Books / Nithya Dhyaan - Experience Bliss

1. Nithya Dhyaan - Experience Bliss

தியானம் ஒரு விஞ்ஞானம்

பேரின்ப நிலையை நீங்கள் அடைவதற்கான தியான நுட்பம்

தியானம் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், இந்தத் தியான நுட்ப தோற்றத்திற்கான அவசியம் எவ்வாறு எனக்குள் தோன்றியது என்பது பற்றி பகிர்ந்து கொள்கிறேன். ஞானமடைந்தவுடன், ஒரு குறிப்பிட்ட கால அளவில் (மாதக்கணக்கில்) மௌனத்திலிருந்தேன். அப்போது "எனக்குள் ஏற்பட்ட அனுபவத்தை எவ்வாறு மற்ற அனைவருக்குள்ளும் மலரச் செய்வது" என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தேன்.

இந்த ஆராய்ச்சியின் முதல் வெளிப்பாடான ஆனந்த ஸ்புரணா நீகம்ச்சியானது (Ananda Spurana) ஏழு சக்தி மையங்களில் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்யப்பட்டு, அவை ஒவ்வொன்றையும் தூய்மையாக்குதல் மற்றும் சக்தியூட்டப்படுதலுக்கான தியான நுட்பமாக இறுதி வடிவுட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து நித்யானந்த ஸ்புரணா நிகழ்ச்சியானது (சக்தி உடலின்) ஏழு சக்தி உடல்களின் மீது ஆராய்ச்சி செய்யப்பட்டு அமைதியான, ஆனந்தமான மரணத்தை எவ்வாறு துமவுவது என்பதற்கான தியான நுட்பமாக வடிவமைக்கப்பட்டது.

அதன் பின்னர் தனிப்பட்ட ஒவ்வொருவரையும் முழு வளர்ச்சி பெரச்செய்து, அவரவரது உண்மை நிலையை உணரச்செய்வதற்கான அனைத்து வழிகளையும் தியான ஸ்புரணா நிகழ்ச்சி, ஆத்ம ஸ்புரணா நிகழ்ச்சி மற்றும் பல நிகழ்ச்சி வழியாக வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன்.

பல்வேறுபட்ட நூற்றுக்கணக்கான தியான நுட்பங்கள் எனது அனைத்து நிகழ்ச்சிகளின் வழியாக வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் இதில் ஒவ்வொரு தனிப்பட்ட தியான நுட்பத்தையும் தனிநபரின் மனநிலையை உயர்த்துவதாக வடிவமைத்தேன். இவை அனைத்துமே மனித விழிப்பு நிலையை உயர்த்துவதாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. மனித இயல்பு நிலையில் ஏதேனும் ஒரு நோக்கில் அது ஆழ்ந்து வேலை செய்து அவர்களை மேன்மையான உணர்வு நிலைக்கு எளிதில் உயர்த்தும்.

தியானம் செய்வது பற்றி பொதுவாக மக்கள் எப்பொழுதும் என்னிடம் "சுவாமிஜி நீங்கள் எங்கள் தனிப்பட்ட ஒவ்வொருவருக்காகவும் பரிந்துரை செய்யும் தியான நுட்பம் ஏதேனும் உண்டா?" என்று கேட்பதுண்டு.

இக்கேள்வி மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டபின் அதைப்பற்றி ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது அவ்வாறு அவர்களுக்காக வடிவமைக்கப்படும் தியான நுட்பம் இன்றைய சூழலில் தினமும் பயிற்சி செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும் எனும் இந்தக் கேள்வி என்னுள் எழுத் தொடங்கியது. அதன் பின் அதற்கான விடையை எண்ணிப்பார்க்க ஆரம்பித்து விட்டேன்.

தனிப்பட்ட ஒவ்வொருவரும் எனது தத்துவாங்கள், கற்பிக்கப்பட்ட செய்கிகள் மற்றும் அனுபவங்களைப் பற்றி எளிதில் அறிந்து கொள்ளும் தியான நுட்பமாகக் கொணர எண்ணிப்பார்க்கேன்.

நமது இயல்பு நிலையின் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மட்டும் குவியச்செய்து பார்க்காமல், முழுமையான மனித மனப்பான்மை, அறிவாற்றல் மீது வேலை செய்யக்கூடிய ஒரு தியான நுட்பத்தை எதிர்பார்த்திருந்தேன். மனித இயல்பு நிலையின் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மட்டும் வேலை செய்யாமல் அனைத்து கோணங்களிலும் வேலை செய்து அவர்களை இறுதியான அனுபவத்தைப் பெறுவதற்காக தயார் செய்யும் நுட்பமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தேன்.

அந்த நேரத்தில்தான் ஒருநாள், உங்கள் அனைவருக்கும் கற்பிக்க விரும்பிய தியான நுட்பமானது நித்ய தியானம் (பேரின்பத்திற்கான தியானம்) உடனடியாகக் கணநேரத்தில் தோற்றமளித்தது. ஒரே பொழுதில், இந்த தியான நுட்பத்தின் பல பகுதிகளை ஒரே நேரத்தில் தெளிவாகக் காண முடிந்தது.

ஒவ்வொரு பகுதியும் மற்ற பகுதியுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதும், அது ஒருவரின் விழிப்புணர்வை எவ்வாறு அதிகரிக்கும் என்பது பற்றி என் உள்மையத்தில் பாவனை செய்துபார்த்தேன்.

நித்ய தியானம் என்னுடைய தியான ஆராய்ச்சியின் உச்சநிலைக்கட்டத்தில் உருவானது.

இங்கு நீங்கள் ஒரு முக்கியக் கருத்தைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.

ரிஷி என்பவர் மந்த்ரா திரஷ்டர் (மந்த்ரங்களை பார்ப்பவர்), நுட்பங்களை சமாதி நிலையில் தோற்றமாக்கிப் பார்ப்பவர் . மந்திரம் அல்லது நுட்பத்தை அவர் உருவாக்கவில்லை. பிரபஞ்ச சக்தி அவ்வாறு அவருக்குத் தோற்றமளித்தது தான் மந்திரங்கள்.

மந்திரத்தின் இயல்புநிலையானது இயற்கையிலேயே பூரணத்துவம் வாய்ந்தது. மந்திரம் உருவாக்கப்பட இயலாது, அது பிரபஞ்ச சக்தியின் பூரண வெளிப்பாடு. ஆகவே எந்த ஒரு மந்திரமோ அல்லது நுட்பமோ தனிப்பட்ட ஒருவரால் உருவாக்கப்பட இயலாது. அது தனிநபருக்கு மட்டும் உரிமையானதல்ல. இந்த நோக்குநிலையைத் (understanding) தெளிவாக்கிக் கொள்ளுங்கள். நித்ய தியானம் எனும் நுட்பத்திற்கான பலன் என்னைச் சார்ந்தது அல்ல. ஏனென்றால் காலம் கனிந்தபொழுது தானாகவே இந்த நூட்பம் பிரபஞ்ச சக்தியால் வெளிப்படுத்தப்பட்டது.

இப்பொழுது, இந்தத் தியான நுட்பத்திற்கான விவரங்களுக்குள் செல்லாம். நித்ய தியானம் ஐந்து படிகள் கொண்டது. ஒவ்வொரு படிக்கான விளக்கத்தை ஒன்றன்பின் ஒன்றாகப் பார்க்கலாம்.

நடை கியல்பு நிலையின் ஏத்தனும் ஒரு குறிப்பிடீட கோணத்தில் முடும் குவியச்சிசய்து பார்க்காமல், முழுமையான மனித मनப்பான்மை, டேவலை தியான டூபத்தை எதிர்பார்த்திருந்தேன்.

சீரற்ற முறையில் சுவாசித்தல்

உங்களுடைய உணர்வு முழுவதும் சுவாசமாக மாறட்டும்.

முதல் ஏழு நிமிடங்களில் நீங்கள் வஜ்ராசன நிலையில் அமர்ந்து, கண்களை மூடியும், உங்கள் கைகளை இடுப்பின் மேல் வைத்தும் சீரற்ற முறையில் சுவாசிக்க வேண்டும். ஆழமாகவும் ஒழுங்கற்ற முறையிலும் மூச்சை உள்ளே இழுக்க வெளியே விடவேண்டும். உங்களுடைய முழுக்கவனமும் சுவாசத்திலேயே குவியச்செய்யுங்கள்.

உங்களுடைய இருப்பே சுவாசமாக மாற வேண்டும்.

உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் சக்தி உடல் மூலாதார சக்கரத்திலிருந்து சஹஸ்ராரத்தை நோக்கிப் பாய வேண்டும். நமது உடலில் சக்தியானது சகஸ்ரார சக்கரத்தில் இருந்து மூலாதாரச் சக்கரத்தை நோக்கி கீழ்நோக்கிப் பாய்கிறது. வஜ்ராசன நிலையில் அமரும் போது நமது சக்தி மேல்நோக்கி நகர்வதற்கு உதவுகிறது.

எந்த ஒரு ஆன்மீகப் பயிற்சியையும் ஒருவர் துவங்குவதற்கு சுவாசமே சிறந்த இடமாகும். பல்வேறுபட்ட தியான நுட்பங்களில் வெவ்வோற வகையான முறைகள் உள்ளன. சிலர் சாட்சியாகவும், சிலர் மந்திரங்களையும், வார்த்தைகளையும் திரும்பச் சொல்லி தியானத்தில் ஈடுபடுவர். ஆனால் எனக்கு இம்முறைகளில் சுவாசமே சிறந்த நிலையான ஆன்மீகப் பயிற்சிக்கு உதவி இருக்கிறது.

நமது உடலில் இரண்டு விதமான அமைப்புகள் உள்ளன. ஒன்று நம்மால் கட்டுப்படுத்தி செயல்படும் அமைப்பு. (Voluntary actions). மற்றொன்று நம்மால் கட்டுப்படுத்த முடியாத செயல் அமைப்பு (Involuntary actions)

கைகளையும் கால்களையும் அசைப்பது நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய செயல்களாகும். உதாரணத்திற்கு தேவைப்படும் பொழுது உங்களால் கைகளையும், கால்களையும் அசைக்க முடியும், ஆனால் உங்களால் உங்கள் மூளையின் இயக்கத்தையோ, இதயத்தின் துடிப்பையோ கட்டுப்படுத்த முடியாது. இது நம்மால் கட்டுப்படுத்த முடியாக செயலுக்கான எடுத்துக்காட்டுகளாகும்.

ஆனால் சுவாசம் என்ற அமைப்பு தானாகவும், நம்மால் கட்டுப்படுத்தக்கூடியதாகவும் இருக்கிறது. நீங்கள் விழிப்புணர்வு நிலையில் இல்லாமல் இருந்தால் கூட சுவாசம் உங்களில் நடந்து கொண்டேயிருக்கும்.

நீங்கள் வேறு எதன் மீதாவது ஈடுபாடு கொண்டிருந்து கவனத்தைத் திருப்பினாலும் உங்களால் மூச்சுவிடுவதை நிறுத்த முடியாது. அப்படி சுவாசத்தை நிறுத்தினால் அது மிகப் பெரிய விளைவுகளை உண்டாக்கும். அதேபோல் உங்களால் உங்கள் சுவாசத்தைக் கட்டுப்படுத்தவும் முடியும்.

பிரணாயாமத்தைப் பற்றிய முழு அறிவியலும் சுவாசத்தைப் பற்றியே விளக்குகின்றது.

உங்களால் ஆழமாகவும், மெதுவாகவும் உங்களின் தேவைக்கேற்ப சுவாசித்துக் கொள்ளமுடியும். உங்களால் உங்கள் சுவாசத்தை நீண்ட இடைவெளிகளில் பிடித்துக் கொண்டும் அல்லது சுவாசத்தைச் சில நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கவும் முடியும்.

ஆனால் உங்களால் உங்கள் சுவாசத்தை நிறுத்தி இறக்க முடியாது. ஏனெனில் உங்களுக்குள்ளிருக்கும் உங்களைக் காப்பாற்றும் தன்மைக்கும் (Survival instinct), உங்கள் விருப்பத்திற்கும் இடையே உள்ள மோதல்தான் காரணம்.

ஒரு உண்மை என்னவென்றால், உங்கள் உடலில் உள்ள சில உறுப்புகளின் இயக்கத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியாததற்குக் காரணம் இந்த காப்பாற்றும் தன்மை (Survival instinct) தான். வாழவேண்டும் என்ற ஆசை இருப்பதினால் தான் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் சுவாசமே நீங்கள் வாழ வேண்டும் என்ற ஆசையினால் தான் நடந்து கொண்டிருக்கிறது.

உங்களின் சுவாசத்தின் தன்மை உங்களின் மனநிலைக்கு ஏற்றார் போல் மாறிக் கொண்டே இருக்கிறது என்ற உண்மையை நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள்.

உங்களின் உணர்ச்சிகள் சுவாசத்துடன் ஒரு மோதலோடு இருக்கின்றது. நீங்கள் கவலைப்படும்போது உங்களின் சுவாசத்தில் மாற்றம் ஏற்படுகிறது. அதுவே நீங்கள் கோபத்தில் இருக்கும் போது உங்களின் சுவாசம் மாறுபாடாக இருக்கின்றது.

அதேபோல் நீங்கள் உணர்வில் இருக்கும் போதும் உங்களின் சுவாசம் மாறுகின்றது.

உங்களுடைய சுவாசம் உங்களின் உணர்ச்சிகளோடு நேரடியாக தொடர்புடையது. உங்களின் மனநிலை மாறிக் கொண்டிருக்கும் போதே உங்களின் சுவாசமும் மாறிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் கோபத்தில் இருக்கும்போது உங்களுக்கு வழங்கப்படும் அறிவுரை ஆழமாக சுவாசியுங்கள் என்பதுதான். ஆழமாக சுவாசித்து முடித்த பிறகு திடீரென உங்கள் மனம் இலேசானதாகவும், மிக அமைதியாகவும் மற்றும் கோபம் குறைந்ததாகவும் மாறியிருப்பதை உங்களால் உணர முடியும்.

மனமும், சுவாசமும் மிக நெருக்கமான தொடர்புடையது. நீங்கள் சுவாசிப்பதை நிறுத்தி விட்டால், நீங்கள் யோசிப்பதற்கு சிரமப்படுவதை உணரமுடியும்,

உங்களுடைய சுவாசம் உங்களின் உணர்ச்சிகளேரீடு நேகடிாக தொடாபுடையது. உங்களின் மனநிலை மாறிக் கொண்டிருக்கும் போதே உங்களின் சுவாசுடிம் மாறிக் ிகாண்டுநக்கிறது. நீங்கள் கேர்பத்தில் இருக்கும்போது உங்களுக்கு வடிங்கப்படும் அறிவுரை ஆடியாக சுவாசியுங்கள் என்பதிதான். ஆடியாக சுவாசித்து உங்களின் மனம் 3lsoverar smosajo, Ola Hooshuraajo yiannyto சோபம் குறைந்ததாகவும் இருப்பதக் உணர முடியும்.

சுவாசமானது உங்கள் மனதிற்கு எரிபொருளாகும், சமஸ்கிருதத்தில் இதனைப் "பிராணா" என்றழைப்போம். "பிராணா" என்பது நேரடியாக நம் சுவாசத்தைக் குறிக்கவில்லை. பிரபுஞ்ச சக்தியானது சுவாசத்தின் மூலமாகப் பாய்வதையே குறிக்கின்றது.

தைத்ரேய உபரிஷத்தில் ஐந்து கோஷங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை அன்னமயக் கோஷம், பிராணமயக் கோஷம், மனோமயக் கோஷம், விஞ்ஞான மயக் கோஷம், ஆனந்தமயக் கோஷம். இந்த கோஷங்கள் "ஆத்மனை" மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது. வெங்காயத்தில் உள்ள தோலைப் போல் இந்த கோஷங்கள் உடலைச் சுற்றி அமைந்துள்ளன. பிராணமயக் கோஷத்தில் தான் உங்களுடைய ஆசைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. ஆதையால் உங்களின் ஆசைகளுக்கேற்பு, உங்களின் சுவாசம் மாறுகின்றது.

உங்களுடைய ஆசைகளும், சுவாசமும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. நீங்கள் ஆழ்ந்து பார்த்தீர்களானால் உங்களுடைய ஆசை அதிகமாக இருக்கும்போது சுவாசம் வேகமாகவும் கனமாகவும் இருக்கும். உங்களுடைய ஆசைகள் குறைவாக இருக்கும்போது நீங்கள் மிகவும் ஒய்வாகவும், அமைதியாகவும் இருப்பீர்கள்.

சுவாசமும், மனமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதால், இதில் ஒன்றை மாற்றும் போது மற்றொன்றும் மாறும். நம்முடைய உணர்ச்சிகள் நம்முடைய சுவாசத்தைப் பாதிக்கின்றது என்பது நமக்குத் தெரியும். அதேபோல், நம்முடைய சுவாசத்தைக் கட்டுப்படுத்தும்போது அல்லது சுவாச அமைப்பில் சிறு மாற்றத்தைக் கொண்டு வந்தாலும் அது நம்முடைய உணர்ச்சிகளைத் தூண்டும்.

நம்முடைய நினைவுகள் தசைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. உடலிருந்து ஒரு பகுதி துண்டிக்கப்பட்டுவிட்டால் அந்தப் பகுதி சார்ந்த நினைவுகளும் துண்டிக்கப்பட்டு விட்டது போன்று உணருகிறோம். இதைப்பற்றி புரிந்து கொள்ள நீங்கள் ஒரு சிறு சோதனையைச் செய்து பார்த்தால் தெரியும்.

உங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்களுடைய உருவத்தை நினைக்காமல் ஞாபகப்படுத்திப்பாருங்கள். உங்களால் முடியாது. உங்களுடைய நினைவுகள் உங்களுடைய உருவங்களில் பதிந்திருப்பதால். உங்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியை ஞாபகப்படுத்துவதற்கு உருவம் அவசியமாகிறது.

உங்களுடைய உங்களால் இயல்பாக சுவாசிக்க முடிவதில்லை. நீங்கள் சுவாசிக்கும் காற்றின் அளவு குறைவாகிறது. இந்நிலையில் உங்களால் ஏற்கனவே அழுக்கப்பட்ட உணர்ச்சிகளும், நினைவுப்பதிவுகளும் தசைகளிருந்து வெளியேறுவதில்லை.

இவ்வாறு சுவாசிக்கும் போது 'பிராணன்' உடலின் எல்லாப் பகுதியையும் தொடுவதில்லை. மேலும் நீங்கள் எப்போதும் ஒரே நிலையான மன அமைப்பைக் கொண்டே சுவாசிக்கின்றீர்கள். உடலில் உள்ள சம்ஸ்காரங்கள், பழைய நினைவுகள், ஒரு தனித்துவமான சுவாச அமைப்பை உருவாக்கிக் கொள்வதால் முடிவில் நாம் அதே போன்ற சம்ஸ்காரங்களையும், நினைவுகளையும் கவர்கின்றோம்.

உடல் அமைப்பில் அழுத்தப்பட்ட எந்த உணர்வுக்கும் தன்னை காப்பாற்றிக் கொள்ளும் தன்மை உண்டு.

(Survival instinct) உங்களுடைய மன அமைப்பில் அமுக்கப்பட்ட உணர்ச்சிகளுக்கு மன அமைப்பில் தங்குவதற்கும் வளர்ப்பதற்கும் ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ளும். உங்களால் அமுக்கப்பட்ட கோபமான உணர்ச்சிகள், அதற்கேற்றாற்போல் சுவாசத்தை உருவாக்கும். இது ஒரு ஒட்டுத்தன்மையுள்ள சுழற்சி முறையாகும்.

உங்களுடைய சுவாசம் உங்கள் பழைய சம்ஸ்காரங்களின் விளைவினாலேயே உருவாகின்றது. அதனால் நித்ய தியானம் சீரற்ற முறையில் துவங்குகிறது. நீங்கள் எவ்வளவு ஆழமாக சுவாசிக்க முடியுமோ அவ்வளவு ஆழமாகவும், அவ்வளவு சீரற்ற முறையிலும் சுவாசிக்க வேண்டும்.

உங்களுடைய மனம் மற்றும் உயிர்த்தன்மை (Being) முழுவதும் சுவாசமாக மாறவேண்டும்.

சுவாசமானது ஆழமாகவும், காற்றை அதிக அளவு உள்ளிழுக்கும்படியும் இருக்கவேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த ஆழமான சீரற்ற சுவாசமுறை உங்கள் தசைகளில் உள்ள இறுக்கத்தையும், சம்ஸ்காரங்களையும் விடுபடுத்த (வெளியேற்ற) ஆரம்பித்து விடும்.

இயல்பாக நம்முடைய தசைகள் எப்போதுமே இறுக்கமாகவே இருக்கும். சீரற்ற சுவாசம் தசைகளை இளகச்செய்து, சம்ஸ்காரங்களை

வெளியேற்றி சுத்தப்படுத்த ஆரம்பித்துவிடும்

ஒவ்வொரு உணர்ச்சியும் நமக்குள் ஒரு குறிப்பிட்ட சுவாச முறையை உயிர்த்தெழுச் செய்யும். குழந்தைகளின் சுவாசம் ஆழமாகவும், ஆனந்தமாகவும் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். அவர்கள் குறைந்த அளவு காற்றை மேம்போக்காக சுவாசிக்க மாட்டார்கள்.

ஆனால் அவர்கள் வளர, வளர சமுதாயம் கொடுத்த கட்டுப்பாடுகளினாலும், அவர்களுக்கு ஏற்பட்ட வலிகள், சந்தோஷாங்கள், குற்ற உணர்ச்சிகள், நம்பிக்கைகள், மன உளைச்சல்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றினாலும் அவர்களின் சுவாசத்தின் தரம் முழுவதுமாக மாறிவிடுகிறது.

இப்பொழுது இந்த அமைப்பை நீங்கள் உலுக்க வேண்டுமானால், பல வருடங்களாக உணர்ச்சிகளால் அழுக்கப்பட்ட அமைப்பில் நீங்கள் குழப்பங்களைப் புகுத்த வேண்டும்.

வேறொரு அமைப்பைப் பகுத்துவதால் அது தீர்வாக அமையாது. உங்களுடைய பழைய பதிவுகளை வெளியே எடுக்க உங்கள் அமைப்பில் குழப்பங்களைப் புகுத்த வேண்டும்.

ஆகனால்கான் பிராணயாமா போன்ற சுவாசப் பயிற்சிகளை நான் அங்கீகரிப்பதில்லை. இந்த ஒழுங்கற்ற சுவாசமுறை பழைய சம்ஸ்காரங்களை எரித்துவிடும். இது ஒரு மரத்தில் உள்ள இறந்த இலைகளை உலுக்குவது போன்றதாகும். எல்லா இறந்த இலைகளும் கீழே விழுந்துவிடும். இதேபோல் இந்த சுவாசமுறை உங்களின் அழுக்கப்பட்ட மன அமைப்பை மாற்றிவிடும். எல்லா சம்ஸ்காரங்களும் வெளியேறிவிடும்.

இந்த சுவாசமுறை உங்களின் அழுக்கப்பட்ட மன அமைப்பை மாற்றிவிடும். எல்லா சம்ஸ்காரங்களையும் வெளியேற்றிவிடும் ஆற்றல் வாய்ந்ததாகும்.

மஹா வாக்கிய உச்சாடனம் உங்கள் உடலை ஒரு சத்தியமாக உணர வைக்கின்றது

இந்த இரண்டாவது பகுதியில் வஜ்ராசன நிலையில் அமர்ந்து கைகளில் சின் (Chin) முத்திரையை உருவாக்கி உங்கள் முட்டிப்பகுதியில் வைக்க வேண்டும். இந்நிலையில் உங்களால் எவ்வளவு நீளமாக முடியுமோ அவ்வளவு நீளமாக, எவ்வளவு ஆழமாக முடியுமோ அவ்வளவு ஆழமாக, எவ்வளவு சப்தமாக முடியுமோ அவ்வளவு சப்தமாக மஹாமந்திர நாதத்தை உச்சாடனம் செய்ய வேண்டும்.

உங்களுடைய முழு விழிப்புணர்வையும் உச்சாடனத்தில் குவியுங்கள். உச்சாடனமாகவே மாறுங்கள், இது உங்களின் உள் எண்ண ஓட்டத்தைக் குறைக்கும்.

தொடர்ச்சியாக உங்களின் மனம் பேசிக்கொண்டே இருக்கின்றது. வெளியே நாம் யாரோடும் பேசாமல் இருந்தாவும், உங்களுக்குள் ஏதாவது ஒரு செயல் ஓடிக் கொண்டே இருக்கும். இந்த ஓசை எழுப்பும் தியான நுட்பம் உங்களின் உள் எண்ண ஓட்டத்தைக் குறைக்கும் சிறந்த நுட்பமாகும்.

பொதுவாக மக்களுக்கு எந்த வித எண்ண ஒட்டமும் இல்லாமல் அமர்ந்திருப்பதற்கு கஷ்டமான செயலாக இருக்கும் . நீங்கள் தியானம் என்ற துணிகரச் செயலில் இறங்கும் போது, உங்கள் மனம் எதிர்ப்பு தெரிவிப்பதை நீங்கள் பார்க்கலாம். மனம் அதற்கு எதிராக கலகம் செய்யும். அமைதியாக உட்கார்ந்து கொள்வதற்கு உங்கள் மனம் விரும்பாது. நீண்ட காலமாக உங்கள் மனம் இயங்குவதற்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளதால், திடீரென அமைதியாக அமரச் செய்யும் போது, மனம் எதிர்ப்பு தெரிவிக்கும்.

பொதுவாக மக்கள் எண்ண ஓட்டம் இல்லாமல் இருக்கும் போது தான் அதிக எண்ணங்கள் வருகின்றன என்று சொல்கிறார்கள். மனது என்பது நீண்ட வருடங்களாக அமைதியாக இருந்து பழக்கப்படவில்லை. அதனால் மனதை அமைதிப்படுத்தும் எந்த ஆரம்ப நிலை முயற்சியும் எதிர் நீச்சல் போலத்தான். பொதுவாகவே மனமானது தடுக்கும்.

இந்த நேரத்தில்தான் நிறைய மக்கள் தியானத்தை நிறுத்திவிடுகிறார்கள். அவர்கள் உற்சாகம் இழந்து, தியானமெல்லாம் நமக்கு சரிவராது என்று நினைத்து விடுகிறார்கள்.

ஆன்மீகத்தேடல் உள்ளவர்களுக்கு இந்த அனுபவம் தான் முதலில் கிடைக்கும். நீங்கள்தான் முயற்சி எடுக்க வேண்டும். இந்த முயற்சியைத்தான் நான் கபஸ் என்கிறேன். ஆரம்பத்தில் வரும் தடைகளைக் கொண்டு நீங்கள் உற்சாகம் இழந்தால், உங்களால் வெற்றி பெறவே முடியாது.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமிர்தத்தை எடுப்பதாகப் புராணத்தில் ஒரு கதை உள்ளது. ஆனால் கடலைக் கடைந்த பிறகு முதலில் கொடிய விஷம் தோன்றியது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது. அதற்கடுத்து பல பொருட்கள் வெளிவந்த பிறகே முடிவில் அமிர்தம் வந்தது. இந்தக் கதை தியானத்தின் ஒரு முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

மனதை ஞானத்திற்காகக் 'தியானம்' என்ற செயலைக் கொண்டு கடையும் போது, எதிர்மறைகளும் வெளிப்படலாம். இதனால் உற்சாகமிழந்து விடாதீர்கள். இது உங்களின் எதிர்மறைகள் வெளியேற்றப்படுவதற்கான அடையாளமாகும். தியானத்தில் உங்களின் முயற்சியை நீங்கள் உயா்ந்த நிலையை அடையும் வரைத் தொடருங்கள்.

ஆரம்ப காலகட்டங்களில் எண்ண ஓட்டங்கள் தொடா்ந்து துன்பப்படுத்திக் கொண்டிருக்கும். இந்த மஹாமந்திர உச்சாடனம் செய்தல் உங்களுக்குச் சிறந்த கருவியாகும். உங்கள் மனதை அமைதிப்படுத்த இது உதவுகிறது.

நம்முடைய உள்மன எண்ண ஓட்டங்கள் மணிப்புரகச் சக்கரத்திலிருந்தும், சுவாதிஷ்டான சக்கரத்திலிருந்தும் உருவாகின்றன. இந்த இடத்தைத் தான் நாம் "Aura" என்கிறோம். முழுவதுமாக நாம் ஓசை எழுப்பும் போது, தொப்புள் மையத்துக்கு கீழே வலது புறமாக ஒரு அதிர்வு வருவதை நாம் உணர முடியும். ஆழமாக உச்சாடனம் செய்யும் போது தொடர்ந்து வரும் எண்ண ஓட்டங்களை நாம் நிறுத்த முடியும். இது ஹரா என்ற இடத்தை நாம் உலுக்குவதற்கு ஒப்பாகும். ஆகையால் தொப்புளுக்குக் கீழேயிருந்து நாம் உச்சாடனம் செய்ய வேண்டும்.

மனம் என்பது எண்ண ஓட்டங்களே. உச்சாடனம் செய்யும் போது எண்ண நிலைக்குச் செல்கின்றீர்கள். உங்கள் மனதின் பல்வோப முகங்களை நீங்கள் அனுபவமாக உணர ஆரம்பிக்கின்றீர்கள்.

ஒரு நல்ல கார் ஓட்டுனருக்கு அவருடைய காரைப்பற்றிய விஷயங்கள் தெரியும். உதாரணமாக காரின் சப்தத்தை வைத்து அதன் வேகத்தை அளவிடுவார். என்ஜினின் சப்தத்தில் ஏதாவது வித்யாசம் தெரிந்தால் கூட, இயந்திரத்தில் ஏதாவது கோளாறு இருக்கிறதா என்பதை அறிந்து அதை சரி செய்து விடுவார்.

ஆனால் பயணிகளால் இந்த வித்யாசத்தை உணர முடியாது. இதே போல் நீங்கள் தியானத்தை தொடர்ந்து செய்யும் போது, நீங்கள் எழுப்பும் நாதத்தின் தரத்தை வைத்து உங்கள் உடலின் இயக்கங்களை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

மனதை ஞானத்திற்காகத் "தியானம்" என்ற செயலைக் கொண்டு கடையும் போது, எதிர்முறைகளும் வரும். இதனால் உற்சாகமிழந்து விடாதீர்கள். அது வெளியேற்றப்படுவதற்கான அடையாளமாகும். தியானத்தில் உங்களின் உயர்ந்த நிலையை அடையும் வரை தொடருங்கள்.

நீங்கள் அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது சில வகை உணவுகள் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலோ. நீங்கள் எழுப்பும் நாதத்தின் தரத்தில் வேறுபாடு ஏற்படுவதை உணர முடியும். இயல்பாக நீங்கள் எழுப்பும் நாதத்தை உங்கள் உடலின் தேவைக்கேற்ப எளிதாக்கிக் கொள்ளுங்கள்.

மவைராமந்திர உச்சாடனம் நுட்பமான உணர்வுகளை உள்ளோக்குவதைக் கொடுத்து, உடலை சரிசெய்வதற்கான செயலைத் தருகிறது. இது இயல்பாகவே நடைபெறுகிறது. நாம் எதுவும் நிறைவேற்ற வேண்டியதில்லை.

நமது உடலும் மனமும் எப்போதுமே ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போவதில்லை. நான் மக்களிடம் சொல்வது என்னவென்றால் "உங்கள் உடல் இங்கே தான் இருக்கிறது. ஆனால் நீங்கள் இங்கு இல்லை". உங்கள் மனம் எப்பொழுதும் எங்கேயாவது சுற்றி கொண்டிருக்கும். நமது உடலுக்கே உள்ள புத்திசாலித்தனம் அதற்குத் தெவையான எல்லாச் செயல்களையும் செய்கின்றது. ஆனால் மனம் இந்த உடலின் புத்திசாலித்தனத்தை மாற்றிவிடுகிறது. இது உடலைக் கட்டாயப்படுத்திச் சில செயல்களை செய்ய வைத்து பின்பு அதன் விளைவாக நோயில் கொண்டு சோ்த்து விடுகிறது.

நோய் என்பது எளிமைத்துவம் இல்லாததால் தான் ஏற்படுகிறது. உடலைக் கட்டாயப்படுத்தி இயங்க வைத்தால், சில நேரங்களில் கலகத்தில் கொண்டு விட்டு விடும். பல நேரங்களில் நாம் நிறைய சாப்பிட்டு விடுகிறோம். உடலானது, "எனக்கு போதும்" என்ற சமிக்ஞையை கொடுக்கிறது. ஆனால் நமது சுவைக்கும் குணம் திருப்தி அடைவதில்லை. அதற்கான வினைப்பயனை பின்னால் நாம் உணர்கிறோம்.

உடலுக்கும், மனத்திற்கும் ஒற்றுமையை உருவாக்க வேண்டியது முக்கியமாகி விடுகிறது. இல்லையெனில் நாம் மேம்பட்ட நிலையில் இருப்பது கடினமாகிவிடும்.

இந்த மஹாமந்திர உச்சாடனம் எழுப்பும் நுட்பம் நமது உடலையும், மனதையும் இணைக்கின்ற பாலமாக இருக்கின்றது.

மந்திர உச்சாடனம் செய்வது உங்கள் உடலை ஒரு சக்தியாக உணர வைக்கும். நாதத்தை எழுப்ப ஆரம்பித்த உடனேயே நீங்கள் இலேசானதாகவும், மிதப்பதாகவும் உணர ஆரம்பிப்பீர்கள். உங்கள் உடல் கனமாக இருப்பதாக நீங்கள் உணர மாட்டீர்கள்.

ஏனெனில் மந்திரங்களை உச்சாடனம் செய்தல் உங்கள் மனதின் அதிர்வுகளையும், உடலின் அதிர்வுகளையும் ஒன்றிணைக்கிறது. உடலும் மனமும் ஒத்திசைவு பெறுகின்றது. சக்தியை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள்.

இந்த இரண்டாவது படியில் (Step), உங்கள் உதடுகளை ஒன்றாகக் குவித்து 'ம்' என்ற நாதத்தை உள்ளிருந்து எழுப்ப வேண்டும். உங்களுடைய முகத்தை ஒரு வெற்று அலுமினிய பாத்திரத்தில் வைத்து, ஓசையை எழுப்பும் போது என்ன சப்தம் வருமோ, அதே போல் நீங்கள் உருவாக்கும் 'ம்' என்ற சப்தமும் இருக்க வேண்டும். குறித்துக் கொள்ளுங்கள் நீங்கள் உருவாக்கும் ஓசை "வாம்" அதை "றும்" அல்லது மிக எளிதாக உதட்டை குவித்து 'ம்' என்று எழுப்புங்கள்.

உங்களால் எவ்வளவு நீளமாக முடியுமோ அவ்வளவு நீளமாக, எவ்வளவு ஆழமாக முடியுமோ அவ்வளவு ஆழமாக, எவ்வளவு சப்தமாக முடியுமோ அவ்வளவு சப்தமாக நாதத்தை எழுப்புங்கள்.

இறுக்கமான நிலையில் இல்லாமல் சாந்தமான நிலையில் எழுப்புங்கள். உங்கள் மொத்த ஜீவனும், சக்தியும் இந்த அதிர்வுகளை உருவாக்குவதற்காக ஈடுபட வேண்டும். நாதங்களுக்கிடையே உள்ள இடை வெளியைக் குறைக்க வேண்டும். சில நேரத்திற்குப் பிறகு 'ஒசையானது உங்களின் முயற்சி

மவைராமந்திர உச்சாடனம் செய்தல் எனும் நுட்பம் நமது உடலையும், மனதையும் இணைக்கின்ற பாலமாக இருக்கின்றது.

இல்லாமலேயே தொடர்ந்து வருவதை உணர்வீர்கள். நீங்கள் மிகவும் எளிமையாகவும், கவனிப்பவராகவும் மாறிவிடுவீர்கள். உடலும் மனமும் இந்த அதிர்வுகளால் ஒத்திசைவு பெறுகின்றது.

வஜ்ராசன நிலையில் அமாந்து, சின் முத்திரையை உருவாக்கி உங்கள் முட்டிகளில் வைத்துக் கொள்ளுங்கள்.

சின் முத்திரையை படத்தில் காட்டியுள்ளபடி, உங்களுடைய முதல் விரல் (ஆள்காட்டி விரல்) கட்டை விரலின் நுனியை தொட்டவாறும் மற்ற மூன்று விரல்களை மடக்காகவாறும் வைத்திருக்க வேண்டும். இந்த சின் முத்திரை சக்தி நுட்பத்தை சமச்சீர் படுத்தி சக்தியை உடலுக்குள்ளேயே காத்து வைத்துக் கொள்வதற்கும் பயன்படுகிறது. உடலை விட்டு சக்தி வீணாகாமல் இந்த முத்திரை தடுக்கிறது.

முதல் இரண்டு படிகளான சீரற்ற சுவாசமுறை மற்றும் ஓசை எழுப்புதல் முடிந்த பிறகு அடுத்த படியான கூட்சுமான பகுதிக்குச் செல்வோம்.

மவறாமந்திர உச்சாடனம் செய்தல் சம்பந்தமாக நிறைய நுட்பங்களை கற்றுக் கொள்ள விரும்பினால் ஆனந்தஸ்பூரண தியான வகுப்பில் கற்றுக்கொடுக்கப்படும் மஹாமந்திர தியானத்தைப் பயிற்சி செய்யுங்கள்.

சின் முத்திரை சக்தி நுட்பத்தை சமச்சீர் படுத்தி சக்தியை உடலுக்குள்ளேயே காத்து வைத்துக் பயன்படுகிறது. உடலை விட்டு சக்தி வீணாகாமல் இந்த முத்திரை தடுக்கிறது.

உடலின் நுண்ணிய சக்தி மையங்கள்

உடலும் மனமும் உயிரும் சந்திக்கும் கூடசுமமான இடத்திற்குச் சக்தி மையங்கள் என்று பெயர். சக்தி மையங்களே சக்கரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

சக்கரங்களின் மீது விழிப்புணர்ச்சி செலுத்துதல்

சக்தியடைந்தவராகவும், இலைசானவராகவும் மாற்றும் நுட்பம்

இந்த மூன்றாவது படியில் (Step) நீங்கள் வஜ்ராசன நிலையில் அல்லது விரும்பினால் பத்மாசனத்தில் அமரலாம். இப்பொழுது உங்களது விழிப்புணர்வை ஒவ்வொரு சக்கரத்திற்கும், வேண்டும்.

நமது உடலில் ஏழு சக்தி மையங்கள் உள்ளன. ஒவ்வொரு சக்தி மையமும் கூட்சுமமான இடத்தில் அமைந்துள்ளது. நம்முடைய ஆளுமை மூன்று வித உடல்களால் ஆனது. அவை ஸ்தூல சரீரம், சூட்சும சரீரம் மற்றும் காரண சரீரமாகும்.

அதேபோன்று விழிப்புணர்வு நிலையில் மூன்று பிரிவுகள் உள்ளன. அவை விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ்ந்த உறக்க நிலை.

இந்த மூன்று உடல்களுக்குப் பின்னால் தான் மூன்று விழிப்புணர்வு நிலைகளும் அமைந்துள்ளன.

இதைத்தான் நாம் ஆத்மன் என்று கூறுகின்றோம். நாம் சமஸ்கிருதத்தில் இந்த உயர்ந்த நிலையை "சரீர த்ரைவலக்ஷனா" "பஞ்சகோஷ தீத்த", "அவஸ்த தரைய சாக்ஷி" (மூன்று உடல்கள், ஐந்து கோஷங்கள் மற்றும் மூன்று வகை விழிப்புணர்வுக்கு சாட்சியாக இருக்கும் நிலை).

ஸ்தூல சரீரம் என்பது நமக்குத் தெரிந்த, நாம் சாப்பிடுகின்ற, அசைக்கின்ற, நடக்கின்ற உடலாகும்.

சூட்சும சரீரம் என்பது நாம் கனவின் போது பயன்படுத்தும் உடலாகும். நீங்கள் பாரத நாட்டில் ஒரு வீட்டில் படுத்திருப்பீர்கள். ஆனால் கனவில் உங்களது மனம் வேறோரு நாட்டில் இருக்கும். அந்த நேரத்தில் கூட்சும உடலில் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். கூட்சும உடலை நீங்கள் விழித்திருக்கும் போதும் பயன்படுத்துகிறீா்கள். எப்படியெனில் விழிப்பு நிலையில் ஏதாவது ஒன்றை பற்றித் தொடர்ந்து சிந்தித்து கொண்டிருக்கும் போதும் உபயோகப்படுத்துகிறீர்கள்.

காரண சரீரத்தை நீங்கள் ஆழ்ந்த உறக்கிறையில் இருக்கும்போதும், கனவுகள் இல்லாத நேரத்திலும் பயன்படுத்துகிறீர்கள். ஆழ்ந்த தூக்கத்தின் போதும், எண்ணங்கள் சற்று உறங்கும் போதும் இந்த சூட்சும சரீரத்தை உபயோகப்படுத்துகிறீர்கள். இந்த நேரத்தில் தான், காரண சரீரத்தை நீங்கள் அனுபவமாக உணர்கிறீர்கள்.

நாம் நினைப்பது போல் இந்த மூன்று உடல்களும் தனித்தனியானவை அல்ல. அவை ஒன்றோடு ஒன்று இறுக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. இரண்டு வளைவான கோடுகள் ஒரு பேப்பரில் வரையப்படுவதாகக் கருதினால் இதில் ஒரு கோடு ஸ்தூல உடலை குறித்தால், இன்னொரு கோடு சூட்சும உடலையும், வரையப்படும் பேப்பரானது காரண உடலையும் குறிக்கின்றது.

சம்ஸ்காரங்கள் நாம் விழிப்புணர்வுடன் இல்லாதிருக்கும்போது தான் நம்மிடையே இருக்கின்றன.

சக்திமையங்களில் விழிப்புணர்வைச் செலுத்தும்போது, எதிர்மறை உணர்ச்சிகள் நேர்முறை உணர்வையும் வெளிப்படுத்த ஆர்ம்பிப்பீர்கள்.

உடலில் ஏழு புள்ளிகளில் ஸ்தூல சரீரமும், கூட்சும சரீரமும், காரண சரீரமும் சந்திக்கின்ற இடங்கள் ஏழு சக்தி மையங்களாகும். ஏழு சக்தி மையங்களும் கூட்சுமமாக அமைந்துள்ளன. சமீபத்திய ஆராய்ச்சியில் ஆரா போட்டோகிராபி (Aura Photography) எனும் தொழில் நுட்பத்தில் நம் சக்தி மையங்களும் மனித உடலில் இருக்கின்றன என்பது படம் பிடித்து விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஏழு சக்தி மையங்களும் நம்முடைய உணர்ச்சிகளுடன் தொடர்பு கொண்டுள்ளன. இந்த உணர்ச்சிகள் பழைய காலத்தில் நமக்குள் ஏற்பட்ட சம்ஸ்காரங்களால் நமக்குள் இன்று ஏற்படுவதன் காரணம் இந்த சம்ஸ்காரங்கள் சக்தி மையங்களை அடைத்து விடுவதால்தான். இதனால் தான் உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை உருவாக்குகின்றன.

சம்ஸ்காரங்கள் நாம் விழிப்புணர்வுடன் இல்லாதிருக்கும்போது தான் நம்மிடையே இருக்கின்றன.

சக்திமையங்களில் விழிப்புணர்வைச் செலுத்தும்போது, எதிர்மறை உணர்ச்சிகள் நீங்கி நேர்மரை உணர்ச்சிகளான அன்பையும், இரக்க உணர்வையும் வெளிப்படுத்த ஆரம்பிப்பீர்கள்.

நமக்கு வருகின்ற எல்லா நோய்களுமே மனவியல் ரீதியானது.

நோய்களின் வேர்களே நமது மனம் தான். நோய்கள் உருவாகுவதற்குக் காரணமாக இருக்கும் நம் உடலுக்கும் மனதுக்கும் இடையே உள்ள இணைப்பு பற்றி நமக்குப் புரிவதில்லை. ஒரு சக்தி மையும் அடைபடும் போது அந்த மையத்திற்கு அருகில் உள்ள உடலின் பகுதிகளும் பாதிப்படைகின்றன.

உதாரணத்திற்கு நீங்கள் அதிகமாக கவலைப்படும்போதும் உங்கள் வயிற்றுப்பகுதி பாதிக்கப்படுகிறது.

ஆகையால் நல்ல உடல்நிலையும், மன நிலையும் பொருவதற்கு உங்கள் சக்தி மையங்களை சுத்தமாக வைத்திருப்பதின் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும்.

சக்தி மையங்களை எது அடைபடச் செய்கிறது? எது திறக்கிறது? என்பதை தற்போது உங்களுக்கு விளக்குகின்றேன்.

கனவுகள், கற்பனைகள், பயம், கவலை, எதிர்பார்ப்பு, பொறாமை, அகங்காரம், திருப்தியின்மை போன்ற உணர்ச்சிகள் எதிர்மறையானவை.

ஒரு அறையில் ஒரு பொருள் இருந்து, அப்பொருளை அந்த இடத்தில் இருந்து எடுக்கச் சொன்னால் உங்களால் அந்தப் பொருளை எடுத்த முடியும். ஏனெனில் அது நேர்மரையானது. (Positive Existence) ஆனால் ஒரு இருட்டரையில் இருக்கும் இருளை (Darkness) அந்த அரையை விட்டு எடுக்கச் சொன்னால். உங்களால் பொருளை எடுப்பது போன்று இருளை எடுக்க முடியாது. ஏனெனில் அது எதிர்மறையானது (Negative Existence). ஆனால் அந்த இருட்டரையில் ஒரு பல்பை வைத்து அறைக்குள் ஒளியை செலுத்தினால் இருள் ஒழிவிடும்.

இந்த எல்லா உணர்ச்சிகளும் அறையில் உள்ள இருளைப் போன்றுதான்.

அறையின் இருளை விளக்கேற்றி வெளியேற்றுவது போன்று மனதில் இருக்கும் எதிர்மறையான எண்ணத்தை வெளியேற்ற முடியும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் விழிப்புணர்வு என்ற ஒளியை உங்களுக்குள் செலுத்துங்கள். அவ்வாறு செலுத்தும் போது விளக்கின் ஒளியால் இருள் மறைவது போன்று எதிர்மறை உணர்ச்சிகள் விழிப்புணா்வு என்னும் ஒளி ஏற்றியதும் தானாகவே மறைந்து விடும்.

ஒருமுறை புத்தர் தன் சீடர்களிடம் ஒரு முடிச்சைக் கொடுத்து அதை அவிழ்க்கச் சொன்னார். ஒரு சீடர் முடிச்சை அவிழ்ப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டும் அவரால் முடியவில்லை. புத்தர் இன்னொரு சீடரை அழைத்து முடிச்சை அவிழ்க்கச் சொன்னார். ஆனால் அந்தச் சீடர் அந்த முடிச்சை கவனமாகப் பார்த்துவிட்டு, பின்பு மெதுவாக முடிச்சை அவிழ்த்துவிட்டார். புத்தர், "இருப்புத்தன்மையில் இருக்கும் அறியாமை எனும் முடிச்சை அவிழ்க்க வேண்டுமானால், முதலில் அந்த முடிச்சு எவ்வாறு போடப்பட்டிருக்கிறது என்பதை உற்று நோக்க வேண்டும். இது எந்தப் பிரச்சனைக்கும் தீர்வளிக்கும்" என்று மிக அருமையாகச் சொன்னார்.

முடிச்சை அவிழ்க்கத் தெரியாமை தான் நம்முடைய மொத்தப் பிரச்சனையுமே!

விழிப்புணா்வை வெள்ளம் போல் நீங்கள் செலுத்தும்போது, எதிர்மறைகள் அழிந்து விடும்.

ஆகையால் இந்தப் படியில் நம்முடைய விழிப்புணா்வு முழுவதையும் மூலாதாரச் சக்கரத்திலிருந்து சகஸ்ராரச் சக்கரம் வரை ஒவ்வொரு சக்கரமாகச் செலுத்த வேண்டும். நீங்கள் விழிப்புணர்வை ஒரு சக்திமையத்தில் செலுத்தும் போது அந்த சக்திமையமாகவே நீங்கள் மாறிவிடுவீர்கள். ஜீவ சக்கி மையமாக மாறும்வரை, அதை முழுவதுமாக உணருங்கள். இந்தப் படியின் இறுதியில் நீங்கள் சக்கியடைந்தவராகவும், இலேசானவராகவும் மாறிவிடுவீர்கள்.

நாம் இப்போது அடுத்த படிக்குச் செல்வோம்,

நீங்கள் சக்கி மையங்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினால் ஆனந்த ஸ்புரணா தியான முகாம் ( ASP)-ல் பங்கு பெற வேண்டும். அதில் வெவ்வொரு சக்கரமும் எந்த உணர்ச்சியால் பாதிக்கப்படுகின்றது என்பது பற்றியும் மற்றும் அதற்கு தீர்வளிக்கும் தியான நுட்பங்கள் பற்றியும் விளக்கமாகக் கற்றுத்தரப்படும்.

"இருப்புத்தன்மையில் இருக்கும் அறியாமை எனும் முடிச்சை அவிழ்க்க வேண்டுமானால், முதலில் அந்த முடிச்சு எவ்வாறு போடப்பட்டிருக்கிறது என்பதை உற்று நோக்க வேண்டும்"

(Be - Unclutched)

மன நிலையை அவிழ்க்க தியான நுட்பம்

அடுத்த 7 நிமிடங்களுக்கு எண்ணங்களை கோர்த்துப் பார்க்காமல் இருங்கள். மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு. ஒரு எண்ணம் எழுந்து முடிவதற்குள்ளேயே அடுத்து வேறொரு எண்ணம் எழுந்துவிடுகின்றது. இயற்கையிலேயே நம்முடைய எண்ணங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்படாதவை. அவை நீர்த்தொட்டியில் உள்ள நீர்க்குமிழிகள் போன்றவையாகும். நீர்க்கொட்டியில் உள்ள நீர்க்குமிழிகள் ஒன்றோடொன்று பிணைக்கப்படாதவை. அவை ஒவ்வொன்றும் தனித்தனியானவை. ஆனால் பார்ப்பதற்கு இணைந்தவை போன்று தோற்றமளிக்கின்றது.

இதே போல்தான் நம்முடைய எண்ணங்களும் இணைக்கப்படாதவையாக இருந்தாலும் அவை இணைக்கப்பட்டது போல் காணப்படும்.

இதை நீங்கள் அனுபவமாக உணர இந்த ஒரு சிறிய பயிற்சியை நீங்கள் செய்யுங்கள். உங்களுக்கு எப்போதெல்லாம் எண்ணாங்கள் வருகின்றதோ அப்போது உடனே அந்த எண்ணத்தை பேப்பரில் எழுதுங்கள்.

ஒரு பத்து நிமிடம் அமைதியாக அமர்ந்து உங்களின் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள். எண்ணங்களைத் தடுக்கவோ, நிறுத்தவோ முயற்சிக்காதீர்கள். அமைதியாக இருந்து எண்ணங்களை "சாட்சியாக" இருந்து கவனியுங்கள். எண்ணம் எப்பொழுது வருகின்றதோ பேப்பரில் உடனே எழுதி விடுங்கள். பத்து நிமிடங்களுக்கு இதை செய்யுங்கள். பத்து நிமிடங்களுக்குப் பிறகு என்ன எழுதியிருக்கிறீர்களோ அதைப் படியுங்கள். அது ஒரு பைத்தியக்காரத்தனமாக இருப்பதைப் பார்க்கலாம்.

உங்களாளேயே புரிந்து கொள்ள முடியாத பெரும் குழப்பமாக இருக்கும். ஒரு எண்ணத்திற்கும் மற்றொரு எண்ணத்திற்கும் இடையே தொடர்பு இல்லை. எல்லா எண்ணங்களுமே சுதந்திரமானவை மற்றும் தொடர்பில்லாதவை. நீங்கள் தியானத்தை செய்து எழுதிப் பார்க்கும் போதுதான் எண்ணங்கள் தொடர்பில்லாதவை என்பது தெரிய வரும்.

நீங்கள் ஒரு காபி குடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். இந்த எண்ணம் முடியும் முன்னே அடுத்து முடிக்கப்பட வேண்டிய அலுவலக வேலையைப் பற்றி எண்ணிக்கொண்டிருப்பீர்கள்.

இதில் அலுவலக வேலைக்கும், காபிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதேபோன்று ஒரே நிகழ்ச்சி சம்பந்தமாக எழும் எண்ணங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. இந்த இரண்டு எண்ணங்களுக்கிடையே எப்போதும் ஒரு இடைவெளி இருக்கும். எண்ணங்களுக்கிடையே வரும் இடைவெளியின்போது எப்போதும் ஒரு அமைதி இருக்கும்.

எண்ணங்கள் அதன் இயல்பிலேயே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத எண்ணங்களை இணைக்கும்போதுதான் பிரச்சனை வருகின்றது. இணைக்கப்பட முடியாத எண்ணங்களை இணைத்து நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உதாரணமாக பத்து வருடங்களுக்கு முன் ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிட்டிருப்பீர்கள். ஏழு வருடங்களுக்கு முன் ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிட்டிருப்பீர்கள். இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிட்டீர்கள். நேற்று ஒரு ஐஸ்க்ரீம் எல்லா அனுபவங்களுமே சந்தோஷமாக இருந்திருக்கும். நீங்கள் எப்பொழுதெல்லாம் ஐஸ்க்ரீம் சாப்பிட்டிருப்பீர்களோ அப்பொழுதெல்லாம் சந்தோஷத்தில் இருந்திருப்பீர்கள்.

இதில் நீங்கள் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதில் பிரச்சனை இல்லை. பிரச்சனை எது என்றால் நீங்கள் இந்த அனுபவங்களையெல்லாம் இணைத்து, ' ஐஸ்க்ரீம் சாப்பிடும் போதெல்லாம் சந்தோஷமாக இருப்பேன்' என்ற கற்பனையை உருவாக்கி கொள்கிறீர்கள்.

எதிர்காலத்தில் இதே அனுபவத்தைப் பெற வேண்டும் என்று மீண்டும் முயற்சிப்பீர்கள்.

இதுபோல் நீங்கள் எப்பொழுதுமே ஒரே மாதிரியான எண்ணங்களை இணைத்து ஒரு எண்ணத் தண்டை (shaft) உருவாக்கி விடுகின்றீர்கள்.

உங்கள் அனுபவத்தில் சில சமயங்களில் ஐஸ்க்ரீமை சுவைக்கும் போது இதற்கு முன் வருடத்தில் சுவைத்த ஐஸ்க்ரீம் போல் இது இல்லை என்று தோன்றும். சில நேரம் நீங்கள் எந்த ஐஸ்க்ரீமை சுவைக்காமல் இருந்தால் கூட உங்களுக்கு ஐஸ்க்ரீம் பிடிக்கும் என நம்ப ஆரம்பித்து விடுவீர்கள். ஏனெனில் விழிப்புணர்வின்றி எண்ணங்களை கோர்த்துப் பார்க்கும் பழக்கம் உங்களுக்கு ஏற்கனவே இருப்பதால், உங்களையறியாமலேயே ஐஸ்க்ரீம், சுவையாக இருப்பதாக நீங்கள் நம்ப ஆரம்பித்து விடுவீர்கள். ஐஸ்க்ரீம் என்றால் 'இப்படி சுவையாகத் தான் இருக்கும்' என்று முடிவெடுத்துவிடுவீர்கள்.

கஷ்டமான அனுபவங்களும் இதே போன்றுதான் உருவாக்கப்படுகின்றது. பத்து வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட வலி, ஏழு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட வலி, மூன்று வருடங்களுக்கு முன் ஏற்பட்ட வலி மற்றும் சமீபத்தில் நேற்று ஏற்பட்ட வலி ஆகிய எல்லாமே வலி சம்பந்தப்பட்ட தனித்தனி நிகழ்ச்சிகளே. இந்த நிகழ்ச்சிகளுக்கிடையே எந்த விதத் தொடர்பும் இல்லை. ஆனால் இந்த எல்லா நிகழ்ச்சிகளும் ஒன்றாகக் கோர்த்து வலி என்ற ஒரு கற்பனையை நீங்கள் உருவாக்கி "வாழ்க்கையே வேதனை தான்" என்று நினைக்க ஆரம்பித்து விடுகின்றீர்கள். சந்தோஷமான அனுபவங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்திருந்தால் நீங்கள் "வாழ்க்கையே சந்தோஷமானது" என்று சொல்வீர்கள்.

இந்த இரண்டு எண்ணங்களுக்கிடையே எப்போதும் ஒரு இடைவெளி இருக்கும். எண்ணங்களுக்கிடையே வரும் இடைவெளியின்போது எப்போதும் ஒரு அமைதி இருக்கும்.

ஆனால் இதுவும் உண்மை இல்லை. நன்றாக தெரிந்துக்கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் என்பதும் இல்லை. அதேப்போன்று வேதனை என்பதும் இல்லை. ஏனெனில் இரண்டிற்கும் காரணமான நிகழ்ச்சிகளைக் கோர்த்துப் பார்ப்பது என்பதே நிகழக்கூடாத ஒரு செயலாகும்.

நாம் எல்லா எண்ணங்களையும் இணைத்துப்பார்ப்பதில்லை. நம் விருப்பத்திற்கேற்ப நினைவில் இருக்கும் எண்ணங்களை மட்டும் கோர்த்துப்பார்க்கின்றோம்.

எவ்வாறு நிறைய மலர்களிலிருந்து தேர்ந்தெடுத்து ஒரு சில மலர்களை மட்டும் கோர்த்துப் பூமாலையை உருவாக்குகின்றோமோ அதேப்போல் மில்லியனுக்கும் அதிகமான எண்ணங்களிலிருந்து நமக்கு ஞாபகத்தில் இருக்கும் சில எண்ணங்களை மட்டும் கோர்த்து ஒரு எண்ணத் தண்டை (shaft) உருவாக்குகிறோம். இவ்வாறு இந்தத் தண்டை (shaft) உருவாக்கும் செயல்தான் உண்மையான பாவம் (sin) என்று சொல்கின்றேன்.

எண்ணங்களைக் கோர்த்து கோர்த்து தண்டை (shaft) உருவாக்கும் போது நாம் இல்லாத துயரத்தை இருப்பதாக நினைத்து துயரம் கொள்கின்றோம்.

மகிழ்ச்சியான எண்ணங்களிலிருந்து நீங்கள் தண்டை (Shaft) உருவாக்கும் போது நீங்கள் அதை நீட்டிக்கப் பார்ப்பீர்கள் ஏனெனில் அந்த மகிழ்ச்சியான அனுபவத்தை நீங்கள் நீட்டிக்க ஆரம்பிப்பீர்கள். கவலையான எண்ணங்களிலிருந்து நீங்கள் தண்டை (Shaft) உடைக்கப் பார்ப்பீர்கள். ஏனெனில் நீங்கள் அந்த வேதனையில் இருந்து தப்பிக்கப் பார்ப்பீர்கள். நீங்கள் தண்டை (shaft) நீட்டிக்கப் பார்த்தாலும், உடைக்கப் பார்த்தாலும் உங்களால் அந்த எண்ணத் தண்டை ஒன்றும் செய்ய முடியாது

ஏனெனில் தண்டின் இருப்புத்தன்மை அங்கு இல்லை. அது ஒரு கற்பனைத் தோற்றம் என்பது தான் நிஜம். தண்டை (Shaft) உருவாக்கும் போது அது நிஜத்தில் இருக்கும் மற்றொரு தண்டாக மாறி விடும்.

எல்லா அனுபவங்களுமே தனித்தனியான அனுபவங்கள். இந்த அனுபவங்களை நீங்கள் கோர்த்துப்பார்க்கும் போது உங்களுக்கு நீங்களே நரகத்தை உருவாக்கிக் கொள்கின்றீர்கள். இப்பொழுது, ஏன்

இந்த வேதனையும் கற்பனையாக இருக்கின்றது என்ற நிஜத்தை புரிந்து கொண்டிருப்பீர்கள். வேதனை என்பது கற்பனையைச் சார்ந்தது. உண்மையில்லாத ஒன்றைச் சார்ந்தது. இது ஒரு தோற்றம் மட்டும் தான். ஏனேனில் வேதனை உருவாக்கும் தண்டு (Shaft) உண்மையல்ல. ஆதனால் இந்த தண்டால் (Shaft) உருவாக்கப்பட்ட வேதனையும் உண்மையல்ல. இதை ஒருமுறை புரிந்து கொண்டால் போதும். நீங்கள் விடுதலையடைந்து விடுவீர்கள்.

ஏனெனில் நம்முடைய எண்ணங்கள் மிக வலிமையானவை.

எண்ணங்கள் தானாகவே இணைத்துக்கொண்டு ஒரு கற்பனைத் தண்டை (shaft) உருவாக்கும் சக்தி கொண்டவை. இந்த கற்பனைத் தண்டை (shaft) உருவாக்குவது அகங்காரத்தின் இயல்பான வேலையாகும்.

எண்ணங்களிலிருந்து தனிப்பட்டது அல்ல அகங்காரம். உண்மையில் எண்ணங்களின் தன்மையே தண்டை (Shaft) உருவாக்குவது தான். ஆகையால் அகங்காரம் என்ற ஒன்று தனியாக இல்லை ஏனெனில் இருப்புத்தன்மையில் தண்டு (shaft) என்பது இல்லை. தண்டு (shaft) என்பது ஒரு கற்பனை. தண்டை (shaft) நாமே உருவாக்கும் முறைக்கு நாம் கொடுக்கும் பெயர் தான் அகங்காரம். இந்த தண்டுதான் தொடர்ந்து ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்னும் உணர்வை உருவாக்குகிறது. பின் அகங்காரத்தைப் பற்றிய மாயத் தோற்றத்தை உருவாக்குகிறது.

எல்லா எண்ணங்களையும் இணைத்துப் பார்க்கும் போது நாம் நமக்கு அகங்காரம் இருக்கிறதென்று நினைத்துக்கொள்கின்றோம். ஆனால் நிஜத்தில் நம்முடைய எல்லா எண்ணங்களுமே இயற்கையிலேயே சுதந்திரமானவை. அதனால் அகங்காரமும் ஒரு கற்பனையே. எதனாலும் எண்ணங்களை இணைத்துப் பார்க்க முடியாது. ஆதலால் சுபாவத்திலேயே நாம் எண்ணங்களை கோர்க்குப்பார்க்காதவர்கள்.

நாம் அனைவருமே ஞானிகள். இதை நாம் உணர்ந்து கொள்வதே தற்போது நமக்குத் தேவை..

ஒரு அருமையான ஜென் கதை ஒன்று ...

ஒருமுறை ஒரு சீடர் ஜென் ஞானியிடம் சென்று "நான் எவ்வாறு புத்தனாவது" என்று கேட்டார். அந்த ஜென் ஞானி சீடரின் கன்னத்தில் பளீரென்று அறைந்து "நீ ஏற்கனவே புத்தன் தான்' 'என்றார்.

ஒரு புத்தனே வந்து புத்தனாவது எப்படி? என்று கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதைத் தான் ஜென் ஞானியும் செய்தார். ஆகையால் நாம் அனைவரும் இயற்கையிலேயே எண்ணங்களை இணைக்காதவர்கள். இதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் ஒரு விதியைச் சார்ந்து சந்தோஷம் மற்றும் துக்க அனுபவங்களைப் பெறுகிறான். உங்களுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை. உங்களால் சந்தோஷத்தையும், துக்கத்தையும் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் உங்களால் இந்த அனுபவங்களை இணைத்து, ஒரு கற்பனைத் தண்டை (shaft) உருவாக்காமல் இருக்க முடியும்.

நீங்கள் ஒருவருடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதே நீங்கள் அவரைப்பற்றிய கற்பனைத் தண்டை (Shaft) உங்களுக்குள் உருவாக்கியிருக்கிறீர்கள் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது.

மூன்று வருடங்களுக்கு முன் ஏற்பட்ட உறவு, ஒரு வருடத்திற்கு முன் ஏற்பட்ட உறவு, இப்பொழுது அவர்களுடன் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் உறவு என ஒவ்வொன்றுமே தனித்தனியான நிகழ்ச்சிகள். இந்த நிகழ்ச்சிகளை நீங்கள் இணைக்கும்போது அந்த உறவுடன் இருக்கும் இணைப்பை நீட்டிப்பதற்கோ அல்லது உடைக்கவோ பார்க்கின்றீர்கள்.

உறவு சந்தோஷமான உறவுமுறை இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள். உறவுமுறை, வேதனையான உறவுமுறை எனில் அந்த உறவுமுறையை நீங்கள் உடைக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறீர்கள்.

ஒவ்வொரு சம்பவத்திலும் நீங்கள் புதிய உறவுமுறையை அனுபவிக்கிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்வதில்லை. ஏனெனில் ஒவ்வொரு சம்பவத்திலும், இரண்டு புதிய நபர்கள் இணைகிறார்கள், மற்றும் இயற்கையிலேயே நாம் எண்ணங்களை இணைக்காதவர்கள்.

உண்மையான பிரச்சனை வலியினாலோ அல்லது சந்தோஷத்தினாலோ வருவதில்லை. உண்மையான பிரச்சனை தவறாகப் புரிந்துகொள்வதானும் மற்றும் கற்பனையான தண்டை (Shaft) உருவாக்குவதானும் வருகிறது.

ரிஷிமார்கள், அவர்களுக்குச் சந்தோஷம் வந்தால் அதைக் கொண்டாடி விட்டுப் பின்பு மறந்து விடுவார்கள். ஏதாவது ஒரு வேதனை என்றால் அதை அனுபவித்துவிட்டு பின்பு மறந்து விடுவார்கள். இந்த அனுபவங்களை அவர்கள் உடன் எடுத்துச் செல்ல மாட்டார்கள்.

ஆனால் இந்த அனுபவங்களை நம்முடனே தொடர்ந்து எடுத்துச் செல்லும் போது வேதனையில் விழுகின்றோம்.

இந்த உலகத்தில் வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டே ஒற்றுமையிலும், அமைதியிலும் நடுநிலைபெற்று வாழ முடியும்.

இதை அடைவதற்காக நாம் எதையும் துறக்கத் தேவையில்லை, கொஞ்சம் இந்த கற்பனைத்தண்டை உருவாக்குவதை நாம் நிறுத்தி விட்டால் போதும். நாம் எதை "தான்" என்று கையில் பிடித்துக்கொண்டிருக்கின்றோமோ அதுதான் வேதனைக்குக் காரணம் என்பதைப் புரிந்து கொள்வோம்.

இந்த ஒத்திருக்கும் தன்மையைத் துறந்து விட்டால், நாம் ஆனந்தத்திற்குள் நுழைந்து விடுவோம்.

வெளி நிகழ்ச்சிகள் உங்களின் அமைதியையும், ஆனந்தத்தையும் ஒன்றும் செய்ய முடியாது, ஏனெனில் நிகழ்ச்சிகளை கோர்த்துப் பார்க்கும் பழக்கத்தை நீங்கள் விட்டுவிட்டீர்கள். ஒவ்வொரு நிகழ்ச்சியும் உங்களுக்குப் புது நிகழ்ச்சி தான். நீங்கள் வாழ்க்கையை இன்னும் அழகாகப் பார்க்க ஆரம்பிப்பீர்கள். எல்லாமே உங்களுக்கு மகிழ்ச்சிகரமாகவும், ஆனந்தமாகவும் இருக்கும். அடுத்தவர்கள் கொடுப்பதை ஒவ்வொரு கணமும் நீங்கள் வாழ்க்கையை அழகாக மலர்ந்து ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தீர்களானால், ஆனந்தம் உங்களுக்குள் இயற்கையாகவே மலர்ந்து விடும்.

வெளிப்புற சூழ்நிலைகள் உங்கள் அழகின்றி உங்களை ஒன்றும் செய்ய முடியாது.

நாங்கள் எங்கள் வாழ்க்கையை வாழும்போது எங்களை சுற்றியிருப்பவர்கள் அவர்களின் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று மக்கள் புகார் சொல்கிறார்கள். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், உங்கள் அனுமதியின்றி எவருமே உங்களை தொந்தரவு செய்யவோ, அவர்களின் சுயநலத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளவோ முடியாது. இதற்கு மட்டுமல்ல இதுபோன்று பல பிரச்சனைகளுக்குமான தீர்வு நாம் எண்ணங்களை இணைத்துப்

பார்க்காமல் "நான் எண்ணங்களை கோர்த்துப்பார்க்காதவன்" என்பதை புரிந்து கொண்டாலே ஆனந்தம் உங்களை இயற்கையாகவே பின் தொடரும்.

சங்கரர் நிர்வாண சதக்கத்தில் சொல்கிறார்

"சகோ மே சமத்வம் ந முக்திர் நா பந்தவை,

சித்தானந்த ரூப சிவோஹம் சிவோஹம்"

நான் அடிமையும் அல்ல சுதந்திரமானவனும் அல்ல. நான் என்றும் நடுநிலையானவன். நான் இயற்கையிலேயே மங்களகரமானவன், சிவனின் சக்தியானவன் என்று சொல்கின்றார்.

அடிமைத்தனம், சுதந்திரத்தனம் இரண்டு கூற்றுகளுமே மனதினால் உருவாக்கப்பட்டது. அடிமைத்தனம் என்ற ஒன்று இருக்கும் வரை தான் சுதந்திரமும் இருக்கும். ஆனால் அடிமைத்தனமே இல்லையென்றால், சுதந்திரத்திற்கான அர்த்தம் இல்லாமலே போய்விடும். இதைத் தான் சங்கரர் குறிப்பிடுகிறார்.

"நீங்கள் உள்ளோக்கி அல்லது வெளியோக்கி என்று ஏதேனும் ஒரு திசையில் செல்ல முயற்சிக்கும் போதெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள் அப்போதெல்லாம் நீங்கள் சத்தியத்தை இழந்து கொண்டிருக்கிறீர்கள்".

அவ்வாறு பயணம் செய்யும் போது தான் உண்மையை விட்டு விலகிச் செல்லும் பயணம் நடக்கின்றது. உண்மை வேறு எங்கும் இல்லை . உண்மை இங்கேயே இப்பொழுதே இருக்கின்றது. அதைத் தேடி வேற எங்கேயும் போகத் தேவையில்லை. எங்கேயும் பயணம் செய்யத் தேவையில்லை. அவ்வாறு அதைத் தேடிச் சென்றோமானால், அது நாம் தண்டை (shaft) உருவாக்குவதைக் குறிக்கின்றது.

நாம் சில முன்னேற்றங்களைப் பார்ப்பதாக எண்ணுகிறோம். ஆனால் அவ்வாறு எண்ணுவது ஒரு நல்ல எண்ணம். அவ்வளவுதான் முன்னேற்றம் என்ற ஒன்று கிடையாது. ஏனெனில் இவர்கள் முன்னேறிக்கொண்டிருப்பவர்கள் என்று யாருமே இல்லை.

தனி மனிதன் ஒவ்வொரு நிகழ்விலும் இறந்து கொண்டிருக்கிறான். அப்போது இவர்கள் முன்னேறிக்கொண்டிருப்பவர்கள் என்று யாரைக் குறிப்பிட முடியும்?. எப்பொழுது நீங்கள் எண்ணங்களை இணைக்காமல் இருக்கிறீர்களோ, அப்போது நீங்கள் 360 முகரியிலும் வெளிப்பட ஆரம்பிப்பீர்கள். அப்போது ஆன்மீகம் அல்லது நாத்தீதம் பற்றிய கேள்விகளே எழாது.

இதையே சங்கரர் சொல்கிறார் "ஒருவன் சுதந்திரமானவன் அல்லது அடிமையானவன் என்று இல்லை. அவன் இரண்டையும் கடந்தவன் எனும் போது இரண்டுமே கருத்துகளாகிவிடும். "

நம்முடைய உள்ளுணர்வுத்தன்மை சுய முன்னேற்றம் அடையாது என்பதாகும். சிலர் அவர்களுடைய சுய முன்னேற்றத்திற்காக உழைக்கிறார்கள்.

நீங்கள் உயிர்த்தன்மையில் குறிப்பிட்டு இதில் நான் முன்னேற முடியும் என்று சொல்ல முடியுமா? உங்கள் உயிர்த்தன்மையில் எதை முதல் நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறீர்கள்?

இணைக்கப்படாத எண்ணங்களே நான் நீங்கள் எனும்போது நீங்கள் முன்னேற முயற்சிப்பது தண்டை (shaft) உருவாக்கும் செயலாகும். நான் முன்னேறுகின்றேன் என்று முடிவுக்கு வருவது நல்ல சுகத்தை உணர்த்தும். ஆனால் ஒருவரால் தனித்தன்மையைப்பற்றி பேசி அதை வளர்க்க முடியாது, ஆனால் அதைப்பற்றிய மாயத்தோற்றத்தை நீக்க முடியும்.

தனித்தன்மை என்று உங்கள் தனித்தன்மையை முன்னேற்றுவதற்கு முயன்றால், அது நீங்கள் தண்டை (shaft) உருவாக்குகிறீர்கள் என்று பொருள்படும்.

மனம் இருக்கும்வரையிலும், உண்மையற்ற தன்மையுடன் உண்டான அடையாளம் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

"பிரம்ம சத்யம் ஜகத் மித்யா ஜீவோ பிரம்மைவ ந அபரவற்" என்று மிக அழகாக சங்கரர் பாடியுள்ளார். இதன் பொருள்.. பிரம்மம் உண்மையானது. உலகம் உண்மையற்றது.

தனிநபரின் விழிப்புணர்விற்கும் பிரம்மத்திற்குமிடையில் இடைவேளை இல்லை என்பதாகும்.

சங்கரர் இங்கு மனம் நிற்கத் துவாங்கும் போதுதான் பிரம்மம் ஒளிர்விடத்துவங்கும் என்று மிக அருமையாக விளக்குகின்றார்.

மனம் இருக்கும் வரையிலும் எண்ணங்கள் இருந்துகொண்டேயிருக்கும். எண்ணங்கள் எப்பொழுதும் எதிர்காலத்திற்கும். இறந்தகாலத்திற்கும் ஊடவிக் கொண்டேயிருக்கும். ஆனால் நிகழ்காலத்தில் எண்ணம் இருப்பதேயில்லை.

ஏனென்றால் நிகழ்காலத்தில் விழிப்புணர்வு மட்டுமே இருக்க முடியும். அதனால்கான் நாம் எண்ணங்கள் இருக்கும் வரையிலும் தொடர்ந்து எண்ணத்தினாலேயே தண்டை (Shaft) உருவாக்குகின்றோம்.

மகிழ்ச்சியான எண்ணங்களினாலோ அல்லது துன்பமயமான எண்ணங்களினாலோ அத்தண்டை உருவாக்குகின்றோம். ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத எண்ணங்களை நாம் கோர்த்துப்பார்ப்பதே இதன் காரணமாகும்.

எண்ணங்களை கோர்த்துப் பார்ப்பதே சம்சார சாகரத்தில் நாம் அடையும் துன்பத்திற்குக் காரணமாகும். நாம் இதுபோல் கோர்த்துப் பார்க்கும் போது மாயை தோற்றுவிக்கப்படுகின்றது. (சங்கரா இதை ஜீவன் என்று அழைக்கிறார்) பிரபஞ்சத்தில் வருகின்றது. ஜீவன் தோன்றும் போது அதனுடனே மித்யா (உண்மையற்ற உலகம்) உருவாகின்றது.

கோர்த்துப் பார்ப்பதை நிறுத்தினோமென்றால் முதலில் உண்மையற்ற அடையாளம் மறைந்து பிரம்மன் வெளிப்படும்.

நாம் இரண்டு அடையாளங்களை பெற்றிருக்கிறோம். ஒரு அடையாளத்தில் வெளிப்புற உலகையும், இன்னொரு அடையாளத்தில் உட்புற உலகையும் பார்க்கின்றோம். வெளிப்புற உலகில் காட்டிக் கொள்ளும் அடையாளத்திற்கு அகங்காரம் என்று பெயர்.

உட்புற உலகில் காட்டிக் கொள்ளும் அடையாளத்திற்கு மமகாரம் என்று பெயர். அந்த இரண்டு அடையாளங்களும் ஒன்றோடொன்று மோதிக் கொள்பவை.

உதாரணமாக வெளிப்புறத்தில் நான் அப்படிப்பட்டவன், இப்படிப்பட்டவன்'

என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும், உட்புறத்தில் நாம் ஏதாவது ஒன்றில் குறைந்ததாய் உணர்கிறோம். எப்பொழுதுமே இந்த இரண்டு அடையாளங்களுக்கும் முரண்பாடு இருந்து கொண்டே இருக்கிறது.

உண்மையில் நாம் வெளிவுலகத்திற்கு 'நம்மை உயர்ந்தவர்கள்' என்றே வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகின்றோம். நாம் வெளிஉலகிற்கு உள் உலகில் இருக்கும் அளவை விட அதிகப்படுத்திக் காண்பிக்கவே விரும்புகின்றோம்.

ஆனால் உள்ளுலகில் அதற்கு மாறாக நம்மைப் பற்றி நமக்கே இயல்பு நிலையை விட குறைவாகவே வெளிப்படுத்திக் கொள்கிறோம்.

நாம் எவ்வாறு எந்த நிலையில் இருந்தாலும் இருக்கும் நிலையை வைத்து நாம் திருப்தியடைவதில்லை. ஏதோ ஒரு விதத்தில் தன்னைத் தானே தொடர்ந்து உயர்த்திக் கொள்ளவே விரும்புகின்றோம்.

ஆன்மீக வாழ்க்கையோ அல்லது லெளகீக வாழ்க்கையோ எதுவாக இருந்தாவும் அதில் திருப்தியற்றவராகவே வாழ்கிறோம். நாம் உள்ளுக்குள் எடுத்துச் செல்லும் அடையாளம் குறைவாகவும், வெளியே எடுத்துச் செல்லும் அடையாளம் அபரிமிதமாகவும் இருக்கிறது. இதன் இரண்டிற்கு இடையில் இருக்கும் வேறுபாடே அநேகமான பிரச்சனையை உருவாக்கி கொள்கிறது.

நாம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டுவதற்குக் காரணம் நாம் நினைப்பதை மிக அரிதாகவே பேசுகிறோம். நம்முடைய எண்ணங்களை நேரடியாக வார்த்தைகளாக்கிப் பேச ஆரம்பித்தோமானால் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நம்மை விட்டு ஓடி விடுவார்கள்.

உங்களுடைய எண்ணங்களையும், வார்த்தைகளையும் ஒன்றாக்கினால் அதுவே உண்மையான ஆன்மீகம் என்று இராமகிருஷ்ணர் சொல்கிறார்.

இந்நிலை இரண்டு அடையாளங்களை நாம் தாண்டி செல்லும்போது நிகழும்.

நாம் எண்ணங்களை உருவாக்கும் இரண்டு அடையாளங்களுமே பொய்யான அடையாளங்கள். இந்த அடையாளங்கள் என்பதே நாம் உருவாக்கிய தண்டின் (shaft) விளைவாகும். இந்த அடையாளங்களுடன் நாம் இணைக்கப்பட்டிருக்கும்வரை 'சம்சாரா சாகரக்கின்' பிடியில் சிக்கியிருப்போம். இந்த இரண்டு அடையாளங்களையும் தாண்டிச் செல்லும்போது நாம் ஞானிகளாகிவிடுவோம்.

எல்லா நேரங்களிலும் நாம் எண்ணங்களை உருவாக்கியும், அதை நிலைநிறுத்தியும் பின்பு அந்த எண்ணங்களை அழிக்கும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். அழித்துவிடுகிறோம். உருவாக்கும் செயல் (பிரம்மன்), காக்கும் செயல் (விஷ்ணு), அழிக்கும் செயல் (மகேஷ்வரன்) தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. உருவாக்குவதையும், காப்பாற்றுவதையும் மற்றும் அழிப்பதையும் நிறுத்தும்போது மூன்று நிலைகளைத் தாண்டிச் செல்லும் போதும் நாம் "பரபிரம்மம்" என்ற நிலையை அடைகிறோம்.

இந்த ஐந்தாவது படியில், உங்களுடைய எண்ணங்கள் ஒன்றுக்கொன்று இணைக்கப்படாதவை என்ற புரிந்து கொள்ளுதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய எண்ணங்களுக்கிடையே எந்த வித இணைப்பும் இல்லை. உங்களுக்கு எண்ணங்கள் இருந்தாவூம் அவற்றை அழுத்தவோ அல்லது அவற்றிற்குப் பதில் சொல்லவோ கூடாது. அவற்றை கவனித்து, அவைகள் இணைக்கப்பட முடியாதவை என்று புரிந்து கொள்ளுங்கள்.

இயல்பாகவே சாட்சியாக பார்க்கும் விழிப்புணர்வு உங்களுக்குள் நிகழத் துவங்கும். இரண்டு அடையாளங்களையும் தாண்டிச் செல்ல ஆரம்பித்து விடுவீர்கள். நீங்கள் மகிழ்ச்சியான சந்தோஷமான தண்டு மற்றும் வேதனையானத் தண்டு ஆகியவை இல்லை என்பதை புரிந்து கொள்வீர்கள். நீங்கள் இந்த தண்டுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று அறிவீர்கள்.

ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும், ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நீங்கள் ஏற்கனவே ஞானிகள். இயற்கையிலேயே நீங்கள் எண்ணங்களை இணைத்துப் பார்க்காதவர்கள்.

இந்தப் புரிதலோடு அமைதியாக அமா்ந்து அடுத்த ஏழு நிமிடங்களில் எண்ணங்களை இணைக்காத நிலையை அனுபவித்துச் சுத்தமான ஜீவனின் நிலையையும், ஆனந்தத்தையும் பெறுங்கள்.

தூய நிலையை அனுபவிப்பதற்கான சிறந்த நுட்பம் இது தான். இந்த உண்மையைப் புரிந்து கொண்டால், நீங்கள் தியான ஸ்புரணா முகாமில் பங்கு பெறலாம். அதில் எண்ணங்களை இணைத்துப் பார்க்காமையைப் பற்றி விரிவாகச் சொல்லப்படும்.

தியான ஸ்புரணா அனுபவ முகாம் 2 நாள் முகாமாகும். இது நம்மை நடுநிலைப்படுத்துவதற்கும், நம்மிடையே நாம் மீண்டும் தொடர்பு கொள்வதற்கும், நம்முடைய இயற்கை நிலையான தியானத்தில் செல்வதற்கும் உதவுகிறது.

இந்த முகாம் நமது மனதின் பிடியில் இருந்து விடுபடுவதற்கும், உணர்ச்சிகளிலிருந்து விடுபடுவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நம்முடைய தவறான மன அமைப்பான மகிழ்ச்சி மற்றும் வேதனையை உடைப்பதற்கும் நம்முள்ளே வெற்றிடத்தை உருவாக்கி தியானத்தை மலர்த்துவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தியான ஸ்புரணா அனுபவ முகாம் 2 நாள் முகாமாகும். இது நம்மை நடுநிலைப்படுத்துவதற்கும், நம்மிடையே நாம் மீண்டும் தொடர்பு கொள்வதற்கும், நம்முடைய இயற்கை நிலையான தியானத்தில் செல்வதற்கும் உதவுகிறது.

சக்தி மையங்களின் மீது விழிப்புணர்வு செலுத்தும் நுட்பம்

சக்திமையம்தடைப்படவதற்கான காரணம்திறப்பதற்கான வழிகள்
மூலாதார சக்கரம்கற்பனைகளும், கனவுகளும்நீஜத்தை எதிர்கொள்ளல்
சுவாதிஸ்டான சக்கரம்மரணத்தைப்பற்றி பயம்மரணத்தை எதிர்கொள்ளல்
மணிப்பூரக சக்கரம்கவலைகவலைகளைப்பற்றி கவலைப்படாதிருத்தல்
அனாஹத சக்கரம்அன்பை எதிர்ப்பார்த்தல்எதிர்ப்பாா்ப்பற்ற அன்பு செலுத்துதல்
விசுத்தி சக்கரம்ஒப்பிடுதலும் பொறாமையும்தனிமனிதரின் தனித்துவத்தை ஏற்றுக்கொள்ளுதல்
ஆஞ்னா சக்கரம்அகங்காரம் மற்றும் தீவிரத்தன்மைஎளிதைத்துவமும் வெகுளித்தனமும்
சவரஸ்ரார் சக்கரம்திருப்தியின்மைநன்றியணர்வு

பிரபஞ்ச சக்திக்கு நன்றி சொல்லும் தியானம்

இந்தக் கடைசி படியில், அமைதியாக அமர்ந்து, ஆனந்தமயமான உணர்வில் ஒலிக்கப்படும் மந்திரங்களை கவனியுங்கள். பிரபஞ்சத்துடன் இணைக்கப்பட்டதாக உணருங்கள். உங்கள் ஜீவனுள் மந்திரங்களின் அதிர்வுகளை உணருங்கள். இந்த மந்திரங்கள் பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லும் ஒரு வழியாகவும், நித்யானந்தத்தைப் பெற உதவுகின்ற குருவிற்காகவும் நாம் சொல்கின்றோம்.

நீங்கள் சடங்குகளில் ஆர்வமுடையவராக இருந்தால், நீங்கள் குரு பூஜையைச் (குருவிற்கு நன்றி செலுத்தும் தியானம்) செய்யலாம். இந்தப் படியில் நீங்கள் மந்திரங்களை உச்சாடனம் செய்து வழிபாடுகளில் ஈடுபடலாம்.

நீங்கள் சடங்குகளில் ஆர்வம் இல்லாதவராக இருந்தால், அமைதியாக அமர்ந்து மந்திரங்களைக் கவனிக்கலாம். மந்திரங்களைக் கவனிப்பதே உங்களுக்கு நல்லது செய்யும். மந்திரங்கள் நேர்மறை அதிர்வுகளைப் (Positive Vibrations) பெற்றிருப்பதால் அது உங்கள் ஜீவனில் ஊடுருவி ஆனந்தத்தைக் கொடுக்கும்

இந்த தியானத்தை தினமும் ஒருமுறையாவது செய்தால், உங்கள் ஜீவனின் புதிய பரிணாமத்தை அனுபவிக்கத் தொடங்குவீர்கள். இந்த நுட்பம் உங்கள் உடலையும், மனதையும் முழு விழிப்புணர்வு நிலையையும், ஆனந்தத்தையும் அனுபவிக்கத் தயார் செய்யும்.

நீத்ய ஆனந்தத்தை அனுபவமாய்ப் பெற்று நித்யானந்தமாய் மலருங்கள்.

நித்யானந்தம்

பாமவைம்ஸ நீத்யானந்தா

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இன்று நம் மத்தியில் வாழும் ஒப்பீடற்ற ஞான குரு ஆவார். இந்த பூமியில் உள்ளுலக ஆனந்தத்திற்கான அறிவியலை மீண்டும் நிர்மாணிப்பதற்கான பணியைச் செய்து வருகின்றார்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தென்னிந்தியாவின் ஆன்மீக தலைநகரமாம் திருவண்ணாமலை நகரில் ஜனவரி 1, 1978 அன்று பிறந்தார். சிறு வயதிலிருந்து ஒரு நோக்குடன் செய்த தீவிர தவத்தினால் தன்னுள் உள்ளுலக ஆனந்தத்தை அனுபவமாக அடைந்தார்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் ஆன்மீகத் தேடுதல் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கியது. 12 ஆவது வயதில் ஆழ்ந்த முதல் ஆன்மீக அனுபவம் (சத்தோரி) அனுபூதியாக அடைந்தார். தனது 17 ஆவது வயதில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தன் சுய தன்மையை உணர்ந்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி, Bharat மற்றும் நேபாளம் முழுவுதும் பரிவராஜகம் சென்றார்.

யோகா, தந்திரம் மற்றும் ஞானிகளினால் மட்டுமே உணர்ந்து கொள்ளக்கூடிய நுட்பமான அறிவியலையும், கலைகளையும் கற்றார்.

இதழிலின் ஆழ்ந்த அறிவுமிகு ஆன்மீக அமைவங்களையும் பெற்றார்.

பெருமைமிக்க புண்ணியஸ்தலாங்களைத் தரிசனம் செய்ததுடன், கடுமையான தியானப்பயிற்சியைத் தொடர்ந்து செய்தார். பல்லாயிரக்கணக்கான மைல்கள் வெறும் கால்நடையாகப் பயணமாக நடந்து Bharat முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக 70,000 மைல்கள் தூரம் நடந்தே பயணம் மேற்கொண்டார்.

ஆழமாக ஆராய்ந்து அனுபவித்து உணர்ந்த கல்வி மூலமாகவும், ஆழ்ந்து செய்த தியானத்தினாலும் இன்று THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உலகளவில் பல மில்லியன்களுக்கும் மேற்பட்ட மக்களுக்கு உத்வேகமளிக்கும் மனிதராக நம்மிடையே வாழ்ந்து வருகின்றார்.

தன்னுடைய அனுபவத்திலிருந்து வடிவமைத்த தனிமனித விழிப்புணா்வடையச் செய்யும் ஆனந்த நுட்பங்களின் மூலமாக மனிதனை மகானாக விழித்தெழச் செய்கின்றார். மேலும் இவ்வாறு உலகிலுள்ள வெவ்வொரு தனி மனிதரும் தன்னுள் இருக்கும் ஆனந்தத்தைக் கண்டுணா்வதற்கான சூத்திரங்களை வடிவமைத்துள்ளார்.

தன்னுடைய வலிமை மிகுந்த எளிமையான தியான நுட்பங்களாலும், ஞானக்கருத்துக்களாலும் மக்களின் நடைமுறை வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு உதவக்கூடிய நேரடித் தீர்வுகளைப் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வழங்கி வருகிறார். இதனால் இந்தக் குறுகிய காலத்திலேயே பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கையில் பெரும் பயன் அடைந்திருக்கிறார்கள்.

பொருள் சார்ந்த உலகில் வெற்றி பொருவதற்கும், தன்னுள் இருக்கும் ஆனந்த தேடுதலை முழுமையடைச் செய்வதற்கும் தியானமே திறவுகோல் என்று வலியுறுத்தும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, உலகின் எல்லா விதமான மனிதர்களும் வெளியிலும், தன்றுள்ளும் ஆனந்தத்தையும், அமைதியையும் அனுபவமாக பொருவதற்குப் பல தியான நடுப்பங்களைப் வடிவமைத்து வழங்கி வருகின்றார்.

தனிமனிதர் ஒவ்வொருவரும் தன்னுள் தானே உணர்வதை உறுதி செய்வதே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மேற்கொண்டிருக்கும் பணியின் ஒரே நோக்கமாகும்.

உலகெங்கும் சமூக சேவைகளாற்றி, மனிதர்களுக்கு உடலளவிலும், மனதளவிலும், ஆன்ம அளவிலும் ஆரோக்கியத்தை வழங்கி வருகின்றார்.

The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam தியானபீடம்

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தியானபீடம் தியானத்திற்காகவும், தனிமனித உருமாற்றத்திற்காகவும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMல் துவங்கப்பட்ட உலகளாவிய இயக்கமாகும்.

காலத்தால் நீரூபிக்கப்பட்ட வேத உள்ளடக்கங்களாலும், நவீன நுட்பங்களாலும் பரிசோதனைக்குட்பட்டு நீரூபணமான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மெடிடேசன் அகடமி (NMA) உலகெங்கிலும் நிறுவப்பட்டு உள்ளுலக வளர்ச்சிக்கான ஆய்வுக்கூடமாக செயல்பட்டு வருகின்றது.

உள்ளுலக வளர்ச்சிக்கு நேரடியான முக்கியத்துவம் அளித்து வரும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மெடிடேஷன் அகடமிகளின் தனிச்சிறப்பம்சமே உள்ளுலக வளர்ச்சியின் பக்க விளைவாக தன்னியல்பாகவே வெளியுலக வளர்ச்சி நிகழத்துவங்கிவிடும் என்பதாகும்.

இந்த இயக்கத்தின் துவக்கம் முதற்கொண்டு தியானத்திலிருந்து அறிவியல் வரை ஒருவர் தன்னைப் பற்றி பூர்வாங்கமாக ஆராய்ந்து அறிந்து தங்கு தடையின்றி முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வதற்காக துவாங்கப்பட்டு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மெடிடேஷன் அகடமி பொருள் சார்ந்த உலகமும், ஆன்மீக உலகமும் கரைந்து ஆனந்த மயமாக வாழும் முறையை வழங்கும் தளமான க்வாண்டம் ஸ்பிரிச்சுவாலிட்டி (Quantum Spirituality) வழங்கி வருகின்றது.

ஆனந்தமான வாழும் முறையால் வெளிப்படும் ஆழ்ந்த விழிப்புணர்வு ஒருவருக்குள் இருக்கும் புத்திபூர்வமான படைப்பாற்றலை அரும்பச்செய்யும்.

2003 ம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது 33 நாடுகளில் 1000 கிளைகளுக்கு மேற்பட்ட கிளைகளுடன் வளர்ந்திருக்கும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தியானபீடம் தனிமனித உருமாற்றத்தால் மனிதகுல உருமாற்றத்திற்கு வித்திட்டு வருகின்றது.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மெடிடேஷன் அகடமியின் முதன் நிலை தியான முகாம் ஆனந்த ஸ்புரண தியான முகாம் (ASP) ஆகும் (லைப் பிளிஸ் ப்ரோகிராம் என்றொரு பெயரும் உண்டு). இது உடலின் சக்தி மையங்களைப் பற்றி அறிமுகப்படுத்தும் தியான முகாம் ஆகும்.

உணர்வின் ஜீவாதாரமாக விளங்கும் இந்த முக்கியமான சக்தி மையங்களின் இயக்கத்தை பொருத்துதான் ஒருவரின் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் நிர்ணயிக்கப்படுகின்றது. ஆனந்த ஸ்புரண தியான முகாம் நம் உணர்வுகளுக்கும், சக்தி மையங்களுக்கும் இடையே உள்ள நேரடியான தொடர்பை நமக்கு விளக்கும் முகாமாகும். உணர்வுகளை நமக்கு நற்பயனளிக்கும்படி கையாளும் முறையையும், மேம்பட்ட தெளிவையும், நோ்மறையான மன அமைப்பையும், சுகமான உறவுகளையும், வேலை மீது புதுப்பிக்கப்பட்ட உத்வேகமான அணுகுமுறையையும், இது அத்துனைக்கும் மேற்பட்ட ஆனந்தமான வாழ்க்கை முறையையும் பெறுவதற்கு ஆனந்த ஸ்புரண தியான முகாம் உறுதியளிக்கிறது.

சகல ஜீவ ஆனந்தீஸ்வர் கோயில், பிடதி ஆசிரமம்

NMA-வில் ஆனந்த ஸ்புரண தியான முகாம் என்பதுடன் பல்வேறு தியான முகாம்கள் வடிவமைக்கப்பட்டு உலகம் முழுவதினும் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. நித்யா ஸ்பிரிச்சுவல் ஹீலிங் எனும் அமைப்பின் வழியாக தொடர்ந்து மக்களுக்கு உலகம் முழுவதும் இலவச தியான சிகிச்சையும், இளைஞர்களுக்கு இலவசக் கல்வியும், ஒவியம் மற்றும் கலைகளுக்கு ஊக்கமளித்தும் வருகின்றது.

சத்சங்கங்கள் ஏற்பாடு செய்தும் (ஆன்மீக சபைகள்). மறைபொருள் நுட்பங்களை அறிவியல் ஆராய்ச்சியின் மூலமாக நீரூபித்து பதிவு செய்தும், தனித்துவத்தை வளர்க்கும் முகாம்களை நடத்தியும், நகரத்து வாழ்வோருக்கு உரிய முகாம்களை நடத்தியும் வருகின்றது.

மேலும் இலவச மருத்துவ முகாம்கள், இலவச கண் அறுவை சிகிச்சைகள், அன்னதானம், விளைநிலங்களில் வேக விவசாயத்தை நடைமுறைப்படுத்துகல், குழந்தைகளுக்கென தனியே தங்கும் வசதியுடன் கூடிய குருகுலக் கல்வி அமைப்பையும் உலகெங்கும் வழங்கி வருகின்றது.

உலகெங்கும் உள்ள தன்னார்வத் தொண்டர்கள் - நித்ய வீர சேவையினர் (NDSS) முழுழுமையாக உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் இயக்கத்திற்கு மிகப்பெருமளவில் பக்க பலமாக இயங்கி வருகின்றனர்.

ஆனந்த ஸ்புரண தியான அனுபவ முகாம்

உடல், மனம், உயிர்சக்தி ஆகிய மூன்றும் நம் உடலுக்குள் ஏழிடங்களில் ஒன்றாய் கலந்திருக்கின்றன. இந்த கூட்சுமமான இடங்களைத்தான் சக்கரங்கள் அல்லது சக்தி மையங்கள் என்றறிகிறோம். சக்தி மையாங்கள் சரிவர இயங்காததே எல்லா நோய்களுக்கும் மனப் பிரச்சனைகளுக்கும் மூலக்காரணம்.

நம் சிறுவயதிலிருந்து, நம் சக்தி மையங்களைத் தாக்கிய மன வேதனைகள், நிறைவேறாத ஆசைகள், அதிர்ச்சிகள் தான் சக்தி மையங்களின் இயக்கத்தை பாதித்திருக்கின்றன. இந்த பாதிப்புகளை ஏற்படுத்திய எண்ணங்களைத்தான் 'எண்ணப்பதிவுகள்' என்றழைக்கின்றோம். உடலும் மனமும் ஆரோக்கியம் பெற "நம்முள் இருக்கும் ஏழு சக்கரங்களை சுறு சுறுப்பாக இயங்கச் செய்வதே எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு" என்று THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொல்கிறார்.

உடல் ஆரோக்கியத்தையும், மனத்தெளிவையும் ஒரு சேர தரும் இந்த ஆனந்த ஸ்புரண தியான முகாம் பங்கேற்பவருக்கு வாழ்வியல் கல்வியையும், பேரின்ப கூட்சுமத்தையும் கற்றுத் தரும்.

அனந்த ஸ்புரண தியான முகாம்

உடல் ஆரோக்கியம், மனத்தெளிவு, சிந்தனைத் திறன் உறவுகளிடம் பண்பு செய்யும் தொழிலில் உற்சாகம் ஆகியவற்றோடு வாழ்வில் ஆனந்தமும் அமைதியும் பெறுவீர்கள்.

LBT Level 1 : 3 Month package

LBT Level 2 : 2 Year package

உங்களுடன் ஒரு நிமிடம் ...

● நினைத்ததை சாதிக்கும் தெளிவு!

● விரும்பியதை அடையும் துணிவு!

● சுற்றத்தைக் கவரும் கனிவு! -பெறத் துடித்துக் கொண்டிருக்கிறீர்களா?

இதைக் கவனித்திருக்கிறீர்களா? ..

Computer Technology, Information Technology, Bio Technology என்பதையெல்லாம் பார்த்திருக்கிறோம், இது என்ன Life Bliss Technology, என்று பார்க்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும்!

உங்கள் வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான பொருட்களைச் சம்பாதிக்க உங்கள் வாழ்வில் 3-ல் 1 பகுதியை 25 வருடங்களை எல்லாப் படிப்புகளும்.

உங்கள் வாழ்க்கையை ஆனந்தமாக வாழுவதற்குத் தேவையான நுட்பத்தை 1 வருடம் செலவு செய்து கற்றுக் கொள்வதுதான் Life Bliss Technology.

Lbt கல்வித் திட்டத்தில் நீங்கள் கற்க இருப்பவை...

  • உடல் ஆரோக்கியத்தையும், மனத்தெளிவையும், உணர்ச்சிச் சமநிலையையும் உருவாக்கும் தியான முறைகள் கற்றுத்தரப்படும்.

  • சாதாரண தலைவலியில் இருந்து கேன்சர் வரை சரி செய்யும் 'தியானசிகிச்சை முறைகள்' (Spiritual Healing) கற்றுத்தரப்படும்.

  • உலகளாவிய ஆன்மீகக் கொள்கைகள், மதங்களின் தத்துவபூர்வமான அடிப்படை விளக்கங்களும். ◆வேதங்கள் ◆உபநிஷத்துக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கைக்குத் தேவையான பகுதிகளும் கற்றுத்தரப்படும்.

உங்களுடைய ஐந்து விரல்களில் எது பெரியது? எது சிறியது? அதில் ஐந்துமே அடிப்படைக் தேவை. அதுபோல் எல்லா மனிதனின் அடிப்படையானத் தேவைகளையும், ஆசைகளையும் ஐந்தாக பிரிக்கலாம். அத்தேவைகளை சுயமாய் பூர்த்திசெய்து கொள்ள

Lbt வழங்கும் பாடத்திட்டங்கள் ...

வ.
எண்.
மனிதனின் அடிப்படைத் தேவைLBT வழங்கும்பாடத்திட்டங்கள்
1உடல் ஆரோக்கியம்ஆரோக்கியம் (Wellness)
Blissful Lifestyle
2மன ஆரோக்கியம்Deprogramming the Mind
Re-programming the Mind
Quantum Memory Program
3உறவுகள்Inter personal relationships
Communication Skills
Intra personal relationships
Personality Development
International relationships
Leadership Training
4சமூக நுண்ணறிவுPublic Speaking Skill
Creativity
5ஆன்மீக நுண்ணறிவுVedic Training
Updated Spirituality

வாருங்கள் .. விவேகானந்தர்களே!

தியாக மணப்பாண்மையும், சேவை கொண்ட வீர இளைஞர்களுக்கான அரிய வாய்ப்பு!

இலவச உணவு, இருப்பிடத்தோடு கூடிய 2 வருட பிரம்மச்சரிய பயிற்சியேற்ப்பு இளைஞர்கள் வரவேற்கப்படுகின்றார்கள்.

33 நாடுகளில் 1200 மையங்களோடு இருக்கும் தியான பீட மஹா சமஸ்தானத்தின் எதிர்கால தியாக வாரிசுகளாக மக்களுக்கெல்லாம் மாபெரும் சேவை செய்யும் அரிய வாய்ப்பு இந்த ஆனந்த பிரம்மச்சரியம்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

  • கலவரம் இல்லாத பூமி உங்களின் கனவா?
  • ஞானியாவது உங்களின் நோக்கமா?
  • சேவையில் மிகவும் ஆர்வம் கொண்டவரா?
  • முறையான துறவறம் மேற்கொள்ள விரும்புகிறவரா?

ஆன்ம ஞானம் பெற்று மனித குலத்தைக் காக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு, வாழும் ஞானி நேரடியாக இருந்து அளிக்கும், முறையான வேத பாரம்பரிய ஆனந்த பிரம்மச்சரிய பயிற்சியில் கலந்துகொண்டு பூரணமான வெற்றியைப் பெற அணுகவேண்டிய முகவரி :

The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam தியானபீடம்

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பூர், கல்லுவேறாயவரல்லி, ராமநகரம் தாலுக்கா, பிடதி - 562 109. பெங்களூர் மாவட்டம், கர்நாடகா.

வானப்பிரஸ்க சன்யாச பயிற்சி

உங்களுக்கும் ஓர் வாய்ப்பு!

வாரங்கள்! ... ராமகிருஷ்ணராகவும் சாரதா தேவியாகவும் மாறுவதற்கு! ... தம்பதிகளுக்கான அருமையான வாய்ப்பு!

  • வேக பாரம்பரியம்

வெளியுலகத்தில் வாழ்ந்து வாழ்க்கையை முடித்த ஒவ்வொருவரும் உள்ளுக்க முழுமையடைய முழுமனிதராக வானப்பிரஸ்த சன்யாஸம் ஏற்க வேண்டும்

ரேர்முகத்தேர்வு நாள்: ஒவ்வொரு மாதமும் முதல் தேதி நடைபெறும். இடம் - பிடதி. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM புரி, கல்லுகோபஹள்ளி, Bidadi - 562109, Bangalore.

Nithyananda Dhyanapeetam is the wing of THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM Mission that handles the spiritual activities of the mission. Listed below are the main Vedic temples and THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM Mission ashrams world wide.

Florida

Orlando Vedic Temple & International Vedic Hindu University

Ohio

Ohio Vedic Temple & Ashram

Oklahoma

Oklahoma City Vedic Temple

Missouri

St Louis Vedic Temple

Washington

Seattle Vedic Temple

Malaysia

Klang Ashram

Bangalore, Karnataka

(Spiritual headquarters. Vedic Temple located here) THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM Dhyanapeetam Nithyanandapuri Kallugopahalli Mysore Road, Bidadi Bangalore - 562 109 Karnataka

Hosur, Karnataka

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMpuri, Kanuka Estate Nallur post, Hosur - 635 109 Krishnagiri District, Tamilnadu

Hyderabad, Andhra Pradesh

Sri Anandeshwari Temple, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM Giri, Pashambanda Sathamrai Village Shamshabad Mandal

Rangareddy District - 501 218 Andhra Pradesh

Salem, Tamil Nadu

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMpuri 102, Azhagapurampudur Salem – 636 016 Tamilnadu (Behind Sharada College)

Namakkal, Tamil Nadu

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMpuri, 2/200, Tirumangkuruchi Post, Namakkal – 637003 Tamilnadu, BHARAT

Tiruvannamalai, Tamil Nadu

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMpuri, Othaivaadai street, Pavazhakundru, Tiruvannamalai - 606 601, Tamil Nadu

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMpuri, Opposite Rajarajeswari Temple Girivalam path Tiruvannamalai

Tiruvannamalai, Tamil Nadu Arunachala Dhyanapeetam

Keel Katcharappattu Village

Tiruvannamalai

Pattanam, Tamil Nadu

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMpuri, Puthupatti road, Pattanam Rasipuram (Taluk) - 605602 Namakkal disrict

Rajapalayam, Tamilnadu

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMpuri, Kothainachiarpuram, Rajapalayam, Virudhunagar District

Pondicherry, Tamilnadu

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMpuri, Embalam to Villianoor main road, Embalam post, Pondicherry - 605 106

Poompuhar, Tamilnadu

Poompuhar Aadeenam Shivarajayoga Mutt Opposite Poompuhar College Melayur Post Seerkaali Taluk Nagai District - 609 107

| இந்தப் | என் புத்தகம் பெருமளவ உதவியிருப்பதால் இதை எனது உறவினருக்கு / நண்பருக்கு | | | |--------------------------------------------|---------------------------------------------------------------------------------|--|--| | பரிசளிக்க விரும்புகிறேன். | | | | | நான்

முகவாி: | | | | | | | | | | | | ``நித்ய தியானம்'' என்ற புத்தகத்திற்கான தொகை | | | | | ரூDD/Cash/Cheque | | | | | இணைத்துள்ளேன். | | | | | தேதி வங்கியின் பெயர் | | | | | கிளை | | | | | அனுப்புபவர்கள் ரூ. 30/- சேர்த்து அனுப்பவும்). | | | | | கீழ்க்கண்ட முகவரிக்கு. | | | | வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். | | | | | பெயா் | . | | | | முகவரி | | | | | | | | | | | | பின்கோடு : | | | | போன் | . | | | | | | | | | | | | |