Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

173. Zero TPS தியானம்

# Zero TPS தியானம்

(குடும்பத்தோடு ஒரு விருந்திற்குச் செல்கிறீர்கள். மிக மிக நெருக்கமானவர்கள் எல்லாம் அங்கு ஒன்றுகூடி இருக்கிறீர்கள். அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போதே...

திடீரென்று உங்கள் நெருங்கிய பள்ளித்தோழனின் நினைவு உங்களுக்கு எழுகிறது. அவர் வருவாரா, மாட்டாரா என்று அவரைப்பற்றி அடுத்த எண்ணம் யோசனையாக எழுவதற்குள்ளாகவே அந்த வழியே உங்கள் நண்பர் வந்துகொண்டிருப்பார்.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் நம்முடைய வாழ்வில் நடந்திருக்கும்.

செல்போன் அடிக்கும் பொழுது 10 வருடமாக பார்க்காத உறவினருடைய பெயர் உங்களுக்கு ஞாபகம் வரும்.

எடுத்தால் என்ன ஆகும் ? !

அவர் லைனில் இருப்பார்.

யாரோ ஒருவர் உங்கள் வீட்டுக்கதவை தட்டுவார். கதவைத் திறப்பதற்கு முன்பே யாரோ ஒருவருடைய நினைப்பு வரும். சரியென்று வீட்டுக் கதவைத் திறந்தால் என்ன ஆகும் ? அவர் நின்று கொண்டிருப்பார்.

இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் பல பேருடைய வாழ்க்கையில் நடந்து இருக்கிறது. நிச்சயம் அது எல்லோருடைய வாழ்க்கையிலும் சில முறையாவது நடந்திருக்கும்.

ஆனால் நடந்தவுடனே நாம் என்ன செய்கிறோம் ? ''தற்செயலாக நடந்ததுப்பா, விடுங்கள்," என்று சொல்கிறோம், இல்லையா? ''ஏதோ இயல்பாக தன்னிச்சையாக நடந்து விட்டதுப்பா,'' என்று விட்டுவிடுவோம்.

ஆனால் அந்த நிமிடங்கள்தான் நீங்கள் ஜீவன் முக்தியை உரசிவிட்டு திரும்பிய நிமிடங்கள் என்று உங்களுக்கு தெரியுமா? நிஜமாகவே, நமக்கு நம் எதிர்காலம் அந்த சில வினாடிகளில் தெரிந்தது எப்படி ? ஆழ்ந்து பார்ப்போம்.

நினைப்பதெல்லாம் நடக்கும் சாத்தியம் Clap your hands and call the God of Death itself!

தியானத்தின் சாரம்

டன்னுடன் நெருக்கமாக வாழும் பக்தா்களிடம் சொல்கிற வார்த்தைகள், சில நேரங்களில் அவர்களுக்குப் புரியாது.

அப்போது 100 ஆஸ்ரமங்கள்தான் இருக்கும். ஆனால், 'நமக்கு 200 ஆஸ்ரமங்கள் இருக்கின்றன, ''என்று சொல்வேன்.

'இல்லையே, 100 தானே இருக்கிறது! எண்ணிப் பார்த்தால் 100 தானே இருக்கிறது. நீ ங்கள் அதிகமாகச் சொல்கிற மாதிரி இருக்கிறதே. பொய் சொல்கிற மாதிரி இருக்கிறதே, ' என்று நினைத்துக் கொள்வார்கள். ஆனால், அது அப்படியல்ல.

அது ஒரு எளிமையான கணக்கு.

நீங்கள் சாலையில் நின்று பார்த்தீர்கள் என்றால், உங்களுக்கு இந்தப் பக்கம் அரை

கிலோமீட்டர் தெரியும், அந்தப் பக்கம் ஒரு அரை கிலோ மீட்டர் தெரியும். இல்லையா ? அப்போது இந்தப் பக்கம் வருகிற 25 கார்கள் தெரியும். அந்தப்பக்கம் வருகிற கார்கள் தெரியும்.

எதிர்காலத்தையும் கடந்த காலத்தையும் பார்க்கிற ஆமம் அதிகமாகும் போது வாழ்க்கையைப் பற்றிய கெளிவு மிகவம் அதிகமாகும்.

அதுவே பத்து அடுக்கு மாடி மேல் நின்று பார்த்தீர்கள் என்றால் இந்தப் பக்கம் இரண்டு கிலோமீட்டர் தெரியும், அந்தப் பக்கம் இரண்டு கிலோ மீட்டர் தெரியும். இந்தப் பக்கம் வருகிற 100 கார்கள் தெரியும். அந்தப் பக்கம் வருகிற 100 கார்கள் தெரியும்.

நான் பத்து அடுக்கு மாடி மேல் நின்று பார்த்து, ''100 கார்கள் வரும்,'' என்று சொல்கிலே றன். ஆனால், நீங்கள் கீழே இருந்து பார்த்து என்ன சொல்கிறீர்கள்? ''இல்லை, இல்லை நான் எண்ணிப் பார்த்துவிட்டேன், 25 கார்கள்தான் வருகிறது," என்று சொல்கிறீர்கள்.

தியானத்தின் சாரம் இதுதான்!

எதிர்காலத்தையும் கடந்த காலத்தையும் பார்க்கிற ஆழம் அதிகமாகும்போது, வாழ்க்கையைப் பற்றிய தெளிவு மிகவும் அதிகமாகும்.

இந்த எண்ணங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுமானால், ஒரு நொடியில் தோன்றும் எண்ணங்களின் எண்ணிக்கை குறைந்தாலே ... எதிர்காலத்தைப் பற்றியும், கடந்த காலத்தைப் பற்றியும் ஒரு தெளிந்த அறிவு உண்டாகும்.

இன்னொரு முக்கியமான விஷயம். வாழ்வில் இந்தத் தெளிவை எடுத்து வருவதுதான், வாழ்வின் சாரம்.

காலத்தையே கை தட்ழக் கூப்பிடுங்கள் The possibility of achieving all what you think

கிரிலச் சக்கரத்தில் காலத்தைப் பற்றிய அறிவியலை இப்பொழுது பார்ப்போம். காலச் சக்கரம் எப்படி உருள்கிறது? காலம் எப்படி இயங்குகிறது? என்பதைப் பற்றிய ஒரு சி ன்ன விளக்கம். ஒவ்வொரு வார்த்தையையும் மந்திரம் மாதிரி உள்வாங்குங்கள்.

காலச் சக்கரம், காலம் என்றால் ...

எதிர்காலம், தொடர்ந்து இறந்தகாலமாக மாறிக் கொண்டேயிருப்பதுதான் காலம்.

அதைத்தான் காலச் சக்கரத்தின் சுமற்சி என்று சொல்கிறோம்.

இப்பொழுது இந்த வினாடி எதிர்காலமாக இருக்கிறது. அது உடனே அடுத்து என்னவாகிறது ? கடந்த காலமாக மாறுகிறது.

தற்சமயம் நிகழ்காலமாக இருப்பது மாறி, நிகழ் காலத்திலிருந்த அது கடந்த காலமாக மாறிவிடுகிறது.

இப்படி எதிர்காலம், கொண்டேயிருப்பதைத்தான், நாம் காலச் சக்காம் என்று சொல்கிறோம். காலத்தின் சுழற்சி என்று சொல்கிறோம்.

ஒரு நொடியில் தோன்றும் எண்ணங்களின் எண்ணிக்கை குறைந்தாலே ... எதிர்காலத்தைப் பற்றியும் ஒரு தெளிந்த அறிவு உண்டாகும்

இந்தக் சக்கரம் போய்க் கொண்டே இருக்கிறது. இந்த இரண்டு

இடத்தைத்தான் நாம் 'நிகழ்காலம்' என்று சொல்கிறோம். (Present moment) நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எதிர்காலம் கடந்த காலமாக மாறிக்கொண்டே யிருப்பதைத்தான், காலச் சக்கரம் என்று சொல்கிறோம். காலத்தின் சுழற்சி என்று சொல்கிறோம். இது இரண்டும் சந்திக்கிற புள்ளியைத்தான் 'நிகழ்காலம்'என்று சொல்கிறோம்.

மனம் என்றால் என்ன, எண்ணம் என்றால் என்ன என்ற சத்தியங்களை அறிவியல்பூர்வமாகப் புரிந்து கொள்வோம். எதிர்காலம் ஆகிய இந்த இரண்டுக்கும் நடுவிலே ஒடிக்கொண்டே இருப்பதுதான் எண்ணம்.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். எல்லா எண்ணங்களுமே கடந்த காலம் பற்றியோ, அல்லது எதிர்காலத்தைப் பற்றியோதான் இருக்க முடியுமே தவிர, நிகழ்காலத்தைப் பற்றி இருக்கவே முடியாது.

நிகழ்காலத்தில் வந்தீர்கள் என்றால் எண்ணமில்லாத நிலைக்கு, அமைதிக்கு வந்து விடுவீர்கள்.

அப்படி என்றால், எண்ணம் என்றால் என்ன ?

கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் நடுவில் நீங்கள் ஓடிக்கொண்டேயிருப்பதின் பெயர்கான், எண்ணம்.

ஒன்று எதிர்காலத்தைப் பற்றிய ஏக்கம், இல்லையென்றால் கடந்த காலத்தைப் பற்றிய கவலை. இந்த இரண்டும்தான் எண்ணங்கள்.

இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் தாவிக் கொண்டேயிருக்கிறீர்கள். தாவிக் கொண்டே இருக்கும் ஒன்றிற்குப் பெயர்தான் எண்ணங்கள் .

எதிர்காலம் கடந்த காலமாக மாறிக்கொண்டே இருப்பதைத்தான் காலச் சக்கரம் என்று சொல்கிறோம்.

உடம்பால் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு வேகவேகமாகக் குதித்துக் கொண்டேயிருப்பது போன்று எதிர்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் இடையில் வேக வேகமாகக் குதித்துக் கொண்டிருப்பீர்கள்; தாவிக் கொண்டே இருப்பீர்கள். இதைத்தான் எண்ணங்கள் என்று சொல்கிறோம்.

உதாரணத்திற்கு... நீங்கள் உட்கார்ந்து இருக்கிறீர்கள், உட்கார்ந்திருப்பதனாலேயே இங்கேயிருக்கிறீர்கள் என்று நினைக்காதீர்கள். உடம்புதான் உட்கார்ந்து கொண்டுள்ளது. உள்ளே ஏதோ ஒன்று நடந்து கொண்டே யிருக்கிறது. ஏதோ ஒரு சிந்தனை ஓடிக் கொண்டேயிருக்கிறது.

எதிர்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் நடுவில் ஒடும் எண்ணங்களில், ஒரு வினாடியில் எத்தனை முறை ஒடுகிறீர்களோ, அத்தனை எண்ணங்கள் உங்களுக்குள்ளே உருவாகிக் கொண்டே இருக்கும். அதைத்தான் Thoughts Per Second என்று சொல்கிறோம். அதாவது படந.

உதாரணமாக, 100 TPS உங்களுக்கு இருக்கிறது என்றால், ஒரு வினாடிக்குள் கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் 100 முறை நடுவில் எண்ணங்கள் ஒடிக்கொண்டே இருக்கிறது என்று அர்த்தம்.

ஒரு செகண்டிற்கு 100 TPS என்று சொல்வது ஒரு உதாரணத்திற்குத்தான். இப்போது உங்களுக்கு 1000க்கு மேல் TPS இருக்கும்.

உண்மையில் நீங்கள் ஒரு நாளில் விழிப்புணர்வுடன் இருப்பது இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள்தான்.

அப்போது என்ன செய்கிறீர்கள்? நிகழ்காலத்திற்கு வந்து விடுகிறீர்கள்.

அது இல்லாமல் இருக்கும் மீதி நேரம் முழுவதும் வேக வேகமாக எதிர்காலத்திற்கும் இறந்தகாலத்திற்கும் நடுவில் ஒடிக்கொண்டேயிருப்பீர்கள் .

உங்கள் எண்ணங்கள் எவ்வளவு வேகமாக ஒடுகின்றனவோ அதற்கு ஏற்றார் போல் வேகமாக ஓடுகிற கருவியைக் கண்டுபிடித்தால் என்ன ஆகும் ?

கட்டுப்பாடில்லாமல் பொங்கும் கணக்கற்ற எண்ணங்களைக் கணக்கிட முடியாமல் நிச்சயம் கருவி ஒரு நிறுத்தத்திற்கு வந்தாக வேண்டும். இல்லையென்றால் அந்தக் கருவியே வெடித்து விடும்.

ஆனாலும் நாம் சளைக்காமல் முழு வேகத்தில் ஒடிக்கொண்டேயிருக்கிறோம்.

இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் நடுவிலே ஒடிக்கொண்டே இருக்கிறோம். இது நிறுத்தத்திற்கு வந்தாக வேண்டும்.

சகா ஒடிக்கொண்டிருக்கும் மனதைக் கவனிக்க ஆரம்பித்தாலே, மனதைத் நிகழ்காலத்திலேயே வாழ வைக்கும் ஜீவன் முக்க சூக்கிரம் இது.

இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் நடுவிலே வாழ்நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இது நிறுத்தத்திற்கு வந்தாக வேண்டும் சகா ஒடிக்கொண்டிருக்கும் மனதைக் கவனிக்க ஆரம்பித்தாலே மணதைத் தாண்டி விடுவோம் நிகழ்காலத்திலேயே வாழ வைக்கும் ஜீவன்முக்க சூத்திரம் இது.

பூமித்தாய், உங்கள் பாதம் பட ஆனந்தப்படுவாள் !

Mother earth will feel blissful just by the touch of your feet

ருன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.

அளவிற்கு அதிகமாக எண்ணங்கள் இருந்தால், கடந்த காலம், எதிர்காலம் இந்த இரண்டுக்கும் நடுவில், எதிர்காலத்தைப் பற்றியும் தெளிவாக யோசிக்க முடியாது; கடந்த காலத்தைப் பற்றியும் தெளிவாகப் புரியாது.

கடந்ததை நினைத்து நினைத்து வருத்தப்படுவதை கவிர துக்கப்படுவதை தவிர அதிலிருந்து வேறு எதையும் கற்றுக்கொள்வதில்லை. கடந்ததை நினைத்து நினைத்து வருத்தப்படுவதைத் தவிர, துக்கப்படுவதைத் தவிர அதிலிருந்து வேறு எதையும் கற்றுக்கொள்வதில்லை.

Section 2

இந்தக் கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் நடுவில் ஒடிக்கொண்டே இருப்பது, 100 TPS இருந்தது என்றால், நீங்கள் வாழ்க்கையில் ஒய்வேயில்லாமல் இருக்கிறீர்கள் என்று அர்க்கம் .

ஒரு வேளை ஏதோ ஒரு தியானம் செய்து ஏதோ கொஞ்சம் முயற்சி செய்து, அந்த 100 என்பதை 80 ஆகக் குறைத்தால், என்ன ஆகும் என்றால், மெதுவாக மெல்ல மெல்ல நிகழ்காலத்தை நோக்கி வருவீர்கள்.

கடந்தகாலத்திற்கும் குறைக்கால் என்ன ஆகும் ?

நிகழ்காலத்திற்கு வருவீர்கள்.

நிகழ்காலத்திற்கு வந்தீர்கள் என்றால் எண்ணங்களின் எண்ணிக்கை என்ன ஆகும் ?

எண்ணங்களின் எண்ணிக்கையைக் குறைய ஆரம்பிக்கும்.

கடந்தகாலமும் எதிர்காலமும், சந்திக்கிற இடத்தைதான் நிகழ்காலம் என்று சொல்கிரே றாம். இப்பொழுது 80 TPS ஆக குறைத்தீர்கள் என்றால் நிகழ்காலத்தை நோக்கி வருகிறீர்கள்.

இன்னமும் தியானம் செய்து TPS ஐ 60 ஆக குறைத்து, மேலும் 40ஆக வந்து அதையும் தாண்டி, 20 அளவிற்கு எல்லாம் வந்தீர்கள் என்றால் 'சத்தோரி' நடந்து விடும். 'முதல் சமாதி அனுபவம்'.

இதைத் தாண்டி எண்ணங்களற்ற நிலையிலேயே நிலைத்து நிற்க ஆரம்பித்தீர் கள் என்றால், அதைத்தான் 'நித்யானந்த நிலை' என்று சொல்கிறோம்.

சமாதி நிலை என்றும்; நித்யானந்த நிலை என்றும்; ஆனந்த நிலை என்றும்; ஞான நிலை என்றும்; ஜீவன் முக்த நிலை என்றும் சொல்லப்படுவது எல்லாம், இந்த Zero TPS

|லேயே நிலைத்து நிற்பதுதான்.

இதுதான் சாரம்.

இதுதான் அதற்காகத்தான் இத்தனை விஷயமும் செய்து கொண்டிருக்கிறோம்.

இந்தக் குறிக்கோள், வாழ்க்கையினுடைய என்றால் நீங்கள் செயலுமே கியானமாக மாறிவிடும்!

ஒரு ஜீவண் முக்தர் நடக்கும் போது அவரின் பாதங்களில் படும் புல் கூட ஹீவன் முக்க அனுபவத்தைப் பெறும். அவரின் பாதத்தில் படுவதற்குப் புல் மட்டுமல்ல. கல்கூட ஏங்கும்.

இப்பொழுது இது புரிந்து விட்டது என்றால், கண்களை மூடி உட்கார்ந்து செய்வது மட்டுமில்லை, நீங்கள் நடக்கும்போது கூட நிகழ்கால செயலிலேயே இருக்க முயற்சி செய்வீர்கள்.

Zero TPS வீவன் முக்க நிலையில், உங்களின் பாகக்கை ஒவ்வொரு முறையும் ஆம்ந்த அன்போடு எடுத்து, பூமிமேல் வைத்தீர்கள் என்றால் போதும், பூமித்தாய் உங்கள் பாதம் படுவதற்காகவே ஆனந்தப் படுவாள்!

விழிப்புணர்வு இல்லாமல், ஒவ்வொரு முறையும் உங்கள் கால் பூமி போதும் நங்கள் மிதிக்கிறீா்கள். விழிப்புணாவுடன், காலை வைக்கும் ஒவ்வொரு முறையும் புமிக் காயை அன்போடு தொடுகிறீர்கள்.

அன்போடு இருந்து ஸ்பரிசம் செய்யும்போது, இயற்கை உங்களைக் கொண்டாடுகிறது!

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள், இயற்கை உங்களைக் கொண்டாடுகிறது.

TPS அதிகமாக இருக்கும் மனிதன் நடக்கும் பகுதியில் புல்கூட முளைக்காது.

விழிப்புணர்வுடன் காலை வைக்கும்போது ஒவ்வொரு முறையும் பூமித் தாயை அன்போடு தொடுகிறீர்கள்.

Zero TPS ல் வாழும் ஒரு ஜூவன் முக்தர் நடக்கும்போது, அவரின் புல்கூட ஜீவன் முக்த அனுபவத்தைப் பெறும்.

அவரின் பாதத்தில் படுவதற்குப் புல் மட்டுமல்ல, கல்கூட ஏங்கும்.