1. Meditation Is For You
தியானத்திற்குள் பிரவேசித்தல்
உடலின் மீதான செயல்பாடு எண்ணங்கள் மீதான செயல்பாடு உணர்வுகள் மீதான செயல்பாடு
தியானமயமான வாழ்வை நோக்கி
தியானத்திற்குத் தவம் தேவையா ? விழிப்புணர்வே திறவுகோல்' 'வாழ்வில் தியானம்' என்பதிலிருந்து 'வாழ்வே தியானம்' என்ற சூழ்நிலைக்கு… அமர்வுத் தியானமும், எங்கும் எப்போதும் உதவும் தியானமுறைகளும்... நீங்கள் காணப்போகும் மாற்றங்கள். எதிர்கொள்ளப்போகும் பிரச்சினைகள். தியானத்தை உணர்ந்து மகிழ்வது எவ்வாறு ?
தியான முறைகள்
ஆனந்த நடனம் அஹம் பிரம்மாஸ்மி அந்தரத் தியானம் ஆத்ம ஸ்புரணா
சித்தாகாசத் தியானம் இதய கமலம் ஜோதி ஸ்தம்பத் தியானம் செயலைல் நிறுத்து! துடிப்பை நிறுத்து! காமஹரணம் பிராண ஸ்தம்பத் தியானம் பிராண சுத்தி பிரதிபிம்பத் தியானம் சக்தி தாரணை சூட்சும சரீர தியானம் சூர்ய தியானம் எங்கும் - எப்போதும் தியானம் அசலத் தியானம் ஆனந்தத் தியானம் அணிமா தியானம் ஹாஸ்யத் தியானம் மௌன பிந்து பிரத்யாகாரத் தியானம் ஸ்பூர்த்தி பானா
ஐந்து நிமிட ஓய்வு :
வெளிமூச்சு பயிற்சி உள்ளங்கை சுகம் புத்துணர்வூட்டும் இறுக்கத் தளர்வுப் பயிற்சி
ஏழு நாள் - சக்கரப் பணி :
ஏழு சக்கரத் தியானங்கள்
வினாக்களின் வாசலில் ....
என் தியானம் செய்ய வேண்டும்?
துவக்க நிலைக்கான சரியான கேள்வி.
ஏன் தியானம் செய்ய வேண்டும் ?
நமது வாழ்வில் தியானம் செய்வதற்கான தேவை உண்மையாகவே இருக்கிறதா ?
சரி. நான் கிடகிறேன், நீங்கள் ஏன் இந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் ?
இந்தத் தருணத்தில் எவ்வளவோ புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்க வேண்டிய நீங்கள், இந்தப் புத்தகத்தை எதற்காகப் படிக்கத் தேர்ந்தெடுத்தீர்கள் ?
உங்கள் உங்களுக்குள் ஆழமாக அமர்ந்திருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது - நாம் ஒவ்வொருவருக்குள்ளேயும்தான்.
உங்களது இறுதியான குறிக்கோள் என்ன ?
அதிகம் சம்பாதிப்பதா ?
என்றும் இளைமையுடன், ஆரோக்கியமாக, அழகாக வாழ்ந்திருப்பதா ?
இருப்பதைவிட இன்னும், நெடுங்காலம் நீடிக்கிற உறவுகள் வேண்டுமென்பதா ?
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
உங்களது ஆளுமையை வேண்டும் என்பதா ?
பட்டியலுக்கு முடிவே இல்லை - - ஒவ்வொரு தனிமனிதருக்கும் வேறுவேறு இலட்சியங்கள்.
ஆனால் ஒவ்வொரு தனி இலட்சியமும் -வித்தியாசமே இல்லாமல், ஒன்றையே சுட்டிக் காட்டுகிறது. ஆது ஆனந்தப் பாவசம் அடைய வேண்டும் என்பதுதான்.
இதை யாராவது மறுக்க முடியுமா ? "எனக்கு அனந்தத்தில் ஈடுபாடு இல்லை. மகிழ்ச்சியாக, பரவசமாக இருப்பது பற்றி எனக்குக் கவலையே இல்லை, '' என்று யாராவது சொல்வார்களா என்ன ?
நாம் ஒவ்வொருவரும் தேடிக் கொண்டிருப்பது ஆனந்தத்தைத் தவிர வேறில்லை. அறிவுப்பூர்வமாகச் சொன்னாலும், நாகரிக முறையில் வெளிப்படுத்தினாலும், நாம் தேடுவதெல்லாம் ஆனந்தமே.
ஆனால் நாம் அதைத் தேடும் வழிகள்தாம் வேறு வேறு.
பணத்தின் மூலமாகவும், அதிகாரத்தின் மூலமாகவும், உறவுகளின் மூலமாகவும், - நமது அன்றாட வாழ்வின் எல்லா இன்பவியல், துன்பவியல் நாடகங்கள் மூலமாகவும், நாம் தேடிக் கொண்டிருப்பது ஆனந்தத்தைத்தான். நமது வாழ்வின் ஒரே உந்து சக்தி அதுதான்.
வாழ்நாள் முழுவதும், நாம் ஆனந்தத்தைத் தேடிக் கொண்டிருந்தும், ஏன் நம்மால் அதை இன்னும் அடைய
முடியவில்லை ?
காரணம், நாம் விழிப்புணர்வு இல்லாமல் தேடுவது தான். நம்முடைய உண்மையான குறிக்கோள் அனந்தம்தான் என்பதைக்கூட நம்மில் 99% பேர் உணர்வதில்லை!
ஏதோ நம் வாழ்வில் குறையிருக்கிறது; பணம், உறவுகள், சொத்துகள் கொண்டு நிரப்ப முடியாத வெற்றிடம் நம்மிடம் இருக்கிறது என்றுதான் நம்மில் பெரும்பாலோர் நினைக்கிறோம்.
வெளியுலகில் நீங்கள் சேர்த்த ஏதாவதொன்றாவது நிரந்தர இன்பத்தைக் கொடுக்கக் கூடியதா என்று சொல்லுங்கள் பார்ப்போம் !
என்றாலும், இன்னும் நாம் தேடிக் கொண்டே இருக்கிறோம்.
அதை நாம் அறியாதிருப்பதால், நம்மை நாமே வெளியில் திருக் கொண்டிருக்கிறோம். ஏற்கெனவே அது நமக்குள் இருந்தும்கூட உலகமெல்லாம் தேடிக் கொண்டிருக்கிறோம் !
நம்பினால் நம்புங்கள் .....
ஆனந்தம் நமது பிறப்புரிமை.
ஆனந்தம் நமது உண்மை இயல்பு.
ஒரு சின்ன கதை:
ஒருநாள் பொழுதில்,
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ા ર
குல்ஜீத் தமது வீட்டு வாசலில் எதையோ தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தார்.
அவருடைய மனைவி வந்து விசாரித்த போது, ஒரு நாணயத்தைத் தொலைத்துவிட்டதாக அவர் சொன்னார். அதைக் கேட்ட அவளும் தேடுதலில் சேர்ந்து கொண்டாள். சீக்கிரத்தில் மற்றவர்களும் அதில் சோ்ந்து கொண்டார்கள். குறிப்பாக அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் நாணயத்தைத் தேட ஆரம்பித்தார்கள்.
சட்டென ஓர் இளைஞன், "நீங்கள் நாணயத்தை எந்த இடத்தில் தவற விட்டீர்கள்? அது ஏன் இன்னும் அகப்பட வில்லை?" என்று குல்ஜீத்திடம் கேட்டான்.
"ஓ, அதுவா? நான் நாண் நாணயத்தை வீட்டிற்குள் தொலைத்து விட்டேன்'' என்றார் குல்ஜீத்.
திகைத்துப் போன இளைஞன், "அப்படியானால் இதை இங்கே எதற்குத் தேட வேண்டும்?" என்று கேட்டான்.
"சிக்கல் விளக்குகள் இல்லை. இங்கே என்றால், தெருவிளக்கு வெளிச்சமாவது இருக்கிறது. அதன் வெளிச்சத்தில் தேடலாமே, என்றுதான் இங்கே .... " என்றார் குல்ஜீத்!
இதைத்தான் நமது வாழ்வில் நாம் செய்து கொண்டிருக்கிறோம். தப்பான இடங்களில் தேடுவதில் நாம் திறமைசாலிகளாக இருக்கிறோம் !
எல்லா இடங்களிலும் நாம் தேடுகிறோம் - பணத்தில்,
தியானம் உங்களுக்காக
அதிகாரத்தில், உறவுகளில், கொள்கை கோட்பாடுகளில். ஆனால் நாம் சரியான திசைநோக்கி நகர்வதே இல்லை -உள்முகமாக.
விழிப்புணர்வை நோக்கிய முதல்படி, நாம் தேடும் நாணயம் நம் சொந்த வீட்டிற்குள் இருக்கிறது என்பதை உணர்வதுதான். அதை உணர்ந்து விட்டால், பிறகு நீங்கள் தெருவில் தேடுவதை நிறுத்தி விடுவீர்கள்.
ஆனந்தத்தைத் தெருவில் தேடுவது வீண் என்பதை நீங்கள் உணரும் தருணமே, நீங்கள் தியானத்திற்காக இயல்பாகவே கனிந்து விட்டீர்கள் என்பதைக் காட்டும்.
ஆனந்த நிலை என்பது என்ன என்று நீங்கள் சொல்கிறீர்கள் ? தியானத்தின் மூலமாகத்தான் அதை நாம் அனுபவிக்க முடியுமா?
நான் நூற்றுக்கணக்கான வழிகளில் ஆனந்தத்தை விளக்க முடியும். ஆனால் ஒரே ஒரு வழியின் மூலமாக த்தான் உங்களால் விளங்கிக் கொள்ள முடியும் - அதை அனுபவிப்பதன் மூலமாக!
என்றாலும், உங்களுக்கு ஒரு விளக்கத்தைத் தர முயற்சி செய்கிறேன்.
நாம் எல்லோருமே, நமது வாழ்வில், பெரிய அளவில் மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறோம். ஆனால் அவற்றிற்கு எல்லாம் காரணங்கள் இருந்திருக்கும்.
உண்மைதானே ?
உங்களுக்குப் பதவி உயர்வு உயர்வு கிடைத்தால் மகிழ்ச்சி. ஒரு நோய் குணமாகி விட்டால் மகிழ்ச்சி. ஒரு புதிய கார் வாங்கி விட்டால் மகிழ்ச்சி. (உங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் கார் மக்கர் செய்தாலும் உங்களுக்கு மகிழ்ச்சி!).
நீங்கள் மகிழ்ச்சியடையும் தருணங்களில், உங்கள் மகிழ்வை வேறு எதனாலும் கெடுக்க முடியாது என்றே நினைக்கிறீர்கள். அனால் அதே நாளில், உங்கள் கணவர் அல்லது மனைவியுடன் சண்டையிட நேர்ந்தால், உங்கள் வாழ்வே படுமோசம், துக்ககரமானது என்று நினைக்க ஆரம்பித்துவிடுவீர்கள்!
சொல்லப்போனால். இறுதியாக வேதனைக்கே இட்டுச் செல்கின்றன.
காரண எப்போதும் மாறினாலோ, முடிந்து விட்டாலோ, நீங்கள் வேதனைப் படுகிறீர்கள். காரணமே இல்லாமல் வரும் மகிழ்ச்சிதான் நிரந்தரமானது. காரணம், அது எதையுமே சார்ந்திருப்பதில்லை.
ஆனந்தம் என்ற சொல்லின் சரியான பொருள், 'குறைக்க முடியாதது, இழக்க முடியாதது' - என்பதுதான்.
ஆனந்தம் என்பது மகிழ்ச்சியைக் குறிக்கும் சொல் அன்று. அதன் சரியான பொருள், 'குறைக்க முடியாதது, இழக்க முடியாதது' என்பதை அறிந்த பிறகு நீங்கள் வியப்படைந்திருப்பீர்கள்.
ஆனந்தம் (பரவசம்) மகிழ்ச்சி அன்று. அனந்தம் என்பது பேரமைதி; மௌன நிலை.
இன்ப துன்பங்களைக் கடந்து செல்லும்போது, நீங்கள் அதை உணர முடியும்.
அந்த நிலையில், இன்ப துன்பங்கள் உங்களைப் பாதிக்கும் சக்தியை இழந்துவிடும்.
அதனால் அந்த அனந்த நிலையை, நீங்கள், நிரந்தர, காரணமற்ற சாந்தி என்று சொல்லலாம்.
தியானத்தின் மூலமாகத்தான் நீங்கள் அனந்த நிலையை அனுபவிக்க முடியும் என்பதில்லை - ஆனால் தியானம் அதற்கு நிச்சயமான வழி.
அன்றாட வாழ்வின் இழுபறிகளிலிருந்து தியானம் உங்களைக் காக்கும். நீங்கள் தியானம் செய்யும்போது, உங்கள் உடலின் ஆணவத்தின் குறுகிய எல்லையை உடைக்கும் புரிந்துகொள்ளுகலை விசாலமடையச் செய்துவிடுவீர்கள்.
எல்லாவற்றிற்குள்ளும் உங்களை உணரும் ஒருமை உணர்வு அனுபவப்பட்டுவிட்டால், அன்றாட வாழ்வின் இன்ப துன்பப் பற்றுகளை இயல்பாகவே நீங்கள் கை நழுவ விட்டு விடுவீர்கள்.
அறிவுப்பூர்வமாக இந்தக் கருத்தைப் புரிந்து கொள்வது சிரமம்தான். ஆனால் ஈடுபாட்டுடன் தியானம் புரிய, உங்களுக்கு அனுபவம் வசப்படும். ஆனந்தத்தின் ஒர் ஒளிக்கீற்று புலப்படும். பிறகு எல்லாம் விளங்கிவிடும்.
நமது அன்றாட வாழ்வில் நாம் ஆனந்த அனுபவத்தை என்றும் பெறுவதே இல்லை. காரணங்கள் இல்லாத மகிழ்ச்சி
இருக்கக் கூடும் என்பதே நமக்குத் தெரியாது. அப்படியானால், எப்படித்தான் நாம் அனைவரும் அந்த ஆனந்தத்தை அடைவது ?
நீங்கள் அதைப் பெற்றுத்தான் இருக்கிறீர்கள். ஏனென்றால் அதுதான் உங்கள் உண்மையான இயல்பு!
அதை நான் விளக்குகிரோன்:
தைத்ரேய உபநிடதத்தில் ஒர் அழகிய ஸ்லோகம் இருக்கிறது. அது சொல்கிறது,
"ஏதஸ் அத்மன ஆகாசஸ்ய சம்பூதஹ அகாஷாத் வாயுஹூ, வாயோர் அக்னிஹி அக்னேர் ஆப்பஹ ஆபஹ் பிரித்விஹி பிரித்வியோர் அன்னம்
இந்தப் பூதங்களால் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம்) உருவாக்கப்பட்டுள்ளது என்பதை இந்தச் சுலோகம் சொல்கிறது. சேர்க்கையால் இவனுக்கு ஆழமான இருந்துகொண்டே இருக்கிறது. இவற்றோடு இணைய, அதாவது தனது மூலத்திற்குத் திரும்ப அவன் விரும்புகிறான்.
இந்த முக்கியமான ஐந்து சக்திகளுடன் தன்னை ஒருங்கிணைத்துக்கொள்ள அவன் பல வழிகளிலும் முயற்சி செய்கிறான்.
விக்கிரக வழிபாட்டின் மூலமாக, அவன் பூமிச்
கியானம் உங்களுக்காக
சக்கியோடு இணைத்துக் கொள்ள முழுயற்சி செய்கிறான்.
வேள்விகள், யோகங்கள் மூலம் ஆற்றலுடன் தன்னை இணைத்துக் கொள்ள முயற்சி செய்கிறான்.
மந்திரங்களை உச்சாடனம் செய்வதன் மூலம் காற்று சக்தியுடன் இணைய முயற்சி செய்கிறான்.
இந்த எல்லா வழிகளின் மூலமும், இந்த அனைத்து முறைகளின் மூலமும், மனிதன், அடிப்படை சக்திகளோடு ஒருங்கிணைக்குக்கொள்ள முயற்சி செய்கிறான்.
மிக நுட்பமான, மேலான, ஆகாய சக்தியுடன் ஒருங்கிணைத்துக்கொள்ளுதல், புற முயற்சிகளால் முடியாத ஒன்று. அது உள் அனுபவம் சம்பந்தப்பட்டது. அதாய ஆற்றலுடன் ஒருங்கிணைத்துக்கொள்ளுதல் தியானத்தின் மூலமே சாக்கியம்.
நாம் தியானத்தில் பிரவேசித்தவுடனே, சுற்று வட்டம் பூர்த்தியாகிவிடுகிறது; பூர்த்தி செய்து விடுகிறோம். நமது மூலத்திற்கும், நமக்கும் இடையில் காணாமற்போன தொடர்புச் சங்கிலியை நாம் அப்போது கண்டுபிடித்து விடுவோம். நாம் நமது ஆதி மூலத்திற்குத் திரும்பி விடுவோம். நாம் முழுமை பெற்றுவிட்டதாக, பாதுகாப்புப் பெற்று விட்டதாக உணர்வோம். அதனால்தான், தியானம் உங்களை ஆனந்த பரவச பரிணாம நிலைக்கு இட்டுச் சென்று விடுகிறது.
ஆகவே, ஆனந்தத்திற்கு ஆசைப்படுதல் என்பது நமது மூல நிலைக்குத் திரும்பும் தவிப்புத்தான். அதனால்தான்,
தெரிந்தோ, தெரியாமலோ, நமக்குள் தியானத்திற்கான ஆவல் இருந்துகொண்டே இருக்கிறது.
தியானம் என்பது திட்டவட்டமாக என்ன?
தியானத்திற்கு நிறைய இலக்கணங்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு குருவும் தமது அனுபவத்திற்கு ஏற்றபடி விளக்கிச் சொல்லியிருக்கிறார்கள். அல்லது, எந்த மக்களிடம் அவர்கள் பேசுகிறார்களோ, அவாகளுடைய தேவைக்கு ஏற்றபடி விளக்கிச் சொல்லியிருக்கிறார்கள்.
தியானம் என்பது வழிபாடு,
நமக்குள்ளே நாம் பூட்டி வைத்திருக்கிற செல்வத்தை நாம் கண்டுகொள்ள உதவும் வழிமுறைதான் தியானம்.
பிரபஞ்ச சக்தியுடன் உங்களைப் பிணைப்பதற்கு உதவும் வழிமுறைதான் தியானம்.
இவை எல்லாமே சரிதான்.
நான் சொல்வது இதுதான்: இந்தக் கணப்பொழுதின் ஆனந்தமே தியானம்! நீங்கள் இந்தக் கணத்தில் நிம்மதியாக, அமைதியாக இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் தியான நிலையில் இருப்பதாகப் பொருள். வேறு எதையும் நீங்கள் செய்ய வேண்டியதே இல்லை.
எல்லோரும் தியானத்தைக் கற்றுக் கொள்ள முடியுமா ?
தியானத்தை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியதே இல்லை. நீங்கள் ஏற்கனவே தியானத்தில்தான் இருக்கிறீர்கள்!
உங்கள் வாழ்வில் அளவுகடந்த அனுபவித்த நேரங்களை நினைவுபடுத்திப் பாருங்கள்.
மலைக்குப் பின்னாலிருந்து கதிரவன் சட்டென மேலே எழுகிறான். அல்லது முதன்முறையாக ஓர் இனிய இசையைக் கேட்கிறீர்கள் ...
அந்தக் கணத்தில், சட்டென, நீங்கள் நின்று விடுகிறீர்கள். பேச்சற்றுப்போய் விடுகிறீர்கள்.
நாம் அனைவருமே அப்படிப்பட்ட தருணங்களை அனுபவித்திருக்கிறோம். அல்லவா ?
அந்தக் கணங்களில், அந்த அழகின் முன், உங்களால் மேற்கொண்டு எதையுமே சிந்திக்க முடியாது. நீங்கள் மௌனமாகி விடுகிறீர்கள். அந்த அழகு மட்டுமே கவனத்தில் இருக்கிறது. அவ்வளவுதான்.
அந்தக் கணப்பொழுதே தியானம்.
சில வினாடிகளுக்குப் பிறகு, உங்களது உள் அரட்டை மறுபடியும் ஆரம்பமாகி விடுகிறது. 'அந்த உதயம் அழகாக இருக்கிறது' என்று மனம் சொல்கிறது.
உங்கள் மனம், நீங்கள் கேட்ட இசையை, முன்பு நீங்கள் கேட்டிருக்கும் மற்றொரு இசையோடு ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்து விடுகிறது.
அதன் அர்த்தம், நீங்கள் தியானத்திற்கு வெளியே விழுந்து விட்டீர்கள் என்பதுதான்!
மௌனமாக ஆனந்த நிலையிலேயே இருந்து கொண்டிருப்பதுதான் தியானம்.
அந்த நிலையை நீங்கள் கற்றுக்கொள்ள முடியாது. அனுபவத்தால் மட்டுமே உணரக்கூடியது அது.
தெளிவாக இருங்கள்: தியானம் என்பது, நீங்கள் செய்யக்கூடிய ஏதோ ஒன்றல்ல.
தியானத்தைச் செய்ய முடியாது.
உங்கள் எல்லாச் செயல்களையும் நீங்கள் கைவிட்டு விடும்போது, மலரும் ஒரு நிலைதான் தியானம்.
அது உடல் இயக்கமன்று. சிந்திப்பதுகூட ஒரு செயல்தான். மன ஒருமைப்பாடு கொள்வதுகூட ஒரு செயல்தான் !
எல்லாச் சிந்தனைகளையும், உணர்வுகளையும் களைந்துவிட்டபின், எஞ்சி இருப்பதே தியானம்.
சும்மா, அப்படியே இருத்தலே தியானம். கதையில் வரும் ஜென் குருவைப்போல, எந்த எதிர்ப்பும் இல்லாமல், நிகழ்காலத்தை அனுபவித்தலே தியானம்.
கடுமையாக உழைத்து, நீங்கள் சாதிக்க வேண்டியது தியானம் உங்களுக்காக ஒன்றல்ல ஆனந்தம்.
ஆனந்தத்தை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியாது; நீங்கள் ஆனந்தத்தில் கரைந்து இளைப்பாற மட்டுமே முடியும்.
ஆனந்தம் எங்கோ இருக்கும் ஒன்றல்ல. உங்கள் உள்ளேயும் வெளியேயும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றே ஆனந்தம்.
ஆனந்தம் தேடி அடைய வேண்டிய ஒன்றல்ல. இங்கேயே, இப்பொழுதே, கண்டுணரப்பட வேண்டியது.
அப்படியானால் தியான முறைகள் எதற்காக?
தியான முறைகள் நீங்கள் எதையாவது சாதிப்பதற்காக அல்ல. உங்களுக்கு நினைவுபடுத்தவே அவை.
ஆனந்தத்திற்குள் மூழ்கி விடுங்கள்! - என்று நான் சட்டெனச் சொன்னால், நடக்கிற காரியமா அது ?
ஆனந்தம் என்பது உங்கள் இயல்புநிலை என்பதுகூட உங்களுக்குத் தெரியாதே!
அது தெரியாதபோது, தியானத்திற்கான செயல்முறை குழப்பமாகவும், அச்சம் தருவதாகவும் இருக்கும்.
தியானத்திற்குள் பிரவேசிப்பது, கரைகளற்ற கடலில் பிரவேசிப்பதுபோல, நீந்தக் கற்ற பின், தன்னந்தனியாகக் கடலில் குதித்து விடுவீர்களா என்ன ?
மாட்டீர்கள் !
மிதக்க, மிதவை வேண்டும், வழி தெரிய, கலங்கரை விளக்கமும் வேண்டும்.
அதேபோல, தியானத்தில் பிரவேசிக்கையில், என்ன செய்ய வேண்டும் என்பதற்கான முறை தெரிந்திருக்க வேண்டும். தியானத்திற்கான பாதையைக் காட்டுவதாக அது அமைய வேண்டும். அப்போதுதானே எல்லாம் இயல்பாக நிகழமுடியும் ?
தியான முறைகள், மிதவைகள்போல.
தியானம் உங்களது வாழ்க்கை முறையாக மாறி விட்டபின், தாமாகவே நீங்கள் ஆரம்பத் தியான முறைகளைக் கைவிட்டு விடுவீர்கள்!
தினசரி நான் எத்தனை மணி நேரம் தியானம் செய்ய வேண்டும் ?
எத்தனை மணி நேரம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
நான் முன்பு குறிப்பிட்டபடி, தியானம் என்பது உங்களது வாழ்வில் சேர்க்கப்பட வேண்டிய ஏதோ ஓர் அம்சமன்று. இது, நான் தினசரி எத்தனை முறை மூச்சவிட வேண்டும் என்று கேட்பதுபோல உள்ளது.
நான் இவ்வளவு மணி நேரம் தியானம் செய்கிறேன். மீதி நேரங்களில் என் அன்றாட அலுவல்களைக் கவனிக்கிறேன் - என்று நீங்கள் சொல்ல முடியாது.
தியானம், உங்களுக்குள் மாபெரும் மாற்றத்தை உருவாக்குகிறது.
தியானம் உங்களுக்காக
உங்களது முழு வாழ்க்கையுமே, தியானம்தான். இந்த உண்மை அனுபவமாக மாற வேண்டும். அதற்கான விதை உங்களுக்குள் ஏற்கனவே இருக்கிறது. அது வளர்ந்து பெருமரமாகிப் பூப்பூக்க வேண்டுமென்றால், முதலில் அந்த விதை வெடிக்க வேண்டும் !
விதை வெடிக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும்!
நீங்கள் உண்மையான விருப்பத்துடன் தியானப் பயிற்சியில் ஈடுபடும்போது, அது தானாக நிகழ்ந்துவிடும். ஆனால் விதை வெடிப்பதற்கான விருப்பம், பரிபூரண நிலைமாற்றம், உங்களுக்குள் நடக்க வேண்டும்.
தியானம் ஒரு வகை மறுபிறப்பு !
முதலில் நீங்கள் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் - உங்களது சொந்த மரணத்தை!
முற்றிலும் மாறுபட்ட ஒருவராக நீங்கள் மறுபிறப்பு எடுப்பதற்காக வேண்டும்.
ஆயத்தமாகுங்கள் !
தியானத்தின் பயன்கள் என்ன?
உங்களின் நிலையையே மாற்றச்செய்யும் சக்தி.
உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் - தியானம் நம்மை பக்குவப்படுத்தும்.
உடலளவில் எல்லோரும் அறிந்தவையே.
தியானத்தின் அழுத்தத்தையும், இரத்தத்தில் சா்க்கரையின் அளவையும், கட்டுப்படுத்திவிடலாம். நோய் அதிகரிக்கலாம்.
கொடிய நோய்களான கோல் ஒவ்வாமை, ஆஸ்துமா, மூட்டுவலி முதலியவற்றையும் குணப்படுத்தி விடலாம்.
தியான சக்தியின் முன்னால், எந்த நோயாலும் தாக்குப்பிடிக்க முடியாது !
தியானம் மருந்திற்குத் துணை நிற்பது. ஆனால் மருந்திற்கு மாற்று ஆகாது.
மன அளவில், தியானம் எண்ணங்களைத் தெளிவு படுத்தும்; சொல்லாற்றலை வளர்க்கும். எண்ணங்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தும்.
தியானம், உறுதியாக மனத்தை ஒருமுகப்படுத்தும்; நினைவாற்றலை மேலாக, புத்திசாலித்தனத்திற்கு இட்டுச் செல்லும்.
சிக்கல்கள் புதிய ஆக்கபூர்வமாகவும், புத்திசாலித்தனம் என்பது.
இந்தக் கலையைக் கற்றுக் கொள்ள முடியாது.
ஆனால் தியானத்தில் தானாக இந்தத் திறமை மலர்ந்துவிடும். தியானத்தின் பயன்களைப் பட்டியலிட முடியாது! அது மிக நீளமானது!
பிரபஞ்சத்தின் எல்லையற்ற ஆற்றலுடன் உங்களை நேரடியாகவே தொடர்பு கொள்ளச் செய்வது தியானம்.
நம் அனைவருக்குள்ளும் இருக்கிற தெய்விகப் பண்பைக் கண்டுகொள்ள, கதவு திறந்து வைப்பது தியானம்.
தியானம் சொல்லுக்குள் அடங்காது. இதன் பயன்களை அனுபவித்து உணரலாமே தவிர, விளக்கிச் சொல்ல வழியில்லை !
24 மணி நேரமும் தியான முயற்சியிலேயே ஈடுபட்டு வந்தால், 'சும்மா இருத்தல்' என்பதிலேயே என் கவனம் சென்று கொண்டிருந்தால், என் அன்றாட வேலைகளை எப்படி செய்வது ?
தியானம் தினசரி செயல்களுக்கு எதிரானதன்று!
இடையூறு ஏற்படாமல், உங்கள் இருப்பிலேயே இருப்பது எப்படி என்ற நுட்பத்தை நீங்கள் கற்றுக் கொண்டுவிட்டால், அதே நிலையில் இருந்தபடி, எத்தனை காரியங்களை வேண்டுமானாலும் நீங்கள் செய்யலாம். வெளிப்புறச் செயல்களோ, செயல்படாமையோ முக்கியம் அல்ல.
இது இரண்டு வகை நடைமுறைகள் கொண்டது.
முதலாவது - நீங்கள் உங்களது உள் இருப்போடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அப்படி ஒன்று உள்ளே இருப்பதை நீங்கள் உணர வேண்டும்! சும்மா இருத்தலில் மகிழ்ச்சி பெறக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் அமர்ந்து கியானம் செய்ய ஆரம்பிக்கும்போது ஆரம்பத்தில், தினசரி, அரைமணி அல்லது ஒரு மணி நேரம் இதைச் செய்யுங்கள்.
அந்த நிலையில் சௌகரியமாக இருக்க முடியும் போது, ஆரம்ப தியான நேரத்திற்கும் அதிகமாக, அதை நீட்டித்துப் பாருங்கள்.
சின்ன காரியங்கள் மூலம் இதை ஆரம்பிக்கலாம்.
நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், நடந்து கொண்டிருந்தாலும், தட்டைக் கழுவிக் கொண்டிருந்தாலும், உங்களில் நீங்கள் மையம் கொள்ள முயற்சி செய்யுங்கள். இதைச் செய்தவுடனே, நீங்கள், அதிக சிக்கலான காரியங்கள் நோக்கி நகர முடியும்.
புறத்தில், உங்களது வாழ்வு சாதாரணமாகப் போய்க் கொண்டிருக்கிறது.
இதே வாழ்வை இன்னும் சற்றுச் சிறப்பாக நடத்திச் செல்ல முடியும். காரணம், தியானம் உங்களுக்குள் அதிகப்படியான திறனையும் ஏற்படுத்தும். இனி, நீங்கள் இன்னும் அதிக விழிப்புணர்வுடன், அதிகப் படைப்பாற்றலுடன் செயல்பட முடியும்.
அதே சமயம், உங்களுக்கு உள்ளேயும், ஆழ்ந்து, இடையூறு கொடுக்க முடியாத, ஒரு மௌனத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள். அதுதான் தியானத்தின் மகத்துவம்.
உங்கள் உணர்வுகளையும், செயல்களையும் பார்த்துக் கொண்டிருப்பவராக, ஒரு சாட்சியாக மாத்திரம் நீங்கள் மாறிவிடுவதுதான், தியானத்தின் முழு இரகசியம்.
உங்கள் செயல்களை விலகி நின்று கவனிக்க ஆரம்பித்தவுடன், ஏதோ ஒன்று உங்களுக்குள் மாறாமல் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். அது, சினம் கொள்வதில்லை, வருத்தப்படுவதில்லை, பணம், பாதுகாப்பு, புகழ் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.
அதுதான் உண்மையான 'நீங்கள்'.
மற்றவை எல்லாம் உங்களைச் சுற்றி நீங்களே உருவாக்கிக் கொண்டவை.
வேலைகளைச் செய்வது நீங்களல்ல, கோபப்படுவது நீங்களல்ல, வேதனைப்படுவது நீங்களல்ல, சலிப்படைவது நீங்களல்ல என்பதை உணர்ந்த உடனே எல்லையற்ற சுதந்திர உணர்வை உங்களுக்குள் அனுபவிப்பீர்கள்.
இது தியானத்தின் மூலமாக ஏற்படும் ஓர் அருமையான நிலை.
தியானம் பரிபூரண சுதந்திரத்தை உங்களுக்கு வழங்குகிறது - அதாவது உங்களிடமிருந்தே உங்களுக்கு விடுதலை !
நீங்கள் உருவாக்கி வைத்துக் கொண்டுள்ள உங்களது 'ஆளுமை'யின் (Personality) பிடியில் இருந்தும் விடுதலையை தரவல்லது தியானம் !
தியானத்தை அணுக சரியான வழி என்ன ?
நல்ல கேள்வி.
முதலில், அதை அதை ஆழ்ந்த விருப்பத்துடனும், சிரத்தையுடனும் அணுக வேண்டும்.
தியானத்தை நம்புங்கள், தியானத்தை நம்பாதீர்கள் என்பதைப் பற்றி நான் பேசப்போவதில்லை.
நம்பிக்கை தேவையில்லை.
நம்பகத்தன்மை வேண்டும் என்கிறேன்.
நம்பிக்கை என்பது, ஒன்றில் நாம் நம்பிக்கை கொள்ளும்படி ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்ட ஒரு கொள்கை அல்லது கருத்து மட்டுமே.
நம்பகம் என்பது, எதற்கும் தயாராக இருப்பது, வெளிப்படையாக இருப்பது.
தியானத்திற்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள். திறந்த மனத்தோடு இருங்கள்.
உற்சாகமாக இருங்கள். மனம் அதிரும்படியாக ஏதோ ஒன்று நிகழப்போகிறது! அதற்கு ஆயத்தமாக இருங்கள்!
நம்பிக்கையுடன் அணுக வேண்டும் என்பது -
தியானம் உங்களுக்காக
இரண்டாவது அம்சம்.
பரவச சன்னியாசிகளுக்கும் மட்டுமே எனப் பதிவு செய்து வைக்கப்பட்டிருப்பது அன்று.
தியானத்திற்காகத் தகுதி கிடையாது.
ஒருமுறை, ஆன்மிக மகா ஞானியான ரமண மகரிஷியை ஒருவர் அணுகி, "பகவானே, ஆன்மிக வாழ்விற்கு நான் தகுதி பெற்றவன்தானா?'' என்று கேட்டார்.
அதற்கு, ரமணர் ஒரு பதில் வினா கொடுத்தார்: "நீ உயிரோடு இருக்கிறாயா?'' என்றார்.
அந்த மனிதர் அதிர்ந்து போனார்.
"ஆமாம், நான் உயிரோடுதான் இருக்கிறேன்".
"அப்படியானால், அது போதும்! ஞானம் பெறுவதற்குத் தேவையான தகுதி அதுதான்'' என்றார் ரமணர்.
உயிரோடு இருப்பதே ஆன்மிகத்திற்கு போதுமான தகுதி !
இயற்கை உங்கள் மீது எந்த வரைமுறைகளையும் திணிக்காதபோது, நீங்கள் ஏன் கண்டதையெல்லாம் உங்கள் மீது திணித்துக் கொள்கிறீர்கள் ? ஏன் இறுக்கிக் கொள்கிறீர்கள்.
ஆரம்பிப்பதற்கு முன் தெளிவாக இருங்கள்.
உங்களுக்கென்று திட்டவட்டமானதொரு குறிக்கோள் இருக்கிறது.
நீங்கள் உறுதியாக அதை அடையத்தான் போகிறீர்கள்.
மூன்றாவதாக இலகுவாக இருங்கள் !
தியானம், பெரியதொரு சாகசம்.
சொல்லப்போனால், உங்கள் வாழ்வின் மிகப் பெரிய சோதனை அது. நீங்கள் தியானத்தில் மிகத் தீவிரம் காட்டினால், அதை இழந்து விடுவீர்கள்.
ஆன்மிகம், தியானம் கடுமையான ஒன்றல்ல. வாழ்க்கை ஒரு லீலை என்பதை அறிந்து கொள்வதே தியானம். தெய்விக விளையாட்டு. திருவிளையாடல்! பிறகு எதற்காகத் தீவிரம் காட்ட வேண்டும் ?
தியானத்தைக் கொண்டாடுங்கள்.
சாதாரணமாக மகிழுங்கள் !
நான்காவது – பொறுமையுடன் காத்திருங்கள் !
தியானத்திற்கான ஆனந்த அனுபவம் உங்களுக்குள் எட்டிக் குதித்து விடுவதல்ல !
தியானத்தை ஆரம்பிக்கும்போதே, அதன் விளைவுகள் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
ஒரு சின்ன கதை:
ஒரு காட்டில் மூன்று குரங்குகள் நண்பர்களாக இருந்தன.
ஒரு சமயம், அந்த மூன்று குரங்குகளில் ஒன்று, பழுத்த மாங்கனி ஒன்றைப் பார்க்கிறது.
எல்லாக் குரங்குகளைப்போலவும், அந்த ஒரு கனிக்காக, சற்று நேரம் அவை சண்டையிட்டுக் கொண்டன.
பிறகு, ஏதோ ஒரு காரணத்தால், ஒரு தெளிவு பிறக்க, கொஞ்சம் புத்தி வர, அவை புத்திசாலித்தனமான ஒரு முடிவுக்கு வந்தன.
அந்தக் கனியை அப்படியே சாப்பிட்டு விடுவதை விட, அதைப் பூமியில் விதைக்க முடிவெடுத்தன.
ஒரு மாங்கொட்டையிலிருந்து ஒரு மரமே தோன்றும். அந்த மூன்று குரங்குகளும் தாராளமாக உண்ண நிறைய மாங்கனிகள் தோன்றும் என்று சிந்தித்துச் செயலில் இறங்கின.
ஒவ்வொரு குரங்கும் ஆளுக்கொரு பொறுப்பை ஏற்றுக் கொண்டன.
''நான் தினந்தோறும் இதற்குத் தண்ணீர் விடுகிறேன்,'' என்றது முதல் குரங்கு.
"மண்ணைச் சத்துள்ளதாக்க, உரமிட்டு நான், நன்கு செடி வளரப் பார்த்துக் கொள்கிறேன்," என்றது இரண்டாவது குரங்கு.
''கடுமையான பிராணிகளிடமிருந்தும் நான் இதைப் பாதுகாக்கிறேன், " என்றது மூன்றாவது குரங்கு.
மாதம் ஒன்று ஆயிற்று. பிறகு, இரண்டு, மூன்று என மாதங்கள் கழிந்தன.
மாங்கொட்டை முளைவிடவே இல்லை!
உடனே, மூன்று குரங்குகளும் ஓர் அவசரக் கூட்டம் கூட்டி, தங்கள் செயல்பாடுகள் பற்றி விவாதித்தன.
''வாக்களித்தபடி, நான் தினமும் தவறாமல் தண்ணீர் விட்டுக் கொண்டுதானே வருகிறேன்,'' என்றது முதல் குரங்கு.
"வாக்களித்தபடி மண் சத்துப் பெற நான் உரம் இட்டுக் கொண்டுதானே வருகிறேன்," என்றது இரண்டாவது குரங்கு.
முன்றாவது குரங்கு சொன்ன பதில் இது: "இதை மிகக் கவனமாகவே நான் பாதுகாத்துதான் வருகிறேன்! அது மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும், மாங்கொட்டையை வெளியில் எடுத்து, முளைவிட்டதா, இல்லையா என்று பார்த்தும் வருகிறேன்!'
அதனால் முதல் சில அமர்வுகளிலேயே அற்புதம் விளையும் என்று எதிர்பார்க்காதீர்கள்! தியானம் முறையாக உங்களுக்குள் வளர கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். உடனடிப் பலனுக்குப் பேராசைப்பட்டால், தியான அனுபவங்கள் உங்களுக்குள் படிவதற்கு வாய்ப்புக் கொடுக்காமல், அதைத் தடுக்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
பலன்களை அனுபவிக்க… பொறுமை கொள்ளுங்கள்!
ஐந்தாவதாக – தனிமையில் மகிழுங்கள்.
முடிந்தவரை, உள்முகப் பார்வைக்கு முயுற்சி செய்யுங்கள்.
ஒவ்வொரு நாளும் சற்று நேரம் மௌனமாக இருங்கள்.
தனித்திருங்கள்.
உங்களது அகச் சூழலை அனுபவிக்க ஒரு வாய்ப்புக் கொடுங்கள். தியானம் உங்களது வாழ்வின் ஒரு பகுதியாகி விடும்போது, அந்த நிலை இயல்பாக உங்களுக்குள் மலா்ந்து விடும். ஆனால் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள், அந்த நிலையை இடைவிடாமல் விழிப்புணர்வோடு காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
பல தியான முறைகள் இருக்கின்றன. எது எனக்குப் பொருத்தமானது என்பதை நான் எவ்வாறு கண்டு கொள்வது?
விளைவைக்கொண்டுதான்!
ஒரு தியானமுறை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதில் தொடர்ந்து பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
உங்கள் முழு ஆற்றலையும் அதில் செலுத்துங்கள்.
உண்மையான மிகுந்த தீவிரத்துடன் முயற்சி செய்யுங்கள்.
அது நிச்சயம் பயன் தரும் என்ற நம்பிக்கையுடன் ஈடுபட்டால், சில நாள்களிலேயே, அது உங்களுக்கு ஏற்றதா இல்லையா என்பது தெரிந்து விடும்.
ஆரம்பத்தில், அமர்வுத் தியான முறையை விட, உடலை இயக்கி செய்யும் தியான முறைகளில் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
காரணம், ஏகப்பட்ட இடையூறுகள் உங்களுக்குள் இருக்கின்றன. பேசாமல் அமர்ந்து கவனிக்க ஆரம்பிக்கும் போது, உங்கள் உள்ளே உள்ள அளவற்ற இடையூறுகளையே நீங்கள் கவனிக்க வேண்டி நேரும்.
அதனால் தியானம் செய்ய ஆரம்பிக்கும்போது 'செயல்முறை' தியான முறைகளைத் தேர்ந்தெடுக்கவும், இவை, முதலில் உள்ளிருக்கும் குப்பை கூளங்களை வெளியேற்றி, அகத்தைச் சுத்தப்படுத்தும்.
அவை வெளியில் சுறுசுறுப்புடன் இருப்பதாகத் தோன்றும். ஆனால் உள்ளே, மௌனத்தின் அமைதி அனுபவத்திற்கு இட்டுச் செல்லும்.
தியானம் கைவரப் பெற்றுவிட்ட பிறகு, உங்கள் தடைகளை எல்லாம் சுத்தப்படுத்திவிட முடிவதால், அதற்குப் பிறகு நீங்கள் விரும்பும் எந்தவொரு தியான முறையையும் மேற்கொள்ளலாம்.
தியானமுறையின் சரியான தன்மையை எவ்வாறு அளந்தறிவது ?
ஒரு தியான முறை, உங்களுக்கு ஒத்ததாக, நிம்மதி தருவதாக, உணர்வுப்பூர்வமானதாக, மையம் கொள்வதாகத் தோன்றினால் - அதுதான் பொருத்தமானது.
அது உங்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தருவதாகவும், நீங்கள் விசாலப்பட சக்தி தருவதாகவும் அமைந்தால், அதுவே உங்களுக்கு பொருத்தமானது.
அது சரிப்பட்டு வரவில்லையென்றால், அதைக் தள்ளி வைத்து விட்டு வேறு முறையில் ஆரம்பித்துவிடுங்கள்.
ஆனால் பொறுமை காட்டுங்கள்! உடனடிப் பலன்களுக்குச் சாத்தியமான நல்ல விஷயத்தை வீசி எறிந்துவிடாதீர்கள்.
முதலில் உள்ள ஐந்தோ, எட்டோ தியான முறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், அவற்றில் ஏதாவதொன்று உங்களுக்கு ஏற்றதாக அமைந்துவிடும்.
அதைக் கண்டுபிடியுங்கள்!
செயல்படுங்கள்!
முக்கிய குறிப்பு
'தியானம் புத்தகம் தியானத்திற்கான ஒரு பாடநூல்.
இது தியானங்களின் தொகுப்பு மட்டுமே.
புத்தகத்தைப் படித்துத் தியானம் செய்கையில் சில பிரச்சனைகளைச் சந்தித்தால், தியானங்களின் செய்முறையை மீண்டும் தெளிவாகப் படித்துப் புரிந்து கொண்டு செய்யுங்கள்.
தியானத்தால் உடலுக்கு நல்லது மட்டுமே விளையும். சின்ன சின்ன தொந்தரவுகள் தொடக்கத்தில் வருவதும் நல்லதே. அவை உடலிலிருந்து நச்சுகள் வெளியேறுவதற்கான அறிகுறிகள்.
சில நேரங்களில் தொந்தரவுகள் அதிகமாக ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும். உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் தியானபீடக் கிளையை உடனே அணுகி விளக்கம் பெறவும்.
தியானபீடத்தின் ஏதாவது ஒரு தியானமுகாமில் கலந்து கொண்டு, தியானபீட ஆச்சாரியர்களிடமிருந்து முறையாகப் பாதுகாப்பானது.
தியானத்தில் பிரவேசித்தல்
தியானம் உங்களை உள்முகமாக அழைத்துச் செல்லும் பாதை.
உள்முகம் வெளியிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.
இப்போது இருக்கிறீர்கள். கால் விரலை மட்டும் வைத்து, தண்ணீர் கடுகடுப்பாக இருக்கிறதா என் நீங்கள் இன்னும் சோதித்துக் கொண்டிருக்கிறீர்கள்!
பலர் என்னிடம் வந்து, "சுவாமிஜி, எனக்கு அன்மிகம் பற்றி எதுவுமே தெரியாது. இதற்கு முன் தியானம் செய்ய முயன்றதும் இல்லை. நான் தயாரா இருக்கிறேனா? நான் எங்கே ஆரம்பிப்பது?'' என்று கேட்கிறார்கள்.
நான் சொல்கிறேன் ... ஆரப்பிப்பதற்கு சரியான இடம் நீங்கள் இப்போது இருக்கும் இடம்தான்!
இப்போது, புரிந்திருப்பவை எல்லாமே, உங்கள் உடலோடு, உங்கள் உணர்வுகளோடு, எண்ணங்களோடு சம்பந்தப்பட்டவைதாம்.
இவ்வளவு காலம் நீங்கள் உங்களை, உங்கள் உடலாக, உணர்வுகளாக, எண்ணங்களாக மட்டுமேதான் நினைத்திருக்கிறீர்கள்.
ஆகவே, அந்த இடத்திலிருந்து தொடங்குங்கள்!
அதுவே எளிதானது.
முதற்படி - உடலால் செய்வது;
உங்கள் உடல் பற்றி எப்படி உணர்கிறீர்கள் ?
நமது சொந்த உடல் பற்றியே நாம் கருத்துகளையும், பதிவுகளையும், கொண்டிருக்கிறோம்.
இந்தப் பதிவுகள் நம்முடையவை அல்ல.
நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன கருத்துகள் கொண்டிருக்கிறார்கள் என்பதையே நாம் சேகரித்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் அனைவருமே நமது உடலைப் பற்றி எதிர்மறையான உணர்வுகளையே கொண்டிருக்கிறோம்.
இந்த நிமிடம் உங்களுக்கு நினைவில்லாமல் போகலாம். ஆனால் நமது உடல் பற்றிய எதிர்மறை எண்ணங்கள், நமது நினைவில் மனத்தில் ஆழமாகப் பதிந்துள்ளன என்பதே உண்மை.
தம் உடலோடு நிம்மதியாக, சௌகரியமாக இருப்பவர்களை நான் அபூர்வமாகவே சந்தித்திருக்கிறேன். நமது உடல் சரியாகவே இருக்கிறது என்று நிம்மதி அடைந்து விடுவதால், நமது உடலில் எல்லாம் நல்லதாகவே இருப்பதாக அர்த்தமில்லை. நம் உடலுடன் தற்காலிக நிம்மதி அடைய அது ஒரு வழி. அவ்வளவுதான்.
உன் உடல் பாவகரமானது; தீயது :
உடலை வருத்து !
உடலைப் புறக்கனி!'' வாழ்வு முழுவதிலும் இப்படித்தான் நாம் கேட்டு வந்திருக்கிறோம்.
ஆன்மிகப் பாதையில், நமது சாதனைக்கு, நமது உடல் மிகப் பெரிய தடையாக இருப்பதாகவே, பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
அதனால் இயற்கைக்கு மாறாக, உடல் மீதான வெறுப்பு நமக்குள் வளர்ந்து விடுகிறது. இந்த எண்ணம் நமது உணர்வற்ற மனத்தில் ஆழமாக வேர் பதித்து நின்று விடுகிறது.
உண்மை என்னவென்றால், இந்த உடல்தான், சம்சார நதியைக் கடந்து கரையேற ஒரு படகாக அமைந்துள்ளது!
உடலின்றி இவ்வுலகில் நம்மால் இயங்க முடியுமா ?
உடல் ஆன்மிகம் நோக்கி ஏதாவது செய்யத்தான் முடியுமா ?
உங்கள் கண்களும், மூளையும் சரியில்லையென்றால், இந்தப் புத்தகத்தைப் படிக்கவும், புரிந்து கொள்ளவும்தான் முடியுமா ?
மனிதன் இறுதியில் உடலைக் கடந்து போக முடியும் என்பது உண்மைதான். ஆனால் உங்கள் உடலுடன் போராடிக் கொண்டு அதைச் சாதிக்க முடியாது.
உங்கள் உடலை ஒவ்புக் கொண்டு, புரிந்து தியானம் உங்களுக்காக
கொண்டால்கான் அதைச் செய்ய முடியும். தியானத்திற்கு ஏற்றபடி உங்களது உடலை நலமாக வைத்திருக்கவும் வேண்டும்.
மறந்துவிடாதீர்கள், உடல் ஆற்றல் மிக்க ஒரு கருவி! ; ஆம்! சாதாரணப் பொருளிலும், ஆன்மிகப் பொருளிலும். உடல் வெறும் கருவி மட்டும்தான்.
உடல் நல்லதுமன்று: கெட்டதுமன்று.
அது உங்கள் நண்பனுமல்ல; பகைவனுமல்ல.
வெளியுலகில் உங்கள் உடலை, உலகத் தேவை களுக்காக இயங்கச் செய்வதுபோலவே, தெய்விகத்தையும், ஆனந்தத்தையும் நோக்கி இயங்கச் செய்ய வைக்க முடியும். இது உங்கள் கைகளுக்குக் கிடைத்திருக்கிற காருவி.
இதை ஒப்புக் கொள்வது சிரமம்தான்!
வாழ்நாள் முழுவதும் நீங்கள் உங்கள் உடலால்தான் அடையாளப் இந்த அடையாளத்தைத் தகர்த்தாலன்றி, உங்கள் உடலைக் கடந்து உங்களால் செல்ல முடியாது.
அதனால் முதல்படி - உங்கள் உடல் மீது கவனம் செலுத்துவது.
உங்கள் உடல் சரிவர வேலை செய்யவில்லை என்றால், நிச்சயமாக நீங்கள் தியானத்திற்குள் பிரவேசிக்க முடியாது. என்னவிதமான எதிர்மறை உணர்வு (அல்லது நேர்மறை உணர்வாக இருந்தாலும்) உங்கள் உடல் மீது
இருந்தாலும், பேசாமல் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விடுங்கள், சுத்தமாகக் கைவிட்டு விடுங்கள்!
முதல்படி - உடலைச் சுத்தப்படுத்துதல்:
உடலைச் சுத்தப்படுத்துதல் என்றால் என்ன ?
நமக்கு நிறைய இடையூறுகள், சக்தித் தடைகள், மனச் சிக்கல்கள் உள்ளன. இவை எல்லாமே நமது புற உடல் அமைப்புச் சார்ந்தவை. இந்தச் சக்தித் தடைகள், இடையூறுகளை நீக்குவதே உடலைத் தூய்மை செய்தல்.
சக்தித் தடைகளும், இடையூறுகளும் எவ்வாறு நம் உடலில் உருவாக்கப்படுகின்றன ?
குழந்தைப் பருவத்திலிருந்தே, நமது இயல்பான உணர்வுகளை ஒடுக்கும்படியாக நாம் கற்றுக்கொண்டு வந்திருக்கிறோம். நாம் விரும்புவதை, இந்தச் சமுதாயத்தில் வெளிப்படுத்த முடிவதில்லை.
உதாரணமாக: உங்களுக்குக் கோபம் வருகிறது. உடனே நமது உடல் போரிடுவதற்கான இரசாயனங்களை உற்பத்தி செய்து விடுகிறது. உடல், ஒரு மனிதனைத் தாக்குவதற்கான ஆற்றலை உற்பத்தி செய்து விடுகிறது!
ஏனென்றால், சினம் என்பது எல்லா விலங்குகளுக்கும், வாழ்வதற்குத் தயார்ப்படுத்தகிறது.
ஆனால் நமது நாகரிக உலகில், நாம் நமது சினத்தை தியானம் உங்களுக்காக
வெளிப்படுத்தவே வழியில்லை.
சினத்திற்கு காரணமான மற்ற ஆள், உங்களைப் பயப்படுத்துகிற ஆளாக இருக்கலாம் - உங்கள் தலைவர் அல்லது மனைவி! ஆகவே, உற்பத்தியான சக்தியெல்லாம் பயன்படுத்தப்படாமல் உடலிலேயே தேங்கி விடுகிறது.
அடக்கப்பட்ட இந்த அதிகப்படியான சக்தி, உங்கள் உடலில் தடுக்கப்பட்டு, சக்தி ஓட்டம் இல்லாமல், தொல்லைகளை ஏற்படுத்தி விடுகிறது. சக்தித் தேக்கம் பிற்கால நோயாக வடிவெடுக்கிறது.
ஆசை, பயம், துக்கம் - போன்ற எல்லா உணர்வுகளும் இதே தொல்லையைத்தான் உண்டாக்கி விடுகின்றன.
உங்கள் பெரும்பாலான அச்சப்படுகிறீர்கள். உங்கள் உடலுக்கு நாகரிக உலகின் மொழி தெரியாது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். சமுதாயத்தின் விதிமுறைகளை இந்த உடலால் அடையாளம் காண முடிவதில்லை என்று நினைக்கிறீர்கள்.
"உடலைத் தன் விருப்பத்திற்கு விட்டால், என்ன நடக்குமோ யார் கண்டார்கள்?' என்ற எண்ணம் நமக்குள் எழுகிறது. அதனால்தான் அதைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டியிருக்கிறது.
தொடர்ந்து இப்படியே உணர்வுகளை ஒடுக்கிக் கொண்டேபோனால், அவை, உடலில் அடைப்புகளை ஏற்படுத்துவதோடு, மனச் சிதைவுக்கும் இட்டுச் சென்றுவிடும் !
தொடர்ந்து சினத்தை அடக்கிக் கொண்டே வந்தால், அது நரம்புத் தளர்ச்சியில் போய் முடிந்துவிடும்!
அதேபோல, மனநிலை பாதிக்கப்பட்டாலும் அது உடல் நலக்கேட்டை உற்பத்தி செய்துவிடும்! நோய் மட்டும் அல்ல, ஒற்றைத் தலைவலி, தோல் ஒவ்வாமை, குடல் புண் போன்றவையும் அதன் விளைவுகளே!
நமது உடலில் தோன்றும் 80% நோய்கள் மனச் சிதைவினால் ஏற்படுவதாக அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உடல், மன நிலைகளே இந்த நோய்களுக்குக் காரணம்.
இந்தப் புத்தகத்தின் பிற்பகுதியில், உங்கள் உடலில் ஏற்படும் அழுத்தம், அடைப்புகள் கரைந்து காணமற் போய் விடுவதற்கான தியான முறைகள் சொல்லப்பட்டுள்ளன.
இந்த அடைப்புகள் அகன்றவுடனே, உங்கள் உடல் எவ்வாறு இயல்பாக மலர்ந்திருக்கும் என்பதை நீங்களே கண்டுகொள்ளலாம்.
உங்கள் உடல் மேலும் அழகுடையதாக, மேலும் புனிதத் தன்மை கொண்டதாகத் தோன்ற ஆரம்பித்து விடும்.
நீங்கள் உங்கள் உடல் அல்ல.
ஆனால் உடல் இருப்பது உங்களுக்கு உதவுவதற்காக! அழகான, நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
அழுத்தப்பட்ட உணர்வுகள் மட்டுமின்றி, மோசமான பழக்கவழக்கங்களும், நோய்களுக்கு காரணமாகிவிடும்.
உடல், சுத்தமானதொரு இயந்திரம்.
நாம் உண்பது உடலைப் பாதிக்கும். உறக்கம், உடற்பயிற்சி, உடலைப் பாதிக்கின்றன.
நான் முன்பு குறிப்பிட்டதுபோல, நோய்கள், உங்கள் விருந்தாளிகள். கவனமற்ற, அக்கறையற்ற காரியங்களால் நாம் நோய்களை வரவழைத்துக் கொள்கிறோம்.
உதாரணத்திற்கு, காரமான உணவை உண்டவுடன் கண்களில் கண்ணீர் பெருகுகிறது. உங்கள் உடல் அதை எதிர்க்கிறது. "என்னால் முடியவில்லை,'' என்கிறது.
நீங்கள் அதையெல்லாம் கவனிக்கிறீர்களா ?
இல்லையே!
நள்ளிரவு வரை நீங்கள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தால், உங்களது உடல் அமைப்பு முழுவதும் அலறுகிறது! "எனக்கு ஒய்வு வேண்டும்!" என்கிறது.
வழக்கம்போலவே, நீங்கள் அதை அசட்டை செய்து விடுகிறீர்கள்.
உடலுக்கென்று தனி அறிவு இருக்கிறது. தனி புத்திசாலித்தனம் இருக்கிறது.
ஆனால் உங்கள் உடலின் புத்திக் கூர்மையுடன் நீங்கள் இணக்கம் கொள்வதே இல்லை. உங்கள் உடல் தொடர்ந்து சமிக்ஞைகளை அனுப்பிக் கொண்டேயிருக்கிறது. அந்தச் சைகைகளை அடையாளம் கண்டு கொள்ளும் அறிவு உங்களுக்கு இல்லை.
நாம் ஏன் சாப்பிடுகிறோம்?
சாதாரண எளிய விளக்கம் ''சக்தி பெற,'' என்பதுதான்.
ஆனால் உங்கள் உணவு, உங்களைச் சக்தி பெறச் செய்கிறதா ?
உணவு உண்டபின் உங்களுக்கு சக்தியா அல்லது உறக்கம் வருகிறதா? நம்மில் பெரும்பாலோர்க்குத் தூக்கம்தான் வருகிறது !
காரணம், நாம் தேர்ந்தெடுக்கும் உணவு மோசமானது. வயிறு நிறைந்து விட்டது என்று வயிறு சொன்ன பிறகும், உள்ளே தள்ளிக்கொண்டே இருக்கிறோம். எல்லாவற்றையும் வயிற்றுக்குள் தள்ளிக்கொண்டே இருக்கிறோம்.
வயிற்றை ஒரு குப்பைத் தொட்டிபோல் கருதிக் கண்டதையெல்லாம் அதற்குள் போடுகிறோம். நமது வயிற்றை நாம் ஒரு குப்பைத் தொட்டியாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு உணவின் போதும், நாம் நமது தியானம் உங்களுக்காக
பகுதி 2: தியானம் உங்களுக்காக
வயிற்றுக்குச் சிரமம் கொடுக்கிறோம்.
அதனால்தான், உண்ட பிறகு உற்சாகம் தோன்றுவதே இல்லை. இதில் அதிசயம் என்ன இருக்கிறது? அளவு கடந்து உண்டால், உடற்பயிற்சியும் இல்லை என்றால் - அது உடலின் மந்தத் தன்மைக்குத்தான் இட்டுச் செல்லும்.
மந்தமான உடல், தியானத்திற்குத் தகுதியற்றது.
அதுமட்டுமல்ல, நமது சக்தி நிலைகள் கீழே போய் விடுவதால், நோய்கள் நம்மை எளிதில் தாக்குகின்றன.
உடற்பயிற்சி உங்களை விரிவுபடுத்தும். உடற்பயிற்சி செய்யும்போது, உங்களது உடலின் ஒவ்வொரு உயிருள்ள 'செல்' லும் விரிவடையும்.
உங்கள் நுரையீரல் முழுவதும் பிராணவாயுவால் நிரப்பப்படும்போது, விஷ வாயுவோடு, வெளியேற்றப்பட்டுவிடும்.
நமது வாழ்க்கை செய்வதற்கோ, ஓய்வெடுப்பதற்கோ நமக்கு நேரமில்லை. நாம் எதை ஓய்வு என்று நினைக்கிறோமோ, அது ஓய்வே அன்று.
நம்மில் எத்தனை பேர் மகிழ்ச்சியாகவும் காலையில் கண் விழிக்கிறோம் ?
நீங்கள் சரியாக ஓய்வெடுத்திருந்தால், காலையில் நடனமாடிக் கொண்டல்லவா குளியலறைக்குப் போவோம்!
அதற்கு மாறாக, காலையில் அலாரம் அடித்தால், நாம் என்ன செய்கிறோம் ? அதை அழுத்தி விட்டு, மறுபடியும் தூங்கப் போகிறோம்!
உண்மையான உறக்கம் என்பது உடல் பூரணமாக ஒய்வெடுப்பதுதான். உடலின் இறுக்கமெல்லாம் வெளியேறி விட வேண்டும்.
உறக்கத்தின் போது, நமது உடல் பழுதுகளையும் சரிபார்த்து, ஒழுங்குபடுத்திவிட வேண்டும்.
இடையூறற்ற, கனவுகளற்ற, ஆழமான உறக்கம் நமக்கு அடிக்கடி கிடைக்கிறதா என்ன ?
அப்படி கிடைத்தால் அது அபூர்வம்! அப்படி கிடைக்கிற நாள்தான், நாம் உண்மையாகத் தூங்கிய நாள்!
இவற்றிற்கும் தியானத்திற்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் வியப்படையலாம். இதை ஆராய்வதற்கு, நமக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
முதலாவதாக - உடல் நிலை சரியாக இருப்பது, தியானத்தில் ஆழ்ந்து செல்வதற்குத் துணை புரியும்.
அதேசமயம், தியானப் பயிற்சி, நன்றாக ஒய்வு எடுக்கவும் உதவும்.
தியானம் உங்களுக்காக
உங்கள் உறக்கத்தைச் செம்மைப்படுத்துவதற்கான தியான முறைகள் உள்ளன. உறக்கத்தின் தரம் மேம்படும்போது, நீங்கள் விழித்திருக்கும் காலத்தின் உற்பத்தித் திறனும் இயல்பாகவே வளர்ச்சி அடைந்துவிடும்.
இரண்டாவது படி - எண்ணங்களின் மீதான செயல்பாடு:
எண்ணங்கள், நமது வாழ்வில் சபலங்களைக் கிளறி விடும் தன்மை வாய்ந்தவை.
பெரும்பாலான சமயங்களில் நமது எண்ணங்களின் மீது நமக்குக் கட்டுப்பாடே இல்லை.
நமது எண்ணங்கள், நம்மை அவற்றின் விருப்பப்படி இழுத்துச் செல்கின்றன. உங்கள் மனத்தில் தோன்றும் ஒழுங்கற்ற எண்ணங்களை உரக்கச் சொன்னால், உங்களுக்கே வெட்கமாகவும், அவமானமாகவும் தோன்றும்!
காரணம், நமது எண்ணங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாதவை !
நிகழ்காலத்தோடு எந்தச் சம்பந்தமும் அற்றவை ;
அர்த்தமற்றவை! வாழ்வில் அவற்றைத்தான் நாம் நம்பியிருக்கிறோம். அப்படிப்பட்ட எண்ணங்களாலேயே நாம் வாழ்ந்து கொண்டும் இருக்கிறோம் !
ஒரு சின்ன கதை:
ஒரு நாட்டில், தீர்க்கதரிசனம் சொல்லக்கூடிய மனிதர் ஒருவர் இருந்தார்.
அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட அந்த நாட்டு மன்னர், அவரைச் சோதித்துப் பார்க்க விரும்பினார்.
அவர், அவரைப் பரபரப்பான துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே, தினத்திற்கு நூற்றுக்கணக்கான கப்பல்கள் வருவதும் போவதுமாக இருக்கும்.
"இன்று எத்தனைக் கப்பல்கள் இங்கிருந்து பயணம் புறப்படப் போகின்றன என்பதை உங்களால் சொல்ல முடியுமா?" என்று கேட்டார் மன்னர்.
"மூன்று கப்பல்கள் அரசே," என்றார் அந்தத் தீர்க்கதரிசி.
தொடர்ந்து அவர், "இன்று மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும், மூன்று கப்பல்களே இந்தத் துறைக்கு வருகின்றன ; மூன்று மட்டுமே புறப்பட்டுப் போகின்றன, " என்றார்.
மன்னன் வியப்படைந்து, ''என்ன சொல்கிறீர்கள்! எந்தக் கப்பல்கள் அவை ?'' என்றார்.
"பணக் கப்பல், அதிகாரக் கப்பல்,
காமக் கப்பல்... அரசே!
எல்லா மக்களும், உங்களையும் சேர்த்துத்தான், இந்த மூன்று கப்பல்களில் பயணம் செய்துதான் வாழ்வைக் கழிக்கிறீர்கள், '' என்றார் தீர்க்கதரிசி.
தியானம் உங்களுக்காக
இதுதான் உண்மை.
பெரும்பாலான நேரங்களில் நாம் பணம், அதிகாரம், காமம் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
நமது எண்ணங்களுக்கு நாம் வேறு பெயர் சூட்டினாலும், கடைசியில் அவை இந்த மூன்றில் ஒன்றில்தான் அடங்கும். இங்கே காமம் என்பது எல்லாவித ஆசைகளையும் குறிப்பது.
யோசித்துப் பாருங்கள்.
எல்லா நேரத்திலும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
மேலே குறிப்பிட்ட மூன்றில் ஒன்றைத்தான்!
நீங்கள் அலுவலகத்தில் பணியாற்றுவது, பணத்திற்காகவும், பதவிக்காகவும்.
வாழ்வில் எவ்வளவு முறை உங்களது எண்ணம் சத்தியம், அழகு, நன்மையைப் பிரதிபலிக்கிறது?
அதைப் பற்றி என்ன தேவை வந்தது இப்போது ? என்று நீங்கள் நினைக்கலாம்...
என் வாழ்வு சத்தியத்தைப் பொறுத்ததா? இல்லை உலக கவர்ச்சிகளைப் பொறுத்ததா?
எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் ? எவ்வளவு பதவி பலத்தை அதிகரிக்கலாம்?
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
என்பவை சுற்றியே என் வாழ்வு அமைந்திருக்கிறதா ?
இவற்றையெல்லாம் தாண்டிய ஒரு உண்மை இருக்கிறது. வாழ்வையே மாற்றியமைக்கும் வல்லமை பெற்றவை நம் எண்ணங்கள்.
நீங்கள் ஏதாவது ஒன்றின் மீதே கவனம் செலுத்திக் கொண்டிருந்தால், அது உங்களது மனநிலையை மட்டுமல்ல, வாழ்வையே மாற்றிவிடும்.
நீங்கள் எப்பேதும் அழகைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால், உங்களது வாழ்க்கை அதிக அழகு உடையதாக மாறிவிடும்.
மேற்சொன்ன எல்லாவற்றிற்கும் மேலாக ...
உங்கள் மனத்திற்குள் எத்தகைய எண்ணங்கள் வருகின்றன. விழிப்புணர்வோடு இருங்கள்.
இப்போது உங்கள் மனம், யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நுழையும், திறந்து கிடக்கும் வீடு போலிருக்கிறது.
அதனால் யார் வேண்டுமானாலும் நுழையலாம். அவை ஏற்கனவே இருக்கும் எண்ணங்களோடு சண்டையிட்டு மனத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து, அவை விரும்பும் காலம் வரை மனத்தை அலைக்கழிக்கலாம்.
பிறகு அவை எப்போது வேண்டுமானாலும் மனத்தை விட்டுவிட்டு இறங்கி விடலாம். அவற்றின் விருப்பம்போல் தியானம் உங்களுக்காக
உங்களுக்குள் பிரவேசித்து, உங்களது வாழ்வைப் பாதித்து, மனத்தையும் பாதிக்கும் எண்ணங்களின் மீது, உங்களுக்கு கட்டுப்பாடு இல்லை.
உங்களது எண்ணங்களை, சும்மா பார்த்துக் கொண்டிருங்கள்.
ஒருவகையான எண்ணம் உங்களுக்குள் நுழையும் போது. உள்ளே என்ன நடக்கிறது என்பதைக் கவனியுங்கள்.
கோபம், காமம், பேராசை போன்ற எண்ணங்கள் மனத்தில் புகும்போது, உங்களது உள் கட்டமைப்பில் சில அசௌகரியங்களை அவை ஏற்படுத்தி விடுகின்றன.
எப்போதெல்லாம் அகங்காரம் மேலெழுகிறதோ, அப்போதெல்லாம் ஒருவித அசௌகரியத்தை உணர்வீர்கள்.
மகிழ்ச்சியும், நிம்மதியும் தரவல்ல எண்ணங்களை மட்டும் கவனமாகப் பாருங்கள். இவற்றை மட்டுமே பற்றிக் கொண்டு, மற்றவற்றைத் தூக்கி வெளியே வீசிவிடுங்கள்.
உங்கள் மனத்தின் காவலனாக மாறிவிடுங்கள்.
உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள்.
உங்கள் எண்ணங்களோடு எவ்வளவு அழுத்தமாக உங்கள் அடையாளம் அமைந்துவிடுகிறது என்பதைப் பாருங்கள்.
எண்ணங்கள் உங்களது உணர்வற்ற மனத்தின் ஆடியாழத்திலிருந்து பிறப்பதை நீங்கள் கண்டுகொள்வீர்கள்.
உணர்வற்ற மனத்தில் பிறக்கும் எண்ணங்களை உங்களால் விழிப்புணர்வுப்பூர்வமான உங்களால் மாற்றிவிட முடியும்!
இப்படி முயற்சி செய்து பாருங்கள்: உங்களது விழிப்புணர்வு வாழ்வின் சில அம்சங்களை நீங்கள் மாற்ற விரும்பினால், உங்களது கோபம் அல்லது பொறாமையை ஒழிக்க விரும்பினால் உறங்கப் போகுமுன், அவற்றை மாற்றும்படியாக சொல்லுங்கள்.
அவ்வாறு தொடர்ந்து ஆலோசனை சொல்லிக் கொண்டே வர, உங்களது நிதர்சன வாழ்வு அந்தத் திசையில் மாறிச் செல்வதைக் கண்டு நீங்களே வியப்படைவீர்கள்!
மூன்றாவது படி - உங்கள் உணர்வுகளின் மீதான செயல்பாடு:
உங்கள் உணர்ச்சிகளே உங்களது உலகைத் தீர்மானிக்கின்றன.
நம்புகிறீர்களோ இல்லையோ, நீங்கள் எல்லோருமே கடவுள்தான் !
உங்களது உணர்ச்சிகள், உணர்வுகள் கொண்டே உங்களது உலகை நீங்கள் படைத்துக் கொள்கிறீர்கள்.
மிகவும் தெளிவாக இருங்கள்: விழிப்புணர்வின் தரம் என்னவோ, உங்களது வாழ்வும் அதே தரத்தைக் கொண்டதாகத்தான் இருக்கும் !
உங்களது எண்ணங்கள் தெளிவாகவும், நேர்மறையாகவும் இருக்குமானால், இந்த முழு உலகமுமே அழகானதாகத் தோன்றும். இயற்கை ஆசிகளைப் பொழியும்.
உங்களிடம் அன்பு நிறைந்திருந்தால், நீங்கள் எங்கும் அன்பையே காண்பீர்கள்.
உங்களிடம் வெறுப்பே நிறைந்திருந்தால், நீங்கள் வெறுப்பையே எங்கும் எதிர்கொள்ள வேண்டி வரும்.
இது ஒன்றும் நீதிக் கதையல்ல; உண்மைக் கதை.
வரையறைக்குட்பட்ட குறைவான புரிந்து கொள்ளும் திறன் இருப்பதால், நம்மால் இதை உணர முடிவதில்லை.
நாம் காரணங்களை தேடிக்கொண்டிருக்கிறோம். என்னவென்றால், நமது வாழ்வின் இன்றையத் தரத்திற்கு 100% நாமே பொறுப்பு.
உங்கள் உணர்ச்சிகள் மீது நீங்கள் செயல்பட ஆரம்பித்துவிட்டால், மேலே சொன்னது எவ்வளவு உண்மை என்பது உங்களுக்குப் புரியவரும்.
நமது உணர்ச்சிகள் நம்மை எவ்வளவு ஆழமாகப் பாதிக்கின்றன என்பதை நாம் உணர்வதே இல்லை.
நமது செயல்களை எல்லாம் கட்டுப்படுத்துவது நமது மனம்தான். நாம் முடிவுகள் எடுப்பதெல்லாம் நமது புத்திசாலித்தனத்தால்தான் என்று நினைக்கிறோம். உண்மையில், நமது வாழ்வின் பெரும்பகுதியைத் தீர்மானிப்பது நமது உணர்ச்சிகளே.
உங்கள் உணர்ச்சிகளைக் கையாள்வதில் மூன்று படிகள் இருக்கின்றன.
அ). உங்கள் வலுவான உணர்ச்சிகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்:
எது உங்களை இயக்குகிறது ?
எந்த உணர்ச்சிகள் உங்களைக் கட்டுப்படுத்துகின்றன ?
உங்கள் வாழ்வு, வெறுப்பு ஆக்கிரமிப்பு சினம் ஆகியவற்றைச் சுற்றிச் சூழ்ந்து இயங்குகிறதா?
காரணமே இல்லாமல் உங்களுக்குச் சோர்வு தோன்றுகிறதா ?
உங்களுக்கு அன்பு செலுத்துவது முக்கியமா ? சண்டை போட்டுக் கொள்வது முக்கியமா ?
உங்களுக்கு நீங்களே நேர்மையாக இருங்கள்.
முதலில் அவற்றையெல்லாம் அடையாளம் காண வேண்டும் - இல்லாவிட்டால், அவற்றை எவ்வாறு நீங்கள் மாற்றப்போகிறீர்கள் ?
நீங்கள் வெறுப்பான சூழலில் வாழ நேர்ந்தால், எதிர்மறை உணர்ச்சிகளோடு உங்களுக்கு நெருக்கம் ஏற்பட்டுவிடும். உங்களுக்கு எதிர்மறை உணர்ச்சிகளின் நெருக்கம் தேவைப்படுகிறது. நீங்கள் தாக்குப் பிடித்து வாழ்வதற்குத் தேவைப்படுகிறது. நீங்கள் உங்களுக்குரிய சக்தியைப் பெறுவதே அந்த எதிர்மறை உணர்ச்சிகளிடமிருந்துதான்.
போர்க் காலங்களில் குற்றங்களும் தற்கொலைகளும் மிகவும் குறைந்து விடுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. காரணம், நமது எதிர்மறை உணர்வுகள் வெளிப்பட, ஒரு திறந்த மேடை கிடைத்து விடுகிறது.
அதனால் தனிப்பட்ட முறையில், குற்றம் புரியவோ, தற்கொலை போய்விடுகிறது !
''ஒரு நாட்டைச் சீரழிக்க வேண்டுமானால், எதிரிகளை உற்பத்தி செய்துவிடுங்கள்,'' என்று ஹிட்லர் கூடச் சொல்லியிருக்கிறார்! அந்தப் பகைவர்கள் உண்மையாக இருக்க வேண்டியதே இல்லை. கற்பனைப் பகைவர்கள் இருந்தாலே போதும்!
மக்கள் வெறுப்புணாவில் இருக்கும் நேரத்தில், தங்களை வலிமை மிக்கவர்களாகவே உணர்கிறார்கள். அவர்கள் கலகம் செய்யும் போதும், தங்களைச் சக்தி மிகுந்தவர்களாகவே உணர்கிறார்கள். நமது எல்லாச் சக்கிகளும் எதிர்மறை உணர்வாக மாறி விடுகின்றன.
சலிப்புணர்வுகூட, உங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தும்போது, அது சினம்போலத் தோற்றமளிக்கிறது.
அதை ஒடுக்கும்போது, அது சலிப்பாக மாறுகிறது. இரண்டுமே எதிர்மறை உணர்வுகள்தாம்.
நமது வெளிப்படுத்தும் போது, 'எனக்கு எதிராக அவர்கள்' என்று நினைக்கும்போது, நம்மைத் தனிமைப்படுத்தும் உணர்ச்சிகளை நாம் வளரவிடும்போது, அகங்காரம் மிகவும் ஆற்றல் கொண்டதாக அமைந்துவிடுகிறது. நாம் சண்டையிடும் நிலையில் இருக்கும்போது, நாம் வலிமையாக இருப்பதற்கு அதுதான் காரணம்.
நேர்மறை உணர்வுகள் நம்மை மென்மையாக்கி விடுகின்றன. அன்பு, மகிழ்ச்சி, கருணை போன்றவை மனத்தின் மென்மையான நிலைகள்.
இந்த உணர்வுகளை நாம் அனுபவிக்கும்போது, நாமும் மெல்லியதாகிவிடுகிறது. ஆணவத்தின் சக்தியும் குறைந்து விடுகிறது.
அதனால்தான், இந்த உணர்வுகளுக்கு நாம் அஞ்சுகிறோம். மனத்தின் அடியாழத்தில், நாம் அன்பு செலுத்த அஞ்சுகிறோம் - காரணம், அன்பு நிலையில், நாம் ஆணவத்தைச் சரணாகதி செய்ய நேர்கிறது!
ஆன்மிக வழியில், ஆணவத்தை இழக்கும் தியானம் உங்களுக்காக
செயல்பாடுதான் அது. நீங்கள் பலவீனப்பட்டு விடுகிறீர்கள் என்பதால்தான் அன்பு செய்யக்கூட அஞ்சுகிறீர்கள் - இந்த நிலையில் எவ்வாறு நீங்கள் தியானத்தை நோக்கி, அகன் உள்ளே பிரவேசிக்க முடியும் ?
ஆ). நேர்மறை உணர்வுகளின் மீது கவனம் செலுத்துங்கள்:
உங்களது ஒரு சாதாரண நாள் எப்படி இருக்கிறது ? சற்றே நினைத்துப் பாருங்கள். நாள் முழுவதும் நமக்குள் எத்தனையோ உணர்வுகள் பாய்கின்றன. காலையில் கண் விழிக்கும்போது மகிழ்ச்சியாகவோ அல்லது சாதாரணமாகவோதான் கண் விழிக்கிறீர்கள்.
பிறகு மனைவி காப்பிக் கொண்டு வருகிறார். அதை மேசை மேல் வைக்கும்போது, கொஞ்சம் சிந்திவிடுகிறது - சட்டென உங்களுக்குக் கோபம் வந்து விடுகிறது.
சிற்றுண்டி முடித்தவுடன் பழையபடி நல்ல மன நிலைக்கு வழியில் வாகன நெரிசலில் சிக்கிக் கொள்ள - யாரையாவது கொன்றுவிட வேண்டும் என்பதுபோல கோபம்!
அலுவலகத்தில், வேலை முடிவதில்லை - மறுபடியும் மன இறுக்கம்.
இப்படியே .... ஒவ்வொரு நிமிடமும் வெவ்வேறு விதமான உணர்வுகள் உங்களைத் தாக்குகின்றன. நீங்கள் வாழ்வது, தலைகீழாகப் பறக்கும் சக்கரக் குடைராட்டினத்தில் பறப்பதுபோல, எவ்வளவு நேரந்தான் ஒத்துப்போவது ?
நல்லவேளையாக, நாம் அனுபவிக்கும் உணர்வுகள் எல்லாம் மோசமானவை அல்ல. ஒவ்வொரு நாளிலும் நாம் சில தருணங்களில், அமைதியாகவோ, மகிழ்ச்சியாகவோ, தியானநிலையிலோ இருக்கத்தான் செய்கிறோம்.
சாதாரணமாகத் தினசரி செய்யக் கூடியவை:
உங்கள் கொஞ்சமாகத் தேநீர் அருந்துவது.
குளிப்பது.
இசை கேட்பது.
குழந்தைகளோடு விளையாடுவது.
ஒவ்வொரு நாளும், நம் ஒவ்வொருவருக்கும் இந்தத் தருணங்கள் வாய்க்கின்றன.
ஆனால் நம்மில் எத்தனைபேர் இவற்றின் மீது கவனம் செலுத்துகிறோம்.
"இன்றைய நாள் எப்படி கழிந்தது ?'' என்று யாராவது நம்மைக் கேட்கும்போது, உடனே நமக்கு நினைவிற்கு வருவது, வாகன நெரிசலும், சிந்திய காப்பியும், கேங்கிப்போன வேலையும்தான்.
ஒரு மாறுதலுக்காக நாம் நல்லவற்றையே நினைத்து, சுகமான அனுபவங்களிலேயே ஏன் தினசரி கவனம் செலுத்தக் கூடாது ?
இந்தச் சோதனையைச் செய்து பாருங்கள்:
ஒரு நாளில், 24 மணி நேரத்தில் நடைபெற்ற நல்லவைகளை மட்டும் நினைத்துப் பாருங்கள்.
சின்னச் சின்ன விஷயங்களுக்கு நன்றி பாராட்டுங்கள்:
வேலைக்குப் புறப்படும்போது மழை பெய்யவில்லை என்பதற்காக : நமது வீட்டுத் தோட்டத்தில் பக்கிருக்கும் மஞ்சள் மலர்களுக்காக; இன்று வீட்டு வேலைக்காரர் விடுமுறை எடுத்துக் கொள்ளவில்லை என்பதற்காக, பாருங்களேன்! இவற்றையெல்லாம் நாம் மறந்து விடுகிறோம்.
வேலைக்காரர் ஒரு நாள் வராமல் போனாலும், அதை நாம் என்றும் மறப்பதில்லை - அவர் வருவதை நாம் நினைவு கூர்கிறோமா ? நம் மனதளவிலாவது, அவருக்கு நன்றி சொல்கிறோமா ?
''ஒவ்வொரு சுகமான அனுபவத்தையும் நினைவு கூறுங்கள், '' என்று நான் சொல்லும்போது, அதை நிச்சயம் செய்து பார்க்க வேண்டும். உண்மையான ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.
24 மணி நேரமாவது செய்து பாருங்களேன்! அப்போது, உங்களுடைய வாழ்வு எவ்வாறு உருமாற்றம் அடைகிறது என்பதை நீங்கள் பார்க்கலாம். சுகமான அனுபவத்தை விட்டால், மறுபடியும் உங்களை என்றும் சலிப்பில் ஆழ்த்திக் கொள்ளவே மாட்டீர்கள்.
இந்தப் பயிற்சி விளையாட்டுக்கல்ல. இது நாம் வாழ்வதற்கான ஒரு சிறந்த தியானமுறை.
வாழ்வின் மீது நீங்கள் கல்லெறிந்தால், அது உங்கள் மீதும் கல்லெறியும். வாழ்வை மலர் கொண்டு வரவேற்றால், உங்களுக்கு மலர்களே கிடைக்கும். பிறகு, வாழ்வை நன்றியோடு வரவேற்பதற்கான தியான முறைகளை நீங்கள் பெறப்போகிறீர்கள்.
இ). எதிர்மறை உணர்வுகளை மாற்றக் கற்றுக் கொள்ளுங்கள்:
''தினசரி உணர்வுகளுக்கு என்ன செய்வது ?, '' என்று நீங்கள் என்னிடம் கேட்கலாம். அவ்வப்போது சில சுகமான நேர்மறை உணர்வுகளை அனுபவித்தாலும், எதிர்மறை உணர்வுகள் உங்களுக்கு உள்ளேயேதான் இருக்கும்! அவை ஒன்று திரண்டு கொண்டே இருக்கும்.
தியானத்தின் மூலம், பழைய அடைப்புகளையெல்லாம் உங்களால் கரைக்க முடிந்தாலும்கூட, புதிய அடைப்புகள் ஏற்பட்டுவிடாமல் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் ! ஒவ்வொரு வினாடியும் அதற்கான புதிய சூழல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
சான்றாக சிலர் உங்கள் சினத்தை மேலும் மேலும் கிளறிவிட்டுக் கொண்டே இருப்பார்கள். நமது உடலில் அதிகப்படியாகச் கழன்று கொண்டிருக்கும் சக்தியை என்ன செய்யப்போகிறீர்கள் ? அந்த எதிர்மறை உணர்வுகளை, நேர்மறை உணர்வுகளாக மாற்றுக் கற்றுக்கொள்ளுங்கள்.
மறந்து விடாதீர்கள், சக்தி, நடுநிலையானது.
தியானம் உங்களுக்காக
சினம் நல்லதுமன்று; தீயதுமன்று.
காமம் நல்லதுமன்று; தீயதுமன்று. இவை எல்லாம் சக்தியின் வெவ்வேறு வடிவங்கள்.
அதை ஆக்கத்திற்கோ, அழிவிற்கோ பயன்படுத்துவது உங்களைப் பொறுத்தது.
ஒரு குழந்தையின் கையில் கிடைத்த கத்தி கேடுகல் செய்வதுபோலவும், அறுவை மருத்துவரின் கையில் உள்ள கத்தி நன்மை செய்வதுபோலவும் ஒரே கத்தியை முற்றிலும் மாறுபட்ட விளைவு தரும்படியாக நீங்கள் பயன்படுத்தலாம்.
உங்கள் ஆற்றலைச் சரியான வழியில் செலுத்த நீங்கள் கற்றுக்கொண்டால், உங்கள் சினத்தைப் படைப்பாற்றலாக நீங்கள் மாற்றிவிட முடியும், உங்கள் ஆற்றல்களையெல்லாம், கலை, இசை, விளையாட்டுத் துறைகளில் திருப்பி விடுங்கள்.
ஓவியம் வரையக் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பொழுதுபோக்கை வளர்த்துக் கொள்ளுங்கள்.
நடனமாடுங்கள்.
இவையெல்லாம் சக்தியின் பாதைகள், தியானத்தைப்போலவே !
ஒரே வித்தியாசம், இவையெல்லாம் படைப்பாற்றல் வழிகள். இவற்றைத் திருப்பிவிடுங்கள். உங்கள் சாதாரண வாழ்வை உயர்த்துங்கள்.
இந்த வகையில், உங்களிடமிருக்கும் அழிக்கும் ஆற்றல்களை எல்லாம் படைப்பாற்றல்மிக்க, நேர்மறை ஆற்றல்களாக மாற்றி விடலாம். முழுப் பயனைப் பெறலாம்.
நேர்மறை உணர்வுகள் மீது கவனம் செலுத்த செலுத்த, உங்களுடைய வாழ்வு தானாகவே நல்வழியில் மாறிவிடுவதை நீங்கள் காணலாம்.
நீங்கள் அன்பை உணரும்போது, நீங்கள் அன்பையே வழங்குவீர்கள். உங்களுக்குக் கிடைப்பதும் அன்பாகவே இருக்கும். அது ஓர் அழகான வட்டச் சுழற்சி.
நீங்கள் அதை அனுபவித்தால் தவிர, அதை உங்களால் நம்ப முடியாது. ஆனால் அது மெய்யாகவே நிகழக் கூடியதுதான்.
இந்த நீங்கள் பிறந்திருப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். "ஆஹா, அவர் எவ்வளவு அதிர்ஷ்டமானவர்! எப்போதும் எப்படி மலர்ந்த முகத்துடன், புன்முறுவலுடன் நடந்துபோகிறார்! நான்தான் இப்படி மன இறுக்கத்துடன் அல்லல் படுகிறேன், '' என்றெல்லாம் சொல்லாதீர்கள்.
வாழ்வை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை அடையலாம். நீங்கள் மகிழ்ச்சியில் நிறைந்து திளைத்துக் கொண்டிருக்கும்போது, கவலை உங்களைக் கண்டு அஞ்சும் !
தியானம் உங்களுக்காக
சினத்தால் உங்களைத் தொடவும் முடியாது. உங்களுக்குள் ஒரு பரவச நிலையை உருவாக்கிக் கொண்டால்தான், தியானத்தில் எந்த முன்னேற்றத்தையும் காண முடியும்.
உங்கள் வாழ்வை, அன்பாலும், சிரிப்பாலும், நன்றி உணர்வாலும் மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.
வாழ்க்கையையே ஒரு கொண்டாட்டமாக மாற்றிக் கொள்ளுங்கள்.
அப்போதுதான், வாழ்க்கையே தியானமாகும்.
வாழ்வே கொண்டாட்டமாக மாறும்.
தியானமயமான வாழ்வை நோக்கி...
''தவம் என்றால் என்ன? தியானத்திற்குத் தவம் தேவையா?'' என்று என்னிடம் பலரும் கேட்கிறார்கள்.
நான் சொல்லி வருவதெல்லாம் தவம் தவிர வேறில்லை !
உங்கள் உடல், உங்கள் எண்ணங்கள், உங்கள் உணர்வுகள் மீதான செயல்பாடுகள் தவம் அல்லாமல் வேறென்ன ?
உணவு, உடை இல்லாமல், இருண்ட அறையில் வாழ்வதோ, ஏதாவதொரு வகையில் உடலை வருத்திக் கொள்வதோ தவம் ஆகாது.
உங்கள் உடலை இந்த வழிகளில் வருத்திக் குழப்பமடையச் செய்தால், தியானத்தின் மீது கவனம் செல்வதைவிட, வாழ்வில் இழந்த பகுதிகளின் மீது கவனம் பாயும் ஆபத்து இதில் இருக்கிறது.
ஒரு இருபத்து நான்கு மணி நேரம் உணவு அருந்தாமல் இருந்தால்கூட, உங்கள் தியானம் தியானமாக இல்லாமல் உணவைப் பற்றியதாகவே அமைந்துவிடும் ! உணவைக் கவிர வேறு கவனமே வராது.
உண்மையான தியானம், உண்ணப்படாத உணவின் மீது கவனம் குவிவதன்று; உணவைப் பற்றிய கவனத்தைத் தாண்டிப் போவது.
இந்த வேறுபாட்டைப் பலர் கவனிப்பதே இல்லை.
தியானம் உங்களுக்காக
அதனால்தான், சொல்கிறேன், இழத்தல் பற்றிய பாதை எல்லாருக்கும் ஏற்றதல்ல. வாழ்வின் பல அம்சங்களை மறுத்து அடக்கி வாழ்வது எல்லோருக்கும் ஏற்றதல்ல.
ஆனால் இவையெல்லாம் வெவ்வேறு வழிகள்தாம். உடலைக் கையாள்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன.
உடலைச் சுத்தப்படுத்தும் முறைகள் மூலம் சிலர் உடலைப் பண்படுத்தும் வழியை மேற்கொள்கிறார்கள்.
ஆனால் எல்லாருமே அந்தப் பாதையில் செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை.
ஒரு சின்ன கதை :
கடுமையான தவமுறைகளை மேற்கொண்டு யோகி ஒருவர் பல்லாண்டுகள் மலையில் வாழ்ந்து வந்தார்.
மந்திரம், வழிபாட்டு முறைகளில் நன்கு தேர்ந்தார். புனித கிரந்தங்கள் கற்று, மனத்தை ஒருமுகப்படுத்துவதில் பல காலம் செலவழித்தார்.
பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தனது தவம் நிறைவடைந்ததாக அவர் கருதினார்.
மக்களின் வாழ்வில் ஆன்மிகம் மலரச் செய்ய வேண்டுமென்ற ஆவலில், அவர் மலையிலிருந்து இறங்கி நாட்டுக்குள் வந்தார்.
நகரத்திற்கு அவர் வந்திருக்கும் செய்தி, எங்கும் பரவவே, ஆன்மிக மக்கள் அவரை வரவேற்கத் திரண்டார்கள்.
அந்தக் கூட்டத்தில், பாரம்பரியுக் தவ முறைகளில் நம்பிக்கை இல்லாத ஓர் இளைஞரும் இருந்தார்.
யோகி அந்த இளைஞர் யோகியிடம் சில கடினமான சொற்களைச் சொன்னார்.
அப்போது, தனக்குள் சினம் பொங்கி எழுவதை யோகி உணர்ந்தார்.
''இளைஞரின் சில வார்த்தைகளுக்கு இவ்வளவு கோபமா ? எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகும் .... எத்தனையோ தவத்துக்குப் பிறகும் ... இப்படியா? யாரோ ஒருவர் சில சொற்கள் சொன்னதும், சினம் தன் அசிங்கமான தலையை மேலே தூக்கிவிட்டதே!'' என்றுணர்ந்தார். !
உடனே அவர் எதுவுமே பேசாமல், மண்டபத்தை விட்டு வெளியேறினார்.
சிலர் அவர் பின்னால் ஓடிச் சென்று, மன்னிப்புக் கேட்டு, திரும்பி வரும்படி வேண்டினார்கள்.
அப்போது யோகி பதில் சொன்னார்: "எனது தவம் பூரணத்துவம் அடையவில்லை என்பதை இப்போது உணர்ந்து கொண்டேன்.
நான் திரும்பிச் சென்று, என் பணியை மறுபடியும் ஆரம்பிக்க வேண்டும்.உண்மையாகவே நான் பக்குவம் அடையும்போது திரும்பி வருவேன்" என்றார்.
கடுமையான தவம், என்பது ஒருவருக்குள் புரிதலை கியானம் உங்களுக்காக 72
ஏற்படுத்தி, அவரை மலரச் செய்வதே.
உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதை விடப் பெரிய தவம் வேறில்லை.
இந்தத் தவத்தை இப்போதே நீங்கள் செய்ய முடியும். நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்களோ, அங்கேயே!
இவையெல்லாம் தியானத்திற்கான சரியான களத்தை உருவாக்குவதற்கே !
விழிப்புணர்வு ஒரு மந்திரச்சாவி :
உங்கள் உடல், உங்கள் எண்ணங்கள், உங்கள் உணர்வுகளைக் கவனியுங்கள் என்று சொன்னேன்.
வேறுவிதமாகச் சொன்னால், விழித்திருங்கள்!
விழிப்புணர்வே அடிப்படை.
விழிப்புணர்வே தியானத்தின் குறிக்கோள்.
விழிப்புணர்வே உடலையும் எண்ணங்களையும் உணர்வுகளையும் கவனிப்பதற்கான மந்திரச்சாவி.
எந்த முறை, எந்த மதம், எந்த ஆன்மிகக் கொள்கைகள் என்றாலும் சரி - உங்களை மேலும் அதிக விழிப்புணர்வு உள்ளவராக ஆக்கிக்கொள்வதற்கே நீங்கள் முயல வேண்டும்.
இந்தப் புத்தகத்தில் சொல்லப்படும் எல்லாத் தியான முறைகளிலும் உள்சரடாக ஓடிச் கொண்டிருப்பது இந்த
விழிப்புணர்வுதான்.
நீங்கள் ஒன்றைக் கவனிக்க ஆரம்பிக்கும்போது. நீங்கள் ஒரு பார்வையாளராக, வெளி ஆளாக மாறி விடுகிறீர்கள்.
நீங்கள் பார்க்கும் பொருளோடு, உங்களை நீங்கள் அடையாளப் படுத்திக் கொள்வதில்லை. ஏதோ நமக்கு வெளியே நடக்கும் ஒன்று என்ற அளவில் மட்டுமே அதைப் பார்க்கிறீர்கள்.
உங்கள் விழிப்புணர்வு பெறும்போது, பார்க்கப்படும் பொருளிலிருந்து நீங்கள் விலகி விடுதலை பெற்று விடுகிறீர்கள்.
உள் சுதந்திரம் பெற உங்கள் புத்தி கூர்மையையும் விழிப்புணர்வையும் விழிப்படையச் செய்யுங்கள்.
உங்களைச் சுற்றி நடக்கும் காரியங்களை. நீங்கள் ஒரு வெளி ஆள்போல கவனிக்க ஆரம்பிக்கும்போது, உங்கள் உடல் உங்களிடமிருந்து கழன்று கொள்ளும்.
உங்களது சலன புத்தியையும் மாறும் உணர்வுகளையும் கவனியுங்கள் - அப்போது, நீங்கள் உணர்வுகள் அல்ல, அதையும் தாண்டியவர் என்பதை உணரலாம்.
ஆழந்த விழிப்புணர்வால், நீங்கள் சுதந்திரம் பெற்று விடலாம்.
'வாழ்வில் தியானம்' என்பதிலிருந்து 'வாழ்வே தியானம்' என்பதை நோக்கி ...
இப்போது நீங்கள் ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறீர்கள். இப்போது நீங்கள், தியானத்தை இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
''என் தியானத்தை எப்படிச் சேமிப்பது ?
எவ்வளவு மணி நேரம் பயிற்சி செய்ய வேண்டும் ? எந்த வகைத் தியான முறை எனக்குப் பொருத்தமானது ?'' என்றெல்லாம் கேட்பதற்கு அதுதான் காரணம்.
இந்தக் கட்டத்தில். இந்த வினாக்கள் மிகச் சரியானவைதாம்.
ஆரம்பத்தில், பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
உங்கள் வாழ்க்கை முறைக்குள் தியானத்தை தொடர்ந்து விழிப்புணர்வுடன் அறிமுகப்படுத்த வேண்டும். ஏதாவதொரு தியான முறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, ஓர் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் பயிற்சி மேற்கொள்ளுங்கள். எப்படி உணர்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள்.
நீங்கள் அந்தத்தியான முறையில் மகிழ்ச்சியடைந்தால், எந்தப் பலன்களையும் எதிர்பாராமல், குறைந்தது பத்து நாள்களாவது பயிற்சி செய்யுங்கள்.
ஒரு தியானமுறை உங்களுக்குப் பொருந்திவிட்டால். ஏதாவது ஒரு வகையில் அது உங்களை மாற்றும்.
சில சமயம் அந்த நிலை மாற்றம் மிக நுட்பமாக இருக்கும். உங்களைவிட மற்றவர்களுக்கு, அது சிறந்ததாக இருக்கலாம். உங்களுக்குப் பிடித்த தியானத்தைத் தொடர்ந்து செய்யுங்கள்.
"சுவாமிஜி, இந்தத் தியான முறையை நான் கடைப்பிடித்த சில நாட்களில், என் முகம் பிரகாசமாக இருக்கிறது. நான் கூடுதலான சக்தியையும் சுகமான நேர்மறை உணர்வுகளையும் பெற்றிருக்கிறேன்' என்றும் பலர் சொல்கிறார்கள்.
அதனால் ஒரு தளத்தில், நிச்சயமாக ஒருவருக்குள் நிலைமாற்றம் ஏற்படுகிறது.
நேரடி பலன் கிடைக்காவிட்டாலும் கூடப் பொறுமை இழந்துவிடாதீர்கள்.
பொறுமை பல அற்புதங்களைச் சாதித்துவிடும்!
அத்தோடு பொறுமையாயிருந்தால் நீங்கள் புதிய புதிய தியான முறைகளைத் தேடிப் போக மாட்டீர்கள்.
ஒன்றையோ, ஏகாவது கடைப்பிடித்து நிம்மதியடைந்தால், அதன் வழியிலேயே தொடர்ந்து போய்க் கொண்டிருக்க வேண்டும்.
இந்தப் புத்தகத்திலிருக்கும் தியான முறைகள் புதியனவாகவும், உற்சாகம் தருவனவாகவும் இருக்கும்.
உங்கள் மனம்- ''இதைச் செய். அதைச் செய்,' என்று தூண்டும். ரொட்டிக் கடைக்குப் போவதுபோலத்தான் அது. நிறைய வகை வகையான தின் பண்டங்கள் இருக்க, எதைத் தேர்ந்தெடுப்பது, எதை உண்பது என்ற சிக்கல் ஏற்படுவதுபோலத்தான்.
அதனால் உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
மனம் எதை விரும்புகிறதோ, அந்த முறையில் செய்யுங்கள். எதைச் செய்தாலும் மெய்யான ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.
இந்தச் சோதனைக்கு, உங்கள் சக்தி முழுவதையும் முனைப்போடு பிரயோகித்து, உங்களை அட்படுத்திக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு தியான முறையையும், கிடைத்திருக்கும் தியானமுறை செயல்படுங்கள். பேராசை கூடாது: பொறுமை இழக்கக் கூடாது.
பேராசையும், பொறுமையின்மையும் தியானத்துடன் ஒருவகை உரசலை ஏற்படுத்திவிடும். பிறகு தியானத்தின் ஆத்ம அனுபவத்தை நீங்கள் அனுபவிக்க முடியாமலேயே போய்விடும்.
தியானத்தின் ஒரே ஒரு அனுபவம் போதுமானது!
நீங்கள் தியானத்தை நேசிக்க, தியானத்தின் ஒரே ஒரு ஆனந்த ஒளிக்கீற்று போதும்.
அதன் பிறகு எத்தனை மணி நேரம் தியானம் செய்வது என்று என்னை கேட்க மாட்டீர்கள்! காலையில் கண் விழித்ததும் உங்கள் முதல் சிந்தனையே தியானமாகத்தான் இருக்கும்.
குளிக்கும்போதும், உண்ணும்போதும், - என எதைச் செய்தாலும், மனம் முழுவதும் இதில் பதியச் செய்தால், ஒவ்வொரு கணமும் தியானமாக மாறிவி(டும்.
தியானம் என்பது வாழ்வின் இயல்பு நிலையாக அமைந்து விடும்.
நீங்கள், தியானத்தில் வாழும் வாழ்வைப் பெற்று விடுவீர்கள்.
இறுதியாகச் சாதிக்க வேண்டிய நிலை இதுதான்.
'வாழ்வில் தியானம்' என்பதிலிருந்து 'வாழ்வே தியான 'மாவதுதான் நான் விரும்பும் ஓர் உன்னத நிலை.
ஆனால் இது எளிதன்று.
முதலில் வேண்டும். கொஞ்ச காலம், ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டும், அதன் பிறகு. அந்த உணர்வை, நாள் முழுவதற்குமாக நீட்டிக்க வேண்டும்.
இந்தப் புத்தகத்தில், இரண்டு வகையான தியான முறைகளின் தொகுப்பை நீங்கள் காணலாம்.
அமர்வுத் தியான முறைகள் :
தினசரி இத்தனை முறைகள் என்ற அளவில் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குப் பயிற்சி செய்யவும்.
எங்கும்-எப்போதுக்குமான தியான முறைகள் :
இதை, எங்கும், எப்போதும் செய்யவும்! வேலைக்கு வாகனம் ஒட்டிச் செல்லும்போதோ, உங்கள் துணிகளுக்குப் பெட்டி போடும்போதோ, படுக்கை அறையிலிருந்து சமையலறை நோக்கி நடக்கும்போதோ நீங்கள் இந்தத் தியான முறைகளைப் பயன்படுத்திப் பயிற்சி செய்யலாம்.
நீங்கள் விரும்பினால், இரண்டு அமர்வு தியான முறைகளையும், எங்கும் முறை ஒன்றையும், ஒவ்வொரு பத்து நாள்களுக்கும் பயிற்சி மேற்கொண்டு பார்க்கலாம்.
ஒரே சமயத்தில் பல தியான முறைகளை முயற்சி செய்ய வேண்டாம். அவ்வாறு செய்தால், எந்த ஒன்றையுமே நீங்கள் முழுமையாகச் செய்ய முடியாது. வாழ்வு முழுவதையும் தியானத்திற்கு இட்டுச் செல்ல எங்கும் -எப்போதும் உத்திதான் முதற்படி.
ஒர் எச்சரிக்கை!
தியான பயிற்சி ஆரம்பித்தவுடனே, உடலிலும், மனத்திலும் அசாதாரண மாற்றங்கள் பல ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள்.
எதிர்பாராததற்குத் தயாராக இருங்கள்.
மறந்துவிட வேண்டாம். தியானம் என்பது தூய்மைப் படுத்தும் ஒரு முறை. உங்களைச் சேர்ந்திருந்த அழுத்தங்களையும், அடைப்புகளையும் நீங்கள் வெளியே தூக்கி எறிந்துவிடுவீர்கள்.
இதுவரை கண்டிராத சக்தி, உங்கள் உடலுக்குள் வெள்ளமாய்ப் பாய்வதை உணர்வீர்கள்.
எவ்வளவோ காலமாய் நீங்கள் செய்திராத ஆட்டம் பாட்டம், குதிப்பு, சுழற்சி, அலறல் எல்லாம் ஏற்படும்! உங்களது உடல் அவற்றிற்கெல்லாம் இணைந்து செல்ல வேண்டும்.
ஆரம்பத்தில் உடலில் நிறைய வெப்பம் கூடிவருவதை உணர்வீர்கள். சிலருக்குத் தலைவலி, கை கால் விரல்களில் குடைச்சல் எல்லாம் கூட ஏற்படும். தீடீரென சக்தி உள்ளே பாய்வதால் ஏற்படுபவை இவை.
சிலருக்கு ஒரு உறக்கமின்மை அல்லது சோர்வு கூடத் தோன்றலாம். இவை எல்லாம் தற்காலிகமானவை. தியானத்தை தொடர்ந்தால் அவை நிச்சயமாக மறைந்து விடும்.
உள்ளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கும் நச்சுகள் உடலை விட்டு வெளியேறுவதன் வெளிப்பாடுகள்தான் இவை. தொடர்ந்து தியானம் செய்ய, நச்சுகள் அனைத்தும் முழுமையாக வெளி வந்து விடும். உடல் சுகம் பெறும்.
நீங்கள் ஏதாவதொரு கடுமையான உடல் நலக் கேட்டில் இருக்கும்போது அல்லது ஒரு தியான முறையைப் பயன்படுத்தும்போது தொல்லை ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள். அல்லது, வெறுமனே தியான முறையைக் கைவிட்டு விடுங்கள்.
இதுபோன்ற சிறிய பிரச்சினைகளால், எந்தவொரு தியான முறையையும் கடைப்பிடிக்க முடியாதபடி, உங்கள் கவலைகள் அதை நிறுத்திவிட அனுமாதிக்காதீர்கள்.
காரணம், தியானம் உடலுக்கும் மனத்திற்கும் நல்லதை மட்டும் செய்யும். சுகத்தை மட்டும் தரும்.
சும்மா அப்படியே போய், தியானத்தில் மூழ்கி விடுங்கள். உங்கள் கண்முன்பாகவே, உங்கள் வாழ்வுநிலை மாற்றம் பெறவதை நீங்கள் காண்பீர்கள்.
நீங்கள் காணப் போகும் நிலை மாற்றங்கள் :
தியானத்தின்போது வேறு எதை நீங்கள் காண்பீர்கள் ?
உடலில் ஏற்படும் பிரச்சினைகள் தீர்ந்த பிறகு, நீங்கள் ஆழமான, நிலைத்து நிற்கக்கூடிய நிலைமாற்றங்களைப் பார்க்க ஆரம்பிப்பீர்கள். அவை இரசாயன மாற்றங்கள்; பழைய நிலைக்குத் திரும்ப முடியாதவை. தியான அனுபவத்தை ஒருமுறை சுவைத்த உடனே, உங்கள் வாழ்க்கை முன்புபோல எப்போதும் இருக்கப் போவதில்லை.
தியான அனுபவத்தைப் பெற்று விட்டதை எவ்வாறு அறிவது?
உங்களுக்குள் ஏற்படும் இந்த மாற்றங்களைக் கண்டுதான்.
வெறும் சுதந்திரம் :
நீங்கள் அனுபவிக்கப்போகும் மாற்றம் ஒருவகையான சுதந்திர உணர்வு.
ஏன் சுதந்திரம் ?
அதற்கும் சுதந்திரத்திற்கும் என்ன தொடர்பு ?
நாம் வாழ்நாள் முழுவதும் தேடிக் கொண்டிருப்பது சுதந்திரத்தைத்தான்.
நாம் உணர்கிறோமோ இல்லையோ, நம்மில் ஒவ்வொருவரும் தேடிக்கொண்டிருப்பது சுதந்திரத்தைத்தான். தியானம் என்பதுகூட தீவிரமானதொரு சுதந்திரத் தேடல்தான். தியானம் சுதந்திரம் தரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதனால்தான் விடுதலைப் பெற நாம் தியானத்தை நாடுகிறோம்.
'சுதந்திரம்' என்ற சொல்லை நாம் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். நம் சாதாரண வாழ்வில் நாம் தேடுவது, 'இன்னதற்காகச் சுதந்திரம்' அல்லது 'இன்னதிலிருந்து சுதந்திரம். '
நாம் விரும்புவதையெல்லாம் செய்வதற்கான சுதந்திரம், நமக்குச் சரியென்று படுகிற விதத்திலெல்லாம் வாழ்வதற்கான சுதந்திரம் -இதுதான் 'இன்னதற்கான சுதந்திரம்'.
நாம் அஞ்சும், வெறுக்கும் எல்லாவற்றிலிருந்தும் -அதாவது நோய், கவலை, சினம், மனஅழுத்தம், உணர்வு, மனப்பான்மை, வேதனை முதலியவற்றிலிருந்து விடுதலை பெறும் சுதந்திரம்- இதுதான் 'இன்னதிலிருந்து சுதந்திரம்'.
நமது எல்லாச் செயல்களும், இவை இரண்டில் ஒன்றில்தான் அடங்கி இருக்கிறது.
நல்லதற்கான பேராசை. தீயதைக் கண்டு பயம்.
நமது வாழ்வு முழுவதையும், இந்தப் பேராசை, அச்சம் என்ற இரண்டு சூத்திரக் கயிறுகளே ஆட்டிப் படைக்கின்றன. இந்த இரு சூத்திரக் கயிறுகள் நம் வாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்தும் வரை, நாம் தேடித் தவிக்கும் சுதந்திரம் எங்கே கிடைக்கும் ?
சில வாரங்களுக்கு முன்னால், வழக்கமாக வரும் சீடர் ஒருவர், என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர் ஒரு ஓவியக் கலைஞர். அவர், தியானத்தைத் தாம் வெறுப்பதற்கான காரணத்தைச் சொன்னார்.
''சுவாமி! நான் இந்த விதிமுறைகள், சட்டங்களை எல்லாம் வெறுக்கிறேன். நான் விரும்பும் வகையில் சுதந்திரமாக என் வாழ்வை நடத்த விரும்புகிறேன்.
பாருங்கள், நான் 6 மணிக்கு எழுகிறேன்.
முதலில் நீந்தப் போய்விடுகிறேன், விரும்பும் போதெல்லாம்…." இப்படி ஒரு நாள் முழுவதையும் எனக்கு அவர் விளக்கினார்.
நான் அவரைக் கேட்டேன், "யாராவது உங்களை 6 மணிக்கே எழுப்பி விட்டால் என்ன செய்வீர்கள் ? உங்களது படுக்கைக்குக் காப்பி வரவில்லையென்றால் என்ன செய்வீர்கள் ? என்றேன்.
''ஒ, எனக்குக் கடும் கோபம் வந்துவிடும்,'' என்றார் சிரித்தபடியே.
''மழை பெய்து, உங்களது நீச்சலைக் கெடுத்து விட்டால்... ?''
"ஆமாம், அது படுமோசம்தான். நான் ஒரு நாள் நீந்தாமற்போனால், அந்த நாள் முழுதும் என்னவோ போலிருக்கும், '' என்றார்.
பிறகு நான் கேட்டேன் .... "உங்கள் சுதந்திரம் பலவற்றைப் பொறுத்திருக்கிறதே. நீங்கள் எவ்வாறு உண்மையான சுதந்திரத்துடன் இருக்க முடியும் ?'' என்று கேட்டேன்.
சுதந்திரம் என்பது எந்த நிலையிலும், எல்லா சூழ்நிலைகளிலும் சுதந்திரமாக இருப்பது. இதைத்தான் வெறும் சுதந்திரம் என்றழைக்கிறோம்.
இதற்காகவோ, இதிலிருந்தோ அல்ல. நிகழ்பொழுதில் பரிபூரண சுதந்திரத்தோடு வாழ்தல்.
பேராசையோ, அச்சமோ, எதிர்காலத்திற்கான எதிர்பார்ப்போ, இறந்தகாலம் பற்றிய வருத்தமோ எதுவுமே இல்லாமல், எதற்கும் கட்டுப்படாமல், இருந்தால் மட்டுமே அந்தச் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.
இதுதான் உண்மையான சுதந்திரம். இந்த வகைச் சுதந்திரத்தைத்தான் நீங்கள் தியானத்தின் போது அனுபவிப்பீர்கள்.
காரண காரியமில்லாத அன்பு:
தியானத்தில் தொடங்கும் அபூர்வமான ஒன்று, அன்பு!
மக்கள் தரிசனங்களையும், அவர்களுடைய தெய்வங்களிடமிருந்தும், மகான்களிடமிருந்தும் காணத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மட்டும் அன்பு என்னும் அற்புதத்திற்கு தயாராக இல்லை !
தியானத்தில் பிரவேசிக்கும்போது, உங்களிடமிருந்து எவ்வளவு அன்பு வெள்ளம் பெருக்கெடுக்கிறது என்பதைக் காண நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
தியானத்தின் மூலமாக, விழிப்பை நீங்கள் அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள். இதுவரை நீங்கள் எட்டியிராத எல்லைக்கு எட்டியதை உணர்வீர்கள்.
அந்த மகிழ்ச்சியைப் பார்க்கிறவர்களிடம் எல்லாம் பகிர்ந்து கொள்ள நீங்கள் விரும்புவீர்கள்! இந்த மகிழ்ச்சி நிறைந்துதான், அன்பாக உங்களிடமிருந்து பாய்கிறது
சுதந்திரத்தைப்போலவே, இந்த அன்பும், நீங்கள் முன்பே அனுபவித்திருக்கும் அன்பைவிட வேறானது.
நாம் நமது வாழ்வு முழுவதிலும், நம்முடைய அற்பமான சுயநல அன்பைக் கொடுக்கவும், வாங்கவும் செய்கிறோம்.
நம் வாழ்வு ரசிக்கப்பட்டதும் ஏதோ ஒரு காரணத்திற்காகவே.
நினைவுடனோ, அல்லது நினைவின்றியோ, நீங்கள் ஒரு காரணத்திற்காகவே அன்பு செலுத்துகிறீர்கள்.
மிக நெருங்கிய உறவிற்கு இடையிலும்கூட கணவன், மனைவி, பெற்றோர், குழந்தைகள் - என எல்லாருடைய உறவிலும்கூட, அன்பிற்கான காரணங்கள் மறைந்து கிடக்கின்றன.
நமது அன்பு முழுவதுமே களங்கப்பட்டு, பொறாமையாலும், உடைமை மனோபாவத்தாலும் அழிந்து போகிறது.
காரணமே இல்லாமல் அன்பு செலுத்தக் கூடியதைத் தியானத்தின் மூலமாக, நீங்கள் முதன்முதலாகப் புரிந்து கொள்வீர்கள்.
முதல் முதலாக, நீங்கள் எதையும் பெறுவதற்கு உத்தரவு போட மாட்டீர்கள். உங்களிடம் ஏராளமான அன்பு இருப்பதால்தான் அன்பைப் பொழிகிறீர்கள்! மழை மேகம் பூமியின் மீது பொழிவதுபோல, நீங்கள் அன்பைப் பொழிவீர்கள். அல்லது, ஒரு நறுமண மலர் தன் மணத்தை எங்கும் பரப்புவதுபோல பரப்புவீர்கள்...
நீங்கள் அன்பு செலுத்தியே தீர்வீர்கள்!
உங்களால் அன்பு செலுத்தாமல் சும்மா இருக்க முடியாது !
எல்லையற்ற மகிழ்ச்சி;
தியானத்தால், வாழ்வு ஆனந்தமயமாகிவிடும்: எந்த ஒரு காரணமும் இல்லாமலேயே!
ஏனென்றால் எந்த ஒரு மகிழ்ச்சிக்கும் ஒரு காரணம் நிச்சயமாக அது இன்றோ, நாளையோ வேதனையைக் கொண்டு வந்தே தீரும்.
நல்ல உணவு கிடைத்தது என்பதற்காக இப்போது மகிழ்ச்சியடைந்தால், அது பசிக்கும்போதும் துன்பம்தான். காதல் கொண்டதால் மகிழ்ச்சி அடைந்தால், அது பறந்து போகும்போது சோகம்தான். 'அதெல்லாம், நமக்கு ஏற்படாது,' என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். எல்லோருக்குமே ஏற்படும். வாழ்வின் சட்டம் அது.
எல்லா மகிழ்ச்சிகளும், அவை முடிந்த பின்னே துயரம்தான். அதனால்தான், புராதன பாரதத்தில், மகிழ்ச்சி யையும் துக்கமாகவே பயன்படுத்தினார்கள்.
ஆனால் நீங்கள் தியானத்தில் அனுபவிக்கும் மகிழ்ச்சி இடையூறு செய்யப்படாதது; இடையூறு படுத்த முடியாதது. நோய்வாய்ப்பட்டிருக்கலாம் அப்போதும் அப்படியேதான் இருக்கும். மழையோ, பனியோ, வெயிலோ, மகிழ்ச்சி மாறாமல் இருக்கும். உங்கள் உள், வெளிச் சூழல்கள் எப்படியிருந்தாலும் மகிழ்ச்சி மாறாது.
தியானத்தால் கிடைத்த நிலையான அந்த மகிழ்ச்சியை நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, எந்தப் புறச் சக்தியும் அதைக் குலைக்க முடியாது. இதன் பொருள், நீங்கள் ஆழ்ந்து உள்முகம் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான்.
புத்திக்கூர்மையுள்ள விழிப்புணர்வு :
வாழ்க்கை எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது.
கணத்திற்கு கணம், வாழ்க்கை நம்மீது சுமத்தும் சவால்களை விழிப்புடன் ஏற்கும் திறமைதான் புத்திக்கூர்மை. அந்தச் சூழ்நிலையை அறிந்துணர்வதே புத்திக்கூட்டை. அந்த வினாடியில் தேவைக்கேற்ப, உங்கள் விடைகளை மாற்றியமைப்பதே புத்திக்கூர்மை.
உங்களுக்குள் மன உறுதி இல்லையென்றால், சமுதாயமும், மதமும், சட்டமும் ஏற்படுத்தி வைத்திருக்கிற விதிமுறைகளைத்தான் நீங்கள் பின்பற்ற வேண்டியிருக்கிறது.
புத்திசாலி, எழுத்துவடிவப் படிவம் இல்லாமலேயே வாழக் கூடியவன். அவனுக்கு அது தேவையே இல்லை. அவன், தன்னையே நம்பி இருப்பவன்; உள் வழி காட்டியையே நம்பி இருப்பவன். புத்திசாலித்தனம் என்பது உங்கள் பொறுப்பை நீங்களே எடுத்துக்கொள்வதுதான்.
நாம் எல்லாருமே புத்திசாலிகளாகப் பிறந்தவர்கள் தான். ஆனால் சமுதாயம் நம்மைவிடப் புத்திசாலி. நாம் தயாராக இல்லாத குழந்தைப் பருவத்திலேயே, நமக்கான விதிமுறைகளை அது வகுத்துவிட்டது.
நமது புத்திசாலித்தனத்தைச் சுற்றி, அது மதில்களை எழுப்பி வைத்து விட்டது. இயல்பாக நம்மிலிருந்து பெருகி வரும் சக்தியை அது தடுத்து விடுகிறது.
இறுதிநிலை புத்திக்கூர்மை என்னவென்றால், இந்த விலங்குகளை எல்லாம் தகர்த்தெறிவதுதான்!
புத்திக்கூர்மையை அடைய சர்வ நிச்சயமான வழி தியானம்தான். காரணம், நம்மைப் பிணைத்திருக்கிற அந்த எல்லா விலங்குகளும் இருப்பது நமது மனத்தில்தான்.
தியானத்தின் மூலம் மனத்தைக் கடந்துபோகலாம், சுய இருப்பிற்குத் திரும்பி விடலாம்.
சுயமான நமது இருப்பில், எந்த விதிகளும் இல்லை. உங்களுடைய முழு ஆற்றல் கொண்டு எதையும் சுதந்திரமாக உங்களால் அடைய முடியும். அதனால்தான் தியானத்தின் போது, எத்தகைய சூழலிலும் உங்களால் நிம்மதியாக இருக்க முடிகிறது.
புதிய இணக்கமாகவும் உங்களால் இடையறுபடாத பிரவாகத்தை நீங்கள் மறுபடியும் கண்டு கொள்வீர்கள் - தியானத்தால் !
உள்ளுணர்வின் மலர்ச்சி:
நான் குறிப்பிடும் 'உள்ளுணர்வு' என்பது நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் அர்த்தம் கொண்டதல்ல.
உங்களில் சிலர், பெரிய அளவில் உடலின் நுட்ப உணர்வுகளையும், தோற்றங்களையும் பெறும் அளவுக்கு வளர்ச்சி பெற்றாலும், அவை முக்கியமல்ல, வளர்ச்சி கட்டத்தில் தோன்றும் துணைப் பலன்களே அவை.
உண்மையான உள்ளுணர்வு என்பது, உங்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டு அதை நிறைவடையச் செய்வதுதான்.
நாம் வாழ்வு முழுவதிலும் விதவிதமான முகமூடிகளை அணிந்தபடியேதான் போய்க்கொண்டிருக்கிறோம். அப்பா, அம்மா, கணவன், மனைவி, மருத்துவர், தலைவர், நாகரிக மனிதர் என ஒவ்வொரு பாத்திரத்திற்கும் தனித்தனி முகமூடிகள் உள்ளன. இது ஒரு முடிவில்லாத பட்டியலாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது!
சமுதாயம் நம்மீது என்ன பாத்திரத்தைச் சுமத்தி இருக்கிறதோ, அதற்கேற்பவே நாம் வாழ்ந்து வருகிறோம். இந்தப் பாத்திரங்களே கடைசியில் நமது பண்புகளாக (Personality) மாறி விடுகிறது.
தியானத்தின் மூலம் நாம் உள்ளே நகர்கிறோம். நாம் நமது சொந்த இருப்பிலேயே வாழத் தொடங்குகிறோம்; நமது இருப்புடன் ஒருங்கிணைக்கப்படுகிறோம்; தனித்தன்மையை நோக்கி நாம் நகர்கிறோம்.
உங்கள் ஆளுமை மாறக்கூடியது. ஆனால் உங்கள் தனித்தன்மை மாற்ற முடியாதது. ஒவ்வொரு தனி மனிதரும் தனித்துவம் பெற்றவர்கள்.
தியானத்தின் மூலம், உங்கள் தனித்தன்மையை உங்களால் தொட்டுவிட முடியும்.
எது தியானம் உங்களுக்காக உச்சபட்சமான நிறைவுபடுத்துகிறதோ, எது உங்களைச் சரியாக அடையாளம் காட்டி வெளிப்படுத்துகிறதோ, அதை நோக்கி நீங்கள் இயல்பாகவே நகரத் தொடங்கிவிடுவீர்கள். உள்ளுணர்வு செய்யும் வேலை இது.
பாதையில் முள்கள்:
தியானப் பாதையில் ஒரே ஒரு உண்மையான தடை உள்ளது.
அதுதான் ஆணவம். என்ன சிக்கல்கள் வந்தாலும், என்ன பிரச்சினைகள் எதிர்ப்பட்டாலும், தெளிவாக இருங்கள். அவை எல்லாம் ஆணவத்தின் வெவ்வேறு குரல்கள்.
ஆணவம் என்பது என்ன ?
உங்கள் சேகரிப்பும், உங்களைப் பற்றிய உங்கள் கருத்துகளும்தான் ஆணவம்.
ஆணவம் ஒரு கற்பனை! ஆணவம் உண்மையாக இருக்கும் பொருளே அன்று. என்றாலும் இந்த ஆணவமே நமது வாழ்வை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது!
உங்களைப் பிரித்துத் தனிமைப் படுத்தும் எண்ணத்தை உங்களுக்குள் தோற்றுவிப்பதும் ஆணவமே.
பிறப்பின்போது, உங்களைத் தாயிடமிருந்து பிரிக்கிறது. பிறக்கும் கணம் வரை ஆணவமே இருப்பதில்லை எல்லைக் கோடும் இல்லை. குழந்தை, தாயின் ஒரு பகுதியாகவே இருக்கிறது.
பிறந்த கணத்தில், தொப்புள் கொடி அறுக்கப்பட்ட உடனேயே, குழந்தை தனக்கான எல்லையை முதன்முதலாக உணர ஆரம்பிக்கிறது.
பிறந்த பின், முதல் ஆண்டில், ஆணவம் உங்களைப் பற்றிய படத்தையும், உலகத்தைப் பற்றிய படத்தையும் உருவாக்கிக் கொள்கிறது.
'நான்' 'எனது' என்னும் உணர்வுகள் தோன்றுவதற்குக் காரணமே ஆணவம்தான்.
வாழ்க்கை முழுவதிலும், இந்த ஆணவம், ''எனக்கு எதிராக அவர்கள், '' என்ற நிலையிலேயே உங்களை வைத்துக் கொண்டிருக்கிறது.
இது உங்களை உங்கள் பெற்றோர்களிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும், இயற்கையிடமிருந்தும், இயற்கையின் எல்லா அம்சங்களிலிருந்தும் பிரித்து வைத்து விடுகிறது.
'நான்' என்று நீங்கள் உச்சரிக்கும் போதெல்லாம், நீங்கள் இயற்கையை விட்டு விலகித் தனித்துப்போய் விடுகிறீர்கள்.
உண்மையில் உங்களால் பிரிந்து போக முடியாது. ஏனென்றால், நீங்கள் இயற்கையின் ஒரு பகுதி - ஆனால் பிரிந்து போவது என்பது உங்கள் மனத்தில் ஏற்படும் நிகழ்ச்சிதான்.
நீங்கள் கூடிய ஓர் உலகத்தை, உங்களுக்காக, நீங்களே படைத்துக் கொள்கிறீர்கள்.
உலகம் உங்கள் மனத்தில்தான் இருக்கிறது.
அது உங்கள் மனத்தின் கருத்தாக்கம் மட்டுமே. ஆனால் இந்தக் கருத்தாக்கமே, ஆணவமே சகல துன்பங்களுக்கும் காரணம்' என்று மக்கள் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்.
ஏன் அப்படி ?
ஆணவம், வளர்வது. எந்தத் தனிமைப்படுத்தும் சூழல் ஏற்பட்டாலும், அதுதான் ஆணவம் நிலைநிற்பதற்கான களம்.
ஆணவம், தயாரிப்பாக இருந்தாலும், அது ஒரு தந்திரமான மிருகம்!
எல்லாப் பொருள்களும் ஒத்திசைவின்றிச் சிதைந்து கிடக்கும், ஒரு சிதறுண்டுபோன எதார்த்தத்தை ஆணவம் படைத்து விடுகிறது. தான் உயிர்வாழ்ந்திருப்பதற்காக இதைச் செய்து கொள்கிறது.
உங்கள் சொந்த வாழ்வைப் பாருங்கள்.
வேதனை, சினம், பொறாமை - ஆகியவற்றை நீங்கள் அனுபவிக்கிறீர்கள் என்றால், யாரிடமிருந்தோ நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக உணர்கிறீர்கள் அல்லது யாரோ ஒருவரால் ஏமாற்றுப்பட்டுவிட்டதாக உணர்கிறீர்கள் என்று பொருள்.
துயரக் காலங்களில் இந்தத் தனிமை உணர்வு மேலோங்கி இருக்கும். இன்பக் காலத்தில், எல்லாருடனும், எல்லாவற்றினுடன் நீங்கள் சேர்ந்திருப்பீர்கள்.
மகிழ்ச்சி, ஆனந்தம், சிரிப்பு ஏற்படும்போதெல்லாம் உங்கள் ஆணவம் பலவீனப்பட்டுக் கிடக்கும்.
உங்களின் நிகழ்கால வாழ்வில், இந்தத் தருணங்களை, நீங்கள் தற்காலிகமாக அனுபவிப்பீர்கள். ஆனால் தியானம், உங்களை, நிரந்தரப் பரவச நிலைக்கு அழைத்துச் செல்லும்.
பிரபஞ்சம் முழுதினோடும் ஒருங்கிணைத்துக்கொள்ளச் செய்வது தியானம். தியானத்தில் தனிமைப்படலுக்கு இடமில்லை; இடமில்லை.
எல்லாவற்றினோடும் ஒரு நிரந்தர ஒத்திசைவை ஒருமுறை உணர்ந்த பிறகு, இயற்கையின் அனைத்து அம்சங்களுடன் உள்ளார்ந்த உறவை ஒருமுறை உணர்ந்து விட்ட பிறகு, ஆணவத்தை வைத்திருப்பதற்கு என்ன தேவை ?
ஆணவம், உலகிற்கு எதிரான உங்கள் படைக்கலம்.
உலக வாழ்வின் போர்க் காலங்களில் இந்த ஆணவமே கேடயம். எங்கும் சமாதானமே நிலவும்போது, எல்லாமே ஒத்திசைவாக அமைந்து விடும்போது - படைக்கலன்களுக்கும், கேடயத்திற்கும் என்ன தேவை ?
அதனால்தான், தியானம் செய்வது உங்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. தியானமோ மிக எளிதான ஒன்று! சும்மா அப்படியே அமர்ந்து உங்களது மூச்சைக் கவனித்துக் கொண்டிருக்கும் விஷயம்தான்.
உண்மையில், தியானத்தைக் கற்றுக் கொடுக்கும் தேவையோ அல்லது கற்றுக் கொள்ளும் தேவையோ இல்லை. அது இயல்பாகவே நிகழ்வது.
அசையாமல் அமர்ந்து, சில நிமிடங்களில் எதார்த்த நிலையின் சில வினாடிகள் மட்டும் மௌமாக அமர்ந்து, பாயும் எண்ணங்களை அமைதிப்படுத்துங்கள் இருங்கள் - உண்மையை உணர்ந்துகொள்ள அது போதும்.
உண்மையை உணர்ந்துவிட்டால், ஆணவத்திற்கு இடமேது ? ஆணவம் தானாகக் கழன்றுக்கொள்ளும். இயல்பாகவே அதை நீங்கள் கைவிட்டு விடுவீர்கள்.
அதனால்தான், ஆணவம் தியானத்தைக் கடுமையாக எதிர்த்து போரிடுகிறது.
ஆணவத்தின் மரணமே தியானம்!
நீங்கள் எதிர்கொள்ளப்போகும் மிகப் பெரிய பிரச்சினையே ஆணவத்தின் எதிர்பார்ப்பத்தான். நீங்கள் தியானம் புரிகையில், ஆணவம் ஆயிரம் வினாக்களுடன் எதிரே வரும். ஆணவத்திடம் உள்ள பயங்கரமான ஆயுதம் சந்தேகம் !
ஆணவம், உங்கள் மனத்தில் சந்தோஷங்களையும்,
வினாக்களையும் தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருக்கும்.
ஆரம்பத்தில் அது கவலையைத் தரக்கூடும்.
மெய்யாகவே நான் தியானம் செய்ய முடியுமா?
முதுகு வலிக்கப் பல மணி நேரம் நான் அமர்ந்திருக்க வேண்டுமா ?
இந்தப் பாதை எனக்குச் சரியானதுதானா?
நான் அதற்குள்ளே ஆழமாக இழுக்கப்பட்டு விட்டால் என்ன ஆவது ?
என் குடும்பம் என்ன ஆவது?
என் நண்பர்கள் என்னைக் கிறுக்கன் என்று சொல்ல மாட்டார்களா ?
நான் உண்மையில் கிறுக்கன்தானா?
நீங்கள் குருவுடன் சேர்ந்து இருந்தால்கூட, குருவுக்கு எதிரான சந்தேகங்களைக்கூட ஆணவம் தோற்றுவிக்கும் !
இவர் உண்மையிலேயே குருதானா?
எனக்கு எந்தத் தியானமுறை சரியான பலன் தருமென்று இவரால் கணிக்க முடியுமா?
தியானத்தை பரப்புவதின் உள்நோக்கம் என்ன ?
இவையெல்லாம் ஒருவகை வசியங்களோ?
இப்படிப்பட்ட வினாக்கள் எழுந்தால், கவலைப்படாதீர்கள். வினாக்களை தூக்கி எறிந்துவிட்டு, தியானத்தைத் தொடருங்கள்.
அந்த வினாக்களைப் பொருட்படுத்தாதீர்கள் !
எல்லாருடைய மனத்திலும் இயல்பாக எழுவதுதான் அவை.
அந்த வினாக்களுடன் மோத முயலாதீர்கள். ஆணவத்துடன் மோதும் தவற்றைச் செய்து விடாதீர்கள். ஏனென்றால், ஆணவம் ஒரு கற்பனை; அது உண்மையில் இருக்கும் ஒன்றல்ல. விழிப்புணர்வு இல்லாமையே ஆணவம்.
வெளிச்சம் இல்லாமையே இருள் - என்பதுபோல, விழிப்புணர்வு இல்லாமையே ஆணவம்.
இருட்டு அறையில் நீங்கள் இருக்க நேர்ந்தால், அறையை மோதி அதை வெளியே தள்ள முயல்வீர்களா என்ன? சொல்லப்போனால், உங்கள் தீர்வுக்கும் இருட்டுக்கும் சம்பந்தமே இல்லை.
இருட்டை முற்றிலும் புறக்கணித்து விட்டு, ஒரு விளக்கை உள்ளே கொண்டு வாருங்கள். இருட்டு தானாகக் காணாமல் போய்விடும்.
அதேபோல, ஆணவத்துடன் மோதுவதில் நேரத்தை வீணாக்காதீர்கள். தியானத்தில் விழிப்புணா்வைக் கொண்டு வரப் பாருங்கள். அடுத்தடுத்து, அந்த வினாக்கள் தாமாகவே போய்விடும்.
ஆணவத்தின் மிகப் பெரிய பேச்சுக்குப் பிரதிநிதி மனம்தான். உடலைப்போலவே, மனமும் உஉங்கள் கைகளில் ஒரு கருவியாகிவிட வேண்டும்.
மனம் அற்புதமான கருவி; எல்லையற்ற சக்கி படைத்தது; படைப்பாற்றலின் ஓர் அற்புதம்; வடிவமைப்பில் தலை சிறந்தது.
பிறகு, மனம் ஒரு சமூகத் தேவையும்கூட. மனம் இல்லாமல், நாம் உலகிற்குப் பணி செய்ய முடியாது.
ஆனால் மனம் என்பது ஒரு கருவிதான் என்பதை நாம் மறந்து போகிறோம் - நாமே அதன் கருவியாக மாறிப் போய் விடுகிறோம்! நாம், முழுக்க முழுக்க மனத்தால்தான் கட்டுப்படுத்தப் படுகிறோம்.
நிலையிலிருந்து நம்மைத் எதார்த்த தனிமைப்படுத்துவதகற்காக, மனம் செய்யும் மாபெரும் தந்திரம், மொழியைப் பயன்படுத்துவதுதான்.
சொற்களே நம்மை நம்மை எதார்த்த நிலையிலிருந்து தனிமைப்படுத்துகின்றன.
நாம் ஒன்றைப் பார்த்தவுடனே, அதைச் சொற்களாக மாற்ற முயற்சி செய்கிறோம்.
ஒரு மலரைப் பார்த்தவுடன், 'இது பூ' என்று,
உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்கிறீர்கள். வாழ்வின் எல்லாவற்றையும், நாம் சொற்களைக் கொண்டே, அருவமான கருத்துகளைக் கொண்டே உள்வாங்கிக் கொள்கிறோம்; ஆனால் வார்த்தைகள் அனுபவங்கள் அல்ல!
'மலர்' என்ற சொல், மலர் அன்று, 'அன்பு' என்ற சொல் அன்பு அன்று.
'ஞானம் பெறுதல்' என்ற சொல் ஞானம் பெறுதல் அன்று.
உங்களுக்கும் எதார்த்தத்திற்கும் நடுவில் சொற்கள் மதில் எழுப்பிவிடுகின்றன.
தியானத்திற்குச் சொற்கள் தேவையில்லை. எதார்த்த நிலையை நேரடியாக அனுபவிப்பதே தியானம்.
ஆனால் மனம் சொற்களைக் கொண்டு ஓயாமல் அரட்டை அடிக்கிறது, . ஒரு கண நேரம்கூட, மனம் உங்களை நிம்மதியாக இருக்க விடுவதில்லை.
ஓயாமல், யோசனைகளையும், கருத்துகளையும், அபிப்பிராயங்களையும் வழங்கிக் கொண்டே இருக்கிறது. எதார்த்தத்தைச் சிதறடிக்க, மனம் சொற்களைப் பயன்படுத்துகிறது !
மனத்தை எப்படித்தான் கையாள்வது ?
ஆணவம் பற்றி நான் முன்னே சொன்னதுபோலத்தான் மனத்தோடு மோதாதீர்கள், மனத்தோடு போராடி, நீங்கள் எதையுமே சாதித்துவிட முடியாது.
உங்களால் போராடக்கூட முடியாது!
ஏனென்றால், உங்கள் மனம்தான் செயல்காண்!
உங்கள் மனத்தின் ஒரு பகுதி, இன்னொரு பகுதியுடன் போராட ஆரம்பித்துவிடுகிறது. அதனால் உங்கள் மனத்தின் செயல்பாடுகளைச் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருங்கள்.
அது எளிதான காரியமல்லதான். குறிப்பாக, இந்த வழியில், மனம் ஓர் ஆபத்தான வழித் துணைவன்!
முதலில், அச்சங்களையும், உங்கள் எண்ணங்களின் போக்கை நீங்கள் கவனிக்க ஆரம்பித்தவுடனே, நீங்கள் உண்மையாகவே பார்த்துக் கொண்டிருப்பதாக அது உங்களை நம்ப வைக்கும். மனம் அப்படி உங்களிடம் சொன்னால், மனம் வேலை செய்கிறது என்று அர்த்தம் !
நீங்கள் உண்மையாகவே பார்த்துக் கொண்டிருந்தால், எந்த அபிப்பிராயங்களும், எந்தத் தீர்ப்பும், எந்தக் கருத்தும் உங்களுக்குத் தோன்றாது.
''இவை எண்ணங்கள், நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்,'' என்ற அளவுக்கு வந்துவிடுவீர்கள்.
மிகத் தெளிவாக இருங்கள்: மனம் உங்கள் எதிரி அன்று.
சிந்திப்பதில் எந்தத் தவறும் இல்லை. மற்ற செயல் முறையோல் அதுவும் ஒன்று.
உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள். மனத்தின் பார்வையாளராக மட்டும் இருங்கள். மனத்தின் விளையாட்டைக் கண்டு மகிழுங்கள்!
நீங்கள் உங்கள் சிந்தனைகளைக் கவனித்து வர வர, அவற்றின் போக்கு மெல்ல மெல்ல நிதானமடையும்.
உங்களின் விழிப்புணர்வு ஆழப்படப் பட, அவற்றின் போக்கிற்கு இடையே, இடைவெளிகள் தோன்றுவதை உணர்வீர்கள்.
ஒரு மின்வெட்டுப்போல அந்த இடைவெளிகள் தோன்றி உடனே மறைவதை நீங்கள் காணலாம்.
அந்தச் சின்ன இடைவெளி பொழுதில், அழகிய அமைதி அனுபவம் சித்திக்கும்.
பிறகு, அந்த இடைவெளிகள் அடிக்கடி தோன்ற ஆரம்பிக்கும்.
அந்த அனுபவத்துடன்கூட அதிகம் சார்த்திருக்க வேண்டாம்! அதற்காகக் காத்திருக்கவும் வேண்டாம்.
அந்த இடைவெளிகளின் காலம் அதிகரிக்கும்போது புற உலகை மட்டுமல்லாமல், அக உலகையும் மிகத் துல்லியமாக உங்களால் காண முடியும்.
மனம் கடந்த நிலையின் அனுபவம் இதுதான்.
இது நம் சக்திக்கு மீறியது என்று நினைக்க வேண்டாம் !
நீங்கள் ஈடுபாட்டுடனும், முழுமையாகவும் பயிற்சி செய்யும்போது, அது நிகழவே செய்யும்.
காலத்தை ஒதுக்குங்கள் :
தினசரி ஒரு அரைமணி நேரமாவது தியானத்திற்கு ஒதுக்குங்கள். எங்கும் எப்போதும் செய்யும் தியானங்களை நீங்கள் பயிற்சி செய்யத் திட்டமிட்டிருந்தாலும்கூட, அமர்வுத் தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒதுக்குங்கள்.
ஆரம்பத்தில், ஒரு சில ஒழுங்குமுறைகளைத் தியானத்தில் கடைப்பிடிக்க வேண்டும்.
-
விழிப்புணர்வுப்பூர்வமாகப் பயிற்சி உருவாக்கிக்கொள்ளுங்கள்.
-
அந்த நேரத்தைப் பார்த்துக் கொள்ளவும். எந்த வேலையையும் அப்போது ஒப்புக்கொள்ள வேண்டாம்.
-
அந்த நேரத்தில் நீங்கள் தனியாக இருக்க வேண்டியது அவசியம் என்பதை உங்கள் குடும்பத்தாரும், நண்பர்களும் உணரும்படி செய்யுங்கள்.
-
ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் அதை வைத்துக் கொள்ளுங்கள். அந்த வழக்கத்திற்கு உடலும், உள்ளமும் விரைவில் பழக்கப்பட்டு விடும்.
ஒவ்வொரு நாளும், குறிப்பிட்ட அதே நேரத்தில் பயிற்சி நிலைக்குள் நீங்கள் பிரவேசித்து விடுவதை உணரலாம்.
இடம் ஒதுக்குங்கள்:
குப்பை கூளங்களற்ற தூய்மையான, அமைதியான இடம் தியானத்திற்கு ஏற்றது. முடிந்தால், உங்கள் வீட்டில் ஒரு தனி அறையை ஒதுக்கிக் கொள்வது நல்லது.
உங்கள் வீட்டில் பூஜை அறை இருந்தால், அது தியானத்திற்குப் பொருத்தமான இடம்.
ஏற்கனவே பிரார்த்தனை, வழிபாடு நடத்தி வந்த இடம் என்பதால், அங்கே சக்திநிலை மிகுதியாக இருக்கும். அது தியானத்திற்கு மிகவும் உதவும் படியாக அமையும்.
தினசரி ஒரே இடத்தில் தியானம் செய்து வருவது நல்லது. அது அறையாக இருந்தால், போதிய காற்றும், வெளிச்சமும் இருக்க வேண்டும்.
வெளியில் தியானம் செய்வதானால், வீட்டுத் தோட்டம் நல்லது. ஆனால் அங்கே ஓசை இடையூறுகள் எதுவும் இருக்கக் கூடாது.
சௌகரியமாக இருங்கள்:
உடல் சௌகரியமான நிலையில் இருந்தால்தான், தியானத்தை நிம்மதியாகச் செய்ய முடியும். "உடலை மறந்து விடு,'' என்கிறது தியானம். உடலால் தொல்லைகள் ஏற்பட்டால். எவ்வாறு அதை மறந்து, அதைக் கடந்து செல்ல மடியும் ?
பல தியான முறைகள் தரையில் அமர்ந்து செய்யக் கூடியவை. அந்தப் பழக்கம் இல்லையென்றால் நாற்காலியைப் பயன்படுத்தலாம் - ஆனால் தரையில் அமரவே முயற்சி செய்து பாருங்கள்.
ஒரு குஷனை அமா்வதற்குப் பயன்படுத்தலாம். தரையில் படுத்துச் செய்யும் முறைகளுக்கு, வெறும் தரையில் படுக்க வேண்டாம். பாயோ, விரிப்பையோ பயன்படுத்துங்கள்.
உணவு உண்டு இரண்டு மணி நேரமாவது ஆனபிறகு பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஆரம்ப நிலையில், தியானத்தின்போது தூக்கம் வருவது போல் தோன்றலாம். அது தாமச குணம் - மந்தம் -நமது உடல் கட்டமைப்பைக் கீழே படியச் செய்வது.
உறக்கத்திற்கு எதிராகச் செயல்பட வேண்டாம் - அவ்வாறு செயல்பட முனைந்தால், தூக்கமும் வராது, தியானமும் நிகழாது !
தூக்கம் வருவதுபோல் இருந்தால் அதற்காகக் குற்றஉணர்ச்சி கொள்ள வேண்டாம். தூக்கம் வருகிறதா, தூங்குங்கள்! தூக்கம் முடிந்தவுடன், எழுந்து தியானம் செய்யலாம்! அவ்வளவுதான்!
வினா: தியானமும்க்கூட ஒரு செயல்தானே?
விடை: ஆம்! ஆரம்பத்தில் அப்படித்தான்.
மௌனமாக அமர்ந்திருப்பதுகூட ஒரு செயல்தான்! உங்கள் மூச்சை கவனித்துக் கொண்டிருப்பதுகூட ஒரு செயல்தான்.
ஆரம்பத்தில், மற்ற காரியங்களைப் போலவே தியானமும் ஒரு செயல்தான் தோன்றும் - இதுவரை உங்கள் இயல்பில் இல்லாத ஒன்றைத்தானே இப்போது செய்ய ஆரம்பித்திருக்கிறீர்கள்.
தினமும் நீங்கள் இயல்பாகவும், சரியாகவும் செய்துகொண்டிருக்கும் உட்காருவது, நடப்பது போன்ற சாதாரண திணிக்கப்படும்போது, அது ஒரு கடினமான செயலாகவே உங்களுக்குத் தோன்றும்.
'சும்மா அமர்ந்திருப்பது' என்ற ஜென் தியான முறை ஒன்று இருப்பது தெரியுமா ? அங்கேயும்கூட அதில் சிரமம் வேண்டியிருக்கிறது !
ஆரம்பத்தில் நிச்சயமாக அது ஒரு கடினமான செயல்தான். ஆனால் ஆழ்ந்து பார்த்தால் தியானம் என்பது ஏதோ ஒன்றைச் 'செய்வது' அல்ல. ஏனென்றால் அதைச் சரியான வழியில் செய்ய ஆரம்பிக்கும்போது, தியானத்தில் வெற்றியும் பெறும்போது எல்லாப் போராட்டங்களும் மறைந்து விடும்.
நீங்கள் முழுமையான நிம்மதியில் இருக்கும்போது, எந்தப் பலனையும் எதிர்பார்ப்பதை நிறுத்தும்போது, தியானத்தை அனுபவிக்க ஆரம்பிக்கும்போது மெல்ல மெல்ல,
நீங்கள் தியானம் செய்து கொண்டிருப்பதையே அறிய மாட்டீர்கள்! பிறகு அது ஒரு செயலாக இராமல் போய் விடும் !.
தியான முறைகள் ...
இனி வரப்போகும் பக்கங்களில் காணப்படும் தியான முறைகள் எல்லாம் என்னால் உருவாகப்பட்டவை அல்ல.
உத்வேகம் பெறுவதற்காக, உலகெங்கிலும் உள்ள புராதன ஆன்மிக மரபுகள் மீது கவனம் செலுத்திய மாபெரும் ஆன்மிக ஆசான்கள், குருமார்களின் உபதேசங்களிலிருந்தும், புராதன கிரந்தங்களிலிருந்து பெறப்பட்டவையே இந்தத் தியான முறைகள்.
பல தியானமுறைகளை, என் சொந்த அனுபவ வலிமை கொண்டு, இக்கால மனிதனுக்கு ஏற்றவாறு மாற்றி அமைந்திருக்கிறேன். சிலவற்றை நானே உருவாக்கி இருக்கிறேன். சில தியானமுறைகள் எவ்வாறு வழங்கப்பட்டு வருகின்றனவோ, அப்படியே பெற்றிருக்கிறேன்.
பல தியானமுறைகளின் வேர்கள் காணாமல் போய் விட்டன. அவை யாருக்கும் சொந்தமல்ல. யாரும் அவற்றின் மீது உரிமை கொண்டாட முடியாது.
உண்மை என்னவென்றால், எந்த உண்மையான குருவும் தியான முறைகளின் பெயர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அது உங்களுக்கு உதவுகிறதா இல்லையா என்பது பற்றித்தான் அக்கறை காட்டுகிறார். ஆகவே தியானமுறைகள் மூலம் பயிற்சி பெற்று மகிழுங்கள். யாரெல்லாம் அதில் மகிழ்ப்போகிறார்களோ அவர்களுக்கெல்லாம் எடுத்து வழங்குங்கள்.
தியானத்தின் நறுமணத்தை எங்கும் பரப்புங்கள்!
இந்தத் தியானமுறையைப் பற்றி :
தியானத்தின் ஒரு சக்திமிக்க வடிவம் நடனம்!
முறையான நடனம், சுதந்திரமான நடனம், இரண்டுமே சக்தி மிக்க தியான முறைகள்தான். சுதந்திரமான நடனம் கூட, உணர்வைத் தூய்மை செய்வதற்கான ஒரு தியான நுட்பம்தான்.
நடனத்தின்போது நீங்கள் உங்களை இழந்துவிட வேண்டும் என்பதுதான் நோக்கம்.
முறையாக நடனம் கற்றவர் இந்த நிலையை அடைய முடியும் ஏனென்றால் அவர் நடனத்திற்குரிய இலக்கண விதிகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நடன விதிகளைப் பற்றிய நினைவுகூட ஒரு தடைதான். அந்தகைய ஒரு இடையூறு இல்லாமல் அவரால் இயல்பாக நடனமாட முடியும். ஒரு முறையான நடனமுறையாகவே அது இருந்தாலும் கூட அவரால் இயல்பாக நடனமாட முடியும். ஆனால் நீங்கள் நடன முறையைப் பற்றித் தெரியாதவராக இருந்தால் சுதந்திர நடனமே ஆடி மகிழுங்கள், இல்லாவிட்டால் விதிகளே உங்களைக் கட்டுப்படுத்தத் துவங்கிவிடும்.
செயல்முறை விளக்கம் :
சுதந்திர நடனம் என்பது, கால் வைப்பு முறைகளில் எந்த விதியும் இல்லாதது; நாட்டிய விதிகள் இல்லாதது.
உங்கள் உடல் எப்படியெல்லாம் விரும்புகிறதோ அப்படியெல்லாம் ஆடுங்கள்.
நடனம் விளையாட்டுப்போல ஆடி மகிழுங்கள்.
நடனத்தின் அளவற்ற சக்தியின் பாகமாக மாறுங்கள்.
சுதந்திர நடனத்தில் இரண்டு கட்டங்கள் உள்ளன.
ஒன்று நடனம், மற்றது ஓய்வு.
நடனம் (21 நிமிடங்கள்) :
கண்களை மூடிக் கொண்டு நடனமாடுங்கள். காலடி வைப்புகள் பற்றிக் கவலைப்படாமல் ஆடுங்கள். உங்கள் உடல் இறுக்கமில்லாமல் இளகியபடி இருக்கட்டும்.
உங்களது உணர்வற்ற மனம் நடனத்தை நடத்திச் செல்லட்டும்! நடனத்தில் நீங்கள் எப்படி தோன்றுகிறீர்கள். உங்கள் உடைகள் எப்படி உள்ளன என்பதைப் பற்றியெல்லாம் கவலையே படாதீர்கள். உங்களை யாரும் பார்க்கப் போவதில்லை. அது பார்வையாளர்களுக்கான நிகழ்ச்சி அன்று.
நீங்கள் தொடர்ந்து நடனம் ஆடிக்கொண்டே இருக்கையில், சோர்வு என்பதே தோன்றாது. மேலும் மேலும் உங்களுக்குள்ளிருந்து சக்திப் பிரவகித்து உங்களை ஆடிக் கொண்டே இருக்கச் செய்யும்.
எவ்வளவு அதிகம் ஆடுகிறீர்களோ, அவ்வளவு அதிகம் சக்தி பெற்றவர்களாக ஆவீர்கள்!
மற்ற தியானங்களைப்போல் அல்லாமல் நடனத்தைப் பற்றிய கவனமோ, ஆடும் உங்களைப் பற்றிய கவனமோ இருக்கக்கூடாது. நடனத்திற்குள் ஆழமாக ஆழ்ந்து விடுங்கள். முடிந்தவரை, வேகமாக ஆடுங்கள்; சுதந்திரமாக ஆடுங்கள்.
உங்களை முழுமையாக மறந்து விடுங்கள். நாட்டிய மாகவே மாறி விடுங்கள்.
அமைதி ( 1 0 நிமிடங்கள்) :
21 நிமிடங்கள் முடிந்த பிறகு, உரத்த மணியோசை கேட்கும். நீங்கள் அப்போது, எங்கே, எப்படி இருக்கிறீர்களோ, அப்படியே தரையில் சாய்ந்து விடுங்கள். விழுந்து விடுங்கள்! படுத்துக்கொள்ளுங்கள். அசையாமல் மௌனமாய் இருங்கள்.
திடீரென சட்டென அசையாத் தன்மைக்குச் சென்றுவிடும்போது, ஒரு கண நேர இருளை நீங்கள் அனுபவிக்க நேரும். உங்கள் மனத்தில் எந்த எண்ணங்களும் இராது; வெறும் அமைதி மட்டுமே நிலவும்.
சில வினாடிகளில், எண்ணங்கள் திரும்பி வர ஆரம்பிக்கும். அமைதியாக அந்த வண்ணங்களைச் கவனியுங்கள்.
அவற்றோடு போராடாதீர்கள்.
அவற்றிற்குள் மூழ்கி விடவும் வேண்டாம்.
விழிப்புணர்வுடன் இருந்தால் போதும். நீங்காத அமைதி உங்களுக்குள் ஏற்படுவதை நீங்கள் உணரலாம்.
எண்ணங்கள் தோன்றிய பின்பும்கூட, மாபெரும் அமைதி உங்களுக்குள் நிலைபெறும். அந்த அமைதியை, அந்த மௌனத்தை, உங்களது நாள் முழுவதற்குமாகக் கொண்டு செல்லுங்கள்.
உங்கள் உறக்கத்திற்கும் கூடக் கொண்டு செல்லுங்கள்.
அதன் பிறகு, நீங்கள் புத்தம், புதியதாய் உற்சாகத்துடன் விழித்தெழுவீர்கள்.
இந்தத் தியான முறையைப் பற்றி :
இது ஓர் அழகான, ஆனால் சிரமமான தியானம்.
எல்லாவற்றையும் உள்ளடக்கிய தியானம் இது.
நமது மற்ற தியான முறைகள் அனைத்துமே ஒருவகை எதிர்மறை பண்பைக் கொண்டவை - அவை, நான் உடலல்ல : நான் மனமல்ல என்பது போன்றதாக இருக்கும்;ஆனால் இந்தத் தியானத்தில் அதற்கு நேர்மாறாக, எல்லாவற்றையும் அங்கீகரித்தபடி நாம் செயல்பட போகிறோம்.
கடைசியில் 'நானே எல்லாம்' என்ற முடிவுக்கு வரப் போகிறோம்.
செயல்முறை விளக்கம்:
கண்களைமூடி தொடங்குங்கள்.
உங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள எல்லாவற்றின் மீதும் கவனம் செலுத்துங்கள்.
உங்களிடமிருந்தே ஆரம்பியுங்கள்.
உங்களது உடல், உங்கள் மனம், உங்கள் எண்ணங்கள், உங்கள் மூச்சு, உங்கள் உணர்வுகள் ஆகிய எல்லாவற்றின் மீதும் கவனம் செலுத்துங்கள்.
உங்களுக்குள் அவற்றையெல்லாம் அனுமதியுங்கள். ஏதொன்றிலும் நிலைத்துவிடாமல் நீரோட்டமாய் இருங்கள்.
மூச்சின் மேல் கவனம் இருக்கட்டும். உங்களது உடலின் திரவ வடிவின் மேல் கவனம் இருக்கட்டும். நீங்கள் நினைப்பதுபோல், உங்களது உடல் விறைப்பானது அன்று!
நீங்கள் கண் மூடி இருக்கையில், உங்களது உடல் நுட்பமாக வடிவம் மாறுவதையும், கனமாவதையும், கனமற்றதாவதையும், விரிவதையும், சுருங்குவதையும் உணரலாம்.
சாதாரண உடல் பற்றிய நமது கருத்து எப்போதுமே மாறாமல் இருக்கும். அதனால்தான், அந்த நுண்ணிய மாற்றங்களை நம்மால் அறிய முடிவதில்லை.
விழிப்புணர்வற்ற விதத்தில் இதை நாம் அடிக்கடி உணரலாம்.
வெறுப்பு மிக்க குழலில் இருக்கும்போதோ, அச்சம் எழும்போதோ, உணரும்போதோ, நீங்கள் சுருங்குவதுபோல உணர்வீர்கள்.
நீங்கள், மகிழ்ச்சி நிறைந்து, அன்பு கொண்டு, நீரோட்டமாய்ப் அறையையே நீங்கள் நிறைக்கு விடுவீர்கள். எல்லாவற்றையும் உள்ளடக்கும்போது, நீங்கள் விரிவடைவதை உணர்வீர்கள்.
உங்கள் இருப்பிற்குள் எல்லாவற்றையும் கொண்டு வாருங்கள். "நான் இல்லை," என்று சொல்லாதீர்கள், மாறாக, ''நான் இருக்கிறேன்,'' என்று சொல்லுங்கள்.
மெல்ல மெல்ல உங்களுக்குள் ஒரு மையம் இல்லை என்பதை உணரத் தொடங்குவீர்கள். ஒரு மையம் இல்லை என்றால், ஆணவம் எந்த இடத்தில் ஊன்றி நிற்க முடியும் ?
விலகியிருக்கும் தனித்தன்மை, ஆணவத்திற்குத் தேவைப்படுகிறது. எல்லாம் உள்ளடங்கிய நிலையில், ஆணவத்திற்கென்று ஏது தனியிடம் ?
ஆணவம் போய்விட்டால், விழிப்புணர்வு மட்டுமே மிஞ்சியிருக்கும். விழிப்புணர்வு விரிவடைந்து வானத்தையும் உள்ளடக்கிக் கொள்ளும். பிறகு அந்த வானம் உங்களது ஒரு பகுதியாக மாறிவிடும். அது உதயத்தை உள்ளடக்கும்; பிறகு அது உங்களுக்குள் நிகழும்.
காலைப்பொழுதின் தென்றல் உங்களுக்குள் தவழ்வதை உணரலாம். மரங்களும்,
பாறைகளும், உங்களுக்குள் வந்து விடும்.
அது ஒரு மாபெரும் அனுபவம்.
நீங்கள் அதை அனுபவித்தால் மட்டும்தான் எல்லாவற்றிற்கும் இடையிலுள்ள பந்தத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.
உங்கள் எல்லை எப்போதும் குறுகியது.
இப்போது அது பிரபஞ்சத்தையே உள்ளடக்கியபடி விரிவடைகிறது !
இந்தத் தியான முறையைப் பற்றி :
நினைவிற்கெட்டாத பழங்காலம் முதலே, ''கண்களை மூடு! உன் உண்மை இயல்பை உள்ளே பார்!' என்றுதான் சொல்லி வந்திருக்கிறார்கள்.
சிவன் தேவிக்குச் சொன்ன, தந்திர சாஸ்திரம் இதுதான். இது தியான முறைகளின் களஞ்சியம்.
இதில் கண்கள் மிக (இரண்டு வகையில்) முக்கியமான பங்கு வகிக்கின்றன. அவை திறந்திருக்கும்போது, உலகத்துச் செய்திகளையெல்லாம் உங்களுக்குத் தெரிவிக்கும் தூதுவர்கள் ; அவை மூடி விட்டால், அவையே உள்உலகத்தின் காட்சி களை காட்ட ஆரம்பிக்கின்றன.
கண்களை மூடுவதல்ல! கண்களை மூடச் சொல்லும்போது, நாம் இயல்பாக இமைகளைத்தான் மூடுகிறோம்.
மூடிய உருவங்களையே நாம் தொடர்ந்து பார்க்கிறோம். வெளியில் உள்ள தொலைக்காட்சியை அணைத்துவிட்டு. உள்ளே உள்ள தொலைக்காட்சியைப் போட்டு விடுகிறோம்! அப்போது நம் கண்கள் மூடவே இல்லை என்று பொருள்.
கண்களை அசையாமல் இருக்கச் செய்ய ஒரு சிறந்த வழி இருக்கிறது. உங்கள் கண்களின் கருவிழிகள் கல்லாக மாறிவிட்டதாகக் கற்பனை செய்துக்கொள்ளுங்கள். கருவிழிகள் இருக்கும் இடத்தில், இரண்டு பளபளப்பான கருப்பு உருண்டைக் கற்கள்! கற்பனை செய்து பாருங்கள்.
அப்படி மட்டுமல்ல, எண்ணங்களும் நின்றுபோவதைக் காணலாம்! விழியசைவு நின்றால், எண்ணங்களின் போக்கு மெல்ல நிதானப்படும்.
செயல்முறை விளக்கம் :
கண்களை கல்லாய்ப்போனதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். வேறு எதுவும் செய்ய வேண்டாம்.
அதே நிலையில் இருங்கள்.
இது எளிதான காரியமல்ல. அந்த நிலையில் சில நிமிடங்கள் இருப்பதற்கும் கூடப் பல வாரங்கள் பயிற்சி செய்ய வேண்டி வரும்.
ஆனால் அதற்கான பலன் உண்டு - காரணம், அப்போதுதான் நீங்கள் முதன்முதலாக உள்ளே பார்க்க ஆரம்பிக்கிறீர்கள்.
நீங்கள் உங்கள் உடலை உள்ளிருந்து பார்த்ததே இல்லை.
இப்போது, ஒவ்வொரு உறுப்பையும் உள்ளிருந்து காண முயற்சி செய்யுங்கள். உங்கள் கையை அசைத்தால், அது உள்ளிருந்து பார்க்கும் அனுபவமாகவே உங்களுக்குத் தென்படும். இதுவரை அது வெளியிலிருந்து பார்க்கும் அனுபவமாகவே இருந்து வந்தது. உங்கள் உடலினுள் ஒரு உள் பயணம் செய்து பாருங்கள்.
கை விரலின் முனையிலிருந்து தொடங்குங்கள். மிகுந்த விழிப்போடு செய்ய வேண்டும். கை விரல் முனை தவிர வேறு எந்த நினைவும் இருக்கக்கூடாது!
பிறகு நினைவை மெல்ல கை, தோள் என மேலே கொண்டு வாருங்கள். உங்கள்உடலின் ஒவ்வொருபகுதியிலும் அளவு கடந்த உணர்வை நீங்கள் அனுபவிப்பீர்கள்.
உங்கள் உடலை உள்ளிருந்து அனுபவிக்கும்போது, 'நீங்கள் ஓர் உடல் அல்ல' என்ற உணர்வை இயல்பாகவே பெற்று விடுவீர்கள்.
உங்கள் உடலையே நீங்கள் ஒரு பார்வையாளராக இருந்து பார்க்கும்போது, நீங்கள் எவ்வாறு ஒர் உடலாக இருக்க முடியும் ?
நீங்கள் ஓரு உடல் என்ற மாயையிலிருந்த நீங்கள் தியானம் உங்களுக்காக
விடுபட்டு விடுவீர்கள். உங்கள் உடலுடனான உங்களது அடையாளத்தை நீங்கள் இழந்து விடுவீர்கள்.
இப்போது நீங்கள் எளிதாக ஆழமாகச் செல்ல முடியும். உங்கள் மனத்தின் அடியாழத்திற்குச் செல்ல முடியும். உங்கள் மனத்தைப் பார்க்க ஆரம்பிக்க முடியும், அது எளிதல்லதான்.
ஆரம்பத்தில். எல்லாவற்றையும் நீங்கள் பார்ப்பது உங்கள் தலைக்குள்கான். ஆனால் அது உங்கள் மனமல்லவே! உங்கள் மனம், மூளையிலிருந்து வேறுபட்டது.
நீங்கள் சாதாரணமாக உங்கள் மனத்தை எப்படி கற்பனை செய்து வைத்திருக்கிறீர்கள் என்று நினைத்துப் பாருங்கள். அதை வெளியிலிருந்து பாருங்கள். இப்போது, முறையைத் தலைகீழாக மாற்றுங்கள். மனத்திற்குள் நுழைந்து, அதை உள்ளிருந்து பாருங்கள்.
தொடர் பயிற்சியில், எல்லாம் நிகழந்துவிடும். உங்கள் உடலைப்போலவே, நீங்கள் மனத்திலிருந்தும் வேறுபட்டவர் என்பதைக் காணலாம். நீங்கள் பார்வையாளர் மட்டுமே.
நீங்கள், உங்கள் உடலுமல்ல ; மனமுமல்ல என்றால் - நீங்கள் யார் ?
இரண்டின் பார்வையாளர் நீங்கள்.
அதுதான் உங்களது உண்மையான சுயம். உங்களது உண்மையான சுயத்தை உங்களால் பார்க்க முடியாது. காரணம் நீங்கள் அதற்கு வெளியே இல்லை.
உங்ளால் காண முடியாகுகே 'நீங்கள்'.
இந்த முறைகளில் பயிற்சி மேற்கொள்ளும்போது. பொறுமை வேண்டும்.
முதல் நாளன்றே உங்கள் முன்னால், அற்புதங்கள் குதித்து வந்துவிடாது. மனமொடிந்து போய் விடாதீர்கள்.
அபைவும் முயற்சிகளுக்கெல்லாம் பயன் கிடைத்துவிட்டதாகப் பொருள். அது, உங்களுக்குள் ஒரு நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்தி விடும்.
அதற்குத் தயாராக இருங்கள்!
இந்தத் தியான முறையைப் பற்றி :
ஒவ்வொரு கணத்திலும், நம்முடைய ஒவ்வொரு அசைவையும் கவனத்தில் கொள்ளச் செய்யும் தியானம் இது.
இது தந்திர சாஸ்திரத்தில் இருக்கும் ஒரு தியான முறையாகும். மகா குருவான குர்ட்ஜியெஃப், இதனை மேலை நாடெங்கிலும் பிரபலப்படுத்தினார்.
செயல்முறை விளக்கம் :
போதும், உண்ணும் நடக்கும்போதும், பேசும்போதும் உங்களை நீங்கள் நினைவு
கொண்டிருந்தால் போதும்.
நாம் நம்மைப் பற்றியதான உணர்வை. சில வினாடிகளுக்கு மேல் நீடித்து வைத்திருக்க முடியாது. உடனே மறந்து விடுவோம்.
நீங்கள் நினைப்பீர்கள். அனால் உங்கள் மனம் வேறொரு சிந்தனைக்குக் காவி விடும்!
சுய நினைவு என்பது, நினைப்பது அன்று. அதாவது, சிந்திப்பது அன்று.
அது சுய விழிப்புணர்வு. 'நான் இருக்கிறேன்' என்று நினைவு வந்தாலே, முக்கிய அம்சத்தை நீங்கள் இழந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
அதைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம். 'நான் இருக்கிறேன்' என்ற சொற்களையே திரும்பத் திரும்ப நினைக்கிறோம்.
சொற்கள் அனுபவம் ஆகாது.
அதைச் சொல் வடிவமாக மாற்றாதீர்கள். இயல்பாக உணருங்கள், 'நான் இருக்கிறேன்' என்று அதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். 'நான் இருக்கிறேன்' என்பதை உணருங்கள்.
நீங்கள் ஒன்றுதான், நடந்து செல்லும்போது. ஒரு கணம் நின்று, நீங்கள் இருப்பதை உணருங்கள். இந்த விழிப்புணர்வு தொடரட்டும்.
வெயில் உங்கள் முகத்தின்மேல் விழுவதையும் காற்று உங்கள் கூந்தலைக் கோதுவதையும் உணருங்கள்.
இந்த அனுபவங்களை உங்கள் உள்ளிருந்து அனுபவிக்கும் அந்த உண்மையான உங்களை 'நான்' என்று வெறுமனே உணருங்கள்.
ஒரு கணக்த்தில் நீங்கள் உங்களுக்குள் தூக்கி எறியப்படுவீர்கள்! அப்போது, ஆழ்ந்த மௌனத்தையும், எதார்க்க நிலையையும் 'பளிச்' எனப் பற்றிக் கொள்வீர்கள்.
அது சொல் கடந்தது. அனுபவித்தே உணர முடியும். ஒன்றைத் தொடும்போது, . அந்தத் தொடுதலை வெறுமனே உணருங்கள், தொட்டவரையும் உணருங்கள். இதனால் உங்கள் விழிப்புணர்வு மேலும் கூர்மையுடையதாக ஆகும்.
அந்த விழிப்புணர்வை, எல்லா நேரங்களிலும் உணருங்கள்.
உண்மையில் பார்ககப்போனால், இதை எல்லா நேரத்திலும் செய்யும் தியானமாக ஆக்கிக் கொள்ளுளுங்கள்.
இந்தத் தியான முறையைப் பற்றி :
வானத்தை முன்னிலைப்படுத்தி தியானம் புரிவது தான் வெறுமையைத் தியானம் புரிவது.
தெளிந்த நீலவான்மே பூரண வெறுமை.
அதன் மீது தியானம் செய்வது என்பது தெளிவுக்குள் பிரவேசிப்பது.
செயல்முறை விளக்கம் :
மேகமில்லாத தெளித்த நீலவானம் புலப்படும் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
அமைதியான இடமொன்றில் படுத்துக்கொண்டு வானத்தைப் பார்க்கத் தொடங்குங்கள்.
கண்களை இமைக்கக் கூடாது - கண்களில் நீர் வழிந்தால்கூட, வெறிந்தபடி பார்த்துக் கொண்டே இருங்கள்.
கண்ணீர் கண்களை விடுங்கள்.
கண்ணீர் கண்களை கழுவிய பிறகு, உற்றுப் பார்ப்பது எளிதாகி விடும்.
வானத்தைப் பற்றி நினைக்காதீர்கள்!
அந்த வானம் எவ்வளவு அழகாக நீலமாக இருக்கிறது என்றெல்லாம் நினைக்காதீர்கள். எந்த வினாடி அதைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கிறீர்களோ, அந்தக் கணமே நீங்கள் வானத்தைவிட்டு விலகி விடுவீர்கள்.
உங்கள் பணி வானத்தைப் பற்றி நினைப்பதன்று ; அப்படியே அதற்குள் பகுந்துவிடுவது.
சும்மா பார்க்குக் கொண்டிருப்பதன் முலலம். வானத்தின் துல்லியத்தை உணருங்கள். நீலவானத்தின் தூய்மையை உணருங்கள். அதற்குள் பிரவேசித்து விடுங்கள். வானத்திற்குள் ஆழமாகச் சென்று விடுங்கள்.
மேலும் மேலும் ஆழமாகப் பார்க்கப் பார்க்க இன்னும் ஆழத்தினுள்ளே செல்ல முடியும்.
அதனோடு ஒன்றிவிடும்வரை பார்த்திருங்கள்.
அதனோடு ஒன்றிவிட்டதாக நீங்கள் நினைக்கும்வரை அன்று! அதனோடு ஒன்றிவிட்டால், அது உங்களுக்குத் தெரிந்துவிடும். ஒரு மணி நேரமோ, அதற்கு மேலுமோ ஆகலாம். நிறுத்தாதீர்கள்.
உங்களது சிந்தனையை அலைபாய விட வேண்டாம்.
உங்களது பார்வையை வானத்தை விட்டு அகற்ற வேண்டாம்.
இனி, கண்களை மூடுங்கள்.
அந்தச் சங்கம் உண்மையில் ஏற்பட்டிருந்தால்,
தியானம் உங்களுக்காக
வானம் உங்களுக்குள் இருப்பதை உணர்வீர்கள்!
உங்களது மனம் கழன்று காணாமல் போகும். உங்களது எண்ணங்களும் மறைந்துபோகும். அந்த வானத் திற்குள் இருங்கள்.
ஆரம்ப கட்டத்தில், அது, ஒருசில கணமாகவே அமையும்.
பயிற்சி மேற்கொள்ள மேற்கொள்ள, அந்த நிலையை மேலும் அதிக நேரம் அனுபவிக்க நேரும். தெளிந்த வானம் உங்களுக்குள் இருக்க, நீங்கள் மனமற்ற நிலையை உணர்வீர்கள்.
இந்தத் தியான முறையைப் பற்றி :
உங்கள் இதயத்தின் மையத்தைத் திறக்கச் செய்யும் வழிகளில் ஒன்றுதான் இந்தத் தியானம்.
இதயம் ஓர் அழகான வாயில்.
அதன் மூலமாகவே நீங்கள் எதார்த்த நிலைக்குள் பிரவேசிக்க முடியும்.
நீங்கள், அறிவு சார்ந்த மனிதராக, உணர்வுகளை விட புத்திசாலித்தனத்தை நம்புகிற மனிதராக இருந்தால், உங்களுக்குத்தான் இது மிகமிகத் தேவையானது.
ஆனால் ஒருவகையில் நாம் எல்லோருமே அறிவு சார்ந்த மனிதர்களே! இன்றைய உலகில் இதயம் சார்ந்த மனிதர்கள் நீண்ட காலம் உயிர் வாழவே முடியாது! அதனால் நாம் நமது மனத்தை வலிமை கொண்டதாகச் செய்து கொள்கிறோம்.
நமது இதய மையம் பலவீனமானது.
நாம் அதற்குப் பயிற்சி கொடுக்காதகே அகன் பலவீனத்திற்குக் காரணம்.
நாம் நமது இதயத்தைச் செயல்பட வைப்பதில்லை: நாம் நமது இதயத்திலிருந்து செயல்படுவதும் இல்லை.
செயல்முறை விளக்கம் :
மிக எளியது; அதேசமயம் ஆச்சரியமானது!
நீங்கள் உங்களுக்குத் தலை இல்லாததாக நீங்கள் கற்பனை செய்து கொள்ள வேண்டும் !
இது ஒன்றும் வேடிக்கை அன்று, எளிமையான தியானம்தான். ஆனால் துவக்கதில் மிகவும் கடினமாக இருக்கும் தியானமுறை இது.
நடந்தாலும், இருந்தாலும், தலையற்றவராகவே உணர்க !
தலையே காணாமற் போய்விட்டதாக உணர்க.
தியானம் உங்களுக்காக
(குறிப்பு அலுவலகம் மற்றும் வீட்டு வேலைகள் செய்யும் நேரத்தில் செய்யக்கூடாது. மேலும் போக்குவரத்துள்ள இடங்கள், சாலைகள், வீதிகளில் இந்தத் தியானத்தை நிச்சயமாக செய்யக்கூடாது.
ஆட்கள் நடமாட்டமில்லாத பூங்காக்கள், உங்களின் தனி அறை, உங்கள் வீட்டிற்கு உள்ளே இந்தத் தியானத்தைச் செய்யலாம்.
இந்தத் தியானத்தின்போது மாடிப்படி ஏறுவதும், மாடியிலிருந்து கீழே இறங்குவதும், வாகனங்கள் ஓட்டுவதும் நிச்சயமாகக் கூடாது.
இனி உங்கள் கவனமெல்லாம் உங்கள் இதயத்தின் மீதே குவிய வேண்டும்.
ஆரம்பத்தில் அது ஒரு நரு பாவனையாகவே இருக்கும். செயற்கையான, கவனச் சிதைவாகவே இருக்கும். நீங்கள் உங்களின் உடற்கூற்றின் மீதான ஆளுமையை இழந்ததாக உணர்வீர்கள்.
இவற்றின் உறுப்புகளுக்கெல்லாம் எவ்வாறுதான் பார்ப்பது, கேட்பது, பேசுவது?" என்று நீங்கள் கேட்கலாம்.
இந்தத் தியானத்தில் உங்கள் உணர்வு உறுப்புகள் காணமற்போய்விடவில்லை - அவை அப்படியே உங்களது இதயப் பிரதேசத்திற்குள் நமுவி விழுந்துவிட்டன!
பார்வையற்றவர் எவ்வாறு தமது கைகளைக் கண்களாகப் பயன்படுத்துகிறார்களோ, அதேபோல நீங்கள் உங்கள் இதயத்தைப் பயன்படுத்துவீர்கள். நீங்கள் இதயம் கொண்டுபார்ப்பீர்கள். இதயம் வழியாகப் பார்ப்பீர்கள்.
முயற்சி செய்து பாருங்கள்!
உங்களால் முடியும்.
ஒரு கண்ணாடியின் முன் நின்று, அதில் தோன்றும் உங்கள் கண்களையே ஆழமாகப் பாருங்கள். அப்போது இதயத்திலிருந்து பார்ப்பதாக உணருங்கள்.
உங்களது இவ்வொரு செயலையும் இதயம் கட்டுப்படுத்தட்டும். உணருங்கள்.
மெல்ல மெல்ல, உங்களது இதய மையம் மலரும். மெய்யாகவே மலரும். அந்தப் பூப்பூத்தலை உள்ளே நீங்கள் உணர்வீர்கள்.
பிறகு அன்பின் பிரவாகத்தை உணர்வீர்கள்.
உங்கள் செயல் ஒவ்வொன்றும், மேலும் அன்பு கூடியதாக அமையும். அதனால்தான் யாராவது ஒருவர் காதலில் உள்ளபோது, 'தலை இழந்துவிட்டான்' என்று குறிப்பிடுகிறோம்.
உங்களுக்குள் அன்பு பாயும்போது, உங்களது இதய மையம் நிறைந்து வழியும்போது, மெய்யாகவே உங்கள் தலை காணாமல் போய்விடும்.
அதன்பிறகு, கட்டுப்படுத்தாது. இந்தத் தியானத்திற்குத் திட்டமிட்ட காலவரையறை இல்லை.
எப்போதெல்லாம் அப்போதெல்லாம் உந்துதல் ஏற்பட்டாலும் பயிற்சியைச் செய்து வர வர, மேலும் மேலும் அன்பு கொண்டவராக மாறுவதைக் காண்பீர்கள். அதிசயமான முறையில், உங்கள் உறவுகள் வளர்ச்சி அடையும். உலகம் ஒத்திசைவு நிறைந்திருப்பதாக உணர்வீர்கள்.
நீங்கள் கடவுளை நோக்கி ஓரடி எடுத்து வைத்து விட்டீர்கள்.
இந்தத் தியானமுறையைப் பற்றி;
இந்தத் தியானம் தந்திர சாஸ்திரத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது சொல்கிறது, "உங்கள் சாரம், ஒரு சக்தி மையத்திலிருந்து இன்னொரு சக்தி மையத்திற்கு மேலெழுகிறது - உங்கள் முதுகுத் தண்டுவடத்திலும் இது நிகழ்கிறது. அதன் காரணமாக உங்கள் உயிர்த்துடிப்பு உங்களுக்குள்ளே பெருகும்.
முதுகெலும்புதான் உடலுக்கும், மனத்திற்கும் ஆதாரம். உடலும் மனமும் முதுகெலும்பில்தான் வேர்விட்டு நிற்கின்றன.
உங்கள் வயது, முதுகெலும்பில்தான் தங்கி இருக்கிறது. முதுகெலும்பு எளிதில் வளையக் கூடியதாக இருந்தால் நீங்கள் இளமையாக இருப்பதாகப் பொருள். முதுகெலும்பு விறைப்பாக இறுகியிருந்தால் நீங்கள் முதியவர்!
ஏழு முக்கிய சக்கரங்கள் அல்லது சக்தி மையங்கள் உடலின் முதுகெலும்பின் அடியில் இருப்பது மூலாதார சக்கரம். பாலுணர்வு மையம் அது. தலையின் உச்சியில் இருப்பது சஹஸ்ரார சக்கரம். கடவுளை நோக்கிக் கதவு திறக்கும் மையம் அது.
முதுகெலும்புதான் சக்திப் பாதை.
இந்தத் மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரத்திற்கு எழுப்புவீர்கள். அதாவது மேல்நோக்கிச் செலுத்துவீர்கள். இந்த இயக்கம் எளிதில் ஏற்படாது. காரணம், இது புவிஈர்ப்புக்கு எதிரானது! உங்கள் சக்தியைக் கீழ்நோக்கிச் செலுத்துவது மிகவும் எளிகானது.
நமது சக்தியில் 80% நமது மூலாதாரத்தில்தான் முடங்கிக் கிடக்கிறது. உங்களைக் கீழே தரையை நோக்கி இழுக்கும் கனமான எடைபோல, உங்கள் முதுகின் கீழ்ப்பகுதி பாரமாக இருப்பதை நீங்களே உணர்ந்திருப்பீர்களே!
இந்தச் சக்தியை மேலெழுப்பி, சஹஸ்ராரத்தின் வழியாக வெளியேற்றும்போது, எல்லையற்ற கனமில்லாத உணர்வையும், சுதந்திரத்தையும் நீங்கள் உணர்வீர்கள். அப்போது பரவசத்தின் சுவையை நீங்கள் உணர்வீர்கள்.
செயல் முறைக்கான விளக்கம் ;
முதுகுத் தண்டுவடம் நேராக நிற்க, கண்களை மூடியபடி நேராக, சௌகரியமாக அமர்ந்துகொள்ளுங்கள்.
நீங்கள் ஒளியாக இருப்பதுபோல் கற்பனை செய்தபடி இருங்கள்.
நீங்கள் ஒளி.
எல்லாமே ஒளிமயம்.
உங்களை நீங்கள் ஒரு சக்தியாக என்றும் உணர்வதே இல்லை. உங்களை ஒரு பொருளாகத்தான் நீங்கள் உணர்வது வழக்கம்.
உங்களை ஓர் ஒளித் தூணாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இனி, முதுகெலும்பின் நுனியிலிருக்கும் பாலுணர்வு மையத்தின் மீது கவனத்தைத் திருப்புங்கள். அது ஒளிப் பந்துபோல, ஒளிமயமாகவும், இருப்பதாக உணருங்கள்.
இனி, அது அந்த ஒளி, மேல் நோக்கி, உங்கள் தொப்புள்வரை நகர்வதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
ஒருவிதமான வெதுவெதுப்பு உள்ளே மேலெழுவதை உணரலாம். அது உண்மையான வெதுவெதுப்பு! தொப்புளும் - இடைப் பகுதியும் - ஒளிப் பந்தாக மாறும். ஒளியின் ஒரு பகுதிமேல் நோக்கி உயரத் தொடங்கும்.
அடுத்து, அந்த ஒளி, மேல்நோக்கி இதய மையத்தை நோக்கி நகர்வதாக உணருங்கள்.
இதயத்தில், ஒளியையும் உணருங்கள்.
மூச்சு ஆழப்படுவதை உணருங்கள்;
இதயத் துடிப்பு மிகவும் அமைதியாக அடிப்பதை உணருங்கள்.
அந்தச் சக்தி, அதன் பிறகு புருவ நடுச் சக்கரம் நோக்கி நகர்வதைக் காணுங்கள். அந்தப் பகுதி முழுவதும் ஒளியால் சூழப்பட்டிருப்பதை உணருங்கள்.
மெதுவாக அந்த ஒளிச் சக்தியைத் தலைப் பகுதிக்கு உயர்த்தவும்.
சக்தி புதுமையான தோற்றங்களை அனுபவிப்பீர்கள். தலை சுற்றலும், மயக்கமும்கூட ஏற்படலாம். அதிக சக்தி தலைக்கு ஏறும்போது, பெரிய வெடிப்புப் போன்ற உணர்வும் ஏற்படலாம். அதற்கு அஞ்சாதீர்கள்.
தலை சுற்றுவதுபோலத் தோன்றினால், விழுவதுபோல உணர்ந்தால், விழுந்து விடுங்கள். மயக்கம் வந்தாலும் சரி, கவலை வேண்டாம். அது, 'யோக தந்திரம்' என்னும் மிகுந்த ஆழ்நிலை உறக்கம்.
தியானிப்பவர் பலர் இந்த நிலை அனுபவம் பெறக்கூடும். அதற்காக அஞ்ச வேண்டியதில்லை.
அரைமணி திரும்பிவிடுவீர்கள்.
சக்கி, தலைப் பகுதியை அடையும்போது, தலை முழுவதும் மெதுவாகச் சூடேறும். தலையே ஓர் ஒளிப்பந்தாக மாறிவிடும்.
இப்போது, அந்த ஆற்றலைப் பிரபஞ்சத்திற்குள் செலுத்துங்கள். உங்கள் தலையே அழகிய தாமரை மலரின் மடல்களாக மெல்லத் திறந்து, அதன் ஆற்றலைப் பிரபஞ்சத்திற்குள் செல்லும்படி விடவும்.
வர் எச்சரிக்கை :
எந்தக் காரணம் கொண்டும், இந்தத் தியான பயிற்சியைப் பாதியில் நிறுத்தக்கூடாது.
ஆரம்பிப்பதற்கு முன்பே, இரண்டு மணி நேரம் எந்த இடையூறும் ஏற்படாதவாறு செய்து கொள்ள வேண்டும்.
எந்தத் தடங்கலையும் நடுவில் அனுமதிக்க வேண்டாம். பாதி வழியில் நிறுத்திவிட்டு எழுந்தால், சக்தி, ஒரு குறிப்பிட்ட மையத்தில் கட்டியாகத் தேங்கிவிடும். அது, உடல், மனச் சீர்கேடுகளுக்குக் காரணமாகிவிடும்.
உங்களது பாலுணர்வுச் சக்தியை, ஆன்மிகச் சக்தியாக மாற்றுவதற்கு இந்தத் தியானமுறை மிகவும் அழகான முறை.
தொடர்ந்து இந்த முறையில் பயிற்சி செய்து வர, உங்களின் அமைதியையும், மனத்தையும் பாதிக்கும்.
காம உணர்வுகள், மெல்ல அப்படியே நின்று விடும்.
நாள் முழுவதும் அதிகமான வழிபாட்டுணர்வை நீங்கள் உணர்வீர்கள். அதிக அளவில், சக்தி உங்கள் தலையை நோக்கிப் பாய்வதால், நீங்கள் மிகுந்த உயிர்த் துடிப்பு உள்ளவராக உணர்வதோடு, உங்களது செயல்பாடுகளும் மிகுந்த திறமையுடன் அமையும். மிக முக்கியமான அம்சம், நீங்கள் தொடர்ச்சியான ஆனந்த நிலையைப் பெறுவது தான்.
செயலை நிறுத்து!
இந்தத் தியான முறையைப் பற்றி :
நமது வாழ்வு முழுவதுமே, செய்தல், பெறுதல் என்ற இரு துருவங்களுக்கிடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
வாழ்வில் நாம் செலுத்தும் கவனம் எல்லாம், 'செயல்' பற்றியே. ஒரு செயலிலிருந்து இன்னொரு செயலுக்கு என நாம் ஓய்வில்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கிறோம்.
வாழ்க்கை முழுவதிலும், செய்தல், செய்தல் என ஏதாவதொன்றைச் செய்து கொண்டே இருக்கிறோம்.
நாம் வேலை செய்கிறோம், நாம் பேசுகிறோம், உறவினர்களிடம் உள்ள உறவை ஆழப்படுத்திக் கொள்கிறோம், நாம் நகர்கிறோம்,
நாம் திட்டமிடுகிறோம்.
உடலளவிலும், மனதளவிலும், நாம் இடைவிடாமல் ஏதாவதொன்றைச் செய்து கொண்டே இருக்கிறோம்.
தியானம் உங்களுக்காக
ஏகாவது பெற வேண்டும் என்பதற்காக.
மேலும் மேலும் உடைமைகளைச் சம்பாகிக்க நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். உடைமைகள், நம்மை மிக வலுவுள்ளவர் ஆக்குகிறது.
அதனால் நாம் அதிகப் பணம், அதிக மரியாதை, அதிக நண்பர்கள், அதிகச் சான்றிதழ்கள், அதிக ஆரோக்கியம், அதிக அழகு, அதிக அறிவு எனப் பலவற்றையும் பெற முயற்சி செய்கிறோம்.
இந்தச் கொள்ளுதலுக்கும், நடுவில் சிக்கிக்கொண்டு நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதையே நாம் மறந்து விட்டோம்.
செயல், உடைமை ஆகியவற்றைவிட, உண்மையில் முதன்மை பெற வேண்டியது 'இருத்தல்தான்.'
ஆனால் அந்த மையத்தைத் தொட்டு மிக நீண்ட காலம் ஆகிவிட்டது நமக்கு.
'நிறுத்து!' - என்பதும் தந்திர சாஸ்திரத்திலிருந்து பெறப்பட்ட தியான நுணுக்கம். இதைப் பிரபலப்படுத்தியவர் குர்ட்ஜியெஃப்.
(குறிப்பு ; வாகனங்கள் ஒட்டும்போதும், பளு தூக்கும்போதும், நீரில் இருக்கும்போதும் மற்றும் பொது இடங்களிலும் இந்தத் தியானத்தைச் செய்யக்கூடாது).
இந்தத் தியானம் எளிமையானது; நீங்கள் எதைச் செய்துக் கொண்டிருந்தாலும், நடுவில் அதைச் சட்டென நிறுத்துவது பற்றியது இந்த முறை!
சட்டென நிறுத்தப் போகிறோம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடாது !
அதனால் நாள் முழுவதும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிற யாராவது ஒருவர், உங்களது செயலின் நடுவே குறுக்கிட்டு, சட்டென, "நிறுத்து !" என்று உரக்கக்குரல் கொடுக்க வேண்டும், அவர்கள் விரும்பும் இடத்தில்! இது ஒருவகைச் சிலை விளையாட்டுப்போலத்தான்.
நீங்கள் நன்றாக ஆழ்ந்திருக்கும் செயலைச் சட்டென நிறுத்துவதால், அதிர்ச்சியும், மௌனமும் பெறுவீர்கள். அந்தக் கணப்பொழுதில்… நீங்கள் உங்களது 'இருப்புக்குள்' தூக்கி எறியப்படுவீர்கள்.
செயல்முறை விளக்கம் :
இந்தத் தியானத்தைத் தனியாகவோ, ஒரு குழுவாகச் சேர்ந்தோ செய்யலாம்.
உத்தரவிட மட்டும் ஒருவர் இருந்தால் போதும்.
ஆனால் அடிக்கடி உத்தரவிடுதல் கூடாது.
அப்படி செய்தால் உத்தரவு வரும் என்ற எதிர்பார்ப்பு உங்களுக்குள் ஏற்பட்டுவிடும் !
நீங்கள் நடக்கும்போதும், பேசும்போதும், வேலை செய்யும்போதும், நடனமாடும்போதும் - "உறைந்து விடு!" ''நிறுத்து!'' என்ற குரல் கேட்டதும், சட்டெனச் செயலை நிறுத்திச் சிலைப்போல நின்றுவிட வேண்டும்.
ஒரு கை மைலை உயர்த்தியபடி இருந்தாலும், வாய்திறந்தபடி இருந்தாலும் வேண்டியதுதான்.
இதை நேர்மையாகச் செய்யுங்கள். சௌகரியமான நிலைக்கு நகர்ந்து கொள்ள வேண்டாம். ஒரு கணத்தாமதமும், மிகத் தாமதம்தான்.
இதை உங்களுக்கு நீங்களே விளையாட்டுப்போலச் செய்துகொள்ளலாம். ஓடிக் கொண்டிருக்கையில், அல்லது குளிக்கையில், தேநீர் அருந்துகையில் - சட்டென உங்களுக்கு நீங்களே உத்தரவிட்டுக் கொள்ளுங்கள், "நிறுத்து!" என்று. நிறுத்த முயலக்கூடாது. உடனே நிறுத்திவிட வேண்டும்.
காரியத்தில் ஒரு ஆழ்ந்திருக்கும்போது, சட்டென நிறுத்தினால், அத்த நிறுத்தமே உங்களை நிலைதடுமாறச் செய்துவிடும்.
உங்கள் மையத்தை நோக்கி, தீங்கள் தூக்கி எறியப்படுவீர்கள். ஒரு கணப்பொழுது தியான அமைதியை, மௌனத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள்.
தியானமும் அதற்கான செயல்முறைகளும் :
'நிறுக்குகல்' என்பது உடலின் செயலை மட்டுமே பொறுத்ததல்ல. விருப்பங்களையும், தாமாக நிகழும் செயலை அல்லது உணர்வையும் கூடச் சட்டென நிறுத்திவிட முடியும்.
எதையாவது செய்யலாம் என்ற உண்ற உணர்வு ஏற்படும்போது, சட்டேன நிறுத்திவிடுவது இது. கவலையில் அழுதால் - அழுகையின் நடுவில் நிறுத்தி விடும்படி, உங்களுக்கு நீங்களே உத்தரவு போட்டுக்கொள்வது.
சட்டென நிறுத்திப் பார்த்தால் புரியும். எவ்வளவு எளிதாக நிறுத்திவிட முடியும் என்பது! அப்போது சட்டென நின்றுவிடும் ! அவ்வளவுதான்.
தடுக்க முடியாத, கட்டுப்படுத்த முடியாத தும்மல் வந்தால்கூட, பாதி வழியில் நிறுத்திவிடலாம். அனால் இது அடக்குவதன்று. அடக்குவது தவறு. நீங்கள் தும்மலைத் தொடர்வதை நிறுத்தினால் போதுமானகு.
சினம் வந்தால், மற்றவரை அடிக்க வேண்டும் என்று தோன்றும் அளவுக்குச் சினம் வந்தால்கூட, எதையாவது உடைக்கலாம் என்று தோன்றினால்கூட, சட்டென நிறுத்தி விடுங்கள். கோபப்படுதலையும், அதைத் தொடர்ந்து வெகுண்டெழுவதையும் கவனியுங்கள். அதை நிறுத்துங்கள்.
உங்கள் குழந்தையை, மனைவியை, நண்பரைப் பாரக்கும்போது, தழுவிக் கொள்ளலாம் என்ற ஆவல்
எழுந்தால்கூட கடைப்பிடிக்கும் சில நாட்களில் சட்டென நிறுத்திவிடுங்கள்! அது தவறில்லை.
நீங்கள் கவனம் செலுத்துவதை நோக்கி உங்களிடம் உள்ள சக்கி வெளியே பாய்வது இயல்பு. !
நீங்கள் பேசும்போதும் நடக்கும்போதும், உங்கள் கவனமும். சக்தியும் வெளிப் பொருள்களை நோக்கி அல்லது பிறரை நோக்கி வெளியே பாய்கிறது ..
'உங்கள் கவனமே, உங்கள் சக்தி' வெளியே பாயும் சக்தியைச் சட்டென நிறுத்தினால் என்ன ஆகும் ? அந்தச் சக்தி உள்ளே பாயும்.
உங்கள் சக்தி, உங்கள் கவனம், சட்டென உள்நோக்கிப் பாயும். மீண்டும் நீங்கள், உங்களது மௌன மையத்தை நோக்கித் தூக்கி வீசப்படுவீர்கள்.
ஒருமுறை, அந்த மையத்தின் தரிசனம் ஒரு துளி கிடைத்துவிட்டால், உங்கள் செயலில் நீங்கள் உங்களை இழந்துவிட மாட்டீர்கள்.
செயல்புரிந்து கொண்டே இருந்தாலும்கூட உங்கள் இருப்பை என்றும் உணர்ந்து கொண்டேதான் இருப்பீர்கள்.
உங்கள் பிறகு உங்களது காரியங்கள் எல்லாமே, நீர்நிலையின் மேல் உள்ள அலைகளாகவே அமைந்துவிடும். மிகச் சரியான தியானத்திற்கான மனநிலைத் தருணம் அதுதான்.
இதுவும் ஒரு 'நிறுத்துதல்' உத்திதான்.
முதலில் குறிப்பிட்டதற்கும் இதற்கும் வேறுபாடு என்னவென்றால், செயலையோ உணர்வையோ பாதி வழியில் நிறுத்த வேண்டியதில்லை.
உணர்வுகளையோ, விருப்பங்களையோ நிதானமாக, மெல்லக் கட்டுப்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும்.
ஒரு விருப்பம் எழுந்தால், அதை நன்றாக உணருங்கள். தைரியமாக, முழு ஆற்றலுடன் நேருக்கு நேர் அதை எதிர்கொள்ளுங்கள்.
அந்த உணர்வை, விருப்பத்தை நீங்கள் உணர்வதை, உணர்ந்திருங்கள். பிறகு, உடனே அதை விட்டுவிடுங்கள். அப்படியே விட்டுவிடுங்கள்.
ஒர் அமகான பெண்ணைப் பார்க்கும்போது உங்களுக்குள் உணர்வுகள் எழலாம். உங்கள் உணர்வைச் சோதித்துப்பாருங்கள்.
அந்த ஆட்கொண்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள்.
உங்களையோ, அந்த விருப்பத்தையோ மதிப்பீடு செய்து பார்க்க வேண்டாம். இது ஒரு மோசமான உணர்வு என்று உங்களுக்குச் சொல்லிக் கொள்ள வேண்டாம்.
எந்த அபிப்பிராயமும் கொள்ளாமல், சும்மா பார்த்துக் கொண்டிருங்கள்.
பிறகு, சட்டென அந்த விருப்பத்தைக் கை கழுவி விடுங்கள்.
அது முடியும்!
உங்களால் அப்படியே கழற்றிவிட்டுவிட முடியும்.
தெளிவாக இருங்கள்; நீங்கள் உங்கள் ஆசையை ஒடுக்கவில்லை! ஆசையை ஒருக்கக்கூடாது. அடக்குதல் மற்றும் ஒடுக்குதலே சகல மனநோய்களுக்கும் மூலகாரணம்.
எப்படி அதை உதறிவிடுவது என்று யோசிக்கவே வேண்டாம்.
ஒர் உணர்வோடு எதிர்த்து மோதும்போது, ஒரு உணர்வை அடக்கி வைக்கும்போது, அந்த உணர்வு சக்தி பெற்றுவிடும் !
நன்றாக அதை விட்டுவிடுதல் எளிதாகிவிடும்.
''விட்டுவிடு,'' என்று நீங்கள் சொல்லும் நேரத்தில், நீங்கள் தனியே பிரிந்து, விலகி நின்று, ஒரு பார்வையாளர் ஆகிவிடுவீர்கள்.
உங்கள் உடல் ஆசையால் நிறைந்திருப்பதை, உங்கள் மனம் ஆசையால் நிறைந்திருப்பதை நீங்கள் பார்க்கும்போது, அவை 'நீங்கள் அல்ல' என்று ஆகிவிடும். அந்தக் கணத்தில், எந்த உணர்வும் 'நீங்கள் அல்ல' என்று உணரும்போது உங்கள் இருப்பிற்குள் தூக்கி எறியப்படுவீர்கள்.
உங்கள் விடுவதற்கு இந்தத் தியானம் மிகச் சிறந்ததாகும்.
சங்கிலித் தொடர்போல் விடாது புகை பிடிப்போர், விடா மதுப்பழக்கம், பெண் பித்து போன்றவற்றை ஒருமுறை ஒழித்துவிட்டால், பிறகு அவை எப்பொழுதும் திரும்பிவராது. அவற்றை ஒழிக்க அவர்கள் முயற்சி எடுப்பதில்லை. முற்றிலும் ஒழித்தே விடுகிறார்கள். அவ்வளவுதான்!
இந்தத் தியானத்தின் மூலமாக, செயல்மட்டுமல்ல, அதற்கான ஆசையே முற்றிலும் ஒழிந்துபோகும்! நீங்கள் உங்கள் அடிமைப் பழக்கங்களுடன் போராட வேண்டியதே இல்லை. போகும்.
இது ஒர் அழகிய 'வெறுமைத் தியானம்'. பிரபஞ்ச சக்தியை நீங்கள், உங்களுக்குள் வரப் பெறுவதற்காக, உங்களுக்குள் இருக்கிற எல்லாவற்றையும், காலி செய்துவிடும் முறைதான் இந்தத் தியானம்.
அசையாமல், நிம்மதியாக, அமைதியான இடத்தில் அமர்ந்துகொள்ளுங்கள். உங்கள் உடல் பற்றிய உணர்வு இருக்கட்டும். உங்கள் உடல் நிம்மதியாக இருக்கும்படியாக உணருங்கள்.
இனி, உங்கள் உடலை ஒரு மூங்கிலாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்! உஉள்ளீடற்ற மூங்கிலாக மாறி விடுங்கள்.
சுத்தமான ஓய்வு நிலையில் இருங்கள்.
உங்கள் முழு உடலும், உங்கள் தசையும், உங்கள் எலும்புகளும், எல்லாமே முங்கிலின் பகுதிகளாக மாறி விடட்டும்.
இந்த மூங்கிலுக்குள், வெற்றிடம் தவிர வேறெதுவும் இல்லை; உள்ளீடு அற்றதும், மௌனம் பொலிவதுமான பிரதேசம். உங்கள் மனமும் சிந்தனையும் அடங்கி இருக்கட்டும். எந்த அனுபவத்திற்காகவும் காத்திருக்க வேண்டாம்.
சும்மா இருந்தால் போதும்.
சட்டென, காண்பீர்கள். இவை சிலருக்கான அந்தரங்கக் கருத்துகள் அல்ல! இவை நடைமுறைக்குச் சாத்தியமான தியான முறைகள். இதுவரை இப்படிப்பட்ட அனுபவப் பரிமாணம் உங்களுக்கு எற்படாததால், இது வினோதமாகத் தோன்றும். முயற்சி செய்து பார்த்து நீங்களே தெரிந்துகொள்ளுள்கள்.
நீங்கள் உள்ளீடற்றுப் போய்விடும்போது, நீங்கள் எதையும் தடுக்க முயலாதபோது தெய்விகச் சக்தி உங்களுக்குள் பாயும். தெய்விக இசைக்கானதொரு புல்லாங்குழலாக நீங்கள் ஆகிவிடுவீர்கள்.
நீங்கள் உள்ளீடற்றவராக மாறினால்போதும், இது எளிதன்று.
நீங்கள் யாராவதொன்றாக இருந்தே பழக்கப்பட்டவர்கள். உள்ளீடற்று மாற, மாபெரும் நேசம் வேண்டும்; மாபெரும் நம்பிக்கை வேண்டும்.
நீங்கள் ஒரு மேற்கொள்ளும்போது, நீங்கள் வெற்றுப் புல்லாங்குழலாக மாறினால், உங்கள் குரு அதை எடுத்து வாசிப்பார். மாமமான ஆற்றலுக்கு உங்களைக் கொடுப்பதை விட, அன்பிற்கு உங்களை வழங்கிவிடுவது எளிது.
முதலில் வெற்று மூங்கிலாக வேண்டும். பிறகு அந்த மூங்கிலே காணமற்போகும் தருணம் வரும். பிறகு நான் என்ற உணர்வு உங்களில் இருந்து காணாமல் போகும். (நீங்கள் உங்களை இழந்து விடுவீர்கள்).
இந்தச் செயல்முறைக்குக் கொஞ்சம் காலம் பிடிக்கும். ஆனால் பயன்கள் அற்புதமானவை. உங்களை நீங்கள் இழந்துவிட நேர்ந்தாலும்கூட, எல்லாவற்றிகுள்ளும் பரவி நிறைந்த ஒர் ஆக்மாவாய் நீங்கள் உணரலாம்.
இந்தத் தியானமுறையைப் பற்றி :
விபாசனாவிலிருந்து பெறப்பட்டது இந்தத் தியானம்.
இந்தத் தியானத்தின் சாராம்சம், நமது மூச்சைத் தொடர்ந்து கவனிப்பதுதான். மற்ற தியானங்களைவிட இதன் மூலமாகப் பலர் ஞானம் பெற்றிருக்கிறார்கள்.
விபாசனா, மிக எளிய, ஆனால் மிகக் கடினமான முறைகளைக் கொண்டது. அது விழிப்புணர்வை அதிகரிக்கும்.
செயல்முறை குறிப்புகள் :
விபாசனா செய்ய மூன்று வழிகள் உள்ளன.
-
உங்கள் உடல், உங்கள் செயல்கள், உங்கள் மனம், உங்கள் இதயம் ஆகியவற்றின் மீது ஆழ்ந்த விழிப்புணர்வு கொள்ளுதல்.
-
நடந்தாலும், கையை அசைத்தாலும், சிரித்தாலும், விழிப்புணர்வுடன் செய்க.
செயல் செய்வது நீங்கள்தான் என்பதைச் சரியாக
அறிந்திருக்க வேண்டும். தயார் நிலையிலேயே இருக்க வேண்டும்.
ஒரு வினாடிப் பொழுதுகூட விழிப்புணர்வற்ற நிலையில் கடந்து போய்விடக்கூடாது. ஒரு செயல்கூட உங்கள் கவனத்திற்கு வாரமல் போய்விடக்கூடாது.
உங்கள் இதயக்கையும், மனக்கையும் கவனியுங்கள்,
உங்களது இதயத்தின் தோன்றும் ஒவ்வொரு உணர்வு பற்றியும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உங்கள் மனத்திற்குள் தோன்றும் மற்றும் மனத்திலிருந்து வெளியே செல்லும் ஒவ்வொரு எண்ணம் பற்றியும் கவனம் கொள்ள வேண்டும்.
எந்தவித அபிப்பிராயமும் கொள்ளாமல், எதையும் சீர்தூக்கிப் பார்க்காமல், வெறும் பார்வையாளராக இருங்கள்.
இரண்டாவது வழி, முச்சைக் கவனித்தல்.
உள்வாங்கி ஒவ்வொரு வெளியேற்றும்போதும், மேலெழுந்து உள்ளொடுங்குவதை உணருங்கள்.
வயிற்றுப் பகுதியில் அமைந்திருக்கும் தொப்புள் பகுதிதான் வாழ்வின் மூலதாரமாக சக்தியாக விளங்குகிறது.
அதனால் தொப்புள் பகுதி மீது கவனம் செல்லும்போது, உங்கள் உஉடலின் உயிர்ச் சக்தியை
உணர்வீர்கள். வயிற்றின் மீது அதிக கவனம் செலுத்துவதன் மூலம், இதயமும், மனமும் அடங்கி விடுவதை அறியலாம்.
இதுதான் இயல்பான, சௌகரியமான மூச்சு முறை -வயிற்றிலிருந்து செய்வது, இவ்வாறு மூச்சு விடுவதை நாம் மறந்து விட்டோம்.
குழந்தைகள் வயிற்றிலிருந்தே மூச்சு விடுகின்றன. சில சமயம், ஆழ்ந்த உறக்கத்தின்போது, நாமும் வயிற்றிலிருந்து மூச்சுவிடும் நிலைக்குத் திரும்பிவிடுவோம்.
- விபாசனாவின் மூன்றாவது அம்சம் மூக்கு வழியாக மூச்சு உள்ளே போவதைக் கவனிப்பது. மூக்கின் வழியாகச் செல்லும் குளிர்ந்த காற்றை விழிப்புணர்வோடு உணருங்கள். மூச்சு உள்ளே செல்வதும், வெளியேறுவதும் சிரமமில்லாமல் இயல்பாக நிகழ வேண்டும்.
நீங்கள் மேற்கண்ட இரண்டு முறைகளையோ அல்லது மூன்று முறைகளையுமோ ஒன்று சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் எதுவும் முயற்சி, சிரமம் இல்லாமல் நிகம வேண்டும்.
அமர்ந்தபடி :
கால அளவு : 45 நிமிடங்கள், ஓய்வு : 15 நிமிடங்கள்.
முதுகு நிமிர்ந்திருக்க, முகம் நேராகப் பார்க்க, சௌகரியமான நிலையில் அமர்ந்து கொள்க. விழிகள் மூடியவாறு இயல்பாக மூச்சு விடுதல் வேண்டும்.
அமர்வு நிலையை மாற்ற வேண்டும்.
மூச்சு உள்வாங்குதல், வெளிவிடுதலின்போது, வயிறு மேலெழுவதையும், உள்ளொடுங்குவதையும் கவளிக்கவும். மூச்சின் மீது கடினமான கவனம் வேண்டியதில்லை, சும்மா பார்த்துக் கொண்டிருந்தால் போதும்.
வேறு எண்ணங்கள் கோன்றினாலும். உணர்வுகள் எழுந்தாலும், அனுமதிக்கவும், அவற்றையும் கவனித்துவிட்டு, மீண்டும் கவனம் மூச்சுவிடலுக்குத் திரும்பிவிட வேண்டும்.
கவனித்தலே முக்கியம்.
எதைக் எல்லாவற்றையும் கவனியுங்கள். (45 நிமிடங்களுக்குப் பிறகு, கவனிப்பதைக்கூட விட்டு விடவும். எல்லாவற்றையும் விட்டு விடவும். ஓய்வு எடுக்கவும்)..
நடந்தபடி :
காலம் : 20 நிமிடங்கள், ஓய்வு : 10 நிமிடங்கள்.
இதில், உங்கள் கவனம் முழுவதையும் உங்கள் கால்களின் மீதும், அவை பூமியைத் தொடுவதின் மீது, அமைய வேண்டும்.
வட்டமாகவோ, 15 காலடி வைப்பு போய் வருகிற முறையிலோ நடக்கலாம். இதை உங்கள் வீட்டில் ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குப் போகும்போதோ,
வெளியே தோட்டத்தில் நடந்தபடியோ செய்யலாம்.
கண்கள் கீழே சில அடி அடி தூரம் முன்னால் பார்த்தபடி இருக்க வேண்டும். அமர்ந்தபோது வயிற்றைக் கவனித்ததுபோல, நடக்கும்போது, காலின் மேல் கவனம் இருக்க வேண்டும் !
வேறு எண்ணங்கள் வந்தால் அனுமதிக்கவும், இதில் இடையூறு என்பது எதுவும் இல்லை. உணர்வோ, வேறு எண்ணமோ கோன்றினால், அதைக் கவனித்த பிறகு, உங்கள் கவனத்தைக் காலைக் கவனிப்பதில் திசை திருப்பி விடுங்கள்.
இந்தத் தியான முறையைப் பற்றி :
இந்தத் தியானம், ஆழமாக ஆழமாக மயாகச் செய்யும் மூச்சு வெளியேற்றம் பற்றியது. நமது வாழ்க்கை முழுவதிலும் மூச்சு உள்ளவாங்குவதைப் பற்றியே நாம் கவனம் செலுத்துகிறோம்.
மூச்சை உள் வாங்குவது உயிர்ப்பு. மூச்சை வெளியேற்றுவது மரணம்.
வாழ்க்கை முயற்சியும் கொண்டதாக இருக்கிறது. மரணமே நிம்மதி.
மரணத்தைப் பற்றிய அச்சம் காரணமாகவே, நாம் மூச்சை வெளியேற்ற அஞ்சுகிறோம்! நாம் வற்புறுத்தி செயவது மூச்சு உள்வாங்குவதை மட்டுமே. மூச்சு விடுவதோ இயல்பாகவே நடந்து விடுகிறது, வேறு வழியே இல்லாமல்!
நாம் முழுமையாக முழுச்சை வெளியேற்றுவதே இல்லை என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
நமது நுரையீரலில் உள்ள ஆயிரம் அரைகளில், இரண்டாயிரம் மட்டுமே காற்றை வெளியேற்றுகின்றன. நான்காயிரம் அறைகள் மாசுபட்ட காற்றோடு அப்படியே இருந்து விடுகின்றன.
உங்கள் காற்றுதான் நமது நோய்களுக்கும், கவலைகளுக்கும் மூல காரணம்.
இந்தத் தியாத்தில் உங்கள் முழுக் கவனமும் மூச்சு வெளிவிடுவதன் மீது விழட்டும். இதனால் நீங்கள் ஓர் எதிரான பரிமாணத்தை உணர்வீர்கள். மூச்சு வெளியேற்றத்தைச் சரியாகச் செய்வதன் மூலம், முழு வெறுமையை உணர்வீர்கள்.
செயல்முறை விளக்கம் :
இந்தத் தியானமுறையின் போது. நீங்கள் மௌனமாக 'ஹ' என்று முடியும் சொல்லுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
அது எந்தச் சொல்லாக இருந்தாலும் சரி. அமைதியாகச் செய்யுங்கள்.
'ஹ' என்று முடியும் சொல்லைக் கைவனத்தில் கொள்ளுங்கள். 'ஹ' என்பதன் மூலமே நீங்கள் முற்றிலும் காற்றைக் காலியாக்க முடியும். முழு மூச்சும் வெளியேறி விடும். ஒரு கணம் நீங்கள் மூச்சு விடாமல் இருந்துவிடுவீர்கள்.
பிறந்தநாள் தொட்டு, மூச்சு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். என்றாலும், அந்த இடைவெளித் தருணம் பற்றிய கவனமே நமக்கு இருப்பதில்லை.
அது உங்கள் கவனத்திற்கு வந்துவிட்டால், நீங்கள் உங்கள் மரணத்தையே பார்த்துவிட முடியும். நீங்கள் உங்கள் மூச்சு விடுதலையும் கடந்து போகக் கூடியதை உணர்வீர்கள்.
நாம் எப்போதும் மரணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறோம். மரணத்தைப் பார்க்கவும் செய்கிறோம். ஆனால் நமக்கு மரணம் நிகழும் என்பதை, நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடிவதில்லை.
ஒவ்வொரு முறை நீங்கள் மூச்சை வெளியேற்றும் போதும், உங்களது உடலமைப்பு, மௌனமாக, உங்களை மரணத்திற்குத் தயார் செய்து கொண்டிருக்கிறது!
உங்களது உடலும், மரண நிலையை ஏற்றுக்கொண்டு விடுகிறது.
நீங்கள் மூச்சுக் காற்றை வெளியேற்றிக் காலியாக்கும் போது, நீங்கள் வாழ்வையே காலி செய்துவிடுகிறீர்கள்.
அதாவது வாழ்வின் எல்லா இறுக்கங்களையும், கவலைகளையும், எண்ணங்களையும், ஆசைகளையும் காலி செய்து விடுகிறீர்கள்!
அது ஒரு பரிபூரண நிம்மதி கணம்.
Part 4: Meditation Is For You
சில சமயம் நமக்குத் தெரியாமலேயே இதை நாம் செய்து கொள்கிறோம். இறுக்கமடைந்து, நிலைகுலைந்து, நிம்மதியை நாம் வேண்டும்போது, நமக்கு வருவது பெருமூச்சு! அப்போது நீங்கள் மூச்சு வாங்குவதில்லை, பெருமூச்சை அடுத்து ஒரு கணம் காலியாக இருக்க நேரிடும். அந்தக் கணப்பொழுதில் பெரிய நிம்மதியை உணர்வீர்கள்.
அந்த ஒரு கணப்போதில், நீங்கள் வாழ்வோடு தொடர்பு கொண்டவராக இருப்பதில்லை; பெறுதலும், செயலும் அப்போது இருப்பதில்லை.
அவற்றிற்குப் பின்னால் உள்ள உங்கள் இருப்பு மட்டுமே வெளிப்படுகிறது. அதை ஒரு கணம் தரிசித்துவிட்டால், பிறகு அதை உங்களால் மறக்கவே முடியாது.
அவ்வளவு எளிய பயிற்சி! எவ்வளவு நிரந்தரப் பயன்! நீங்கள் இந்தப் பயிற்சியைத் தொடங்கும்போது, மிகவும் நிம்மதி, மிகுந்த அமைதி பெறுவீர்கள்.
கவலையால் உங்களைத் தொட முடியாது. புற உலகில் என்ன விவகாரங்கள் வந்தாலும், அவற்றை எளிதாக எதிர்கொண்டு சமாளிப்பீர்கள்.
ஒருமுறை, ஒரே ஒருமுறை மரணத்தின் ஒரு சின்ன அம்சத்தைக் அனுபவித்துவிட்டால், எவ்வாறு உங்களை அதிகாரம் செலுத்த முடியும் ?
இந்தத் தியானத்தைப் பற்றி :
நீங்கள் எப்போதும் வெளிப்புறம் நோக்கியே மையம் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் ஆற்றல்கள் எல்லாம் வெளி உலகத்தை நோக்கியே பாய்ந்து கொண்டிருக்கின்றன.
நீங்கள் ஒன்றைப் பார்க்கும்போது, உங்களது விழிப்புணர்வு அதை நோக்கியே பாய்கிறது. உங்களை நீங்கள் கவனம் கொள்வதே இல்லை.
உங்கள் கவனத்தைக் கவர்வதன் மீதுதான் உங்கள் பார்வை. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நமக்கு வெளியே இருப்பவை மீதே நமது கவனம்.
ஏதாவது ஒன்றின் மீது நமது ஆழ்ந்த கவனம் நிலைப்படும்போது - ஓர் அழகான அஸ்தமனமோ, இனிய சங்கீதமோ - நாம் நம்மை அதில் முற்றிலும் இழந்து விடுகிறோம்.
அது ஓர் அற்புத அனுபவம் - ஆனால் அது விழிப்புணர்வு இல்லாத நிலை.
விழிப்புணர்வின்போது, பார்க்கப்படும் பொருள் மீது மட்டுமல்லாமல், பார்க்கிற உங்கள் மீதும் கவனம் இருக்கும்.
தாவோவின் கொள்கைப்படி, சாதாரணமாக உங்கள் ஆற்றல், எப்போதும் புற நிகழ்வுகள் நோக்கியே பாய்கிறது. வெளி உலகை நோக்கி அலைபாயும் அந்த ஆற்றலை, உங்களை நோக்கித் திருப்ப வேண்டும்.
அதுதான் மன ஒருமைப்பாடு.
செயல்முறை விளக்கம் :
முழு உயரக் கண்ணாடி ஒன்றின் முன் நின்று உங்களைப் பாருங்கள். வெளியிலிருந்து உங்களை இப்போது நன்றாகப் பார்க்கிறீர்கள்.
நீங்கள் அகம், கண்ணாடியில் தெரிவது உங்களது புறம். உங்கள் உணர்வு அப்போது புறம் நோக்கிப் பாய்கிறது. உங்கள் கண்களை வெளியிலிருந்து பாருங்கள்.
பார்ப்பது நீங்கள். பார்க்கப்படுவது உங்கள் நிழல்; எதிரொளிப்பு.
அதை எதிராக மாற்றிக் கற்பனை செய்யுங்கள், அந்தப் பிரதிபலிப்பு உங்களைப் பார்ப்பதாக!
முதலில் இது பயமாக இருக்கும். உங்களது பிரதிபலிப்பு யோசித்துப் பார்ப்பது வினோதமாக, அச்சம் தருவதாக இருக்கும். இருந்தாலும் முயற்சியைத் நீங்கள் பெரிய மாற்றத்தை உணர்வீர்கள்.
உங்களது பிரபலிப்புப் பிம்பத்திலிருந்து உங்களை நோக்கி சக்தி பாய்வதை உணரலாம்! அது உண்மையில் அச்சம் தருவதாகவும் குழப்பம் தருவதாகவும் இருக்கும்.
உங்கள் வாழ்க்கை முழுழுவதிலும், மனத்தைப் புறமுகமாகத் திருப்பியும், ஆற்றலை புறம் நோக்கியே பாயவிட்டும் பழக்கப்பட்ட உங்களுக்கு, சட்டெனப் புதிய அனுபவம் தோன்றுவது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
ஆனால் உணர்வீர்கள். காரணம், நீங்கள் இப்போது, வட்டத்தைப் பூர்த்தி செய்து விட்டீர்கள். சக்தி வட்டத்தை முழுமையாக்கி விட்டதன் காரணமாக, சக்தி வந்துவிடுகிறது.
உங்கள் சக்தியை நீங்களே சேமித்துக் கொள்கிறீர்கள்.
இந்தத் தியான முறையைச் சில நாள்கள் பயிற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக மாற்றத்தைக் காண்பீர்கள்.
நீங்கள் அதிக சக்தி பெற்றவராக, வீரியம் மிக்கவராக உணர்வீர்கள், அதிக மையம் கொண்டவராக, மிகுந்த அமைதி பெற்றவராக உணர்வீர்கள்.
ஒரு நாள் முழுவதும் இதைப் பயிற்சி செய்து பார்க்கலாம். உங்களைப் பற்றியதாகவே இருக்க வேண்டு மென்பதில்லை.
நீங்கள் கவனம் செலுத்தும் ஏதாவது ஒரு பொருளுடன் இருக்கலாம்.
ஏதாவது ஒரு பொருளுக்கு உங்கள் சக்தியை நீங்கள் கடத்தும்போது, அது மறுபடியும், அந்தச் சக்தியைத் திருப்பித் தருவதாகக் கற்பனை செய்யுங்கள்.
அது உயிரற்ற பொருளாக இருந்தாலும் கவலை இல்லை.
உங்கள் சக்தி உங்களை நோக்கிப் பாயும்;
உங்களைப் புத்துயிர் பெறச் செய்யும் ;
அதிக வீரியம் பெறச் செய்யும்!
இந்தத் தியானத்தைப் பற்றி :
சொல்லுக்கடங்காத அழகிய தியானம் இது.
இதைத் தியானம் என்பதைவிட, ஒரு பிரார்த்தனை எனலாம்.
பிரபஞ்ச சக்திகள் அனைத்தினோடும், உங்களைத் தொடர்பு கொள்ளச் செய்வது இந்தத் தியானம்.
இதை இரவு வேளையில் உறங்கப் போகுமுன் பயிற்சி செய்வதுதான் சிறந்தது.
பகலில் செய்வதானால், செய்த பிறகு பதினைந்து நிமிட ஒய்வு வேண்டும். அந்த ஒய்வுப் பொழுதில்தான் தியானத்தில் பெற்ற சக்தி ஒன்று திரளும். இல்லாவிட்டால், பல மணி நேரம் பிரமை பிடித்த மாதிரி ஆகிவிடும் !
செயல்முறை குறிப்புகள் :
குளிர்ச்சியான, காற்றோட்டமுள்ள, இருண்ட அறை ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். நீங்கள் விரும்பினால் வெளியிலும் செய்யலாம்.
தரையில் மண்டியிடுங்கள். தோன்றினால் பாயைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முழங்காலிட்டு நிமிர்ந்து கைகளை வானை நோக்கி உயர்க்கவும்.
முகத்தையும் வானை நோக்கிப் பார்த்தபடி வைத்துக் கொண்டு சற்று காத்திருக்கவும்.
விரைவில் இயற்கையின் சக்தி பாய்வதை உணரலாம். அதைக் தடுக்காமல் அப்படியே இருக்க வேண்டும்.
இயற்கைச் சக்தி உங்களுக்குள் பாயட்டும்.
கைகளில் ஒரு நடுக்கம் தோன்றும்.
மெல்ல மெல்ல உங்கள் உடல் முழுவதுமே நடுங்கும் ;
பிரவேசிக்கும் சக்தியோடு இணைந்து உடல் முன்னும் பின்னும் அசையும். அவற்றையெல்லாம் அனுமதியுங்கள.
அந்தச் சக்தியின் நீங்கள் மூழ்கிவிடும்போது, நீங்கள் இருக்கும் மையப் புள்ளி, வானமும் பூமியும் சந்திக்கும் இடமாக அமையும்.
நீங்கள் மிதப்பதாக உணர்வீர்கள்.
உடலே இல்லாததைப் போல் உணர்வீர்கள்.
நீங்கள் முற்றிலும், இனி நிரம்ப முடியாத அளவுக்கு சக்தியால் நிறைந்து விட்டதாகத் தோன்றும்போது, குனிந்து தரையை முத்தமிடுங்கள்.
உள்ளங்கைகளைப் பூமியின் மேல் வையுங்கள்.
உங்கள் அன்பையெல்லாம் பூமிக்கு வழங்குங்கள்!
உங்கள் உதடுகள் வழியாகவும், கைகள் வழியாகவும் அன்பு பூமி நோக்கிப் பாய்வதாக உணரவும். ஒரு தெய்விக சக்தியைப் பூமிக்கு வழங்கும் ஒரு கருவியாக மாறி விடுங்கள்.
இதை ஏழுமுறை தொடர்ந்து செய்யுங்கள். ஒவ்வொரு முறையும் ஏழு சக்திச் சக்கரங்களில் ஒன்று சக்தி ஏறப் பெறும். ஏழு முறைக்கு மேல் அதிகம் செய்தால், சக்தி அதிகரித்து, நிம்மதியின்மை ஏற்பட்டு விடும்.
ஏழுமுறைக்கு குறைவாகச் செய்ய வேண்டாம். சக்திச் சுற்று முழுமுமை பெறாமலே நின்றுவிடும். எனவே ஏழு முறை தொடர்ந்து செய்யுங்கள்.
சக்தி தாரணை என்னும் வழிபாடு முடிந்தவுடன், அந்த வழிபாட்டு நிலையிலேயே உறங்கி விடுங்கள்.
அந்தச் சக்திக்குள் மூழ்கி, அதற்குள்ளேயே உறங்கி விடுங்கள்.
நீங்கள் கண் விழிக்கும்போது, புத்துணர்ச்சியோடு அதிகம் சக்தி பெற்றவர்களாக உணர்வீர்கள்.
இந்தத் தியானமுறையைப் பற்றி :
இது ஒரு புராதனமான, ஆற்றல் மிகுந்த தியானம்.
இஸ்லாமியத்தின் ஒரு பிரிவான சூஃபியிசத்திலிருந்து பெறப்பட்ட தியானம்.
மிக மிக எளிமையான தியானம்.
நீங்கள் வட்டமாகச் சுழல்வதே இந்தத் தியானம்.
நீங்கள் குழந்தைப் பருவத்தில் செய்யவில்லையா. அதுபோலத்தான், சுழன்று வட்டமாக ஆடுவது.
வட்டம் சுற்றல் - ஆற்றல் மிகுந்த, மையப்படுத்தும் தியானமுறை.
இந்த நீங்கள் ஒரு சக்கரத்தின் மையக்கால் போன்று அசையாமல் மையம் கொண்டிருக்கும்.
செயல்முறை விளக்கம் :
இந்தத் தியானம் தொடங்கும்போது வயிறு காலியாக இருக்க வேண்டும்.
சாப்பிட்டுக் குறைந்தது மூன்று மணி நேரமாவது ஆகியிருக்க வேண்டும். இந்தத் தியானம் இரண்டு நிலைகளைக் கொண்டது. சுழன்றாடுதல் மற்றும் ஓய்வுநிலை.
சுழன்றாடுதல் :
கடிகாரச் சுழற்சிக்கு எதிர்வசமாகவே இதைச் செய்வது வழக்கம். வலக்கையை மேலுயர்த்தி, உள்ளங்கை மேல் பார்த்து இருக்கும்படியும், இடக்கையைத் தொங்கவிட்டு, உள்ளங் கை, தரையைப் பார்த்து இருக்கும் படியும் வைத்துக் கொள்ள வேண்டும்.
கடிகாரச் சுழற்சிக்கு எதிரிவசமாகச் (இடப்பக்கமாக) சுழல்வது சிரமமாக இருந்தால் வலப்பக்கமாக வைத்துக் கொள்ளலாம்.
எவ்வளவு நேரம் உணருகிறீர்களோ! அவ்வளவு மணி நேரம் சுழன்றாடப் பழகலாம்.
சக்திச் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது சுழல வேண்டும்.
மெதுவாகச் சுழல ஆரம்பிக்கவும்.
உங்கள் உடல் மென்மையாக, எதிர்ப்புணர்வு இல்லாது போகும்வரை சுழலவும்.
சுழன்றாடும்போது. காணும் காட்சிகள் மங்கலாகத் தெளிவற்றுப் போய் விடும்.
அவை வேகமாய்க் கடந்து செல்லட்டும்.
எதன் மீதும் பார்வை குவியக் கூடாது. அவ்வாறு குவிந்தால், தலை சுற்றும், குமட்டல் வரும்.
ஆரம்பத்தில் 15 நிமிடங்கள் மிக மெதுவாகச் செய்யவும்.
பிறகு, அடுத்த 30 நிமிடங்களில் வேகத்தைக் கூட்டவும்.
சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு, அந்தச் சுழற்சி முற்றிலுமாக உங்களை ஆட்கொண்டு விட்டதாக உணர்வீர்கள்.
செயலும், இயக்கமும் வட்டத்தின் வெளி விளிம்பில் நிகழ, மையம் ஒருவகை அசையாத தன்மையைப் பெற்று விடும்.
பிறகு நீங்கள் அந்தச் சுழற்சியின் பங்கேற்பவராக அல்லாமல், அதன் பார்வையாளராக மாறி விடுவீர்கள்.
ஒய்வு :
சுழன்றாடுதலில், விரைவாகச் செயல்படுவதால், ஒய்வு நேரத்தில் நிமிர்ந்து நிற்க இயலாது.
உங்கள் உடல் கீழே சரிந்து விழும். விழுதலைத் திட்டமிட வேண்டாம்.
உங்கள் உடல் மெத்தென்றும், நெகிழ்வாகவும் ஆகிவிடுவதால், உடல் சரிவதால் உங்களுக்குக் காயம் எதுவும் படாது. படுத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் இடுப்பு பூமியைத் தொட முடியும்.
உங்கள் உணருங்கள்.
கண்களை மௌனமாக அப்படியே, குறைந்தபட்சம் 15 நிமிடம் படுத்துக் கிடக்கவும் .
இந்தத் தியானம் முடிந்த பிறகு, மௌனமாக தியான நிலையில் சில மணி நேரம் இருக்கவும்.
இந்தத் தியானத்தின் போது, சிலருக்குக் குமட்டல் உணர்வு ஏற்படலாம்.
சில நாள்களில் அது மறைந்துபோகும்.
அந்த உணர்வு தொடர்ந்து வந்தால், இந்தத் தியானத்தைத் தொடராமல் விட்டுவிடவும்.
இந்தத் தியானமுறையைப் பற்றி :
உங்களது சூட்சும உடலை உணர்ந்து கொள்வதற்கான வழிதான் இந்தத் தியானம்.
உங்களுக்கு Palming பழக்கப்பட்டிருந்தால், இந்தத் தியானத்தை எளிதாகச் செய்துவிட முடியும்.
நம் அனைவருக்குள்ளும் ஏழு சரீரங்கள் உள்ளன. ஒவ்வொரு சரீரத்தையும் தெய்விகத்திற்குள் பிரவேசிக்கும் வாயிலாகப் பயன்படுத்தலாம்.
ஸ்தூல உடலை (Physical body) அடுத்திருக்கும் சூட்சும உடலை (Etheric body) அடையாளம் கண்டுகொள்வது எளிது.
காரணம் அது ஸ்தூல உடலை ஒட்டி, அதற்கு வெளியே அமைந்திருக்கிறது. குட்சும உடல், நமது ஸ்தூல உடலோடு ஒட்டி நின்று, விரிந்து, நமது ஸ்தூல உடலுக்கு ஒரு கவசம் போல் அமைந்து விடுகிறது.
செயல்முறை விளக்கம் :
Palming பயிற்சி செய்தால் நீங்கள் எடையற்றவராய், பறக்கத் தயாராக இருப்பது போல் உணர்வீர்கள். மற்ற தியானங்கள் செய்யும்போது, சில சமயங்களில் இதை நீங்கள் உணரலாம்.
உங்களது வடிவம் பற்றிய எண்ணம் இருக்க வேண்டும்.
கண்களை மூடியபடி, உங்கள் உடலின் ஒவ்வொரு பாகத்தையும், ஒன்றன்பின் ஒன்றாக நினைவில் நிறுத்தவும்.
உங்கள் விரல்களின் வடிவம், உங்கள் கை, கால், இடை, தலை என எல்லாவற்றையும் வரிசையாக உணரவும். உங்கள் உடலின் மொத்த வெடிவத்தின்மீதும் கவனம் இருக்கட்டும்.
உங்கள் வடிவத்தை நினைவு கொள்ள முயற்சி செய்யும்போது, உங்களது உடலைச் சுற்றி, ஒரு நீல ஒளிவட்டம் இருப்பதைப் பார்க்கலாம். உங்கள் உடலைச் சுற்றியிருக்கும் இந்த ஒளிவட்டம் விரிந்து பரவி கொண்டே இருக்கும்.
ஆரம்பத்தில், அந்த ஒளிவட்டத்தை நன்றாகப் பார்க்க முடியும்போது, கண்களைத் திறந்து பார்க்க முயலலாம்.
நல்ல இருட்டு அறை ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
இதை இரவில் செய்வதே நல்லது.
கண்கள் மூடிய நிலையில் அந்த ஒளிப் போர்வையை நீங்கள் காண முடியும்போது, கண்களைத் திறக்கவும்.
உங்கள் உடலைச் சுற்றிலும் பரவியிருக்கும் அந்த நீல ஒளியை நீங்கள் காணலாம்! முதன்முதலாக நீங்கள் உங்கள் நுண் உடலைப் பார்க்க முடிகிறது.
பல சமயங்களில் இந்த அனுபவம் நமக்கு வாய்க்கிறது என்றாலும், அதைப் பற்றிய உணர்வு நமக்கு இருப்பதில்லை.
நீங்கள் ஒரு அறைக்குள் பிரவேசிக்கும் போது, அந்த அறை முழுக்க அந்நியர்கள் நிறைந்திருந்தாலும்சரி அல்லது நண்பர்களே நிறைந்திருந்தாலும்சரி, அந்த வித்தியாசத்தை நீங்கள் உணர முடியும், உங்கள் கண்களைக் கட்டியிருந்தாலும்கூட! உங்களை வெறுக்கும் ஒருவர் உங்கள் அருகில் வரும்போது, அவரது சூட்சும உடல் சுருங்கிப் போகும்.
உங்களுக்குச் சினமோ, ஆவலோ, வருத்தமோ ஏற்படும்போது, உங்கள் உடல் சுருங்குவதுபோல் உணர்வீர்கள்.
அது உங்கள் சூட்சும சரீரம் சுருங்குவதுதான்.
நீங்கள் அதிகமாக சந்திக்கும்போது, இருவரும், ஒருவரை நோக்கி ஒருவர் ஈர்க்கப்படுவதுபோல உணர்வீர்கள். உங்கள் சூட்சும உடலின் விரிவுதான் அது.
நாம் உணராமலேயே, நமது சூட்சும உடல்களின் சமிக்கைகளைப் பயன்படுத்தியே ஒரு சூழ்நிலையை நாம் மதிப்பிடுவதும், மற்றவர்களோடு தொடர்பு கொள்ளுதலுமான சூட்சுமத்தை நாம் உருவாக்கிக் கொள்கிறோம்.
அந்த எதையுமே செய்ய வேண்டாம். சும்மா அமர்ந்து பார்த்துக் கொண்டிருங்கள். அந்த ஒளி வட்டம் மெல்ல விரிவடைந்து பரவும்.
அது மேலும் மேலும் பெரியதாகிவிடும்.
நீங்கள் ஒன்றுமே செய்யாமல் இருந்தாலும்கூட உங்களது சக்தி வெளியே சென்று விடுவதில்லை. அது உங்களது சூட்சும உடலில் ஒன்று திரள்கிறது.
உங்களைச் சுற்றியுள்ள உங்களது ஒளிவட்டம் வலிமை பெறப்பெற, நீங்கள் ஆழ்ந்த அமைதி உணர்வைப் பெறுவீர்கள். ஒரு நிசப்தத்தை அனுபவிப்பீர்கள். இந்தத் தியானத்தை அடிக்கடி பயிற்சி செய்து வந்தால், அவ்வகை அமைதி, நிரந்தர அனுபவமாகிவிடும்.
இந்தத் தியானத்தைப் பற்றி :
ஒளியின் மீது செய்யப்படும் தியானம், நமக்கு மிக அழகான தியான அனுபவங்களை வழங்கும்.
நீங்கள் ஒளியின் மீது தியானம் செய்யும்போது, அனைத்துள்ளும் பரவிவியுள்ள பெரும் சக்தியுடன் உங்களை ஒருங்கிணைத்துக்கொள்வீர்கள். வாழ்வை நிலைநிறுத்தும் சக்திஒட்டத்தின் ஒரு பகுதியாக மாறிவிடுவீர்கள்.
செயல்முறை விளக்கம் :
காலம் : 21 நிமிடங்கள்.
காலையில் கண் விழித்தவுடன், இதைப் பயிற்சி செய்யவும். உதய வேளையில் எல்லா உயிர்களும் கதிரவன் பக்கம் திரும்புகின்றன; சக்தி பெற அந்த ஒளிப் பேரலையின் பகுதியாக மாறிவிடுங்கள்.
படுக்கையில் படுத்தபடியே, கண்களை மூடிக் கொண்டு, மூச்சை உள்ளே இழுக்கவும், அவ்வாறு உள்மூச்சு வாங்கும்போது ...
பொன்னொளி உங்கள் தலை வழியாக உங்களுக்குள் பாய்வதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
உங்கள் கால் கட்டை விரல் வரை அந்த ஒளி பாய்ந்து நிரப்புகிறது. அந்தக் கால் விரல்கள் வழியாக அது வெளியே பாய்கிறது !
இது வெறும் கற்பனை செய்து கொள்ளூர்ம் காரியமன்று. நீங்கள் செய்தால், அது நடந்தே விடுகிறது. சக்தி உங்களுக்குள் நிச்சயமாகப் பாயவே செய்கிறது.
வெளிவிடும்போது ...எதிர்மறையாக மூச்சை கற்பனை செய்யுங்கள்.
ஒரு பெரிய இருள், உங்கள் கால் விரல் வழியாக, உங்களுக்குள் புகுந்து தலைவரை பயணம் செய்வதாக, அந்த இருள் தலைவழியாக வெளியே போய் விடுகிறது.
பொன்னொளி, ஆண் சக்தி - வலிவு தந்து நிலை நிறுத்துவது.
இருள், பெண் சக்தி - அமைதிப்படுத்துவது,
இரவு படுக்கப்போகும் முன்பும் இதைச் செய்யலாம். செய்யும்போது உறக்கம் வந்துவிட்டால், அதுவும் ஒர் இனிய அனுபவம்தான்.
இரண்டு அல்லது மூன்று மாத காலம் இப்பயிற்சியைச் செய்து வருக. பெரிய மாற்றங்கள் உங்களுக்குள் நிகழ்ந்திருப்பதைக் காண்பீர்கள்.
உங்கள் மூலாதார சக்தியை மேல்நோக்கி கொண்டு செல்ல இது சிறந்த பயிற்சி.
உங்கள் முதுகின் கீழ்ப் பகுதியில் எப்போதும் இருந்து வந்த பாரத்திலிருந்து விடுபட்டு விட்டதை உணரலாம். உங்களது சக்தி மேலே உள்ள மையங்களை நோக்கி நகரும்.
இந்தத் தியானமுறையைப் பற்றி :
ஏதாவது ஒன்றைப் பற்றித் தியானம் செய்யும்போது, அந்தப் பொருளுக்கும் உங்களுக்கும் இடையில், ஒரு சக்தி வட்டம் மெல்ல உருவாகி விடுகிறது.
யந்திரங்கள் அல்லது சக்தி வரைபடங்கள், இவை காகிதத்தில் எழுதப்படும் அல்லது மரம், தகடு ஆகியவற்றின் மீது செதுக்கப்படும் கணித வரைவியல் வடிவங்கள் ஆகும். .
ஆத்ம நிலையில் இயல்பாகத் வைத்தவைதான் யந்திரங்கள்.
பிரபஞ்சத்தின் வரைபடங்கள்தான் யந்திரங்கள் என்று புராதன தியான நூல்கள் குறிப்பிடுகின்றன.
பிரமிடுகளின் அமைப்பு, சக்தியை உள்வாங்கிச் சேமித்து வைத்திருப்பதுபோல, குறிப்பிட்ட கணித வடிவியல் அமைப்பில் அமைக்கப்படும் யந்திரங்களும் நீண்ட காலத்திற்கு, சக்தியைச் சேமித்து வைத்துக்கொள்கின்றன.
ஆன்மிகப் பக்குவமடைந்தவர் யந்திரத்தை வைத்துத் தியானம் செய்யும்போது, அவருடைய குணப்படுத்தும் ஆற்றல் அந்த யந்திரத்திற்குள் பாய்கிறது.
குணமாக்கும் ஆற்றலை, அந்த யந்திரம், ஒரு பேட்டரியைப்போல சேமித்து வைத்துக்கொள்கிறது.
உடல் நலமில்லாத ஒருவர், அதை வைத்துத் தியானம் செய்ய, அதன் சக்தி அவருக்குள் பாய்கிறது.
அந்தக் கணித வடிவம் பிறந்த போது எந்த ஆன்மிக ஆனந்த சக்தி பாய்ந்ததோ. அதன் ஒரு சின்ன பொறியை, தியானிப்பவர் கண்டு அனுபவிக்க முடியும்.
செயல்முறை விளக்கம் :
காலம் : 21 நிமிடங்கள்.
நமது உடலிலுள்ள சக்கரங்கள், சக்தி பெறுவதற்கான நுழைவாயில்களாக இருப்பதால், இவற்றின் மூலம் நம் விரைவாகவும், ஆழமாகவும் சக்தி பெற்றுவிட முடியும்.
நலம் தரும் யந்திரங்களைக் கொண்டு தியானம் செய்வதால், சக்கரங்களின் மூலம் குணப்படுவது எளிதாகி வி(டும்.
ஒரு பிரச்சனை வரும்போது, சக்கரத்தின் மீது கவனம் ஒருமுகப்படட்டும். உங்கள் கண்கள், நலம் தரும் அந்த யந்திரத்தின் மீது நிலைத்திருக்கட்டும்.
அடைபட்ட அந்த சக்கரத்திலிருந்து யந்திரத்தைப் பார்ப்பதாகக் க்கரத்திலிருந்து யந்திரத்தின் மேல் கவனம் குவியட்டும். அந்த யந்திரத்திலிருந்து உங்களை நோக்கி சக்தி பாய்வதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
உங்களுக்கும் அந்த யந்திரத்திற்கும் இடையில் ஒரு சக்தி வட்டதை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
சக்தி ஒட்டத்தை உணருங்கள்.
இதை 11 நிமிடங்கள் செய்யவும்.
அடுத்து, கண்களை மூடிக்கொண்டு, அந்த யந்திரம், அதற்குரிய சக்கரத்தின் மையத்தை நோக்கிப் பிரவேசிப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.
அந்த மையத்திற்கு நேராக அந்த யந்திரத்தைப் பிடித்து கொள்ளுங்கள். அந்த சக்தி உங்கள் உடல் முழுவதிலும் கலந்து கரைந்துவிட அனுமதியுங்கள்.
குணப்படுத்தும் சக்தி, நலம் இழந்த உறுப்பிற்குள் பாய்வதை உணருங்கள்.
இதை 10 நிமிடங்கள் செய்யுங்கள்.
நீங்கள் விரும்பினால் மறுபடியும் ஒருமுறை செய்து பார்க்கலாம்.
இந்தத் தியானத்ததை 21 நாள்கள் தொடர்ந்து செய்யுங்கள்.
'எங்கும் - எப்போதும்' உதவும் தியானங்கள் ....
உண்பது , உறங்குவது, நடப்பது.
வேலை செய்வது - என அன்றாட வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், ஆன்மிகப் பயிற்சியாக மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது,
நீங்கள் விழிப்புணர்வுடன் பயிற்சி செய்தீர்களானால் கார் ஒட்டுவது,
இசையை இரசிப்பது,
- விளையாவது, தோட்ட வேலை செய்வது என எல்லாவற்றையும் ச க்தியுள்ள தியான முறைகளாக மாற்றிக் கொள்ள முடியும்.
நாம் ஒவ்வொருவரும் செய்யும் சாதாரண காரியங்கள் இங்கே சொல்லப்பட்டுள்ளன.
அவற்றை தியானங்களாக மாற்றுவதற்கான குறிப்புகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
இனி வரும் தியானங்கள் எங்கும் - எப்போதும் செய்வதற்கான தியானங்கள்.
'வாழ்வில்' தியானம் என்பதிலிருந்து...'வாழ்வே' தியானமாக மாற இந்தத் தியானங்கள் உதவும்.
இந்தத் தியானமுறையைப் பற்றி :
இது ஜென்னிலிருந்து பெறப்பட்டது.
'ஸாஜென்' என்ற ஜென் வொர்த்தைக்கு, 'சும்மா அமர்ந்திருத்தல்' என்று பொருள்.
இது கடினமான தியானம். இதில் மிகக் கடினமான அம்சம் என்னவென்றால், ஒன்றும் செய்யாமல் சும்மா அமர்ந்திருப்பதுதான்.
உங்கள் மனத்தை விருப்பம்போல விளையாட விடுவதற்காக சும்மா அமர்ந்திருப்பது.
இந்தத் தியான முறைக்கு எதிராக உங்கள் மனத்தில், எல்லாவகையான விவாதங்களும், நியாயங்களும் தோன்றும், இது ஒரு வீண் வேலை என்று உங்கள் மனம் உங்களை நம்ப வைக்கும்.
நீங்கள் தொடர்ந்து செய்தால் ...
மனம் தூங்க முயற்சி செய்யும்;
பகல் கனவு காணும் ;
மனத்தில் வினோத உருவங்களைத் தோற்றுவிக்கவும் செய்யும்.
தன் அனுமதிப்பதுதான் இந்தத் தியானத்தின் அம்சம்.
ஏதாவது ஒருநாள், இந்த மனம் விருப்பம்போல விளையாடிச் சலித்துப்போகும். 'இனி இவர் மனத்தை நம் விளையாட்டுக்களால் கட்டுப்படுத்த முடியாது' என்பதை அது கண்டுகொள்ளும்.
பிறகு மனம் தானாகக் கழன்று கொள்ளுளும்.
செயல்முறை விளக்கம் :
எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து கொள்ளலாம்.
சுற்றிலும் கொண்டிருந்தால், அவை அவை திருப்பும் அல்லது சிதறடிக்கும். இயற்கையைப் பார்ப்பது நல்ல அம்சம்.
ஓர் அறையில் இருந்தாலும்கூட, சாளரத்தின் வழியாக வானத்தைப் பார்க்கலாம். ஒரு வெள்ளைச் சுவரைப் பார்த்தபடியும் அமரலாம். அல்லது ஓர் அறையின் மூலையை நோக்கி அமர்ந்து அந்த மூலையைப் பார்க்கலாம்.
ஆனால் எதன் மீதும் உங்கள் கவனத்தைக் குவியச் செய்யக் கூடாது. அரை விழி மூடியபடி அமர்ந்து, எதையும் உற்றுப் பார்க்கலாம்.
உங்கள் பார்வை நீங்கள் பார்ப்பதோடு கரைந்ததாக வேண்டும்.
தியானம் உங்களுக்காக
உங்கள் பார்வை தூரத்தை வெறித்தபடி அமைய வேண்டும்.
அது உங்களை ஓய்வு நிலையில் இருக்கச் செய்யும்.
உங்கள் மூச்சு இயல்பாக, நிம்மதியாக அமையட்டும். அரைமணி நேரமாவது அசையாமல் இருக்கும்படியாக நீங்கள் சௌகரியமான நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும்.
தேவைப்பட்டால் பாயின் மீதோ, ஒரு குஷனின் மீதோ அமர்ந்து கொள்ளலாம்.
உடல் அசையாமல் இருக்கும்போது, மனமும் அசையாது நின்றுவிடும்.
முதுகு நிமிர்ந்திருக்கட்டும்.
முதுகுக்கு உதவியாக எதையாவது வைத்துக் கொள்ளலாம். ஆனால் அது இல்லாமல் இருப்பதே நல்லது.
இரு உள்ளங் கைகளையும் ஒன்றாகச் சேர்த்துக் கொண்டு விரல்களைக் கோர்த்துக்கொள்ளவும்.
தயார் நிலையில் விழிப்புடன் இருக்கவும். எதன் மீதும் கவனம் பாயாமல், எதையும் ஏற்கும் நிலையில் இருக்கவும்.
கணத்திற்குக் கணம் நிகழ்காலத்தில் இருக்கவும்.
ஒன்றுமே செய்யாமல் சும்மா அமர்வது ஆரம்பத்தில் சிரமமாகத்தான் இருக்கும்.
ஆனால் சில நாட்களில் அதை ஆனந்தமாக அனுபவிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். அடுக்கடுக்காக, மனம் மெல்ல கீழே நமுவிப் போவதை உணர ஆரம்பிப்பீர்கள்.
இறுதியாக, ஒரு நாள்,
அந்தத் தருணம் வரும்,
மனம் முற்றிலும் இல்லாமல் போய் விடும்.
அப்போது, மனமற்ற தன்மையின் நிலையை, ஒரு சிறிது நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.
இந்தத் தியானமுறையைப் பற்றி :
குஃபி ஞானி அப்துல்லாவிடமிருந்து பெறப்பட்டது இந்தத் தியானம்.
எப்போதும் சிரித்த முக்தோடு இருப்பதில் புகழ் பெற்றவர் அப்துல்லா. மரணப் படுக்கையில்கூட அவர் சிரித்துக் கொண்டே இருந்ததாகச் சொல்வார்கள்.
அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சீடர்கள் சிலா் அதைப் பற்றி அவரிடம், "சாவில் சிரிப்பதற்கென்ன இருக்கிறது ?'' என்று கேட்டிருக்கிறார்கள்.
தமது இரகசியத்தை வெளிப்படுத்தினாராம் குரனி அப்துல்லா.
''மகிழ்ச்சி என்பது எப்போது உங்கள் கையில்தான் இருக்கிறது. உங்கள் மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு 100% உங்களுடையதுகான்.
ஒவ்வொரு நாளும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா அல்லது கவலையாக இருக்க வேண்டுமா, என்பதைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை, வாழ்க்கை உங்களுக்கு வழங்கியிருக்கிறது.
எதைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களோ, அது உங்கள் விருப்பம் !'' என்று தமது குரு சொன்ன மொழியைச் சொன்னாராம்.
செயல்முறை விளக்கம் :
இதைவிட ஓர் எளிய தியான முறை இருக்க முடியாது! ஆனால் இதன் எளிமையைக் கண்டு ஏமாந்துவிட வேண்டாம்; மிகமிக எளியதுதான்; அடிப்படை விதிமுறைகள் நடைமுறைக்குச் சாத்தியமானதுதான்.
ஒவ்வொரு நாள் காலையிலும் எவ்வளவு விரைவாக எழுமுடியுமோ அவ்வளவு விரைவாக எழுந்து, அப்படியே கண்களைத் திறக்காமலேயே, படுக்கையிலேயே அமர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் பெயர் சொல்லி, உங்களையே கூப்பிடுங்கள்! உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்:
''இன்று நீ எதைத் தேர்ந்தெடுக்கப்போகிறாய் ? மகிழ்ச்சியாக இருக்கப்போகிறாயா அல்லது கவலையுடன் இருக்கப்போகிறாயா ?''
காலையில் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. அதனால் உங்கள் மனம், ''நான் மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன், '' என்று சொல்லும். "சரி, ஆனந்தமாக இரு," என்று சொல்லிவிடுங்கள்! அவ்வளவுதான்.
அவ்வளவு எளியது இந்தத் தியானம்! ஒவ்வொறு நாளிலும் நீங்கள் எதிர்கொள்ளும் இன்பமும், துன்பமும் உங்கள் கைகளில்தான் இருக்கின்றன என்பது உண்மை.
அதனால் இந்தத் தியானத்தின் மூலம், பழியை மற்றவர்கள் மேல் தூக்கிப் போடுவதை நிறுத்தி விடுவீர்கள்.
புறச்சூழல் எப்படிப்பட்டதாக இருந்தாலும் -நீங்கள் மகிழ்ச்சியாகவே இருக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணமே, நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதுதான்! அவ்வளவுதான்!
இந்தத் தியானமுறையைப் பற்றி :
மற்ற நாட்களைவிடச் சில நாட்களில், நீங்கள் பாரமாக இருப்பதாக உணர்கிறீர்கள் அல்லவா ?
அந்தப் பாரம் உங்கள் உடலின் பாரம்.
நீங்கள் கனமற்றவர்.
தொடர்ந்து உடலோடு கொண்ட அடையாளம் காரணமாக, இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம்.
உங்கள் உடல், ஒரு பொருள். அதனால் அதற்குக் கனம் இருக்கவே செய்யும்.
விழித்திருக்கும் காலத்தைவிட, உறங்கும் போதோ, மயக்கமடைந்து கிடக்கும்போதோ நமது உடல் கனம் அதிகமாக இருப்பதை உணரலாம்.
விழிப்புணர்வு குறைந்தவராக இருக்கிறீர்கள். கனம் குறைந்து விட்டதுபோல உணர்வதல்ல; உண்மையாகவே கனம் குறைந்து விடுகிறது.
உங்கள் இருப்பின் தன்மையை உணர, நீங்கள் உடல் கடந்தோ, மனம் கடந்தோ போக வேண்டும்.
ியானம் உங்களுக்காக
காரணம் மனத்திற்குக்கூட ஒரு கனம் இருக்கிறது. நீங்கள் கவலையுடன் இருக்கும்போது உடல் பாரமாக இருப்பதுபோல் தெரிகிறது. ஏதோ ஒன்று, உங்களைக் கீழ் நோக்கி இழுப்பதுபோல் உணர்கிறீர்கள்.
மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீங்கள் கனமற்றவராக உணர்கிறீர்கள். காற்றில் நடப்பது போல் உணர்கிறீர்கள்!
காரணம், மகிழ்ச்சியாக இருக்கும்போது உங்கள் உடலை மறந்து விடுகிறீர்கள்; மனத்தை மறந்து விடுகிறீர்கள். எந்த முயற்சியும் இல்லாமலேயே, கனமற்றவராக உணர்கிறீர்கள்.
ஆனால் புறச்சூழல்களால் தியானத்தில், நமது விருப்பத்தினால், கனமில்லா உடல் உணர்வை அனுபவிக்கக் கற்றுக் கொள்ளப்போகிறோம்.
செயல்முறை விளக்கம் :
எங்காவது அமர்ந்து கொண்டு, உங்களை நீங்களே கனமற்றவராக நினைக்கத் தொடங்குங்கள்.
முதுகு நிமிர்ந்திருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளுங்கள்.
உங்கள் முதுகுதண்டு நேராக இருக்கும்போது, நீங்கள் இயல்பாகவே எடையற்றவர்போன்ற உணர்வை உணரத்தொடங்கிவிடுவீர்கள்.
முதுகுத்தண்டு நேராக இருக்கிறதா இல்லையா என்பதை எப்பத் தெரிந்து கொள்வது ? முதுகுத்தண்டை நேராக நிமிர்த்திவைப்பது எப்படி?
நிமிர்ந்து உட்கார்ந்தபடி, உங்கள் முதுகை, மெதுவாக முன்னும் பின்னுமாக அசைக்க ஆரம்பியுங்கள்.
அசைவு மிக மெதுவாக, கொஞ்சமாக இருக்கட்டும். ஒரு இருப்பதாக உணர்வீர்கள்.
அந்த நிலையை மையமாகக் கொண்டு, இடப்பக்கம் வலப்பக்கமாக அசைய அரம்பியுங்கள். சட்டென, நீங்கள் லேசானவராக, கனமற்றவராக உணர்வீர்கள். இந்த மையத்தில் புவிஈர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருக்கும். இந்த மையத்தில்தான் முதுகு நேராக நிமிர்ந்து இருக்கும்.
இப்போது, நீங்கள் கனமே அற்றவராக இருப்பதாகக் கற்பனை செய்ய ஆரம்பியுங்கள்.
ஆரம்பத்தில் அது எளிதாக இருக்காது. உங்கள் உடல் பாரத்தை உணர்ந்துகொண்டேதான் இருப்பீர்கள்.
ஆனால் தொடர்ந்து உங்களுக்கு நீங்களே, 'நீங்கள் கனமற்றவர்' என்று சொல்லிக்கொள்ளுங்கள், உங்களைக் கனமற்றவராக உணருங்கள். பிறகு சட்டென வரும் ஒரு தருணத்தில், நீங்கள் கனமற்றுப் போனதை உணர்வீர்கள். இது தான் முற்றிலும் உண்மையான நிலை!
இது, உங்களுக்கு நீங்களே மனோவசியம் செய்து
உண்மையைப் பார்க்கப்போனால். உங்கள் வாழ்நாள் முழுவதும், ஒருவகை மாயையில், மனோவசியத்தில்தான் இருக்கிறீர்கள். உங்கள் உடல் கனமுள்ளதாக உணர்வதால், அது உங்கள் கனம் என்று கற்பனை செய்து கொள்கிறீர்கள். இதுதான் சுய-வசியம்.
கனமற்றவராக உணருங்கள். தொடர்ந்து அப்படியே நினையுங்கள்.
நீங்கள் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும்போது, உங்கள் உடல் பற்றிய அடையாளத்தை, அடியோடு அறுத்து விடுவீர்கள்.
உடலின் எல்லைக்கோடு தகர்ந்து விடும்.
நீங்கள் அளவற்ற சக்தி உடையவராக ஆகி விடுவீர்கள். நீங்கள் முடிவிலா வெளியை ஆக்கிரமித்துக் கொள்ளவும் முடியும். ஆனால் நீங்கள்தான், உங்களை இந்தச் சின்ன உடலுக்குள் திணித்துக் கொண்டு விட்டீர்கள்!
உங்கள் ஆகியவற்றிற்கெல்லாம் அதுதான் மூலகாரணம்.
ரீங்கள் அதை அடையாளம் கண்டு கொள்ளும்போது, உங்களது எடையின்மையை நீங்கள் தானாகவே உணர்ந்து கொள்வீர்கள்.
தியானத்திற்குள் மிக ஆழ்ந்து செல்லும்போது, உங்களால் உங்கள் உடலை உங்களுடன் எடுத்துச் செல்லவும் முடியும்.
உங்களின் தூயவிழிப்புணர்வாற்றலின் மூலம் உங்கள் உடலையே உயர தூக்க முடியும். அது புவிஈர்ப்புவிசையை எதிர்க்கு, மேலே காற்றில் மிதக்கும்!
அதைத்தான் அந்தரத்தில் மிதத்தல்' என்று சொல்கிறார்கள். இதைப் யோகினிகளாலும் செய்துகாட்ட முடியும்.
நாம் கனமற்றவராக உணரும்போது, உடலிலிருந்தும், மனத்திலிருந்தும் விடுபட்டு விடுகிறோம்.
எடையற்றவராக உணர்வது என்பது, முழுப் விழிப்புணர்வுநிலை, அது அது ஒரு சில இருந்தாலும் சரி. இந்த உத்தி, முழு நிம்மதியையும், முழுப் புத்துயிர்ப்பையும் வழங்கக் கூடியது.
சிரிப்புத் தியானம்
இந்த உத்தி பற்றி :
எந்த அளவுக்கு நீங்கள் அடிக்கடி சிரிக்கிறீர்கள் ?
நாம் சிரிக்கும்போது, மாபெரும் ஆன்மிகப் பயிற்சி ஒன்றை மேற்கொள்கிறோம் என்ற நினைவே நமக்குச் சுத்தமாக இல்லை !
சிரிப்பு, உங்களை உங்கள் மூலத்தோடு இணைக்கிற தியானம் உங்களுக்காக
மிகவும் நெருக்கமானதொரு உள்ளார்ந்த வழி.
அது மிக எளிதானது; மிகுந்த ஆற்றல் கொண்டது.
வாழ்வில், ஒவ்வொருவரும் எப்போதாவது பயிற்சி செய்து பார்த்திருக்கும் ஒரே தியானம் இதுதான்.
சிரிப்பு, அளவு கடந்த ஆற்றலின் மூலம்.
சும்மா சிரித்துப் பாருங்கள், சக்தி உங்கள் மையத்திலிருந்து பொங்கி எழுந்து, ப பெருவெள்ளமாய் உங்களை நிரப்பிவிடும்.
நீங்கள் சிரிக்கும்போது ...
உங்கள் எல்லை மதில்கள் தகர்ந்து விடுகின்றன.
சுயத்தின் உணர்வை நீங்கள் இழந்து விடுவீர்கள்.
நீங்கள், சிரிப்பால் ஆக்கிரமிக்கப்பட்டு விடுவீர்கள்.
இதைக் கவனித்திருக்கிறீர்களா ?
ஒரே சமயத்தில், சிரிக்கவும், சிந்திக்கவும் முடியாது!
நீங்கள் சிரி சிரியென்று சிரித்துக் கொண்டிருக்கும் போது, எண்ணத்திற்கு அப்போது இடமில்லை என்பதை, ஒரு கணப்பொழுதில் உணர்ந்து கொள்வீர்கள். அப்போது, மனமற்ற நிலையை நீங்கள் அனுபவிப்பீர்கள்!
நான் சொல்லும் சிரிப்பு, நமுட்டுச் சிரிப்பன்று; ஏளனம் கலந்த அரைச் சிரிப்புமன்று; புன்முறுவலும் அன்று. அது, அழகான பெரும் சிரிப்பு.
அது உங்களை நிறைத்து, வெளியேயும் பிரவகிப்பது. காாணமற்ற சிரிப்பு இது.
சாதாரணமாக, ஏதோ ஒரு காரணத்தால்தான் சிரிக்க ஆரம்பிக்கிறீர்கள் - ஆனால் ஒருமுறை ஆரம்பித்துவிட்டால், அந்தச் சிரிப்பு உங்களைப் பிடித்துக் கொண்டுவிடுகிறது. அதற்குப் பிறகு சும்மா சிரித்துக் கொண்டே இருப்பீர்கள். காரணம், நீங்கள் சிரிப்பதால்தான்! அவ்வளவுதான்.
சிரிப்பின் மகிழ்ச்சியே உங்களைச் சிரித்துக் கொண்டே இருக்கச் செய்கிறது. உங்களுக்கு அது பற்றிய நினைவுகூட இருக்காது.
ஜப்பானியத் துறவி ஹோடெய் என்பவருக்கு 'சிரிக்கும் புத்தா' என்று பெயர். அவருடைய ஆன்மிக நற்செய்தி முழுவதையும் ஒற்றைச் செயலில் அடக்கி விடலாம்.
அதுதான் சிரிப்பு!
அவர் ஊராக அலைந்து கொண்டே இருப்பார். பொது இடங்களில் நின்று சிரிக்க ஆரம்பித்துவிடுவார்! சிரிப்பென்றால், சத்தமிட்டுச் சிரிக்கும் பெரும் சிரிப்பு; வயிறு குலுங்கச் சிரிப்பது.
சிரிப்பால் அவரது உடலே குலுங்கும். அந்தச் ியானம் உங்களுக்காக
சிரிப்பு, அவரிடமிருந்து அனைவருக்கும் பரவி, ஒரு பெரும் சக்தி அலையை உருவாக்கும். அவரது சிரிப்பு, ஒர் ஒட்டுவார் ஒட்டிபோல எங்கும் பரவி ஊரே அவரோடு சேர்ந்து சிரிக்க ஆரம்பித்து விடும். அந்த ஊரே சிரிப்பால் ஆசிர்வதிக்கப்பட்டுவிடும் !
எந்த உத்தியும் இல்லாமல், எந்த முயற்சியும் செய்யாமல், அந்த நினைவுகூட இல்லாமல், முழுவதுமே, மனமற்ற நிலையின் ஒரு சின்ன பொறியை அனுபவித்துவிடும்.
சிரிப்பு என்பது, எப்பேர்ப்பட்ட தலைசிறந்த தியான முறை!
செயல்முறை விளக்கம் :
ஒவ்வொரு நாள் காலையிலும், கண் விழித்தவுடன், ஒரு குழந்தையைப்போலக் கிகைகால்களை நீட்டுங்கள். விழித்தவுடன் கவனித்திருக்கிறீர்களா ?
இப்படியும் அப்படியும் நீட்டி, நிமிா்ந்து சடவு வாங்கி, உடலை வளைத்து முறுக்குங்கள். உடலின் ஒவ்வொரு தசைநாரும் நீண்டு நிமிரட்டும் !
பிறகு, கண்களைத் திறக்காமலேயே சிரிக்கத் தொடங்குங்கள்.
கொஞ்சம் ஆரம்பத்தில் முயற்சி மேற்கொள்ளத்தான் வேண்டிவரும். பிறகு, உண்மையான
சிரிப்பு, உங்களுக்குள் பொங்க ஆரம்பித்துவிடும்.
சிரிப்பதற்கு ஒன்றுமே இல்லையென்றால், சிரிப்பதற்கு நீங்கள் முயற்சி எடுக்கும், கோமாளித்தனமே உங்களுக்குச் சிரிப்பைக் கொண்டு வந்துவிடும் !
சிரிப்பு ஒரு முறை உங்களைப் பற்றிக் கொண்டு விட்டால், அதை அப்படியே தொடர விடுங்கள்.
எவ்வளவு நேரம் என்ற வரையறை இதில் இல்லை.
சலிக்கும் வரை சிரித்துக் கொண்டே இருங்கள்.
சிரிக்கச் சிரிக்க, சிரிப்பை நீண்டநேரம் நீட்டிக்க உங்களால் முடியும்.
நாற்பத்தைந்து நிமிடம் ஒருவரால் தொடர்ந்து சிரிக்க முடியுமானால், அவர் ஞானம் பெற்று விடுவார் என்று புத்தர் சொல்லியிருக்கிறார், வெறும் நாற்பத்தைந்து நிமிடச் சிரிப்பில் !
அதனால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சிரியுங்கள்! சிரிப்பைத் தொடர்வதற்கான சக்தி உங்களுக்குள் பொங்கி எழும்.
சிரித்து முடித்து நீண்ட நேரம் ஆன பின்பும், சமதளத்திற்கு அடியில், அந்தச் சிரிப்பலைகள் நிலை கொண்டுதான் இருக்கும்.
தினசரி, காலை செய்யும் சில நிமிடச் சிரிப்பு, உங்கள் நாள் முழுமையையுமே மாற்றி அமைத்துவிடும்.
இந்தத் தியானமுறையைப் பற்றி :
இதுவொரு 'கேட்கும் தியானம்'.
கேட்கும் தியானங்கள் அடக்கமான தியானங்கள். நீங்கள் எதையுமே செய்ய வேண்டியதில்லை - - சும்மா கேட்டுக்கொண்டிருந்தால் போதும்.
ஆனால் கேட்பதால் நிறையப் பலன் விளையும்! நாம் வாழ்வது ஒலிகளின் புயல் நடுவே.
எப்போதும் ஒலிகள் வந்து நம்மைத் தாக்கிக் கொண்டே இருக்கின்றன. நம்மை நசுக்குகின்றன. நம்மை விழுங்கி விடுகின்றன.
அந்தப் புயலில் நாம் காணாமல் போய் விடுகிறோம். ஆனால் அந்தப் புயலின் நடுவே, நாம் கேள்விப்பட்டிராத ஒரு மௌனம் இருக்கிறது. அந்த நிசப்தத்தை இந்தத் தியானம் நம்மை உணரச் செய்கிறது.
செயல்முறை குறிப்புகள் :
சரி, வேண்டுமானாலும் எங்கு கொள்ளுங்கள்.
அந்த இடத்தில் அவ்வளவு இரைச்சல் அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது!
ஒசை தொடர்ந்து கேட்கும் இடமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அது இயற்கை ஒசையாக இருந்தால் நல்லது.
பாய்ந்து செல்லும் ஆறாகவோ, அருவியாகவோ இருக்கலாம் அல்லது இரயில் இரயில் நிலையம், சர்த்தை கடைவீதியாகக் கூட இருக்கலாம்!
அமைதியாக இருங்கள்.
உங்களை நோக்கி, பல திசைகளிலிருந்தும் அலை அலையாக வரும் ஒலிகளை உணருங்கள்.
எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஒலிகள் பாய, அந்த ஒலிப் புயலின் நடுவே இருப்பதாக உணருங்கள்.
நீங்கள் மையத்தில் இருக்கிறீர்கள்.
ஒலிகளோ உங்களை நோக்கிப் பாய்கின்றன.
நீங்கள் இருக்கும் இல்லையென்று உணருங்கள்! மையத்தில் முழு நிசப்தம்.
மையத்தில் ஓசைகள் இருந்தால் உங்களால் வெளி ஓசைகளைக் கேட்க முடியாது. புற ஓசைகள் உங்களுக்குள் புகுந்து ஊடுருவிச் செல்கின்றன. ஆனால் அவை மையத்தை அடையும்போது நின்று விடுகின்றன.
உங்களுக்குள் ஓர் இடம் இருக்கிறது. அங்கே எல்லா ஒசைகளும் நின்றுவிடும். அந்த இடத்திலிருந்துதான் நாம்
ஒவ்வொரு ஒசையையும் கேட்கிறோம். அந்த இடத்தை கண்டுகொள்ள முயற்சி செய்யுங்கள்.
அது, சட்டென உள்முகமாகத் திரும்பிவிடும்.
உங்கள் விழிப்புணர்வு வெளியலகத்திலிருந்து இடம் மாறுகிறது. எங்கு நிசப்தம் நிலவுகிறதோ. அதுதான் உங்கள் மையம். எந்த ஒசையும் புக முடியாத ஒரு புள்ளி இருக்கிறது. அந்தப் புள்ளிதான் நீங்கள்.
ஒருமுறை அந்த நிசப்தத்தை நீங்கள் அனுபவித்து விட்டால் பிறகு எந்த ஓசையாலும் உங்களை இடையூறு செய்ய முடியாது. எதனாலும் உங்களைத் தொடவும் முடியாது.
நாம் நம் காதுகளால் ஒலிகளைக் கேட்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த உத்தியின் மூலம் ஒலிகள் காதுகளாலோ, தலையாலோ கேட்கப்படுவன அல்ல என்பதை உணரலாம்.
நாபி மையம்தான் ஒலிகளை எப்போதும் கேட்டுக் கொண்டிருக்கும் மையம் ! அதுதான் ஒலிகளின் மையம்.
ஒலிகளை ஏன் அதிக முக்கியதுவம் கொண்டதாகப் பேசுகிறோம் ? ஏனென்றால், அதிகப்படியான ஓசை, உங்கள் செவிகளைக் குத்தித் துளையிடுவதற்கு ஒப்பாகும்! ஒரு ஒலி அர்த்தமற்றதாகத் தோன்றுமானால், அது தொடர்ந்து ஒலித்தால், ஒலிகளைத் தனித்தனியாக அடையாளம் காண முடியவில்லை என்றால், அந்த ஒலியே ஒரு பெரிய கடையாகிவிடும்.
பாடல்கள் கொண்டு இந்த முறையில் தியானம் செய்ய முடியாது. காரணம், பாடல் உங்களுக்கு விளங்கும்; பொருளின் மீது கவனம் குவியும்.
உடனே மூளையைப் பயன்படுத்த ஆரம்பித்து விடுவீர்கள். அதனால் அது வெறும் ஓசையாக இருக்க வேண்டும்.
ஓசை நடுவே, விரல்கள் கொண்டு காதை அடைத்துப் பாருங்கள். ஒரு புதிய ஓசையைக் கேட்பீர்கள்.
அதுதான் ஓசையில்லா ஓசை.
இந்தப் புதிய ஓசை. ஓசை இல்லாமையின் ஓசை, அப்படிப்பட்ட ஒருஒசை இருக்கவே செய்கிறது. அதை நீ ங்கள் எளிதாகக் கேட்கவும் முடியும்!
ஒலியின் மூலம், நாம் ஒலியின் மூலத்தை நோக்கிச் செல்கிறோம். ஓசையின்மை மூலம், நாம் உள்நோக்கி நமது மையத்தை நோக்கிச் செல்கிறோம்.
உலகின் புற ஒசைகள்,
மையத்தில் உள்ள ஓசையில்லா ஓசை,
இந்த இரண்டையும் கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
ஒன்றிலிருந்து இன்னொன்றை நோக்கி நகருங்கள்.
வெளியிலிருந்து உள் நோக்கி நகருங்கள். பிறகு மறுபடியும் திரும்பி வரக் கற்றுக்கொள்ளூங்கள்.
ஒவ்வொரு முறையும் உங்கள் உள்வாங்கும் திறன் கூர்மைப்படும் ; அதிகரிக்கும்.
அகத்திற்கும், புறத்திற்குமாக எளிதாக நகர்ந்து செல்லக் கற்றுக் கொள்ளுங்கள். அப்போது தெரியும் அந்த விளையாட்டு எப்படிப்பட்டதென்று !
இந்தத் தியானமுறையைப் பற்றி :
வெளியுலகிலிருந்து உங்களை நோக்கி வரும் சமிக்ஞைகளைத் தடுத்துவிடுவதுதான் இந்தத் தியானம்.
உலகிலிருந்து ஐம்புலன்கள் (பார்வை, ஒலி, சுவை, மணம், தொடுவுணர்வு) வழியாகவே உங்களை வந்தடைகின்றன:
புலன்கள் வழியாக வரும் எல்லா அனுபவங்களையும் இந்தத் தியானம் தடுத்து மூடிவிடுகிறது. உலகிலிருந்து விடுபட்டு உங்கள் நீங்கள் மூடிக் கொள்ளும்போது, நீங்கள் உங்கள் உடலிலுருந்தும் விட்டுபட்டு மூடிக் கொள்கிறீர்கள். அப்போது, உங்கள் சக்தி உள்நோக்கித் திரும்பும்.
செயல்முறை விளக்கம் :
இதை எங்கும், எப்போது செய்யலாம்.
நீங்கள் எங்கிருந்தாலும் சரி, புலன்கள் மூலமாக உங்களுக்குள் தோட்டத்திலுள்ள ஒரு ஒரு மலரை நீங்கள் பார்க்கலாம். பறவைகளின் பாட்டைக் கேட்கலாம். கால் மீது ஏறும் ஓர் எறும்பின் செயலையும் உணரலாம்.
என்ன செய்ய வேண்டும் ?
வெறுமனே கண்களை மூடிக் கொள்ளுங்கள்.
நீங்கள் கண் பார்வையற்றவராகவும், பறவையின் பாடலைக் கேட்க முடியாதவராகவும், எறும்பு ஊர்வதை உணர முடியாதவராகவும் ஆகிவிட்டதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
உறைந்து கொள்ளுங்கள். அசைய முடியாதபடி ஆகிவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள்.
இந்த உணர்வில் ஆழ்ந்து செல்லுங்கள்.
உங்களால் அது முடியும்!
எப்படி ?
ஒரு வினாடி நேரம் மூச்சை நிறுத்திப் பாருங்கள்.
தியானம் உங்களுக்காக
உங்கள் புலன்கள் தாமே மூடிக் கொண்டுவிடும். மூச்சு நின்றுவிடும்போது, உணர்வுகளும் நின்று விடுகின்றன.
மூச்சை நிறுத்திவிட்டுக் கவனித்துப் பாருங்கள.
உங்கள் தோலில் ஏற்பட்ட நமைச்சல் தெரிகிறதா ? தூரத்து ஒசை கேட்கிறதா? உங்கள் உடல் முற்றிலும் உறைந்து போய் விட்டது. உங்களால் கையைத் தூக்கக்கூட முடியாது!
நிம்மதியடைவதற்கு இது ஒரு அருமையான உத்தி.
நீங்கள் வெளிநோக்கிப் பாய முடியாதபோது, புலன்கள் மூலம் உணர்வுகள் பெற முடியாதபோது நீங்கள் உங்களை நோக்கி உள்ளே வீசி எறியப்படுகிறீர்கள்.
நீங்கள் ஒரு நிசப்தத் தீவாக மாறிவிடுவீர்கள்.
அந்த நிசப்தத்தில், நீங்கள் உங்களுடைய சொந்த மையத்தைக் கண்டு கொள்வீர்கள்.
அந்த நிலையில், நீங்கள் வெளியே பார்த்தாலும், எதையாவது கேட்டாலும்கூட, அவற்றை நீங்கள் உங்கள் சொந்த நிசப்த மையத்திலிருந்தே பார்ப்பீர்கள்.
ஒரு முறை அந்த இடத்தைக் கண்டுபிடித்தபிறகு, எந்தக் காரணம் கொண்டும், புலன்களின் பேரிரைச்சலால் நீங்கள் பாதிக்கப்படவே மாட்டீர்கள். உங்கள் மன உறுதியால், நீங்கள் உங்கள் புலன்களை மூடி அடைத்துவிட முடியும். பிறகு, உங்கள் புலன்களின் பார்வையாளராக நீங்கள் ஆகிவிடவும் முடியும்.
ஸ்பூர்த்தி பானா
இந்தத் தியானமுறையைப் பற்றி :
நீங்கள் எதைச் செய்து கொண்டிருக்கிறீர்களோ, அந்தச் செயலே ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கு சி றந்த தியானத்திற்குரிய நுட்பம் ஆகும். நீங்கள் சும்மா அமர்ந்திருப்பதை விட, செயல்படும்போதே, விழிப்புணர்வை நிலைநிறுத்துவது எளிது.
அதுதான், 'டைனமிக் தியானம்', 'ஓடும் தியானம்.'
ஏன் ஒட வேண்டும் ?
நீங்கள் விழிப்புணர்வோடும் இருப்பீர்கள்.
ஒடும்போது, உடலும் மனமும் உயிரும் ஒன்றி இருக்கும் ஒற்றுமையை உணர்வீர்கள்.
உங்களுக்குள் உள்ள அனைத்தும் ஒன்றுபட்டு, ஒரு குறிக்கோள் நோக்கிச் செயல்படும். அமர்ந்திருக்கும்போது, உடல் மட்டுமே அசையாமல் இருக்கும். மனமோ ஒட்டமாய் ஒடிக் கொண்டிருக்கும்! இதில், உடலும் மனமும் பிரிந்து நிற்கும். உடலோ அமாந்திருக்கிறது, மனமோ மோ தன் பயணத்தைத் தொடங்கி விடுகிறது!
உங்கள் எதிர்ச்செயல் நிகழ்கிறது.
நீங்கள் ஒடும்போது, மனம் அசைவது இல்லை,
உங்கள் மனம் பேசுவதை நிறுத்தி விடுகிறது. தொடர்ந்து ஒடிக் கொண்டே இருந்தால், சற்று நேரம் ஆன பிறகு ஒட்டம் உங்களை சுவீகரித்துக் கொள்கிறது.
அப்போது, உங்களுக்குச் சொந்தமில்லாமல் போய்விடுகிறது. நீங்கள் ஒட்டமாகவே மாறிவிடுவீர்கள்!
செயல்முறை விளக்கம் :
ஒடுவதற்கான நேரத்தை கொள்ளுங்கள்.
அதிகாலை நேரம் சிறந்தது,
அடுத்தபடியாக மாலை நேரம்.
கதிரவனின் உதயம், மறைவு ஆகிய நேரங்களில், உடல் மிகவும் திறந்திருக்கும்; இயற்கையின் சக்திகளைப் பெறுவதற்கு மிகவும் தயாராக இருக்கும்.
எளிய, நேரான, நிசப்தமும் தனிமையும் உள்ள பாதையைத் தோ்தெடுத்துக் கொள்ளுங்கள். கரடுமுரடான பாதை சரிப்பட்டு வராது.
ஒடும்போது ... உங்கள் கவனம் ஓட்டத்தில் மட்டுமே இருக்க
ஒரத்துச் சரிவில் விழுந்து விடுவோமோ, வாகனங்கள் இடித்துத் தள்ளிவிடுமோ என்ற கவலைகள் இல்லாதபடியான பாதையாக அது இருக்க வேண்டும்.
ஒடிப் பழக்கமில்லை என்றால், கொஞ்ச தூரம் - ஒரு அரை மைல் - ஓடினால் போதும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தூரத்ததைக் கூட்டிக் கொள்ளலாம்.
வயிற்றிலிருந்து ஆழமாக மூச்சு விடுங்கள். கைகள் எல்லாம் செயல்படும்படி ஒடுங்கள். களைப்புத் தோன்றினால், உடலுக்குச் சிரமம் கொடுக்காமல், சற்று ஒய்வெடுத்துக் கொள்ளுங்கள்.
காலணிகளைக் கழற்றிவிட்டு, கால் பூமி மண்ணைத் தொட்டு உணரும்படி நில்லுங்கள். பூமியைத் தொடுவதால் கிடைக்கும், ஒரு சக்தி ஆதாரத்தை நாம் இழந்து விட்டோம். காரணம், எங்கும் செயற்கையான தளங்கள் இருப்பதால், நாம் வெறுங்காலில் நடந்து மகிழ்வதையே விட்டுவிட்டோம்.
பாரதத்தில், வெறுங்காலில் நடப்பது புனிதமான உடற்பயிற்சியாகக் கருதப்படுகிறது.
அதனால்தான், எல்லா வழிபாட்டுத் தலங்களிலும், மிதியடிகளை வெளியே விட்டு வரும்படி செய்கிறார்கள்
அந்த இடங்களில் சக்தி மட்டம் உயர்ந்திருக்கும்.
அந்தச் சக்கியைப் பெற உங்கள் பலன்கள் அனைத்தும் தயாராகத் திறந்து இருக்கும்படி செய்ய வேண்டும்.
பாதை நன்றாக இருந்தால், வெறுங்காலில் ஓடுவது மாபெரும் அனுபவமாக அமையும்.
புல்வெளியிலோ, ஆற்றோரத்திலோ, கடற்கரையிலோ முயற்சி செய்து பாருங்கள்.
பூமியோடு தொடர்பு கொள்வது, ஆதாரமூலத்தோடு தொடர்பு வாழ்வின் கொள்வதாகும்.
மையப்பட்டு, மையத்தில் நிற்பதற்கு இது ஓர் இனிய வழி.
அதிகப்படியாக ஓடும் உற்சாகத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம். காலத்தை வரையறுக்க வேண்டாம்.
உங்கள் திறமையை வளர்த்துக்கொள்வதற்காக ஓட வேண்டாம். எடைக் குறைப்பதற்காகவும் ஓட வேண்டாம்! ஒருவேளை உங்கள் எடை குறைந்தால், அதுவும் நல்லதுதான்-ஆனால் அதற்காக என்று ஒடக் கூடாது. சும்மா ஒடுங்கள்!
பல நாள் ஓடிய பிறகு, அந்தக் காரியம் மலைபோல் தோன்றினால், அதை அப்படியே விட்டுவிட்டு, வேறு தியான முறைக்குப் போய் விடுங்கள்! நீந்தலாம், நடனமாடலாம். மறுபடியும், செய்யலாம் என்று தோன்றினால் ஒடுவதற்குத்
திரும்ப வந்து விடுங்கள்.
நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய, இந்தச் சில குறிப்புகள் தவிர, தேவறு எந்த விதிகளையும் வகுத்துக் கொள்ளாதீர்கள்.
விதிகள், தியானத்தின் ஆனந்தத்தை அழித்துவிடும்.
ஐந்து நிமிடப் புத்துணர்ச்சிகள் ...
தொழிலில் இறுக்கம் தோன்றினால், சாதாரணமாக நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?
அல்லது,
நாளின் கடைசி நேரத்தில் களைத்துப் போகும் போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?
தயவுசெய்து ஒரு சிகரட்டை எடுக்காதீர்கள். அல்லது, தொலைக்காட்சியைப் போடாதீர்கள்!
ஒரு குறுகிய நேர தியானப் பயிற்சி சில நிமிடங்களில் உங்களுக்குப் புத்துணர்ச்சி தரும்.
இங்கே, சில எளிய எளிய ஐந்து நிமிடப் புத்துணர்ச்சி வழிகள் உள்ளன.
வேலை செய்யும்போதோ, வீட்டிலோ இதைச் செய்ய முயன்று பார்க்கலாம்.
தியானமும், அதற்கான குறிப்புகளும் :
நீங்கள் இறுக்கமாக இருக்கும்போது, இந்தத் தியானம் அற்புதங்களைச் செய்யும்.
ஆழமாக வெளிமூச்சு விடுவதில் ஆரம்பிக்கவும்.
எப்போதும் வெளிமூச்சு விடுவதில் ஆரம்பிக்கவும். ஆழ்ந்து, ஆற்றலோடு வெளிமூச்சு விடுவதில் கவனம் செலுத்துங்கள்.
முழுவதுமாக வெளிமூச்சு விட்ட பிறகு, வயிற்றை உள் இழுத்துக் கொண்டு, மூன்று வினாடிகள் காத்திருக்கவும்.
பிறகு முடிந்தவரை ஆழமாக உள் மூச்சு வாங்கவும், மூன்று வினாடிகள் மூச்சை உள்நிறுத்தி, பிறகு வெளிவிட ஆரம்பிக்கவும்.
மீண்டும் வெளிமூச்சு,
பிறகு உள்மூச்சு,
மூச்சு விட்டு வாங்குவது ஒரே சீராக, ஒத்திசைவாக அமைய வேண்டும்.
மெதுவாக உள்ளிழுக்க வேண்டும்.
உள்ளேவருவதும், முத்சு
முழுமையாக இருக்க வேண்டும்.
நீங்கள் மூச்சை வெளியேற்றும்போது, உங்கள் உடலுக்குள் உள்ள உநச்சுப் பொருள்களை எல்லாம் வெளியேற்றி விடுகிறீர்கள்.
அதே சமயம் இறுக்கத்தையும் தூக்கி வெளியே எறிந்து விடுகிறீர்கள். 10 அல்லது 12 முறை செய்தபின் (வெளிமூச்சு - உள்மூச்சு சேர்ந்த ஒரு தடவை) இறுக்கம் போய்விடும், படபடப்பு வெளியேறிவிடும்!
இந்தத் தியானம் பற்றி :
இரு புருவங்களுக்கும் நடுவில், நெற்றியில் உள்ள சக்கரத்திற்குச் சக்தி ஊட்டும் உத்தி இது.
இந்த சக்கரத்திற்கு - 'ஆக்ஞா' என்று பெயர் அதாவது. ஆணை.
இது எசமான சக்கரம்.
- இது மன உறுதியின் பீடம்.
இது சக்தி ஊட்டப்படும்போது, புரிதலில் மிகமிகத் துல்லியத்தை நீங்கள் உணர்வீர்கள். உங்களது பகுத்தறிவும், திட்டமிடும் ஆற்றலும் பெருகும்.
இதற்கு மேலாக. அந்த மூன்றாம் வழிதான், உள்முகமாகப் பார்க்கக் கூடியது.
முதன் முதலாக. நீங்கள் உள்முகமாகப் பார்க்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
உங்களின் சொந்த சக்தியைக் கொண்டே இந்தத் தியானத்தைச் செய்யப்போகிறீர்கள்.
நமக்குள் இயற்கையாகவே குணப்படுத்தும் தன்மையும், புத்துணர்வூட்டும் தன்மையும் சக்திகள் ஓடிக் கொண்டேதான் இருக்கின்றன.
இந்தத் தியானம் அந்தச் சக்தியைப் பயன்படுத்த உதவும்.
இதற்கான குறிப்புகள் :
கண்களை மூடியபடி சௌகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள்.
இரு உள்ளங்கைகளையும், கண் கருவிழிமேல் இருக்கும்படி. மெதுவாக வைத்துக் கொள்ளுங்கள்.
ஆரம்பத்தில், கவனமில்லாமல் அழுத்தி வைத் திக் கொள்ளக் கூடும், அழுத்தம் கொடுக்காமல் வைக்கப் பழகவும்.
கண்களின் வழியாக சக்தி உள்ளே பாய்கிறது.
அது நுட்பமான சக்கி.
நீங்கள் உள்ளங்கைகளால் கண் கருவிழிகளைத் தொடுவது சக்தியை உங்களுக்குள் திருப்பி விடுவதற்குத் கான்.
நீங்கள் எதிர்ப்புக் காட்டும். தொட்டும் தொடாமலும் இருக்கும்படி வைக்க வேண்டும் !
அவ்வாறு மெல்லத் தொடுகையில், எண்ணங்களும் நகராமல் நின்றுவிடும்.
விழிகள் அசைந்தால், எண்ணங்களும் ஒட ஆரம்பித்து விடும். கண்கள் அசையாமல் இருக்கும்போது எண்ணங்கள் உறைந்துவிடும். இதைக் கவனித்திருக்கிறீர்களா ?
மெல்லத் தொட, சக்தி உள்நோக்கி நகர்வதை நீங்கள் உணரலாம். சக்தி உள்ளே சென்றதும், ஒருவகைப் புத்துணர்ச்சியும், பாரமின்மையும், உங்கள் முகம் முழுவதிலும், கலையெல்லாம் நிரைந்துவிடும்.
அந்தச் சக்தி உங்கள் ஆக்ஞா சக்கரத்தைத் தூண்டும். சில நிமிடங்களில், புத்துணர்வும் ஏற்பட்டதை நீ ங்கள் உணரலாம்.
அரை மணி நேரம் இதைத் தொடர்ந்தால், அந்தச் சக்தி, உங்கள் இதயத்தை நோக்கி நகரும். உங்கள் இதயத் துடிப்பு நிதானப்படும்.
உங்கள் உடல் முழுவதுமே தளர்ந்து வைப்வு பெற்றுவிடும். உடனடி ஒய்வுக்கு இது மிகச் சிறந்த தியானம் ஆகும்.
நீங்கள் தியானத்தில் பிரவேசிக்கக் கூடத் தேவை இல்லை. உங்கள் உள்ளங்கைகளை, மெத்தென்று, மூடிய கண்களின் கருவிழிகள் மீது வைப்பதால், கண்களும் ஒய்வு பெறுகின்றன.
கண்கள் விடுகின்றனவோ, பார்க்கும். கணினி பார்க்கும் களர்ந்து போகின்றனவோ. அப்போதெல்லாம் இம்முறையைச் செய்து பாருங்கள்.
மாதக் கணக்கில் இதைக் தொடர்ந்தால், ஆக்ஞா சக்கரத்திலும், இதயப் பிரதேசத்திலும், சக்தி நிரந்தரமாகத் தங்கியிருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.
ஆரம்பத்தில் ஒரு துளி துளி சக்தியே கிடைத்தாலும், ஒராண்டு காலத்தில், உங்களுக்குள் ஒரு சக்தி வெள்ளம் நிரந்தரமாகத் தங்கியிருப்பதை உணரலாம்.
ஆக்ஞா சக்கரத்தைத் திறப்பதன் மூலம், செய்யும் காரியங்களில் தெளிவு உண்டாகும். உங்கள் எதார்த்த நிலையையும் உணரலாம்.
இதயச் சக்கரத்தைச் செயல்படத் தூண்டுவதன் மூலம், உங்களிடமிருந்து எல்லயற்ற அன்பு, புறம்நோக்கிப் பெருகிப் பாய்வதைக் காணலாம். அப்போது நீங்கள் பிரபஞ்ச இயற்கையோடு தொடர்பு கொண்டு விடுவீர்கள்.
குறிப்புகளும் தியானமும் :
உடனடி நிவாரணத்திற்கு, மிகவும் பிரபலமான, வேகமான உத்தி இது. ஒரு தனியிடம் கிடைத்தால், படுத்தபடி இதைச் செய்யலாம்.
கண்களை மூடிச் கொள்ளுங்கள், வயிற்றிலிருந்து மூச்சை நன்றாக உள்வாங்குங்கள். மூச்சை சற்று நிறுத்த வேண்டி இருப்பதால், முடிந்தவரை நன்றாக உள்இழுக்க வேண்டும். மூச்சை உள்நிறுத்திக்கொண்டு கையை இறுக்குங்கள்.
கால் விரல்களிலிருந்து ஆரம்பிக்கவும்.
கால் இறுக்குங்கள். தளர விடவே கூடாது.
பிறகு இந்த இறுக்கம் காலுக்கும், முழங்காலுக்கும் வர வேண்டும்.
பிறகு புட்டத்திற்கு வேகமாக இறுக்கத்தை மேலே நகர்ந்தவும். ஏனென்றால் அதிக நேரம் மூச்சு பிடிக்க முடியாதே! ஒரு நிமிடம்தான் மூச்சு பிடிக்க முடியும்.
பிறகு அந்த இறுக்கத்தை இடுப்புக்கும், உடனே வயிற்றிற்கும் கொண்டு வரவும். வயிற்றின் தசைநார்கள் முடிந்தவரை இறுக வேண்டும். அப்போது, இடுப்பின் தியானம் உங்களுக்காக
தசைநார்கள் தாமாகவே இறுகிவிடும்.
பிறகு வேண்டும். முதுகுத் தண்டுவடம் முழுவதும் இறுக வேண்டும்.
கைகள் இறுக வேண்டும். விரல்களில் காவங்கி புறங்கை, தோள், கழுத்து எனத் தசைகள் இறுகிக் கொண்டே போக வேண்டும்.
பிறகு முகத்திற்கு வருக.
நீங்கள் அறிந்திருப்பதை விட, அதிகத் தசைநார்கள் கொண்டது முகம்.
வாய், மூக்கு, கண்கள், புருவங்கள், நெற்றி, கன்னங்கள் என எல்லாம் இறுக வேண்டும்.
கண் இமைகளைச் சுருக்குங்கள். இவற்றைச் செய்து வரும்போது. உடலின் எந்தப் பகுதியையும், தளர விடக் கூடாது.
எவ்வளவு நேரம் முடியுமோ அதுவரை அப்படியே விறைப்பாக இருங்கள்.
இனி மூச்சு பிடிக்க முடியாது என்ற நிலை வரும்போது, சட்டென மூச்சை விடுங்கள்.
உடல் விடுங்கள். உடலும், மனமும் தளர்ந்த ஒய்வில், அப்படியே ஒரு நிமிடம் இருங்கள்.
இரண்டு நிமிடங்களில், உடலையும், உள்ளத்தையும் புத்துணர்வு பெறச் செய்யும், ஒய்வு கொள்ளச் செய்யும், தியானமுறை இது. இது. மறுபடியும் செய்யவும்.
எழு சக்கரத் தியானங்கள்
சக்கரங்கள் எவை ?
சக்கரங்கள், நம் உடலின் நுட்பமான சக்திக் களஞ்சியங்கள். முக்கியமான ஏழு சக்கரங்கள்: மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரம்.
ஸ்கால உடலில் இவற்றிற்கென்று கனியாக ஸ்தூல இடங்கள் இல்லையென்றாலும், உடலோடு இந்தச் சக்தி மையங்கள் இருக்கவே செய்கின்றன.
உடலின் தொடர்புகொண்டு அவற்றின் செயல்பாடுகளில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்தச் சக்கரங்கள், நமது உடல் - மன நலத்திற்குப் பெரிதும் துணை செய்கின்றன. அதே சமயம், நமது எண்ணங்களும் உணர்வுகளும், இவற்றைப் பாதிக்கவும் செய்கின்றன.
பிரபஞ்சத்தின் எல்லையற்ற சக்திக்கு, இவை நேரடி வாய்க்கால்களாகவும் அமைந்துள்ளன.
இயல்பிற்கு மாறான நமது வாழ்க்கை முறையும், இறுக்கமும், எதிர்மறை உணர்வுகளும், சக்கரங்களைப் பூட்டிவிடக் கூடியவை; அவற்றைச் செயலிழக்கவும் செய்துவிடக் கூடியவை.
தியானம் உங்களுக்காக
இவற்றைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாதகால். முக்கியமான சக்தி வாயில்களை, நாம் தொடர்ந்து அடைத்து விடுகிறோம்.
சக்கியே உடல் நலம்.
அதனால்தான் ஒவ்வொரு சீர்கேட்டிற்கும் உரிய சக்கரத்தைத் தூய்மைப்படுத்தி, சக்தி ஊட்டுவதன் மூலம், நமது எல்லா உடல் - மனச் சீர்கேடுகளும் முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ குணப்படுத்திவிட முடிகிறது.
சக்கரத் தியான சிகிச்சை முகாமின் போது என்ன நிகழ்கிறது? (Chakra Therapy)
சக்கரத் தியான சிகிச்சை முகாம் இரண்டுநாள் நிகழ்ச்சி.
தியானத்தின் மூலம், சக்கரத்தை நலமாக்கும் தீவிரமான முகாம் அது.
அந்த இயல்பையும், அதன் பங்கு பணியையும் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். அந்த ஏழு சக்கரங்களையும் தூய்மைப் படுத்தி, சக்தி ஏற்றும் ஏழு ஆற்றல் மிக்க நடைமுறை தியான உத்திகளைக் கற்றுக் கொடுப்பார்கள்.
இந்தத் தியானங்களை வாரத்திற்கு ஒருமுறை சாதாரணமாகச் றந்ததாக உங்களுக்குத் தோன்றும் ஏதாவதொன்றைத் தேர்தெடுத்துக்கொள்ளலாம்.
உள்ளவர்களுக்கு, மகாமந்திர, துக்கஹரணா, மணிபூரக சுத்தி கிரியா ஆகியவை மிகவும் உதவியாக இருக்கும்). அதை 21 நாள் தொடர்ந்து செய்து வரவேண்டும்.
பிறகு அடுத்த தியானத்திற்கு நகர்ந்து கொள்ளலாம்.
உண்மையான ஈடுபாட்டுடன் இந்தத் தியானங்களைச் செய்து வரும்போது, உடல், மனம், ஆன்மிகத் தளங்களில் அற்புதங்கள் நிகழும்.
தியானங்களுக்குமான (ஏழு குறிப்புகள் அடங்கிய ஒலிநாடா தியானபீடக் கிளைகளில் கிடைக்கும்).
முதல் நாள் துக்கஹரண தியானம் (துயரத்தை அழிப்பது )
| குணப்படுத்தும் சக்கரம் | : | மலாதாரம் |
|---|---|---|
| சக்கரம் உள்ள இடம் | : | முதுகுத் தண்டுவடத்தின் கீழ்நுனிப்பகுதி. |
| சக்கரத்தைப் பூட்டுவன | ・・ | அதீத கற்பனையும், எதிர்பார்ப்பும் |
| பூட்டைத் திறப்பது | : | எதார்த்த நிலையை ஏற்றல் |
| தியானம் பெறப்பட்டது | ・ | சிவகுத்திரத்திலிருந்து |
| காலம் | 30 நீமிடங்கள் |
துக்கஹரணத்திற்கான செயல்முறை குறிப்புகள் :
இந்தத் தியானம், மூன்று 10 நிமிடப் பகுதிகளைக் கொண்ட 30 நிமிடத் தியானம். அலாரம் அல்லது கடிகாரம் ஒன்று வேண்டும். அல்லது நேரம் பார்ததுச் சொல்ல யாராவது ஒருவர் வேண்டும்.
முதல் 10 நிமிடங்கள் மூச்சுப் பயிற்சி.
ஆழமாக மூச்சை இழுங்கள், விடுங்கள், ஒழுங்கற்று!
ஏன் ஓழுங்கற்று இருக்க வேண்டும் ?
ஒழுங்கற்ற முறையில் மூச்சுப் பயிற்சி செய்யும் போது உடல் தன் புத்திக்கூர்மையைப் பயன்படுத்தும்.
தாறுமாறாக இல்லை. முடிந்தவரை இழுங்கள். மற்றதை எல்லாம் மறந்து விடுங்கள். முடிந்தவரை ஆழமாக இழுங்கள். நீங்களே முச்சாக மாறிவிடுங்கள் !
கனக்கு வேண்டிய அளவு மூச்சை அது எடுத்துக் கொள்ளும். முச்சை நீங்கள் கட்டுப்படுத்தத் தேவையில்லை - இது பிராணாயாமம் அன்று.
உங்களுக்கு இதயப் பிரச்சினை இருந்தால், சிரமப்படாத அளவுக்குச் இல்லையென்றால், உங்கள் முழு ஆற்றலையும் பயன்படுத்திச் செய்யுங்கள்.
இந்தப் சக்தி, உங்கள் உடலில் இறுகிக் கட்டிக் கிடக்கும் எல்லா எதிர்மரை சக்கிகளையும் உருக்கிவிடும்.
உணர்வற்ற மனம் நன்றாகத் திறந்து கொள்ளும்.
இப்படித்தான் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும் என்ற வரைமுறை இல்லை. உடல் விரும்பியபடி செய்யட்டும். நீங்கள் நின்று கொண்டிருக்க வேண்டும். அவ்வளவுதான்.
அடுத்த 10 நிமிடங்கள் வெளிக்கொட்டுதல் (Catharsis)
வெளிக்கொட்டுதல் என்பது உங்கள் இருப்பிற்குள்
தியானம் உங்களுக்காக
இருக்கும் 'விதை உடலை'த் திறக்கிறது.
ெவ ளிக் கெ ா ட் டு தலின் போ து , உங்களுக்குள்ளிருக்கும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் உள்ள அழுத்தப்பட்ட உணர்வுகள் எல்லாவற்றையும் ஒரு நோயாக மாற்றிக்கொள்ளாமல் வெளியேற்றி விடுவீர்கள்.
அது மட்டுமல்ல, மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாவகையில் வெளியேற்றி விடுவீர்கள்.
இந்தப் பகுதியில் முடிந்தவரை உடலை விறைப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
கையின் போக்கின்படி கைகளை வீசுங்கள்.
தேவைப்பட்டால் பற்களைக் கடித்துக் கொள்ளுங்கள்.
உடலின் விருப்பப்படி தலையைச் சுழற்றுங்கள்.
உடல் என்னவெல்லாம் செய்ய விரும்புகிறதோ அதையெல்லாம் செய்ய விடுங்கள்.
ஆனால் ஒவ்வொரு வைத்துக் கொள்ளுங்கள்.
மனத்திலிருக்கும் உங்கள் துயரங்களை எல்லாம் தூக்கி எறியுங்கள்.
அழுகை வந்தால் அழுங்கள்.
சிரிக்க விரும்பினால் சிரியுங்கள்.
இந்தப் பத்து நிமிடங்களில் உங்கள் உடலைக் கட்டுப்படுத்தாதீர்கள். பைத்தியம்போல் ஆகிவிடுங்கள்.
பயப்பட வேண்டாம். இந்த உத்தி உங்களைப் பைக்தியம் பிடிக்கச் செய்து விடாது. ஏற்கனவே உள்ளே உள்ள பைத்தியக்காரத் தனத்தைத்தான் இது வெளியேற்றும்.
உங்களுக்குள் பொங்கி எழும் வன்முறையைக் கண்டு அஞ்ச வேண்டாம். எல்லா வன்முறைகளும் தீர்ந்துபோன பிறகு, உங்கள் இருப்பில் ஓர் அமைதி மலரும்.
உங்கள் அறிவுக்கு எட்டாமலேயே, உங்கள் விழிப்புணர்வின் ஆழத்திலிருந்து ஒருவித அசைவற்ற மௌனம் மேல் எழ ஆரம்பிக்கும்.
பத்து நிமிடங்களின் முடிவில் (நீங்கள் ஒலிநாடாவைப் பயன்படுத்தினால்) ''நிறுத்து,'' என்ற சொல்லைக் கேட்பீர்கள். அல்லது உங்கள் நண்பரைச் சொல்லச் சொல்லுங்கள்.
அந்தக் கணத்தில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்களோ அப்படியே நின்றுவிட வேண்டும். அதாவது சிலைபோல உறைந்து போய்விட வேண்டும்.
வேகமான இயக்கத்திலிருந்து சட்டென முழு நிசப்த நிலைக்கு நீங்கள் வந்துவிடும்போது, உங்கள் மனமும் சட்டென நின்றுவிடும். ஒரு கணம் அப்படியே நின்றுவிடும்.
அந்தக் கணத்தில்தான் நீங்கள் சமாதி நிலையை அனுபவிக்கும் வாய்ப்பு அமையும். குருவின் முன்னால் செல்லும்போது இந்த வாய்ப்பு மிக அதிகம்.
மனம் சட்டென நின்றுவிடும்போது, அளவற்ற சக்தி தியானம் உங்களுக்காக
உங்களுக்குள் பாய்வதை உணர்வீர்கள்.
சில வினாடியில், உங்கள் மனத்தில் சிந்தனைகள் மேலெழ ஆரம்பித்துவிடும். அப்போது, தரையில் அமர்ந்து விடுங்கள்.
ஆனந்தமான சூழலில், உங்கள் மனம் போகும் போக்கைக் கவனிக்க ஆரம்பித்து விடுங்கள். இயல்பாக மூச்சு விடுங்கள், எதைப் பற்றியும் நினைக்காகீர்கள்,
தியானம் என்பது மன ஒருமைப்பாடு அன்று,
தியானம் என்பது விழிப்புணர்வு.
உங்கள் எண்ணங்களின் போக்கையும், உங்கள் உடலிலும், உடலுக்கு வெளியிலும் என்ன நடக்கிறது என்பதைக் கவனியுங்கள்.
இந்தத் தியான முறையின் ஆற்றலைக் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், இன்றே ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள்.
பதினைந்து நாள்கள் இந்த முறையில் முழுச் சக்தியை பிரயோகித்துப் பயிற்சி செய்தபின், இன்னொரு புகைப்படம் எடுத்து, இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். உங்கள் முகப்பொலிவு, நிச்சயம் மாறியிருக்கும் என்று உறுதி சொல்கிறேன் !
உங்கள் கண்களின் பார்வை இனியதாக மாறி இருக்கும் .
நீங்கள் பூப்பூத்துத் திகழ்வீர்கள்.
நிர்பய தியானம் (அச்சமின்மையின் பாதை)
| குணப்படுத்தும் சக்கரம் | சுவாதிஸ்டானம் | |
|---|---|---|
| சக்கரம் உள்ள இடம் | : | தொப்புளிலிருந்து 2 அங்குலம் கீழே |
| சக்கரத்தைப் பூட்டுவன | அச்சம், குறிப்பாக மரண பயபம் | |
| பூட்டைத் திறப்பது | மரணத்தை அமைதியாக ஏற்றுக்கொள்வது | |
| தியானம் பெறப்பட்டது | வேதாந்தத்திலிருந்து | |
| காலம் | 20 நீமிடங்கள் |
எச்சரிக்கை :
இது மிகச் சக்தியுள்ள தியானம்.
குருவின் மூன் அமர்ந்து செய்வதே சிறந்தது.
நம் தியான முகாம்களில் நிர்பயா தியானம் பயின்றவர்கள் இதைச் நண்பரோ, உறவினரோ உடனிருப்பது அவசியம்.
குறிப்பிட்ட தியானம் உங்களுக்காக
கொள்ளவில்லை என்றால், உடனிருப்பவர் உங்களை மெதுவாக, ஆனால் உறுதியாக பெயர் சொல்லி அழைத்து எழுப்பிவிட வேண்டும்.
நிர்பய தியானத்திற்கான ஆரம்பக் குறிப்புகள் :
இந்தத் தியானத்தின்போது, நீங்கள் உங்கள் சொந்த மரணத்தைப் பார்ப்பீர்கள், நீங்கள் உங்கள் உடலை விட்டுப் போவதைக் அப்படியே காண்பீர்கள்.
ஆரம்பிப்பதற்கு முன்னால், சில குறிப்புகள் :
உங்கள் தரப்பிற்கு என்ன தேவை ?
உங்கள் காட்சித் திறன், கற்பனைத் திறன் முழுவதையும் ஒருமுகப்படுத்த வேண்டும்.
உங்கள் மரண நிகழ்வின் செயல்பாடு முழுவதையும் நீங்கள் காணப் போகிறீர்கள்!
குருவின் தரப்பிலிருந்து அளவற்ற சக்தி உங்களுக்குக் கிடைக்கப் போகிறது. அது, நடக்கப் போவதற்கு உதவியாக, முதலில் அச்சத்தை விடுங்கள்.
மெய்யாகவே செத்துப் போய் விடுவோமோ என்று அச்சப்பட வேண்டாம். தியானத்தின்போது சற்று நேரம் அப்படி தோன்றும், என்றாலும் அஞ்ச வேண்டாம்.
நீங்கள் சாகமாட்டீர்கள். உங்களுக்கு தன்றும் ஆகிவிடாது. குருவின் சொல்லும் ஆதரவும் உங்களுக்கு
இருக்கிறது. உங்கள் நம்பிக்கையைக் குருவின் மீது வையுங்கள்.
இரண்டாவதாக, போாசையை விட்டொழியுங்கள். இந்தக் கற்பனைகளால் எல்லாம் எனக்கு என்ன இலாபம் என்று கேட்காதீர்கள்.
உங்கள் வாழ்வே ஒரு கற்பனைதான்.
அதனால். இன்னும் கொஞ்சம் அதிகப்படியாகக் கற்பனை செய்வதால் இழப்பு ஒன்றும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.
நீங்கள் எதை எதார்த்தமென்று நினைத்திருக்கிறீர்களோ, அந்தக் கற்பனையைவிட, அதிக எதார்த்தமானது இந்தத் தியானம்.
நீங்கள் கற்பனை செய்யும் எத்தனையோ காரியங்கள் நடப்பதே இல்லை. ஆனால் மரணம் மட்டும் சர்வ நிச்சயம்.
மரணத்தைப் பற்றித் துல்லியமாக நீங்கள் கற்பனை செய்து பார்த்து விடலாமே.
நீங்கள் தரையில் படுத்துக் கொள்ளும்போது, உங்களுக்கும் இருக்கட்டும். குறைந்தது ஒரு அடியாவது இரண்டு பக்கமும் இருக்கட்டும்.
உங்களது சூட்சும உடல் விரிவடையப் போகிறது.
தியானம் உங்களுக்காக
பக்கத்தில் தொந்தரவாக இருக்கும் - அமைதியாகச் செய்யுங்கள்-செத்தவர்கள் யாராவது இடத்திற்காக அடித்துக் கொள்வார்களா என்ன !
சரி, இப்போது நீங்கள் சாகத் தயாராகி விட்டீர்களா ?
(இந்தத் தியானம் மிக நுணுக்கங்கள் நிறைந்தது. உடலை விட்டு உயிர் வெளியேறி, அது மீண்டும் உள்ளே நுழைந்தாக வேண்டும்.
தியான குறிப்புகளை, முறையாகப் பின்பற்றாத பட்சத்தில் பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
உங்களின் பாதுகாப்புக் கருதி இந்தத் தியானத்தின் செயல்முறைக் குறிப்புகளை இங்குக் குறிப்பிடவில்லை.
நிர்பய தியானத்தைத் தியானபீடத்தின் (ASP) தியான முகாம்களில் முறையாகப் பயிற்றுவிக்கப்பட்ட ஆச்சாரியர்களிடமிருந்து பாதுகாப்பானது )
மூன்றாம் நாள்
மணிபூரக சுத்தி கிரயா (இறுக்கத்தை வெளியேற்றல்)
| குணப்படுத்தும் சக்கரம் | ・・ | மண்பூரகம் |
|---|---|---|
| சக்கரம் உள்ள இடம் | தொப்புளிலிருந்து ஒரு அங்குலம் மேலே. | |
| சக்கரத்தை பூட்டுவன | ・・ | கவலை |
| பூட்டைத் திறப்பது | நேர்மரையான அணுகுமுரைகளும், சந்தோஷமும் | |
| தியானம் பெறப்பட்டது | சூஃபி / கிறிஸ்தவம் | |
| காலம் | 30 நிழி நிகள் |
எதிர்மறை சக்திகளான கவலைகளின் அடிப்படையை அடியோடு களையும், மனப் பயிற்சியான, மணிபூரக சுத்தி கிரியா என்னும் தூய்மைப்படுத்தும் தியானம் இது.
மணிபூரக சுத்தி கிரியாவுக்கான குறிப்புகள் :
உங்களைக் கவலைகள் எல்லாம் வெறும் சொற்கள்.
உங்களுக்குத் ஒட்டுமொத்த தொகுப்புதான் வாழ்க்கை அது. தியானம் உங்களுக்காக
முழுவதும், உங்கள் கவலைகளை வார்த்தைகளாகவே வெளிப்படுத்துகிறீர்கள், உங்களுக்குத் தெரிந்த மொழியில்.
இப்போது, நீங்கள் உங்களுக்குத் தெரியாத மொழி ஒன்றில் பேசப் போகிறீர்கள்!
உங்கள் கவலைகள்,
எதிர்மறை குணங்கள்,
அடக்கப்பட்ட உணர்வுகள் - எல்லாம் உங்களது இடுப்புப் பகுதியில் ஒரு பாரம்போல நீங்கள் பிடித்து வைத்திருக்கிறீர்கள்.
அந்தப் பகுதி எவ்வளவு கனமாக உணர்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்போது நீங்கள் அந்த அடக்கப்பட்டுக் கிடக்கும் உணர்வுகளை எல்லாம் சத்தம், செயல்கள் மூலம் விரட்டப் போகிறீர்கள்.
கவனம், சொற்களால் அல்ல!
நீங்கள் சொற்களைப் பயன்படுத்த ஆரம்பித்தவுடனே, உங்கள் உள்ளே உள்ள அரட்டை மேலே எழ ஆரம்பித்துவிடும்.
இந்தத் தியானத்தின்போது, உங்கள் அகம், அரட்டை அடிக்க அனுமதிக்காதீர்கள்.
உங்கள் இதயத்தின் அடியாழத்திற்குச் சென்று, அங்கே நிலை கொண்டுள்ள அடக்கப்பட்ட உணர்வுகளைப் பிடுங்கி எறியுங்கள்!
ஒசைகள் வடிவத்தில் அவற்றை வாந்தி எடுத்து விடுங்கள் !
முதலில் ஒரு நிமிடம், மணிபூரகப் பகுதியில் கவனம் செலுத்துங்கள். உங்கள், அடக்கப்பட்ட எதிர்மறையான, கவலைகள் எல்லாம் உங்கள் விழிப்புணா்வு மனத்திற்கு வர ஆரம்பிக்கும்.
இப்போதும் ஒரு முரண்பட்ட நிலையில் உங்களைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். யாருடனோ கடுமையாகச் ச ண்டையிடுவதாக நினைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்குத் தெரியாத மொழியில் அந்த நபரோடு பேசுங்கள்! முட்டாள் தனமான ஒசைகளை - குழந்தைகள்போலப் - - பயன்படுத்துங்கள். உங்கள் விவகாரங்களை, உங்கள் வேதனையை, அந்த நபரிடம் வெளிப்படுத்துங்கள்.
ஆனால் அந்த நபர் உங்கள் கருத்தை ஓப்புக் கொள்வதில்லை !
நீங்கள் அப்போது என்ன செய்வீர்கள் ? உங்கள் கோபத்தை அவரிடம் காட்டுங்கள்! கண்ணீர் வந்தால், வரவிடுங்கள்! நிறுத்தாதீர்கள். அலறுங்கள், கத்துங்கள், அழுங்கள், கைகளை ஆட்டி ஆட்டிக் கூச்சலிடுங்கள்! முடிந்தவரை அதிகப்படியான வன்முறையைப் பயன்படுத்துங்கள். உண்மையாகச் செய்யுங்கள்.
வாழ்நாள் தியானம் உங்களுக்காக
உணர்வுகளைத் தொலைப்பதற்கான அருமையான வாய்ப்பு இது !
முழு ஈடுபாட்டுடன் இந்தத் தியானத்தில் ஈடுபடுங்கள்.
20 நிமிடங்களுக்குப் பிறகு, நிறுத்தி விடவும்.
அடுத்த 10 நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருங்கள்.
உங்களது மணிபூர்கச் சக்கரத்தின் மீது கவனம் நிலைபெறட்டும். அந்த இடம் மனமே இல்லாததாக உணர்வீர்கள்! ஏதோ ஒரு மூளைக் குளியல் எடுத்து விட்டதுபோலத் தோன்றும்!
தினசரி, இந்தத் தியானத்தை 21 நாள்களுக்குச் செய்து வரவும் அல்லது தூக்கி எறிவதற்கு இனி உள்ளே எதுவும் இல்லை என்று தோன்றுகிற வரைக்கும் செய்யுங்கள்.
முதல் நாளிலிருந்தே ஒருவித மாற்றம், பேரமைதி உங்களுக்குள் மலர்வதை நீங்கள் உணரலாம்.
அந்த அமைதியை அனுபவியுங்கள்!
மகாமந்திர தியானம் (ஆதி ஒலியை இசைப்பது)
| குணப்படுத்தும் சக்கரம் | ・・ | அனாகதம் |
|---|---|---|
| சக்கரம் உள்ள இடம் | : | இதயப் பகுதி |
| சக்கரத்தைப் பூட்டுவன | : | தன்னைக் கவனிக்கச் சொல்வது |
| பூட்டைத் திறப்பது | சுயநலமற்ற அன்பு | |
| தியானம் பெறப்பட்டது | ・・ | திபெத்திய தந்திரத்திலிருந்து |
| காலம் | 30 நீமிடங்கள் |
மகாமந்திர தியானம், மனத்தை ஸ்திரமாக்கி மையப்படுத்தும் தியானம். "மனஸ்யஸ்ய ஸ்திரா: இதி மந்த்ரஹ: ' .
இந்தத் தியானத்தைச் செய்வதால், உங்கள் சக்தி முழுவதும் உங்களுக்குள்ளேயே மையம் கொண்டு விடுகிறது. உங்கள் உடல் முழுவதும் மந்திரமயம் ஆவதற்காகவே இந்த உத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
இது உங்களை 'அஜப' நிலைக்கு உயர்த்துகிறது - நீ ங்கள் ஜபிக்க வேண்டிய அவசியமே இல்லை.
தியானம் உங்களுக்காக
ஜபம் உடல் ஆகிவிடுகிறது.
மந்திரங்களை உச்சாடனம் செய்ய வேண்டியதில்லை. இந்தத் தியானத்தில் மந்திரங்கள் உங்களை உச்சாடனம் செய்யும்.
மகாமந்திர தியானத்திற்கான குறிப்புகள் :
சம்மணமிட்டபடி,
கைகளை வைத்தபடி, சௌகரியமாக அமர்ந்து கொள்ளுளுங்கள்.
கடிகாரம், நகை முதலியவற்றை அகற்றி விடுங்கள் அவை சக்திப் பெருக்கத்தைத் தடுக்கும்.
முதுகு நிமிர்ந்து நிற்கட்டும். தலை, க(ழத்து, முதுகு ஆகியவை ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்.
கண்களை மூடிக் கொள்ளுங்கள். உண்மையாகவே கண்களை மூடிக் கொள்ள வேண்டும்.
வழக்கமாக, நீங்கள் கண்களை மூடும்போது, வெளியிலுள்ள தொலைக்காட்சியை அணைத்துவிட்டு உள்ளே இருக்கும் தொலைக்காட்சியை ஆரம்பித்து விடுகிறீர்கள்.
வெறும் இமைகளை மூடினால் போதாது - கண்களை மூட வேண்டும்!
இதற்கு ஒரு நல்ல வழியிருக்கிறது. ஒரு கணம், உங்கள் விட்டதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். உடனே உங்கள் எண்ணங்கள் நின்று விடும். அல்லது நிதானப்பட்டு விடும்.
இனி வாயை மூடியபடி, 'ம்ம்ம் ....' என்று ஒலிக்க வேண்டும்.
'மம்ம்…' மூலம் ஓர் அதிர்வை அதாவது நாதத்தை உருவாக்க வேண்டும். வேறு மந்திரங்கள் கூடாது. 'ஒம்' என்றும் உச்சரிக்கக் கூடாது.
முடிந்தவரை மெதுவாக ஒலிக்கவும். உடல் மெல்ல அசையட்டும். ஒலி, உங்கள் உந்திச் சுழியிலிருந்து அதாவது அடிவயிற்றிலிருந்து வர வேண்டும்.
உங்கள் உடலை ஒரு காலிப் பாத்திரமாக நினைத்துக் கொள்ளுங்கள். காலிப் பாத்திரத்தில் வாய் வைத்து 'ம்ம்ம் ... ' என்றால் என்ன ஒலி எழும் ? அந்த ஒலியை உருவாக்குங்கள்.
இதை முடிந்தவரை ஆழமாக, முடிந்தவரை அதிக நேரம் ஒலிக்கவும். இதில் முழு முயற்சியுடன் ஈடுபடவும்.
மகாமந்திர ஒலிநாடாவைப் உங்களின் ஒலிக்கு இசைவான இசையொன்று தொடர்ந்து ஒலிக்கும். ஒலிநாடா இல்லாதபோது, அமைதியான 'ம்ம்…' நாதத்தை ஒலிக்கவும்.
தியானம் உங்களுக்காக
எந்தவிதமான வேண்டாம். உங்கள் மூச்சு தானாக அதைச் செய்து கொண்டு விடும்.
இதுதான் 'மகாமந்திர உச்சாடனம்' - - ஒலிக்கு அப்பாற்பட்ட ஒலி, மொழி கடந்த, எழுத்து கடந்த, பேச்சுக் கடந்த ஒலி இது.
இது 'அனாகதத் தொனி' (உருவாக்கப்பட முடியாத, கேட்கப்படாத ஒலி)- இந்த மகாமந்திரம் மிகமுக்கியமான அதிர்வு.
இது, பிரபஞ்சம் அனைத்திற்குள்ளும் ஒலி அதிர்வுகளை உண்டாக்க வல்லது.
இந்தத் தியானத்தின் ஆற்றலை நீங்கள் அனுபவிக்கும் போது, நீங்கள் அனாகதத் தொனியில் நிலை கொண்டு விட்டதைப் புரிந்து கொள்வீர்கள்.
எது நிகழ்ந்தாலும் சரி நிகழட்டும்.
கண்ணீர் பெருகினால் பெருகட்டும். சிரிப்போ, இருமலோ, நடுக்கமோ - எது வந்தாலும் வரட்டும். வர விடுங்கள்.
அது வெளியேறட்டும். எதையும் அடக்கிப் பிடித்து வைக்க வேண்டாம்.
எவ்வகை எண்ணங்கள் எழுந்தாலும், அவற்றை 'ம்ம்ம் ... ' மிற்குள் வீசி விடுங்கள். அவை மெல்ல மெல்லக் காணாமற் போய்விடும்.
20 நிமிடங்கள் கழிந்த பிறகு, இசை நின்று விடும். மணிஒசை கேட்கும்.
சட்டென 'ஹம்மிங்கை' நிறுத்தி விடுங்கள்.
ஒரு பெரிய மௌனம் உங்கள் இருப்பைச் சூழ்ந்து கொள்ளும்.
ஒரு கணம் காலம் நின்றுவிடும்.
அந்த மௌனத்தைக் கவனியுங்கள்.
உங்களைச் சூழந்துள்ள மாபெரும் அமைதியை அனுபவியுங்கள்.
சற்று நேரம் கழித்து, அந்த அமைதிக்குள் எண்ணங்கள் அவற்றை நிறுத்த வேண்டாம். அவற்றிற்குள்ளும் நீங்கள் பிரவேசிக்க வேண்டாம். சும்மா அந்த எண்ணங்களைக் கவனித்துக் கொண்டிருங்கள்.
விழிப்புணர்வின் மையமாக இருங்கள். உங்கள் அனாஹத நிலையில் அப்படியே இருங்கள். உங்களுக்குள் அமைதி மையம் கொண்டிருப்பதைக் காண்பீர்கள்.
இதை அதிகாலை வேளைகளில் செய்வதே சிறந்தது. இது எல்லையற்ற சக்தியை உங்கள் உடலுக்குள் உருவாக்கும். இரவில் செய்தால், அது உங்கள் உறக்கத்திற்கு இடையூறு விளைவிக்கக் கூடும்.
சக்தி சாகர் தியானம் (சக்திக் கடல்)
| குணப்படுத்தும் சக்கரம் | விசுத்தி |
|---|---|
| சக்கரம் உள்ள இடம் | தொண்டைப் பகுதி |
| சக்கரத்தைப் பூட்டுவன | ஒப்பிடுதலும், பொறாமையும் |
| பூட்டைத் திறப்பது | உங்கள் தனித்தன்மையை உணர்கல் |
| தியானம் பெறப்பட்டது | ஜென் பௌத்தத்திலிருந்து |
| காலம் | 30 நீமிடங்கள் |
நம்மிடம் மூன்று அடுக்கு சக்தி இருப்பது, நம்மில் பலருக்கும் தெரியாது.
சாதாரண அடுக்கு, அவசர அடுக்கு, அடுத்த அடுக்கு புத்திசாலித்தனம்.
நமது சாதாரண வாழ்வில், நாம் முதல் அடுக்கிலுள்ள சக்தியையே பயன்படுத்தி வருகிறோம். அந்த அளவு சக்தி கிடைத்துவிட்டாலே நமக்கு மகிம்ச்சிதான்!
அபூர்வமாகவே நாம் இரண்டாவது அடுக்குக்கு உந்தப்படுகிறோம்.
ஆனால் மூன்றாவது அடுக்கை நாம் பயன்படுத்துவதே இல்லை. அது இருப்பதன் கவனம்கூட நமக்கு இல்லை.
புத்திசாலித்தனம் என்பது, நமக்குக் கிடைக்கக்கூடிய உயர்ந்தபட்ச சக்திச் செயல்பாடு.
சக்தி சாகர் தியானத்தின்போது, புத்திசாலித்தனத்தின் அடிப்படை ஆதாரங்களை அடைத்திருக்கும் அடைப்புகளை நீங்கள் தகர்க்க முடியும்.
சக்தி சாகர் தியானத்திற்கான குறிப்புகள் :
வாழ்க்கையே ஓர் ஒட்டப் பந்தயம் ஆகிவிட்டது. மற்றவர்களை முந்துவது போய், இப்போது, உங்களையே நீங்கள் முந்தப் போகிறீர்கள்!
உங்களது சுயத்தின் எதிர்மறை அம்சங்களைத் தாண்டிச் சென்று வெற்றி பெறப் போகிறீர்கள்.
இந்த 30 நிமிடத் தியானம், 20 நிமிடம், 10 நிமிடம் என இரு பகுதிகளைக் கொண்டது.
முதலில், கண்களை மூடியபடி நின்று கொள்ளுங்கள். உங்களது தொண்டைப் பகுதியில் உள்ள விசுத்தி சக்கரத்தின் மீது உங்கள் முழுக் கவனத்தையும் செலுத்துங்கள்.
இனி, (ஜாக்கிங்) - கால் மாற்றி கால் மாற்றி, மெதுவாக ஆரம்பித்துப் பின் வேகத்தைக் கூட்டலாம்.
மெது மெதுவாக அதிகரிக்க வேண்டும்.
ஏனென்றால், வேகத்தைக் கூட்டியபிறகு, அதைக் குறைக்கக்கூடாது! ஆகவே, வேகத்தைக் கூட்டிக் கொண்டே போகவும்.
களைப்பாக இருப்பதாக மனம் சொல்லும். மனத்தின் பேச்சைக் கேதீர்கள்! உங்களுடைய எல்லையைத் தாண்டிவிடுங்கள். உங்களிடம், இதுவரை பயன்படுத்தாத மிக அதிக சக்தி உள்ளது.
முழு மூச்சோடு இந்தத் தியானத்தைச் செய்ய முயற்படும்போது, மேல்நிலைச் சக்தி அடுக்கு திறந்து கொள்வதைக் காண்பீர்கள்.
நிற்குமிடத்தில் ஓடிக் கொண்டே இருங்கள்.
சக்தி மட்டம் உயரட்டும் !
20ஆவது நிமிட முடிவில் நிறுத்தி விடுங்கள்.
அடுத்த 10 நிமிடங்கள், நீங்கள் இருக்குமிடத்தில் அமர்ந்து அமைதியாக இருங்கள்.
உங்கள் கவனம் முழுவதும் விசுத்தி சக்கரத்தின் மீது இருக்கட்டும். இந்தக் கட்டத்தில், முழுச் சக்தியை நீங்கள் திரட்டிக் கொள்வீர்கள்.
பட்டு, தங்கம், வைரம் போன்றவை, சக்தி சேமிப்பிற்கு மிகச் சிறந்த கிடங்குகள். இந்தத் தியானத்தின்போது கழுத்தில் இவற்றை அணிந்து கொண்டால், சக்தியை நீண்ட நேரம் சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.
திவ்ய நேத்ர தியானம் ( தெய்விக விழி )
| குணப்படுத்தும் சக்கரம் | ஆக்ஞா |
|---|---|
| சக்கரம் உள்ள இடம் | புருவ நடுப் பகுதி |
| சக்கரத்தைப் பூட்டுவன | கடுகடுப்பு, இறுக்கம் |
| பூட்டைத் திறப்பது | களங்கமின்மையும், எளிமையும் |
| தியானம் பெறப்பட்டது | கிறிஸ்துவத்திலிருந்து |
| காலம் | 30 நீழிடங்கள் |
ஆக்ஞா சக்கரம், சக்கரங்களின் அரசன் - தலை சிறந்த சக்கரம். மிக முக்கியமான இந்தச் சக்கரத்தை எழுப்பிச் செயல்பட வைக்க முயற்சி செய்யாத மதமே இல்லை.
ஆக்ஞா சக்கரம் விழித்துக் கொண்டால், நமது இருப்பு முழுவதுமே வித்தியாசமான ஒரு பிரதேசத்திற்கு மாறிவிடும். செயல்திறன் நிறைந்த அடுக்கு ஒன்று திறந்து கொண்டுவிடும்.
திவ்ய நேத்ர தியானம் மிகமிகச் சக்தி வாய்ந்த தியானம். நீங்கள் குருவின் சக்தியோடு தொடர்பு கொள்வது இதன் மூலமே நிகழும்.
குருவின் முன்னால் இதைச் செய்ய நேர்ந்தால் பலன் கூடும்.
சுவாமியின் கண்களின் படம் கிடைப்பதால் அதை வைத்துச் செய்யலாம். (சுவாமியின் படத்தைப் பயன்படுத்த வேண்டாம் ).
திவ்ய நேத்ர தியானத்திற்கான குறிப்புகள் :
இதில் இரண்டு வெவ்வேறு தியானங்கள் உள்ளன.
ஒன்று - ஆக்ஞாவைச் சுத்தப்படுத்துவது.
இரண்டாவது - அதற்குச் சக்தி ஏற்றுவது.
கீழ்நிலைச் சக்கரங்களைத் தூய்மைப் படுத்தினால் போதும்.
ஆனால் மேல்நிலைச் சக்கரங்களைத் தூய்மைப் படுத்துவதோடு, அதற்கு சக்தி ஏற்றவும் வேண்டாம் - அந்தச் சக்கரத்தை நோக்கி சக்தியை உந்தி ஏற்றி விடுதல்.
இந்த இரண்டு கட்டங்களிலும், நீங்கள் கண்களை மூடியும், திறந்தும் மாறி மாறி இருக்க வேண்டும். கண்கள் மூடியிருக்கும் போது, மூன்றாம் கண்ணாகிய ஆக்ளு சக்கரத்தின் மீது கவனம் செலுத்துங்கள்.
இரண்டாவது கட்டத்தில் கண்கள் திறந்தபடி இருக்க வேண்டும். ஆனால் எதையும் பார்க்கக் கூடாது.
மாறாக, முன்றாம் விழி மூலம் அதாவது ஆக்ஞா சக்கரம் மூலமாகப் பார்க்க முயற்சி செய்யுங்கள். மூன்றாம் விழி மூலம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMஜியின் மூன்றாம் கண்ணை உற்றுப் பார்க்கவும்.
கண்ணிமைக்கக் கூடாது.
முதலில் கொஞ்சம் சிரமமாக இருக்கலாம்.
கண்கள் எரியலாம்; கண்ணீர் வரலாம். வரட்டும். அதுதான் தூய்மைப் படுத்துதல்.
இந்தத் தியானத்தின்போது, அபூர்வ அனுபவங்கள் ஏற்படலாம். உங்களது ஆக்ஞா சக்கரம் இதற்கு முன் செயல்படுத்தப்பட்டதே இல்லை. அதைத் திறப்பதன் மூலம், ஒரு புதிய அனுபவ உலகம் அனுபவப்படும்.
அந்த வேளையில் உங்களுக்குப் பிடித்தமான கடவுளின் உருவங்கள் தோன்றலாம். அல்லது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMஜியின் உருவம் மறைந்து அந்த இடத்தில் ஓர் ஒளிப்புள்ளியோ ஒளிக்கற்றையோ தோன்றலாம்.
சில சமயம் அவர் படம் இருக்கும் இடத்தில் ஒன்றுமில்லாத வெற்றிடம் தோன்றலாம்.
அந்த கண்டு அச்சப்பட வேண்டாம். நீங்கள் மனோ வசியத்திற்கு உள்ளாக்கப்படவில்லை !
சொல்லப்போனால், இப்போதுதான்
கடைசியாக, மனோ வசியத்திலிருந்து விடுபட்டிருக்கிறீர்கள்! இப்போதுதான் உங்களது அதிவிழிப்புணர்வு விழித்துக் கொண்டிருக்கிறது.
ஒளியோ, வெறுமையோ தோன்றினால், நீங்கள் உண்மையான ஈடுபாட்டுடன் தியானம் செய்திருப்பதாக அர்த்தம்.
ஏனென்றால், நமது இயல்புநிலை அதுதான்.
நாம் சக்தி தவிர வேறொன்றும் இல்லை.
நமது என்று நாம் நினைத்திருக்கும் இந்த நமது உடலும், நம்மைச் சுற்றியுள்ள எல்லாப் பருப்பொருள்களும், வெறும் பொய்த்தோற்றம்; மாயையே.
அதனால்தான் இந்த ஆக்ஞா சக்கரத்தை மாயஹரணா - மாயையை அழிப்பது - என்று குறிப்பிடுகிறார்கள்.
சகஸ்ரார தியானம் (பிரார்த்தனைபோல நன்றியுடைமை)
| குணப்படுத்தும் சக்கரம் | சகஸ்ராரம் |
|---|---|
| சக்கரம் உள்ள இடம் | தலை உச்சி |
| சக்கரத்தைப் பூட்டுவன | மனந்ரைவின்மை |
| பூட்டைத் திறப்பது | நன்றியும் பரவசுமும் |
| தியானம் பெறப்பட்டது | (சூஃபி (இஸ்லாம்) |
| காலம் | 30 நீமிடங்கள் |
சகஸ்ரார் தியானம் மிக எளியதொரு தியான முறை. நமது வாழ்வில் நமக்கு அமைந்துள்ள, நாம் ஏற்றுக் கொண்டுள்ள அனைத்திற்காகவும், இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் சிரமமற்ற காரியம் இது.
இது எளியதுதான் என்றாலும், நம் உணர்வு மனம், உணர்வற்ற மனம் ஆகிய இரண்டின் மீது மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது இது.
சகஸ்ரார தியானத்திற்கான குறிப்புகள் :
சகஸ்ரார தியானத்திற்கு அமைதியான இசையை, உங்களுக்குப் பிடித்த மெல்லிசையைக் கேளுங்கள்.
கியானம் உங்களுக்காக
அந்த இசை உங்களுக்குள் பாய்ந்து உங்களைச் செழுமைப் படுத்தும்படி கேளுங்கள்.
நின்று கொண்டு, இசைக்கு ஏற்றபடி அசைந்தாடவோ, நடனமாடவோ விரும்பினால், அப்படியே செய்யுங்கள். அமைதியாக அமர்ந்து கொண்டு கேட்க விரும்பினாலும் சரி.
இசை உங்களுடைய ஒரு ஒரு பகுதியாக ஆகிவிட வேண்டும்.
அந்த இசை உங்களுக்குள்ளிருந்தே எழுவதாக உணர வேண்டும்.
நீங்கள் விரும்புகிறவரை நினைத்துக் கொள்ளலாம் - கடவுளோ, நீங்கள் விரும்பும் ஞானியோ, அல்லது ஒரு விக்கிரகமோ - எதுவாக இருந்தாலும் சரி.
வடிவம் முக்கியமில்லை. உங்களுக்கு இந்த வாழ்வை அளித்துள்ள இயற்கைக்கு நன்றி செலுத்துங்கள்.
வாழ்வே இயற்கையின் பரிசுதான்.
இந்த வாழ்வைப் பெற்றதற்காக, இதன் தகுதிக்காக நாம் கடுமையாக உழைத்திருக்கிறோமா ? இல்லை!
நாம் வாழ்ந்து கொண்டிருப்பதே ஒரு வரம்தான்.
இயற்கைக்கு நன்றி செலுத்தும்போது, இன்றுள்ள உங்களது வாழ்விற்குக் காரணமான அனைவரையும் நினைத்துக் கொள்ளுங்கள்.
பெற்றோரிலிருந்து ஆரம்பிக்கவும் - உங்களுக்கு உயிர் கொடுத்தவர்கள் அவர்கள். ஆழ்ந்த நன்றியுணர்வை முதலில் அவர்களுக்குத் தெரிவியுங்கள்.
அவர்களுக்கு பூரண வேண்டும். அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்குக் முழுமையாக மன்னித்து விடுங்கள். நன்றியுணர்வை மட்டுமே உணரவேண்டும் !
உங்களுக்கு உதவி செய்த விவாருவரையும் நினைவுகூர வேண்டும்.
நீங்கள் பிறக்க உதவிய மருத்துவமனை டாக்டர்கள்,
பள்ளி கல்லூரி ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் என, உங்கள் வாழ்வில் சந்தித்த எல்லா மனிதர்களுக்கும் நன்றி சொல்லுங்கள்.
நீங்கள் அறியாமல் உங்களுக்கு உதவிய - பயிர் வளர்க்கும் உழவர்கள், ஆடை நெய்யும் நெசவாளர்கள், எல்லாருக்கும் நன்றி சொல்லுங்கள்.
உங்கள் எதிரிகள் கூட ஏதோ ஒரு வகையில் உங்களது வாழ்வில் ஒரு பங்கு பெற்றிருப்பார்கள். அவர்கள்கூட உங்களுக்கு எதையாவது கற்றுத் தந்திருப்பார்கள்.
சினத்தைக் கைவிடுங்கள். வெறுப்பைக் கைவிடுங்கள். மன்னிப்பு வழங்குங்கள்.
தியானம் உங்களுக்காக
மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள்.
ஈடுபாட்டுடன், இதயபூர்வமாக இதைச் முழும செய்யவும் !
இயற்கையின் அழகுக்காக! பிரபஞ்சத்திற்கு நீங்கள் நன்றி செலுத்தியதுண்டா ?
தினசரி காலையில் உங்களுக்கு வெப்பம் தர வரும் கதிரவனுக்கு நன்றி செலுத்தியதுண்டா ?
குடிக்கும் தண்ணீருக்கு நன்றி சொன்னதுண்டா ?
எத்தனை எத்தனை பொருள்களுக்கு நன்றி தெரிவிக்க மறந்துவிடுகிறோம் நாம்! இப்போது அதைச் செய்யலாம்.
ஒவ்வொருவருக்கும், ஒவ்வொன்றிற்கும் உங்களது நன்றிகளைக் கூறுங்கள்.
இந்தப் பிரபஞ்சத்திற்கே நன்றி கூறும் போது, நன்றியின் ஆனந்தந்தை நமக்கு உணர்த்திய ஞானிகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
காலம் காலமாக குருமார்களின் குருமார்களின் பணி ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. அது, உங்களை ஆனந்த பரவச நிலைக்கு உயர்த்துவதுதான்!
ஆகவே, அவர்களுக்குச் சிறந்த முறையில் நன்றி செலுத்துவது - நீங்கள் ஆனந்த பரவசத்தோடு இருப்பதுதான்!
உங்களது நன்றியறிதலை உங்களது சத்குருவுக்குத் தெரிவியுங்கள்.
இசை நின்றதும், சற்று நேரம் மௌனமாய் இருங்கள். அதே நன்றியறிதல் உணர்வுடனும், ஆனந்த பரவசத்துடனும் இருங்கள்.
முடிந்தவரை நீண்ட நேரம் அமைதியாக இருங்கள்.
உங்கள் விழிப்புணர்வை உள்முகமாகக் திருப்பி, அமைதியையும், நிறைவையும் உணர்ந்து மகிழுங்கள்.
சகஸ்ரார தியானம் 'எங்கும் எப்போதும்' தியானத்தில் அடங்கும். நன்றியுணர்வையும், நேர்மறையான வாழ்வை அணுகுதலையும் நிரந்தரமாக வளர்த்துக் கொண்டால் உங்கள் உடல், உணர்வு நலம் ஆகியவற்றில் அற்புதங்கள் நிகழும்.
உங்களுக்காக கொடுக்கப்பட்ட இந்தத் தியானங்களை வாழ்வில் தொடர்ந்து கடைபிடியுங்கள். ஆனந்தமாக இருங்கள்.
இந்தப் புத்தகத்தை தியான பாபாடநூல்' என்றழைக்கலாம். இன்றைய மனிதனுக்கு உதவும் வகையில் தொகுக்கப் பட்டிருக்கிறது. தியானத்தின் மிக அடிப்படையான சூத்திரங்களையும், சூட்சுமங்களையும் இந்தப் புத்தகம் விளக்குகிறது. இந்தப் புத்தகத்தை படிக்கும் ஒவ்வொருவரும் ''இன்னும் கொஞ்ச வருடங்களுக்கு முன்பு இந்தப் புத்தகம் கிடைத்திருக்க கூடாதா?' என்றே சொல்கிறார்கள். இந்த அரிய புத்தகத்தின் ஆழமான சத்தியங்கள், எளிமையாய் படிப்பவரினுள் இறங்கி புதுமையான பல மாற்றங்களை உருவாக்குகிறது. படியுங்கள், புதுமையானவராகுங்கள்.
ஒரு செல் குழந்தையாகும் புனிதமான நேரம் கா்ப்பகாலம்
ஒரு மனிதன் தெய்வமாகும் புனிதமான நேரம் தியான காலம்
- THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM