157. சங்கரரின் சீடர்கள் குழுத்தார்களா?
# சங்கரரின் சீடர்கள் குழுத்தார்களா?
Did Shankara`s disciples drink?
- சங்கரரைப் பார்த்த சீடர்களும் ஒருமுறை கள் குடித்தார்களாமே?, இது குருவே சீடர்களுக்குச் செய்யும் துரோகம் இல்லையா?
- பாலக்குமார், தனுஷ்கோடி
உங்களுக்கு அந்த நிகழ்ச்சிப்பற்றிப் பாதிதான் தெரிந்திருக்கிறது என்பது உங்கள் கேள்வியிலேயே தெரிகிறது.
ஆதி சங்கரா் ஒரு முறை பாதயாத்திரை சென்று கொண்டிருந்தார். அவருக்குத் திடீரென்று தாகம் எடுத்தது. அவா எல்லாம் கடந்த ஞானி. அவர் உடல் உணர்வே இல்லாத ஞானி.
அவருடைய உடலுக்குத்தான் தாகம் எடுத்தது. சுற்றிலும் பார்த்தார். அங்குக் 'கள்' இறக்கும் ஒரு தோப்பு இருந்தது. அங்கு ஒருசிலர் அப்போது தங்கள் பானையில் கள்ளை இறக்கிக் கொண்டிருந்தார்கள்.
சங்கரா "அப்பா! தாகமாக இருக்கிறது.. ஏதாவது, இருந்தால் கொடுங்கள்," என்று கேட்டார். அதற்கு அவர்கள் ''சாமி! 'கள்' மட்டும்தான் இருக்கிறது,'' என்று சொன்னார்கள்.
அதற்கு அவர், ''அதனால் என்னப்பா தாகத்திற்கு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை,'' என்று சொல்லி, தம் தாகம் தீர அவர்கள் கொடுத்த ஒரு பானை 'கள்'ளையும் குடித்துவிட்டார்.
இவர் கள்ளைக் குடித்த உடனே, நம்மில் பல பேருக்குத் தோன்றுவதைப் போலவே அவருடைய சீடர்களுக்கும் தோன்றியது.
''ஆஹா! சங்கரரே கள் குடித்தார். நமக்கு என்ன? நாமும் குடிக்கலாம்,'' என்று எல்லோரும் குடிக்க ஆரம்பித்தார்கள். ஆனால், சங்கரா் ஒரு பானை கள் குடித்தும் தடுமாறாமல், மனம் மாறாமல் தெளிவாக நடந்து சென்றார்.
ஆனால் சீடா்கள் குடித்த பிறகு, தடுமாற ஆரம்பித்தார்கள். முறை தவறி நடக்க ஆாம்பிக்கார்கள்.
சங்கரா் அவர்களுக்கு அறிவுரை சொல்லவில்லை. சிரித்துக் கொண்டே நடந்தார். கொஞ்ச தூரம் நடந்ததும் மாலைபொழுது வந்தது.
மீண்டும் சங்கரருக்குத் தாகம் எடுத்தது.
அந்த இடத்தைச் சுற்றி நோக்கினார்.
அங்கு ஒரு கொல்லர் இரும்பு உலைக்களம் வைத்திருந்தார். அங்கு அவர் இரும்பை உருக்கிக் கொண்டு இருந்தார்.
சங்கரர் அவா் பக்கத்தில் சென்றார். ''அப்பா! தாகமாக இருக்கிறது,'' என்று சொன்னார்.

அதற்கு அந்தக் கொல்லர், ''இரும்பை உருக்கிக் வைத்திருக்கும் இரும்பின் ரசம்தான் என்னிடம் இருக்கிறது....தண்ணீர் இல்லை,''என்று சொன்னார்..
உடனே சங்கரர், இரும்பை உருக்கி வைத்திருந்த பாத்திரத்தை எடுத்து, காய்ச்சிய இரும்பைத் தண்ணீர்போல் குடிக்க ஆரம்பித்துவிட்டார்.
இதைப் பார்த்த சீடர்கள் திகைத்தார்கள். இப்போது அவா்களால் அதை செய்ய முடியாது. சங்கரா் குடித்தார் நாங்களும் குடித்தோம் என்ற அவா்களின் வாதம் உடைந்தது. தலைகவிழ்ந்து, நிஜம் புரிந்து, உண்மையை உணர்ந்து நின்றார்கள்.
ஞானி சொல்வதைச் செய்யுங்கள், செய்வதைச் செய்யாதீர்கள்.