Books / Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

1. Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

0.000 புத்திசாலித்தனம்

  • எந்த ஒரு பைத்தியமும் தன்னை பைத்தியம் என்று சொல்லிக்கொள்ளாது, ஏற்றுக்கொள்ளாது. இதில் பாதிப்புமில்லை, பலனுமில்லை.

  • எந்த ஒரு முட்டாளும் தன்னை முட்டாள் என்று சொல்லிக் கொள்ள மாட்டான். எண்ணிக் கொள்ளவும் மாட்டான். இதில் பாதிப்புண்டு, ஆனால் பலனில்லை.

  • அதேபோல், எந்த ஒரு புத்திசாலியும் தன்னைப் புத்திசாலி என்று சொல்லிக் கொள்ளவோ, எண்ணிக் கொள்ளவோ மாட்டான். இதில் பாதிப்பில்லை, நிச்சயம் பலனுண்டு.

    • நீங்கள் பாதிப்படைந்தவரா ? பலன் அடைந்தவரா ? நீங்கள்தான் தேர்வு செய்து முடிவு சொல்ல வேண்டும்.
  • தன் தகுதியையும், தன் தெளிவையும் கணக்கில் கொள்ளாமல் 'நான் ஒரு புத்திசாலி' என்று அழுத்தமாக (தெரிந்தோ, தெரியாமலோ) நினைக்கும், நினைவு என்ற விதையில் இருந்துதான் 'முட்டாள்தனம்' என்னும் முட்புதர் நமக்குத் தெரியாமலே வளர்கிறது.

    • வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யாமல் சோம்பேறியாக இருப்பது நிச்சயம் முட்டாள்தனம்.
  • அதற்காக ஓய்வே இல்லாமல் உழைத்துக் கொண்டே, சம்பாதித்துக் கொண்டே இருப்பது புத்திசாலித்தனமல்ல.

0.000 முட்டாள்தனம்

  • ஒவ்வொருவருக்கும் மற்றவரின் குறைகள் பளிச்சென்று தெரிகிறது. ஆனால் அவரவரின் குறைகள் மங்கலாக கூடத் தெரிவதில்லை.

  • வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்த திருப்தி நம்மிடமில்லை என்றாலே, நன்றாக புரிந்து கொள்ளுங்கள் ... இறைவன் நமக்குக் கொடுத்த புத்திசாலித்தனம் என்னும் சக்தியை நாம் பயன்படுத்தவில்லை என்று.

  • திருப்தியை வீணடிக்கச் செய்யும் முட்டாள்தனங்கள் எங்கு ஒளிந்திருக்கின்றன என ஆராயுங்கள். கலந்தாலோசியுங்கள்.

  • ஒருவேளை உங்களைப் போலவே உங்கள் உறவுகளும் மற்றவர்களின் குறைகளைச் சரியாய் சுட்டிக் காட்டும் புத்திசாலிகளாக இருக்கலாமில்லையா ?

    • வாழ்வின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் முழுமையாக அனுபவிக்க, இயல்பாக வாழு, இறைவன் கொடுத்த புத்தி என்னும் சக்தியை முழுமையாகப் பயன்படுத்த ஆரம்பியுங்கள். புத்திசாலித்தனம் பொங்க ஆரம்பித்துவிடும். வாழ்ந்த திருப்தி கிடைக்குமளவுக்கு அனுபவித்து வாழ ஆரம்பிப்பீர்கள்.

ருசித்தல்

    • 'விழிப்புணர்வோடு இரசித்து ஈடும்படும்போது ருசித்தல் ஒரு தியானம்'. ஆனால், நூற்றுக்கு தொன்னூற்றி ஒன்பது மனிதர்கள் விழிப்புணர்வின்மையிலேயே வாழ்வதால், அதே ருசிக்கு அடிமைகளாகி விடுகிறார்கள். உடலுக்கு உற்சாகமளிக்க வேண்டிய உணவே உபத்திரவங்களை உருவாக்க ஆரம்பித்து விடுகிறது.
  • ருசிக்கு அடிமையானவன் - பசிக்கு புசிக்காமல், ருசிக்கு புசிக்க ஆரம்பிக்கிறான். ருசிக்கு புசிப்பதால்… உடலின் உண்மைத் தேவையை மீறி உடலுக்குள் விதவிதமாய் உணவு கொட்டப்படுகிறது.

  • உடல், உருசியின் குப்பைத் தொட்டியாக மாறிவிடுகிறது.

  • மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையிலிருக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். மனிதன் உருசிக்குச் சாப்பிடுகிறான். மிருகங்கள் பசிக்குச் சாப்பிடுகின்றன!

இளைஞா! இளைஞா!

    • உலக வாழ்க்கையில் குடும்பஸ்தனாக வாழ முடிவு எடுப்பவர்களுக்கு ராமகிருஷ்ணர் அழகான வாசகமொன்றை சொல்லியிருக்கிறார்.
  • "குடும்ப வாழ்க்கையில் நுழையும் நீ ஆன்மீகத்தை கொஞ்சம் கையில் எடுத்துச் செல். நிச்சயமாக சிக்கித் தவிக்க மாட்டாய்". பலாப்பழம் அறுக்கும்போது வெறும் கையால் அதைச் செய்தால் பழத்தின் பிசுபிசுப்பு கையில் ஒட்டிக் கொள்ளும். பிசுபிசுப்பில் விரல்கள் சிக்கித் தவிக்கும். ஒரே ஒரு முறை எண்ணெயில் கை நனைத்து விட்டுச் செய்தால் விரல்கள் பிசுபிசுப்பில் சிக்காது. பலாப்பழம் அறுப்பதும் எளிதாக நடக்கும். விரல்களும் சிக்கித் தவிக்காது. சங்கடமேயிருக்காது.

ஆன்மீகமும் இது போன்றதுதான், கொஞ்சம் ஆன்மீகத்தோடு வாழ்க்கையை எதிர்கொண்டால், வாழ்க்கையை இன்னும் ஆழமாக அனுபவிக்க முடியும். அதே நேரத்தில், வாழ்க்கைச் சூழலில் சிக்காமல் எளிதில் தப்பிவிடலாம்.

  • இந்தச் செய்தியை இளைஞர்கள் ஒன்றுக்கு இரண்டு முறையாவது படித்து மனதில் நிறுத்திக் கொண்டு கட்டுரையைத் தொடருங்கள்.

உங்கள் உலகம்

    • உங்கள் மனதைப் பொறுத்து எண்ணங்கள் அமையும்.
  • உங்கள் எண்ணங்களைப் பொறுத்து வாழ்க்கை அமையும்.
    • உங்கள் வாழ்க்கையைப் பொறுத்து வெற்றி அமையும்.
  • உங்கள் வெற்றியைப் பொறுத்து ஆரோக்கியம் அமையும். புரிகிறதா... ? இது ஒரு சக்கரம். மக்கள் எப்போதும் நம்மை பிரதிபலிக்கும் கண்ணாடிகளாகவே செயல்படுகிறார்கள். நாம் மரியாதை கொடுத்தால், மரியாதை கிடைக்கும். சீண்டினால் சீண்டப்படுவோம். அன்பு செலுத்தினால், அன்பு கிடைக்கும்.

எப்போதும் எரிச்சலும் கோபமுமாக இருந்தால் உலகமே தவறு செய்வதாகவும், ஒவ்வொருவரும் திட்டம் போட்டு எரிச்சல் படுத்துவதாகவும் தோன்றும்.

  • ஒருவருடைய உலகத்திற்கும் மற்றவருடைய உலகத்திற்கும் சம்பந்தமே இல்லை. அவரவர் கருத்து, கண்ணோட்டம் மனம் பொருத்து உலகம் விதவிதமாக மாறி மாறித் தெரியும்.
    • உண்மையில் எல்லோரும் இயல்பானவர்கள். அருமையானவர்கள். நீங்கள் உலகத்தை அணுகும் விதத்தைப் பொறுத்து உலகம் மாறுபடும். உலகம் அருமையானது... உணர ஆரம்பியுங்கள். உண்மை புரியும் !

சாதிக்கும் சக்தி பெற ...

  • தெளிவில்லாமல் சாதனை ஒட்டத்தில் குதித்தாலும், சாதிக்கலாம், சாதனை சாத்தியமே. ஆனால் சாதித்த திருப்தி இருக்காது. எதை சாதிக்க வேண்டும் ? என்ற தெளிவு இருந்தால், 'இதை சாதிக்க வேண்டும்' என்ற முடிவு பிறக்கும். சாதித்தபின் சாதனையும் திருப்தி தரும். காரணம் அது உங்கள் சாதனை. உங்களின் விருப்பப்படி நிறைவேறி இருக்கிறது.

ஏன் சாதிக்க வேண்டும் ? எதை சாதிக்க வேண்டும் ? என்ற தெளிவு பிறக்க வேண்டுமானால் ... உலகம், வாழ்க்கை மற்றும் உங்களையும் சேர்த்துப் புரிந்து கொள்ளும் பக்குவம் வேண்டும்.

  • சாதிக்கும் சக்தியையும், சிந்திக்கும் சக்தியையும் அதிகரிக்கத் தியானம் எளிதில் உதவும்.
  • வாழ்க்கையில் குதிக்கும் முன்பு தியானத்தையும் வாழ்க்கையில் எடுத்துக்கொள்ளுங்கள். சந்தோஷம் கலந்த சாதனையின் வாசல் திறக்கும்.

உள் சுதந்திரத்தின் அளவை அதிகரியுங்கள்

  • மனமோ கட்டுப்படுத்துகிறது. எண்ணங்களோ அலைக்கழிக்கிறது - இரண்டுக்கும் இடையில் சிக்கிக் கொண்ட மனிதன், கூண்டுக்குள் அடைக்கப்பட்ட கிளி,

    • சிறகிருந்தும் சுதந்திரமாய் பறக்க முடியாமல் தடுமாறுவதுபோல், தடுமாறுகிறான்.
  • 'எண்ணங்களால் என்னை அலைக்கழிக்கும் அகங்காரமே! நீ எங்கே இருக்கிறாய் ?' என உள்நோக்கி பிரயாணித்தலே தியானம் செய்தல்.

    • இந்தப் பிரயாணித்தில் ஒரு முக்கிய விதி - பிரயாணி பார்வையாளனாக மட்டுமே இருக்க வேண்டும்.
  • நம்பி பிரயாணத்தால் ... மனிதனை அடிமைப்படுத்தி, கொக்கரிக்கும் அகங்காரத்தை மூக்கறுத்து, 'சுதந்திரமாய் ஆர்ப்பரிப்பது' என்பது தியானத்தால் நிச்சயம் சாத்தியமாகும்.

  • இது விசித்திரமான பிரயாணம். * பிரயாண வேகம் அதிகமானால், எண்ணங்களின் வேகம் குறையும்.

  • எண்ணங்களின் ஓட்டம், குறையக் குறைய உள் சுதந்திரத்தின் அளவு அதிகரிக்க ஆரம்பிக்கும்.

விழித்துக் கொள்ளுங்கள்

    • விழித்துக்கொண்டு சந்தோஷமாக வாழும் வாழ்க்கையைவிட, விழி பிதுங்கப் பிதுங்க! வாழும் சதா சச்சரவு நிறைந்த வாழ்க்கையில்தான் பலருக்கும் அதிக ஈர்ப்பு இருக்கிறது - இது ஒரு பெரிய விந்தை!
  • 'கண்களைத் திற' என்றால் எல்லோருக்கும் கண் இமைகளை மாத்திரமே திறக்கத் தெரியும். கண் இமைகளைத் திறப்பது, கண்களைத் திறப்பது அல்ல ... என்றால் மனித மனது புரிந்து கொள்ளக் கடினப்படும். அதேபோல்தான் விழித்துக் கொள்வதும், மனித மனதால் இதைப் புரிந்து கொள்ள முடியாது.

    • 'விழித்துக் கொள்வது' தன்னையே அழித்துக் கொள்ளும் தன்மை படைத்த அகங்காரத்தை ஒழிப்பதற்கான எளிய வழி.
  • விழித்துக் கொள்ளாதவரை... * வாழ்வில் துக்கம் வழிந்து கொண்டேதான் இருக்கும்.

  • நம்மில் பலபேர் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக வீணாக்கிய பிறகுதான் அதன் அருமையை உணர ஆரம்பிக்கிறோம்.

  • மீதமுள்ள சொற்ப வாழ்க்கையை பயனுள்ளதாக வாழ்வது எப்படி? - என்ற கேள்வியை கேட்கும் நீங்கள், எந்த வயதினராக இருந்தாலும் சரி, வீணான வாழ்க்கைப் பகுதியைப் பற்றி கவலைப் படுவதை நிறுத்துங்கள். எஞ்சியிருக்கும் வாழ்க்கை ஒரு சில ரத்தினங்களுக்குச் சமமம்.

  • எஞ்சிய வாழ்நாட்களை அருமையாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள். அது போதும், உங்களுடைய எல்லா மனத் துக்கங்களும் மறைந்துவிடும்.

    • இதற்குப் பெயர்தான் 'விழித்துக் கொள்வது'.
  • இன்பம் பொங்க ஆரம்பிக்கும். இந்தப் பிறவியையும், அடுத்தடுத்த பிறவிகளையும் இன்பமாக அனுபவிப்பதற்கான அடிப்படைத் தகுதியை பெற்றுவிடுவீர்கள்!

அன்பு மலர... நீங்கள் வளர...

    • நேசம் என்பது உண்மையான அன்பு மலர்.
  • ஒருவன் தன்னையே நேசிக்க ஆரம்பிப்பது ஆனந்த மாளிகையின் திறவுகோல். இது ஒரு சிறந்த தியான முறை.
  • நம்மை நாமே நேசிப்பதைப் பற்றி யோசியுங்கள்.
    • நேசிக்க ஆரம்பியுங்கள். அன்பு என்னும் மலர் உங்களுக்குள் மொட்டாகக் காத்துக்கொண்டிருக்கிறது. அன்பு மலர - நீங்கள் வளர - நேசியுங்கள்! நேசிக்க ஆரம்பியுங்கள் ... முதலில் உங்களை!
  • வேறு வழியேயில்லை. நீங்கள்தான் உங்களுக்கு உதவ வேண்டும்.

இயற்கையளிக்கும் பரிசுகள் ...

  • 'வரவேற்றல்' என்ற நற்குணமில்லாதவர்களுக்கே அதிர்ச்சிகளை வாழ்க்கை பரிசளிக்கிறது. எல்லாவற்றையும் வரவேற்கத் தெரிந்தவர்களுக்கு அதிர்ஷ்டங்களைத் தவிர வேறு எதையும் வாழ்க்கையால் பரிசளிக்க முடியாது.
  • வருவது வரட்டும், வந்தது இருக்கட்டும்' - இப்படிப்பட்ட மேம்போக்கு குணம் படைத்த மனிதனால் வாழ முடியும். ஆனால் குதூகலமாக வாழ்வைக் கொண்டாட முடியாது. காரணம் குதூகலத்தின் பிறப்பிடமான 'வரவேற்றல்' என்னும் குணம் இல்லாதிருப்பதே!

  • 'வருவதெல்லாம் வரம் வந்ததெல்லாம் அதிர்ஷ்டம்' - இப்படிப்பட்ட குணத்தை அடைந்த மனிதனால் மட்டும்தான் வாழ்வை குதூகலமாகக் கொண்டாட முடியும்.

  • 'குழந்தையின் துள்ளல் தைரியசாலியின் தெம்பு புத்திசாலியின் தெளிவு'

  • இம்மூன்றின் மொத்தக் கலவையாய் வெளிப்படும் குணமே 'வரவேற்றல்' (welcoming) என்னும் அற்புதக் குணம்.

சுருங்கச் சொன்னால் ...

'இன்பத்தை நம் மகிழ்ச்சிக்காகவும், துன்பத்தை நம் வளர்ச்சிக்காகவும் - இயற்கை இயற்கையாகவே பரிசளிக்கிறது!' என்ற சூட்சுமம் புரிந்து, வாழ்வை சுகிப்பதே 'வரவேற்றல்' என்னும் நற்குணம்.

வயப்படாததையும் வயப்படவைக்கும் வசியக்கலை!

  • பாத்திரம் கழுவுவதில் இருந்து... ஷூ பாலிஷ் செய்வது வரை ... குழந்தைக்கு தலை வாருவதில் இருந்து... தொழில் செய்யும் திறமை வரை... என வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் கலைநயத்தைக் கொண்டுவரலாம்.
  • கலைநயம் சேரச் சேர உங்களிடமிருந்து காந்த சக்தி வெளிப்படும். அது எல்லாவித வெற்றி வாய்ப்புகளையும் உங்களை நோக்கி ஈர்க்கும்.
  • வாழும் கலையின் நயத்தை நயம்படக் கற்றுக் கொண்டால், வயப்படாததைக் கூட வயப்படுத்திவிடலாம். இப்போது செய்யும் செயலை இன்னும் சிறப்பாகச் செய்யுங்கள். அதில் இன்னும் கொஞ்சம் சுவராஸ்யம் சேருங்கள். கலைநயம் தானாய் வெளிப்படும். கலை உணர்வோடு ஒவ்வொரு செயலையும் செய்ய ஆரம்பித்தால், சந்தோஷத்திலிருந்து ... திருப்திவரை நம் சுயம் விரும்பும் எல்லாவற்றையும் வசப்படுத்தி விடலாம்.

வாழ்க்கையை அனுபவியுங்கள்!

  • இந்த வாழ்க்கையை அனுபவி என்று இறைவன் நமக்குப் பரிசாகக் கொடுத்த ஆனந்த சக்தியைப் பயன்படுத்தாமல் இருப்பது - சுயபாதகச் செயல்.

  • பணம், பதவி, பேருக்காக நீங்கள் செலவழிப்பது எதை ? - உடல், உயிர், மனதை! எந்த நிமிடம் வேண்டுமானாலும் கைமாறத் தயாராக இருக்கும் பணம், பணம், பதவி, பேருக்காக இந்த நிமிடம் உங்களோடிருக்கும் உடல், உயிர், மனதை பாழாக்குவது எந்த வகையில் நியாயம். கொஞ்சம் யோசியுங்களேன்!

  • வாழ்க்கையை வீணடிப்பது ... ஒரு மகாபாவம்! ஒரு கொடுஞ்செயல் ! ஒரு பெருங்குற்றம் !

  • 'இந்த நிமிடத்தில் என்னிடம் உள்ளதே இந்த நிமிடத்தை அனுபவிப்பது போதும்' - என்று தன்னையும் தன் சூழ்நிலையையும் அனுபவித்து வாழ்பவனுக்கு மட்டுமே ஆனந்தமும், திருப்தியும் சொந்தம்.

    • இந்தப் புத்தகத்தைப் படிக்கும் அளவுக்கு நேரமும், பணமும் பெற்ற நீங்கள்... நிச்சயம் பிச்சைக்காரராக இருக்க முடியாது.
    • வாழ்க்கையை அனுபவித்து வாழத் தெரிந்திருந்தால், பிச்சைக்காரனால்கூட சொர்க்கத்தை உணர்வது சாத்தியம் என்றால், ஏன் உங்களால் முடியாது? உங்களையும், உங்கள் சூழ்நிலைகளையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், சொர்க்கம் உங்களுக்குள்ளே ... என்று கண்டுகொள்வீர்கள்.
  • வாழ்க்கையே ஒரு பெரிய தொடர் திருவிழா! வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள்!

நீங்கள் வாழ கற்றுக்கொள்வதற்காக ...

ஞானகுருவால்கூட ஒருவனுக்கு புத்திசாலித்தனத்தைக் கற்றுக்கொடுக்க முடியாது. ஒவ்வொரு தனி மனிதனும் தானே கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு சாதனைதான் புத்திசாலித்தனம்.

அதிகபட்சம்

ஒரு மனிதன் புத்திசாலித்தனத்தைக் கற்றுக் கொள்வதற்கான சூழ்நிலையையும், உத்வேகத்தையும் ஒரு குருவால் உருவாக்க முடியும். அவ்வளவே.

  • இதனால் ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒரே ஒரு வரியில் சொல்லி முடித்து விட்டார், 'Master is not needed' - குரு தேவையில்லை. ஆம், வாழ்க்கையைக் கொண்டாட புத்திசாலித்தனத்தை கற்றுக்கொள்ள ஒருவருக்குக் குரு தேவையில்லைதான்.

  • ஆனால் ஒரு நிமிடம் யோசியுங்கள்! புத்திசாலித்தனத்தை நீங்களே கற்றுக் கொள்ளும் சூழலையும், உத்வேகத்தையும் யார் உங்களுக்காக உருவாக்குவது ? உங்களுக்கு நீங்களே தான் அதை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இது எல்லோருக்கும் எளிமையாகச் சாத்தியப்படக் கூடிய காரியமல்ல.

  • புத்திசாலித்தனத்தைக் கற்றுக்கொள்ளும் சாத்தியக் கூறுகளை உருவாக்குவது கடினம் என்று எண்ணுபவர்களுக்காகவே, புத்தரிலிருந்து ... ஜே.கிருஷ்ணமூர்த்தி வரை தொடர்ந்து எல்லா ஞான குருமார்களும் தியான, ஞான சொற்பொழிவுகளையும், தியான சத்சங்கங்களையும் நடத்தி வருகிறார்கள்.

  • வாழும் ஞானியைச் சந்திப்பது ... அவரின் தியான சத்சங்கங்களில் கலந்து கொள்வது ...

இவை அனைத்தும் புத்திசாலித்தனத்தை நீங்கள் கற்றுக் கொள்ள உதவும் சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தும்.

இவற்றால் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையைக் கொண்டாட வேண்டும் என்ற ஞானகுருமார்களின் கருணை நோக்கம் முழுழப் பலன் பெறும். புத்திசாலித்தனத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்!

தெரிந்துகொள்ள வேண்டிய தெரியாதவைகள்

  • உண்மையில், நிஜத்தில் ஒரு மனிதனைப் புரிந்து கொள்வது என்பது இமாலய சாதனை!

  • உங்களை முழுமையாகத் தெரிந்துகொண்ட, புரிந்துகொண்ட ஒருவரையாவது சந்தித்திருக்கிறீர்களா ? இதுவரை சந்திக்கவில்லை என்றால்... இதுதான் நிஜத்தின் நிழல். உண்மையின் உரு. ஒரு ஜென் ஞானியின் சுருக்கமான கூற்று இதை நாம் புரிந்து கொள்ள உதவும். உன்னைப் புரிந்து கொள்ள வேண்டுமா ? -உலகைப் புரிந்து கொள்! உலகைப் புரிந்து கொள்ள வேண்டுமா ? -உன்னைப் புரிந்து கொள்!

  • உங்களையும், மனிதர்களையும் பற்றிய பிரமிப்புகள் தெரிய ஆரம்பித்தாலே 'பிரம்மாண்டத்தின் (இறைசக்தியின்) வெளிப்பாடுகள் பற்றி நாம் தெரிந்துகொண்டது எவ்வளவு?' என்று புரிய வரும். கடலுக்கும் ஒரு துளி நீருக்கும் உள்ள வித்தியாசம்தான் அது என்று புரிய வரும்.

  • சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் 'நமக்குத் தெரியாது' என்கிற விஷயமாவது நமக்குத் தெரிந்தால், குறைந்தது 'நமக்குத் தெரியாது' என்கிற விஷயமாவது நமக்குத் தெரியவரும். 'நமக்குத் தெரியாது' என்கிற விஷயம்கூட நமக்குத் தெரியாதவரை 'நமக்குத் தெரியாது' என்கிற விஷயம் நமக்குத் தெரியவே தெரியாது.

  • 'நமக்கு என்ன தெரியும்' என்ற தெளிவுக்கு வந்து விட்டால், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அத்தியாவசியமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளத் தகுதி பெற்றுவிடுவோம். தெரிந்து கொள்ள ஆரம்பியுங்கள் ...

தவறுகள் தவறட்டும்

  • தவறு செய்வது தவறு இல்லை. காரணம், தவிர்க்க முடியாதது தவறு. செய்த தவறையே திரும்பத் திரும்ப செய்வதுதான் தவறு.
  • இரண்டுவிதமாக மனிதர்களை நாம் பார்க்கலாம் :
  1. எல்லாருமே பாவிகள்.
    • 2. எல்லோருமே புனிதர்கள்.
  • பாவம், புனிதம் என்பது இடத்துக்கு இடம், மதத்துக்கு மதம் மாறக்கூடியது. ஏன் ? பாவம், புனிதம் பற்றிய

    • வரையறைகள், மதங்ளுக்குள் இருக்கும்
    • உப பிரிவுகளுக்குள்ளேயே மாறக் கூடியது.
  • பழைய தவறுகளை நினைத்து... நீங்களும் கஷ்டப்படாதீர்கள். மற்றவர்களையும் கஷ்டப்படுத்தாதீர்கள்.

  • உங்களையும் மற்றவரையும் வருத்தும் தவறுகள் தவறட்டும் ஆனந்தம் வாழ்வில் கொட்டடட்டும்.

சாதனையைப் பகுப்பாய்வு செய்யுங்கள்

  • ஏன் ? எதற்கு ? என்ற அடிப்படை பகுப்பாய்வு செய்யாமல் 'தானும் சாதித்தே ஆகவேண்டும்' என்று வாழ்க்கை ஒட்டத்தை ஆரம்பிக்கிறான். ஒவ்வொரு இளைஞனும்! ஓட்டம் கொஞ்ச நாளிலேயே வெறியாக மாறி விடுகிறது. இங்குதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. வாழ்க்கை திசை மாறிப்போகிறது.

சாதனை தவறு என்று சொல்லவில்லை. சாதனை தேவை. ஒவ்வொரு இளைஞனும் தன் வாழ்வில் நிச்சயம் சாதிக்க வேண்டும். சோம்பேறியாக வாழ்க்கையை வீணடித்துவிடக்கூடாது.

ஆனால், சாதனை என்ற விஷயத்தில் ... எதைச் சாதிக்க வேண்டும் ? ஏன் சாதிக்க வேண்டும் ? - என்ற தெளிவு பிறக்கும் முன்பே, எப்படி சாதிப்பது ? என்ற ரீதியில் செயல்படும்போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.

  • ஏன் ? எதற்கு ? என்ற தெளிவில்லாமல் சாதிக்கத் துடிக்கும் போதுதான் 'எப்படியாவது!, எதையாவது சாதித்தே ஆக வேண்டும்' என்ற மன வெறி கிளம்புகிறது. கண் எதிரே இருக்கும் பணம், பேர், பதவி, அறிவு என்ற ஏதாவது ஒன்றை மனம் பற்றிக் கொள்கிறது. மொத்த வாழ்வும் திசை திரும்பி விடுகிறது. எதையாவது சாதிப்பதால், சாதித்த திருப்தி கிடைத்து விடாது. சாதனைக்கும் திருப்திக்கும் நேரடியாக எந்த சம்பந்தமுமில்லை. எனவே சாதிக்கச் செயல்படும் முன் சாதனை பகுப்பாய்வை கட்டாயம் செய்ய வேண்டும்.

செயல் சிறியது... பலன் பெரியது!

  • பணி நிமித்தமாக, படிப்பு நிமித்தமாக, வாய்ப்பு நிமித்தமாக, உதவி நிமித்தமாக நாம் எல்லோரும் பலமுறை பலரிடம் பவ்யமான இனிமையான உடல் மொழிகளை வெளிப்படுத்தித்தான் நம் காரியங்களை சாதித்திருப்போம்.
    • சாதாரண காரியத்திற்காக, யாரோ ஒருவருக்காக, நம்மையும் நம் பாவனைகளையும் இவ்வளவு தூரம் மாற்றி வளைக்க முடியும்போது - நாம் முழுமையாக நேசிக்கும் நம்முடைய சில உறவுகளுக்காக நம்மை நாம் ஏன் மாற்றிக் கொள்ளக் கூடாது ? .
  • இதுவரை நமக்கு நெருங்கியவரிடம் உடல் மொழியால் உண்மையான பவ்யத்தை வெளிப்படுத்தாவிட்டாலும், இனியாவது வெளிப்படுத்தலாம். இந்த சிறு செயலால் உங்களுக்கு கிடைக்கப்போகும் பலன் மிக மிகப் பெரியது.
  • நம் உடல் மொழியில் இனிமையைச் சேர்த்து மற்றவரையும் இன்புற வைப்பதென்பது பெரிய கம்ப சூத்திரமில்லை. 'உடல் மொழியில்' - மனித உறவிலும், அன்பின் பூரணத்துவத்திலும், திருப்தியிலும் எவ்வளவு பங்கு வகிக்கின்றது என்பதை ஆழமாகப் புரிந்துகொண்டு, 'உடல் மொழி' இனிமைகளைச் சேருங்கள். அதுபோதும். சேர்ந்து வாழும் வாழ்க்கை முறையின் ஆனந்த சூத்திரம் புரிந்து விடும்.

நிஜ சுற்றுலா

  • 'நம் உள்ளே ... ஏழு கடல் -ஏழு மலை -ஏழு வானம் -இருக்கின்றது' என சொல்லப்படுவது பொய்யல்ல, மெய். மெய்யைத் தாண்டிய மெய் உணர்வு நிலையில் ... இவையும் இவை தாண்டியவையும் நம்முள்ளேதான் ஒளிந்திருக்கிறது. உள்ளே ஒரு முறையாவது உள்ளுணர்வுப் பயணம் செய்து பார்க்காத வரை,இவையெல்லாம் பொய்யாகத்தான் தோன்றும். மனம் நம்ப அனுமதிக்காது.

Part 2: Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

'ஒரு முறையாவது உங்களோடு நீங்களே இன்பச் சுற்றுலா சென்றிருக்கிறீர்களா ?' 'என்னக் கேள்வி இது ? இக்கேள்வியே வினோதமானது' என்றெண்ணுபவர்கள் வாழ்க்கையின் அர்த்தத்தை ஒரே ஒருமுறை கூட அனுபவிக்காத அப்பாவிகள்.

  • உள்ளே செல்லும் ஒரே ஒரு சுற்றுலா, வெளியே செல்லும் ஓராயிரம் சுற்றுலாக்கள் தரும் சந்தோஷ திருப்தியைவிட பல நூறு மடங்கு அதிகமான சந்தோஷத் திருப்தியைத் தரும்.
  • கண்ணை மூடிப் பாருங்கள் ... சுற்றுலாத் தலம் தெரியும் ... தைரியமாய் செல்லுங்கள் ... பரவச களம் தொடுவீர்கள் ...

தியானம் உள்ளே ஒரு சினிமா!

  • கியானம் செய்ய ... 'உங்களுக்குள்ளே இருக்கும் சலனமற்ற உணர்வு நோக்கி ஊடுருவுங்கள்' இதைப் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்தால் ... ஒரு பார்வையாளனாக மாத்திரம் உங்கள் எண்ணங்களை, மனதைப் பார்க்க முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.

  • இதை இன்னும் எல்லோரும் நன்றாகப் புரிந்து கொள்ள ஒரு உதாரணம். சினிமாவை தியேட்டரில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்… சினிமாவில் உங்களுக்கு பிடித்தக் காட்சி ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. உங்களுக்கு பிடிக்கிறதென்பதற்காக அதே காட்சிகள் தொடர்ந்து வராது.

  • அதேபோல் உங்களுக்குப் பிடிக்காத காட்சி ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக சினிமாவில் காட்சிகளை அந்த நேரம் தடுக்க முடியாது.

இந்தப் படம் சரியில்லை, சலிப்பைத் தருகிறது என்பதற்காக அந்த நிமிடமே புது சினிமாவை அங்கே திரையிட முடியுமா? முடியாது. சினிமாவில் என்ன வந்தாலும் வரட்டும் என்று ஒரு மூன்று மணி நேரம் உட்கார்ந்து வெறுமனே பார்த்து விட்டுத்தான் வருவீர்கள். அதே காரியத்தை தியானத்திலும் செய்யுங்கள். வெறுமனே பாருங்கள். சாட்சி மாத்திரமாக பாருங்கள். 30 நிமிடம் உள்ளே ஒரு சினிமா பாருங்கள்.

  • ஒருவேளை வந்த எண்ணங்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, அந்த எண்ணங்களை, காட்சிகளை நிறுத்த வேண்டாம்.
  • வந்த எண்ணங்கள் உங்களுக்கு பிடித்த எண்ணங்கள் என்பதற்காக, அந்த எண்ணங்களை, காட்சிகளைத் தொடர வேண்டாம்.
  • புதிதாக எந்த ஒரு எண்ணத்தையோ, காட்சியையே உருவாக்க முயற்சிக்க வேண்டாம். அவ்வளவுதான்.
  • இந்த மூன்று விதிகளைக் கடைப்பிடித்தால் சாட்சி மாத்திரமாகப் பார்ப்பது சுலபம். தியானத்தில் நன்றாக ஈடுபட முடியும். தியானித்துப் பாருங்கள்.

பிரச்சினை யாரிடம் ?

  • அடிப்படையில், அருமையான குணம் கொண்ட மக்கள் மற்றவர்களையும் அருமையானவர்களாகவே கருதுவார்கள்.
  • 'அருமையானவர்கள்' மற்றவர்களிடம் இருக்கும் அருமையான குணங்களைத் தேடித் தேடி கண்டுபிடித்து சந்தோஷமடைகிறார்கள்.
  • நல்ல நட்புறவோடு இருக்கிறார்கள்.
  • 'மோசமானவர்கள்' மற்றவர்களிடம் இருக்கும் மோசமான குணங்களைத் தேடிக் கண்டுபிடித்து நொந்து போகிறார்கள். நல்ல உறவுகளையும் கெடுத்துக் கொள்கிறார்கள்.
  • ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு நிறம் உண்டு.

பார்க்கும் பொருள் எல்லாம் பச்சையாகத் தெரிகிறது என்றால், பிரச்சினை பொருளிடமா ? பார்ப்பவரிடமா? பிரச்சினை பார்ப்பவரிடம்தான். அவர் அணிந்திருக்கும் பச்சைக் கண்ணாடிதான் பிரச்சினை. இந்த பச்சைக் கண்ணாடிதான் உங்கள் பர்ஸனாலிட்டி.

  • உங்களின் பர்ஸனாலிட்டி எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் மற்றவர்களையும் நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

  • பார்க்கும் பொருட்கள் எல்லாம் பச்சையாகத் தெரிந்தால் - அணிந்திருக்கும் மூக்குக் கண்ணாடிதான் பச்சையாக இருக்க முடியும். பொருட்கள் அல்ல.

  • அதேபோல் உலகத்தில் உள்ள பலரும் ஏதோ ஒரு வகையில் தவறானவர்களாக, சரியில்லாதவர்களாக உங்களுக்குத் தெரிந்தால், உங்களுடைய பர்ஸனாலிட்டியில்தான் பிரச்சினை. மற்றவர்களிடமல்ல.

  • பர்ஸனாலிட்டி சரியாகிவிட்டால், மற்றவர்களை அவரவர் குணங்களின்படி தவறாக எடை போடாமல் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

உம்மை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ள காரணமாயிருப்பது எது ?

  • உடலையும், மனத்தையும் பிளவுப்படுத்துவது அகங்காரம்.
  • மனதில் வெளிப்படுத்த நினைப்பவற்றை உடல் பாவனைகள் மூலமாக முழுமையாக மனிதன் வெளிப்படுத்துவதேயில்லை.
  • மனிதனின் எல்லா பாவணைகளுமே, அவரின் அகங்காரம் கலந்தே வெளிப்படுகிறது.
  • நினைத்ததை நினைத்த மாதிரியே வெளிப்படுத்த முடியாமையே, நம்மை மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்வதற்கு வித்திடுகிறது.

நம் வாழ்வில் நெருக்கடியையும், எரிச்சலையும் நாம் உணரும் ஒவ்வொரு நிமிடங்களும் இதுபோன்ற தருணங்கள்தாம்.

ரெடிமேடான வசனங்களோ, புத்திசாலித்தனமோ இல்லாத நெருக்கடியான சூழ்நிலைகளில் நம் சுயரூபம் நம்மையும் மீறி நம் உடல்மொழிகள் மூலமாக வெளிப்பட்டு விடுகிறது.

நீ கண்ணால் பார்ப்பதில்லை ...

  • உங்களுக்கு ... யார் சொன்னது ? வாழ்வு துக்ககரமானதென்று. யார் சொல்ல முடியும் ? வாழ்வு ஆனந்தமயமானதென்று. இரண்டையுமே உங்களுக்கு நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
  • உங்களை அழிப்பது, உங்களைக் காப்பது இரண்டுமே உங்களுக்கு நீங்கள் செய்வதைவிட வேறு யாரும் அதிகமாகச் செய்துவிட முடியாது.
  • 'நான் இப்படிப்பட்டவன்' 'எனக்குப் பிடித்தது ... பிடிக்காதது'

'என்னைப் பொறுத்தவரையில்'

  • இதுபோன்ற கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் உங்களுக்கு தெளிவாய் தரும் மனத்தின் ஒரு அம்சத்திற்கு பெயர்தான் பர்ஸனாலிட்டி (Personality).

கண்கள் வழியாய் எதையும் நீங்கள் பார்ப்பதில்லை. உங்களின் பர்ஸனாலிட்டி வழியாகத்தான் எல்லாவற்றையும், பார்க்கிறீர்கள். புரிந்து கொள்கிறீர்கள். அதனால் ஒருவருடைய கருத்தைப்போல் இன்னொருவர் கருத்து இருப்பதில்லை. காரணம் பா்ஸனாலிட்டி என்பது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமானது.

  • Personality-ல் இருந்து Individuality-க்கு உங்களை நகரச் செய்வதே ஆன்மீகம். நகருங்கள், ஆனந்தத்துக்குள் நகர ஆரம்பிப்பீர்கள்.

இது முடிவுக்கு வரவேண்டியது

  • எதிர்காலம், நிகழ்காலம், இறந்த காலம் - என மூன்று காலங்கள் இருந்தாலும் நம் கையில் எப்போதுமே இருப்பது நிகழ்காலம் மட்டுமே.
  • நம் கையை விட்டுப்போன இறந்தகாலம், இன்னும் நம் கைக்கே வராத எதிர்காலம் - இது இரண்டைப் பற்றிய கவலைதான் நம் கையில் இருக்கும் நிகழ்காலத்தை அனுபவிக்க விடாமல் தடுக்கின்றன.
  • ஏதாவதொரு காரணம் சொல்லி, எதிர்காலத்திலேயே உங்களை மனமானது வாழவைக்கும்.

எதிரிலிருப்பவர்களையும், தொடர்ந்து இழக்கச் செய்து கொண்டேயிருக்கும். இந்தச் செயல் முடிவுக்கு வரவேண்டிய ஒன்று.

  • எப்போதுமே நம்மிடமிருக்கும் நிகழ்காலத்தை, எப்போதுமே நம்மிடமில்லாத இறந்தகால மற்றும் எதிர்காலம் பற்றிய நினைவுகள், கவலைகளுக்காக பலி கொடுப்பது புத்திசாலித்தனமா ? யோசியுங்கள்…

மனிதர்களை மனிதர்களாக மதியுங்கள்

  • பலரும் இயல்புக்கு மாறாக, தாங்கள் கற்பனை செய்து வைத்திருக்கிறபடிதான் ஆட்களைத் தேடுகிறார்கள்.
    • கற்பனையில் இருக்கும் தன் எதிர்கால மனைவியின் அழகுக்கும், அன்பிற்கும், நிஜத்தில் வந்திருக்கும் மனைவியின் அழகுக்கும், அன்பிற்கும் பெரும்பாலும் சம்பந்தமே இருப்பது இல்லை.

அதேபோல் தனது கற்பனையில் இருக்கும் எதிர்கால கணவனின் பண்பிற்கும், பாசத்திற்கும் நிஜத்தில் வந்திருக்கும் கணவனின் பண்பிற்கும், பாசத்திற்கும் பெரும்பாலும் சம்பந்தமே இருப்பது இல்லை.

காரணம் இயல்புக்கு மீறிய அதீத கற்பனைகள்தான்.

  • தன்னைப் போன்ற எல்லாவிதமான உடல் மன தடுமாற்றங்கள் நிறைந்த ஒரு பெண்தான், தனக்கு வரப்போகும் மனைவியாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்ற நிஜம், அதீத கற்பனை என்ற கரிப்புகையால் மறைக்கப்பட்டு விடுகிறது.

  • கற்பனையில் தங்களுக்கு மகாராணியை எதிர்பார்ப்பவர்கள் ... இயல்பாகவே தங்களை மகாராஜாக்களாக கற்பனை செய்து கொள்வதும், அவர்களின் மனிதின் அடி ஆழத்தில் கா்வம் உருவாகுவதும் இயல்பு. இந்த கர்வம்தான் மலர் போன்ற பெண்மையை மதிக்கத் தவறி மிதிக்கத் தூண்டுகிறது.

  • இதே போன்று கற்பனையில் அருமையான ஹீரோவை எதிர்பாா்ப்பவர்கள் ...

  • இயல்பாகவே தங்களை அருமையான ஹீரோயினாக கற்பனை செய்துகொள்வதும், அவர்களின் மனதின் அடி ஆழத்தில் கா்வம் உருவாகுவதும் இயல்பு. இந்த கா்வம்தான் சில நேரங்களில் குடும்பத்தை குதூகலமாக வைத்திருக்கும், 'தாய்மை குணம்'முழுமையாக வெளிப்படாமல் தடுத்து விடுகிறது.

  • மற்றவர்களைப் பற்றிய கற்பனைகளை எரித்து விட்டு, நிஜத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். மனிதர்களை மனிதர்களாக மதிக்க ஆரம்பியுங்கள், நிம்மதி மலரும் ! ஆனந்தம் நோக்கிய பயணம் இனிதே தொடர ...

  • இந்த அணுகுமுறை பணத்திலிருந்து ... மதம் ... காமம் வரை எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

  • ஒரு வெறியிலிருந்து தப்பிப்பதற்காக அந்த விஷயத்தை வெறுக்க ஆரம்பித்தால், வெறி மனதில் இன்னும் ஆழமாகச் சென்று மறைந்து கொள்ளும். நிலைமை முன்பைவிட மோசமாகி விடும்.

  • உங்கள் மனதை ஆராயுங்கள். உள்ளுக்குள் இருக்கும் வெறி, வெறுப்பு, இரண்டையும் பட்டியலிடுங்கள். இரண்டையுமே தூக்கி எறியுங்கள்.

விழிப்புணர்வோடு அணுகினால் 'மத்தியில் வாழ்வது' அதாவது ஆனந்தமாய் வாழ்வது எப்படி என்பது புரிந்துவிடும்.

  • உங்களின் ஆனந்தம் நோக்கிய பயணம் இனிதே தொடரும்.

இது தெரியுமா ?

  • 'எனக்கு எல்லாம் தெரியும்' என்ற எண்ணமிருக்கும்வரை, எதையுமே புரிந்துகொள்ள முடியாது. 'ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை ?' என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியாது!
  • '. 'எனக்கு என்ன தெரியும்' என்ற கேள்வி தோன்றிய பின்புதான், 'எதையுமே என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை' என்பதை, ஓரளவாவது புரிந்துகொள்ள முடியும்.
  • 'எனக்கு என்ன தெரியும்' என்ற ஆச்சரியம் அரும்பிய பின்புதான் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள ஆரம்பிப்பீர்கள். 'தெரியாது' என்ற உண்மை புரிய ஆரம்பிக்கும்.

சுசுரனுக்கு பிறந்த குழந்தைகள்

  • நன்றாக இருந்தால் வேறோடு பிடுங்குவது! இல்லை என்றால் காரித்துப்புவது! வெறுத்து ஒதுக்குவது ! இது மனதின் முக்கியமான குணங்களில் ஒன்று.
  • வெறியும் வெறுப்பும் மனதின் கறுப்பு பக்கங்கள்.
  • மற்றவரை ஏமாற்றி தான் ஏமாறுவது வெறி. தன்னை ஏமாற்றி மற்றவரை ஏமாற்றுவது வெறுப்பு.
  • வாழத்தெரிந்தவன் எதையும் வெறுக்க மாட்டான். வாழத் தெரியாதவன் எதன் மீதும் வெறிகொள்வான் - வெகு எளிதாக!
  • வெறிக்கு ஒரு காரணம். வெறுப்புக்கு ஒரு காரணம்.

இரண்டுமே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம். எதன் மீதும் ஏற்படலாம். காரணம், இரண்டுமே ஆசை என்னும் அசுரனுக்குப் பிறந்த குழந்தைகள்.

  • ஆசை ஓயாதவரை வெறியும், வெறுப்பும் உங்களை உலுக்கும்.

சிற்றின்பம் பேரின்பம்

  • இன்பம் என்பது வெளிப்பொருட்களை சார்ந்ததல்ல. அது உள்ளுணர்வு சம்பந்தப்பட்டது. ஆனால் மனிதர்கள் வெளிப் பொருட்கள் சம்பந்தப்பட்டதாகதான் இன்பத்தைப் பற்றிப் புரிந்து வைத்திருக்கிறார்கள். இவைதான் சிற்றின்பங்கள்.
  • திகட்டாத, குறையாத ஆனந்தத்தை தராத எல்லாமே சிற்றின்பங்கள்தான்.
  • ஆனந்தத்தை அளிப்பது பேரின்பம். ஆனந்தத்தை அழிப்பது சிற்றின்பம்.
  • மனம் சிற்றின்பங்களைத்தான் பெரிதும் விரும்பும்.

காரணம், ஒரே ஒருமுறை பேரின்பத்தை ருசித்தால் போதும், மனம் அழிந்து விடும்.

  • தன் தற்காப்புக்காக, மனமானது மனிதனை சிற்றின்பங்களைக் காட்டித்தான் அனுபவி ! அனுபவி! என்று தூண்டும்.
  • ஆகவே, அனுபவிக்க நினைப்பதையெல்லாம் அனுபவி, அப்புறமாவது அவை திருப்தியையும் ஆனந்தத்தையும் தராது எனப் புரிந்துகொள்.
  • பெரிய பெரிய எதிர்பார்ப்புகளுக்காக, சின்னச் சின்ன சந்தோஷ மலர்களை சூடி வரும் வாழ்வென்னும் அழகுக் குழந்தையைத் தண்டிக்காதீர்கள்.

எதிர்ப்புகளைத் தாண்டி ஆழ அனுபவித்து வாழ்பவர்... சின்னச் சின்ன நிகழ்வுகளிலேயே பேரின்பத்தில் மூழ்கிப் போவார்.

மனிதனை துன்பத்தில் மூழ்கடிப்பவை

  • ஆட்டிவிடப்பட்ட பெண்டுலம் தொடர்ந்து இரண்டு பக்கமும் அலைந்து கொண்டே இருக்கும். வலப்பக்கம் நகர்ந்த பெண்டுலம் வலது முனையை அடைந்த அடுத்த நொடியே இடது முனை நோக்கி நகர ஆரம்பித்துவிடும்.

  • ஆசை என்ற உந்துதலால் தள்ளப்பட்ட மனமும் 'வெறி' அல்லது 'வெறுப்பு' இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைப் பற்றிக் கொள்ளும்.

  • சில நேரம் வெறி ... சில நேரம் வெறுப்பு ...

    • என்ற கணக்கில்தான் பலரின் மொத்த வாழ்க்கையும் சென்று கொண்டிருக்கிறது.
  • கிட்டத்தட்ட எல்லா மனிதர்களுமே சமுதாயத்தின் சில அம்சங்களில் வெறியாக இருப்பது, வேறு சிலவற்றை வெறுப்பது என்பது பரவலாகிப்போன பரிதாபம்.

    • பாசமும், பகையும்... சில நேரங்களில் வெறியாகவும், சில நேரங்களில் வெறுப்பாகவும் வெளிப்படுகிறது. அது மதம் மீதான வெறியாகவோ வெறுப்பாகவோ வெளிப்படுகிறது. காமம் மீதான வெறியாகவோ, வெறுப்பாகவோ, பேர், புகழ் போன்றவற்றின் மீதான வெறியாகவோ, வெறுப்பாகவோ இப்படி மனித மனம் வெறி அல்லது வெறுப்பை பற்றிக் கொண்டு, மனிதனை படாதபாடு பட வைக்கிறது.
  • நீதிநெறிகளை தங்களுக்கு சாதகமாக்கி சிலவற்றை வெறுப்பதும், நீதி நெறிகளை தங்கள் மனவெறிக்காக மீறுவதும் -இரண்டுமே மனிதனை துன்பத்தில் மூழ்க வைத்துவிடும்.

திண்டாட்டமில்லா தூய நிலை

  • நாடாளும் பலம் பெறுவதாலோ, பணம் குவிந்து விட்டதாலோ கொண்டாட்டம் பிறந்துவிடாது. தன்னை ஆளும் பலம் பெறுவதாலும், உள்ளத்தை ஆனந்தமாய் அனுபவிக்கும் குணம், பக்குவம் உருவாக்குவதாலும்தான் கொண்டாட்டம் பிறக்கும்.
  • திண்டாட்ட உணர்வுதான், உங்களுக்கும் கொண்டாட்டத்திற்கும் நடுவில் தடைச் சுவராய் இருக்கிறதென உங்களுக்குத் தெரியுமா ?
  • கிருஷ்ண, புத்த நிலையில் இருப்பவனை எந்தவொரு திண்டாட்டமும் அசைக்க முடியாது.

காரணம் திண்டாட்ட உணர்வை உதறியெறிந்துவிட்ட தூய நிலைதான்!

  • திண்டாட்ட உணர்வென்னும் நோய் ஒருவனைப் பிடித்திருக்கும்வரை அவன் கண்ணுக்குத் திண்டாட்டங்கள் மட்டுமே தெரியும்.
  • கொண்டாட்ட உணர்வு ஒருவனுள் உதயமாகி விட்டால் அவனுடைய கண்களுக்கு எல்லாமே கொண்டாட்டமாகத் தெரியும்.

ஒடு! ஆடு! அனுபவி!

  • எதுவாக இருந்தாலும் அது நிலையாக நிரந்தரமாக இருக்க வேண்டுமென்று நாம் ஏன் விரும்புகிறோம் ? இந்த ஒரு கேள்வி உள்ளே எழுந்தால் போதும். அதுவே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMத்திற்கு அழைத்துச் செல்லும்.

  • மனிதன் சந்தோஷத்திற்காகவும், தற்காலிகச் சுகத்திற்காகவும் அலைவது, கோடீஸ்வரன் கோடீஸ்வரனாக இருக்கும்போது கையேந்தி பிச்சையெடுப்பதற்குச் சமம்.

  • மித்யானந்தம் - சிற்றின்பம், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMம் - பேரின்பம்

  • THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆனந்தம் உள்ளே இருப்பது மறந்து போனதால்தான், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆனந்தத்தை வெளியே தேடித் தேடி மரத்துப் போகிறான் மனிதன். பின் மரித்துப் போகிறான்.

  • எந்த ஒரு சுகமாக இருந்தாலும், அந்த சுகம் அடைந்து முடிந்த பிறகு அனுபவித்த திருப்தி முழுமையாகக் கிடைப்பதில்லை.

காரணம் என்ன ?

  • அனுபவிப்பதை அடையும்வரை இருந்த ஆர்வம்! அடைந்து அனுபவித்த பிறகு மாயமாய் மறைந்து போகிறதே! ஏன் ? மனிதன் விரும்பும்போதெல்லாம், விரும்பிய அளவு சுகத்தை அனுபவிக்க வழி ஏதும் இருக்கிறதா? இவைகள்தான் இன்றைய மருத்துவ ஆராய்ச்சியை ஆன்மீகம் நோக்கி திருப்பியிருக்கும் வெகு பொது ஜன எதிர்பாா்ப்புகள்.

  • மனிதன் இப்படி எதிர்பார்ப்பதின் மூலகாரணம்தான் என்ன ? அது எங்கேயிருக்கிறது ?

இதற்கு ஒரு அருமையான ஜென் கூற்று பதில் சொல்கிறது ; 'முடிந்தவரை ஓடு! விடியும்வரை ஆடு! ஆசை தீர அனுபவி!' -தவறே இல்லை. அப்பொழுதாவது உனக்குத் தெரியட்டும் ! நீ தேடுவது வெளியே இல்லை என்று ...

சந்தோஷத்தை மறைப்பது ...

  • நியாயம், அநியாயம் என்பது மனிதநேயத்தின் அடிப்படையில் பிரித்துப் பார்க்கப்பட வேண்டியது.
  • ஆனால் வழக்கில் நியாயம், அநியாயம் பற்றி நிலவும் கருத்துக்கள் வேடிக்கையானது. இது பற்றுதலை அடிப்படையாகக் கொண்டது... அதாவது ... நியாயம் - தனக்கு சாதகமாக நடக்கும்

எல்லாமே நியாயமான விஷயங்கள்தான். அநியாயம் - தனக்கு சாதகமாக நடக்காத எல்லாமே அநியாயமான விஷயங்கள்தான்.

  • 'மருமகள் உடைத்தால் பொன் சட்டி, மாமியார் உடைத்தால் மண் சட்டி'

  • இந்தப் பழமொழி நியாயம், அநியாயம் பற்றிய கருத்து தலைகீழாக மாறிய பின்தான் சமூதாயத்தில் நுழைந்திருக்கிறது.

இப்படி தனக்கொரு சட்டம், ஊருக்கொரு சட்டம் என்று வாழ்பவர்களால் வாழ்க்கையை அனுபவித்து வாழ முடியாது. இதுபோன்ற சூழ்நிலைகளில் 'பாசம் கண்ணை மறைத்து விட்டது' என்று கூறி தப்பிக்கலாம்.

  • உண்மையில் பாசம் கண்ணை மறைப்பதில்லை. பற்றுதல்தான் கண்ணை மறைக்கிறது.

  • அது கண்ணை மாத்திரம் மறைப்பதில்லை. சந்தோஷத்தையும் சேர்த்து மறைத்து விடுகிறது.

  • பற்றைப் பற்றுவதை நிறுத்துங்கள், சந்தோஷம் சந்தடியில்லாமல் உங்களுக்குள் வந்து வெளி செல்லும்.

மீண்டும் மீண்டும் வரும் மீளாதுன்பங்கள்

  • ரசகுல்லா என்ன ஒரு அருமையான சுவை. - ஒன்றைச் சுவைத்தால் எவ்வளவு சந்தோஷம்! இரண்டு ... மூன்று ! ! ... நான்கு ? ... ஏழு, எட்டு சுவைக்க எவ்வளவு மயக்கம் ? தலைச்சுற்றல் ? எவ்வளவு கஷ்டம் ?
    • அனுபவி! அனுபவித்தே ஆகவேண்டும்! - என்ற 'வெறி' அனுபவிக்கும்வரை இருக்கிறது. நினைத்தது, நினைத்த அளவுக்கு நடக்கவில்லை என்றால் உடலே சிறிது நடுங்குகிறது, வியர்க்கிறது. இவ்வளவு கொள்ளை ஆசை, அனுபவித்த பின் எங்கே போனது ? அடுத்த நிமிடம் வெறி சலிப்பாகிவிட்டதே! அதுவரை ஈர்த்தது. இப்போது ஈர்க்கவில்லையே ஏன் ?

மனிதன் மீண்டும், மீண்டும் கஷ்டத்திற்குள்ளாவதும், துன்பமடைவதும் எதனால் ? இவற்றிலிருந்தெல்லாம் விடுபடுவது சாத்தியமா ?

பதில் : நிச்சயம் சாத்தியமே.

எப்படி? அடுத்த பக்கம் புரட்டுங்கள் பதில் காத்திருக்கிறது உங்களுக்காக.

தரங்குறைந்த மனதின் செயல்

  • தரங்குறைந்த மனம்தான் -உணர்ச்சி வேகத்தில் உசுப்பப்படும். ஊர் பேச்சு கேட்டு ஆடும். தவறைக்கூட சரியென சொல்லும். சரியானதைக்கூட தவறென வாதிடும்.
  • எனவே, மனிதர்களைத் தரம் பிரித்துப் பார்ப்பது தரங்குறைந்த மனதின் செயல்.
  • மனிதத் தரம் உயரும்வரை தரம் பிரித்தல் ஒரு தொடர் கதை.
  • தரமான மனிதனால் தரம் பிரித்து பார்க்க முடியாது. அதற்கு அவசியமும் இருக்காது.
  • சரியை சரியாய் புகழ்வதும் தவறைக்கூட சரியாய் புரிய வைப்பதும் நடுநிலையாய் வாழத்தெரிந்தவனுக்கே சொந்தம்.
  • எதிரியையே நண்பனாக்கும் வல்லமை சரியான அன்பிற்கு உண்டு. நண்பனையே எதிரியாக்கும் வல்லமை தவறான அன்பிற்கு உண்டு. உண்மையான அன்பு 'சரி தவறுக்கு' அப்பாற்பட்டது.
  • அன்பு என்ற பெயரில் மனிதன் நிகழ்த்தும் பாச நாடகம் 'சரி தவறுக்கு' உட்பட்டது.

வருந்துவதைவிட திருந்துவதே ஞானம்

  • ஒரு உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். மற்றவர்களிடம் எப்படிக் குற்றம் கண்டு பிடித்துத் திட்டுகிறீர்களோ, அதேபோல்தான் ஆழ்மனதில் நீங்கள் அதே தவறு செய்யும்போது உங்களை நீங்களே திட்டிக் கொள்வீர்கள்.
  • தவறு கண்டு பிடித்துக் கொண்டேயிருப்பது தவறான செயல். நம்முடைய பழைய தவறுகளைக் கிளறிக் கிளறி அதற்காக இன்றும் நோவது மடச்செயல்.
  • தவற்றைப் பற்றிச் சரியாக விளக்கும் ஒரு ஜென் கூற்று. 'தெரிந்து கொள்! புரிந்து கொள்! நீ தவறு செய்யப் பிறந்தவன். தொடர்ந்தல்ல !'

ஆம்! மனிதன் தன் வாழ்வில் தவறு செய்வதை தவிர்க்கவே முடியாது.

காரணம் செய்வது என்பது எது தவறு எது சரி ? என்பதைக் கற்றுக்கொள்ள உதவும் ஒரு வாழ்வியல் வழிமுறை.

ஆனால், ஒருமுறை செய்த தவறைக் கண்டிப்பாக திரும்பச் செய்யக் கூடாது. செய்த தவறையே திரும்பத் திரும்ப செய்யாதிருக்கத்தான் இறைவன் 'புத்தி' என்ற ஒரு விஷயத்தை மனிதனுக்குப் பரிசளித்திருக்கிறான்.

  • செய்த தவறுகளுக்காக வருந்துவது துவக்கத்தில் சரி. தவறுக்காக வருந்திக் கொண்டேயிருப்பது தவறு. தவறுக்காக வருந்துவதைவிட, திருந்துவது புத்திசாலித்தனம்.

  • தவறு என்று நாம் கண்டு கொண்டதை திரும்பச் செய்யாதிருக்க வேண்டுமானால் கொஞ்சம் கவனத்தை நம்முள் கொண்டு வந்தால் நிச்சயம் சாத்தியமே. தவறுக்காக வருந்துவதை விட திருந்துவதுதான் நம் அகத்துக்கு மருந்து.

    • இது வாழ்க்கை சுகத்துக்கு ஓர் எளிய வழி.

நீங்களும் கடவுளாகலாம்

  • நீங்கள் யாராக இருந்தாலும் சரி, உங்களாலும் கடவுளாக முடியும். கடவுளை உணர முடியும்.
  • ஆனால்,

கடவுள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் கடவுளாக மாற நிச்சயமாக முடியாது. உங்கள் நினைவுக்கும், மனதிற்கும் அப்பாற்பட்ட ஒரு நிலைதான் கடவுள்தன்மை.

கடவுள் என்று நீங்கள் நினைப்பதெல்லாம் கடவுளைப் பற்றிய உங்கள் மனக்கருத்துக்களும், அதீத கற்பனைகளும்தான்.

  • மனித மனதால் கடவுளை கற்பனை செய்ய முடியாது. அப்படிக் கற்பனை செய்ய முடிந்தால் அது கடவுளாக இருக்க முடியாது.
  • நீங்கள் கடவுளாக, தனி அவதாரம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் கடவுளாக மாற இந்தப் பிறவியே போதுமானது.
    • கடவுளைப் பற்றிய கருத்துக்களைக் கடந்து கடவுளைக் கண்டு கொள்ளுங்கள். நீங்களும் கடவுளாக முடியும். அதற்கு முதல் படி, 'நான் ஏன் கடவுளாகக் கூடாது' என்ற கேள்வியை முழு உணர்வோடு கேளுங்கள். வழி பிறந்து விட்டது.

எது ஞானம் ?

பொதுவாக மனிதர்கள் ஞானத்தை பற்றி வைத்திருக்கும் கருத்துக்கள் இரண்டு:

  1. விஷய ஞானம் அதாவது அறிவு.

  2. அனுபவ ஞானம் அதாவது அனுபவம். உண்மையான ஞானம் - விஷய ஞானத்தையும், அனுபவ ஞானத்தையும் தாண்டியது.

அறிவையும், அனுபவத்தையும் தாண்டியது அனுபூதி. இந்த அனுபூதி ஆனந்தத்தின் உச்சம். அனுபூதிதான் உண்மையான ஞானம்.

  • வெறும் செய்திகளும் அறிவும் மூளையை நிரப்பும். அறிவைத் தாண்டிய அனுபவமே விடுதலையைத் தரும்.

  • அறிவை அனுபவமாக மாற்ற முயற்சி செய்தால் ஓர் உண்மை தெரியவரும்.

  • அது பெரும்பாலான உலக அறிவுக்கும் வாழ்க்கை அனுபவத்திற்கும் சம்பந்தமே இல்லை என்று !

  • வாழ்க்கைப் பாடங்களை முழுழுமையாக புரிந்துக் கொள்வதே பூரண ஞானம்.

  • அறிவை அனுபவமாக்கி அனுபூதி நோக்கி நகருங்கள் !

ஞானகுருவிடமிருந்து முழுப்பலனைப் பெற...

❖ ஆன்மீகத்தை... கற்றுக்கொள்வது சுலபம். கற்றுக்கொடுப்பது கடினம். காரணம், கற்றுக் கொள்பவன் ஞானகுருவிடமிருந்து கற்றுக்கொள்ள மனதளவில் தயாராக இருப்பான். ஆனால், ஒரு பக்தனுக்கு குரனகுரு கற்றுக் கொடுக்க முயற்சிக்கும்போது பக்தனின் மனதை கற்றுக்கொள்ள தயார்படுத்துவதிலேயே குருவின் நேரம் வீணாகிவிடும்.

  • கையில் வெண்ணெய் வைத்துக் கொண்டு நெய்யைத் தேடி அலைபவன் போல், உள்ளுக்குள் பேரின்பம் இருக்க

வெளியே சிற்றின்பத்தை மனிதன் தேடி அலைந்தாலும், தேடுபவனிடம், 'மனிதா! நீ தேடுவது உன்னிடம்தான் இருக்கிறது' என்று எவ்வளவு நேரம் முயன்று புரியவைக்க முயற்சித்தாலும், மனித மனது புரிந்துகொள்ள முயற்சிப்பதைவிட, புரிந்துகொள்ள முடியாததுபோல் நடிப்பதிலேயே காலத்தை ஓட்டி விடும். மனிதனும் 'அப்பப்பா! ஞானகுரு சொல்வதை எல்லாம் புரிந்து கொள்வதற்கே - நாம் போன பிறவியில் பெருந்தவம் செய்திருக்க வேண்டும். நம்மைப் போன்றவர்களுக்கு அவ்வளவு பெரிய ஞான விஷயங்களைப் புரிந்து கொள்வது கடினம்'என்று சொல்லி எளிதாக தப்பிக்கவே முயற்சிப்பான்.

  • மனம் போடும் தப்புத் தாளத்திற்கேற்ப ஆடிக் கொண்டிருக்கிறான் என்ற உண்மை பலருக்கு கடைசிவரை தெரிவதே இல்லை.
  • மனம்தான் ஆனந்தத்தை அடையும் வழியை புரிந்துகொள்ள விடாமல் தடுக்கிறது என்பதை புரிந்துகொண்டால், ஞானகுருவின் பணி எளிதாகிவிடும். சீடனாக மாறுவது மனோரீதியான மாற்றம்.
  • ஒரு ஆஸ்ரமத்தில் தங்குவதால் மட்டுமே சீடனாகி விடமுடியாது.
  • ஞானகுருக்களான சைதன்யர், இராமகிருஷ்ணர், இரமணரிடம் பல சீடர்கள் குடும்பஸ்தர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

இவர்களின் திறந்த மனது ஞான குருவின் வழிகாட்டுதலை அப்படியே ஏற்றுக் கொள்ளும். இது போன்றவர்களின் ஆன்மீக வளர்ச்சியும் வேகமாக இருக்கும்.

  • ஒரு ஞானகுருவிடமிருந்து முழுப் பலனைப் பெற விரும்பினால், மனதளவில் சீடனாக இருக்க வேண்டும். மற்றதை ஞானகுரு பார்த்துக் கொள்வார்.

Part 3: Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1_Tamil_part_3.md

சரணாகதி

  • என் உடலும் தியானத்திற்கு வளையாது, என் மனமும் தியானத்தால் அடங்காது, ஆனால் எனக்கு ஆன்மீகத்தில் முழு நம்பிக்கை உண்டு - என்று சொல்லும் மனிதனுக்கு சரணாகதிதான் எளிய வழி.
  • ஆழ்ந்த அன்பும், நிறைந்த மரியாதையும்தான் சரணாகதிக்கு மிக மிகத் தேவையான அடிப்படை அம்சங்கள்.
  • துக்கத்தைத் தாண்டி, கவலையில்லாத ஆனந்த வாழ்விற்கு துரிதமாக அழைத்துச் செல்லும் ராக்கெட்தான் சரணாகதி.
  • சரணாகதி வெறும் உதட்டிலிருந்து பிறக்கக் கூடாது. உள்ளத்தின் ஆழத்திலிருந்து உணர்வுபூர்வமாகப் பிறக்க வேண்டும்.

தெளிவென்னும் குழந்தை

  • குழப்பத்தை நீங்கள் வெறுக்கத் தேவையில்லை; நீங்கள் வளருகிறீர்கள் என்பதற்கான அறிகுறிதான் குழப்பம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
  • குழம்புவதில் தவறில்லை ; குழம்பிக் கொண்டே இருப்பதுதான் தவறு.
  • நீங்கள் குழம்புவது நியாயம் ; அடுத்தவர்களைக் குழப்புவது அநியாயம்.
  • இன்றைய குழப்பம் நாளைய தெளிவு.
  • எது சரி - எது தவறு என்ற தெளிவை ஏற்படுத்தும் மனதின் செயல்முறைதான் குழப்பம்.
  • மேற்சொன்ன வரிகளை ஒன்றுக்கு இரண்டு முறை படித்து, மனதில் தக்க வைத்துக் கொண்டாலே குழப்பத்தைப் பாதி தூரம் ஓட்டிவிடலாம்.
  • பிரச்சினை குழப்பத்தில் இல்லை, குழப்பத்தை நீங்கள் அணுகும் முறையில்தான் இருக்கின்றது.
  • குழப்பமே குழம்புமளவுக்கு குழப்பத்தை குழப்புவது, குழப்பத்தை குழப்பம் இல்லாமல் எதிர்கொள்ளும் போதுதான் சாத்தியம்.
  • குழப்பத்தை முழுமையாக வரவேற்றுக் கொள்ளுங்கள். குழப்பத்தின் உச்சிக்குச் சென்றாலும் பயப்படாதீர்கள். குழப்பத்தைத் தாண்டிய அடுத்த நிமிடம் தெளிவு கிடைத்துவிடும். இது சூட்சுமமான உண்மை.

தெளிவு பெற்ற ஒவ்வொருவரும் ஒத்துக்கொள்ளும் உண்மை.

  • தெளிவு என்ற குழந்தையை நம்முள் பிறக்க வைக்க நாம் படும்பாடுதான் குழுப்பம்.
  • குழப்பத்திற்கு பயந்து குழப்பத்தைக் கலைக்க நீங்கள் முயற்சி செய்வதால் எத்துனைமுறை தெளிவைப் பிறக்கவிடாமல் கருவிலேயே கலைத்திருக்கிறோம் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
  • குழப்பத்தை வரவேறுங்கள்!

நம் கட்டுப்பாட்டில் நாமில்லை ... ஏன்?

  • கிளா்ந்தெழுவதும், பொங்கியெழுவதும் முழுக்க முழுக்க உங்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தால் நீங்கள் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லாவிட்டால்... கொந்தளிக்கும் உணர்ச்சிகள் அவை வாழ, உங்களைக் கருவியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்று அர்த்தம்.

  • கோபிப்பதும்,

    • ஆசைப்படுவதும், துக்கப்படுவதும் பெரும்பாலும் நம் கையிலில்லை. இப்படி நிகழ்வது ஏன் ?
  • ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமானவன், தனியானவன். இது நிகழ்வது எப்படி?

  • தொடர்ந்து துன்புறுத்துபவர்கள், காரணமில்லாவிட்டாலும் கவலைப்படுபவர்கள், தொட்டதுக்கெல்லாம் எரிச்சலடைபவர்கள். அப்படித் தொடர்வது எதனால் ?

  • ஏன் ? எப்படி ? எதனால் ? இந்த மூன்று கேள்விக்கும் ஒரே பதில் - அதுதான் மனித சுபாவம்.

குழந்தைகளை வளரவிடுங்கள்

  • குழந்தைகளை வளர்க்க வேண்டிய அவசியமில்லை. குழந்தைகள் வளர்கிறார்கள்.
  • 'வளர்க்கிறேன்'என்ற பெயரில் வளர்ச்சியின் போக்கைத் தடுக்காமல், திசை திருப்பாமல் இருப்பதுதான் குழந்தைகளுக்கு பெற்றோர் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு.
  • 'என் பிள்ளை' என்று உரிமை கொண்டாடி, குழந்தையை ஒரு உடைமையாக்குவதைவிட - என்னைத் தாயாக்கிய / தந்தையாக்கிய ஒரு உயிர் என்று மதித்துப் பாருங்கள் - குழந்தை தெய்வமாகத் தெரியும்.
  • வெறும் உணவு, உடை, பாதுகாப்பு கொடுத்துவிட்டு சில நேரங்களில்

திட்டுவதற்கும், சில நேரங்களில் கொஞ்சுவதற்கும் பெயர் 'வளர்ப்பு' அல்ல. இந்த உண்மை புரியவரும்போது குழந்தையை வளர்க்க நீங்கள் வளர்ந்திருக்க வேண்டும் என்பதும் புரிய வரும்.

  • குழந்தையைத் தண்டிப்பது 100% தவறும் அல்ல. குழந்தைக்கு செல்லம் கொடுப்பது 100% சரியும் அல்ல.
  • 'குழந்தையை வளர்க்கிரேன்' என்ற பெயரில் கெடுப்பது, 'இல்லை கெடுக்கக் கூடாது' என்ற பெயரில் வளர்க்கத் தவறுவது - இரண்டுமே 100% தவறு.
  • முதலில், உங்கள் குணக் கோளாறுகளை கண்டுபிடித்து அதை எவ்வளவு சீக்கிரம் சரி செய்ய

முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சரி செய்வதற்கான வேலைகளை ஆரம்பியுங்கள்.

  • இரண்டாவது, ஒரு குழந்தைக்குச் சராசரி பெற்றோர்கள் 'வளர்க்கிறேன்' என்ற பெயரில் செய்யும் கெடுதல்களை தெரிந்துகொள்ளுங்கள். குழந்தையை வளர்க்க நீங்கள் வளருங்கள். இரண்டுமே 100% சரி.

மனிதரின் நிஜமான நிலை

  • முழு யோக்கியனும் அரிது. முழு அயோக்கியனும் அரிது.
  • 'நல்லவர்' என்ற சான்றிதழை நாம் ஒருவருக்களிப்பது ... அவரின் அயோக்கியத்தனங்கள் நமக்குத் தெரியாத வரைதான்.
  • அதேபோல் 'கெட்டவர்' என்று நாம் ஒருவரை சொல்வது ... அவரின் ஆத்மார்த்தமான குணங்கள் நமக்குத் தெரியாத வரைதான்.
  • நம்முடைய அபிப்பிராயங்களைக் கோலாகவும், தீர்ப்பைக் காலாகவும், மனத்தெளிவை வெளிச்சமாகவும் வைத்து நடக்கும்...

இந்த'பந்தபாசம்' என்னும் வாழ்க்கை நாடகத்தை இனிதே நடத்த, தீர்ப்பு என்னும் கால்களை உதறுங்கள்! அபிப்ராயங்கள் என்னும் கோலைத் தூக்கி எறியுங்கள்! மனக்கண் ஒளி பெற ஆரம்பிக்கும். நிஜம் நிஜமாகத் தெரியும் !

கடவுள்

  • கடவுளைக் காண முடியும். கடவுளை உணர முடியும். கடவுளை அனுபவிக்க முடியும்! - நீங்கள் கடவுளான மறுநிமிடமே!
  • கடவுள் என்றால் கட + உள். எல்லாவற்றையும் கடந்து விட்டால் உள்ளேயிருப்பது கடவுளைத் தவிர வேறெதுவும் இல்லை.
  • கடவுளாகவே மனிதன் மாறும்வரை ... கடவுளை மனிதனால் கற்பனை செய்ய முடியாது. கடவுளை அதிசய அமானுஷ்ய

சக்திகளின் தொகுப்பாகவே மட்டுமே மனிதனால் கற்பனை செய்ய முடியும்.

கடவுளை மனிதனால் புரிந்து கொள்ளவே முடியாது. கடவுளை கடவுளால்தான் புரிந்து கொள்ள முடியும். எனவே, கடவுளாகுங்கள்!

வாழும் நானிகளே சாட்சி

  • 'ஏன் பிறந்தோம் ?' என்ற கேள்வி உணர்வுப் பூர்வமாக உள்ளத்திலிருந்து எழுவதுதான், உங்களின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அறிந்துகொள்வதற்கான அடிப்படைத் தகுதி.
  • மனிதன் ஏன் பிறப்பெடுத்தான் என்பதற்கு ரிஷிகள் சொல்லும் பதில்,

'நிலையான,

நிம்மதியான,

எதனாலும்,

எப்போதும் ஆனந்தத்தை (முழு சுகத்தை) அடைய வேண்டும் என்பதுதான் மனிதப் பிறப்பின் அடிப்படை நோக்கம்'. மேலும் 'ஆனந்தத்தில் லயித்திருந்த நாம் நமக்கே ஆரம்பித்து வைத்த கண்கட்டு

விளையாட்டுதான் மனித பிறப்பு. இந்த ஒரு உண்மை மட்டும் உங்களுக்குப் புரிந்துவிட்டால், விளையாட்டு சுவராஸ்யமாகிவிடும்'என்கிறார்கள். இந்தக் கூற்றுகள் உண்மை என்பதற்கு வாழும் ஞானிகளே சாட்சி. இதுபோன்ற சத்யங்கள் மனிதனுக்குத் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் சுகம், திருப்தி, சமாதானம், நிம்மதி என்று மனிதன் தேடுவது எல்லாமே இந்த நித்யமான ஆனந்தத்தைத்தான். இதுதான் மனிதனின் உச்சபட்ச குறிக்கோள். இதை அடையத்தான் மனிதன் பிறந்தான்.

மனிதன் தேடுவது மனிதனுக்கு வெளியே இல்லை. அது மனிதனுக்குள்ளேயேதான் இருக்கிறது. உங்கள் பிறப்பின் நோக்கமான ஆனந்தத்தை அடைய செயல்படுங்கள். ஒரு நிமிடம்கூட வீணாக்காதீர்கள்.

பித்தன் புத்தனாகும் நேரம்

  • ஜனனத்திற்கும், மரணத்திற்கும் இடையில்தான் எல்லா வேறுபாடுகளும் தெரிகிறது. இருக்கிறது. அப்புறம் இல்லை. மனிதன் மரணிக்கும்போது ... உடல் இறக்கிறது. மனம் தன் கதையைத் தொடர்கிறது. மீண்டும் ஜனனம் ! மீண்டும் மரணம் ! சாம்பல்கூட மிஞ்சாத அளவுக்கு உடலை எரித்தாலும், சாகாத மனம் சாக வேண்டும். இந்த நிகழ்வுதான் நிஜமான மரணம்.

இந்த சுபநிகழ்வு நிகழும்போதுதான் மனிதன் தெய்வமாகின்றான். பித்தன் புத்தனாகின்றான்.

மனம் உயிரோடிருக்கும்வரை நீங்கள் வாழ்வதில்லை. மனமே உங்கள் மூலமாக வாழ்கிறது. மனம் மரணிக்கும் போதுதான் முதல்முறையாக நிஜமாய் நீங்கள் பிறக்கிறீர்கள்.

ஞானமடைதல்

ஞானமடைய, சொடுக்கிடும் நேரத்தைவிட குறைவான நேரத்தையே இறைசக்தி எடுத்துக் கொள்ளும். 99.0°C-ல் இருக்கும் நீர் 100°C-ல் நீராவியாக மாற எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளுமோ, அவ்வளவு நேரம்தான் திடமான மனம் கரைய எடுத்துக் கொள்ளுளும்.

ஆனால் சாதாரண நீர் 99.9℃ அடைய எவ்வளவு நேரமாகும். அதற்கு எவ்வளவு வெப்பமும், சக்தியும், முயற்சியும் தேவைப்படும். ஒரு வேளை நீர் பனிக்கட்டியாக உறைந்து போயிருந்தால் ...

  • பலர் மனம் பனிக்கட்டிதான். உங்களுக்குள் உஷ்ணம் உருவாக்கப்பட வேண்டும். உழைக்க ஆரம்பியுங்கள் ... நெருப்பு பற்றிக்கொண்டால், அடுத்த நிமிடமே காணாமல் போகும் கற்பூரக்கட்டியைபோல மனம் காணாமல் போகும் அற்புதம் நிகழும்.

துடிப்புகள் பலவிதம்

வளரும் நாடுகள் சாதிக்கத் துடிக்கின்றன. வளர்ந்த நாடுகள் சாதித்தும் துடிக்கின்றன. சாதனையின் உச்சியில் இருக்கும் அமெரிக்காவில் மூன்றில் ஒருவர் ஏதாவது ஒரு மனநோயால் பாதிக்கப்பட்டு வேதனைப் படுகிறார்கள். வெறும் சாதனை மாத்திரமே சந்தோஷத்தையும், திருப்தியையும் தருமென்றால் அமெரிக்காவில் மனநோயாளியே இருக்கக் கூடாது. ஏனென்றால், அடிப்படை வசதிகள் அனைத்தும் தாண்டி பல சாதனைகள் புரிந்த மக்கள் நிறைந்த நாடு அது.

  • எதையாவது சாதிக்க ஆரம்பித்து, சாதித்தபின், அந்த சாதனைக்கும் உங்களின் ஆழ்மனதின் விருப்பத்திற்கும் சம்பந்தமே இல்லை என்றால் சாதனையே வேதனையாகி விடும்.
  • சாதிக்க துடிப்பது, சாதித்தும் துடிப்பது எது பரிதாபத்திற்குரியது ? யோசியுங்கள். யோசனை தரும் ஆர்வத்தோடு கட்டுரையைத் தொடருங்கள் ...

வாழ்க்கையை ஜெயித்துக் காட்டுங்கள்!

சாதனையின் ரகசியம், இந்த மூன்று வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறது. - அது நம்பிக்கை, ஒழுக்கம், உற்சாகம். நம்பிக்கை, உற்சாகம் என்ற இரண்டும் சாதிப்பவனுக்கு அவசியம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால், ஒழுக்கம் அவசியமென்பது பலருக்கும் தெரியாத ஒன்று. 'தனிமனித ஒழுக்கம் வேறு. சமுதாய ஒழுக்கம் வேறு' - நான் அவசியம் என்று கூறுவது தனி மனித ஒழுக்கத்தை. சாதிப்பவனை அவன் பாதையிலிருந்து சற்றுக்கூட தடுமாறாமல் காப்பாற்றும் சக்தி படைத்தது தனி மனித ஒழுக்கம்.

'நம்பிக்கை', 'ஒழுக்கம்', 'உற்சாகம்' ஆகியவற்றின் கூட்டு வெளிப்பாடே சாதனை! ஒழுக்கம் இருந்து, நம்பிக்கையும், உற்சாகமும் மிகுந்தால் அந்த மனிதனின் சாதனை - பக்கக் கண்ணாடி போடப்பட்ட குதிரையின் ஸ்திரமான ஓட்டம்போல இருக்கும் எடுத்த இலக்கை அடையலாம். வழி தவற மாட்டார்கள். வெறும் நம்பிக்கையும் உற்சாகமும் இருந்து ஒழுக்கம் இல்லாதிருந்தால் அது காட்டுக் குதிரை போலத்தான் மனிதனை ஆட்டிப்படைக்கும். இந்த நிலையில் மனிதன் வழிதவற வாய்ப்பு அதிகம். வெறும் ஒழுக்கம் மட்டுமே கடைப்பிடித்து நம்பிக்கையும், உற்சாகமும் மிகக்

குறைவாகக் கொண்டிருந்தால் அது மனிதனை ஒரு கிழட்டுக் குதிரைபோல ஆக்கி விடும். வாழ்க்கையில் மந்தம் மாத்திரமே மிஞ்சும்.

  • உங்களின் ஓட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் ? கிழட்டுக் குதிரையின் ஓட்டமா ? காட்டுக் குதிரையின் ஓட்டமா ? ஜெயிக்கும் குதிரையின் ஓட்டமா ? ஒழுக்கம், நம்பிக்கை, உற்சாகம் மிகுந்து வெளிப்பட்டால் ஜெயம் உறுதி. வாழ்க்கையை ஜெயித்துக் காட்டுங்கள்!

அருமையான உலகத்தை உருவாக்கலாம் வாங்க!

அருமையான வாசகத்தோடு துவங்குகிறேன். 99 முறை செய்த நல்லதையெல்லாம் விட்டு விட்டு ஒரே ஒருமுறை செய்த தவறை கணக்கில் கொண்டு கோபிப்பது - மனிதன். 99 மூறை செய்த தவறுகளையெல்லாம் விட்டுவிட்டு, ஒரே ஒரு முறை செய்த நல்லதுக்காக மனதார நன்றியோடு ஆசீர்வதிப்பது - கடவுள். நீங்கள் மனிதனா ? கடவுளா ? சுற்றியிருப்பவர்களிடம் தவறு கண்டுபிடித்துக் கொண்டே இருப்பது சிலருக்கு வெல்லம் சாப்பிடுவதுபோல சுவராஸ்யமான விஷயம்.

  • மற்றவர்களிடம் தவறு கண்டுபிடித்துக் கொண்டேயிருப்பதுதான் நாம் தவறாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கான அத்தாட்சி.
  • சரியாக வாழும் ஒரு மனிதன் மற்றவர்களிடம் நல்லதைதான் முதலில் கண்டு கொள்வான். இவர்களுக்கு தவறுகள் இரண்டாவது பட்சமாகத்தான் தெரியும். மற்றவர்களிடம் நல்லதை இனம் கண்டுகொள்ள தெரிந்தால் உலகமே நல்லவர்களால் நிறைந்திருப்பது கண்களுக்குத் தெரியும். 'ஆஹா! என்ன அருமையான உலகம்!' என்று நினைக்கத் தோன்றும்.

மற்றவர்களிடம் தவறையே இனம் கண்டுக் கொண்டு இருந்தால் உலகமே கெட்டவர்களால் நிறைந்திருப்பதாகத் தெரியும். 'உலகத்தில் நல்லவர்கள் அரிது.

உலகமே மோசம்' என்று நினைக்கத் தோன்றும்.

நீங்கள் எதை மிகைப்படுத்துகிறீர்கள் ? அதுவே உங்களின் உலகத்தை வடிவமைக்கிறது.

வாழ்வும் கனவும்

வெண்ணெயை கையில் வைத்துக்கொண்டு, நெய்யைத் தேடித்தேடி அலைவது போன்ற ஆர்வத்தையும், சக்தியையும், அள்ளி அள்ளித் தரும் வேடிக்கையான அம்சத்திற்கு பெயர்தான் 'மாயா'. ஞானமடையும் முன்வரை, மனிதன் வாழும் அறுபது வருட வாழ்விற்கும் - ஆறுமணி நேர கனவிற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. கால அளவில் வித்தியாசமுண்டு. அவ்வளவே. ஒரு கனவு - ஆறு மணி நேரம்! ஒரு வாழ்வு - அறுபது வருஷம்! கனவு கலைந்ததும் கனவு உலகம் காணாமல் போய்விடும் ! அகங்காரம் கலைந்ததும் நினைவு உலகம் காணாமல் போய்விடும்.

ஆத்மன் விழித்ததும்தான், 'உண்மையாக உள்ள உலகமே' கண்ணிற்குத் தெரியும்! தூங்கும் மனிதனுக்கு - கனவு மாயை விழித்திருக்கும் மனிதனுக்கு - நினைவு மாயை விழித்துக்கொண்ட மனிதனுக்கு - எல்லாம் மாயை.

நாமாய் துரத்தாதவரை தானாய் விலகாதது -மாயை ! உங்கள் வாழ்க்கையை வாழ வேண்டுமா ? உண்மையான உலகை அனுபவிக்க வேண்டுமா ? கடவுளை நேரில் காண வேண்டுமா ? வேறு வழியேயில்லை... மாயத்திரை கிழிக்கப்பட வேண்டும். அதுவும் உங்களாலேயே ...

தேனிலவு

எதிர்காலம் ஆஹா... ஒஹோ ... என்றிருக்கும், வாழ்க்கைத் துணை மகா ராணி / மகாராஜாபோல் இருக்கவேண்டும், என்பன போன்ற மனக்கருத்துக்கள் சிறு வயதிலேயே எளிதாக மனிதனுள் நுழைந்து விடுகிறது. நிஜத்தில் சாத்தியப்பட வாய்ப்பில்லாத அதீத எதிர்பார்ப்புகள்தான் மன நிம்மதியை உறிஞ்சி விட்டு அதிருப்தியை நம்முள் கொப்பளித்து விடுகின்றன. தேன் நிலவு நாட்கள்தான் ஒரு இளைஞன் இளைஞியின் வெகு கால கனவுகள் நிஜமாகும் நேரம். இதை 'தேன்சூரியன்' எனச் சொல்லாமல் ஏன் 'தேன்நிலவு' என்று சொல்கிறார்கள் ?

பதில் காண கவனமாகக் கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள் ... இங்குதான் தன் வாழ்வில் முதல் முறையாக நிஜத்தை நேரடியாக இவர்கள் சந்திக்கிறார்கள்.

வாழ்வு இப்படியிருக்க வேண்டும், வாழ்க்கைத் துணை இப்படியிருக்க வேண்டும் என்ற கனவுகள் - 'இவ்வளவு தான் வாழ்க்கை' என்ற நிஜத்தை, நேருக்கு நேர் சந்திக்கும் காலம்தான் தேன் நிலவு. வாழ்க்கையைப் பற்றிய கனவுக்கும், நிஜ வாழ்க்கைக்கும் சம்பந்தமேயில்லை என்பதைத் தெரிந்துகொள்ள முப்பது நாட்களே அதிகமென்று பெருகிவரும் விவாகரத்துகள் உறுதிபடச் சொல்கின்றன.

ஆசை மறுபது நாள்

மோகம் முப்பது நாள்' என்பதெல்லாம் விளையாட்டு பழமொழிகள் அல்ல.

நம் மூதாதையரின் மனோதத்துவ முதிர்ச்சியின் வெளிப்பாடு. முப்பது நாட்களுக்கு மேல் ஒரு நிலவு தாங்காது.

அதேப்போல், மனிதா! உன் கனவுகளும் முப்பது நாட்களுக்கு மேல் தாங்காது... என்பதை இலைமறை காயாய் செந்தமிழில் என்றோ 'தேன்நிலவு' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். முப்பது நாட்களில் வாழ்க்கைப் புளித்துப் போகவா கனவு காண்கிறோம் ? கனவின் இயல்பே மிகைப்படுத்தி நிஜத்தை புளிக்கச் செய்வதுதான்.

கனவுகளை கட்டுப்பாடில்லாது உருவாக்க உதவும் அதே அகங்காரம்தான், கனவுகளை நிஜவாழ்வில் அனுபவித்து வாழவிடாது தடுத்துக் கொண்டிருக்கிறது.

கனவுகள் நிஜமாக ஆரம்பித்தால் அது அகங்காரத்திற்கு அழிவு! எனவே அது வாழ்வதற்காக, உங்களைக் கனவு காணத் தூண்டும்; ஆனால் கனவை நிஜவாழ்வில் அனுபவிக்காமல் போவதற்கான எல்லா முன்னேற்பாடுகளையும் உங்கள் மூலமாகவே அது செய்து முடிக்கும். அவ்வளவு தந்திரமானது அது!

  • கனவுகளையும் மனக்கருத்துக்களையும் தாண்டி வாழ ஆரம்பியுங்கள். வாழ்க்கை தேன் போன்று இனிக்க ஆரம்பிக்கட்டும். தேனினும் இனிய மனித வாழ்வு உங்களுக்கும் உரித்தானதாகட்டும்.

ஒவியம், சிற்பம், காவியம், போன்றவை மட்டுமே கலை அல்ல. கலைநயத்தை நம் வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுத்த முடியும்.

பேசும் கலை, படிக்கும் கலை, பழகும் கலை, ஏன் சமைப்பது கூட ஒரு கலைதானே! கலைநயம் கொண்ட ஒருவரின், கலை வெளிப்பாடு எதுவாக இருந்தாலும்

அதன் மீது நம்மையும் அறியாமல் ஈடுபாடு வரும்.

கடலில் பெருங்காயத்தைக் கரைப்பதால் கடலுக்கு நறுமணம் கிடைக்கிறதோ இல்லையோ - முதலில் நம் கை முழுவதும் பெருங்காயம் நறுமணம் மணக்கும். நம்முடைய கலை வெளிப்பாட்டால் மற்றவருக்கு நன்மை கிடைக்கிறதோ இல்லையோ - முதலில் நமக்குள் சந்தோஷம் பிறக்கும். திருப்தி மலரும். மற்றவர்களுக்காக அல்ல உங்களுக்காக கலைஞனாகுங்கள்.

கலைத்துவத்தின் மூக்கியத்துவம்

கலை என்பது ... கவலையை மறக்கடிக்கும் ஒரு இனிமையான துறை. கலை என்பது ... நம்மிடமிருக்கும் மிருதுத் தன்மையை வெளிக் கொண்டுவரும் ஒரு அருமையான முறை. ஒவ்வொரு மனிதனின் தனித்தன்மையை தயக்கமில்லாமல் வெளியே கொண்டுவர உதவும் ஒரு அருமருந்து கலை. ஒரே ஒரு துறையிலாவது கலைத்துவம் பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு அம்சத்தை இழக்கிறீர்கள்.

செய்யும் செயல்திறன் தியானம். பூரண கலைத்துவம்தான் ஞானம். இயல்பான, மிருதுவான வாழ்வுதான் ஆனந்தம்.

அதிசயம், ஆச்சரியம், சாதனை

இன்னும் மலராத மொட்டு மனிதனின் தனித்துவம் (Individuality). மலர்ந்தும் ...

வாசமில்லா மலராயிருப்பவை ! மனிதனின் ஆளுமை எனப்படும் குணாதிசயங்கள் (Personality).

மனிதன் கடவுளாக மலர்வது மட்டுமே இந்த உலகின்

பெரிய அதிசயம், ஆச்சரியம், சாதனை.

மலர்ந்த மலரின் (மனிதனின்) ... நறுமணம் - மனிதநேயம் நிறம் - அன்பு அழகு - ஆனந்தம்

உள்ளுலக விசா

'சில தடவைகள் தியானத்தில் ஈடுபட்டேன், பெரிய மாற்றம் ஒன்றும் நிகழவில்லை' என்று சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள். சில தடவைகள் தியானத்தில் ஈடுபட்ட உடன் பலன் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. முதலில் மனதின் சப்தம் கேட்கப்பட வேண்டும். இரண்டாவதாக மனதின் இயக்கம் புலப்பட வேண்டும். மூன்றாவதாக மனதைப் புரிந்து அதைக் கடக்க வேண்டும். இவை அனைத்தும் நிகழ உணர்வுத் தெளிவு தேவை. உணர்வுத் தெளிவை அதிகப்படுத்துங்கள்.

அதற்கு சில டிப்ஸ்..

மனதின் சப்தம் கேட்கப்பட, உங்களோடு நீங்கள் செலவிடும்நேரம் அதிகப்படுத்தப்பட வேண்டும்... உணவு உட்கொள்ளுதல் போன்ற சில மணி நேரங்கள்தான் நீங்கள் உங்களுக்காகச் செலவு செய்யும் நேரம். அதுகூட உங்கள் உடலுக்காக மட்டுமே! உங்கள் மனதின் இயக்கம் புலப்பட, மனதை வெளிச்சமிட்டுப் பார்ப்பதற்கு உதவும் தியானத்திற்காகத் தினமும் ஒரு அரைமணி நேரமாவது கட்டாயம் செலவிட வேண்டும். உடலளவில் உங்களுக்காக நீங்கள் செலவிடும் நேரங்களில்கூட உங்களின் உடல் அங்கு இருக்கும்.

ஆனால் மன்மோ எதையாவது நினைத்துக் கொண்டு ஊர் சுற்றப் போயிருக்கும்.

மனதைப் புரிந்து கொண்டு அதைக் கடப்பதற்கு ஞானக்கருத்துக்கள் பெரிதும் உதவும். உங்களுக்காகச் செலவிடும் நேரங்களிலெல்லாம் முழுக்க முழுக்க உடல், மனம், உயிர் என்ற எல்லாக் கோணத்திலும் உங்களோடு இருங்கள். இவையனைத்தையும் கடைப்பிடிப்பவருக்கு உள்ளே ஒரு சுற்றுலா செல்வதற்கான விசா ரெடி!

கர்வத்தைவிட காரமானது ...

நான் அழகு நான் அசிங்கம் நான் உணர்ந்தவன் நான் தாழ்ந்தவன் நான் அதிர்ஷ்டக்காரி நான் துரதிஷ்டக்காரன்

என ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்வது அல்லது தன்னைத் தாழ்த்திக் கொள்வது இரண்டுமே அகங்காரத்தின் வெளிப்பாடுகள். என்ன! அதிர்ச்சியாக இருக்கிறதா ? உயர்வு மனப்பான்மையை (கா்வம்) அகங்காரம் எனச் சொன்னால் எல்லோரும் எளிதாக ஏற்றுக் கொள்வோம். தாழ்த்திக் கொள்வது (தாழ்வு மனப்பான்மை) அகங்காரம் எனச் சொன்னால் ஏற்றுக் கொள்வது கடினம்.

கர்வம், தாழ்வுமனப்பான்மையைவிட பல மடங்கு மேல்! என்ன ஆச்சரியமாக இருக்கிறதா ... கர்வத்தால் பேசிய வார்த்தைகளுக்கு இன்றோ நாளையோ சமூதாயத்திடம் கொட்டு வாங்கியே தீர வேண்டும். சமுதாயம் அடக்கிவிடும். தாழ்வு மனப்பான்மையால் ஒருவர் தன்னை தாழ்த்திக் கொண்டால் சமுதாயம் கொட்டாது. மாறாக சமுதாயம் மதிக்க ஆரம்பித்து விடும். இவற்றால் அகங்காரம் மிக, மிக ஆழமாக வளர ஆரம்பித்து விடும். அகங்காரத்தின் பாதிப்பு வெளியில் தெரியாது. ஆனால் சம்பந்தப்பட்டவரை மட்டும் பாதிக்கும். நிம்மதியைக் குலைத்துவிடும். நீங்கள் யோசித்தபடி அடக்கமாக, ஒடுக்கமாக இருந்தால் நிச்சயம் தவறில்லை.

ஆனால் ...

அடக்கிக் கொண்டும், ஒடுக்கிக் கொண்டும், இருந்தால் அது நிச்சயம் தவறு. நீர் தேங்கினால் விஷமாகும். சக்தி தேங்கினால் துர்சக்தியாகும். இது பெரும் பாதகத்தையே விளைவிக்கும். அகங்காரம் என்னும் புண், புரையோட ஆரம்பித்துவிடும். மனம் கெட்டு உள்ளுலக வாழ்க்கையில் தனிப்பட்ட உணர்வு சம்பந்தப்பட்ட வாழ்க்கையில் துர்மணம் வீச ஆரம்பிக்கும்.

தாழ்த்திக் கொள்கிறேன், பவ்யமாக நடந்து கொள்கிறேன் என்ற பெயரில் தம்மையும் அறியாமல் உணர்வுகளை தேவைக்கு மீறி கட்டுப்படுத்தும் போதுதான் சிக்கலாகி விடுகிறது.

மனச்சோர்வின் மாபாதகங்கள் ...

சொர்க்கத்தை எட்டிப் பார்க்க வேண்டுமா ? - சிரி நரகத்தை எட்டிப் பார்க்க வேண்டுமா ? - துக்கப்படு. மனம் உற்சாகமாக இருந்தால் புல்கூட ஆயுதமாகத் தோன்றும் ! தோல்விகூட குருவாகத் தோன்றும். சாத்தியம் இல்லாததில்கூட சாத்தியம் ஆவதற்கான சிறு சாத்தியக் கூறுகள் மட்டும் மனக்கண்களுக்கு தெளிவாகத் தெரியும். மனம் சோர்வுற்றிருந்தால் - படையே உடன் இருந்தாலும் பயம் இருக்கும் !

பெரிய வெற்றி கூட 'இப்போதைக்கு இது O.K.' அடுத்த தோல்வி எப்ப வருமோ? என்று யோசிக்கத் தோன்றும்! சாத்தியமாகக் கூடியதில் இருக்கும் சிறிய சாத்தியமின்மைகள் மட்டும் மனக்கண்களுக்குத் தெளிவாகத் தெரியும் !

கவலை முற்றினால் துக்கம். துக்கம் முற்றினால் மனச்சோர்வு. மனச்சோர்வு முற்றினால் மனக்கோளாறு. சந்தோஷமும், துக்கமும் வாழ்க்கையை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதைப் பொறுத்துதான் அமைகிறது. சரியான மனத்தெளிவு இல்லாமல் போனால்தான் துக்கம் ஏற்படும்.

இறந்த காலத்தின் கசப்பான அனுபவங்களும், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மையும், பயமும்தான் துக்கமாக வெளிப்படுகிறது. பலர் துக்கப்படுவதற்கு காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்து துக்கப்படுகிறார்கள்.

  • வாழ்வில் எப்போதாவது துக்கம் அனுபவிப்பது சாதாரண விஷயம். ஆனால் எப்போதுமே துக்கம் அனுபவிப்பது கொடுமையிலும் கொடுமை! பலருக்கு துக்கம் என்பது ஒரு மனப்பழக்கமாகவே மாறிவிட்டது. துக்கமோ மனச்சோர்வோ உங்களை ஆட்கொள்ளாமல் இருக்க எளிய வழிகள் சில... எப்போதும் உற்சாகமாக, சுறுசுறுப்போடு இருங்கள். வெறுமனே உற்சாகமாக இருப்பது என்பது இயலாத விஷயம்.
  • பல புத்தகங்களைப் படித்து, 'நான் உற்சாகமாக இருக்கிறேன். நான் உற்சாகமாக இருக்கிறேன்' என்று பலமுறை மனதில் சொல்லிக் கொள்வதால் மட்டும் உற்சாகம் வந்துவிடாது.
  • நீங்கள் மாணவனாக இருந்தாலும் சரி, குடும்பஸ்தனாக இருந்தாலும் சரி, உங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து முழுமையாகச் செயல்படுங்கள். எவ்வளவுக்கெவ்வளவு பொறுப்பு எடுத்துக் கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு உற்சாகமும், சுறுசுறுப்பும் பெற்று சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வீர்கள். மனச்சோர்வு உங்களை அணுகவே அணுகாது.

பாதகத்தை சாதகமாக்கும் துணிச்சல்

பாதகத்தைப் பார்த்து தயங்கினால் வாழ்வின் பாதையே மங்கலாகி வாழ்வே இருண்டு விடும். 'துணிச்சல்' மனித இனத்துக்கு கிடைத்த மாபெரும் பரிசுகளில் ஒன்று. தயக்கம் ! மயக்கம் ! என்ற இரண்டுமே துணிச்சலற்ற தன்மையின் வெளிப்பாடுகள். இந்த நிமிடத்தில் உங்களிடம் இருக்கும் நிகழ்காலத்தில்தான், எதிர்காலத்தில் தலைவிதி எழுதப்பட்டிருக்கிறது. ஒரு சிறிய ஆலம் விதைக்குள் மறைந்திருக்கும் மிகப்பெரிய ஆலமரத்திற்கு இணையானது, உனக்குள் இருக்கும் துணிச்சல்.

Part 4: Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

ஒவ்வொரு பிரச்சிணை என்கிற கர்ப்பத்திற்குள்ளும் - தீர்வு என்கிற குழந்தை இருக்கிறது. எனவே...

துணிச்சலை துயில் எழுதப்பு! துளிர்விடட்டும் சாதனை! பாதகம் கூட சாதகமாகட்டும் !

வெற்றிக்கான முதலிடு

  • விவாதம் = வீண் வாதம்.

  • விவாதம்

    • நாக்கிற்கு பிடித்த கேடு,
    • தொண்டையைப் பிடித்துக் கொண்ட தொல்லை,
    • நட்பில் கலக்கப்படும் நச்சு,
    • அன்பிற்கு வைக்கப்படும் அணுகுண்டு, இப்படியெல்லாம் சொல்வது மிகைப்படுத்துவது போலத் தோன்றலாம்.கொஞ்சம் ஆழமாக ஆராய்ந்து பார்த்தால்...உண்மை புரிய வரும்.
  • விவாதத்தின் மூலம் மற்றவருக்கு ஒரு விஷயத்தை புரிய வைக்க முயற்சிப்பது தீவிரவாதத்தால் நட்பை வளர்க்க முயற்சிப்பது போன்றது.

  • எல்லா விவாதங்களும் வருத்தத்தின் விருத்தங்கள். ஒரு விவாதத்தை நீடிப்பது ஒரடி வரப்பிற்காக நீதிமன்றத்தை நாடுவது போன்றது. நம்மில் பலரிடம் விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லை. அதை உணராத காரணத்தால்தான் அடுத்தவர் விட்டுக் கொடுக்க வேண்டுமென எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

  • விவாதத்தை களைந்தெறியுங்கள் ... விவேகம் பூத்துக் குலுங்க ஆரம்பிக்கும். விவாதம் குறைய குறைய ... உங்களின் சக்தியும், நேரமும் மிச்சமாக ஆரம்பிக்கும்.

  • வெற்றிக்கான முதலீடு பெருக ஆரம்பிக்கும்.

முதிர்ச்சி பெறும் வழி

  • நமக்குத் ... தெரிந்தவைகளுக்கு அப்பால்... தெரியாதவைகளுக்கு அருகில் ... நமக்குத் தெரிந்தும் புரியாத ஆனந்தம் நிறைந்திருக்கிறது.
  • 'எனக்குத் தெரியும்' - என்ற இந்த எண்ணம் எந்தச் செயலில் என்று உதிக்கிறதோ, அன்றே அச்செயலின் வளர்ச்சி குன்ற ஆரம்பித்துவிடும்.
  • 'எனக்கு எல்லாம் தெரியும் ... ' - என்ற இந்த எண்ணம் பிறந்துவிட்ட அடுத்த நொடியே அச்செயலின் வளர்ச்சி நின்றுவிடும்.

காரணம்,

உங்களுக்குத்தான் எல்லாம் தெரிந்து விட்டதே! முதிர்ச்சிக்குப் பதிலாக மனிதன் தளர்ச்சியடைய ஆரம்பித்து விடுவான்.

'எனக்குத் தெரியாது ...' - என்ற இந்தத் தெளிவு உதித்த நொடியிலிருந்தே மனிதனின் வளர்ச்சியில் புது வேகம் பற்றிக் கொள்ளுளும். ஒரு மலர் போல் மனிதன் தானாக மலர்வான்.

வாழ்க்கையின் ஆசான்கள்

  • ஆனந்தம் நிரந்தரம், துக்கம் நிரந்தரமான நிரந்தரமின்மை.
  • வாழ்க்கையில் ஏற்படும் திடீர் அதிர்ச்சிகள்தான் நம்மை வாழ்க்கையின் அடுத்த பரிமாணத்திற்கு அழைத்துச் செல்லும் வானூர்திகள்.
  • மனதிலிருக்கும் பயம், துக்கம், மனவேதனை போன்றவை நீங்கள் எந்த வேஷமெடுத்தாலும் உங்களை உலுக்கிக் கொண்டேயிருக்கும் நிரந்தரமான நிரந்தரமின்மைகள். இவை உங்களிடமிருந்து நிரந்தரமாகத் துரத்தப்படும்வரை என்ன செய்தாலும், எதைச் சாதித்தாலும் அதில் துக்கமானது இழையோடிக் கொண்டேயிருக்கும்.
  • அறியாமை இருளுக்குள் தூங்கும் நம் மனத்தை உலுக்கி, விழிக்கச் செய்யும் சம்பவங்கள்தான் -வாழ்வில் நாம் சந்திக்கும் எதிர்பாராத அதிர்ச்சிகளும், திருப்பங்களும்.
  • நிரந்தரமில்லா துக்கத்தை தொலைத்து நிரந்தரமான ஆனந்தத்தை அடைய, எந்தவொரு அதிர்ச்சியையும் ஆர்வத்தோடு எதிர்கொள்ளலாம். தயங்க வேண்டியதில்லை.
  • வாழ்க்கைப் பாடங்களை கற்றுத் தரும் 'எதிர்பாரா அதிர்ச்சிகள்' என்னும் ஆசான்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். முன்னேற்றம் காணுவீர்கள்.

லீலை

  • மொத்தப் பிரபஞ்சமும் இறைவனின் விளையாட்டுக் களம். இந்த விளையாட்டுக் களத்தில் ... இறைவனின் அசைவுகள் ... ஒருவருக்கு நடனமாகவும், ஒருவருக்கு ருத்ர தாண்டவமாகவும், ஒருவருக்கு அமைதியின் முழக்கமாகவும் தெரிவதே லீலை.
  • ஆக்கல்,

அழித்தல்,

காத்தல்

  • என்ற மூன்று செயல்களையும் சர்வசாதாரணமாக நிகழ்த்தும் இறைசக்திதான் நம்மையும் ஆட்டிப்படைக்கிறது.

  • மொத்தப் பிரபஞ்சத்தின் மீது எந்த அளவுக்கு இறைவனுக்கு அக்கறை இருக்கிறதோ, அதே அளவுக்கு உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லின் மீதும் இறைசக்திக்கு அக்கறை இருக்கிறது. உங்கள் உடலில் ...

எந்த செல் எவ்வளவு நாள் வாழ வேண்டும், எந்த செல் எப்போது அழிய வேண்டும் என்று திட்டமிடுவது நீங்கள் அல்ல. எந்த செல் எப்போது உருவாக வேண்டும், எந்தக் காரியம் எப்போது அழிய வேண்டும் என்று திட்டமிடுவதும் நீங்கள் அல்ல.

  • அனைத்தையும் திட்டமிட்டு திட்டமிட்டபடியே எல்லாவற்றையும் திண்ணமாய் நடத்தி முடிப்பது இறைவன்.

எது நடந்தாலும் அது இறை கணக்குப்படி நல்லதில்தான் முடியும்.

  • முடிவுவரை பொறுத்திராமல் நடுவில் பார்த்தால் சில நேரம் நம்மைச் சுற்றி கெட்டது நடப்பது போலத்தான் தோன்றும். ஏன்! 'இறைவன் என்ற ஒருவன் இருக்கிறானா' என்ற சந்தேகம் கூடத் தோன்றும்.
  • 'எல்லாம் இறைவன் விளையாட்டு' என்னும் உண்மை புரியாதவரை விளையாட்டு வினையாகத்தான் தெரியும். புரிந்து விட்டால் - வினைகூட விளையாட்டாய் தெரியும்.

பிறப்பும் இறப்பும்

  • பிறந்து கொண்டே, இறந்து கொண்டிருக்கிறான் மனிதன்.
  • என்றோ பிறந்த மனிதன், என்றோ ஒரு நாள் இறப்பான் - என்பது மாயை.
  • ஒவ்வொரு நொடியும் பிறப்பும், இறப்பும் உடலில் சம அளவில் நடந்துகொண்டே இருக்கிறது - இது அறிவியல் பூர்வமான உண்மை!
  • மரணத்தை நேருக்கு நேராக சந்தித்துவிட்டால் அடுத்த கணமே ஞானம் கிடைத்துவிடும்.

உன் நாடகம் முடியும் போது ...

  • ஜென் கூற்றுகள் எளிமையானவை! ஆனால் ஆழமானவை! வாழ்க்கைத் தத்துவங்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல எளிதாக விளக்குபவை !
    • இது வாழ்வில் விடிவுக்கு ஜென் கூறும் கூற்று : நீ ஏங்கினாலும், ஏங்காவிட்டாலும், மழை பெய்யும்போது பெய்யும். மழைக்கு மட்டுமல்ல...இது வாழ்வின் எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் பொருந்தும். பொருத்திப் பாருங்கள் கூற்றின் ஆற்றல் புரியும்.
  • உம் சித்தத்திற்கும், இறைவனின் சித்தத்திற்கும் சம்பந்தமே இல்லை. எனவே வருந்தாதீர்.
  • நாடகத்தில் தன்னை மறந்த மனிதன் நாடகத்தோடு சேர்ந்து உண்மையாகவே அழுவதும், சிரிப்பதும் இயற்கை.
  • அதேபோல்தான் உலக நாடகத்தில் தன்னை மறந்த மனிதனும் உலகத்தோடு சேர்ந்து உண்மையாகவே அழுவதும், சிரிப்பதும் இயற்கை.
  • உண்மை என்ன ? நான் யார் ? ஏன் வந்தோம் ? என்ற எல்லாமோ, நாடகம் முடியும்போது தெரிய ஆரம்பிக்கும்.

இறைவனால்கூட காப்பாற்ற முடியாது

  • மனமானது இறைவனைப் பற்றிய கற்பனைகளில் சிக்கிக் கொண்டால் இறைவனே நினைத்தால்கூட காப்பாற்ற முடியாது. 'அடேய்! உன் மனம் சிக்கிக் கொண்டு விட்டது' என்று இறைவனே நேரில் வந்து சொன்னால்கூட புரிந்து கொள்வது கடினம்.
  • மனம் பக்குவப்பட்டுக் கொண்டிருக்கும்போது, 'எல்லாவற்றையும் இறைவன் செய்கிறார். எல்லாம் அவன் செயல்' என்று சொல்வது உண்மையாக இருக்க முடியாது. காரணம் மனம் கிளிப்பிள்ளையைப்போல் மற்றவர்கள் பேசுவதைப் பிடித்துக்கொண்டு பேச ஆரம்பிக்கும். அது வார்த்தை ரீதியானது.

மனம் பக்குவப்பட்ட பின், மனம் கடந்த நிலையில், 'எல்லாம் இறைவன் செயல்' என்பதை அனுபவித்து இதயப் பூர்வமாக சொல்லும்போது மட்டுமே அது உண்மை. இது உணர்வு ரீதியானது.

  • மனப்பக்குவமில்லாத, இதுபோன்ற பெரிய பெரிய அனுபவ உண்மைகளை தன் மனக் கண்ணோட்டம் மூலம் புரிந்துகொண்டு பேச ஆரம்பித்தால், கடைசிவரை உண்மை தெரியாமலே வாழ்க்கை முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது.

இது போன்ற மக்களுக்காக ... 'எல்லாம் அவன் செயல், எல்லாம் இறைவன் பார்த்துக்கொள்வான் என்றால்! நீங்கள் எதற்காக இருக்கிறீர்கள்? சதா அதைக்கொடு, இதைக்கொடு என பிச்சை கேட்கவா? அல்லது சதா என்னைக் காப்பாற்று என்று பயப்படுவதற்கா? சதா மேல் நோக்கியே இறைவனைத் தேடும் நீ எப்போது இறைவனை உள்நோக்கித் தேட ஆரம்பிக்கிறாயோ, அப்போது இந்த உடலிலேயே இறைவனைக் கண்டு கொள்வாய்.

  • அப்போது இந்த உலகத்திலேயே மொத்த சொர்க்கத்தையும் அனுபவிப்பாய். இது புரியாவிட்டால் உன்னை கடவுளே நினைத்தால் கூட காப்பாற்ற முடியாது' என்னும் ஜூ-மல்கியின் வாசகங்கள் இந்த இடத்தில் குறிப்பித் தக்கவை.

  • மனிதன் அந்தக் காலத்திலிருந்தே மந்த மனம் விரிக்கும் வலைகளிணில் சுலபமாகச் சிக்கிக் கொள்கிறான்.

  • சிக்கிக் கொண்டதுகூடத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான்.

சலிப்பை களிப்பாக்குங்கள்

  • நீங்கள் செய்யும் காரியம் எதுவாக இருந்தாலும், நீங்கள் பின்பற்றும் மார்க்கம் எதுவாக இருந்தாலும் சரி - அங்கேயே, அதிலேயே வாழுங்கள். தொட்ட குறை, தொடாத குறை வேண்டாம். மிச்சம் மீதி வைக்க வேண்டாம்.
  • சலிப்பிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் வெளி வர மிக எளிய வாழ்வியல் வழிமுறை - வாழ்க்கையை அதன் உச்சத்தில் வாழ்வது தான். அது எதுவாக இருந்தாலும் சரி. உச்சத்தை அடைந்து விடுவதுதான்.
  • சாப்பிடும் ஒரு ரசகுகுல்லாவின் சுவையை அதன் உச்சத்தில் அனுபவிக்க முயற்சி செய்யுங்கள். இரண்டு, மூன்று கடியில் ஐந்து ரசகுல்லாவை ஒரேயடியாகச் சாப்பிடுவதும், ஒரே ஒரு

ரசகுல்லாவின் முழுச் சுவையும் வாயிலேயே கரைந்து போகும் அளவுக்கு பல நிமிடங்கள் சுவைத்து சாப்பிடுவதும் ஒன்றே. சுவையின் உச்சத்தை ஒரே ஒருமுறை ருசித்து விட்டால் ஒரு ரசகுல்லா போதும், பத்து தேவையில்லை. திருப்தி கிடைத்து விடும். சுவையின் உச்சத்தை ருசிக்காவிட்டால் பத்து சாப்பிட்டாலும் திருப்தி கிடைக்காது. சலிப்பும், கஷ்டமுமே மிஞ்சும். மேலே உள்ள சில வரிகள் வெறுமனே படிப்பதால் புரிந்து கொள்ள முடியாது. இனிப்பு வாயிலே கரைந்துபோகும் அளவுக்கு விழிப்புணர்வோடு சுவைத்துப் பாருங்கள். 'உச்சத்தில் வாழ்வது' என்றால் என்ன என்பது புரியும்.

  • நீங்கள் அனுபவித்தே ஆகவேண்டும் என்று துடிக்கும் வாழ்வின் ஒவ்வொரு விஷயத்தையும் நிதானித்து, அதன் உச்சத்தில் அனுபவியுங்கள்.

'இன்னும் கொஞ்சம்' என்ற தொக்கி நிற்கும் உணர்வு இருக்காது. சலிப்பு நெருங்கவே நெருங்காது.

  • கடைசியாக ஒரு சத்யம். அனுபவத்தின் உச்சத்தை அடையாததால் மிச்சமாகும் அனுபவிக்கப்படாத பகுதிகள்தான், 'மீண்டும் மீண்டும்' என்ற வெறியைத் தூண்டித் தூண்டி பின்னாளில் சலிப்பைத் தருகிறது. சலிப்பின் மூலக்காரணம் தெரிந்துவிட்டது. இன்னும் என்ன தயக்கம். எதிலும் மிச்சம் வைக்காதீர்கள். உச்சத்தில் வாழுத் துவங்குங்கள்.

ஆனந்தயியல் ...

  • ஆனந்தமடைவதற்கான வழிமுறை முற்றிலும் அறிவியல் பூர்வமானது.

  • வேதியியலில் இந்த ரஸத்தோடு இந்த வேதிப்பொருளைச் சேர்க்க இந்த பொருள்தான் கிடைக்கும் என்று ஆணித்தரமாக எப்படிக் கூற முடியுமோ அதுபோல் ஆனந்தத்தையும் கூற முடியும். ஆனந்த வழியை பகுதி, பகுதியாக பிரித்து காண்பிக்க முடியும்.

  • உங்களுக்குள்ளிருக்கும் ஆனந்த ரஸம் விழிப்புணர்வோடு கலந்து விட்டால் கிடைக்கும் பொருளுக்குப் பெயர்தான் ஆனந்தம்.

  • இந்த ஆன்மீகயியல் சம்பந்தப்பட்ட வினைகள்தான் ரஸவாதம்.

  • இன்று விஞ்ஞானம் நன்றாக வளர்ந்திருப்பதால், ஏழு சக்கரங்களின் உணர்வுகளைப் பக்குவப்படுத்தும் ரஸவாதத்தை செய்முறை தியானங்களாகவே கற்றுக்கொள்ள முடியும். ரஸவாதத்தை உங்களுக்குள் நிகழ்த்திப் பாருங்கள்.

  • மருத்துவக் குணமும், சக்தியும் கொண்ட 'நவபாஷானம்' என்பது ஒன்பது விஷங்களை ஒன்று சேர்த்து செய்யப்படுவது.

  • ஒன்பது விஷயங்களை சரியான அளவில், சரியான பக்குவத்தில் சோ்த்துவிட்டால் அடுத்த நிமிடமே நவபாஷாணம் ரெடி.

யார் சிக்கித் தவிக்கும் குடும்பஸ்தராவார்கள்?

  • 18-ல் காதல் 20-ல் எதிர்காலக் கனவு 25-ல் திருமணம் 30-ல் குடும்பச் சுமை 40-ல் வயிற்றுக் கோளாறும், மனச்சோர்வும் 45-ல் В.Р. / டயாபடீஸ் 50-ல் முட்டி வலி...
  • என்பதெல்லாம் இன்று கிட்டத்தட்ட எல்லோருடைய வாழ்க்கைக்கும் பொருந்தும் என்ற நிலை வந்து விட்டது. திருமணத்திற்குபின் ஒருநாள் தானும் எல்லாப் பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதைப் பற்றி ஆழமாக யோசிக்கும் இளைஞர்கள் அரிதாகி விட்டார்கள்.

தானும் சிக்கித் தவிக்க 100% வாய்ப்புகள் இருக்கிறது என்பதை முழுமையாக உணராத இளைஞர்கள்தான் எதிர்காலத்தில், சிக்கித் தவிக்கும் குடும்பஸ்தர்களாக மாற வாய்ப்புகள் அதிகம்.

ஊடல்

  • 'உறவுகளுக்கிடையே ஊடல் அவசியம் இதைக் கண்டுபிடித்துச் சொன்னவர்கள் உற்சாகமாக வாழ்த் தெரியாதவா்கள்'.
  • ஆழ்மன வெறுப்பின் முன்னோட்டமே 'ஊடல்'.
  • ஒருவர் மீது மற்றவருக்கு ஈர்ப்பு இருக்கும்வரை மனித உறவில் ஊடல் புகைபோல் கசிந்து கொண்டிருக்கும்.
  • ஈர்ப்பு மறைந்த அடுத்த கணமே ஆழ்மன வெறுப்பு வெடிக்கும்.
  • ஆழ்மன வெறுப்பு உருவானதற்குக் காரணம் -ஆழ்மனத்தின் மாயக்கருத்துக்களால் ஆன, வாழ்வு பற்றிய கனவிற்கும், நிஜ வாழ்க்கைக்கும் இடையே

இருக்கும் பொருத்தமின்மையே!

  • எல்லா ஊடல்களும் எல்லா கிளர்ச்சிகளும் எல்லாத் தற்காலிக சந்தோஷங்களும் நிஜ உலகில் கனவைக் குடிப்பவனுக்கு மட்டுமே நிகழ்வது.
  • அகங்காரம் என்பது தாறுமாறான கருத்துக்களின் தொகுப்பு. அகங்காரம் என்பது அதீத கற்பனைகளின் அதிபதி.
  • அகங்காரம் மறைய, ஊடல்கள் மறையும், உற்சாகம் பொங்கும், தேனினும் இனிய மனித வாழ்வு கனியும்.

விவாதத்தின் நெடி!

❖ விவாதத்தின் அழகே விவாதிக்கும் ஒருவர் பேசுவதை கவனிக்கும்போது அதுவே மிக மிகச் சரியானது என நம்பவைக்கும். அடுத்தவர் பேச ஆரம்பித்ததும், 'அவர்தான் சரி, முந்திப் பேசியவர் தவறு' என்ற நம்ப வைக்கும். மீண்டும் முந்தியவர் பேச ஆரம்பித்ததும், 'இவரே சரி' என்று நம்ப வைக்கும்.

  • விவாதங்களை ஆழமாக ஆராய்ந்துப் பார்த்தால், பெரும்பாலும் இருவருடைய கருத்துகளுமே தவறாக இருக்கும்.

  • சில நேரங்களில் ஒரே கருத்தை இருவரும் வெவ்வேறு விதங்களில் பேசி, விவாதத்தைவாக்கு வாதமாக்கிக் கொண்டு இருப்பார்கள்.

  • கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உண்மை புரியும். நாம் ஒரு கருத்தைச் சொல்லிவிட்டோம் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக, நம் கருத்தை நிலைநிறுத்த உதவும் எல்லா விஷயங்களையும் வாதங்களாக எடுத்து வைப்போம். ஒருவேளை எதிராளியின் கருத்தை நாம் சொல்லியிருந்தால் அதற்குத் தக்கபடி நாம் பேச ஆரம்பித்திருப்போம்.

  • எதிராளியைப்போல் நாம் பேசியிருப்போம். நம்மைப்போல் எதிராளி பேசியிருப்பார்.

உங்களின் எல்லா மனவருத்தங்களுக்கும் மூலக்காரணத்தை யோசித்துப் பாருங்கள் ... விளையாட்டாக ஆரம்பித்த கருத்து மோதல் விவாதமாக மாறி, பின் வாதம் வாக்குவாதமாகி, வாக்குவாதம் சண்டையாகி மன வருத்தம் வந்திருக்கும். பிடிவாதத்தின் வெளிப்பாடுதான் வாக்குவாதம்.

  • வாக்குவாதத்தின் நெடியை உணர்ந்து, விவாதத்தின் வாதத் தன்மையை அறிந்து அதிலிருந்து உங்களையும், உங்கள் தன்மையையும் காப்பாற்றிக் கொள்ள 'விட்டுக் கொடுக்க' கற்றுக் கொள்ளுங்கள்.
  • பண்பும், அமைதியும் மிச்சமாகும். மன வருத்தங்கள் குறையும். நீங்கள் உங்களுக்குள் விருத்தி அடைவீர்கள்.

யதார்த்தவாதியாகுங்கள்

    1. நான் செய்தால் சரி,
    • நீ செய்தால் தவறு
    • முதல் வகை. இது அகங்காரத்தின் உச்சம்.
    1. நண்பன் செய்தால் சரி. எதிரி செய்தால் தவறு - இரண்டாம் வகை. இவர்கள் சூழ்நிலைக் கைதிகள்.
    1. நண்பன் தவறு செய்தாலும் தவறு தவறுதான். எதிரி நல்லது செய்தாலும் அது நல்லதே, சரியே! -மூன்றாம் வகை. இவர்கள் நடுநிலைவாதிகள். தைரியசாலிகள்.

நீங்கள் எந்த வகை ?

    1. இது தவறு, இது சரி எனும் சிறுவட்டங்களைத் தாண்டியவரே யதார்த்தவாதி. தவறு, சரி, கடந்தவருக்கு நண்பரும் எதிரியும் ஒன்றே. யதார்த்தவாதி 'தவறு' எனும் சப்பைக் காரணங்காட்டி அன்பெனும் வெகுமதிகளைத் தவறவிடமாட்டார். எந்த வகையாக இருந்தாலும் சரி, தாண்டிச் செல்லுங்கள். தவறு, சரி என்ற இரும்பு கரங்கள் கொண்டு 'அன்பு' எனும் மலரை நசுக்காதீர்கள். யதார்த்தத்தோடு வாழ்க்கையையும், மனிதர்களையும் அணுகுங்கள், வாழ்வு கொண்டாட்டமாகும்.

பயம்

  • உயிர்சக்தியை நொடிக்குள் உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள் வல்லமை கொண்டது பயம்.
  • மனிதன் தீங்கிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக இறைவனால் மனிதனுக்குத் தரப்பட்ட ஒரு பரிசு - பயம்.
  • மனித குலம் இந்த அளவுக்கு கட்டுக்கோப்பாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணங்களில் பயமும் ஒன்று.
  • எப்படி உப்பு உணவில் கூடினாலும், குறைந்தாலும் உணவு சுவைக்காதோ அப்படித்தான் பயம் கூடினாலும், குறைந்தாலும் வாழ்வு நரகம்தான்.
    • பய உணர்வை சரியாகப் பயன்படுத்த மனிதனுக்கு அனுபவ ஞானம் தேவை. அனுபவ ஞானம் இல்லாவிட்டால் பயம் நம்மையே அழித்து விடும்.

உங்களின் கண்ணை மறைப்பது

ஆஹா ... இது கானல் நீர்! அதோ! அங்கே சோலைவனம் இருப்பதுபோல் நம் கண்களுக்கு தெரிகின்றதே, அது சோலைவனமே அல்ல. அதுவும் பாலைவனத்தின் ஓர் பகுதிதான். நம் தாகத்தைத் தீரப்பது நிச்சயமாக அங்கே இல்லை என்று தெள்ளத் தெளிவாக ஏற்கனவே தெரிந்து கொண்ட ஒருவன் கானல் நீர் வரை சென்று ஏமாறவே மாட்டான்.

மோகம்,

வேகம்,

புகழ்,

பணம் - என்று ஓடும் ஒருவனுக்கு, தன் மோகத்தைத் தீர்ப்பது அங்கே இல்லை என்று தெரிந்து விட்டால் ஓடமாட்டான்.

திடீரென்று எல்லோருக்குமே இந்த உண்மை புரிந்துவிட்டால் மொத்த சமூக இயக்கமே ஸ்தம்பித்துவிடும்.

தேடுவது

தேடும் இடத்தில் இல்லை என்ற உண்மையை யதேச்சையாகப் படித்துவிட்டால்கூட புரிந்துகொள்ளவிடாதபடி பார்த்துக் கொள்ளும் ஒன்றுதான் மாயா சக்தி.

ஆன்மீகம் - ஆனந்தம்

  • ஆனந்தமயமான வாழ்க்கைக்குப் பெயர்தான் ஆன்மீக வாழ்க்கை.

  • ஆனந்தமயமாக வாழ முடியாமல் போனதற்கு மனிதன் கண்டுபிடித்த புதுப் பெயர்தான் சாதாரண வாழ்க்கை.

  • ஆசை பலவாக இருந்தாலும், தேடுதலின் நோக்கம் ஒன்றுதான் - அது நிம்மதி, ஆனந்தம்.

  • வாழ்க்கையில் சாதனைகள் பல சாதித்த பிறகு கிடைக்காத திருப்தியையும், சந்தோஷத்தையும் எளிதாக வழங்கும் மார்க்கம்தான் ஆன்மீகம்.

  • உங்களுடைய அனுபவிக்கும் தன்மையின் அளவு அதிகமானால் சின்ன விஷயங்களில்கூட சந்தோஷம் அடைவீர்கள். சுகம் காண்பீர்கள்.

  • ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணிநேரமாவது ஆனந்த வாழ்வு பற்றிய ஆன்மீகத்திற்கு ஒதுக்காவிட்டால் உங்கள் வாழ்க்கையின் ஒரு அற்புதமான பகுதியை இழந்துக்கொண்டே இருக்கிறீர்கள்.

மகாமந்திர தியானம் உங்களுக்காக ...

மகாமந்திர தியானம் மிகப் பழமையான திபெத்திய தியானம்.

ஆரம்ப காலத்தில் அதிகாலையில் இந்த தியானத்தை செய்வார்கள். இந்த தியானத்தின் தனிச்சிறப்பே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே. இந்த தியானத்தைச் செய்யும்போது வயிறு காலியாக இருக்க வேண்டும்.

சாப்பிட்ட உடன் இந்த தியானத்தைச் செய்யக் கூடாது. தியானத்தைச் செய்தவுடன் சாப்பிடக் கூடாது.

தனியாகவும், பலரோடும் சேர்ந்து கூட்டுத் தியானமாகவும் இந்த இந்த தியானத்தைச் செய்யலாம்.

தியானம் முடிந்து 15 நிமிடங்களுக்கு எந்த வேலையும் செய்ய வேண்டாம். ஓய்விலிருங்கள் 30 நிமிடங்கள் நீடிக்கும் இந்த இரண்டு பாகங்களைக் கொண்டுள்ளது.

  • உடல் வலி

  • மனக்குழப்பம்

  • சோர்வு

  • குணக்குறைகள் ஆகியவை அனைத்தும் மகாமந்திர தியானத்தை தொடர்ந்து செய்பவரிடமிருந்து பறந்தோடிவிடும்.

முதல் பாகம் : 21 நிமிடங்கள்

முதுகெலும்பு, கழுத்து, தலை மூன்றும் நேர்கோட்டிலிருக்குமாறு, உங்களுக்கு வசதியாக இருக்கும் நிலையில் அமர்ந்து கொள்ளுளுங்கள்.

கண்கள் கூழாங்கல் ஆனதுபோல பாவித்து பார்வை முழுவதையும் உள்முகமாகத் திருப்புங்கள்.

  • 'ம்ம்ம்…' என்ற நாதத்தை அடிவயிற்றிலிருந்து உருவாக்குங்கள்.
  • 'ம்' என்ற நாதத்தை எவ்வளவு நீளமாக முடியுமோ அவ்வளவு நீளமாக…
  • 'ம்' என்ற நாதத்தை எவ்வளவு ஆழமாக முடியுமோ அவ்வளவு ஆழமாக…
  • 'ம்' என்ற நாதத்தை எவ்வளவு சப்தமாக முடியுமோ அவ்வளவு சப்தமாக…

நாதத்தில் நீளம், ஆழம், சப்தம் ஆகிய மூன்றையும் முடிந்த அளவு சேர்த்து வெளியிடுங்கள்.

நாதத்தை உருவாக்குவதை தொடர்ந்து 21 நிமிடங்களுக்கு செய்யுங்கள். மகாமந்திர ஒலிநாடாவை பயன்படுத்திச் செய்தால், 21 நிமிடங்கள் சரியாகச் செய்ய முடியும்.

இரண்டாம் பாகம் : 10 நிமிடங்கள்

21 நிமிட மகாமந்திர உச்சாடனத்திற்கு பிறகு 10 நிமிடங்கள் சாட்சியாக மாத்திரம் அமர்ந்திருக்கவும்.

வெறுமனே எண்ணங்களையும், சுற்றியிருப்பவைகளையும் கவனியுங்கள். எதையும் தீர்மானிக்காதீர்கள்.

இந்த தியானம் ஒரு சக்தி கற்பதரு. தொடர்ந்து இந்த தியானத்தைச் செய்ய, உடலில் சக்திப் பற்றாக்குறை என்பதே இருக்காது.

நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் தூண்டிப் புத்துணா்வூட்டும் தனித்தன்மை பெற்றது இந்த மகாமந்திர தியானம்.

இன்றைய மனிதனின் தினசரி அதிக சக்தி தேவைக்கான ஒரு சக்தி மருந்து என்று இந்த தியானத்தை அழைக்கலாம். தியானத்தின் முழுப் பலன் பெற தொடர்ந்து ஒரு மண்டலம் செய்யுங்கள். (இடைவெளியில்லாமல் தொடர்ந்து 48 நாட்கள் செய்வதே ஒரு மண்டலம் என்று அழைக்கப்படுகிறது). தியானத்தின் பலனை அறிந்து, என்றும் ஆனந்தமாக இருங்கள் !

பிரார்த்தனையில் கடவுளிடம் யாசிக்கிறீர்கள் தியானத்தில் நீங்களே கடவுளாகிறீர்கள.

தியானி கடைப்பிடிக்க வேண்டியவை

  • ஒரு நாளின் எல்லா நேரங்களும் தியானத்திற்கு உகந்தவையே. காலை 7 மணியிலிருந்து 7.30 மணி வரை; மாலை 7 மணியிலிருந்து 7.30 மணி வரை - தியானத்தில் ஈடுபட்டால் தியானத்தின் மூலம் 'குருசக்தியோடு' தொடர்பு கொண்டு அதிக பலனைப் பெறலாம்.
  • தியானம் செய்யும்போது வயிறு காலியாக இருக்க வேண்டும்.
  • தியானம் முடிந்தபின் அடுத்த அரை மணி நேரம்வரை எதுவும் சாப்பிட வேண்டாம். தியானம் செய்வதற்கு முன் குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன் சாப்பிட்ட இடைவெளி இருக்க வேண்டும்.
  • எந்தத் தியானமாக இருந்தாலும் அதில் முழுமையாக ஈடுபடுங்கள். உங்களின் முழு சக்தியையும், முழு உணர்வையும் பிரயோகித்து தியானத்தில் ஈடுபடுங்கள்.
  • எல்லாத் தியானங்களிலும் கடைசி 10 நிமிடங்கள் சாட்சியாகப் பார்ப்பதைச் சிரத்தையோடு செய்யுங்கள். 30 நிமிட தியானத்தில் முதல் 20 நிமிடங்கள் நீங்கள் செய்வது, இந்த கடைசி 10 நிமிடங்களுக்காகதான்.
  • ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் தொடர்ந்து செய்து பார்த்தால் ஒரு தியான முறையின் முழுப் பலனை உணர்ந்து கொள்ளலாம்.
  • அதிக காரம், அதிக புளிப்பு, அதிக மசாலா, அதிக எண்ணெய் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.
  • தியானத்தின்போது தளர்ந்த ஆடைகளை உடுத்திக்கொள்ளுங்கள்.
  • தொந்தரவு இல்லாத தனி அறையில் தியானம் செய்வது நல்லது.
  • புகை, புலால் தவிர்த்தல் நல்லது. முடியாவிட்டால் தப்பில்லை. தொடர்ந்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுங்கள் உடல் தானாகவே தன்னை இதுபோன்ற அடிமைத் தனங்களிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும்.
  • மது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

முக்கிய எச்சரிக்கை

  • கடந்த சில மாதங்களுக்குள் அறுவை சிகிச்சை பெற்றவர்கள் ;
  • அவசர சிகிச்சை பெற்ற நோயாளிகள்;
  • தீவிர இதய நோயாளிகள்;
  • உங்களுக்கு அருகேயுள்ள தியானபீட கிளையை கலந்து ஆலோசித்தபின் தியானத்தில் ஈடுபடலாம்.