1. Lines of Wisdom Which Makes You Beautiful - Part 2
பொருளடக்கம் பகுதி – I
-
76 சொர்க்கழும், நரகமும் மனோரீதியானது
-
77 நீ செத்தாலும் ... வாழும் மனம்
-
78 எப்போது முற்றுப்புள்ளி வைக்கலாம் ?
-
79 புத்திசாலித்தனம்
-
எல்லாவற்றிற்குமான ஒரு தீர்வு 80
-
எது பூஜை ? எது தியானம் ? 81
-
தியானம் புதிரானதா ? 82
-
ஆனந்தத்தை ஈர்க்கும் வெற்றிடம் 83
-
செயலும் எண்ணமும் தெளிவாக ... 84
-
கஷ்டங்களெல்லாம் கரைந்துவிட ... 85
-
பீனியல் சுரப்பியைச் 86 சுறுசுறுப்பாக்குங்கள்
-
ஞானப் பயணம் 87
-
பிடிவாதத்தை விட்டு வெளியே 88 வாருங்கள்...
-
வாழ்வின் மாயங்கள் 89
-
கவலை! சந்தோஷம்! அனந்தம் ! 90
-
எது ஞானம் ? 91
-
தேடுதல் 92
-
உன் அவசர காலம் 93
-
உங்களை உங்களுக்கு 94 அடையாளங்காட்டியது யார் ? தெளிவென்னும் குழந்தை 95
-
இளமை 96
-
97 அனுபவிக்கத் துடிப்பவனுக்கு ...
-
வேதனை தரும் தூண்டல் ... 98 சாதனை !
-
99 குரு சிஷ்யன்
-
ஞானிகளை நம்பாதே ! 100
-
உங்களை மகானாக்கும் பட்டியல் 101
-
102 விழிப்புணர்விண்மையே நிதானமின்மை
-
103 நிதானம் ஒர் தானம்
-
ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்... 104
-
105 உங்கள் வாழ்க்கைச் சக்கரத்தின் விட்டம் என்ன ?
-
ஞானம் அடைவதற்கு முதல்படி… 106
-
கோபத்தை அடக்காதீர்கள் 107
-
108 ஒப்பீடற்றவரே!
-
நிம்மதி தரும் தெய்வஸ்தலங்கள் 109
-
சக்தி மையங்கள் 110
-
கடவுள்தான் எல்லாம் 111
-
போலித் திருப்தி தன்மை என்றால் 112 என்ன ?
-
மனப் பட்டிமன்றம் 113
-
தப்பின் கதை 114
-
மனதைக் குத்திக் கிழிக்காதீர்கள் ... 115
-
ஏன் மனமொடிகிறோம் ? 116
-
நேசம் வேஷம் 117
-
பஞ்சு மனம் 118
-
கோயில்கள் 119
-
உங்கள் உடல் ஒரு கோயிலா? 120
-
121 ஆரோக்கியமான மனிதன்
-
122 எங்கே இருக்கிறது அதிர்ஷ்டமும் துரதிஷ்டமும் ?
-
தைரியசாலியும் அதிர்ஷ்டசாலி! 123
-
பெருமை எனும் சிறுமை 124
-
நீங்கள் எல்லாம் தெரிந்தவரா? 125
-
இதுதான் அகங்காரம் 126
-
127 அகங்காரம் அழிக்க வழி
-
இறுக்கம் மறைய இயல்பாகி 128 விடுங்கள்
-
போலிச் சுகம் 129
-
கீழ்த்தரமான செயல் 130
-
(டிதிர்ச்சியின் அளவுகோல் 131
-
132 பக்தி சக்தி
-
அவமானம் என்னும் நாடகம் 133 கோப சக்தி விரையம் 134 மன்னித்து ... மறந்துவிடுங்கள்! 135 ஆனந்தப் பயணம் 136 137 எது பக்தி ? போலி நம்பிக்கை என்றால் என்ன ? 138 மிகவும் தவறாகப் புரிந்து 139 கொள்ளப்பட்டவர் இறைவன் பிரபஞ்ச செல் 140 மனிதன் மகானாக எது மாற 141 மாறவேண்டும் ? 142 பூதி Personality தெளிவாக வழி ! 143 உங்கள் உலகம் 144
-
அத்தனைக்கும் ஆசைப்படலாமா ? 145
-
நியாயமில்லாத கொள்கை 146
-
கவலையின் விதை அசை 147
-
எங்கே நிம்மதி (கேள்வியல்ல -148 வேள்வி )
-
மன அறுவைச் சிகிச்சை 149
-
மனமென்னும் வேலைக்காரன் 150
-
என்ன தெரியும் ? கடவுள் பற்றி ... 151
-
ஒரு தியானிக்கு எது தேவை ? 152
-
அறிவு, அதிகாரம், திருப்தி 153
-
ஆனந்தம் பற்றிய சில உண்மைகள் 154
-
அங்கீகாரத்தை வெளியே 155 தேடாதீர்கள்
-
கனவு ! கற்பனை! நிஜம் ! 156
| 157 அறிவு அனுபவம் அனுபூதி | |
|---|---|
| 158 | எங்கே இருக்கிறார் கடவுள் ? |
| 159 | ஏன் பொறுத்துக் கொள்ள |
| முடியவில்லை ? | |
| 160 | தெளிவற்றத் தெளிவு |
| 161 | பழக பழகிக் கொள்ளுங்கள் |
| 162 | நம்பிக்கையை வளப்படுத்துங்கள் |
| 163 | கர்மச் சக்கரம் |
| 164 | ஒரே செயல் இரண்டு மிகப் பெரிய |
| நிகழ்வுகள் | |
| 165 | கற்றுக்கொள்ள கற்றுக் |
| கொள்ளுங்கள் ! | |
| 166 | காமம், காதல், நட்பு, அன்பு |
| 167 | வெட்டிப் பேச்சா? வெட்டும் |
| பேச்சா ? | |
-
வாழ்க்கை அர்த்தமுள்ளதாகட்டும் 168
-
169 சந்நியாசம்
-
இது உச்சக்கட்ட போதை 170
-
வேண்டுதல்கள் நிறைவேற்றுவது 171 எப்படி ?
-
172 படிப்பு சுமையா? சுவையா?
-
173 படிப்பு ஒரு திறன்
-
174 ஞாபகச் சக்தி கிடங்கின் மந்திரசாவி
-
மனம் எனும் குழந்தை 175
-
176 உயிர்ச் சக்தி விரையத்தை தடுக்கும் வழி
-
யார் சிஷ்யன் ? 177
-
கடமை ! கடமை ! 178
-
கடமை உங்களை உறிஞ்சுகிறதா? 179
-
தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி 180 வையுங்கள்
-
சாதிக்கும் முன் யோசிக்க 181 வேண்டியது
-
182 பாச வலை
-
வேதம் விவாதத்திற்கல்ல 183
-
பிடித்தவர்களும் பிடிக்காதவர்களும் 184
-
முடியும் தாண்டிவிடலாம்... வா! 185
-
வாழ்க்கையை அர்த்தமுள்ளதா(க்)க 186
-
உங்களை உத்தமராக்கும் உண்மை 187
-
உன்னுள் ஒளிந்திருக்கும் 188 மாயாச்சிலை
-
189 ருசித்தல்
-
நீங்கள் கிளர்ச்சியாளனா? 190
-
சாந்த குணம் 191
-
தீண்டுபவரே தீண்டப்படுவார் 192
-
எது பக்தி ? 193
பிற்சேர்க்கைகள்
சொர்க்கழும், நரகழும் மனோரீதியானது
-
சொர்க்கமோ, நரகமோ புவியியல் ரீதியாக எந்த இடத்திலும் இல்லை. மனவியல் ரீதியாகவே உள்ளது.
-
கோபம், வெறுப்பு, கவலை, துக்கம் ஆகியவை சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நிகழ்விலும் நீங்கள் உண்மையில் வாழ்வது நரகத்தில்தான். அந்த நிமிடங்களில் ... நரக உணர்வான துன்பத்தைத்தான் ருசிப்பீர்கள்.
-
சாந்தம், சந்தோஷம், நிம்மதி, அன்பு ஆகியவை சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நிகழ்விலும் நீங்கள் நிச்சயமாக வாழ்வது சொர்க்கத்தில்தான். அந்த நிமிடங்களில்... சொர்க்க உணர்வான இன்பத்தைத்தான் ருசித்துக் கொண்டிருப்பீர்கள்.
-
துன்பத்தையும், இன்பத்தையும் தாண்டிய ஒரு நிலைதான் ஆனந்தம். நரகத்தையும், சொர்க்கத்தையும் தாண்டிய ஒரு வெளிப்பாடுதான் ஞானம்.
-
கோபத்தைப் போன்றே... மனிதனுக்குத் துன்பத்தையும், வேதனையையும் உணர வைக்கும் எல்லா நிமிடங்களிலும், நிகழ்வுகளிலும் மனிதன் நரகத்தில் வாழ்கிறான்.
-
சந்தோஷத்தைப் போன்றே... மனிதனுக்கு இன்பத்தையும், உற்சாகத்தையும் உணர வைக்கும் எல்லா நிமிடங்களிலும், நிகழ்வுகளிலும் மனிதன் சொர்க்கத்தில் வாழ்கிறான்.
-
முயன்றால் சொர்க்கத்தை நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ள முடியும்.
-
சொர்க்கமும், நரகமும் ஒரு தனிமனிதனின் கையில் இருக்கிறது. உங்கள் சொர்க்கத்தை உருவாக்குங்கள்.
நீ செத்தாலும் ... வாழும் மனம்
- ஞானமடையும்போது அகங்காரம் சாகிறது. உடல் தொடர்கிறது. மனிதன் இறக்கும்போது உடல் சாகிறது. அகங்காரம் (மனம்) தொடர்கிறது.
- இதுவரை எதுவெல்லாம் 'நான்' என்று நினைத்துக் கொண்டிருந்தானோ அதற்கு மொத்த மூலக்காரணமான அகங்காரம் அழிவதும், இந்த உலகில் ஒரு மனிதன் இறப்பதும் சமம். இது இரண்டும் ஒன்றே.
- உடலில் உயிர் இருக்கும்போதே அகங்காரம் மடிந்து விட்டால் நிஜமான 'தான்' யார் என்பது ஆத்ம அனுபூதியாக ஒருவருக்குள் மலரும். பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து எல்லாவற்றிற்கும் காரணமான அந்த ஆத்மாவின் வெளிப்பாடாக மனிதன் மாறிவிடுவான். அப்போதுதான் மனிதன் ஞானியாக மாறும் ஆனந்த நிகழ்வு நிகழ்கிறது.
எப்போது முற்றுப்புள்ளி வைக்கலாம்?
- பிரபஞ்சத்திற்கே காரணமான ஒன்றைக் கண்டு கொண்டு, அதுவாகவே மாறிவிட்ட ஞானிக்கு முக்காலமும் ஒன்றே.
- ஒரு ஞானிக்கு இந்த உடல் வெறும் சட்டையைப் போன்றது. ஞானியின் உடல் அழியலாம். ஆனால் ஞானிக்கு அழிவில்லை.
- ஆத்மா அழிவில்லாதது ஆத்மாவை வெட்ட முடியாது ஆத்மாவை எரிக்க முடியாது ஆத்மா நிலையானது ஆத்மா ஆனந்தமானது. இவ்வளவு வல்லமையும், புனிதமும் பெற்ற ஆத்மா உள்ளே இருக்க, சின்னச் சின்ன
விஷயங்களுக்காக மனிதன் பல பிறவிகளை விலையாகக் கொடுப்பது அகங்காரத்தின் விளையாட்டு.
- அகங்காரத்தின் விளையாட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் முற்றுப் புள்ளி வைக்கலாம். இல்லை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விளையாடலாம். இரண்டிற்கும் இயற்கைச் சக்தி அனுமதி தருகிறது.
- அகங்காரத்தோடு அல்லல் பட்டுச் சாவதா ? இல்லை ஆத்மாவோடு ஆனந்தமாக வாழ்வதா ? தனிமனிதன் தானே யோசித்து எடுக்க வேண்டிய முடிவு.
புத்திசாலித்தனம்
- வெற்றி - தோல்வி! சாதனை - சோதனை! கொண்டாட்டம் - திண்டாட்டம் - ஆகியவை ஒருவருடைய புத்திசாலித்தனத்தின் அளவைப் பொறுத்து அவருடைய வாழ்வை ஆட்டிப்படைக்கும் அம்சங்கள்.
- புத்திசாலித்தனம் அதிகம் பெற்றிருப்பவரிடம் பணம், பதவி, புகழ், இன்பம் ஆகியவை கட்டுப்பட்டுக் கிடக்கும்.
- தன்னைப் புத்திசாலி என நினைத்துக் கொண்டிருப்பவர்கள் மற்றவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். புத்திசாலி தொடர்ந்து வாழ்விலிருந்து கற்றுக்கொண்டேயிருப்பான்.
வாழ்வின் எந்தெந்த அம்சங்களில் நம்முடைய புத்திசாலித்தனம் பெருகவில்லையோ, அந்தந்த அம்சங்களுக்குதான் நாம் அடிமையாக இருப்போம். புத்திசாலிதனம் பெருகப் பெருக அனைத்தையும் நம் விருப்பப்படி கட்டுப்படுத்தும் அதிபதியாகி விடுவோம்.
மகாராஜா போல்... மகாராணி போல் ... வாழ வேண்டுமா ? புத்திசாலித்தனம் உங்களினுள் பெருக வழி செய்யுங்கள்.
எல்லாவற்றிற்குமான ஓர் தீர்வு
- புரிந்து கொள்ளுதலே ஞானம்.
- வாழ்க்கை மற்றும் உறவுகள் பற்றி மனதில் உருவாக்கி வைத்திருக்கும் தவறான புரிந்து கொள்ளுதல்களில்தான் மனிதன் சிக்கித் தவிக்கிறான்.
- தவறான புரிந்துகொள்ளுதல்கள் மனதில் உருவாகும் புதைகுழிகள்.
- தவிர்க்க முடியாதது - உடலின் மரணம். ஜெயிக்க வேண்டியது - மனதின் மரணம். சரி செய்யப்பட வேண்டியது - உயிரின் மரணம். உடல், மனம், உயிர் என்ற மூன்றையும் ஆட்டிப் படைக்கும் அகங்காரம் மட்டும் மரணித்துப் போனால் எல்லாம் சரியாகிவிடும்.
- அகங்காரத்தை அழிக்கும் மருந்து 'புரிந்துகொள்ளுதல்'
- மனிதனின் எல்லாக் கேள்விகளுக்கும், எல்லாச் சந்தேகங்களுக்கும் ஒரே ஒரு வார்த்தையில் தீர்வளிக்க வேண்டுமானால் அது 'புரிந்துகொள்' என்பதே!
எது பூஜை? எது தியானம்?
- கடமைக்காகச் செய்யும் பூஜைகளால் எந்த ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை. பக்தியில்லாத பூஜை உணவில்லாத இலைக்குச் சமம்.
- பக்தியோடும், சிரத்தையோடும், செய்யும் பூஜை, வெறும் பூஜையோ சடங்கோ அல்ல. அது இறைசக்தியோடு நேரடித் தொடர்புக்கு உதவும் தியானத்திற்குச் சமம்.
- சிரத்தையோ, முழு ஈடுபாடோ இல்லாமல் செய்யும் தியானம்கூட வெறும் சடங்கே.
சிரத்தையோடும், முழு ஈடுபாட்டோடும் செய்யும் சடங்குகூட தியானம்தான்.
ஏகப்பட்ட ஞானிகளையும், கோயில்களையும் கொண்ட புண்ணிய பூமி பாரதம். இந்தப் புண்ணிய பூமியில் பிறப்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்தப் புண்ணிய பூமியில் இருக்கும் கோயில்களுக்குச் செல்வதும், வெகுநேரம் நின்று தரிசிப்பதும், பூஜிப்பதும் ஒருவகையான தியான முறைதான் ... உங்களிடம் சிரத்தை மிகுந்தால்!
தியானம் புதிரானதா ?
-
தியானம் செய்வது எப்படி ? -மேலுள்ள கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள இன்று பலர் ஆர்வமாக இருக்கிறார்கள்.
-
காரணம், இவர்கள் தியானத்தில் அமர்ந்தால் சாதாரண நேரங்களில் வரும் எண்ணங்களைவிட அதிகமான எண்ணங்கள் வருவதுபோலவே தோன்றுவதுதான். அப்படித் தோன்றக் காரணம், அப்போதுதான் தங்கள் வாழ்வில் முதல்முறையாக தங்களினுள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் மனக் குதிரையை நேருக்குநேர் சந்திக்கிறார்கள்.
-
'இயல்பாகவே இருக்கிறேன்' என்றெண்ணிக் கொண்டிருந்தவர்களின் உள்ளே இருக்கும் 'இயல்பற்ற தன்மைதான்' தியானத்தில் அமரும்போதுதான் ஒருவருக்குத் தெரியவரும்.
ஆனந்தத்தை ஈர்க்கும் வெற்றிடம்
- 'பகிர்தல்' ஒரு தியான முறை.
- அகங்காரத்தை வலி தெரியாமல் அறுத்துவிட உதவும் வாழ்வியல் வழிமுறை 'பகிர்தல்'
- உள்ளத்தில் உள்ளதையெல்லாம் பகிர்ந்து விடுங்கள். பகிர்வதால் உள்ளே உருவாகும் வெற்றிடத்தை, ஆனந்தம் நிரப்பிவிடும்.
- மேல் உள்ள கூற்றைச் சோதித்துப் பாருங்கள். உங்களினுள் ஆனந்தக் கதவு தானாகவே திறந்துகொள்ளும்.
- கவலைப் பகிரப் பகிர குறையும் ஆனந்தம் பகிரப் பகிர அதிகமாகும்.
- பகிர்தல் உங்களின் வாழ்க்கைப் பாடத்தில் புதுப்புது பக்கங்களை திருப்பிக் காட்ட வல்லது! பகிர்தல் ஒருவித வளர்தல்.
செயலும் எண்ணமும் தெளிவாக ...
- இன்றைய நிகழ்காலம் என்பது நேற்றைய எதிர்காலம். நாளைய எதிர்காலம் அது சந்திக்கப்படும்போது நிகழ்காலமாகியிருக்கும். எனவே நிகழ்காலத்தைச் சந்திக்கத் தெரிந்தால்போதும். எதிர்காலத்தை பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.
- கவலைப்பட்டாலும், கவலைப்படாவிட்டாலும் சந்தித்தே ஆகவேண்டிய எதிர்காலத்தை எதிர்கொள்ளத் தயாராவதே புத்திசாலித்தனம்.
எதிர்கொள்ள ஆரம்பியுங்கள் நிகழ்காலத்தை! வாழ ஆரம்பியுங்கள் நிகழ்காலத்தில் ... கவலைகளாலும், தேவையற்ற சிந்தனைகளாலும் வீணாகும் நேரமும், சக்தியும் மிச்சமாகும். செயலும் எண்ணமும் தெளிவாக ஆரம்பிக்கும்.
நிகழ்காலத்தில் நினைவொன்றி வாழ வாழ நிச்சயம் வாழ்வு வளமாகும்.
கஷ்டங்களெல்லாம் கரைந்து விட ...
- மக்களைக் கற்பனையிலேயே வாழச் செய்யும், சில பொழுழை போக்கும் அம்சங்களால் மனித மனம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது வருத்தத்திற்குரிய உண்மை.
- கற்பனை உலகில்தான் நாம் வாழ்கிறோம் என்பதை அறியாமல் ... கற்பனைகளை நிஜம் என்றும், நிஜத்தைக் கற்பனை என்றும், பார்த்துப் பார்த்து மனம் பாதிக்கப்பட்டதால் தெளிவற்றுப்போன மனதிலிருந்து முடிவுகள் எடுப்பதால்தான் வாழ்க்கையில் பல குழப்பங்கள்.
- கற்பனை நிஜமாக மூடியாது. நிஜத்தைக் கற்பனை செய்ய முடியாது. இது நடைமுறை உண்மை.
- மனிதன் செய்யும் 100 கற்பனைகளில் ஒன்றிரண்டு நிஜமானால் அதுவே பெரிய விஷயம். இதற்குப் பெரிய விளக்கம் தேவையில்லை. உங்களின் மன ஏட்டில் 'சொந்த அனுபவங்கள்' எனும் பகுதியைப் புரட்டடிப் பாருங்கள். புரியும்.
உங்களின் ... பயம் பரிதவிப்பு
ஏக்கம்
எதிர்பார்ப்பு
ஆகிய அனைத்தும் கற்பனைகளே.
- நிஜமாகாத கற்பனைகளுக்காக நிஜ வாழ்வை கரைக்காதீர்கள்.
- கற்பனைகளைக் கரையுங்கள், கஷ்டங்களெல்லாம் கரைந்துவிடும்.
பீனியல் சுரப்பியைச் சுறுசுறுப்பாக்குங்கள்
-
கிடைத்தவகைளுக்கு மனிதன் மதிப்பளிப்பதில்லை. அதோடு நில்லாமல், கொடுக்கப்பட்டதில் குறை சொல்லிக் கொடுத்தவரையே கொட்டுவதும், 'இன்னும் கொடு' எனச் சொல்லி பெற்றுக்கொண்டதை அவமதிப்பதும் நன்றியுணர்வற்றவர்களின் குணாதிசயங்கள்.
-
பீனியல் சுரப்பி, சுரப்பிகளின் ராணி என்றழைக்கப்படுகிறது. நமக்குள் ரம்யமான உணர்வையும் (Senser of well being), இளைப்பாறுதலில் கிடைக்கும் அமைதியையும் (Peace) உருவாக்குவது இந்த பீனியல் சுரப்பி.
-
'நன்றியுணர்வோடிருத்தல்' என்னும் உணர்வு நிலை சஹஸ்ராரச் சக்கரத்தை மலரச் செய்யும், பீனியல் சுரப்பியை சுறுசுறுப்பாக்கும்.
-
நன்றியின்மை மரியாதையின்மை எனும் குணக்கேடுகளின் வெளிப்பாடுகளான ... அவமதித்தல், எகத்தாளம் ஆகிய எல்லாம் ஒன்றாய் சேர்ந்துதான், ஒருவருள் வெறுமையை உருவாக்குகின்றன. அவரின் அருமையை மறைக்கின்றன. மற்றவரின் அருமையையும் அவருக்கு மறைத்து விடுகின்றன.
ஞானப் பயணம்
- புத்து (BHUDDHU) புத்தா (BHUDDHA) என்ற இருவருக்குமே துக்கமில்லை.
- புத்து என்றால் முட்டாள். புத்தா என்றால் ஞானி.
- இப்போது நீங்கள் அனுபவிக்கும் எல்லா துக்கங்களுமே நீங்கள் முட்டாள் அல்ல என்பதற்கான அறிகுறிகள். ஞானம் நோக்கி நகருகிறீர்கள் என்பதற்கான ஆதாரங்கள். உற்சாகத்தோடு முன்னேறுங்கள் !
பிடிவாதத்தை விட்டு வெளியே வாருங்கள் ...
- பிடிவாதம் பக்கவாதத்தைவிட மோசமானது.
- பக்கவாதம் உடலை மாத்திரம்தான் முடமாக்கும். பிடிவாதம் உடல், மனம் என்ற இரண்டையும் முடமாக்கும்.
- மனிதனுக்குள் ஒளிந்துகொண்டு, அவ்வப்போது வெளியில் வந்து மற்றவர்களையும், அந்த மனிதனையும் நாசம் செய்யும் அரக்கன்தான் 'பிடிவாதம்'.
- பிடிவாதம் உங்கள் மனதைப் பிடித்துக் கொண்ட வாதம்.
வாழ்வின் மாயங்கள்
- 'நான் யார் ?
நான் எவ்வளவு பெரிய ஆள்? என் கௌரவம், என் கொள்கை' என்று வறட்டுப் பிடிவாதம் பிடித்துக் கொண்டு வாழ்க்கை நடத்தினால், உங்கள் பிடிவாதம் மட்டுமே உங்களுக்கு மிச்சம்! இந்தப் பிடிவாதத்தால் பல இழுப்புகளை நிச்சயம் சந்திக்க நேரிடும் !
- பிடிவாதம் என்பது உங்கள் மனதைப் பிடித்துக் கொண்ட வாதம். பைசாவுக்கும் பிரயோசனம் இல்லாத பிடிவாதத்தை விட்டுவிட்டு ஆயிரக்கணக்கான இழுப்புகளிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்!
-
- 'யார் நீ?' என்ற கேள்விக்கு - பெரும்பான்மையான மக்கள் கூறும் பதில்கள், படிப்பறிவில்லாதவன் 'உடல்தான் நான்' என்று நினைக்கிறான். படித்தவன்
'மனம்தான் நான்' என்று நினைக்கிறான். பண்டிதன்
'ஆத்மாதான் நான்' என்று நினைக்கிறான். இந்த மூன்று நினைவுகளும் மனிதனின் மாயங்களே! வெறும் கருத்துக்களே! உண்மையான நீங்கள் யார்? என்ற சுய அனுபவம் கிடைக்காத வரை 'நீங்கள் யார்' என்பதைப் புரிந்துகொள்ளவே முடியாது.
-
வாழ்வே மாயம் ; 'வாழ்வே மாயம்' என்று பிரச்சினைகளால் தத்தளிக்கும் சராசரி மனிதன் கூறினால் அது பொய். வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாததற்குக் கூறும் சப்பைக்கட்டு.
-
'வாழ்வே மாயம்' பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியசாலி கூறினால் அது உண்மை. வாழ்க்கையின் வலிகளை அனுபவித்து வாழ்வைப் புரிந்து கொள்வதால் பிறந்த தெளிவான கருத்து.
-
'வாழ்வே மாயம்' பிரச்சினைகளால் பாதிக்கப்படாத நிலையை அடைந்த ஞானி கூறினால், அது சத்தியம். வாழ்க்கையின் இன்ப, துன்பத்தை முழுமையாக அனுபவித்து அனுபூதி அடைந்ததின் வெளிப்பாடு.
-
'வாழ்வே மாயம்' என்று ஒரு ஞானி கூறியதை ஒரு சராசரி மனிதன் 100% தவறாகப் புரிந்துகொள்வான்.
-
அவனது தத்தளிக்கும் வாழ்க்கையை நியாயப்படுத்திக் கொள்ள ஒரு கருத்தாகப் பயன்படுத்திக்கொள்வான்.
-
அவ்வளவே, இது சத்தியத்தை மாற்றிப் புரிந்துகொண்டு சத்தியத்தைப் பொய்யாக்குவது.
-
இதுதான் மாயைகளிலேயே மிகப் பெரிய மாயை.
கவலை! சந்தோஷம்! ஆனந்தம்!
- சந்தோஷம் என்ற ஒளி இல்லாத வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் கவலை என்ற இருள் வந்து பற்றிக்கொள்ளும்.
- சந்தோஷம்,
கவலை என்ற இரண்டையும் தாண்டிய நிலைதான் ஆனந்தம்.
- சந்தோஷம் நிரந்தரமாக எவருக்குமே இருப்பதில்லை. கவலையைக்கூட, இந்த நேரத்தில் வரும், இவ்வளவு நேரம் இருக்கும் என்று பலரால் சொல்ல முடியும்.
ஆனால், சந்தோஷம் எப்போது வரும், எவ்வளவு காலம் இருக்கும் என்று சிலரால் சொல்லக்கூட முடியாது. அதனால்தான் சந்தோஷம் ஒரு தோஷம்.
-
சந்தோஷத்திற்கு நச்சு கவலை. கவலைக்கு மருந்து சந்தோஷம். கவலை ஒரு வலை ! சந்தோஷம் ஒரு தோஷம்! ஆனந்தம் ஒன்றே நிரந்தரம்!
-
ஒரு இடத்தில் வெளிச்சம் மறைந்த அடுத்த நொடியே யாருமே அழைக்காமல் அந்த இடத்தில் இருள் வந்து சேர்ந்துவிடும்.
-
ஒருவர் மனதில் சந்தோஷம் குறைந்த அடுத்த நொடியே சந்தடியே இல்லாமல் மனதில் கவலை தோன்றி விடும்.
-
சந்தோஷம் கவலையை மறைத்து விடும். ஆனால் ஆனந்தம் கவலையை வேரோடு பிடுங்கி எறிந்து விடும். கவலை மறந்து வாழலாம் - சந்தோஷித்தால், கவலை துறந்து வாழலாம் - ஆனந்தித்தால் !
எது ஞானம் ?
- பொதுவாக மனிதர்கள் ஞானத்தை பற்றி வைத்திருக்கும் கருத்துக்கள் இரண்டு: 1. விஷய ஞானம் அதாவது அறிவு. 2. அனுபவ ஞானம் அதாவது அனுபவம். உண்மையான ஞானம் - விஷய ஞானத்தையும், அனுபவ ஞானத்தையும் தாண்டியது. அறிவையும், அனுபவத்தையும் தாண்டியது அனுபூதி. இந்த அனுபூதி ஆனந்தத்தின் உச்சம். அனுபூதிதான் உண்மையான ஞானம்.
- வெறும் செய்திகளும் அறிவும் மூளையை நிரப்பும். அறிவைத் தாண்டிய அனுபவமே விடுதலையைத் தரும்.
- அறிவை அனுபவமாக மாற்ற முயற்சி செய்தால் ஓர் உண்மை தெரியவரும். அதாவது, பெரும்பாலான உலக அறிவுக்கும் வாழக்கை அனுபவத்திற்கும் சம்பந்தமே இல்லை என்று !
- வாழ்க்கைப் பாடங்களை முழுமையாகப் புரிந்துக் கொள்வதே பூரண ஞானம். அறிவை அனுபவமாக்கி அனுபூதி நோக்கி நகருங்கள் !
தேடுதல்
- தகுதியான குருவைத் தேடும் நாம், தகுதியான சிஷ்யனாக இருப்பதில்லை.
- குருவைத் தரம் பார்க்கச் செய்யும் முயற்சிகளை விட்டுவிட்டு உங்களுடைய புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி உண்மையான நிறம் பார்க்க முயலுங்கள். பிரயோஜனம் உண்டு.
- நாம் உண்மையிலேயே தகுதியான சீடனாக மாறும்போது கடவுள், தகுதியான குருவை நம்மிடம் அனுப்பியே தீர வேண்டும். அனுப்பியே தீருவார்.
- இராமகிருஷ்ணர் உடலில் வாழ்ந்தபோது ஆயிரக் கணக்கானோர் அவரைப் பார்த்திருக்கிறார்கள்.
Part 2: Lines of Wisdom Which Makes You Beautiful
ஆனால் சில நூறு பேர்தான் அவரின் மகிமையையும், அவர் இறைவனின் அவதாரம் என்பதையும் உணர்ந்தனர்.
-
பக்குவமான சீடர்களால் மட்டும்தான் குருவை உணர முடியும் எனவே நம் கவனம் முழுவதும் நம்மைச் செம்மைப்படுத்திக் கொள்வதிலேயே இருந்தாலேபோதும். குரு தானாகவே வந்து வாய்ப்பார்.
-
நல்ல சீடனாக இருந்தால்... கல்லும் கடவுளாகி வாழ்வில் ஒளி காட்டும். இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் 'எங்கிருந்து வருகிறாய் ?' உன் அடையாள அட்டையைக் காட்டு. நீ கடவுள் என்று நான் நம்புவதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறாய் ? என்போம்.
-
நீங்கள் ஆனந்தமாக வாழ முடிவு எடுக்காத வரை குருவே நேரில் வந்தாலும் உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது.
-
'ஆனந்தமாக வாழ முழு மனதாக முடிவு எடுத்து விட்ட பட்சத்தில்' நீங்கள் தேடாவிட்டால்கூட குரு உங்களைத் தேடி வருவார்.
-
இதில் விந்தை என்னவென்றால் அப்படி முழு மனதாக முடிவு எடுத்துவிட்ட பட்சத்தில் உங்களால் ஒரு நொடி கூட சும்மா உட்கார்ந்து நேரத்தை வீணடிக்க முடியாது.
-
உங்களின் முடிவு வாழ்க்கையின் முடிவையே மாற்றி விடும். முடிவை நீங்கள் எடுங்கள்! விடிவை இறைவன் பார்த்துக் கொள்வான்!
உன் அவசர காலம்
-
'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பதைவிட 'அகநடுக்கத்தின் அளவு முகத்தில் தெரியும்' என்றால் எல்லோரும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
-
அழகுக்கும் அக நடுக்கத்திற்கும் நேரடிச் சம்பந்தம் இருக்கிறது.
-
அக நடுக்கம் நில நடுக்கத்திற்குச் சமம். அகம், நடுங்கும்போது நரம்பு மண்டலமே நடுங்கும். இது மிகைப்படுத்தல் அல்ல. அறிவியல் பூர்வமானது !
-
அக நடுக்கம் ஏற்படும் ஒவ்வொரு நிமிடமும் உடலின் உயிர்ச் சக்தி சேதமாகும்.
-
வாழ்வின் சாதாரண விஷயங்களை அசாதரணமாகப் பார்க்கப் பழகியதால் உள்ளே உருவாகும் 'அவசர கால நிலை' தான் அகநடுக்கம்.
-
படபடபடப்பும்,
தேவையற்ற பரபரப்பும், சுறுசுறுப்பு அல்ல. சுறுசுறுப்பு என்ற பெயரில் பதட்டத்தைதான் மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
- பதட்டத்தால் நடுங்கும் விரல்கள், சிக்கலான நூல் கண்டை விடுவிப்பதற்கு பதில் இன்னும் கொஞ்சம் சிக்கலை அதிகப்படுத்தும்.
- அவ்வளவே, அகநடுக்கம்தான் உங்களின் சாதா பிரச்சினைகளை உடல், மன வேதனைகளாக மாற்றுகின்றன.
உங்களை உங்களுக்கு அடையாளங்காட்டியது யார்?
- நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உங்கள் உடல் காற்றைச் சுவாசிக்கிறது. காற்றில் வாழ்கிறீர்கள். அதேபோல், நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உங்கள் ஆத்மா கடவுள் சக்தியைக் கிரகிக்கிறது. நீங்கள் கடவுள் சக்தியில் வாழ்கிறீர்கள்.
- ஒரு நாய்க்கு அது நாய் என்ற விஷயம் தெரியாது. ஒரு மாட்டுக்கு அது மாடு என்ற விஷயம் தெரியாது. நாய், மாடு என்பது நாம் உருவாக்கிய பெயர்கள்.
நாயையும், மாட்டையும் பொறுத்தவரையில் அது அதுவாக உணரும். அவ்வளவுதான். மனிதனுக்கு மாத்திரம்தான் அவன் மனிதன் என்ற விஷயம் தெரியும். புரியும். காரணம் மனம்.
- மனிதனுக்குத் தெரிந்த மனம் தாண்டிய ஒரு நிலை இருக்கிறது அதற்கு பெயர்தான் 'மனம் கடந்த நிலை. '
- மனம் கடந்த ஆத்ம உணர்வு ஒருவருக்குள்ளிருந்து வெளிப்பட்டால், கடவுளையே தன்னுள் ஒருவனாகக் காணமுடியும்.
- கடவுள் தன்மையை ஒரே ஒருமுறை உணர்ந்துவிட்டால், கடவுள் என்ற வார்த்தை அனுபவப் பூர்வமாக விளங்கிவிடும். தானே எல்லாமாகவும், எல்லாம் தானாகவும் மாறிவிடும்.
தெளிவென்னும் குழந்தை
- குழப்பத்தை நீங்கள் வெறுக்கத் தேவையில்லை; நீங்கள் வளருகிறீர்கள் என்பதற்கான அறிகுறிதான் குழப்பம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
- குழம்புவதில் தவறில்லை ; குழம்பிக் கொண்டே இருப்பதுதான் தவறு.
- நீங்கள் குழம்புவது நியாயம்; அடுத்தவர்களைக் குழப்புவது அநியாயம்.
- இன்றைய குழப்பம் நாளைய தெளிவு.
- எது சரி எது தவறு என்ற தெளிவை ஏற்படுத்தும் மனதின் செயல்முறைதான் குழப்பம்.
மேற்சொன்ன வரிகளை ஒன்றுக்கு இரண்டு முறை படித்து, மனதில் தக்கவைத்துக் கொண்டாலே குழப்பத்தைப் பாதி தூரம் ஓட்டிவிடலாம்.
- பிரச்சினை குழப்பத்தில் இல்லை. குழப்பத்தை நீங்கள் அணுகும் முறையில்தான் இருக்கின்றது.
- குழப்பமே குழப்புமளவுக்கு குழப்பத்தை குழப்புவது, குழப்பத்தை குழப்பம் இல்லாமல் எதிர்கொள்ளும்போதுதான் சாத்தியம்.
- குழப்பத்தை முழுமையாக வரவேற்றுக் கொள்ளுங்கள். குழப்பத்தின் உச்சிக்குச் சென்றாலும் பயப்படாதீர்கள்.
குழப்பத்தைத் தாண்டிய அடுத்த நிமிடம் தெளிவு கிடைத்துவிடும். இது சூட்சுமமான உண்மை. தெளிவு பெற்ற ஒவ்வொருவரும் ஒத்துக்கொள்ளும் உண்மை.
- தெளிவு என்ற குழந்தை நம்முள் பிறக்க நாம் படும்பாடுதான் குழப்பம்.
- குழப்பத்திற்கு பயந்து குழப்பத்தைக் கலைக்க நீங்கள் முயற்சி செய்வதால் எத்தனைமுறை தெளிவைப் பிறக்க விடாமல் கருவிலேயே கலைத்திருக்கிறோம் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இளமை
- இளமையில் இளமையை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தாமல் இருப்பவன், 'இளைஞன்' என்ற போர்வைக்குள் இருக்கும் 'கிழவன்'.
- வாழ்க்கையில் சுவை மிகுந்த பகுதி - இளமை! படிப்பு, வேலை எதிர்கால வாழ்க்கை பற்றிய பயம் இவற்றால் இன்றைய உலகில் வாழ்க்கையின் சுமை மிகுந்த பகுதி - இளமை ! என்றாகி விட்டது.
- இன்று அதிகபட்ச சுவையும், அதிக பட்ச சுமையும் நிறைந்த வாழ்க்கைப் பகுதி இளமை !
- பொதுவாக நாம் பின்னால் பெறுகிற வெற்றியின் விதைகள் இளமையிலேயே ஊன்றப்படுகின்றன.
- இளமை என்பது வாழ்வின் சாரம். இதைப் பிழிந்து அர்ப்பணிக்காவிட்டால் உயர்ந்த நிலைகளை அடைய முடியாது.
- இளமையை எதற்கு அர்ப்பணிக்கிறீர்களோ அதன்படி உங்கள் வாழ்க்கை நிர்ணயமாகிறது.
- இளமையில் உருவாகிற இந்த அர்ப்பணிப்புதான் பின்னாளில் ஞானமாகவோ, பணமாகவோ, பதவியாகவோ வந்தமைகிறது.
அனுபவிக்கத் துடிப்பவனுக்கு ...
- சாதாரண வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை என்ற இரண்டு வகைப்பட்ட வாழ்வு முறைகள் இல்லை.
- மனிதன் தான் 'ஆனந்தமாக இல்லை' என்று உணர ஆரம்பித்தபின், சுயபட்டசாதாபத்தால் சப்பைகட்டுக் கட்ட உருவாக்கப்பட்ட title தான் சாதாரண வாழ்க்கை. எல்லோரும் ஆனந்தத்தின் உச்சிக்குச் செல்லவே ஆசைப்படுகிறோம். ஆனால் காதல், பேர்,புகழ், பணம், பதவி என்று அதை நமக்குப் பிடித்த வழியில் வேகமாக அனுபவிக்க, காளைபோல உழைக்க ஆரம்பிக்கிறோம். ஆனால் நாம் தேடும் ஆனந்தத்தை வெளியில் பெற முடியாது என்று புத்தன் முதல் ரமண மகரிஷி வரை வெவ்வேறு மொழிகளில் புலன் இன்பத்தின் உச்சத்தை அடைந்து தாண்டியவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
- ஐந்து புலன்களின் மூலமாக இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கும் புலன் இன்பத்தில் கூடத் தவறே இல்லை.
- ஆனால் அனுபவிக்கத் தேவையான சக்தியும் புத்தியும், தேவையான அளவு இல்லாமல் சுகத்தையும், திருப்தியையும் தேடி அலைய ஆரம்பிக்கும்போதுதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.
- வாழ்க்கையை அனுபவிக்க தேவைப்படும் 'சக்தியை' தியானம் எளிதில் உருவாக்கித் தரும். உலகையும், மனிதர்களையும் புரிந்து கொண்டு நிம்மதியாக இருக்க உதவும்.
- தன்னைப் போன்ற எல்லாவிதமான உடல், மன தடுமாற்றங்கள் நிறைந்த ஒரு பெண்தான், தனக்கு வரப்போகும் மனைவியாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்ற நிஜம் - அதீத கற்பனை
என்ற கரிப்புகையால் மறைக்கப்பட்டு விடுகிறது.
- இயல்பாகவே தங்களை மகாராஜாக்களாக கற்பனை செய்து கொள்வது, அவர்களின் மனதின் அடி ஆழத்தில் கா்வம் உருவாகுவதும் இயல்பு.
- இந்த கர்வம்தான் மலர் போன்ற பெண்மையை மதிக்கத் தவறி மதிக்கத் தூண்டுகிறது.
- இதேபோன்று கற்பனையில் அருமையான ஹீரோவை எதிர்பார்ப்பவர்கள்...இயல்பாகவே தங்களை அருமையான ஹீரோயினாக கற்பனை செய்துகொள்வதும் அவர்களின் மனதின் அடி ஆழத்தில் கா்வம் உருவாக்குவதும் இயல்பு.
- கற்பனையை எறிந்துவிட்டு, நிஜத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். மனிதர்களை மனிதர்களாக மதிக்க ஆரம்பிப்பீர்கள். நிம்மதி மலரும்!
வேதனை தரும் தூண்டல் ... சாதனை!
- சாதனை தனி வேதனை தனி
- வேதனைக்கு மருந்து சாதனையல்ல. வேதனைக்கு மருந்து சந்தோஷம்.
- சந்தோஷத்திற்கு வழி வாழ்க்கையைப் பூரணமாக அனுபவித்து வாழ்தல். சந்தோஷ வாழ்வு வேதனைகளை மறையச் செய்யும்.
வேகனைக்கு, சந்தோஷமென்னும் மருந்திட்டு குணப்படுத்துவது - சாதனை என்னும் தீப்புகையை மூட்டி விட்டு விட்டு வேதனையை மறைப்பதைவிட சிறந்தது.
- வேதனையை மறைப்பதைவிட, குணப்படுத்துவதே ஆரோக்கியமானது. அதன் பிறகு சாதனைக்குக் காலடி எடுத்து வையுங்கள்! சாதியுங்கள்!
- மீண்டும் சொல்கிறேன், சாதனை தனி வேதனை தனி. உங்களின் சாதனை ஆசை வேதனையிலிருந்து உதித்த ஒன்றா என ஆராயுங்கள்.
- சோதனையிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். வேதனைக்கு முதலில் மருந்திடுங்கள்!
- விழிப்புணர்வோடு அணுகினால் 'மத்தியில் வாழ்வது' அதாவது ஆனந்தமாய் வாழ்வது எப்படி என்பது புரிந்துவிடும்.
- உங்களின் ஆனந்தம் நோக்கிய பயணம் இனிதே தொடரும்.
குரு – சிஷ்யன்
ீ வா! அருகில் வா! என் அருகில் வா! என்னோடு கலந்துவிட வா! - என்ற நிலையில் உங்களுக்குள் இருக்கும் ஆத்மா காத்துக்கொண்டே இருக்கிறது. அழைப்பை ஏற்பதும், உதாசீனப்படுத்துவதும் உங்கள் கையில்.
-
உங்களுக்குக் காத்துக் கொண்டிருக்கும் ஆத்மாவை நீங்கள் திருப்பிப் பார்க்க, நீங்கள் ஆத்மாவில் கலக்க உதவுவதுதான் ஒரு குருவின் பணி.
-
குருவின் பணியை முழுமையாக அனுபவிப்பன் சிஷ்யன்.
-
ஒரு குருவின் நோக்கம் தனிமனிதனுக்குள் ஆனந்தத்தை மலர வைப்பதே.
-
உண்மையான குருவிற்கு எந்தவொரு காலத்திலும் பஞ்சம் இருந்ததே இல்லை. ஆனால், உண்மையான சீடர்களுக்குத்தான் எல்லாக் காலங்களிலும் பஞ்சம் இருந்துக் கொண்டே இருக்கிறது.
ஞானிகளை நம்பாதே!
-
நம்பினால் 100% முழுமையாக நம்புங்கள், நம்ப முடியாவிட்டால் ஞானிகளின் கூற்றுக்களை 100% முழுமையாக நம்பாதீர்கள்.
-
ஞானம் பற்றிய ஞானக் கூற்றுக்கள் அனைத்தும் முக்காலத்திலும் மாறாத சத்தியங்கள்.
-
ஒரு ஞானியின் கூற்றுக்களில் நீங்கள் சிலவற்றை மாத்திரம் நம்பும்போது ... 1. நீங்கள் உங்களுக்கு (அகங்காரத்திற்கு) பிடித்த விஷயங்களை மட்டும் ஒரு ஞானியிடம் இருந்து எடுத்துக்கொள்ளும்போது உங்கள் அகங்காரத்திற்குத் தீனியிடுகிறீர்கள்.
-
- காரணம், ஒரு ஞானி என்னதான் சத்தியத்தைக் கூறினாலும் அதை நீங்கள் உங்களின் மனத்தன்மையைப் பொறுத்தும், மன கண்ணோட்டத்தைப் பொருத்தும் அதை மனக்கருத்தாகத்தான் புரிந்து கொள்வீர்கள்.
-
- அரைகுறையாக ஒரு ஞானியின் கருத்தை நம்பும்போது உங்கள் மனக்குறைகள் உங்களுக்கு நிறைபோல தெரிய ஆரம்பிக்கும். அகங்காரம் உயிர் பெறும்.
-
- ஞானியின் கூற்றை முழுமையாக நம்பினால் மாத்திரமே, சத்தியம் சத்தியமாக உங்களை வந்து சேரும். இல்லையென்றால் சத்தியம் சாதாரண மனக்கருத்தாகவே உங்களுக்குள் நுழையும்.
-
- உங்களுக்குப் பிடித்தக் கருத்துக்களை மட்டும் பெற்று அகங்காரத்தை வளர்க்க ஞானிகள் தேவையில்லை. வீதியில் விற்கப்படும் சில தரம் கெட்ட புத்தகங்களே போதுமானது. தரம் குறைந்து பேசும் சில மேடைப் பேச்சாளர்களின் பேச்சுக்களே போதுமானது.
் 6. சத்தியத்தை முழுமையாக நம்பினால் மாத்திரமே அது உங்களுக்குள் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் நம்புங்கள்! நம்புங்கள்!! நம்புங்கள்!!! நம்பிக்கைதான் வாழ்க்கை! நம்பிக்கைதான் எல்லாம்!
- இல்லையெனில், நம்பாதீர்கள்! அரைகுறையாக நம்பி, அரைகுறையாகப் புரிந்து கொண்டு, 'அந்த ஞானி இப்படித்தான்
சொன்னார்... அவர் சொன்ன கருத்துக்களிலேயே இதுதான் சரி. எனக்கு பிடித்தது. அவர் ஞானிதான் ... அதுக்காக அவர் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? அந்த ஞானி அதன் மூலம் என்ன சொல்லவரார்னா ?' என்று வெட்டி வேதாந்தம் பேசி, உங்கள் ஞானியால்தான் இவர் இப்படி லூசு மாதிரி பேச ஆரம்பித்து விட்டார் என்று நினைத்து, ஒரு ஞானியை மற்றவர்கள் இழக்க நாம் காரணமாக இருந்துவிடக்கூடாது.
- ஞானத்தையும், ஞானிகளையும் தொடக்கத்தில் ஆராய்ச்சி செய்வதுதான். மகாதவறு. அதனால் பிரயோஜனம் ஏதுமில்லை.
- நம்பினால் 100% நம்புங்கள். வெட்டியாக பேச மாட்டீர்கள். வெற்றியை நோக்கி நடக்க ஆரம்பித்துவிடுவீர்கள்…
உங்களை மகானாக்கும் பட்டியல்
- குணமுதிர்ச்சியைப் பெறுவது சாதாரண மனிதன் ஞானமடைவதற்கான மிக முக்கியமான படிகளில் ஒன்று.
- கோபம் -பாசம் -
பயம் -
-
என்றழைக்கப்படும் உணர்ச்சிகளைச் சுயக்கட்டுப்பாட்டில் வைத்திருந்து, தானும் மற்றவரும் பாதிக்கப்படாதவாறு உணர்ச்சிகளைக் கையாளும் திறன்தான் குணமுதிர்ச்சி.
-
உணர்ச்சிகளைத் தாண்டி, தானும் மற்றவர்களும் பரவசைமடையுமாறு வாழச் செய்யும் குணமுதிர்ச்சியே ஞானம்.
-
உடலைத் தாண்டிய மனதையும், உணர்வையும் பிழைக்க வைக்க, தழைக்க வைக்க குணமுதிர்ச்சி பெற வேண்டும். அதற்காகத் தனியாய் உழைக்க வேண்டும்.
-
குணக் கோளாறுகளைத் தாண்டிய குணமுதிர்ச்சியைப் பெற ஒருவர் செய்ய வேண்டிய முதல் செயல், தானும் மற்றவர்களும் குணக்கோளாறால் எவ்வளவு பாதிக்கப் பட்டிருக்கிறோம் என்பதைப் பட்டியலிடுவதுதான்.
-
'பட்டியலிடுவதே' குணக்கோளாறுகளை மறையச் செய்து குணமுதிர்ச்சியை வளா்க்கும்.
-
உணர்வோடு பட்டியலிட்டுப் பாருங்கள். உங்களுக்கேப் புரியும்.
-
கிட்டத்தட்ட எல்லா மனிதர்களுமே சமுதாயத்தின் சில அம்சங்களில் வெறியாக இருப்பது, வேறு சிலவற்றை வெறுப்பது என்பது பரவலாகிப் போன பரிதாபம்.
-
பாசமும், பகையும்...சில நேரங்களில் வெறியாகவும், சில நேரங்களில் வெறுப்பாகவும், வெறுப்பாகவும் வெளிப்படுகிறது.
- அது மதம் மீதான வெறியாகவோ, காமம் மீதான வெறியாகவோ, போர், புகழ் போன்றவற்றின் மீதான வெறியாகவோ, வெறுப்பாகவோ இப்படி மனித மனம் வெறி அல்லது வெறுப்பைப் பற்றிக் கொண்டு மனிதனை படாதபாடுபட வைக்கிறது.
-
நீதி நெறிகளை தங்களுக்கு சாதகமாக்கி சிலவற்றை வெறுப்பதும் நீதி நெறிகளை தங்கள் மனவெறிக்காக மீறுவதும்- இரண்டுமே மனிதனை துன்பத்தில் மூழ்க வைத்து விடும்.
விழிப்புணர்வின்மையே நிதானமின்மை
-
கோபம், சீற்றம் என்பவை நிதானமின்மை இருப்பதற்கான வெளி அறிகுறிகள்.
-
தடுமாற்ற உணர்வு நிதானமின்மை இருப்பதற்கான உள் அறிகுறி.
-
கோபப்படும் போதும் சீற்றப்படும் போதும் தடுமாறும் போதும்… முழு உணர்வோடு இருப்பதுதான் விழிப்புணர்வோடு இருப்பது.
-
நம் எல்லோருடைய கோபமும் சிறு பிள்ளைத்தனமானது. இது மறுக்க முடியாத உண்மை.
-
கோபம் நம் வசம் இல்லை. கோபத்தின் வசத்தில்தான் நாம் இருக்கிறோம்.
-
வெளியில் ஏற்படும் சிறு மாற்றங்கள், உறவுகளின் சில தவறான நடவடிக்கைகள், எதிர்பார்த்தது, எதிர்பார்த்தபடி இல்லாமல்போவது எனச் சிறு சிறு விஷயங்களுக்குத்தான் கோபப்படுகிறோம்.
-
வெளியில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்கள்தான் நம்மைச் சீற்றமடைய வைக்கிறது! நிலைகுலைய வைக்கிறது! நிதானத்தையே கலைக்கிறது ! நிதானமின்மையை உருவாக்குகிறது ! எப்போதும், எந்தவொரு சூழ்நிலையிலும் நிதானமாக, முழுமையாக இருப்பதே ஞானம்.
-
தடுமாற்றுவது உலகின் இயல்பு! தடுமாறுவது மனதின் இயல்பு! தடுமாறாமல் இருப்பது ஆத்மாவின் இயல்பு!
-
எவ்வளவுக்கெவ்வளவு அவசரம் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு கோபமும், சீற்றமும் இருக்கும்.
-
கோபமும், சீற்றமும் இருக்கும் அளவைப் பொறுத்து நிதானம் பாதிக்கப்பட்டு நிதானமின்மை ஏற்படும்.
-
நில நடுக்கத்தைப்போல் ஒவ்வொரு கோபத்திலும் அக நடுக்கம் ஏற்படுகிறது! நாடி நரம்புகள் உலுக்கப்படுகின்றன! ஒவ்வொரு செல்லும் கொதிக்கிறது ! இதனால் யாருக்கென்ன பிரயோஜனம் ? கொஞ்சம் யோசியுங்கள்.
-
உங்களுக்குள் ஒளிந்திருக்கும் உங்களைக் கொஞ்சம் உற்றுப் பாருங்கள்.
-
தடுமாற்றங்கள் எவ்வளவு ? கோபங்கள் எவ்வளவு ? எரிச்சல் எவ்வளவு ? என்று புரியவரும்.
-
நம்முடைய நிதானம் எந்த அளவுக்குக் களங்கப்பட்டு நிதானமின்மையாக மாறியிருக்கிறது என்று தெரியவரும். தவறுகளைக் கண்டுபிடித்துவிட்டீர்களா ?
-
'ஆம்' என்றால் நிதானத்திற்கான முதல் படியை நீங்கள் எடுத்து வைத்து விட்டீர்கள்.
-
வெளி உலகில் வாழும் மனிதர்கள் தங்கள் உள் உலகத்திற்குள் செல்வதற்கான
'பாலத்தைக்' கண்டுபிடிப்பதுதான் - உள் உலக சாதனையின் முதல்படி.
- தன் தடுமாற்றங்களைக் கண்டுபிடிப்பது பாலத்தைக் கண்டுபிடிப்பதற்குச் சமம். தடுமாற்றத்தைத் தாண்டுங்கள், தடுமாற்றம் அற்ற நிதானம் உங்களுக்காக உங்களுக்குள்ளேயே காத்துக்கொண்டிருக்கிறது.
- தட்டுத் தடுமாறினாலும், பரவாயில்லை என்று தடுமாற்றத்திற்குள் தைரியமாக விழிப்புணர்வோடு நுழைந்து வெளியே வருவதுதான் தடுமாற்றத்தைத் தாண்டுவதற்கான எளிய வழி.
- விழிப்புணர்வு ஓர் சக்தி. தடுமாற்றத்தை தாண்டும் வல்லமையை அது நமக்குத் தரும்.
- நிதானமின்மைக்குள் புகுந்து நிதானம் நோக்கிய பயணத்தை இந்த நிமிடம் முதல் ஆரம்பியுங்கள்.
நிதானம் ஓர் தானம்
- நீங்கள் உங்களுக்குள் பெற்றிருக்கும் நிலையான சமாதான உணர்வே -நிதானம்.
- நிதானம் - நீங்கள் ஆரோக்கியமானவர் என்ற செய்தியை வெளியிடும் கொள்கைப் பரப்புச் செயலாளர்.
- நிதானம் - ஆன்மீகவாதியின் அடையாளச் சின்னம்.
- நிதானம் இருந்தால் உங்கள் இல்லத்தின் பிரதமர் நீங்கள்தான்.
- கோபத்தை நாம் பயன்படுத்தினால் - அது நிதானம்.
கோபம்
நம்மைப் பயன்படுத்தினால் - அது நிதானமின்மை.
- கோபத்தை வெறும் சக்தியாகத் தேவைப்படும் நேரத்தில் மட்டுமே பயன்படுத்துவதுதான் நிதானத்தின் முதல்படி.
- நிதானம்தான் நீ செய்யும் தானங்களிலேயே சிறந்த தானம். நிதானம் எல்லாச் குழ்நிலைகளையும் முழுமையாகக் கொண்டாட உதவச் செய்யும்.
- நம்முடைய நிதானத்தால் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு கிடைக்கும் நிம்மதி ! திருப்தி !
சந்தோஷம் !
ஆகியவை பல நூறு தானங்கள் செய்தாலும் அவர்களுக்குக் கிடைக்காது.
-
முதலில், எவ்வளவு சலனப்படுகிறீர்கள் என்பதையும், எவ்வளவு மனத்தடுமாற்றம் உங்களுக்குள் இருக்கிறது என்பதையும் கண்டுபிடியுங்கள். பாதிப்பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
-
இரண்டாவது, சலனப்படும் போதெல்லாம் விழிப்புணர்வோடு இருங்கள். எவ்வளவு சலனப்படுகிறீர்கள் ? எப்படிச் சலனப்படுகிறீர்கள் ? எதற்காகச் சலனப்படுகிறீர்கள் ? - என்று தெரிந்து கொண்டு முழு உணர்வோடு இருங்கள்.
-
இப்படியே தொடர்ந்து விழிப்புணர்வோடிருக்கும்போது உங்களுக்குள் ஒரு மாற்றம் நிகழும் - அதற்குப் பெயர்தான் நிதானம்.
ரிலாக்ஸ்... ரிலாக்ஸ் ... ரிலாக்ஸ் ...
- எண்ணங்களை உறிஞ்சி உறிஞ்சி உயிர் வாழும் மனம் தொடர்ந்து நிறம் மாறிக் கொண்டேயிருக்கும்.
- ஒரு பெண்ணையோ, ஆணையோ தொடர்ந்து நான்கைந்து பேர் 'நீ அழகு' என்று சொல்லிவிட்டால்போதும், தான் அழகென்ற எண்ணம் அவருக்குள் கா்வமாக மாறிவிடும்.
- அதே பெண்ணையோ இல்லை ஆணையோ 'நீ மோசம்' என்று தொடர்ந்து நான்கைந்து பேர் சொல்லி விட்டால் போதும், தான் மோசமென்ற எண்ணம் வருத்தமாக மாறிவிடும்.
மனித மனது உறுதியாக இல்லாததால்தான், மற்றவர்கள் புகுத்தும் எண்ணங்கள் மனிதனை குரங்காட்டம் ஆட வைக்கிறது. ரிலாக்ஸே இல்லாதவர்களாக மனிதர்களை மாற்றி விட்டது. உறுதித்தன்மையும், தெளிவும் மனதின் முதுகெலும்புகள்.
ஒரு முறை யோசியுங்கள் ... ஏன் வெளியே இருப்பவர்கள்தான் நம் மனதின் எலும்புகளான எண்ணங்களை நிர்ணயிக்க வேண்டுமா ? நாமே நிர்ணயிக்கக் கூடாதா ? பதில் - நிர்ணயிக்க முடியும் என்பதே!
- முதலில் உங்களை நீங்களே
ரிலாக்ஸாக அனுமதியுங்கள். களங்கப்பட்ட எண்ணங்களைக் கண்டுபிடியுங்கள்.
-
தவறான எண்ணங்களைத் தூக்கியெறிந்துவிட்டு நல்ல எண்ணங்களை முழுவிழிப்புணர்வோடு உங்கள் மனத்திற்குள் நுழையச் செய்யுங்கள். புது மனதை நீங்களே வடிவமையுங்கள். புது எண்ணங்களால்! இது சாத்தியமானதே.
-
நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு இளவரசன்! நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு இளவரசிதான்! என்பதை அனுபவபூர்வமாய் உணர்வீர்கள்.
உங்கள் வாழ்க்கைச் சக்கரத்தின் விட்டம் என்ன?
- அதிகபட்சமாக நமக்கெல்லாம் என்ன தெரியும் ? சில மனிதா்கள்... சில விஷயங்கள் ... சில இடங்கள் ... யார், யார் நமக்குத் தெரிந்தவர்கள் ? ஒரு பட்டியலிடலாம்.
- உங்களின் பெயர் மற்றும் உங்களை ஒருமுறை பார்த்து தெரிந்து வைத்திருப்பவர்கள் இரண்டாயிரம் போர்; உங்களின் பெயர், விலாசம், பெற்றோர் வரை தெரிந்து வைத்திருக்கும் நண்பர்கள்,
உறவினர்கள் ஆயிரம் பேர்; உங்களின் குணம், நடவடிக்கைகள் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பவர்கள் பத்து பேர்;
- மொத்தமாக உங்களோடு நேரிடையாக சம்பந்தப்பட்டவர்கள் 300-லிருந்து 350-க்குள் இருப்பதே பெரிய விஷயம்! எடுத்துப் பட்டியலிட்டுப் பார்த்தால் உண்மை புரியும்.
- இத்தனை கோடி மக்கள் இருந்தும், அதில் நமக்குத் தெரிந்திருப்பது சில மனிதர்கள் மட்டுமே.
- அந்தச் சிலரில் நம்மை உண்மையாகப் புரிந்து கொண்டவர்கள் யார் ? யார் ? என்று எண்ண ஆரம்பித்தால் ஐந்து
விரல்களைத் தாண்டுவது பலருக்குக் கடினம். நம் கதி இப்படியிருக்க - மற்றவர்களின் கதி எப்படி இருக்கும் ? ஒரு சிறு ஆய்வு செய்யலாமே! எவ்வளவு விஷயங்கள் நமக்குத் தெரியும் ?
- ஒவ்வொரு துறையிலும் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் இருக்க, பனிரெண்டாவதுவரை வருடத்திற்கு ஐந்தாறு புத்தகங்கள் படித்ததை தாண்டி, கல்லூரியில் ஒவ்வொரு வருடத்திற்கும் படித்த ஒரு சில புத்தகங்கள் மற்றும் அவ்வப்போது படித்த பத்திரிக்கைகள், கதைகள், டி.வி.யில் பார்த்த சில சம்பவங்கள் போன்ற செய்திகளைத் தாண்டி உண்மையில் நமக்கு என்ன தெரியும் ?
ஞானம் அடைவதற்கு முதல்படி ...
- சிரிப்பு உங்களுக்கு மருந்து மற்றவர்களுக்கு விருந்து.
- சிரிப்பில்லா முகத்திற்கும் செத்துப்போன முகத்திற்கும் வித்தியசங்கள் மிகக் குறைவு.
- சிரிப்பு - உடல், மனம், உயிர் என்ற மூன்றும் சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறி.
- சிரிப்பது, சிரிக்க வைப்பது என்பது எல்லோராலும் முடிந்துவிடக் கூடிய சாதாரண விஷயம் அல்ல.
- சிரிக்கத் தெரியாத சிலர், அது ஒன்றும் சீரியஸான விஷயம் இல்லை என்பார்கள் - இது தவறு.
- சிரிப்பை விட சீரியஸாக எடுத்து அனுபவிக்கப்பட வேண்டிய விஷயம் வேறு எதுவும் இல்லை.
- 'வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்' - இது வெறும் பழமொழி அல்ல. மருத்துவ குணம் கொண்ட 'தியான சூத்திரம்'. தொடர்ந்து இருபது நிமிடங்கள் சிரிப்பதே ஒரு தியான முறை.
வாய்விட்டுச் சிரிப்பது நமது அகங்காரத்தை உடைக்கிறது. அகங்காரம் பிடித்தவர்கள் பொதுவாக இறுக்கமாக இருப்பார்கள். சிரிக்கிற போது அகங்காரம் கரைந்து வெறுமையாகி விடுகிற சந்தா்ப்பம் அவர்களுக்குக் கிடைக்கிறது. அந்த வெறுமைதான் ஞானத்தை அடைவதற்கு முதல்படி.
கோபத்தை அடக்காதீர்கள்
- எவ்வளவு தேவையோ அதைவிடக் குறைந்த அளவே கோபப்படுங்கள்.
- கோபப்படுங்கள் என்று நான் உங்களிடம் சொல்வது கண்டு ஆச்சரியப்படாதீர்கள். கோபம் ஒரு மன உணர்வு. உலக வாழ்க்கையில் அதற்கு ஒரு அர்த்தமும், தேவையும் இருக்கிறது. ஆனால், அளவுக்கு மீறினால் அதுதான் உங்களுக்கு எமனாகவும் இருக்கும்.
- கோபத்தை அடக்கி வைக்கும்போது, அது நம் மனதுக்குள் கிடந்து குமுறுகிறது. வெளிவர முடியாத கோபம் நம் உடலுக்குள் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
அடிக்கடி கோபப்பட்டு, அதை வெளிக்காட்ட முடியாமல் மனசுக்குள் போட்டு அழுத்தி விடுகிறவர்களுக்குதான் ரத்த அழுத்தம் வருகிறது ; மாரடைப்பு வருகிறது ; நினைத்துப் பார்க்க முடியாத விளைவுகள் எல்லாம் ஏற்படுகிறது. அதேபோல், அளவுக்கு மீறி கோபப்படும்போது பாதகமான விளைவுகளே ஏற்படுகின்றன.
கோபம் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள குதிரையாக இருந்தால் நீங்கள் தாரளமாக ஊர் போய்ச் சேரலாம். இல்லாவிட்டால் கட்டுக் கடங்காத குதிரை உங்களைக் கீழே தள்ளி விடும்.
- அளவுக்கு மீறிய கோபம்தான் சாபமாக மாறும். சாபத்திலிருந்து தப்பித்துக்கொள்ள அதிகக் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.
- கோபத்தை நீங்கள் தேவைப்படும்போது பயன்படுத்துங்கள். சக்தியைச் சேமியுங்கள். முக்தி நோக்கி நகர ஆரம்பிப்பீர்கள்.
ஒப்பீடற்றவரே!
-
வெறுமனே ஒப்பிடுவது வாழ்க்கைக்கு உப்பிடாது.
-
மற்றவர்களோடு தன்னை ஒப்பிட்டு நொந்துபோவது - தாழ்வு மனப்பான்மை. ஒப்பிட்டுக் கர்வப்படுவது - உயர்வு மனப்பான்மை.
-
மற்றவர்களோடு தினம், தினம் தன்னை, ஒப்பிட்டு, ஒப்பிட்டு... மனதைச் சிறுமையின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றால் அது பொறாமையாகவும், வெறுமையின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றால் அது ஆதிக்க குணமாகவும் மாறும்.
-
ஒப்பீடற்றவரே! மற்றவர்களோடு ஒப்பிட்டு, ஒப்பிட்டு நொந்து போவதும்… ஒப்பிட்டு ஒப்பிட்டு ஊக்கப்படுத்துவதும் ... உங்கள் கையில் !
-
நாம் பிறந்ததற்கான நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் 'தவிப்புத்' தான்... ஒப்பிடுதல் ! பொறாமை ! போன்ற எதிர்மறை உணர்வுகளை உருவாக்குகிறது.
-
நாம் எப்படியிருந்தாலும் சரி, நாம் நாமாயிருத்தல் வேண்டும்.
Part 3: Lines of Wisdom Which Makes You Beautiful - Part 2_Tamil_part_3.md
- பிரபஞ்சம் என்னும் பூங்காவின் தனித்துவம் வாய்ந்த மலர் நீங்கள். உங்களுக்கு இணை நீங்களே!
- உங்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித்துவத்தை வெளிக்கொண்டு வர முயற்சியுங்கள்... ஒப்பீடற்றவர்களாகுங்கள்!
நிம்மதி தரும் தெய்வஸ்தலங்கள்
- கோயில்களுக்குள் சென்று கொஞ்ச நேரம் அமா்ந்து விட்டு திரும்பும்போது ... ஒருவித அமைதி நம்முள் பிறக்கிறதே அது எதனால் ? இயற்கையான சூழலில் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்து வீடு திரும்பும்போது ... ஒருவித அமைதி நம்முள் இருக்கிறதே அது எதனால் ? காரணம் 'சக்தியூட்டம்' தான்.
- இயற்கைச் சூழலில் இயற்கையாகவே இன்னும் களங்கப்படுத்தப்படாத சக்தி எப்போதும் இருந்துக் கொண்டே இருக்கும். பேட்டரி சார்ஜ் செய்வதுபோல் நமது உடலும், மனதும் இயற்கையால் சக்தியூட்டப்படுவதால்தான் உடலுக்கு
புத்துணர்வும், மனதிற்கு அமைதியும் கிடைக்கிறது.
- கோயில்களுக்கு, சார்ச்சுகளுக்கு, மசூதிகளுக்கு ஒருவர் சென்று முழுழு பக்தி நிலையில், - வேண்டிக் கொள்ளும்போது அவரை அறியாமலேயே திறந்த மனதோடு தெய்வ சந்நிதி முன் நிற்கிறார். (முழு பக்தி = தியானம்)
- ஒவ்வொரு இறை சந்நிதியும் உலகின் சிறு, சிறு சக்தி நிலையங்கள். (Energy stations) மனம் திறந்திருந்தால், அதாவது திறந்த மனதோடு இருந்தால் இயற்கை விதிப்படி, சக்தி குறைவாக இருக்கும் நம்முள் தேவையான அளவு சக்தி வந்து நிரம்பி விடும். இதனால்தான் கோயிலுக்குச் செல்வது பலருக்கு மன நிறைவைத் தருகிறது.
சத்திமையங்கள்
- நீங்கள் நினைக்கிறபடி ... நீங்கள் உடல் அல்ல. நீங்கள் மனமும் அல்ல. பின் நீங்கள் யார் ? இந்த கேள்விதரும் ஆராய்ச்சி உணர்வோடு தொடருங்கள்.
-
- உச்சந்தலை 2. புருவ மத்தி 3. தொண்டைக் குழி 4. மார்பு மத்தி 5. நாபிக்கு மேல் 6. நாபிக்கு கீழ் 7. முதுகெலும்பு நுனி இந்த ஏழுமே ஆத்மாவை அடைய உதவும் நுழைவாயில்கள்.
-
- இந்த ஏழு இடங்களைச் சம்பந்தப்படுத்திதான் எல்லாத் தியான முறைகளும், வேதங்களும், சடங்குகளும் உருவாக்கப்படுகின்றன. இந்த இடங்கள், சக்கரங்கள் அல்லது சக்தி மையங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
- இந்த சக்தி மையங்களில்தான் உடல்,
மனம்,
உயிர்
ஆகிய மூன்றும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதபடி கலந்திருக்கின்றன.
- பார்க்க முடிந்த ஆத்மா உடல். பார்க்க முடியாத உடல் ஆத்மா.
காரணம், உடலும் ஆத்மாவும் தனித்தனியானவை அல்ல.
- மனம் என்ற இடைச்செருகலே உடலை, ஆத்மாவை பிரித்துக் காட்டுகிறது.
- ஆத்மாவைப் போர்த்தி இருக்கும் மனம் விலக உடலும் ஆத்மாவும் சங்கமித்துக்கொள்ளும்.
கடவுள்தான் எல்லாம்
- கடவுளுக்கு உருவம் உண்டு.
- கடவுளுக்கு உருவம் இல்லை.
- உருவம், அருவம் இரண்டுமே கடவுள்தான்.
- உருவம், அருவம் இரண்டிற்கும் அப்பாற்பட்டது கடவுள்.
- கடவுள் என்பது மனிதன் உருவாக்கியக் கருத்து.
- கடவுள் என்ற ஒன்று பிரபஞ்சத்தில் இல்லவே இல்லை.
- கடவுள் தவிர வேறு எதுவும் பிரபஞ்சத்தில் இல்லை.
'கடவுள் தான் எல்லாம்' என்ற ஒரு உண்மையின் பல முகங்கள்தான் மேற்கூறிய 7+1 கூற்றுகள்.
- இந்த 8 கூற்றுகளில் ஏதாவது ஒன்றைப் பிடித்துக் கொண்டு தொங்குவது, அதைப் பற்றிக் கற்பனை செய்து விவாதித்துக் கொண்டே இருப்பதுதான் மனதின் இயல்பு. மனித சுவாபம்.
- கடவுளைப் பற்றி விவாதிப்பதைவிட, உங்கள் மனதை கடந்து உங்கள் உள்ளேயிருப்பதை (கடவுளை) அடைவது மாத்திரமே பயனைத் தரும். விவாதிப்பதால் நேரம் வீணாகும். பலன் இல்லை.
- கடவுள் என்பது கடந்து உள் இருந்து அனுபவிக்க வேண்டிய ஆனந்த ரசம்! ஆனந்த நிலை!! ஆனந்தம்!!!
- கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்க நாம் முயற்சி செய்தால் ! ஒருவேளை நிரூபித்து விட்டால்!!!
- அந்த விஷயம் கடவுளை விடப் பெரிதாகி விடும். கடவுள் நிரூபிக்கப்படும் அளவுக்கு தாழ்ந்த ஒன்றல்ல. சாதாரண விஷயமல்ல.
- பகுத்தறிவினால் நிரூபிக்கப்பட முடியாமல் இருப்பதுதான், 'சாதாரண மனிதனின் அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்று கடவுள்' என்பதற்கான நிரூபணம்.
போலித் திருப்தி தன்மை என்றால் என்ன?
- திருப்தி இரண்டு வகை. ஒன்று - போலித் திருப்தி. இரண்டு - ஆழ்ந்த திருப்தி.
- உணவு, உறக்கம், காமம், கிளர்ச்சி அல்லது விளையாட்டு என்ற இந்த நான்கு விஷயங்களிலேயே ஐந்தறிவு ஜீவிகள் திருப்தி காண முயற்சிக்கும். இதைத் தாண்டி ஒரு படி கூட எடுத்து வைக்க முடியாது.
- காரணம் முழுமையாக யோசிக்கும் மனித மனம் அவற்றிடம் இல்லை. மனம் இருந்தும் மனிதன் உணவு, உறக்கம், காமம், அந்தஸ்து தேடுவதில் சுகம் கண்டு ''நான் திருப்தியாகத் தான் இருக்கிறேன்' என்று சொன்னால் அதுதான் போலித் திருப்தி.
- அன்பு, நிம்மதி, ஆனந்தம் இவற்றை அடைய முயற்சி செய்து அடைந்த பின் கிடைப்பதுதான் ஆழ்ந்தத் திருப்தி.
- போலித் திருப்தி அதிருப்தியைவிட மிக மோசமானது !
- "நான் நிம்மதியாக இருக்கிறேன்'' என்ற கற்பனை எண்ணமும், ''நான் திருப்தியாக இல்லை'' என்ற உணர்வும் கலந்து வெளிப்படும்போது அது போலித் திருப்தியாக மாறி விடுகிறது.
- உலக விஷயங்களில் திருப்தியே இல்லாமல் அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று செய்துகொண்டே இருப்பது நம்மிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியைக் கூடக் கெடுத்துவிடும்.
வாழ்வில் திருப்தியே அடையாதவர்கள் பைத்தியமாகக்கூட அலைய நேரிடலாம்.
-
உண்மையை உணர்வதில் - திருப்தி ! பெருந்தன்மையாக நடந்து கொள்வதில் - திருப்தி ! கருணைக் காட்டுவதில் - திருப்தி மற்றவர்களுக்குக் கற்றுத் தருவதில் - திருப்தி ! - என திருப்தி வாழ்க்கைத் திடலில் கொட்டிக்கிடக்கிறது.
-
ஆழ்ந்த திருப்தி உங்களுக்குள் மலரும்வரை 'போதும்' என்ற உணர்வு மலராது.
-
போலித் திருப்தி உங்களைத் தொற்றிக் கொண்டிருக்கும் வரை 'இதுக்கு மேலே என்ன இருக்கும் ?' என்ற மந்த எண்ணம் எழுந்து கொண்டே இருக்கும்.
-
போலித் திருப்தியை ஒழிக்க மிகச் சரியான வழி வாழ்வின் ஒவ்வொரு - நிகழ்விலும் திருப்தியைக் காண்பதுதான்.
-
ஆழ்ந்த திருப்தியைப் பெறுவதற்குத் தொடர்ந்து உங்கள் புத்திசாலித்தனத்தை உபயோகப்படுத்திக் கொண்டே இருங்கள்.
-
போலித் திருப்தியிலிருந்து உதறி எழுந்து திருப்தியை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பியுங்கள்.
மனப் பட்டிமன்றம்
- 'அவர் சொன்னார், இவர் சொன்னார்' என்று பலவிதமான விஷயங்களை நாம் நம் மனதில் போட்டு அடைத்து வைத்திருக்கிறோம்.
- மதங்களின் பெயரால், இயக்கங்களின் பெயரால் பொழுதுபோக்கு அம்சங்கள் வழியாக நீங்கள் தெரிந்து வைத்திருக்கிற விஷயங்களைத் தவிர்த்து வேறெதுவும் நீங்கள் பேச முடியாது.
- இவற்றைப் பொறுத்துதான் உங்கள் Inner chattering' (மன உளறல்) அமையும்.
- வெட்டிப் பேச்சு -வெட்டி எண்ணங்கள் உங்கள் மனதை வெட்டிக்
கொண்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரம்.
- தனிமையில் நீங்கள் யாருடனும் பேசாத வேளையில் உங்களுக்கு நீங்களே பேச ஆரம்பிக்கிறீர்கள்.
- தூங்கிய பிறகு கனவில் பேச ஆரம்பிக்கிறீர்கள்.
- இப்படி இருபத்து நான்கு மணி நேரமும் நீங்கள் பேசிக்கொண்டே இருப்பதால்தான் உங்களால் நிம்மதியாக இருக்க முடிவதில்லை.
- ஒட்டமாய் ஓடும் மனக்குதிரையையும், ஓயாமல் நடக்கும் மனத்தின் பட்டி மன்றத்தையும், ஒருவழிக்கு கொண்டு வராத வரை, 'நிம்மதி', 'ஆனந்தம்', 'நோயற்ற வாழ்வு' என்ற பேச்சுக்கே இடமில்லை.
தப்பின் கதை
- 'தப்பு' என்பது சுட்டிக் காட்டுவது ...
- ஒருவன் தன்னை மனதளவிலோ, உடலளவிலோ புண்படுத்திக் கொள்வதிலிருந்து தவிர்க்க, சமுதாயத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வார்த்தை, அவ்வளவே.
- 'தவறு' என்பது ...
- ஒரு மனிதன் தன்னைக் கட்டுக்கடங்கா புலன் ஈர்ப்பிலிருந்து காத்துக் கொள்ள பெரியவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு உணர்வு.
- ஒரு பாதுகாப்பம்சம் மட்டுமே.
- ஆனால் இன்று ... 'தப்பு' துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.
'தப்பு' என்ற சொல்லை, தங்கள் தவறுகளை மறைப்பதற்காக, மற்றவர்களின் கண்களை மூட வைக்கும் மிளகாய் தூள்போல் பலர் அவ்வப்போது பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
'தவறு' செய்யும்போது அல்லது 'தவறு செய்கிறோம் என்ற உணர்வு வரும்போது, தவறுக்குப் பயப்படுவதைவிட, மற்றவர்கள் தவறாகப் பேசிவிடுவார்களே!' என்று பயப்படும் கூட்டம்தான் அதிகம்.
நாம் தவறு என்று சொல்வது நம்மை பொறுத்தவரையில் மட்டுமே சரி. மற்றவருக்கு அதே தவறு 100% சரியாக இருக்கலாம்.
-
ஏனென்றால் ... ஒவ்வொரு இடத்திற்கும், ஒவ்வொரு மனிதா்க்கும், ஒவ்வொரு மதத்திற்கும், ஒவ்வொரு ஜாதிக்கும், 'தவறு' என்பது வேறுபடுகிறது.
-
நாம் மற்றவர்களிடம் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதே, கிட்டத்தட்ட தவறுதான்.
-
விஷயம் இப்படியிருக்க ... உறவினர்களும் இன்றைய சமுதாயமும்
எதைத் தவறு என்று சுட்டிக் காட்டுகிறதோ, அதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு, அதை அச்சாணியாகக் கொண்டு செயல்படுவது மிகப் பெரிய தவறு.
மனதைக் குத்திக் கிழிக்காதீர்கள் ...
-
இது தப்பு, அது தப்பு, என்று சுட்டிக்காட்டி மற்றவர்களிடம், 'தவறு செய்கிறோம்' என்ற உணர்வை உருவாக்க உதவும். 'தப்பு' என்ற வார்த்தை ஒரு வீச்சரிவாளுக்குச் சமம். வீச்சரிவாளை பயன்படுத்த அதை ... எப்போது ? எங்கே ? எதை ? வெட்டுவதற்காகப் பயன்படுத்த வேண்டும் ? என்ற தெளிவு வேண்டும்.
-
புத்தி தெளிவில்லாத பட்சத்தில் ... தன் சுய விருப்பு, வெறுப்புகளுக்காகவும் தடுமாறும் எரிச்சல் மனத்திற்காகவும் பல தலைகள் உருளும்.
-
மற்றவரின் தப்புத்தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கு, வாழ்க்கை பற்றிய அனுபவ ரகசியங்களும் மனித மன, குண உணர்ச்சிக் கொந்தளிப்புகள் பற்றிய உண்மை நிலவரமும் தெரிந்திருக்க வேண்டும்.
-
இவற்றைத் தெரிந்து கொள்ளாமல் நம்மிடம் பல தவறுகளை வைத்துக்கொண்டு மற்றவரின் தவறைத் திருத்த முயற்சித்தால் ... கூரிய வீச்சரிவாளால் குத்திக் குத்தி ரணகளமாக்கப்பட்ட ஒரு புண்பட்ட மனத்தைத் தான் நம்மால் மற்றவர்களிடம் ஏற்படுத்த முடியும்.
-
தேவையில்லாத மன, குணப் பிரச்சினைகளை நீக்கி ஒரு பண்பட்ட மனத்தை உருவாக்க முடியாது. புண்பட்ட மனத்தைதான் உருவாக்குவோம்.
-
மற்றவர்களின் மனத்தைக் குத்திக் குத்தி ரணகளப்படுத்தும் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.
-
ஈருடல் ஓருயிராக இருந்து மனம் ஒருமித்து வாழ வேண்டிய கணவன், மனைவி...
-
வாழ்க்கைத் துணையின் தவறுகளைத் தொடர்ந்து சுட்டிக் காண்பிப்பது அல்லது அவரின் தப்புத் தவறுகளை நினைத்து, நினைத்து தன்னைத்தானே புண்படுத்திக்கொள்வது ...
-
என்ற இந்த இரண்டு காரியங்களை மட்டும்தான் வாழ்நாள் முழுவதும் பல தம்பதியினா் செய்து கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் வருந்தத்தக்க விஷயம்தான்.
ஏன் மனமொடிகிறோம் ?
- மற்றவரின் சூழ்ச்சி நமக்குப் புரியாததால்தான், மற்றவர்கள் நம்மைக் குறை சொல்லும்போது நாம் மனம் ஒடிந்து போய்விடுகிறோம்.
- மற்றவர்களை நாம் குற்றப்படுத்தும்போது நம்முடைய குரூர உணர்வு திருப்தி அடைந்து, அது இன்னும் கொஞ்சம் வளர ஆரம்பித்து விடுகிறது.
- அது தப்பு இது தப்பு என்று மற்றவரிடம் குற்றஉணர்ச்சியைத் தூண்டி தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைப்பதுதான் உண்மையான தவறு.
இன்றிலிருந்து, மற்றவர்களின் தவறை சரிசெய்ய நேரத்தை வீணடிக்காமல், உங்கள் தவறுகளை மட்டும் கண்டுபிடித்து அதை சரிசெய்ய நேரத்தைப் பயன்படுத்துங்கள்.
- உங்கள் மீதே உங்களுக்கு மதிப்பு கூடும். உங்கள் மீது மற்றவர்க்கும் மதிப்பு கூடும்.
நேசம்-வேஷம்
நேசி'
- நேசம் புதிரானது.
- நேசம் என்பது பலர் எதிர்பார்த்தும் கிடைக்காத ஒன்று !
- பலர் மற்றவருக்குக் கொடுக்க முயற்சித்தும் கொடுக்க முடியாத ஒன்று! என்ன! குழப்பமாக இருக்கிறதா?
- நேசத்தைப் பற்றிப் பலர் பேசியிருந்தாலும் அதில் முக்கியமான சிலரின் கூற்றைத் தெரிந்து கொண்டால் உங்கள் குழப்பம் தீர்ந்துவிடும். புத்தா் - 'உன்னை நேசி' இயேசு - 'உன்னை நேசிப்பது போல் பிறரையும்
ரிஷி கூற்று - 'உன்னை நேசிக்காமல் பிறரை நேசிக்கவே முடியாது' இன்று மூன்று பேரின் கூற்றையும் தெரிந்து கொண்ட பிறகு கீழ்க்கண்ட உண்மைகளைப் புரிந்துகொள்வது வெகு சுலபம்.
-
'பிறரை நேசிக்கும் அளவுக்குத்தான் நீங்கள் உங்களை நேசிக்க முடியும். உங்களை நேசிக்கும் அளவுதான் பிறரை நீங்கள் நேசிக்கும் அளவு.
-
வேஷம் அல்லது உள்வெறுப்பு கலந்த நேசமாக உங்கள் நேசம் இருந்தால் ... அது பிறரைத் தீண்டுவதைவிட முதலில் உங்களைத்தான் அதிகம் தீண்டும்'.
-
நேசத்தின் வேஷம் கலையுங்கள்... நேசத்தின் தோஷமும் ( மனிதாபமின்மை ) நேசத்தின் தோஷமும் (ஆரோக்கியமின்மை ) உயிர்வாசத்தின் தோஷமும் (ஆனந்தமின்மை) நொடியில் பறந்தோடும். புது வழி பிறக்கும்.
பஞ்சு மனம்
-
தவறான மனிதர்கள் உருவாவதற்குத் தவறான வளர்ப்புமுறை காரணமா? என்று சிலர் என்னிடம் கேட்பார்கள்.
-
வளர்ப்பு முறையில்தான் எப்போதும் தவறு இருக்கிறது என்று சொல்ல முடியாது. வளர்ப்பவரின் முதிர்ச்சியில்தான் எப்போதும் தவறு இருக்கிறது.
-
குழந்தையைக் கண்டிக்க -குழந்தையின் மனோநிலை பற்றிய ஞானமும், வாழ்க்கையின் போக்கு பற்றிய ஞானமும் வேண்டும். குழந்தைக்குச் செல்லம் கொடுக்கவும் மேற்கூறிய இரண்டும் தேவை.
-
குழந்தைகள் மூளையிலிருந்து செயல்படுவதில்லை. குழந்தைகள் இதயத்தில் இருந்து செயல்படுகிறார்கள்.
-
உங்களது வார்த்தைகளையும், எதிர்பாா்ப்புகளையும் குழந்தைகள் அதிகம் கவனிப்பதில்லை. ஏனென்றால் அவை மூளை சம்பந்தப்பட்ட விஷயங்கள். உங்களது முகபாவங்களையும், உணர்ச்சிகளையும்தான் குழந்தைகள் முழுமையாக கிரகிக்கின்றன. ஏனென்றால் அவை இரண்டும் இதயம் சம்பந்தப்பட்டவை.
-
உங்களுடைய 'முகமூடி' 'அழுத்தப்பட்ட உணர்வுகள்'
'வெறுப்புகள்' 'துக்கங்கள்' - ஆகியவை உங்களின் முகபாவங்கள் மூலமும் வெளிப்படும். அப்படியே அவை குழந்தைக்குச் சென்றுவிடும்.
- காரணம் குழந்தையின் மனம் பஞ்சு போன்று நீங்கள் கொடுக்கும் நிறத்தை அப்படியே கிரகித்துவிடுவதுதான்.
- இது சூட்சுமமான உண்மை.
- அடிக்கடி சண்டையிட்டுக்கொள்ளும் பெற்றோர்களைத் தினமும் பார்த்து வளரும் குழந்தையின் ஆழ் மனதில், சண்டை என்பது வாழ்க்கையின் ஒரு அம்சம், ஒரு தன்மை என்று பதிந்துவிடும். பிஞ்சு மனதில் கலவரம் என்ற விதை விதைக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில் கோபக்காரர்களாகவும், கலவரக்காரர்களாகவும் எளிதில் மாறி விடுவார்கள்.
- 'சண்டைச் சச்சரவு' இல்லாமல் 'அன்போடும்' 'பரிவோடும்' 'ஒருவருக்கொருவர் ஆதரவாக' இருக்கும் பெற்றோர்களைத் தினமும் பார்த்து வளரும் குழந்தையின் மனதில் அன்பு, விட்டுக் கொடுத்தல், உதவி செய்தல் என்பது வாழ்க்கையின் ஒரு அம்சம், ஒரு தன்மை என்று பதிந்துவிடும்.
- இதுபோல் அன்பும், பண்பும் விதைக்கப்பட்ட பிஞ்சு மனதிற்குக் கலவரம், கோபம், சண்டை, அடுத்தவர்களைத் துன்புறுத்தல் என்பது எல்லாம் நஞ்சாகத் தெரியும்.
ூகள்ளம் கபடம் இல்லாமல் உங்களை முழுமையாக நம்பும் குழந்தைகளுக்கு அமிர்தத்தைக் கொடுக்க முயற்சி செய்யுங்கள். உங்களின் மன முதிர்ச்சியே அந்த அமிர்தம்.
- உங்கள் குழந்தைகளுக்கு ... பணம் சேர்த்து வைப்பதோடு, பண்பை அதிகம் சேகரியுங்கள். புகழ் சேர்த்து வைப்பதோடு, தெளிவை அதிகம் சேகரியுங்கள்.
- குழந்தை வளர்ப்பு முறையைக் கற்றுக்கொள்வதைவிட, உங்களை வளர்க்கும் முறைகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.
கோயில்கள்
- விக்ரக வழிபாட்டை உற்சாகப்படுத்தாத புத்தர்கூட கோயில்கள் என்ற அமைப்பை பெரிதும் ஆதரித்திருக்கிறார்.
- மதம் எதுவானாலும், தெய்வம் எதுவானாலும் கோயில்கள் எல்லோருக்கும் பொதுவானது.
- மனிதனின் சக்தித் தேவையை பெருமளவில் பூர்த்தி செய்யும் சக்திச் சிகிச்சையளிக்கும் மையங்கள், கோயில்கள்.
- கோயில்கள், ஆலயம், மசூதி என்ற பெயரில் எல்லா மதங்களும் கோயில் தத்துவத்தை வரவேற்கின்றன.
கோயிலின் தத்துவம்:
- குணமளிக்கும் சக்திகளைத் தொடர்ந்து வெளியிடும் புனிதக் கட்டிடங்களுக்குப் பெயர் கோயில்கள், கோயில்கள் தெய்வ சக்தியான ஆனந்த சக்தியூட்டும் மருத்துவமனைகள்.
உங்கள் உடல் ஒரு கோயிலா?
- காளையால் இழுக்க முடியாத அளவுக்கு அதிக சுமையை வைத்து, 'இழு!' என ஏவும்போது அது தடுமாறினால் அது தவறு செய்வதாக பொருள்படுமா ?
- உடலில் தகுதிக்கும் தேவைக்கும் அதிகமான அளவு உணவை உள்ளே தள்ளிவிட்டு ...
- 'எனக்கு ஜீரணக்கோளாறு' என உடல் மேல் பழிபோட்டால் என்ன அர்த்தம்! ? யார் பொறுப்பு ... சொல்லுங்கள்.
- 'You are Food' என ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார்.
- 'Your eating habit tells, who you are' எனச் சொல்கிறது.
- 'உணவுக்கும் மனித குணத்துக்கும் நேரடித் தொடர்புண்டு. நாவைக் கட்டுப்படுத்தியவன், தவ குணத்தையும் கட்டுப்படுத்தியவன்' எனச் சொல்கிறது வேதாந்தம்.
உண்ணும்போது சாந்தமாய் நிதானமாய் உண்ணமுடிகிறதா... ? 'போதும்' என்ற உணர்வு வந்ததும், காரை பிரேக் போட்டு நிறுத்துவது போல உண்ணுவதை நிறுத்த முடிகிறதா ... நாவிற்கு மட்டும் மதிப்பளிக்காமல் 'என் உடலுக்கு இந்த உணவு, இவ்வளவு உணவு பொருந்துமா?' என உடலை மதித்து உணவருந்துகிறீர்களா...
- உடல் கோயில், உணவு பிரசாதம். நீங்கள்தான் அர்ச்சகர். உங்களின் இரப்பை என்னும் கற்பகிரகத்திற்குச் செல்லும் பிரசாதங்கள், பிரசாதங்கள்தானா ... ஒரு நாளின் மூன்று வேளையும் பூஜை புனிதமாக நடைபெறுகிறதா... ?
- கோயிலுக்குள் அராஜகமோ, துஷ்பிரயோகமோ கூடாது. கோயிலின் புனிதம் காக்கப்பட்டால், அங்கு தெய்வ சக்தி விழித்துக் கொள்ளும். எல்லாம் சுலபமாகும்.
ஆரோக்கியமான மனிதன்
-
மக்கள் தெய்வமாக, வீடு மாளிகையாக உலகம் சொர்க்கமாக - நீங்கள் உணர்ந்தால், நீங்கள் ஆரோக்கியமான மனிதர்.
-
ஆரோக்கியமாக இருப்பவர்கள் ஆனந்தமாக இருப்பார்கள்.
-
ஆனந்தமாக இருப்பவர்கள் நிச்சயம் ஆரோக்கியத்தோடு இருந்தே ஆகவேண்டும். வேறு வழியே இல்லை - இது 'ஆனந்த சூத்திரம்'.
-
உடல் பிரச்சினை நோய். மனப் பிரச்சினை - வேதனை. உணர்வுப் பிரச்சினை - ஆரோக்கியக் குறைவு.
-
ஆரோக்கியம் குறைய ஆரம்பித்ததிலிருந்தே நோய் உருவாக ஆரம்பிக்கின்றது. நோய் திடீரென்று தோன்றுவது இல்லை. தோன்றவும் முடியாது.
-
ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து பின் வேதனை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து - எதிர்பாராத தருணத்தில் அது நோயாக வெடிக்கிறது.
-
நோய் என்பது பல நாட்களாக இருக்கும் ஆரோக்கியக் கேட்டின் வெளிப்பாடு.
-
உங்கள் உற்சாகம், சந்தோஷம் குறைய ஆரம்பிக்கும்போதே, உங்களின் ஆரோக்கியத்தை இழக்க ஆரம்பிக்கிறீர்கள்.
-
மனதளவில் புண்பட்டு இருப்பவர்களே அடுத்தவர்களின் மனதைப் புண் படுத்துவார்கள்
-
உங்களுடைய அணுகுமுறை ஆரோக்கியமாக இருந்தால் போதும். ஆரோக்கியமான உறவுகள் தானாகக் கிடைக்கும்.
எங்கே இருக்கிறது அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும்?
- பொதுப்படையாக சொல்ல வேண்டுமானால் - அதிர்ஷ்டம், துரதிர்ஷம் இரண்டுமே அதனதன் இஷ்டப்படி வாழ்வில் வந்து போகும் விஷயங்கள்.
- வாழ்வை எதிர்கொள்ளும் தைரியமும், பக்குவமும் இருந்தால் மாத்திரமே அதிர்ஷ்டத்தை அனுபவிக்க முடியும், துரதிர்ஷ்டத்தை ஜீரணிக்க முடியும்.
- கூர்ந்து ஆராய்ந்தால் ஒரு உண்மை புரியவரும். 'அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் என்ற இரண்டு தனிப்பட்ட நிலைகள் இல்லவே இல்லை' என்று தெரிய வரும்.
சுலபமாக...
கை நோகாமல் ... அதிகம் உழைக்காமல் ... நல்ல பலனைக் கொடுத்த வாழ்க்கை அம்சங்களை நாம் 'அதிர்ஷ்டம்' என்று கூறி சந்தோஷப்படுகிறோம்.
கைநோக...
உடல் நோக உழைத்தும் ... எதிர்பார்த்த பலனைத் தராத வாழ்க்கை அம்சங்களுக்கு நாம் 'துரதிர்ஷ்டம்' என்று கூறித் துக்கப்படுகிறோம்.
துரதிர்ஷ்டம், அதிர்ஷ்டம் என்ற இரண்டு வாழ்க்கை அம்சங்களுமே நமக்குக் கிடைக்கும் பலனின் அளவைப் பொறுத்து நாமே நிர்ணயிப்பவை.
- துக்க சந்தோஷ மனநிலைகளைப் பொறுத்து ... அதிர்ஷ்டம் கூடத் துரதிர்ஷ்டமாகத் தெரியலாம்.
துரதிர்ஷ்டம் கூட அதிர்ஷ்டமாகத் தெரியலாம்.
- உங்களுக்கு கிடைக்கும் பலன்களும், உங்களின் மனநிலையும் சேர்ந்துதான் அதிர்ஷ்டத்தை அல்லது துரதிர்ஷ்டத்தை உருவாக்குகின்றன.
- வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்தத் துடிப்பவனுக்கு, - நீங்கள் கற்பனை செய்யும், 'அதிர்ஷ்டங்கள் பல'வாழ்வில் காத்துக்கொண்டு இருக்கின்றன.
- நேரத்தை சரியாகப் பயன்படுத்தாமல் மந்தமாக நேரத்தை விணடிப்பவனுக்கு, - நீங்கள் கற்பித்துக் கொள்ளும் 'துரதிர்ஷ்டங்கள் பல' காத்துக் கொண்டிருக்கின்றன.
- அதிர்ஷ்டம் சோம்பேறிகளின் கனவு ! துரதிர்ஷ்டம் பயந்தாங்கொள்ளிகளின் பீதி!
- சுறுசுறுப்பான தைரியசாலிக்கு இரண்டுமே ஒன்று! இரண்டின் மூலமும் வாழ்வில் முதிர்ந்துகொண்டே இருப்பார்கள்.
தைரியசாலி அதிர்ஷ்டசாலி!
- பயம் என்ற ஒரு மனப்புண்தான் துரதிர்ஷ்டம் என்ற வாழ்க்கையின் சாதாரண அம்சத்தைப் பெரிதுபடுத்திக் காண்பிக்கும்.
- பயத்தை விட்டொழித்து விட்டு தைரியமாக வாழ்க்கையை அணுக ஆரம்பித்தால் துரதிர்ஷ்டம் பயமுறுத்தாது. 'எனக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லையே! எனக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்குமா?' என்ற ஏக்கம் இருக்காது.
- பயத்திலிருந்து மனதைத் தைரியத்திற்குத் திருப்பினால் துரதிர்ஷ்டத்தைக் கூட அதிர்ஷ்டமாக மாற்றலாம்.
- மனதின் பயமும், உழைப்புக் குறைவும்தான் அதிர்ஷ்டத்தை நோக்கி எதிர்பார்ப்புத் தீயை மூட்டுகிறது.
- அதே செயல்கள்தான் உங்களால் ஜீரணிக்க முடியாத - சாதாரண வாழ்க்கை அம்சங்களைச் சுற்றித் துக்கப் புகையை கிளப்பி துரதிஷ்டமாகக் காண்பிக்கிறது.
- துரதிர்ஷ்டம் என்பது ஒருவரால் ஜீரணிக்க முடியாத சாதாரண வாழ்க்கை அம்சங்களே!
- அதிர்ஷ்டத்தை எதிர்பார்ப்பதும், துரதிர்ஷ்டத்தை நினைத்துத் துக்கப்படுவதும் புத்திசாலி செய்யும் காரியம் அல்ல.
- புத்திசாலி புத்தியைப் பயன்படுத்தி வாழ்வின் எல்லா அம்சங்களிலும் புகுந்து
ஏதோ ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்ட புதுத் தெம்போடு வெளியே வருவான்.
- தைரியமாக சுறுசுறுப்போடு வாழ்க்கையை அணுகுங்கள். சாதாரண வாழ்க்கை அம்சங்கள் அதிர்ஷ்டமாக மாறும். நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று பலராலும் பிரமிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்டத்தின் சூட்சுமம் இதுதான்.
- வாழ்வில் கொட்டிக் கிடக்கும் அதிர்ஷ்டங்களை உங்களுக்கு சொந்தமாக்குங்கள் அதிர்ஷ்டசாலியாகுங்கள்.
பெருமை எனும் சிறுமை
- எத்தனைப் புதுப்புது வழிகள் கண்டுபிடிக்கிறான் மனிதன், பெருமை பேசித் திரிவதற்கு!
- தன்னைப் பற்றித் தானே பெருமைக்காக தம்பட்டம் அடித்துக் கொள்வது ஒரு வகையென்றால் இன்னொரு வகை இன்னும் தந்திரமானது.
தாங்கள் சம்பந்தப்பட்ட காரியங்களை நேரடியாகப் பேசாமல் மறைமுகமாகப் பேசுவதால்தான் பெருமையடைவதாக நினைப்பார்கள். ஒருவிதக் கற்பனையோடு உலகில் வாழ்வார்கள்.
தனக்குத் தெரிந்த V.I.P. பற்றி, தன் மதம் பற்றி, தன் ஜாதி பற்றி பெருமையடிப்பதைத் தாண்டி பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்களைச் சுற்றிச் சுற்றியே நாம் பெருமையடித்துக் கொள்ளும்போதெல்லாம் நம் அடிமனதில் நம் பெருமைக்காகவே அவர்களின் பெருமையைப் பேசுகிறோம்.
- இதைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். சும்மா பெருமை பேசுவது தவறல்ல. அது நல்ல உரையாடலின் ஒரு பகுதியே.
Part 4: Lines of Wisdom Which Makes You Beautiful - Part 2_Tamil_part_4.md
ஏதோ ஒரு வகையில் 'நான் தகுதி குறைந்தவன்' என்ற ஆழ்மன எண்ணம் தரும் தூண்டுதலால் ... மீண்டும் மீண்டும் பெருமையடிப்பதற்காக மனிதன் முனைய ஆரம்பிப்பதே தவறு. இது ஒருவித சுயபாதகமே. பெருமை பேசித் திரிவது போன்ற சிறுமை வேறில்லை. காரணம் உள்ளிருக்கும் சிறுமைதான் வெளியே பெருமையடிக்க, வெட்டி பந்தாவில் இறங்கும் அளவுக்குக் கூட ஒருவனைத் தூண்டுகிறது.
- உங்களிடமுள்ள பெருமை எனும் சிறுமைகளைக் கண்டுபிடிக்க உதவும்.
நீங்கள் எல்லாம் தெரிந்தவரா?
- பதில் தெரிந்தால் கட்டத்தில் டிக் செய்யவும். பதில் தெரிந்தவர், உண்மையிலேயே எல்லாம் தெரிந்தவர். தூங்கும்போது உங்கள் உடலுக்குள் எங்கே இருக்கிறீர்கள் ? எப்படி இருக்கிறீர்கள் ? □
- மனம்தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம் என்று சொல்லுவோம். மனம் இருப்பது நமக்குத் தெளிவாய் தெரியும். அது எங்கே, எப்படி இருக்கிறது ? 1
- பிறப்பதற்கு முன் எங்கே இருந்தீர்கள் ? □ *
- நம்மையெல்லாம் ஆட்டுவிக்கும் இறைவன் அல்லது இயற்கைச் சக்தி எங்கே?
- ஏன் இந்த பிரபஞ்சம் உருவானது ?
- சில புத்தகங்களில் படித்த தத்துவக் கருத்துக்களை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு 'எனக்கு அது தெரியும், இது தெரியும்' என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது.
- அறிவியல், மருத்துவம், விஞ்ஞுானம், மொழி, கலை. வியாபாரம், அரசியல் என்ற எல்லாமே வாழ்வின் சிறு சிறு பகுதிகளே.
அந்தத் துறையின் உச்சிவரை ஒருவர் தெரிந்து கொண்டால்கூட, அது முழுழு வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொண்டதாகாது.
அப்படியே வாழ்வைப் பற்றி நீங்கள் ஏதாவது தெரிந்து வைத்திருந்தாலும்…
- நீங்களே உணர்வுப் பூர்வமாக உணர்ந்து பார்க்காதவரை, மற்றவர்களிடமிருந்து நீங்கள் தெரிந்துகொண்ட ஜீரணமாகாத (அனுபவமாகாத) கருத்துக்களுக்கும், ஜீரணமாகாத உணவுக்கும் பெரிய வித்தியாசமில்லை.
- கடைசியாக ஒரே ஒரு ஒரு சத்தியத்தைச் சொல்லி இந்தக் கட்டுரைக்கு முற்றுப் புள்ளி வைக்கிறேன்.
நமக்குத் தெரியாது என்ற ஒரு விஷயம் தெரியாத வரை, 'நமக்குத் தெரியாது' என்ற ஒரு விஷயம் நமக்குத் தெரியவே தெரியாது. 'நமக்குத் தெரியாது' என்ற ஒரு விஷயம் தெரிந்தால், குறைந்தது 'நமக்குத் தெரியாது' என்ற ஒரே ஒரு விஷயமாவது நமக்குத் தெரிய வரும். தெரிந்து கொள்ள ஆரம்பியுங்கள்.
இதுதான் அகங்காரம்
- உண்மையில் யாருடைய மனதையும், யாராலும் புரிந்து கொள்ள முடியாது. காரணம், மனம் என்றாலே அது ஆழமானது, அதனால் மனத்தை அவ்வளவு எளிதாக யாரும் புரிந்து கொள்ள முடியாது. இது ஆணுக்கும் பொருந்தும், பெண்ணுக்கும் பொருந்தும்.
- ત્વન્યું હતું. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அகத்தின் அருமை முகபாவனையில் தெரியும்.
- જુન வயிற்று வலி, நோகும் அளவுக்கு ஒருவருக்கு இருக்கும்போது, அவர் சிரிக்க முயன்றால் அவரது சிரிப்பு எப்படி இருக்கும் ?
கட்டாயத்தின் பேரில், சூழ்நிலைக்காக அந்த நபர் சிரிக்க முயற்சித்தாலும், சிரிப்பு உண்மை அல்ல, வெறும் நடிப்பு என்று முகபாவனைகள் காட்டிக்கொடுத்து விடும்.
-
எவ்வளவுதான் அந்த நபர் இயல்பாகப் பேசிச் சிரிக்க முயற்சித்தாலும், அவரது வலியின் வெளிப்பாடு முகபாவனையில் வெளிப்பட்டே தீரும்.
-
சாதாரண வயிற்று வலியே இந்த அளவுக்கு நமது முகபவானையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதே ...
-
நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும், நமக்கு மட்டுமே தெரிந்த மன வலி எந்த அளவுக்கு நமது முகபாவத்தையும், வார்த்தைகள் வெளிப்படும் விதத்தையும் பாதிக்கும் ?
-
જુન அது எந்த அளவு நமது சுமூகத்தன்மையைப் பாதித்து சமுதாய வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தும் ? யோசியுங்கள்.
-
பல காரணங்களால் அகம் காரமடைகிறது.
-
அகம் காரமடைந்து, அகத்தின் சுகம் 參 குறைந்து, அகங்காரம் வலுப்பெற வலுப்பெற மனவலியானது அதிகமாகிறது.
-
சட்டென்று வரும் கோபம், 发 எதிர்பாராமல் வரும் படபடப்பு, காரணமே இல்லாமல் வரும் கவலை, சம்பந்தமே இல்லாமல் வரும் வெறுப்பு, ஆகியன, ஒருவரின் அகம் காரமடைந்து, அது அகங்காரத்தினால் பாதிக்கப்பட்டிருக்கதற்கான மிக முக்கிய அறிகுறிகள்.
-
જ્ கோபம், படபடபடப்பு, கவலை, வெறுப்பு ஆகிய அனைத்துமே அகங்காரத்தின் வெளிப்பாடுகளே. 心 கடலில் குளித்த பிறகு, சாதாரண நீரில் குளிக்க வேண்டும். இல்லையென்றால், நம் உடலில் படிந்த ஒரடுக்கு உப்பு நம் நிம்மதியைக் கெடுத்து விடும். அதுவும் நம் தோலில் ஒரு புண் இருக்கும்போது அதில் கடல் நீர், உப்பு நீர் பட்டு விட்டால் நமக்கு ஏற்படும் எரிச்சலுக்கு அளவே இருக்காது. அகங்காரம் இதே வேலையைத்தான் நமக்குள் செய்கிறது. அகங்காரம் ஆங்காங்கே நமது மனதில் புண்களை ஏற்படுத்துவதால்தான் மனவலியும், வேதனையும் வாழ்வின் சாதாரண அம்சங்களில்கூட வெளிப்படுகிறது.
-
な கர்வம் அகங்காரத்தின் ஒரு சிறு வெளிப்பாடு மட்டுமே. திமிர் மட்டுமல்ல, திண்டாட்டம் மற்றும் தடுமாற்றம்கூட அகங்காரத்தின் வெளிப்பாடுகள்தான்.
-
发 அகங்காரமில்லாதவன் எந்த ஒரு குழ்நிலையிலும் தடுமாற மாட்டான்.
• உங்களின் அகங்காரங்களைப் பட்டியலிடுங்கள் ... நம் நிம்மதியையும், நிதானத்தையும்
நம்மிடமிருந்து பறிபோக வைக்கும் எல்லா உணர்ச்சிகளும் அகங்காரங்களே! இந்த சத்தியத்தை ஆழமாகப்புரிந்துகொண்டால் மட்டுமே அகங்காரத்தை வேரறுக்க முடியும். அதிலிருந்து வெளிவர முடியும்.
ூ உங்களை மையமாக வைத்து வெளியில் நடக்கும் சண்டைச் சச்சரவுகளையும், சஞ்சலங்களையும் வழிகாட்டியாகக் கொண்டு உள்ளே இருக்கும் மனவலியின் அளவைக் கண்டுபிடியுங்கள். அகங்காரத்தின் வீரியம் புரியும்.
அகத்தின் காரத்தைக் குறைக்க முயற்சி செய்யுங்கள், அகத்தின் சுகம் தானாகவே அதிகமாக ஆரம்பிக்கும். இல்லறம் நல்லறமாகவே இருக்கும்.
அகங்காரம் அழிக்க வழி
-
அகங்காரத்தைவிட தந்திரம் நிறைந்தது இந்த உலகில் இல்லை.
-
彩 'நான் பெரியவன்! அவன்! இவன்!' என்று கூறித் திரிவது மாத்திரம் அகங்காரமல்ல.
-
જુન 'நான் சிறியவன்! பாவி! முடியாதவன்!' என்று கூறித் திரிவதும் அகங்காரமே!
-
அகங்காரம், அது வாழ என்ன வேண்டுமானாலும் செய்யும், எதாவதொரு வகையில் தன்னை மறைத்துக் கொண்டு வாழவே முயற்சி செய்யும்.
-
இகத்திலும் அகத்திலும் சுகமாக இருக்க જુન முடியாமையே அகங்காரம் இருப்பதற்கான அடையாளம்.
-
அகங்காரம் இருப்பவரிடம் ஆனந்தம் இருக்காது. ஆனந்தம் இருப்பவரிடம் அகங்காரம் இருக்காது.
-
ન્દ્રન தொடர்ந்து ஆனந்தமாக வாழ முயற்சி செய்வது, ஆனந்தமாக வாழ்வது இரண்டுமே அகங்காரத்தை அழித்து விடும்.
இறுக்கம் மறைய இயல்பாகி விடுங்கள்
-
அறிவு தரும் செருக்கு! பதவி தரும் போதை! பணம் தரும் மிதப்பு! புகழ் தரும் மயக்கம்!
- இவைதான் ஒரு மனிதனுள் இறுக்கத்தை அழைத்து வரும் புரோக்கர்கள்.
-
જુન இறுக்கத்தோடு குடித்தனம் நடத்துவதால் ஒருவருக்குக் கிடைக்கும் பலாபலன்கள் ;
- சிரிக்கக் கஷ்டப்படும் முகம்!
- வெளியில் பகிர முடியாத கோகம் !
- எதையும் முழுமையாக அனுபவிக்க முடியாத குணம்!
-
'அறிவு ஞானமாக வேண்டும், பதவி சேவையாக வேண்டும், பணம் பகிரப்பட வேண்டும், புகழ் ஜீரணிக்கப்பட வேண்டும்', - இப்படி ஒருவர் வாழும் பட்சத்தில், இவை ஒரு மனிதனுள் இனிமையை அழைத்து வரும் தேவைதைகளாக மாறிவிடும்.
-
இறுக்கத்தை அழைத்து வரும் புரோக்கர்களாக அவை இருக்க வாய்ப்பே இல்லை.
-
જુન இறுக்கத்தால் இறுகிப்போன முகத்தசைகளுக்கும், உதடுகளுக்கும் குதூகலமான சிரிப்பும், வாழ்வும் பூரிப்பைத் தரும்.
-
ન્દ્ર மன இறுக்கத்திலிருந்து வெளியே வர மிக எளிய வழி - நாம் நினைத்தபடி மற்றவர்களும், சூழ்நிலைகளும் மாற வேண்டும் என்ற மாய நினைவைத் தூக்கி எறிந்துவிட்டு, ஒவ்வொரு நிமிடமும் சந்தோஷமாக இருக்க முயற்சிப்பது ஒன்றுதான் வழி.
போலிச் சுகம்
- வாழ்க்கை இயல்போடு கலந்து இயல்பாக செயல்படுங்கள். இறுக்கம் கரைய ஆரம்பித்துவிடும்.
- தன்னை உயர்த்திக் கொள்ளும்போது જી மனதிற்கு ஒருவகை போலிச் சுகம் கிடைக்கும். சில மனிதர்கள் இந்தப் போலிச் சுகத்திற்காகத்தான் கர்வத்தோடு நடந்து கொள்கிறார்கள்.
- மனிதன் தன்னைத் தாழ்த்திக் கொள்ளும்போது பலரால் உயர்த்தப்படுகிறான்.
- 参 கர்வத்தை விட, தாழ்வு மனப்பாங்கோடு நடிப்பவருக்குப் பல மடங்கு போலிச் சுகம் கிடைக்கும்.
- அதன் விளைவுதான் - தன்னை மற்றவர்களிடம் தாழ்த்திக் கொள்வது. தன்னைத்தானே தரம் குறைத்துப் பேசிக்கொள்வது ... என்ற எல்லாமே.
- જ્વન தாழ்த்திக் கொள்வது வேறு, எளிமையாக வாழ்வது வேறு.
- இயல்பாக, இயற்கையாக இருப்பவர்கள் தங்களை உயர்த்தியும் சொல்ல மாட்டார்கள். தாழ்த்தியும் சொல்ல மாட்டார்கள். இவர்களிடம் எளிமை நிறைந்திருப்பதைப் பார்க்க முடியும். தங்களின் எளிய நிலையை எளிமையாகவே எப்போதும் வெளிப்படுத்துவார்கள்.
- 'எளிமை' என்பது ஒருவரிடம் જુન வெளிப்படுவது.
- புகழ்ச்சிக்காக மதிப்புக்காகத் தன்னையும், அறியாமல், தன்னைத் தாழ்த்திக் கொண்டால்கூட அது பாதகமே. அது அகங்காரத்தை வளர்க்கும்
- யாருக்காகவும், எதற்காகவும் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். யாரிடமும், எந்தச் சூழலிலும் உங்களை உயர்த்திக் கொள்ளாதீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள். உள்ளதை உள்ளபடியே பேசுங்கள்.
- உங்களையும் அறியாமல் உங்களைக் கவ்விக் கொண்டிருக்கும் தாழ்வு மனப்பான்மையும், உயர்வு மனப்பான்மையும் கழண்டு விழ ஆரம்பிக்கும்.
கீழ்த்தரமான செயல்
જુન
彩 நமக்குத் தெரிந்த சிலவற்றை கொண்டு அவர் அப்படி, இவர் இப்படி, என்று தீர்ப்பு கூறுவது போன்ற ஒரு கீழ்த்தரமான செயல் வேறெதுவும் இருக்க முடியாது.
யாரையும், எதையும் 'தோராயமாகத்தான் கூறுகிறோம்' என்ற உண்மை தெரியாததாலும் 'உண்மையைத்தான் நாம் கூறுகிறோம்' என்று ஊர்ஜிதமாக நம்புவதாலும் நடக்கும் இருபெரிய தவறுகள்-ஒன்று, உங்களைப் பற்றி நீங்களே நல்லவர் அல்லது கெட்டவர், மனிதன் அல்லது மிருகம் என்ற முடிவுக்கு வருவீர்கள்.
இரண்டாவது, மற்றவர்களைப் பற்றி அவர் நல்லவர் அல்லது கெட்டவர், மனிதன் அல்லது மிருகம் என்ற முடிவுக்கு வருவீர்கள். ஆனால் நிஜத்தில் ... இரண்டுமே கற்பனை, இரண்டுமே பொய்.
டிதிர்ச்சியின் அளவுகோல்
- 'மனிதர்களின், குணம் மாறும் போது, நிறம் மாறும். தரமும் மாறும்'என்ற உண்மையை ஒருவர் தன்னுடைய குணமுதிர்ச்சியினால் புரிந்து கொள்ள முடியும்.
- மற்றவர்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பால் தடுமாறிக் கோபப்படும்போது, பதிலுக்கு நாமும் கோபத்தையோ வெறுப்பையோ காட்டினால், அது நாம் இன்னும் குணமுதிர்ச்சியைப் பெறவில்லை என்பதற்கான அறிகுறி.
- பிடித்த விஷயங்கள் எந்த அளவுக்கு சந்தோஷத்தைத் தருகிறதோ அதேபோல் தான் நமக்குப் பிடிக்காத விஷயங்கள் நம்மை துக்கத்தில் ஆழ்த்தும்.
இதை விளக்கும்… ஒரு அருமையான ஹஸிட் கூற்று.
- கிளர்ச்சியின் ஆழம்தான் துக்கத்தின் உயரம் !
- குணமுதிர்ச்சி பெற்ற ஒருவனை 'புகழ்ச்சி' - கிளர்ச்சிக்குள்ளாக்காது. 'இகழ்ச்சி' - தளர்ச்சிக்குள்ளாக்காது.
- புகழ்ச்சியும், இகழ்ச்சியும் உங்களை என்ன செய்கின்ற ? உங்களை எவ்வளவு ஆட்டிப் படைக்கின்றன ? பதில் காணுங்கள்… குணமுதிர்ச்சியின் விகிதாச்சாரம் தெரியவரும்.
பக்தி சக்தி
� பக்தி உணர்வு இல்லாமல் பெற்றவர்களும் மற்றவர்களும் சொன்னார்களே! என்பதற்காகக் கோயிலுக்குக் கடமைக்காக சென்று வந்தால் ... அவன் தன்னை ஆத்தீக வாதி என்று கூறிக் கொண்டாலும் அவன் ஒரு நாத்தீகவாதிதான். இப்படிப்பட்ட மனிதர்கள் ... பெயரளவில் ஆத்தீகவாதியாகவும், உணர்வளவில் நாத்தீகவாதியாகவும் இருப்பார்கள்.
彩 கோயிலுக்குச் சென்று பக்தியுணர்வோடு தெய்வ சந்நிதியில் சிறிது நேரம் அமர்ந்திருக்கும் போது - அங்கே இருக்கும் சக்தி களத்தால் சக்தியூட்டப்படுவதால்தான் நம் உடலில் புத்துணர்வும், மனதிற்கு அமைதியும் ஏற்படுகிறது. அப்படியென்றால், ஒரு விஷயத்தை நாம் அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
- அது நம் உடல் புத்துணர்வு இல்லாமல் சோர்வாகவும், மந்தமாகவும் இருப்பதற்குக் காரணம் சக்தியின்மையே. 'சக்தி குறைவே'.
- நம்முள் மனமானது அதைி இல்லாமல், சஞ்சலத்தோடு, தவிப்போடு, எரிச்சலோடு இருந்தால் அதற்கும் சக்தி குறைவே காரணம்.
- எனவே, ஏதாவது ஒரு வகையில் நம் உடலுக்கும் மனதுக்கும் சக்தியைக் கொடுப்பதற்குக் கற்றுக்கொண்டால்போதும்.
- எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணகர்த்தாவான சக்தி குறைப்பாட்டை சரிசெய்து நிம்மதியாக, ஆனந்தமாக இருக்கலாம்.
- பக்தியோடு நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலும் தியானமே. தியானம் உங்களுக்குள் இருக்கும் சக்தியை நீங்களே பயன்படுத்திக் கொள்ள உதவும் ஒரு வழிமுறை.
அவமானம் என்னும் நாடகம்
-
'அவமானம்' என்பது நம் அந்தஸ்து, வயது, குலம், கோத்திரம் பொறுத்து நம் மனதால் கண்டுபிடிக்கப்படும் ஒரு புதிய கண்டுபிடிப்பு.
-
பொதுவாக அந்தஸ்து, வயது, பதவி நம்மை விட அதிகமாக இருப்பவர்கள் சற்று மரியாதைக் குறைவாகப் பேசினாலோ, நடந்து கொண்டாலோ அதற்கு நாம் கொடுக்கும் பெயர் - 'உரிமை' (ஆஹா! எவ்வளவு உரிமை எடுத்துக்கிறார்கள்! எல்லாம் பாசம் ! )
-
மாறாக! அந்தஸ்து, வயது, பதவி நம்மைவிட குறைவாக இருப்பவர்கள் சற்றே மரியாதை குறைவாகப் பேசினாலோ, நடந்து கொண்டாலோ அதற்கு நாம் கொடுக்கும் பெயர் - 'அவமானம்' (கொஞ்சம் இடம் கொடுத்தால் என்மேல் எவ்வளவு உரிமை எடுத்துக்கறாங்க பார்! எல்லாம் ரொம்ப மோசம் )
-
அவமானம் நிஜமா ? கற்பனையா ? பதில் - உங்களின் மனநிலையைப் பொறுத்தது.
-
நிஜத்தில் அவமானம் - மனதின் ஒரு மாயத் தோற்றம்தான்.
-
பொதுவாக அவமானத்தை மனிதர்கள் மூன்று விதமாக அணுகுவார்கள்:
-
முதல் வகை : மனிதர்களால், உறவுகளால் எவ்வளவுதான் அவமதிக்கப்பட்டாலும் திரும்பத் திரும்ப அதே மனிதர்களிடம் சென்று மூக்கு உடைபடுவார்கள் முதல் வகை. அதிலிருந்து வெளியே வருவதைப் பற்றி யோசிக்கூட மாட்டார்கள். மந்த மனம் படைத்தவர்கள்.
-
இரண்டாவது வகை : இவர்கள் தொட்டதற்கெல்லாம் கோபித்துக்கொள்வார்கள். புதிது, புதிதாகக் கண்டுபிடித்து, 'நீ என்னை இங்கே, இப்படி அவமானப்படுத்தினாய்', 'என் மதிப்பென்ன ... ' என்று சதா மதிப்பு தேடி அலைபவர்கள்.
-
அவமானம் பற்றிய அதீத கற்பனையில் வாழ்பவர்கள் !
-
மூன்றாவது வகை: அற்புதப் பிறவிகள். பண்பட்டவர்கள். அவமானம் என்ற ஒன்றே இல்லை என்பதை உணர்ந்தவர்கள்.
-
நம் Ego-விற்கு விழும் அடியைத்தான் நாம் அவமானம் என்று கருதிக் கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை உணர்ந்து தாண்டியவர்கள். Ego-வை தொலைத்தவர்கள். அப்படியே மனிதர்கள் அவமதித்தாலும் அது இவர்களைப் பாதிக்காது.
-
தான் வேறு, தன் உடல் வேறு என்ற அனுபூதி பெற்றவரை யாராலும் அவமதிக்க முடியாது. அப்படியே அவமதித்தாலும் அது அவர்கள் உடல் மாத்திரமே சம்பந்தப்பட்டது.
-
எதனாலும் பாதிக்கப்படாமலிருக்கும் உணர்வுப் பக்குவத்தை பெற்ற இவர்களுக்கு 'அவமானம்' என்ற ஒன்று ஏற்படாது. ஆனந்த மனிதர்கள்.
அவமானத்தை மூன்று விதமாக அணுகலாம்: 1. அவமானத்தை அலட்சியப்படுத்துவது 2. அவமானத்தை எதிர்கொள்வது 3. அவமானம் என்னும் மாயையைத் தாண்டிச் செல்வது. மூன்றில் எதைச் செய்தாலும் நீங்கள் புத்திசாலிதான். தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டே இருங்கள்.
அவமானத்தால் பாதிக்கப்படுபவர்கள் அதை அலட்சியப்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்! அவமானத்தை அலட்சியப்படுத்துபவர்கள் அதைத் தாங்கக் கற்றுக்கொள்ளுங்கள்! அவமானத்தைத் தாங்கத் தெரிந்தவர்கள் அதைத் தாண்டக் கற்றுக்கொள்ளுங்கள்!
கோப சக்தி விரையம்
-
நீங்கள் கோபப்படும் போது மிக மிக ஜாக்கிரதையாக இருங்கள்.
-
கோபப்படுவதை அடக்க முயற்சிப்பதை விட்டுவிட்டு, கோபத்துக்கான காரணத்தை ஆராயுங்கள்.
-
தவறு நம் மீது இருக்கும்போது, நாம் ஏன் அடுத்தவர் மீது கோபப்பட வேண்டும் என்கிற ரீதியில் யோசித்துப் பாருங்கள்.
-
நீங்கள் கள்ளம் கபடமில்லாதவர், தவறே செய்யாதவர் என்றால் யாராவது உங்களைப் பார்த்துச் சுண்டுவிரல் நீட்டிப் பேசமுடியுமா ?
-
நாம் கோபப்படுகிறபோது ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். நம்மை விட வலிமை குறைந்தவர்களிடத்தில் நாம் காட்டுகிற கோபம் எப்போதும் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது.
-
உங்களுக்குக் கீழே இருக்கும் வேலைக்காரர் ஒருவர், ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுவதற்கு மட்டுமே தகுதியானவர் என்றால் அவருக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே நாம் கொடுக்கிறோம்.
-
மூவாயிரமோ, ஐயாயிரமோ அள்ளிக் கொடுத்துவிடுவதில்லை.
-
ஒரு மடங்கு வேலைக்குப் பல மடங்கு கூலி நாம் தருவதில்லை.
-
ஆனால், அதே ஊழியர் ஒரு சிறு தவறு செய்து விட்டால் ஆயிரம் ரூபாய்க்குப் பதிலாக ஐந்தாயிரம் ரூபாய் அளவுக்குக் கோபப்படுகிறோம்.
-
ஒரு மடங்கு தவறுக்குப் பல மடங்கு சக்தியைக் கோபமாகக் கொட்டுகிறோம்.
-
யாருக்கு இழப்பு அதிகம் ?
-
யோசியுங்கள்.
-
அளவுக்கு அதிகமாக நாம் கோபத்தை வெளிக் காட்டும்போது நம் கிரியா சக்தி அநியாயமாக வீணாகிறது.
-
எந்தக் காரியத்தையும் சிறப்பாகச் செய்வதற்கு அடிப்படையாக இருப்பது இந்தக் கிரியா சக்திதான்.
-
அளவுக்கதிகமாகக் கோபப்படுகிறவர்கள் எளிதில் உற்சாகமிழந்து, மந்தமாவதற்குக் கோபத்தால் விரையமாகும் கிரியா சக்தியே காரணம்.
-
கோப சக்தி வங்கியில் இருக்கும் பணத்திற்குச் சமம்.
-
இடம் பார்த்து ! பதம் பார்த்து ! தேவை பார்த்து ! தேவையானவர்களுக்கு மட்டுமே தேவையான அளவு மட்டுமே செலவு செய்ய வேண்டும்.
-
சக்தி விரையம் செய்யாதீர்! சக்தியின்மையில் தவிக்காதீர் !
-
சக்திச் சிக்கனம் தேவை இக்கணம்.
மன்னித்து... மறந்துவிடுங்கள்!
-
உங்கள் கோபத்தால் பாதிக்கப்படுவது ! உங்கள் மன்னிப்பால் பலன்பெறுவது! -இரண்டுமே எதிராளி அல்ல. நீங்கள்தான்.
-
தொடர்ந்து உங்கள் உடலும், மனதும் கொதித்துக் கொண்டிருந்தால் மாத்திரமே. கோபக்கனல் மூலம் மற்றவர்களைச் சிறு தவறுக்காக கோபித்துக் கொண்டு சக்திவிரையம் செய்ய முடியும். வெறுப்பு கொள்ள முடியும்.
-
- இதில் யாருக்குப் பாதிப்பு அதிகம் ? கோபப்படுவனுக்கா? இல்லை பொங்கும் கோபத்தின் வெளிப்பாடான உங்கள் சீற்றத்தை மேம்போக்காக எடுத்துக் கொள்ளும் எதிராளிக்கா ? மன்னித்து விட்டால், மன்னித்த அடுத்த நிமிடமே கோப எரிமலை குளிர்ந்து விடும் ! உடலும், மனமும் இலகுவாகிவிடும் !
-
கோபத்தால் சக்தி விரையமாவது மிச்சமாகும். பழி தீர்க்க யோசனை செய்யும் நேரம் மிச்சமாகும்.
-
சக்தியும், நேரமும் மிஞ்சினால் பலன் பெறப் போவது,
- மன்னிப்பவரா? இல்லை,
- மன்னிக்கப்படுவரா ? யோசியுங்கள் !
-
சுயக்கட்டுப்பாட்டுத் திறனைப் பொறுத்து கோபம் ஒரு சக்தி அல்லது கத்தி!
மன்னித்தல் ஒரு அருமருந்து!
- அகங்காரத்திலேயே மிகவும் மோசமானது 'நான் நல்லவன்' என்கிற நினைப்பினால் வரும் அகங்காரம் தான்.
- நான் நல்லவன் என்ற கற்பனைதான் பல விஷயங்களை 'கெட்டது! மோசம்!' என்று சுட்டிக்காட்டிக் கோபத்தை வளர்க்கும்.
- உங்களின் 'கெட்ட குணங்களையும்', மற்றவரின் 'நல்ல குணங்களையும்' மட்டுமே ஆராயுங்கள். கோபம் தணியும். சுயக்கட்டுப்பாடு மலரும்.
- மற்றவர்களை மன்னித்து விடுங்கள். அத்தோடு அதை மறந்து விடுங்கள். மறக்க முடியவில்லை என்றால் 'மன்னித்து விட்டேன்' என்ற பெயரில் வேஷம் போடுகிறீர்கள் என்று அர்த்தம். முழுழுமையாக
மன்னித்து விட்டால், மன்னித்தல் நிகழும்போது மறத்தலும் நிகழ்ந்து விடும்!
ஆனந்தப் பயணம்
ூ ஆனந்தம் நோக்கிப் பயணம் செய்யும் மூன்று தரப்பட்ட மனிதர்கள்: 'என்னுடைய வீட்டில் இருப்பவர்களை திருப்திப்படுத்தினால் போதும். இவர்கள் சந்தோஷமாக இருந்தால் போதும். அதுதான்என் வாழ்க்கையின் நோக்கம்" - முதல் வகையினர்.
-
ூ 'வீட்டில் இருப்பவர்கள் எல்லோரையும் திருப்திப்படுத்துவது சாத்தியமில்லாதது. முதலில் நான் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும். நான் திருப்தி அடைய வேண்டும்'. - இரண்டாவது வகையினர்.
-
'வெளி உலகில் அடையும் சந்தோஷமும், திருப்தியும் நிரந்தரமாக இருப்பதில்லையே. இந்த நிரந்தரத் தன்மைத்தான் நாம் முதலிலிருந்தே தேடுகிறோமோ ? ஒருவேளை அதுதான் ஆனந்தமா ? அதுதான் நிம்மதியா ?' - மூன்றாவது வகையினர்.
-
வாழ்க்கையின் எல்லையை எட்டிப் பார்க்காதவரை, வாழ்க்கையின் நோக்கத்திற்கான விடை தெரியாது. நோக்கம் புரியாது. ஆனால் ஏக்கம் இருப்பது மட்டும் புரியும்.
-
மனிதப் பிறப்பின் நோக்கமே நிலையான, நித்தியமான ஆனந்தத்தைப் பெறுவதுதான். ஆனந்தம் பெறும்வரை ஏதோ ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
-
இப்படி வாழ்க்கையின் பல புரியப்பட வேண்டிய புதிர்களை விடுவிப்பது ஆன்மீகம். நீங்கள்... விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளவிட்டாலும், நாம் அனைவரும் ஆனந்தம் நோக்கித்தான் பயணம் செய்துக் கொண்டிருக்கிறாோம். என்ற உண்மையைப் புரிந்து கொண்டு உற்சாகமாகுங்கள். 'ஆனந்தப் பயணம்' ஆனந்தமாக அமையட்டும்.
எது பக்தி ?
பக்தி ! சக்தி ! முக்தி ! - இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று சூட்சுமமான தொடர்புடையவை. பக்தியின் பூரணம் சக்தியின் வெளிப்பாடு. சக்தியின் பூரணம் முக்தியின் வெளிப்பாடு. உங்களின் 'பக்தி' உணர்வின் அளவைப் பொறுத்தே, நீங்கள் 'சக்தி'யைக் கிரகிக்கும் அளவு நிர்ணயிக்கப்படும். பக்தி என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதற்கும், உண்மையான பக்திக்கும் பெரும்பாலும் சம்பந்தம் இருப்பதே இல்லை.
'எனக்கு அது/இது வேண்டும் ... என்னைக் காப்பாற்று! எனக்கு அதைக் கொடுத்தால் ... ' - என்ற ரீதியில் பிரார்த்தனையும், பக்தியும் இருந்தால், அது 'பக்தி' என்று நினைத்துக் கொண்டு இறைவனிடம் நாம் நடத்தும் 'பேரம் பேசுதல் அல்லது வியாபாரம்'.
'நன்றி! நன்றி! நன்றி! இதை கொடுத்தாயே நன்றி! இந்த நிமிடம் உயிரோடிருக்கிறேனே! நன்றி !
நீ செய்ததற்கும், செய்யப் போவதற்கும் நன்றி ! . . . '
என்று 'பக்தியுணர்வு' நன்றி உணர்வாக பொங்க! பொங்க! இந்த நொடி நான் நன்றாக சுவாசிக்கக் காரணமான இறை சக்தியை, உள்ளத்தின் ஆழத்திலிருந்து போற்றினால், துதித்தால், தொழுதால் - அதுதான் பக்தி.
பக்தி சக்தியின் திறவுகோல் !
சக்தி முக்தியின் நுழைவாயில் !
போலி நம்பிக்கை என்றால் என்ன?
இந்த நூற்றாண்டில் அதிகமாகியிருக்கும் பிரச்சினை 'போலி நம்பிக்கை' (Pseudo Belief - self cheating in mature). இது தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளும். போலி நம்பிக்கை உங்கள் மனதிற்குள் நுழைந்து விட்ட HIV வைரஸ் (HIV - Happiness Insufficiency Virus). போலி நம்பிக்கை நிம்மதியைக் கெடுத்து, சந்தோஷத்தைக் குறைக்கும். தான் முட்டாள் என்ற உண்மையைக் கடைசிவரை முட்டாளுக்குத் தெரிய விடாமல் மறைத்து விடும் - மனதின் மாயத் திரைதான் போலி நம்பிக்கை.
நம்மில் பலரும், இளம் வயதில் இயலாமை, சூழ்நிலை காரணமாகச் சிறுசிறு தோல்விகளை, ஏன் பெரிய தோல்வியைக்கூட சந்தித்திருக்கலாம். அந்தத் தோல்விகள் முடிவுகள் அல்ல. அந்த அசம்பாவிதமான தோல்விகள் உங்களையும் அறியாமல் உங்கள் மனதில் ஆழப் பதிந்துவிடும். முதல் முறையாகப் பங்கு கொண்ட மேடைப் பேச்சில் ஒருவர் சரியாகப் பேசவில்லை என்றவுடன், தனக்குப் பேச்சுத் திறமையே இல்லை என்று நம்ப ஆரம்பித்துவிடுவார். அந்த நம்பிக்கை பிற்காலத்தில் மேடைப் பேச்சு பேசவே முடியாது என்ற இயலாமையாக மாறிவிடும். ஆனால், ஒவ்வொருவருக்குள்ளும் நன்றாக மேடையில் பேசுவதற்கான எல்லாவித திறமையும் இருக்கும். இது உண்மை. இந்த உண்மை தெரியாமலேயே போய் விடும். தற்செயலாகத் தெரிந்தால்கூட இப்படிப்பட்டவர்களால் நம்ப முடியாது. காரணம் அவர்களின் போலி நம்பிக்கை! 'என்னால் இவ்வளவுதான் படிக்க முடியும். இதற்கு மேல் முடியாது'. 'என்னால் இவ்வளவுதான் உழைக்க முடியும். இதற்கு மேல் முடியாது'. என்று தங்கள் குணம், திறமை, வாழ்க்கை முறை, மற்றவருடன் பழகும்முறை என்று எல்லாவற்றிலும் ஒரு வேலி, ஒரு கோடு போட ஆரம்பித்துவிட்டார்கள்.
வயது அதிகமான பின்பு சாதிப்பதற்கான சக்தியும், சாத்தியக் கூறுகளும் இருந்தாலும் அவர்களுடைய போலி நம்பிக்கை அவர்களைத் தடுத்து விடுகிறது. மனித மனம் தோல்விகளையும், அவமானங்களையும் பதிய வைத்துக் கொள்ளும் அளவுக்கு வெற்றிகளையும், சந்தோஷங்களையும் பதிய வைத்துக் கொள்வதில்லை. இன்றைய உலகில் கஷ்டப்படுபவர்கள் எல்லோருமே இந்தப் போலி நம்பிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள்தான். கடந்த காலத்தில் தற்செயலாக நடந்து விட்ட சில அசம்பாவிதங்கள் மூலம் உங்களையோ உங்களின் திறமையையே குறைத்து மதிப்பிட மடியாது.
Part 5: Lines of Wisdom Which Makes You Beautiful - Part 2
சில அசம்பாவிதமான நிகழ்ச்சிகளைக் கொண்டு பல திறமைகள் பொதிந்து உங்களைத் தோற்றவன், இயலாதவன், கெட்டவன் என்று நம்ப வைப்பது போலி நம்பிக்கை என்னும் மாய குணம்தான். வாழ்க்கையில் சாதித்தவர்களெல்லாம் ... போலி நம்பிக்கைகளைத் தாண்டித் தங்களுடைய உண்மையான சக்தியையும், சாதிப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் உணர்ந்த, உண்மையாக நம்பிச் செயல்பட்டு ஜெயித்தவர்கள்.
மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் இறைவன்
இறைவனைத் துதிக்கிறேன்! நமஸ்கரிக்கிறேன் ! புகழ்கிறேன் ! என்று ஆரம்பித்த மனிதன், 'இறைவன் ஒரு தனி நபர்' என்று நம்ப ஆரம்பித்ததை, வெம்பும் மனது பிடித்துக் கொண்டது, அதோடு நில்லாமல் இறைவனின் அன்பு, கருணை, கோபம் ஆகியவற்றைத்தான் ... 'அன்பு' என்று நினைக்கும் பாசம்; 'கருணை' என்று நினைக்கும் பட்சாதாபம்; 'கோபம்' என்று நினைக்கும் எரிச்சல் ஆகியவற்றோடு சேர்த்து குழப்பிக் கொண்டான். இந்தக் குழப்பம்தான் மனிதன் இறைவனை முழுமையாகப் புரிந்து கொள்ளத் தடையாக இருக்கிறது. இறைவன் என்றழைக்கப்படும் இறைசக்தியின் ... அன்பு, கருணை, கோபத்திற்கும் மனிதனின்... அன்பு, கருணை, கோபத்திற்கும் சம்பந்தமே இல்லை. மனிதன் தன் மனக் கண்ணோட்டத்தின்படி இறைவனைப் புரிந்துகொள்ள ஆரம்பித்த அன்றிலிருந்து இன்றுவரை இறைவனை தவறாகவே புரிந்து கொண்டிருக்கின்றான்.
பிரபஞ்ச செல்
அனைத்து மதங்களின், அனைத்து ஆன்மீகப் பாதைகளின் - எல்லா வழிபாட்டு முறைகளும், எல்லா தியான முறைகளும் உங்களுக்குள்ளிருக்கும் இறைசக்தியின் விஸ்வ ரூபத்தை உணரத்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இரண்டே இரண்டு வகை மனிதர்கள்தான் சாத்தியம். கடவுளான மனிதன். மனிதனாக இருக்கும் கடவுள். எங்கும், எதிலும் நிறைந்திருப்பவன் இறைவன் (GOD) - மெய்ஞான கூற்று. எங்கும் எதிலும் நிறைந்திருப்பது சக்தி
(Energy) - விஞ்ஞானக் கூற்று. படித்த எந்த ஒரு மனிதனாலும் இரண்டையும் பொருத்திப் பார்த்து முடிவுக்கு வருவது எளிது.
அதாவது, மெய்ஞ்ஞானம் 'சக்தியை'த் தான் இறைவன் என்று குறிப்பிடுகிறது. விஞ்ஞானம் 'இறைவனை'த் தான் சக்தி என்று குறிப்பிடுகிறது. கடவுள் என்ற அந்த ஒன்றுதான் பிரபஞ்சம் உருவாகக் காரணம் ! நீ உருவாகக் காரணம்! ஏன்! நீயும் பிரபஞ்சமும் இயங்குவதற்கே அதுதான் காரணம். விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் பார் -ஒரு செல்லுக்குள் பிரபஞ்சமே தெரியும் !
மெய்ஞானக் கண்ணோட்டத்தில் பார் -முழு பிரபஞ்சமே சாதாரண ஒரு செல்லாகத் தெரியும்!
மனிதன் மகானாக எது மாறவேண்டும்?
நாகரீகம் என்ற பெயரால் வெளிவேஷம் வேண்டுமானால் மாறலாம். மனிதன் மாறுவதற்கும் நாகரீகப் பூச்சுக்கும் சம்பந்தமில்லை. உடை, நடை, பாவனையில் சிறு மாற்றம் செய்வது எளிது. இந்த மாற்றத்தால் அதிகப்பட்சம் நமது வெளிவேஷம் மாறும். வெளிவேஷம் மாறுவது சாதாரண மனமாற்றத்தைத்தான் ஏற்படுத்தும். குண மாற்றத்தை ஏற்படுத்தாது. மனமாற்றத்தால் சில சூழ்நிலைகளை எளிதாகச் சிந்திக்க வழி கற்றுக் கொள்ளலாம். இதில் வேடிக்கை என்னவென்றால் வாழ்க்கை சூழ்நிலைகளைத்தான் பரிசாகத் தரும். அதனால்தான் பலர் நாகரீகம், சௌகரியம், சொத்து இவற்றின் உச்சிக்குப் போன பின்கூட, நிம்மதியின் வாசல் கதவைக் கூடத் திறக்க முடியாமல் தவிக்கிறார்கள்.
கணம் பூரணமாக மாறினால் மனிதனே மலர்ந்து விடுவான். மலர்ந்தவனுக்கு எந்தச் சூழ்நிலையையும் எளிதாக அணுகும் பக்குவம் கிடைத்துவிடும்.
பீதி
என்சைக்ளோபீடியாவில் Phobia (பீதி) என்று இருக்கும் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் மலைத்துப் போவீர்கள். எத்தனை வகையான பீதிகள் ... Acrophobia (உயரத்திலிருந்து பார்த்தால் பீதி) முதல் Zoophobia (விலங்குகளைப் பார்த்தால் பீதி) வரை மனிதர்களை விதம் விதமாக வாட்டும் இந்தப் பீதி பற்றி ஒரு சுவராஸ்யமான ஆராய்ச்சி.
பய உணர்வு அதிகமாகி சுயகட்டுப்பாட்டை இழந்து செயல்பட ஆரம்பித்தால் அதற்கு பெயர்தான் பீதி.
பய உணர்வு சரியாகப் பயன்படுத்தப்படாமல், மந்தமாக ஒருவர் செயல்பட்டால் அதற்குப் பெயர்தான் அசட்டுத் தைரியம். 'பீதி, அசட்டுத் தைரியம் என்பதெல்லாம் ஏதோ சில மனிதரிடம் இருக்கக் கூடியது. எனக்கல்ல!' - என்று நீங்கள் நினைத்தால் இந்தக் கட்டுரை நிச்சயம் உங்களுக்குத்தான்... 'மரண அனுபவத்தை வாழும் போதே தாண்டிய ஞானிகளைத் தவிர்த்து மற்ற எல்லா மனிதர்களையும் ஏதோ ஒருவகை பீதி அல்லது அசட்டுத் தைரியம் பிடித்திருக்கும்' - இது வேத உண்மை. 'கிட்டத்தட்ட எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு வகை பீதியால் (Phobia) பீடிக்கப் பட்டிருக்கிறார்கள்'.
-இது மனோ ஆரோச்சியாளர்களின் முடிவானக் கருத்து. உங்களின் பீதி எதுவாக இருந்தாலும் அதற்கு தீர்வு அடுத்த பக்கத்தில் உள்ளது.
Personality தெளிவாக வழி!
இது நல்லது, இது கெட்டது / இது தவறு, இது சரி. - என்பது ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் வேறுபடும். இளைஞர்களுக்கு இது சரி, இது சந்தோஷம் என்று தோன்றும் பல விஷயங்கள், முதியவர்கள் பலருக்கு தவறாகவும், தேவையில்லாத விஷயமாகவும் தோன்றும். ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் பார்க்கும் போது நல்லவர்கள்தான். மற்றவர்களின் நல்ல குணங்கள் பளிச் என்று தெரியாமல்,
மற்றவரின் கெட்ட குணங்கள் முதலில் ஒருவருக்குத் தெரிகிறது என்றால், பார்க்கும் பார்வையில்தான் தவறு இருக்கும்.
நீங்கள் நல்லவர், அருமையானவர் என்ற உணர்வு உங்களுக்குத் தெளிவாக இருந்தால் மற்றவர்களின் நல்ல குணங்கள்தான் எடுத்த எடுப்பில் பளிச் என்று தெரியும். மற்றவர்களிடம் கண்டுபிடிக்கும் தவறுகளில் 90%-க்கும் மேல் நம்மிடம் இருக்கும் தவறுகள்தான் இருக்கும். ஒரு சிறு காகிதத்தை எடுத்து மற்றவர்களிடம் நீங்கள் கண்டுபிடிக்கும்
தவறுகளை எழுதுங்கள். தயாராகும் பட்டியலை நன்கு கவனித்துப் பாருங்கள் மேலே சொன்ன உண்மை புரியும்!
நம்முடைய பல குறைகள் மனத்திற்குள் மிக ஆழமாகச் சென்று விட்டன. அதனால், சிலருக்கு இதை ஏற்றுக் கொள்ளக் கடினமாக இருக்கலாம். ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் 'உங்கள் குறைகளைத்தான் மற்றவர்களிடம் காண்கிறீர்கள்' என்பது உண்மை.
பட்டியலிலிருந்து கண்டுபிடித்த தவறுகளைத் திருத்திக்கொண்டால் போதும் ! உங்கள் பர்ஸனாலிட்டி மிகவும் தெளிவாகி விடும் !
அதன் பின்தான் மற்றவர்கள் எவ்வளவு நல்லவர்கள் என்ற உண்மையும் தெரிய வரும். அதன் பின்னே கொஞ்சம், கொஞ்சமாக மற்றவர்கள் எவ்வளவு நல்லவர்கள், நாம் எவ்வளவு தவறாக அவர்களைப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்று புரிய ஆரம்பிக்கும்.
உங்கள் உலகம்
உங்கள் மனதைப் பொறுத்து எண்ணங்கள் அமையும் ! உங்கள் எண்ணங்களைப் பொறுத்து வாழ்க்கை அமையும் ! ** உங்கள் வாழ்க்கையைப் பொறுத்து வெற்றி அமையும் ! உங்கள் வெற்றியைப் பொறுத்து ஆரோக்கியம் அமையும் ! உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்து மனம் அமையும் ! - புரிகிறதா... இரு ஒரு சக்கரம். மக்கள் எப்போதும் நம்மை
பிரதிபலிக்கும் கண்ணாடிகளாகவே செயல்படுகிறார்கள்.
நாம் மரியாதை கொடுத்தால், மரியாதை கிடைக்கும். சீண்டினால் சீண்டப்படுவோம். அன்பு செலுத்தினால், அன்பு கிடைக்கும். எப்போதும் எரிச்சலும் கோபமுமாக இருந்தால் உலகமே தவறு செய்வதாகவும், ஒவ்வொருவரும் திட்டம் போட்டு எரிச்சல்படுவதாகவும் தோன்றும்.
ஒருவருடைய உலகத்திற்கும் மற்றவருடைய உலகத்திற்கும் சம்பந்தமே இல்லை. அவரவர் கருத்து கண்ணோட்டம்.
மனம் பொறுத்து உலகம் விதவிதமாக மாறி மாறித் தெரியும்.
உண்மையில் எல்லோரும் இயல்பானவர்கள், அருமையானவர்கள், நீங்கள் உலகத்தை அணுகும் விதத்தைப் பொறுத்து உலகம் அணுகும் விதத்தைப் பொறுத்து உலகம் மாறுபடும். உலகம் அருமையானது... உணர ஆரம்பியுங்கள். உண்மை புரியும் !
அத்தனைக்கும் ஆசைப்படலாமா?
கவலையை எதிர்கொள்ளும் துணிவு இல்லாதவன் - எல்லாவற்றிற்கும் ஆசைப்பட்டால் அவன் கதி! அதோ கதிதான்! (காரணம் நிறைவேறாத ஆசை, கவலையாக மாறும் ! )
எல்லாவற்றிற்கும் ஆசைப்படுவது மனித இயல்புதான். மனமும் அதைத்தான் தூண்டும். ஆனால், ஆசைப்படும் முன் யோசியுங்கள், முடியா விட்டால் பின்னாவது யோசியுங்கள். - இது சாத்தியமா ? இல்லையா ? ஆசைப்படுவது எளிது. ஆனால் அது சாத்தியம் இல்லை என்று தெரிந்து உதறித் தள்ளுவது கடினம்.
எனவே ஆசைப்படும் முன் யோசிப்பது புத்திசாலித்தனம். எளிதும் கூட.
எனக்கு ஆசைப்படவும் தெரியும்! சாத்தியமில்லை, தேவையில்லை என்று தெரிந்தால் அதை உதறவும் தெரியும்! கவலையைப் பற்றி எனக்கு கவலையில்லை. - இந்த அளவுக்கு வாழ்க்கையை அணுகும் பக்குவம் பெற்றிருந்தால் நீங்கள் எதன் மீதும் ஆசைப்படலாம் தவறில்லை. அத்தனைக்கும் ஆசைப்படுங்கள். அது சரியே.
நியாயமில்லாத கொள்கை
பற்றுதல் கண்ணை மறைக்கும். நல்லவர்களைக் கெட்டவர்களாகக் காட்டும். ஏன்! கேடு செய்பவர்களைக்கூட நல்லவர்களாகக் காட்டும். நியாயம் அநியாயம் பற்றிய நியாயமற்ற மனஅமைப்பு பெற்றிருந்தால்... நியாயமான உலக வாழ்வில் அனுபவிக்க வேண்டிய சந்தோஷங்களை அநியாயமாக இழந்து விடுவீர்கள். யோசித்து கொள்ளுங்கள். கனக்கொரு சட்டம். ஊருக்கொரு சட்டம் என்று வாழ்ந்தால் ... கன்றாவியை கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டி இருக்கும்.
கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டியதை கன்றாவி என்று ஒதுக்கி, இழக்க நேரிடும்.
பற்று இருக்கும் அளவைப் பொறுத்து உலகமும், மனிதர்களும் பிளவுபட்டுத் தெரிவார்கள். வாழ்க்கையை முழுழுமையாக அகன் எல்லா பரிமாணங்களிலும் வாழ முடியாத தவிப்பு ஏற்படும். நியாயம், அநியாயம் பற்றிய உங்கள் அபிப்ராயங்களை ஆராய்ந்து பாருங்கள். அநியாயமாக 'நியாயம், அநியாயம்' பற்றி வைத்திருக்கும் நியாயமில்லாத கொள்கைகளைத் தூக்கி எறியுங்கள். உங்கள் கண்களை மறைத்துக் கொண்டிருந்தது அகன்று விடும்.
கவலையின் விதை ஆசை
உங்கள் கவலையின் அளவு உங்கள் ஆசையின் அளவே. எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கவலைகள் ? என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் ... உங்கள் கவலைகளுக்குக் காரணம் உங்கள் ஆசைகளே! ஆசைகள் குறைந்தால், கவலைகளும் குறைந்து விடும்.
உங்கள் கவலைகளை ... உங்கள் ஆசைகள் மூலம் நீங்கள்தான் தேர்வு செய்கிறீர்கள்.
என் கவலைக்கு நான்தான் பொறுப்பு என்று உணர்ந்தால், ஆசை சரி. ஆசைப்படுங்கள் தவறில்லை. இந்த உண்மையை முழுழுமையாகப் புரிந்து கொண்டாலே போதும், நிம்மதியான வாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைத்து விடலாம்.
எங்கே நிம்மதி? (கேள்வியல்ல - வேள்வி)
பாதுகாப்பின்மையை (Insecurity) எதிர்த்தே வாழுப் பழகியதின் பக்க விளைவாக மனிதனைத் தொற்றிக் கொண்ட குணம்தான் 'பற்றுதல்'. நிஜப்பற்று நிம்மதியையும், சந்தோஷத்தையும் தரும். மனப்பற்று நிம்மதியையும், சந்தோஷத்தையும் திருடும். மனிதர்களை உறவு என்ற பெயரில் உடைமையாக்க முயற்சிப்பது - மனப் பற்று.
மனிதர்களை உறவு என்ற வாய்ப்பால் உயர்த்தித் தன்னுயிர் போலப் பாவிப்பது நிஜப்பற்று
மனப்பற்று, நிஜப்பற்று என்ற இரண்டையும் தாண்டியது பற்றற்ற நிலை. பற்றற்ற நிலையில்தான் தன்னுள்ளும். தன்னைச் சுற்றி இருப்பவர்களின் உள்ளும், தெய்வம் இருப்பதைப் பார்க்க முடியும். உண்மையான நிம்தி அடைய முடியும்
நிஜப்பற்று: உண்மையான ஈடுபாட்டோடு, உங்களுடைய பொருள்களை முழுமுமையாக அனுபவிப்பது, சொந்தங்கள் மற்றும் நண்பர்களை முழுமையாகப் புரிந்து கொண்டு அவர்களோடு இனிமையான அன்பும், உறவும் கொண்டிருப்பது, என தன் வாழ்வை முழுமுமையாக வாழ்வதுதான் நிஜப்பற்று.
மனப்பற்று ; உண்மையான ஈடுபாடில்லாமல், பெருமைக்காக, புகழுக்காக ஆடம்பரமாக உங்களுடைய பொருள்களை விரையம் செய்வது, பொறுமையின்மையால், வெறுப்பால், சலிப்பால், கா்வத்தால் உங்களுடைய சொந்தங்களையும், நண்பர்களையும் முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் கடமைக்காக வாழ்வதுதான் மனப் பற்று. இது மனநிம்மதியைக் குலைத்து விடும். உங்கள் நிம்மதியைக் குலைப்பது உங்கள் பற்றுதல்தான்.
மன அறுவைச் சிகிச்சை
பெரும்பாலானோர் அவர்களிடம் மிகப் பெரும் குறைகளையும், தவறுகளையும், உணர்ச்சிக் கட்டுபாடின்மையையும், பொய்மையையும் வைத்துக் கொண்டு, அடுத்தவர்களைக் கைகாட்டியே வாழ்க்கையைக் கடத்துகிறார்கள். எனக்கு மட்டும் நல்ல தாய் தந்தை அமைந்திருந்தால் ... இல்லை, நல்ல மனைவி அமைந்திருந்தால் ... நல்ல பிள்ளைகள் பிறந்திருந்தால் ... நல்ல நண்பர்கள் கிடைத்திருந்தால் ...
நல்ல வேலை, முதலாளி கிடைத்திருந்தால்,
என்று அடுத்தவர்கள் மீது பழியைப் போட்டு நமது குறைகளை அப்படியே வைத்துக்கொண்டிருக்கிறோம்.
உங்கள் குறைகள் உங்கள் மனதில் இருக்கும் கட்டிகள். உங்கள் குறையை ஒத்துக் கொள்வது மனதில் இருக்கும் கட்டியை அறுவை சிகிச்சை செய்வதற்குச் சமம்.
குறைகளை ஒத்துக் கொள்வது கொஞ்சம் கடினம்தான். அறுவை சிகிச்சை வலிக்கத்தான் செய்யும். ஆனால் வேறு வழி இல்லை.
உங்களின் பதவி, அந்தஸ்து, பெயர், புகழ், அதிகாரம் போன்றவற்றால் தங்கக் கவசங்களைச் செய்து (கட்டி வெளியே தெரியாமல்) உங்கள் குறைகள் வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம். இதனால் என்ன பயன் ? கட்டி இன்னும் கொஞ்கம் சீழ் பிடிக்கும். உங்கள் குறைகள் இன்னும் கொஞ்சம் மோசமாகும். உங்களின் மனநிலையைப் பொறுத்துதான் உங்கள் உடல் ஆரோக்கியம் அமையும். மனதின் குறைகள் நாளுக்கு நாள் சீழ் கோர்த்துக் கொண்டே சென்றால், உடலும் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டேதான் இருக்கும். மனதில் அறுவை சிகிச்சை நிகழ்ந்தால் எல்லாம் சரியாகிவிடும். அறுவை சிகிச்சை நிகழ ... 1. மனக் கட்டிகள் கண்டறியப்பட வேண்டும். 2. அவற்றை வெட்டி எறிய தைரியம் வேண்டும். 3. அவை வேரோடு வெட்டி எறியப்படவேண்டும். நீங்கள் தயாரா ?
மனமென்னும் வேலைக்காரன்
-
மனிதன் மனிதனாகவே வாழ்வதற்காக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMவால் பரிசாக அளிக்கப்பட்ட ஒரு கட்டுப்பாட்டு அமைப்பே மனம்.
-
மனிதன் என்ற எஜமானன் ஆனந்தமாக வாழ், அவன் தேவைகளையும், விருப்பங்களையும் பூர்த்தி செய்துகொள்ள உதவும் ஒரு வேலையாள்தான் மனம்.
-
மனிதனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்து மனம் மனிதனைக் கட்டுப்படுத்தும் அமைப்பாக மாறிவிட்டதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம்.
-
எஜமானன் அசந்த நேரத்தில், வேலைக்காரன் எஜமானன் போலச் செயல்பட்டால் அந்தச் சூழ்நிலை எப்படியிருக்கும் ?
-
பக்குவப்படாத வேலைக்காரன் எஜமானாக மாறுவது குரங்கைப் பிடித்துச் சிம்மாசனத்தில் உட்கார வைத்தது போல் இருக்கும். அதனால்தான் ஞானிகள் எல்லோரும் மனதை குரங்கோடு ஒப்பிட்டுக் 'குரங்கு மனம்' என்று அழைக்கிறார்கள். சிம்மாசனத்திலிருந்து குரங்கு அகற்றப்படாதவரை பிரச்சினைகள், கஷ்டங்கள் தொடரத்தான் செய்யும்.
-
மனம் பல பிரச்சினைகளைப் பல போலிகளை உருவாக்கிக் காண்பிக்கும் தன்மை கொண்டது. அவற்றில் ஒன்றுதான் மாயை !
-
மாயை என்பது இல்லாத ஒன்றை இருப்பது போலக் காண்பிப்பது. இல்லாத ஒன்றை இருப்பதுபோல நினைத்து அதனால் அதிகம் பயப்படுவது அல்லது அதற்காக அதிகம் ஆசைப்படுவது இரண்டுமே மாயையின் வெளிப்பாடுகள்.
-
மனமே மாயை ! மனதின் மாயை பேயைவிட விசித்திரமானது!
-
நிஜத்தில் இந்தப் பதவி, பணம், பொருள் எல்லாம் நீர்க்குமிழி போல சில காலம் மட்டுமே உங்களிடம் இருக்கக் கூடியவை.
-
இந்த உண்மையைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் ... மனதை நீங்கள் கட்டுப்படுத்துவீர்கள் மனம் உங்களை கட்டுப்படுத்தாது!
என்ன தெரியும்? கடவுள் பற்றி…
- க… ட… வு… ள்… இந்த நான்கு எழுத்துக்குள் சுருங்கிப்போகும் அளவுக்கு சிறுசா கடவுள் ?
- கடவுள் என்ற வார்த்தையை தெரிந்து கொண்டதாலேயே என்ன தெரியும் கடவுள் பற்றி? கடவுள் இருக்கிறார் கடவுள் இல்லை.
- மேற்கண்ட கேள்விகள் முதலில் ஆத்திகவாதிகளுக்கும், பின் நாதீகவாதிகளுக்கும் கேட்கப்படுகிறது.
ஒரு தியானிக்கு எது தேவை?
-
வெறும் உடலால் மாத்திரம் தியானம் செய்வது ... ஒரு நல்ல உடற்பயிற்சி. அவ்வளவே. உடலோடு சேர்ந்து மனதையும் தியானத்தில் ஈடுபடுத்துவது ஒரு நல்ல சடங்கு. அதற்கு மேல் ஆகாது.
-
உடல், மனம், உயிர் ஆகிய மூன்றையும் முழுமையாக தியான முறையில் ஈடுபடுத்தினால்தான் அது தியானம்.
-
சிரத்தையில்லாதவனால் தியானத்தின் சிறந்த பலன்களைப் பெறவே முடியாது.
-
ஆழ்ந்த சிரத்தையைச் செய்யும் செயலிலெல்லாம் கொண்டு வரக் கற்றுக் கொண்டுவிட்டால், செய்யும் செயலெல்லாம் தியானமாகும்.
அறிவு, அதிகாரம், திருப்தி
- சாதனைக்குப் பிறகு சொர்க்க சுகம் அடையலாம் என்ற கனவு பொய்த்து நரக வேதனையை அடைய நேரிடும்போதுதான் வாழ்வே மாயமாகத் தெரிகிறது. எல்லாவற்றின் மேலும் வெறுப்பு வருகிறது.
- அறிவு,
அதிகாரம்,
திருப்தி
-
இந்த மூன்று துறைகளில் எதுவேண்டும் என்று தேர்வு செய்யுங்கள். சாதிக்க ஆரம்பியுங்கள்.
-
நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை -ஆனந்தத்தை அடைய முடியும். திருப்தி பெற முடியும்.
-
அறிவின் சிகரத்தை அடைய அதிகாரத்தின் உச்சியைத்தொட - அதற்கே உரிய உழைப்பைக் கொடுத்தாக வேண்டும்.
-
ஆனந்த அனுபவமான திருப்தியில் - அதற்கே உரிய உழைப்பான தியானத்தையும், புரிந்து கொள்ளுதலையும் செய்தே ஆகவேண்டும்.
-
தியானமும், ஞானமும் கைகூடினால் நீங்கள் எங்கு இருந்தாலும், எந்த சாதனைச் செய்தாலும் சந்தோஷமாக இருப்பீர்கள்.
ஆனந்தம் பற்றிய சில உண்மைகள்
-
ஆனந்தம் என்பது பலருக்குத் தெரியாத ஒன்று. தெரிந்த சிலருக்கு அது புரியாத ஒன்று. அனுபவித்து உணர்ந்த வெகு சிலருக்கு அது விளக்க முடியாத ஒன்று.
-
ஆனந்தத்தை அனுபவிக்கலாம். அதையும் தாண்டி ...
-
'ஆனந்தம் இங்கேதான் இருக்கிறது; ஆனந்தத்தை இப்படிக் கூட அடையலாம், இதுதான் ஆனந்தம்' என்று சுட்டிக் காட்ட முடியும். ஆனால் ஆனந்தத்தை விளக்க முடியாது.
-
எல்லா ஞானிகளின்... ஞான உபதேசங்களும், தியான முறைகளும் அந்த ஆனந்தக் கடலை காட்டத்தான்.
-
தனி மனிதன் தன் தனி வாழ்வில் தனக்குள்ளேயே ஆழ்ந்து கண்டுபிடிக்க வேண்டிய ஒன்றுதான் இந்த ஆனந்தம்.
அங்கீகாரத்தை வெளியே தேடாதீர்கள்
-
அங்கீகார உணர்வு உற்சாக மனதின் அங்கஹீனம்
-
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் உற்சாகமான மனிதனுக்கு வெளி அங்கீகாரம் தேவையில்லை. அங்கீகாரத்தை வெளியில் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவனால் உற்சாகமாக இருக்க முடியாது.
-
நீங்கள் நல்லவர் ? நீங்கள் அருமையானவர் ? சில குறைகள் இருந்தாலும் சீக்கிரம் மாற்றிக்கொள்ளும் பக்குவம் பெற்றவர் நீங்கள் என்பது போன்ற அங்கீகாரங்களை மற்றவர்களிடம் எதிர்பார்க்காதீர்கள்.
-
நம்மை நாம் அங்கீகரித்துக் கொள்ள முடியாமைதான் - மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக நம்மை ஏங்க வைக்கும்.
-
நாம் யார், எப்படிப்பட்டவர்கள் என்று நாம் நினைப்பதைவிட மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதற்குத்தான் அதிக மரியாதை கொடுக்கிறோம். இது உங்களை நீங்களே அவமரியாதை செய்வதற்குச் சமம்.
-
உங்களை நீங்களே அங்கீகரிக்க ஆரம்பியுங்கள். பிரச்சினை தீர்ந்தது.
கனவு! கற்பனை! நிஜம்!
- வாழ்க்கையை பற்றிய நமது கற்பனைக்கும், நிஜ வாழ்க்கைக்கும் இடைப்பட்ட பொருத்தமின்மையே வாழ்க்கையை வருத்தமாக்குகிறது.
- கற்பனை என்ற மனத்திரைப்படத்தை வாழ்க்கையில் நிஜமாக்க முயற்சி செய்யாமல், வெறும் மனத்திரைப் படத்தையே விதம், விதமாகப் பார்த்து சிறு சிறு கிளர்ச்சி அடைபவர்கள்தான் - உயிர்ச் சக்தியை வீணடிக்கும் 'மகா பாவிகள்'.
- எதிர்காலத்தில் ஒருவன் எப்படி வாழ வேண்டும் ? எப்படிப்பட்ட மனைவி வாழ்க்கை, குடும்பம் அமைய வேண்டும் ? என்னென்ன
சொத்து, சகம், சௌகரியம் வேண்டும் ? என்று எதிர்கால தேவைக்குத் தகுந்தபடி தன்னை மாற்றிக் கொள்வதற்கு உதவியாக, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMவால் மனிதனுக்குப் பரிசாகத் தரப்பட்ட 'மனதின் ஒரு செயல்பாடு'தான் கற்பனை.
கற்பனைகளை ... நிஜமாக்க முயல்பவனுக்கு, கற்பனை ஒரு உந்து சக்தி. கற்பனைகளை ... நிஜமாக்காமல், கற்பனை மேல் கற்பனை செய்து வாழ்வை வீணடிப்பவனுக்குக் கற்பனை ஒரு மந்த சக்தி.
-
எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் கற்பனை ஓர் அற்புதம்! நிகழ் காலத்தை வீணடிக்கத் துணைபோகும் கற்பனை அற்பம்!
-
கற்பனை அற்புதமா ? அற்பமா ?
-
என்பது கற்பனைகளை நீங்கள் நிஜமாக்குவதைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.
-
கற்பனைச் சக்தி - நீங்கள் உங்களின் காரியங்களை திட்டமிட்டு சரியாக முடிப்பதற்காகக் கடவுளால் வழங்கப் பட்ட ஓர் அற்புதம்.
-
கற்பனைகள் நிஜமாக்குவதற்காக என்றால் கற்பனை செய்யுங்கள். நிச்சயமாக கற்பனை சரியே!
அறிவு அனுபவம் அனுபூதி
- அறிவு : ஒவ்வொரு நெருப்பைத் தொட்ட பிறகு, அது சுடும்! என்று அறிந்து கொள்வது அறிவு.
- அனுபவம் : ஒரே ஒரு முறை தீயைத் தொட்டு, அது சுடுகிறது என்று தெரிந்தவுடன், எல்லாத் தீயும் சுடும் என்று தெரிந்து கொள்வது அனுபவம்.
- அனுபூதி :
ஒருவர் தீயை தீண்டியதும் வேதனைப் படுவதிலிருந்தே 'தீ சுடும்' என்ற உண்மையை கிரகித்துக் கொள்வது அனுபூதி.
-
வாழ்வின் ஒவ்வொரு துன்பதுக்கத்திலும் விழுந்து விழுந்து எழுந்து வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொள்வது அறிவு.
-
அறிவாளி செய்வது!
-
நம் வாழ்வின் ஒரிரு துன்பதுக்கங்களை முழுமையாக எதிர்கொள்வதின் மூலமாக வாழ்க்கையைப் புரிந்துகொள்வது அனுபவம். - புத்திசாலி செய்வது!
-
உலகில் நம் கண்ணெதிரே மனிதர்கள் படும் துன்பங்களைப் புத்திசாலித்தனமாக கவனித்துப் பார்ப்பதினாலேயே வாழ்க்கையை முழுழுமையாகப் புரிந்துகொள்வது அனுபூதி. - ஆன்மீகவாதி செய்வது!
-
நீங்கள்...
அறிவாளியா ? புத்திசாலியா ? ஆன்மீகவாதியா ?
எங்கே இருக்கிறார் கடவுள்?
- இறைவன் எங்கும் நிறைந்திருக்கின்றான் என்றால், அவன் இல்லாத இடம் என்று ஒரு இடம், ஏன் ஒரு அணுகூட இருக்க முடியாது.
- இறைவன் சக்தி வடிவமானவன், இறைவன் உருவமற்றவன் என்பது ஆன்மீகத்தின் அடிப்படை உண்மை. இறைவன் ஒரு தனி ஆளாக இருக்க முடியாது. இறை சக்திக்கு உருவம் கொடுப்பது மதங்கள் தான் - இது ஒரு நல்ல துவக்கம். முடிவு அல்ல.
- இறைவன், சக்தி வடிவில் இருக்கிறான் என்பதற்கு என்ன ஆதாரம் ?
Part 6: Lines of Wisdom Which Makes You Beautiful - Part 2_Tamil_part_6.md
இதற்குக் குவாண்டம் பிசிக்ஸ் (Quantum Physics) அருமையான விளக்கம் சொல்கிறது. ஒவ்வொரு அணுவிற்குள்ளும் 99.99 சதவிகிதம் வெற்றிடம்தான் இருக்கிறது. அந்த வெற்றிடத்தில் தொடர்ந்து அதிர்வுகள் இருந்துகொண்டே இருக்கின்றன. அந்த அதிர்வுகள்தான் சக்தியாக வெளிப்படுகின்றன.
- ஒவ்வொரு அணுவும் ஒரு சக்தி மயம். ஒவ்வொரு பொருளும் சக்தி மயம். இன்றைய விஞ்ஞானம் 'அனைத்தும் சக்தியால் நிறைந்திருக்கிறது' என்று கூறுகிறது.
- இதைத்தான் இறைவன் சக்தி வடிவானவன் என்றும், 'அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த' என்றும் சொன்னார்கள் நம்முடைய
ஞானிகள்.
-
இது மெய்ஞானம்.
-
சக்தி அழிவில்லாதது ; ஒரு சக்தி இன்னொரு சக்தியாக மாறும்.
-
பேட்டரியில் சேமிக்கப்பட்ட மின்சாரம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மறைந்துவிடும். அதன் பிறகு இரும்புப் பட்டை, கார்பன் துண்டுகளில் ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பிரித்து வேறு ஒரு பொருளாகவோ, அல்லது பேட்டரியாகவோ மாறிவிடும்.
-
அது போலத்தான் மனித உயிர், கருவான பின் ஒரு குறிப்பிட்ட காலம்வரை மனிதனாக இருந்துவிட்டு, பின்பு காற்றில் கலந்துவிடுகிறது.
-
காற்றில் கலந்த உயிர் மீண்டும் மனிதனாக உயிர் பெறுகிறது. இப்படி சக்தி மாறி, மாறித் தோன்றிக்கொண்டே இருக்கிறது.
-
பிரபஞ்ச இயக்கத்தில், பிரபஞ்ச கால அட்டவணையில் மனிதத் தோற்றம் ஒரு கண நேர நீர்க்குமிழி போன்றது.
-
'இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்' என்று ஞானிகள் சொன்னது இதைத்தான்.
-
மனிதனிலும், தூணிலும், துரும்பிலும் அடிப்படையாக இருப்பது சக்தியே.
-
சக்தியே எங்கும் நிறைந்திருக்கிறது. அந்தச் சக்திதான் இறைவன்.
-
ஒரு சக்தி இன்னொரு சக்தியாக மாறி உருவமெடுத்தாலும் சக்தி எப்போதும் நிலைத்திருக்கிறது.
-
நமது உடல்கூட நமது உயிர்ச் சக்தியின் ஒரு போர்வை மட்டுமே. கடவுள் ஒவ்வொரு செல்லிலும் இருக்கிறான். ஒவ்வொரு அணுவிலும் இருக்கிறான்.
ஏன் பொறுத்துக் கொள்ள முடியவில்லை?
- மிருகங்களுக்குப் பொறுத்துக் கொள்வது எப்படி? என்பது தெரியாது. பொறுத்துக் கொள்வது என்பது மனிதாகப் பிறந்த ஒவ்வொருவரும் பெற்றிருக்க வேண்டிய பண்பு.
- மனிதனின் மனவளர்ச்சியின் ஆரம்பப் படிக்கட்டுகளில் ஒன்றுதான் இந்த பொறுத்துக் கொள்ளும் தன்மை (Tolerance).
- பொறுத்துக் கொள்ள முடியாமல் போவது மனிதனின் பண்பு அல்ல. (மனம் என்ற ஒன்றை ஆறாவது அறிவாகப் பெற்றதால்தான் மனிதன் ஐந்தறிவு கொண்ட மிருகத்திலிருந்து மாறி மனிதன் என்று அழைக்கப்படுகிறான்).
மன வளர்ச்சி சரியான முறையில் இல்லை என்பதற்கான அடையாளம்தான் பொறுத்துக்கொள்ள முடியாமை.
-
மனிதன் தன் பொறுத்துக்கொள்ளுக் தன்மையை இழக்கும் ஒவ்வொரு நிமிடமும் மிருகமாகிறான்.
-
பொறுத்துக்கொள்ளும் தன்மை என்பது ஒரு தனிப்பட்ட மனிதனின் புரிந்துக்கொள்ளும் தன்மையைப் பொறுத்தது.
-
நான் பொறுத்துக் கொள்ளும் தன்மை என்று குறிப்பிடுவது ... யார் எது செய்தாலும் அதற்கு எந்தவித பதில் உணர்வும் காட்டாமல் தன் உணர்வுகளை அடக்கிக் கொள்வது - என்று தயவு செய்து மாற்றிப்புரிந்து கொண்டு விடாதீர்கள்.
-
பொறுத்துக் கொள்ளும் தன்மை என்பது உணர்ச்சிகளை அடக்குவது அல்ல. அது உணர்ச்சிப் பக்குவ நிலை.
-
ஒவ்வொரு முறையும் வெளியில் நடக்கும் காரியங்களைப் பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல் உணர்ச்சிக் கொந்தளிப்பு நிகழும்போது ஏன் இப்படி தத்தளிக்கிறேன் ? ஏன் ? ஏன் ? ஏன் ? இப்படி என்று உள்முகமாக திரும்பிப் பார்க்க ஆரம்பியுங்கள்.
-
ஏன் ? ... ஏன் ? ... ஏன் ? ... என்று கேட்பதோடு நின்று விடாமல் - ஏன் இப்படி நீங்கள் பொறுமையை இழக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ள ஆரம்பித்ததால், வெளியில் நடக்கும் எரிச்சலூட்டும் காரியங்களின் காரண விளக்கம் புரிய ஆரம்பிக்கும்.
-
உங்களின் உள்ளுக்குள் நடக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் குறைய ஆரம்பிக்கும்.
-
பொறுத்துக் கொள்ளும் தன்மையின் மகிமை புரியப்புரிய Tolerance அதிகமாக ஆரம்பிக்கும். புரிந்து கொள்ள ஆரம்பியுங்கள்!
தெளிவற்றத் தெளிவு
-
நலிவடைந்த மனதைப் பெற்றவன் வாழ்வின் எதிர்பாராத திடீர், திடீர் திருப்பங்களில் புகுந்து வெளிவருவது கடினம். நலிவடைந்த மனதுதான் தெளிவற்றத் தெளிவு.
-
வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளில் புகுந்து வெளிவர ஒவ்வொருவருக்கும் தெளிவு என்பது மிக அத்தியாவசியமான தேவைகளில் ஒன்று.
-
தெளிவு மலிவானதல்ல ஒரு சில புத்தகங்களைப் படித்தவுடன் கிடைப்பதற்கு ! பல தனி மனித அனுபவங்களின் தொகுப்புதான் தெளிவை உண்டு பண்ணும்.
-
கஷ்டத்திற்கு தீர்வு - கஷ்டப்படுவதல்ல. துக்கத்திற்கு தீர்வு - துக்கப்படுவதல்ல.
-
தெளிவாக இருப்பதாக நாம் எல்லோரும் நம்பினாலும், நிஜத்தில் தெளிவு என்பது சிறுவயதிலிருந்து பல ஏமாற்றங்களால் கலப்படமாகி விட்ட 'தெளிவற்ற தெளிவாகத் தான்' இருக்கிறது.
-
தெளிவற்ற நிலையிலிருந்து -தெளிவது சுலபம் ! தெளிவற்ற தெளிவிலிருந்து -தெளிவது கடினம் !
-
புத்திசாலித்தனம் எறும்பளவு, கடுகளவு இருப்பதால்தான் வாழ்க்கையில் நாம்
தொடர்ந்து கஷ்டங்களையும், துக்கங்களையும், ஏமாற்றங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
- எறும்பளவு இருக்கும் புத்திசாலித்தனம் பெரிதாகப் பெரிதாக பல உண்மைகள் தெளிவாகப் புரிய ஆரம்பிக்கும்.
- கஷ்டங்களும், ஏமாற்றங்களும் வாழ்க்கைப் பாதையில் இருக்கும் சாதாரணக் கற்கள் என்பது புரியும். இதழ் இதழாகத் தெளிவு உங்களுக்குள் மலர ஆரம்பிக்கும்.
பழகப் பழகிக்கொள்ளுங்கள்
-
உலகையே நேசிக்கிறவன் என்று பெருமை பேசுவது வெகு சுலபம், உண்மையில் ஒரே ஒருவரை முழுமையாக நேசிப்பது -'இமாலய சாதனைக்குச்' சமம்.
-
மனிதர்களிடம் நீங்கள் பழகும் விதம் உங்களோடு நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் படம் பிடித்துக்காட்டும்.
-
தன் உடல், மனம், உயிரை அரை குறையாக மதிப்பவன் பிறரையும் அரை குறையாகத்தான் மதிப்பான்.
-
சாதாரணமாகப் பழகுகுவது என்பது அசாதாரணமான ஒரு விஷயமாக மாறி விட்டது, கொடுமையிலும் கொடுமை.
-
நான்! நான்! எனது! எனது! என்று குறுகிய வட்டத்தில் வாழும்வரை குதூகலம் என்பதைக் கற்பனை செய்வதுகூடக் கடினம்தான்.
-
இனிமையாகப் பழகப் பழகிக் கொள்ளுங்கள் உங்களை நீங்களே! சுமுகமான உறவுகள் சுலபமாகக் கிட்டிவிடும். தான் உண்டு, தன்வேலை உண்டு என்று இருப்பதற்கு மனிதனாகப் பிறக்க வேண்டிய அவசியமில்லை. மிருகங்கள் ஏற்கனவே அப்படித்தானிருக்கின்றன.
-
சுமுகமான மனித உறவுகளை வளர்த்துக் கொள்வது சுக-வாழ்விற்கான சுலபமான வழி.
-
இயல்பாக இருப்பதுதான் மனித இயல்பு.
-
சந்தோஷமாகப் பழகுவது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டால் சத்தம் போடும் மனிதர்களைக் கூட சாந்தப்படுத்திவிட முடியும்.
-
தர்மம் தனக்கும் மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை கொடுக்கக் கூடிய எல்லாச் செயல்களும் தா்மம்.
-
அதா்மம் - தனக்கும் மற்றவர்களுக்கும் கஷ்டத்தைக் கொடுக்கக் கூடிய எல்லா செயல்களும் அதா்மம்.
நம்பிக்கையை வளப்படுத்துங்கள்
-
எடுத்த காரியத்தில் நம்பிகைவை, உன் நம்பிக்கைக்கு வாழ்க்கைக் கை கொடுக்கும்.
-
'என் பெயர் XY/XX நான் ஒரு மனிதன், மனுஷி எனக்கென்று ஒரு குடும்பம், தொழில். என் வாழ்வின் நோக்கம் இதுதான். நான் உடல், மனஅளவில் நன்றாக இருக்கின்றேன்'.
-
சில நம்பிக்கைகளை அச்சாணியாக வைத்துத்தான் மனிதன் தெளிந்த மன நிலையில் வாழ்கிறான்.
-
சில நம்பிக்கைகளில் ஏற்படும் குளறுபடிகள்தான் மனிதனின் மனதைக்
குளறுபடியாக்கி பைத்தியம் ஆக்குகின்றன.
-
சில நம்பிக்கைகள் முழுவதுமாக மனதை விட்டு வெளியேறுவதும், உடலை விட்டு உயிர் பிரிவதும் ஒன்றாய் நிகழும்போது மனிதன் இறந்து விடுகிறான்.
-
உன் வாழ்க்கையின் தரம் உன் நம்பிக்கையின் தரத்தைப் பொறுத்தது.
-
நம்புங்கள் ... உங்களை நம்புங்கள்! எதை நீங்கள் நம்புகிறீர்களோ அதுவாகவே நீங்கள் மாறுவீர்கள்.
-
நம்பிக்கைதான் வாழ்க்கை! நம்பிக்கைதான் பிரச்சினை! நம்பிக்கைதான் தீர்வு !
-
மனிதன் காற்றைச் சுவாசிப்பதால் மட்டும் வாழ்வதில்லை ; நம்பிக்கையையும் சுவாசிப்பதால்தான் வாழ்கிறான்.
-
சுவாசிக்கும் காற்று மாசடைந்திருந்தால் நம் ஆரோக்கியம் நாசமடைவது உறுதி.
-
அதேபோல் நம்பிக்கை மாசடைந்திருந்தால் நம் வாழ்க்கை நாசம் அடைவது உறுதி.
-
'நான் மோசமானவன்' என்று கூறித் தாழ்வு மனப்பான்மையில் நோகவைப்பது அவனின் தவறான நம்பிக்கைதான்.
-
'நான் பெரியவன்' என்று நினைக்க வைத்து உயர்வு மனப்பான்மையால் நோக வைப்பதும் அவனைப் பற்றிய தவறான நம்பிக்கைதான்.
-
ஒருவனின் நம்பிக்கைதான் அவனின் மன, குண செயல்பாட்டின் அச்சாணி, நம்பிக்கை என்னும் அச்சாணியில் நெளிவு ஏற்படும் போதும் வாழ்க்கைச் சுக்கரத்தின் இயக்கம் பாதிக்கப்படும். மனிதன் தடுமாறுவான்.
-
நம்பிக்கைத் திடமானால் வாழ்க்கைத் திடமாகும். நம்பிக்கைச் சரியானதால் வாழ்வு சரியாகும்.
-
உங்கள் நம்பிக்கையின் தன்மையைப் பொறுத்துத்தான் அது வாழ்வா ? இல்லை பிரச்சனையா ? இல்லை தீர்வா ? என்று முடிவு செய்யப்படும். நம்பிக்கையை வளப்படுத்துங்கள் வாழ்வு வளமாகும் !
கா்மச் சக்கரம்
- பிறக்கும் முன் எப்படி இருந்தீர்கள் ? இறந்த பின் எப்படி இருப்பீர்கள் ?
- தாயின் கருப்பையில் பலகோடி செல்களால் ஆன ஒரு கட்டி போன்று உருவான கரு எப்போது தனி மனித உயிராக மாறுகிறது ? எப்போது அந்த கருவில் தனி உயிர் நுழைந்தது ?
- உயிர் என்பது என்ன? அது எப்படி இருக்கும் ? அதை சேகரிக்க முடியுமா ? ஏதேனும் ஒரு நவீன விஞ்ஞான முறையால் கண்டுபிடிக்க முடியுமா ?
- இந்த கேள்விக்கு அனுபவப்பூர்வமான பதில் கூற முடிந்தவனால் மாத்திரமே
'கர்மா' போன்ற குட்சுமமான விஷயங்களுக்கு அனுபவ விளக்கம் தர முடியும்.
- கருமை அடையாத ஆசைகளும், முழுமையாக அனுபவிக்கப்படாத அனுபவங்களும் சேர்ந்ததுதான் கர்மா அல்லது கர்மவினை என்றழைக்கப்படுகிறது.
- ஆசை - நிராசையால் உந்தப்பட்டு, நிராசையிலேயே முடிவாதால்தான் மீண்டும் மீண்டும் ஆசை உருவாகிறது.
- ஒவ்வொருவரும் அவர்கள் இறக்கும்போது அவர்கள் கொண்டிருக்கும் ஆசை, எண்ணங்கள், கோபங்கள், அனுபவங்களைப் பொறுத்து அவர்களது அடுத்த பிறவி நிர்ணயமாகிறது.
- மனிதர்கள் தொடர்ந்து விதம், விதவிதமாகப் பிறவி எடுத்தாலும் மூழு திருப்தியை அடையாவிட்டாலும் அரசனும், ஆண்டியும் ஒன்றே. இரண்டு வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
- உங்கள் ஒவ்வொருவருக்கும் கர்மச் சக்கரத்தை (ஆசை - நிராசை) நிறுத்தி ஆனந்த நிலை அடையும் கலையை மெல்லச் சொல்லிக் கொடுப்பதற்காகத்தான் அவதாரங்கள் அவ்வப்போது தோன்றுகிறார்கள்.
- கர்மவினைகள்... வாழ்க்கையின் போக்கை தீர்மானிக்கும், வாழ்க்கையையே தீர்மானிக்காது.
ஒரே செயல் இரண்டு மிகப் பெரிய நிகழ்வுகள்
-
மற்றவர்களைத் தொடர்ந்து பாராட்டுவது, – சரியான விஷயங்களுக்கு ! மற்றவர்களுக்குத் தொடர்ந்து விட்டுக் கொடுத்து வாழ்வது, – தேவையான விஷயங்களுக்கு! தொடர்ந்து சந்தோஷமாக இருப்பது, இருக்க முயற்சி செய்வது ... தொடர்ந்து மற்றவர்களைச் சந்தோஷமாக இருக்க வைக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வது ...
-
இவை எல்லாமே அகங்காரத்தை அழிக்க ஆரம்பிக்கும்.
மேற்கூறிய விஷயங்களை எப்போதாவது செய்வது அகங்காரத்தை வளர்க்க ஆரம்பிக்கும்.
- எப்போதாவது மேற்கூறியவற்றைச் செய்வது 99% அந்த தனிப்பட்ட நபரின் சுய லாபத்திற்காக மாத்திரமே இருக்கும். இதனால் நான், எனது, எனக்காக என்ற அக்கறை உணர்வுகள் இன்னும் வேர்விட்டு வளரும். காரணமில்லாமல் பலனில்லாமல் எந்த ஒரு காரியத்திலும், நீங்கள் ஈடுபட அகங்காரம் உங்களை அனுமதிக்காது. -மேற்கூறியவற்றைத் தொடர்ந்து செய்ய ஆரம்பிக்கும்போது... தடுமாற்றமோ, 'எனக்குத் தேவையில்லை' என்ற உணர்வோ, 'என்னால் முடியாது' என்ற எண்ணமோ தோன்றும்.
இது அகங்காரம் இருப்பதற்கான அடையாளம்!
- மற்றவர்களின் சுகத்தன்மையை (சந்தோஷத்தை) அதிகரிக்க நாம் செய்யும் செயல்கள், நம்முள்ளிருக்கும் அகங்காரத்தை அழித்து ஆனந்தத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.
- எல்லோரையும் சந்தோஷப்படுத்தி, நீங்களும் சந்தோஷமான இருந்து, ஆனந்தத்திற்குள் குதியுங்கள்!
கற்றுக்கொள்ள ... கற்றுக்கொள்ளுங்கள்
- வாழ்க்கையின் ஒவ்வொரு திடீர் திருப்பங்களும் நீங்கள் கற்றுக்கொண்டே ஆகவேண்டிய பாடங்களை வைத்துக் காத்துக்கொண்டு இருக்கிறது.
- வாழ்வின் ஒவ்வொரு சம்பவமும் – வேதம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு உயிரும் - குரு வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும்
- தியானம்
கற்றுக்கொள்ள வேண்டியதைக் கற்றுக்கொள்ள வேண்டிய நேரத்தில் கற்றுக்கொள்ளத் தவறியதே நம் கஷ்டங்களுக்கான காரணகர்த்தா.
- வாழ்வின் ஒவ்வொரு சம்பவமும் மிகப்பெரிய ரகசியங்கள் பொதிந்தது. மனிதர்களுக்கும், வாழ்க்கைக்கும் முழுமையாக மதிப்பளிக்க ஆரம்பிக்கும்போது மாத்திரமே இந்த உண்மை நமக்குத் தெரியவரும்.
- மனிதர்களுக்கும், வாழ்க்கைக்கும் மதிப்பளிக்கக் கற்றுக்கொள்வதுதான் கற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ளுதல்.
- முழுமையாக மதிக்கக் கற்றுக்கொண்ட பிறகு,
குரு, வேதம்,
தியானம்,
- ஆகிய அனைத்தும் உங்களைச் சுற்றியே இருப்பதை உணர்வீர்கள்.
- வாழ்வின் ரகசியங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். உலகையும், உறவுகளையும் மதிக்க ஆரம்பியுங்கள். உண்மைகள் தொடர்ந்து புலப்பட ஆரம்பிக்கும்.
காமம், காதல், நட்பு, அன்பு
-
ஒரு பூவைப் பார்த்து ஏற்படுவதும் ஈர்ப்புதான்!
-
ஒரு கலையைப் பார்த்து ரசிப்பதும் ஈர்ப்புதான்!
-
ஒரு மனித உடலைப் பார்த்து ஏற்படுவதும் ஈர்ப்புதான் !
-
ஒருவர் குணத்தைப் பார்த்த உடன் ஏற்படுவதும் ஈர்ப்பு தான்!
-
ஈர்ப்பு + இச்சை = காமம் ஈர்ப்பு + பாசம் = காதல் ஈர்ப்பு + மதிப்பு = நட்பு
-
மனதில் ஏற்படும் ஈர்ப்போடு, இச்சை உணர்வு கலக்கும்போது அது காம உணர்வாக மாறுகிறது.
-
மனதில் ஏற்படும் ஈர்ப்போடு, பாச உணர்வு கலக்கும்போது அது காதல் உணர்வாக மாறுகிறது.
-
மனதில் ஏற்படும் ஈர்ப்போடு, மதிப்பும், மரியாதையும் கலக்கும் போது அது நட்பு உணர்வாக மாறுகிறது.
-
காதலும், அன்பும் பிரார்த்தனையின் இன்னொரு அற்புதமான வடிவங்கள்.
-
காமம், காதல், நட்பு என்ற மூன்றையும் தாண்டியது அன்பு!
-
உண்மையான காதலர்கள் தங்கள் தனித்துவத்தைப் போராடிக் காக்க மாட்டார்கள். விட்டுக் கொடுப்பதன் மூலம் தங்கள் தனித்துவத்தைக் காத்து நிற்பார்கள்.
-
காதல் உணர்வில் நம்மை மறந்து மற்றவர்களைப் போற்றுகிறோம் !
-
காமத்தில் மற்றவர்களை மறந்து நம்மை மட்டுமே முக்கியமாகக் கருதுகிறோம்.
-
நட்பு மலரும்போது உறவு பூரண நிலையை அடைகிறது. அன்பு மலரும்போது மனிதனே பூரண நிலையை அடைகிறான்.
-
ஹார்மோன்களின் திடீர், திடீர் மாற்றம் நிறைந்த வாலிப வயதால் எதைக் காமம் ? எதைக் காதல் ? என்று பிரித்தறிவது கடினம். காதல் வயப்பட்டது தானாக இருக்கும் பட்சத்தில் ஈகோ காரணமாக அது புனிதமான காதல்தான் என்று மனம் அடித்து கூறும். வாலிப வயதும் அப்படித்தான் கூறும்.
-
மிக அதிக விழிப்புணாவும், புத்திசாலித் தனமும் பெற்றிருந்தால் மாத்திரம்தான் காமம் வேறு, காதல் வேறு என்பதைச் சரியாகப் பிரித்துப் பார்க்க முடியும்.
-
சிறந்த காதலன் நல்ல நண்பன் சிறந்த காதலி - நல்ல தோழி சிறந்த பெற்றோர் - நல்ல நண்பர்கள் சிறந்த சகோதரன் - நல்ல நண்பன் சிறந்த சகோதரி - நல்ல தோழி
-
இப்படி நம்முடைய சிறந்த உறவுகளைக் குறிப்பிடும்போது, அவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள் என்று குறிப்பிட நாம் தவறுவதில்லை.
-
எல்லா உறவுகளிலும் நட்பு மலரும்போதுதான் அது ஒரு முழுமைத் தன்மை பெறுகிறது.
-
காதலிலிருந்து நட்பின் வழியாக அன்பை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பியுங்கள்!
வெட்டிப் பேச்சா? வெட்டும் பேச்சா?
-
ஏன் பேசிக் கொண்டிருக்கிறாோம் ? என்ன பேச நினைத்திருந்தோம் ? எப்படிப் பேசிக் கொண்டிருக்கிறோம் ? - என்ற கேள்வியைப் பேசிக் கொண்டிருப்பவர்களிடம் கேட்டால் பலரால் பதில் கூற முடியாது. இப்படி முடியாமல் இருப்பவர்களால்தான் சாதாரணப் பேச்சு வெட்டிப் பேச்சாக மாறுகிறது.
-
வெட்டிப் பேச்சின் இயல்பே ஒரு குழ்நிலையில் அது உறவை வெட்டும் பேச்சாக மாறும் தன்மை பெற்று இருப்பதே! - இது கவலைகளுக்கான காரணங்களில் ஒன்று.
-
உரையாடலில் வெட்டிப் பேச்சை அனுமதிப்பது ...
-
'பிரேக்' இல்லா காரை நகருக்குள் ஓட்ட முயற்சிப்பது போன்றது!
-
வெட்டிப் பேச்சில் என்ன பேசுகிறோம் என்ற சுயதெளிவு இருக்காது. பேச்சின் போக்கு கட்டுப்பாடற்று மனதின் இஷ்டப்படி தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்.
-
இது பேசுபவர், கேட்பவர் என்ற இருவரையுமே பாதிக்கும்.
-
'வெட்டிப் பேச்சில்' அழியும் நேரம் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டால் பாரத் தானாகவே வல்லரசாக மாறிவிடும்.
-
அகத்தின் (உணர்வின்) அழகு முகத்தில் தெரியும் ; மனதின் (எண்ணத்தின்) அழகு பேச்சில் தெரியும்.
-
பொழுதுபோக்கு அம்சங்கள் பொழுதையே போக்கும் அம்சங்களாக மாறக்கூடாது. இது விதியையும் மீறிய சதி.
வாழ்க்கை அர்த்தமுள்ளதாகட்டும்
- இந்த வாழ்க்கையை அனுபவி என்று இறைவன் நமக்குப் பரிசாகக் கொடுத்த ஆனந்த சக்தியைப் பயன்படுத்தாமல் இருப்பது - சுயபாதகச் செயல்.
- பணம், பதவி, பேருக்காக நீங்கள் செலவழிப்பது எதை? - உடல், உயிர், மனதை! எந்த நிமிடம் வேண்டுமானாலும் கைமாறத் தயாராக இருக்கும் பணம், பதவி, பேருக்காக இந்த நிமிடம் உங்களோடிருக்கும் உடல், உயிர், மனதைப் பாழாக்குவது எந்த வகையில் நியாயம். கொஞ்சம் யோசியுங்கள்!
- வாழ்க்கையை வீணடிப்பது ... ஒரு மகாபாவம் ! ஒரு கொடுஞ்செயல் ! ஒரு பெருங்குற்றம்!
- 'இந்த நிமிடத்தில் என்னிடம் உள்ளதே இந்த நிமிடத்தை அனுபவிக்கப் போதும்' - என்று தன்னையும் தன் சூழ்நிலையையும் அனுபவித்து வாழ்பவனுக்கு மட்டுமே ஆனந்தமும், திருப்தியும் சொந்தம்.
- இந்தப் புத்தகத்தைப் படிக்கும் அளவுக்கு நேரமும், பணமும் பெற்ற நீங்கள் ... நிச்சயம் பிச்சைக்காரராக இருக்க முடியாது.
- வாழ்க்கையை அனுவித்து வாழுத் தெரிந்திருந்தால் பிச்சைக்காரனால்கூட சொர்க்கத்தை உணர்வது சாத்தியம்
என்றால், ஏன் உங்களால் முடியாது?
- உங்களையும், உங்கள் சூழ்நிலைகளையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
- சொர்க்கம் உங்களுக்குள்ளே ... என்று கண்டுகொள்வீர்கள்.
- வாழ்க்கையே ஒரு பெரிய தொடர் திருவிழா!
- வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள்!
சந்நியாசம்
பாரத் நாட்டில் உள்ள எல்லாருமே துறவிகளாகி விடுவது சாத்தியமில்லை. ஆகவே என்னைப்போல சிலா் துறவிகளாகி, நாங்கள் ஆனந்தமயமாவது மாத்திரம் அல்லாமல் பிறருக்கும் ஆனந்தமயமாவதற்கான வழிகளைக் காட்டுகிறோம். இது ஒரு சமுதாயத் தேவை. இறைச்சித்தம்.
-
உண்மையான சந்நியாசிகள் உருவாக்கப் படுவதில்லை - பிறக்கிறார்கள். (Real sanyasis are not made, They are bourn).
-
சந்நியாசி ஆவதற்கு வீரர்களுக்கெல்லாம் இல்லாத வீரம் வேண்டும்.
-
வீரன், அடுத்தவர்களை வெற்றி கொள்கிறான். சந்நியாசி தன்னைத்தானே வெற்றி கொள்கிறான். ஆகவே, எல்லோரும் சந்நியாசிகளாகிவிட முடியாது.
-
100% சதந்திரமான ... 100% ஆனந்தமயமான ... - வாழ்வு முறைக்குப் பெயர் சந்நியாசம். இப்படிப்பட்ட சுதந்திரமயமான வாழ்க்கை வாழ்பவனுக்குப் பெயர் சந்நியாசி.
இது உச்சக்கட்ட போதை
-
ஒருவனைச் சிறுமையில் சிக்கவிடாமல் காக்கும். அது தற்பெருமையாகவோ வெட்டிப் பந்தாவாகவோ, அகந்தையாகவோ மாறும்போது, அதுவே அவனை அழித்துவிடும்.
-
பெருமை தரும் உற்சாகம் போதை மருந்து தரும் உற்சாகத்திற்குச் சமம்.
-
போதை மருந்து உடலை அடிமைப்படுத்தும். பெருமையுணர்வு மனதை அடிமைப்படுத்தும்
-
போதை மருந்தால் உடல் மட்டும் வீணாகும். பெருமை என்ற மாய உணர்வு மனதை வீணாக்குவதின் மூலமாக உடலையும் சேர்த்து வீணாக்கும்.
-
மேதையைக்கூட பேதையாக்கும் போதை இந்தப் பெருமை !
-
மனிதன் தான் இடிப்பட்டதாய் உணரும் எல்லாச் சூழ்நிலைகளிலும்… அவன் அடிபடுவது இந்தப் பெருமையுணர்வில்தான்! பெருமைப்பட ஆயிரம் காரணமும், சிறுமைப்பட ஆயிரம் காரணமும் சொல்வது எளிது. ஆனால், எளிமையாய் வாழ ஒரு காரணம் சொல்வதுகூட மனதுக்கு மிகக் கடினமானது.
-
பெருமையை விட்டு வெளியே வாருங்கள். அப்போதுதான் உங்களின் அருமை உங்களுக்கே புரியவரும்.
வேண்டுதல்களை நிறைவேற்றுவது எப்படி?
-
கோயில்களுக்குச் சக்தி கிடைத்தது எப்படி?
-
ஒரு ஞானி பிராணப் பிரதிஷ்டை செய்து வைக்கும் ஒரு 'ஸ்தலத்தில்' அவர் அனுபவப் பூர்வமாக உணர்ந்து அனுபவித்த தெய்வ சக்தி தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.
-
இதற்குப் பல உதாரணங்களை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
-
பழனியில் திருக்கோயிலை உருவாக்கி பிராணப் பிரதிஷ்டை செய்து வைத்தவர் போகர் என்ற ஞானி.
-
தஞ்சாவூரில் கரூரார், திருவண்ணாமலையின் அக்னி ஸ்தலத்தை பிரதிஷ்டை செய்தவர் இடைக்காட்டுச் சித்தர் என்னும் ஒரு ஞானி.
-
சிதம்பரத்தில் திருக்கோயிலைப் பிரதிஷ்டை செய்து வைத்தவர் பதஞ்சலி என்ற ஒரு ஞானி.
-
திருப்பதியில் திருத்தலத்தை உருவாக்கிப் பிராண பிரதிஷ்டை செய்து வைத்தவர் கொங்கனவர் என்ற ஒரு ஞானி. ஒவ்வொரு ஞானியும் ஒரு குறிப்பிட்ட சக்தியை ஒரு கோயிலில் விட்டுச் செல்கிறார்கள். அதனால்தான் ஒவ்வொரு பிரசித்தி பெற்ற கோயில்களும் வெவ்வேறு விஷயங்களுக்குப் பிரசித்தி பெற்றிருக்கின்றன.
-
மெக்காவில் தொடர்ந்து மக்கள் அலை மோதுவதற்கு காரணம் அங்கே இருக்கும் ஞானி (இறைதூதர்) முகமது நபியால் வெளிப்படுத்தப்பட்ட தெய்வ சக்திதான் காரணம்.
அங்கு தொடர்ந்து வரும் சக்தியால் தான் மக்கள் பயன்பெற்று, திருப்தி அடைந்து மீண்டும் மீண்டும் செல்கிறார்கள்.
- வேளாங்கண்ணியில் மக்கள் கூட்டம் அலை மோதுவதற்கும் அங்கே இருக்கும் ஒரு தெய்வ சக்திதான் காரணம்.
- தெய்வஸ்தலங்களில் நம் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்.
- உங்களின் திறந்த மனதும், பக்தியும். 2. அந்த இடத்தில் இருக்கும் தெய்வ சக்தி. ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு இடத்தில் ஆன்மீக உணர்வு, பக்தி உணர்வு ஏற்படும்.
-
நீங்கள் எந்த இடத்திற்கு எந்தக் கோயிலுக்குச் செல்கிறீர்கள் என்பது முக்கியமில்லை.
-
உங்களுக்குள் பக்தி உணர்வு ஏற்படுகிறதா இல்லையா என்பதுதான் மிக முக்கியமான ஒரு விஷயம்.
-
கோயில்களுக்குச் சென்று 'பக்தி உணர்வோடு தெய்வ சந்நிதியில் இருத்தல்' என்பது வெளியிலிருந்து சக்தியை உங்கள் உடலுக்கும், மனத்திற்கும் எடுத்துக் கொடுக்கும் ஒரு எளிய முறை. (வேண்டுதல்கள் நிறைவேறுவதின் சூட்சுமம் இதுதான்).
-
எதைச் செய்தாலும் முழுமையாகச் செய்யுங்கள். கோயிலுக்குச் சென்றால் 1/2 மணி நேரமாவது அமைதியாக உட்கார்ந்திருந்து தியானம் செய்யாமல் திரும்பாதீர்கள்.
படிப்பு சுமையா? சுவையா?
- நன்றாகப் படிக்காதவர்கள், நன்றாகப் படிக்க இயலாதவர்கள் - என்பது தவறு. படிக்கிற காலத்தில் நன்றாகப் படிக்காமல் விட்டுவிட்டவர்கள் - என்பதுதான் சரி.
- உண்மையில் எல்லோரும் நன்றாகப் படிக்கும் திறன் கொண்டவர்கள்தான்.
- படிப்பு என்பது இன்றைய வாழ்க்கைக்கும் இன்றைய உலகத்திற்கும் அவசியமாகிப்போன ஒரு சுமை.
- கல்வியைச் சுமை என்று நான் சொல்வதைக் கேட்டு, உங்களில் பலருக்கும் ஆச்சரியம் ஏற்படலாம்.
இந்தச் சுமை சுகமாக மாறத் தவறிய சுமை என்று புரிந்து கொள்ளுங்கள்.
- பிறந்தது முதல் பதினான்கு வயது வரையிலான பகுதி வாழ்வில் சுதந்திரப் பறவையாக ஆனந்தமாகத் திரியும் காலம்.
- இந்த சுதந்திரம் சிறுவர்களுக்குப் பல்வேறு காரணங்களால்'மறுக்கப்படுவதால்' அல்லது 'மறுக்கப்படுவதாக நினைத்துக் கொள்வதால்' - இழந்து விட்டதாக நினைக்கும் சந்தோஷத்தைப் பிள்ளைகள் 14-21 வயதிற்குள் பூர்த்தி செய்து கொள்ள மனரீதியாக தயாராகிறார்கள். (இந்த தூண்டலுக்குக் காரணம் 14-21 வயதிற்குள் கிடைக்கும் சுதந்திரமும், வாலிபத் துடிப்பும்தான்).
- தங்களின் கவனம் சிதறுவதற்கான அடிப்படைக் காரணங்களைப் புரிந்து கொண்டால்போதும். படிப்பு தாண்டிய விஷயங்களில் இருக்கும் ஈர்க்கும் மாயை, போலி என்று புரிந்துவிடும்.
- இதைப் புரிந்துகொண்டால் படிப்பின்மீது இருக்கும் வெறுப்பும், மற்ற விஷயங்கள் மேல் இருக்கும் ஈாப்பும் குறைய ஆரம்பிக்கும்.
- படிப்பின்மீது ஆர்வம் இயல்பாகவே அதிகரிக்க ஆரம்பிக்கும். படிப்பில் துடிப்பும், துள்ளலும் ஏற்படும். படிப்பு, சுமையாகத் தெரியாது.
படிப்பு ஒரு திறன்
- படிப்பு ஒரு கலை.
- வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படாதவரை படிப்பில் துடிப்பும், ஆர்வமும் ஏற்படாது.
- படிப்பசை சுற்றி சமுதாம் உருவாக்கும் கட்டாயப்படுத்தல்களும், கஷ்டங்களும்தான் படிப்பின் மீது வெறுப்பை உண்டு பண்ணுகிறது.
- மனதில் வெறுப்போடு ஒரு ஓவியக் கலையையோ, சிற்பக்கலையையோ கற்றுக்கொள்ள கடினம்.
- வெறுப்போடு கற்றுக்கொள்ள முயற்சித்தால் கலைகூட கவலையைத்தான் உண்டுபண்ணும். அது சுமையாகத்தான் தெரியும்.
Part 7: Lines of Wisdom Which Makes You Beautiful - Part 2_Tamil_part_7.md
- படிப்பு சுமையாகத் தெரிவதின் சூட்சுமம் இதுதான்.
- உண்மையான படிப்பு என்பது நீங்கள் உங்களைப் புரிந்து கொள்வதற்காக உதவும் ஒரு வழிமுறை.
- நன்றாகப் படிக்க முடியாமல் போனதற்கு நீ பொறுப்பல்ல.
ஆனால் நன்றாகப் படிக்கப் போவதற்கு நீதான் பொறுப்பு !
ஞாபகச் சக்திக் கிடங்கின் மந்திரசாவி
-
'விருப்பம்' என்னும் மந்திரச் சாவி இருந்தால், ஞாபகம் என்னும் கிடங்கை திறப்பது வெகுசுலபம்.
-
படிப்பு ஒரு சுமை - படிப்பின் மீது விருப்பம் உள்ளத்தில் மலராதவரை இது உண்மை.
-
படிப்பு ஒரு சுவை - படிப்பின் மீது விருப்பம் உள்ளத்தில் மலர்ந்தபின் உணரப்படும் உண்மை.
-
படிப்பு ஒரு சுமை என்பதும், படிப்பு ஒரு சுவை என்பதும் அவரவர் விருப்பத்தின் அளவைப் பொறுத்தது. உண்மையில் உங்களுடைய ஞாபக சக்தியில் எந்த குறையும் இல்லை.
-
உங்கள் விருப்பத்தில்தான் குறை இருக்கிறது. குறை ஞாபகச்சக்தியில் அல்ல. விருப்பத்தின் அளவில் இருக்கிறது.
-
படிப்பு ஒரு சுமை போல, இந்த காலத்தில் ஆகிவிட்டதாலும், மனதைச் சிதறடிப்பதற்கு ஏகப்பட்ட வழிமுறைகள் உருவாகிவிட்ட காரணத்தாலும் - நம் மனம் நம்மிடம் இல்லை.
-
பெரும்பாலும் நமது விருப்பம் சூழ்நிலைக்குச் சூழ்நிலை மாறிக் கொண்டேயிருக்கும் விருப்பங்கள்தான். இப்போது உங்களிடம் இருக்கும் விருப்பங்களும், ஆசைகளும் உங்களுடைய சொந்த விருப்பமாக இருப்பதற்கு 99% வாய்ப்பு இல்லை.
-
எனக்குப் படிப்பின் மீது விருப்பமில்லை என்பதும், வெளி விஷயங்களில்தான் அதிக நாட்டமும் அதிக விருப்பமும் இருக்கிறது என்பதும் காலத்தின் கோலங்களே!
-
விருப்பம் திசைமாறியது விபத்துதான். இருந்தாலும் விருப்பத்தைத் திசை மாற்ற விரும்பினால் விருப்பத்தை நம் நோக்கத்திற்கே திருப்பி விடலாம். இது சாத்தியமே.
-
விருப்பத்தையும், நாட்டத்தையும் அதிகப்படுத்துங்கள் (படிப்பில்) ஞாபக சக்தி தானாய் அதிகமாகிக் கொள்ளும்! - இது இயற்கையின் விதி.
மனம் எனும் குழந்தை
மனித மனம், அது முதலில் கிரகிக்கும் கருத்துக்கள் மற்றும் சம்பவங்களைக் கொண்டு தன்னை உருவாக்கிக் கொள்கிறது. அவற்றிற்குள் உறைந்து இறுகிப்போகிறது. அது நல்லதானாலும், கெட்டதானாலும்! வாழ்க்கையில் ஒரே மாதிரியான சுக துக்கங்களையே மனிதன் தொடர்ந்து அனுபவிக்க காரணமானது இந்த மனதின் எலும்புகள்தான்.
மனித உடலுக்கு எலும்புகள் போல், மனதிற்கு எண்ணங்கள்! எண்ணங்களே இல்லையென்றால் மனமே இல்லை.
- எண்ணங்களின் தொகுப்பே மனம். இதில் வேடிக்கை என்னவென்றால், எலும்புகள் வளைந்தோ, நெளிந்தோ போய் விட்டால் மனிதன் குட்டையாகவோ, கூனாகவோ மாற வேண்டியதுதான். எண்ணும் விதம் களங்கப்பட்டதாகவோ ஆனந்தத்திற்கு மாறானதாகவோ இருந்தால் ... நம் மனமும் கூனாகவோ, குருடாகவோ மாறிவிடும்.
- விதவிதமான எண்ணங்கள் மனிதனுக்குள் சமுதாயத்திலும் உறவினர்களாலும் திணிக்கப்படுகிறது. எண்ணங்கள் சேரச் சேர மனம் என்னும் குழந்தை வளர ஆரம்பிக்கிறது.
உயிர்ச்சக்தி விரயத்தை தடுக்கும் வழி
அவமானம் நேரும்போது ... பிரச்சினைகள் வரும்போது ... தவறு செய்யும்போது ... என்று படபடப்பு நமக்குள் ஏற்படும் ஒவ்வொரு நிமிடமும் நாம் பீதியில்தான் வாழ்கிறோம்.
நமக்குள்ளே படபடபடப்பை உணர்வது, பேச்சுத் தடுமாறுவது, விரல்கள் நடுங்குவது ... இதில் ஏதாவது ஒன்று இருந்தாலும் சரி -அந்த நேரங்களில் நாம் நம் கட்டுப்பாட்டை இழக்கிறோம் என்று அர்த்தம். அதன் விளைவாக ஏற்படும் உயிர்ச் சக்தி விரையம்தான் நடுக்கத்தையும், படபடப்பையும் உண்டு பண்ணுகிறது.
இதுதான் பீதி.
- இந்த பீதியிலிருந்து எப்படி வெளிவருவது ? எளிது, பயத்தை கண்டு பயந்துவிடாமல் பயமே பயப்படுமளவுக்கு பயத்தை விழிப்புணா்வோடு அணுக ஆரம்பியுங்கள்.
- பயத்தில் பயந்து படபடத்து, பீதியடைவதற்கும், பயத்தை விழிப்புணர்வோடு பார்த்து பீகியின் வெளிப்பாடான படபடப்பையே தாண்டுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. சுருக்கமாகச் சொன்னால்… பயத்தை தைரியத்தோடு எதிர்கொள்ளுங்கள். பிரச்சினை தீர்ந்தது.
யார் சிஷ்யன்?
ஒரு சீடனால், குருவின் வார்த்தையை அப்படியே நம்ப முடியும். குருவின் நேரத்தையோ, தன் நேரத்தையோ சந்தேகங்களில் வீணடிக்க மாட்டான்.
ஒரு பக்தனால், குருவின் வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியும். ஆனால், நம்பி ஏற்றுக்கொள்ள நேரமாகும்.
ஒரு பார்வையாளன்,
'இந்த குரு உண்மையிலேயே குருதானா!' என்று சோதிப்பதிலேயே நேரத்தை வீணடித்து விடுவான்.
சீடன், பக்தன், பார்வையாளன் என்பது குருவை நீங்கள் அணுகும்விதத்தைப் பொறுத்தது.
கடமை! மடமை!
-
கடமை! கடமை! என ஓடியதில் பலரின் வாழ்வே கடமைக்கென்று மாறிவிட்டது. கடமைக்காக வாழ ஆரம்பித்துவிட்டார்கள். இது கொடுமை.
-
கருணை ஒரு உற்சாகச் சக்தி. கருணையின் வெளிப்பாடாகக் கடமை அமைந்தால்தான் வாழ்க்கை உற்சாகமாக இருக்கும். உற்சாகமாக வாழ முடியும்.
-
கருணையால் உற்சாகப்பட்டு நம் உறவுகளுக்குச் சேவை செய்யாமல், கட்டயாத்தின் பேரில் உந்தப்பட்டு நம் உறவுகளுக்குச் சேவை செய்ய இறங்கினால் சேவை பூர்த்தியாகும். ஆனால் உங்களின் தனித்தேவை பூர்த்தியாகாது. ஆனந்தமே உங்களின் உண்மையான தனித்தேவை.
-
கருணையால் சேவை செய்தால்தான் அது கடமை. கட்டாயத்தால் சேவை செய்தால் அது கடமை அல்ல அது மடமை. உங்களின் சேவை கடமையா? மடமையா ?
கடமை உங்களை உறிஞ்சுகிறதா?
- கடமைகள் 'கடமையே!' எனச் செய்யப்படக்கூடாது. கடமை வாழ்வின் ஒரு கட்டாயமாக மாறி மனிதனைக் கட்டுப்படுத்தவும் கூடாது.
- கடமையானது, துள்ளலோடும், ஆனந்தத்தோடும் செய்யப்பட வேண்டும்.
- நம் வாழ்வில் நாம் சுதந்திரமாக முடிவெடுத்து செய்யும் உற்சாகமான காரியமாகக் கடமை இருக்க வேண்டும்.
- கடமையும், கருணையும் ஒன்றோடொன்று மிக நெருங்கிய தொடர்புடையவை. கருணையின் வெளிப்பாடாக கடமை இருந்தால் அது கடமையாற்றுபவனை இன்பத்தில் ஆழ்த்தும். கட்டாயத்தின் வெளிப்பாடாக கடமை அமைந்து விட்டால் அது கடமையாற்றுபவனை துன்பத்தில் வீழ்த்தி விடும்.
- கடமைகள் மனிதனுக்குப் பிரச்சினைகளை உண்டு பண்ணுவது கடமையின் காரண சக்தியைப் பொறுத்தது.
காரண சக்தியானது 'கட்டாயம்' என்னும் உறிஞ்சும் சக்தியா? 'கருணை' என்னும் உற்சாக சக்தியா ? என்பதைப் பொறுத்து கடமை துன்பமா அல்லது இன்பமா என்பது முடிவு செய்யப்படும்.
தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்
- கையில்லாதவன் கழுத்தில்லாதவனுக்கு மாலை அணிவிக்க முயன்றால் ... அது எப்படியிருக்கும் ? ஒருவர் இன்னொருவரைப் பற்றிச் சொல்லும் கருத்துக்களும் தீர்ப்புகளும் அப்படிப்பட்டதே. நம்மை நாமே புரிந்து கொள்வது கடினம். பல வேளைகளில் நம்மைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வருவது நமக்கே கடினமாக இருக்கும். இதை கவனித்திருக்கிறீர்களா ?
நம்மைப் பற்றியே நமக்குத் தெளிவாகப் புரியாத பட்சத்தில் - உலகத்தையும், உறவுகளையும் மதிப்பிட ஆரம்பித்தால் அந்தத் தீர்ப்பு எப்படி இருக்கும் ... 'மஞ்சள் நிற'க் கண்ணாடி போட்டுக்கொண்டு 'ஊதா' நிறத்தை ஆராய்ச்சி செய்து நான் கண்டுபிடித்தது 'பச்சை' எனத் தீர்ப்பு எழுதுவதைப் போன்று இருக்கும்.
-
இந்த ஒரு உதாரணத்தை முழுமுமையாகப் புரிந்துகொண்டால் மொத்தத் தொல்லைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விடலாம். யாரையும் எதையும் எப்போதும் - 'தீர்ப்பிட முடியாது' என்பது உண்மை.
-
'தீர்ப்பிடக் கூடாது' என்பது அறிவுரை. - 'தீர்ப்பிடாமல் இரு' என்பது தியானம். நம் மனக்கண்ணணக் குருடாக வைத்துக் கொண்டு மற்றவர்களின் குணத்தைப் பற்றியும், நடத்தையைப் பற்றியும் விமா்சிக்க ஆரம்பிக்கும்போதுதான் வினையே ஆரம்பிக்கிறது.
சாதிக்கும் முன் யோசிக்க வேண்டியது
யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். எப்படி வேண்டுமானாலும் சாதிக்கலாம். எப்பொழுது வேண்டுமானாலும் சாதிக்கலாம். சாதிக்க எதுவுமே தடையில்லை. சாதனை பெரிய விஷயமா என்ன ? எச்சரிக்கை !
- சாதிக்கலாம் என்ற கனவையும், சாதித்தபின் நிம்மதியாயிருக்கலாம் எனும் நம்பிக்கையையும், சாதனை துடைத்தெறிந்துவிடும்.
சாதனை என்பது நாம் நினைக்குமளவுக்கு பெரிய விஷயமல்ல என்ற உண்மை சாதிக்கும்வரை மனிதனுக்குத் தெரியாது, புரியாது.
- உள்ளுலகில் சாதித்தவன் வெளியுலகில் சாதித்தாலும் சாதிக்காவிட்டாலும் ஆனந்தமாயிருப்பான். நிம்மதியாயிருப்பான். உள்ளுலகில் சாதிக்காதவனுக்கு வெளியுலகில் சாதித்தாலும் சாதிக்காவிட்டாலும் ஆனந்தம், நிம்மதி சொந்தமில்லை!
- சாதித்தாலும், சாதிக்காவிட்டாலும் வேதனை தொடர்கிறது. முதலில் தாண்டப்பட வேண்டியது வேதனை. இதையடுத்துதான் சாதனை பற்றியே யோசிக்க வேண்டும்.
பாச வலை
-
நேசத்தை முதலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் மற்றவரை நேசிப்பதைப் பற்றி நாம் யோசிக்கவே முடியும். நேசம் என்ற உண்மையான அன்பு நம்முள் மலராதவரை... 'நேசம்' என்ற பாச வலையால் ஒருவரை ஒருவர் மனதளவில் கட்டிப் போட்டு, மற்றவரை நம் கைக்குள் வைத்திருக்க உதவும் ஒரு தந்திர வலையாகத்தான் 'நேசத்தை' நாம் பயன்படுத்த முடியும்.
-
உங்கள் உறவுகளுக்கு முழுச் சுதந்திரம் நீங்கள் கொடுக்கவில்லை என்றால், தெரிந்துகொள்ளுங்கள் ... இவ்வளவு காலமாக நேசம் என்ற வேஷமிட்டு பாச நாடகம்தான் நிகழ்ந்திருக்கிறது. உண்மையான நேசம் இன்னும் நிகழவில்லை.
-
பாசம் என்ற உரிமையைப் பயன்படுத்தி நம் நெருங்கிய உறவுகளுக்குச் சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறோமா ? அல்லது நம் கட்டுக்குள் அவர்களை வைத்திருக்க முயற்சித்திருக்கிறோமா ? ஆராயுங்கள். உண்மை புரியும். பாச வலையின் இறுக்கம் தெரியும்.
வேதம் விவாதத்திற்கல்ல
- ஒரே கடவுளின் வார்த்தைகளால் தொகுக்கப்பட்ட வெவ்வேறு மதப்புத்தகங்கள், முதாதையரின் சடங்காச்சாரியங்கள் மற்றும் மதவிதிகளைப் பிடித்துக் கொண்டுதான் மனித மனம் வாழ்கிறது. விகல்பத்தைத் தூண்டுகிறது. கலகத்தை வரவேற்கிறது.
வார்த்தைக் கலகங்களைத் தாண்டி, மதம் என்னும் ஏரிக்குள் குதியுங்கள். உண்மை விளங்கும். வேதம் விவாதத்திற்கல்ல ! அது தெய்வ அனுபவத்திற்கு!
பிடித்தவர்களும் பிடிக்காதவர்களும்
- ஆராயாமல் வெறுமனே மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக, எந்த ஒரு சூழ்நிலையிலும் உணர்ச்சி வேகத்தால் உங்கள் மனம் ஏற்றுக்கொள்ளாததை உங்களுக்குள் அனுமதித்து விடாதீர்கள்.
- நமக்குப் பிடித்தவர்களால், நம் மனதை பிடித்துக்கொண்ட தவறுகள்தான் அதிகம்.
- அதேபோல் நமக்குப் பிடிக்காதவர்களால் நம் மனதில் பிடிபடாமல் நழுவிச் சென்ற சரியான விஷயங்களும் அதிகம்.
- நமக்குப் பிடித்தவர்கள் என்பது, அவர்கள் நமக்கு அறவே பிடிக்காத செயலைச் செய்யும்வரை மட்டுமே !
நமக்குப் பிடிக்காதவர்கள் என்பதும் -அவர்கள் நம் மனதுக்கு மிகப் பிடித்த ஒரு செயலைச் செய்யும்வரை மட்டுமே! பிடித்தவர்கள் > பிடிக்காதவர்கள் என்ற இரண்டுமே நிலையில்லாதவை. நம் கருத்துக் கண்ணாடிகளால் மனிதர்களை முத்திரையிட்டு, பிரித்துப் பார்த்து -உண்மையைச் சரிய விட்டுவிட்டு, 'சரி' என்ற பெயரில் தவறு செய்வதை நிறுத்த ஆரம்பித்தால்போதும்…
புத்தனின் நடுநிலை மார்க்கத்தை நெருங்க ஆரம்பித்து விட்டீர்கள் ... நிம்மதிக் காற்று வீச ஆரம்பித்து விட்டது.
டிடியும் தாண்டி விடலாம் ... வா
- திருப்தியின்மையால்தான் மீண்டும், மீண்டும் விட்டில் பூச்சி போலவே மனிதன் சிற்றின்பங்களின் வலையில் சிக்கிக் கொள்கிறான். 'சிற்றின்பங்களைத் தாண்டுவது எளிது. தாண்டிவிடலாம் - முயற்சி செய்' என்று ஞானியர் சொல்லக் காரணம், அவை இன்பம் போன்ற ஏதோ ஒன்றை சிறிதாகக் கொடுத்துவிட்டு, கூடவே பெருந்துன்பத்தையும் தந்து விடுவதுதான்.
- இறைவன் நமக்குப் பரிசாகக் கொடுத்த வாழ்க்கையின் பிரம்மாண்டமான, உள்ளே இருக்கும் ஆனந்தப் பெருங்கடலுக்கு முன் -'சிற்றின்பங்கள்' சாதாரணக் கூழாங்கற்களை விடச் சிறியவை.
- பேரின்பம் இறைவன் கொடுத்த இரத்தினம். சிற்றின்பம் இறைவன் கொடுத்த கூழாங்கல். நாம் இரத்தினத்தை விட்டு விட்டு கூழாங்கல்லை வைத்து, ராசிக்கல் வியாபாரம் செய்யும் சமுதாயத்தை உருவாக்கியிருக்கிறோம். அதில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலக வாழ்வு கூழாங்கற்களைத் தரும். தியான வாழ்வு இரத்தினங்களைத் தேடித் தரும். கூழாங்கல்லா? இரத்தினமா? எது தேவை. இரண்டுக்குமே சாத்தியமுண்டு. முடிவு செய்யுங்கள்.
வாழ்க்கையை அர்த்தமுள்ளதா(க்)க
- சிற்பியின் கைகள்! ஒவியனின் விரல்கள்! பாடகனின் குரல் ! கவிஞனின் சிந்தனை! சமைப்பவனின் பக்குவம் ! அறிவாளியின் அறிவு ! ... - என்று புத்திசாலித்தனத்தின் அபூர்வ வெளிப்பாடுகளை அடுக்கிக்கொண்டே போவார்கள்.
- அவரவர் படைப்புத் திறன், விருப்பம் பொறுத்து புத்திசாலித்தனம் வெவ்வேறு துறைகளில் வெளிப்படும். மனோதத்துவ நிபுணர்கள் புத்திசாலித்தனத்தை Seven types of Intelligence என்று வகைப்படுத்தியுள்ளார்கள். சுருங்கச் சொன்னால்,வாழ்க்கையை ஒரு திருவிழாப் போல கொண்டாடுவது எப்படி என்பதை நடைமுறையில் சாத்தியமாக்கும் உள் உலக உணர்வு அம்சம்தான் புத்திசாலித்தனம். எந்தத்துறையில் எவ்வளவு பெரிய புத்திசாலியாக ஒருவர் இருந்தாலும் சரி, வாழ்க்கையைக் கொண்டாடும் புத்திசாலித்தனத்தைப் பெறாவிட்டால் வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விடும்.
உங்களை உத்தமராக்கும் உண்மை
- எப்போதும் எதனாலும் அசைக்க முடியாத கருணை உணர்வோடு இருப்பதே குணமுதிர்ச்சியின் பூரண வெளிப்பாடு. இந்த நிலையைத்தான் நீங்கள் ஒவ்வொருவரும் அடைந்து, வாழ்வின் ஆனந்தத்தை ருசிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
- முதிர்ச்சி பெறுவதற்கு ஜென் ஞானி முரெ - சென்னின் அழகானக் கூற்று ஒன்று ... காற்றில் சருகாகிவிடு! ஆற்றில் தக்கையாகி விடு!
- என்ன ஒரு அற்புதமான பொன்மொழி!
காற்றோடு காற்றாகச் செல்லும், தக்கை நீரோடு நீராகச் செல்லும், ஆனால் சருகு சருகாக இருக்கும். தக்கை தக்கையாக இருக்கும்.
இரண்டுக்குமே கஷ்டம் இருக்காது. இந்த நிலையைத்தான் முதிர்ச்சி என்று அழைக்கிறேன். வாழ்க்கை எனும் ஆற்றில் நாம் தக்கையாக மாறிவிடுவதுதான் குணமுதிர்ச்சி.
அப்படி மாறிவிட்டால்... மற்றவர்களும் நம்மைப் போன்றே, உணர்ச்சிக் கொந்தளிப்பில் தவிப்பவர்கள்தான். அவர்களும் நம்மைப் போன்றே, சுயக்கட்டுப்பாட்டைச் சில நேரங்களில் இழந்து, செய்வதறியாது மற்றவர்கள் மீது கோபத்தைக் கொட்டித் தீர்ப்பவர்கள்தான் என்ற உண்மை புரிய வரும்.
- கோபத்திற்குப் பதில் கருணை பிறக்கும்.
- வெறுப்பிற்கு பதில் அன்பு பிறக்கும்.
- சலிப்பு களிப்பாக மாறும். எப்போது ? குணம் முதிர அனுமதித்தால்!
உன்னுள் ஒளிந்திருக்கும் மாயச்சிலை
பாறைக்குள் ஒளிந்திருக்கும் அழகிய சிலை போல் மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் மாயச்சிலைதான் மனம்.
அழகிய சிற்பம் உருவாவது சிற்பியின் கைவண்ணத்தைப் பொறுத்தது.
ஆரோக்கிய மனம் உருவாவது தனிமனிதனின் மனமுதிர்ச்சியைப் பொறுத்தது.
ஒரு கல்லில் இருந்து அழகுச் சிலையை செதுக்க உதவும் உளி போன்றது -மனதை செதுக்க உதவும் உணர்வு!
(மனதின் உளி, உணர்வு)
பாறையைச் சிலையாக்குபவன் சிற்பி.
மனதைக் குதூகலமாக்குபவன் தியானி.
நாம் நம் தேவைக்கேற்றப்படி மனதை விழிப்புணர்வால் செதுக்கி வடிவமைக்க முடியும்.
ருசித்தல்
- 'விழிப்புணர்வோடு ரசித்து ஈடுபடும்போது ருசித்தல் ஒரு தியானம்'. ஆனால், நூற்றுக்கு தொன்னூற்றி ஒன்பது மனிதர்கள் விழிப்புணர்வின்மையிலேயே வாழ்வதால், அதே ருசிக்கு அடிமைகளாகி விடுகிறார்கள். உடலுக்கு உற்சாகமளிக்க வேண்டிய உணவே உபத்திரவங்களை உருவாக்க ஆரம்பித்து விடுகிறது. ருசிக்கு அடிமையானவன் -பசிக்குப் புசிக்காமல், ருசிக்குப் புசிக்க ஆரம்பிக்கிறான். ருசிக்குப் புசிப்பதால் ... உடலின் உண்மைத் தேவையை மீறி உடலுக்குள் விதவிதமாய் உணவு கொட்டப்படுகிறது. உடல், ருசியின் குப்பைத் தொட்டியாக மாறிவிடுகிறது.
மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையிலிருக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தைத் தெரிந்து கொள்ளுங்கள் ... மனிதன் ருசிக்குச் சாப்பிடுகிறான். மிருகங்கள் பசிக்குச் சாப்பிடுகின்றன ! ! !
நீங்கள் கிளர்ச்சியாளனா?
ஒரு கிளர்ச்சியாளன் நிச்சயமாக மூர்க்கன், மூடன் ஆகிய இருவரையும்விட உயர்ந்தவனே. ஆனால் அது இறுதியல்ல. பொங்கியெழுவது முதிர்ச்சியாகாது.
- மனதுக்குப் பிடிக்காத எந்த ஒரு விஷயத்தைப் பார்த்தும் அல்லது கேட்டதும் கோபமோ எரிச்சலோ வந்தால் நீங்களும் ஒர் கிளா்ச்சியாளனே. (ஏதோ பெரிய பெரிய புரட்சியில் ஈடுபடுபவர்கள் மாத்திரமே கிளர்ச்சியாளர்கள் அல்ல ) கிளர்ந்தெழுவது என்பது, மனம் அதன் மந்தத் தன்மையில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளம் மட்டுமே.
- ஒய்வேயில்லாமல் யோசிப்பதும், பரபரப்பாக எப்போதும் ஏதாவது செய்து கொண்டிருப்பதும், தனக்குப் பிடிக்காத விஷயங்கள் தன்னைச் சுற்றி நிகழும்போது, கிளா்ந்தெழுவதும் பொங்கியெழுவதும் நம் வளர்ச்சியின் நல்ல அடையாளங்களே. பொங்கியெழுவதும், கிளர்ந்தெழுவதும் தாண்டப்பட வேண்டிய நிலைகள். கொண்டாடப்பட வேண்டிய நிலைகள் அல்ல. பெருமைப்பட வேண்டிய குணாதிசயங்கள் அல்ல.
சாந்த குணம்
கிளர்ந்தெழுதல் ஒரு பேய் மாதிரி மனிதனுக்குள் இருந்து கொண்டு மனிதனை உலுக்கிக் கொண்டே இருக்கும். உத்திரவிட்டுக் கொண்டே இருக்கும். மனிதனும்தான் உயிரோட்டம் உடையவனாய் செயல்படுவதாய் நம்புவான். கிளர்ந்தெழுதல், மனிதனை இளைப்பாற அனுமதிக்காது. போதும் என்ற திருப்தி மனிதனை நெருங்க விடாது பார்த்துக் கொள்ளும். மந்தத் தன்மைக்கும் கிளர்ந்தெழுவதற்கும் இடைப்பட்ட சுபாவம்தான், நிதானம் ! சாந்தம் ! நிம்மதி ! திருப்தி ! ஆனந்தம் ! இந்த உண்மை மனிதனால் உணரப்படாதவரை கிளா்ந்தெழுதல், வாழ்க்கையை காட்டாறுபோல அதன் இஷ்டத்துக்கு அலைக்கழிக்கும். உண்மை தெரியாத மனிதனோ! 'நான் சரியாகத் தானே வாழ்ந்தேன், கஷ்டப்பட்டுதானே உழைத்தேன்! ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்டங்கள்?' என்று வாழ்வின் பிற்பகுதியில் நொந்து கொள்வான்.
சாந்த குணத்தை வளர்த்துக் கொண்டால் இந்த எல்லாப் பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விடலாம். கிளர்ந்தெழும் சுபாவத்தைத் தணியச் செய்வது சாந்த குணத்தைப் பெறும் ஒர் எளிய வழி.
தியான சக்திக்கு, இந்தப் பேய்ச் சுபாவத்தை எரித்து விடும் சக்தியுண்டு. கிளர்ச்சி முதிர்ச்சியல்ல. கிளர்ச்சி வளர்ச்சியின் ஒரு பகுதி மட்டுமே. கிளர்ச்சியைக் கடந்து சாந்தமடையுங்கள். வாழ்வு சந்தோஷமாகும்.
தீண்டுபவரே தீண்டப்படுவார்
- யாரை எப்படி ஏமாற்றலாம்? 2. நடிப்பால் மற்றவரை நம்ப வைத்து நம் காரியத்தை மட்டும் சாதிப்பது எப்படி? 3. சாதித்தபின் மற்றவர் படப்போகும் கஷ்டத்தைக் கணக்கில்கூட எடுத்துக் கொள்ளாமல் விடுவது எப்படி? என்ற மூன்று கேள்விகளுக்கு பதில் தரும் குண அமைப்பிற்கு பெயர்தான் கள்ளம், கபடம். கள்ளம் உள்ளத்தில் குடியிருக்கும்வரை இல்லத்திலோ, உள்ளத்திலோ நிம்மதி இருக்காது. இருக்கவும் முடியாது.
கள்ளங்களை உள்ளங்களிலிருந்து களையும் கலை நுணுக்கமானது. மில்லிமீட்டர் மில்லிமீட்டராய் உள்ளத்தை ஆராயுங்கள் உள்ளதெல்லாம் வெளிச்சத்துக்கு வரும்.
ஏமாற்றப்பட்டவர்களுக்கு... அது பாடம். பண்படுவார்கள். ஏமாற்றுபவர்களுக்கு ... அது படமெடுக்கும் பாம்பு. ஆபத்து ! கள்ளம் கொண்ட உள்ளம், அது மற்றவர்களைத் தீண்டுவதுபோல் குறைந்தது இரண்டு மடங்கு தீண்டப்படும். துன்பப்படும்.
எது பக்தி ?
எது பக்தி ? என்பதை யார் வேண்டுமானாலும் எளிதாய் உணர்ந்து கொள்ளலாம். கீழே குறிப்பிடப்பட்டிருப்பது பக்தியுணர்வின் ஒரு சில வெளிப்பாடுகள் ... நாம் பிறப்பதற்குக் காரணமாக இருந்த பெற்றோர்கள்; நாம் வளர்வதற்கு உதவியாக இருந்தச் சமுதாயம்; நாம் வாழ்வதற்கு ஆதாரமாக இருந்த இறைசக்தி ; ஆகியவற்றின் மீது நமக்கிருக்கும் மரியாதையும், நன்றியுணர்வும், நம்பிக்கையும் சேர்ந்ததே பக்தி.
இந்தப் பக்தியை எல்லோரிடமும் எல்லா இடத்திலும் வெளிப்படுத்தும் பக்குவம் பெறும்போது பக்தியின் மூழு வெளிப்பாடு நிகழும். நாம் காணும் ஒவ்வொரு விஷயத்திலும் இயற்கை சக்தியை அல்லது இறைசக்தியை உணர்வதுதான் பக்தி. இந்தப் பக்திதான் ஞானம்.