Books / காற்றின் சுவடுகள்

1. Unknown

காற்றின்

சுவருகள்... பரமஹம்ஸ நித்யானந்தர் காற்றின் சுவடுகள்... (அகவிதை தொகுப்பு) முதல் பதிப்பு மார்ச் 2006 Ebook ISBN: 979-8-88572-159-2 ஒளியச்சு, அட்டை வடிவமைப்பு தியானபீடம் விநியோகம் : நித்யானந்தா பதிப்பகம் பக்கம் : 56 விலை : ரூ.100 வெளியீடு : தியான பீடம் நித்யானந்தபுரி, கல்லுப்போபுல்லி, பிட தி, பெங்களூர் - 562109 அகவுரை என்ன செய்ய... சுகந்தேடி அலையும் மனிதன் அதிக முக்கியத்துவம் தருகிறான் சுவைக்கு! பூரண சுகத்தின் சூத்திரக் களஞ்சியமான - ஆன்மீக சூத்திரங்களை சுவைக்கச் சுவைக்க செ ரான்னாவெல்ன்ன?!?! என முயன்றதின் புதிய புறப்பாடு அகவிதை புறப்பட்டு விட்ட அகவிதைகளை புக விடுங்கள் அகத்துள்... அதுபோதும் அதுபோதும் புகுந்ததும் பூக்கும் பூச்செடி ஒளிந்துகொண்டு(ு)ற்கிறது ஒவ்வொரு அகவிதைக்களுள்ளும். அகவிதை கற்கண்டாய் சுவைக்கும் வசீகர வார்த்தைகளின் தொகுப்பல்ல அகவிதை. பேச்சின் உயர்வடிவமான சாதாரண உரைநடை தொகுப்புமல்ல அகவிதை அகத்தை மலரச்செய்யும் தியான ஞான வார்த்தைகளின் தொகுப்பே அகவிதை! அக விதைகளை அர்த்தமான வார்த்தைகளால் அழகாக தூவித்தூவி அகம் மலரச்செய்யும் தியான ஞானவரிகளை கவிதை என்றழைப்பதும் உரைநடை என்றழைப்பதும் நெறியாகுமோ? அகம் மலரச்செய்யும் அக விதைகளின் தொகுப்பை அகவிதை என்றழைப்பதே நெறியாகும். அன்பென்னும் தொழில் மொத்த உலகில் இந்த ஒரேபோரு தொழிலுக்கு வேலை வாய்ப்புகள் வெகு அதிகம் வெகுதுறைவு வேலையாட்கள் வரவும் இல்லை செலவும் இல்லை அன்புக் கணக்கில் கணக்கில்லா அன்பில் தேவையில்லை வரவு செலவே நிறைவு செலவழிக்க செலவழிக்க இலாபம் ஈட்டடும், ஒரே தொழில் ‘அன்பு செய்தல்’ இதனால்தான் அதிசயங்கள் நிகழ்வதில்லை நீயா?! எப்படி நம்புவது? காட்டு உன் அடையாள அட்டையைய எனக் கேட்டான் இக்கால மனிதனுக்கு திடீர் தரிசனங்கொடுத்த இறைவனை. மோதிரவிரலுக்கு ஒரு வைர மோதிரம் தரக்கூடாதா? என நொந்து கொண்டான் இறைவனை இக்காலத்து மனிதன், மோதிர விரல் கொடுத்தாயே நன்றி என்று விளையாட்டாய் கூட சொல்லத் தோன்றாமல் சூட்சுமங்கள் கேட்பதை நிறுத்து! அமைதியின் முழக்கம் தெளிவாக கேட்க்கும் யோசிக்கும் முன் குதித்து விடு. உற்றுப்பார்! வெளிச்சத்திற்குள் ஒளிந்து கொண்டிருக்கிறது இருள் கொக்கரிக்கும் அகங்காரத்தை கத்தியில்லாமல் கொலை செய் வேலைகளிலேயே மிக கடினமானதும் மிக ஆனந்தமானதும் ஒரு வேலையுஞ்செய்யாது இளைப்பாறுவதே! முயற்சியின்றி செத்துவிடு ஆனந்தத்தில் பிறப்பதற்கு!! இவற்றை திரும்ப திரும்ப தியானியுங்கள் யோசியுங்கள்... எதிர்ப்பதை நிறுத்து! எதிர்ப்பாராத அளவு ஆசீர்வதிக்கப்படுவாய் சுலபமாய் புரிந்துவிடும் சூட்சுமங்கள் எதிரியுமல்ல நன்பனுமல்ல மனம் தப்பித்தவறி தியானஞ்செய்துவிடாதே! ஆனந்தம் வந்துவிடப் போகிறது இப்படிக்கு மனம் ஏன் என்னிடம் சிக்கித்தவிக்கிறாய்? தியானமென்னும் பாடகேறி தப்பித்துவிடேன்... வெற்பன்று போன்ற மனம் நண்பனுமல்ல எதிரியுமல்ல அது ஒரு நல்லதொரு ஊன்றுபோல இப்படிக்கு மனம் நாளொன்றும் குறங்குமில்லை நடுக்கடல் அமைதியுமில்லை நான் நான்தான் என்னையே அப்படியே பாரேன்! அகம் மகிழ மனம் மகிழட்டும். சரியாய் புரிப்பட்டு முழமையாய் பயன்படுத்தப்படும் மனமென்னும் ஊன்றுகோல் இப்படிக்கு மனம் ஆனந்த துள்ளல்... ஆனந்த துள்ளல்... ஆனந்த துள்ளலாக அன்பை இறைத்துவிடு! உருவாகும் வெற்றிடத்தை ஆனந்த உணர்வு நிரப்பிவிடும் அல்லல் இல்லா ஆனந்தத் துள்ளலாக அன்பின் வள்ளலாகுக! கண்டுகொண்டேன் வேதங்கள், ரிஷிகள் சொன்னது : 'ஆனந்தமயமானது வாழ்வும் உலகமும்,' என் உயிரில் கலந்துவிட்ட இந்த கருத்தால் கண்டேன் ஒரு ஆனந்த கனவு! ஒருநாள் அந்த நிமிடங்கள் அழகாயிருந்தது. சுகமாயிருந்தது திடீரென விழித்துக்கொண்டேன் கனவிலிருந்து கனாதான் அது என்று உணர்ந்துகொண்டேன் சூடுபட்ட பூனையாய் சுற்றித் துள்ளித் திரிந்தேன் தொடர்ந்து சுற்றினேன், தியான உருவேற்றினேன் விழிப்புணர்விலேயே.. உயர்ந்து சென்றேன் விரைவிலேயே கண்டுகொண்டேன்! கண்டுகொண்டேன்! ஆஹா! எவ்வளவு ஆனந்தமாயமானது இந்த வாழ்க்கையும் உலகமும் மூயன்றால்.. உங்களுக்கும் இது சாத்தியமே! கற்றுக் கொள்ளுங்கள் கற்றுக் கொள்ளுங்கள்... கற்றுக் கொள்ளுங்கள் மற்றவர்களிடம் பீற்றிக் கொள்வதற்காக அல்ல ஏற்றமுடன் உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்வதற்காக வெற்றியின் இரகசியங்களை வாழ்வின் ஒவ்வொரு கணமும் கற்றுக் கொடுக்கிறது - அதை - கற்றுக் கொள்ளுங்கள்... உங்களை எரிச்சலூட்டும் எதிர்கள் எதிர்களே அல்ல. தங்களுக்குத் தெரியாமலே உங்களுக்கு நல்லதை மட்டும் செய்யும் அப்பாவிகள் எதிர்கள். அவர்களைமட்டும் சந்தித்திராவிட்டால் வெகுளிக் குழந்தையாய் பிறந்த நீங்கள் ‘உலகம் இவ்வளவுதான்’ என்பதை எப்படி புரிந்திருப்பீர்கள். வெகுளியானவன் விவரமானவனானவது யாரால்? உங்கள் எதிர்காலத்தை நீங்கள் எதிர்கொண்டே ஆகவேண்டிய அவசியத்தை உணர்த்திய ஆசிரியர்கள். எனவே, எதிரிகளுக்கு சொல்லுங்கள் நன்றியை! செலுத்துங்கள் மரியாதையை! உற்சாக ஊற்று உனக்கே செ அங்கீகாரம் ஆக்கப்பூர்வ சக்தி. அடுத்தவர்களின் அங்கீகாரத்திற்கு அங்கீகாரம் அளிப்பதை விட்டு நம்முள் உறையும் உற்சாகத்திற்கு அங்கீகாரம் அளிப்போம் உற்சாகம் ஊற்றெடுக்கும் அங்கீகரி! உன்னை நீயே அங்கீகரி! உற்சாக ஊற்று உனக்கே சொந்தம். அறிவு அனுபவம்; எல்லாம் தெரிந்திருக்கும் எதுவுமே புரிந்திருக்காது அறிவாளிக்கு எவ்வளவு தெரிந்ததோ அவ்வளவும் புரிந்திருக்கும் அனுபவசாலிக்கு தெரிதலையும் புரிதலையும் தாண்டி ஆனந்த அனுபவமாகியிருக்கு அனுபூதியானவனுக்கு அறிவு வெறும் செறிவு! அனுபவம் பெரும்பாக்கியம்! அனுபூதி அளவில்லா ஆனந்தம்! உள்ளும் புறமும் எங்கும் நிறைந்திருக்கும் பிரபஞ்சபேரியக்க பெருஞ்சக்தியில் திளைத்திருப்பதே - அனுபூதி வாழ்க! அடைக! ஆறுக! அளவில்லா ஆனந்த அனுபூதியில்... நன்றி சொல்லுங்கள் இந்த விந்தையான நம்பிடம் நண்பர்கள் கட்டிக்காட்டும் நல்லனவற்றைவிட எதிர்கள் சுட்டிக்காட்டிவிடும் எல்லாத் தவறுகளும் எப்போதுமே சரியாக இருக்கும் வாழ்வை விளக்கும் வேதங்கள் துன்பங்கள் புண்படுத்தினாலும் பண்படையச் செய்ய மறப்பதில்லை நம்மை சந்திக்கும் தொல்லைகள் விந்தையென்றாலும் இவையணைத்தும் உண்மையே. தவிர்க்க முடியாதது தவறு தெரிந்து கொள்! புரிந்து கொள்! நீ தவறு செய்யப் பிறந்தவன் தொடர்ந்தல்ல... தவறுதலாக்கூட தவிர்க்க முடியாதது தவறுகள் தவறு செய்வது தவறில்லை செய்தத் தவறையே திரும்பச் செய்வதுதான் தவறு தவறுக்கு வருந்தாதே! திருந்து!! செய்யாதே திரும்பச் செய்யாதே ஒருமுறை செய்த தவறை! மினுக்கும் சிரித்தல் அரிது! இறுக்கம் எளிது! அகங்காரமடைந்தவருக்கு சிரிப்பு அகங்காரம் கரைவதற்கான அரிய வாய்ப்பு வெடிக்கும் சிரிப்பில் தெறிக்கும் உள்ள வெறுமையில் மினுக்கும் ஞானம். சிரி! சிரி! சிரி! அகம் மலர சுகம் துளிர சிரியுங்கள்! சிரியுங்கள்! முழுமையாய் சிரியுங்கள்! சிரிக்க கிடைத்த வாய்ப்பு சிறியதானாலும் சிரித்துவிடுங்கள் முழுமையாய் சிரிப்பதற்கு நம்மைவிட வேறு எதாவது ‘ஜோக்’ வேண்டுமா?! தெரிந்துகொள்ளும் வரை ஓடு! அடு! ஓடு! முடிந்தவரை ஓடு ஆடு! விடியும்வரை ஆடு அனுபவி ஆசைகிர அனுபவி தவறில்லை வாழ ஆனந்தத்தை ஆழ ஆனமட்டும் ஆடு ஓடு அனுபவி அப்போதாவது உனக்குத் தெரியட்டும் நீ தேடுவது வெளியே இல்லை என்று! விரைவிலேயே தெரிந்துகொள்வாய் தேடுவது தேடுமிடத்தில் இல்லை என்று! விழட்டும்! வாழ்ந்தும் வீழாத வாசனைகள் வீழட்டும் முடிவில்லா யோசனைகள் முடியட்டும் உன் ஆட்டம் பாட்டம் முடியுமிடத்தில் ஆரம்பிக்கிறது கொண்டாட்டம். நீங்கள் நீங்களாய் மலருங்கள்! யாரையும் யாருடனும் ஒப்பிடாதீர்கள் உங்கள் தனித்தன்மையை உணர்ந்து நோக்கம் பயன்பாடு புரிந்து உங்களுக்கு நீங்களே போட்டியாளராகுங்கள்! நீங்கள் ஒப்பீடற்றவர்கள் நீங்களாய் மலருங்கள்! ஆம்! ஆனந்தமாய் இருங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் ஒப்பீடற்றவர்கள் குதர்கலவாழ்வுக்கு உப்பிடாது ஒப்பீடல் உப்பீடல் சாதனைப் பாதையின் சோதனை! உறைந்திருக்கும் ஆனந்தம் பகிர பகிர குறைவது துக்கம் பகிர பகிர பொங்குவது ஆனந்தம் நீங்கள் அன்புக்கு ஏங்குவது கோட்ஸ்வரன் ஒத்த ஊபாய்க்கு பிட்சையெடுப்பதற்கு சமம் இப்படிக்கு உள்ளுக்குள் உறைந்திருக்கும் ஆனந்தம் சொல்லும் சேதி ஞானிகளை நம்பினால் நம்பிவிடுங்கள் நம்பிடுங்காத் தயங்கிநாத் முழுமையாக! நாதிகள் முழுமையாக! நம்பிக்கை அறைக் குறைந் தை. அறைகுறையாக நம்பினால் அரைகுறையாகத்தான் நம்பிக்கை. புரிந்துகொள்வோம் ஞானத்தை. ஞானியின் உண்மை மோசமானது! பொய்யைவிட அறைகுறை அஞ்ஞானத்தை அகோரமானது! பூரணமாக டும் நம்பிக்கை. ஞானம். மூதாதையர் மூளைகளை விழுங்கிட்டு தேர்வு நேரத்தில் வாந்தியெடுக்க வைப்பதுவா கல்வி? அவனுள் உறையும் அவனை அவனுக்கு அடையாளங்காட்டும் அற்புத ஒளிதான் கல்வி! எங்கும் செல்லாமல் அங்கேயே மங்கிக் கிடக்கும் புத்திசாலித்தனத்தை புதுப்பொலிஊட்டும் புத்துணர்வு சக்திதான் கல்வி! எது கல்வி? உயிரோவியமாகுங்கள் கனவுகள் நிஜமாவதில்லை என்றால் அவை கனவுகள். கற்பனை வருங்காலத்தை பெற்றெடுக்கும் அற்புத சக்தி. கனவும் கற்பனையும் நிஜமானால், கற்பனை ஓர் உந்து சக்தி. நிஜம் உயிரோட்டம் மாறாத நீரோட்டம் நிஜமாகிவிட்டால் கற்பனை ஓர் மந்த சக்தி. கனவு காணுங்கள் கண்ட கற்பனைகளையெல்லாம் நிஜமாக்குங்கள் உயிரோவியமாகுவீர்! வாழ்க்கைப் புதிர்... வாழ்க்கைப் பாடம் எளிது! மாணவன்சரன் குழம்பியிருக்கிறாய்! வாழும்போதே வாழாதவன் சாகும்போது சாகமுடியாமல் தவிப்பான் நோகடிப்பது முட்டாள்தனம் நொந்துபோவது மகா முட்டாள்தனம்! மனிதனின் கண்களுக்கு தெரிவது மனம் பார்க்க வேண்டுமென நினைப்பவை விருப்பபவை மட்டுமே. தெரியுமா உங்களுக்கு? எளிமையாயிருப்பது மிக கடினமானது. காரணம் கடினங்களை மட்டுமே காணும் காட்டும் கள்ள மனது நல்ல மனதை கள்ள மனதாக்கி உள்ளே ஒவிந்து கொண்டு உன்னையே உலுக்கும் அகங்காரமது சாகட்டும்! அது மெல்ல சாக பார்வையின் போர்வை அகட்டும் எல்லாம் தெரியட்டும் எளிமையாகட்டும் எல்லாம் என்ன செய்ய? நான் கர்வப் படக் கூடாது... எளிச்சல் படக் கூடாது... துரோகம் செய்யக் கூடாது... பகல் கனவு காணக் கூடாது... பொறாமைப் படக் கூடாது... சோம்பித் திரியக் கூடாது... துக்கப் படக் கூடாது... என்றால்! பின் நான் என்னதான் செய்வது? 'தியானம் செய் மனதைக் குணப்படுத்துங்கள் மனம் ஓர் விதையில்லா விருட்சம்! எண்ணங்கள் வடிவில்லா சூர்வாள்கள்! சூர்வாள் கொண்டு விருட்சத்தை சீர்செய்து சீர்செய்த சூர்வாளையே தூர தூக்கி எறிந்தது போல! பிறந்து விடும் ஞானம் இதை தியானித்துப் பார். மனம் சுணமாகும். உதயமாகும் சாதனை! தயக்கம் என்னும் தடைக்கற்களால் தேங்கிக்கிடக்கும் ஆக்கத்திறன் துணிச்சல் என்னும் படிக்கற்கள் ஏறி பாகத்தை சாதகமாக்கி சாதனை படைக்கடும்! தயக்கத்தை நினைத்து தயங்குவதை நிறுத்து! துணிச்சல் துளிர்விடு! சாதனை தானாய் உதயமாகும்! வாழ்வு - சாவு வாழும்போது சாவைப்பற்றி தெரிந்து கொள்ளாவிட்டால் சாகும் போதுதான் வாழ்வைப் பற்றியே தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும்! வாழும்போதே தெரிந்து கொள்வதுதான் புத்திசாலித்தனம் வாழ்வின் தர்ம சாவின் தரத்தால் அறியப்படும் நிறம். சாவும் கலையே அந்தக் கற்றுக்கொள்ளுங்கள் வாழ்வுக் கலை மூலம். உச்சத்தை உணருங்கள், உணத்துங்கள் 'உலகையே நேசிக்கிறேன்' - இது எளிது எனில் இது வெற்று வார்த்தை. நிர்ஜ்த்தில் பக்கத்து வீட்டுக்காரன் பெயர் சொல் தெரியாது மனித உறவுகள் மலிந்து போயின. உண்மையில் மனித உறவுகள் மகத்தானவை - அவை உணர்வுகளின் முகங்காட்டும் கண்ணாடிகள். ஆனந்த வானின் சன்னல்கள்! உறவுகளிடம் உச்சத்தை உணருங்கள். உணர்த்துங்கள். இரத்தினம் இறைவனளித்த இரத்தினம் போரின்பம். இறைவனளித்த கூழாங்கல் சிற்றின்பம். நாம் இரத்தினத்தை விட்டுவிட்டு கூழங்கல்லை வைத்து ராசிக்கல் வியாபாரஞ்செய்யும் சமூகத்தை அன்றோ உருவாக்கியிருக்கிறோம். அதில் தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இரத்தினத்தின் அருமையை அறியாமலிருக்க காரணம் இதுதான். இளமையை வடிக்கும் சீ ஆக்க சக்தியின் அருமை வெளிப்பாடு - இளமை. விரயத்தால் விரக்தி அடையாமல், வேகத்தால் வேதனைப்படாமல், விவேகத்தால் தன்னைத்தானே வென்று, ஆனந்த வாழ்வை (ஆளும்) அரசாட்சி செய்யட்டும் இளமை! துடிக்காதே! ஆண்டு அனுபவிக்க, ஆழ்ந்து அனுபவிக்க, இளமையை வடிக்கும் சிற்பியாகிவிடு! அற்ப வாழ்வை அற்புத வாழ்வாக்கும் ரகசியம் இதே! இதே! அது திகட்டாது கவலைகள் கலைக்கப்பட வேண்டும் காரணம் - கவலை - ஒரு வலை அது சுத்திகரிக்கப்பட வேண்டும்! கவலை வரும் காலத்தை நம்மால் கனித்துச் சொல்லமுடியும் ஆனால்... சந்தோஷம் எப்போது வரும்? எவ்வளவு காலமிருக்கும்? எப்படி மறைந்து போகும்? என்பனப் பற்றி எவ்வளவு கூட கனித்தல் கடினம் எனவே... சந்தோஷம் - ஒரு தோஷம் அது புரிந்து கடக்கப்பட வேண்டும் குறையாது திகட்டாது இருக்கும் இருந்து கொண்டேயிருக்கும் சுதிலை அகனிலை ஆனந்தம் ஆகவே... ஆனந்தம் - நிரந்தரம்! அது உணரப்பட வேண்டும்! தியான சூத்திரம் மூடிய கண் இருக்கும் எண்ணங்களை, மனக்காட்சிகளை, நிறுத்தாதே! தொடராதே! உருவாக்காதே! எண்ணங்களையும் காட்சிகளையும் தொடர்ந்து பார். பொங்கும் மனம் அடங்க ஆரம்பிக்கும். என்றோ அடங்கிப் போய்விட்ட ஆனந்தம் பொங்க ஆரம்பிக்கும் பார்... தியானித்துப் பார்! வாழ்விற்கும் சாவிற்கும் இருக்கும் ஒரே ஒரு வித்தியாசம் நம்பிக்கை. மனிதன் காற்றை சுவாசிப்பதால் அல்ல மனிதன் நம்பிக்கையை சுவாசிப்பதால் தான் வாழ்கிறான் காரணம் நம்பிக்கையே வாழ்வு! நம்பிக்கையே பிரச்சினை! நம்பிக்கையே தீர்வு! வாழ, சுவாசிக்கும் நம்பிக்கையை சுத்திகரிங்கள்... மனத்தின் போலி நம்பிக்கைகள் காணியாகட்டும் வேலியிடப்பட்ட வாழ்க்கை விசாலமாகும். உல்லாசக்காற்று உள்ளுக்களேயே வீச ஆரம்பிக்கும் போகி - துரோகி - தனக்கு மாத்திரமே வாழ்பவன் போகி. மற்றவர்களுக்கு மாத்திரமே வாழ்பவன் துரோகி (சய). தனக்காவும் மற்றவர்களுக்காகவும் சேர்ந்து மகிழ்ந்து, நெகிழ்ந்த சேவை சுணத்தோடு வாழ்பவனே யோகி. அது நான், எனது என்று கணத்திருப்பது அது தன்னைத் தவிர அதனையும் அறிந்து இருளில் உழல்வது அது தன்னையறிய விடாது தன்னுள் லயிக்கவும் விடாது ஆனந்தமின்றி திகைப்பது! உன்னை திகைக்க வைப்பது! அது நாம், நமது என்று சுவைத்திருப்பது ஆதலால் அகத்தின் காரத்தை கரைத்துவிடுங்கள்! முடியாது! இந்தில் கூட வளைக்க முடியாது! நாம் நினைக்காவிட்டால் முடியும் மனதை ஐம்பதில் கூட வளைக்க முடியும் நாம் நினைத்தால் மன அமைப்பு மாறாமல் என்ன சாதித்தும் எந்த பயனுமேயில்லை காரணம் பதிநந்து வயதில் துக்கத்தையளித்த அதே மன அமைப்பு மீண்டும் மீண்டும் துக்கத்தையே தரும் ஐம்பது வயதிலும் மாறவேண்டும்! துயரத்தையே அதிகம் தரும் மன அமைப்பு மாற வேண்டும்... முடியும் மாற்ற முடியும் எப்போதும் ஆனந்தமளிக்கும் உற்சாக மன அமைப்பாக மாற்ற முடியும் நாம் மன அமைப்பை நீ நினைத்தால... நீ நினைத்தால... நீ நினைத்தால்... வார்த்தை விதை (அ) கவிதை சொல்லும் (ஆழ்) கருத்தோடு அவசரப்படாமல் வகுத்து நிற்கும் வார்த்தைகளுக்கு வசப்படு! அப்பொழுதுதான் - ஒரு அகவிதை ஜீரணிக்கப்படுகிறது. வாழ்க்கை - ஒரு அருமையான கவிதை பொறுத்திருந்தால், பொக்கிஷங்கள்! அகவிதைகள் ஆழப் பதியட்டும்! ஆனந்த தளிர் துளிரும் மாயமாகட்டும் நமக்கும் மற்றவர்களுக்கும் மரியாதை என்ற பெயரில் அவமரியாதையையும்! நீதி என்ற பெயரில் அநீதியும்! நான் நல்லதுக்குத்தான் செய்கிறேன் என்று நம்மை நம்ப வைப்பது மனதின் மாயங்களில் ஒன்று ஒழுக்கம் என்ற பெயரில் ஒழுக்கமின்மையும்! செய்துவிட்டு, நான் நல்லதுக்குத்தான் செய்தேன் நல்லதுக்காக எதையும் செய்ய வேண்டாம்

  • அந்த நல்லதாகவே மாறிவிடுங்கள் மாயங்கள் மாயமாகிவிடும். இறுக்கம் அறுங்கள் இறுக்கம் எல்லா மன நோய்களுக்கும் அழைப்பு விடுங்கும் இயல்பாய் எளிமையாய் செய்யும் செயலில் கரைந்து விடுங்கள். உடல் குளுங்கும் சிறப்பாக இறுக்கம் அறுங்கள். ஆனந்தம் துளிர்விட்டு! இது ரகசியம் இந்தத் தவறைத் தொடர்ந்து செய்தால் துண்டலைச் சுகம்! இன்பம்! ஆரோக்கியம்! இப்படிக்குத் தியானம் வாழ்வில் சுகம் தேடுவோர்க்கு வாழ்வே சுகமென சுகிக்கச் செய்யலாவது சேருங்கள் சுகந்தரும் தியானத்தை! வாழ்வில் தியானம் வாழ்வை வளமாக்கும் வாழ்வே தியானமாதல் உன்னையே வளமாக்கும் மனித பிறவி என்னும் கண்ணாடி விளையாட்டில் நித்ய ஆனந்தத்தை மறந்ததே விளையாட்டின் ஆரம்பம் நித்ய ஆனந்தத்தை அடைவதே விளையாட்டின் முடிவு இது விசித்திரமான விளையாட்டு தொடர்கும்வரை தொடரும்... தொடர்ந்து கொண்டேயிருக்கும்! ஜெயிக்கும் வரையும் தொடரும் ஞானிகளை நான், எனது என்னும் - நம் மனம் வழியாக மனக் கருத்தாக அன்றி (அல்லாமல்) அவர்களை அவர்களாக அனுமதிப்போம்! ஞானியின் வாழ்வியல் கருத்துகளை கேட்டு! ரசித்து! புகழாரம் படாதீர்கள். எந்த ஞானியும் இதை விரும்புவதில்லை கேட்டதையும் ரசித்ததையும் ருசியுங்கள்! ஞானிகளின் நோக்கம் பூரணமாகும் யாம், யமது நம்முள் மலரும் ஆனந்தம் பரவும்! நாம் நாமாவோம் நிம்மதி! ஓயாமல் ஓடும் மனக்குதிரையையும்! பாடாய்ப் படுத்தும் மனப்பட்டிமன்றத்தையும்! ஒழுங்குக்குள் கொண்டு வராத வரை, இடமில்லை நிம்மதி நிதானத்திற்கு! கவனியுங்கள் முதல் முறையாக முழு கவனத்தோடு... உங்கள் மனப்பட்டிமன்றத்தை நீங்களே கவனியுங்கள். ஓடும் குதிரை ஓய்வாகும்! நிதானமாய் நிம்மதி பிறக்கும்! தன் உள்ளுக்குள் பிரண்டு விட்டவன் மிரண்டு விடுவதுதான். மனவேதனை! மனதுக்கம்! மனச்சோர்வு! தலைகீழானதை தலைகீழாக்கிவிடு! தலைநிமிர்த்து விடும், வாழ்க்கை. அதிர்ஷ்டத்தின் ரகசிய அதிர்ஷ்டம் தூரதிர்ஷ்டம் - இவை மனம் காட்டும் வண்ணங்கள். நிஜமற்ற நிழல்கள் ஆசைகொண்ட மனம் அதிர்ஷ்டத்தைப் பார்த்து சபலப்படும், பீதிகொண்ட மனம் தூரஅதிர்ஷ்டத்தைப் பார்த்து துக்கப்படும். உண்மையில் இவை நிறமற்ற நிகழ்வுகள். இந்த மின்மினிகளுக்காக வெண்ணிலவை இழக்காதீர்கள்! இந்நிலவுலகின் வெண்ணிலவு வாய்ப்புகள் ! வாய்ப்புகளை வலியச்சென்று பயன்படுத்திக் கொள்ளுங்கள் எதிர்காலம் உங்களை அதிர்ஷ்டசாலி என்றழைத்து மகுடம் சூட்டும். அதிர்ஷ்டத்தின் ரகசிய வழி இது ! அளப்பரியது வாழ்க்கை - ஒரு வெகுமதி ! அணுப்பொழிதும் - அது அளித்தரும் அனுபவங்கள் அளப்பரியது - அதை அனுபவிக்கத் தெரிந்தால் நரகமும் சொர்க்கம் ! சொர்க்கமும் நரகமும் வெளியில் இல்லை' அனுபவித்தலில். இக்கணம் நீட்டும் அனுபவத்தை 'அப்படியே' அள்ளிக்கொள் இப்பொழுதும் எப்பொழுதும் - சொர்க்கம்தான் ! சிற்றின்பம் சிற்றின்பங்கள் வலை. பேரின்பம் அலை. சிக்கவைப்பது வலையின் இயல்பு ! அழைத்துச் செல்வது அலையின் இயல்பு ! பேரின்பத்தை ஒரே ஒரு முறை சுவைத்துவிடு உள்ளிருக்கும் ஆனந்தக் கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுவாய் உன்னையும் மீறி (ச)காலங்கள் கோலங்களடா! காலங்கள்... 'என்னை நினைத்து நினைத்து கவலைப்படாதே!'
  • எதிர்காலம் என்னை நினைத்து நினைத்து உருகாதே !
  • இறந்தகாலம் என்னையே நினைத்து நினைத்து திருந்து !
  • நிகழ்காலம். கடவுளின் காதல்மொழி அன்பெனும் மலர் இதயத்தில் மலராதவரை, பாசமும், வெறுப்பும் இருந்து கொண்டேயிருக்கும் சம அளவில். பாசம் காதல் நட்பு மனிதனின் உணர்வுமொழிகள் கடவுளின் காதல் மொழி அன்பெனும் உணர்வு ! மலரட்டும் அன்பெனும் மலர். அப்போது... கடவுளே காதலனாகுவான். வாழும் காலமெல்லாம் தேன்நிலவாகும் கடவுளின் காதலியானவுடனே அறிவின் நிறைய விஷயங்களை தெரிந்திருக்கவா அறிவு ! அதற்கு குணிநுணுத்தீச்ணுளு போதுமே ! வாழ்க்கைக்கு அவசியப்படும் சில விஷயங்களை மட்டும் தேர்ந்தெடுப்பதற்குதானே அறிவு அவசியம். படித்துக் கொண்டே போவதால் என்ன பயன் ? முட்டாள்! மனிதன்! கடவுள்! ஒளியை விவரிக்கும் குருடன் முட்டாள் கடவுளை விவரிக்கும் மனிதன் குருடன் மனிதனால் கடவுளை விவரிக்க முடியாது - என் விவாதிக்கூட முடியாது மனிதனல்ல கடவுள் மூயன்றால்... மனிதனே கடவுளாகலாம் அகக் கண்ணை திறக்காதவரை மனிதன் மனிதன் தான் அது திறந்த மறு நிமிடமே மனிதன் மனிதனல்ல கடவுள் தியானித்துப் நீர் சுவைக்கும் தன்மை இனிக்கும் தியானித்துப் பார்... புரியும் சொர்க்கம் வரும் மகா ராஜனாவாய் தியானித்துப் பார்... கண்டுகொள்வாய் உற்சாக காற்று மகிழ்ச்சி ஊற்று உனக்கே சொந்தம் தியானித்துப் பார்... சொந்தமாகும் சுகத்தில் கசிப்பாய் இகத்தில் ஆனந்திப்பாய் அகத்தில் இறைவனாவாய் தியானித்துப் பார்... வழி தெரியும். (அ) மனதின் திருப்தியே போலியானது! முன்னேறுங்கள்! நிஜத்தின் நிழலானாலும் நிழல் நிழல்தான் நிஜத்தின் நிழல்தான் அதிருப்தி. நிஜமே நிதர்சனமானது நிஜத்தை நோக்கிட முன்னேறுங்கள்! ஆத்மா திருப்தியே நிஜமானது புரிந்துகொள்ளுதலின் 'யார் புரிந்து கொண்பார்கள் என்னை!' என்றே வருந்துகிறோம். யாரையும் புரிந்து கொள்ளாமல், நாம்.! யாரையும் புரிந்து கொள்ளவிடாமல் நம்மை பற்றி! முதலில் புரிந்து கொள்ள அனுமதியுங்கள் உங்களை நீங்களே! புரிந்து கொள்ளுதலின் துவக்கப் புள்ளியும் முற்றும் புள்ளியும் உங்களுக்கு நீங்களே! விழித்துக்கொள்ளுங்கள்! விழித்துக் கொள்ளாதவரை துக்கம் விழித்து கொண்டேதான் இருக்கும். வாழ்க்கை வேண்டாமல் - பெற்ற வரம். இன்னும் 'பிரிக்கப்படாமல் கிடக்கும்' பரிசுப் பெட்டகம்! விழித்துக் கொள்ளுங்கள்... எஞ்சியது மிஞ்சட்டும் காலன் கடப்பதற்குள் விழித்துக் கொள்ளுங்கள்!! காற்றின் வருகை தேகம் அறியும். காற்றின் பதிவை இதயம் உணரும். இதயம் திற சுவடுகள் பதியட்டும். Ebook ISBN: 979-8-88572-159-2