Books / Chnidi Ndachti

1. Chnidi Ndachti

ஆதிசைவம் ஒர் அறிமுகம்

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சுவாமிகள் ஆதிசைவத்தைப் பற்றி அழகு தமிழில் அளித்த சொற்பொழிவுகளின் சாரமே இந்நூல். இதில் ஆதிசைவத்தைப்பற்றிய அறிமுகமும், எம்பெருமான் சதாசி வன் நேரடியாக அளித்த வேதாந்த, சித்தாந்த, ஆகமாந்த சத்தியங்களின் சாரமும், சைவத்தின் மாண்பும், சைவம் வாழ்ந்த அடியார்களின் மாண்பும் தொகுத்தளிக்கப்பட்டிருக்கிறது.

ஆதிசைவத் தமிழில் எனும்போது, நாம் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இப்போது வழக்கிலிருக்கும் தமிழ் வேறு, ஆதிசைவத் தமிழ் வேறு.

இந்நூலில் பெருமானே வளர்த்த, வாழ்ந்து காட்டிய வாழ்க்கைமுறையையே ஆதிசைவம் என்ற தலைப்பில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அருளியிருக்கிறார். மேலும் பக்தா்களுக்காக பரமன் நடத்திய திருவிளையாடல்களையும், பரமனை அடைய ஒரு அற்புத வழியாக சைவத்தை வாழ்ந்த பக்தர்களின் சரிதத்தையும் அழகு தமிழில், அற்புத நடையில் அருளியிருக்கிறார் நம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.

குளவி புழுவைக் கொண்டு சென்று, கூடு செய்து, வாயிலில் அமாந்து ஓங்கார பிரணவத்தைச் சொல்லிச் சொல்லிச் சொல்லியே, புழுவைக் குளவியாக்கும். அதைத்தான் குரு செய்கிறார். ஜீவனைக் கொண்டுபோய் பூலோகக் கைலாயமாம் பிடதி கேஷத்ரக் கூட்டில் வைத்து, 'சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம்' என்று சிந்தையே கரைந்துபோகும் அளவிற்குச் சொல்லி, ஜீவனுக்குள் 'அகம்' அற்றுப்போகும் வரை கொட்டிக் கொட்டி, ஜீவன் 'அகம்' அற்றுப்போய் சிவோஹம் ஆகின்றவரை இதைச் செய்து ஜீவனை சிவோஹமாக்குகிறார். ஆதிசைவத் தமிழிலே இதனைப் பிரம்மக்கீட நியாயம் என்று சொல்வோம்.

குளவி, தன்னுடைய ரீங்காரத்தால் ஒரு புழுவை குளவியாக்குவதுபோல, குருவினுடைய வார்த்தைகள், கேட்பவரை 'நான்' என்ற நிலையிலிருந்து 'இருப்புத்தன்மை' நிலைக்கு உயர்த்தும். குருவினுடைய வார்த்தைகள் எந்த உணர்வில் இருந்து வெளிப்படுகிறதோ அதே உணர்வை, கேட்பவர்களுக்கும் கொடுக்கும் சக்தி வாய்ந்தது. குருவின் சாநித்தியத்தில் ஒருவர் இருந்து ச த்தியங்களைக் கேட்கும்போது, ஒருவர் எளிதாக ஞானநிலையை அடைய முடியும்.

ஆதிசைவம் - அந்தம் இல்லா ஆதி உடையது

ஆதிசைவத்தை அறிமுகப்படுத்த முயற்சிசெய்வது, ஆண்டவனையே, சி வனையே அறிமுகப்படுத்த முயற்சிப்பதற்குச் சமம். அது சாத்தியம் இல்லாதது என்பது மட்டும் அல்லாது, வாழ்ந்து மட்டுமே பார்த்து, அனுபவித்து மட்டுமே பார்க்கக்கூடியது என்கின்ற தகுதி உடையது ஆதிசைவம்.

ஆண்டவனை அறிமுகப்படுத்த இயலாது, வாழ்ந்து மட்டும்தான் பார்க்க இயலும். ஆதிசைவத்தையும் அறிமுகப்படுத்த இயலாது, வாழ்ந்துதான் பார்க்க இயலும். 'அறிமுகப்படுத்த இயலாது' என்கின்ற அறிமுகத்தை வேண்டுமானால் அளிக்க இயலும்.

ஆதிசைவம், இந்தப் பேரருள் வடிவான ஞானப் பிரபஞ்சத்தில் என்றென்றும் விரிவடைந்துகொண்டே சென்று கொண்டேயிருக்கும். மரணம் இலாத சி ரஞ்சீவியான, நிரந்தரமான இந்தப் பிரபஞ்சத்தில் உயிர் தோன்றியபொழுது, அவ்வுயிர் எவ்வாறு தன் வாழ்க்கையை மேம்படுத்தி, பிரபஞ்சத்தின் எல்லா சக்திகளையும் தன் உள்ளிருந்து வெளிப்படுத்தி, 'கடவுள் துகள்' என்கின்ற நிலையிலிருந்து 'கடவுளாக' மாறுவது எப்படி, தன்னுடைய இருப்பு நிலையை… பிரபஞ்சத்தின் வடிவமாக, அகண்ட சச்சிதானந்த பரிபூரண நித்யானந்த நிலையில் நிலைநிறுத்திக் கொள்வது எப்படி என்கின்ற அறிவியலே ஆதிசைவம், வாழ்வியலே ஆதிசைவம்.

இப்போது நான் கொடுத்த இந்த வரைமுறை - பள்ளியில், ஒரு பக்கக் கட்டுரை வரைக என்று ஒரு கேள்வியைக் கேட்டு, பத்து மதிப்பெண்களுக்கு அந்தக் கேள்வியை நிர்ணயித்தால், ஒரே வரியிலே நீங்கள் விளக்கம் கொடுக்கற மாதிரி, அறிமுகப்படுத்த முடியாத ஆதிசைவத்தை, சில வரிகளில் சொல்ல நான் செய்த முயற்சிதான் இது.

உயிர் பிரபஞ்சத்தில் மலர்ந்தவுடன், 'கடவுள் துகள்' என்கின்ற நிலையிலிருந்து 'கடவுள்' நிலையை உணர்வது, கடவுள் தன்மையைத் தனக்குள்ளிருந்து வெளிப்படுத்துவது, கடவுள் நிலையிலேயே இருப்பு கொள்வது என்கின்ற மிகப்பெரிய வழியின் அறிவியல், அதை அடைவதற்கான, வாழ்வதற்கான அறிவியல் ஆதிசைவம்.

வரலாற்றை வைத்தோ, நிலைகொண்ட புவியியல் சூழல்களைச் சார்ந்தோ ஆதிசைவத்தைச் சுருக்குவது சாத்தியமே இல்லாதது. ஏனென்றால், வரலாறு... துவக்கமும் முடிவும் இருக்கின்ற ஒன்றுக்குத்தான் இருக்க முடியும். ஓரிடத்தில் இருந்து, இன்னோர் இடத்தில் இல்லாத ஒன்றைத்தான், புவியல் ரீதியாக நாம் அடையாளம் காட்ட முடியும்.

அந்தம் இல்லாத ஆதி உடையது, ஒன்று இரண்டாக மாற முடியாத அளவுடையது ஆதிசைவம். அதனால், வரலாறு சார்ந்தோ, புவிஇயல் சார்ந்தோ ஆதிசைவத்தை விளக்குவது சாத்தியமில்லாதது, வரையறுப்பது சாத்தியமில்லாதது.

மதம் உருவாவதற்கு முன்பே மலர்ந்த மலர்

ஒரு காலத்தில் தோன்றி, ஒரு காலத்தில் இல்லாமல் போவது கிடையாது ஆதிசைவம். ஒரிடத்தில் இருந்து, ஓர் இடத்தில் கடைபிடிக்கப்படாமல் போவது கிடையாது ஆதிசைவம்.

புவிராப்பு விசை எப்படி புவி முழுக்க இருக்கின்றதோ, அதேபோல, பிரபஞ்சம் சில குணங்களால், சத்தியங்களால் முழுமையாக நிறைந்து, அந்தச் சத்தியங்களைச் சார்ந்து இயங்குகிறது. அந்தச் சத்தியங்கள்தான் ஆதிசைவம்.

புவிஈர்ப்பு விசை ஒர் இடத்தில் இருக்கிறது, இன்னொரு இடத்தில் இல்லை என்று சொல்ல முடியுமா? முடியாது. எப்படிப் புவி முழுவதும் புவிஈர்ப்பு விசை நிறைந்திருக்கின்றதோ, அதுபோல பிரபஞ்சம் முழுவதும் சில விதிகள், சத்தியங்கள், சாத்தியங்கள், கருத்துக்கள், உண்மைகள் நிறைந்து இந்தப் புவியே இயங்குகிறது. இந்தப் பிரபஞ்சமே இயங்குகிறது. அந்தச் சத்தியங்களை, அந்தப் பிரபஞ்சமே குறை இலாது, முறைதவறாது வெளிப்படுத்திய வாழ்வியல்முறைதான் ஆதிசைவம்.

பிரபஞ்சப் போரருள், பிரபஞ்சப் பரம்பொருள் வடிவம், வடிவமின்மை என்னும் நிலைகளைக் கடந்து தன்னுடைய சாந்நித்ய இருப்பின் மாத்திரத்தாலேயே வெளிப்படுத்திய சத்தியங்களைத்தான் என்று சொல்கிறோம். வேதங்களின் சாரம் உபநிடதங்கள்.

பிரபஞ்சப் பேரருள், அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரம்பொருள் தன்னுடைய நித்யானந்த நிலையில் இருந்தவாறே, தானே தன் மயமாய் தனக்குள்ளேயே ரசித்துக்கொண்டிருக்கும், தனக்குள்ளேயே அதை வாழ்ந்து கொண்டிருக்கும், தனக்குள்ளேயே தன்னையே ருசித்துக்கொண்டிருக்கும் அந்தத் தன்மயானந்த நிலையில் இருந்தவாறே வெளிப்படுத்திய, உணர்த்திய பிரபஞ்சத்தின் ச த்தியங்கள்தான் வேதங்கள். அதன் சாரம் உபநிடதங்கள்.

தன் இருப்பினாலேயே, தன்னுடைய இருப்பின் சாந்நித்யத்தினாலேயே, சாந்நித்ய பலத்தினாலேயே வெளிப்படுத்திய சத்தியங்கள் வேதங்களும் உபநிஷதங்களும்.

அதே பிரபஞ்சப் போரருள், அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரம்பொருள் தன்னுடைய நித்யானந்த நிலையிலேயே, தான் இருப்பது மட்டுமல்லாது, உயிர்கள் எல்லாம் உய்வடைய, உத்தம நிலை அடைய, தன் நிலைதனை உயிர்கள் எல்லாம் உணர்ந்திட சதாசிவனாய் திருமேனி கொண்டு உலகத்திற்கு வெளிப்படுத்தியவையே ஆகமங்கள்.

ஒவ்வொருவரும் பிரபஞ்சப் பேரருள் நிலையிலிருந்து சுத்த சிவாத்வைத ச த்தியத்தை வாழ்ந்திட, சுத்த சிவாத்வைத சத்தியத்தில் நிலைபெற்று பொங்கி மலர்ந்திட, திருமேனி தாங்கி சதாசிவனாய் பெருமானே உலகிற்காக வெளிப்படுத்திய சக்தியங்கள்கான் ஆகமங்கள்.

வேதங்களைச் சார்ந்து, உபநிடதங்களைச் சார்ந்து பெருமானே வெளிப்படுத்திய ஆகமங்களைச் விஞ்ஞானமாக, வாழ்வியல் நெறியாக மலர்ந்ததுதான் ஆதிசைவம்.

ஆகிசைவம் ஆகி மதம் மட்டும் அல்லாது, மதம் என்கின்ற கருத்து உருவாவதற்கு முன்பாகவே மலர்ந்த ஒரு ஆன்மீக வாழ்வியல் நெறி. வேறு வேறு நாடுகளில், இடங்களில் இருக்கின்ற மக்கள் கல்லாலே ஆயுதங்கள் செய்து, ஒருவரை ஒருவார் தாக்கிக்கொண்டு, காட்டு மிராண்டிகளாக வாழ்ந்திருந்த காலத்தில், நாங்கள் 'கல் ஆலயம்' செய்து, ஜீவன்முக்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த வாழ்வியல் நெறி ஆதிசைவம்.

காமிக ஆகமம் - வாழ்வை வழிநடத்தும் விஞ்ஞானம்

மொழி இல்லாத காலத்தில், மேலை நாட்டவர்கள், பல்வேறு கண்டங்களில் இருந்த மக்கள் ஹீன சப்தங்களால் உணர்சிகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தி கொண்டிருந்த காலத்தில், முறையான செம்மொழியான தமிழீ என்னும் அருமையான மொழியில், வாழ்வியல் சத்தியங்களை ஆகமங்களாக நாம் வாழ்ந்து கொண்டு இருந்த வாழ்வியல் நெறி ஆதிசைவம்.

பல போ் கருதுவதுபோல, ஆகமங்கள் சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்டது என்பது பொய். அது மிகப்பெரிய தவறான கருத்து. உண்மையில், சம்ஸ்க்ருத வல்லுனர்களால் ஆகமத்தின் 50 சதவிகித பகுதியைக்கூட மொழிபெயர்க்க இயலவில்லை என்பதுதான், நான் நேரடியாகப் பல சம்ஸ்க்ருத அறிஞர்களோடு தொடர்புகொண்டு வேலைசெய்து பார்த்ததன் இறுதி உண்மையாக அறிந்த ச த்தியம்.

உண்மையில், ஆகமங்கள் சம்ஸ்க்ருதத்திற்கும் மூல மொழியான தமிழீ என்னும் மொழியில்தான், கிரந்த எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு, தமிழீ என்னும் மொழியின் இலக்கணம் சார்ந்து அருளப்பட்டது. எம்பெருமானே மொழியின் இலக்கணமும் தந்து, எம்பெருமானே வாழ்வியல் நெறியும் தந்து, எம்பெருமானே ஜீவன் முக்த விஞ்ஞானம் மாத்திரம் அல்லாது, உணவு சமைக்கும் அடிப்படை விதிகளையும், உடை நெய்தல் முறை மாத்திரம் அல்லாது, உடையுடுத்தும் முறைகளையும் - 35 விதம் ஆண்களுக்கு, 35 விதம் பெண்களுக்கென மொத்தம் 70 விதமான உடையுடுத்தும் முறைகளையும் தந்த ருளியிருக்கிறார்.

ஆதிசைவா்கள் தங்களுடைய தொழில் திறமை சார்ந்து - யார் இந்த வாழ்வியல் முறையான ஆதிசைவத்தை உலகிற்கு உபதேசித்து உரைக்கவேண்டிய நிலையில் இருக்கிறார்கள், யார் ஆட்சி செய்து நாட்டின் முறைமையையும் தகைமையையும் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள், யார் வியாபாரம் செய்ய வேண்டிய கடமையில் இருக்கிறார்கள் என்று - ஒவ்வொருவரும் தங்கள் தங்களுடைய விருப்பம் மற்றும் வேலைகள் சார்ந்து தங்களைத்தாங்களே பல்வேறு குழுக்களாக மிகத் தெளிவாக பிரித்துக்கொண்டார்கள்.

இந்தப் பிரிவு முறை, ஒரு நகரம் அமைக்கப்படும்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்குமான இருப்பிடம் இருக்க வேண்டிய இடவரிசை முறை, உணவுமுறை, உடைமுறை மற்றும் அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்கின்ற வாழ்வியல் முறை என அனைத்தையும், எண்ணிக்கூட பார்க்க முடியாத அளவிற்கு மிகத் தெளிவாக வரையறுத்திருந்தனர்!

வீட்டில் வளர்ப்புப் பிராணிகளைப் பராமரிக்க வேண்டுமென்றால்கூட, எந்த இடத்தில் கோசாலை இருக்க வேண்டும், எந்த இடத்தில் குதிரைலாயம் இருக்க வேண்டும், எந்த இடத்தில் காவலுக்கான நாய்ப் பட்டிகள் இருக்க வேண்டும் என்கின்ற அளவிற்கு மிக நட்பமாக வகைப்படுத்தினர்.

திருநீறு பஸ்மத்தை உருவாக்க வேண்டும் என்றால், எந்த நிறமான பசுவின் சாணத்தை, எந்தவிதத்தில் எடுத்தும், எப்படித் திருநீற்றை உருவாக்க வேண்டும் என்பதைத் தெளிவாக அறிந்து வைத்திருந்தனர்.

எம்பெருமான் ஏறத்தாழ சில கோடி ஸ்லோகங்கள் மூலமாக மிக மிக நுட்ப மாகவும் நுணுக்கமாகவும் ஆக்கியருளியிருக்கிறார், ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள், சில கோடி... ஏனென்றால் காமிக ஆகமத்தை எம்பெருமான் விவரிக்கும்பொழுது, சொல்லுகின்றார். இப்பொழுது நம்முடைய கைக்குக் கிடைத்திருப்பவை 20 லக்ஷம் மாத்திரமே.

காமிக ஆகமம், காரண ஆகமம் முதலாகிய 28 ஆகமங்களும், அதன் உப ஆகமங்களாக 108 ஆகமங்களும், அதுதவிர இவற்றின் பாகமாக 64 தந்திரங்களையும் பெருமானே நேரடியாக அருளி உள்ளார். வேதம், அதன் சாரமான உபநிடதம், அதை வாழும் முறையான ஆகமம் - இந்த மூன்றையும் சார்ந்த வாழ்வியல் முறையைத்தான் ஆதிசைவம் என்று சொல்லுகின்றோம். வேதங்களைப் பொதுநூலாக வைத்து, ஆகமங்களைச் சிறப்புநூலாய்க்கொண்டு வாழுகின்ற வாழ்க்கைமுறை, ஜீவன் முக்த வாழ்வியல் விஞ்ஞானம்தான் ஆதிசைவம்.

அவதாரம் - இறைவன் குருமேனி தாங்கி வரும் நிகழ்வு

பிரபஞ்சம் தோன்றிய பொழுதே, உயிரினங்களை உருவாக்கும் பொழுதே எம்பெருமான், மகாதேவன், ஆதிசிவன், ஈசன், அண்ணாமலையான் உலகத்திற்கு அருளிய மிகப்பெரிய நன்கொடை, வாழ்வியல் சாத்திரம், வாழ்வியல் சூத்திரம், வாழ்பவர்கள் அவனை நோக்கிப் பொழியும் தோத்திரம் - இவற்றையெல்லாம் ஒன்று அடக்கி மிகப்பெரிய வாழ்வியல் நெறியாக அருளியதுதான் ஆதிசைவம்.

தானே அந்த உண்மைகளை உலகத்திற்குச் சொன்னது மட்டும் அல்லாமல், எப்பொழுதெல்லாம் மக்கள் அதை மறந்து மாயையிலே சிக்குகிறார்களோ, எப்பொழுதெல்லாம் மூடா்கள்... அரக்கர்கள்... வாழ்க்கையின் அடிப்படை தெரியாதவர்கள் அசுர பலத்தாலே வாழ்வியல் நெறியை அழிக்க முயற்சி த்து, தனக்கும் மற்றவர்களுக்கும் தீங்குசெய்து கொள்ளுகின்ற ராக்ஷஸர்களாக மாறி, உலகத்திற்கு பெருங்கேடு விளைவிக்க முயற்சிக்கின்றார்களோ, அப்பொழுதெல்லாம் தீமையை அழித்து, நன்மையை மலரச்செய்து, சைவத்தைப் புனரமைத்து, வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க மீண்டும் மீண்டும் பெருமானே அவதரிக்கின்றான்.

வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க, பூதப் பரம்பரை பொலிய பெருமானே மீண்டும் மீண்டும் அவதரித்து, தன்னைத்தானே அடையாளம் காட்டி, தன்மயானந்தத்தில், சின்மயானந்ததில், சிவானந்த போதத்தில் ஜீவனெல்லாம் திளைத்திருக்க வழியும் காட்டி, வாழ்வும் காட்டி, உய்யவும் காட்டி, உணவாய் ஊட்டி, உணர்விலும் காட்டி, உயிரிலும் காட்டி, மெய் நினைவும் உயிர் நினைவும் உயிர் உணர்வும் மலர்த்தி, ஆதிசைவத்தை நம் வாழ்வியல் நெறியாய் மீண்டும் நிறுத்திடவே, குருவாய் மீண்டும் மீண்டும் வருவாய் எனக் கேட்கும் ஜீவராசிகளுக்காக, குருவாய் வருவாய் என ஏங்கும் ஜீவர்களுக்காகத் தன் திருமேனி விட்டு, குருமேனி தாங்கி, உறும் உலகத்தில் உய்ய வழிகாட்டிடவே, என்றென்றும் இருந்திருக்கும் அண்டம் இல்லாத ஆதிசைவத்தை உயிர் கொடுத்துப் புனரமைக்க, மீண்டும் வாழ்வியல் நெறியாய் மாற்றிட, இறைவன் குருமேனி தாங்கி வரும் நிகழ்வுகளைத்தான் அவதாரங்கள் என்றும், விளையாடல்கள் என்றும் ஆதிசைவத்தின் பாரம்பரிய சாத்திரங்கள் தெளிவாய் வகுத்து உலகிற்கு வரைத்து உரைக்கின்றன.

பாலில் நெய்போலே, வேதங்களில் இருக்கும் சத்தியமான நெய்யை, உபநிஷதம் மூலமாய் உயிர்க்குச் சொல்லி, வெறும் நெய்யை உண்பதும் சாத்தியம் இல்லை என்பதனால், ஆகமம் என்னும் உணவாய் சமைத்து, அதில் நெய்யையும் கலந்து, நம் நெஞ்செலாம் இனிக்க, கல் நெஞ்சாய் இருக்கும் மனமெலாம் கரைந்து, நெஞ்சு பஞ்சாக, நெஞ்செலாம் இனிக்க உலகத்திற்கு சொன்ன வாழ்வியல் நெறிதான் ஆதிசைவம்.

ஆகம அங்கங்கள்

ஆகமம் - சரியை, க்ரியை, யோகம் மற்றும் ஞானம் என 4 முக்கிய பகுதிகளாக இருந்து, ஆதிசைவத்தின் வாழ்வியல் முறைகளை நமக்குக் காட்டுகிறது.

  • சரியை - ஆதிசைவத்தின் வாழ்வியல்முறை.
  • க்ரியை - ஆதிசைவத்தின் வழிபாட்டு இயல் முறை
  • யோகம் - ஆதிசைவ நிலையை உடலையும் மனத்தையும் வைத்து அடைகின்ற முறை.
  • ஞானம் - ஆதிசைவ நிலையில், சிவோஹோம் எனும் ஜீவன்முக்த நிலையில் நிலைபெற்று இருப்பதற்கான சிவபோத, சிகபோத, சிவஞான ரகசிய சாக்கியங்கள்.

சரியை - வாழ்வியல் முறை.

துயிலெழுதல், துயிலெழுந்ததிலிருந்து செய்ய வேண்டிய செயல்கள், நாள் முழுக்க உங்கள் உடலும் மனமும் செய்ய வேண்டிய செயல்கள், செய்யக்கூடாத செயல்கள் என்பதில் துவங்கி, உங்கள் உணவுமுறை, உடைமுறை, உறக்கமுறை, உறைவிடமுறை என்னும் எல்லா முறைமைகளையும், வாழ்வியல் சத்தியங்களையும் நெறியையும், சரியை அக, சரியாக வாழவேண்டிய முறையைச் சொல்வது சரியை.

க்ரியை - பக்தி

பக்தியால் பொங்கிப் பழுத்து, இறைவனோடு இரண்டற கலந்து இருக்கும் இனிமையான நெறிமுறை க்ரியை. மலர் கொய்வதில் துவங்கி, சந்தனம் அரைப்பது, மாலை சாற்றுவது, ஆத்மார்த்தமாய் இறைவனை வழிபடுவது, பரார்த்தமாக ஆலய வழிபாட்டில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவைவரை, எல்லாவற்றையும் முறையாக, தானே தன்னை வழிபடும் விதியை தவறில்லாது ஜீவன்களுக்கெல்லாம் சொன்ன விதம் க்ரியை.

யோகம்

ஜீவன் சிவனாக மாற, ஜீவன் சிவத்துவத்தை உணர்ந்து, சிவனுடைய அதே உணர்வு நிலையில் சிவமயமாய் ஒளிர்ந்து மிளிர்ந்து, சிவத்துவதிற்க்கு தன்னை யோக்கியனாக்கி கொள்ளும் முறை யோகம்.

ஞானம்

சதாசிவனோடு இரண்டறக்கலந்து, இருப்பின் இருப்பினால் இருப்பே இருப்பை உணர்ந்து, உள்ளதை உள்ளத்தில் உள்ளி, உள்ளுக்குள் இருந்து, உள்ளே உறைந்திருக்கும் சத்தியத்தை, சதாசிவத்தை, நித்தியத்துவமாய், நினைப்பும் மறப்பும் இலாத நெஞ்சினாய், 'நீர்த்தாரை' போன்று நித்தமும் சதாசிவத்தில் நிலைத்திருக்கும் நித்தியானந்த நிலையைத்தான் ஞானம் என்று சைவம் விளம்புகின்றது. தாமே சிவமாய், சிவோஹம் என்னும் ஜீவன் முக்த தன்மையில் நிலைத்து இருக்கும் நுட்பம் ஞானம். இதைத்தான் வித்யை என்கின்றோம்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், சைவத்தின் இந்த நான்கு முக்கியமான பாகங்கள், நான்கு படிகள் அல்ல, பாகங்கள். படிகள் என்பது வேறு, பாகங்கள் என்பது வேறு. படிகள் என்றால் ஒரு படியைக் கடந்து மறு படிக்குச் செல்ல வேண்டும், அந்த மறு படியைக் கடந்து மூன்றாம் படிக்குச் செல்ல வேண்டும். மூன்றாம் படி கடந்து நான்காம் படி செல்ல வேண்டும். இது அப்படி அல்ல.

ஒரு படியைக் கடந்து மறு படி செல்வது அல்ல, இவை நான்கும் ஒரே நேரத்தில் வாழ வேண்டியவை.

மனித இனம், கடந்த சில நூறாண்டுகளில் செய்த மிகப்பெரிய தவறு, சரியை, க்ரியை, போகம் மற்றும் ஞானம் - இந்த நான்கும் ஒன்றிற்கு, அடுத்து ஒன்று அடுத்து படி என்று புரிந்துகொண்டதுதான்.

அதனால்தான் கடந்த இரண்டு மூன்றாயிரம் ஆண்டுகளில், மூடத்தனங்களும் அறிவிலித்தனங்களும் கருத்துக்களாக, மதங்களாக உருவெடுத்தன. சைவம் தவிர வேறு சில மதங்கள் உருவெடுப்பதற்கான மிகப்பெரிய காரணம் மனிதன் செய்த இந்த மூடத்தனமே.

இந்த நான்கும் ஒன்றிற்கு அடுத்து ஒன்று நினைக்கும்பொழுதே, அகங்காரம் பிடித்த சில மனிதர்கள் நான்காவது படிதான் உயர்ந்தது என்று கற்பனை செய்துகொண்டு, அந்தக் கற்பனையினால் முதல் படிகளைக் கடைபிடிக்க வேண்டாம் என்கின்ற மூடத்தனத்தை உருவாக்கிக்கொண்டு, உருவ

வழிபாடே இல்லாத ஒரு மதத்தை உருவாக்க முடியும் என்கின்ற முடத்தனத்திற்கு, மூர்கத்தனத்திற்கு 'மதம்' என்கின்ற கருத்தையும் காட்டி, அதனால் ஏற்படும் மனம் குழம்பிய நிலையினால், உள்ளே இருக்கும் கோபத்தையும் கொந்தளிப்பையும் வெளிக்கொட்டும் நிலைக்கு 'அறப்போர்' என்றும், 'தெய்வப் போர்' என்றும் பெயரிட்டு, நிஜத்தில் இருந்து மிகவும் விலகி, மாயையில் சிக்கி, எல்லா மூட தன்மைகளையும் மாயைகளையுமே, அஞ்ஞான இருளையே மதமாகவும் காட்டுகின்ற மிகப்பெரும் கொடுமை மனித இனத்திற்கு நிகழ்ந்ததற்கான காரணம், முதல் காரணம் ... இந்த நான்கும் ஒன்றிற்கு, அடுத்து மற்றொன்று என்கின்ற தவறான புரிதலாகும்.

இவை நான்கும் அங்கங்கள், படிகள் அல்ல! ஞானியும், திருமேனி வழிபாடு செய்தே தீர வேண்டும். சரியை நிலையிலும் கிரியை நிலையிலும் சொல்லப்படும் திருமேனி தீண்டி வழிபடுவது ஞானநிலை அடைந்தவுடன் தானாய் விட்டுப்போகும் என்று கற்பனைகளையும் கனவுகளையும், ஒன்றைத்தாண்டி மற்றொன்று என்கின்ற மூடக் கருத்துக்களையும் சொல்லி, இல்லல் அளிக்கும் இல்லாத மதங்கள் எல்லாம் இவ்வுலகில் வந்திட, மூடர்களே முதற்காரணம் ஆனார்கள்.

சைவத்திலிருந்து விலகி, பரம்பொருள் சதாசிவன் உலகிற்கு அளித்த சத்தியமான வாழ்வியல் நெறியிலிருந்து விலகி, ஏற்பட்ட எல்லா மதங்களுக்கும், பணம் சார்ந்த வாழ்க்கை கோட்பாடுகளுக்கும் அடித்தளமே அஞ்ஞானமும் மாயையும்தான்.

ஒரு சின்ன கதை :

ஒரு ஊருக்கு, ஒரு பணக்கார முதலாளி தொழில் தொடங்குவதற்காக வந்தார். இவர் தொழில் தொடங்கப்போவதால் ஊரே வளமாகப் போகிறதென்று ஊரில் இருந்த மக்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள்! தான் பாம்புகள் சார்ந்த ஒரு வியாபாரம் செய்யப்போவதாகவும், ஒரு பாம்பைப் பிடித்து வந்துகொடுத்தால், ரூபாய் 1000 தரப்போவதாகவும் விளம்பரப்படுத்தி, ஊர் முழுக்க சுவரொட்டி ஒட்டினார்.

மக்கள், தங்கள் கண்ணில்பட்ட பாம்பைல்லாம் பிடித்துக்கொண்டுவந்து கொடுத்து, ரூபாய் 1000 பெற்றுச்சென்றார்கள்.

ஒரு வாரம் கழித்து, ஒரு பாம்புக்கு ரூபாய் 2000 தரப்போவதாக அறிவித்து, இரண்டாவது சுவரொட்டி ஒட்டினார். இப்போது மக்கள், கண்ணில் பட்டவை மாத்திரமல்லாது தேடிப்பிடித்துக் கொண்டுவந்து கொடுத்து பணம் பெற்றுச்சென்றார்கள்.

மூன்றாவது வாரம், ஒரு பாம்புக்கு ரூபாய் 5000 தரப்போவதாக அறிவிக்கப சுவரொட்டி ஒட்டினார். மக்கள், சுற்றியிருக்கும் வயல் காடெல்லாம் துழாவி, இருந்த பாம்பையெல்லாம் கொண்டு வந்தார்கள். இதற்குமேல் சுற்றுப்புறங்களில் பாம்பல்ல, பாம்பு முட்டை கூட இல்லை.

அடுத்த சுவரொட்டி அதிரடியாக வந்தது, ஒரு பாம்புக்கு ரூபாய் 10000 என்று! உடனே மக்கள் சுற்றி இருந்த காடு மேடெல்லாம் திரிந்து, வனம், காடு, ஆரண்யம் என எந்த இடத்திலும் ஒரு பாம்பையும் விட்டுவைக்காமல் கொண்டு வந்தார்கள்.

தமிழில் மட்டும்தான் காட்டுக்கு 3 வார்த்தைகள்.

மனிதனாலோ வேறு யாராலோ உருவாக்கப்படாமல் வனாந்தரமாக இருப்பது வனம்.

உருவாக்கினாலும் உருவாக்காவிட்டாலும் கட்டுப்படுத்த முடியாமல் அடர்ந்து கிடப்பது காடு.

ரம்யமாக இருப்பதற்காக மனிதன் உருவாக்கியது ஆரண்யம்.

அடுத்து வந்தது அதிரடி அறிவிப்பு, ஒரு பாம்புக்கு ரூபாய் 50000 என்று! சுவரொட்டி ஒட்டிவிட்டு, இரண்டு நாள் முக்கியமான வேலைக்காக வெளியூர் புறப்பட்டுச் சென்றார் முதலாளி. ஊர் மக்கள் எல்லாம், "பாம்பே இல்லையே, 50000 ரூபாய் என்று சொல்லியிருக்கிறார்களே!' என்று புலம்பினார்கள்.

அப்போது, பணக்கார முதலாளியிடம் வேலைபார்க்கும் ஒரு வேலைக்காரன் ஊர் மக்களில் சிலரை அழைத்து, ''கவலையேபடாதீர்கள், என் முதலாளி திரும்ப வருவதற்கு இரண்டு நாள் ஆகும். அவர் இதுவரை உங்களிடம் வாங்கிய பாம்புகளெல்லாம் என் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. ஒரு பாம்புக்கு 25000 ரூபாய் கொடுத்துவிட்டு, வேண்டுமென்பவர்களெல்லாம் எடுத்துச் செல்லுங்கள், நாளை காலை, அவற்றைக் கொடுத்துவிட்டு 50000 ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள், அந்த 50000 ரூபாய் வாங்கின பிறகு, எனக்குரிய தர குக் கட்டணமாக 10000 ரூபாய் கொடுத்துவிடுங்கள் என்றதும், வீட்டில் இருந்த 5000 பாம்புகளும் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன.

மறுநாள் காலை, பாம்பு வாங்கிப் போனவர்களெல்லாம் வந்தார்கள். ஆனால் வேலையாள்தான் அங்குக் காணோம்.

ஊர் மக்கள் சொந்த ஊர் பாம்பை ஆயிரத்திற்கும் இரண்டாயிரத்திற்கும் விற்று, 25000 ரூபாய்க்கு வாங்கியதுதான் மிச்சம், இதுதான் பணம். இதுதான் பங்குச் சந்தை.

பொருளுக்கு மதிப்புண்டு என்று சொல்பவனும், மதிப்பில்லை என்று சொல்பவனும் உறவாடும் களவாளிகள். அவர்கள் உறவாடும் களவாணிகள் என்று சந்தேகப்படாதவரை நாம் ஏமாற்றப்படுவோம்.

தன்னுடைய பங்களிப்பு எதுவுமே இல்லாமல், பங்குச்சந்தையை உருவாக்கி, எதையோ வாங்கியதுபோலவும், கொடுத்ததுபோலவும் மக்களிடம் கற்பனையை உருவாக்கி, அவர்கள் வாங்கியது, கொடுத்தது இரண்டிற்கும் கற்பனையான

மதிப்பையும் காட்டி, பிறகு கற்பனை மதிப்பிற்கு வரியும் கூட்டி, கடைசியில் விழித்துப்பார்க்கும்பொழுது, கற்பனை பூஜ்ஜியங்கள் கரைந்துபோயிருக்கும். அதற்கு நாம், நம்மையே குறை சொல்லிக்கொள்வோம். வேறு யார் மீதும் குற்றம் சொல்லக்கூட தெரியாத நிலையில் நாம் இருப்போம். இதற்குப் பெயர்தான் முதலாளித்துவ பங்குச்சந்தை.

இருபத்தைந்தாயிரம் கொடுத்து பாம்பு வாங்கியவர்களெல்லாம், திருடனுக்குத் தேள் கொட்டினா மாதிரி, அதைப்பற்றி மூச்சுக்கூட விடாமல், வெளியில் சொல்லாமல் இருந்தார்கள், ஏனென்றால், முதலாளிக்குத் தெரியாமல் அந்த மாதிரி வாங்கலாமா? தப்புத்தானே! தப்பு செய்ததனால்தான் உனக்கு இந்த மாதிரி நஷ்டமாயிற்று என்று மற்றவர்கள் ஏளனம் செய்வார்களே என்று நினைத்து, இப்படி ஏதாவது ஒரு காரணத்தை அவர்களே கற்பித்துக்கொண்டு கேள்வி கேட்காமல் இருக்கின்ற சூழலையும் உருவாக்குவதுதான் பங்குச்சந்தை வர்க்ககம்.

கடவுள் துகள், கடவுளாவதற்கு ஆதிசைவமே கதி

எது உங்கள் இதயத்திற்குள் ஒலித்துகொண்டிருக்கிறதோ, அதுதான் உங்கள் த்வனியிலும் இறுதி எதிரொலியாக இருக்கும். நீங்கள் என்னதான் வார்த்தைகளை மாற்றி விளையாடினாலும், உங்கள் வார்த்தைகளுக்கு இடையில் வருகின்ற செய்தி ... உங்கள் இதயத்தில் இருக்கின்ற உணர்வு ... அது தானாகவே, நீங்கள் என்ன எழுதினாலும், நீங்கள் என்னுரைத்தாலும் அதன் முன்னுரையும் பின்னுரையுமாய் மாறிவிடும். உங்கள் முன்னுரைப்பும் பின்னுரைப்பும் உங்கள் இதயத்திற்குள் ஒலித்துகொண்டிருக்கும் அந்தச் செய்தியின் சாரமாக மாறிவிடும்.

வன்முறை எண்ணம்கொண்ட ஒரு நபா என்னதான் அன்பைப்பற்றி பேசினாலும், அமைதியைப்பற்றி பேசினாலும், அதன் இறுதி வெளிப்பாடு விகாரமான, வேதனையான, வன்முறையாகத்தான் இருக்கும்.

ஆதிசைவம் தவிர மற்ற எல்லா வாழ்க்கைமுறைகளுமே, மற்ற எல்லா நெறிமுறைகளுமே வாழ்க்கையின் வேறு வேறு படி நிலையில் இருந்தவர்களால் உருவாக்கபட்டவையே.

சில பேர் ஆழமான வன்முறை உணர்வில் வீழ்ந்து கிடந்தவர்கள், சில பேர் கொடுக்கல், வாங்கல் எனும் பேரம் மனநிலையில் இருந்தவர்கள், சில பேர் பெயர் புகழ் என்பதையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தவர்கள். இவர்கள் யாருடைய வார்த்தைகளை நீங்கள் வாழ்ந்தாலும், உங்களுக்குள் இருக்கும் 'கடவுள் துகள்', கடவுள் நிலையை அடையுமா என்பதில் சந்தேகம் மட்டும் அல்ல, சாத்தியமே இல்லை என்பதுதான் சத்தியம்.

ஒவ்வொரு வாழ்க்கை/முறையுமே, அதை உருவாக்கியவரின் உணர்வு நிலையைச் சார்ந்துதான் உருவாக்கப்படுகிறது. ஒரு வாழ்க்கைமுறையை, ஒரு மதத்தை, ஒரு தத்துவத்தை உருவாக்கியவன் கொடுரமானவனாகவும், தாக்குவதும் போர்புரிவதுமே வாழ்க்கை என்பதுபோன்ற கருத்துக்களை உடையவனாகவும் இருந்தால், அவனைக் கடைபிடிக்கும் எல்லோருடைய கதியும் அதுவாகவே இருக்கும்.

ஒவ்வொருவருக்குள்ளும் கடவுள் துகளை கடவுளாய் மாற்றிடும் ஒரே வாழ்வியல் முறை ஆதிசைவம், எங்கு நீங்கள் இருக்கிறீர்களோ அங்கிருந்து துவங்கி, எங்கு நீங்கள் செல்ல வேண்டுமோ அங்கு வரை எல்லா உயிர்களுக்கும் வழிகாட்டும் ஒரே வாழ்வியல் முறை ஆதிசைவம்.

தமிழ் எனும் பெருமொழி புரிகின்ற உடலும் மனமும் கொண்டதனாலேயே நீங்கள் புண்ணியவான்கள்

எத்துணையோ நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சம்பிரதாயங்களையம், வாழ்வியல் முறைகளையும், மதங்களையும், தத்துவக் கோட்பாடுகளையும், சித்தாந்தங்களையும், கம்யூனிசம், நாத்திகம் உட்பட எல்லாவிதமான கருத்துக்களையும் பல்வேறு கோணங்களிலும் ஆராய்ந்து, அறிந்து, படித்து, சிந்தித்து அவைகளின் உட்பொருளை உள்வாங்கி இருக்கின்ற தெளிவினாலும் தைரியத்தாலும் உங்களுக்குச் சொல்லுகின்றேன்...

ஆழ்ந்து கேளுங்கள் மக்களே, தமிழ் எனும் பெருமொழி புரிகின்ற உடலும் மனமும் கொண்டதனாலேயே நீங்கள் புண்ணியவான்கள். ஏனென்றால் அந்த ஒரு மொழியில்தான் ஆதிசைவத்தின் சத்தியங்கள் நேரடியாய்த் திறந்து வைக்கப்பட்டு இருக்கின்றன. மற்றவர்கள் எல்லோருமே அதன் மொழிபெயர்ப்பைத்தான் படித்தாக வேண்டும். நீங்கள் ஒருவர் மட்டுமே நேரடியாய்ப் படிக்கவும், அதன் துடிப்பை உங்கள் இதயத் துடிப்பாய் உணரவும், உங்களுக்குள் அதை உள்வாங்கவும், வாழவும், வாழ்வியல் அனுபவமாக மாற்றிக் கொள்ளவும், மிகப் பெரிய வாய்ப்பு உடையவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் மட்டும்தான் இந்த மிகப் பெரிய புண்ணியத்திற்கு ஆளானவர்களாக இருக்கிறீர்கள்.

தெரிந்து கொள்ளுங்கள், தமிழ் மொழி புரிகின்ற மனம் உங்களுக்கு இருந்திருக்குமானால், இருக்குமானால் முன்பு இருந்தோ அல்லது இப்போழுதேதான் இருக்குமானால் சைவத்தை இழக்காதீர்கள், சைவத்தை கண்டு கொள்ளுங்கள், கண்டு அறியுங்கள், வாழுங்கள், அது உங்களுடைய வாழ்வியல் நெறியாக மாறட்டும், உங்கள் வாழ்வியல் சத்தியமாக மாறட்டும்.

வேறு எந்தச் சித்தாந்ததிலும் இத்துணை தெளிவாக, கடைநிலை மனிதனுக்கும் கடைத்தேறும் வழியை, இடைச்செருகல் ஏதுமில்லாது, ஒரு இம்மி எடையும் சத்தியத்தில் குறையாது, எடையும் குறையாது மாத்திரையும் குறையாது, சத்தியத்தை சத்தியமாகவே சத்தியமாய் சதாசிவன் சொல்லி அருளிய வாழ்வியல் முறையான சைவம் பிடியுங்கள்.

வாழ்ந்திட வாழ வைக்கும் பெருவழியான சைவம் வாழுங்கள்.

2

ஆதிசைவத்தின் சரியை பாகத்தை ஆராய்வோம்.

சரியை: வாழ்க்கையை அனுசரிக்கும் முறை. வாழ்க்கையில் தினந்தோறும் கடைபிடிக்க வேண்டிய, அனுசரிக்க வேண்டிய விதிகள், எண்ண ஓட்டங்கள், சிந்தனை ஓட்டங்கள், வாழ்க்கைமுறையையே சரியை என்கிறோம்.

பல பேர் என்னிடம் கேட்கும் ஒரு விஷயம்: சுவாமிஜி, இறைவனை அடைவதற்கு ஏதாவது குறுக்கு வழியைக் கற்றுக் கொடுங்கள்!

ஒருமுறை, ஆனந்த யோகம் பயிற்சி வகுப்புக்கு வந்திருந்த மூன்று மாணவர்கள், அத்துறைக்கான பொறுப்பாளரிடம், ''ஸ்வாமியினுடைய சத்சங்கங்களைக் கேட்டு, மனம் என்றால் என்ன? அதை எப்படிக் கட்டுப்படுத்துவது ? ஜீவன் முக்தி எப்படி அடைவது என்ற கருத்துக்களை எல்லாம் கேட்டு மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்து, அதை வாழ வேண்டும் என்று நினைத்தோம். அது சார்ந்த பாடங்களை, அந்த நுட்பங்களை நாங்கள் இங்கு ஒரு படிப்புபோல், வகுப்பறைபோல் அமர்ந்து கற்றுக்கொள்ளத்தான் வந்தோம். ஆனால் இங்கே ஆடல், பாடல், பக்தி என்று பல்வேறு விஷயங்கள் நடக்கின்றன. எங்களுக்கு ஆடலை கற்றுக்கொள்ள விருப்பமில்லை, பாடலைக் கற்றுக்கொள்ள விருப்பமில்லை, பக்தியை, விக்ரஹ வழிபாட்டை கற்றுக்கொள்ள விருப்பமில்லை, இதெல்லாம் எங்களுக்கு வேண்டாம். தியான நுட்பங்கள் மட்டும் கற்றுக்கொடுப்பதுபோன்ற நிகழ்ச்சிகளை மட்டும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்,'' என்று சொன்னார்கள்.

இதை, பொறுப்பாளர் என்னிடத்தில் சொன்னபோது, முதல் வார்த்தை நான் சொன்னது, 'அவர்களைத் திருப்பி அனுப்புங்கள்' என்பதுதான்.

குறுக்கு வழி, மன உளைச்சலுக்கான வழி

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், மனித மனம், நாகரிக காலத்தில் எல்லாவற்றையுமே குறுக்குப் பாதை, குறுக்கு வழி மூலமாக அடைந்துவிட துடிக்கிறது.

ஆனால், குறுக்கு வழி மூலமாக எல்லாவற்றையும் வேக வேகமாக அடைந்த பிறகு, அடைவதற்கு ஒன்றுமே இல்லாமல் வாழ்க்கை மட்டும் உங்கள் முன்னாடி வெறுமனே பரந்து விரிந்து கிடக்கும்பொது என்ன செய்வீர்கள் ? அப்பொழுது நீங்கள் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனைதான் மன உளைச்சல், செய்வதற்கு ஒன்றுமில்லை, அனால் செயலிலி (செய்வதற்கென ஒரு செயல் இல்லா) ? ? ? வாழ்க்கை உங்கள் முன்னால் பரந்து கிடக்கின்றது. ஏனென்றால் எல்லாவற்றையுமே குறுக்கு வழியில் அடைந்து முடிந்தாயிற்று.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், குறிக்கோளும் ... குறியும் கோளும், அதை அனுசரிக்க வேண்டிய சரியையும் இருக்கும் வாழ்க்கையை வாழ்வீர்களானால் வாழ்க்கை இனிக்கும், மணக்கும். மீண்டும் மீண்டும் மனம் திகைத்து, திகைந்து ஆனந்தத்திற்குள் தீஞ்சுவையாய் இனிக்கும்.

செய்வதற்கு சரியையும், அனுசரிப்பதற்கு சரியையும், அது காட்டும் குறியும் கோளும் இல்லாமல் போனால், உங்கள் முன் காலம், வாழ்க்கை விரிந்து கிடக்கும். ஆனால் அதை வாழத் தெரியாது. அந்த நேரத்தில், தானாக உடலும் மனமும் ஒன்றோடு ஒன்று பொருந்தியிருக்க இயலாது நொடிந்து விழுவதுதான் மன அழுத்தம், மன உளைச்சல்.

குறிக்கோளும், அதை அடையும் சரியையும் வாழ்க்கையில் இருக்கும்வரை, நீங்கள் காலத்தின் தலைவனாய் இருப்பீர்கள். நேரம் கிடைக்க கிடைக்க வாழ்க்கை இனிக்கும். எத்துணை நாள் உங்களுக்கு கிடைக்கிறதோ, அத்துணை நாளும் வாழ்க்கை ஆனந்தமாகவும் இனிப்பாகவும் இருப்பதாகத் தோன்றும். குறிக்கோளும் சரியையும் இல்லாமல் போனால், அதே காலம் உங்களைக் கொல்லும்.

தினசரி அனுசரிக்க ஏதுமில்லையென்றால், அது காட்டும் உயர்ந்த குறிக்கோள் இல்லையென்றால். வாழ்க்கையை உங்கள் முன் வைக்குக்கொண்டு என்ன செய்வீர்கள் ? ரெண்டு நாள் படுக்கையிலிருந்து எழாமல் தூங்கலாம், மூன்றாவது நாள் என்ன செய்வீர்கள்? காலத்தை நகர்த்துவதே நரகமாக இருக்கும். காலத்தை நகர்த்துவதே நரகமாக இருத்தலைத்தான் மன உளைச்சல் என்று சொல்கிறோம்.

குறுக்கு வழி கண்டுபிடித்த சமுதாயங்கள் எல்லாமே உளைச்சலில்தான் இருக்கும். ஏனென்றால், குறிக்கோள் குறுக்கு வழியால் அடையப்படுவதனால், வாழ்க்கையின் பெரும் பகுதிக்கு, நிரப்புவதற்கு ஒன்றும் இருப்பதில்லை. குறிக்கோளை குறுக்கு வழியில் அடைந்தே பழகிய மனிதர்கள்தான், கடவுளை அடையவும் குறுக்கு வழி உண்டா என்று கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள்.

கடவுள் ஒன்றும் பெட்டிப் பாம்பு அல்ல, நீங்கள் ஏதாவது ஒரு மந்திரத்தை மகுடி மாதிரி ஊதினால், உடனே எழுந்து ஆடுவதற்கு!

ஜீவன் சிவனாக மாறுவதற்கு, ஆதிசைவ வாழ்க்கைமுறையே நேர் வழி

தெளிவாகச் சொல்கிறேன், ஜீவன் சிவனாக மாறுவதற்கு தனியாக எந்தக் குறுக்கு வழியும் நுட்பமும் பிராணாயாமமும் தியானமும் கிடையாது. வாழ்க்கைமுறை மட்டும்தான் வழி. வாழ்க்கைமுறையே நேர் வழி. அது தவிர வேறொரு வழி கிடையாது.

வாழ்க்கைமுறை பிராணயாமம் இதெல்லாம் உதவலாம். ஆனால், இந்த யோகம், பிராணாயாமம், தியானம் எல்லாவற்றினாலும் உங்கள் உடலையும் மனதையும் மேம்படுத்தி இறைவனை உணர்ந்தால் கூட, உங்களுடைய சரியையின் மூலமாகத்தான் உணர்ந்த அபைவத்தைக்கூட நிரந்தாமான நித்யாளந்தமாத மாற்றிக்கொள்ள முடியும்.

என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன் - பன்னிரண்டு வயதில் ஜீவன் முக்த அனுபவம் எனக்குள் மலர்ந்தாலும் கூட, பதினொரு வயதில் அருணகிரியோகீஸ்வரரோடு அத்வைத அனுபவம், பன்னிரண்டு வயதில் சுத்தாத்வைத அனுபவம், இது எல்லாம் நடந்திருந்தாலும் கூட, சரியை என்னும் வாழ்க்கைமுறை மேம்பட்ட பிறகுதான் இருபத்திரண்டாம் வயதில் அந்த அநுபூதி இயற்கையான நித்யானந்தமாக நிலைபெற்றது.

சரியை என்னும் வாழ்க்கைமுறையை ஒதுக்கி வைத்துவிட்டு, ஏதோ

சில பிராணாயாமம், தியானம், ஏதோவொரு ரகசிய நுட்பங்கள், ரகசிய மந்திரங்கள்கொண்டு, கடவுளை மயக்கி நம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடலாம் என்றும் நினைப்பது குருடன் குருடனுக்கு வழிகாட்டும் வழி மாதிரிதான். குருடன் குருடன்க்கு வழிகாட்டினால், குருட்டும் குருட்டும் குருட்டு ஆட்டமாடி குழியில்தான் விழும்.

நவீன கால குருமார்கள் மனித இனத்தைப் பீடித்த பீடைகள். இந்தப் பீடைகள் செய்கிற மிக பெரிய பிழை, விக்ரஹ வழிபாடு, தினசரி அனுசரிக்க வேண்டிய சரியை வாழ்க்கைமுறைகளெல்லாம் தேவை இல்லை என்று வாதிடுவதுதான். ஏனென்றால் நவீன கால மனிதனுக்கு, தான் எதைச் செய்தாலும் பெரும்படி உயர்வு, ஒரே தாவலில், தான் அடைய வேண்டிய இலக்கை அடையத் துடிக்கும் மனப்போக்கு உச்சத்தில் உள்ளது.

நவீன கால மனிதனுக்கு, எந்தவொரு பொருளை வாங்கினாலும், அதைப் படிப்படியாகக் கையாளுவதற்கான பொறுமையெல்லாம் கிடையாது. கார் வாங்கினாலும் அந்த உபயோகிப்பாளர் கையேட்டை யாரும் படித்துப் பார்ப்பது கிடையாது. உடனடியாக ஒட்டுநர் இருக்கையில் அமாந்து கார் ஒட்ட கற்றுக்கொள்ள வேண்டும்.

மூன்று நிமிடத்தில் ... இறைவன் அருள் தியானம் ... இரண்டே நிமிடத்தில் இறையருள்…! உடனே வாருங்கள் என்று நவீன கால குருமார்களின் நாயகன்கள் தரும் விளம்பரங்களை இணையத்தில் நீங்கள் பார்த்திருக்கலாம்.

சிவன் -

உங்கள் 'முதன்மைவாய்ந்த விவரண வர்த்தகச் சின்னம்' அல்ல

சரியை வேண்டாம் என்று ஒதுக்கி, ஏதோ யோக நுட்பத்தாலேயே, தியான நுட்பத்தாலேயே மனிதன் முழுமை அடைந்து விட முடியும், ஜீவன் சிவத்தன்மை அடைந்து விட முடியும் என்று யாராவது முட்டாள்கள் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தால் அல்லது தங்களைப் புத்திசாலிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தால், ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், அவர்கள் ஆதி சிவனுக்கு எதிராய்ப் பேசும் விரோதிகள் மட்டுமல்ல, சில நேரத்தில் சிவனையே முன்னிறுத்தி சிவத்திற்கு எதிராய்ச் செயல்படும் துரோகிகள்.

அவரே அருளிய ஆகமங்களை உபயோகிப்பவர்கள், தயவுசெய்து அவர் பெயரை உபயோகியுங்கள். இது, நான் எல்லாருக்கும் விடுக்கும் வேண்டுகோள்.

சில பேர் கேட்பதுண்டு, 'இந்த ஆகமங்களையெல்லாம் சிவபெருமான்தான் சொன்னார் என்று எப்படித் தெரியும் ?

சில நேரத்தில் இந்த ஆகமங்களைப் படித்துவிட்டு யாரோ அறைந்ததுபோல அலண்டுபோய் அமர்ந்திருக்கின்றேன். ஏனென்றால் அந்த அளவுக்கு நுட்பத்தோடு பெருமான் ஒவ்வொன்றையும் தெளிவாக விளக்குகிறார். இந்த அளவுக்கு நுட்பத்தோடு யாராவது ஒருவர் சத்தியங்களை, வாழ்க்கைமுறையை ஆழமாகவும் நுட்பமாகவும் உலகத்துக்கு விளக்கியிருந்தால், அவர் சத்தியமாக சிவன்தான். இல்லையென்றால் சிவத்துவத்தை அடைந்த ஒரு நபராக இருக்கலாம். அதனால், அது சிவனுடைய வாக்கியங்கள் என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.

சிவ விரோதிகளை விட்டுவிடலாம்! சிவன் உண்டு, சிவனுடைய முகத்தையும்

பெயரையும் படத்தையெல்லாம் உபயோகிப்போம். ஆனால் ஆகமத்தை வாழ மாட்டோம் என இருக்கும் சிவத்துரோகிகளுக்கு முதலில் பதில் சொல்லலாம்.

இவர்களுடைய முக்கியமான கேள்வி என்னவென்றால், இந்த ஆகமத்தை எல்லாம் சிவன்தான் சொன்னார் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது ? என்பதுதான்.

நீங்கள் சந்தேகப்பட்டால், சிவன் என்று ஒருவர் இருந்தாரா? ஆகமங்கள் உண்மையானவையா? - என்று சிவன் மற்றும் ஆகமம் இரண்டையும் சந்தேகப்படுங்கள்.

அப்படிச் செய்தீர்களானால், நீங்கள் விரோதிகள். உங்களைப் பகுத்தறிவு கும்பலோட ஒதுக்கிவைத்துவிட்டு, எங்கள் வேலையைக் கவனிக்கிறோம்.

சிவனுடைய வார்த்தைகளைக் கடைபிடிக்காமல், எங்கள் சொந்த வார்த்தைகளை, எங்களுடைய சொந்த நோக்கங்களைப் பிரபலப்படுத்துவதற்கு, சிவனை எங்கள் வர்த்தகப் பிரதிநிதியாக மட்டும், சிவன் என்கிற அந்த 'முதன்மைவாய்ந்த விவரண வர்த்தகச் சின்ன'த்தை மட்டும் உபயோகிப்போம்.

குளிர்பானங்கள் என்ற பெயரில் சாக்கடைகளையெல்லாம் புட்டிகளில் அடைத்து, விளம்பரதாரர், அந்த ஊர்ல இருக்கின்ற பிரபலங்களையெல்லாம் பிடித்து, விளம்பரத்திற்காக உபயோகிப்பதுபோல், இவர்களுக்கு உள்ளேயிருந்து வந்த சாக்கடைகளையெல்லாம் கருத்துகளாகச் சொல்லி, அதுக்கு விளம்பரதாரராக மட்டும் சிவனுடைய பெயறையும் வடிவத்தையும் உபயோகப்படுத்துகின்ற சிவக்குரோகிகளுக்கான சில கேள்விகள்.

சரியையும் கிரியையும்,

யோகத்தையும் ஞானத்தையும் மலர்த்தும் நுட்பம்

சிவக்குரோகிகள் செய்கின்ற மிக பெரிய பிரச்சினை என்னவென்றால், சரியையும் கிரியையும் இல்லாமல், யோகத்தையும் ஞானத்தையும் மட்டும் குறுக்குவழி என்கின்ற பெயரில் உபயோகப்படுத்துவது மட்டும் இல்லாமல், சரியையும் கிரியையும் வாழ்பவர்களை மிகுந்த ஒரு தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் என்பது போன்ற மாய தோற்றத்தை உருவாக்கி, சரியை கிரியையின் முக்கியத்துவத்தை அழித்ததே இந்த நவீன கால சைவத் துரோகிகள்தான்.

அதனால்தான் மீண்டும் சொல்லுகின்றேன், சரியை உயர்ந்ததா, கிரியை உயர்ந்ததா, யோகம் உயர்ந்ததா, ஞானம் உயர்ந்ததா? என்கின்ற கேள்விக்கே இடமில்லை. ஏனென்றால் இந்த நான்கும் படிகள் அல்ல, பாகங்கள் மட்டுமல்ல அங்கங்கள். ஒன்றில்லாவிட்டால் இன்னொன்று இயங்க முடியாத அங்கங்கள்.

பாகம் எனும் வார்த்தை கூட குறைவான வார்த்தைதான். ஏனென்றால், பாகம் என்று சொன்னால் கூட, நான்கில் ஒன்றிரண்டு பாகங்கள் இல்லாவிட்டாலும் மற்ற பாகங்கள் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அங்கம் என்கின்ற வார்த்தையே சரியானது. ஒரு அங்கம் இல்லாவிட்டாலும், மற்ற எந்த அங்கமும் இருக்ககூட இயலாத அளவிற்கு மிகத்தெளிவாக ஒன்றோடு ஒன்று பின்னி பிணைக்கப்பட்ட அங்கங்கள் சரியையும் கிரியையையும் யோகமும் ஞானமும்!

ஒரு நவீன கால கால குரு வெளிப்படையாகவே, ''கிரியைகளையெல்லாம் செய்கின்ற மக்களெல்லாம் வேறு தொழிலைப் பாருங்கள், இதையெல்லாம் செய்ய வேண்டாம்," எனச் சொல்கிறார். என்ன தைரியம் இருக்கும் இவர்களுக்கு... யோகத்தையும் ஞானத்தையும் சரியை கிரியையிடமிருந்து பிரித்து எடுப்பதற்கு! சிவாச்சார்யார்களே சீறி எழுங்கள்.

ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள், சரியை கிரியை மாத்திரம் போதாது என்பது சத்தியம், சரியை கிரியை இல்லாமலும் போகாது என்பதே உத்தமம், சரியை கிரியை மாத்திரம் போதாது என்பது சத்தியம், சரியையும் கிரியையும் இருந்தால் மட்டுமே எல்லாம் சாத்தியம்.

வாழ்க்கைமுறையை, சரியையை அழித்தவர்களே சைவத்தை அழித்தவர்கள். இன்று உலகத்தில் இருக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் சரியையும் கிரியையும் அழித்தவர்களே. சரியையும் கிரியையும் அழித்துவிட்டு, யோகத்தையும் ஞானத்தையும் ஏதோ பாம்பு பிடிக்கும் குறுக்குவழிபோல, பகவானைப் பிடிப்பதற்கு உபயோகபடுத்தும் மூடர்கள். அநுபூதி இலா குருடர்கள், மற்றவர்கள் வாழ்க்கையையும் அழிக்கின்ற கலியின் கொடுமை! இதை, கால காலனே கேட்க வேண்டும்.

இயைபு, இயல்பு மற்றும் இருப்பு உங்கள் அங்கமாகட்டும்

சில பேர் என்னிடம் கேட்பதுண்டு, 'கண்ணப்பன், சரியை கிரியை செய்தா சி வபதம் அடைந்தான் ? '

ஐயோ மூடர்களே கண்ணப்பனின் உதாரணத்தைச் சொல்லாதீர்கள். அவன் என் தரப்பின் சாட்சி. அவன் செய்யாதது யோகமும் ஞானமும், அவன் செய்தது சரியையும் கிரியையும் !

சிவலிங்க வழிபாடும், கண்யை பிடுங்கி வைத்த பக்தி அன்பும்தான் சரியையும் கிரியையும். கண்ணப்பன் காலையிலே எழுந்து, மூக்கைப் பிடித்து யோகம் பயின்றான் என்றோ அல்லது சிவோஹம் என்று சொல்லி உட்கார்ந்தான் என்றா எந்தப் புத்தகத்திலாவது இருக்கின்றதா?

சிறு வயதில் எங்கோ வேட்டைக்குச் செல்லும் பொழுது, ஒரு சிவலிங்கத்திற்கு யாரோ அந்தணர் நீருற்றி வழிபாடு செய்வதைப் பார்த்திருக்கின்றான், தானும் அதைச் செய்ய வேண்டும் என்கின்ற சரியை அவனுக்குள் பொங்கியது, அதை அரைசரிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் பொங்கியது, தனக்குத் தெரிந்த விதத்திலே கிரியையாய் அதைச் செய்யத் துவங்கினான், அதனால்

கொண்ட பேரன்பினால் பொங்கிய ஆனந்தப் பேரூற்றினாலே சரியை, க்ரியை இரண்டினுடைய ஆழமான குட்சுமமான பக்தி என்ற உணர்வைப் பிடித்து க்கொண்டு, அது காட்டிய வழிபடியே சரியையும் செய்து சிவபதம் அடைந்தான் கண்ணப்பன்.

சில சிவத் துரோகிகள், அவர்களுடைய மாய மூட வியாபாரதந்திர கருத்துகளை விற்பதற்கு, கண்ணப்பன் எனும் பாட்டில் உறையை உபயோகபடுத்துகிறார்கள், கண்ணப்பன் என்ன சரியையும், கிரியையும் முறையாகக் கடைபிடித்தா குரானம் அடைந்தான்? என்று கேட்கிறார்கள்.

வேறு சிலர், கண்ணப்பனை நாயகனாகக் காட்டுவதற்காக, அந்த லிங்கத்தைத் தினந்தோறும் முறையாக ஆகம முறைப்படி வழிப்பட்டு வந்த சிவாச்சாரியாரை, வில்லனாக காட்டும் முயற்சியையும் செய்கிறார்கள். யோகம், தியானம் நான் தேவையில்லை என்று சொல்லவில்லை. சரியை, கிரியை தேவையில்லை என்று சொல்பவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டு இருக்கின்றேன்.

கண்ணப்பன் வாழ்க்கையைப் பாருங்கள், சரியையும் கிரியையும் சிரத்தையோடு செய்யப்பட்டால், யோகத்தையும் ஞானத்தையும் தானாகவே அது மலர்த்திவிடுவதை நாம் நேரடியாய் பார்க்கலாம்.

இயைபு என்றால் வாழும்பொழுதே அதை மேன்மைப்படுத்திக் கொள்வது, இயல்பு என்றால் அதை நம் வாழ்க்கையின் இயல்பாக மாற்றிக் கொள்வது, இருப்பு என்றால் அதை நாமாகவே மாற்றிக் கொள்வது.

சரியை எனும் வாழ்க்கைமுறை ஜீவன்முக்த அறிவியலின் அங்கம் மாத்திரம் அல்ல, முக்கியமான அங்கம், பங்கம் செய்யக் கூடாத தங்கமான முக்கிய அங்கம். சரியையில் இயைபு, இயல்பு மற்றும் இருப்பு - இம்மூன்றையும் உங்கள் அங்கமாக்குங்கள்.

1. சுந்தரர்

க்ரியை: பிரபஞ்ச பேரருளான, அகண்ட சச்சிதானந்த பரம்பொருளான சதாசி வனோடு பக்தியில் சங்கமித்து, பக்தியால் பொங்கும் ஆனந்தத்தை அனுபவித்து, சிவஞானத்தால் பொங்கிப் பெருகும் சிவபோதத்தில் சிந்தை கரைந்து நிறைந்து உறைந்து கிடந்து வாழும் வாழ்க்கைமுறைதான் க்ரியை.

சுந்தரமூர்த்திப் பெருமானைப்போல க்ரியையின் சக்தியை, பக்தியின் சக்தியை வெளிப்படுத்திய வேறொரு பக்தரை, ஞானபுருஷரை சைவம் மட்டுமல்ல

வேறு எந்த சம்பிரதாயமும் காட்ட முடியாது.

பகவான் பக்தனுக்காக இறங்கிவந்து சேவை செய்திருப்பது பல சம்பிரதாயங்களிலும் நிகழ்ந்திருக்கின்றது. கிருஷ்ணனே வந்து அர்ஜுனனுக்குத் தேரோட்டியாய் இருந்ததும், பெருமாட்டியே நேரடியாய் வந்து வள்ளலாருக்கு சோறு சுமந்ததும் நிகழ்ந்திருக்கின்றன.

ஆனால் சுந்தரர் வாழ்க்கையில் பெருமான் வந்து பக்தனுக்காக செய்த சேவைகள் ஒரு சிறப்புடையவை.

காரணம் என்னவென்றால் ... கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனைப் பார்த்து, ''என்னிடம் சரணடைந்து, எல்லாவற்றையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு, போர் செய்,' என்று சொன்னவுடன், அந்தக் கட்டளைக்கு அர்ஜுனன் அடிபணிந்தான். அவருக்கு அர்ஜுனன் உண்மையாக இருந்ததனால், ஜீவன் ஜீவாத்மா பரமாத்மாவிற்கு உண்மையோடு இருப்பதனால், பரமாத்மா ஜீவாத்மாவிற்கு சேவை செய்தது உண்மை.

ஜீவன் சிவனுக்குப் பொய்த்தாலும், சிவன் ஜீவனுக்குப் பொய்ப்பதில்லை

ஆனால் இங்கு, தம்பிரான்தோழர் வன்தொண்டர் அவருடைய வாழ்க்கையைப் பார்க்கோமானால், மோகத்தில்தான் பெருமானோடான அவர் காதலே துவங்குது. முதலில் பெருமானைப் பார்த்தவுடன் அவர் சொன்ன வார்த்தையே 'பித்தா .. '

பெருமானே சொல்கிறார், "வன்மையான வார்த்தைகளை என்னை நோக்கிச் சொன்னதனால், நீ 'வன்தொண்டன்' எனப்படுவாய் என்று.

தம்பிரான்தோழர் பெருமானுக்கு தோழனாய் இருந்து, பல இடங்களிலே பெருமானுடைய உபதேசமான ஆகமத்தை வாழவேண்டிய ஆதிசைவ குலத்தில் பிறந்தும், ஆகமத்திற்கு அப்பாற்பட்டு, ஜீவன் சிவனுக்குப் பொய்த்தாலும், சிவன் ஜீவனுக்குப் பொய்க்காமல் இருக்கின்ற சத்தியத்தை, பக்தியின் சக்தியை சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வாழ்க்கையில் மாத்திரம்தான் பார்க்க முடியும்.

சைவத்தால் மட்டும்தான் பக்தியின் சக்தியை இத்துணை அழகாக விளக்க இயலும். சைவம் அன்றி வேறொரு சம்பிரதாயத்தினாலும், சமயத்தினாலும் இதைச் சொல்ல இயலுமா என்று நிச்சயம் நாம் நினைக்க முடியாது. ஏனென்றால் வேறு ஒரு இடத்திலும் காணாத ஒன்றை சைவத்தில் நாம் கண்டோம்.

சுந்தரப்பெருமான், பெருமானுக்கே கைக்கலகு தாங்கும் திருப்பணி செய்பவர். கைக்கலகு தாங்கும் சேவையென்றால் 24 மணிநேரம் கூடவே இருந்தாக வேண்டும். ஏனென்றால் எழுந்தவுடன் திருநீற பூசிக்கொள்வார் பெருமான். வருபவர்களுக்கெல்லாம் அளிப்பார். தூங்கும்முன் பூசிக்கொள்வார், தூங்கி யெழுந்தவுடன் பூசிக்கொள்வார், அதனால் வாசலிலேயே நிற்க வேண்டும், எப்போதும் உடனிருக்க வேண்டும்.

இறைவனுக்கு அருகாமையில் 'திருநீற்று ஆலயம்' என்று சொல்லப்படும் திருநீற்று பெட்டகமான கைக்கலகு தாங்கும் திருப்பணி செய்து வரும் சாமீப்ய முக்தி பெற்ற அடியார், சுந்தரப்பெருமான்.

நான்கு நிலை முக்தி நிலை :

சாலோக்ய முக்தி - திருக்கயிலாயத்திலே இடம் கிடைத்து அங்கே வாழ்வது. சாமீப்ய முக்தி - அருகாமையில் இருந்து பணி செய்கின்ற புண்ணியம். சாரூப்ப முக்தி - அவருடைய ரூபத்திலேயே வாழ்ந்து அவருடைய நிலையிலேயே இருப்பவர்கள். ஏகாதச ருத்ரா்கள், அஷ்ட பைரவர்கள் -

இவர்களெல்லாம் சாரூப்ப முக்தி பெற்றவர்கள். கோவிலில் இருக்கும் துவார பாலகர்கள் பெருமானைப்போலவே சடா மகுடந்தாங்கி, நான்கு கரங்களோடு மான் மழுவேந்தி இருப்பார்கள்.

சாயுஜ்யம் - பெருமானோடேயே இரண்டறக் கலந்து முக்தியடையும் நிலை. மாணிக்கவாசகப் பெருமானும், திருஞானசம்பந்தப் பெருமானும் சாயுஜ்ய முக்தர்கள்.

இந்த நான்கு நிலை முக்தியிலே, சாமீப்ய முக்தி நிலையில், அருகாமையில் இருந்து, சுந்தரமூர்த்திபெருமான்.

சாயுஜ்யமான 'ஜீவன் முக்தி' அமையும் வரை, எது வேண்டுமானாலும் நம்மைக் கீழ் இறக்கலாம்

ஒரு நாள் காலை, பெருமான் திருமுடியிலே மலர் சூட்டுவதற்காக, கைலாயத்தின் நந்தவனத்திலே மலர் பறிக்கச்சென்றார். சென்ற இடத்தில், மலர் பறிக்க வந்திருந்த தேவியாரின் இரண்டு சேடிமார்கள் அழகில் இவர் மயங்கினார், இவருடைய அழகில் அவர்கள் மயங்கினார்கள்.

நாதனின் சந்நிதிக்கு வந்த பொழுது, அவர் பறித்து வந்த மலரிலேயே சுந்தரனின் எண்ணக்கையும் கண்டார் எம்பெருமான். கொடும் பொருளில் தொட்டவுடன் எண்ணமும் ஒட்டியிருக்கும். மலரைக் கண்டதும், அதில் மலர்ந்த இரண்டு மங்கையரின் முகத்தையும் கண்டார் எம்பெருமான்.

கண்டதும் கேட்டார், சுந்தரா 'இருவரையும் கண்டாயா ?'

நாணி குறுகி வெட்கத்தோடு தலை கவிழ்ந்து தம்பிரான் தோழன் நிற்க, கைலை நாதனோ, ''அஞ்சாதே அப்பனே! செல்வாய் பூவுலகிற்கு, சிறப்பொடு இருபெண்ணோடு வாழ்ந்து, கொண்ட மோகம் தணிந்த பின் மீண்டும் வருவாய்,'' என்றார்.

கேட்டதும், உளமெலாம் நடுநடுங்கினார் சுந்தரர். 'ஐயகோ, ஒரு பெண்ணின் மோகம், பெண்ணின் எண்ணம், சாமீப்ய முக்தியிலிருக்கும் என்னைத் தள்ளி வைக்கும் சக்தி வாய்ந்ததா ? '

இரண்டற இறைவனோடு ஒன்றிவிடும் சாயுஜ்யமான 'ஜீவன் முக்தி' அமையும்

வரை, எது வேண்டுமானாலும் நம்மைக் கீழ் இறக்கலாம் என்பதற்கு சாட்சி, இந்த நிகழ்வு.

எப்படியானாலும் சரி, ஒரு வினாடி மயங்கினார் என்பது உண்மைதான், ஆனால், உளம் முழுவதும் இறைவன் பாகமல்லவா? அதனால், நடுநடுங்கினாலும், வரமொன்று கேட்கிறார், ''அப்பனே! பிறவாமை வேண்டியே வந்தேன்; பிறந்தாலும், உன்னை மறவாமை வேண்டும். அங்கு செல்லும் பொழுதும், ஆபத்தில் நீயே வந்து, நானே மறுத்தாலும் ... நீயே வந்து என்னை தடுத்தாட்கொண்டிடல் வேண்டும், '' என்ற வரம் கேட்டு வாங்கிக்கொள்கிறார்.

திருநாவுக்கரசா்கூட ''பிறவாமை, பிறந்தாலும் உனை மறவாமை வேண்டும்'' - என்றுதான் கேட்டாரே தவிர, சுந்தரமூர்த்திப் பெருமான், நான் உனை மறந்தாலும், அதுமட்டுமல்ல மறுத்தாலும் எனைத் தடுத்தாட்கொள்ள வேண்டும் என்ற வரம் கொடு என்ற வரம் கேட்டுப் பெற்றுக்கொள்கிறார்.

இதுதான் பெரு வரம்!

நான் உனை மறந்தாலும் எனை ஆட்கொள்ள வேண்டும் என்று கேட்டால் அது திருவரம், நான் உனை மறுத்தாலும் எனை ஆட்கொள்ள வேண்டும் என்று கேட்டால் அது பெருவரம்.

அப்பனும், ''ஆகட்டும் அப்படியே,'' என்று அருளி விடுகின்றார். தம்பிரான் தோழனல்லவா ? பக்கத்தில் இருந்து பணிவிடை செய்தவர், அவன் கருணையின் ஆழம் தெரிந்தவர். பெருமான் கருணையின் ஆழம் தெரிந்தவர்களுக்கே தவறு செய்யும் தைரியம் வந்துவிடுகின்றது. எல்லா இடத்திலும் நடக்கின்ற ஒரு நிகழ்ச்சி. ஏனென்றால் எப்படியும் அவன் ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கை.

என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுள் இதுவும் ஒன்று: இறைவனையே நேரில் தரிசித்த சுந்தரர் ஏன் சாதாரண ஆசைகளில் வீழ்ந்தார் ?

வலி சுகத்தில் உழல்கின்ற மனம் பக்தியை எடை போடுவது சாத்தியமற்றது

தா்க்க ரீதியான கேள்வி, ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், சுந்தரரை போன்றதொரு இறைவனோடேயே விளையாடித்திரியும் ஒருவருடைய வாழ்க்கையை, நம்முடைய சாதாரண மிகவும் தாழ்ந்த மனத்தைக் கொண்டு. அது சொல்லுகின்ற சரி, தவறுகளை வைத்துக்கொண்டு, எடை போடுவது சாத்தியம் இல்லை, அப்படிச் செய்வது சரியானதும் அல்ல. அவர் இருக்கின்ற உணர்வு நிலை வேறு, நாம் இருக்கின்ற உணர்வு நிலை வேறு.

கருத்துச் சுதந்திரம் என்ற பெயராலேயே ஒரு சில முட்டாள்கள், ஞான சம்பந்தப்பெருந்தகையை மிகுந்த அவதூறு செய்து எழுதியிருக்கும் சில நாவல்கள், புத்தகங்கள், கட்டுரைகள் அவரவர்கள் மனத்திலிருக்கும் வக்கிரத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனவே தவிர, ஞானசம்பந்தர் போன்றதொரு பெரிய மகானை நம்முடைய சாதாரண மனம் சார்ந்து மதிப்பிடவோ, ஒப்பிடவோ இயலவே இயலாது.

அதே போல், சுந்தரமூர்த்தி பெருமானின் வாழ்க்கையையும் சாதாரண லாப நஷ்டங்களில், நன்மை தீமைகளில், கொடுக்கல் வாங்கலில், வலி சுகத்தில், துக்கம் ஆனந்தத்தில் உழல்கின்ற மனம் எடை போட இயலாது. சாத்தியமும் இல்லாதது.

விதா்க்கத்தால், ஏற்கெனவே பக்தி இருப்பதனால், சந்தேகம் மட்டும் தெளிய வேண்டும் என்ற அன்பர்களுக்கான பதில் இது: நம்முடைய சாதாரண மனம் கொண்டு அவருடைய செயல்களை எடை போட இயலாது. எடை போட வேண்டாம்.

அடுத்து, குதர்க்கத்தால் வரும் சில கேள்விகள் - இந்த குதர்க்கவாதிகளுடைய பெரிய பிரச்சினையே என்னவென்றால், அவர்கள் கேள்விகள் கேட்பதில்லை, அவர்களுடைய முடிவை நம் மீது திணிப்பார்கள்.

Part 2

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் - குதர்க்கவாதிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. தேவையும் இல்லை. ஆனால் உங்கள் எல்லோருக்கும் சில விஷயங்களை, சில சத்தியங்களை சொல்லவும், வெளிப்படுத்தவும் கடமைப்பட்டிருக்கிறேன், விரும்புகிறேன்.

நான் நினைக்கிறேன் - மடமையை ஒழிக்காத, மடங்களினுடைய தலைமையை மட்டும் பிடித்த சில பேருடைய சீடர்கள் அல்லது கை தொண்டர்கள் என்று சொல்ல முடியாது, குண்டர்களாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். அந்த கேள்விகளே எப்படி இருக்கிறதென்றால், நாம் சுந்தரரை அவமானப்படுத்தி விட்டதாகவும் அவமரியாதை செய்து விட்டதாகவும் இகழ்ந்து உரைத்து விட்டதாகவும்தான் கேள்வியையே கேட்கிறார்கள்.

துக்கத்திலும், சுகத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும், நல்லதிலும் கெட்டதிலும் அலைகின்ற மனம் சார்ந்து இவர்களை எடைபோடுவது சாத்தியமில்லை. ஆனால் தம்பிரான் தோழரான சுந்தரரும் தம்பிரானும் இருக்கின்ற, எம்பெருமான் ஈசபைம் இருக்கின்ற உணர்வு நிலையை என் வாழ்க்கையில் உணர்ந்ததனால். எந்த உணர்வு நிலையில் இந்த மொத்த நிகழ்ச்சியும் நடந்தது என்று நடந்ததை நடந்தவாறு, நடந்த நிலையிலிருந்து பார்த்து உங்களுக்கு சொல்லவேண்டிய கடமை எனக்குள்ளது.

இப்பொழுது, ஈசனான தம்பிரானுக்கும் தம்பிரான் தோழனுக்கும் இடையிலே நடந்த பக்தியின் லீலையை, பக்தியின் விளையாட்டைப் பார்ப்போம்.

சாமீப்ய முக்தி பெற உள்ளுக்குள் திரும்பி ஒருமுறை அவனது பாதத்தைப் பிடித்துவிடுங்கள்

சுந்தரமூர்த்தி பெருமான், மிக உயர்ந்த ஆதிசைவர் குலத்திலே அவதரிக்கிறார். அரசனாலே வளர்க்கப்படுகின்றார். ஆதிசைவா குலத்திலே அவதரித்தாலும், நாட்டு அரசன் அவருடைய தேஜ்ஸைக்கண்டு, 'நான் இவரை அரசிளங்குமரனாக மாற்றுகின்றேன் என்று வலிந்து சென்று அரண்மனையிலே வளர்க்கின்றார்.

திருமணப்பருவம் வந்ததும், தந்தையார் பெண் பார்க்கின்றார். அருகாமையில் ஆதிசைவா் குலத்திலே பெண் பார்த்து திருமணமும் நிச்சயிக்கிறார்கள். அரசிளங்குமரனாக வளர்ந்ததனாலே, அரசனே திருமணத்திற்கு வருகின்றார்.

எல்லாச் சடங்குகளுக்கும் தேவையான எல்லாப் பொருட்களும் தயாராக இருக்கின்றன. இரவு நடைபெறவேண்டிய சடங்குகள் நிறைந்து, மறுநாள் திருமணத்திற்கான சடங்குகள் துவங்குகின்ற நேரம்.

சுந்தரமூர்த்தி பெருமான், அரசு உடையுடன் வேதியர் உடையும் - அரசனுக்கு உரிய உடையும் ஆபரணங்களும், வேதியருக்கு உரிய திருநீறும் தாங்கி ஆதிசைவ அரசன்போலவே வருகின்றார்.

திருமணம் ஆரம்பிக்கும் முன் திடீரென்று வயதான ஒரு அந்தணர், எந்த நிமிடமும் வளைந்து, முன்றாவது கால் ஊன்றி மட்டுமே நடக்க முடியும் என்கின்ற நிலையிலே இருக்கின்ற வயதான அந்தணர் சபைக்குள் நுழைகின்றார்.

நுழைந்தவுடனேயே, 'நிறுத்துங்கள் திருமணத்தை!' என்று உரத்த குரலில் சத்தம் கொடுக்கின்றார். மூன்றாவது கால் என்றால் கோல், கைத்தடி. மூன்றாவது கண் திறக்கலாம், மூன்றாவது காது கேட்கலாம், ஆனால் மூன்றாவது கால் தேவைப்படக்கூடாது.

நீங்கள் யார்? ஏன் நிறுத்த வேண்டும் திருமணத்தை ? என எல்லோரும் வின வ, அதற்கு அந்தணர் சொல்கிறார்... ''திருமண கோலத்தில் இருக்கின்ற இந்த சுந்தரன் என்னுடைய அடிமை. இவன் எனக்கு ஊழியம் செய்ய வேண்டியவன். இவன் திருமணம் செய்து கொள்ளலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்ய வேண்டியது நான். என்னைக் கேட்காமல் இவன் எப்படித் திருமணம் முடிக்கலாம் ?' என்று உரத்த குரலில் உரைக்க, அங்கிருந்த ஆதிசைவர்கள் எல்லாம் அரண்டு போனார்கள்.

ஏனென்றால், அந்தணர் அந்தணர்க்கு அடிமை ஆதல் என்பது உலகத்திலே இல்லாத மரபு.

''அது எப்படிச் சாத்தியம்?' என எல்லோரும் கேட்க, சுந்தரரோ இரண்டு கையையும் இடுப்பில் வைத்துக்கொண்டு, ''நன்று நன்று,'' என்று இகழ்ச்சியான புன்னகையோடு பார்க்கிறார்.

ஒடுவதும் பிடிப்பதும் ஒட்டத்தின் வேகம் சார்ந்தது அல்ல

புதிய அந்தணர் ஒரு ஒலையை எடுத்துக் காட்டி, ''இதுதான் சாட்சி, சுந்தரனுடைய முப்பாட்டன் எனக்கு எழுதி கொடுத்த ஓலை,'' என்கிறார். சுந்தரர் படுவேகமாக ஒடி அந்த ஓலையைப் பறிக்க முயற்சிக்கின்றார். கிழவனாக வந்ததோ ஈசன் எம்பெருமானே!

அவரும் ஓடுகிறார், இவரும் ஓடுகிறார். ஒருவர் ஓடும்போது பிடிக்க வேண்டுமானால், வேகம் தேவை இல்லை, அவருடைய ஓட்டத்தினுடைய போக்கைத் தெரிந்து கொள்ள வேண்டும். பாம்பு விரட்டும் பொழுது, நாம் நேராக ஓட வேண்டும், ஏனென்றால், பாம்பின் போக்கு வளைந்து வளைந்து செல்லும் வகையிலே இருப்பதால், அதிலேயே அதிக நேரம் செலவு ஆயிடும். யானை விரட்டும் பொது வளைந்து வளைந்துதான் ஓட வேண்டும், ஏனென்றால், யானையின் ஒட்டம் நேராகத்தான் இருக்கும்.

ஒடுவதும் பிடிப்பதும் ஒட்டத்தின் வேகம் சார்ந்தது அல்ல, ஓடுபவர் பிடிப்பவர் தன்மையைச் சார்ந்தது. வேகம் சார்ந்ததாக இருந்தால், பெருமானை ஒருவர் பிடிக்க முடியுமா ?

நம் எல்லோர் உள்ளத்திற்கு உள்ளேயும் அமர்ந்து கொண்டு, நாம் திரும்பிப்பார்க்கின்ற ஒரு கணம்கூட, நம் கண்ணில் சிக்காமல் எங்கோ ஓடி ஒளிந்து மறைந்து கொண்டு இருக்கின்றவனை, முப்புரம் எரித்தவனை, அயனும் மாலும் - பிரமனும் விஷ்ணுவும் தேடியே காணாத பாதத்தை பிடிக்க முடியுமா?

சாத்தியமே இல்லை !

ஆனால் பிடித்தோமேயானால், வெளியில் அவன் ஓடினாலும் பிடிப்பது சாத்தியம்.

சுந்தரர் ஏற்கெனவே ஒரு முறையாவது பிடித்து இருக்கிறார் என்பதனால், வெளியிலே ஓடிய அந்தணரைப் பிடித்து விட்டார். உள்ளுக்குள் அவனை ஒரு முறையாவது அவனைத் தேடி பிடித்து இருந்தால்தான், சாமீப்ய முக்தி வரை செல்ல முடியும்.

உள்ளே பிடித்தவர் என்பதனால், ஓடுபவருடைய ஓடும் முறை தெரிந்து அந்தணரைப் பிடித்து விடுகின்றார், அவரிடமிருந்த அந்த ஓலையைப் பறித்துக் கிழித்தெறிந்து விடுகிறார்.

மறந்தாலும் மறுத்தாலும் ஆட்கொள்ளும் அருட்பெருங் கருணையாளன்

ஒடும் முறையை சுந்தரர் கற்றாரே தவிர, பெருமான் உள்ளத்து முறையைக் கற்கவில்லை. அதனால்தான் அந்த ஒலையைக் கிழித்துப் போட்ட உடனேயே அந்தணர், ''மூல ஓலை தனியாக இருக்கிறது. இது 'படி ஓலை'தான் அப்பனே,'' என்கிறார்.

முதியவராக வந்த பெருமான் ''என்னுடைய சொந்த ஊரான திருவெண்ணெய் நல்லூரில் 'மூல ஓலை' பக்குவமாக பாதுகாப்போடு இருக்கிறது, சுந்தரர் கிழித்துப்போட்டது படி ஒலைதான். அங்கே சென்று மூல ஒலையை உங்கள் எல்லோருக்கும் காட்டுகிறேன், வாருங்கள்,'' என்று வழக்குக்கு அழைக்கிறார்.

ஊராரெல்லாம், 'இந்த வழக்கு என்ன ஆகுமோ?' என்ற கவலையுடன் சுந்தரரோடு செல்கிறார்கள் சென்றவுடன், திருவெண்ணெய் நல்லூரிலே, சான் றார் சபையிலே அந்தணர் ஒரு நிபந்தனையை சொல்கிறார், படி ஓலையை கிமித்த இவன் மூல ஒலையையும் கிழிக்க மாட்டான் என்ற சபையோர் உறுதிகொடுத்தால், ஒலை காட்டுகிறேன்!''

உறுதி அளிக்க, மூல ஒலையை எடுத்துக் காட்டுகிறார். சுந்தரருடைய முப்பாட்டனார் எழுதிக் கொடுத்த மூல ஓலை தெளிவாகச் சொல்கிறது, ''வழி வழியாக திருவெண்ணெய் நல்லூர் சித்தருக்கு, பித்தன் என்கிற பெயருடைய சி த்தருக்கு நாங்கள் அடிமைசெய்யக் கடவது. ''

முப்பாட்டன் கையெழுத்தும் இருக்கின்றது. அதற்கு, மூவா் சாட்சி கையெழுத்து இட்டும் இருக்கிறார்கள்.

அக்கையெழுத்துகளை, சான்றோர் சபை தீர ஆய்ந்து அறிந்து, ''சுந்தரா நீ இவருக்கு அடிமை," என்று தீா்ப்பு அளிக்கிறார்கள். சுந்தரரும் வேறு வழி இல்லாமல், 'இவருக்கு அடிமைதான்' என்று அவர் பின்னாலேயே செல்கிறார்.

திடீரென்று ஒரு சந்தேகம். ''நீங்கள் திருவெண்ணெய் நல்லூரைச் சேர்ந்தவர் என்று ஓலையில் போட்டு இருக்கிறதே. நாங்கள் இதற்குமுன் உங்களை இவ் வூரில் பார்த்ததே இல்லேயே! உங்கள் வீடு எது ? எங்கு வாழ்கிறீர்கள்?'' என்று தீர்ப்பிற்குப் பிறகும் ஆராய்ச்சி நோக்குடன் கேள்வி கேட்க, சிரித்துக்கொண்டே, "வா, காட்டுகிறேன்," என்று சென்று, 'பித்தன்' என்கின்ற பெயரிலே வந்த முதியவர் ஆலயத்திற்குள் சென்று, கருவறைத் திருமேனிக்குள் இரண்டறக் கலந்தார்.

சுந்தரனுக்கு சுளீரென்று உரைத்தது.

நாளமிலா சுரப்பிகளை மனத்தினால் கட்டுங்கள்

உடலெல்லாம் நடுங்க விதிர் விதிர்த்துப் போய், ''இறைவா! நீயே நேரில் வந்து செய்த இந்த லீலையின் காரணம் என்ன? திருமணத்தைத் தடுத்து நிறுத்த வேண்டிய காரணம் என்ன?'' என்று கேட்க, பெருமான் ரிஷபாரூடராய் அன்னையாரோடு தோன்றி, "சுந்தரா வந்த வேலை சொந்த வேலை எந்த வேலையோ, அந்த வேலை மறந்தாயா? மனித உடல் தாங்கியதும் கைலாய நினைவெல்லாம் போனதா? இந்தக் காலைப் பற்றவே இந்த வேலை கொண்டு வந்தோம் என்பதை மறந்தாயா? என் கைக்கலகு தாங்கும் சாமீப்ய முக்தி பெற்ற ஆலால சுந்தரன் நீ.

ஆலகால் விஷத்தைக் கண்டவுடன் பிரம்மா, விஷ்ணுவுடன் எல்லோரும் அஞ்சி நடுங்கி ஒட, 'அதை நான் பருகி உலகத்தைக் காக்கவேண்டும், அதை இங்குக் கொணா்' என்று நான் கட்டளை இட, தைரியத்தோடு சென்று அந்த விஷத்தையே உருட்டி ஒரு குடத்திலிட்டு வந்ததனால், 'ஆலாலசுந்தரன்' என்று பெயர் பெற்ற சுந்தரன் நீ!

மறந்தாயோ உன் நிஜ நிலையை? இரு பெண் மீது கொண்ட காமத்தால் நீ பூவுலகம் வந்தாய், வந்தாலும் உன்னை நான் தடுத்தாட்கொள்ள வேண்டும் என்று வரம் வாங்கி வந்தாயே!'' என்று அவருடைய பூர்வ திருக்கயிலாய வாச நிலையை நினைவூட்டுகிறார்.

சொன்னவுடன் சுய நினைவுக்கு வந்தார் சுந்தரர். அரச வாழ்க்கை வாழ்ந்த உடனேயே கைலாய எண்ணம் மறைந்ததும், வந்த நோக்கம் மறந்ததும் சுந்தரருக்குப் புரிந்து விட்டது.

புரிந்ததும் விழித்துக்கொள்கின்றார் சுந்தரமூர்த்திப் பெருமான். விழித்து, '' ஆஹா பெருமானே! நானே மறுத்தாலும், எனை தடுத்தாட்கொள்ள வேண்டும் என்ற என்னுடைய வேண்டுதலை நிறைவேற்ற வந்தாயோ, வந்த நோக்கத்தைக் காட்டியதற்கு நன்றி. இனி நான் தவ நிலையில் இருந்து வந்த நோக்கத்தை நிறைவேற்றி, உன்னுடைய பாதத்தைப்பற்றிட வேண்டும், தவநிலை அருளுக, '' என்று உளம் எலாம் உருகி, நெஞ்சு பஞ்சாய்க் கரைய, தன்னுடைய சுய நிலையை உணர்ந்து, திருமணத்தை மறுத்து, பெருமானிடம் தவ வாழ்க்கை வரம் கேட்க, சுந்தரமூர்த்திப்பெருமானுக்கு பெருமான் தம்பிரான் அவ்வாறே தவ நிலை அருளுகிறார்.

இந்த முதல் நிகழ்ச்சி மிக அருமையான நிகழ்ச்சி. நம்முள் உள்ள நாளமிலா சுரப்பிகள் மனத்தாலே கட்டுப்படுத்தபடுவதனால், உடலோடு எந்த நாள இணைப்பும் இல்லாதது. அதனால்தான் அதற்கு 'நாளமிலா சுரப்பிகள்' என்று பெயர்.

உங்களுடைய உணவு, உங்களுடைய உடலினுடைய இயற்கையான எந்த ஒரு விஷயத்தாலும் இந்த நாளமிலா சுரப்பிகள் கட்டுப்படுத்தப்படுவதில்லை. மன ரீதியாக மட்டும்தான் அதை இயக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும்.

இந்த சத்தியத்தை நன்றாக ஆழ்ந்து கேளுங்கள், ஒருமுறை நாளமிலா சுரப்பிகள் சுரந்து விட்டால், அதன் இயக்கத்தை அதற்கு பிறகு மனம்கூட கட்டுப்படுத்த முடியாது. அதாவது இது ஒன்றோடு ஒன்று ஆழமாக இணைந்தது.

முதலிலிருந்தே மனம் கட்டுப்பாட்டுடன் இருந்தால், இந்த நாளமிலா சு ரப்பிகளின் போக்கையும், இயக்கத்தையும் நீங்கள் கட்டுப்படுத்திவிடலாம். அதற்கான மார்க்கம் - இறைவனுடைய 64 லீலைகளையும் அறுபத்துமூவா கதைகளையும் நீங்கள் உள்வாங்குது.

அப்படியில்லையென்றால், அந்த நாளமிலா சுரப்பிகள் தானாகவே இயங்கத் தொடங்கிவிடும், அதற்குப் பிறகு மனத்தால்கூட அதைக் கட்டுப்படுத்த (மடியாது.

ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், அண்ணீரகச் சுரப்பி (Adrenal gland) பயம் சார்ந்தது. உங்கள் மனம் கட்டுப்பாட்டோடு, பயம் இல்லாமல் இருக்குமானால் நல்லது. ஒரு முறை பயந்து, அண்ணீரகச் சுரப்பி நீர் உடம்பு முழுக்கப் பரவ அனுமதித்தீர்களானால், அதற்குப் பிறகு நீங்கள் மனதைக் கட்டுப்படுத்தினாலும்கூட, பயத்தால் வருகின்ற பக்க விளைவுகளான நடுக்கம், விதிர்விதிர்ப்பு, நரம்பு தளர்ச்சி இதை எல்லாம் கட்டுப்படுத்த முடியாது.

இந்த நாளமிலா சுரப்பிகளின் கட்டுப்பாட்டுக்குள் விழுந்தீர்களானால் போய்விட்டது. ஒருவர் விழக்கூடாத இடம் அதுதான். அங்கு விழுந்தால் கடவுளாலும், கடவுளின் அவதாரமான குருவாலும் மட்டும்தான் உங்களைத் தூக்கி விட முடியும்.

வரம் கொடுத்தல் - வரம் வாங்கல் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டவர்களே பெரும் பண்ணியவான்கள்

ஆனால் பிரச்சினை என்னவென்றால், அங்கு விழுந்தால், பிறகு கடவுளையோ கடவுளின் அவதாரமான குருவையோ கூட 'தூக்கி விடுங்கள்' என்று கேட்க கூடத் தெரியாது. அதனால்தான் விழுவதற்கு முன்பு, ''அப்பனே! ஒருவேளை நான் விழுந்தாலும், நான் வேண்டாம் என்று சொன்னாலும், என்னத் தூக்கி விட் டுவிடு,'' என்று கேட்டுவிடுவதே நல்லது.

'சில வினாடிகள் மாத்திரம்தான் அந்த உணர்ச்சித்க் கொந்தளிப்பில் விழுந்தேன், அதற்காக மானுட ஜென்மம் வந்ததே. சரி நடந்தது நடந்ததுவிட்டது, இதற்கு மேலாவது இந்த மானுட ஜென்மம் அடுத்தடுத்த ஜென்மங்களுக்கும் தொடராமல் இருப்பதற்கான பாதுகாப்பு உறுதியையாவது கேட்டு வாங்கிக்கொள்ளலாம்' என்றுதான் பெருமானிடம் கேட்டு வாங்கிக்கொள்கிறார். சுந்தரர் கேட்ட வரம் சரியான வரம்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த வரம் கொடுத்தல் - வரம் வாங்கல் என் பதன் மொத்த தாத்பரியமும் புரிந்தால்தான், சுந்தரா எந்தத் தெளிவில் இருந்து இந்த வரத்தை வாங்கி இருக்கிறார் என்று புரியும்.

எத்துணை வரம் நான் கொடுத்தாலும், நீங்கள் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்கள் என்றால், அதை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடு எனக்கு இல்லை. நீங்கள், 'வேண்டாம்' என்று சொல்லாத வரைதான், அந்தக் கட்டுப்பாட்டிற்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டிய தேவை இருக்கிறது.

ஏனென்றால், தனி சிந்தனை சுதந்திரத்திற்கு மிக பெரிய சக்தி உண்டு. முக்தியே வேண்டும் என்று நீங்க கேட்டு மூவாயிரம் ஆண்டு தவம் கிடந்து, ஏதோ ஒரு நாள், ''இல்லையப்பா வேண்டாம்,' என்று பெருமானிடம் சொல்லிவிட்டீர்களென்றால், உங்களுக்கு முக்தி கொடுக்க வேண்டும் என்கின்ற அவசியம் அவருக்கு இல்லாமல் போய்விடுகிறது. அது தனி சுதந்திரத்தின் ச க்தி.

பொதுவாக பெருமான் சோதனை செய்யும்பொமுது, அந்தத் தனி சுதந்திரத்தின் சக்தியைத்தான் கிளறிவிடுவார். கிளறி விட்டு, நம்முடைய வாயாலேயே வேண்டாம் என்ற சொல்ல வைத்துவிடுவார். அதற்குத்தான் எல்லா விளையாட்டும் செய்வார்.

காரணம் என்னவென்றால் எந்த வரம் கொடுத்தாலும் அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான வழி இருக்கும் என்பது அவருக்குத் தெரியும்.

ஆனால் அவரே காரணம் சொல்லித் தப்பித்துகொள்ள முடியாத ஒரு வரத்தைக் கேட்டுப் பெறுவதற்கு பக்கத்திலேயே இருந்து பார்த்தவரால் மட்டும்தான் முடியும். சுந்தரர் பக்கத்திலேயே இருந்து பார்த்தவர்தானே, எல்லாமே தெரியுமல்லவா ?

எப்பொழுதாவது உங்கள் வாழ்க்கையில், தன்னை மறந்து, கரைந்து, இறைவனோடு இணைந்து இருக்கின்ற தரிசனமோ, அனுபவமோ வந்தால், இந்த ஒரு வரத்தை - நானே மறந்தாலும் எனை நீ மறவாது தடுத்து ஆட்கொள்ள வேண்டும், நானே மறுத்தாலும் நீ என்னை மறுதலிக்காது தடுத்து ஆட்கொள்ள வேண்டும், நானே எதிர்த்தாலும் நீ எனை எரிக்காது ஆட்கொள்ள வேண்டும் - என்ற இந்த ஒரு வரத்தை மறக்காமல் வாங்கி விடுங்கள்.

இந்த ஒரு வரத்தை வாங்கி விட்டீர்களானால், சுந்தரர் செய்ததுபோல என்ன செய்தாலும் வேறு வழி இல்லை, அவர் காப்பாற்றியே ஆக வேண்டும்.

இந்த ஒரு வரம் பெற்றவன் திருவரம் பெற்றவன். பக்கத்திலேயே இருந்து பார்க்கின்றவர்களுக்கு பெருமான் எந்தத் தாமத்தை சார்ந்து இயங்குகிறார் என்கின்ற அவருடைய தர்மம் புரியும்.

சில நிஜமாகும், எந்த வரம் நிஜம் ஆகாது என்கிற குட்சுமத்தை எப்படி நாங்கள் கெரிந்துகொள்வது. புரிந்துகொள்வது ?

என் பக்கத்தில் கைக்கலகு தாங்குகிறவர்கள் கண்களைப் பார்த்தீர்களென்றால் புரிந்துவிடும். இது ஆறுதலா? அருளா? வரமா? மறமா? அல்லது மறுதலிக்கவைக்கும் திறமா ?

வியாதி என்று ஒருவர் வந்தால், ''சரியாகும், போங்க சாமி பாத்துக்கறேன்,'' என்று சொன்னால் அதற்கு ஒரு அர்த்தம்.

''கட்டாயம் சரி பண்றேன் கவலைப்படாதீங்க போங்க, மாங்கல்யம் நிரந்தரமா இருக்கும்,'' என்று சொன்னால் அதற்கு ஒரு அர்த்தம்.

''ஒழுங்கா இருந்துருக்கலாமேப்பா, திருநீறு பூசிக்கோ, கஷ்டம் குறையும்,'' என்று சொன்னால் அதற்கு ஒரு அர்த்தம்.

''கோவில்ல போய் பிரார்த்தனை பண்ணிட்டு போ,'' என்று சொன்னால் அதற்கு ஒரு அர்த்தம்.

''தைர்யமா இரு' என்று சொன்னால் அதுக்கு ஒரு அர்த்தம்.

''ஆனந்தமா இரு,'' என்று சொன்னால் அதுக்கு ஒரு அர்த்தம்.

'முடியலேன்ன ஜாலியா இரு,'' என்று சொன்னால் அதற்கு ஒரு அர்த்தம்.

கைக்கலகு தாங்கும் அனுக்க தொண்டர்களுக்குத்தான் இந்த ஒவ்வொரு வார்த்தைக்கும் என்ன அர்த்தம் இது அருளா? மறுமா? திறமா? இதன் பக்க விளைவு என்ன? எதிர் விளைவு என்ன? அடுத்த விளைவு என்ன? என்று புரியும்.

த்வைத, அத்வைத, விசிஷ்டாத்வைத வட்டங்களுக்குள் அடங்கா சைவம்

தன்னுடைய சுய நிலையான சாமீப்ய முக்த நிலையை அனுபூதியாக உணர்ந்து, தான் வந்த நோக்கத்தைப் புரிந்துகொண்டு வாழத்துவங்கிய சுந்தரர், திருவாரூர் கோவிலுக்குப் போகிறார், கோவிலில் பரவை நாச்சியாரைப் பார்க்கிறார்.

திருவெற்றியூர் திருக்கோயில்

பார்த்தவுடனேயே தன் வாழ்க்கையின் நோக்கத்திலே, நாம் வாழ்ந்து அனுபவிக்க வேண்டிய பெண் இவள் என்று புரிகின்றது. தன்னை மறந்தார், பரவை நாச்சி வயப்பட்டார்.

உடனே அவர் பரவை நாச்சியாரிடம் சென்று தன் காதலைச் சொல்லவில்லை. பெருமானிடம் சென்று, ஆரூரன் தியாகராஜப் பெருமானிடம் சென்று, புற்றிடம்கொண்ட நாதா, வன்மீகநாதா் பெருமானைப் பார்த்து, ''நீயே பொறுப்பு,'' என்கிறார்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ஆதிசைவம் என்பது வெறும் த்வைத, அத்வைத, விசிஷ்டாத்வைத என்கின்ற தத்துவ கோட்பாடு வட்டங்களுக்குள் அடக்கிவிட முடியாத பெரும் ஞானத் தத்துவம்.

'உயா்ந்த ஆன்மிகத் தேவைகளுக்காக மட்டுமே, பக்திக்காக மட்டுமே பகவானிடம் செல்' என்று சொல்வது த்வைதம்.

'ஞான அனுபவத்திற்காக மட்டுமே பகவானிடம் செல்' என்று சொல்வது விசிஷ்டாத்வைதம்.

'முக்கிக்காக மட்டுமே இறைவனை நாடு' என்று சொல்வது அத்வைதம்.

முக்தியானாலும் சரி, மூக்குத்தியானாலும்சரி பெருமானிடம் போ' என்று சொல்வது சைவம்.

வேறு எந்தப் பாரம்பரியத்திலும், 'மண் வேண்டும், பெண் வேண்டும், பொன் வேண்டும்' என்று ஒரு த்வைத குருவிடம் சென்று கேட்டீர்களானால், ''அதெல்லாம் பகவானுக்குத்தான் சொந்தமப்பா, அவரையே பிடி, போதுமப்பா,'' என்பார்.

ஒரு விசிஷ்டாத்வைத குருவிடம் சென்று கேட்டீர்களானால், ''அதையெல்லாம் வைத்து என்னப்பா பண்ணப்போற, காலம் வீணாகப்போகும், பெருமானை நினைப்பா," என்று சொல்வார்.

ஒரு அத்வைத குருவிடம் சென்று கேட்டீர்களானால், மாயையப்பா விடப்பா, ஞானத்தை அடைப்பா,'' என்று சொல்வார்.

ஒரு சைவ குருவிடம் சென்று கேட்டால் மட்டும்தான், இரப்பா, எவ்வளவு வேணும், எப்பவேணும்னு சொல்லப்பா பொருமானிடம் கேட்டு வாங்கித் தருகிறேன்,'' என்பார்.

ஒரு பெண்ணைப் பார்த்தேன், திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைக்கின்றேன், திருமணத்தை நடத்திவையுங்கள்,' என்று பெருமானை நேரடியாகக் கேட்கின்றார்.

ஐயனும், "ஆகட்டும் செய்கிறேன் அப்பா!' என்று சொல்லிவிட்டு, அன்று இரவே பரவை நாச்சியாருடைய குடும்பத்தார் கனவிலும், தம்பிரான் தோழரின் உற்றத்தார் குடும்பத்தார் கனவிலும் சென்று, ''இருவருக்கும் திருமணம் நடத்திவையுங்கள்!' என்று ஆணையிடுகின்றார்.

உடனடியாக ஏற்பாடுகள் செய்து திருமணம்செய்து வைக்கப்படுகிறது. இனிமையோடு திருவாரூரில் பரவை நாச்சியாரோடு வாழ்ந்துவருகின்றார்.

சில காலம் கழித்து, எல்லா சிவத்தலங்களையும் சென்று பார்க்க வேண்டும் என்று கிளம்புகிறார். வழியெல்லாம் பல்வேறு விதமான அத்புதங்களை நிகழ்த்தி, எத்துணை எத்துணையோ இறைவனின் வீலைகளை விளையாடல்களை மக்களுக்குக் காட்டி, பெருமானைக் கசிந்துருகி ஸ்தோத்திரங்கள் செய்து, பாடல்கள்செய்து, சைவம் பரப்பி திருத்தலம் திருத்தலமாக தம்பிரான்தோழர் யாத்திரை செய்து திருவெற்றியூர் வருகின்றார்.

இறைவனுக்கும் நிபந்தனை விதிக்கும் சங்கிலி நாச்சியார்

திருவெற்றியூர் வந்து தங்கியிருந்து, தினந்தோறும் பெருமானை தரிசித்து வரும் வேளையிலே, சங்கிலி நாச்சியாரைப் பார்க்கின்றார். இதில் பிரச்சினை என்னவென்றால் சங்கிலி நாச்சியார் சைவ வேளாளர் குலத்துப் பெண்மணி, சுந்தரமூர்த்திபெருமானோ ஆதிசைவ குலத்து உதித்தவர். குலம் சார்ந்த பிரச்சினை வேறு! சங்கிலி நாச்சியாரின் தகப்பனார், குலம் சார்ந்த ஒரு நபரைத் திருமணம் செய்துகொள்ள தயார்செய்தபொழுது, சங்கிலி நாச்சியார் இறைவனுக்கு அடிமை செய்யும் வன்-தொண்டருக்குத்தான் நான் என் வாழ்க்கையை முடிப்பேன் என்று உறுதியோடு திருமணத்தை மறுத்து, ஆலயத்திலேயே இருந்து பெருமானுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றார்.

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சங்கிலி நாச்சியாரைக் கண்டவுடன் காதல், இரண்டாவது காதல். திரும்பவும் சிறிதும் அச்சம், மடம், நாணம், வெட்கம் எதுவுமில்லாமல் நேராக பெருமானிடம் செல்கின்றார். இவர் ஒன்னும் அத்வைதி இல்லையே, இவர் சைவர்! நேராகப் பெருமானிடம் செல்கின்றார், "ஐயனே.. சங்கிலி நாச்சியாரைப் பார்த்தேன். நீங்கள்தான் இந்தத் திருமணத்தையும் நடத்தி வைக்க வேண்டும்." என்ன இனிமையான உறவுபாருங்கள், பக்தியின் சக்தி பாருங்கள். இதற்கு முதல் மனைவியான பரவை நாச்சியாரிடம் அனுமதியெல்லாம் வாங்கவில்லை.

திருவெற்றியூர் பெருமான், ''சரி, என்ன செய்வதென்று பார்க்கிறேன்,'' என்று சொல்கிறார். சொல்லிவிட்டு சுந்தரமூர்த்திபெருமான், தான் தங்கியிருக்கின்ற இடத்திற்கு சென்று விடுகின்றார்- நன்றாக இந்த இரவின் நிகழ்ச்சியைப் புரிந்துகொண்டீர்களென்றால், ஆழ்ந்துகேளுங்கள், இந்த இரவு என்ன நடந்ததோ அதைப் புரிந்துகொண்டால், உங்கள் வாழ்க்கை விடிந்தது! வேறு ஒன்றும் வேண்டாம்.

பிரபஞ்சத்தையே இயக்கும் பெருமான், முப்பத்துமுக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், கின்னர, கிம்புருட, கந்தாவ, காந்தார, யக்ஷ, ராக்ஷ, தேவர், மானுடர் எல்லாம் நின்று துதிக்கும் திருக்கயிலாயத்து காமதேனு கற்பகவிருக்ஷத்தோடு கொலுவிருக்கும் பெருமான், எத்துணைகோடி சூழல்களைக் காத்து இரட்சித்து நடத்திக்கொண்டிருக்கும் பெருமான், இந்த சுந்தரர் விஷயத்திற்காக மட்டும், அன்று இரவு ஏறத்தாழ ஒரு 20 முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கிறது.

முதல் முடிவாக, அன்று இரவு சங்கிலி நாச்சியார் கனவிலே பெருமான் தோன்றுகின்றார், தோன்றி ''அம்மா! எனக்கே அடிமையான பக்தர்களில் ஒருவரைத்தான் மணம்புரிவேன் என்கின்ற எண்ணத்தோடு இருக்கிறாயே. வன்தொண்டன் தம்பிரான் தோழன், நல்ல சிவபக்தன் - எனது அடிமை, அவனைத் திருமணம் செய்துகொண்டு வாழ்!'' என்று சொல்ல, அவள் '' ஆகட்டும் அப்பனே அவ்வாறே செய்கின்றேன், ஆனால் என்னுடனேயே இங்கேயே வாழவேண்டும், என்னை விட்டுப்பிரியக்கூடாது என்று அவர் உறுதிமொழி கொடுத்தால், செய்து கொள்கிறேன்," என்று சொல்கிறார். ஏனென்றால் சங்கிலி நாச்சியாருக்குத் தெரியும், சுந்தரருக்கு ஏற்கெனவே ஒரு மனைவி இருக்கிறார் என்று !

''ஏற்கெனவே அவர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார் அதனால், இங்கேயே இருப்பதாக உறுதிமொழி பெற்றுத்தந்தால் செய்துகொள்கிறேன்," என்று சொல்கிறார். அந்தம்மாவினுடைய பக்தியைப் பாருங்கள், பெருமான் சொன்னாரே என்று நேரடியாக 'மாட்டேன்' என்று சொல்லவில்லை. நியந்தனை விதித்துக்கான், 'மாட்டேன்' என்று சொல்கிறார்கள்.

இருபக்கமும் சாரும் பெருமான்

பெருமான், எல்லாத்தையும் கேட்டுத்தானே ஆகனும் - பொறுத்துட்டுதானே ஆக வேண்டும். உடனே சுந்தரமூர்த்தியிடம், சென்று ''அப்பா! அவளை விட்டுப்பிரியாமல் இங்கேயே இருக்க வேண்டும் என்று அவள் சொல்கிறாள்,' என்கிறார். இவர் உடனே, ''இந்த நிபந்தனைகளெல்லாம் இல்லாமல், திருமணம் செய்து வைக்க ஏதாவது திட்டம் செய்யுங்களேன்,'' என்கிறார். நல்லவேளை பெருமானுடைய முடியெல்லாம் சடை முடியாக இருந்ததனால பிச்சிகிட்டு கீழ வரல. சாதாரண முடியாக இருந்திருந்தால் பிச்சிகிட்டு எல்லாம் உதிர்ந்து போயிருக்கும். ''சரி, யோசித்து சொல்கிறேனப்பா!

அங்கே திரும்பச் செல்கிறார். ''ஏம்மா அவன் நிறைய சிவஸ்தலங்களுக்கெல்லாம் சென்று வருகின்ற பக்தன், இந்த மாதிரி ஒரே இடத்தில் இருக்கச் சொல்லி விதி போட்டால், அவனுக்கு அது கட்டுப்படுத்த முடியமா? அது சாத்தியமா ? கொஞ்சம் யோசித்துப் பார், '' என்று சொல்ல, சங்கிலி நாச்சியார் தெளிவாகச் திருவெற்றியூரிலேயே இருப்பேன் என்று உறுதிமொழி கொடுத்தால், வாருங்கள், அந்த உறுதிமொழியோடு வாருங்கள். '

உடனே பெருமான் சுந்தரரிடம் வருகிறார், ''இல்லைப்பா, அவள் மிக உறுதியாக இருக்கிறாள், மிக தெளிவாக இருக்கிறாள், அவளோடுதான் வாழ்ந்தாகவேண்டும், இந்த ஊர் எல்லையை விட்டுத் தாண்டக்கூடாதென்று சொல்கிறாள், அதுவும் உறுதிமொழி வேறு செய்துகொடுக்க வேண்டும் என்று சொல்கிறாள்,'' என்கிறார்.

சுந்தரமூர்த்த்தி நாயனார், இவர்தான் பெருமானுக்கே விளையாட்டுக் காட்டியவராயிற்றே... உடனே சொல்கிறார், ''அவ்வளவுதானே. சரி, நாளை அவளை அழைத்து வந்து, உங்களுடைய சன்னிதியில், 'அவளை விட்டுப்பிரிய மாட்டேன், திருவெற்றியூரிலேயே இருப்பேன் என்று சத்தியம் செய்து கொடுக்கின்றேன், நீங்கள் ஒரு அரைமணி நேரம், அருகிலிருக்கும் மகிழ மரத்தடியில் போய் அமர்ந்துகொள்ளுங்கள், நான் சத்தியம் செய்து கொடுத்தவுடன் திரும்ப வந்துவிடுங்கள், அப்பொழுது சத்தியத்திற்குப் பலமில்லாமல் போய்விடும்,''என்று சொல்ல, பெருமான் பிரச்சினைக்குத் தீர்வு பிறந்ததென, அப்பா'ன்னு பெருமச்சு விட்டார். பாருங்கள், பெருமானுக்கே விளையாட்டு!

எப்படியோ பிரச்சினை தீர்ந்தால் சரிதான் என்று சங்கிலி நாச்சியாரிடம் வருகிறார், சங்கிலி நாச்சியாரைப் பார்த்தவுடனேயே ''இந்தப் பேதை, ஏழைப்பெண், என்ன சிரத்தையோடு எனக்கு பக்தி செய்கின்றாள், இவளுக்கு நான் பொய்ப்பது சரியா?'' என மனம் கழிந்து, மனம் குழைந்து, ''மகளே ... சுந்தரன், வன்தொண்டன், சூட்சுமக்காரன், திருவெற்றியூர் எல்லை தாண்டாமல் உன்கூடவே இருக்கிறேன் என்று சத்தியம் செய்து கொடுக்கிறேன் என்று ஒத்துக்கொண்டான், ஆனால் இதில் ஒரு சின்ன விளையாட்டு செய்கிறான். நாளை அவன் கோயிலில் சத்தியம்செய்து கொடுக்கும்பொழுது, என்னை, கருவறையில் இல்லாமல் மகிழ மரம் பக்கம் ஒதுங்கிக்கொள்ள சொல்லியிருக்கிறான். அவன் சொல்லும்பொழுது, சரி... சரி' என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன், உன் முகத்தைப் பார்த்தவுடன் எனக்குத் தாளவில்லை, ஆனால் நீ சத்தியத்தை என் சன்னிதியில் கேட்காமல், மகிழ மரத்தின் முன்னால் கேள், இதை நான் சொன்னேன் என்று அவனிடம் சொல்லாதே, ' என்று சொல்லிவிடுகின்றார்.

இனிமை...இனிமை...இனிமை...

ஐயகோ!!! இதைவிட ஒரு இனிமை வேண்டுமா? சைவம் வாழ்ந்திட!! பெருமானே!! இந்த ஒருகதை போதுமையா.. ஒரு ஜென்மம் மட்டுமல்ல... நூறு ஜென்மம் எடுத்து சைவம் வாழலாம், சிவனைத் துதிக்கலாம், சிவனோடு வாழலாம், அவனை வாசிக்கவும், நேசிக்கவும், சுவாசிக்கவும், உனக்கே தாசியாய் இருந்து தாசிக்கவும் இன்னொரு கதை வேண்டுமா ஐயனே! இந்த ஒரு கதை போதுமைய்யா! ஆசுதோஷானந்தன், ஆசுதோஷன்' என்று சொன்னால் எளிமையாக மனம் இளகிவிடுபவன், இறங்கிவிடுபவன் என்று பொருள்.

மறுநாள் பொழுதும் விடிந்தது. சுந்தரமூர்த்திப் பெருமான் வெற்றி நடையோடு, வெற்றிப் புன்னகையோடு, தான் எல்லாவற்றையும் சரியாகத் திட்டமிட்டு, முதல்நாள் இரவே முடித்துவிட்டோம் என்கின்ற தெளிவோடு வருகிறார். வந்து கருவறை முன்னின்று சங்கிலி நாச்சியார் கரம் பற்றி, அம்மா, சத்தியம் செய்கின்றேன் வா!' என, உடனே சங்கிலி நாச்சியார், ஐயனே! பெருமான் முன்னிலையில் சத்தியம் செய்துவிட்டு, என்றாவது நீங்கள் வழுவிவிட்டால், அது உங்களுக்குப் பெரும் துக்கமாகுமல்லவா? அது எனக்கு மனம் தாளாது. ஆதலால் மகிழ மரத்தின் முன்பாக சத்தியம் செய்தால்போதுமானது ஐயனே! பெருமான் முன்பு எதற்காக இவ்வளவு பெரிய வேதனை? இந்த வினை வேண்டுமா ? மகிழ மரம் முன்பாகவே செய்துகொள்ளலாம் ஐயனே!

பெருமான் சிரிக்கிறார்... மகிழ மரம் சிரிக்கிறது ... சங்கிலி நாச்சியார் சிரிக்கிறார்... சுந்தரமூர்த்தி நடுங்குகின்றார் ...

சிரிப்புக்கு தமிழில் பல வார்த்தை உண்டு! பெருமான் முகத்திலே மலர்ந்தது - புன்னகை. மகிழ மரத்தின் முகத்தில் மலர்ந்தது எள்ளி நகையாடுதல், ஏமாந்தாயா ?' சங்கிலி நாச்சியார் முகத்தில் மலர்ந்தது மாயப்புன்னதை, மாட்டிக்கொண்டாயா ?'

பெருமான் புன்னகைக்கிறார், மகிழ மாம் எள்ளி நகையாடுகிறது. சங்கிலி நாச்சியார் மாயப் புன்னகையால் முகம் மலர்கின்றார், சுந்தரமூர்த்தி மூன்றையும் கண்டு நடுங்குகின்றார்.

பெருமானைச் சற்றே சந்தேகத்தோடு பார்க்கின்றார். சொல்லிட்டியா'? – நமக்கொன்றும் தெரியாதப்பா, நான் சிவனே நீ சொன்னதைத்தானே செய்தேன்! மகிழ மரத்தில் அமைதியாக அமர்ந்திருக்கின்றார். எனக்கென்ன தெரியும் ? நீ வேற யார்கிட்யாவது பேசனியான்னு கேட்டுப்பாரு, இராத்திரி ஏதாவது சத்தமா இதையெல்லம் பெனாத்தினியாப்பா ? பக்கத்துல இருந்தவன் கேட்டு சங்கிலி நாச்சிக்கு உளவு சொன்னானான்னு கேட்டுப்பாரு..! எனக்கென்ன தெரியும்! ?

சங்கிலி நாச்சியாரைக் கூர்ந்து நோக்குகிறார் சுந்தரர், எப்படி டீ கண்டுபிடிச்ச ? .. கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்வளவு வில்லங்கம் பன்ற. அவள் மாயப் புன்னகையை மந்தகாசப் புன்னகையோடு கலந்து, அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்கின்ற பெயராலே முக்காடிட்டு முகத்தை மூடிக்கொள்கின்றாள். பார்த்தா கண்டுபிடிச்சிடுவாரோ என்னவோ? யாருக்குத் தெரியும்! பெருமானோடே விளையாடும் வன்தொண்டர். இதுக்கு மேல ரொம்ப நேரம் யோசிக்க

திருவாளூர் திருத்தலம்

விட்டா ஆபத்து, வாங்கபோலாம் மகிழ மரத்துக்கு.' இதுக்கு மேல என்ன பன்றது! இருக்கு. சத்தியமும் செய்துகொடுத்து விடுகிறார், திருமணமும் இனிதாக நிறைவேறிவிடுகின்றது.

மனம் தளரா சைவன்...

சில நாள்களிலேயே, கால் அரிக்க ஆரம்பித்துவிடுகிறது. தம்பிரான் தோழன், பெருமான் சுகம் கண்டவர், ஒருவேளை மனம் மயங்கி, ஒருவிநாடி பெண் சுகத்தைச் சிந்தித்திருக்கலாம், ஆனால் பெண் சுகத்திலேயே இருந்துவிட முடியாது.

ஆசை 60 நாள், மோகம் 30 நாள் என்பது சாதாரண மனிதர்களுக்கே!

தெற்கு வீதி, தெற்கு மாடத்தில் அமைந்துள்ள பரவை நாச்சியின் மாளிகை - திருவாரூர்

சிவனையே உயிராய் வைத்து வாழ்கிற சிவனடியார்களுக்கு ஆசை 6 மணி நேரம், மோகம் 30 நிமிடம். ஆசை, மோகம் - இவையிரண்டும் பறந்தன, திருத்தலங்கள் செல்ல வேண்டும் என்று கால்கள் வேகவேமாய் கேட்கத்துவங்கியது. ஆனால் ஒரு நல்ல விஷயம் பரவை நாச்சியை சென்றுப் பார்கக் வேண்டும் என்பதற்காக அல்ல, பெருமான் திருத்தலங்கள் சென்று பார்க்கவேண்டும் என்றுதான் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு உணர்வு மேலோங்குகிறது.

ஆனால் இதை, பெருமானிடம் சொல்வதற்குப் பயம்! என்னபன்றது பயம்! அதுமட்டுமில்லாமல், இப்பொழுது ஒரு அளவிற்கு அனுமானத்திற்கு வந்துவிட்டார், பெருமான் இரண்டு பக்கமும் விளையாடுகிறார், ஒ! நம்முடைய பக்தி அளவிற்கே அவளுடைய பக்தியும் பலமானதுபோல, அதனால், நான் சொன்னாலும் கேட்டுக்கொள்கிறார், கேட்டதைச் சரியாக அந்தப்பக்கம் போய் சொல்லிவிடுகிறார். எப்படிச் சொல்வது ? திருத்தலங்களுக்கு எப்படிச் செல்வது ?

கடைசியில் ஒருநாள், ரொம்பவும் தாள முடியாமல், திருத்தல யாத்திரை புறப்படுவதென்று முடிவெடுத்து, திருவெற்றியூரைத் தாண்டி விடுகின்றார். தாண்டியவுடன் இரண்டு கண்ணும் போய்விடுகிறது. தம்பிரான் தோழனே ஆனாலும் சத்தியத்திற்கு மாறாய் நடந்ததனால், இரண்டு கண்ணும் போய்விடுகிறது.

எத்துணைநாள் இரண்டு கண்ணும் இல்லாமல் எனை இறைவன் வைத்திருக்கிறான் பார்த்துக்கொள்கிறேன்' என்ற வைராக்கியத்தை இருத்தி, வன்தொண்டன்... மனம் தளரவில்லை. சைவன்... மனம் தளரவில்லை.

மெதுவாக அருகில் இருந்த திருத்தலங்களெல்லாம் தரிசிக்கச் செல்கிறார். கரிசிப்பதற்காகச் செல்வதனால்கான், கண்கள் போய்விடுகிறது. ஆனாலும் மனம் தளரவில்லை. நான் உன்னைக் காணாவிட்டாலும் பரவாயில்லை, நீ என்னைக் காண்பாய், அதுபோதும், அதற்காக கோவில் கோவிலாக வருகிறேன்' என்று நினைத்துத்தான் தல யாத்திரை தொடங்குகிறார்.

அடுத்த ஆலயத்திலேயே பெருமான் பார்க்கிறார், சுந்தரர் அடியார்கள் தோளைப் பற்றிக்கொண்டு வருவதைப் பார்க்க அவராலேயே தாங்க முடியவில்லை. ஊன்றி வரத் தங்கத்தடி கொடுக்கின்றார். தடி ஊன்றி நடக்கின்றார் சுந்தரர்.

அடுத்த திருத்தலம் காஞ்சிபுரம். காஞ்சிபுரம் வந்து சுந்தரமூர்த்திப் பெருமான் பாட

திருவாரூர் தெருக்களில் பாதுகையின்றி நடந்த எம்பெருமான்

இறைவன் தம்பிரானுக்கே தாங்கவில்லை, ஒரு கண்ணை அளித்துவிடுகின்றார்.

பாதுகை வேதனையே வந்தாலும் சோதனைன்னு நினைத்தால் சாதனையாகிவிடும்

ஒரு கண்ணுடனேயே பல திருத்தலங்களுக்குச் சென்று, இறுதியில் திருவாரூரும் வந்துவிடுகின்றார். புற்றிடம்கொண்டாரைத் தியாகராஜனைச் சென்று, ஐயனே! உன் அழகு காண்பதற்குக் கோடிக்கண்களும் போதாது, ஒரு கண்ணை வைத்து எப்படி நான் கண்டு ரசிப்பேன், ருசிப்பேன் என்று கரைந்து அழுதவுடன், எம்பெருமான் பேரருள் பெருங்கருணை பேராளன் மற்றொரு கண்ணையும் அளித்துவிடுகின்றார்.

எம்பெருமான் என்றென்றும் நிறைவுத்தன்மையிலேயே இருக்கின்றவர், நாம் நிறைவுசெய்தால் போதும், நாம்தான் குறைவுணர்வென்னும் படுகுழியில் விழுந்து கிடக்கிறோம். அவர் நிறைவுத்தன்மையில்தான் இருக்கிறார், நம் குறைவுணர்வினுடைய ஆழம் என்னவென்று ஆழம் பார்ப்பாரே தவிர அவர் குறைவுணர்வினுள் போவதே இல்லை.

மரம், மண் சார்ந்தது. மண்சார்ந்த மரத்தின்முன் செய்த சத்தியம் என்பதனால், பஞ்ச பூதங்களிலே மண் சார்ந்த திருத்தலங்கலான திருவாரூரிலும் காஞ்சிபுரத்திலும் - இரண்டிலும், ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கண்ணை அளித்துவிடுகின்றார்.

நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், இறைவன் கொடுக்கும் 'தண்டனைகள்' என்று நீங்கள் நினைக்கின்ற எல்லாமே, நம்முடைய பலத்தை அவர் செய்கின்ற சோதனை தானே தவிர, தண்டனை கிடையாது. சோதனையை வேதனையாக எடுத்தால் வாழ்க்கை போய்விட்டது.

வேதனையே வந்தாலும் சோதனைன்னு நினைத்தால் சாதனையாகிவிடும்.

சத்தியம் செய்து கொடுக்கும்பொழுது, அதில் குளறுபடி செய்ய முயற்சித்தது, அதன்பின், செய்துகொடுத்த சத்தியத்தையும் மீறியது - இவற்றுக்கான தண்டனையையும் பெற்று, அந்தத் தண்டனையையும் அனுபவித்து முடித்து வெற்றிகரமாக வெளியில் வந்துவிட்டார்.

அடுத்த கதையைக் கேளுங்கள், இதுதான் கதையின் உச்சம்! சுந்தரமூர்த்தி சுவாமிகள் வந்துவிட்டார், திருவாரூரில் இருக்கிறார், வீட்டுக்கு வரப்போகிறார் என்று செய்தி அனுப்புகிறார் பரவை நாச்சியாருக்கு, உடனிருக்கும் தொண்டர்கள் மூலமாக. பரவை நாச்சியார் கதவைப் பளீரென்று சாத்திவிட்டு, சொல்லாமல் இன்னொரு திருமணம் செய்ததனால், இந்தப்புரம் வரக்கூடாது' என்று ஜன்னல் வழியாக சொல்லியனுப்புகிறார்கள். சந்திக்கக்கூட மறுத்துவிடுகிறார்கள்.

சுந்தரமூர்த்திபெருமான் உணரில் இருக்கும் சான்றோர்களையெல்லாம் ஒன்றுசேர்த்து அனுப்புகிறார். முதலில் படை நடத்தும் சேனை முதலியார்கள் செல்கிறார்கள், கதவைப் படாரென்று' சாத்தி அனுப்பிவிடுகிறார்கள் பரவை நாச்சி. சான்றோர்கள் சைவ வேளாளாகள் செல்கிறார்கள், கதவைப் சடாரென்று' சாத்தி அனுப்பிவிடுகிறார்கள். ஆதிசைவர்களான சிவாச்சாரியார்கள் தூது போகிறார்கள், அப்பொழுதும் கதவைச் சாத்தி திருப்பி அனுப்பிவிடுகிறார். பிறகு சுந்தரருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இப்ப ஒரே வழி என்ன ? பெருமான்தான்!

நோர்க பெருமானிடம் செல்கின்றார்.

என்ன ?'

அது வந்து, அது வந்து, ம்ம்ம்... பரவை நாச்சி வீட்டிற்கு வரவேண்டாமென்று சொல்கிறாள் ... '

ஒருவேளை பெருமான் மனசுக்குள்ளயே நினைத்திருக்கலாம், நீ செய்த வேலைக்கு ஊருக்குள்ளேயே விட்டிருக்கக்கூடாது, வீட்டுக்கு மட்டும்தானே வரவேண்டாமென்று சொன்னாள். வெளிப்படையாகவே சொல்லியிருக்க மாட்டாரு... ஆசுதோஷன் அல்லவா! அன்பிற்கு இனியான்.

சரி, நான் என்ன செய்ய வேண்டும் ?'

பெருமானே, ஒருதரம் தூது போய்விட்டு வந்தால் நன்றாக இருக்கும்!'

ஆஹா!! அது ஒன்னுதாம்பா செய்யாம இருந்தோம். சரி நான் சென்று என்ன சொல்ல வேண்டுமென்பதைச் சொல்.

இவர் உடனே, பெருமான் சொல்ல வேண்டிய அந்த வசனங்களை எல்லாம் தயார்செய்து கொடுக்கின்றார்.

பெருமான் அதைக்கேட்டுவிட்டு, சரி அப்படியே சொல்கிறேன்.' என்று சொல்லி, பரவை நாச்சியாரின் வீட்டுக்குப் புறப்படுகிறார்.

பாதுகை அணியாமல், கால் தேய தூது

இன்னொரு விஷயம், அக்காலத்தில் தூது போகிறவர்கள் பாதுகை அணிந்து செல்லக்கூடாது, இது பாரம்பரியம். பாதுகை அணிந்துசென்றால் பரவை நாச்சி அடையாளம் கண்டுகொள்வாள் என்பதற்காக, பாதுகையை விட்டுவிட்டு பெருமான் செல்கின்றார். கால் தேய திருவாரூரிலே, சுந்தரன் தங்கியிருந்த மாளிகைக்கும் பரவை நாச்சியின் மாளிக்கைக்கும் தூதாகச் செல்லுகின்றார்.

பெருமான் சிவனடியார் திருக்கோலத்தில் கிளம்பி போகிறார். பரவை நாச்சியாரின் வீட்டுக் கதவைத்தட்டி, நடு ராத்திரியில் சுந்தரன் சொல்லி அனுப்பிய எல்லாவற்றையும் போய் பரவை நாச்சியாரிடம் சொல்கிறார். பரவை நாச்சியார் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, ''வேறு ஏதாவது சொல்ல வேண்டுமா அடியாரே? நீங்கள் சிவனடியாராக இருந்ததனால் உங்கள் வார்த்தைகளை இவ்வளவு நேரம் கேட்டேன், நீங்கள் சென்று வரலாம்," என்று திருப்பி அனுப்பிவிடுகிறார்.

சுந்தரமூர்த்தி நாயனாரோ வாசலில் அமர்ந்துகொண்டு, எப்பொழுது பெருமான் வரப்போகிறார் என்று நல்ல செய்திக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். தூரத்தில் இருந்து பார்த்தால் பெருமான் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு வருகின்றார். முகத்திலே மலர்ச்சி இல்லை.

''சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறாள். நீ சொன்னதையெல்லாம் சொன்னேன், அவள் என்னென்னேவோ எதிர்கேள்வி கேட்கிறாள்."

அப்பொழுதான் சுந்தரனுக்கு உரைத்தது! பெருமானை, 'இதைச் செய்து முடித்துவிட்டு வா' என்று சொல்வதை விட்டுவிட்டு, 'நான் சொன்னதைச் சென் று சொல்லிவிட்டு வா' என்றா சொல்வது ?

ஆஹா!! சுந்தரனுக்கு சுளீர் என்று உரைத்தது! உரைத்த உடனே, "பெருமானே! பெருமானே வந்திருக்கிறீர்கள் என்று சொன்னீர்களா?''

''அதைச் சொல்லச்சொல்லி நீ என்னிடம் சொல்லவில்லை இல்லையா, அதனால் சொல்லவில்லை. ''

''ஆவார!!

''என்ன ?''

''இன்னொருமுறை சென்று வந்துவிடுங்கள்.''

"சரி -ம்" வேஷம் போட்டாச்சு செய்துதானே ஆக வேண்டும்.

பக்தனுக்காய் பரம்பொருள் இன்னொருதரம் கிளம்புகிறார். இந்தமுறை கிளம்பும்பொழுது ''என்னென்ன ் சொல்ல வேண்டுமென்று ஒழுங்காகச் சொல்லிவிடு. எல்லாவற்றையும் சொல்லிவிட்டு வருகிறேன். ''

இவர் சொல்கிறார், ''நீங்கள் வேறு எதுவும் சொல்ல வேண்டாம், நான்தான் பெருமான்னு அவளுக்கு காட்டுங்கள், அதுக்கு மேல நீங்க என்ன சொல்ல வேண்டுமோ அது உங்கள் விருப்பம், ஆனா வேலையை முடித்துவிட்டு வாருங்கள் !' '

பக்தன் சரணாகதிக்கு வந்துவிட்டான் என்கிற ஆனந்ததத்தைத் தன் புன்னகையில் காட்டிவிடாமல் மறைத்துக்கொண்டு, பெருமான் பாதுகையின்றி திருவடி தோய, மீண்டும் திருவாரூர் தெருக்களில் இறங்கி நடக்கத் துவங்கினான்.

வானவரெல்லாம் பெருமான் கருணையை நினைந்து ஒருபுறம் ஆனந்தத்தால் கண்ணீர் சொறிய, வானவப் பெண்டிரெல்லாம் பெருமான் திருப்பாதம், திருவடி இன்றி திருவாரூர் தெருக்களில் தேய்வதைப் பார்த்து துக்கத்தால் கண்ணீர் சொறிய, இரண்டு கண்ணீரும் மழையாய்ப் பொழிந்து திருவாரூரை நனைக்க, பெருமான் பெய்யும் மழைகனில் பரவை நாச்சியாரின் மாளிகை நோக்கிச் செல்கின்றார்.

தானேதான் 'தான் யார்' என்று காட்ட முடியும்

மாளிகைக்குச் சென்று கதவைத் தட்டுகிறார்... கதவைத் திறந்தவுடன், சுந்தரனுக்கு அளித்த வாக்கின்படி, நான்கு திருக்காங்களோடு, தானே பரம்பொருள் என்கின்ற ஆதிசிவ ஸ்வரூபத்தை, சதாசிவ வடிவத்தைக் காட்டி அருளுகின்றார்.

பெருமான் திருவடியில் வீழ்ந்தாள் பரவை நாச்சி, ''ஐயனே! தாங்களே வீடுதேடி வர என்ன புண்ணியும் செய்தேன்! ? வந்த காரியும் யாதோ! வாருங்கள் என்று, ஆசமனம் ஆசனம் முதலாகிய 16 உபச்சாரங்களையும் செய்து பெருமானைத் துதிக்க, ''அம்மா நம் தொண்டன், வன்தொண்டன், நம்தோழன் சுந்தரனுக்காய் தூதாய் வந்திருக்கின்றோம், நீ அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும்,'' என்று கேட்க, "ஐயனே வந்தது தாங்கள்தான் என்று சென்றமுறை வந்தபோதே சொல்லியிருக்கக்கூடாதா? இருமுறை உங்களை நடக்க வைத்தேன் என்று திருமுறை ஓதும் பக்தர்களுக்கெல்லாம் தெரிந்தால், அவர்கள் என்னை என்ன நினைப்பார்கள் ? கருணையே இல்லாத கொடுமைக்காரி என்று நினைக்கமாட்டார்களா? அவர்கள் மனமெல்லாம் நோகுமே! ஐயனே! இது தகுமா? இது முறையா? என்று இறைவனின் பாதங்களில் பூக்களாய்ச் சமாப்பித்து, பாத்யமாக தன்னுடைய கண்களில் பொங்கும் ஆனந்தக் கண்ணீரையே அர்ப்பித்து, ஐயனே! தங்களுடைய ஆணைக்கு மற்றொரு எண்ணம் உண்டோ! சுந்தரனை ஏற்றுக்கொள்கிறேன்,' என்று உறுதிமொழி அளிக்கிறார்.

ஆனந்தத்தோடு பெருமான்மீண்டும் தூது செல்லும் தூதுவனின்தாமப்படி, திருவடி இல்லாது திருவாரூர் தெருக்களில் கால் தேய நடந்து சுந்தரன் தங்கியிருக்கும் மாளிகையை வந்து சேர்ந்து, ''சுந்தரா, 'உன்னை ஏற்றுக்கொள்கின்றேன்' என்று பரவை நாச்சி வார்த்தை கொடுத்துவிட்டாள், சென்று அவளோடு வாழ்!'' என்று ஆசீர்வதிக்கிறார்.

மறுநாள் சுந்தரமூர்த்தி நாயனார் பெருமானைத் தொழுது, தியாகராஜனைக் கண்குளிரக் கண்டு தரிசித்து, வன்மீகநாதரை, புற்றிடம்கொண்டாரை தரிசி த்து, பூஜித்து பரவை நாச்சியாரின் இல்லைத்தை அடைந்து, பரவை நாச்சியார் மனம் உவந்து அவரை ஏற்றுக்கொள்ள, இருவரும் இனிதே வாழ்க்கையைத் துவங்கினார்கள்.

பெருமான் கருணை இதோடு முடிந்துவிடவில்லை! பெருமான் கருணையின் ஆழத்தை, சுந்தரமூர்த்தி நாயனாரின் பக்தியின் சக்தியை மேலும் காண்போம்.

விளையாடல்கள் செய்து சங்கிலி நாச்சியார் திருமணத்தை நடத்தியது உச்சம் அல்ல !

கால்தேய திருவாரூர் வீதிகளில் முன்னும் பின்னுமாய் தூது சென்று இருவரையும் சேர்த்து வைத்தது இதன் உச்சம் அல்ல!

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் சிவனடியார்களுள் ஒருவர், சுந்தரமூர்த்தி நாயனார் மீது கடும்கோபம் கொண்டார். நல்ல சிவ பக்தனாக இருந்தால் யாராக இருந்தாலும் இதைக் கேட்டவுடன் கடும்கோபம் கொள்வான். இரவிலே திருவடி இல்லாமல் பெருமானைத் தெருவின் தரைமீது முன்னும் பின்னுமாக தன் பெண்ணாசைக்காக நடக்க வைப்பவன் சிவபக்தனா? யாருக்குத்தான் கோபம் வராது. யாருக்குத்தான் கொதிப்பு வராது? கொதிப்படைந்த பக்தனையும் சுந்தரனையும் எப்படி சேர்த்து வைக்கிறார் என்பதுதான் உச்சம்!

ஆனால் அதற்குமுன், இதைக் கேட்டவுடன், உங்களுள் விதர்க்கத்தோடு சிரத்தையோடு குதர்க்கமில்லா எழும் ஒரு சந்தேகம் என்னவென்றால், நீங்கள் சுந்தரா் கதையை, அவா் பக்தியின் சக்தியை விவரித்த முறையைக்கண்டு ஆழ்ந்து சிந்தித்தால், பெருமான் தடுத்தாட்கொண்ட பின்பும், இரண்டு மனைவியரை மணந்துகொண்டு, ஒருவரின் உத்தரவு பெறாமலேயே இரண்டாம் திருமணம் செய்துகொண்டு, இது சமூக ஒழுக்கத்திற்கு எதிரானதல்லவா? இது சரியா ? என்பதாகத்தான் இருக்கும்.

தம்பிரான் தோழன் சுந்தரமாத்தி பெருமான் திருமேனி தாங்கியதே, உடல் தாங்கியதே, இந்த இரண்டு பெண்களின் மீதும் ஏற்பட்ட காமம் தணிந்து வாழ்ந்து முடித்துசிவனின் அனுக்கிஹத்தோடு மீண்டும் தன் சாமீப்ய முக்தி நிலையான பெருமானின் தொண்டு செய்யும் நிலைக்கு சென்றிட வேண்டும் என்பதற்காகத்தான். பிறவியின் நோக்கமே இந்த இச்சையை வாழ்ந்து தீர்ந்து முடிக்க வேண்டும் என்பது. அதனால்கான், இரண்டு பெண்களின் மீதும் காதல் வயப்பட்டார். இறைவனைக் கண்டபின்னும் காதல் வயப்பட்டார். தர்க்க ரீதியாக வந்த கேள்வி இது, அதனால் அதற்கு இதுதான் விடை.

சுந்தரர் வாழ்க்கையே சுந்தரம்

உண்மையில் பார்த்தால் இந்தக் கேள்வியை நீங்கள் ரொம்ப வேகமாக கேட்டுவிட்டீர்கள். இன்னும் முழுக்கதையையும் நீங்கள் முழுமையாகக் கேட்டு முடிக்கவில்லை. இன்னும் இறுதிக் காட்சி முடியவில்லை. இறங்கி வந்ததில் இருந்து திரும்பிப் போகிற வரைக்கும் ஒரு விறுவிறு நாவல் மாதிரிதான் சுந்தரா கதை மட்டும் போகிறது, அவர் வாழ்க்கையே சுந்தரம்.

தனிமனித ஒழுக்கம், சமூகத்தைச் சமச்சீர் நிலையில் வைக்கின்ற ஒழுக்கம், சமூகத்தின் கோட்பாடுகள் எதையுமே மதிக்காமல், இது எதையுமே வாழாமல், என்னவேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் செய்கிறார். அது அத்துணைக்கும் பெருமானே தூது செல்கிறார். அப்பொழுது நானும் அதுபோல் செய்தால் எனக்கும் பெருமான் தூது செல்வாரா ?

ஆழ்ந்து கேளுங்கள், இந்தப் பிரச்சினையை சிறிது ஆழ்ந்து சிந்தித்தால் மட்டும்தான் இதற்கு தீர்வு கிடைக்கும், புரியும்.

உடல்-மனம்-உணர்ச்சி-உணர்வு-ஆன்மா இந்த ஐந்தும் ஒன்று இணைந் தவன்தான் ஒரு மனிதன். சுந்தரமூர்த்தி நாயனார் உடலாலும், மனத் தாலும் செய்ததை மட்டும்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். உடலாலே இரண்டு பெண்களை மணந்துகொண்டார். மனத்தாலே இரண்டு பெண்களிடம் காதலில் விழுந்தார். இதைத்தான் பார்க்கிறீர்கள். உணர்ச்சியாலும், உணரவாலும், உயிராலும்-ஆன்மாவாலும் அவர் எப்படி இருந்தார் என்பதை நீங்கள் பார்க்கவோ நினைக்கவோ மறந்து மறுக்கிறீர்கள். காரணம் என்னவென்றால், நீ ங்கள் உங்களையே வெறும் உடல்-மனமாக மட்டும்தான் பார்க்கிறீர்கள்.

நாத்திக நாராசம் தமிழ்நாட்டில் பரப்பப்பட்ட பொழுது, இந்த உடல் -மனம் தாண்டி உங்களுடைய பரிமாணங்கள் வளர்வதற்கான வாய்ப்பே அழிக்கப்பட்டது. பகுத்து அறிவதற்காக, பகுத்தறிந்தால் தவறில்லை ... பகுத்து எறிவதற்காக பகுத்தறிவைப் பரப்பினார்கள். பகுத்து எறிய பகுத்தறிவை உபயோகித்தார்கள். அதுவும் இந்து மதத்திற்கு எதிராக மட்டும்தான் உபயோகித்தார்கள்.

தமிழ்நாட்டில் நாத்திகம், பகுத்தறிவு இயக்கம் பரவிற்று என்று தயவுசெய்து யாரும் தவறாக நினைக்காதீர்கள். முட்டாள் தனமான, மூடத்தனமான இந்து மத விரோதக் கருத்துக்களை மொத்தமாகத் தொகுத்து, அதற்கு ஏதாவது ஒரு தலைப் பு கொடுக்க வேண்டுமல்லவா ? அதற்காக, அதற்கு 'பகுத்தறிவு இயக்கம்' என்ற தலைப்பு கொடுக்கப்பட்டது.

ஆனால் கொடுமை என்னவென்றால், சாத்தியங்களை மறுக்கின்ற இந்த முட்டாள்தனமான மூடக்கருத்துகள் பரவியதனாலே, நீங்கள் எல்லாருமே, உங்களை உடல்-மனம் தாண்டி வேறு ஒன்றுமே இல்லை என்ற முடிவுக்கே வந்துவிட்டீர்கள்.

இது ஒரு பெரிய கொடுமை. உங்களை நீங்கள் உடல்-மனம் என்று நினைப்பதினால், சுந்தரரையும் உடல் மனம் என்கின்ற நிலையிலிருந்து மட்டும்தான் பார்க்கிறீர்கள்.

'நீங்கள்' என்கின்ற உங்களுடைய உடல் வெறும் 5 சதவிகிதம்தான். உங்கள் மனம் வெறும் 5 சதவிகிதம்தான், உங்களுடைய உணர்ச்சிகளும், உணர்வும், உயிரும்தான் மீதி 90 சதவிகிதம். உடல் 5 சதவிகிதம், மனம் 5 சதவிகிதம் - இந்த 10 சதவிகிதம் செய்த செயலைப் பார்த்தீர்களே தவிர, மீதமுள்ள 90 சதவிகிதம் இந்த 10 சகவிகிதத்தின் செயல்களின்பொழுது எந்த நிலையில் இருந்தது என்று பார்க்கவில்லை.

உங்களுடைய வாழ்க்கையின் நோக்கம்மீது குரு கொள்ளும் நம்பிக்கையே சக்கி

சுந்தரர் மிக அழகாகச் சொல்கிறார் தடுக்கி விழுந்தாலும் உன் நாமமே என் தருக்கில் செறுக்கும். தடுக்கி விமுந்தாலும் உன் நாமமே என் நாவில், நெஞ்சி ல் சுரக்கும். அவருடைய இந்த உணர்வுநிலை, அவருடைய இந்த உணர்ச்சி நிலை, அவருடைய உயிர் எதிலே நிலைகொண்டிருந்தது என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தெளிவிக்கிறது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், அரசிளங்குமரனாக, எதிர்கால அரசனாக, அந்த நாட்டு அரசனாலே வளர்க்கப்பட்டும், பெருமான் ஆட்கொண்டவுடன் அரசைத் துறந்து ஊர் ஊராய் சைவம் பரப்பச் சென்று விடுகின்றார். அப்படியென்றால் என்ன அர்த்தம், அவா உயிர் 'பொருள், உலகம், சுகம்' - இதன் மீது நிலைகொள்ளவில்லை. அதுவே வேண்டுமானாலும் பெருமானிடம்தான் கேட்டுப்பெறுவேன், வேறு ஒருவரிடம் கேட்கவும், வேறு ஒருவரிடம் வணங்கலும் ஆகாது.

அஞ்சுவதும், அடிபணிவதும் அப்பன் ஒருவனுக்கே! அவனேதான் மன்னவனும், அவனேதான் என்னவனும். கடவுளும் அவன்தான், தலைவனும் அவன்தான், இறைவனும் அவன்தான். வேறு ஒருவருக்கு ஊழியம் செய்ய மாட்டேன். வேறு ஒருவருக்கு என் வாழ்க்கையும், தலையும் வணங்காது.

சைவத்தினுடைய சாரம், சைவத்தின் ஒரு அடிப்படையான விளக்கம்: பரம்பொருளான சதாசிவனை, பக்தியால் பரவுவதும், நம் பக்தியை அவர் ஏற்றுக்கொண்டு நம்மை வாழ்விக்கின்றார், நாம் அவாமீது வைத்த நம்பிக்கைபோல் அவரும் நம்மீது அதே நம்பிக்கையை வைத்திருக்கின்றார் என்கின்ற சிரத்தை, என்று புரிந்துகொண்ட சரணாகதி. அவ்வளவுதான், மொத்த சைவமுமே இவ்வளவுதான், வேறு ஒன்றும் இல்லை.

வாழ்க்கையையே எனக்கு விவுப்படைத்த ஒரு சன்யாசி தெருவில் நடந்துபோகும்பொழுது தெரியாமல் என்னுடைய படத்தை மிதித்துவிட்டுப் போவதைப் பார்த்த ஒருவா என்னிடம் வந்து, ''சாமி, உங்கள் படத்தை அவர் மிதித்துவிட்டுப் போனார்,'' என்று சொன்னாலெ, நான் சொல்வது இதைத் தான்: அப்பா, தெரியாமல் நடந்திருக்கும். விடப்பா!

தவறே செய்தாலும் அவன் தெரிந்து செய்திருக்கமாட்டான் என்கின்ற ஒரு மனப்போக்கு எப்பொழுது எனக்குள் வருமென்றால், அவனுடைய வாழ்க்கையின் நோக்கம் அந்த அளவிற்கு ஆழமாக என்னுடைய நம்பிக்கையைப் பெற்றிருக்கும்பொழுதான் வர முடியும்.

ஜீவன் சிவனுக்குப் பொய்த்தாலும், 'இல்லை, அவன் வாழ்க்கையின் நோக்கமும், அந்த நோக்கம் அவனுக்குள் பொதிந்திருக்கும் ஆழமும், அந்த ஆழத்தின் தாக்கமும் கண்டவன் நான், அதனால் நான் அவனுக்குப் பொய்க்க மாட்டேன்' என்று சிவனேக்கின்ற அளவிற்கு ஜீவனின் பக்தியின் சக்தியை வெளிப்படுத்தியது சுந்தாமூர்த்தி சுவாமிகளின் வாழ்க்கை மாத்திரம்கான்.

'எனக்கு அவரைத் தெரியும், நான் விழுந்து விழுந்து கும்பிடுகிறேன். ஆனால் என்னை அவருக்குத் தெரியுமா என்று தெரியவில்லையே' என்று நினைக்கின்றீர்கள். உங்களுக்கே அவரைத் தெரியும்பொழுது, அவருக்கு உங்க ளைத் தெரியாதா ? மொத்த சைவமும் இவ்வளவுதாங்க ஐயா.

நினைத்தவுடன் அடிவயிறே இனிக்கின்ற நம்பிக்கை -

இறை நம்பிக்கை

நினைத்தவுடன் அடிவயிறே இனிக்கின்ற நம்பிக்கை... நினைத்தவுடன் அடிவயிறு கலங்குகின்ற துன்பத்தை எல்லாரும் பார்த்திருப்பீர்கள் வாழ்க்கையில்.

ஒரு புது வார்த்தையைச் சொல்கின்றேன், 'நினைத்தவுடன் அடிவயிறே ஆனந்தம் கொள்ளுகின்ற நம்பிக்கை'

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நினைத்தவுடனேயே அடிவயிறே கலங்குகின்ற துக்கம் ஏன் வருகிறதென்றால், ஏற்கெனவே வந்த துக்கங்களெல்லாம் நினைவில் பொங்கி, அலைமோதி, 'ஐயோ! அந்த மாதிரியே ஆயிடுமோ, இல்லை அதைவிட மோசமாக ஆகிவிடுமோ ? என்று கலங்குவதுதான் அடிவயிறு பொங்குகின்ற துக்கம்.

பெருமானையும், அவர்தம் அடியாரின் வாழ்வில் அவர் ஆடிய விளையாடல்களையும் நினைத்தவுடனேயே, 'என் வாழ்விலும் அந்தமாதிரி ஆகுமோ, அதைவிட வேறமாதிரி ஆகுமோ!' என்று மனதெல்லாம் ஆனந்தத்தால் பொங்குகிற மாதிரியான சத்தியங்கள்தான் சைவம்.

திருவண்ணாமலை

அடிவயிறு பொங்குகின்ற துக்கம் வரவேண்டும் என்றால், உங்கள் வாழ்க்கையையே நினைத்துக்கொண்டிருப்பது.

அதாவது, விளையாடல்களெல்லாம் குப்பையாக இருக்க வேண்டும். அடிவயிறு பொங்குகின்ற ஆனந்தம் வரவேண்டுமென்றால், உங்கள் வாழ்க்கையில் பெருமான் ஏற்கெனவே செய்த விளையாடல்களெல்லாம் நினைவிற்கு வரவேண்டும்.

எதை அதிகமாக உங்கள் உயிர்-நினைவில் சேமித்து வைத்துள்ளீர்களோ, அதுதான் திரும்பத் திரும்ப மேலே வரும். என்ன சாப்பிட்டீர்களோ, அது தான் ஏப்பமாக வரும். 24 மணிநேரமும், தொலைக்காட்சி தொடர் கதை களைப் பார்த்துக்கொண்டிருந்தீர்களானால் - - அதாவது, மருமக(ளுக்குத் தெரியாமலேயே, மருமகளிடமிருந்து மகனைப் பிரிப்பது எப்படி? சட்டத்தின் பிடியில் மாட்டாமல் மாமியாரைச் சாகடிப்பது எப்படி? தானாகவே மருமகளை ஓடச்செய்வது எப்படி? - என்று இருக்கின்ற எல்லாவிதமான கடுமையான குற்றச் செயல்களையும் எப்படிச் செய்வது என்று வருடக்கணக்காக எடுக்கப் படுகின்ற பாடம்தான் இந்த தொலைக்காட்சி தொடர்கள் - இவையே உங்கள் உயிர்-நினைவில் பகியும்.

அந்நிலையில், ஒரே ஒருநாள் புருஷன் 5 நிமிடம் தாமதமாக வந்தால்கூட மனசுக்குள் என்ன ஆகிறது, 50 காரணங்கள் வந்துவிட்டுப் போகிறது. கேவறொரு போய்விட்டார்களா? அவரே இதுக்குமேல வீட்டுக்கு வரவேண்டாம் என்று முடிவுசெய்து விட்டாரா? அலுவலகத்தில் வேலை போய்விட்டதா? துக்கத்தில் தற்கொலை செய்துகொண்டாரா? நான் வேறு இன்று காலை அவரிடம் கடு மையாகப் பேசியிருக்கக்கூடாது. நான் கொஞ்சம் ஒழுங்காகப் பேசி அனுப்பி இருந்திருக்க வேண்டும் என்று.

சமூகம் சார்ந்த குற்றம், கொலை போன்றவற்றை அலசி ஆராய்வதாகக் கூறிக்கொண்டு ஒலிபரப்பப்படும் 'க்ரைம்-ஷோ'வின் பின்னணி இசையைப் பார்த்தீர்களென்றால்.. அப்பா.. இடி மாதிரி அந்த இசை இடிக்கும்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், தொலைக்காட்சி தொடர்கள் நம்முடைய வாழ்க்கையின் பாகமாக மாறுவதற்கு முன்பாக, இந்த அளவிற்கு மனக்கொந்தளிப்பு, மன உளைச்சல், நினைத்தவுடன் அடிவயிறு கலங்குகின்ற துக்கம் நமக்கு இருந்திருக்கவில்லை. நினைத்துப் பார்ப்பதற்கு தவறான நினைவுகளை அளவுக்கதிகமாக உண்டுவிட்டு, கண்டுவிட்டு, எப்பொழுது ஒரு சிறு காரணம் வரும், துக்கப்படலாம், உயிரே நடுங்கும் அளவிற்கு வேதனைப் படலாம் என்று காத்துக்கொண்டிருக்கின்ற ஜீவன்களைப்போலே மாறிவிட்டோம்.

உங்கள் உடலிற்குள்ளும் மனத்திற்குள்ளும் எப்பொழுது துக்கத்தைப் பரப்பலாம் என்கின்ற உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் நீங்கள் வைத்திருந்தால் அந்த வாழ்க்கைதான் நாத்திக வாழ்க்கை. அப்பொழுது எந்த ஒரு சிறு காரணம் கிடைத்தாலும், அது உங்களை ஒரு துக்க சுனாமி மாதிரி தாக்குகிறது. அதனால்தான் வாழ்க்கை துக்கமாக இருக்கிறது.

ஆனால் அதுவே, கரிக்குருவிக்கு உபதேசித்ததும்,

வந்திக்காக, பிட்டுக்காக மண் சுமந்ததும், நரியெல்லாம் பரியாக்கி தானே குதிரைச் சேவகனாய் வந்ததும், பாலைக் கொடுத்து சம்பந்தனை ஆண்டதும், குலை கொடுத்து அப்பரை ஆண்டதும், குதிரைஓட்டும் கோலை எடுத்து மணிவாசகரை ஆண்டதும், ஒலை கொடுத்து சுந்தரனை ஆண்டதும், இதெல்லாம் நினைவில் இருந்தால், இதெல்லாம் உங்கள் உயிர்-நினைவில் இருந்தால், எந்த ஒரு சூழலிலும் இது வெடித்து, பக்தியை, ஆனந்தத்தை உங்களுக்குள் பொங்க வைக்கத் தயாராக இருக்கும். அதுதான் சைவத்தை வாழ் வது.

துக்கமும், துயரமும், துயரமும், கல்மஷமும், வலியும் கொண்ட தொலைக்காட்சி தொடர்களைத் தொடர்ந்து பார்த்தீர்களென்றால், வாழ்க்கையில் எது தவறாக போகுமோ? எப்படித் துக்கம் வருமோ? என்று துக்கமும், துயரத்தையும், வேதனையையும், வலியையும் எதிர்நோக்கியே காத்திருப்பீர்கள். கடும் பயத்தையும் நரம்புத்தளர்ச்சியையும் உருவாக்கக்கூடிய அண்ணீரகச் சுரப் பியைச் சுரக்கச்செய்ய உங்களுடைய உயிர்-நினைவு காத்துக்கொண்டிருக்கிறது.

ஒரு சிறுவிஷயமாக இருந்தால்கூட்போதும், உயிரே நடுக்குகின்ற மாதிரி உடலும்- மனமும் நடுநடுங்கி, தன் இருப்புநிலையை இழுந்து, இயல்பு நிலையை மறந்து, இயைபாக இருக்கும் நிலையும் ஒழிந்து, மீண்டும் மீண்டும் துக்கச் சுனாமி உங்களுக்குள் அடிப்பதற்கு, துக்கப்பேரலை உங்களுக்குள் அடிப்பதற்கு நீங்களே காரணமாகிறீர்கள். இதுதான் நாத்திகம். எந்த நினைவுகள் அதிகமாக உங்களுடைய உயிர்-நினைவில் இருக்கிறது என்பதுதான் நீங்கள் எந்த வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்பதை முடிவுசெய்கிறது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், செய்கின்ற செயல் சார்ந்து உங்கள் வாழ்க்கை அமைவதில்லை. நீங்கள் செய்கின்ற செயல், உங்கள் வாழ்க்கையின் மிகச் சிறிய பாகம், நீங்கள் இருக்கின்ற உணர்வுதான் உங்கள் வாழ்வின் பெரும்பாகம். பெரும்பாகத்தை தூய்மை செய்யுங்கள், பொருமான் பாகம் கிடைக்கும்.

பெரும்பாகத்தை தூய்மை செய்வதற்கு லீலாத்தியானம் மாதிரி ஒரு அருமையான வழி வேறு எதுவும் இல்லை. நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், இப்பொழுது நீங்கள் சினிமாவில் பார்க்கின்ற, தொலைக்காட்சியில் பார்க்கின்ற செய்திகளைவிட, நம்முடைய அளவு உண்மை உடையவை, அதுமட்டுமல்ல, அதிக அளவு உண்மையும், உண்மையான மனிதர்களாலும் உருவாக்கப்பட்டது. அதனால் இந்தப் புராணங்களும், நம்முடைய இதிகாசங்களும் பொய் என்று உங்களுக்குக் கற்றுக்கொடுத்த பொய்யர்கள்தான் பொய்யா்கள்.

'புராணம் பொய்' என்று அதைப் படிப்பதை நிறுத்தினார்கள், இப்பொழுது இவர்கள் புராணத்தைப் படிக்க வைக்கிறார்கள். இவர்கள் புராணத்தைப் படிக்க வைக்க, இதற்கு முன்பிருந்த புராணத்தை பொய் என்று உங்களை நம்ப வைத்தார்கள்.

எந்த ஒரு சூழல் உங்கள் கவனத்திற்கு முன்பு வந்தாலும், எந்த ஒரு நிகழ்வை நீங்கள் எதிர்கொண்டாலும், அதை எவ்வாறு நீங்கள் உள்வாங்கி உங்களுக்குள் பதிய வைத்துக்கொள்கிறீர்கள் (உணர்வுபடுத்திக்கொள்ளுதல்)என்பது மிக முக்கியம். ஒரு மனித வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சம், எவ்வாறு நீங்கள் வாழ்க்கையை உணர்வுபடுத்திக்கொள்கின்றீர்கள் என்பதுதான்.

சிலபேர் என்னிடம் கேட்பதுண்டு: ''தவறு செய்கிறவர்கள் எல்லாம் நல்லாவே இருக்கிறார்கள். நல்லது செய்கிறவர்கள் எல்லாம் கெட்டுப்போகிறார்களே சாமி!' என்று. உங்கள் உணர்வுப்படுத்துதல்தான் தவறே தவிர, இறைவனின் தர்மம் தவறுவதே இல்லை.

சரி எது ? நல்லது எது ? நிம்மதி எது ? துக்கம் எது ? என்று இந்தக் கருத்துக்களை நீங்கள் உணர்வுப்படுத்திக்கொள்வதில் தவறு இருக்கிறதே தவிர, இறைவனின் தர்மம் தவறுவதே இல்லை.

எதுகாலம் தொங்கிக்கொண்டிருக்கிறதோ, அதுவரை இறைவன் தா்மம் தவறுவதே இல்லை. எந்தச் சக்தியும் தாங்கலும் இல்லாது அந்தரத்தில் பூமி இருப்பதும், சுற்றுவதுமே இறைவனின் தர்மம்தான். அவன் தா்மம் தவறுவதே இல்லை.

உண்மையிலேயே சொல்கிறேன், என்னுடைய வாழ்க்கையில் நான் நினைத்து நினைத்து சந்தோஷப்படுகின்ற, ஆனந்தப்படுகின்ற ஒரு விஷயம், நல்லவேளை தொலைக்காட்சி மனித வாழ்க்கையின் அதீதமான பாகமாக மாறுவதற்கு முன்பாகவே பிறந்து வளர்ந்துவிட்டோம். அதுவும் அதெல்லாம் அண்ட முடியாக கிராமக்கில் பிறந்து வளர்ந்தோம்.

நல்லவேளை, இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது, மாலையானால் எனக்குத் தெரிந்ததெல்லாம், அண்ணாமலையான் ஆலயம்தான். காலை புலாந்தாலும், மாலை மங்கினாலும், வாழ்க்கை அவன் வாழும் சாலைதான். காலை புலா்ந்தாலும், மாலை மங்கினாலும் அவன் ஆலயமே கதி.

வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் இருக்கின்ற பலபேரை நான் சந்திக்கிறேன். அவர்களிடம் நான் கேட்கிறேன். ''ஏன் தொடர்ந்து வேதனை, துக்கம், அழித்தல், வஞ்சகத்தன்மை - போன்றவைதான் இயற்கையான வாழ்க்கைமுறை என்பதுபோன்ற கோற்றத்தைப் பதித்தும் வகையிலான நிகழ்ச்சிகளையே தரு கிறீர்கள் ? ''

சாதாரண மாட்டிக்கொள்ளாமல் திட்டம்போடுவதற்கு நாங்கள் கற்றுக்கொடுக்கிறோம், இதுவே இயற்கையான வாழ்க்கைமுறை என்ற ஒழுக்கமுறை நிறுவப்படுவது தான் மிகப்பெரிய கொடுமை. இதற்கு, 'சுதந்திரம்' என்று வேறு ஒரு தலைப்பு கொடுக்கிறார்கள்.

நல்லவேளை இதெல்லாம் நடப்பதற்கு முன் பிறந்து வளர்ந்துவிட்டோம்.

இதுபோன்ற கருத்துக்கள் தொடர்ந்து உள்சென்று கொண்டிருந்தால்.. உடலில் இரத்தத்திற்கு பதில் அமிலத்தை ஊற்றிச் சுத்த வைத்துக்கொண்டிருக்கிறோம்.

எந்த ஒரு சூழலிலும், உங்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்று நீங்கள் நம்பத்துவங்கிவிட்டால், உணர்வுப்படுத்திக்கொள்ளத் துவங்கிவிட்டால் நீங்களும் அநீதி இழைக்கத் தயாராகி விடுவீர்கள்.

இந்த நாகரீக உலகத்தில், எல்லாவிதமான ஊடகங்களும்... பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என்ற பெயரில், உங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக உங்களை நம்பவைக்கின்றன. நீங்களும் அந்த நம்பிக்கை ரொம்ப சுகமாக இருப்பதால் அதைச் சாப்பிட ஆரம்பித்து விடுகிறீர்கள்.

மாமியாரைச் கொடுமைக்காரியாக சித்தரிக்கின்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து, 'இதில் வருகின்ற மருமகள் நான், என் மாமியார் இது' என்று எல்லா மருமகளும் நினைக்கிறார்கள். மருமகள் கொடுமைக்காரியாகச் சித்தரிகின்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து, 'இதில் வருகிற மருமகள் என் மருமகள், இந்த மாமியார் நான்' என்று எல்லா மாமியாரும் நினைக்கிறார்கள்.

நீங்கள் வஞ்சிக்கப்படுவதாக உங்களை நம்பவைப்பது சுலபம். அந்த நம்பிக்கை உங்களுக்குள் மற்றவர்களை வஞ்சிக்க மனதளவிலும், கருத்தளவிலும், உணர்வளவிலும் தயாராகிவிடுகின்றீர்கள். அந்தத் தயார் நிலையிலிருந்து நீங்கள் செய்கின்ற எல்லாச் செயலுமே, உங்கள் இருப்பு நிலைக்கு எதிரானதாக, உங்கள் இயல்பான சுபாவமான சிவபோத நிலையான நித்யானந்த நிலைக்கு எதிரானதாக இருக்கின்றது.

எப்பொழுது ஆரம்பிக்கின்றீர்களோ, அப்பொழுது எந்தவிதமான நல்லது-கெட்டது, ஞாயம் - தா்மம் எதையும் பார்க்காமல், எதை வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராகிவிடுவீர்கள். மிருகத்தன்மைக்குள் நுழைந்து விடுவீர்கள்.

அப்படியில்லாமல், இறைவனுடைய 64 லீலைகளையும் அறுபத்துமூவா கதைகளையும் நீங்கள் உள்வாங்குவீர்களானால், எப்பொழுதும், எந்தச்சூழலிலும் நீங்கள் காக்கப்படுகிறீர்கள், இரட்சிக்கப்படுகிறீர்கள், தாங்கப்படுகிறீர்கள்.

பிரபஞ்சத்தையே இயக்கும் பேரருட் கருணை சக்தி, எப்பொழுதும் உங்கள் உள்ளும் புறமும் பொங்கி, உங்களை நித்யானந்தத்தில் நிலைபெறச் செய்துகொண்டே இருக்கின்றது. இந்த உணர்வுப் பதிவு உங்களுக்குள் செல்வதற்கு இறைவனின் திருவிளையாடல்கள் மிகப்பெரிய வழிவகுக்கும்.

உங்களைத் தாங்கிக்கொண்டிருக்கும் திருக்கரம் எல்லாச் சக்தியுடையது மட்டுமல்ல, எல்லா வல்லமையும் உடையது மட்டுமல்ல, பெரும் கருணை உடையது. இந்த சத்தியம் உங்களுக்குள் மலரும்பொழுது எல்லோரையும் இனிமையோடும், ஆனந்தத்தோடும், அன்போடும், கருணையோடும், பொங்குகின்ற பொறுப்போடும், சிரத்தையோடும் அணுகத் துவங்கிவிடுவீர்கள்.

'தொலைக்காட்சித் தொடர்களும் - திருவிளையாடலும்' - அதுதான் இன்றைக்கு நான் சொல்ல விரும்புகின்ற கருத்து.

உங்களையும் வலிக்க வைத்துக்கொண்டு, உங்களைச் சுற்றி உலகமே உங்களை ஏமாற்றுவதற்காகத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது நம்ப வைத்து, நீங்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறீர்கள் என்ற முடிவுக்கு உங்களை வரவழைத்து, தொடர்ந்து நீங்கள் வஞ்சிக்கப்படுவதனால் யாரை வேண்டுமானாலும் நீங்கள் என்ன செய்தாலும் அது தவறில்லை என்று உங்களை

நம்பவைத்து, வஞ்சக வாழ்க்கைக்குத் தயார்படுத்தி உங்களை வாழ்க்கைக்குள் அனுப்புவதற்கு பதிலாக, ஒரு கொடூரமான, குரூரமான, அழிக்கும் சக்தியாக, இராட்சஸ்த் தன்மையை உங்களுக்குள் உருவாக்கி, உங்களை வாழ்க்கைக்குள் அனுப்புகின்ற ஒரு எதிர்மறை சக்தி தொலைக்காட்சித் தொடர்கள்.

நீங்கள் வஞ்சிக்கப்படுகிறீர்கள், நீங்கள் யாரை எப்படி வஞ்சித்தாலும் அதில் தவறில்லை என்று நம்பினால் நீங்கள்தான் இராட்சஸர்கள்.

நீங்கள் இரட்சிக்கப்படுகிறீர்கள், எப்போதும் போராட் பெருங்கரத்தால் தாங்கிப் பிடிக்கப்படுகிறீர்கள் என மிகத்தெளிவாக உங்கள் உணர்வில் உணர வைக்கப்பட்டு, அதே பேரருள், ஆனந்தம், கருணை இவை எல்லாவற்றையும் உங்கள் வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளிலும் நீங்கள் வாழ்ந்துகொண்டிருந்தால், சிந்தனையும் செய்துகொண்டிருந்தால், வெளிப்படுத்திக்கொண்டிருந்தால் நீங்கள்தான் சிவகணங்கள்.

இந்த இரண்டே இரண்டு விதத்தில்தான் வாழ்க்கை நடக்க முடியும். நீங்கள் வஞ்சிக்கப்படுகிறீர்கள் என்று நம்பி நாசமாகப்போவது. நீங்கள் இரட்சிக்கப்படுகிறீர்கள் என்று நம்பி ஆனந்தமாக வாழ்வது.

எப்பொழுதும் நீங்கள் எம்பெருமானால் காத்து, இரட்சித்து, அவருக்கு நீங்கள் உண்மையாக இல்லாதபொழுதுகூட அவர் உங்களுக்கு உண்மையாக இருக்கின்றார் என்கின்ற சத்தியத்தை உங்களுக்குள் புகட்டுகின்ற, அந்த சாத்தியத்தை உங்களுக்குச் சொல்வதற்காகத்தான் சுந்தரமூர்த்திபெருமான் அவதாரம் செய்து, இந்த லீலை எல்லாம் நடத்திக்காட்டினார். நல்லவேளை பரவை நாச்சியும் - சங்கிலி நாச்சியும் தொலைக்காட்சித் தொடர்களையெல்லாம் பார்க்கவில்லை.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்,

தொலைக்காட்சித் தொடரில் காட்டுகிற மாதிரி துக்கங்களும், கொடுமைகளும் உங்கள் வாழ்க்கையில் எத்துணை முறை நடந்திருக்கிறது என்று நீங்கள் நம்புகின்றீர்களோ.. சத்தியமாக சொல்கிறேன் அதைவிட அதிக முறை திருவிளையாடல்களிலும், புராணங்களிலும், இதிகாசங்களிலும் பெருமான நடத்திக்காட்டியதாக சொல்லப்பட்டிருக்கின்ற 'காப்பாற்றுதல், தாங்கிப்பிடித்தல், ஏற்றுக்கொள்ளுதல், நிகழ்ந்திருக்கிறது.

தொலைக்காட்சித் தொடர்களில் காட்டுகிற மாதிரி 'உடைந்துபோவது' 100 முறை நடந்திருந்தால், திருவிளையாடற்புராணங்களில் சொல்லப்படுகிற மாதிரி 'ஒட்ட வைத்து, தூக்கி நிறுத்தப்படுவது' 101 முறையாவது நடந்திருக்கிறது. அதனால்தான் இன்னமும் நீங்கள் நின்றுகொண்டிருக்கிறீர்கள். 100 முறை விழுந்தால் 101 முறை எழுந்து நின்றிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதனால்தான் இன்னும் நின்றுகொண்டிருக்கிறீர்கள்.

''எந்துனை? ? என் அப்பன் துணை இருப்பான்' என்கின்ற தெளிவுதான் சைவம் !

இந்த நவ நாகரீக பகுத்து எறியும் பன்றிகள், 'எத்துனை என் அப்பன் துணை இருப்பான்'? ? என்கின்ற கருத்தை, ஏதோ ஏமாற்றுக் கருத்துபோலவும், தன்னைத்தானே மயக்கத்தில் ஆழ்த்திக்கொண்ட வெகுளி மனிதர்கள்தான் இதுபோன்று நினைத்துக்கொண்டு வாழ்வார்கள் என்றும், இந்தக் கருத்தையே ஒரு சட்டவிரோத கருத்துபோன்று சமூகத்தில் மாற்றிவிட்டார்கள்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், 'எந்த நேரத்திலும், எந்தப் பிரச்சினை வேண்டுமானாலும் வரலாம், நீ

ஒன்றுமில்லாமல் போய் விடுவாய்' என்கின்ற பயத்தை உங்களுக்குள் விதைப்பவர்கள் இராக்ஷஸர்கள். யார் அந்த பயத்தை உங்களுக்குள் விகைக்கிறார்கள் என்று உங்கள் எல்லோருக்கும் கெரியும் - நாக்கிதர்கள்.

'எப்பொழுதும் எப்பெருமான் இருக்கின்றான், எத்துணை வெந்தாலும் எம் துணையாய் எப்பெருமான் இருக்கின்றான்' என்கின்ற சத்தியத்தை உங்களுக்குள் சாத்தியமாக்குபவர்கள் தெய்வங்கள்.

உண்மையில் நீங்கள் மாயையில் இல்லை. அவர்கள்தான் மாயையில் இருக்கிறார்கள். நீங்கள் தெளிவாக இருக்கிறீர்கள்.. மிகவும் தெளிவாகத்தான் இருக்கிறீர்கள்.

ஒரு குழு சொல்கிறது, ''என்ன பிரச்சினை வேண்டுமானாலும் வரலாம், என்னவேண்டுமானாலும் நடக்கலாம், யாரையும் நம்பாதே, என்னை மட்டும் நம்பு, நான்தான் ஏதாவது பிரச்சினை வந்தால் உன்னைக் காப்பாற்றுவேன்' என்று !

இன்னொரு குழு சொல்கிறது, ''ஒரு பிரச்சினையும் வராது அப்பனே, என் அப்பன் இருக்க எதுவும் வராது, நிம்மதியாக ஆனந்தமாக அவனைச் சிந்தித்து சிவமயமாய் வாழ்!' என்று!

'நிம்மதியாக இரு' என்று சொல்கின்ற குழுவுக்கு, அந்த இன்னொரு கூட்டத்தினரைப் பார்த்தால் கோபம் வருவதில்லை. ஆனால் அந்த இன்னொரு கூட்டத்தினருக்கு, 'நிம்மதியாக இரு' என்று சொல்கின்ற இந்தக் குழுவைப் பார்த்தாலே அடிவயிறு எரிகிறது. இதைப் பார்த்தே தெரியவில்லையா?! யார் மாயையில் இருக்கிறார்கள், யார் ஞானத்தில் இருக்கிறார்கள் என்று.

இந்தப் பயமுறுத்துகின்ற குழுவை ஞானிகள் அடித்ததாக கதை இருக்கு. ஆனால் ஞானிகள் எப்போதாவது இவர்களை அடித்ததாகக் கதை இருப்பதாகப் பார்த்திருக்கிறீர்களா? ஏனென்றால் நமக்குத் தேவையில்லை. அதிகபட்சமாக நம்மைக் காத்துக்கொள்வோம். ஞானிகளை அடித்த காமம் அவர்களுக்கே திரும்பிச் செல்கிறது. அவ்வளவுதான்.

முடிந்தவரை, பெருமான் ஆற்றிய லீலைகள், அறுபத்து மூவா வரலாறுகளையும், 64 திருவிளையாடல்களையும் படித்து, சிந்தித்து, உணர்விற்குள்ளே பார்த்து, இரசித்து, அவைகளை உங்கள் மெய்-நினைவாகவும், உயிர்-நினைவாகவும்

மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் வாழ்க்கையே வசந்தமாய், ஆனந்தமாய், சிவபோதத்தில் இருப்பதை தானாய் உணர்வீர்கள்.

பிட்டிற்கு மண் சுமந்ததும்..

கால் தேய வெறும்காலோடு நடுநிசியில் சுந்தரருக்காக தூதுபோனதும்

கரிக்குருவிக்கு உபதேசித்ததும்

இவையெல்லாம் சத்தியமாக கற்பனை இல்லை. கற்பனை கடந்த சத்தியம்.

இதெல்லாம் அப்பொழுது மட்டும்தான் நடந்தது என்று நினைக்காதீர்கள். இன்னமும் அவன் செய்துகொண்டே இருக்கின்றான். உங்கள் வாழ்க்கையில் எல்லாம்கூட நிகழ்த்திக்கொண்டே இருக்கிறான். ஆனால் ஊடகங்களினால் பதியப்படும் தகவல்களே உங்கள் தசைப்பதிவு, உயிர்ப்பதிவாக இருப்பதனால், கெட்டது நடக்கும்பொழுதுதான் ஒப்பிட்டுப்பார்த்து, ஆய்வுசெய்வதற் கான மூலப்பொருள் உங்களுக்கு இருக்கிறது. நல்லது நடக்கும்பொழுது ஒப்பிட்டுப்பார்த்து, ஆய்வுசெய்வதற்கான மூலப்பொருள் உங்களுக்கு இல்லாம் போய்விட்டது.

எதிர்பார்க்காமல் திடீரென்று ஒரு உதவி வரும்பொழுது, பெருமான்தான் அனுப்பியிருக்கிறார் ஏற்கெனவே பெருமான் இதுபோன்ற லீலைகளை நடத்தியது எல்லாம் உங்கள் தசைப்பதிவிலோ, உயிர்ப்பதிவிலோ இல்லை.

காரணம் என்னவென்றால், அந்த மாதிரி நடந்ததெல்லாம் எதேச்சையாக நடந்ததென்று நினைக்கின்றோம். பிரச்சினையை மட்டும் அவர் திட்டமிட்டு உங்கள்மீது ஏவி விட்டார் என்று நினைக்கின்றோம். என்னங்க ஐயா இது ? தீர்வு நடந்தால் ஏதேர்ச்சையாக நடந்தது, பிரச்சினை வந்தால், சிவன், அவர் வேலையெல்லாம் விட்டுவிட்டு.. னும் பார்வதியுடன் அமர்ந்துகொண்டு, நந்தியையும் கூட அழைத்துக்கொண்டு, விளக்குப் பிடிக்கச் சொல்லி.. எல்லாம் ப்ளான் பண்ணி.. ''இவன் இருக்கான் பாரு.. இந்த ஊரில், இவனை நாம் சும்மா விடக்கூடாது. இவனை கட்டம் கட்டு' என்று நமக்காகவே நான்கு நாள் உட்கார்ந்து சிந்தித்து, திட்டபோட்டு, அந்தக் கதாப்பாத்திரங்களையெல்லாம் நம்மீது ஏவி விட்டதுபோல நினைக்கின்றோம். ஆனால் தீர்வு வரும்பொழுது, "எதேர்ச்சையாக நடந்துவிட்டதப்பா, நான் படு புத்திசாலிப்பா, அதனால் தப்பித்துவிட்டேன்பா!' என்கிறோம்.

கிணறும் லிங்கமும் நடந்துகொண்டுதான் இருக்கிறதப்பனே!!!

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை பொய் இல்லை ! நீங்கள் வஞ்சிக்கப்படுகிறீர்கள், ஏமாற்றப்படுகிறீர்கள் என்று உங்களைத் தொடர்ந்து நம்பவைப்பவர்கள் உங்களைப் பலவீனர்களாக மாற்றுகிறார்கள்.

'இறைவன் எப்போதும் உங்களைத் தாங்குகின்றான், எப்போதும் உங்களைக் காக்கின்றான், எப்போதும் உங்களை மேம்படுத்துகின்றான், எப்பொழுதும் உங்களைத் தாங்கி நிற்கின்றான்' என்று நீங்கள் நம்பும்பொழுது பலசாலியாக, தெய்வீகத்தன்மை உடையவா்களாக மாறுகின்றீர்கள். எந்த நம்பிக்கை வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள்.

சுந்தரமூர்த்தி நாயனார்.. தன்னுடைய உணர்ச்சி - உணர்வு - உயிர் மூன்றிலும், பெருமான் என்னவன் நான் தம்பிரான் தோழன்.. என்கின்ற உணாவை, தன் உணர்வுப்படுத்தி அனுபவமாக வைத்திருந்தார். அதனால் ஒரு பெண் என்ன? இரு பெண் என்ன? எத்துணை பெண், பொன், மண் கேட்டாலும் பெருமான் தூது சென்றிருப்பான். ஏனென்றால் அவர் உணர்வு எதுவோ அது மிகுந்த உத்தம நிலையில் இருந்தது. உணர்வை உத்தமமாக்கும் உயர் வாழ்க்கைமுறையே சைவம்.

பெருமான் தூது சென்றது மட்டுமல்ல, அடுத்தது என்ன செய்தார் என்றும் சொல்கிறேன், கேளுங்கள்..

இதுதான் உச்சக்காட்சி.

காமிக ஆகமம் - வாழ்வை வழிநடத்தும் விஞ்ஞானம்

ஆழ்ந்து கேளுங்கள், சுந்தரர் கேட்டதையெல்லாம் கொடுத்தது மட்டுமல்லாது, கேட்டதையெல்லாம் செய்தது மட்டுமல்லாது, அதையும் தாண்டி பெருமான், சுந்தரருடைய பெயர்கூட கெட்டுவிடக்கூடாது என்று எந்த அளவிற்கு சிரத்தையோடு இருந்தார் என்று பாருங்கள்.

இரவிலே பெருமானை, கால்தேய திருவடிகூட இல்லாமல் திருவாரூரின் தெருக்களிலே தூதுக்காக நடக்கச் செய்து, தன்னுடைய காம சுகத்திற்காக பெருமானை ஏவல் கொண்ட செய்தி நாடு முழுவதும் தீ எனப் பரவியது.

சோழ நாட்டிலே, திருப்பெருமங்கலத்தில் ஏயர்கோன் கலிக்காமர் என்று ஒரு பெரிய சிவனடியார் இருந்தார். இதைக் கேட்டதும் அவருக்கு நெஞ்சு பதைத்தது! ஐயோ!! ஒரு சிவனடியார், தொண்டன், பக்தன் பெருமானை ஏவல் கொல்வது சரியா? ஏயா்கோன் கலிக்காமருக்கு மட்டுமல்ல, அதைக் கேட்ட எல்லாச் சிவனடியாருக்குமே நெஞ்சு பதறும். தன்னுடைய காம சுகத்திற்காக, தன்னுடைய தேவைக்காகப் பெருமானைத் தூது செய்வது, அதுவும் இரண்டுமுறை பெருமானை ஏவல்கொள்வதா? ஏயர்கோன் கலிக்காமரால் இதைக் காங்கிக்கொள்ள முடியவில்லை.

ஆழ்ந்து கேளுங்கள்

சோழ நாட்டிலே, திருப்பெரும் தலம் ஒன்று.. இதில் ஏயர்கோன் கலிக்காமர் என்கின்ற சிவனடியார் வன்தொண்டர் சுந்தரா், தன்னுடைய சுய நலத்திற்காகப் பெருமானை ஏவல் கொண்டார் என்கின்ற செய்தி கேட்டதும், கடும்கோபமடைந்தார்.

எல்லாத் தொண்டா்களுக்கும் கோபம் வரவில்லையென்றால் அவர்கள் சிவத் தொண்டா்கள் என்று சொல்ல முடியாது. அனால் பெருமானோ, ''இது எனக்கும் அவருக்கும் உள்ள தனி-உறவு, அதற்கெல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள், அதற்கெல்லாம் நீங்கள் கோபப்படாதீர்கள்,''என்கிறார்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த மொத்த சூழ்நிலையையும் ஆராய வேண்டும். ஏயர்கோன் பெருமானோ, அந்தக் கோபத்தைத் தணித்து இருவரும் இனிமையாக நட்பு பாராட்ட வேண்டும் என்று விரும்புகின்றார். உண்மையிலேயே சுந்தரர் செய்தது இன்னொரு சிவபக்தருக்கு நிச்சயமாக ஜீரணித்துக்கொள்ளக்கூடிய விஷயமல்ல. ஆனால் அந்த அவப்பெயர்கூட சுந்தரருக்கு வரக்கூடாது என்று நினைக்கின்றார்.

காரணம் என்னவென்று ஆழ்ந்து பாருங்கள், அந்த அளவிற்கு.. பெருமான் சுந்தரா் மீது நட்பு பாராட்ட, சிரத்தை வைக்க, அன்பு செய்ய காரணம் என்ன? அப்படி என்ன செய்து விட்டார் சுந்தரா? பெருமான் இப்படி ஓடி ஒடி கேட்டதையெல்லாம் செய்தது மட்டுமல்லாது, கேட்டது கெட்டதாக இருந்தாலும் அதன் காரணத்திற்காக இவர் பெயர்கூட கெட்டுவிடக்கூடாது என்று நினைக்கின்ற அளவிற்கு, ஓடி ஓடி சுந்தரரை காக்க வேண்டிய அவசியம் என்ன பெருமானுக்கு ? இந்த இருவருடைய உறவின் நட்பையும் பாருங்கள், மொத்தக் கதையையும் படித்தால்தான் அது புரியும்.

ஒரு காலத்திலே தேவர்களும், அசுரர்களும் கடலைக்கடைந்து அமிர்தம் எடுப்பதற்காகக் கடலைக் கடைகிறார்கள். அப்பொழுது, கடைவதற்காக உபயோகப்படுத்திய பாம்பு வாசுகி விஷத்தைக் கக்குகிறது. அந்த விஷத்தைப் பார்த்ததும் அசுரா்கள், தேவர்கள் எல்லோரும் விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். பிரச்சினை என்று வந்தவுடன் ஓடிப்போகின்ற கும்பல். பிரம்மா விஷ்ணு எல்லாரும்கூட ஓடிப்போய்விட்டார்கள்.

இந்த விஷத்திலிருந்து பூமியைக் காக்கவேண்டிய பொறுப்புடைய எம்பெருமான் அமாந்திருக்கின்றார். யாருமே இல்லை அருகில். அந்த தைரியத்தோடு, நெஞ்சுரத்தோடு எம்பெருமான் இருக்க, ஒரு தீங்கும் வராது என்ற சிரத்தையோடு உடன் நின்றவர் ஆலால சுந்தரர்.

உண்மையிலேயே அழிந்துபோய்விடுமோ என்கின்ற பயத்தையும் உருவாக்கி, அந்தச் சூழ்நிலையைக் காட்டினால்தான், யார் ஆலால சுந்தரர் என்று நமக்கே தெரியவரும். ஒரு காலத்தில் என் தியான முகாம்களில் கலந்து கொள்வது என்பது நாகரிகம். இன்னொரு காலத்தில் என்னை எதிர்ப்பது நாகரிகம். நாக ரிகத்திற்காக வருவது, நாகரிகத்திற்காகப் போவது அதற்குப்பெயர்தான் அழகுப்போட்டிகளில் நடந்து காட்டப்படும் பூனைநடை -என்று சொல்வது. நாகரிகத்திற்காக வந்தது நாகரிகத்திற்காகப் போய்விட்டது.

அதுபோலத்தான், விஷம் திரண்டாலும் பெருமான் இருக்க ஒரு அழிவு வருமா? என்ற தைரியத்தோடு நின்றது மட்டுமல்லாமல், பெருமான் கடைக்கண் உத்தரவைப் புரிந்துகொண்டு, மொத்த விஷத்தையும் ஒன்றாய் உருட்டி, கன் கையில் காங்கித் திரட்டிக் கொண்டுவந்து பெருமானிடம் ஒப்படைத்தவர் ஆலால சுந்தரர்.

அதன் அருகில் சென்றால் இறந்துவிடுவோமோ என்று விஷ்ணுவும்-பிரம்மாவும் கூட ஓடிப்போய்விட்டார்கள். ஆனால் தைரியமாகச் சென்று கைகளில் தாங்கி, சோதனையின்போது உடன் இருந்தது மட்டுமல்லாமல், அதைச் சாதனை ஆக்குவதற்கு துணை நின்றதனால், ஆலால சுந்தரனுக்கு ஒரு துக்கமும் வராமல், ஒரு தீங்கும் வராமல் எம்பெருமான் காக்கின்றான். அதுதான் நட்பின் இரகசியம்.

'நீ செய்த அந்த ஒரு செயல்போதுமப்பா, நீ என்ன வேண்டினாலும் அதைச் செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்று, என்ன வேண்டுமானாலும் செய்கிறேன்' என்று எம்பெருமானே உருகி, எம்பெருமானே முடிவுசெய்த, எம்பெருமானே நினைந்து, எம்பெருமானே அன்பு செய்த சுந்தரமூர்த்திப் பெருமான்.

ஏயர்கோன் கலிக்காமர்மீது சுந்தரருக்கு உண்மையில் எந்தக் கோபமும் வருத்தமும் இல்லை. அனால் ஏயர்கோன் கலிக்காமருக்கு சுந்தரர்மீது வருத்தம், அந்த வருத்தம் காரணத்தோடு விளைந்த வருத்தம். பெருமான் எப்படியாவது இந்த ஊடலை, பிணக்கைத் தீர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கின்றார். இந்த வருத்தம் தீர வேண்டும், பூரணத்துவம் வரவேண்டும் என்று நினைக்கின்றார்.

உடனே ஏயர்கோன் கலிக்காமருக்குத் தீராத சூலை நோய் கொடுத்தார். கொடுத்தார். கொடு த்தது மட்டுமல்லாது, அவர் கனவிலே போய், ''நம் வன்தொண்டன் சுந்தரன்தான் இதைத் தீர்த்து வைக்கின்ற ஒரே வழிதெரிந்தவன், அவன் தொட்டால், அது மாத்திரம்தான் இதற்குத் தீர்வு, '' என்று சொல்கிறார்.

சுந்தரர் கனவில் வந்து, ''அப்பா, போய் அவன் சூலை நோயைத் தீர்த்து வைத்து வா,'' என்று சொல்கிறார். இப்படியாவது இருவரையும் சேர்த்துவிடலாம் என்று.

ஆனால் சில சில இருக்கிறார்கள்.

Part 3

ஏயர்கோன் கலிக்காமர் சொல்கிறார், ''எம்பெருமானே! வழிவழியாய் உனக்கு அடிமையாய் இருக்கும் எனக்கு வந்த ஒரு வியாதியை, புதியவனாகிய சுந்தரன் வந்து தீர்ப்பதா? அவன் வந்து தொட்டு நான் நோய் தீர்ந்து வாழ வேண்டிய அவசியமே இல்லை," என்று உடைவாளை எடுத்து வயிற்றைக் கிழித்து இறந்துவிடுகின்றார்.

''உனக்கு ஒரு தீங்கு செய்து, உனக்கு ஒரு மாறு செய்த ஒருவன் தொட்டுத்தான் என் வயிறு சரியாக வேண்டும் என்றால், அந்த வியாதி தீர்ந்து அப்படி இந்த உடலில் வாழ்ந்து ஒரு தேவை எனக்கில்லை," என்று வயிற்றைக் கிழித்து இறந்துவிடுகின்றார் ஏயர்கோன் கலிக்காமன்.

பக்தியின் ஆழத்தைப் பாருங்கள். 'நீயே சொன்னாலும் உனக்கு ஒரு தீங்கு செய்தவர்களைச் சும்மா விடமாட்டோம், நீயே மறுத்தாலும் உனக்கு ஒரு தீங்கு செய்தவரை மன்னிக்க மாட்டோம். '

பெருமானையே நடுநடுங்கச் செய்யும் பெரும் பக்தி.

இதைக் கேள்விப்பட்டதும் சுந்தரமூர்த்தி நாயனார், ஐயோ! என்று அலறி அடித்துச் செல்கின்றார். சென்ற இடத்திலே ஏயர்கோன் கலிக்காமரின் உடல் வீழ்ந்துகிடப்பதை, குருவாளால் வயிற்றைக் கிழித்துக்கொண்டு அவர் விழுந்துகிடப்பதைப் பார்க்கிறார்.

'ஐயோ! சிவ பக்தன் மனம் வருந்துகின்ற நிலைக்கு நாம் காரணமாகி விட்டோமே! நம் சுயநலத்திற்காக பெருமானை ஏவல் கொண்டது சரியா? அதைக் கண்டு வருந்தி இவருடைய வருத்தம் நியாயமானதுதானே!' என்று சுந்தரர் உருகுகின்றார். அந்த உருகுதலில் பூரணத்துவம் நடந்துவிடுகின்றது. நடந்தது மட்டுமல்லாமல், 'இவர் உயிர்விடக் காரணமாக இருந்ததனால் இதே உடைவாளால் நானும் உயிர் விடுகிறேன்' என்று அதே உடைவாளை உருவி தன் வயிற்றைக் கிழித்துக்கொள்ள சுந்தரர் முயற்சிக்கின்றார்.

பெருமான் தோன்றி, ஏயர்கோன் கலிக்காமருக்கு உயிர்கொடுத்து, சுந்தரரைத் தடுத்தாட்கொண்டு அருள்கொடுத்து, இருவருக்கும் இருவருடைய பக்தியின் சிறப்பையும், இருவருடைய பக்தியின் வேறுபட்ட பரிமாணத்தையும் புரியவைத்து, இருவருக்குள்ளும் இனிமைத்தன்மையை மரைகின்றார்.

கொடுத்த வரத்திற்காக தடுத்தாட்கொள்ள வந்து, பித்தா! என்று அவதூறு செய்யப்பட்டு, ஓலை கிழித்தெறியப்பட்டு, அப்பொழுதும் மனம் சளைக்காது, மூல ஒலை வெண்ணைநல்லூரில் உள்ளது என்று சொல்லி, அங்கு அழைத்துக் சென்று, உண்மையைச் சொல்லி தடுத்தாட்கொண்டு, பரவை நாட்சியாருக்குத் தூதுசென்று, இரண்டாவது ஒர் பெண் வேண்டும் என்று கேட்க, சங்கிலி நாச்சி க்குத் தூது சென்று, அவள் இட்ட நிபந்தனையை விளக்கி, நிபந்தனையை பூர்த்தி செய்வதற்கு ஞானத் தெளிவும் கொடுத்து, நிபந்தனையிலிருந்து எப்படியாவது வெளியேற முயற்சித்த சுந்தரன் சங்கிலி நாச்சியாரை ஏமாற்றாத வண்ணம் ச ங்கிலி நாச்சியையும் காத்து, இதையும் மீறி சுந்தரன் கொடுத்த சத்தியத்தை மீறி இரு கண்களையும் இழந்தாலும் அதையும் பொறுத்து, இரண்டு கண்களையும் மீண்டும் கொடுத்து, மீண்டும் பரவை நாச்சியாருக்கு தூது சென்று, அதை நாச்சியார் கேளாத போது இரண்டாவது முறையும் தூது சென்று, இத்துணையும் என்னை செய்தலால் மற்றவர் உன்னைத் தவறாக நினைக்க கூடாது என்று, அந்தப் பிரச்சனையும் தீர்த்து வைத்து, என்ன கேட்டாலும் செய்வேன் மற்றும் அல்லாது செய்வது நான் என்பதினால் கெட்ட பெயர் உனக்கு வந்திடக் கூடாது என்று, அதற்கும் நானே பொறுப்பு என்று, இத்தனையையும் செய்த பெருமானின் கருணையை எண்ணி வியப்பதா? இத்தனையையும் பெருமானைச் செய்ய வைத்த சுந்தரரின் பக்தியின் சக்தி எண்ணி வியப்பதா ? இது சுந்தரரின் பக்தியின் சக்தியா ? பெருமானின் கருணையா ?

பெருமானின் கருணை, பொங்கும் கங்கை போல் என்றென்றும், எப்போதும் எல்லோர் மீதும் உள்ளது. உண்மையில் இதை ஆழ்ந்து பார்த்தால், இதற்கு முக்கியமான காரணம், பெருமான் கருணை என்பதை விட சுந்தரரின் பக்தியின் சக்தியே என்ற முடிவுக்குத்தான் வர வேண்டும், ஏனென்றால் அந்த முடிவுதான் நமக்குள்ளும் சக்தி தரும் பக்தியை உருவாக்க முடியும்.

பக்தி 3 விதம் உண்டு. தன்னைத்தானே தாழ்த்திக் கொள்வதை 'பக்தி' என்று நினைத்துக் கொண்டிருக்கும் மூட பக்தி. அடுத்து, முக்தி தரும் பக்தி, முக்திக்காகப் பெருமானோடு சம்மந்தம் செய்துகொண்டு பக்தி வைத்துக் கொள்ளுதல். திருநாவுகரசருக்கு இருந்தது முக்தி தரும் பக்தி.

அடுத்தது, சக்தி தரும் பக்தி. சுந்தரமூர்த்தி பெருமானுக்கு இருந்தது சக்தி தரும் பக்தி, என் மீது அவனுக்கு ஏற்பட்டிருக்கும் மனக்கசப்பின் ஆழ்த்தைவிட, என்மீது அவனுக்கு இருக்கும் பக்தியின் இனிமையின் ஆழம் அதிகம் என்று பெருமானே நம்பிக்கை கொண்டிருக்கும் பக்தியின் சக்தி.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா! பெருமானுக்கே அந்த நம்பிக்கை வரவேண்டும் என்றால், தன் உயிரையே உருக்கி ஊற்றினால் அவன் உருவாக வார்க்கெடுத்தால் மட்டும்தான் அது சாத்தியம்.

நீங்கள் பெருமானை நம்பினால் அது பக்தி. பெருமான் உங்களை நம்பினால் அது சக்தி. ஜீவன் சிவனை நம்பினால் அது பக்தி. சிவன் ஜீவனை நம்பினால் அது சக்தி. 'இவனுக்கு இதுகொடுக்க வீணாகவோ, விரயமாகவோ ஆகாது' என்று அவன் நம்பிக்கை வைக்கும்பொழுதுதான். அது உங்களுக்கு ஆகும்.

உண்ணும்பொழுது குழந்தை தவறி, உணவு சரியில்லை என்ற கோபத்தால் ஒருபொருளை நம்மீது விட்டெறிந்தால், அதைக் கொலை வழக்காக பதிவுசெய்ய நாம் நினைக்க மாட்டோம். அதைக் கொலை முயற்சி என்று நினைக்கமாட்டோம். நன்றாகத் தெரியும், செயலைவிட இருப்பின் நோக்கம் நமக்குப் புரியும்பொழுது, செயலை ஒரு பொருட்டாக பொருட்படுத்துவதில்லை. அவ்வாறு சிவன் ஜீவனை நம்பும் சக்தி தரும் பக்தியை வாழ்வதுதான் ஆதி சைவம்.

சூது வந்த போது பொது பெருமானை அழைத்து வெற்றி கண்டவர் ஞானசம்மந்தா். சூது வாது இரண்டும் செய்வதற்காக பெருமானை அழைத்து என்ன வேண்டுமோ அதைத் தன் போக்கிலேயே சாதித்துக் கொண்ட ஒரே பக்தர் தம்பிரான் தோழர் சுந்திரமூர்த்தி பெருமான் நாயனார்.

சுந்தரரின் மொத்தக் கதையையும் படித்தீர்களானால், இவர் ஒருமுறைகூட 'பெருமான் விதி'க்கு வணங்கவில்லை. தன்னுடைய மதிக்கு மட்டும்தான் பெருமானை வளைத்தாா். 'அப்பா பார்த்துக்கொள்', ம்ம்ம் இதை செய்' என்று தனக்கு என்ன தேவையோ அதற்குப் பெருமானை வளைக்கின்ற பக்தியின் சக்தி. இதுதான் வேண்டும்.

திருநாவுக்கரசரின் வாழ்வும் வாக்கும்

உணர்வும் மொழியும் கலந்து உள்ளத்துள் உயிராய் விளங்கி, ஆதி சிவனே உன்னருள் வெளிப்பட்டு, தன்னருள் இன்னருள் எங்கும் நிரைந்திருக்க, மனமெனும் கருத் தங்க மறுத்திடும் கருத்தெலாம், உன் குணம் எனும் அருளாலே வென்று வெளிவந்திட திருநாவுக்கரசன் தன் திருவாழ்க்கை சொல்லிட நாவில் வந்து நடம்புரி நான்மாடக்கூடல் நம் சுந்தரேசனே!

நாவுக்கு அரசன் என்று சான்றோராலும், அப்பரே என்று ஞானசம்பந்த பெருந்தகையாலும் அழைக்கப்பட்டவர். நம்முடைய குரு கு முதல்வருக்கு அப்பன், குரு முதல்வர் ஞான சம்பந்த பெருமான் அப்பனே என்று தன் சொந்த தந்தையைக்கூட அழைக்கவில்லை. அம்மையே அப்பா என்று சீர்காழி சோலியப்பரை மட்டும்தான் அழைத்தார். இரண்டாவதாக அவர் அப்பரே என்று அழைத்தது திருநாவுக்கரசு பெருமானைத்தான்.

திருநாவுக்கரசு சொல்வதற்கு சைவத்தை அறிமுகப்படுத்தினால்தான் அறிமுகப்படுத்தமுடியும்.

உலகத்திலே இரண்டே இரண்டு மதங்கள்தான் உண்டு. ஒன்று, இறைவனை ஒரு சக்தியாக, பேராற்றலாக, பலகுணங்களின் தொகுப்பாக பார்க்கிற மதம். இன்னொன்று, அவரைப் பலகுணங்கள் மட்டுமல்லாது, சுதந்திரமாக முடிவெடுக்கின்ற, சுதந்திரமாக இயங்குகின்ற சுதந்திரமாக செயல்படுகின்ற, சுதந்திரத் தன்மையுடைய ஒரு நபராக பார்க்கின்ற மதம்.

இந்த இரண்டு மதங்கள்தான், வேறு மதங்கள் கிடையாது. உண்மையில் இறைவன் இந்த இரண்டு கருத்துக்களுக்கும் அப்பாற்பட்டவர். இரண்டு கருத்துக்க(ளும் தவறு என்றும் நான் சொல்லவில்லை, சரி என்றும் சொல்லவில்லை. இந்த இரண்டு கருத்துக்களுமே இறுதியை அடைகின்ற வழி.

'அவர்' என்று கூட சொல்லமுடியாத அவர். 'அவா' என்றும் 'அவள்' என்றும் 'அது'வென்றும் சுட்டவும் எட்டவும் எட்டவும் இயலாத பொருள். கிட்டியோர்க்கு எட்டியது என்றாலும், அவர்கள் சுட்டியோர்க்கெல்லாம் எட்டிடாதது; கிட்டியோர்கள் சுட்டிக் காட்டினாலும், யாருக்கு காட்டப்பட்டதோ அவர்கள் எட்டிப்பிடித்து விடுவதில்லை.

ஒரு விஷயத்தை ஆழ்ந்து பார்த்தோமானால், இரண்டுமே, கருத்துதான். இரண்டுமே பாதைதான். ஏனென்றால், இறுதியில் இந்த இரண்டின் மூலமாகவும் அடையப்படும் அனுபூதி, இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டது. இரண்டுமே பாதையென்றாலும் ஒன்று மாட்டு வண்டிபோல-கட்டைவண்டி பாதை, இன்னொன்று ஜெட் - நேராக தூக்கிக்கொண்டு போகிற ஆகாய பாதை.

பெருமானை ஒரு பேராற்றலாக எண்ணி, சிந்தித்து, தியானித்து அணுகுகின்ற முறை படாத பாடுபட்டு, நீங்கள் எத்தனை முறை அதைச் சிந்திக்கிறீர்களோ, அத்தனை முறை மெது மெதுவாக அந்த குணங்கள் உங்களுக்குள் ஊறி, அநுபூதிக்கு அது உங்களைக் கொண்டு செல்லும். இது பிரம்மக்கீட ஞானம் என்று சொல்வோம்.

இறைவனை ஒரு பேராற்றலாகக் கருதுகின்ற மதங்களின் வழி, நீ ண்ட நெடிய வழி. தவம் எனும் பெயரால் தன்னைத்தானே பொரும் துயா்களுக்குள் ஆழ்த்திக்கொள்பவர்கள், சில நேரங்களில் சாமான்ய மனிதர்கள் செய்ய முடியாததை அவர்களால் செய்ய முடிகிறது என்ற 'அகம்' (அகங்காரம்) வந்து, வழி மாறி, தடம் மாறும் வாய்ப்புக்கள் அதிகம்.

ஆதிசைவத் தமிழுக்கே உரிய தெளிவின்படி, வழி என்பது வேறு, தடம் என்பது வேறு. வழி என்பது ஏற்கெனவே யாரோ ஒருவரால் நிர்மாணிக்கப்பட்டது. தடம் என்பது நீங்களே கண்டுபிடித்துக்கொண்டே செல்வது, வழி வேறு,தடம் வேறு.

அதனால், நிரந்தரமானதும் நிம்மதியானதும் சீக்கிரமானதும் கடைபிடித்தாலும் பெரும்பலன் தருவதும் ஆன வழி இறைவனைப் பேராற்றல் சக்தியாக மட்டுமல்லாது, பேராற்றல் சக்திகொண்ட நபராக தியானிப்பதே.

இதுதான், ஜைனத்திற்கும் பௌத்தத்திற்கும் வைதீக சம்பிரதாயமான ஆதிசைவத்திற்கும் இருக்கின்ற ஒரே மிகப்பெரிய வித்தியாசம்.

பௌத்தத்தின் சில சம்பிரதாயங்கள், இறைவனைப் போராற்றல் கொண்ட தனிநபராக, புத்தராக வழிபடத் துவங்கிவிட்டாார்கள்.

ஆனால் வாழ்ந்த பௌத்தமும் ஜைனமும் அந்த அளவிற்கு உயர்ந்து இருக்கவில்லை. காலப்போக்கினால்தான் அவர்கள் ஆதிசைவத்தின் நன்மைகளைப் புரிந்துகொண்டு, இதனுடைய சாரத்தையும் உள் வாங்கிக்கொண்டார்கள்.

இறைவனைப் போரற்றலாகக் காண்கின்ற, நிர்வாண நிலையாக வா்ணிக்கின்ற, சொல்லுகின்ற ஜஜன மதம், தீர்த்தங்கரர்களை ஒரு குருவாக மட்டுமே கருதுகிறது.

ஆதிசைவம், பரம்பொருளை பேராற்றல் கொண்ட சக்தியாக மட்டும் அல்லாது, நபராக ரசித்தும் ருசித்தும் தீண்டியும் அணைத்தும் செல்லும் ஒரு மிகப்பெரிய மார்க்கம்.

இதுதான், மற்ற சம்பிரதாயங்களுக்கும் ஆதிசைவத்திற்கும் இடையில் இருக்கின்ற மிகப்பெரிய வித்தியாசம்.

சிந்தையெல்லாம் வாழ்க்கையின் சாரமென கொண்டு, மதத்தை மனத்தின் பாகமாக்காமல், அதை வாழ்க்கையின் சாரமாக்கி வைத்து, இறுதி உண்மையை, அறுதி உண்மையை, ஒரு பேராற்றல் கொண்ட சக்தியாக மட்டுமல்லாது, நபராக வழிபடும் மிகப்பெரிய மார்க்கம், ஆதிசைவம்.

இந்த இரண்டையுமே தன்னுடைய வாழ்க்கையில் வாழ்ந்து பார்த்தவர் திருநாவுக்கரசு பெருமான். அதனால்தான் அவருக்கிருக்கின்ற ஆழம், அவருக்கிருக்கின்ற அனுபவம், அவருடைய தெளிவு ஒப்பீடே செய்ய முடியாதது. பக்தியில் கூட ஆழ்ந்த, பழுத்த, ஸ்திரமான பக்தி அவரு டையது.

கற்றூணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சி வாயமே ... ' குறையொன்றும் செய்யாதும் சிறைபட்ட போதிலும், முறை தவறா

ஞானப்பெருஞ்சக்தி. மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேணியும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தன் இணையடி நீழலே.

என்று பரம்பொருளை பேராற்றலாக மட்டுமல்லாது பேராற்றல் சக்தி கொண்ட நபராக வழிபடுகின்ற மனதால் மட்டுமே இயலும்.

ஒரு விநாடிகூட சிந்தை நடுங்காது, மாற்றான் சிறைப்பட்டும் மனங்கலங்காது, என்ன கற்பணை பாருங்கள்!

மாசில் வீணையும் - அந்த வார்த்தைக்கு அர்த்தமென்ன வென்றால், வீணை தூசுபட்டிருந்தால் அதிலிருந்து எழும் நாதத்தில் தெளிவு இருக்காது. தூசு கம்பி மேலே படியாமல் இருக்கின்ற வீணைதான் சுத்த ஸ்ருதியை உருவாக்கமுடியும். ஆழமான 'கேட்டல்' இருந்தால்தான், இது மாசு பட்டு துடைத்த வீணையா? மாசே படாத வீணையா? என்கின்ற தெளிவிருக்கும்.

அடுத்த சொல், மாலை மதியமும் - இரவு அல்ல, மாலை. மாலை நேரத்திலே வருகின்ற சந்திரனின் அழகுகு.

வீசு தென்றலும் - தெற்கிலிருந்து வருகின்ற காற்று உடலுக்குச் சுகத்தை அளிக்கும்.

வீங்கிள வேணியும் - இளவேனிற்காலம்

மூசு வண்டறை பொய்கையும் - தாமரையில் இருக்கும் தேனைக் குடித்துவிட்டு, ஆயிரக்கணக்கான வண்டுகள் அந்த சுகமும் ஆனந்துமும் தாளாது, போதையில், அந்த மயக்கத்தில் அறையும் 'ம்ம்ம்…' என்ற சப்தம் ஒலித்துக்கொண்டிருகின்ற பொய்கை.

இத்தனையையும் சிறையில் அமாந்து, சதாரண சிறையல்ல, சு ண்ணாம்புக்காலவாய்... குறையொன்றும் கொதிக்கின்ற அறையில் சுட்டெரித்தார்கள் பாதகர்கள். அதிலும் தன்னிலை தவறாது, சிந்தை சிவமயத்திலே இருந்ததால், 'மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே'

என்று பாடுகிறார்.

மன அழுத்தம் வந்தால் கற்பனை வராது. சிறையில் அமர்ந்திருக்கும் போது, இந்த கற்பனை வருகிறது என்றாலே சுகந்தமாக, ஓய்வாக, ஆனந்தமாக, மன அழுத்தமே இல்லாமல் இருந்திருக்கிறார் என்று அதிகாரபூர்வமாகச் சொல்லமுடியும்.

அவருடைய சைவத்தையும் புரிந்துகொள்ளலாம். இன்றைய அதிசைவ சத்ச ங்கத்தின் சாரமாய் உங்களுக்கு சொல்ல விரும்புவது, இறைவனை வெறும் பேராற்றலாக மட்டும் வழிபட்டால், மிகுந்த சிரமங்களுக்கு உட்பட்டு சாதனைகள் செய்து வேதனையெல்லாம் கடந்து, அதனை அடையவேண்டும். ஆனால் ஆதிசைவமோ இறைவனை பேராற்றல் பெருஞ்சக்தி கொண்ட நபராகக் காட்டுவதனால், அவரை அநுபூதியாக அடைந்து விடுவது சுலபம்.

ஆம்ந்துகதையைக் கேட்டோமானால், பக்தி வேண்டும் , முக்தி வேண்டும், என்று பெருமானக் கேட்பதும், அவர் கொடுக்கும் அருளையும், ஆசியையும் சக்தியையும் அவா் புகழைப் பரப்புவதற்கு மாத்திரம் உபயோகிப்பதும் எல்லா அன்பர்கள், தொண்டர்கள் அடியார்கள் வாழ்விலும் நடக்கின்ற ஒன்று. பக்தி வேண்டும் என்று திருநாவுக்கரசப் பெருமான், பொருமானைப் பார்த்துப் பிரார்த்தித்தின்றார், சைவத்தைப் பரப்புகின்றார். பரப்பும்பொழுது வருகின்ற இடர்பாடுகளிலே அரசன் இவரை கல்லில் பூட்டி கடலில் பாய்ச்சுகின்றான். கல் தெப்பமாய் மிதந்து கரையேறுகின்றார்.

இந்த அத்புதத்தை, அதிசயத்தை சைவத்தைப் பரப்புவதற்கு உபயோகிக்கின்றார். இதுபோன்று பெருமானிடம் படிக்காசு பெற்று அன்னதான் செய்து சைவத்தைப் பரப்புகிறார், பாடல் பாடி திருக்கதவு திறந்து சைவத்தைப் பரப்புகிறார். இது எல்லாவற்றையுமே ஜீவன் சிவனுக்கு உண்மையுடையதாக இருக்கின்றது, சிவன் ஜீவனுக்கு உண்மையுடையதாக இருக்கின்றார். இது எல்லா யோகிகள், சித்தர்கள், புருஷர்கள், ஞானிகள், அவதாரபுருஷர்கள் இவா்களின் வாழ்க்கையில் எல்லாம் பார்க்கலாம்.

ஆனால் சுந்தரமூர்த்திப் பெருமான் பொன் கொடுக்கவில்லை என்று ஏசுகின்றார். பெருமான திட்ராரு.. "என்னயா சாமி நீ.. கேட்டா குடுக்கமாட்டேங்கிற '. திட்டிட்டு அப்புறமா தூதுதுடு பன்றாரு. பெருமான இரண்டையும் பொறுத்துக்கொண்டு அவர் கேட்டபடி பொன்னையும் அளிக்கின்றார்

இந்த ஆதிசைவத்தின் சாரத்தை உங்களின் அனுபவமாக மாற்றிக் கொள்வதற்காக உங்களுக்குத் தேவையான சத்தியங்களை, இந்த வாழ்வியல் விஞ்ஞானத்தை உங்கள் முன் திறந்து வைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. சீரிய பக்தியுடனும் இந்த ஆதிசைவத்தின் சாரத்தை உள்வாங்கி, உங்களுக்குள் இருக்கும் 'கடவுள் துகள்' விழிப்படைந்து, கடவுள் நிலை அடைந்து, சிவோஹம் எனும் அனுபூதியில் நிலைபெற்று, சிவஞானத்தில் நிலைத்து இருந்து, சிவபோதத்தில் வாழ்வீர்களாக, நித்ய ஆனந்தத்தில் நிலைபெறுவீர்களாக.

ஆழ்ந்து இதை வாழ்ந்து பாருங்கள். ஆதிசைவம், வாழ்ந்து பார்த்து அனுபவிக்க வேண்டிய சத்தியம். வெறும் எண்ணத்தாலோ வார்த்தையாலோ புரிந்துகொள்ள முடியாத, வாழ்ந்து பார்த்தே உணர்ந்து கொள்ளப்பட வேண்டிய வாழ்வியல் நெறி, வாழ்வியல் சத்தியம். வாருங்கள் சைவத்தை வாழுங்கள். மேன்மை கொள்வீர்கள்.

5 ஞானம்

மஹாதேவ இரகசியம் -

பஞ்சு நூல் ஆவதுபோல் இருப்பே உரைப்பாய் இருந்து என்னுள் ஈசனே உரைப்பாய் மஹாதேவ இரகசியம் உலகிற்கு

சிதம்பர நாதனின் தூக்கிய திருவடியும், கோவிந்தராஜனின் நீட்டிய திருவடியும்

ஆழ்ந்து கேளுங்கள். அம்பலவாணண் சிதம்பர நாதனின் இரகசியத்தை. சிதம்பரத்தில் அம்பலவாணன், சிதம்பர நாதன் திருநடமிடும் திருக்கோலத்தைக் கண்டீர்களானால், அவன் தூக்கிய திருவடியும், கோவிந்தராஜன் யோக நித்திரையில் நீட்டி இருக்கும் திருவடியும் இரண்டும் ஒரு திசையையே காட்டும். அந்தத் திசையில் இருப்பதுதான் சிதம்பர இரகசியம்.

அந்த இரண்டுத் திருவடியைப் பற்றினாலும் நீ அந்த இடத்தைத்தான் அடைவாய் என்பதைக் காட்டுவதற்காக, சமாதியில் ஆனந்தத் தாண்டவமிடும் அம்பலவாணணின் தூக்கியத் திருவடியும், சமாதியில யோக நித்திரையில் இருக்கும் கோவிந்தராஜனின் நீட்டியத் திருவடியும் இரண்டுமே ஒரு முனையை, ஒரு இடத்தைக் காட்டியவாறு இருக்கும். அந்த இடம் சிதம்பர இரகசியம்.

இராஜ இரகசியம் - இராஜ குஹ்யம் என்று டூரீ கிருஷ்ணன் பகவத் கீதையிலே 9ம் அத்யாயத்திலே சில இரகசியங்களை உலகத்திற்கு அளிக்கின்றார்

தேவ இரகசியம் என்று சில இரகசியங்களை யமதாமராஜன் கடோபநிஷத்தில் உலகத்திற்கு அளிக்கின்றார்.

இன்று நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளப்போவது மஹாதேவ இரகசியம்.

இராஜ இரகசியத்தையும் தாண்டி, தேவ இரகசியத்தையும் தாண்டி மஹாதேவ இரகசியம் இது.

ஆழ்ந்து கேளுங்கள். வாழ்க்கையின் அடிப்படையான உண்மைகள் எப்பொழுதுமே இரகசியங்களாக இருப்பதனால்தான், அடித்தளமே இல்லாமல் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு ஞானி ஆழ்ந்து பார்த்தால் உயிரே உருகும்

ஒரு வெளிநாட்டு அன்பர் இரமண மகரிஷியுடைய பரமபக்தர். ஒரு நாள் ஏதோவொரு மனக்கலக்கத்திலே இரமண மகரிஷியிடம் சென்று முறையிடுகின்றார். பகவான் ஆழ்ந்த கண்ணாலேயே, அழகொழுகும், ஆனந்தமொழுகும், அமிர்தமொழுகும் தன் திருக்கண்களாலேயே அவரை ஒருமுறை ஆழ்ந்துப் பார்த்து அந்த உடலையே உருக்குகின்றார். ஞானிகளோட பார்வை மட்டும்தான் உடலையே உருக்கும்.

அம்மா ஆழ்ந்து பார்த்தால் உணர்ச்சி உருகும். அப்பா ஆழ்ந்து பார்த்தால் தைரியம் உருகும். குரு ஆழ்ந்து பார்த்தால் உணர்வு உருகும். இரமண மகரிஷி மாதிரி ஒரு ஞானி ஆழ்ந்து பார்த்தால் உயிரே உருகும்.

அந்த உயிரையே உருக்குகின்ற பார்வையினாலே, ஆழ்ந்து ஒரு முறை பார்க்கின்றார் ஏதோ இவருக்குள் நடக்குது, உடனே அவர் தனது அறைக்கு ஓடிப்போய், தனது அறையிலிருந்த குளிக்க உபயோகிக்கும் சிறு தொட்டிக்குள் தண்ணீரை நிரப்பி அமர்ந்துகொண்டார்.

அவருக்கு ஒன்றும் புரியவில்லை. தூக்கம் வரவில்லை. என்ன செய் வதென்றும் தெரியவில்லை. அப்போது பளிச்-னு சுகமும், துக்கமும்

இல்லாத நான் என்கின்ற உணர்வு அவருக்குள் விளங்கியது. அஹம் ஸ்புரணமாக, ஆத்ம ஸ்புரணமாக, உயிருக்குள் எல்லாம் இருந்து இயக்கிக் கொண்டிருக்கின்ற எம்பெருமான் இருப்பும்-உரைப்புமாய், பஞ்சும்-நூலுமாய், காற்றும்-சொல்லுமாய்க் கனன்றுகொண்டிருக்கும் அந்த நான் எனும் அஹம் ஸ்புரணம் ஆத்ம ஸ்புரணமாக மலர்ந்தது. திரும்ப ஓடிவருகிறார், '' பகவானே, இவ்வளவு தானா ? இது தானா ?'' பகவான், ஆம்,'' என்கிறார்.

''இவ்வளவு எளிமையாக இருக்கிறதே? இதற்கா மக்கள் இந்தப் பாடுபடுகிறார்கள் ?

திருவாய் மலர்ந்து பெருமான் பகவான் அருளுகின்றார்: அடிப்படையான விஷயங்கள் இரகசியமாக இருப்பதனால்தான், அடித்தளமில்லாமல் மனிதர்கள் அல்லாடுகின்றார்கள்!''

சிவத்துவமஸி, நீங்களே சிவமாக இருக்கிறீர்கள்

இப்ப நான் அடிப்படையான ஒரு சத்தியம். கொடுமை என்னவென்றால், அடிப்படையான விஷயங்கள் இரகசியமாக இருப்பதனால், அடித்தளமில்லாமல் மனித இனம் அல்லாடுவது மட்டுமன்றி, அடிப்படையான விஷயங்கள் எளிமையாக இருக்கவே முடியாது என்கின்ற ஒரு மூடநம்பிக்கையோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆழ்ந்து கேளுங்கள் அடிப்படையான இந்த சில சத்தியங்களை. வேதாந்த, சித்தாந்த, ஆகமாந்தத்தின் சாரம், சுத்தாத்வைதத்தின் சாரம் இந்த மஹாதேவ இரகசியம். அந்த இரகசியத்தை ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அந்த வார்த்தை சிவத்துவமஸி, நீங்களே சிவமாக இருக்கிறீர்கள்.

மஹாதேவ இரகசியத்தை நீங்கள் உள்வாங்கும் முன் புரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படையான சத்யங்கள். நீங்களெல்லோரும் உங்களுடைய இருக்கிறீர்கள்.

அகம் அஹம் என்று ஸ்புரித்தாலும் அது சிவம் எனும் ஆதியின் மீதுதான்

தாண்டவமிடுகின்றது. உங்களுக்குள் நான் நான் என எப்போதும் உயிர்த்திருக்கும் உயிர்ப்பு, சிவம் எனும் இருப்பாகவே இருக்கின்றது. சிவம் எனும் இருப்பே உங்களுக்குள் நான் எனும் உயிர்ப்பாக இருக்கின்றது. சாதாரண வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் சிவமே நீங்கள்.

சிவத்துவமஸி. நானே சிவமா? இது அபத்தமாகத் தெரியவில்லையா? நான் சிவன்னு சொன்னா சிவனுக்கு என் மேல் கோபம் வராதா ? சிவன் என்ன நினைப்பாரு ? "உனக்கென்ன அந்தளவு தவமிருக்கின்றதா, தகுதியிருக்கின்றதா, சிவமயமாக மாறிவிட்டாயா, தூய்மையிருக்கின்றதா என்று கேட்கமாட்டாரா ?

ஆழ்ந்து கேளுங்கள்.

வெளி உலகத்திலே வெற்றிக்காக நீங்கள் உருவாக்கிக் கொள்ளுகின்ற சாத்திய மனஅமைப்புதான் திறமை.

உள்ளுலகத்திலே நீங்கள் உருவாக்கும் சாத்திய மன அமைப்புதான் தவம்.

திறனும், தவமும் உள்-வெளி பேதமன்றி வேறொன்று அடிப்படை பேதம் இல்லாதவை. திறன் வெளிஉலகத்தில் உங்களுக்கிருக்கின்ற திறமை. தவம் உள்ளுலகத்தில் உங்களுக்கிருக்கின்ற திறமை. இரண்டுமே குணம் தானே தவிர இயற்கை கிடையாது. தவம் இயற்கை கிடையாது. உருவாக்கப்பட்ட குணம்.

இருப்பிலே இருக்கின்ற இசத்தியத்தை உங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தவும், உருவாக்கிக்கொண்ட தேவையுமில்லை.

உழைத்தால் மட்டும், திறமிருந்தால் மட்டும் ஒரு பொருளை அடைய முடியும் என்பது சமூகம் நமக்கு சொல்லிக் கொடுக்கும் விதி. இதே விதியை உள்ளுலகத்திலும் உபயோகப்படுத்துகின்ற வழியே யோகப்பாதை, யோக சம்பிரதாயம், யோக மார்க்கம். அதனால்தான் யோக மார்க்கத்தை சாதாரண நடுத்தர மக்கள் எளிமையாகப் புரிந்து, அதை சாத்தியம் என்று நம்புகிறார்கள். அது சாத்தியமில்லை என்று நானும் சொல்லவில்லை. ஆனால் அது மட்டும்தான் சத்தியம் என்று நான் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றேன்.

திறனும், தகுதியும் தவமும் பெருக்கி, உருவாக்கி அதன் மூலமாய் மட்டுமே ஒரு பதவியை, ஒரு நிலையை அடைய முடியும் என்பது வெளி உலகத்தின் விதி.

உள்ளுலகத்தில் மேனெஜ்மென்ட்) தவம். வெளியுலகத்தில் நுண்மேலாண்மை செய்தல் (மைக்ரோ மேனெஜ்மென்ட்) திறன். திறன். தவமும் குணமேயன்றி இருப்பு அல்ல.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் நடுத்தர மக்களாக வாழ்வது தவறல்ல, நடுத்தர மனதுடன் வாழ்வது தவறு. நடுத்தர வாழ்வு தவறல்ல. நடுத்தர மனது தவறு. ஒரு திறனால் மட்டுமே ஒரு நிலையை, பதவியை எட்ட முடியும் என்று சொல்வது வெளியுலகத்தின் வழக்கு. வெளியுலகத்தின் விதி. ஏனென்றால் வெளியுலகத்திலே இருக்கின்றவை, அளவில் குறைந்து இருக்கின்றவை என்று எல்லோரும் நம்புகிறார்கள். பணமாகட்டும், பொருளாகட்டும், பதவியாகட்டும், புகழாகட்டும், உயர்வாகட்டும் இருப்பது குறைவு என்று அவர்கள் நம்புவதனால் ஒருவர் எடுத்துக் கொண்டால் மற்றொருவருக்கு இருக்காது என்று நம்புவதனால், திறன் படைத்தவர்க்கே உண்டு மற்றவர்க்கில்லை என்பது வெளியுலகத்தின் விதி.

ஆனால், உள்ளுலக சக்தியோ அளவு இல்லாதது. அளப்பரிய இயலாதது. முடிவு இல்லாதது. உள்ளுலகத்தில் இதே தா்க்கம் உதவாது. இதே எண்ணத்திறன் உதவாது. இதே எண்ண ஓட்டம் உதவாது. இதே மனவோட்டம் உதவாது. இதே உணர்ச்சி ஒட்டம் உதவாது. உள்ளுலகில் இவ்விதி செல்லாது. உள்ளுலகிலேயும் இவ்விதியே செல்லுமென்ற யோகமார்க்கம் ஒரு மார்க்கமேயன்றி திருமார்க்கம் அன்று.

வெளி சமூகத்தின் உயர் அந்தஸ்திலோயிருப்பாரேயானால், நீங்கள், 'நீங்கள்தான் அவர்' என்று சொன்னீர்களானால், அவர் உங்களைப் பார்த்துப் பொறாமைப்படுவார், கோபப்படுவார், எரிச்சல்படுவார், உங்களைப் போட்டியோடும் பொறாமையோடும் பார்ப்பார். எதிரியாகக்கூட நினைப்பார். உங்களை இல்லாது செய்வதற்கான எல்லா முயற்சியும் எடுப்பார். ஆழ்ந்து கேளுங்கள். வெளியுலகத்தில் உயர் நிலையிலிருப்பவருடைய 'இருப்பை' நீங்கள்தான் என்று உரிமை கொண்டாடினீர்களானால், அவர் உங்களுக்கு எதிரியாவார். ஏனென்றால் அவருக்கு பயம். இருப்பது குறைவு. இன்னொருவர் எடுத்துக் கொண்டால் தனக்கிருக்காது எனும் கவலையும், பயமும் பாதுகாப்பின்மையும் இருக்கும்.

ஆனால், இருக்கும் இருப்பிற்கு எல்லையேயில்லை என்றும் எத்துணைபேர் எடுத்தாலும் என்னுடையது குறையாது என்றும் இருப்பின் இருப்பை இனிமையாய் உணர்ந்து, இருப்பின் இருப்பிலே நிலைகொண்டிருக்கும் ஈசன், ஸதாசிவன் யாராவது ஒருவர் நானே சிவம் என்று உரைத்தால் பொறாமைப்படுவதும் இல்லை. போட்டிப்படுவதும் இல்லை, எதிர்படுவதும் இல்லை, எதிரிப்படுவதும் இல்லை; 'ஆஹா நான் வெளிப்பட இன்னொரு இருப்பு கிடைத்துள்ளது' என அவன் இனிமையே படுகின்றான்.

ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் கடவுள் ஒருவர் அல்ல. ஒருமைத்தன்மை. கடவுள் ஒருவர் என்றால், 'ஐயோ வேறு எவனாவது என் பதவியைப் பிடித்துக் கொண்டால் நான் எங்கே போவேன்' என்று அவரும் மிகுந்த பாதுகாப்பற்றத்தன்மை மற்றும் பொறாமையின் வடிவமாக இருந்தாக வேண்டும். அதனால்தான், கோட்பாடுகளும், தத்துவங்களும் பொறாமையினால் தன்னைத்தானே எரித்துக் கொள்கின்றன. பொறாமை எனும் புகைச்சல், தீவிரவாதம் எனும் நெருப்பாய் மாறியே தீரும்.

உலகம் கேட்டாக வேண்டிய ஒரு முக்கியமான மஹாதேவ இரகசியம் - கடவுள் ஒருவரல்ல. ஒருமைத்தன்மை.

மதத்தின் பெயரால் மதம் பிடித்தலைந்து, தவத்தின் பெயரால் அவமே

செய்து, அமைதியின் பெயராலே அண்டத்தை அழித்து, சத்தியம் புரியாமல் சாக்கடை விழுந்து, மாக்களாய் வாழும் மக்களே கேளுங்கள் -கடவுள் ஒருவன் அல்ல. ஒருமைத்தன்மை.

கடவுள் ஒருவன்தான் என்று சொல்ல முயன்றால் இயற்கையிலேயே நமக்கிருக்கும் எல்லாவற்றையும் அவர் மீது ஏற்றி, அவருக்கும் இதெல்லாம் இருப்பதாய்க் கருதி, இது சார்ந்த கருத்துக்களை, எண்ண ஓட்டங்களை அவருடைய உபதேசமாகத்தான் இருக்க வேண்டுமென்று நமக்கு நாமே கற்பனை செய்து கொண்டு, மனிதர்களையும் உலகத்தையும் அழித்தும், பழித்தும், கொடுமைகள் பல செய்து, வழி தெரியா வஞ்சகத்தில் விழுந்து மாக்களாய் வாழும் மக்களே கேளுங்கள். கடவுள் ஒருவனல்ல. ஒருமைத்தன்மை.

சத்தியத்தின் சாரத்தைக் கேளுங்கள்; வேதாந்த, சித்தாந்த, ஆகமாந்த இரகசியத்தைக் கேளுங்கள். கடவுள் ஒருவனல்ல. ஒருமைத்தன்மை.

அதனால்தான் நானேசிவம் என்று நீங்கள் சொல்லும்பொழுது, பெருமான் உங்கள் தகுதியைக் கேட்பதில்லை, திறனையும் கேட்பதில்லை, தவத்தையும் கேட்பதில்லை, தூய்மையையும் பார்ப்பதில்லை, ஆணா நான் இருந்து கொண்டாடி இரசிக்க, நடமிட இன்னொரு சிதம்பரம் கிடைத்ததென்று இருப்பில் புகுந்து வெளிப்படுகின்றான்.

எவன் தவத்தால் அவன் நிலைக்குச் சமமாக முடியும். தவத்தால் அவன் நிலைக்கு ஆவேன் என்பதுதான் அவம். தவம் தன் நிலையிலிருந்து உயர்த்தும். ஆனால் அவன் நிலைக்கு ஆக்காது. அவன் நிலைக்கு ஆக்கத் தவமே முடியுமென்றால் ஏன் சிவம் ? தன்பாலிருந்து மேம்பட தவம் உதவும். சிவன்பாலிருந்து ஜீவன் முக்தனாக தவமாகாது.

அனாக்கணக்கில் பிச்சையெடுத்து அண்ட கோடிகள் ஆக்குவது சாத்தியமா ? அனாக்கணக்கில் பிச்சையெடுத்து அண்டக் கோடி சேர்ப்பது, பினாக்கணக்கில் வீழ்ந்தாலும் எனாக் கணக்கும் ஆகாது. எத்துணை முறை நீங்கள் பிணமாக விழுந்து விழுந்து விழுந்து

அனாக்கணக்கில் பிச்சையெடுத்தாலும் இறந்து இறந்து பினாக்கண்க்கில் விழுந்து, ஜன்ம ஜன்மங்களாக அனாக்கணக்கில் பிச்சையெடுத்தாலும் அண்ட கோடிக்கணக்கில் ஆகுவது சாத்தியமா ?

ஒவ்வொரு பைசாவாகப் பிச்சையெடுத்து, ஆயிரம் கோடி சேர்ப்பது, ஆயிரம் ஜென்மமெடுத்தாலும் சாத்தியமில்லை. அது போல எத்துணைத் தவம் செய்தாலும் தன் நிலையிலிருந்து உயரலாமே தவிர, அவன் நிலையைத் தன் நிலையாய் ஆக்குவது ஆகவே ஆகாது.

உங்கள் காலில் கட்டியிருக்கின்ற சலங்கையை நீங்களே பிடித்திழுத்துக் கொண்டு, அரையடி வேணா உயரமா குதிக்கலாம். ஆயிரம் அடி பறக்க முடியுமா ? தவம் தனக்குள் அமைதியைத் தரலாம். தவம் தனக்குள் சில சித்திகளைத் தரலாம். ஆனால் தவம் நம்மை சிவம் ஆக்காது. தவமே சிவமாக்குமென்று சொல்பவா்கள் அவமே சொல்கிறார்கள். அவமே செய்கிறார்கள். தவம் ஆக்காதென்றால் எது நமைச் சிவம் ஆக்கும் ?

ஆழ்ந்து குளுங்கள், இருப்பான சிவத்திற்கும், உரைப்பான ஜீவனுக்கும் இருக்கும் தொப்புள் கொடி உறவு ஒன்றே ஒன்று. அது சங்கல்ப சக்தி. இருப்பான சிவத்திற்கும், எண்ணமாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கிற நான் என்கின்ற உங்கள் தனித்தன்மையான ஜீவனிற்கும் இடையிலே இருக்கின்ற தொப்புள் கொடி உறவு சங்கல்ப சக்தி.

ஒரு சங்கல்பத்தை உருவாக்கி அதை நிஜமாக்கும் சக்திதான் உங்களுக்கும் சிவத்திற்கும் இடையிலே இருக்கின்ற தொப்புள் கொடி உறவு. அந்தத் தொப்புள் கொடியைப் பற்றித் தொடர்ந்து சென்றீர்களானால் ஜீவன் சிவனாகும்.

நான் நான் நான் என்று ஜீவனாக நீங்கள் எதை உணருகிறீர்களோ அதற்கும், சிவத்திற்கும் இருக்கின்ற இணைப்புப் பாலம், தொப்புள் கொடி உறவு சங்கல்ப சக்தி. 'நானே சிவம்' என்று உங்கள் சங்கல்ப சக்தி முழுவதையும் ஒன்று திரட்டி உரைக்க உரைக்க, அது இருப்போடு உங்களை இணைக்கும்.

சிவம் இருப்பு, ஜீவன் உரைப்பு. நான் நான் என நீங்கள் எதை உணருகிறீர்களோ அது உரைப்பு. அந்த நான் நான் என்று உரைக்கின்ற ஒன்றிற்கு எது மூலமாக இருக்கின்றதோ அது இருப்பு. இருப்பையும், உரைப்பையும் இணைக்கின்ற தொப்புள்கொடி சங்கல்ப சக்தி.

பஞ்சு சிவம். நூல் ஜீவன். நூலின் மூலத்தைத் தேடிச் செல்ல பஞ்சின் நிலையை பஞ்சமிலாது அனுபவிக்கலாம். அச்சம் இல்லாது, தடைகளையெல்லாம் துச்சம் என்று கருதி, இருப்பின் மிச்சமே வாழ்க்கையின் உச்சம் என்று நினைந்து, மற்றதையெல்லாம் துச்சம் எனத் துறந்து, சிவோஹம் எனும் சத்தியத்தின் இருப்பை சாத்தியம் ஆக்கிக் கொள்வதே வாழ்க்கையின் உச்சம். அதை மறப்பதே வாழ்வின் நீச்சம்.

அனிச்சமாக நமக்குள் நிகழும் செயல்களெல்லாம் துக்கம் என்பதை உணர்ந்து, அவைகளை துச்சமாக்கி, உங்கள் சங்கல்பம் முழுவதையும் ஒன்று திரட்டி, நானே சிவம் எனும்பொழுது, சிவம் தனக்கு எவ்வாறு வேண்டுமோ அவ்வாறே தன் வாழ்க்கையை மலரச்செய்கிறது. அனிச்சம் என்றால் தன்னுடைய சங்கல்பம் இல்லாமலேயே தானாகவே, தன் போக்கிலேயே நடந்து கொண்டிருக்கின்ற செயல்கள் என்று பொருள்.

நான் சிவன் எனும் சங்கல்பத்தின் சக்தியிலிருந்து, இந்த சத்தியத்தின் உறுதியிலிருந்து என் வாழ்க்கையை என் விருப்பப்படி வெளிப்படுத்துவேன் என்கின்ற தெளிந்த சக்தியோடு, தெளிந்த சங்கல்பத்தோடு உங்கள் வாழ்க்கையை இயக்கத் துவங்குங்கள்.

பெருமான் உங்கள் தகுதியையும் தவத்தையும் பார்ப்பதில்லை. ஏனென்றால் உங்கள் தகுதியும், தவமும் அவருக்கு உபயோகமில்லை. உங்கள் வாழ்க்கையின் உச்சமாக, தகுதியாக, மிகுதியாக நீங்கள் கருதும் எல்லாம், பணம், புகழ், அழகு, இளமை, வாழ்க்கை, உத்வேகமும், உந்து வேகமும், வீடும், பணமும், இரத்தினமும், பொருளும், இல்லாளும், இருப்பாளும், மனைவியும், துணைவியும், இணைவியும், பரிச்சாரமும், உபச்சாரமும், எதெல்லாம்

உங்கள் வாழ்க்கையின் சாரம் என்றும், சக்தியென்றும், பலம் என்றும், எச்சம் என்றும், மிகுதியென்றும் நினைக்கின்றீர்களோ அவை எல்லாமே அவருக்குத் துச்சம்.

ஆடு சிங்கத்திற்குப் புல் கொண்டுபோனதுபோலே, நீங்கள் கொண்டு செல்வதெல்லாம் அவர் புசிக்க அல்ல. நீங்கள் கொண்டுசெல்லும் தன்மையை மட்டுமே அவர் ருசிக்கிறார். ஒரு நாளும் நீங்கள் கொண்டு செல்வதை அவர் புசிப்பதில்லை. நீங்கள் கொண்டுசெல்லும் உணர்வையே ருசிக்கின்றார். கொண்டு செல்லும் அழகையே இரசிக்கின்றார். பசிக்காதவன் புசிப்பதேது.

கண்ணால் இரசிக்கவும், வாயால் புசிக்கவும், மனதால் ருசிக்கவும், காதால் இனிக்கவும் ஒன்றும் இலா கடந்த நிலையிருக்கும் பெருமானுக்கு உங்கள் திறனோ, தவமோ, தகுதியோ எவ்விதத்திலும் உபயோகமில்லாததால் அவைகளை உங்களிடமிருந்து அம்பலவாணன் தேடுவதும் இல்லை. அவைகள் இல்லாததனால் ஒருவரை அவன் மறுதலிப்பதுமில்லை. மறுதலிப்பதும் இல்லா பரம்பொருள். தகுதிகளைப்பற்றித் ஒருபோதும் தான் கவலையே படுவதில்லை எனும் சத்தியத்தைத்தான் கரிக்குருவிக்கு உபதேசம் கொடுத்தபொழுது எம்பெருமான் சொல்லுகின்றார்.

கரிக்குருவிக்கு உபதேசம் தந்து பன்றிக்குட்டிகளுக்கு பால் முலை தந்து, ஞானசம்பந்தருக்காவது அன்னைதான் முலைப்பால் கொடுத்தாள். பன்றிக்குட்டிகளுக்கு பெருமானே முலைப்பால் கொடுத்திருக்கின்றான். சோழ நாட்டிலே ஞானிகளுக்கு மட்டும்தான் அதுவும் அன்னைதான் முலைப்பால் கொடுப்பாள். எங்கள் பாண்டி நாட்டிலே பன்றிக்குட்டிகளுக்கு கூட பரமன் வந்து முலைப்பால் கொடுப்பான். எங்கள் ஊர்ச்சிறுவனுக்கு முலைப்பால் தந்து, ஞான சம்பந்தனாக்கினான் என்று ஏமாந்து நிற்கும் சோழர்களே, எங்கள் பாண்டி நாட்டில் பன்றிக்குட்டிக்குக் கூட பரமன் முலைப்பால் கொடுத்து இருக்கின்றான். தகுதியைப் பார்க்காதவன், தயாபரன்.

தவம் கேட்காதவன். தகுதிப்பார்க்காதவன். திறன் வைத்து ஒன்றிற்கு

தீர்வு கொடுக்காதவன், ஹரன். 'நீயே நான்' என்று சொன்னவுடன் நமக்கே அரணாய் இருக்கும் ஹரன். 'என்னைக் கொடுத்தேன்' என்று சொன்ன வினாடியே தன்னைக் கொடுத்திடும் தம்பிரான்

உங்களுக்குள் இருக்கும் சங்கல்ப சக்தியை ஒன்று திரட்டி 'நானே சிவம்' என்று உங்கள் சித்தத்திற்குள் தெளிவான சங்கல்பத்தை உருவாக்குங்கள். இந்த சங்கல்பத்தைச் சார்ந்து, இந்த சங்கல்பத்தை அடித்தளமாய் வைத்து உங்கள் மெய் நினைவும், உயிர் நினைவும் இயங்குவதற்கு அனுமதியுங்கள். உங்கள் தசை நினைவும், மெய் நினைவும், உயிர் நினைவும் நானே சிவன் என்கின்ற சங்கல்பத்தைச் சார்ந்தே இயங்கச் செய்யங்கள்.

ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள். என்னுடைய வாழ்க்கையிலேயே மிகப்பெரிய பலமாக, ஆதரவாக இருந்த பல குருமார்களிலே ஒருவர் நாரயணசுவாமி. அவர் ஒரு வயதான முதியவர். அவர் செய்து வந்த ஒரே வேலை, அதிகாலை சென்று சுற்றியிருக்கும் நந்தவனங்களிலெல்லாம் மலர்களைப் பறித்து, மாலை கொண்டு திருவண்ணாமலை தெற்கு கோபுர வீதியிலிருக்கும் விநாயகருக்குப் பூஜை செய்துவிட்டு வாசலில் அமர்ந்து கொள்வார். யாராவது உணவு கொடுத்தால் உண்பார், இல்லையேல் இல்லை. மிகச்சாதாரணமாக வாழ்ந்த மிகப்பெரிய யோகி. சக்திகளை வெளிப்படுத்திய ஸ்தாசி வத்தன்மையில் இருப்போடு இருந்த ஒரு ஞானி. ஒரு நாள் அவருடன் பேசிட்டிருக்கும்பொழுது, அருமையான ஒரு சத்தியத்தை எனக்குள் அனுபவப் பாடமாக்கினார்.

இந்த சத்தியத்தை ஆழ்ந்து கேட்டுக் கொள்ளுங்கள். நாமே சிவம் என்கின்ற சத்தியத்தை சார்ந்து நம்முடைய தசை நினைவும், மெய் நினைவும், உயிர் நினைவும் இயங்கத் துவங்குமானால் அதைச் சார்ந்து வெளிப்படுகின்ற எல்லாம் ஆமானுஷ்யமான சக்திகளாகவே இருக்கும்.

ஒரு நாள் அவருடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். வயிற்று வலி என்று சொன்னார். கடுக்காய்ப்பொடி கொண்டு வரட்டுமா இல்லை, திரிபலாசூர்ணம் கொண்டு வரட்டுமா, மணத்தக்காளி அரைச்சுக் கொண்டு வரட்டுமா ? எனக் கேட்டேன்.

அவர் சொன்னார்: 'இல்லையப்பா, நான் ஸதாசிவம் என்கின்ற உண்மை சத்தியமானால், இந்த வயிற்று வலி தானாய்த் தீர்ந்துபோய் நான் ஆரோக்யத்துடன் இருப்பேன். ஏனென்றால் சதாசிவன் சதா ஆரோக்யத்தில் இருப்பவர், இந்த சத்தியத்தின் சங்கல்பத்தைச் சார்ந்து, இந்த உடல் ஆரோக்யம் அடையட்டும். இல்லையேல் இந்த உடல் வேண்டாம்.''

அரை மணி நேரத்தில் சரியாகிவிட்டார். இருப்பாரோ, போவாரோ என்று நினைக்கின்ற விதத்திலே துடித்துக் கொண்டிருந்த உடம்பு அரை மணிநேரத்தில் அமைதியாக அடங்கி, முகம் மலர்ந்து சாதாரணமாகிவிட்டார்.

'நீங்கள் மருந்தெடுக்காதீர்கள்' என்று நான் சொல்லவில்லை. ஆனால் மருந்துக்கு முன் இந்த 'ஞான விருந்தை' எடுத்தீர்களானால், மருந்தின் அளவு குறையும். இந்த ஞான விருந்தை எடுத்துக் கொண்டு மருந்தெடுங்கள். மருந்தின் அளவு குறையும். செயல்படும் வேகம் அதிகரிக்கும். சில காலங்களுக்குப் பின்பு மருந்தில்லா வாழ்க்கையும் அமையும்.

திருவண்ணாமலை அந்தளவுக்கு குளிர் இருக்கின்ற பிரதேசம் கிடையாது. அக்னிப் பிரதேசம். அதனால் இங்குள்ள மக்கள் போர்வை, கம்பளம் போன்றவற்றை வைத்துக் கொள்கின்ற வழக்கமில்லை. சாதாரண ஒரு நடுத்தர வீட்டிற்குச் சென்றால் கம்பளமோ, போர்வையோ இருக்காது. விசிறி மட்டும்தான் இருக்கும். வட நாட்டுக்குப் போனால் கம்பளிச் சாமியார்கள் இருப்பார்கள், காளி கம்பளிவாலா என்பார்கள். திருவண்ணாமலை வந்தால் விசிறிச்சாமியாரைத்தான் பார்க்கலாம்.

ஒரு முறை மார்கழி மாதத்தில், நான் விடியற்காலை 3.30 மணிக்கு கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்தேன். வழியில் அவரைப் பார்த்தேன், குளிரால் அவருடைய உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. ''சாமி, ஒரு போர்வையைக் கொண்டு வந்துப் போர்த்தட்டுமா?' என்றேன். ஸதாசிவன் உடம்பென்றால் சீதோஷ்ணம் சமமாகட்டும் என்றார். நடுக்கம் நின்றுவிட்டது. உடம்பு சாதாரண நிலைக்குத் திரும்பியது.

நடுக்கத்திற்கு கூட உடுப்பைத் தேடாமல், இருப்பைத் தேடுகின்ற ஞானிகள். குளிரால் வரும் உடல் நடுக்காயினும், பயத்தால் வரும் உணர்வு நடுக்காயினும். அஞ்ஞான மாயையால் வரும் உயிர் நடுக்கமாயினும் சிவம் நானெனும் இருப்பே தீர்வு.

'நீங்கள் யார்' என்று உங்களை நீங்கள் கருதுகிறீர்களோ, அந்த இருப்பே உங்கள் செயல்பாடு. உங்கள் செயல்பாட்டிலே வருகின்ற வெற்றியோ தோல்வியோ, வியாபாரம், உறவுகள், சமூக அந்தஸ்து, போர் புகழ் இதெல்லாம் செயல்பாடுகள் சார்ந்து வருகின்ற வெற்றி அல்லது தோல்வி. செயல்பாடைச் சார்ந்து வருகின்ற வெற்றியோ தோல்வியோ உங்கள் இருப்பையே பாதிப்பதாக நீங்கள் வைத்திருக்கும் கற்பனைக்குத்தான் 'மாயை' என்று பெயர்.

உங்களுடைய தோல்வியோ உங்கள் இருப்பை பாதிக்குமானால் செயல்பாட்டில் வெற்றி சாத்தியமே இல்லை. அது உங்கள் இருப்பை பாதிக்காமல் நிலைநிறுத்தி கொள்ள துவங்கினீர்களானால் இருப்பில் அல்ல செயல்பாட்டிலும் வெற்றி நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

அதாவது வெளியிலே செயல்பாட்டினால் வருவதும் போவதும் உயர்வதும் தாழ்வதும், உங்கள் இருப்பு நிலையை, உங்களை பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்தைப் பாதிக்காத வண்ணம் வாழ்தல் ஆன்மீக வாழ்க்கை. அதுவே ஜீவன் முக்த வாழ்க்கை.

செயல்பாட்டின் உயர்வும் தாழ்வும், விருப்பும் உங்களுடைய இருப்பு நிலையை பாதிக்காமல், மனஉளைச்சல், மனஅழுத்தம், மனக்கொந்தளிப்பு, மனமாற்றம் போன்றவைகளை உங்களுக்குள் நிகழ்த்தாமல், உங்களால் உங்களைக் காத்துக் கொள்ள முடியுமானால், நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளத் துவங்குவீர்களேயானால், உங்களுடைய செயல்பாட்டில் மேம்பாடையும், செயல்பாட்டில் நுண் மேலாண்மையையும் செயல்பாட்டில் வெற்றியும் வாழ்க்கையின் வழியாக மாறி விடும்.

'யோக: சொல்லுகின்றான். யோகம் என்பது செயல்பாட்டில் நுண் மேலாண்மை. வாழ்க்கையில் அடிமட்டத்தில் செயல்பாட்டின் வெற்றி மூலம் கொஞ்சம் பணம், போர், புகழ், வீடு, கார் - இவற்றையெல்லாம் சம்பாதிப்பதின் மூலம் நடுத்தர வர்க்கத்துக்கு வந்து விட முடியும். ஆனால் நடுத்தர வர்க்கத்திலிருந்து மேம்படுவதற்கு செயலின் வெற்றி உதவாது. இருப்பின் வெற்றியே உதவும்.

ஒரு நடுத்தர வர்க்கத்திற்கு வந்து விட்டீர்களேயானால், அதற்குப் பிறகு வாழ்வில் மேம்பட ஒரே வழி, இருப்பை மேம்படுத்துவது. செயல்பாட்டின் மேம்பாடும் செயல்பாட்டின் வெற்றி தோல்வியும், இருப்பை பாதிக்கின்ற வகையில் இருக்கின்றவரை நீங்கள் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்களாக வாழ்ந்து சாவீர்கள். ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள், வாழ்க்கையை நடுத்தர வாக்கத்தில் தொடங்குவது தவறில்லை, நடுத்தர வர்க்கமாய் சாவது பெரும் தவறு.

எந்த துறையாக இருந்தாலும் - அரசியலாகட்டும், சமூகமாகட்டும், ஆன்மீகமாகட்டும், தலைமைத்தன்மை, செயலால் வரும் இன்பு துன்புக்கு அப்பாற்பட்டு, செயலால் வரும் இன்பாலும் துன்பாலும், சித்தம் கலங்காது இருப்பவர்க்கே தலைமை சாத்தியம்.

செயலால் வரும் உயர்வும் தாழ்வும், உங்களைப் பாதிக்கத் துவங்கினால், தொடர்ந்த மன உளைச்சல், துக்கத் தாக்குதல், பயத் தாக்குதல் போன்றவைகளினால் வாழுகின்ற சக்தியும் விருப்பமும் குன்றி, நடுத்தர வாழ்க்கையாகவே நம் வாழ்க்கை கழிந்துவிடும்.

எப்பொழுது செயலின் உயர்வும் தாழ்வும், செய்கையின் நன்றும் தீதும் உங்கள் இருப்பு நிலையை அசைக்க முடியாத வண்ணம் இருக்கத் துவங்குகிறீர்களோ, அப்பொழுதே வாழ்வை வாழ்வதற்கான சக்தியும் விருப்பமும் நமக்கும் தெளிவாக இருக்கும்.

மிக ஆழ்ந்து புரிந்துகொள்ள வேண்டிய அடிப்படைசத்தியம். மஹாதேவ ரகசியத்தின் முதற் பகுதி. இருப்பு வேறு. செயலால் வரும் நன்றும் தீதும் வேறு. இதை தெளிவாக புரிந்து கொண்டீர்களானால்தான், இருப்பில் இறைவனை நிறுத்தி, செயலில் வெற்றியாய் வெளிப்படுத்த முடியும். இல்லையேல் செயலின் நன்றும் தீதும், உயர்வும் தாழ்வும் இறைவனை காரணம் என்று சொல்லி, அவருக்கு இழுக்கு சாற்றி, அவருக்கும் உங்களுக்கும் இடையே இடையே இடைவெளியை ஏற்படுத்துவார்கள். இறைவன் மீது இழுக்கு சாற்றல் இடைவெளியாக்கும்.

மனிதனுடைய மிகப்பெரிய பிரச்னை இறைவனை இழுப்பதற்கும் பழிப்பதற்கும் பொருளாக உபயோகப்படுத்த துவங்குவது. நாம் நினைத்தது நினைத்தபடி நடக்கவில்லையென்றால் இறைவனைப் பழித்து விடுவது. பரீட்சையில் வெற்றிபெற்றால், தேங்காய் உடைப்பது, கு தோல்வி அடைந்தால் பிள்ளையாரையே உடைப்பது.

நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்ற இறைவன் காத்திருக்கிறான், ஆனால், நீங்களே தலை கால் புரியாமல் குழம்பிப் போய் தரித்திரத்தனமாக இருக்கும்போது, நீங்கள் நினைத்ததை அவர் நிறைவேற்ற முயற்சி செய்தால், என்ன ஆகும் ? வாழ்க்கை நரகமாய் மாறும்.

இருப்பு செயல்பாட்டால் பாதிக்கப்படுவதில்லை என்கின்ற அடிப்படையாக உங்களுக்குள் வரும்பொழுது, அதன் அறிவியல் தெரிந்து நினைப்பவருக்கு, இருப்பில் இறைவனை கண்டு, இருப்பில் இறைவனை நிறுத்தி சங்கல்பம் செய்து, அதன் மூலம், இறை சக்தியை, சதாசிவன் சக்தியைச் செயலிலும் வெளிப்படுத்துவது சாத்தியமாகும், சத்தியமாகும்.

வேதாந்த சித்தாந்த ஆகமாந்த சாரமான சிவத்துவமசி என்னும் சத்தியத்தை சங்கல்பமாய் உங்களுக்குள் சங்கல்பிக்கும்பொழுது,

வெளியில் உங்கள் வாழ்க்கையில், உங்கள் உள்ளில், இறை நிலையில் என்ன நிகழ்கிறது என்பவைகளை ஆழ்ந்து பார்ப்போம். அதை நாம் எப்படி முழுமை இன்றி புரிந்துகொள்கிறோம் என்பதையும் ஆழ்ந்து பார்ப்போம்.

இந்த சிவத்துவமசி என்ற மகாதேவ ரகசியத்தில் மொத்தம் மூனே மூனு பேர்தான் சம்பந்தம் பட்டிருக்கிறார்கள். ஒன்று, சதாசிவன், இன்னொன்று அவருடைய வடிவமாக இருந்து இந்தச் சத்தியத்தை உங்களுக்கு அனுபூதியாக மாற்றுகிற குரு. மூன்றாவது நீங்கள். இந்த மூன்று பேர்தான் இதில் சம்பந்தம் பட்டிருக்கிறீர்கள்.

உண்மையிலேயே, உள் உணர்வில் என்ன இருக்கிறது, ஆனால் அதனை நீங்கள் எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டாலே இந்த மகாதேவ ரகசியம் விளங்கும். ஒரு வீட்டை வாங்க வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள். அந்த வீட்டைப் பார்த்தவுடன் உங்களுக்கு ரொம்ப பிடித்துவிடுகிறது. ஆனால் உங்களுக்கு பயம். உங்கள் விருப்பத்தை வெளிப்படையாகச் சொல்லிவிட்டால், 1 கோடி பெறும் வீட்டின் விலையை 5 கோடி என்று வீட்டின் சொந்தக்காரர் உயர்த்திவிடுவாரே!

ஆனால் அந்த வீட்டுக்குச் சொந்தக்காரரோ, 'எப்படியாவது 50 லக்ஷத்துக்காவது யார் தலையிலாவது கட்டிட்டு, நாம் வெளியேறினால் போதுமப்பா' என்று தவித்துக்கொண்டு இருக்கிறார். வீட்டுக்குச் சொந்தக்காரரின் மனதிலே என்ன இருக்கிறது, வாங்க வேண்டுமென விரும்புகிறவரின் மனதிலே என்ன இருக்கிறது என்ற ரெண்டு ரகசியங்களையும் சரியாகப் புரிந்துகொண்டு, செயலை நடத்தி வைப்பவர்தான் புரோக்கர்.

வாங்க வேண்டுமென விரும்புகிறவரிடம், ''அப்பா, உனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்பது எனக்குப் புரியுது. கவலையேப்படாதே. இதை விற்றுவிட்டு, வெளியேறினால் போதும் என்று நினைக்கிறார். நீ வீணாக, 5 கோடி என்றெல்லாம் எண்ணி கவலைபடாதே, அவர் 50 லக்ஷம்தான் மனதிலே வெச்சிருக்காரு...' என்கின்ற ரகசியத்தைச் சொல்லி, அதேபோல், வீட்டின் சொந்தக்காரரிடம் போய், "ஐயா, அவனுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. வாங்குவானோ வாங்கமாட்டானோ என்று பயப்படாதீர்கள். நீங்க மனதில் நினைத்துக்கொண்டிருப்பது 50 லக்ஷம்தான், நான் 60 லக்ஷமே சொல்லி வாங்கித் தருகிறேன்,'' என்று அவருக்கும் தைரியம் கொடுத்து, இருவருக்கும் ஒருவரைப் பற்றி ஒருவர் ரகசியங்களை சொல்லி, வேலையைச் சுமூகமா முடிப்பவர்தான் நல்ல தரகர்.

'சிவமே நான்' என்று சொன்னால், சிவன் கண்ணைக் குத்திட மாட்டாரா? அவருக்குக் கோபம் வந்துவிடாதா? என் தகுதி என்னென்னு கேட்க மாட்டாரா? 2 நாளைக்கு முன்னாடி கூட, கறி தின்றுவிட்டு, குடித்துவிட்டு படுத்திருந்த நான், என்னையே சிவம் சொன்னால் ஒத்துக்கொள்வாரா ? என உங்களுக்குள் தேவையேயில்லாத சந்தேகங்கள், மனக் கலக்கங்கள்.

ஆனால் சிவனோ, ''நீ என்ன செய்கிறாய் என்பது எனக்கு ஒரு பொருட்டு அல்ல, உன்னுடைய உயிரில் நான் வெளிப்பட வேண்டுமென நினைக்கிறேன். உன் உயிரை மட்டும் நான் இருப்பதற்கு அளிக்க மாட்டாயா ? உன் செயலையா நான் கேட்கிறேன்? உன் சிந்தனையைத்தான் நான் கேட்கிறேன். உன் சித்தத்தை அல்லவா நான் கேட்கிறேன், '' என அவரொரு கருத்தில் இருக்கிறார்.

இவர்கள் இருவருடைய கருத்து ரகசியத்தையும் தெரிஞ்சவர் குரு.

சீடனிடம், "அப்பா, கவலைப்படாதே. 'சிவனே நான்' என்று சொன்னால், அவா கோபப்பட மாட்டார். அவர் அந்த மாதிரி மனநிலையில் இல்லை. உன்னுடைய உயிரான சித்தத்திற்குள், பொன்னம்பலத்தான் சித்தத்தில் பொன்னம்பலமாய் வைத்து சிதம்பரம் தாண்டவம் செய்திடவே எத்தனித்து காத்திருக்கிறான் எம்பெருமான் ஈசன்.

அவன் தராதரம் கேளான் தகுதியும் கேளான். பலனும் கேளான். பலவும் கேளான். ஏதும் கேளான் என்பதைக் காட்டவே, சுடலையிலும் தாண்டவம் செய்கிறான். சுந்தரத் திருமகன் சுடலையில் கூட தாண்டவம் செய்கின்றான் என்றால் அதை விடவா உன் மனம் அழுக்காய் மாறியிருக்க முடியும் ? என்று மகாதேவன் உள்ளத்தில் இருப்பதை சீடனுக்குச் சொல்லி, என்னவெல்லாம் சீடனுக்குள் சந்தேகங்கள் இருக்கின்றதோ தவறான கருத்துக்கள் இருக்கின்றதோ

அதையெல்லாம் அழித்து தெளிவாக்கி, சிவத்துவமசி என்னும் அனுபூதியை சீடனுக்குள் மலரச் செய்பவர்தான் குரு.

உங்கள் உள்ளத்தில் இருக்கும் கிடைக்கையைத் தகாத்து, உள்ளத்தில் இருக்கும் சந்தேகங்கள் அழித்து, உள்ளத்தில் இருக்கும் துக்கங்கள் எரித்து, உள்ளத்தில் இருக்கும் தூய்மையை, தெளிவை மலரச் செய்து உங்களுக்குள் சிவத்துவமசி என்னும் அனுபூதியை மலர்வதற்காக எம்பெருமான் இருப்பு நிலையில் இருக்கும் ரகசியங்களை உங்களுக்குச் சொல்வதுதான் இந்த மஹாதேவ ரகசியத்தின் காரணம்.

பொறாமை கொள்ளான், பொல்லாப்பு இல்லான். நல்லாப்பு செய்து நமனையும் அழித்து, இருப்பும் இன்மையும் கடந்த உங்கள் சித்தம் ஒன்றையே தன் சி தம்பரமாய் மாற்றி திருநடம் செய்திட காத்திருக்கும் கபாலீசன், இறைவன் விட்ட தூதுவன்தான் குரு. இறை விடு தூதுவே குரு. சிவன் சீவனுக்கு விடும் தூது குரு.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், மஹாதேவ ரகசியத்தை உங்கள் எல்லோருக்கும் சொல்ல பெருமான் விட்ட தூதுவன் நான்.

கபாலத்தில் நீங்கள் எழுதிக் கொண்டதை மாற்றி வைக்கும் கபாலீஸ்வர். நீங்களாய் தாறுமாறாய், நிலைதடுமாறி எழுதிக்கொண்ட மூட எழுத்தெல்லாம் அழித்திடும். இறைவன் உள்ள கிடக்கையை, சிவனின் உள்ள கிடக்கையை சீவனுக்கு சொல்லவே வந்த தூதுவன்.

ஒவ்வொரு முறை நீங்கள், 'நானே சிவம்' என்கின்ற சத்ய சங்கல்பத்தை உங்களுக்குள் கொண்டாடுகிறார். ஒவ்வொரு முறை அந்தச் சத்ய சங்கல்பத்தை உங்களுக்குள் உருவாக்கும்பொழுதும், பெருமான் நீங்கள் உருவாக்கும் சத்ய சங்கல்பத்தை ஏற்றுக்கொள்வது மட்டும் அல்ல, ஆனந்த தாண்டவம் செய்கின்றார்.

சிதம்பரநாதனாய் உங்கள் சித் அம்பலத்தில் ஆனந்த தாண்டவம் செய்ய காத்திருக்கிறார். அவருக்கு வேண்டியது உங்கள் திறமை அல்ல. எதையெல்லாம் நீங்கள் அவைகளெல்லாம் அவருக்கு எந்த விதத்திலும் உபயோகம் இல்லை.

''சரி, ஜீவனுக்கு சிவன் அனுப்பிய தூதன் குரு, அதற்கு நாங்கள் எவ்வளவு தர குப்பணம் தர வேண்டும் ?'' என்று மக்கள் கேட்கிறார்கள். ஏனென்றால், 'நாம் தரகுப்பணம் வாங்காமல், வேலைசெய்து பழக்கம் இல்லை என்பதாலே, இந்தத் தரகரும் தரகுப்பணம் வாங்காமல் வேலைசெய்ய மாட்டார்' என நினைக்கின்ற மன அமைப்பு மக்களிடம் பதிந்துள்ளது.

தரகுப்பணம் வாங்கி தனக்கென சேர்த்து வைத்துக்கொள்ளும் வெளி உலக வியாபாரம், ஒரு பாரம். ஆனால் குருவால் உள்ளுக்குள் நிகழ்த்தப்படும் விஷயங்கள் பரிமாற்றம், பாரம் அல்ல.

நீங்கள், 'பெருமான் என்று வருவார்?' என்று எப்படிக் காத்திருக்கிறீர்களோ அதுபோல, 'நீங்கள் என்று அழைப்பீர்களோ என்று?'எம்பெருமானும் காத்திருக்கின்றார்.

காத்திருப்பு இரண்டையும் ஒன்றாக்கி, காற்றலை தவிர்த்து இருத்தலை ஒன்றாகும் வேலையை செய்பவர்தான் குரு.

இரண்டுபுறமும் காத்திருத்தல் நிகழ்கின்றது. ஒருபுறம் அறியாமையினால், மறுபுறம் அழையாமையினால். சிவம், அழையாததால் காத்திருக்கின்றது. ஜீவன், அறியாததால் காத்திருக்கின்றது. ஜீவன் காத்திருக்கும் காரணம் அறியாமை. சிவம் காத்திருக்கும் காரணம் அமையாமை.

அறியாமையினால் நிகழும் நிலைமையைத் தவிர்த்து அழைக்கச்செய்து, காத்திருத்தலை முற்றுபெறச் செய்து, காற்றலை கற்றலாய் மாற்றி, இருப்பை ஒன்றாகும் செயலே குருவின் செயல்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், கடவுள்கூட தலையிடமுடியாத ஒரு இடம் எது என்றால், உங்களுடைய வாழ்க்கையின் தனிமனிதச் சுதந்திரம்.

ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழில்களில் முதல் நான்கு நிலையான ஆக்குதல், காப்பாற்றுதல், அழித்தல், மறைத்தல்

இந்த நான்கையும் செய்யும்பொழுது, உங்களுக்கு அந்தத் தனிமனிதச் சுதந்திரம் இல்லை. 'நான் - நான்' என்கிற அந்தத் தனி விழிப்பு, தனி இருப்பு உங்களுக்குள் இல்லை. அந்த நான்கையும், இறைவன் நேரடியாக வடிவம் கடந்த தன்னுடைய சதாசிவ நிலையில் இருந்தே செய்துவிடுகின்றார்.

இந்த மறைத்தல், மாயையில் போட்டு உங்களை அழுத்தியவுடனேயே, 'நான்' என்கிற அந்தத் தனிமனித சுதந்திரம் வந்துவிடும். அதற்குப்பிறகு பெருமானேகூட அதில் தலையிட முடியாது.

தோலுக்கு மிஞ்சினால் உங்கள் மகனேகூட தோழன்தான். அதுக்குமேல தலையிட முடியாது. அதுபோல மாயையில் பட்டு 'நான், நான' என்கிற அந்தத் தனி அகங்காரம் வந்துவிட்டால், இறைவன்கூட தலையிட முடியாது. அதனாலதான் இந்த ஐந்தாவது செயலான ஞானம் அளித்தல் செயலை அவர், அவர் விருப்பப்படி செய்துவிட முடியாது. நீங்களும் அதற்கு இயைந்தாக வேண்டும்.

உங்களுடைய இயைபு வேண்டும், இசைவு வேண்டும். அந்த உங்களுடைய இயையையும், இசைவையும் இருப்புநிலையான, பரம்பொருள் சதாசிவ நிலையிலிருந்து, குருமேனி தாங்கி மனிதவடிவிலே ஞானமளிக்கின்ற ஒரு செயலைச் செய்யத்தான் வருகின்றார்.

காரணம் என்னவென்றால் இந்த ஐந்தாவது செயலான ஞானமளித்தலைச் செய்வதற்கு உங்களுடைய தனிமனித சுந்திரத்தோடு நீங்கள் அதை 'வேண்டும்' என்று கேட்டாக வேண்டும்.

நீங்கள் மறுத்தால் பெருமானேகூட உள்ளே வர முடியாது. அதுமாதிரியான சுதந்திரத்தை கொடுத்துவிடுகின்றார். இருப்பதிலேயே மிகப்பெரிய கொடுமை என்னவென்றால்.. பெருமானை மறுக்கும் சுதந்திரம்.

ஈசனை, அருவுரு ராசனை, குருவுருநாதனை மறுக்கும் சுதந்திரம்தான் வாழ்க்கையில் கொடிது. கொடிது, கொடிது பெருமானை மறுக்கும் சுதந்திரம். அந்த ஒரு செயலை செய்துவிட்டால், மறுத்தல் - மறுதலித்தலைச் செய்துவிட்டால், யாராலும் எவராலும் எதுவும் செய்ய முடியாது.

பிரம்மாவின் கோபத்திற்கு ஆளானால், விஷ்ணு காப்பார். விஷ்ணுவின் கோபத்திற்கு ஆளானால் சிவன் காப்பார், சிவனின் கோபத்திற்கு ஆளானால்

குருகாப்பார், குருவை மறுதலித்துவிட்டால், அவரை மறுக்கும் கதந்திரத்தை நீங்கள் உபயோகப்படுத்திவிட்டால் அவரும்கூட ஒன்றும் செய்ய முடியாது.

இந்த மறுக்கும் சுதந்திரம்தான் மிகப்பெரிய மாயை. அதில்தான் அந்த மறைத்தல் என்கின்ற லீலையைப் பெருமான் புரிகின்றார். 'அந்த மறைத்தல் என்கின்ற மறுக்கும் சுதந்திரத்திற்குள் நான் விழக்கூடாது' என்கின்ற வரத்தை சுந்தர மூர்த்திப் பெருமானாரைப்போல் பெற்றிடுங்கள்.

காத்திருத்தலை விட்டு, கற்றிருத்தலை துவங்குங்கள். காத்திருத்தல் காலத்தை வீணாக்கும். கற்றிருத்தல் வாழ்க்கையை மலர வைக்கும். கற்று இருத்தல் அறிவு. அதனால் வருவது ஞானச்செறிவு. நிகழ்வது இறைவனின் ஆனந்த வெளிப்பாடு.

நிலத்திற்குத்தான் ஒருவர் பிடித்துக்கொண்டால், இன்னொருவர் இருக்கின்றாரே என்கின்ற பயம். நெருப்பிற்கு அந்த பயம் இல்லை. எத்துணை பேர் உள்வந்தாலும் அவர்களையெல்லாம் தனதாக்கி, தானே தன் மயமாக்கிக் கொள்ளும் ஒருமை தன்மையின் வெளிப்பாடு நெருப்பு.

ஒரு நிலத்தை, 'இது எனது' என்று ஒருவர் சொன்னால், மற்றவருக்கு அது கிடைக்காது. பொறாமையும், புரட்டும், வோட்டியும், வந்தே தீரும். ஆனால் நெருப்பைப் பொறுத்தவரையில், 'நான் நெருப்பு' என்று எத்துணை பேர் சொன்னாலும், நெருப்புக்குப் போட்டியும் இல்லை. பொறாமையும் இல்லை. எல்லோரையும் தன்மயம் ஆக்கிக்கொண்டு, மீண்டும் மீண்டும் பொங்கி ஒளிரும் சக்தி உடையது நெருப்பு.

இறைவன் நெருப்பைப் போன்றவன். அதனால்தான் ஒருவர் 'நானே நீ' என்று சொன்னால், 'வாவென்று வாரி அழைத்து', சொன்னவண்ணம் செய்யும் பெருமான் செய்து காட்டி விடுவார்.

இந்த மகாதேவ ரகசியத்தை ஆழ்ந்து சிந்தியுங்கள். உங்கள் இனம், குணம், மனம், நன்று, தீது, வரவு, செலவு, சரி, தவறு, இவை எல்லாவற்றையும் கடந்து, உங்கள் இருப்பிலே நீங்கள் சிவமாகவே ? ?

உங்கள் செயலும் அதன் விளைவும் உங்கள் இருப்புதன்மையான சிவமை ? ?தொடுவதும் இல்லை, சுடுவதும் இல்லை, பாதிப்பதும் இல்லை, பாதிக்கவும் இயலாது. கரும்பால் நாவினிக்கும். இச்சத்தியத்தை மனதால் விரும்ப மனிமே இனிக்கும். நாவினிக்க கரும்பு சுவைப்பது போலே, மனம் இனிக்க இந்த சாத்தியமான சிவத்துவமசியை தொடர்ந்து சிந்தியுங்கள். இதை அனுபூதியாய் அடைய விரும்போருக்கு அருமையான ஒரு வாய்ப்பு.

அனுபூதி வேண்டும் என்று ஆவல் உடையவர்கள். வாருங்கள். பெங்களுரு ஆதீனத்திற்கு. வரலாமா அனுமதிப்பீர்களா? என்று நீங்கள் காத்திருப்பது எனக்குத் தெரியும். வருவீர்களா வரமாட்டீர்களா என்று நான் காத்திருப்பது உங்களுக்குத் தெரியுமா? வாருங்கள் காத்திருக்கின்றேன். வழிகாட்டி. நீங்கள் எல்லோரும் நித்யானந்தத்தில் நிறைந்து நித்யானந்தத்தில் மலர்ந்து நித்தியானந்தம் ஆகிட ஆசீர்வதிக்கிறேன். நன்றி. ஆனந்தமாக இருங்கள்.

சைவ நீதி ஆதிசைவம் சார்ந்து உங்கள் எல்லோருக்கும் இருக்கும் கேள்விகள் சந்தேகங்கள் இவைகள் அனைத்தையும் நித்யானந்த தியானபீடம் பெங்களுரு ஆதீனத்திற்கு அனுப்பலாம். உங்கள் சந்தேகங்களை கேள்விகளை அனுப்பலாம். அது மட்டும் அல்லாது மிக முக்கியமான இந்த ஆதிசைவத்தை உங்கள் வாழ்வியல் நெறியாக அனுபவமாக மாற்றி கொள்வதற்கு எம்பெருமான் அருளி இருக்கும் மிக முக்கியமான சமய தீகைஷ், விசேஷ தீகைஷ் என்கின்ற இரண்டும் வருகின்ற 21,22,23,24 ஆகிய நான்கு தேதிகளில் பெங்களுளு ஆதினத்தில் நித்யானந்த நகரத்தில் நடைபெறும். அன்பர்கள் அனைவரும் வந்து கலந்து கொண்டு சமய தீகைஷயும், விசேஷ தீகைஷயும் பெற்று ஆதிசைவத்தை அனுபவமாக மாற்றிக் கொண்டு எம்பெருமானோடு இரண்டற கலந்து இறைநிலை உணர்ந்து சிவஞானத்தை அனுபூதி ஆக்கிக்கொண்டு, சிவபோதத்தில் நிலைத்து வாழுமாறு சிவபோதத்தில் நிலைபெற்று இருக்குமாறு உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கின்றோம்.

6. வாழ்வியல்நெறி

ஆகிசைவத்தின் சாரம்: மனிதன் மட்டுமல்லாது எல்லா உயிரினங்களிலும் தன்னுடைய மூல நிலையான இறைத்தன்மையை, கடவுள் தன்மையை எல்லா ஜீவனும் உணர்ந்து, அதில் லயித்து இருப்பதற்கான வாழ்வியல் முறை ஆதி சைவம்.

ஆதிசைவம் எனும் இந்த வாழ்வியல் முறை பரம்பொருள் அகண்ட பரிபூரண சச்சிதானந்த சின்மயானந்த, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொரூபி சதாசிவனே செய்து வைத்து உலகிற்கு வழங்கிய ஆய்வியல் வாழ்வியல்.

இயைபு, இயல்பு, இருப்பு எனும் மூன்று நிலைகளிலும் வாழ்வதனால் சிவத்துவத்தை நமக்கு, நம் எல்லோருக்குள்ளும் அநுபூதியாக மாற்றும் சக்தி வாய்ந்த இந்த வாழ்வியல் முறையை பரம்பொருளாம், பரமசிவனே அருளி இருக்கிறார்.

இயைபு என்றால் வாழும்பொழுதே ஒன்றை மேன்மைப்படுத்திக் கொள்வது, இயல்பு என்றால் ஒன்றை நம் வாழ்க்கையின் இயல்பாக மாற்றிக் கொள்வது, இருப்பு என்றால் ஒன்றை நாமாகவே மாற்றிக் கொள்வது.

எந்த நிலையில் இருக்கும் ஜீவனுக்கும் உதவுவது, ஆதிசைவமே

ஆதிசைவம் எனும் இந்த வாழ்வியல் முறையை நோக்கி எறியப்படும் கேள்விகளை ஆழ்ந்து பார்ப்போம். ஆதிசைவம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய கேள்வி, நானே என்னுடைய வாழ்க்கையில் இந்தக் கேள்வியை மூடர்களிடமிருந்து எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இது ஒரு மிகப்பெரிய மூடத்தனம் சார்ந்த பிரச்சனை.

ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்! தூங்குபவனை எழுப்பிவிடலாம். தூங்குவது போல் நடிப்பவனை எழுப்புவது சாத்தியமே இல்லை. உண்மையை உள்வாங்க வேண்டுமென்று, பகுத்தறிவோர்க்கு பதில் மூலம் சத்தியத்தை சாத்தியமாக்கலாம். ஆனால் எறிவதற்காகவே பகுத்து அறிவோர்களுக்கு பதில் வழங்குவது சாத்தியமே இல்லை.

இவர்களுடைய கேள்வி, இவர்களுடைய வாதம், இவர்களுடைய பிரதிவாதம் எல்லாமே பித்தலாட்டம். இந்தப் பித்தலாட்டக்காரர்கள் எறிந்த சில கேள்விகள். இது கேள்விகள் கூட இல்லை. பகுத்தெறிவதற்காகவே பகுத்தறியும் மூடத்தனத்தின் எச்சங்களும் மிச்சங்களுமே! அவர்களுடைய கொள்கைகளாகவும் கோட்பாடுகளாகவும், பாரம்பரியம் என்கிற பெயராலேயே அவைகளுக்கு பட்டாபிஷேகமும் செய்யப்பட்டு எறியப்பட்ட சில கேள்விகள்.

இவர்களுடைய பகுத்தெறியும் மூடத்தனத்திற்கு பாரம்பரியம் என்கின்ற பட்டாபிஷேகமும் செய்து வைத்து, இந்தக் கேள்விகள் எறியப்பட்டன.

இதில் முதல் கேள்வி என்னவென்றால், சைவம் என்றால் த்வைத கருத்தை உடையது. அத்வைதிகளுக்கு சைவத்திலும், சைவ மடத்திலும் என்ன வேலை ? ஆகவே அத்வைதிகள் சைவத்திற்குள், சைவமடங்களுக்குள், சைவ சம்பிரதாயத்திற்குள் வரக்கூடாது என்பதுதான்.

ஆழ்ந்து கேளுங்கள். (Part 2)

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். இந்தப் பிரச்சினையைத் தொடங்கிய யாருமே அத்வைதத்தோட 'அ'னா, 'ஆ'வன்னாவைப் படித்ததில்லை, அநுபூதியாக உணர்ந்ததில்லை என்பது ஒருபுறம், அவர்கள் அறிவாலும் கூட அதை ஆராய்ந்ததில்லை.

பகுத்தெறிவதற்காக காரணத்திற்காகவோ, இந்தக் கேள்வி எழுந்துவிட்டது. அதனால் பதில் சொல்லியே தீரவேண்டிய இதற்குத் தீர்வளித்துத் தீரவேண்டிய கடமையும் பொறுப்பும் இருப்பதனால், இந்தப் பிரச்சனையை அலசி ஆராய்வோம்.

ஒரு சாரார், சைவம் த்வைதம் என்றும், ஒரு சாரார், விசிஷ்டாத்வைதம் என்றும், இன்னொரு குழுவினர் சைவம் அத்வைதம் சார்ந்தது என்றும் கூற, அதைப் பற்றிய மிகப்பெரிய வாதப்பிரதிவாதங்களும், அதைச் சார்ந்த மனக் கசப்புக(ளும் சஞ்சலங்களும் சங்கடங்களும் பல்வேறு பிரச்சினைகளும் சமூகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், த்வைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் மூன்றுமே ஒரு ஜீவன் சிவத்துவத்தை அடைகின்ற பாதையிலே உணருகின்ற அநுபூதிகள். அவை பாதையில் வருகின்ற ஊர்களைப் போன்றவை. பாணியில் ? ? வருகின்ற இரயில் நிலையங்களைப் போன்றவை.

ஒருவன் தன்னை உடல் என்று உணரும் போது, பெருமானையும் பொருள் வடிவத்தில் பார்த்து ரசிக்கின்றான். அது த்வைதம்.

தன்னை தன்னுடைய மனதில் நிலவுகின்ற சந்தோஷம் அல்லது துக்கத்தோடு இணைத்து, தன்னை 'உணர்வு' என்று காணும் போது இறைவனையும் பிரபஞ்ச உணர்வாக பார்த்து, அதில் தன்னை ஒரு பாகமாக பார்த்து உணருகின்றான். இது விசிஷ்டாத்வைதம்.

இதைத் தாண்டி, 'தான்' எனும் தனி உணர்வே மறையும்பொழுது, ஜீவன் சி வனாக மாறும் 'சிவோஹம்' எனும் அத்வைத நிலையை அனுபவிக்கின்றான்.

இந்த மூன்றும், ஜீவன் சிவத்துவத்தை அடையும் வழியிலே இருக்கின்ற வேறு வேறு நிலைகள்கான்.

பரம்பொருள் அருளியிருக்கும் வாழ்வியல் நெறியான ஆதி சைவம் இந்த மூன்றையும் உள்ளடக்கி, இந்த மூன்றுக்கும் அப்பாற்பட்டதாய் திகமுகின்றது. சைவம் வெறும் த்வைத சம்பிரதாயம் அல்ல; வெறும் விசிஷ்டாத்வைத சம்பிரதாயம் அல்ல; வெறும் அத்வைத சம்பிரதாயம் அல்ல; இந்த மூன்றையும் உள்ளடக்கி, இதையும் தாண்டி சில படிகளையும் உள்ளடக்கியது சைவம்.

சைவத்தை த்வைத்திற்குள்ளும், விசிஷ்டாத்வைத்திற்குள்ளும் அடக்க முயற்சிக்க்கும் சிவ துரோகிகள் எரிபத்தா்களாலும், மூர்க்காகளாலும் கவனிக்கப்பட வேண்டிய மூடா்கள். ? ?

உடம்பில் வேகமும், இரத்தத்தில் சூடும் இருக்கும் போதே, அநுபூதியைத் தேடி அடையுங்கள்

சைவத்தை த்வைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் எனும் எந்த ஒரு சட்டத் திற்குள்ளும் அடக்கிவிட முடியாது. எந்த நிலையில் எந்த ஜீவன் இருந்தாலும், அந்தந்த ஜீவனுக்கு அந்தந்த நிலையிலேயே இருந்து சத்தியத்தை காட்டி, சிவத்துவத்தில் நிலைபெற வைக்கும் வாழ்வியல் முறை ஆதி சைவம்.

மடமையை அழித்து, பின் மடத்தின் அதிபதிகளாக அமைந்தால், அது மக்களுக்கு நன்மை செய்யும். மடமையை அழிக்காமல், மடமைக்கு அதிபதியாய் இருந்து கொண்டு, மடாதிபதிகளாக சிலர் இருப்பதனால், பீடத்திற்கு அதிபதிகளாக இருப்பதற்குப் பதிலாக, மக்களைப் பிடித்த பீடைகளுக்கு அதிபதியாக இருந்து கொண்டு, சத்தியம் மக்களுக்கு சாத்தியமாவதற்கு வழி சொல்லாது, நித்திலம் ? ? அவர்களைக் குழப்பத்தில் ஆழ்ந்தி, குருடும், குருடும் குருட்டாட்டம் ஆடி குழியில் விழுந்திடும் கதியை என்னவென்று சொல்வது ?

சைவம் த்வைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் எனும் மூன்று சம்பிரதாயங்களையும் உள்ளடக்கியது. இவை மூன்றிற்கும் அப்பாற்பட்டது. இது ஒரு முழுமையான வாழ்வியல் முறை.

ஒரு ஊரில் ஒரு பெரிய குளம். அந்த ஊருக்கு நான்கு பேர், நான்கு வேறுவேறு இடத்திலிருந்து வருகிறார்கள். அதிலொருவர், அந்த ஊரிலிருந்த விவசாயியைப் பார்த்துக் கேட்கிறார்: ரொம்ப தாகமாக இருக்கிறது, தண்ணீர் எங்கே கிடைக்கும் ? குடியானவன் குளத்தைக் காட்டினான்.

வடநாட்டிலிருந்து வந்திருந்த இன்னொருவர் கேட்கிறார்: 'பானி' எங்கே கிடைக்கும் ? குடியானவன் குளத்தைக் காட்டினான்.

இன்னொருத்தர் ஆந்திராவிலிருந்து வந்திருந்தார், அவர் கேட்டார்: நீலு எங்கே கிடைக்கும். குடியானவனுக்கு வார்த்தை புரியவில்லை. ஆனால் சைகை மூலம் காட்டியதால், புரிந்து கொண்டு குளத்தைக் காட்டினான். அந்தக் காலத்தில், குடிப் பதுபோல் சைகை காட்டினால், வெறும் தண்ணீர் என்று மட்டும்தான் அர்த்தம்!

வெளிநாட்டிலிருந்து வந்திருந்த நான்காமவர், 'வாட்டா' எங்கே என கேட்டார். குடியானவன் குளத்தைக் காட்டினான்.

நான்கு பேருமே அந்தக் குளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் வழியில் சந்தித்துக்கொண்டார்கள். எங்கே போகிறீர்கள் என்று ஒருவரையொருவர் விசாரித்துக்கொண்டனர். தண்ணீரைத் தேடி என்று ஒருவரும், வாட்டரைத் தேடி என்று ஒருவரும், பானியைத் தேடி என்று ஒருவரும், நீலு தேடி என்று ஒருவரும் சொல்ல, என்ன ஐயா! வெவ்வேறு பொருளைத் தேடி நாம் நால்வரும் ஒரே இடத்திற்கா போய்க் கொண்டிருக்கிறோம் என்று ஒருவா வினா எழுப்ப, 'அங்கிருந்த இந்த ஊர்க்காரர் இங்கு நீலு கிடைக்குமென்றுதான் சொன்னார்' என்றும், 'இல்லை இல்லை, இங்கு பானி கிடைக்குமென்றுதான் சொன்னார்' என்றும், தண்ணீர் என்றும், வாட்டர் என்றும் சொல்லி, நான்கு பேரும் விவாதத்தில் ஈடுபட்டார்கள்.

விவாதம், வேகத்தோடு சண்டை சச்சரவைக் கொண்டு வந்தது. சச்சரவில் ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளத் தொடங்கினார்கள். கடைசியில் நான்கு பேரும் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு... குளத்தில் இறங்கி, நான்கு பேரும் சொல்கின்ற வேறு வோர்த்தைகளால் குறிக்கப்படும் வஸ்து ஒன்று தான் என்று தெரித்து கொள்ளாமலேயே இறந்து போனார்கள்.

மடையார்களுக்கு அதிபதிகளாய் அநுபூதியை அடையாமல் குருபீடத்தில் அமர்ந்த அத்துனை மூடர்களுக்கும் இது தான் கதி.

தேட வேண்டிய வயதில் அநுபூதியைத் தேடி அடைந்துவிட்டு, குருபீடத்தில் அமர்பவர்கள்தான், தங்கள் வாழ்க்கையிலும் நிம்மதியாய் இருப்பார்கள். மற்றவர் வாழ்க்கையிலும் ஆனந்தத்தை உருவாக்குவார்கள்.

சின்ன வயதில் உடம்பில் வேகமும், இரத்தத்தில் குடும் இருக்கும் போது, அநுபூதியைத் தேடி அடையாதவர்கள், பீடங்களைத் தேடி அமர்ந்து கொண்டு, சுக போகமான வாழ்க்கையை வேண்டுமானால் வாழலாம் ஆனால், அவர்களுக்கு அந்தப் பீடமே பந்தமாக மாறி, இறுதிக்காலத்தில், தனியாக ஒரு தண்டனை தேவைப்படாது.

உரைய வைக்கப்பட்ட காமரை மலருக்குத் கனித்துவமான சக்தி இருப்பது இல்லை

அதனால் தான் என்னுடைய சந்நியாசிகளுக்கும், பிரம்மச்சாரிகளுக்கும் திரும்பத் திரும்ப சாமி சொல்றேன். மீண்டும் அவர் சொல்வதுண்டு, இளமையில் இறைவனைத் தேடு. இளமையிலேயே இரத்தத்தில் குடு இருக்கும்பொழுதே, உடலுக்கும் மனதுக்கும் சக்தி இருக்கும்பொழுதே, அவை இரண்டும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்பொழுதே இறைவனைத் தேடி அநுபூதியாய் உணர்ந்துவிடுங்கள். இருப்பால், அவனை உணர்ந்துவிடுங்கள்.

இளமையில் தேடாமல்விட்டவர்கள் முதுமையில் படும் கஷ்டத்தை நான் நேரில் பார்த்திருக்கின்றேன்.

'இளமையில் வறுமையும், முதுமையில் தனிமையும் கொடியது' என்று சொல்வார்கள். நான் சொல்கிறேன், 'இளமையில் இறைத் தேடல் இன்மையும், முதுமையில் இறை வெறுமை'யும்தான் மிகக் கொடுமையான நரகங்கள்.

தானே அநுபூதியை அடையாமல்விட்டது மட்டுமல்லாது, அநுபூதி

அடைந்தவர்கள் உலகிற்கு சொல்லும் உண்மையையும் முடத்தனத்தால் மறுத்துரைத்து, எதிர்த்துரைத்து, மேலும் கருமத்தை உருவாக்கிக் கொள்ளும் மனம் கொண்ட மூடர்கள், சைவத்தை த்வைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் எனும் சிறு சிறு கூண்டுக்குள் வைக்க முயற்சிக்கிறார்கள்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், தத்துவங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் போன்றவற்றால் உறைய வைக்கப் பட்ட த்வைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ? ? என்னும் மலர்களில் உயிர் இருக்க வாய்பேயில்லை.

உறைய வைக்கப்பட்ட தாமரை மலருக்குத் தனித்துவமான சக்தி இருப்பது இல்லை. எத்துணை நாள் அந்த மலர் தாமரைத் தண்டோடு தண்ணீரில் உயிரோடு இருக்கிறதோ, அத்துணை நாள் வரைதான் அதற்கு தனித்துவமான உயிர் உண்டு. உயிருள்ள மலர் பறிக்கப்பட்டு, உறைய வைக்கப்பட்ட உடனேயே அது தனித்துவத்தை இழக்கிறது. அதேபோல் வார்த்தைகளால் கொள்கை, கோட்பாடு என்று உறைய வைக்கப்பட்ட எந்த சத்தியத்துக்கும் பதில்லை ? ?.

கொள்கை, கோட்பாடு எழை சிறையில் அடைத்து. வார்த்தை எனும் சங்கிலியால் கட்டப்பட்ட உடனேயே சத்தியம் தன் நித்தியத்துவத்தை இழக்கிறது. த்வைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் மூன்று கொள்கைகளும், தத்துவங்களும் இதுபோல் வார்த்தை எனும் சங்கிலியால் கட்டப்பட்டு கொள்கை, கோட்பாடு எனும் சிறையில் சிறை வைக்கப்பட்ட கருத்துக்கள். அவைகளுக்கு தன் தனித்துவத்தால் முழுமையாக ஒரு ஜீவனை சிவத்தன்மைக்குள் கொண்டு செல்லும் ஆற்றல் இல்லை.

ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட நிலையில், ஒரு குறிப்பிட்ட மனிதர்களுக்கு உதவுகின்ற சக்தி மட்டும்தான் அவற்றுக்கு உண்டே தவிர், ஒரு ஜீவன் அதன் இருப்பு நிலையிலிருந்து சிவத்தன்மையான இயல்பு நிலைக்குள் செல்லும்வரை வழிகாட்டுவதற்கான முழுமுமைத்தன்மையை எந்த ஒரு தத்துவ த்தாலும் தனியாக செய்துவிட இயலாது.

ஆனால், ஒரு ஜீவன் எந்த நிலையில் இருக்கிறதோ, அந்த நிலையில் தொடங்கி, இயைபு, இயல்பு, இருப்பு எனும் மூன்று நிலைகளிலும் ஜீவனைப் பயணிக்க வைத்து, சிவத்துவத்தில், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிரந்தரமாய் இருக்க வைக்கும் சக்தியும், தெளிவும் சைவத்திற்கே உண்டு. ஏனெனில், சைவம் எனும் வாழ்வியல் முறையை சொன்னவன், சுந்தரத் தமிழியில் இந்த சுகபோத ஞானத்தைச் சொன்னவன், என்னவன், மன்னவன், விண்ணவன், விண்ணோரும்

காணாத மன்னவன், விண்ணவன் விண்ணோரும் காணாத மன்னவன், தன் தனிப்பெருங்கருணையால் தென்னவனாய் தோன்றிய என்னவன்.

ஞான ரசவாதத்தின் எல்லா நுட்பங்களையும் நுண்மைகளையும் தன்னுள் அடக்கியது சைவம்

த்வைதம் ஒரு குறிப்பிட்ட ஆன்மிக பயணத்தின்போது, ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட மனிதர்களுக்கு மட்டும் உதவியாய் இருக்கும். விசிஷ்டாத்வைதம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட மனிதர்களுக்கு மட்டும் உதவியாய் இருக்கும். அத்வைதம் ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட மனிதர்களுக்கு மட்டும் உதவியாய் இருக்கும்.

ஆனால் சைவமோ இந்த மூன்றையும் உள்ளடக்கி, இதையெல்லாம் தாண்டி, நீங்கள் எங்கு, எந்நிலையில், எவ்வாறு இருக்கிறீர்களோ, அங்கிருந்தே உங்களுக்கு உதவத் தொடங்கி, எங்குச் சென்று சேர வேண்டுமோ அங்கு வரை உதவுகிறது.

குறிக்கோளாய், குறிக்கோள் காட்டும் நெறிப்பாதையாய், நெறிப்பாதையில் செல்லத் தூண்டும் உத்வேகமாய், எல்லா நிலையிலும் உடனிருந்து உண்மையைக் காட்டவும், கூட்டவும், சிவஞான போதத்துள், சிவத்துவ நிலைக்குள் எப்போழுதும் இருக்கச் செய்யும் வழியில் ஜீவன் எதிர்கொள்ளுகின்ற எல்லாத் தடைகளையும் அழிக்கும் திறனும், சந்தேகங்களை எல்லாம் தீர்க்கும் தெளிவும், வழியில் ஏற்படும் சோம்பல், மனச் சோர்வு இவைகளை எல்லாம் அழித்து, உற்சாக ஊஞ்சலில் ஏற்றி நம்மை உத்தம நிலைக்கு கொண்டு செல்லும் ஞான ரசவாதத்தின் எல்லா நுட்பங்களையும் நுண்மைகளையும் தன்னுள் அடக்கியது சைவம்.

நுட்பம் என்றால் (கூதுஞிடணடிணுத்து), நுண்மை என்றால் (கூதுஞிடணணிடு ணிஞ்தூ) ? ? .

அகம் பிரம்மாஸ்மி எனும் வார்த்தை, சிவோஹம் என்னும் சக்தியத்திற்குச் சமம் கிடையாது. அகம் பிரம்மாஸ்திமார்த்த ? ? அத்வைதம். சிவோஹம் சைவ சத்தியம். இரண்டிற்கும் மிகப்பெரிய வித்தியாசமூண்டு.

பிரம்மம் என்று ஸ்மார்த்தம் விளக்குவது - இருப்பின்மை என்கின்ற

எல்லாவற்றையும் முழுமையாக நேரடியாய் உணரக்கூடியதைக் குறிக்கும் வார்த்தையாக இருக்கிறதா என்றால் நடைமுறையில் இல்லை. பிரம்மம் என்ற வார்த்தை வெளிப்படாத மூலப்பொருள் என்றே எல்லோராலும் வருணிக்கப்படுகிறது. அனுபவித்தவர்கள் கூட அநுபூதியைப் பெற்றி எழுதும்பொழுது, அதை, வெளிப்படாத மூலப்பொருள் என்றும், அதை ஒரு தன்மை என்றும், பொருள் என்றுமே விவரிக்க முற்படுகிறார்கள்.

ஆனால் சிவம், வெறும் சில குணங்கள், தன்மைகள் இவைகளின் தொகுப்பு அல்ல. தன்னுடைய சுய விருப்பமும், வெறுப்பமும், தெரிப்பும், இயங்குவதும் இயங்காமையும் - திதுவைப்படின் இயங்காமல் இருக்கின்ற சுதந்திரமும் கொண்ட சக்தி, வல்லமையே சிவம். வல்லமை, சக்தியை வேண்டும்பொழுது வெளிப்படுத்தி, தேவையில்லாத போது வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்தி வைக்கும் இருப்பு நிலையே சிவம்.

சிவம் எனும் வார்த்தை, தன் கருணையாலே விதியை மாற்றக்கூடிய, செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை எனும் விதி நிசேஷதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு இயங்கும் இருப்பு நிலையை, நமக்குத் தெளிவாக அந்த உணர்வை உணர்த்துகிறது.

பிரம்மம் எனும் வார்த்தையைக் கேட்டவுடன் இந்த உலகத்தை எல்லாம் ஆக்கி, படைத்து, காத்து, அழித்து என்கின்ற ஒரு தன்மையை, குணங்களைத்தான் நீங்கள் உணர்கிறீர்கள், சிந்திக்கிறீர்கள், படிக்கிறீர்கள். ஆனால் சிவன் என்றால் இவை எல்லாவற்றோடு சேர்ந்து தன்னுடைய தனித்துவத்தினாலே, கருணையினாலே, விருப்பத்தாலே எப்படி வேண்டுமானாலும் இயங்குகின்ற உணர்கிறீர்கள்.

சுதந்திரத்தன்மை சேர்த்த சுந்தர வெளிப்பாடாக நினைத்தவுடனேயே சிந்தை இனிக்கும். சிவபெருமான் உணர்வே மேலோங்கி நிற்பதால், அகம் பிரம்மாஸ்மி எனும் மகாவாக்கியத்தை விட சிவோஹம் எனும் மகாவாக்கியம் அதிகம் உபயோகத்திற்குரியது. சத்தியத்தைச் சாத்தியமாக்கும் சக்தி உடையது.

சைவத்தை, சின்ன தீப்பெட்டிக்குள் அடைக்க முயலாதீர்கள்

சைவம், அத்வைதத்தை ஏற்றுக்கொள்கிறதா, இல்லையா என்பது இங்குப் பிரச்சனை இல்லை. அத்வைதத்தை நம்பினாலும், விசிஷ்டாத்வைத்தை நம்பினாலும், த்வைத்தை நம்பினாலும் - எதையோ ஒன்றைக் கடைபிடித்து, சண்டையைத் தவிர்த்து, குளத்தில் இறங்கிப் பாருங்கள்.

கடைசிவரை தாகத்திலேயே செத்துப்போன அந்த நால்வா்போல இல்லாமல், குளத்திற்குள் இறங்கிப்பாருங்கள் என்கின்ற சத்தியம்தான் சைவம்.

குளத்தில் இறங்கிப் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும், 4 வார்த்தைகளால் 4 பேரும் சொன்னது ஒன்றைத்தான். ஆனால் அந்தப் பொருள் அந்த நாலு வார்த்தைக்கும் அப்பாற்பட்ட உண்மை. அதை அருந்தியிருந்தால் வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம், அருந்தாமல் வார்த்தையை மட்டும் பிடித்து க்கொண்டு சண்டையிட்டதனால் தாகமும் தீரவில்லை. வாழ்க்கையும் போனது. அதேபோல அத்வைதமா, விசிஷ்டாத்வைதமா, த்வைதமா என சண்டையிட்டுக் கொண்டிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு குளத்திற்குள் இறங்கிப்பாருங்கள் என்கின்ற சத்தியம்தான் சைவம்.

சைவத்திற்கான ஒரு ஆழமான விளக்கம் இதுதான். சண்டையைத் தவிர்த்து, சச்ச ரவை ஒழித்து, சத்தியத்தை எட்டிப்பார், இறங்கிப்பார், இது சாத்தியம், இதுவே சைவம்.

பாடிப்பாடி கரைந்து, உருகிய நாவுக்கரசரைப்போல ஒரு பக்திமானை எந்த த்வைத சம்பிரதாயமாவது உருவாக்க முடியுமா? த்வைதத்தின் உச்சியான ச விகல்ப சமாதியிலேயே வாழ்ந்தவர் திருநாவுக்கரசு பெருமான்.

நான் உன் வழி நிற்க நீ என் வழி நின்றால், அது த்வைதம்.

நான் உன் வழி நிற்க மறந்தாலும் நீ என் வழி நிற்க வேண்டும் என்றால் அது விசிஷ்டாத்வைதம்.

நானும் நீயும் எப்போதும் ஒன்றாய் இருக்க வேண்டும், ஒன்றோடொன்று கலந்திருக்க வேண்டும் என்றால் அது அத்வைதும்.

நான் உனை மறந்தாலும், மறுத்தாலும் நீ என் வழி நிற்க வேண்டும் என்பதே சைவம், என்பதன்படி, ஞானத்திற்காக மட்டுமல்ல, காதலி கூட அல்ல, இரண்டாவது கள்ளக்காதலிக்காகப் பெருமானையே தூது அனுப்பிய சுந்தரன், இதைப் போன்ற பக்தனை எந்தச் சம்பிரதாயத்தில் காட்ட முடியும் ? எந்த மதமோ தத்துவமோ இதுபோன்றதொரு பக்தியின் சக்தியை வெளிப்படுத்த முடியும் ?

சில சம்பிரதாயங்களில் ஒரு வேளை இதுபோன்ற பக்தா்கள் இருந்தால்

கூட, இது மாதிரியான செய்திகளை எதிர்கால சந்ததியின் ஒழுக்கம் கருதி, எதிர்கால சந்ததியினர் தவறாகக் கடைபிடிக்கக் கூடாது என்று கருதி அதை மறைத்திருப்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகம், ஆனால் இங்கு எதைப்பற்றியும் கவலைப்படாமல் இதை பட்டவர்த்தனமாக, தெளிவாக வரலாறாகப் பதிந்தும் வைத்திருக்கும் தைரியமான ஒரே சம்பிரதாயம் சைவம்.

ஏனென்றால் தனி மனித ஒழுக்கம், சமூக ஒழுக்கம், இயற்கையின் போக்கு, இது எல்லாவற்றையும் தன் கருனையின் மாத்திரத்தால் நடத்துவதும், நடத்தாததும், நிற்பதும், நிற்காததும், இயக்குவதும், இயக்காததும், தன் இச்சா மாத்திர சு தந்திரமெனும் பேரொமுக்கு பெருமான். சாதாரண விதிகள் ஒழுக்கங்கள். எந்த விதியை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எதனோடு வேண்டுமானாலும் விளையாடும் தன்மை பேரொழுக்கு பற்றி கவலைப்படாமல் வரலாறை உள்ளதை உள்ளபடியே உரைத்து வைத்தார்கள்.

உடலைக் கூட மிச்சம் விடாமல் இறை சக்தியோடு கரைத்துவிட்ட சு த்தாத்வைதிகள் ஞானசம்மந்தரும், மாணிக்க வாசகப் பெருமானும். அப்பர் மாதிரி த்வைதத்தின் உச்சத்தைப் பார்த்தவரையோ. சுந்தாரைப் போல பக்கியின் சக்தியை வெளிப்படுத்தியவரையோ, ஞானசம்பந்தரைப்போல, மாணிக்கவாச கரைப்போல் உச்சநிலையை, அத்வைதத்தை அநுபூதியாக உலகிற்குக் காட்டியவர்களையோ எந்தச் சம்பிரதாயத்தில் காண்பீர்கள் ?

இவைகளையெல்லாம் உருவாக்கிய சம்பிரதாயத்தை அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் எனும் சின்ன தீப்பெட்டிக்குள் அடைக்க முயற்சிப்பவர்கள் தீயால் சுட்டெரிக்கப்படுவீர்!

இவை எல்லாவற்றையும் தன்னுள் அடக்கும் சக்தி சைவம் ஒன்றிற்கே உண்டு. சைவத்தை ஒரு சம்பிரதாயம் எனும் சாதாரண வார்த்தைக்குள் அடைக்க முயற்சிப்பது மிகப் பெரிய மூடத்தனம். எல்லாச் சம்பிரதாயங்களையும் உள்ளடக்கி, அதற்கும் அதிகமானது இருக்கின்ற எல்லா எண்ண ஒட்டங்கள், சிந்தனை ஒட்டங்கள் இவை அனைத்திற்கும் மூலமான தாயாய், தந்தையாய், அம்மையாய், அப்பனாய் நின்றது சைவம்.

பிரபஞ்சத்திற்கே அம்மையப்பன் தந்த வாழ்வியல் என்பதனால், இதை ஒரு சிறு கட்டத்திற்குள் அடைக்க முயற்சிப்பவர்கள் மூடா்கள். அது ஒரு சிறு பகுதிக்குத்தான், சிறு கட்டத்திற்குச் சொந்தமானது என்று சிந்திக்க முயற்சிப்பவர்களும் மூடா்கள். அதைப் பரப்ப முயற்சிப்பவர்கள் பாவிகள்.