிதாக நழுவிவிடும். நடக்க வேண்டியது நடக்கும்'' என்றார்.
''சாப்பிடுவது! உறங்குவது! உடை பராமரிப்பது போன்ற உடல் வேலைகளையே நான் ஒழுங்காகக் கவனிப்பதில்லை.
இதில் காலையும் மாலையும் இறைவனை நினை என்றால் அது நடக்கிற காரியமா? கட்டாயங்களுக்குக் கட்டுப்படுவது எனக்குச் சாத்தியப்படாத ஒன்றாயிற்றே" என யோசித்து அதை எப்படி குருவிடம் சொல்வதென தயங்கிக் கொண்டிருந்தார் கிரிஷ்.
கிரிஷ் யோசிப்பதற்குப் பதிலாக, பேசியிருந்தால் என்ன பதில் தர வேண்டுமோ, அந்தப் பதிலை ராமகிருஷ்ணர் சொல்ல, சுற்றியிருந்தவர்களுக்குக் குழப்பம், கிரிஷ்க்கு சந்தோஷம்....
ராமகிருஷ்ணர், ''சரியப்பா. காலையிலும் மாலையிலும் இறைவனை நினைப்பது உனக்கு இயலாத காரியம்தான்.
அதனால் உணவருந்துவதற்கு முன் ஒரு முறை, உறங்கச் செல்வதற்கு முன் ஒரு முறை இறைவனை நினைக்க முயற்சி செய்யப்பா!' என்று கருணையும் சாந்தமும் பொங்கும் குரலில் பேசினார்.
| சரணாகதி நிகழாதவரை மனிதரின் கடவுளைத் தேடி அலைவான். | சரணாகதி நிகழ்ந்த கணமே மனிதனை தேடி கடவுள் ஓடி வருவார்! |
"நீதிமன்றத்தில் வழக்கு இழுத்தபடி இருக்கிறது. என்னுடைய சொந்தக் கவலை, பதட்டம் எல்லாம் சேர்ந்து அலைக்கழிக்க, சில நாட்களில் காலை உணவு ஒன்பதுக்கு மேல் மதிய உணவு மணி ஐந்துக்கும் மேல் என்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.
சதா கவலைகளால் அலைபாயும் மனதைக் கொண்டு சாப்பிடுகிறேன் என்ற பிரக்ஞையே இல்லாமல் சாப்பிடும் நானெல்லாம் இறைவனை சாப்பிடும் முன், தூங்கும் முன் மறக்காமல் நினைப்பது சாத்தியமா?'' என்று கிரிஷ் யோசிக்க யோசிக்க ...
ராமகிருஷ்ணர் அன்பு கலந்த புன்சிரிப்போடு, 'சரி கிருஷ்ணா. உன்னால் இதுவும் முடியாது என்று சொல்ல நினைக்கிறாய்.
நல்லது! உன்னால் முடியவில்லை.
அதனால் என்னிடம் ஒப்படைத்து விடு. மற்றதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்று நம்பிக்கை கரும் குரலில் கூறினார்.
''ஆஹா! இது எவ்வளவு சுலபம்.
எனக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. எல்லாவற்றையும் குருதேவர் பார்த்துக் கொள்வார். நல்லதும் கெட்டதும் என்னைச் சுற்றி நடப்பது அவரின் ஆன்மீக சக்தியின் வெளிப்பாடால்தான். எனக்கு இனி கவலையில்லை'' என்று கிரிஷ் சந்தோஷப்பட்டார்.
தன்னை ஒப்படைப்பது என்பது விளையாட்டு விஷயம் அல்ல.
ஒரு நாளைக்கு இரண்டே இரண்டு முறை இறைவனை நினைப்பது கடினம். இதுபோன்ற வலையில் நான் சிக்கமாட்டேன் என்று நினைத்த கிரிஷ் ராமகிருஷ்ணரிடம் அன்பின் வலையில் சிக்கிக் கொண்டார்.
அதன்பின் ராமகிருஷ்ணரை அவர் நினைக்காத நிமிடமே இல்லை. அவரை முழுமையாக ராமகிருஷ்ணரின் ஆனந்த சக்தி ஆட்கொண்டுவிட்டது என்று பின்னாளில் கண்ணீர் மல்கக் கூறியிருந்தார்.
கிரிஷின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொண்ட திரு. அனுநிதன் ''நானும் ஒரு வாழும் ஞானியைச் சந்திக்க வேண்டும் சரணாகதி அடைய வேண்டும். ஆனந்தத்தில் நிரம்ப வேண்டும்' என்ற விருப்பம் எழ, வாழும் ஞானிகளைத் தேடி அலைந்திருக்கிறார்.
| அகங்காரத்தில் | ஆழ்ந்து |
| வேலைசெய்யும் | ஆற்றல் பெற்றது |
| ' சரணாகதி!' . |
கடைசியில் வாழும் ஞானி ஒருவரைக் கண்டுகொண்டார். அவரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துவிட்டு நிம்மதியாகிவிடுவது என்ற முடிவெடுத்து அவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருக்கிறார். குருவிடம் தன் விருப்பத்தைக் கூறி சரணாகதி ஏற்றுக்கொள்ளக் கூறியிருக்கிறார்.
ஞானி இதைக் கேட்டுச் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். அனுநிதனுக்குக் குழப்பம், ''ஏன் இவர் சிரிக்கிறார்?''
"கிரிஷ், ராமகிருஷ்ணரின் ஆனந்த சக்தியால் ஆட்கொள்ளப்படுவதற்கு நடுவில் பட்ட பாடெல்லாம் தெரியுமா?
அவருடைய இன்ப - துன்பத்தைக்கூட அதன் பிறகு அவரால் ஆராய முடியாது. அவர் வாழ்வில் எது நடந்தாலும் அது குருவின் ஆசியால் தன்னுடைய நலனுக்காகத்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருமுறை கிரிஷ் 'நான் இதைச் செய்கிறேன்' என்று சொன்ன போது, ராமகிருஷ்ணர் உன்னையே என்னிடம் ஒப்படைத்தபின் நீ எப்படித் தானாக செயல்பட முடியும் ? இறையருள் இருந்தால் இறைவன் அனுமதித்தால் செய்வேன் என்று கூற வேண்டும். புரிந்ததா ? என்றிருக்கிறார்.
அதற்குக்கூட கிரிஷ்க்கு சுதந்திரம் இல்லை. இதெல்லாம் தெரிந்த பின்தான் இந்த முடிவு எடுத்தாயா?'' என்று கேட்டிருக்கிறார்.
தயங்கி அனுநிதன் ''ஆம்'' என்றிருக்கிறார்.
ஆனால், அதன்பின் அங்கே ஒரு வாரம்கூட முடியாமல் ஓடி வந்து விட்டார். அதன் பின்தான் பார்க்க வந்தார்.
அனுநிதனிடம், "மன அகங்காரத்தில் கள்ளத்தனத்திற்கு அளவே இல்லை.
அதற்கு வலிக்காமல் ஏதாவது ஒரு வழி தோன்றினால் உடனே அதுசரி என்று காண்பித்து விடும்.
எது சரணாகதி ? உறவுகளோடு உராய்வில்லாமல், உணர்ச்சிகளின் கொந்தளிப்பில்லாமல் உற்சாகக் குறைவேயில்லாமல் இருக்கும் நிலை சரணாகதி நிலை. சரணாகதி நிகழ வழி என்னவென்றால் மேற்குறிப்பிட்ட சூழ்நிலைகளிலெல்லாம் வெகு நிதானத்தோடு இருக்க முயற்சி செய்யுங்கள். நிதானம் பெற உங்களுக்கு என்னென்ன மாற்றங்கள் நிகழ வேண்டுமோ அவ்வளவையும் நிகழ்த்துங்கள் சரணாகதி நிகழும்!
கொஞ்சம் அகங்காரத்தில் வலித்தால்கூட அந்த வலிக்குக் காரணமாயிருந்த இடத்தை விட்டே ஓடி வர வைத்துவிடும்.
ராமகிருஷ்ணர் கிரிஷின் அகங்காரம் கரையத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த டெக்னிக்கே சரணாகதி.
சரணாகதி துவக்கத்தில் கடினம் போலத் தோன்றும். காரணம் - அகங்காரம் கரைய ஆரம்பிப்பதுதான். பயந்து விடக்கூடாது.
ஒரு வாழும் ஞானியின் செயல், சிரிப்பு, பேச்சு எல்லாமே மனிதரின் அகங்காரத்தை அழிக்கும் நோக்கில்தான் இருக்கும்.
கடினமான காலத்தைத் தாண்டினால், கிரிஷ் போல ஆனந்த சக்தியால் ஆட்கொள்ளப்படுவது சாத்தியம்தான்" என்று சொல்லி முடித்தேன்.
சரணாகதி என்பது ஒரு அற்புதமான டெக்னிக்.
அதுவும் மனதோடு சேர்ந்து உடலும் பாதிக்கப்பட்டிருக்கும் நவநாகரீக மனிதருக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
அனுநிதனுக்கு உண்மை புரிந்தது. அதன்பின் அந்த வாழும் ஞானியை முழுமையாகப் புரிந்துகொண்டார்.
சரணாகதி உங்களின் ஒரு அங்கமாக மாறிப்போன அகங்காரத்தை எளிதாய் கலைத்துவிடும்... நீங்கள் அதைப்பற்றி புரிந்துகொண்டால்!
அர்த்தமுள்ள சம்பவம் ... ஞானமடைவது மிக எளிது என ஞானிகள் சொன்னால் மனிதர்கள் புரிந்துகொள்ள தடுமாறுகிறார்கள். ஏன் ?
Dr. நிட்டி இலவச கண்மருத்துவ முகாமில் கண்பார்வை இழந்தவரிடம் "சிறியதாக ஆப்ரேஷன் செய்தால் உன்னுடைய பல வருட குருடு சரியாகிவிடும். இனி கைத்தடி இல்லாமல் நடக்கலாம்" எனச் சொன்னதும், குருடர்.
" ஆப்ரேஷனுக்கு அப்புறம் என்னால் பார்க்க முடியும், என நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால் கைத்தடி இல்லாமல் நடக்க முடியும் எனச் சொல்வதுதான் புரியவில்லையே'' எனச் சொன்னாராம்.
· அக்குருடருக்குக் கைத்தடியானது உடலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. இதேபோல் துக்கம் மற்றும் இயலாமை நிறைந்த மனமானது மனிதரின் ஒரு அங்கமாக இருப்பதாக நம்புவதே தடுமாற்றத்தின் மூலகாரணம்.
நல்லதெல்லாம் நிகழ்வது இறைவனால் ... கெட்டதெல்லாம் நிகழ்வது மனிதமனத்தால்!
முயற்சித்தாலும் ஓடும் நதியில் வாழும் மீன் அது, நதியின் போக்கில் இழுத்துச் செல்லப்படும்.
மீறி அந்தக் குட்டி மீன் நிற்க முயற்சித்தாலும் தேவையில்லாமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும். நதியை எதிர்க்கும் மீன் தடுமாறும்! தூக்கியெறியப்படும்! தான் தண்ணீரால் துஷ்பிரயோகப்படுத்தப்படுவதாக அது நினைத்துக்கொள்ளும்! தன்னைச் சுற்றியுள்ள தண்ணீர் துளிகள் தன் சுதந்திரத்தைப் பறிப்பதாக நம்பித் தொலைக்கும்!
கடவுள் எனும் இயற்கை சக்தி,
நதியைவிடப் பல மடங்கு வேகமானது, சூட்சுமமானது.
மீனின் எண்ணங்கள் விட பல மடங்கு சூட்சுமமான மனம் கொண்ட மனிதர்கள், இயற்கையிலிருந்து புரிந்திருக்கிறார்கள்.
இயற்கையின் போக்கில் அழைத்துச் செல்லப்படுவதைவிட, தன் கற்பனைகளின் நதிபோல் வாழ விரும்புகிறார்.
விளைவு – தான் தடுமாற்றப்படுவதாகவும் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் தன்னைத் துஷ்பிரயோகம் செய்வதாகவும் நம்பித் தொலைக்கிறார்! நதியின் போக்கில் தன்னைச் சமர்ப்பித்துவிட்ட மனிதருக்குப் போகும் வழியெல்லாம் கொண்டாட்டமே! நதியின் வேகத்தில் செல்வது தொடர்ந்து ராட்டினத்தில் இருப்பது போல சுகமாக இருக்கும்.
கெட்டது-நீங்கள் எதிர்க்க நிகழ்வது!
இயற்கையின் போக்கில் வாழ தன்னை சரணாகதி செய்துவிட்ட மனிதர், தன்னை வாழ்வெனும் இன்ப நதியின் ஒரு துளி போலவே பாவித்துக் கொள்வார். ஆனந்தமாக இருப்பார்.
ஒரு உண்மை :
வாழ்வென்னும் நதியை எதிர்த்தாலும் எதிர்க்காவிட்டாலும் நீங்கள் இழுத்துச்செல்லப்படுவீர்கள். இயற்கை விதி.
ஒரு தியான விதி:
நல்லது இறைவனால் நிகழ்வது. கெட்டது அந்த நல்லவற்றை நம் அறியாமையால் எதிர்க்கும்போது நிகழ்வது.
நதியின் போக்கில் செல்லும் மீனைப் போல் வாழ ஆரம்பியுங்கள்.
கிடைக்காததையெல்லாம் கடவுள் கொடுத்ததுதான் என உணர்ந்து வாழுங்கள். அப்படி வாழ்ந்துவிட்டால் நல்லதும் கெட்டதும் அசைக்காத ஆனந்த நிலையை அடைவீர்கள்.
ஒரு ஞானக்கருத்து:
வாழ்வு நம் கையில் இல்லை.
ஆனந்தம் நம் கையில் இல்லை.
எதிர்ப்பதும் துக்கப்படுவதும்தான் நம் கையில் இருக்கிறது.
அப்புறமென்ன! கையை விரித்து நதிக்குள் குதித்து விட வேண்டியதுதானே!
நல்லது நிகழ ... நிகழும் நல்லதை நிகழவிட்டால் போதும் !
Part 7: Open the Door... Let the Breeze in! Part 1
அறிவு! அனுபவம்!
பொதுவாக மனிதர்கள் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கருத்துக்கள் இரண்டு,
- விஷயஞானம், அதாவது அறிவு.
- அணுபவஞானம், அதாவது அனுபவம்.
- உண்மையான ஞானம் விஷயஞானத்தையும் அனுபவஞானத்தையும் தாண்டியது.
- அறிவையும் அனுபவத்தையும் தாண்டியது அனுபூதி. இந்த அனுபூதி, ஆனந்தத்தின் உச்சம். அனுபூதிதான் ஞானம்.
மிகவும் காலத்திற்கு முன்பு, சீன நாட்டில் முகம் பார்க்கிற கண்ணாடி முதன் முதலாக ஒருவருக்குக் கிடைத்தது. அதில் அவர் தன் முகத்தைப் பார்த்து, 'சொர்க்கத்தில் இருந்து என் தந்தையார் வந்து விட்டார் என்று பேசத் தொடங்கினார். தனியாகச் சென்று பேசிக் கொண்டிருந்த கணவரைச் சந்தேகித்த மனைவி, ஒதுக்குப்புறமாகச் சென்று பேசிக் கொண்டிருந்த கணவரை மடக்கினார்.
அவர் கையிலிருந்த கண்ணாடியைப் பறித்து, அதில் தெரிந்த முகம், தன் முகம்தான் என்று அறியாமல் "இத்தனை காலமாய் என்னோடு வாழ்ந்துவிட்டு இப்போது வேறு ஒரு பெண்ணோடு நீங்கள் எப்படிப் பேசலாம்?" என்று கேட்டார்.
கணவரோ. "நான் எந்தப் பெண்ணோடும் பேசவில்லை. என் அப்பாவோடு பேசிக் கொண்டிருக்கிறேன்" என்றார். அந்தப் பெண்ணோ "வேறு ஒருத்தியோடு பேசியது மட்டுமில்லாமல், பொய் வேறு சொல்கிறீர்களா?" என்று கொண்டார். இருவருக்குள்ளும் பிரச்சனை அதிகமாகி அமளிதுமளி ஏற்பட்டது. அப்போது அந்தப் பெண்ணானவர், "என் கணவர் வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு வைத்திருக்கிறார்" என்று கக்கினார்.
ஆனால் கணவரோ, "என் தந்தையாரோடுதான் நான் கலவரத்திற்குக் காரணமான கண்ணாடியை வாங்கிப் பார்த்த மதபோதகர் அதிர்ச்சிக்கு ஆளானார். ''இந்தப் பகுதியில் நான் ஒருவன்தானே அல்லாமல் வேறு ஒரு துறவி எங்கிருந்து முளைத்தார்?'' என்று அவர் ஆவேசமாகக் கத்தினார். அந்தக் கண்ணாடியை அவர் கீழே எறிந்தார் அது உடைந்து சுக்குநாறாயிற்று. அவர் ஞானியாக இருந்திருந்தால் இது நடந்திருக்காது.
ஞானம் என்றால் என்ன?
அறிவு என்பது வேறு, ஞானம் என்பது வேறு, ஆங்கிலத்தில் Intellect என்பதற்கும் Intelligence என்பதற்கும் என்ன வித்தியாசம் என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்வார்கள்.
நமது மனம் அவசியமற்ற தகவல்களால் நிரம்பி வழிகிறது. இந்தத் தகவல்களால் நிரம்பி வழிவதைத்தான் ஞானம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம், மணி ஆர்டரைக் கொண்டு வந்து தருகிறவர் பணம் அனுப்பியவரல்ல. பணத்தைக் கொண்டுவந்து சேர்த்தவர் மாத்திரமே உரியவர்!
ஆனால், ஞானம் என்பது முற்றிலும் வேறு. நிறைய தகவல்கள் சேகரித்து வைத்திருப்பவர்களை அறிவாளிகள் என்று அழைக்கிறோம். அறிவாளிகளின் அறிவு எப்போதும் யூகங்களாக மாத்திரமே இருக்கிறது.
மின்மினிப் பூச்சி, அது படைக்கப்பட்ட காலம் தொடங்கி 'மினுக் மினுக்' என்று மின்னி வருகிறது. 'மின்மினிப் பூச்சிகளுக்கு எதற்காக வெளிச்சம் இருக்கிறது?' என்பது மாலுமிகளுக்கு விளங்கவில்லை. அவர்கள் படகுகளைச் செலுத்துகிறபோது இருட்டு ரோத்தில் தங்களுக்கு வெளிச்சம் ஏற்றவே, மின்மினிகளுக்கு அவ்வாறான வெளிச்சத்தை இறைவன் வழங்கி இருக்கிறான் என்று நினைத்தார்கள்.
பறவைகளோ, இருள் சூழ்ந்த காலங்களில் தங்கள் கூடுகளைச் சுத்தப்படுத்த இறைவன் இத்தகைய வெளிச்சத்தை மின்மினிக்கு அருளியிருக்கிறார் என்று நினைத்தன. ஆனால், காலப்போக்கில் இருவர் நினைத்ததும் தவறு என்று ஆனது.
ஒரு ஆண்பூச்சி மேலே இருந்து வெளிச்சம் காட்டிய ஓரிரு வினாடிகளில், பெண் பூச்சி புதருக்குள் இருந்து வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. பிறகு ஆண் பூச்சி, பெண் பூச்சி இருக்கிற இடத்தை அறிந்துகொண்டு சரேலெனக் கீழே இறங்குகிறது. பிறகு அவர்களின் குடும்ப வாழ்க்கை நடக்கிறது. இதற்காகத்தான் மின்மினிப் பூச்சிகள் வெளிச்சம் போடுகின்றன என்பது தகவல்.
ஆனால், ஒவ்வொரு உயிரின் இனவிருத்திக்காக இறைவன் செய்திருக்கிற ஏற்பாடு இது என்பது அறிவு. வெறும் செய்திகளும் அறிவும் மூளையை நிரப்பும். அறிவைத் தாண்டிய அனுபவமே விடுதலையைத் தரும்.
ஆல்டஸ் ஹக்ஸ்லி என்கிற தத்துவஞானி உலகத்தை மேற்கு, கிழக்கு என்று பிரித்தார். மேற்கின் அடையாளம் மூளை. கிழக்கின் அடையாளம் இதயம். இதயம் என்றால் அன்பு, கருணை, பாசம். ஃபுல்டன், ஹேஷின், மார்க் டுவெயின் போன்ற சிந்தனையாளர்களும் இதில் உடன்பட்டார்கள்.
சமயங்களெல்லாம் கிழக்கே தோன்றின. புத்தர் கருணை மிகுந்தவர். லைட் ஆப் ஆசியா முழுவதும் அவர் கருணையே வெள்ளமாக வடிகிறது. இயேசு கருணை வள்ளல். ஆகவேதான் எந்த நாட்டிலும் அவரது படம் மூளை வெளிப்பட்டுத்
நிறைய தகவல்கள் சேகரித்து வைத்திருப்பவர்களை அறிவாளிகள் என்று அழைக்கிறோம்!
தெரிவதைப் போல இல்லாமல் இதயம் வெளிப்படுவது போல் வரையப்படுகிறது. அனுபவம், அதாவது அனுபவ ஞானம் இதயத்திலிருந்து ஊற்றெடுக்கிறது.
ஆல்டஸ் ஹக்ஸ்லி இரண்டு வகை தத்துவஞானிகளைக் காட்டினார். ஒரு சாரார், காலத்துக்குட்பட்டு யோசிக்கிறவர்கள். இவர்கள் timely philosophers. மற்றொரு வகையினர் காலத்தைத் தாண்டி யோசிக்கிறவர்கள். இவர்கள் eternal philosophers.
தங்களை மாற்றிக்கொண்டு உலகத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்தவர்கள் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள். இதில் ஆகிசங்கரர், இயேசு, புத்தர் எல்லோரும் அடக்கம்.
தங்களை மாற்றிக்கொள்ளாமல் மற்றவர்களை மாற்ற முயற்சி செய்பவர்கள் முதல் வகையினர். தத்துவங்களைப் படித்துக் கொண்டு தொங்குபவர்கள்.
நம்மில் பலர் காலத்துக்குட்பட்டு யோசிக்கிறவர்கள்தான். நம்மை மாற்றிக் கொள்கிற எண்ணமே நமக்கில்லை. அதற்குள் உலகத்தை மாற்றப் புறப்பட்டு விடுகிறோம். நம்மை மாற்றிக்கொள்வதற்கு முதலில் அறிவு, அனுபவமாக மாற வேண்டும்.
பணத்தாலும் இறைவனை அடைய முடியாது. கல்வியாலும் இறைவனைக் காண இயலாது. தங்களைத் தாங்கள் தோண்டுவதே, நம்மை நாம் உணர்வதே இறைவனை அடைய ஒரே வழி.
இன்றைய கல்வி நமக்கு ஆஸ்திரேலியாவுக்கு யார் பிரதமர் என்று சொல்லித் தருகிறது. 'ஆடுதுறை 27' நெல்லுக்கு அடி உரம் என்ன என்பதைச் சொல்லித் தரவில்லை. நமது வேளாண்மைப் பட்டதாரிகளைவிட, விவசாயிகள் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
நமது கல்வி சொல்லிக்கொடுப்பவர்களையே உருவாக்குகிறது. செயல்படுத்துபவர்களை உருவாக்குவது அதன் நோக்கமாக இல்லை.
பணத்தாலும் இறைவனை அடைய முடியாது. கல்வியாலும் இறைவனைக் காண இயலாது. தங்களைத் தாங்கள் தோண்டுவதே, நம்மை நாம் உணர்வதே இறைவனை அடைய ஒரே வழி.
மூளை உழைப்பிற்கு முக்கியத்துவம் தரும். நமது கல்வி, இதயப்பூர்வமான படைப்பாற்றலுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஆகவேதான் நமது சுமுதாயத்தில் ஒரே பாடக்கை 25 ஆண்டுகளாக மாறாமல் நடத்திக்கொண்டு இருக்கிற பேராசிரியர்கள் இருக்கிறார்கள்.
வேர்வை சிந்தி உழைக்கிற மரவெட்டிக்குக் குறைவான கூலியே கொடுக்கிறோம். கடினமான உழைப்பிலே அனுபவம் கனிகிறது. அறிவைச் சேர்ப்பது எளிது. அனுபவங்களை அதிகரிப்பது சற்றுக் கடினம். வெறும் அறிவு நிறைவைத் தராது. அனுபவமே மனிதருக்கு நிறைவைத் தரும்.
அறிவை அனுபவமாக மாற்ற முயற்சி செய்தால், ஒர் உண்மை தெரியவரும் அது பெரும்பாலான உலக அறிவுக்கும், வாழ்க்கை அனுபவத்திற்கும் சம்பந்தமே இல்லை என்று!
வாழ்க்கைக்கு உதவாத குறிப்புகள், கருத்துகள், செய்திகள் மூளையில் பதிந்து இருந்தாலும் பகிந்திராவிட்டாலும் பயன் ஏதும் இல்லை.
தலையின் கனம் வேண்டுமானால் அறிவின் செறிவால் அதிகமாகலாம்.
முதலில் அதிகப்படுத்தும் அறிவின் செறிவைக் குறைத்து, விஷயஞானத்தை (அறிவை), அனுபவ ஞானமாக்குங்கள். வாழ்வில் ஆனந்தக்காற்று வீசட்டும்.
தொடர்ந்து ஆன்மீகச் சாதகத்தில் ஈடுபட்டுக் கொண்டே இருங்கள். அனுபூதி நோக்கி முன்னேறிக்கொண்டே இருப்பீர்கள் !
தங்களை மாற்றிக்கொண்டு உலகத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்தவர்கள் இரண்டாவது வரையைச் சேர்ந்தவர்கள். இதில் ஆதிசங்கரர், இயேசு, புக்கர் எல்லோரும் அடக்கம்.
வாழ்க்கையை அனுபவி!
- இந்த வாழ்க்கையை அனுபவி என்று இறைவன் நமக்குப் பரிசாகக் கொடுத்த ஆனந்த சக்தியைப் பயன்படுத்தாமல் இருப்பது - சுயபாதகச் செயல்.
- பணம், பதவி, பேருக்காக நீங்கள் செலவழிப்பது எதை? உடல், உயிர், மனத்தை !
- எந்த நிமிடம் வேண்டுமானாலும் கைமாறத் தயாராக இருக்கும் பணம் பதவி புகழுக்காக, இந்த நிமிடம் உங்களோடிருக்கும் உடல், உயிர், மனத்தை பாழாக்குவது எந்த வகையில் நியாயம். கொஞ்சம் யோசியுங்களேன்!
- வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிந்தால், பிச்சைக்காரனுக்குக் கூட உலகம் சொர்க்கமாகத் தெரியும். வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாவிட்டால், பணக்காரனுக்குக்கூட உலகம் நரகமாகத் தெரியும்.
கடந்த நூற்றாண்டில் மேற்கத்திய அறிவுலகத்தையே ஒரு கலக்குக் கலக்கியவர்கள் இரண்டு சிந்தனாவாதிகள். ஒருவர் காரல் மார்க்ஸ், இன்னொருவர் சிக்மண்ட் ஃபிராய்ட்.
காரல் மார்க்ஸ் சொன்ன விஷயங்களில் எனக்கு மிகவும் பிடித்தது, ''எதை இழந்து எதைப் பெறுகிறோம்'' என்று சொன்னதுதான். எவ்வளவு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் இவை ?
ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். காலையில் எழுந்தவுடன், அழகாக எழுந்து வரும் சூரியனை ரசிக்க நமக்கு மனமில்லை. தோட்டத்தில் பலவாறாகப் பூத்துக் குலுங்கும் ரோஜா செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி, தடவிக் கொடுக்க, நமக்கு மனம் வருவதில்லை. குழந்தையோடு கொஞ்ச நேரம், கொஞ்சி விளையாட நமக்கு நேரம் கிடைப்பதில்லை.
பணம்.... பணம்.... பணம்!.... இந்த ஒன்றுக்காக நம் வாழ்க்கையின் சகலவிதமான அற்புதங்களையும் இழந்து, அல்லல்படுகிறோம். நீங்கள் என்னதான் ஓடியாடி உழைத்தாலும் இலட்ச இலட்சமாக, கோடி கோடியாக சம்பாதித்தாலும் உங்களுக்கு மிஞ்சப் போவது என்ன ?
Few cars and few Bangalows மாத்திரமே சில கார்களும் சில பங்களாக்களும் தான்!
'வாழ்க்கையை அனுபவித்து வாழத் தெரிந்திருந்தால், பிச்சைக்காரரால்கூட சொர்க்கத்தை உணர்வது சாத்தியம் என்றால், ஏன் உங்களால் முடியாது? உங்களையும், உங்கள் குழ்நிலைகளையும் மதிக்கக் கற்றுக்கொள்ளங்கள். சொர்க்கம் உங்களுக்குள்ளே ... என்று கண்டுகொள்விர்கள்!
இந்த உயிரற்ற பொருள்களுக்காக நீங்கள் எதை விலையாகக் கொடுக்கிறீர்கள் தெரியுமா? இறைவன் உங்களுக்கு வரப்பிரசாதமாகக் கொடுத்த வாழ்க்கையை! அந்த வாழ்க்கையை அனுபவிக்கக் கொடுத்த ஆனந்தசக்தியை !
ஒரு கணக்குக்காகப் பார்த்தால்கூட, உயிரற்ற பொருள்களை வாங்க உயிருள்ள வாழ்க்கையைத் தருவது எவ்வளவு பெரிய அநியாயம் என்பது புரிய வரும்.
அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் கடற்கரையில் எதையோ எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் அருகே உட்கார்ந்திருந்த இளைஞர், "ஐயா, அப்படி என்ன ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
'' ஒன்றுமில்லையப்பா… ஒரு பர்ஃபெக்ட்டான பெண்ணைத் திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறேன். அதற்குத் தகுந்த பெண்கள் யாரேனும் வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்'' என்றார் அந்த வயதானவர்.
''இத்தனை ஆண்டுகளாக நீங்கள் காத்திருந்தும் அழகான, பர்ஃபெக்ட் பெண் கிடைக்கவில்லையா?" என்று மீண்டும் கேட்டார் இளைஞர்.
"முப்பத்தைந்து வயதில் எனக்கு ஒரு பர்ஃபெக்ட் பெண் கிடைத்தாள்" தயக்கத்தோடு சொன்னார் வயதானவர். "பிறகென்ன ...! செய்து கொண்டிருக்க பரபரப்பாகக் கேட்டார் இளைஞர்.
"என்னைப் போல அந்தப் பெண்ணும் பர்ஃபெக்ட்டான தேடிக் கொண்டிருந்ததுதான் பிரச்சினை". குருட்டுப்பூனை விட்டத்தில் பாயந்தது போல், ஏதோ ஒரு நோக்கத்தைப் பிடித்துக்கொண்டு வாழ்க்கையை உதாசீனப்படுத்துகிறார்கள்.
சாதிக்க வேண்டும் என்று நினைத்துக் கிளம்புகிறவர்கள், ஓரளவு சாதித்த பிறகு, இன்னும் இன்னும் என்று சிலர் சென்று கொண்டே இருக்கிறார்கள். எத்தனை சாதித்த பிறகும், திருப்தி அடையாதது கண்டு, எந்த சாதனையும் செய்யாமல் சாதாரண வாழ்க்கை வாழ்ந்திருக்கலாமே! என்று புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள். காரணம் - வாழ்க்கையை அனுபவிக்காததுதான்.
இயேசுநாதர் சொன்ன கதை ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன்.
வாழ்க்கையை வீணடிப்பது - ஒரு பாவம்.
ஒரு கொடுஞ்செயல் ஒரு பெருங்குற்றம்.
மிகப் பெரிய பணக்காரன் ஒருவன் ஆனந்தமாக வாழ நினைத்து மது ,மாது, மாட மாளிகை என்று தினம் தினம் வாழ்ந்து வந்தான். அதே பணக்காரனின் வீட்டுக்கு எதிரே பிச்சைக்காரன் ஒருவன் கொடிய நோயோடு வாழ்ந்து வர்தான். பணக்காரனின் எச்சில் இலையில் இருக்கும் மிச்சம் மீதியைக் கெருநாய்களின் சண்டைகளுக்கிடையே உண்டு வாழ்ந்து வந்தான்.
பணக்காரன் ஆனந்தத்திற்காகத் தேடிய வழிகள் எல்லாமே அளவுக்கதிகமாகப் பயன்படுத்தப்பட்டதால், உடலில் நோயும் மனசில் அதிருப்தியும்தான் மிஞ்சியது.
கடைசியில் பணக்காரனும் பிச்சைக்காரனும் கிட்டத்தட்ட ஒரே நாளில் இறந்தார்கள்.
சாவிற்குப் பின் நிலைமை தலைகீழாக இருந்தது. பணக்காரன் நரகத்தில் இருந்தான். கொடிய வேதனையில் தாகம் தாளாமல் நிமிர்ந்து ஒரு சொட்டு நீராவது கிடைக்காதா என்று துடித்துக்கொண்டிருந்தான்.
ஆனால் பிச்சைக்காரனோ, பரலோகத்தின் ஆபிரகாமின் மடியில் படுத்துக்கொண்டிருந்தார்
"அபிரகாமே! எனக்குத் தாகம் தாளவில்லை.
ஒரு சொட்டுத் தண்ணீராவது கொடுங்களேன்!" என்று கெஞ்சினான்.
" அது சாத்தியமே இல்லையப்பா" என்று சொன்னார் அபாகாம்.
'' அப்படியானால் நரகத்தில் நான் படும் வேதனையை, அந்தப் பிச்சைக்காரனைப் பூலோகத்துக்கு அனுப்பிச் சொல்லச் சொல்லுங்களேன். என் சகோதரர்களாவது தப்பித்துக் கொள்ளட்டும்" என்று வேண்டினான் பணக்காரன்.
" அதற்கும் சாக்கியமில்லையப்பா, பிச்சைக்காரனே பூலோகத்துக்குப்போய் நீ படுகிற கஷ்டங்களைச் சொன்னாலும் அவர்கள் கேட்கமாட்டார்கள். கேலி செய்வார்கள்" என்றார் ஆபரகாம்.
எதற்காக இந்தக் கதை ?
பணக்காரர்கள் நரகத்திற்கும் ஏழைகள் சொர்க்கத்திற்கும் போவார்கள் என்று பலர் விளக்கமும் போதனையும் செய்வதற்காக இந்தக் கதை கூறப்படவில்லை. பணம் நிறைய இருப்பதால், டாம்பீகமாக - வாழ்வதால் ஆனந்தமும் திருப்தியும் கிடைத்துவிடாது.
இந்த நிமிடத்தில் என்னிடம் உள்ளதே இந்த நிமிடத்தை அனுபவிக்கப் போதும் என்று தன்னையும் தன் சூழ்நிலையையும் அனுபவித்து வாழ்பவருக்கு மட்டுமே ஆனந்தமும் திருப்தியும் சொந்தம்! இந்தப் பெரிய உண்மையைச் சொல்வதற்காகத்தான் இந்தக் கதை.
இந்த நிமி க்கில் என்னிடம் உள்ளதே இந்த நிமிடத்தை அனுபவிக்கப் போதும், என்று தன்னையும், தன் சூழ்நிலையையும் அனுபவித்து வாழ்பவருக்கு மட்டுமே ஆனந்தமும், தருப்தியும் சொந்தம்!
பிச்சைக்காரரின் வாழ்வு முறை குறிப்பிடத்தக்கது. எல்லாக்கேளிக்கை, கூத்தும் இருந்தும் பணக்காரனிடம் இல்லாத ஏதோ ஒன்று பிச்சைக்காரரிடம் இருந்தது. அது அவர் தன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்ததன்மை. தன் சூழ்நிலையோடு இணைந்து வாழ்ந்த தன்மை.
இந்தப் புத்தகத்தைப் படிக்கும் அளவுக்கு நேரமும் பணமும் பெற்ற நீங்கள் நிச்சயம் பிச்சைக்காரராக இருக்க முடியாது.
' வாழ்க்கையை பிச்சைக்காரரால்கூட சொர்க்கத்தை உணர்வது சாத்தியம்' என்றால், ஏன் உங்களால் முடியாது? உங்களையும், உங்கள் சூழ்நிலைகளையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். சொர்க்கம் உங்களுக்குள்ளே ... கண்டுகொள்வீர்கள்!
இப்படி எத்தனையெத்தனை மகா உண்மைகள் அவதாரபுருஷர்களால் கூறப்பட்டாலும் நிறைய மனிதர்கள் தங்கள் மனத்திற்குச் சரியென்று பட்டதையே செய்து, பொறியில் சிக்கிய எலிகளாகத் தவிக்கிறார்கள். தவிக்கும்போதுதான் உண்மை புரிய ஆரம்பிக்கிறது.
தவிக்கும் நிலை வரும்முன் ஒரு நிமிடம் யோசியுங்கள்... நேரத்தை வீணடிக்காமல் சூழ்நிலையை மதித்து, அனுபவித்து வாழ ஆரம்பியுங்கள். வாழ்க்கையில் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள். வாழ்க்கையை அனுபவிப்பீர்கள்! அனுபவித்துக் கொண்டாடுவீர்கள்!
வாழ்க்கையே ஒரு பெரிய தொடர் திருவிழா! என்று நம் முன்னோர்கள் கூறியதின் உள்அர்த்தம் உங்கள் உள்ளத்தின் அர்த்தமாக மாறும்.
வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள்!
சரி... தவறு.....
-
தரங்குறைந்த மனம்தான் --உணர்ச்சிவேகத்தில் உசுப்பப்படும். ஊர் பேச்சுகேட்டு ஆடும். தவறைக்கூட சரியென சொல்லும். சரியானதைக்கூட தவறென வாதிடும்.
-
எனவே, மனிதர்களைத் தரம் பிரித்துப் பார்ப்பது. தரங்குறைந்த மனதின் செயல்.
-
மனிதத் தரம் உயரும் வரை. தரம்பிரித்தல் ஒரு தொடர்கதை.
-
தரமான மனிதரால். தரம்பிரித்துப் பார்க்க முடியாது. அதற்கு அவசியமும் இருக்காது.
-
சரியை சரியாய் புகழ்வதும் தவரைக்கூட சரியாய் புரிய வைப்பதும் நடுநிலையாய் வாழத் தெரிந்தவருக்கே சொந்தம் !
சனர்கன ஞானியிடம், குடும்பஸ்தர் ஒருவர் கேட்டார்;
"சாமி, நான் அன்பு செய்வது சரியான விதத்தில்தரன் செய்கிறேன். என் அன்பு தவறல்ல என்பதை எப்படி நான் கண்டுபிடிப்பது? உபாயம் சொல்லுங்கள்."
ஞானி, "உன் எதிரியை நேசிக்குமளவுக்குப் பக்குவம் பெறும்போது உன் அன்பானது தவறல்ல எனும் பக்குவநிலையை அடைகிறது.
எப்போது உன் எதிரிகளின் மகிழ்ச்சிக்காக ஒரு நண்பனைப் போல் செயல்பட அரம்பிக்கிறாயோ அன்று உன் அன்பானது சறியானதாகிறது".
எதிரியையே நண்பராக்கும் வல்லமை சரியான அன்பிற்கு உண்டு. நண்பரையே எதிரியாக்கும் வல்லமை தவறான அன்பிற்கு உண்டு. உண்மையான அன்பு "சரி, தவறுக்கு" அப்பாற்பட்டது.
அன்பு என்ற பெயரில் மனிதர் நிகழ்த்தும் பாச நாடகம், சரி தவறுக்கு உட்பட்டது.'
விவேகானந்தர் மீன் சாப்பிட்டார் என்பதற்காக ஒருவர் புலால் சாப்பிட்டால் - அவர் சரி என்ற பெயரில் தவறு செய்கிறார்.
காந்தியடிகள் புலால் சாப்பிடவில்லை என்பதற்காக ஒருவர் புலால் சாப்படுவதை நிறுத்தினால் - அவரும் சரி என்ற பெயரில் தவறு செய்கிறார்.
ஏனென்றால் அது அனுபவத் தெளிவால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல.
உணர்ச்சி வேகத்தில் எடுக்கப்பட்ட முடிவு.
நமக்கு அனுபவப்பூர்வமாக உணர்ந்து விஷயங்கள் தவிர, மற்றவர்கள் செய்தார்கள் அல்லது சொன்னார்கள் என்பதற்காக நாம் வாழ்வில் செயல்படுத்த ஆரம்பித்தால், நாமும் சரி என்ற பெயரிலே நிச்சயமாக தவறுதான் செய்கிறோம்.
உங்களின் சொல் செயல்களைப் பாராட்டும் பாசக்கார்களை விட உங்களின் தவறுகளை சுட்டிக்காட்டிய மோசக்காரர்களுக்கு முதலில் நன்றி சொல்லுங்கள்.
-சாக்ரடீஸ்
உங்களை உருவாக்குவதில் நண்பர்களைவிட எதிரிகளே முக்கிய பங்கு வகிக்கிறார்கள்!
1. நான் செய்தால் சரி. நீ செய்தால் தவறு
- இது அகங்காரத்தின் உச்சம்
- முதல் வகை.
2. நண்பன் செய்தால் சரி. எதிரி செய்தால் தவறு.
- இரண்டாம் வகை.
- நண்பன் தவறு செய்தாலும் தவறு தவறுகான். எதிரி நல்லது செய்தாலும் அது நல்லதே, சரியே!
- மூன்றாவது வகை
முதல் வகை மனிதர்கள் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள். "நான் சரியானவன்" என்று பிடிவாகமாக நம்புவதால், தங்களுக்குத் தோன்றுவதெல்லாமே சரியானவை, உண்மையானவை என நம்புவர். தவறானவற்றைக்கூட சரியென நம்புவர்.
பாவம்! எண்ணங்களால், பீடிக்கப்பட்டு தாறுமாறாகச் செயல்படும் ஒரு மனதைத்தான் இவர்கள் பெற்றிருப்பார்கள்.
எவ்வளவு பெரிய மகான்கள் வந்து எத்தனை முறை எடுத்துக்கூறினாலும் இவர்களுக்குத் தங்களின் அவலநிலை புரியாது.
தாறுமாறான மனதில் இருந்து வரும் - 'தரமற்ற எண்ணங்கள்' தவறாகத்தான் இருக்கும் என்ற உண்மை 'நான் சரியானவன்' எண்ணம் இருக்கும் வரை அந்த நபருக்குத் தெரியாது. உலகமே தவறு செய்வது போலக் கோன்றும்.
பலர் பல சமயங்களில், 'நான் சரியானவன்' எனும் எண்ணக்குழியில் விழுந்துவிடுகிறார்கள். விளைவு - நம்மைச் சுற்றி இருக்கும் முத்தான சில உள்ளங்களைக் குத்திக்கிழித்து, அந்தச் சில நிமிடங்களை நரகமாக்கி விடுகிறோம். நரகம் சொர்க்கமாக மாற 'நான் சரி'- யில் 'நான்' உடைந்து, 'சரி' மட்டும் புரிய வேண்டும்.
இரண்டாவது வகை மனிதர்கள் 'சூழ்நிலைக் கைதிகள்'. இவர்களுக்கு நண்பன் செய்த தவறு, தவறாகத் தெரியாது. மேலும், எதிரி (மனதிற்குப் பிடிக்காதவர்கள்) செய்த மிகச் சரியான விஷயங்கள்கூட, சரியாகத் தெரியாது.
நம்மைச் சுற்றி இருக்கும் மக்களிடம், அதாவது நமக்குப் பிடித்தவர்கள், பிடிக்காதவர்களிடமிருந்துதான் நாம் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்கிறோம்.
மனிதர்களைப் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று பிரிக்கும் போது -பிடித்தவர்களின் தவறுகளைக் கூட "சரி" என ஏற்றுக்கொள்ள ஆரம்பிப்போம்.
விளைவு, தவறுகள் நம் மனதில் படிய ஆரம்பிக்கும். மனம் தவறாவதால் நாம் தவறானவராக மாற ஆரம்பிப்போம்.
நமக்கு பிடிக்காதவர்களின் சரியான நடவடிக்கைகளைக்கூடத் தவறு என்று கண்ணாடி போட்டுப் பார்த்தால், "சரி" என்பதே தரம் மாறி தவறாகத் தெரியும். 'எது சரி ?' என்ற கேள்விக்கு மனம் குழப்பமான பதிலையே தரும்.
மனதில் சரி, சரியானபடி படியாததால் நாம் சரியானவராகும் வாய்ப்பு குறைய ஆரம்பிக்கும்.
மூன்றாவது வகை மனிதர்கள் 'நடுநிலைவாதிகள்'. தைரியசாலிகள் வாழ்க்கையையும் மனிதர்களையும் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தி, வாழ்வில் வளமடையக்கூடியவர்கள்.
| என்ன | எதிரியின் சரிகளையும் |
|---|---|
| மேலும் | நண்பனின் தவறுகளையும் |
| சுட்டிக் | சுட்டிக்காட்ட பக்குவமும் |
| காட்ட | தைரியமும் நிறைய வேண்டும்! |
மனிதர்களைச் சரியாக தரம் பார்த்து, தரம் பிரித்து, தன் தரம் தாழாமல் நடுநிலையோடு வாழத் தெரிந்தொண்டவரின் மனதை யாராலும், எப்போதும் அசைக்க முடியாது.
நண்பனின் தவறைச் சுட்டிக்காட்ட தைரியம் வேண்டும். எதிரியின் 'சரி'யை ஏற்றுக் கொள்ள பக்குவமடைந்த மனோபாவம் வேண்டும்.
இது இரண்டுமே நடுநிலையில் நன்றாய் வாழ்பவரின் வெளிப்பாடு. நடுநிலைவாதியாக இருப்பதே புத்தர் கூறும் மார்க்கம்.
சரிக்கும் தவறுக்கும் பிடித்தவற்றிற்கும் பிடிக்காதவற்றிற்கும் துன்பத்திற்கும் இன்பத்திற்கும் அதிர்ஷ்டத்திற்கும் துரதிர்ஷ்டத்திற்கும்
'நான் சரி' - ல் நான் உடைந்து சரி மட்டும் புரிய வேண்டும்.
- இடையில், நடுவில் நிற்க பழகிக்கொண்டால் போதும் நிம்மதி தேடி வர ஆரம்பிக்கும். இதுதான் புத்தர்கூறும் நடுநிலை மார்க்கம். (Middle Path).
புலால் உண்பது என்பது விவேகானந்தருக்குச் சரி. ஆனால், காந்தியடிகளுக்குத் தவறு. புலால் உண்ணக்கூடாது என்பது காந்தியடிகளுக்குச் சரி. ஆனால், விவேகானந்தருக்குத் தவறு.
விவேகானந்தரின் சக்திக்கும் அவரின் தவவலிமைக்கும் முன் உணவு ஒரு பொருட்டே அல்ல.
அவருக்குள் ஓடி விளையாடிய சக்திக்கு உணவு, உறக்கம், வார்த்தைகள் என்ற எல்லாவற்றையும் தாண்டி அவரைக் காக்கும் திறன் உண்டு.
'அவர் செய்தாரே'
'இவர் செய்தாரே' என்று சாதாரண மனிதர் ஏதேதோ காரியங்களைச் செய்ய ஆரம்பித்தால் அவரவருக்குள் இருக்கும் சக்தியளவைப் பொறுத்து மந்தத்தன்மையும், சோர்வும் மட்டுமே மிஞ்சும்.
ஆராயாமல் வெறுமனே மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக, எந்த ஒரு சூழ்நிலையிலும் உணர்ச்சிவேகத்தால் உங்கள் மனம் ஏற்றுக் கொள்ளாததை உங்களுக்குள் அனுமதித்துவிடாதீர்கள்!
- நமக்குப் பிடித்தவர்களால், நம் மனதைப் பிடித்துக் கொண்ட தவறுகள் அதிகம்.
- அதேபோல் நமக்குப் பிடிக்காதவர்களால் நம் மனதில் பிடிபடாமல் நழுவிச் சென்ற சரியான விஷயங்களும் அதிகம்.
- நமக்குப் பிடிக்காதவர்கள் என்பது, அவர்கள் நமக்கு அறவே பிடிக்காத செயலைச் செய்யும் வரை மட்டுமே!
- நமக்குப் பிடிக்காதவர்கள் என்பதும் அவர்கள் நம் மனதுக்கு மிகப் பிடித்த ஒரு செயலைச் செய்யும் வரை மட்டுமே!
பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்ற இரண்டுமே நிலையில்லாதவை.
தரம் கருதும் கண்ணாடிகளால் மனிதர்களை முத்திரையிட்டு, பிரித்துப் பார்த்து - உண்மையை, சரியை விட்டுவிட்டு, "சரி" என்ற பெயரில் தவறு செய்வதை நிறுத்த ஆரம்பித்தால் போதும் ... புத்தரின் நடுநிலைமார்க்கத்தை நெருங்க ஆரம்பித்து விட்டீர்கள் ... நிம்மதிக் காற்று வீச ஆரம்பித்து விட்டது!
அர்த்தமுள்ள சம்பவம் ...
சீரியல் பார்த்த மனைவியிடம் முகுந்தன் கேட்டார்: "சீரியலை விட விறுவிறுப்பானது வாழ்க்கை! வாழப்பிறந்தாயா? அழப்பிறந்தாயா ? இப்படி மூழ்கிப்போக அதில் என்னதான் இருக்கோ!"
அடுத்த நாள் முகுந்தன் செய்தித்தாள் படிக்கையில், "செய்திகளைவிட கலவரமானது வாழ்க்கை! நான் மனைவியா ? செய்தித்தாள் மனைவியா ? அதில் மூழ்கிப்போக அப்படி என்னதான் இருக்கோ!" என்றார் மனைவி.
பிடித்தவரிடம் வரும் சச்சரவுகளுக்குக் காரணமும் 'இது சரி', 'இது தவறு' எனும் நம் வரையறைகள்தான்!
நாகரிகத் தந்திரம் போக்கும் மந்திரம்
கியான த -எகெள்
இப்புறமாவது அசைபோட்டு ஜீரணிக்கலாம் எனும் வாய்ப்பளிக்கப்படாத மிருகம் மனிதர்கள். இருந்தும் அவர்கள்தான் மெல்லாமல் விழுங்குகிறார்கள் நாகரிகமாய்! வயிற்றுக்குள் கிரைண்டரா இருக்கிறது ? போட்டதையெல்லாம் மசித்துத் தள்ள!
நுனி விரல்களில் சாப்பிடுவது உதடு நனையாமல் குடிப்பது குதிகால் தரையில் படாமல் நடப்பது என்ற எல்லாமே நாகரிகங்கள்.
இயற்கையோடு கலப்பதைக் குறைக்கும் தந்திரங்கள்.
இவ்வளவு ஏன்? மூச்சுகூட மார்பளவிலேயே சிக்கிக் கொள்கிறது. நுரையீரல் முழுவதும் சுவாசக்காற்று வியாபிப்பதில்லை. நுரையீரலின் அடி வரை செல்வதில்லை.
" மனிதர்கள் வாழ்வது அரைகுறையானது" எனச் சுட்டிக்காட்ட உதவும் ஒரு சில தடயங்களே மேலே நீங்கள் படித்தது.
பல தடயங்கள் சுட்டிக்காட்ட முடியாத அளவுக்கு உங்களின் உடல், உயிர், உணர்வோடு கலந்துவிட்டது. எல்லாம் களங்கமாகிப் போனது. களங்கப்படுத்தியது எது ?
குழந்தைப் பருவத்திலிருந்தே பல சூழ்நிலைகளில்… "இதுதான் சரி", "இதுதான் தவறு' எனும் வரிகள் உங்களுக்குள் செருகப்பட்டு விட்டன.
அவை நாகரிகம் எனும் பேரில் உங்களுக்குள் நுழைந்து விட்டன.
நஜம் இதுவே ... (நாக)ரிகம்! நீங்களே பால் ஊர்றி வளர்த்தது.
மனிதன் தான் செய்வது தவறானதாக இருந்தபோதிலும், "நான் சரியாகத்தானே செய்கிறேன்!' என அவரைச் சொல்ல வைப்பது இந்த நாகரிகத் தந்திரங்களே!
இவை கண்டுபிடிக்கப்பட வேண்டும். வெளித் தள்ளப்பட வேண்டும்.
உங்கள் உடலிலும் மனதிலும் பல சச்சரவுகளை உருவாக்கிவிட்ட இந்த நாகரிகத் தந்திரங்களைத் தேடித் துரத்தும் மந்திர வழி...பூரணமாய் தங்திரங்களைச் செய்யுங்கள். அது மறையும்.
அரைகுறையாய் வாழும் எல்லாக் காலங்களையும் கவனத்துக்குள் எடுத்து வாருங்கள்.
மிகச் சரியாய் அலசி ஆராய்ந்தால் மட்டுமே புலப்படக்கூடிய, மிகத் தவறான தங்திரங்களைப் போக்குங்கள். அந்த எல்லா காலங்களிலும் செய்யும் செயல்களை பூரணமாக்குங்கள்.
நாகரிகம் பற்றி யோசிக்கக் கூட வேண்டாம்.
பூரணமாக வாழ ஆரம்பித்தால் ... தந்திர காலங்கள்கூட தியான காலங்களாகும்.
தேனினும் இனியது மனிதவாழ்வ !
ரோகிணி நதி நீருக்காக சாக்கியர்களும் கோலியர்களும் போட்டியிட்டுப் போருக்கே தயாராகிவிட்டனர்.
பரபரப்பின் நடுவே வெகு அமைதியோடு நுழைந்த புத்தர், "ரோகிணி நதி நீர் என்பதால் இந்த நீரை மதிக்கிறீர்களா? அல்லது இந்த நீர் தரும் நன்மைகளுக்காக இந்த நீரை மதிக்கிறீர்களா?" எனக் கேட்டதற்கு,
"வெறும் நன்மைக்காகத்தான் மதிக்கப்படுகிறது. விரும்பப்படுகிறது" என்றார்கள்.
"இருதரப்புக்கிடையே போர் உருவாகக் காரணமான இந்த நீர், இந்தச் சூழலில் நன்மை செய்கிறதா, தீமை செய்கிறதா ... இரத்தக் களறியாக்கும் போகிறீர்கள் ?'' எனக் கேட்டுவிட்டு புத்தர் கலைந்து சென்றார். போரும் கலைந்தது.
- நெருங்கியவரிடம் இருக்கும் சில தவறான செய்கைகளுக்காக நீங்கள் சண்டையிடுகிறீர்கள் என்றால் ... யாரை மதிக்கிறீர்கள்? நெருங்கியவரையா... தவறுகளையா? யோசியுங்கள். தப்பித்துக்கொள்ளுங்கள்!
- 'உறவுகளுக்கிடையே ஊடல் அவசியம்' இதைக் கண்டுபிடித்துச் சொன்னவர்கள்
- ஆழ்மன வெறுப்பின் முன்னோட்டமே ஊடல்.
- ஒருவர் மீது மற்றவருக்கு ஈர்ப்பு இருக்கும் வரை மனித உறவின் ஊடல் புகைபோல் கசிந்துகொண்டிருக்கும்.
- ஈர்ப்பு மறைந்த அடுத்த கணமே ஆழ்மன வெறுப்பு வெடிக்கும்.
- ஆழ்மன வெறுப்பு உருவானதற்குக் காரணம் ஆழ்மனத்தின் மாயக்கருத்துகளால் ஆன, வாழ்வு பற்றிய கனவிற்கும் நிஜ வாழ்க்கைக்கும் இடையே இருக்கும் பொருத்தமின்மையே!
- எல்லா ஊடல்களும் எல்லா கிளர்ச்சிகளும் எல்லாத் தற்காலிக சந்தோஷங்களும் நிஜவுலகில் கனவைக் குடிப்பவருக்கு மட்டுமே நிகழ்வது.
- அகங்காரம் என்பது தாறுமாறான கருத்துக்களின் தொகுப்பு. அகங்காரம் என்பது அதீத கற்பனைகளின் அதிபதி.
- அகங்காரம் மறைய,
ஊடல்கள் மறையும்.
உற்சாகம் பொங்கும்.
தேனினும் இனிய மனித வாழ்வு கனியும்.
டு ஜூன் பெண் ஞானி சீயானோ, தான் ஞானமடைந்த நிமிடத்தைப் பற்றி எழுதிய வரிகள்...
''என் இடுப்பிலிருந்த மூங்கிலால் ஆன வாளி நீரில் நிலா! எதிர்பாராத நேரத்தில் வாளி உடைந்து போனது. நிலாவும் நீரும் மறைந்து போனது. ஒன்றுமேயில்லை என் கையில். வெள்ளத்தில் மூழ்கிவிட்டேன்!"
- சீயானோவின் வாழ்க்கையைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொண்டால் இந்த வரிகளை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.
ஒரே ஒரு காரணத்திற்காக எந்த ஒரு மடாலயத்திலும் சீயானோ ஏற்றுக் கொள்ளப்படவில்லை. காரணம் சீயானோ ஒரு பேரழகி!
ஒரு அழகியை ஆஸ்ரமத்திற்குள் அனுமதிப்பது அவர்களின் அன்றைய சூழல்களுக்கு ஆபத்து என்று கூறி மறுத்துவிட்டார்கள்.
உறவினர்களால் உருவாக்கப்படும் மெழுகுபொம்மை மனித குணம். அதனால் சொல்கிறேன், அந்த மெழுகுபொம்மையை அழகூட்ட முடியும். நீங்களே மிக எளிதாய் செதுக்கி உருவாக்கலாம்!
ஆனால் சீயானோ மிகத் தீவிரமான ஆன்மீகத் தேடலுடையவர்.
தான் துறவியாக வேண்டுமென்பதற்காக அவர் செய்த காரியத்தை, பலர் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டோம்.
"முகத்தின் அழகுதான் தடையோ" என யோசிக்கார். அடுப்பங்கரை சென்றார். வேகவேகமாக தீக்கட்டையால் தாறுமாறாகத் தேய்த்து அகோரப்படுத்தி விட்டார்!
சீயானோ ஒரு பெண் என்ற முடிவுக்கு ஒருவர் வருவதற்கே சில நிமிடங்கள் தேவைப்படும். அந்த அளவுக்கு அகோர முகம். இப்போது எந்த பாதகமும் இல்லையென்று மடத்தில் சேர்த்துக் கொண்டார்கள்.
தொடர்ந்து முப்பத்து ஐந்து வருடங்களாக பல இனிமேல் என்னும் அளவுக்கு எல்லாத் தவங்களும் செய்துவிட்டார். கிடைத்தபாடில்லை.
அப்போது ஒரு நாள், தன் இடுப்பிலிருக்கும் மூங்கில்களால் ஆன வாளியிலிருக்கும் நீரில் தெரிந்த நிலவின் பிம்பத்தை ரசித்தபடியே நடந்து வந்து கொண்டிருந்தார் சீயானோ.
அப்போது ஒரு எதிர்பாராத தருணத்தில் அது நிகழ்ந்தது, ஞானமடைந்தார். அதைப் பின்வருமாறு அவர் சொல்கிறார்.
"இருபது வருடங்களாக என்னுடன் இருந்த அந்த மூங்கில்வாளி வலுவிழந்து விட்டிருந்தது. எதிர்பாராத நேரத்தில் வாளி உடைந்து போனது.
அடுத்த நொடியில் நீரும் நிலவும் மறைந்து போனது. என்னுள் ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது.
நானும் மறைந்து போனேன்.
மூங்கில்பட்டைகளால் ஆன வாளி உடைந்த நேரத்தில் என்னுடைய மனக் கருத்துகளாலும் மாயங்களாலும் ஆன அகங்காரமே உடைந்துவிட்டது. இரண்டும் ஒன்றாய் உடைந்து விழ, அந்த நிமிடத்தில் நான் முழுவிழிப்புணர்வோடு இருந்ததுதான் காரணம் !
ஆற்றுக்குள் இருக்கும் மீன், நான் ஆற்றுக்குள்தான் இருக்கிறேன் என்பதை திடீரென உணர்ந்துகொண்டது போல, நான் ஆனந்த வெள்ளத்தில் (கடவுள் சக்தியில்) சூழப்பட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டேன். ''
'வெள்ளத்தில் மூழ்கிப்போனேன்' என்று தன் ஞான அனுபவத்தை பெண் ஞானி சீயானோ எழுதியிருக்கிறார்.
இவ்வளவு ஆனந்தத்தை அடையத் தடையாக இருந்தது - மனக்கருத்துக்கள் எனும் மூங்கில்
தவக்கூற்று ஒன்று ...
தனித்திரு! விழித்திரு ! பசித்திரு!
இது நவீன மனிதனுக்குக் கடினம் எனவே சொல்கிறேன்.
சேர்ந்திரு! ஆழ்ந்திரு! புசித்திரு !
சேர்ந்து பகிர்ந்து வாழ் ஆழ்ந்து அனுபவி வாழ் ருசிக்கல்ல பசிக்குப் புசி.
எதைச் செய்தாலும் அதை முழுமையாய் செய். அதிலேயே நீ மூழ்கிவிடு. முழுமையடைவாய்!
பட்டைகளால் ஆன உருவமில்லாத மனமென்னும் வாளிதான். அந்த வாளிக்குள்
| நெ | இனிய வாழ்வுக்கு வழி |
|---|---|
| க். இ | உனக்கும் உனக்கும் உள்ள உறவில் நெருக்கம் குறைவாக இருக்கும்வரையில், யாரோடும் நெருக்கமாகிட உன்னால் |
| முடியாது! | |
| ம் | -குஃபி போதனை |
| நெருக்கக் குறைவு மறைந்து போகட்டும். |
தனிமைப்படுத்தப்பட்ட நீர் போல், நான் என் மனதுக்குள் சிக்கிக்கொண்டு தனிமைபடுத்தப்பட்டு விட்டேன்.
அது அந்த நிமிடத்தில் உடைந்தது, என்பதைத்தான் அவ்வளவு அழகாக கவிநயப்படுத்தியிருக்கிறார் ஞானி சீயானோ.
எதிர்காலம் பற்றியும் மனிதர்கள் பற்றிய மனக்கருத்துக்களையும், மாயங்களையும் நம் வாழ்க்கைச் சம்பவங்களிலிருந்துதான் சேகரிக்கிறோம்.
விவரம் தெரிந்த நாளிலிருந்து இந்தச் சேகரிப்பு ஆரம்பித்து நம் நிம்மதியை இழக்கச் செய்யும் மனக்கருத்துக்கள் நம்முள் நுழையும் போதுதான் அகங்காரமே உருவாகிறது. நிம்மதி பறிபோகிறது.
எதிர்காலம் 'ஹா… ஒஹோ…' என்றிருக்கும். வாழ்க்கைத் துணை மகாராணி / மகாராஜா போல் இருக்க வேண்டும். என்பன போன்ற மனக்கருத்துக்கள் சிறு வயதிலேயே எளிதாக மனிதருள் நுழைந்து விடுகிறது.
நிஜத்தில் சாத்தியப்பட வாய்ப்பில்லாத அதீத எதிர்பார்ப்புகள்தான் மனநிம்மதியை உறிஞ்சிவிட்டு அதிருப்தியை நம்முள் கொப்பளித்து விடுகிறது.
தேன் நிலவு நாட்கள்தான் ஒரு இளைஞன் இளைஞயின் வெகுகாலக் கனவுகள் நிஜமாகும் நேரம்.
இதை 'தேன் சூரியன்' எனச் சொல்லாமல், ஏன் 'தேன்நிலவு' என்று சொல்கிறார்கள் ?
பதில் காண கவனமாகக் கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.
இங்குதான் தன் வாழ்வில் முதல் முறையாக நிஜத்தை நேரடியாக இவர்கள் சந்திக்கிறார்கள்.
வாழ்வு இப்படியிருக்க வேண்டும், வாழ்க்கைத் துணை இப்படியிருக்க வேண்டும் என்ற கனவுகள் - இவ்வளவுதான் வாழ்க்கை என்ற நிஜத்தை, நேருக்கு நேர் சந்திக்கும் காலம் தேன்நிலவு.
| ெ |
|---|
| in |
| 010 |
மனதைச் செம்மையாக்கியவரை நிழல்போல் இன்பம் தொடரும்! - தம்மபதம்
மனக்கருத்துக்களை மாற்றி அமையுங்கள். உங்களையும் மீறி உங்களுக்குள் வந்து செல்லும் மூச்சுக்காற்று போல் இன்பமும் அமைதியும் வந்து செல்லும்!
வாழ்க்கையைப் பற்றிய கனவுக்கும், நிஜவாழ்க்கைக்கும் சம்பந்தமேயில்லை என்பதைத் தெரிந்துகொள்ள முப்பது நாட்களே அதிகமென்று பெருகிவரும் விவாகரத்துகள் உறுதியாகச் சொல்கின்றன.
"ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்' என்பதெல்லாம் விளையாட்டுப் பழமொழிகள் அல்ல. நம் மூதாதையரின் மனோதத்துவ முதிர்ச்சியின் வெளிப்பாடு.
"பதினாறு நாட்களுக்குமேல் ஒரு நிலவு தாங்காது. அதேபோல், மனிதா! உன் கனவுகளும் பதினாறு நாட்களுக்கு மேல் தாங்காது" என்பதை இலைமறை காயாய் செந்தமிழில் என்றோ தேன்நிலவு என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பதினாறு நாட்களில் வாழ்க்கை புளித்துப் போகவா கனவு காண்கிறோம். கனவின் இயல்பே இயல்பை மிகைப்படுத்தி நிஜத்தைப் புளிக்கச் செய்வதுதான்.
கனவுகளைக் கட்டுப்பாடில்லாது உருவாக்க அகங்காரம்தான், நிஜவாழ்வில் அனுபவித்து விடாது தடுத்துக்கொண்டிருக்கிறது.
கனவுகள் நிஜமாக ஆரம்பித்தால் அது அகங்காரத்திற்கு அழிவு! எனவே அது வாழ்வதற்காக, உங்களைக் கனவு காணத்தூண்டும். ஆனால், கனவை நிஜவாழ்வில் போடுவதற்கான எல்லா முன்னேற்பாடுகளையும் மூலமாகவே அது செய்து முடிக்கும். அவ்வளவு தந்திரமானது அது!
சீயானோவிற்குள் உடைந்தது இந்த அகங்காரம்தான்!
வருடங்கள் பல ஆனதால் வலுவிழந்த மூங்கில் வாளி போல், தொடர்ந்து தியானமார்க்கத்தில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள, அகங்காரத்தின் மாயக்கால்களான 'தவறான கருத்துக்கள் வலுவிழந்து விடும்.'
எதிர்பாராத தருணத்தில் சீயானோவின் மூங்கில்வாளி உடைந்தது போல, அகங்காரம் நம்முள்ளும் ஒரு நாள் உடைந்து போகும். தொடர்ந்து தியானம் செய்பவருக்குக் கிடைக்கும் ஆச்சரியமான பரிசு இது!
அதன்பின் கனவில்லாக வாழ்வு பிறக்கும். தேன் நிலவு என்ற முப்பது நாட்கள் கொண்டாட்டத்தைத் தாண்டி வாழ்வு முழுவதும் கொண்டாட்டமாகி விடும். அப்போது வாழ்வின் கொண்டாட்டம் வருடம் முழுவதும் இருக்கும். தேன் சூரியனாக மாறிவிடும் - வாழ்வு முழுவதுமாக!
வருடத்தின் முன்னூற்று அறுபத்தைந்து நாட்களையும் அனுபவிக்க முடியும்.
வாழ்க்கையோ, வாழ்க்கைத்துணையோ சலிப்புத் தட்ட, கனவு கடந்த மனிதருக்கு வாய்ப்பே இல்லை. மனக்கருத்துக்களைத் தாண்டி வாழ ஆரம்பியுங்கள். வாழ்க்கை தேன் போன்று இனிக்க ஆரம்பிக்கட்டும். தேனினும் இனிய மனித வாழ்வு உங்களுக்கும் உரித்தானதாகட்டும் !
அர்த்தமுள்ள சம்பவம் ...
ஒரு வாசகரின் கேள்வி ''தினம் செய்யும் சிறிது நேர தியானம், கடினமான மனதை எப்படி வலுவிழக்கச் செய்யும் ?''
பதில் ... ''தியானமும் மனமும் - இந்து மாமியார் மருமகள் போன்றவை. இரண்டுக்கும் ஒத்துப்போகாது. யாராவது ஜெயித்தாக வேண்டும். தியானம் உங்களுக்குப் புதுவரவு! தினம் அனுமதியுங்கள்! உங்களையும் உங்கள் மனதையும் கைக்குள் கொண்டுவரும் வித்தை தெரிந்தது. தியானத்தை அனுமதித்து பாருங்கள்".
• இனிய வாழ்வு கனிய... 'எளிய தியானத்தை' வலியப் போய், செய்தாலும் நல்லதே!
ஏக்கத்தைத் தூண்டும் மனக்கருத்துக்கள் துண்டிக்கப்பட வேண்டும் !
கிடைக்கும் முன் கடுகேயானாலும் மலையாக்கிக் காண்பித்து, கிடைத்த பின் மலையேயானாலும் கடுகாக்கிக் காண்பிக்கும் ....
அது மடமனம்.
புகை, மது போன்றவற்றிற்கு அடிமையாயிருப்பவர்கள் அது கிடைக்கும் வரை அது இல்லாவிட்டால் வாழ்வே இல்லை எனும் அளவுக்கு ஏங்குவர். அது மலை போலத் தெரியும்.
அது கிடைத்த மறுநிமிடமே ஏக்கம் சுருங்கிப் போகும்.
இதுவரை தெரிந்தது இப்போது கடுகுபோல் மாறிவிடும்.
இது மனதின் மிக அடிப்படையான குணங்களில் ஒன்று. எல்லா மனிதர்களும் மனதின் இந்தப் பண்பால் தினம் தினம் பாதிக்கப்படுபவர்கள்தான்.
கரண்டலை தீண்டுவது யுக்தி. கரண்டலை தாண்டுவது ஆனந்தம்.
ஒரு டீ, ஒரு இனிப்பு, ஒரு சுவை மிகு உணவு, ஒரு குட்டித் தூக்கம், ஒரு புது உடை, ஒரு நண்பரோடு உறவினரோடு உட்கார்ந்து பேசுவது ... போன்ற பல வாழ்க்கையம்சங்கள் மனிதனை கட்டிப்போட்டு வைத்திருக்கின்றன.
மேற்குறிப்பிடப்பட்ட எல்லாமே அவை கிடைக்கும்வரை மிகுந்த ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் சந்தோஷத்தைத் தரக்கூடியதாகவும் தெரியும்.
ஆனால் அவை கிடைத்தவுடனேயே அந்த ஆர்வம், சந்தோஷம் எல்லாம் மறைந்து அது மிக மிகச் சாதாரணமான ஒன்றாகிவிடும்.
ஏக்கப்பட்ட அளவிற்கும் கிடைத்த சந்தோஷத்திற்குமுள்ள வித்தியாசம், எப்போதுமே மலைக்கும் கடுகுக்குமுள்ள வித்தியாசமாகவே இருக்கிறது!
காரணம், விரும்புவது கிடைக்கும் வரை மனிதனுள் பரபரப்பை உருவாக்கும் மனக்கருத்தானது, கிடைத்த பின் மறைந்து போவதே.
ஆசையைத் தூண்டி. அது கிடைத்ததும் மறைந்து கொள்ளும் தன்மை பெற்ற இந்த மனக்கருத்து எல்லோரிடமும் இருக்கிறது.
தவறான மனக்கருத்துக்காக மனிதன் ஓடுவதும் ஆடுவதும் பரிதாபம்.
இனி ஆசை உங்களை ஆட்டுவிக்கும் காலங்களில் மிகக் கவனத்தோடு இருங்கள். காரணம், அவை ஒரு தவறான மனக்கருத்தின் தூண்டுதல்கள்.
தூண்டலில் இருந்து மீள். மீதி வாழ்வு உன் கையில்
தூண்டுவது துண்டிக்கப்பட வேண்டும்.
தூண்டல்கள் வரும் இடம்வரை செல்லுங்கள். அப்படிச் செல்வதின் உபவிளைவாக தூண்டல்களையே துண்டிக்கும் கலையைக் கற்றுக்கொள்வீர்கள்!
தூண்டல்கள் துண்டிக்கப்பட்ட பின்தான், மனிதன் முறையாகத் தன் வாழ்வை வாழ ஆரம்பிப்பான்.
தூண்டப்படும் காலங்களையெல்லாம் தியான காலங்களாக்குங்கள். உங்கள் வாழ்வை உங்களின் விருப்பம் போல வாழ ஆரம்பிப்பீர்கள்!
கருப்ப
திருப்தி இரண்டு வகை.
ஒன்று - போலித் திருப்தி. இரண்டு - ஆழ்ந்த திருப்தி.
- உணவு, உறக்கம், காமம், கிளர்ச்சி அல்லது விளையாட்டு என்ற இந்த நான்கு விஷயங்களிலேயே ஐந்தறிவு ஜீவிகள் திருப்தி காண முயற்சிக்கும். இதைத் தாண்டி ஒரு படிகூட எடுத்து வைக்க முடியாது.
- காரணம் முழுமையாக யோசிக்கும் மனித மனம் அவற்றிடம் இல்லை. மனம் இருந்தும் மனிதர்கள் உணவு, உறக்கம், காமம், மேல்நிலை தேடுவதில் சுகம் கண்டு - நான் திருப்தியாகத்தான் இருக்கிறேன் என்று கூறினால் அதுதான் போலித் திருப்தி.
- அன்பு, நிம்மதி, ஆனந்தம் இவற்றை அடைய முயற்சி செய்து அடைந்த பின் கிடைப்பதுதான் ஆழ்ந்த திருப்தி.
கிரேதர்வ நாட்டு அரசன் யயாதி, சாதாரண அரசன் அல்ல; பேரரசன். அவனுக்கு நூறு வயது ஆனது.
அரசன் ஒருவன் தன் வாழ்க்கையில் எவ்வளவு இன்பத்தையும் சந்தோஷத்தையும் அடைய முடியுமோ, அதைவிடப் பன்மடங்கு சந்தோஷத்தை அனுபவித்தவன்தான் இந்த யயாதி.
ஒருநாள் இரவு திடீரென அவன் முன் வந்து நின்றது மரணம். "பறப்படு, உன் நேரம் வந்து விட்டது. உன்னைக் கொண்டு போகத்தான் நான் வந்திருக்கிறேன்' - கடமை தவறாத குரலில் சொன்னது மரணம்.
யயாதி மிகப்பெரிய வீரன். இருந்தாலும், மரணத்தைக் கண்டு நடுங்கினான். "இவ்வளவு சீக்கிரத்தில் என் உயிரைக் கொண்டுபோக வந்து விட்டாயா?" என்று மரணத்திடம் கெஞ்சலாகக் கேட்டான் யயாதி.
"சீக்கிரமா? உனக்கு நூறு வயதாகிவிட்டது, உன் முதல் மகனுக்கே எண்பது வயது. இன்றும் உனக்கு வாழ ஆசையா?" என்று கேட்டது மரணம்.
"ஏ ..... மரணமே! எனக்கு நூறு மனைவிகள், எனவே, நூறு மகன்கள், எனக்குப் பதிலாக, என் மகன்களில் ஒருவர் உயிர் துறந்து, உன்னோடு வருவதற்குத் தயாராக இருந்தால் என்னை விட்டுவிடுகிறாயா?" மரணத்திடம் பஞ்சாயத்து பேசினான் யயாதி.
"தாராளமாக விட்டுவிடுகிறேன். ஆனால், நூறு வயதான நீயே வாழ ஆசைப்படும்போது, உன்னைவிட வயது குறைந்த உனது மகன்கள் எப்படி உயிர் துறக்கச் சம்மதிப்பார்கள் ?" -யயாதியிடம் கேட்டது மரணம்.
யயாதி எல்லா மகன்களையும் அழைத்தான் " எனக்காக உங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளப் போகிறவர்கள் யார்?" என்று கேட்டான்.
கேள்விக்குப் பதில், அமைதிதான். ஆனால், பதினாறு வயது நிரம்பிய அவன் கடைசி மகன் மட்டும் எழுந்து, "நான் தயார்!" என்றான்.
அவன் பதிலைக் கேட்டு மரணமே ஒரு கணம் திடுக்கிட்டது. "நீ சிறுவன். ஒன்றும் அறியாதவன். வாழ்க்கையை அனுபவிக்காதவன். வயதான உன் தகப்பனும் அண்ணன்களும் வாழ்க்கையை நன்றாக அனுபவித்தவர்கள். அவர்களே வரத் தயங்குகிறபோது, நீ மட்டும் தயார் என்கிறாயே! நன்றாக யோசித்து பார்' என்றது மரணம்.
எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் பேச ஆரம்பித்தான் அந்தச் சிறுவன். "நூறு வயது வாழ்ந்த என் அப்பாவால் வாழ்க்கையில் திருப்தியடைய முடியவில்லை. என் அண்ணன்களும் அப்படியே.
யாருமே திருப்தி அடையாத போது, நான் மட்டும் ஏன் நூறு ஆண்டுகள் வாழ ஆசைப்பட வேண்டும் ? இவர்களைப் போன்று போலித் திருப்தியில் வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை. குறைந்தபட்சம் என் தந்தைக்காக என் உயிரைக் கொடுக்க முடிகிறதே! அந்த ஆழ்ந்த திருப்தி ஒன்று போதும்!' என்று சொன்னான் அந்தச் சிறுவன்.
சிறுவன் சொன்னதைக் கேட்டு மரணத்தால்கூட மறுப்புச்சொல்ல முடியவில்லை.
இந்தக் கதையில் வரும் யயாதி மாகிரிதான் நம்மில் பலரும் இருக்கிறோம். திருப்தி என்பது நம்மிடம் அவ்வளவு எளிதில் உருவாகிவிடுவதில்லை.
இலட்ச ரூபாய் வைத்திருப்பவர், கோடி ரூபாய் உடைய பணக்காரராக வேண்டுமென்று நினைப்பது ஆசை. கோடி ரூபாய் சேர்ந்த பிறகும் திருப்தியடையாமல், அதை இன்னும் பல கோடிகளாக்க வேண்டுமென்று நினைப்பது - போலித் திருப்தியை உருவாக்கும் பேராசை என்னும் நச்சு.
மிக்ஸி வாங்குகிறோம் கிரைண்டர் வாங்குகிறோம் கறுப்பு - வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டியை விற்று, கலர் டி. வி. வாங்குகிறோம். வாஷிங்மெஷின் வாங்குகிறோம். நீண்டு கொண்டேதான் போகிறது. ஏன் மனநிறைவு என்கிற உணர்வு
| வரிசை எண் | பொருள் |
|---|---|
| 1 | அன்பு, நிம்மதி, ஆனந்தம் இவற்றை அடைய முயற்சி செய்து - அடைந்த பின் |
| 2 | கிடைப்பதுதான் ஆழ்ந்த திருப்தி! |
நமக்கு ஏற்படுவது இல்லை. காரணம் போலித் திருப்திதான்.
'நான் நிம்மதியாக இருக்கிறேன்' என்ற கற்பனை எண்ணமும் 'நான் திருப்தியாக இல்லை' என்ற உணர்வும் கலந்து வெளிப்படும் போது, அது போலித் திருப்தியாக மாறிவிடுகிறது. உலக விஷயங்களால் திருப்தியே இல்லாமல் 'அடுத்து அடுத்து' என்று செய்துகொண்டே இருப்பது, நம்மிடமிருந்து கொஞ்ச நஞ்ச நிம்மதியைக்கூடக் கெடுத்துவிடும்.
வாழ்வில் திருப்தியே அடையாதவர்கள் பைத்தியமாகக்கூட அலைய நேரிடலாம்.
உண்மையை உணர்வதில் - திருப்தி ! பெருந்தன்மையாக நடந்துகொள்வதில்-திருப்தி ! கருணை காட்டுவதில் - திருப்தி ! மற்றவர்களுக்குக் கற்றுத்தருவதில் - திருப்தி என திருப்தி வாழ்க்கைத்திடலில் கொட்டிக் கிடக்கின்றன.
ஆழ்ந்த திருப்தி உங்களுக்குள் மலரும் வரை 'போதும்' என்ற உணர்வு மலராது. போலித் திருப்தி உங்களைத் தொற்றிக்கொண்டிருக்கும் வரை 'இதற்கு மேலே என்ன இருக்கும் ?' என்ற மந்த எண்ணம் எழுந்துகொண்டே இருக்கும்.
போலித் திருப்தியை ஒழிக்க மிகச் சரியான வழி, வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் திருப்தியைக் காண்பதுதான். ஆழ்ந்த திருப்தியைப் பெறுவதற்குத் தொடர்ந்து உங்கள் புத்திசாலித்தனத்தை உபயோகப்படுத்திக் கொண்டே இருங்கள் ....
போலித் திருப்தியிலிருந்து உதறி எழுந்து திருப்தியை நோக்கிப்பயணம் செய்ய ஆரம்பியுங்கள்!
மனதின் எலும்புகள்
-
ஒளிந்திருக்கும் மாயச்சிலைதான் மனம்.
-
அழகிய சிற்பம் உருவாவது சிற்பியின் கைவண்ணத்தைப் பொறுத்தது. ஆரோக்கிய மனம் உருவாவது தனிமனிதரின் மனமுதிர்ச்சியைப் பொறுத்தது.
-
ஒரு கல்லில் இருந்து அழகு சிலையைச் செதுக்க உதவும் உளி போன்றது - மனதைச் செதுக்க உதவும் உணர்வு! (மனதின் உளி, உணர்வு)
-
பாறையைச் சிலையாக்குபவர் சிற்பி. மனதைக் குதூகலமாக்குபவர் தியானி.
-
நாம் நம் தேவைக்கேற்றபடி மனதை விழிப்புணர்வால் செதுக்கி வடிவமைக்க முடியும்.
இரமேசான் காட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட அபூர்வ சிம்பன்ஸி குரங்கு ஒன்று கலிபோர்னிய தொடர்ந்து மூன்றரை வருடங்களாக தீவிர அராய்ச்சிக்குட்படுத்தப்பட்டது.
ஆராய்ச்சியில் இருபத்தைந்தடி கூண்டுக்குள், அதன் வாழ்க்கையும் நடவடிக்கையும் சுருக்கப்பட்டுவிட்டது.
ஆராய்ச்சி முடிந்தபின் அதன் ஜோடிக் குரங்கும் வரவழைக்கப்பட்டது. இருப்பத்தைந்தடி, அறுபதடி கூண்டாக மாற்றப்பட்டது.
உடலின் எலும்புகளைச் சரி செய்வது கடினம். ஆனால், மனத்தின் எலும்புகளை எளிதாய் சரிசெய்யலாம். காரணம் - அவை மாய எலும்புகள்.
மாற்றப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் இன்னொரு அச்சரியத்தைக் கண்டுபிடித்தார்கள்.
கூண்டு அறுபதடி பெருகினரலும், அந்தக் குரங்கு இத்தனை வருடமாக தான் வாழ்ந்து பழகிய அந்த இருபத்தைந்தடி இடத்தை வாழ்நாளெல்லாம் பயன்படுத்தியது.
குரங்கின் மனம் இருபத்தைந்தடிக்குள் சுருங்கிப் போனது.
இறுகிப் போனது.
முதலில் மனித மனம், அது கிரகிக்கும் சம்பவங்களைக் கொண்டு தன்னை உருவாக்கிக் கொள்கிறது.
அவற்றிற்குள் இறுகிப் போகிறது ... அது நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும்!
வாழ்க்கையில் சுகதுக்கங்களை மனிதர்கள் தொடர்ந்து அனுபவிக்கக் காரணமானது இந்த மனதின் எலும்புகள்தான்.
மனித உடலுக்கு எலும்புகள் போல், மனதிற்கு எண்ணங்கள்!
எண்ணங்களே இல்லையென்றால் மனமே இல்லை. எண்ணங்களின் தொகுப்பே மனம்.
இதில் வேடிக்கை என்னவென்றால், எலும்புகள் வளைந்தோ, நெளிந்தோ போய்விட்டால், மனிதர்கள் குட்டையாகவோ, கூனாகவோ மாறவேண்டியதுதான்.
எண்ணும் விதம் களங்கப்பட்டதாகவோ, ஆனந்தத்திற்கு மாறானதாகவோ இருந்தால், மனமும் கூனாகவோ, குருடாகவோ மாறிவிடும்.
மனிதருக்குள் சமுதாயத்தாலும் விதவிதமான எண்ணங்கள் உறவினர்களாலும் திணிக்கப்படுகிறது. எண்ணங்கள் சேரச் சேர, மனம் என்னும் குழந்தை வளர ஆரம்பிக்கிறது.
ஒரு சின்ன கதை...
ஐந்து வயதில் காணாமல் போன தன் நொண்டிக் குழந்தையை நினைத்து நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார் நவாப்.
நவாப்பிற்குத் துக்கம் காளாநிலைக்குச் செல்லும் போதெல்லாம் தளபதியை அழைத்து, "போய் என் பையனைக் கண்டுபிடியுங்கள். என்னுடைய மகன் இல்லாமல் நாட்டுக்குள்ளே வரக்கூடாது. மீறி வந்தால் மரண தண்டனைதான்" எனச் சொல்லி அனுப்பி விடுவார்.
இப்படி பத்து வருடத்திற்குள் பதின்மூன்று தளபதிகளைத் தேடச் சொல்லி அனுப்பிவிட்டார். எனவே தளபதி பதவி என்றாலே அரசவையில் பீதிகொள்ள ஆரம்பித்தார்கள்.
பதினாலாவதாக ஒரு தளபதி நியமிக்கப்பட்டார். ஒரு நாள்! துக்கம் உச்சத்திற்குச் செல்ல, அந்தத் தளபதியிடமும் எப்போதும்
| வரிசை எண் | பொருள் |
|---|---|
| 1 | மனதின் |
| 2 | எலும்புகள் |
| 3 | எண்ணங்கள். |
சொல்வதை சொல்லி நாட்டை விட்டு அனுப்பிவிட்டார்.
பதினாலாவது தளபதி புத்திசாலி. வித்தியாசமாக யோசித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தன்னுடன் வந்த காவலாளிகளிடம், அவர்கள் கண்ணில் படும் பதினைந்து வயது மதிக்கத்தக்க எல்லா நொண்டிப் பிச்சைக்காரச் சிறுவர்களையும் இழுத்து வரச் சொன்னார்.
காவலாளிகள் 25 பிச்சைக்காரச் சிறுவர்களை அழைத்து வந்தார்கள். தன் அரசனுடைய முகச்சாயலுக்கு ஒத்திருக்கும் ஒருவரை தளபதி தேர்ந்தெடுத்தார்.
அந்த பிச்சைக்காரச் சிறுவனை வணங்கி, "இளவரசே, உங்களுக்காக உங்கள் தந்தை காத்துக்கொண்டிருக்கிறார்'என்றார் தளபதி.
பிச்சைக்காரன், "அய்யா ... என்ன சொல்கிறீர்கள் ... நானொரு அனாதை, பிச்சைக்காரன்".
தளபதி, "இளவரசே! அப்படிச் சொல்லாதீர்கள் உங்களுக்கு விவரம் தெரியும் வயதடையும் முன்பே நம் நாட்டிலிருந்து நீங்கள் காணாமல் போய்விட்டீர்கள். தயவு செய்து தாங்கள் திரும்ப நாட்டிற்கு வர வேண்டும்" என்று சொல்ல, தலைகீழாக மாறிப்போன பிச்சைக்காரன், அதிகாரத் தோரணையில் "அப்படியா சொல்கிறாய் நீ ? சரி சரி. சீக்கிரம் பல்லக்கை கொண்டுவரச் சொல் ... " என்று ஒருமையில் பேச ஆரம்பித்தான்.
பிச்சைக்காரன் இளவரசன் ஆகவில்லை... அதற்குள் மனதளவில் இளவரசனாகி, "அதைச் செய், இதைச் செய்" என்று கட்டளையிட்டபடியிருந்தான்.
"இந்தப் பிச்சைக்காரன் எப்படி நடந்துகொண்டால் எனக்கென்ன, நான் நாடு திரும்ப வேண்டும்" என்றெண்ணிய தளபதி, இளவரசன் என்றதும் ஆட்டமாய் ஆடும் பிச்சைக்காரனைப் பார்த்து, "இதற்குப் பெயர்தான் அகங்காரமா!" என்றெண்ணி தன்னுள் சிரித்துக்கொண்டார்.
ஒருவன் நுழைந்துவிட்ட, நுழையப்போகும் எண்ணங்களைப் பொறுத்தது.
எண்ணங்களின் சக்தியை விளக்கும் ஓர் அழகான கதையிது.
பாருங்கள்! எண்ணத்தில் ஏற்பட்ட சிறுமாற்றம். இதுவரை பிச்சைக்காரன் என்றெண்ணிக் கொண்டிருந்தவனின் மனதில் புதிதாக இளவரசனென்ற ஒரு எண்ணம் நுழைந்து விட்டது. அவன் இளவரசனாகவே மாறிவிட்டான்.
கதையின் கதாபாத்திரத்தை ஆழ்ந்து பார்த்தால் பிச்சைக்காரன், இளவரசன் என்ற இரண்டுமே "எண்ணத்தைப் பொறுத்தது" என்பது தெரிய வரும்.
எண்ணங்களை உறிஞ்சி உறிஞ்சி உயிர் வாழும் மனம் தொடர்ந்து நிறம் மாறிக்கொண்டேயிருக்கும்.
ஒரு பெண்ணையோ, ஆணையோ தொடர்ந்து நான்கைந்து பேர்"நீ அழகு" என்று சொல்லிவிட்டால் போதும், தான் அழகென்ற எண்ணம் அவருக்குள் கர்வமாக மாறிவிடும்.
அதே ஆணையோ"நீ மோசம்" என்று தொடர்ந்து நான்கைந்து பேர் சொல்லி விட்டால் போதும். தான் மோசமென்ற எண்ணம், வருத்தமாக மாறிவிடும்.
மனம் இல்லாததால்தான், மற்றவர்கள் புகுத்தும் எண்ணங்கள் மனிதரைக் குரங்காட்டம் ஆட வைக்கிறது. ரிலாக்ஸே இல்லாதவர்களாக மனிதர்களை மாற்றிவிட்டது.
உறுதித்தன்மையும் தெளிவும் மனதின் முதுகெலும்புகள்.
இன்று நம்மிடமிருக்கும் மனம் ஒழுங்காக செதுக்கப்படாத பாறை. முடிவெடுக்கத் தெரியவில்லை என்றால் விழிப்பணர்வால் மனதை செதுக்கி ஆரோக்கியமான மனம் படைக்கலாம்
பிச்சைக்காரனுக்குள், "நீ இளவரசன்" என்ற எண்ணத்தை நுழைக்க ஒரு தளபதி தேவையாயிருந்தது. "நீ இளவரசன்" என்ற உறுதித்தன்மையை தளபதி தந்த பின்தான்"நான் இளவரசன்" என்றெண்ணி அவனால் நிமிர முடிந்தது.
ஒரு முறை யோசியுங்கள்...
ஏன், வெளியே இருப்பவர்கள்தான் நம் மனதின் எலும்புகளான எண்ணங்களை நிர்ணயிக்க வேண்டுமா ? நாமே நிர்ணயிக்கக்கூடாதா ?
பதில் - நிர்ணயிக்க முடியும் என்பதே!
முதலில் உங்களை நீங்களே ரிலாக்ஸாக அனுமதியுங்கள். களங்கப்பட்ட எண்ணங்களைக் கண்டுபிடியுங்கள்.
தவறான எண்ணங்களைத் தூக்கியெறிந்து விட்டு நல்ல எண்ணங்களை முழு விழிப்புணர்வோடு நீங்களே உங்கள் மனதிற்குள் நுழையச் செய்யுங்கள். புது மனதை நீங்களே வடிவமைவுங்கள் - புது எண்ணங்களால்! - இது சாத்தியமானதே.
நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு இளவரசர்! நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு இளவரசிதான்!
அர்த்தமுள்ள சம்பவம் ...
தத்துவப் பேராசிரியருக்குக் கோபம்! "ஏற்கெனவே ஷூ போட்டிருக்கிறேன். அதுமேலேயே ஷூல போடச் சொன்னால் எப்படி முடியும் ?'' என வெடித்தவரை பார்க்குச் சிரித்த ஜென்ஞானி,
" இன்னொருவரின் எண்ணங்களை உங்கள் தலையினுள் நீங்கள் சுமந்து திரிவது சாத்தியமாகும்போது, இன்னொரு ஷூ போடுவதை வினோதமாகப் பார்ப்பது ஏன்?" எனக் கேட்டார்.
- சிறு தூசி படுவதை விரும்பாதவர்கள் வண்டி வண்டியாய் குப்பையான எண்ணங்களைக் குவிக்கிறார்கள். வெட்கப்பட வேண்டியதுக்கு வெட்கப்படுவதேயில்லை!
திரும்பிப் பாருங்கள் ... முழுசுதந்திரம் பெறுவீர்கள் !
நிரந்தர சுவர்களால் ஆன அறையின் ஒரு மூலையில் கியாண முட்டிக்கொண்டு நின்றவர் கூச்சலிட்டார்... "யாராவது காப்பாற்றுங்கள். நான் சிறையிடப் பட்டிருக்கிறேன். எப்படி வெளியே வருவது ?"
'' மூடனே, திரும்பிப் பார்!' என்ற வார்த்தைகள் காதில் விழ, திரும்பப் பார்த்தவர் அதிர்ந்தார். காரணம் நான்காவது பக்கம் சுவரே இல்லை!
அந்த மனிதர் மட்டும் திரும்பிப் பார்க்காமல் இருந்திருந்தால் ... அவர் அடைபட்டிருப்பதாக நம்பிக்கொண்டிருந்த அறையிலிருந்து வெளியே வந்திருக்க முடியுமா ?
அவர் சுதந்திரமடைய அவர் செய்த ஒரே ஒரு காரியம் -
"திரும்பிப் பார்த்தது" மட்டுமே.
கதவில்லா கூண்டுக்குள் சிறைப்பட்ட சிங்கம் நீ!
நீங்களும் மனதின் எலும்புகளான எண்ணங்கள் எனும் சிறைக்குள் சிக்கிக்கொண்டு தவிப்பவர்தான்.
தியான, ஞானக்கருத்துகள் உருவாக்கப்பட்டது, இந்த ஒரே ஒரு அற்புதம் நிகழத்தான்.
அது நீங்கள் உங்களைத் திரும்பிப் பார்க்கும் சுபநிகழ்வுகளின் தொகுப்பு.
உங்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பார்க்கிறீர்கள். ஆராய்கிறீர்கள். புரிந்து கொள்கிறீர்கள்.
ஆனால், உங்களை மட்டும் தவற விட்டுக்கொண்டேயிருக்கிறீர்கள்.
விளைவு - உங்களின் எண்ணங்களும் நம்பிக்கைகளுமே உங்களைச் சிறைப்படுத்திவிட்டன.
திரும்பிப் பார்க்காத ஒரே ஒரு காரணத்தால் ஜென்ம ஜென்மமாக உங்களின் வாழ்வு, அனுபவிக்கும் திறன், ஆனந்தம், சுதந்திரம் என்ற எல்லாமே சுருங்கிப் போயிருக்கிறது.
மனிதர்கள் கட்டுப்பாடுகள் மிகுந்த அடிமையாயிருக்கிறார்கள்.
எண்ணங்களை மாற்றுவதற்கு, நல்ல எண்ணங்களை புகுத்துவது என்பது....
அறையின் சுவர்களைத் துளையிடுவதற்குச் சமம்.
இதற்கு வெகு பிரயத்தனம் தேவை.
ஆஹாவென ஆடிப் பாடி வாம வங்க ராஜா நீங்கள்!
இதற்கு ஒரே ஒரு எளிய விடிவு - அது திரும்பிப் பார்ப்பதுதான்!
உங்களின் எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட ஆச்சரியத் தொகுப்பான உங்களைத் திரும்பப் பாருங்கள்.
கண்ணை மூடிச் சிரத்தையோடு முயற்சிசெய்யுங்கள்.
எந்தவொரு நொடியிலும் 'திரும்பிப் பார்க்கல்' நிகழ்ந்து விடக்கூடியதே.
ஒரு சிறு திருப்பம் - முழுச் சுதந்திரத்தைத் தந்துவிடும்.
பரிசோதித்துப் பாருங்கள்!
உச்சத்தில் வாழுங்கள்
- ஒன்றைச் சுவைத்தால் எவ்வளவு சந்தோஷம்! இரண்டு ... மூன்று ... ! நான்கு ? ? ... ஏழு, எட்டு சுவைக்க எவ்வளவு மயக்கம் ? தலைச்சுற்றல் ? எவ்வளவு கஷ்டம் ?
என்ற வெறி அனுபவிக்கும் வரை இருக்கிறது. நினைத்தது. நினைத்த அளவுக்கு நடக்கவில்லை என்றால் உடலே சிறிது நடுங்குகிறது, வியர்க்கிறது .
இவ்வளவு கொள்ளை ஆசை, அனுபவித்தபின் எங்கே போனது ? அடுத்த நிமிடம் வெறும் சலிப்பாகிவிட்டதே! அதுவரை ஈர்த்தது. இப்போது ஈர்க்கவில்லையே ஏன் ?
- துன்பமடைவதும் எதனால் ? இவற்றிலிருந்தெல்லாம் சாத்தியமா ?
பதில் - நிச்சயம் சாத்தியமே !
ஒரு காதலிக்கு வந்த சுவாரஸ்யமான ஈமெயில் ஒன்று ...
'என் அன்பே! உயிரே! மூச்சே! வரும் வெள்ளி, உன்னைக் காண வருவேன். அப்போது, கடற்கரை மணலை கிருஷ்ணரை ஆன்மீக சத்குருவாக கருதுபவர்களும் ஆன்மீக வள்ளலான கிருஷ்ணரிடமிருந்து ஞானத்தையும் ஆனந்தத்தையும் பெற்றுக் கொள்ளத் துடிக்கும் பக்தர்களும் சக்தியைக் திறந்த மனதோடு ஏற்கும் கன்மை எனும் மகத்தான பெண்மைக்குணம் பெற்றவர்களும், 'கோபியர்' என்றழைக்கப்படுவார்கள்!
நாராய் திரித்து - அதில் நட்சத்திரங்களையெல்லாம் கொய்து செய்த மாலையோடு, நீலவானத்தை உரித்து உனக்கு அதைச் சேலையாக மடித்து, உன் நெற்றிக்கு பொட்டிட்டு அழகுப்பார்க்க சூரியனையோ, சந்திரனையோ நிச்சயம் பறித்து வருவேன். இப்படிக்கு உனக்காக உயிர்வாழ்பவன்'
பின் குறிப்பு: வெள்ளிக்கிழமை மழை பெய்யும் போல் வானிலை இருந்தால் நான் வரமாட்டேன். நன்றி.
உணர்ச்சி வசனம் பேசுவது எளிது. வாழ்வது?
- "அதைச் செய்வேன்", "இதைச் செய்வேன்" எனச் சொல்வது எளிது. செய்வது ?
- முடியாததைக் கதைக்காதீர்கள். முடிந்ததைச் செய்யுங்கள். அதையும் உச்சத்தில் செய்யுங்கள். வாழ ஆரம்பிப்பீர்கள்.
ஆனந்தத்தின் உச்சியிலேயே இருப்பதென்பது நிச்சயம் சாத்தியம் என்று வாழ்ந்துகாட்டிய பெண் ஞானிதான் மீரா.
கிருஷ்ணர் வழியாக இறைவனை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர் மீரா.
மீரா - கவித்தன்மையின் உச்சம். பக்தியின் உச்சம். பக்திப் பரவச நடனத்தின் உச்சம்.
உலகத்தில் உள்ள அனைவரும் இறைசக்திக்காகக் காத்திருக்கும் கோபியர்கள் (பெண்கள்) என்றும் இறைசக்தியின் பூரண வெளிப்பாடான கிருஷ்ணரை ஆண் என்றும் பாவித்து, அந்தப் பாவனையின் உச்சத்திலேயே வாழ்ந்தவர் மீரா.
அந்த உச்சத்திலேயே வாழ்ந்து தன்னுள் இருக்கும் ஆனந்த சக்தியை, இறைச் சக்தியை உணர்ந்தவர்.
கிருஷ்ணர் சத்குரு. ஆன்மீகத் தேடுதலோடு இருப்பவர்கள் அனைவரும் கோபியர்கள். இதுதான் கிருஷ்ண கோபியர் தத்துவம்.
மீரா செல்லும் இடமெல்லாம் பக்திப் பரவசம் தொற்றிக் கொள்ளும். மீராவின் பாடலும் பக்திப் பரவசமும் நடனமும் சேர்ந்து அந்த இடத்தையே மாற்றி விடும்.
சும்மா பார்த்துக்கொண்டிருப்பவர்கள்கூட மீராவின் ஆனந்த நடனத்தினால் ஈர்க்கப்பட்டுவிடுவார்கள். ஈர்க்கப்பட்டவர்கள் அனைவரும் அவர்களையும் அறியாமல் பக்திப் பரவசத்தில் மூழ்கிவிடுவார்கள்.
இந்தச் செய்தி காட்டுத் தீ போல பாரதம் முழுவதும் பரவிக் கொண்டிருந்த நேரம்.
'மீரா மதுரா நகருக்கு வருகை' - இந்தச் செய்தியைக் கேட்டதுமே அந்த நகரின் கிருஷ்ணர் கோவில் தலைமை பூசாரிக்கு அடிவயிறு கலங்கியது.
| வரிசை எண் | பொருள் |
|---|---|
| 1 | அது எதுவாயினும்… முடியுமா? முடித்து விடு. |
| 2 | முடியாதா? விட்டுவிடு. முடி! இல்லை விடு! நடுவில் நிற்காதே! |
| 3 | உச்சிக்குச் செல்! |
காரணம்,
அந்தக் கோயிலுக்குள் ஆண்கள் மட்டுமே நுழைய அனுமதி. இது அவர்கள் காலங்காலமாகக் கடைப்படித்து வரும் விதி.
"மீராவோ புதுமைப்பெண். புரட்சிப்பெண். கிருஷ்ணபக்தை! எடுத்த காரியத்தில் எல்லாம் வெற்றியையே சந்திக்கும் பெண்.
எனவே மீரா மதுரா வந்தால் கிருஷ்ணர் கோயிலுக்குள் நுழைந்தே தீருவார். இவ்வளவு நாள் கடைப்படித்த விதி என்னாவது! அதை எப்படியாவது தடுத்தாக வேண்டும்" என்பதே பூசாரியின் பயத்திற்குக் காரணம்.
மீராவைத் தடுக்க கோயில் வாசலிலேயே இரண்டு ஆண்களைக் காவலுக்கு வைத்தார் பூசாரி.
மதுராவிற்குள் மீரா வந்து விட்டார். நகரில் நுழைந்ததும் முதல் வேலையாக கிருஷ்ணர் கோயிலை நோக்கி பக்திப் பாடல் நடனத்தோடு புறப்பட்டார்.
விஷயம் பூசாரி காதுக்கு எட்டியது. பயம் அதிகரித்தது.
பாடல், பஜனை, பக்தி, நடனம், இசைக்கருவிகள் என்று பக்திப் பரவசம் மிகுந்த கூட்டத்தோடு கோயில் வாயிலை மீரா அடைந்தார்.
சில நிமிடங்களில் மீராவைச் சுற்றியிருந்த உற்சாகமும் ஆனாந்த நடனமும் காவலுக்கு நின்ற இருவரையும் தொற்றிக்கொண்டது. பஜனை ராகத்திலும் நடனத்திலும் தங்களையும் மீறி ஈர்க்கப்பட்டு, கூட்டத்தில் ஒருவராக மாறி விட்டார்கள் அந்தக் காவலர்கள். மீராவைத் தடுக்க நின்றவர்கள், தடுப்பை நீக்கி வழிகாட்டியாக மாறிவிட்டார்கள். "வாங்கோ, வாங்கோ!" என்று உள்ளே அழைத்துச் சென்றார்கள்.
பூசாரிக்கு வியர்த்துக் கொட்டியது.
பூசாரி அர்ச்சனை செய்யும் இடம் வரைக்கும் கூட்டம் வந்து விட்டது. சில நிமிடங்களில் மொத்தக் கூட்டமும் பக்திப் பஜன்களை ஆனந்தமாகப் பாடி முடித்து அமைதியாகியது.
உச்சத்தில் வாழ்தல் சலிப்பைக் கூட சலிப்படையச் செய்திடும்.
பூசாரி, "இந்தக் கோயிலுக்குள் ஆண்கள் மாத்திரம்தான் வரலாம். பெண்கள் வரக்கூடாது என்பது விதி. இது உங்களுக்குத் தெரியாதா?' என்று மீராவிடம் கோபம் கலந்த குரலில் கேட்டார்.
இதற்கு மீரா அளித்த பதில்தான், மீரா சாகாரணப் பெண் அல்ல என்று திரும்பத் திரும்ப நமக்கு உணர்த்தும் ஆதாரம்.
மீரா, "என்னது! ஆண்களா? இதுவரை இந்த மொத்த உலகில் கிருஷ்ணர் ஒருவர்தான் ஆண். மற்றவர்கள் அனைவரும் கோபியர்கள் (பெண்கள்) என்றல்லவா கொண்டிருந்தேன்.
கிருஷ்ணருக்கு அடுத்து இந்த உலகில் நான் சந்திக்கும் முதல் ஆண் நீங்கள்தான்.
அப்போது நீங்கள் ஒரு கோபியர் அல்ல.
இன்றிலிருந்து நாம் எல்லோரும் ஒரு முடிவுக்கு வருவோம். இந்த உலகில் இரண்டு ஆண்கள் இருக்கிறார்கள்.
ஒன்று கிருஷ்ணர்.
இரண்டாவது இந்த பூசாரி!" என்ற கணீர் குரலில் பேசி முடித்தார்.
பூசாரி நடுங்க ஆரம்பித்துவிட்டார். "கிருஷ்ண தத்துவத்திற்குப் புறம்பாகவா நாம் இவ்வளவு காலம் செயல்பட்டோம். இது எவ்வளவு பெரிய தவறு ?" என்று மனதின் ஆழத்திலிருந்து வேதனைப்பட்டார் பூசாரி.
பூசாரி, "நான் ஆண் இல்லை … நான் ஆண் இல்லை ... நான் ஒரு கோபியர்தான். நான் கிருஷ்ண பக்தர்தான்.
'வாழ்ந்தேன்!' எதையும் திருப்தியோடு பார்ப்பதில்லை.
வாழ்க்கை சுவைத்தும் சுவையாய் சுவைபடாமல் தாண்டிய நிமிடங்களே!
என்னை எல்லோரும் மன்னித்து விடுங்கள்" என்று அழாத குறையாக மன்னிப்புக் கேட்டார்.
மீரா, "அப்போது இந்தக் கோயிலின் விதி இன்றிலிருந்து மாறட்டும். இனி இந்தக் கோயிலுக்குள் ஆண்களுக்கு அனுமதி இல்லை. பெண்களுக்கு (கோபியர்கள்) மாத்திரம் தான் அனுமதி.
'நான் ஒரு கோபியர்' என்ற உணர்வோடு வருபவர் மட்டுமே கோயிலுக்குள் நுழையலாம். நான் ஆண் என்ற உணர்வோடு வருபவர்களுக்கு இனி அனுமதி இல்லை" என்று சொல்லி காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்ட விதியையே மாற்றிவிட்டார். கிருஷ்ணர், கோபியர் தத்துவத்தின் உச்சத்தில் வாழ்ந்தவர் மீரா.
மீரா எல்லோருக்கும் ஒரு அற்புதமான முன் உதாரணம்.
சராசரி பெண்கள் நடுவில், ஆனந்த நடனமாடும் மலராக வாழ்வது"-தான்.
தோழி மனைவியாவது எளிது. மனைவி தோழியாவது கடினம். இரண்டாவது, வாழ்வை அதன் உச்சத்தில் வாழ்பவருக்கே சாத்தியம்!
நீங்கள் செய்யும் காரியம் எதுவாக இருந்தாலும் நீங்கள் பின்பற்றும் மார்க்கம் எதுவாக இருந்தாலும் சரி - அங்கேயே, அதிலேயே வாழுங்கள்!
தொட்ட குறை, தொடாத குறை வேண்டாம்.
மிச்சம் மீதி எதையும் வைக்க வேண்டாம்.
சலிப்பிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் வெளி வர மிக எளிய வாழ்வின் வழிமுறை - வாழ்க்கையை அதன் உச்சத்தில் வாழ்வதுதான். அது எதுவாக இருந்தாலும் சரி, உச்சத்தை அடைந்துவிடுவதுதான்.
சாப்பிடும் ஒரு ரசகுல்லாவின் சுவையை அதன் உச்சத்தில் அனுபவிக்க முயற்சி செய்யுங்கள். இரண்டு மூன்று கடியில் ஐந்து ரசகுல்லாவை ஒரேயடியாக சாப்பிடுவதும் ஒரே ஒரு ரசகுல்லாவின் முழுச் சுவையும் வாயிலேயே கரைந்து போகும் அளவுக்குப் பல நிமிடங்கள் சுவைத்துச் சாப்பிடுவதும் ஒன்றே.
சுவையின் உச்சத்தை ஒரே ஒரு முறை ருசித்துவிட்டால் ஒரு ரசகுல்லா போதும். பத்து தேவையில்லை. திருப்தி கிடைத்துவிடும்.
சுவையின் உச்சத்தை ருசிக்காவிட்டால், பத்து சாப்பிட்டாலும் திருப்தி கிடைக்காது. சலிப்பும் கஷ்டமுமே மிஞ்சும் !
மேலே உள்ள சில வரிகளை வெறுமனே படிப்பதால் புரிந்து கொள்ள முடியாது. இனிப்பு வாயிலே கரைந்து போகுமளவுக்கு விழிப்புணர்வோடு சுவைத்துப் பாருங்கள். "உச்சத்தில் வாழ்வது" என்றால் என்ன என்பது புரிந்துவிடும் .
நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும் என்று துடிக்கும் வாழ்வின் ஒவ்வொரு விஷயத்தையும் நிதானித்து, அதன் உச்சத்தில் அனுபவியுங்கள், "இன்மை கொஞ்சும்" என்று தொக்கி நிற்கும் உணர்வு இருக்காது. சலிப்பு நெருங்கவே நெருங்காது.
கடைசியாக ஒரு சத்யம்
அனுபவத்தின் அனுபவிக்கப்படாத பகுதிகள்தான். ''மீண்டும்'' என்ற வெறியைத் தூண்டித் தூண்டி பின்னாளில் சலிப்பைத் தருகிறது.
சலிப்பின் மூலகாரணம் தெரிந்து விட்டது. இன்னும் என்ன தயக்கம். எதிலும் மிச்சம் வைக்காதீர்கள். உச்சத்தில் வாழத் தொடங்குங்கள்!
ஆனந்த ரசத்தை உங்களுக்குள் பிழிந்துவிடும் உச்சகட்ட அனுபவம் – ஒரு தியானம்
இரு பலூனில் உச்சகட்ட காற்றை ஊதும்வரை அது பெரிய உருவமாய் இருக்கும்.
உச்சகட்ட காற்றழுத்தத்தைத் தொட்ட மறு வினாடியே அது வெடித்து விடும். அவ்வளவு பெரிய உருவம் ஒழிந்துபோகும்!
அகங்காரம்தான் எல்லா வேதனைகளுக்கும் வேர். இதை உணர்ந்து, இதிலிருந்து வெளிவர விரும்புவோர் மட்டும் இனி தொடரலாம் ...
அரைகுறையாய் நீங்கள் அனுபவிக்கும்வரை அகங்காரம் பெரிய உருவத்தோடு இருந்து கொண்டேயிருக்கும்.
ஒரே ஒரு முறை உச்சகட்ட அனுபவத்தை ஏதாவதொரு வழியில் அனுபவித்துவிட்டால் போதும். மறுவினாடியே அகங்காரம் வெடித்துவிடும். உச்சத்தை அகங்காரம் தாங்காது.
தான் ஒழிந்துபோவோம் என்பதை அறிந்த காரணத்தால், மனமானது மனிதரை எந்த ஒரு செயலிலும் உச்சகட்ட அனுபவம் வரை செல்ல விடுவதேயில்லை.
மனிதரும் உச்சகட்டத்தில் அனுபவிப்பதை மறந்துவிட்டார்.
மறந்ததை நினைவுபடுத்த ஒரு எளிய தியானமுறை ...
உங்களின் எதிர்மறை உணர்வுகளை இந்தத் தியானத்திற்குத் தேர்வுசெய்து கொள்ளுங்கள்.
கோபம், ஆத்திரம், படபடப்பு, கிளர்ச்சி போன்ற எதிர்மறை உணர்வுகள்,
எதிர்மறை உணர்வையும் நேர்மறை தியானமாக்கலாம்!
உங்களுக்குள் பொங்கும் அந்த உணர்ச்சிமயமான நிமிடங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அந்த நோக்கில் அப்படியே படுத்துவிடுங்கள்.
படுத்தபின் கோபமென்றால் கோபமாகவே மாறுங்கள். உணர்வளவில் கோபம் அதன் உச்சம் வரை செல்லட்டும்.
ஆனால், உடல் படுத்துக்கிடக்கட்டும். எதிர்மறை உணர்ச்சிகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு, உள்ளே அரைபடட்டும்.
ஒரு மிக்ஸியில் போடப்பட்ட சமையல் பகுதி பொருட்கள் சரியாக அரைபட வேண்டுமானால், மிக்ஸி எல்லா பக்கங்களிலும் அடைப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், உள்ளுக்குள் உள்ள பொருட்கள் பொங்கி அடித்து இடித்து உடைத்து கரைபட வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்க்கும் பக்குவத்தில் விளைவுகள் நிகழும்.
உடலுக்குள் உணர்வுகளும் உணர்ச்சிகளும் இதேபோல் பொங்கி அடிபட்டு, இடிபட்டு, உடைபட அனுமதித்தால், உள்ளுக்குள் ரசவாதம் மிக எளிகில் நிகழ்ந்து விடும்.
சுகித்து சுகித்த கிரூப்தி காராது. உச்சம் தொடும்வரை!
ஆனந்த ரசம் மனிதருக்குள் தயாராகிவிடும்!
மிக்ஸியின் மிக்ஸி இயக்கப்பட்டால் என்ன ஆகும் ? உள்ளே உள்ள பொருட்கள் நாலா புறமும் தெறிக்கும். எல்லாம் வீணாகிப்போகும்.
மனிதர்களின் விழிப்புணர்வு முழுமையானதாக இல்லை. அதில் ஏதோ ஒரு பகுதி முழுமை பெறாததாகவே, திறந்து கொண்டேயிருக்கிறது.
விளைவு - உணர்ச்சிக் கொந்தளிப்பு நிகழ்கிறது. அவர்களிடமிருந்து நாலா புறமும் எதிர்மறை உணர்வுகள் கொந்தளித்து தெறிக்கிறது.
இந்தத் தியான முறையில், அதுவும் எதிர்மறை உணர்வுகள் வரும் போது அமைதியாக படுப்பது ... உங்களின் விழிப்புணர்வை முழுமை பெறச் செய்யும்!
Part 8: Open the Door... Let the Breeze in!
உணர்ச்சிக் கொந்தளிப்புகள் உங்களின் விழிப்புணர்வென்னும் மிக்ஸி ஜாருக்குள் முழுமையாக அரைக்கப்படும்.
அரைக்கப்படும் வரை காத்திருந்தால் போதும்.
அதுவும் ஒரே ஒருமுறை அந்தந்த உணர்ச்சிகள் உச்சகட்டம் வரை செல்ல அனுமதித்துக் காத்திருந்தால் அது நிகழ்ந்து விடும்.
ஆனந்த ரசம் உங்களுக்குள் பிழியப்படும். நீங்கள் புதுமனிதனாக மாறிவிடுவீர்கள்.
ஜே.கிருஷ்ணமூர்த்தி ''ஒரு உச்சகட்ட உணர்வனுபவம், அந்த மனிதரைப் புதுப் பிறவியெடுக்க வைக்கும்'' எனச் சொல்கிறார்.
உங்களுக்குள் உருவாகும் ஆனந்த ரசமானது உங்களின் அகங்காரத்தின் கொள்ளளவை விட பல ஆயிரம் மடங்கு பெரியது.
அனுபவ உச்சியைத் தொடு. ஆனந்த தரிசனம் பரிசு!
அந்த உச்சகட்ட அனுபவத்தினால் உருவாகும் ஆனந்தத்தைத் தாங்கமுடியாத அகங்காரம், நொடியில் வெடிக்குச் சிதறும்.
நீங்கள் புது மனிதராவீர்கள். புது ஆனந்த உணர்வில் லயித்துப் போவீர்கள்.
'ஆஹா ... வாழலாம். வாழ்வு வாழுத் தகுந்தது' எனக் கூச்சலிடும் அளவுக்கு குதூகலமாவீர்கள்.
எதிர்மறை உணர்வு வரும் காலங்களையெல்லாம் தியான காலமாக்குங்கள். நாளையேகூட அந்த அதிசயம். நீங்கள் உச்சகட்டத்தைத் தொடுவீர்கள்.
விழித்துக் கொள்ளுங்கள்
- விழித்துக் கொண்டு சந்தோஷமாக வாழும் வாழ்க்கையை விட, விழி பிதுங்கப் பிதுங்க வாழும் சதா சச்சரவு நிறைந்த வாழ்க்கையில்தான் பலருக்கும் அதிக ஈர்ப்பு இருக்கிறது - இது ஒரு பெரிய விந்தை.
- கண்களைத் திற என்றால் எல்லோருக்கும் கண் இமைகளை மாத்திரமே திறக்கத் தெரியும். கண் இமைகளைத் திறப்பது, கண்களைத் திறப்பது அல்ல என்றால், மனித மனது புரிந்துகொள்ளக் கடினப்படும். அதேபோல்தான் விழித்துக் கொள்வதும்.
- விழித்துக்கொள்வது, தன்னையே அழித்துக்கொள்ளும்தன்மை படைத்த அகங்காரத்தை ஒழிப்பதற்கான எளிய வழி.
நான் சொல்லப்போகும் கதை உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கக்கூடும். நம்மிடம் கதைகள் நிறையவே இருக்கின்றன. நாமும் நிறையவே கதை கேட்டு வளர்ந்திருக்கிறோம். ஆனால், கதையில் உள்ள கருத்துகளைக் காற்றில் விட்டதுதான் நம்முடைய துரதிர்ஷ்டம்.
ஒவ்வொரு முறையும் நான் உங்களுக்குக் கதை சொல்வது, குஷிப்படுத்தி பொழுதுபோக்குவதற்கு அல்ல. கதையில் உள்ள கருத்துக்களை நீங்கள் உணரச் செய்வதற்குத்தான்.
மிகப்பெரிய ஏரிக்குப்பக்கத்தில் ஒரு கிராமம் இருந்தது. தொடர்ந்து பெய்த மழையால் ஏரி நிரம்பி வழிந்தது.
ஒருநாள் உதயமாவதற்கு முன்பே, படகோட்டி ஒருவர் விட்டார். ஏரிக்கரைக்கு கிராமத்திலிருந்து பக்கத்து ஊருக்குச் செல்ல வருகிறவர்களைப் படகில் அழைத்துக் கொண்டு செல்வதுதான் அவர் வேலை.
சூரியன் உதயமாகாத இருட்டில் ஏரிக்கரையில் நடந்து வந்தபோது, அவர் காலடியில் மூட்டை ஒன்று தட்டுப்பட்டது.
என்ன மூட்டை என்று அந்த இருட்டிலேயே தொட்டுத் தடவிப்பார்த்தார். கூழாங்கற்கள் போல ஏதோ ஒன்று மூட்டை நிறைய இருந்தது. மூட்டையைத் தூக்கி ஏரிக்கரையில் ஓரிடத்தில் போட்டார். இந்த மூட்டை மீது கால்களை வைத்தபடி ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தார்.
கிழக்கில் சூரியன் உதயமாவதற்கு இன்னும் நிறைய நேரமிருந்தது. மூட்டையில் உள்ள ஒரு கல்லை எடுத்துத் தண்ணீரில் போட்டார். தொப்பென்ற சத்தம் அவர் காதில் புதிய ரீங்காரத்தை எழுப்பியது.
விழித்துக்கொள்ளாத வரை வாழ்வில் துக்கம் வழிந்து கொண்டேதான் இருக்கும்.
செய்வதற்கு வேறு எந்த வேலையும் இல்லாததால் ஒவ்வொரு கல்லாக எடுத்துத் தண்ணீரில் எறிந்துகொண்டே இருந்தார்.
கிழக்கில் மெதுவாகச் சூரியன் எழுந்து வந்தது. எங்கும் வெளிச்சம் பரவ ஆரம்பித்தது. மூட்டையில் இருக்கிற ஒரே கல்லைத் தவிர, மற்ற கற்கள் எல்லாவற்றையும் அவர் ஏரியில் வீசிவிட்டார்.
நன்கு பரவிய வெளிச்சத்தில் கையில் இருக்கிற ஒரே ஒரு கல்லைக் கவனித்துப் பார்த்தபோது ஆச்சரியத்தில் திடுக்கிட்டுப்போனார் அந்தப் படகோட்டி. விழித்துக் கொண்டார்.
அவர் கையில் இருந்தது சாதாரணக் கூழாங்கல் அல்ல. விலை மிகுந்த இரத்தினக்கல் !
''அய்யோ! அய்யோ! இத்தனை விலை மிகுந்த இரத்தினக் கற்களை ஏரியில் வீசி வீணடித்துவிட்டேனே!'' என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார் படகோட்டி.
இந்தப் படகோட்டி மாதிரிதான் நாமும். நம்முடைய வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.
கிராமத்தில் பிறந்த இளைஞர் ஒருவர், "நான் கிராமத்தில் பிறப்பதற்கு என்ன பாவம் செய்தேனோ?'' என்று புலம்பிக்கொண்டிருந்தார்.
அந்த இளைஞர் விழித்துக்கொண்டிருந்தால், கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்குக் கல்வி கற்றுத் தந்திருக்கலாம். கிராமத்தில் புதிய சாலை வசதிகளை ஏற்படுத்தியிருக்கலாம். புதிய தொழில்களைக் கொண்டுவந்து பொருளாதார முன்னேற்றத்தைக் கிராமத்தில் ஏற்படுத்தி இருக்கலாம்.
| ரா 0 & 11 த ர் | இந்த வாழ்க்கை என்பது நமக்குக் கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம். அதை வீணாக்குவது மகா பாவம். |
|---|---|
| --- | --- |
இத்தனை வாய்ப்புகளிருந்தும் அவர், வாழ்க்கையை அநியாயமாக வீணடித்தார். நகரத்தில் இருந்தால் எளிதில் முன்னேற்றம் கண்டுவிடலாம் என்பது அந்தக் கிராமத்து இளைஞரின் எண்ணம்.
ஆனால், முன்னேறுவதற்கு எவ்வளவு தடைகள் இருக்கின்றன என்பது நகரத்திலுள்ள இளைஞர்களுக்குத்தான் தெரியும்.
திரும்பத் திரும்பச் சொல்கிறேன் ...
இந்த வாழ்க்கை என்பது நமக்குக் கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம். அதை வீணாக்குவது மகாபாவம்.
நமக்கு இரண்டு கால்கள் நன்றாக இருக்கின்றன. அவற்றை முறையாகப் பயன்படுத்தாமல் வீணடிக்கிறோம்.
நமக்கு இரண்டு கைகள் நன்றாக இருக்கின்றன. அவற்றை முறையாகப் பயன்படுத்தாமல் வீணடிக்கிறோம்.
நம் இரண்டு கண்கள் - ஏன், மிகத் திறமையாகச் செயல்படும் மூளையைக்கூடச் சரியாகப் பயன்படுத்தாமல் வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.
படகோட்டியாவது ஒருவகையில் அதிர்ஷ்டக்காரர். கடைசிக் கல்லை ஏரியில் எறிவதற்குமுன் அதைப் பார்த்துவிட்டார். ஒரு கல்லாவது மிஞ்சியதே. 'நல்லவேளை விழித்துக் கொண்டேன்' என்கிற திருப்தி அவருக்கு இருக்கவே செய்கிறது.
ஆனால், அந்தப் படகோட்டி அளவுக்குக்கூட நம்மில் பலர் அதிர்ஷ்டம் செய்தவர்கள் அல்ல. வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக வீணாக்கிய பிறகுதான் அதன் அருமையை உணர ஆரம்பிக்கிறோம்.
''படகோட்டி, கடைசியாகக் கையில் வைத்திருந்த ஒரே ஒரு இரத்தினக்கல் போதும். அதை வைத்து மூன்று தலைமுறை உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்குச் சொத்து சேர்த்து விடலாம். வீணான இரத்தினங்களைப் பற்றிக் கவலைப்படத் தேவை இல்லை.
மீதமுள்ள வாழ்க்கையைப் பயனுள்ளதாக வாழ்வது எப்படி ?'' என்ற கேள்வியைக் கேட்கும் நீங்கள், எந்த வயதினராக இருந்தாலும் சரி, வீணான வாழ்க்கைப் பகுதியைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்துங்கள்.
எஞ்சியிருக்கும் வாழ்க்கை ஒரு சில இரத்தினங்களுக்குச் சமம். எஞ்சிய வாழ்நாட்களை அருமையாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள். அது போதும். உங்களுடைய எல்லா மனத்துக்கங்களும் மறைந்துவிடும் - இதற்குப் பெயர்தான் விழித்துக் கொள்வது.
இன்பம் பொங்க ஆரம்பிக்கும். இந்தப் பிறவியையும் அடுத்தடுத்த பிறவிகளையும் இன்பமாக அனுபவிப்பதற்கான அடிப்படைத் தகுதியைப் பெற்றுவிடுவீர்கள்!
என் அருமை இளைஞர்களே ...
- இரகசியம், ஒளிந்து சாதனையின் இந்த மூன்று கொண்டிருக்கிறது . - அது நம்பிக்கை, ஒழுக்கம், உத்சாகம்.
- நம்பிக்கை, உத்சாகம் என்ற இரண்டும் சாதிப்பவருக்கு அவசியம் என்பது, எல்லோருக்கும தெரிந்ததே. ஆனால், ஒழுக்கமும் அவசியம் என்பது பலருக்குத் தெரியாத ஒன்று.
- தனிமனித ஒழுக்கம் வேறு. சமுதாய ஒழுக்கம் வேறு-நான் அவசியம் என்று கூறுவது தனிமனித ஒழுக்கத்தைச் சாதிப்பவரை. அவர் பாதையிலிருந்து சற்றுக்கூடத் தடுமாறாமல் காப்பாற்றும் சக்தி படைத்தது தனிமனித ஒழுக்கம்.
இது இளைஞர்களின் யுகம். இன்றைய சமுதாயத்தைச் சரியான திசையில், சரியான முறையில், நடத்திச் செல்கிற திறமை இளைஞர்களுக்குத்தான் உண்டு.
வயதான பெரியவர்கள் நம்மை வழிநடத்திச் சென்றது ஒரு காலம். அனுபவம் வாய்ந்த நடுத்தர வயதினரும் ஆற்றல் மிகுந்த பெண்களும் நம்மை வழிநடத்திச் சென்றிருக்கிறார்கள்.
அவர்களெல்லாம் இப்போது கொஞ்சம் ஒதுங்கி நின்று, இளைஞர்களுக்கு வழிவிட வேண்டிய நேரம் வந்து விட்டது. காரணம், இந்த யுகம் இளைஞர்களுக்கான யுகம்.
சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்று வந்தேன். அங்குள்ள இளைஞர்கள் தறிகெட்ட வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். குடும்பம் என்கிற அமைப்புச் சிதைந்து போய், எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலையில் அபாயகரமான குழுப்பத்தை நோக்கி, அவர்கள் சென்றுகொண்டிருப்பதை என்னால் எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
ஆனால், இந்த இளைஞர்களிடம் இருக்கிற நம்பிக்கைகளைப் பார்த்து அசந்து போனேன். அவர்களிடம் முயற்சி இருக்கிறது. பிற்காலத்தில் எப்படிபட்டவர்களாக வர வேண்டும் ? அதற்கு என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்கிற அறிவுத் தெளிவு அவர்களிடம் இருக்கிறது.
எல்லாவற்றையும்விட அவர்களிடம் நம்பிக்கை இருக்கிறது. 'நான் வீணாய்ப் போய்விட மாட்டேன். என்னால், எனக்கும், இந்த நாட்டுக்கும் பயனுள்ள முறையில் நிறையச்செய்ய முடியும்' என்கிற நம்பிக்கை அவர்களிடம் அதிகமாகவே இருக்கிறது.
அமெரிக்க இளைஞர்களை உன்னிப்பாகக் கவனித்தபோது, நம்முடைய இளைஞர்கள்தான் உடனடியாக ஞாபகத்துக்கு வந்தார்கள்.
நம் இளைஞர்கள், ஒழுக்க விஷயங்களில் குடத்திலிட்ட விளக்குப் போலத்தான் இருக்கிறார்கள். அகில உலகத்திலும் உள்ள இளைஞர்களுக்கு, ஒழுக்க வழிகாட்டிகளைத் தேடித் தரவேண்டும் என்றால், நம் இளைஞர்களைத் தாராளமாக அனுப்பி வைக்கலாம்.
ஆனால்…. ?
ஒழுக்கம் மட்டும் வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தந்துவிடாது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாட்டு இளைஞர்களிடம் இருக்கும் நம்பிக்கை, விடாமுயற்சி, அறிவுத்தெளிவு நம்முடைய இளைஞர்களிடம் இல்லையே என்று நினைத்துபோது, எனக்குப் பரிதாப உணர்வு மேலிட்டது.
சுதந்திரப் போராட்ட காலத்தில் இளைஞர்களிடம் இருந்த அறிவுத் தெளிவு, இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்களிடம் இல்லை.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இளைஞர்களிடம் ஒரு நல்ல குணம் இருந்தால், மற்றொரு முக்கியமான நல்ல குணம் இருப்பதில்லை.
பரமஹம்ஸர் இராமகிருஷ்ண ஒரு விவேகானந்தரை உருவாக்கினார். விவேகானந்தரால் ஆயிரக்கணக்கான விவேகானந்தர்களை உருவாக்க முடிந்தது அந்தக் காலத்தில்.
ஆனால் இப்போது .... ?
இன்றைய இளைஞர்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டு இருக்கிறது.
கோணல்மாணலாகிப் போன அவர்களின் சிந்தனையைச் சரிசெய்தால் மட்டுமே இளைஞர்களின் எழுச்சியை மீண்டும் காண முடியும்.
இன்றைய நமது இளைஞர்களிடம் அவநம்பிக்கை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. இந்த அவநம்பிக்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை. மற்ற நாட்டு இளைஞர்கள் வாழுகிற சூழ்நிலையை நம் நம் நாட்டு இளைஞர்களின் சூழ்நிலையோட ஒப்புட்டுப் பார்த்தால், நம்மவர்கள் எவ்வளவோ தேவலை என்றுதான் சொல்ல வேண்டும். அங்கு நிலவுகிறப் போட்டி இங்கு இல்லை அங்கு இருக்கும் கலாசாரச் சீரழிவு இங்கு இல்லை.
நம்பிக்கை ஒழுக்கம் ஆகியவற்றின் கூட்டு வெளிப்பாடே சாதனை!
எல்லா வகையிலும் சிறந்த சூழ்நிலை கொண்ட நாம் ஏன் அவநம்பிக்கைக்கு உள்ளாக வேண்டும் ? என்பதுதான் புரியாத புதிர்!
நம்முடைய இளைஞர்களிடம் இருக்கும் இரண்டாவது பெரிய குறை - நாம் வாழும் சூழ்நிலையை மாற்றிக்காட்ட வேண்டும் என்கிற உத்சாகம் இல்லாததுதான். 'நான் மிகப் பெரிய தொழிலதிபராக வருவேன். நான் மிகப் பெரிய விஞ்ஞானியாக வருவேன்' என்கிற உத்சாகம் அவர்களிடம் இல்லை. அதற்கான சக்தியும் அவர்களிடம் இருப்பதாக அவர்கள் நினைக்கவும் இல்லை.
ஆனால், உண்மையில் அளப்பரிய சக்தி கொண்டது நம் இளைஞர்களின் உள்ளம். இளைஞர்களிடம் இருக்கும் சக்திக்கு உவமை சொல்ல வேண்டும் என்றால், கடலைத்தான் சொல்ல வேண்டும்.
கடல் எவ்வளவு ஆழமானதோ, அந்த அளவுக்குச் சக்தி நிறைந்தது வாலிப உள்ளம். கடல் அலை போல நாம் ஒவ்வொரு காரியத்தைச் செய்கிறபோது, கொஞ்சம் சக்தி நம்மிடமிருந்து வெளியேறுகிறது.
கடல் அலைகள் என்றாவது ஓய்ந்து பார்த்திருக்கிறீர்களா? கடல் என்றைக்காவது காய்ந்து பார்த்திருக்கிறீர்களா? அந்த மாதிரி உங்களிடம் இருக்கும் சக்தியும் என்றைக்கும் அழியாது.
"என்னிடம் நூறு இளைஞர்கனைத் தாருங்கள். பாரதத்தையே மாற்றிக் காட்டுகிறேன்" என்றார் விவேகானந்தர். நாம் நாட்டை மாற்றுவது இருக்கட்டும். முதலில் நம்மை நாம் மாற்றிக்கொள்ள முயற்சி செய்வோம்.
குழந்தைப் பருவம் கடந்த காலம். அதை நாம் மாற்ற முடியாது. முதுமைப் பருவம் வருங்காலம். அது எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க விரும்பினால் - இளமைப் பருவம்தான் நிகழ்காலம்; அதைத் தவறவிடவே வேண்டாம்.
ஒழுக்கம் இருந்து, நம்பிக்கையும், உத்சாகமும் மிகுந்தால் அந்த மனிதரின் சாதனை - பக்கக் கண்ணாடி போடப்பட்ட குதிரையின் ஸ்திரமான ஓட்டம் போல இருக்கும். எடுத்த இலக்கை அடைய முடியும். வழி தவறமாட்டார்கள்!
நம்முடைய இளைஞர்களில் பலரிடம் ஒழுக்கம் இருக்கிறது. அதிலும் தனிமனித ஒழுக்கம் சிலரிடம் நன்றாக இருக்கிறது. வெளிநாட்டு இளைஞர்களிடம் இருக்கும் நம்பக்கையும் உத்சாகமும் நம் இளைஞர்களிடம் குறைவு.
ஒழுக்கம் இருந்து, நம்பிக்கையும் உத்சாகமும் மிகுந்தால் அந்த மனிதரின் சாதனை - பக்கக் கண்ணாடி போடப்பட்ட குதிரையின் ஸ்திரமான ஓட்டம் போல இருக்கும். எடுத்த இலக்கை அடைய முடியும் வழிதவற மாட்டார்கள்!
வெறும் நம்பிக்கையும் உத்சாகமும் இருந்து ஒழுக்கம் இல்லாதிருந்தால், அது காட்டுக் குதிரை போலத்தான் மனிதனை ஆட்டிப்படைக்கும். இந்த நிலையில் மனிதன் வழிதவற வாய்ப்பு அதிகம்.
வெறும் ஒழுக்கத்தை மட்டும் கடைப்பிடித்து, நம்பிக்கையும் உற்சாகமும் மிகக் குறைவாகக் கொண்டிருந்தால் அது மனிதரை ஒரு கிழட்டுக்குதிரை போல ஆக்கிவிடும். வாழ்க்கையில் மந்தம் மாத்திரமே மிஞ்சும்.
உங்களின் ஓட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் ? கிழட்டுக்குதிரையின் ஓட்டமா ? காட்டுக்குதிரையின் ஓட்டமா ? வெல்லும் குதிரையின் ஓட்டமா? முடிவுசெய்யுங்கள்.
ஒழுக்கம், நம்பிக்கை, உற்சாகம் மிகுந்த வெளிப்பாட்டால் வெற்றி உறுதி. வாழ்க்கையை ஜெயித்துக் காட்டுங்கள்!
இளஞ்சிங்கமே!
ஆண்ட்ரூ கார்னகி மிகப் பெரிய சாதனையாளர். உலகத்தின் பெரிய செல்வந்தர்கள் பட்டியலில் இடம் பெற்றவர். இதற்குமேல் சாதிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லாத அளவுக்கு இமாலய சாதனை படைத்தவர்.
ஒரு முறை பேட்டியளிக்கையில், அவர் சந்தித்த சிந்தனையைத் தூண்டும் கேள்வி.
" ஓய்வேயில்லாமல் எப்போது வேண்டுமானாலும் ஒய்வடைந்திருக்கலாம். இளைப்பாறியிருக்கலாம். உங்களைச் சுற்றி எல்லாம் இருந்தும் ஏன் இன்னும் சாதிக்க ஓடிக்கொண்டேயிருக்கிறீர்கள்?'என கேட்கப்பட்டதற்கு, கார்னகி சொன்னார்; போல் ஓய்வெடுத்திருக்கலாம்தான். ஆனால், என்னால் அது முடியவில்லை.
ஒடுவதை நான் மறந்துவிட்டேன். இதன் விளைவு - ஒடிக்கொண்டேயிருக்கிறேன்''.
- ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சக்கரம், ஒவ்வொரு விதமானது. அச்சக்கரத்தை ஒரு முறை மேட்டிலிருந்து சுற்றிவிட்டால், அச்சக்கரம் அகன் கட்டுப்பாட்டை இழந்துவிடும்.
வேகவேகமாக ஒடும் சக்கரம் தானாய் நிற்க நினைத்தால்கூட நிற்க முடியாது. ஒய்வெடுக்க முடியாது, யாராவது தடுத்து நிறுத்த வேண்டும்.
தியானமும் ஞானகருத்துக்களும் வாழ்வைத் துவங்கப்போகிறவர்களின் வாழ்க்கைச் சக்கரத்தை ஒரு கட்டுக்கோப்பான, பாதுகாப்பான பாதைக்குள் திருப்பி விடும்.
- சாதிக்கத் துடிப்பது, சாதித்தும் துடிப்பது, எது பரிதாபத்திற்குறியது? ★ யோசியுங்கள். யோசனை தரும் ஆர்வத்தோடு கட்டு ரையை த் தொடருங்கள் ... உலக வாழ்க்கையில் குடும்பஸ்தராக வாழ முடிவு எடுப்பவர்களுக்கு, ராமகிருஷ்ணர் அழகான வாசகமொன்றைச் சொல்லியிருக்கிறார்.
குடும்ப வாழ்க்கையில் நுழையும் நீ, ஆன்மீகத்தைக் கொஞ்சம் கையில் எடுத்துச் செல். நிச்சயமாக சிக்கித் தவிக்கமாட்டாய்!".
சாதாரண பலாப்பழம் அறுக்கும்போது வெறும் கையால் அதைச் செய்தால் பிசுபிசுப்பு கையில் ஒட்டிக்கொள்ளும். பிசுபிசுப்பில் விரல்கள் சிக்கித் தவிக்கும்.
ஒரே ஒருமுறை எண்ணெயில் கை நனைத்துவிட்டு செய்தால், விரல்கள் பிசுபிசுப்பில் சிக்காது. பலாப்பழம் அறுப்பதும் எளிதாக நடக்கும். விரல்களும் சிக்கித் தவிக்காது. சங்கடமேயிருக்காது.
ஆன்மீகமும் இது போன்றதுதான். கொஞ்சம் ஆன்மீகத்தோடு வாழ்க்கையை எதிர்கொண்டால், வாழ்க்கையை இன்னும் ஆழமாக அனுபவிக்க முடியும். அதே நேரத்தில், வாழ்க்கைச் சுழலில் சிக்காமல் எளிதில் தப்பிவிடலாம்".
இந்தச் செய்தியை இளைஞர்கள் ஒன்றுக்கு இரண்டு முறையாவது படித்து மனதில் நிறுத்திக்கொண்டு கட்டுரையைத் தொடருங்கள்.
- 18-ல் காதல்
- 20-ல் எதிர்காலக் கனவு
- 25-ல் திருமணம்
- 30-ல் குடும்பச்சுமை
- 40-ல் வயிற்றுக் கோளாறும் மனச்சோர்வும்
- 45-ல் B.P /டயபடீஸ்
- 50-ல் டுட்டிவலி...
என்பதெல்லாம் இன்று கிட்டத்தட்ட எல்லோருடைய வாழ்க்கைக்கும் பொருத்தும் என்ற நிலை வந்துவிட்டது.
| தோல்விகளைக் கண்டு | |
|---|---|
| அஞ்சுபவன் வெற்றி பெறத் | |
| தகுதியற்றவன்! |
திருமணத்திற்கு பின் ஒரு நாள் தானும் எல்லாப் பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதைப் பற்றி ஆழமாக யோசிக்கும் இளைஞர்கள் அரிதாகி விட்டார்கள்.
தன்னை சிக்கிக் கவிக்க வாய்ப்புகள் இருக்கிறது என்பதை முழுமையாக உணராத இளைஞர்கள்தான் எதிர்காலத்தில் சிக்கிக் தவிக்கும் குடும்பஸ்தர்களாக மாற வாய்ப்புகள் அதிகம்.
ஒரு மருத்துவ ஆராய்ச்சி குழுவின் சர்வே ரிப்போர்ட்டின்படி, "இளைஞர்கள் தங்கள் சக்தியை அதிகம் பயன்படுத்துவதேயில்லை. இளைஞர்கள் கொஞ்சம் பயன்படுத்தினாலே போதும். உலகத்தின் தலையெழுத்தையே மாற்றிவிடலாம்"எனச் சொல்கிறது.
உலகத்தின் தலையெழுத்து மாறுவது ஒருபுறம் இருக்கட்டும். சக்தியை அதிகம் பயன்படுத்தினால் நம் தலையெழுத்தையாவது மாற்றலாமே!
சாமுராய் வீரர்கள் (ஐப்பானிய மல்யுத்த வீரர்கள்) போட்டிக் களத்தில் விழிப்புணர்வை தலைநகரை மாற்றி மாற்றியே தன் கஜானாவைக் காலியாக்கிய 'துக்ளக்குக்கு' இணையானது கத்தளிக்கும் மணிதமனம்.
திடீர் திடீரென ஏதோ ஒரு ஆசை உந்த, ஏதோ ஒரு இலக்கை, மாற்றி மாற்றி மனத்தில் உருவாக்கினால் உங்களின் சக்தி, புத்தி கஜானா காலி!
இலக்கை நிர்ணயிப்பதும், அதற்குத் தேவையான, சக்தி-புத்தியைச் சேகரிப்பதும் வளர்வது மிக அத்தியாவசியம்!
கொஞ்சம் இழந்தாலும் வெட்டுப்பட வேண்டியிருக்கும். இது பற்றிய ஒரு அருமையான சாமுராய் கூற்று.
"இளஞ்சிங்கமே ! களம் பார்த்து ஆடு. இல்லாவிட்டால் நிலம் ரத்தமாகும்!"
தெளிவில்லாமலும் சாதிக்கலாம். சாதனைகள் சாத்தியமே. ஆனால், அது திருப்தி தராது, சாதனை முக்கியமா? திருப்தி முக்கியமா? யோசியுங்கள்!
நிச்சயமாக இன்றைய வாழ்க்கை, தடுமாறும் மனம் கொண்ட ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு போட்டிக் களம்தான். கொஞ்சம் தடுமாறினாலும் கொஞ்சம் சோம்பிப்படுத்தாலும் மிகப் பெரிய விளைவுகளை சந்தித்த வேண்டி இருக்கும்.
சோம்பி உட்காராமல், கொஞ்சம் விழித்துக்கொண்டு வாழ்க்கையில் குதிப்பவர்கள், புதிதாக உருவாக்கியிருக்கும் வேறு ஒரு சூழலில் சிக்கிவிடுகிறார்கள்.
அந்தச் சூழலுக்குப் பெயர் - சாதனை!
அசந்து தூங்கிக்கொண்டிருந்த ஒரு எலி திடீரென விழித்ததும் கூட்டமாக ஓடும் எலிக் கூட்டத்தின் ஓட்டத்தில் எம்பிக் குதித்ததாம். அடுத்த நிமிடம் தன்னைத் தாண்டி பல எலிகள் ஓடுவதைப் பார்க்கு அதுவும் வேக வேகமாக ஓட ஆரம்பித்ததாம்.
அந்த எலியைத் தடுத்து, "எங்கே இவ்வளவு வேகமாக ஓடுகிறாய் ?" என்று கேட்டதற்கு, "விடு என்னை. நான் ஜெயிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவமானம்" என்றதாம்.
இதேதான் நம் வாழ்விலும் நடக்கிறது. 25 வயது வரை வாழ்வை விளையாட்டாகக் கழித்த இளைஞர் திடீரென்று கண்முன் வந்து நிற்கும் எதிர்காலத்தைப் பார்க்கு எம்பிக் குதித்து விடுகிறார்.
குதித்த பிறகுதான் தெரிகிறது எல்லோருமே ஏதாவது ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்று.
'ஏன் ? எதற்கு ?' என்ற அடிப்படை பகுப்பாய்வு செய்யாமல் தானும் சாதித்தே ஆக வேண்டும் என்று வாழ்க்கை ஓட்டத்தை ஆரம்பிக்கிறார்.
ஓட்டம் கொஞ்ச நாளிலேயே வெறியாக மாறிவிடுகிறது.
மேலே எழுந்த அலை கீழே இருக்கும் கடலை எண்ணமாய் பார்க்காமல் ... அதன் கதி அடுத்த கணம் என்னவாகும் ? சாதியுங்கள். பனை மர உயரம் எழும்பினாலும் நீங்கள் கடவுளில் இருந்து எழும்பிய அலை என்பதை மறவாமல் இருங்கள். ஆணவம் வர விடாதீர் ... சிறு அளவில்கூட!
இங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. வாழ்க்கை திசை மாறிப்போகிறது.
சாதனை தவறு என்று சொல்லவில்லை.
ஒவ்வொரு இளைஞரும் தன் வாழ்வில் நிச்சயம் சாதிக்கத் தேவை. ஆனால், சாதனைக்காக வாழ்க்கையை வீண்டித்துவிடக்கூடாது.
ஆனால், சாதனை என்ற விஷயத்தில் ....
'எதைச் சாதிக்க வேண்டும் ? ஏன் சாதிக்க வேண்டும் ?'
என்ற தெளிவு பிறக்கும் முன்பே, 'எப்படி சாதிப்பது ? ' என்ற ரீதியில் செயல்படும் போதுதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது.
'ஏன் ? என்ற எதற்கு ? ' தெளிவில்லாமல் சாதிக்கத் துடிக்கும் போதுதான் எப்படியாவது, எதையாவது, சாதித்தே ஆக வேண்டும் என்ற மனவெறி கிளம்புகிறது.
எல்லா காலங்களுக்கும் எல்லாத் தட்பவெப்பங்களுக்கும் தாக்குப்பிடித்து நின்ற கன்றே மரமாகிறது.
விதவிதமான பிரச்சனைகள்தாம் சந்தனக் கன்றான உன்னை விலையுயர்ந்த மரமாக்கும்!
எல்லோரும் சந்தனக் கன்றுகளே! ஆனால் எத்தனை கன்றுகள் மரமாகும் ?
கண் எதிரே இருக்கும் பணம், பேர், பதவி, அறிவு என்ற ஏதாவது ஒன்றை மனம் பற்றிக் கொள்கிறது. மொத்த வாழ்வும் திசை திரும்பி விடுகிறது.
எதையாவது சாதிப்பதால் சாதித்த திருப்தி கிடைத்துவிடாது என்பதை சாதனைகள் பல படைத்த ஐன்ஸ்டீனும் ஒப்புக்கொள்கிறார்.
பணம், பேர், பதவி, அறிவு அனைத்திலும் சாதித்து விட்ட ஐன்ஸ்டீன் இறக்கும் தறுவாயில் அவரின் சகநண்பர் ஒருவர் அவரிடம், "ஒருவேளை, உங்களுக்கு இன்னொரு முறை உலகில் வாழ வாய்ப்புக் கொடுத்தால், என்ன செய்ய விரும்பவீர்கள்?' என்று கேட்டார்.
எல்லோரும் ஏதோ தன்னுடைய அடுத்த அறிவியல் சாதனைக்கான ஆசைகளைச் சொல்வார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஐன்ஸ்டீனோ, "வீடுகளுக்குத் தண்ணீர் குழாய்களை இணைக்கும் ஒரு நல்ல பிளம்பராக மாறுவேன்" என்றார்.
மொத்தக் கூட்டமும் அதிர்ச்சி அடைந்தது, சக நண்பர், "என்ன ஐன்ஸ்டீன்? என்ன சொல்கிறீங்க ?" என்றார் பதட்டத்தோடு. ஐன்ஸ்டீன் வெகு நிதானமாக, "ஆமாம் ! நான் ஒரு பிளம்பராக வாழத்தான் முடிவெடுத்திருந்தேன். எப்படியோ என் வாழ்வு திசையால் ஆராய்ச்சியாளனாகிவிட்டேன்.
பணம், பேர், பதவி, அறிவு அனைத்திலும் சாதித்தும் என் வாழ்க்கையை வாழ்ந்த திருப்தி எனக்கில்லை. எனக்கொரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் ஒரு நல்ல பிளம்பராக வாழ்ந்து திருப்தியடைவேன்" என்றார்.
தெளிவில்லாமல் சாதனை ஓட்டத்தில் குதித்தாலும் சாதிக்கலாம். சாதனை சாத்தியமே. ஆனால் சாதித்த திருப்தி இருக்காது.
'சாதனை முக்கியமா? திருப்தி முக்கியமா? ஏன் சாதிக்க வேண்டும் ? எதைச் சாதிக்க வேண்டும்?'என்ற தெளிவு இருந்தால், "இதைச் சாதிக்க வேண்டும்" என்ற முடிவு பிறக்கும்.
சாதித்தபின் சாதனையும் திருப்தி தரும். காரணம் அது உங்கள் சாதனை. உங்களின் விருப்பப்படி நிறைவேறி இருக்கிறது.
'ஏன் சாதிக்க வேண்டும் ? எதைச் சாதிக்க வேண்டும் ?' என்ற தெளிவு பிறக்க வேண்டுமானால், உலகம், வாழ்க்கை மற்றும் உங்களையும் சேர்த்துப் புரிந்து கொள்ளும் பக்குவம் வேண்டும். இந்தப் புரிந்துகொள்ளுதலை ரத்தினச் சுருக்கமாக வழங்கும் ஒரு மார்க்கம்தான் ஆன்மீகம்.
சாதிக்கும் சக்தியையும் சிந்திக்கும் சக்தியையும் அதிகரிக்கத் தியானம் எளிதில் உதவும்.
வாழ்க்கையில் குதிக்கும் முன்பு ஆன்மீகத்தைக் கொஞ்சம் மனதில் எடுத்துக்கொள்ளுங்கள். சாதனையின் வாசல் திறக்கும்.
வாழ்வென்பது கீபோர்டாடும் போர்க்களம் அல்ல ...
நீ உன்னை அறிந்த மறுநிமிடத்திலிருந்து!
வளர்ச்சிக்கு வானமே எல்லை என்பர் ... ஏனென்றால் வானமே இல்லை. வளர்ச்சிக்கு முடிவே இல்லை. அது உண்மையே.
நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம் என்பது இறுதியான உண்மையல்ல.
இது சரியான கண்ணோட்டம் ஆகாது. உண்மையில் ஒருவர் தன்னை அறிந்த பின் போராட வேண்டிய அவசியமே இருக்காது. அளவிட முடியாத சுதந்திரம் அப்போது கிடைத்திருக்கும்.
- வானம் தொட்டுவிடும் தூரம்தான் வா!'
- ' பொங்கியெழு'
- ் நீ ஒரு போர்வீரன்
'வாழ்க்கை ஒரு போராட்டக்களம்'
வாழ்வென்பது கொண்டாட்ட பூந்தோட்டம்!
என்பன போன்ற ஊக்கக் கருத்துக்களை இளைஞர்கள் மனதில் பிடித்துக் கொண்டு வாழ்வதைக் காண்கிறேன். ஆனால், இதைத் தாண்டியும் மனிதரால் வாழ முடியும்.
இவையெல்லாம் வாழத் துடிப்பவருக்கான ஊக்க மருந்துகள்தான், இல்லை என்று மறுக்க முடியாது.
ஊக்க மருந்துகள் மிக அதிக அளவில் மனிதர்களால் எதிர்பார்க்கபட்டால். அவை மிக மிக அதிக அளவில் உருவாக்கப்படும். அதில் தவறில்லை.
ஆனால், உண்மையான ஓட்டப்பந்தய வீரர் ஊக்கமருந்துகளை எடுத்துக் கொள்ளமாட்டார். தன்னுடைய சக்தியையும் எவ்வளவு எடுத்துப் பயன்படுத்த முடியுமோ அதைச் செய்வதிலேயேதான் குறியாயிருப்பார்.
உண்மையான சாதனையாளர்கள் தங்கள் மனதுக்கு ஊக்கமருந்துகள் எடுத்துக்கொள்வதில்லை !
மற்றவர்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பதைவிட, தன் புத்திக்கும் தன் சக்திக்குமே மதிப்பளிக்கிறார்கள்.
அவர்கள் அவர்களை அறிந்துகொள்வதின் மூலமாக, மற்றவர்களை அறிந்து கொள்கிறார்கள். இதனால் உலகம் ஒரு போராட்டகளமாகக் இவர்களுக்குத் தெரிவதில்லை.
ZEN BUSINESS MANAGEMENT TECHNIQUES என்று சில தொழில் சார்ந்த அறிவுரைகள் மேலைநாட்டில் வழக்கலிருக்கிறது.
ஜென் தத்துவத்தின் சில அடிப்படையான ஞானக்கருத்துக்களைக் கொண்டு சாதிக்கும் வழிமுறைகளை அந்தக் குழுவினர் உலகெங்கும் சென்று கற்றுத் தருகின்றனர்
அவர்கள் சொல்லும் புரட்சிகரமான வாசகம் ஒன்று.
"கஷ்டப்படுபவர் சாதிக்கமாட்டார். சாதித்தவர் கஷ்டப்பட்டிருக்கமாட்டார்
அதிகமாக உழைப்பது வேறு. கஷ்டப்படுவது வேறு. கொஞ்சம் உழைத்துவிட்டால் ... சோம்பேறியால்கூட, 'நான் நிறைய கஷ்டப்பட்டவன்' எனச் சொல்ல முடியும்.
மேலும், சாதனை பாதையில் உச்சத்தைத் தொட, சக்தியை வீணாய் ஒரு துளிகூட விரயம் செய்யாமல் சாகிப்பதற்கு எப்படியெல்லாம் புத்தியைப் பயன்படுத்துவது என ஜென்னின் தியான ஞான வழிமுறைகளைக் கொண்டு கற்றுத் தருகிறார்கள்.
வெளி ஊக்கம் வெகுநாள் காக்குப்பிடிக்காது!
"மனதை வென்றவர், உலகை வென்றவர்.
மனதை அரசாள்பவர். உலகையே அரசாள்பவர்' எனும் சீனப் பழமொழியின் சூட்சுமம், "கஷ்டமில்லாமல் சாதிப்பது" பற்றியதே!
மனம் தன் இயல்புபடி உங்களை அலைக்கழிக்கும் ...
தடுமாறும் ... துடுமாறும் மனதோடு சாதனைப் பாதையில் குதிக்கும்போதுதான் நீங்கள் போராட வேண்டியிருக்கும். உலகம் போராடும் போர்க்களமாகத் தெரியும்.
ரிமோட்கன்ட்ரோலில் இயங்க வைக்கும் ரோபோட் பொம்மை போல, நம்மால் நம் மனதை இயக்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களை முழுமையாக அறிந்துகொள்வதே.
தடுமாறும் மனம் சரிசெய்யப்பட்டால், இருக்கும் நிலையில் உங்களின் சக்தியையும் புத்தியையும் உலகில் போராடுவதற்காகப் பயன்படுத்தும்போதுதான் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.
மனம் சரிசெய்யப்பட்டதும் நம் சக்தியைப் போராடுவதற்குப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டால் உண்மையான சாதனை உதயமாகிவிட்டது என்று அர்த்தம்.
தன்னை அறிந்தவர், தன் மனதையும் உலகத்தைக் கையாளும் சூட்சுமத்தையும் கற்றுக்கொண்டதால்... தான் நினைத்ததையெல்லாம் லேசாய் நடத்திவிடும் சக்தி, புத்தி பெற்றவராகிவிடுவார்.
அப்புறம் உலகம் அவருக்குப் போர்க்களமல்ல. எவ்வளவு வேண்டுமானாலும் அவரால் சாதிக்க முடியும்.
கஷ்டப்படுத்தும் மனம் இல்லாததால் கஷ்டமில்லாமல் சாதிக்கலாம். உலகையே வெல்லலாம். தன்னை வென்றுவிட்டதால் வாழ்வென்பது கொண்டாட்ட தோட்டமாகிவிடும்.
சக்தி, புத்தி பெருகச் செய்யுங்கள். உங்களுக்கும் மேலே குறிப்பிட்ட ராஜசுக நிலை சாத்தியமே.
வாழ்வு காலத்தை சுவைக்கும் முன் தியான காலத்தை சுவையுங்கள். சாதனை காலம் தியான காலமாகட்டும்!
| சாதிக்க |
|---|
| திசை |
| எழு |
| உன் |
| சக்தி, |
| உன் |
| புத்தி |
| எழு |
| வேண்டும் |
தவறுக்காக வருந்தாதே! திருந்து !
தவறு செய்வது தவறு இல்லை. ★ காரணம், தவிர்க்க முடியாதது தவறு. செய்த தவறையே திரும்பத் திரும்பச் செய்வதுதான் தவறு.
இரண்டு விதமாக மனிதர்களை நாம் பார்க்கலாம்: ★ 1. எல்லோருமே பாவிகள்.
-
- எல்லோருமே புனிதர்கள். பாவம், புனிதம் என்பது இடத்துக்கு இடம், மதத்துக்கு மதம் ★ மாறக்கூடியது. ஏன் ? பாவம், புனிதம் பற்றிய வரையறைகள், மதங்களுக்குள் இருக்கும் உபபிரிவுகளுக்குள்ளேயே மாறக்கூடியது.
-
பழைய தவறுகளை நினைத்து ... ★ நீங்களும் கஷ்டப்படாதீர்கள். மற்றவர்களையும் கஷ்டப்படுத்தாதீர்கள். ஊருக்கு வெளியே தபஸ்வி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு கடுமையான ஒழுக்கவாதி. நீதிநெறிப்படி தவறாமல் வாழ முயற்சிப்பவர்.
ஒரு நாள் இரவு அவரின் குடிசைக்கு வெளியாள் ஒருவன் வந்தான். அவன், "ஐயா, இன்று இரவு மட்டும் நான் இங்கு தங்க அனுமதிப்பீர்களா?" எனக் கேட்டான். தபஸ்வி அதற்கு அனுமதி கொடுத்ததோடு, இரவு உணவும் சேர்த்துக் கொடுத்தார்.
அவர் எழும் முன்பே அவன் எழுந்து சொல்லிக்கொள்ளாமல் நழுவி விட்டான். விடிந்ததும் அங்கு காவலர்கள் வந்தார்கள். 'நேற்றிரவு இங்கு யாராவது வந்தார்களா' என்பது பற்றி விலாவாரியாக விசாரித்தார்கள். விசாரணையின் முடிவில் தபஸ்வி, "அவன் யார்? எதற்காக இவ்வளவு விசாரிக்கிறீர்கள்?" எனக் கேட்டதற்கு, "திருடன்" என்றார்.
"நான் தவறு செய்தவன். நான் பாவி! நான் பாவி!' என்று புலம்புவதும் தவறு. "நீ தவறு செய்தவன். நீ பாவி! நீ பாவி!' என்று குற்றம் சாட்டி மற்றவர்களைக் குற்ற உணர்வில் தவிக்க விடுவதும் தவறு.
"ஐயோ ... திருடனுக்கு உதவியது பாவமாயிற்றே ... !''' ' என நீதிநெறியாளர் புலம்பும் இன்னொருவர் சப்தம் கேட்கவே, தான் புலம்புவதை நிறுத்துவிட்டு ''யார் அது? '' எனக் கேட்டார்.
"கடவுள்" என பதில் வந்தது.
"கடவுளே, நீங்கள் ஏன் புலம்ப வேண்டும்?" எனக் கேட்டதற்கு, "ஒரு நாள் இரவு நீ அவரைப் பாதுகாத்து உதவியதே தவறு என்றால், முப்பது வருடங்களாக நான்தானே பெரும் தவறு செய்தவன். நான்தானே பெரும்பரவி! ? " எனக் கேட்டார்.
*தவறு பற்றிய தவறான அபிப்பராயம், அந்த அன்றே உடைந்து போனது. உங்கள் மனதிலிருக்கும் தவறு பற்றிய தவறான அபிப்பிராயங்களைக் கண்டுபிடித்து உடடைத்தெறியுங்கள்.
அருமையான வாசகத்தோடு துவங்குகிறேன்.
99 முறை செய்த நல்லதையெல்லாம் விட்டுவிட்டு ஒரே ஒரு ஒரு முறை செய்த தவறை கணக்கில் கொண்டு கோபிப்பது - மனிதர்கள்.
99 முறை செய்த தவறுகளையெல்லாம் விட்டுவிட்டு, ஒரே ஒருமுறை செய்த நல்லதுக்காக மனசார நன்றியோடு ஆசீர்வதிப்பது - கடவுள்.
நீங்கள் மனிதரா ?
கடவுளா ?
சுற்றியிருப்பவர்களிடம் தவறு கண்டுபிடித்துக்கொண்டே இருப்பது, சிலருக்கு வெல்லம் சாப்பிடுவது போல சுவாரஸ்யமான விஷயம்.
மற்றவர்களிடம் தவறு கண்டுபிடித்துக்கொண்டேயிருப்பது நாம் தவறாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதற்கான அத்தாட்சிகள்.
சரியாக வாழும் ஒரு மனிதர் மற்றவர்களிடம் நல்லதைத்தான் முதலில் கண்டுகொள்வார். இவர்களுக்குத் தவறுகள் இரண்டாவது பட்சமாகத்தான் தெரியும்.
மற்றவர்களிடம் நல்லதை இனம் கண்டுக்கொள்ள தெரிந்தால், உலகமே நல்லவர்களால் நிறைந்திருப்பது கண்களுக்குத் தெரியும். "ஆஹா! என்ன அருமையான உலகம்!" என்று நினைக்கத்தோன்றும்.
மற்றவர்களிடம் தவறையே இனம் கண்டுகொள்ள இருந்தால், உலகமே கெட்டவர்களால் நிறைந்திருப்பதாகத் தெரியும். "உலகத்தில் நல்லவர்கள் அரிது. உலகமே மோசம்" என்று நினைக்கத் தோன்றும்.
சுற்றியிருப்பவர்களின் தவறுகளை மிகைப்படுத்தி, தவறானவர்களாகவே வாழ்ந்து வந்த ஒரு கூட்டம் இயேசுநாதரை ஒருமுறை சந்திக்க நேர்ந்தது.
மரத்தடியில் தவ அமைதியில் இயேசு அமர்ந்திருந்தார். "என்னைக் காப்பாற்றுங்கள்" என்ற அலறலோடு பெண் ஒருத்தி இயேசுவின் காலடியில் வந்து விழுந்தாள்.
அந்தப் பெண்ணைத் துரத்திக்கொண்டு வந்தவர்கள் இயேசுவைப் பார்த்ததும் செய்வதறியாது திகைத்து நின்று விட்டார்கள்.
அமைதி கலையாமல் கூட்டத்தையும் துரத்திய கும்பலையும் தலைநியிர்ந்து பார்த்தார்.
பிடித்தோம். நமது சட்டப்படி இவளைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும். அதனால்தான் கற்களால் அடித்துக்கொண்டே இவளைத் துரத்திக்கொண்டு வந்தோம். இந்த மோசக்காரிக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று நீங்கள்தான் கூற வேண்டும்'' என்று கடமை கண்ணியவான்கள் போல வெகு பரிசுத்தத்தோடு பேசியது அந்தக் கும்பல்.
இயேசு நல்ல தீர்ப்பு கொடுப்பார் என்று காத்துக்கொண்டிருந்த கும்பலுக்கு பெருத்த ஏமாற்றம். இயேசுநாதர் மண்ணோடு விளையாட ஆரம்பித்து விட்டார்.
அவர் விரல்களால் ஏதோ வரைந்து, எழுதிக் கொண்டிருந்தார். கும்பலில் இருந்தவர்கள் பொறுமை இழந்து சலசலக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இயேசு தலைநிமிராமலேயே, "உங்களில் எவரொருவர் பாவம் செய்யாதிருக்கிறாரோ அவர் முதலில் இந்தப் பெண் மீது கல் எரியட்டும்" என்றார். அவ்வளவுதான்.
எல்லா தவறுகளையும் செய்யுமளவுக்கு ஒரு மனிதனின் வாழ்நாள் நீளமானதாக இல்லை.
கொடூரன்கூட எல்லாத் தவறுகளையும் செய்தவன் அல்ல.
"நான் இனி ஒரு முறை அதே தவறை செய்யமாட்டேன்" என உறுதிபட முடிவெடுத்ததும் உங்களின் இமாலய தவறுகள் கூட மன்னிக்கப்பட்டுவிடும்.
@ முடிவெடுங்கள். தவறுகள் தவறட்டும்!
கும்பலில் இருந்த ஒவ்வொருவரும் சந்தடி தெரியாமல் கல்லைக் கீழே போட்டுவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டார்கள்.
இதையடுத்து இயேசு கூறிய வரிகள்தான் மிக அழகானது. ஆழ்ந்த அர்த்தம் பொதிந்தது.
பீதியில் அழுது கொண்டிருக்கும் அந்தப் பெண்ணிடம், "இனி தவறு செய்யாதே!" என்று ஒரே ஒரு வரிதான் இயேசு கூறினார்.
அந்தப் பெண்ணுக்குள் அது பெரிய மனமலர்ச்சியையே உண்டுபண்ணிவிட்டது.
அவளின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. இதுவரை அவள் செய்த தவறு அனைத்தும். 'இனி தவறு செய்யாதே!' என்ற ஒரு வார்த்தையில் கரைந்து போனது.
அவளின் மனச்சுமை முழுவுதும் அன்றோடு மறைந்தது. செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் சந்தோஷமாக மீதி வாழ்வைக் கழித்தாள் அந்தப் பெண்.
கண்ணியவான்கள் போல துரத்திய கூட்டம் வேறு ஆட்களிடம், வெவேறு தவறுகளைக் கண்டுபிடித்து, "உலகம் மோசம்! உலகம் பாவிகளால் நிரைந்தது!" என்று நொந்து கொண்டு மீதி வாழ்வைக் கழித்தது.
ஒரு உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.
மற்றவர்களிடம் எப்படிக் குற்றம் கண்டுபிடிக்கிறீர்களோ அதேபோல் தான் ஆழ்மனதில் நீங்கள் அதே தவறு செய்யும்போது, உங்களை நீங்களே கிண்டிக் கொள்வீர்கள்.
தவறு கண்டுபிடித்துக் கொண்டேயிருப்பது தவறான செயல்.
நம்முடைய பழைய தவறுகளைக் கிளறிக் கிளறி அதற்காக இன்றும் நோவது மடச்செயல்.
தவறைப் பற்றிச் சரியாக விளக்கும் ஒரு ஜென் கூற்று.
" தெரிந்துகொள்! புரிந்துகொள்! நீ தவறு செய்யப் பிறந்தவன். கொடூரனல்ல !"
மனம் கடவுள் வந்து தங்கும் வசந்த மாளிகை. ஆனந்தம், கூச்சம், புத்திசாலித்தனம் போன்ற வி.ஜ.பி.க்கள் தங்கும் ராஜ்பவன்.
கண்டிப்பதும் தண்டிப்பதும் கடவுள் செய்யவேண்டியது நீங்கள் கடவுளா?
ஆம்! மனிதர்கள், தங்கள் வாழ்வில் தவறு செய்வதை தவிர்க்கவே முடியாது.
காரணம் தவறு செய்வது என்பது, 'எது சரி?' என்பதைக் கற்றுக்கொள்ள உதவும் ஒரு வாழ்வியல் வழிமுறை.
ஆனால், ஒருமுறை செய்த தவறைக் கண்டிப்பாக திரும்ப செய்யக்கூடாது.
செய்த தவறையே திரும்பத் திரும்பச் செய்யாதிருக்கத்தான் இறைவன் 'புத்தி' என்ற ஒரு விஷயத்தை மனிதருக்குப் பரிசளித்திருக்கிறார்.
செய்த தவறுகளுக்காக வருந்துவது துவக்கத்தில் சரி.
தவறுக்காக வருந்திக்கொண்டேயிருப்பது தவறு. தவறுக்காக வருந்துவதைவிட, திருந்துவது புத்திசாலித்தனம்.
தவறு என்று நாம் கண்டுகொண்டதை திரும்ப செய்யாதிருக்க வேண்டுமானால், கொஞ்சம் கவனத்தை நம்முள் கொண்டுவந்தால் நிச்சயம் சாத்தியமே.
"தவறுக்காக வருந்தாதே! திருந்து" என்பதுதான் இயேசு அந்த விலை மாதுவிடம் "இனி தவறு செய்யாதே" என்று சொன்னதின் ரகசியம்.
தவறுக்காக வருந்துவதைவிட திருந்துவதுதான் நம் அகத்துக்கு மருந்து. இது வாழ்க்கை சுகத்துக்கு ஒர் எளிய வழி.
அர்த்தமுள்ள சம்பவம் ...
நித்தியின் மனைவி கேட்டார். " என்னிடம் பிடித்தது எது ?" "நீ செய்யும் தவறுகள் ?"
" என்னிடம் பிடிக்காதது எது ?" நீ திரும்பத் திரும்ப செய்யும் அதே தவறுகள்"
- இனி தவறு செய்யும்போது அது திரும்ப செய்யும் தவறா என காணத் தவறாதீர்கள். வளர்வீர்கள். வாழ்வீர்கள்!
மற்றவர்கள் திருந்தும் போது திருந்தட்டும் ... விட்டுவிடுங்கள் !
'அவர் திருந்த வேண்டும்' என்ற எண்ணம் ஒருவருக்கு உதிக்காத வரை, நீங்கள் எவ்வளவு துல்லியமாக அவரின் தவறுகளைக் கண்டுபிடித்துச் சொன்னாலும் அவர் திருத்திக் கொள்ளமாட்டார்.
நான் திருந்த வேண்டும் என்ற எண்ணம் ஒருவருக்கு உதித்தபின், நீங்கள் அவரின் தவறுகளைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டிய அவசியமே இருக்காது என்று எண்ணுமளவுக்கு அவரின் தவறுகளை அவரே கண்டுபிடித்து திருத்திக் கொள்ள ஆரம்பிப்பார்.
இது வாழ்க்கையின் சத்தியம்.
எப்படி யோசித்துப் பார்த்தாலும் நீங்கள் மற்றவர்களிடம் கண்டுபிடித்துச் சொல்லும் தவறுகளால், உங்களுக்கோ மற்றவருக்கோ எந்தவொரு காலத்திலும் பலனில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதா ?
'மற்றவரைத் திருத்துகிறேன். உலகைத் திருத்தப் போகிறேன்' என்பதெல்லாம் பைசாவுக்குப் பயன்தராத செயல் என்பது புரிகிறதா ?
நீங்கள் மற்றவரிடம் தவறு கண்டுபிடிப்பதால் வரும் பல பலன்கள்...
- திருந்த விரும்பாதவரை வருந்த விடலாம் ... ★
- அவரை வருந்த விடுவதின் விளைவாக, உங்களின் மீது வெறுப்பு கொள்ள ★ ஏதுவான சூழல்களை நீங்களே உருவாக்கித் தரலாம்.
- அப்பாவிகளை நோகடிக்கலாம். ★
- உங்களைப் பார்த்தவுடனேயே, "ஐயய்யோ! இன்று என்ன குற்றம் சொல்லப் ★ போகிறாரோ?" எனப் பீதி கொள்ளச் செய்யலாம்...
| மற்றவரைத் |
|---|
| திருத்தத் |
| துடிப்பது. |
| திருந்துவதை |
| தள்ளிப் |
| போடும் |
| ஆழ்மனத் |
| தந்திரம். |
- முட்களை காரணங்காட்டி, ரோஜாவை இழக்கும் அப்பாவி போல மனிதர்களையும் ★ அவர்களின் நெருக்கத்தையும் தொடர்ந்து இழந்து கொண்டேயிருக்கலாம்.
எனவே சொல்கிறேன் ...
வருந்துவதும் வருந்த விடுவதும் மட்டும்தான் பாவம்.
திருந்துவதும் மற்றவர் திருந்தும் போது திருந்தட்டும் என திருந்த விடுவதும் புனிதம் மட்டுமல்ல அது வாழ்வியல் தியானம். இதைச் செய்பவரே புணிகர்.
இனி நீங்கள் வருந்தப் போகும் காலங்களையும் மற்றவர்களை திருத்துவதாய் நினைத்து அவர்களை வருந்தவிடப் போகும் காலங்களையும் குறித்து மிக எச்சரிக்கையோடிருங்கள்.
இந்தக் காலங்களில் வருத்தத்திற்கு பதில் திருத்தம் உங்களுக்குள் நிகழ ஏதுவான எல்லாச் செயல்களையும் செய்யுங்கள்.
பாவம் புனிதமாகட்டும். வருத்தம் திருத்தமாகட்டும், சோக காலங்கள் தியான காலங்களாகட்டும்.
வருத்த.. வருத்த ... ஒருவரை தூண்டுவது, 1. நான் புனிதன்! 2. நான் புனிதன் அல்ல! எனும், இரண்டில் ஒரு எண்ணமே!
சாதனையா ?
வேதனையா ?
ஊக்கவனஹல்லி ASP-யில் கிடைத்த ஓய்வு நேரத்தில் சிலர் வாழ்வியல் ஆலோசனைக்காக என்னைச் சந்தித்தார்கள்.
வங்கியில் மேனேஜேராகப் பணிபுரியும் அந்த நபர், ''திருமணமாகிப் பத்து வருடமாகிறது. இன்னும் எனக்குக் குழந்தையில்லை. என்னுடைய கவலையெல்லாம் எனக்கொரு குழந்தையில்லையே என்பதுதான்.... '' என ஆரம்பித்து தன்னுடைய மற்ற மனப் பிரச்சனைகளைப் பகிர்ந்து தெளிந்து விடைபெற்றார்.
சிறிது நேரத்திற்குப் பின் அதே வங்கியில் கிளர்க்காகப் பணிபுரிபவர் வந்தார். ''திருமணமாகிப் பத்து வருடம் முடிந்து விட்டது. பத்து வருடத்திற்குள் ஆறு குழந்தைகள் என்னோட கவலையெல்லாம் என்னுடைய குழந்தைகள்தான். ஒண்ணு கூட கூட சொல்பேச்சு கேட்பதில்லை...'' என ஆரம்பித்தார்.
இருந்தாலும் வேதனை, இல்லாவிட்டாலும் வேதனை. எல்லோரும் ★ எல்லா வாழ்க்கை கட்டத்திலும் சந்திக்கும் பிரச்சனை இது. கொஞ்சம் கவனத்தோடு வாழ்வை அலசிப்பாருங்கள். இது உண்மை என்பது புரிய வரும்.
சாதித்தாலும் சாதிக்காவிட்டாலும் வேதனை தொடர்கிறது. முதலில் தாண்டப்பட வேண்டியது வேதனை. இதையடுத்துதான் சாதனை பற்றியே யோசிக்க வேண்டும்.
யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். ★ எப்படி வேண்டுமானாலும் சாதிக்கலாம். எப்போது வேண்டுமானாலும் சாதிக்கலாம். சாதிக்க எதுவுமே தடையில்லை. சாதனை பெரிய விஷயமா என்ன?
பிறந்தோம், வளர்ந்தோம், சாதித்தோம் என்பதைத் தாண்டி ... "ஆஹா! அருமையாய் அனுபவித்தேன். வேதனையில்லாமல் வாழ்ந்தேன். சந்தோஷத்தையல்லவா சாதித்தேன்!" எனச் சொல்லும்படி வாழ்ந்து காட்டுங்கள்.
-
- எச்சரிக்கை! சாதிக்கலாம் என்ற கவலையும் சாதித்தபின் நிம்மதியாயிருக்கலாம் எனும் நம்பிக்கையையும் சாதனை துடைத்தெறிந்துவிடும்.
- சாதனை என்பது * நாம் நினைக்குமளவுக்குப் பெரிய விஷயமல்ல என்ற உண்மை சாதிக்கும் வரை மனிதருக்குத் தெரியாது. புரியாது.
- ஆனந்தத்தையும் நிம்மதியையும் தராத * எல்லா சாதனைக்கும் சாதனையில் உபசர்களாக வேதனையைத் தரும் என்பது ஆராய்ச்சியபூர்வமான உண்மையும்கூட!
- உள்ளுலகில் சாதித்தவர் ★ வெளியுலகில் சாதித்தாலும் சாதிக்காவிட்டாலும் ஆனந்த மாயிருப்பார். நிம்மதியாயிருப்பார். உள்ளுலகில் சாதிக்காதவருக்கு வெளியுலகில் சாதித்தாலும் சாதிக்காவிட்டாலும் ஆனந்தம், நிம்மதி சொந்தமில்லை !
சிரிக்கும் குழந்தை, ஆரோக்கியமான முதியவர், சந்தோஷமான கணவன் - மனைவி, பண்பும் பணமும் நிறைந்த மனிதர், வாழ்க்கையைக் கொண்டாடும் தியானி,
இவர்களை சாதனை, வெறி போல் பற்றுவதில்லை. இவர்களைச் சாதனை ஈர்ப்பதில்லை.
பூரணமாகவும் முழுமுமையாகவும் வாழ்க்கையை வாழும் வாழ்வு சந்தோஷத்திற்கு வித்திடுகிறது.
இப்படிப்பட்டவர்கள் சந்தோஷத்தை அடையும் உணர்வுப்பூர்வமான வழியை அறிந்தோ, அறியாமலோ கண்டுபிடித்துவிட்டதால் அவர்களுக்கு வேதனை இருக்காது. சந்தோஷமே எங்கு பார்த்தாலும் நிறைந்திருப்பது தெரியும்.
சந்தோஷத்தை இன்னும் அனுபவிக்க வேண்டும் என்ற தூண்டுதல் இல்லாததால், வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் 'முழுமையாக அனுபவிக்கவில்லை' என்ற வேதனை இல்லாததால் - எதையாவது சாதித்தே ஆக வேண்டும் என்ற வெறி இவர்களுக்குக் கிளம்புவதில்லை.
சாதனையென்பது வாழ்க்கையின் ஒரு அங்கம் மட்டுமே. வாழ்க்கையையே சாதனையின் ஒரு அங்கம் என்று மாற்றும்போதுதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. வாழ்க்கையில் வெறுப்பும், எதிர்பார்ப்பும் நம்மையுமறியாமல் அதிகமாகிறது.
இதை விளக்கும் ஒரு அருமையான கதை.
32 மகன்களோடு, 10 கப்பம் கட்டும் சிற்றரசர்களோடு நைலீஸ் மாநகரத்தை ஆட்சி செய்து வர்தார் யா-ரீக்மின்.
இன்னும் நாடுகளைப் பிடிக்க வேண்டும். இன்னும் பொன், பொருள் குவிக்க வேண்டும். இன்னும் சாதிக்க வேண்டும். என்ற மனநிலையோடு தூங்கச் சென்றார். கனவில்... திடீரென்று மரணதூதன் வந்துவிடுகிறார். மரணதூதன், ''யா-ரீக்மின், உன்னுடைய ஆயுசு நாள் முடிந்துவிட்டது. உனக்கு மாரடைப்பு கொடுத்து உன்னை எடுத்துச் செல்லப் போகிறேன் ... '' என்று கூற,
கனவு கனவுதான் என்று தெரியாத நிலையில் யா-ரீக்மின் படுக்கையிலேயே பேச ஆரம்பத்துவிட்டார்.
| ர | இது மறுக்க முடியாத உண்மை |
|---|---|
| ரை மு | சாதித்தவர்கள் உள்ளுலகில் ஏழைகள். |
| சாதிக்காதவர்கள் வெளியுலகில் ஏழைகள் | |
| க | வெளியே பணக்காரன் உள்ளே பிச்சைக்காரன். |
| ர் | உள்ளே நுழையாமல் வெளியே குதித்தவன். |
| -இதுவோ கீதம் |
அவரது 32 மகன்களில், 32-ஆவது மகன் ஜோஷ் மிகவும் புத்திசாலி. எதையும் முழுமையாக அனுபவித்து சந்தோஷமாக வாழும் 16 வயது இளைஞர்.
தன் தந்தை தாக்கத்தில் எதோ பேசிக் கொண்டிருப்பதை கேட்டவர், என்ன பேசுகிறார் என்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார். தந்தையின் பேச்சை மாத்திரம் வைத்து ஜோஷ் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்.
சாதனையாம்! சாதனை. எரிபொருள் வாங்காமல்
கார், கப்பல், விமானம் என வாங்கிக் குவிப்பதால்
என்ன பயன்?
வாழ்வின் எரிபொருளான அமைதிக்கும் சக்திக்கும் சேகரிக்காமல் ... உன் ஐம்புலன்களைப் பயன்படுக்கி திருப்தி பெற ஆயிரமாயிரம் சுக சௌகரியங்களைச் சேர்ப்பதால் ... என்ன பயன் ?
புத்திசாலிகள் முதலில் எரிபொருளைச் சேகரிக்கவே செயல்படுவர்.
சுக சௌகரியங்களைப் பெருக்கிக் தொண்டேயாவது ...
எரிபொருள் சேகரிக்கலாமே!
சிந்தியுங்கள்!
செயல்படுங்கள்!
யா-ரீக்மின். "மரண தூதா! நான் இன்னும் கொஞ்ச நாள் இந்த உலகத்தில் இருந்து அனுபவிக்க வேண்டியதெல்லாம் அனுபவித்து முடித்து விடுகிறேன். அப்புறம் என்னைக் கூட்டிச் செல் " என்றார்.
சில நிமிட மௌனம்...
மீண்டும் யா-ரீக்மின், "என்னது எனக்குப் பதிலாக வேறு யாராவது வந்தால் என்னை விட்டுவிடுவாயா?
அப்படியென்றால், என் மனைவி என் மீது உயிரையே வைத்திருப்பதாக அடிக்கடி சொல்வாள் அவளை எனக்குப் பதிலாகக் கூட்டிச் செல். நிச்சயம் வருவாள்" என்றார்.
சில நிமிடம் மௌனம்….
மீண்டும் யா-ரீக்மின், "என் மனைவி இப்படி ஒரு நொண்டிச்சாக்கு சொல்வாள் என்று பார்க்கவில்லை மரணதூதா!
என் மேல உயிரையே வைத்திருப்பதாகச் சொல்லிவிட்டு, என்னுடைய கடைசிப் பையன்
வேதனை தலையெடுக்க நீஜசாதனை துளிர்விடும்
ஜோஷ்க்கு கல்யாணமாகி அவன் குழந்தைகளைப் பார்க்கும் வரைக்கும் வாழ ஆசை படுகிறேன் எனச் சொல்லிவிட்டாளே!
சரி. என்னுடைய முதல் மகனை கூப்பிட்டுக் கொள். அவன் நிச்சயம் வருவான். போன வருடம் அவனுடைய பிறந்த நாள் விழாவில், எனக்குப் பதவி வேண்டாம். நீங்கள் நல்லாயிருந்தால் அதுவே போதும். நாட்டுக்காக என் உயிரைக்கூடக் கொடுப்பேன் என்று சொன்னான். அவனைக் கூப்பிட்டுக் கொள்'' என்றார்.
சில நிமிடம் மெளனம்...
மீண்டும் யா-ரீக்மின், ''எனக்கென்று தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கிறது. என்னை முகத்திலடித்தாள் போல் இவன் சொல்வான் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை ...
' ஏன் மரணதூதா சிரிக்கிறாய் ... என் நிலையைப் பார்த்தால் உனக்குச் சிரிப்பாயிருக்கிறதா ... ரொம்ப சிரிக்காதே. இன்னும் 31 மகன்கள் இருக்கிறார்கள். யாராவது ஒருவராவது பாசமிகுதியால் எனக்காக தியாகம் பண்ணத் தயாராய் இருப்பார்கள். போய்க் கேள்...'' என்றார் நம்பிக்கையோடு,
பல நிமிடங்கள் மௌனத்திற்கு பின் ....
யா-ரீக்மின், ''எங்கே, என் செல்லக்குட்டி ஜோஷ் எங்கே ? ''
தந்தையின் முழு உணர்வையும் அவரின் உள்ளுணர்வு மூலமாகக் கேட்ட ஜோஷ், கனவில் அடுத்து தான் வர வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்து மெல்ல தன் தந்தையின் தலையை வருடியவாரே -
"அப்பா, நான் வந்துவிட்டேன். கவலைப்படாதீங்க ... என்னை மரணதூதனுக்குக் கொடுத்து விடுங்கள்" என்றார்.
யா-ரீக்மின் கண்விழித்துக் கொண்டார்.
விடாமுயற்சியும் கடினஉழைப்பும் சாதனையை நிர்ணயிப்பதில்லை. சிந்தனைக் தெளிவே சாதனையை நிர்ணயிக்கிறது. அதனால் தான் உழைப்பவரெல்லாம் உயர்ந்து விடுவதில்லை. சிந்தனைத்தெளிவு பெறத் துணையாய் உழையுங்கள்! அவர் கண்களில் நீர் திரண்டது.
இவ்வளவு நேரம் தான் கண்டது கனவென்று புரிந்தது. கனவில் தான் உளறியதைக் கண்டு, விவேகமாக பேசும் ஜோஷ்-ஐ பார்த்ததும் அழ ஆரம்பத்துவிட்டார்.
வெற்றி வாய்ப்புகள் நழுவி கொண்டே இருக்கிறது. நழுவ விட்டாலும் தொடர்ந்து அழ வந்து கொண்ட இருக்கிறது. வெளியே பிடிப்பவர் பில் கேட்ஸ் ஆகிறார். உள்ளே பிடிப்பவர் புத்தர் ஆகிறார். நீங்கள்தான் அதை பிடிக்க முயற்சிக்க வேண்டும். முயற்சிப்பீர்களா?
யா-ரீக்மின் கேட்டார், "நீ எப்படி இவ்வளவு பெரிய தியாகம் செய்ய முன்வந்தாய் ? ''
ஜோஷ், "தியாகமுமில்லை. ஒரு மண்ணங்கட்டியும் இல்லை ... இவ்வளவு சாதித்த பிறகும் உங்களுக்கும் அம்மாவுக்கும் எல்லா அண்ணன்களுக்கும் வாழ்க்கையைப் பூரணமாக வாழ்ந்த திருப்தியில்லை...
இவ்வளவு சாதித்தும் வேதனையிலேயே நீங்கள் போக்கிக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை தேவையா என்றெனக்குத் தோன்றியது.
அதனால்தான் இந்த முடிவுக்கு வந்தேன்'' என்றார்.
யா-ரீக்மினின் மூளையில் சுரீர் என்று அடித்தது ....
ஒவ்வொரு மனிதருக்கும் ஏதோ ஓர் உந்துதல், அல்லது தூண்டுதல்தான் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பை உண்டுபண்ணுகிறது.
ஏற்கெனவே வேகனையில் இருக்கும் சராசரி மனிதக் கண்ணுக்குப் பசுமையாகத் தெரிவது சாதனையாளர்களின் சாதனைகள்தான்.
"தன் வேதனைக்கான மருந்து அந்தச் சாதனைகள்தான் என மனிதர்கள் எடுக்கும்
முடிவே மனிதரைத் தூண்டுகிறது. சாதிக்கக் கிளம்புகிறார்.
'சாதித்தவரின் வேகனைகள் சாதித்த பின்னாவது மறைந்ததா? குறைந்தபட்சம் வேதனைகள் கூடாமலாவது இருந்ததா?' என்ற யோசனைகூட இல்லாமல் அதே
பாதையில் செல்கிறார்கள்.
வேதனை தரும் தூண்டல்களால் சாதிக்க குதித்தவர்களே பெரும்பாலான சாதனையாளர்கள்.
ஆனால், நிஜத்தில் ... சாதனை தனி வேதனை தனி. வேதனைக்கு மருந்து சாதனையல்ல. வேதனைக்கு மருந்து சந்தோஷம்.
சந்தோஷத்திற்கு வழி வாழ்க்கையைப் பூரணமாக அனுபவித்து வாழ்குதல். சந்தோஷ வாழ்வு வேதனைகளை மறையச் செய்யும்.
வேதனைக்கு சந்தோஷமென்னும் மருந்திட்டு குணப்படுத்துவது - சாதனை என்னும் தீப்புகையை மூட்டிவிட்டு வேதனையை மறைப்பதைவிட சிறந்தது.
வேதனையை மறைப்பதைவிட, குணப்படுத்துவதே ஆரோக்கியமானது. அதன் பிறகு சாதனைக்குக் காலடி எடுத்து வையுங்கள். சாதியுங்கள். மீண்டும் சொல்கிறேன். சாதனை தனி. வேதனை தனி. 'உங்களின் சாதனை ஆசை வேதனையிலிருந்து உதித்த ஒன்றா?' என ஆராயுங்கள்.
சோகனையிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள்.
வேதனைக்கு முதலில் மருந்திடுங்கள்!
அர்த்தமுள்ள சம்பவம் ...
"'ஜெயிக்க வழி சொல்ல ஞானி தேவையில்லை" என்று சொன்ன குருவிடம் நிருபர், ''அப்புறம் எதற்கு ஞானிகள்?'' எனக் கேட்டார்.
ஜெயிக்கும் முன்னும் ''ஜெயிக்கும்போதும் ஜெயித்த பின்னும் திருப்தியோடு ஆனந்தத்தோடிருப்பது எப்படி ? என வழி சொல்ல ஞானிகள் அவசியம்'' என்றார்.
● ஞானகுருமார்கள் உங்களுக்காகவே பிறப்பு எடுத்தவர்கள். தவறவிடாதீர்கள்!
சாதனை துளிர்விடும் முன். ஆனந்தம் துளிர்விடட்டும் !
சாதனை தவறல்ல. அதே நேரத்தில் மனிதனுக்கு அது மிக அவசியமான ஒன்றுமில்லை. வேதனையிலிருந்து பூத்த சாதனை மனிதவாழ்வுக்கு எதிரானது. அது மனிதவாழ்வு புதிரானதற்குக் காரணமானது.
எதிர்காலம் பற்றிய பயம். பண நெருக்கடி தரும் உத்வேகம். அவமானங்கள் கிளப்பிவிடும் எரிச்சல். பொறாமைகள் தரும் ஊக்கம்
போன்ற எதிர்மறை வேதனை உணர்வுகளே பலரின் மனதில் சாதனை எனும் கிளர்ச்சியைத் தூண்டுகின்றன.
இந்த வேதனைகள், குணக்குறைபாடுகள் மட்டுமே. இவை எளிதில் சரிசெய்யக்கூடியவையே.
இந்தக் குணக்குறைகள் சரியான பின் உங்களுக்குள் சந்தோஷமும் உற்சாகமும் நிரந்தரமாக குடிகொள்ளும்.
அப்போது வேதனையைத் தூண்டும் நிகழ்வுகள்
உங்களைச் சுற்றி வளைக்கும் போதுகூட,
நீங்கள் கலங்காமல் நிம்மதியாய் இருப்பீர்கள்.
இந்த உற்சாகம் நிம்மதி நிலவும் மனிதனின் சாதனைக் காலம், சாதாரண சாதனைக் காலமாக இருக்காது. அது கொண்டாட்ட காலமாக இருக்கும்.
சாதனை வாழ்வதற்கு அவசியமான ஒன்றல்ல. அது மனம் வாழ்வதற்கு அவசியமான ஒன்று.
மானிடா. வாங்கு வேலை எங்க வேலை என மாரண்டு திரிகிறாய்! உனக்கு இது புரிகிறதா ?
வேதனை தரும் மனம், சாதனை தரும் வெறி ஆரோக்கியமற்றது. அதனால்தான் சொல்கிறேன்... சாதனையாளர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. சாதித்தவர்கள் பலர் துன்பத்திலிருந்து எம்பிக் குதித்தவர்கள்.
எனவே, சாதனை என்பது மிகப்பெரிய வாழ்வியல் அம்சமல்ல என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தப் புரிந்துகொள்ளுதல், வாழ்வென்னும் திடலில் மூச்சிரைக்க ஓடும் உங்கள் ஓட்டத்திலிருந்து இளைப்பாறுதலைத் தரும். பெரும் சுதந்திரத்தைத் தரும்.
சாதனையின் தூண்டுதல் சந்தோஷமாக இருக்கும்படி உங்களின் குணத்தை வடிவமைவுங்கள். சாதனை துளிர்விடும் முன் ஆனந்தம் துளிர்விடட்டும்.
சாதனைப் பாதையில் ஓட ஆரம்பித்துவிட்டவர்கள், இந்த ஞானக்கருத்துக்களையெல்லாம் ஆழத் தியானித்து, சந்தோஷத்தைத் துளிர்விடச் செய்ய உழைக்க ஆரம்பியுங்கள். வாழ்க்கைப் பயணம் இனிதாகட்டும். சாதனை சுலபமானதே!
வேதனை
இருமுறை பக்தர் ஒருவர், "சாமி, இந்தக் கல்லறைகளிலெல்லாம் பிறப்பு, இறப்பு என்பதை மட்டும் எழுதி வைக்கிறார்களே, ஏன்?' என்று என்னிடம் கேட்டபோது ...
" பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில் குறிப்படும் அளவுக்கு மனிதர்கள் எதையும் சாதிப்பதில்லை. அதனால்தான் பிறப்பு இறப்பு தேதியை மட்டும் எழுதி வைக்கிறார்கள்" என்றேன்.
- சரதனை எதற்கு ? ★ வாழ்வின் சோதனைகளிலிருந்து மீளவா? இல்லை, பேர் படைக்கவா ? இல்லை, வாழ்வைக் கழிக்கவா!
- தன்னை வருத்திச் சாதகம் செய்வதால் ★ கிடைக்கும் சமுதாய அந்தஸ்திற்கு சமுதாயம் கொடுக்கும் பட்டம்தரன் சோதனை.
- தன்னை வருத்தி சாதகம் செய்யும் போது ★ சிந்திய வியர்வைத் துளிகளுக்கும் மனதில் உதித்த எதிர்பார்ப்புகளுக்கும், தக்க பதில் - உணர்வுரீதியாக கிடைக்காதபோது
கிளம்பும் எதிர்மறை உணர்வுதரன் வேதனை.
- வேதனைகளைத் தாண்டி ★ சோதனைகளைத் தாண்டி சாதனைகளைத் தேடியவருக்கு வேதனைகளே பரிசானால் - அதுதான் சாதனையின் வேதனை.
ஒரு தியான சொற்பொழிவில் சொன்னது... "உங்கள் உடல் ஒரு யுத்தகளம். அதில் தினம் உலகப்போர் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.
தினம் பல கோடி நுண்ணுயிர்களும் செல்களும் கொல்லப்படுகிறது. அவை பிறக்கவும் செய்கின்றன.
'இவ்வளவு பெரிய போர் நிகழும் போர்க்களமா நீ!' என ஆச்சரியப்பட வைக்கும் வாழும் மனிதா, வாழ்க்கை எனும் சிறுதிடல் தரும் வேதனைகளைக் கண்டு அஞ்சலாமா ?
வேதனையைத் தணிக்கும் சாதனைக்குள் இறங்குங்கள். அது பலன் தரும் சாதனை."
'' 'Mr. நிட்டி உங்களுக்கு போன்... Mr. மூர்க் முகுந்த் லைனில் இருக்கிறார்.''
"வரலா முகுந்த்… என்ன விசேஷம் ?"
"சாரி. இன்று உங்களோட பர்த்டே பார்ட்டிக்கு என்னால் வரமுடியாது. ரொம்ப தவிர்க்க முடியாத வேலை வந்துடுச்சு''.
"…………………"
''கோபித்துக் கொள்ளாதீர்கள்''.
"...................................."
"நிட்டி, ப்ளீஸ் கஷ்டப்படாதீங்க, இன்னொரு முறை நிச்சயம் வரேன்...கவலைப்படாதீங்க."
"முகுந்த், நீங்கள் கவலைப்படாதீங்க. என்னோட ப்ரின்ஸிபல் வேற ...
சாதனைக்கு முன் கனவில் காலந்தள்ளவது ... சாதனைக்குப் பின் வேதனையில் காலந்தள்ளுவது ... இந்த இரண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசமிருக்கிறது ?
நீங்க பர்த்டே பார்ட்டிக்கு வந்தால் நிச்சயமாக நான் சந்தோஷப்படுவேன்.
நீங்கள் வராவிட்டால் தொல்லை மிச்சம். செலவு சந்தோஷப்படுவேன்.
வந்தால் வரவு.
வராவிட்டால் செலவில்லை.
அதனால் என்னை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் போனை வைக்கிறேன்''.
Mr. மூர்க்-யைப் போன்று தொடர்ந்து வேதனைப் Mr. நிட்டியை விளையாட்டாக பார்த்துச் சந்தோஷப் படுபவர்களும் உண்டு.
இதே போன்றுதான் சாதனைப் பாதையில் இருப்பவர்கள் சாதனையைப் பார்க்கிறார்கள்.
முதல் வேதனையில் ஆரம்பித்து வேதனையில் முடிகிறது. இவர்கள் அப்பாவிகள்.
இரண்டாம் வகையினருக்கு: சாதனை விளையாட்டில் ஆரம்பித்து விளையாட்டில் முடிகிறது. இவர்கள் அரைபவிப்பவர்கள்.
இரண்டையும் தாண்டியும் சிலர் உண்டு: 'சாதனையா? அப்படியென்றால் ? எதற்கு இந்த வீண் வேலையெல்லாம் ?' என்றெண்ணும் இவர்கள் அதிமுட்டாள்கள்.
அனுபவிப்பவர்கள், கஷ்டப்படுபவர்கள் இந்த அப்பாவிகள்தான்.
நிகழ்கால வேதனை காரணமாக எதிர்காலத்திலாவது வேதனையில்லாமல் சந்தோஷமாக வாழலாமே என்றெண்ணிதான் அறிவு, பணம், புகழ், அதிகாரம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு சில துறைகளிலாவது சாதித்து முன்னுக்கு வர முயற்சிக்கிறோம்.
சாதனை எங்கே அழைத்துச் செல்கிறது ?
- ஐன்ஸ்டீன் அடைந்ததும் சாதனைதான். ★ அலெக்ஸாண்டர் அடைந்ததும் சாதனைதான். புத்தர் அடைந்ததும் சாதனையே. மூன்று பேரும் அவர்களால் முடிந்த சாதனையை, அவரவர் தேர்ந்தெடுத்த துறையில் செய்தார்கள்.
- ஐன்ஸ்டீன் சாதித்தது அறிவுத்துறையில். ★ அலெக்ஸாண்டர் சாதித்தது அதிகாரத்தில். புத்தர் சாதித்தது வாழ்க்கையில்!
- ஐன்ஸ்டீன், அலெக்ஸாண்டர், புத்தர் மூவருமே புகழின் உச்சியைத் ★ தொட்டவர்கள். சமுதாயத்தால் புகழப்பட்டார்கள்.
- இவர்கள் மூன்று பேருமே எதையோ தேடி அலைந்தார்கள். மூன்று பேருக்குமே ★ ஏகபோகம் கிடைத்தது.
- மூன்றுபேருக்குமே தேடியதுதான் கிடைத்ததா? ★
- திருப்தி கிடைத்ததா? ★
ஒரு மனிதர் உண்மையில் என்ன சாதித்தார் என்பதை அவருடைய கடைசி கால கட்டத்தில்தான் அதாவது இனிமேல் சாதிக்க ஒன்றுமில்லை அல்லது சாதிக்க நேரமோ,
| சா | சோம்பேறித்தனத்தை |
|---|---|
| தை | உதறி எறிய உதவும் |
| ரி | எளிய வழிமுறை |
| சாதனை! அவ்வளவே. |
சக்தியோ இல்லை என்ற காலகட்டம் வரும்போதுதான் அவரால் தெளிவாகப் பார்க்க முடியும்.
மூன்று பேரும் தங்களின் சாதனைப் பாதை பற்றியும் சாதனைக்குப்பின் அதை அவர்கள் எப்படிப் பார்த்தார்கள் என்பதை அவர்களுடைய கடைசி வார்த்தைகள் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம்.
மன்று பேரின் கடைசி நிமிட நிகழ்வுகள் ...
ஐன்ஸ்டீன் கடைசி காலத்தில் அவருடைய நண்பர். ஒருவர், ''மீண்டும் இந்த ★ உலகத்தில் வாழ ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் என்ன செய்ய விரும்புவீர்கள் ?'' அறிவியலில் அடுத்து என்ன சாதனையைச் சொல்லப்போகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க ... ஐன்ஸ்டீன், "பிளம்பர் ஆவேன்" என்றார்.
''என்ன சொல்கிறீர்கள் ?... பிளம்பரா ?'' ஆம். நான் பிளம்பராகத்தான் விரும்பினேன். எதிர்பாராதவிதமாக நான் விஞ்ஞானியாகிவிட்டேன். நான் முடிந்த அளவு உழைத்தேன்.
அறிவு, புகழின் உச்சியை தொட்டுவிட்டேன். ஆனால் என் வாழ்க்கையை வாழ்ந்த முழுமையான திருப்தி என்னிடம் இல்லை.
எனவே, நான் இன்னொரு முறை இந்த உலகில் வாழ வாய்ப்புக் கிடைத்தால்... நான் வாழ நினைத்த பிளம்பர் வாழ்க்கையைத்தான் வாழ்வேன்'' என்று சொல்லி முடித்தார்.
அலெக்ஸாண்டர் இறக்கும் தறுவாயில் தன்னுடைய தளபதியை அழைத்து... ★
''நான் இறந்த பிறகு என்னுடைய சவத்தை எடுத்துச் செல்லும் சவப்பெட்டியில் இரண்டு துவாரங்களை உருவாக்கி என்னுடைய இரண்டு கைகளையும் வெளியே தெரியுமாறு வையுங்கள்" என்றார்.
'வேண்டிய வேண்டியவர்க்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்' - திருவள்ளுவர் தியானமென்னும் தவம், நீ விரும்பியதையெல்லாம் விரும்பியபடியே அடைய உதவும் சக்தியையும் புத்தியையும் தரும் ஆற்றல் பெற்ற கல்பதரு!
தளபதிக்கு அலெக்ஸாண்டர் சொல்வது என்னவென்று புரியவில்லை.
தளபதி, குழப்பிக் கொண்டிருக்க, அலெக்ஸாண்டர் தொடர்ந்தார்.
''என்னுடைய இரு வெறுங்கைகளைப் பார்த்தாவது உலக மக்கள் தெரிந்து கொள்ளட்டும்…
உலகத்தில் பெரும் பகுதியைப் பிடித்த அலெக்ஸாண்டர் இந்த உலகத்திற்கு வரும்போதும் கையில் எதையும் கொண்டு வரவில்லை. உலகத்தை விட்டுப்போகும்போதும் கையில் எதையும் எடுத்துக் கொண்டு போகவில்லை என்று ...
எவ்வளவுதான் நான் சாதித்தாலும் எனக்கு அதனோடுதான் நான் உலகைவிட்டுச் செல்கிறேன் என்பதை மனிதகுலம் புரிந்து கொண்டு திருந்தட்டும்'' எனச் சொன்னார்.
★ போகிறேன் என்பதை அறிவிக்க விட்டுவிட்டார்.
புத்தர் உடலை விட்டுப் பிரிய ஆரம்பித்துவிட்டார்.
அந்த நிமிடத்தில் ஒரு பக்கர் "புத்தர், புத்தர்!" என்று கூவியப்படி வருகிறார்.
பக்கர், ''புத்தர் இவ்வளவு நாள் நீங்கள் இருந்து எங்களுடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் பதிலளித்தீர்கள்.
இப்போது நீங்கள் எங்களைவிட்டுப் பிரியப் போகிறீர்கள்.
அனுபவக் கிலி கொண்டு உறுதியாய் சொல்கிறேன் ... உயிர் விடும்போது, மனிதரால் எடுத்து செல்ல முடிந்த ஒரே ஒரு வஸ்து மனிதத் தன்மை. அதாவது பக்குவம்! அதை அதிகரியுங்கள். அடுத்த உடல் எடுக்கும் போது அது வந்து உதவும் ... அழகாய் ஆனந்தமாய் வாழ!
இனிமேல் எங்களை வழிநடத்தப் போவது யார் ?
யார் எங்களுடைய பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு கொடுக்கப்போகிறார்கள் ... '' என்று பரிதவிப்போடு கேட்டார்.
புத்தர் மீண்டும் விழிப்புணர்வு நிலைக்கு வந்து, வெகு நிதானமாக ஒரு தியானமுறையை கற்றுத் தருகிறார்.
அதுதான் மூச்சு ஓட்டத்தைக் கவனிக்கும் புகழ்பெற்ற விப்பாஸனா தியானம். ''இது உனக்கு பேருதவியாக இருக்கும்'' என்று சொல்லிவிட்டு மெல்ல மெல்ல தன் உடலை விட்டுப் புத்தர் பிரிந்து சென்றார்.
| அறிவு | - விஞ்ஞானம், சாஸ்திரம்; |
|---|---|
| அதிகாரம் - பணம், பேர்; | |
| ஆத்மதிருப்தி - ஆனந்தம், நிம்மதி |
என்ற இந்த மூன்று துறைகளில் ஏதாவது ஒன்றின் கீழ் நாம் சாதிக்க விரும்பும் துறையை வகைப்படுத்தி விடலாம்.
அறிவு, அதிகாரம், திருப்தி மூன்றுக்கும் மூன்று முத்தான வரலாற்று உதாரணங்கள்தான் ஐன்ஸ்டீன், அலெக்ஸாண்டர், புத்தர்.
அறிவு, அதிகாரம் இரண்டின் சிகரத்தை தொட்டும் ஆனந்தம் அடையாவிட்டால் புகழ் இருந்தும் பிரயோஜனம் இல்லை.
எந்த நிம்மதியும் சந்தோஷமும் நம்முள் பிறந்து, நமது வேதனைகள் மறைந்து, வாழ்வில் திருப்தி மலர வேண்டும் என்று எண்ணி சாதனைப் பாதையில் காலடி எடுத்து வைத்தோமோ!... அது மலரவில்லை என்றால் மனித மனம் என்ன ஆகும் ?
அதனால்தான் பலர் கடைசிக் காலங்களில், துக்கத்தின் எல்லையை அடைந்து விடுகிறார்கள். காரணம் இவர்களுக்குச் சாதனையானது வேதனையில் ஆரம்பித்து வேதனையிலேயே முடிந்ததுதான்.
சாதனைக்குப் பிறகு சொர்க்கச் சுகம்' அடையலாம் என்ற கனவு பொய்த்து நரக வேதனையை அடைய நேரிடும் போதுதான் வாழ்வே மாயமாகத் தெரிகிறது. எல்லாவற்றின் மேலும் வெறுப்பு வருகிறது.
அறிவு,
அதிகாரம்,
திருப்தி - இந்த மூன்று துறைகளில் எதுவேண்டும் என்று தேர்வுசெய்யுங்கள். சாதிக்க ஆரம்பியுங்கள்.
நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை -ஆனந்தத்தை அடைய முடியும். திருப்தி பெற முடியும்.
அறிவின் சிகரத்தை அடைய
அதிகாரத்தின் உச்சியைத் தொட
- அதற்கே உரிய உழைப்பான தியானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் செய்தே ஆகவேண்டும்.
தியானமும் ஞானமும் கைகூடினால், நீங்கள் எங்கு இருந்தாலும், எந்த சாதனைச் செய்தாலும் சந்தோஷமாக இருப்பீர்கள்.
| பு | சாகும்போதுகூடச் சிரிக்கிறார் ஞானி. வாழும் போதுகூட நோகிறார் மனிதர். |
|---|---|
| - தாவோ. | |
| சாதனை தோல்வியின் துவக்கமாகும். | |
| புகழ் அவமானத்தின் துவக்கமாகும். | |
| - சுவாங்குஸு- |
சந்தோஷமும் புரிந்துகொள்ளும் தன்மையும் இருந்தால் Mr. நிட்டி போன்று சாதித்தால் சந்தோஷம்... சாதிக்கவில்லையா தொல்லை மிச்சம். ரொம்ப சந்தோஷம் என்று வாழ்க்கையை முழுமையாகப் புரிந்து வாழ்க்கை விளையாட்டை அனுபவித்து வாழ முடியும். இவர்கள்தான் இரண்டாவது வகை. அனுபவிப்பவர்கள்.
அதிமுட்டாளாக இல்லாமல், அதிபுத்திசாலியாக மாற நினைத்து அனுபவமில்லாத சாதனையில் இறங்கி அப்பாவிகளாகத் தவிப்பதைவிட ...
தியானத்தையும், ஞானத்தையும் குகையில் அனுபவிப்பவர்களாக மாறினால் வாழ்வே ஆனந்தமயமாக மாற ஆரம்பித்துவிடும்.
ஆத்ம சாதனையான ஆனந்தம்தான் சாதனைகளிலேயே சிறந்த சாதனை. முடிவான சாதனை!
அர்த்தமுள்ள சம்பவம்...
ப்ரசன்ஜீத் புத்தருடைய தந்தையின் நண்பர். அவர் புத்தரைச் சந்தித்த போது ... புத்தரிடம் 'நாடோடிப் பிச்சைக்காரன்போல் வாழும் வாழ்வை விட்டு அரண்மனைக்குச் செல்'' என்று வற்புறுத்தினார்.
புத்தர், "உண்மையைச் சொல்லுங்கள். அந்த அரச வாழ்க்கை ஒரேயொரு நாளாவது உங்களுக்கு ஆனந்தத்தைத் தந்ததா?'' எனக் கேட்டவுடனே ... ப்ரசன்ஜீத் தலைகுனிந்தார். சில நிமிடங்களுக்குப் பேசவேயில்லை.
'துன்பப்படுகிறோம்' எனக் தெரிந்தும் துன்பப்படுவது, அதைப் பூசிமெழுகுவது... என்ற இரண்டும்தான் மீண்டும் மீண்டும் உங்களைத் துன்பத்தில் ஆழ்த்துகின்றன. துன்பத்தை துடைத்தெரிந்து இன்ப சாதனை செய்யுங்கள்!
உன் காலம் தீரும் முன், ஓடோடி வந்துவிடு!
அடுத்த வேளை உணவு நீங்கள் சாப்பிடப்போவது ஃபைவ் ஸ்டார் ஒட்டலில்.
அறுசுவை உணவு!
உலகிலேயே மிக மிகச் சுவையான உணவுகளை உங்களுக்குச் சாப்பிடப் பரிமாறுகிறார்கள். ஏக திருப்தி உங்களுக்கு. ஆனால் கடைசி வாய் உணவில் ஒரு முழு பச்சை மிளகாயைக் கடித்துவிட்டீர்கள்!
ஒரு மிளகாய் தரும் எரிச்சல், உங்கள் வாய் வழியாக மூளைக்கு, ''என்ன சுவை! ஆஹா ... என்ன சுவை!'' எனச் சென்று கொண்டிருந்த சுக உணர்வை, திருப்தி என்ற கனவை, ஒரே நொடியில் துடைத்தெறிந்திருக்குமல்லவா ?
வாழும் கலை மட்டுமல்ல, சாகும் கலைகூட கற்பது அவசியம்.
ராஜ விருந்து சாப்பிடும் முன் இருந்த மனோ நிலையைவிட மோசமான நிலைக்கு இப்போது தள்ளப்பட்டிருப்பீர்கள். புரிகிறதா ?
உலகின் எல்லா சந்தோஷ சாத்தியக்கூறுகளையும் ஒரு மனிதர் பார்த்துவிட்டார்.
அந்த வாழ்க்கை, அவருக்கு ராஜவிருந்து!
வாழ்க்கை எனும் விருந்து முடியும் சமயத்தில், அவரை வேதனை தொற்றிக் கொண்டால் ...
உடலைவிட்டு உயிர் பிரியும் நொடிகளில் வேதனையும் அதிருப்தியும் தொற்றிக் கொண்டால், வாழ்ந்து என்ன பயன் ?
சாகும் நிமிடங்கள் சுக நிமிடங்களாய் இருக்க வேண்டும்.
விருந்து முடியும்போது சுவையாய் முடிய வேண்டும். மரணம் ஒரு கலை.
Part 9: Open the Door... Let the Breeze in!
இன்னும் சரியாகச் சொன்னால்,
வாழ்வதே வாழ்வதே எனும் அந்தச் சுப நிகழ்வைச் சந்திக்கத்தானே.
அதற்குத் தயாராக வேண்டாமா!
இந்தச் சாகும் கலை பற்றிய ஆழமான ரகசியங்களை NSP தியான முகாமில் விளக்குவேன். இங்கு சொல்ல பக்கங்கள் பற்றாது.
சுருக்கமாகச் சொன்னால் ... சுகமாய் சாக மனிதனை தயாராக்க முடியும். அதற்குச் சில பிரத்யேக தியானங்களைச் செய்தால் போதும். உடலும் மனமும் அதற்கும் தயாராகிவிடும்.
உங்கள் ஜீவன் ஓய்வதற்கு முன்பே தியானபாதை நோக்கி ஓடி வந்து விடுங்கள்.
வாழும்போதும் சாகும்போதும் ஆனந்தமாயிருக்கும் கலையை எளிதில் கற்றுக்கொள்வீர்கள்.
ஓயும் முன் ஓடி வா! ஓயும் முன் உய்வை கொள். காரணம் சாவும் ஒரு சுப நிகழ்வே!
- J¸ §øÁ¨ £õºzx HØ£kÁx® Dº¨¦uõß! ¸ §øÁ¨ £õºzx HØ£kÁx® Dº¨¦uõß!
J¸ Pø»ø¯¨ £õºzx J¸ Pø»ø¯¨ £õºzx J¸ Pø»ø¯¨ £õºzx J¸ Pø»ø¯¨ £õºzx μ]¨£x® Dº¨¦uõß! ]¨£x® Dº¨¦uõß! ]¨£x® Dº¨¦uõß! ]¨£x® Dº¨¦uõß! J¸ ©Ûu Ehø»¨ £õºzx HØ£kÁx® Dº¨¦uõß! J¸ ©Ûu Ehø»¨ £õºzx HØ£kÁx® Dº¨¦uõß! J¸Áº Snzøu £õºzuEhß HØ£kÁx® Dº¨¦uõß! J¸Áº Snzøu £õºzuEhß HØ£kÁx® Dº¨¦uõß! Dº¨¦+ CaøŒ = Põ©® Dº¨¦+ £õ\® = PõuÀ Dº¨¦+ ©v¨¦ = |m¦
-
- ©ÚvÀ HØ£k® Dº¨÷£õk, CaøŒ EnºÄ P»US®÷£õx, Ax Põ© EnºÁõP ©õÖQÓx. Põ© EnºÁõP ©õÖQÓx.
-
- ©ÚvÀ HØ£k® Dº¨÷£õk, £õ\ EnºÄ P»US®÷£õx, Ax PõuÀ EnºÁõP ©õÖQÓx. PõuÀ EnºÁõP ©õÖQÓx.
-
- ©ÚvÀ HØ£k® Dº¨÷£õk, ©v¨¦® ©›¯õøu²® P»US®÷£õx, ©ÚvÀ HØ£k® Dº¨÷£õk, ©v¨¦® ©›¯õøu²® P»US®÷£õx, Ax |m¦ EnºÁõP ©õÖQÓx. Ax |m¦ EnºÁõP ©õÖQÓx.
கிரிதல் என்பது அற்புதமான உணர்வு. உங்களில் பலருக்கு ஆச்சரியம் ஏற்படலாம். 'ஒரு துறவி காதலைப் பற்றிப் பேசலாமா?' என்கிற கேள்வி உங்கள் மனகில் தோன்றலாம்.
மரீ ராமானுஜரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றைச் சொல்கிறேன். கேளுங்கள். அது உங்களுக்குள் பதிய தெளிவை உருவாக்கும்.
ராமானுஜர் ஒரு புரட்சித்துறவி, தாம்த்தப்பட்ட மக்கள் மனிதர்களாகவே கருதப்படாத அந்தக்காலத்தில், எல்லா மனிதரும் கடவுளின் அம்சம் தான் என்று திருக்கோஷ்டியூர் கோயில் கோபுரத்தின் மீது ஏறி, ஊர் முழுக்கக் கேட்கிறபடி உரக்க மந்திரம் சொன்னவர்.
ராமானுஜர் மிகப் பெரிய வேதாந்தி, பல கக்காவங்களைக் கரைத்துக் குடித்தவர். ஆனால், தத்துவங்களைச் சளைக்காமல் பேசுபவர்களிடம், மென்மையான உணர்வைச் சொட்டும் இதயம் இருப்பதில்லை.
மனத்திற்குப் பதிலாக மூளைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மனிதர்கள்தான் தத்துவவாதிகள்.
ராமானுஜர் அந்த மாதிரியான தத்துவவாகி அல்ல. காதலுக்கும் அன்பு செலுத்துவதற்கும் அவர் கொடுத்த முக்கியத்துவம் அலாதியானது.
ஒருமுறை ராமானுஜரைத் தேடி நடுத்தர வயது மனிதர் ஒருவர் வந்தார். "சுவாமிகளே! எனக்குக் கடவுளை அடைய வேண்டும். அதற்கு என்ன வழி என்று எனக்குக் கற்றுத் தாருங்கள்'' - சாஷ்டங்கமாகக் காலில் விழுந்து வணங்கியபடி அந்த மனிதர் கேட்டார்.
ராமானுஜர் அவரிடம், ''கடவுளை அடையும் வழி சொல்வதற்குமுன், உன்னிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீ யாரையாவது காதலித்திருக்கிறாயா ? யார் மீதாவது அளவு கடந்த அன்பு செலுத்தியிருக்கிறாயா?" என்று கேட்டார்.
நட்பு மலரும் போது உறவு பூரணநிலையை அடைகிறது. அன்பு மலரும் போது மனிதர்கள் பூரண நிலையை அடைகின்றார்!
"என்னது, காதலித்திருக்கிறாயா என்றா கேட்கிறீர்கள்! நான் ஒரு கட்டை பிரம்மச்சாரி! நோய்வாய்ப்பட்ட மனிதர்களைக் கண்டு ஓடுகிற மாதிரி, பெண்களைக் கண்டாலே நான் தூர ஓடிவிடுவேன். என்னைப் பார்த்தா இப்படி ஒரு கேள்வியைக் கேட்டீர்கள்!" கொஞ்சம் கோபமாகவே கேட்டார் அந்த மனிதர்.
"பரவாயில்லை. கடந்த காலத்தில் என்றாவது ஒரு நாள், உன் உள்மனதில் ஏதோ ஒரு மூலையில் காதல் என்கிற உணர்வு கசிந்திருக்கிறதா?" என்று கேட்டார் ராமானுஜர்.
"கிரும்பக் கிரும்ப அதையே கேட்கிறீர்களே! பிரார்த்தனை செய்வதைப்பற்றி என்று உங்களிடம் கற்றுக்கொள்ளத்தான் வந்திருக்கிறேன். காதலிப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொள்வதற்காக அல்ல" - மீண்டும் கோபமாகச் சொன்னார் அந்த மனிதர்.
நீ சொல்வதைப் பார்த்தால், காதலிப்பதையும் அன்பு செலுத்துவதையும் என்னவென்று உணராத மனிதராக நீ இருக்கிறாய். காதலிக்கத் தெரியாத மனிதருக்குக் கடவுளை அடையும் பிராத்தனையை நான் எப்படிச் சொல்லித்தர முடியும் ? அன்பு செலுத்தத் தெரியாக மனிதனால், பிரார்த்தனையைப் புரிந்துகொள்ளவே முடியாது.
அன்பும், காதலும் பிரார்த்தனையின் இன்னொரு அற்புதமான வடிவங்கள். காதலினால், பிரார்த்தனை சுலபத்தில் கைகூடும். அதன்மூலம் கடவுளையும் எளிதில் அடைந்துவிட முடியும். ஆனால், உனக்கு அந்த அடிப்படையே இல்லையே! முதலில் மனிதர்கள் மீது அன்பு செலுத்தத் கற்றுக்கொள். பிறகு கடவுளை அடைவது பற்றி யோசிக்கலாம்" என்று சொல்லி, அந்த மனிதரை அனுப்பவிட்டார் ராமானுஜர்.
காதல், அன்பு ஆகியவற்றின் மகத்துவத்தை இவ்வளவு எளிமையாக ராமானுஜரே எடுத்துச் சொன்ன பின்பு, யார்தான் அதற்கு எதிராகக் குரல் எழுப்ப முடியும் ?
நமக்குள் இருக்கும் ஈகோவை அடக்கியாள மிகச் சிறந்த வழி காதல்தான். உணர்வுபூர்வமாக ஒன்றிவிட்ட இரண்டு காதலரிடையே'நீ முக்கியமா? நான் முக்கியமா?' என்கிற கேள்வியே பிறப்பதில்லை. இருட்டான அறையொன்றில், இரண்டு மெமுகுவத்திகளை ஏற்றிக்கொண்டு உள்ளே செல்கிறோம்..
| காமம், காதல்; நட்பு |
|---|
| என்ற மூன்றையும் தாண்டியது அன்பு! |
இரண்டு மெழுவத்திகளிடமிருந்து புறப்படும் வெளிச்சம் அறையை ஒளிமயமாக்குகிறது. இந்த வெளிச்சத்தில், இவ்வளவு ஒளி இந்த மெழுகுவத்தியிலிருந்து வருகிறது. இவ்வளவு ஒளி அந்த மெழுகுவத்தியிலிருந்து வருகிறது என்று தனித்தனியாகப் பிரித்து, அளந்து பார்க்க முடியுமா என்ன?
காதல் என்பதும் பிரித்துப் பார்க்க முடியாத ஒன்றுதான். என்றாலும் தங்கள் தனித்துவத்தைக் (Individuality) காத்து நிற்பது. ஒரு நதி ஓட வேண்டும் என்றால் இரண்டு பக்கங்களிலும் கரை நிச்சயம் வேண்டும். ஒரே ஒரு பக்கம் மட்டும் கரை இருந்தால் நதி ஓடுமா? இந்த இரண்டு கரைகள்தாம் இரண்டு காதலர்கள். கரைகளுக்கு நடுவே ஓடும் நதிதான் காதலர்களுக்கு இடையே தோன்றும் அன்பு.
கரைகள், நம் கண்களுக்குத் தனித்தனியாகப் பிரிந்து நிற்பவைகளாகக் காட்சி அளித்தாலும் அதில் ஓடும் தண்ணீருக்கு அடியில், இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்துதான் கிடக்கின்றன. காதலர்களும் அப்படித்தான்.
உண்மையான காதலர்கள் தங்கள் தனித்துவத்தைப் போராடிக் காக்க மாட்டார்கள். விட்டுக்கொடுப்பதன் மூலமே தங்கள் தனித்துவத்தைக் காத்து நிற்பார்கள்.
காதல் என்கிற அற்புதமான உணர்வை, காமம் என்கிற உணர்ச்சியோடு சேர்த்துக் குழப்பிக் கொள்ளாதீர்கள். காமம் என்பது, காதலின் ஓர் அம்சம் மட்டுமே. காமம் என்பது உடல் சார்ந்த உணர்வு மட்டுமே.
காதல் உணர்வில் தம்மை மறந்து மற்றவர்களைப் போற்றுகிறோம். காமத்தில் மற்றவர்களை மறந்து, நம்மை மட்டுமே முக்கியமாகக் கருதுகிறோம்.
காதல் என்பது மற்றவர்களைச் சுரண்டுவதல்ல. காமம் என்பது ஒருவர்க்கு ஒருவர் என்ற பெயரில் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்வதுதான். இதனால்தான் காமத்தினால் மட்டுமே கவரப்பட்ட இரண்டு உயிர்களிடையே எந்தவிதமான அன்னியோன்யமும் இருப்பதில்லை. எனவேதான் அவர்கள் எளிதில் பிரிந்துவிடுகிறார்கள்.
இளம் வயதில் வருவதெல்லாம் உடல் கவர்ச்சிதான். அது காதல் என்று தவறாகப் பரிந்து கொள்ளப்பட்ட காம இச்சைதான்.
உண்மையான காதலர்கள் தங்கள் தனித்துவத்தைப் போராடிக் காக்க மாட்டார்கள், விட்டுக்கொடுப்பதன் மூலமே தங்கள் தனித்துவத்தைக் காத்து நிற்பார்கள்.
இந்தக் குழப்பமான உணர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது தேவையற்ற பிரச்சனைகளுக்குத்தான் இட்டுச் செல்லும். எனவே, காதல் விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.
காரணம் - ஹார்மோன்களின் திடீர் திடீர் மாற்றம் நிறைந்த வாலிப வயதால், 'எதைக் காமம்? எதைக் காதல்?' என்று பிரித்தறிவது கடினம். காதல் வயப்பட்டது தானாக இருக்கும் பட்சத்தில், ஈகோ காரணமாக அது புனிதமான காதல்தான் என்று அடித்து கூறும் வாலிப வயது அப்படித்தான் கூறும்.
மிக புத்திசாலித்தனமும் பெற்றிருந்தால் மாத்திரமே காமம் வேறு, காதல் வேறு என்பதைச் சரியாகப் பிரித்துப் பார்க்க முடியும்.
| சிறந்த காதலன் | நல்ல நண்பன் |
|---|---|
| சிறந்த காதலி | நல்ல தோழி |
| சிறந்த பெற்றோர் | நல்ல நண்பர்கள் |
| சிறந்த சகோதரன் | நல்ல நண்பன் |
| சிறந்த சகோதரி | நல்ல தோழி |
- இப்படி நம்முடைய உறவுகளை சிறந்தவர்கள் என்று குறிப்படும்போது, அவர்கள் இருக்கிறார்கள் தவறுவதில்லை. எல்லா உறவுகளிலும் நட்பு மலரும்போதுதான் அது ஒரு முழுமைத் தன்மையை பெறுகிறது.
காதலிலிருந்து அன்பை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பியுங்கள்!
மிக மிக விழிப்புணர்வும், புத்திசாலித்தனமும் பெற்றிருந்தால் மாத்திரமே காமம் வேறு, காதல் வேறு என்பதைச் சரியாகப் பிரித்துப் பார்க்க முடியும்!
மலர வேண்டும்!
- இன்னும் மலராத மொட்டு மனிதர்களின் தனித்துவம் (Individuality)
- மலர்ந்தும்... வாசமில்லா மலராயிருப்பவை ! மனிதர்களின் ஆளுமை எனப்படும் குணாதிசயங்கள் ... (Personality)
- மனிதர்கள் கடவுளாக மலர்வது மட்டுமே இந்த உலகின் பெரிய அதிசயம், ஆச்சரியம், சாதனை.
- மலர்ந்த மலரின் ( மனிதரின் )... நறுமணம் அன்பு திறம் - ஆனந்தம் அழகு
புத்தர் பக்குவமான சீடர்களிடம் அடிக்கடி சொல்வார்:
"இதுதான் சத்தியம், உண்மை, அடிப்படை, நீ என்ற தனியொன்று இல்லை, நீயே இல்லை என்றால், நீ இறக்கவோ பிறக்கவோ முடியாது.
இதையெல்லாம் தூண்டி நீயே இல்லை எனும் போது நீ எப்படித் துன்பப்பட முடியும் ... முடியாது. நீ எப்படி பற்றுதலில் சிக்க முடியும் ... முடியவே முடியாது.
"இதையெல்லாம் புரிந்துகொள்ள நீ தயாரா?" எனக் கேட்டுவிட்டு, புத்தர் சொல்வார்:
"இதை ஏற்றுக்கொள்ள, புரிந்துகொள்ள, தயாராக இல்லையென்றால் இப்போதைக்கு நீ தியானத்தை முயற்சிக்காதே.
"நீ உண்மையானவனா - இல்லையா என்ற உண்மையைக் கண்டுபிடி.
முதலில், நீ இதை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன் ? என்பதின் மேல் தியானம் செய். விடை காணு!
அடுத்தடுத்தவை தானாய் நிகழும்! '''
நுனிநாக்கில் ஆங்கிலம் ... கனகச்சிகமான உடைகள்… கையில் கொஞ்சம் பணம் ... நவநாகரிகக் கலாசாரம்.... சௌகரியமான வாழ்க்கை ...
- இவற்றைக் கொண்டு மனிதர்கள் முன்னேறிவிட்டார்கள் என்று சொல்லலாமா ? எதிர்பார்த்ததை அடைந்துவிட்டார்கள் என்று அறிவிக்கலாமா ?
கேள்விக்குப் பதிலாய் ஒரு கதை,
விலங்குகள் ஆராய்ச்சியாளர் ஒருவர் நரமாமிசம் உண்ணும் ஒரு கும்பலிடம் சிக்கிக் கொண்டார். பிடிப்பட்ட வெள்ளையரை உயிரோடு வறுத்துத் தின்பதற்காக காட்டுக்குள்ளே கூச்சலோடு அந்தக் கும்பல் இழுத்துச் சென்றது.
புது விருந்துக்கு ஆள் கிடைத்த குஷியில் வெள்ளயரை தங்கள் தலைவரிடம் இழுத்துச் சென்றது. தலைவருக்கு அருகிலேயே தலைமுடி சரியாக வெட்டி, நாகரிக மனிதன் போன்று உடையணிந்த ஒரு காட்டுவாசி உட்கார்ந்திருக்க… வெள்ளையர்க்கு புது நம்பிக்கை பிறந்தது.
ஒரு வேளை அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால் தப்பித்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்தவர்
போல் அந்த முனிதர் ஆங்கிலத்தில் வெள்ளையரிடம் பேசினார்.
வெள்ளையரிடம், ''உன் கடைசி ஆசை என்ன ? சொல். முடிந்தால் நிறைவேற்றி வைக்கிறேன். இங்கே இருக்கிறவர்களுக்கு பார்மாலிட்டீஸ் எல்லாம் தெரியாது'' என்றார்.
வெள்ளையர் ''ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறாய். நாகரிகம் இதெல்லாம் உன்னிடம் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவே இல்லையா?" என்று வெகுண்டு கேட்டார்.
அதற்கு அவர் உடலை உலுக்கிக்கொண்டு, "என்னை அப்படிக் கேட்டு விட்டீர்கள். நான் எவ்வளவு மாறிவிட்டேன் தெரியுமா ? இவர்கள் போன்று அநாகரிகமாக நான் நடந்துக் கொள்வதில்லை.
இப்பக் கூட உன்னை வறுத்தப் பின்பு, நான் உன்னை ஸ்பூன், கத்தி, போர்க்கோடுதான் சாப்பிடுவேன்! விரல்களைப் பயன்படுத்தவே மாட்டேன். நான் நிறைய மாறிவிட்டேன்'' என்றாராம்.
நாகரிகம் என்ற பெயரால் வெளிவேஷம் வேண்டுமானால் மாறலாம். மனிதர்கள் மாறுவதற்கும் சம்பந்தமில்லை. இதை உணர்த்தத்தான் இந்தக் கதை.
மனிதர்கள் மாற வேண்டும் என்பதைவிட, மனிதன் மலர வேண்டும் என்பதுதான் சாலச்
சிறந்தது. உடை, நடை, பாவனையில் சிறு மாற்றம் செய்வது எளிது. இந்த மாற்றத்தால் அதிகபட்சம் நமது வெளிவேஷம் மாறும்.
வெளிவேஷம் மாறுவது சாதாரண மனமாற்றத்தைத்தான் ஏற்படுத்தும்.
குண மாற்றத்தை ஏற்படுத்தாது. மனமாற்றத்தால் சில சூழ்நிலைகளை எளிதாகச் சந்திக்க வழி கற்றுக்கொள்ளலாம். இதில் வேடிக்கை என்னவென்றால் வாழ்க்கை எப்போதுமே புதுப்புது சூழ்நிலைகளைத்தான் பரிசாகத் தரும்.
அதனால்தான் பலர் நாகரிகம், சௌகரியம், சொத்து இவற்றின் உச்சிக்குப் போன பின்கூட, நிம்மதியின் வாசல் கதவைக்கூடத் திறக்க முடியாமல் தவிக்கிறார்கள்.
குணம் பூரணமாக மாறினால் மனிதரே மலர்ந்து விடுவார். மலர்ந்தவருக்கு எந்தச் சூழ்நிலையையும் எளிதாக அணுகும் பக்குவம் கிடைத்துவிடும்.
மேலைநாட்டுச் சிந்தனையாளர்கள் எப்போதுமே மனம், எண்ணம் போன்ற மூளை அணுகுமுறைகளைத்தான் ரீதியாக வலியுறுத்தினார்கள். இதன் பாதிப்பு உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது.
குணம், உணர்வு போன்ற இதயரீதியான உணர்வுகள் சம்பந்தப்பட்ட அணுகுமுறை தான் இன்றைய மனிதருக்கு அவசியம்.
அந்தஸ்தல்ல ... நடந்துகொள்ளும் விதமே
மற்றவரை மதிக்க வைக்கும். வார்த்தைகளல்ல ...
அதன் தொனியே ... சொல்லைச் செயலாக்கும் வல்லமை பெற்றது.
வேஷம் மாற கோஷம் கரைய நீங்கள் மலர்வீர்கள்!
முளை ரீதியான அணுகு முறையால் Personality -யில் வேண்டுமானால் சில மாற்றங்கள் கொண்டுவர முடியும். இது போன்ற மாற்றங்களால்
வியாபாரம் நன்றாகத் செய்வது எப்படி ?
மேடைப்பேச்சில் மக்களைக் கவர்வது எப்படி ?
புதிய மனிதர்களைக் கவர்வது எப்படி ? என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் தேடலாம். அவ்வளவே.
ஆனால், இவற்றால் நியாயமான தாகங்கள் தீர்க்கப்படுமா என்றால் - இல்லை என்றே குணநல ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இதயரீதியான அணுகுமுறைதான் இதற்கும் தீர்வு. மனிதர்களின் தனித்துவம் (Individuality) மலருவதே அந்தத் தீர்வு. மனிதர்களின் நியாயமான தாகங்களான நிம்மதி,
| அன்பை வாரி இரைத்துவிடு. உருவாகும் வெற்றிடத்தை | |
| ஆனந்த உணர்வு நிரப்பிவிடும். | |
| நில்! கவனி! உணர்! இதயம் கண் திறந்துவிடும்! |
திருப்தி, ஆரோக்கியம் முழுமையாக கிடைக்க வேண்டுமென்றால் தனித்துவம் மலர வேண்டும்.
தனித்துவம் மலர வேதகாலத்து ரிஷிகள் கூறும் தீர்வு:
எதற்கெடுத்தாலும் மனரீதியாக மட்டும் ஆராய்ந்து, மூளைரீதியாக மட்டுமே விவரிப்பது என்று மதிப்பிடுவதிலேயே நேரத்தை வீணாக்கி விடாதே! உனக்கு உள்ளேயும் வெளியேயும் நிகழும் ஒவ்வொன்றையும் மதிப்பிடுவதைத் தாண்டி, அவற்றை மதிக்க ஆரம்பி. உணர்வுரீதியாக அணுகுவது எப்படி என்பது புரிந்து விடும்.
ஒரு ரோஜா மலரை...
இளம் மாலைக் தென்றலை ...
பௌர்ணமி முழுநிலவை ...
சாதாரண மனிதர் ரசிப்பதற்கும் கவிஞன் ரசிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. உணர்வுரீதியான அணுகுமுறை அதிகமாக அதிகமாக, உங்களைச் சுற்றிச் சந்தோஷங்களும் அதிகரிப்பதை உணர்வீர்கள்.
இயற்கையையும் அழகையும் சுகத்தையும் மற்ற அனைத்தையும் மனிதர்கள் முழுமையாக அனுபவிக்க வேண்டும். இதற்கு அனுபவிக்கும் சக்தியான உணர்வு அதிகமாக வேண்டும்.
மனிதரின் தனித்துவம் மலர்ந்தால்தான் எந்த ஒன்றையும் முழுதாக அனுபவிக்கும் திறனைப் பெற முடியும். இன்று முதல் உணர்வுரீதியாக வாழ ஆரம்பியுங்கள், தனித்துவம் உங்களினுள் சுலபமாய் மலரும்!
மனித உடலில் இருப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் அல்ல!
இலட்சக்கணக்கில் மனிதருக்கு ஜீன்கள் இருக்கிறது என பல ஆண்டுகளுக்கு முன் ஆராய ஆரம்பித்த ஜெனிடிக்ஸ் (Genetics) ஆராய்ச்சித்துறை கூறுகிறது.
எலிக்கும் மனிதருக்கும் ஜீன்களின் எண்ணிக்கையில் வித்தியாசமே இல்லை என்ற அதிர்ச்சித் தகவலை அந்தத் துறை இப்போது வெளியிட்டிருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா ?
அப்படியென்றால் எலிக்கும் முனிதருக்கும் என்ன வித்தியாசம் ?
ஒரு அமிபாவுக்குள்ளும் ஒரு எலிக்குள்ளும் இருந்து அவற்றை இயக்கும் அதே சக்திதான் உங்களுக்குள்ளும் இருந்து, உங்களையும் இயக்குகிறது. இந்தச் சக்திதான் மண்ணுக்குள்ளும், கல்லுக்குள்ளுமிருக்கிறது.
சூது ... வாது ... மந்தம் ... கவலை... வெட்கம் ... ரோசம் ... மனித குணங்கள் அல்ல
எல்லாம் ஒரே சக்தி என்றால் இத்தனை விதவிதமான வெளிப்பாடுகளில் உயிரினங்கள் உருவாவது எப்படி ?
மண்ணுக்குள்ளிருக்கும் சக்தியோடு புத்தி சேரவில்லை. அதே சக்தியோடு கொஞ்சம் புத்தி சேர்ந்து வெளிப்படும் ஒரு செல் உயிர், 'அமிபா'. அது ஓரறிவு உயிர்.
இன்னும் புத்தியின் அளவு அதிகமாக அதிகமாக ஒரறிவு, ஈரறிவு... ஆறறிவு மனிதர் வரை விதவிதமான வெளிப்பாடுகள் உருவாகின்றன.
இது ஒரு ஞானவிளக்கம்
மனிதரின் ஆறாவது அறிவு முழுமை பெறாவிட்டால், அவர் இன்னும் மனிதராக முயற்சி செய்து கொண்டிருக்கும் மிருகம் என்று அர்த்தம்.
ஏற்றுக்கொள்ளக் கடினமாக இருந்தாலும் இது உண்மையே!
ஜியாகிராஃபி சேனலில் மிருகங்களின் குணங்களைப் படம்பிடித்துக் காண்பிப்பதை பார்த்திருப்பீர்கள்.
நரியின் தந்திரம், எருமையின் மந்தத்தனம், நாகத்தின் விஷம் கக்கும் பேச்சு என்பன போன்ற வேறு எல்லா மிருக குணங்களும் மனிதரிடமிருந்து வெளிப்படும். எல்லா நிமிடங்களிலும் மனிதர் மனிதரல்ல. மிருகம்.
புத்தியின் முதிர்ச்சியடைய ஆரம்பிக்கும். மனிதத் தன்மைகளான அன்பு, அமைதி, ஆனந்தம் உங்களிடம் இருந்து பறிக்கப்படும் நிமிடங்களையெல்லாம் கவனியுங்கள்.
அந்த நிமிடங்களில் ... எந்த மிருகம் எட்டிப் பார்க்கிறது எனப் பார்த்து அதைத் துரத்த வழி செய்யுங்கள். புத்தி பூரணமாகட்டும்.
மனித உடல் எடுத்தவர் எல்லாம் ... மனிதனாகிட நிறைய மாற வேண்டும் ...
இனி உங்களின் கட்டுப்பாட்டை இழக்கும் காலங்களையெல்லாம், உங்களை உருவாக்கும் தியான காலங்களாக்குங்கள்.
மிருகமாகும் நேரங்களையெல்லாம் கடவுளாகும் நேரமாக மாற்றுங்கள்!
உடல் என்ன, குப்பைத் தொட்டியா?
★
ஆனால், தொண்ணூற்று ஒன்பது மனிதர்கள் விழிப்புணர்வின்மையிலேயே வாழ்வதால், அதே ருசிக்கு அடிமைகளாகி விடுகிறார்கள்.
உடலுக்கு உற்சாகமளிக்க வேண்டிய உணவே உபத்திரங்களை உருவாக்க ஆரம்பித்து விடுகிறது.
- ருசிக்கு அடிமையானவர் - பசிக்குப் புசிக்காமல், ருசிக்குப் புசிக்க ஆரம்பிக்கிறார். ருசிக்குப் புசிப்பதால்... உடலின் உண்மைத் தேவையை மீறி உடலுக்குள் விதவிதமாய் உணவு கொட்டப்படுகிறது. உடல், ருசியின் குப்பைத்தொட்டியாக மாறிவிடுகிறது.
மனிதருக்கும் மிருகத்திற்கும் இடையிலிருக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ளுங்கள் ... மனிதர்கள் ருசிக்குச் சாப்படுகிறார்கள். மிருகங்கள் பசிக்குச் சாப்படுகின்றன!
திரளையால் இழுக்க முடியாத அளவுக்கு அதிகச் சுவையை வைத்து, ''இழு!'' என ஏவும்போது அது துடுமாறினால், அது தவறு செய்வதாகப் பொருள்படுமா?
உங்களின் இஷ்டதெய்வத்துக்கு உணவு படைக்கும்போது ... எவ்வளவு பக்சியுணர்வோடு படைப்பீர்கள்! அதை நினைவுகூருங்கள் ... அதே பக்கியுணர்வோடு உங்கள் உள்ளே குடியிருக்கும் உயிர் எனும் தெய்வசக்கிக்குத்தான் சாப்பிடுதல் எனும் பூஜை வழியாக படையல் செய்கிறீர்கள். எனவே, சாப்பிடும்போது அதே பக்கியுணர்வோடு சாப்பிட்டுப் பாருங்கள். பரவசப்பெருக்கால் நிறைவீர்கள். உடல் கோயிலாகும்!
உடலின் தகுதிக்கும் தேவைக்கும் அதிகமான அளவு உணவை உள்ளே தள்ளிவிட்டு... ''எனக்கு ஜீரணிக்கோளாறு!''' என உடல் மேல் பழிபோட்டால் என்ன அர்த்தம்? யார் பொறுப்பு ... ? சொல்லுங்கள்.
"YOU ARE FOOD" என ஜே. கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். YOUR EATING HABIT TELLS 'WHO YOU ARE' எனச் சொல்கிறது தத்துவவியல்.
"உணவுக்கும் மனித குணத்துக்கும் நேரடித் தொடர்புண்டு. கட்டுப்படுத்தியவர், நவ குணத்தையும் கட்டுப்படுத்தியவன்" எனச் சொல்கிறது வேதாந்தம்.
உண்ணும்போது நிதானமாய் உண்ண முடிகிறதா... "போதும்" என்ற உணர்வு வந்ததும் காரை பிரேக் போட்டு நிறுத்துவது போல உண்ணுவதை நிறுத்த முடிகிறதா... நாக்கிற்கு மட்டும் மதிப்பளிக்காமல் "என் உடலுக்கு இந்த உணவு, இவ்வளவு உணவு பொருந்துமா" என உடலை மதித்து உணவருந்துகிறீர்களா...
உடல் கோயில், உணவு பிரசாதம், நீங்கள்தான் அர்ச்சகர். உங்களின் இரைப்பை என்னும் கர்ப்பக்கிரகத்திற்குச் செல்லும் பிரசாதங்கள், பிரசாதங்கள்தானா ?... ஒரு நாளின் மூன்று வேளையும் பூஜை புனிதமாக நடைபெறுகிறதா ? ...
கோயிலுக்குள் அராஜகமோ, துஷ்பிரயோகமோ கூடாது. கோயிலின் புனிதம் காக்கப்பட்டால், அங்கு தெய்வசக்தி விமித்துக்கொள்ளும், எல்லாம் சுபமாகும்.
ரிட்டி ராஜனி எங்கு சென்றாலும் ஏதாவது ஒரு நகைச்சுவை அவரைச் சுற்றி அரங்கேறிக் கொண்டே இருக்கும்.
நிட்டியும் அவரது மனைவியும் ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தார்கள். திருமண மண்டபத்திற்குச் சென்றிருந்தார்கள். திருமண மண்டபத்தின் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த நிட்டி அடிக்கடி வெளியே எழுந்து சென்றார். திரும்ப வரும்போது ஒரு ஜாங்கிரியோடு வந்து சேர்ந்தார்.
ரிட்டியின் மனைவி, "ஏங்க எதுக்கு அடிக்கடி எழுந்து போறீங்க?" என்று கேட்க,
நிட்டி, "ஜாங்கிரி ரொம்ப நல்லாயிருக்கு அதனால்தான்… அடிக்கடி…" என்று இழுத்தார்.
நிட்டியின் மனைவி, "இது ரொம்ப மோசம். ஏற்கெனவே ஆறு ஜாங்கிரி சாப்பட்டீங்க .... எனக்கு ஒன்று பரவாயில்லை. ஒரே நேரத்துல இவ்வளவு சாப்பிட்டா உடம்பு என்னதுக்கு ஆகும் ?' என்று பரிதவிப்போடு கேட்டார்.
நிட்டி, "இந்த ஒருமுறை மாத்திரம்…
இந்த ஒரு முறை மாத்திரம்..." என்று கெஞ்சி மேலும் இரண்டு சாப்பிட்டுவிட்டார்.
அடுத்து "இதுதான் கடைசி" என்று சொல்லிவிட்டு ஒன்பதாவது ஜாங்கிரியோடு வந்து சேர்ந்தார்.
ரிட்டியின் மனைவி, "ஏங்க உண்மையைச் சொல்லுங்க… ஒசியில் கிடைக்கிறது என்பதற்காக இப்படி ஒன்பது ஜாங்கிரிகளைத் திரும்பத் திரும்ப போய் வாங்க உங்களுக்குக் கூச்சமா இல்லை" என்று கேட்டார்.
| நாத்திகருக்கு | |
|---|---|
| நா | உங்களின் இஷ்டத்திற்குரிய நபருக்கு விருந்து படைக்கும் |
| த் | போது எவ்வளவு குஷியோடும் செய்வீர்கள்! |
| த | அதே உணர்வோடு, நண்பரான உங்களின் உடலுக்கு |
| க | உணவு தரும் ஒவ்வொரு நொடியிலும் வாழுங்கள். பரவசம் |
| ர் | பொங்கும். உடல் வசந்த மாளிகையாகும்! |
நிட்டி, "நான் ஏன் கூச்சப்படணும், நீதான் கூச்சப்படணும்".
"நான் ஒவ்வொரு முறை வாங்கும்போதும் 'என்னுடைய மனைவி ஆசைப்படறா… அதனால் இன்னொன்று…' எனச் சொல்லிச் சொல்லித்தான் வாங்குகிறேன். நான் ஏன் கூச்சப்பட வேண்டும்"என்று சொல்லிவிட்டுக் கிண்டல் சிரிப்பு சிரித்தார்.
இந்தச் சம்பவத்தில் நிட்டி சாமர்த்தியமாகப் பேசினாலும் நிஜத்தில் ஒரே நேரத்தில் ஒன்பது ஜாங்கிரிகளை ஏதோ குப்பைத்தொட்டியில் போடுவது போல இரைப்பையில் போட்டது - உடலை இழிவுபடுத்தியதற்குச் சமம்.
இப்படி உடலை இழிவுபடுத்துவதால் வரும் நோய்களுக்குப் பெயர்தான் நீரிழிவு நோய், இரத்தக்கொதிப்பு என்ற எல்லாமே.
கட்டுப்பாடில்லாத, ருசிக்கு அடிமையான மிதமிஞ்சிய உணவுப்பழக்கமே… உடலின் ஆரோக்கியத்தைக் கெடுத்து, உடலை இழிவுசெய்யும் நோய்!
வாய் மட்டும் இருந்தால் ... இன்றைய உணவு உண்ணும் முறைக்கு, இரைப்பை குமுறிக் குமுறி அழும்... கல்லீரல் கண்டபடி கத்தும்... கணையம் அபத்தம் என்று கிட்டும்... சிறுநீரகம் 'சீச்சீ' என்று வேதனைப்படும்!
''உணவு அருந்தலாமா? உணவருந்த வாருங்கள் ?'' என்றுதான் நம் முன்னோர்கள் அழைத்திருக்கிறார்கள்.
காரணம், "உணவே மருந்து", "உண்ணுதல் ஒரு சிறந்த தியானம்" என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.
இன்று சிலர் சாப்படுவதைப் பார்த்தால் - வாங்க உணவு கொட்டிக்கலாம்! வாங்க ஒரு வெட்டு வெட்டலாம்! என்று அழைப்பதுதான் சரி என்று தோன்றுகிறது.
இதற்கு ... அன்னம் (உணவு) பிரம்மம் (தெய்வம்)!
உமிழ் நீர் - உயிர்நீர்!
- என்ற மிகப் பெரிய உண்மைகள் நமக்கு மறந்து போனது அல்லது மறைக்கப்பட்டதுதான் காரணம்.
மேலைநாட்டு நாகரிக மோகத்தால் நமது உணவு அருந்தும் முறை, ருசிக்காக உணவை இரைப்பையில் கொட்டும் ஒரு நிகழ்ச்சியாக மாறிப்போனதுதான் கஷ்டம்.
அரக்கபரக்க, ஆவி பறக்க, விறுவிறு என்று சுவையும் மணமும் தூக்க சாப்பிடுபவர்கள்... நாலு, ஐந்து முறைக்குமேல் பெரும்பாலும் மென்று உண்பதில்லை.
ருசிக்கும் நாவை நயமாக நீங்களே கட்டுப்படுத்திவிடுங்கள். இது எளிது. நல்லது! கட்டுப்படுத்தாவிட்டால், தன்னை இழிவு படுத்தியதைக் காரணங்காட்டி உடலானது நீரிழிவு நோயைப் பரிசாகத் தரும்!
நோய் விளைவு - மிக மெல்லிய இரைப்பைக்கு மிகக் கடினமான உணவு சென்று சேர்கிறது.
ஒரு கைப்பிடி சோற்றை எடுத்து கூழாகும் அளவுக்குப் பிசைந்து பாருங்கள். அப்போது புரிய வரும் நாம் அரைகுறையாகச் மென்று விழுங்கும் ஒவ்வொரு குவளை உணவையும் கூழாக்க இரைப்பை எவ்வளவு கஷ்டப்படும் என்று!
உணவு வாயில் இருக்கும் போது, 'இது கார உணவு' என எரிச்சலைத் தந்து சுட்டிக்காட்டும் நரம்புகள், வயிற்றுக்குச் செல்லும் போது அப்படிச் சுட்டிக் காட்டுவதில்லை.
ஆனால் நாக்கின் கோலைவிட இரைப்பையின் கோல் மிக மெல்லியது என்று நம் எல்லோருக்கும் தெரியும்.
நாக்கின் சுவைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உடலின் சுகத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் கொடுப்பதில்லை.
இதுபற்றி ...
திருமூலர் மிக அழகாகக் கூறுகிறார்.
"உடம்பார் அழியின் உயிரார் அழிவார்.
திரும்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்... "
பேணிக்காக்காமல் உடலைப் வாழ்க்கையை வீண்டித்தால் - உடல் மட்டும் அழியாது. அதனோடு சேர்ந்து உயிராற்றலும் அழியும். குறையும்.
ஆரோக்கியமில்லாத உடலையும் குறைவான உயிராற்றலையும் வைத்துக் கொண்டு சந்தோஷம், வாழ்க்கையை அனுபவித்தல், ஆனந்தமாக வாழ்தல் என்ற மெய்ஞானம் சம்பந்தப்பட்ட நிலைகளை அனுபவிக்கச் சாத்தியங்களே இல்லை.
அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுதல், ருசிக்காக மட்டும் சாப்பிடுதல், உணவை அருந்தாமல் விழுங்குவது ஆகிய அனைத்தும் தவறு.
சரியான நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் நம் உடல் சோர்வடையும் என்பது ஐதீகம்! சாப்பிட்டால் நம் உடல் சோர்வடையும், மந்தமாகும், தரக்கம் வரும் என்பது நிஜம். சாப்பிடும் முன்பைவிட சாப்பிட்ட பின் நம் உடல் 'அதிகம் ஸ்தம்பிக்கிறது' என்றால் எதற்காகச் சாப்பிடுகிறீர்கள்? குற்றம்! எங்கு ... உணவிடமா? உங்களிடமா? பதில் காணுங்கள்!
சாப்பிடும்போது "சாப்பிடுதல்" என்ற ஒரு செயலை மட்டும் முழுமையாகச் செய்யாமல் - அந்த நோக்கில் பேசுவது, நிகழ்ச்சிகளைப் பார்ப்பது, படிப்பது, என்ற பல செயல்களில் ஈடுபடுவதால்தான், இதுபோன்ற தவறுகள் அதிகம் நடக்கின்றன.
ஒரு அருமையான ஜென் கூற்று. "சாப்பிடும்போது சாப்பிடு! பாடும் போது பாடு! சாப்பிடும் போது பாடாதே! பாடும் போது சாப்பிடாதே! சாப்பிடும் போது - சாப்பிடு" (இது மிக அருமையான தியானம்)
சாப்பிடும் போது வேறு எந்த வேலையும் செய்யாமல், வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் முழுமையாக "சாப்பிடுதல்" என்ற செயலை மட்டும் செய்வதால் (கவனிப்பதால்) கிடைக்கும் நன்மைகள்.
- ஒரே செயலை ஆழமாகச் செய்யும்போது... மனமானது எதிர்காலம் நோக்கிப் பறக்காமல், இறந்த காலத்தைக் குறித்து நோகாமல், நிகழ்காலத்திலேயே இருக்கும். நிகழ்காலத்திலேயே இருப்பது ஒரு அற்புதமான தியான நிலை. பசிக்காமலேயே அதிக நேரம் உணவு வாயிலிருப்பதால்... உணவை
- முழுமையாக ஜீரணித்து, அதை சக்தியாக மாற்றத் தேவையான எல்லா வேதிப்பொருட்களும் உமிழ்நீர் சுரப்பி மூலம் சுரக்கப்படும்.
முழுமையாகச் சுவைப்பதால் 'சுவைத்த திருப்தி' கிடைக்கும்.
ஒரே ஒரு மைசூர்பாவை மெல்லத் தின்று, அதன் நெய் கலந்த இனிப்பு சுவை, உமிழ்நீரிலேயே கரைந்து மறையும்.
புசிக்கும் ஒரேயொரு மிருகம் மனிதன்.
உணவை கழிவுப்பொருளாக மாற்ற மட்டுமே உதவும் தொழிற்சாலையல்ல உங்கள் உடல்.
அளவுக்குச் சுவைத்துச் சாப்பிட்டால் ஒரு மைசூர்பாவைத் தாண்டி இரண்டாவது சாப்பிடுவது தானாய் தவிர்க்கப்படும். இதுவே முழுத் திருப்தியை ஏற்படுத்தும்.
மூன்று, நான்கு முறை மென்றவுடன் இனிப்பை விழுங்குவது என்ற பழக்கம் இருந்தால் - பத்து மைசூர்பா சாப்பிட்ட பிறகும் இன்னொன்று சாப்பிட்டால் பரவாயில்லை என்று தோன்றும். திருப்தி இருக்காது.
ஒரு மைசூர்பாவை மெல்ல ரசித்து, சுவை கரையும் வரை அனுபவித்துச் சாப்பிட்டால் ஒரே ஒரு ஒரு மைசூர்பா, பத்து மைசூர்பா சாப்பிட்ட பிறகும் கிடைக்காத திருப்தியைத் தரும்.
மெல்ல மெல்ல மென்று வாயிலேயே உணவைக் கூழாக்குவதால் என்ன நடக்கிறது என்பது பற்றிய ஒரு சமீபத்திய ஆராய்ச்சி இப்படிச் சொல்கிறது...
- குணமாக்கும் வேதிப்பொருட்கள் (Healing chemicals) உமிழ்நீரில் நிறைய சுரக்கப்படுகிறது.
- இரைப்பையின் கூழாக்கும் வேலை குறைவதால் அதற்காகச் செலவிடப்படும் இரத்த ஓட்டமும் சக்தியும் மிச்சமாவதால் - எப்போதும் வரும் உண்டபின் மயக்கம் வராமல், உற்சாகம் பிறக்கிறது.
- உணவைக் கூழாக்க பலமுறை மெல்லுவதால் முகத்தில் இருக்கும் பல முக்கியமான தசைகள் இயக்கம் பெறுவதால் முகத்தில் இறுக்கம் குறைந்து மிருதுத்தன்மை பெருக ஆரம்பிக்கிறது.
- சுவைத்த திருப்தியடைவதால் தேவைக்கு அதிகமான உணவை நாம் எளிதாகத் தவிர்த்துவிடுவோம்.
உணவை அருந்துவது என்பது, "சாப்பிடும் போது சாப்பிடுதல்" என்ற கவனத்தை நடைமுறைப்படுத்தும் போது மாத்திரமே சாத்தியம்.
உணவை இரைப்பையில் கொட்டாமல், உணவை அருந்த ஆரம்பித்தால் உணவே மருந்தாக மாறும்.
உணவை அருந்துவது எப்படி என்று தெரியாமல், விருந்தே சாப்பிட்டாலும் திருப்தி முழுமையாகக் கிடைக்காது. விருந்து செரிக்க பல நேரங்களில் மருந்து தேவைப்படும்.
உணவருந்தக் கற்றுக்கொண்டால் சாதாரண உணவும் விருந்தாகும். அதுவே நல்ல மருந்தாகும்.
ஆழமான உறவின் அஸ்திவாரம் ...
உங்களின் மிக நெருங்கிய நண்பன் யார் ?
பதில் கண்ட பின் தொடருங்கள்.
நிச்சயம் உங்கள் பெயரைத் தவிர மற்ற எல்லோரின் பெயரும் மனதில் ஓடியிருக்குமே!
மனிதர்கள் அவர்களைத் தவிர மற்ற எல்லோரையும் நேசிக்கத் துடிக்கிறார்கள். அதில் மிக ஆர்வமாயிருக்கிறார்கள்
உங்களுக்காகவே வாழும் உங்களின் உடலுக்காக இதுவரை நீங்கள் என்ன உதவி செய்திருக்கிறீர்கள் ?
ஆசைப்படும் போதெல்லாம் அதன் ஐம்புலன்களையும் அளவுக்கதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர, வேறு எந்த நல்லதையும் மனிதர்கள் தங்கள் உடலுக்குச் செய்வதில்லை.
வீட்டுச் செல்லப்பிராணியைவிட, மிக விசுவாசத்தோடு வேலை செய்யும் மிக அருமையான நண்பனான உடல் மதிக்கப்படுவதேயில்லை.
உங்கள் உடலை மதிப்பது ஆனந்தத்தின் துவக்கம்.
உண்மையான அன்பின் நுழைவாயில்.
அது ஆழமான உறவின் அஸ்திவாரம்.
உங்களின் துணிமணியைப் பராமரிப்பதில் பாதியளவுக்காவது உங்கள் உடலைப் பராமரியுங்கள்.
தனித் தீவு அல்ல நீ!
உடல்மேல் அக்கறை கொள்ளுங்கள்.
உடலைக் கவனியுங்கள்.
காப்பாற்றுங்கள்.
அன்பு செய்யுங்கள்.
உங்களுக்காக வாழ ஆரம்பியுங்கள்.
உங்களோடு ஆழமான நட்புறவு கொள்ளுங்கள்.
மேலே படித்தவற்றைச் செய்து பாருங்கள்...
சுகம் –
ரம்யம் –
உற்சாகம் –
உடலில் பூப்பதைப் பார்ப்பீர்கள்!
நீயும் நீயும் சேராத வரை... நீங்கள் தனித் தீவு தான்!
சிரிப்பு ஓர் மருந்து
-
சிரிப்பு உங்களுக்கு மருந்து -மற்றவர்களுக்கு விருந்து.
-
சிரிப்பில்லா முகத்திற்கும் செத்துப்போன முகத்திற்கும் - வித்தியாசங்கள் மிகக் குறைவு
-
சிரிப்பு உடல், மனம், உயிர் என்ற மூன்றும் சீராக இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பதற்கான அறிகுறி.
உங்களைச் சுற்றி இருப்பவர்களைக் கொஞ்சம் உற்றுப் பாருங்கள். யாருக்கு அதிகமாகக் கூட்டம் கூடுகிறது ?
சிரிக்கச் சிரிக்கப் பேசுகிறவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் வட்டமடித்துக் கொண்டிருக்கும். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு தத்துவமாகப் பொழிகிறவர்களிடமிருந்து பலரும் ஒதுங்கிவிடுவார்கள். எல்லோரும் கவலையை மறந்து சிரிப்பதையே விரும்புகிறார்கள்.
எவ்வளவு முற்போக்கான கருத்தாக இருந்தாலும் சிரிக்கச் சிரிக்கச்சொல்லுகிற போதுதான் அது சாதாரண மக்களையும் சென்றடைகிறது.
ஒரு சாக்கில் அரிசியை அளந்து அளந்து உள்ளே போடுகிறோம். பிறகு அதன் வாய் நிறைந்துவிட்டால், மேற்கொண்டும் ஒரு படியைப் போடுவதற்கு அந்தச் சாக்கு மூட்டையை ஒரு குலுக்குக் குலுக்குவோம்.
அந்த மாதிரி, பேசுகிறவரின் கருத்துக்களால் கேட்கிறவர்கள் நிறைந்து இருந்தால், மேற்கொண்டு அவர்கள் கேட்பதற்குப் பெரும் பேச்சாளர்கள் நகைச்சுவைகளை அள்ளித் தெளிப்பார்கள்.
சிரிப்பது, சிரிக்க வைப்பது என்பது எல்லோராலும் முடிந்து விடக்கூடிய சாதாரண விஷயம் அல்ல. சிரிக்கத் தெரியாத சிலர், ''அது ஒன்றும் சீரியஸான விஷயம் இல்லை'' என்பார்கள். இது தவறு. சிரிப்பைவிட சீரியஸாக எடுத்து அனுபவிக்கப்பட வேண்டிய விஷயம் வேறு எதுவும் இல்லை.
நமது கிராமங்களில் நாடகங்கள் நடைபெறும். பாஞ்சாலி சபதம் அதில் பிரபலமானது. ஒரு கிராமத்தில் இந்த நாடகம் நடந்துகொண்டிருந்தபோது, பாஞ்சாலி துகில் உரிதல் காட்சி வந்தது. பாஞ்சாலியாகப் பெண் வேடமிட்டு நடித்தவர், ஒர் இளைஞர்.
கிராமத்து மக்கள் உற்சாகமாக அந்தக் காட்சியில் மூழ்கி இருந்தார்கள். அன்று பார்த்து, பாஞ்சாலிக்குச் சேலைகளை வழங்க வேண்டிய கிருஷ்ண பரமாத்மா வேடம் ஏற்று நடிப்பவர் வரவில்லை.
சேலையை உருவும் துச்சாதனன் நடிகருக்கு இந்த விஷயம் தெரியாது. வழக்கம் போலப் பாஞ்சாலியின் சேலையை வெறித்தனமாகத் துச்சாதனன் பிடித்து இழுக்க, கிருஷ்ண பகவானிடமிருந்து சேலைகள் வராது போக, பெண் வேடத்தில் நடித்த இளைஞரின் கால்சட்டை தெரிந்தது.
உடனே அவர் நிலையைச் சமாளித்துக்கொண்டு, "கிருஷ்ணா, ஆபத்பாந்தவா, அனாதரட்சகா, பெண்ணாக இருந்த என்னை அனாதையாக மாற்றி அற்புதம் செய்து விட்டாயே!'' என்று வசனம் பேசினார். கிராமத்து மக்கள் இதைப் பார்த்து விழுந்து, விழுந்து சிரித்தார்கள்.
வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போம் -இது பழமொழி அல்ல. அற்புதமான தியான சூத்திரம். தொடர்ந்து இருபது நிமிடங்கள் சிரிப்பதே ஒரு தியானமுறை. சொர்க்கத்தைப் பார்க்க வேண்டுமா! சிரி. முழுமையாகச் சிரி!!
வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும். இது வெறும் பழமொழி அல்ல. மருத்துவக் குணம் கொண்ட தியானமுறைச் சூத்திரம். தொடர்ந்து இருபது நிமிடங்கள் சிரிப்பதே ஒரு தியான முறை. முஜென் புத்திஸத்தில் தொடர்ந்து முக்கியத்துவம் தருகிறார்கள். அந்த நாளில் அரசர்கள், உணர்ந்திருக்காவிட்டால், தெனாலி ராமனும் பீர்பாலும் போயிருப்பார்கள்.
சிரிப்பு நமது நமது அகங்காரத்தை உடைக்கிறது. சிலர் கூட்டத்தில் சிரிக்க மாட்டார்கள். அவ்வாறு சிரிப்பது, தங்களைச் சாதாரணமாக மாற்றிவிடுகிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால், வாய் விட்டுச் சிரிக்கும் தலைவர் தனக்கும் மற்றவர்களுக்கும் வேறுபாடு இல்லை என்று அந்தக் கூட்டத்திலேயே கரைந்து ஒன்றாகி விடுகிறார். அகங்காரம் பிடித்தவர்கள் பொதுவாக இறுக்கமாக இருப்பார்கள்.
சிரிக்கின்றபோது வெறுமையாகி விடுகின்ற சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைக்கிறது. அந்த வெறுமைதான் ஞானத்தை அடைவதற்கு முதல்படி.
பல நேரங்களில் கவலைகளால் மனம் சோர்ந்து ஒரு வகையான மனஅழுத்தம் வர வாய்ப்புண்டு. அந்த நேரங்களில் சிரிப்பு மருந்தாகும்.
பெரிய விஷயத்தைக்கூட வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரி சொல்லிவிடுவார்கள் சிலர். காரணம், அவர்களிடம் உள்ள சிரிப்புணர்ச்சி. ஒரு வீட்டில் மனைவி சமையல் அறையில் வேலையாக இருந்தார். அப்போது சத்தம் கேட்டது. "என்ன சத்தம்?" என்று மனைவி கேட்டார். "ஜன்னலுக்கு வெளியே சட்டை விழுந்துவிட்டது" என்றார் கணவன்.
"சட்டை விழுந்ததற்கா இவ்வளவு சத்தம் ?" என்று மீண்டும் கேட்டார் மனைவி. "அந்தச் சட்டைக்குள் நான் இருந்தேன்" என்று கணவர் பதில் சொன்னவுடன், மனைவி குறுகிப் போனார்.
மனமுதிர்ச்சி பெற்ற நிலையில் இருந்த அந்தக் கணவர், தன்னை தன் மனைவி மதிப்பதில்லை என்பதை உணர்த்த நகைச்சுவையோடு சொன்னார். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல், சச்சரவு இல்லாமல் முடித்துவிட்டார்.
கண் டாக்டர் ஒருவர் மூன்று கண்ணாடிகளை அவரது மேஜையின் மேல் வைத்திருந்தார். அவரிடம் தன் கண்களைச் சரிப்படுத்த வந்திருந்த ஒருவர், முதல் கண்ணாடியைச் சுட்டிக்காட்டி, "இது எதற்கு?" என்று கேட்டார், "இது கிட்டப் பார்வைக்கு" என்றார் டாக்டர்.
இரண்டாவது கண்ணாடியைக் காட்டி, "இது எதற்கு?" என்று கேட்டார், "இது எட்டப் பார்வைக்கு" என்றார் டாக்டர்.
மூன்றாவது கண்ணாடியைக் காட்டி, "இது எதற்கு ?" என்று கேட்டார். உடனே டாக்டர், "(இது மற்ற கண்ணாடிகள் எங்கே இருக்கின்றன என்பதைப் பார்ப்பதற்கு" என்றார். நோய் என்பது பொதுவானது. அது உங்களுக்கும் வரும். எனக்கும் வரும். எல்லோருக்கும் வரும் என்பதை உணர்த்தத்தான் டாக்டர் அப்படிச் சொன்னார்.
சிரிக்கிற போது வெறுமையாகி விடுகிற சந்தர்ப்பம் கிடைக்கிறது. அந்த வெறுமைதான் ஞானத்தை அடைவதற்கு முதல்படி!
நகைச்சுவை உணர்வு பெற்ற ஒருவரால்தான், இக்கட்டான சூழ்நிலையைக்கூட இனிமையாக அணுக முடியும்.
இக்கட்டான நேரத்திலும் சிரிக்க வைக்கச் சிலரால் மட்டுமே முடியும். ஹிட்லருடைய ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த காலம். பல அடுக்குகள் கொண்ட ஒரு மாடியில், ஹிட்லர் - பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். தமது வல்லமையைப் பத்திரிக்கையாளர்களிடம் காட்ட நினைத்த ஹிட்லர், ஒரு சிப்பாயை மேலே இருந்து கீழே குதிக்கச் சொன்னார். உடனே அவர், குதித்து நொறுங்கிப் போனார். 'சிப்பாய்கானே குதித்திருக்கிறார்' என்று பத்திரிகையாளர்கள் நினைத்துவிடுவார்களோ என்று கருதிய ஹிட்லர், ஒரு மேஜர் ஜெனரலை அழைத்து, கீழே குதிக்குமாறு உத்தரவிட்டார்.
அவர் கீழே குதிக்க முனைகிற போது, ஒரு பத்திரிகையாளர் பாய்ந்து வந்து, அவரைத் தடுத்தார். அப்போது அந்த அதிகாரி, அந்தப் பத்திரிகையாளரின் காதுகளில், ''இந்தக் கொடியவனிடமிருந்து நான் தப்பித்துக்கொள்கிற ஒரே ஒரு சந்தர்ப்பத்தையும் கெடுத்துவிட்டாயே, பாவி'' என்றார். வரலாறு முழுக்க இப்படிச் சிரிப்புகள் காணப்படுகின்றன. சிரியுங்கள். எதை நினைத்து என்று கேட்கிறீர்களா?
உங்களை நினைத்து நீங்களே சிரியுங்கள்! நம்மையே நாம் நினைத்துப் பார்த்தால், நாமே நமக்கு ஒரு கேலிப்பொருளாவோம். அடுத்தவர்களைக் கேலி செய்வதை விட்டுவிட்டு, நம் நிலை பற்றி நமக்கு முழுமையாகத் தெரிந்தால்தான், நம்மைப் பார்த்து நாம் சிரிக்க முடியும். நம்மைப் பற்றித் தெரிந்து கொள்வோம்...
சௌக்கியமாக இருக்கீங்களா?
- தெய்வீகமாக, வீடு மாளிகையாக, உலகம் சொர்க்கமாக நீங்கள் உணர்ந்தால், நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்.
- ஆரோக்கியமாக இருப்பவர்கள் ஆனந்தமாக இருப்பார்கள். ஆனந்தமாக இருப்பவர்கள் நிச்சயம் ஆக வேண்டும். வேறு வழியே இல்லை - இது ஆனந்தச் சூத்திரம்.
| * | உடல் பிரச்சனை | நோய். | |
|---|---|---|---|
| மனப் பிரச்சனை | வேதனை. | ||
| உணர்வுப் பிரச்சனை |
நோய் ஆரம்பிக்கிறது. நோய் திடீரென்று தோன்றுவதில்லை. தோன்றவும் முடியாது. ஆரோக்கியம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறைந்து, பின் வேதனை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து - எதிர்பாராத தருணத்தில் நோயாக வெடிக்கிறது.
ஆரோக்கியமான உடலுக்கு... ஆரோக்கியமான மனம் தேவை. மனம் ஆரோக்கியமாக இருந்தால், உடல் நிச்சயம் ஆரோக்கியமாக இருக்கும்.
இயற்கைக்கு மாறான வேலை, மாசடைந்த காற்று, நீர், இரசாயனம் கலந்த உணவுகள், இயற்கைச்சூழலில் இருந்து முற்றிலும் மாறிய நகர வாழ்க்கை, ஒரே மாதிரியான அலுப்புக் கட்டும் வேலைகள், என்ன செய்தாலும் திருப்தி அடையாத உறவுகள், என்ன நடந்தாலும் திருப்தி அடையாத கண்டுபிடிக்கப்படும் புதிய நோய்கள் ...
இப்படி மனிதர்கள் தங்களுடைய இயல்புக்கு முற்றிலும் மாறான வாழ்க்கையே வாழ்ந்து வருகிறபோது, ஆரோக்கியத்தைப் பற்றிக் கவனம் செலுத்துவது சற்றுக் கடினமான விஷயம்தான்.
பலருக்குத் தாங்கள் ஆரோக்கியமாக இல்லையென்ற விஷயமே தெரிவதில்லை. பி.பி., டயாபடீஸ் போன்ற பெரிய பெரிய வியாதிகள் தங்களுக்கு இல்லையென்றால் ஆரோக்கியமானவர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். நோய் என்பது பல நாட்களாக இருக்கும் ஆரோக்கியக்கேட்டின் வெளிப்பாடு.
உங்கள் உடலில் இருக்கும் சக்தியின் அளவு குறையும் போதே ஆரோக்கியம் குறைய ஆரம்பிக்கிறது. இந்த நிலை, தொடர்ந்து பல நாட்களாக நீடிக்கும்போதுதான் நோய் உண்டாக ஆரம்பிக்கிறது.
உங்கள் ஆரோக்கியமாக இருக்கின்றனவா? பின் வரும் கேள்விகளைப் படியுங்கள். அந்தக் கேள்விகளுக்கு 'ஆம்' என்ற பதில் வந்தால் உங்கள் ஆரோக்கியம் ஓகே. 'இல்லை' என்று பதில் வந்தால் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.
- காலையில் எழுந்தவுடன் புதுப்பொலிவை உணருகிறீர்களா?
- படுத்தவுடன் உறக்கம் வருகிறதா?
- ஆறு மணி நேரம் தூங்கியதும் திருப்தியைக் தருதிறதா?
- சிரிக்கும்போது முழுமையாகச் சிரிக்க முடிகிறதா?
- இயல்பான செரிமானம் இருக்கிறதா?
- தனிமை உங்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறதா?
- நடப்பது, வீட்டு வேலை செய்வது உங்களுக்கு எனர்ஜடிக் ஆக (உற்சாகமாக) இருக்கிறதா?
உங்கள் உற்சாகம், சந்தோஷம் குறைய ஆரம்பிக்கும் போதே உங்கள் ஆரோக்கியத்தை இழக்க ஆரம்பிக்கிறீர்கள்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை என்னென்ன?
ஆரோக்கியமான உணவு:
சமஸ்கிருதத்தில் மூன்று வகையாகப் பிரிப்பார்கள். சாத்வீக உணவுகள் என்பவை எண்ணெய், காரம், மசாலா ஆகியவை மிகக் குறைவாகக் கொண்ட எல்லா உணவுகள்.
ராஜஸீக உணவுகள் என்பவை அதிக காரம், அதிக எண்ணெய், அதிக மசாலா கொண்டு சமைக்கப்படும் எல்லா உணவுகள்.
தமஸீக உணவுகள் என்பவை, அதிகம் வறுக்கப்பட்ட, கொழுப்பு அதிகம் கொண்ட உணவுகள், கெட்டுப்போன உணவுகள், சத்து இல்லாமல் வெறும் சுவைக்காக மட்டும் எடுத்துக் கொள்ளப்படும் உணவு வகைகள்.
சாத்வீக உணவுகள், உடலையும் மனதையும் ரம்மியமாக வைத்திருக்கும் தன்மை கொண்டவை.
ஆரோக்கியமான உடலுக்கு ... ஆரோக்கியமான மனம் தேவை. மனம் ஆரோக்கியமாக இருந்தால், உடல் நிச்சயம் ஆரோக்கியமாக இருக்கும்!
ரஜஸீக உணவுகள், பதற்றத்தையும் கோபத்தையும் அதிகப்படுத்தும் தன்மை கொண்டவை.
தமஸ்க உணவுகள், மந்தத் தன்மையையும் தூக்கத்தையும் அதிகப்படுத்தும் தன்மை கொண்டவை.
இனிமையான உணர்வையும் இலகுவான உடலையும் பெற விரும்பினால், சாத்வீக உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். பலனைச் சில நாட்களிலேயே உணர்வீர்கள்.
ஆரோக்கியமான சுற்றுச்சூமல்:
தூய்மையான காற்றும், மாசுபடாத நீரும் கொண்ட ஒரு அமைதியான சூழல்தான், மனிதர்கள் வாழ்வதற்கு மிகவும் ஏற்றது.
அதனால்தான் பண்டைய நாகரிகங்கள் எல்லாம் ஆற்றங்கரையில் உருவாகியது. இன்றைய கட்டுக்கடங்காத மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஆரோக்கியமான சுற்றுச் சூழல் முற்றிலும் சாத்தியமற்றதாக மாறிவிட்டது.
இருந்தாலும் ஆங்காங்கே ஆரோக்கியமான சுற்றுச்சூழல் கொண்ட பூங்காக்கள், கோயில்கள் இருக்கின்றன. தினம் ஒரு அரை மணி நேரமாவது இதுபோன்ற ஆரோக்கியமான சூழலிலிருந்து, அமைதியாக உட்கார்ந்து தியானம் செய்வது நகர் வாழ் மக்களின் உடலுக்கும் மனதுக்கும் மிக ஆரோக்கியத்தை அளிக்கும்.
ஆரோக்கியமான உறவுகள்:
ஆரோக்கியமான மனமும் உடலும் அமைந்தவரால் சோம்பி உட்கார முடியாது. சோகமான முகத்தைக் கனவிலும் அவரால் கொண்டுவர முடியாது. எப்போதும் உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் மட்டுமே இருக்கத் தோன்றும்!
மனதளவில் புண்பட்டு இருப்பவர்களே அடுத்தவர்களின் மனதைப் புண்படுத்துவார்கள். சிலர் யாரையாவது பார்த்தால், ''அய்யய்யோ, என்னங்க
ஆரோக்கியமான மனமும் உடலும் அமைந்தவரால் சோம்பி உட்கார முடியாது. சோகமான முகத்தைக் கனவிலும் அவரால் கொண்டுவர முடியாது. எப்போதும் உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் மட்டுமே இருக்கத் தோன்றும்!
இப்படி இளைச்சுப் போயிட்டீங்க?" என்று கொஞ்சமும் யோசிக்காமல் கேட்பார்கள்.
நல்ல ஆரோக்கியத்துடனும் மனவலிமையுடனும் இருப்பவர்கள்கூட, இந்தக் கேள்வியைக் கேட்டுத் தூரப் போய்விடுவார்கள். உடம்புக்கு ஏதாவது வந்துவிட்டதோ என்று சந்தேகப்பட ஆரம்பித்துவிடுவார்கள்.
ஆரோக்கியமாக இருப்பவர்கள் அவர்களை அறியாமலே எல்லோரிடமும் ஆரோக்கியமான உறவு கொண்டிருப்பார்கள்.
இவர்கள் யாரைப் பார்த்தாலும், "என்னங்க, சௌக்கியமா இருக்கீங்களா?'' என்று கேட்பார்கள். ''சுகமா?'' என்று வினவுவார்கள். ''ஏதேதேது, சந்தோஷமாக இருக்கீங்க போல! உடம்பு ஒரு ரவுண்டு பெருத்திடுச்சே!'' என்று கள்ளமில்லாமல் கேட்பார்கள்.
இந்தக் கேள்வியை எதிர்கொள்கிற மனிதருக்கு ஏதாவது உடம்பில் பிரச்சனை இருந்தாலும் அது உடனே சரியாகிவிடும்.
உங்களுடைய ஆரோக்கியமாக இருந்தால் ஆரோக்கியமான கிடைக்கும். ஆரோக்கியமாக முயற்சி செய்யுங்கள்! ஆரோக்கியமாக இருங்கள்!
தூய்மையான காற்றும், மாசுபடாத நீரும் கொண்ட ஒரு அமைதியான சூழல்தான், மனிதர்கள் வாழ்வதற்கு மிகவும் ஏற்றது!
உடல் மொழி
இன்று மிகப்பெரிய பல்கலைக்கழகத்தில் ஐன்ஸ்டீன் E=mc2 பற்றி விளக்கவுரையாற்ற வேண்டும். வேறொரு ஊரிலிருந்து வரவேண்டிய ஐன்ஸ்டீன் நேரத்திற்கு வராததால், சமயோசித புத்தியைப் பயன்படுத்துவதாக நினைத்துக்கொண்ட ஐன்ஸ்டீனின் கார் டிரைவர், ஐன்ஸ்டீனின் உடையணிந்து மேடையேறிவிட்டார்!
அது புதிய ஊர். டிரைவரும் பட்டப்படிப்படிப்பு முடித்தவர். விளக்கவுரையை நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஐன்ஸ்டீன் E=mc2 பற்றி விளக்கும்போதெல்லாம் உடனிருந்து கேட்ட டிரைவர் ...
ஐன்ஸ்டீன் பேசுவது போலவே, ஒரு பாயிண்ட்கூட விடாமல் எல்லாவற்றையும் மனப்பாடமாய் பேசிவிட்டார்!
ஐன்ஸ்டீன் பேசுவதாய் நம்பிய கூட்டம் பேச்சின் கடைசியில் ஆரவாரத்தோடு கைதட்டியது.
அடுத்ததுதான் வம்பாகிவிட்டது. ஐன்ஸ்டீனிடம் E=mc2 பற்றி மிகச் சிக்கலான கேள்வி ஒன்றைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் கேட்டுவிட ...
படபடப்பானர் டிரைவர். இது புதியது. எதிர்பாராதது. இந்தப் புதிய சூழ்நிலையைச் சந்திக்க எந்த ரெடிமேட் வசனமோ, பதிலோ இல்லாததால் டிரைவர் தடுமாற ஆரம்பிப்பதற்கும், ஐன்ஸ்டீன் அந்த அறைக்குள் நுழைவதற்கும் மிகச் சரியாக இருந்தது.
"இதுபோன்ற சாதாரண கேள்விக்கு நான் பதிலளிப்பதில்லை. இதற்கு என் கார் டிரைவரே மிக அழகாக பதில் சொல்வார்' எனச் சொல்லி ஐன்ஸ்டீனை மேடைக்கு அழைத்து தப்பித்துக் கொண்டார் டிரைவர்!
ஐன்ஸ்டீன் வரக் கால தாமதமாகியிருந்தால் டிரைவரின் கதி என்னவாகியிருக்கும்? டிரைவரின் குட்டு, அவரின் உடல்மொழி மூலமாக வெளிப்பட்டிருக்கும்!
நம் வாழ்வில் நெருக்கடியையும் எரிச்சலையும் நாம் உணரும் ஒவ்வொரு நிமிடங்களும் இதுபோன்ற தருணங்கள்தாம்.
ரெடிமேடான இல்லாத நெருக்கடியான சூழ்நிலைகளில் நம் சுயரூபம் நம்மையும் மீறி நம் உடல்மொழிகள் மூலமாக வெளிப்பட்டுவிடுகிறது.
- உடலையும் மனதையும் பிளவுபடுத்துவது அகங்காரம்.
- மனதில் வெளிப்படுத்த நினைப்பவற்றை, உடல்பாவனைகள் மூலமாக முழுமையாக மனிதர்கள் வெளிப்படுத்துவதேயில்லை.
- மனிதர்களின் எல்லா பாவனைகளுமே அவர்களின் அகங்காரம் கலந்தே வெளிப்படுகிறது.
- நினைத்ததை நினைத்த மாதிரியே வெளிப்படுத்த முடியாமையே, நம்மை மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்வதற்கு வித்திடுகிறது.
உன் மேல என் உசிரையே வச்சிருக்கேன்!
- அப்புறம் எப்படி நீ இன்றும் உயிரோட இருக்க?
என்னை பெத்த ராசா!
- நான் எப்படிப் பாட்டி உன்னையை பெக்க முடியும்?
உடல் மொழி என்பது உங்கள் பார்வை சொல்லும் செய்தி.
உங்கள் முகபாவம் சொல்லும் செய்தி.
உங்கள் கை, கால் அசைவுகள் சொல்லும் செய்தி. உங்கள் உட்காரும் ஸ்டைல், பேசும் ஸ்டைல் கூறும் செய்திகளின் தொகுப்பு.
என் மனசே என்கிட்ட இல்ல!
- எங்க? பக்கத்து வீட்டுக்கு விளையாடப் போயிருக்கா?
வயிக்குல பால வாக்கீங்க!
- ஏன் இப்படிப் பச்சப் பொய் சொல்றீங்க?
வயிறே பத்திகிட்டு எரியுது!
- இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாமச் பேசினா எனக்குக் கெட்ட கோபம் வந்துரும்.
என்று மற்றவர்கள் பதில் பேச ஆரம்பித்துவிட்டால் பலர் கதி அதோகதிதான்.
உணர்வுப்பூர்வமான விஷயங்களையும், அனுபவங்களையும் வெளிப்படுத்துவது மிக மிகக் கடினம்.
மேலே உள்ள சில வசனங்கள் கிட்டத்தட்ட எல்லோருக்குமே ரெடிமேடான வசனங்கள் மூலம் பல வேளைகளில் உணர்வுகளைச் சரியாய் வெளிப்படுத்த முடியாது என்பதே உண்மை.
ஆனால் உணர்வுகளை வார்த்தைகளால் முழுமையாக வெளிப்படுத்த முடியாது என்பதே உண்மை.
ஒரு செய்தியை மற்றவருக்குத் தெரியப்படுத்தும் போது (Communication) - நமது மொழி மூலம், (வார்த்தைகள் மூலம்) வெறும் 10% விஷயத்தை மட்டுமே தெரியப்படுத்த முடியும்.
மீதமிருக்கும் செய்திகளை மற்றவருக்குத் தெரியப்படுத்தப்படுவது எப்படி? அது உடல்மொழி (Body Language) மூலம்தான் வெளிப்படுத்தப்படுகிறது என்பதை இன்றைய ஆராய்ச்சியாளர்கள் தெளிவாக ஒப்புக் கொள்கிறார்கள்.
இன்றைய கல்வித் திட்டம் 10% செய்தியை மட்டுமே வெளிப்படுத்தும் மொழிக்குத் தரும் முக்கியத்துவத்தை, 90% செய்தியை வெளிப்படுத்தும் உடல் மொழிக்குக் கொடுக்காதது வருந்தத்தக்க ஒரு விஷயம்தான்.
உடல்மொழிக்கு முக்கியத்துவமளிக்காத அறியாமை நிலை மாற வேண்டும். அன்பு, பண்பு, நட்பு குன்றாத குத்துவிளக்காய் ஒளிதர உடல்மொழி பற்றிய விழிப்புணர்வு பெருக வேண்டும்.
உடல் மொழி என்பது ஒரு தனிப்பட்ட மனிதர் கற்றுக்கொண்டு பழக்கப்படுத்தப்பட வேண்டிய ஒரு கலை அல்ல. அது எல்லோருடைய வாழ்வுக்கும் அடிப்படையானது.
நாம் எதிர்பார்க்கும் ஏதோ ஒன்று நம்முடைய நெருங்கிய நண்பரிடம், உறவினரிடம் குறைவாக இருக்கிறது அல்லது இல்லை என்று பாசப்பரிமாற்றங்களில் உணர்கிறோம். நாம் எதிர்பார்க்கும் அந்த ஏதோ ஒன்று உடல் மொழிதான்.
இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், நம் உறவுகளின் உணர்வுகள் உரசப்படும்போது வரும் வார்த்தைகள் இவை...
"நான் உன்னிடம் அன்பு செலுத்துமளவுக்கு, நீ என்னிடம் அன்பு செலுத்துவதில்லை".
"என்னை நேசிப்பதாய் நீ சொல்லும் அளவுக்கு, என்னிடம் நீ அன்பு செலுத்துவது இல்லை".
"ஏன், எனக்கு மாத்திரம் இப்படி! உண்மையாக பழகக்கூடிய ஒரு உறவு கிடைக்காதா?"
| உண்மை | |
|---|---|
| என்னவோ | உடல் – மன ஒருங்கிணைப்பு |
| அல்லது | உடல் – மன இனக்கத்தின் |
| வெளிப்பாடுதான் | உடல் மொழி. |
| தான் |
"சே... அன்பு, பாசம் என்பதெல்லாம் வெளி வேஷம்தான்! வாய் வார்த்தை தான்!"
"நீ என்னவோ எந்தக் குறையும் சொல்லமுடியாத அளவுக்குத்தான் தாங்குகிறாய். அன்பு செய்கிறாய். இருந்தாலும் நம் உறவில் ஏதோ ஒரு மூலையில் முழுமை அடையவில்லை என்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கிறது..."
முழுமையாகாதது எது?
அது இந்த உடல் மொழி வெளிப்பாட்டின் குறை, நிறைகளே!
ஒரு கம்பெனியில் ரிசப்ஷனிஸ்டாக இருப்பவருக்கு வாடிக்கையாளரைக் கவர வார்த்தைகளும் உடல் மொழியும் எவ்வளவு இனிமையாக இருக்க வேண்டும் என்று விதிமுறையே இருக்கிறது.
ரிசப்ஷனிஸ்டாக இருக்கும் நேரத்தில் அந்த நபரை ஒருவர் பார்த்தால், அந்த நபருக்கு ரிசப்ஷனிஸ்ட் மிக அருமையான ஆளாகத் தெரிவார்.
ஆனால், நிஜத்தில் அந்த ரிசப்ஷனிஸ்ட் அதே அளவு இனிமையானவராக இருப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.
வரவேற்றல் என்ற பணியைச் செவ்வனே செய்வதற்காக சில இனிமையான உடல் மொழிகளான சிரித்து வரவேற்றல்; வணங்குதல்; பணிவோடும் அன்போடும் விசாரித்தல்; முகத்தில் எந்த ஒரு சூழ்நிலையிலேயும் எதிர்மறை உணர்வுகளைக் காட்டாது இருத்தல் என்று சில, சின்ன உடல் மொழிகளை இயந்திரம் போல கடைப்பிடித்தால் போதும். வாடிக்கையாளர் திருப்தியடைந்து விடுவார்.
ரிசப்ஷனிஸ்ட் வெறும் சம்பளத்திற்காக மட்டுமே நல்ல உடல்மொழிகளை வெளிப்படுத்த வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அன்போடு வரவேற்பது, வெறும் பணி நிமித்தமான நடிப்பாகவும் இயந்திரத்தனமாக திரும்பத் திரும்பச் செய்யும் ஒரு சாதாரணச் செயலாகவும் இருப்பதற்கே வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.
பேச நினைப்பதெல்லாம் பேச முடிவதில்லை. பேசி முடித்ததெல்லாம் பேச நினைத்தவை அல்ல. இந்த விசித்திரத்தைக் கவனித்திருக்கிறீர்களா? காரணம் உடல்மொழிபற்றி ஞானம் இல்லாதிருப்பதே!
ஆனால், வாடிக்கையாளர் ஒவ்வொருவரும் தான் மிக நன்றாக கவனிக்கப்பட்டதாகவும், வரவேற்கப்பட்டதாகவும்தான் எப்போதும் நினைக்கின்றனர்.
(ஏனென்றால், முழு உலகமும் ஒரு பூரணமான உணர்வு வெளிப்பாட்டுக்காக ஏங்குகிறது. எனவேதான் இனிமையான உடல் மொழிகளைச் சந்திக்கும் நாம் சந்தோஷம் அடைகிறோம்).
ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு மனிதர்கள் இவ்வளவு சந்தோஷம் அடைந்தால், காலம் முழுவதும் நம்மோடு இருக்கும் நமது உறவுகளுக்கு நம் அன்பின் பூரணத்துவத்தைக் காண்பித்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார்கள்?
சிறிது யோசியுங்கள், ஆனால் பலன் பெரிது!
பணி நிமித்தமாக, படிப்பு நிமித்தமாக, வாய்ப்பு நிமித்தமாக, உதவி நிமித்தமாக நாம் எல்லோரும் பலமுறை பலரிடம் பவ்யமான இனிமையான வெளிப்படுத்திதான் நம் காரியங்களை சாதித்திருப்போம்.
சாதாரண காரியத்திற்காக, யாரோ ஒருவருக்காக,
நம்மையும் நம் பாவனைகளையும் இவ்வளவு மாற்றிக் கொள்ள முடியும் என்றால் - நாம் முழுமையாக நேசிக்கும் நம்முடைய சில உறவுகளுக்காக நம்மை நாம் ஏன் மாற்றிக்கொள்ளக்கூடாது.
நீங்கள் எப்படியிருந்தாலும் அப்படியே உங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். இது உடல்மொழிகளைப் பொலிவாக்கும் ஒரு டெக்னிக்.
இதுவரை நம் நெருங்கியவர்களிடம் உடல்மொழியில் உண்மையாய் பவ்யத்தை வெளிப்படுத்தாவிட்டாலும், இனியாவது வெளிப்படுத்தலாமே.
நம் உடல்மொழியில் இனிமையைச் சேர்த்து மற்றவரையும் இன்புற வைப்பதென்பது பெரிய கம்ப சூத்திரமில்லை.
உடல் மொழி - மனித உறவிலும் அன்பின் பூரணத்துவத்திலும் திருப்தியிலும் எவ்வளவு பங்கு வகிக்கிறது என்பதை ஆழமாகப் புரிந்துகொண்டு, உடல் மொழியில் இனிமைகளைச் சேருங்கள். அதுபோதும். சேர்ந்து வாழும் வாழ்க்கை முறையின் ஆனந்த சூத்திரம் புரிந்துவிடும்.
இல்லத்தாசனாக... உள்ளத்தாசனாக வேண்டும்...
நாம் நினைத்த காரியம் ஒருவரிடம் முடியும்வரை எவ்வளவு குழைவோம். முகத்தில்தான் எவ்வளவு பவ்யம், புன்சிரிப்பு, பிரகாசம்!
காரியம் சாதிக்கும்வரை, என்ன நடந்தாலும் உங்களால் முடிந்தளவு பொறுமையாக இருப்பீர்கள். இதைக் கவனித்திருக்கிறீர்களா?
நெருங்கியவர்களிடம் நீங்கள் நினைத்ததிலிருந்து சிறிதளவு பிசகி எது நடந்தாலும் உடனே சீறுவீர்கள்.
உடனே பொறுமை இழந்திருப்பீர்கள். இதையும் கவனித்திருக்கிறீர்களா?
உறவுகளிடம் சீறுவதும் ஊராரிடம் பதுங்குவதும் தொடர்ந்தால்... உங்கள் உள்ளத்தின் அரசராக நீங்கள் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
வெறும் ரேஷன்கார்டோடு மட்டும் இல்லத்தரசன், இல்லத்தரசி என்ற பட்டங்கள் நின்றுவிடக்கூடாது. அவை நிஜமாக வேண்டும்.
மனதினுடைய மன்னனாக ஆகாதவன், மன்னன் ஆன பின்னும் கூட அடிமையே!
யாரிடமோ, எதற்காகவோ பொறுத்திருக்கும் மனிதர்கள் உறவுகளிடம் எதற்காகவும் பொறுத்திருக்கத் தயாராயில்லை
பொறுத்தவர் பூமியாள்வார். உண்மைதான். காசுக்காக சிரிப்பவரின் கஜானாவில் காசு கொட்டும்தான். நல்ல உடல்மொழி செல்வத்தை ஈர்க்கத்தான் செய்யும். இதெல்லாம் பெரியதல்ல.
அரசனாயிருப்பதும் அரசனாவதும் பெரியதல்ல.
இல்லத்தரசனாக திகழ்வதே பெரிது.
இல்லத்தின் அரசனாக வேண்டுமானால், உங்கள் உள்ளத்தின் அரசனாக வேண்டும் முதலில்.
தன்னை ஆளத்தெரிந்தவரால்தான் இல்லத்தைச் சுமூகத்தன்மையோடு நடத்திச் செல்ல முடியும்.
அப்படி இல்லாவிட்டால் அதட்டி, உருட்டி, அடிதடி அராஜகத்தோடு நடக்கும் ஒரு ராஜாங்கமாகத்தான் குடும்ப நிர்வாகம் பல நேரங்களில் இருக்கும்.
காசுக்காகச் சிரிக்க முடிகிறது.
காரியத்திற்காகப் பொறுமை காக்க முடிகிறது.
எதற்கோ யாராரிடமோ காட்டும் பொறுமையை, கனிவை, பணிவை உற்றாரிடம் காட்ட ஆரம்பியுங்கள்.
உணர்ச்சிகள் கட்டுக்குள் வரும் கலை கிட்டும்.
உங்களின் உள்ளத்தரசராவீர்கள். உள்ளத்தரசியாவீர்கள்.
ஆடும் மனதைத ஆள அறிவதே நிஜ அரசாட்சி
கிளர்ந்தெழுபவரா நீங்கள் ?
புதிய சேன்ட்ரோ கார் ஒன்றை வாங்கியிருந்தார். அக்கம்பக்கத்தாரை பார்த்து ஏதோவொரு மோகத்தில் கார் வாங்கிவிட்டார். ஆனால், கார் ஓட்டுவதைப் பற்றி முழுமையாகத் தெரியாது.
ஏற்றத்தில் நின்றிருந்த காரில் அமர்ந்து ஏதேதோ முயற்சி செய்து கொண்டிருந்தபோது, காரின் பிரேக் ரிலீசாகி, இறக்கம் நோக்கி கார் ஒட... எதேச்சையாக கியரிலும் கிளட்சிலும் கால், கை பட, கார் ஸ்டார்ட் ஆகிவிட்டது.
கார் ஓடுவதை குஷியாகப் பார்த்த ஸ்டியரிங்கைப் பிடித்து ஆட்ட, அவர் திருப்பும் திசையில் கார் திரும்பியது.
காலியாக இருந்த ஹைவேயில் அதே குஷியோடு கார் ஓட்டிக்கொண்டு சென்ற வருக்கு திடீரென ஒரு சந்தேகம் வந்தது. அது ... எப்படிக் காரரை நிறுத்துவது ?
எவ்வளவு யோசித்தும் தெரியவில்லை. படபடப்பும் பயமும் பற்றிக்கொண்டது.
அதிகபட்சம் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தது ஸ்டியரிங் மட்டுமே!
அவருக்கு எதிரே தெரிந்த ஒரு புளியமரம் நோக்கி வண்டியைத் திருப்பினார். பெரிய குலுக்கலோடு மோதி மோதி நின்றது.
இக்கதையில் காரை ஒட்டினாரா? இல்லை, கார் ஒட்டியதா?
படிக்க இது வினோதமாயிருக்கிறதென சொல்லி விட்டுவிடாதீர்கள்.
படித்ததை மனதில் பிடியுங்கள். அழ ஆராயுங்கள். பிடி விலகும். எந்த மனிதனும் தன் வாழ்வை வாழ்வதேயில்லை.
அவ்வப்போது பொங்கியெழும் உணர்ச்சிகள், கிளர்ச்சிகள் வாழ்கின்றன.
அப்பாவி மனிதனின் உடல், மனம், சக்தி, புத்தி ஆகிய எல்லாவற்றையும் அவை பயன்படுத்திக்கொள்கின்றன.
கிளர்ந்தெழுவதும் பொங்கியெழுவதும் முழுக்க கட்டுப்பாட்டில் இருந்தால் நீங்கள் வாழ்கிறீர்கள் இல்லாவிட்டால் கொந்தளிக்கும் உணர்ச்சிகள் அவை வாழ்கின்றன, உங்களைக் கருவியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்று அர்த்தம்.
- கோபிப்பதும் ஆசைப்படுவதும் துக்கப்படுவதும் பெரும்பாலும் நம் கையிலில்லை. இப்படி நிகழ்வது ஏன் ?
- ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதமானவர்கள். தனியானவர்கள். இது நிகழ்வது எப்படி ?
- தொடர்ந்து துன்புறுத்துபவர்கள் ... காரணமில்லாவிட்டாலும் கவலைப்படுபவர்கள்... தொட்டதுக்கும் எரிச்சலடைபவர்கள்... இப்படித் தொடர்வது எதனால் ?
ஏன் ? எப்படி ? எதனால் ? இந்த மூன்று கேள்விக்கும் ஒரே பதில் - அதுதான் மனித சுபாவம் !
பேயொன்று சுகமாய் உறங்கிக்கொண்டிருக்கிறது… நம் ஒவ்வொருவரின் மனதுக்குள்ளும்.
மனநல மருத்துவர்களின் ஆராய்ச்சி முடிவுப்படி நம் மனதின் பத்து சதவிகிதம் மட்டுமே நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. நம்மால் பயன்படுத்தப்படுகிறது.
நம் மனதின் தொண்ணூறு சதவிகிதம் நம் கட்டுப்பாட்டில் இல்லை.
நம்முள் உறங்கும் பேய் என்றமைக்கப்படுவதின் கட்டுப்பாட்டில்தான் தொண்ணூறு சதவிகிதம் மனம் இயங்குகிறது.
உறங்கும் பேயின் சுபாவம், மனித சுபாவம்! மனித குணம்!
ஒருவர் கிளர்ச்சியாளனாகவோ இருப்பது இந்தச் சுபாவத்தைப் பொறுத்ததே.
காரணம், மனிதரைக் கட்டுப்படுத்துவது மனம். மனதைக் கட்டுப்படுத்துவது சுபாவம்.
கல்லை மாணிக்கமாக்குவது அதிசயமல்ல. மனி தனை மகானாக்குவதே அதிசயம்
ஒரு சின்னக் கதை:
இரவு மாறுவேடத்தில் நகர்வலம் சென்ற இளவரசர் அப்போதுதான் முதல் முறையாக சேவற்போரைப் பார்த்தார்.
சேவற்போரை ரொம்ப ரசித்துப் பார்த்த இளவரசர் தனக்கென்று சொந்தமாக ஒரு போர்ச்சேவல் வேண்டும் என்றார்.
போர்ச்சேவல் பயிற்சியாளரை நியமித்து தனக்கென்று ஒரு சேவல் வாங்கி வளர்க்க ஆரம்பித்தார்.
| மனிதன் | மகானாவது |
|---|---|
| வ | மனித சுபாவத்தில் |
| b | அறுவை சிகிச்சை |
| நீகழ்ந்தால் மட்டுமே சாத்தியம்! |
ஒரு வாரம் கழித்து பயிற்சியாளரிடம் சேவல் பற்றி இளவரசர் விசாரித்தார். "பக்கத்து வீட்டு சேவலின் கொக்கரிப்பு கேட்டாலே நம் சேவல் கிளர்ந்தெழுகிறது" என்றார்.
இதுவும் மனிதசுபாவமே!
போற்றப்படும் தங்களின் குணங்களை வளர்த்துக்கொள்ளவே மனிதர்கள் முனைகிறார்கள். திட்டு வாங்கினாலோ, தூற்றப்பட்டாலோ அதற்குப் பழிவாங்கவே முனைகிறார்கள். விளைவு - அச்சோ... அது பாதகம்! திட்டியவரை எதிர்ப்பதாகவும் எண்ணிக்கொண்டு தவரைத் திருத்திக்கொள்ளாத கள்ளத்தனம் கற்கிறார்கள். தம்மையே பாழாக்குகிறார்கள். நெருங்கியவரை நல்லவழிப்படுத்த
போற்றலாமா? கிட்டலாமா? இனி நீங்கள் முடிவுசெய்யுங்கள்
"அப்படியா!" என்று மிக ஆச்சரியமாகக் கேட்டார் இளவரசர்.
ஒரு மாதம் கழித்து பயிற்சியாளரிடம் இளவரசர் விசாரித்தார். "அடுத்த தெரு சேவல் கொக்கரித்தால் போதும், இங்கேயிருக்கும் நம் சேவல் கிளர்ந்தெழுகிறது. உடல் சிலிர்த்து சண்டைக்கு உடனே தயாராகி விடுகிறது" என்றார்.
" அப்படியா! அவ்வளவு பொங்கியெழுகிறதா நம் சேவல் ?" என்று ரொம்ப சந்தோஷமாகக் கேட்டார் இளவரசர்.
இரண்டு மாதம் கழித்து பயிற்சியாளரிடம் விசாரித்த போது, "நம் சேவலுக்கு இப்போது கொக்கரிப்பு சத்தமெல்லாம் தேவையில்லை. ஒரு சேவலை பார்த்தாலே கிளர்ந்தெழுகிறது" என்றார்.
"அப்படியா!" என்று என்று விழி விரிய ஆச்சரியப்பட்ட இளவரசர், "நம் சேவலை சேவற்போருக்கு அனுப்பலாமா?"
பயிற்சியாளர், "இல்லை. இன்னும் கொஞ்சம் பக்குவம் அடைய வேண்டியிருக்கிறது" என்றார்.
சில நாட்கள் கழித்து ஆள் அனுப்பி கேட்டார் இளவரசர், "சேவலை இப்போது சேவற்போருக்கு அனுப்பலாமா?" என்று கேட்டார்.
சுதந்திரம் பெற்றாக வேண்டும் எனும் எண்ணத்திலிருந்து சுதந்திரம் பெறுவதே உண்மையான சுதந்திரம்.
" பொறுத்திருங்கள். இன்னும் சேவல் பக்குவம் பெறவில்லை. பக்குவம் பெற்றதும் நானே சொல்லியுரைக்கிறேன்' என்றார் பயிற்சியாளர்.
வேறொரு சேவலைப் பார்த்தாலே நம் சேவல் கிளர்ந்தெழுகிறது.
இதற்குமேல் அந்தச் சேவல் என்ன பக்குவத்தை புதிதாய் அடைய முடியும் ? என்று யோசித்தவராயிருந்தார் இளவரசர்.
மூன்று மாதம் கழித்து ....
"சேவல் பக்குவமடைந்துவிட்டது.
சேவலை சேவற் போருக்கு அனுப்பலாம்.
இளவரசர் வந்து பார்க்கலாம் என்று சொல்" எனச் செய்தி அனுப்பினார் சேவல் பயிற்சியாளர்.
சேவலை நேரில் பார்த்த இளவரசருக்கு ஆச்சரியமாக இருந்தது. காரணம் சேவல் அமைதியாக நெல் கொத்தி விளையாடிக் கொண்டிருந்தது. ஆனால், பக்கத்திலோ இன்னொரு சேவல் இருந்துகொண்டிருந்தது. "பார்த்தாலே கிளர்ந்தெழுவது இப்படி யோசிக்கார் இளவரசன்.
"பயிற்சியாளரே! நீர் சொன்னதுக்கு நேர்மாறாக இருக்கிறது இந்தச் சேவல். ஏன் பொய் சொன்னீர்?" என்றார் இளவரசர்.
"நம் சேவலை சேவற்போரில் விட்டுப் பாருங்கள். அப்போது புரியும் ?" என புதிராகச் சொன்னார் பயிற்சியாளர்.
இளவரசர் சேவற்போருக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார்.
களர்ச்சியிலிருந்து கிளர்ச்சிக்கும், கிளர்ச்சியிலிருந்து சாந்தத்திற்கும் பயணிப்பதே சந்தோஷம்!
Part 10: Open the Door... Let the Breeze in!
படபடவெனச் சிறகடித்து தலையையும் உடலையும் உதறியவாறே அடி மண்ணிலிருந்து புழுதியைக் கிளப்பியது எதிரணிச் சேவல்.
இளவரசரின் சேவலோ மிக நிதானமாக எல்லாவற்றையும் பார்த்துக்கொன்டு நின்று கொண்டிருந்தது.
அடுத்தவர்களின் கோபத்தைக்கூட பஸ்பமாக்கிடும் சக்தி பெற்றது நம் நிதானம். களர்ச்சி, கிளர்ச்சி தாண்டி வளர்ச்சி பெற்று நிதானம் மலர்ச்சி பொட்டும்.
"என்னய்யா! உம்மை நம்பி என் சேவல் என்று சொல்லிவிட்டேன். இப்படி நிற்கிறதே ?" கோபக்குரலில்.
"இளவரசே பொறும்! போர்க்களத்தின் உச்சகட்ட பக்குவம் நிதானமாக அணுகுவதுதான். எதிரணி சேவல் தன் பயத்தால் தன்னைக் காப்பாற்றவே கிளர்கிறது.
நம்பிக்கைகுறைவின் வெளிப்பாடுகான் கிளர்ச்சி.
கிளர்ந்தெழுவதைத் தாண்டியதுதான் நிதானம். நம் சேவல்..." என்று பயிற்சியாளர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே...
எதிரணிச் சேவல் சீற்றத்தோடு அருகில் பறந்து வரவும் அதுவரை முழுமத்தயார் நிலையில் இருந்த இளவரசரின் சேவல் மிகச்சரியாக எதிரணிச் சேவலின் இறக்கையைத் தன் கால்விரலில் கட்டப்பட்ட கத்தியால் ஒரே பாய்ச்சலில் துண்டிக்கெறியவும் சரியாக இருந்தது.
ஒரு கிளர்ச்சியாளர் நிச்சயமாக மூர்க்கன், மூடன் ஆகிய இருவரையும் விட உயர்ந்தவனே.
ஆனால் அது இறுதியல்ல.
பொங்கியெழுவது முதிர்ச்சியாகாது.
மனதுக்குப் பிடிக்காத எந்த ஒரு விஷயத்தைப் பார்த்ததும் அல்லது கேட்டதும்
கோபமோ, எரிச்சலோ வந்தால் நீங்களும் ஓர் கிளர்ச்சியாளரே. (ஏதோ பெரிய பெரிய பாட்சியில் ஈடுபடுபவர்கள் மாத்திரமே கிளர்ச்சியாளர்கள் அல்லர்.)
கிளர்ந்தெழுவது என்பது, மனம் அதன் மந்தத்தன்மையில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளம் மட்டுமே.
ஒய்வேயில்லாமல் யோசிப்பதும் பரபரப்பாக எப்போதும் ஏதாவது செய்து கொண்டிருப்பதும் தனக்குப் பிடிக்காத விஷயங்கள் தன்னைச் சுற்றி நிகழும் போது கிளர்ந்தெழுவதும் பொங்கியெழுவதும் நம் வளர்ச்சியின் நல்ல அடையாளங்களே.
பொங்கியெழுவதும் கிளர்ந்தெழுவதும் தாண்டப்பட வேண்டிய நிலைகள். கொண்டாடப்பட வேண்டிய நிலைகள் அல்ல. பெருமைப்பட வேண்டிய குணாதிசயங்கள் அல்ல.
நவீன மனிதர்களில் பெரும்பாலானவர்கள் கிளர்ந்தெழுபவர்களாகவே இருக்கிறார்கள்.
இந்தச் சம்பவம் ஒரு பேய் மாதிரி மனிதருக்குள் இருந்துகொண்டு மனிதனை உலுக்கிக் கொண்டே இருக்கும். உத்தரவிட்டுக் கொண்டே இருக்கும். மனிதர்களும் தான் உயிரோட்டம் உடையவர்களாய் இருப்பதால் நம்புவார்கள்.
கிளர்ந்தெழுதல், மனிதரை இளைப்பாற அனுமதிக்காது. போதும் என்ற திருப்தி மனிதரை நெருங்க விடாது பார்த்துக்கொள்ளும்.
மந்தத்தன்மைக்கும் கிளர்ந்தெழுவதற்கும் இடைப்பட்ட சுபாவம்தான்,
- நிதானம் ! சாந்தம் ! நிம்மதி! திருப்தி! ஆனந்தம் !
| Genius is nothing but a greater aptitude for patience. | |
|---|---|
| சா | - Benjamin Franklin. |
| ந் | கிளர்ச்சி கடந்த முதிர்ச்சி, நிதானம்! |
| த | நிதானம் கடந்த முதிர்ச்சி, சாந்தம்! |
| ம் | வரிஸிட் தத்துவம். |
| சாந்தம் தொடு நிம்மதியும்! பிடிக்கும்? | |
| வேறு வழி இல்லாமல் நீ ஆனந்தமாவாய்! |
இந்த உண்மை மனிதரால் உணரப்படாத வரைகிளர்ந்தெழுதல், வாழ்க்கையைக் காட்டாறு போல அதன் இஷ்டத்துக்கு அலைக்கழிக்கும்.
உண்மை தெரியாத மனிதரோ! "நான் சரியாகத்தானே வாழ்ந்தேன், கஷ்டப்பட்டுத்தானே உழைத்தேன்! ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்டங்கள்?" என்று வாழ்வின் பிற்பகுதியில் நொந்து கொள்வார்கள்.
சாந்த குணத்தை வளர்த்துக்கொண்டால் இந்த எல்லாப் பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
கிளர்ந்தெழும் சுபாவத்தைத் தணியச் செய்வது சாந்த குணத்தைப் பெறும் ஓர் எளிய வழி.
தியான சக்திக்கு, இந்தப் பேய் சுபாவத்தை எரித்துவிடும் சக்தியுண்டு.
கிளர்ச்சி முதிர்ச்சியல்ல.
கிளர்ச்சி வளர்ச்சியின் ஒரு பகுதி மட்டுமே.
கிளர்ச்சியைக் கடந்து சாந்தமடையுங்கள். வாழ்வு சந்தோஷமாகும்!
அர்த்தமுள்ள சம்பவம் ...
ஞாயிறு வகுப்பில் போதகர் சொன்னார், "அன்பு செய்யுங்கள். வாயில்லா பிராணிக்குக்கூட ஊறு செய்யக்கூடாது. நீங்கள் அன்பு செய்த சம்பவங்களைச் சொல்லுங்கள் ... "
ஜான் முறை வந்தபோது வேகமான குரலில், "ஒருமுறை ஒருவன் நாயை எட்டி உதைத்தான்... நான் அவனை எட்டி உதைத்தேன்" என தன் அன்பை நினைவுகூர்ந்தானாம்.
- கிளர்ச்சியாளனின் அன்பில்கூட அடாவடித்தனம் எட்டிப்பார்க்கும். இவர் சாந்தமாக வேண்டும். எதிராளி சொல்லும் போதனைகள் ....
"வொ பில் கிளிண்ட்டா!' என உங்களை அழைத்தால் உங்களுக்குக் கியான கோபம் வராது.
உங்களை 'வா கிறுக்கா!' என்றால் கண்கள் சிவக்கக் கோபம் வெடிக்கும். அமெரிக்க அதிபர்' என உங்களை சொல்லும்போது
வராத கோபம் கிறுக்கா எனச் சொல்லும்போது வருகிறது- ஏன் ?
அதிபர் என்றால் சிரிப்பவர், கிறுக்கர் என்றதும் கிளர்க்தெழுந்து கோபப்பட்டு கிறுக்குத்தனமாக நடந்ததையாவது செய்து கிறுக்கராகவே நடந்துகொண்டால்... எதிராளி சொன்னதில் கணிசமான அளவுக்கு உண்மை இருக்கிறது என்று அர்த்தம்.
கோபம் வர வைக்கும் வார்த்தை ... உள் அவலம். வெளிவரச் செய்யும் வார்த்தை வேக மந்திரம்!
எரிச்சல், கோபம் வந்த நிமிடங்களையும் வரப்போகும் நிமிடங்களையெல்லாம் கணக்கில்லெடுத்துக் கொள்ளுங்கள்.
அந்த நிமிடங்களில் எதிராளி சொன்ன வார்த்தைகளை மனதிற்குள் எடுத்துவந்து ஆராயுங்கள். காரணம் அந்த வார்த்தைகள் உங்களைப் பற்றிய கணிசமான அளவு உண்மைகளைப் பறைசாற்றுகின்றன.
அவை உங்களை திருத்திக்கொள்ள உதவும் பிரத்யேக சூத்திரங்கள்.
உங்களைப் பற்றி உங்களுக்கே போதிக்கும் இது போன்ற நிமிடங்களைத் தவறவிடாதீர்கள். எரிச்சல், கோபம் வரும் காலங்களை தியான ஆராய்ச்சிக் காலங்களாக மாற்றுங்கள்!
பாதகத்தைச் சாதகமாக்கும் துணிச்சல்
- பாதகத்தைப் பார்த்துத் தயங்கினால், வாழ்வின் பாதையே மங்கலாகி, வாழ்வே இருண்டுவிடும்.
- துணிச்சல் மனித இனத்துக்குக் கிடைத்த மாபெரும் பரிசுகளில் ஒன்று.
- தயக்கம், மயக்கம் என்ற இரண்டுமே துணிச்சலற்ற தன்மையின் வெளிப்பாடுகள்.
- இந்த நிமிடத்தில் உங்களிடம் இருக்கும் நிகழ்காலத்தில்தான், எதிர்காலத்தின் தலைவிதி எழுதப்படுகிறது.
பெரிய ஒரு ஆலமரத்திற்கு இணையானது, உங்களுக்குள் இருக்கும் துணிச்சல்!
ஒருநாள் ஒரு விவசாயி, கும்மிருட்டான வேளையில் காட்டுப்பாதையைக் கடந்து செல்ல வேண்டிருந்தது. அங்கே இருந்த ஒரு ஞானி, விவசாயி பாதையைக் கடக்க உதவியாக, ஒரு லாந்தர் விளக்கைக் கொடுத்தார்.
"இங்கிருந்து நகரத்தை அடைய வேண்டும் என்றால், எத்தனை மைல்கள் நடக்க வேண்டும் ?' என்று கேட்டார் விவசாயி.
"பத்து மைல்கள்" என்று பதில் சொன்னார் ஞானி.
"பத்து மைல்கள் நடக்க வேண்டும் என்கிறீர்கள். இந்த லாந்தர் விளக்கு பத்தடிக்குக்கூட பாதையைக் காட்டாது போலிருக்கிறதே" என்று புலம்பினார் விவசாயி. "புறப்பட்டுப் போ, உனக்கு எல்லாம் புலப்படும்" என்றார் ஞானி.
அந்த விவசாயி புறப்பட ஆரம்பித்த பிறகுதான் பத்தடி பத்தடியாக வெளிச்சம் தந்த லாந்தர் விளக்கு, பத்து மைல்களுக்கும் வெளிச்சம்
தந்துகொண்டே இருக்கும் என்கிற உண்மை அவருக்கு உறைத்தது.
ஆயிரம் மைல் ஓட்டம்கூட ஒரு சின்ன அடியில்தான் தொடங்குகிறது என்று ஒரு சீனப் பழமொழி உண்டு.
பாதகங்களைச் சாதகமாக கணச்சலோடு மாற்றுகிறவர்களே உலக வரலாற்றில் உலா வருகிறார்கள்.
எதிர்கொள்ளப்போவது நீங்கள் பெரியதாக இருந்தாலும் கலக்கம் வேண்டாம். தீர்வு சிறியது.
அரிய பிரச்சனைக்குத் தீர்வு காண்பது ஒவ்வொரு சிறிய சிறிய அணுகுமுறைகளின் தொகுப்பாகத்தான் இருக்கும்.
எனவே பிரச்சனைகளின் பூதாகாரத் தன்மையைப் பார்த்துக் கலங்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால், நாமோ பிரச்சனைகளை எதிர்கொள்கிறபோது, திக்குமுக்காடிப் போகிறோம். வெற்றி பெறுகிற மனிதர்கள் அப்படியல்ல. பிரச்சனை என்கிற கர்ப்பத்திற்குள் - தீர்வு என்கிற குழந்தையும் இருக்கிறது என்ற விவரம் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
உலகத்தில் வெற்றி பெற்றவர்களைப் பாருங்கள். துணிச்சல், திட்டமிடல், விடாமுயற்சி, கடின உழைப்பு, இறைச்சித்தம் ... இந்தப் படிகளில் ஏறித்தான் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
அமெரிக்காவைக் கண்டுபிடிக்க கொலம்புஸ், அமெரிக்காவை அடைய வேண்டுமென்று போகவில்லை. பல வருடங்கள் முயற்சிக்குப் பிறகு ஓர் அரசர் கொடுத்த கப்பலில் ஏறினார். மேற்கே நிலப்பரப்பு ஒன்று உண்டு என்கிற உள்ளுணர்வு அவரை உர்தித் தள்ளியது.
தமது சகாக்களோடு மேற்கு நோக்கிக் கடலில் பயணம் செய்தார். துணிச்சலான அவரது முயற்சியில் பல அபாயங்களைச் சந்தித்தார். காற்றும் கடும் மழையும் திமிங்கலங்களின் எதிர்ப்பும் இருந்தன. இறுதியாக உணவுக் கையிருப்பும் தீர்ந்தது. ஊரில் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக இருந்திருப்போமே! எங்களைக் கொண்டுவந்து நடுக்கடலில் தள்ளிவிட்டீரே' என்று நண்பர்களெல்லாம் அவரைத் திட்டித் தீர்த்தனர். அவரது அடிப்படையே ஒரு நிமிடம் ஆட்டம் கண்டது. என்றாலும், துணிச்சல் மாத்திரமே துணையாக இருந்தால் போதும் என்றிருந்தார் அவர்.
மறுநாள் காலை விடிந்த போது நீர்க்காகங்கள் சில பறந்து வருவதைப் பார்த்தார். சற்றைக்கெல்லாம் தொலைவில் மரங்கள் நிறைந்த ஒரு நிலப்பரப்பு தென்பட்டது. அதை ஒரு தீவு என்றுதான் அவர் முதலில் நினைத்தார். எல்லோருக்கும் மகிழ்ச்சி. இறங்கி அங்கே நடந்தபோதுதான் அங்கே வாழுகிறவர்கள் செவ்விந்தியர்கள் என்று கண்டார். துணிச்சலும், அபாயத்தை எதிர்கொள்ளும் ஆற்றவும் விடாமுயற்சியும் இல்லாதிருந்திருந்தால், கொலம்பஸ் உலக வரலாற்றில் இடம் பெற்றிருக்க முடியாது.
சாதகங்களைப் பாதகங்களாக்குகிறவர்கள் சாதாரண மனிதர்கள். பாதகங்களைச் சாதகங்களாகத் துணிச்சலோடு மாற்றுகிறவர்களே உலக வரலாற்றில் உலா வருகிறவர்கள்.
சாதகங்களைப் பாதகங்களாக்குகிறவர்கள் சாதாரண மனிதர்கள். பாதகங்களைச் சாதகங்களாகத் துணிச்சலோடு மாற்றுகிறவர்களே உலக வரலாற்றில் உலா வருகிறவர்கள்!
துணிச்சல் இன்றி வெற்றி இல்லை- துணிச்சல் இன்றி வாழ்வே இல்லை.
துணிச்சல் என்ற ஒரு உணர்வு இருந்தால் போதும், சாதனைக்கான பாதை உருவாகிக் கொண்டே போகும்.
துணிச்சல் என்ற ஒரே ஒரு சிறிய விளக்கு இருந்தால் போதும், வாழ்வை விளங்க வைக்கும் மனத்தெளிவு பிறக்கும். பாதகத்தைச் சாதகமாக்கும் சக்தி பிறக்கும். துணிந்து நில்லுங்கள்!
வெட்டிப்பேச்சு
- ஏன் பேசிக்கொண்டிருக்கிறோம் ? என்ன பேச நினைத்திருந்தோம் ? எப்படிப் பேசிக்கொண்டிருக்கிறோம் ?
-என்ற கேள்விகளை பேசிக்கொண்டிருப்பவர்களிடம் கேட்டால், பலரால் பதில் கூற முடியாது. இப்படி முடியாமல் இருப்பவர்களால்தான் சாதாரண பேச்சுவெட்டிப் பேச்சாக மாறுகிறது.
- வெட்டிப்பேச்சின் இயல்பே ஒரு சூழ்நிலையில் அது உறவை வெட்டும் பேச்சாக மாறும் தன்மை பெற்றுவிடும்! இது கவலைகளுக்கான காரணங்களில் ஒன்று.
- உரையாடலில் வெட்டிப்பேச்சை அனுமதிப்பது "பிரேக்" இல்லாத காரை நகருக்குள் ஓட்ட முயற்சிப்பது போன்றது.
- வெட்டிப்பேச்சில் என்ன பேசுகிறோம் என்ற சுயதெளிவு இருக்காது. பேச்சு, கட்டுப்பாடற்று மனதில் இஷ்டப்படி வந்து கொண்டே இருக்கும். இது பேசுபவர் கேட்பவர் இருவரையும் பாதிக்கும்.
"ஆக்கா, அந்த எதிர் வீட்டுக்காரி இருக்காளே..."
"ச்ச்சின் என்னமா விளையாட றான் பாரு…"
"அந்த எம்.எல்.ஏ.வோட பொண்டாட்டி…"
" அந்த வீரோ யாரையோ…"
"நேக்கு சீரியல்ல…"'
" அந்தச் சாமியார் ஒரு ... "
....இப்படிப் பைசா பிரயோஜனம் இல்லாத விஷயம் பேசுவதில் எல்லோருக்கும் ஏதோ ஒரு குஷி! சிலருக்கு இந்த மாதிரி வெட்டிப்பேச்சு பேசுவதில் இஷ்டமில்லை. என்றாலும், 'என்ன செய்வது ? மற்றவர்கள் பேசும்போது நாம் மட்டும் வாயை மூடிக் கொண்டு இருந்தால் என்னைத் தப்பாக நினைக்கமாட்டார்களா?' என்று சப்பை கட்டுவார்கள்.
அரசியல் - விளையாட்டு - திரைப்படம்...
வெட்டிப்பேச்சு மகாராஜாக்கள் இந்த மூன்று விஷயங்களைத்தான் மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள். போர் அடிக்கிற போது கொஞ்சம் ஆன்மீகத்தையும் கொஞ்சம் அறிவியலையும் கலந்து பேசிவிடுகிறார்கள்.
வெட்டிப்பேச்சு மகாராணிகளின் சப்ஜெக்ட்டுகள் வேறு. தன்னைச் சுற்றி இருப்பவர்கள் பற்றிப் புறம் பேசுவது, டி.வி., சினிமாக்கள் பற்றி அலசி ஆராய்வது, புடவை, நகைநட்டு சமாசாரங்களைப் பேசித் தீர்ப்பதுதான், அவர்கள் வேலை. இந்த விஷயங்கள் பற்றிப் பேசிப்போரடித்து விட்டால் பக்தியையும் சமையலையும் பற்றிப் பேச ஆரம்பித்து விடுவார்கள்.
இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையில், இதுபோன்ற வெட்டிப்பேச்சுகள் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருக்கிறவரை சரி. ஆனால் பொழுதையே போக்கும் அம்சமாகும் போதுதான் விபரீதமான விஷயமாக மாறிவிடுகின்றன.
பாரதத்தில் மனிதசக்தி அதிகமாக இருந்தும் குறைவாகவே பயன்படுத்தப் படுகிறது. வெட்டிப்பேச்சில் அழியும் நேரம் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தப்பட்டால், பாரதம் வல்லரசாக மாறிவிடும்.
வெட்டிப் பேச்சில் ஆரம்பித்து வெட்டுகுத்து வரை சென்ற எத்தனையோ வரலாற்றுக் கொடுமைகள் நமக்குத் தெரிந்த விஷயங்கள்தான்!
விவாகம், தர்க்கம், வாக்குவாகம், வாய்ச்சண்டை, மனஸ்தாபம், சண்டை, சச்சாவு, வெறுப்பு, பிரிவு என்று, சாதாரண பேச்சில் ஆரம்பித்து, பிரிவு வரை போவது, ஒரு தரப்பின் தெளிவின்மையையும் மறுதரப்பின் பொறுமையின்மையையும் படம்பிடித்துக் காட்டுகிறது.
வெட்டிப்பேச்சைக் குறைக்க முடியாதா?. முடியாது. உடனே முடியாது. நாம் எப்போதும் பேசிக் கொண்டே இருக்கிறோம். சில நேரம் வெளியில், பொரும்பாலான நேரம் மனதிற்குள்ளேயே பேசுகிறோம். ஆங்கிலத்தில் இதை'inner chattering' என்பார்கள்.
வெட்டிப் பேச்சு -வெட்டி எண்ணங்கள் உங்கள் மனதை வெட்டிக் கொண்டிருக்கின்றன என்பதற்கான ஆகாரம்.
கனமையில் நீங்கள் யாருடனும் பேசாத வேளையில், உங்களுக்கு நீங்களே பேச ஆரம்பிக்கிறீர்கள். தூங்கிய பிறகு கனவில் பேச ஆரம்பிக்கிறீர்கள். இப்படி இருபத்து நான்கு மணி நேரமும் நீங்கள் பேசிக் கொண்டே இருப்பதால்தான் உங்களால் நிம்மதியாக இருக்க முடிவதில்லை.
ஒரு நிமிடம், இரண்டு நிமிடம் ஒடினால், ஒன்றும் தெரியாது. ஐந்து நிமிடங்கள் ஒடினால், மூச்சு வாங்கும். ஒடிக்கொண்டே இருந்தால், உடம்பு என்னவாகும் ? அதேபோல்கான் மனம் பேசிக் கொண்டே இருந்தாலும் தொல்லைதான் ஏற்படும்.
ஒட்டமாய் ஒடும் மனக் குதிரையையும், ஒயாமல், பட்டிமன்றத்தையும் கொண்டுவராத வரை, நிம்மதி, ஆனந்தம், நோயற்ற வாழ்வு என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஜென் ஒதுக்குப்புறமான பகுதியில் வாழ்ந்து வந்தார். 'அவர் பெரிய ஞானி என்றும் எல்லோருடைய பிரச்சனைகளுக்கும் தெளிவான ஆறுதலும் விளக்கமும் அளிக்கிறார் "என்றும் ஒரு பேராசிரியருக்குச் செய்தி கிடைத்தது.
பேராசிரியரும் அவரைப் பார்க்கச் சென்றார். நிம்மதி பற்றியும் பேரானந்தத்தைப் பற்றியும் தனக்குச் சொல்லித் தர வேண்டும் என்றார். பேராசிரியர் முன்னிலையில் ஜென் ஞானி செய்க செயல் குழுப்பம் தருவதாகவே இருந்தது.
தனக்கு முன்பிருந்த இரண்டு டம்ளரில் நீர் நிரம்ப இருந்தது. இன்னொன்று காலியாக இருந்தது. காலியான டம்ளரை நிரப்பி விட்டு, நீர் நிறைந்த டம்ளரில் மீண்டும் தண்ணீரை ஊற்றினார் ஞானி. அது நிரம்பி வழிந்தது.
" ஞானியே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?" என்று கேட்டார் பேராசிரியர்.
" ஏற்கெனவே நிறைந்திருக்கும் டம்ளரில் எப்படி ஒரு சொட்டுத் தண்ணீர்கூட ஊற்ற முடியாதோ, அதுபோல ஏற்கெனவே ஏகப்பட்ட விஷயங்களைப் போட்டு உங்கள் மனதை நிரப்பி வைத்திருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் உங்கள் மனத்திலிருந்து காலி செய்யாகவரை, நிம்மதி பற்றியும் பேரானந்தம் பற்றியும் உங்களுக்குச் சொல்லித் தர முடியாது" என்றார் ஞானி.
'அவர் சொன்னார், இவர் சொன்னார்' என்று, பலவிதமான விஷயங்களை நாம் மனதில் போட்டு அடைத்து வைத்திருக்கிறோம். மதங்களின் பெயரால், இயக்கங்களின் பெயரால் நீங்கள் சேகரித்து வைக்கிற விஷயங்களைத் தவிர்த்து, வேறெதுவும் நீங்கள் பேச முடியாது. இவற்றைப் பொறுத்துதான் உங்கள் 'inner chattering' (மன உள்றல்) அமையும்.
எனவே முதல் வேலையாக மனக் குப்பைக்கொட்டியில் தேவையில்லாமல் சேர்ந்து, துர்நாற்றம் அடிக்கும் குப்பைக்கூளங்களை எடுத்து வெளியே எறியுங்கள். முக்கியமான விஷயம், மீண்டும் குப்பைகள் சேராத படிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள்!
அகத்தின் (உணர்வின்) அழகு முகத்தில் தெரியும். மனதின் (எண்ணக்கின்) அழகு பேச்சில் தெரியும்.
தேவையான விஷயங்கள் மட்டுமே உங்கள் மன வங்கியில் சேரும்போது, உங்களிடமிருந்து வெட்டிச் செயலோ, வெட்டிப்பேச்சோ வெளிப்பட வாய்ப்பே இல்லை. உங்கள் வாழ்க்கையும் ஆனந்தம் நிறைந்ததாக இருக்கும்.
மனதைச் சுத்தப்படுத்துங்கள் - பேச்சு அழகாகும். உங்களை வெறுத்தவர்கள் விரும்ப ஆரம்பிப்பார்கள். பேச்சை எவ்வளவு சீக்கிரம் அழகாக்க முடியுமோ. அவ்வளவு சீக்கிரம் அழகாக்குங்கள்!
உண்மை
வெட்டிப்பேச்சில் என்ன பேசுகிறோம் என்ற சுயதெளிவு இருக்காது. பேச்சு, கட்டுப்பாடற்று மனதில் இஷ்டப்படி வந்து கொண்டே இருக்கும். இது பேசுபவர் கேட்பவர் இருவரையும் பாதிக்கும்.
முட்டாள்தனம்
- பைத்தியமும் ஒரு என்று கூட சொல்லிக்கொள்ளாது, ஏற்றுக்கொள்ளாது. இதில் பாதிப்புமில்லை, பலனுமில்லை.
- எந்த ஒரு முட்டாளும் தன்னை முட்டாள் என்று சொல்லிக் கொள்ள மாட்டார். எண்ணிக் கொள்ளவும் மாட்டார். இதில் பாதிப்புண்டு, ஆனால் பலனில்லை.
- அதேபோல், எந்த ஒரு புத்திசாலியும் தன்னைப் புத்திசாலி என்று சொல்லிக் கொள்ளவோ, எண்ணிக் கொள்ளவோ மாட்டார். இதில் பாதிப்பில்லை, நிச்சயம் பலனுண்டு.
- நீங்கள் பாதிப்படைந்தவரா, பலன் அடைந்தவரா? நீங்கள்தான் தேர்வு செய்து
தன் தகுதியையும் தன் கணக்கில் கொள்ளாமல் 'நான் ஒரு புத்தசாலி' என்று அழுத்தமாக (தெரிந்தோ, தெரியாமலோ) நினைக்கும் நினைவு என்ற விதையில் இருந்துதான் 'முட்டாள்தனம்' என்னும் முட்புதர் நமக்குத் தெரியாமலே வளர்கிறது.
பரபரப்பூட்டும் புதியதொரு ஆறாய்ச்சிக் கட்டுரை ஒன்றை முதுகலை மாணவர் பல்கலைக்கழகத்தில் வாசித்தார். அரங்கமே அதை ஆர்வமாகக் கேட்டது. உரை முடிந்ததும் கைத்தட்ட, அரங்கமே அதிர்ந்தது.
அனரல், முன்வரிசையில் இருந்த முனைவர் தூங்கிக் கொண்டிருந்தார். மாணவர், "என்னய்யா, நம்மளை மாதிரி ஒருத்தன் புடிக்காத மாதிரி ஒரு கருத்தை உருவாக்கியிருக்கிறேனர்?" என்று கேட்டதற்கு, "இது பொய் கட்டுரை. இந்தக் கட்டுரையில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் ஏற்கெனவே ஒரு நூலில் வெளிவந்து விட்டது. என்னை ஏமாற்ற முடியாது" என்றார் முனைவர்.
அதிர்ச்சியில் மாணவர் ஆடிப் போனார். காரணம் அந்தக் கட்டுரை முழுக்க முழுக்க அவரே உருவாக்கியது. "நாளை விளைவு, மாணவரின் அன்றிரவு தூக்கம் கலைந்து போனது.
அடுத்த நாள் காலை முனைவர், "இதைத் திறந்து பார்" எனச் சொல்லி அந்த நூலைத் தந்தார்.
திறந்த மாணவன் அதிர்ந்தார். அது ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி.
- மேலே சொன்னது மிகைப்படுத்தப்பட்ட கதையல்ல.
மனிதர்களைக் கொல்ல ... 0.02 நொடி மட்டுமே அந்தச் சிறு அணுகுண்டுக்குத் தேவைப்பட்டது! இந்த அணுகுண்டை உருவாக்கிய மனோசக்தி இதைவிட வேகமானது. மிகக் கூட்சுமமானது. ஒரு விபரீதம் ... பயன்படுத்தப்படாவிட்டால் அணுகுண்டு சும்மாயிருக்கும். ஆனால், மனோசக்தி பயன்படாவிட்டால் அது எதிர்மறை சக்தியாகிவிடும். மந்த மனம் தரும் உபாதைகள் ... உடல் எனும் உலகில், துக்கம் எனும் அணுகுண்டுகளைத் தொடர்ந்து பொழிந்தபடியே இருக்கும். மனம் கூட! இல்லை மனதைப் பயன்படுத்து. மந்தமாய் அது கிடக்க
என்றும் அனுமதிக்காதே!
உள்உலக நிஜம்.
- புத்திசாலித்தனம் எனச் சொல்லி தலைதூக்கும் முட்டாள்தனத்திற்கான உதரரணம். மாணவனின் படைப்பாற்றலைக்கூட மட்டந்தட்டிப் பார்த்த முனைவர் போலவே ... எல்லோரையும் எல்லாவற்றையும் மட்டந்தட்டும் குறைகாணும் முட்டாள்தனம் கண்டுபிடிக்கப்பட வேண்டும். கரைக்கப்பட வேண்டும்.
"என்ன இந்தத் தலைப்பே ரொம்ப நெகடிவ் ஆக இருக்கிறதே?" என்று நீங்கள் எண்ணுகிறீர்களா... ? என்ன செய்ய... சில நேரங்களில் உண்மையைப் போட்டு உடைக்க வேண்டிதான் இருக்கிறது. நம்மில் பலரின் மனதில் வெகுநாளாக
மீண்டும் மீண்டும் எதை நாம் செய்கிறோமோ ... அதுவேதான் நாம்! - அரிஸ்டாட்டில் நல்லவர் - வல்லவர் -கெட்டவர்- அயோக்கியவர் -என்பதையெல்லாம் நிர்ணயிப்பது இதுவே! இனி செய்யப்போவதே இனி வரும் வாழ்வை நிர்ணயிக்கும் - அதே நிர்ணயியுங்கள். வளமாவீர்.
இருக்கும் ஒரு கட்டியைத் தொடப்போகிறேன். சிலருக்கு வலிக்கலாம்…
வேறு வழியில்லை. அந்தக் கட்டிக்கு இப்போதாவது மருத்துவம் செய்வோம். இல்லையென்றால் நாளுக்கு நாள் அது புரையோடிக் கொண்டேயிருக்கும்.
இந்தக் கட்டுரை எனக்காகத்தான் எழுதப்பட்டிருக்குமோ?" என்ற எண்ணம் வருபவர்கள் தொடர்ந்து படியுங்கள்.
'இந்தக் கட்டுரை எனக்காக எழுதப்பட்டதல்ல...' என்று தோன்றினால், ஒரு விஷயத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். இந்தக் கட்டுரை நிச்சயம் உங்களுக்குத்தான்.
★ எதையும் செய்யாமல் சோம்பேறியாக இருப்பது நிச்சயம் முட்டாள்தனம்.
★ உழைத்துக்கொண்டே, சம்பாதித்துக் கொண்டே இருப்பது புத்தசாலித்தனமல்ல.
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே ! சம்பாதித்துச் சம்பாதித்து மடிவதற்கல்ல.
இந்த வாசகத்திற்கேற்ற ஒரு மருத்துவரின் கதை.
Dr. மூர்க் முகுந்த் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மிகப் பிரபலமான அறுவை சிகிச்சை நிபுணர். மருத்துவக் கல்லுரியின் H.O.D.மாநகரத்தின் நடுவில் பிரமாண்டமாகக் கட்டப்பட்ட மருத்துவமனை ஒன்று இவருக்குச் சொந்தமானது.
மூர்க் முகுந்தின் P.A., "எங்க டாக்டர் மெடிக்கல் அலோஸியேஷனில் மிக முக்கிய பொறுப்பு வகிப்பவர். வாரத்தில் இரண்டு நாள் மற்ற ஊர்களில் கான்ஃப்ரன்ஸ், மருத்துவமுகாம், விஸிட்டிங் என்று சுற்றிக்கொண்டே இருப்பார்.
இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வெளிநாடு சென்று வருபவர். இது இல்லாமல் அவர் செய்யும் பிஸினஸ்... அவருடைய எஸ்டேட்.." என்று Dr.மூர்க் முகுந்தின் பெருமையை அடுக்கிக்கொண்டே போனார்.
இதைக் கேட்ட அடுத்த கணம் எனக்கு விவேகானந்தரின் நினைவுதான் வந்தது. அமெரிக்காவில் விவேகானந்தரை ஒரு முறை அமெரிக்காவின் அதிநவீன வளர்ச்சியைக் காண்பிப்பதற்காக அமெரிக்காவின் பல முக்கியமான இடங்களுக்கும் கேளிக்கை இடங்களுக்கும் அழைத்துச் சென்றார்கள்.
விவேகானந்தர் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, 'என்ன மாதிரி பாராட்டப் போகிறார்' என்று அமெரிக்கர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள்.
விவேகானந்தர், "இவ்வளவு கேளிக்கை அம்சங்கள் மற்றும் பொழுதுபோக்கு அமைப்புகளை நீங்கள் உருவாக்கியிருப்பதையும் அதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதையும் பார்க்கும் போது ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது.
நீங்கள் எந்த அளவுக்கு மனக்கஷ்டத்திலும் இருக்கிறீர்கள்'' என்று அமெரிக்கர்களின் அவலநிலையைப் புட்டு வைத்தார்.
அமெரிக்கர்களுக்கு ஒரே திகைப்பு ...
விவேகானந்தர் தொடர்ந்து, "மக்கள் மனக் கஷ்டத்தாலும், துக்கத்தாலும் பீடிக்கப்படாமல் ஆனந்தமாக இருந்தால், இங்கே ஏன் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் ?
| சரியாய் சொல்பவர், தவறாய்கூடக் குறைகளை மதிக்கமாட்டார். தங்களின் குறைகளைக் கண்டுபிடிப்பதில்லை. - உண்மை I |
|---|
அவர்களுடைய வீடே சொர்க்கமாக இருக்காதா???" என்று கேட்டார்.
இதே கதைகள் Dr. மூர்க் முகுந்தனின் விஷயத்திலும்.
அமெரிக்கர்களின் பொழுதுபோக்கு அம்சங்கள் அவர்களின் ஆனந்தமில்லாத வாழ்வை மறக்கடிப்பதற்காக உருவாக்கப்பட்ட வர்ணப் பூச்சு.
மூர்க் முகுந்தின் பரபரப்பான வாழ்க்கை அவரது சஞ்சலத்தையும் ஆழமற்ற வாழ்க்கையையும் மறைத்து, அவரை ஒரு சாதனையாளராக மட்டும் உலகுக்குக் காண்பிக்கும் வர்ணப்பூச்சு மட்டுமே.
மருத்துவரின் P.A விடம் "அடுத்த பிறவியில் நீங்கள் உங்களுடைய டாக்டர் போல வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா?" என்று கேட்டேன்.
" ஓ அப்படியா ... அவ்வளவு பெரிய மருத்துவரா உங்க Dr. மூர்க் முகுந்த்!" என்ற பாணியில் பதில் வருவமென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த P.A. இந்தக் கேள்விக்குக் கொஞ்சம் தடுமாறினார்.
கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு, "ம்ஹம்… என்னால் முடியாது, எனக்கு வேண்டாம் அப்படி ஒரு வாழ்க்கை" என்றார்.
" என்ன இப்படிச் சொல்கிறீர்கள். அவர் எவ்வளவு பெரிய மருத்துவர் எவ்வளவு சொத்து படைத்தவர்! அவர் நினைத்தால் நினைத்ததை வாங்க முடியும், சாதிக்க முடியும் ! இவ்வளவு அருமையான வாழ்க்கையை வேண்டாம் என்கிறீர்களே... ஏன்?" என்று கேட்டேன்.
"இல்லை சாமி, உங்களுக்குத் தெரியாது ...
அவரை பற்றி நீங்கள் சொன்னதெல்லாம் உண்மைதான். அது அவரது வெளி வாழ்க்கை மட்டுமே. நிஜ வாழ்க்கையில் எல்லாமே தலைகீழ்" என்றார் பி.ஏ.
"என்ன சொல்கிறீர்கள் ... ?"
"ஆமாம் …
தான் முட்டாள் என்ற உண்மை தெரியாததால் புத்திசாலிகள் போல் வாழ்கிறார்கள் பல முட்டாள்கள். உண்மை II
அவர் ரொம்பக் கண்டிப்பானவர். காலையில் சரியாக ஏழு மணிக்கு மருத்துவமனைக்கு நோயாளிகளைப் பார்க்க வந்துவிடுவார். எல்லோரையும் பார்த்து விட்டு திரும்ப வீட்டுக்கு ஒன்பது மணிக்குத்தான் செல்வார்.
அரை மணி நேரம் வீட்டில் தங்கமாட்டார். உடனே செல்போனை கையில் எடுத்துக் கொண்டு வியாபாரம், எஸ்டேட் என்று செல்போனோடு நேரத்தைச் செலவிட ஆரம்பித்து விடுவார்.
பத்து மணிக்கு புறநோயாளிகளைப் பார்க்க ஆரம்பித்தால், மதியம் இரண்டு மணி அல்லது மூன்று மணி ஆகிவிடும். (இதில் வாரம் இரண்டு நாள் மருத்துவக் கல்லூரிக்கு வேறு சென்றாக வேண்டும் ).
மதியம் போய் அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு, உடனே படுத்துக்கொள்வார். அவருக்கு உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் B.P. (டையபடிஸ்) இருப்பதால் படுத்த உடன் எழுந்திருக்க முடியாது.
இருந்தும் என்ன செய்வது, கடமை அழைப்பதால் கஷ்டப்பட்டு எழுந்து ஐந்து மணிக்கு மீண்டும் மருத்துவமனைக்கு வந்தால்... அறுவை சிகிச்சை எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்ப, பத்து பதினோரு மணி ஆகிவிடும். சில நாள் பன்னிரெண்டுமணி கூட ஆகிவிடும்.
வீடு சென்றதும் சாப்பிட்டுவிட்டு உடனே தூங்கச் செல்வதற்குத்தான் அவருக்கு நேரம் சரியாக இருக்கும்.
திரும்ப காலை ஆறு மணி...
என்ன வாழ்க்கை இது .... ! கடந்த முப்பது வருடமாக இதே மாதிரிதான் அவருடைய வாழ்க்கை போகிறது.
நாம் பெருமையாய்ப் பார்க்கும் பல விஷயங்களை, நமக்குத் தருவதாய் இறைவன் சொன்னால், அவர் பேச்சு முடியும் முன்பே அதை வேண்டாமென்போம். அது பார்க்க ரசிக்க மட்டுமே வாழ அல்ல என்போம்.
வாழ்க்கை ரகசியம்
மனைவியோடு உட்கார்ந்து அன்பாகப் பேச ஒரு மணிநேரம்கூட முழுமையாகக் கிடைப்பதில்லை.
அவருடைய பிள்ளை தந்தையோடு பேச விரும்பினால் மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளுக்கிடையே பேசிவிட்டுப் போக வேண்டும்.
இரண்டு, மூன்று வருடத்திற்கு ஒரு முறை நான்கைந்து நாட்கள் அவர்கள் செல்லும் வெளியூர் பயணம்தான், அவர் தன் குடும்பத்தோடு வாழ்ந்த விரல் விட்டு எண்ணும் நாட்கள்.
குடும்ப வாழ்க்கையில் அவருக்கோ, அவர் மனைவிக்கோ, வெளிநாட்டில் படிக்கும் அவரது பிள்ளைகளுக்கோ திருப்தியே இல்லை.
திருப்தியில்லாமல் வெறும் பணத்தையும் புகழையும் சம்பாதித்து அடுக்கிக்கொண்டே போவதால் யாருக்கு என்ன பயன் ?
நான் சந்தோஷமான, சுலபமான வாழ்க்கை வாழவே விரும்பறேன்.
தொழிலோடும் அவர் போல் குடும்பம் பணத்தோடும் நடத்த விரும்பவில்லை.
அடுத்த பிறவியில் டாக்டர் போல எனக்கு ஒரு வாழ்க்கை கிடைக்குமென்றால், நான் இப்போது வாழும் வாழ்க்கையைவிட, பல மடங்கு நிம்மதியான, கஷ்டம் குறைந்த இப்போது வாழும் வாழ்க்கையே மேல்" என்று அவரது டாக்டர் மேல் தான் கொண்டிருந்த பரிதாப உணர்வைக் கொட்டிக் தீர்த்துவிட்டார்.
"அவர் வாழும் வாழ்க்கை புத்திசாலித் தனமில்லாதது, வசந்தமில்லாதது என்பதை
உங்களால் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறதா?' என்று கேட்டேன்.
நதி உன் வாய் தேடி வந்து
பாயாது.
காகம் கத்தும் நீதான் குனிந்து குடிக்க வேண்டும். வாழ்க்கை
உன்னுடைய எல்லாத்
தாகங்களையும் நீ நிச்சயம்
போதுமானதாக உள்ளது. அது, நீ குனியும் அளவைப்
பொறுத்து தாகம் தீர்க்கும்.
எட்டும் தூரத்திலுள்ள
எல்லையில்லா ஆனந்தத்தை
எட்டிப்பிடி, அது ...
எட்டுத்திசைகளில் இருந்தும்
எல்லாச் சௌகரியங்களையும்
ஏகமாய் வர வைக்கும்.
"ம்ம் ... முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது" என்றார்.
"இப்போதாவது நீங்கள் பார்வையாளராக ஒரு Dr. மூர்க் முகுந்தின் கஷ்டங்கள் உங்களுக்கு நன்றாகத் தெரிகிறது. உங்களுக்குத் தெரியும் அளவுக்கு டாக்டருக்கு அவரைப் பற்றித் தெரியுமா?" என்று கேட்டேன்.
"நிச்சயமாகத் தெரியாது" என்று அழுத்தமாகக் கூறினார்.
"டாக்டருக்கே அவரைப் பற்றித் தெரியாத போது…
உங்களுக்கு மட்டும் உங்களைப் பற்றி முழுமையாக எப்படித் தெரியும் ?" என்று கேட்டேன்.
இந்த கேள்வியில் மனுஷன் கொஞ்சம் ஆடிவிட்டார்.
"நன்றாக உங்களை நீங்களே ஆராயுங்கள்" என்றேன்.
சில நிமிடங்கள் கழித்து, வேர்த்து வடியும் முகத்தோடு, "அமாம், என்னைப் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியவில்லைதான்" என்றார் பரிதாபமாக.
மேலும், கஷ்டப்படுவர்களைப் பார்த்து - நான் நல்லா இருப்பதாகவும், புத்தசாலித்தனமான ஒரு வாழ்ககை வாழ்வதாகவும் நம்பிக் கொண்டிருந்திருக்கிறேன்' என்ற உண்மையை ஒப்புக் கொண்டு தன்னைத் திருத்திக் கொள்ள ஆரம்பத்தார்.
இந்த பி.ஏ. போல - பல அன்பர்களுக்கு அடுத்தவர்களுடைய முட்டாள்தனங்கள் பல சமயம் நன்றாகத் தெரிகிறது. ஆனால், தங்களைப் பற்றிய உண்மைகள் மட்டும் தங்களுக்குத் தெரியவில்லை.
ஞானம் அடையாத வரை ஏதாவது ஒரு முட்டாள்தனம் மனிதரை ஒட்டிக்கொண்டே இருக்கும்.
ஹஸிட் ஞானி ஜு-மல்கி, "நாம் ஒவ்வொருவரிடமும் கற்ற கல்வி ரீதியாக கலாசார ரீதியாக, சமுதாய ரீதியாக, மத ரீதியாக புத்திசாலித்தனங்கள் ஒட்டிக் கொண்டிருந்தாலும்,
நம்மிடம் பக்குவப்படாத பகுதிகள் நிறைய இருக்கத்தான் செய்கின்றன" என்றார்.
| புரிதல் | இருளைச் சபிப்பதைவிட ஒரு சிறு விளக்கேற்றுவது சிறந்தது. - கன்பூசியஸ் இருள் - முட்டாள்தனம் ஒளி - புத்திசாலித்தனம் |
வாம்க்கையை முழுமையாக வாழ்ந்த திருப்தி நம்மிடமில்லை என்றாலே நன்றாக புரிந்துகொள்ளலாம் -இறைவன் நமக்குக் கொடுத்த புத்திசாலித்தனம் என்னும் சக்தியை நாம் பயன்படுத்தவில்லை என்று.
ஒவ்வொருவருக்கும் மற்றவர்களின் குறைகள் பளிச்சென்று தெரிகிறது.
ஆனால் அவரவரின் குறைகள் மங்கலாகக்கூடத் தெரிவதில்லை.
திருப்தியை வீண்டிக்கச் செய்யும் முட்டாள்தனங்கள் எங்கு ஒளிந்திருக்கின்றன என ஆாயங்கள்.
கலந்தாலோசியுங்கள்.
ஒருவேளை உங்களைப் போலவே உங்கள் உறவுகளும் மற்றவர்களின் குறைகளைச் சரியாய் சுட்டிக்காட்டும் புத்தசாலிகளாக இருக்கலாம்.
வாழ்வின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் முழுமையாக அனுபவிக்க, இயல்பாக வாழு, இறைவன் கொடுத்த புத்தி என்னும் சக்தியை முழுமையாகப் பயன்படுத்த ஆரம்பியுங்கள்.
புத்திசாலித்தனம் பொங்க ஆரம்பித்துவிடும்.
வாழ்ந்த திருப்தி கிடைக்குமளவுக்கு அனுபவித்து வாழ ஆரம்பிப்பீர்கள்.
அர்த்தமுள்ள சம்பவம் ...
பெற்றோர் பிள்ளையிடம்… "உன்னை விட சிறியவன் டாம். ஆனால், உன்னை விட அதிக மதிப்பெண்களையே
டாம் தொடர்ந்து வாங்குவது எப்படி ?''
எனக் கேட்டதற்கு,
சிறுவன், ''டாமின்
பெற்றோர் புத்திசாலிகள்'' என்றான்.
நாம் நம்புமளவுக்கு
நாம் புத்திசாலிகளா ? விடை காணுங்கள்!
சந்தேகப்படுங்கள் ... தவறுகள் உங்களுக்கும் தெரியட்டும்!
அடுத்தவர்கள் உண்மை பேசுவதாக நாம் நம்புவதே இல்லை. காரணம், நாம் உண்மை பேசுவதே இல்லை. நம்மைப் போலவே எல்லோரும் இருப்பதாக நம்புவதால், அவர்கள் பெரும்பாலும் பொய்களை உண்மை போல் பேசுகிறார்கள் என நம்புகிறோம்.
நீங்கள் எல்லோரையும் சந்தேகிக்கிறீர்கள். எப்போதும் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறீர்கள். ஆனால் உங்களை ஒருபோதும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதில்லை.
அப்படி ஒருமுறை செய்திருந்தால்கூட அடுத்தவரின் குறையைக் கண்டுபிடிப்பதை விட இன்னும் துல்லியமாய் உங்களைப் பற்றிக் கண்டுபிடித்திருப்பீர்கள்.
நாம் என்னதான் விளக்கமாக எடுத்துச் சொன்னாலும் அடுத்தவர்கள் அவர்களின் குறைகளை திருத்திக் கொள்ளவோ, கேட்டுக்கொள்ளவோ தயாராக இல்லை.
தாங்கள் புத்திசாலிகள் என்றும், தாங்கள் மிகவும் சரியான நபர் என்றும்தான் அந்து நபர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
திருந்த கிடைக்கும் வாய்ப்பைத் தவற விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பரிதாபம்!
இதேபோல்தானே நீங்களும் தொடர்ந்து திருந்த கிடைக்கும் வாய்ப்பைத் தவறவிட்டுக் கொண்டேயிருப்பீர்கள் ?
ஏதோ சில நேரங்களில் நம்மைப் பற்றி ஆராயும்போது,
சில குறைகளைக் கண்டுபிடித்ததும்
அவை திருத்தம் நோக்கிச் செல்லாமல்,
உள் மனதுக்கு மணி கட்டுவது யார் ?
வருத்தம் நோக்கியே இழுத்துச் செல்கின்றன. இது தேவையற்றது.
எனவே சந்தேகப்படுங்கள்.
உங்களின் குணச்சந்துகள் வெளிச்சத்துக்கு வரட்டும்.
அடுத்தவருக்கு மட்டுமே தெரிந்திருந்த உங்களின் குறைகள், இனி உங்களுக்குத் தெரிய ஆரம்பிக்கட்டும்.
அடுத்தவர்களின்மேல் குறைந்தது ஒரு நூலிழை அளவாவது சந்தேகம் எப்போதும் மனிதருக்குள்ளிருந்து வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும்.
உன்னை சந்தேகி ... சுகதேசி ஆகி வாழும் குண வழி தெரியும்!
சந்தேக அம்பை உங்களை நோக்கித் திருப்புங்கள்.
சந்தேகம் பிறக்கும் போதெல்லாம் அந்தச் சந்தேகக் காலங்கள் தியான காலங்களாகட்டும்!
படிப்பு ஒரு சுமை
படிப்பு ஒரு கலை.
- வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படாத வரை படிப்பில் துடிப்பும் ஆர்வமும் ஏற்படாது.
- படிப்பைச் சுற்றிச் சமுதாயம் உருவாக்கும் கட்டாயப்படுத்தல்களும், கஷ்டங்களும்தான் படிப்பின் மீது வெறுப்பை உண்டு பண்ணுகின்றன.
- மனதில் வெறுப்போடு ஓர் ஓவியக்கலையையோ, சிற்பக் கலையையோ கற்றுக்கொள்வது கடினம்.
- வெறுப்போடு கற்றுக்கொள்ள முயன்றால், கலைகூட கவலையைத்தான் உண்டுபண்ணும்.
அது சுமையாகத்தான் தெரியும். இது படிப்பு சுமையாகத் தெரிவதின் சூட்சுமம்.
வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிப்பதற்குப் படிப்பு நமக்கு ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறதா?
ஒன்று, பல்வேறு பிரச்சனையின் காரணமாக, ஒழுங்காகப் படிக்காமலேயே, வாழ்க்கையைப் புரிந்துகொள்ளாமலேயே போய்விடுதிறார்கள் பலர். இதனால் வாழ்க்கை என்றால் என்னவென்று அவர்களுக்குப் புரிவதே இல்லை. இவர்கள் பிற்காலத்தில் இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸில் மாட்டித் தவிக்க நேரிடும்.
இன்னொரு நிலையில் நிறையப் படித்து, இரண்டு மூன்று பி.ஹெச்.டி. வாங்கிவிடுகிறார்கள் சிலர். நிறையப் படிக்குவிட்டதால், அவர்களைப் பற்றி அவர்களுக்கே எண்ணம் வந்துவிடுகிறது. சுப்பீரியாரிட்டி காம்பளக்ஸில் மாட்டித் தவிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். முடிவில் இருவருமே வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் திணறுவார்கள்.
உண்மையில், அனந்தத்திற்கும் முட்டுக்கட்டை இல்லை. உண்மையான படிப்பு என்பது நீங்கள் உங்களைப் புரிந்து கொள்வதற்காக உதவும் ஒரு வழிமுறை. உலக வாழ்க்கையைப் பொறுத்த அளவு, படிப்பு என்பது, கல்வி என்பது உலக வாழ்க்கையை நீங்கள் புரிந்து கொண்டு நல்ல வாழ்க்கை வாழ்வதற்காக.
உங்களை நீங்களே புரிந்துகொள்வது, உலகத்தை நீங்கள் புரிந்துகொள்வது, இரண்டுமே நல்ல வாழ்க்கைக்காகத்தான். இரண்டில் உங்களைப் புரிந்துகொள்வது சாத்தியம், உலகத்தைப் புரிந்துகொள்வது மிகக்கடினம்.
உங்களை நீங்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்தால் உங்களுக்குள்ளே நடக்கும் படித்தல் என்ற நிகழ்வும் வெகு இயல்பான,
வெகு சுலபமான ஒரு விஷயமாகிவிடும். உங்களை நீங்கள் புரிந்துகொள்ள ஆரம்பிக்காத வரை படித்தல் ஒரு சுமையாகத்தான் தெரியும்.
எப்படிப் படிப்பது என்பதைப் பற்றி நமக்குப் பல தவறான அபிப்பிராயங்கள் இருக்கின்றன. இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்ல வேண்டுமெனில், எப்படியெல்லாம் குழந்தைகளைப் படிக்க வைக்கக்கூடாகோ, அப்படியெல்லாம் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். கல்வி கற்றுத் தருகிறோம் என்கிற பெயரில், பிஞ்சுக் குழந்தைகளைச் சில ஆசிரியர்கள் படுத்துகிற பாடு கொடுமையானது.
குழந்தைகளுக்கு எதை, எப்படிக் கற்றுத் தர வேண்டும் என்பதை அந்த ஆசிரியர்களுக்குக் கற்றுத் தா வேண்டியது இப்போது அவசியத்திலும் அவசியம்.
குழந்தைகள் அபரிமிதமான கற்பனை வளம் கொண்டவர்கள். நாம் நினைத்துப் பார்க்காத கோணங்களில் எல்லாம் சிந்தித்துச் செயல்படும் வல்லமை கொண்டவர்கள். அவர்களின் கிரியாசக்தியை நாம் தெரிந்து கொள்வதில்லை. நாம் குழந்தைகளை எழுத்துக்கள் எழுதப்படாத சிலேட்டுகள் என்று நினைக்கிறோம்.
அதில் அந்தக் குழந்தையே ஏதாவது எழுதி விடுவதற்குள், நாம் எழுதிவிட வேண்டும் என்று துடிக்கிறோம்.
விளைவு, விளையாட வேண்டிய வயதில், குழந்தைகள் விரல் வீங்க எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அணிலையும், ஆந்தையையும் நேரில் பார்த்து ஆச்சரியப்பட வேண்டிய நேரத்தில், புத்தகங்களில் மட்டுமே பார்க்கிறார்கள். புதுப்புது வார்த்தைகளை விளையாட்டாக கற்றுக் கொள்ள வேண்டிய வயதில்… 'இதைப்படி, அதைப்படி' என்று குழந்தைகள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
படிப்பதற்காக, இப்படிக் கட்டாயப்படுத்தும்போது, படிப்பின் மீதே மனதில் வெறுப்பு உண்டாகிறது. இதனால் படிப்பின் மீதான கவனம் சிதறி, படிப்பற்கு நேர் எதிரான டி.வி. விளையாட்டு, அரட்டை, கெட்டப் பழக்கவழக்கங்கள் என்று கேடி ஒட ஆரம்பித்து விடுகிறார்கள்.
வாலிப வயதான பிறகும் இப்படிப்பட்ட வற்புறுத்தல் தொடர்வதால், சில இளைஞர்கள் போதைப் பழக்கங்களுக்குக்கூட அடிமையாகி விடுகிறார்கள்.
படிப்பைத் தாண்டிய விஷயங்களில் அதிக ஈடுபாடு ஏற்படக் காரணம்,
| | உங்களை நீங்களே புரிந்துகொள்வது, உலகத்தை நீங்கள் | | - | புரிந்துகொள்வது, இரண்டுமே நல்ல வாழ்க்கைக்காகத்தான். | | | இரண்டில் உலகத்தைப் புரிந்துகொள்வது மிகக்கடினம். உங்களை | | | நீங்களே புரிந்துகொள்வது சாத்தியம்! |
டி.வி.யிலிருந்து போதைப் பழக்கம் வரை அதிக சந்தோஷம் தருகின்றன. அதுதான் காரணம் என்பது தவறான கண்ணோட்டம். படிப்பின் மீது தெரிந்தோ, தெரியாமலோ உருவாக்கப்பட்ட அதிக வெறுப்பும், கஷ்டமும்தான், மற்ற விஷயங்களில் ஈர்ப்பையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்துகின்றன. இது புரிந்தால் பாதிப்பிரச்சனை தீர்ந்துவிடும்.
சமீபத்தில் தன் இருபத்திரண்டு வயது மகனோடு என்னைத் தேடி வந்தார் ஒருவர், மகன், பெங்களூரில் மருத்துவத் கல்லூரியில் படிக்கிறானாம். மருத்துவத் கல்லூரியில் மருத்துவம் படித்தானோ இல்லையோ... நன்றாக கஞ்சா இழுக்கக் கற்றுக்கொண்டான். போதை மாத்திரைகள், ஊசிகள் என்று அவன் காலம் போதையில் வேகமாகக் கழிந்திருக்கிறது.
இப்படியே போனால் மகனைப் பறிகொடுத்து விட வேண்டியதுதான் என்று பயந்து என்னிடம் அமைத்து வந்திருந்தார் அந்தப் பெரியவர்.
பையனோடு சில நிமிடங்கள் பேசிய பிறகுதான் தெரிந்தது. மருத்துவம் படிக்க அவனுக்கு எந்த விருப்பமும் இல்லை என்பது. பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் வேண்டாவெறுப்பாக மருத்துவம் படிக்க ஆரம்பித்தவன். இலகுவாகப் போதை ,வலையில் சிக்கிக் கொண்டிருக்கிறான்.
அவன் நிலையை அவனிடமே பக்குவமாக எடுத்துச் சொன்ன போது, தன் தவறை எளிதில் புரிந்து கொண்டான். அவனை மிகச் சுலபமாக அந்தப் பழக்கத்திலிருந்து மீட்டு வர முடிந்தது. சாதாரண வெறுப்பு அந்த அளவுக்கு தன்னை ஆட்டிப்படைத்து விட்டது என்று உணர்ந்து கொண்டான். படிப்பின் மீதிருந்த வெறுப்பு மறைந்து விருப்பம் பிறந்தது.
நன்றாக படிக்காதவர்கள், நன்றாக படிக்க இயலாதவர்கள் என்பது தவறு.
படிக்கிற காலத்தில் நன்றாகப் படிக்கத் தவறியவர்கள் என்பதுதான் சரி.
உண்மையில் எல்லோரும் நன்றாகப் படிக்கும் திறமை கொண்டவர்கள் தான்.
நன்றாக படிக்காதவர்கள், நன்றாக படிக்க இயலாதவர்கள் என்பது தவறு. படிக்கிற காலத்தில் நன்றாகப் படிக்கத் தவறியவர்கள் என்பதுதான் சரி.
படிப்பு என்பது இன்றைய வாழ்க்கைக்கு, இன்றைய உலகத்திற்கு அவசியமான சுமை, கல்வியைச் சுமை என்று நான் சொல்வதைக் கேட்டு, உங்களில் பலருக்கும் ஆச்சரியம் ஏற்படலாம். இந்தச் சுமை சுகமாக மாறத் தவறிய சுமை என்று பரிந்து கொள்ளுங்கள்.
ஒரு மனிதனின் முதல் இருபத்தொரு வயதை மூன்று பருவங்களாக பிரிக்கலாம்.
- ஒன்று முதல் ஏழு வயது வரை இருக்கும் பருவம் முதல் பருவம். இந்தப் பருவம் குழந்தைப் பருவம். 'அம்மாவோடு இருக்க வேண்டும். கேட்பது கிடைக்க வேண்டும் எல்லோரும் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்.' என்று ஆசைப்படும் மனம் குழந்தைகளுக்கு.
அம்மாவிடமிருந்தும் தன் விளையாட்டிலிருந்தும் தன்னைப் பிரிக்கும் யாரையும் குழந்தை வெறுக்கவே செய்யும். பள்ளிக்கூடம், படிப்பு, ஆசிரியர் எல்லாம் சேர்ந்து தன்னைக் கட்டுப்படுத்துவதாக, கஷ்டப்படுத்துவதாகக் நினைப்பதால் தான் பள்ளிக்குச் செல்லும் முன்பு சில நாட்களாவது குழந்தைகள் அழுகின்றன.
பள்ளிக்கூடம் ஜெயிலிலிருந்து தப்பித்து வரும் கைதி போல ஓடோடி வெளியே வருவதற்கும் காரணம் அதுதான்.
- குழந்தைகளுக்கு விளையாட வேண்டும் என்று ஆசை. ஆனால் அப்படி விளையாடுவதற்கான வாய்ப்பையும் ஸ்பெஷல் கிளாஸ், டியூஷன் போன்றவை அபகரித்துக் கொண்டு விடுகின்றன.
இளைஞர்களே! படிக்கிற காலத்தில் நன்றாகப் படியுங்கள்! உங்களால் முடியுமா என்கிற சந்தேகமே உங்களுக்கு வேண்டாம். 'உங்களால் எல்லாம் முடியும் என்பதே மறுக்க முடியாக உண்மை.
எனவே பல நியாயமான ஆசைகள் நிறைவேறாமல் நிராசைகளாகவே மனதில் தங்கிவிடுகின்றன.
- பதினான்கு வயது முதல் இருபத்தொரு வயது வரை உள்ள பருவம், மூன்றாம் பருவம். ஒரு குழந்தை இளைஞனாகும் நேரம் இது. வாழ்க்கையில் முதன்முறையாக ஹார்மோன்களோடு போரிட வேண்டிய நேரம். பொறுப்பை ஏற்றுக்கொண்டு சாதனையாளன் ஆகும் நேரம்.
பிறந்தது முதல் பதினான்கு வயது வரையிலான பகுதி வாழ்வில் சுகந்திரப் பறவையாக ஆனந்தமாகத் திரியும் காலம் - இந்தச் சுதந்திரம் குழந்தைகளுக்கு 'மறுக்கப்படுவதால்' அல்லது 'மறுக்கப்படுவதாக நினைத்துக்கொள்வதால்' - இழந்து விட்டதாக நினைக்கும் சந்தோஷத்தையும் பிள்ளைகள் 14-21 வயதிற்குள் பூர்த்தி செய்துகொள்ள மன ரீதியாக தாயாராகிறார்கள். காரணம் 14-21 வயதிற்குள் கிடைக்கும் சுகந்திரமும், வாலிபத் துடிப்பும்தான்.
தங்களின் கவனம் சிதறுவதற்கான அடிப்படைக் காரணங்களைப் புரிந்து கொண்டால் போதும் படிப்பு தாண்டிய விஷயங்களில் இருக்கும் ஈர்க்கும் மாயை, போலி என்று புரிந்துவிடும்.
இதைப் புரிந்துகொண்டால் படிப்பின் மீது இருக்கும் வெறுப்பும், மற்ற விஷயங்கள் மேல் இருக்கும் ஈர்ப்பும் குறைய ஆரம்பிக்கும். படிப்பின் மீது ஆர்வம் இயல்பாகவே அதிகரிக்க ஆரம்பிக்கும். படிப்பில் துடிப்பும் துள்ளலும் ஏற்படும். படிப்பு, சுமையாகத் தெரியாது.
இளைஞர்களே! படிக்கிற காலத்தில் நன்றாகப் படியுங்கள்! உங்களால் முடியுமா என்கிற சந்தேகமே உங்களுக்கு வேண்டாம். 'உங்களால் எல்லாம் முடியும்' என்பதே மறுக்க முடியாக உண்மை.
நீங்கள் சாதிக்கத் தகுதியானவர் என்ற நம்பிக்கையையும் எப்போதும் மனதில் ஞாபகப்படுத்திக்கொண்டே இருங்கள்.
தூங்கியதும், துக்கப்பட்டதும் போதும். எழுந்திருங்கள். சாதனை என்கிற ஒட்டத்திற்கு முடிவே இல்லை!
பயத்தைத் தைரியத்தோடு எதிர்கொள்ளுங்கள்!
ஆஸ்ரமத்திற்கு வந்திருந்த பெண்மணி வெகு கலக்கத்தோடு பேசினார்: "என் பையனைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அடிவயிற்றில் கிலி பற்றிக் கொள்கிறது".
"கவலைப்படாதீங்கம்மா... தைரியமா என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள்' என்றேன்.
''அவன் என் சொல்பேச்சு கேட்பதேயில்லை. அடிக்கடி பக்கத்து வீட்டுப் பெண்களிடம் வம்பு வெம்பு செய்கிறான். பக்கத்துத் தெருவில் இருக்கும் பையன்களோடு போன வாரம் சண்டை. சின்னப் பிரச்சனைக்குக்கூட சீறுகிறான். அடிதடி வரை சென்றுவிடுகிறான்.
வீட்டில் தங்கமாட்டேன்கிறான்... தெருமுனையில் இருப்பதையே விரும்புகிறான். இப்படியே போனால் அவன் நான் பார்த்து வைக்க போகும் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளமாட்டான். ஏதாவது ஒரு பெண்ணை எதிர்காலத்தில் இழுத்துகிட்டு என்னைவிட்டு ஓடிப்போய் விடுவானோ என பயமாக இருக்கின்றது. இதை நினைக்கும் போதெல்லாம் வயிறே கலங்குகிறது " என்றார்.
மகனைவிட, மகனின் திருமணம் மூலம் தனக்குக் கிடைக்கும் சமுதாய அந்தஸ்திற்கு அதிக முக்கியத்துவம் தந்து பேசிய அந்தப் பெண்மணியிடம், "பயப்படாதிங்கம்மா ... உங்க பையனை ஒரு நாள் ஆஸ்ரமத்திற்கு அழைத்து வாருங்கள். உங்க பையனோடு தனியா உட்கார்ந்து பேசுகிறேன். உங்கள் பையனின் மனம் சரியானால், எல்லாம் சரியாகிவிடும்" எனச் சொன்னவுடன்,
"இன்னொரு நாள் எதற்கு! என் பையனை கையோடு அழைத்து வந்திருக்கிறேன். இப்போதே அவனோடு நீங்கள் பேசலாம்" எனச் சொல்லி, தன் இடுப்பில் இருந்த நான்கு வயது சிறுவனை அப்பெண்மணி காட்டினார். அங்கு நடப்பது எதுவும் புரியாமல் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தான் சிறுவன்.
★ ஒவ்வொரு மனிதரும் ஏதாவதொரு வகையில் இதுபோன்ற ஒரு பயத்திற்குள் சிக்கி அதீத பயத்தில்தான் வாழ்கிறார்கள். இது மிகைப்படுத்தல் அல்ல. அந்தப் பெண்ணுக்கு அதுதான் பயம்.
- உயிர்சக்தியை நரம்புக்குள் உடல் முழுவதும் பரவச்செய்யும் வல்லமை கொண்டது பயம்.
★ மனிதன் தீங்கிலிருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்காக இறைவனால் மனிதனுக்குத் தரப்பட்ட ஒரு பரிசு - பயம்.
★ மனிதகுலம் இந்த அளவுக்குக் கட்டுக்கோப்பாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணங்களில் பயமும் ஒன்று.
★ கூடினாலும், குறைந்தாலும் உணவு சுவைக்காதோ அப்படித்தான் பயம் கூடினாலும் குறைந்தாலும் வாழ்வு நரகமாகும்.
- பயஉணர்வைச் சரியாகப் பயன்படுத்த மனிதருக்கு அனுபவஞானம் தேவை. அனுபவங்கள் இல்லாவிட்டால் பயம் நம்மையே அழித்துவிடும். என்சைக்ளோபீடியாவில் Phobia (பீதி) இருக்கும் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் மலைத்துப் போவீர்கள். எத்தனை வகையான பீதிகள்...
Acrophobia (உயரத்திலிருந்து பார்த்தால் பீதி) முதல் Zoophobia (விலங்குகளைப் பார்த்தால் பீதி) வரை மனிதர்களை விதவிதமாக வாட்டும் இந்தப் பீதி பற்றி சுவாரஸ்யமான ஒரு ஆராய்ச்சி.
பய உணர்வு அதிகமாகி சுயக்கட்டுப்பாட்டை இழந்து செயல்பட ஆரம்பித்தால் அதற்குப் பெயர்தான் பீதி.
பய உணர்வு சரியாகப் பயன்படுத்தப்படாமல், மந்தமாக ஒருவர் செயல்பட்டால் அதற்கு பெயர்தான் அசட்டுத் தைரியம்.
"பீதி, அசட்டுத் தைரியம் என்பதெல்லாம் ஏதோ சில மனிதரிடம் இருக்கக் கூடியது. எனக்கல்ல!" - என்று நீங்கள் நினைத்தால் இந்தக் கட்டுரை நிச்சயம் உங்களுக்குதான்...
" மரண அனுபவத்தை வாழும் போதே தாண்டிய ஞானிகளைத் தவிர்த்து, மற்ற எல்லா மனிதர்களையும் ஏதோ ஒருவகை பீதி அல்லது அசட்டுத் தைரியம் பிடித்திருக்கும்" - இது வேத உண்மை.
"கிட்டத்தட்ட எல்லா மனிதர்களும் ஏதோ ஒருவகை பீதியால் (Phobia) பீடிக்கப்பட்டிருக்கிறார்கள்" இது மனோ ஆராய்ச்சியாளர்களின் முடிவானக் கருத்து.
இந்த உண்மைகளோடு பொருந்தும் ஒரு வேடிக்கையான கதை.
சுந்தரபுரி மக்களின் குறை தீர்த்து ஊருக்கு வெளியே வாழ்ந்து கொண்டிருந்தார் ஒரு ஞானி.
| பயத்தை எதிர்கொள்ள | |
|---|---|
| ஆ | தைரியமில்லாதவரே |
| பீதிக்குள்ளாகிறார். |
ஒரு நாள், "இங்கே எதுக்காக வந்தாய்?" என்று சுந்தரபுரி நோக்கி வந்து கொண்டிருந்த எமதர்மனைப் பார்த்து ஞானி கேட்டார்.
எமன், "சாமி! கலிகாலக் கணக்குப்படி இந்த ஊரிலிருந்து ஐந்நூறு பேரை நான் எமலோகத்துக்கு உடனே கூட்டிக்கொண்டு போக வேண்டும்" என்றார்.
ஞானி, "கலிகாலக் கணக்கு சரியா வர மாதிரி நான் பார்த்துக் கொள்கிறேன். நான் இருக்கும் வரை இவர்களை நீ ஒன்றும் செய்யக் கூடாது. நீ திரும்பப் போகலாம்'' என்றார்.
மக்களை உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டிய என்ன "சாமி, ஒரு முன்னூறு பேரை மட்டுமாவது அழைத்துச் செல்ல அனுமதியுங்கள்' என்றார்.
"இல்லை... முடியாது".
சாமி... இப்படி தடை உத்தரவு போட்டால் நான் என்ன செய்வேன். முன்னூறு பேர் வேண்டாம். ஒரு நூறு பேரையாவது நான் அழைத்துச் செல்ல அனுமதியுங்கள்".
நூறு பேர் ரொம்ப அதிகம், வாழ்க்கையை நன்றாக வாழ்ந்துவிட்டு உலகை விட்டுப் போகத் தயாராக ஐம்பது பேர் இருக்கிறார்கள். அவர்களை மாத்திரம் நீ அழைத்துக் கொண்டு போகலாம்" என்று ஞானி சொல்ல ...
எமன் அங்கிருந்து வெகு துள்ளலோடு, முன்னூறு பேரையும் அழைத்துச் செல்ல அனுமதி பெற்றது போல சந்தோஷமாக ஊருக்குள் சென்றார்.
ஒரு வாரம் தொடர்ந்து காலரா நோயால் ஐம்பது பேரைத் தாக்கிய எமன், ஞானியின் அனுமதி மீறாமல் தன் வேலையை முடித்துக்கொண்டு எமலோகம் நோக்கிப் புறப்பட்டார்.
ஆனால், எமன் அந்த ஊரிலிருந்து வெளியேறும் போது முன்னூறு ஆவி உடல்களோடு வெளியேறிக் கொண்டிருந்தார்.
ஞானி, "எமா! நான் ஐம்பது பேருக்குத் தானே அனுமதி கொடுத்தேன். நீ எப்படி முன்னூறு பேர் உயிரைப் பறிக்கலாம்... ?" என்று கேட்க, எமதர்மன் சிரித்துக் கொண்டே, "நீங்கள் கொடுத்த அனுமதியை மீறவே இல்லை சாமி. ஊருக்குள் காலரா
| ஆனந்தமாக வாழ், | |
|---|---|
| ன் | முடிவெடுக்க, தைரியம் வேண்டும். |
| G | ஆனந்தமாக வாழ, செயல்பட |
| ா | புத்திசாலித்தனம் வேண்டும். |
நோயை வரவிட்டேன். ஐம்பது பேர் பேதியால் செத்தாங்க. மிச்ச இருநூற்றைம்பது பேர் அதைப் பார்த்து பீதியாலேயே செத்துப் போயிட்டாங்க. என் கணக்குச் சரியாயிடுச்சு" என்றார்.
பீதி என்ற வார்க்கையை விட, பயம் என்றால் எல்லோராலும் பரிந்து கொள்வது சுலபம். ராட்சக வளைய ராட்டினத்தில் சுற்றும் போது பய உணர்வை எல்லோருமே உணர்ந்திருப்பீர்களே! பயத்தை எங்கே உணர்ந்தீர்கள் ?
சரியாக அடிவயிற்றின் வலப்புறத்தில் ஜிவ்வெண்று உணர்வை உணர்ந்திருப்பீர்கள்.
பயத்திற்கும் அடிவயிற்றிற்கும் அப்படி என்ன சம்பந்தம் ?
பயத்தில் கலங்குகிறதே. ஏன் ?
எந்த இடத்தில் நாம் பயத்தை உணர்கிறோமோ அந்த இடத்தில்தான் ஸ்வாதிஷ்டானச் சக்கரம் இருக்கிறது என்று ரிஷிகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து கூறியிருக்கிறார்கள்.
ஸ்வாதிஷ்டானம் என்பது நம் உடலிலிருக்கும் ஏழு சக்திமையங்களில் ஒன்று.
இந்த ஸ்வாதிஷ்டானச் சக்கரத்தில்தான் பயமும் இருக்கிறது. உயிர் சக்கியின் மூலமும் இருக்கிறது.
எதிர்பாராத ஒன்றால் பயம் நம்மைப் பற்றும் ஸ்வாதிஷ்டானச் சக்கரம் உலுக்கப்படுகிறது.
ஸ்வாதிஷ்டானச் சக்கரம் உலுக்கப்படும்போது வெளிப்படும் ஒரு துளி
பயம் போக்கும் தியானம். பயம் எங்கிருந்து உருவாகிறதோ அங்கேயேதான் தைரிய சக்கியும் ஒளிந்திருக்கிறது. பயம் படிக்கமாகி விட்டதால் அவசரகாலங்களில் உணர்வின் பற்களால் பயத்தையே தொடர்ந்து கவ்வுகிறீர்கள். அந்தக் காலங்களில் சிட்டிகையளவு விழிப்புணர்வைக் கொண்டுவந்தாலே போதும் பயத்திற்குப் பகில் கைரிய சக்கியை வசப்படுத்துவீர்கள்.
உயிர் சக்தி கொடுக்கும் உணர்வுதான், ராட்சத ராட்டினத்தில் சுற்றும் போது 'ஜிவ்' என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
எதிர்பாராத சூழ்நிலை மற்றும் அவசர காலத்தை உடனடியாகச் சமாளிப்பதற்கு நம் உடலில் ஏற்கெனவே வைத்திருக்கும் சக்தி போதாது.
மனிதனென்றால் எதிலும் வாழ கற்றுக்கொள்வான்.
ஐஸ்வரியத்தையும் தரித்திரத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக.
- பைபிள்.
ஐஸ்வரியத்தின் உச்சியில் சுகபோகத்தின் உச்சியில் சந்தோஷமாய் வாழ் - Zorba
ஐஸ்வரியமும் தரித்திரமும் ஞானிக்கு ஒன்றே. இரண்டும் ஆனந்தத்தை அவரிடமிருந்து பறிக்காது!
- வேத ரகசியம்.
சாதாரண மனிதனை ஐஸ்வரியமும் தரித்திரமும் கொல்லும். கஷ்டப்படுத்தும். வாழ்வின் இவ்விரு முனைகளில் வாழ ஞானம் அடிப்படை. அதனால்தான் சொல்வேன், "ஞானம் நீ பெறு, அப்புறம் எதை வேண்டுமானாலும் நீ பெறலாம். அது உன்னைப் பாதிக்காது".
இதுபோன்ற ஸ்வாதிஷ்டானத்தை உலுக்கி, அந்தச் சூழ்நிலையைச் சந்திக்கத் தேவையான சக்கியைக் கருகிறது.
சிறுவயதிலிருந்தே பலவற்றிற்கும் பயந்து பயந்து வளர்வதால் பயம் வாழ்வின் ஒரு தொடர் அம்சமாகிவிட்டது.
ஒவ்வொரு முறை பயப்படும் சிறிய பயத்திற்குக்கூட உயிர்சக்தி உடனடியாக வெளிப்படும். எப்போதாவது வரவேண்டிய பயம் எப்போகும் இருக்கும்போதுதான் ஆரம்பிக்கிறது. பயம் வாழ்வின் தொடர் நிகழ்ச்சியாக மாறும் போது, மனிதரை நடுக்கம் தொற்றிக் கொள்கிறது.
தொடர்ந்து நடுக்கம், படபடபடப்பு என்ற ஒரு மனம் - உடல் சம்பந்தப்பட்ட நோயாகவே அது இந்நிலைகான் பீதி.
அவமானம் நேரும் போது...
பிரச்சனைகள் வரும் போது ...
தவறு செய்யும் போது…
என்று படபடபடப்பு நமக்குள் ஏற்படும் ஒவ்வொரு நிமிடமும் நாம் பீதியில்தான்
வாழ்கிறோம்.
நமக்குள்ளே படபடபடப்பை உணர்வது, பேச்சு திடுமாறுவது, விரல்கள் நடுங்குவது இதில் ஏதாவது ஒன்று இருந்தாலும் சரி - அந்த நேரங்களில் நாம் நம் கட்டுப்பாட்டை இழக்கிறோம் என்று அர்த்தம்.
அதன் விளைவாக ஏற்படும் உயிர் சக்தி விரயம்தான் நடுக்கத்தையும் பட படப்பையும் உண்டுபண்ணுகிறது.
இதுதான் பீதி.
இந்தப் பீதியிலிருந்து எப்படி வெளிவருவது ?
எளிது. பயத்தைக் கண்டு பயந்துவிடாமல் பயமே பயப்படும் அளவுக்கு பயத்தை விழிப்புணர்வோடு அணுக ஆரம்பியுங்கள். பயத்தில் பயந்து படபடபடத்துப் பீதியடைவதற்கும் பயத்தை விழிப்புணர்வோடு பார்த்து பீதியின் வெளிப்பாடான படபடப்பையே தாண்டுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.
சுருக்கமாகச் சொன்னால்... பயத்தைக் தைரியத்தோடு எதிர் கொள்ளுங்கள். பிரச்சனை தீர்ந்தது!
"பயத்தைத் தைரியமாய் எதிர்கொள்வதெப்படி ? விளக்குங்கள்!" என பக்தர் ஒருவர் கேட்டார்.
"இரவில் தனியே வரும்போது நாயொன்று துரத்தினால், எவ்வளவு வேகமாய் ஓடுவீர்கள். அந்தச் சூழ்நிலை பயம்! ஆனாலும் தைரியத்தோடு எதிர்கொள்ளவில்லையா ? எங்கிருந்தோ உங்களுக்குள் சக்தி பொங்கியது நிஜம்தான்!
ஏன் நாயும் பேயும் மட்டும்தான் நம்முள்ளிருக்கும் சக்தியைப் பொங்கச் செய்ய வேண்டுமா? அதை நாமே செய்யலாமே. பயத்தைத் தைரியத்தோடு அணுகுங்கள். பயம் மறையும்।" என்றேன்.
தயக்கத்தைத் திருகி வெளியே எறியத் தயங்காதீர்கள் !
சந்திரனை விஜயம் செய்த மனிதனென்னும் சாகசக்காரன், அதுபோதாதென்று செவ்வாய் தாண்டி அண்டத்துள் செல்லத் தயாராகிறான். ஆனால், அருகிலுள்ள இதயத்தைத் தொட வாழ்வை கொண்டேயிருக்கிறான். இன்னும் நெருங்கவே இல்லை.
நினைத்ததை நினைத்தபடி பேச முடியவில்லை.
காரணம் - நீதிநெறிகள் குரல்வளையை நெருக்குகின்றன.
விரும்பியபோது சிரிக்க முடியவில்லை. அழ முடியவில்லை. நியாயமான உணர்வுகளைக்கூட அடக்குகிறான். காரணம் கேட்டால்"நாகரிகம்?" என்கிறான்.
தைரியமாய் சிரிக்கமுடியாத மனிதர்கள் பயந்து போயிருக்கிறார்கள். என்னவிதமான வாழ்க்கை இது ?
பயப்படுகிறார். தயங்குகிறார் வாழ்வின் பல அம்சங்களுக்கு?"
ஆழ்மனதில் நிகழும் இவற்றால், மேல்மனதிலிருந்து எண்ணங்களை எடுக்கும் மனிதர்கள் சொல்கிறார்கள் ...
"எனக்கு இந்த இந்த விஷயங்கள் பிடிக்காது. மேடையில் பேச பிடிக்காது. கிறுக்கர் போல வாய் பிளக்க சிரிப்பது படிக்காது. எப்போதும் இறங்கிப் போவது எனக்குப் பிடிக்காது."
- இப்படி சுமூக வாழ்வுக்கு எதிராகப் பேசி வாழ்க்கையை இழந்து கொண்டேயிருக்கின்றார்கள்.
இதுபோன்ற எல்லா வாக்கியங்களும் உள்பயத்தால், வெளியே வந்து விழும் வார்த்தைகள்தான்.
சுருங்கச் சொன்னால் வாழ்க்கை சம்பவம் எதுவாக இருந்தாலும் அந்த சம்பவத்திற்கு ஆழ்மனதில் நீங்கள் பயந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
உங்களின் எல்லா தயக்கங்களையும் பட்டியலிடுங்கள்.
சிறிய தயக்கத்தைக்கூட விட்டுவிட வேண்டாம்.
பட்டியலிட்ட தயக்கங்களை இனி சந்திக்கப்போகும் காலங்களைச் சும்மாவிடாதீர்கள்.
பயம் நாசூக்காய் தலைக்காட்டும் அந்த நிமிடங்களில் ...
தயக்கம் இருந்தாலும் இருந்துவிட்டுப் போட்டும் எனச் சொல்லி தயக்கம் துறந்து சந்தியுங்கள்.
தடைபடாமல் செயல்படுங்கள்.
தயக்கத்தின் தலையைப் பிடித்து தயக்கமில்லாமல் திருகி இழுத்தெறியுங்கள். தயக்கத்தின் பூதஉடலான பயம் வெளியே வந்து விழும்.
தயக்க காலங்களை தியான காலமாக்குங்கள்!
தயக்கம் விட்டு எகிறி குதி ... ஆனந்தம் ஆடும். நிம்மதி நிலவும். அமைதி பூத்த ஞான சமவெளியில் விழுவாய்! தில் இருந்தால் ... சோதித்துப் பார் மனதில் !
வரவேறுங்கள் ...
ஒரு இளம்பெண்ணைக் காதலித்த பணக்கார குல்ஜீத், ஒரு பிறவிக் குருடன். தன் காதலியின் குணம், பேச்சு, நடவடிக்கை பற்றி தன்னுடைய நண்பனிடம் சந்தோஷத்தோடு விளக்கினான்.
அடுத்த நாள் தன் நண்பனை காதலிக்கு அறிமுகம் செய்து வைத்தான். சந்திப்பிற்குப் பின் நண்பன் சொன்ன செய்தியால் உடைந்துபோனான்.
"குல்ஜீத்!" நீ சொல்வது போல் அவள் அழகியல்ல. என்னைப் பொறுத்தளவிற்கு அவள் உனக்கு எந்த வகையிலும் பொருத்தமானவளல்ல" என நண்பன் சொன்ன நிமிடம், இதுவரை மகாராணி போல் அவன் மனதில் வாழ்ந்த காதலி சுருங்கிப்போனாள். அவன் காதலும் சுருங்கிப்போனது.
- வரவேற்றல் என்ற நற்குணமில்லாதவர்களுக்கே அதிர்ச்சிகளை வாழ்க்கைப் பரிசளிக்கிறது. எல்லாவற்றையும் வரவேற்கத் தெரிந்தவர்களுக்கு அதிர்ஷ்டங்களைத் தவிர வேறு எதையும் வாழ்க்கையால் பரிசளிக்க முடியாது.
"வருவது வரட்டும் வந்தது இருக்கட்டும்"
- இப்படிப்பட்ட மேம்போக்கு குணம் படைத்த மனிதரால் வாழ முடியும். ஆனால் குதூகலமாக வாழ்வைக் கொண்டாட முடியாது. காரணம் குதூகலத்தின் இல்லாதிருப்பதே !
"வருவதெல்லாம் வரம். வந்ததெல்லாம் அதிர்ஷ்டம்"
இப்படிப்பட்ட அடைந்த மனிதரால் மட்டும்தான் வாழ்வைக் குதூகலமாகக் கொண்டாட முடியும்.
"குழந்தையின் துள்ளல், தைரியசாலியின் தெம்பு, புத்தசாலியின் தெளிவு"
இம்மூன்றின் மொத்தக் கலைவையாய் வெளிப்படும் (Welcome) என்னும் அற்புதக் குணம்.
சுருங்கச் சொன்னால் ...
"இன்பத்தை நம் மகிழ்ச்சிக்காகவும், துன்பத்தை நம் வளர்ச்சிக்காகவும்
இறைவன், மனிதக் குழந்தை விளையாட கற்களைத் தந்தான். இது அதிர்ஷ்டக்கல் எனச் சிலவற்றை முத்திரையிட்டு, மீதியனைத்தையும் ஒதுக்கிவிட்டு ...
"எனக்கு கொடுத்து வைத்தது இவ்வளவுகான்"
"நான் அதிர்ஷ்டமில்லாதவன்" எனப் புலம்பினான் மனிதன்.
சொல்லுங்கள் ... புலம்பலுக்குக் காரணம் இறைவனா? மனிதனா?
இயற்கை பரிசளிக்கிறது !" என்ற கூட்சுமம் புரிந்து, வாழ்வைச் சுகிப்பதே "வரவேற்றல்" என்னும் நற்குணம்.
இறைச்சி உங்களுக்காக ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் ஒவ்வொன்றையும் ஆனந்தமாக வரவேறுங்கள். ஆனந்தமாக என்றால் முழு ஆனந்தமான உணர்வோடு ஏற்றுக் கொள்ளுங்கள்!
இது அதிர்ஷ்டம், இது துரதிர்ஷ்டம் என்பதெல்லாம் உங்களின் மனக்கண்ணோட்டக்கைப் பொருந்ததே!
உங்களுக்குச் சித்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் ஒவ்வொரு கணமும் இறைசக்கியின் அசீர்வாதங்கள்.
நல்லதை மட்டுமே வரவேற்கத் தூண்டுவது வளர்ச்சிக்குன்றிய மனம்!
கெட்டது வந்தாலும், அது வருவதும் இயல்புகானே எனச் சொல்லி வரவேற்பதே வளர்ந்த, மலர்ந்த, மனதின் குணம்.
வரவேற்பதில் வளம் சேருங்கள். வாழ்வே வளமாகும்
உங்களைக் கஷ்டப்படுத்தும் ஒவ்வொரு கணமும் உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்ட சந்தோஷத்திற்காக உங்களைத் தயார்ப்படுத்தும் பயிற்சிக்களங்கள்.
ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நீங்கள் வரவேற்கும் விதத்தைப் பொறுத்துதான் உங்களின் ஆனந்தம் அமையும்.
ஒரு சிறிய கதை...
மூன்று நடுத்தர வயது நண்பர்கள் ஒரு டாக்ஸியில் விமானநிலையம் நோக்கிப் செய்தார்கள். பயணம் திருப்பத்தில் டாக்ஸியை ஓவர்டேக் செய்து சட்டென பைக்கில் தாண்டிச் சென்ற இளைஞரால் டாக்ஸி டிரைவர் கொஞ்சம் தடுமாறி விட்டார்.
எதிரே வந்த வண்டிகளும் கொஞ்சம் தடுமாறியது. ஆனால், யார் மீதும் மோதாமல் வளைந்து நெளிந்து அழகாய் தப்பவிட்டார் அந்த இளைஞர்.
முதல் நண்பர், அவரசம். ஏன் இப்படிப்போறான்! இத்தனை பேர் வைத்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டு இதெல்லாம் எங்க உருப்படப் போகிறது ?" என்று டென்ஷன் தாளாமல் திட்டிக் கீர்த்தார்.
இரண்டாவது நண்பர், "இந்தக் காலத்துப் பசங்க எல்லாமே இப்படித்தான் இருக்காங்க" என்றார்.
மூன்றாவது ஏதோ தவிர்க்க முடியாத அவசரத்திற்காக வண்டியில் இவ்வளவு வேகமாகச் சென்றாலும் - இப்படி எதிர்பாராத வளைவில், எதிரில் வரும் வண்டியில் சிறிது கூட மோதாமல், என்ன ஸ்டெய்லா வண்டி ஓட்டறான்பா அவன்." என்று புன்னகையோடு கூறினார்.
ஒரே நிகழ்ச்சி - ஒருவரை எரிச்சலின் உச்சிக்கும், இன்னொருவரை ஆச்சரியத்தின் உச்சிக்கும் கொண்டுச் சென்றிருக்கிறது. கோபமும், புன்னகையும் -நீங்கள் ஒரு நிகழ்ச்சியை அணுகும் விதத்தையும் வரவேற்கும் விதத்தையும் பொருத்தது.
விமான நிலையம் சென்று மூன்று பேரும் விமானம் ஏறினார்கள். பாதி வழியில் அந்த விமானம் கடத்தப்பட்டது. மூன்று நாட்கள் கழித்து கடத்தப்பட்ட விமானம் மீட்கப்பட்டது.
முதல் நண்பர், "நான் வீட்டை விட்டுக் கிளம்பியதில் இருந்து எல்லாமே கெட்ட சகுணம்தான்.
பூனை குறுக்கே சென்றது! ஒரு அறிவு கெட்டவன் இடதுபுறம் ஓவர்டேக் செய்கது !
பல்லி தோள்பட்டையில் விழுந்தது! இப்படி நடந்த எல்லாவற்றையும் பார்க்கும் போதே எனக்குத் தெரியும் இப்படி ஏதாவது நடக்கும் என்று!" புலம்பிக் கொண்டே விமானநிலையம் விட்டு வெளியேறினார்.
இரண்டாவது நண்பர், "எல்லாம் கடவுள் அருள், நான் வேண்டிக்கொண்டதை கேட்டுத்தான் கடவுள் காப்பாற்றியிருக்கிறார்" என்றார்.
விரும்பினால் சந்தோஷமடையலாம், ஒரே காரியத்திற்காக! என்றால் எரிச்சல், சலிப்பு, சந்தோஷம் வருவது யாரால்? எதனால்?
மூன்றாவது நண்பர் எதுவும் கூறாமல் திருப்தியும் புன்னகையும் கலந்த முகத்தோடு நடந்து வந்தார்.
அவரைப் பார்த்த மற்ற இருவரும் சற்றே திகைத்தார்கள். " எப்படிப்பா, இப்பக் கூட இவ்வளவு சந்தோஷமா இருக்கிறாய் ?" என்று வியப்போடு கேட்டார்கள்.
"இல்லையப்பா… மூன்று நாட்கள் கடத்தி வைத்திருந்தும் அவர்கள் நம்மைக் கொல்லாமல் உயிரோடு விட்டுவிட்டார்களே. இதை நினைக்கும் ஒவ்வொரு கணமும் இறக்காமலே மறுபறவி எடுத்ததுபோல ஆனந்தமாக இருக்கிறது" என்று புன்னகையோடு சொன்னார்.
'வரவேற்றல்' என்னும் குதூகல் குணம் பிறக்காதவரை, வருத்தம் என்பது அடிக்கடி வந்து போகும். வேண்டா விருந்தாளியாக வந்து போகும்.
ஒவ்வொரு ரீங்கள் வரவேற்கும் விதத்தைப் பொறுத்துதான் உங்களின் ஆனந்தம் அமையும்.
வெளியூரில் வேலை நிமித்தம் வீடு எடுத்துத் தங்கியிருந்த அந்த மூன்று நபர்களும் வீடு திரும்பியபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த வீடு திடீரென்று விழுந்துவிட்டிருந்தது.
முதல் நபர், "எனக்குத் தெரியும். கிளம்பியதிலிருந்து எதுவுமே சரியில்லை. நீங்கள் நிறைய கஷ்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று நாளிதழில் ஜோதிடம் படித்தபோதே எனக்குத் தெரியும். இப்படித்தான் ஏதாவது நடக்கும் என்று!" என மனமுடைந்து உளறித் தீர்த்தார்.
இரண்டாவது நண்பர், "எல்லாம் கடவுள் செயல். கடவுள் நம்மை சோதிக்கறான்பா, நாம் இன்னும் நல்லவர்களாக மாற இறைவன் செய்யும் கண்ணாமூச்சு விளையாட்டுதான் இதெல்லாம்" என்று வறட்டு வேதாந்தம் பேசினார்.
அப்போதும் மூன்றாவது நண்பர் தெளிவாக, புன்னகையோடு இருந்தார். மற்ற இருவருக்கும் இந்தபுன்னகை கொஞ்சம் கோபத்தைத் கிளப்பிவிட்டது.
" ஏன் இப்படி எல்லா இடத்திலேயும் சிரித்துக்கொண்டே இருக்கிறாய் ?" என்று வெறுப்போடு கேட்டார்கள்.
" இல்லையப்பா. நாம் சென்ற விமானம் மட்டும் கடத்தப்படவில்லை என்றால் நாம் மூன்று நாட்களுக்கு முன்னரே வீடு திரும்பி இருப்போம், வீடு இடிந்து விழும் போது நாமும் மாட்டிக்கொண்டு செத்துப்போயிருப்போம்.
இப்போது விமானத்தைக் கடத்தியவருக்கு நன்றி சொல்வதா? இல்லை, இறைவனுக்கு நன்றி சொல்வதா என்று யோசித்தேன். சிரிப்பு தானாகவே வந்துவிட்டது"என்று புன்னகையோடு சொன்னார்.
ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நீங்கள் வரவேற்கும் விதத்தைப் பொறுத்துத்தான் உங்களின் ஆனந்தம் அமையும்.
நீங்கள் சதா துக்கப்படுகிறீர்கள், எரிச்சல்படுகிறீர்கள் என்றால் நீங்கள் வரவேற்கும் விதம்தான் தவறு. எல்லாமே இறைவன் அளிக்கும் பரிசு என்ற உண்மையைப் புரிந்து கொண்டால் போதும் ஆனந்தம் தானாக ஏற்படும்!
அர்த்தமுள்ள சம்பவம் ...
மிகுந்த வருத்தத்தோடு ஒருவர், "எல்லாவற்றையும் வரவேற்க, ஏற்றுக்கொள்ள என்னால் முடியவில்லை. என் மனம் கல்லா? என்ன செய்யலாம் ?" என என்னிடம் வழி கேட்டார். ''கவலையை விடுங்கள். என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, என்பதை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள்" என்றேன். அடுத்த நாள் காலை, "நன்றி" என்றவர், "இயலாமையை ஏற்றுக்கொண்டபின் மிகப்பெரிய பாரத்தை இறக்கினாற்போல் லேசாயிருக்கிறேன்" எனச் சந்தோஷமாய் சொன்னார். உங்கள் வாழ்க்கையை அது உள்ளபடியே வரவேறுங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள். நிம்மதி வரும். செய்து பாருங்கள்.
கெட்ட குணங்களுக்காக வெறுக்கக்கூடாது!
ரோஜாவின் அழகுக்கு ஆசைப்படுகிறீர்களா ? அதன் முட்களையும் ஏற்றுக்கொள்ளத் தயாராகுங்கள்.
அரவணைப்புக்கு ஆசைப்படுகிறீர்களா... சிறு அடிக்கும் பெரும் அதட்டலுக்கும் கூடக் தயாராக இருக்க வேண்டும். தயாராக இருக்கிறீர்களா ... ? சிந்தியுங்கள்.
காதலர்களுக்குக் காதல் காலம் எப்போதுமே இனிக்கக் காரணம், அந்தக் காலங்களில் ரோஜாவின் முட்கள் இதயத்தைக் குத்துவதில்லை.
சிவப்பு ரோஜா வெள்ளை ரோஜாவைப் பார்த்து மயங்கியும், வெள்ளை ரோஜா சிவப்பு ரோஜாவை பார்த்து மயங்கியும், இருப்பது மனசுக்கு இதமாகத்தான் இருக்கும்.
நிஜ அன்பு ஒரு பக்தி மிகுப்பு!
எந்த உறவும் முதலில் இனிக்க இதுதான் காரணம்.
முள் குத்தும்போதுதான் மயக்கம் தெளிகிறது.
நம்மவரின் சில கெட்ட குணங்கள் தெரியும் போதுதான் இதயம் குத்திக் கிழிக்கப்படுகிறது.
பூஜைக்கு உரிய நபரை... நிஜமாய் யூஜி! அப்புறம் வெறுக்க (மடியுமா உன்னால்!
மனதிலிருந்து துக்கம் சொட்டுச் சொட்டாய் கசிகிறது.
ரோஜாவை நேசித்த நீங்கள் அதன் முட்களை மட்டும் வெறுத்தால் எப்படி ?
முள்ளில்லாத ரோஜா உலகில் இல்லை. நீங்களும் முட்கள் உள்ள ஒரு ரோஜாதானே!
ரோஜாவை முட்களோடு நேசியுங்கள்.
அதுதான் ரோஜாவுக்கு நீங்கள் தரும் மரியாதை..
மனத்தின்
போலிகள்
கனவு! கற்பனை! நிஜம்!
- வாழ்க்கையைப் பற்றிய நமது கற்பனைக்கும் நிஜவாழ்க்கைக்கும் இடைப்பட்ட பொருத்தமின்மையே - வாழ்க்கையை வருத்தமாக்குகிறது.
- கற்பனை என்ற மனத்திரைப்படத்தை வாழ்க்கையில் நிஜமாக்க முயற்சி செய்யாமல், வெறும் மனத்திரைப்படத்தையே விதவிதமாகப் பார்த்துச் சிறு சிறு கிளர்ச்சி அடைபவர்கள்தான் மகாபாவிகள்.
- கற்பனை என்பது 'எதிர்காலத்தில் ஒருவர் எப்படி வாழ வேண்டும் ? எப்படிப்பட்ட மனைவி, வாழ்க்கை, குடும்பம் அமைய வேண்டும் ? என்னென்ன சொத்து, சுகம், சவுகரியம் வேண்டும் ?' என்று எதிர்காலத் தேவைக்குத் தகுந்தபடித் தன்னை மாற்றிக்கொள்ள, இறைவனால் மனிதருக்குப் பரிசாகத் தரப்பட்ட மனதின் ஒரு செயல்பாடு.
- நிஜமாக்க முயல்பவருக்குக் கற்பனை ஓர் உந்து சக்தி. கற்பனையை நிஜமாக்காமல், கற்பனைமேல் கற்பனை செய்து, வாழ்வை வீணடிப்பவருக்குக் கற்பனை ஒரு மந்த சக்தி.
என்னைப்பற்றிப் பலரும் விசாரித்திருக்கிறார்கள். நான் யார்? எங்கே பிறந்தேன்? என்ன வயது? இந்த இளைய வயதில் ஏன் இந்தத் தோற்றம்…. என்றெல்லாம் பலவிதமான கேள்விகளை வாசகர்கள் கேட்டிருக்கிறார்கள்.
நான் திருவண்ணாமலையில் ஒர் எளிய குடும்பத்தில் பிறந்தேன். மிகச் சிறிய வயதிலேயே ஆன்மீகத் தேடல் இருந்தது. இரமணரும் மற்ற பல ஞானிகளும் வசித்த திருவண்ணாமலையின் மீதமர்ந்து சிறு வயதிலேயே தவம் செய்ய ஆரம்பித்தேன். ஏட்டுக் கல்வி எனக்கு அறிவைக்கான் தந்தது. எனவே, உண்மையான ஞானத்தைத் தேடி அலைய ஆரம்பித்தேன்.
உடுத்திக்கொள்வதற்கு ஒரே ஒரு உடுப்பு, அவ்வளவுதான். இனி காசை என் கையால் தொடுவதில்லை என நடக்க ஆரம்பித்தேன். நடந்தே பாரதம் முழுக்கச் சுற்றினேன். பல ஞானிகளைச் சந்தித்தேன். இமயமலையில் பல மாதங்கள் இருந்தேன். பத்தாண்டுக் கால கடும் தவத்திற்குப் பிறகு என்னை நானே உணர்ந்து ஞானம் பெற்றேன்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தில் சிறிய ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்த சமயம், மாலை வேளையில் என்னைச் சந்திக்கப் பலரும் வருவார்கள்.
அப்போது நான் தோட்டத்திற்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருப்பேன். "சாமி ஆசிரமத்தில் இருக்கிறாரா?" என்று என்னிடம் கேட்பார்கள், என்னைத் தேடி வருகிறவர்கள். "இருக்கிறார். உள்ளே போய் அமருங்கள்" என்பேன் நான். பிறகு நான் அவர்கள் முன்பு போய் உட்காருவேன்.
"நாங்கள் பெரிய சாமியைப் பார்க்க வந்திருக்கிறோம்" என்று என்னிடம் சொல்வார்கள்.
என் இளைய வயது - என்னை ஒரு ஞானியாகப் பார்க்க அவர்களுக்குத் தடையாக இருந்தது. தாடி, மீசை, கமண்டலம், ஜெபமாலையும் கையுமாகத்தான் ஞானிகளைக் கற்பனை செய்து வைத்திருக்கிறார்கள் மக்கள். உருவம் கொஞ்சம் வித்தியாசப்பட்டாலும் அவர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
கற்பனையை எறிந்து விட்டு, நிஜத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். மனிதர்களை மனிதர்களாக மதிக்க ஆரம்பிப்பீர்கள். நிம்மதி மலரும்!
இருப்பவைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொள்ளுகிற பக்குவம் இல்லாவிட்டால், கவலையும் கலக்கமும்தான் மிஞ்சும்.
ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். ஒருவரை ஒருவர் செதுக்கிக் கொள்வதே இங்கே வாழ்க்கை என்றாகிவிட்டது. விருப்பத்தை அறியாமல், தான் கற்பனை செய்து வைத்திருப்பது போலவே மகன் வர வேண்டும் என்று அவரைச் செதுக்குகிறார். "நான் ஒரு காவல்துறை அதிகாரி. என் மகனைம் காவல்துறை அதிகாரியாக வரவேண்டும்" என்று நினைக்கிறார் அப்பா. மகனோ, தந்தையின் விருப்பத்துக்கு எதிராக நடந்து கொள்கிறார்.
இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே மோதல். "என் மகன் நான் சொல்வதைக் கேட்பதில்லை" என்று எல்லா இடங்களிலும் புலம்பத் தொடங்குகிறார். அடிப்படையான கோளாறு தந்தையிடம். அதை உணராமல் புலம்பி என்ன பிரயோஜனம் ?
சதுப்பு நிலத்தில் பருத்தி வராது. கரிசல் காட்டில் சணல் விளையாது. பிள்ளைகள் அவர்கள் விரும்பாத துறையில் சாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவு. இதைத் தாய், தந்தையர் உணர்ந்து கொள்வதில்லை. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு நிமிடமும் மாறிக்கொண்டிருக்கிற உலகத்தில், தந்தையார் பார்க்கும் பழைய உலகம் வேறு; மகன் பார்க்கும் புதிய உலகம் வேறு.
எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் கற்பனை ஒர் அற்புதம்! நிகழ்காலத்தை வீணடிக்கத் துணைபோகும் கற்பனை அற்பம்! கற்பனை அற்புதமா? அற்பமா? கற்பனையை நிஜமாக்குவதைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்!
Part 11: Open the Door... Let the Breeze in!
காலம் மாறுகிற போது, கருத்தும் மாறிப் போகிறது. மஞ்சு விரட்டுகிற வீர விளையாட்டு, இப்போதும் தமிழ் மக்களுக்கு மத்தியில் உண்டு. அந்த நாளில், கூரிய கொம்புள்ள காளையை, மடக்கிப் பிடிக்கிற வீரரைக்குதான் கன்னிப் பெண் மாலை இடுவாள்.
கற்பனைகளை நிஜமாக்குவதற்காக இருந்தால், கற்பனை செய்யுங்கள். நிச்சயமாகக் கற்பனை சரி!
ஆகவே, தமிழ் ஆசிரியர் ஒருவர் தன் மகளைப் பார்த்து, ''பொங்கலுக்கு நடந்த வீர விளையாட்டில், காளையை அடக்கிய வீரன் ஒருவன் இருக்கிறான். அவனுக்குக் கழுத்தை நீட்டுகிறாயா கண்ணே ... ?'' என்று கேட்டார். அவளோ ''இவன் காளையையே இந்தப் பாடு படுத்தி இருக்கிறானே! என்னை எந்தப் பாடு படுத்தமாட்டான் ... ? '' என்று கேட்டாள். ஒரு காலத்தின் மதிப்பீடுகள் மற்றொரு காலத்தில் மாறிப்போகின்றன.
தன் வாழ்க்கைத்துணை எப்படி இருக்க வேண்டும் என்கிற ஆசைகளோடு, நீண்ட நாட்களாக பெண் தேடிக்கொண்டிருந்தார் ஒருவர் "உனக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும்?" என்று கேட்டார் தரகர்.
"நான் எதிர்பார்க்கிற பெண்ணின் கண், அந்த நடிகையின் கண் மாதிரி இருக்க வேண்டும். மூக்கு இந்த நடிகையின் மூக்கு மாதிரி இருக்க வேண்டும். '' என்று அடுக்கிக்கொண்டே போனார்.
அவர் சொன்னது மாதிரி அலைந்துதிரிந்து ஒரு பெண்ணையும் தேடிக் கொடுத்தார் தரகர். அந்தப் பெண்ணைப் பார்க்கச் சம்மதம் கேட்டபோது சொல்லிவிட்டார் அந்த பெண். "எனக்குக் கணவனாக வருகிறவனின் மூக்கு இந்த நடிகரின் மூக்கு மாதிரி இருக்க வேண்டும். மீசை அந்த நடிகரின் மீசை மாதிரி இருக்க வேண்டும்" என்று அவளும் பட்டியல் போட்டபோது, நொந்து போய்விட்டார்.
பலரும் தாங்கள் கற்பனை செய்து வைத்திருக்கிறபடியான ஆட்களைக் கேடுகிறார்கள்.
கற்பனையில் இருக்கும் தனக்கு வரப்போகும் மனைவியின் அழகுக்கும் அன்பிற்கும் நிஜத்தில் வந்திருக்கும் மனைவியின் அழகுக்கும் அன்பிற்கும் பெரும்பாலும் சம்பந்தமே இருப்பது இல்லை.
அதேபோல் தனது கற்பனையில் இருக்கும் எதிர்காலக் கணவனின் பண்பிற்கும், பாசத்திற்கும் நிஜத்தில் வந்திருக்கும் கணவனின் பண்பிற்கும் பாசத்திற்கும் பெரும்பாலும் சம்பந்தமே இருப்பது இல்லை.
காரணம், இயல்புக்கு மீறிய அதீத கற்பனைதான்.
கற்பனைச்சக்தி - நீங்கள் உங்களின் காரியங்களைத் திட்டமிட்டுச் சரியாக முடிப்பதற்காகக் கடவுளால் வழங்கப்பட்ட ஓர் அற்புதம்.
பகல் கனவு கண்டு, கடவுள் கொடுத்த கற்பனா சக்தியை துஷ்பிரயோகம் செய்தால் ... அதே கற்பனை ஒர் அற்பம்.
கற்பனை தவறல்ல. கற்பனையை எப்படி நீங்கள் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து அது சரியா, இல்லை தவறா என்று முடிவு செய்யப்படும்.
கற்பனைகளை நிஜமாக்குவதற்காக இருந்தால், கற்பனை செய்யுங்கள். நிச்சயமாகக் கற்பனை சரி !
கற்பனைகளை நிஜவாழ்க்கையில் சாத்தியமாக்க முடியாத மனிதர்களின் மனது - கற்பனைக் காவியங்கள் நோக்கித் திரும்புவதும் தற்காலிக திருப்தி அடைவதும் திரும்பக் கற்பனையிலேயே காலத்தைக் கழிப்பதும் சகஜமாகிவிட்ட ஒரு கொடுமை ! இந்தக் கற்பனை நிச்சயமாகத் தவறு.
கற்பனை தவறல்ல. கற்பனையை எப்படி நீங்கள் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து அது சரியா, இல்லை தவறா என்று முடிவு செய்யப்படும்.
தன்னைப்போன்ற எல்லாவிதமான உடல், மன, தடுமாற்றங்கள் நிறைந்த ஒரு பெண்தான் தனக்கு வரப்போகும் மனைவியாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்ற நிஜம், அந்தக் கற்பனை என்ற கரிப்புகையால் மறைக்கப்படுகிறது.
கற்பனையில் மகாராணியை எதிர்பார்ப்பவர்கள், இயல்பாகவே தங்களை மகாராஜாக்களாக கற்பனை செய்து கொள்வதும் அவர்களின் மனதின் அடி ஆழத்தில் கர்வம் உருவாவதும் இயல்பு. இந்தக் கர்வம்தான் மலர் போன்ற பெண்மையை மதிக்கத் தவறி, மிதிக்கத் தூண்டுகிறது
இதேபோன்று கற்பனையில் அருமையான ஹீரோவை எதிர்பார்ப்பவர்கள், இயல்பாகவே தங்களை அருமையான ஹீரோயினாக கற்பனை செய்து கொள்வதும், அவர்களின் மனதின் அடி ஆழத்தில் கர்வம் உருவாவதும் இயல்பு.
இந்தக் கர்வம்தான், சில நேரங்களில் குடும்பத்தைக் குதூகலமாக வைத்திருக்கும் தாய்மைக்குணத்தை முழுமையாக வெளிப்படாமல் தடுத்து விடுகிறது.
கற்பனையை எறிந்துவிட்டு, நிஜத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். மனிதர்களை மனிதர்களாக மதிக்க ஆரம்பிப்பீர்கள். நிம்மதி மலரும் !
ஏன் ? ஏன் பொறுக்க முடியவில்லை?
- பிறவிகளுக்குப் பொறுத்துக்கொள்வது எப்படி என்பது தெரியாது. பொறுத்துக்கொள்வது என்பது மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் பெற்றிருக்க வேண்டிய பண்பு.
- மனிதரின் மனவளர்ச்சியின் ஆரம்பப்படிக்கட்டுகளில் ஒன்றுதான் இந்தப் பொறுத்துக்கொள்ளும் தன்மை (Tolerance).
- பொறுத்துக்கொள்ள முடியாமல் (Intolerance) போவது மனிதரின் பண்பு அல்ல. மனம் என்ற ஒன்றை ஆறாவது அறிவாகப் பெற்றதால்தான் மனிதன் ஐந்தறிவு கொண்ட மிருகத்திலிருந்து மாறி, மனிதன் என்று அழைக்கப்படுகிறான். மனவளர்ச்சி சரியான முறையில் இல்லை என்பதற்கான அடையாளம்தான் பொறுத்துக்கொள்ள முடியாமை.
புத்தரின் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு சம்பவமும் மிகப்பெரிய உண்மையை எடுத்துச் சொல்லும். அப்படியொரு சம்பவத்தை இப்போது சொல்கிறேன்.
ஒருமுறை புத்தரும் அவரது பிரதம சீடர் ஆனந்தா உள்படப் பலரும் ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
காடு, மலை, மேடு தாண்டிச் செல்கையில் வழி மாறிப் போனார்கள். எந்த ஊருக்குப் போய்ச்சேர வேண்டுமோ, அந்த ஊரிலிருந்து வெகுதொலைவு சென்ற பிறகுதான் அவர்களுக்கு விஷயம் தெரிந்தது.
மீண்டும் சரியான பாதையைக் கண்டறிந்து நடக்க ஆரம்பித்தார்கள். சிறிது தூரம் நடந்தபிறகு, "நகரத்தைச் சென்றடைவதற்கு இன்னும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் ?" என்று அங்குத் தென்பட்ட மக்களிடம் கேட்டனர்.
"இன்னும் இரண்டு மைல் நடந்தால் நீங்கள் தேடிச் செல்லும் ஊர் வந்துவிடும்" என்று அவர்கள் சொல்ல, உற்சாகமாக நடக்க ஆரம்பித்தார்கள். இரண்டு மைல் தூரம் நடந்த பிறகு எந்த நகரமும் வரவில்லை.
மீண்டும் தென்பட்ட மக்களிடம் "நகரத்தை சென்றடைவதற்கு இன்னும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் ?" என்று விசாரித்தார்கள். ''இன்னும் இரண்டு மைல் நடந்தால் நீங்கள் தேடிச்செல்லும் நகரம் நிச்சயம் வந்துவிடும்" என்றார்கள்.
மேலும் இரண்டு மைல்தூரம் நடந்து சென்ற பிறகும் நகரம் எதுவும் வராததைக்கண்டு பொறுக்க முடியாமல் கோபமானார் பிரதம சீடர் ஆனந்தா. "என்ன மடத்தனமான மக்கள் இவர்கள்! சரியான தூரத்தைச் சொல்லாமலே. இதோ அதோ என்று நம்மை ஏமாற்றுகிறார்களே!" என்று சினத்தில் கத்தினார். மற்ற சீடர்களும், "ஆனந்தா சொல்வது மிகவும் சரி' என்றுதான் நினைத்தார்கள்.
ஆனால் புத்தர் அந்த மாதிரி நினைக்கவில்லை. ''நீங்கள் மக்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவர்கள் மீது கோபப்படுவது ஏன்? நீங்கள் வழிகேட்ட மக்கள் எல்லாம் உங்கள் மீது கருணையைப் பொழிந்தார்கள். நகரம் எவ்வளவோ தூரத்தில் இருக்கிறது. அதை அடைய வேண்டுமென்றால் நீங்கள் இன்னும் பல மைல் நடக்க வேண்டும் என்பதுதான் உண்மை.
அதை உங்களிடம் சொன்னால் நீங்கள் என்ன ஆவீர்கள் ? இவ்வளவு தூரம் நடக்க வேண்டுமா என்று மனம் உடைந்து பொறுமை இழந்து இங்கேயே உட்கார்ந்து விடுவீர்கள். நீங்கள் உற்சாகம் இழந்துவிடக்கூடாது. உங்கள் இலக்கை நீங்கள் அடைந்துதான் ஆக வேண்டும் என்பதற்காகத்தான், 'இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும்' என்கிறார்கள் என்று புத்தர் சொன்னபோது, மக்களின் செய்கைக்கான காரண விளக்கம் புரிந்ததால் சீடர்கள் முகத்தில் மிகப்பெரிய உண்மையை எளிதாக புரிந்துகொண்ட திருப்தி மலர்ந்தது.
புத்தரின் சீடர்கள் போலத்தான் நம்மில் பலரும் இருக்கின்றனர்.
எதையும் நினைத்த மாத்திரத்தில் நடக்க வேண்டும். வேகமாகச் செய்துவிடவேண்டும். கண்மூடித் திறப்பதற்குள் காட்சி மாறவேண்டும் என்கிற அவசரம், பரபரப்புதான் இன்றைய மனிதரின் சகஜமான மனநிலையாக மாறி விட்டது.
எதையும் அவசரமாகச் செய்கிறவர், எந்த ரசிப்பும் இல்லாமல், இயந்திரம் போலத்தான் நடந்து கொள்கிறார். நல்ல சாப்பாட்டை, வேகமாகச் சாப்பிடுகிறவருக்கு உப்பு குறைவா, புளிப்பு அதிகமா என்றுகூடத் தெரிவதில்லை.
மனிதனின் மனவளர்ச்சியின் ஆரம்பப்படிக்கட்டுகளில் ஒன்றுதான் இந்தப் பொறுத்துக்கொள்ளும் தன்மை (Tolerance).
நல்ல கவிதைத் தொகுதியை வேகமாகப் படிக்கிறவர், அருமையான கவிதை வரிகளை அநியாயமாக இழக்கிறார். பூக்கள் நிறைந்த பூங்காக்களில் வேகவேகமாக நடக்கிறவர் இயற்கையையே இழக்கிறார்.
அவசரக் குடுக்கைகள், பல நேரங்களில் வெற்றியை விடவும் தோல்வியைத்தான் இறுகத் தழுவிக்கொள்கிறார்கள். ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தைத் தொலைக் காட்சியில் கவனமாகப் பாருங்கள் ...
போட்டி ஆரம்பித்தவுடன் வேகமாக ஓடுகிறவர் பெரும்பாலும் கடைசி வரை ஓட மாட்டார். மூன்றாவதாக ஓட ஆரம்பித்தவர் 'பரவாயில்லை. மெதுவாக, ஆனால் சீராக ஓட வேண்டும்' என்று நினைப்பவரே கடைசி நேரத்தில் வேகமாக ஓடிப்பரிசைத் தட்டிச் செல்வார்.
அளவுக்கு அதிகமான ஆசை, எதிர்பார்ப்புதான் இந்த அவசரத்துக்குக் காரணம்.
பரபரப்பு, அவசரம் - இரண்டுமே பொறுமையின்மையின் வெளிப்பாடுகள்.
பொறுமையின்மை என்னும் கருவேலமரத்தின் வேர்தான் பொறுக்க முடியாமை (Intolerance).
பொறுத்துக்கொள்ளும் உங்களின் (Tolerance) பொறுத்ததுதான் உலகம் உங்களுக்கு மாறி மாறித் தெரியும்.
பொறுத்துக்கொள்ளுதல் அல்லது தாங்கிக்கொள்ளுதல் (Tolerance) என்பது வாழ்வின் சாதாரண செயலான பேரம் பேசுவதிலிருந்து, வாழ்வின் மிகப்புனிதமான செயல்களான சேவை, பாசம் வரை ஒவ்வொரு நிலைக்கும் தேவைப்படும் அதி அவசியமான ஒரு தகுதி.
நடைமுறையில் இருக்கும் பிரச்சனைகள் மற்றும் அவமானங்களைத் தாங்கிச் ஜீரணிக்கும் பொறுத்துக்கொள்ள முடியாமைதான் (Intolerance) பல விவகாரத்துக்கு மூல காரணம் என்பது மன குண நல ஆராய்ச்சியாளர்களின் முடிவான கருத்து. இந்தப் பொறுத்துக்கொள்ளும் தன்மை என்பது ஒரு தனிப்பட்ட மனிதரின் புரிந்துகொள்ளும் தன்மையைப் பொருத்தது.
நான் பொறுத்துக்கொள்ளும் தன்மை என்று குறிப்பதை - யார் எது செய்தாலும் அதற்கு எந்தவிதப் பதில் உணர்வும் காட்டாமல் தன் உணர்வுகளை அடக்கிக்கொள்வது - என்று தயவுசெய்து மாற்றிப் புரிந்துகொண்டு விடாதீர்கள்.
பொறுத்துக்கொள்ளும் தன்மை என்பது, உணர்ச்சிகளை அடக்குவதல்ல. அது உணர்ச்சி பக்குவநிலை.
ஒவ்வொரு முறையும் வெளியில் நடக்கும் காரியங்களைப் பார்த்துப் பொறுத்துக்கொள்ள முடியாமல் உணர்ச்சிக் கொந்தளிப்பு நிகழும்போது 'ஏன் இப்படித் தத்தளிக்கிறேன்? ஏன்? ஏன்? ஏன்? இப்படி உள்முகமாகத் திரும்பிப் பார்க்க ஆரம்பியுங்கள்.
'ஏன் ?... ஏன் ?... ஏன் ?.. ' என்று கேட்பதோடு நின்று விடாமல் - ஏன் இப்படி நீங்கள் பொறுமையை இழக்கிறீர்கள் என்று புரிந்துகொள்ள ஆரம்பித்தால், வெளியில் நடக்கும் எரிச்சலூட்டும் காரியங்களின் காரண விளக்கம் புரிய ஆரம்பிக்கும். உங்களின் உள்ளுக்குள் நடக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் குறைய ஆரம்பிக்கும். பொறுத்துக் கொள்ளும் தன்மையின் மகிமை புரிய புரிய பொறுமை (Tolerance) அதிகமாக ஆரம்பிக்கும். புரிந்து கொள்ள ஆரம்பியுங்கள்!
துக்கம் நரகத்திற்கு வழி
சொர்க்கத்தை எட்டிப்பார்க்க வேண்டுமா ?
- சிரி.
நரகத்தை எட்டிப்பார்க்க வேண்டுமா ?
-
துக்கப்படு.
-
மனம் உற்சாகமாக இருந்தால் புல்கூட ஆயுதமாகத் தோன்றும். தோல்வியும்கூட குருவாகத் தோன்றும். சாத்தியம் இல்லாததிலும்கூடச் சாத்தியம் மனக்கண்களுக்குத் தெளிவாகத் தெரியும் !
-
மனம் சோர்வுற்றிருந்தால் படையே உடன் இருந்தாலும் பயம் இருக்கும், வெற்றிகூட இப்போ இது ஓ.கே. அடுத்த தோல்வி எப்போது வருமோ என்று யோசிக்கத் தோன்றும். சாத்தியமாகக்கூடியதில் இருக்கும் சிறிய சாத்தியமின்மைகள் மட்டும் மனக்கண்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
இருக நூற்றாண்டில் மனிதரை அதிகம் பாதித்த வியாதி எது?' என்று ஒரு கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது. அது எய்ட்ஸ், கேன்சர், இரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, வறுமை போன்றவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்ற நோக்கில் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது.
கருத்துக் கணிப்பின் முடிவு சற்றும் எதிர்பாராதது. மனிதரை அதிகம் பாதிப்பது துக்கம்தான் என்பது தெரிய வந்தது. துக்கத்துக்குக் காரணம், மனச்சோர்வு ... DEPRESSION. இந்த நூற்றாண்டிலேயே மனிதருக்கு மிகப்பெரும் பிரச்சனையாக இருப்பது இந்த மனச்சோர்வுதான்.
இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்திய துக்கம் அல்லது மனச்சோர்வு எப்படி உருவாகிறது ? ஒரு சிறிய கதையைச் சொல்கிறேன், கேளுங்கள்.
பலருக்கு இந்தக் கதை ஏற்கெனவே தெரிந்திருக்கும். இந்தக் கதையின் கருத்தாழத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தக் கதையைச் சொல்கிறேன்.
ஒரு கிராமத்தில், நகரத்தில் வாழும் தன் மகன்களை நினைத்து எப்போதும் கஷ்டப்பட்டுக் கொண்டே இருந்தார் ஒரு பெண்மணி. பக்கத்து ஊருக்கு ஒரு ஞானி வந்திருப்பதாகவும் அவர் மக்களின் கஷ்டங்களைத் தீர்த்துவைப்பதாகவும் பெண்மணியின் காதுக்குச் செய்தி எட்டியது. பெண்மணி ஞானியைத் தரிசிக்கக் கிளம்பினார்.
"சாமி, எம் பையன்களைப் பற்றிய கவலைதான் எனக்கு எப்போதும். எம் பையன்களுக்கு நல்லகாலம் பொறக்கணும். அதுக்கு ஏதாவது வழி சொல்லுங்க" என்று ஞானியிடம் பெண்மணி வேண்டினார்.
ஞானி, "அப்படியாம்மா ... சரி ... ஏன் எப்போதும் உங்கள் மகன்களை நினைத்தே கவலைப்படுகிறீர்கள் ?" என்று கேட்டார்.
பெண்மணி, "இப்பப் பாருங்க ... இது நல்ல மழைக்காலம். என்னோட மூத்த மகன் உப்பு வியாபாரம் செய்கிறான். மழையில் உப்பு எல்லாம் நனைந்துவிடும். வெயில் முழுமுசாக இல்லாததால் உப்பளம் கட்டமுடியாது.
இன்னும் கொஞ்ச காலம் கழித்து வெயில் காலம். என்னோட இளைய மகன் கம்பளி, குல்லா வியாபாராம் செய்கிறான். வெயிலினால் வியாபாரமே நடக்காது.
இப்படிப் பெரிய மகன் வருடத்தில் பாதிக் காலமும் சிறிய மகன் பாதிக் காலமும் சரியாகச் சம்பாகிக்காத போது, நான் எப்படிச் சந்தோஷமாக இருக்க முடியும் ?' என்றார்.
ஞானி, "ஏம்மா, உங்களைத் தேவையே இல்லாமல் வருத்திக்கொள்கிறீர்கள் ? வெயில் காலத்தில் பெரிய மகன் நன்றாக உப்பு வியாபாரம் சந்தோஷப்படுங்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
மழைக் காலத்திலும் குளிர் காலத்திலும் இளைய மகனின் கம்பளி, குல்லா வியாபாரம் நன்றாக சந்தோஷப்படுங்கள். அப்புறம் பாருங்கள், துக்கம் எங்கே போகிறது என்று! " என்றார்.
இது போலத்தான் பலர் எதையாவது நினைத்துக்கொண்டு கொண்டே இருக்கிறார்கள். இன்னும் சரியாகச் சொல்ல துக்கப்படுவதற்குக் காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்து துக்கப்படுகிறார்கள்.
அந்த ஞானி கூறியதுபோல் நிச்சயம் அந்தப் பெண்மணியால் வருடம் முழுவதும் ஆனந்தமாக இருக்க முடியும். சந்தோஷமும் துக்கமும் வாழ்க்கையை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் அமைகிறது. சரியான மனத்தெளிவு இல்லாமல் போனால்தான் துக்கம் ஏற்படும். இறந்தகாலத்தின் கசப்பான அனுபவங்களும் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மையும் பயமும்தான் துக்கமாக வெளிப்படுகிறது.
வாழ்வில் எப்போதாவது துக்கம் அனுபவிப்பது சாதாரண விஷயம். ஆனால், எப்போதுமே துக்கம் அனுபவிப்பது கொடுமையிலும் கொடுமை!
துக்கம் என்பது ஒரு மனப்பமக்கமாகவே (HABIT) மாறிவிட்டது. துக்கமோ, மனச்சோர்வோ உங்களை ஆட்கொள்ளாமல் இருக்க ஒரு எளிய வழி...
எப்போதும் உற்சாகமாக, சுறுசுறுப்போடு இருங்கள். வெறுமனே உற்சாகமாக இருப்பது என்பது இயலாத விஷயம். பல புத்தகங்களைப் படித்து, "நான் உற்சாகமாக இருக்கிறேன். நான் உற்சாகமாக இருக்கிறேன்" என்று பலமுறை மனதில் சொல்லிக்கொள்வதால் மட்டும் உற்சாகம் வந்துவிடாது.
எப்போதும் உற்சாகமாக இருப்பது என்பது உங்களுக்குள் மலர வேண்டிய ஒன்று.
நீங்கள் மாணவனாக இருந்தாலும் சரி,குடும்பஸ்தராக இருந்தாலும் சரி, உங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து முழுமையாகச் செயல்படுங்கள்.
மனம் உற்சாகமாக இருந்தால் புல்கூட ஆயுதமாகத் தோன்றும். தோல்வியும் கூட குருவாகத் தோன்றும். சாத்தியம் இல்லாததிலும்கூடச் சாத்தியம் ஆவதற்கான சிறு சாத்தியக்கூறுகள் மட்டும் மனக்கண்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
எவ்வளவுக்கெவ்வளவு பொறுப்பு எடுத்துக்கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு உற்சாகமும் சுறுசுறுப்பும் பெற்று சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வீர்கள். மனச்சோர்வு உங்களை அணுகவே அணுகாது!
எவ்வளவுக்கெவ்வளவு பொறுப்பு எடுத்துக்கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு உற்சாகமும் சுறுசுறுப்பும் பெற்று சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வீர்கள். மனச்சோர்வு உங்களை அணுகவே அணுகாது!
கள்ளம், கபடம்
- யாரை எப்படி ஏமாற்றலாம்? ★
- நடிப்பால் மற்றவரை நம்ப வைத்து நம் காரியத்தை மட்டும் சாதிப்பது எப்படி ?
- அப்படிச் சாதித்தபின் மற்றவர் படப்போகும் கஷ்டத்தை கணக்கில்கூட எடுத்துக்கொள்ளாமல் விடுவது எப்படி ?' என்ற மூன்று கேள்விக்குப் பதில் தரும் குண அமைப்பிற்கு பெயர்தான் கள்ளம், கபடம்.
- கள்ளம் உள்ளத்தில் குடியிருக்கும் வரை ★ இல்லத்திலோ. உள்ளத்திலோ, நிம்மதி இருக்காது. இருக்கவும் முடியாது.
- கள்ளங்களை உள்ளங்களிலிருந்து களையும் கலை நுணுக்கமானது. மில்லிமீட்டர் மில்லிமீட்டராய் உள்ளத்தை ஆராயுங்கள். உள்ளதெல்லாம் வெளிச்சத்துக்கு வரும்.
விடிந்தால் இரு நாடுகளுக்கும் பெரும் யுத்தம். மன்னரும் மந்திரியும் பக்கத்து நாட்டு அரசரின் உதவி பெறுவது பற்றி பேசும் போது, மன்னர், "என்ன லஞ்சம் கொடுத்தால் பக்கத்து நாட்டு அரசன் நமக்கு மயங்குவான்?" எனக் கேட்டதற்கு, "மன்னரே, தப்பத்தவறி அந்தத் தவறை மட்டும் செய்து விடாதீர்கள். அவன் ஒரு ஒழுக்கவாதி. லஞ்சம் கொடுத்தால்
நமக்கு எதிரானவனாகி விடுவான்" என மந்திரி சொன்னார்.
ஒரு வாரம் கழித்து அரசவையில், போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, மந்திரி மதுமயக்கத்தில் மன்னரிடம் கேட்டார். "மன்னா அப்படி என்ன சொக்குபொடி போட்டீர்கள்? பக்கத்து நாட்டு மன்னன் நம் காலைச் சுற்றும் பூனையாகி விட்டானே! ".
"எதிரி நாட்டு அரசர் கெட்டவன் என்று சொல்லிச் சொல்லி, நம் ஒற்றனிடமே லஞ்சம் கொடுக்கச் சொன்னேன். அவன் நமக்கு நண்பனாகி விட்டான். என கண்டித்து, மயக்கத்தில் உளறியதை, பக்கத்து நாட்டு அரசன் கேட்டு விட்டான்.
அப்புறம் என்ன! அடுத்த ஒரு வாரத்திற்குள் நிலைமை தலைகீழாகி விட்டது".
- ஏமாற்றப்பட்டவர்களுக்கு ... அது பாடம். பண்படுவார்கள். ஏமாற்றுபவர்களுக்கு ... அது படமெடுக்கும் பாம்பு. ஆபத்து!
கள்ளம் கொண்ட உள்ளம், அது மற்றவர்களை தீண்டுவது போல் குறைந்தது இரண்டு மடங்கு தீண்டப்படும். துன்பப்படும்.
களின் நீகபட குணம் ஏதோ சைக்கோக்கள் மாத்திரமே திட்டம்போட்டு நடத்தும் ஒரு குரூரம் என்று நினைத்து, 'இந்தக் கட்டுரை எனக்கல்ல' என்று தவிர்த்து விடாதீர்கள்.
கட்டுரைக்குள் செல்லும் முன்...
நமக்குத் தேவையானதை மற்றவர்களின் மூலம் சாதிக்க நாம் மாற்றும் முகபாவங்களை ஒருமுறை மனத்திரையில் கொண்டுவாருங்கள். அதேபோல், உங்களுக்கு நன்கு பழக்கப்பட்டவர்கள் உங்களிடம் தங்களுக்குத் தேவையானதைச் சாதிக்க அவர்கள் காட்டும் முகபாவங்களையும் மனத்திரைக்கு கொண்டுவாருங்கள். அது உங்களின் முகபாவங்களைக் கண்டுபிடிக்க வழிகாட்டியாக செயல்படும்.
தொடர்ந்து படியுங்கள். கள்ளம், கபடம் புரியும்.
அன்பு செலுத்தும்போது நீங்கள் உங்களையும் உங்கள் கர்வங்களையும் மறக்கிறீர்கள். மனம் அமைதியாகிறது. இதனால் உடலும் ஆரோக்கியம் பெறும்.
கள்ளத்தில், கபடத்தில் ஒருவர் செயல்படும்போது அவரின் காரியம் நிறைவேறியே ஆக வேண்டும் என்ற நோக்கில் நடிக்கிறார். உடலால், குரலால், வார்த்தைகளால் அன்பொழுகப் பேசினாலும் மற்றவர் பெருமைப்பற்றி பேசினாலும்,
நீ கடந்து வந்த வாழ்க்கையனுபவங்களை ஒன்றுதிரட்டி புத்தகமாக்கும். அதைப் புரட்டிப் பார். அதை மிஞ்சிய வேதம் அவசியமாயிருக்காது. கள்ளம் காண, கபட இவ்வேதம் மிகவும் உதவும்! மற்றவருக்கு ஏக ஏக மதிப்பளித்தாலும் இவற்றைச் செய்பவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் இவற்றால் பலன் ஏதும் இல்லை.
வேண்டுமானால் வெளி உலகத்தில் சில காரியங்களை அந்த மனிதர் சாதித்திவிட முடியும். அதுகூட சரியாக நடித்தால் (ஏமாற்றினால்) தான் சாத்தியம்.
இப்படிப்பட்டவர்களின் உடலானது நல்லவன் போல் நடித்துக் கொண்டிருக்க, உண்மையில் மனதில் கள்ளக்காரராய், கொடியவராய் இருந்து கொண்டிருப்பார்கள்.
கள்ளத்தனத்தைக் கலைப்போல ஒருவர் கற்றுக் கொண்டால் மாத்திரமே, அவர் நினைத்தப்படி மற்றவர்களை ஆட்டிப்படைத்து நினைத்த காரியத்தைச் சாதிக்க முடியும். இது தீமையின் உச்சம்.
இந்தக் கட்டுரைக்குப் பொருத்தமான ஒரு வழக்கு.
வழக்குக்கு மாறாக இந்த வழக்கு விசித்திரமாயிருந்தது.
" இந்த இடத்தில், இந்த நேரத்தில் இந்த நபரை, இந்த ஆயுத்தால், இந்தக் கையால் நான் கொலை செய்கிறேன்.
கொலை செய்த எனக்கு அரசாங்கம் வழங்கும் தண்டனை எதுவானாலும் இந்தக் கொலைகாரன் அதை இனிதே ஏற்றுக்கொள்ளத் தயார்' என்று தன்னிடம் வந்து சரணடைந்த கொலையாளியை நீதிமன்றத்தில் ஒப்படைத்தது காவல்துறை.
நீதிமன்றம்... விசாரணை நேரம்:
நீதிபதி, "ராக்ஸினை நீ கொலை செய்தது உண்மையா?" எனக் கேட்டார்.
கொலையாளி, "என்னுடைய வாக்கு மூலத்தை நீங்கள் படிக்கவில்லையா… ? சரி. மீண்டும் சொல்கிறேன்.
நான்தான் ராக்ஸி மேனைக் கொலை செய்தேன். ராக்ஸி என்னுடைய நண்பன்.
நாளை காலை 7 மணிக்கு உன்னைக் கொலை செய்யப்போகிறேன் என்று சொன்னேன். முட்டாள் ராக்ஸி நம்பவில்லை.
எப்போதும் போல் நான் விளையாடுவதாக நினைத்து விட்டான் - பாவம்!
ராக்ஸி நம்பாவிட்டாலும், நான் அடுத்த நாள் காலை 7 மணிக்கு ராக்ஸியைக் கொலை செய்து விட்டேன்" என நிதானமாகச் சொல்லி முடிக்க ... நீதிபதி கொஞ்சம் தடுமாறிவிட்டார். இதுபோன்ற ஒரு குற்றவாளியை இதுவரை தன் வாழ்வில் அவர் சந்தித்ததில்லை.
வெளியுலகில் ஏமாற்றப் பிறந்தவன் உள்ளலகில் ஏமாறப் பிறந்தவன்
போதும். துக்கப்படுவதாய் நடிப்பது! கள்ளம் கலைக.
குற்றம் செய்தவன் தடுமாற்றமில்லாமல் தெளிவாகப் பேசுவது எப்படி ? நீதிபதிக்குக் கொஞ்சம் உறுத்தியது. குற்றவாளியின் சிரிப்பை பார்க்கும்போதும் அவன் செயலுக்குப் பின் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். ஆனால், இவன் அப்பாவி போல் தெரிகிறானே என்று யோசித்துக்கொண்டே...
உடலின் ஒரு மூலையிலிருக்கும் முளைக்குள் மட்டுமே மனிதன் வாழ்கிறான். இது ஒரு கள்ளத்தொடர்பு!
நீதிபதி, "ஏன் கொலை செய்தாய்?" எனக் கேட்டார்.
"சொன்னால் நம்பமாட்டீர்கள். தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை!" நீதிபதியும், பொது மக்களும் அதிர்ந்துவிட்டார்கள்.
" எந்தக் காரணமும் இல்லை என்றால் ஏன் கொலை செய்தாய்?".
" அவன் சமூக விரோகச் செயல் பல செய்து வருகிறான். அதை நிரூபிக்க ஆதாரம் எதுவும் இல்லை. இவன் ஒருவனை விட்டு வைத்தால் பிற்காலத்தில் ஒரு ஊரையே அமித்தாலும் அமிப்பான். யோசித்தேன். முடிவு செய்தேன். கொலை செய்து விடுவது என்று.
அன்று காலை 7 மணிக்கு நண்பன் ராக்ஸியை கொலை செய்ய வீடு தேடிச் சென்றேன். வா... வா... என்று வரவேற்றான். 'புதிதாக வாங்கிய என் துப்பாக்கியைப் பார்..' என்று காண்பித்தான்.
துப்பாக்கியை வாங்கினேன்.
ராக்ஸி சிரித்துக்கொண்டே... ஏதோ இன்று காலை 7 மணிக்கு என்னைக் கொலை செய்யப் போவதாகச் சொன்னாய் என்று சிரித்தான்.
சிரித்த வாய் மூடுவதற்குள் 'டுப், டூப்' மூன்று முறை டிரிக்கரை அழுத்தினேன். மூன்று குண்டுகளும் வாயில் நுழைந்து பின்ன தலை வழியாக வெளியேறியது.
ராக்ஸி சரிந்தான். என் வேலை முடிந்ததால் நேரடியாக போலீஸ் ஸ்டேஷன் சென்றுவிட்டேன். அவனைக் கொல்ல எனக்குத் தனிப்பட்ட காரணம் ஏதும் இல்லை. இப்போதுகூட அவன் என் நண்பன்தான்.
நான் நல்லாதான் இருக்கேன். நான் மனநோயாளியாக இருப்பேனோ, அதுவோ, இதுவோ! என்று இந்த போலீஸ்காரர்கள் குழம்பி கொண்டிருக்கிறார்கள். பாவம்.
தீர்ப்பு என்ன சொல்ல நினைக்கிறீர்களோ அதை சீக்கிரம் சொல்லுங்கள்" என்றான்.
நீதிபதி 'இவன் சொல்வதைப் பார்த்தால் மிகவும் நல்லவனாகத் தெரிகிறான். இதுபோன்ற நல்லவர்கள் காப்பாற்றப்பட வேண்டும்' என்று எண்ணிக்கொண்டே,
உன்னில் உலவும் போலியானவனைக் காலியாக்கு. நிம்மதி உணர்வைக் கொட்டும் தேள்கள் - கள்ளம், கபடம்!
" கொலைக்கான தனிப்பட்ட முன் விரோதம் இல்லை. மேலும் நடுக்கமில்லாமல் வாக்குமூலம் தரும் முதல் குற்றவாளி நீங்கள் தான். திட்டமிட்டுச் செய்ததால் தூக்கு தண்டனைக்கு நீங்கள் பாத்திரவானாக இருந்தாலும், நான் தூக்குதண்டனைக்குத் தீர்ப்பு எழுத முடியாது".
" நீங்கள் எது கொடுத்தாலும் அது எனக்குச் சரியே. ஏனென்றால் அது என் வேலைக்கு நீங்கள் தரும் கூலி, அவ்வளவுதான்".
"குறைந்தபட்ச தண்டனையான பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனைத் தருகிறேன்".
"தண்டனையைக் கொண்டாட நான் விரும்புகிறேன். அதனால் ஒரு சிறிய வேண்டுகோள்".
"என்ன?"
"கொலை செய்தது என் கை மாத்திரம் தானே. எனவே என் கைக்குப் பத்து வருட கடுங்காவல் தண்டனை கொடுங்கள்".
" அது எப்படி கை மாத்திரம் சிறையில் தண்டனை பெறும் ?".
" அது என் பிரச்சினை. நீங்கள் ஏன் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுகிறீர்கள் ?".
" கொலை செய்த இவன் கைக்குப் பத்து வருட கடுங்காவல் தண்டனை தருகிறேன்".
கொலையாளி நிஜம் போலத் தோன்றும் தன்னுடைய அதி நவீன எலக்ட்ரானிக் செயற்கை கையை கழட்டி வைத்துவிட்டு.
"இதற்குத்தான் பத்து வருடத் தண்டனை" என்று சொல்லி விறுவிறுவென்று கூண்டிலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்துவிட்டான்.
உன்னையும் மீறி, உன்னை இயற்கை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. எனவே ஜீரணம், இரத்த ஓட்டம், ஏன் மூச்சோட்டம் கூட உன் பங்கு இல்லாமலேயே நிகழும் அளவுக்கு, முன்னேற்பாடுகளையும் கடவுள் செய்து வைத்திருக்கிறார்!
கள்ளத்தனத்தையும், கபடத்தனத்தையும் கலை போலத் கற்று ஊரையே ஏமாற்றத் திட்டம் தீட்டி புறப்பட்டு இருக்கும் புத்தி இவன் என்பதை நொடியில் உணர்ந்த நீதிபதி சுதாரித்துவிட்டார்.
நீதிபதி, "முட்டாள்! ஏன் அவசரப்பட்டாய். என் தீர்ப்பு இன்னும் முடியவில்லை. கைக்குப் பத்து வருடக் கடுங்காவல் தண்டனை உண்மைதான். ஆனால் அது மனரீதியான கைக்கு. உடல்ரீதியான கைக்கு என்று சொல்லவில்லை. இப்போது சொல்கிறேன் அது மனரீதியான கைக்கு".
அன்பொழுக பேசினால் அற்ப காரியங்களை அழகாய் சாதிக்கலாம். 'நீங்கள் சொன்னால் சரி! 'உங்களைப் போல் உண்டா! 'ஞாபகத்திலேயே இருக்கீங்க. 'எவ்வளவு நல்லவர் நீங்கள்! 'ஹீ... ஹீ... சொல்லுங்க! என வார்த்தைகளை வசிகரமாய் கையாள்வதைத் தாண்டி உண்மையாக உணர்வுபூர்வமாக உள்ளத்தின் ஆழத்திலிருந்து உணர்ந்து பேசினால் ... அற்ப காரியங்களைச் சாதித்தாலும் சாதிக்காவிட்டாலும் அற்புதமான ஆனந்த உணர்வு எப்போதும் உங்களோடே இருக்கும்!
நீதிமன்றமே பொதுமக்கள் கைத்தட்டினார்கள். கொலையின் உண்மைக் காரணம் பின்னாளில் அவனுக்கு வழங்கப்பட்டது.
இந்த உதாரணம் கள்ளத்தனத்தின் உச்சம், நீதிபதி புத்திசாலித்தனமாக செயல்பட்டதால் கண்டனை கிடைத்து விட்டது.
வாழ்க்கையில் நடைமுறையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரியத்திற்காக கள்ளத்தனத்தையும், கபடத்தனத்தையும் குறைந்த அளவில் பயன்படுத்தும்போது அவர்கள் தண்டனை பெறுவதில்லை.
உங்கள் கள்ளக்கபடத்தால் அதிகம் பாதிக்கப்படுவது நீங்கள்தான் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா ?
இரண்டாகப் மனம் செயல்பட்டால் அதற்குப் பெயர் மனச்சிதைவு. முற்றினால் மனச்சிதைவு நோய்.
கள்ளம் செயல்படுத்தப்படும் போது மனம் பிரிந்து செயல்படுகிறது.
உடலின் முழு இயக்கமும் மனதால் கட்டுப்படுத்தப்படுகிறது. அப்பொமுது நல்லவன் போல் தன் காரியத்திற்காக ஒருவர் நடிக்கும் போது, மனதின் ஒரு பகுதி நல்லவராக செயல் பட்டே ஆக வேண்டும்.
கள்ளங்கபடத்தை (நல்லவன் போல் நடிப்பை) செயல்படுத்த காரணகர்த்தாவாக இருக்கும் கள்ளத்தனம் ஆழமாகச் செயல்பட்டால் மாத்திரமே சரிவர நடிக்க முடியும். இந்த நடிப்புக்குக் காரணமான மனதின் இன்னொரு பகுதி கெட்டவனாகச் செயல்பட்டே ஆக வேண்டும்.
ஒரே நேரத்தில் மனமானது பாதி கெட்டவனாகவும் பாதி நல்லவனாகவும் இரண்டாய் பிளவுபட்டுச் செயல்பட்டால் என்ன ஆவது ? உடலில் சக்தியின் அளவு அதிகம் இருக்கும் வரை கள்ளத்தனத்தோடு வாழலாம். மனச்சிதைவு வெளியே தெரியாது. விஸ்வரூபம் எடுக்காது.
வயது ஆக, ஆக சக்தி குறையக் குறைய பிளவு ஆழமாகும். மனம் சிதையும். உடலும் மனமும் கட்டுப்பாட்டை இழக்கும்.
மனமும் உடலும் மோசமாவது ஏமாற்றுபவருக்குத்தான் அதிக அளவில் இருக்கும்.
ஒருவரின் எதிர்கால நிம்மதி நாசமாவதற்கு, இக்காலத்தில் அவரே அவருக்குச் சேர்த்து வைக்கும் பாதகங்கள்தான் கள்ளம், கபடம்.
கள்ளம், கபடம் சிறிதளவில் இருந்தாலும் சரி, அது வேண்டவே வேண்டாம். தூக்கி எறிந்து விடுங்கள்.
அதனால் பாதகம் மட்டுமே மிஞ்சும்.
கள்ளங் கபடமற்ற குழந்தையாக மாறுங்கள்.
மனம் சுத்தமாகும். உடல் ஆரோக்கியம் பெறும்.
அர்த்தமுள்ள சம்பவம் ...
குல்ஜித் ஒரு கருமி. அவரின் கழுதையை கடனாய் பெற அவ்வூர்க்காரர் வந்தார். அவரிடம், "மன்னிக்கவும். கழுதையை ஏற்கெனவே ஒருவரிடம் கடன் தந்துவிட்டேன்" என குல்ஜித் சொல்லிக்கொண்டிருக்க ... குல்ஜித்தின் கழுதை கத்தியது!
" ஆனால், நான் கழுதை கத்தும் சத்தத்தைக் கேட்கிறேனே!" என்றார் ஊர்க்காரர்.
குல்ஜித், "அப்படியென்றால், இப்போதே சொல்லுங்கள். நீங்கள் யாரை நம்ப போகிறீர்கள் ? கழுதையையா என்னையா'' என்றார்?.
கள்ளம் பேசினால் தப்பிக்கலாம். ஆனால் உள்ளத்திடம் மாட்டிக்கொள்வீர்கள் !
யாரையும் எதற்காகவும் கஷ்டப்படுத்தாதீர்கள் ... நல்லவற்றிற்காகக்கூட !
உங்களின் எல்லா கள்ளங்கபடத்திற்கும் நீங்கள் காரணமல்ல. தெரியாமல் உங்களிடமிருந்து வெளிப்படும் உங்களுக்கே கள்ளங்கபடங்கள் விசித்திரமானவை. அவை எளிதில் கண்டுபிடிக்கப்பட முடியாது.
காரணம், அந்தக் கள்ளத்தனங்களை நல்லத்தனங்கள் என நீங்கள் நம்புவதே.
அறிவுரைகளை மற்றவர்களுக்குச் சொல்லும்போது... மனதில் முடியவில்லை. இவர்களாவது திருந்தட்டும். என நினைத்துக் கொள்வது.
குத்தும் வார்த்தைகளை வீசும்போது ... எல்லாம் அவர்களின் நல்லதுக்குத்தான் என நினைத்துக்கொள்வது, மற்றவரின் குறைகளை மட்டுமே குறிப்பாய் சுட்டிப் பேசும்போது .... உள்ளதைச் சொன்னேன் எனச் சாக்கு சொல்லி, அவர்களின் நிறைகளை மதிக்காமல் அவமதிப்பது.
- என்று எல்லாச் சூழ்நிலைகளிலும் நல்லத்தனங்கள் என்ற பெயரில் கள்ளத்தனங்களே எட்டிப் பார்க்கின்றன.
உங்களின் குணாதிசயங்களே கள்ளத்தனமாகின்றன.
தன்னால் கடைப்பிடிக்க முடியாததை, இன்னொருவரிடம் கடைப்பிடி எனச் சொல்லி அறிவுரை தருவது நல்லத்தனமா ? கள்ளத்தனமா ?
அவரின் எதிர்கால நலனுக்காகத்தான் குத்திப் பேசுகிறேன் எனச் சொல்லி இக்காலத்தை துக்கமாக்குவது நல்லத்தனமா, சிந்தியுங்கள்.
தான் கடைப்பிடிக்க முடியாமல் கஷ்டப்பட்டது போலவே, இன்னொருவரும் கஷ்டப்படுவதற்கான கருத்துக்களைக், நீங்கள் தெரிந்தே பிரயோகிப்பதில்லை.
இந்தச் சமுதாயம் அந்தப் பழக்கத்தை உங்களுக்குக் கற்று தந்துவிட்டது. நீங்கள் தொடர்கிறீர்கள்.
நல்லத்தனங்கள் என்ற போர்வையில், நம்முள் கள்ளத்தனங்கள் உலவும் என்ற புரிந்துகொள்ளுதல் நிகழ்ந்தகணமே இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
உங்களின் நல்லத்தனங்களை நேர்மையோடும் தைரியத்தோடும் நீங்கள் அலசி ஆராயும்போது, 'யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்'
எனச் செயல்படும் கள்ளமனம் கையும் களவுமாக சிக்கிக் கொள்ளும். அப்புறம் அதை தூக்கியெறிவது எளிதானதே.
யாரையும் எதற்காகவும் கஷ்டப்படுத்தாதீர்கள். நல்லதுக்காககூட !
பொய் சொல்லலாம். இல்லாவிட்டால் சும்மாயிருப்பதே பெரும் புண்ணியம்.
திருத்துகிறேன் எனச் சொல்லி வருத்துவது கள்ளத்தனம் !
நல்லதை நாரசமாகச் சொல்லும் வரை, உங்களின் உள் வேதனைகள் இன்னும் கொஞ்சம் புரையேறும். அதைத் தடுக்க ....
எப்போதும் நல்லதைக்கூட நல்லவிதமாக மட்டுமே சொல்லுங்கள்!
அகநடுக்கம்
அகத்தின் தெரியும்" ★ "அகநடுக்கத்தின் அளவு முகத்தில் தெரியும்" என்றால் எல்லோரும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
அழகுக்கும் அகநடுக்கத்திற்கும் நேரடிச் சம்பந்தம் இருக்கிறது.
-
அகநடுக்கம் நிலநடுக்கத்திற்குச் சமம். அகம், நடுங்கும்போது நரம்பு ★ மண்டலமே நடுங்கும். இது மிகைப்படுத்தல் அல்ல. அறிவியல் பூர்வமானது!
-
அகநடுக்கம் ஏற்படும் ஒவ்வொரு நிமிடமும், ★ உடலின் உயிர்ச்சக்தி சேதமாகும்.
-
வாழ்வின் சாதாரண விஷயங்களை அசாதாரணமாகப் பார்க்கப் ★ பழகியதால் உள்ளே உருவாகும் 'அவசரகால நிலை'தான் அகநடுக்கம். கிரகரம்பெல்லின் தொலைபேசி முறை அப்போதுதான் புழக்கத்திற்கு வந்து சூடுபிடித்துக் கொண்டிருந்தது. புதியது என்பதால் தொலைபேசிக் கட்டணம் வெகு அதிகமாக இருந்தது.
எப்போதும் படபடப்பாக இருக்கும் அந்த ஜெர்மானிய தரகுவர் ஜப்பான் தூதரகத்திற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "நான் பேசி முடிக்க மூன்று நிமிடங்களுக்கு மேல் ஆகாது. நான் பேசும் போது நீங்கள் குறுக்கே எதுவும் கேட்கக்கூடாது. கவனமாகக் கேட்க வேண்டும். எனக்கு ஏதேனும் பதில் சொல்ல விரும்பினால் அதை இப்போது சொல்லக்கூடாது. தந்தி மூலமாக பதில் சொல்லலாம். புரிந்ததா?" என முன்னுரை அளித்து சொல்ல வேண்டிய அலுவலகச் செய்திகளை வேகவேகமாகச் சொல்லி முடித்தார்.
தொடர்ந்த ஜெர்மானிய தூதுவர், "சொல்லவேண்டியதையெல்லாம் சொல்லி விட்டேன். மூன்று நிமிடம் முடிய இன்னும் முப்பது வினாடிகள் இருக்கிறது. நீங்கள் ஏதேனும் சொல்ல நினைக்கிறீர்களா?" எனக் கேட்டதற்கு, ஜப்பான் தூதரகத்திலிருந்தவர் சொன்ன பதில், "ஆமாம்... எல்லாம் சொன்னீர்கள். மிக வேகத்தோடு படபடப்பாக நீங்கள் சொல்லி முடித்த செய்தியின் ஒரு வார்த்தைகூட என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை!"
ஜெர்மானிய தூதுவர், "இதை ஏன் முன்பே சொல்லவில்லை?" எனக் கேட்க, ஜப்பான் தூதரகத்திலிருந்தவர், "குறுக்கே பேசக்கூடாதென்று சொன்னது நீங்கள்தானே!" என்று சொன்னவுடன் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.
- படபடப்பும் தேவையற்ற பரபரப்பும் சுறுசுறுப்பு அல்ல. சுறுசுறுப்பு ★ என்ற பெயரில் பதட்டத்தைத்தான் மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். பதட்டத்தால் நடுங்கும் விரல்கள், சிக்கலான நூல்கண்டை விடுவிப்பதற்கு பதில் இன்னும் கொஞ்சம் சிக்கலை அதிகப்படுத்தும் அவ்வளவே. அகநடுக்கம்தான் உங்களின் சாதா பிரச்சனைகளை உடல் மன வேதனைகளாக மாற்றுகின்றன.
நம்முடைய நிம்மதி அலைக்கழிக்கப்படும் எல்லா நிமிடங்களும் நாம் வாழ்வது அகநடுக்கத்தில்தான்.
- கெஞ்சினால் மிஞ்சுவது ! ★ மிஞ்சினால் கெஞ்சுவது!
வெளியில் ஆடு! ★ வீட்டில் பலி!
அமைதியாக இருந்திருக்க வேண்டிய இடத்தில் கோபப்படுவது. ★ கோபப்பட வேண்டிய இடத்தில் அமைதியாக இருந்து விடுவது. - இவைதான் அகநடுக்கத்தின் காரணகர்த்தாக்கள்.
தாப கோப. உலுக்கப்படும்போது, அதை எதிர்க்கும் மனிதர்கள் மிருகமாவார்கள். இதுதான் அகநடுக்கம்.
அடிவயிறு கலங்க வேண்டிய சூழலில்கூட அகத்தில் நடுக்கமில்லாமல் நிம்மதியாக இருப்பவரே மகான் என்று அழைக்கப்படுவார்.
அசோக சக்ரவர்க்கியை கருணைக்காற்றாய் மாற்றியதுகூட ஒரு மகான்தான்.
கி.மு. 270 - புத்த பிட்சுவாகும் முன் அசோகர் ஒரு கொடூரனாக வாழ்ந்த நேரம். ஆட்சி சூழ்ச்சியும், பதவி வெறியும் அகக்கண்ணை மறைக்க புறப்பட்டுவிட்டார் அசோகர்.
தன் சகோதரனைக் கொல்ல முயற்சித்தார்.
ஆனால், சகோதரன் தப்பவிட்டார். தப்பிய சகோதரன் ஒரு புத்தபிட்சுவிடம் தஞ்சம் புகுந்தார்.
சகோதரன் ஒரு புத்தபிட்சுவிடம் ஒளிந்து கொண்டிருப்பதாகச் செய்தி கிடைத்தது.
தஞ்சம் புகுந்தவரை வஞ்சம் தீர்க்க வாளோடு புறப்பட்டார் அசோகர்.
புத்த பிட்சுகளுக்கு மிக நல்ல மதிப்பும், மரியாதையும் பாரதத்தில் இருந்த நேரம் அது.
அனால் அசோகர் தன் கையாட்களோடு புத்த மடாலயத்திற்குள் நுழைந்து, "ஏய்! இங்கே ஒளிந்து கொண்டிருப்பவன் எங்கே?" என்றார் வெறி கலந்த குரலில்.
புத்த பிட்சு சாந்தமாக, "இங்கே பாரப்பா, பழிதீர்ப்பது பொல்லாதது. கோபத்தைக் கோபத்தால் தணிக்க முயற்சிப்பது தவறு.
கோபத்தை அன்பால் வெல்ல வேண்டும்.
பமிக்கு, பமிவாங்குவது தீர்வாகாது.
ஒரு தீமைக்குப் பதிலாக இன்னொரு தீமை செய்வதால் ஏற்கனவே நடந்து விட்ட தீமையைப் போக்க முடியாது.
அதனால் சொல்கிறேன். தீங்கு செய்ய நினைக்காமல் திரும்பிப் போங்கள்' என்று கனிவான குரலில் சொன்னார்.
"உன்னுடைய போதனையை உன் மடத்துறவிகளோடு நிறுத்திக்கொள்.
இவ்வளவு தூரம் பேசும் நீ உள்ளே ஒளிந்திருப்பவரைக்காக சாகத் தயாரா. எங்கே! அகநடுக்கம் மனிதனைத் தடுமாறச் செய்யும். தடம் மாறச் செய்யும். உங்களின் நியாயமான உணர்வுகளை யாருக்காகவும் எதற்காகவும் நசுக்காதிர்கள்!
என் கோபத்தை உன் அன்பால் வெல்லேன்! பார்ப்போம்!" என்று சவால் விட்டார்.
புத்த பிட்சு அதே சாந்தத்தோடு, "சரி, என்னை வெட்டு. ஆனால் மடாலயம் புனிதமானது. அது கறைபடக்கூடாது. வெளியே வருகிறேன், வெட்டு!" என்று கூறி, மடாலயத்தை விட்டு வெளியே வந்துவிட்டார். தன் சவாலை, மிகச் சாதாரணமாக புத்த பிட்சு ஏற்றுக்கொண்டது அசோகருக்கு முதல் அதிர்ச்சி.
இருந்தும் கோபமும், எரிச்சலும் அசோகரைத் தூண்ட, உறையிலிருந்து வாளை உருவி, "சரியான முட்டாள்யா நீ…" என்று கூறிக்கொண்டே வெட்ட முயற்சிக்க... எந்தச் சலனமும் இல்லாமல், கண்களில் கலக்கமே இல்லாமல், தொடக்கத்திலிருந்த அதே சாந்தத்தோடு இருக்கும் புத்த பிட்சுவின் நடுங்காத தன்மை அசோகரை நடுங்க வைத்தது.
இது இரண்டாவது அதிர்ச்சி.
அகநடுக்கத்தின் சல்லிவேர்கள் வரை உணர்வால் பரவு. அகம், சுகம் நோக்கி ஒடுக்கெடுக்கப்படும். அகத்தில் சுகம் பரவ நீ திகம்பராவாய்!
புத்த பிட்சுவின் உருவத்தையும், நடுக்கமில்லாத தன்மையையும் கண்டு திகைக்க அசோகரின் கை அப்படியே அந்தரத்திலேயே நின்று விட்டது.
அசோகரால் பிட்சுவை வெட்ட முடியவில்லை.
தன் முன் இருப்பது சராசரி மனிதரல்ல என்பது மட்டும் அசோகருக்கு அந்தக் கணத்தில் புரிந்தது.
"இப்படியும்கூட ஒரு மனிதரால் இருக்க முடியுமா? உயிரே நடுங்கும் சூழ்நிலையில்கூட சாந்தமாக இருந்தால்! இந்த மனிதர் சாதாரண நேரங்களில் எவ்வளவு சந்தோஷமாக இருப்பார்?" என்று யோசித்துக்கொண்டே, அசோகர், "இது எப்படிச் சாத்தியம் ?…" என்று கோபம் மறைந்து ஆச்சரிய விழிகளோடு கேட்க, ஆனந்தத்தின் வழிகளை அன்போடு அசோகருக்குப் போதித்தார் அந்த புத்த பிட்சு. பின்னாளில் அசோகர் புத்த மதத்தைப் பரப்பும் ஒரு கருணைக் காற்றாக மாற, விதைக்கப்பட்டது அன்றுதான். ஒரு மகானால்தான் சாந்தப்படுத்த முடியும்.
"அகநடுக்கமே இல்லாமல் மிகச் சுகமாக சுலபமாக மனிதர்கள் வாழ முடியும்" என்பதற்கு அப்படி வாழ்ந்து காட்டிய மகான்கள்தான் அத்தாட்சி. வாழும் மகான்கள்தான் சாட்சி.
நடுக்கத்திலிருந்து வெளி வர வழி தரும் ஒரு அழகான ஜென் கூற்று…
"தலை கீழானதை தலை கீழாக்கி விடு !
தலைநிமிர்ந்து விடும் வாழ்க்கை!"
இந்தக் கூற்றை புரிந்துகொள்ள ஒரு சிறிய உதாரணம்.
தலைகீழாகப் புரண்டுவிட்ட வண்டோ, கரப்பான்பூச்சியோ நிமிரப்படும் பாட்டைப் பார்த்திருப்பீர்கள்.
தலைக்கீழாகப் புரண்டுவிட்டதால் தவிக்கும் வண்டை மீண்டும் ஒருமுறை புரட்டினால் (தலைகீழாக்கினால்) பிரச்சனை தீர்ந்தது. படபடத்து நடுங்கும் வண்டு பரவசத்தோடு பறக்க ஆரம்பித்து விடும்.
இதேபோலதான் உள்ளுக்குள் மனிதர் புரண்டு போயிருக்கிறார். அதனால்தான் தவித்துத் தத்தளிக்கிறார்.
வாழ்க்கையையும் மனிதர்களையும் நேர் எதிராக அணுகுகிறான். புரிந்துகொள்ள முடியாமல் படாதபாடு படுகிறார்.
அமைதியாகப் போக வேண்டிய இடத்தில் கோபப்படும் போதும் சரி, கோபப்பட வேண்டிய இடத்தில் அமைதியாக அடங்கிப்போகும் போதும் சரி - தடுமாறும் உணர்ச்சிகளால் உள்ளம் உலுக்கப்படும். நியாயமான உணர்வுகள் அடக்கப்படும்.
இவற்றால் உடலின் உயிர்ச் சக்தி துஷ்பிரயோகப்படுத்தப்படும்.
கொஞ்சம் கவனத்தோடு ஆராய்ந்தால் அகநடுக்கத்தைக் கண்டுகொள்ள முடியும்.
ஒருமுறை கண்டுகொண்டாலே போதும். அகநடுக்கத்தைத் தூக்கி எறிவது சுலபம்.
அகநடுக்கம் குறையக் குறைய அகம் தெளிவாகும். முகமும் தெளிவாகும்.
அகம் அழகாகி,
முகமும் அழகாகிவிட்டால்,
வாழ்க்கையில் நீங்கள் சிறகடித்துப் பறக்கலாம்!
அர்த்தமுள்ள சம்பவம் ...
குல்ஜித்திடம் நிட்டி கேட்டார், "திருமணத்திற்கு முன் பின் அனுபவமென்ன?"
"முன் : 'அவளைக் கண்டாலே எனக்கு நடுங்கும்' - என என்னைப் பற்றி மற்றவர்கள் குறிப்பிடுவார்கள்".
"பின் : "அவளைக் கண்டாலே அவன் நடுங்குகிறான்!" - என என்னைப் பற்றி மற்றவர்கள் குறிப்பிடுகிறார்கள்" !
- ஆம்! நிஜவாழ்வில் மனிதரின் அகநடுக்கம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. உணர்கிறீர்களா!
அபாய காலங்களில்தான் நிதானம் அதிகமாக வேண்டும்.
நீருக்கமானவர்களுக்கு ஏதாவதொரு அபாயம் நிகழ்ந்தால் பதறிப்போவது ...
பாசமா, வேஷமா, இயலாமையா ?
"பெரும்பான்மையினரின் அது இயலாமையின் வெளிப்பாடுதான்!" என்பது மனோ குண ஆராய்ச்சியாளர்களின் முடிவான கருத்து.
அன்பிற்குரியவர் அடிபட்டு இரத்தம் சிந்துவதைப் பார்த்ததும் அடிவயிறு கலங்கி, பதறி, நீங்களும் மயங்கி விழுந்தால், உங்களின் அன்பிற்குரியவர் இன்னும் கொஞ்சம் பரிதாபத்திற்குரிய நிலைக்குத்தானே தள்ளப்படுவார்கள். நீங்களும் மயங்கி விட்டால், யார் அவரைக் காப்பாற்றுவது.
அடிபட்டிருப்பவருக்குப் பரிவும், பாதுகாப்பும்தான் உடனடித் தேவை! பதற்றம் உங்களுக்கும் அவருக்கும் இன்னும் கொஞ்சம் தொல்லைகளை அதிகப்படுத்தும். அவ்வளவே.
பதற்றம் உங்கள் அன்பின் ஆழத்தைச் சொல்லும் அளவீடல்ல.
அது எதிர்பாராததை எதிர்த்துக் கையாளும் பக்குவம் இல்லாதிருப்பதை அளந்து சொல்லும் அளவீடு மட்டுமே. அகநடுக்கம் இல்லாத ஒருவரின் உடலும் மனமும் பதட்டந்தரும் சூழலில் முழுமையாய் விழித்துக்கொள்ளும்.
பதற்றம் தரும் சூழலில் உங்களிடமிருந்து வெளிப்படும் நிதானத்தின் அளவுதான் உடல் - மன ஆரோக்கியத்தின் அளவீடுகள்.
நிதானம் என்ற பெயரில் மற்றவரின் ஆபத்துக் காலத்தில் விட்டேறியாக, இயந்திரம் போல் நடந்து கொள்வது, அக இறுக்கத்தின் வெளிப்பாடு.
அபாய காலத்தில் பயம்
நடுக்கம்
பாயக் கூடாது!
பதறுவது அகநடுக்கம். விட்டேறியாயிருப்பது அக இறுக்கம்.
இரண்டுக்கும் பொதுவான இவை அணுகுமுறையான பரிவுதான் –
ஒருவரிடமிருந்து வெளிப்பட வேண்டும்.
அபாயத்திலிருப்பவருக்கு...
அபாயத்தையும் பரிவையும் ஒன்றுசேர்த்து -
அதை நிதானமாக மாற்றி உங்கள் மூலமாக வெளிப்படுத்திடப் பழகுங்கள். வெளிப்படுத்துங்கள்!
இரண்டுமே உங்களை அடியோடு மாற்றும் தியானங்கள்.
எல்லா அபாய காலங்களையும் தியானகாலமாக்குங்கள்!
அபாய காலம்தான்... அபய குணம் பாயும் காலம். அந்த நொடியில் விழிப்பு பொங்க வாழ் ! உள் உலகில் பரிவட்டம் சூட்டப்படுவாய் !
நம்பிக்கை
திட்ட காரியத்தில் நம்பிக்கை வை, உன் நம்பிக்கைக்கு வாழ்க்கை கை ★ கொடுக்கும்.
- "என் பெயர் XY /XX ★ நான் ஒரு மனிதன், மனுஷி. எனக்கென்று ஒரு குடும்பம் - தொழில் என் வாழ்வின் நோக்கம் இதுதான். நான் உடல், மன அளவில் நன்றாக இருக்கின்றேன்!"
என்ற சில நம்பிக்கைகளை அச்சாணியாக வைத்துதான் மனிதர்கள் தெளிந்த மனநிலையில் வாழ்கின்றனர்.
சில நம்பிக்கைகளில் ஏற்படும் குளறுபடிதான், மனிதரின் மனதைக் குளறுபடியாக்கிப் பைத்தியம் ஆக்குகிறது.
சில நம்பிக்கைகள், முழுவதுமாக மனதைவிட்டு வெளியேறுவதும் உடலைவிட்டு உயிர் பிரிவதும் ஒன்றாய் நிகழும் போது, மனிதர்கள் இறந்து விடுகின்றனர்.
உன் வாழ்க்கையின் தரம், உங்கள் நம்பிக்கையின் தரத்தைப் பொறுத்தது. ★
நம்மில் சிலருக்கு உடனே நடந்து விட வேண்டும். அலாவுதீனும் அற்புத விளக்கும் கதையில்தான் இந்த மாதிரியாக மாயாஜாலம் நடக்கும். ஆனால், வாழ்க்கை என்பது கதையோ, படமோ அல்ல. இங்கே வெற்றி கிடைக்க வேண்டுமென்றால், பல ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டும்.
விவசாயத்தில் எவ்வளவோ புரட்சிகள் நடந்து விட்டன. என்றாலும், நெல் விளைவதற்குக் குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் பொறுத்துத்தான் ஆக வேண்டும்.
அதைப் போலவே, ஒரு தாயின் வயிற்றில் குழந்தை கருவாகி, உருவாகி வளர்வதற்கு ஒன்பது மாதங்களும் சில நாட்களும் காத்திருக்கத்தான் வேண்டும்.
ஏர்னெஸ்ட் ஹெமிங்வே நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர். அவர் எழுதிய 'கடலும் கிழவனும்' என்கிற நாவலுக்கு நோபல் பரிசு கிடைத்தது. இந்த நாவலில் வரும் கிழவர், நம்பிக்கையின் உருவகமாகவே இருக்கிறார். அந்த நம்பிக்கையின் அடிப்படை பொறுமைதான். பொறுமையாக இல்லாதவரின் நம்பிக்கைதான் முதலில் சோதனைக்குள்ளாகிறது.
நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்புங்கள்... உங்களை நம்புங்கள் ! எதை நீங்கள் நம்புகிறீர்களோ, அதுவாகவே நீங்கள் மாறுவீர்கள். கிருமியாலேயே செத்துப்போகிற உயிர்களும் உண்டு. மார்பில் துப்பாக்கிக் குண்டுகளை வைத்திருந்து வாழ்க்கையை ஓட்டுகிறவர்களும் உண்டு.
வாழ்வதற்கும் சாவதற்கும் இடையே இருக்கிற ஒரே வித்தியாசம் நம்பிக்கைதான்.
ஒரு கதையை உங்களுக்குச் சொல்கிறேன்.
ஓர் ஆழமான கடல். அதன் நடுவில் ஒரு மலை. மலையின் உச்சியில் பாறை இடுக்கில் ஒரு பறவை கூடு கட்டிக்குஞ்சு பொரித்திருந்தது. தன் குஞ்சுப் பறவைகளுக்கு உணவு தேடுவதற்காக, அது ஒரு நாள் காலை எங்கோ பறந்து போயிற்று.
குஞ்சுப்பறவைகளுக்கோ பசி. எதிரே பார்த்தால் சிவப்பு வண்ணத்தில் கண்களை மிரட்டுகிற சூரியன். கீழே பார்த்தால் அலைக்கரங்களை மேலே எழுப்பும் கடல்.
தான் கீழே குதிக்கப் போகிறேன் என்றது ஒரு குஞ்சுப் பறவை. அதற்கு, வேறு ஒரு பறவை "நீ குதித்தால், கடலில் மூழ்கிச் சாவது உறுதி" என்று சொன்னது.
சற்று நேரம் தயங்கிய அந்தக் குஞ்சுப்பறவை, பிறகு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கடலில் குதித்தது. குதித்த பிறகுதான் அது தண்ணீரில் மூழ்கமுடியாது என்பதைக் தெரிந்துகொண்டது.
அது கடலின் மேற்பரப்பில் மிதந்து சின்னச் சின்ன மீன்களைக் கொத்தித் தின்றது. அதைப் பார்த்த மற்ற குஞ்சுப் பறவைகள் எல்லாம் கடலில் விழுந்தன.
தங்கள் மிதக்கத்தான் முடியும், மூழ்க முடியாது என்பதை அப்போது அவை தெரிந்து கொண்டன.
இந்தக் கதையில் வருகிற முதல் பறவை நம்பிக்கை இல்லாது இருந்திருந்தால் ... உடன் பிறந்த தன் குஞ்சுப் பறவைகளோடு பசியால் மாண்டு போயிருக்கும். அதன் நம்பிக்கையே அதை வாழ வைத்தது.
அறிவால் நம்பிக்கை உருவாவது தவறில்லை. ஆனால் உணர்வால் உருவாகிற நம்பிக்கை உடனே பலன் தருகிறது. வெறும் அறிவு எதையும் கேள்வி கேட்கும். எதையும் நம்பாது. கேள்வி கேட்பதில் தவறில்லை. ஆனால் கேள்விகளிலேயே வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவிடக்கூடாது.
பிணத்துக்குப் போகிற மனிதரைப் மனிதர் பார்க்கிறார். ஆனாலும் தனக்கு மரணம் வராது என்பதைப் போலத்தானே நடந்து கொள்கிறார். இது தவறான நம்பிக்கை என்றாலும் இந்த நம்பிக்கைதான் மனிதரை இயங்க வைக்கிற உந்து சக்திகளில் ஒன்றாக இருக்கிறது.
பெரிய ஏரியில் மீன்பிடிக்கப் போகிறவர்கள் தூண்டிலைப் போட்டுக்கொண்டு எவ்வளவு நேரம் பொறுமையாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர் ? தூண்டிலில் எந்த மீனும்
சிக்காது என்கிற அவநம்பிக்கை வந்து விட்டால், ஏரிக்கு யார் போவார்கள் ? நம்பிக்கையோடு காத்திருப்பது, திட்டமிடுதல், புத்திசாலித்தனமாக உழைத்தல் ஆகிய வெற்றிப் படிக்கட்டுகள், அடிப்படை அஸ்திவாரங்களாக உள்ளன.
மனிதன் தன்னம்பிக்கையையும் சுவாசிப்பதால்தான் வாழ்கின்றனர்.
சுவாசிக்கும் காற்று மாசடைந்திருந்தால் நம் ஆரோக்கியம் நாசமடைவது உறுதி.
அதேபோல் தன் மீது கொண்ட நம்பிக்கை மாசடைந்திருந்தால் நம் வாழ்க்கை நாசமடைவது உறுதி.
தான் மோசமானவன் என்று கூறித் தாழ்வுமனப்பான்மையில் நோக வைப்பது அவரது தவறான நம்பிக்கைதான். நான் பெரியவன் என்று நினைக்க வைக்கு உயர்வு மனப்பான்மையால் நோகவைப்பதும் அவரைப் பற்றிய தவறான நம்பிக்கைதான்.
ஒருவனின் நம்பிக்கைதான் அவரது மன, குணச் செயற்பாட்டின் அச்சாணி. தன்னம்பிக்கை என்னும் அச்சாணியில் நெளிவு ஏற்படும் போதும் வாழ்க்கைச் சக்கரத்தின் இயக்கம் பாதிக்கப்படும். மனிதர்கள் தடுமாறுவார்கள்.
கற்பனையை நிஜம் என்றும், பொய்யை உண்மை என்றும் தவறைச் சரி என்றும் நம்பும் மாசடைந்த நம்பிக்கையை மையமாகக் கொண்டு உருவாகும் மனதின் செயல்பாடும், குணத்தின் வெளிப்பாடும் தன்னம்பிக்கையின் கலங்கிய தன்மையைப் பொறுத்தவை.
இதைப்பொறுத்துத்தான் வாழ்க்கைச் சக்கரத்தின் இயக்கம் உற்சாகமா ? இல்லை உள் சோகமா? என்று முடிவு செய்யப்படும்.
தவறை அறிந்து சரியாகப் புரிந்து கொண்டால் நம்பிக்கையைச் சுற்றிக் கொண்டிருந்த மாசு நீங்கிவிடும். மாயம் கலைந்து விடும்; வாழ்க்கைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும்.
நம்பிக்கை திடமானால் வாழ்க்கை திடமாகும்; தன்னம்பிக்கை சரியானால் வாழ்வு சரியாகும்.
உங்கள் தன்னம்பிக்கையின் தன்மையைப் பொறுத்துத்தான் அது வாழ்வா? இல்லை பிரச்சனையா? இல்லை தீர்வா என்று முடிவு செய்யப்படும்.
நம்பிக்கையை வளப்படுத்துங்கள் வாழ்வு வளமாகும் !
மனிதன் காற்றைச் சுவாசிப்பதால் மட்டும் வாழ்வதில்லை. தன்னம்பிக்கையையும் சுவாசிப்பதால்தான் வாழ்கின்றனர்.
நம்பிக்கை திடமானால் வாழ்க்கை திடமாகும். தன்னம்பிக்கை சரியானால் வாழ்வு சரியாகும்.
போலி நம்பிக்கை
போலி நம்பிக்கை உங்கள் மனதிற்குள் நுழைந்து விட்ட எச்.ஐ.வி கிருமி (HIV - Happiness Insufficiency Virus) போலி நம்பிக்கை நிம்மதியைக் கெடுத்து, சந்தோஷத்தைக் குறைக்கும்.
- தான் முட்டாள் என்ற உண்மையைக் கடைசி வரை முட்டாளுக்குத் தெரியவிடாமல் மறைத்துவிடும் - மனதின் மாயத்திரைதான் போலி நம்பிக்கை. நம்பிக்கை... மனிதர்கள் உயிர் வாழ மிகவும் அவசியமான ஒன்று. அந்த நம்பிக்கை எப்படிப்பட்டது என்பதைப் பொறுத்துதான் வாழ்க்கை அமையும். அவநம்பிக்கை, மூடநம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, போலி நம்பிக்கை, பயத்தால் வரும் நம்பிக்கை, ஆசையால் வரும் நம்பிக்கை என்று பல நம்பிக்கைகள் உள்ளன.
இதில் ஏதோ ஒரு சில நம்பிக்கையை அச்சாணியாகக் கொண்டுதான் ஒவ்வொருவரின் சக்கரத்தைச் சுழற்ற முயல்கிறார்கள்.
சர்க்கஸ் கூடாரங்களில் அவ்வளவு பெரிய யானை எப்படிச் சிறிய சங்கிலிக்குக் கட்டுப்பட்டு நிற்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? யானை நினைத்தால், ஒரேயொரு காலில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியை நூல் தெறிப்பது போல அறுத்துக்கொண்டு ஓடிவிடலாம்.
ஆனால், அப்படி ஒருபோதும் நடப்பதில்லை. காரணம், மனதில் ஆழப் பதிந்துபோன செய்தி கான்.
யானை, குட்டியாக இருக்கும் போதே, சங்கிலியால் ஒரு காலைப் பிடித்துக் கட்டிவிடுவார்கள். இயல்புக்கு ஏற்ப குட்டி ஓடியாட முயன்று பார்க்கும். அது குட்டியாக இருப்பதால், அதற்குப் பலம் போதாது. குட்டியால் அந்தச் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓட முடியாது. சங்கிலியை அறுக்க முடியாதென்பது அந்த இளம் வயதுக்குச் சரி.
யானைக்குத் தன்னால் இந்தச் சங்கிலியை நிச்சயமாக அறுத்துக் கொண்டு ஓட முடியாது என்ற செய்தி மூளையில் ஆழப்பதிந்துவிடும். தன்னால் இப்போது இந்தச் சங்கிலியை அறுக்க முடியும் என்ற உண்மை, யானைக்குத் தெரியாமலேயே போய் விடும்.
வளர்ந்த பிறகும் கூடத் தன்னால் அறுக்க முடியும் என்ற எண்ணம் யானைக்கு வருவதே இல்லை.
உண்மையைத் தெரிந்து கொண்டாலும் தெரிந்து கொள்ளாவிட்டாலும் புரிந்து கொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும் உண்மை, உண்மையே!
இந்த யானையைப் போல்தான் நம்மில் பலரும் இளம் வயதில் இயலாமை, சூழ்நிலை காரணமாக சிறுசிறு தோல்விகளை, ஏன் பெரிய தோல்வியைக்கூட சந்தித்திருக்கலாம். அந்தத் தோல்விகள் முடிவுகள் அல்ல.
அந்த அசம்பாவிதமான தோல்விகள் உங்களையும் அறியாமல் உங்கள் மனதில் ஆழப் பதிந்துவிடும். முதல் முறையாகப் பங்கு கொண்ட மேடைப்பேச்சில் ஒருவர் சரியாகப் பேசவில்லை என்றவுடன், தனக்குப் பேச்சுத் திறமையே இல்லை என்று நம்ப ஆரம்பித்துவிடுவார்.
அந்த நம்பிக்கை பிற்காலத்தில் மேடைப்பேச்சுப் பேசவே முடியாது என்ற இயலாமையாக மாறிவிடும். ஆனால், ஒவ்வொருவருக்குள்ளும் நன்றாக மேடையில் பேசுவதற்கான எல்லாவிதத் திறமையும் இருக்கிறது. இது உண்மை. இந்த உண்மை தெரியாமலேயே போய்விடும். தற்செயலாகத் தெரிந்தால்கூட இப்படிப்பட்டவர்களால் நம்ப முடியாது.
நம்பிக்கைகள் பலவிதம்.
ஆனால், இந்த நூற்றாண்டில் அதிகமாயிருக்கும் பிரச்சனை போலி நம்பிக்கை இது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும்.
என்னால் இவ்வளவுகான் படிக்க முடியும். இதற்குமேல் முடியாது. என்னால்
போலி நம்பிக்கை நிஜத்தை போலியாக்கி போலியை நிஜமாக்கி போலியை நிஜம் போல் நம்ப வைத்து கீழ்மையை காலி செய்யும் தன்மை கொண்டது!
இவ்வளவுதான் உழைக்க முடியும். இதற்கு மேல் முடியாது. சந்தோஷமாக இருக்க முடியும். இதற்கு மேல் முடியாது ... என்று தங்கள் குணம், திறமை, வாழ்க்கை முறை, மற்றவருடன் பழகும் முறை என்று எல்லாவற்றிலும் ஒரு வேலி, ஒரு கோடு போட ஆரம்பித்துவிட்டார்கள்.
யானை, குட்டியாக இருக்கும் போது சங்கிலியை அறுக்க முடியாது என்று மூளையில் பதிந்தது அவர்களுடைய அனுபவத்தால் (ஒவ்வொரு விஷயத்திலும்) "தங்களால் முடியாது" என்று துர்ச்செய்தியை மனதின் ஆழத்தில் பதிய வைத்து விடுகிறார்கள்.
வயது அதிகமான பின்பு சாதிப்பதற்கான சக்தியும் சாத்தியக்கூறுகளும் இருந்தாலும் அவர்களுடைய போலி நம்பிக்கை அவர்களைத் தடுத்து விடுகிறது.
இன்றைய உலகில் கஷ்டப்படுபவர்கள் எல்லோருமே இந்தப் போலி நம்பிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள்தான். வாழ்க்கையில் சாதித்தவர்களெல்லாம் உண்மையான சக்தியையும் சாதிப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் உணர்ந்து உண்மையாக நம்பிச் செயல்பட்டு, வென்றவர்களே!
நம்புங்கள் உங்களுக்குள் எல்லாத் திறமையும் அதற்கான சக்தியும் இருக்கின்றது.
ஒரு முறை நித்திராஜன் ரயில் பயணம் மேற்கொண்டிருந்தார். பாதி வழியில் டிக்கெட் பரிசோதனை நடை பெற்றது. நித்திராஜன் டிக்கெட்டைத் தேடினார். கிடைக்க வில்லை. பெட்டியைக் கிறந்தார், எல்லாத் துணிகளையும் கலைத்துப் பார்த்துவிட்டார். டிக்கெட் கிடைக்கவில்லை.
அடுத்துப் பையைக் கவிழ்த்துப் பார்த்தார். டிக்கெட் கிடைக்கவில்லை. நித்திராஜன் கட்டுக் குலையாமல் டிக்கெட் தேடுவதைப் பார்த்த பயணி ஒருவர், "சார், உங்களோட பேண்ட் பாக்கெட்டைப் பார்த்தீர்களா?" என்று கேட்டார். நித்திராஜன், "இல்லை இல்லை ... கடைசியாகத்தான் பார்ப்பேன், என்னோட நம்பிக்கை பேண்ட் பாக்கெட்டில்கான் இருக்கிறது".
பயணியோ, "என்ன குழப்புகிறீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு நித்திராஜன், ''இப்போ இவ்வளவு இடத்தில் தேடிப் பார்த்த பிறகும் என்னோட டிக்கெட் கிடைக்கல. எப்படி இருந்தாலும் டிக்கெட் பாக்கெட்டில்கான் இருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன். அதனால்தான் பதட்டப்படாமல் தேடிக் கொண்டிருக்கிறேன்" என்று தெளிவாகப் பதிலளித்தார்.
நித்திராஜனைப் போலப் பலரும் ஏதோ ஒரு குருட்டுநம்பிக்கையைப் பிடித்துக் கொண்டு, தாங்கள் தெளிவாக இருப்பதாக நினைத்து, வாழ்க்கையையும் நேரத்தையும் வீண்டுகிறார்கள்.
மனிதமனம் தோல்விகளையும் அவமானங்களையும் பதிய வைத்துக் கொள்ளும் அளவுக்கு, வெற்றியையும் பாராட்டுக்களையும் பதிய வைத்துக்கொள்வதில்லை.
வாய் ப் பு
வயது அதிகமான பின்பு சாதிப்பதற்கான சக்தியும் சாத்தியக் கூறுகளும் இருந்தாலும், அவர்களுடைய போலி நம்பிக்கை அவர்களைத் தடுத்து விடுகிறது.
தோல்வியையும் இயலாமையையும் நினைத்து நினைத்து, வாழ்க்கையை வீணாக்காதீர்கள். வெற்றியையும் சாதிப்பதற்கான சாத்தியக்கூற்றையும் நினைத்து வாழுங்கள்!
கடந்த காலத்தில் தற்செயலாக நம்பிவிட்ட சில அசம்பாவிதங்கள் மூலம் உங்களையோ, உங்களின் திறமையையோ மதிப்பிட முடியாது.
சில அசம்பாவிதமான நிகழ்ச்சிகளைக் கொண்டு பல திறமைகள் பொதிந்த உங்களை, தோற்றவன், இயலாதவன், கெட்டவன் என்று நம்பவைப்பது போலி நம்பிக்கை என்னும் மாயக்குணம்தான்.
"என்னால் முடியாது !"
"என்னால் அவ்வளவுதான் முடியும் !"
"என்னோட Capacity இவ்வளவுதான் !"
"அதெல்லாம் என் தகுதிக்கு அதிகம் !"
என்ற ஒரு சில கருத்துக்களைக் கொண்டுதான் போலிநம்பிக்கை வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த மாயக்கருத்துக்களைத் தூக்கி எறியுங்கள். வாழ்க்கைக் கடலில் குதியுங்கள். திறமைகளைக் கண்டுபிடியுங்கள். போலிநம்பிக்கை இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். போலி மறைய நம்பிக்கை பிறக்கும்! வெற்றி நிச்சயம் !
நீங்கள் ஏன் கடவுளாகக் கூடாது?
தண்ணாடிக்கோப்பையில் மட்டுமே ஃப்ரூட் சாலட் சாப்பிட்டுப் பழகிய இஸ்ரேலிய சிறுமி தன் குடும்பத்தோடு பாரதத்திற்கு வந்திருந்தாள். பெட்டிக்கடையில் தொங்கிய வாழைத்தாரை முதன்முறையாகப் பார்க்க, அச்சிறுமிக்கு மிக ஆச்சரியமாக இருந்தது.
"கண்ணே! நீ விரும்பிச் சாப்பிடும் ஃப்ரூட் சாலட் போலவே இதுவும் சுவையாய் இருக்கும்" எனச் சொல்லி ஒரு வாழைப்பழத்தை அச்சிறுமிக்கு தந்தை உரித்துக் கொடுத்தார்.
அதைச் சுவைத்துச் சாப்பிட்டு முடித்த சிறுமி, கடைக்காரரிடம் வாழைப்பழத்தோலை நீட்டினாள்.
கடைக்காரர், "பாப்பா, உனக்கு என்ன வேண்டும்?" என கேட்க, சிறுமி, "எனக்கு இந்த தோலை மீண்டும் நிரப்பித் தாருங்கள்" என்றாள்!
இக்குழந்தை போலத்தான் மனிதமனம் கடவுளைப் பற்றி கணித்து வைத்திருக்கிறது.
தோலில் பழத்தை நிரப்ப முடியுமா? மனதால் கடவுளைப் புரிந்துகொள்ள முடியுமா ?
- கடவுளைக் காண முடியும் கடவுளை உணர முடியும் கடவுளை அனுபவிக்க முடியும்! - நீங்கள் கடவுளான மறுநிமிடமே !
- கடவுள் என்றால் கட+உள். எல்லாவற்றையும் கடந்துவிட்டால் உள்ளேயிருப்பது கடவுளைத் தவிர வேறேதுவும் இல்லை.
- கடவுளாகவே மனிதர்கள் மாறும்வரை ... கடவுளை மனிதரால் கற்பனை செய்ய முடியாது. கடவுளை மனிதரின் மிக உயர்ந்த வடிவமாகவோ அல்லது
எல்லா பாவங்களையும் எல்லாக் கர்மங்களையும் நொடியில் எரித்து மண்ணை மாணிக்கமாக்கும் மகாசக்தி ஒவ்வொரு மனிதருள்ளும் மறைந்திருக்கிறது.
மாணிக்கமாக நீங்கள் தயாரா?
கடவுளை சக்திகளின் தொகுப்பாகவோ மட்டுமே மனிதரால் கற்பனை செய்ய முடியும்.
கடவுளை மனிதனால் புரிந்து கொள்ளவே கடவுளால்தான் புரிந்துகொள்ள முடியும். எனவே, கடவுளாகுங்கள்!
ஒரு மாமரத்தின் இரு கிளைகள் பேசிக் கொண்டன. மாங்கிளையைப் வளரும் மாங்கிளை கேட்டதாம் ...
"ஏன் நீ மட்டும் இவ்வளவு வேகமாக வளரத் துடிக்கிறாய் ?"
"நான் விரும்புகிறேன். அதனால்தான் ... " என்றதாம், வேகமாய் வளரும் மாங்கிளை.
முடியாது. அது மாமரம் தானென உணர வேண்டும். அதே விதிதான் மனிதன் எனும் கடவுளுக்கும்.
மீண்டும் ஒரு முறை தலைப்பை உணர்ந்து படித்து விட்டுக் கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.
நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உங்கள் உடல் காற்றைச் சுவாசிக்கிறது. காற்றில் வாழ்கிறீர்கள்.
அதேபோல், நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உங்கள் ஆத்மா கடவுள் சக்தியைக் கிரகிக்கிறது. நீங்கள் கடவுள் சக்தியில் வாழ்கிறீர்கள்.
ஒரு நாய்க்கு, அது நாய் என்ற விஷயம் தெரியாது. ஒரு மாட்டுக்கு, அது மாடு என்ற விஷயம் தெரியாது. நாய், மாடு என்பது நாம் உருவாக்கிய பெயர்கள், நாயையும், மாட்டையும் பொருத்தவரையில் அது அதுவாக உணரும். அவ்வளவுதான்.
மனிதருக்கு மாத்திரம்தான், அவர்கள் மனிதன் என்ற விஷயம் தெரியும். புரியும். காரணம் மனம்.
மனிதர்களுக்குத் தெரிந்த மனம் தாண்டிய ஒரு நிலை இருக்கிறது. அதற்குப் பெயர்தான் மனம் கடந்த நிலை.
மனம் கடந்த ஆத்ம உணர்வு ஒருவருக்குள்ளிருந்து வெளிப்பட்டால் கடவுளையே கண்ணுள் ஒருவராகக் காண முடியும்.
கடவுள் தன்மையை ஒரே ஒருமுறை உணர்ந்து விட்டால், கடவுள் என்ற வார்த்தை ஆழமாக விளங்கிவிடும்.
தானே எல்லாமாகவும், எல்லாம் தானாகவும் மாறிவிடும்.
ஒரு சிறிய சம்பவம்…
"கடவுளை நேரில் காண முடியுமா?" என்ற தீவிரத்தேடலில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தவர் மதுவாதன்.
மதுவாதன் பல வருடங்களுக்கு முன் பிரிந்த தன் பால்ய சிநேகிதன் ராககீர்த்தனைச் சந்திக்க நேர்ந்தது. ராககீர்த்தன் வெகு குதூகலத்தோடும் பளிச்சிடும் கண்களோடும் உற்சாகமாக இருந்தார்.
ராககீர்த்தனின் ஆனந்தக் கூத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ளும் ஆசையில் மதுவாதன், "இவ்வளவு குதூகலமாக நீ இருப்பதின் ரகசியம் என்ன?" என்றார் ஆச்சரியம் மேலிட..
ராககீர்த்தன் வெகு இயல்பாக, "நான் கடவுளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அதுதான் ரகசியம்!" என்றார்.
மதுவாதன், "என்ன சொல்கிறாய்!!!" என்றார் ஆச்சரியத்தின் உச்சியில். காரணம் "கடவுளைக் காண முடியுமா?" என்பது அவருடைய இரண்டு வருட கேள்வி.
ராககீர்த்தன், "கடவுளை பார்க்க விரும்புகிறாயா?" என்றார்.
மதுவாதன். "அது சாத்தியம் என்றால் உடனே என்னை அங்கு அழைத்துச் செல்" என்றார்.
போகும் வழியெல்லாம் தன் கடவுளைப் பற்றிய முழுவிவரத்தையும் ராககீர்த்தன் சொல்லிக் கொண்டே வர மதுவாதனின் கடவுளைப் பார்க்கும் ஆர்வம் அதிகமாகி விட்டது. மதுவாதன் ஓட்டமும் நடையுமாக ஓட ஆரம்பித்துவிட்டார்.
கடைசியாக, ஒரு பெரிய ஆலமரத்தின் பின்புறம் மதுவாதனை கூட்டிச் சென்ற ராககீர்த்தன், "முன்னால் சென்று பார்! என் கடவுள் ஆனந்த அமைதியில் அமர்ந்திருப்பார்" என்று தன் சத்குரு சாக்கிய முனியிடம் அழைத்து வந்தார்.
மதுவாதன் சாக்கிய முனியைப் பார்த்த நிமிடம், தன்னுள் ஓர் அற்புத உணர்வு பரவுவதை உணர்ந்தார். இதுவரை அவர் அனுபவித்திராத ஆனந்த உணர்வு அது!
மதுவாதனைப் பார்த்துப் புன்னகைத்த சாக்கிய முனி, "என்ன?" என்றார்.
மதுவாதன், "நீங்கள் கடவுள்" என்றார்.
சாக்கியமுனி, " உன் பிரச்சனை என்ன?" என்று கேட்டார்.
மதுவாதன், "நான் உலகத்தில் செய்யாத பாவங்களே இல்லை. என் கொடுரங்களிலிருந்து என்னை மன்னிக்கக் கடவுள் ஒருவரால்தான் முடியும். எனவேதான் கேட்கிறேன். நீங்கள் கடவுளா?" என திரும்பவும் கேட்டான்.
சாக்கிய முனி, "ஒரு விஷயம் உறுதி. நான் நிச்சயமாக நீ நினைத்துக் கொண்டிருக்கும் கடவுள் கிடையாது. ஆனாலும் உன் பிரச்சனைக்கு என்னால் தீர்வு தர முடியும்" என்றார்.
மேலும், "உன் பிரச்சனை என்ன? சொல்" என்று கேட்டார்.
"நான் நினைக்கும் கடவுள் இவர் இல்லை. அப்படியென்றால் கடவுளைவிட இவர் பெரியவரோ!' என்று சிந்தித்துக்கொண்டே மதுவாதன்,
" ஜந்து பெண்களின் வாழ்வை நாசப்படுத்தியிருக்கிறேன். எனக்குப் பிடிக்காத நான்கு பேரை சித்ரவதை செய்து கொலை செய்திருக்கிறேன். என்னுடைய மூத்தமகனைக் கதறக் கதற நானே வெட்டி என் இஷ்ட தேவதைக்குப் பலி கொடுத்திருக்கிறேன்.
மனிதன் தெரிந்துவைத்திருக்கும் கடவுள் என்பதே வெறும் கருத்துக்களின் - கற்பனைகளின் தொகுப்பு மட்டுமே!
பல குடும்பங்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்திருக்கிறேன்" என்று தன்னுடைய கொடுரங்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு மிக்க மனவருத்தத்தோடும், கவலையோடும் சொன்னார்.
மேலும், தொடர்ந்த மதுவாதன், "விவரம் தெரிந்த நாள் முதல் ஏதோ ஒன்றைக் கேடித்தேடி அலைகிறேன். அது கிடைக்கவேயில்லை.
'அதில் கிடைக்குமா? இதில் கிடைக்குமா ?' என்று கிடைக்க வழியிலெல்லாம் நான் சென்றதின் விளைவுதான் இத்தனை கொடூரங்களும்! நான் செய்த கொடுமைகள் என்னை வாட்டுகின்றன.
என்னை முழுமையாக விடுவித்துக் கொள்ள வழி என்ன? எவ்வளவு கஷ்டமான பரிகாரமாக இருந்தாலும் சரி, நான் செய்யத்தயார்!" என்றார்.
சாக்கிய முனி, "பரிகாரம் மிக எளிது" என்றார்.
மதுவாதன், "அப்படியா! என்ன அது ?" என்று கேட்டார்.
சாக்கிய முனி, "கடவுளாகிவிடு" என்று எளிமையாகச் சொன்னார்.
மதுவாதன். "என்ன சொல்கிறீர்கள்! நான் ஒரு மகா கொடுமைக்காரன். கிட்டத்தட்ட ஒரு சைத்தான். என்னைப் போய்..." என்று குழப்பமாக கூச்சலிட்டு விட்டார்.
சாக்கிய முனி, "நீ ஏன் கடவுளாகக் கூடாது?" என்று மீண்டுமோர் முறை அழுத்தம் திருத்தமாகக் கேட்டார்.
சாக்கிய முனியின் வார்த்தைகளில் இருந்த உறுதித்தன்மை மதுவாதனை உலுக்கிவிட்டது.
"ஏன் நான் கடவுளாகக் கூடாது ?" என்று யோசித்து, யோசித்து பல நாட்களுக்குப் பின் யோசனைகளைத் தாண்டிய நிலையை அடைந்தார்.
அஹம் பிரம்மாஸ்மி நான் பிரம்மன் I am Brahman தத் த்வம் அஸி நீதான் அது That thou art அயம் ஆத்மா பிரம்ம நான் தெய்வம் I am God
ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நீங்கள் கடவுள்தான் நீங்கள் ஞானமடைகையில் இது உண்மையென அறிவீர்கள்!
மனம் கடந்த நிலையை அனுபவித்தார்.
எங்கும் நிறைந்திருக்கும் கடவுள் தன்னை தன்னுள்ளேயே இருப்பதைக் கண்டு கொண்டார். கடவுளை உணர்ந்து ஆனந்தத்தைக் கொண்டாட ஆரம்பித்தார்.
அவர்தான் பிற்காலத்தில் மிக அருமையான ஆன்மீகவாதியான மறீ புளீ மதுவாதனார் என்றழைக்கப்பட்டார்.
நீங்கள் யாராக இருந்தாலும் சரி, உங்களாலும் கடவுளாக முடியும். கடவுளை உணர முடியும்.
ஆனால், கடவுள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் கடவுளாக மாற நிச்சயமாக முடியாது. உங்கள் நினைவுக்கும் மனதிற்கும் அப்பாற்பட்ட ஒரு நிலைதான் கடவுள்தன்மை.
கடவுள் என்று நீங்கள் நினைப்பதெல்லாம் கடவுளைப் பற்றிய உங்கள் மனக்கருத்துக்களும் அதீத கற்பனைகளும்தான்.
மனித மனத்தால் கடவுளைக் கற்பனை செய்ய முடியாது. அப்படி கற்பனை செய்ய முடிந்தால் அது கடவுளாக இருக்கமுடியாது.
நீங்கள் கடவுளாக, தனி அவதாரம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் கடவுளாக மாற இந்தப் பிறவியே போதுமானது.
கடவுளைப் பற்றிய கருத்துக்களைக் கடந்து கடவுளைக் கண்டுகொள்ளுங்கள். நீங்களும் கடவுளாக முடியும்.
அதற்கு முதல் படி,
" நான் ஏன் கடவுளாகக்கூடாது ?" என்ற கேள்வியை முழுஉணர்வோடு கேளுங்கள். வழி பிறந்துவிட்டது.
அர்த்தமுள்ள சம்பவம்
''நான் எப்போது புத்தனாவேன்?'' எனக் கேட்ட சீடனின் கன்னத்தில் பளாரென அரைந்தார் ஜென் குரு.
''புத்தா எப்படி புத்தாவாக முடியும் ?
உள்ளே தூங்கும் நீ விழிக்கும்போது.
பித்தனான நீ புத்தனாவாய்'' என ஆசீர்வதித்தார்.
கடவுள் தன்மை கதிர் வீசட்டும்!
நான் கடவுள் என்பதை நிரூபிப்பதற்காக வரவில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் கடவுள் என்பதை நிரூபிப்பதற்காகவே வந்திருக்கிறேன்.
என்னவொரு விறுவிறுப்பான வாசகம் இது!' என நினைக்காதீர்கள். காரணம் அப்படி நினைக்கையில் அது வெறும் நினைவாகவோ நின்று விடக்கூடும். அப்படி நின்று விடக்கூடாது! இது முழுக்க முழுக்க நிஜம். உண்மை. சத்யம். எனவே, இந்த வாசகத்தைத் தியானியுங்கள். அது அனுபவமாக மாற வேண்டும்.
கடவுள் பெரியவர்
எனச் சொல்லி உங்களின் தரத்தைக் குறைப்பது.
கடவுள் நண்பர்
எனச் சொல்லி கடவுளின் தரத்தைக் குறைப்பது ஆகிய இரண்டுமே தரம்குறைத்த செயல்கள்.
"நீங்கள்தான் கடவுள்" எனும் வேதவாக்கியத்தை ஆழமாய் உணர்ந்தவர்களின் எண்ணிக்கை பல வரலாற்றில் பதிந்திருக்கிறது.
இதையெல்லாம் படித்தபின் ...
கடவுளுக்குக் கிடைக்கும் மரியாதைகளைப் பிடித்துக்கொண்டு, மனம் கனவு காண அனுமதிக்காதீர்கள்.
இப்பொழுதிலிருந்து கடவுளின் குணாதிசயங்களை குணாதிசயங்களாக்குங்கள். கடவுள் தன்மை உங்களுக்குள் புகுந்து பரவட்டும்.
உங்கள் வழியாக கடவுள்தன்மை கதிர் வீச ... நீங்களே கடவுளாகி விடுவீர்கள்!
அளவில்லா அன்பு - அமைதி -ஆனந்தம் கடவுளின் தன்மைகள்!
கடவுளே நினைத்தாலும் ...
ஜென் கூற்றுகள் எளிமையானவை! ஆனால் ஆழமானவை! வாழ்க்கைத் தத்துவங்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல எளிதாக விளக்குபவை !
-
இது வாழ்வின் விடிவுக்கு ஜென் கூறும் கூற்று: நீ, ஏங்கினாலும், ஏங்காவிட்டாலும். மழை பெய்யும் போது பெய்யும், மழைக்கு மட்டுமல்ல ... இது வாழ்க்கையின் எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் பொருந்தும். பொருத்திப் பாருங்கள் கூற்றின் ஆற்றல் புரியும்.
-
உம் சத்தத்திற்கும் இறைவனின் சித்தத்திற்கும் சம்பந்தமே இல்லை. எனவே வருந்தாதீர்.
-
நாடகத்தில் தன்னை மறக்க மனிதர் நாடகத்தோடு சேர்ந்து உண்மையாகவே அழுவதும் சிரிப்பதும் இயற்கை. உலக நாடகத்தில் தன்னை மறக்க மனிதரும் உலகத்தோடு சேர்ந்து உண்மையாகவே அழுவதும், சிரிப்பதும் இயற்கை.
உண்மை என்ன ? நான் யார்? ஏன் வந்தேன்? என்ற எல்லாமே, நாடகம் முடியும்போது தெரிய ஆரம்பிக்கும்.
குந்தனுக்கு ஜலதேர்ஷம் மிகுந்திருந்தது. மருத்துவரை பார்க்கச் சென்ற முகுந்தன் தன்னுடை தொந்தரவுகளை விளக்கி முடித்ததும் பயந்த விழிகளோடு சுற்றும்முற்றும் பார்த்தார்.
அவர் ஊசி போட்டு விடுவரோ என்ற பயத்தில் டாக்டரின் கைகளையே பார்த்துக்கொண்டிருந்த முகுந்தனின் சிந்தனையைத் தடுத்து மருத்துவர், "மருந்து தரும் முன் நீங்கள் ஒரு காரியத்தைச்செய்து முடிக்க வேண்டும்" என்றார்.
முகுந்தன், "என்ன அது? சொல்லுங்கள்".
"குறைந்தது ஒரு பத்து நிமிடமாவது உங்களின் உச்சந்தலையில் நீர் விழுமாறு டேப்பை திறந்து விட்டு நனையுங்கள். பின் குளிர்காற்று உடலில் படுமாறு ஒரு பத்து நிமிடமாவது நில்லுங்கள். இதை முடித்த உடனே என்னை வந்து பாருங்கள். மருந்து தருகிறேன் ".
"என்ன சொல்லுகிறீர்கள்! அப்படிச் செய்தால் ஜலதோஷம் போய் வீசிங் அல்லவா வந்துவிடும்?".
"என்ன செய்வது ... எனக்கு வீசிங்குக்குதான் மருந்து கொடுக்கத் தெரியும்".
- மருத்துவர் அரைகுறையாக இருந்தால் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிவிடும். கருத்துக்கள் கேள்விக்குறியாகிவிடும்.
Part 12: Open the Door... Let the Breeze in!
இறைவனைத் துதிக்கிறேன்! நமஸ்கரிக்கிறேன்! புகழ்கிறேன்!' என்று ஆரம்பித்த மனிதர், இறைவன் ஒரு தனி நபர் என்று நம்ப ஆரம்பித்ததை, வெம்பும் மனது பிடித்துக் கொண்டது.
அதோடு நில்லாமல் இறைவனின் அன்பு, கருணை, கோபம் ஆகியவற்றை தான்...
'அன்பு' என்று நினைக்கும் பாசம்;
கருணை என்று நினைக்கும் பட்சாதாபம்;
'கோபம்' என்று நினைக்கும் எரிச்சல் ஆகியவற்றோடு சேர்த்துக் குழுப்பிக் கொண்டார்கள்.
இந்தக் குழப்பம்தான் மனிதர்கள் இறைவனை முழுமையாகப் புரிந்துகொள்ளத் தடையாக இருக்கிறது.
இறைவன் என்றழைக்கப்படும் இறைசக்தியின் அன்பு, கருணை, கோபத்திற்கும் - மனிதரின் அன்பு, கருணை, கோபத்திற்கும் சம்பந்தமே இல்லை.
மனிதர்கள் தன் மனக்கண்ணோட்டத்தின்படி இறைவனைப் புரிந்துகொள்ள ஆரம்பித்த அன்றிலிருந்து இன்று வரை, இறைவனை தவறாகவே புரிந்துகொண்டிருக்கிறார்.
இறைவனைப் பற்றி மதப் பிரசாரம் செய்யும் ஒரு மதப் பிரசாரகரின் வாழ்க்கைச் சம்பவம்.
இறைவன் நமக்காக வேதனைப்படுகிறார். அன்பு செலுத்துகிறார். நமக்காக காக்கிக் கொண்டிருக்கிறார்!" என்ற ரீதியில் இறைவனை சராசரி பாச உணர்வுகளின் அடிப்படையில் விளக்க முயற்சிப்பவர் அவர்.
அது மழை பெய்ய வேண்டிய காலம். பருவம் மாறிப்போனதால் மழை பெய்யவில்லை. அப்போது... அந்த மதப் பிரசாரகர், "மழை பெய்யச் செய்யுங்கள்!" என்று வெகு உருக்கத்தோடு மக்களுக்காக வேண்டினார். வேண்டின சில மணித் துளிகளில் மழை பெய்ய ஆரம்பித்தது.
உடனே மதப் பிரச்சாரகர், "பார்த்தீர்களா! இறைவன் என் வேண்டுதலைக் கேட்டு மழையை வரவழைத்து விட்டார். அவர் நமக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார்" என்று கூறினார்.
மக்களும் "ஆமாம்! ஆமாம்!" என்று தலை ஆட்டினார்கள்.
சில நாள் கழித்து ... "இன்று ஒரு மழை பெய்தால் நன்றாக இருக்குமே. நீங்கள் எங்களுக்காக இறைவனிடம் வேண்டக்கூடாதா?"என்று மக்கள் கேட்க, "மழை பெய்யச் செய்யுங்கள்" என்று வெகு உருக்கத்தோடு வெகு நேரம் இறைவனிடம் வேண்டினார். வேண்டி ஒரு மணி நேரமாகியும் மழை வரவில்லை. மீண்டும் வேண்டினார். பலனில்லை. தொடர்ந்து ஐந்து முறை வேண்டியும் பலனில்லை.
"மழை பெய்யவே இல்லை. இதை தொடர்ந்து அந்த மதப் பிரசாரகர், "பார்த்தீர்களா, இது இறைவனின் சோதனை. அவர் மீது எவ்வளவு பயபக்தியோடு நாம் இருக்கிறோம் என்று அவர் நம்மைச் சோதிக்கிறார்" என்று சொல்ல, மக்களும், " ஆமாம்! ஆமாம்! சரிதான்" என்று மீண்டும் தலையாட்டினார்கள்.
மக்கள் எல்லாம் கூடியிருக்கும்போது ஒருநாள் அவர் வேண்டாமலேயே மழை பெய்ய ஆரம்பித்து விட்டது.
இறந்தபின் சொர்க்கம் செல்வேன் எனக் கனவு காணாதே. அது நடக்காது. ஏனென்றால் ஏற்கனவே நீ சொர்க்கத்தில்தான் வாழ்கிறாய்!
உடனே மதப் பிரசாரகர் "பார்த்தீர்களா, இறைவன் மிகவும் நல்லவர். நம் தேவை அறிந்து நாம் கேட்காமலேயே உதவி செய்யும் உள்ளம் படைத்தவர்' என்று சொல்ல.
மக்களும், " ஆமாம்! ஆமாம்!" என்று உற்சாகத்தோடு தலையாட்டினார்கள்.
"என்ன நடந்து கொண்டிருக்கிறது நம்மைச் சுற்றி?" என்று யோசிக்கவும் முடியாமல், புரிந்துகொள்ளவும் துணியாமல் மக்களும் தலையாட்டினார்கள். மதப் பிரசாரகரும் பேசிக்கொண்டே இருந்தார்.
இது சரியா? நியாயமா?
பதில் தெரிய… தொடர்ந்து மிகக் கவனத்தோடு கட்டுரையைப் படியுங்கள்.
சதா இறைவனோடு, இறைச்சக்தியோடு இதயப்பூர்வமாக தொடர்பு வைத்திருப்பது நல்லது. சதா இறைவனைப் பற்றி கற்பனை செய்து கொண்டே இருப்பது நல்லதல்ல.
இப்படிக் கற்பனை உலகில் தொடர்ந்து வாழ்வது இறைசக்தியை, இறைவனை அடையும் பாதையில் முன்னேற்றம் நடப்பதற்கான அறிகுறி அல்ல.
காரணம், மனம் இறைவனைப் பற்றிய கற்பனைகளில் சிக்கிக்கொண்டால் இறைவனே நினைத்தால்கூட காப்பாற்ற முடியாது. "'மனம் சிக்கிக் கொண்டு விட்டது'' என்று இறைவனே நேரில் வந்து சொன்னால் கூட புரிந்துகொள்வது கடினம்.
மனம் பக்குவப்பட்டுக் கொண்டிருக்கும் போது, "எல்லாவற்றையும் இறைவன் செய்கிறார். எல்லாம் அவன் செயல்" என்று சொல்வது உண்மையாக இருக்க முடியாது. காரணம் மனம் கிளிப்பள்ளையைப் போல் மற்றவர்கள் பேசுவதைப்
| சரணாகதி நிகழாதவரை எல்லாம் அவன் | ||
|---|---|---|
| பார்த்துக் கொள்வான் என்பது ஆறுதல் | ||
| வாசகம் தான்! | ||
பிடித்துக் கொண்டு பேச ஆரம்பிக்கும். அது வார்த்தைரீதியானது.
மனம் பக்குவப்பட்ட பின், மனம் கடந்த நிலையில், "எல்லாம் இறைவன் செயல்" என்பதை அனுபவித்து இதயப் பூர்வமாக சொல்லும்போது மட்டுமே அது உண்மை. இது உணர்வு ரீதியானது.
மனப் பக்குவமில்லாதவர், இது போன்ற பெரிய பெரிய அனுபவ உண்மைகளை தன் மனக் கண்ணோட்டம் மூலம் புரிந்துகொண்டு பேச ஆரம்பித்தால், கடைசி வரை உண்மை தெரியாமலே வாழ்க்கை முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது.
இது போன்ற மக்களுக்காக ...
"எல்லாம் அவன் செயல்.
எல்லாம் இறைவன் பார்த்துக்கொள்வான் என்றால் !
நீங்கள் எதற்காக இருக்கிறீர்கள் ?
சதா அதைக் கொடு, இதைக் கொடு எனப் பிச்சை கேட்கவா ?
அல்லது சதா என்னைக் காப்பாற்று என்று பயப்படுவதற்கா ?
சதா மேல் நோக்கியே இறைவனைத் தேடும் நீ எப்போது இறைவன் உள்நோக்கித் தேட ஆரம்பிக்கிறாயோ, அப்போது இந்த உடலிலேயே இறைவனைக் கண்டுகொள்வாய். அப்போது இந்த உலகத்திலேயே மொத்த சொர்க்கத்தையும் அனுபவிப்பாய்.
இது புரியாவிட்டால் உன்னைக் கடவுளே நினைத்தால்கூடக் காப்பாற்ற முடியாது!".
நானமடைவது ஒரு புது அனுபவம் அல்ல உஷார்! எந்தத் தருணத்திலும் நீ நானியாகலாம். உன் வாழ்நாளில் பல முறை பல சம்பவங்களில் உன் ஆத்மத்தை தொட்டுக் கொண்டேயிருக்கிறாய். "அவறா ... இதுதான் வானமா!" என வானம் தேடி அலையும் வானம்பாடி திடீரென உணர்ந்துகொண்டதுபோல் நானியாகலாம் நீ!
என்னும் ஜுமல்கியின் வாசகங்கள் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கவை.
மனிதர்கள் அந்தக் காலத்திலிருந்தே மனம் விரிக்கும் வலைகளில் சுலபமாகச் சிக்கிக்கொள்கிறார்கள்.
சிக்கிக்கொண்டதுகூடத் தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். கட்டுரையை மீண்டும் படித்துப் பாருங்கள். உண்மையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். எல்லாம் சாத்தியமே!
ஆன்மீகத்தை நம்புபவர் நான்' எனச் சொல்லாதீர்கள்.
உங்களின் பேச்சு குறைந்து, செயல் அதிகரித்திருக்கும். செயலில் படபடப்பு குறைந்து, நிதானம் அதிகரித்திருக்கும். கவலைகள் குறைந்து, சந்தோஷமும் சுதந்திர உணர்வும் அதிகமாகி இருக்கும். இதுவரை இப்புத்தகத்தைச் சோதித்திருந்தால்!
சோதிக்காமல், வெறுமனே படித்திருந்தால்... உங்களின் பேச்சு இன்னும் கொஞ்சம் வலிமை அதிகரித்திருக்கும். இந்த நேரத்திற்குள், உங்களை நாலுவிஷயம் தெரிந்தவர் என நாலுபேர் சொல்லியிருப்பார்கள். ஆனால் நீங்கள் அப்படியே இருப்பீர்கள்.
இன்னும் உங்களுள் மாற்றம் நிகழாவிட்டால் ...
மீண்டும் ஒரு முறை படித்துச் சோதியுங்கள்.
இனி படிக்கப்போவதையெல்லாம் சோதியுங்கள்.
மனம், மனிதர்கள், வாழ்வு பற்றிய ரகசியங்கள் அனுபவமாக மாற்றப்பட வேண்டும்.
படி. மனதில் அதை பிடி. யின் உணர்வால் சோதி... அது ஆகவே மாறிப் போவாய்!
அனுபவமாக மாற்றத் தயாராக இல்லாதவர், ஞானக் கருத்துக்களை மூளைத்தீனி போல் மட்டுமே எடுத்துக்கொள்வது அவர்களுக்கும் அடுத்தவர்களுக்கும் பேராபத்தைத் தரும்.
அவர்களின் அனுபவமாகாத, அரைகுறை கருத்துக்கள் கேட்பவரின் மனதில், குளறுபடிகளாகவே பதிவாகும். தன்னைப் போலவே இன்றுமொரு குழப்பவாதியை மட்டுமே இவர்களால் உருவாக்க முடியும்.
படித்த ஞானக்கருத்துகளைத் சோதிக்கத் தவறாதீர்கள்.
'ஆன்மீகத்தை நம்புபவர் நான்' எனச் சொல்லாதீர்கள்.
ஆன்மீகக் கருத்துக்கள் இறுதியான உண்மைகள். ஆனால், அவற்றை அனுபவமாக்கியவருக்கே அவை உண்மைகள்.
புதிதாய் படிப்பவருக்கு ஆன்மீகம் ஒரு நல்ல தத்துவம் மட்டுமே. தத்துவங்களை நம்ப முயற்சிக்க கூடாது. நம்ப முடியாது.
அப்படியே நம்பினாலும் அவை உண்மைகளாகிவிடாது. ஏனென்றால் அவை இன்னும் அனுபவமாகவில்லை!
தேன் இனிக்கும் என எவ்வளவு ஆழமாக நம்பினாலும் என்ன பயன் ? அப்படி நம்புபவருக்குத் தேனின் சுவை தெரியாது. தேனைப் பற்றி ஒரு வார்த்தைகூட தெரியாதவருக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம். ?
இந்தப் புத்தகம் தூவும் விதைகள், விழும் ஆழம் பொறுத்தே, வளர்ச்சி அடையும். வேகமும் எழுச்சி வரும் காலமும் நிர்ணயமாகும்.
தேனை நம்புகிறேன் எனச் சொல்பவருக்கும் தேனை நம்ப மாட்டேன் எனச் சொல்பவருக்கும் தேனின் இனிமை பற்றித் தெரியாது. இருவரும் ஒரே தளத்தில்தான் இருப்பார்கள்.
நம்புகிறேன்… நம்பவில்லை எனச் சொல்லி விளையாடுவதை விட்டுவிட்டு, ஒரே ஒரு சொட்டுத் தேனை நாக்கிலிட்டுச் சோதித்தால் பிரச்சனை தீர்ந்தது. தேன் இனிக்கும் என்ற தத்துவம் உண்மை அனுபவமாகும்.
ஆன்மீகம் ஆனந்தமயமான வாழ்வைத் தருகிறதா என என சோதித்துப் பாருங்கள்... பிரச்சனை தீர்ந்துவிடும்.
சோதிக்காவிட்டால்... ஆன்மீகத்தை நம்புபவர், ஆன்மீகத்தை நம்பாதவரின் நிலையிலேயேதான் இருப்பார். எனவே சோதியுங்கள். முழுமையாய் சோதியுங்கள்!
தியானம் செய்வது எப்படி?
-
மனம் கட்டுப்படுத்துகிறது எண்ணங்களோ அலைக்கழிக்கிறது
-
இரண்டுக்கும் இடையில் சிக்கிக்கொண்ட மனிதர்கள் - கூண்டுக்குள் அடைக்கப்பட்ட கிளி, சிறகிருந்தும் சுதந்திரமாய் பறக்க முடியாமல் தடுமாறுவது போல தடுமாறுகிறார்கள்.
-
' எண்ணங்களால் என்னை அலைக்கழிக்கும் அகங்காரமே நீ எங்கே இருக்கிறாய் ? என உள்ளோக்கிப் பிரயாணித்தலே தியானம் செய்தல்.
-
இந்தப் பிரயாணத்தில் ஒரு முக்கிய விதி பிரயாணி பார்வையாளராக மட்டுமே இருக்க வேண்டும்.
-
நம்பி பிரயாணித்தால் ... மனிதரை அடிமைப்படுத்தி, கொக்கரிக்கும் அகங்காரத்தை மூக்கறுத்து, சுதந்திரமாய் ஆரப்பரிப்பது என்பது தியானத்தால் நிச்சயம் சாத்தியமாகும்.
-
இது விசித்திரமான பிரயாணம். பிரயாண வேகம் அதிகமானால், எண்ணங்களின் வேகம் குறையும்.
-
எண்ணங்களின் ஓட்டம் குறையக் குறைய உன் சுதந்திரத்தின் அளவு அதிகரிக்க ஆரம்பிக்கும் !
அறுபது வயது தாத்தாவுக்கும் அறு வயது பேரனுக்கும் நடந்த சுவையான உரையாடல் ...
பேரன், "தாத்தா, மனம் ஒரு குரங்காமே! என் டீச்சர் சொன்னார்கள். மனதை அடக்கிவிட்டால் நல்லா படிக்கலாமாம். மனதை ஜெயித்தவர் உலகையே ஜெயிப்பாராம். முயன்றால் இது முடியுமாம். மனதைக் கட்டுப்படுத்த எவ்வளவு நாள் ஆகும் தாத்தா?" எனக் கேட்டதற்கு,
கோபப்பட்ட தாத்தா. "எவ்வளவு நாள் என்றா கேட்டாய்? உன் டீச்சர் உங்களுக்கெல்லாம் தவறான செய்திகளையே கற்றுத் தருகிறார். அவரை நம்பாதே.
நாட்களில்லை ... அறுபது வருடங்களானாலும் ஒருவரால் மனதைக் கட்டுப்படத்த முடியாது" எனச் சொன்ன விதத்தை வினோதமாக பார்த்தான் ஆறுவயது பேரன்.
மனதை அடக்க முடியாது.
மனமானது அடங்க வேண்டும்.
எவ்வளவுக்கெவ்வளவு மனதைக் கட்டுப்படுத்த, அடக்க, ஒடுக்க முயற்சிக்கிறீர்களோ - அவ்வளவு மனம் கட்டுபாட்டை இழந்துவிடுவீர்கள்.
மனம் தானாய் அடங்க என்ன செய்வது? கட்டுரைக்குள்ளே ...
இதுவைபீபுக் பதில தெரிந்து கொள்ள இன்று பலர் ஆர்வமாக இருக்கிறார்கள்.
காரணம், இவர்கள் தியானத்தில் அமர்ந்தால் சாதாரண நேரங்களில் வரும் எண்ணங்களைவிட அதிகமான எண்ணங்கள் வருவது போலவே தோன்றுகிறதுதான்
தியானம் செய்ய மாலையை விட காலையை தேர்ந்தெடுங்கள். தினசரி நடவடிக்கையின் கடைசி நடவடிக்கையாக ஒதுக்கி வைக்காமல் அதை முதல் காரியமாக செய்து முடியுங்கள்!
அப்படிக் தோன்றக் காரணம். அப்போதுதான் நீங்கள் வாழ்வில் முதல் முறையாக தங்களினுள் கொண்டிருக்கும் தொடர்ந்து மனக்குதிரையை நேருக்கு நேர் சந்திக்கிறீர்கள்.
"இயல்பாக என்றெண்ணிக் உள்ளே இருக்கும் இயல்பற்ற தன்மைதான் தியானத்தில் அமரும் போது ஒருவருக்குத் தெரியவரும்.
ஒரு சுவாரஸ்யமான சம்பவம்,
பாரத சுதந்திரம் பெற்ற இருபத்தைந்தாவது நாள்...
திருவண்ணாமலை தமிழ்நாட்டின் ரமணாச்சரமம் நோக்கி ஆந்திராவிலிருந்து உள்சுக்கிரம் கேடி தியானம் கற்க வந்திருந்தார் அந்த இளைஞர்.
என்றும் போல், இன்றும் காலார நடந்து வர ரமண மகரிஷி புறப்பட்டுவிட்டிருந்தார்.
உள்சுதந்திர தீ கொழுந்து விட்டு எரிந்ததால் நிமிட நேரத்தையும் வீணாக்க அந்த இளைஞர் தயாராக இல்லை.
ரமண மகரிஷியை வழி மறித்து, "சாமி, நான் தியானம் செய்வதற்காக வெகு தூரத்திலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறேன்.
ஆஸ்ரமத்தில் தியானம் செய்ய உகந்த இடம் எது என்று எனக்குத் தெரியவில்லை. தாங்கள் எங்கே தியானம் செய்யச் சொல்கிறீர்களோ அங்கேயே செய்கிறேன்" என்று கேட்டுக்கொண்டார் இளைஞர்.
கேட்டவரின் கேள்வியை, ரமணர் கண்டுகொண்ட மாதிரியே காண்பிக்கவில்லை.
ரமணர் சிரித்துக்கொண்டே, கால்களையும், கணுக்கால்களையும் தேய்த்துக் கொண்டு, நடப்பதற்குப் புறப்பட்டார்.
இளைஞனின் பொறுமை சோதிக்கப்பட்டது.
ரமணர் தமது ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு கேள்வி கேட்ட இளைஞன் முன்னே நிற்க, பின்னால் இருந்தவர்களை நோக்கித் திரும்பி, "எந்த இடத்தில் தியானம் செய்ய வேண்டுமென்று கேட்டால் என்ன இடத்திலேயே இருப்பதுதான் நல்லது. மிகச் சரியானது.
அந்த இடத்திலேயே இருந்து தியானம் செய் " என்ற வரிகளைச் சிரித்துக் கொண்டே உதிர்த்துவிட்டு நகர்ந்து விட்டார்.
கேள்விக்குப் பதில் வேள்வி போல் இருந்ததால் இளைஞன் எரிச்சலடைந்து விட்டான்.
பக்கத்திலிருந்தவர்களிடம், "என்னங்க இவர்! நீ இருக்கும் இடத்திலேயே இரு என்கிறார். இதைக் கேட்கவா நான் ஆந்திராவில் இருந்து வந்தேன்.
இவர் பெரியவர், அதனால் எனக்குத் தகுந்த இடம் பார்த்துச் சொல்வாரென்று கேட்டால், தானிருக்கும் இடத்திலேயே இரு என்கிறாரே. இந்த சோபாவின் அருகில் நான் இருக்கிறேன்.
| நோய்கள் மற்றும் மனவேதனைகளை | |
|---|---|
| வரும்முன் காக்கும் | |
| வந்தபின் போக்கு, | |
| அருமருந்து தியானம் ! | |
ஆகவே, நான் இங்கேயே இருக்கட்டும் என்றா அர்த்தம் கொள்வது ? இதென்ன வீண் விளையாட்டு "என்று நொந்து போய் பேசினான்.
ரமண மகரிஷி எவ்வளவு பெரிய ரகசியத்தை மிக எளிமைப்படுத்தி அவரிடம் சொன்னார் என்பது அப்போது அவருக்குப் புரியவில்லை.
பின் பக்தர் ஒருவர் அந்த இளைஞரைத் தனியே அழைத்துச் சென்று, "நண்பா, பகவான் தமாஷாகப் பேச மாட்டார். அவர் பேசுவது சத்தியத்தைப் பற்றி மட்டுமே.
விழித்து, உள் விழித்துக்கெள்ள! உன் உள் நுழை
'நான்' என்கின்ற அகங்காரம் எங்கிருந்து கொண்டு இருக்கிறதோ, அதுவே நீ இருக்கும் இடம்.
இருக்கும் அகங்காரம் இடத்திற்கு விழிப்புணர்வோடு சென்று பார்வையாளனாகப் பார்த்துக் கொண்டிருத்தலே தியானம்.
நீ (அகங்காரம்) இருக்கும் இடத்தில் விழிப்புணர்வோடு இருப்பதுதான் தியானம். அதை விட்டுவிட்டு 'இங்கே உட்கார்ந்தால் நன்றாக தியானம் செய்ய முடியுமா? அங்கே உட்காரலாமா?' என்று கேட்பது எல்லாம் நேர விரயம்" என்று விளக்கம் கூறி முடித்தார்.
'ஓவேறா! தியானம் என்ற பெயரில் தியானத்தில் ஈடுபடாமல், வெளி விஷயங்களில்தான் விளையாட்டுத்தனமாக இருப்பதைத்தான் விளையாட்டாய் குத்திக்காண்பித்திருக்கிறார்' என்பதைப் புரிந்துகொண்டார். தியானத்தில் முழுமையாக ஈடுபட்டார்.
உங்களுக்குள்ளே இருக்கும் சலனமற்ற உணர்வு நோக்கி ஊடுருவுங்கள் " -இதைப் புரிந்துகொள்ளக் கடினமாக இருந்தால்... ஒரு பார்வையாளனாக மாத்திரம் உங்கள் எண்ணங்களை மனதைப் பார்க்க முதலில் கற்றுக்கொள்ளுங்கள்.
தியான சூத்திரம் சாட்சியாக மாத்திரம் பார். எண்ணங்களை, மனக்காட்சிகளை நிறுத்தாதே! தொடராதே! உருவாக்கதே! எண்ணங்களையும், காட்சிகளையும் உணர்ச்சிகளையும் தொடர்ந்து பார். எண்ணங்களும் காட்சிகளும் உணர்ச்சிகளும் நிற்க ஆரம்பிக்கும். பின் நின்றுவிடும். ஆனந்தம் பொங்கும்! இதை இன்றும் எல்லோரும் நன்றாகப் புரிந்துகொள்ள ஒரு உதாரணம்.
சினிமாவை தியேட்டரில் பார்க்குக் கொண்டிருக்கிறீர்கள்... சினிமாவில் உங்களுக்குப் பிடித்தக் காட்சி ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கிறதென்பதற்காக அதே காட்சிகள் தொடர்ந்து வராது.
அதைபோல் உங்களுக்குப் பிடிக்காத காட்சி ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக சினிமாவில் காட்சிகளை அந்த நேரம் தடுக்க முடியாது.
இந்தப் படம் சரியில்லை. சலிப்பைத் தருகிறது என்பதற்காக அந்த நிமிடமே புதுசினிமாவை அங்கே திரையிட முடியாது.
சினிமாவில் என்ன வந்தாலும் வரட்டும் என்று ஒரு மூன்று மணி நேரம் உட்கார்ந்து வெறுமனே பார்த்து விட்டுத்தானே வருவீர்கள்.
அதே காரியத்தைத் தியானத்திலும் செய்யுங்கள், வெறுமனே பாருங்கள். சாட்சி மாத்திரமாக பாருங்கள். 30 நிமிடம் உள்ளே ஒரு சினிமா பாருங்கள்.
- ஒருவேளை! வந்த எண்ணங்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, அந்த எண்ணங்களை, காட்சிகளை நிறுத்த வேண்டாம்.
- வந்த எண்ணங்கள் உங்களுக்குப் பிடித்த எண்ணங்கள் என்பதற்காக அந்த எண்ணங்களைக் காட்சிகளை தொடர வேண்டாம்.
சும்மாயிருத்தலே 'தியானம்.' சும்மாயிருந்தாலே சுகமாயிருப்பது ஆனந்தம். ' சும்மாயிருத்தலின் உச்சும்பே ஞானம். '
- புதிதாக எந்த ஒரு எண்ணத்தையோ, காட்சியையோ உருவாக்க முயற்சிக்க வேண்டாம். அவ்வளவுதான். இந்த மூன்று விதிகளைக் கடைப்பிடித்தால் சாட்சியாக மாத்திரம் பார்ப்பது சுலபம். தியானத்தில் நன்றாக ஈடுபட முடியும். தியானித்துப் பாருங்கள்
அர்த்தமுள்ள சம்பவம் ...
தியானம் செய்ய ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே மிகவும் சந்தோஷமாயிருப்பதைச் சொன்ன THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வார்த்தைகள் ...
"தேடித் தேடிப் பார்த்தேன் என்னுள், கவலைப்பட ஒரு காரணங்கூட இல்லை. இதைவிட பெரிய சந்தோஷம் என்ன இருக்கிறது".
தியான பாதையின் வெளிப்பாடுகள் இவை:
முதலில், கவலைகள் கலையும்.
அடுத்து, சந்தோஷம் பொங்கும்.
கடைசியாக, ஆனந்தம் நிலைக்கும் !
ஒவ்வொரு நொழியும் தியானமாக்க வழி. . .
| நில் | ||||
|---|---|---|---|---|
| தியாண | நட | |||
| ஓடு | ||||
| உளிகள் | ஆடு | |||
| ருசி | ||||
| நுகர் | ||||
| சிரி | ||||
| பார் | ||||
| கேள் | நிற்கையில் | |||
| பேசு | நடக்கையில் | |||
| பாடு | படுக்கையில் | |||
| யோசி | செய்கையில் | |||
| உட்கார் | விழிப்போடிரு! | |||
| சாப்பிடு | விழிப்போடிரு! | |||
| விளையாடு | விழிப்போடிரு! | |||
| ஏன் கோபங்கூட | – பிரம்ம விஹாரம் | |||
| எதை வேண்டுமானாலும் செய். | ||||
| அதைச் செய்யும்போது, அதை மட்டும் செய். | ||||
| அந்தச் செயல் பற்றி முழுப்பரிமாணத்தில் சிந்தி. | ||||
| இது சம்பந்தப்பட்ட எல்லா சாத்தியகூறுகளையும் காண். | ||||
| ஐம்புலன்களையும் | ||||
| அச்செயலுக்குள் ஆர்வங்கொள்ளச் செய். | ||||
| செய்யும் செயல் தியானமாகும். | ||||
| செய்யும் செயல் வெற்றியாகும். |
மாயா! மாயா ! எல்லாம் மாயா !
-
விண்ணெயைக் கையில் வைத்துக்கொண்டு, நெய்யைத் தேடித்தேடி அலைவது போன்ற ஆர்வத்தையும் சக்தியையும் அள்ளி அள்ளித் தரும் வேடிக்கையான அம்சத்திற்கு பெயர் மாயா.
-
ஞானமடையும் முன்வரை, மனிதர்கள் வாழும் அறுபது வருட வாழ்விற்கும் - ஆறுமணி நேர கனவிற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. கால அளவில் வித்தியாசமுண்டு. அவ்வளவே.
-
ஆறு மணி நேரம்! ஒரு கனவு ஒரு வாழ்வு
-
கனவுகலைந்ததும் கனவு உலகம் காணாமல் போய்விடும்! அகங்காரம் கலைந்ததும் நினைவு உலகம் காணாமல் போய்விடும். ஆத்மன் விழித்ததும்தான் உண்மையாக உள்ள உலகமே கண்ணிற்குத் தெரியும்!
| தூங்கும் மனிதருக்கு | கனவு மாயை |
|---|---|
| விழித்திருக்கும் மனிதருக்கு | நினைவு மாயை |
| விழித்துக் கொண்ட மனிதருக்கு - | எல்லாம் மாயை |
- நாமாய் துரத்தாத வரை தானாய் விலகாதது மாயை!
- உங்கள் வாழ்க்கையை வாழ வேண்டுமா ? உண்மையான உலகை அனுபவிக்க வேண்டுமா ?
கடவுளை நேரில் காண வேண்டுமா ? வேறு வழியே இல்லை ... மாயாசக்தி ஜெயிக்கப்பட வேண்டும். அதுவும் உங்களாலேயே ...
சிதைக்கப்படுவது புதுப்பிக்கப்படுவதற்காக
- லாவோட் சூ
லாவோட் சூவின் கூற்று முரண்பட்டதாகத் தோன்றலாம். ஆனால், அவர் சொல்வது முரண்பட வைப்பதை நேர்பட வைக்கும் சூத்திரம். நீங்கள் புதுமையானவராக மாற விரும்பினால், உங்களில் உலவும் பலவற்றையும் சிதைக்காமல் விட்டால் ... நாளை அது உங்களைச் சிதைத்துவிடும். எச்சரிக்கை சிதைப்பதை சிதை. சிதைப்பது, மாயா! மாயா மாயமாகட்டும்.
மாயாவும் இதைப் போன்றதே. வாழ்வின் ஏதாவதொரு அம்சத்தை மட்டுமே பிடிக்குக்கொண்டு மனிதரைச் சிக்க வைத்துவிடும். விளைவு -வாழ்ந்து முடிந்தபின்தான் ஏமாந்துபோனதாக ஒவ்வொரு மனிதரும் உணர்வார்.
மாயா சக்தியை வெல்வதற்கு இணையானதொரு வெற்றி இவ்வுலகில் இல்லவேயில்லை!
அதோ! அங்கே சோலைவனம் இருப்பதுபோல் நம் கண்களுக்குத் தெரிகிறதே, அது சோலைவனமே பாலைவனத்தின் ஓர் பகுதிதான்.
நம் தாகத்தைத் தீர்ப்பது நிச்சயமாக அங்கே இல்லை என்று என்று தெள்ளத் தெளிவாக ஏற்கெனவே தெரிந்து கொண்ட ஒருவர் கானல் நீர் வரை சென்று ஏமாறவே மாட்டார்.
மோகம், வேகம், புகழ், பணம் - என்று ஒன்று ஒன்றுக்கு தன் மோகத்தைத் தீர்ப்பது அங்கே இல்லை என்று தெரிந்துவிட்டால் ஓடமாட்டார். திடீரென்று எல்லோருக்குமே புரிந்துவிட்டால் மொத்த சமூக இயக்கமுமே ஸ்தம்பித்துவிடும்.
தேடுவது தேடும் இடத்தில் இல்லை என்ற உண்மையை யதேச்சையாக படித்துவிட்டால் கூட, புரிந்துகொள்ளவிடாகபடி பார்த்துக்கொள்ளும் ஒன்றுதான் மாயாசக்தி.
ரமண மகரிஷியிடம் பக்தர் ஒருவர், "சாமி, மாயா என்றால் என்ன? மாயாவின் மயக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி ?' என்று கேட்டார்.
ரமணர், "ஆத்ம விசாரம் என்னும் ஆன்மீக தியானத்தில் ஈடுபட்டால் எளிதில் வெளிவந்துவிடலாம். மாயாவின் மயக்கம் கண்டால் நாயைக் காணோம். நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்பது போன்றதுதான்" என்றார்.
பக்தருக்கு ரமணர் கூறியது சுத்தமாகப் புரியவில்லை.
ரமணர் சிரித்துக்கொண்டே, "புரியவில்லையா…! நீ (அகங்காரம்) இருக்கும் வரை எல்லாமே தூரத்தில் பசுமை போன்றுதான் தெரியும். இதுதான் மாயா.
கல்லைக் கண்டால் நாய் இல்லை என்றால், நீ கல்லைக் கண்டதால் நாய் ஓடிவிட்டது என்று அர்த்தமா? இதை விளக்க நல்ல கதை ஒன்று இருக்கிறது.
அரண்மனையைப் பார்க்கச்சென்றாராம் ஒருவர். போனவர் திடுக்கிட்டார். அரண்மனை வாசலில் இரண்டு பெரிய நாய்கள். மிக தத்ரூபமாக வடிக்கப்பட்டிருந்த அந்தக் கற்சிலைகள் தூரத்திலிருந்து பார்க்க நாய்கள் போன்றே தெரிந்ததாம்.
நாய்களுக்கு ஏற்கெனவே பயந்து நடுங்கும் அவர், 'இரண்டு பெரிய நாய்களா!' என்று நடுக்கமெடுத்து ஓட முயற்சித்தார்.
தூரத்திலிருந்தே அந்த மனிதரின் உடல் நடுக்கம், முகக் கலவரம் மூலமாக மொத்தத்தையும் உணர்ந்த சாது, 'பயப்படாதே! என்னோடு வா!' என்று அழைத்துச் சென்றார்.
அருகில் சென்று பார்க்கதில் அவர் பயம் தெளிந்தது.
'அப்பாடா! வெறும் கற்கள்தானா!' என்றாராம்.
அவர் முதலில் நாயைக் கண்டதும் கல் இல்லை. இப்போது கல்லைக் கண்டதும் நாய் இல்லை. இதுதான் நாயைக் கண்டதும் கல்லைக் காணோம், கல்லைக் கண்டதும் நாயைக் காணோம் என்பது!" என்று வேகமாகச் சிரித்துக்கொண்டே சொல்லி முடிக்க விளக்கம் புரிந்த பக்தரும் வாய் விட்டுச் சிரித்தார்.
ஒரு சாது வந்து அழைத்துச் செல்லாதவரை அந்த மனிதருக்கு அச்சிலை எங்கும் நிறைந்திருக்கும் கல்லின் ஒரு வடிவம் என்று தெரிந்திருக்காது.
| தொல்லைகூட | |
|---|---|
| உண்மை | எல்லையில்லா |
| தைரியம் | ஆனந்தத்திற்கான |
| ஒரு பாதையே! |
இந்த மனிதர் கல்லை நாய் என்று நினைத்துப் பயப்படுவதும் மற்றொருவர்
ஒன்பதாவது சித்தி வசியங்கள் ... அனிமா மகிமா லகிமா கரிமா பிராப்தி பிராகாமியம் வசித்துவம் என எட்டுவகை சித்திகள் உண்டு. இந்த அட்டமா சித்திகள் ஞானபாதையில் வரும் விதவிதமான சக்தி விளையாட்டுகள். இச்சக்தியால் கட்டுக்கு அடங்காத அனைத்தையும் தனக்கென வசியப்படுத்திட உதவும். ஆனால் விரோதம்!
தன்னை வசியம் செய்ய இந்த சித்திகளால் முடியாது. சித்திகளால் முடியாது சித்திகளில் சிக்குபவர் மனம் விரித்த வலையில் சிக்குபவர்.
தன் மனதை வசியம் செய்வது ஒன்பதாவது சித்தி அது ஒப்பற்ற புத்தி.
மோகம், புகழ், பணத்தில் உச்சத்தைத் தொட்டுவிட்டால் இருக்கலாம் என்று நினைப்பதும் ஒன்றே.
அந்த மனிதர் கல்லை நாய் என்று நம்பியதுதான் மாயம்.
காமத்திலிருந்து, கடவுள் வரை, ஏதாவதொன்றை மனிதமனது நினைத்துக்கொண்டு, அதுதான் உண்மை என்று தேடுவதுதான் மாயம். அப்போது ஏற்படுவதுதான் மாயை தரும் மயக்கம்.
காமத்திலிருந்து பலவற்றை நேருக்கு மாறாகப் புரிந்து கொண்டு மாயக்கால் தவிக்கும் மனிதருக்கு மாயக்கை விளக்கி, மயக்கத்தை விலக்க தன்னை ஜெயித்த ஒரு ஞானியால்தான் முடியும்.
ஒரு சிறிய கதை.
ஜென் "எல்லாமே மாயா என்றால்… நிஜத்தில் சாத்தியமில்லாத ஒன்றைத்தான் மனிதர்கள் மோகம், பதவி, புகழ், பணம் ஆகியவற்றில் தேடுகிறார்களா ?''
" ஆமாம்... ஞானி. சந்தேகமென்ன ?"
" அப்படியென்றால். அவற்றின் மூலமாகச் சாதிக்கலாம் என்று நினைப்பதெல்லாம் அங்கே இல்லாத ஒன்றையா?"
"ஆமாம்…"
"இல்லாத ஒன்றைத் தேடி, அது கிடைக்காத இடத்தில் மனிதர்கள் எப்படி இவ்வளவு உற்சாகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள் ?"
"இப்படித்தான்… ஒரு கிராமத்துச் சிறுவன் முதல் முறையாக புகைவண்டியில் ஏறினான். அதுவும் சைகைக்காரர் இருக்கும் கடைசிப் பெட்டியில். ஏறிய சிறுவன் விளையாட்டாக பெட்டியின் கம்பி மேல் சாய்ந்து தள்ளவும், புகைவண்டி கிளம்பவும் சரியாக இருந்தது.
சிறுவன் தான் தள்ளியதால்தான் வண்டி கிளம்பியது என்று நினைத்துவிட்டான். இன்னும் கொஞ்சம் வேகமாகத் தள்ள புகைவண்டியின் வேகம் அதிகரித்தது.
சிறுவனுக்கு ஒரே குஷி... தான் எவ்வளவோ சூப்பரா வண்டியைத் தள்ளிக் கொண்டிருக்கிறோம் என்று!
உண்மை புரியாத சிறுவன் உற்சாகமாக புகைவண்டியை ஓட்டவில்லையா என்ன ?" என்று கண்சிமிட்டிச் சிரித்தார் ஞானி.
சீடன், "அது சரி குருவே.
இரண்டு விஷயங்கள்.
மனிதர்கள் தான் தேடும் ஒன்றை (சுகம், ஆனந்தம்) அது கிடைக்காத இடத்தில்தான் உற்சாகமாகத் தேடுகிறார்கள் என்று புரிய வைக்கவே முடியாதா?" என்றார்.
"ஒன்று… அந்தச் சிறுவனுக்குப் புகைவண்டி தானாகவே ஓடுகிறது என்ற உண்மை சொல்லப்பட வேண்டும்.
பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான நம் வாழ்வு ஒரு நீண்ட கனவு மாத்திரமே! இந்தக் கனவிலிருந்தும் துயில் எழு முடியும். ஆனால், துயில் எழுத்த முடியாது. துயில் எழுங்கள். தூக்கம் கலையட்டும் துக்கமும் கலையட்டும்!
இரண்டாவது ... அந்த உண்மையைப் புரிந்துகொள்ளும் பக்குவமும் ஆர்வமும் வேண்டும்" என்று சொல்லி முடித்தார் ஞானி.
ஒரு உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் வாழும் சமுதாயம், உங்களைச் சுற்றிய நிகழ்வுகள், உறவுகளின் தனி வாழ்க்கை, ஏன், உங்களின் உடல் இயக்கம்கூட உங்களால் நடக்கவில்லை. எல்லாம் உங்களை மீறியே நடந்து கொண்டிருக்கிறது.
"எல்லாமே நம்மை மீறி நடக்கும் போது, நம் வாழ்க்கை மட்டும் 100% நம் கையிலா இருக்கிறது. இருந்தாலும் எதையோ தேடுகிறோமே. அது என்ன?"
இந்தக் கேள்வி பிறந்துவிட்டால் போதும்.
மாயை விலக ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்.
இதற்குமேல் உள்ள படிகளைக் காட்டி ஆனந்தத்திற்கு அமைத்துச் செல்லத்தான் ஞானிகள் பிறப்பெடுக்கிறார்கள்.
தேடிக்கொண்டுதான் இருக்கிறீர்கள் என்பதை உணருங்கள்.
மாயை விலகட்டும்!
மாயா – ஒரு விஞ்ஞான விளக்கம்
உண்மையில் மூளைக்கு எது நிஜம் ? எது கனவு ? எது கற்பனை ? எனப் பிரித்துப் பார்க்கத் தெரியாது என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா ?
நரம்பியல் வல்லுனர்களால் உங்கள் மூளையின் செயல்பாடுகளைப் படிக்க முடியும்.
மூளையிலிருந்து பெறப்பட்ட செய்திகள் மூலம், நீங்கள் என்ன வகையான உணர்ச்சியில் அந்த நிமிடத்தில் இருந்தீர்கள் என்பதுவரை துல்லியமாகச் சொல்ல முடியும்.
நிஜத்தில் ஒரு குழந்தையைப் பார்க்கிறீர்கள்.
இரவு கனவில் அதேக் குழந்தையைப் பார்க்கிறீர்கள்...
கற்பனையில் அதேக் குழந்தையைப் பார்க்கிறீர்கள் .....
இந்த மூன்று நிகழ்வுகள் பற்றி மூளை தரும் சமிக்ஞைகள் எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றனவாம்.
மூளையின் சமிக்ஞைகளிலிருந்து 'நிஜம் எது? கனவு எது ? கற்பனை எது ? எனப் பிரித்துப் பார்க்க முடிவதில்லை. மூளைக்கு மூன்றுமே ஒரே மாதிரியாகத்தான் தெரிகிறது.
அதாவது மூன்றுமே நிஜம் அல்லது மூன்றுமே மாயை என்ற ரீதியில் மூளை அணுகுகிறது.
மூளையால் பிரித்தறிய முடியவில்லை. ஆனால், உங்களால் பிரித்தறிய முடிகிறது.
'எது நிஜம்! எது கனவு!' என்று உங்களால் பிரித்து உணர முடிவது எதனால்... ?
அது உங்களுடைய விழிப்புணர்வால் இரவு கனவை விட, பகல் கற்பனைக்கு விழிப்புணர்வு அதிகம்.
பகல் கற்பனையைவிட, நிஜவாழ்வுக்கு விழிப்புணர்வு அதிகம்.
நிஜவாழ்வு வரை அதிகமானால் இப்போது நீங்கள் வாழும் வாழ்வே மாயை எனப் புரியும். இதுவும் கனவே!
எழு! எழு! எழு! என எழுப்புறைகூட எழுப்ப முடியும். ஆனால் ... எழுணுமே!
நிஜவாழ்வு நிஜ உலகம் என நீங்கள் நம்புவது இன்னும் கலைக்கப்படாத கனவு. இதுவும் மாயையே. இது தாண்டப்பட வேண்டிய ஒரு நீண்ட கனவு மட்டுமே.
இரவு கனவு எவ்வளவு அருமையான கனவாக இருந்தாலும், என்ன பயன் அதனால் ? அது, விழித்ததும் கலைந்து போகுமே.
அதேபோல்தான் நிஜவாழ்வு எனும் மாயையும். இதையும் தாண்டிய இதைவிட மிகவும் நிதர்சனமாக சொர்க்க உலகம் இருக்கிறது. அது நிஜம். எல்லா ஞானியரும் சொல்லும் நிஜம்.
கனவில் ஒருவர் கயவரிடம் சிக்கிக்கொண்டு அடி உதைப்பட்டு கனவிலேயே அலற ஆரம்பித்தால் ... அருகேயிருக்கும் நீங்கள் என்ன செய்வீர்கள்.
பாவம் கனவில் ஏதோ பயந்து போயிருப்பார்கள் . இந்தக் கனவு இன்னும் தொடர்ந்தால் இன்னும் அதிகமாக அவர்கள் கஷ்டங்களை அனுபவிக்கலாம்... என்றெண்ணி அவரை எழுப்பச் செய்வீர்கள்தானே.
காரணம் - தூங்குபவரை விட உங்களுக்கு விழிப்புணர்வு அதிகம். அதனால் அவரை எழுப்புகிறீர்கள்.
காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். கூர்ந்து விசாரித்து அறிவதும் பொய். ஆழ உணர்ந்து தெளிவதே மெய்!
கண்ணால்
ஞானிகளுக்கு மனிதர்களைவிட பல ஆயிரம் மடங்கு விழிப்புணர்வு அதிகம் பெற்றவர்கள்.
இந்த மாயை வாழ்க்கையை நிஜமென்று நம்பி நீங்கள் படும் கஷ்டங்களைப் பார்த்தால் .... ஞானிகளுக்குக் கருணை பொங்கும். மனிதரின் பரிதாப நிலை புரியும்.
நிஜத்தின் பொய்மை அவர்களுக்குப் புரிந்துவிட்ட காரணத்தால்தான் தொடர்ந்து ஞானிகள் மனிதகுல சேவைக்காக வருகிறார்கள்.
தூங்குபவரை எழுப்புகிறார்கள்.
நிஜவாழ்வெனும் கனவு இன்னும் ஆழமானது. ஞானிகள் எழுப்பினாலும் நீங்கள் எழ விரும்ப வேண்டுமே.
இந்த ஞானக் கருத்துக்களை ஆழமாய் தியானியுங்கள்
நீங்கள் விழித்துக்கொள்வீர்கள்!
கோயில்கள்,
சக்தி நிலையங்கள்
கோயில்கள் என்ற அமைப்பை பெரிதும் ஆதரித்திருக்கிறார்.
- மதம் எதுவானாலும் தெய்வம் எதுவானாலும் கோயில்கள் எல்லோருக்கும் பொதுவானது.
- மனிதரின் சக்தித் தேவையைப் பெருமளவில் பூர்த்திசெய்யும் சக்தி சிகிச்சையளிக்கும் மையங்கள், கோயில்கள்.
- கோயில், ஆலயம், மசூதி என்ற பெயரில் எல்லா மதங்களும் கோயில் தத்துவத்தை வரவேற்கின்றன.
கோயிலின் தத்துவம் : குணமளிக்கும் சக்திகளைத் தொடர்ந்து வெளியிடும் புனிதக் கட்டடங்களுக்குப் பெயர் கோயில்கள். கோயில்கள் தெய்வ சக்தியான ஆனந்த சக்தியூட்டும் மருத்துவமனைகள்.
-
க ... ட ... வு ... ள் ... இந்த நான்கு எழுத்துக்குள் சுருங்கிப் போகும் அளவுக்கு சிறுசா கடவுள் ?
-
கடவுள் என்ற வார்த்தையைத் தெரிந்து கொண்டதாலேயே கடவுளைப் புரிந்துகொண்டுவிட்டீர்களா ? என்ன தெரியும் கடவுள் பற்றி?
-
மேற்கண்ட கேள்விகள் முதலில் ஆத்திகவாதிகளுக்கும் பின் நாத்தீகவாதிகளுக்கும் கேட்கப்படுகிறது.
கடவுள் உண்டு என்ற வார்த்தையை உச்சரித்தால் நீங்கள் ஆத்திகவாதியாகிட முடியாது. வார்த்தை உங்களின் அனுபவமாகாதவரை ஆத்திகம் நிகழவில்லை!
மகரிஷி கிருஷ்ணர் சொன்ன அழகான கதையிரண்டு ...
அந்த அரசருக்கு பகவத்கீதையைத் தினம் போதிக்கும் பண்டிதர் கேட்கும் கேள்வி, "அரசே! தான் இன்று புரிந்துகொண்டதையெல்லாம் கொண்டீர்களா?" என்பதே. இதற்கு எப்போதும் அரசர் சொல்லும் பதில் கேள்வி, இதையெல்லாம்புரிந்துகொண்டீர்களா ?" என்பதே. எவ்வளவோ தயார்செய்தும், எவ்வளவு அழகாக விளக்கியும் அரசர் அதே கேட்பதால் மனதுக்குள் சஞ்சலப்பட்டுக் கொண்டேயிருந்தார் பண்டிதர்.
அன்று காலை கீதை வகுப்பிற்குப் பண்டிதருக்குப் பதில் அரசரைப் பார்க்க ஒரு ஓலை வந்தது. அதில், "அரசே! இன்று புரிந்துகொண்டேன். இனி வரமாட்டேன்'' என எழுதியிருந்தது.
பற்றற்று இருப்பது புலன்களின் சிக்கலிலிருந்து விடுபடுவது பற்றியும் மணிக்கணக்காய் பேசியவருக்கு தான் பேசும் வார்த்தைகள் தனக்கே இன்னும் அனுபவமாகவில்லை என்பது அன்றுதான் துல்லியமாய் புரிந்தது.
ஊருக்கு உபதேசம் செய்வதை நிறுத்தி, அன்றிலிருந்து தான் உருப்படுவதற்குச் செயல்பட அரும்பித்தார் அவர்.
- புரிந்துகொள்ளவில்லை தான் பண்டிதர் புரிந்துகொள்வதற்கே அவ்வளவு காலமானது நம் நிலை! உலகைப் பற்றி நான்கு வார்த்தை பேசத் தெரிந்ததால் உலகம் புரிந்ததா நமக்கெல்லாம் ? வானொலி நிலையங்கள் - ஒலி அலைகளை (Sound waves) கிரகித்து ஒலிபரப்புவது போல், கோயில்கள் - சக்தி அலைகளை (Energy waves) கிரகித்து சக்தியைப் பரப்பும் சக்தி நிலையங்கள்தான் கோயில்கள்.
ஞானிகள் பிரதிஷ்டை செய்து வைத்த கோவில்கள் எப்போதும் சக்தியை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும் சக்திகேந்திரங்கள். அதனால்தான் மன அழுத்தத்தோடும் மனக்கஷ்டத்தோடும் கோயிலுக்குள் செல்பவர்கள் வெளியில் வரும்போது புதுத்தெம்போடு, புதுநம்பிக்கையோடு வெளியே வருகிறார்கள்.
புதுத் கெம்பும், புதுத் தெளிவும் அந்தக் கோயில்களில் இருக்கும் ஞானசக்தியால் கிடைத்தது. கோயிலுக்குள் செல்பவர்கள் எவ்வளவு பக்தியோடும் எவ்வளவு திறந்த மனதோடும் செல்கிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு சக்தியைப் பெற்றுக்கொண்டு திரும்புவார்கள்.
சக்தி (Energy) உங்களுக்குள் நுழைய உதவும் ஒரு நுழைவாயிலே பக்தி. பக்தி என்னும் நுழைவாயிலின் கதவை எவ்வளவு திறக்கிறீர்களோ அந்த அளவுக்கு சக்தி என்னும் தென்றல்காற்று உங்களுக்குள் புகும். உங்களை ஆனந்தமயமாக்கும்.
பக்தியில்லாமல், சிரத்தையில்லாமல் கோயிலுக்கு ஏதோ கடமைக்குச் சென்றால் பலன் ஏதும் இல்லை. பக்தி கதவைத் திற... சக்தி காற்று வரட்டும்.
கோயில்கள் ஏன் உருவாக்கப்பட்டது ?
மனிதர்கள் இறைசக்தியோடு தொடர்புகொள்ள உருவாக்கப்பட்ட புனிதமான சக்தி நிலையங்கள்தான் (ENERGY STATION) கோயில்கள்.
டாக்டர் பராங் ருடால்ஃப் ஓர் அறிவியல் அறிஞர். அமேசான் காட்டில் பழங்குடி இனத்தார் மத்தியில் தங்கி முப்பது வருடங்கள் தொடர் ஆராய்ச்சி செய்துள்ளார்.
அங்கு ஒரு விசித்திரமான வழக்கம் இருந்ததாக அவர் நூலில் குறிப்பிடுகிறார்.
| சொல் | பக்தி ஆத்திகவாதிகளுக்கு |
|---|---|
| மட்டும் | மட்டுமே |
| சொந்தம் | சொந்தமல்ல! |
அவர்கள் தங்கள் எதிரியைத் தண்டிக்க வேண்டும் அல்லது நோயால் பாதிக்கப்படையச் செய்ய வேண்டும் என்றால்,
அந்த எதிரியைப் போன்றே ஒரு சிலையைச் செய்து அந்தச் சிலைக்கு எதிரியின் பெயரை வைத்து, சில மந்திரங்களை உருவேற்றிய பின் அந்த சிலையின் கால்களை உடைத்தால்….எத்தனை மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் ஏதோவொரு விபத்து நிகழ்ந்து அவரது கால்கள் உடைந்துவிடும்.
அதேபோல் நோய் குணமாக வேண்டுமென்றாலும் நோயாளியைப் போல ஒரு சிலையைச் செய்து, நோயாளியின் பெயரை வைத்து மாந்திரம் சொல்லி உருவேற்ற, நோய் குணம் அடைகிறது.
இப்படி ஒரு விசித்திரமான நிகழ்ச்சி நடைபெறுவதை முதன்முதலில் கேட்டபொழுது, டாக்டர் பராங் ருடால்ஃப் நம்பவே இல்லை.
பிறகு முப்பது ஆண்டுகள் அங்கு தங்கி செய்த ஆராய்ச்சி பற்றி தனது சுயசரிதையில் எழுதும் போது, "நூறு முறை நான் இதனைச் சோதனை செய்தேன். நூறுமுறையும் வெவ்வேறு மனிதர்களுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்வதை கண்களுக்கு நேராகக் கண்டேன். இது உண்மை" -இதை ஒரு சாதாரண மனிதர் சொன்னால் புரளி எனச் சொல்லி ஒதுக்கிவிடலாம்.
ஒரு சாதாரணச் சிலையை வைத்து நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஓர் உயிருள்ள மனிதருள் மாற்றத்தை நிகழ்த்த முடியும்போது, ஏன் ஒரு ஞானியின் உருவச் சிலையை வைத்து ஞானியோடும் இறைசக்தியோடும் தொடர்புகொள்ள முடியாது.
ஞானியால் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் தொடர்ந்து சக்தியை வெளிப்படுத்தும் சக்தி படைத்தவை.
இது உண்மை. முழுபக்தியோடு வருபவர்களுக்கு மட்டுமே இந்த உண்மை அனுபவபூர்வமாகப் புரியும்.
பக்தி உங்களின் இதயத்தில் அதிகமாக அதிகமாக அகங்காரம், கோபம், பொறாமை, வெறுப்பு என்று உங்களைப் பாதிக்கும் அற்ப உணர்ச்சிகள் உங்களை விட்டு மறைய ஆரம்பிக்கும்.
இப்படி ஒன்று நிகழ்ந்தால் ....
நாத்திக ஞானம்
கடவுள் இல்லை என்ற வார்த்தைவலைக்குள் தொக்கி நின்றுவிடாதீர்கள். அவ்வார்த்தைகள் அனுபவமாக மாறுமளவுக்குப் பக்தியோடு தியானியுங்கள். உங்களின் உயிரோட்டத்திற்குக் காரணமான அந்த ஆனந்தசக்தியால் ஆட்கொள்ளப்படுவீர்கள். எது உண்மை என்பது உதயமாகும்!
திடீரென்று உலகப் போர் மூண்டு கிட்டத்தட்ட உலகமே அழிந்து விடுகிறது. எஞ்சிய சிலரிடம் எப்படியோ தப்பிக்க ஒரு செல்போன் மட்டும் கிடைக்கிறது.
ஒன்றிரண்டு தலைமுறைகளுக்குப் பின் வருபவர்களிடம் அந்த செல்போனைக் காட்டி, "இதன் பெயர் செல்போன், ஒரு காலத்தில் இதன் மூலம் மக்கள் உலகத்தின் எந்த ஒரு மூலை முடுக்கில் இருப்பவரிடமும் பேச முடியும்" என்று சொன்னால் நம்புவார்களா ? நம்பமாட்டார்கள்.
ஏனென்றால், பயன்படுத்தக்கூடிய அறிவியல் தொழில்நுட்ப முறை இப்போது அழிந்துவிட்டது. அதனால் செல்போனின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியாது. புரிய வைக்கவும் முடியாது.
அதேபோல்தான் ஞானிகள் இருந்த போது உருவாக்கப்பட்ட கோயில்களின் மகத்துவம் நாளடைவில் மறைக்கப்படுகிறது. கோயில்கள் மனித வாழ்க்கையிலும் ஆன்மீக வளர்ச்சியிலும் எவ்வளவு முக்கியமான ஒரு வழிமுறையாக இருக்கின்றன என்பது பலருக்குத் தெரிவதே இல்லை.
கடமைக்காகச் செய்யும் பூஜைகளால் எந்த ஒரு பலனும் கிடைக்கப்போவதில்லை. அது பக்தியில்லாத இலைக்குச் சமம்.
பக்தியோடும் சிரத்தையோடும் செய்யும் பூஜை, வெறும் பூஜையோ சடங்கோ இல்லை. அது இறைசக்தியோடு நேரடித் தொடர்புக்கு உதவும் தியானத்திற்குச் சமம்.
சிரத்தையோ, இல்லாமல் செய்யும் தியானம்கூட வெறும் சடங்கே. முழு ஈடுபாட்டோடும் செய்யும் சடங்குகூட தியானம்தான்.
எண்ணிற்கரிய நாத்திகருக்கு. உங்களின் கொள்கைமேல் உங்களுக்கு இருக்கும் ருசி மற்றும் மரியாதையின் கூட்டுத்தொகையே பக்தி. பக்தி முக்கியம். அது பக்தி செய்யப்படும் பொருளை விட முக்கியமானது. எந்தப் பொருளின் மீது, எதன் மீது பக்தி வந்தாலும் அது நல்லதே! அது பக்தியுணர்வை உருவாக்க உதவும் ஒரு டெக்னிக்! பக்தியுணர்வு உங்களுள் எங்கே எப்போது, எதன் மீது வந்தாலும் அங்கு அப்போது தியானம் நிகழ்கிறது!
ஞானிகளையும் ஏகப்பட்ட கோயில்களையும் கொண்ட புண்ணிய பூமி பாரதம். இந்தப் புண்ணிய பூமியில் பிறப்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்தப் புண்ணிய பூமியில் இருக்கும் கோயில்களுக்குச் செல்வதும், வெகுநேரம் நின்று தரிசிப்பதும் பூஜிப்பதும் ஒரு வகையான தியானமுறைகள்தான்.
இறைசக்தியை அனுபூதியாக உணர்வதற்கான ஆன்மீகப் பயணத்தில் கோயில்களுக்குச் செல்வதும் தெய்வச்சிலைகளை வழிபடுவதும் ஒரு முக்கியமான அம்சமே.
ஜெபிக்கையில் கடவுளிடம் ஜெபிக்கிறாய். தியானிக்கையில் கடவுளாகவே மாறிவிடுகிறாய். When you pray you pray to God. When you meditate you are God
இவை ஏதோ படிப்பறிவில்லாதவர்களும் ஒன்றும் தெரியாதவர்களும் மட்டுமே செய்ய வேண்டியது என்று நினைத்துவிடாதீர்கள். படித்தவரானாலும் படிக்காதவரானாலும் சரி, உணர்வுப்பூர்வமாக வாழும் ஒவ்வொருவரின் மிகச் சிறந்த மார்க்கம் பக்தி மார்க்கம்.
சுயலாபத்திற்காகப் பேசப்படும் சில மேடைப் பேச்சுகளையும் எழுதத் தெரியும் என்பதற்காக எதையாவது எழுதி பக்தியை ஏளனம் செய்யும் கருத்துக்களையும் உங்கள் மனதில் பதிய வைக்க உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.
நீங்கள் ஆத்திகவாதியாக இருக்கலாம். தவறாக கிடைத்த சில கருத்துகளை மனதில் பதித்துக்கொண்டு "பக்தியாவது, மண்ணாவது அதெல்லாம் எனக்கு வராது" என்று உங்களை நீங்களே ஏமாற்றிக்கொண்டால் நஷ்டம் உங்களுக்குத்தான். நிச்சயம் உங்களுக்கு மட்டும்தான்.
இறைச்சக்தியை உணர, அடைய ஏகப்பட்ட வழிகள் இருக்கிறது. இந்த எல்லா வழிகளிலும் மிக எளிமையான வழி எது என்றால் அது நிச்சயம் பக்தி மார்க்கம்தான்.
வாயிருந்தும் ஊமை கண்ணிருந்தும் குருடு காதிருந்தும் செவிடு
என்பது உண்மை தெரிந்தும் மகத்துவம் தெரிந்தும் அதைப் புரிந்துகொள்ளாதிருக்கும் கல்மனங்கள்தான்.
கல்மனத்தை மாற்றும் வெண்பஞ்சு போன்று மிருதுவாக்கும் பக்தியை வாழ்க்கையில் எடுத்து வாருங்கள் - ரோகம், சோகம், துக்கம் இவற்றிற்குக் காரணமான உடல், மன, சக்திக்குறைபாடு ஆகியவை இறைசக்தியின் பூரணப் பொழிவால் பூரணத்துவம் பெறுவதை அனுபவமாக உணர்வீர்கள்.
சூரிய ஒளி அல்லது வெப்பம் தேவையான அளவு கிடைக்கப் பெறாத ஈரத்துணி நாற்றம் எடுப்பது போலத்தான் நம் உடலின் ஆரோக்கியத்திற்குத் தேவையான சக்தி தேவையான அளவு கிடைக்காத போது ஆரோக்கியம் குறைந்து ரோகம் உருவாகிறது.
அதேபோல்தான் மனதின் சந்தோஷத்திற்குத் தேவையான சக்தி, தேவையான அளவு கிடைக்காத போது உற்சாகம் குறைந்து சோகம் உருவாகிறது.
ரோகம், சோகம், துக்கம் எல்லாமே உடல், மன, உயிர் இருப்புநிலையில் ஆகியிருக்கும் சக்திக் குறைபாடுகளின் வெவ்வேறு வெளிப்பாடுகள். சக்திக் குறைபாடு என்ற ஒரே ஒரு பிரச்சனையை மாத்திரமே சரிசெய்தால் போதும். எல்லா பிரச்சனைகளும் தன்னால் சரியாகிவிடும்.
சிலருக்கு இந்த உண்மையை நம்புவதற்குக் கடினமாகத் தோன்றலாம்… சக்தி குறைபாடு என்ற ஒரே ஒரு பிரச்சனைதான் எல்லாக் கஷ்டங்களுக்கும் ஆணிவேர்.
உண்மையை நம்புவது கடினம். ஏற்றுக்கொள்வது எளிது. அனுபவமாக்குவது வெகு சுலபம். உண்மையை நம்புவது போல நடிப்பது சுலபம். ஏற்றுக்கொள்வது போல நடிப்பதும் சுலபம்.
அனுபவ அறிவு பெற்றவர் போல நடிப்பது இயலாத காரியம்.
பக்தி நிறைந்தவர் போல நடித்துக்கொண்டு உள்ளுக்குள் கொடூரமானவராக, ஏமாற்றுக்காரராக, துக்கம் நிறைந்தவராக வாழ்வது சுலபம்.
ஆனால், பக்தி நிறைந்தவராக வாழ்வது கடினம். உங்களின் குறைபாடுகள் அதைக் காட்டிக் கொடுத்துவிடும்.
ஏனென்றால். பக்தி நிறைந்தவர் சக்தி நிறைந்தவர் ! பக்திமான் சக்திமான்! பக்தி சக்தி!
பக்தியும் சக்தியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். உங்கள் பக்தி எந்த அளவுக்கு இருக்கிறதோ அதே அளவுக்கு சக்தியும் இருக்கும்.
நீங்கள் சக்திக்குறைவை உணர்ந்தாலோ அல்லது ரோகம், சோகம், துக்கம் இருப்பதை உணர்ந்தாலோ நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்… அது சக்தியின்மையின் வெளிப்பாடு.
| செல் | |
|---|---|
| போன் | செல்போன் மூலமாக உங்கள் நண்பர்களோடு பேசலாம். |
| தெய்வ விக்கிரகங்கள் மூலமாக உங்களின் தெய்வத்தோடு பேசலாம். |
சக்தியின்மையைப் போக்க, பக்தியின்மையை மாற்ற ஆரம்பித்தாலே போதும். பக்தியை வளர்க்க ஆரம்பித்தாலே போதும். ஒளி வந்த கணத்தில் மறைய ஆரம்பிக்கும் இருள் போல, பக்திப்பரவசமாவது சக்திக் குறைவை நிறைவாக்கிவிடும்.
பக்தி என்பது நம்பிக்கை, மரியாதை, நன்றியுணர்வு என்ற மூன்று உணர்வுகளின் கூட்டு வெளிப்பாடு.
இந்த மூன்று உணர்வுகளின் குறைபாடுகள்தான் பக்தியின்மையாக வெளிப்படும்.
உணர்வுகளின் இந்த போலித்தன்மைதான் போலி பக்தியாக வெளிப்படும்.
'எது பக்தி ?' என்பதை யார் வேண்டுமானாலும் எளிதாய் உணர்ந்து கொள்ளலாம். மேலே குறிப்பிடப்பட்டிருப்பது பக்தியுணர்வின் ஒரு சில வெளிப்பாடுகள்.
நாம் பிறப்பதற்குக் காரணமாக இருந்த பெற்றோர்கள்.
நாம் வளர்வதற்கு உதவியாக இருந்த சமுதாயம்.
கோயில் சென்றால் தவறாமல் ஒரு இருபது நிமிடமாவது அமைதியாய் அமர்ந்து தியானம் செய்யுங்கள்.
உடல், மனம், உயிர் ஒருசேர உற்சாகப்படும்.
செய்யத் தவறாதீர்கள்.
நாம் வாழ்வதற்கு ஆதாரமாக இருந்த இறைசக்தி.
ஆகியவற்றின் மீது நமக்கிருக்கும் மரியாதையும் நன்றியுணர்வும் நம்பிக்கையும் சேர்ந்ததே பக்தி.
இந்தப் பக்தியை எல்லோரிடமும் எல்லா இடத்திலும் வெளிப்படுத்தும் பக்குவம் பெறும் போது பக்தியின் முழுவெளிப்பாடு நிகழும்.
நாம் காணும் ஒவ்வொரு விஷயத்திலும் இறைசக்தியை உணர்வதுதான் பக்தி.
இந்தப் பக்திதான் ஞானம்.
இவ்வளவு பக்குவம் நிறைந்த பக்தியை வெகுசுலபமாக, வெகு இயல்பாக மக்கள் பெறுவதற்காக ரிஷிகளும் ஞானிகளும் உருவாக்கிக் கொடுத்த தெய்வீக தத்துவ வெளிப்பாடுதான் கோயில்கள்.
கோயில்கள் சக்திநிலையங்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. மாறாத நிஜம்.
ஞானிகள் பிராணப்பிரதிஷ்டை செய்து வைத்த கோயில்களில் நன்றியுணர்வும் மரியாதையும் நம்பிக்கையும் முழுமையாக கொண்டு, அங்கிருக்கும் விக்கிரகங்களின் மூலம் இறைசக்தியைத் தொடர்புகொள்ள முயன்றால் சக்திப் பிரவாகத்தைப் பூரணமாக உணர முடியும்.
நன்றியுணர்வும்
மரியாதையும்
நம்பிக்கையும் இல்லாமல்... கடமைக்காகச் சென்றால் விக்கிரதங்கள் வெறும் கற்சிலையாக மாத்திரமே தெரியும்.
கோயில்கள், வேதங்கள், யாகங்கள் மக்களைச் சகதிக்கடலில் இருந்து சக்திக் கடலுக்கு அழைக்குச் செல்ல உருவாக்கப்பட்ட மந்திரப் படகுகள்.
விக்கிரகங்களை கடவுள் சக்தியாக உணர்வதும் வெறும் கருங்கல்லாகப் பார்ப்பதும் அவரவரின் நன்றியுணர்வு, மரியாதை, நம்பிக்கையைப் பொறுத்தது.
கோயில்களின் ஒவ்வொரு அம்சமும் ஞானசக்தியை வெளிப்படுத்தும் அம்சங்கள்.
கோயில்களுக்குச் செல்வதைப் பொழுதுபோக்காகவோ, கடமையாகவோ பயன்படுத்தாமல் பக்தி சிரத்தையோடு கோயிலுக்குள் நுழைந்தால், உங்கள் பொழுதின் ஒவ்வொரு நிமிடத்தையும் பொலிவாக்கும் இறைசக்தியை உணர முடியும்.
பக்தி சிரத்தையோடு கோயில்களில் தியானத்தில் ஈடுபட்டு கோயில்களின் தத்துவத்தை முழுமையாக உணர்ந்து ஆனந்தமாக இருங்கள்!
உங்களின் புத்திக்கேந்திரத்திற்குள் சக்தி பாயட்டும் !
ஆச்சரியப்பட வைக்கும் தஞ்சை பெரிய கோயிலை கற்களாலேயே கட்டிய ராஜராஜசோழன், நிச்சயம் தான் தங்குவதற்கு அதேபோல் உறுதியான ஒரு அரண்மனையை கட்டியிருப்பார்தானே.
இன்று அது இருக்கிறதா ?
எல்லாப் பெருமைவாய்ந்த கோயில்களையும் கட்டியவர்கள் மன்னர்கள்தான். இன்று வரை அக்கோயில்கள் உயிர் வாழ்கின்றன.
அந்த மன்னர்களின் அரண்மனைகளும் சொகுசு மாளிமைகளும் எங்கே? எப்படி அழிந்தன ?
எவ்வளவு படையெடுப்புகள், ஆக்கிரமிப்புகள்… ஆனால், இன்று வரை கோயில்கள் பத்திரமாகவே இருக்கின்றன என்றால், அக்கோயில்களை ஏதோ ஒரு பெரிய சக்தி அல்லது சங்கதி காப்பாற்றுகிறது என்பது புரிகிறதா ?
கோயில்கள் மட்டும் காக்கப்பட்டிருப்பது தற்செயலானது எனச் சொல்லி சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது.
இது ஆச்சரியப்பட வேண்டியது மட்டுமல்ல ... ஆராயப்பட வேண்டியது.
நீங்கள் பிறக்க,
வெட்டவெளியில் பூமி பிறக்க,
அணுவிலிருந்து அண்டம் வரை ஒழுங்காய் இருக்க,
காரணமான காரணசக்தியின் (Super Natural Power) சக்தி நிலையங்களாகக் கோயில்கள் இருப்பதால்தான், அவை இயற்கையாகவே காக்கப்பட்டிருக்கின்றன.
கோயில்கள் மற்றும் சம்பிரதாயங்களைச் சுற்றி ஏதோ சிறு சிறு மூடநம்பிக்கைகள் இருக்கின்றதென பெரிதுபடுத்தி பார்க்க வைத்து, கோயில்களில் இருக்கும் மகா சக்தியை நீங்கள் இழக்க மனதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். நம்மை மீறிய சக்தி நம் அருகிலேயே இருக்கிறது. நம் அறியாமையால், குறை மதிப்பீட்டால் அவற்றை இழந்துவிடக் கூடாது.
சக்திக்கேந்திரங்களுக்கு உங்கள் புத்திக்கேந்திரத்தில் மதிப்பளியுங்கள். சக்தி புத்திக்குள் பாயட்டும். புத்தி புதுக்கோணத்தில் வாழ்வை அணுகட்டும்!
ஞானியரால் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில்களே சக்தி கேந்திரங்கள்!
கவலைப்படாதே சக்காதரா!
- சந்தோஷம் என்ற ஒளி இல்லாத வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் கவலை என்ற இருள் வந்து பற்றிக்கொள்ளும்.
- சந்தோஷம், கவலை என்ற இரண்டையும் தாண்டிய நிலைதான் ஆனந்தம்.
- சந்தோஷம் நிரந்தரமாக எவருக்குமே இருப்பதில்லை. கவலையைக் கூட இந்த நேரத்தில் வரும், இவ்வளவு காலம் இருக்கும் என்று பலரால் கூற முடியும். ஆனால், சந்தோஷம் எப்போது வரும், எவ்வளவு காலம் இருக்கும் என்று சிலரால்கூடக் கூற முடியாது. அதனால்தான் சந்தோஷம் ஒரு தோஷம்.
- சந்தோஷ்த்திற்கு நச்சு கவலை. கவலைக்கு மருந்து சந்தோஷம்.
போன நூற்றாண்டில் கோவைக்காரர் ஒருவர் தன் மகள் வயதிற்கு வந்த நிகழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக ஒரு வீணை வித்துவானைச் சந்தித்து, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யத் தஞ்சாவூர் சென்றார்.
தேதி முடிவானதும் புறப்படுகிறபோது ஒரு குறிப்பிட்ட மனிதரின் பெயரைச் சொல்லி, அவரது கடத்தை எங்கள் பகுதியில் எல்லோரும் விரும்புவார்கள் என்று சொன்னார்.
இதிலே காயப்பட்டுப் போன வீணை வித்வான், பொறாமையால். "அவர் கடம் வாசிப்பதில் கைதேர்ந்தவர்தான். ஆனால் உற்சாக மிகுதியால் கடத்தைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பார். அவ்வாறு பிடிக்கும்போது கடம் கீழே விழுந்து உடைந்து விட்டால், ஒரு நல்ல நாளில் அது உங்களுக்கு அபசகுனமாகப் போகும்'' என்றார்.
கோவைக்காரர், கடம்காரர் வீட்டுப் பக்கமே போகாமல் கச்சேரியில்லாமல் திரும்பிவிட்டார்.
கச்சேரிக்கான கொண்டிருந்தது. கடம் வாசிப்பவர், கடம் வாசிக்கக் தன்னை அமைக்கவில்லை என்பதை உணர்ந்து, தன்னை அழைக்காமல் ஒரு கச்சேரியா என்று கேட்பதற்காகக் கோவைக்காரரின் வீட்டுக்கு வந்தார்.
கோவைக்காரர் அமைதியாகக் கேட்டுக்கொண்டார் கடம் கலைஞர், பிறகு பேச ஆரம்பித்தார்.
"வீணை வாசிப்பதில் தஞ்சாவூர்க்காரர் சரஸ்வதிக்கு ஒப்பானவர்கள்தான். ஆனால், அவருடைய நீண்ட வீணையை வெள்ளைத் துணியைப் போட்டு மூடி வீணையிலிருந்து கீழே இறக்கி உங்கள் வீட்டுக்குள் இரு கைகளாலும் கொண்டுவருகிறபோது பிணத்தைக் கொண்டு வருகிற மாதிரி இருக்கும். ஒரு நல்ல நாளில் இந்த அபசகுனம் நடக்க வேண்டுமா ? நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்" என்று கடம் கலைஞர் சொன்ன போது கோவைக்காரருக்குப் பகீரென்று இருந்தது.
கடம் கலைஞர் போன பிறகு கோவைக்காரர், தம் மகளின் விசேஷத்திற்குச் கச்சேரியே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்!
ஏன் இந்தக் கதையைச் சொன்னேன்? ஒருவரின் பொறாமை மூன்று பேரின் ஈகோவைப் பாதித்துவிட்டது என்பதைச் சொல்வதற்குத்தான், ஈகோ பிரச்சனை எழுந்து விட்டால் முதலில் பாதிக்கப்படுவது சந்தோஷம்தான். எனவே பொறாமைப் பேயை எழுந்து உட்காராதபடி பார்த்துக்கொள்வது நம் வேலை.
சந்தோஷத்தைத் தக்கவைத்துக் கொள்ள இன்னோர் எளிய வழி, கவலைப்படாமல் இருப்பது. கிருஷ்ணபரமாத்மா எங்குமே கவலைப்பட்டதாகவோ, அரற்றியதாகவோ காணப்படவில்லை. அதனால்தான் அவர் ஆனந்த மயத்தில் எப்போதும் குடிகொண்டிருக்க முடிந்தது.
ஆகாய விமானத்தில் பறந்து கொண்டிருக்கிற போது பாதுகாப்புப் பெரும்பாலும் விமான ஓட்டியின் கரங்களிலேயே உள்ளது. விமான ஓட்டி நமது உயிருக்கும் உடைமைக்கும் பொறுப்பாக இருக்கிறார் என்று எண்ணாமல், நாம் கவலைப்பட ஆரம்பித்தால் பயணம் இனிதாக இருக்காது.
இந்த உலக வாழ்விலும் நாம் ஆனந்தமயமாக இருக்க வேண்டும் என்றால், இறைசக்தி மீது பாரத்தைப் போட்டுவிட்டு நமது கடமைகளைச் செய்வது ஒன்றே, சிறந்த வழி.
நம்மால்தான் எல்லாம் என்கிற நினைப்பை அகற்றுதலே ஆனந்தத்தின் ஆரம்பப் படிக்கட்டுகள்தான்.
"அதிகாலையில் கண்ணாடித்தொட்டிகளை உற்றுப் பாருங்கள். அதில் தங்க மீன்கள் வண்ணக் கனவுகளோடு துள்ளிக் குதித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்" என்று ஒரு கவிஞர் கூறியபடி, மீன்கள் தாங்கள் குதிக்கின்ற நீரே குழம்பாக மாறுவதைப் பற்றிக் கொஞ்சம்கூடக் கவலைப்படாமல் துள்ளிக்கொண்டே இருக்கின்றன. காலையிலேயே மலர்ந்து மணம் பரப்பும் வாசமுள்ள பூக்களை எண்ணிப் பாருங்கள். சலசலத்து ஓடுகிற சங்கீத நதிகளில் முகம் பார்க்கும் சின்ன சிட்டுகளைப் பாருங்கள். இயற்கையே ஆனந்தமயமாக இருக்கிறபோது மனிதருக்கு மாத்திரம் கவலை ஏன் ?
உலக வாழ்விலும் நாம் ஆனந்தமயமாக இருக்க வேண்டும் என்றால், இறைசக்தி மீது பாரத்தைப் போட்டுவிட்டு நமது கடமைகளைச் செய்வது ஒன்றே, சிறந்த வழி.
காரணம் - ஒரு இடத்தில் வெளிச்சம் மறைந்த அடுத்த நொடியே யாருமே அழைக்காமல் அந்த இடத்தில் இருள் வந்து சேர்ந்துவிடும். ஒருவர் மனதில் சந்தோஷம் குறைந்த அடுத்த நொடியே சந்தடியே இல்லாமல் மனதில் கவலை தோன்றிவிடும்.
பொறாமை, நம்பிக்கையின்மை, கர்வம் என்ற மூன்று குணங்கள்தான் மனிதனின் சந்தோஷத்தைக் குறைக்கும் பெரிய காரணிகள்.
நமது ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் நமது குணங்கள் வெளிப்படும். கொஞ்சம் நிதானத்தோடு கவனித்துப் பார்த்தால் உங்கள் சந்தோஷ்த்தைக் குறைக்கும் காரணிகளை உங்கள் சொல், செயலிலிருந்து மிக எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். முயன்று பாருங்கள்!
என்ன, கவலையின் காரணங்களைக் கண்டுபிடித்து விட்டீர்களா? அப்புறம் என்ன யோசனை. சந்தோஷத்தை உங்களிடம் இருந்து குறைக்கும் காரணிகளை வேராக்க ஆரம்பியுங்கள்.
வெளிச்சத்தைக் குறைப்பவற்றை அகற்றினாலே போதும் வெளிச்சம் அதிகரிக்கும். இருள் மறையும்.
சந்தோஷத்தைக் குறைப்பவற்றை மனதிலிருந்து அகற்ற ஆரம்பியுங்கள். சந்தோஷம் அதிகரிக்க ஆரம்பிக்கும். கவலை கலைய ஆரம்பிக்கும்.
சகோதரர்களே, சகோதரிகளே!
கவலைப்படாதீர்கள். மகிழ்ந்து சந்தோஷம் அடையுங்கள். பின் அதையும் தாண்டி ஆனந்தமாக இருங்கள்!
கவலைகளின் ரிஷிஷலம் ...
-
கவலையை எதிர்கொள்ளும் துணிவில்லாதவர்கள் எல்லாவற்றிற்கும் ஆசைப்பட்டால் அவர்கள் கதி! அதோகதிதான்! (காரணம் நிறைவேறாத ஆசை, கவலையாக மாறும்).
-
எல்லாவற்றிற்கும் ஆசைப்படுவது மனித இயல்புதான். மனமும் அதைத்தான் தூண்டும். ஆனால், ஆசைப்படும் முன் யோசியுங்கள். முடியாவிட்டால் பின்னாவது யோசியுங்கள்.
-
இது சாத்தியமா ? இல்லையா ?
ஆசைப்படுவது எளிது. ஆனால், அது சாத்தியம் இல்லை என்று தெரிந்து உதறித்தள்ளுவது கடினம். எனவே ஆசைப்படும் முன் யோசிப்பது புத்திசாலித்தனம்; எளிதும் கூட.
- எனக்கு ஆசைப்படவும் தெரியும்! சாத்தியமில்லை, தேவையில்லை என்று தெரிந்தால் அதை உதறவும் தெரியும்! கவலையைப் பற்றி எனக்குக் கவலையில்லை. இந்த அளவுக்கு வாழ்க்கையை அணுகும் பக்குவம் பெற்றிருந்தால், நீங்கள் எதன் மீதும் ஆசைப்படலாம். தவறில்லை. எல்லாவற்றிற்காகவும் ஆசைப்படுங்கள். அது சரியே!
எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு என்று தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் கவலைகளுக்குக் காரணம் உங்கள் ஆசைகளே!
- "எப்படி இருக்கீங்க ?"
- "ரொம்ப நல்லா இருக்கேன்."
- "வீட்ல எல்லோரும் நல்லா இருக்காங்களா?"
- " ஆண்டவன் கிருபையால் எல்லோரும் ரொம்ப நல்லா இருக்காங்க."
- "வியாபாரம் எப்படிப்போயிட்டிருக்கு ?"
- " அமோகமாகப் போயிட்டிருக்கு. ஒரு கவலையுமில்லை, எல்லாம் மேல இருக்கிறவர் பார்த்துக்கறார்."
இப்படித்தான் நமது உரையாடல் தொடர்கிறது. மேம்போக்காக எல்லோரும் தாங்கள் மிகவும் நன்றாக இருப்பதாகவே வெளியில் உண்மையில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு துன்பங்கள், கவலைகள் இருக்கின்றன என்பது அவரவருக்கு மட்டுமே தெரியும்.
கவலையில்லாமல் வாழ எல்லோருக்கும் ஆசைதான். ஆனால் ஆசைதான் எல்லாக் கவலைகளுக்கும் காரணம் என்ற உண்மை தெரியாமல் போனதுதான், எல்லா மனத் துன்பத்திற்கும் காரணம்.
நமது ஆசைகள்தான் எந்த ஒரு காரியத்தையும் செய்வதற்கு வித்திடுகிறது. ஒரு ஆசை திருப்தி அடைந்து முடிவதற்குள், அடுத்த ஆசை வந்து விடுகிறது. இப்படித் தொடர்ந்து எழும் ஆசைகளால், தொடர்ந்து ஏதாவது ஒரு காரியத்தைச் செய்து கொண்டோ அல்லது சிந்திக்குக்கொண்டோ இருக்கிறோம்.
கவலையில்லாமல் ஆனந்தமாக இருப்பதற்குப் போதுமானவை இருந்தாலும் எதையாவது நினைத்து நம்மில் பலர் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறோம்.
ஏன் இவ்வளவு கவலைகள் ? - ஒரு சிறிய கதை மூலம் விளக்குகிறேன்.
ஒரு முறை நிட்டிராஜன் ஒட்டல் ஒன்றிற்குச் சென்றார். அங்கு, "ஒரு செட் தோசை... ஒரு நெய் ரோஸ்ட்.... ஒரு வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ்... மசாலா சமோசா... கட்லெட்… சப்போட்டா பழ ஜுஸ்… பாதாம் பால்… வெண்ணிலா ஐஸ்கிரீம்…" என்று எகப்பட்ட ஐட்டங்களை ஆர்டர் செய்து சாப்பிட்டார்.
கடைசியாக, "சர்வர், ஒரு ஸ்வீட் பீடா கொண்டாப்பா" என்று கூறிவிட்டுக் கைகளுமுவச் சென்றார் நிட்டி.
சர்வர் பீடாவை, பல் பளேட்டில் வைத்து நிட்டியின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார். கைகமுவி விட்டு வந்த நிட்டிராஜன், "என்னப்பா, நான் பீடா மாத்திரம்தான் கேட்டேன், இது என்ன! கூடவே ஒரு பேப்பர்?' என்றார். சர்வர் "சார், இதுவரை நீங்கள் சாப்பிட்ட உணவோட பில்தான் இது. நீங்கள் இதுவரை சாப்பிட்டதற்கு 545 ரூபாய் கொடுக்க வேண்டும்" என்றார்.
நட்டி, "என்னப்பா! வெறும் சாப்பாடு மாத்திரம்தானே கேட்டேன்! இந்த பில்லை யார் கேட்டது!" என்றார் பகற்றத்தோடு.
கதை வேடிக்கையாக இருந்தாலும் கதையின் கருத்து மிக ஆழமானது, நிட்டி பல உணவுகளை ஆசைப்பட்டு ஆர்டர் செய்ததன் விளைவே, 545 ரூபாய் பில். இப்படித்தான் நாம் ஆசைப்பட்டுப் பல காரியங்களில் இறங்கி விடுகிறோம். ஆனால், நமது செயல்களைத் தொடர்ந்து வரும் கவலைகளை மட்டும் ஏற்க மறுக்கிறோம்.
நாம் ஈடுபடும் ஒவ்வொரு விஷயத்திலும் காரியத்திலும் இன்பமும் துன்பமும் கலந்தே இருக்கின்றன. படித்தால் முழுக்கவனத்தோடு படிப்பது, சுவையான
என் கவலைக்கு நான்தான் பொறுப்பு என்று உணர்ந்தால், ஆசை சரி. ஆசைப்படுங்கள் தவறில்லை!
உணவைச் சாப்பிட்டால் முழுமையாக ரசித்துச் சுவைத்துச் சாப்படுவது, வேலை செய்தால் பொறுப்புணர்ந்து முழுமையாகச் செய்வது என்று செய்யும் காரியங்களிலெல்லாம் முழுமையாக ஈடுபட்டால்... முதலில் முழுத் திருப்தி ஏற்படும்.
இரண்டாவது, அடுத்த ஆசை உருவாவதற்கு வாய்ப்பே கிடைக்காது. ஆசை... கவலை... ஆசை... இந்தச் சக்கரம் நின்று போகும்.
எந்த ஒரு செயலிலும் முழுமையாக ஈடுபட முடியாமல் போவது ... கட்டுப்பாடற்ற, கட்டுக்கடங்காத ஆசைகளால்கான்.
ஆசை என்ற பந்தை எவ்வளவு வேகமாக வீசுகிறீர்களோ, அதைப் பொறுத்துத்தான் கவலை என்ற பந்தாக, உங்கள் வாழ்க்கைச் சுவரில் பட்டுத் திரும்பும்.
உங்கள் கவலையின் அளவு உங்கள் ஆசையின் அளவே.
ஆசைகள் குறைந்தால், கவலைகளும் குறைந்துவிடும்.
உங்கள் கவலைகளை, உங்கள் ஆசைகள் மூலம் நீங்கள்தான் தேர்வு செய்கிறீர்கள்.
இந்த உண்மையை முழுமையாகப் புரிந்துகொண்டாலே போதும், நிம்மதியான வாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைத்துவிடலாம்.
ஆசைகள்தான் கவலைகளுக்குக் காரணம் என்று புரிந்துகொண்ட பின் தயக்கம் ஏன் ?... தெளிவாக யோசியுங்கள்...
தேவையில்லாத - சாத்தியப்படாத - ஆசைகளை மனதிலிருந்து விட்டுவிடுங்கள். (இது நிச்சயம் சாத்தியமாகக்கூடிய ஒன்றே). உங்கள் கவலைச் சுமையின் பெரும் பகுதியை இறக்கி வைத்தது போல் உணர்வீர்கள்!
பகிர்தல்
தியான சிகிச்சையின்போது, "நானொரு பாவி, முரடன், ஒரு காலத்தில் திருடன்! நானெல்லாம் புனிதமான தியானத்தைச் செய்யலாமா?"என ஒரு நபர் என்னிடம் கேட்டார்.
அவரிடம், "நீங்கள் கேட்பது… ஒரு மருத்துவரிடம் சென்ற நோயாளி, 'என் உடல் மோசமாயிருக்கிறது. உங்களின் புனிதமான மருந்துகளை நானெல்லாம் எடுத்துக்கொள்ளலாமா' எனக் கேட்பது போலுள்ளது' என்றேன். அந்த நபரின் கண்களில் சந்தோஷம் பொங்கியது!
-
எல்லோரும் உருவாக்கப்படுபவை அல்ல.
-
எல்லோரும் உருவாக்கப்படுகின்றன.
-
பகிர்தல் - ஒரு தியானமுறை.
-
அகங்காரத்தை வலி தெரியாமல் அறுத்துவிட உதவும் வாழ்வியல் வழிமுறை பகிர்தல்.
-
உள்ளத்தில் உள்ளதையெல்லாம் பகிர்ந்துவிடுங்கள். பகிர்வதால் உள்ளே உருவாகும் வெற்றிடத்தை, ஆனந்தம் நிரப்புவிடும்.
மேல் உள்ள கூற்றைச் சோதித்துப்பாருங்கள். உங்களினுள் ஆனந்தக் கதவு தானாகவே திறந்து கொள்ளும்.
பேசினாலும் சிரித்தாலும் அழுதாலும் உள்ளேயிருப்பதை அப்பட்டமாய் அப்படியே அருகிலிருப்பவரிடம் பங்கிடுவதே பகிர்கல்!
கவலை பகிரப் பகிரக் குறையும். ஆனந்தம் பகிரப் பகிர அதிகமாகும்.
இளம் எழுத்தாளராக வளர்ந்து கெரண்டிருந்த சமயத்தில், தனக்கு நேர்ந்த சம்பவத்தை அந்த எழுத்தாளர் ஒரு பகிர்ந்து கொண்டார்.
"சாமி, அது நான் எழுதிய முதல் புத்தகம். அந்தப் புத்தகம் பற்றி மற்றவரின் விமர்சனங்களைக் கேட்பேன். என் பக்கத்து வீட்டுக்காரரிடம் ஏதேர பேச்சுவரக்கில் இப்படிச் சொன்னேன் ... 'கதை எழுதுவதற்குப் பெரிய புத்திசாலித்தனமெல்லாம் தேவை இல்லை' எனப் பேசியதற்கு அவர் தந்த பதில் .
'ஆமாம் சார்! உங்களுடைய கதைப் புத்தகத்தை படித்தவுடன் நானும் அதே முடிவுக்குத்தான் வந்தேன்' என்றார்.
புதிலால் நான் ஆடிப்போனாலும், அதைப் பாடமாக்கிக் கொண்டேன்" என்றார்.
பகிர்தல் உங்களின் வாழ்க்கைப் பக்கத்தில் புதுப் பக்கங்களை திருப்பிக் காட்டவும் வல்லது! பகிர்தல் ஒருவித வளர்தல்.
நட்டி அவர் வாழ்வில் நடந்த ஒரு சந்தோஷமான சம்பவத்தை ஒருமுறை பகிர்ந்து கொண்டார். நிட்டியின் வம்பாலும் குறும்புப்பேச்சாலும் டென்ஷனாகிப் போன நிட்டியின் மனைவி பூரிக்கட்டையை எடுத்துக்கொண்டு அடிக்கத் துரத்த ... "ஆஹா… ஒடிப்பிடித்து விளையாடி எவ்வளவு நாளாகி விட்டது" என்று நினைத்துக் கொண்டே நட்டி ஓட, மனைவி துரத்த ... நெரிசல் மிகுந்த வீதிக்குள் நட்டி புகுந்து, வளைந்து வளைந்து ஓடினார்.
நட்டியைத் துரத்துவதில் ஆர்வமாக இருந்த நிட்டியின் மனைவி, எதிரே வரும் ஆட்டோக்காரர் போடும் கூச்சலைக் கண்டுகொள்ளாமல் ஆட்டோ மீது மோதவும் ஆட்டோ சடன் பிரேக்கில் நிற்கவும் சரியாக இருந்தது.
எரிச்சலடைந்த ஆட்டோக்காரர், "ஏம்மா! இப்படி வளைந்து வளைந்து ஓடினால் எப்படி? நீ எந்தப் பக்கம் போறேன்னு உன் கையால் சுட்டிக் காண்பித்துவிட்டு ஓடியிருந்தால், நானாவது ஒதுங்கியிருப்பேனே…" எனக் கோபமாய் சொல்ல.
நட்டி மனைவி, "நிலைமை புரியாமல் பேசாதே! நான் தேடிப் போகிற வழியை என்னால் சுட்டிக் காட்ட முடியாது" என்று படபடத்துவிட்டு மீண்டும் ஓடி விளையாடும் நட்டியைத் துரத்த ஆரம்பித்துவிட்டார்.
நட்டியின் மனைவியைப் போலவே ஏதாவது ஒரு காரணம் கற்பித்துக்கொண்டு கவலையைத் துரத்திக்கொண்டு ஓடுவது மனதின் இயல்பு.
துரத்திப் பிடித்த கவலையோடு வாழ்ந்தது போதும் என்று மனத்திற்கு தோன்றிய உடனே, அடுத்த கவலையை மனம் துரத்த ஆரம்பித்துவிடும்.
மனம்தான் கவலைகளைத் தேடித்தேடிக் கண்டுபிடிக்கிறது என்பது நடைமுறை உண்மை. மனதின் இச்செயல்களை இனங்காண சிறிதளவு கவனத்தை எடுத்து வந்தால் கூட நம்மால் எளிதாய் கண்டுபிடிக்க முடியும்.
கவலையைத் தேடிக் கண்டுபிடிப்பதிலேயே சுகம் காணும் மனதை ஸ்தம்பிக்க வைக்க ஒரு சின்ன டெக்னிக்.
மனதில் எந்த ஒரு கவலையும் ஒரு நாளைக்குமேல் இருக்கவிடாதீர்கள். எல்லாவற்றையும் தூக்கி எறியுங்கள். இது சாத்தியமில்லை என்று நினைப்பவர்கள் கவலைகளைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பியங்கள்,
| ஏதோதோ பேசி. ஏதேதோ | |
|---|---|
| அளவுக்கு கூடு கூட்ட | புலம்புவதும். எதற்கோ சிரித்துப் |
| எல்லாம் | கும்மாளமடிப்பதும் பகிர்தலாகாது! |
Part 13: Open the Door... Let the Breeze in! Part 1
உங்கள் உணர்வுகளை முழுமுமையாகப் பாதிக்கும் ஒரு நபரிடம் உங்களின் கவலைகளையெல்லாம் பகிர்ந்துவிடுங்கள்.
ஒருவேளை உங்களைப் புரிந்துகொண்டு உங்கள் உணர்வுகளை மதிக்கும் நபர் உங்களுக்கு இல்லாவிட்டால், அதற்காகக் கவலைப்பட வேண்டாம்.
ஆன்மீகக் கூட்டங்கள், சேவை மையங்கள் போன்ற இடங்களுக்குச் செல்லுங்கள்.
உங்களைப் போன்றே உணர்வுகளை மதிக்க, மற்றவர்களோடு பகிர, நிறையப் பேர் அங்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள். புது வழி பிறக்கும்.
கவலைகளைப் பகிர்வது கட்டியில் இருக்கும் சீழை வடியச் செய்வதற்குச் சமம். அது முழுத் தீர்வல்ல. அதைத் தாண்டி, ஆனந்தம் நோக்கிப் பயணம் செய்ய வேண்டும்.
ஒரு நாள் மூர்க் முகுந்தன் தூக்கமில்லாமல் வீட்டு முற்றத்தில் உலாத்திக் கொண்டிருந்தார்.
முகுந்தனின் மனைவி, "என்னாச்சுங்க ? ஏன் இப்படிக் கவலையா இருக்கிங்க முகுந்த்" என்றாள்.
முகுந்தன், "எதிர்வீட்டு தன்ராஜூக்கு ரூ. 10,000 கொடுக்க வேண்டும். இரண்டு வாரமாக இழுத்தடித்து விட்டேன். நாளை கண்டிப்பாகத் தருகிறேனென்று சொல்லியிருக்கிறேன். ஆனால் கையில் ஒரு ரூபாய்கூட இல்லை. இந்த ஜென்மத்தில் அந்தக் கடனை அடைக்க முடியும் என்று எனக்கு நம்பிக்கையில்லை. அதனால்தான் கவலைப்படுகிறேன்" என்றார்.
"உங்களின் கவலைக்கான காரணம் இவ்வளவுதானா!" என்று சொல்லிக் கொண்டே விருட்டென்று எழுந்தவள் ஜன்னலைத் திறந்து "தன்ராஜ்! தன்றாஜ்!" என்று அந்த இரவில் சப்தமிட.
முகுந்தன், "ஏய், ஏய்! என்ன செய்கிறாய்!" என்று பதற, தன்ராஜ் தன் வீட்டு ஜன்னல் கதவைத் திறந்தார்.
| வாழ்க்கை | சோதனைகள் |
| எல்லாம் | சாதனைகளுக்கான |
| முன்னேற்றம் | நுழைவாயில்கள்! |
முகுந்த் மனைவி, "தன்ராஜ், என் கணவரிடம் நீங்க கொடுத்த 10,000 ரூபாயை மறந்துடுங்க ... அவரால் தர முடியாது" என்று சப்தமிட, "ஏன்?" என்று கவலையோடு கேட்க,
முகுந்த் மனைவி, "அவரால் இந்த ஜென்மத்துல அந்தக் கடனை அடைக்க முடியாதாம். ஏன்னா, அவரிடம் பணமே இல்லையாம். இந்த உண்மை சொல்லத்தான் கூப்பிட்டேன்' என்று சொல்லி படாரென ஜன்னலை மூடிவிட்டாள்.
"இன்றிரவு நிம்மதியா தூங்குங்க முகுந்த். இனிமேல் உங்களுக்குப் பதிலா அவர் கவலைப்பட ஆரம்பித்துவிடுவார்" என்று கண்சிமிட்டிச் சொல்லிவிட்டுப் படுத்துக் கொண்டாள்.
முகுந்தனின் மனைவியைப் போல நிமிட நேர குஷிக்காக மற்றவர்களைக் கவலைக்குள்ளாக்குவது புண்பட்ட மனதின் இயல்பு.
மற்றவர்களின் உணர்வை மதிக்கத் தெரியாத இது போன்ற ஆட்களோடு கவலையைப் பகிர்ந்து கொண்டால், துக்கம் இன்னும் கொஞ்சம் அதிகமாகிவிடும்.
ஆன்மீக உணர்வ கொண்டவர்களிடம் பகிர்ந்துகொண்டால், முதலில் கவலை குறையும். பின் தீர்வு கிடைக்கும்.
இதையெல்லாம் தாண்டி ஆனந்த வாழ்வு பற்றிய வழிகளை ஆன்மீக உணர்வு கொண்டவர்களிடமிருந்து எளிதாகக் கற்றுக் கொள்ளலாம். விருப்பத்தோடு உங்களுக்கு உதவி செய்வார்கள்.
சர்வ சாக்கிய முனியிடம் ஒரு பண்டிதர், "நீங்கள் இருக்கிறீர்களே ... அது எப்படி ? உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் ?" என்று கேட்டார்.
சாக்கிய முனி, "அது வேறொன்றில்லை. நான் மற்றவரிடம் ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். நீ துக்கத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறாய். இதுதான் வித்தியாசம்" என்றார்.
மற்றவர்களோடு பகிர்தல் எனும் செயல் நம்மை ஒரு அர்த்தமுள்ள மனிதராக மாற்றும். கவலைகளைப் பகிர்வது என்பது கவலைகளில் இருந்து நாம் விடுபட உதவும் ஓர் யுத்தி.
- கவலையையும் அதன் பிறப்படத்தையும் கண்டுபிடிப்பது எப்படி ?
- கவலையைப் போன்ற மற்ற உணர்ச்சிகள் நம்மைத் தாக்குவது ஏன் ?
- உண்மையிலேயே கவலையில்லாமல் ஆனந்தமாக வாழ முடியும். இதுதான் வழி.
என்பன போன்ற வழிமுறைகளை உங்களுக்கு அறிவியல் பூர்வமாக, அதே நேரத்தில் எளிமையாய் கற்றுத் தருபவைதான் தியான முகாம்கள்.
இதுபோன்ற சேவைகளைச் செய்பவர்கள், அவர்களின் ஆனந்தத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறார்கள். அதனால்தான் ஆனந்தத்தை சேவையாகச் செய்கிறார்கள். சேவையை ஆனந்தமாக செய்கிறார்கள்.
மீண்டும் சொல்கிறேன், கவலை பகிர பகிரக் குறையும். ஆனந்தம் பகிரப் பகிர அதிகமாகும். இது ஒரு ஆனந்த சூத்திரம்.
அர்த்தமுள்ள சம்பவம் ...
90 வயது மூதாட்டியிடம் முதியோர் தினத்தன்று, டி.வி. நிகழ்ச்சியில் பின்வருமாறு கேட்கப்பட்டது
" இந்த வயதிலும் உங்களை சந்தோஷப்படுத்துவது எது?" என்ற கேள்விக்கு, "என் தொழில்!" எனச் சொன்னார்.
ஆச்சரியமடைந்த நிரூபர், "என்ன தொழில் அது?" என்று கேட்க,
" என்னைவிட வயதில் மூத்த இரு மூதாட்டிகளைக் கவனித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு உதவும்போது நான் பகிர்ந்து கொள்ளும் நிமிடங்கள் மகத்தானவை. மகிழ்ச்சியானவை" என்றார் முதாட்டி.
- பகிர்தல் தியானம். பகிர்தல் பண்பு பகிர்தல் ஆனந்தம். பகிர்தல் அன்பு.
முகத்தை நேசிப்பதும் உடலின் மற்ற பகுதிகளையும் நேசியுங்கள்
இரு அசிங்கத்தை எடுத்து தூரப்போடுங்கள் எனச் சொன்னால்.. நீங்கள் முதலில் பயன்படுத்த யத்தனிப்பது கைவிரல்களா ... கால் விரல்களா.... பெரும்பாலும் கால் விரல்கள் எனச் சொல்லும் மனிதர்களைக் கேட்கிறேன் ... கால் அவ்வளவு இளக்காரமானதா ?
கைவிரல்களைப் பயன்படுத்தினால் ... உடல் முழுக்க அருவருப்பு உணர்வை உணரும் நீங்கள், விரல்களைக் கால் போது அப்படி உணர்வதில்லை.
பகிர், உன்னை உனக்குப் பகிர்
ஏன் ? சிந்தியுங்கள்.
அப்படியென்றால், ஒன்று கால்விரல்கள் மரத்துப் போயிருக்க வேண்டும் அல்லது உங்களின் இதயத்தில் அதுவொரு மரியாதையற்ற பகுதியாக இருக்க வேண்டும்.
உதாசீனப்படுத்தப்படும் நம் உடல் பகுதிகள், அவற்றின் நுண்ணுர்வை இழக்க ஆரம்பித்துவிடும்.
| "ச்சீய்!" எனச் சொல்லி எதையும் ஒதுக்கக் கூடாது! எப்போதும். | நம்மால் மதிக்கப்படாத பகுதிகள் நம் சக்தியை பகிர்ந்து கொள்வதிலிருந்து மெதுமெதுவாக விலக்கப்படும். விளைவு முட்டி வலி, கால்வலி, இரத்தகுழாய் வீக்கம் கட்டிகள், எல்லாம். |
|---|---|
| பகிர்தல் முதலில் உங்களுக்குள் நிகழ வேண்டும். உடலின் வெவேறு பகுதிகள், | |
| வெவ்வேறு காரணங்களுக்காக, |
மனிதன் உதாசீனப்படுத்தவும், அவமதிக்கவும் கற்றுக் கொண்டான்.
முகத்தைப் போலவே உடலின் ஒவ்வொரு பகுதியும் நேசிக்கப்பட வேண்டும். பராமரிக்கப்பட வேண்டும்.
முக்கியத்துவம் தரப்படாத பகுதிகள் உங்களிடமிருந்து துண்டிக்கப்படுகின்றன.
கடலின் நடுவே இருந்தும் கடலின் குளுமையை அனுபவிக்க முடியாத குட்டித் தீவாக இப்பகுதிகள் மாறிப் போகும். உடலின் சக்தியை அவை அனுபவிப்பதில்லை.
இது நிறுத்தத்திற்கு வரவேண்டிய ஒன்று.
உங்களின் சக்தியானது உடல் முழுவதும் பகிரப்பட வேண்டும், பாய்ச்சப்பட வேண்டும்!
உங்களின் முகத்தையோ அல்லது அதை விட முக்கியமாகக் கருதும் உடல் பகுதியையோ எப்படி மதிக்கிறீர்களோ, அதுபோல் உடலின் எல்லாப் பகுதிகளையும் மதிக்கிறீர்களா எனப் பாருங்கள்.
மதிப்பிழந்த பகுதிகளை மதியுங்கள்! சக்தி பாயும்!
உன் உடலை நீயே மதிக்காவிட்டால் ... பின், யார் அதை மதிப்பார்களாம்!
ஹலோ எப்படி இருக்கீங்க ?
- உலகையே நேசிக்கிறவன் என்று பெருமை பேசுவது வெகுசுலபம், உண்மையில் ஒரே ஒருவரை முழுமையாக நேசிப்பது - 'இமாலாய சாதனைக்கு' சமம்.
- மனிதர்களிடம் நீங்கள் பழகும் விதம், உங்களோடு நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் படம்பிடித்துக் காட்டும். தன் உடல், மனம், உயிரை முழுமையாக மதிப்பவரால்தான், பிறரை முழுமையாக மதிக்க முடியும்.
- தன் உடல், மனம், உயிரை அரைகுறையாக மதிப்பவர், பிறரையும் அரை குறையாகத்தான் மதிப்பார். சாதாரணமாகப் பழகுவது என்பது, அசாதாரணமான ஒரு விஷயமாக மாறிவிட்டது, கொடுமையிலும் கொடுமை.
- 'நான்! நான்! எனது! எனது!' என்று குறுகிய வட்டத்தில் வாழும் வரை, குதூகலம் என்பதைக் கற்பனை செய்வதுகூடக் கடினம்தான்!
- தர்மம் தனக்கும் மற்றவர்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுக்கக் கூடிய எல்லாச் செயல்களும் தர்மம்.
- அதர்மம் தனக்கும் மற்றவர்களுக்கும் கஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய எல்லாச் செயல்களும் அதர்மம்.
சுலபமான வழி!
என்று இருப்பதற்கு, மனிதராகப் பிறக்க வேண்டிய அவசியம் இல்லை. மிருகங்கள் ஏற்கெனவே அப்படித்தான் இருக்கின்றன.
மனித உறவுகள் அற்புதமானவை: ஆனந்தம் அளிப்பவை.
சுற்றி இருக்கிற மனிதர்களிடம் சகஜமாகப் பழகுகிறவர்கள் வெற்றிவாகை சூடும் மனிதர்களாக இருக்கிறார்கள்.
பக்கத்து வீட்டுக்காரருடன் பிரச்சனை பேரூந்தில் சக பயணியோடு மோதல் அலுவலகத்தில் மேனேஜரோடு சண்டை என்று எதற்கெடுத்தாலும் அடிதடியில் தோல்வியும், நிம்மதியின்மையும் மட்டுமே மிஞ்சுகின்றன.
அறிமுகத்துக்கு எப்போதுமே ஒரு மதிப்பு உண்டு. புதிதாக ஒரு ஃபிளாட் வாங்கிக் குடி போகிறீர்கள். ஏற்கெனவே அந்தக் கட்டடத்தில் குடியிருப்பவர் உங்களை எதிரிபோலப் பார்க்கிறார். பதிலுக்கு நீங்களும் முறைக்கிறீர்கள் என்றால் நல்லுறவு வராது. சண்டை சச்சாவதான் வரும்.
குடியேறிய சில நாட்களில், ஒரு விடுமுறை தினத்தில் குடும்ப சகிதமாகச் சென்று, "என் பெயர் ராமசேஷன். இந்த ஃபிளாட்டில் புதிதாகக் குடிவந்திருக்கிறேன். இவள் என் மனைவி. இவள் என் குழந்தை. ஒரு நாளைக்கு நீங்கள் எல்லோரும் எங்கள் ஃபிளாட்டுக்கு வாருங்கள்' என்று அழைப்புக் கொடுத்துவிட்டு வாருங்கள். அதற்குப் பிறகு பாருங்கள் அந்த ஃபிளாட்வாசிகள் உங்களிடம் எப்படியெல்லாம் கொஞ்சிக் குலாவுகிறார்கள் என்று.
முன்பின் தெரியாத மனிதர்களிடம் சென்று, "எப்படி அறிமுகம் செய்து கொள்வது ?" என்று தோன்றலாம். சில கேள்விகளுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து யோசிக்க ஆரம்பித்தால், எந்தக் காரியமும் உருப்படியாக நடக்காது. எனவே, இது யோசிக்காமல் செய்ய வேண்டிய ஒன்று.
மேலும், முன்பின் தெரியாதவர்களிடம்தான் அறிமுகம் செய்து கொள்ள முடியுமே தவிர, ஏற்கெனவே நன்கு தெரிந்தவர்களிடம் அறிமுகம் செய்து கொள்ளத் தேவை இல்லை.
பேரறிஞர் பெர்னாட்ஷா ஒருமுறை வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். புதிய வீடு ஒன்றில் அப்போதுதான் குடியேறியிருந்தார் ஒருவர். அவர், தன் வீட்டுத் தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார்.
"ஹலோ எப்படி இருக்கீங்க ?" என்று அவரிடம் கேட்டார் பெர்னாட்ஷா.
தோட்டத்தில் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த புது வீட்டுக்காரருக்குக் கோபம் வந்துவிட்டது. "யார் நீங்கள்? உங்களை நான் முன் பின் பார்த்ததே இல்லையே ?" என்று கோபமாகக் கூறிவிட்டுப் போய்விட்டார்.
மறுநாளும் காலையில் வாக்கிங் போகும் போது, அதே புது வீட்டுக்காரர் தோட்டத்தில் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார். பெர்னாட்ஷா அவரை விடவில்லை.
"ஹலோ, எப்படி இருக்கீங்க? நேற்றே நாம் அறிமுகமாகிவிட்டோம். ஞாபகம் இருக்குல்லே?" என்று சொல்ல, புதிதாக வந்தவர், வேறு வழியே இல்லாமல் நட்புறவுக் கரம் நீட்டினார்.
| இயல்பு | இயல்பாக இருப்பது தான் மனித இயல்பு! |
சந்தோஷமாக பழகுவது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டால், சத்தம் போடும் மனிதர்களைக் கூட சாந்தப்படுத்தி விட முடியும்.
மனித உறவுகளை ஏனோதானோ என்று எடுத்து கொள்ளாதீர்கள். அந்த மனிதர் வீட்டுக்கு வந்தால் இருக்கிற இடம் தெரியாது என்கிற மாதிரியாக நீங்கள் நிச்சயம் இருக்க வேண்டாம்.
இது பெருமை இல்லை. உங்கள் அருமைகளை மறைக்கும் சிறுமை.
'பக்கத்து வீட்டுக்காரரோடு பழகுவதால் என்ன நன்மை கிடைக்கும்? எதிர் வீட்டுக்காரரிடம் குசலம் விசாரித்தால் என்ன உதவிசெய்வார்?' என்றெல்லாம் எதிர்பார்க்காமல் உண்மையாகப் பழகுங்கள்.
உங்களின் சந்தோஷம் கலந்த அணுகுமுறை மற்றவர்களுக்குச் சந்தோஷத்தையும் உங்களுக்குச் சாந்தத்தையும் வாரி வழங்கும்.
உங்கள் சந்தோஷ வெளிப்பாட்டால், மற்றவர்களுக்குச் சந்தோஷத்தை வாரி வழங்கி, உங்களுக்குள் சாந்தத்தை உணருங்கள்!
கடமை! கருணை! கட்டுப்பாடு!
பிரான்ஸில் குழந்தைகளின் படிப்பு செலவைக்கூட அரசாங்கமே செய்கிறது. அங்கே சோம்பேறியாய் வாழும் குல்ஜித்திடம் அவர் மனைவி சொன்னார், "எனக்கு அவமானமாக இருக்கிறது".
உடனே சொல்கிறேனென்பதே தெரியாமல், எனக்கும்தான் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?" என மனைவி கேட்டதும், பதில் சொல்ல முடியாமல் திருதிருவென விழித்த குல்ஜித், "சரி சரி… சொல்ல வந்ததை முதலில் சொல்" என்றார் அழுத்தமான குரலில்.
"குழந்தைகளை அரசாங்கம் வளர்க்கிறது. வேலைக்குப் போகாத உங்களுக்குக் கருணை பென்ஷனை உங்களின் கம்பெனி தருகிறது. வீட்டு செலவை என் தந்தை பார்த்துக்கொள்கிறார். உடைகளை உங்களின் அண்ணன் வருடா வருடம் வாங்கித் தருகிறார். கார் செலவை என் அண்ணன் பார்த்துக்கொள்கிறான்... உங்களுக்கு இதில் ஏதும் அவமானமாகத் தோன்றவில்லையா?" என மனைவி கேட்டதற்கு,
குல்ஜித், "ஆமாம்! எனக்குக்கூட அவமானமாகத்தான் இருக்கிறது. இவ்வளவு பேர் இவ்வளவு செய்தும் உன் தம்பி மட்டும் நமக்கு ஒத்த காசுகூடச் செலவு செய்வதேயில்லை. இது பெருத்த அவமானம்தான்!" என்றாராம்.
மற்றவர்கள் எனக்குச் செய்வது அவர்களின் கடமை!
அதை ஏற்றுக்கொள்வது என்னுடைய கருணை!
எனும் நோக்கில்தான் ஒவ்வொருவரின் ஆழ்மனமும் இயங்குகிறது. கடமை, கருணை வலைகளில் வேறெதுவுமில்லை. கடமை செய்ய, மடமை தாண்டப்பட வேண்டும்.
- 'கடமை! கடமை! என ஓடியதில் பலரின் வாழ்க்கை கடமைக்கென்றே மாறிவிட்டது. கடமைக்காகவே வாழ ஆரம்பித்து விட்டார்கள். இது கொடுமை'
- கருணை ஒரு உற்சாக சக்தி. கருணையின் வெளிப்பாடாக கடமை அமைந்தால்தான் உற்சாகமாக இருக்கும். உற்சாகமாக வாழ முடியும்.
- கருணையால் உற்சாகப்பட்டு நம் உறவுகளுக்குச் சேவை செய்யாமல், கட்டாயத்தின் பேரில் உந்தப்பட்டு நம் உறவுகளுக்குச் சேவை செய்ய இறங்கினால் சேவை பூர்த்தியாகும். ஆனால் உங்களின் தனித் தேவை பூர்த்தியாகாது. ஆனந்தமே உங்களின் உண்மையான தனித்தேவை.
கருணையால் சேவை செய்தால்தான் அது கடமை. கட்டாயத்தால் சேவை செய்தால் அது கடமை அல்ல. அது மடமை! உங்களின் சேவை கடமையா. மடமையா?
வெங்காளத்தில் மதபோதகர் ஒருவருக்கு முப்பது வருடங்களாக சேவையை தன் கடமையென கருதி செய்த அப்பெண்மணிக்கு, "இவர் உண்மையான ஆன்மீகவாதிதானா?" என்ற சந்தேகம் திடீரெனத் தோன்றியது.
உடனே அவரைச் சோதிக்க ஒரு விலைமாதுவிடம் ஒப்பந்தம் செய்தார். ஒப்பந்தப்படி அன்றிரவு அந்த மதபோதகரை விலைமாது தொந்தரவு செய்ய வேண்டும். மனம் தடுமாறச் செய்ய வேண்டும்.
முடிவுசெய்ததுபோல் இரவு அந்த இளம்பெண் வந்து சேர்ந்தாள். "யாரைச் சோதிக்கிறாய். மூடப்பெண்ணே... போ வெளியே. நான் நெருப்பு! உடனே இந்த இடத்தை காலிசெய்' எனக் கொதித்தெழுந்து, உடல் நடுங்க அப்பெண்ணை திட்டி இரவென்றும் பாராமல் வெளியே அனுப்பிவிட்டார்.
விலைமாதுவிடமிருந்து நடந்ததை அறிந்த பெண்மணி மிகக் கோபத்தோடு "ஐம்பது வயதானவர் பக்குவமடைந்திருக்க வேண்டாமா? இவ்வளவு நாள் கருணையைப் பற்றி அவர் செய்த போதனைகளை அவர் கொஞ்சமாவது கடைப்பிடித்திருக்க வேண்டாமா ?
உன் தவறை தடுப்பதாக நினைத்து, அவர் சுயக்கட்டுப்பாடில்லாமல் கோபப்படும் சராசரி மனிதரைப் போல் நடந்துகொண்டது எவ்வளவு பெரிய தவறு.
கருணை என்ற அடிப்படையில் ஆன்மீகக் குணம்கூட இல்லாதவருக்காகவா இவ்வளவு நாள் கடமை செய்தேன். இப்படிப்பட்டவர் இருந்தாலென்ன, இறந்தாலென்ன'' என சொல்லி சலித்துக்கொண்டு அன்றிரவோடு அந்த இடத்தை காலிசெய்து சென்று விட்டார் அப்பெண்மணி.
வெறும் கடமை போலி, கருணையில்லாத கடமை ஏதாவதொரு ஆழ்மனக் குறிக்கோளை மையமாக வைத்து செயல்படும். அது இன்றோ நாளையோ சலிப்பைக் தரும்.
முகுந்தன் ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார். பார்த்தவரிடமெல்லாம் ஏதாவது முகுந்தன் பேசிக்கொண்டே வந்தார். முகுந்தனைப் பார்த்த எதிர்வீட்டு ராஜன்...
| பழுத்த கனிதான் முதலில் பறிக்கப்படும் | |
| நேராய் வளர்ந்த மரமே முதலில் வெட்டப்படும் | |
| மலர்ந்த மலர்களே முதலில் கொய்யப்படும்! |
" அப்புறம்… நல்லாயிருக்கிறீர்களா ?" என்று கேட்டார்.
முகுந்தன், "ஆஹா… ஆண்டவன் புண்ணியத்துல ரொம்ப நல்லாயிருக்கிறேன்'' என்று இழுக்க,
ராஜன், "ஐயய்யோ, என்ன முகுந்தா சும்மா ஒரு கடமைக்காகத்தான் நல்லாயிருக்கிறீர்களாவென கேட்டேன். எதிர்வீட்டுல இருக்கிற எனக்கு உங்கள் கிண்டாட்டம் தெரியாதா என்ன! ரொம்ப கஷ்டப்பட்டு பெரிய பெரிய பொய்யெல்லாம் பேசுகிறீர்கள்" என்றுக் கண்சிமிட்டி கிண்டலடித்தார்.
"ஹரி… ஹரி…" என்று சங்கடத்தோடு முகுந்தன் சிரித்தார். பொது விஷயங்கள் சில பேசிவிட்டு விடைபெறும் போது, ராஜன் சொன்னார்: "உங்க வீட்ல எல்லோரையும் கேட்டதாக சொல்லுங்க!" முகுந்தன், "கண்டிப்பா சொல்கிறேன். ஆனா ..." என்று இழுக்க, ராஜன், "என்ன முகுந்தா!" என்று ஆவலோடு கேட்டார்.
முகுந்தன், "என் வீட்டில் நீங்கள் கேட்டதாக சொன்ன பிறகு, என் வீட்டிலிருப்பவர்கள், 'என்ன முகுந்தா! இத்தனை பேரையும் கேட்டிருக்கிறார். பாவம்! அவருக்குக் கூச்ச சுபாவம், அதனால்தான் சொல்லாமல் விட்டிருப்பார். அவருக்கு என்ன வேண்டுமென்று, நீயாவது கேட்டுத் தெரிஞ்சிட்டு வந்திருக்கலாம்… அவர் எல்லோரிடமும் கேட்டதை நாம் கொடுத்திருக்கலாமே' என்றால் நான் என்ன செய்வது?" என்று மடக்க.
ராஜன், "ஹீ… ஹீ… சும்மா கடமைக்காகத்தான்…" முகுந்தனின் பதிலடியால், பதில் பேச முடியாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டார் ராஜன்.
இப்படித்தான் கடமை, சம்பிரதாயம் என்ற பெயரில் பல காரியங்கள் எந்தவித அர்த்தமும் இன்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கடமைகள் 'கடமையே!' எனச் செய்யப்படக்கூடாது. கடமை வாழ்வின் ஒரு கட்டாயமாக மாறி மனிதரைக் கட்டுப்படுத்தவும் கூடாது.
கடமை துள்ளலோடும், ஆனந்தத்தோடும் செய்யப்பட வேண்டும்.
கடமை உங்களைக் கட்டுப்படுத்துகிறதா? "ஆம்". என்றால் ... தெரிந்துகொள்ளங்கள் அது கடமையல்ல மடமை!
நம் வாழ்வில் நாம் சுதந்திரமாக முடிவெடுத்து செய்யும் உற்சாகமான காரியமாக கடமை இருக்க வேண்டும்.
கடமையும் கருணையும் ஒன்றோடொன்று மிக நெருங்கிய தொடர்புடையவை!
கருணையின் வெளிப்பாடாக கடமை இருந்தால் அது கடமையாற்றுபவரை இன்பத்தில் ஆழ்த்தும்.
கட்டாயத்தின் வெளிப்பாடாக கடமை அமைந்துவிட்டால், அது கடமையாற்றுபவனை துன்பத்தில் வீழ்த்தி விடும்.
கடமைகள் மனிதருக்கு பிரச்சனைகளை உண்டு பண்ணுவது கடமையின் காரண சக்தியைப் பொருத்தது.
காரணசக்தி உறிஞ்சும் சக்தியா ? அல்லது "கருணை" என்னும் உற்சாக சக்தியா ? என்பதைப் பொருத்து கடமை துன்பமா அல்லது இன்பமா என்பது முடிவு செய்யப்படும்.
கருணை மிகுதியில் கிருஷ்ண பகவான் "கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே...'' என்றது கிருஷ்ணரின் ஆனந்தத் தத்துவம். அது கர்மானந்தம்.
கிருஷ்ணபகவான் கட்டாயத்தின் பிடியிலிருக்கும் நம்மூர் கிருஷ்ணசாமியோ, கேட்டுத் தவறாகப் புரிந்து கொள்ளவே வாய்ப்புகள் அதிகம்.
கிருஷ்ணரிடம் இருந்த ஆனந்தம் சராசரி மனிதரிடம் இருக்காது.
ஆனந்தமில்லாமல் கருணை மலரவே முடியாது.
கடமையை முழுமையாய் செய்ய.. கருணையெனும் உற்சாக சக்தி தேவை!
நம்மூர் கிருஷ்ணசாமியும், கோவிந்தசாமியும் ஆனந்தம் என்னும் காரண சக்தியைப் பெற்றிராமல், கடமையில் கட்டாயம் காரணமாக இறங்கும் போது, கடமை இன்பத்திற்குப் பதில் துன்பத்தைத் தருவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம். கருணை நம் ஒவ்வொருவருக்குள்ளும் மலர வேண்டியது மிக அவசியம்.
இந்தக் கருணையின் உச்சம் ஞானிகள், கருணையை விளக்கும் ஜென் ஞானியின் கடைசிக் கால வாழ்க்கைக் கதை...
"ஒரே ஒரு வாயளவு மதுபானமே என்னைக் கிறங்கச் செய்கிறது!" எனச் சொன்ன முகுந்தனிடம் "நிஜமாகவே சொல்கிறாயா!" என ஆச்சரியமாய் கேட்டார் நீட்டி.
முகுந்தன், "ஆம். அந்தக் கிறக்கம் எப்போதும் ஏழாவது கிளாஸின் முதல் வாயாக இருக்கிறது!'' என்றார்.
முகுந்தனைப் போலவே மனித மனமும் மரத்துவிட்டது. ஒரு வாயளவு சந்தோஷத்தை மனம் பருக, அதற்கு நிறைய சந்தோஷங்கள் தேவைப்படுகிறது.
பெருமளவு கடமையாற்றியும் அவருக்குச் சிறிதளவே திருப்பி கிடைக்கக் காரணம் கூட மனம் மரத்துப்போனதே!
அந்தச் சிறு திருப்தியை பெரிது என நம்பி... நிறைய இழக்கிறான்...
அதைப் பெருக்குவதற்காக!
மனம் ... உணர்வுள்ளதாக வேண்டும் !
ஞானிகளால் அவர்களின் இறப்பை முன்கூட்டியே சொல்ல முடியும். அதுவும் ஜென் ஞானிகளின் இறப்பு, ஒரு விழா போல் அனுஷ்டிக்கப்படும்.
ஒரு ஜென் "என்னுடைய முடிவை நான் முடித்துவிட்டேன். இன்று சாயங்காலம் 6 மணிக்கு பிரியப்போகிறேன்' என்றார்.
102 வயதான தங்கள் குருவின் கடைசி வார்த்தைகளைக் கேட்க எல்லோரும் ஆவலாக அங்கிருந்தவாறு காத்துக் கொண்டிருந்தார்கள்.
நேரம் நகர்ந்துகொண்டேயிருந்தது. மணி 5.30... 5.40 ... அதுவரைக்கும் குரு மௌனமாகவே அமர்ந்திருந்தார்.
சீடர்களை ஒவ்வொருவராக ஆசிர்வதித்தார்.
ஆனால் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
மணி 5.50 ஆனவுடன், ஞானி எழுந்து சென்று தன் காலில் ஷூக்களை அணிந்து கொண்டு, ஊன்றுகோலோடு எங்கோ புறப்படத் தயாரானார்!
சீடர்கள், "இன்னும் 10 நிமிடத்தில் உடலைவிட்டுப் பிரியப் போகும் நீங்கள் எங்கே கிளம்புகிறீர்கள்" என்று கேட்டார்கள்.
ஞானி, "என் கல்லறைக்கு" என்றார்.
சீடர்கள் அதிர்ச்சியில், "என்ன! என்ன சொல்கிறீர்கள்? இப்போது ஏன் நீங்கள் கல்லறைக்குச் செல்ல வேண்டும் ?" என்று கேட்க,
"நான் யாருக்கும் கஷ்டம் கொடுக்க விரும்பவில்லையப்பா.
நான் உடலைவிட்டுப் பிரிந்த பிறகு இந்த உடலை உங்களுடைய தோளில் சுமந்து செல்ல வேண்டும்.
பின் ஊர்வலத்திற்கு வேறு தனியாக எல்லோரும் தயாராக வேண்டும்.
ஏன் இந்த வீண் சிரமம். அதனால்தான்..." என்று பேசிக்கொண்டே தன் கல்லறையை அடைந்து விட்டார் ஞானி.
மணி 5.59... ஜென் ஞானி தன் கல்லறைக்குள் தானே சென்று படுத்துக் கொண்டார்.
மணி 6.00. சிறிய சிரிப்பிற்குப் பின் கண்களை மூடிக்கொண்டு உடலை விட்டுப் பிரிந்தார்.
தங்கள் குரு, கடைசிச் செய்தியை வார்த்தைகளில் சொல்லாமல், செயலில் சொல்லிவிட்டு சென்றிருப்பதை நினைத்து, அன்று இரவு முழுவதும் குருவின் மரணத்தைக் கொண்டாடினார்கள் ஜென் சீடர்கள்.
ஒருவருக்கும் தொந்தரவு தராமல், கடைசி நிமிடத்தில்கூட தன்னாலான உதவிகளைச் சீடர்களுக்கு அந்த குரு செய்ய காரணமாயிருந்த காரணசக்தி கருணைதான்.
| கருணையால் சேவை செய்தால்தான் அது கடமை. | ||
|---|---|---|
| கட்டாயத்தால் சேவை செய்தால் அது கடமை அல்ல. அது மடமை. உங்களின் சேவை கடமையா? | ||
| மடமையா? |
- சமூக நெறிமுறைகள் கடமையைச் செய்யத் தூண்டும்.
- கடமையைச் செய்ததால் மனம் பலனை எதிர்பார்க்கும்.
- நீதிநெறிகளோ பலனை எதிர்பார்ப்பதைக் கண்டனம் செய்யும்.
சமூகம், மனம், நீதிநெறி இவற்றில் சிக்கிய மனிதர்களின் நிம்மதி மும்முனைகளிலிருந்தும் தாக்கப்படும். அவர்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும்.
"ஆனந்தத்தோடு கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே!" என்ற ஒரு சந்தோஷமான விஷயமானது…
சமூகம் சொல்லும் 'கடமையைச் செய்!' மனம் சொல்லும் 'சந்தோஷமாக இரு!' நீதிநெறிகள் சொல்லும் 'பலனை எதிர்பார்க்கக்கூடாது!'
எனும் முரண்பாடுகளால், கடமையானது கட்டாயம் என்று மாறும் போதுதான் கடமை கஷ்டமாகிறது.
கடமை கட்டாயமாகிறது. கட்டுப்படுத்துகிறது. கடமையையும் செய்து, நிம்மதியோடும் சந்தோஷத்தோடும் இருக்க மிக எளிய வழி கருணையை மலர்த்துவது தான்.
கருணையை மலரச் செய்யுங்கள்!
அர்த்தமுள்ள சம்பவம் ...
"யார் ஏமாளி?" என்ற தலைப்பில் தியான சொற்பொழிவாற்றியவர் மீண்டும் சொன்னார்...
"நீங்கள் பிறந்தது உங்களுக்காக. நீங்கள் வளர்ந்தது உங்களுக்காக. ஆனால், வாழ்ந்தது மட்டும் யாருக்காகவோ, எதற்காகவோ என்றால் என்ன அர்த்தம்! யார் ஏமாளி ?
நீதி வேண்டாமா... ? !?'
முடியாதென்பதே முடியாது போகட்டும் !
'முடியாது'' என்ற வார்த்தையைச் சட்டென சொல்லாதீர். முழு சக்தியையும் பிரயோகித்துப் பார்க்க நீங்கள் பயப்படும் காலங்களில் மனதிலிருந்து எட்டிப்பார்க்கும் வார்த்தைதான் 'முடியாது' என்பது.
இந்த வார்த்தைக்கு முக்கியத்துவமளித்தால்,
வாழ்வின் அரிய வாய்ப்புகள் கை நழுவிசச் சென்று கொண்டே இருக்கும். மனக்குறைகள் அப்படியே இருக்கும்.
வாய்ப்புகளுக்குதான் முக்கியத்துவமளிக்க வேண்டும். முடியாது எனும் முடமாக்கும் கொண்ட வார்த்தைகளுக்கல்ல!
வெளியுலக சாதகமாகட்டும், உள்ளுலக சாதகமாகட்டும், கடமையாகட்டும், கருணையாகட்டும் ...
எடுத்த காரியம் வெற்றி பெற,
தொட்ட காரியம் ஜெயமடைய,
முடியாது என்ற வார்த்தையை உதாசீனப்படுத்தி, தொடர்ந்து கொண்டேயிருங்கள். .. முடித்துவிடுவீர்கள்.
முடியாதென்ற வார்த்தையையே சொல்ல முடியாத நிலை உருவாகும்.
முடியாததெல்லாம்கூட உங்களால் முடியும்!.
'முடியும்' என உனக்குச் சொல் உறுதியாய்!
அதை முடித்திடத் தேவையான எல்லாம்
உன்னைச் சுற்றித் திரளும் அதிசயம் நிகழும்.
காண்பாய் நிச்சயம்!
குழந்தைகள் ...
-
குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டிய அவசியமில்லை. குழந்தைகள் வளர்கிறார்கள்.
-
வளர்க்கிறேன் என்ற பெயரில் வளர்ச்சியின் போக்கைத் தடுக்காமல், திசை திருப்பாமல் இருப்பதுதான் குழந்தைகளுக்குப் பெற்றோர் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு.
-
'என் பிள்ளை' என்று உரிமை கொண்டாடி, குழந்தையை ஓர் உடைமையாக்குவதைவிட - என்னைத் தாயாக்கிய / தந்தையாக்கிய ஓர் உயிர் என்று மதித்துப் பாருங்கள் - குழந்தை தெய்வமாகத் தெரியும்.
-
வெறும் உணவு, உடை, பாதுகாப்புக் கொடுத்து சில நேரங்களில் திட்டுவதற்கும், சில நேரங்களில் கொஞ்சுவதற்கும் பெயர் வளர்ப்பு அல்ல என்று புரிய வரும். குழந்தையை வளர்க்க, நீங்கள் வளர்ந்திருக்க வேண்டும் என்பதும் புரிய வரும்.
-
குழந்தையைத் தண்டிப்பது 100% தவறும் அல்ல. குழந்தைக்குச் செல்லம் கொடுப்பது 100% சரியும் அல்ல.
-
குழந்தையை வளர்க்கிறேன் என்ற பெயரில் கெடுப்பது இல்லை கெடுக்கக் கூடாது என்ற பெயரில், வளர்க்கத் தவறுவது, இரண்டுமே 100% தவறு.
-
முதலில், உங்கள் குணக் கோளாறுகளை முதலில் கண்டுபிடித்து அவற்றை எவ்வளவு சீக்கிரம், சரி செய்ய முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சரிசெய்வகற்கான வேலைகளை ஆரம்பியுங்கள். இரண்டாவது, ஒரு குழந்தையை வளர்க்கிறேன் என்ற பெயரில் செய்யும் கெடுதல்களைத் தெரிந்து கொள்ளுங்கள். குழந்தையை வளர்க்க, நீங்கள் வளருங்கள். இரண்டுமே 100% சரி.
குழந்தையைக் கண்டிக்க குழந்தையின் மனோதிலை பற்றிய ஞானமும் வாழ்க்கையின் போக்கு பற்றிய ஞானமும் வேண்டும். குழந்தைக்குச் செல்லம் கொடுக்கவும் மேற்கூறிய இரண்டும் தேவை.
(குழந்தைகள் - தெய்வங்கள்! ஏனெனில். தெய்வத்தன்மையின் கள்ளங்கபடமற்ற சிரிப்பும் கண்களில் தெளிவும், எப்போதும் குழந்தைகளிடம் இருந்துகொண்டே இருக்கும்.
குழந்தைகள் இருந்து செயல்படுவதில்லை.
இதயத்தில் குழந்தைகள் இருந்து செயல்படுகிறார்கள்.
குழந்தைகள் இதயபூர்வமாக (7 வயது வரை) வாழ்வதால், அவர்களின் கிரகிக்கும் தன்மை முழுமையாக இருக்கும். அவர்கள் பார்க்க, உணர்ந்த விஷயங்கள் தவறாக இருந்தாலும், சரியாக இருந்தாலும் அப்படியே பதிந்துவிடும். அந்தப் பதிவுகளாகவே மாறிவிடுவார்கள்.
சிறுபிராயத்தில் ஏற்படும் அனுபவங்கள்தான், ஒருவரின் நிர்ணயிக்கின்றன.
"தவறான மனிதர்கள் உருவாவதற்கு, தவறான வளர்ப்பு முறை காரணமா?" என்று சிலர் என்னிடம் கேட்பார்கள்.
வளர்ப்பு முறையில்தான் எப்போதும் தவறு இருக்கிறது என்று கூற முடியாது. வளர்ப்பவரின் முதிர்ச்சியில்தான் எப்போதும் தவறு இருக்கிறது.
பெற்றோரின் முதிர்ச்சியில் வேறுபாடுகள் இருந்தாலும், தம் குழந்தை நன்றாக வளர வேண்டும் என்ற கரிசனம், அக்கறை, பாசம் எல்லோரிடமும் இருப்பதால் வளர்ப்பு முறையைக் குறைசொல்ல முடியாது.
நன்கு மனமுதிர்ச்சி கொண்ட ஒருவரால், குழந்தையைத் தவறான வழியில் வளர்க்க முடியாது.
அதேபோல், மனமுதிர்ச்சி தேவையான அளவு இல்லாமல் சராசரி வெறுப்பு, எரிச்சல், பொறாமை, துக்கம் என்று வாழ்ந்துகொண்டிருக்கும் தம்பதியினர், எவ்வளவு முயன்றாலும் எவ்வளவு குழந்தை வளர்ப்புமுறையைப் படித்தாலும் கேட்டாலும் குழந்தையை நன்றாக வளர்க்க முடியாது.
உங்களது வார்த்தைகளையும் எதிர்பார்ப்புகளையும் குழந்தைகள் அதிகம் கவனிப்பதில்லை. ஏனென்றால், அவை மூளை சம்பந்தப்பட்ட விஷயங்கள்.
உங்களது முகபாவங்களையும் உணர்ச்சிகளையும்தான் குழந்தைகள் முழுமையாகக் கிரகிக்கின்றன. ஏனென்றால் அவை இரண்டும் இதயம் சம்பந்தப்பட்டவை.
கிட்டத்தட்ட எல்லோருமே முகமூடி அணிந்த வாழ்க்கையைத்தான் நடத்துகிறார்கள். பல காரணங்களுக்காகத் தங்கள் உணர்வுகள், ஆசைகள், கோபங்களை மறைத்துச் சூழ்நிலைகேற்ப வேஷம் ஏற்க வேண்டியிருக்கிறது. இப்படியே இரட்டை வாழ்க்கை வாழ்ந்து பழகியவர்கள் இதயப் பூர்வமாக, உணர்ச்சிப் பூர்வமாக, வாழ்வது எப்படி என்பதை மறந்தே விடுகிறார்கள்.
இப்படி வாழப் பழகிய நீங்கள் தவிர்க்க முயன்றாலும் முடியாவிட்டாலும் உங்களுடைய முகமூடியால் அமுக்கப்பட்ட உணர்வுகள், வெறுப்புகள், துக்கங்கள் -இவையணைத்தும் உங்களின் முகபாவங்கள் மூலமும் உணர்ச்சிகளின் மூலமும் வெளிப்படும். அப்படியே அது குழந்தைக்குச் சென்றுவிடும்.
குழந்தை மனது பஞ்சு போல. நீங்கள் கொடுக்கும் நிறத்தை அப்படியே ஏற்கிறது.
உங்களது முகபாவங்களையும் உணர்ச்சிகளையும்தான் குழந்தைகள் முழுமையாகக் கிரகிக்கின்றன. ஏனென்றால் அவை இரண்டும் இதயம் சம்பந்தப்பட்டவை!
- இது சூட்சுமமான உண்மை.
அடிக்கடிச் சண்டையிட்டுக் கொள்ளும் பெற்றோர்களைத் தினமும் பார்த்து வளரும் குழந்தையின் மனதில், சண்டை என்பது வாழ்க்கையின் ஓர் அம்சம், ஒரு தன்மை என்று பதிந்துவிடும். பிஞ்சு மனதில் கலவரம் என்ற விதை விதைக்கப்படுகிறது. இப்படிப்பட்டக் குழந்தைகள் கோபக்காரர்களாகவும் கலகக்காரர்களாகவும் எளிதில் மாறி விடுவார்கள்.
சண்டை ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கும் பெற்றோர்களைத் தினமும் பார்த்து வளரும் குழந்தையின் மனதில் அன்பும், விட்டுக்கொடுத்தல், உதவிசெய்தல், என்பது வாழ்க்கையின் ஓர் அம்சம், ஒரு தன்மை என்று பதிந்துவிடும்.
அன்பும், பண்பும் விதைக்கப்பட்ட பிஞ்சு மனதிற்குக் கலவரம், கோபம், சண்டை, அடுத்தவர்களைத் துன்புறுத்துதல் என்பதெல்லாம் நஞ்சாகத் தெரியும்.
முதல்வகைப் பெற்றோரிடம் வளரும் குழந்தை நல்லவராக, அன்பானவராக, பண்பானவராக மாற நிறைய முயற்சி செய்ய வேண்டும்.
இரண்டாவது வகைப் பெற்றோரிடம் வளரும் குழந்தை நல்லவராக, அன்பானவராக, பண்பானவராக மாறக் கஷ்டப்பட வேண்டியதில்லை. அவை அந்தக் குழந்தையிடம் இயற்கையான ஒரு குணமாகவே அமைந்துவிடும்.
பாவம் குழந்தைகள்! குழந்தைகள் தெய்வம்தான். மறுக்கவில்லை. ஆனால், ஒவ்வொரு குழந்தைக்கும் முழு விவரம் தெரியும் வரை, தாய், தந்தையாகிய நீங்கள்தாமே அந்தக் குழந்தைக்குக் குரு, தெய்வம், உலகம் எல்லாம்.
தெய்வத்தையும் உலகத்தையும் குழந்தை உங்கள் மூலம்தான் முதலில் பார்க்கிறது. நீங்கள் செய்யும் சிறு தவறுகள், உங்களின் முதிர்ச்சியின்மை எல்லாம் சேர்ந்து பிஞ்சு மனத்தை நஞ்சாக்கும். நஞ்சைத்தான் (தனது குணத்திற்கும் பணக்கிற்கும் பாதகமான) கிரகிக்கிறோம் என்ற தெளிவுகூட இல்லாமல், கள்ளம் கபடம் இல்லாமல், உங்களை முழுமையாக நம்பும் குழந்தைகளுக்கு, அமிர்தத்தைக் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
உங்களின் மனமுதிர்ச்சியே அந்த அமிர்தம். பணம் சேர்த்து வைப்பதோடு, பண்பை அதிகம் சேகரியுங்கள், புகழ் சேர்த்து வைப்பதோடு, தெளிவை அதிகம் சேகரியுங்கள்.
குழந்தை வளர்ப்புமுறையைக் கற்றுக்கொள்வதைவிட, உங்களை வளர்க்கும் முறைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.
தியானம் செய்யலாமா
- வெறும் உடலால் மாத்திரம் தியானம் செய்வது ... ஒரு நல்ல உடற்பயிற்சி! அவ்வளவே. உடலோடு சேர்த்து மனதையும் தியானத்தில் ஈடுபடுத்துவது ஒரு நல்ல சடங்கு. அதற்குமேல் ஆகாது.
உடல், மனம், உயிர் ஆகிய மூன்றையும் முழுமையாக தியானமுறையில் ஈடுபடுத்தினால்தான் அது தியானம் !
- ஒரு தியானிக்கு சிரத்தை (Sincerity) ஒரு மகா பொக்கிஷம். அது ஒரு அடிப்படைத் தகுதியும்கூட.
- சிரத்தையில்லாதவரால் தியானத்தின் சிறந்த பலன்களைப் பெறவே முடியாது.
- ஆழ்ந்த சிரத்தையை, செய்யும் செயலிலெல்லாம் கொண்டுவரக் கற்றுக் கொண்டுவிட்டால், செய்யும் செயலெல்லாம் தியானமாகும்.
ஒரு ஜென் சீடரும் ஒரு குரு குடுவி சீடரும் ...
- உன் வாழ்வின் சுவாரஸ்யமான பகுதி எது? ஜென்:
- 'நான் ஒரு முட்டாள்' என்ற உண்மையைப் புரிந்துகொண்ட அந்த நாள்! சூஃபி:
- ஜென்: உன் வாழ்வின் சங்கடமான பகுதி எது?
'நான் ஒரு புத்திசாலி' என்று நம்பிக்கொண்டிருந்த அந்த எல்லா சூஃபி: நாட்களும் !
நீ எதை வேடிக்கை எனக் குறிப்பிடுவாய்? ஜென்:
அரைகுறையாய் நாமிருக்கும்வரை, நம் நிறைகுறையில் சூஃபி: நிறைமட்டும் நம் கண்ணுக்கு நிறையத் தெரியாதது வேடிக்கை.
ஜென்: விளக்குவது ?
தெரியுமா உங்களுக்கு?
தியானத்தில் தொடர்ந்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமென்பது தயான விதி.
இந்த ஒன்றை சிரத்தையோடு கடைப்பிடித்தாலே ஞானமடைந்து விடலாம்.
கு ஃபி: அவசியமில்லை ஞானிக்கும் வாழ்க்கைச் சக்கரத்தில் இடைப்பட்ட இவர்களுக்கு நிலையிலிருக்கும் எல்லோரும் தியானம் செய்தே ஆக ஆக வேண்டும். தெரிந்து செய்தால் அதன் பெயர் தியானம். இல்லாவிட்டால் மனிதர் செய்வது உலக சடனை.
உன் மூலமாக உன் மனதுக்குத் தரப்படும் தியானம். உலகம் மூலமாக உன் மனத்துக்கு தரப்படும் சடனைக்குப் பெயர் சடனை.
தியானம் ஒரு சாதனை! சாதனை ஒரு தியானம்! பித்தனுக்கும் புத்தனுக்கும் இடைப்பட்ட வாழ்க்கைச்சக்கரத்தின் அச்சாணியான தியானத்திலிருந்து ஒரு மனிதர்கூட தப்பிக்க முடியாது" என்றான்.
தியானம் உங்களின் வாழ்க்கை.
உங்கள் வாழ்வே ஒரு தியானம்தான்.
சிரத்தையோடு முழுமையாகச் செய்யும் சடங்கு கூட தியானம்தான்.
சிரத்தையில்லாமல், முழு ஈடுபாடில்லாமல் செய்தது தியானமாக இருந்தாலும், இது வெறும் சடங்குதான்.
என்ன ஷாக் அடித்த மாதிரி இருக்கிறதா ?
சடங்குகளும், சம்பிரதாயங்களும் பலர் நினைப்பது போல் சாதாரண விஷயங்கள் அல்ல.
ரிகம்காலத்தில் நிம்மதியாக நிலையான ஆனந்தத்தில் மனிதர்கள் வாழ்வதற்காக கண்டுபிடிக்கப்பட்ட முறைகளில், சடங்கும் ஒன்று. சரியாகச் சொல்ல வேண்டுமானால், அவையும் தியான முறைகளே,
ஆனால் இன்றைய நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மதம், குலம், கோத்திரப்படி சில சடங்குகள் மற்றும் காரியங்கள், கட்டாயம் செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயச் சடங்காக அவை மாறிவிட்டன.
சடங்குகள் அதற்கே உரிய சிரத்தையோடு, முழு ஈடுபாட்டோடும் செய்வது சமூக வழக்கிலிருந்து மறைந்துவிட்டதால், சடங்கு என்றால் அது சாதாரண விஷயம் என்றாகி விட்டது.
மாறாக தியானம் என்றால் இன்றும் கூட மக்கள் மனதில் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது.
தியானத்தில் தாங்கள் ஈடுபடாவிட்டாலும்
தியானம் செய்ய வேண்டும்.
தியானம் செய்தால் நல்லது.
தியானம் செய்தால் ஆனந்தம் கிடைக்கும்
- என்பது போன்ற ரெடிமேடான வாசகங்கள் மக்களிடம் நிறைய இருக்கிறது.
சில நேரங்களில் சிலர் தியானம் என்கிற பெயரில் எதையாவது செய்து கொண்டு, தாங்கள் ஆன்மீகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்று நம்புவதுண்டு.
சிரத்தை என்பது ஆனந்தம் பெற நீங்கள் தரும் விலை!
மேற்கண்ட எல்லாவற்றிக்கும் தீர்வு தரும் ஒரு நாடோடிக் கதை ....
லி-மஜோலிக்கு, பல வருடமாக சாசென் தியானம் செய்தும் தனக்கு இன்றும் முக்தி கிடைக்கவில்லையே என்ற வருத்தம்.
'யாராவது ஒரு வாழும் ஞானியைப் பார்த்து, இதற்குத் தீர்வு கண்டுபிடித்தாக வேண்டும்' என்ற லி-மஜோலியின் பல நாள் ஏக்கம் அன்று பூர்த்தியானது.
ஞானி, இசாக்கிய மிந்தாவைச் சந்திக்கும் வாய்ப்பு லி-மஜோலிக்கும் கிடைத்தது.
லி-மஜோலி, இசாக்கிய மிந்தாவை வணங்கிவிட்டு, " 15 வருடங்களாக சாசென் தியானம் செய்கிறேன். இன்னும் முக்தி கிடைக்கவில்லை. நீங்கள் எனக்குத் தீர்வு கொடுக்க வேண்டும்" என்றார்.
ஏமாற்றுவதை ஏமாற்றுவதே சிறந்த
இசாக்கிய மிந்தா, வெகுகோபமான குரலில் தன் சீடர்களைப் பார்த்து, "இது போன்ற முட்டாளை யார் உள்ளே விட்டது? உங்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் புத்தியே இருக்காதா!" என்று சீறினார்
லி-மஹோலிக்குக் கன்னத்தில் ஓங்கி அறைந்தது போல இருந்தது. அவமானத்தால் கோபம் உள்ளுக்குள் பொங்கியது. இருந்தும் தனக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமே! எனவே மீண்டும், "நான் 15 வருடமாக ..." என்று ஆரம்பிக்க,
இசாக்கிய மிந்தா, "உன்னோடு பேச விருப்பமில்லை. போய் வா" என்று உறுதியாகச் சொன்னார்.
தீர்வு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் லி-மஜோலியை வாட்டி எடுத்தாலும் இசாக்கிய மிந்தாவின், "….விரும்பவில்லை…. போய் வா…" என்ற முரண்பட்ட வார்த்தைகள் லி-மஜோலியின் மனதில் திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டே இருந்தது.
அடுத்தநாள் இசாக்கிய மிந்தாவை வழியில் சந்திக்கும் வாய்ப்பு லி-மஜோலிக்குக் கிடைத்தது.
லி-மஜோலி வணங்கிவிட்டு, "15 வருடமாக தியானம் செய்தும் எந்தப் பலனும் இல்லை. நான் என்ன செய்வது ?' என்று கேட்டார்.
சடங்கு தியானமாகலாம். தியானம் சடங்காகக் கூடாது!
இசாக்கிய மிந்தா, "தியானம் செய்யாதே" என்று இரண்டு வார்த்தையைச் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்துவிட்டார்.
லி-மனோலிக்கு மனதே இரண்டாய் பிளந்து போல இருந்தது.
லி-மஜோலிக்கு வாழ்க்கை மீது வெறுப்பு வந்து விட்டது. நம்பிக்கையை இழந்த லி-மஜோலி பக்கத்தில் இருக்கும் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு எடுத்தார். சரி, கடைசியாக ஒரே ஒருமுறை தியானம் செய்து பார்க்கலாம் என்று தியானம் செய்ய ஆரம்பித்தார்.
திடீரென்று உச்சநிலையில் ஏதோ குறுகுறுப்பு, தலைநிமிர்ந்தார் லி-மஜோலி.
லி-மஜோலியின் தலையை வருடியபடி, அங்கே அருகே இசாக்கிய மிந்தா நின்று கொண்டிருந்தார். "என்ன நடக்கிறது இங்கே ?" என்று புரிந்துகொள்ள லி-மஹோலி தடுமாறிக் கொண்டிருக்க ...
அதே ஆற்றங்கரையில் புத்தர் சிலை ஒன்றை வைத்துக்கொண்டு,
"புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி'' என்று பக்தியோடும் புத்த பக்தர் ஒருவர் பூஜித்துக் கொண்டிருந்தார்.
ஜெயிக்க வழி வாழ்க்கையில் கியானத்தைக் சேர்க்காதிர்கள். தியானத்தில் வாழ்க்கையைச் சேருங்கள். வாழ்வு தியான வாழ்வானால் ஜெயம் நிகழ, நிகழ்த்த தேவையான எல்லா புத்திசாலித்தனங்களோடு உதயமாகும்!
இசாக்கிய மிந்தா, லி-மஜோலியிடம் அந்த மனிதனைக் காட்டி, ''மனிதன் பூஜிப்பதில் காட்டும் ஈடுபாட்டையும் சிரத்தையையும் நீ தியானத்தின் போது கடைப்பிடித்தாயா?' என்று கேட்டுவிட்டு நடக்க ஆரம்பித்து விட்டார்.
யோசிக்க யோசிக்க லி-மஜோலிக்கு ஒவ்வொன்றாகப் புரிய ஆரம்பித்தது.
15 வருடமாக செய்த தியானத்தில், ஒருமுறைகூட முழு ஈடுபாட்டோடும், சிரத்தையோடும் தான் செய்யாததுதான் பிரச்சனைக்குக் காரணம் என்பது புரிய ஆரம்பித்தது.
'' சடங்கைக்கூட தியான முறையில் முழு ஈடுபாட்டோடும் செய்ய முடியும் போது - நான் என் தியான முறையை முழுமையாகச் செய்யக்கூடாது?" என்ற கேள்வி எழு - 15 வருட முட்டாள்தனம் கீழே விழுந்தது!
முழு ஈடுபாடும் ஞானக்கருத்துக்களை தன் வாழ்வில் நடைமுறைப்படுத்தி பார்க்கும் தைரியத்துடன் சேர்ந்ததே சிரத்தை.
நீங்கள் செய்யும் இருக்கிறது. அது உண்மையான தியான முறையா ? இல்லை சிலர் கட்டாயத்தின் பேரில் மேம்போக்கான ஒரு உந்துதல் காரணமாக செய்யும் கட்டாயச் சடங்கு போன்றதா ?
சிந்தியுங்கள்... தியான முறையில் முழுமையாக ஈடுபடுங்கள். மீண்டும் சொல்கிறேன்.
முழுச்சிரத்தையோடு தியானம்தான். சிரத்தையில்லாமல் வாழும் ஞானி கற்றுக் கொடுத்த தியான முறையைச் செய்தாலும் அது சாதாரண சடங்குதான்.
தியானமுறையின் பலன் - உங்களின் சிரத்தையைப் பொறுத்தது,
அர்த்தமுள்ள சம்பவம்...
Dr. முரளி கிருஷ்ணா ஒருமுறை கேட்டார், 'சுவாமிஜி, தியானம் எந்தெந்த நோய்களைக் குணப்படுத்தும் எனப் பட்டியலிடலாமா?'' என்று என்னிடம் கேட்டபோது...
- ''சிரத்தையோடு செய்யும் தியானம், உங்களால் பெயரிட முடிந்த மற்றும் உங்களால் பெயரிட முடியாத எல்லா நோய்களையும் குணப்படுத்தும்'' எனச் சொன்னேன். • எல்லா நோய்க்கும் ஒரேயொரு மூலகாரணம்தான். அது சக்திகுறைவு! தியானத்திற்கும் ஒரேயொரு செயல் மட்டுமே செய்யத் தெரியும். அது சக்தி குறைவை நிறைவாக்குவது. சக்தி சரியாக, நோய் சரியாகும்!
எண்ணங்களைத் தாக்கியறிவது எப்படி? எளிய விளக்கம்
10 நாட்கள் விடுமுறை வேண்டுமென அலுவலகத்திற்கு எழுதிக் கொடுத்துவிட்டு இந்தப் பக்கத்தை தொடருங்கள். பத்தே பத்து நாட்கள் மட்டும் இனி சொல்வதைக் கடைப்பிடித்து விட்டால் உங்கள் வாழ்வே மாறிப்போகும். புதிய உலகம் காணும் மனிதராகி விடுவீர்கள்.
மீன்தொட்டியின் மூலையிலிருந்து, உபகரணத்திலிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் காற்றுக் குமிழிகள் போல ...
உங்களுக்குள் எங்கோ ஒரு மூலையிலிருந்து எண்ணங்கள் தொடர்ந்து உற்பத்தியாகிக் கொண்டேயிருக்கின்றன.
பல வண்ண எண்ண தொகுப்பே மனம்!
இந்த எண்ணங்களை எட்டிப்பிடிப்பதே இந்த தியானத்தின் இலக்கு.
இந்த தியானத்தின் ஒவ்வொரு படிகளையும் நிதானமாக ஒரு முறை செய்து அனுபவமாக மாறிவிட்டு, அப்புறம் அடுத்ததிற்குள் செல்லுங்கள்.
முதலில் உடல் எனும் தொட்டிக்குள் நுழையுங்கள்.
உங்களுக்குள் ஓர் மீன் போல் உணர்வு வழியாய் நீந்திச் செல்லுங்கள்.
அடுத்து, தூர இருந்து பாருங்கள். நிற்காமல், உங்களின் பங்கு எதுவுமில்லை, தொடர்ந்து உற்பத்தியாகிக் கொண்டே இருக்கின்றன- எண்ணங்கள் என்பதை பார்த்து. உணர்ந்து, உறுதி செய்யுங்கள்.
அடுத்து, இந்த எண்ணங்கள் பிறக்கும்போதே, அவற்றை உங்களின் கவனத்திற்குக் கொண்டுவந்து விடுங்கள்.
முதலில் வந்த எண்ணத்தைக் கவனிப்பீர்கள்.
விழிப்புணர்வு விரிவடைய விரிவடைய ...
அடுத்தபடியாக, வருகின்ற எண்ணங்களைக் கவனிப்பீர்கள்.
இன்றும் கொஞ்சம் பயிற்சியைச் சிரத்தையோடு செய்யச் செய்ய...
இனி வரப்போகின்ற எண்ணங்களைக் கவனிப்பீர்கள்.
கையாலேயே குருவி பிடிக்க கற்றுக்கொண்டவர்போல், உணர்வாலே எண்ணங்களைப் படிக்கும் கலையைக் கற்றுக்கொண்டபின் செய்ய வேண்டிய அடுத்த கட்ட தியான பயிற்சி..
எண்ணங்கள் எங்கிருந்து பிறக்கிறது எனத் தேடிச் செல்லுங்கள். எண்ணங்களின் பிறப்பிடம் செல்லுங்கள்.
உடல் உள்ளே நீந்திப் பார்! வெளி உலகில் மிதந்து செல்வோம்
நீங்கள் இதுவரை வந்துவிட்டால் ... உள்ளேயிருக்கும் பாதாள அறையைத் தொட்டுவிட்டீர்கள் என்றர்த்தம்.
காரணம், எண்ணங்கள் பிறப்பிடமே அகங்காரத்தின் இருப்பிடம்! ஹிந்து மதம் சொல்லும் கர்மங்கள், கிறிஸ்தவ மதம் சொல்லும் பாவங்கள் மற்றும் ஏனைய மதங்கள் மார்க்கங்கள் குறிப்பிடும் வேதனைக்கான மூலகாரணங்கள் ஒளிந்திருக்கும் இடம் இதுதான்.
இதை நரகத்தின் நுழைவாயில் என தாவோ மதம் குறிப்படுகிறது.
இந்தப் பாதாள அறைக்குள் செல்லும்போது பயம் வரலாம்.
பயப்பட வேண்டாம் - இந்தப் பயத்தை மட்டும் தாண்டிவிட்டால், உணர்வுரீதியான சொர்க்கத்திற்குள் இழுத்துச் செல்லப்படுவீர்கள். சிரத்தையோடு செய்யும் எந்தவொரு மனிதருக்கும் இது சாத்தியமானதே.
கோபப்படும் எல்லா நேரங்களிலும் நாம் திட்டி விடுவதில்லை. சூழ்நிலை கருதி நாம் பல சமயம் பலரைத் திட்டுவதில்லை. அப்படித் திட்ட முடியாதபோது என்ன செய்கிறீர்கள் ? உள்ளேயிருந்து புறப்பட்ட கோபவார்த்தைகளை, உணர்ச்சிகளை அப்போதெல்லாம் காறியெறிந்து விடுகிறீர்கள்தானே?
எண்ணங்களின் பிறப்பிடம் வரை சென்றுவிட்ட நீங்கள் அங்கிருந்து வரும் எல்லா எண்ணங்களையும் தூக்கியெறிய ஆரம்பியுங்கள். குழ்நிலை கருதி கோபத்தில் செய்வகை, இனி வரும் எல்லா எண்ணங்களுக்கும் செய்யங்கள்.
காமம், கவலை, சந்தோஷம் என எது வந்தாலும் சரி, அதைத் தூக்கியெறியுங்கள்.
எல்லாமே உள்ளேயிருக்கும் குப்பைகள்.
குப்பைகள் தீரும் வரை இச்செயலை நிறுத்த வேண்டாம்.
ஆனந்தம் வரும்வரை இது தொரட்டும்.
தொடர்ந்து பத்து நாட்கள் இந்த ஒரு தியானத்திற்காக மட்டுமே செலவு செய்யுங்கள்.
வேதனைப் பதிவுகள் தீர்ந்ததும் ஆனந்தம் ஊற்றுபோல் பொங்க ஆரம்பிப்பதைக் காண்பீர்கள்.
எண்ணங்களின் பிறப்பிடம். அகங்காரத்தின் இருப்பிடம்!
கீர்ப்புக் கூறாதே !
திய் மகனிடம், "பிளம் கேக்கைத் திருடிச் சாப்பிட்டாயா?" என வெகு கோபத்தோடு கேட்டார்.
மகன் "ஆமாம், சாப்பிட்டேன்" என்றான் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல்.
" நீ அந்த கேக்கை திருடும்போதுகூட, கடவுள் அங்கேதான் இருந்தார் என்ற விஷயம் உனக்குத் தெரியுமா?" எனக் கேட்டு, தன் மகன் குற்றம் செய்திருப்பதைச் சுட்டிக்காட்ட முயற்சித்தார்.
"ம்ம்... தெரியும்" என்றான் மகன் வெகு இயல்பாக. தாய்க்கு மகனின் பதில்கள் மேலும் எரிச்சலைத் தந்தது ...
"நீ என்ன செய்தாலும் உன்னைக் கடவுள் கவனிக்கிறார் என்பது தெரியுமா ?''
"ம்… ம்… ம்… தெரியும்மா!"
" நீ திருடும்போது உன் செயலைப் பார்த்து அவர் என்ன சொல்லிக் கொண்டிருந்தார் என்று உனக்குத் தெரியுமா?" எனக் கேட்டதற்கு,
மகன் "கிசுகிசுவென மெல்ல கடவுள் சொன்னார்... சமையலறையில் நம் இருவர் மட்டும்தான் இருக்கிறோம். அதனால், பயப்படாதே. எனக்கும் சேர்த்து இரண்டு பிளம் கேக்காக எடுத்துக்கொள் என்றார்!" எனச் சொன்னான்.
பொய் சொன்னதால் வாய் அடைத்து நின்றார். எது மெய்? எது பொய்? என இங்கு தீர்ப்பிட முடியுமா ...
-
யாரையும் எதையும் எப்போதும்
- தீர்ப்பிட முடியாது என்பது உண்மை.
- தீர்ப்பிடக்கூடாது என்பது அறிவுரை.
- தீர்ப்பிடாமல் இரு என்பது தியானம்.
-
கையில்லாதவர் கழுத்தில்லாதவருக்கு மாலை அணிவிக்க முயன்றால் ... எப்படியிருக்கும் ? ஒருவர் இன்னொருவரைப் பற்றிச் சொல்லும் கருத்துக்களும் தீர்ப்புகளும் அப்படிப்பட்டதே!
-
நம்மை நாமே புரிந்துகொள்வது கடினம். பல வேளைகளில் நம்மைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வருவது நமக்கே கடினமாக இருக்கும். இதைக் கவனித்திருக்கிறீர்களா?
-
நம்மைப் பற்றியே நமக்குத் தெளிவாகப் புரியாத பட்சத்தில் - உலகத்தையும் உறவுகளையும் மதிப்பிட ஆரம்பித்தால் அந்தத் தீர்ப்பு எப்படி இருக்கும் ...
அது மஞ்சள்நிறக் கண்ணாடி போட்டுக்கொண்டு ஊதா நிறத்தை ஆராய்ச்சி செய்து, நான் கண்டுபிடித்தது 'பச்சை' என தீர்வு எழுதுவதைப் போன்றிருக்கும்.
இந்த ஒரு உதாரணத்தை முழுமையாகப் புரிந்துகொண்டால் மொத்தத் தொல்லைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
- குணத்தைப் பற்றியும்
நடத்தையைப் பற்றியும் விமர்சிக்க ஆரம்பிக்கும்போதுதான் வினையே ஆரம்பிக்கிறது.
பார்வையில்லாதவர் ஒருவர் தன் நண்பர் முல்லா நஸ்ருதீன் வீட்டிற்கு விருந்திற்காக வந்திருந்தார். விருந்து முடிந்து அவர் வீடு திரும்பும் போது, முல்லா நஸ்ருதீன் அவரிடம் ஒரு விளக்கைக் கொடுத்தார்.
பார்வையில்லாதவர், "என்ன இது ?" என்றார்.
முல்லா நஸ்ருதீன், "இது விளக்கு. போகும் வழியில் என்றார்.
பார்வையில்லாதவர், "என்ன முல்லா ? கிண்டலா! எனக்கு எதற்கு விளக்கு?" என்றார் சற்றே கோபமாக.
முல்லா நஸ்ருதீன், "இல்லையப்பா. இது உனக்காக வருபவர்களுக்காக.
விளக்கு இருந்தால், அவர்களுக்காவது தெளிவாகத் தெரியும், யார் எதிரே வருகிறார்கள் என்று.
நீ கஷ்டப்படாமல் வீடு சேரலாமில்லையா ? அதற்காகத்தான்' என்று விளக்கினார்.
விளக்கம் கேட்ட பார்வையில்லாதவர், தன் நண்பரின் அறிவையும் அன்பையும் நினைத்துப் பெருமிதப்பட்டவராய் வீடு நோக்கி நடந்தார்.
வீடு நோக்கி நடந்துகொண்டிருந்த குருடரின் மீது யாரோ சடார் என்று மோதவே,
நிறக்குருகி நிறங்களை மறைக்கும் அவ்வளவே. மனக்குருடோ நிறைகளையும் வாழ்க்கையையும் சேர்த்து மரைத்து விடும்.
குருடர், "யாரப்பா நீ, கண்ணு தெரியல! அதான் விளக்கை கையில் பிடிச்சிட்டு வரேனில்லா" என்றார் கோபமும் சலிப்பமாக,
இடித்தவர், "'ஐயா, தயவுசெய்து மன்னிக்க வேண்டும். நான் வேணுமென்றே இடிக்கவில்லை. நான் ஒரு குருடர்" என்றார்.
''…………'' பதில் ஏதும் பேச முடியாமல் திரும்ப விளக்கோடு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார் குருடர்.
மீண்டும் குருடரின் மீது யாரோ 'சடார்' என்று மோதவே, "என்னய்யா இது? அதுதான் விளக்கைப் பிடிச்சிட்டே வரேனில்ல. பார்த்து வரக்கூடாதா?" என்றார் கோபச் சலிப்பில்.
இடித்தவர், "ஐயா, நீங்க விளக்கை கையில் வைத்திருப்பது என்னவோ உண்மைதான். அனால் விளக்கு அணைந்து போயல்லவா இருக்கிறது!" என்றார்.
நம்மைப் பற்றிய தெளிவு நமக்கு முழுமையாகத் தெரியாதபட்சத்தில் ஒவ்வொருவரும் ஒருவகையில் குருடர்கள்தான். அதாவது மனக்குருடர்கள்.
மனக்கண்ணை, "எனக்கு எல்லாம் தெரியும்" என்ற குருட்டு இருள் கவ்விக் கொண்டிருக்க ...
கடையில் கிடைக்கும் சில புத்தகங்கள், சில மனிதர்கள் கூறும் (வியாபாரம் கலந்த) கருத்துக்களை விளக்கு போன்று வைத்துக்கொண்டு, வாழ்க்கை என்னும் சாலையில் ஒய்யாரமாக நடக்க முயற்சி செய்தால் அந்தக் குருடர்போல் இடிபட்டு, இடிபட்டு நோக வேண்டியதுதான்.
மனக்குருடனாயிருப்பவரின் எதிரே முழுப்பார்வை நிறைந்தவரே (ஞானியே) வந்தாலும் கூட மனிதனால் பிரித்துப் பார்க்க முடியாது.
நமக்குத் தெரிந்த சிலவற்றைக் கொண்டு அவர் அப்படி, இவர் இப்படி என்று தீர்ப்பு கூறுவது போன்ற ஒரு கீழ்த்தரமான செயல் வேறெதுவும் இருக்க முடியாது.
| தி | |
| ந | |
| ப |
மனிதரை மனிதனாய் மதிப்பவர்
அபிப்ராயங்களைக் கடந்தவர்!
யாரையும், எதையும் கோரமாகத்தான் கூறுகிறோம் என்ற உண்மை தெரியாததாலும் உண்மையைக் தான் நாம் கூறுகிறோம் என்று ஊர்ஜிதமாக நடக்கும் இரு பெரிய தவறுகள்.
ஒன்று, உங்களைப் பற்றி நீங்களே நல்லவர் அல்லது கெட்டவர், மனிதன் அல்லது மிருகம் என்ற முடிவுக்கு வருவீர்கள்.
இரண்டாவது, மற்றவர்களைப் பற்றி அவர் நல்லவர் அல்லது கெட்டவர், மனிதன் அல்லது மிருகம் என்ற முடிவுக்கு வருவீர்கள். ஆனால் நிஜத்தில், இரண்டுமே கற்பனை. இரண்டுமே பொய்.
முழு யோக்கியனும் அரிது. முழு அயோக்கியனும் அரிது.
தீர்ப்பிடாதீர்கள்!!! தீர்ப்புக்கள் நெருக்கமான உறவைக்கூட அறுத்துவிடும்.
நல்லவர் என்ற சான்றிதழை நாம் ஒருவருக்களிப்பது, அவரின் அயோக்கியத்தனங்கள் நமக்குத் தெரியாத வரைதான். அதேபோல் கெட்டவர் என்று நாம் ஒருவரை சொல்வது, அவரின் ஆத்மார்த்தமான குணங்கள் நமக்குத் தெரியாத வரைதான்.
நம்முடைய அபிப்ராயங்களைக் கோலாகவும் தீர்ப்பைக் காலாகவும் மனத்தெளிவை வெளிச்சமாகவும் வைத்து நடக்கும் இந்த 'பந்தபாசம்' என்னும் வாழ்க்கை நாடகத்தை இனிதே நடத்த, தீர்ப்பு என்னும் கால்களை உதறுங்கள்! அபிப்ராயங்கள் என்னும் கோலைத் தூக்கி எறியுங்கள்!
மனக்கண் ஒளி பொங்க ஆரம்பிக்கும். நிஜம் நிஜமாகத் தெரியும்!
அர்த்தமுள்ள சம்பவம் ...
உலகின் எல்லா தீர்ப்புக்களுக்கும் பத்தரின்
வைரம் பாய்ந்த விளக்கம்:
● ''மனிதனின் எல்லா வரையறைகளும் விளக்கங்களும்
கொள்கைகளும் நிஜத்தைப் பற்றிய
பொய்யான விரிவுரைகள்''.
உங்களின் வாழ்க்கைப்போக்கை, அது நிர்ணயிக்கக் கூடாது
தீர்ப்பை ஏற்கெனவே ஆரம்பித்தால் ...
அந்த வழக்கின் போக்கு எப்படியிருக்கும் ?
எதிராளியால் ஜெயிக்க முடியுமா ? அவரின் நியாயம்தான் எடுபடுமா... சிந்தியுங்கள். ஒரு மனிதரைப் பற்றிய கருத்துக்கணிப்புக்கு நம்மால் வெகு எளிதாக வந்து விட முடிகிறது.
தீர்ப்பிடல் நிற்க ... வாழ கற்க ஆரம்பிப்பீர்கள்!
விவாதிக்க
"நீங்கள் யார் அடுத்த ஆளை தீர்ப்பிட!"
என கடவுள் உங்களிடம் கேட்டால் ...
பொறுமையற்றவர் கணவர் செய்துவிட்ட மனைவிக்கு, கணவரின் அன்புப் பேச்சுகூட நிரந்தரமற்றதாகவும் நடிப்பாகவுமே தெரியும்.
மனைவி பேராசைக்காரி என்று முடிவு செய்துவிட்ட கணவருக்கு, மனைவியின் அன்புப் பேச்சுக்கூட அடுத்த காரியத்தைச் சாதிப்பதற்கான ஒத்திகையாகவே தெரியும்.
எல்லா மனிதர்களைப் பற்றியும் இப்படி ஏதோ ஒரு வகையில் முத்திரை குத்தி, அவர்களை நம் மனதில், ஒரு மூலையில் உட்கார வைத்து விடுகிறோம்.
தீர்ப்பிட தீர்ப்பிட மனிதர்களின் உண்மையான அன்புகூட ஏளனப்படுத்தப்படுகிறது.
பலமுறை நீங்கள் அது உதாசீனப்படுத்தப்பட்டதைக் கண்டு மனமொடிந்து போயிருப்பீர்களே ... அந்த நிமிடங்கள் உருவாகக் காரணம் இப்படிப்பட்ட தீர்ப்பிடல்கள்தான்.
நம்முடைய உரையாடல்களை கவனித்துப் பார்த்தால் ...
பல நேரங்களில் நாம் முதலில் சொன்னதைச் சரியென நிரூபிப்பதற்காகவே பல ஆதாரங்களை அடுக்கிக்கொண்டே போவோம்.
ஒருவேளை வேறொரு கருத்தைச் சொல்லியிருந்தால் அதைச் சுற்றியே நம் பேச்சின் போக்கு செல்லும்.
நீங்கள் பேசும்போது மட்டுமல்லாமல், யோசிக்கும்போதும் தீர்ப்புகளை உருவாக்கிக் கொண்டேதான் இருக்கிறீர்கள். அவற்றைத் தொடர்ந்தே உங்களின் வாழ்க்கைப் போக்கு திருப்பப்படுகிறது. வாழ்க்கை தடுமாற ஆரம்பிக்கிறது.
உங்களின் வாழ்க்கைப் போக்கை நீங்கள் தீர்மானிப்பதல்ல. அதைத் தீர்மானிப்பது தீர்ப்புகளே!
தீர்ப்புகள் முள்வேலிகள்.
அது மற்றவரையும் குத்தும்.
உங்களையும் சிறைப்படுத்தும்.
முள்வேலிகள் விலகும்வரை உங்களின் சுதந்திரம் பற்றியோ, மற்றவர்களின் நெருக்கம் பற்றியோ யோசிக்கக் கூட முடியாது.
விடிவு கிடைக்க வேண்டுமானால்... தீர்ப்பிடும் குணம் வேரோடு பிடுங்கியெறியப்பட வேண்டும். தீர்ப்பிடும் குணமானது அது உருவாகும்போதே எரிக்கப்பட வேண்டியது.
தீர்ப்பிடும் குணத்தைவிட்டு வாழ ஆரம்பித்துப் பாருங்கள் ... சொர்க்கத்துக்குள்தான் நீங்கள் குடியிருக்கிறீர்கள் எனும் உண்மை அனுபவமாகும். !
மன்னித்து ... மறந்துவிடுங்கள் !
உங்கள் கோபத்தால் பாதிக்கப்படுவது! உங்கள் மன்னிப்பால் பலன்பெறுவது ! - இரண்டுமே எதிராளி அல்ல. நீங்கள்தான்!
தொடர்ந்து உங்கள் உடலும் மனதும் கொதித்துக்கொண்டிருந்தால் மாத்திரமே கோபக்கனல் மூலம் மற்றவர்களைச் சிறு தவறுக்காகக் கோபித்துக் கொண்டு சக்தி விரயம் செய்ய முடியும். வெறுப்பு கொள்ளமுடியும். - இதில் யாருக்குப்பாதிப்பு அதிகம் ?
கோபப்படுபவருக்கா? இல்லை பொங்கும் கோபத்தின் வெளிப்பாடான உங்கள் சீற்றத்தை மேம்போக்காக எடுத்துக்கொள்ளும் எதிராளிக்கா ?
மன்னித்துவிட்டால், மன்னித்த அடுத்த நிமிடமே கோப எரிமலை குளிர்ந்து விடும். உடலும் மனமும் இலகுவாகி விடும். கோபத்தில் சக்தி விரயமாவது மிச்சமாகும். பழிதீர்க்க யோசனை செய்யும் நேரம் மிச்சமாகும்.
சக்தியும், நேரமும் மிஞ்சினால் பலன் பெறப் போவது ...
- -மன்னிப்பவரா? இல்லை,
- மன்னிக்கப்படுவரா ? -
யோசியுங்கள் !
யோசனை கொடுக்கும் உற்சாகத்தோடு கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள் . . .
(கேட்டு குரனியைத் தேடி வந்தார் சீடர் ஒருவர். வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதைக் கற்றுக்கொள்ளத்தான் அந்தச் சீடர் வந்திருந்தார்.
ஆனால் சீடரின் முகத்திலோ கவலையின் ரேகைகள். அவர் மனம் அமைதியாக இல்லை என்பதைச் சொல்கிற மாதிரி இருந்தன அவாது நடவடிக்கைகள்,
ஞானியின் வீட்டுக்கதவை 'டமால்' என்று அதிரடியாக் கட்டித் திறந்தார். திறந்த வேகத்திலேயே மீண்டும் கதவை 'டமால்' என்று முடினார்.
அவர் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி ஒரு மூலையில் விட்டெறிந்தார். இதனால் கொஞ்சம் ஆசுவாசமடைந்துவிட்டு, நல்ல பிள்ளையாக, ஞானியின் முன்பு உட்கார்ந்தார். ஞானிக்கு மரியாதை செலுத்தினார்.
ஞானியோ, சீடரின் மரியாதையை ஏற்றுக் கொள்ளவில்லை. "நான் உன் மரியாதையை ஏற்றுக்கொள்ள மாட்டேன். முதலில் அந்த செருப்பிடமும் கதவிடமும் சென்று மன்னிப்புக் கேட்டுவிட்டு வா!" என்றார் ஞானி.
சீடருக்கு ஒன்றும் புரியவில்லை. 'ஞானி என்னவோ உளறுகிறாரே!' என்கிற மாதிரி பார்க்கார்.
"செருப்பிடமும் கதவிட(மும் போய் எப்படி மன்னிப்புக் கேட்க முடியும் ? அவையென்ன உயிருள்ள பொருள்களா? நான் அவற்றிடம் மன்னிப்புக் கேட்காவிட்டாலும் அவற்றுக்கு என்ன தெரியப் போகிறது ?" - தான் ஒர் அதிபுத்திசாலி என்கிற நினைப்பில் ஞானியிடம் கேள்விகளை அடுக்கி கொண்டே போனார் சீடர்.
சீடரின் கோபமடைந்து விடவில்லை, "நீ இங்கு
வர்களேகு கோபத்தோடு வந்தாய். அந்தக் கோபத்தை யார் மீதாவது காட்டி அமைதியடைய, உன் கோபத்தை மனிதர்கள் மீது காட்டுகிற அளவுக்கு உனக்குத்
தைரியமில்லை. எனவே செருப்பின் மீதும் கதவின் மீதும் காட்டினாய். உன்னிடம் உதைபடுவதற்கும். அடிபடுவதற்கும் செருப்பம் கதவம் என்ன தவறு செய்தன?
உன் கோபக்கைக் காட்டுகிறபோது மட்டும் அதற்கு உயிர் இருப்பதாக நினைத்தாய். ஆனால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லும்போது மட்டும் அவற்றை உயிரற்ற ஜடம் என்று கூறுகிறாய்.
இதனை நான் எப்படி ஏற்றுக்கொள்வது? உன்னை என்னால் சீடராக ஏற்றுக் கொள்ள முடியாது" என்றார் ஞானி.
ஞானி சொன்னதை ஏற்றுகொள்ளத் தயக்கம் காட்டினார் சீடர். ஆனால், அதற்காக ஞானியைவிட்டுச் செல்லவும் சீடாக்கு மனம் வரவில்லை. இதையெல்லாம் காண்டி ஞானியின் வார்க்கைகளில் ஏதோ ஒரு செய்தி மறைந்திருப்பதாக உணர்ந்தார்.
'நான் தேடிவந்தவர் கொஞ்சம் வித்தியாசமானவர்தான். இவர் கூறுவதில் உண்மை இருப்பது போலத் தெரிகிறது. எனவே, அவர் சொல்கிறபடி நடந்து கொள்வோம்" என்று நினைத்து மன்னிப்புக் கேட்கத் தயாரானார்.
"நண்பர்களே! என் அவமதிப்பைப் பெரிய விஷயமாக நினைக்காதீர்கள். பெரிய மனதோடு மன்னித்துவிடுங்கள்!' என்று கெஞ்சலாகக் கேட்டார் சீடர்.
சீடர் உண்மையான எண்ணத்தோடு அந்தச் செயலைச் செய்யவில்லை. மன்னிப்புக் கேட்கும் போது கொஞ்சம் கேலியும், கிண்டலும் குரலில் கலந்திருந்தன. என்றாலும் மன்னிப்புக் கேட்டு முடிந்தவுடன், சீடரின் மனதில் ஏதோ ஒரு மாற்றம். இவ்வளவு நேரம் தன் மனதை வருத்திக் கொண்டிருந்த பாரம் ஒன்று, தானாகவே கழன்று கீழே விழுந்துவிட்ட மாதிரி உணர்ந்தார்.
"விளையாட்டுக்காக மன்னிப்புக் கேட்டேன். அதற்கே என் மனம் இவ்வளவு இலகுவாகிறதே ? உண்மையாகவே நான் மன்னிப்புக்கேட்க ஆரம்பித்தால், இன்னும் எனக்கு எவ்வளவு அமைதி கிடைக்கும்!" என்று எண்ண ஆரம்பித்தார் சீடர். மீண்டும் ஒருமுறை உண்மையாகக் கேட்டார். உள்ளுக்குள் ஒருவிதமான சுக உணர்வு பெருகுவதை உணர்ந்தார்.
அன்றிலிருந்து அவர் முற்றிலும் மாறிப்போனார். நீங்களும் மன்னிக்க ஆரம்பியுங்கள். புது மனிதராய் மாறி விடுவீர்கள்.
மன்னிக்கக்கூடிய மனது மகத்தானது. அதைப் பெற நீங்கள் போராட வேண்டியது அவசியமில்லை. எதையும் கருணையோடு பார்க்கத் தெரிந்தாலே போதும். மன்னிக்கும் மனோபாவம் மலர்ந்துவிடும்!
மன்னிக்கக்கூடிய மனது மகத்தானது. அதைப் பெற நீங்கள் போராட வேண்டிய அவசியமில்லை. எதையும் கருணையோடு பார்க்கத் தெரிந்தாலே போதும். மன்னிக்கும் மனோபாவம் மலர்ந்துவிடும்.
" மன்னிக்கும் மனோபாவம், அப்படியென்ன அதி அவசியமான ஒன்றா?" என்று நீங்கள் கேட்கலாம். ஒருவர் தவறு செய்கிறார். அவர் மீது உங்களுக்குக் கோபம் வருகிறது. நீங்கள் அவரை மன்னிக்காதவரை, உங்கள் கோபம் குறைவதில்லை. சொல்லப்போனால் கோபம் அதிகமாகிக்கொண்டே செல்லும்.
அளவுக்கதிகமான கோபம் உங்கள் உடலிலும் மனதிலும் பலவிதமான பிரச்சனைகளை உண்டுபண்ணும். வீட்டில் ஏதோ ஒரு மூலையில் உருவாகும் ஒரு சிறு தீப்பொறி, கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகி வீட்டையே அழித்துச் சாம்பலாக்கிவிடுவதுபோல, கட்டுப்பாட்டில் இல்லாத கோபம் உங்களைச் சர்வநாசமாக்கிவிடும்.
இந்தக் கொடுந்தீயை அணைக்கும் வல்லமை மன்னிக்கும் மனதுக்குத்தான் உண்டு. எனவே, தாராளமாக மன்னியுங்கள்!
முக்கியமான விஷயம் - மன்னித்த பிறகு, அதை உடனடியாக மறந்து விடுங்கள்.
" நீ எவ்வளவு பெரிய தவறுகளெல்லாம் செய்தவன் செய்தவன் தெரியும்மா உன்னை மன்னித்துவிட்டேன். எனவே, நான் உயர்ந்தவன். நீ ஒர் அற்பன்!" என்றெல்லாம் உங்களைப் பற்றி நீங்களே உயர்வாக நினைத்து, இன்னொரு தவறைச் செய்துவிடாதீர்கள்.அகங்காரத்திலேயே மிக மோசமானது, 'நான் நல்லவன்' என்கிற நினைப்பதனால் வரும் அகங்காரம்தான்.
ஆகவே, மன்னிக்கக் கற்றுக் கொள்வோம். அதை உடனடியாக மறக்கவும் கற்றுக் கொள்வோம்.
மறக்க முடியவில்லை என்றால், மன்னித்துவிட்டேன் என்ற பெயரில் வேஷம் போடுகிறீர்கள் என்று அர்த்தம் முழுமையாக மன்னித்துவிட்டால், மன்னித்தல் நிகழும்போது மறத்தலும் நிகழ்ந்துவிடும்!
சந்தோஷத்தை அளிப்பதும் அழிப்பதும் ...
- ஈக்களைக் கற்பனையிலேயே வாழச் செய்யும். சில பொழுதையே போக்கும் அம்சங்களால் மனிதமனம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது வருத்தத்திற்குரிய உண்மை.
- கற்பனை உலகில்தான் நாம் வாழ்கிறோம் என்பதை அறியாமல் கற்பனைகளை நிஜம் என்றும் நிஜத்தைக் கற்பனை என்றும், பாதிக்கப்பட்டதால் தெளிவற்றுப் போன மனதிலிருந்து முடிவுகள் எடுப்பதால்தான் வாழ்க்கையில் பல குழப்பங்கள்.
- கற்பனை நிஜமாக முடியாது. நிஜத்தைக் கற்பனை செய்ய முடியாது. இது நடைமுறை உண்மை.
- மனிதன் செய்யும் 100 கற்பனைகளில் ஒன்றிரண்டு நிஜமானால் அதுவே பெரிய விஷயம். இதற்குப் பெரிய விளக்கம் தேவையில்லை. உங்களின் மனஏட்டில் சொந்த அனுபவங்கள் எனும் பகுதியைப் புரட்டிப்பாருங்கள். புரியும்.
அந்த மனிதன் புலியிடமிருந்து தப்பிக்க மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தான். ஓடி ஓடி மலையின் விளிம்புக்கே வந்து விட்டவன் ... பதட்டத்தில் தடுமாறி விழுந்தரன்!
மலையிலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தவன் கையில் சிவப்புப்
பொதுச்சந்தையின் ஜனசத்தத்திற்கு இணையானது மன அரட்டையின் சத்தம். நீங்கள் அமைதியாக ஆக அச்சத்தம் தெளிவாய் கேட்க ஆரம்பிக்கும்!
பழங்கள் அகப்பட்டது. அதைப் பற்றிய அந்த மனிதன் கொண்டிருந்தரன்.
மேலே புலி, கீழே பள்ளதாக்கு! இதையெல்லாம் தாண்டி, பிடித்திருக்கும் புதரோ வலுவிழுந்து கொண்டிருந்தது.
அந்த ஊசலாடும் கணத்தில், அந்த மனிதனின் கண்களில் புதறில் பழுத்துத் தொங்கிய சிவப்புப் பழங்கள் தென்பட்டது. ஒரு கையால் சிவப்புப் பழத்தைப் பறித்து வாயில் போட்டுக்கொண்டார். சுவைக்க ஆரம்பித்தார். என்ன ருசி! என்ன இனிமை!' அதுவரை அவரின் வாழ்வில் ஒரு இனிமையாக இருந்ததுமில்லை!
விழுந்தால் "ஐயோ, என்ன ஆவோம்". என்ற கற்பனைகள் அந்த மனிதனிடம் அந்த நிமிடத்தில் இல்லை. அதனால்தான் பயத்திலேயே சாகவேண்டிய சூழலில் கூட ஒரு பழத்தின் இனிமையை இனிமையாக ருசிக்க முடிந்தது.
உங்களின் பயம், எரிச்சல், துக்கம் எல்லாமே யாரோ அல்லது ஏதோ ஒன்றைச் சுற்றி உருவான கற்பனைகளால் உருவாகுபவைதான்.
நடந்த அல்லது நடக்கப் போகிற ஒரு காரியத்தை நாம் கற்பனை செய்யும் கோணத்தைப் பொறுத்து நிம்மதியும் நிம்மதியின்மையும் நிர்ணயமாகிறது.
மனித வாழ்க்கையில் நிகழும் 100 நிஜ அனுபவங்களில் 99 அனுபவங்கள் திடீரென்று இயல்பாகவோ, இயற்கையாகவோ நடைபெற்றதாக இருக்கும்.
நாம் தயாராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் விசித்திரமான அனுபவங்களை நாம் சந்தித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
நாம் தயாராக இருந்தால் எதிர்பாராத வாழ்க்கை அனுபவங்கள் சந்தோஷத்தை அளிக்கும். இல்லையென்றால் அவைதான் நம் சந்தோஷத்தை அழிக்கும்.
தங்களின் சந்தோஷத்தை அழித்துக் கொண்டிருந்த தம்பதியினர், எல்லோருக்கும் சந்தோஷத்தை அளித்துக்கொண்டிருந்த சர்வ சாக்கிய முனியைச் சந்திக்கச் சென்றார்கள்.
சர்வ சாக்கிய முனியின் குடிசைக்குள் தம்பதியினர் நுழைய ... சாக்கிய முனி, "வாங்கோ! வாங்கோ! வாங்கோ!" என்று, ஒரு கூட்டத்தையே வரவேற்பது போல அவர்களை வரவேற்றதில் தம்பதியினரின் மனம் பூரித்தது.
சாக்கிய முனி ''ஏன் இவ்வளவு கூட்டம்? முதலில் ஒரே ஒரு ஜோடி மாத்திரம் உள்ளே வாங்க. மற்றவர்களை அப்புறம் பார்க்கிறேன்" என்று அந்த தம்பதியினரைப் பார்த்துச் சொன்னார்.
| நீ | கோபம் உனக்கு வர |
| அதை | உடலுக்குள் அமலமழை பெய்கிறது. |
| வெ | கோப வறார்மோன்களாய்! |
தம்பதியினரை பீதியும் குழுப்பமும் பற்றிக்கொண்டது.
ஏனென்றால் அந்த அறையில் அவர்கள் மூன்று பேரைத் தவிர்த்து வேறு யாரும் இல்லை.
சரி ஆனது ஆகட்டும் என்று தம்பதியினர் சாக்கிய முனியின் முன் சென்று உட்கார்ந்தார்கள்.
யாரும் வாழ்க்கைத் துணையோடு வாழ்வதில்லை.
சாக்கிய முனி மீண்டும் அறையைப் பார்த்து, "சொன்னா கேட்கமாட்டீர்களா! இப்படி நீங்கள் எல்லோருமே கூட்டமாக என்னைச் சுற்றி உட்கார்ந்து கொண்டால், நான் யாருக்கென்று பேசுவேன் ? ஒருவரைக்கூட என்னால் திருப்திப் படுத்த முடியாதே!" என்று தலையில் கைவைத்துக் கொண்டார்.
அவர்களைத் தவிர வேறு யாரும் அந்த அறையில் இல்லாததால் தம்பதியினரை பீதி முழுவதுமாக ஆட்கொண்டு விட்டது.
இருவருக்கும் வேர்த்துக் கொட்ட ஆரம்பித்தது!
சாக்கிய முனி, "சரியப்பா, முதலில் நீங்கள் இரண்டு பேரும் உங்களின் பிரச்சனையைச் சொல்லுங்கள். அப்புறமாக மற்றவர்களிடம் பேசுகிறேன்!'' எனச் சொன்னார்.
முதலில் கணவன் கொஞ்சம் தைரியத்தை வளர்த்துக் கொண்டு, "எனக்கு மனைவியாக வாய்ந்த இவள்தான் என்னுடைய எல்லாக் கஷ்டங்களுக்கும் காரணம். முதலில், என் கஷ்டம் நீங்க ஒரு வழி சொல்லுங்க சாமி" என்றான்.
தெரியுமா ... உங்களுக்குள் ஒரு நரகமே வாழ்கிறதென்று! யாரும் வாழ்க்கைத் துணையோடு வாழ்வதில்லை.
சாக்கிய முனி, "'பொய் சொல்லாதே! எனக்குக் கெட்ட கோபம் வரும். உனக்கு இரண்டு மனைவிகள்" என்று சொல்ல -
கணவன் திடுக்கிட்டான். "நான் இன்னொரு பெண்ணோடு வாழ்கிறேன் என்ற விஷயம் என் மனைவிக்கே சில நாட்களுக்கு முன்தான் தெரியும். இவருக்கு எப்படி இதெல்லாம் தெரியும் ?" என்று யோசித்துக் கொண்டே இருக்க -
மனைவி "எனக்கு வாய்த்த இந்தக் கணவன் சரியில்லை சாமி. இந்த மனுஷனிடம் பக்தியாக வாழ்ந்ததில் என் வயிறு பத்தி எரிந்ததுதான் மிச்சம்" என்று கணவனைக் குக்கிப் பேசினாள்.
சாக்கிய முனி, "கலியுகம்! ஒரு பெண்ணாயிருந்தும் இப்படியா பேசுகிறாயே. உண்மையில் உனக்கு இரண்டு கணவன்கள்!" இதைக் கேட்ட மனைவிக்கு தேள் கொட்டியது போல இருந்தது.
கணவனுக்கு உண்மையாக தூக்கிவாரிப் போட்டது. ஏமாற்றுக்காரிக்கு பயந்து பயந்தா நான் வாழ்ந்தேன்?" என்று யோசிக்க யோசிக்க கோபம் தலை உச்சிக்கு ஏறியது.
மனைவி, "சாமி, இவருக்கு இன்னொரு மனைவி இருப்பது உண்மை. ஆனால், நான்
மனமிருந்தாலும் இருப்பதைத்தானே கொடுக்க முடியும் - தாவோ கீதம் உங்களின் உணர்வில் இருக்கும் ஆனந்தத்தின் அளவைப் பொறுத்தே -நீங்கள் மற்றவருக்கு ஆனந்தத்தை அளிப்பதும் அழிப்பதும் அமையும்.
தர்மபத்தினி. கற்பூரத்தை என் கையில் ஏற்றுங்கள். அது சொல்லட்டும் நான் எப்படிப் பட்டவள் என்று" என்று கூற -
சாக்கிய முனி, "ஏ! மடப்பெண்ணே! அப்போ நீ முழு உண்மை தெரியாமல் இருக்கிறாய் - உண்மையில் உன் கணவனுக்கு நான்கு மனைவிகள். உனக்கு இரண்டு கணவன்கள்" என்று கூறினார்.
கணவன் குழப்பத்தின் உச்சிக்குச் சென்றுவிட்டான்: அது யார் எனக்கே தெரியாத அந்த மற்ற இரண்டு மனைவிகள்.
மனைவி ஒரு புத்திசாலிப் பெண். ஏற்கெனவே ஞானிகளைப் பற்றி தெரிந்து வைத்திருப்பவள். எனவே ஒரு ஞானி சொன்னால் அதில்
சிரிக்க உன் ஒவ்வொரு செல்களும் குதிக்கிறது சிரிப்பு உடலுக்குள் அள்ளித் தெளித்த ஆனந்த வறார்மோன்களாய்! ஒரு சத்தியம் இருக்கும் என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டாள்.
மனைவி, "சாமி என்னுடைய அந்த இன்னொரு கணவன் யார்?" என்று கேட்டாள்.
சாக்கிய முனி, "இங்கே முதல் கணவன். உன் கணவன் இப்படிப்பட்டவன் என்று நீ வைத்திருக்கும் உன்னுடைய அபிப்பிராயம்தான் அந்த இரண்டாவது கணவன்.
இங்கு இருக்கும் கணவன் வேறு. உன் மனதில் வாழும் உனது கருத்துச் சாயம் பூசப்பட்ட கணவன் வேறு.
நீ உடலளவில் மட்டுமே உன் கணவனோடு வாழ்கிறாய். மனதளவில் உண்மைக் கணவனோடு நீ வாழவில்லை. உன் கருத்துச் சாயம் பூசப்பட்ட இரண்டாவது கற்பனைக் கணவனோடுதான் வாழ்கிறாய்.
உன்னுடைய மனதில் இருக்கும் கணவன் வேறு. நிஜத்தில் இருக்கும் கணவன் வேறு' என்ற மிகப்பெரிய வாழ்க்கை உண்மையை மிக எளிமையாகப் புரிய வைத்தார்.
தன் கணவனுக்கு நான்கு மனைவிகள் எனச் சொன்னது ஏன் என்பது அப்பெண்ணுக்கு எளிதாகப் புரிந்தது.
மனைவி. "சாமி, அப்படியென்றால் எங்ககூட கூட்டமாக பலர் உட்கார்ந்திருப்பதாக நீங்கள் சொன்னது?' என்று கேட்க,
சாக்கிய முனி, "உன் மனதில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் உன் நல்ல, கெட்ட உறவுகளையும், உன் கணவன் மனதில் வாழும் உறவுகளையும், மொத்தமாகச் சேர்ந்தால் ஒரு கிராமமே உங்களுக்குள் வாழ்கிறது.
நீங்கள் பேசிக்கொள்ளும் போது இருவர் பேசிக்கொள்வதில்லை.
இரண்டு கிராமம் பேசிக் கொள்கிறது.
அது போல் சண்டையிட்டுக் கொள்ளும்போதும் இரண்டு கிராமமே சண்டையிட்டுக் கொள்கிறது.
"உங்கள் மனதில் இருக்கும் உங்களின் சொந்தக் கருத்துகளால் உருவாக்கப்பட்ட மனிதர்களை (கற்பனைகளை) துரத்தாத வரை சந்தோஷம், ஆனந்தம் சாத்தியமில்லை" என்று சொல்லி முடித்தார்.
இருவர் ஒன்றுசேர்ந்து வாழும் குடும்ப வாழ்க்கை மேலும் மேலும் சந்தோஷத்தையும் அழிக்கிறது என்பதற்கான காரணம் என்ன என்பது தம்பதியினருக்குப் புரிந்தது. கற்பனைகளைத் தூக்கி எறிந்து நிஜக் கணவன், நிஜ மனைவியாக வாழ ஆரம்பித்தார்கள்.
இந்தக் கட்டுரையைப் படித்த யார் வேண்டுமானாலும் நிஜ வாழ்க்கையை இன்றிலிருந்து வாழத் துவங்கலாம்!
Part 14: Open the Door... Let the Breeze in!
உறவுகளைப் பற்றிய கற்பனை வடிவங்களுக்கும் உங்களுக்கும் இடையில் நடக்கும் மனச்சச்சரவுக்கும், மன சஞ்சலத்திற்கும் வெளியில் இருக்கும் நிஜூறவுகளைக் குற்றம் சாட்டி கஷ்டத்துக்குள்ளாக்குறீர்கள். இந்த மந்தத்தனத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம்.
இன்றிலிருந்து நிஜத்தில் வாழ்ந்து மற்றவர்களுக்கு மேலும் மேலும் சந்தோஷத்தை அளிப்போம். சந்தோஷத்தை அழிக்கும் கற்பனைகளை அழிப்போம் !
அர்த்தமுள்ள சம்பவம் ...
டி.வி. நிகழ்ச்சியொன்றில் முகுந்த் மனைவியிடம், "உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?" எனக் கேட்டதற்கு,
''என் இரண்டு மகன்களும் நல்ல வேலையிலிருக்கிறார்கள்'' எனச் சொன்னார். நிருபர்!'' "மகன்களின் வயது என்ன?"
"டாக்டருக்கு வயது ஆறும். இன்ஜினியருக்கு வயது மூன்றும் ஆகிறது" எனச் சொன்னார் கலையாத கற்பனைகளோடு.
கற்பனைவலைக்குள் சிக்கிக்கொண்ட மின்மினிப் பூச்சிதான் மனம். தப்புவிக்கப்பட வேண்டும் !
காரணமேயில்லாமல் வரும் ஆனந்தமே ஆனந்தம்!
சாற்றும் பூமி நிற்பதில்லை. பூமி சுற்ற ஆளுமில்லை. ஆனாலும் அது நிற்பதில்லை. நிற்பதே இல்லை. எப்படி? ஏன் ? அதுதான் இயற்கை. உங்களின் இயற்கை என்ன ...
காரணமேயில்லாமல் துக்கப்படுவது மனித இயற்கை. காரணம் இருந்தால் மட்டுமே சந்தோஷப்படுவதும் மனித இயற்கையே.
ஒன்றைக் கேட்கிறேன்... சிந்தியுங்கள்!
காரணமேயில்லாமல் உங்களால் துக்கப்பட முடியும்போது, காரணம் இருந்துால் மட்டுமே சந்தோஷப்படுவதும் மனித இயற்கையே.
ஒன்றைக் கேட்கிறேன்... சிந்தியுங்கள்! காரணமேயில்லாமல் உங்களால் துக்கப்பட முடியும்போது, காரணமேயில்லாமல் உங்ளால் அனந்தப்பட முடியாதா ?
இரண்டுமே இயற்கையானது.
திடீர் என துக்கம் வர முடிந்தால் ... ஆனந்தம் வர முடியாதா ? எது பெரியது ?
அதனால் சும்மாயிருக்கும்போதே ஆனந்தப்படுவது சாத்தியமானதுதான்.
உங்களின் எல்லா சந்தோஷங்களையும் ஆராய்ந்தால் அதற்கொரு மூல காரணம் இருக்கும். உங்களின் விருப்பமாகவே அது இருக்கும்.
சந்தோஷத்தின் சாவி விருப்பத்தின் கையில் சிக்கிக் கொண்டுள்ளது.
விளைவு - உங்கள் விருப்பம் சம்பந்தப்பட்ட சந்தோஷ நிகழ்வுகளை மட்டுமே, 'சந்தோஷ நிகழ்வுகள்' என ஏற்றுக்கொள்வீர்கள்.
உண்மையிலேயே சந்தோஷமான நிகழ்வுகள் உங்களைச் சுற்றி நிகழ்ந்தாலும் அது உங்களின் விருப்பத்தோடு ஒத்துப்போகாததால், "இதுக்காகவா இவ்வளவு பெரிய சிரிப்பு ... ரொம்ப சிறுபிள்ளைத்தனமா இருக்கிறார்கள் ... ' என ஏதாவதொரு முத்திரை குத்தி, நிகழ்வுகளை மனதில் ஏளனப்படுத்தி விடுவோம். சந்தோஷத்தை அழிப்போம்.
சிட்டுக்கிளி உனை வெட்டுக் கிளி போல் ஆக்கியது. விருப்பம் எனும் மாயக் கூண்டு!
காரணகாரியங்கள் எனும் ஆட்டுவிப்பான் இருக்கும் வரை சந்தோஷம் என்பது எப்போதாவது பூக்கும் பூவாக மட்டுமே இருக்கும்.
விருப்பம் எனும் வரையறையைத் தாண்டுங்கள்.
காரணமேயில்லாமல் துக்கப்படுவது, காரணமேயில்லாமல் பொங்கும் ஆனந்தமாக மாறும் ... விருப்பங்கள் எனும் வட்டத்தைவிட்டு வெளியே வரும் நிமிடத்தில்!
புரிந்ததும்
புரியாததும்
எங்கே இருக்கிறார் கடவுள் ?
அனைத்து மதங்களின், அனைத்து ஆன்மீகப் பாதைகளின் - எல்லா வழிபாட்டுமுறைகளும் எல்லா தியானமுறைகளும் உங்களுக்குள் இருக்கும் இறைசக்தியின் விஸ்வரூபத்தை உணரத்தான்.
இரண்டே இரண்டு வகை மனிதர்கள்தான் சாத்தியம். கடவுளான மனிதர். மனிதராக இருக்கும் கடவுள்.
எங்கும் எதிலும் நிறைந்திருப்பவர் இறைவன் (GOD). மெய்ஞ்ஞானக் கூற்று. எங்கும் எதிலும் நிறைந்திருப்பது சக்தி (Energy). - விஞ்ஞானக் கூற்று.
படித்த எந்த ஒரு மனிதராலும் இரண்டையும் பொருத்துப் பார்த்து முடிவுக்கு வருவது எளிது.
அதாவது, மெய்ஞ்ஞானம் சக்தியைத்தான் இறைவன் என்று குறிப்பிடுகிறது. விஞ்ஞானம் இறைவனைத்தான் சக்தி என்று குறிப்பிடுகிறது.
இக்கேள்விக்கான பதிலைச் சொல்லும் முன்பு, ஒரு சிறிய கதை.
கடவுள் என்ற அந்த ஒன்றுதான் பிரபஞ்சம் உருவாகக் காரணம்! பிரபஞ்சம் உருவாகக் காரணம். ஏன். நீயும் பிரபஞ்சமும் இயங்குவதற்கே அதுதான் காரணம்!
சேவானந்தார் என்று ஒரு சீடர், வெளியூர் சென்று விட்டு வந்து கொண்டிருந்தார். தூரத்தில் ஒரே கூட்டம். என்ன நடக்கிறது என்று ஆவலோடு எட்டிப்பார்த்தார். சேவானந்தாருக்கு அதிர்ச்சி... நாய் ஒன்று தட்டில் கிடந்த சாப்பாட்டைச் சாப்பிட முயன்று கொண்டிருந்தது.
அதன் மீது சேவானந்தரின் குரு அமர்ந்து கொண்டு சவாரி செய்து கொண்டிருந்தார்.
சேவானந்தருக்கு ஒன்றும் புரியவில்லை. "என்ன கண்றாவி இது! குருவே, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?"என்று குழப்பத்தோடு கேட்டார். குருவோ சாவகாசமாகப் பதில் சொன்னார். "பார்த்தால் தெரியவில்லையா ... ? யாரோ ஒரு பிரம்மம். பிரம்மத்தில் பிரம்மத்தைப் பிசைந்து வைக்கிறது. அதை நாலு கால் பிரம்மம் சாப்பிட முயற்சி செய்கிறது. அதன்மேல் இன்னொரு பிரம்மம் சவாரி செய்கிறது. இந்த மாபெரும் நிகழ்ச்சியைப் பல பிரம்மங்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கின்றன. அவ்வளவுதான்!" என்றார் குரு.
குருவின் பேச்சைக் கேட்ட மக்கள், "என்ன பைத்தியக்காரத்தனம் இது!" என்று திட்டிவிட்டுக் கலைந்து சென்றனர். ஆனால், சீடர் சேவானந்தருக்கு மட்டும் குருவின் பேச்சில் மிகப் பெரிய உண்மை ஒளிந்து கிடப்பதாகத் தோன்றியது.
பக்கத்தில் இருந்த மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு தியானிக்கத் தொடங்கினார். தட்டும் பிரம்மம். சாப்பாடும் பிரம்மம். நாயும் பிரம்மம். குருவும் பிரம்மம். மக்களும் பிரம்மம் என்று குருவின் அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் சேவானந்தரின் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன.
சிறிது நேரம் கழித்து வார்த்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, உணர்வுகள் பெருக ஆரம்பித்தன. கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைச் சுற்றி உள்ள எல்லாமே பிரம்மம் என்பதைச் சேவானந்தரால் உணர முடிந்தது.
ஒவ்வொன்றிலும் இறைசக்தி, இறைவன் ஆனந்தமாக நடமாடுவதை அவரால் உணர முடிந்தது. ஒரு கணத்தில் எல்லாமே மாறிவிட்டது சேவானந்தருக்கு. நான் என்ற எண்ணம் மறைந்து, தான் என்ற உணர்வு பிறந்தது, 'எல்லாம் பிரம்மம்; எங்கும் பிரம்மம்; எனக்குள்ளும் பிரம்மம்' என்கிற பூர்ண அனுபவம் பிறந்தது. ஆனந்தம் என்னும் பெருங்கடல் தனக்குள்ளும் வெளியிலும் எப்போதும் நிரம்பிக்கிடப்பதை அனுபவித்தார். ஞானத்தின் முதல் அனுபவத்தைச் சேவானந்தர் பெற்று விட்டார்.
எல்லாம் பிரம்மம்; இறைவன் எங்கும் இருக்கிறார். எல்லா இடத்திலும் இறைசக்தி பரிபூர்ணமாக இருக்கிறது என்பதை எடுத்துச்சொல்லத்தான் இந்தக் கதையைச் சொன்னேன்.
இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார் என்றால், அவர் இல்லாத இடம் என்று ஓர் இடம், ஏன் ஓர் அணுகூட இருக்க முடியாது.
விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் பார் - ஒரு செல்லுக்குள் பிரபஞ்சமே தெரியும்!
இறைவன் சக்தி வடிவமானவர். இறைவன் உருவம் அற்றவர் என்பது ஆன்மீகத்தின் அடிப்படை உண்மை. இறைவன் ஒரு தனி ஆளாக இருக்க முடியாது. அது ஒரு சக்தியாக இருக்கலாம். இறைச் சக்திக்கு உருவம் கொடுப்பது மதங்கள்தான். -இது ஒரு நல்ல துவக்கம். முடிவு அல்ல.
இறைவன், சக்தி வடிவில் இருக்கிறார் என்பதற்கு என்ன ஆதாரம் ? இதற்குக் குவாண்டம் பிசிக்ஸ் (Quantum physics) அருமையான சொல்கிறது. விளக்கம் ஒவ்வோர் அணுவிற்குள்ளும் 99.99 சதவீதம் வெற்றிடம்தான் இருக்கிறது. அந்த வெற்றிடத்தில் கொடர்ந்து அதிர்வுகள்தான் இருந்துகொண்டே இருக்கின்றன. அந்த அதிர்வுகள்தான் சக்தியாக வெளிப்படுகின்றன. ஒவ்வோர் அணுவும் சக்திமயம். ஒவ்வொரு
மெய்ஞ்ஞானம் கண்ணோட்டத்தில் பார் -முழுப் பிரபஞ்சமே சாதாரண ஒரு சொல்லாகத் தெரியும்!
பொருளும் சக்திமயம். இன்றைய விஞ்ஞானம் அனைத்தும் சக்தியால் நிறைந்திருக்கிறது என்று கூறுகிறது.
இதைத்தான் 'இறைவன் சக்தி வடிவானவர்' என்றும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவர் என்றும் சொன்னார்கள் நம்முடைய ஞானிகள். இது மெய்ஞ்ஞானம்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் வளராத காலத்திலேயே, நம்முடைய ஞானிகள் இந்தப் பிரம்மாண்டமான உண்மையை எடுத்துச்சொல்லி இருக்கிறார்கள். மனித அறிவுக்கு எட்டாத, மனித மனதிற்குப் புலப்படாத ஏதோ ஒன்றை நிதர்சனமான அனுபவமாக உணர்ந்ததால் மட்டுமே, இவ்வளவு பெரிய உண்மைகளை அவர்களால் சொல்ல முடிந்தது.
சக்தி அழிவில்லாதது. ஒரு சக்தி இன்னொரு சக்தியாக மாறும். பேட்டரியில் சேமிக்கப்பட்ட மின்சாரம், ஒரு குறிப்பட்ட காலத்திற்குப் பிறகு மறைந்துவிடும். அதன் பிறகு இரும்புப் பட்டை, கார்பன் துண்டுகளில் ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பிரிந்து வேறு ஒரு பொருளாகவோ, அல்லது பேட்டரியாகவோ மாறிவிடும்.
அது போலத்தான் மனித உயிர் கருவான பின், ஒரு குறிப்பிட்ட காலம் வரை மனிதனாக இருந்துவிட்டுப் பின்பு காற்றில் கலந்து விடுகிறது.
காற்றில் கலந்த உயிர், மீண்டும் மனிதனாக உயிர் பெறுகிறது. இப்படிச் சக்தி மாறி மாறித் தோன்றிக்கொண்டே இருக்கிறது. பிரபஞ்ச இயக்கத்தில், பிரபஞ்சக் கால அட்டவணையில், மனிதத் தோற்றம் ஒரு கணநேர நீர்க்குமிழி போன்றது.
இறைவன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று ஞானிகள் சொன்னது இதைத்தான். மனிதனிலும் அடிப்படையாக இருப்பது சக்தியே. சக்தியே எங்கும் நிறைந்திருக்கிறது. அந்த சக்திதான் இறைவன் . ஒரு சக்தி இன்னொரு சக்தியாக மாறி உருவம் எடுத்தாலும் சக்தி எப்போதும் நிலைத்திருக்கிறது.
நமது உடல்கூட நமது உயிர்ச்சக்தியின் ஒரு போர்வை மட்டுமே. கடவுள் ஒவ்வொரு செல்லிலும் இருக்கிறார். ஒவ்வோர் அணுவிலும் இருக்கிறார்!
எல்லாம் இறைவன் விளையாட்டு!
" அவர் செய்யும் தவறுகள்கூடப் புனிதமானவை" எனச் சொன்ன ஜென் ஞானியிடம் ''யார் அவர்?'' எனச் சீடர் கேட்டார்.
"இறைவன்" என்றார் ஞானி. எல்லாமே இறைவனின் செயல். அதில் சிலவற்றை மனிதன் தவறு என்பதால் சிலவற்றைப் புனிதம் என்கிறார். உண்மையில் இறைவன் இரண்டுக்கும் இடைப்பட்டவர்.
மொத்தப் பிரபஞ்சமும் இறைவனின் விளையாட்டுக்களம். இந்த விளையாட்டுக்களத்தில் ... இறைவனின் அசைவுகள் ... ஒருவருக்கு நடனமாகவும் ஒருவருக்கு ருத்ர தாண்டவமாகவும் ஒருவருக்கு அமைதியின் முழுக்கமாகவும் தெரிவதே லீலை.
- ஆக்கம், அழித்தல், காத்தல்
என்ற மூன்று செயல்களையும் சர்வசாதாரணமாக நிகழ்த்தும் இறைசக்திதான் நம்மையும் ஆட்டிப்படைக்கிறது.
மொத்தப் பிரபஞ்சத்தின் மீது எந்த அளவிற்கு இறைவனுக்கு அக்கறை இருக்கிறதோ, அதே அளவுக்கு உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லின் மீதும் இறைசக்திக்கு ஆக்கறை இருக்கிறது.
-
உங்கள் உடலில் .... 'எந்த செல் எவ்வளவு நாள் வாழ வேண்டும். எந்த செல் எப்போது அழிய வேண்டும்' என்று திட்டமிடுவது நீங்கள் அல்ல. 'எந்த செல் எப்போது உருவாக வேண்டும். எந்தக் காரியம் எப்போது உலகில் நிகழ வேண்டும்' என்று திட்டமிடுவதும் நீங்கள் அல்ல.
-
அனைத்தையும் திட்டமிட்டு திட்டமிட்டபடியே எல்லாவற்றையும் திண்ணமாய் நடத்தி முடிப்பது இறைவன். எது நடந்தாலும் அது இறைக் கணக்குப்படி நல்லதில்தான் முடியும்.
-
முடிவு வரை பொறுத்திராமல் நடுவில் பார்த்தால் சில நேரம் நம்மைச் சுற்றிக் கெட்டது நடப்பது போலத்தான் தோன்றும். ஏன், இறைவன் என்ற ஒருவர் இருக்கிறாரா என்ற சந்தேகம்கூடத் தோன்றும்.
-
எல்லாம் இறைவன் விளையாட்டு என்னும் உண்மை புரியாதவரை விளையாட்டு வினையாகத்தான் தெரியும். புரிந்துவிட்டால் வினைக்கூட விளையாட்டாய் தெரியும்.
நிட்டி ராஜாருக்கு அன்று காலை ஒரு சந்தோஷமான செய்தி காத்துக் கொண்டிருந்தது.
வாழ்த்துக்கள் நிட்டி ! உனக்கு அஸிஸ்டன்ட் மேனேஜர் புரோமோஷன் கிடைத்திருக்கிறது. இந்தா ... " என்று அவருடைய புரோமோஷன் கடிதத்தைக் கொடுத்தார் M.D.
M.D. அறையைவிட்டு வெளியே வந்ததும் எல்லோரும் நிட்டியைப் புகழ்ந்தார்கள்.
நிட்டி, ''நல்ல விஷயம்… என்னை மாதிரி சாதாரண ஆளுக்கு இவ்வளவு பெரிய பதவி கிடைத்தது ரொம்ப பெரிய விஷயம்.
எல்லாம் இறைவன் விளையாட்டு" என்று சந்தோஷத்தோடு கூறிவிட்டுச் சென்றார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் அடுத்த செய்தி வந்தது.
கேட்டதையெல்லாம் கொடுக்கும் சக்தி கடவுளுக்கு உண்டு என நம்புகிறீர்கள். கேட்கிறீர்கள் ... ஆனால், கேட்டதை எப்போது, எப்படிக் கொடுக்க வேண்டும் என்ற புத்தியும் கடவுளுக்கு உண்டு என நம்ப மறுக்கிறீர்கள். கடவுள் வள்ளல் மட்டுமல்ல. புத்திராவியும் கூட!
M.D. "சாரி நிட்டி! தவறுதலாக பெயர் மாற்றி அடிக்கப்பட்டுவிட்டது.
பதவி உயர்வு கிடைத்தது ராம். மோகன் ராமுக்கு.
உங்களுக்கல்ல ...
சாரி, கஷ்டப்படாதீர்கள் நிட்டி!" என்றார்.
நிட்டி, "நல்ல விஷயம். எல்லாம் இறைவன் விளையாட்டு. இதில் நீங்கள் ஏதும் தவறு செய்ய வில்லையே. நீங்கள் ஏன் சாரி சொல்கிறீர்கள் ?
வருத்தப்படாதீர்கள்" என்று M.D -க்கு ஆறுதல் சொல்லிச் சென்ற நிட்டியை ஆச்சரியத்தோடு M.D. பார்க்கார்.
ஜனவரி 1 -2001. மேனேஜர் அறையில்...
M.D. " சாரி கஷ்டமாயிருக்கு எனக்கு..." என்றார்.
நிட்டி, "கஷ்டப்பட வேண்டாமென்று நேற்றே சொன்னேனல்லவா சார்..." என்று சமாதானம் சொன்னார்.
M.D. "நேற்றைய அதிர்ச்சியைவிட இன்று இன்னும் மோசமான செய்தி
வந்திருக்கிறது. உங்களை நம் சூப்ரவைசர் கோபாலுக்கு அஸிஸ்டன்டா பதவிக் குறைப்பு செய்திருக்கிறார்கள்.
சாரி. எனக்குக் கஷ்டமாயிருக்கிறது" என்றார்.
நிட்டி, "ஆஹா ... அப்படியா! இதுமாதிரியான பதவிக் குறைப்பு ஆயிரத்தில் ஒருவருக்கு நடப்பதே பெரிய விஷயம்தானே.
இறைவனின் இந்த விளையாட்டும் நன்றாகத்தான் இருக்கிறது.
நல்லது! என் சந்தோஷம் இதனால் பாதிக்கப்படவில்லை. நீங்க ஏன் கஷ்டப்படுறீங்க ? நிம்மதியா இருங்க சார்' என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு விட்டார்.
ஜனவரி 2-2001.
காலை 11.00 மணி.
M.D. "சாரி நிட்டி, எனக்கு ரொம்ப ரொம்பக் கஷ்டமாயிருக்கிறது ...
குழப்பம் கம்ப்யூட்டரில் நடந்த குளறுபடியால், நேற்று பதவிக் குறைப்பு செய்ததாய் தவறான செய்தி வந்து சேர்ந்துவிட்டது ... " என்றார்.
நிட்டி, "நல்ல விஷயம்தானே!
என் பதவிக் குறைப்புதான் சரியாகி விட்டதே. இன்னும் ஏன் கஷ்டப்படுகிறீர்கள்?' என்று கேட்டார்.
M.D. "நிட்டி,உங்களை வேலையிலிருந்தே தூக்கிட்டாங்க!'' என்று வருத்தத்தோடு சொன்னார்.
நிட்டி ஒரு முறை மேலே பார்த்துவிட்டு, "சார், லட்சத்துல ஒருத்தர்க்குக்கூட இப்படி நடக்காது. தப்பே செய்யாமல் தண்டனை கிடைக்காது.
காரணமே இல்லாம எப்படி வேலை போகும். சாத்தியமே இல்லை. இறைவன் என்னமா விளையாடறார் சார்!
எல்லாம் நல்லத்துக்குத்தான், ஒ.கே. நான் விடைபெறுகிறேன். நீங்க தேவையில்லாம கஷ்டப்படாதீர்கள். நிம்மதியாக இருங்க சார்!'' என்று கூறிவிட்டுச் சென்றார்.
"இந்த சூழ்நிலையை இப்படிக் கூட அணுக முடியுமா!" என்று ஆச்சரிய விழிகளோடு நிட்டி போவதையே பார்த்துக் கொண்டிருந்தார் M.D.
ஜனவரி 3 - 2001.
காலை 11.00 மணி.
தொலைபேசியில், "நிட்டி! உங்களுக்கு பதவி உயர்வு, பதவிக்குறைப்பு என்று வந்தது கம்பயூட்டரோட தவறில்லை. உங்களுக்கு பதவி பறிப்பு என சொன்னது என்னோட தவறு" என்று M.D. சொன்னார்.
நிட்டி, "அப்படியா! என்ன சொல்றீங்க?" என்று கேட்டதற்கு, "வேலையை விட்டுத் தூக்கபட்டது நிட்டி ராஜன். நீங்க இல்லை.
நீங்கள் எப்போதும் போல சூப்ரவைசர்தான். பதட்டத்துல இனிஷியலை தப்பா நான் படித்து, சாரி நிட்டி…'' என்று M.D. கூறினார்.
நிட்டி, "எல்லாம் இறைவன் விளையாட்டு. மூன்று நாளா விளையாட்டு படு சூப்பர் இல்ல..." என்று சிரித்துக்கொண்டே தொலைபேசியை வைத்தார்.
நாம் இறைசக்தியை நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது இருப்பது உண்மை. அது எங்கும் எதிலும் புகுந்து விளையாடிக் கொண்டிருப்பதும் உண்மை.
இந்த ரகசியத்தை ஆழமாகப் புரிந்துகொண்டால் நாமும் விளையாட்டை ரசிக்கலாம். ஏன், இறைவனோடு சேர்ந்து நாமும் விளையாடலாம்.
சிவராத்திரி தினத்தில்,
"இறைவனின் விளையாட்டில்,,,
இறைசக்தியின் வெவ்வேறு வடிவங்களான இவைகள் உங்களைக் கட்டுப்படுத்தும் சக்தி பெற்றவையே! தினம் தியானம் செய்து தியானசக்தியைப் பெற்றவர், அந்த இறைசக்தியையே தன் கைக்குள் கொண்டுவருவர்! ராகு கேதுகூட அந்த் சாதுவை எதுவும் செய்ய முடியாது!
வெற்றியும் வெற்றிதான்.
தோல்வியும் வெற்றிதான்.
இந்த இறைச் சித்தாந்தம் அனுபவமாகி விட்டதால் சிரிப்புக்கும் ஆனந்தத்திற்கும் பஞ்சமே இருக்காது'' என்று கேசவரிஷி சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார்.
பண்டிதர் ஒருவர் எழுந்து, "அது எப்படி சாமி, நகைச்சுவையும், சிரிப்பும் இருந்துக் கொண்டே இருக்க முடியும் ? இதற்கும் இறைச் சித்தாந்தத்திற்கும் என்ன சம்பந்தம் ?'' என்று கேட்டார்.
கேசவ ரிஷி, "உன்னைப் பார்த்து, நீயே சிரிக்க ஆரம்பித்தால் அதுவே பல காலம் தொடரும்" என்றார்.
பண்டிகர், "அதெப்படி சாமி?" என்று கேட்டார்.
கேசவ ரிஷி, பக்கத்தில் இருந்த சீடரைக் காட்டி, "இவரைப் பார். இவர் புத்தசாலி. ஆனால், இவர் தன்னை முட்டாள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால், நீங்கள் உங்களைப் பற்றிய உண்மை புத்தசாலி என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் ?'' என்று சொல்லி முடிக்க சுற்றி இருந்தவர்கள் சிரித்தார்கள்.
இறைவனை நீங்கள் நம்புவதால் இறைவனுக்கு எந்த பயனுமில்லை. உங்கள் நம்பிக்கையே உங்களை உற்சாகப்படுத்தும். அந்த நம்பிக்கையே உங்களை மகாராஜா போல் வாழவைக்கும்
"சாமி, நீங்க சொல்றது எனக்குப் புரிய வில்லை".
"இறைச்சித்தாந்தம் கேட்டுப் புரிந்துகொள்ளக்கூடியதல்ல. அனுபவித்துப் புரிந்துகொள்ள வேண்டியது" என்றார் கேசவ ரிஷி.
"எல்லாம் இறைவன் விளையாட்டு" என்பது சாதாரண கூற்றல்ல. மகா வாக்கியம்.
இந்த ஒரே ஒரு உண்மையை அனுபவப்பூர்வமாக புரிந்துகொண்டால், உடலில் உயிரோடு வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும் உலகில் ரசிக்க முடியும். இது முயன்றால் சாத்தியமாகக்கூடிய ஒன்றே!
அர்த்தமுள்ள சம்பவம் ...
குஃபி ஞானியிடம் நாத்திகர், ''கடவுள் எங்கேயிருக்கிறார், எப்படியிருக்கிறார்?'' எனக் கேட்டதற்கு, ''கடவுள்.. மலைக்குள் தூங்குகிறார். மலர் மற்றும் தாவரங்களுக்குள் மயங்கிக் கனவு காண்கிறார். மிருகங்களுக்குள் அசைகிறார். மனிதனுக்குள் விழித்திருக்கிறார்'' எனச் சொன்னார் ஞானி. மேலுள்ள வாக்கியங்களை ஆழமாகத் தியானியுங்கள். அது நிஜமாகட்டும் !
நீங்கள் குட்டிக்கடவுளாகலாம் இப்போதே!
கடவுள் இருப்பதை நிரூபிக்க முடியவில்லை. கடவுள் இல்லை என்பதையும் நிரூபிக்க முடியவில்லை.
பிரபஞ்சம் தோன்றியது இப்படித்தான் எனச் சொல்லும் (Big bang theory) -யால்கூட தோற்றுவாய் வரைதான் விவரிக்க முடிந்தது.
தோன்றுவித்தது சொல்ல முடியவில்லை. அவர்தான் ஏற்றுக் கொள்ளப்படக் எல்லாவற்றையும் படைத்தார் என்பதால்!
படைப்பாற்றல் கடவுளின் ரகசியம். ரகசியம், எல்லாம்.
கடவுளாகும் முன், மனிதா! கலைஞனாகு!
கடவுள் கருமி அல்ல, சுயநலவாதி அல்ல. என நிரூபிப்பதற்காக உங்களுக்குள் படைப்பாற்றல் வைக்கப்படவில்லை. அது கடவுள் தந்த சொந்தப் பரிசு! சொந்தப் பரிசு!
படைப்பாற்றல் கடவுளின் இரத்த ஓட்டம், அந்த இரத்த உறவு மனிதருக்குள் தொடர்கிறது.
படைப்பாற்றல் மிகுந்தவர்கள் கடவுளின் நேரடி மைந்தர்கள். அவரின் பாகங்கள் அவர்கள். செய்யும் செயலில் கவனம், அது செய்யும் விதத்தில் நயம், அது செய்யப்படுவதில் புதுமை சேர்ந்தால்
நீங்கள் செய்வது எதுவானாலும் அது படைப்பாற்றலை வெளிவருவது புதுப் படைப்பே.
செயலில் முழுக் கவனம், நயம், புதுமை தொடர்ந்து கலந்திட உங்களின் தனித்துவம் வெளிப்படும். ஆனந்தம் அரும்பும். தியானம் நிகழும்.
கடவுள் கலைத்துவம் மிக்க படைப்பாளி. நீங்கள் ஒரு படைப்பாளியாக மாறினால்... கடவுளை நெருங்குகிறீர்கள். தொடர்ந்து புதுமையாய் செய்யுங்கள். அப்படியே வாழுங்கள். நீங்கள் படைப்பாளியாகும் ஒவ்வொரு நிமிடமும் கடவுளின் உதிரம் உங்களுக்குள் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கடவுள்தன்மை வெளிப்படுகிறது.
படைப்பாற்றல் வெளிப்படும் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் ஒரு குட்டிக் கடவுளாகிறீர்கள். தியானம் நிகழ்கிறது!
ஏன் மனிதன் பிறந்தான் ?
மில்லா நஸ்ருதீன் தன் கால் அளவைவிட சின்னதாயிருக்கும் ஷீவையே விரும்பி அணிவார். நாள் முழுவதும் அந்த இறுக்கமான ஷீ தரும் வலியோடுதான் எல்லா வேலையும் செய்வார். இரவு வீடு திரும்பும்வரை ஷீவைக் கழட்டவே மாட்டார்.
நஸ்ருதீனின் எதிர்வீட்டுக்காரர், ஏன் அவர் இப்படிப்பட்ட ஒரு ஷீவை உபயோகிக்கிறார் எனக் கேட்டதற்கு,
"நாள் முழுக்க அந்த இறுக்கமாயிருக்கும். சிலநேரம் வலிக்குமளவுக்குக் கூட அழுத்தும்' என நஸ்ருதீன் சொன்னார். "என்ன மடத்தனம்! இதற்காகவா அந்த ஷீவை அணிகிறீர்கள்?' என வருத்தத்தோடு எதிர்வீட்டுக்காரர் கேட்டதற்கு,
''ச்சேச்சே... அதற்காக இல்லை. ஒரு நாள் முழுவதும் ஷூவோடு போராடி விட்டு, இரவு வீடு வந்தவுடன் அந்த ஷூவை கழட்டும்போது ஒருவித சுகம் உண்டாகும் பாருங்கள் ... அந்த சில நிமிட சுதந்திர சுகஉணர்வுக்காக ஒரு நாள் கஷ்டப்படுவது தவறே இல்லை!'' என்றார் நஸ்ருதீன்.
மனிதன் பிறந்தது ஏன் என்பது புரியாததால், சில நிமிட சுகத்தைத் தரும் பேர், பணம், சுகத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைப்பதுதான் மனித வாழ்வு முறை என்றாகிவிட்டது. அதனால்தான் பேர், பணம், மது மற்றும் எல்லாம் மனிதனுக்கு திருப்தியைத் தருகிறது.
மனிதன் சில நிமிடங்கள் மட்டும் ஆனந்தமாயிருக்க பிறந்தவனல்ல.
மனிதப்பிறவி என்னும் கண்கட்டி விளையாட்டில், நித்யானந்தத்தை மறந்தது விளையாட்டின் ஆரம்பம். நித்யானந்தத்தை அடைவது விளையாட்டின் முடிவு.
அதற்காக வாழ்க்கையை வீணடிப்பது புத்திசாலித்தனமல்ல.
★ இருந்தாலும் ஏன் நிலையாக இருக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோம் ?
இந்த ஒரு கேள்வி உள்ளே எழுந்தால் போதும். அதுவே நித்யானந்தத்திற்கு அழைத்துச் செல்லும்.
மனிதன் சந்தோஷத்திற்காகவும், தற்காலிக சுகத்திற்காகவும் அலைவது, கோடிஸ்வரன் கோடிஸ்வரனாக இருக்கும்போதே கையேந்தி பிச்சையெடுப்பதற்குச் சமம்.
மித்யானந்தம் சிற்றின்பம். நித்யானந்தம் பேரின்பம்.
நித்யானந்தம் உள்ளே இருப்பது மறந்து ஆனந்தத்தை வெளியே தேடித் தேடி மரத்துப் போகிறார் மனிதர். பின் மரித்துப் போகிறார்.
எந்த ஒரு சுகமாக இருந்தாலும், அந்த சுகம் அடைந்து முடிந்த பிறகு, அனுபவித்த திருப்தி முழுமையாகக் கிடைப்பதில்லை. காரணம் என்ன?
அனுபவிப்பதை அடையும் வரை இருந்த ஆர்வம், அடைந்து அனுபவித்த பிறகு மாயமாய் மறைந்துபோகிறதே! ஏன்?
மனிதர்கள் விரும்பும்போதெல்லாம் விரும்பிய அளவு சுகத்தை அனுபவிக்க வழி ஏதும் இருக்கிறதா?
இவைகள்தான் இன்றைய மருத்துவ ஆராய்ச்சியை ஆன்மீகம் நோக்கித் திரும்பியிருக்கும் வெகு பொது ஜன எதிர்பார்ப்புகள்.
மனிதர் இப்படி எதிர்பார்ப்பதின் மூலக்காரணம்தான் என்ன? அது எங்கேயிருக்கிறது ?
இதற்கு ஒரு அருமையான ஜென் கூற்று பதில் சொல்கிறது:
"முடிந்தவரை ஓடு ! விடியும் வரை ஆடு ! ஆசை தீர அனுபவி ! தவறே இல்லை. அப்பொழுதாவது உனக்குத் தெரியட்டும் ! நீ தேடுவது வெளியே இல்லை என்று ... "
வெறுமனே உணவு, உறக்கம், உறவு என்று வாழாமல், அதையும் தாண்டிய ஏதோ ஒன்றை அடையத்தான் மனிதர்கள் பிறப்பெடுக்கிறார்கள். அது என்ன?
கட்டுரையை கவனமாகப் படியுங்கள், புரியவரும்…
ஜுமல்கி அந்த ஊருக்கு வந்து சில மாதங்களே ஆகியிருந்தது. அன்று முரடன் ஒருவன் அவரை வம்பு செய்யும் நோக்கோடு வந்திருந்தான்.
தியானம்
ஓய்வுக்காக - பூரண ஓய்வுக்காக செய்யும் ஒரேயொரு உற்சாகச்செயல் தியானம்!
ஜுமல்கியின் குடிசை வெளியில், கரகரப்பான குரலில் முரடன், "ஏய்! யாரது வீட்டுக்குள்ளே!
இங்கே ஞானின்னு புதிதாக வந்திருப்பது யார்?
வெளியே வாச்சொல்...
நானா ? அந்தாளா ? பார்த்துடலாம்! ''
என்று மிரட்டல் விட்டுவிட்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.
ஜுமல்கி மெதுவாக வெளியே வந்து, 'அப்படி யாரும் இங்கே இல்லையே'' என்றார்.
முரடன், ''என்னை ஏமாற்ற முயற்சிக்காதே! நீதான் அது.
மக்கள் சொன்ன எல்லா அடையாளமும் உன்னிடம் இருக்கிறது ... நீ ஞானிதான்.
நீ ஞானிதான்'' என்றான்.
ஜுமல்கி வந்த சிரிப்பைத் தவிர்த்து விட்டு, ''இல்லீங்க. நான் என்னை ஞானின்னு ஒருபோதும் சொன்னதே இல்லை. நான் சாதாரண மனுஷன். மக்கள்தான் அப்படிச் சொல்றாங்க" என்றார்.
முரடன், ''ஏய் நீ ஏதேதோ எனக்குத் தெரியாத விஷயமெல்லாம் பேசி என்னை ஏமாற்றப்பார்க்கிறாய்... நான் பல இரவுகள் தூங்குவதே இல்லை.
இரவு முழுவதும் வேட்டையாடுவேன் .
உன்னால் இது முடியுமா?'' என்று பெருமை பொங்க சம்பந்தம் சம்பர்தமில்லாமல் கேட்டான்.
ஜுமல்கி, ''இதுக்கு சிங்கமாகவோ, புலியாகவோ பிறந்தா போதுங்களே! இதற்காக மனிதராகப் பிறக்க வேண்டிய அவசியமில்லையே…''
ஞானியின் பதிலடிக் கேள்வியால் உள்ளுக்குள் கொஞ்சம் தடுமாறினான் முரடன்.
| துன்பம் என்பதே இல்லை என்பதை | |
|---|---|
| 601 | தியானம் செய்பவரே அறிவார்! |
இதுநாள் வரை எதைப் பெரிய சாதனையென்று நினைத்திருந்தானோ, அதைச் சாதாரண மிருதுகுணமுடைய ஞானி சொன்னதில், மனதளவில் பெரிய அடி வாங்கியதைப் போன்று உணர்ந்தான்.
''அதிகரிக்கட்டும். என்னைக் கண்டால் இந்த ஊரே கட்டுப்படும். எல்லோரும் எனக்குப் பயப்படுவார்கள். உன்னால் முடியுமா?''
''இந்த ஊரில் யாராவது உனக்கு மரியாதை கொடுக்கிறார்களா ?
வெறும் பயத்தால் மக்களைக் கட்டுப்படுத்த அரக்கன் போதுமே ... அதற்கு மனிதராகப் பிறக்க வேண்டிய அவசியமே இல்லை. ''
சாதனை என்று முரடன் நினைத்திருந்த மனக்கோட்டை ஞானியின் சோதனையில் ஆட்டம் கண்டுவிட்டது.
''எல்லோரும் என்னைப் பார்த்து பயப்படுகிறார்களா ?
இல்லை என்னை மதிக்கிறார்கள். ?….'' என்ற கேள்விகள் முரடன் மனதில் மீண்டும், மீண்டும் வர ஆரம்பிக்க ...
ஜுமல்கி தொடர்ந்தார், "உன் மனது கெட்டுப்போயிருக்கிறது. அதனால் தூங்க முடியவில்லை. தூக்கம் வரவில்லை.
மனதில் கொஞ்சம்கூட ஈரம் இல்லாமல் மிரட்டினால் பயப்படுவார்கள்தான்.
இகத்தில் பெருமைப்படுமளவுக்கு என்ன சாதனை இருக்கிறது ?
உனக்குள்ளே வேதனை இருக்கிறது. அவ்வளவுதான்'' என்று சொல்லிவிட்டு ஜு-மல்கி குடிசைக்குள் சென்று விட்டார்.
பிறப்பு ஓர் அதிர்ச்சி இறப்பு ஓர் அதிர்ச்சி இரண்டிலும் கோமா நிலையைத் தொடுகிறான் மனிதன்.
இறப்பு - முழு விழிப்புணர்வோடு நிகழ், மனிதன் ஞானியாகிறான்.
பிறப்பு- முழு விழிப்புணர்வோடு நிகழ், ஞானி மனிதனாக அவதரிக்க வேண்டும்.
பதில் பேச முடியாத அளவுக்குச் சிந்தனையில் ஆழ்ந்த முரடன், அதே சிந்தனையோடு வீடு சென்றான்.
கிட்டத்தட்ட மூன்று நாட்களாக முரடன் வெளியே வரவில்லை. முரடன் மூன்று நாட்களாக எவ்வளவு முயன்றும் இரவு அவனால் தாங்க முடியவில்லை.
மக்களைப் பார்க்கவில்லை.
விஷயம் தெரிந்த மக்களும் நிம்மதி அடைந்தனர்.
மனம் சோர்ந்துபோய் நான்காவது நாள் காலையில் வெளியே வந்த முரடனின் நடையே மாறிவிட்டது. யாரையும் மிரட்டத் தோன்றாமல் நடந்தான். ஆச்சரியப்பட்டான்.
இதுவரை பார்த்ததால் பயந்து ஒதுங்கியவர்கள், இன்று தன்னைக் கண்டு கொள்ளாமல் செல்வதைப் பார்த்த முரடன் 'ஒரு வேளை!' ஞானி சொல்லியது போல் நான் மனுஷனாக வாழவே இல்லையா.. என்று யோசிக்க துக்கம் தாளாமல் ஓடி வந்து ஜூ-மல்கியின் குடிசை வாசலில் விழுந்தான்.
முரடன் முதுகில் தட்டிக் கொடுத்த ஜமல்கி, ''தகுதி பெற்று விட்டாய்! அழாதே.
மனிதராகப் பிறந்ததின் நோக்கத்தை அனுபவமாக உணரத் தேவையான அடிப்படைத் தகுதியைப் பெற்று விட்டாய். எழு!'' என்று ஆரத்தழுவிக் கொண்டார்.
முரடனைக்கூட முல்லை மலர் போல மாற்றுவது இவர் போன்ற ஞானிகளுக்கு எளிது.
''ஏன் பிறந்தோம்?'' என்ற கேள்வி உணர்வுப்பூர்வமாக உள்ளத்திலிருந்து எழுவதுதான் உங்களின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அறிந்துகொள்வதற்கான அடிப்படைத் தகுதி.
மனிதர் ஏன் பிறப்பெடுத்தார் என்பதற்கு ரிஷிகள் சொல்லும் பதில் -
"நிலையான, நிம்மதியான, எதனாலும் எப்போதும் அசைக்க முடியாத, நித்யமான ஆனந்தத்தை (முழுச் சுகத்தை) அடைய வேண்டும் என்பதுதான் மனிதப் பிறப்பின் அடிப்படை நோக்கம்".
''இந்த ஒரு உண்மை மட்டும் உங்களுக்குப் புரிந்துவிட்டால், விளையாட்டு சுவாரஸ்யமாகிவிடும்'' என்கிறார்கள்.
இந்தக் கூற்றுகள் உண்மை என்பதற்கு வாழும் ஞானிகளே சாட்சி. இதுபோன்ற சத்யங்கள் மனிதர்களுக்குத் தெரிந்திருந்தாலும், தெரியாவிட்டாலும் சுகம், திருப்தி, சமாதானம், நிம்மதி என்று மனிதர்கள் தேடுவது எல்லாமே இந்த நித்யமான ஆனந்தத்தைத்தான்.
இதுதான் மனிதரின் உச்சபட்சக் குறிக்கோள்.
இதை அடையத்தான் மனிதர்கள் பிறந்தார்கள்.
மனிதர் தேடுவது மனிதருக்கு வெளியே இல்லை. அது மனிதருக்குள்ளேயே தான் இருக்கிறது.
உங்கள் பிறப்பின் நோக்கமான ஆனந்தத்தை அடையச் செயல்படுங்கள். ஒரு நிமிடம்கூட வீணாக்காதீர்கள்.
அர்த்தமுள்ள சம்பவம் ...
ஒரு கண்டிப்பான பேராசிரியருக்கு அன்று பிறந்தநாள் விழா. எல்லா மாணவர்களும் அவரிடம் வந்து வந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னபோது அவர் நன்றி என்று சொல்லாமல், "Same to you... Same to you" என்றே சொன்னார். இது வினோதமாகப்பட்டதால் புதிதாய் வந்த பேராசிரியர் கேட்டார். ''ஏன் நன்றி சொல்லாமல், இப்படிச் சொல்கிறீர்கள்.''
அவர் சொன்னார், ''நானும் மாணவனாய் இருந்து வந்தவன் தானே! எனக்கு வாழ்த்துக்கள் சொல்லும்போது… அவர்கள் மனதில் என்னைப் பற்றி என்ன சொல்வார்கள் என்பது கூடவா தெரியாது!" என்றாராம்.
• ஏன் பிறந்தேன்? என்ற கேள்விக்கான பதில் அனுபவமாகாக வரை, இதுபோல் ஒருவரையொருவர் ஏமாற்றி வாழும் போலி வாழ்வு தொடரும். தவிர்க்க முடியாது.
ஆன்மீகம் வாழ்வின் ஒரு பகுதி அல்ல ... உங்களின் வாழ்வே ஆன்மீகம்தான் !
டூமிளையை விற்று, பட்டம் பெறுவது நவீன சட்டம்.
எளிமையை விற்று, நாகரிகம் பெறுவது நவீன ரகம். வாழ்க்கையை விற்றுப் பணம் பெறுவது நவீன குணம்.
பட்டம், நாகரிகம், பணம் பெற்றபின் திரும்பிப் பார்த்தால் பெற்றவரிடம் கீழ்கண்டவை காணவில்லை ... விற்றுவிட்டதால்!
-
- முளை:
-
- எளிமை:
-
- வாழ்க்கை.
மனிதர்கள் எதற்காக வந்தார்களோ அந்த வேலையை விட்டுவிட்டு. எல்லாவற்றையும் செய்து கொண்டேயிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், தன் மூலதனத்தையே விற்று விட்டு முடங்கிப் போயிருக்கிறார்.
வேலை கிடைப்பதற்காக படிக்கிறார். சம்பளம் கிடைப்பதற்காக உழைக்கிறார். நல்ல அந்தஸ்து கிடைக்கச் சாதிக்கிறார்... இவ்வளவு எதற்காக எனக் கேட்டால் வரும் பதில், "நல்ல வாழ்க்கைக்காக!"
நல்ல வாழ்க்கை வாழ என்ன படித்தீர்கள், என்ன உழைத்தீர்கள் ?
வாழ்கின்றேன் பேர்வழி என வாழ்வையே மனிதர்கள் இழந்து கொண்டிருக்கும் பரிதாபச் செயல் நிறுத்தத்திற்கு வரவேண்டும்.
வாழ்வு என்பது ஆனந்தமயமானது.
அதை மீண்டும் மனிதனுக்குக் கிடைக்கச் செய்யும் வழிமுறைகளின் தொகுப்புதான் ஆன்மீகம்.
எதைப் பெற ... இதை விற்றாய் ?
உலகம் ஒரு கியான களம்! விளையாட நீ தயாரா ?
நீங்கள் என்ன தேடினாலும் அதன் உள்நோக்கம் நிலையான, நித்யமான திருப்தி, நிம்மதி, ஆனந்தத்தை அடையத்தான் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா ?
இதுவரை உணராதவர்கள் இந்தக் கருத்துக்களைத் தியானித்து உணருங்கள், நீங்கள் யாராயிருந்தாலும்
உங்களின் இலக்கு ஆனந்தம்தான்.
உலகம் ஒரு தியானக்களம்! விளையாட நீங்கள் தயாரா?
நீங்கள் செல்லும் பாதை எதுவாயினும் அது ஆனந்த வழிச்சாலைகள்தான். அதைத் துரிதமாய் அடைய ஆன்மீகம் உதவும்.
எனவே சொல்கிறேன், ஆன்மீகம் என்பது உங்கள் வாழ்வின் ஒரு பகுதி அல்ல. உங்களின் வாழ்வே ஆன்மீகம்தான் (Spirituality is not a part time job, it is a full time job).
எனவே செய்யும் செயல் எதுவாயினும் அதை இன்னும் அழகாய் செய்யும் ஆன்மீகத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்.
பிறப்பின் நோக்கம் இறக்கும் முன் பூர்த்தியாகட்டும்!
நீரந்தரமான நீரந்தரமின்மை
புராண காலத்துக் கதையொன்று ...
பூனையைப் பார்த்து பயந்து நடுங்கிக்கொண்டிருந்த எலியைக் காப்பாற்ற நினைத்த மந்திரவாதி, அதை தன் மந்திரசக்தியால் பூனையாக மாற்றினார்.
பூனையாக மாற்றிய பின் அது நாயைப் பார்த்துப் பயப்பட்டது. எனவே அதை நாயாக மாற்றினார். மருவுரு எடுத்த நாய், வேட்டைக்காரனைப் பார்த்ததும் பயந்து நடுங்கியது. எனவே அதை ஒரு வேட்டைக்காரனாக மாற்றினார்.
உருவாக்கிய வேட்டைக்காரன் காட்டுக்குள் வந்தான்.
மந்திரவாதியைப் பார்த்த வேட்டைக்காரனின் மனதைக் கிலி பற்றிக் கொள்ள, சரி ஆனது ஆகட்டும் என நினைத்து அவனை ஒரு மந்திரவாதியாக மாற்றினார்.
புது உருவெடுத்திருந்த மந்திரவாதி அருகே ஒரு பெருச்சாளி வந்து நின்றது. கரப்பான்பூச்சியைப் பார்த்ததும் பீதியடைந்து கத்தும் சில பெண்கள் போல, எலியைப் பார்த்த புது மந்திரவாதி கத்தினான்.
''நீ எலியாக இருக்கத்தான் லாயக்கு எலியாகவே இரு!'' என திரும்பவும் எலியாகவே மாற மந்திரவாதி சபித்துவிட்டார்.
-
மனதிலிருக்கும் பயம், துக்கம், மனவேதனை போன்றவை நீங்கள் எந்த வேஷமெடுத்தாலும் நிரந்தரமான நிரந்தரமின்மைகள். இவை உங்களிடமிருந்து நிரந்தரமாகத் துரத்தப்படும் வரை என்ன செய்தாலும் எதைச் சாதித்தாலும் அதில் துக்கமானது இழையோடிக் கொண்டேயிருக்கும்.
-
ஆனந்தம் நிரந்தரம். துக்கம் நிரந்தரமான நிரந்தரமின்மை.
-
வாழ்க்கையில் ஏற்படும் கிடீர் அதிர்ச்சிகள்தான் நம்மை வாழ்க்கையின் அடுத்த பரிமாணத்திற்கு செல்லும் வானூர்திகள்!
-
அறியாமை இருளுக்குள் தூங்கும் நம் மனதை உலுக்கி, விழிக்கச் செய்யும் சம்பவங்கள்தான் -
வாழ்வில் நாம் சந்திக்கும் அதிர்ச்சிகளும் , எதிர்பாராத திருப்பங்களும்.
-
நிரந்தரமில்லா துக்கத்தை தொலைத்து நிரந்தரமான ஆனந்தத்தை அடைய, எந்தவொரு ஆர்வத்தோடு எதிர்க்கொள்ளலாம். தயங்க வேண்டியதில்லை. "அடுத்த ஏழாயிரம் வருடங்களுக்குள் தன்னைச் சுற்றியுள்ள எல்லா மலைகளையும் அரித்தே அழித்துவிடும் நயாகரா!" என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஏற்கனவே எழு மைல் சுற்றளவுக்கு உள்ள பாறையும் மண்ணும் அரித்தாகி விட்டது என்கின்றனர். நிரந்தரமாகத் தெரியும் எல்லாமே நிரந்தரமின்மைகள். 'மனம்' தான் வாழ்வை, மனிதனுக்குள் பாய்ச்சும் நங்கூரம்தான் - எதையும் நிரந்தரமாக்கிக்கொள்ளத் துடிக்கும் உத்வேகம். இந்த நங்கூரம் அறுபடாதவரை நிம்மதி, ஆனந்தம், ஆரோக்கியம் ஆகிய எல்லாமே வெறும் ஏட்டுச்சுரக்காய்களே!
-
வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுக்கும் என்னும் ஆசான்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். முன்னேற்றம் காணுவீர்கள். "வாழ்க்கையினை சொத்து, சுகத்தோடு நிரந்தரமாக கஷ்டமில்லாத வாழ்க்கை வாழ வேண்டும்''
என்ற ஒன்றை அச்சாணியாகக் கொண்டு,
வாழ்க்கைச்சக்கரத்தை நிரந்தரமில்லாத உலகத்தில் பள்ளம், மேடு, குழி எனப் பார்த்துப் பார்த்து ஒட்ட முயற்சித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு அன்பரும், கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை இது !
- அஞ்சு வருஷமாகியும் அப்படியே மகாலெஷ்மி மாதிரியே இருக்கியே! என் கண்ணே பட்டுடும்!
- ரொம்ப சந்தோஷம்... இவ்வளவு வருஷமாகியும் எதையும் மறக்காம இருக்கிறத நினைக்கிறப்போ....
- என்ன வாழ்க்கை இது, ஒரே மாதிரி போயிட்டிருக்கு ?
- மத்தவா இவ்வளவு பேர் நல்லாயிருக்கா, சிலரை மாத்திரம் ஆண்டவன் சோதிக்கிறான்!
- ஒரே மாதிரி கஷ்டத்துலேயே அவர் இருக்காரே ஏன்?
- வாழ்க்கையில் நல்லா செட்டில் ஆயிட்டான்! நிரந்தரமாய் ஒரு சொந்த வீடு! ஒரு வேலைன்னு இப்ப ரொம்ப நல்லாயிருக்கான்!''
இப்படி -நிரந்தரமானதை வளர்கின்றன. எது நிரந்திரம் ?
உறவானாலும் சரி, சொத்தானாலும் சரி, பதவியானாலும் சரி, மனிதன் அவற்றை நிரந்தரமாக்கிக்கொள்ளவே வெகு முயற்சி செய்கிறான். இது ஆற்றைக் கட்டிப்பிடித்து தன்னோடு வைத்துக்கொள்ள முயற்சிப்பதற்குச் சமம்!
இக்கேள்வியை மனதில் எழுப்பி விடை கண்டுபிடித்த பின்பு கட்டுரையைத் தொடருங்கள்.
இந்த நிமிடம் சென்னையில் ஒருவர் சுவாசிக்கும் காற்று, சென்னைக் காற்று. சில மணித்துளிகளில் அதே காற்று காஞ்சிபுரத்தை அடைந்ததும் காஞ்சிபுரத்தில் ஒருவர் அதைச் சுவாசிக்கும் போது அது காஞ்சிபுரத்தின் காற்று.
சென்னையின் காற்று, காஞ்சிபுரத்தின் காற்று என்பது அந்தந்த நிமிடத்திற்கு மாத்திரமே உண்மை போன்று தெரியும். உண்மையில் காஞ்சிபரத்தின் காற்று என்ற தனி காற்று இல்லவே இல்லை.
காற்று இருப்பது உண்மை. அது இடம் மாறிக்கொண்டே இருக்கிறது. இன்றைய பாரதக் காற்று நாளைய இலங்கைக் காற்று.
மனிதனின் உடலும் மனமும் இப்படித்தான் மாறிக்கொண்டே இருக்கின்றன. மனிதன் உயிரோடு இருக்கக் காரணமான காரண சக்தி (ஆத்மா) மட்டுமே உண்மை. நிரந்தரம்.
மற்றபடி இந்தப் பூவுலகில் உலா வரும் கருப்புசாமி, கோவிந்தசாமி என்பதெல்லாம் பாரதக் காற்று, இலங்கைக் காற்று போலத்தான். அந்த நிகழ்விற்கு (50, 60 வருட வாழ்க்கைக்கு மட்டுமே உண்மை) மாத்திரமே உண்மை போலக் தெரியும்.
உடல் தொடர்ந்து வளர்ந்து கொண்டும் சிதைந்து கொண்டும் இருக்கிறது. அதைத்தான் 'வளர்ச்சிதை மாற்றம்' என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மனிதர் ஒவ்வொரு சுவாசத்தின் போதும் பிறந்து கொண்டும் இறந்து கொண்டும் இருக்கிறார் என்று புத்தர் கூறும் தம்மபதத்தத்துவம் இதுதான்.
மனமானது தொடர்ந்து மலர்ந்து கொண்டும், மறைந்து கொண்டும் இருக்கிறது.
ஒரே நேரத்தில் நேர்மறை, எதிர்மறை இரண்டும் தொடர்ந்து நடந்து கொண்டே வர
மனித வாழ்வில் ஆனந்தத்தைத் தவிர மற்ற எல்லாமே நிரந்தரமான நிரந்தரமின்மைகள்தான்! இருப்பதுதான் உலக நியதி.
ஆனால், மனிதர்கள் மட்டும் அவர்களின் மனக்கோட்டையென்னும் (சுய எண்ணங்களாலும் சொந்தக் கருத்துகளாலும் கட்டப்பட்ட ) கருத்துக் கோட்டையில்....
உலகம் என்பது இதுதான்.
மனிதர்கள் என்பது இவ்வளவுதான்.
உறவு, உணர்ச்சி, உண்மை என்பது இதுதான் என்று சிலர் அறிந்தும் சிலர் அறியாமலும் பல மாயபொம்மைகளை மனக்கோட்டைக்குள் பிடித்து வைத்து அவற்றோடு குடித்தனம் நடத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.
நிஜம் ஒன்றாக இருக்க, மனிதர்களின் மனக்கருத்துக் கோட்டையில் இருக்கிறது.
அதனால்தான் நிரந்தரமான கருத்துக்கோட்டையில் இருந்து ...
வாழ்க்கை, சொத்து, சுகம், மனைவி, மக்கள் எல்லாம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்
எதுவும் தன் கருத்தைத் தாண்டி, தன் எதிர்பார்ப்பைத் தாண்டி, தன் ஆசையைத் தாண்டி போய்விடக்கூடாது என்பதற்காகவும் உழைக்க ஆரம்பிக்கிறார்கள். உழல ஆரம்பிக்கிறார்கள்.
மனம் கருத்துக்கோட்டையைப் பற்றிய மாயத்தை விளக்கும் ஒரு அருமையான சம்பவம்.
ஒரு முறை அத்வைத ஞானி திகம்பரரிடம் துக்கம் நிறைந்த கண்களோடு ஒரு பெண்மணி வந்தார்.
திகம்பரர், ''என்னம்மா, என்ன பிரச்சனை?'' என்று கேட்டார்.
பெண்மணி, ''சாமி, என் கணவன் இறந்துவிட்டார்… நீங்கள் முக்காலமும் உணர்ந்தவர். எல்லா வல்லமையும் பெற்றவர். சத்யத்தை அனுபூதியாக அனுபவித்தவர் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
உங்களுடைய தெய்வசக்தியால் எப்படியாவது என் இறந்து போன கணவனை எனக்கு உயிர்ப்பித்து கொடுங்கள். அதுபோதும் இந்த உலகில் வேறு எதுவும் எனக்கு வேண்டாம்'' என்று பக்தியோடு கேட்டாள்.
டைட்டானிக் கப்பல்
கடலில் நீந்திய முதல் நாளில் கப்பலின் கேப்டன் இப்படிச் சொன்னார், "இக்கப்பலை அக்கடவுள் நினைத்தால்கூட கவிழ்க்கவோ, மூழ்கடிக்கவோ முடியாது''
நிகழ்வுகள் நிச்சயம் உங்கள் கையில் இல்லை.
திகம்பரர், "எந்தக் கணவனை நான் உயிர்ப்பித்துக் கொடுக்கட்டும் ?' என்று திரும்பவும் கேட்டார்.
திகம்பரர் கேட்டக் கேள்வி அந்தப் பெண்மணியைத் திடுக்கிடவைத்தது. சுற்றியிருந்த மக்கள் மிகப்பெரும் அதிர்ச்சிக் குள்ளானார்கள். ஞானி அந்தப் பெண்ணுக்குத் தீர்வு கொடுப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க அந்த பெண்ணைக் கலங்கடிப்பார் என்று யாருமே எதிர் பார்க்கவில்லை.
பெண்மணி கேட்டார்.
திகம்பரர், ''நான் சரியாகத் தான் கேட்டேன். எந்தக் கணவனை நான் உயிர்ப்பித்துக் கொடுக்க வேண்டும் ?
உனக்குத் திருமணமான பின்ப வாழ்ந்த கணவனையா ? இல்லை,
திருமணமாகி சில வருடம் கழித்து வாழ்ந்த கணவனையா? இல்லை,
திருமணமாகி குழந்தைகள் பல பெற்ற பின்பு வாழ்ந்த கணவனையா? இல்லை,
இப்போது நீ இறந்ததாகச் சொல்லும் கணவனையா? எந்த நிலையில் வாழ்ந்த கணவனை நான் உயிர்ப்பிக்க வேண்டும். அதை முதலில் முடிவு செய்யம்மா. பின்பு அந்த நிலையில் உன்னோடு வாழ்ந்த கணவனை உயிர்ப்பிக்கலாம்'' எனச் சொன்னார்.
பெண்மணி இப்போது கலக்கம் நீங்கி குழப்பத்தின் உச்சிக்கே சென்று விட்டாள். ஆனால் ஏதோவொரு பெரிய உண்மை இந்த ஞானியின் பேச்சில் அடங்கியிருக்கிறது என்பது மாத்திரம் அவருக்குப் புரிந்தது.
எதிர்காலம் நிரந்தரமில்லாதது நிர்ணயிக்க முடியாதது! நிர்ணயிக்கக்கூடியது. நிரந்தரமானது நிகழ்காலம்
நிரந்தரமானதை நேசியுங்கள். நிரந்தரத்தில் வாழுங்கள்!!!
''எந்தக் கணவனை?...'' என்ற கேள்வி மட்டும் அப்பெண்மணியின் மனதில் தொக்கித் தொக்கி குழப்பிக்கொண்டிருக்க ….
துக்கத்தின் உச்சியில் இருந்த பெண்மணியை எதிர்பாராத அதிர்ச்சி வைத்தியத்தால் கலக்கத்தின் உச்சிக்கு எடுத்துச் சென்று அடுத்தடுத்த கேள்விகளால் குழப்பத்தின் உச்சிக்கு எடுத்துச் சென்ற திகம்பரர், அந்தப் பெண்மணியைப் பார்த்துக் கருணை நிறைந்த புன்முறுவல் புரிந்தார்.
பெண்மணி குழப்பத்தின் உச்சியிலிருந்தாலும் - தன் பிரச்சனைக்குப் பதில் கிடைத்துக்கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் மலர, பெண்மணியின் முகமும் மெல்ல மலர ஆரம்பத்தது.
நல்லவர்களுக்கு வாழ்க்கை எப்போதும் கஷ்டமளிக்காது. அப்படி அது கஷ்டமளித்தால் ... அல்லது அப்படி ஒருவர் உணர்ந்தால் ... இன்னும் அவர் நல்லவராகவில்லை என பொருள்!
திகம்பரர் நினைப்பது மனிதர்கள் நிலையானவர்கள் அல்ல.
சிறுவன்,
வாலிபன்,
நடுத்தரமனிதன்,
வயோதிகன்.
- என்ற நான்கு நிலையும் ஒரே மனிதன் வாழ்ந்து தாண்டினாலும் வெவ்வேறு நிலைகளில் மன நிலையோடு இருக்கிறார்கள்.
மனிதரின் இந்த நான்கு நிலைகளையும் பொருத்திப் பார்த்தால், அவை ஒன்றோடு ஒன்று பொருந்தாது. நான்கு நிலைகளும் நான்கு தனி நபர்களாகத் தோன்றும்.
வாலிபராகும் சிறுவன் இறந்துவிட்டார். சிறுவன் இல்லை.
நடுத்தர மனிதராகும் போது வாலிபர் இறந்து விட்டார். வாலிபர் இல்லை.
வயோதிகராகும் போது நடுத்தர மனிதர் இறந்து விட்டார். அவர் இல்லை.
இப்படி ஒவ்வொரு நிலையும் மாறும் போதும் முந்தைய நிலை இறந்துவிடுகிறது. இறப்புகளைத் தொடர்ந்து பார்த்தும் நம்மை வருத்தப்படாமல் பாதுகாப்பது நம் பற்று உணர்வு (என்னுடையது என்ற போலி உணர்வு ).
என் கணவர் என்ற இயல்பான ஒன்றை பற்றுச் சங்கிலியாக்குவது, என்னுடைய கணவர் என்ற அதீத கற்பனை.
பெண்ணே, இப்போது நீ வாழ்வது எதனால் ? என்று கொஞ்சம் யோசித்துப் பார் புரியும். கஷ்டத்திற்குக் காரணம் தெரியும்'' என்றார் திகம்பரர்.
இதைக் கேட்ட பெண்மணி மெளனம் சாதித்தார்.
திகம்பரர், ''உன் கணவரின் வாலிபம் இறந்து விட்டது. அதற்காக நீ இவ்வளவு அழவில்லை.
உன் கணவனின் நடுத்தர மனித உடல் மாறி வயோதிகத்தைத் தொட்ட போது நடுத்தர உடல் இறந்துவிட்டது. அதற்காகாவும் நீ அழவில்லை.
இப்போது வயோதிகக் கணவனின் உடல் இறந்ததற்காக மாத்திரம் அழுது துக்கப்படுவது, உனக்கே வினோதமானதாகத் தோன்றவில்லையா?''
உன்னுடைய அன்பு உடல் மீதா ? கணவன் மீதா? இல்லை...
என்னுடைய கணவன் என்ற உரிமை மீதா?" என்று கேட்டார்.
பெண்மணிக்கு யோசிக்க யோசிக்க என்ன புரிய வேண்டுமோ அது புரிந்து விட்டது. அப்படியே சாஷ்டாங்கமாக குருணியின் காலில் விழுந்தாள்.
பூமியால் சாப்பிடப்பட பிறந்த 'இரை' மனிதன். - குருட்ஜீஃப்
உயிர் உள்ள வரையில் ... பூமி, மனிதனின் உணவு. அப்புறம் மனிதன் பூமியின் உணவு.
இது ஒரு நிரந்தரமான கூற்று.
''உண்மையிலேயே நான் இறந்ததற்காகத்தான் கஷ்டப்படுகிறேனென்றால், ஒவ்வொரு காலத்தைத் தாண்டி வரும் போதும் என் கணவனின் பழைய உடல் இறந்ததற்காக நான் அழுதிருக்க வேண்டும். ஆனால் அப்படி நான் அழவில்லை.
இப்போது மட்டும் அழுகிறேனென்றால், நிச்சயமாக அது என் கணவன் என்ற உரிமை பறிபோனதால் வந்த ஏக்கத்தால்…'' என சிந்தனை செய்தார் பெண்மணி.
இந்த உண்மை புரிந்ததும் அந்தப் பெண்மணிக்கு மனதிலிருந்து பெரிய சுமை இறங்கிவிட்டது போலிருந்தது.
பழி யார் மீதும் அல்ல. பழக்கத்தை விழிப்புணர்வால் மட்டுமே அழிக்கலாம். எனவே விழிப்புணர்வை அதிகரியுங்கள்.
மாறிக்கொண்டே இருப்பதுதான் வளர்ச்சி!
இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் போதும். நிரந்தரமான உலக இயல்பு, நிரந்தரமாக இல்லாமல் மாறிக்கொண்டேயிருப்பது என்று எளிதாகப் புரியும்.
உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றம், எதிர்பாராத திருப்பம் ஆகியவற்றை சந்தோஷக் கோடு ஏற்றுக்கொண்டு வாழ்க்கைப் பாதையில் வளர்ந்து கொண்டே போவீர்கள். அனுபவ முதிர்ச்சி (Maturity) என்னும் அற்புத மலர் உங்களினுள் மலரும்.
அர்த்தமுள்ள சம்பவம் ...
அமெரிக்காவில் பரபரப்பைக் தூண்டிவிட்ட, ஒரு கன்சியூமர் கோர்ட் வழக்கு வினோதமானது.
காரணம் 'வழக்கு தொடுத்தவர்' - திருடன்!
'வழக்கு தொடுக்கப்பட்டது' - திருடப்பட்ட வீட்டின் மேல்!
'வழக்கு' - திருடச் சென்றவர் பயன்படுத்திய வீட்டின் கூரை இடிந்து விழுந்தால், திருடனுக்கு உடலில் பெருமளவு காயம் ஏற்பட்டுவிட்டது !
''எனக்கு திருடச் சென்றதற்கான தண்டனையளியுங்கள். ஆனால், திருடச் சென்ற நான் விபத்துக்குள்ளாகக் காரணமாக இருந்தது ஒழுங்காகக் கட்டப்படாத வீடு, அதனால் நஷ்ட ஈடு தரவேண்டும்'' என்ற திருடனின் வழக்குக்கு, வீட்டின் உரிமையாளர் - பெருமளவு பணத்தைத் தரவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது!
நாம் எதிர்ப்பார்க்காத கோணத்தில் வாழ்க்கையை எதிர்கொள்ள வைப்பது - 'நிரந்தரமின்மை' எனும் நிரந்தரவிதி. எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!
சந்தோஷம் தாண்டி உடல். உயிர்.
ஆவி எல்லாம் ஏவப்பட்டும் ...
இரு யுத்தங்களுக்கு இடைப்பட்ட காலத்தை அமைதி எனச் சொல்ல முடியாது.
அது, அடுத்த போருக்கான ஆயத்த காலம் மட்டுமே.
அதுபோல் இரு பெரும் துன்பங்களுக்கு இடைப்பட்ட நிகழ்வுகளை இன்ப நிகழ்வுகள் எனச் சொல்ல முடியாது. அது, சிறிய துன்பம் மட்டுமே. வேதனையின் அளவு குறைவதற்கு இன்பம் எனச் சொல்லக்கூடாது.
மனிதர்கள் சுகம், சந்தோஷம் எனச் சொல்வதெல்லாமே
குறைக்கப்பட்ட அல்லது வேறவிதக்கில் வெளிப்படுத்தப்பட்ட வேதனைகள் மட்டுமே.
இது உணரப்படாத வரை ... ஆனந்தத்தைப் பற்றி கற்பனைக்கூட செய்ய முடியாது.
ஆனந்தம் என்பது இடைவெளி இல்லாதது. துன்பம் என்பது நிரந்தரமான நிரந்தரமின்மை. சில இடைவெளிகளைக் கொண்டது. அந்த, இடைவெளிகளே சந்தோஷம். இது தாண்டப்பட வேண்டியது.
| துன்பம் உலக இயல்பு | உங்கள் மனதின் இயல்பு. |
|---|
ஆனந்தம் பிரபஞ்ச இயல்பு - உங்களின் ஆத்மாவின் இயல்பு.
வாழ்வில் ஒரே ஒரு முறை நீங்கள் ஆனந்தத்தை அனுபவித்திருந்தால்கூட போதும் ... அது நிரந்தரமாகியிருக்கும். ஏனென்றால் அது நிரந்தரமானது.
அதையடுத்து நிரந்தரமான நிரந்தரமின்மை என்னும் உலக இயல்பை மீறி பிரபஞ்ச இயல்புக்குள் குதித்திருப்பீர்கள், பாசக்கடல் தாண்டப்பட்டிருக்கும்.
நீங்கள் எவ்வளவு சந்தோஷங்களை வாழ்வில் சந்தித்தவராக இருந்தாலும் சரி... ஒரு சந்தோஷத்திற்குப் பின் ஒரு துன்பத்தை நீங்கள் அனுபவித்துவிட்டால் போதும், தெரிந்து கொள்ளுங்கள். அது சந்தோஷமல்ல, தோஷம். துன்பத்தின் இன்னொரு உரு!
இந்த உண்மை உங்களுள் ஆழ இறங்கட்டும். சந்தோஷம் தாண்டி ... உங்களின் மனம், உடல், உயிர், ஆவி
துன்பத்தின் கவர்ச்சிமிகு உரு சந்தோஷம்!
எல்லாம் ஏவப்படட்டும்.
ஆனந்தம் அடைந்தாக வேண்டும், அதுவே இலக்கு என்பது ஐஸ்கட்டியாய் மனதுக்குள் இளகட்டும்.
இந்த ஞானக்கருத்துக்களை உணர்ந்து தியானியுங்கள்.
எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள் !
வித்தியாசமான ஆசைகொண்டிருந்த அந்த இருபத்தேழு வயது நிறைந்தவர் சென்னையில் நடந்த தியான சத்சங்கம் ஒன்றில் சந்தித்தார். அப்போது ....
" ' ' உங்களுக்குச் சித்துவேலைகூடத் தெரியுமாமே ?'' எனக் கேட்டதற்கு, அவர் ஏன் அதுபற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறார் என விசாரித்தேன்.
"சித்து வேலைகள் ஒரு வகையான விளையாட்டு. அதன் சூட்சுமங்கள் தெரியாததால் மனிதர்களுக்கு அவை ஆச்சரியத்தைத் தருகின்றன. அது ஒன்றும் ஞானவெளிப்பாடல்ல. அது ஒரு சாதாரண வித்தை' என்ற சில அடிப்படை உண்மைகளை விளக்கிய பின்,
அவரிடம், ''சரி சொல்லுங்கள். எதற்காக எந்தச் சித்து வேலையைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள்'' எனக் கேட்டேன்.
அவரோ, ''எனக்குப் காளிமாதேவியை வசியம் செய்யும் கலை அல்லது மந்திரம் சொல்லித் தாருங்கள். காளியிடமிருந்து சில சக்திகளை நான் பெற விரும்புகிறேன்'' என்றார்.
அதற்கு, ''பதினெட்டு கைகளையுடைய காளியை வசியம் செய்வது
ஒருபுறமிருக்கட்டும். முதலில் உங்களுடைய இரண்டுகை காளியை (மனைவி) வசியம் செய்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்'' என்றேன்.
சொல்லி, எதிர்காலத்திலேயே உங்களை ஏதாவதொரு காரணம் மனமானது வாழவைக்கும். எதிரிலிருப்பவர்களையும் இருப்பவைகளையும் தொடர்ந்து இழக்கச் செய்து கொண்டேயிருக்கும். இந்தச் செயல் முடிவுக்கு வரவேண்டிய ஒன்று.
- சாகித்தவர்கள் கவலை கொள்வது இறந்த காலத்தை நீனைத்து! ' நினைத்து!
சாதிக்காதவர்கள் கவலைக் கொள்வது எதிர்காலத்தை நீணைத்து! நினைத்து!
எதிர்காலம். நிகழ்காலம், இறந்தகாலம்
- என மூன்று காலங்கள் இருந்தாலும் நம் இருப்பது கையில் எப்போதுமே நிகழ்காலம் மட்டுமே.
நம் கையை விட்டுப்போன இறந்தகாலம், இன்றும் நம் கைக்கே வராத எதிர்காலம்,
ஆகியன பற்றிய கவலை கொள்ளல்தான் நம் கையில் இருக்கும் நிகழ்காலத்தை அனுபவிக்கவிடாமல் தடுக்கின்றன.
- எப்போதுமே நம்மிடருக்கும் நிகழ்காலத்தை, எப்போதுமே நம்மிடமில்லாத இறந்தகாலம் மற்றும் எதிர்காலம் பற்றிய நினைவுகள், கவலைகளுக்காக பலிகொடுப்பது புத்தசாலித்தனமா? யோசியுங்கள்!
குரியன் அப்போதுதான் எட்டிப்பார்க்கும் நேரம் நூறு புதுத் துறவிகளோடு நந்தவனத்தில் துறவிகளுக்கான விதிகளை புத்தர் சொல்ல ஆரம்பித்தார்.
ஒவ்வொரு விதியாக சொல்லிக் கொண்டே வந்தார்.
அதில் ஒன்று ...
' துறவிகள் துறவறத்தில் பெண்களை நெருங்கக்கூடாது. பெண்களைப் பார்ப்பதைக் கூடக் கூவிர்க்க வேண்டும்.
பெண்களின் பாதங்களைப் பார்த்த உடன் ஒதுங்கிவிடுங்கள். நிமிர்ந்துகூட பார்க்காதீர்கள்'' என்று புத்தர் சொல்லிக்கொண்டே வர....
புதுத் துறவிகளில் ஒருவரான நாதநீதன் எழுந்து, "ஒருவேளை அந்தப் பெண் எனக்கு வணக்கம் கெரிவித்தால், நான் என்ன செய்வது?" என்று கேட்டார்.
நாதரீதன், பேசிக் கொண்டிருக்கலாம். தப்பில்லை என்கிறீர்களா?'' என்று எதிர்கேள்வி கேட்டார்.
"வரை! என்ன விதியைத் தலைகீழாக்குகிறாய் ? வணக்கம் கூறிவிட்டு உடனே அங்கிருந்து நகர்ந்துவிடு''.
"ஒருவேளை! அந்தப் பெண் என்னிடம் உதவிக்கேட்டால் …. அதாவது, 'இந்த இடத்திற்கு எப்படிப் போவது? இந்த கூடையைத் தூக்கி விட முடியுமா?' என்பன போன்று உதவிகள் கேட்டால் என்ன செய்வது ?''
''ம்ம்... தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், வேறு யாரும் அருகில் இல்லாத காரணத்தால், நாம்கான் உதவியாக வேண்டும் என்றிருக்கும் போது உதவி செய்யலாம் கப்பில்லை''.
"ஒருவேளை! அந்தப் பெண் என்னிடம் 'இது இரவு வேளை. வழிப்பறிக் கொள்ளையர்களை நினைத்தால் பயமாக இருக்கிறது. உங்களை நம்புகிறேன். தயவு செய்து என் வீடு வரை வந்து என்னை விட்டுச் செல்ல முடியுமா?' என்று கேட்டால் நான் அந்தப் பெண்ணோடு போகலாமா? கூடாதா?"
"என்னப்பா இப்படிக் கேட்கிறாய்!
மக்களுக்குச் சேவை செய்வதும் துறவியின் பணிகளில் ஒன்றுதான். இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் சமுதாய நலன் கருதி உதவலாம். தப்பில்லை.
ஆனால் அதைச் சாக்காக வைத்துக்கொண்டு அந்தப் பெண்ணோடு பேசக்கூடாது. தொடக் கூடாது".
எதிர்காலம் பற்றிய நிகழ்கால பயங்கள் எதிர்காலத்தைப் பாழக்குகின்றன!
சரி. "நான் பேசாமல், தொடாமல் அந்தப் பெண்ணோடு பாதுகாப்பு கருதி அவள் வீடு வரை சென்று கொண்டிருக்கும் போது
ஒரு வேளை அந்தப் பெண் ஒரு பெரிய குழியில் தடுமாறி விழுந்துவிட்டால் என்ன செய்வது ? அப்போது தொட்டுத் தூக்கிவிடலாமா? ''
"வேறு வழியில்லை. காப்பாற்றித்தான் ஆக வேண்டும். கைப்பிடித்துத் தூக்கி விடத்தான் வேண்டும்.
இதுபோன்ற விபத்துக்களில் தொடலாம். தப்பில்லை. காப்பாற்றி வீட்டில் விட்ட கையோடு திரும்பி விட வேண்டும்.
காப்பாற்றியதைச் சாக்காக வைத்து அந்த வீட்டிற்குள் செல்லக்கூடாது''.
''அந்தப் பெண்ணை வீட்டில் விட்ட உடன் ஒருவேளை! அந்தப் பெண் என்னிடம் 'என் தந்தை இன்னும் வீடு திரும்பவில்லை. அண்ணனும் வீட்டில் இல்லை.
ஆற்றங்கரையோரம் என்னை அடிக்கடி வம்பு செய்யும் ரவுடி, இந்த தெருவில் சுற்றிக் கொண்டிருக்கிறான்.
ராம் வரும் போதே அதைக் கவனித்து விட்டேன். என் தந்தை அல்லது அண்ணன் வரும் வரை வீட்டில் இருங்களேன்.' என்று கெஞ்சி கேட்டால் என்ன செய்வது ? ''
சுற்றி உட்கார்ந்த எல்லாத் துறவிகளும் நாதநீதன் கேட்டுக்கொண்டே போவதைப் பார்த்துக் குழம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.
சாதாரண மனிதர்களால் நாதநீதனின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பது கடினம்.
ஞானிகள் அவர்களின் பதிலிலும் செயலிலும்தான் பெரும்பாலும் தாங்கள் ஞானி என்ற முத்திரையிட்டுச் செல்வார்கள்.
புத்தர், ''ஆமாம், ஆமாம். ஒருவேளை... அப்பெண்ணின் அண்ணனும் தந்தையும் வராமலே போகலாம். அதனால் அன்றிரவு நீ அங்கே தங்கியே ஆக
| ம் | நாம் வேறு , | | - | நீகழ்காலம் வேறு | | யா | என பிரிக்கவே முடியாது! | | S | - | | 5 | |
வேண்டிய கட்டாயம் வரலாம்.
அடுத்த நாள் காலையில் அவள் தந்தையும் அண்ணனும் விபத்தில் இறந்ததாகச் செய்தி வாலாம். பாவம்! அனாதையாக நிற்கும் பெண். உன்னிடம் அபயம் கேட்கலாம். நீயும் மனமிறங்கி அந்தப் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கலாம்.
அப்புறம் கணவன் - மனைவியாக நீங்களிருவரும் ஆசீர்வாகம் வாங்க என்னிடமே ஒருவேளை வரலாம்'' என்று விறுவிறுப்பாக பேச....
பத்தரின் திருப்பத்தைப் பார்த்த நாதநீதன் உள்ளுக்குள் நடுங்க ஆரம்பித்து விட்டான்.
புத்தர் தொடர்நது, "ஒருவேளை நீங்களிருவரும் என்னிடம் ஆசிர்வாகம் வாங்க வரும் போது ....
'அறிவு கெட்ட உனக்கெல்லாம் எதுக்கு துறவறம் ?' என்று கூட அப்போது நான் கேட்கலாம்.
அதை இப்போதே கேட்கிறேன். சாதாரண கற்பனைகளையே தாண்டாத உனக்கெல்லாம் எதுக்கு துறவறம் ? காவியைக் கீழே போடு!
மீண்டும் சேர்ந்து நான் சொல்லும் வரை மவுன விரதத்தில் இரு'' என்று கூறி அனுப்பிவிட்டார்.
ஒரு வேளை...
அப்படியிருக்குமோ ... இப்படி நடந்து விட்டால் ...
என்று எதிர்காலத்தில் நடக்கச் சாத்தியமான அசம்பாவிதங்களைப் பற்றி யோசிப்பதும், அதற்கான வருமுன் காப்பது பற்றிய காரியங்களை யோசிப்பதும் நிச்சயமாக புத்திசாலித்தனமான செயல்கள்தான்.
இறந்த காலம் உண்மையில் இறந்தது. அதனால்தான் அப்படி அழைக்கப்படுகிறது.
எதிர்காலம் உண்மையில் எதிரானது. அதனால்தான் அப்படி அழைக்கப்படுகிறது.
பரீட்சையில் தோற்றுவிட்டால் ... தொழில் நஷ்டம் வந்துவிட்டால் ... அந்த நோய் வந்துவிட்டால் ...
என்று யோசிப்பதும் யோசித்தபின் எதிர்காலத்தை அருமையாக வைத்துக்கொள்ள நிகழ்காலத்தை பயன்படுத்தி அசம்பாவிதங்களைத் தடுக்க முயற்சிப்பதும், தடுப்பதும் இரண்டுமே புத்தசாலி செய்யும் காரியங்கள்தான்.
ஒருவேளை இப்படி நடக்கலாமா, இல்லையா என்பது பற்றிக் கொஞ்சம்கூட யோசிக்காமல், எதிர்காலத்தின் அருமை தெரியாமல், நிகழ்காலத்தை வெறுமனமே வீண்டிப்பது, முட்டாள் செய்யும் காரியம்.
| ஒருவேளை - ஒருவேளை என்று சதா எதாவது நடந்துவிடுமோ என்று நினைத்து, பீதியடைவது - இது மனக்கட்டுப்பாட்டை இழந்தவர்கள் செய்யும் காரியம். | |||
|---|---|---|---|
| வார்த்தைகளே எண்ணங்களாகின்றன | எதிர்கால பயம் பற்றி, ஜே. கிருஷ்ணமூர்த்தி அருமையான ஞானவரிகளில் கூறியிருக்கிறார்… | ||
| எண்ணங்களே செயல்களாகின்றன செயல்களே பழக்கங்களாகின்றன பழக்கங்களே குணங்களாகின்றன குணங்களே மனிதனை நிர்ணயிக்கின்றன | ' ' ' நூறு கற்பனைகளில் ஒன்றுகூட நிஜமாவதில்லை. அப்படியே ஒன்றிரண்டு நிஜமானாலும் அது நம் நன்மைக்கே''. | ||
| இந்த 'வாழ்க்கைச் சுற்றி' எங்கு விழிப்புணர்வைப் புகுத்தினாலும் அங்கு தியானம் நிகழும். | தொழில், உறவுகள், சமுதாய அந்தஸ்து, பதவி ஆகியவற்றின் அசம்பாவிதங்கள் பற்றிய நம் கற்பனை பயங்களுக்கு ஜே. கிருஷ்ணமூர்த்தியின் ஞான வரிகள் அப்படியே பொருந்தும். | ||
| காரணம், அங்கு நீங்கள் நிகழ்காலத்திலிருக்கிறீர்கள்! | ''இப்பபடி நடந்துவிடுமோ! அப்படி நடந்துவிடுமோ!" |
என நாம் எதிர்காலம் பற்றிப் பயப்படும் நூறு கற்பனை பயங்களில் ஒன்றுகூட நிஜமாவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. அப்படியே நாம் பயந்தபடியே ஏதோ ஒன்று நடந்துவிட்டால்கூட அதுவும் நம் வளர்ச்சிக்கே.
வாழ்க்கை என்பது தொடர்புகள் நிறைந்த சாலை.
அது பெரும்பாலும் நாம் கற்பனை செய்யாத புதிர்களை வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறது. அவற்றைத் தவிர்க்கவும் நம்மால் முடியாது.
ஒருவேளை- ஒருவேளை - என்று எதிர்காலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைவிட.
இவ்வேளை - இவ்வேளை - என்று நிகழ்காலத்தை முழுமையாக எதிர்கொள்ள ஆரம்பியுங்கள்.
நிகழ்காலத்தைச் சரியாகக் கையாள ஆரம்பித்துவிட்டால் எதிர்காலத்தை பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.
ஏனென்றால்....
இன்றைய நிகழ்காலம் என்பது நேற்றைய எதிர்காலம்.
நாளைய எதிர்காலம் அது சந்திக்கப்படும் போது நிகழ்காலமாயிருக்கும்.
எனவே நிகழ்காலத்தைச் சந்திக்கத் தெரிந்தால் போதும். எதிர்காலத்தை பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.
கவலைப்பட்டாலும் கவலைப்படாவிட்டாலும் சந்தித்தே ஆக வேண்டிய எதிர்காலத்தை எதிர்கொள்ளத் தயாராவதே புத்திசாலித்தனம்.
எதிர்கொள்ள ஆரம்பியுங்கள் நிகழ்காலத்தை!
வாழ ஆரம்பியுங்கள் நிகழ்காலத்தில்!
கவலைகளாலும் தேவையற்ற சிந்தனைகளாலும் வீணாகும் நேரமும் சக்தியும் மிச்சமாகும், செயலும் எண்ணமும் தெளிவாக ஆரம்பிக்கும்.
நிகழ்காலத்தில் நினைவொன்றி வாழ வாழ நிச்சயம் வாழ்வு வளமாகும்.
அர்த்தமுள்ள சம்பவம் ...
மலை உச்சியிலிருந்த நிட்டியின் மனைவி பயத்தில் கேட்டார்: ''ஏங்க! ஒருவேளை இங்கேயிருந்து கீழே விழுந்துவிட்டால்… ?''
அதற்கு டூரிஸ்ட் கைடு சொன்னார், ''மேடம்! அப்படியேதும் விழுந்துவிட்டால், அப்போது உங்களின் இடப்பக்கத்தில் தெரியும் அழகான காட்சிகளை ரசிக்கத் தவறாதீர்கள்" என்கிறார்.
- இது வெறும் ஜோக்கல்ல. டெக்னிக். அதிர்ச்சிகளைச் சந்திக்கும்போது மட்டும் நிகழ்காலத்தில் இருந்துவிட்டீர்களென்றால், அந்த நிமிடத்தில் ஆத்மச்க்தியை நீங்கள் தொட்டுவிடுவீர்கள்.
இந்த நிமிடம் ஜெயிக்காவிட்டால் ...
எந்த நிமிடம் ஜெயிக்கப் போகிறீர்கள்?
துணைக்கு நிச்சயம் புலி பிறக்காது. அதுபோல் துன்பப்படும் மனிதருக்கு நிச்சயமாய் ஆனந்தம் பிறக்காது.
அவர் துன்பப்படும்வரை இது உண்மை. மாற முடியாதது. துண்பமிருக்கும் வரையில் இது மாற்ற முடியாததும்கூட.
ஜெயம்!
ஒரு மழைத்துளி பூமியை வந்து தொடுவதை, அந்த மழைத்துளியே நினைத்தாலும் தடுக்க முடியாது. காரணம் புவிஈர்ப்பு விதி!
| கொட்ட ஆரம்பித்த மழை, பூமியில் கொட்டியே தீரும். உங்களுக்குள் துக்கம் கொட்ட ஆரம்பித்துவிட்டால் அதை | என்றோ |
|---|---|
| உங்களால் தடுக்க முடியாது. இது மன இயல்பு விதி. | எங்கோ |
| இந்த நிமிடத்திலிருந்துதான் | பூக்கும் |
| அடுத்த நிமிடம் பிறக்கிறது. | பு அல்ல |
எதிர்காலம் பிரசவமாவது ...
நிகழ்காலத்தில் இருந்துதான்!
'பிறக்கப்போவது புலியா? பூனையா ?' என்பதை முடிவுசெய்வது இயற்கை.
அடுத்த நிமிடம் நீங்கள் ஆனந்தமாக இருக்கப் போகிரீர்களா, இல்லையா ? என்பதை நிர்ணயிப்பது நீங்களல்ல, நிகழ்காலம். எனவே எதிர்காலத்தின் தாய் நிகழ்காலம்.
இந்த நிமிடம் நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் ? ... ஆய்வு செய்யுங்கள்.
அப்படித்தான் அடுத்தடுத்த நிமிடமெல்லாம் இருக்கப் போகிறது.
அப்படித்தான் வாழ்க்கையே அமையப் போகிறது.
இந்த நிமிடம் ஆனந்தமாகிவிட்டால் அடுத்தடுத்த எல்லா நிமிடமும் ஆனந்தமாகிப் போகும்.
எதிர்கால வாழ்க்கை ஆனந்தமயமாக இருப்பதை முயன்றாலும்கூடத் தடுக்க முடியாது.
ஞானிகள் எப்போதும் ஆனந்தமயமாகவே இருக்கும் ரகசியம் இதுதான். வாழ்வில் ஒரு முறை ஆனந்தத்தை ருசித்தவர்களால் மீண்டும் ஒரு முறை துக்கப்படவே முடியாது.
உங்களாலும் இது முடியும்.
தியான காலத்தில் அது கிடைக்கும்.
முதலில் துக்கப்படும் மனதை மாற்றுங்கள்.
இந்த நிமிடத்தில் ஆனந்தமாக இருங்கள்! இருங்கள்!
ஆனந்தமாகவே இருப்பீர்கள்! இது ஒரு டெக்னிக்.
நிகழ்காலத்தில் ஆனந்தத்தைக் கருத்தரிக்கச் செய்யுங்கள். நிச்சயம் உங்களால் முடியும். இந்த நிமிடத்தை ஜெயித்துக்காட்டுங்கள்!.
மரணம்
மனித எலும்புகள் குவிந்திருந்த இடத்திலிருந்த ஞானி டயோஜீனஸ். அந்தக் குவியலை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த மாவூர் அலெக்சாண்டருக்கு ஆச்சரியம்.
ஆர்வம் மேலிட அலெக்சாண்டர் கேட்டார் "இந்தக் குவியலுக்குள் அப்படியென்ன ஆராய்ச்சி, என்ன தேடுகிறீர்கள்?''
ஞானி டயோஜீனஸ், "என்னால் கண்டுபிடிக்க முடியாத ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன் ? " என்றார்.
''அவ்வளவு வினோதமானதா அது ?''
''ஆம். இந்தக் குவியலில் உள்ள உன் தந்தையின் எலும்புகளுக்கும் அவரது அடிமையின் எலும்புகளுக்கும் வித்தியாசம் ஏதுமிருக்கிறதா எனத் தேடுகிறேன் ... இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை'' என்றார் ஞானி.
ஜனனத்திற்கும் மரணத்திற்கும் இடையில்தான் எல்லா வேறுபாடுகளும் தெரிகிறது. இருக்கிறது. அப்புறம் இல்லை.
மனிதன் மரணிக்கும் போது உடல் இறக்கிறது. மனம் தன் கதையைத் தொடர்கிறது. மீண்டும் ஜனனம்! மீண்டும் மரணம்!
சாம்பல்கூட மிஞ்சாத அளவுக்கு உடலை எரித்தாலும் சாகாத மனம் சாக வேண்டாம். இந்த நிகழ்வுதான் நிஜமான மரணம்.
இந்த சுபநிகழ்வு நிகழும்போதுதான் மனிதர் தெய்வமாகிறார். பக்தர் புத்தனாகிறார்.
வெளிமுச்சில் மரணமும் தொடர்ந்து நிகழ்திறது.
இந்த மரணத்திற்கும் உயிர் உடலைவிட்டுப் பிரியும் போது நீகழும் மரணத்திற்கும் வித்தியாசங்கள் மிக மிகக் குறைவு.
மூச்சை விழிப்புணர்வோடு எதிர்கொள்வது மரணத்தை எதிர்கொள்வதற்குச் சமம்!
மனம் உயிரோடிருக்கும் வரை நீங்கள் வாழ்வதில்லை. மனமே உங்கள் மூலமாக வாழ்கிறது. மனம் மரணிக்கும் போதுதான் முதல் பிறக்கிறீர்கள்.
- பிறந்துகொண்டே, இறந்து கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்.
- என்றோ பிறந்த மனிதர்,என்றோ ஒரு நாள் இறப்பார் - என்பது மாயை.
- ஒவ்வொரு நொடியும் பிறப்பும் இறப்பும் உடலில்சம அளவில் நடந்து கொண்டே இருக்கிறது.
- இது அறிவியல்பூர்வமான
- உண்மையும் கூட!
- மரணத்தை நேருக்கு நேராகச் சந்தித்துவிட்டால் அடுத்த கணமே ஞானம் கிடைத்துவிடும்.
' 'கத்தியில்லாமல் கொலை செய்!
முயற்சியின்றி செத்துவிடு !
ஆனந்தத்தில் பிறப்பதற்கு!''
இந்த அர்த்தம் பொகிந்த ஜென் வரிகளின் ஆழத்தைப் புரிந்துகொள்ள ஒரு சிறிய சம்பவம்.
பெருமாங்குடியில் மரணம் என்ற தலைப்பில் கேசவரிஷி தியானச் சொற்பொழிவாற்றினார். சொற்பொழிவின் கடைசி வரிகளாக,
''திரும்பச் சொல்கிறேன்.
வாழும் போது சாவைப் பற்றி யோசிக்காவிட்டால்,
சாகும் போது வாழ்க்கையைப் பற்றி யோசிக்கவேண்டியதிருக்கும்" என்று சொல்லி விடைபெற்றார்.
அடுத்த நாள் காலை சீடர் ஸ்வரூபனுக்குப் பெருத்த சந்தேகம். குருவிடம் சென்று, ''சாமி, சாவைப் பற்றி எவ்வளவோ யோசித்துவிட்டேன்.
ஒன்றுமே புரியவில்லை!
நான் வாழும் போதே சாவைப் பற்றிப் புரிந்துகொள்வது எப்படி ?'' என்றார்.
கேசவ ரிஷி, ''நீ பிறந்துகொண்டே இறந்துகொண்டு இருக்கிறாய். இதை தியானித்துப்பார். புரியும்'' என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
ஒரு நாள் முழுவதும் முயற்சித்தும் எந்தப் பலனும் இல்லை.
மறுநாள் ஸ்வரூபன், ''சாமி, எனக்குப் புரியவில்லை. வேறு வழி சொல்லுங்கள்'' என்றார்.
கேசவ ரிஷி, ''நீ இறந்துகொண்டே பிறந்துகொண்டு இருக்கிறாய். இதைத் தியானித்துப் பார்'' என்று கூறிவிட்டு சென்றார்.
மீண்டும் ஒரு நாள் முழுவதும் முயற்சித்தும் ஒரு வரியின் அர்த்தத்தைக்கூட ஸ்வரூபனால் புரிந்து கொள்ளமுடியவில்லை.
''எனக்கு ஆன்மீகத்தைப் பற்றி ஓரளவுத் தெரியும். நீங்கள் உதவி செய்தால் போதும். நான் ஞானமடைந்து விடுவேன்'' என்று கேசவ ரிஷியிடம் சீடராகச் சேரும்
வாழ்விடமிருந்து தப்பிக்கலாம்.
மாணத்திடமிருந்து தப்பிக்க முடியாது!
போது தான் சொன்ன வரிகளில் பொதிந்திருந்த செருக்கு, இன்று ஸ்வரூபனின் இதயத்தில் சுருக் என்று குத்தியது.
''குரு சொன்ன ஒரு வரிக்கே என்னால் அர்த்தம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆன்மீகம் எனக்குத் தெரியும் என்று இது நாள் வரை, நான் நினைத்திருந்தது வெறும் அறிவுச் செருக்கு மட்டும்தானா!'' என்று ஸ்வரூபனுக்குப் புரிய ஆரம்பித்த நிமிடத்தில் தொண்டையைக் துக்கவலி கொற்றிக்கொண்டகி.
மூச்சை விமிப்பணர்வோடு எதிர்கொள்வது மரணத்தை எதிர்கொள்வதற்குச் சமம்.
குருவின் வாசகத்தைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் செருக்கு கொஞ்சம் கூடக் குறையவில்லை ஸ்வரூபனுக்கு. குருவிடம் சென்று ஒரே வரியில், ''இதுவும் புரியலை. வேறு வரி சொல்லுங்க'' என்று கேட்டு நின்றார்.
கேசவ ரிஷி சிரித்துக்கொண்டே, ''சரி... ஒரு முறை செத்துப் பார்?'' என்றார்.
திடுக்கிட்ட ஸ்வரூபன், ''சாமீ! அது எப்படி சாத்தியம்'' என்று சத்தமிட்டு விட்டார்.
கேசவ ரிஷி, "ஸ்வரூபா! உனக்குத்தான் ஆன்மீகம் பற்றி எல்லாம் தெரியுமே!
சாவது ரொம்பச் சுலபமப்பா.
அமைதியாக உட்கார்ந்து, அசையாமல், கத்தியில்லாமல் உன்னைக் கொலை செய். நீ முயற்சியின்றி செத்துவிடுவாய்.
இதை எல்லாம் பார்த்து ரசி!'' என்று சொல்லி அமைதியாகிவிட்டார்.
அடுத்த நாள் முழுவதும் என்ன செய்தாலும் என்ன யோசித்தாலும் அது முயற்சியே என்று தெரிய தன் அறியாமையின் ஆழமும், அகங்காரத்தின் உயரமும் ஸ்வரூபனுக்குப் புரிந்தது. கர்வம் குறைந்தது.
பொழுது எப்போது விடியும் என்று காத்துக்கொண்டு இருந்த ஸ்வரூபன், கேசவ ரிஷி குடிசையைவிட்டு வெளியே வந்ததுதான் தாமதம், ''சாமி! என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு ஒன்றுமே தெரியாது. எனக்கு ஒன்றுமே தெரியாது''என்று சிறுவன் போலப் புலம்பினார்.
கேசவ ரிஷி மார்போடு அணைத்துக்கொண்டு, ''அழாதே! தகுதி பெற்றுவிட்டாய்! இனி கற்றுக்கொள்வது சுலபம், வா!' என்று ஆலமரத்தடிக்கு அழைத்துச் சென்றார்.
கேசவ ரிஷி, ''நீ பிறக்கும் போது முதலில் என்ன செய்தாய் ?'' என்று கேட்டார்.
''முதலில் சுவாசித்திருப்பேன். மூச்சை இழுத்திருப்பேன். ''
''நீ இறக்கும் போது கடைசியாக என்ன செய்வாய் ? ''
''கடைசியாக மூச்சை விடுவேன்.''
நீ தொடர்ந்து மூச்சை இழுத்துக் கொண்டும், வெளியே விட்டுக்கொண்டும் தானே இருக்கிறாய்!"'
"ஆமாம்…"
''தெரிந்து கொள்! மூச்சை இழுக்கும் போது நீ பிறக்கிறாய், மூச்சை வெளிவிடும் போது நீ இறக்கிறாய்.
தொடர்ந்து மூச்சை உள்ளே இழுத்து, வெளியே விடும் ஒவ்வொரு முறையும் பிறந்து கொண்டே இறக்கிறாய், அல்லது இறந்து கொண்டே பிறக்கிறாய்.
இந்த நிமிடம் நீ வெளியே விட்ட காற்று, உள்ளே வராவிட்டால் நீ இறந்துவிட்டதாகத் தானே அர்த்தம்! வெளியே விட்ட காற்று மீண்டும் உள்ளே வந்ததால் நீ பிழைத்தாய். மீண்டும் பிறந்தாய்.
இப்போது புரிகிறதா?'' என்றார்.
ஸ்வரூபன் தன் குழப்பத்திலிருந்து விடுபட்டு நன்றிப் பெருக்கோடு மௌனமாகத் தலையாட்டினார்.
உடலும் உயிரும் ஒய்ந்துபோனதால் மட்டுமே உடலைவிட்டு உயிர் பிரியக்கூடாது. பட்டறிவில் கங்கைப் பகுக்கம் பெற்றவன் படிப்பு முடிந்த திருப்தியோடு, தன் பல்கலைக்கழகத்தைவிட்டு நன்றியுணர்வோடு பிரிவது போல்... வாழ்ந்த திருப்தியோடு உயிர் உடலிலிருந்து விடைபெற வேண்டும். இது நிகழ, ஒவ்வொருவரும் வாழும் கலையிலும் தங்கப் பதக்கம் பெற்றாக வேண்டும்.
நீங்கள் தயாரா?
கேசவ ரிஷி, "அமைதியாக உட்கார்ந்து உன்னுடைய மூச்சின் ஒட்டத்தைக் கவனித்தாலே போதும். அது ஒரு மிகப் பெரிய தியானம். மூக்கின் நுனிக்கு உன் கவனத்தைக் கொண்டுசெல். மூச்சு உள்ளே வருவதையும் வெளியேறுவதையும் கவனித்துக் கொண்டே கவனி.
விழிப்புணர்வோடு அதிகமாக அதிகமாக நீ என்று நினைத்துக்கொண்டு இருக்கும் உன்னுடைய அகங்காரம் உன்னை விட்டுத்தானே அகலும்.
அகங்காரம் செத்துவிடும்'' என்றார்.
ஸ்வரூபனும் சிரத்தையோடு தியானத்தில் ஈடுபட்டார். முக்தி பெற்றார்.
புத்தர் தன்னுடைய உடலைவிட்டுப் பிரியும் தறுவாயில் இந்தத் தியானத்தைத்தான் விப்பாசனா என பெயரில் உலகுக்குக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
இந்தத் தியானம் ஒன்றை மாத்திரமே செய்து ஞானம் பெற்றவர்கள் பலர். இதற்கு வரலாற்றுச் சான்றுகள்கூட இருக்கிறது.
நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே.
பூரகம், ரேசகம், தம்பகம்... இடக்கலை, பிங்கலை, சுழுமுனை பற்றி கவலை வேண்டாம். வெறுமனே உள்வரும் வெளிசெல்லும் மூச்சின்மேல் கவனம் வை! தியானம் நிகழும்!
'மூச்சோட்டத்தைக் கவனிப்பது' மிக எளிமையான, ஆனால் மிக வலிமையான தியானம். முயற்சிசெய்யுங்கள்!
அர்த்தமுள்ள சம்பவம்...
பார்வதிக்கு ரகசியங்களை சிவன் விளக்கும்போது, ''மூச்சைக் கவனிப்பது தூய்மையற்றவருக்கே மிகக் கடினம்'' என்றார்.
பத்து நிமிடம்கூட அமைதியாக உட்கார்ந்து மூச்சைக் கவனிக்க முடியாத அளவுக்கு, மனிதமனம் மாசடைந்திருக்கிறது.
மாசு நீக்கப்பட வேண்டும்.
அச்சுக்காற்றால் நீங்கள் உயிர் வாழவில்லை… பின் எதனால்?
ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் கலந்த காற்றைச் சுவாசிப்பதால் மட்டும் மனிதன் உயிர் வாழவில்லை.
மூச்சிழுக்கும் காற்றுக்குள் இருக்கும் அந்த சக்திதான் மனித உயிரோட்டத்தின் மூலகாரணம்.
உயிரின் ஓடம் மூச்சு. மூச்சுப்பாதை தியானசாலை!
நான் அதை ஆர்கான் எனர்ஜி என்று குறிப்பிடுகிறேன்'' என வில்லியம் ரிச் என்ற ஜெர்மானிய உளவியலாளர் சொல்கிறார்.
நாம் சுவாசிப்பது ஆக்ஸிஜனைத்தான் என்ற உண்மைகூட சில வருடங்களுக்கு முன்வரை விஞ்ஞானிகளுக்கே அது யூகம்தான். நிரூபிக்கப்பட்ட பின்பே, அதை உண்மை என மனிதர்கள் நம்புகிறார்கள்.
மூச்சுக்காற்றின் உயிர்ச்சத்தாக ஒன்று இருக்கிறது என சொல்லும் அளவுக்கு விஞ்ஞானம் இன்று யூகித்திருக்கிறது.
இது நிரூபிக்கப்பட பல காலங்கள் ஆகும். ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பே நம் ரிஷிகள்... ''மூச்சுக்காற்று என்பது உயிர்ச்சத்தான பிராணாவை எடுத்துவரும் ஓடம் மட்டுமே. நீங்கள் உயிர் வாழ்வது மூச்சின் ஓட்டத்தால் அல்ல, பிராணனின் ஓட்டத்தால்தான் சாத்தியமாகிறது'' என உணர்ந்து சொல்லியிருக்கிறார்கள்.
மூச்சோட்டத்தைக் கவனித்துத் தியானம் செய்ய ஆரம்பித்தபின், முதலில் உங்களின் விழிப்புணர்விற்குள் வருவது மூச்சுக்காற்று எனும் ஓடம் மட்டுமே.
தொடர்ந்து கவனிக்கக் கவனிக்க விழிப்புணர்வு அதிகமாகும்.
விழிப்புணர்வு அதிகமாகும் போதுதான்
ஒவ்வொரு உள்மூச்சிலும் உடலுக்குள் வரும் பிராணசக்தியை முழுமையாய் உணர்வீர்கள். சக்திமயமாவீர்கள். ஆனந்தமயமாவீர்கள். கடைசியாக, பிரபஞ்ச மையமாகவே மாறுவீர்கள்.
மூச்சின் சத்தான பிராண சக்தியை உணரும் வரை மூச்சோட்டத்தைப் கவனியுங்கள். சுவாச காலத்தையெல்லாம் தியான காலமாக்குங்கள்! ரகசியங்கள் வெளிப்படும்.
நீங்கள் செய்யும் செயல் எதுவானாலும் அந்தச் செயலைச் செய்ய உள்ளே வந்து வெளியே செல்லும் மூச்சைக் கவனித்துக் கொண்டேயிருங்கள்!
மூச்சைக் கவனித்தபடியே செயலில் ஈடுபடுங்கள்.
செயல்களில் ஈடுபட்டபடியே மூச்சைக் கவனியுங்கள்!
கோயில்களின் தத்துவம்
பக்தி ! சக்தி ! முக்தி ! ★
- இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று சூட்சுமமான தொடர்புடையவை!
பக்தியின் பூரணம் சக்தியின் வெளிப்பாடு. சக்தியின் பூரணம் முக்தியின் வெளிப்பாடு.
உங்களின் பக்தி உணர்வின் அளவைப் பொறுத்தே, நீங்கள் சக்தியைக் கிரகிக்கும் அளவு நிர்ணயிக்கப்படும்.
பக்தி என்று நாம் நினைத்துக்கொண்டிருப்பதற்கும் உண்மையான பக்திக்கும் பெரும்பாலும் சம்பந்தம் இருப்பது இல்லை.
'எனக்கு அது வேண்டும். எனக்கு இது வேண்டும் ... என்னைக் காப்பாற்று ! எனக்கு அதைக் கொடுத்தால் ... '
- என்ற நோக்கில் இருந்தால்,
அது பக்தி என்று நினைத்துக்கொண்டு, இறைவனிடம் நாம் நடத்தும் பேரம் பேசுதல் அல்லது வியாபாரம்.
'நன்றி ! நன்றி ! நன்றி ! இதைக் கொடுத்தாயே நன்றி!
பேட்டரி சார்ஜ் செய்வது போல் நமது உடலும் மனதும் இயற்கையால் சக்தியூட்டப்படுவதால் தான் உடலுக்குப் புத்துணர்வும் மனத்திற்கு அமைதியும் கிடைக்கின்றன!
இந்த நிமிடம் உயிரோடிருக்கிறேன்! நன்றி! நீ செய்ததற்கும் செய்யப்போவதற்கும் நன்றி ! ... '
-என்று பக்தியுணர்வு நன்றியுணர்வாகப் பொங்கப் பொங்க இந்த நொடி நான் நன்றாக இறைசக்தியை உள்ளத்தின் ஆழத்திலிருந்து போற்றினால், துதித்தால், தொழுதால் -அதுதான் பக்தி.
கோயில்களுக்குள் சென்று கொஞ்ச நேரம் அமர்ந்துவிட்டுத் திரும்பும் போது ஒருவித அமைதி நம்முள் பிறக்கிறதே, அது எதனால் ?
இயற்கையான சூழலில் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்து வீடு திரும்பும் போது, ஒருவித அமைதி நம்முள் இருக்கிறதே அது எதனால் ?
காரணம் சக்தியூட்டம்தான்.
இயற்கைச் சூழலில் இயற்கையாகவே இன்னும் களங்கப்படுத்தப்படாத சக்தி எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். பேட்டரி சார்ஜ் செய்வது போல் நமது உடலும் மனதும் இயற்கையால் சக்தியூட்டப்படுவதால்தான் உடலுக்குப் புத்துணர்வும் மனத்திற்கு அமைதியும் கிடைக்கின்றன.
சர்ச்சுகளுக்கு, மசூதிகளுக்கு ஒருவர் சென்று முழுபக்தி நிலையில் (முழு பக்தி = தியானம்) வேண்டிக்கொள்ளும் போது அவரை அறியாமலே திறந்தமனதோடு தெய்வ சந்நிதியில் நிற்கிறார். ஒவ்வொரு இறைசந்நிதியும் உலகின் சிறு சிறு சக்தி நிலையங்கள் (Energy hours) மனம் திறந்திருந்தால், அதாவது திறந்த மனதோடு இருந்தால், இயற்கை விதிப்படி சக்தி குறைவாக இருக்கும் நம்முள் தேவையான அளவு வந்து நிரப்பிவிடும். இதனால்தான் கோயிலுக்குச் செல்வது பலருக்கு மனநிறைவைத் தருகிறது.
இந்தக் கோயில்களுக்குச் சக்தி கிடைத்தது எப்படி ? ஒரு ஞானி பிராணப் பிரதிஷ்டை செய்து வைக்கும் ஒரு 'ஸ்தலத்தில்' அவர் அனுபவப்பூர்வமாக உணர்ந்து அனுபவித்த தெய்வ சக்தி தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.
இதற்குப் பல உதாரணங்களை நம்மால் தெரிந்துக்கொள்ள முடியும்.
திருப்பதியில் திருத்தலத்தை உருவாக்கிப் பிராணப் பிரதிஷ்டை செய்து வைத்தவர் 'கொங்கனவர்' என்ற ஒரு ஞானி. ஒவ்வொரு ஞானியும் ஒரு குறிப்பிட்ட சக்தியை ஒரு கோயிலில் விட்டுச்செல்கிறார்கள். அதனால்தான் ஒவ்வொரு பிரசித்திப் பெற்ற கோயில்களும் வெவ்வேறு விஷயங்களுக்குப் பிரசித்தி பெற்றிருக்கின்றன.
நம் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுவதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள்,
உங்களின் திறந்த மனதும் பக்தியும் அந்த இடத்தில் இருக்கும் தெய்வசக்தி.
பழனியில் திருக்கோயிலை உருவாக்கிப் பிராணப் பரதிஷ்டை செய்து வைத்தவர் போகர் என்ற ஞானி. தஞ்சாவூரில் கரூவூரார், திருவண்ணாமலையின் அக்னித் தலத்தைப் பிரதிஷ்டை செய்தவர் இடைக்காட்டுச் சித்தர் என்னும் ஒரு ஞானி. சிதம்பரத்தில் திருக்கோயிலைப் பிரதிஷ்டை செய்து வைத்தவர் பதஞ்சலி என்ற ஒரு ஞானி.
மெக்காவில் தொடர்ந்து மக்கள் அலைமோதுவதற்குக் காரணம் அங்கே இருக்கும் ஞானி (இறைத்தூதர்) முகமது நபியால் வெளிப்படுத்தப்பட்ட தெய்வசக்திதான் காரணம். அங்குத் தொடர்ந்து வரும் சக்தியால்தான் மக்கள் பயன் பெற்று, திருப்தி அடைந்து மீண்டும் மீண்டும் செல்கிறார்கள்.
வேளாங்கண்ணியில் மக்கள் கூட்டம் அலை மோதுவதற்கும் அங்கே இருக்கும் ஒரு தெய்வச்சக்திதான் காரணம்.
ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு இடத்தில் ஆன்மீக உணர்வு, பக்தி உணர்வு ஏற்படும்.
நீங்கள் எந்த இடத்தில் எந்தக் கோயிலுக்குச் செல்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. 'உங்களுக்குள் பக்தி உணர்வு ஏற்படுகிறதா? இல்லையா?' என்பதுதான் மிக முக்கியமான ஒரு விஷயம்.
பக்தி உணர்வு இல்லாமல், பெற்றவர்களும் மற்றவர்களும் சொன்னார்களே என்பதற்காகக் கோயிலுக்குக் கடமைக்காகச் சென்று வந்தால் - அவர் தன்னை ஆத்தீகவாதி என்று கூறிக்கொண்டாலும் அவர் ஒரு நாத்திகவாதிதான்.
இப்படிப்பட்ட மனிதர்கள் பெயரளவில் ஆத்திகவாதியாகவும் உணர்வளவில் நாத்திகவாதியாகவும் இருப்பார்கள்.
கோயிலுக்குச் சென்று, பக்தியுணர்வோடு தெய்வசக்தியில் சிறிது நேரம் அமர்ந்திருக்கும்போது - அங்கே இருக்கும் சக்திகளத்தால் சக்தியூட்டப்படுவதால்தான் நம் உடலில் புத்துணர்வும் மனத்திற்கு அமைதியும் ஏற்படுகின்றன. அப்படியென்றால், ஒன்றை நாம் அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
அது நம் உடல் புத்துணர்வு இல்லாமல், சஞ்சலத்தோடு, தவிப்போடு, எரிச்சலோடு இருந்தால் அதற்கும் சக்திக்குறைவே காரணம்.
நமக்குள் மனம் அமைதி இல்லாமல் சோர்வாகவும் மந்தமாகவும் இருப்பதற்குக் காரணம் சக்தியின்மையே. சக்தி குறைவே.
எனவே, ஏதாவது ஒரு வகையில் நம் உடலுக்கும் மனதுக்கும் சக்தியைக் கொடுப்பதற்குக் கற்றுக்கொண்டால் போதும். எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரண கர்த்தாவான சக்திக் குறைப்பாட்டைச் சரிசெய்து நிம்மதியாக, ஆனந்தமாக இருக்கலாம்.
தியானம் உங்களுக்குள் இருக்கும் சக்தியை, நீங்களே பயன்படுத்திக்கொள்ள உதவும் ஒரு வழிமுறை.
கோயில்களுக்குச் சென்று பக்தி உணர்வோடு தெய்வ சந்நிதியில் இருத்தல் என்பது வெளியிலிருந்து சக்தியை உங்கள் உடலுக்கும் மனத்திற்கும் எடுத்துக் கொடுக்கும் ஒர் எளிய முறை.
எதைச் செய்தாலும் முழுமையாகச் செய்யுங்கள். கோயிலுக்குச் சென்றால் அரை மணி நேரமாவது அமைதியாக உட்கார்ந்திருந்து தியானம் செய்யாமல் திரும்பாதீர்கள்!
கடவுள்
- கடவுளுக்கு உருவம் உண்டு. ★
- கடவுளுக்கு உருவம் இல்லை. ★
- உருவம், அருவம் இரண்டுமே கடவுள்தான். ★
- உருவம், அருவம் இரண்டிற்கும் அப்பாற்பட்டவர் கடவுள். ★
- கடவுள் என்பது மனிதர்கள் உருவாக்கிய கருத்து. ★
- கடவுள் என்ற ஒன்று பிரபஞ்சத்தில் இல்லவே இல்லை. ★
- கடவுள் தவிர வேறு எதுவும் பிரபஞ்சத்தில் இல்லை. ★
- கடவுள்தான் எல்லாம் என்ற ஓர் உண்மையின் பல முகங்கள்தாம் மேற்கூறிய 7+1 கூற்றுகள்.
- இந்த 8 கூற்றுகளில் ஏதாவது ஒன்றைப் பிடித்துக்கொண்டு தொங்குவது, அதைப் பற்றிக் கற்பனைசெய்து விவாதித்துக்கொண்டே இருப்பது மனதின் இயல்பு. மனித சுபாவம்.
- கடவுளைப் பற்றி விவாதிப்பதைவிட, உங்கள் மனதைக் கடந்து உங்கள் உள்ளே இருப்பதை (கடவுளை) அடைவது மாத்திரமே பயனைத் தரும். விவாதிப்பதால் நேரம் வீணாகும். பலன் இல்லை!
இரு நாள் பார்வையற்ற ஒருவர், புத்தரிடம் அழைத்து வரப்பட்டார்.
வந்தவரோ, பார்ப்பதற்குத்தான் பார்வையற்றவர். ஆனால், எவ்விதமான தத்துவங்களையும் கரைத்துக் குடித்தவர் போல் தர்க்கம் செய்வதில் கெட்டிக்காரர்.
எந்த விஷயத்தைப் பற்றி கேட்டாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதை நிரூபிக்காமல் விட மாட்டார். அவரிடம் வாதம் செய்கிறவர்கள் அவர் சொல்வதைக் கேட்க வேண்டுமே ஒழிய, அவர் மனதில் கொண்டிருக்கும் கருத்தில் மாற்றம் காண வைக்க முடியாது.
உதாரணமாக, உலகத்தில் வெளிச்சம் என்று ஒன்று கிடையாது என்று வாதிடுவார். யாராவது அவரிடம் வெளிச்சம் என்று உண்டு என்று சொன்னால், உடனே அவர் எப்படி வாதிட ஆரம்பிப்பார் தெரியுமா ?
''இந்த உலகத்தில் வெளிச்சம் ஒன்று உண்மையிலேயே இருக்குமானால், அதைப் பிடித்துக் கொண்டுவந்து என்னிடம் காட்டுங்கள்.
நான் அதைச் சுற்றிப்பார்க்க வேண்டும். நுகர்ந்து பார்க்க வேண்டும். தொட்டு விளையாட வேண்டும். இதை எல்லாம் செய்ய முடிந்தால் வெளிச்சம் இருப்பதை ஏற்றுக்கொள்வேன்'' என்று வாதிட ஆரம்பிப்பார் அந்தப் பார்வையற்றவர். வெளிச்சத்தை யாரால்தான் கட்டி எடுத்துக்கொண்டு வர முடியும்! எப்படி அதைச் சுற்றிப்பார்க்க முடியும் ? விளையாட முடியும் ?
இதையெல்லாம் யாருமே செய்யாததினால் அந்தப் பார்வையற்றவர் சொல்வது உண்மை என்று நிரூபணமாகிவிடும். பார்வையற்றவரும் தான் 'வெற்றி பெற்று விட்டோம். வாதத் திறமையில் தன்னை மிஞ்சுவதற்கு ஆளே இல்லை' என்கிற இறுமாப்போடு அலைந்து கொண்டிருந்தார்.
அந்தப் பார்வையற்றவருக்கு எப்படி உண்மையை உணர வைப்பதென்று தெரியாமல் ஊர்மக்கள் குழம்பிப்போனார்கள்.
அவரைப் புத்தரிடம் அழைத்துச் சென்றார்கள். புத்தரை வந்து பார்த்தவுடன் வாதிட ஆரம்பித்து விட்டார். 'ஒளி என்று ஒன்று இல்லவே இல்லை. அப்படி ஒன்று இருந்தால் நிரூபியுங்கள்'' என்று தத்துவார்த்தமாக வாதிட ஆரம்பித்தார்.
புத்தர் எந்தப் பதிலும் பேசாமல், தன்னுடைய மருத்துவரை அழைத்து அவருக்கு வைத்தியம் பார்க்க உத்தரவிட்டார். அந்த வைத்தியரும் அவரோடு எந்த தர்க்கமும் செய்யாமல் வைத்தியம் செய்ததன் பலன், பார்வை கிடைத்தது.
பார்வை கிடைத்தவுடன் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒவ்வொரு வண்ணத்தையும் கண்டு ரசித்தார். நிறைய மலர்களையும் பழங்களையும் கொண்டுவந்து புத்தரின் காலடியில் வைத்துச் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
''புத்த பகவானே! நான் கண்மண் தெரியாமல் குருட்டுத்தனமாக வாதம் செய்திருக்கிறேன். என்னோடு மற்றவர்களும் வாதமிட்டு என்னை நாசம் செய்துவிட்டார்கள்.
நீங்கள் என்னோடு நல்ல வாதாடவில்லை. நீங்களும் வாதம் புரிந்திருந்தால் நானும் வாதம் செய்து வீணாகியிருப்பேன்.
ஆனால், இப்போதோ வெளிச்சம் உள்ளது என்பதை நன்றாகவே புரிந்து கொண்டேன்'' என்று உண்மையாக மனமுவந்து பேசினார் அந்த மனிதர்.
இந்தப் பார்வையற்றவரைப் போல, விடாக்கண்டன், கொடாக்கண்டன், பாணியில் வாதம் செய்கிறவர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள். இந்தப் பிடிவாதக்காரர்கள் எதைப் பற்றிப் பேசினாலும் பரவாயில்லை. 'கடவுள் இருக்கிறாரா, இல்லையா?' என்று பேச ஆரம்பிப்பதுதான் அபாயகரமானது.
பல நேரங்களில் நாத்திகவாதிகள் என்னிடம் வந்து வம்புக்கு இழுப்பார்கள். "கடவுள் இருக்கிறாரா? உங்களால் நிரூபிக்க முடியுமா?" என்றெல்லாம் கேட்பார்கள்.
'கடவுள் இருக்கிறார்' என்பதை அவர்களிடம் தீர்க்கமாக எடுத்துச்சொல்வேன். அதற்கு மேலும் அவர்கள் பிடிவாதமாக இருந்தாலும் பார்வையற்றவரிடம் புத்தபெருமான் மௌனம் சாதித்தது போல நானும் மௌனமாக இருந்து விடுவேன்.
இந்த விஷயத்தில் மெளனம் சாதிப்பது தோல்விக்கான அறிகுறி அல்ல. கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்க நாம் முயற்சி செய்தால், ஒருவேளை நிரூபித்துவிட்டால், அந்த விஷயம் கடவுளைவிடப் பெரிதாகிவிடும். கடவுள் நிரூபிக்கப்படும் அளவுக்குத் தாழ்ந்த ஒன்றல்ல; சாதாரண விஷயமல்ல.
பகுத்தறிவினால் நிரூபிக்க முடியாத ஒரு நிலையே கடவுளின் இருப்பாகும். அதை அனுபவிக்க முடியும். பார்வையற்றவருக்கு எப்படி வாதம் செய்தாலும் வெளிச்சத்தை நிரூபிக்க முடியாதோ, அதேபோல் ஒரு நாத்திகவாதியிடம் எத்தனை வாதம் செய்தாலும் இறைவனை நிரூபிக்க முடியாது.
கடவுள் நிரூபிக்கப்பட முடியாமல் இருப்பதுதான், கடவுள் சாதாரண மனிதரின் அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்று என்பதற்கான நிரூபணம். இன்னொரு கருத்துப்பொதிந்த கதை ஒன்றைச் சொல்கிறேன் ...
ஒரு குளிர்ந்த பனிப்பிரதேசத்தில் குளிரினாலும் பனியாலும் மரத்தடி போல உறைந்து கிடந்தது ஒரு பாம்பு. அந்த வழியாக வந்த பார்வையற்றவர் ஒருவர் கையில் சிக்கியது அது.
அதை மெதுவாகத் தடவிப்பார்த்துவிட்டு, ''ஆஹா, ஊன்றி நடக்க நல்ல கோல் கிடைத்துவிட்டது'' என்று சந்தோஷப்பட்டார், அந்தப் பார்வையற்றவர்.
அந்த வழியாக வந்த ஒரு ஞானி, அவர் செய்கையைப் பார்த்து, "அப்பா! இது கோலல்ல! பாம்பு. இன்னும் சிறிது நேரத்தில் வெயில் வந்துவிடும்.
வெயில் வந்தவுடன் பாம்புக்கு உணர்வு வந்து உனக்குத் தீங்கு செய்துவிடும்'' என்றார்.
| நிலை | விளக்கம் |
|---|---|
| நிருபிக்கமுடியாத பகுத்தறிவினால் | ஒரு நிலையே கடவுளின் இருப்பாகும். அது |
| அனுபவிக்க முடியும்! |
ஞானி சொன்னதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. தனக்கு நல்ல கோல் கிடைத்துவிட்டது. தன்னிடமிருந்து அதைப் பறித்துவிடத்தான் ஞானி இந்த மாதிரிப் பேசுகிறார் என்று நினைத்தார் அவர். கடைசியில் அந்தப் பாம்பு அவரைக் கடித்தபிறகுதான் உண்மை புரிந்தது அவருக்கு.
இதே போல்தான் ஞானிகள் ஒவ்வொரு முறையும் மனிதரைக் காப்பாற்ற முற்படும் போதும், மனிதர்கள் தங்கள் மதியீனத்தால் சந்தேகித்துத் தங்களது வாழ்க்கையைத் தானே நரகமாக்கிக் கொள்கின்றனர்.
'கடவுள் எங்கு இருக்கிறார் ? ஏன் கடவுள் ? எதற்காகக் கடவுள் ?' என்று கேள்வி கேட்டுவிட்டு விடாமல் - 'எப்படிக் கடவுள் இருப்பார்? ஏன் கடவுள் இருக்கக் கூடாது?' என்று உங்களை நீங்களே பகுத்தறிய முயற்சி செய்யுங்கள். கடவுளை உங்களால் பரிபூரணமாக அனுபவிக்க முடியும். அந்த அனுபவம் உங்களுக்குக் கிடைத்துவிட்டால் ஆனந்தம்தான்!
நன்றி
நண்பர்களோடு பிக்னிக் செல்ல நூறு டாலர் தர வேண்டுமென வெகு உருக்கத்தோடு ஜானி வேண்டிக் கொண்டார். மேலும், தன்னுடைய முகவரியை சப்தமாக கடவுளிடம் சொல்லிவீட்டுக்குப் பணம் அனுப்பும்படி உரிமையோடு சொன்னார்.
"இன்னும் ஏன் அனுப்பவில்லை?" என மறுநாள் ஆலயம் வந்தவர், கடவுளிடம் கோபித்துக்கொண்டார்.
ஜானியின் செயலை ரசித்த மதபோதகர் தன் பணத்திலிருந்து ஐம்பது டாலரை ஜானி வீட்டுக்கு 'இப்படிக்கு - கடவுள்' என எழுதி மணியார்டர் செய்தார்.
அடுத்த நாள் மாலை, ஆலயத்திற்கு வந்த ஜானி கடுகடுப்போடு கடவுளிடம் சொன்னார், "அடுத்த முறை பணம் அனுப்பும்போது மணியார்டர் மூலமாக அனுப்ப வேண்டாம். அந்த போஸ்ட் ஆபீஸில் ஐம்பது டாலரை லஞ்சமாக எடுத்துக்கொண்டு, ஐம்பது டாலர் மட்டுமே எனக்கு அனுப்பினார்கள்' '.
கிடைத்தவைகளுக்கு மனிதர்கள் மதிப்பளிப்பதில்லை. ★
நில்லாமல், அதோடு கொடுத்தவரையே கொட்டுவதும், 'இன்னும் கொடு' எனச் சொல்லி பெற்றுக்கொண்டதை அவமதிப்பதும் குணாதிசயங்கள்.
பீனியல் சுரப்பி, சுரப்பிகளின் ராணி என்றழைக்கப்படுகிறது. நமக்குள் ★
ரம்யமான உணர்வையும் (Sense of well being) இளைப்பாறுதலில் கிடைக்கும் அமைதியையும் உருவாக்குவது இந்த பீனியல் சுரப்பி.
பீனியல் சுரப்பிக்கும் (Pineal Gland) ★ சஹஸ்ரார தொடர்பு உண்டு.
''நன்றியுணர்வோடிருத்தல்'' என்னும் ★ உணர்வுநிலை ச சஹஸ்ரார சக்க்கரத்தை மலரச் செய்யும்.
பீனியல் சுரப்பியைச் சுறுசுறுப்பாக்கும்.
நன்றியின்மை, மறியாதையின்மை ★ எனும் குணக்கே(டுகளின் வெளிப்பாடுகளான அவமதித்தல், எகத்தாளம் ஆகிய எல்லாம் ஒன்றாய்சேர்த்துதரன், ஒருவருள் வெறுமையை அவரின் அவருக்கு மறைத்து விடுகின்றன.
நீ ஒரு அபூர்வம். கண் விழித்ததும் இந்த உடலில் இந்த உலகில் வாழ்கிறாய். கண் உறங்கியதும் கனவு உடலில் கனவு உலகில் வாழ்கிறாய். கண்கள் விழித்திருக்கும்போதும் விழிப்புணர்வு தவறிப்போக கற்பனை உடலில் கற்பனை உலகில் வாழ்கிறாய். நன்றாய் யோசி... இம்மன்று உடலும் இம்முன்று உலகமும் ஒன்றுதானோ! யோசிப்பதைத் தாண்டி சிந்தி. பல கேள்விகள் நிற்கும். அதுவே, உன்னை தியானத்திற்குக் கூட்டிச் செல்லும்!
மற்றவரின் அருமையையும்
ஒழிரு சிறிய ககை.
ஒரு தேவாலயத்தில் புதிய கட்டடம் ஒன்று கட்ட முடிவெடுத்தார்கள்.
அந்த தேவாலயத்திற்கு வரும் ஒரு பெரிய வியாபாரி, ''புதிய கட்டடம் கட்டுவதற்கான நன்கொடை முதலில் தந்தது நானாக இருக்க வேண்டும். அதுவும் அதிகமாகக் கொடுத்தது நான் கொடுத்ததாகதான் இருக்க வேண்டும்'' என்ற (முடிவில்...
2 மில்லியன் டாலருக்கு ஒரு செக் எழுதி எல்லோருக்கும் முன்பாக பாகிரியாரிடம் கொடுத்தார் வியாபாரி.
செக் - 2 மில்லியன் டாலர் என எழுதியிருப்பதை பாதிரியார் படித்துவிட்டு, ''சரி. நான் இதை ஏற்றுக் கொள்கிறேன்'' என்றார் வெகு இயல்பாக.
பாராட்டையும் அவைப் புகழ்ச்சியையும் எதிர்பார்த்த வியாபாரிக்கு பாதிரியாரின் செயல் கோபத்தைக் கிளப்பியது.
''பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. ஒரு நன்றியாவது சொல்லியிருக்கலாம். இவ்வளவு பெரிய தானத்தை ஒரு பொருட்டாகக்கூட எடுத்துக்கொள்ளவில்லையே" என்ற வேதனையில்,
வியாபாரி, ''அந்த செக் 2 மில்லியன் டாலருக்கானது'' என்றார் அழுத்தமான குரலில்.
பாதிரியார், ''ம்ம்... நான் அதைப் பார்த்தேன்!'' என்றார்.
வியாபாரி, "நான் பெரிய வியாபாரிதான். இருந்தும் 2 மில்லியன் டாலர் தானம் செய்வது மிகப் பெரிய விஷயம் என்று நான் நினைக்கிறேன்'' என இழுத்தார்.
பாதிரியார் சிரித்துக்கொண்டே, 'நான் அதற்கு நன்றி கூற வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். சரியா?'' என்றார்.
வியாபாரி, ''ஆமாம், ஆமாம், நீங்கள் அதைத்தானே செய்திருக்க வேண்டும்'' என்றார்.
பாதிரியார் சிரித்த முகத்தைக் கடினமாக்கி, ''ஒருவேளை நான் அத்தனை பேர் முன்பும் நீங்கள் கொடுத்த தானத்தை, நீயும் உன் தானமும் எனக் கூறி தூக்கி எறிந்திருந்தால்'' எனக் கேட்க,
இந்த மாதிரி பகிலை எதிர்பார்க்காததால் உள்ளுக்குள்ளே தடுமாறிவிட்டார் வியாபாரி.
பாகிரியார், ''முறைப்படி பார்த்தால், உன்னை அவமானப்படுத்தாமல், அத்தனை பேர் முன் உன் தானத்தை நான் ஏற்றுக்கொண்டதற்காக நீதான் முதலில் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்.
நீ ஏன் எனக்கு நன்றி சொல்லவில்லை?
சிந்தி…
அப்படியாவது உன் அகந்தை அழியட்டும்" என்று கடினமாகப் பேசிவிட்டு பாதிரியார் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
- நடைமுறை தியானம், தியானம். நன்றி! நன்றி! நன்றி!' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதால் மற்றவர்களை மாத்திரம் திருப்திப்படுத்தலாம். நன்றியுணர்வை நடைமுறைப்படுத்துவதால் உங்களையே தருப்திப்படுத்தலாம்! அன்று முழுவதும் வியாபாரிக்கு ஒவ்வொன்றாகப் புரிந்தது.
தான் நன்றியுணர்வு இல்லாமல் தவறாக வாழ்ந்த ஒவ்வொரு மகத்தான நிமிடங்களும் நினைவுக்கு வந்தது.
கண்ணீர் பொங்கியது.
கன் தவரை உணர்வதற்காகத்தான் பாகிரியார் அவ்வளவு கோபமாக நடந்து கொண்டார் என்ற உண்மை புரிந்தது.
அன்றிலிருந்து தான் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் மற்றவர்களையும் முழுமையாக மதித்து வாழுக் கற்றுக் கொண்டார். வாழ்க்கைத் தத்துவத்தை ஏற்றுக் கொண்டார்.
உண்மையான காதலன்,
தன் காதலிக்கு நல்ல பரிசை வாங்கிக் கொடுத்ததை விட, அதைத் தன் காதலி ஏற்றுக் கொண்டாளே என்பதற்காகத்தான் அதிகம் மகிழ்வான்!
உண்மையான மனைவி தன் கணவருக்கு இன்று மிக ருசியாக சமைத்துப்போட்டேன் என்று பெருமைப்படுவதைவிட,
தன் கணவர் அந்த உணவை எவ்வளவு தூரம் ரசித்துச் சாப்பிட்டார், எப்படி அதைத் ஏற்றுக்கொண்டார் என்பதைப் பற்றித்தான் அதிகம் சர்தோஷப்படுவார்.
உண்மையாக தானம் செய்பவரும் -
தான் செய்த தானத்தை நினைக்குப் பெருமை பேசுவதை விட,
'என் தானத்தை ஏற்றுக்கொண்டார்களே, எனக்குத் தானம் செய்ய வாய்ப்பு கிடைத்ததே' என்று சொல்லியே சந்தோஷப்படுவார்…
மேற்கூறிய மூன்று நபர்களிடமும் பொதுவாக ஒரு உணர்வு இருக்கிறதே, அதைக் கண்டுபிடித்துவிட்டீர்களா ?
ஆம்! அது நன்றி உணர்வுதான்.
மனிதர்கள் தன் சாதனைகளை நினைத்துக் கர்வப்படாமல், அதே நேரத்தில் சந்தோஷமாக சாதனைகளை அனுபவிக்க உதவும் ஒரு அருமையான உணர்வுதான் நன்றி உணர்வு.
''நன்றி உணர்வோடிருத்தல்'' இது மிகப்பெரிய தியானமுறை.
ஒரு சாதாரண குண்டுசியில் இருந்து
நாம் சாப்பிடும் உணவு வரை,
எத்தனை மனிதர்கள் அவை நம் கைக்குக்கிடைப்பதற்காக தங்கள் இரத்தத்தையும் சக்தியையும் உழைப்பாக்கியிருப்பார்கள்.
உ ழை ழ បំ பு
சக்தி சிந்தி வந்த மனித உழைப்புக்கு
நீங்கள் தரும் பலன் ஈடாகுமோ?
ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.
பொருட்களைப் பெற கடைகளுக்கு நீங்கள் தரும் பணம், அந்தப்பொருளை பல நிலைகளில் உருவாக்கிய அவர்களுடைய உழைப்பை நிச்சயமாக ஈடுசெய்ய முடியாது.
சிலருக்கு இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும்.
ஆனால், இனி சொல்லப் போவதை நீங்கள் மறுக்க முடியாது. நீங்கள் பிறக்கும் போது உங்கள் தாய்க்கு மருத்துவ உதவி செய்த மருத்துவச்சிகளின் கருணையை எண்ணிப் பாருங்கள்.
கருணை மறந்து வெறும் கடமைக்காகவும் காசுக்காகவும் அவர்கள் செயல்பட்டிருந்தால், உங்களின் கையோ, காலோ முடமாகி இருக்கலாம்.
பச்சிளம் குழந்தையாகப் பிறந்த உங்கள் மீது அவர்கள் அன்று காட்டிய கருணைக்கு, இன்று நீங்கள் எதைப் பதிலாகத் திரும்பத் தர முடியும் ?
அவர்களின் முகம்கூட உங்களுக்குத் தெரியாது.
முகம் தெரியாத உங்களைப் பரிவோடு பார்த்துப் பராமரித்து, எந்தக் குறைபாடும் நேராமல் பார்த்துக் கொண்ட மருத்துவச்சிகளின் தொழில் நேர்மைக்கும் மனிதநேயத்திற்கும் எதை நாம் பதிலாகத் திரும்பத் தர முடியும்!
அண்டத்துள் பிண்டம் பிண்டத்துள் அண்டம் - சித்தர் கூற்று ஆழ ஆராய்ந்து பார்த்தால் ... ஒவ்வொரு செல்லும்… தனியாய் யோசித்து செயல்புரிகிறது, கனியாய் வாழ்கிறது. எனவே. மனிதன் ஒரு தனி ஆள் அல்ல -அவன் பல கோடி உயிர்களின் தொகுப்பு. மனிதன் எனும் பிண்டத்துக்குள் அண்டம் எனச் சொல்வதை விட மனிதனின் ஒவ்வொரு செல்லும் ஒவ்வொரு அண்டம் எனச் சொல்ல வேண்டும் ஆக, உன்னைப் படைத்த இறைவனுக்கு நன்றி பெற பாக்கியமானவனே!
| இன்னொருவரை போல் நீ மாற நினைக்காதே! அது வீண் சிரமம். உள்ளதை உள்ளபடி ரசித்து ஆனந்தப்படு உங்களுக்கு நீயே நன்றி சொல் உங்கள் புலன்கள், உங்கள் உடல், உங்கள் உயிர், உங்கள் மனம், உங்கள் மூச்சு என உங்களிடம் உள்ளவற்றிற்கும் நன்றியுணர்வோடு இருங்கள். தியானம் நிகழும். |
நாம் பதிலாகத் திரும்பத் தர முடியும்!
ஒருவேளை அவர்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால்கூட நம்மால் திரும்பப் பதிலுக்கு எதையுமே தரமுடியாது. அதிகபட்சம் நன்றியுணர்வை அவர்களுக்குத் காணிக்கையாக்க முடியும்.
அதேபோல் குண்டூசியில் இருந்து, கோதுமை மாவு வரை ஒவ்வொன்றையும் உங்களுக்குக் கிடைக்கக் காரணமாக இருந்த பணம் மனிதர்களுக்குப் நன்றியுணர்வுதான் அவற்றிற்கு ஈடாக முடியும்.
'நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். இந்த நன்றியுணர்வைக் கடைப்பிடிப்பதால் எனக்கென்ன பலன்?' என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்.
நன்றியுணர்வை வாழ்வில் கடைப்பிடிப்பதால் கிடைக்கும் பலன்களைச் சொல்கிறேன்.
பிடித்திருந்தால் உங்களுக்குப் நன்றியுணர்வை கடைப்பிடிக்க ஆரம்பியுங்கள்.
பலன்கள் :
கர்வம் தலை தூக்காது. ★
கர்வத்தாலும் ★ மற்றவர்களை மனதளவில் துன்புறுத்தி, தான் என்னும் கொடுமை அரங்கேறாது.
முகம் பொலிவடைய ஆரம்பிக்கும். ★
'கடவுள் காவில்லையே!' என்று கோபிப்பதல்ல. கடவுளிடம் கேட்பதே அபத்தம்தான்!
இதுவரை கிடைத்த எல்லாவற்றிற்க்கும் நன்றி சொல்லிட்டீர்களா ? ...
நன்றியுணர்வு வெளிப்படும் போது ★ உங்களையும் அறியாமல் முகத்தில் இறுக்கம் தளர்ந்து, குதூகலம் பிறக்க ஆரம்பிக்கும்.
உறவுகளின் விருப்பத்திற்குரியவராக மாறுவது சுலபமாகிவிடும். ★
கிட்டத்தட்ட எல்லா மனிதர்களும் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது ★ நன்றியுணர்வைத்தான்.
மற்றவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் ஒரு விஷயம் உங்களிடம் இருந்தால் உங்களைச் சுற்றியுள்ள எல்லோரையும் திருப்தி செய்வது வெகு சுலபமாகிவிடும்.
நன்றியுணர்வு ஒரு சுக உணர்வு.
அதை நடைமுறைப்படுத்தக் கற்றுக்கொண்டால் சுகம் உங்கள் கையில்.
நன்றியுணர்வை நடைமுறைப்படுத்திப் பார்த்தால், உணர்வுரீதியாக மேற்கூறிய அனைத்தும் உண்மை என்பது புரிய வரும்.
அர்த்தமுள்ள சம்பவம் ...
சீனக் பல்கலைக்கழகமொன்றில் 'எது மாபெருஞ்செல்வம் ?' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு வந்திருந்த தாவோ சொற்பொழிவாளரை தீர்ப்பளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டபோது,
''தம்மிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியடையும் பக்குவத்தை விட பெரிய செல்வம் இவ்வுலகில் இல்லை. இப்படிப்பட்டவர், செல்வச்சீமானை விட பல மடங்கு திருப்தியோடிருப்பார்'' என்றார்.
நன்றியுணர்வு மிக்கவருக்கே இது சாத்தியம். நன்றியுணர்வு மிக்கவராக மாறுங்கள்!
பலரின் விருப்பத்திற்குரியவராக வழி ...
குழந்தையை அசிங்கமான குழந்தையாக இதுவரை பார்த்திருக்கிறீர்களா...வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழுமிடத்திலிருக்கும் குழந்தைகூட அழகாகவே இருக்கிறது. எளிமையாக இருக்கிறது.
ஆனால், ஒரு அழகான எளிமையான ஆளைப் பார்க்க முடியுமா ?
உண்மையான அழகு (Beauty) அல்ல. முகப்பூச்சால் வருவது உண்மையான அழகல்ல.
| மழலைக் குழந்தையின் முகத்திலும் மனம் கடந்த ஞானியின் முகத்திலும் தெரியும் அழகு பொலிவு மிகுந்தது. அது இயற்கையானது. | |
|---|---|
| அது (Beauty) அல்ல. அது (Grace) அது சக்தியின் வெளிப்பாடு. | grace வேறு. |
| உண்மையான அழகு (Grace) சலிப்புத் தட்டாது. | |
| மனதையும் உணர்வுகளையும் அலைக்கழிக்காது. மனதைச் அமைதிப்படுத்தும். | (Beauty) எனப்படும் செயற்கை அழகு பொய்யானது. சலிப்புத் தட்டக்கூடியது. |
குழந்தை மனிதராகும் போது அதன் அழகு (grace) துடைக்கப்பட்டுவிடுகிறது. முகம் இறுகிப்போகிறது.
காரணமென்ன ?
சிந்தித்திருக்கிறீர்களா ?
மலர்ந்த மலர்போல்
மனிதரைக் குதூகலமாக இருக்கச் செய்யும் பீனியல் சுரப்பி மிகச் சரியான முறையில் குழந்தைகளிடம் இயங்குகிறது. இதன் வெளிப்பாடே அழகு!
மனிதர்கள் நன்றியுணர்வு பொங்க மற்றவரை மதித்துப்பேசும் போதெல்லாம் அவர்களின் முகத்தில் இன்னுங்கொஞ்சம் அழகு கூடுவதைக் கவனித்திருக்கிறீர்களா?
நன்றியுணர்வை ...
வெறும் வார்த்தையளவோடு நிறுத்தாமல், உங்களின் முகபாவங்கள் மற்றும் உடல்மொழிகள் மூலமாக வெளிப்படுத்துவது... உயிரின் ஆழம் வரை சென்று மிக ஆழமாக வேலை செய்யும் ஒரு தியான முறை.
நன்றியை Body Language மூலமாக வெளிப்படுத்தும்போது பீனியல் சுரப்பி இயங்கி, உங்களின் இறுக்கம் உடையும்.
முகத்தை பொலிவடையச் செய்யும்.
குரலில் நயம் சேர்க்கும்
சுருங்கச் சொன்னால், உங்களை குதூகலமானவராக மாற்றும்.
பலரின் விருப்பத்திற்குரியவர்களாக மாறுவீர்கள்.
இன்றிலிருந்து மற்றவர் செய்யும் சிறுசிறு உதவிகளைக்கூட தியானகாலமாக மாற்றுங்கள்.
முடிந்தளவு உடல்மொழி மூலமாக, முகபாவம் மற்றும் வார்த்தைகள் மூலமாக நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள். வாழ்வு வளமாகும்!
| அழகு! |
|---|
| 'பூச்சு' |
| அல்ல. |
| அது |
| ஒரு |
| 'பூப்பு'. |
நீத்ய ஆனந்தம்
- ஆனந்தம் என்பது பலருக்குத் தெரியாத ஒன்று. ★ தெரிந்த சிலருக்கு அது புரியும் ஒன்று. அனுபவித்து உணர்த்த வெகு சிலருக்கு அது விளக்க முடியாத ஒன்று.
- ''ஆனந்தத்தை அனுபவிக்கலாம். ★ அதையும் தாண்டி ... . ஆனந்தம் இங்கேதான் இருக்கிறது. ஆனந்தத்தை இப்படிக்கூட அடையலாம். இதுதான் ஆனந்தம் '' என்று சுட்டிக்காட்ட முடியும். ஆனால் ஆனந்தத்தை விளக்க முடியாது.
- எல்லா ஞானிகளின் ★ ஞானஉபதேசங்களும் தியானமுறைகளும் அந்த ஆனந்தக் கடலை காட்டத்தான்.
தனிமனிதர்கள் தங்கள் தனி வாழ்வில் தனக்குள்ளேயே ஆழ்ந்து ★ கண்டுபிடிக்க வேண்டிய ஒன்றுதான் இந்த ஆனந்தம்!
மேலோட்டமாய் வாழும் அந்த நபர், "என்ன இது! நாற்பது வருடமாக கிடைத்தபாடில்லையே'' என நொந்தபடி பேசினார் ஜென் ஞானியிடம்.
ஞானி மெதுவாய் சொன்னார் "நாற்பது வருடம் தானே ... நாற்பது ஜென்மங்களில்லையே!'''
ஆனந்தப் பாதை ஆனந்தத்தின் வழி அழகானது ஆனந்தமயமானது. காரணம் -அந்த வழி ஆனந்தத்தில் துவங்கி ஆனந்தத்திலேயே முடிகிறது!
★ நேரத்தை விட குறைவான நேரத்தையே இறைசக்தி எடுத்துக்கொள்ளும். 99.9செல்சியஸில் இருக்கும் நீர் 100செல்சியலில் கொதிக்க எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளுமோ, அவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும்.
- ஆனால், சாதாரண நீர் ★ 99.9செல்சியுஸில் அடைய எவ்வளவு நேரமாகும். அதற்கு எவ்வளவு வெப்பமும் சக்தியும் முயற்சியும் தேவைப்படும்.
ஒருவேளை உறைந்து போயிருந்தால் ...
- பலர் மனம் பனிக்கட்டிதான். ★
- உங்களுக்குள் உஷ்ணம் ★ உருவாக்கபட வேண்டும்.
- உழைக்க தயாராகுங்கள்! ★
நெருப்பு பற்றிக்கொண்டால், அடுத்த நிமிடமே காணாமல் போகும் கற்பூரக்கட்டிப் போல மனம் காணாமல் போகும் அற்புதம் நிகழும்.
ஆனந்தத்தின் ஞானத்தேடல் கொஞ்சம் விசித்திரமானது போலத் தோன்றும். காரணம்...
ஆனந்தமாக இருப்பது இயற்கை ...
ஆனந்தமில்லாமல் இருப்பதுதான் செயற்கை.
வாழ்வில் தொடர்ந்து ஆனந்தமே இல்லாமல் செயற்கையாகவே வாழ்ந்து பழகிவிட்டால் - செயற்கையே இயற்கை என்ற பிரம்மை உருவாகி விட்டது. இயற்கை, செயற்கை போல சராசரி மனிதருக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டது.
ஞானத்தேடல் விசித்திரமாகத் தெரியக் காரணம் இதுதான்.
ஒரு ஜென் ஞானியைத் தேடி ஞானத் தேடுதலோடு சீடர் ஒருவர் அணுகுமுறை
ஜென் ஞானிகளின் அணுகு முறை வித்தியாசமானது.
அவர்களின் பேச்சைப் புரிந்துகொள்வதற்கே சிலநேரம் தனிப் பக்குவம் தேவை.
சீடர் ஜென் ஞானியிடம், ''நான் ஞானம் அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் ? எனக்குத் தெரிந்த எல்லா வழியையும் முயற்சித்து விட்டேன் ... ''என்றார்.
ஜென் ஞானி , ''அது மிக சுலபமப்பா'' என்றார்.
ஆனந்தம் மாபெரும் சாகசம்!
அப்படியா, எனக்கு அந்த வழியை உடனே கற்றுக்கொடுங்கள்''.
"அது மிகக் கடினப்பா".
சீடர் குழம்பி விட்டார், ''சாமி, என்ன சொல்கிறீர்கள்! எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஞானம் அடையும் வழிமுறை மிக சுலபம். ஆனால், அதைக் கற்றுக் கொடுப்பது மிக கடினமென்று சொன்னால் நான் என்னவென்று புரிந்துகொள்வது ... ''என்று குழும்பியவர் புலம்பினார்.
''அந்த வழி மிக மிக சுலபம். அதனால்தான் அதை உனக்கு கற்றுக் கொடுப்பது மிக மிகக் கடினம்''.
''எனக்கு நீங்கள் சொல்வது கொஞ்சம்கூட புரியவில்லை'''.
ஜென் ஞானி, ''இன்னும் அந்த வழியைப் பற்றி நான் விளக்கக்கூட ஆரம்பிக்கவில்லை. அதற்குள் புரிந்துகொள்வதே கடினம் என நீ சொல்கிறாய். அதை உனக்கு கற்றுக்கொடுப்பது, எப்படியப்பா சாத்தியம் ?'' என்றார்.
சீடர், ''கடினமானாலும் சரி. அதை எனக்குத் கற்றுக் கொடுங்கள்'' என்றார்.
ஜென் ஞானி, ''நான் சொல்வதை நீ காதால் கேட்டுப் புரிந்துகொள்வது கடினம்தான். சரி. ஒருமுறை அந்த மிக மிக எளிமையான வழியை, நீயே முயற்சித்துப் பார். அப்புறம்தான் எல்லாம் புரியும்" என்றார்.
சீடர், ''சீக்கரம் சொல்லுங்கள்…'' என்று குஷியாகிவிட்டார்.
ஜென் ஞானி -
இதே உடலில், இதே உலகில் இதைவிடப் பல கோடி மடங்கு! உன்னால் ஆனந்தாமாயிருக்க முடியும்!
அது மரத்தின் ஊடே செல்லும். ஆனால் சப்தம் சிறிதும் எழுப்பாது செல்லும். ★ அதை நீ கண்டுபிடிக்கவேண்டும்.
பச்சைப்பசேல் என முளைத்திருக்கும் புல் பூண்டுகளைச் சிறிதும் அசைக்காமல் ★ அவற்றைக் கடந்து செல்லும். அதையும் - நீதான் கண்டுபிடிக்க வேண்டும்.
நீரில் விழுந்த பின்னும் அதில் எந்தவித அலைகளையும் ஏற்படுத்தாத அந்த ஒன்றையும் நீதான் கண்டுபிடிக்க வேண்டும். அதைக் கண்டுபிடி. ஞானமடைவாய்'' என்றார்.
சீடருக்குச் சந்தோஷம் தாளவில்லை. 'இவ்வளவு எளிமையான முறையிருப்பது முன்பே தெரிந்திருந்தால் எப்போதோ ஞானம் அடைந்திருப்பேனே!
மரம், புல், நீர் இருக்கும் இடம் சென்று தேடினால் இவர் சொல்வதை எளிதில் கண்டுபிடித்துவிடலாமே. இதைக் கற்றுக் கொள்வதையா கடினம் என்று சொல்கிறார்!' என்று வியந்தவாறே தேட ஆரம்பித்தார்.
தொடர்ந்து ஒரு மாத காலம் முயற்சித்தும் சீடரால் மரம், புல், நீர் ஆகியவற்றில் ஏற்படுத்தாமல் செல்லும் அதைக் கண்டுபடிக்கவே முடியவில்லை.
தேடித் தேடி சீடர் நொந்ததுதான் மிச்சம்.
வானம் எங்கேயிருக்கிறது மேகம் தேடினால் வானம் அதற்குக் கிடைக்குமா!
எது வானம்? எது மேகம்? எனப் பிரிக்க முடியாத காற்றுத் தொகுப்பு அவை.
மனிதன் வேறு ஆனந்தசக்தி வேறு என பாவித்து ஆனந்தத்தைத் தேடினால் அது கிடைக்காது.
ஆனந்தச் சக்தியின் பகுதியான மனிதனால் அதைக் கண்டுபிடிக்க மட்டுமே முடியும்.
அதைக் கண்டுபிடிக்க அதில் கரைந்து போக வேண்டும்!
கடைசியாக ஞானியிடம் திரும்பிய சீடர், ''என்ன பொருள் அது ? என்னால் அதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை'' என்று கேட்டார்.
ஜென் ஞானி, "பொருளா? அது பொருளோ அல்லப்பா?" என்றார்.
''அப்படியென்றால், அது ஒன்றுமே இல்லாததா?'' ''ம்ம்... அதை அப்படிக்கூட அழைக்கலாம்''.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கடல்! மலை உச்சியைத் தொட்டதும் மலைச்சரிவின் முதல் அடி ஆரம்பமாகிறது.
அறிவு, அழகு, அதிகாரம், பணம், பண்பு, புகழாரம். இதில் உச்சிக்குச் செல்வது உள்ளுலகில் சரியத்தான். உச்சிக்குச் செல்லாமல் நடுவில் அகப்பட்டவனையே அகங்காரம் ஆட்கொள்ளும்.
"என் துறை, என் ஆசை, என் தொழில் ஆகியவற்றில் என்னால் முடிந்தளவு உச்சிக்குச் செல்வேன்" என சொல்லித் திரியாமல், செய்துகாட்டினால் ...
உள்சரிவின் முதல் அடி தெரியும். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆனந்தக் கடலின் வழி தெரியும்!
''இப்படியெல்லாம் சொன்னால், பிறகு எப்படித்தான் நான் அதைத் தேடுவது ?'' என்று கேட்டார் குழப்பத்தின் உச்சியில்.
"ஏப்பா, நன்றாக யோசித்துப் பார். நான் அதைக் கேடு என்றா சொன்னேன் ? கண்டுபிடி என்று மட்டும்தானே சொன்னேன்.
நிச்சயமாக அதைக் கண்டுபிடித்து விடலாம். கண்டுபிடிப்பது மிக மிக சுலபம். மாறாக அதைத் தேட ஆரம்பித்தால் அதைக் கண்டுபிடிப்பது மிக மிகக் கடினம்.
இப்போது யோசித்துப் பார். நான் முன்பு சொன்னது புரிய வரும்'' என்றார் ஜென் ஞானி.
ஞானி கூறிய சூட்சுமத்தை ஒரளவு புரிந்து கொண்ட சீடர், ஆர்வமிகுதியால், "தயவுசெய்து நாம் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்த எதுவென அது சொல்லுங்கள்" என்றார்.
''அது வேறெதுவும் இல்லை.
எங்கும் நிறைந்திருக்கும் ஆனந்தசக்திதான் அது'' எனச் சொல்லி முடித்தார் ஜென் ஞானி.
சூட்சுமம் புரிந்த சீடர் வெகு விரைவிலேயே ஆனந்த சக்தியைக் கண்டுகொண்டார்.
ஞானம் அடைவது என்பது ஆனந்தச்சக்தியை, அனுபவம் தாண்டிய அனுபூதியாக உணர்வது.
சதா ஆனந்தத்தில் திளைத்திருந்தும் திகட்டாமல் இருக்கும் நிலைதான் அந்த ஞான அனுபூதி நிலை.
இது நிச்சயமாக எல்லோருக்கும் சாத்தியமாகக்கூடிய ஒன்றுதான். சொல்லப்போனால் ஞானமடைவது என்பது ஒவ்வொரு மனிதரின் பிறப்புரிமை அல்லது பிறவி உரிமை.
பிறந்ததிலிருந்து ஆனந்தமில்லாத செயற்கைத்தன்மையை தொடர்ந்து பார்த்ததால், திகட்டாமல் இருக்கும் நிலையான ஆனந்தம் என்பது சற்றே விசித்திரமாக சிலருக்குத் தோன்றலாம்.
ஆனால், ஆணித்தரமாக என்னால் சொல்ல முடியும் ... முயற்சித்தால் நிச்சயம் அது சாத்தியம்தான். நீங்கள் நித்யமான ஆனந்தத்தை அடைய முடியும். ஆனந்த நிலை அடைவது மிக மிக சுலபம்தான்!
நீத்யானந்தமாக மாறலாம்!
வீட்டைவிட்டு காட்டுக்கு ஓடாதே. காட்டில் மரத்தடியில் அமர்வதால் மட்டும் ஞானம் கிடைத்துவிடாது.
வீட்டில் ஓரிடத்தில் அமைதியாய் இருக்க முடியாதவரால், காட்டிற்குச் சென்றால் மட்டும் அமைதி ஆகிவிட முடியும் என நம்புவது மாயை.
ஓர் உண்மை ... சம்சாரியாய் இருப்பதற்கான அதிகபட்ச மனப்பக்குவம்தான், சந்நியாஸியாக வாழ்க்கையைத் தொடர இருப்பவருக்கான குறைந்தபட்சத் தகுதி.
வெளிஉலகில் தாங்கிப் பிடிக்க குடும்பம் இருக்கிறது.
உள்உலகில் தடுமாறினால் ....
யாருமில்லை தாங்கிப் பிடிக்க!
இங்கு தடுமாறுபவரை, தடுமாறுபவரே
தாங்கிப் பிடிக்க வேண்டும்.
எனவே சொல்கிறேன் ...
மனிதனாய் அரும்பிய பின்னும் எறும்பு போல் ... எதற்கோ ஒடிக்கொண்டே இருக்கிறாய். எதற்கு அது சொல் மனிதா!
சன்யாசம் தப்பிப்பவருக்கான தப்பும் வழி அல்ல. நித்ய ஆனந்தம் பெற தீர்க்கமான முடிவு எடுத்துவிட்டவரின் தீர்க்கமான வழி.
அது கொண்டாட்ட வழி. தனி வழி.
புற உலகில் பார்க்க வேண்டியதையெல்லாம் பார். அனுபவி, எதிலும் குறைவைக்காதே.
எவரோடும் எதனோடும் உன்னைக் கட்டிப்போடாதே.
மனதளவில் எப்போதும் தனித்தன்மை உடையவனாயிரு.
எங்கும் எதிலும் சிக்கிக்கொள்ளாதே. யாருக்கும், எதற்கும் அன்பென்ற பெயரில் கூட அடிமையாயிராதே.
அன்பை வழங்கும் வள்ளலாயிரு. நித்ய ஆனந்தமாக இருக்க அதுபோதும்.
நித்ய ஆனந்த நிலையடைய இருக்குமிடத்திலிருந்தே முயற்சி செய்.
உடலின் ஒவ்வொரு செல்லையும் இயங்கச் செய், சக்திக்கு தியானத்தையும் புத்திக்கு ஞானக்கருத்துக்களையும் தொடர்ந்து சேர்.
சண்யாஸம் ஒரு ஞானவழி. அது ராஜ வழி.
ஆனால் முழுமூச்சோடு முயன்றால்...
வெளிஉலகிலிருந்தே உள்உலகில் நித்யானந்தத்தை அடையலாம்.
நித்யானந்தமாகவே மாறலாம்.
ஒவ்வொருவருக்கும் இது சாத்தியமானதே!
கொண்டாட்டம்
சாகுக்கி (Suzuki)என்பவர் மிகப்பெரிய ஜென் ஞானி. அவர் எழுதிய மிக அழகான ஜென் ஹைகூ ஒன்று ...
''ஞானத்தோட ஆரம்பிக்கும் முன் ... மலை மலையாகத் தெரிந்தது மலர் மலராகத் தெரிந்தது ஆறு ஆறாகத் தெரிந்தது ஞானமடைந்த பின் ... மலை மலையாகத் தெரிந்தது மலர் மலராகத் தெரிந்தது ஆறு ஆறாகத் தெரிந்தது இடையில்தான் குழப்பமெல்லாம். ''
புத்து (Buddhu), புத்தா (Buddha) இருவருக்குமே துக்கமில்லை. புத்து ★ என்றால் முட்டாள். புத்தா என்றால் ஞானி.
இப்போது நீங்கள் அனுபவிக்கும் எல்லா துக்கங்களுமே நீங்கள் முட்டாள் அல்ல என்பதற்கான அறிகுறிகள். ஞானம் நோக்கி நகருகிறீர்கள் என்பதற்கான ஆதாரங்கள். உற்சாகத்தோடு முன்னேறுங்கள்!
- நாடாளும் பலம் பெறுவதாலேயோ, ★ பணம் குவிந்துவிட்டதாலேயோ, கொண்டாட்டம் பிறந்துவிடாது. தன்னை ஆளும் பலம் பெறுவதாலும் உள்ளதை ஆனந்தமாய் அனுபவிக்கும் குணம், பக்குவம் உருவாக்குவதாலும்தான் கொண்டாட்டம் பிறக்கும் !
- திண்டாட்டஉணர்வுதான், உங்களுக்கும் கொண்டாட்டத்திற்கும் ★ நடுவில் தடைச்சுவராய் இருக்கிறதென உங்களுக்குத் தெரியுமா?
- கிருஷ்ண புத்தநிலையில் இருப்பவரை எந்தவொரு திண்டாட்டமும் * அசைக்க முடியாது. காரணம் திண்டாட்ட உணர்வை உதறியெறிந்துவிட்ட தூயநிலைதான்!
- திண்டாட்ட உணர்வென்னும் நோய் ஒருவரைப் பீடித்திருக்கும் வரை ★ அவர் கண்ணுக்குத் திண்டாட்டங்கள் மட்டுமே தெரியும்.
- கொண்டாட்ட உணர்வு ஒருவனுள் உதயமாகிவிட்டால் அவனுடைய ★ கண்களுக்கு எல்லாமே கொண்டாட்டமாகத்தெரியும்!
் பிச்சைக்காரன் போல ஏன் வாழ வேண்டும் ?' எனப் புலவர் ஒருவர் கேட்டபோது புத்தர் சொன்னார்...
''ஞானமடையும் முன், எல்லாம் என்னோடு இருந்தும் துக்கமாயிருந்தேன். ஞானமடைந்த பின், எதுவும் என்னோடு இல்லாது இருந்தும் ஆனந்தமாக இருந்தேன். இருக்கிறேன். இருப்பேன். இந்த நிலைக்காக எதை வேண்மானாலும் இழக்கலாம்'' என்றார்.
என்னவொரு சுகபோகமான வாழ்க்கை!
புத்தனாகும் முன் கௌதம் சித்தார்த்தன் வாழ்ந்தது.
தங்கள் பிள்ளை பின்னாளில் நிச்சயம் துறவியாவான் என்ற உண்மையை முன்கூட்டியே புத்தரின் தந்தை தெரிந்துகொண்டிருந்ததால் தன் மகனுக்கு எல்லாவிதமான சுக போகங்களையும் உருவாக்கிக் கொடுத்திருந்தார்.
இதற்குமேல் அனுபவிக்க இந்த உலகில் ஏதாவது இருக்கிறதா என்ன!'' என்றெண்ணும் அளவுக்கு எல்லா ஏற்பாடுகளையும் தந்தையார் சித்தார்த்தனுக்குச் செய்து கொடுத்திருந்தும் அவரால் சித்தார்த்தன் புத்தராவதைத் தடுக்க முடியவில்லை.
"துக்கப்படுகிறேன்" என வெட்கப்படாமல் சொல்ல, உரை, காட்டு புத்திசாலித்தனம் தேவை!
வெளிசுகங்களைத் தாண்டி, உள்சுகம் தேடிப் புறப்பட்டார், புத்தனாக மலர்ந்துவிட்டார்.
ஞானம், தியானம் ஆகிய யாவும் கலைகள், முறையாய் உருவாக முழுமுதற் காரணமாக இருந்தவர் புத்தர். ஞானத்தையும் அதை அடையும் முறைகளையும் வகுத்துக் கொடுத்த முதல் ஞானி புத்தர்.
புத்தரின் ஞானம் நாம் ஒவ்வொருவரும் அடையப்போகும் இறுதி இலக்கு.
கிருஷ்ணரின் கொண்டாட்டத்தை தவிர, வேறெதுவும் இல்லை.
கிருஷ்ணரின் கொண்டாட்டம்! கொண்டாட்டம்! மட்டுமே
கிருஷ்ணருடைய கொண்டாட்டத்தில் கிருஷ்ணருடைய பக்தர்கள் அனைவரையும் கொண்டாட்டத்தில் கரையச் செய்தவர் கிருஷ்ணர்.
கிருஷ்ணரின் இந்தக் கொண்டாட்ட நிலை அவரின் ஞானவெளிப்பாடு.
எல்லா மாதிரியானதே. வெளிப்படும் விதம் விதவிதமாக மாறும்.
புத்தர் தன் ஞானத்தை ஞானவழியாகவும்,
கிருஷ்ணர் தன் ஞானத்தைக் கொண்டாட்டமாகவும்
பதஞ்சலி தன் ஞானத்தை யோகமாகவும்
இயேசு தன் ஞானத்தை அன்பாகவும்
மீரா தன் ஞானத்தைக் கீதமாகவும் வெளிப்படுத்தினார்கள்.
எல்லா ஞான வழிகளும் இறுதியான ஆனந்தக் கடலில் தான் கொண்டு சேர்க்கும் என்பது உண்மையே.
இருந்தும் அந்தந்தக் கால மனிதரின் மனஅமைப்பிற்கேற்றார்போல் சில வழிமுறைகள் மிகச் சிறப்பான முறையாக அமையும். அந்த வழியில் சென்றால் ஆனந்தம் நோக்கிய பயணம் எளிதாக இருக்கும்.
இந்தக் கால மனிதரின் மனஅமைப்பிற்கேற்றது கொண்டாட்டம். வாழ்வைக் கொண்டாட முயற்சிப்பதே ஒரு அருமையான ஞானமுறைதான். கிருஷ்ணனின் கொண்டாட்டமும் புத்தரின் ஞானமும்தான் இன்றைய மனிதருக்கு மிகச் சிறந்த ஞான வழிகள்.
அதனால்தான் இன்றைய மனிதன் 'கிருஷ்ணபுத்த நிலையை''அடைய வேண்டுமென சொல்கிறேன்.
வாழ்வைக் கொண்டாடுங்கள். வளமான மனிதராவீர்கள்.
''இவ்வளவு திண்டாட்டங்களுக்கு நடுவே நாங்கள் எப்படிக் கொண்டாட முடியும் ? இது எப்படிச் சாத்தியமாகும் " என்று சிலர் யோசிக்கலாம்.
இதற்கு கிருஷ்ணர் சொல்லும் இந்த ஞானவாசகத்தை மனதில் பதிய வைத்துக் கொண்டாலே போதுமானது, கொண்டாட்டம் சாத்தியமாகிவிடும்.
"முடிவு இறைவன் கையில் இருக்கிறது. நீ வெறுமனே செயலில் ஈடுபடு''
அமைதியின் கீதம் சிரிப்பு! முழு சிரிப்பு! என்ன அழகான வாசகம்!
நாம் திண்டாட்டம் என உணரக் காரணம் எதிர்காலம் என்ன ஆகும்!' என்ற நடுக்கம்தான்.
முடிவு இறைவன் கையிலிருக்கிறது என்ற உண்மை உள்ளத்தில் இறங்கிவிட்டால், எதற்குக் கவலை? எதற்கு பயம்? உங்களைப் பிடித்திருக்கும் தேவையற்ற திண்டாட்ட உணர்வு மறைய ஆரம்பித்துவிடும்.
திண்டாட்டம் என்பது வாழ்க்கை சம்பந்தப்பட்ட ஒன்றல்ல. வாழ்க்கை பற்றிய நம்முடைய எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகள் சம்பந்தப்பட்டது.
கொண்டாட்டம் உள்ளுணர்வு சம்பந்தப்பட்டது.
வெளி உலகச் சுகபோகங்கள், சொத்துக்கள் சம்பந்தப்பட்டது அல்ல.
ஆனால், நம்மைப் பொறுத்தளவிற்குக் கொண்டாட்டமென்பது வெளிஉலக சுகபோகங்கள், சொத்துக்கள் சம்பந்தப்பட்டது என்று ஆழ்மனதில் தவறாக நம்புவதால்தான் நம்மால் கொண்டாட முடியவில்லை.
திண்டாடுகிறேனே வாழ்வியல் என்ற விஷ உணர்ச்சிக்குக் கொண்டாட்டம் மருந்து!
முடிவு இறைவன் கையிலிருக்கிறது. எனவே வாழ்வியல் வெறுமனே ஈடுபாடுவது மட்டும்தான் இன்றைய மனிதரின் திண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
வெறுமனே வாழ்வதென்பது உப்புசப்பில்லாத, சுவாரஸ்யமற்ற வாழ்வல்ல.
எதிர்பார்ப்பில்லாத, பகல் கனவுகள் இல்லாத வாழ்வியல் அணுகுமுறையே வெறுமனே வாழ்வது.
உண்மையில் இந்த நிலைதான் கொண்டாட்டம். முடிவு நம் கையில் இருந்தால் விளையாட்டில் சுவை அழிந்துவிடும்.
''முடிவு அவன் கையில் வாழ்வு உன் கையில் கொண்டாடு கொண்டாடு!''
-எனும் தாவோ கீதம்படி வாழ்க்கையை அணுகுங்கள். ஆனந்தமடைவீர்கள்.
ஒரு இருப்பதோ சாதாரணக் குடிசை. உங்களின் வசதி படைத்த பக்தர்கள் கட்டிக்கொடுத்ததோ மாளிகை. இந்த தேவையில்லை எனச் சொல்லி வாழ்கிறீர்கள்…
பார்ப்பதற்குப் பிச்சைக்காரர் போல இருக்கும் உங்களைச் சுற்றி சதா மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். உங்கள் கரம் படுவதினாலேயே நோய்கள் குணமாகின்றன. திண்டாட்டமான சூழலில்கூட கொண்டாட்டத்தோடு வாழ்கிறீர்கள்.
எப்படி இதெல்லாம் சாத்தியமாகிறது ? இதன் ரகசியமென்ன?' என வியந்துபோய் கேட்டார் ஒரு எழுத்தாளர்.
ஞானி, ''அந்த ரகசியம் - மூன்றே வரிகளில அடங்கி விடும்'' என்றதும்.
எழுத்தாளர், ''அப்படியா…. சொல்லுங்கள் சொல்லுங்கள்!'' என ஆர்வமானார்.
ஞானி, "ஆமாம்…
நான் சாப்பிடும்போது சாப்பிடுகிறேன்.
தூங்கும்போது தூங்குகிறேன்.
வாழும்போது வாழ்கிறேன்''.
3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலர் மனிதர்களுக்குக் கொடுத்த பெயர்.. "நடமாடும் கோவில்கள்."
நடமாடும் உங்களுள் நடனமாடும் இறைவனோடு நடனமாட ஆரம்பிக்கும்போது கொண்டாட்டக்காரனாக நீங்கள் மாறிப்போவீர்கள்!
குழுப்பக் கேள்விகளுக்கு மேலும் குழுப்பத்தையே பதிலாகத் தருவது ஜென் ஞானிகளின் பொதுவான அணுகுமுறை.
அந்த ஞானி சொன்னது முழுக்க முழுக்க கிருஷ்ணரின், ''வெறுமனே செயலில் ஈடுபடு'' என்பதைப் பற்றியது. கொண்டாட்டத்தின் உச்சியில் வாழ்ந்த கிருஷ்ணர் நமக்குத் தரும் வழிமுறை வெறுமனே செயலில் ஈடுபடுவது.
ஒரு தியான சொற்பொழிவில் சொன்னது . . . பிறக்கும்போதே புத்தர் ஒரு புத்தராகப் பிறக்கவில்லை. ஒரு காலத்தில் உங்களைப் போன்றே திண்டாடிக் கொண்டிருந்தவர்கள்தான் புத்தரும்!
சாதாரண சித்தார்த்தனால் பத்தனாக முடியும்போது உங்களால் முடியாதா?
அதாவது செய்யும் செயலில் மாத்திரம் கரைந்து போவது.
எதிர்காலம் மற்றும் வாழ்க்கை பற்றிய திண்டாட்ட உணர்வுகளைத் தாண்டி, செய்யும் செயலிலேயே கொண்டாட்டத்திற்கு எளிதாய் ஒருவரை அழைக்குச் செல்லும்.
அப்போதுதான் கொண்டாட்டம், ஆனந்தம் என்ற வார்த்தைகள் அனுபவமாக மாறும்.
விழா வந்தால் கொண்டாட்டமா ?
சாதனை புரிந்தால்தான் கொண்டாட்டமா ?
ஏன் கொண்டாட்டத்தின் சாவி வெளியில் இருக்க உணர்ந்துவிட்டால் உங்கள் கொண்டாட்டத்தின் அதிபதி நீங்களே! வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளும் விழாக்களே! சாதனைகளே!
அக்கண்ணுக்கு இவையெல்லாம் தெரிந்து விடாமல் மறைப்பது மனிதரின் திண்டாட்ட உணர்வே. கொண்டாட்டத்தை வாழ்வில் நடைமுறைப்படுத்த ஆரம்பியுங்கள்.
துவக்கத்தில் உணர்வு மாற்றம் கடினம் போலத் தோன்றலாம்.
துவண்டு விட வேண்டாம்.
துவண்டு போயிருக்கும் உணர்வைக் துள்ள வையுங்கள். ஒரு நேரத்தில் ஒரு செயலில் மாத்திரம் முழுமையாக ஈடுபடுங்கள்.
இறைவன் வாழ அனுமதித்த ஒவ்வொரு நிமிடத்தையும் செயலையும் பரிசாகக் கொண்டாடுங்கள். கொண்டாட்டம் பிறந்துவிடும். கிருஷ்ணபத்தநிலை உதயமாகும்!
உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள்! திண்டாட்டத்தைக்கூடக் கொண்டாட்டமாய் தாண்டிவிடுவீர்கள் !
''என்னை மட்டும் இப்படித் திண்டாட வைக்கிறாயே, இதுவா உன் கருணை. கல்நெஞ்சா உனது ?'' என யோசித்த சூஃபி சீடனின் கனவில் தோன்றிய கடவுள் -
''இரத்தம் வரவர, தோலைக் கிழித்து, தசையை அறுத்து, உள்ளிருக்கும் கட்டியை எடுத்தெறியும் மருத்துவனின் நெஞ்சு கல்நெஞ்சா?'' எனக் கேட்டார் கடவுள்.
மேலும் தொடர்ந்த கடவுள் :
"கொஞ்சம் பொறு. அதிக விழிப்புணர்வோடிரு. திண்டாட்ட காலத்தைத் தாண்டிவிடுவாய். உன் கர்மங்கள், எதிர்மறை நினைவுகள், கரைந்து காணாமல் போகத் தியானம் செய். கொண்டாட்ட காலத்தைத் தொட்டுவிடுவாய்'' எனச் சொன்னார் சீடனிடம்.
ஆனந்தம் அதன் இருக்கையில் அமரட்டும்
''ஆனந்தமாக இருங்கள்'' - இது ஒரு தியானம், இது ஒரு சத்யம், இது ஒரு ஆசீர்வாதம்.
உங்களுக்குப் பரிசாகத் தர விரும்பும் தியானம் இது.
எவ்வளவு காலம் துக்கமாயிருக்கப் போகிறீர்கள்.
ஆனந்தமாக இருங்கள் ...
தியானம் செய்யுங்கள்
ஆனந்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள் ...
ஆனந்தமாகவே இருப்பீர்கள்!
ஒய்வாக, நேராக, அமர்ந்து இதை முயற்சியுங்கள் ...
பால் நிரப்பப்பட்ட பால் பாக்கெட் போல, உங்களின் மொத்த உடலையும் ஆனந்தம் நிரப்பியிருப்பதாக பாவனை செய்யுங்கள்.
ஒவ்வொரு செல்லும் ஆனந்தசக்தியில் முங்கியிருப்பதாக முழுமையாக ஆழமாக உணருங்கள்...
கொஞ்சம் கொஞ்சமாகப் பொங்க ஆரம்பிக்கும் ஆனந்த உணர்வுக்குள் மூழ்கிப் போங்கள்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதைச் செய்யுங்கள்.
ஆனந்தமாக இருப்பீர்கள். அதன் வழியையும் சுற்றியிருப்பீர்கள்.
உங்களுக்குச் சொல்ல விரும்பும் சத்யமும் இதுதான்.
ஆனந்தமாக இல்லாதிருக்க என்னென்ன செய்ய முடியுமோ, அவ்வளவையும் மனிதர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். தேவை சிறு மாற்றமே.
ஆனந்தம் 'அந்தம்' என்றால் ... அது குறையக் கூடியது. ஆனந்தம் என்றால் ... அது குறையாதது! திகட்டாதது! தித்திப்பானது! திருப்தியானது!
துக்கம் நோக்கிச் சுழலும் வாழ்க்கைச் சக்கரத்தையும் குணச் சக்கரத்தையும் ஆனந்தம் நோக்கிச் சுழல வைத்தால் பிரச்சனை தீர்ந்தது. திருப்புங்கள். ஆனந்தமாக இருப்பீர்கள்.
கடைசியாக, ஆனந்தமாக இருங்கள்!
கடைசியாக ஆனந்தமாக இருங்கள் என ஆசீர்வதித்து…
உங்களின் ஆனந்த வாழ்வுக்குத் துவக்கப் புள்ளி வைக்கிறோம். ஆனந்தமாக இருங்கள்!
'ஞான அனுபூதி' என்னில் பெற்றபின்... ஒன்பது மாத ஆனந்த மௌனத்தைத் தாண்டி, என் வழியாய் இறைவன் சொன்ன முதல் வார்த்தை ... ''ஆனந்தமாக இருங்கள்!'''
சொர்க்கமா ? நரகமா ?
உங்கள் சாய்ஸ்
- (கோபம், வெறுப்பு, கவலை, துக்கம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு ★ நிகழ்விலும் நீங்கள் உண்மையில் வாழ்வது நரகத்தில்தான். அந்த நிமிடங்களில் நரக உணர்வான துன்பத்தைத்தான் ருசிப்பீர்கள்.
- சாந்தம், சந்தோஷம், நிம்மதி, அன்பு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு ★ நிகழ்விலும் நீங்கள் நிச்சயமாக வாழ்வது சொர்க்கத்தில்தான். அந்த நிமிடங்களில் சொர்க்க உணர்வான இன்பத்தைத்தான் ருசித்துக் கொண்டிருப்பீர்கள்.
- துன்பத்தையும் இன்பத்தையும் தாண்டிய ஒரு நிலைதான் ஆனந்தம். ★
நரகத்தையும் சொர்க்கத்தையும் தாண்டிய ஒரு வெளிப்பாடுதான் ஞானம்.
சிலர் விடாப்பிடியாக மற்றவர்களுக்கு நன்மைகள் மட்டுமே செய்து கொண்டிருப்பார்கள். தானம், தர்மம் மாதிரியான விஷயங்களில் தாராளமாக இருப்பார்கள்.
இவர்களின் நோக்கம், மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதல்ல.
இறந்த பிறகு சொர்க்கத்துக்குப் போக வேண்டும் என்பதுதான்.
மற்றவர்களுக்குக் கெடுதல் செய்பவர்களைப் பார்த்து, 'நீ நரகத்துக்குத்தான் போவாய்' என்று சபிப்பதையும் கேட்டிருக்கிறோம், மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நரகத்தில்தான் சரியான தண்டனை கிடைக்கும் என்கிற நம்பிக்கையில்தான் இப்படியெல்லாம் சாபம் விடுகிறார்கள்.
கொதிக்கும் எண்ணெயில் குளிப்பாட்டுவது, தீயில் வாட்டுவது, கசையடி கொடுப்பது போன்ற தண்டனைகள் நரகத்தில் தரப்படுவதாக நமக்குப் படங்களோடு விளக்கிக் காட்டப்படுவதால், சாதாரண மனிதர்களுக்கும் சிறு குழந்தை முதலே பயம் தொற்றிக் கொள்கிறது.
உண்மையில் சொர்க்கம், நரகம் என்று ஒன்று உண்டா? இந்தக் கேள்விக்குப் பதில் காண்பதற்கு முன்பு, ஒரு சிறிய ஜென் கதையைச் சொல்கிறேன். கேளுங்கள்.
போர்வீரர் ஒருவர் ஒருநாள் ஜென் ஞானியைச் சந்தித்தார். "சொர்க்கம், நரகம் என்று உண்மையிலேயே உள்ளதா?'' என்று கேட்டார்.
ஞானியோ, ''நீ யார் என்பதை முதலில் சொல்?'' என்றார்.
"நான் ஒரு போர்வீரன்'' என்று கர்வத்தோடு சொன்னான் அந்த வீரன்.
''நீயா ? போர்வீரனா?'' என்று லேசான திண்டலோடு கேள்வியைத் தொடுத்தார் ஞானி. "உன்னை எந்த அரசன் காவலுக்கு வைத்துக் கொள்வான்? உன் முகத்தைப் பார்த்தால் ஒரு பிச்சைக்காரனைப் போல் இருக்கிறதே! ஒரு போர் வீரனுக்கு உரிய இலட்சணமே இல்லையே!'' என்று கூறி விட்டார்.
போர்வீரன் ஆவேசத்துடன் கொந்தளித்து தன்னுடைய உடைவாளை உருவினான். ஞானியைக் கொல்லுவதற்காக வாளோடு சீறி வந்தான்.
உடனே அவனைத் தடுத்து நிறுத்திய அந்த ஞானி, ''இதுதான் நரகம்'' என்றார். நொடிப்பொழுதில் தன் தவறை உணர்ந்த போர்வீரன், வாளை உறையில் செருகி, தன் மடத்தனத்தை நினைத்துச் சிரித்தவாறே ஞானியை வணங்கினார். ''இதுதான் சொர்க்கம்!'' என்று ஞானி மீண்டும் சொன்ன போது, மிகப் பெரிய தத்துவத்தை எளிதாகப் புரிந்துகொண்டு விட்ட திருப்தி போர்வீரருக்கு.
சொர்க்கமோ, நரகமோ புவியல்ரீதியாக எந்த இடத்திலும் இல்லை. மனவியல்ரீதியாகவே உள்ளது.
இந்த உண்மை புரியாதவர்கள்தான் மூடநம்பிக்கையில் சிக்கி உழன்று கொண்டிருக்கிறார்கள், நாம் புரிந்துகொள்ள வேண்டிய மிகப் பெரிய உண்மை: சொர்க்கமும் நரகமும் வெளியில் இல்லை. நமக்குள்ளேதான் இருக்கிறது. நாம் அதிகமாகக் கோபப்படுகிற கணம் நரகம். நம் மனதில் கருணை பொங்கி வழியும் கணம் சொர்க்கம்.
வெளிச்சத்தில் தான் இருக்கிறார் என்ற சத்தியம் சாத்தியமாகும்!
என்னைச் ''கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி ?'' என்கிற கேள்வியைக் கேட்பார்கள், என்னைப் பொறுத்தவரை மிக மிக எளிதான கேள்வி இது, கோபத்தைப் பற்றிச் சில உண்மைகளை, உங்களுக்கு இப்போது சொல்கிறேன்.
'நீ ஒரு ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் செய்து விட்டாய்'' என்று உங்களைப் பார்க்க யாராவது சொன்னால் வருமேயொழியக் கோபம் வராது. ஏனென்றால், அது முழுக்கப்பொய் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால் ''நீ ஒரு அயோக்கியன்'' என்று யாராவது உங்களைப் பார்த்துச் சொன்னால், உங்களுக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்துவிடும். காரணம் என்ன ?
இந்தக் குற்றச்சாட்டில் ஒரளவுக்கு உண்மை இருக்கிறது என்று அர்த்தம், நமக்குள் எங்கோ மறைந்திருக்கும் நாம் மறைத்து வைத்திருக்கும் மனப்புண்ணின் மேல் மற்றவர்கள் வீசும் வார்த்தைக் கத்தி பட்டு, வேதனை பொங்கும் போதுதான் நாம் வெகுண்டு எழுகிறோம்.
நீங்கள் கோபப்படும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். கோபப்படுவதை அடக்க முயற்சிப்பதை விட்டுவிட்டு, கோபத்துக்கான காரணத்தை ஆராயுங்கள். தவறு நம் மீது இருக்கும் போது, நாம் ஏன் அடுத்தவர் மீது கோபப்பட வேண்டும் என்கிற ரீதியில் யோசித்துப் பாருங்கள். நீங்கள் கள்ளம் கபடமில்லாதவர், தவறே செய்யாதவர் என்றால், யாராவது உங்களைப் பார்க்குச் சுண்டுவிரல் நீட்டிப் பேசமுடியுமா ?
நாம் கோபப்படுகிற போது ஒன்றைக் கவனிக்க வேண்டும். வலிமை குறைந்தவர்களிடத்தில் நாம் காட்டுகிற கோபம் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது.
உங்களுக்குக் கீழே இருக்கும் வேலைக்காரர் ஒருவர், ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுவதற்கு மட்டுமே தகுதியானவர் என்றால், அவருக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே நாம் கொடுக்கிறோம். மூவாயிரமோ, ஐயாயிரமோ அள்ளிக் கொடுத்துவிடுவதில்லை. ஒரு மடங்கு வேலைக்குப் பல மடங்குக் கூலி நாம் தருவதில்லை.
ஆனால், அதே ஊழியர் ஒரு சிறு தவறு செய்துவிட்டால், ஆயிரம் ரூபாய்க்குப் பதிலாக ஐந்தாயிரம் ரூபாய் அளவுக்குக் கோபிக்கிறோம். யாருக்கு இழப்பு அதிகம் ? யோசியுங்கள்.
அளவுக்கு அதிகமாக நாம் கோபத்தை வெளிக்காட்டும்போது, நம் 'கிரியா சக்தி' அநியாயமாக வீணாகிறது. எந்தக் காரியத்தையும் சிறப்பாகச் செய்வதற்கு அடிப்படையாக இருப்பது இந்தக் கிரியாசக்திதான். அளவுக்கதிகமாகக் கோபப்படுகிறவர்கள் எளிதில் உற்சாகமிழந்து, சக்தி இழந்துவிடுவதற்குக் காரணம், இந்தக் கோபம்தான்.
எனவே, எவ்வளவு தேவையோ அதைவிடக் குறைந்த அளவே கோபப்படுங்கள்.
கோபப்படுங்கள் என்று நான் உங்களிடம் சொல்வது கண்டு ஆச்சரியப்படாதீர்கள். கோபம் ஒரு மன உணர்வு. உலக வாழ்க்கையில் அதற்கு அர்த்தமும் தேவையும் இருக்கின்றன. ஆனால், அளவுக்கு மீறினால் அதுதான் உங்கள் எமனாகவும் இருக்கும்.
எவ்வளவு தேவையோ அதைவிடக் குறைந்த அளவே கோபப்படுங்கள்!
Part 16: கதவைத்திற ... காற்று வரட்டும்! பகுதி 1
கோபத்தை அடக்கி வைக்கிற போது, அது நம் மனசுக்குள் கிடந்து குமுறுகிறது. வெளிவர முடியாத கோபம், நம் உடலுக்குள் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அடிக்கடிக் கோபப்பட்டு, அதை வெளிக்காட்ட முடியாமல் மனசுக்குள் போட்டு அமுக்கி விடுகிறவர்களுக்கு, இரத்த அழுத்தம் வருகிறது. மாரடைப்பு வருகிறது. நினைத்துப் பார்க்க முடியாத விளைவுகள் எல்லாம் ஏற்படுகின்றன.
ஆனால், அளவுக்கு மீறிக் கோபப்படும்போதுதான் பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன. எனவே, கோபம் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள குதிரையாக இருந்தால், நீங்கள் தாராளமாக ஊர் போய்ச் சேரலாம். இல்லாவிட்டால் கட்டுக்கடங்காத குதிரை உங்களைக் கீழே தள்ளிவிடும்.
அளவுக்கு மீறிய கோபம்தான், சாபமாக மாறும். சாபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள அதிகக் கோபத்திலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள். கோபத்தை நீங்கள் தேவைப்படும் போது பயன்படுத்துங்கள், சக்தியைச் சேமியுங்கள், முன்னோக்கி நகர ஆரம்பிப்பீர்கள்.
கோபத்தைப் போன்றே, மனிதருக்குத் துன்பத்தையும் வேதனையையும் உணர வைக்கும் எல்லா நிமிடங்களிலும் நிகழ்வுகளிலும் மனிதர் நரகத்தில் வாழ்கிறார்.
சந்தோஷத்தைப் போன்றே மனிதனுக்கு இன்பத்தையும் உற்சாகத்தையும் உணர வைக்கும் எல்லா நிமிடங்களிலும், நிகழ்வுகளிலும் மனிதர் சொர்க்கத்தில் வாழ்கிறார்.
நாம் முயன்றால் சொர்க்கத்தை நாமே உருவாக்கிக் கொள்ள முடியும். சொர்க்கமும் நரகமும் ஒரு தனிமனிதரின் கையில் இருக்கின்றன. உங்கள் சொர்க்கத்தை உருவாக்குங்கள் !
உலக வாழ்க்கையை இருமையாக வாழ்வது எப்படி? என்பதைப் பற்றிய கதவைத்திற ... காற்று வரட்டும்! உற்சாகத் தொடர் சொல்லும் சத்தியங்களை வெறுமனே நம்பாதீர்கள்.
நவ நாகரீக மனிதனுக்கு அது மிக கடினம். யோசித்துப் பாருங்கள் ... சிந்தித்துப் பாருங்கள் ... "இந்த புத்தகம் சொல்லும் சத்தியங்கள், என் வாழ்வை வளமாக்கும் சத்தியமாக ஏன் இருக்கக்கூடாது ? ஒரு வேளை இருந்துவிட்டால் ?!!!'' என்ற மன நிலையோடு, கட்டுரைகளை படித்து, சிந்தித்து வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துங்கள்.
The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam பற்றி ...
- எல்லையில்லா இறைச்சத்தி, மனித மனம் மாய எல்லைக்குள் சிக்கிக் கொண்டதால் உருவான உயிரே மனிதன்!
- உடலுமல்ல, மனமுமல்ல, உயிருமல்ல நீங்கள் இம்மூன்றையும் சாட்சியாய் கவனிக்கும் விழிப்பு நிலை.
- 'நான் கடவுள்' என்பதை நிருபிப்பதற்காக வரவில்லை. 'நீங்கள் கடவுள்' என்பதை நிரூபிப்பதற்காக வந்திருக்கிறேன்.
- "சொர்க்கமும் நரகமும் புவியியல் ரீதியல்ல மனோரீதியானது. சொர்க்கம் உனக்குள்ளே ... ''
- "மனிதர்கள் இரண்டே வகை. கடவுளாக வாழும் மனிதன் மனிதனாக வாழும் கடவுள்''
- "வாழ்வின் ஒவ்வொரு சம்பவமும் வேதம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு உயிரும் - குரு வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் - தியானம்''
21-ஆம் நூற்றாண்டில் மெய்ஞானத்தோடு விஞ்ஞானத்தை சமைத்து வழங்கும் ஞான சத்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
உலக அமைதியை உடனடியாக ஏற்படுத்தும் நேரடித்தீர்வான ஜீவன் முக்தர்களை உருவாக்குவதே என் பிறப்பின் நோக்கம் எனும் அவதாரபுருஷர்.
யோகம், தியானம், தீக்ஷைகள், தியான சிகிச்சைகள் மூலமாக தனிமனிதர்களின் வாழ்வை உயர்த்துவதற்காக, தன்னுடைய ஒரு நாளில் 20 மணி நேரத்தை பொதுமக்களுக்காகவே பயன்படுத்தும் தியாக புருஷர்.
மக்கள் சேவைக்காக தியான சிகிச்சையாளர்களை உருவாக்கி, சன்யாசிகளை உருவாக்கி, சேவைக்காகவே உருவாக்கப்பட்ட தியானபீடங்களின் மூலமாக, நாடுகளில் சேவைகளை செய்துவரும் ஞான புருஷர்.