1. Bhagavad Gita Explained Chapter 13
The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam-ன்
விளக்கவுரை
க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம் அத்தியாயம் - 13
உலகம் முழுவதிலும் உள்ள நித்யானந்த பீடத்தின் ஸ்ந்யாஸிகளுக்கும் அனந்த ஸமாஜத்தவர்களுக்கும் வழங்கப்பட்ட அங்கில பகவத்கீதை தியான சத்சங்க தொகுப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு.
உலகம் முழுவதிலும் உள்ள நித்யானந்த பீடத்தின் ஸ்ந்யாஸிகளுக்கும் ஆனந்த ஸமாஜத்தவர்களுக்கும் வழங்கப்பட்ட சொற்பொழிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது. அன்பான வாசகர்களே.
மனித குலத்தின் முன்னேற்றத்திற்காக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வழங்கும் ஆனந்தமான செய்திகளை உடனுக்குடன் உலக மக்களுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் எங்களின் சேவை அனைத்தும் உங்களுக்காகத்தான்; உங்கள் ஒவ்வொருவருக்காகவும்தான்.
உங்களிடம் எவ்வளவு வேகமாகக் கொண்டு வந்து சேர்க்க முடியுமோ அவ்வளவு வேகமாக எடுத்து வந்து சேர்க்கும் சேவையில் எங்களை இணைத்துக்கொள்கிறோம். பரமசிவம் வழங்கிய சக்தியங்களால் நீங்கள் விரைவில் பயனடைய வேண்டும் என்பதற்காகத்தான் பரமசிவம் ஆற்றிய சொற்பொழிவுகளைப் புத்தகங்களாக அச்சிட்டு வழங்கும் சேவையை ஆனந்தத்தோடு செய்து வருகிறோம்.
எங்களால் முடிந்த அளவுக்கு எல்லாப் பிழைகளையும் சரிபார்த்து, அச்சுக்கோர்த்து பதிப்பு செய்கிறோம். அதையும் மீறி வரும் அச்சுப்பிழைகளுக்குத் தாங்கள் தயைக் கூர்ந்து எங்களை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்கிறோம். உங்களின் மேலான பரிந்துரைகளை எங்களின் கவனத்திற்கு எடுத்து வந்தால் அடுத்த பதிப்பில் அவற்றைச் சரிசெய்து வெளியிட உதவியாக இருக்கும்.
இப்படிக்கு. மக்களுக்கான ஆனந்த சேவையில் நித்யானந்த ஹிந்து பல்கலைகழகம்.
இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கும் அல்லது பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நுட்பங்களை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இந்தக் நட்பங்கள் உங்கள் உடல் நலத்திற்கு ஏற்றதுதானா என்பதை உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகே பயிற்சி செய்யுங்கள். இந்த நுட்பங்கள், உங்கள் மருத்துவ கவனிப்பிற்கோ, மருத்துவ பரிசோதனைகளுக்கோ, மருத்துவ சிகிச்சைகளுக்கோ மாற்று அல்ல. இதில் விளக்கப்பட்டிருக்கும் நட்பங்களை பயிற்சி செய்யும் ஒருவர், அவரது குடும்ப டாக்டராலோ அல்லது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பயிற்சி அளிக்கப்பட்டு, தீட்சை பெற்ற ஆசிரியராலோ பரிந்துரைக்கப்பட்ட பிறகு மட்டுமே அவற்றை பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு பரிந்துரை பெறாது, நீங்களாகவே துணிந்து செய்யும் பயிற்சிகளுக்கும், அதன் விளைவுகளுக்கும் நித்யானந்த பீடம் பொறுப்பாகாது.
புத்தக வெளியீடு: நித்யானந்தா ஹிந்து பல்கலைகழகம்
இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு தகவலையும் எந்திரத் தட்டச்சு செய்வதன் மூலமாகவோ, படம் பிடிப்பதன் மூலமாகவோ, பிரதி எடுக்கப்படவோ அல்லது திரும்பப்பெறும் வகையில் ஒரு கணினியில் சேமித்து வைக்கவோ அல்லது அதனை வேரொரு கணினிக்கு அனுப்பவோ அல்லது தனிப்பட்ட மற்றும் பொதுவான பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தவோ கூடாது. நித்யானந்த பீடத்திலிருந்து எழுத்துப்பூர்வமான அனுமதியின்றி எந்தவிதத்திலும் இந்தப் புத்தகத்தின் பிரதியை உற்பத்தி செய்தல் கூடாது. இந்தப் புத்தகத்தில் குறிப்பட்டிருக்கும் எந்த ஒரு தகவலையும் நீங்கள் இப்புத்தகத்தின் வெளியீட்டாளரோ அல்லது எழுத்தாளரோ பொறுப்பல்ல. இந்தப் புத்தக விற்பனை மூலமாகப் பெறப்படும் நன்கொடை, நிதி முழுவதும் நித்யானந்த பீடத்தின் கருணை நோக்கச் செயல்களுக்குச் சேவையாகச் சென்றடைகிறது.
ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறை
ஸ்ம்ஸ்க்ருதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்லோகங்கள்தான். ஆனால், அதை உச்சரிப்பது கடினம் என்று நினைத்து அதைப் படிக்காமல் ஒதுக்கிவிடுகிறோம்.
ஆனால், ஸ்ம்ஸ்க்ருத மொழியிலுள்ள எழுத்துக்களின் உச்சரிப்பை நாம் சிறிது தெரிந்து கொண்டாலே போதும், ஸ்லோகங்கள் தமிழ் எழுத்து வடிவில் இருந்தாலும் சரியான ஸ்ம்ஸ்க்ரு'த உச்சரிப்புடன், மிகச் சுலபமாக அதைப் படிக்க முடியும்.
ஸ்ம்ஸ்க்ருதத்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துகளும் நான்குவிதமான உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களில் கீழே தந்திருக்கிறோம்.
| வகை | 1 | 2 | 3 | 4 |
|---|---|---|---|---|
| எழுத்து | ||||
| க | கடவுள் (ka) | அக்கா (kka) | கங்கை (ga) | கடம் (gha) |
| ச | சரம் (cha) | சச்சரவு (chcha) | ஜூடி (ja) | மஜ்ஜை (jha) |
| ட | பட்டம் (ta) | பட்டம் (tta) | படம் (da) | ஸ்ஸ்ஸ் (dha) |
| த | தங்கை (tha) | தாத்தா (ththa) | தானம் (da) | தர்மம் (dha) |
| ப | பசு (pa) | அப்பா (pha) | பம்பரம் (ba) | பந்தம் (bha) |
| ச், | ச'ரணாகதி |
ஸ்ம்ஸ்க்ருத அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை எழுத்தை முதல் வகை எழுத்தாகவும், சாதாரண எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ருதத்தின் இரண்டாவது வகை எழுத்தாகவும், எழுத்து தடிமனாக இருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ருதத்தின் மூன்றாவது வகை எழுத்தாகவும், தடிமனான எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ருதத்தின் நான்காவது வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.
ஸ்ம்ஸ்க்ருதத்தில் மூன்று வகை 'ஸ்'க்கள் உண்டு.
- ஸ 2. ஷ. ஆனால், மூன்றாவதுவிதமான 'ஸ'க்கு இணையான எழுத்து தமிழிலோ, ஆங்கிலத்திலோ கிடையாது. அதனால் அந்த மூன்றாவது 'ஸ' வையும் பெரும்பாலும் நாம், முதல் இரண்டு 'ஸ' வைப்போலவே உச்சரிக்கிறோம். அதற்குத் தமிழில் தனி எழுத்து இல்லாததால், தமிழ் எழுத்தான ச-விற்கு மேல் மேற்கோள்குறியை இந் நூலில் பயன்படுத்தியுள்ளோம்.
ச'ரணாகதி, சி'வன் - இது போன்ற வார்த்தைகளில், ச' - என ச-விற்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அது அச்சுப் பிழை அல்ல. நீங்கள் அதனை, தமிழில் சிவன், ஆச்ரமம் என்ற வார்த்தைகளில் வரும் எழுத்தைப்போலவும், ஆங்கிலத்தில் Compassion என்ற வார்த்தையில் வரும் ssஎழுத்தைப்போலவும் உச்சரிக்க வேண்டும்.
க்ஷ என்பதை க்+ஷ = க்ஷ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும்.
ரு' என்று ரு வுக்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை எருது, விருது என்ற சொற்களில் வரும் 'ரு'வைப்போல உச்சரிக்க வேண்டும்.
ஞானி, ஆக்ஞா போன்ற வார்த்தைகள் ஸ்ம்ஸ்க்ருதத்தில் 'ஜ்ஞாநி', 'ஆஜ்ஞா' என்றே எழுதப்பட வேண்டும். ஆகவே ஜ்ஞாநி, ஆஜ்ஞா என்று வரும் இடங்களில் அது ஞானி, ஆக்ஞா என்பதைத்தான் குறிக்கிறது.
ஸ்லோகங்களுக்கு இடையில் ≤ என்ற குறியீடு வரும்பொழுது, அங்கு 'அ' என்ற எழுத்து தொக்கி நிற்பதை அது குறிக்கிறது. அதை உச்சரிக்கத் தேவையில்லை.
தமிழில் 'ந,ன,ண' என்று மூன்று வகை 'ந' க்கள் உண்டு, ஆனால், ஸ்ம்ஸ்க்ருதத்தில் 'ந,ண' என்று இரண்டு வகை மட்டுமே இருக்கிறது. அதனால் நாம் தமிழில் 'ன' என்று பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்கூட, ஸ்ம்ஸ்க்ருத வார்த்தைகளைப் பொறுத்தமட்டில், 'ந' என்று மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஞாநம், தியாநம், அர்ஜூந், வாஸநா என்றே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், படிப்போரின் வசதிக்காகப் பெரும்பாலான இடங்களில், 'ன' என்ற எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.
உங்களை ஞானியாக்கும் அனுபவத்தின் வெளிப்பாடு
பாரதத்தின் உன்னதமான வேத பாரம்பரியத்தின் புனித நூல்களுள் ஒன்று பகவத்கீதை. ஏனைய சமய நூல்களைப் போன்றே, பகவத் கீதையிலும் அனுபவ அறிவானது வாய்மொழியாகவே நேரிடையாகத் தரப்பட்டுள்ளது. இதை ஸ்ம்ஸ்க்ருதத்தில் ச்ருதி (Sruti) என்பார்கள். ச்ருதி என்றால் 'காதால் கேட்பது' என்று பொருள்.
பகவத்கீதையைப் கீதை என்றால் ஸ்ம்ஸ்க்ருதத்தில் 'புனிதப் பாடல்' என்று பொருள். வேதங்களும் உபரிஷதங்களும் தனிப்பட்ட மனிதர்களின் அனுபவ வெளிப்பாடுகளாகவே இருக்கின்றன. ஆனால், கீதை, ஹிந்து மத கிராஸ் கதையான மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மஹாபாரதக் கதையின் ஒரு பகுதி கீதை என்றும் சொல்லலாம்.
வேத பாரம்பரியத்திற்கே ஆதாரமாக விளங்குகிற மேன்மையான தத்துவ ஞானிகளினுடைய அனுபவ வெளிப்பாடுகளாக விளங்கும் புனிதமான ஞானக் கருத்துகளின் ஒரு பகுதியாக கீதை இருக்கிறது.
புனித நூலான ச்ருதியின் அஸ்திவாரங்களாக விளங்கும் வேதங்களும் உபரிஷதங்களும், நம்முடைய ஞானிகளும், ரிஷிகளும் மனமற்ற நிலைக்குச் சென்றபொழுது, உள்முகப் பார்வையில், முழு விழிப்புணர்வு நிலையில் இருந்து வெளிப்படுத்தியவையே!
இவை, மனிதகுலம் எவ்வளவு பழமைவாய்ந்ததோ அவ்வளவு பழமையானது. சத்தியத்தைத் தேட ஆரம்பித்த மனிதனின் பயணத்தில் வெளிப்பட்ட முதன்மையான சக்திய வெளிப்பாடுகளாக இருக்கின்றன.
பிரபஞ்ச சக்தியால் முதலில் ஞானிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட வேதங்களைப் போன்றோ அல்லது அவர்களால் மனிதகுலத்திற்குப் போதிக்கப்பட்ட உரரிஷதங்களைப் போன்றோ அல்லாமல், ஞானிகளுள் ஒருவரான வியாஸ முனிவரால் எழுதப்பட்ட மஹாபாரதக் கதையின் ஒரு பகுதியாக விளங்குகிறது கீதை. அது தெய்வத்திடமிருந்து நேரடியாக எப்படி வெளிப்பட்டதோ அப்படியே, தெய்விகத்தின் நேரடி வெளிப்பாடாகவே விவரிக்கப்பட்டுள்ளது.
கீதை பெற்றிருப்பதைப் போன்ற ஒரு சிறப்பு நிலையை வேறு எந்த கிரீஸ்தவ அல்லது யூத மதத்தின் பகுதியோ இதுவரை பெறவில்லை. கீதை இருப்பதால்தான், மஹாபாரதமேகூட ஹிந்துகளின் புனித நூலாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின் விழிப்புணர்வு நிலையில் இருந்து தோன்றியது கீதை. அதனால்தான் அது எல்லோராலும் புனித நூலாகக் கருதப்படுகிறது.
மஹாபாரதத்தின் கதைச் சுருக்கம்
பருதன் வம்சாவளியினராலும் பாரதம். 'மஹாபாரதம்' என்றால் மிகச்சிறந்த பாரதம். பாரத நாட்டைப் பற்றியும் அப்பொழுது நாகரிகத்தைப் பற்றியும் மஹாபாரதம் விவரிக்கிறது.
இந்த கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நிகழும் போட்டி, பூசல், ஒற்றுமையின்மை, சண்டை சச்சரவுகளைப் பற்றிச் சொல்கிறது.
ஹஸ்தினாபுரத்தின் இளவரசர்களான திருதராஷ்டிரர், பாண்டு இருவருள், தமையனான திருதராஷ்டிரா் பார்வை அற்றவராக இருந்ததால், இளையவரான பாண்டு அரசராக முடிசூட்டப்பட்டார்.
மன்னரான பாண்டு ஒருமுறை தம்முடைய இளைய மனைவியான மாத்ரியின் விருப்பத்தை நிறைவேற்றும் முயற்சியில் ஒரு மானைக் கொல்ல நேர்ந்தது. அப்போது மான் உருவில் இருந்த முனிவா், சாகுந்தறுவாயில் பாண்டுக்கு ஒரு சாபமிட்டார். பாண்டு, தம் மனைவியருடன் உறவு கொண்டால் இறந்துவிடுவார் என்பதே அச்சாபம். அதனால் அவருக்குக் குழந்தைகள் இல்லை.
தம்முடைய பாவச் செயலுக்குப் பிராயச்சித்தம் பரிய முடிவுசெய்த பாண்டு, தமது அரசை பார்வையற்ற தமது அண்ணன் திருதராஷ்டிரிடம் ஒப்படைத்துவிட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றுவிடுகிறார்.
கதைக்குள் ஒரு சின்ன கதை
குந்தி, தமது இளமைப் பருவத்தில் துர்வாஸ் முனிவருக்குச் சேவை புரிந்தார். அதனால் மகிழ்ச்சியடைந்த முனிவர் அவருக்கு ஒரு வரம் அளித்தார். அதன்படி அவர், ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரித்து எந்தத் தெய்வ சக்தியை வழிபடுகிறாரோ, அந்தத் தெய்வ சக்கியின் அருளால் குழந்தை பாக்கியம் பெற முடியும்.
இளம் பருவத்தில், திருமணத்திற்கு முன் அந்த வரத்தைச் சோதித்துப் பார்க்க விரும்பிக் குந்தி, சூரிய தேவனை வேண்டி, அந்த மந்த்ரத்தை உச்சரித்தார். சூரியதேவனும் தோன்றினார், அவருடைய அருளால் குந்திக்குப் பிறந்தவா்தான் கர்ணன். ஆனால், சமுதாயக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து, குழந்தை பிறந்தவுடன் அதனை ஒரு பெட்டிக்குள் வைத்து நதியில் விட்டுவிடுகிறார் குந்தி.
அவ்வாறு நதியில் விடப்பட்ட குந்தியின் முதல் மகனான கர்ணன், அரண்மனைத் தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டார். விதியின் வினோத விளையாட்டினால் கர்ணன் துரியோதனனுடன் இணைந்தார்.
திருமணத்திற்குப் பிறகு, அதே வரத்தின் அருளால், குழந்தைச் செல்வம் பெற இயலா நிலையிலுள்ள பாண்டுவின் சம்மதத்துடன், யுதிஷ்டிரா, பீமன், அர்ச்சுனன் ஆகிய மூவரைப் பெற்றெடுக்கிறார் குந்தி. அதே வரத்தின் அருளாலேயே, பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கு இரட்டையர்களான நகுலனும், ஸ்ஹதேவனும் பிறந்தார்கள். பாண்டவர்கள் ஐவரும் அவர்களது அன்னை குந்திக்கும் மாத்ரிக்கும் தெய்வ அருளால் பிறந்ததாக வியாஸ முனிவர் விவரிக்கிறார்.
யுதிஷ்டிரா், தர்மத்திற்கும் மரணத்திற்கும் அதிபதியான யமராஜனின் ஆசீர்வாதத்தால் பிறந்தார். காற்றுக்கு அதிபதியான வாயு பகவானால் பீமனும், தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் அருளால் அர்ஜுனனும், அஸ்வினி குமாரர்களின் அருளால் மாத்ரிக்கு நகுலனும் ஸ்ஹதேவனும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.
திருதராஷ்டிரருக்கு அவரது மனைவி காந்தாரி மூலமாக நூறு பிள்ளைகள் (கௌரவர்கள்) பிறந்தார்கள். இளவரசர்களில் மூத்தவர் பெயர் துரியோதனன். துரியோதனனுக்கு தமது ஒன்றுவிட்ட சகோதரர்களான பாண்டவர்கள் மீது சிறிதும் அன்பில்லை. தமது தம்பி துச்சாதனனுடன் சேர்ந்து, பாண்டவர்களை அழிக்கப் பலமுறை முயற்சி செய்தார் துரியோதனன். ஆனால், ஒன்றும் பயனளிக்கவில்லை.
இதற்கிடையில் அர்ஜுனன், பாஞ்சால தேசத்து இளவரசி திரௌபதியை சுயம்வரத்தில் வென்றார். திரௌபதியை அர்ஜுனன் தமது வீட்டிற்குள் நுழையும்பொழுது, தமது அம்மா குந்தியிடம், வீட்டுவாசலில் இருந்தவாறே, ''அம்மா, நான் ஒரு தானப் பொருளை கொண்டுவந்திருக்கிறேன்," என்று சொன்னார். அப்பொழுது குந்தி, ' நீ கொண்டுவந்திருக்கும் தானப் பொருள் எதுவாகயிருந்தாலும் அண்ணன் தம்பி ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்," என்று அந்தத் தானப் பொருள் என்னவென்று பார்க்காமலேயே கட்டளையிட்டார். 'தானப் பொருள் எதுவாகயிருந்தாலும் ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்' என்ற அன்னை குந்தியின் வாக்கை நிறைவேற்ற, ஐவரும் திரௌபதியை மணம்புரிந்தார்கள்.
பாண்டு விட்டுக்கொடுத்த அரசாட்சி என்பதாலும், பாண்டவ இளவரசரான யுதிஷ்டிரரே குரு வம்சத்தின் மூத்த வாரிசு என்பதாலும், திருதராஷ்டிரா அவருக்குப் பாதி தேசத்தைக் கொடுத்தார்.
யுதிஷ்டிரா், இந்திரப்பிரஸ்தத்தைத் தலைநகராக நிறுவி, தமது தம்பியர்களான பீமன், அர்ஜுனன், ஸ்ஹதேவனுடன் ஆண்டுவந்தார். அப்பொழுது துரியோதனன், யுதிஷ்டிரரைச் சூதாட்டத் திற்கு இணங்க வைத்தார். அதில் துரியோதனனின் தாய்மாமனான சுகுனி வஞ்சகமான முறையில் பாண்டவா்களைத் தோற்கடித்தார். ஆட்டத்தில் யுதிஷ்டிரர், அவரது நாடு, தம்பிகள், மனைவி என அனைத்தையும் இழந்தார், தம்மையும் இழந்தார்.
துரியோதனின் தம்பி துச்சாதனன், எல்லோர் முன்னிலையிலும் திரௌபதியைத் துகிலுரித்து மானபங்கப்படுத்த முயற்சிசெய்தார். கிருஷ்ணரின் அருளால் திரௌபதி காக்கப்பட்டார். பிறகு துரியோதனன், பாண்டவர்களும் திரௌபதியும் பதினான்கு ஆண்டுகளுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். அதில் பதினான்காவது ஆண்டு பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும் (அஞ்ஞாத வாசம்) என்ற ஒரு நிபந்தனையையும் விதித்தார்.
பதினான்கு ஆண்டுகள் முடிந்தவுடன் பாண்டவர்கள் தங்கள் இராஜ்ஜியத்தை மீண்டும் பெற முயற்சிசெய்தார்கள். இந்த முயற்சியில் யாதவர்களின் தலைவரும் மஹாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமாய் வணங்கப்படுபவருமான 'கிருஷ்ணர்' அவர்களுக்கு உதவி செய்தார்.
ஆனால், துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலம்கூட தர மறுத்துவிட்டார். இதன் விளைவாக ஒரு பெரிய யுத்தம் மூண்டது. அதுதான் 'மஹாபாரத யுக்கம்'.
இப்பொழுது பாரதம் என்றழைக்கப்படும் நமது பாரததேசத்தின் அனைத்து அரசர்களும் அவரவர்களின் விருப்பப்படி பாண்டவருடனோ அல்லது கௌரவர்களுடனோ இணைந்து போரிடக் கயாரானார்கள்.
கிருஷ்ணர் இரண்டு குடும்பங்களில், யாராவது ஒருவா் பக்கம் இணைய ஒப்புக்கொண்டார். "என்னுடைய ஆயுதம், சேனை எதுவும் இல்லாமல் 'நான்' மட்டும் ஒருபுறம் இருப்பேன். அனைத்துப் போர்த் தளவாடங்களுடன்கூடிய எமது யாதவ சேனை ஒருபுறம் இருக்கும். இந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை கோர்ந்தெடுத்துக்கொள்ளலாம்," என்று சொன்னார்.
தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு முதலில் அர்ஜுனனுக்கு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில், அர்ஜுனன் மகிழ்ச்சியுடனும் நன்றி உணர்வுடனும் தமது நண்பரும் அனுபவமிக்க ஆலோசகருமான கிருஷ்ணரை, தமது தேரோட்டியாகப் பெற்றுக் கொண்டார்.
ஆயுதங்களுடன்கூடிய பலமிக்க கிருஷ்ணரின் யாதவ சேனை தமக்குக் கிடைத்ததில் உள்ளூர மிகவும் மகிழ்ச்சியடைந்த துரியோதனன், வெளியில் வேறுமாதிரி காட்டிக்கொண்டார். அதாவது அர்ஜுனன் கிருஷ்ணரைத் தேர்ந்தெடுத்த பின்னர், தமக்கு யாதவ சேனையைத்தவிர வேறு வாய்ப்பில்லை என்பதுபோல் காட்டிக்கொண்டார். மேலும், ஆயுதம் ஏந்தாத கிருஷ்ணரைத் தேர்ந்தெடுத்த அர்ஜுனன் நிச்சயம் ஒரு முட்டாள்கான் என்றும் நினைத்தார்!
பாரதத்தில் உள்ள ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய குருக்கூஷ்தர போர்க்களத்தில், இரு சேனைகளும் கூடின.
அனைத்து அரசர்களும் இளவரசர்களும் ஒருவருக்கொருவர் உறவு முறையினர்தான். ஆனால், ஒருவருக்கொருவர் எதிரெதிர் அணியில் இருந்தார்கள்.
கௌரவ சேனையில் இருந்த தமது நண்பர்களையும் உறவினர்களையும் ஆச்சாரியர்களையும் கண்டு அர்ஜுனன் குற்ற உணர்ச்சியினாலும் மன உளைச்சலாலும் தளர்வடைந்தார்; மனச்சோர்வுற்று போரிலிருந்து விலகிச்செல்ல விரும்பினார்.
மனிதனாய் பிறந்த கடவுளுக்கும் கடவுளாய் மாற வேண்டிய மனிதனுக்கும் நடந்த லீலை
குருக்கூஷேத்ர போர்க்களத்தில் அர்ஜுனனுடன் கிருஷ்ணர் நடத்திய உரையாடல்தான் பகவத்தீதை.
கிருஷ்ணர், "நீ என்ன செய்ய வேண்டுமோ அதைத் தயங்காமல் செய், அது மட்டுமே உன் கடமை. போரின் முடிவைப் பற்றிக் கவலைப்படாதே. அதை என்னிடம் விட்டுவிடு. எதிரில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டவர்களே,'' என்று அர்ஜுனனை ஆயுதங்களைக் கையிலெடுத்துப் போரிட்டு எதிரிகளை அழிக்குமாறு உத்வேகப்படுத்தினார்.
உள்ளுலக விஞ்ஞானத்தின் (ஆன்மிகத்தின்) இறுதி அனுபூதி சாரங்கள் நிறைந்த நூலாக கீதை விளங்குகிறது. சில பண்டிதர்கள் சொல்வதுபோல் கீதை வன்முறையைத் தூண்டும் நூல் அல்ல. அது, உடல் - மனத்தின் நிலையற்ற தன்மையைப் பற்றியும், ஒவ்வொரு தனிமனிதனும் தர்க்கம், உடல், மனம், எண்ணம் என்ற நிலைகளைக் கடந்த நிலைக்குச் செல்ல வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் விளக்குகிறது.
கண் பார்வை இல்லாததால் அரசர் திருதராஷ்டிரர் போரில் பங்கு பெறவில்லை. அவரது அமைச்சரான சஞ்ஜயன்தான் வியாஸரால் அருளப்பட்ட ஞானக்கண் கொண்டு மன்னருக்குப் போர்க்களத்தில் நடப்பவற்றைத் தெரிவித்தார்.
சஞ்ஜயனின் குரல் மூலமாகவே நாம் கீதையைக் கேட்கிறோம். அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் நடக்கும் உரையாடலை சஞ்ஜயன் மூலமாகத்தான் கேட்கிறோம்.
போரில் எல்லா கௌரவ இளவரசா்களும் கொல்லப்பட்டார்கள். மேலும் கௌரவ சேனையின் தளபதியான பீஷ்மா், துரோணர், கர்ணன் ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். இறுதியில் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே எஞ்சி நின்றார்கள். அவர்கள் போரிலே வெற்றியடைந்து ஒன்றுபட்ட தேசத்தை ஆண்டார்கள்.
அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல், ஒரு மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல்.
ஸம்ஸ்க்ருதத்தில் அதை 'நர-நாராயண' உரையாடல் என்று சொல்வார்கள். அர்ஜுனன் எழுப்பும் கேள்விகளும் சந்தேகங்களும் நம் ஒவ்வொருவா் மனதிலும் உள்ளவைகான்.
கிருஷ்ணரின் பதில்கள் காலம், இடம் ஆகியவற்றைக் கடந்து நிற்கின்றன. கிருஷ்ணரின் போதனைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பேரழிவைத் தந்த அந்தப் போர்க்களத்தில் எந்த அளவுக்கு யுக்தியை ஆதாரமாகக்கொண்டதாக இருந்ததோ, அதே அளவுக்கு இன்றும் ஆழமான அர்த்தமுடையதாக உள்ளது.
பகவத் கீதை, ஜீவன்முக்திக்கான வரைபடம்!
வாழும் ஞானி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மஹாபாரதத்தின் உருவகமான உட்பொருளை இவ்வாறு விளக்குகிறார்: மஹாபாரதப் போர் என்பது வேறு ஒன்றும் அல்ல, ஸம்ஸ்காரங்கள் எனப்படும் நமது மனத்தில் உள்ள நேர்மறை எண்ணங்களுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையேயான போராட்டம்தான்.
நேர்மறை எண்ணங்களை 'பாண்டவர்கள்' என்று சொல்லலாம்; எதிர்மறை எண்ணங்களை 'கௌரவ இளவாசர்கள்' என்று சொல்லலாம்.
குருஷேத்ர போர்க்களம் என்பது நமது மனித உடல்; அர்ஜுனன் தனிமனித உணர்வு நிலை; கிருஷ்ணர் ஜ்ஞானகுரு.
தனிமனித விழிப்புணர்வு, தம்முடைய ஞானமடைவதற்கான பாதையில் சந்திக்கும் பெரிய தடைகளின் குறியீடுகளாகவே கௌரவப் படையை நடத்திச் செல்லும் பல்வேறு தளபதிகளும் இருக்கின்றனர்.
பீஷ்மர், குரு வம்சத்தின் மதிப்புமிக்க வணக்கத்துக்குரிய பெரியவர், குலபதி. அவர் பெற்றோர் மற்றும் சமுதாயம் நமக்குள் உருவாக்கும் கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார்.
அடுத்து, கௌரவர் மற்றும் பாண்டவா்களின் ஆச்சாரியரான துரோணர், நமக்கு அறிவையும் ஆன்மிக வழியையும் காட்டியவர்களால், நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார்.
கர்ணன், ஞானமடைவதற்குத் தடைகளை ஏற்படுத்தக்கூடிய தானம், இரக்கம் போன்ற நமது 'நல்ல செய்கை'களால் நமக்குள் ஏற்படும் கட்டுறு மனப்பாங்கின் அடையாளமாக இருக்கிறார்.
இறுதியாக வீழும் துரியோதனன், நமது 'தனிமனித அகங்காரத்தின் சின்னமாக இருக்கிறார். '
நடைமுறை மரபுகளை எதிர்ப்பதன் மூலமே பெற்றோராலும் சமுதாயத்தாலும் நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கைக் கடக்க வேண்டியதுள்ளது. அதனால்தான் ஞானப் பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள், சமுதாயத்தைவிட்டு ஒதுங்கியிருப்பது வழக்கமாக இருக்கிறது.
பெற்றோர்களால் ஏற்படுத்தப்படும் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு நாம் உடலில் வாழும்வரை உடன் வாழும். அவை இறப்பதில்லை. ஆனால், நம்மைக் கட்டுப்படுத்தும் வலிமை அதற்கு இருக்காது. அதன் தாக்கம் குறைந்துவிடும். அதையே பீஷ்மரின் 'அம்புப் படுக்கை' உணர்த்துகிறது.
துரோணர் என்பது நம் வாழ்வில் நாம் உள்வாங்கிய அனைத்து அறிவுகளையும், நம்மை வழிநடத்திச்செல்கின்ற ஆசிரியர்களையும் குறிக்கிறது. அவர்களால் நம்மை வழிநடத்திச் செல்லத்தான் முடியுமே தவிர, நம்முள் நிலையான முக்தியை மலரச்செய்ய முடியாது. ஆனாலும் நம்மை வழிநடத்திய ஆசிரியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டவர்களாக உணர்வதால், அவர்களை 'விட்டுவிடுதல்' என்பது மிகவும் சிரமமாக உள்ளது.
இங்குதான் ஜ்ஞானகுருவானவர் நம் வாழ்வில் வருகிறார். அதிலிருந்தும் நம்மை விடுவித்து வழிநடத்துகிறார்.
கர்ணன், நற்செய்கைகளின் களஞ்சியம். அவரது நற்செய்கைகளே அவர் ஞானமடைவதைத் தடுக்கும் தடைகளாகவும் இருந்தன. கர்ணனை விடுவிப்பதற்கு அவரது புண்ணியங்களையும், நல்ல செய்கைகளின் பலன்களையும் கருணை உள்ளம் படைத்த கிருஷ்ணர் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.
ஒருவரின் தர்ம சிந்தனையாலும் இரக்க குணத்தாலும் உருவாகும் நல்ல செயல்களின் மீதான பற்றைவிடுவதற்கு, ஜ்ஞானகுருவானவர் வழிகாட்டுகிறார். ஞானத்திற்கான தேடுதலும் ஞான அனுபவமுமே, நாம் உலகிற்கு அளிக்கும் நிலையான சேவை என்பதையும் ஜ்ஞானகுரு தெள்ளத் தெளிவாக உணரச் செய்கிறார்.
இறுதியாக நாம், துரியோதனனை அதாவது நம்முடைய அகங்கார மனப்பாங்கை வந்தடைகிறோம். வெற்றிகொள்வதற்குக் கடினமாக இருக்கும் நம்முடைய அகங்கார மனப்பாங்கைக் கரைக்க ஜ்ஞான சத்குருவின் முழு உதவியும் நமக்குத் தேவைப்படுகிறது. இது மிகவும் நுட்பமான வேலை. ஜ்ஞான சத்குருவின் உதவியும் இங்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை. அதனால் சில சமயங்களில் நம் அகங்காரம், நாம் ஜ்ஞான சத்குருவிடம் கொண்டிருக்கும் தொடர்பையேகூட துண்டித்துவிடும் சக்திவாய்ந்தது.
நடைபெற்ற போரில், வீரர்கள் இருந்தனர். இதில், கௌரவ சேனை என்பது நமது எதிர்மறை ஸம்ஸ்காரங்களையும், பாண்டவர் சேனை என்பது நமது நேர்மறை எண்ணங்ளையும் குறிக்கிறது. எதிர்மறை வீரர்களுக்கும், நேர்மறை வீரர்களுக்கும் இடையே நடந்த இந்த மஹா யுத்தமானது பதினெட்டு நாள்களுக்கு நீடித்தது.
பதினெட்டு என்ற எண் முக்கியத்துவம்வாய்ந்த ஆழ்ந்த உட்பொருளைக் கொண்டது. அது நம்முடைய உடலின் முக்கியமான பத்து புலன்களையும் எட்டுவித எண்ண ஓட்டங்களையும் குறிக்கிறது.
அவற்றுள் ஞானேந்திரியங்கள் என்பவை சுவைத்தல், பார்த்தல், முகர்தல், கேட்டல், மற்றும் தொடு உணர்வு ஆகிய 'அறியும் புலனுணர்வு'களைக் குறிக்கின்றன.
ஐந்து கர்மேந்த்ரியங்கள் என்பவை பேசுதல், கரங்களால் செய்யப்படும் செயல்கள், நடத்தல், உடற்கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் இனப்பெருக்கம் செய்தல் ஆகிய 'செயல்புரியும் புலனுணர்வு'களைக் குறிக்கின்றன.
எட்டுவித எண்ண ஓட்டங்கள் என்பது காமம், பயம், குரோதம் (வெறுப்பு), பொறாமை, மதம் (ஆணவம்), நன்றியற்றத் தன்மை மற்றும் அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றைக் குறிக்கின்றன.
'தன்னை உணர்தல்' எனப்படும் ஆத்ம ஞானம் நம்முள் மலருவதற்கு, இந்தப் பதினெட்டும் விடப்பட வேண்டும்.
மஹாபாரதம் ஒரு சரித்திரக் கதை மட்டுமல்ல, அது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வெறும் சண்டை மட்டுமல்ல, அது நமது உடல் - மன அமைப்பில் உறையும் எதிர்மறை, நேர்மறை ஸம்ஸ்காரங்களைக் கரைத்தலைப் பற்றியது. ஜீவன்முக்திக்கு இது நடைபெற்றாக வேண்டியுள்ளது.
இது ஞானமடைதலுக்கான வழிமுறையைப் பற்றிய கதை. மஹாபாரதம், வாழும் வரலாறு. பகவத் கீதை, ஞானமடைதலுக்கான கையேடு!
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அர்ஜுனனைப்போல், நீங்களும் இங்கே இப்புத்தகத்தின் வாயிலாக, ஜ்ஞான சத்குருவுடன் உரையாடுகிறீர்கள். இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. சத்குருநாதரின் திவ்ய வார்த்தைகளிலிருந்து உங்கள் கேள்விகளுக்கான விளக்கங்களையும் சந்தேகங்களுக்கான தெளிவையும் பெற்று மலருங்கள்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இந்தத் தொடரில் விளக்கமளிக்கிறார்.
பகவத் கீதைக்கு பல வருடங்களாக நூற்றுக்கணக்கான விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, ஆதி சங்கராச்சாரியர், இராமானுஜர், மத்வர் போன்ற மாபெரும் ஜ்ஞான குருமார்களும் கீதைக்கு விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார்கள்.
அண்மைக் காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த குருமார்களானஇராமகிருஷ்ண பரமஹம்ஸா், இரமண மஹரிஷி ஆகியோர் கீதையிலிருக்கும் ஞானக்கருத்துகளைப் பேசியிருக்கிறார்கள்.
பலர், இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்கா விளக்கவுரைகள் எழுதியிருக்கிறார்கள்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அளித்திருக்கும் இந்தத் திறனாய்வு உரை, கீதையின் ஒரு மொழிபெயர்ப்போ அல்லது அதன் ஒரு விளக்கவுரையோ அல்ல. அவர் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் விளக்கும்போதும், நம்மை உள்ளுலகச் சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்கிறார்.
கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்திற்குமான அர்த்தங்கள் ஏழு நிலைகளில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால், பொதுவாக, முதல் நிலை விளக்கமே கொடுக்கப்படுகிறது. இங்கே நம்முடன் இருக்கும் சத்குருநாதர், பொதுவான முதல் நிலை விளக்கவுரையைத் தாண்டி, நாம் அறியாத பிற நிலைகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் நம்மை அழைத்துச்செல்கிறார்.
என்றென்றும் வாழும் மஹாபாரதம்
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ரின் கீதை திறனாய்வு உரையைப் படிப்பது, ஒருவருக்குள் ஞானத்தைப் பெறுவதற்கான பார்வையைத் தரும். இது வெறுமனே படித்தல் அல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு அருமையான தியானம்.
சிறந்த சிறிதளவு படிப்பது, ஒருதுளி கங்கை நீரைப் பருகுவது, கிருஷ்ணரை அவ்வப்பொழுது நினைப்பது - இம்மூன்றும் மரண தேவனான யமனுடன் உங்களுக்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும், '' என்று சொல்கிறார். ''நீங்கள் மரணபயத்திலிருந்து விடுபட்டுவிடுவீர்கள், மரணபயத்தைக் கடந்துவிடுவீர்கள், '' என்று சொல்கிறார்.
பரமஹம்ஸரின் விரிவுரைகளை, வழிகாட்டுதலுடன் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். படிப்பவர்களின் வசதிக்காகவும் அவர்களது கற்கும் ஆர்வத்திற்காகவும் ஸ்ம்ஸ்க்ருத ஸ்லோகங்களும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.
இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரிவாழ்வில் பயன்பெறவும், அதையும் கடந்து, அவர்களின் இறுதிநிலையான ஸ்த்யத்தை உணர்வதற்கான பெருமுயற்சிக்கு உறுதுணையாகவும் இந்நூல் விளங்கும் என்பது உறுதி!
முடிவற்ற பேரின்பநிலையாம் தித்யானந்தத்தை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது!
பூர்ணத்வம்
ஞானத்திற்கான நுட்பமான, ஆனந்த வாழ்வின் இரகசியமான 'பூர்ணத்வம்' பகவத்தீதையின் அனைத்து அத்தியாயங்களிலும் அளிக்கப்பட்டுள்ளது. இங்கு அனைவருக்கும் புரியும்வகையில், 'பூர்ணத்வம்' என்பதின் தாத்பரியம் விரிவாக வழங்கப்பட்டுள்ளது. 'பூர்ணத்வம்' எனும் வார்த்தைக்கு இப்பகுதியில் வரும் விளக்கத்தைப் படித்துணர்ந்து கொண்டீர்களானால், புத்தகத்தின் உள்ளே நீங்கள் 'பூர்ணத்வம்' பற்றிப் படிக்கும்பொழுது, அந்த சத்தியத்தின் ஆழத்தை அருமையாக உணர்வீர்கள்.
பூர்ணத்வம் - ஓர்அறிமுகம்
ஒவ்வொரு ஜீவனும் அடைய விரும்புவது - 'பூர்ணத்வம்'
வாழ்வின் மிக உயர்ந்த சத்தியம், மிக உயர்ந்த இலட்சியம் - 'பூர்ணத்வம்'
ஒவ்வொரு ஜீவனும் பூர்ணத்தன்மையை அடைய வேண்டும் என்பதே வாழ்வின் நோக்கம் - பிரபஞ்சத்தின் நோக்கம். அதனால்தான் நம் வேதங்களும் சாஸ்திரங்களும் இறுதியில் பூர்ணத்வ நிலையையே வலியுறுத்துகின்றன. இப்புத்தகத்தின் நோக்கமும் -நீங்கள் அனைவரும் பூர்ணத்தன்மையை உணர்வதே.
இங்கு, வாழும் அவதார புருஷர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ...
நம் அன்றாட வாழ்வில், நாம் மிக உயா்ந்த சத்தியமான பூர்ணத்வத்தைக் கடைபிடிப்பது எவ்வாறு? பூர்ணத்வத்தை உணர்வது எவ்வாறு? பூர்ணத்வத்தை அனுபவிப்பது எவ்வாறு? பூர்ணத்வத்தில் வாழ்வது எவ்வாறு? என்பதை எளிய நடையில், அனைவரும் புரிந்துகொள்(ளும் முறையில் வழங்கியுள்ளார்.
புர்ணத்வம் என்றால் என்ன ?
பூர்ணத்வம் குறைக்கன்மைகளோடும் நீங்கள் நிறைவசெய்கல். உங்களை நீங்களே மன்னித்து, உங்களின் நிறைவுத்தன்மையை பிரகடனப்படுத்துதல்.
உங்கள் வாழ்வில் விழிப்புணர்வில்லாமல்... நீங்கள் உங்களைப் பலப் பாகங்களாக ... துண்டுகளாகப் பிரித்து ... பல மக்களுடனும் ... பல விஷயங்களுடனும் பகிர்ந்துகொண்ட உங்களுடைய பாகங்களையும், துண்டுகளையும் திரும்பப் பெறுவதே பூர்ணத்வம்.
இழந்துவிட்ட எல்லா விஷயங்களையும் திரும்ப மீட்டெடுப்பதே பூர்ணத்வம் ! 'நீங்களும் பிரபஞ்சமும் ஒன்றே' என்று அறியும்வரையிலும், உங்களின் உயர்ந்த இறுதிநிலையை அறியும்வரையிலும், உங்களது அமைதியான விழிப்புணர்வையும், நிலையான ஆனந்தத்தையும் நீங்கள் அறிந்துகொள்ளும்வரையிலும், பூர்ணத்வம் செய்வது தொடர வேண்டும்.
ஒரு குழந்தை எனும் புதையலுடன்தான். இது, சமுதாயத்தால் ஒருபோதும் ஆதரிக்கப்படுவதில்லை. ஒரு குழந்தை, தன் உண்மையான அத்வைத நிலையிலேயே இருப்பதற்கு இந்தச் சமுதாயம் உதவுவதேயில்லை. அப்படிப்பட்ட ஒரு சமுதாயச் சூழலால் சிதறிப்போன தனது உணர்வுத் துண்டுகளை, வாழ்க்கை முழுவதும் அது தேட ஆரம்பித்துவிடுகிறது. அகவே, தக்கவைத்துக்கொள்வதே முழுமைசெய்தல்.
உங்கள் குறைவுணர்வுகள் என்பது உங்கள் மீது அமர்த்தப்பட்டிருக்கும் ஒரு குழந்தைகளைப்போன்றது என்றால், ஒவ்வொரு நாளும் நீங்கள் பூர்ணத்வம் செய்யும்பொழுது அந்த குறைவுணர்வுகளில் கரையும் ... இப்படி எல்லாக் குறைவுணர்வுகளும் கரையக் கரையக் கரைய, திடீரென ஒரு நாள், நீங்கள் மட்டும் உங்களுடன் இருப்பீர்கள்.
எந்தக் அமர்ந்திருப்பீர்கள். குறைவுணர்வுகளும் கரைந்து விடும். இந்தத் தேவையற்ற புரிதல்கள் உங்களை விட்டு விலகும்பொழுது, நீங்கள் அனுபவிக்கும் அந்த நிறைவுணர்வுதான் 'லட்சுமி'!
நம் எல்லா வறுமைக்கும் மூலகாரணம், நாம் வளர்ந்த பின்பும்கூட சிறுவயது குறைவுணர்வுகளோடு வாழ்வதுதான்.
குறைவுணர்வு - என்றால் என்ன ?
கடந்தகாலம் சார்ந்த எண்ணங்கள் ... துக்கங்கள் ... சந்தேகங்கள் ... குற்றவுணர்ச்சிகள் ... வெறுப்புகள் ... பயங்கள் - இவை உங்கள் நிகழ்காலத்தில் அமர்ந்துகொண்டு, எதிர்காலத்தையும் வாழவிடாமல் தடுப்பதுதான் 'குறைவுணர்வுகள்' என்கிறோம். இதை Incompletions என்று ஆங்கிலத்தில் சொல்வோம்.
உள் மனத்தடையாலோ அல்லது வெளியில் ஏற்படும் ஏதாவதொரு தடையாலோ, நீங்கள் நினைத்தபடி நிகழாமல் தடைபட்டு நின்றுவிடும் எந்தவொரு செயலுமே, உங்களுக்குள் ஒரு குறைவுணர்வாகத் தொக்கிநின்றுவிடுகிறது.
நிகழ்கால வாழ்வில் நிகழும் நிகழ்வுகளின் போக்கில், அப்படியே பங்கேற்கவிடாமல் உங்களைத் தடுக்கும் கடந்தகால நிகழ்வின் தாக்கம் எதுவானாலும், அது குறைவுணர்வே. குறைவுணர்வுகள், உங்களைத் தாழ்த்தி, உங்களை உணர்ச்சிவசப்படுவராகவும் பலவீனமானவராகவும் உணரச்செய்து, உங்களுக்குள் ஒரு திருப்தியற்ற உணர்வையே விட்டுச்செல்லும்.
நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், குறைவுணா்வு உடையவராக இருப்பீர்கள். மன அழுத்தம் என்பது உங்களுக்குள் நீங்களே குறைவுணர்வுகளை வைக்கோல் போர்போன்று போட்டுத் திணித்து வைத்துக்கொள்வதைத் தவிர வேறெதுவுமில்லை.
'மனிதகுலத்தின் இருக்கின்றனவே' என்பதே மனிதகுலம் சுமந்துகொண்டிருக்கும் மிகப் பெரிய குறைவுணர்வு!
ஏன் குறைவுணர்வுகள் உருவாகின்றன ?
ஒரு சிறிய கதை:
அன்றாடம் ஒரே விதமான விதமான வேலைகளைச் செய்து மிகவும் சலிப்படைந்திருந்தார், மசக்காளி. அவர், ஒருநாள் அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்பொழுது அவர் தமக்குள், 'என்ன சலிப்பான வாழ்க்கை இது! ? ... தினமும் காலையில் எழுந்து, பல்விளக்கி, பேப்பர் படித்து, சாமி கும்பிட்டு, காலை உணவு அருந்தி, என் மனைவியோடு சண்டையிட்டுவிட்டு, அலுவலகம் சென்று, ஏதோ வேலைசெய்து, அதிகாரியிடம் திட்டுவாங்கி, பின்பு வீட்டுக்குத் திரும்பி வந்து, டி.வி பார்த்துக்கொண்டே சாப்பிட்டுவிட்டு, தூங்கி... என்ன வாழ்க்கை இது... நகர மாட்டேன்கின்றதே, ஒரே சலிப்பாக இருக்கிறதே, ஏதோ ஒன்று குறைகிறதே. வாழ்க்கையை விறுவிறுப்பாகவும், சுவையுள்ளதாகவும் மாற்ற நான் எதையாவதைச் சேர்த்தாக வேண்டுமே ... எது என்னை நிறைவடையச் செய்யும்..?, எது என் வாழ்க்கையை உயிர்ப்போடும்... சுவையோடும் ... விறுவிறுப்போடும் ... உத்சாகமானதாகவும் மாற்றும் ' என்று வீடு திரும்பும் வழி முழுக்க யோசித்துக்கொண்டே வந்தார்.
வீட்டை அடைந்தவுடன் அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தார். அவர் மனைவி கதவைத் திறந்தார்.. உடனே அவர்தன் மனைவியிடம் ''ஷீலா, இந்த வாரக் கடைசியில் கோவாவுக்குப் போகலாம், நாம் அங்கு கடலருகில் விடுதியெடுத்துத் தங்கி, விரும்பும்போதெல்லாம் இளைப்பாறலாம், உணவகத்திற்குச் சென்று விரும்பியதைச் உண்ணலாம், அருந்தலாம் என்ன போகலாமா?' என்று மூச்சுவிடாமல் கேட்டார். அதைக் கேட்ட மனைவிக்கோ ஒரே சந்தோஷம். உடனே சம்மதித்தார்.
வாரயிறுதியும் வந்தது. மசக்காளியும் அவர் மனைவியும் கோவாவிற்குப் பறந்தார்கள். அங்கு சென்ற மசக்காளிக்கு ஒரே சந்தோஷம். ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து வாழத் துடித்தார். தம் மனைவியுடன் கடற்குளியலையும், அந்தக் காலை இளம்வெயிலையும் அனுபவித்துக் கொண்டிருந்தபொழுது, நினைவு வந்துவிட்டது. உடனே அதை நினைத்துக் கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்!!!
கடற்கரையில் அமர்ந்துகொண்டு கவலைப்படுவதைத்தான் நாம் 'விடுமுறை' எனச் சொல்கிறோம்.
கதை உணர்த்தும் சத்தியம் ...
உங்களைக்காட்டிலும் பெரியதாக ஏதோ ஒன்று வெளியில் உங்களுக்காகக் காத்திருப்பதாக யூகித்துக்கொண்டு, அதுதான் உங்களை நிறைவடையச் செய்யப்போகிறதென்று நென்று நீங்கள் நம்புவதினால்தான் குறைவுணர்வுகள் உருவாகின்றன.
உங்கள் குறைவுணர்வுக்குத் தாவும் ஒரு பயணம்தான். வெளியில் இருக்கும் ஏதோ ஒன்றே உங்களை முழுமைபடுத்த முடியும் என்னும் கருத்தே உங்களை உடனடியாக ஒரு சாதாரண உலகாயத நிலைக்குத் தள்ளி, உங்களை ஒரு உணர்வற்ற பொருளின் நிலைக்குக் குறைத்துவிடுகின்றது. உங்களை ஒரு குறைவுணர்வு உள்ளவராக ஆக்கிவிடுகிறது.
எந்தவொரு நிறைவடையாக செயலும் 'கா்மா'வாக ஆகிவிடுகிறது. அது நிறைவடையும்வரை, அதே செயலைத் திரும்ப திரும்பச் செய்வதற்கு அது உங்களை இழுத்துக்கொண்டேயிருக்கும். இது உங்களைப் பல ஜென்மங்கள் எடுக்கவைக்கும்.
குறைவுணர்விலிருந்து குறைவுணர்வை நிலையிலிருந்து செய்யப்படும் எந்தவொரு செயலும் உங்களைப் பூர்ணத்தன்மைக்கு எடுத்துச்சென்று, மற்றவர்களையும் நிறைவடையச் செய்கிறது.
உங்களுக்குள் இருக்கும் குறைவுணervகள் தான் உங்களின் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்பதை நீங்கள் உணர்ந்தால்தான் உங்களால் அதிலிருந்து விடுபட முடியும். நீங்கள் உருவாக்கிய குறைவுணர்வுகளை நிறைவுசெய்து, உங்களின் கனவுகளை நீங்கள் நிஜமாக்க முடியும்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் ...
நம் வறுமைக்கு காரணம் ... செல்வத்துடன் நமக்கு இருக்கும் குறைவுணர்வு.
நம் நோய்களுக்கு காரணம்... நம் உடலுடன் நமக்கு இருக்கும் குறைவணர்வ.
நம் துக்கத்திற்கு காரணம் ... வாழ்க்கையுடன் நமக்கு இருக்கும் குறைவணர்வ.
நம் தோல்விகளுக்கு காரணம்.. நம் செயல்களின் மீது நமக்கு இருக்கும் குறைவணர்வ.
இந்த ஒவ்வொன்றோடும் பூர்ணத்வம் செய்யும்பொழுது நாம் நினைத்த அளவிற்கு... செல்வத்தையும்... ஆரோக்கியத்தையும்... அனந்தமான வாழ்வையும்... வெற்றியையும் பெறுகிறோம்.
பூர்ணத்வ நுட்பம் -கடவுள் உங்களுக்கு அருளிய பிரசாகம்
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் ... நாம் எதைக் கற்றுக்கொள்கிறோம் என்பதைவிட யாரிடமிருந்து கற்றுக்கொள்கிறோம் என்பதை ஆம்ந்து கவனிக்க வேண்டும். ஏனெனில் ஒருவர் வார்த்தையில் இருந்து நாம் கற்பதைவிட அவருடைய வாழ்வைப் பார்த்து நாம் கற்பது மிகவும் அதிகம்.
நீங்கள் கற்கும் இந்தப் பூர்ணத்வ நுட்பம், பூர்ணத்தின் வடிவமாம்... எம்பெருமான் ஈசனால் அன்னை பார்வதி தேவிக்கு அருளப்பட்ட மிக சக்திவாய்ந்த நுட்பம். ஈசன் அருளிய இந்தப் பூர்ணத்வ நுட்பத்தை தங்கள் வாழ்வில் உண்மையாகக் கடைபிடிக்கும் ஒவ்வொருவரும் இறுதியில் அவர் வாழும் 'பூர்ண நிலையை' அடைவது சாத்தியம். இதுதான் கடவுள் உங்களுக்கு அருளிய உண்மையான பிரசாதம் !
ாசன் அருளிய ஞானசூத்திரமாம் விஞ்ஞான பைரவ தந்திரத்தில் 22வது சூத்திரம் சொல்வது :
'கடந்தகால நிகழ்வுகளைப் பார்க்கும் 'அந்த இடத்தில்' உங்கள் கவனத்தைக் குவியுங்கள். கடகடந்தகாலத்தோடு உங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ளாமல், அதனை உற்றுக் கவனியுங்கள். அங்கு உங்கள் வடிவம், இன்றைய குணநலன்களை இழந்து, உணர்வுமாற்றம் அடைந்துவிடும். '
பூர்ணத்வ க்ரியை
உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள் என்பது உங்கள் உணர்வில் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டு விடுகிறது.
உங்கள் வாழ்க்கையில் குறைவணர்வுகள் ஏற்படுவதற்கு - காலம், உணர்வு, உங்கள் குறைபுரிந்துணர்வுகள் இவை தேவைப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட குறைபுரிந்துணர்வு உங்கள் உணர்வில் பதியப்படுகிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட காலம், ஒரு குறிப்பிட்ட குறைபுரிந்துணர்வுடன் உங்கள் உணர்வில் பதியப்படுகிறது.
உங்கள் உணர்வில் பதியப்படும் ஒரு குறிப்பிட்ட காலமானது, ஒரு குறிப்பிட்ட குறைபுரிந்துணர்வுடன்கூடியதாக இருந்தால், அந்தக் குறைவுணர்வு அனுபவம் அடுத்தடுத்த கணங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் உங்கள் வாழ்க்கையை நடத்துவீர்கள்.
உதாரணத்திற்கு, உங்களுடைய ஆறாவது வயதில், உங்கள் மூத்த சகோதரர் உங்களை ஏதோ ஒரு காரணத்திற்காக அடித்துவிட்டார் என வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்தச் சமயத்தில், உங்களைச் சக்தியற்றவராக உணர்ந்திருந்தீர்களானால், அது ஒரு ஒரு ஆழமான குறைவுணர்வாக உங்களுள் பதிந்துவிடும்.
இப்போதும், எப்பொழுதெல்லாம் அந்தக் குறைவுணர்வின் தாக்கம் ஏற்படுகின்றதோ, எப்பொழுதெல்லாம் அந்த பலஹீனவுணர்வால் பாதிக்கப்படுகின்றீர்களா, புரிந்துணர்வைக் அந்தக் குறைவுணர்வு உருவாக்கப்பட்ட அந்த சிறுவயது வடிவம், உங்களுடைய நினைவுக்கு ஒரு மைக்ரோ நொடிக்காவது உங்கள் மனக்காட்சியில் வந்தே தீரும். நீங்கள் மறுபடியும் அந்த வடிவை நினைவுகூர்வீர்கள்.
அந்த வடிவிலிருந்து அக்குறைவுணர்வு, தன் வலையைத் துவங்கிவிடும். ஒரு வன்குறுந்தகட்டில் (DVD) நிழற்காட்சியாகக் குறுக்கப்பட்டுச் சேமிக்கப்பட்ட ஒரு காட்சி, திரும்பவும் போட்டுக் காண்பிக்கப்படுவது போன்றதுதான் இது.
உங்கள் ஆறு வயதில் உருவாக்கப்பட்ட ஒரு குறைவுணர்வினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் அந்த நேரத்தில் எப்படி இருந்தீர்களோ, அந்த வடிவைத் திரும்பவும் நினைவு கூர்வீர்கள். அது அப்படியே உங்கள் நினைவிலிருக்கும். ஒரு வினாடிக்கும் மிகமிகக் குறைந்த நேரத்திலிருந்தாலும் கூட உங்களால் அதை நினைவுகூர முடியும். அந்தப் பழைய நினைவை அடித்தளமாக அமைத்து, அதன்மேல் அந்தக் குறைவுணர்வு வளருகிறது. அதுவே இப்போதைய உங்களுடைய நிகழ்காலத்தையும் பாதிக்கிறது.
மஹாதேவர் உங்கள் உள்தளத்திலிருந்து, அந்த ஆறு வயது வடிவையும், அந்த நினைவையும், கரைப்பதற்கு ஒரு சக்திவாய்ந்த நுட்பத்தைத் கருகின்றார்.
இதைத்தான் அவர், 'உங்கள் கடந்தகாலத்தை நினைவு கூா்ந்து. அதைக் கரைத்துவிடுங்கள்' என்று சொல்கிறார். நீங்கள் இந்த ஒரு வரியைத் தவற விட்டுவிட்டீர்களென்றால், நீங்கள் (முழுவதையும் தவறவிட்டுவிடுவீர்கள்.
உங்கள் ஆறு வயதில் ஏற்பட்ட குறைவுணர்வுகளை இன்னும் நீங்கள் சுமந்து கொண்டிருக்கிறீர்கள், அதனால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அந்தக் கடந்தகாலக் குறைவுணர்வு உங்கள் நிகழ்கால் முடிவுகளை, நிகழ்கால விழிப்புணர்வை இன்னமும் பாதித்துக்கொண்டிருக்கிறது. ஒரு நொடிக்கும் மிகக் குறைந்த நேரத்தில் உங்களுக்குள் உருவான குறைவுணர்வை, அந்த ஆறு வயது சிறுவனின் பயந்த, குறுகிய, வெளிறிய முகத்தின் காட்சியை நினைவுகூர்வீர்கள். அந்த நினைவிலிருந்து உங்கள் குறைவுணர்வு வளர்ந்து பெருகத் துவங்கும்.
ஆகவே, ஒவ்வொரு கணமும் உங்கள் தோற்றம் எப்படியிருந்தது என்பது உங்கள் உணர்வில் பதியப்படுகிறது. உணர்வுதான் படச்சுருள்.
மகாதேவர் சொல்கிறார்: இப்போது, அதே காலத்திற்குச் சென்று, அதே வடிவைப்பார்த்து, அதையே திரும்ப வாழுங்கள்.
ஆனால், அதைக் கரையச்செய்துவிட வேண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். இப்போது என்ன நடக்கும் ? நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் அந்தச் சிறுவயது வடிவம், கடந்தகாலத்திலிருந்து ஒரு பொக்கிஷம்போல் பாதுகாக்கப்பட்டு, காக்கப்பட்டு வந்த அந்த
நினைவுமலர் வடிவம் 'சட்'டெனக் கரைந்துபோகும்.
கடந்தகாலத்தை நீங்கள் மீண்டும் வாழும்போது, சரியாக இதுதான் நடக்கிறது. அந்த ஆறு வயது சிறுவனிடம் நீங்களே சென்றோ அல்லது அந்த ஆறு வயது சிறுவனையே நீங்கள் இங்குக் கொண்டு வந்தோ, அந்தக் குறைவுணர்வை மீண்டும் நிகழ்காலத்துக்கு எடுத்து வந்து, அதை விழிப்புணர்வோடு வாழுத் துவங்குங்கள்.
உங்கள் சகோதரர் உங்களை விரட்டிக்கொண்டு வருகிறார். அவர் உங்களை அடிக்கிறார். நீங்கள் திகிலடைந்து, பயந்து ஓடி, ஒளிந்து கொள்கிறீர்கள்: உங்களால் கத்தக்கூட முடியவில்லை. பயத்தில் மூச்சுவிடுவதே கடினமாக இருக்கும். அந்தக் குழந்தை பருவக் காட்சியை அப்படியே வாழுங்கள் அப்படி வாழும்போது குறைவுணர்வு கொண்ட சிறுவன், பதறிப்போன சிறுவன் இப்போது அப்படியே கரைந்துபோவான்! அந்த நினைவுகள் கரைந்துபோகும். அந்தக் காட்சி கரைந்துபோகும். இவை எல்லாம் கரைந்தவுடன் உங்கள் உணர்வில் இருக்கும், அந்தக் குறைவுணா்வின் தாக்கமும் கரைந்துபோகும் !
இதுதான், மஹாதேவர் சொன்னது, 'உங்கள் கடந்தகாலத்தை, அதனோடு தொடர்புபடுத்திக் கொள்ளாமல் உற்றுக் கவனியுங்கள். உங்கள் கடந்தகாலம் நிகழும் இடத்தில் உங்கள் கவனம் இருக்கட்டும் அப்பொழுது உங்கள் வடிவம்கூட, தன்னுடைய இப்போதைய பண்புகளை இழந்து, உணர்வுமாற்றம் அடையும்! அந்த வடிவம், தனது பண்புகளை இழந்து விடுகிறது! அப்போது நீங்கள் பூர்ணமாகிவிட்டீர்கள்! இதுதான் பூர்ணத்வத்தின் விளக்கம்.
நீங்கள் இந்த விளக்கத்தைப் பின்பற்றினீர்களென்றால், நீங்கள் அப்போது வைத்திருந்த அந்தக் குறைவுணா்வினையும் அந்த வடிவத்தையும் உங்களால் மீண்டும் நினைவுபடுத்த முடியாது. நீங்கள் பூர்ணத்வம் செய்து விட்டீர்களா, இல்லையா என்னும் உங்கள் சந்தேகம் தெளிந்து விடும்.
குறைவுணர்வு என்பது மிகவும் சிக்கலான உணர்வுப்பதிவு. குழந்தைப் பருவ குறைவுணர்வை, இப்போதுள்ள உடலுக்குள்ளும் கொண்டுவந்து, அதன் அடிப்படையிலேயே இப்போதும் வாழ்வது என்பது, சிறுவயதில் குடித்த 200மில்லி பால் அளவே இப்போது வளர்ந்தபிறகும் போதும் என்று நீங்களாகவே முடிவுகெய்துகொண்டு, ஒரு லிட்டர் பாலைக் குடிக்கவேண்டிய வயதில்கூட அதே 200 மில்லி பாலைக் குடிக்க
முயற்சிப்பது போன்றதுதான். நீங்கள் குழந்தையாய் இருந்தபோது குடித்த அளவே இப்போதும்கூட குடித்து வந்தீர்களென்றால், உங்களுக்கு சத்துக் குறைவுதான் ஏற்படும் !
அந்த வடிவத்தின் அதே போதாத உணர்வை இந்த வடிவத்திற்குள் கொண்டுவந்து வாழ்வதற்கு முயற்சி செய்தீர்களானால், நீங்கள் தொடர்ந்து போதாமையால் சிரமப்படுவீர்கள். வாழ்க்கையில் 'போதாமை' என்பது ஒரு சாபம்!
அதனால், 'போதாமை' என்னும் சாபத்திலிருந்து விடுபட, உங்களுடைய குறைவுணர்வுகளை நிறைவுசெய்வதைத் துள்ளிப் போடாதீா்கள். சிறிதும் தாமதம் செய்யாதீா்கள். ஏனெனில், அவை உங்களிடம் இருப்பனவற்றையெல்லாம் அழித்துவிடும். உங்களுடைய வாழ்க்கையின் நோக்கத்தையே அழித்துவிடும் !
உங்கள் நிகழ்காலத்தின் மேல் பாரமாக அமர்ந்துகொண்டு, உங்களை பலமில்லாதவராக உணரச்செய்யும் இறந்துபோன கடந்தகாலத்தை எரிக்கு, நீங்கள் நிகழ்காலத்தில் வாழவும், விரிவடையவும், உயிர்ப்போடு இருப்பதற்குமான ஒரு உணர்வை உருவாக்குவதே பூர்ணத்வம்.
பூர்ணத்வத்தைத் தவிர உடனடி சக்தியுள்ள நுட்பம் கிடையாது. பூர்ணத்வத்தைப்போல வேறெந்த செயல்முறையும் நீடித்த, நிலைத்த விளைவுகளையும், விழிப்புணர்வையும் தராது.
அதனால்தான் மஹாதேவர் இதில் மிகத் தெளிவாக சொல்கின்றார் -உங்கள் கடந்தகாலத்தைப் பற்றி நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் எல்லா வடிவங்களும், கருத்துக்களின் வடிவங்களும்... அந்தக் கருத்துக்களை உருவாக்கிய நினைவுப்பதிவுகளையும் நீங்கள் கரைத்தே ஆக வேண்டும்.
அவற்றையெல்லாம் சொல்கிறேன், நீங்கள் ஞானமடைந்து விடுவீர்கள்! உங்களுக்கு ஞானம் கிடைத்துவிடும்! அவற்றையெல்லாம் கரைத்தவுடனே, நீங்கள் இந்த வாழ்க்கையை வாழத்துவங்குவீர்கள். அவை கரைக்கப்பட்டவுடன், நீங்கள் உணர்வுமாற்றம் பெறுவீர்கள். நீங்கள் ஜீவன்முக்த வாழ்வை வாழ்வீர்கள் !
பூர்ணத்வம் செய்தல், நிறைவுசெய்தல் என்பதன் மிகச் சரியான விளக்கம் இதுவே! நிறைவுசெய்தல் என்பதற்கு மகாதேவரின் மிகச் சரியான விளக்கமும் இதுவே!
பூர்ணத்வம் - வாழ்வின் திறவுகோல்!
பூர்ணத்வமே நீங்கள் சேர்க்க வேண்டிய உண்மையான செல்வம் ! பூர்ணத்வம் - எங்கேயோ வெளியில் தேடியலைந்து அடைய வேண்டிய ஒரு பொருள் அல்ல. உங்களுக்குள்ளேயே புதைந்து இருக்கின்ற ஒரு பொக்கிஷம். அதனால் உடலில் இருக்கும்பொழுதே உணர்வில் பூர்ணத்வத்தைக் கண்டுவிடுங்கள் !
பேருந்தில் பயணம் செய்துகொண்டிருக்கும் ஒருவருக்கு, அவர் அடையவேண்டிய இடத்தை அவர் சென்றடையும்பொழுதுதான், அவரது பயணம் நிறைவுபெறும். அதுபோல - இந்த 'வாழ்க்கை' என்னும் சாலையில் 'உடல்' என்னும் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருக்கும் ஒவ்வொரு 'ஆன்மா'வுக்கும் அது அடையவேண்டிய இறுதி நிலையான 'பூர்ணத்வத்தை' அடையும்பொமுதுதான், அதனுடைய பயணம் நிறைவுபெறும். இல்லையெனில் எத்துணைமுறையானாலும் அது இன்னொரு உடலெடுத்து தன் பயணத்தை தொடர்ந்தே ஆக வேண்டும்.
பூர்ணத்வம் - மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமான திறவுகோலாக செயல்படுகின்றது. அதைக்கொண்டு... உங்கள் பிரச்சினைகள் போன்ற எந்தப் பூட்டையும் திறந்துவிடலாம். இந்தப் பூர்ணத்வம்தான் எங்கும், எல்லா இடங்களிலும் உங்களைப் பாதுகாக்கும் உங்களின் உண்மையான சொத்து.
பூர்ணத்வம் - உங்களுக்காக, உங்கள் வாழ்க்கையின் எல்லாவிதச் சிறப்பம்சங்களையும் திறந்துவிடக்கூடிய ஒரு ஒரு திறவுகோலாக செயல்படுகின்றது. குறைவுணர்வுகளை மட்டும் நிறைவுசெய்வதற்காகப் பயன்படவில்லை. மற்றவர்களிடமிருந்து துன்பங்களையும் முழுமைப்படுத்தி, அதிலிருந்து விடுபடுவதற்கும் வழிவகுக்கும்.
பூர்ணத்வம் மட்டுமே நம் வாழ்வில் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் எல்லாத் துன்பங்களுக்குமான ஒரே தீர்வு !
தனக்குள்ளும் மற்றவர்களுக்குள்ளும் பூர்ணத்வத்தை உணர்வதற்காக அறிவைப் பயன்படுத்துவதே -உண்மையான பகுத்தறிவ.
ஒவ்வொருவரும்- 'நான் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறேன்? நான் ஏன் இவ்வாறு செய்கிறேன்?' என்று தன்னைப்பற்றி, தன்னுடைய செயல்களைப்பற்றி, நடவடிக்கைளைப்பற்றி பகுத்தாராய வேண்டும். தன்னுள் குறைவுணர்வை ஏற்படுத்தும் காரணங்களைக் கண்டுபிடித்து, அதை நிறைவசெய்ய வேண்டும்.
உங்களுடைய வாழ்வில் உங்கள் கனவுகளை நிஜமாக்குவதற்குத் தடையாக இருக்கும் குறைவுணர்வுகளே! இந்தக் உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் துக்கத்தில் ஆழ்த்துகின்றன.
ஒவ்வொருவரும் இருக்கும் நீங்கள் குறைவுணர்விற்கான உண்மையான காரணத்தை அவசியம் புரிந்துகொள்ளவேண்டும். அப்பொழுதுதான் அதை நிறைவுசெய்து, உங்களின் இயல்பான இறையுணர்வை, புர்ணத்வ உணர்வை உங்களால் உணரமுடியும்.
உங்களின் ஆன்ம சக்தியை உயிர்ப்பிக்கும் பூர்ணத்வம் !
நீங்கள் எவ்வளவுதான் மன அழுத்தத்திலிருந்தாலும், ஒன்றுக்கும் உதவாதவர் என்று உங்களை நீங்களே உணர்ந்தாலும், உங்கள் மீதும், உலகத்தின் மீதும் கோபமும், குற்ற உணர்ச்சியும் கொண்டிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக உங்கள் எல்லோருக்குள்ளும் தூய்மையான விழிப்பணர்வு இருந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தத் தூய்மையான விழிப்புணர்வை நம் தினசரி நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்த முடியும்.
பணமாக இருந்தாலும். பொருளாக இருந்தாலும் உங்களிடம் இருப்பவற்றை நீங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தாவிடில் அது பயனற்றதே! நீங்கள் ஸ்விட்சர்லாந்து வங்கியில் பில்லியன் டாலர்கள் வைத்திருந்தாலும், அதை உங்களால் அன்றாட வாழ்க்கையில் எடுத்துப் பயன்படுத்த முடியவில்லையென்றால், அது பயனற்றதே!
நீங்கள் பெட்ரோல் கடையிலோ அல்லது உணவு விடுதியிலோ சென்று
'எனக்கு ஸ்விஸ் வங்கியில் வங்கிக்கணக்கு இருக்கிறது. பில்லியன் கணக்கில் டாலர் இருக்கிறது. இதுதான் என் வங்கி கணக்கு எண். எனக் குச் சிறிது உணவு வேண்டும், என் வண்டிக்கு 1 லிட்டர் பெட்ரோல் வேண்டும்' என்று கேட்டால், அவர்கள் தரமாட்டார்கள்.
உங்களிடம் பணம் இருக்கிறது என்று தெரிந்தாலும்கூட, நீங்கள் பணத்தைத் திருப்பித் தருவதாக வியாபார ஒப்பந்தம் செய்தபின்பே உங்களுக்குப் பணம் தருவார்கள். உங்களுக்கு வங்கியில் பணம் இருக்கிறது என்பதற்காகத் தரமாட்டார்கள்.
உங்களிடம் இருக்கும் உங்களுடைய எல்லா ஆன்மீக சக்கியும். உங்களக விழிப்புணர்வான ஆத்மாவும் ஸ்விட்சர்லாந்து வங்கியில் இருக்கும் பணம் போன்றவைதான்! உங்களிடம் இருக்கின்ற ஆன்ம சக்தியை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த முடியவில்லையென்றால், அதை நீங்கள் வைத்துக்கொண்டிருந்தாலும், அதனால் உங்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
பூர்ணத்வம் - உங்களுக்குள் உறைந்திருக்கும் தூய விழிப்புணர்வான ஆன்ம சக்தியை விழிப்படையச் செய்கின்றது.
உங்களுக்குள் இருக்கும் ஆன்ம சக்தியை உங்கள் அன்றாட வாழ்வில் நீங்கள் உங்களைப் பூர்ணமானவராக உணர்வீர்கள். உங்கள் வாழ்வு பூர்ணத்வ நிலையில் இயங்குவதைப் பார்ப்பீர்கள். உங்கள் வாழ்வு முழுமையாக மாற்றம் அடைவதைக் காண்பீர்கள். ஒரு பூர்ணமான சக்தி உங்களுக்குள் இருந்துகொண்டு உங்களையும் உங்கள் வாழ்வையும் வழிநடத்துவதையும் உணர்வீர்கள்.
நேற்றுவரை நான் பூர்ணத்வம் செய்யவில்லையே, இப்போது ஏன் ?
பூர்ணத்வம், ஏன் செய்யப்பட வேண்டும் ? இக்கேள்வி உங்கள் மனதில் எழுவது இயல்பே. அதற்கான பதில் - ஏனெனில், பூர்ணத்வம், உங்கள் விழிப்புணர்வைத் திரும்பப் பெற்றுத்தருகிறது. உங்கள் விழிப்புணர்வு விடுவிக்கப்படும்பொழுது, அது உயா்-விழிப்புணர்வாகிறது.
தண்ணீரைச் சுடாக்கினால், அது குளிர்விக்கப்பட்டால் பனிக்கட்டி ஆகிவிடுகிறது. அதைப்போலவே, உங்கள் விழிப்பணர்வை சுருள அனுமதிக்கும்பொழுது, அது சுருண்டு, சுருண்டு, சுருண்டு விழிப்பற்ற நிலையாக ஆவிடுகிறது. அதை விரிக்கும் பொழுது, அதுவே 'உயர்விழிப்புணர்வாக' மாறுகின்றது.
பூர்ணத்வம் என்பது - உங்கள் உணர்வுக்குள் சிதறிக்கிடக்கும் உங்களின்பல பாகங்களை ஒருங்கிணைப்பது. பூர்ணத்வம் செய்வதால், நீங்கள் ஒரு ஒருங்கிணைந்த நபராக மாறிவிடுகிறீர்கள். உங்கள் உள்ளுணர்வு, உடல், மனம்- எல்லாமே உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகின்றன. உங்களுடையதாக மாறிவிடுகின்றன. உங்கள் பாகமாக மாறி விடுகின்றன.
இன்னொன்றையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பூர்ணத்வம் செய்யும்போது, உங்கள் எதிர்காலம் மட்டும் பூர்ணமாய் அமையும் என்று நினைக்காதீர்கள். உங்கள் கடந்தகாலமும்கூட மாற்றப்பட்டுவிடும்! உங்கள் கடந்தகாலமும் முழுமை அடைந்துவிடும்.
பூர்ணத்வம் மட்டுமே உங்கள் கடந்தகாலத்தைக்கூட மாற்றக்கூடிய ஒரு சக்திவாய்ந்த நுட்பம்! 'கடந்தகாலத்தை மாற்ற முடியாது'-என்றே மனிதர்கள் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். அழ்ந்து பரிந்துகொள்ளுங்கள், கடந்தகாலத்தை மாற்ற முடியாது என்றால், எதிர்காலத்தையும் மாற்ற முடியாது!
காலத்தின் ஒரே டி.என்.ஏ விதைக்குள்தான் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இந்த மூன்றுமே இருக்கின்றன! காலம், ஒரு விதை என்றால், கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் டி.என்.ஏ வடிவமாக அந்த விதையில் உள்ளன.
கடந்தகாலத்தைப் பற்றிய உங்கள் மனப்போக்கும், எதிர்காலத்தைப் பற்றிய உங்கள் மனப்போக்கும், நிகழ்காலத்தைப் பற்றிய உங்கள் மனப்போக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
நிகழ்காலத்தில் உங்களை நீங்கள் ஒரு பலஹீனராக உணர்ந்தால், கடந்தகாலத்திலும் இருந்திருப்பீர்கள்! நிகழ்காலத்தில் உங்களை நீங்கள் ஒரு பலஹீனராக உணர்வதால், எதிர்காலத்திலும் பலஹீனமானவராகத்தான் இருப்பீர்கள். நீங்கள் காலையில் எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்து, உங்களையே குளிப்பாட்டிச் சுத்தப்படுத்திக் கொள்வதைப்போலவே, ஒவ்வொரு நாள் இரவிலும் நீங்கள் பூர்ணத்வம் செய்து உங்கள் அகத்தைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு இரவும் பூர்ணத்வம் செய்வது என்பது உங்கள் உயிரின் பாகமாக மாறவேண்டும். அது உங்கள் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே மாறிவிட வேண்டும்.
தொடர்ந்து பூர்ணத்வம் செய்யுங்கள். ஏனெனில் பூர்ணத்வம், உங்களை ஒருமைத்துவத்துடன் இருக்கச் செய்கிறது. பூர்ணத்வம், உங்களை சிரத்தையுடன் இருக்கச் செய்கிறது. பூர்ணத்வம், உங்களை பொறுப்பெடுக்கச் செய்கிறது. பூர்ணத்வம், உங்களையும் வளப்படுத்தி, மற்றவர்களையும் வளப்படுத்தச் செய்கிறது.
உங்களிடமிருந்தே தப்பித்து ஓடாதீர்கள்!
முழுமையாக இருப்பதே உங்களின் உயர்ந்த இயல்பாக இருப்பதால், உங்களுடைய குறைவுணர்வுகளுடன் உங்களால் சௌகரியமாக இருக்கவே முடியாது. உங்கள் குறைவுணர்வுகள் உங்களை ஒரு குறையுடைவராகக் காட்டுகின்றன என்பதற்காகவே அவற்றை நீங்கள் எதிர்கொள்வதில்லை. அதனால்தான் அவற்றை நீங்கள் எதிர்கொள்ள எப்பொழுதும் விரும்புவதில்லை.
உங்கள் வாழ்நாள் முழுவதும், உங்களுடைய குறைவுணர்வுகள் என்னும் பேய்களிடமிருந்து தப்பிக்க ஓடிக்கொண்டேயிருக்கிறீர்கள். உங்களிடமிருந்து நீங்கள் தப்பித்து ஓட ஓட, உங்கள் குறைவுணர்வுகள், உங்களை வாழ்க்கையின் மூலமாகவும், உங்களைச் சுற்றி இருப்பவர்கள் மூலமாகவும் மேலும் மேலும் துரத்தி வேட்டையாடுகிறது.
குறைவுணர்வுகளை நேரிடையாக அவற்றிடமிருந்து விடுதலையடைய ஒரே வழி.
நீங்கள் ஐந்து வயது குழந்தையாய் இருந்தபொழுது உங்களுக்கு ஒரு பொம்மைக் காரே போதும். ஆனால் உங்களுக்கு 25 வயதாகும்போது, உண்மையான கார் தேவை. ஆனால் இந்த இருபத்தியைந்து வயதிற்கு பிறகும் அதே பொம்மைக் காரை வைத்துக் கொண்டு, ''ஆ! நான் காரில் போகிறேன்,'' என்று சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ? அதைப்போலவேதான் நீங்கள் இப்போது செய்துகொண்டிருக்கிறீர்கள்! இப்போது நீங்கள் நிஜமான காரில் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. உங்கள் பொம்மைக் கார்களை விட்டுவிடுங்கள்.
சிறுவயது காகல். சிறுவயது கார்கள், சிறுவயது பரிதல்கள், உங்களது பார்பி பொம்மைகள் எல்லாவற்றையும் கண்டிப்பாக விட்டுவிட வேண்டும். எல்லாமும் கண்டிப்பாகத் தூக்கியெறியப்பட வேண்டியவையே. துரதிருஷ்டவசமாக, சமுதாயம் உங்களுக்கு, பொம்மைகளை மட்டுமே விட்டுவிடக் கற்றுத் தந்திருக்கிறது. ஆனால் அந்தச் சிறுவயதில் உருவாக்கிய விளையாட்டு உணர்வுகளையும், தேவையற்ற புரிதல்களையும், குறைவுணர்வுகளையும் விட்டுவிடக் கற்றுத்தரவில்லை. அவை அனைத்தையும் தூக்கியெறிந்துவிடுங்கள். உங்களுக்குள் பூர்ணத்வம் நிகழ அனுமதியுங்கள்.
பூர்ணத்வம், உஉங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளையும்... போராட்டங்களையும் ... பிரச்சினைகளையும் தவிர்த்துவிடுகிறது. உங்களை ஒருங்கிணைக்கிறது.
பூர்ணத்வம் செய்வதைத் கள்ளிப்போடாதீர்கள்!
சில சரிசெய்யப்பட முடியாத சேதங்களை உங்களுக்கு ஏற்படுத்திவிடும். 'அவற்றை நான் ஒரு வருடத்திற்குப் பிறகு அல்லது இரு வருடங்களுக்குப் பிறகு நிறைவுசெய்து கொள்வேன் 'என்றெல்லாம் நினைக்காதீர்கள். அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்! ஏனெனில், தீவிரவாதிகள் எவ்வாறு சும்மாயிருக்க மாட்டார்களோ, அவ்வாறே உங்களுடைய குறைவுணர்வுகளும் சும்மாயிருக்காது.
'இரண்டு வருடங்களுக்குப் பிறகு அந்தத் தீவிரவாதிகளோடு நான் போரிடுவேன்', என்று நீங்கள் சொல்ல முடியாது. அதுவரையில் அவர்கள், உங்களை உயிரோடு விட்டுவைக்க மாட்டார்கள். உங்களைத் தீர்த்துக்கட்டிவிடுவார்கள்.
அதேபோல் குறைவுணர்வுகளும் சும்மாயிருக்காது. அவை உங்களது வாழ்க்கை லட்சியங்களுக்கு சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் தொடர்ந்து அழித்துக்கொண்டேயிருக்கும். நீங்கள் எதற்காகப் பிறப்பெடுத்தீா்கள், நீங்கள் எதை நிறைவேற்ற இந்த உடலில் இருக்கிறீர்கள், உங்கள் வாழ்வின் இலட்சியம், மற்றும் அதை நிறைவேற்ற உங்களுக்கு தேவையாக இருக்கும் எல்லாவற்றையும் இந்தக் குறைவுணர்வுகள் அழித்து விடும்.
குறைவுணர்வுகள், அழித்துவிடும் ! விரோதிகளைப்போல உங்களுக்குள்ளேளேயே தங்கி உங்களையே அழிக்கும் வேலையைச் செய்யவல்லது. அவை உங்களை மிகவும் கொடுமைசெய்து இன்பமடையும்.
உங்களது சிறு மலரினால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்களென்றால், அந்தச் சிறு மலர்கூட உங்களுக்குக் கிடைக்க அவை அனுமதிக்காது. அவை சரியாக அந்தக் குறிப்பிட்ட மலரையே வாடிப்போகச் செய்யும்! அதற்குத் தேவையானதெல்லாம் ஒன்றே, நீங்கள் அந்த மலரைப் பெற்றுவிடக்கூடாது, அவ்வளவுதான்!
பல நேரங்களில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கவனித்திருக்கலாம், மிகச் சாதாரணமான பொருளைக்கூட... எந்தவொரு சாதாரண மனிதனாலும் எளிமையாகப் பெறக்கூடிய ஒரு பொருளைக்கூட, நீங்கள் அடைய மிகவும் கஷ்டப்படுவீர்கள். அது உங்களுக்குத் தேவைப்படும்பொழுது, அதை அடைய நீங்கள் போராடினாலும் அதன் சிறு பகுதிகூட உங்களுக்குக் கிடைக்காது. அதை அடைவதற்கு உங்களுக்குத் தடையாக இருப்பவை உங்களுடைய குறைவுணர்வுகள்தான்! ஏனெனில், நீங்கள் விரும்புவது எவ்வளவு சிறியவையாக இருந்தாலும்கூட, உங்களுடைய குறைவுணர்வுகள் அவை உங்களுக்குக் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளும். !
மேலும், குறைவுணர்வுகள் இருக்கும்பொழுது நீங்கள் சாதாரண விஷயத்தையும் தவறான முறையிலேயே அணுகுவீர்கள். உதாரணத்திற்கு, நீங்கள் யாரையாவது விரும்புகிறீர்கள், நீங்கள் அந்த நபருடன் நெருங்கிப் பழக விரும்புகிறீர்கள், ஆனால் அந்த நபர் உங்களின் உணர்வைப் புரிந்துகொள்ள மறுக்கிறார். அதனால் நீங்கள் உங்களைப் புரிந்துகொள்ளச் சொல்லி அவருடன் சண்டையிடத் துவங்குவீர்கள். உங்களின் இந்தச் சண்டை அவரை உங்களோடு நெருங்க விடுமா ? இல்லை! குறைவுணர்வுகள் உங்களுக்குச் சண்டையிடத் கற்றுக் கொடுக்கும்.
குறைவுணர்வுகளின் குறைவுணர்வுகள் திட்டத்தையும் - - பொருளாதாரத் திட்டங்களையோ, உறவுகள் சம்பந்தப்பட்ட திட்டங்களையோ - தீட்டாதீர்கள். அதேபோல் என்ன முடிவுகளாக இருந்தாலும் - வாழ்க்கை பற்றிய முடிவுகளையோ, உடல் சார்ந்த முடிவுகளையோ, மனோரீதியான முடிவுகளையோ, ஞானமடைவது அறிவுரைப்படி எடுக்காதீர்கள்.
உங்களுடைய குறைவுணர்வுகளைப் பூர்த்திசெய்வதைத் தள்ளிப் போடாதீர்கள். உங்களது குறைவுணர்வுகள் நீங்கள் நினைப்பதுபோல அவ்வளவு அப்பாவி அல்ல. அதனால் இப்போதே பூர்ணத்வம் செய்யுங்கள்! இல்லையென்றால் உங்களது உடலும், மனமும் அழிந்துவிடும். உங்களுடைய சிந்தனைத் திறனையே முழுவதுமாக விமுங்கிவிடும்.
உங்களைத் தாக்க, உங்களின் சக்தியையே பயன்படுத்தும். இது எப்படிப்பட்டதென்றால் உங்களுடைய பாதுகாப்புப் படையையே உங்களது நாட்டைத் தாக்க உபயோகிப்பது போன்றது. இதைத்தான் குறைவுணர்வுகள் செய்கின்றன. அது மிகவும் ஆபத்தானது. திரும்பவும் சரிசெய்யப்பட முடியாதது. இப்பொழுதே பூர்ணத்வம் செய்யுங்கள்! இல்லையென்றால் ... குறைவுணர்வுகள் சக்தி அதிகமாக இருப்பதால், உங்களது உடலும், மனமும் அழிக்கப்பட்டுவிடும்.
நீங்கள் ஒவ்வொருவருமே பூர்ணத்தின் வெளிப்பாடே!
நம் உபநிடதத்தில் சொல்லப்படும் மிக அழகான ஒரு ஸ்லோகம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே / பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே //
இதன் பொருள்:
தோற்றத்துக்கு அப்பால் இருப்பதும் முழுமை, தோன்றியுள்ளதும் முழுமை. முழுமையிலிருந்து முழுழுமை எடுக்கப்பட்டாலும்கூட, முழுமை முழுழுமையாகவே இருக்கிறது.
பூர்ணத்வத்தில் இருந்து நீங்கள்தான் பூர்ணம் என்பதை உணர்வதுதான் ஞானம்.
'நீங்கள்தான் பூர்ணம்' என்பதை நீங்கள் உணரும்பொழுது, இந்தப்
பிரபஞ்சத்தின் பூர்ணத்வத்தை அனுபவமாக உணர்கின்றீர்கள், நீங்கள் இந்தப் பூர்ணத்தன்மையை அனுபவமாக உணர்ந்தீர்களானால்... நீங்கள் தெய்வீகத்தை வெளிப்படுத்துவீர்கள்.
நாம் வெளிப்பட்டவர்கள்தான். பூர்ணம் ஜோதியில் இருந்து வெளிவந்த சுடர்கள்தான். ஆனால் அஞ்ஞானம் எனும் இருளால் அதை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம் உண்மையைான வாழ்வை இழந்துகொண்டிருக்கிறோம். பூர்ணத்வம் செய்வது நெம்முடைய வாழ்க்கையை நமக்குத் திருப்பி வழங்குகிறது!
நீங்கள் பூர்ணத்வம் செய்யும்போது, விதம் பாரம்பரியத்தில் நீங்கள் படித்த அனைத்தும் நிஜமாகிவிடுகிறது. உங்கள் வாழ்க்கையில் வேதப் பாரம்பரியத்தை அடைவதற்கு, அதீதமான சக்திகளைப் பெறுவதற்கு, பூர்ணத்வம் ஒரு பாலமாக இருக்கிறது.
எல்லா நிலைகளிலும் பூர்ணத்வமே வாழ்க்கை.
உங்களுக்கும், இராமானுஜா, ஆதிசங்கரா, போன்றவர்களுக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம், அது பூர்ணத்வத்தின் நிலைப்பாடுதான்.
பூர்ணத்வமே ஆன்மீகத்தின் வளர்ச்சி! பூர்ணத்வத்தினால், உங்கள் முழு வாழ்க்கையும் மாறிவிடுகிறது.
பூர்ணத்வத்தால், நேரிடையாக வாழத்துவங்குகிறீர்கள் !
உங்களுக்குள் அமைதி, நிம்மதி நிலைகொள்ள வேண்டுமென்றால் பூர்ணத்வம் செய்யுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டுமானால் பூர்ணத்வம் செய்யுங்கள்.
உங்கள் துறையில் நீங்கள் திறன்மிக்கவராக வேண்டுமானால் பூர்ணத்வம் செய்யுங்கள்.
அமகான உறவுகள் வேண்டுமானால் பூர்ணத்வம் செய்யுங்கள்.
நீங்கள் பூர்ணத்வம் செய்யும்போது, உங்கள் வேலையில், உறவுகளில் என எல்லாவற்றிலும் மேன்மையடைவீர்கள். இந்த வெளிவிளைவை மட்டுமல்ல, உங்களுக்குள் உங்களுடைய உணர்வு திரும்பக் கிடைக்கப்பெறுவீர்கள். உங்கள் விழிப்புணர்வு, உங்களுக்குத் திரும்ப வந்துவிடும் .
எவ்வளவுக்கெவ்வளவு திரும்ப வருகின்றதோ ... அந்த அளவிற்கு உங்கள் வாழ்வில் பல அதிசயங்கள் நடப்பதைக் காண்பீர்கள். உங்கள் உணர்வைத் திரும்பப் பெறும்பொழுது, நீங்களும் பூர்ணத்தில் இருந்து வெளிப்பட்டவர்தான் என்ற சத்தியத்தை உணர்ந்துகொள்வீர்கள்.
உங்களின் உண்மையான அடையாளம்!
உங்களின் உண்மையான அடையாளம் எது என்பதை நீங்கள் மறந்திருப்பதே உங்களின் எல்லாக் குறைவுணர்வுகளுக்கும் காரணம்.
உதாரணத்திற்கு ... உண்மையில் கோடிக்கணக்கில் பணம் போட்டு வைத்திருக்கும் ஒரு செல்வந்தர்தான், ஆனால் தீடீரென ஏதோ சில காரணத்தால், நீங்கள் பிரக்ஞையற்ற நிலையில் விழுந்துவிட்டீர்கள். அதன்பின்பு நீங்கள் விழிக்கும்போது, இயற்கையாகவே, உங்கள் ஸ்விஸ் வங்கி கணக்கு எண், அதற்கான கடவுச்சொல், எவ்வளவு வைப்புத்தொகை ஆகிய எல்லாவற்றையுமே மறந்துவிடுவீர்கள். அதனால் உங்களை ஒரு பிச்சைக்காரராகவே நம்புவீர்கள். ஆனாலும் உலகத்திற்கு உங்களை ஒரு பணக்காரராக காட்டிக் கொள்ளவே விரும்புவீர்கள். அதற்காக நீங்கள் கடுமையாக முயற்சிப்பீர்கள். ஆனால், உங்களுக்குள் உங்களை ஒரு ஏழையாகவே நீங்கள் உணர்வீர்கள்.
ஆனால் நிஜத்தில் நீங்கள் ஒரு பெரும் பணக்காரர்! ஒரு பணக்காரரான நீங்கள், உங்களுக்குள் உங்களை ஒரு ஏழையாகவே நம்புகிறீர்கள். ஏழையாகவே வாழ்கிறீர்கள். உங்கள் கணக்கில் எவ்வளவு வைத்திருக்கிறீர்கள் என்பதைக்கூட அறியாமலே இருக்கிறீர்கள்.
நீங்கள் ஸ்விஸ் வங்கியில் பணம் போட்டுவைத்துவிட்டு, உங்கள் கணக்கு எண்ணை மறந்துவிட்டதைப் போலத்தான், பூர்ணத்வம்தான் உங்கள் உண்மைநிலை என்பதை மறந்து, உங்களுக்குள் உங்களை ஒரு குறைவுணர்வுள்ளவராகவே நம்புகிறீர்கள். ஆனால் வெளி-உலகிற்கு உங்களை விரும்புகிறீர்கள். அப்படியே காட்டிக்கொள்ளவும் செய்கிறீர்கள்.
பூர்ணத்வம், எல்லாத் தடைகளையும், குறைவுணர்வுகளையும் உருக்கிக் கரைத்துவிடும். உங்களுடைய உணர்வு மலர்வதற்குத் தடையாக இருக்கும் தடைகளெல்லாம் பெரிய மலைகளாக, பெரிய மலைத்தொடர்களாக இருக்கின்றன. எனினும், பூர்ணத்வத்தால்-மலையளவுள்ள குறைவுணர்களைக்கூட கரைத்துவிட முடியும். ஆகவே, நிறைவுசெய்யுங்கள்! ஞானம் அடைவதையே நினைவில் வைத்து, சரியான புரிதலைக்கொண்டு எல்லாவற்றுடனும் நிறைவுசெய்து கொள்ளுங்கள்.
பூர்ணத்வமே கடவுள். பூர்ணத்வமே வாழ்க்கை. பூர்ணத்வம், உங்களைப் பிரபஞ்சத்திற்கே அழைத்துச் செல்கிறது. உண்மையிலேயே, பூர்ணத்வம் உங்களுக்கு எல்லாவற்றையும் அளிக்கிறது. எல்லாக் கா்மங்களிலிருந்தும், எல்லா தோஷங்களில் இருந்தும் - அது நாகதோஷ்மோ, சனிதோஷ்மோ, ஜாதக தோஷமோ, வாஸ்து தோஷமோ - அவற்றிலிருந்து பூர்ணத்வம் உங்களை விடுவிக்கிறது. ஆகவே பூர்ணத்வக் கிரியாவை செய்ய ஆரம்பியுங்கள். அனைத்து மதங்களின் சாரமும் பூர்ணத்வமே ! ! !
அத்தியாயம் – 13
பிரபஞ்சம் என்னும் சமுத்திரத்தில் வாழும் அலை நீங்கள். எப்போது அந்த அலை, 'அலையும் சமுத்திரமும் வெவ்வேறல்ல' என்பதைப் புரிந்துகொள்கின்றதோ, அப்போதே அதனுடைய எதிர்ப்பைக் கீடுழு போட்டுவிட்டு சமுத்திரத்தோடு சங்கமித்துவிடும்.
வினாக்களின் வாசலில்...
ஸ்வாமிஜி,
நீங்கள் ஒரு ஸத்சங்கத்தில், 'ஒருவருக்குள் ஜ்ஞானத்தின் பொறி உதிக்கவில்லையென்றால், அவர் ஜ்ஞானம் அடைந்தவர்களிடம் ஈர்க்கப்படமாட்டார்' என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் வேறொரு ஸத்சங்கத்தில் 'நாமெல்லோருமே ஜ்ஞானமடைந்தவர்கள்தான். ஆனால் நாம்தான் அதையறியாமல் இருக்கிறோம்' என்று சொல்லியிருக்கிறீர்கள். நாங்கள் ஜ்ஞானமடைந்தவர்கள் என்றால், உங்களைப்போன்ற ஜ்ஞானவான்களிடம் எங்களுக்கு ஏன் ஈர்ப்பு ஏற்படுவதில்லை ?
ஸ்வாமிஜி,
ஒருவர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென்றால், அவர் நிகழ்காலத்தில் இருக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி நீங்கள் பேசியிருக்கின்றீர்கள். அதற்கு என்ன அர்த்தம் ? நான் எப்படி அறிந்துகொள்வது? நான் நிகழ்காலத்தில் இருந்தால், அதை மற்றவர்கள் அறிவார்களா?
ஸ்வாமிஜி, மதத்திற்கும், ஆன்மிகத்திற்கும் இடையே இருக்கிற வித்தியாசம்தான் மனசாட்சிக்கும், விழிப்புணர்வுக்கும் உள்ளதா?
ஸ்வாமிஜி,
கிருஷ்ணர் தொகுத்திருக்கும் நற்பண்புகளை ஒருவர் அடைய வேண்டுமானால், அவர் ஜ்ஞானம் அடைந்திருக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னீர்கள். அப்படியன்றால், நாங்கள் ஜ்ஞானமடைவதற்கான வாய்ப்புக்கள் எங்கே இருக்கின்றன ? ஒரு குருவே எங்களுக்கு வழிகாட்டினால்கூட, நாங்கள் எப்படி முன்னேறுவது?
ஸ்வாமிஜி,
புருஷ், ப்ரக்குதி பற்றி இதற்கு முன் படித்தபொழுது, அந்தக் கருத்துகளைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவை எனக்குள் குழப்பத்தையே ஏற்படுத்தின.
ஆனால் நீங்கள், புருஷ என்பது சமுத்திரத்தின் நீர் என்றும், ப்ரக்ருதி என்பது அதில் எழும் அலைகள் என்றும் சொன்னீர்கள். இது புரிந்துகொள்வதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது. ஏன் மற்ற விளக்கங்கள் எல்லாம் சிக்கலாக இருக்கின்றன?
ஸ்வாமிஜி,
நாம், பட்டறிவின் மூலம் ஏற்படும் புரிதலைப் பற்றித்தான் இங்குப் பேசுகிறோமா? நான் சேர்த்து வைத்திருக்கும் எல்லாவகை உலகியல் உடைமைகளும் நிலையானவையல்ல என்பதை நான் புரிந்துகொண்டேன். நான் சாகும்பொழுதும், எந்த வகையிலும் இவையெதையும் நான் என்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. ஆனாலும் இந்த உடல் இருக்கும்வரை, உலகியல் விஷயங்களுக்காகவும், உடலைப் பராமரிக்கவும் நான் உழைக்க வேண்டியதிருக்கிறது. இந்த உழைப்பு என்பது உண்மைதான், அது மாயையில்லை! இதற்கு என்ன பதில் ?
ஸ்வாமிஜி,
நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால், அறிவை வளர்த்துகொள்வதற்கான முயற்சிகள் எல்லாம் ஆன்மிக வளர்ச்சிக்கு உதவாது என்பதுபோல் தெரிகிறது. ஆனால் இதுவரை என் வாழ்நாள் முழுவதும் எனக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட பாடம் என்னவென்றால், நான் வேதப் புத்தகங்களையோ அல்லது மற்ற ஏதேனும் ஒன்றைப் படிக்கவோ அல்லது ஒரு குருவையோ அல்லது யாரோ ஒரு பெரியவரையோ பின்பற்ற வேண்டுமென்பதுதான். உண்மையில் உங்கள் புத்தகங்களைப் படித்துப் பார்த்த பின்புதான் உங்கள் சொற்பொழிவுகளுக்கு வர ஆரம்பித்திருக்கிறேன். இது எப்படித் தவறாகும் அல்லது உபயோகமற்றதாகும் ?
ஸ்வாமிஜி,
வேத காலக் கல்வித்திட்டத்தைப் பற்றியும் குருகுலம் பற்றியும் பேசினீர்கள். சிறு குழந்தைகள் ஆடை அணியாமல் இருக்கலாம் எனும் இந்தத் திட்டம், எந்த அளவுக்கு நடைமுறைக்கு சாத்தியமாகும்?
ஸ்வாமிஜி, உங்கள் ஆசிரமத்தில் உங்கள் சீடர்களும் மற்றவர்களும் வெண்மைநிற ஆடைகளையே அணிந்திருக்கிறார்களே, அது ஏன் ? அவர்கள் காவி உடைகள் அணிவதற்குத் தேவையான தகுதிகள் என்ன ?
களமம் களமறிந்தவரும்
க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம் என்னும் இந்த அத்தியாயத்தில், கிருஷ்ணர் அர்ஜுனனிடம், க்ஷேத்ரம்-களம் மற்றும் க்ஷேத்ரஜ்ஞன்- அந்தக் களத்தை அறிந்தவர்- இந்த இரண்டைப் பற்றியும் பேசுகிறார்.
க்ஷேத்ரம் என்றால், உடல்; க்ஷேத்ரஜ்ஞ என்றால், தனக்கு ஒரு உடல் இருக்கிறது என்பதை அறிந்த விழிப்புணர்வு; விபாக என்றால், க்ஷேத்ரத்தையும் க்ஷேத்ரஜ்ஞனையும் வேறுபடுத்திப் பார்க்கும் ஜ்ஞானம்.
கிருஷ்ணர், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஸ்தூல உடலைப் பற்றியும், அதனுள் இருக்கும் விழிப்புணர்வைப் பற்றியும் மிகத் தெளிவாகப் பேசுகிறார்.
நமக்குப் புரிந்தாலும் புரியாவிட்டாலும், நாம் உணர்ந்தாலும் உணராவிட்டாலும், நாம் எல்லோருமே ஏதேனும் ஒருவழியில், இந்த மொத்தப் பிரபஞ்சத்துடன் தொடர்புடையவர்களே. விழிப்புணர்வே அனைத்திற்கும் மூலகாரணம்; இது தொடக்கம் மட்டுமல்ல; இதுவே
Part 2: Bhagavad Gita Explained _ Chapter 13_Tamil_part_2.md
மூலகாரணமும்கூட. இந்த மூலத்திலிருந்தே நாம் வந்திருக்கிறோம்; இதில்தான் இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த மொத்தப் பிரபஞ்சம்தான், இந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வுதான், நாம் எல்லோரும் நிகழ்கிற, இருக்கிற இடமாக இருக்கிறது.
கிருஷ்ணர் அலைகளையும் சமுத்திரத்தையும் இங்கு உதாரணமாகப் பயன்படுத்துகிறார். நாம் அதை எப்படி அழைத்தாலும் - இந்து மதத்தினர் அதை, பிரபஞ்ச பேரறிவு அல்லது கடவுள் அல்லது ஆத்மா என்றும், புத்தமதத்தினர் நிர்வாணா என்றும், வேதாந்திகள் ப்ரஹ்மம் என்றும், முகமதியர் அல்லா என்றும் வேறு வேறு பெயர்களில் அழைத்தாலும் -அவை அந்தப் பிரபஞ்ச சக்தியை அல்லது பிரபஞ்ச பேரறிவைத்தான்
குறிக்கிறது.
இந்தப் பிரபஞ்ச பேரறிவை சமூத்திரத்திற்கு ஒப்பிடுகிறார் கிருஷ்ணர். இந்த முழுழுப் பிரபஞ்சமும் சமூத்திரம் போலவும், நாம் அனைவருமே அதில் அலைகளைப் போலவும் இருக்கிறோம் என்ற இரகசியத்தை வெளிப்படுத்துகிறார். நாம் இந்தச் சமூத்திரத்தின் அனுபவத்தைப் பெறுவது எப்படி என்பதை அவர் விளக்குகிறார்.
வாழ்க்கையில் நம் ஒரேயொரு பிரச்சினை என்னவென்றால்,
நாம் இந்தச் சமுத்திரத்தின் ஒரு பாகம் என்பதை எப்படியோ மறந்து விட்டோம் என்பதுதான்.
நாம் சமுத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்துவிட்டோம். நாம் க்ஷேத்ரஜ்ஞனைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்துவிட்டோம். க்ஷேத்ரஜ்ஞ என்ற வார்த்தைக்கு விழிப்புணர்வு என்று பொருள். இதுவே, களம் செயல்படுவதற்குக் காரணமாக இருக்கிறது.
இந்த அத்தியாயத்தில், கிருஷ்ணர், க்ஷேத்ரம் மற்றும் க்ஷேத்ரஜ்ஞன் பற்றிய இரகசியங்களை வெளிப்படுத்துகிறார். க்ஷேத்ரஜ்ஞனின் இரகசியங்களை நாம் அறியாதிருந்தால், க்ஷேத்ரம், தானே முதலாளி என்பதுபோல் செயல்பட ஆரம்பித்துவிடும்.
உடலும் மனமும் நல்ல வேலையாட்களே!
ஒரு சிறு உதாரணம் :-
நீங்கள் ஒரு புது காரை வாங்குகின்றீர்கள். நீங்கள் அந்தக் காரில் அமர்ந்து அதை ஓட்ட ஆரம்பிக்கின்றீர்கள். திடீரென பத்து நிமிடங்களுக்குப் பிறகு, அதை எப்படி நிறுத்துவது என்பது உங்களுக்குத் தெரியாது என்பதை உணர்கிறீர்கள். அந்தக் காரை எப்படி நிறுத்துவது என்பது உங்களுக்குத் தெரியாதென்றால், நீங்கள் அந்தக் காரை ஒட்டவில்லை, அந்தக் கார்கான் உங்களை ஒட்டிக் கொண்டிருக்கிறது!
அதைப்போலவே, நாமும் இந்த மனத்திற்குள் நுழைந்து, உடலிற்குள் நுழைந்து வாழ ஆரம்பித்துவிடுகிறோம். ஒரு கட்டத்தில், இந்த உடலையும் மனத்தையும் நிறுத்த முடியவில்லை என்று அறிகிறோம். அதனால் அவை எப்படி விரும்புகின்றனவோ, அவை ஓட்டிச் செல்கின்றன. அவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடிவதில்லை.
காலை காபி குடிக்கும் பழக்கம் நமக்கு இருந்தால், கடிகாரத்தைப் பார்க்கத்தான் 7 மணி என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. ஏழு மணியானால் போதும், நம் மனத்தினுள் 'காபி' என்று, அலாரம் அடித்துவிடும்.
உடலையும் மனத்தையும் இயக்கத் தெரிந்துகொள்ளுங்கள்!
புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாய் இருப்பவராயிருந்தால், அவருக்குள் புகைப்பதற்கான பேராவல் தோன்றினாலோ அல்லது ஏதோ ஒரு சூழல் அந்தப் பேராவலைத் தூண்டினாலோ, உடனே 'புகைக்க வேண்டும்' என்ற எண்ணம் உங்கள் மனத்தை ஆட்டிப்படைக்க ஆரம்பித்துவிடும்.
நம்முடைய வாழ்நாள் முழுவதுமே, நம்முடைய மொத்த உடல்-மன அமைப்பும் நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. நாம் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அவை நம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இது எப்படி இருக்கிறது என்றால், நாம் காரை ஓட்டுவதற்குப் பதிலாக, அது நம்மை ஓட்டுவதுபோல் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், நமது உடலுக்கும், மனதுக்கும் நாம் முதலாளிகள் அல்ல. நம் உடலும் மனமும்தான் நம்மை ஆளுகின்றன.
உடலையும் பேரறிவான விழிப்புணர்வின் கீழ்கொண்டு வாருங்கள்.
உடலும் மனமும் நல்ல வேலையாட்கள்தான், ஆனால் வேலையாட்களாக இருக்கும்வரை, அவர்கள்
சிறந்தவர்களே. நிச்சயமாக உடலும் மனமும் இல்லாமல், நீங்கள் வாழ்க்கையை வாழ முடியாதுதான்; வாழ்க்கையை சந்தோஷமாகக் கொண்டாட முடியாதுதான். அவை உங்களுக்கு அவசியமே. ஆனால், அவற்றை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராமலிருந்தால், அவை உங்களுடைய முதலாளிகளாகிவிடும்.
இரு வாய்ப்புக்கள் மட்டுமே சாத்தியம்: ஒன்று நீங்கள் அவற்றை அனுபவிப்பீர்கள்; இல்லையென்றால், அவை உங்களை அனுபவிக்கும்.
ஆரம்பத்தில் வேண்டுமானால், நீங்கள் விரும்பிப் புகைபிடிக்க ஆரம்பித்து இருக்கலாம்; சிறிது காலத்திற்குப் பிறகு, உங்களுக்குப் புகைப்பிடிப்பதில் விருப்பம் இல்லாமல் போகலாம். ஆனால் புகை உங்களை விரும்ப ஆரம்பித்திருக்கும். நீங்கள் அதைப் பிடிக்க வேண்டாம், அது உங்களைப் பிடித்துக் கொண்டிருக்கும்.
அதைப் போலவே, ஆரம்பத்தில், நீங்கள் குடிப்பழக்கத்தைத் தொடங்கி இருக்கலாம். பிறகு குடியை உங்களைக் குடித்துக் கொண்டிருக்கும்.
ஆரம்பத்தில் நீங்கள்தான் ஒரு பழக்கத்தை விளையாட்டாகச் செய்யத் தொடங்குகிறீர்கள், ஆனால், சிறிது காலத்திற்கு பிறகு, அதுவே உங்கள் மொத்த வாழ்க்கையையும் கட்டுப்படுத்தி, ஆள ஆரம்பித்துவிடுகிறது.
உங்கள் வாழ்க்கையை, அந்தப் பழக்கமே அனுபவித்துக்
கொண்டிருக்கும். பிறகு உங்களுக்கு வேறு வழியே இல்லை; வேறு வாய்ப்பே இல்லாதவராக ஆகிவிடுகிறீர்கள். உங்கள் கட்டுப்பாடின்றி மீண்டும் மீண்டும் தொடரும் ஒருசில பழக்கங்களின் ஒரு தொகுப்பாக ஆகிவிடுவீர்கள்.
'கையேட்டையே' படிக்காமல் காரை ஓட்ட ஆரம்பித்தால், காரை நிறுத்த எந்த உபகரணத்தை இயக்க வேண்டும், இடது பக்கம் திரும்ப வேண்டுமானால், காரின் ஸ்டியரிங்கை எந்தப் பக்கம் சுழற்ற வேண்டும்; வலது பக்கம் திரும்ப வேண்டுமானால், அதை எந்தப் பக்கம் சுழற்ற வெண்டும் என்றுகூட உங்களுக்குத் தெரியாது என்பதை அப்பொழுதுதான் உணர்வீர்கள்.
உடலையும் மனத்தையும் எப்படி ஆள்வது என்று தெரியாமல் அவற்றுள் நுழையும்பொழுது, இதே சூழ்நிலையில்தான் இருப்பீர்கள். நீங்கள், உங்கள் மனத்தின் உடலின் கட்டுப்பாட்டுக்குள் போவதற்கு முன்பு, அவற்றை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவாருங்கள்.
உடலும் மனதும் நம் கட்டுப்பாட்டிற்குள் இல்லையென்றால், அது பொருள் சார்ந்த வாழ்க்கையோ அல்லது ஆன்மிக வாழ்க்கையோ, எந்த வாழ்க்கையாயினும், நாம் செய்ய நினைப்பவற்றையும், நாம் செய்ய விரும்புபவற்றையும் நிறைவேற்ற இயலாது.
நாம் காலையில் எழுந்தவுடன், பலவற்றையும் ஆராய்ந்து, 'இன்று நான் அதைச் செய்ய வேண்டும்', 'இன்று நான் இதைச் செய்ய வேண்டும்' என்று, ஒரு பெரிய திட்டம் போடுகிறோம்.
ஆனால் நம் கட்டுப்பாட்டையும் மீறி, நாம் குடிப்பதிலும் தூக்கத்திலும் மற்ற பயனற்ற செயல்களிலும் ஈடுபடுகிறோம். பிறகு நாள் முழுவதுக்குமான பெரிய திட்டம் போட்டதில் என்ன பயன் ? ஒன்றுமேயில்லை !
நாம் என்னென்ன செய்ய வேண்டுமென்பதை, தொடர்ந்து திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டிருப்போம். ஆனால் நம் உடல், அது என்ன செய்ய விரும்புகிறதோ,
உடலும் மனதும் நம் கட்டுப்பாட்டிற்குள் இல்லையென்றால், நம் வாழ்க்கையை நாம் வாழ முடிவதில்லை!
அதன்படிதான் செயல்பட்டுக் கொண்டிருக்கும். மனமும் அதன் விருப்பப்படிதான் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.இறுதியில், அந்த நாளின் முடிவில் நாம் எதையும் பெறுவதில்லை.
நீங்கள் வாழ ஆரம்பிக்கவே இல்லை
இயற்கையாகவே, உங்களுடைய வாழ்க்கை, தர்க்க அறிவுக்கு அப்பாற்பட்ட வழியில்தான் செல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வதற்காக எவ்வளவோ உழைக்கின்றீர்கள்.
ஆனாலும், உங்கள் உடலும் மனமும் அவை விரும்பியபடிதான் செயல்படுகின்றன. விளைவு ... நீங்கள் உங்கள் வாழ்க்கையை வேதனையில் முடிக்கின்றீர்கள்.
'வாழ்க்கை', 'உயிர்ப்பு' என்பதே, உங்கள் உடலும் மனதும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்பொழுதுதான் நிகழும்.
உடலும் மனமும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவரை, நீங்கள் 'உயிர்ப்பு' என்ற வார்த்தையைக்கூட அனுபவமாகப் பெற இயலாது. உடலையும் மனத்தையும் உங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும்வரை, நீங்கள், உங்கள் வாழ்க்கையை வாழ்வது இல்லை. உங்களின் ஆழமான நினைவுப் பதிவுகள்தான், உங்கள் வாழ்க்கையை வாழ்கின்றன.
நாம் மநுஷ்ய ஆகிறோம்.
நாம் உணராதவரை, அறிந்தவரை உண்மையான வாழ்க்கை ஆரம்பமாவதில்லை. வேதம் தனிமனிதனுடைய விழிப்படையும்பொழுதுதான், மனிதர் பிறந்ததாகக் கருதப்படுகிறது.
உடல் பிறப்பை மட்டுமே கருத்திற்கொண்டு, ஒருவருடைய ஒரு மனிதபிறப்பாக ஏற்றுக்கொள்வதுமில்லை ;
அவரை ஒரு மநுஷ்யராகக் கருதுவதுமில்லை. வேதங்களின்படி, ஒருவருவருடைய உள்ளுலக விழிப்புணர்வு மலரும்பொழுதே, அவர் பிறப்பெடுத்ததாகக் கருதப்படுகிறார்; ஒரு மனிதராக அதுவரையிலும் அவர், மிருகங்களில் ஒருவகை, அவ்வளவுதான்.
மநுஷ்ய என்னும் ஸம்ஸ்க்ருத வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் இருக்கின்றன. ஒன்று, 'மநுவின் வழித்தோன்றல்' என்பது, (மநு என்பவர்கான் நம்முடைய முதல் மூதாதையர்) மற்றொன்று, தம் மனத்தைக் கையாளத் தெரிந்தவர் அல்லது கம் மனத்தைக் கடந்தவர் என்பதாகும்.
நக்குள் விழிப்புணர்வை மலரச் செய்யும் நுட்பம்-காயத்ரி மந்தீரம்.
நம்முடைய மனத்தைக் கட்டுப்படுத்த முடியும்பொழுதுதான் நாம் மநுஷ்ய ஆகிறோம். இதை ஸம்ஸ்க்ருத்தில், ப்ரத்யகாத்ம ஜாக்ரத் என்று சொல்வார்கள். தனி மனிதரின் விழிப்புணர்வானது விடித்துக்கொள்ளும்பொழுதுதான், மனிதராகக் கருதப்படுகிறார்.
ஹிந்து பாரம்பரியமுறையில், ஒரு குழந்தைக்கு ஏழு வயதாகும்பொழுது, காயத்ரி என்ற மிகப் புனிதமான மெந்திரம் தீக்ஷையாக அளிக்கப்படுகிறது. இங்கு தீக்ஷ என்பது பிற மதத்தில் சொல்லப்படுவதுபோல், அந்த மதத்தினராக இருக்க முடியும் என்பதில்லை. காயத்ரி தீக்ஷ எடுக்காதவர்களும் இந்து மதத்தில் இந்துக்களாகவே கருதப்படுகிறார்கள்.
நீங்கள் ஒன்றை இங்கு நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஹிந்து பாரம்பரியம் அல்லது ஹிந்துமதம் அல்லது சனாதன தர்மம் என்று சொல்லப்படும் இந்த ஒரே மதத்தில்தான், 'புனிதப்படுத்தும் சடங்கு' என்று ஒரு சடங்கு கிடையாது; ஒரு 'இந்து' ஆவதற்கான தீக்ஷையும் கிடையாது; உங்களுக்கு அது எந்தவிதமான நம்பிக்கையையோ, கருத்தையோ, தத்துவத்தையோ போதிப்பதுமில்லை! நீங்கள் இதை நம்பியே ஆக வேண்டும்' என்று சொல்லி உங்களைக் கட்டாயப்படுத்துவதுமில்லை. உங்கள் உடலையும் மனத்தையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கான ஒரு நுட்பம் மட்டுமே தரப்படுகிறது. அவ்வளவுதான்.
ஒரு குழந்தைக்கு ஆறு அல்லது ஏழு வயதாகும்பொழுது, சொல்லித் தரப்படும் காயத்ரி மந்த்ரம், எந்த ஒரு தெய்வத்தையும் குறித்த ஸ்தோத்திரம் அல்ல, அது வெறும் ஒரு நுட்பம் மட்டுமே.
காயத்ரி மந்த்ரத்தில் என்ன சொல்லப்படுகிறதென்றால். 'எனக்குள் விழிப்புணர்வை மலரச் செய்யும் சக்தியைத் தியானிப்பேனாக; அதற்கு அந்த விழிப்புணர்வே உதவி செய்யட்டும்!' என்பதுதான்.
ஓம் பூர் புவ ஸுவ: தத் ஸவிதுர்வரேண்யம் l பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்ll
இந்த மந்த்ரத்திற்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது. காயத்ரி தேவியைப் பற்றியோ அல்லது ஐந்து முகங்களைக்கொண்ட ஒரு தேவதையைப் பற்றியோ குறிப்பிடுவது அல்ல இது.
இந்த புத்திசாலித்தனத்தை நான் தியானிப்பேனாக, அந்த விழிப்புணா்வே, நான் அதனைத் தியானிப்பதற்கு உதவிபுரியட்டும்!', அவ்வளவேதான்.
நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம், நம்முடைய உடலையும் மனத்தையும் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதுதான் என்று, நம்முடைய வேத கால ரிஷிகள் விரும்பினார்கள். நம்முடைய மனத்துடனும் உடலுடனும் இசைந்து வாழ்வது எப்படி என்பதை நாம் காயத்ரி மந்தரம் ஆழமாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ரிஷிகள் விரும்பினார்கள். காயத்ரி மந்த்ரம் என்பது உடலிற்கும் மனத்திற்குமான 'உரிமையாளர் கையேடு' போன்றது.
காருக்கான உரிமையாளர் கையேட்டை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். அந்தக் கையேட்டைச் சரியாகப் படித்துப் புரிந்துகொள்ளாமல், அந்தக் காரை நாம் ஒட்ட ஆரம்பித்தோமென்றால், அது யாருடைய தவறு ?
கார்களில் வைக்கப்பட்டிருக்கும் காற்றுப் பைகளின் மேலுறைகளில், 'காற்றுப் பைகளினால் சில சமயம் ஆபத்தான காயங்கள் ஏற்படலாம். பனிரெண்டு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் முன் இருக்கையில் அமரக்கூடாது. காற்றுப் பைகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, உரிமையாளர் கையேட்டைப் படியுங்கள்' என்ற சில எச்சரிக்கைகளும், சில முக்கியமான செய்முறைக் குறிப்புகளும் இடம்பெற்றிருப்பதைப் பார்க்கலாம்.
இதேபோல்தான், கிட்டதட்ட ஏழு வயது ஆகும்பொழுதுதான், நாம் நம்முடைய உடலைக் கையாள ஆரம்பிக்கிறோம். ஏழு வயதாகும்வரை, நாம் உள்ளுணர்ச்சி நிலையில் வாழ்கிறோம். ஏழு வயதிற்குப் பிறகு, ஆரம்பிக்கிறது. பிறகு நாமே முடிவுகளை எடுக்க ஆரம்பிக்கிறோம். நாம் முடிவுகள் எடுக்க ஆரம்பிக்கிற தருணத்திலேயே, நம்முடைய உடலையும் மனத்தையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது எப்படி என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
நாமெல்லோருமே ஜ்ரூராநமடைந்தவர்களே. ஆனால் நாம்கான் அதையறியாமல் இருக்கிறோம்!
அதனால்தான் வித கால குருமார்கள், உள்ளுலக புத்திசாலித்தனத்தை விழிப்பிக்கும் நுட்பத்தை ஏழு வயதிலேயே கற்றுக்கொடுத்து, அக்குழந்தைகளை விழிப்புணர்வைப் பெறுவதில் குருவாக்கினார்கள். இது, காரை ஓட்டுவதற்கு முன்பே, உரிமையாளர் கையேட்டைப் படித்துப் பார்த்துத் தெரிந்துகொள்வதற்கு ஒப்பாகும்.
பின்பற்றுவதா? ஏங்குவதா ? -உங்கள் தேர்வுதான்!
கேள்வி: ஸ்வாமிஜி, நீங்கள் ஒரு ஸத்சங்கத்தில், 'ஒருவருக்குள் ஜ்ஞானத்தின் பொறி ஈர்க்கப்படமாட்டார்' என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் வேறொரு ஸத்சங்கத்தில் 'நாமெல்லோருமே ஜ்ஞானமடைந்தவர்கள்தான். ஆனால் நாம்தான் அதையறியாமல் இருக்கிறோம்' என்று சொல்லியிருக்கிறீர்கள். நாங்கள் ஜ்ஞானமடைந்தவர்கள் என்றால், உங்களைப்போன்ற ஜ்ஞானகுருமார்களிடம் எங்களுக்கு ஏன் ஈர்ப்பு ஏற்படுவதில்லை?
பதில்: அருமையான கேள்வி!
ஆம், சக்தியோடுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதருமே தங்களுக்குள் தெய்விகத்தன்மையின் பொறியை சுமந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மனிதருள் பாவிகள் யாருமில்லை. இதில் சந்தேகம் எதுவும் இல்லை.
ஒரு மனிதர் என்ற முறையில், நீங்கள் உங்கள் புலன்களின் வழியாக வேலை செய்வதற்கு உங்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. ஆனால் பெரும்பாலும் நம்மில் பலர், நாம் புலன்களை வழிநடத்துவதை விட்டுவிட்டு, புலன்கள் நம்மை வழிநடத்துவதையே தேர்வுசெய்கிறோம்.
புலன்கள் உருவாக்குகின்றன. மகிழ்ச்சியாக அனுபவித்திருக்கலாம். ஆனால் புலன்களின் கட்டுப்பாட்டில் நீங்கள் இருந்தீர்களென்றால், உங்கள் ஆசைகள் திருப்தியடைவதேயில்லை. எப்படி ஒரு விலங்கு, தம் இருப்பிடமென்று எதை நினைக்கிறதோ, அங்கேயே மீண்டும்
இல்லை!
தன்னிச்சையாகத் திரும்புகிறதோ, அதேபோல இந்தப் புலன்களும், உங்களை ஒரே மாதிரியான செயல்களையே மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டும்.
இப்படி
நிறைவடையாத, திருப்தியடையாத ஸம்ஸ்காரங்கள் உங்களுக்குள் சோ்ந்துகொண்டே வரும் அனுபவங்களையும் நினைவுகளையும்தான் ஸம்ஸ்காரங்கள் என்று அழைக்கிறோம்.
இந்த ஸம்ஸ்காரங்கள் உங்கள் மூளையில் ஆழமான பதிவுகளை ஏற்படுத்தி விழிப்பற்ற நிலையில், உங்களைக் கட்டுப்படுத்துகிறது. உண்மையில் நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்களென்றால், எல்லாமே உங்களுடைய சுய- விருப்பப் படிதான் நடக்கின்றன கொண்டிருக்கிறீர்கள். உண்மை அல்ல! எப்படி ஒரு எருது, வயலில் ஏற்கெனவே உழப்பட்டிருந்த அதே பாதையில் செல்கிறதோ, அதைப் போலத்தான் நீங்களும் செல்கின்றீர்கள். நீங்கள் சிக்கிக்கொள்கின்றீர்கள்; நீங்கள் அதற்கு அடிமையாகிவிடுகின்றீர்கள்.
ஒரு உறவு பற்றல்லாத உறவாக வளரும்பொழுதுதான், அது தெய்விகமான உறவாகிறது. !
எந்தவித விதிவிலக்கும் இன்றி, இதே இயல்பில்தான் உங்களுடைய எல்லாப் புலன் இன்பங்களும் இருக்கின்றன. அந்த இன்பத்தை நீங்கள் காதல் என்றோ அல்லது காமம் என்றோ, எப்படி அமைத்தாலும் அதில் எந்த வித்தியாசமும் இல்லை. அவை உங்கள் சொந்த அகராதியில் மட்டும் உள்ள வார்த்தைகளே!
உங்கள் நியாயப்படுத்துவதற்காக நீங்கள் பயன்படுத்தும் வெற்று வார்த்தைகளே இவை. உங்களுடைய குழந்தைகள், பெற்றோர், கணவன், மனைவி அல்லது மற்றவர்கள் மேல் நீங்கள் காட்டும் அன்பாகவே இருந்தாலும் அது உணர்ச்சிகளிலிருந்து எழுந்ததாகவோ அல்லது புலன் இன்பங்களின் அடிப்படையிலோ இருந்தால், அது பந்தமே.
நாம் அன்பு செலுத்தும் பொருள், ஒருபோதும் பற்றினால் ஏற்படும் பந்தத்தை மாற்றாது. பற்றுடன் அன்பு செலுத்தும் எதுவுமே நம்மைப் பந்தப்படுத்தவே செய்யும்.
கடவுளிடமோ அல்லது குருவிடமோ ஏற்படும் ஈர்ப்புகூட ஒருவகையான பந்தமே. ஒரு உறவு, பற்றில்லாத உறவாக வளரும்பொழுதுதான், அதாவது பிரதிபலனையோ, சுகங்களையோ, இன்பங்களையோ எதிர்பார்க்காத உறவாக மாறும்பொழுதுதான், அது தெய்விக உறவாகிறது. இப்படிப்பட்ட உறவில்தான், ஒருவா் தம்மையே அந்தப்
பொருளில் அடையாளம் கண்டு அதனிடமே சரணடைகிறார். இதுவே துறவு, இதுவே எந்த எதிர்பார்ப்புமில்லாத முழுமையான சரணாகதி
இப்படிப்பட்ட ஒரு சரணாகத் நிலையை அடைவதற்கு பல பிறவிகள் எடுக்க வேண்டியதிருக்கிறது. உங்களில் சிலா், உங்கள் முற்பிறவிகளில் பலமுறை என்னிடம் வந்தவர்களும் இருக்கின்றீர்கள்! இப்பொழுது இந்தப் பிறவியில்கூட என்னுடனேயே தங்கியிருப்பீர்கள் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமுமில்லை! அது உங்களின் தேர்வே.
ஒருவர், குருவுடனே தம்முடைய தேர்வுசெய்யாதபொழுது, அவர் மரணமடையும்பொழுது, அவருடைய உடலையும் மனத்தையும் விட்டுப் பிரியும்பொழுது அந்த ஜீவன், தன் தவற்றை உணர்ந்து வேதனைப்படுகிறது. மரணத்தின்பொழுது, உயிர் உடலிலுள்ள ஏழு சரீரங்களையும் கடந்து செல்லும்பொழுது, அதனுடைய மொத்த வாழ்க்கை அனுபவங்களும் அதன் முன் காட்சியாகத் திரும்பக் காண்பிக்கப்படுகிறது.
அந்த ஜீவாத்மா, பொருள்சார்ந்த அவ்வெல்லா உலக இன்பங்களையும் எந்த மகிழ்ச்சியும் கொள்ளாமல் வெறுமனே பார்க்கிறது. ஆனால் வாழும்பொழுது, அதே காட்சியனுபவங்கள்தான் அந்த ஜீவாத்மாவுக்கு புலன்களுக்கு அளவிலா வாழும்பொழுது, அதே காட்சிகள் பிரகாசமான நிறங்களில் நான்கு பரிமாணங்களிலும் காட்சியளித்தன. ஆனால் உயிர் பிரியும் நேரத்தில், அதே காட்சிகள் எந்த நிறமுமில்லாமல், ஒரே பரிமாணத்தில் இருக்கின்றன. அவற்றின் மீது எந்தவொரு ஈர்ப்பும் ஏற்படுவதில்லை.
அடுத்த பிறவியை நம் விருப்பப்படி தேர்ந்தெடுக்க முடியும்! ஆனால், நாம் நம் வாழ்வில் ஓரிரு ஆன்மிக பெற்றிருந்தால், அதாவது ஒரு ஜ்ஞான ஸத்குருவின் அருகாமையில் சிறிது காலம் இருந்திருந்தாலோ போன்ற ஆன்மிகப் புத்தகங்களை ஆழ்ந்த விழிப்புணர்வோடு படித்திருந்தாலோ, அந்த மாதிரியான காட்சிகள் மட்டும் பிரகாசமாக, நான்கு பரிமாணங்களுடன், பலவித வண்ணங்களில் அந்த ஜீவாத்மாவிற்குத் தெரியும். பிறகு அந்த ஜீவாத்மா அதே
மாதிரியான அனுபவங்களை மீண்டும் பெறுவதற்காக ஏங்கும்.
அந்த ஆத்மா, காரண சரீரத்தைக் கடக்கும்பொழுது, அப்பிறவியில் நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் மறந்து ஆழ்ந்த நினைவற்ற (coma) நிலைக்குள் சென்றுவிடும். கடந்தகால நினைவுகள், அனுபவங்கள், ஆசைகள் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமலேயே, விழிப்பற்ற நிலையிலேயே, அடுத்த பிறவி எடுக்கப்படுகிறது, இந்த சுழற்சி மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. ஏதோ ஒரு கட்டத்தில், 'ஒவ்வொரு முறையும் நாம் ஆன்மிக அனுபவத்தைத் தவறவிட்டுக் கொண்டேயிருக்கிறோமே' என்ற ஆன்மாவின் ஆழமான ஏக்கமானது, 'எப்பாடுபட்டாவது அதை அடைந்தே தீருவது' என்ற தீர்மானமாக மாறுகிறது !
இறுதி ஆன்மிக அனுபவத்தைப் பெற்றே தீருவது என்று முடிவெடுத்த அந்த ஆத்மா, ஒரு ஜ்ஞான குருவின்வழிகாட்டுதலால் மட்டுமே, தன்னுடைய நிறைவேறாத ஆசைகளிலிருந்து விடுபட முடியுமென்பதால், ஒரு ஜ்ஞான குருவிடம் சென்றடைவதற்கான தீவிர தேடுதலோடும் ஆசையோடும் புதிய உடலில் பிரப்பெடுக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு மனிதா், எந்த ஒரு மருத்துவமுறையாலும் குணப்படுத்த முடியாத நோயுள்ள ஒரு உடலைத் தேர்ந்தெடுத்து விடலாம். அதனால்தான், குருவிடம் வந்து குணமடைபவர்கள், அவருடைய சீடர்களாகவே மாறிவிடுகிறார்கள். இப்படித்தான் அவர்களுடைய ஆத்மா, அவர்களை குருவிடம்கொண்டுவந்து சேர்க்கிறது.
நீங்கள் என்னோடு இருப்பதையோ, புத்தகங்களைப் படிப்பதையோ, நான் பேசிய ஒலிநாடாக்களைக் கேட்பதையோ, வீடியோக்களைப் பார்ப்பதையோயெல்லாம் ஒரு விபத்து என்று நினைக்காதீர்கள். இந்தப் பிரபஞ்சத்தில் விபத்து என்பதே இல்லை. ஒவ்வொன்றும் காரண காரியங்களோடுதான் நிகழ்கிறது.
ஆனாலும்கூட, இதை நீங்கள் இந்தப் பிறவியிலேயே பின்பற்றுவதும் அல்லது அனுபவங்களைப் பெறுவதற்காக உங்கள் ஆத்மாவை பல பிறவிகளுக்கு ஏங்கவிடுவதும் உங்கள் தேர்வுதான்.
நீங்கள் என்று நினைப்பது நீங்கள் அல்ல
அர்ஜுனன் சொன்னது
- 13.0 ஓ கேசவா, ப்ரக்ருதி மற்றும் புருஷ் எனப்படும் செயல்படும் மற்றும் செயலற்ற சக்திகளையும், களம் மற்றும் களத்தை அறிந்தவரையும், அறிவு மற்றும் அறிவின் முடிவையும் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் விரும்புகிறேன். (சில பதிப்புகளில் இச்சுலோகம் இடம்பெறுவதில்லை)
- 13.1 பகவான் கிருஷ்ணர் சொல்கிறார் : ஓ, குந்தி மகனே, இந்த உடலைத்தான் 'களம்' என்று சொல்கிறோம். யாரொருவர் இந்த உடலைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறாரோ அவரைத்தான் 'களமறிந்தவர்' என்று சொல்கிறோம்.
- 13.2 ஓ பரத குலத்தில் உதித்தவனே, சிருஷ்டிகர்த்தாவாகிய நானே களமறிந்தவனாக எல்லா உடல்களிலும் இருக்கிறேன் என்பதைப் புரிந்துகொள். எனப்படுவது, படைத்தலுக்குரிய களமான இந்த உடலையும், இந்த உடலை அறிந்த படைப்பாளியையும் புரிந்துகொள்வதே.
நீங்கள், உங்கள் உடல் அல்ல!
கிருஷ்ணர் விளக்குகிறார்: ஓ கௌந்தேயா, இந்த உடலைத்தான் க்ஷத்ரம் -களம் என்று அழைக்கிறோம். இந்த உடலைப் பற்றி அறிந்தவனைத்தான் க்ஷேத்ரக்ஞன் - களம் அறிந்தவன் என்றழைக்கிறோம்.
நீ அறிவது எல்லாம் நீ அல்ல! நீ எதைப் பற்றியாவது அறிந்துகொள்ள முடிந்தால், அது நீ அல்ல. உதாரணத்திற்கு, நீ இந்தப் புத்தகத்தைப் படிக்க முடியும்; ஏனென்றால் அது உன்னிலிருந்து வேறானது, தனியானது.
இதுபோலவே உன்னுடைய உடலைப் பற்றி உன்னால் அறிந்துகொள்ள முடிந்தால், அது நீயல்ல என்பதைப் புரிந்துகொள்!
உன்னுடைய மனத்தைப் பற்றி நீ அறிந்துகொண்டதாக உணர்ந்தால், புரிந்துகொள், அதுவும் நீயல்ல !
உன் எண்ணங்களைப் பற்றி நீ அறிந்துகொண்டதாக உணர்ந்தால், அவையும் நீ அல்ல.
எதையெல்லாம் உன்னால் அறிய முடிகிறதோ, அவை அத்தனையும் நீ அல்ல. நீ அவற்றிலிருந்து வேறானவன் அல்லது அவற்றைவிட உயர்ந்தவன். அதனால்தான் உன்னால் இவற்றை அறியமுடிகிறது. அது உடலென்றாலும், எண்ணமாக இருந்தாலும், உணர்ச்சிகளாக இருந்தாலும், நீ எதையறிந்தாலும் அது நீ அல்ல.
களம், களமறிந்தவன் - இரண்டையும் பிரித்தறிந்துவிட்டால், இந்த உடல் சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் இருக்கும்; ஜீவன், விடுதலை அடையும் !!
இப்பொழுது நாம் களம், களம், களமறிந்தவன் இந்த இரண்டையும் பிரித்தறிய வேண்டிய தேவையிருக்கிறது. நாம் இந்த இரண்டையும் பிரித்தறிந்துவிட்டால், இந்த உடல், சந்தோஷமாகவும் ஆனந்தமாகவும் இருக்கும் ; ஜீவன், விடுதலை அடையும் ! இந்த இரண்டும் சேர்ந்துகொள்ளும்பொழுதுதான், பிரச்சினையே ஆரம்பமாகிறது!
நான் எங்கோ படித்த ஒரு வாக்கியம் இது: ஒருவர் தம் நண்பரிடம் சொல்கிறார், ''நான் பூமி, என் மனைவி தண்ணீர். நாங்கள் இருவரும் இணைந்தால் சேறு செய்வோம்!''
நிலமும் நீரும், அவையவை இருக்கின்ற நிலையில் இரண்டும் ஒன்றாக சேரும்பொழுதுதான் 'சேறு' ஆகிவிடுகிறது.
அதைப்போலவே, உள்ளபடியே அழகானது; இந்த இரண்டும் சேரும்பொழுதுதான் பிரச்சினை ஆரம்பமாகிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், களமறிந்தவனையும் புரிந்துகொள்வதுதான்.
நீ அறிவது எல்லாம் நீ அல்ல! - கிருஷ்ணர்.
அதாவது நாம் எதுவாக இருக்கிறோம், எதுவாக இல்லையென்பதை முதலில் புரிந்துகொள்வதுதான். நம் வாழ்வில் என்ன பிரச்சினை என்றால், நம்மை நாம் எதனுடனாவது இணைத்துப் பார்க்கும்பொழுது, நம்மை அதுவாகவே பாவித்து நம்பிவிடுகிறோம்.
நாம்தான் புரிந்துகொள்வதற்குப் பதிலாக, அந்த 'மனது'தான் நாம் என்று நம்பிவிடுகிறோம். பின்பு அந்த மனதே, 'நான்' ஆக மாறிவிடுகிறது. 'இந்த மேஜை என்னுடையது' என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும்வரையில், எந்தப் பிரச்சினையும் இல்லை. 'இந்த மேஜையே நான்' என்று நினைக்க ஆரம்பிக்கும்பொழுதுதான், பிரச்சினை ஆரம்பமாகிறது !
அதுபோல இந்த உடலும் மனமும் 'என்னுடையது' என்று நினைக்கும்வரை இணைக்குக்கொள்ளும்பொழுதுதான் பிரச்சினை தோன்றுகிறது. 'நாம் அறிவதெல்லாம் நாம் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்' என்கிறார் கிருஷ்ணர்.
சிறிது சிறிதாக களம், களம் அறிந்தவன் என்ற இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அவர் நமக்கு விளக்க ஆரம்பிக்கிறார்.
இன்னொரு நம்மில் இருந்து வேறுபட்டது என்று நாம் புரிந்துகொள்ளும்பொழுது, அதைத் துறந்தே ஆக வேண்டுமென்று நாம் உணர்வதில்லை. அந்தக் குறிப்பிட்ட பொருள்தான், 'நாம்' என்ற எண்ணத்தை மட்டும் நாம் துறக்க வேண்டும். அவ்வளவுதான். உண்மையில், அதைத் துறக்க அவசியம்கூட இல்லை. நம் உடலும் மனமும் அறிந்துகொண்டாலே போதும், நாம் துறப்பதற்கு புரிந்துகொள்வோம்.
கம் உடலையும் மனத்தையும் கையாளத் தெரிகின்ற ஒரு மனிதர்தான் எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறார்!
அவை நம்மை வேதனைக்குள்ளாக்குவதாகவோ அல்லது அவற்றை நாம் வேதனைக்குள்ளாக்குவதாகவோ, நாம் நினைக்கமாட்டோம்.
உடலாலும் மனத்தாலும் வேதனைப்படுவோர்தான், இந்த உலகச் சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறார்கள். இன்னொரு வகையினர், தமஸ் என்ற பெயரில் தொடர்ந்து உடலையும் மனத்தையும் வருத்திக்கொள்கின்றனர்.
சுமார் ஐந்து வருடங்களுக்கும் மேலாக ஆணிப் பலகைகளின் மேல் நின்றுகொண்டும் உட்கார்ந்துகொண்டும் மோன பயிற்சிகளில் ஈடுபடும் சிலரை நானே நேரில் பார்த்திருக்கிறேன்!
ஒற்றைக் காலில் நிற்பது, தரையில் உருள்வது, நெருப்பில் நடப்பது போன்ற உடலை வருத்திக்கொள்ளும் செயல்களைச் செய்யும் மக்களும் இருக்கிறார்கள். இப்படியெல்லாம் உடலை வருத்திக்கொள்ளத் தேவையேயில்லை. உண்மையில், நம் உடல் நம்மைச் சித்ரவதை செய்கிறது என்று நினைத்துக்கொள்வதால்தான், அதனை நாம் சித்ரவதைக்குள்ளாக்குகிறோம், நாம் அதைப் பழிவாங்குகிறோம்.
ஒருபக்கம், உடல்-மனத்தின் பிடியில் சிக்கி, புலனின்பங்களில் மாட்டிக்கொண்டு, தங்களைத் தாங்களே சித்ரவதைக்குள்ளாக்கிக் கொள்கிறார்கள். இல்லையென்றால், சென்றுவிடுகிறார்கள். இந்த இருவருக்குமே, தங்கள் உடலையும் மனத்தையும் சரியாகக் கையாளத் தெரியவில்லை.
தம் உடலையும் மனத்தையும் கையாளத் தெரிகின்ற ஒரு மனிதர்தான் எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறார். அவர் அவருக்குள் மிகத் திருப்தியாகவும் சௌகரியமாகவும் இருக்கிறார். அவா் தன்னுடைய உடலுடனும் மனத்துடனும் மிக நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார். அவர் எல்லா இன்பங்களையும் சுகங்களையும் ஆழமாக அனுபவிக்கிறார். மேலும் அவர் தம் உடலைத் தவறான வழிகளில் உபயோகித்துச் சீரழித்துக்கொள்வதில்லை !
அனுபவிப்பது என்பது வேறு, சீரழிப்பது என்பது வேறு. மனமும் உடலும் ஒன்றுடன் ஒன்று இசைந்திருப்பதேயே 'அனுபவிப்பது' என்கிறேன். நாம் நம்மோடு வெகு சுகமாக, தளர்வாக, வெகு சௌகரியமாக நமக்குச் சொந்தமான இருப்பிடத்தில் இருப்பதுபோல் ஆனந்தமாக உணர்வோம்.
மனத்தின் ஆசைக்கு உடலை வருத்தாதீர்கள்
பல சமயங்களில் நாம் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதாக நினைக்கிறோம். ஆனால் உடலும் மனமும் இசைவாக இருப்பதில்லை.
உதாரணத்திற்கு, நாம் நடுஇரவைத்தாண்டி அதிகாலை இரண்டு மணிவரை டி.வி.யில் ஒரு திரைப்படத்தையோ அல்லது கால்பந்தாட்டத்தையோ பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நம் கண்கள் எரியும்;
உடம்பு, 'கொடுங்கள்' என்று கெஞ்சும்; விளம்பர இடைவேளையின்பொழுது நம் கண்கள் தன்னிச்சையாகவே உடனே தூங்கிவிட விரும்பும். இருந்தாலும் நம் மனம், 'இல்லை, நான் இதைத் தொடர்ந்து பார்ப்பேன்' என்றுதான் சொல்லும்.
இவற்றையெல்லாம் இன்பங்கள், ஆனந்தம் என்று நினைக்காதீர்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால், நாம் நம் உடலைச் சரியான வழியில் பயன்படுத்தாமல், அதைக் கேவலப்படுத்துகிறோம் என்பதுதான்.
தம் உடலையும் மனத்தையும் அறிந்த ஒருவர், அவற்றைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடிந்த ஒருவர், தம் உடலை ஒருபோதும் கேவலப்படுத்துவதேயில்லை.
நாம் ஏன் டி.வி.யை அதிகாலை இரண்டு மணிவரை அமர்ந்து பார்க்கிறோம்? நம் மனது, நமது கட்டுப்பாட்டில் இல்லை. நம் மனது நம்மை ஏதோ ஒன்றைச் செய்யத் தூண்டுகிறது. நம் மனத்தைத் திருப்திசெய்வதற்காக, நாமும் நம் உடலை வருத்துகிறோம். மனத்திற்காக அதன் உச்சபட்ச சந்தோஷத்திற்காக உடலை வருத்துகிறோம்.
உண்மையான இன்பங்களைச் சரியான அளவில் அனுபவிப்பதில் தவறில்லை, ஆனால், மனத்தைத் திருப்திப்படுத்தும் நோக்கில், உடலுக்கு எதிராக இன்பங்களின் பின்னாலேயே தவறாகும். இது, ஒருவகைப்பட்ட மன அமைப்பு.
இன்னொரு வகையான மன அமைப்பினர் இருக்கிறார்கள். இவர்கள் பரிகாரம் அல்லது தவம் என்ற பெயரில் உடலை வருத்திக்கொள்வார்கள்.
அனைவரும் மன நிம்மதியைத் தேடிக் கொண்டிருப்பவர்கள்; மன அமைதியையோ அல்லது ஆனந்தத்தையோ வாழ்வில் இதுவரை அனுபவித்திராதவர்கள்.
'மாதக்கணக்கில் உணவு உண்ணாமல் இருப்பது, ஒரே காலில் நிற்பது, ஆணிகளின் மேல் நிற்பது அல்லது நெருப்பின் மீது நடப்பது' என்று பலவிதங்களிலும் சித்ரவதை செய்து கொண்டிருப்பார்கள். இவர்கள் ஏதேனும் ஒருவிதத்தில் தொடர்ந்து உடலையோ, அல்லது மனத்தையோ சீரழித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.
பிறரைத் துன்புறுத்தும் இயல்புடையவர்கள், இயல்பிலேயே தங்களைத் தாங்களே அதேபோல் தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொள்பவர்கள், பிறரைத் துன்புறுத்துபவர்களாகத்தான் இருப்பார்கள்.
நம்மை நாமே இயற்கையாகவே நாம் மற்றவர்களையும் துன்புறுத்துவோம்.
தயவுசெய்து ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். நாம் நம்முடன் நாமே திருப்தியாக, நிம்மதியாக இல்லாமலிருக்கும்பொழுதுதான், நாம் பிறரைத் துன்புறுத்துகிறோம். நாம் நம்மோடு அமைதியில்லாமல் இருக்கும்பொழுதுதான் மற்றவர்களைத் துன்புறுத்துகிறோம். ஏனெனில், நாம் அப்பொழுது மிகுந்த மனச்சோர்வில் இருப்போம். மற்றவர்களைத் துன்புறுத்துவது என்பது. நம்மை நாமே
துன்புறுத்திக்கொள்வதோடு நேரடியாகத் தொடர்புடையதாகும்.
'மனம்தான் நாம் ' என்று நினைத்துக்கொள்ளும்பொழுது நம் உடலைக் துன்புறுத்துகிறோம். 'உடல்தான் நாம்' என்று நினைத்துக்கொள்ளும்பொழுது, மனத்தைத் துன்புறுத்துகிறோம்.
உடல், மனம் ஆகியவற்றின் ரகசியங்களையறிந்த ஒருவர், அவற்றை துன்புறுத்தவோ, இழிவுபடுத்தவோ மாட்டார்.
உடல், ரகசியங்களையறிந்த ஒருவர், அவற்றை துன்புறுத்தவும் மாட்டார், இழிவுபடுத்தவும் மாட்டார்; அவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டு மென்பதையும், அவற்றோடு ஆனந்தமாக வாழ்வது எப்படி என்பதையும் அவர் அறிவார்.
உடல்-மனத்தின் ஆனந்தத்தால் நிரம்பி வழியும். அவருடைய வெளி உலகம் உண்மையான சுகங்களையும் இன்பங்களையும் அனுபவிக்கும்.
கிருஷ்ணர், நம் உடலையும் மனத்தையும் அழகாக, ஆனந்த சக்தியாக வைத்துக்கொள்வது எப்படி என்பது பற்றியும், நமது உள்ளுலகத்தை ஆனந்த விழிப்புணர்வில் நிலைகொள்ளச் செய்வது எப்படி என்பது பற்றியும் விளக்குகிறார்.
கடவுள் என்று தனியாக எதுவுமில்லை
கிருஷ்ணர் மேலும் சொல்கிறார், ''ஓ பார்த்தா, எல்லா உடல்களிலும் நானே அறிபவனாக இருக்கிறேன். இந்த உடலையும் அதை அறிந்தவனையும் அறிந்துகொள்வதுதான் 'அறிவு' எனப்படுகிறது.''
இங்கு மிக அழகாக இரண்டு அறிக்கைகளைப் பிரகடனப்படுத்துகிறார்: 1. எல்லா உடல்களிலும் நானே அறிபவனாக இருக்கிறேன்; 2. அந்த அறிபவனையும் உடலையும் புரிந்துகொள்வதுதான் 'அறிவு'.
களத்தைப் பற்றி அதாவது உடல்-மனத்தைப் பற்றியும் மற்றும் களத்தை அறிபவனைப் பற்றி அதாவது விழிப்புணர்வு பற்றியும் அறிந்துகொள்வதே 'அறிவு' என்று அவர் சொல்கிறார். மேலும், அவரே அனைத்து உயிர்களுக்குள்ளும் விழிப்புணர்வாக உறைவதாகவும் சொல்கிறார்.
நம்முடைய விழிப்புணர்வே கடவுள்; கடவுள் என்று தனியாக ஒன்று இல்லை. இந்த உடலும் மனமுமே நாம்' என்று நினைக்க ஆரம்பிக்கும்பொழுதுதான், பிரச்சினையே எழுகிறது. 'விழிப்புணர்வே நாம்' என்று அறிந்துகொண்ட ஒருவர், தம்மைத்தாமே விடுவித்துக்கொள்கிறார். அவரே ஞானமடைகிறார். அவர் புத்தராகிறார்.
ஒரு கோட்பாடு இருக்கிறது : கடவுள் + உடல்,மனம் = மனிதர். மனிதர் - உடல், மனம் = கடவுள்!
நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நாம் 'விழிப்புணர்வே! நாம் எப்படி அதைத் தவறவிடுகிறோம், அதனால் எப்படி நம் வாழ்க்கையையும் இழக்கிறோம்; அதை எப்படிக் குழப்பிக்கொள்கிறோம் என்பதை இப்பொழுது பார்க்கலாம் !
உடல்-மனத்தைப் பற்றிய அறிவையும், நாமே விழிப்புணர்வு என்கிற புரிதலையும் நாம் எப்படித் தவறவிடுகிறோம் என்பதை விளக்கும் ஒரு அழகான கதை இருக்கிறது.
நிறைமாத கர்ப்பமாக இருந்த ஒரு பெண் சிங்கம், தன் உணவுக்காக வேட்டையாடச் சென்றிருந்தபொழுது, மந்தையை எதிர்கொண்டது. உடனே அது, அந்த மந்தையைத் தாக்க முயற்சித்தது. ஆனால் அது, அதனுடைய சக்திக்கு மீறியதாக இருந்ததால் களைத்துக் கீழே விழுந்தது. அப்பொழுது ஒரு குட்டியை ஈன்றது; ஆனால் தாய்ச்சிங்கத்தின் உயிர் பிரிந்தது.
கடவுள் + உடல்,மனம் = மனிதன் ! மனிதர் - உடல். மனம் = கடவுள்!
புதிதாகப் பிறந்த அந்த அழகான சிங்கக் குட்டியைப் பார்த்த ஆடுகள், ஒரு உயிரினம் இன்னொரு உயிரினத்திற்குச் செய்யும் உதவியாக, அதனைப் பாதுகாக்க வேண்டியது தங்கள் கடமை என்று நினைத்தன. அவை அந்த குட்டியைக் காக்க வேண்டும் என்று உணர்ந்தன. அதன்மேல் இரக்கம்கொண்டு அதைத் தங்களோடு சேர்த்துக்கொண்டன.
அந்த ஆடுகள், தங்கள் குட்டிகளுக்குப் பாலும் புல்லையும் கொடுத்து வளர்ப்பதைப் போலவே அந்தச் சிங்கக்குட்டிக்கும் கொடுத்து வளர்க்கன. ஆட்டுக்குட்டிகள் அதனோடு விளையாடின. அந்தச் சிங்கக் குட்டியும் அவற்றோடு சேர்ந்துகொண்டு, அவற்றைப் போலவே வாழ ஆரம்பித்தது. மற்ற ஆடுகளோடு சேர்ந்தே வளர்ந்தது. தன்னிலிருந்து அவை வேறானவை என்பது தெரியாமலே, அவற்றுள் ஒன்றாகவே சந்தோஷமாக வாழ்ந்து வந்தது.
சிறிது காலத்திற்குப் பிறகு, பிரச்சினை மெதுவாக ஆரம்பித்தது. அது வந்தே தீரும் !
'அவன் மிகவும் திமிர்பிடித்தவனாக இருக்கிறான், அவன் மிகவும் பலங்கொண்டவனாகவும் முரடனாகவும் இருக்கிறான், அவன் எங்களோடு சிங்கக்குட்டியின் நடத்தைகளைப் பற்றிய புகார்கள் தாய் ஆட்டுக்கு வர ஆரம்பித்தன. இவ்வாறு நடந்துகொண்டால் என்ன ஆகும் ? அவர்களை ஒரங்கட்டி விடுவார்கள். அது போலவே அந்தச் சிங்கக்குட்டியும் ஒதுக்கி வைக்கப்பட்டது. பிரச்சினைகள், விவாதங்கள் என்று வந்தபொழுது, அந்தச் அனைவரும் முடிவுசெய்தனர்.
சில நாட்களுக்குப் பிறகு சிங்கக்குட்டி திகைக்க ஆரம்பித்தது, 'என்ன இது? நான் உண்மையாக வாழ்வதாகத் தெரியவில்லையே, பொய்யா ? வாழ்க்கையே இவ்வளவுதானா ? புல்லைத் தின்பது, குதியாட்டம் போடுவது, கத்துவது, திரிவது, இவை மட்டுமேதானா? நான் என்றுடைய முழுமையான வாழ்க்கையை வாழ்வதாகவே உணரவில்லையே?' என்று சிந்திக்க ஆரம்பித்தது.
'இது எனக்கான வாழ்க்கையில்லை' என்று முழவு செய்யும்போதுதான், நீங்கள் அடுத்தகட்ட வளர்ச்சியை அடைகிறீர்கள்!
மற்ற ஆடுகளைவிட, தான் வேறாக இருப்பதையும், தான் வித்தியாசப்படுவதையும் அது உணரத் தொடங்கியது. தன்னுடைய உண்மையான முடியவில்லையே என்று அது நினைக்கத் தொடங்கியது.
காட்டைக் காணும்போதெல்லாம், உடனே அந்தக் காட்டுக்குள் சென்று அங்கே என்ன இருக்குமென்று ஆராயத் துடித்தது. ஆனால் தாய் ஆடு, அந்த ஒன்றை மட்டும் சிங்கக் குட்டி செய்யக்கூடாது என்று அதனை எச்சரித்திருந்தது. தாய் ஆடு, அந்தச் சிங்கக் குட்டியைத் தம் ஆடுகளில் ஒன்றாகவே கருதியது. அதனால் அதைத் தனியே போய்விடாமல் பார்த்துக்கொண்டது. அப்படிச் செய்தால், காட்டில் இருக்கும் சிங்கங்கள் அதனைக் கொன்றுவிடும் என்று எச்சரித்திருந்தது.
உள்ளே இருப்பதையே வெளியே தேடுகிறீர்கள்
இந்த முழுக் கதையும் உண்மையிலேயே ஆன்மிகத்தைத் தேடும் ஒருவரைப் பற்றியதுதான்! இது, எப்படி ஒருவா பிறக்கிறார், எப்படித் தேட ஆரம்பிக்கிறார், எப்படித் தன்னிறைவை அடைகிறார் என்பதைப் பற்றியதுதான்.
இது ஒரு அருமையான கதை. இந்தக் கதையை நான் மிகவும் ரசிக்கிறேன். அதனால்தான், எங்கெல்லாம் சொல்ல முடிகிறதோ, அப்பொழுதெல்லாம் இதை மீண்டும் சொல்வதுண்டு.
'' நீ அங்கெல்லாம் போகக்கூடாது. அங்குக் கொடிய சிங்கங்கள் உள்ளன'' என்று தாய் ஆடு சொல்லிக் கொண்டிருந்தது. அதனால் சிங்கக்குட்டியும் காட்டுக்குள் சென்று, அதை ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்ற தன் ஆவலையும், தனக்குள் ஏற்படும் வெறுமையையும், அது எதற்காக ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்கான குதுகுடுதலையும் தனக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.
சிறிது காலத்திற்குப் பிறகு, 'இது எனக்கான வாழ்க்கையில்லை' என்று அது முடிவுசெய்தது. ஆனால் எப்படியோ, தாய் ஆடு அதைத் தன் கட்டுப்பாட்டின்கீழ் அடக்கி வைத்துக்கொண்டது. அழுவது, கத்துவது, தேற்றுவது என்று, தாய் ஆடு ஒரு பெரிய நீண்ட நாடகமே ஆடி, இறுதியில் அந்தச் சிங்கத்தைத் திருமணமும் செய்துகொள்ள வைத்துவிட்டது !
இந்தக் கதைக்குள் இன்னொரு சின்ன கதை:
ஒரு காட்டுக்குள், பெரிய திருமணவிழா ஒன்று நடந்து கொண்டிருந்தது. சிங்க அரசனுக்குத் திருமணம். எல்லாக் காட்டு மிருகங்களும் அந்தத் திருவிழாவுக்கு வந்திருந்தன. திருமணத்தின் ஒரு பாகமாக நடன நிகழ்ச்சியும் நடந்தது. மவிருந்து மேஜைகளுக்கு நடுவே அமைக்கப்பட்டிருந்த பெரிய நடன மேடையில் சிங்கங்கள் மட்டுமே நடனமாடிக் கொண்டிருந்தன. மற்ற விலங்குகளுக்கு அவர்களோ(டு சேர்ந்துகொள்ள சற்று விலகி வெளியே நின்று, அவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.
அப்பொழுது திடீரென ஒரு எலி அந்த நடன சிங்கங்களோடு ஆரம்பித்தது.
உடனே ஒரு உடனே பிடித்துக்கொண்டு, அதைப் உனக்கு, நடன மேடைக்கு கைரியம்
'நீ ஒரு ஆடு அல்ல, நீ ஒரு சிங்கம்' - என்று சொல்ல ஒரு குரு தேவைப்படுகிறார்!
வருவதற்கு ? மற்றவர்கள் எல்லாம் ஓரமாகவே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதை நீ கவனிக்கவில்லையா ? சிங்கங்கள் மட்டுமே இங்கு நடனமாடலாம்!' என்று கர்ஜித்தது.
உடனே அந்த எலி மிக அழுத்தமாகச் சொன்னது, ''ரொம்பவும் கத்தாதே, சும்மாயிரு! நானும் என் திருமணத்திற்கு முன் ஒரு சிங்கமாகத்தான் இருந்தேன்!''
சரி, இப்பொழுது, ஆடு-சிங்கக் கதைக்கு வரலாம்.
அந்தச் சிங்கக்குட்டிக்குத் திருமணம் நடந்து, ஒரு சில வருடங்கள் உருண்டோடிவிட்டன. வாழ்க்கையைத் ஆராய்ந்து ''என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? நான் உங்களை நீங்கள் ஒரு வாழ்க்கையைத்தான், உண்பது, கத்துவது, ஆடாக நினைக்கும்வரை, சுற்றிக் குதித்து ஆட்டம் போடுவது என சிங்கத்தைக் கண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் பயப்படவே செய்வீர்கள்! எதையோ இழந்து கொண்டிருப்பதாக ஆழமாக உணர்கிறேன்.
எனக்கு கிடைத்திருக்கிறது. ஒரு நல்ல தாய், நல்ல மனைவி, நல்ல வாழ்க்கை, ஆனாலும்
எனக்குள் ஒரு வெறுமையே இருக்கிறது. எனக்குள் திருப்தி இல்லை. என்ன நடந்து கொண்டிருக்கிறது எனக்கு ?''
மறுபடியும் அது தனக்குள் தேட ஆரம்பித்தது; ஆம், தேடல் ஆரம்பமாகிவிட்டது.
பக்கத்துக் காட்டில் வசித்துவந்த சிங்கம் ஒன்று அன்று அந்த ஆட்டு மந்தையைத் தாக்கியது. அப்பொழுது எல்லா ஆடுகளும் பயந்து ஓடிவிட்டன. ஆனால் இந்த ஆட்டுச் சிங்கம் மட்டும் ஓடவில்லை; ஓடவேண்டுமென்று அதற்கு எண்ணம் வரவில்லை; அதேசமயம் அந்தப் புதிய சிங்கத்தை எதிர்கொள்வதற்கான தைரியமும் இல்லை. அந்தப் புதிய சிங்கம் தன்னையும் வந்து தாக்கப் போகிறது என்று
உணர்ந்தது. ஆனாலும் தனக்குள், 'அந்தப் புதிய சிங்கம் பார்ப்பதற்கு எவ்வளவு கம்பீரமாக இருக்கிறது, ஏதோ வித்தியாசம் இதனிடம் இருக்கிறது!' என்று அதன் கம்பீரத்தைப் பார்த்து வியந்தது.
இதற்கு முன் அது, இப்படியொரு கம்பீரமான விலங்கினைப் பார்த்ததேயில்லை. அதனால், மெதுவாக, எப்படியோ தன்னையறியாமல் சிங்கம்பால் ஈர்க்கப்பட்டது. அந்த ஈர்ப்பு காரணமாக, அதனால் அங்கிருந்து ஓடவும் முடியவில்லை; அந்தச் சிங்கத்தை எதிர்கொள்ள தைரியமும் இல்லை. ஏனெனில், அது இன்னமும் தன்னை ஒரு ஆடாகவேதான் நினைத்தது.
அந்தப் பார்வையை வைத்து, மெதுவாக அங்கிருந்து பின் நோக்கி நகரத் தொடங்கியது. அந்தச் சிங்கம் ஒரே தாவலாக வந்து அதனைப் பிடித்துக்கொண்டது.
உடனே அந்த ஆட்டுச்சிங்கம் பயந்து போய், ''ஒ, என்னை விட்டுவிடு, என்னைக் கொல்லாதே!' என்று வழக்கமான தன் ஆட்டுக் கத்தலைக் கத்த ஆரம்பித்தது.
உடனே அந்தச் சிங்கம், "மடையா, நான் உன்னைக் கொல்ல வரவில்லை! நீ ஒரு சிங்கம், பிறகு ஏன் உதவிகேட்டு ஒரு
ஆடு மாதிரி கத்துகிறாய்? நான் உன்னைக் கொல்வேன் என்று ஏன் நீ நினைக்கிறாய் ?'' என்றது.
'நான் சிங்கமா?', அந்தப் புதிய சிங்கம் தன்னை ஏமாற்றி அதனுடன் காட்டுக்கு தன்னை அழைத்துச் செல்ல முயற்சிக்கிறதோ என்று அந்த ஆட்டுச் சிங்கம் சந்தேகித்தது. உடனே அதற்கு பயம் பற்றிக்கொண்டது, ''இல்லை, இல்லை என்னை விட்டுவிடு!' என்று கதறத் தொடங்கியது.
அந்தச் சிங்கம் மறுபடியும் சொன்னது, "முட்டாளே! நீ ஒரு சிங்கம், ஏன் அதைப் புரிந்துகொள்ள மாட்டேனென்கிறாய் ?'' ஆனாலும் அந்த ஆட்டுச் சிங்கம் அதை நம்ப மறுத்துவிட்டது. எப்படியோ சிங்கத்தின் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு தப்பி ஒடிவிட்டது. அங்கிருந்து தப்பி
பயத்தையும் ஒரு ஆனந்தமான ஈர்ப்பையும் ஒருசேர வெளிக்கொணரும் ஓர் அனுபவமே 'முதல் அனுபவம்' என்பது. !
ஓடிவிட்டாலும் அந்த ஆட்டுச் சிங்கத்தால், அந்தக் கம்பீரச் சிங்கத்தை மறக்க முடியவில்லை. ஒரு வாரத்திற்குப் பயந்துகொண்டேயிருந்தது. சாதாரணமாகவே 'முதல் ஆன்மிக அனுபவ'த்திற்குப் பிறகு பயம் என்பது இருக்கத்தான் செய்யும்.
ஆட்டுக்குட்டியும் தன் 'முதல் சிங்க அனுபவ'த்தைப் பெற்றதும் பயந்தது. இப்படித்தான் அர்ஜுனனும், தம் 'தெய்வீக அனுபவ'த்தைப் பெற்றவுடன், 'கிருஷ்ண அனுபவ'த்தின் முதல் துளியைப் பெற்றவுடன் பயத்தை உணர்ந்தார்.
பயத்தையும் ஒரு ஆனந்தமான ஈர்ப்பையும் ஒருசேர வெளிக்கொணரும் ஓர் அனுபவமே 'முதல் அனுபவம்' என்பது.
ஒரு வாரம் கழிந்தது. பயம் மெதுவாகக் குறைய ஆரம்பித்தது. மறுபடியும் அந்தக் காட்டுச் சிங்கத்தின்பால் தனக்கு ஈர்ப்பு ஏற்படுவதை உணர்ந்தது. ஆட்டுச் சிங்கம், அந்தச் சிங்கத்தை மறுபடியும் சந்தித்துவிட நினைத்தது. 'அந்தச் சிங்கத்தை நான் இன்னொருமுறை சந்தித்தே ஆக வேண்டும் என நினைக்கிறேன்' என்று நினைத்தது. உடனே மனத்தின் இன்னொரு புறத்தில், 'இல்லை, இல்லை, அது என்னைக் கொன்றுவிடும்' என்று பயந்தது. மறுபடியும் 'இல்லை, இல்லை, அதனுடனான அனுபவம் அப்போப்பட்ட ஆனந்தமான அனுபவமாயிருந்ததே. அது கம்பீரமாக இருந்ததே. அதனை மறுபடியும் சந்திக்க என்னுள் ஆவலாயிருக்கிறதே!' என்றும் நினைத்தது.
துணிவே, நம்பிக்கையைக் கொடுக்கும்
உங்களுக்குள் ஞானத் தன்மை இருந்தால் மட்டுமே, நீங்கள் ஒரு ஞானியால் ஈர்க்கப்படுவீர்கள்
தயவுசெய்து மிக மிக மிக்வும் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்குள் ஞானத் தன்மை இல்லாமல், நீங்கள் இன்னொரு ஞானியிடம் ஈர்க்கப்படமாட்டீர்கள்.
நாம் ஞானமடைந்த தொடர்போ, பிணைப்போ ஏற்படுவதாக உணர்ந்தாலும், அவரோடு நாம் எந்த வழியிலாவது இணக்கமாகவோ, ஈடுபாடு கொண்டவர்களாகவோ புரிந்துகொள்ளுங்கள், நமக்குள் ஏற்கெனவே ஞானத் தன்மை இருக்கிறது என்பதற்கான அடையாளமே அது. ஆனாலும் நமக்குள் இருக்கும் அந்த ஞானத் தன்மையை நாம் உணர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு மன முதிர்ச்சி அடையாமலோ, மனரீதியாக வளராமலோ இருப்போமேயானால், ஒரு ஞானியிடம் ஒரு சிறுஅளவு இணக்க உணர்வைக்கூட உணரமாட்டோம்.
இந்த மக்கள் வசிக்கிறார்கள். இந்தப் பேச்சை கேட்பதற்கு, சில நூறுபேர்கள் மட்டுமே இங்கு வந்து ஏன் உட்கார்ந்திருக்கின்றீர்கள் ? அது மட்டுமல்ல, குறைந்தது சில ஆயிரம்
ஒரு ஞான குருவின் போதனைகள் நம்மை ஈர்ப்பதாக நாம் உணரும் தருணமே, நமக்குள்ளும் ஞானம் மலர அரம்பித்துவிடும்!
பேர்களாவது ஒருமுறை வந்துவிட்டு, இரண்டாவது முறை வரவில்லை. ஏன் ஒரு சிலர் மட்டும் தவறாமல் வந்து கொண்டிருக்கின்றீர்கள் ?
ஒரு ஞான குருவின் போதனைகள் உங்களை ஈர்ப்பதாக நீங்கள் உணரும் தருணமே ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களுக்குள் இருக்கும் ஞானம் வெளிப்பட ஆரம்பித்துவிட்டது, மலர ஆரம்பித்துவிட்டது !
ஆட்டுச் சிங்கத்திற்கு அந்த காட்டுச் சிங்கத்தின் நினைவு வந்ததும், அதனிடம் ஈர்க்கப்பட்டதற்கும் அதுதான் காரணம். மறுபடியும் அந்தச் சிங்கத்தைப் பார்க்க மிக்க ஆவல்கொண்டது. இறுதியாக அதை நேரில் சந்திக்க முடிவுசெய்தது. ஆனால் அதை எப்படிச் சந்திப்பது? 'இந்த நேரத்தில், இந்த இடத்தில் நான் நிகழ்ச்சி நடத்துகிறேன், நீ அங்கு வந்து என்னைச் சந்திக்கலாம்' என்று அந்தச் சிங்கம் எந்த விளம்பர நோட்டீசும் கொடுக்கவில்லை.
அந்த ஆட்டுச் சிங்கம், தான் வாழும் புல்வெளிப் பகுதியின் எல்லை முடிந்து, காட்டுப் பகுதி தொடங்கும் இடத்திற்கு ஒவ்வொரு நாளும் சென்று, 'அந்தச் சிங்கம் இன்றாவது வராதா!' என்று ஏங்கிக் காத்துக் கொண்டிருந்தது.
ஒரு சில மாதங்களுக்குப் பிறகு அந்தச் சிங்கம் தென்பட்டது. அந்தச் சிங்கத்தைப் பார்த்த மாத்திரத்தில் அந்த ஆட்டுச் சிங்கத்திற்குள் இருந்த
பயம் மேலெழுந்தது. அதைப் பார்க்க மாதக்கணக்கில் காத்திருந்தும்கூட, அந்தத் தருணத்தில் என்ன செய்வதென்றறியாமல், குழம்பித் தவித்தது.
இந்த முறை, அந்தச் சிங்கம் அதனருகில் வந்து ''நீ எப்படியிருக்கிறாய் ?'' என்று கேட்டது. அந்த ஆட்டுச் சிங்கம் மறுபடியும் "நான்.., நான்.., நான்..'' என்று அதே ஆட்டுக்கத்தலில், வாய் குழறியது.
அதனால் பதில்சொல்ல முடியவில்லை. ஆனாலும் முன்பு செய்ததைப் போல இப்பொழுது ஒடிவிடவில்லை.
அந்த காட்டுச் சிங்கம், ''கவலைப்படாதே, நீ பயப்படுவதாயிருந்தால் நான் போய்விடுகிறேன். நான் உன்னைத் தின்றுவிட மாட்டேன். ஏனென்றால் நீயும் ஒரு சிங்கமே. நான் உன்னைத் தின்ன முடியாது என்பதனால், நான் உன்னைக் கொல்ல மாட்டேன். நீ என்னைப் பார்த்து பயப்படுவதால், என்னால் உனக்கு எந்தவிதத்திலும் உதவ முடியாது, அதனால் நான் உன்னோடு இங்கே இருப்பதில் எந்தப் பயனுமில்லை, ' என்று சொல்லிக்கொண்டே அந்தச் சிங்கம் காட்டை நோக்கிப் புறப்பட்டது.
உடனே அந்த ஆட்டுச் சிங்கம், காட்டுச் சிங்கத்திடம், இன்னும் சில நிமிடங்களாவது அங்கேயே இருக்கும்படி வேண்டிக்கொண்டது. மேலும் அது, ''என் அருகில் மட்டும் வராதீர்கள் நீங்கள் தூரத்தில் நின்றுகொண்டுகூட பேசலாம். தயவுசெய்து, ஒரு பத்தடி தள்ளியே நின்றுகொள்ளுங்கள். நான் இங்கேயே நிற்கிறேன் ஆனால் இன்னும் கொஞ்ச நேரமாவது என்னுடனே இருங்கள்,' என்று கெஞ்சியது. இப்பொழுது அந்த ஆட்டுச் சிங்கத்தால் காட்டுச் சிங்கத்தை மறக்கவும் முடியவில்லை; அருகில் செல்வதற்கான துணிவும் இல்லை!
இதுவே ஒரு தேடுதலுடையவரின் அடுத்த கட்ட வளர்ச்சி.
அவையிரண்டும் ஒரு பத்துப் பதினைந்தடி தொலைவு இடைவெளி விட்டுத் தள்ளி நின்றுகொண்டுதான் அந்தச் சிங்கம் ஆட்டுச் சிங்கத்திடம் கதை பேசியது. அப்பொழுது காட்டுச் சிங்கம் ஆட்டுச் சிங்கத்தைப்பார்த்து, ''நீ முட்டாள்! நான் உன்னை ஏமாற்றவில்லை. என்னுடைய இதயப்பூர்வமான அன்பினால் உனக்கு உண்மை நிலையை உணர்த்த விரும்புகிறேன்,'' என்று சொன்னது. ''உன்னை நீ ஆடு என்று நினைக்கும் வரை, என்ன நடந்தாலும் அதிலிருந்து நீ வெளியே வரமுடியாது. எப்பொழுதும் நீ பயத்துடனே இருப்பாய். நீ ஒரு சிங்கமாக இருந்தாலும் ஆட்டு வாழ்க்கையையே வாழ்வாய்!'' என்று காட்டுச் சிங்கம் சொன்னது.
காட்டுச் சிங்கம் மறுபடியும் ஆட்டுச் சிங்கத்திடம், ''நீ ஒரு சிங்கம்தான். முட்டாளே! நீ உன்னை ஒரு ஆடு என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயே! நீ உன்னோடு பழகும் உன் நண்பர்களைப் போன்றவன் அல்ல. நீ வாழவேண்டிய விதம் இதுவல்ல, '' என்றது.
ஆட்டுச் சிங்கம், காட்டுச் சிங்கம் சொன்னதைப் பற்றி நினைத்துப் பார்க்க ஆரம்பித்தது. ஒருவழியாக, ஆட்டுச் சிங்கத்திற்கு, காட்டு சிங்கம் தன்னைக் காட்டுக்குள் அழைத்துச் சென்று, கொன்று தின்றுவிடும் என்ற சந்தேகம் நீங்கியது. காட்டுச் சிங்கத்திற்கு அந்த மாதிரி கீழான எண்ணம் எதுவும் கிடையாது என்பது ஆட்டுச் சிங்கத்திற்குப் புரிந்தது. காட்டுச் சிங்கத்திற்கு கொடுப்பதற்கென்று தன்னிடம் எதுவும் இல்லை என்பதையும், தன்னால் அதற்கு எந்த உபயோகமுமில்லை என்பதையும் அது அறிந்துகொண்டது.
சீடருடைய மனத்தில் அப்படி ஒரு தைரியம் வந்த பிறகுதான், குருவின் வார்த்தைகளை அவர் நம்ப ஆரம்பிக்கிறார்!
அதனால்தான் ஆன்மிகக் கல்வி என்பது இலவசமாக அளிக்கப்பட்டது. குருவுக்கு எந்தவிதத்திலும் நம்மால் பங்களிக்க முடியாது என்றும், அவர் நம்மிடமிருந்து அடைவதற்கென்று எதுவும் இல்லை என்றும், நாம் அவரைச்
சென்றடையாவிட்டாலும், அவர் பூரணமானவரே என்றும் நாம் உணரும்பொழுதுதான், நாம் குருவை நம்பத் தொடங்குகிறோம்.
ஏற்கெனவே குரு, தன்னுடைய இருப்புணர்வில் கொண்டிருப்பதைக் காட்டிலும், மேலாக அதனுடன் இன்னும் சேர்ப்பதற்குத் தன்னிடம் ஒன்றுமில்லை என்பதைச் சீடர் அறிந்துகொள்ளும்பொழுதுதான் குருவுக்கும், சீடருக்கும் இடையிலான நம்பிக்கை ஆரம்பமாகிறது.
குருவானவர் தம் இருப்பில் அனைத்தையுமே பெற்றிருக்கிறார்; அவர் தளும்பி வழிகிறார்; குரூவின் சக்தி தளும்பி வழிந்தோடுவதனால்தான், அதை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். நம்மிடமிருந்து எதையாவது எடுத்துக்கொள்ள கொடுக்கவில்லை. அவருடைய இருப்பானது நிரம்பிப் பொங்கிக் கொண்டேயிருக்கிறது. அதை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளும்பொழுதுதான், நீங்கள் குருவின் வார்த்தைகளை நம்பத்தொடங்குகிறீர்கள்.
இது போன்ற நம்பிக்கைதான் அந்த ஆட்டுச்சிங்கத்திற்கு, காட்டுச் சிங்கத்தின் மேல் ஏற்பட்டது. 'அந்தச் சிங்கம் என்னைக் கொன்று தின்னப் போவதில்லை. அப்படிச் செய்ய நினைத்திருந்தால் அது எப்பொழுதோ செய்திருக்கும். ஒன்று மட்டும் நிச்சயம். என்னிடமிருந்து அதற்கு எந்த லாபமுமில்லை. அப்படியிருக்கையில், ஏன் அது என்னை ஒரு சிங்கம் என்று சொல்ல வேண்டும் ?' என்று நினைத்தது.
குருவுக்குக் கொடுப்பதற்கென்று நம்மிடம் எதுவுமே இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ளும்பொழுதும், அவர் தெய்விகப் பேரானந்தத்தில் நிரம்பி வழிகிறார் என்பதையும் அந்த மகிழ்ச்சியையும் பேரானந்தத்தையும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் என்பதையும் நாம் புரிந்துகொள்ளும்பொழுதுதான், நாம் அவற்றை ஆழமாக ஆராய்ந்து பார்க்க ஆரம்பிக்கிறோம்.
நீங்கள் வாழ வேண்டியவிதம் இதுவல்ல
குரு என்ன சொன்னாலும் அது நம்முடைய நன்மைக்காகத்தான், நம்முடைய புரிந்துகொள்ளும்வரை, நாம் அவருடைய வார்த்தைகளை ஆராய்ந்து
ஒருவருடைய கண்களைப் பார்த்தமாத்திரத்தில், அவர் பொய் சொல்கிறாரா, இல்லையா என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும். !
பரிசோதித்துப் பார்க்க முற்படுவதுமில்லை ; அதைப் பார்ப்பதில்லை.
பின்பு ஆட்டுச் சிங்கத்தின் மனத்தில், காட்டுச் சிங்கத்தைப் பற்றிய நினைவுகள் விரிந்தன: "அது பார்ப்பதற்கு மிகுந்த தைரியமாகவும், மிகுந்த கம்பீரமாகவும் இருப்பது மட்டுமல்லாமல் மிகுந்த நம்பிக்கையையும் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறது! சொல்வது போன்று தோன்றவில்லையே!'' என்று நினைத்தது.
நாம் பார்த்தமாத்திரத்தில், அவர் சொல்கிறாரா, இல்லையா கண்டுபிடித்துவிட சொல்வதைக் கண்டுபிடிக்கத் தனியாக 'பொய் கண்டுபிடிக்கும் கருவி' என்று ஒன்று தேவையில்லை! நாம் செய்ய வேண்டியதெல்லாம் கண்களைக் கூர்ந்து கவனிப்பதை மட்டுமே.
எதிராளியின் கண்களைக் கூர்ந்து கவனிப்பதே உண்மை நிலையை உணர உதவம்!
அதனால் அந்த அந்த ஆட்டுச் சிங்கம் தனக்குள்ளேயே, 'இந்தச் சிங்கம் பொய் சொல்வதுபோல் தெரியவில்லை. நான் ஒரு ஆடு என்று எனக்குத் தெரியும். பிறகு
அது ஏன் என்னிடம், ''நீ ஒரு சிங்கம்,'' என்று மீண்டும் சொல்கிறது ?' என்று நினைத்தது.
சிங்கமோ, ''சரி, என்னை நம்புவதற்கு உனக்கு விருப்பமில்லை என்று நினைக்கிறேன், அப்படியிருக்கும் பட்சத்தில் இங்கு நின்று நான் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நான் போகிறேன்,' என்று நகர ஆரம்பித்தது.
ஆனால் அந்த ஆட்டுச் சிங்கமோ, ''இல்லை, இல்லை, இல்லை! நான் உன்னை மறுபடியும் பார்ப்பதற்கு ஒரு சந்தாப்பம் கொடு,'' என்று கெஞ்சியது.
''மறுபடியும் என்னைச் சந்திக்க வேண்டுமென்று ஏன் நினைக்கிறாய் ?'' என்று அந்தச் சிங்கம் கேட்டது.
அதற்கு அந்த ஆட்டுச் சிங்கம், "நான் வீட்டுக்குச்சென்று, நீ சொன்னதையெல்லாம் யோசித்துப் பார்க்கிறேன். பிறகு திரும்பி வந்து, என் சந்தேகங்களைத் தீர்க்குக்கொள்கிறேன், '' என்றது.
அந்தச் சிங்கமும் ஆட்டுச் சிங்கம் சொன்னதை ஏற்றுக்கொண்டு, "சரியாக, ஒரு மாதம் கழித்து, இதே இடத்தில் உன்னை வந்து சந்திக்கிறேன்,'' என்றது.
வீட்டுக்குச்சென்ற ஆட்டுச் சிங்கம் ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தது, "நான் எப்படிச் சிங்கமாக இருக்க முடியும்? நிச்சயம் எனக்குத் தெரியும், நான் ஒரு ஆடுதான். நான் புல்லை மேய்கிறேன்; ஆடுகள்போலக் கத்திக்கொண்டு, அவற்றோடுதானே எப்பொழுதும் சுற்றிக் கொண்டிருக்கிறேன். அப்படியிருக்கும்பொழுது நான் எப்படி ஒரு சிங்கமாக இருக்க முடியும்?' என்று அது மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்தது.
ஆன்மிக சம்பந்தமான அத்துணை கேள்விகளையும் தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டது. அது அத்துணையுமே இத்தனை நாட்களாக நான் பதில் சொல்லிக் கொண்டிருந்த அதே கேள்விகள்தான்!
'ஆட்டு என்று சில புத்தகங்கள் அந்த ஆட்டுச் சிங்கத்திற்குக் கிடைத்திருக்க வேண்டும். அது அந்தப் புத்தகங்களை எல்லாம் படித்துப்பார்த்துவிட்டு, எல்லா சாத்தியமான கேள்விகளைப் பற்றியும் யோசித்துப் பார்த்தது.
இதுவரை அதனுடைய தாயும் தந்தையும் பதில் அளிக்காக கேள்விகள் அனைத்தையும் ஒரு பெரிய பட்டியலாகத் தயரித்தது.
இருப்பினும் ஒரு முக்கியமான விஷயம், தான் அந்தச் சிங்கத்தைச் சந்தித்ததை மட்டும், தன் தாயிடம் சொல்லவேயில்லை. ஏனெனில் தன்னுடைய தாய், தன்னை தடுத்து நிறுத்திவிடும் என்றும், ''அங்கெல்லாம் போகக்கூடாது போய் விடாதே! நீ இந்தப் புல்வெளியிலேயேதான் திரிய வேண்டும். மறுபக்கமுள்ள அந்தக் காட்டுக்குள் நீ போகக்கூடாது, ' என்று சொல்லி அந்தக் காட்டுக்கு அருகில் செல்லக்கூட அனுமதிக்காது என்றும் அதற்குத் தெரியும்.
பெற்றோர்கள், அஞ்சுகிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளைக் கோயிலுக்கு அனுப்புவார்கள். ஆனால் ஒரு ஸ்வாமியிடமோ, ஒரு ஆன்மிக குருவிடமோ அனுப்புவதேயில்லை !
அவர்களுக்கு எப்பொழுதும் ஒரு பயம் இருக்கிறது. 'ஸ்லீவாமி விவேகானந்தர் பக்கத்து வீட்டில் பிறந்தால், அவர் மிக உயர்ந்தவர், மிகச் சிறந்தவர். ஆனால் நம் வீட்டில் ஒருவர் அப்படி ஒருவர் விவேகானந்தராக ஆவதுதான் நமக்கு ஆகாது! நம் வீட்டுப் பிள்ளையை விவேகானந்தர்போல் துறவு வாழ்க்கை மேற்கொண்டு, மக்கள் நலனுக்காக ஆன்மிக சேவைசெய்வதற்கு அனுமதிக்க முடியாது' என்போம் !
எப்படியோ, ஒரு மாதத்திற்குப் பிறகு அந்தக் குறிப்பிட்ட சந்திப்பு நாளும் வந்தது. அந்த ஆட்டுச் சிங்கம், தான் 'நல்ல புற்கள்' என்று நினைத்த புற்களையெல்லாம் சேர்த்துவைத்து, அந்தச் சிங்கத்திற்குப் பரிசாகக் கொடுப்பதற்கு எடுத்துச்சென்று, ''தயவுசெய்து இதைப் பெற்றுக்கொள்ளுங்கள். நான் இதை உங்களுக்காகவே பத்திரமாகக் காத்து எடுத்து வந்திருக்கிறேன்,'' என்று வேண்டிக்கொண்டது.
அந்த ஆட்டுச் சிங்கத்தின் அன்பைப் பார்த்த சிங்கம், அதைச் சந்தோஷப்படுத்துவதற்காகவும், அதனோடு மேலும் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவும், அந்தப் புல்லைத் உண்பது போலவும், மிகவும் ரசிப்பது போலவும் நடித்தது. அதன் இடைவெளியைக் குறைத்துக்கொண்டே வந்தது. தன்னோடு இருக்கும்பொழுது அந்த ஆட்டுச் சிங்கம் சுகமாகவும் இசைவாகவும் இருப்பதை, அதற்கு உணர வைக்க விரும்பியது. அப்பொழுதுதான் எந்தவிதமான உணர்வுமாற்றமுமோ அல்லது அறிவு மாற்றமோ நிகழ முடியும். அந்த ஆட்டுச் சிங்கத்தைத் திருப்திப்படுத்தவே அது அந்தப் புல்லை உண்பதுபோல் நடித்தது.
இயல்பாகவே, ஆட்டுச் சிங்கம், "நன்றாக இருக்கிறதா? ருசியாக இருக்கிறதா ?'' பார்த்துக் கைட்டது. அந்தச் சிங்கமும் "ஆம், ஆம் மிக ருசியாக இருக்கிறது. எனக்கு மிகவும் சந்தோஷம். நீ நன்றாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாய். நீ ஒரு சிறந்த வேலையைச் செய்திருக்கிறாய், '' என்றது. இப்படிச் கொடுத்தது !
குருவோடு இசைவாக கருக்கும்போதுதான் உணர்வுமாற்றம் ந்தழ முடியும்!
சிங்கம் அந்தப் புல்லை அன்பளிப்பாக ஏற்றுக்கொண்டபிறகு, மெதுவாக அந்த ஆட்டுச் சிங்கத்திடம் முன்பு சொன்னவற்றையே மீண்டும் சொல்ல ஆரம்பித்தது. ''நான் உன்னிடம் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். ஆனால் நீதான் நான் சொல்வதைக் கேட்பதற்குத் தயாராயில்லை. நீ ஒரு சிங்கம்தான், ஆடு அல்ல, '' என்றது.
இப்பொழுது இருப்பதைவிட நீங்கள் மேலானவர்
இப்பொழுதுதான், அந்த ஆட்டுச் சிங்கம், தான் இதுவரை தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருந்ததோ, அது தவறு என்று அறிந்தது. ஆனால் இன்னமும் அந்த அந்த ஆட்டுச்சிங்கத்தால், சிங்கம் சொல்வது சரிதான் என்பதை ஒப்புக்கொள்ள முடியவில்லை.
உங்களுடைய சொந்த சொரூபத்தையே அறியாகவர்களாக இருக்கிரிர்கள்!
ஆனாலும் தன் தர்க்க அறிவைப் பயன்படுத்தி, 'என்னுடைய நிறம் வேறாக இருக்கிறது. நான் ஆடாக இருந்தால் என் நண்பர்களைப்போல்தானே இருக்க வேண்டும் ? ஆனால் வித்தியாசமாக இருக்கிறேன்; நான் இந்த ஆட்டு திருப்தியாகவோ வாழ்க்கையில் சௌகரியமாகவோ உணர முடியவில்லை; அப்படியானால் நான் இதற்கும் கொஞ்சம்
மேலானவன் என்பது புரிகிறது; ஆனால் நான் எப்படி ஒரு சிங்கமாக இருக்க முடியும் என்பதைத்தான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை' என்று சிந்தித்தது.
தான் ஒரு ஆடு அல்ல என்பதை அந்த ஆட்டுச் சிங்கத்தால் இப்பொழுது புரிந்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சிங்கம் சொல்வதுபோல், தான் ஒரு சிங்கந்தான் என்பதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. அதே நேரத்தில், இதுநாள்வரை அது தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருந்ததோ அதைப் பற்றிய ஒரு உறுதியான கருத்தும் இல்லாமல் இருந்தது.
ஒருநாள், அந்தச் சிங்கம், "வா! அருகிலிருக்கும் ஏரி வரை போய்
வரலாம்,' என்று அந்த ஆட்டுச் சிங்கத்தை அழைத்தது. அந்தச் சமயத்தில் அந்த ஆட்டுச் சிங்கம், சிங்கத்திடம் சற்றுப் பழகிவிட்டதால், அதடைன் செல்ல சம்மதித்தது.
அவை அந்த ஏரியை நெருங்கியபொழுது, சிங்கம், ஆட்டுச் சிங்கத்தின் கழுத்தைக் கவ்வி, அந்த ஏரியின் தண்ணீருக்கு அருகில் இழுத்துச் சென்று, அந்த நீர்பரப்பில் அதன் உருவ பிரதிபலிப்பைக் காட்டி, ''இந்தப் பிரதிபலிப்பில் ஒரு சிங்கத்தின் உருவம் தெரிகிறதா?'' என்று கேட்டது.
அதற்கு அந்த ஆட்டுச்சிங்கம், ''ஆம், உன்னுடைய உருவம் தெரிகிறது, நீ பதிலளித்தது.
''எனக்கு அருகில் இன்னொரு பிரதிபலிப்பு கெரிகிறதா?'' என்று மீண்டும் கேட்டது.
''ஆம், உனக்கு அருகில் இன்னொரு குட்டி சிங்கத்தைப் பார்க்கிறேன். அது உன் குட்டியா? எங்கே உன் குட்டி? உன் குட்டியைக் இங்குக் காணோம், ஆனால் அதன் பிரதிபலிப்பு தெரிகிறதே. அது தண்ணீருக்குள் இருக்கிறதா ?'' ஆட்டுச்சிங்கம் கேட்டது.
மாற்றங்களை எதிர்கொள்ளத் கயாராகுங்கள்!
அந்தச் சிங்கம் கா்ஜித்தது, ''முட்டாளே! அது நீதான்!''
அதை அந்த ஆட்டுச்சிங்கம் நம்ப மறுத்து, ''இல்லை, இல்லை, இல்லை, ஒரு வேளை உன் குட்டி தண்ணீருக்குள் ஒளிந்து கொண்டிருக்கலாம், அதைக் கூப்பிடு, '' என்றது.
அந்தச் சிங்கம் சொன்னது, ''முட்டாளே, அது என் குட்டி அல்ல, அது நீயே,'' என்றது.
அந்தச் சிங்கம் சொன்னது, ''பார்! இப்போது நான் இங்கிருந்து நகர்ந்து செல்கிறேன். நீ மட்டுமே இங்கே நின்று கொண்டிருப்பாய். அதன்பிறகு என்ன நடக்கிறதென்று நீயே பார்!'' என்றது.
அந்த ஆட்டுச் சிங்கம், இப்போது தன்னுடைய சொந்த பார்த்தது. அதிர்ச்சி ஏற்பட்டது. 'அந்தச் சிங்கம் சொல்வதில் ஏதோ உண்மை இருக்கிறது என்று நினைக்கிறேன்' என்று நினைக்க ஆரம்பித்தது.
மறுபடியும் அது பயந்தது, 'நான் ஒரு சிங்கம் என்றால், நான் காட்டில் அல்லவா வசிக்க வேண்டும்! என்னால் அந்தப் பொறுப்பை ஏற்க முடியாது. நான் ஒரு கர்க்கம், கத்துவம், கேள்வி-பதில், இவை எதுவுமே ஸ்க்யத்தை உணர உதவமாட்டா!
ஆடாகவே இருந்தால், எவ்வளவு சுகமாயிருப்பேன்; ஏற்கெனவே, நான் என் ஆட்டு நண்பர்களையெல்லாம் அறிவேன்; எனக்குத் தவறாமல் உணவும் கிடைக்கிறது; எங்கு உணவு கிடைக்கும் என்பது எனக்குத் தெரியும்; எங்குச் சமைக்கவேண்டும் தெரியும்; என் வீடு எங்கு இருக்கிறது என்பதும் தெரியும்; என் மனைவி எங்கிருக்கிறாள் என்பதும் தெரியும்; என்னுடைய வாழ்க்கை எங்கே என்பதும் தெரியும் ; இவையெல்லாம் எனக்குத் தெரியும்.
நான் பழக்கப்பட்டுவிட்டேன். ஆனால் நான் ஒரு சிங்கம்தான் என்பது எனக்கு புரிய ஆரம்பித்தால், இப்பொழுது இருக்கும் மொத்த விஷயத்தையும் கீழே போட்டுவிட வேண்டியதுதான். எல்லாவற்றையும் நான் துறந்தாக வேண்டும். நான் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்கொண்டாக வேண்டும். அது மிகவும் கடினம்' என்று நினைத்தமாத்திரத்தில், பயம் திடீரென மேலெழுந்தது, அது உடனே அங்கிருந்து ஓடிவிட்டது; அது மீண்டும் தப்பித்துவிட்டது.
விட்டுவிட' - பயப்படாதீர்கள்
ஒரு சில மாதங்களுக்குப் பிறகு அந்தச் சிங்கம், ஆட்டுச் சிங்கத்தைத் தேடிவந்தது. ஆனால், ஆட்டுச் சிங்கத்தைப் பார்த்தும் அது எதுவும் பேசவில்லை. இம்முறை, அந்த ஆட்டுச் சிங்கத்தினிடம் காட்டுச் சிங்கத்திற்குக் காணிக்கையாகத் தருவதற்கு ஏதுமில்லை.
ஆனால் காட்டுச் சிங்கம், அந்த ஆட்டுச் சிங்கத்திற்கு ஒரு அன்பளிப்பைக் கொண்டுவந்திருந்தது. அது ஒரு 'மாமிசத் துண்டு'!
அங்குத் தத்துவ ரீதியான போதனைகளோ, தர்க்க ரீதியான கலந்துரையாடலோ அல்லது கேள்வி பதில் பரிமாற்றமோ எதுவுமே நிகழவில்லை. சிங்கம் நேரிடையாக, அந்த ஆட்டுச் சிங்கத்தைப் பிடித்து, அதன் வாயைப் பலவந்தமாகத் திறந்து, அந்த மாமிசத் துண்டை உள்ளே போட்டது.
உதிரத்தை ருசித்த அந்தக் கணத்தில், மாமிசத்தை ருசித்த அந்தத் தருணத்தில் ஆட்டுச் சிங்கத்தினுள் ஏதோ ஒன்று சுழன்றது. அதனுடைய இருப்புக்குள் ஏதோ நிகழ்ந்தது. அதனுடைய விழிப்பு நிலைக்குள் ஏதோ நிகழ்ந்தது. அந்த மாமிசத்தை விமுங்கிய உடனே பலமாகக் கா்ஜித்தது!
அந்தக் கர்ஜனையைத்தான் ஜனூரம் என்று சொல்கிறோம். மிக முக்கியமான விஷயம், அந்த ஆட்டுச் சிங்கம், தான் ஆரம்பம் முதலே ஒரு சிங்கமாகத்தான் இருந்திருக்கிறோம் என்பதை அறிந்துகொண்டது!
இதேதான் நம்முடைய வாழ்க்கையிலும் நடக்கிறது. மீண்டும் மீண்டும் நம்மை நாம் ஆடுகள் என்றே நினைத்துக்கொள்கிறோம். ஏதேனும் ஒரு சமயத்தில், 'நான் இந்த வாழ்க்கையை திருப்தியாக உணரவில்லை. என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?'என்ற சந்தேகம் நமக்கு வருகிறது.
சில நாட்களுக்குப் பிறகு திடீரென நாம் ஒரு சிங்கத்தைப் பார்க்கிறோம்! அது, ''நீயே கடவுள், நீயே சக்தி, நீயே விழிப்புணர்வு," என்று நமக்கு உபதேசிக்கும். நாம் அதைக் கேட்டவுடன் பயந்து ஓடிவிடுகிறோம். சென்று யோசிக்க ஆரம்பிக்கிறோம், அவர் குருவுக்குக் ஏதோ சில திட்டங்களை வைத்திருக்கிறார் காண்க்கையாகத் என்று நினைக்கிறேன். அவர் ஒரு ஆஃரமம் தருவதற்கு உங்களிடம் நிறுவ நினைக்கிறார், அதற்கு நானும் ஏதுமில்லை. ! தேவைப்படுகிறேன். அதனால்தான் அவர் இவற்றை எனக்குச் சொல்கிறார்' என்று நினைக்கிறோம்.
சில நாட்களுக்குப் பிறகு, 'அவருக்கு ஏற்கெனவே ஒரு ஆஃ'ரூமம் இருக்கிறது, நாம் அவருக்குப் புதிதாக ஒரு ஆச்ரமம் கட்டத் தேவையில்லை. அதற்காக நான் எதுவும் உதவத் தேவையில்லை. அவர் எல்லாமே பெற்றிருக்கிறார், என்னிடமிருந்து அவருக்கு எதுவும் தேவையில்லை' என்பதை மெதுவாக அறியத் தொடங்குகிறோம்.
பிறகு, ஏன் அவர் தினமும் காலையில் வந்து, சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்? ஒவ்வொரு நாளும் வந்து இரண்டு. மூன்றுமணி நேரத்திற்கு உரத்த குரலில் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார், ஏன்? ஒன்று மட்டும் நிச்சயம், நான் என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பது தவறுதான் என்பது தெரிகிறது. ஆனால்
அவர் சொல்வகெல்லாம் சரியா, இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை!' என்று பலவிதமாக யோசிக்கிறோம்.
எப்படியோ, அல்லும் பகலும் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறோம்
தியானத்தின்பொழுது, கண நேர அனுபவம் நிகழ்கிறது. அது நிகழும்பொழுது இல்லை, இது எனக்கானது இல்லை. இது மறுபடியும் நிகழ்ந்தால், நான் எல்லாவற்றையும் துறந்துவிட்டு, அவர் பின்னாலேயே சென்று விடுவேன்' என்று
நினைத்து, நாம் மறுபடியும் பயத்துடன் ஓடிவிடுகிறோம்.
இந்தத் தருணத்தில்தான் குருவானவா நம்மைப் பிடித்து, ஆழமான ஆன்மிக அனுபவம் என்ற மாமிசத் துண்டை நம் வாயில் போடுகிறார். நம்முடைய உடலமைப்பிலும் விழிப்புணர்விலும் ஏதோ நிகழ்கிறது. திடீரென்று நாம் கண்களைத் திறந்து, நம் இருப்பில் நடந்த அனுபவத்தை வெளிப்படையாகக் அதுவாகவே இருந்திருப்பதை உணர்கிறோம்.
அந்த ஆட்டுச் சிங்கம் எப்பொழுதுமே 'ஒரு சிங்கமாகத்தான்' இருந்திருக்கிறது. ஆனாலும், அந்த ஸ்த்யத்தை உணர வைப்பதற்கு இன்னொரு சிங்கம் தேவையாயிருக்கிறது.
முதல் நாளிலிருந்தே, நாம் 'களம் அறிந்தவராக,' கூடித்ருஜ்ஞனாக அதாவது விழிப்புணர்வாகத்தான் இருக்கிறோம். அந்த ஆட்டுச் சிங்கம், தான் ஆடு என்று நினைத்துக் கொண்டிருந்ததுபோல், நாமும் இந்த உடலையும் மனத்தையும் 'நாம்' என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். 'தாம் விழிப்புணர்வுதான்' என்று ஏற்கெனவே அனுபவம் பெற்ற ஒருவர், நம்மை வழிநடத்திச்செல்ல, நம் வாழ்வில் திடீரென வருகிறார் ''இது விழிப்புணர்வு, அது உடல்-மனம்; நீங்கள் விழிப்புணர்வுதான், அந்த உடல்-மனம் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்," என்று சொல்கிறார்.
இங்கு, கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் அதே கதைதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவர், கிஷத்ரம் மற்றும் கூடித்ருணைப் பற்றி விவரிக்கிறார். அவர் அர்ஜுனனிடம், "நீ ஒரு ஆடு அல்ல, நீ ஒரு சிங்கம்; நீ வெறும் களம் அல்ல, களம் அறிந்தவன்," என்று விளக்குகிறார்.
நீகழ்காலத்தில் இருப்பது என்பது மிக எளிதே
கேள்வி : ஒருவர் விழிப்போடு இருக்க வேண்டுமானால், அவர் நிகழ்காலத்தில் இருக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்திச் சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு என்ன அர்த்தம் ? நான் நிகழ்காலத்தில் இருக்கிறேனா என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது? நான் நிகழ்காலத்திலிருக்கிறேன் என்பதை மற்றவர்கள் அறிய முடியுமா?
எந்த ஒரு தருணத்திலும், எதைச் செய்தாலும், அதன் விளைவைப் பற்றிக் கவலைப்படாமல், செயலிலேயே முற்றிலும் மூழ்கியிருப்பதே நிகழ்காலத்தில் இருப்பதாகும்.
நான் அடிக்கடி சாப்பிடும்பொழுது சாப்பிடும் உணவின் மீது உங்கள் கவனத்தை ஒன்றாக்குங்கள்; அந்தச் பேசாதீர்கள், படிக்காதீர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி களைப் செய்யாதீர்கள். அப்படி வேறெதிலோ உணவை கவனத்தை
சாப்பிடும்பொழுது சாப்பிடும் உணவின் மீது உங்கள் கவனத்தை ஒன்றாக்குங்கள் அந்த சமயத்தில் வேறெதுவும் செய்யாதீர்கள்!
வேண்டுமே தவிர
மற்றவர்களின் மனத்தை
அல்ல !
உண்டீர்களானால், நீங்கள் உணவைப் புறக்கணிக்கிறீர்கள், அதனை அவமதிக்கின்றீர்கள். அதனால் அது குப்பையாக மாறிவிடுகிறது.
சாப்பிடும்பொழுது வைத்தீர்களென்றால், நீங்கள் வழக்கமாக உண்ணும் உணவின் பாதியளவு உணவுதான் சாப்பிடுவீர்கள், ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள். நீங்கள் விழிப்புணர்வில்லாமல், கவனமில்லாமல் சாப்பிட்டீர்களென்றால், உங்கள் உடல் பருமனாகிவிடும்; பிறகு உடற்பருமனால் வரும் அனைத்து பக்கவிளைவு நோய்களையும் வரவழைத்துக்கொள்வீர்கள்.
எண்ணற்ற குருமார்கள் நிகழ்காலத்தில் இருப்பதைக் குறித்துப் பேசியிருக்கிறார்கள். அவர்கள் நிகழ்காலத்தில் இருப்பதற்கான பல்வேறு வழிகளைப் பற்றிப் பல கருத்துகள் இருக்கலாம்.
நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது, நீங்கள் நிகழ்காலத்தில்தான் இருக்கின்றீர்கள் என்றோ அல்லது இங்கேயே, இப்போதே, இதிலேயே இருக்கிறேன் என்றோ மற்றவர்களுக்கு சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை உறுதியாகத் தெரிந்துகொள்ளுங்கள். அப்படி ஒரு அவசியம் நேர்ந்தால், நீங்கள் நிகழ்காலத்தில் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் நிகழ்காலத்தில் இருப்பதற்கு, மிகக் கடுமையாக முயற்சி செய்தீர்களானால், அது தொந்தரவாகவோ குழப்பமளிப்பதாகவோ அச்சுறுத்துவதாகவோ இருக்கும். உங்களின் உள்முகப் பேச்சு மிகவும் சப்தமாக இருக்கும்; அதை உங்களால் குறைக்க முடியாது; ஆனால் மற்றவர்கள் உங்களிடமிருந்து தப்பித்து ஓடும் அளவுக்கு சப்தமாக இருக்கும் !
தாங்கள் தியானம் செய்யும்பொழுது, தங்களைச் சுற்றி எல்லாமே சப்தமில்லாமல் அமைதியாகவும், தொல்லைக் கொடுக்காமலும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் சிலரைப் போலவே நீங்களும் மாறிவிடுவீர்கள். அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள், அப்படிச் செய்தால்தான் எல்லோருடைய கவனத்தையும் தங்கள் மீது திருப்ப முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள், உங்கள் சொந்த மனத்தைத்தான் சரிசெய்துகொள்ள வேண்டுமே தவிர, மற்றவர்களின் மனத்தை அல்ல.
நீங்கள் நிகழ்காலத்தில் இருந்தால், மற்றவர்கள் தானாகவே உங்களின் நறுமணத்தை உணர்வார்கள். உங்கள் நிகழ்கால நறுமணத்தை அவர்கள் நுகர்வார்கள். உங்களுடைய ஸாந்தித்யத்தை உணர்வார்கள். அப்படி அவர்கள் செய்யவில்லையென்றால், நீங்கள் நிகழ்காலத்தில் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது, இருப்பு மற்றவர்களையும் மையப்படுத்தி, சாந்தப்படுத்தி நிகழ்காலத்திற்கு அழைத்து வந்துவிடும். நீங்கள் விளம்பரப்படுத்தத் தேவையில்லை.
நீங்கள் எந்தளவிற்கு திகழ்காலத்தில் இருக்கின்றீர்கள் என்பதை மற்றவர்களுக்கு எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருந்தால், நீங்கள் நினைக்கும் இடத்தில், நீங்கள் இல்லை. நீங்கள் உங்களின் உள் பேச்சிலேயேதான் சிக்கிக் கொண்டிருக்கின்றீர்கள், அவ்வளவுதான்.
நீங்கள் நிகழ்காலத்தில் இருந்தால், மற்றவர்கள் தானாகவே உங்களின் நறுமணத்தை உணர்வார்கள்.
ஸாந்தித்யமும் நிகழ்காலத்தில் இருப்பதும் தேடுதல் மூலம் நிகழ்ந்து விடுவதில்லை. நீங்கள் தேடலை நிறுத்தும்பொழுதும், முயற்சிப்பதை நிறுத்தும்பொழுதும், அதற்குள் சென்று இளைப்பாறும்பொழுதும், அந்த எண்ணத்தை விட்டுவிட்டு தளர்வாக அமைதியாகும்பொழுதுதான் அவை நிகழ்கின்றன.
உங்கள் எண்ணங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது, தர்க்க ரீதியானது அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு எண்ணமும் தனித்தனியானது. ஒரு எண்ணத்தோடு இன்னொரு எண்ணத்தை இணைத்து, வலி மற்றும் மகிழ்ச்சி என்ற தண்டுகளையோ அல்லது பயம் மற்றும் பேராசை என்ற தண்டுகளையோ உருவாக்கிவிடுகிறோம். நிகழ்காலத்தில் இருந்துகொண்டு, எண்ணத்தை ஒரு சாட்சியாக மட்டுமே இருந்து பார்த்து, அதைக் கடந்து போகவிடுவதற்குப் பதிலாக, நாம் அவற்றை இறந்தகாலத்திலும் எதிர்காலத்திலும் நுழைக்கிறோம்.
எப்பொழுது இந்த லகுயத்தைப் புரிந்துகொள்கின்றீர்களோ, அப்பொழுது இயற்கையாகவே, நீங்கள் நிகழ்காலத்தினுள் நுழைகின்றீர்கள். நான் இதை 'அன்கிளட்சிங்' நிலை, நித்யானந்த நிலை என்கிறேன்!
விழிப்புணர்வும் மனசாட்சியும்
- 13.3 செயல்பாடுகள் நிறைந்த இந்தக் களத்தைப் பற்றியும், அது எப்படி உருவாக்கப்பட்டது, அது எப்படி அமைக்கப்படுகிறது, மற்றும் அதன் மாற்றங்கள் என்ன என்பதையும், அந்தக் களத்தைப் பற்றித் தெரிந்தவர் யார், அவருடைய மஹிமைகள் என்ன என்பதையும் புரிந்துகொள்வாயாக.
- 13.4 செயல்பாடுகள் நிறைந்த இந்தக் களத்தைப் பற்றிய அறிவையும், இந்தக் களத்தைப் பற்றி அறிந்தவனைப் பற்றிய அறிவையும் பல்வேறு ஞானிகள் வேத நூல்களில் விளக்கியுள்ளார்கள். இது காரண காரிய விதிகளோடு, சரியான தர்க்கத்துடன் விளக்கப்பட்டுள்ளது.
- 13.5,6 இயற்கையின் ஐந்து மூலப்பொருட்களான பஞ்சபூதங்கள், தவறான அஹங்காரம், புத்திசாலித்தனம், உருவமற்ற தன்மை, மனம், உணர்ச்சிப் புரிதலை ஏற்படுத்தும் புலன்கள் ஐந்து, செயல்புரியும் புலன்கள் ஐந்து, புலன்களின் விஷயங்கள் ஐந்து, விருப்பு, வெறுப்பு, சந்தோஷம், துக்கம், வாழ்வின் அடையாளம் மற்றும் உறுதி - இங்ஙனம் செயல்பாட்டுக்குரிய இந்தக் களத்தைப் பற்றியும் மற்றும் அவற்றுக்கிடையே நடைபெறும் உட்செயல்கள் பற்றியும் சுருக்கமாகச் சொல்லப்பட்டன.
கிருஷ்ணர் அர்ஜுனனிடம், உடல்- மனம் எனப்படும் கிஷத்ரம், அதன் செயல்பாடுகள், அதன் மாற்றங்கள், அவை எப்படி உருவாக்கப்படுகின்றன விளக்கங்களைக் கவனமாகக் கேட்குமாறு சொல்கிறார்.
இந்த உண்மைகள் காலங்காலமாக, விளக்கப்பட்டிருக்கின்றன. வேத சாஸ்த்ரங்கள், உதாரணத்திற்கு உண்மைகளை மிகத் தெளிவாகச் சரியான விளக்கங்களோடு விளக்கியிருக்கின்றன.
மனிதனுடைய உண்மையான தன்மை, தூய்மையான விழிப்புணர்வே!
இலட்சக்கணக்கான உள்ளுலக விஞ்ஞானிகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் இதே உண்மைகளைத்தான் வெளிப்படுத்தியிருக்கின்றனர். மனிதனுடைய உண்மையான தன்மை, தூய்மையான விழிப்புணர்வே! விழிப்புணர்வே! க்ஷத்ரம் எனப்படும் செயல்களை அறிந்த க்ஷத்ருஜ்ஞனாக மனிதன் இருக்கிறான்.
மீண்டும் மீண்டும் இந்த அத்தியாயம் முழுவதும் கிருஷ்ணர், உடலை அறிந்தவனோடு உடலையும், மனத்தை அறிந்தவனோடு மனத்தையும் சேர்த்துக் குழப்பிக்கொள்ள வேண்டாம் எச்சரிக்கிறார். களத்தை, களம் அறிந்தவனோடு சேர்க்கும்பொழுதுதான் பிரச்சினையே எழுகிறது.
நாம், இந்த உடலையும் மனத்தையும், நம்முடைய ஸம்ஸ்காரங்களை, ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் ஒரு நோக்கத்திற்காகவே கொண்டுவந்திருக்கிறோம். இந்தப் பிறப்பிற்காக இந்த உடல்-மன ஆடையை வாடகைக்கு எடுத்திருப்பதையும், நம்மைப் படிப்படியாக அதனோடேயே இணைத்துக்கொள்கிறோம் என்பதையும் மறந்துவிடுகிறோம். சில நாட்களுக்கு பிறகு, மற்ற எதையும்விட அந்த ஆடையே நமக்கு மிக முக்கியமானதாகவும் அவசியமானதாகவும் ஆகிவிடுகிறது. இந்த ஆடை சிறிது காலத்திற்குப் பிறகு, தேய ஆரம்பித்தவுடன் நாம் கவலைப்பட ஆரம்பிக்கிறோம்.
மனதிற்குச் சுகம் தந்த கட்டுறு மனப்பாங்கு
உண்மையில் இது நம் தவறல்ல. சமூகம் நம் மேல் அடுக்கடுக்கான கட்டுறு மனப்பாங்குகளை விதித்திருக்கிறது. நாம் என்பது இந்த உடலும் மனமும்தான் என்று நம்மை நம்பவைத்து முட்டாளாக்கியிருக்கிறது. நம் குழந்தைப் பருவத்திலிருந்தே நாம், இந்த உடல், மனத்துடன்கூடிய ஒரு தனி ஜீவன் என்றேதான் சொல்லப்பட்டிருக்கிறோம்.
இந்த உடலுக்கும் மனத்துக்கும் ஒரு பெயர்கூட வருவதற்குப் பிறகு நாம் நம்மை அந்தப் பெயரோடு சம்பந்தப்படுத்திக் கொள்கிறோம். என்னுடைய பெயர் இதுதான், நான் இன்னாருடைய மகன், நான் ஒரு டாக்டர் என்று அடுக்கடுக்காக பல அடையாளங்களோடு, அதாவது நம் பெயர், பெற்றோர், தொழில், நண்பர்கள் ஆகியவற்றோடு நம்மையே அடையாளப்படுத்திக் கொள்கிறோம்.
உடலை அறிந்தவனோடு உடலையும், மனத்தை அறிந்தவனோடு மனத்தையும் சேர்த்துக் குழப்பிக்கொள்ள வேண்டாம்!
இது பல தபால் முத்திரைகள் குத்தப்பட்ட ஒரு அஞ்சல் கட்டைப்போலத்தான். நாம் ஒரு அஞ்சல்கட்டை (Parcel) இங்கிருந்து திருவண்ணாமலைக்கு அனுப்பினால், அது அனுப்பப்படுவதற்கு முன்னால் ஒரு முத்திரை குத்தப்படுகிறது. அதைப் போலவே, அது செல்லும் வழிநெடுக, அது ஒவ்வொரு நிலையத்திலும் ஒவ்வொரு முத்திரையாக வாங்கிக்கொள்கிறது. அது திருவண்ணாமலை சென்று சேரும் சமயத்தில் நிறைய முத்திரைகள் பெற்றிருக்கும். இப்பொழுது அந்தக் கட்டானது, தன் மீது குத்தப்பட்டிருக்கும் முத்திரைகள்தான் 'தான்' என்று நினைத்துக்கொள்கிறது. ஆனால் உள்ளே இருக்கும் பொருள்தான் 'தான்' என்பதை அது மறந்தே விட்டது!
உடல்-மனத்தை வழிநடத்திச் செல்லும் என்பதற்குப் பதிலாக, நாம் நம்மை அதனோடு இணைத்துக்கொள்ளும்பொழுது, இதுதான் நடக்கிறது.
'நாம் க்ஷத்ரம் அல்ல, அதாவது முத்திரைகள் அல்ல; நாம் க்ஷத்ருஜ்ஞன்தான், அதாவது உள்ளே இருக்கும் பொருள்தான்' என்பதை நாம்தான் குழப்பிக்கொள்கிறோம். இயற்கையாக, உடல்-மன நிலையில் இருந்து வெளிப்படும் விழிப்புணர்வு இன்றி மனசாட்சியோடு மட்டும் இருக்கும் ஒருவர்தான் துன்பப்படுகிறார்!
எல்லாப் பிரச்சினைகளும் நம்மைப் பாதிக்கின்றன. உடல்-மனத்தில் நடக்கும் செயல்பாடுகள் நம் வாழ்க்கையில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அடுத்த சில செயல்பாடுகள் என்ன? அவை எப்படி ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்புரிகிறது என்பதைப் பற்றிப் படிப்படியாக விளக்குகிறார்.
கிருஷ்ணர், மகத்தான ஐந்து மூலப்பொருட்கள், தவறான அஹங்காரம், புத்திசாலித்தனம் அல்லது முடிவெடுக்கும் மனம் மற்றும் பத்து புலன்களைப் பற்றி பேசுகிறார்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், அவர் சொல்கிறார், பத்து புலன்கள் - கிர்த்ரியாரி தச் கம்சு: நமக்கு ஐந்து புலன்கள்தான் இருக்கின்றன என்று நாம் நினைக்கிறோம். நமக்கு ஐந்து கர்மேந்தியங்களும், ஐந்து ஞானேந்த்ரியங்களும் இருக்கின்றன. ஞானேந்த்ரியம் என்பது அறிவை உள்வாங்கிக்கொள்ளும் ஐந்து புலன்கள் கிர்த்ரியங்கள். அவை கேட்டல், தொடுஉணர்வு, பார்வை, ருசி மற்றும் வாசனை முதலியவற்றை உணரும் காதுகள், தோல், கண்கள், நாக்கு மற்றும் மூக்கு.
கர்மேந்த்ரியம் என்பது செயல்புரியும் புலன்கள்; அவையாவன, வாய், கைகள், கால்கள், மல-மூத்திரக் கழிவுகளை வெளியேற்றும் உறுப்பு மற்றும் பிறப்புறுப்பு (இனப்பெருக்க உறுப்பு).
இந்தப் பத்து புலன்களுடன், பற்று வெறுப்பு, மகிழ்ச்சி, துக்கம், உடல், பரஸ்பர ஈர்ப்பு, மற்றும் விழிப்புணர்வு ஆகியனவும்கூட செயல்பாடுகள் நிகழும் களத்திற்குப் பங்களிக்கின்றன.
உண்மையில் 'விழிப்புணர்வு' என்னும் வார்த்தையைப் பயன்படுத்த முடியாது. நம் விழிப்புணர்வு கடினமாகும்பொழுது, அது மனசாட்சியாக மாறிவிடுகிறது. இருக்கிறது.
விழிப்புணர்வு - கடவுள் தந்தது
உதாரணத்திற்கு, நம் மனசாட்சியின்படிதான் நாம் 'சரி, தவறு' என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அதை அடிப்படையாகக்கொண்டே நாம் செயல்படுகிறோம்.
அடுத்த தலைமுறைக்கு, நாம் இதே உபதேசத்தைக் கொடுத்தோமானால், அது சரியாக வராமல் போகலாம்; ஏனென்றால் அவர்கள் வேறு எதையோ 'சரி, தவறு' என்று நினைக்கலாம். நாம் செய்தவற்றையே அவர்களையும் செய்யுமாறு கட்டாயப்படுத்தும்பொழுது, நாம் அதை ஒரு நல்லொழுக்கமாகவும், மனிதாபிமானமாகவும் அல்லது சுயக்கட்டுப்பாடாகவும் மட்டுமே போதிக்கிறோம். நாம் அவர்களுக்கு உயிரற்ற, சாரமற்ற ஒரு சட்டத்தையே தருகிறோம்.
ஆனால், அதற்குப் பதிலாக, நம் அடுத்த தலைமுறையினருக்கு வாழ்க்கையைத் தரும்பொழுது, நாம் அவர்களுக்கு விழிப்புணர்வையே தருகிறோம்.
மனசாட்சியோடு எப்பொழுதும் ஒருவர்தான் துன்பப்படுகிறார். வாழ்வை அனுபவித்தாலும் சரி அல்லது துறவு வாழ்க்கையை மேற்கொண்டாலும் சரி, அவரால் மகிழ்ச்சியாய் இருக்க முடிவதில்லை. அனுபவிக்கும்பொழுதும், அதைப் பற்றிய குற்றவுணர்ச்சியால் துன்பப்படுகிறார்; துறந்து விடும்பொழுது, அதை இழந்துவிட்டோமோ என்று வருந்துகிறார். இரு வகையிலும் அவர் வருந்துகிறார்.
ஒருபோதும் மனசாட்சியை மட்டும் அடுத்த தலைமுறையினருக்குக் கொடுக்காதீர்கள். வாழ்க்கையைப் பற்றிய புரிதலைக் கொடுங்கள். நான் இதைத்தான் 'விழிப்புணர்வு' என்கிறேன். வாழ்க்கையைப் பற்றிய புரிதலைத்தான் விழிப்புணர்வு என்கிறேன். அவர்களே அனுபவித்து, ஆராய்ந்துகொள்ள அனுமதியுங்கள்.
நான் நல்லொழுக்கத்தை நம்பவில்லை. நான் விழிப்புணர்வு அனுபவத்தை நம்புகிறேன். நான் நிச்சயம் மனசாட்சியை நம்பவில்லை ; விழிப்புணர்வையே நம்புகிறேன்.
மனசாட்சி சமூகத்தால் நமக்குக் கொடுக்கப்பட்டது. விழிப்புணர்வு, கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்டது. மனப்பாங்கு. விழிப்புணர்வு என்பது நம்முடைய இயல்பு.
இயற்கையாகவே, நம்முடைய முழு வாழ்க்கையையும் ஒரு சடங்காகச் செய்துவிடுகிறது. நாம் எதையும் செய்யும் முன்பாக, நாம் எதைச் செய்யப் போகிறோம் என்பதை நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அதை நாம் சீர்த்தியுடன் செய்வோம்.
நாம் செய்து கொண்டிருக்கும் செயலுக்கான அர்த்தத்தைத் தர்க்கரீதியாக நாம் தெரிந்துகொள்ளவில்லையென்றால், நாம் நம்மை அதற்குள் முழுமையாக ஈடுபடுத்தி, அதற்காக நம்மை அர்ப்பணித்துக்கொள்ள மாட்டோம்.
கிருஷ்ணர், தன்மையும், எல்லா விதிமுறைகளும்கூட களமே என்று சொல்கிறார். அவை பருப்பொருளே, அவை சக்தி அல்ல, அவை உங்களுடைய 'இருப்பு'ம் அல்ல, அவை நீங்கள் அல்ல. இங்கே எதைக் குறிப்பிட்டாலும் அது நீங்கள் அல்ல.
நாம் என்னவாகவெல்லாம் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளும் அந்தத் தருணத்தில், நாம் அந்தத் தளைகளிலிருந்து விடுதலையாகிறோம் என்பதைப் புரிந்துகொண்டாக வேண்டும்.
நாம் இந்த உடல், மனத்தோடு வாழ்ந்தாலும்கூட, தெரிந்துகொண்டால் அதற்குப் பின் நாம் அவற்றின் அடிமைகளாக இருப்பதில்லை!
நாம் செய்து கொண்டிருக்கும் செயலுக்கான அர்த்தத்தை நாம் தர்க்கரீதியாகத் தெரிந்துகொண்டால் மட்டுமே, அதற்காக நம்மை முழுமையாக அர்ப்பணிப்போம்!
உங்கள் விருப்பத்திற்கு எதிராக ஏதோ ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கும்வரை, ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், அதை 'அடிமைத்தனம்' என்றே சொல்லலாம். நீங்கள் இந்த உடல், மனத்தோடு வாழ்ந்தாலும்கூட, விழிப்புணர்வுடன் இருந்தால், நீங்கள் அவற்றின் அடிமை இல்லை.
பிறப்பாலேயே நீங்கள் சுதந்திரமானவர்
நான் ஒரு சின்ன கதையைச் சொல்கிறேன். அது கிரேக்க ஞானி டையோஜினஸ் (Diogenes) பற்றியது. டையோஜினஸுக்கு எதிராகச் சிலர் சதிச்செயல்களில் ஈடுபட்டனர். அவர்கள் தீவிர ஆலோசனைக்குப்பின், அவரைக் கைதுசெய்து, அடிமைச் சந்தையில் விற்றுவிட முடிவுசெய்தனர். அதனால் அவரது இருப்பிடத்திற்குச் சென்று அவரைத் தாக்கினர். அவரைக் கைதுசெய்யும்பொழுது அதை அவர் எதிர்க்கக்கூடும் என்று நினைத்தார்கள். அவரோ எந்தவித எதிர்ப்பும் காட்டவில்லை.
அவர்கள் அவரைத் தாக்கிக் கைதுசெய்யச் சென்றார்கள். ஆனால், அவரோ எந்தவித எதிர்ப்பும் காட்டாததால், அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் அமைதியாக, தம்மைத் தாக்கியவர்களைப் பார்த்து, ''உங்களுக்கு என்ன வேண்டும்?'' என்று ஒரு தலைவனைப்போல கேட்டார். தாக்க வந்தவர்கள் அதிர்ந்து போனார்கள்!
அவர்களில் ஒருவன் மட்டும் சுதாரித்துக்கொண்டு, ''உன்னைப் பிடித்து, ஒரு அடிமைச் சந்தையில் விற்றுவிட வந்தோம்," என்று சொன்னான்.
அதற்கு டையோஜினஸ், "ஓ, அதை நீங்கள் நேரிடையாகவே செய்திருக்கலாமே! இதற்கெல்லாம் திட்டம் போட்டு, பேசி ஏன் உங்கள் நேரத்தை வீணாக்கினீர்கள் ? வாருங்கள், விலங்கை மாட்டுங்கள், எங்கே அவை ?'' என்று கேட்க ஆச்சரியப்பட்டார்கள். தம்மைக் கைதுசெய்ய வந்தோரிடம் ஒருவர், தம் கைகளை நீட்டி, அவற்றில் விலங்கிடுமாறு அவரே கட்டளையிடுவதை அவர்கள் முதல் தடவையாகப் பார்த்தார்கள்!
அவரே தம் கைகளில் விலங்கை மாட்டிவிடச் சொன்னபொழுது, அவர் ஒரு தலைவரைப்போலத்தான் பேசினார். கடைசியில், அவர்களுள் ஒருவன் எப்படியோ விலங்கை எடுத்து, ஒரு பக்கத்தை அவருடைய கையிலும் அடுத்த பக்கத்தைத் தன்னுடைய கையிலும் மாட்டினான்.
அப்பொழுது டையோஜினஸ் அவனைப் பார்த்து, "மடையனே, நீ ஏன் உன் கையில் விலங்கைப் பிணைத்துக் கொள்கிறாய்? என்று வினவினார்.
மேலும், மற்ற சதிகாரர்களைப் பார்த்து, ''நீங்கள் என்னை நம்பவில்லையா? நானேதானே எனக்கு விலங்கு பூட்டிவிடக் கட்டளையிட்டேன் ? வாருங்கள். என்னை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லுங்கள். ஆனால் தெளிவாக இருங்கள், என்னிடமிருந்து நீங்கள் ஓடிவிடாதீர்கள்!' என்றார்.
அவரைக் கைதுசெய்தவர்களுக்கு, இப்பொழுது லேசாக பயம் பற்றிக்கொண்டது. 'என்ன நடந்து கொண்டிருக்கிறது' என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. மெதுவாக, அவர்கள் தங்களைச் சிறியவர்களாகவும் குறையுடையவர்களாகவும் உணர ஆரம்பித்தார்கள்.
அப்பொழுது டையோஜினஸ், முட்டாள்களே, சுதந்திரத்தின் நுட்பம் எனக்குத் தெரியும். சுதந்திரத்தின் அடிப்படை விதிகளும் எனக்குத் தெரியும். நான் எல்லையில்லா உள்ளுலகச் சுதந்திரத்தை நிலையாக அனுபவிக்கிறேன். என்னை எதுவும் கட்டுப்படுத்த முடியாது. உங்களால் முடிந்த மட்டும் உங்களுடைய விளையாட்டை விளையாடிப் பாருங்கள். அது எங்குப்போய் முடியப்போகிறது என்று பார்த்துவிடலாம்,'' என்றார்.
இப்படிச் சொல்லிவிட்டு, தெருவில் இறங்கி ஒரு அரசனைப்போல் கம்பீரமாகச் செல்ல, அடிமைகளைப்போல அவரைப் பின்தொடர்ந்தார்கள்.
தெருவில் நின்றுகொண்டு இந்த வினோதக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களிடம் அவர், ''இவர்கள் என் அடிமைகள். ஏனென்றால் இவர்களால் என்னை விட்டுப் போகமுடியாது." என்று சொன்னார். உடனே அவர்கள், ''டையோஜினஸ்தான், அடிமை,'' என்று கத்தினார்கள்.
உடனே டையோஜினஸ் தம்மருகில் இருந்தவனிடம், 'இதோ பார், இப்பொழுது நீ என்னைப் போக அனுமதித்தால் நான் உடனே ஓடிவிடுவேன். ஆனால் நான் உன்னைப் போக அனுமதிக்கிறேன். நான் இந்த விலங்கிலிருந்து உன்னை விடுவிக்கிறேன் உன்னால் ஓடிவிடமுடியுமா?'' என்று கேட்டார்.
அவர் மேலும் தொடர்ந்து சொன்னார்: "நீங்கள் அவ்வாறு செய்ய மாட்டீர்கள், ஏனென்றால் உங்களுக்கு என்னிடமிருந்து ஏதோ வேண்டியதிருக்கிறது. அதுதான் உங்களை என்னிடம் அடிமையாக்கி வைத்திருக்கிறது ஆனால் எனக்கு உங்களிடமிருந்து எதுவும் தேவையில்லை. அதனால்தான் தலைவனாக இருக்கின்றேன்! நான் சுதந்திரமானவன்!''
உண்மையில், உங்கள் கைகளில் விலங்கு மாட்டப்படாமல் இருக்கலாம் ஆனாலும் நீங்கள் மனதளவில் ஒரு அடிமையாக இருக்க முடியும். அடிமைத்தனம் என்பது உடல் சம்பந்தப்பட்டது அல்ல; இருப்புத் தன்மை சம்பந்தப்பட்டது.
அடிமைத்தனம் என்பது உடல் சம்பந்தப்பட்டதல்ல; கருப்புத் தன்மை சம்பந்தப்பட்டது!
அவர்கள் அழைத்துச் சென்றார்கள். யாருடைய கட்டாயப்படுத்துதலும் இன்றி, அவரே, அடிமைகள் விற்கப்படும் விற்பனை மேடை மீதேறி நின்றார். ஏலம் ஆரம்பித்தது. ஏல விற்பனையாளர், ''இங்கே ஒரு அடிமை வந்திருக்கிறான். அதிக விலைகொடுத்து வாங்குபவர்கள் வாங்கிக்கொள்ளலாம், '' என்று கூவினார்.
டையோஜினஸ் உடனே அந்த ஏல விற்பனையாளரைப் பார்த்து, ''நிறுத்து! இங்கு ஒரு அடிமை இருக்கிறான் என்று சொல்லாதே! அதற்கு பதில், இங்கே ஒரு குரு வந்திருக்கிறார். அவரை ஏலம் கேட்க முடிந்தால், ஏலம் கேட்கலாம் என்று சொல்," எனக் கம்பீரமாகக் கூறினார்.
அடிமைத்தனத்தோடு நாம் ஒத்துழைக்க மறுக்கும்பொழுதுதான். அடிமைத்தனம் நம்மை அடிமைப்படுத்த முடியும்! ஒரு குருவுக்காக ஏலம் கோர அங்கு யாருக்கும் தைரியம் வரவில்லை; அதனால் அவரை யாரும் வாங்கிக்கொள்ளவில்லை.
மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர்களுக்கு அவர் ஒரு சுமையாகத் தெரிந்தார். யாரும் அவரை வாங்கப் போவதில்லை என்று தெரிந்த பிறகு, அவருக்கு அனாவசியமாக செலவு என்று வெறுத்தார்கள். 'நாம் இங்கேயே உட்கார்ந்திருந்தால், இவன் நம்மையே விற்று இவனால் என்ன வெல்லாம் செய்ய முடியும் என்று நமக்குத் தெரியவில்லையே' எனத் திகைத்தார்கள்.
இறுதியில் அவரை விடுதலைசெய்து விட்டார்கள்.
உங்களை யாராலும் அடிமைப்படுத்த முடியாது
இது ஒரு கதையாகக்கூட இருக்கலாம். ஆனாலும் இந்தக் கதையின் பின்னால் இருக்கும் உண்மை என்னவென்றால், நாம் இந்த உடலும் மனமும் அல்ல என்பதை நாம் புரிந்துகொண்டால் போதும், நம்மை எதுவும் அடிமையாக்கிவிட முடியாது, என்பதுதான்.
நாம் எதற்கும், என்றும் அடிமையாகிவிட மாட்டோம். கைதுசெய்தோ,
சிறையில் இட்டோ, நம்மை யாரும் அடிமையாக்கிவிட முடியாது. அடிமைத்தனம் நம்மை எப்பொழுது அடிமையாக்க முடியுமென்றால், அடிமைத்தனத்தோடு நாம் நாம் ஒத்துழைக்க மறுக்கும்பொழுதுதான், அடிமைத்தனம் நம்மை அடிமைப்படுத்த முடியும்!
ஒரு ஸூக்ஷ்மமான ஸ்த்யம், 'இந்த உடல்-மனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் நாம்' என்று நாம் தெரிந்துகொண்ட பிறகு, நம்மை யாராவது அடிமைப்படுத்த முயன்றால், நாம் அதை எதிர்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பதை உணர்வோம்.
ஏனென்றால் நாம் என்றுமே அடிமைகளாக இருக்க முடியாது என்ற ஸ்த்யும் நமக்குத் தெரியும்.
நம் விருப்பத்திற்கு எதிராக நிகழ்பவை மட்டுமே நம்மை அடிமைப்படுத்த முடியும்.
இங்கு நாம் முற்றிலும் வேறு தளத்தில், ஒரு முற்றிலும் வேறுபட்ட ஒரு விழிப்புணர்வில் இருக்கிறோம், அதனால் நம் விருப்பத்திற்கு எதிராக எதுவும் எதையும் ஒருபோதும் எதிர்க்க மாட்டோம். நாம் ஆற்றின் போக்கிலேயே சென்று கொண்டிருப்போம், நீரின் வேகத்தோடே ஓடிக்
நம் விருப்பத்திற்கு எதிராக நிகழ்பவை மட்டுமே நம்மை அடிமைப்படுத்த முடியும். !
தெய்விகத்திற்குள் கரைந்துவிடுவோம். அதனால் அடிமைத்தனம் நமக்கு ஏற்படாது. நம்முடைய விழிப்புணர்வு எந்த ஒரு அடிமைத்தனத்திற்கும் அப்பாற்பட்டது.
அதனால்தான் கிருஷ்ணர், கிஷத்ரம் மற்றும் கிஷத்ருஜ்குன் என்னும் உடல்-மனம் மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றின் ரகசியத்தைப் போதிக்கிறார். அடிமைத்தனத்திற்கு மட்டுமே உட்படுத்தப்பட்டார்கள். இந்த நாட்களில் உட்படுத்தப்படுகிறார்கள்.
புரிந்துகொள்ளுங்கள்,
மனோரீதியான அடிமைகளாகத்தான் இருக்கிறோம்.
தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு பொருள் பற்றிய விளம்பரம் காட்டப்படும்பொழுது, அது உடனே நேராக நம் தலைக்குள் நுழைந்து உட்கார்ந்துவிடுகிறது. சில நாட்களுக்குள் எப்படியோ பணத்தைப் புரட்டி அதை நாம் வாங்கியும் விடுகிறோம். நாம் இப்படி ஒரு மனோரீதியான அடிமைத்தனம்கொண்ட ஒரு உலகத்தில் வசிக்கிறோம்.
நாம் இந்த உடல்-மனம் அல்ல; அதற்கும் அப்பாற்பட்டவர்கள் நாம் என்பதை ஒருமுறை புரிந்துகொண்டுவிட்டோமானால், நாம் உடல் ரீதியாகவும் மனோரீதியாகவும்கொண்ட அடிமைத்தனத்திலிருந்து முற்றிலும் விடுபட்டுவிடுவோம்.
நாம் ஒரு குறிப்பிட்ட பொருளோ அல்லது ஒரு நிகழ்ச்சியோ நிகழ வேண்டுமென்று மிகவும் விரும்பும்பொழுது, நம் மகிழ்ச்சியானது அந்தப் பொருளிலோ அல்லது அந்த நிகழ்ச்சியிலோ சிக்கிக்கொள்கிறது. வெளியில் இருக்கும் அந்தப் பொருளோ அல்லது நடக்கும் அந்த நிகழ்ச்சியோதான் நம்முடைய மகிழ்ச்சியைக் குடகட்டுப்படுத்தும் சக்தியைப் பெற்றுவிடுகிறது.
நிகழ்ச்சிகள் நாம் விரும்பியபடி நடக்காதபொழுது, நாம் மனச்சோர்வு அடைகிறோம். உலகத்தில் நியாயம் என்பதே இல்லை என்று நினைக்கிறோம். பலரும் என்னைக் கேட்பதுண்டு, ''என் வாழ்க்கையில் மட்டும் ஏன் இவ்வளவு அநியாயங்கள் நடக்க கடவுள் அனுமதிக்கிறார் ? நான் மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறேன்?''
ஒரு முக்கியமான விஷயம், நாம் அனுமதித்தால், சுதந்திரத்தை விரும்பும் எண்ணம்கூட. நம்மை அடிமைப்படுத்திவிடும் !
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் ஏதோ ஒன்றிடமோ அல்லது யாரோ ஒருவரிடமோ உங்கள் மகிழ்ச்சியை அடகு வைக்கும் கணத்தில், நீங்கள் அதனின் அல்லது அவரின் அடிமையாகிவிடுகின்றீர்கள். அது அல்லது அவர் உங்களை ஏமாற்றிவிடமுடியும்.
மேலும் ஒரு முக்கியமான விஷயம், நாம் அனுமதித்தால், விரும்பும் அடிமைப்படுத்திவிடும்! பல சமயங்களில்,
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
ஆன்மிகத்தேடல் என்ற பெயரில் நாம் சுதந்திரத்தைத் தேடி ஓடுகிறோம். நாம் அப்படித் தேடி ஒடத் தேவையில்லை என்று உணரும்பொழுதுதான் சுதந்திரம் நிகழ்கிறது !
விடுதலை வேண்டும் என்ற எண்ணத்தை நாம் கைவிட வேண்டும். விடுதலையை மட்டுமே நாம் நாம் நம்ப அப்படியென்றால் மட்டுமே நாம் அதை அனுபவமாக உணர முடியும். இல்லாவிடில், விடுதலைக்கான அடிமையாக்கிவிடலாம். நாம் ஏற்கெனவே சுதந்திரமாகத்தான் இருக்கிறோம் என்று நாம்
நம்மிடம் என்னவெல்லாம் இருக்கிறதோ, அவற்றை அப்படியே ஏற்றுக்கொண்ட அந்த நிமிடமே, நம் எதிர்ப்பை நிறுத்திவிட்டு, தடையின்றி ஓட ஆரம்பிக்கிறோம். !
தெரிந்துகொள்ளும்பொழுது மட்டுமே, நாம் இந்தப் போராட்டமே வீண் என்பதை உணர்கிறோம்; சுதந்திரத்தை அனுபவிக்கிறோம்.
நம்மிடம் என்னவெல்லாம் இருக்கிறதோ, அவற்றை அப்படியே ஏற்றுக்கொண்ட அந்த நிமிடமே, நம் எதிர்ப்பை நிறுத்திவிட்டு, தடையின்றி ஓட ஆரம்பிக்கிறோம். நம் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரத்தையோ அல்லது சக்தியையோ வேறு ஒருவருக்கோ அல்லது வேறு எதற்கோ நாம் கொடுப்பதை நிறுத்தும்போது, எதுவும் நம்மை அடிமைப்படுத்தாது; நாம் சுதந்திர உணர்வை அனுபவிப்போம்.
ஆன்மிக அனுபவமாக்குங்கள்
கேள்வி: ஸ்வாமிஜி, மதத்திற்கும், ஆன்மிகத்துக்கும் உள்ள வித்தியாசம், மனஸாக்ஷிக்கும் விழிப்புணர்வுக்கும் உள்ள அதே வித்தியாசம் தானா?
பதில்: நீங்கள் மிகச்சரியாகப் புரிந்துகொண்டுவிட்டீர்கள்! ஆம், அதேதான்!
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், மோசஸ் தம் குருவைச் சந்தித்தபொழுது, அவருடைய ஆன்மிக அனுபவத்தின் உருவகமாகப் பத்து கட்டளைகள் வெளிப்பட்டன! மோசஸ், தம்முடைய ஆன்மிக உணர்வுமாற்றத்தால், அஹிம்ஸை, பேராசைகொள்ளாமை போன்ற அந்த 10 கட்டளைகளின் எல்லாக் கருத்துகளையும் தெரிந்துகொண்டார்.
அவை வெறும் வார்த்தைகளோ அல்லது அறிவுரைகளோ அல்ல. அவை மிக அழகான வெளிப்பாடுகள். ஒரு ஜ்ஞாநமடைந்த இருப்பு எப்படி வாழ்கிறது என்பதற்கான வெளிப்பாடுகள். அவர் குருவோரு கலந்துவிட்டதன் விளைவாக இவை அவருடைய விழிப்புணர்வாக மாறின.
ஏனென்றால், அவற்றை அவருடைய அனுபூதியாக உணர்ந்தபின், இந்த உண்மைகளே அவருடைய திடநம்பிக்கையாகிவிட்டதால், மோசஸால் அவற்றைப் பின்பற்ற முடிந்தது. அவரோடு நெருக்கமாக இருந்த ஒரு சிலரே, அவர் எதை அனுபவித்து என்பதைப் புரிந்துகொள்ளவும், அந்த ஸ்தீயங்களைப் அதனால் விழிப்பணர்வின் இருந்தன.
அந்த அனுபவம் நிகழாதவரை, அந்த வெளிப்பாடுகள் வெறும் விதிமுறைகளாக மட்டுமே இருக்கும். விதிமுறைகளாக இருக்கும்வரை, அந்த ஸ்த்யங்கள், சுதந்திரமானவர்களாக பதிலாக, அவர்களையும் அவற்றைப் பின்பற்றுபவர்களையும் பந்தப்படுத்தி விதிமுறைகளாகிவிடுகின்றன. என்பதிலிருந்து கீழிறங்கி, மதக் கோட்பாடுகளாகச் சிதைந்துவிடுகின்றன.
கூர்ந்து தர்மம் - ஸ்ராதரு காமம். ஆன்மிக வெளிப்பாடுகளுக்கும் மத சமூகக் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை மிகத்தெளிவாகப் பிரித்துக் காண்பிக்கிறது.
ஸ்த்யங்கள், ஸ்ருதி அழைக்கப்படுகின்றன. ஸ்ருதி 'தி' என்பது சிறந்த ஞானிகளின் போதனைகள், ஸ்ம்ரு 'தி' என்பது மனஸாக்ஷியைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள்.
ஸ்ம்ரு தியை இயற்றியவா்கள், அதனை இடம், காலம் பொறுத்து மாற்றிக்கொள்ளலாம் என இணைத்துள்ளார்கள்.
பகவத்கீதையில் ஓரிடத்தில், சமய நூல்களை வெறுமனே படிப்பது மட்டும் ஒருவனை இறைவனிடம் அதாவது ஜனுரைத்திற்கு அழைத்துச் சென்றுவிடாது என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
சமய நூல்கள், வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் கீதை ஆகியவை உள்ளுலகில் அனுபவிக்க வேண்டியவை. அவை ஒவ்வொரு தனிமனிதனின் ஸ்தீயங்களாக மாற வேண்டியது மிகவும் அவசியம். அப்பொழுது மட்டுமே அவை உங்களுடைய விழிப்புணர்வாக, உங்களுடைய சொந்த ஆன்மிக ஸ்தீயங்களாக மாறும்.
இல்லையென்றால், அவை மற்ற எந்த விதிமுறைகளையும்விட, எந்தவிதத்திலும் பெண்களும் விதிகளையும் கட்டுப்பாடுகளையும் மீறி நடக்கும் மனப்பாங்குடையவர்களாகவே இருக்கிறார்கள். வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் அவர்கள் விதிகளை மீறி நடப்பார்கள்.
ஆனால், மாறிவிடும்பொழுது, ஒருவருடைய உள்ளுலக ஆன்மிக அனுபவமாகி விடும்பொழுது, இந்த லகுயங்களின் வழி வாழ்வதே பேரானந்தமாக மாறிவிடும்.
உள்ளுலக நுட்பம்
13.7-11 அடக்கம், கர்வம்மின்மை, அஹிம்ஸை, பொறுமை, சகிப்புத்தன்மை, எளிமை, ஒரு ஜ்ஞானகுருவுக்குச் சேவைசெய்தல், தூய்மை, மனஉறுதி, சுயக்கட்டுப்பாடு;
புலன்களைத் திருப்தி செய்யும் பொருட்களைத் துறத்தல், அஹங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, முதுமை, வியாதி ஆகியவற்றின் சுழற்சியை அறியும் திறன்;
குழந்தைகள், மனைவி, வீடு மற்றும் பிறவற்றின்மீது பற்றின்மை, சுக, துக்கங்களில் சமநிலையில் இருத்தல்;
என்னிடத்தில் நிலையான கலப்படமற்ற பக்தி, ஏகாந்தமான இடங்களில் வசித்தல், பொது மக்களிடமிருந்து விலகிவசித்தல்; 'தன்னை உணர்தலின்' முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்ளுதல், இறுதி ஸ்தீயத்திற்கான தேடல்; - இவையே 'புத்திசாலித்தனம்' என்றும், இதற்கு எதிர்மறையாக உள்ள எல்லாவற்றையும் 'அறியாமை' என்றும் வலியுறுத்துகிறேன்.
குணநலன்களைப் பயிற்சிசெய்து பெற முடியாது
இந்த ஐந்து ஸ்லோகங்களிலும் கிருஷ்ணர் ஒரு அருமையான நுட்பத்தைக் கொடுக்கிறார்.
இதுவரை அவர் அர்ஜுனனுக்குக் கொடுத்தது ஒரு புத்திசாலித்தனமான புரிதலே. ஆனால் இப்பொழுது அவர், தாம் சொன்னவற்றை நாம் உணர்ந்துகொள்வதற்கும், நுட்பத்தையும் தருகிறார்.
நம் உள்ளுலகை சுதந்திரமடையச் செய்யும் இந்த 5 ஸ்லோகங்களையும் நான் தொழிற் நுட்பங்கள்' என்று சொல்லுவேன். ஒருவர் தன்னை விடுவித்துக்கொள்வதற்கான நுட்பம் இது.
இந்த உடல்-மனத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொள்வது எப்படி, அவற்றை நம்முடைய கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவது எப்படி என்பதை இங்கு அவர் மிக அழகாக விளக்குகிறார்.
முதலில், நாம் புரிந்து கொண்டால், நாம் உடல்-மனத்திலிருந்து விடுதலை பெறுவோம். இங்கே அவர், உடல்-மனத்திலிருந்து விடுதலையடையும் நுட்பத்தையும், அதன்மூலமாக எப்படி விழிப்புணர்வு அனுபவத்தைப் பெறுவது என்கிற நுட்பத்தையும் மிக அழகாகத் தருகிறார்.
முதலில் அந்த ஸ்லோகங்களின் பொருளைத் தருகிறேன்.
அடக்கம், அஹிம்ஸை, உண்மையான ஜ்ஞானகுருவை அணுகுதல், சுத்தம், தளராத மன உறுதி, சுயக்கட்டுப்பாடு, புலனின்பத்திற்கு காரணமான பொருட்களைத் துறத்தல், அஹங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, முதுமை, வியாதி ஆகியவற்றின் தீமைகளை அறியும் உணர்வு, எல்லாச் சிக்கல்களிலிருந்தும் சுதந்திரம், இன்ப, துன்பத்தில் நடுநிலை வகித்தல், நிலையான பக்தி, ஆன்மிக வழியில் வாழ ஆழமான விருப்பம், இறுதி உண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தல், பற்றின்மை. இவை எல்லாவற்றையும் நான் 'புத்திசாலித்தனம்' என்று அறிவிக்கிறேன். இவற்றைத் தவிர உள்ள ஏனைய அனைத்துமே 'அறியாமை'யே.
இந்த ஸ்லோகங்களில் பல போதனைகளை, ஒரு நீளமான பட்டியலிட்டு கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். நான் உங்களுக்கு மிகத் தெளிவாகச் சொல்கிறேன், அவர் இங்கே கொடுத்திருக்கும் எல்லாக் குணநலன்களையும் நேரிடையாகக் கடைபிடித்து வாழ முயற்சித்தால், 'நமக்கு பைத்தியம் பிடித்துவிடும்' என்றுதான் நாம் நினைப்போம்!
இந்தக் குணநலன்களை உண்மையிலேயே ஒவ்வொன்றாகப் பயிற்சிசெய்து பெற முடியாது. நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான், அது, விழிப்புணர்வு நமக்குள் நிகழ உதவுவதே!
விழிப்புணர்வு நிகழ்வதன் மூலம், நாம் இந்த எல்லாக் குணநலன்களையும் வெளிப்படுத்த ஆரம்பிப்போம். இந்தப் பண்புநலன்கள் நிகழும், மலரும்!
நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது விழிப்புணர்வு நமக்குள் நிகழ உதவுவதே!
உதாரணத்திற்கு, நீரும் சேறும் கலந்து
அசுத்தமாகிவிட்ட ஒரு தொட்டி நீரைச் சுத்தம் செய்ய விரும்புகிறோம் என வைத்துக்கொள்ளுங்கள். உடனே நம் கைகளைத் தொட்டியினுள் விட்டு, கைகளினால் சேற்றை அள்ளி வெளியில் போட முடியுமா? அப்படி நம் கைகளை நீரினுள் விட்டு சேற்றை எடுக்க முயற்சித்தால், என்ன நடக்கும் ? கீழே படிந்திருந்த சேறு முழுவதும், மேலெழும்பி கலங்கி, நீரை மேலும் அசுத்தமாக்கி விடும், அதுதான் நடக்கும்.
ஆனால், அப்படிச் செய்யாமல், அந்த நீர்த் தொட்டியினுள் நிறைய சுண்ணாம்புத்தூளைத் தெளித்தோமென்றால், அது அந்த சேற்று அழுக்கையெல்லாம் ஈர்த்துக்கொண்டு, தொட்டிக்குக் கீழே படிந்து விடும். அதன் மூலம் தெளிந்த நீரை நாம் பெற முடியும். நம்முடைய மனதும் சேறு நிறைந்த ஒரு தொட்டிதான். நாம் அதை அடக்க முயற்சி செய்தால், அதனோடு போராடினால் நாம் மேலும் சிக்கல்களை உருவாக்குவோம். அதற்குப் பதிலாக, சுண்ணாம்பு தூளைப் போன்ற ஒரு சிறிய தியானத்தைச் செய்யுங்கள்; பிறகு இளைப்பாறுங்கள். வெறுமனே உங்களுடைய விழிப்புணர்வுக்குள் தியானத்தைப் போட்டுவிடுங்கள்; பிறகு இளைப்பாறுங்கள். அனைத்து அசுத்தங்களும் அடங்கிவிடும்!
நாம் விழிப்புணர்வுள்ளவராக மாறும் அந்தத் தருணமே, ஸாக்ஷியாக இருந்து எல்லாவற்றையும் பார்க்கும் ஸாக்ஷி பாவனை மலரத்துவங்கும்; மொத்த விஷயங்களுமே சரியாகிவிடும். தானாகவே எல்லா அசுத்தங்களும் கீழே படிந்துவிடும். ஸாக்ஷியாக இருந்து பார்க்கும் விழிப்புணர்வுதான் நம்முடைய இருப்பைச் சுத்தம் செய்யும் 'சுண்ணாம்புத் தூள்' ஆகும்.
பெரும்பாலும் நாம் சாஸ்த்ரங்களையும், பிற புத்தகங்களையும் படித்துவிட்டு, உடனே நாம் அந்த உபதேசங்களை நம் வாழ்க்கையில் பின்பற்றத் துவங்கிவிடுகிறோம். உதாரணத்திற்கு, 'உன்னை நீ நேசிப்பது போலவே உன் பக்கத்து வீட்டுக்காரரையும் நேசி' என்று அவை உபதேசித்தால், உடனே நாம் அதைக் கடைப்பிடிக்கத் துவங்கிவிடுகிறோம், அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமலேயே!
முதல் பிரச்சினையே, நாமே நம்மை நேசிப்பதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளாமலிருப்பதுதான்.
முதலில், நம்மால் மற்றவர்களையும் நேசிக்க இயலாது என்பதை நாம் புரிந்துகொள்ளவில்லை. அடுத்ததாக, அன்பு இயற்கையாகவே நிகழக்கூடிய பெற்றிருக்க வேண்டும். பிறகு அன்பு தானாகவே நிகழும் ஒரு செயல்முறையாகிவிடும்.
நாம் மற்றவர்கள் மீது அன்புச் சுமையை ஏற்றினால், அது ஒரு வியாபாரப் பரிமாற்றமாகிவிடும். நாம், தூய்மையற்ற அன்பின் வடிவத்தை மட்டுமே அறிவோம். 'தூய அன்பு' என்பது வெறும் பாதுகாப்புக்காகவோ அல்லது பிரதிபலனை எதிர்ப்பார்த்தோ ஏற்படுவது அல்ல; அது தூய இருப்பின் ஒரு வெளிப்பாடு; அது தானாகவே நிகழும்.
நம்முடைய இருப்புக்கு நாம் உண்மையாக, நம்முடைய மையத்திற்கு உண்மையாக இருந்தால், அதுவே போதும். உடனடியாகவே, நாம் சுதந்திரமடைந்து விடுவோம்.
நினைப்பதை அப்படியே பேச முடிந்தால், ஞானியாவீர்கள்
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொல்கிறார், "உங்கள் மனத்தையும் வாயையும் 'நேர்மை' என்னும் ஒரு நேர்க்கோடு இணைத்தால், நீங்கள் சுதந்திரம் அடைகிறீர்கள்!''
சமூகம் விரும்பும் விதத்தில் நாம் செயலாற்றினால், நம்மைச் சமூகம் பாராட்டுகிறது. சமூகம் பாராட்டுகிறது என்பதற்காக நாம் செயலாற்ற ஆரம்பித்தால், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். ஏனெனில் அவற்றை நாம் உள்ளார்ந்த விருப்பத்துடன் செய்வதில்லை. நாம் செய்ய விரும்புவதற்கும், நாம் செய்பவற்றுக்கும் இடையே தொடர்ந்து நிலவும் இந்த வேறுபாட்டால்தான் பிரச்சினைகள் உருவாகின்றன.
நாம் விழிப்புணர்வை உருவாக்குவதற்குப் பதிலாக, செயல்களையே உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நமது 'இருப்பு' மீது கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, நாம் நம் 'செயல்'களின் மீதுதான் கவனம் செலுத்துகிறோம். நமது செயல்கள் எந்த வகையிலும் நமக்கு உதவாது. நமது இருப்பு மட்டுமே நமக்கு உதவப் போகிறது. அதனால், இருப்பின் மீது கவனம் செலுத்துங்கள், செயல்கள் மீது அல்ல !
செயல்களின் மீதே கவனம் செலுத்தும் ஒருவர், செயல்களை மட்டுமே தொடர்ந்து செதுக்கிக் கொண்டிருப்பார்; ஆனாலும் அவரது இருப்பு, முன்பிருந்த அதே பழைய போராட்டம், மனஅழுத்தம், துன்பங்கள், சண்டை சச்சரவு ஆகியவற்றைத்தான் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். ஆனால் நம் இருப்பின்மீது செயல்பட்டால், நாம் தானாகவே மலருவோம்; சரியான சக்தியை, சரியான விழிப்புணர்வை தானாகவே வெளிப்படுத்துவோம் !
ரிஷி பதஞ்ஜலி, நம்முள் இறுதி விழிப்புணர்வு மலர்வதற்கும், யோகா நிகழ்வதற்குமான அஷ்டாங்க யோகம் என்றும் எட்டு முக்கியமான செயல்முறைகளைப் பற்றி தம்முடைய யோக நூலில் விவரித்திருக்கிறார்.
அதில் ஒரு அங்கமானது, அஹிம்ஸை, ஸ்தீயம் போன்ற பயிற்சிகளைப் பற்றி விவரிக்கிறது. பதஞ்ஜலி அல்லது கிருஷ்ணர் சொல்லியிருக்கிறார்கள் என்பதற்காக, நாம் இந்த நற்பண்புகளை நடைமுறைப்படுத்தினால், அந்த நற்பண்புகள் நமக்குள்ளே உண்மையாக வளராது: அவை ஆழமாக உள் இறங்காமல், மேலோட்டமாகத் தோல் அளவில் நின்றுவிடும்.
உண்மையான அறிம்ஸை நிகழும்பொழுது, நமது இருப்பே அன்பை வெளிப்படுத்தும், எதை நோக்கிச் செலுத்தப்படுகிறது என்பது அங்கு ஒரு பொருட்டே அல்ல! நம் எதிரியே நம் எதிரே நின்றாலும்கூட, அன்பு ஒன்றே நமக்குள் நிலைத்திருக்கும்; வேறு எந்த உணர்ச்சியும் நம்முள் இருப்பதில்லை. இதைத்தான் கிருஷ்ணர் விரும்புகிறார்.
| உண்மையான அஹிம்ஸை நிகழும்பொழுது, நமது இருப்பு நிலையே அன்பை வெளிப்படுத்தும்! | தெய்விக | நிபந்தனையற்றதாகத்தான் என்பதை அக்காட்சி தெளிவாக்குகிறது. | அன்பானது இருக்கும் |
| காட்சியை | அழகான அருமையான காட்சி! | கற்சிலையாக் | |
| தென்னிந்தியாவில், கோயிலுக்குச் செல்ல ஆலோசிப்பதில்லை. நமது இருப்பின் மையத்தில் நாம் நிலைகொள்ளும்போது, | கர்நாடக மாநிலத்திலுள்ள | ஒரு பாம்பு படமெடுத்து, ஒரு தவளையைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் அன்பானது, இல்லை |
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. மையத்தில் நாம் நிலைகொள்ளும்போது, அன்பு நற்பண்புகள் நிகழும். அவை நம் இருப்பின் வெளிப்பாடுகான்.
இந்த ஐந்து ஸ்லோகங்களில் கிருஷ்ணர் சொல்லியிருப்பவை அனைத்தும், அந்த விழிப்புணர்வு மலர்ந்தால், நம்முள்ளிருந்து வெளிப்படும் வெளிப்பாடுகளே தவிர, பயிற்சி செய்யப்பட வேண்டிய விஷயங்கள் அல்ல! மற்றவர்களைத் திருப்திபடுத்துவதற்காக, மகிழ்விப்பதற்காக அவற்றை ஆரம்பித்தால், அடிமைகளாகிவிடுவோம்.
உள்ளுலக சக்தியை வெளிப்படுத்தி வாழ்ந்தோமென்றால், நாம் ஒருபோதும் அடிமையாக மாட்டோம்!
டையோஜினஸின் கதையில், அவர் கைகளுக்கு விலங்கிட்டுவிட்டால் போதும், அவர் தங்களின் அடிமையாகிவிடுவார் என்று அந்தக் கூட்டம் நினைத்தாலும்கூட, அவர் அவர்களுக்கு ஒருபோதும் அடிமையாகவில்லை என்பதை நாம் கவனிக்கலாம். அவர் உள்ளுலகச் சக்தியையும் தூய விழிப்பணர்வையும் வெளிப்படுத்தினார். நாமும் அந்தமாதிரியே நம்முடைய உள்ளுலகச் சக்தியை வெளிப்படுத்தி வாழ்ந்தோமென்றால், மற்றவர்கள் நம்மை ஒரு அடிமை என்று நினைத்தாலும்கூட, நாம் ஒருபோதும் அடிமையாக மாட்டோம்.
சாதாரணமாக, நம்மைப் பற்றிய மற்றவர்களின் கருத்துகளைத்தான் நம்புகிறோம். நம்மை அளக்க உதவும் ஒரு அளவுகோலாக, மற்றவர்களின் அளவுகோல்களைத்தான் ஏற்றுக்கொள்கிறோம். பின், பிரச்சினைகளுக்குள்ளாகிறோம். இதைத்தான் நான் 'குற்றவுணர்ச்சி' என்றழைக்கிறேன்.
நமது மேம்படுத்தப்பட்ட அறிவைக்கொண்டு திரும்ப ஆராய்ந்து பார்ப்பதே குற்றவுணர்ச்சியாகும். நம் கடந்தகாலத்தை நமது தற்போதைய புத்திசாலித்தனத்தைக்கொண்டு மறுபரிசீலனை செய்யும்பொழுது, நாம் நமக்குள் குற்றவுணர்ச்சியையும் துன்பத்தையும் உருவாக்கிக்கொள்கிறோம்.
மிகத் தெளிவாக இருங்கள், நாம் ஒவ்வொரு கணமும் நம்மைத் திருத்தி, மேம்படுத்திக்கொண்டேயிருக்கிறோம். சில மணி நேரத்திற்குமுன் இருந்த அதே 'நாம்' இப்பொழுது இல்லை. நம்முடைய புத்திசாலித்தனம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதனால் இயற்கையாகவே, நாம் நம் கடந்தகால நிகழ்ச்சிகளைத் திரும்ப நினைத்து அவற்றை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, நாம் அதில் சிலவற்றைத் தவிர்த்திருக்கலாமோ என்று உணருகிறோம்.
பிரச்சினை பொறுப்பு என்று நினைக்கிறோம். தினசரி நடவடிக்கைகளை முடிவுசெய்து நடத்துவதும் நாம்தான் என்று நினைக்கிறோம். நாம்
நம்முடைய புத்திசாலித்தனம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது!
எல்லாவற்றையும் நம் தோள்களின் மீது சுமத்திக்கொண்டு, பிறகு குற்றவுணர்ச்சி, கவலை போன்ற உணர்ச்சிகளை உள்ளே வர அனுமதித்துவிடுகிறோம்.
இந்தப் பிரபஞ்சமே தூய்மையான புத்திசாலித்தனம்தான் வாழ்க்கையை எப்படிக் கவனமாகப் பார்த்துக்கொள்ள அதற்குத் தெரியும் என்பதை நாம் ஞாபகத்தில் கொண்டோமானால், நாம் எந்தவித பதட்டமும் இல்லாமல் தளர்வாக ஒய்வாக இருப்போம்.
அது மட்டுமல்ல, நாம் பிரபஞ்ச அறிவை இயங்க அனுமதிக்கும்பொழுது, கிருஷ்ணர் சொல்லும் அழகான பண்புகளை தன்னிச்சையாக வெளிப்படுத்துவோம். இந்தப் பண்பு நலன்களை வேறெதைச் செய்தும் நாம் அடைந்துவிட முடியாது.
கிருஷ்ணர், முதலில் பணிவு அல்லது க்ஷிமார்த்வம் என்பதைத்தான் சொல்கிறார்.
பணிவு, நாம் முயற்சிசெய்து அடையப்பட முடியாத ஒரு பண்பு. பணிவை நாம் நம் முயற்சியினால் பெற முடியாது. அப்படி முயற்சியினால் அது பெறப்பட்டால், அது பார்க்க மிகவும் அழகற்றதாக இருக்கும்.
ஒவ்வொரு மனிதரும் தனிப்பிறவி என்பதை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ளும்பொழுதுதான் பணிவு என்பது நிகழுமே தவிர, ஒவ்வொருவரும் சமமே என்று நினைப்பதால் பணிவு வருவதில்லை. முதல் விஷயம், இங்கு எதுவும் சமம் அல்ல! ஒவ்வொன்றுமே தனித்துவம் வாய்ந்தது என்பதை ஆழமாகப் புரிந்துகொண்டோமானால், நாம் தானாகவே ஒவ்வொருவரையும் மதிப்போம். ஒவ்வொருவரும் பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கு வழங்க, வாழ்க்கைக்கு வழங்க தங்கள் பங்குக்கு ஏதாவது பெற்றிருக்கிறார்கள்.
உங்கள் எதிரிகூட எதிரியல்ல
ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது நமது எதிரிகூட, நம்முடைய வளர்ச்சிக்குத் தம் பங்கினை அளிக்கிறார்! அவர் அதை மறைமுகமாகச் செய்கிறார். ஆனாலுங்கூட அதைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். நம்முடைய வளர்ச்சிக்கு அவர், தம் பங்களிப்பை அளிக்கிறார்.
ஒருவரை உபயோகமற்றவர் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். அவர் அப்படி உபயோகமற்றவராக இருந்தால், அவரை இந்த உலகத்திலிருந்து வெகுகாலத்திற்கு முன்பே நீக்கியிருக்கும். ஏதாவது ஒருவழியில், பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கு நாமும் நம் பங்களிப்பைச் செய்து கொண்டிருந்தால் மட்டுமே, நம்மை இங்கு இருக்க பிரபஞ்சம் அனுமதிக்கும். இல்லையென்றால், நாம் இந்தப் புவியிலிருந்து தூக்கி எறியப்படுவோம். நாம் நம் பங்கை அளிக்கும்வரை, நாம் இந்த உலகில் நிலைத்திருப்போம்.
பொதுவாக, நாம் ஒருவரை நம்முடைய மரியாதையைப் பெறத் தகுதியானவர்தானா என்றுதான் மதிப்பீடு செய்கிறோம். அதை அளப்பதற்கென்று, சொந்த அளவுகோலை வைத்திருக்கிறோம்.
அவர் எந்தளவுக்குத் தகுதியுள்ளவராக இருக்கிறார், சமூகம் அவரை எவ்வளவு தூரம் மதிக்கிறது என்று பார்ப்போம். அதற்குப்பிறகே, 'சரி, நான் அவருக்குக்
கொஞ்சம் மரியாதை காட்டலாம் என்று நினைக்கிறேன்' என்று நம் மனம் முடிவுசெய்கிறது. என்னவோ நம்முடைய மரியாதை அவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்பதைப் போலவும், அதன் காரணமாகத்தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதைப் போலவும் நடந்துகொள்கிறோம் !
ஒவ்வொரு ஜீவனும் பிரபஞ்சத்தின் ஒரு தனித்துவம் மிக்க படைப்பு என்பதையும் நம்முள் இருக்கும் அதே தெய்விகம்தான் அதனுள்ளும் இருக்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ளும்பொழுது, நாம் தானாகவே பணிவையும் கர்வமின்மையையும் வெளிப்படுத்துகிறோம்.
ஒவ்வொரு மனிதரும் தனிப்பிறவி என்பதை நாம் ஆழமாகப் புரிந்து கொள்ளும் பொழுது பணிவு என்பது நிகழும் !
ஆன்மிகத் தேடல்கொண்ட ஒருவருள்ளே இது சாதாரணமாகவே நிகழ்ந்து வெளிப்பட வேண்டும். இதையே விளக்குகிறார். இன்னொரு முக்கியமான விஷயம், ஆசார்யோபாலர் அதாவது ஒரு சிறந்த உண்மையான, ஆன்மிக குருவை அணுகுவதைப் பற்றி, அவர் இன்னொரு ஸ்லோகத்திலும் சொல்கிறார்.
தத் வித்தி ப்ரூரி பாதேநா பரிப்ராச்'நேநா லேவயா
அப்படியென்றால், நாம் அந்த குருவை கேள்விகளோடு அணுக வேண்டும், அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு அவரிடம்
பணிவோடு விண்ணப்பிக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம்.
கிருஷ்ணர் ஏன் அதைச் சொல்கிறார்? அப்படிச் சொல்லவேண்டிய அவசியம் என்ன ?
ஆன்மிக நூல்கள், மீண்டும் மீண்டும் குருவின் அவசியம் பற்றி வலியுறுத்துகின்றன. பகவத் கீதையில் மட்டுமல்ல, ஜென் புத்தமதம், ஜைன மதம், யூதமதம், இஸ்லாம் அல்லது கிருத்துவம் என்று எதுவாக இருந்தாலும், குரு என்பவர் நம் ஆன்மிக வாழ்வில் ஒரு முக்கிய பங்காற்றுகிறார் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றன! மிக முக்கியமாக வேத சம்பிரதாயத்தில், குருவானவர் ஒரு மிகப் பெரிய பங்காற்றுகிறார். ஏன் ?
தொடர்ந்து ஒருவர் விழிப்பு நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதையும் தொடர்ந்து அவர் விழிப்புணர்வை வெளிப்படுத்துவதையும் நேராகப் பார்த்தாலொழிய, விழிப்புணர்வு தன்மை சாத்தியம்தான் என்பதை நமது விழிப்புணர்வற்ற தன்மை நம்ப மறுக்கிறது.
நாம் இந்த ஸ்லோகங்களைப் படிக்கும்பொழுதும் கேட்கும்பொழுதும் நம் வெளிமனது அவற்றை நம்புகிறது. ஆனால் உள்மனது 'இவையெல்லாம் பழைய சித்தாந்தங்கள், யாரோ ஒரு பைத்தியம் இவையெல்லாவற்றையும் எழுதியிருக்கலாம்!' என்றே சொல்கிறது.
நமதுஉள்மனது அந்த ஸ்லோகங்களையும், ஜ்ஞாநமடையக்கூடிய சாத்தியத்தையும் ஏற்றுக்கொள்ளாது. இதயமும் இதன் காரணமாக ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக்கொள்கின்றன. நமது பட்டறிவு, 'இவையெல்லாம் ஸத்யமாகள்தான்' என்று ஏற்றுக்கொள்கிறது; நாம் தர்க்க ரீதியாக ஒப்புக்கொள்கிறோம், ஆனால் உணர்ச்சி ரீதியாக நாம் அதை அனுபவிக்க முடிவதில்லை.
நாம் பார்க்கும்பொழுது, உணர்ச்சிகள் தானாகவே அதை உணரத் தொடங்குகின்றன. தொடர்ந்து கேள்விகள் கேட்கும் நம்முடைய உள்மனதுகூட, ஒரு வாழும் ஞானியைப் பார்க்கும்பொழுது அடங்கிவிடுகிறது. புத்தகங்களைப் படிக்கும்பொழுது, அதன் எழுத்து வடிவங்கள் மூலமாகக் கற்கிறோம் ஒரு ஜ்ஞாந குருவோடு வாழும்பொழுது, அவருடைய 'உடல் மொழி' மூலம் கற்கிறோம்.
அவர், சத்தியத்தை உறுதிசெய்யும் ஒரு வாழும் உதாரணம். இவையெல்லாம் நமது வாழ்க்கையில் உண்மையாகிவிட முடியும் என்பதை அவர் நிரூபிக்கிறார். அவர் இதைச் சொல்லும்பொழுது, நாம் மேம்போக்காக நம்ப வேண்டிய அவசியம் இல்லை. அது, நம்மை ஆழமாகத் தொடும் ஒரு திடமான அனுபவமாகவே மாறிவிடும்.
என்னால் முடிந்தால், உங்களாலும் முடியும்
நாம் ஒரு ஜ்ஞாநகுருவை நேரிடையாகச் சந்திக்கும்பொழுது, மூன்று விஷயங்கள் நிகழ்கின்றன.
முதலாவதாக, ஒரு நாளின் இருபத்திநான்கு மணி நேரமும் ஆனந்தமான உணர்விலேயே அல்லது நிலையான ஆனந்தத்திலேயே வாழ முடியும், அது சாத்தியம்தான் என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். அந்த நிலையை அடைவதற்கான திடமான நம்பிக்கையும் உத்சாகமும் அங்கே இருக்கிறது. அந்தச் சாத்தியத்தை நாம் புரிந்துகொள்கிறோம்.
அடுத்ததாக, ''ஆமாம், அது சரிதான், ஆனால் அது குருவுக்கு மட்டுமே சாத்தியம்; அது எனக்கு சாத்தியமாகுமா?' என்று நாம் கேட்கிறோம். 'சாத்தியம்தான்' என்ற உறுதியும் நம்பிக்கையும் நாம் குருவை சென்றடையும்பொழுது, நமக்குக் கொடுக்கப்படுகிறது.
குருவானவர், "என்னால் அடைய முடியுமென்றால், ஏன் உன்னால் அடைய முடியாது?'' என்று வினவி நமக்குள்ளே நம்பிக்கையை ஊட்டுகிறார்.
ஒரு விதையானது, 'தான் ஓட்டைக் கிழித்து முளைவிட்டால், ஒருவேளை, தான் இறந்துவிடக்கூடும்' என்று நினைத்து பயந்து முளைவிடாமல் இருப்பது போன்றதே இது.
ஒரு விதையினுள் இருக்கும் மரமோ, அந்த விதை உடைவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் விதையோ, ஆனால் அதற்குள் இருக்கும் மரம், "நீ உடைந்தால் மட்டுமே நான் நிகழ முடியும், '' என்கிறது.
''நான் திறந்தாலும் அந்த மரம் வளருமோ, வளராதோ யாருக்குத் தெரியும் ?'' என்கிறது விதை.
அந்த மரமோ, ''நீ திற, அப்பொழுதுதான் நான் வளர முடியும்," என்று சொல்கிறது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
அதற்கு அந்த விதை, ''இல்லை, இல்லை, நீ வளர்வதைப் பார்த்த பிறகே நான் திறப்பேன்,'' என்கிறது.
விதை, வளர்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. விதை உடைவதற்காகக் காத்திருக்கிறது
குருவானவர். "என்னால் அடைய முடியுமென்றால், ஏன் உன்னால் அடைய முடியாது?'' என்று வினவி, நமக்குள்ளே நம்பிக்கையை ஊட்டுகிறார். !
குரு, இங்கு மரத்திற்கு ஒப்புவமையாக சொல்லப்படுகிறார். வாழ்க்கையில்கூட, நாம் அடியெடுத்து வைக்கப் பயப்படுகிறோம். நாம் அடியெடுத்து வைத்தால், ஜ்ஞாநமடைந்துவிட முடியும் என்ற உத்தரவாதத்தை எதிர்பார்க்கிறோம். நாம் 'நடுவில் மாட்டிக்கொள்கிற சூழ்நிலையை' நினைத்து, அடியெடுத்து வைக்கவே பயப்படுகிறோம் !
ஒருமுறை அடியெடுத்து வைத்த பிறகு, நம்மால் ஜ்ஞாநமடைய முடியாவிட்டால், அதன்பிறகு நம்மால் சாதாரண வாழ்க்கைக்கும் திரும்ப முடியாது; ஜ்ஞாந வாழ்க்கையையும் தொடர முடியாது. இந்த நிச்சயமற்ற நிலையையும் பாதுகாப்பின்மையையும் கண்டு நாம் பயப்படுகிறோம். ஆனால், குரூ அதற்கு உத்தரவாதம் அளிக்கிறார்.
ஒரு சின்ன கதை :
ஒரு பத்திரிகை நிருபர், ஜனாதிபதி தேர்தலுக்காக நிற்கும் ஒரு வேட்பாளரைப் பேட்டி காணச் சென்றார். வேட்பாளர் தம்முடைய தேர்தல் பிரச்சாரத்தின்பொழுது, ''நான் வெற்றியடைய போவது உறுதி, அதை நான் தெளிவாகப் பார்க்கிறேன், ' என்று சொன்னதைக் கேட்டிருந்த நிருபர், அந்தப் பேட்டியின்பொழுது, அதைச் சுட்டிக்காட்டி, ''அப்படியென்றால், நீங்கள் ஏன் இவ்வளவு கவலையோடு காணப்படுகின்றீர்கள் ?' என்று அவரைக் கேட்கிறார்.
அதற்கு அந்த வேட்பாளர் நான் நேர்மறை நோக்கு கொண்டவன்தான், ஆனால் அது என் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லையே!'' என்று பதில் சொன்னார்.
நாமும் இதேபோல்தான் மாட்டிக்கொண்டு நிற்கிறோம்! நமக்கு அந்த அனுபவம் சாத்தியம்தான் என்று நம்புகிறோம், ஆனால் அதே நேரத்தில் துணிச்சலான முடிவுகளை எடுக்க நாம் பயப்படுகிறோம்.
குரு ஏற்கெனவே ஒரு மரமாகி இருக்கிறார். சிஷ்யனுக்கு நம்பிக்கையூட்டுகிறார். அவர், ''கவலைப்பட வேண்டாம், முதலில் நானும் உன்னைப் போலவேதான் போராடினேன். துணிந்து வெடித்தேன், இப்பொழுது என்னைப் பார், நான் மலர்ந்திருக்கிறேன். நான் இறந்துவிடவில்லை. நான் ஒரு மரமாகி இருக்கிறேன். நீ வெடித்தாலும், நீகூட ஒரு மரம் ஆகிவிடுவாய்,''என்று சொல்கிறார்.
குரு, நாம் மலர்வதற்கான சரியான சூழ்நிலையையும் நுட்பத்தையும் உருவாக்குகிறார்!
அவர் பார்த்துக்கொள்வதாக உறுதியளிக்கிறார். நாம் திறந்துகொண்டு மரமாக மாறுவதற்கு சக்தியை உருவாக்கி, நம்பிக்கையும் தருகிறார். ''நான் சாதித்திருக்கும்பொழுது, உன்னால் ஏன் முடியாது ?' என்று நமக்கு ஞாபகப்படுத்துகிறார்.
மூன்றாவதாக, குரு, அந்த மரம் உருவாவதற்கான சரியான சூழ்நிலையையும் சுற்றுச்சூழல், சரியான மண், நீர் முதலியவற்றை உருவாக்குகிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் குருவை நம்புவதும், வெடிக்க வேண்டியது மட்டும்தான்.
அதற்குத்தான் குரு, ஆச்ரமங்களை உருவாக்குகிறார். ஆச்ரமம், நாம் முற்றிலும் மலர்வதற்கு உதவும் ஒரு அருமையான சூழல். அங்கு அந்த விதை திறக்க முடியும்; மரமாகவும் மாற முடியும்.
அது ஒரு அறுவை சிகிச்சை கூடம் என்றும் சொல்லலாம். அங்கு நீங்கள் போகலாம், திறக்கலாம், மரமாகலாம், அனுபவத்தை வெளிப்படுத்தலாம். ஆச்ரமம் என்பது ஒரு சூழல், அங்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதால், நீங்கள் பாதுகாப்பான, பத்திரமான வழியில் விழிப்புணர்வுக்குள் நுழையலாம்.
குரு, நம்முடைய இருப்புக்குள் இருக்கும் அதீதத்தை உணர வைக்கிறார். அதனால் அவர் முதலில், தம்முடைய 'உடல் மொழி' மூலமாக, அது நிகழ்வதற்கான சாத்தியத்தை நமக்கு உறுதி செய்கிறார்.
அடுத்ததாக, அது நமக்கும்கூட சாத்தியமே என்பதை நமக்குத் தெளிவாகப் புரியவைக்கிறார்.
மூன்றாவதாக அது நிகழ்வதற்கான ஒரு சரியான சூழலையும் உருவாக்குகிறார்.
நான்காவதாக, நாம் அந்த விழிப்புணர்வில் நிலைத்திருக்க, எந்த இடையூறும் வராமல் பாதுகாப்பும் தருகிறார். இவையே ஒரு குருவின் பொறுப்புகள்.
அதனால்தான் வேத வழியிலான வாழ்க்கை முறையில், நாம் ஒரு வாழும் ஜ்ஞாநியிடம் சரணடைய வேண்டும் என்று மீண்டும் வற்புறுத்தப்படுகிறது. இதுதான் கிருஷ்ணர் சொல்லும் ஆசார்யோபாலநா. அவர், இந்த நுட்பத்தைச் சோதித்துப் பார்ப்பதற்கான முக்கிய விதிமுறைகளையும் தருகிறார்.
இங்கு யாரும் சமம் இல்லை
கேள்வி: ஜ்ஞாநம் குருவின் மூலமாகவே பெற முடியுமென்று நீங்கள் சொல்வீர்களானால், நாங்கள் ஜ்ஞாநமடைவதற்கு எங்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? குரு எங்களுக்கு வழிகாட்டினால்கூட நாங்கள் எப்படி முன்னேற முடியும் ?
கிருஷ்ணர், இந்த அத்தியாயத்தின் எட்டாவது ஸ்லோகத்திலிருந்து பன்னிரண்டாவது ஸ்லோகம் வரை, குறிப்பிட்ட சில குணங்கள்தான் உண்மையான புத்திசாலித்தனம் என்றும், மற்றவையெல்லாம் அறியாமையே என்றும் சொல்கிறார். இந்தக் குணங்கள் இலக்குகள் அல்ல; அவற்றை இலக்குகளாகக் கருதவும் முடியாது !
உணர வைக்கிறார்!
இந்தக் குணங்கள் தாமாகவே மலர்வதற்கான பாதையில் செல்வதுதான் முக்கியம். அந்தப் பாதையில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கின்றீர்கள் என்பதோ, எந்தப் படியைச் சென்று அடைந்திருக்கின்றீர்கள் என்பதோ முக்கியமல்ல.
'நான் அவரைவிட மிகப் பணிவானவன்' என்றோ அல்லது 'என்னைவிட அவருக்கு உயிர், வாழ்க்கை, இறப்பு என்பதைப் பற்றி நிறையத் தெரியும்' என்றோ நினைக்கும் விளையாட்டில் மாட்டிக்கொண்டீர்களானால், நீங்கள் ஒப்பிட்டு பார்த்துக்கொண்டே இருப்பதில் சிக்கிக்கொள்வீர்கள். நீங்கள் முன்னேற முடியாது.
நீங்கள் ஜ்ஞாநமடைவதற்கு எதையும் சாதிக்க வேண்டியதில்லை. ஜ்ஞாநம், உங்களுடைய இயல்பான நிலை.
அதை ஒரு வெளியுலகப் பொருள் போன்று கருதி, வெளியுலகப் பொருளை அடைவதற்கு இதற்கு நீங்கள் வேலைசெய்ய முடியாது.
ஜ்ஞாநம் என்பது உள்ளே உணரப்படுவது. நாம், எதிர்மறை எண்ணம் மற்றும் விலகி, செயல்களிலிருந்து பண்புகள் எண்ணம் செல்லும்பொழுது, ஜ்ஞாந
நிகழ்கிறது.
எதிர்மறைகள் என்பது உங்களுடைய அஹங்காரத்தின் பல அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன. அஹங்காரம் தன்னை, பற்றுதல்கள், ஆசைகள், தோல்விகள், வருத்தங்கள், குற்றவுணர்ச்சிகள் என்று பலவிதங்களில் வெளிப்படுத்திக்கொள்கிறது. நேர்மறை பண்புகள் என்பவை கிருஷ்ணர் குறிப்பிட்டவற்றைக் குறிக்கின்றன.
ஒரு நிஜ வாழ்க்கை நிகழ்ச்சியை எடுத்துப் பார்ப்போம். உங்கள் நெடுநாளைய நண்பர் ஒருவர் வியாபாரத்தில் வெற்றியடைந்து, இப்பொழுது வைத்துக்கொள்வோம். உங்கள் முதல் உணர்ச்சி என்னவாகயிருக்கும் ? பொறாமைதான்.
அவன் எப்படிப் பணக்காரனானான்? நான் அவனைப்போல் ஆக முடியவில்லை?' என்று எண்ணி ஆச்சரியப்படுவீர்கள். அதோடு நிறுத்திவிடமாட்டீர்கள், 'அவனிடமிருந்து நான் என்ன லாபம் அடைய முடியும் ? அவனை நான் எப்படிப் பயன்படுத்திக்கொள்ள முடியும்!' என்றும் திட்டம் போடுவீர்கள். ஆனால், உடனே இந்த மாதிரி எண்ணங்களும் உணர்ச்சிகளும் உங்களுக்குள் இருக்கக்கூடாது என்றும் நீங்கள் நினைப்பீர்கள்; உடனே உங்களுக்குள் குற்றவுணர்ச்சி எழும்.
உங்கள் செயல்களைத் தூண்டும் இந்த எல்லாவித உணர்ச்சிகளும், ஒரு அடிப்படையான எழுகின்றன: அவர்கள் வைத்திருக்கும் செல்வத்தினாலும் அந்தஸ்தினாலும் அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைத்து, அவர்களிடமிருந்து அந்த அசைகளை கடன் வாங்குவதிலிருந்துதான் எழுகின்றன.
ஒருவேளை உண்மையிலேயே அந்த செல்வமும், அந்தஸ்தும் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும்கூட, அதே செல்வமும், அந்தஸ்தும் உங்களுக்கும் அதே அளவு மகிழ்ச்சியைத் தரும் என்று சொல்ல முடியாது ! .
நீங்கள் ஜ்ஞாநமடைவதற்கு எதையும் சாதிக்க வேண்டியதில்லை. ஜ் நாடும் உங்களுடைய இயல்பான நிலை !
அனாலும்கூட நீங்கள் தொடர்ந்து ஒப்பிட்டுப்பார்த்துக்கொண்டும், அவரைப் போல ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டுக்கொண்டும் இருப்பீர்கள். விளைவு துன்புறுத்திக்கொண்டேயிருப்பீர்கள்.
இந்த ஒப்பிட்டுப் பார்த்தல், பயம், பேராசை போன்ற எதிர்மறை குணங்களிலிருந்து அத்தியாவசியத் தேவைகள் என்னென்ன என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
நம்முடைய அத்தியாவசியத் தேவைகளைக்கூட, பலன்களின் மேல் பற்றுதல் இல்லாமல் செயல்களைச் செய்வதன் மூலமே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ளும் பாதையில் மட்டுமே நம் கவனத்தைச் செலுத்த வேண்டும், இறுதிப்பலனில் அல்ல. இந்தப் புரிதலோடு நீங்கள் அந்தப் பாதையில் செல்ல ஆரம்பித்தால், கிருஷ்ணர் குறிப்பிடும் இந்த நற்பண்புகள் எல்லாம் தானே நிகழும்.
ஒரு வாழும் ஞானியின் வழிகாட்டல், உங்களுடைய பாதையைத் தடைகளற்றதாக்கும், தூரத்தைக் குறைக்க உதவும். தைரியத்துடனும் மன உறுதியோடும் இந்தப் பாதையில் தனியாக ஒரு குரு இல்லாமலேயே ஒருவர் பயணிக்க முடியும்; அப்படிச் செய்து காட்டப்பட்டும் இருக்கிறது. ஆனால் எதற்குத் தேவையில்லாமல் உங்களை நீங்களே வேதனைக்குள்ளாக்கிக்கொள்ள வேண்டும் ?
ஒரு சீடர் என்னிடம் சொன்னார், ''ஸ்வாமிஜி, பாருங்கள், உங்களைவிட நாங்கள் எவ்வளவு புத்திசாலிகளாக இருக்கிறோம்! நீங்கள், ஒரு குருவைப் பின்பற்றிச் செல்ல சாதுர்யமில்லாமல், தனியாகப் போராட வேண்டியதிருந்தது. நாங்கள் உங்களைப் பெற்றிருக்கிறோம், எங்கள் வாழ்க்கை எவ்வளவு எளிதாகிவிட்டது!''
விழிப்புணர்வே முடிவற்றது
- 13.12 எது அறியப்படவேண்டியதோ, எதை அறிந்து மனிதன் பரமானந்தத்தை அடைகிறானோ அதை விளக்கிக் கூறுவேன். அது தொடக்கமற்றது, காரண-காரியங்களுக்கு அப்பாற்பட்டது, உலகியலுக்கு அப்பாற்பட்டது.
- 13.13 எங்கும் கைகால்களை உடையதாகவும், எங்கும் கண், தலை, முகங்களோடு கூடியதாகவும், எங்கும் காதுகளை உடையதாகவும் அது உலகனைத்தும் வியாபித்து நிற்கிறது.
- 13.14 பரமாத்மாவோவே எல்லாப் புலன்களுக்கும் அடிப்படை ஆதாரம். ஆனாலும் அது, உண்மையில், எல்லாப் புலன்களுக்கும் அப்பாற்பட்டது, எதன்மீதும் பற்றற்றது. எல்லா றீவராசிகளைக் காப்பது அதுவே, இருந்தாலும் இயற்கையின் எல்லாச் செயல்வகைகளையும் கடந்தது, அதே சமயத்தில் நமது உலகியல் ரீதியான செயல் வகைகளில் தலைசிறந்த நிபணத்வம் மிக்கதாக இருக்கிறது.
- 13.15 சராசரமான எல்லாப் பிராணிகளினுடைய உள்ளும் புறமும் அது நிறைந்திருக்கிறது. நுண்ணியதாக இருப்பதால் பார்க்க முடியாததாக இருக்கிறது, எட்டமுடியா தூரத்தில் இருந்தாலும் எல்லோருக்கும் அருகில் இருக்கிறது !
- 13.16 பார்ப்பதற்குத் தோன்றினாலும் அது பிளவுபடாதது. ஸகல பிராணிகளையும் பேணிக் காப்பதென்றாலும் அழிப்பதாகவும் படைப்பதாகவும் அதுவே இருக்கிறது.
- 13.17 அந்தப் பரமாத்மன் ஒளிரும் பொருட்களின் ஒளிக்குக் காரணமாக, அப்பாற்பட்டது, அறியப்படவேண்டியது, வேண்டியதுமாகிய அதுவே எல்லோருடைய இதயத்திலும் நிலைத்திருக்கிறது.
கிருஷ்ணர் சொல்கிறார், ''நீ அறிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் விளக்கிவிடுகிறேன். அதையெல்லாம் அறிந்துகொண்ட பின்பே, இந்தப் பொருள்சார் உலகின் செயல் மற்றும் விளைவுகளுக்கு அப்பாற்பட்ட ஆதியே இல்லாத விழிப்புணா்வை, நிலையான இருப்பை நீ அறியத் துவங்குவாய். ''
முன்பு வந்த ஸ்லோகங்களில், கிருஷ்ணர், உள்ளுக்குள் மலரும் தெய்விக விழிப்புணர்வின் பண்புகளைப் பற்றிச் சொன்னார். இப்பொழுது அவர்
இரண்டு எண்ணங்களின் நடுவே உள்ள இடைவெளியே கூணம் எனப்படுகிறது. !
இந்த விழிப்புணர்வே நிலையானது என்பதை அர்ஜுனன்னுக்கு வெளிப்படுத்துகிறார்.
ஆழ்ந்து மனது காலத்தோடும் இடத்தோடும் இணைத்து சம்பந்தப்படுத்திக்கொள்கிறது. காலவரிசைப்படி மட்டுமே நினைக்கும். அது ஒரு உள்ளுலகக் கால அட்டவணை; இந்தக் கால, வெளி அட்டவணையில் எல்லா நிகழ்ச்சிகளும் பட்டியலிடப்படும்.
நவீனவிஞ்ஞானம், ''இது எப்படி நிகழ்ந்தது ?
இதற்கு முன்னால் அங்கு என்ன இருந்தது ? இதற்குப் பிறகு என்ன வரப்போகிறது ? இதை எது தூண்டிவிட்டது?'' என்று பல கேள்விகளைக் கேட்கிறது. இந்தப் பிரபஞ்சம் அவர்களிடம் கைட்டபொழுது, 'பெரும் வெடிப்பு' கொள்கை வாயிலாக அதை விளக்கினார்கள்.
ஒரு மிகச்சிறிய வெடிக்துச் சிதறி, பிரபஞ்சம் உருவாகியது என்று அவர்கள் விளக்கம் கொடுத்தார்கள். அவர்கள் முடியவில்லையென்றால், முன்னால் என்ன இருந்தது ?'' என்பதற்குத்தான்.
காலத்தைப் பற்றிய நம்முடைய புரிதல் ஒரு ஜ்ஞாந குருவின் புரிதலிலிருந்து வேறுபட்டது!
ஆனால் கிருஷ்ணர், இதற்குப் பதிலளிக்கிறார். அவர் சொல்கிறார்: இந்தப் பிரபஞ்ச சக்தி, இந்த இறுதி விழிப்புணர்வு என்றென்றும் இருக்கிறது; அதுவே கிரகங்களாகவும் மனிதர்களாகவும் இன்னும் பல ரூபங்களிலும் தோன்றியது; ஆனாலும் அது நிலையானது. அது தொடர்ந்து தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்ளும்; பிறகு தன் அதாரத்திற்கே திரும்பி விடும். அதாவது ஆதாரத்தில் ஒடுங்கிவிடும். அது எப்பொழுதும் நிலைத்திருக்கும்.
காலம், இடம் என்னும் நாம் வைத்திருக்கும் கருத்தெல்லாம் நமது மனம், மற்றும் புலன்களை அடிப்படையாகக்கொண்டது. நாம் எதை எப்படி உணர்ந்தாலும், அது நம்முடைய மனத்தின் காட்சியே. காலத்தைப் பற்றிய நம்முடைய புரிதல் ஒரு ஜனூர் குருவின் புரிதலிலிருந்து வேறுபட்டது. அவர் காலத்தை கிணம் என்னும் அளவுகோலைக் கொண்டு அளக்கிறார். இரண்டு எண்ணங்களின் நடுவே உள்ள இடைவெளியே க்ஷணம் எனப்படுகிறது.
புத்தா் இந்த காலம், இடம் என்னும் கருத்தை சூ ன்யம் என்று குறிப்பிடுகிறார். ஆதி சங்கரா் அதையே பூர்ணம் என்று குறிப்பிடுகிறார். இது மனமே இல்லாத ஒரு இடம்; அதே சமயத்தில் மனம் நிறைந்த ஒரு இடம்! இதில் நாம் நம் அடித்தளத்தையே தொடுகிறோம்! இதுவே நிகழ்காலத் தருணம்! இந்தத் தருணத்தில்தான் நமக்குள் இருக்கும் தெய்விகத்தை நாம் நேருக்குநேர் சந்திக்கிறோம்; அதன்மூலம் நம்முடைய முக்கியமான இயல்பான பிரபஞ்ச சக்கியை அடையாளம் கண்டுகொள்கிறோம்.
நாம் உலகியல் இன்பங்களுக்குப்பின், அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாகச் சென்று கொள்ளும்பொழுது, வினாடியும் மன அழுத்தம், மன உளைச்சல், கவலை என்று, நம் தலையை உடைத்துக் கொண்டேயிருக்கின்றன.
இந்த உடலும் மனமும் பஞ்ச பூதங்களால் ஆனது என்பதையும் அவை வந்த நோக்கத்தை ஆற்றி முழந்தவுடன் அதனுடைய மூலத்திற்கு கிரும்பிவிடும் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்!
நம்முடைய என்பது மிகச்சிறியது. ஏனெனில் நமக்குள் எண்ணற்ற எண்ணங்கள் ஒடிக்கொண்டேயிருக்கின்றன. அதனால்தான் நமக்கு மூச்சுத்திணறுவது போன்ற உணர்வும் பய உணர்வும் தோன்றுகின்றன.
நாம், ஒடிக்கொண்டேயிருக்கிறோம். காலம் சீக்கிரம் ஓடிப்போவதாகவும் சொல்லி, எப்பொழுதுமே வருந்திக் கொண்டிருக்கிறோம். இந்த உடல் இறப்பதற்கு முன்பே, எல்லாவற்றையும் அனுபவித்துவிட அனுபவங்களுக்காகப் பேராசை கொள்கிறோம். அதோடு கூடவே, நாம் சேமித்து வைத்த எல்லாவற்றையும் இழந்து விடுவோமோ என்ற பயுமும் கொண்டிருக்கிறோம். நாம் இப்படித்தான் உணருகிறோம்; ஏனென்றால் நாம் நம்மை கூடித்ரம் அழியக்கூடிய உடல்-மனம் என்றே நினைத்துக்கொள்கிறோம்.
ஆனால், ஒரு ஜ்னூரத குரு, தாம் கீஷத்ரஜ்குன் என்று அறிவார். தாம் இந்த உடல்-மன அமைப்பு இல்லை என்று அவர் அறிவார். அவர் தம்மை 'இறுதி விழிப்புணர்வாக' உணர்ந்திருக்கிறார். இந்த ஒட்டப் பந்தயத்தில் கலந்து ஓட வேண்டும் என்று அவர் அவசரப்படுவதில்லை.
ஏனெனில் இந்த உடல் அழிந்தாலும் வாழ்க்கை தொடரும் என்பதை அவர் அறிவார். அவர் அந்த மனதுக்கு ஒரு லாக்ஷி ஆகிவிட்டார். ஆகவே அந்த மனத்தில் எழும் எந்தவொரு எண்ணமும், செயல்
நோக்கம்கொண்ட எண்ணமாகத்தான் இருக்கும்; ஒருபோதும் அது ஆக்கமற்ற எண்ணமாக இருக்காது. எண்ணம் நிகழும் அந்தக் கண்மே, அது செயலாக வெளிப்பட ஆரம்பித்துவிடுகிறது. அவருக்குள்ளே எண்ணங்கள் 'வெளியில்' அவர் நிலைத்து இருப்பதால், அவர் முடிவற்ற நிலையான இருப்பை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
இதுகான் 'ஆகியில்லாத, தொடக்கமில்லாத விழிப்பு நிலை' என கிருஷ்ணர் இங்கு விளக்குகிறார்.
இந்த உடலும் மனமும் பஞ்ச பூதங்களால் ஆனது என்பதையும், அவை வந்த நோக்கத்தை ஆற்றி முடிந்தவுடன், அதனுடைய மூலத்திற்கு திரும்பிவிடும் என்பதையும் புரிந்துகொள்ளுளுங்கள்.
குரு பார்த்தாலே, 'விழித்துக்'கொள்வீர்கள்
நாம், ஒரு ஜ்ஞாநமடைந்த, மனம் இல்லா நிலையிலிருக்கும் குருவுக்கு முன்னால் இருக்கும்பொழுது, நமக்குள் ஒடும் எண்ண ஒட்டங்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வரும்; நமது க்ஷணத்தின் நேர அளவு நீளும்; அதாவது எண்ணங்களின் நடுவிலுள்ள இடைவெளியின் நேர அளவு நீளும். அதனால் நாம் முயற்சி செய்யாமலேயே, நாம் அமைதியானவர்களாக ஆகிறோம்; அதிக ஆனந்தமுடையவர்களாக, அதிக விழிப்புள்ளவர்களாக ஆகிறோம்.
நமது தர்க்க ஒவ்வொன்றிற்கும் காரணம் குற்பித்துப் பார்க்க முயற்சி செய்யும். எந்த ஒரு விஷயம் நடந்தாலும் இது ஏன் இந்த விதத்தில் நடந்தது என்று ஆராய்ந்து, அதற்கான காரணத்தைத் தா்க்க ரீதியாக அறிந்துகொண்ட பிறகே, அதில் நம்பிக்கை கொள்ள வேண்டுமென்று விரும்பும்.
ஆனால், நமது தர்க்க ரீதியான புரிதலும், புத்தகங்கள் மூலம் பெற்ற அறிவும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை மாற்றுவதைப் பற்றிய தகவல்களையே நமக்குக் கொடுக்கின்றன.
எந்தவொரு எண்ணமும் செயல் நோக்கம் கொண்ட எண்ணமாகத்தான் கருக்கும்!
ஆனால் கிருஷ்ணர் விளக்குகிற 'அறிய வேண்டியது' என்பது இந்த வெளிமாற்றங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது. இது எப்பொழுதும் நிலைத்திருப்பது. ஏனெனில், இது நம்மைச் சுற்றியுள்ள மற்ற பருப் பொருட்களைப்போல படைத்தல், அழித்தல் விதிகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்டது அல்ல. அது அங்கேயேதான் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறது; இனியும் தொடர்ந்து இருக்கப் போகிறது.
நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாப் பருப்பொருளுமே ஒரு குறிப்பிட்ட காரண-காரிய உறவைப் பின்பற்றுகின்றன. எனினும் நமது ஆழமான உள்-இருப்பு, இந்த மாற்றங்களினால் தொடப்படாதது.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். நமக்குள்ளே இருக்கும் ஒவ்வொரு எண்ணமும் பிரபஞ்சத்தின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. நாம் இதை ஏற்றுக்கொள்ள விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நாம் தனித்தனி தீவுகளாகச் செயல்படுவதில்லை. நாம் வாழும் இடத்தின்கண்ணுள்ள ஆகாச த்தில் பதிந்திருக்கும் எண்ணங்கள், நமது மன அமைப்பைப் பாதிக்கின்றன. அந்த மன அமைப்பின்படியே நாம் வாழ்கிறோம், எண்ணுகிறோம், செயல்படுகிறோம்.
நீங்கள் கணினியில், தகவல் தளத்தில் 'தண்ணீரில் மறைந்துள்ள செய்திகள்' (The Hidden Messages in Water) என்று தேடினால், மகுரு எமோடோ (Masuru Emoto) என்னும் ஒரு ஜப்பானிய விஞ்ஞானி தண்ணீர் மாதிரிகளின் மேல் நடத்திய ஆராய்ச்சிகளின் விளைவுகளைப் பற்றிப் படிக்கலாம்.
நமக்குள்ளே இருக்கும் ஒவ்வொரு எண்ணமும் பிர்பஞ்சத்தின் செயல்பாட்டைப் பாதீக்கிறது!
அவர் எடுக்கப்பட்ட நீா் மாதிரிகளை, பல பாட்டில்களில் பாட்டிலின் மீதும் அன்பு, வெறுப்பு, கருணை என்று வெவ்வேறு உணர்ச்சிகளின் பெயர்கள் ஒட்டினார். பின்பு தினமும் 'அன்பு' என்று சீட்டு ஒட்டப்பட்ட பாட்டிலின் முன் நின்று, அன்புணர்ச்சியோடு பல வார்த்தைகளைப் பேசினார். அதைப் போலவே, 'வெறுப்பு' என்ற சீட்டு ஒட்டப்பட்ட பாட்டிலின்முன் நின்று, பழிவாங்குதலைப் போலவும், கொடுரமாகவும் பேசினார்.
பிறகு அவர் அந்தத் தண்ணீர் மாதிரிகளை உறையவைத்து பனிக்கட்டிகளாக்கி, அவற்றை கருவியின் மூலமாக பார்க்கும்பொழுது, 'அன்பு' என்று எழுதப்பட்ட தண்ணீர் மாதிரி, மிக அழகான ஸ்படிகமாக ஒளிர்ந்து மின்னியது. அந்த 'வெறுப்பு' என்று எழுதப்பட்ட தண்ணீர் மாதிரியின் பனி உருவம், மிகவும் அசிங்கமாகவும் கொடூரமாகவும் தெரிந்தது.
ஒரு மனிதருடைய எண்ணங்களே, தண்ணீரில் இந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறதென்றால், மொத்த மனிதகுலத்தின் மனக்கிளர்ச்சிகளும் சேர்ந்து, இந்தப் பிரபஞ்சத்தின் மீது எவ்வளவ தாக்கத்தை உண்டாக்கும் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?
இன்றைய நாளில் கூட்டு விழிப்பற்ற தன்மையும், எண்ணங்களும் அளவில் கிடக்கின்றன. பிரபஞ்சமும் அதற்குப் பதில்செயல் புரிகிறது. மக்கள், ''ஸ்வாமி, ஏன் இந்த சுனாமி ஒன்றுமறியா பல கொல்லுகிறது?' என்று கேட்கிறார்கள்.
இயற்கை சீற்றங்கள், புகம்பங்கள், சுனாமிகள், போர்கள் மற்றும் பல பேரழிவுகளும் ரும் கூட்டு விழ்ப்பற்ற நிலையின் வெளிப்பாடுகளே!
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், இந்த மாதிரியான இயற்கை சீற்றங்கள், பூகம்பங்கள், சுனாமிகள், போர்கள், மற்றும் பல பேரழிவுகளும் நம் கூட்டு விழிப்பற்ற நிலையின் வெளிப்பாடுகளே!
இந்த வழியில்தான், கூட்டு விழிப்புணர்வு நிலையானது எதிர்மறை தன்மைகளை மொத்த அளவில் தூய்மைப்படுத்துகிறது. கொல்லப்பட்ட மக்களெல்லாமே கெட்டவர்கள் என்று சொல்வதற்கில்லை. மொத்த கூட்டு எதிர்மறைகளும் இந்த மாதிரி இயற்கைப் பேரழிவுகளின் மூலமாக எந்த வழியிலாவது, எந்த இடத்திலாவது, எப்படியாவது வெளிப்பட்டாக வேண்டும்.
கூட்டு எதிர்மறை தன்மைகளையும், கூட்டு விழிப்பறு நிலையையும் குறைக்க, நமது முன்னோர்களான ரிஷிகளும் யோகிகளும் சேர்ந்து கும்பமேளா என்னும் ஒரு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்கள்.
பல லட்சக்கணக்கான ஞானிகளும் மஹான்களும் ஒன்று கூடி கங்கை, யமுனை போன்ற புனிதமான ஆறுகளுக்கு வருகிறார்கள். இந்த ஆறுகளின் தண்ணீரை லட்சக்கணக்கான ஞானிகள் தொடும்பொழுது, அந்த ஆற்று நீரானது எந்தளவிற்கு தூய்மைப்படுத்தப்பட்டு, புனிதமாக்கப்படும் என்று நினைத்துப்பாருங்கள். இந்தப் புனித நீராடல், அந்த எதிர்மறைகளையெல்லாம் சமநிலைபடுத்துகிறது. இதனால்தான், கும்பமேளாவின்பொழுது, அந்தப் புனித நதிகளில் முழுக்குப்போடுவது அவ்வளவு முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பூமித்தாயும் பூர்க்கிறாள் -குருவைச் சுமப்பதால்!
சென்றவருடம் செப்டம்பர் 21 -ம் நாள், ஐக்கிய நாடுகளின் உலக அமைதி தினத்தன்று, உலகம் முழுவதும் உள்ள THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மிஷனின் தியான மையங்களில் 24மணி நேர தியானப் பேரணிகள் நடத்தப்பட்டன.
மையக் கருத்து இதுதான்: அமைதியுடனும் ஒத்திசைந்து வாழும் நோக்கத்துடனும் இருக்கும் பலருடைய எண்ணங்கள் ஒன்று சேரும்பொழுது, அங்கு இனிமையான அமைதி நிலை நிகழ்கிறது. அது, பூமிக்கிரகத்தின் கூட்டு நேர்மறை விழிப்புணர்வை அதிகரிக்கிறது.
நாம், மாற்க்கொண்டேயிருக்கும் க்ஷத்ரம் அல்ல ; என்றுமே மாறாத க்கூத்ரஜ் குறைதான் என்பதை அறிந்துகொண்ட அக்கணமே நாம் க்குந்திரமடைக்றோம்!
நேர்மறை மற்றும் எதிர்மறை, படைத்தல் மற்றும் அழித்தல் இவையெல்லாமே, க்ஷுத்ரம் என்னும் நாம் வாழ்கிற, எப்பொழுதும் மாறிக்கொண்டேயிருக்கிற, இந்த உலகத்திடைய இயல்பான உடைமைகள். நாம், மாறிக்கொண்டேயிருக்கும் அந்த 6 க்ஷத்ரம் அல்ல; 6 க்ஷ்ரஜ்குன்தான் என்பதை அறிந்துகொண்ட நாம் நாம் சுதந்திரமடைந்து அக்கணமே விடுகிறோம்.
கிருஷ்ணர் இந்த அழியாத நிலையான ஆனந்தத்தைத்தான் ஜ் டேநய, அறிந்துகொள்ளப்பட வேண்டியது என்று அழைக்கிறார். அறிதல் நிகழும்பொழுது, அறியப்படும்பொருள் (ஜீலீனும்), அறிபவன் (ஜ்ஞாதா ), அறிவு (ஜ்ஞாநம்) அதிகியவை ஒன்றாகக் கலந்துவிடுகின்றன.
இந்த அனுபவத்தில் அறிபவன், அறியப்படும்பொருள், அறிவு ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து அனுபவம், அனுபவிப்பவர் மற்றும் அனுபவிக்கப்படும் தனித்தனியாக எதுவுமில்லை. அது த்ருப்தி என்று அழைக்கப்படுகிறது; அங்கே இந்த முன்று அம்சங்களுக்கு இடையே எந்த வித்தியாசமும் இருப்பதில்லை.
அறிதல் நிகழும்பொழுது. அறியப்படும்பொருள் (ஜ்ட்ரூய), அறிபவன் ( ஜ்ஞாதா ), அறிவு ( ஜீஞாநம்) ஆகியவை ஒன்றாகக் கலந்துவிடுகின்றன!
இதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன்: காரோட்டுவதில் மிகவும் விருப்பமுடைய நீங்கள், ஒரு புதிய தானியங்கி காரில் அமா்ந்து, நெடுஞ்சாலையில் முழு வேகத்தில் ஓட்டிச்சென்று கொண்டிருப்பதாக கற்பனைசெய்து கொள்ளுங்கள். உங்களை மறந்து காரை ஆனந்தமாக ஓட்டுவதிலேயே நேரத்திற்குப் பிறகு, சட்டென்று உணர்வீர்கள்: நீங்கள் காரோட்டிக் கொண்டிருக்கவில்லை; கொண்டிருக்கிறது என்பதை உணர்வீர்கள்!
நீங்கள் காரோட்டும் அனுபவமாக மாறிவிட்டீர்கள்; காரோட்டிக் கொண்டிருக்கிறேன் என்ற உணர்வு இல்லை. கார் தானாகவே ஒடிக் கொண்டிருக்கிறது. நீங்கள் அனுபவமாக மாறிவிட்டீர்கள்.
அதே போலவே, நீங்கள் வேறெந்த உணர்ச்சியிலாவது செயலிலாவது ஆழமாக மூழ்கி விட்டீட்டா்களானால், அங்கு அனுபவம், அனுபவிப்பவர், அனுபவிக்கப்படுவது ஆகிய மூன்றுமே ஒன்றாகி நிலையான விழிப்புணர்வில் கரைந்திருக்கும்! நீங்கள் இதைத்தான், 'தளத்தில் இருப்பது' (In the Zone) என்று சொல்வீர்கள்.
கிருஷ்ணர், தம்முடைய முடிவற்ற இயல்பு, நிலையான இருப்புத்தன்மை காலத்தினால் கட்டுப்பட்டதல்ல என்று விளக்குகிறார். இப்பொழுது, அவர் 'தாம் எங்கும் நிறைந்திருப்பவர் என்றும், தாம் இடத்தால் கட்டுப்படுத்தப்படாதவர்' என்றும் சொல்லுகிறார்.
சாதாரணமாக நாம், ஒரு பொருள் அல்லது ஒரு நபர் இருப்பதையோ அல்லது இல்லாததையோ அதனுடைய அல்லது அவருடைய ஸ்தூல ரூபத்தை அடிப்படையாகக்கொண்டுதான் தெரிந்துகொள்கிறோம்.
நாம் நம் வாழ்க்கையை, நாம் எதைப் பார்க்கிறோமோ, நாம் எதைக் கேட்கிறோமோ, எதைத் தொடுகிறோமோ, எதை நுகா்கிறோமோ, எதைச் சுவைக்கிறோமோ அவற்றின் அடிப்படையில்தான் வாழ்கிறோம். நமது ஐம்புலன்களான பஞ்ச இந்திரியங்களால் ஒரு பொருளை உணர முடியவில்லையென்றால், அந்தப் பொருளை இல்லை என்றே நினைத்துக்கொள்கிறோம்.
குரு சீக்தியானது காலம், கடம் இவற்றையெல்லாம் கடந்தது!
ஒரு முக்கியமான, ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒரு ஜன்னுரை குருவின் ஸாந்நித்யத்தை அவருடைய அருகாமையில், ஸ்தூல உடலின் முன் உணர்வதைவிட, அவர் இல்லாதபொழுது அதிகம் உணரமுடியும்.
இதன் குருவினுடைய சக்தி என்றும் அழிவதும் இல்லை; அதை எதுவும் தடுப்பதும் இல்லை. அது எந்தத் தடைகளையும் அறியாது.
உலகின் பல பகுதிகளிலுமுள்ள சீடர்கள், ''ஸ்வாமி, நாங்கள் தங்களோ(டு இருப்பதையே விரும்புகிறோம், தயவுசெய்து எங்களிடத்திற்கு வருகை தாருங்கள்'' என்று கேட்பதுண்டு. அப்பொழுது நான் அவர்களிடம் சொல்வது: ''உண்மையில், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMவுடைய 66% ஸாந்நித்யமும் அருள் பணிகளிலும் போதனைகளிலும் இருக்கிறது; வெறும் 33% ஸாந்நித்யமும் இந்த உடலில் இருக்கிறது."
நாம் ஒரு ஜ்ஞான குருவை அவருடைய ஆறடி உருவத்திற்குள் கட்டுப்படுத்தினோமேயானால், நாம் அவரை அவரை முழுமையாகத் தவறவிட்டு விடுவோம். அவருடைய சக்தியானது காலம், இடம் இவற்றையெல்லாம் கடந்தது; அவர் எப்பொழுதும், எங்கும் நமக்குக் கிடைக்கூடியவராக இருக்கிறார்!
குரு. இல்லாமலும் இருக்கிறார்
ஒரு ஜ்ஞான குருவின் உடல் அமைதிகொள்ளும் ஜீவ ஸமாதியின் அருகாமையில் இருந்தாலுமே, நீங்கள் எவ்வித முயற்சியும் செய்யாமலேயே, அமைதியாகிவிடுவீா்கள்; உங்களுக்குள் இருக்கும் அந்த அமைதி தளத்தையும் அனுபவிப்பீர்கள்.
பல பெரிய கோயில்களான திருப்பதி, திருவண்ணாமலை, மந்த்ராலயம், பழனி போன்றவை ஜ்ஞானிகளின் ஜீவ ஸமாதியின் அருகாமையில் கட்டப்பட்டவைகான். அதனால்தான் இன்றளவும் பல லட்சக்கணக்கான பக்தர்களைக் களால் ஈர்க்கும் சக்தி வாய்ந்த ஸ்தலங்களாக இருக்கின்றன.
குரு, தம் உடலில் இல்லாதபொழுதும், நாம் அவருடைய இருப்பை உணருகிறோம். ஏன் ? ஏனெனில், அவர் உடலால், குறிப்பிட்ட இடத்திற்குள் இருப்பவர் அல்ல ; உடலாலும் இடத்தாலும் கட்டுப்படுத்த முடியாதவர். அந்த பிரபஞ்ச சக்தி, காலம் மற்றும் இடத்தைக் கடந்தவை. நமக்கு ஸ்தூல ரூபத்தில் இருக்கும் தடைகளை மட்டுமே தெரியும். இங்கு கிருஷ்ணர், 'எல்லா இடத்திலும் கண்களை உடையவன்' என்ற சொற்றொடரை உபயோகப்படுத்துகிறார்.
குரு, உடலில் இல்லாதபொருதும், நாம் அவருடைய இருப்பை உணரலாம்!
என்னுடைய பரிவிராஜகத்தின்பொழுது, ஹிமாலயத்தில், ஒரு நாகா பாபாவுடன் சில காலம் தங்கியிருந்து கற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. நாகா பாபா என்பது நாகர்களின் வழிவந்தவர்களைக் குறிக்கும். இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் உடையேதும் அணியாத பழக்கத்தைக்கொண்டவர்கள்.
இந்த பாபா, தம்மிடம் கற்க வருபவர்களுக்கு, கற்பிப்பதற்குத் தனிப்பட்ட பாணியைக் கொண்டிருந்தார். மக்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வரும்போதெல்லாம், சூலத்தை, அவர்களை அதன் மூன்று நுனிகளையும் ஒரே நேரத்தில் உற்றுப்பார்க்கச் சொல்வார். சில சமயங்களில் அந்த மாணவர்கள், இந்தக் கலையில் முழுமைத்துவம் பெற மூன்று மாதங்களுக்கும் மேலாகவேகூட ஆகும். அவர்கள் நாள் பூராவும் அமர்ந்து இந்தப் பயிற்சியைச் செய்வார்கள்.
உங்களுக்கு இப்பொழுது இதைக் கேட்கும்பொழுது வேண்டுமானால், இது மிகவும் எளிமையான நுட்பம்போல் தோன்றும். ஆனால், நீங்கள் நினைப்பதுபோல் இது அவ்வளவு எளிதானது அல்ல; இது மிகவும் கடினமானதொரு பயிற்சி.
ஒரு நேரத்தில் நம்மால் ஒரு நுனியை மட்டுமே பார்க்கமுடியும். அடுத்த கணம் அடுத்த நுனி, அதற்கடுத்த கணம் மூன்றாவது நுனி. ஒரே நேரத்தில் மூன்று நுனிகளையும் பார்ப்பது மிகக் கடினம்.
நானும் முதலில் அது சுலபம் என்றுதான் நினைத்து விட்டேன்! ஆனால் நான் பயில ஆரம்பித்தபொழுது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 'ஓ கடவுளே, ஒரே நேரத்தில் என்னால் இந்தச் சிறிய சூலத்தைக்கூட முழுதாகப் பார்க்க முடியவில்லையே!' என்று உணர்ந்தேன், பார்வையை நகர்த்தாமல், ஒரே நேரத்தில் ஒரு புள்ளிக்கு மேல் நம்மால் பார்க்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டேன்.
மூன்றாவது கண்ணை (புருவ மத்தியில் இருக்கும் சக்தி மையம்) விழிக்கச் செய்வதற்கு திரிசூலம் ஒரு சிறந்த ஆயுதம். அது நம் விழிப்புணர்வை அதிகப்படுத்துவதற்கான ஒரு நல்ல கருவி.
இப்பொழுது, உங்களுடைய பார்வையின் கோணம் 120 டிகிரி அளவில் இருக்கும். நீங்கள் உங்கள் கவனத்தை ஒரு குறிப்பிட்ட புள்ளியில் குவித்தால், ஒருமுகப்படுத்தினால், உங்கள் பார்வையின் பரப்பு 30 டிகிரி அளவிற்குக் குறைந்துகொண்டே வரும். கவனத்தைக் குவிக்கக் குவிக்க, உங்கள் பார்வையின் பரப்பளவு குறைந்துகொண்டே வரும். அதேசமயத்தில், உங்கள் விழிப்புணர்வு, மெதுவாக 120 டிகிரியிலிருந்து 180 டிகிரி, பிறகு 240 டிகிரி என்று அதிகரித்துக்கொண்டே வந்து இறுதியில் 360 டிகிரியாகிவிடும்!
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
மூன்றாவது கண்ணின் மேல் மையப்படுத்தி, உங்கள் விழிப்புணர்வை உருவாக்குதல் என்பது உங்களின் விழிப்புணர்வை விழிப்பிக்கச்செய்வதுதான்.
இடத்திலும் 'எல்லா கைகளும் கால்களும் தலைகளும் காதுகளும் வாய்களும்' என்று கிருஷ்ணர் சொல்லும்பொழுது குறிப்பிடுகிறார் ?
மூன்றாவது கண்ணின் மேல் மையப்படுத்தி. உங்கள் விழிப்புணர்வை உருவாக்குதல் என்பது உங்களின் விழிப்புணர்வை விழிப்பிக்கச் செய்வதுதான்!
இது, மனித மனம் புரிந்துகொள்வதற்கு அப்பாற்பட்டது; உள்வாங்கி, சிரத்தையுடன் ஆராய்தல் என்ற அம்சம் ஒரு சிறிது இதற்குத் தேவைப்படுகிறது. நமக்கு ஒரே ஒரு உடலைத்தான் தெரியும். அது இந்த ஸ்தூல உடல் - ஏனெனில் நாம் அதனோடுதான் முழுவதுமாக நம்மை இணைத்து வைத்திருக்கிறோம். ஒரு சிறுபடத்துடன் இதை விளக்குகின்றேன்.
ஏழு சரீர அடுக்குகளின் வரைபடம்
இந்தப்படம், நமக்குள் இருக்கும் ஏழு விதமான சக்தி அடுக்குகளைக் காட்டுகிறது. எல்லாவற்றிற்கும் வெளியில் இருக்கும் முதல் அடுக்கு நம் ஸ்தூல உடல். இதனோடுதான் எல்லா நேரத்திலும் நம்மை இணைத்துக்கொண்டுள்ளோம். ஒரு ஜோடி கைகள், கால்கள், கண்கள், காதுகள், ஒரு வாய், ஒரு தலை, இன்னும் பலவற்றைக் கொண்ட இந்த உடலை மட்டும்தான் நமக்குத் தெரியும்.
இப்பொழுது அந்த வெளி அடுக்கின் மேல் ஒரு சில புள்ளிகளை எடுத்துக்கொள்வோம். அந்தப் புள்ளிகளை நாம் 'நீ', 'நான்', 'உங்கள் கிருஷ்ணா', அழைக்கலாம். அதனால் உங்கள் மொத்த அடுக்கில், நீங்கள் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து வேறுபடுகின்றீர்கள் ; பக்கத்துவீட்டுக்காரர் உங்கள் என்னிடமிருந்து வேறுபடுகிறார்; பல்வேறு நீர்வாண அடுக்கில்தான் பிரபஞ்ச சக்தி ஒவ்வொரு இருப்பையும் இணைக்கிறது!
வடிவங்களிலிருக்கும் வேறுபடுகின்றனர். ஒவ்வொருவரும் மற்றவர்களிலிருந்து தனித்தே இருக்கிறார்கள் .
நாம் இந்த ஸ்தூல உடலிலேயே ஆழமாக வேரூன்றி இருப்பதால், நாம் நமக்கும், நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றுக்கும் இடையில் பல தடைகள் இருப்பதைப் பார்க்கின்றோம். ஏனெனில் இந்த அடுக்கைப் பொறுத்தவரை ஒவ்வொன்றும் மற்றதிலிருந்து வேறாகத் தெரிகிறது; ஒவ்வொன்றையும் வேறாக உணர்கிறோம்.
இப்பொழுது, ஒவ்வொரு புள்ளிக்கும், நம் உள் அடுக்குகளில் தொடர்பு புள்ளிகள் இருக்கின்றன. அந்தத் தொடர்பு புள்ளிகளைப் பின்பற்றி மிக ஆழமாகச் சென்றால், இறுதியில் நாம் அனைவரும் நிர்வாண அடுக்கில் ஒன்றாக இணைவதை உணர்வோம். இங்குதான் பிரபஞ்ச சக்தி ஒவ்வொரு இருப்பையும் இணைக்கிறது. இந்தப் பகுதியில்தான் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசமே இல்லை.
விழிப்புணர்வின் இந்தப் பகுதியைத்தான் கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். இங்கு, கிருஷ்ணரும் புத்தரும் வேறுவேறானவர்கள் இல்லை. எல்லோரும் கடவுளின் வேறு வேறு வடிவங்கள், எல்லாமே அதே தெய்விகத்தின் வெளிப்பாடுகளே.
கிருஷ்ணரின் சிறந்த பக்தைகளான கோபியர்கள், அந்த இடையர் குலப் பெண்கள், வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும்கூட, எப்பொழுதும் கிருஷ்ண பக்தியிலேயே மூழ்கியிருந்தார்கள்; கிருஷ்ண பக்தியில் திளைத்திருந்தார்கள்.
அந்தக் கோபியர்களுக்கு பிரபஞ்ச விழிப்புணர்வு அனுபவத்தைக் கொடுக்க, கிருஷ்ணர் இராஸலீலா என்னும் தெய்விக நாடகத்தை நடத்தினார். இராஸலலீலாவின்பொழுது, ஆயிரக்கணக்கான கிருஷ்ணர்களாக வெளிப்பட்டு, ஒவ்வொரு கோபிகையுடனும் தனித்தனியாக நடனமாடினார்.
இறைவன் உங்களின் வழியாகவும் வாழ்கிறார்
இதில் உள்ள ஆழமான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு கோபியருமே, அந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வுடன், கிருஷ்ண விழிப்புணர்வுடன் ஆழமாகத் தொடர்பு கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தனித்தனியே கிருஷ்ணரின் ஸாந்நித்யத்தை உணர்ந்தனர்.
நாமும் நமக்குள்ளே பயணிக்கும்பொழுது, நமது மையப்பகுதியில், எங்கும் எதிலும் தெய்விகத்தையே காண்கிறோம். அந்தக் கோபியர்கள் எங்கும் எதிலும் கிருஷ்ணரையே கண்டனர்.
பிரபஞ்ச விழிப்புணர்வுக்கு எவ்விதமான உடல் தடைகளும் கிடையாது ; அது எந்தவித ஸ்தூல தடைகளையும் அறியாது! அதனால்தான் கிருஷ்ணர் சொல்லுகிறார், ''நான் அனைத்திலும் ஊடுருவியிருக்கிறேன்; அனைத்தையும் என்னுள் கொண்டுள்ளேன்; எங்கும் நிறைந்திருக்கிறேன். '
அதனால்தான் நான் சொல்கிறேன், "நான் தியான சிகிச்சையாளர்களாக தீக்ஷை அளித்த அனைவருமே என்னுடைய கைகள்; நம் அனைத்து ஆசிரியர்களும் என்னுடைய வாக்கு; எல்லா அமைப்பாளர்களும் என் மனம் ! ' '
என்னுடைய இரண்டு கைகளைக்கொண்டு ஒரு சில மக்களை மட்டுமே நான் குணப்படுத்த முடியும். என்னுடைய ஒரு வாயை வைத்துக்கொண்டு ஒரு சில சொற்பொழிவுகளை மட்டுமே கொடுக்க முடியும். இந்த ஒரு மூளையைக்கொண்டு ஒரு சில நிகழ்ச்சிகளையே நடத்தித்தர முடியும்.
அதனால்தான் நான், என்னுடைய தியான சிகிச்சையாளர்கள், ஆசிரியர்கள், அமைப்பாளர்கள் மூலம் செயலாற்றுகிறேன். பிரபஞ்ச சக்தி செயல்படுகிறது !
ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு ஒரு தொலைபேசி தொடர்பு ஏற்படுத்த வேண்டுமானால், தேவையான கட்டமைப்புகள் வேண்டும். கடலுக்கு அடியில் அதற்கான இணைப்புக் கம்பிகளைப் பொருத்த வேண்டும். இதைச் சார்ந்த பல வேலைகள் செய்தாக வேண்டும். ஆனால் இந்தப் பிரபஞ்சத் தொடர்புக்கு, எதுவும் தேவையில்லை. நமக்குள் இருக்கும் இருப்பினோடு தொடர்புகொண்டோமானால் போதும், உடனே எந்தத் தடைகளும் இருக்காது, நாம் எளிதாகப் பறக்கலாம்!
கிருஷ்ணர், 'பிரபஞ்ச சுய'த்தின் பண்புகளை மேலும் தருகிறார். ஆனால் புரிந்துகொள்ளுங்கள், முதலில் இதை நாமே அனுபவித்துத் தெரிந்துகொள்ளவே இவையனைத்தும் இதற்குமுன் இனிப்பையே சுவைத்திராத ஒருவர் உங்களிடம், "சர்க்கரையின் ருசி எதைப்போல இருக்கும்?'' என்று கேட்டால். அவருக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைப்பீர்கள் ?
"வெள்ளை சதுரவில்லைகளாக, கண்ணாடிபோல் தெளிவாக, வெகு இனிப்பாக இருக்கும், '' என்று நீங்கள் சொல்லலாம். உடனே அவர், ''இனிப்பு என்றால் என்ன ?' என்று கேட்கக்கூடும். அதற்கு நீங்கள், ''கரும்பிலிருந்து சர்க்கரை செய்யப்படுகிறது. சர்க்கரைபாகு நிறைந்து இருக்கும். அதைக் கடித்தும் சுவைக்கலாம் ... '' என்று, அதைப் பற்றிய சொன்னாலும் என்ன பயன் ?
அதற்குப் பதிலாக சிறிது சர்க்கரையை எடுத்து, அவர் தானாகவே இனிப்பின் சுவையை அறிந்துகொள்வார்.
இனிப்பு என்றால் என்ன அர்த்தம் என்பதை அவரே அனுபவிக்காதவரை, 'சர்க்கரையின் ருசி' என்ற வார்த்தை அவருக்கு வெறும் வார்த்தையளவில் மட்டுமே இருக்கும் ; ஆனால் சர்க்கரை பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவல் வளர்ந்துகொண்டேயிருக்கும்.
ஆனால் பட்டறிவாளர்களிடம் உள்ள பிரச்சினை என்னவென்றால், அவர்கள், சந்தேகங்களாலும் அவநம்பிக்கைகளாலும் சூழப்பட்டு இருளில் இருக்கிறார்கள்.
நம் மனத்திலிருந்து எழும் சந்தேகங்களும் கேள்விகளும் நம் மீது ஒரு கனமான படலத்தை உருவாக்குகிறது. குருவின் அருள் இந்தப் படலத்தை மென்மையாகக் கரைத்துவிடுகிறது!
அதனால் அவர்களுக்கு வார்த்தைகள் ரீதியான விளக்கமும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. நாம் எல்லாவற்றையும், நமக்குத் தெரிந்த ஒன்றை வைத்துத்தான் மதிப்பீடு செய்ய விரும்புகிறோம். கிருஷ்ணர், கருணை மிகுந்தவர். அவர் மிகப் பொறுமையானவர்.
அத்தியாயம் 11-ல் அவர் தம் பிரபஞ்ச உருவத்தோற்றத்தை, விச்வரூப தரிசனத்தை வெளிப்படுத்தினார். ஆனால், விச்வரூப தரிசனத்திற்குப் பிறகு அர்ஜுனன் அச்சத்திற்குள்ளானார். அந்தச் சக்தியை அவரால் கையாள முடியவில்லை. அவர் கிருஷ்ணரிடம் ''என்னால் உங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. உங்கள் பேரொளியை என்னால் தாங்க முடியவில்லை,'' என்று மன்றாடுகிறார்.
ஆனாலும் அர்ஜுனன், கிருஷ்ணர் எதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார். அதனால் மறுபடியும் அர்ஜுனனின் சந்தேகங்களைத் துடைப்பதற்காக, எல்லாவித விளக்கங்களையும் கிருஷ்ணர் தருகிறார்.
ஒரு குருவின் கருணை அளவு கடந்தது. சீடனுள் அவநம்பிக்கையும் சந்தேகங்களும் இருந்தாலும், அவர் சீடனுடன் அமைதியுடனும் பொறுமையுடனும் அமர்கிறார்; எல்லாச் சந்தேகங்களும் ஒவ்வொன்றாக நீங்கும்வரை!
நம் மனத்திலிருந்து எழும் சந்தேகங்களும் கேள்விகளும், நம்மீது ஒரு கனமான படலத்தை உருவாக்குகின்றன. ஒரு குருவின் அருள் இந்தப் படலத்தை மென்மையாகக் கடினமில்லாமல் கரைத்துவிடுகிறது.
ஆனந்தத்தை அனுபவிக்க மட்டுமே முடியும்
இப்பொழுது புத்தர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி பற்றிச் சொல்கிறேன்.
ஒரு குருடர் ஒவ்வொருவரோடும், 'வெளிச்சம் என்று ஒன்று கிடையவே கிடையாது' என்று வாதாடிக் கொண்டிருந்தார். யாராவது ஒருவர் வெளிச்சம் இருக்கிறது என்று சொன்னால், அதைத் தம்முடைய கையில் பிடித்துத் தருமாறு கேட்பார்.
மேலும் அவர், ''அது ஒன்றிருந்தால், நான் அதைத் தொட விரும்புகிறேன்; அதனோடு வெளியே செல்ல ஆசைப்படுகிறேன்; அதனோடு விளையாட விரும்புகிறேன்; அதன் பிறகுதான் இருக்கிறது என்று நம்புவேன், '' என்று வீம்பு பேசினார். ஒவ்வொருவரோடும் வாதாடிக்கொண்டேயிருந்தார், அவர்கள் அவருக்காக அவர் ஒப்புக்கொள்ளும்வரை!
ஒரு நாள் அவர் புத்தரிடம் சென்றார். புத்தர் அவரோடு வாதாடவில்லை, ஒரு வார்த்தையும் அவரிடம் பேசவில்லை, அவரைப் பரிசோதித்து அவருக்குச் சிகிச்சை கொடுக்குமாறு ஒரு மருத்துவரை கேட்டுக்கொண்டார்! மருத்துவரின் பார்வையும் கிடைத்தது. பார்வை கிடைத்தவுடன் அவருடைய சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. எல்லா விஷயங்களையும் பார்த்து அதிசயித்து மகிழ்ந்தார். பிறகு அவர் சில மலர்களையும் கனிகளையும் கொண்டுவந்து புத்தருடைய காலடியில் வைத்து, சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
அந்தக் குருடர் தம் இதயத்தின் ஆழத்திலிருந்து பேச ஆரம்பித்தார்: ''ஓ, புத்தர் பெருமானே, குருட்டுத்தனமாக, நான் எல்லோரிடமும் வாதாடிக் கொண்டிருந்தேன். மற்றவர்களும் என்னிடம் வாதாடி. என்னை அழித்து விட்டனர். நீங்கள் என்னோடு வாதாடாதது நல்லதாகிப் போயிற்று. நீங்களும் என்னிடம் வாதாடியிருந்தால், நானும் திருப்பி வாதாடி என்னை அழித்துக் கொண்டிருந்திருப்பேன். ஆனால், இப்பொழுது வெளிச்சம் இருக்கிறது என்று புரிந்துகொண்டேன்!''
புத்தர், அந்தக் குருடரிடம் காட்டியது போன்ற அதே கருணையோடு, கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஒரே சத்தியத்தை மீண்டும் மீண்டும் பலவாறு எடுத்து விளக்குகிறார், அப்படியாவது, அர்ஜுனனின் மனத்திற்குள், ஏதோவோரு விதத்தில், சத்தியத்தின் பொறி தட்டக்கூடும் என்ற கருணை உணர்வோடு பதிலளிக்கக் சந்தேகங்களுக்குப் பதிலளிக்கக் கொண்டிருக்கிறார்.
கிருஷ்ணர், இந்த ஸ்லோகத்தில் ... எல்லாப் புலன்களும் வேலைசெய்வதற்கு தாமே பொறுப்பு என்றும், ஆனாலும் அதற்கெல்லாம் தாம் அப்பாற்பட்டவர் என்றும்...
வாழ்க்கை எப்படி நிகழ்ந்தாலும் தாமே பொறுப்பு என்றும், ஆனால் அதில் எந்தவித பற்றுதலும் கொள்ளாதவர் என்றும் ...
பல விஷயங்கள், நம்மைச் சுற்றி நம்மையறியாமலேயே தானாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன!
பேராவல், சோம்பேறித்தனம், நற்குணம் ஆகிய முக்கிய பண்புகளுக்கும் அவரே காரணமாயிருக்கிறார் என்றும், ஆனாலும் அந்த மூன்றுக்கும் அப்பாற்பட்டவர் என்றும் ...
பிரபஞ்ச சக்தியின் இழை ஒவ்வொன்றிலும் தாம் ஊடுருவிச் செல்வதால்தான், எல்லா உயிர்களும் இயங்குகின்றன என்றும் சொல்கிறார்.
இதன்மூலம் கிருஷ்ணர், மிக சூட்சுமமான ஒரு செய்தியை நமக்குச் சொல்கிறார்:
எந்தவொரு நிகழ்வு நிகழ வேண்டுமென்றாலும், நாம், பிரபஞ்ச விழிப்புணர்வான அதே சமயத்தில், பிரபஞ்ச சக்தி, எதிலும் ஈடுபடாமல், எல்லா உயிர்வகைகளுக்கும், அவற்றின் எல்லா நடவடிக்கைகளுக்கும், ஒரு சாட்சியாக இருக்கிறது.
பல விஷயங்கள், நம்மைச் சுற்றி நம்மையறியாமலேயே தானாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன.
ஒரு ரொட்டித் துண்டை எடுத்து நம் வாயில் வைத்து அதை மெல்லுகிறோம், விழுங்குகிறோம். அதன் பிறகு, நம் உத்தரவுகள் ஏதுமின்றியே தானாகவே அதைச் சக்தியாக மாற்றும் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. உத்தரவுகள் கொடுப்பது பற்றி விடுங்கள், நமக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறதென்றுகூட நமக்குத் தெரியாது.
இன்று மாற்றங்களைப் புரிந்து கொண்டிருக்கலாம். ஆனாலும் இறந்துவிட்ட ஒரு உயிரணுவை இயங்கும் வேறுபடுத்தி காட்டுகிறது என்பதை இன்னும் அவர்கள் தெரிந்துகொள்ளவில்லை.
பிறகு எப்படி அவர்கள் இந்தப் பிரபஞ்சத்தையும், ஒத்திசைவாக ஓடிக் கொண்டிருக்கும் பல லட்சக்கணக்கான கிரகங்களையும் பால்வெளி மண்டலங்களையும் புரிந்துகொள்ள முடியும் ? அண்டவெளியில் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறாரா என்ன ?
இல்லையே !
ஒரு புல்கூட அசைய முடியாது
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். இந்த முழு நாடகத்தையும் நடத்திக் கொண்டிருக்கும் வாழ்வின் சக்தி, நம் ஒவ்வொரு சுவாசத்தையும் கட்டுப்படுத்தும் சக்தி, அண்டவெளியில் நிகழும் குழப்பங்களின் இடையிலும் ஒரு ஒழுங்குமுறையைக் காப்பாற்றும் சக்தி - ஆகிய இவை எல்லாமே தாய்மையான புத்திசாலித்தனம்தான்.
சமஸ்க்ருதத்தில் ஒரு பொன்மொழி: இறைவனின் சித்தம் இல்லாமல் ஒரு புல்கூட அசைய முடியாது!
நாம் சற்று ஆழமாகப் பார்த்தோமானால், நாம் எதையெல்லாம் பார்க்கிறோமோ, எதையெல்லாம் ஒரு பொருளாக உணர்கிறோமோ, அவையனைத்துமே, நம் மனம், நம் புலன்களோடு இணைந்து படைக்கும் படைப்புகளே என்னும் புரிதல் நமக்குள் மலரும்.
நமக்கான, உருவாக்குகிறோம். நாமேகான் அடித்தளத்தில், நம் நம் ஆத்மா எதிலும் ஈடுபடாமல், எல்லாவற்றையும் சாட்சியாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட குழ்நிலைக்கு, நமது மனம் நமக்குள் வலியோ மகிழ்ச்சியோ ஏற்பட காரணமாகிறது.
நமது மனம், சிலரை நல்லவர்கள் என்றும், சிலரை நிகழ்வுகளை மகிழ்ச்சியளிப்பதாகவும், சில நிகழ்வுகளை வலி உண்டாக்குவதாகவும் தோற்றம் காண்பிக்கிறது. அது, தான் நல்லவர் என்று கருதும் நபரின் பின் ஒடுகிறது, கெட்டவர் என்று கருதும் நபரைக் கண்டு விலகி ஒடுகிறது. அதேபோல் மகிழ்ச்சியான நிகழ்வுகளுக்குப் பின் ஓடுகிறது, துன்ப நிகழ்வுகளிடமிருந்து விலகி ஒடுகிறது.
முன்பு கிருஷ்ணர் மூன்று பண்புகளைப் பற்றி விளக்கியிருந்தார். அவை, தமஸ் (மந்தத் தன்மை), ரஜஸ் (செயல்கள்), ஸத்வம் (சாத்வீகம்). இவை மூன்றும் சேர்ந்து திரிகுண - மூன்றுபண்புகள் எனப்படும்.
நாம் உண்ணும் உணவாகிலும், செய்யும் செயலாகிலும், எந்த ஒரு பொருளுமே இந்த மூன்றில் ஒருவகையாக வகைப்படுத்தப்படும்.
நாம் நம்மை, இந்த உடலோடு அடையாளப்படுத்திக் கொள்ளும்வரை, ஒவ்வொருவரையும் பெயர்களாகவும் உருவங்களாகவும் பார்த்துக் கொண்டிருக்கும்வரை, அவற்றை வகைப்படுத்திக் கொண்டிருப்போம். உதாரணத்திற்கு, 'தியானம் மிக நல்லது', 'அதிகம் உண்பது நல்லதல்ல' - என வகைப்படுத்திக் கொண்டிருப்போம்.
ஞானமடைந்த ஒருவருக்கு, ஸத்யத்தை அறிந்துகொண்ட ஒருவருக்கு, எல்லாமும் ஒன்றேதான். அவர் வகைப்படுத்துவதை நிறுத்திவிடுகிறார். ஏனெனில், அவர் பெயர்களுக்கும் உருவங்களுக்கும் அப்பாற் சென்றுவிட்டார்; நல்லது, கெட்டது என்ற இருவகைகளுக்கும் அப்பாற் சென்றுவிட்டார்.
இராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஒரு அழகான உதாரணத்தைக் கொடுக்கிறார். நாம் ஒரு பள்ளத்தாக்கில் நின்றுகொண்டு, குனிந்து நம் காலடியருகில் பார்த்தால் குண்டுங்குழியுமாக மேடுபள்ளங்களையும், மேல் நோக்கி அண்ணார்ந்து பார்த்தால் மலைமுகடுகளையும் பார்ப்போம். ஆனால் நாம் அந்த மலை உச்சிக்கு ஏறினால் , கீழே இருக்கும் மேடுபள்ளங்களும் மலைமுகடுகளும் நமக்கு ஒரு பொருட்டாகத் தெரியாது. கீழே நின்றுபார்த்தபொழுது தெரிந்த மேடுபள்ளம், மலைமுகடுகளையெல்லாம் இப்பொழுது கடந்துவிட்டோம்.
எப்படி உச்சிக்கு ஏறுவது? எல்லா மேடு, பள்ளங்களையும் கடந்து ஆகாயத்தில் பறப்பது எப்படி?
நீங்கள் சாந்தமனத்துடனும் தளர்வாகவும் இருக்க வேண்டும். நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதை உணர வேண்டும், அவ்வளவுதான். நீங்கள் அந்த மேடு, பள்ளங்களைக் கடந்தவர்; நீங்கள் அந்த மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டவர்; நீங்கள் ஏற்கெனவே உச்சியில்தான் இருக்கின்றீர்கள் என்பதை உணர வேண்டும், உங்கள் மனம், 'இவர் என்ன சொல்கிறார் ? வாழ்க்கையில் இன்னும் நான் செய்ய வேண்டிய பல முக்கிய காரியங்கள் இருக்கின்றன. எப்படி நான் ஓய்வாக இருக்க முடியும் ?' என்று சொல்கிறது.
நாம், நம் மன உளைச்சல்களையும் பிரச் சினைகளையும் மிகவும் நேசிக்கிறோம். நாம் நமது வாழ்க்கையை பற்றிக்கொள்ளத்தான் விரும்புகிறோம். நாம் அதை விட்டுவிட விரும்புவதில்லை. ஏனெனில், அதுவே அனைத்தும் என்று நாம் நினைக்கிறோம்.
நாம் தளர்வாக, இருப்பதில்லை; நாம் தளர்வாக இருந்தால், நாம் பறக்க முடியும் என்பதை நாம் உணர்ந்து கொள்வதில்லை.
நாம் ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்னும் முக்குணங்களையும் கடந்து நிர்குணராகிட முடியும் !
நாம், அந்த மூன்று தன்மைகளையும் கடந்து, கிருஷ்ணர் சொன்ன, அந்த நிர்குணராக விடமுடியும்.
மனம் என்னும் வேடனின் வலையில் மாட்டிக்கொள்ளாதீர்கள்
ஒரு சின்ன கதை:
ஒரு வேடன் காட்டைக் கடந்து வரும்பொழுது, ஓரிடத்தில் பறவைகளின் கூட்டத்தைப் பார்க்கிறான். அவற்றைப் பிடிக்க நினைத்த அவன், ஒரு மரக் குச்சியை எடுத்து, அதன் நடுவில் ஒரு கயிற்றைக் கட்டி, அந்தக் கயிற்றின் இரு முனைகளையும் இரண்டு மரங்களின் கிளைகளில் கட்டிவிட்டு, அதைச் சுற்றி சிறிது தானியங்களை தெளித்துவிடுகிறான். இப்பொழுது அந்தக் குச்சி அந்தக் கயிற்றின் குறுக்கே தொங்கிக் கொண்டிருக்கிறது. புத்திசாலியான அந்த வேடன், அதன்பிறகு பறவைகளைப் பற்றிய கவலையில்லாமல் சந்தோஷமாக ஒரு குட்டிப் பகல் தூக்கம் தூங்கப்போய்விடுகிறான்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்தத் தானியங்களால் கவரப்பட்ட ஒரு பறவை, அவற்றை உண்ண, கயிற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் குச்சியின் மீது வந்து அமருகிறது. பறவையின் எடைதாளாமல், உடனே அந்தக் குச்சி புரண்டு விட, அந்தப் பறவையும் தலைகீழாகத் தொங்க ஆரம்பித்தது. அது இந்த உலகத்தையே தலைகீழாகப் பார்த்துப் பயந்து போனது. தான் பிடிக்கப்பட்டுவிட்டோம் என்று தெரிந்து மிகவும் கலவரப்பட்டது. ஆனாலும் அந்தக் குச்சியை விட்டுவிடாமல், முன்பைவிட இறுக்கிப் பிடித்துக்கொண்டது, தன்னை இதிலிருந்து விடுவிக்குமாறு கடவுளைப் பிரார்த்தித்தது.
ஒரு மணிநேரம் கழித்து, அந்த வேடன் மெதுவாக வந்து எந்தவித கஷ்டமும் படாமல் அந்தப் பறவையைப் பிடித்து, பைக்குள் போட்டு எடுத்துச் சென்றான். அதன் பிறகு என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கே தெரியும்.
நாமும் நம் வாழ்க்கையில் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அந்தப் பறவை, தன் சுதந்திரத்தை உணரவேயில்லை. அது செய்ய வேண்டியதெல்லாம் அந்தக் குச்சியை விட்டுவிட்டு, பறந்து விடுவதே.
ஆனால் அதற்கு பதிலாக அது என்ன செய்தது ? தான் பிடிபட்டுவிட்டதாகவும், தான் அந்தக் குச்சியை விட்டுவிட்டால், தலைகீழாக விழுந்து, தன் தலை தரையில் மோதி தான் இறப்பது உறுதி என்றும் நினைத்து, குச்சியை விட்டுவிடாமல் இறுகப்பிடித்துக்கொண்டது.
நாமும் கடந்தகாலத்தை இப்படித்தான் பிடித்துக் கொண்டிருக்கிறோம்; வலிகளையும் சந்தோஷங்களையுமே பிடித்துக்கொண்டு, எதைப் பிடிக்க வேண்டுமோ அதைத் தவறவிட்டுக் கொண்டேயிருக்கிறோம். நாம் இந்த நிகழ்கால நிமிடத்தைத் தவறவிட்டுக் கொண்டேயிருக்கிறோம். நாம் 'முடிவற்ற நிலை' யைத்தவறவிடுகிறோம். நாம், நம்முள் நிலைத்திருக்கும் நம் 'விழிப்புணர்வை' தவறவிடுகிறோம்.
வாழ்கிற எல்லா உயிரினங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் 'உன்னதமான ஸ்தீயம் இருக்கிறது!
உயிரினங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் உன்னதமான ஸ்தீயம் இருக்கிறது. ஸூக்ஷ்மமாக இருப்பதால், அது, அசைந்துகொண்டும் அசையாமலும் இருக்கிறது. அது, அருகிலும் இருக்கிறது, தூரத்திலும் இருக்கிறது.
கிருஷ்ணர், அசைவது அசையாதது, சமீபம் தூரம், உள்ளே வெளியே என்பது போன்ற எல்லாவித சொற்களையும் கையாள்கிறார். ஏனெனில் இந்தச் சொற்களைக்கொண்டே, அனைத்தையும் நாம் புரிந்துகொள்கிறோம், அறிந்துகொள்கிறோம்.
அதாவது உன்னதமான விழிப்புணர்வானது, நமக்குத் தெரிந்த இந்த வார்த்தைகள், கருத்துகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்று சொல்லி, நமக்கு அதைப் பற்றிய ஒரு கருத்தைக் கொடுக்கிறார்!
நாம் எப்பொழுதுமே நமக்குத் தெரிந்த ஏதாவது ஒன்றை வைத்தே, அதாவது அண்மை தொலைவு, உள்ளே வெளியே போன்ற குறிப்புகளை வைத்தே மதிப்பீடு செய்கிறோம். புரிந்துகொள்ளுங்கள், இந்தப் பெயரெச்ச சொற்கள் எல்லாம், ஏதோ ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு மட்டுமே உதவுபவை.
ஒருவருக்கு அண்மை என்று தெரிவது, மற்றொருவருக்கு, தொலைவாகத் தெரியலாம்.
ஏதோ ஒன்றிற்குள்ளே இருப்பதாக இருக்கும் ஒரு பொருள், மற்றொன்றிற்கு, வெளியே இருக்கும் பொருளாக இருக்கலாம்.
ஒரு பெட்டி வீட்டுக்கு உள்ளே இருப்பதாகவும், மரம் வீட்டுக்கு வெளியே இருப்பதாகவும் ஆனால் அதே சமயத்தில், அந்த மரம், அந்நகரத்திற்கு உள்ளே இருப்பதாகவும் நாம் சொல்லலாம் அல்லவா. வீட்டோடு ஒப்பிட்டால், மரம் வெளியே இருக்கிறது, நகரத்தோடு ஒப்பிட்டால், உள்ளே இருக்கிறது.
உன்னதமான விழிப்புணர்வானது, நமக்கு தெரிந்த வார்த்தைகள், கருத்துகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது!
ஆகவே இந்தப் பெயரெச்ச சொற்களெல்லாம், நாம் எந்தப் பொருளோ(டு அல்லது எந்த இடத்தோடு ஒப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்த தொடர்புச் சொற்களாக இருக்கின்றன.
ஒரு எல்லையோடு நின்று விடாதீர்கள்
நீங்கள் உலகம் முழுவதும் விதவிதமான குணாதிசயங்களுடன் கூடிய ஏனென்றால், உங்களை நீங்களே ஒரு குறிப்பிட்ட அடையாளத்தோடு இணைத்துக்கொள்கிறீர்கள். நீங்கள் இந்த உடலை, ஒரு குறிப்பிட்ட எல்லையுடன் கூடிய ஒரு உருவமாக நினைத்து, அது உலகத்தில் மற்றதையெல்லாம் பார்க்கிறது என்று நினைக்கின்றீர்கள்.
உங்களைச் சுற்றியுள்ள எல்லாப் பொருட்களிலிருந்தும் உங்களைத் தனியாகப் பிரித்து, உங்களை வேறாக உணர்ந்தீர்களென்றால், இப்படித்தான் எல்லாவற்றையும், உங்களுக்குத் தெரிந்த பெயரெச்ச சொற்களைப் போட்டு முத்திரை குத்திக் கொண்டிருப்பீர்கள்.
உங்கள் உடல் எல்லையை அடிப்படையாக வைத்து, மற்றதையெல்லாம் அண்மை, தொலைவு என்று சொல்கின்றீர்கள். நீங்கள் மேற்கோள் குறிப்புகளை உருவாக்கிவிடுகிறீர்கள். நீங்கள் எதைச் செய்தாலும், எதை நினைத்தாலும், இந்தக் குறிப்புக்களை வைத்துத்தான் செய்கின்றீர்கள். நீங்கள், கடாகாசம் என்று சொல்லப்படும் உங்கள் உடல் எல்லைக்குள்கான் வசிக்கிண்றீர்கள்.
நாம் வாழக்கூடிய 'வெளி'கள் மூன்று உள்ளன. ஒன்று - உடலால் சூழப்பட்ட வெளி, இரண்டு- மனத்தால் சூழப்பட்ட வெளி, மூன்று -உடலாலும் மனத்தாலும் கூழப்படாத வெளி.
முதலாவது, கடாகாசம் - இந்த உடலால் சூழப்பட்ட வெளி. இந்த வெளி, நமது நேரமும், இந்த வெளியில்தான் வாழ்கிறோம்.
அடுத்தது, சிதாகாசம் - நீங்கள் 'உணர்கிற வெளி'யாகும். இங்கே, இப்பொழுது நீங்கள் இந்தக் கூடத்தை உணர்ந்தால், இது உங்கள் பிர்பஞ்ச வெளி.
நாம் வாழக்கூடிய 'வெளி'கள் மூன்று:
-
- உடலால் சூழப்பட்ட வெளி,
-
- மனத்தால் சூழப்பட்ட வெளி,
-
- உடலாலும் மனத்தாலும் கூழப்படாத வெளி.
மூன்றாவது மறையகாசம் - எல்லாமே அடங்கிய பெருவெளி, அண்டவெளி, மற்றும் சிதாகாசம், இது எண்ணங்களின் வெளி'யாகும்.
கடாகாசம் என்பது நிலம், நீர், தீ, காற்று, ஆகாசம் என்னும் ஐந்து தனிமங்களால் ஆனது; நாம் நிலத்திலிருந்து நீருக்கு, நெருப்புக்கு, காற்றுக்கு, வெட்டவெளிக்கு என்று மேல்நோக்கிச் செல்லச் செல்ல இந்தத் தனிமங்கள் ஸூஷ்மமாகின்றன.
ஆகாசத்தைத் தைத் தனிமங்களும் பிரதிபலிக்காது. விழிப்புணர்வைச் இது விழிப்புணர்வைப் நாமெல்லாம் உயிரோடு இருப்பதற்கு இதுவே காரணம்.
ஆகாசம் மட்டுமே விழிப்புணர்வைச் சேர்ந்தது. மற்ற நான்கு தனிமங்களும் விழிப்புணர்வைப் பிரதிபலிக்காது.
பிரச்னை நம் விழிப்புணர்வு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது நினைக்கிறோம். இந்த உடலுக்குள் மட்டும் வரையறுக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறோம்.
அதனால்தான் வெளியுலகத்தைப் பார்க்கும்பொழுது, நாம் இந்த உடலையே ஒரு அடையாளக் குறிப்பாக எடுத்துக்கொள்கிறோம். வெளியுலகத்தைப் பார்க்கும் இந்த உடலே 'நான்' என்று நினைக்கிறோம். உடல் எல்லைகளால் வரையறுக்கப்பட்ட தனித்தனி அடையாளங்களே, அதாவது தனித்தனி ஜீவன்களே 'நான்' என்கிற கருத்தைத்தான் எல்லா விஞ்ஞானமும் அடிப்படை ஆதாரமாகக் கொண்டுள்ளன.
இந்த கடாகாசத்தைக் கடந்து மறைகளகத்திற்குள் நுழைந்த ஞானிகள், இந்த எல்லாப் பிரிவுகளுக்கும் காரணம் நம்முடைய 'அறியாமை'தான் என்பதைப் புரிந்துகொள்கிறார்கள்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், இந்த 'வெளி'யை எப்பொழுதும் பிரிக்கவே முடியாது. இருந்தாலும் நாம், நம் குறுகிய புரிதலின் அடிப்படையில், உள்ளே வெளியே, அண்மை தொலைவு போன்ற சொற்களைக்கொண்டு எல்லைகளை உருவாக்கி அதைப் பிரிக்கிறோம். இதுவே நம்முடைய துன்பங்களுக்கெல்லாம் காரணம்.
முதலாவதாக, இந்த வெளியை நம் அறியாமையால் பிரிக்கிறோம்.
இரண்டாவதாக, 'வெளி' என்பது நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்றெண்ணிக்கொண்டு, அதை நமக்கே சொந்தமாக்கிக்கொள்ள முயற்சிக்கிறோம்.
மூன்றாவதாக, நம்மிடமிருந்து இந்த வெளி பறிக்கப்பட்டு விடும் என்று நாம் அஞ்சுகிறோம்.
நமக்கு, மரண பயம் உட்பட, எல்லாவித பயங்களும் ஏற்படுவதற்கான காரணம் என்னவென்றால், உடலாலும் மனத்தாலும் குழுப்பட்ட வெளியைப் பாதுகாத்துக்கொள்ள நாம் தொடர்ந்து முயற்சிப்பதுதான்.
'வெளியைப் பிரிக்கவே முடியாது' என்ற இந்த அடிப்படை ஸ்த் யத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாமே மறையகாசம் என்பதைப் புரிந்துகொள்ளும்பொழுது, கடந்துவிடுகிறோம்.
கடாகாசத்திலிருந்து சிதாகாசத்திற்கும், சிதாகாசத்திலிருந்து மாற்றம் உள்ளே-வெளியே, அண்மை-தொலைவு என்று எதுவுமே இல்லை என்பதைப் புரிந்துகொள்கிறோம்.
நாம் எந்த 'வெளி'யில் இருந்தாலும், அதைவிட அடையக்கூடிய ஒவ்வொருவருக்குள்ளும் மனிதன், இயல்பாகவே, உள்ளார்ந்த அற்றல்களைக்கொண்டவன்!
இப்பொழுது, அவன் 'உண்மை நிலை'யில் இல்லை; அவன் என்னவாக இருக்க வேண்டுமோ அப்படியில்லை.
தற்சமயம், நம்முடைய உள்ளடங்கிய செயல்திறத்தை இன்னும் முழுமையாக வெளிப்படுத்தவில்லை. நாம் இன்னும் மரமாகவில்லை. அதற்காக நாம் வளரவே முடியாது, மரமாகவே முடியாது என்று அர்த்தமில்லை.
'அந்த மஹோன்னதமான ஸத்யம், வாழும் எல்லா உயிர்களின் உள்ளேயும் வெளியேயும் இருக்கிறது' என்கிறார், கிருஷ்ணர். நாம் இந்தத் தொடர்பு எல்லைகளை, பெயரெச்ச சொற்களைக் கடந்தோமானால், நாம், கிருஷ்ணர் சொல்வதை, அனுபவங்கள் வாயிலாகப் புரிந்துகொள்வோம் !
அது, இருப்பதால் இயங்கிக்கொண்டும் இருக்கிறது. இதுதான் எல்லா வெளியையும் உள்ளடக்கிய மறைகாசம் என்னும் வெளி.
இந்த வெளி ஒன்றே, முழுமையானது, எல்லையற்றது. எல்லாமே இந்த வெளியில் அடக்கம். அங்கு 'இரண்டு' என்பதே இல்லாதபொழுது, எப்படி நாம் அதை ஒப்பிடமுடியும் ? இருப்பது ஒன்றுதான் எனும்பொழுது, அதை எப்படி நாம் அண்மை, சொல்ல முடியும் ?
நாம் எந்த 'வெளி'யில் இருந்தாலும், அதைவிட உயர்ந்த வெளியை அடையக்கூடிய சாத்தியம், நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.
அது ஸத்வியமானது, முழுமையானது, மேலும் ஒன்றே ஒன்றுதான்.
வடிவத்தைக் கடந்தும் வாழும் சக்தி
பரமாத்மா, பிரபஞ்சமாகவும் மற்றும் தனித்தனி உயிர்களாகவும் பிரிந்திருப்பதாக நமக்குத் தோன்றினாலும், அது எப்பொழுதும் பிரிக்கப்பட முடியாததாகும். இதுவே வாழ்வின் தோற்றம், வாழ்தல் மற்றும் அழிவு என்பனவற்றின் அடிப்படை என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டும்.
பெயரோ அல்லது உருவமோ இல்லாத அதே பிரபஞ்ச சக்திதான் இந்த உலகத்தில் பல வடிவங்களாகவும், பெயர்களாகவும் வெளிப்படுகிறது. எது இணைந்து ஒன்றாக இருக்கிறதோ அதுவே பலவாகவும் தோன்றுகிறது.
நாம் தண்ணீரை பல அளவும், வடிவமும்கொண்ட ஜாடிகளில் ஊற்றும்பொழுது, அதுவும் அதே வடிவங்களை எடுத்துக்கொள்கிறது. ஒவ்வொரு ஜாடியிலுள்ள தண்ணீரும் ஒவ்வொரு வடிவமாகத் தோற்றமளிக்கிறது. ஆனால் நன்றாகக் கவனித்தால், எல்லாமே அதே தண்ணீரைத்தான் கொண்டிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வோம்.
அதைப்போலவே உலகிலுள்ள கோடிக்கணக்கான ஜீவராசிகள், பல்வேறு வடிவங்களாகவும் அளவுகளாகவும் தோன்றிக் கொண்டிருந்தாலும், அத்தனைக்குள்ளும் அதேசக்திதான் இருக்கிறது. ஒவ்வொன்றிற்குள்ளும் ஒடிக் கொண்டிருக்கும் ப்ராண சக்தி - 'உயிர் சக்தி' ஒன்றே!
உமரிஷத்தில், கடலையும் அலைகளையும் பற்றி வரும் உருவகத்தைப் பற்றி நான் முன்பே பேசியுள்ளேன். பெருங்கடலிலிருந்து எழும் ஒவ்வொரு அலையும், பிறகு அதிலேயே விழுந்து கலந்துவிடுகிறது. அது, மேலெழுவதற்கும், கீழே விழுவதற்கும் இடைப்பட்ட இந்தக் குறுகிய கால இடைவெளியில், அது தன்னை அந்தக் கடலிலிருந்து வேறாக நினைக்கிறது.
அதைப் போலவே, ஒவ்வொரு அலையும் தன்னைத் தனித்ததாகவும், மற்றதிலிருந்து வேறாக இருப்பதாகவும் நினைக்கிறது. புதிதாக எழுந்த அந்தச் சிறிய அலைக்கு, முன்னமே எழும்பியிருந்த மற்ற அலைகளெல்லாம் சேர்ந்து ஒரு பெயர் வைத்தன. அதோடு மட்டுமல்ல, சிறிது காலத்திற்குப் பிறகு, அந்தச் சிறிய அலை, 'இது என் தந்தை அலை', 'இது என் தாய் அலை', 'அவையெல்லாம் என் நண்பர்கள்', 'இதெல்லாம் என் ஆசிரியர்கள்', 'அவை என்னுடைய எதிரிகள்', என்று இன்னும் பல அடையாளங்களை, தானே ஏற்படுத்திக்கொண்டது.
சிறிது காலத்திற்குப் பிறகு, அந்த அலை, தான் அந்தக் கடலிலிருந்து எழுந்ததையே மறந்துவிட்டது. அது, தனக்கென்று இப்படிப்பட்ட பொய்யான அடையாளங்களைச் செதுக்கிக்கொள்வதில் மும்முரமாக ஈடுபட்டது. அதைப் புரிந்துகொள்வதற்கு முன்பாகவே, அது மீண்டும் அந்தக் கடலுக்குள் விழுந்து விட்டது!
ஒவ்வொன்றிகுள்ளும் ஒடிக் கொண்டிருக்கும் ப்ராண சக்தி – 'உயிர் சக்தி' ஒன்றே!
அந்த அலை விரும்புகிறதோ இல்லையோ, இதை நம்புவதற்கு விரும்புகிறதோ இல்லையோ, அது மீண்டும் கடலுக்குள் விழத்தான் அது அங்கிருந்துதான் வந்தது. அதற்கு வாய்ப்பு, விருப்பம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. அலை, கடலிலிருந்து வந்தது; அது அதே கடலுக்குத்தான் திரும்பிச் சென்றாகவேண்டும்.
அது, தன்னை அந்தக் கடலிலிருந்து வேறாக நினைத்து, அதைத் தடுக்கும்பொழுதுதான்,
எல்லாப் பிரச்சினைகளும் எழுகின்றன. அதுமட்டுமல்ல, வெவ்வேறு அலைகளும், ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்து, ஒன்றோடு ஒன்று போரிடவே ஆரம்பித்துவிடுகின்றன!
அந்த அலை கடலில் விழுந்தாலுங்கூட, அது கடலின் வேறொரு பகுதியில் மற்றொரு அலையாக எழுப்போகிறது என்பதைப் புரிந்து கொண்டிருந்தால், பிறகு, தான் கீழே விழுவதை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை. அது தளர்வாக இருக்கலாம், இன்பமாக இருக்கலாம்! இது புரிந்தவுடன் அந்த அலை, கடலில் தன்
'நாமனைவரும் ஒரே மூலத்திலிருந்துதான் வந்தோம். அங்கேயே திரும்பி விடுவோம்'
விளையாட்டை மகிழ்வுடன் விளையாட ஆரம்பிக்கலாம்.
மேலும், அந்த அலை, அந்த மாபெரும் கடலில் இருக்கும் மற்ற அலைகளும்கூட, அதே கடலின் தண்ணீர்தான் என்பதைப் புரிந்துகொண்டால், உடனே மற்ற அலைகளோடு ஒரு ஆழமான தொடர்பை தனக்குள் உணரும், ஏனெனில் மையப் பகுதியில், அவையெல்லாம் ஒன்றேதான் என்பதை அது அறிந்துகொள்ளும் !
'நாமனைவரும் ஒரே மூலத்திலிருந்துதான் வந்தோம், அங்கேயே திரும்பி விடுவோம்' என்ற இந்த எளிய வாழ்க்கைக் கோட்பாட்டை நாம் புரிந்துகொண்டால், நம் தனி 'சுய'த்தைவிட, மிகப்பெரிய ஒன்றுடன் இணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நாம் அறிந்துகொள்வோம்.
ஒரு சின்ன கதை:
ஒரு சிறுவன், ஒருமுறை, ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தைக் கயிறு கட்டி இழுத்துக்கொண்டு செல்வதைப் பார்த்தான். இரண்டு வாகனங்களுமே மிக மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்ததால், போக்குவரத்து தடைபட்டது. அந்தச் சிறுவன் அந்த இரண்டு வாகனங்களையும் பார்த்துப் பலமாகச் சிரிக்க ஆரம்பித்துவிட்டான். அந்த வாகன ஓட்டுநருக்கு ஒன்றும் புரியாததால், அந்தச் சிறுவனிடம், ''ஏன் சிரிக்கிறாய்?' எனக் கேட்டார். அதற்கு அந்த சிறுவன், ''ஒரு கயிற்றை தூக்கிக்கொண்டு போவதற்கு இரண்டு வாகனங்களைப் பயன்படுத்துகிறீர்களே, அதனால்தான் சிரித்தேன்!'' எனறு பதிலளித்தான்.
அந்தச் சிறுவனுக்கு, பழுதடைந்திருக்கும் ஒரு வாகனத்தைத்தான் அந்த மற்றொரு வாகனம் கயிறுகட்டி இழுத்துச் செல்கிறது என்பது தெரியவில்லை. அதனால் அவன் அறியாமையில் சிரித்தான். நம் வாழ்க்கையும் இப்பொழுது இப்படித்தான் இருக்கிறது. நாம் அறியாமையில் இருக்கும்பொழுது, உலகிலுள்ள அனைத்தாலும் முட்டாளாக்கப்படுகிறோம்; உண்மையைத் தவறவிடுகிறோம்.
தந்த முழுப் பிர்பஞ்சத்தையும் இணைக்கும் இழையைப் பிடியுங்கள், பிர்பஞ்சத்தின் அழகையும் ஆனந்தத்தையும் கொண்டாடுங்கள்.
ஒரு யானையைத் தொட்டுப்பார்த்த நான்கு குருடர்கள், 'யானை முறம் போன்றது; தூண் போன்றது; பானை போன்றது; உருட்டுக்கட்டையைப் போன்றது' - என, தாங்கள் தொட்டுப் பார்த்த உறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டனர், ஏனெனில், அவர்கள் தொட்டு உணர்ந்த நான்கு வேறு வேறு உறுப்புகளும், ஒரே யானையைச் சேர்ந்தவை என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அதேபோல் இந்த ஒரு இழையைப் பிடிக்க முடியவில்லையென்றால், நாமும் அந்த அழகையும் ஆனந்தத்தையும் தவறவிடுகிறோம். நாம் ஒவ்வொருவரும் அதே தெய்விக சக்தியின் ஒரு வெளிப்பாடுதான் என்பதை அறிந்துகொள்ளும்பொழுது, நாம் ஒவ்வொன்றோடும், ஒவ்வொருவரோடும் ஒரு ஆழமான இணைப்பை, தொடர்பை உணருகிறோம்.
பெயருக்கும் தோற்றத்திற்கும் அப்பாற்பட்டவர் ...
பிரபஞ்ச விழிப்புணர்வு, எண்ணற்ற வழிகளில் வெளிப்படுகிறது. மேலும் அதுவே அழிவுக்கும் காரணமாயிருக்கிறது. அதே பிரபஞ்ச சக்தி வெளிப்படாமல் இருக்கும்பொழுது, அது உள்ளடங்கிய சக்தியாக இருக்கிறது. வேதங்கள், இந்தச் சக்தியை புருஷ என்று குறிப்பிடுகின்றன.
இந்தச் சக்தியே, தன்னை விதவிதமான பெயர்கள், உருவங்கள், வடிவங்களாக வெளிப்படுத்துகிறது.
புருஷ அல்லது இந்த வெளிப்படாத சக்தியானது, பிரம்மா-படைப்பவர், விஷ்ணு - காப்பவர், சிவா- புதுப்பிப்பவர் இவர்களையெல்லாம் கடந்தது; எல்லா இருப்புகளுக்குள்ளும் ஒடுகிற பிரபஞ்ச விழிப்புணர்வு, பெயர்களுக்கும் தோற்றங்களுக்கும் அப்பாற்பட்டது!
எனினும் அதே பிரபஞ்ச விழிப்புணர்வு வெளிப்படும்பொழுது, பிரம்மா, விஷ்ணு, சிவா என்று ஆகிவிடுகிறது. அதாவது புருஷ சக்தி, ப்ரக்ரு தியாக வெளிப்படும்பொழுது- படைத்தல், காத்தல், அழித்தல் நிகழ்கிறது.
நம்மைப் பிறக்க வைத்த அதே உயிர்சக்திதான், நம்மைக் காக்கவும் செய்கிறது. நமக்குள் நடக்கும் ஒவ்வொரு சின்ன நிகழ்வையும் நம்மை இவ்வுலகிற்குக் கொண்டுவந்த, அதே புத்திசாலித்தனம்தான் நடத்திக்கொண்டு வருகிறது. அதைப் போலவே, நாம் இந்த உடலை விட்டுச் செல்லும்பொழுது, அந்தப் புத்திசாலித்தனம், நம்மோடு சேர்ந்து வருகிறது.
பெருங்கடலின் தண்ணீர்தான் புருஷன். நடனமாடி விளையாடும் அலைகள்தான் ப்ரக்ரு தி. அந்தத் தண்ணீரானது, பல உருவங்களையும் வடிவங்களையும்கொண்ட அலைகளாகத் தோற்றமளிக்கிறது; ஆனால் உண்மையில் அது ஒரே தண்ணீர் கொண்ட பெருங்கடல்தான்.
கிருஷ்ணர் அர்ஜுனருக்கு நினைவூட்டுகிறார்: ப்ரக்ரூ 'தியின் வெவ்வேறு படைப்புகள் மற்றும் வெளிப்பாடுகளின் காரணமாகவே, அந்த ஒப்புயர்வற்ற சக்தியானது - புரூஷன் பிரிக்கப்பட்டிருப்பதாகத் என்றும் தோற்றமளிக்கிறது. இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர், பிளவுபடாதவர். அனைத்துப் படைப்புகளுமே, அவற்றின் மையங்களை நோக்கும்போது, அவை பிரபஞ்ச சக்தியின் படைப்புகளே!
கிருஷ்ணர் சொல்கிறார்: நானே மேலான இருப்புத்தன்மையாகவும், பொருட்களின் ஒளிக்குக் காரணமான ஒளி ஆதாரமாகவும் இருக்கிறேன்.
கடோபநிஷத்தில் உள்ள ஒர் அழகான சுலோகம்: ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாருகம் நேமா வித்யதோ பாந்தி குதோऽயமக்நிஃ | தமேவ பாந்தமநு பாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி ||
இதற்கு அர்த்தம்: சூரியன், சந்திரன், நட்ச த்திரங்கள் ஆகியவற்றால்கூட சுயமாக ஒளிரும் அந்த விழிப்பணர்வை பிரகாசிக்க வைக்க முடியாதென்றால், நெருப்பைப் பற்றி என்ன சொல்வது ?
கருப்புத்தன்மையே 'ஒளியின் ஆதாரம்'!
ஆனால், சுயமாக ஒளிரும் விழிப்புணர்வை பின்பற்றிச் சென்றால், குரியன், சந்திரன், மற்றவை எல்லாமே பிரகாசமாக ஆகிவிடும். பரமாத்மாவான இறைவனின் உடலிலிருந்து வெளிப்படும் பிரகாசத்தால் இந்த முழும் பிரபஞ்சமும் பிரகாசமடைகிறது.
நாமறிந்தவரையில், ஒளிக்கு ஆதாரங்கள் என்று சொல்லும்பொமுது, குரியன், சந்திரன், மின்னல், நெருப்பு மற்றும் மின்சாரம் போன்ற செயற்கை ஒளிகளைக் குறிக்கிறோம். இவையே வாழ்க்கையை சாத்தியமாக்குகின்றன. நம்மைச் சுற்றியுள்ள ஒரு பொருளை, ஒளிச் சக்தியின் உதவிகொண்டுதான் பார்க்க முடிகிறது.
உள்ளதை உள்ளபடியே பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்
சக்ஷு என்னும் பார்வைக்குப்பின் இருக்கும் சக்தியால் சுற்றுப்புறம் ஒளியேற்றப்படும்பொழுது மட்டுமே, பொருட்களை உணர்ந்து, அறியமுடிகிறது. சூரியனிடமிருந்து வரும் ஒளிச் சக்திதான், எல்லா உயிர்களின் பிறப்புக்கும், வளர்ச்சிக்கும் காரணம். பூமியில் வாழும் அனைத்து உயிர்களும், தாம் வாழ்வதற்கு, சூரியனையே சார்ந்திருக்கின்றன.
இந்த ஒளி ஆதாரங்களுக்கு எது சக்தியைத் தருகிறது ? எது அவற்றைத் தூண்டுகிறது? அந்தப் பிரபஞ்ச சக்திதான்! ஆம், ஒளியினுடைய எல்லா ஆதாரங்களுக்கும் தேவையான சக்தியை பிரபஞ்ச இருப்பே கொடுக்கிறது.
கிருஷ்ணர், இந்த இருப்புத்தன்மையை 'ஒளியின் ஆதாரம்' என்று அழைக்கிறார். ஒளியின் மூலங்களான குரியன், சந்திரன், மின்னல் ஆகியவை, சுயமாக பிரகாசிக்கும் தன்மைகொண்ட இருப்புத்தன்மையிலிருந்தே, தங்களின் சக்தியைப் பெறுகின்றன. அதனால்தான், இருப்புத்தன்மையை, 'தானே பிரகாசிப்பது' அல்லது 'சுயமாக ஒளிவிடுவது' என்று அழைக்கிறோம்.
ஆழ்ந்த கருத்தின்படி, இருப்புத்தன்மையை 'ஒளிபொருந்திய' என்று குறிப்பிடும்பொழுது, அது, நாம் சாதாரணமாகப் புரிந்துகொள்ளும் அர்த்தத்தில் குறிக்கப்படவில்லை. இருப்புத்தன்மை என்பது தூய புத்திசாலித்தனம்; அது நம் அறியாமையைப் போக்குகிறது.
ஒரு ஜ்ஞான குரு ஒவ்வொன்றையும் மிகத்தெளிவோடு பார்க்கிறார். அவர் சத்தியத்தை உள்ளது உள்ளபடியே பார்க்கிறார். நீங்கள் ஒரு இருட்டான அறைக்குள் இருக்கும்பொழுது, அந்த அறையில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். விளக்கைப் போட்டபிறகு, சுற்றிலும் இருப்பதைத் தெரிந்துகொள்வீர்கள்.
ஒரு ஜ்ஞான குரு, 'விழிப்புணர்வு' என்னும் விளக்கைப் பயன்படுத்தி, சத்தியத்தை உள்ளது உள்ளபடியே, எந்த எந்த வடிகட்டியையும் பயன்படுத்தாமலேயே பார்க்கிறார். அவர், விழிப்புணர்வு விளக்கைப் பயன்படுத்தி, தம்மைச் முழுமைத்தன்மையில் உணர்கிறார்.
இந்த விழிப்புணர்வு விளக்கு, மற்ற விளக்குகளைப் போன்றது அல்ல; இது அறியாமையின் அடுக்குகளை, அவை எவ்வளவு ஆழத்தில் இருப்பினும், அவற்றை வெட்டிவிடுகிறது! அதனால்தான் குருவானவர், தம்மைச் சுற்றி, 360 டிகிரியும் பார்க்கிறார்.
அனைத்துப் படைப்புகளுமே, அவற்றின் மையங்களை நோக்கும்போது, அவை பிர்பஞ்ச சக்தியின் படைப்புகளே !
அவர், தாம் பார்க்கும் எதையும் நாம் செய்வதைப்போல, வடிகட்டி பார்ப்பதில்லை. நாம் செய்யும் இந்த வடிகட்டுதல்தான், நம்முடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம். நாம், உள்ளதை உள்ளபடி பார்ப்பதேயில்லை. நமது நினைவுப்பதிவுகளிலிருந்து விளைந்த கருத்துகளுக்குத் தக்கவாறு, நாம் அவற்றைத் திரித்துக்கொள்கிறோம்.
நம்முடைய உணர்ச்சிகளாலும் நினைவுகளாலும் பாரம் ஏற்றப்பட்ட நம்முடைய அஹங்காரம், சத்தியத்தை உள்ளபடியே பார்க்கவும், அனுபவிக்கவும் நம்மை அனுமதிப்பதில்லை. இது, உங்கள் கணினியில் ஏராளமான உயர்-அடர்த்தி படங்கள் ஏற்றப்படும்பொழுது நடப்பதைப்போலத்தான் நடக்கிறது! அதற்குப் பிறகு அதனுள் எந்தச் செய்தியைப் போட்டாலும் அதனால் சரியாகச் செயல்பட முடியாது.
அதைப்போலவே, நாம் கடந்தகால உணர்ச்சிகள், மனக்கிளா்ச்சி கள், கருத்துகள், நினைவுகள் ஆகியவற்றாலான ஒரு வடிகட்டியை உருவாக்கி, அதன் வழியே உலகத்தைப் பார்க்கிறோம்; விளைவு... உள்ளதை உள்ள படியே பார்ப்பதை நாம் நிறுத்திவிடுகிறோம்.
நாம் அஹங்காரத்திலிருந்து செயல்படும்பொழுது, உண்மையில் என்ன இருக்கிறதென்ற அறிந்துகொள்ளாமலேயே, நாம் நம் சொந்தக் கற்பனை உலகில் வாழ்கிறோம்.
இந்த அஹங்காரம், இருளைப் போன்றது, அதற்கென்று ஒரு இருப்பு இல்லை, அதற்கென்று ஒரு நேர்மறை இருப்பு கிடையாது. ஒளி இல்லாத நிலையே இருள் என்பதுபோல், விழிப்புணர்வற்ற
ஜ்ஞான குரு, விழிப்புணர்வு விளக்கைப் பயன்படுத்தி, தம்மைச் சுற்றி நிலவும் சூழலை முழுமைத்தன்மையில் உணர்கிறார்.
நிலையே அஹங்காரம் எனப்படுகிறது. அஹங்காரத்தை அழிக்கப் போராடுவது என்பது அறையிலிருந்து இருட்டை, நம் கைகளால் தள்ளி, விரட்டிவிட முயல்வது போன்றதுதான்.
நாம் விஷயங்களை, உள்ளது உள்ளபடியே பார்த்து, அதிலுள்ள சத்தியங்களை அப்படியே உணர்வது எப்படி ?
இருளை நீக்குவதற்காக நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், இருளுடன் போராடுவதைப் பற்றிய எண்ணத்தை மறந்துவிட பதிலாக, உங்கள் சக்தியை ஒளியின்மேல் குவியுங்கள். அந்த அறைக்குள் ஒரு விளக்கைக் கொண்டுவாருங்கள், இருள் தானாகவே போய்விடும். விழிப்புணர்வு எனும் இந்த விளக்கு, நம் எல்லோரிடமும் இருக்கிறது ; இருக்கிறது.
அஹங்காரத்தைப் பற்றிய அனைத்தையும் மறந்து விழிப்புணர்வு என்ற விளக்கை உங்கள் இருப்புத்தன்மைக்குள் எடுத்து வருவதில்
ஒளி இல்லாத நிலையே கருள் என்பதுபோல், விழ்புணர்வற்ற நிலையே அவரங்காரம் எனப்படுகிறது.
கவனம் செலுத்துங்கள். எப்பொழுது உங்கள் முழு விழிப்புணர்வும் ஒளிச்சுடராக மாறுகிறதோ, அப்பொழுது அங்கு அஹங்காரம் என்பது இல்லை.
சத்தியங்கள் எள்மையானவையே!
கேள்வி: ஸ்வாமிஜி, புருஷ், ப்ரக்ரு தி என்பதைப் பற்றி படித்தபொழுது நான் குழம்பிவிட்டேன். நீங்கள் புருஷ் என்பது கடலின் தண்ணீர் என்றும் ப்ரக்ரு தி என்பது அலைகள் என்றும் சொன்னீர்கள். இது புரிந்துகொள்வதற்கு மிகவும் எளிதாக உள்ளது. ஆனால் மற்ற விளக்கங்கள் ஏன் அவ்வளவு குழப்பமாக இருக்கின்றன ?
எல்லா சத்தியங்களுமே மிக எளிமையானதுதான். நாம் சத்தியங்களைப் புரிந்துகொள்ளவில்லையாதலால், அவற்றை சிக்கலாக்கிவிடுகிறோம், நாம் முழுவதுமாக சுய-சந்தேகத்தால் நிரப்பி இருப்பதனால், எல்லா சாத்தியக் கூறுகளையும் வைத்து, அவற்றை மறைக்க விரும்புகிறோம்.
நாம் படிப்பவரையும் கேட்பவரையும் குழப்பவே விரும்புகிறோம். அவர்கள், குழப்பத்தில் இருந்தால்தான், மேலும் கேள்விகளைக் கேட்கமாட்டார்கள். தத்துவவாதிகளின் நோக்கமே மற்றவர்களைக் குழப்பிவிடுவதுதான்! அப்படியானால்தான், அவர்களே எந்தளவிற்கு குழப்பத்திலிருக்கிறார்கள் என்பதை மற்றவர்களால் கண்டுபிடிக்க இயலாது !
இந்த வார்த்தைகளைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் சிரமப்படாதீர்கள். அதற்கு அவசியமேயில்லை! தத்துவவாதிகளும் அதைப் பற்றிக் கவலைப்படட்டும்.
நீங்கள் அறிய வேண்டியதெல்லாம், ஒரு ஆதார சக்தி இருக்கிறது, இந்த ஆதார சக்திதான் இந்த முழுப் பிரபஞ்சத்தையும் நம் ஒவ்வொருவரையும் இயக்குகிறது. இந்த விழிப்பு இல்லாததுதான் நம் எல்லாப் பிரச்சினைகளுக்கும், துன்பங்களுக்கும் காரணம்.
இந்த ஆதார சக்தியைத்தான் கிருஷ்ணர், பரமாத்மன் என்று அழைக்கிறார். அதை எளிமையாக மொழிபெயர்க்க வேண்டுமானால், மேலான ஆத்மா என்று சொல்லலாம்.
பிர்பஞ்சம் அனைத்தும் புருஷனின் வெளிப்பாடே என்பதைப் புரிந்துகொள்வதே 'தன்னை அறிதல்' !
இதை, 'கடவுள்' அல்லது உங்கள் விருப்பப்படி வேறு அழைத்துக்கொள்ளுங்கள். இது எல்லாவற்றுள்ளும், ஊடுருவியுள்ளது. இந்தச் சக்தியில்லாமல் எதுவும் இயங்க முடியாது. இந்தச் சக்திதான் புத்திசாலித்தனம். இதுவே புத்தி மற்றும் சக்தி, அல்லது சக்தியுள்ள புத்தி.
சாங்கிய தத்துவஞானிகள், போன்றவர்கள் இந்தக் கருத்தை இன்னும்
பிரித்தார்கள். இயங்காமல் இருக்கும், அசையாமல் இருக்கும் புத்தியின் சக்தியை, அவர்கள் புருஷ் என்று குறிப்பிட்டார்கள். இதுவே அடிப்படையான, ஆதாரமான, பார்க்க முடியாத, வெளிப்படாத சக்தி. உருவகமாகச் சொன்னால், இதுதான் 'வெளி'யில் உள்ள ஆகாசம், கடலின் நீர், பூமியின் மண்.
புருஷ என்பது தூய சக்தி. இந்தத் தூய சக்தியின் வெளிப்பாடே ப்ரக்ரு தி. ப்ரக்ரு தி என்பது இந்த உள்ளடங்கிய சக்தியின் வெளிப்பாடு. புருஷ் சக்தி, பருப்பொருளாக வெளிப்படுவதைத்தான் ப்ரக்ரு தி எனச் சொல்கிறோம். உருவகமாகச் சொல்ல வேண்டுமானால், ப்ரக்ரு தி என்பது கடலில் உள்ள அலைகள்; மண்ணில் உள்ள தாவரங்கள்.
இவையனைத்துமே வேறுபடுத்த முடியாத புருஷனின் வெளிப்பாடுகளே என்பதைப் புரிந்துகொள்வதே 'தன்னை அறிதலே' தவிர, வேறு ஏதோ ஒன்று அல்ல.
ஞானமடைதல் புத்திசாலித்தனமான சக்தியும் ஒன்றுதான் என்பதை நேரிடையாக அனுபவமாகப் பெறுவதுதான். அதனால்தான் ஞானத்தை அடைய வேண்டிய அவசியமில்லை என்று சொல்கிறேன். நீங்கள் அறிய வேண்டியதெல்லாம், ஒன்றே ஒன்றுதான், 'நீங்கள் அதுவே' என்பதுதான்.
நீங்கள் அந்தப் பெருங்கடலின் தண்ணீரைக் காட்டிலும் வேறான ஒரு தனி அலை என்று நினைத்துக்கொள்ளக்கூடாது. நீங்கள் உணர வேண்டியது இதுவே: நீங்கள்தான் அந்தப் பெருங்கடல்! அலையும் கடலும் நீங்கள்தான்!
தத்துவவாகிகளே அதுபோன்றவற்றைப் பற்றியும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கட்டும். நீங்கள் தளர்வாக இருங்கள்!
சக்தியைப் புரிந்துகொள்ளுங்கள்
- 13.18 செயல்பாடுகள் நிறைந்த இந்தக் களத்தைப் பற்றியும், அறிவைப் பற்றியும், அறியத்தக்கது பற்றியும், என்னால் உனக்குச் சுருக்கமாகச் சொல்லப்பட்டன. நம்மைப் பற்றித் தவறான அடையாளங்களை நாமே உருவாக்கிக்கொள்ள காரணமான பொருள்சார்ந்த உலகின் இயல்பைப் புரிந்துகொள்ளும்பொழுது மட்டுமே, நம்மால் இந்தப் பொய்யான அடையாளங்களைக் கடந்து மேலான பரமாத்மனை அடையமுடியும் !
- 13.19 ப்ரக்ரு'தி புருஷன் இவ்விரண்டுக்குமே தொடக்கம் இல்லை. நாம் பார்க்கிற அனைத்து இயற்கை உணர்வுமாற்றங்களும் ப்ரக்ரு 'தியிலிருந்து உண்டானவையே என்று அறிந்துகொள்.
- 13.20 உடலையும் புலன்களையும் உண்டுபண்ணும் விஷயத்தில் ப்ரக்ரு தி காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் ஸுக துக்கங்களை அனுபவிப்பதில் புருஷன் காரணமென்று கூறப்படுகிறான்.
- 13.21 பொருள் சார்ந்த உலகில் வாழும் ஜீவாத்மா, வாழ்க்கைப் பாதையில் வரும் இயற்கையின் இயல்புகளை அனுபவிக்கிறான். மேலும் அந்தக் குணங்களுடன் தொடர்புகொள்ளும் அந்த ஜீவாத்மா நல்லதும் தீயதுமான பிறவிகளில் பிறப்பதற்கு அந்தக் குணங்களே காரணம்.
- 13.22 இந்த சரீரத்தில் வாழும் அந்தப் புருஷனாகிற ஜீவாத்மா லாக்ஷி, அனுமதிப்பவன், தாங்குபவன், அனுபவிப்பவன், மஹேஸ்வரன், பரமாத்மன் என்றும் சொல்லப்படுகிறான்.
- 13.23 இவ்வாறு புருஷனையும், குணங்களோடு கூடிய ப்ரக்ரு தியையும் எந்த மனிதன் தத்வ ரீதியாக அறிவானோ, அவனுடைய இப்போதைய நிலை எதுவாகயிருந்தாலும், அவன் மறுபடியும் பிறப்பதில்லை.
வாழ்க்கை ரதத்தை ஓட்டும் நீங்களே!
கிருஷ்ணர், குருஷ்த்ர யுத்தகளத்தில், நின்றுகொண்டு, பகவத கீதையைத் தருகிறார்.
நீங்கள் இதை ஆழமாகப் பார்த்தீர்கள் என்றால், இது நம் ஒவ்வொருவருடைய அழகான சித்திரம் ஆகும். கிருஷ்ணர் தேரோட்டி, களம் அறிந்தவர், முழு நாடகத்தையும் நடத்துகிறார். தேரோட்டிக்குச் சரியாக ஒட்டத் தெரியவில்லையென்றால், குதிரைகள் ரதக்கையைப் பல திசைகளிலும் இழுக்க ஆரம்பித்துவிடும்.
இந்த ஐந்து குதிரைகள், நம்மைப் பலவழிகளிலும் இழுத்துச் சென்று, நமக்குள் குழப்பங்களை ஏற்படுத்தும் நமது புலன்களையும் மனத்தையும் குறிக்கின்றன. நமக்கு அந்தக் குதிரைகளை அடக்கத் தெரியவில்லையென்றால், குதிரைகள் நம்மை அடக்கிவிடும். நமது வாழ்க்கையில் இதுதான் நடக்கிறது. ரதத்தை எப்படி ஓட்டுவது என்று நமக்குத் தெரியாத காரணத்தினால், நாம் மிக எளிதாக அந்தக் குதிரைகளுக்கு அதிகாரத்தை கொடுத்துவிடுகிறோம்.
நம்மைச் சுற்றியுள்ள பொருள் ரீதியான உலகமான கூஷத்ரம் பற்றிய நம்முடைய தெளிவான புரிதலே, அவற்றை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதைக் கற்றுக் கொடுக்கும். உடல்-மனமான கூஷத்ரத்தை அறிந்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
அந்த நிமிடமே, நாம் அந்த க்ஷத்ரம் அல்ல என்பதை உணருவோம்!
நாம் கூடித்ரமாக இருந்தால், எப்படி நாம் அதை அறிந்திருக்கமுடியும் ? உதாரணத்திற்கு நாம் இந்தப் புத்தகத்தைப் படிக்க முடியும். ஏனெனில், நாம் இந்தப் புத்தகம் அல்ல. புத்தகத்திற்கும், நமக்கும் இடையில் ஒரு இடைவெளி, ஒரு பிரிவு இருக்கிறது.
அதைப்போலவே, நாம் கிஷ்ரத்தை அறிந்துகொள்ளும்பொழுது, நாம் அந்த கிஷ்த்ரும் அல்ல என்பதைப் புரிந்துகொள்கிறோம். நாம் கூஷ்ரம் அல்ல என்ற இந்தப் புரிதலே, நாம் கிஷத்ரஜ்னுன் என்ற புரிதலைக் கொடுக்கும்.
நாம் புரிந்துகொள்ளும் போதே, க்ஷேத்ரத்தைக் கடந்துவிடுகிறோம்.
நாம் கூடித்துத்தை எப்படிப் புரிந்துகொள்வது ? இதற்கு நாம் பொருள் சார்ந்த இந்த உலகத்தைப் வளர்த்துக்கொள்வது மிக மிக முக்கியம். அதுவரை, இருப்போம். நாம் அறியாமையில் இருக்கும்பொழுது, நமது புலன்களும், சமூகக் கட்டுறு மனப்பாங்குகளுமே நம்மை வழிநடத்தும்.
நமக்கு புலன்களை அடக்கத் தெரியவில்லையென்றால், புலன்கள் நம்மை அடக்கிவிடும்.
அவை வழிநடத்தும் வழியில் சென்றோமானால், இந்தப் பொருள் உலகமே நாம், இந்த உடலே நாம் என்று ஆழமாக நம்புவதில்தான் வந்து நிற்போம்.
நாம் இந்தப் பொருள் சார்ந்த உலகத்திலேயே மூழ்கி, நம்மை அதனுடனே முழுவதுமாக அடையாளப்படுத்திக் கொள்வோம். நாம் அதனுடைய ஒரு பாகமாக ஆகி விடுவோம். க்ஷத்ரத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நாம் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து, அதற்கு ஒரு கடுமைத்தன்மையையும் சேர்த்துவிடுவோம்.ஏனென்றால், க்ஷேத்ரத்தை ஸாஷியாகயிருந்து கவனித்துக் கொண்டிருக்கும் க்ஷத்ரஜ்னுகுன் நாம் என்பதை, நாம் மறந்துவிட்டோம்.
உண்மையில், க்ஷத்ரம் என்று எதுவுமே இல்லை. இதுவும் நமது கனவைப்போல, நம் மனத்தின் வெளிப்பாடே!
நாம் உறங்கச் செல்வதற்கு முன், நான் இன்னாருடைய கணவன் அல்லது இன்னாருடைய மனைவி, நான் இந்த அலுவலகத்தில் பணிபுரிகின்றேன் போன்ற நம்முடைய எல்லா அடையாளங்களையும் நாம் நன்றாக அறிவோம். நாம் உறங்கச் சொல்லும்பொழுதுகூட நம்முடைய அடையாளங்களைத் தெளிவாக அறிவோம்.
ஆனால் நாம் கனவுக்குள் நுழையும் அந்த நிமிடமே, அந்தக் கனவை உண்மை என்று நினைக்க ஆரம்பித்துவிடுகிறோம். அந்தக் கனவுக்குள் ஆழமாகச் செல்லச்செல்ல, கனவில் வரும் பாத்திரங்களோடு நம்மை முழுமையாக அடையாளப்படுத்திக் கனவில் நடப்பதெல்லாம் வாழ்க்கைக்கு உண்மை அல்ல என்பதைத் தெளிவாக உணர்ந்துகொள்கிறோம். இருந்தாலும் நாம் அவற்றை நம்ப ஆரம்பித்துவிடுகிறோம்.
நம் கனவில், நம்மை ஒரு சிங்கம் தாக்கும்பொழுது பயத்தையும் கவலையையும் உணருகிறோம். அது உண்மையாகவே பயத்தினால் வியர்த்து விறுவிறுத்துப் போகிறோம். ஆனால் கனவிலிருந்து விழித்தவுடன், கனவு உண்மை அல்ல என்பதைத் தெளிவாக அறிந்துகொள்கிறோம்.
அதனால்தான் மறுநாள் காலை எழுந்து, நம் அலுவலக வேலை, மற்ற வேலைகள், நம் குழந்தைகள் என்று அதே வாழ்க்கையைத் தொடர்கிறோம்.
அதைப்போலவே, நாம் இந்த வாழ்க்கையையும் உண்மை என்றே நினைக்கிறோம். நீங்கள் இப்பொழுது வாழும் இந்த வாழ்க்கையானது, உங்கள் மனத்தின் ஒரு படைப்பே தவிர வேறில்லை என்று நான் உங்களிடம் சொன்னால், நீங்கள் என்னை நம்புவீர்களா? இல்லை!
ஏனென்றால் நீங்கள் கனவில் அவ்வளவு ஆழமாக ஆழ்ந்திருக்கின்றீர்கள்.
நாம் நம் கனவிலிருந்து விழித்தவுடன், அது நிஜமில்லை என்று உடனே எப்படி அறிந்துகொள்கிறோம் ? கனவுக்கும் நிஜத்துக்கும் இடைவெளி இருக்கிறது என்பதை உடனே புரிந்துகொள்கிறோம். இது 'வெறும் ஒரு கனவுதான்' என்ற புரிதலேகூட நம்மை நிஜத்தில் வைக்கிறது. இதைப் போலவே, இந்த உலகம் நம் மனத்தின் ஒரு படைப்பே என்ற புரிதலானது, நம்மை நிதர்சனத்துக்குள் வைக்கிறது.
நாம் க்ஷேத்ரம் அல்ல என்ற புரிதலே, நாம் க்ஷேத்ரஜ்ஞன் என்ற புரிதலைக் கொடுக்கும்.
நனவும் ஒரு 'கனவே
ஒரு சின்ன கதை:
ஒரு ஜென் குரு, ஒரு நாள் காலையில் அழுதபடியே விழித்தெழுந்தார். அவருடைய சீடர்கள் ஓடி வந்து, ''என்ன நடந்தது குருவே ?'' என்று கேட்டனர். அதற்கு அந்த குரு, "நேற்றிரவு என் கனவில், நான் ஒரு வண்ணத்துப் பூச்சியாக இருந்தேன், '' என்று சொன்னார்.
அந்தச் சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள், "அதனால் என்ன குருவே ? அது ஒரு கனவுதானே, அதுதான் முடிந்துவிட்டதே எதற்கு வருந்துகின்றீர்கள் ?'' என்று கேட்டனர்.
அதற்கு, அந்த குரு, ''உங்களுக்கு விஷயம் புரியவில்லை. நான் இப்பொழுது, 'நான் ஒரு பட்டாம் பூச்சி' என்று கனவு கண்டு கொண்டிருக்கும் ஒரு ஜென் குருவா, அல்லது 'நான் ஜென் குரு' என்று கனவுகண்டு கொண்டிருக்கும், ஒரு பட்டாம் பூச்சியா ?'' என்று வினவினார்.
நாம் கனவு காணும்பொழுது, நாம் யார் என்பதை அறியாமல் இருக்கிறோம். கனவு உண்மைபோன்றே இருக்கிறது.
அதே போலத்தான் நாம் வாழ்கிற இந்த உலகமும், உண்மை என்று நம்பும் அளவிற்கு இருக்கிறது. 'நம்முடைய கனவைப்போன்றே, இந்த நனவுலகமும் உண்மையானது கிடையாது, இதுவும் நம் மனத்தின் ஒரு படைப்பே' என்ற இந்தக் கருத்தை இல்லையென்று மறுப்பதற்கு போதிய காரணங்கள் இருக்கின்றனவா ? நம்மிடம் போதிய காரணங்கள் இல்லை, அதனால் இந்த உலகம்கூட, இன்னொரு கனவாகக்கூட இருக்கலாம்.
இந்த உலகம் உண்மை இல்லை என்று உணர்ந்துகொண்ட அந்த நிமிடமே, நாம், நம் துன்பங்களுக்கும் நமக்கும் ஒரு பெரிய இடைவெளியை உருவாக்கிவிடுவோம்!
கனவில், நாம் அந்த உள்ளுலகம் முழுவதையும் நாமேதான் உருவாக்கிக்கொள்கிறோம்; அந்த முழுக் கட்டமைப்பும் நம் மனதால் உருவாக்கப்பட்டதே. நாம் நம் அடையாளத்தை மட்டும் உருவாக்கவில்லை; சுற்றுப்புறத்திலுள்ள எல்லாவற்றையும் சேர்த்துத்தான் உருவாக்குகிறோம்.
ஒரு விழாவில், ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன்னால், நாம் ஏதோ ஒரு பரிசைப் பெறுவதாக ஒரு கனவு காண்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்கு நடக்கும் முழுக் காட்சிகளையும் உருவாக்கிப் பார்த்துக்கொள்ளும் அளவிற்கு மனத்திற்குச் சக்தி இருக்கிறது.
ஒரு அரங்கத்தினுள் பார்க்கக் கூடிய அனைத்தையும், அதாவது, அந்த அரங்கத்தின் அமைப்பு, கைத்தட்டிப் பாராட்டும் ஆயிரக்கணக்கான மக்கள், அவர்களது பேச்சுக்கள் என்று அனைத்தையுமே மனமே உருவாக்கிக் கொள்கிறது. கனவில் காணும் நம் அடையாளத்திற்கு மட்டுமல்ல, நம் கனவில் நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்துக் காட்சி களுக்கும்கூட உயிரூட்டக் கூடிய அளவு சக்திகொண்டது நம் மனம்.
இதே போன்றுதான் நாம் உண்மை என்று கருதிக் கொண்டிருக்கும் இந்த உலகத்திலும்கூட, நம் மனம் எல்லாவற்றையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், நாம் நமது இரவுக் கனவுகளிலிருந்து விரைவில் விழித்துக்கொள்கிறோம். ஆனால், நாம் உண்மை என்று நினைத்துக் கொண்டிருக்கும், மிகப்பெரிய இந்தப் பகற்கனவிலிருந்து விழித்துக்கொள்வது எப்படி என்பதை மட்டும் நாம் அறியாமலிருக்கிறோம்.
இந்த உலகம் உண்மை என்று நினைத்துக் கொண்டிருக்கும்வரை, நாம் துன்பப்படுவோம். இந்த உலகம் உண்மை இல்லை என்று உணர்ந்துகொண்ட அந்த நிமிடமே, நாம், நம் துன்பங்களுக்கும் நமக்கும் ஒரு பெரிய இடைவெளியை உருவாக்கிவிடுவோம்.
ஸத்யத்தை உணர்ந்த ஒரு ஞான குருவால் மட்டுமே, நம்மை ஸத்ய நிலைக்கு எழுப்பிவிட முடியும்.
நம்மைச் சுற்றி நாம் பார்ப்பதெல்லாம் நம் மனத்தின் வெளிப்பாடே என்று உணர்த்துவதற்காகவே ஞானிகள் தங்களுடைய கருணையினால், இந்தப் புவியுலகத்திற்கு இறங்கி வருகிறார்கள்.
நம் மனத்தால் உருவாக்கப்பட்ட மாய உலகான க்ஷேத்ரத்தைப் பற்றிய புரிதல், உண்மை மற்றும் உண்மையல்லாதனவற்றை வேறுபடுத்திப் பார்க்க உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நாம் ஸ்த்யத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், உணர்ந்துகொள்ள வேண்டுமானால், நாம் முதலில் க்ஷேத்ரம், க்ஷேத்ரஞ்ஜனைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வது அவசியம் என்று கிருஷ்ணர் சொல்கிறார். அதுவரை நாம், நம் மனது காட்டும் காட்சிகளையே, நாடகத்தையே குருட்டுத்தனமாக நம்பிக் கொண்டிருப்போம்.
நமது சொந்த நாடகத்தை உருவாக்கி, அதில் நாமே நடித்துக் கொண்டிருக்கிறோம். படிப்படியாக, 'நாம்தான் அந்த நாடகத்தை உருவாக்கினோம்' என்பதையும், அந்நாடகத்தில் நாம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தை அல்ல நாம் மறந்துவிடுகிறோம். அதனால்தான் நாம் அதைப் பற்றித் தீர்ப்பளித்துக்கொண்டும், அதற்கேற்றவாறு எதிர்ச்செயல் புரிந்துகொண்டும் இருக்கிறோம்.
ஸத்யத்தை உணர்ந்த ஒரு ஞான குருவால் மட்டுமே, நம்மை ஸத்ய நிலைக்கு எழுப்பிவிட முடியும்.
நம்முடைய உண்மையான 'சுய'த்தை அறியாத அளவுக்கு, நாம் இந்தப் பொருள் சார்ந்த உலகத்தில் மூழ்கியிருக்கிறோம். இது, நாம் வளர்க்கப்பட்ட விதத்தினால் விளைந்த விளைவுதான்!
நாம் மனித ரூபங்கள்கொண்ட தெய்விக இருப்புக்கள் என்பதையும், நம்மைச் சுற்றி நடப்பது நாடகமே என்பதையும் நமக்கு நம் பெற்றோரும் ஆசிரியர்களும் விளக்கிச் சொல்வதில்லை.
ஒரு திரையரங்கில், அதே வெள்ளித்திரையில் வெவ்வேறு விதமான திரைப்படங்கள் காட்டப்படுகின்றன. ஆனால் அந்தத் திரை, அதன் மீது காட்டப்படும் திரைப்படங்களால் பாதிக்கப்படுவதில்லை!
நம் வழியைப் பின்பற்றுவதற்கு, நம்மை, நம் குடும்பமும் சமூகமும், நாம் வளரும் சூழலும் உற்சாகப்படுத்துவதில்லை. ஏனென்றால், அவர்களும் பொய்யான அடையாளங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாம்தான் க்ஷேத்ரம் என்பதை அவர்கள் நமக்குச் சொல்வதில்லை, ஏனெனில், அவர்களுக்கே அது பற்றித் தெரியாது.
குழந்தையை, ஜீவன்முக்தராக்கும் பாரம்பரியம்
ஒரு குழந்தை, பிறந்ததிலிருந்தே தொடர்ந்து தெய்விகத்தைப் பற்றி நினைவுபடுத்தப்பட்டுக் கொண்டேயிருந்தால், அது ஒரு ஜீவன்முக்தராகும் விதமாக வளர்கிறது. இப்படித்தான், வகுப் பாரம்பரியத்தில் குழந்தைகள் வளர்க்கப்பட்டார்கள். அதனால்தான் அவர்களின் விழிப்புணர்வின் நிலை, மிகவும் உயர்நிலையில் இருந்தது.
ப்ரக்ருதி எனப்படும் நாம் பார்க்கும் இந்தப் பொருள்சார்ந்த உலகத்திற்கு தொடக்கம் கிடையாது. புருஷ் எனப்படும் விழிப்புணர்வுகூட, தொடக்கம் இல்லாததுதான்.
ஒரு திரையரங்கில், அதே வெள்ளித்திரையில் வெவ்வேறு விதமான திரைப்படங்கள் காட்டப்படுகின்றன. ஆனால் அந்தத் திரை, அதன் மீது காட்டப்படும் திரைப்படங்களால் பாதிக்கப்படாமல் இருக்கிறது. திரைப்படம் காட்டப்படுவற்கு முன்னும் பின்னும் அந்தத் திரை, காலியாகவும் வெண்மையாகவுமே இருக்கிறது.
அந்தத் திரையில் காட்டப்படும் ஒரு காட்சியில் எல்லோரும் மகிழ்ச்சி யைக் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள்; அடுத்த காட்சியிலேயே ஒரே துக்கமான நிகழ்வுகள் வரும். இருந்தாலும் திரை ஒன்றுதான். அந்தத் திரைப்படத்தின் மகிழ்ச்சி மற்றும் துக்கமான காட்சிகளால் அது பாதிக்கப்படாமல், தொடர்பற்று இருக்கிறது. அதன் மீது காட்டப்பட்ட பல தரப்பட்ட உணர்ச்சிகரமான காட்சிகளால், அது துளியும் பாதிக்கப்படாமல் இருந்து கொண்டிருக்கிறது.
அதே விதமாக, நமக்குள்ளே ஆழத்தில், நம் மையமும் துளியும் தொடர்பற்றுதான் இருக்கிறது. கிருஷ்ணர் குறிப்பிடும் புருஷ் என்பது இதுதான்! நம்மைச் சுற்றி மாறிக்கொண்டும் இடம் பெயர்ந்துகொண்டும் இருக்கிற பொருட்களெல்லாம் ப்ரக்ருதியின் நாடகந்தான்.
நாம் பார்க்கும் எல்லா மாற்றங்களும், அதாவது காலம் மற்றும் வெளியைப் பற்றிய கொள்கைகள், நம் உடல்-மனம் மற்றும் மாறும் தன்மைகொண்ட ப்ரக்ருதியின் வேறுபட்ட பண்புகளே. இவை, எழுதுவதும் வீழ்வதுமாக உள்ள கடலின் அலைகள் போன்றவை. இந்தப் பண்புகள் எழுந்தும் விழுந்தும் கொண்டிருப்பவை. அலை, எழும், விழும் காலமும் இடமும் முற்றிலும் ஒப்பீட்டுக்குரியவை.
ஒரு குழந்தை, பிறந்ததிலிருந்தே தொடர்ந்து தெய்விகத்தைப் பற்றி நினைவுபடுத்தப்பட்டுக் கொண்டேயிருந்தால், அது ஒரு ஜீவன்முக்கராகும் விதமாக வளர்கிறது.
இந்த எழுதல் விழுதல் இடையே உள்ள கால இடைவெளியைப் பற்றிய கருத்துகூட, ஒப்பீட்டுக்குரியவையே. ஏனெனில் இது முழுக்க முழுக்க நம் புலன்களால் உருவாக்கப்பட்ட ஒரு கருத்துதான்.
நமது புலன்கள், காலம் நகருவதாக உணருகிறது. அது, பொருள் உலகத்தைக்கொண்டும் கிரகங்களின் ஓட்டத்தைக்கொண்டும் காலம் நகருவதை ஒப்பிட்டு உணர்கிறது. நமது புலன்கள் உணர்வதற்காக, நாம், காலத்தைப் பற்றிய இந்தக் கருத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். நாம் வெளியையும் இடத்தையும்கூட, ஒப்பீட்டு கருத்துகளைக்கொண்டே (Concept of Comparative Reality) உருவாக்கி வைத்திருக்கிறோம்.
பொருள் சார்ந்த உலகத்தோடு நம்மை அதிகமாக இணைத்துக் கொள்ளும்பொழுதும், நிகழ்வுகள், உணர்ச்சிகள், அஹங்காரம், உடல், மனம் போன்றவற்றோடு ப்ரக்ருதி விளையாடும் விளையாட்டோடு நம்மை இணைத்துக் கொள்ளும்பொழுதும்தான், உலகியல் ரீதியான காலம் மற்றும் இடத்தோடு நம்மைப் பிணைத்துக்கொள்கிறோம்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்கிறார், ''காலமும் வெளியும் நம் எண்ணத்தின் பாங்குதானே தவிர, அது நம் வாழும் நிலையோ சூழ்நிலையோ அல்ல. இது எதை விளக்குகிறது என்றால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நம் ஞானிகளும் ரிஷிகளும் சொன்னதை, இன்றைய நவீன விஞ்ஞானம் உண்மை என்று நிரூபித்தது மட்டுமல்ல, அதை ஏற்றுக்கொண்டதையுமே இது குறிக்கிறது.
காலமும் வெளியும் நம் மனத்தில் உருவாக்கப்பட்ட சார்பியல் கருத்துகளே! காலத்தின் நகர்வும் ஒன்றுக்கொன்று நேரடியாகத் தொடர்புகொண்டவை.
உதாரணத்திற்கு, ஒருவருடன் எவ்வளவு நேரமானாலும் சரி, அது நமக்குச் சலிப்பைத் தருவதில்லை. நாம் அந்த நபருடன் குறைந்த கால அளவே செலவிட்டதாக நினைப்பதுகூட நமக்குத் தெரிவதில்லை. ஆனால் அதுவே, நமக்கு சலிப்பைத் தரும் ஒருவரோடு நாம் இருக்கும்பொழுது, அடிக்கடி கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருப்போம். காலம் ஊர்ந்து செல்வதுபோல் உணர்வோம்.
மனம் நகர்ந்து கொண்டிருக்கும்வரை, காலமும் நகர்கிறது. நாம் ஆழமாகப் பார்க்கும்பொழுது, மனம் என்பது இறந்த காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் இடையே ஓடிக் கொண்டிருக்கும் ஓட்டம்தான் என்று நாம் புரிந்துகொள்வோம். மனம் என்றாலே சஞ்சலம்தான்; அது எதிர்காலத்துக்கு திட்டமிட்டுக்கொண்டுமே இருக்கும்.
நாம் எப்பொழுதும் கடந்தகாலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ மாறி மாறி இழுக்கப்பட்டுக் கொண்டிருப்போம். ஆனால் நிகழ்காலத்தில் மட்டும் இருக்கவே மாட்டோம்.
காலச்சங்கிலியில், உங்கள் பணியாள்
ஒரு சிறுபரிசோதனை செய்து பார்க்கலாம். ஒரிரு நாட்களுக்கு, கடந்தவற்றைப் பற்றியோ வருபவற்றைப் பற்றியோ கவலைப்படாமல் நிகழ்காலத்திலேயே முழுவதுமாக இருப்பதற்கு முடிவுசெய்வோம். நாம் நிகழ்காலத்திலேயே மூன்று நாட்கள் வாழ்வதால், நிச்சயமாக, நம் சொத்து, சுகங்களை நாம் இழந்துவிடமாட்டோம். அதனால் ஒரு மூன்றே மூன்று நாட்களுக்கு நிகழ்காலத்திலேயே இருப்பதற்கு முடிவுசெய்வோம். அப்படிச் செய்யும்பொழுது, நம்மால் சுலபமாக நிகழ்காலத்தில் நிலைகொள்ள முடியும்.
நாம் நிகழ்காலத்திலேயே இருக்கும்பொழுது, காலச்சங்கிலி நமக்கு ஒரு வேலையாள் ஆகிவிடுகிறது. நாம் இந்த காலச்சங்கிலியை ஊடுருவ முடியும். இதற்கு அர்த்தம் என்னவென்றால், மொத்த கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்திற்குள்ளும் நுழைவதற்கு நமக்கு முடியும்.
நிகழ்காலத்திலேயே மூன்று நாட்கள் தங்கியிருக்க முடிவுசெய்வது என்பது, உள்ளுலகத்திலும் வெளியுலகத்திலும் நமக்கு கிடைத்ததை நாம் அப்படியே ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது.
உள்ளுலகமோ அது வெளியுலகமோ, பேராசை பேராசை பேராசைதான். எந்தப் பேராசையானாலும், எதிர்காலத்திற்குள் இழுக்கப்படுகிறோம் என்பதுதான் பொருள். ஞானமடைவதற்குப் பேராசைகொள்வதும்கூட எதிர்காலத்தின் மீது நாம் வைக்கும் ஒரு பேராசைதான், ஒரு நம்பிக்கைதான்.
பேராசைகளையும் கடந்தகாலத்தை ஆய்வு செய்வதையும் விட்ட கணத்தில், நாம் நிகழ்காலத்தினுள் விழுந்து, அந்தக் காலச்சங்கிலியை உண்டுருவிச் செல்வோம். நிகழ்காலத்தினுள் விழுவது, இடைவெளிக்குள் விழுகிறோம் என்று சொல்லப்படுகிறது. இரு எண்ணங்களுக்கு இடையே வரும் இடைவெளியில், க்ஷணத்தில் விழுகிறோம்.
நாம் நிகழ்காலத்தினுள் நுழையும்பொழுது, நாம் 'எல்லையற்ற'தற்குள் விழுகிறோம். அந்த 'எல்லையற்றது' என்பது கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றின் ஒரு தொகுப்புதான். அங்கே வேறுபாடே இல்லை. இந்நிலையில் நாம், கால, வெளி சம்பந்தப்பட்ட எல்லா நிகழ்வுகளுக்கும் ஸாக்ஷியாகி விடுவோம். நாம் பார்க்கும் விழிப்புணர்வாக ஆகிவிடுகிறோம். நாம் அறிபவன் ஆக ஆகிவிடுகிறோம்.
நாம் க்ஷேத்ரத்தை அல்லது ஆத்மத்தை எந்தவொரு பற்றுதலும் இல்லாமல், கவனிக்க ஆரம்பித்தால் ஒவ்வொன்றுமே ஒரு நாடகமே, ஒரு கனவே என்பதையும், நம் வாழ்க்கையில் எதைச் செய்ய முயற்சித்தாலும், அது, அந்தக் கனவை நடத்திச்செல்லும் ஒருவழிமுறைதான் என்பதையும் நாம் உணர்வோம்.
எந்த முயற்சியை செய்தாலும், அது, இந்தக் கனவில் செய்யும் இன்னொரு செயல்தான்!
இதன் மொத்தக் கருத்தும் என்னவென்றால், இந்தக் கனவில் சிக்கிக்கொள்ளாமல், அதாவது, அதை நடத்திச் செல்வதில் உங்களை உணர்ச்சி ரீதியாக இணைத்துக்கொள்ளாமல், உங்கள் உண்மை நிலையோடு ஒன்றிணைந்து, அதை அனுபவித்து மகிழ்வதும், அதை ஸாக்ஷியாகயிருந்து கவனிப்பதும்தான்.
க்ஷேத்ரம் என்னும் களத்தோடு நாம் வீணாக சிக்கியுள்ளோம் என்பதைப் புரிந்துகொள்ளவும், இந்தக் கனவிலிருந்து நாம் விலகவும், நமக்கு உதவுவதில், பொருள்சார்ந்த உலகத்தைப் பற்றிய புத்திசாலித்தனம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. களத்தில் ஏற்படும் எல்லா உணர்வுமாற்றங்களும் காலத்தோடும் இடத்தோடும் சம்பந்தமுள்ளவை.
இது நம் மனத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நாம் காலச்சங்கிலியை ஊடுருவும்பொழுது, காலம் நம்முடைய வேலையாள் ஆகிவிடுவதையும், முழுக் காலச்சங்கிலியும் நம்முடைய மனத்தின் காட்சியே என்பதையும் பார்க்கிறோம். நாம் காலச்சங்கிலியை ஊடுருவி, கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் நம்முடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறோம்.
மனத்தை விடுவித்தல்
கடந்தகாலமும், பொருள் உணர்வுமாற்றங்களாகும். எல்லா உணர்வுமாற்றங்களும் ப்ரக்ருதி என்னும் களத்தின் நாடகமே. மனமும் ப்ரக்ருதியின் ஒரு பகுதிதான்.
ப்ரக்ருதியின் பிடியிலிருந்து நாம் விடுபட வேண்டுமென்பதன் பொருள்: நமக்குள் முன்னதாகவே உருவாக்கிவைத்திருக்கும் அஹங்காரம், மனத்தின் பற்று, அது மட்டுமல்ல மனத்தையே விட்டுவிடுதல் ஆகும்.
நம் புலன்கள் மூலமாகச் செய்திகளை உள்வாங்கும்பொழுதெல்லாம், நமக்குள் என்ன நடக்கிறது என்பதைத் தெளிவாக உணர்ந்தால், அப்பொழுது, நாம் ஸாக்ஷி ஆகிவிடுகிறோம்.
ஒரு நிகழ்வு எப்படி நிகழ்கிறது என்பதைக் கவனிக்க ஆரம்பித்தவுடன், மனமானது நின்றுவிடுகிறது. நம் கவனத்தை அதன்மீது வைக்க முடிவுசெய்த கணமே, நாம் ஸாக்ஷியாக இருப்பதற்கு முடிவுசெய்து விடுகிறோம்.
நாம் பொருளிலோ அல்லது காட்சியிலோ சிக்கிக்கொள்ளாமல், எவ்வளவு நேரம் ஸாக்ஷியாக இருக்க முடிகிறது என்பதைப் பொறுத்தே, ஸாக்ஷி பாவனை திடப்படும். நாம் இதைத் தொடர்ந்து பயிற்சி செய்ய செய்ய, ஸாக்ஷி பாவனையின் அனுபவம் ஆழப்படும். நாம் உணர்ந்துகொள்கிறோம்.
''பொருள் சார்ந்த செயல்களுக்கும், அவற்றின் விளைவுகளுக்கும் காரணம், இயற்கையே. ஆனால் சுக துக்கம் போன்ற உலகியல் ரீதியான விஷயங்களுக்கு, ஜீவாத்மாதான் மூலகாரணமாக இருக்கிறது.'' -இந்த வார்த்தைகளின் வழியாக, கிருஷ்ணர் நம்மை மறுபடியும் நமது விழிப்புணர்வுக்குள் கொண்டுவருகிறார்.
அவர் முந்தைய ஸ்லோகங்களில் சொன்னவற்றின் சாரத்தை இது உள்ளடக்கியிருக்கிறது. அவர், 'நாம் எதையெல்லாம் பார்க்கிறோமோ, அது நாம் அல்ல' என்ற ஒரு தெளிவான வாக்குமூலத்தை அளிக்கிறார்.
"கடந்து, கடந்து, கடந்து, அதற்கு மேலும் கடந்து செல்லுங்கள். நீங்கள் உங்கள் உடலைப் பார்க்க முடிந்தால், அதையும் கடந்து செல்லுங்கள்; உங்களின் எண்ணங்களைக் கவனிக்க முடிந்தால் அதையும் கடந்து செல்லுங்கள்; உங்கள் மனத்தின் போக்கைக் கவனிக்க முடிந்தால் இன்னும் கடந்து செல்லுங்கள்; உங்கள் உணர்ச்சிகளைக் கவனிக்க முடிந்தால் அதையும் கடந்து செல்லுங்கள்; இவை எதுவுமே நீங்கள் இல்லை!' - என்ன ஒரு அருமையான வாக்குமூலம்!
ஒரு கட்டத்தில், நம்மால் அதற்கு மேல் செல்ல முடியாது, அதற்கு அப்பால் ஒன்றுமே இல்லை என்பதையும், நாம் ஸாக்ஷியாகயிருந்து கவனிப்பதெல்லாம் 'நாம்' அல்ல என்பதையும் உணர்ந்துகொள்வோம். சட்டென, அந்தக் கணமே, தூய விழிப்புணர்வு நமக்குள் நிகழ ஆரம்பிக்கிறது.
பொருள் சார்ந்த செயல்களுக்கும், அவற்றின் விளைவுகளுக்கும் காரணம், இயற்கையே.
திருவண்ணாமலையில் வாழ்ந்த தீனுரை குரு ரமணமஹரிஷி, மிக அழகாகச் சொல்லுகிறார், போட முடியுமோ எல்லாவற்றையும் கீழே போட்டுவிடுங்கள். ஒரு கட்டத்தில், நாம் எதையும் கீழே போட முடியாமல் இருப்போம். கீழே போடுவதற்கு அங்கு எதுவுமே இருக்காது. அப்பொழுது அதைப் பிடித்துக்கொள்ளுங்கள், அவ்வளவுதான்!''
ஸாக்ஷியாகயிருந்து கவனித்துக் கொண்டிருங்கள், அதுவே ஸாக்ஷியாகயிருந்து கவனித்தல். அவ்வாறு கவனித்து உங்கள் எண்ணங்களிலிருந்து விலகிவிடுங்கள், அமர்ந்துகொள்ளுங்கள், தளர்வாகுங்கள், கவனியுங்கள். உங்கள் எண்ணங்களை உருவாக்கவோ, வளர்க்கவோ, செய்யாதீர்கள்.
எண்ணங்களை உருவாக்கவோ, வளர்க்கவோ, அழிக்கவோ முயற்சி செய்யாதீர்கள்.
ஸாக்ஷியாகப் பார்க்கும் விழிப்புணர்வு, பிரம்மா (படைப்பவர்), விஷ்ணு (காப்பவர்), சிவா (புதுப்பிப்பவர்) ஆகியவர்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது. வரவேற்கக் காத்திருக்கின்றன.
நாம் அவை வந்துபோகின்றன.
இது, ஆகாயத்தில் மிதக்கும் மேகங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்றது. அடுத்தமுறை, ஒரு ஜன்னலருகே உட்கார்ந்து, ஆகாயத்தில் மிதந்து செல்லும் மேகங்களைப் பார்த்து, இந்தப் பயிற்சியை செய்து பாருங்கள். எந்தவிதமான தகுதிகளும், குணங்களும் அவற்றுக்குத் தராமல் அவற்றை வெறுமனே பாருங்கள்.
பொதுவாக, நாம் மேகங்களைப் பார்க்கும்பொழுது, 'ஓ, அந்த மேகம் இந்த விலங்கைப்போல இருக்கிறது. இந்த மேகம் ஒருவருடைய முகத்தைப் போல இருக்கிறது. இதன் நிறம் எனக்கு அந்த மலைத்தொடரை நினைவூட்டுகிறது' என்று பலவிதமாக நாம் நினைக்கிறோம். அவற்றுக்கு எந்தவிதமான உருவங்களையும் குணங்களையும் கொடுக்காமல், எதிலும் பற்றில்லாத வழியில் அவற்றைப் பார்ப்போமானால், ஒரே ஒரு எண்ணம் மட்டும் நிற்கும் அது, 'நான் மேகங்களைப் பார்க்கிறேன்' என்ற எண்ணம் !
ஸாக்ஷி பாவனையையும் கடந்து செல்லுங்கள்
நீங்கள், ஒரு முழுமையான ஸாக்ஷியாக இருக்க வேண்டுமானால், இந்த ஒரு நினைப்பும்கூட கரைந்து போக வேண்டும்.
உங்கள் உணர்வுமாற்றத்திற்கான தீர்வு
'நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்' என்று எண்ணம் தோன்றினாலும்கூட, அந்த எண்ணத்தையும் கவனியுங்கள். அந்த எண்ணம்கூட மறைந்து போகும்வரை கவனியுங்கள்.
இன்னும் ஆழமாகக் கடந்து கடந்து உங்கள் இருப்புக்குள்ளே செல்லுங்கள், 'நான் ஸாக்ஷியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்' என்று சொல்லும் எண்ணத்தையும் கடந்து செல்லுங்கள்.
தயவுசெய்து தெளிவாக இருங்கள், 'நான் ஸாக்ஷியாகயிருந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன்' என்று நீங்கள் உங்கள் மனத்தில் நினைத்துக் கொண்டிருக்கும்வரை, உள்வெளியைத் தூய்மையாக்கும் பொழுது. நாமே தெய்விகம் ஆகிறோம். !
இப்பொழுது நீங்கள், 'பார்த்துக் கொண்டிருக்கிறேன்' எண்ணத்தில் சிக்கிக்கொண்டீர்கள்! இந்த எண்ணத்தையும் கீழே போடுங்கள்!
'நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்' என்ற அந்தக் கடைசி எண்ணமானது, கடவுளுக்கும் உங்களுக்கும் இடையே ஒரு பாலம்போல் இருக்கிறது. எண்ணமில்லாத இடத்திற்கும், உங்களுக்கும் நடுவில் ஒரு பாலம்போல் இருக்கிறது.
முதன்முதலில், செயல்களையும் எண்ணங்களையும் பார்க்க முயற்சிசெய்யும்பொழுது, 'நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்' எண்ணம் வருவது இயற்கையே. அது அப்படியே இருக்கட்டும். நூற்றுக்கணக்கான எண்ணங்கள் உங்களின் உள்ளுலகத்தைத் தகர்த்துக் கொண்டிருப்பதை விட, இந்த ஒரு எண்ணம் இருப்பது, நல்லதுதான்.
ஆனாலும் அப்பால் கடந்து செல்லுங்கள். அங்கும் நிற்காதீர்கள், 'நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்' என்ற எண்ணத்தையும் கவனியுங்கள். பிறகு, அந்தத் தொடப்படாத உள் வெளி உங்களுக்குள் நிகழும் : களங்கப்படாத தூய உள்வெளியில்தான் கடவுள் மலர்வார்; தெய்விக விழிப்புணர்வும் உணரப்படும்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
சாதாரணமாக, எண்ணங்கள் நிகழும் நம் 'உள்வெளி'யில் ஸம்ஸ்காரங்கள், மனப்பதிவுகள் எனப்படும் கட்டுறு மனப்பாங்குகளும் கடந்தகால ஞாபகங்களும், நிரம்பியிருக்கின்றன.
நமது உள்ளுலகத்தில் இருக்கும் தெய்விகம், சொக்கத் தங்கம் அதாவது 24 காரட் தங்கம் போன்றது. ஆனால் நாம், தூய்மையான தங்கத்துடன் தாமிரம் சேர்த்துக் கலக்கப்பட்டு, அது ஆபரணத் தங்கமாக அதாவது 22 காரட் அல்லது அதற்கும் கீழ், தரமாக்கப்படுவதுபோல, நமக்குள் இருக்கும் தெய்விகத்துடன் கட்டுறு மனப்பாங்குகளைச் சேர்த்து, அதன் தரத்தைக் குறைத்துவிடுகிறோம்.
சில சமயம், அந்தத் தங்கமானது தூய தாமிரமாகவே வெளிவரும் அளவுக்கு, அதனோடு கலக்கப்படுவதுபோல், நம் உள்வெளியில் அளவுக்கதிகமான கட்டுறுமனப்பாங்குகள் கலக்கப்படுவதால், நமக்குள் இருக்கும் தெய்விகம், கட்டுறு மனப்பாங்காகவே வெளிப்படுகிறது.
இந்த வெள்ளமாகப் பாயச்செய்யும்பொழுது, இந்த நிறைக்கும்பொழுது, அது தூய்மைப்படுத்தப்படுகிறது.
நமது உள்ளுலகத்தில் இருக்கும் தெய்விகம், சொக்கத் தங்கம் அதாவது 24 காரட் தங்கம் போன்றது.
உள்ளுலகத்தைச் சுத்தப்படுத்தும்பொழுது, நமக்குள்ளே மீண்டும் உள்ளே 24காரட் தங்கம் நிகழ அனுமதிக்கிறோம்.
பிறகு, நாம் என்ன நினைத்தாலும் பேசினாலும் செய்தாலும், அது பிரபஞ்ச விழிப்புணர்வின் நேரிடையான விருப்பத்துடன் இணைந்ததாகவே இருக்கும். பிறகு, தெய்விகத்துடன் இணக்கமாகிவிடுவோம். நாம், காலியான மூங்கில் ஆகி, தெய்விகம் என்னும் காற்று நம்முள்ளே பாய்வதற்கு அனுமதிப்போம்.
இங்கு, கிருஷ்ணர் ஒரு நுட்பத்தைத் தருகிறார். இப்பொழுதுவரை, நாம் தாமிரமும் தங்கமும் கலந்த 18 காரட் தங்கமாக, இருக்கிறோம். அந்த 18 காரட் தங்கத்தைத் தீயில் போட்டு, தொடர்ந்து உருக்கினால், அது 22 காரட் தங்கமாக மாறும். இதேபோல, ஸாக்ஷியாகயிருந்து கவனிக்கும் விழிப்பணர்வு எனும் தீயினில் நம்மை மீண்டும் மீண்டும் தொடர்ந்து போடுவோமானால், நமது உள்வெளி முழுமையாகத் தாய்மையாகிவிடும் : 22 காரட் தங்கம் 24 காரட் தங்கமாவதுபோல !
நான் இமயத்திலிருந்தபொழுது என் வாழ்வில் நடந்த ஒரு நிஜமான சம்பவத்தை, உங்களுக்கு இப்பொழுது சொல்கின்றேன்.
ஒரு வயது முதிர்ந்த நாக ஸாதுவை அங்குச் சந்தித்தேன். நாக லாது என்பவர்கள் ஆடைகள் ஏதும் அணியாத, தங்களுக்கென்று எந்தவிதமான உடைமைகளும் இல்லாமல் சுற்றித்திரியும் ஸ்ரீந்யாஸிகள். அவர் காட்டில், புனித நதியான கங்கையின் கரையில் அமர்ந்து கொண்டிருந்தார். அவர் அமைதியாக ஏகாந்தமாக அமர்ந்திருந்ததைப் பார்த்தபொழுது, நான் அவரருகே சென்று சிறிது நேரமாவது அவரோடு இருக்க வேண்டுமென்று உணர்ந்தேன். அவர் ஒரு கஞ்சா புகைக்கும் குழாய் வைத்திருந்தார்.
அவர் என்னைப் பார்த்ததும், 'உட்கார், உட்கார்' என்று ஹிந்தியில் சொன்னார். அந்தப் புகைக் குழாய்க்குள் ஒருசில தாமிர நாணயங்களைப் போட்டார். அதற்குப் பிறகு கஞ்சாவை அதனுள் போட்டு தீப்பற்ற வைத்தார்; பிறகு புகைக்கவும் ஆரம்பித்தார்! புகைத்து முடித்த பின்பு, அந்தக் குழாயைக் கவிழ்த்தார். அப்பொழுது அந்தக் குழாயிலிருந்து தங்க நாணயங்கள் விழுந்தன ! ! !
என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை. அவர் அந்தத் தங்கக்
ஸாக்ஷியாகப் பார்க்கும் விழிப்புணர்வு எனும் தீயினில் நம்மை மீண்டும் மீண்டும் தொடர்ந்து போடுவோமானால், நமது உள்வெளி முழுமையாகத் தூய்மையாகவிடும்
காசுகளைக் கொண்டுபோய் விற்று, அந்தப் பணத்திற்குக் கஞ்சா வாங்கினார். பிறகு மீண்டும் அதேபோல, புகைக் குழாய்க்குள் தாமிர நாணயங்களைப் போட்டு, தங்க நாணயஙங்களாக மாற்றிக் காண்பித்தார். நான் அவரோடு சில நாட்கள் தங்கியிருந்தேன். அவர் அதை 10 தடவைகளுக்கு மேலாகவே பார்த்தேன்.
தரம் குறைந்த உலோகங்களை உயர் ரக உலோகங்களாக மாற்றும் நுட்பத்தை ரஸவாதம் எனச் சொல்வார்கள். அதை அந்த பாபா, மிக எளிதாகச் செய்தார்.
நான் அவரிடம், பாபா, இதை எப்படி உங்களால் என்று கேட்டேன். அதுவரை நான் அவரிடம், நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவன் என்று சொல்லவில்லை: என் தாய்மொழியான அரைகுறை இந்தியில்தான் அவரோடு பேசிக் கொண்டிருந்தேன்.
ரஸவாதம் , தரம் குறைந்த உலோகங்களை உயர் ரக உலோகங்களாக மாற்றும் நுட்பம்.
ஆனால், நான் கேள்வி கேட்டவுடன், அந்தப் பாபா தூய தமிழில், "அங்கம் பழுத்தால், தங்கம் பழுக்கும்,'' என்று பதிலளித்தார்.
அதற்கு அர்த்தம், 'உன்னுடைய இருப்பு பழுத்தால், தங்கத்தை வரவழைக்கலாம்' என்பதே. அவர் தமிழில் பதில் சொன்னதைக் கேட்டு நான் அதிர்ந்து போனேன்!
அவருடைய வார்த்தைகளுக்கு அர்த்தம், நம்முடைய உள்வெளியை ஸாக்ஷி விழிப்புணர்வால் நிரப்பினால், நம்முடைய தாழ்ந்த சக்தி, ஆன்மிக சக்தியாக மாறிவிடுகிறது. இந்த உள் ரஸவாதம், வெளி ரஸவாதத்தைச் சாத்தியமாக்குகிறது.
ஸாக்ஷி விழிப்புணர்வை, ஸாக்ஷியாகயிருந்து கவனிப்பதால், உங்களுடைய உள்வெளி மலரத் தொடங்குகிறது.
உணவுப் பட்டியல் அட்டவணையோடு நின்றுவிடாதீர்கள்
கிருஷ்ணர் சொல்கிற இந்த ஒரு ஸ்லோகத்தில், அனைத்து மதங்கள் மற்றும் ஆன்மிகத்தின் சாரமும் உள்ளடங்கிவிட்டது. எல்லாப் பூட்டுக்களையும் திறக்கும் மிகச்சிறந்த சாவியை இந்த அத்தியாயத்தில் தருகிறார்.
கிருஷ்ணர் தரும் அந்தப் பிரதான சாவி ... ஸாக்ஷியாகயிருந்துகவனிப்பதே ! உங்கள் உடலையும் மனத்தையும் ஸாக்ஷியாகயிருந்து கவனிப்பது; உங்கள் இருப்பை ஸாக்ஷியாகயிருந்து கவனிப்பது.
ஸாக்ஷியாகயிருந்து கவனிக்கும் நுட்பத்தில் நுழைந்து, ஸாக்ஷி நிலையை ஒருசில நிமிடங்களுக்கு அனுபவிக்க முடிந்தால், நாம் அதன் ருசியைப் பெறுவோம். நாம், ஸாக்ஷியாகயிருந்து கவனிக்கும் கலையைப் பற்றி எவ்வளவுதான் கேட்டாலும், எவ்வளவுதான் பேசினாலும் அல்லது எவ்வளவுதான் பகுத்து ஆராய்ந்தாலும், அதை நாமாக அனுபவித்து உணரவில்லையென்றால், அதனால் நமக்கு எந்தப் பயனும் இல்லை.
ஒரு சின்ன கதை :
ஒருவர், மது அருந்திவிட்டு வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார். ஒரு காவலர் அவரை நிறுத்திக் கேட்டார், ''ஐயா, நீங்கள் குடித்திருக்கின்றீர்கள் என்று நான் நினைக்கிறேன். நான் சொல்லுவது சரியா ? ''
"ஆம், நான் இப்பொழுதுதான் ஆறுவகை மதுபானங்கள் குடித்தேன். அவற்றின் பெயர்களைச் சொல்லட்டுமா? கொஞ்சம் பீர், கொஞ்சம் பிராந்தி ..., '' என ஒரு பட்டியலை வாசிக்க ஆரம்பித்தார்.
அந்தக் காவலர், 'நிறுத்துங்கள், உங்களிடம் மூச்சு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தயவுசெய்து, காரை விட்டு வெளியே வாருங்கள்,''என்றார்.
அதற்கு அந்தக் காரோட்டி, ''சோதனை ஏன்? நான் சொல்லுவதை நீங்கள் நம்ப மாட்டீர்களா ?'' என்றார்.
நான் சொல்வதைப் பயிற்சி செய்து பார்க்காமல், வெறுமனே கேட்டுவிட்டுச் செல்வது என்பது, உணவுப் பட்டியலை மட்டும் படித்து விட்டு, எதுவுமே சாப்பிடாமல் அந்த உணவகத்தை விட்டுச் செல்வதுபோன்றதே!
அந்தக் காவலர், அந்தக் காரோட்டி சொல்வதை நம்பினாலும்கூட. அவர் அந்தச் சோதனையைச் செய்தாக வேண்டும்.
அதைப் போலவே, நீங்கள் என்னுடைய வார்த்தைகளை அப்படியேஎடுத்துக்கொள்ள முடியாது. நீங்களே அதனைச் சோதனை செய்தாக வேண்டும். அதை உங்கள் மீதே நீங்கள் சோதனை செய்தாக வேண்டும். உங்கள் இருப்பைக்கொண்டு சோதனை செய்தாக வேண்டும்.
படிப்பதோ அல்லது கேட்பதோ உங்களை உணர்வுமாற்றம் பெறச் செய்யாது. படிப்பதும் கேட்பதும், ஒரு உணவகத்தில் உணவுவகைகளின் அட்டவணையைப் படித்துப்பார்த்து விட்டு, பின் ஒன்றும் சாப்பிட்டுப் பார்க்காமலேயே, அந்த இடத்தை விட்டு வெளியேறிச் செல்வதைப் போன்றது. நான் சொல்வதைப் பயிற்சி செய்து பார்க்காமல், வெறுமனே கேட்டுவிட்டுச் செல்வது என்பது, உணவுப் பட்டியலை மட்டும் படித்துவிட்டு, எதுவுமே சாப்பிடாமல் அந்த உணவகத்தை விட்டுச் செல்வது போன்றதே!
அதனால், இப்பொழுது நீங்கள் அந்த அட்டவணையைப் படித்துப் பார்த்து விட்டதனால், உணவை ருசிப்பதற்கான நேரம் இது.
கிருஷ்ணர் இன்னும் ஒரு படி மேலே செல்கிறார். இதுவரை உள்வெளியைத் தூய்மைப்படுத்துவது எப்படி, நமக்குள் இருக்கும் தெய்விக விழிப்புணர்வை எப்படித் தூண்டுவது என்பதைச் சொல்லிக்கொண்டு வந்தார். இப்பொழுது, இந்தக் கடைசி ஸ்லோகத்தில், அவர் இன்னும் ஒருபடி மேலை சென்று, இப்படிச் செய்பவர்கள், இப்பொழுது எந்த நிலையிலிருந்தாலும் முக்தி அடைவார்கள் என்று சொல்லுகிறார்.
ஒவ்வொரு இருப்பும் தெய்விகத்தை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது. அதை அந்த இருப்பு அறிந்திருக்கிறதோ, இல்லையோ, அது, அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது.
சில ஆசைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்காக, நாம் இந்த உடலை எடுத்து வந்திருக்கிறோம். நாம் உண்மையிலேயே, நம் சக்திகளையெல்லாம் இந்த ஆசைகளைக் குறைப்பதற்கென்றே பயன்படுத்திக்கொண்டால், இதே ஆசைகளை நிறைவேற்றுவதற்கென்று, நாம் இன்னொரு பிறவி எடுப்பதற்கான காரணமே இருக்காது.
நாம் இன்னொருவருடைய வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கும்பொழுதும், நம்முடைய ஆசைகளைத்தான் வாழவந்தோமே தவிர, மற்றவர்களின் ஆசைகளை அல்ல என்பதை மறந்துவிடும்பொழுதும்தான் பிரச்சினைகள் உருவாகின்றன. நாம் தொடர்ந்து மற்றவர்களின் ஆசைகளைக் கடன் வாங்கி, நமக்குள்ளே மலைபோல் சேர்த்து வைத்துக்கொள்கிறோம்.
பின், நம்முடைய உண்மையான இயல்பை உணர்ந்துகொள்வதற்கு முன்பாகவே, இந்த மரணம் வந்துவிடுகிறது; பூர்த்தியாகாத எல்லா ஆசைகளையும் மூட்டைக் கட்டி எடுத்துச்சென்று, அடுத்த உடலை எடுத்துக் கொள்கிறோம்.
இந்தப் பிரபஞ்சம், நமது ஆசைகளைக் கரைத்து, நாம் இந்தப் பிறவிச் சக்கரத்திலிருந்து விடுபட, நமக்கு உதவுவதற்கு மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறது. ஆனால், நமக்குள்ளும் நம்மைச் சுற்றியும் நடப்பவற்றை, நாம் ஏற்க மறுக்கிறோம்.
புரிதல் - விடுதலைக்கான மார்க்கம்
கிருஷ்ணர், க்ஷேத்ரம் அல்லது ப்ரக்ரு தியைப் பற்றிய புரிதல் நம்மை நேரிடையாகவே விடுதலைசெய்து விடுகிறது என்கிறார். நாம், நம்மை இந்த உடலோடு சம்பந்தப்படுத்திக்கொண்டு இந்தப் ஆசைகளைச் சிக்கிக்கொள்கிறோம்.
'நாம் இந்த உடலையும் மனத்தையும் கடந்தவர்கள்' என்பதைப் புரிந்துகொண்ட அந்தக் கணமே, நாம், 'பேர், பணம், புகழ், அந்தஸ்து ஆகியவற்றின் பின் ஓடுவது எவ்வளவு முட்டாள்தனம்' என்பதை உணர்ந்துகொள்கிறோம்.
நம்முடைய உண்மையான இயல்பைப் பற்றிய அறியாமையின் காரணமாகவே, நம்முடைய எல்லாப் பிரச்சினைகளும் எழுகின்றன. இந்தப் போர், புகழ், பணம், அதிகாரம் ஆகியவற்றுக்காக நாம் சண்டையிட்டுக் கொள்தல் போன்ற அற்ப விஷயங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் என்கிற புரிதல், நம்மை அவற்றிலிருந்து விடுவிக்கிறது. ஒரு உணர்வு மாற்றம் நிகழ்ந்து, இந்தப் பொருட்களின் பந்தத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது.
உலகியல் சேகரிப்பதெல்லாம் வீணே என்ற புரிதல் நிகழும்பொழுது, உள் விழிப்புணர்வில் ஒரு திடீர் மாற்றம் நிகழ்கிறது.
இந்தப் புரிதல் எந்த நேரத்திலும் எவருக்கும் நடக்கலாம்! அதற்கு நீங்கள் ஆஸ்ரமத்தில்தான் வளர வேண்டும், கடவுளின் நாமத்தைத்தான் எல்லா நேரத்திலும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதெல்லாம் அவசியமில்லை. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், எதை வேண்டுமானாலும் செய்து கொண்டிருக்கலாம்.
உணர்வுப் பெருமாற்றம் எவருக்கும், எந்த நேரத்திலும் நிகழலாம். மேலும் அது நிகழும்பொழுது, விழிப்புணர்வின் அளவில் ஒரு பெருமாற்றமாக, ஒரு பெருந்தாவலாக இருக்குமே தவிர, அது படிப்படியாக நிகழ்வதில்லை. விளக்கேற்றியவுடன் அறை முழுவதும், 'சட்டென' ஒரே சமயத்தில் வெளிச்சம் பரவுவதைப் போன்றதாகும்.
நம் பாரதத்தில் ஏகப்பட்ட ஸாதுக்களுக்கு இந்த உணர்வுப் பெருமாற்றம் நிகழ்ந்துள்ளது. தென்னிந்திய ஸாதுவான புரந்தரதாஸர் சன்யாசமடைவதற்கு முன்னர், சம்பாதிப்பதிலேயே இரவு பகலாக மூழ்கியிருந்தார். அவருடைய செல்வத்தைத் தேவையுள்ளோருடன் பகிர்ந்துகொள்ளாமல், மிகக் கஞ்சனாகவே வாழ்ந்து கொண்டிருந்தார்.
ஆனால் அவரின் மனைவியோ மிகப் பெருந்தன்மை மிக்கவராயும், தேவையுள்ளவர்களுக்குக் கொடுக்கக் எவ்வித தயக்கமும் இல்லாதவராயும் இருந்தார். அது பிடிக்காதென்பதால், அவர் ரகசியமாகவே உதவிக் கொண்டிருந்தார்.
அவர் ஒரு நாள், பண உதவி கேட்டு வந்த ஒருவருக்கு, தன்னுடைய வைர மூக்குத்தியைக் கொடுத்துவிட்டார். மூக்குத்தியைப் பெற்றவர் புரந்தரதாஸர் கடையிலேயே அதை விற்கச் செல்ல, மூக்குத்தியைப் பார்த்த புரந்தரதாஸ்ருக்கு விஷயம் புரிந்துவிட்டது. தம் மனைவி
உணர்வுப் பெருமாற்றம் எவருக்கும், எந்த நேரத்திலும் நிகழலாம்.
அவ்வளவு விலையுயர்ந்த பொருளைத் தானமாகக் பிடிக்கவில்லை. அதனால், அவருடைய ஆட்சேபத்தைத் தெரிவிக்க, கோபமாக வீட்டிக்குச் சென்றார்.
இதற்கிடையில், அவர் கணவரிடம் இவ்விஷயத்தை மறைக்க முடியாதே, என்ன செய்வது என்று செய்வதறியாது திகைத்து, கடவுளிடம் உதவி வேண்டினார். கடவுளும் அதே போன்றதொரு மூக்குத்தியைக் கொடுத்தார்.
வீட்டிற்கு வந்த புரந்தரதாஸர், தம் மனைவியிடம் மூக்குத்தி இருப்பதைப் பார்த்து, திகைத்தார். இது எப்படி நிகழ்ந்தது என்று மனைவியிடம் கேட்க, மனைவியும் நடந்த விஷயத்தைச் சொன்னார்.
அதைக் கேட்ட புரந்தரதாஸருக்குள் சட்டென ஒரு மாற்றம் நிகழ்ந்தது. செல்வத்தைச் சேர்க்க, தம் சக்திகளை எவ்வளவு தூரம் வீணாக்கியிருக்கிறார் என்பதை உணர்ந்தார். தாம் இதுநாள்வரை, தம் வாழ்க்கையை வீணாக்கியிருப்பதை உணர்ந்தார். பிறகு தம்மை அறிந்துகொள்ளும் பேராவலில், வீட்டைவிட்டு வெளியேறினார்.
அதனால், நாம் எந்த வேலைசெய்பவராயிருந்தாலும், ஆன்மிகத்தில் எந்தப் படியிலிருந்தாலும், எந்த நிலையிலிருந்தாலும், பிரபஞ்ச இருப்புத்தன்மையின் திருவிளையாடல்களைப் புரிந்துகொண்டாலே போதுமானது, விரைவில் குணமடைந்து விடலாம். நாம் பொருள் இன்பங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற புரிதலே, நம்மை விடுவித்துவிடப் போதுமானது.
புரிதலை மேலும் உயர்த்துங்கள்
கேள்வி: ஸ்வாமி, நாம் புத்திசாலித்தனம் சார்ந்த புரிந்துகொள்ளும் ஆற்றலைப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறோமா? என்னுடைய எந்த சொத்து சுகங்களும் நிலையானவை இல்லை என்று நான் அறிகின்றேன். எதுவாக இருந்தாலும் நான் இறக்கும்பொழுது என்னோடு எதையும் எடுத்துப் போக முடியாது. ஆனால் நான் இந்த உடலில் வாழும்வரை, எனக்குப் பொருள் அவசியம். நான் பொருளீட்டியாக வேண்டும். அதற்கு வேலையும் செய்தாக வேண்டும். அந்த வேலை உண்மை, கற்பனை அல்ல. இதற்கு என்ன பதில் ?
பதில்: இறக்கும்பொழுது எதையும் எடுத்துப் போக முடியாது என்பதை, நீங்களே அறிந்திருக்கிறீர்கள். எதுவும் நிலையானதில்லை என்பதையும் அறிந்திருக்கிறீர்கள். இதுவே ஒரு நல்ல புரிதல்கான்.
நீங்கள் வேலைசெய்ய வேண்டியதெல்லாம் உங்கள் பட்டறிவின் மீதுதான். இந்தப் புரிதலை மேலும் உயர்த்துங்கள். அது உங்களை விரைவிலோ அல்லது மெதுவாகவோ ஊடுருவிவிடும்.
பொருளீட்டுதல் என்னும் விஷயத்தை, ஒவ்வொருவரும், அவரவர்களின் இயல்புக்கேற்றவாறு, வெவ்வெறு கோணத்தில் நோக்கலாம்.
பொதுவாக பலர், அவர்களுக்குத் தேவையோ இல்லையோ, சொத்துகளை வாங்கிக் குவித்துக்கொண்டே இருப்பார்கள். போர், புகழ், அந்தஸ்திற்காகவே இதைச் செய்வார்கள். ஏனெனில், சமூகம் நம்முடைய செல்வத்தை வைத்துத்தான் நம்மை மதிக்கும். இதற்கு ஒரு முடிவே கிடையாது. இது ஒரு போட்டி, இந்தப் பந்தயத்தில் நீங்கள் ஜெயித்தாலும்கூட, உங்கள் நிலை அதேதான்.
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கத்தான் வேலைசெய்கிறீர்கள், ஆனால் தேவையான அளவு பணம் சம்பாதித்த பிறகும், நீங்கள் மகிழ்ச்சியடைவதே இல்லை. ஏனெனில், சேர்ப்பதில் சிக்கிக்கொள்கின்றீர்கள்.
உங்களைவிட வைத்திருப்பவர் இருக்கத்தான் செய்வார்; அவரைப்போல சம்பாதிக்கவே நீங்களும் விரும்புவீர்கள்; அதனால்தான் உங்களால், பொருளுக்குப் பின்னால் ஓடும் மனப்பாங்கை நிறுத்த முடிவதில்லை. 'நிறுத்துவதற்குரிய நிறுத்தல் பொத்தான்' நீக்கப்பட்ட ஓர் இயந்திர மனிதன்தான் நீங்கள்! நீங்கள் வேலைசெய்ய வேண்டியதெல்லாம் உங்கள் பட்டறிவின் மீதே.
இப்போது, இவ்விஷயத்தைத் தர்க்க ரீதியாகப் பார்க்கலாம்; நீங்கள் இப்பொழுது செய்து கொண்டிருப்பது நல்லதே. பொருள் சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் நீங்கள் எதையும் சேர்க்கவில்லை. ஆனால், வாழ்வாதார தேவைக்காகச் சம்பாதிக்கிறீர்கள்.
'வாழ்வாதாரத் தேவை' என்று சொல்லும்பொழுது இங்கே எழும் ஒரு பிரச்சினை என்னவென்றால், நாம் ஒவ்வொருவரும், 'வாழ்வாதாரத் தேவை' என்பதற்கு அவரவருக்குரிய ஒரு விளக்கம் வைத்திருக்கிறோம்.
'நிறுத்தல் பொத்தான்' நீக்கப்பட்ட ஓர் இயந்திர மனிதன்தான் நீங்கள் !
ஒருவர், நடந்துசெல்வதே தம்முடைய அடிப்படைத் தேவை என்று நினைப்பார், இன்னொருவர், மிதிவண்டியில் செல்வதே தம்முடைய அடிப்படைத் தேவை என்று நினைப்பார், மற்றொருவர், பேருந்தில் ஒரு பயணியாகச் செல்வதே தமக்குப் போதுமானது என்று நினைப்பார்!
நீங்கள், இன்னமும் ஒரு பலனை நோக்கித்தான் வேலைசெய்து கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள், இன்னமும் செயலினால் விளையும் பலன்களில் பற்று கொண்டிருக்கின்றீர்கள். விளைவு, நீங்கள் விரும்பியபடி நிகழ்வுகள் நிகழ்ந்தால், நீங்கள் சந்தோஷப்படுகின்றீர்கள். இல்லையென்றால், துக்கத்தில் விழுகின்றீர்கள். இருக்கின்றீர்கள்.
நீங்கள், இதையே நீங்கள் ஒரு புத்திசாலித்தனம் மிகுந்த சக்தியால் இந்த உலகுக்குக் கொண்டுவரப்பட்டீர்கள்; அதனால் அந்த சக்தியே உங்களைக் காப்பாற்றவும் செய்யும் என நம்பிக்கை கொள்ள முடியும்.
நீங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும்பொழுது, ஏதோ ஒன்றைக் கேட்டுத்தான் பிரார்த்திக்கின்றீர்கள். கடவுள் கொடுப்பார் என்று உங்களுக்குத் தெரியும்; எனினும் கடவுளுக்கு, உங்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதும் தெரியும் என்பதை நீங்கள் நம்புவதில்லை. அதனால், நீங்கள் அவரிடம் ஒரு மனு போடுகின்றீர்கள்!
கடவுளுக்கு, 'கொடுக்கும் சக்தி' இருக்கும்பொழுது, உங்களுக்கு என்ன தர வேண்டும் என்ற 'புத்திசாலித்தனமும்' அவருக்கு இருக்கும் என்று நீங்கள் ஏன் யோசிப்பதில்லை ?
நீங்கள் பணிபுரிய வேண்டியதிருக்கிறது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். யாரும் வெகு காலத்துக்கு சோம்பேறியாக இருக்க முடியாது. எனினும் நீங்கள் விளைவுக்கு, பலனுக்கு முக்கியத்துவம் தராமலேயே வேலைசெய்யலாம். நீங்கள் இதைச் செய்யும்பொழுது, ஒரு லாக்ஷியாக இருக்கின்றீர்கள். நீங்கள் வேலை செய்கின்றீர்கள், ஆனால் வேலையின் விளைவுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. என்ன நடந்தாலும், அது நல்லதே என்று உங்களுக்குத் தெரியும். புத்திசாலித்தனம் உள்ள சக்தி உங்களைக் காப்பாற்றும் என்று உள்ளத்தின் ஆழத்தில் உணரவீர்கள்.
பலமனிதர்கள், பலவழிகள்
- 13.24 தூய்மை படுத்தப்பட்ட மனம் மற்றும் அறிவின் துணைகொண்டு, தங்கள் ஆம்மனத்தில் பரமாத்மாவை உணர்வார்கள்.
- 13.25 வேறு சிலர், போதிய ஆன்மிக புத்திசாலித்தனம் இல்லையென்றாலும், ஒப்புயர்வற்ற இறைவனை வழிபடத் தொடங்குகிறார்கள். ஒப்புயர்வற்ற இறைவனைப் பற்றிக் கேட்பதாலேயே சிலர் பிறப்பு, இறப்பு என்னும் பாதையைக் கடக்கிறார்கள்.
- 13.26 பரத குலத்துதித்தவர்களில் தலைசிறந்தவனே, பிறக்கிற அனைத்துமே, அது அசைகிறதோ அசையவில்லையோ, அது க்ஷத்ர க்ஷத்ரஜ்ஞ என்பவற்றின் சேர்க்கையால்தான் தோன்றின.
எந்த வழியாக இருந்தாலும், இலக்கு ஒன்றே
இந்த ஸ்லோகத்தில் கிருஷ்ணர், 'தம்மை அறிதல்' பாதையில் செல்வதற்கான பலவிதமான நுட்பங்களைத் தருகிறார். நம் 'சுய'த்தை அறிய, நாம் பல்வேறு விதமான செயல்முறைகளை அல்லது வழிகளைப் பயன்படுத்தலாம் என்கிறார் அவர்.
'எவ்வளவு குருமார்கள் இருக்கிறார்களோ, அவ்வளவு வழிகள்' என்று மக்கள் சொல்வதுண்டு. ஆனால் உண்மையில், 'எவ்வளவு சீடர்களோ அவ்வளவு வழிகள்' என்றே இருக்க வேண்டும் !
ஒவ்வொரு சீடரும், அவருக்கென்று ஒருவழியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதுவே கிருஷ்ணர் சொல்ல விரும்புவது. நாம், இறுதி விழிப்புணர்வை பல்வேறு வழிமுறைகளின்மூலம் அடையலாம்.
கிருஷ்ணர், இறைத்தன்மையிடம் சரணாகதி ஆகிய வழிகளின் மூலமாக நீங்கள் விடுதலை அடையலாம், என்கிறார்.
எல்லா விதமான முறைகளும், ஒரே இலக்குக்குத்தான் அழைத்துச் செல்கின்றன. பகவத்கீதையின் ஒவ்வொரு அத்தியாயமும், இருப்பை அறிவதற்கான, ஒவ்வொரு தனித்துவமான நுட்பத்தைத் தருகிறது. கிருஷ்ணர், நான்காவது அத்தியாயத்தில், ஞான யாகத்தைப் பற்றிப் பேசுகிறார். பிறகு அத்தியாயம் பன்னிரண்டாவது அத்தியாயத்தில், பக்தி யாகத்தைப் பற்றிப் பேசுகிறார்.
க்ருஷ்ணர் சொல்ல விரும்பும் செய்தி: ஒவ்வொரு சீடரும், அவருக்கென்று ஒருவழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
எந்த வழியாக இருந்தாலும் இலக்கு ஒன்றே தான். ராமகிருஷ்ணர் பல மதங்களையும் பின்பற்றி இந்த சத்தியத்தை நிரூபித்தார். அவருடைய வாழ்க்கை பார்த்தீர்களானால், அவர் இஸ்லாம், கிருஸ்துவம், இந்துத்துவம், இந்துத்துவத்தின் உட்பிரிவுகளான தந்திரம், வைஷ்ணவம் போன்ற பல மார்க்கங்களையும் பின்பற்றிப் பார்த்திருக்கிறார் என்பது தெரியும். அந்த எல்லா வழிமுறைகளும் ஒரே இறுதி விழிப்புணர்வுக்குத்தான் அழைத்துச் செல்கின்றன என்று உறுதிசெய்கிறார்.
அவர், ஒவ்வொருவருக்கும், உணர்வுக்கேற்றவாறு, வழிகளை விவேகானந்தரை, அத்வைத கோட்பாட்டை வலியுறுத்தும் புத்தகங்களைப் படிக்கச் சொன்னார். சில சீடர்களை, தேவி பக்தியில் மூழ்கச் சொன்னார்.
நாம், இறுதி விழிப்புணர்வை பல்வேறு வழிமுறைகளின் மூலம் அடையலாம்.
அவர், மனப்பாங்கைப் பொறுத்து, வெவ்வேறு வழிகளைக் குறிப்பிட்டார். ஒருவர், விவேகானந்தரைப் போன்று, தர்க்க ரீதியானவராகவும், கேள்விகள் அதிகம் கேட்பவராகவும் இருந்தால், அவரைப் புத்தகங்களைப் படிக்க ஊக்குவித்தார். பிரார்த்தனை, வழிபாடு போன்ற சடங்கு சம்பிரதாயங்களில் ஈடுபாடு கொண்டவராக ஒருவர் இருந்தால், அவருக்கு பக்தி வழியையே காட்டினார்.
செல்ல வேண்டிய பாதையை நினைவூட்டும் ஆன்மீகப் பெயர்
நமது இரண்டாம் நிலை தியானப் பயிற்சியான நீத்யானந்த ஸ்புரண நிகழ்ச்சிக்குப் பிறகு ஆன்மிகப் பெயர் விரும்பி கேட்பவர்களுக்கு, ஓர் ஆன்மிகப் பெயர் நான் கொடுக்கின்றேன். அப்பெயர், அவர்கள் செல்ல வேண்டிய பாதையை நினைவூட்டும் !
பக்தாகளின் சக்தி நிலையைப் பொறுத்து, அவர்களுக்கும் பெயர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறேன். அவர்கள் எவ்வாறு பிரபஞ்ச அளவில் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் அந்தப் பெயர்கள் இருக்கும்.
ஒருவர், பக்தி போன்ற உணர்ச்சி நிலை செயல்பாடுடையவராக இருந்தால், அவருக்கு அந்தக் குறிப்பிட்ட சக்திக்குத் தகுந்த மாதிரி பெயர் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறேன்.
சிலர், பிரபஞ்ச அளவில் தொடர்பு கொண்டிருப்பார்கள். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வோடு மன அளவில் தொடர்பு கொண்டவர்கள் இவர்களுக்கு, ஒவ்வொன்றுக்குமே விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
இருப்பு அளவில் தொடர்புகொண்டவர்கள் மூன்றாவது வகையினர்.
ஒவ்வொருவரின் சக்தி நிலைகளின் மேல் தியானம் செய்து, அவற்றுக்கு தகுந்த மாதிரி பெயர்களை அவர்களுக்குக் கொடுக்கிறேன். அந்த ஆன்மிகப் பெயர் அவர்களுக்கு ஒரு பாதையைத் தருகிறது, ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கான தனித்தனி பாதையைத் தருகிறது.
உங்கள் ஆன்மிகப் பெயர், உங்கள் பாதையை உங்களுக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும்.
ஆன்மிகப் பெயருக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. அந்தப் பெயர் உங்கள் பாதையை உங்களுக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும்.
நாம் பொதுவாக நம் பெயர்களோடுதான் நம்மைக் தொடர்புபடுத்திக் கொண்டிருப்போம். எப்பொழுதெல்லாம் உங்கள் பெயரைச் சொல்கிறீர்களோ அல்லது மற்றவர்கள் அந்த ஆன்மிகப் பெயர் கொண்டு அழைக்கிறார்களோ, அப்பொழுதெல்லாம் அந்தப் பெயர் உங்கள் தலைக்குள் ஒரு மணி அடிக்கிறது; நீங்கள் சென்று சேர வேண்டிய இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறது.
கிருஷ்ணர், அர்ஜுனனிடம் வழிகளைப் பற்றிச் சொல்கிறார். அவர் அர்ஜுனனுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தருகிறார். கிருஷ்ணர், தியானம், யாகம், மந்திர ஜபம், கற்றல், அறிவை வளர்த்தல், பிரபஞ்சத்திடம் சரணாகதியடைதல் போன்ற பல்வேறு மாற்று வழிகளைத் தருகிறார்.
ஒரு முக்கியமான விஷயம், 'எந்தப் பாதை உங்களுக்கு ஏற்றது' என்பதை நீங்கள் தெரிந்துகொண்டாக வேண்டும். ஆனால் பொதுவாக மக்கள், ஆன்மிகப் பாதையைப் பற்றிய போதிய அறிவு இல்லாமலேயே, ஏதோ ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். நீங்கள் உங்கள் பாதையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பலதரப்பு மக்களும் ஆச்ரமத்திற்கு வந்து தியான வகுப்புகளில் கலந்துகொள்கின்றனர். அவர்கள், அந்த சில நாட்களுக்கு என்னைச் சுற்றியிருப்பதால், ஆனந்தமாக இருக்கிறார்கள். அது அவர்களுக்குப் பிடித்துப் போவதால், உடனே ஆச்ரமத்தில் சேர்ந்துவிட நினைக்கிறார்கள். அவர்களுக்கு அவர்களுடைய பாதை எது என்பதும் தெரியாது; ஆச்ரம வாழ்க்கைதான் அவர்களுடைய பாதையா என்பதையும் அறிய மாட்டார்கள்.
ஆனால் ஆச்ரமத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்று மட்டும் விருப்பப்படுவார்கள். அவர்கள், "ஸ்வாமி, நான் ஆச்ரமத்தில் வந்து சேர்ந்துகொள்கிறேன். தயவுசெய்து, நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்,'' என்று கேட்பார்கள்.
வேறுசிலர், மற்றவர்கள் எதைச் செய்கிறார்களோ, அதையே அவர்களும் பின்பற்றிச் செய்வார்கள், ஏனென்று தெரியாமலேயே! பெற்றோர் ஏதாவது ஒரு குருவை பின்பற்றினால், குழந்தைகளும் அதே குருவைப் பின்பற்றுவார்கள்.
ஆரம்பத்தில் யாரையாவது ஒருவரைப் பின்பற்றுவதில் தவறில்லை. நீங்கள் ஒரு இடத்தை ஆரம்பமாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் நீங்கள் சரியான பாதையில்தான் செல்கிறீர்களா என்பதை, நீங்கள்தான் கண்டுபிடித்தாக வேண்டும். உங்களுக்குத் தெரிந்தவர் அந்த குருவைப் பின்பற்றுகிறார் என்பதற்காக, நீங்களும் குருட்டுத்தனமாக, அதையே பின்பற்றக்கூடாது.
ஒரு சின்ன கதை :
ஒரு நாள் ஒருவர், நள்ளிரவில் காரோட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தக் காரின் முகப்பு விளக்குகள் பழுதடைந்துவிட்டன. தன்முன்னே வேறொரு காரையே பின்பற்றிச் செல்ல முடிவுசெய்து, பின்னாலேயே இருந்தார். வெளியே காரிருள் அப்பிக் கொண்டிருந்தது. ஒன்றுமே தெரியவில்லை.
நீங்கள் ஒரு இடத்தை ஆரம்பமாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் நீங்கள் சரியான பாதையில்தான் செல்கிறீர்களா என்பதை, நீங்களே கண்டுபிடித்தாக வேண்டும்.
Part 5: Bhagavad Gita Explained
முன் திரும்பியதோ, அந்தப் பக்கமெல்லாம் இவரும் திரும்பிக் கொண்டிருந்தார். அப்படியே முன்செல்லும் காரின் விளக்கு வெளிச்சத்தைப் பார்த்தே வெகுதூரம் சென்றார்.
திடீரென, முன்சென்ற அந்த காரின் விளக்குகள் அணைந்தன. காரும் சட்டென நிறுத்தப்பட்டது. இதை எதிர்பார்க்காத இரண்டாவது காரின் ஓட்டுநர், முன்சென்ற காரின் மீது மோதிவிட்டார். அதனால் ஆத்திரமடைந்த அவர், முன்சென்ற காரின் ஒட்டுனரைப் பார்த்து, ''ஏன் காரை இப்படித் திடீரென நிறுத்தினீர்கள் ?' எனக் கோபமாகக் கேட்டார்
நீங்கள் எதையாவது, யாரையாவது குருட்டுத்தனமாகப் பின்பற்றினால், நீங்கள் சரியான இலக்கை அடைய முடியாது.
"என் வீடு வந்துவிட்டது. நான் வேறென்ன செய்ய வேண்டுமென்று நீ எதிர்பார்க்கிறாய் ?'' என்று பதிலுக்குக் கேட்டார், அந்த முதல் காரோட்டி.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் எதையாவது, யாரையாவது குருட்டுத்தனமாகப் பின்பற்றினால், நீங்கள் சரியான இலக்கை அடைய முடியாது. உங்கள் பாதையை நீங்கள்தான் அறிந்திருக்க வேண்டும்.
பொதுவாக, நம்மில் பலரும் செய்யும் செயல்: ஒரு குரு நடத்தும் பல்வேறு தியான வகுப்புகளுக்குச் செல்வார்கள். பிறகு வேறொரு குரு நடத்தும் தியான வகுப்புகளுக்கும் செல்வார்கள் அங்கும் அனைத்து வகுப்புக்களையும் முடிப்பார்கள். ஒரு குருவிடமிருந்து மற்றொரு குருவிடம் மாறிக்கொண்டே இருப்பார்கள்.
உண்மையில் இன்று, இது ஒரு நாகரிகமாகவே ஆகிவிட்டது. ஒருவருக்கொருவர், ''எந்தெந்த பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டீர்கள்?' என்று பரஸ்பரம் கேட்டுக்கொள்கிறார்கள்! எல்லாக் குருமார்களிடமிருந்தும் சான்றிதழ்களாக வாங்கிச் சேகரிக்கத் தொடங்குகிறார்கள்.
நீங்கள் செல்ல வேண்டிய பாதையை அறிந்தவர் அவர் ஒருவரே!
சுயத்தை அறிவதற்குப் பல வழிகள் உள்ளன. எனினும் நம்முடைய பாதை எது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இங்கேதான், ஒரு ஞானகுரு நமக்கு உதவ முடியும். உங்களுக்குரிய சரியான பாதை எது என்று அவர் அறிவார். நீங்கள் தவறான பாதையில் சென்றால், அவர் உங்களுக்குச் சரியான பாதையைக் காட்டுவார். உங்கள் பாதைக்கேற்ப உங்களின் தவறுகளையும், உங்கள் நுட்பங்களையும் சரிசெய்வார்.
நம்முடைய மேம்படுத்தப்பட்ட தியான சிகிச்சையாளர் பயிற்சியில், சீடர்களை கேள்விக்கு விடையளிக்கும்பொழுது, அவர்கள் செய்கிறார்கள் என்பதைக் கவனித்து, அவற்றைச் சரிசெய்வேன்.
இந்த ஸ்லோகத்தில், கிருஷ்ணர், தியானம், யோகா, ஞானம் போன்ற பலவிதமான நுட்பங்களைத் தருகிறார். பலர் இவற்றைச் செய்தும் வருகிறார்கள். சிலர் கேட்கின்றனர், '' ஸ்வாமி, தினமும் 21 நிமிடங்களுக்கு தியானம் செய்து வருகின்றேன். இன்னும் என்னால் ஒன்றையும் உணர முடியவில்லை. இது ஏன் ?''
நான், "நீங்கள் தியானிக்கும்பொழுது, உங்கள் உடல் இருக்கும் இடத்தில்தான் உங்கள் மனதும் இருக்கிறதா அல்லது உங்களின் அலுவலகத்தை நினைத்துக் கொண்டிருக்கிறதா?'' என்று கேட்டால், அவர்களால் எந்தப் பதிலும் சொல்ல முடிவதில்லை.
எல்லா முறையும் சரியாகச் செய்யப்பட்டாக வேண்டும். நீங்கள் சுயத்தை அறிவதற்கு பல வழிகள் உள்ளன. எனினும் நம்முடைய பாதை எது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நிமிடங்களென்ன, 21 நாட்கள் தொடர்ந்து அமர்ந்தாலும், சரியான விளைவுகள் ஏதும் இருக்காது.
ஒரு தியான வகுப்பில் நடந்த நிகழ்ச்சியைச் சொல்கிறேன்.
"இந்தத் தியான நுட்பம் அநாஹத சக்ரத்துக்கு உரியது - அதாவது இதயப் பகுதியில் உள்ள சக்திமையத்துக்கு உரியது. இந்தத்தியானத்தின்பொழுது நம் கவனத்தை இதயத்தின் மத்தியில் வைப்போம்," என்று சொல்லி முடித்தேன்.
பங்கேற்பாளர்களுள் ஒருவர் நேராக அமாந்து, ஆசனத்தை நன்றாகவே பிடித்துக்கொண்டார். நேரம் செல்லச் செல்ல, அவர் தூக்கத்தில் ஒரு பக்கமாகச் சாய ஆரம்பித்தார். கடைசியில் நான் அவரை கூப்பிட்டுக் கேட்டேன், ''என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?" அதற்கு அவர், "நான் அநாஹத தியானம் செய்துகொண்டிருக்கிறேன், ஸ்வாமி!' என்றார்.
நான் அவரைக் கேட்டேன்: "நீங்கள் தியானிப்பது உங்கள் அநாஹதத்தின் மேலா, இல்லை, உங்கள் பக்கத்திலிருப்பவரின் அநாஹதத்தின் மேலா ?''
நன்கு கவனியுங்கள், தியானம் என்பது விழிப்புணர்வோடு செய்யப்பட வேண்டும். ஒவ்வொன்றையுமே தியானமாக ஆக்கலாம், நீங்கள் விழிப்போடும் ஆழமான உத்வேகத்தோடும் செய்வது எல்லாமே தியானம்தான்.
விழிப்புணர்வின் அந்தஸ்தை உயர்த்துவதற்கே, தியானமும் யோகமும்
பெரும்பாலான மக்கள் மந்திர ஜபம் செய்வார்கள். தினமும் அதிகாலையில் எழுந்து, குளித்து பிரார்த்தனை அறையில் அமர்ந்து ஜபம் செய்கிறார்கள். அதை அவர்கள் விழிப்புணர்வோடு ஜபித்தால், நல்லதுதான். ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் ?
அந்த நேரத்தில் பால்காரன் வந்து குரல் கொடுத்தால், "சரிப்பா, பாலை கதவுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டுப் போ. நான் பிறகு எடுத்துக்கொள்கிறேன்,'' என்று பதில் கொடுப்பார்கள். பிறகு ஜபத்தை ஆரம்பிப்பார்கள்!
அடுத்து, வீட்டு வேலைக்கார அம்மா வருவார். அவர் பக்கத்து வீட்டு வேலைக்கார அம்மாவுடன் நின்றுகொண்டு, அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களைப் பற்றி அரட்டை அடித்துக் கொண்டிருப்பார். இவர்கள், மந்திர ஜபம் செய்து கொண்டிருந்தாலும், அந்த அரட்டையைக் காதுகொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். சில சமயம், ஜபத்திற்கு இடையில், வேலைக்காரர்கள் பேசிக் கொண்டிருக்கும் விஷயத்தை இடைமறித்து, அதைப் பற்றித் தாங்கள் கொண்டிருக்கும் உயர்ந்த அபிப்பிராயங்களைக்கூட பகிர்ந்து கொள்வார்கள்.
இது தியானமே அல்ல.
இதைப் போலவே யோகாவையும் பற்றியும் நிறைய தவறான கருத்துகள் இருக்கின்றன. மக்கள், யோகா வகுப்புகளை உடற்பயிற்சி வகுப்புகளாக மாற்றிவிட்டனர். இன்று யோகா என்பது ஒரு நாகரிகமாகிவிட்டது. பவர் யோகா, டீலக்ஸ் யோகா, 'சூப்பர் டீலக்ஸ்' என்று வித விதமான யோகா முறைகள் உள்ளன. ஒரு யோகா கூடமானது, ஒரு நாகரிக நடை, உடை கலை அரங்காகத்தான் இருக்கிறது.
யாராவது ஒருவர், ''நான் தினமும் யோகா செய்து கொண்டிருக்கிறேன்,'' என்று சொன்னால், அது ''நான் ஒரு மெர்சிடிஸ் கார் வைத்திருக்கிறேன்,'' என்று சொல்வதைப் போல இருக்கிறது. அப்படித்தான் இப்பொழுது யோகா ஆகிவிட்டது.
ஆனால், உடல் மற்றும் நம் அந்தஸ்துக்கு உயர்வு சேர்க்கும் பயிற்சிகளை எல்லாம்விட மேலானது, யோகா. கிருஷ்ணர், இறுதி விழிப்புணர்வை அடைவதற்கான வழியாக அதைக் கொடுத்திருக்கிறார்.
இந்த ஸ்லோகத்தில் கிருஷ்ணர், சாங்கியோ - அறிவு அல்லது வேதாந்த கலந்துரையாடல்கள் மூலம் நம்மைப் பிரபஞ்ச THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வோடு இணைத்துக்கொள்ளும் வழிமுறையைப் பற்றிப் பேசுகிறார்.
நீங்கள் ஒன்றை ஆழ்ந்து புரிந்துகொள்ள வேண்டும். அறிவைச் சேகரித்தல் மற்றும் வேதாந்த கலந்துரையாடல்களையும் இரண்டு வழிகளில் மேற்கொள்ள முடியும்.
ஒன்று, நிறைய புத்தகங்களைப் படிப்பது. சிலர், வேதாந்த புத்தகங்கள், மத புத்தகங்கள், ஆன்மிகப் புத்தகங்கள், குருமார்களின் சுயசரிதைகள் என்று ஒரு பெரிய நூலகத்தையே தங்கள் வீட்டில் வைத்திருப்பார்கள்.
யாராவது ஏதாவது சொன்னால் போதும், உடனே மேற்கோள்கள் எடுத்துச் சொல்லி, நீண்ட நேரம் பேச்சினை வளர்ப்பார்கள். இவர்கள் அறிவு ஜீவிகள்.
சிலர், தபால் தலைகள், நாணயங்கள் போன்றவற்றைச் சேகரிப்பது கூட அறிவின் வெளிப்பாடே. நீங்கள் அறிவை ஆழமாகப் பார்த்தீர்களானால், அவர்களின் அறிவு அவர்களுடைய அஹங்காரத்தின் மற்றொரு வெளிப்பாடே! அவர்கள், தங்களை உயர்ந்தவர்களாக மற்றவர்கள் முன்னிலையில் காட்டிக்கொள்வார்கள். ஆனால் அவர்கள், உண்மையில் அந்த அறிவை ஜீரணித்திருக்கமாட்டார்கள், அவர்கள் அதை உண்மையில் உள்வாங்கியிருக்க மாட்டார்கள்.
கிருஷ்ணர், அறிவைப் பயன்படுத்தி, உங்கள் இலக்கை அடைய முடியும் என்று சொல்கிறார். இதற்கு படிப்பதும், அறிவைச் சேகரிப்பதும் மட்டுமே போதாது என்பதை நாம் புரிந்துகொண்டாக வேண்டும். படித்ததை அறிந்துகொள்வதற்கு, நாம் அதை அனுபவ பூர்வமாக உணர வேண்டும்.
நாம் பலவித தத்துவங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கும்வரை, வெறும் சேகரித்தலை மட்டுமே செய்கிறோம். இதனால் நாம், நமக்கென்று எந்த மதிப்பையும் சேர்த்துக் கொள்வதில்லை. நாம் அவற்றை உள் வாங்கிக்கொள்ளும்பொழுது, நமக்குள் ரஸவாதம் நிகழ்கிறது.
நம்முடைய அறிவையும் அஹங்காரத்தையும் காட்டுவதற்காகவே உரையாடினால், நாம் அந்த அறிவினால் எந்தப் பயனும் அடையப்போவதில்லை. அறிவையும் கலந்துரையாடல்களையும் நமது வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்பதை நாம் அறிந்துகொள்ளும்பொழுது மட்டுமே, அது நமக்கு ஒரு சக்தி வாய்ந்த கருவியாக ஆக முடியும்.
அனுபவிக்கத் தெரிந்தவர்களுக்கே ஆன்மிகம்
அந்த ஸ்லோகத்தின் கடைசியில், கிருஷ்ணர் ஒரு மிக அழகான நுட்பத்தை, சரணாகதி என்னும் உச்ச நுட்பத்தைத் தருகிறார். அவர், "உங்களின் செயல்களுடைய பலனை பிரபஞ்ச விழிப்புணர்வாகிய அவரிடமே விட்டுவிடுங்கள்" என்கிறார். இதுதான் மிகவும் சரியான பயனளிக்கும் நுட்பமாகும். இதைப் பற்றித்தான் அவர் கீதை முழுவதும் பேசுகிறார்.
பிரபஞ்ச விழிப்புணர்வாகிய அவரிடமே உங்கள் செயல்களின் பலனை விட்டுவிடுங்கள்.
நாம், மீண்டும் மீண்டும், நம் செயல்களுக்கு நாமே பொறுப்பை எடுத்துக் கொள்கிறோம். அப்பொழுதுதான் இறுக்கங்களும், பிரச்சினைகளும் ஆரம்பமாகின்றன. பிரபஞ்ச சக்தியான கிருஷ்ணரிடமே எல்லாவற்றையும் சமர்ப்பியுங்கள்! செய்துவிட்டோமானால், நாம் சுதந்திரமாக உணர்வோம். நாம் விடுவிக்கப்பட்டதாக உணர்வோம். ஸத்யத்தை அடைவதற்கான மிக சுலபமான வழி இதுவே.
ஸத்யத்தை அடைவதற்கோ அல்லது ஒரு ஆன்மிகப் பாதையில் செல்ல ஆரம்பிப்பதற்கு, ஏதேனும் முன் நிபந்தனைகள் உண்டா?
இந்தக் கிருஷ்ணர் விடையளிக்கிறார். ஒருவர் ஒரு குறிப்பிட்ட பாதையில் செல்ல ஆரம்பிப்பதற்கு, எந்த ஒரு ஆன்மிக அறிவும் தேவையில்லை. முன் நிபந்தனைகள் ஏதும் கிடையாது. ஒருவர், புதிதானவராக இருந்தாலும், அவர், ஒரு குறிப்பிட்ட ஆன்மிகப் பாதையைப் பின்பற்றலாம்.
ஆனால் பிரச்சினை என்னவென்றால், பலர், ஒரு தியான முகாமில் கலந்துகொண்ட உடனேயே, தாங்கள் ஜ்ஞானமடைந்துவிட்டதாக நினைக்கிறார்கள். அவர்கள், தியானம் போன்ற எதையாவது செய்வது பற்றிப் பேசி சந்தோஷமடையட்டும். ஆனால் ஒருவர், ஆன்மிகத்திற்கு முற்றிலும் புதிதானவராக இருந்தாலும், அவர், ஒரு குறிப்பிட்ட ஆன்மிகப் பாதையைப் பின்பற்றலாம்!
பிரச்சினை என்னவென்றால், அதை அனுபவ பூர்வமாக உணராமலேயே மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அவர்கள், தியானம் செய்யாத மற்றவர்களைக் கீழ்த்தரமாக நினைப்பது மட்டுமல்லாமல், அவர்களைச் சீண்டிக் கொண்டிருப்பார்கள்.
கிருஷ்ணர் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முயற்சிக்கிறார்.
ஒரு உணர்வு மாற்றம் மட்டுமே நிகழ வேண்டும். அது இப்படித்தான்: ஒரு பிறவிக் குருடர், வெளிச்சம் என்றால் என்ன என்பதைப் பற்றி அறியமாட்டார். நிறங்களைப் பற்றியும் அறியமாட்டார். அவற்றை அவர் பார்த்ததேயில்லை, அவற்றைப் பற்றிய எந்த முன் அனுபவமும் அவருக்கில்லை. யாருமே வசிக்காத ஒரு பகுதியில் அவர் விடப்பட்டால், அவர் உலகமே இருட்டுதான் என்று நினைத்துக் கொண்டிருப்பார்.
ஆனால் வெளிச்சத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களிடையே அவர் வசிப்பதால், வெளிச்சம் என்று ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை மட்டும் அறிகிறார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பார்வை சக்தியான சக்ஷு தூண்டிவிடப்பட்டால், தம் முன்னால் இருக்கும் எல்லாவற்றையும் பார்க்கிறார். ஒளியையும் நிறங்களையும் பார்த்து மகிழ்கிறார். பார்வை கிடைப்பதற்கு முன்னால், அவையெல்லாம் என்னவென்றே அவருக்குத் தெரியாது. இருப்பினும் பார்வை கிடைத்த உடனேயே அவற்றை அவரால் அனுபவித்து மகிழ முடியும்.
இந்த மாற்றம் நிச்சயம் நிகழ்ந்தாக வேண்டும் அவ்வளவுதான்.
ஜ்ஞான குருமார்களுள் பலர், ஆன்மிகத்தைப் பற்றிய முன்னறிவைப் பெற்றிருக்கவில்லை. பெருங்காப்பியமான இராமாயணத்தை எழுதிய வால்மீகி என்னும் ஒரு ஜ்ஞான குருவைப் பற்றிச் சொல்கிறேன்.
உணர்வு மாற்றம் மட்டுமே நிகழ வேண்டும்
ஜ்ஞானமடைவதற்கு முன்னால் வால்மீகி ஒரு கொள்ளைக்காரனாகத்தான் இருந்தார். காடுகளில் ஒளிந்திருப்பார். யாரேனும் செல்வந்தர்கள் அந்தக் காட்டைக் கடக்கும்பொழுது, அவர்களைக் கொன்று, அவர்கள் வைத்திருக்கும் பணத்தைக் கொள்ளையடித்து வந்தார்.
ஒரு நாள் நாரத முனிவரே, அந்தக் காட்டின் வழியாக வந்தார். நாரதர், மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவிடம் அளவு கடந்த பக்திகொண்டவர். அவரிடம் இருந்ததெல்லாம் ஒரே ஒரு தம்புராதான். அதைக்கொண்டு எப்பொழுதும் விஷ்ணு புகழைப் பற்றித்தான் பாடிக் கொண்டிருப்பார்.
வால்மீகி அவரை வழிமறித்து ''உன்னிடமிருப்பதை எல்லாவற்றையும் என்னிடம் கொடு. இல்லையென்றால் உன்னைக் கொன்றுவிடுவேன்," என்றார்.
நாரதர் அவரிடம், ''இந்தத் தம்புராவையும் கடவுள் நாமத்தையும் தவிர, உனக்குக் கொடுப்பதற்கு என்னிடம் வேறொன்றுமேயில்லையே,' என்றார்.
நாரதர் பொய் சொல்கிறார் என வால்மீகி நினைத்தார். ''எப்படி ஒன்றுமில்லாமலிருக்க முடியும் ?'' என்று நாரதரைக் கேட்டார்.
சிரித்துக்கொண்டே, நாரதர் ''மற்றவர்களிடமிருந்து கொள்ளையடித்து வைத்துக்கொண்டு நீயென்ன செய்வாய் ? '' எனக் கேட்டார்.
''என்னுடைய குடும்பத்தினரைக் காப்பாற்றுவேன். என்னுடைய குழந்தைகள், மனைவி, பெற்றோர் ஆகியோருக்காகத்தான் நான் இப்படிக் கொள்ளையடிக்கிறேன்,'' என்றார் வால்மீகி.
நாரதர், ''உன் குடும்பத்தினர் உனக்காகச் எப்பொழுதுமே உன்னோடுதான் இருக்கப் போகிறார்கள் என்று நினைக்கிறாயா?' என்று கேட்டார்.
வால்மீகி ''ஆம், நிச்சயமாக, அவர்கள் என்னோடுதான் இருக்கப் போகிறார்கள். நான் அவர்கள் உயிர்வாழ உணவைக் கொடுப்பேன், அவர்களுக்குச் செல்வத்தைக் கொடுப்பேன், அவர்கள் எப்பொழுதும் என்னோடுதான் இருக்கப் போகிறார்கள், ' என்று பதிலுரைத்தார்.
நாரதர், மறுபடியும் ''அவர்கள் எப்பொழுதும் உனக்காக, உன் பக்கம் இருப்பார்கள் என்று உனக்கு நிச்சயமாகத் தெரியுமா?' என்று கேட்டார்.
நாரதர் இவ்வாறு மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தைக் கேட்கிறார். வால்மீகிக்கு எரிச்சலைத் தருகிறது. ''நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்பது உனக்குப் புரியவில்லையா? அவர்கள் எப்பொழுதும் என்னோடுதான் இருக்கப் போகிறார்கள் என்று நான் சொல்லிக் கொண்டிருப்பது உன் காதில் விழவில்லையா?'' என்று கோபமாகக் கேட்டார்.
உண்மையில் நாரதர், அந்த மாதிரி கேள்விகளாகக் கேட்டு, நேரத்தைத்தான் கடத்திக் கொண்டிருந்தார். அவர் வால்மீகியைப் பேச்சிலேயே, கலந்துரையாடலிலேயே இருக்கச்செய்து, வாழ்க்கையை வேறு கோணத்தில் உற்றுநோக்க வைத்தார்.
கடைசியாக, நாரதர், ''சரி, உன் குடும்பத்தார் உனக்குத் தங்கள் ஆதரவை எந்தச் சூழ்நிலையிலும் கொடுப்பார்கள் என உறுதியாக நம்புகிறாய். அவர்கள் உன்னுடனேயே இறுதிவரை இருப்பார்களா ? நீ இறக்க நேரிட்டால், உன்னுடனேயே சாகச்சொன்னால், அவர்கள் சம்மதிப்பார்களா ? அவர்கள் அதற்கு ஒத்துக்கொள்வார்களா ?'' என்று கேட்டார்.
வால்மீகி நம்பிக்கையோடு பதில் சொன்னார்: ''ஆம், எனக்கு நம்பிக்கை இருக்கிறது, நான் கேட்டால் குறைந்தது அவர்களுள் ஒருவராவது என்னோடு வருவார்கள். நான் அவர்களைக் காப்பாற்றத்தான் கொள்ளையடிக்கிறேன். அவர்களும் நான் இந்த செல்வத்தைக் கொடுப்பதால்தான் உயிர் வாழ்கிறார்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது, நான் கேட்டால் அவர்களும் என்னோடு சாவார்கள்!''
நாரதர் அதற்கு, ''சரி அவர்கள் உனக்காக அதையும் செய்வார்கள் என்று நீ நினைத்தால், நீயே போய் இதைப் பற்றி அவர்களைக் கேள். பிறகு என்னிடம் வா. யாராவது ஒருவர் உன்னோடு வர ஒத்துக்கொண்டால்கூட, நீ என்னைக் கொல்லலாம். நான் எங்கும் போய் விடமாட்டேன். நான் இங்கேயே இருக்கிறேன்,'' என்று சொன்னார்.
வால்மீகியும் ஒத்துக்கொண்டு, வீட்டிற்குச் சென்றார். முதலில் தம் மனைவியை, தன்னோடு இறக்கத் தயாரா என்று கேட்டார். மனைவி உடனே அதற்கு, "நான் உங்களுடைய மறுபாதி என்பது உண்மைதான், அதற்காக உங்களுடனேயே என்னையும் இறக்கச் சொல்வது நியாயமாக எனக்குப் படவில்லை. இறப்பு என்று வரும்பொழுது, அது உங்களுடையது மட்டுமே, '' என்று பதில் சொன்னார்.
சில சமயங்களில், தர்சனம்கூட, நமக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது!
வால்மீகி அதிர்ச்சி அடைந்தார். எப்படியோ, தம்முடைய குழந்தைகள் தம்மை மிகவும் நேசிப்பதால், அவர்களாவது தம்மோடு வருவார்கள் என்று நினைத்தார் அதனால் அவர்களைக் கேட்டார். அவர்கள், " அப்பா, நாங்கள் மிகவும் இளையவர்கள். நாங்கள் இன்னும் உலகத்தை அனுபவிக்கவே இல்லை. நீங்கள் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டீர்கள் உங்களோடு நாங்கள் எப்படிச் சாக முடியும்?'' என்று கேட்டார்கள்.
வால்மீகி மிகவும் மனம் வருந்தினார். அவர் இறக்கும்பொழுது, மனைவியும் குழந்தைகளும் அவரோடு வர மறுத்ததால், தம் பெற்றோர்களாவது நிச்சயம் தம்மோடு வருவார்கள் என நினைத்தார். ஏனெனில் அவர்கள்தான், அவரை நன்கு கவனித்து அக்கறையுடன் வளர்த்தவர்கள். அதனால் அவர்களிடம் சென்று, அதே கேள்வியைக் கேட்டார்.
ஆனால் அவர்களோ, "நாங்கள் ஏன் உன்னோடு சாக வேண்டும்? எங்கள் பேரக் குழந்தைகளோடு எங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். உன்னோடு நாங்கள் ஏன் சாக வேண்டும் ?' என்று கேட்டனர்.
பெற்றோர்கள் அப்படிக் கேட்டதுதான் அவரை அதிகம் அதிர்ச்சியடைய வைத்தது. நம்மோடு எப்பொழுதும் இருக்கக்கூடியவர் கடவுள் ஒருவரே!
அவர் நாரதரிடம் திரும்பிச் சென்று, நடத்தவற்றை முழுவதுமாகக் கூறினார். அவற்றைக் கேட்ட நாரதர், ''உன்னோடு எப்பொழுதும் இருக்கக் கூடிய ஒரே ஒருவர் இருக்கிறார், கடவுளே அவர்!' என்று சொன்னார்.
இந்தக் கூற்று, வால்மீகியின் முழு வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. அவர், தாம் செய்து கொண்டிருப்பது எதுவுமே பயனற்றது என்று உணர்ந்தார்.
பிறகு நாரதர் அவருக்கு, இராம நாமத்தை தீக்ஷையாகக் கொடுத்தார். அவர் அந்தக் காட்டிலே அமர்ந்து தீவிரமாக தியானத்தில் ஆழ்ந்து விட்டார். பல காலமாக அப்படியே அமர்ந்திருந்ததில், அவர் மேலேயே ஒரு எறும்புப் புற்று அமைந்தது. இப்படித்தான் அவர் 'வால்மீகி' என்றழைக்கப்பட்டார். வால்மீகி என்றால் 'எறும்புப் புற்றிலிருந்து தோன்றியது' என்று பொருள்.
அவர் தியானத்திலிருந்து வெளிவந்தபொழுது, ஒரு ஜ்ஞான குருவாக மலர்ந்திருந்தார்.
நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயமென்னவென்றால், ஒருவருக்கு ஆன்மிக அறிவு இருப்பதாலேயே, அவர் உண்மையிலேயே, ஒரு தேடல் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை. நான் பலரையும் பார்த்திருக்கிறேன், அவர்கள் நிறைய புத்தகங்களைப் படித்துவிட்டு, அவசியமே இல்லாத நேரத்தில்கூட, ஆன்மிகத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்களுக்கு பெரிய ஆன்மிக அறிவு இருப்பதாக நினைத்து, தங்களை மிகவும் உயர்ந்தவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள்.
உண்மையில் அவர்களுக்கு இருப்பது தார்க்கிக அறிவு மட்டுமே, பட்டறிவு மட்டுமே, ஆன்மிக அறிவு அல்ல. அவர்கள் பேசும்பொழுது, சுய அனுபவத்திலிருந்து பேசுவதில்லை. இதுதான், ஒரு ஜ்ஞான குருவுக்கும், ஒரு சாதாரண மனிதருக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம்.
ஒரு ஜ்ஞான குரு ஆன்மிகத்தைப் பற்றிப் பேசும்பொழுது, அவர் தம்முடைய உண்மை அனுபவத்திலிருந்து பேசுகிறார். அவர் ஸத்யத்தை உணர்ந்து அனுபவம் பெற்றிருக்கிறார்.
சராசரி மனிதருக்கு, அவருடைய அஹங்காரம்தான் பேசுகிறது. 'ஆன்மிக அறிவு' என்று சொல்லிக்கொள்ளும் அவருடைய அந்த அறிவு, அஹங்காரத்திலிருந்து வருகிறது, பட்டறிவிலிருந்து வருகிறது.
தயாரானால் போதும், தகுதியானவராக்குகிறேன்
மக்கள் என்னைக் கேட்பதுண்டு, '' ஸ்வாமி, நான் இந்தப் பயிற்சி வகுப்பில் சேர வேண்டும் என்று நினைக்கிறீர்களா? நான் இந்தப் பயிற்சிக்குத் தகுதியுள்ளவன் தானா ? ' '
அப்பொழுது நான் அவர்களுக்குச் சொல்லும் பதில் இதுதான்: ''நீங்கள் திடமாகவும், பெற்றுக்கொள்ளுவதற்கான தயார் நிலையிலும் இருந்தீர்களானால் நான் உங்களைத் தகுதியானவராக்குகிறேன். '
இந்த ஒன்றே ஒன்றுதான் முன் தேவை: நீங்கள் திடமாகவும், தயார் நிலையிலும் இருந்தீர்களானால், இறுதி அடைவதற்கு நீங்கள் தகுதியானவர்தான்.
இரண்டே இரண்டு தகுதிகள்தான் தேவை. ஒன்று, திடமாக சமநிலையோடு இருங்கள்; இரண்டு, திறந்த மனத்தினராக, அணுகக்கூடியவராக இருங்கள்.
முதலில் நீங்கள் திடமாக இருக்க வேண்டும். நீங்கள் அமைதியற்று இருந்தால், உங்கள் மனம் குரங்கு போல இங்குமங்கும் தாவிக் கொண்டிருந்தால், உங்கள் பாதையில் கவனம் செலுத்த முடியாது. உங்களுடன் நீங்களே அமர்ந்து, உங்களுக்காக நீங்களே, உங்களுடைய மனதைக் கட்டுப்படுத்த முடியாது. தேவையான முதல் விஷயமே திடம்தான்.
நீங்கள், உடலாலும் மனத்தாலும் இருப்பினாலும் குருவோடு இருக்க வேண்டும்.
அடுத்தது, நீங்கள் திறந்த மனத்தினராக, அணுகக்கூடியவராக இருக்க வேண்டும். இது, நீங்கள் அங்கு உடலளவில் மட்டும் இருந்தால் போதும் என்று அர்த்தம் அல்ல. நீங்கள், உடலாலும் மனத்தாலும் இருப்பினாலும் அங்கு இருக்க வேண்டும். நீங்கள் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் உங்களைத் திறந்து வைக்க வேண்டும்.
ஆன்மிகத்தைப் பற்றி எல்லாமே தங்களுக்குத் தெரியும் என்று பலர் நினைக்கிறார்கள். அவர்கள் என்னுடைய பயிற்சி வகுப்பிற்கு வரும்பொழுது பல கேள்விகளைக் கேட்கின்றனர். ஏன் இவ்வளவு கேள்விகள் கேட்கின்றனர் என்பதும் எனக்குத் தெரிந்துவிடும். அவர்களுடைய கோப்பை ஏற்கெனவே நிறைந்திருக்கிறது. வேறு புதியவை உள்ளே நுழைவதற்கு அங்கே இடமே இல்லை. அவர்கள் எதையும் உள்வாங்கிக்கொள்ளும் நிலையில் இல்லை.
உண்மையில் ஆன்மிகத்தைப் பற்றி ஏதும் தெரியாமல் இருப்பதே, மிக நல்லது, மிக எளிது. பின்பு அவர்கள், குருவிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகளை, உடனே பிடித்துக்கொள்கிறார்கள். இதுவே சிறந்தது, ஏனெனில், அப்பொழுதுதான் குப்பையை அகற்றும் வேலை இருக்காது.
இதைத்தான் கிருஷ்ணர் சொல்கிறார். நீங்கள் ஆன்மிகம் என்னும் பாதையில் அடியெடுத்து வைக்க, முன்னறிவு எதுவும் உங்களுக்குத் தேவையில்லை. யாராவது ஒருவர் உங்களுக்கு அதைப் பற்றிச் சொன்னவுடன், நீங்கள் உடனே அந்தப் பாதையைப் பின்பற்றினால், அது போதும்.
ஆனால் நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். எதையும் குருட்டுத்தனமாகச் செய்யாதீர்கள். இதற்கு முந்தைய ஸ்லோகத்தில், நாம் அதைப் பற்றிப் பேசியிருக்கிறோம். நமது பாதை எதுவென்று தெரிந்திருக்க வேண்டும். அவ்வளவுதான்.
நாம் நினைப்பதுபோல், 'நாம் சாதாரணமானவர்கள்' அல்ல
நீங்கள் பார்ப்பது எதுவானாலும், அது, பொருள் மற்றும் சக்தியும் சேர்ந்திருக்கிற ஒரு சேர்க்கைதான். இந்த முழுப் பிரபஞ்சமும் க்ஷேத்ர மற்றும் க்ஷேத்ரஜ்ஞனாகவும், மாயா மற்றும் ஆத்மனாகவும், பரக்ருதி மற்றும் புருஷனாகவும், பொருள் மற்றும் சக்தியாகவும், உடல்-மன அமைப்பு மற்றும் விழிப்புணர்வாகவும் அறியப்படுகிறது.
'இருப்பது' அனைத்துமே, நாம் நினைப்பதுபோல, இந்த இரண்டில் ஒன்றினால் மட்டுமே ஆனது அல்ல; இவ்விரண்டின் சேர்க்கையே!
நாம் பார்ப்பது வெறும் பொருள்தான் என்று நாம் நம்பினால், அது வெறும் மாயைதான். 'நாம்' என்று நினைத்துக் கொண்டிருக்கும் நமது உடலானது க்ஷேத்ரம் மற்றும் க்ஷேத்ரஜ்ஞு இந்த இரண்டினுடைய சேர்க்கைதான். விழிப்புணர்வு இல்லையென்றால், இந்த உடல் பயனற்றதாகிவிடும். நாம் உடல் என்று அழைக்கும் இந்தப் பொருளானது, விழிப்புணர்வால்தான் உயிர் வாழ்கிறது. இந்த இரண்டுமே இருந்தாக வேண்டும்.
ப்ரக்ருதி என்பது வெளிப்படுவது, புருஷ என்பது வெளிப்படாதது. ப்ரக்ருதி என்பது நாம் பார்க்கக் கூடிய வெளிப்பாடு. நாம் பார்க்கும் இந்த வெளிப்பாட்டிற்குப் பின்னால் வேறொன்றும் இருக்கிறது. அதுவே அதாவது பொருளின் பின்னால் உள்ள நம்மால் பார்க்க முடியாத சக்தி!
நாம் நட்சத்திரங்கள், இலட்சக்கணக்கான கிரகங்கள், கோள்கள் கொண்டிருக்கின்றன என்பதையும், அங்கு, இது போன்ற எண்ணற்ற பால்வெளிகள் இருக்கின்றன என்பதையும் பார்த்தோம்.
நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். எதையும் குருட்டுத்தனமாகச் செய்யாதீர்கள்.
அவை ஓடிக் கொண்டிருக்கின்றன. அவை எப்படி இத்தனை ஒழுங்கோடு ஓடிக் கொண்டிருக்கின்றன? நம்முடைய சூரிய மண்டலத்தைப் பாருங்கள், எல்லாக் கோள்களும் சீரான பாதையில் ஓடிக் கொண்டிருக்கின்றன. நாம், அவற்றைப் பாறைகள், தூசுகள், அல்லது பனிப்படலங்கள் என்று நினைத்தால், அவை வெறும் பொருள்தான் என்று நினைத்தால், அங்கு எப்படி இம்மாதிரி ஒரு ஒழுங்குமுறை இருக்க முடியும் ?
அவை பொருள் மட்டுமே அல்ல. அந்தப் பொருட்களின் இருப்பின் பின்னால், வேறு ஏதோ ஒன்று இருக்கிறது. அங்கு, பல குழப்பங்கள் உள்ளன. இருந்தாலும், அந்தக் குழப்பங்களின் நடுவே ஒரு அழகான ஒழுங்குமுறை உள்ளது. அந்த ஒழுங்கு முறைக்குக் காரணம், க்ஷேத்ரஜ்ஞுன்.
அது, ஒரு இருந்தால் அல்லது க்ஷேத்ரம் மட்டுமாகவே இருந்தால், இந்தப் புத்திசாலித்தனம் எதுவும் இருந்திருக்காது. ஆனால் அந்தப் பொருளுள் அமைந்துள்ளது. அந்தப் புத்திசாலித்தனம் அல்லது விழிப்புணர்வுதான், அந்த 'இருப்பை' உருவாக்குகிறது. அதனால் க்ஷேத்ரம் மற்றும் க்ஷேத்ரஜ்ஞுன் ஆகியவற்றின் சேர்க்கை அவசியமாகிறது.
நவீன விஞ்ஞானம், பொருளும் சக்தியும் ஒன்றேதான் என்றும், அவை ஒன்றுக்கொன்று மாற்றிக்கொள்ளத் தக்கவைதான் என்றும் நிரூபித்துள்ளது. ஆனால் நம் உள்ளுலக விஞ்ஞானிகள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே இதை நிரூபித்துவிட்டனர்.
'இருப்பை' உருவாக்குவதற்காகவே, பொருளும் சக்தியும் ஒன்றாக இணைகின்றன.
நமது உடம்பின் ஒவ்வொரு அணுவும் எவ்வாறு புத்திசாலித்தனத்தைப் பெற்றிருக்கிறது என்று நான் முன்னமேயே சொல்லியிருக்கிறேன். விஞ்ஞானம், நமது மனித உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் புத்திசாலித்தனம் பொதிந்துள்ளது என்று நிரூபித்திருக்கிறது. ஒவ்வொரு அணுவும், வெறும் சில வேதியப் பொருட்களால் மட்டும் ஆனது அல்ல; அது, புத்தி அல்லது சக்தியையும் உள்ளடக்கி இருக்கிறது. இந்த ஒருங்கிணைப்புதான், உடல்-மன அமைப்பை உருவாக்குகிறது.
மாயையை விட்டு நிஜத்தை விரும்பினால் வாழ்வே இனித்திடும்
நாம் இன்னும் ஆழமான நிலையில் ஆராய்ந்து பார்த்து, க்ஷத்ரமும் க்ஷத்ரஜ்ஞும் தனித்தனியான அமைப்புகள் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
க்ஷத்ரமும் க்ஷத்ரஜ்ஞும் ஒரே மூலத்தைக் கொண்டவைதான். க்ஷத்ரம் என்பது சக்தியின் ஸ்தூல வடிவம், அதே சக்தியின் ஸூக்ஷ்ம வடிவம் க்ஷத்ரஜ்ஞன்.
க்ஷத்ரஜ்ஞனின் 'இருப்பு' நிகழ்வதற்கு, ஸ்தூல அமைப்பும், அங்கே இருந்தாக வேண்டும்.
நம்மைச் சுற்றியிருப்பவற்றை, நாம் எவ்வாறு பார்க்கிறோம் என்பதே நம் வாழ்க்கை முறையை நிச்சயிக்கிறது.
நாம் எல்லாவற்றையுமே பொருளாக மட்டுமே பார்க்கிறோம். நாம் இந்த ஸ்தூல நிலையை மட்டுமே பார்க்கும்பொழுதுதான் பயங்களும் புகுந்துகொள்கின்றன.
மேலும் நாம், இந்தப் பொருளைத்தான் மேலும் மேலும் பெற விழைகிறோம். நாம் பார்ப்பதெல்லாம் பொருள்தான் என்று நாம் நினைக்கும்பொழுது, நாம் பொருளுலக வாழ்க்கையைத்தான் வாழ்கிறோம். நாம் க்ஷத்ர நிலையில் வாழும்பொழுது, நாம்
ஒவ்வொரு அணுவும், வெறும் சில வேதியப் பொருட்களால் மட்டும் ஆனது அல்ல; அது, சக்தியையும் உள்ளடக்கி இருக்கிறது.
மாயையில்தான் வாழ்கிறோம். அதுதான் பிரச்சினையே.
நாம் இந்த மாயையில் வாழும்பொழுது, நாம் நம்மை, இந்தப் பொருள் உலகத்தை அடிப்படையாக வைத்துத்தான் வரையறுத்துக் கொள்கிறோம். இதன் காரணமாகவே நாம், இந்தப் பொருளின் பின்னால் ஓடி, ஓடி, அதைச் சேகரிக்கத் தொடங்குகிறோம்.
நாம் இந்தப் பொருளை நம் உடைமையாக்கிக்கொள்ள விழைகிறோம். ஆனால் இதுவே சக்தியும்கூட என்று அறிந்துகொள்ளும்பொழுது, 'சக்தியை எப்படி நம் உடைமையாக்கிக்கொள்ள முடியும் ? அதை சொந்தமாக்கி நம்மிடமே பிடித்து வைத்துக்கொள்ள முடியுமா?' என்று நாம் சிந்திக்கத் தொடங்குகிறோம்.
'இல்லை, நாம், சக்தியை ஒரு பைக்குள் பிடித்து வைத்துக்கொள்ள முடியாது' என்ற இந்தப் புரிதல் நிகழும்பொழுது, விஷயங்களை வெறும் 'பொருளாக' மட்டுமே கருதிக்கொண்டு, அவற்றின் பின்னால் ஒடுவது வீணே என்பதை உணர்ந்துகொள்கிறோம்.
நாம் பிரஹ்மம்
-
13.27 யார் ஒருவர், எல்லா உடல்களிலும் அந்த மேலான பரம்பொருளோ தனி தனி ஆத்மாவாக இருக்கிறது என்பதைப் பார்க்கிறாரோ, அந்தத் தனிப்பட்ட ஆத்மாவிற்கும், அந்த மேலான பரம்பொருளுக்கும் எப்பொழுதுமே அழிவில்லை என்று புரிந்துகொள்கிறாரோ, அவர்தான் உண்மையிலேயே பார்க்கிறார்.
-
13.28 ஒருவர் மனத்தால் இழிவுபடுத்தப்படாமலோ அல்லது தூண்டப்படாமலோ இருக்கும்பொழுதும், மற்றும் அசையா பொருட்கள் அனைத்திலும் ஒப்புயர்வற்ற மெய்ப்பொருளை பார்க்க முடியும்பொழுதும் அவர் மனம் கடந்தநிலையை அடைகிறார்.
-
13.29 பொருட்களினால், பஞ்சபூதங்களால் அமைந்த இந்த உடல்தான் எல்லாச் செயல்களையும் செய்கிறது, ஆத்மா எதுவுமே செய்வதில்லை என பார்க்கமுடிந்த ஒருவர்தான் உண்மையில் பார்க்கிறார்.
-
13.30 எல்லா உயிர்களிடத்தும் ஒப்புயர்வற்ற ஆத்மாவைக் காண முடிந்த ஒருவர், உயிர்களிடத்தே வேற்றுமை காணும் தன்மையை விட்டுவிடுகிறார். அவர், இந்த முழுப் பிரபஞ்சமும் அந்த ஒரே ஸத்யத்தின் விரிவாக்கமும் வெளிப்பாடும்தான் என்பதைப் பார்க்கிறார்.
நீங்களும் பிரஹ்மம், நானும் பிரஹ்மம்
''தன்னை உணர்ந்துகொண்ட ஒருவர் அதாவது மேலான விழிப்புணர்வை அடைந்த ஒருவர், உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் அனைத்திலும் மேலான பரமாத்மாவின் ஸார்வபௌதீயத்தை, இருப்பைப் பார்க்கிறார். பரமாத்மாவை அழிக்கப்பட முடியாததாகவும், ஆரம்பமே இல்லாததாகவும், லாக்ஷியமான விழிப்புணர்வாகவும் அவர் உணர்கிறார்,'' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
நாம் காணும் இந்தப் பிரபஞ்ச இருப்பு, தனிப்பட்ட அடையாளங்களால் ஆனது அல்ல. நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களிடமிருந்து நாம் வேறுபட்டவர்கள் என்று, நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையில், நாம் அனைவரும் ஒன்றே. கிருஷ்ணர் சொல்லும் பிரபஞ்ச இருப்பு, நம் எல்லோருள்ளும், நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும் இருக்கிறது.
'நான் கடவுள்' என்பதை நிரூபிக்க நான் இங்கு வரவில்லை. 'நீங்கள் கடவுள்' என்பதை நிரூபிக்கவே நான் இங்கு இருக்கிறேன்! – என்று நான் சொல்வதுண்டு.
என்பதினால், 'நீங்கள் கடவுள் இல்லை' என்று ஆகிவிடமுடியாது.
இதுதான் உண்மை. நான் இதைச் சொல்லும்பொழுது, மக்கள், "இல்லை, இல்லை ஸ்வாமி. நாங்கள் எப்படி கடவுளாக முடியும் ? நாங்கள் நிறைய பாவங்கள் செய்தவர்கள். நீங்கள் கடவுள், ஏனெனில் உங்களுக்கு வியாதிகளைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது. ஆனால் நாங்கள் எப்படிக் கடவுளாக இருக்க இருக்க முடியும் ?' என்று கேட்கிறார்கள்.
ஆழ்ந்து ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் பாவங்கள் செய்திருக்கின்றீர்கள் என்பதினால், 'நீங்கள் கடவுள் இல்லை' என்று ஆகிவிடமுடியாது. புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் ஒரு பாவத்தைச் செய்ததாலேயே, நீங்கள் பேய், பிசாசு ஆகிவிடமாட்டீர்கள்.
நீங்கள் இன்னமும் கடவுள்தான். நீங்கள் கடவுளாயிருப்பதற்கு, உங்கள் பாவங்கள், உங்களைத் தகுதியானவராகவோ அல்லது தகுதியற்றவராகவோ செய்துவிட முடியாது.
நாம் தான் கடவுளுக்கும் நமக்கும் நடுவில் ஒரு தடையை உண்டுபண்ணிக் கொள்கிறோம்.
இயற்கையான 'பாவம்' என்பது கட்டுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்
பட்ட ஒரு கருத்துதான். கோவிலில் பணியாற்றும் ஒரு அர்ச்சகரின் ஆத்மாவுக்கும், ஒரு கொள்ளையனின் ஆத்மாவுக்கும் ஸத்யத்தை அடைவதற்கு ஒரே மாதிரியான தகுதிதான் இருக்கிறது.
நாமேதான் கடவுளுக்கும் நமக்கும் நடுவில் ஒரு தடையை உண்டுபண்ணிக்கொள்கிறோம். கடவுள் எனப்படுபவர், நமக்குள்ளேயும் இருக்கிறார் என்பதை நம்புவதற்கு, நாம் தயாராயில்லை. நம்முன் நிற்கும் யாரோ ஒருவரைக் 'கடவுள்' என்று ஒத்துக்கொள்கிறோம், எனினும் அதே கடவுள்தான் நம்முள்ளும் இருக்கிறார் என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
நம்மை நாமே கடவுள் என்று சொல்லிக்கொள்ள ஆரம்பித்துவிட்டால், சமூகத்திற்கு நம்மைக் கட்டுப்படுத்தவதற்குக் கடினமாகிவிடும் !
என்னுடைய வாழ்க்கையிலிருந்து ஒரு நிகழ்ச்சியை உங்களுக்குச் சொல்கிறேன். நான் என்னுடைய பதினேழாவது வயதில், எனக்கென்று எவ்வித வெளியேறினேன்.
பாரதத்தில் வடக்கு நோக்கிப் பயணம் செய்தேன். நான் பணம், காசு எதுவும் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று உறுதி கொண்டிருந்திருந்ததால், டிக்கெட் இல்லாமல்தான் ரயில்களில் பயணம் செய்தேன். பாரதத்தின் வட பகுதியில், என்னுடைய காவி உடைதான் என்னுடைய இலவச பயணங்களுக்கு ஒரு இருந்தது. யாரும் என்னைத் தொந்தரவே செய்யவில்லை.
எனினும் ஒருதடவை கொல்கத்தா நோக்கிப் பயணம்செய்து கொண்டிருந்தபொழுது, ஒரு டிக்கெட் பரிசோதகர் என்னுடைய பயணச்சீட்டைக் கேட்டார். நான் தப்பும் தவறுமாக, இந்தியையும் கலந்து அவருக்குப் பதில் சொன்னேன்: "என்ன டிக்கெட்? நான் பிரஹ்மம், இந்த ரயில் பிரஹ்மம், நீயும் பிரஹ்மம், ஏன் டிக்கெட் ? ''
தெய்வீக சக்தி, எல்லா இடங்களிலும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.
அவர் ஒரு நல்ல மனிதராக இருந்தார். டிக்கெட் இல்லாமலேயே தொடர்ந்து என்னைப் பயணம் செய்ய அனுமதித்தது மட்டுமல்லாமல், அவரே எனக்கு உணவும் வாங்கிக் கொடுத்தார்!
ஆம், நாம் எல்லோரும் பிரஹ்மம். கடவுள் எங்கும் இருக்கிறார். தெய்விக சக்தி, எல்லா இடங்களிலும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. ஒரே பிரச்சினை என்னவென்றால், நாம் அதைப் பார்ப்பதில்லை. நாம் ஒரு சமயத்தில் ஒன்றைத்தான் பார்க்கிறோம். நாம் கடவுளை, வேறு யாரோ ஒருவராகவும், சக்திமிகுந்தவராகவும் பார்க்கிறோம். நாமே கடவுளுக்கும் நமக்கும் நடுவில் ஒரு பெரிய இடைவெளியை உருவாக்கிக்கொள்கிறோம்.
இறைவனோடு தொடர்புகொள்ள உதவும் கருவி, விக்ரஹம்
மேலைநாட்டு மக்கள், இந்துக்களை, 'விக்ரஹ வழிபாட்டுக்காரர்கள்' என்று அழைக்கிறார்கள். அவர்கள் அதைக் கேலி செய்கிறார்கள். உண்மையில், நம் ஹிந்து நாட்டிலேயே விக்ரஹ வழிபாட்டைக் கேலி செய்பவர்களும் இருக்கிறார்கள். எல்லாப் பட்டறிவாளர்களும் விஞ்ஞானிகளும் கீழ்த்தரமாகத்தான் பார்க்கிறார்கள்.
சில புதிய வேதாந்திகள், வேதாந்தத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்.
ஆனாலும் விக்ரஹ வழிபாட்டை, அறிவியல் முறையில்லாதது என்று கருதுகிறார்கள். ஹோமங்களைப் பற்றியும் அபிஷேகங்களைப் பற்றியும் அதே கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள்.
நாம் பிரார்த்தனை செய்யும்பொழுது, நம் முன்னால் இருக்கும் விக்ரஹங்களுக்கும் மேலானதாக ஒன்று இருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நாம் வழிபடும்பொழுது, நாம் விக்ரஹங்களை மட்டும் வழிபடுவதில்லை ; அந்த விக்ரஹங்களின் 'மூலமாக' வழிபடுகிறோம். விக்ரஹங்களுக்கு அப்பால் இருக்கும் மேலான சக்தியை உணர்ந்து, அந்தச் சக்தியை
வழிபட்டால், நம் வழிபாட்டில் அர்த்தம் உள்ளது. அதுவே விஞ்ஞானமும்கூட. நாம், கல்லின் பின்னாலுள்ள சக்தியை வழிபடாமல், குருட்டுத்தனமாக, கல்லை மட்டும் வழிபட்டால் அதில் அர்த்தமே இல்லை.
நான் உங்களை ஒன்று கேட்கின்றேன், நாம் கடவுளிடம் பிரார்த்தனை செய்துகொண்ட பின்பு, நமக்குள்ளிருந்த ஒரு பெரிய பாரம் நீங்கியதாக உணர்கிறோம், அது ஏன் ?
நாம் பிரார்த்தனை செய்யும்பொழுது, நம் முன்னால் இருக்கும் விக்ரஹங்களுக்கும் மேலானதாக ஒன்று இருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பிறகு பிரார்த்தனைகளுக்குப் கோயிலிலிருந்து வெளியே வரும்பொழுது, ஒரு மனத்திருப்தியை உணர்கிறோமே, அது ஏன்?
நம் மனது மிகவும் லேசாகிவிட்டது போல உணர்கிறோம் அது ஏன் ?
நாம் விக்ரஹத்துக்கு அப்பாலுள்ள சக்தியை உணர்ந்து, அந்தச் சக்தியை வழிபடும்பொழுது, நாம் அந்தச் சக்தியோடு தொடர்புகொள்கிறோம்.
'நாம் அந்தச் சக்தியோடு தொடர்புகொள்கிறோம்' என்று நான் சொல்லும்பொழுது, நமக்குள் இருக்கும் ஆத்மாவுக்கு, அந்த மேலான பரமாத்மாவுடன் தொடர்புகொள்வதற்கான ஒரு பாதையை உருவாக்கிக் கொடுக்கிறோம் என்பதையே தெளிவுபடுத்துகிறேன். இந்தக் குறுகிய நேரத் தொடர்பு, நமக்கிருக்கும் பொறுப்புகளின் சுமைகளிலிருந்து
நம்மை விடுவிக்கிறது. நாம் அந்த விக்ரஹத்தினுள் பிரபஞ்ச சக்தியைக் கண்டு, பிரார்த்தனை என்னும் உருவில், நம் பிரச்சினைகளைக் கொட்டிவிடுகிறோம்.
நாம் பரமாத்மாவிடம் முழு நம்பிக்கை வைத்திருப்பதால், நமக்குள் ஒரு ஆழமான நிம்மதியை உணர்கிறோம். அந்தப் பரமாத்மா நம்மைக் கவனித்துக்கொள்ளும் என்று முழுநம்பிக்கை கொள்கிறோம்.
நாம் அந்தப் பரமாத்மாவை நம்புகிறோம், ஆனால் நமக்குள் இருக்கும் ஆத்மாவும், அந்தப் பரமாத்மாதான் என்பதை நாம் நம்புவதில்லை. நம்மால் அந்த ஸத்யத்தை கிரகித்துக்கொள்ள முடிவதில்லை.
கிருஷ்ணர், 'நமக்குள்ளே இருக்கும் ஆத்மாவும், மற்றவர்களுக்குள் இருக்கும் ஆத்மாவும் பரமாத்மாதான் என்று சொல்கிறார். ஆனால் நாம் என்ன செய்கிறோம் ? நாம் நம்முடைய ஆத்மாவை தனிப்படுத்தி விடுகிறோம்.
நாம் நம்முடைய ஆத்மாவுக்கு ஒரு எல்லை வகுத்து, பரமாத்மாவிடமிருந்து பிரித்துவிடுகிறோம். இது இப்படித்தான் இருக்கிறது: தண்ணீர் நிரப்பப்பட்ட பத்துப் பானைகள் இருக்கின்றன. அந்தப் பத்துப் பானைகளிலும் சூரியன் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பானையுமே, அந்தச் சூரியனைத் தானே பிடித்து வைத்திருப்பதாக நினைத்துக்கொள்கிறது. அந்தப் பத்துப் பானைகளுமே, தாங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு சூரியனைப் பிடித்து வைத்திருப்பதாக நினைத்துக்கொள்கின்றன.
நாம் அந்தப் பரமாத்மாவை நம்புகிறோம், ஆனால் நமக்குள் இருக்கும் ஆத்மாவும், அந்தப் பரமாத்மாதான் என்பதை நாம் நம்புவதில்லை.
அதைப் போலவே நாமும், நமக்குள் இருக்கும் ஆத்மாக்களிலிருந்து நினைத்துக்கொள்கிறோம். அதே ஆத்மாவை, எல்லாவற்றிலும் அந்த எல்லாப் பானைகளையும் உடைத்து விடும்பொழுது, பரமாத்மா என்பது என்ன என்பதைப் பார்க்கிறோம்.
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் அழகாகச் சொல்கிறார், "பிண்டாண்டத்தில் என்ன இருக்கிறதோ, அதுவேதான் பிரம்மாண்டத்திலும் இருக்கிறது''.
பிண்டாண்டத்தில் அல்லது ஸ்தூலபொருளில் இருக்கும் அதே சக்தி, பிரம்மாண்டம் அல்லது நாம் புரிந்துகொள்ள முடியாத ஸூஷ்மமான பொருளிலும் இருக்கிறது. நாம், நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலுமே இந்தச் சக்தியை பார்க்கும்பொழுதே, நாம் உண்மையிலேயே 'பார்க்கிறோம்' என்கிறார், கிருஷ்ணர்!
இறுதி இலக்கை அடையும் பாதையில் இருக்கும் ஒரே தடை. மனம்தான்!
''நமக்குள்ளும், ஒவ்வொன்றிலும் உறையும் ஆத்மாவானது அழிக்கப்பட முடியாதது என்பதை நாம் பார்க்கும்பொழுதே, நாம் ஸத்யத்தைப் பார்க்கிறோம்,'' என்கிறார், கிருஷ்ணர்.
எப்பொழுதுமே இருப்பது ஒன்றே ஒன்றுதான், அது ஆத்மா! நாம் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். மற்ற ஒவ்வொன்றும் ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும்.
இந்த ஆத்மா ஒன்றே அழிவில்லாதது என்ற இந்த ஸத்யத்தை நாம் அறியும்பொழுது, மேலும் மேலும் பொருள் சேகரிக்க ஓடும் நம்முடைய எல்லா ஓட்டமும்கூட வீணே என்பதைப் புரிந்துகொள்வோம். எப்படியாயினும் நம்மோடு என்றென்றும் இருக்க முடியாத பொருள்களின் பின்னால் ஓடிக் கொண்டிருப்பதில் பயனில்லை என்பதைப் புரிந்துகொள்வோம்.
இதை உணரும்பொழுது, நாம் ஸத்யத்தைப் பார்க்கிறோம்.
மனத்தடை நீங்கினால் வாழ்வின் எல்லாத் தடைகளும் தகர்ந்துவிடும்
இறுதி இலக்கை அடையும் பாதையில் இருக்கும் ஒரே தடை, மனம்தான்!
இதற்கு முந்தைய ஸ்லோகத்தில், கிருஷ்ணர், நாம் ஸத்யத்தை எப்படிப் பார்க்க முடியும் என்பதைச் சொன்னார். இங்குக் கிருஷ்ணர், நாம் தாண்ட வேண்டிய தடையைப் பற்றிப் பேசுகிறார். நம் மனம், நம்மைக் குறைத்து மதிப்பிட்டுக் காட்டாதபொழுது, நாம் மனத்தால் ஆளப்படாதபொழுது, பரமாத்மாவை ஒவ்வொன்றிலும் காணலாம். நம்மால் அப்படிச் செய்ய முடியும்பொழுதுதான், நாம் அந்த இறுதி இலக்கை அடைய முடியும்.
ஸத்யத்தைப்பார்க்கவொட்டாமல் நம்மைத் தடுப்பது, நம்முடைய மனமே.
நம் ஒவ்வொருவருக்குள் இருக்கும் ஆத்மாவும், அதே பரமாத்மாவின் பிரதிபலிப்புதான் என்று நான் சொன்னாலும்கூட, உங்கள் மனம் ஒப்புக்கொள்ளாது. 'அதை நம்ப வேண்டாம்' என்றுதான் உங்களுக்கு அறிவுறுத்தும்.
முடிவுகளை எடுக்கும் பாதையில் மனம் குறுக்கே வரும்வரை, நாம் சரியான காட்சியைப் பார்க்க மாட்டோம்.
நீங்கள் முதலில், 'மனம்' என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் வெறுமனே அமர்ந்திருக்கும் நேரத்தில், ''என்ன விஷயம் ?'' என்று நாம் கேட்டால், அவர்கள் சொல்வதெல்லாம் மனம் சம்மந்தப்பட்டதாகத்தான் இருக்கும். சிலர், ''எனக்கு மனசு சரியில்லை,'' என்று சொல்வார்கள் சிலர், ''ஒ, உள்ளே என்னென்னவோ ஓடிக் கொண்டிருக்கிறது, அதை நினைத்தாலே மிகவும் பாரமாக இருக்கிறது, '' என்று சொல்வார்கள்.
நாம் மனத்தைப் பற்றிப் பேசும்பொழுது, ''இது நிறைய நினைக்கிறது,'' என்று, அதை நம்மிலிருந்து ஒரு தனித்த பொருளாகத்தான் பேசுவோம்.
மனம், கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட, சீரான அமைப்புகொண்ட ஒரு கருவி.
நாம், மனம் என்றால் என்ன என்று புரிந்துகொள்வதில்லை, ஆனாலும் அதைப் பற்றிப் பேச ஆரம்பிப்போம்.
உண்மையில் 'மனம்' என்றால் என்ன ? அது, கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட, சீரான அமைப்புகொண்ட ஒரு கருவி.
மனம், மனிதனுடைய தேவைகளையும் அவனுடைய அடிப்படைகளையும் பூர்த்திசெய்வதற்கு உதவிசெய்கிறது. இதன் மூலம் அவன்,
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
ஒரு மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வதற்கு உதவிசெய்கிறது.
இப்பொழுது இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம், மனிதனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டிய மனம், அவனையே கட்டுப்படுத்தும் ஆகிவிட்டது.
ஒரு வேலையாள், முதலாளியைப்போல் நடந்துகொண்டால் என்ன ஆகும் ?
யோக சூத்திரங்களில் அடங்கியுள்ள ஞானக் கருத்துகள், இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல, எதிர்கால தலைமுறைக்கும் பொருத்தமுள்ளவையாக இருக்கின்றன.
ஒரு பக்குவப்படாத வேலையாள், முதலாளியாக ஆகும்பொழுது, அது ஒரு
குரங்கைப் பிடித்து சிம்மாசனத்தில் அமரவைத்தது போலத்தான் இருக்கும். அதனால்தான் ஞான குருமார்கள், மனத்தை 'குரங்கு மனம்' என்று ஒரு குரங்குக்கு ஒப்பிடுகிறார்கள். அந்தக் குரங்கை, சிம்மாசனத்திலிருந்து துரத்தும்வரை, பிரச்சினைகளும் கவலைகளும் நிச்சயம் இருக்கும்.
ஸத்யத்தை உணரத் தடைசெய்யும் 'அவித்யாவின் நான்கு கிளைகள்
இங்குக் கிருஷ்ணர், நம் மனத்தால், எப்படி நம் புலனுணர்வைத் தூண்டிவிடவோ அல்லது இழிவுபடுத்தவோ முடியும் என்பதை விளக்குகிறார்.
யோக புலனுணர்தலைப் பற்றியும் எழுதுகிறார். யோக சூத்திரங்கள், மிகத் தெளிவோடு எழுதப்பட்ட ஒரு அற்புத புத்தகமாகும். இந்தப் புத்தகத்திலுள்ள இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறைக்கும் பொருத்தமுள்ளவையாக இருக்கின்றன.
பதஞ்ஜலி, நம் மனம், தவறான அறிதலாலும், தவறான புரிதலாலும் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறது என்பதைப் பற்றிப் பேசுகிறார்.
நம் மனமானது, தான் தீர்மானிப்பதற்கும் முடிவெடுப்பதற்கும் பயன்படுத்தும் அவித்ய - தவறான புரிதலைப் பற்றி, பதஞ்ஜலி விளக்குகிறார். நம் மனம், இந்த அவித்ய - தவறான புரிதலை அடிப்படையாக வைத்தே, முடிவுகளையும் சொல்கிறார்.
நாம் பார்க்கும் ஒன்றைப் பற்றிய அல்லது உணரும் ஒன்றைப் பற்றிய புரிதல் என்பது, இந்தத் தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
அஹங்காரத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் தீர்மானம், ஒருதலைபட்சமானதாகவே இருக்கும்!
அவித்ய, நான்கு கிளைகளைக் கொண்டிருக்கிறது. முதல் கிளை, அஸ்மித - 'நான் எப்பொழுதுமே மற்றவர்களைவிட உயர்ந்தவன்' என்கிற அஹங்காரம்.
நம் மனம், அஹங்காரத்தை அடிப்படையாக வைத்து தீர்மானங்களை எடுத்தாலோ அது நினைத்தாலோ, நம்முடைய எல்லாத் தீர்மானங்களும் ஒருதலைப்பட்சமானவையாகவே இருக்கும்; நாம் முழுமையான காட்சியைக் காணமாட்டோம்.
அடுத்த கிளை, ராக - பற்றுதல். இந்தக் கிளை வளர், நமது கடந்தகால அனுபவங்களும் தேவைப்படுகின்றன. நமது கடந்தகால அனுபவம் சிறப்பானதாக இருந்தால், அதே அனுபவத்தை, நம் மனம் மீண்டும் மீண்டும் விரும்பும். அது நமக்குத் தேவையில்லாத ஒரு விஷயமாக இருந்தாலும்கூட, நம் மனம் மேலும் அதையே கேட்கும்!
உதாரணத்திற்கு, வயிற்றில் இனி இடமே இல்லை என்னுமளவுக்கு, அப்பொழுதுதான் உணவுண்டு முடித்திருப்போம். எனினும், பத்து நாட்களுக்கு முன் ருசித்த, ஏதோ புதுவகையான இனிப்பின் ஞாபகம் வந்துவிட்டால், உடனே நம் மனம், "அதை முன்பு மிகவும் ருசித்து மகிழ்ந்தேன், எனக்கு இப்பொழுது அது வேண்டும். அதை எனக்குக் கொடு, '' என்று கேட்கும். இதுவே மனத்தின் விளையாட்டு.
கடந்தகால அனுபவத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து, மனம் இப்பொழுதும், அதையே மேலும் மேலும் அடைய விரும்புகிறது.
மூன்றாவது கிளை, தீவுஷம் - வெறுப்பு
இது ஓரக என்பதின் எதிர்ச்சொல். கடந்தகால அனுபவத்தை அடிப்படையாக வைத்து, இப்பொழுதும் அதே அனுபவத்தை வெறுப்பது.
நாம் கடந்தகாலத்தில், ஏதோ ஒரு அனுபவத்தை விரும்பவில்லை என்று வைத்துக்கொள்வோம். அதையே மறுபடியும் இப்பொழுது பார்க்கும்பொழுது, உடனே நம் மனம், 'கடந்த முறை இது எனக்குத் திருப்தியளிக்கவில்லை. இதனுடனான அனுபவம் இனிமையானதாக இல்லை. அதனால் இதை எடுக்காமல் விட்டுவிடுவதே நல்லது' என்று முடிவுசெய்கிறது.
இதனுடனான நமது முந்தைய அனுபவம் கசப்பானதாக இருந்தது என்ற காரணத்திற்காகவே, நாம் இம்முறை அதைத் தவிர்க்க முடிவுசெய்கிறோம். இதையே நாம் மீண்டும் மீண்டும் செய்கிறோம். ஒருமுறை கசப்பான அனுபவத்தைத் தந்துவிட்ட ஒரு விஷயத்தை, அதன்பின் முற்றிலுமாகத் தவிர்த்து விடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளோம்.
நான்காவது கிளை, அழிநிலேசம் - பயம்
இது, நமக்குள் சந்தேகங்களைக் கிளப்பிவிடும். நாம் செய்பவற்றை மற்றவர்கள் ஒப்புக் கொள்வார்களோ மாட்டார்களோ என்று, எதற்கெடுத்தாலும் சந்தேகப்பட்டுக்கொண்டே இருப்போம்.
பலரும், இளமையாகத் தோன்ற விரும்புவார்கள். அவர்களுக்கு வயது ஐம்பதாகியிருக்கும், ஆனாலும் தங்களுக்கு முப்பது வயதுதான் சொல்லிக்கொள்வார்கள். என்று மற்றவர்களைவிட அவர்கள் இளமையாகக் காட்சியளிக்க வேண்டுமென்று விரும்புவார்கள். இவ்விருப்பம், 'நாம் வயதானவர்களாகத் நம்மை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களோ மாட்டார்களோ' அடிப்படையாகக் கொண்டது.
ஒருமுறை கசுப்பான அனுபவத்தைத் தந்துவிட்ட ஒரு விஷயத்தை. அதன்பின் முற்றிலுமாகத் தவிர்த்து விடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளோம்.
நமது மனம், தவறான புரிதல் மற்றும் தவறான தூண்டுதல்களின் அடிப்படையில் வேலைசெய்யும்பொழுது, நமது முடிவுகள், கருத்துகள் அனைத்துமேகூட தரம் தாழ்ந்துவிடுகின்றன.
முதல் நிலை தியானப் பயிற்சி வகுப்புகளில், நம் மனம் எப்படி வேலைசெய்கிறது என்பதைப் பற்றி விளக்கமாகச் சொல்கிறோம்.
நாம் எதையாவதை பார்க்கிறோம், உடனே அதற்கென்று ஒரு எதிர்ச்செயல் செய்கிறோம். அந்த எதிர்ச்செயல்கள், பொதுவாக, ஸ்ம்ஸ்காரம் எனப்படும் பழைய அனுபவங்களின் அடிப்படையில் புரியப்படுபவையாகவே இருக்கும். நமது பழைய அனுபவங்கள்
இனிமையானதாக இருந்ததென்றால், நமது மனம், 'நல்லது, நான் அதைத் தொடரலாம்' என முடிவுசெய்கிறது இல்லையென்றால், அது அதை ஒதுக்கிவிடுகிறது.
கிருஷ்ணர் சொல்கிறார்: 'உண்மை எது' என்று ஆராய்ந்து பார்க்கும் வழியில் நம் மனமானது குறுக்கிட்டால், நமது முடிவுகள் புரிதலை அடிப்படையாக எடுக்கப்படும். நாம், நம், நம் மனத்தின் தாக்கத்திற்குள்ளாகும்பொழுது, சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும் உள்ள பரமாத்மாவைப் பார்க்கத் தவறிவிடுகிறோம்.
நாம் சிறிது நேரம் மனத்தை ஒதுக்கி வைத்தால், ஸத்யத்தை, உள்ளது உள்ளபடியே பார்க்க முடியும்.
பரமாத்மா, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்ற உண்மை, நம் உள்ளே உறைந்திருக்கும் ஆதமாவுக்குத் தெரியும். ஆனால் நம் மனதோ, அதைச் சுற்றிலும் ஒரு உறுதியான உறையை உருவாக்கிவிடுகிறது. நமது மனம், நம்மைத் தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்கிறது. அது கடந்தகால நினைவுகளில் நிலைகொண்டு, மேலும் மேலும் தவறான முடிவுகளுக்கு அழைத்துச் செல்லும் விதமாக, மாயத் தோற்றங்களையே உருவாக்குகிறது.
நாம் குழந்தைகளாக இருந்தபொழுது, நமது மனத்திற்கு இவ்வளவு சக்தி இருக்கவில்லை; நாம் புதிய ஸம்ஸ்காரங்களை உருவாக்கவில்லை. ஆனால், வளர வளர, சமூகக் கட்டுறு மனப்பாங்குதான், மனத்திற்குச் சக்தி கொடுக்க வைக்கிறது.
உண்மையில், 'ஒரு குழந்தை வளர்ந்து கொண்டிருக்கிறது' என்று மக்கள் சொல்லும்பொழுது, அது, குழந்தை, 'மெது மெதுவாகச் சுருங்குவதில்' வளர்ச்சி அடைவதையும், மனம், 'மேலோங்கி வளர்வதில்' வளர்ச்சி அடைவதையுமே குறிக்கிறது. அதாவது, குழந்தை, சுருங்கிக்கொண்டே போகிறது; மனம், வளர்ச்சி அடைந்துகொண்டே போகிறது! ஆதீமா ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டு, மனத்திற்கு மேலும் மேலும் சக்தி கொடுக்கப்படுகிறது.
ஸ்த்யத்தைப் பார்க்கவொட்டாமல் நமது மனம் நம்மைத் தடுக்கிறது. நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும் உறைந்துள்ள பரமாத்மாவைப் பார்க்கவொட்டாமல், அது தடுக்கிறது. தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் மனத்தின் பிடியிலிருந்து வெளியே வந்தால் மட்டுமே, நாம் ஸ்த்யத்தைப் பார்க்க முடியும்.
உடலின் நோக்கம் புரிந்தால், உடலை வருத்தமாட்டோம்
உலகியல் ரீதியான விஷயங்களுக்கு எதிர்ச்செயல் புரிவது நம் உடலேயன்றி, பரமாத்மா அல்ல என்ற லகுயத்தைப் பார்க்க முடிந்தால் போதும், நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்.
ஆத்மா உடலானது நமது உலக ஆசைகளைப் பூர்த்திசெய்வதற்கான என்பதையும் நாம் அறிந்திருக்கும்வரை, நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். நாம் மிகச்சரியான பாதையில் இருக்கிறோம்.
ஆனால் இதற்கு மாறாக மாறாக நாம், ஆத்மாவுக்கான இடத்தை
மனத்தின் பிடியிலிருந்து வெளியே வந்தால் மட்டுமே, நாம் ஸ்த்யத்தைப் பார்க்க முடியும்.
கொடுக்கும்பொழுதுதான், ஆரம்பிமாகிவிடுகிறது.
நாம், இந்த உடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம், ஆனால் உண்மையில், நாம் அதை மதிப்பதே இல்லை; அதைச் சரியான முறையில் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அதை நம் சுகங்களுக்காகவே பயன்படுத்திக் கொள்கிறோம்.
நாம் நம் உடலை இழிவுபடுத்துகிறோம். நமது கண்கள் ஒய்வுக்கு கெஞ்சும்வரை, இரவில் பார்க்கிறோம். அது கெஞ்சுவதை, நாம் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. ஏனெனில், அந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பதுதான் நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
நாம், இந்த உடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம், ஆனால் உண்மையில், நாம் அதை மதிப்பதே இல்லை
நம்முன் சிற்றுண்டி வகைகளைப் பரப்பிக்கொள்வோம். நம் வயிறு நிறைந்திருநதாலும், இனி இடமில்லை என்று அது அலறினாலும், நாம் சாப்பிட்டுக்கொண்டே இருப்போம், ஏன் ? நாம் அந்த ருசியை அனுபவிக்க விரும்புகிறோம். அதனால், உடல் அதை வேண்டாமென்று அறிவுறுத்தினாலும்கூட, இருக்கிறோம்.
இன்று பலரும், அழகு நிலையங்களுக்கும், 'ஸ்பாஸ்' என்னும் நீராவிக் குளியல் நிலையங்களுக்கும் சென்று, பூச்சின் மேல் பூச்சாக முகத்தில் போட்டு, தங்களைப் பலவிதங்களில் ஒப்பனைசெய்து கொள்கிறார்கள். செயற்கை நகங்களைப் பொருத்திக்கொள்கிறார்கள். இது அத்தனையும், தங்களின் தோற்றம், மற்றவர்களின் கண்களுக்கு அழகாகத் தெரியவேண்டும் என்பதற்காகத்தான்!
ஒரு சின்ன கதை:
ஒரு புதுமணத் தம்பதிகள் திருமணத்திற்குப் பின் முதல் தடவையாக, கணவருடைய கிராமத்துக்குச் செல்கிறார்கள். மனைவி, நகரத்தில் பிறந்து வளர்ந்தவர். அதற்கு முன் அவர், எந்தக் கிராமத்திற்கும் சென்றதே இல்லை. அவர்கள் மறுநாள் காலை, அந்தக் கிராமத்துக்
கோயிலுக்குச் சென்றுவர திட்டமிட்டார்கள்.
பொதுவாக பாரதத்தில், மக்கள், தங்கள் தினசரி வேலைகளைத் தொடங்குவதற்கு முன் கோயிலுக்குச் செல்வது வழக்கம். அதனால், காலை ஏழு மணிக்கே கோயிலில் இருக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார்கள். மறுநாள் காலை ஐந்து மணியிலிருந்தே, மனைவி, தம் ஒப்பனையை ஆரம்பித்துவிட்டார்.
எப்படியோ, அவர் ஒப்பனையை முடித்த பின்பு கோயிலுக்குச் சென்றனர். இந்து கிராமத்துக் கோயில்களில் குரங்கு, மயில், முயல் போன்ற பல விலங்குகளையும் பறவைகளையும் காணலாம். முதல் தடவையாக மனைவி அப்படிப்பட்ட ஒரு கோயிலைப் பார்ப்பதால், அவருக்கு அந்த விலங்குகளைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. உடனே அவர், தம் கணவரிடம் குரங்குகளைப் பற்றி விமரிசனம் செய்தார்.
கணவர், ஒரு புன்முறுவலுடன் சொன்னார், ''ஆம், ஒரு பெரிய குரங்கை என்னருகிலேயே பார்க்கிறேன்!''
பெண்கள், ஒப்பனைசெய்வதில் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அழகு நிலையங்களுக்கும், நீராவிக் குளியல்களுக்கும் சென்று தங்கள் உடலைக் கவனமாகப் பார்த்துக்கொள்வதாக நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில், தங்கள் தோலின் மேல் நிறைய வேதிப் பொருட்களைப் பூசி, அவர்கள் தங்கள் உடலைத்தான் கெடுத்துக்கொள்கிறார்கள்.
நாம் ஏன் இப்படிப்பட்ட தாகரிக மோகத்தில் நம் நம் உடலை அவதூறு செய்கிறோம் ? வாயிலாக, அனுபவிக்கிறோம். மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. அதனால் தொடர்ந்து, அந்தப் புலனின்பங்களைப் பிடித்துக்கொண்டு, அதன் பின்னாலேயே ஓடிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் நேரம்தான் என்பதைப் புரிந்துகொள்ளத்
உடலைச் சரியான முறையில் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அதை நம் சுகங்களுக்காகவே பயன்படுத்திக் கொள்கிறோம்.
தவறிவிடுகிறோம். நாம் புலன்கள் மூலம் இன்பத்தை அனுபவிப்பதாக உணர்ந்தால், அதே புலன்கள் மறுநாளே நம்மைத் துக்கத்தில் ஆழ்த்திவிடும். அது, சுழலும் கதவுகள்போல இருக்கிறது.
நாம், சுழற்கதவின் ஒரு முனையை வேகமாகத் தள்ளினால், அதன் மறுமுனை சுற்றிவந்து, நம்மை அறைக்கு வெளியில் தள்ளிவிட்டுச் செல்லும்! அங்கிருந்து நகராமல், அந்தக் கதவின் அருகேயே நின்று கொண்டிருந்தால், அந்தக் கதவு மீண்டும் சுழன்று வந்து, நம்மை மீண்டும் அறைக்கு உள்ளே தள்ளிவிட்டு விடும்.
வெளியுலக உடலை புலனின்பங்களையே விரும்புகிறோம். நாம், நம் உடலை அதற்குத்தான் பாதுகாக்கிறோம்.
நாம் மகிழ்ச்சியாய் இருப்பதற்கு, நம் உடல் பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, அதைப் பாதுகாக்க விரும்புகிறோம். நாம், நம் உடல் எல்லா நேரத்திலும் அழகாகத் தோற்றமளிக்க வேண்டுமென விரும்புகிறோம்.
நாம் ஒரு உடலை அல்ல, பல உடல்களை எடுத்திருக்கிறோம்
நாம் இப்புவிக்கு, இந்த மனித உடலெடுத்து ஏன் வந்திருக்கிறோம் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அப்படியென்றால்
இந்த உடலும் ஒன்று என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். மட்டுமே, நாம் இந்த உடலைச் சரியான வழியில் வழியை அறிவோம்.
முதலில், நம் உடலைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள முக்கியமான விஷயம், நம் ஆத்மா இதுவரை எடுத்திருக்கும் பல உடல்களில் இதுவும் ஒன்று என்பதே. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், விரும்பினாலும் இதுவே உண்மை.
நாம் இந்த வாழ்க்கைக்கு முன்னரே, பல பிறவிகளை எடுத்திருக்கிறோம். இந்தப் பிறப்புக்கு முன்னாலேயே பல உடல்களைக் கொண்டிருந்தோம். நாம் அடுத்த பிறவி எடுப்போமா என்பது இந்த வாழ்க்கையை நாம் எப்படி வாழ்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது.
நாம் எடுத்திருக்கும் இந்தப் பிறவியானது, கடந்த பல பிறவுகளில் பூர்த்தியாகாத ஆசைகளையெல்லாம் பூர்த்திசெய்து கொள்வதற்காகவே எடுக்கப்பட்டதாகும். பூர்த்தியாகாத ஆசைகளைத்தான் ப்ரார்த்க காமம் என்று சொல்கிறோம்.
நம் ஆத்மாவானது, இந்த ப்ரார்க் காமாவை நிறைவேற்றுவதற்காகவே, இந்த உடலை இப்பொழுது எடுத்திருக்கிறது. நாம் இறக்கும்பொழுது, எண்ணும் நமது கடைசி எண்ணம்தான் நமது அடுத்த பிறவியை முடிவுசெய்கிறது. நமது ஆத்மா, சென்ற பிறவியின் ஆசைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்காகவே இந்த உடலைத் தேர்ந்தெடுத்தது, இதுதான் உண்மை.
புரிந்துகொள்ளுங்கள், நாம், நம் கடந்த பிறவியிலிருந்து எடுத்து வந்த ஆசைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்காகவே, ஒரு புது உடலை எடுக்கிறோம். எனினும் என்ன நடக்கிறது என்றால், நாம் இந்தப் பிறவியிலும் இன்னும் பல புதுப்புது ஆசைகளைச் சேர்த்துக் கொள்கிறோம்.
நமது ஆத்மா, சென்ற பிறவிகளின் ஆசைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்காகவே இந்த உடலைத் தேர்ந்தெடுத்தது, இதுதான் உண்மை.
நாம், நம் உடலை புலனின்பங்களுக்காகவே பயன்படுத்தி, மேலும் மேலும் பல புதுப்புது ஆசைகளை உருவாக்கிக்கொள்கிறோம். இதனால்தான், நாம் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியில் விழுகிறோம்.
நம்முடைய சென்ற பிறவியில் நிறைவேறாத ஒரு நோக்கத்தை முடித்துக்கொள்ளவே, நம் ஆத்மா இந்த உடலை எடுக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட மாத்திரத்திலேயே, நம் உடலைப் பற்றிய மனோபாவம் முற்றிலுமாக மாறிவிடும்; அதனை நாம் அணுகும் முறையே மாறிவிடும் !
நமது உடல், ஒரு உடையைப் போன்றது. நாம் ஒவ்வொரு நாளும் பழைய உடைகளைக் களைந்துவிட்டு, புது உடைகளை அணிந்துகொள்கிறோம் இல்லையா ? அதைப் போலவே, நாம் இறக்கும்பொழுது, இந்த உடலை விட்டுவிட்டு, நம் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்ற வேறு ஒரு புது உடலை எடுத்துக்கொள்கிறோம், அவ்வளவுதான்.
விருப்பமே இல்லையென்றாலும் அவர் இங்கே இருப்பது நமக்காகவே!
மக்கள் என்னைக் கேட்கிறார்கள், ''ஸ்வாமி, ஒரு ஜ்ஞானகுரு எதற்கு மனிதப் பிறவி எடுக்க வேண்டும் ? அவர் எல்லா ஆசைகளையும் பூர்த்திசெய்திருந்தால், அவர் ஏற்கெனவே ஜ்ஞானம் அடைந்திருந்தால், இப்போது உடல் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?''
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் வாழ்க்கையிலிருந்து விருந்து அழகான நிகழ்ச்சி. ஒருநாள் அவர், தம்முடைய சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபொழுது, தம் வாழ்வில் நடந்த ஒரு ஒரு நிகழ்வை, தம் சீடர்களுடன் பகிர்ந்துகொண்டார்: கிராமத்திலிருந்து கல்கத்தாவிற்கு வந்து கொண்டிருந்தபொழுது, சில வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் என்னை நிறுத்தினார்கள். நான் உடனே எல்லாக் கடவுளர்களின் பெயர்களையும் சொல்ல ஆரம்பித்துவிட்டேன். அப்படியானால்தான் அதில் ஒன்றாவது வேலைசெய்யும் என்று நினைத்தேன்!' .
ஒரு ஜ்ஞான குரு, மற்றவர்களின் நன்மைக்காகவே, அஹங்காரத்தின் ஒரு மெல்லிய இழையை மட்டும் வைத்துக்கொண்டு, இந்த உடலைக் கொண்டிருக்கிறார்.
மேலும் அவர், அவர், ஜ்ஞான குருமார்கள் ஏன் உடலைத் தாங்கி, பிறப்பெடுக்கிறார்கள் என்பதை அழகாக விளக்கினார்.
அவர் மிக அழகாக, "என் மனத்தின் ஒரு சிறுபகுதி, இந்த என் உடலோடு ஒட்டியிருக்கிறது. அதனால்தான், இது கடவுளின் அன்பையும், பக்தர்களுடன் இணைந்திருக்கும் அனுபவிக்க முடிகிறது,'' என்று சொன்னார்.
எவ்வளவு அழகாக அதைச் சொல்லுகிறார் என்பதைப் பாருங்கள்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், ஒரு ஜ்ஞான குரு, மற்றவர்கள் மீது கொண்டிருக்கும் தூய கருணையினால்தான் இந்த உடலைக் கொண்டிருக்கிறார். உணர்வுமாற்றம் நிகழ வேண்டும் என்று விரும்புகிறார். மேலும் அவர், இந்த உடல் உருவில் இருந்தால்தான், அதை மிகவும் பயனுள்ள வழியில் செய்ய முடியும் என்று நம்புகிறார். அவருக்கு மற்ற எந்த விருப்பமும் இல்லை.
இந்த உடலை, அவர் எப்பொழுது விரும்பினாலும் நீத்து விடமுடியும். அவர், அஹங்காரத்தின் ஒரு மெல்லிய இழையை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றவர்களின் நன்மைக்காகவே இந்த உடலைக் கொண்டிருக்கிறார்.
நாம் எப்பொழுதுமே இந்த உடலின் மூலமாக, ஏதாவது ஒன்றை மேலும் மேலும் பெற்று அனுபவிக்கவே விரும்புகிறோம். நாம் அதிக நேரம் தொலைக்காட்சியைப் பார்க்க, நம் கண்கள் ஒத்துழைக்க வேண்டுமென்று விரும்புகிறோம். நம் வயிறு, அதிக கொள்ளளவு கொண்டதாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். காதுகள், இரைச்சலான இசையைக் கேட்கத் தக்கதாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். நாம் இவற்றையெல்லாம் பேராசையின் காரணமாகச் செய்கிறோம். நாம் மேலும் மேலும் புலனின்பங்களைத்தான் அனுபவிக்க விரும்புகிறோம்.
அதற்கு பதிலாக, நாம் இந்த உடலை நன்றி உணர்வோடு பார்க்க ஆரம்பிக்கும்பொழுது, இந்த உடல் நமக்கு நல்கும் ஆதரவுக்காக, அதற்கு ஒவ்வொரு கணமும், நாம் நன்றி சொல்லும்பொழுது, நம் உடலுடன், ஒரு ஆழ்ந்த தொடர்புகொள்வோம்.
நமது ஆத்மாவின் கோயில்தான் இந்த உடல். நாம் நமது உடலை மதிக்க வேண்டும். நாம் நமது உடலை மிகுந்த நன்றியோடு கவனித்துக்கொள்ள வேண்டும்; வெறும் பேராசையால் அல்ல. நமது உயிரையும் ஆதமாவையும் வைத்திருப்பதற்காக, இந்த உடலினிடம் நாம் மிகுந்த நன்றியுணர்வு கொள்ள வேண்டும். பிறகு, நாம் நம்முடைய உடலை, ஒரு வித்தியாசமான பரிமாணத்தில் பார்க்கத் தொடங்குவோம்.
நம்முடைய வகுப்புகளின் முடிவில், ஒரு அழகான தியானத்தைச் 'உடலுக்கு நன்றி சொல்லும் தியானம்' என்றழைக்கப்படுகிறது.
இந்தத் தியானத்தில் நீங்கள் தரையில் படுத்து, கால்கட்டை விரல்களிலிருந்து தலைவரையிலும், ஒவ்வொரு உறுப்பாகத் தளர்வாக்கிக் கொள்வீர்கள். அதே சமயம், நீங்கள் ஒவ்வொரு உறுப்புக்கும் நன்றி சொல்வீர்கள். அனைத்துவகையிலும் ஒத்துழைப்புத் தந்து உதவி செய்வதற்காக, இந்த முழுஉடலுக்கும் உங்களின் மனமார்ந்த நன்றியைச் செலுத்துவீர்கள்.
நமது ஆத்மா, தூய பிரபஞ்ச விழிப்புணர்வு. அதற்கு, ஆனந்தமாக இருப்பதற்கு வெளியிலிருந்து எதுவுமே தேவையில்லை!
இது, மிக அழகான ஒரு தியானமாகும். இந்தத் தியானத்தின் முடிவில், உங்களுக்குள் ஸ்தீயம் 'பளிச்'சென உறைக்கும். நீங்கள் உண்மையில், உங்கள் உடல் என்றால் என்ன என்பதை உணர்வீர்கள்.
ஆத்மாவிற்கு எந்த ஒரு தேவையும் இல்லை
இங்கு கிருஷ்ணர் சொல்கிறார், 'நாம் மகிழ்ச்சியோடு அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்று எதை நினைத்தாலும், உண்மையில் அதை, நம் உடல்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது; நம் ஆத்மா அல்ல!'
நமது உடல், எல்லா வகையான பொருள் சுகத்தையும் அனுபவிக்கிறது. நமது ஆத்மா, அவையெல்லாம் இல்லாமலேயே ஆனந்தமாக இருக்க முடியும்.
நமது ஆத்மா, தூய பிரபஞ்ச விழிப்புணர்வு. அதற்கு ஆனந்தமாக இருப்பதற்கு வெளியிலிருந்து எதுவுமே தேவையில்லை.
உண்மையில் நமது ஆத்மாவானது எப்பொழுதுமே ஒரு ஆனந்த நிலையில், ஒரு போரனந்தத்தில்தான் இருந்து கொண்டிருக்கிறது. நமக்குத் தேவை என்று எந்தெந்தப் பொருட்களையெல்லாம் நினைக்கிறோமா,
என்று எந்தெந்தப் பொருட்களையெல்லாம் நினைக்கிறோமா, அவற்றையெல்லாம் நமது உடல்தான் அவசியம் என்று நினைக்கிறது, அனுபவிக்கிறது. நமது ஆத்மாவுக்கு, அவை எதுவுமே அவசியமில்லை.
'நமது ஆத்மா, இந்தப் பொருட்செல்வங்களை விரும்புகிறது' என்று நாம் நினைக்கும்பொழுதுதான், பிரச்சினை ஆரம்பமாகிறது.
நாம், நம்முடைய ஆத்மாவை, வெளியுலகப் பொருட்களிலிருந்து பெறுகிற மகிழ்ச்சியுடன் சம்பந்தப்படுத்துகிறோம். இங்குதான், பிரச்சினை ஆரம்பமாகிறது.
பொருள் சுகங்களிலிருந்து கிடைக்கப் பெறும் மகிழ்ச்சியை, நம்முடைய ஆத்மா விரும்புகிறது என்று நாம் நினைக்கிறோம். அதனால்தான் மேலும் மேலும் இந்தப் பொருட் சுகங்களைச் சேகரிப்பதற்காக, நாம் அவற்றின் பின்னாலேயே ஓடுகிறோம்.
கிருஷ்ணர், இங்கு ஒரு நுட்பத்தைத் தருகிறார்: புலனின்பங்களை அனுபவிக்கும் நம் உடலை, நாம் ஒரு ஸாக்ஷியாக இருந்து கவனிக்கும்பொழுது, சம்பந்தப்பட்டிருப்பது நம்முடைய உடலே அன்றி, நம்முடைய ஆத்மா அல்ல என்று நாம் கவனிக்கும்பொழுது, நாம் ஸத்யத்தைப் பார்க்கிறோம்.
உடலை, ஒரு ஸாக்ஷியாக இருந்து கவனியுங்கள். உங்கள் உடலைப் பற்றிய விழிப்புடன் இருங்கள். வெளியுலகப் பொருட்களுக்கு உங்கள் உடல் எப்படி எதிர்ச்செயல் புரிகிறது என்பதைக் கவனித்துப் பாருங்கள்.
'நீங்கள் இந்த உடலைக் காட்டிலும் வேறானவர்' என்ற ஒரு உணர்வு எழுவதை நீங்கள் அடையாளம் காண்பீர்கள். உங்கள் உடல் என்பது என்ன என்பதைக் காண்பீர்கள். உடல் கொண்டிருக்கும் இன்பங்களால், உங்கள் ஆத்மாவுக்கு ஆகப்போவது எதுவுமில்லை என்பதைக் காண்பீர்கள்.
நீங்கள் இதைச் செய்யும் சமயம், நீங்கள் ஒரு வெளி ஆள்போல இருந்து, இந்த உடலையும் மனத்தையும் ஸாக்ஷியாகயிருந்து
நாம், நம்முடைய ஆத்மாவை, வெளியுலகப் பொருட்களிலிருந்து பெறுகிற மகிழ்ச்சியுடன் சம்பந்தப்படுத்துகிறோம். இங்குதான், பிரச்சினை ஆரம்பமாகிறது.
கவனிப்பீர்கள். இது, நீங்கள் ஒரு திரைக்காட்சியைக் காண்பதைப் போன்றதுதான்.
நீங்கள் ஒரு திரைக்காட்சியைக் காணும்பொழுது, அந்தத் திரையின் மீது என்ன நிகழ்கிறது என்பதைக் கவனிக்கின்றீர்கள். அதைப் போலவே, உங்கள் உடலையும் மனத்தையும் கவனிக்கும்பொழுது, கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்பது உங்களுக்குப் புரியும்.
புலனின்பங்களை உடல்தான் அனுபவிக்கிறது என்பதையும், உடல்தான் ஒவ்வொன்றையும் செய்கிறது என்பதையும், ஆத்மாவுக்கு எதுவும் அவசியமில்லை என்பதையும் நீங்கள் கவனிக்கும்பொழுது மட்டுமே, நீங்கள் ஸத்யத்தைப் பார்க்கிறீர்கள்.
மிகத் தெளிவாக இருங்கள், நாம் அனைவரும் ஒருவருடன் ஒருவர் இணைக்கப்பட்டிருக்கிறோம். நம் ஒவ்வொரு எண்ணத்திற்கும் பிரபஞ்சம் தொடர்ந்து பதிலளிக்கிறது
கிருஷ்ணர், இந்த ஸ்லோகத்தில் மிகப்பெரிய ஒரு நுட்பத்தைத் தருகிறார். 'விழிப்புணர்வை'ப் பற்றிப் பேசுகிறார்.
ஒவ்வொரு பரமாத்மாவையே நமக்குப் பிரிவினைகள் தென்படுவதில்லை.
நாம் அனைத்தையும் ஒரே 'இருப்பாக'க் காண்போம். இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் ஒரே உடலாகவும், அதே ஸத்யத்தை வெளிப்படுத்தும் ஒரே இருப்பாகவும் காண்போம்.
மிகத் தெளிவாக இருங்கள், நாம் அனைவரும் ஒருவருடன் ஒருவர் இணைக்கப்பட்டிருக்கிறோம். உங்களுடைய எண்ணங்கள் உங்கள் பக்கத்தில் அமர்ந்திருப்பவருடைய எண்ணங்களையும் பாதிக்கின்றன. நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, இது முற்றிலும் உண்மையே.
நாம் நம்மை, ஒரு தனிப்பட்ட விழிப்புணர்வாக நினைக்கிறோம். நாம் நம்மை, தனித்தனி தீவுகளாக நினைத்துக்கொள்கிறோம். நம்முடைய எண்ணங்கள் நமக்குள் மட்டுமே இருக்கின்றன என நினைக்கிறோம். நம்முடைய எண்ணங்களை வேறு ஒருவரும் கவனிப்பதில்லை என்றும் நினைக்கிறோம். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உங்களுடைய எண்ணங்களுக்கு, இந்த முழுப் பிரபஞ்சமும் தொடர்ந்து பதில் அளித்துக் கொண்டிருக்கிறது. இந்த முழுப் பிரபஞ்சமுமே, ஒரே பிரபஞ்ச விழிப்புணர்வால் செய்யப்பட்டதுதான்.
உண்மையில், இங்குப் பிரபஞ்ச விழிப்புணர்வைத் தவிர, வேறெதுவும் இல்லை. தனிப்பட்ட விழிப்புணர்வானது, மொத்தக் கூட்டு விழிப்புணர்வின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய, ஒரு சிறு மாதிரி வடிவம்தான், ஒரு சிறு பிரதிபலிப்புதான், ஒரு சிறு ஹோலோகிராம்தான்!
ஹோலோகிராமை ஐந்து துண்டுகளாகக் கத்தரித்தால் என்ன நிகழும் ? ஒவ்வொரு துண்டுமே ஒரு ஹோலோகிராமாகத்தான் மாறும். ஹோலோகிராம் இருந்தபொழுது எதைக் காட்டியதோ, அதே அம்சங்களை அந்த ஐந்து துண்டுகளும் தன்னகத்தே கொண்டிருக்கும்.
தனிப்பட்ட விழிப்புணர்வானது, மொத்தக் கூட்டு விழிப்புணர்வின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய, ஒரு சிறு ஹோலோகிராமே!
நம்முடைய தனிப்பட்ட விழிப்புணர்வும் அந்த ஹோலோகிராமைப் போன்றதே! இந்தப்
ஹோலோகிராமானது, எண்ணற்ற சிறு சிறு துண்டுகளாக அல்லது தனித்தனியான உயிருள்ள ஜீவன்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் நாம் ஒவ்வொருவரும், பிரபஞ்ச விழிப்புணர்வைப் போன்ற அதே விழிப்புணர்வைத்தான் பெற்றிருக்கிறோம்.
நாம் அனைவருமே இந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வால் இணைக்கப்பட்டிருக்கிறோம். இதைத்தான் நான், 'கூட்டு விழிப்புணர்வு' என்று அழைக்கின்றேன். இந்தப் பிரபஞ்சத்தின் எல்லா வாழும் உயிரினங்களுமே, ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. உங்களுடைய எந்த எண்ணங்களுமே என்னையும் தூண்டிவிட முடியும் ; என்னுடைய எந்த எண்ணங்களும் உங்களையும் தூண்டிவிட முடியும்.
நாம் உடலளவில் மட்டுமே தனித்தனியானவர்கள்!
எண்ண அளவில், மனதளவில் மட்டுமல்ல, ஆழமாகச் செல்லச் செல்ல, இன்னும் ஆழமாக நீங்கள் மற்றவரோடு இணைக்கப்பட்டிருக்கின்றீர்கள் என்பதே ஸத்யம்.
நாம் நம்முடைய சரீர அமைப்பில், வெவ்வேறு அடுக்குகளைக் கொண்டிருக்கிறோம். அதாவது ஸ்தூல சரீரம், ப்ராண சரீரம், மன சரீரம், ஸூக்ஷ்ம சரீரம், காரண சரீரம், ஆத்ம சரீரம், நிர்வாண சரீரம் என்பனவாகும்.
உடல் அடுக்கில், அனைவரையும் தனித்தனி மனிதர்களாகப் பார்க்கிறோம். நாம் இந்த அடுக்குகளின் ஆழத்திற்குச் செல்லச் செல்ல, நாம் ஒவ்வொருவரும் மற்றவரோடு இணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதைக் காண்போம். அடுத்தடுத்து ஆழமாகச் செல்லச் செல்ல, நம் இணைப்பும் மிகவும் ஆழமாகிறது.
இந்த உடலைச் சுற்றியிருக்கும் ஏழு சக்திப் படலங்களில், ப்ராண, மன சரீர் அடுக்களவில், ஒரு மனிதருடைய எண்ணங்கள், மற்றவருக்குள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒருவர் ஏதும் பேசாதபொழுதும்கூட, அவருடைய எண்ணங்களின் அமைப்பு உங்கள் எண்ணங்களைப் பாதிக்கின்றது.
உங்களுடைய அலுவலகத்தில், உங்களுடைய மேலதிகாரியைப் பார்த்த
ஒருவர் ஏதும் பேசாதபொழுதும்கூட, அவருடைய எண்ணங்களின் அமைப்பு உங்கள் எண்ணங்களைப் பாதிக்கின்றது.
மாத்திரத்திலேயே, அவருடைய எண்ண அமைப்பை அறிந்த மாத்திரத்திலேயே, உங்களுடைய எண்ணங்களிலும் சக்தியிலும் தாக்கம் ஏற்படுகிறது. அவர் எதுவுமே சொல்லக்கூட வேண்டாம்; அவர் உடலளவில் எதுவும் செய்ய வேண்டாம். அவருடைய எண்ணங்களே போதும், உங்கள் எண்ணங்களையும் சக்தியையும் பாதிப்படையச் செய்ய !
அதனால் நாம் இன்னும் ஆழமான அடுக்குகளுக்குச் செல்லும்பொழுது, இன்னும் சற்று ஆழமான நிலையில் அங்கு இணைக்கப்பட்டிருகிறோம். இறுதி அடுக்கான நிர்வாண அடுக்கிற்குச் செல்லும்பொழுது, நாம் அனைவருமே இணைக்கப்படுகிறோம். அங்குக் கடவுளுக்கும், உங்களுக்கும், எனக்கும் உள்ள இடைவெளியானது பூஜ்யமாகிவிடும்.
நாம் நம்மை, இந்த ஸ்தூல சரீரத்துடன் இணைத்துக்கொள்வதுதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம்.
நாம் கண்ணால் பார்ப்பதை மட்டுமே உண்மை என்று நம்பிவிடுகிறோம். இயற்கையாகவே, நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு தனிநபர்கள் என்று நினைக்கிறோம். நமக்கும் மற்றவர்களுக்கும் இடையில் எல்லைகளை
நாம் இந்த நிலையிலேயே தடைபட்டு நின்றுவிடும்பொழுது, நாம் ஒப்புயர்வற்ற ஸத்யத்தைத் தவறவிடுகிறோம்.
மனத்தால் நம் எல்லைகளையெல்லாம் நாம் உடைக்கும்பொழுது, எல்லோருமே ஒருவரோடு இணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதைப் பார்க்கும்பொழுது, எல்லாத் தனிப்பட்ட உருவங்களும் ஒன்றேதான் என்பதைப் பார்க்கும்பொழுது, 'நாம் யார்' என்பதை உணர்ந்துகொள்கிறோம்.
சரீர அடுக்கான நிர்வாண அடுக்கிற்குச் செல்லும்பொழுது, நாம் அனைவருமே விழிப்புணர்வளவில் இணைக்கப்படுகிறோம்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உங்களுடைய தனி மனித விழிப்புணர்வானது ஒரு வெங்காயத்தைப் போன்றது. நாம் ஒவ்வொருவரும் ஒரு வெங்காயம்தான். ஒரு வெங்காயத்தில் நீங்கள் என்ன பார்க்கின்றீர்கள் ? அதில் தோல்கள் அடுக்கடுக்காக இருக்கின்றன. அந்தத் தோல்களை, ஒன்றன் பின் ஒன்றாக உரிக்கும்பொழுது, உள்ளே என்ன மிஞ்சுகிறது ? ஒன்றுமே இல்லை!
நீங்கள் அந்த வெங்காயத்தைப் போலத்தான் இருக்கின்றீர்கள். நீங்கள், வெங்காயத்தை ஒரு திடப்பொருளாக நினைக்கின்றீர்கள். அதை உரிக்கும்பொழுதுதான், அதனுள் ஒன்றுமே இல்லை என்பதை நீங்கள் பார்க்கின்றீர்கள். அதைப் போலவே நீங்கள் ஏழு அடுக்குகளையும் உரிக்கும்பொழுது, உங்களுள் கூட்டு விழிப்புணர்வு இருப்பதை அனுபவிப்பீர்கள்.
எல்லா அடுக்குகளையும் நீக்கிவிட்டால், உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு உயிருமே, அதே விழிப்புணர்வைத்தான் உள்ளடக்கியிருக்கிறது பார்க்கின்றீர்கள். அனைத்துமே ஒன்றுதான்.
ஒரு குழந்தையாக இருக்கும் பொழுது, இருப்புத்தன்மையோடு இணைக்கும் நிறைய விஷயங்களைச் செய்கிரீர்கள்.
ஆரம்பத்திலிருந்தே, நீங்கள் பிறந்ததிலிருந்தே, சமூகம் உங்கள் மேல் புதுப்புது அடுக்குகளைப் போட ஆரம்பித்துவிடுகிறது.
ஒவ்வொன்றிலும் 'இருப்பை'யே பார்க்கும் கள்ளங்கபடமற்ற குழந்தைத் தன்மையை மெதுமெதுவாக இழந்துவிடுகிறீர்கள்.
ஒரு குழந்தையாக இருக்கும்பொழுது, இருப்புத்தன்மையோடு உங்களை இணைக்கும் நிறைய விஷயங்களைச் செய்கிறீர்கள். நீங்கள் உங்களை, இந்த மண்ணிலிருந்தோ, பூமியிலிருந்தோ வேறானவர்களாகக் கருத மாட்டீர்கள். அதனால்தான் நீங்கள் மண்ணோடும் சேற்றோடும் விளையாடி மகிழ்கின்றீர்கள். ஆனால் பெற்றோர்கள் என்னசெய்கிறார்கள்? "இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே, நீ அழுக்காகிவிடுவாய், உன்னுடைய உடைகள் அழுக்காகிவிடும்,'' என்று கடிந்துகொள்வார்கள்.
இவ்வாறு தொடர்ந்து, பல சமூகக் கட்டுறு மனப்பாங்குகளை அந்தக் குழந்தையின் மீது பெற்றோர்களும், சமூகமும் சுமத்திவிடுகின்றனர்.
அந்தக் குழந்தைக்கு எது அழுக்கு, எது சுத்தம் என்று தெரியாது. அந்தக் குழந்தை, தரையைப் பார்ப்பதைப் போலத்தான் மண்ணையும் பார்க்கிறது. அது எந்த வித்தியாசத்தையும் பார்ப்பதில்லை. சுத்தமான வீட்டினுள் ஆனாலும் சரி, புழுதியான வீதியானாலும் சரி, அந்தக் குழந்தை ஒரே சக்தியுடன்தான் இணைந்துகொள்கிறது. பெரியவர்கள், குழந்தைகளை வேறுபாட்டைக் காண்பதற்கான கட்டுறு மனப்பாங்குக்குப் பழக்கிவிடுகிறார்கள்.
குருகுல முறை - குழந்தையை, கடவுளாக்கும்
பழங்காலத்தில், நம் பாரதத்தில் பரந்து நிலவிய குருகுல முறையைப் பற்றி உங்களுக்குச் சொல்லுகிறேன்.
குருகுல முறை, எல்லா உயிர்களோடும் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள குழந்தைகளுக்கு மிகவும் உதவியது. குழந்தைகளுக்கு எந்தத் தடைகளையும் அவர்கள் போடவில்லை. மிகச் சிறு வயதிலேயே, கல்விக்காக குருமார்களிடம் கொண்டுவிடப் பட்டனர் குழந்தைகள். குருவானவர், அக்குழந்தைகளுக்கான பொறுப்பேற்றுக் கொண்டார். அங்கு, பெற்றோரோ அல்லது உற்றாரோ யாருமே இல்லை. எல்லாக் குழந்தைகளுமே, நவீன மாணவர் விடுதிகளைப்போல இருந்த குருகுலத்தில்தான் வசித்து வந்தனர்.
ஏழு வயதாகும்வரை, அந்தக் குழந்தைகள் ஆடைகளேதும் அணியவில்லை. அவர்கள், இயற்கை வழியிலேயே தங்களை வெளிப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள், இயற்கையோடு தங்களைச் சிறந்த வழியில் தொடர்புபடுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். போதனைகளை அவர்கள் பரீட்சித்துப் பார்க்க முடிந்தது.
கூச்சம் மற்றும் ஆண் பெண் வேறுபாடு என்ற தடைகளேதும் இல்லாமல், பிரபஞ்சத்தோடு ஆழமான நிலைகளில் தங்களை இணைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.
ஒரு குழந்தையை ஆண் - பெண் பாகுபாடு, கூச்சம், வெட்கம் ஆகியவற்றின் மூலமாகக் கட்டுப்படுத்தினால், அது முழுமையாக வெளிப்படுத்திக்கொள்ளாது. அது தனக்குத்தானே விதிமுறைகளை உருவாக்கிகொள்ள அது, இருப்பதால், இதைச் செய்யக்கூடாது, பெண் பிள்ளையாக இருப்பதால் அதைச் செய்யக்கூடாது' என்றெல்லாம் நினைக்க ஆரம்பித்துவிடுகிறது.
இந்தக் கட்டுறு மனப்பாங்கு, கட்டுப்பாட்டு விதிமுறைகள், குருகுலத்தில் இல்லாமலிருந்தன. குழந்தைகள் தங்களை முழுமையாக வெளிப்படுத்திக்கொள்ள முடிந்தது. அவர்கள், முழுமையாகத் தங்களை இயற்கையோடு, பிரபஞ்சத்தோடு இணைத்துக் கொள்ள அனுமதிக்கப் பட்டார்கள்.
ஏழு வயதில் அவர்களுக்கு, தங்களை இறுதி விழிப்புணர்வுடன் இணைத்துக் கொள்வதற்கான, ஒரு தியான நுட்பம் வழங்கப்பட்டது. தாங்கள் மற்றவர்களிலிருந்து வேறுபட்டவர்கள் என்னும் எண்ணம் அவர்களுக்கு வந்தால், இந்தத் தியான நுட்பம், அந்த எண்ணத்தைக் கரைத்து விடும்.
விழிப்புணர்வை விலக்கிவைத்துவிடக் கூடிய எண்ணங்களிலிருந்து, இந்தத் தியானம் அவர்களை விடுவித்தது. அதே சமயம் சக்தி வாய்ந்த காயத்ரி மந்த்ரத்தை ஜபிப்பதே அந்தத் தியான நுட்பம் !
குழந்தைகள், இந்த காயத்ரி மந்த்ரத்தின் மூலமாக, தொடர்ந்து இணைப்பை ஏற்படுத்திக்கொண்டார்கள்.
பதினான்கு வயதிற்குள் அவர்கள், கூட்டு விழிப்புணர்வின் ஒரு கண்ணோட்டக் காட்சியை, ஒரு அனுபவத்தின் துளியை, லேசான அனுபவத்தைப் பெற்றார்கள்.
நாம் இன்று என்ன செய்கின்றோம் ? ஆண் குழந்தை என்றால், ஒரு கால் சட்டையும் டி-சர்ட்டையும், பெண் குழந்தை என்றால் அவர்களுக்குத் தகுந்த மாதிரி ஆடைகளையும் வாங்கி மாட்டுகிறோம். அதுவும் சிறுவர்களுக்கு நீலநிறத்திலும், சிறுமிகளுக்கு ரோஜா நிறத்திலும் ஆடைகளை வாங்கி மாட்டுகிறோம்.
பெரும்பாலும் அந்தக் குழந்தைக்கு ஒரு வயது ஆவதற்கு முன்னரே, அதனுள் ஆண், பெண் பாகுபாட்டு அடுக்கை உருவாக்கிவிடுகிறோம். நாம் மீண்டும் மீண்டும் அவர்களை அவர்களிடமிருந்து வெளியே இழுக்கிறோம். அவர்களை அவர்களாகவே இருக்க நாம் அனுமதிப்பதே இல்லை.
நாம், இந்தக் கட்டுறு மனப்பாங்கினை, கட்டுப்பாட்டு விதிகளை விலக்கிக் கொள்ளும்பொழுதுதான், ஒவ்வொன்றுமே தூய விழிப்புணர்வுதான் என்பதைக் காண்கிறோம். இதுதான் கிருஷ்ணர் இங்கே சொல்வதாகும்.
நம் ஒவ்வொருவருள்ளும் உறையும் பரமாத்மாவைக் காணும்பொழுது, நாம் அனைவருமே ஒருவரோடு ஒருவர் இணைக்கப்பட்டிருப்பதைக் காண்போம். நாம் இந்த இணைப்பைக் காணும்பொழுது, ஸத்யத்தைக் காண்போம். இந்த முழுப் பிரபஞ்சமும், அதே விழிப்புணர்வின் விரிவுதான் என்பதைக் காண்போம். இந்த மொத்தப் பிரபஞ்சமுமே, ஸத்யத்தின் வெளிப்பாடுதான்.
கேள்வி : குருகுலம் என்னும் வேத முறைக் கல்வியைப் பற்றிப் பேசினீர்கள். குழந்தைகள் இயற்கையாக திரியக் கூடிய முறை உண்மையிலேயே சாத்தியமாகுமா ?
நாம், கட்டுறு மனப்பாங்கினை விலக்கிக் கொள்ளும்பொழுதுதான். ஒவ்வொன்றுமே தூய விழிப்புணர்வுதான் என்பதைக் காண்கிறோம்.
பதில்: இந்த நாட்களில், ஆடையே உடுத்தாத கூட்டுக் குடியிருப்புகள் உள்ளன. ஆனால், அங்குப் புலனின்பங்கள்தான் நோக்கமாக உள்ளதே தவிர, நம் இயல்பு நிலைக்குத் திரும்பி, இயற்கையோடு தொடர்பு வைத்துக் கொள்வது அல்ல.
குழந்தைகளுக்கு ஆறு அல்லது ஏழு வயதாகும்வரை, கட்டுப்பாடுகள் என்று ஏதுமில்லை. அவர்களுக்கு ஆண் பெண் பாகுபாட்டைப் பற்றிய புரிதல் இருப்பதில்லை. அந்த வயதுவரை, அவர்கள் அவர்களுக்குள்ளாகவே விளையாடுகிறார்கள். வெளியுலக ஆர்வம் என்பது, அவர்கள் படிக்கும் முறைகளுள் ஒன்றே.
உங்களுடைய குழந்தையை, உங்கள் வீட்டினுள்ளாவது சுதந்திரமாக வளர அனுமதிப்பது சாத்தியமே.
உதாரணத்திற்கு, குழந்தைகள் குளித்தவுடன், குளியலறையை விட்டு ஆடைகள் ஏதுமில்லாமலேயே வெளியே வர முடிவுசெய்யலாம். அந்த நேரத்தில் அவர்களைத் தடைசெய்யாதீர்கள். சில சமயம், குழந்தை, தன் உடலோடும், தன் பிறப்புறுப்புகளோடும் சுதந்திரமாக விளையாடிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். அந்தச் சமயங்களில், அவர்களின் கவனத்தைத் தட்டிவிடாதீர்கள். இப்போதைக்கு இந்த மாதிரியான சில சிறு சிறு விஷயங்களை நீங்கள் அனுமதிக்கலாம்.
உங்களுடைய குழந்தையை, உங்கள் வீட்டினுள்ளாவது சுதந்திரமாக வளர அனுமதிப்பது சாத்தியமே !
ஒரு தலைமுறை இது மாதிரி வளருவதை, அந்தப் புதிய தலைமுறையை நீங்களே கற்பனைசெய்து பாருங்கள். குழந்தைகள் இந்த மாதிரி வழிகளில் வளர்க்கப்பட்டால், அவர்கள் பயமில்லாமலும் முற்றிலும் சமநிலையோடும், மன உறுதியோடும் வளர்வார்கள்.
அவர்களுடைய பாலுணர்வு, காமத்தால் தூண்டப்பட்டதாக இருக்காது. அவர்கள், காமத்தால் விரட்டப்படாத, அதே சமயம், இப்புவியிலேயே அதிக புலனின்பத்தை அனுபவிக்கும் மக்களாக இருப்பார்கள்.
இப்போதைய நமது கல்விமுறை, குழந்தைகளை வளர்ப்பதற்குப் பதிலாக, அவர்களைக் கீழ்நோக்கித்தான் இழுத்துவிடுகிறது. அவர்கள், தடைகள், பயம், போராசை, பொறாமை, மேலும் பல எதிர்மறை எண்ணங்களோடும்தான் வளர்கிறார்கள்.
கட்டுப்பாடுகள் விதிக்காத புத்திசாலித்தனம்மிக்க பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட இளஞ்சிறார்களை நீங்கள் கவனித்துப் பார்த்தால், அச்சிறுவர்களின் எல்லாச் சக்தி மையங்களும் மிக அழகாகத் திறக்கப்பட்டிருக்கும். அவர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள்.
அவர்களுக்கு என்ன தேவையோ அது, அந்தக் கணத்திலேயே நிறைவேறும். அதனால் அவர்கள் பூர்த்தியாகாத ஆசைகளைக் கொண்டிருக்க மாட்டார்கள்; தங்களைக் கட்டுப்படுத்திக் கட்டுப்படுத்தி
மன அழுத்தத்திற்கு ஆளாக்கிக்கொள்ள மாட்டார்கள்; தங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுக்கொள்ள மாட்டார்கள். ஆசைகளைக் கடன் வாங்கி, தேக்கி வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
குருகுலக் கல்வியில், குழந்தைகளுக்கு ஏழு வயதுவரை, திட்டவட்டமான பாட முறைகள் ஏதும் கற்பிக்கப்படுவதில்லை. இந்த வயதில், காயத்ரி மந்த்ரம் கற்பிக்கப்படுகிறது. இந்த மந்த்ரம் அவர்களின் உள்ளுலக புத்திசாலித்தனத்தை விழிப்பிக்கச்செய்கிறது. பிறகு, ஆன்மிக விஷயங்களுடன் பலவிதமான வாழ்க்கைத் திறன்களும் கற்பிக்கப்படுகின்றன. கல்வி முறை முழுமையானதாக இருக்கும்.
குழந்தைகள் ஊக்கமளிக்கப்படுகிறார்கள். அவர்களின் அறிவுத்திறனை அளக்கும் 'புத்திக்கூர்மை பரீட்சை'களின் (Intelligence tests) அடிப்படையில், அவர்கள் மதிப்பீடு செய்யப்படுவதில்லை.
அவர்களுடைய வேகத்திறன் ஆகியவற்றிற்கேற்ப, தாங்கள் திறம்படச் செயல்பட முடியும் என்று அவர்கள் நம்பும் துறைகளை, அவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும். பெரியவர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்றாற்போல் அவர்கள் செயல்பட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
மறுபடியும் நீங்கள் கேட்கலாம்: "இது எப்படிச் சாத்தியமாகும் ? இந்தச் சிறுவர்கள் பிழைப்பதற்காகச் சம்பாதிக்க வேண்டுமே!''
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உங்களுடைய வாழ்க்கையைத் திரும்பிப் பாருங்கள். நீங்கள் செய்ய விரும்பாதவற்றையே கட்டாயத்தில் தள்ளப் பட்டிருக்கிறீர்கள் ? எவ்வளவு வேலைகளை வெறுக்கின்றீர்கள் ? நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தீர்களானால், உங்களில் மிகப் பெரும்பாலோனோர் 'ஆம்' என்றுதான் சொல்வீர்கள்.
உங்களுடைய பெரியோர்கள், அவர்களுடைய கருத்துகளின்படி நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று விரும்பினார்களோ, அந்தத் துறைக்குத் தள்ளிவிடப்பட்டீர்கள். நீங்கள் செய்ய விரும்பியதைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு, உங்களுக்கு ஒருபோதும் கிட்டியதே இல்லை.
நான் சந்திக்கும் பல இளைஞர்கள், "நான் விளையாட்டு வீரனாக விரும்பினேன். ஆனால் என்னுடைய பெற்றோர், நான் ஒரு பொறியாளர் ஆக வேண்டுமென்று விரும்பினார்கள். அவர்கள் விருப்பப்படி படித்த அந்தப் படிப்பை வெறுக்கிறேன்,'' என்றுதான் சொல்லுகிறார்கள்.
பாரதத்தில் அல்லது ஆசியாவில் மட்டும்தான் இப்படி நடக்கிறது என்று நினைக்க வேண்டாம்.
உங்களுடைய குழந்தைகளுக்கு, அவர்களுடைய சொந்த விருப்பங்களைப் பின்பற்றுவதற்குக் கற்பியுங்கள்.
தங்களுடைய கல்விக்காக, தாங்களே சம்பாதித்துக்கொள்ளும் இளைஞர்களைக் கொண்டுள்ள நிர்பந்தத்தினாலோ அல்லது தன்னோடு இருப்பவர்களால் தங்களுக்குப் பிடிக்காத, கல்வித் துறைகளில் தள்ளப்படுகிறார்கள்.
இறுதியில், அந்தத் துறையையே வெறுக்கும் அவல ஆளாகிறார்கள். பிறகு சமூகத்திலிருந்து ஒடும் கட்டறுத்துக்கொண்டு ஒரு
தலைமுறையாக வளருகிறார்கள்.
உங்களுக்குப் பிடித்த ஒன்றை நீங்கள் செய்யும்பொழுது, அச்செயலின் இறுதி விளைவே, அச்செயலின் மீது நீங்கள் கொண்டுள்ள ஆழமான விருப்பத்தைக் காட்டும்.
நீங்கள், ஒரு செயலை எப்படிச் செய்கின்றீர்கள், செயலின் விளைவாக எதை அளிக்கின்றீர்கள் என்பது, உங்கள் ஆழமான விருப்பத்தின் பிரதிபலிப்பு. உங்கள் செயல்கள் அனைத்தும், நிச்சயமாக, வெற்றியடையும்.
சமூகத்தின்
அவற்றை மனதார ஏற்றுக்கொள்ளாமலும், பயம் மற்றும் பேராசையின் காரணமாகப் பின்பற்றினீர்களானால், நீங்கள் எதையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியாது.
உங்களுடைய ஆழமான விருப்பம், ஆசை என்ன என்ன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பின்பு அதையே பின்பற்றுங்கள்.
உங்களுடைய குழந்தைகளுக்கும், அவர்களுடைய சொந்த ஆசைகளை, விருப்பங்களைப் கட்டுப்படுத்திய கட்டுறு மனப்பாங்கினை அவர்களின் மேலும் சுமத்தி, அவர்களையும் கட்டுப்படுத்தாதீர்கள்.
Part 6: Bhagavad Gita Explained
ஆத்மாவும் உடலும்
- 13.31 குந்தி புத்திரா, மனத்திற்கெட்டாத, அநாதியான, நிர்குணமான இந்த அழிவற்ற பரமாத்மா உடலிலேயே இருந்தபோதிலும் உண்மையில் ஒன்றும் செய்வதில்லை. எதிலும் ஒட்டுவதும் இல்லை.
- 13.32 எங்கும் நிறைந்திருந்தாலும் ஆகாச் ம் நுண்ணியதாக இருப்பதால் எவ்வாறு எதனோடும் கலப்பதில்லையோ, அவ்வாறே ஆத்மாவும் இவ்வுடலில் வசித்தாலும், இந்த உடலோடு அது கலப்பதில்லை.
- 13.33 பரத குலத்தில் உதித்தவனே, எப்படிச் சூரியன் ஒருவனே இந்தப் பிரம்மாண்டம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்கிறானோ, அப்படியே ஆத்மானுன்றே இந்த க்ஷத்ரம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்கிறது.
- 13.34 இவ்விதம் கிஷத்ரம் மற்றும் கிஷத்ரஜ்குன் இவற்றின் வேறுபாட்டையும் செயல்முறையையும் எவர்கள் ஐக்குராக் கண்களால் தத்வ ரீதியாக அறிகிறார்களோ, அந்த மஹாத்மாக்கள் உலகியல் ரீதியான பந்தத்திலிருந்து விடுபட்டு, பரமாத்மாவை அடைகிறார்கள்.
ஆத்மா அமைதீக்கும் அப்பாற்பட்டது
கிருஷ்ணர், மீண்டும் மீண்டும் பரமாத்மாவின் உண்மை நிலையைப் பற்றிப் பேசுகிறார். அவர், 'ஆத்மாவானது எந்தப் பிடிப்புகளிலும் சிக்கிக் கொள்ளாமல் சுதந்திரமாக இருக்கிறது, அது எல்லையற்றது, முடிவற்றது. மனம் கடந்தநிலையில் உள்ளது. இந்த 'ஸ்தூல உடலோடு தொடர்பு கொண்டிருந்தாலும்கூட, அது இன்னமும் சுதந்திரமாகத்தான் இருக்கிறது' என்று அர்ஜுனனிடம் சொல்கிறார்.
முந்தைய ஸ்லோகங்களில், நம் உடல், எப்படி ஆத்மாவின் கோயிலாக இருக்கிறது என்பதைப் பற்றிப் பேசினோம். கடந்த பிறவிகளின் ஆசைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்காகவே, இந்த ஆத்மா எப்படி இந்த உடலை எடுக்கிறது என்பதைப் பார்த்தோம்.
உண்மையில் ஆத்மா, எதையுமே செய்வதில்லை. அது பயம், பேராசை என்னும் சிக்கல்களில் தன்னைச் சிக்கவைத்துக் கொள்வதில்லை. நம் மனம்தான், புதுப்புது ஆசைகளை, தொடர்ந்து பட்டியலில் சேர்த்துக்கொண்டேயிருக்கிறது. உடலையும் அவற்றின் பின்னாலேயே ஓட வைத்துக்கொண்டும் இருக்கிறது. ஆனால், உள்ளுக்குள் ஆதீமா எப்பொழுதும் சுதந்திரமாகவே இருக்கிறது. அதற்கு பந்தமே கிடையாது.
ஆத்மா எப்பொழுதும் சுதந்திரமாகவே இருக்கிறது. அதற்கு பந்தமே கிடையாது!
அது, தடாகத்தில் மிதக்கும் தாமரையைப் போன்று இருக்கிறது. தாமரை இலைகளின் மேல் விழுகிற நீர்த்துளிகள், அதில் ஒட்டுவதில்லை. அவை உருண்டோடி விடுகின்றன. அதைப் போலவே, உடலின் உள்ளே உறையும் ஆதமாவினிடத்து, ஒட்டுவதில்லை.
உடல் தொடர்புகொள்கிறது.் இத்தமா தொடர்புகொள்வதே இல்லை. ஆத்மாவானது பரமாத்மாவுடன் முடியும்.
கிருஷ்ணர், நிர்குணம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். குணங்களுக்கும் அப்பாற்பட்டது' என்று அர்த்தம்.
மூன்று குணங்களாகிய அமைதி, பேராசை, சோம்பல்தனம் ஆகியவை உடலோடும் மனத்தோடும் ஆத்மா, இந்த மூன்று குணங்களிலிருந்து விடுபட்டது. அது அமைதியானதும் அல்ல ; சோம்பலானதும் அல்ல; தூய்மையானது. உண்மையில், அது தூய்மைக்கும் அப்பாற்பட்டது.
ஆக்மாவாகிய நீங்கள் எதனாலும் பாதிப்படைய மாட்டர்கள்
ஆதமாவிற்குத் பயன்படுத்தும்பொழுது, அதனை அமைதி என்னும் குணத்தோடும் சம்பந்தப்படுத்தலாம் என்று அர்த்தமாகிறது. ஆனால் ஆதீமாவானது அமைதிக்கும் அப்பாற்பட்டது. அதனால்தான் நான், 'தூய்மைக்கும் அப்பாற்பட்டது' என்று சொல்கிறேன். அதனை எதுவுமே சுற்றி வளைத்துக் கட்டுப்படுத்த முடியாது.
நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், நம் மனத்தால் பார்க்கப்படும் ஒரு விஷயத்தைத்தான், வார்த்தைகளாக வெளிப்படுத்துகிறோம். நம் மனத்தில் ஓடும் உள் அரட்டையின் வெளிப்பாடே சொற்கள். மனம் இல்லாதபொழுது சொற்களே இல்லை.
மலைகளால் குழப்பட்ட இமயத்திற்குச் செல்லும்பொழுது, முதலில் நிகழ்வது 'பெரும்வியப்பு'. வார்த்தைகளே வெளி வராது. நாம் மிக அமைதியாக இருக்கிறோம். நம்முடைய இருப்பு, அந்த அழகை அனுபவிக்கிறது; நமது இருப்பு, அதனை வேறு எதனோடும் சம்பந்தப்படுத்திப் பார்க்க முயலாது. நம் மனது, இன்னமும் அதனை வேறு எந்த வார்த்தையோடும் சம்பந்தப்படுத்தவில்லை. ஒரு சில நொடிகள் கழித்தே 'ஆஹா' என்னும் உணர்ச்சியை அனுபவிக்கிறோம். அதை விவரித்துச் சொல்ல இயலாது.
அதைப் போலவே, ஜ்ஞாருமடைதலையும் வார்த்தைகளால் விவரிக்கவே இயலாது. ஜீஞாநம் என்பது என்ன என்பதை வார்த்தைகளால் விவரிக்க எந்த ஒரு ஜ்ஞாந குருவாலும் இயலாது.
ஆத்மாவை, அமைதி அமைதி என்ற வெல்லுடன் தொடர்புபடுத்திச் சொல்வதற்குக்கூட, நமது மனம் தேவைப்படுகிறது. ஆனால் ஆத்மர அதற்கும் அப்பால் உள்ளது. எந்தச் சொல்லும், அதை விவரிக்க முடியாது. அது வெறுமனே 'இருக்கிறது' அவ்வளவுதான்.
ஜ்ஞார குருமார்கள், த்ரிகுண ரூறிதர்களாக இருக்கிறார்கள். இதற்கு அர்த்தம் என்னவென்றால், அவர்கள் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு
ஆத்மா. அதன் உரைவிடத்தின் குணங்களால் பாகிக்கப்படுவதேயில்லை. நிலையில் வாழ்கிறார்கள் என்பதாகும். முக்குணங்களுக்கும் அப்பால் அவர்கள் சென்று பந்தப்படாமல் சுதந்திரமாக இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த உடல், அவர்களுக்குத் தெரியும்; உடல், ஆத்மாவைப் பாதிக்காது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
கிருஷ்ணர் இந்த தெளிவாக்குவதற்கு, ஒரு உதாரணத்தைச் சொல்கிறார்: ஆகாசம், அதில் இருக்கும் எந்த ஒரு பொருளாலும் பாதிக்கப்படுவதில்லை!
ஸூஷ்ம சக்தியான ஆகாசம் எங்கும் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு மூலக் கூறிலும் அணுவிலும்கூட, இந்த ஸூக்ஷ்மமானசக்தி உள்ளது. நாம் பார்க்கும் ஒவ்வொன்றிலும் அது நிறைந்திருந்தாலும், அவற்றின் தன்மைகளை அது சுவீகரித்துக் கொள்வதில்லை. அது, ஒரு மலரில் இருந்தாலும், அதன் நறுமணத்தைக்கூட அது எடுத்துக் கொள்வதில்லை.
அதைப் போலவே ஆத்மா, அதன் உறைவிடத்தின் குணங்களால் பாதிக்கப்படுவதேயில்லை.
மக்கள், தாங்கள் பாவங்கள் செய்தால், தங்களின் ஆத்மா நரகத்திற்குச் செல்லும் என்று நினைக்கிறார்கள். தெய்வ பக்தியுடன் வாழ்ந்தால்,
சொர்க்கத்திற்குச் நினைக்கிறார்கள். செயல்களால் ஆதீமா பாதிக்கப்படுகிறது என்று நினைக்கிறார்கள்.
தயவுசெய்து வெளியே நம் இன்னுமொன்றை உங்களுக்குச் சொல்கிறேன், சொர்க்கம் என்றோ, கிடையாது. அவை புவியியல் ரீகியான இடங்கள் அல்ல; அவை மன ரீதியான நிலைகள்.
உடலின் வெளிச் செயல்கள், ஆத்மாவின் கறுதி இலக்கைப் பாகிப்பதில்லை.
நாம் விழிப்பில்லாமல் எதையாவது செய்தால், நாம் நரகத்தில் இருக்கிறோம். நாம் விழிப்புணர்வுடன் ஒரு செயலைச் செய்தால், நாம் சொர்க்கத்தில் இருக்கிறோம். அப்பொமுது நமது செய்கைகள் அனைத்துமே, இயல்பாகவே, எல்லோருடைய நன்மைக்காகவே அமையும்.
உடலின் வெளிச் செயல்கள், ஆக்மாவின்இறுதி இலக்கைப் பாதிப்பதில்லை. நமது பாவங்கள், நமது ஆதீமாவின் தன்மையை பாதிப்பதில்லை. ஆத்மா, அவற்றிலிருந்து முற்றிலும் சுதந்திரமாக இருக்கிறது. ஆத்மா எதனாலும் பாதிக்கப்படுவதில்லை.
பிரபஞ்சத்திற்கே ஒளியேற்றிடும் கூடித்ருஜ்குன்
கிருஷ்ணர் சொல்கிறார், ''கூரியன் உலகையே பிரகாசிக்கச் செய்வது போல, கூஷ்ரஜ்ஞன், பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் - அவை உயிருள்ளவையோ உயிரற்றவையோ - பிரகாசிக்கச் செய்கிறது. பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றுமே, அதே விழிப்புணர்வைத்தான் கொண்டிருக்கிறது.
கிருஷ்ணர், மேலும் மேலும் உதாரணங்களைத் தருகிறார். குரியன், சுற்றியுள்ள கிரகங்களின் மேல் ஒளியைப் பொழிகிறது, கிரகங்களின் மேலுள்ள இருளை குரிய ஒளி விலக்குகிறது. அதைப் போலவே, பரமாத்மா, கிஷத்ரஜ்ஞன், பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றையும் பிராசிக்கச் செய்கிறது. பிரபஞ்சத்திலுள்ள எல்லா இருப்புக்குள்ளும் இந்தப் பரமாத்மா இருக்கிறது.
கிருஷ்ணர் ஏன் இதை மீண்டும் மீண்டும் சொல்கிறார் என்று நாம் ஆச்சரியப்படலாம். ஆனால் அவர், அவர், கிஷத்ரும், கிஷத்ருஜ்ஞனைப் பற்றிய சந்தேகத்தைப் விளக்க முயற்சிக்கிறார். இது மிகவும் முக்கியமானது என்று கிருஷ்ணருக்குத் தெரியும். அதனால் அதை, அர்ஜுனன் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினார்.
நம் உடலுக்குள் இருக்கும் விழிப்புணர்வுக்கும், செடி அல்லது பாரைகளில் இருக்கும் விழிப்புணர்வுக்கும் ளந்தப் பிரீவும் இல்லை. அனைத்தும் ஒரே சக்திதான்.
எப்படியோ கிருஷ்ணர் இங்குப் புதிதாக ஒன்றைச் சொல்கிறார். குரியன் பிரபஞ்சத்தைப் பிரகாசிக்கச் செய்வதைப் போல. இந்த உடலிலுள்ள ஆத்மா, இந்த உடலை மட்டுமல்லாமல், இந்த உடலைச் சுற்றியிருப்பவற்றையும், இந்த முழுப் பிரபஞ்சத்தையும் பிரகாசிக்கச் செய்கிறது !
அவர் சொல்கிறார்.
யதா ப்ரகாச'யத்யேக: க்ரு'த்ஸ்நம் லோகமிமம் ரவி: / க்ஷத்ரம் கேஷத்ரீ ததா க்ரு'த்ஸ்நம் ப்ரகாச'யதி பாரத //13.34
க்ஷத்ரீ என்பது பரமாத்மா; அதுவே இந்த எல்லா கிஷத்ரத்தையும் – எல்லா உடல்களையும் பிரகாசிக்கச் செய்கிறது. நம்முடைய கூஷ்தரம் - உடல் மட்டும் ஒளியூட்டப்படுவதில்லை, எல்லா கூஷத்ரங்களும் ஒளியூட்டப்படுகின்றன.
நம் அனைவருக்குள்ளிருக்கும் விழிப்புணர்வும், அந்தப் பரமாத்மாவின் ஹோலோகிராமே! அதனால் விழிப்புணர்வுக்கும், விழிப்புணா்வுக்கும் எந்தப் பிரிவும் இல்லை. அனைத்தும் ஒரே சக்தியே.
சூரியன், தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் பிரகாசிக்கச்
செய்கிறது. அது எந்தப் பாகுபாட்டையும் காண்பிப்பதில்லை; அது எதையும் வேறுபடுத்திக் காண்பதில்லை. அதன் வழியே எது வந்தாலும், அது, அதிலிருக்கும் இருளை நீக்கிவிடுகிறது. அதைப் போலவே, நம்முள் இருக்கும் பரமாத்மா, பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றையும் பிரகாசிக்கச் செய்கிறது. நம்முடைய அறியாமையே, பரமாக்மாவிலிருந்து ஆத்மாவைப் பிரிக்கிறது.
பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றுமே பரமாத்மாதான்!
உண்மையிலேயே, இரு வேறு சொற்களை - ஆத்மா, பரமாத்மா என்று பயன்படுத்துவதேகூட சரியல்ல.
ஆதமா, பரமாத்மா என்று இரு தனித்தனியான இருப்புகளே இல்லை. இருப்பது ஒரு ஆத்மாவே. இருப்பது ஒன்றே.
இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றுமே பரமாத்மாவைக் கொண்டிருக்கிறது. 'இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றுமே 'அதே' பரமாதமாவைக் கொண்டிருக்கிறது' என்றுகூட நாம் சொல்ல முடியாது. ஏனெனில் நாம், 'அதே' என்னும் சொல்லைப் பயன்படுத்தும்பொழுது, பரமாத்மாவின் நகல்கள்தான் நம் எல்லோரினுள்ளும் இருக்கிறது என்று அர்த்தமாகிறது.
இல்லை, அது அப்படி இல்லை. ஒரே ஒரு பரமாத்மாதான் இருக்கிறது, அதைத் தவிர வேறெதுவுமில்லை. நம்முடைய மனம்தான் எல்லைகளை வரையறுக்கிறது. இரு நாடுகளுக்கிடையே எல்லைக்கோடுகளை உருவாக்குவது போலத்தான் இது இருக்கிறது.
பல ண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு நாடு மற்றொரு நாட்டின் நிலத்தை எடுத்துக் கொள்ள போரிடுகிறது. அவை, எல்லைக் கோடுகளை வரைந்துகொண்டும் அழித்துக் கொண்டும் இருக்கின்றன.
நாம், நமக்குள்ளிருக்கும் பரமாத்மாவுக்கும் இடையில் எல்லை வகுக்க முடியும் என்று நினைக்கிறோம். நாம் நம் ஆத்மாவை, பயம் மற்றும் பேராசைகளைக் கொண்டு ு ஒரு
பெட்டியினுள் வைத்துத் தாழிட முயற்சிக்கிறோம். அதை மூடியும் விடுகிறோம், பிறகு அதைத் திறக்கவே பயப்படுகிறோம்.
உண்மையில் நாம், நம்முடைய அடையாளத்தை இழக்கப் பயப்படுகிறோம். நாம், நம்முடைய தனிப்பட்ட அஹங்காரத்தோடு நம்மை இணைத்துக் கொள்கிறோம். நாம் மற்றவர்களிடமிருந்து எவ்வாறு உணர்க்கவே விரும்புகிறோம்.
நம் மனத்திற்குத் தெரியும், அது திறந்துகொண்டால் ஆத்மாவும், பரமாத்மாவும் ஒன்றாகிவிடும் என்று! இந்த உடலில் உள்ள ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே, இரண்டிற்கும் இடையில் வேறுபாடு இல்லை என்பதை மனம் அறியும். அதனால்தான் நம் மனம், அது 'மூடியைத் திறந்தால், நம்முடைய அடையாளங்களை இழந்து, மற்ற எல்லோரையும் போல ஆகிவிடுவோம்' என்று அஞ்சுகிறது; இது நிகழ, அது விரும்புவதில்லை.
அதனால், நாம் நம் தனி அஹங்காரத்தை இறுகப் பற்றிக்கொள்கிறோம். நாம் எல்லோருமே ஒன்றாக இணைக்கப்பட்டவா்கள்தான் என்பதையும், இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றுமே ஒரே பிரபஞ்ச விழிப்புணர்வுதான் என்பதையும் உணர்ந்தால் மட்டுமே, நாம் அந்தப் பெட்டியை உடைத்துத் திறந்து, பரமாத்மாவுடன் இணைவோம்.
உடலிற்கும் மனத்திற்கும் சீனேகிதனாக இருங்கள்
கிருஷ்ணர், உணர்வதற்கான ஒரு நுட்பத்தைத் தருகிறார். அவர் இதைச் சொல்லி முடிக்கிறார்: தூய்மையான விழிப்புணர்வாக இருந்து, ஸாக்ஷியாகயிருந்து கவனித்தால், உடல்-மனம் என்ற விடுதலையடைவோம், விழிப்புணர்வை அடைவோம்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுளுங்கள், க்ஷுத்ரத்தை, ஸாக்ஷியாகயிருந்து உடல்-
க்ஷத்ரத்தை, ஸாக்ஷியாகயிருந்து கவனிப்பதுதான் உடல்-மனம் என்ற பற்றிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதற்கான ஒரே வழி.
விடுவித்துக் கொள்வதற்கான ஒரே வழி. நாம் கிஷ்த்ருஜ்ஞனாக, அனைத்தையும் ஸாக்ஷியாகயிருந்து கவனிக்க நாம் அதைச் செய்யும்பொழுது, நம் உடல்-மனத்திலிருந்து ஆத்மாவைக் காண்போம்.
நமது உட்டலை நாம் அசைக்கும் விதமே, ருமது உடல்-மன அமைப்பின் ஒரு எதிர்ச்செயல்கான்.
புரிந்துகொள்ளுங்கள், நம்முடைய எதிர்ச்செயல்கள், அசைவுகள், மனவெழுச்சிகள் அமைப்போடு 'உடல்-மனம்' தொடர்புள்ளவையே. நமது உடலை நாம் அசைக்கும் விதமே, நமது உடல்-மன
அமைப்பின் ஒரு எதிர்ச்செயல்தான். நமது மன எழுச்சிகளான கோபம், சிரிப்பு, சோகம், மகிழ்ச்சி ஆகியவை, நம் மனத்தின் எதிர்ச்செயல்களே. இவையனைத்துமே நமது உடல்-மன அமைப்பினால் உருவாக்கப்பட்ட அசைவுகளே.
நம்முடைய உடல்-மன அமைப்பில் நிகழ்கிற இந்த அசைவுகளை, நாம் ஒரு ஸாஷியாக இருந்து பார்க்கும்பொழுது, நம் உடல்-மன அமைப்பிலிருந்து நம்மை விலக்கிக்கொள்கிறோம். விண்ணில் தவழ்ந்து செல்லும் மேகங்கள், விண்ணைப் பாதிப்பதில்லை: திரையில் ஒடும் காட்சிகள், திரையைப் பாதிப்பதில்லை; அதேபோல் உடல்-மன அமைப்பில் ஏற்படும் மனவெழுச்சிகள், நம் ஆத்மாவைப் பாதிப்பதில்லை.
நமது எண்ணங்களையும் மன எழுச்சிகளையும் ஸாக்ஷியாகயிருந்து கவனிக்கிறோம் கட்டுப்படுத்தப்படும் ஒரு எண்ணமே. அதுவும்கூட நமது எண்ணமே. மனம், இன்னமும் மறைமுகமாக வேலைசெய்து கொண்டிருக்கிறது என்பதையே அது காட்டுகிறது. அந்த ஒரு எண்ணத்திற்கும் அப்பால் சென்றால்தான், தித்ய விழிப்புணர்வை நாம் அனுபவமாகக் காண்போம்.
அந்த நுட்பத்தை இப்பொழுது நான் உங்களுக்கு விளக்குகின்றேன். அந்த நுட்பத்தைச் செய்ய குறைந்தது பத்து நிமிடங்களாகவது ஆகும்.
நீங்கள் உங்களுடைய உடல் அசைவுகளை, மூச்சின் அசைவுகளை, மன அசைவுகளைக் கவனிக்கப் போகின்றீர்கள்.
உடலின் அசைவுகள், மூச்சின் அசைவுகள், மனத்தின் அசைவுகள் என்றால் என்ன? என்று நீங்கள் கேட்கலாம்.
புரிந்துகொள்ளுங்கள், உள்மூச்சின்பொழுதும், வெளிமூச்சின்பொழுதும், உங்கள் வயிறு சற்று மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருக்கும். உங்கள் மூச்சுகளின்பொழுது, உங்கள் வயிறு மிக மெதுவான அசைவுகளோ(டு இருக்கும்.
ஸாக்ஷியாகயிருந்து அந்த அசைவுகளையே கவனியுங்கள்.
இரண்டாவதாக, உங்கள் உள் மூச்சு, வெளி மூச்சுகளின்பொழுது, அதைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் செய்யாமல், உங்கள் மூச்சின் ஒட்டத்தையே கவனியுங்கள்.
உடலோடும் மனத்தோடும் தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பதால் மட்டுமே. அவற்றின் பிழயிலிருந்து குப்பிவிட முடியாது.
மூன்றாவதாக, மனத்தைக் எண்ணங்கள் கவனியுங்கள். அங்கே ஒடிக்கொண்டேயிருக்கும், உங்கள் எண்ணங்களெல்லாம் சரியா. தவறா கொண்டிருக்காதீர்கள். ஒரு நிமிடங்களுக்கு சினேகிதனைப்போல, உங்கள் மனத்திற்கு அருகில் அமருங்கள். அது என்ன சொல்ல விரும்பினாலும்,
அனுமதியுங்கள். அது என்ன பேச விரும்பினாலும், அதைப் பேச அனுமதியுங்கள்.
எந்தவிதமான பெற்றும் இல்லாமல், அவை எல்லாவற்றையும் கவனியுங்கள், கட்டுப்படுத்தாதீர்கள். அவற்றின் கொண்டிருக்காதீர்கள்.
தொடர்ந்து நாம் போராடிக்கொண்டே இருக்கிறோம். அவற்றோடு தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பதால் மட்டுமே, அவற்றின் பிடியிலிருந்து தப்பிவிட முடியாது. நட்புத்தன்மையுடன் அணுகுவதன் மூலமாகவே, அவற்றுக்கப்பால் கடந்துசெல்ல முடியும்.
உடல்-மனத்தோடு இயற்கையாகவே, அவற்றை அவதூறு செய்வோம்; அவற்றுடனான உறவு வன்முறையோக்குடன்தான் இருக்கும்.
உடலையும் மனத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். மனத்தை ஒரு நல்ல நண்பனைப்போன்று கவனியுங்கள். உள்ளிருந்து எது வேண்டுமானாலும் வெளிவர விடுங்கள்; அதில் தவரேயில்லை. மனத்தை ஆதரிக்கவும் செய்யாதீர்கள். அடக்கவும் செய்யாதீர்கள். நாம் அதை ஆதரித்தால், வெறும் குப்பைகளின் பின்னால்தான் செல்வோம்.
நாம் அதை அடக்கினால், அந்தக் குப்பைகளைக் கிளறி ஆராய்ந்துவிட்டு,
மீண்டும் தள்ளுவதில்தான் போய் முடியும். ஆக, இந்த இரண்டு வழிகளுமே பயன்தராது. அதனால் வெறுமனே கவனியுங்கள்.
'கவனித்தல்' என்பது நெருப்பைப்போல் வேலைசெய்கிறது. எல்லா எண்ணங்களையும் எரித்து விடுகிறது. புரிந்துகொள்ளுங்கள், உங்கள் எண்ணங்களை ஆதரிப்பதோ அல்லது அடக்குவதோ உதவாது, 'கவனித்தல்' மட்டுமே பயன்தரும்.
புரிந்துகொள்ளுங்கள், உங்கள் எண்ணங்களை ஆதரிப்பதோ அல்லது அடக்குவதோ உதவாது, கவனித்தல் மட்டுமே பயன்தரும்.
நாம் நம் இருப்பினுள் இன்னும் ஆழமாகச் செல்லும்பொழுது, இந்த ஸாக்ஷி பாவனை, இயல்பாகவே புத்திசாலித்தனத்தை உருவாக்குகிறது. புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் நாள் முழுக்க, 24 மணி நேரமும், அதே மன நிலையில் இருக்க வேண்டியதில்லை. ஒரு கண நேரக் காட்சி கிடைத்தாலே போதுமானது. அந்தச் சக்தியானது நமது மொத்த வாழ்க்கைக்குமே வழிகாட்டியாக இருக்கும்.
சாதனைகளுக்குச் சாத்தியமான சக்தியைப் பெறுங்கள்
நாம் ஒரு ஸாக்ஷியாக இருக்கும்பொழுது, நமக்குள் நிகழும் அமைதியைப் புரிந்துகொண்டோமேயானால், அது ஒரு சில நொடிகளேயானாலும்கூட, நாம் அந்த இனிமையைச் சுவைப்போம்; பின்பு, அதை அடிப்படையாகக்கொண்டு செயல்படத் தொடங்குவோம். அந்த ஒரு சில நிமிட நேரத்திலிருந்துதான், பெரிய பெரிய சாதனைகளுக்குச் சாத்தியமான சக்தி நிகழ்கிறது.
மிகப்பெரிய சாதனைகளும், கண்டுபிடிப்புகளும், உடல்-மனம் கடந்த விழிப்புணர்வாலும் உள்ளுணர்வாலும்தான் கிடைக்கப் பெற்றன. ஸாக்ஷி விழிப்புணர்வின் படைப்புகளே அவை.
இது விஞ்ஞான உலகிற்கு மட்டுமல்ல, கலை, ஆன்மிகம் போன்ற எல்லாத் துறைகளுக்குமே பொருந்தும். உடல் – மன அமைப்பைக் கடந்த
மிகப்பெரிய சாதனைகளும், கண்டுபிழப்புகளும், உடல்-மனம் கடந்த விழிப்புணர்வாலும் உள்ளூணர்வாலும்தான் கிடைக்கப் பெற்றன!
நிலையில், நாம் நம் 'இருப்பி'லிருந்து உச்ச ஆற்றல்களை வெளிப்படுத்துவோம்.
நாம் முழுமையாக இருக்கும்பொழுது, நமது இருப்பின் உச்ச வெளிப்பாடு நிகழ்கிறது. முழுமையாக இருக்கிறோமோ, அப்பொழுது நாம் புனிதமாக இருக்கிறோம். புரிந்துகொள்ளுங்கள், அல்லது புனிதத்திற்கோ ஒரே வழி, ஸாக்ஷியாக இருத்தல் மட்டுமே.
தூய்மையான அருளுமாறும்,
அருளுமாறும், ஒப்புயர்வற்ற இறுதி அனுபவத்தை அருளுமாறும், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிலைநிறுத்துமாறும், பரமக்ருஷ்ணரிடம் பிரார்த்திப்போம்.
கேள்வி: இருப்பவர்களும் வெண்மை நிற ஆடைகளையே அணிகிறார்கள்? காவி உடைகள் உடுக்க வேண்டுமானால், அதற்கான தகுதி என்ன?
வெவ்வேறு நிறங்கள், உடலளவிலும் மனதளவிலும் வெவ்வேறு விளைவுகளை நிகழ்த்த வல்லவை. வெவ்வேறு நிறங்கள், வெவ்வேறு வழிகளில், உங்களுடைய சக்தியைப் பாதிக்கின்றன.
வெண்மை நிறம், உங்களை அமைதிபடுத்துகிறது; நேர்மறை
சக்தியை எளிதில் ஈர்த்து தக்கவைத்துக் கொள்கிறது. இப்போது நான் ஒளியையும் வெப்பத்தையும் பிரதிபலிக்கும் பொதுவான வெண்மை கோட்பாட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கவில்லை.
பிரபஞ்சத்தின் வெளிப்பாடான குருவின் மீதோ அல்லது பிரபஞ்ச சக்தியின் மீதோ நீங்கள் தியானம் செய்யும்பொழுது, வெண்மையான ஆடைகள் அணிந்திருந்தால், உங்களை ஒருமுகப்படுத்துவதற்கோ, உங்கள் கவனத்தை ஒருங்கிணைப்பதற்கோ ஆன திறன் அதிகரிக்கும். தியானப் பயிற்சி வகுப்புகள் நடக்கும்பொழுது, மக்களை வெண்மை நிற ஆடைகளை அணியுமாறு நாங்கள் பரிந்துரைப்பதற்கான காரணம் இதுவே.
நகைச்சுவையாகச் சொல்வதென்றால், அவர்கள் அணியும்பொழுதுதான், தங்களுடைய ஆடைகளை எந்தளவிற்குச் சுத்தமாக வெளுக்கிறார்கள் என்பதைக் கண்டுகொள்ள எளிதாக இருக்கிறது!
வெளிர் நிறங்கள், அமைதியை, ஸத்வ மன நிலையை மேம்படுத்தும்.
வெவ்வேறு நிறங்கள், உடலளவிலும் மனதளவிலும் வெவ்வேறு விளைவுகளை நீகழ்த்த வல்லவை.
பிரகாசமான நிறங்கள், உங்களுள் உள்ள, எதிர்த்துப் போராடும் தன்மை, போராசை போன்ற வெளிக்கொணரும்.
கருப்பு போன்ற ஆழ்ந்த நிறங்கள், உங்களுடைய மந்தத்தன்மையை அதிகரிக்கும்.
நீங்கள் அடைய வேண்டுமென போட்ட திட்டத்தைப் பொறுத்து, அதை அடைவதற்கான மனோ நிலையை நீங்கள் அடைய உதவும் நிறத்தை, நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
சங்கீதம், ஒலி, நறுமணம், வாசனை, உணவு, ருசி ஆகிவற்றுக்கும் அதே அடிப்படை உண்மைகள் பொருத்தும். அதனால்தான் பக்திப்பாடல்கள் ஒரு குறிப்பிட்ட இராக தாளங்களையும் 'ராக்', சங்கீதம் வேறு விதமான இராக தாளங்களையும் பின்பற்றுகின்றன. 'டெக்னோ' போன்ற சங்கீதம்
மன ஆரோக்கியத்துக்கும், கேட்கும் சக்திக்கும் கேடு விளைவிப்பவை என்று ஆராய்ச்சிகள்மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
'காவி' நிறம், ஒரு சிறப்பு மிகுந்த நிறம். இது, பாரதத்தைத்தவிர, வேறெந்த தேசத்திலும், இவ்வளவு பிரசித்தமான ஒரு நிறமாக இருக்குமா என்பது சந்தேகந்தான். இது துறவுக்கான நிறம். இது, நீங்கள் பிரபஞ்ச சக்தியிடம், உங்கள் அடையாளத்தை இழந்து, சரணாகதி அடைவதையே குறிக்கிறது; உங்களுடைய மனத்தை இழந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
சீடர்களுக்குள்ளிருக்கும் வெவ்வேறு துறவு நிலைகளுக்கு ஏற்ப, அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையை அவர்களுக்கு நினைவூட்டி, அவர்கள் தொடர்ந்து அப்பாதையில் முன்னேறிச் செல்ல உதவுவதில் காவிநிறம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குருவால் சக்தியூட்டப்பட்டு, அவருடைய ஆசீர்வாதத்துடன் தரப்படும்போது, அந்தக் காவிநிறம் மேலும் புனிதத் தன்மை மிக்கதாகிறது.
இந்த நிறம் தனக்கே உரிய மேன்மையும் கம்பீரமும் கொண்டதாகும். இந்த நிறம், ஒரு தகுதியான நபர் அணியும்போது, அரசாட்சியோடு சம்பந்தப்பட்ட ஊதா நிறத்தைக் காட்டிலும், இன்னும் அதிக மேன்மையையும் கம்பீரத்தையும் தருகிறது. இந்த நிறம், பிரபஞ்சத்தோடு உங்களை ஒன்றிணைக்கிறது.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞ விபாக யோக்கோ நாம த்ரயோதசாத்யாய: ||
இது ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய 'க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்' எனப் பெயர் படைத்த பதின்மூன்றாவது அத்தியாயம்.
ஸ்லோகங்கள்
அத த்ரயோதசோ' த்யாய: பதின்மூன்றாவது அத்தியாயம்
க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோக: க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்
அர்ஜூந உவாச
ப்ரக்ரு'திம் புருஷம் சைவ க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞமேவ ச / ஏதத்வேதிதும் இச்சாமி ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச கேச'வ // 13.0
அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னார்; ப்ரக்ரு'திம் - இயற்கை; புருஷம்- அனுபவிப்பவன்: ச - அதுவும்: ஏவ - அப்படியே: க்ஷேத்ரம் - சரீரம்; க்ஷேத்ரஜ்ஞ - சரீரத்தைப் பற்றி அறிந்தவர்; ஏவ - அப்படியே; ச - அதுவும்; ஏதத் - இதை; வேதிதும்- புரிந்துகொள்ள; இச்சாமி -விரும்புகிறேன்; ஜ்ஞாநம் - அறிவு, ஜ்நேயம் - அறியப்படும் பொருள்; ச - அது; கேச்வ - பகவானே
அர்ஜுனன் சொன்னது
13.0 ஒ கேசவா, பிரகிருதி மற்றும் புருஷ எனப்படும் செயல்படும் மற்றும் செயலற்ற சக்திகளையும் களம் மற்றும் களத்தை அறிந்தவரையும், அறிவு மற்றும் அறிவின் முடிவையும் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் விரும்புகிறேன். (சில பதிப்புகளில் இச்சுலோகம் இடம்பெறுவதில்லை)
ஸ்ரீபகவாந் உவாச
இதம் ச'ரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபிதீயதே / ஏதத்யோ வேத்தி தம் ப்ராஹு: க்ஷேத்ரஜ்ஞ இதி தத்வித: // 13.1
ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீபகவான் சொன்னார்; இதம் - இந்த; ச'ரீரம் - உடல்; கௌந்தேய - குந்தி புத்திரா; க்ஷேத்ரம் - களம்; இதி -என்ற பெயரால்; அபிதீயதே - அழைக்கப்படுகின்றது; ஏதத் - இதை; ய: - எவன்; வேத்தி - அறிகின்றானோ; தம் - அவனை; ப்ராஹு; -சொல்கின்றார்கள்; க்ஷேத்ரஜ்ஞ: - களமறிந்தவன்; இதி - என்று; தத்வித: - தத்துவம் அறிந்த ஞானிகள்
ஸ்ரீபகவான் சொன்னது
13.1 ஓ, குந்தி மகனே, இந்த உடலைத்தான் 'களம்' என்கிறோம். யாரொருவர் இந்த உடலைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறாரோ அவரைத்தான் 'களமறிந்தவர்' என்கிறோம்.
க்ஷேத்ரஜ்ஞும் சாபி மாம் வித்தி ஸர்வக்ஷேத்ரேஷு பாரத / க்ஷேத்ரக்ஷ்த்ரஜ்ஞயோர்ஜ்ஞாநம் யத்தஜ்ஜ்ஜ்ஞாநம் மமம் மம // 13.2
க்ஷேத்ரஜ்ஞும் ச அபி - களத்தை அறிந்தவனும்; மாம் - நானே என்று; வித்தி - தெரிந்து கொள்: ஸர்வக்ஷேத்ரேஷு - எல்லா சரீரங்களிலுமுள்ள : பாரத - பரத குலத்தில் உதித்தவனே; க்ஷேத்ரஜ்ஞ்ஞயோ:- இந்த உடலையும் இந்த உடலை அறிந்த படைப்பாளியையும் பற்றிய; ஜ்ஞாநம் - அறிவு; யத் - எது; தத் - அதுதான்; ஜ்ஞாநம் - ஞானம்; மதம் -கருத்து; மம - என்னுடைய
- 13.2 ஒ பரத குலத்தில் உதித்தவனே, சிருஷ்டிகர்த்தாவாகிய நானே களமறிந்தவனாக எல்லா உடல்களிலும் இருக்கிறேன் என்பதைப் புரிந்துகொள். என்னுடைய அபிப்பிராயப்படி 'அறிவு' என்றால், படைத்தலுக்குரிய களமான இந்த உடலையும், இந்த உடலை அறிந்த படைப்பாளியையும் புரிந்துகொள்வதே.
தத் க்ஷேத்ரம் யச்ச யாத்ரு'க்ச யத்விகாரி யதச்'ச யத் / ஸ ச யோ யத்ப்ரபாவச்'ச தத்ஸமாஸேந மே ச்'ரு'ணு // 13.3
தத் - அந்த; க்ஷேத்ரம் - சீரீரம்; யத் - எது ?; ச - மேலும்; யாத்ரு'க் - எத்தகையது?; ச- அப்படியே; யத்விகாரி - எந்த விகாரங்ளோடு கூடியது?; யத: - எதிலிருந்து; ச - மேலும்; யத் - எது உண்டாயிற்று ?; ஸ: - அந்த; ச - மேலும்; ய: - யார்?; யத்ப்ரபாவ: - எத்தகைய பெருமை கொண்டவன்?; ச - மேலும்; தத் - இவையனைத்தையும்; ஸமாஸேந -சுருக்கமாக; மே - என்னிமிடமிருந்து; ச்'ரு'ணு - கேள்
- 13.3 செயல்பாடுகள் நிறைந்த இந்தக் களத்தைப் பற்றியும், அது எப்படி உருவாக்கப்பட்டது, அது எப்படி அமைக்கப்படுகிறது, மற்றும் அதன் மாற்றங்கள் என்ன என்பதையும், அந்தக் களத்தைப் பற்றித் தெரிந்தவர் யார், அவருடைய மஹிமைகள் என்ன என்பதையும் புரிந்துகொள்வாயாக.
ரு'ஷிபிர்பஹுதா கீதம் சந்தோபிர்விவிதை: ப்ரு'தக் / ப்ரஹ்மஸூத்ரபதைச்'சைவ ஹேதுமத்திர்விநிச்'சிகை: // 13.4
ருஷிபி: - ரிஷிகளால்; சந்தோபி: - வேத மந்தரங்கள் மூலமாகவும்; விவகை: - பலவிதமான; ப்ருதக் - தனித்தனியாகப் பிரித்து; ப்ரஹ்மஸூத்ரபதை: ஏவ ச- வேதாந்த பதங்களாலும்; ஹேதுமத்பி: - யுக்திகளோடு கூடிய; விநிச் சிதை:-விளக்கப்பட்டுள்ளது
13.4 செயல்பாடுகள் நிறைந்த இந்தக் களத்தைப் பற்றிய அறிவையும், இந்தக் களத்தைப் பற்றி அறிந்தவனைப் பற்றிய அறிவையும் பல்வேறு ஞானிகள் வேத நூல்களில் விளக்கியுள்ளார்கள். இது காரண காரிய விதிகளோடு, சரியான தர்க்கத்துடன் விளக்கப்பட்டுள்ளது.
மஹாதுதாந்யஹங்காரோ புத்திரவ்யக்தமேவ ச / இந்த்ரியாணி தசை'கம் ச பஞ்ச சேந்த்ரியகோசரா: // 13.5
இச்சா த்வேஷ: ஸுகம் து:கம் ஸங்காதச் சேதநா த்ரு'தி: / ஏதத் க்ஷேத்ரம் ஸமாஸேந ஸ்விகாரமுதனுறைரு'தம் // 13.6
மஹாததாநி - நுண்ணிய ஐம்பெரும் பூதங்களும்; அஹங்கார: -அஹங்காரமும்; இந்த்ரியாணி தச' - பத்துப் புலன்களும்; ஏகம் ச - மனமும்; பஞ்ச இந்த்ரியக்காசரா: - புலன் விஷயங்கள் ஐந்து; இச்சா - விருப்பு; த்வேஷ - வெறுப்பு;ஸுகம் - இன்பம்; து:கம் - துன்பம்; ஸங்கரத: - உடற்கட்டு; சேதநா - சைதன்ய சக்தி; த்ருதி - உறுதி; ஏதத் - இந்த; சீரீரம்; ஸமாஸேந - சுருக்கமாக;ஸவிகாரம் - ஆகிய மாறுபாடுகளுடைய; உதாஹ்ரு'தம் - சொல்லப்பட்டது
- 13.5,6 இயற்கையின் ஐந்து மூலப்பொருட்களான பஞ்சபூதங்கள், தவறான அஹங்காரம், புத்திசாலித்தனம், உருவமற்றத் தன்மை, மனம், உணர்ச்சிப் புரிதலை ஏற்படுத்தும் புலன்கள் ஐந்து, செயல்புரியும் புலன்கள் ஐந்து, புலன் விஷயங்கள் ஐந்து, விருப்பு, வெறுப்பு, சந்தோஷம், துக்கம், வாழ்வின் அடையாளம் மற்றும் உறுதி - இங்ஙனம் செயல்பாட்டுக்குரிய இந்தக் களத்தைப் பற்றியும் மற்றும் அவற்றுக்கிடையே நடைபெறும் உட்செயல்கள் பற்றியும் சுருக்கமாகச் சொல்லப்பட்டன. அமாநித்வமதம் பீத்வமஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம் / ஆசார்போபாஸ்ம் செ'ளசம் ஸ்தைர்யமாத்மவிநிக்ரஹ: //13.7
இந்த்ரியார்கேஷூ வைராக்யமநவரங்கார ஏவ ச / ஜந்மம்ரு'த்யுஜராவ்யாதி து:கதேஷாநுதர்ச'நம் // 13.8
அஸக்கிராபிஷ்வங்க: புக்ரதார்க்ரு'ஹாதிஷு / நித்யம் ச ஸமசித்தத்வமிஷ்டாநிஷ்டோபபத்திஷு //13.9
மயி சாநந்யயோகேந பக்திரவ்யபிசாரிணீ / விவிக்ததே ச'ஸேவித்வமரதிர்ஜநஸம்ஸதி // 13.10
அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்த்வஜ்ஞாநார்ததர்ச'நம் / ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநம் யததோடந்யதா // 13.11
அமாநித்வம் அஹிம்ஸா - துன்புறுத்தாமை; க்ஷாந்தி: - பொறுத்துக் கொள்ளுதல்; ஆர்ஜவம் - எளிமை; ஆசார்ய உபாஸநம் - சிரத்தையுடனும், பக்தியுடனும் குருவுக்குப் பணிவிடை செய்தல், செள சம் -உள்ளும் புறமும் தூய்மையாக இருத்தல்; ஸ்தைர்யம் - உள்ளத்தின் உறுதி; ஆத்மாவிநிக்ரஸ; - மனம் புலன்களோடு கூடிய உடலைக் கட்டுப்பத்துதல்; இந்த்ரிய அர்தேஷு - இவ்வுலக பரலோக போகங்கள் அனைத்திலும்; வைராக்யம்- பற்றற்றத் தன்மை; ச - மேலும்; அநஹங்கார: ஏவ - அஹங்காரம் இல்லாமை; ஜந்ம ம்ருதயு ஜரா வ்யாதி து:க தேர்ஷ அநுதா்ச'நம் - பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய் இவற்றில் உள்ள துக்கத்தையும் குறைபாடுகளையும் திரும்பத் திரும்பச் சிந்தித்துப் பார்த்தல்; அஸக்தி - பற்றின்மை; அநபிஷ்வங்க:- தன்னுடையது என்ற எண்ணமின்மை; புத்ர தார்க்ரு'ஹாதிஷு - மனைவி, மக்கள், வீடு, செல்வம் இவற்றில்; நித்யம் - எப்போதுமே; ச - அவ்வாறே; ஸமசித்தத்வம் - ஸ்மபாவனையுடன் இருத்தல்; இஷ்ட அநிஷ்ட உபபத்ஷு - வேண்டியன வேண்டாதனவற்றை அடையும் போது; மயி - பரமேசுவரனான என்னிடத்தில்; அநந்யயோகே ந - வேறு எதையும் எண்ணாத யோகத்தின் மூலம்; பக்தி; அவ்யாசிசாரிணீ -பிறழாதவிவிக்த தேச'ஸேவித்வம் - தனிமையில் தூய்மையான இடத்தில் வாழும் இயல்பு; அரதி - விருப்பம் கொள்ளாதிருத்தல்; ச -மேலும்; ஜநஸம்ஸதி - உலகியலில் ஈடுபாடு கொண்ட மனிதர்களுடைய கூட்டத்தில்; அத்யாத்மஜ்ஞாந நித்யத்வம் - அத்யாத்ம ஞானத்தில்
எப்பொழுதும் நிலைத்து நிற்றல்; தத்த்வஜஞாந அர்ததா்ச'நம் -தத்வஞானத்தின் பொருளான பரமாத்மாவையே தரிசனம் செய்தல்; ஏதத் - இவையெல்லாம்; ஜ்ஞாநம் - ஞானம்; இதி - என்றும்; ப்ரோக்தம் - சொல்லப்பட்டது; அஜ்ஞாநம் - அஞ்ஞானம்; யத் - எது; அத: -அதனிலும்; அந்யதா -மாறுபட்டதோ
13.7-11 பணிவு, கர்வமின்மை, அஹிம்ஸை, சகிப்புத்தன்மை, எளிமை, ஒரு ஞானகுருவுக்குச் சேவைசெய்தல், தூய்மை, மனஉறுதி, சுயக்கட்டுப்பாடு;
- புலன்களைத் திருப்தி செய்யும் பொருட்களைத் துறத்தல், அஹங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, முதுமை, வியாதி அகியவற்றின் சுமற்சியை அறியும் திறன் ; குழந்தைகள், மனைவி, வீடு மற்றும் பிறவற்றின்மீது பற்றின்மை, சுக, துக்கங்களில் சமநிலையில் இருத்தல்;
என்னிடத்தில் நிலையான கலப்படமற்ற பக்தி, ஏகாந்தமான இடங்களில் வசித்தல், பொது மக்களிடமிருந்து விலகிவசித்தல்; 'தன்னை உணர்தலின்' முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்ளுதல், இறுதி சத்தியத்திற்கான தத்துவத் தேடல்; - இவையெல்லாம்தான் 'புத்திசாலித்தனம்' என்றும், இதற்கு எதிர்மறையாக உள்ள எல்லாவற்றையும் 'அறியாமை' என்றும் வலியுறுத்துகிறேன்.
ஜ்ரேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வாம்ரு'தமச்'நுதே / அநாதிமத்பரம் ப்ரஹ்ம ந ஸத்தந்நாஸதுச்யதே // 13.12
ஜ்னேயம் - அறியப்படவேண்டியதோ; யத் - எது; தத் - அதை; ப்ரவக்ஷ்யாமி - விளக்கிகூறுவேன்; யத் - எதை; ஜ்ஞாத்வா- அறிந்து; அம்ரு'தம் - பரமானந்தத்தை; அச்'நுதே -அடைகின்றானோ; அநாதி மத் - ஆதியில்லாத; பரம் ப்ரன்ம - பரப்ரஹ்மம்; ந - இல்லை; ஸத் - ஸ்தி என்றும்; தத் - அந்த; ந அஸத் என்றும்; உச்யதே -சொல்லப்படுகிறது
- 13.12 எது அறியப்படவேண்டியதோ, எதை அறிந்து மனிதன் பரமானந்தத்தை அடைகிறானோ அதை விளக்கிக் கூறுவேன். அது தொடக்கமற்றது, காரண-காரியங்களுக்கு அப்பாற்பட்டது, உலகியலுக்கு அப்பாற்பட்டது.
ஸர்வத: பாணிபாதம் தத்ஸர்வதோ≤க்ஷிசிரோமுகம் / ஸா்வத: ச்'ருதிமல்லோகே ஸர்வமாவ்ரு'த்ய திஷ்டதி // 13.13
ஸர்வத: - எங்கும்; பாணிபாதம் - கைகால்களை உடையது; தத் - அது; ஸர்வத்: - எங்கும்; அக்ஷிசிர; முகம் - கண், தலை, முகங்களோ(டு கூடியது; ஸர்வத்: - எங்கும்; ச்'ருதிமத் - காதுகளை உடையது; லோகே - உலகில்; ஸர்வம் - அனைத்தையும்; ஆவ்ரு'த்ய - வயாபித்து; திஷ்டதி - நிற்கின்றது
13.13 எங்கும் கைகால்களை உடையதாகவும், எங்கும் கண், தலை, முகங்களோடு கூடியதாகவும், எங்கும் காதுகளை உடையதாகவும் அது உலகனைத்தும் வியாபித்து நிற்கிறது.
ஸர்வேந்த்ரியகுணாபரஸம் ஸா்வேந்த்ரியவிவர்ஜிதம் / அஸக்தம் ஸா்வப்ரு'ச்சைவ நிர்குணம் குணபோக்த்ரு' ச // 13.14
ஸர்வ இந்த்ரியகுண ஆமாஸம் - எல்லாப் புலன் நுகா் பொருட்களை அறிவது; ஸா்வ இந்த்ரிய விவர்ஜிதம் - புலன்கள் அற்றது; அஸக்தம் -ஒன்றிலும் பற்றற்றது; ஸா்வப்ருத் ச ஏவ - எல்லாவற்றையும் தாங்குவது, காப்பது; நிர்குணம் - குணமற்றதாக இருந்தாலும்; குணபேரக்த்ரு' -குணங்களை அனுபவிப்பது; ச - மேலும்
13.14 பரமாத்மாவோவே எல்லாப் புலன்களுக்கும் அடிப்படை அதாரம். ஆனாலும் அது உண்மையில் எல்லாப் புலன்களுக்கும் அப்பாற்பட்டது, எதன்மீதும் பற்றற்றது. எல்லா ஜீவராசி களைக் காப்பது அதுவே, இருந்தாலும் இயற்கையின் எல்லா செயல்வகைகளையும் கடந்தது, அதே சமயத்தில் நமது உலகியல் ரீதியான இயற்கை செயல் வகைகளில் தலைசிறந்த நிபுணத்வம் மிக்கதாக இருக்கிறது.
பஹிரந்தச்'ச பூதாநாமசரம் சரமேவ ச / ஸூக்ஷ்மத்துவிஜ்ஞேயம் தூஸ்தம் சாந்திகே ச தத் // 13.15
பஹி: - புறமும்; அந்த: ச - உள்ளும்; சரம் - அசைவன; அசரம் ஏவ ச -அசையாதனவற்றின் வடிவிலும் கூட; பிராணிகளினுடைய; ஸூக்ஷ்மத்வாத் - நுண்ணியதாக இருப்பதால்; தத் - அது; அவிஜ்ஞேயம் - அறிய முடியாதது; தூரஸ்தம் ச - மிகுந்த தூரத்திலும் இருப்பது; அந்திகே ச - மிக அருகிலும்; தத் - அதுவே
13.15 சராசரமான எல்லாப் பிராணிகளினுடைய உள்ளும் புறமும் அது நிறைந்திருக்கிறது. நுண்ணியதாக இருப்பதால் பார்க்க முடியாததாக இருக்கிறது, எட்டமுடியா தூரத்தில் இருந்தாலும் எல்லோருக்கும் அருகில் இருக்கிறது !
அவிபக்தம் ச பூதேஷு விபக்தமிவ ச ஸ்திதம் / பூதாபர்த்ரு' ச தஜ்ஜ்ஜேருயம் க்ரஸிஷ்ணு ப்ரபவிஷ்ணு ச//13.16
அவிபக்தம் பூதேஷு- சராசரமாகின்ற பிராணிகள் அனைத்திலும்; விபக்தம் இவ ச - பிரிக்கப்பட்டுத் தனித்தனியாக இருப்பது போன்ற; ஸ்திதம் -தோற்றத்தை அளிக்கின்றது; பூதபர்த்ரு' - ஸகல பிராணிகளையும் தாங்கிப் பேணிக் காப்பது; ச - மேலும்; தத் - அந்தப் பரப்ரஹ்மம்; ஜ்ரேயம் - அறியத்தக்க; க்ரஸிஷ்ணு - அழிப்பது; ப்ரபவிஷ்ணு ச-படைப்பதும்
13.16 பார்ப்பதற்குத் தனித்தனியாகப் பிளவுபட்டதுபோல் தோன்றினாலும் அதுபிளவுபடாதது. ஸகல பிராணிகளையும் பேணிக் காப்பதென்றாலும் அழிப்பதாகவும் படைப்பதாகவும் அதுவே இருக்கிறது.
ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்ஜ்யோதிஸ்தமஸ: பரமுச்யதே / ஜ்ஞாநம் ஜ்ரேயம் ஜ்ஞாநகம்யம் ஹ்ரு'தி ஸா்வஸ்ய விஷ்டிதம் // 13.17
ஜ்யோதிஷாம் அபி - ஒளிகளுக்கெல்லாம்; தத் - அந்தப் பரப்ரஹ்மம்; ஜ்யோத் - ஒளி; தமஸ - மாயைக்கு; பரம் - அப்பாற்பட்டது; உச்யதே -என்று சொல்லப்படுகின்றது; ஜ்ஞாநம்- அறிவு; ஜ்ஞேயம் - அறியப்பட வேண்டியது;ஜ்ஞாநகம்யம் ஹ்ருதி - இதயத்திலும்; ஸர்வஸ்ய - எல்லோருடைய; விஷ்டிதம் -நிலைக்கிருக்கிறது
13.17 அந்தப் பரமாத்மன் ஒளிரும் பொருட்களின் ஒளிக்குக் காரணமாக, அதாரமாக இருக்கிறது. இருளுக்கெல்லாம் அப்பாற்பட்டது, உருவமற்றது, ஞான வடிவானது, அறியப்படவேண்டியது, ஞானத்தினால் அடையப்பட அடையப்பட எல்லோருடைய இதயத்திலும் நிலைத்திருக்கிறது.
இதி கேஷத்ரம் ததா ஜ்ஞாநம் ஜ்ரேயம் சோக்தம் ஸமாஸத: /
மத்பக்த ஏதத் விஜ்ஞாய மத்பவாயோப்பத்யதே // 13.18
இதி - இவ்விதம்; கைஷத்ரம் - சரீரத்தினுடைய ஸ்வரூபம்; ததா - அவ்விதமே; ஜ்ஞாநம் - எனுனமும்; ஜ்ஞேயம் ச -அறியப்படவேண்டியதும்; உக்கம் - சொல்லப்பட்டன; ஸ்மாஸ்க; -சுருக்கமாக;மத்பக்த: - என்னுடைய பக்தன்; ஏதத் - இதை; விஜ்ஞாய - தத்துவரீதியாக அறிந்து; மத்பரவாய - என்னுடைய ஸ்வரூபத்தை; உபபத்யதே - அடைகின்றான்
13.18 செயல்பாடுகள் நிறைந்த இந்தக் களத்தைப் பற்றியும், அறிவைப் பற்றியும், அறியத்தக்கது பெற்றியும், என்னால் உனக்குச் சுருக்கமாகச் சொல்லப்பட்டன. நம்மைப் பற்றித் தவறான அடையாளங்களை நாமே உருவாக்கிக்கொள்ள காரணமான பொருள்சார்ந்த உலகின் இயல்பைப் புரிந்துகொள்ளும்பொழுது மட்டுமே, நம்மால் இந்தப் பொய்யான அடையாளங்களைக் கடந்து மேலான பரமாத்மனை அடையமுடியும் !
ப்ரக்ரு 'திம் புருஷம் சைவ வித்த்யநாதீ உபாவபி / விகாராந்ச்'ச குணாந்ச்'சைவ வித்தி ப்ரக்ரு'திஸம்பவாந் //13.19
ப்ரக்கு'திம் - பிரபஞ்ச இயற்கையையும்; புருஷம் ஏவ ச புருஷனையும்; வித்தி - அறிந்துகொள்; அநாதீ - ஆரம்பமற்றதென; உபௌ - இவ்விரண்டையுமே; அபி - அனைத்தையும்; விகாராந் ச -ராகம் துவேஷம் முதலிய விகாரங்களும் ; குணாந் ஏவ ச - குணங்களும் ; வித்தி - அறிந்துகொள்; ப்ரக்ரு'திஸம்பவாந் - இயற்கையிலிருந்து உண்டானவையே என்று
13.19 பிரகிருதி புருஷன் - இவ்விரண்டுக்குமே தொடக்கம் இல்லை. நாம் பார்க்கிற அனைத்து இயற்கை உணர்வுமாற்றங்களும் பிரகிருதியிலிருந்து உண்டானவையே என்று அறிந்துகொள்.
கார்யகரணகா்த்ரு'த்வே ஹேது: ப்ரக்ரு'திருச்யதே / புருஷ: ஸுகது:காநாம் போக்த்ரு'த்வே ஹேதுருச்யதே// 13.20
கார்யகரணகர்த்ரு'வே - காரியத்தையும் கரணங்களையும் உண்டு பண்ணும் விஷயத்தில்; ஹேது: - காரணம் என்று;ப்ரக்ரு'தி: - இயற்கை; உச்யதே - சொல்லப்படுகின்றது; புருஷ: - ஜீவாத்மா; ஸுகது:காநாம்
ஸுக துக்கங்களை; போக்த்ருவே - அனுபவிப்பதில்; ஹேது: --காரணமென்று; உச்யதே - சொல்லப்படுகின்றான்
13.20 உடலையும் பலன்களையும் உண்டுபண்ணும் விஷயத்தில் பிரகிருதி காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் ஸுக துக்கங்களை அனுபவிப்பதில் புருஷன் காரணமென்று கூறப்படுகிறான்.
புருஷ: ப்ரக்ரு'திஸ்கோ வி புங்க்கே ப்ரக்கு'திஜாந்கணாந்/ காரணம் குணஸங்கோல்ய ஸ்தஸத்யோநிஜந்மஸு // 13.21
புருஷ - மனிதர்; ப்ரக்ருதிஸ்த: ஹி - பொருள் சார்ந்த உலகில் இருந்து கொண்டுதான்; புங்க்தே - அனுபவிக்கின்றான்; ப்ரக்ருதிஜாந் - இயற்கையிலிருந்து உண்டான; குணாந் - முக்குணங்கள் நிறைந்த பொருட்களை; காரணம் - காரணமாகின்றது; குணஸங்க- அந்த குணங்களுடைய தொடர்பே; அஸ்ய - அந்த ஜீவாத்மா; ஸ்த் அஸத் யோநி ஜந்மஸு - நல்லதும் தீயதுமான பிறவிகளில் பிறப்பதற்கு
- 13.21 பொருள் சார்ந்த உலகில் வாழும் ஜீவாத்மா, வாழ்க்கைப் பாதையில் வரும் இயற்கையின் இயல்புகளை அனுபவிக்கிறான். மேலும் அந்தக் குணங்களுடன் தொடர்புகொள்ளும் அந்த ஜீவாத்மா நல்லதும் தீயதுமான பிறவிகளில் பிறப்பதற்கு அந்தக் குணங்களே காரணம்.
உபத்ரஷ்டாநுமந்தா ச பர்தா பேரக்தா மஹேச்'வர: / பரமாத்மேதி சாப்யுக்தோ தேஹேsஸ்மிந் புருஷ: பர: // 13.22
உபத்ரஷ்டா- ஸாக்ஷியாக இருப்பர்;அநுமந்தா - அனுமதி அளிப்பவர்; ச - மேலும்; பர்தா - காப்பவர் என்றும்; போக்தா - அனுபவிப்பவர் என்றும்; மஹேச்'வர - மஹேஸ்வரன் என்றும்; பரமாத்மா இதி ச -பரமாத்மா என்றும்; உக்த - சொல்லப்படுகின்றார்; தேஹே-தேஹத்தில்; அஸ்மிந் - இந்த; புருஷ: - ஜீவாத்மா; அபி - இருப்பினும்; பர: -பரமாத்மா
13.22 இந்த சரீரத்தில் வாழும் அந்தப் புருஷனாகிற ஜீவாத்மா - ஸாக்ஷி, அனுமதிப்பவன், தாங்குபவன், அனுபவிப்பவன், மஹேச்வரன், பரமாத்மன் என்றும் சொல்லப்படுகிறான்.
ய ஏவம் வேத்தி புருஷம் ப்ரக்ரு'திம் ச குணை: ஸஹ / ஸர்வதா வர்தமாநோபி ந ஸ பூயோப்பிஜாயதே // 13.23
ய: - எந்த மனிதன்; ஏவம் - இவ்வாறு; வேத்தி - தத்துவரீதியாக அறிவானோ; புருஷம் - புருஷனையும்; ப்ரக்ரு'திம் ச - உலகியல் இயற்கையையும்; - எல்லாவிதங்களிலும்; வா்குமாந: அபி - இப்போதைய நிலை எதுவாகயிருந்தாலும்; ந - இல்லை; ஸ்ஹ - அவன்; அமிஜாயதே - பிறப்பது
- 13.23 இவ்வாறு புருஷனையும், குணங்களோடு கூடிய இயற்கையின் இயல்புகளையும் எந்த மனிதன் தத்வ ரீதியாக அறிவானோ, அவனுடைய இப்போதைய நிலை எதுவாகயிருந்தாலும், அவன் மறுபடியும் பிறப்பதில்லை.
த்யாநேநாத்மநி பச்'யந்தி கேசிதரத்மாநமாத்மநா / அந்யே ஸாங்க்யேந யோகேந கா்மயோகேந சாபரே //13.24
த்யாளேந - தியானத்தின் மூலமாக; ஆத்மநி - இதயத்தில்; பச்'யந்தி - பார்க்கின்றார்கள்; ஆத்மாநம் - அந்த பரமாத்மாவை; கேசித் - சில மனிதர்கள்; ஆத்மநா - தூய்மையடைந்த நுண்ணிய புத்தியினால்; அந்யே - மற்றும் சிலர்; ஸாங்க்யேந யோகேந - ஞானயோகத்தின் மூலமாகவும்; கா்மயோகேந ச - கா்மயோகத்தின் மூலமாகவும்; அபரே - வேறு சிலா்
- 13.24 தூய்மை படுத்தப்பட்ட மனம் மற்றும் அறிவின் துணைகொண்டு, தங்கள் ஆழ்மனத்தில் பரமாத்மாவை உணர்வார்கள்.
அந்யே த்வேவமஜாநந்த: ச் ருத்வாந்யேப்ய உபாஸதே / தேபி சாதிதரந்த்யேவ ம்ரு'த்யும் ச்'ருதிபராயணா: //13.25
அந்யே - வேறு சிலர்; து - ஆனால்; ஏவம் - இவ்வாறு; அஜாநந்த -அறியாமல்; ச் ருத்வா - கேட்டு; அந்யேப்ய - மற்றவர்களிடமிருந்து; உபாஸ்தே - உபாஸனை செய்கின்றார்கள்; தே அபி ச- அவர்களும்; அதிதரந்தி ஏவ - ஸ்ந்தேஹமின்றிக் கடக்கின்றார்கள்; ம்ரு'த்யும் -மரணப் பாதையை; ச்'ருதிபராயணா: - கேட்டறிந்த உபதேசத்தை மேலான கதியாகக் கொண்ட
13.25 வேறு சிலர், சிலர், போதிய அன்மிக புத்திசாலித்தனம் இல்லையென்றாலும் ஒப்புயர்வற்ற இறைவனை வழிபடத் தொடங்குகிறார்கள். ஒப்புயர்வற்ற இறைவனைப் பற்றிக் கேட்பதாலேயே சிலர் பிறப்பு, இறப்பு என்னும் பாதையைக் கடக்கிறார்கள்.
யாவத்ஸஞ்ஜாயதே கிஞ்சித்ஸத்த்வம் ஸ்தாவரஜங்கமம் /
கேஷத்ரக்ஷத்ரஜ்ஞுஸம்யோகாத்தத்வித்தி பரதர்ஷப / / 13.26
யாவத் கிஞ்சித் - எத்தனை எத்தனை; ஸஞ்ஜாயதே - உண்டாகின்றதோ; ஸத்த்வம் - பிராணி வர்க்கம் ; ஸ்தாவர ஜங்கமம் - அசைவன, அசையாதன ஆகிய; கேஷத்ரஜ்கு லம்யோகாத் - சரீரம், சரீரத்தையறிந்தவன் இவர்களுடைய அவையனைத்தும்; வித்தி - அறிந்து கொள்; பரதா்ஷப - பரத சிரேஷ்டா
13.26 பரத குலத்துதித்தவர்களில் தலைசிறந்தவனே, பிறக்கிற அனைத்துமே, அது அசைகிறதோ அசையவில்லையோ, அது க்ஷத்ர க்ஷேத்ரஜ்ஞ என்பவற்றின் சேர்க்கையால்தான் தோன்றின.
ஸமம் ஸா்வேஷு பூதேஷு திஷ்டந்தம் பரமேச்'வரம் விநச்'யத்ஸ்வவிநச்'யந்தம் ய: பச்'யதி ஸ பச்'யதி //13.27
ஸமம் - எங்கும் ஸமமாக; ஸஸ்ர்வேஷுடுதேஷு - சாரசரங்களை அனைத்திலும்; திஷ்டந்தம் - இருப்பவராகவும்; பரமேச்வரம் - பரமேசுவரனான பகவானை; விநச்'யத்ஸு - அழியக்கூடிய; அவிநச்'யந்தம் - அழியாதவராகவும்; ய: - எந்த மனிதன்; பச்'யதி -பார்க்கின்றானோ; ஸ: - அவனே; பச்'யதி - உண்மையில் பார்க்கின்றவன்
- 13.27 யார் ஒருவர், எல்லா உடல்களிலும் அந்த மேலான பரம்பொருளே தனி ஆத்மாவாக இருக்கிறது என்பதைப் பார்க்கிறாரோ, அந்தத் தனிப்பட்ட ஆத்மாவிற்கும், அந்த மேலான பரம்பொருளுக்கும் எப்பொழுதுமே அழிவில்லை என்று புரிந்துகொள்கிறாரோ, அவர்தான் உண்மையிலேயே பார்க்கிறார்.
ஸமம் பச்'யந்ஹி ஸர்வத்ர ஸமவஸ்திதமீச்'வரம் / ந ஹிநஸ்த்யாத்மநாத்மாநம் ததோ யாதி பராம் கதிம் // 13.28 ஸமம் - ஸமமாகவே;பச்'யதி - பார்த்துக் கொண்டு; ஹி - ஏனெனில்; ஸர்வத்ர - அனைத்திலும்; ஸ்மவஸ்திதம் - ஸ்மமாக நிலை பெற்றிருக்கும்; ஈச்'வரம் - பகவானை; ந ஹிநஸ்தி - அழித்துக் கொள்வதில்லை; ஆத்மநா - தன்னாலேயே; ஆத்மாநம் - தன்னை; தத: - அதனால்; யாதி - அடைகின்றான்; பராம் கதிம் - பரமகதியை
13.28 ஒருவர் மனத்தால் இழிவுபடுத்தப்படாமலோ அல்லது தூண்டப்படாமலோ இருக்கும்பொழுதும், மற்றும் அசையா பொருட்கள் அனைத்திலும் ஒப்புயர்வற்ற மெய்ப்பொருளை பார்க்க முடியும்பொழுதும் அவர் மனம் கடந்தநிலையை அடைகிறார்.
ப்ரக்ரு'த்யைவ ச கா்மாணி க்ரியமாணாநி ஸா்வச': / ய: பச்'யதி ததாத்மாநமகர்தாரம் ஸ பச்'யதி // 13.29
ப்ரக்ரு'த்யா ஏவ - இயல்பினாலேயே; ச - மேலும்; கா்மாணி -எல்லாக்கா்மங்களும்; க்ரியமாணாநி - செய்யப்படுவன வென்றும்; ஸர்வச்: - எல்லா விதங்களிலும்; ய: - எந்த மனிதன்; பச்'யுதி -பார்க்கிறானோ; ததா - மேலும்; ஆத்மாநம்- ஆத்மாவை; அகர்தாரம் - கர்த்தா அல்லன் என்றும்; ஸ - அவனே; பச்'யதி - உண்மையில் பார்க்கின்றவன்
- 13.29 பொருட்களினால், பஞ்சபூதங்களால் அமைந்த இந்த உடல்தான் எல்லாச் செயல்களையும் செய்கிறது, ஆத்மா எதுவுமே செய்வதில்லை என பார்க்கமுடிந்த ஒருவர்தான் உண்மையில் பார்க்கிறார்.
யதா பூதப்ரு'தக்பாவமேகஸ்தமநுபச்'யதி / தத ஏவ ச விஸ்தாரம் ப்ரஹ்ம ஸம்பத்யதே தகா // 13.30
யதா - எப்பொழுது; பூதப்ரு'தக்பாவம் - சராசரங்கள் அனைத்தினுடைய தனித்தனித் தன்மை; நிலைபெற்றிருப்பதாகவும்; அநுபச்'யதி - காண்கின்றானோ; தத: ஏவ - அந்த பரமாத்மாவிடமிருந்தே; விஸ்தாரம் ச- ஸகல சராசரங்களும் விரிவடைந்தனவாகவும்; அடைகின்றான்; ததா - அப்பொழுதே
13.30 எல்லா உயிர்களிடத்தும் ஒப்புயர்வற்ற அத்மாவைக் காண
முடிந்த ஒருவர், உயிர்களிடத்தே வேற்றுமைகாணும் தன்மையை விட்டுவிடுகிறார். அவர், இந்த முழுப் பிரபஞ்சமும் அந்த ஒரே ஸத்யத்தின் விரிவாக்கமும் வெளிப்பாடும்தான் என்பதைப் பார்க்கிறார்.
அநாதித்வாந்நிர்குணத்வாத் பரமாத்மாயமவ்யய: / ச்ரீரஸ் தோபி கௌந்தேய நகரோதி ந லிப்யதே // 13.31
- அநாதிக்வாக் நிர்குணமானபடியாலும்; பரமாத்மா - பரமாத்மா; அயம் - இந்த; அவ்யய: - அழிவற்ற; ச'ரீரஸ்த: அபி - உடலிலேயே இருந்த போதிலும் ; கௌந்தேய - குந்தி புத்திரா; ந கரோதி - ஒன்றும் செய்வதில்லை; ந லிப்யதே - எதிலும் ஒட்டுவதும் இல்லை
13.31 குந்தி புத்திரா, மனத்திற்கெட்டாத, அநாதியான, நிர்குணமான இந்த அழிவற்ற பரமாத்மா உடலிலேயே இருந்தபோதிலும் உண்மையில் ஒன்றும் செய்வதில்லை. எதிலும் ஒட்டுவதும் இல்லை.
யதா ஸர்வகதம் ஸெளக்ஷ்ம்யாதா காச'ம் நோபலிப்யகே / ஸர்வத்ராவஸ்திதோ தேஹே ததாத்மா நோபலிப்யதே // 13.32
யதா - எவ்வாறு; ஸா்வகதம் - எங்கும் நிறைந்த; ஸெளக்ஷ்ம்யாத் -நுண்ணியதாக இருப்பதால்; ஆகாச'ம் - அகாசம்; ந உபலிப்யதே -எதிலும் ஒட்டுவதில்லையோ; ஸர்வத்ர - எங்கும்; அவஸ்தித: - நிலை பெற்றிருக்கும்; தேஹே - இவ்வுடலில்; ததா - அவ்வாறே; ஆத்மா -ஆத்மா; ந உபலிப்யதே - ஒட்டுவதில்லை
13.32 எங்கும் நிறைந்திருந்தாலும் ஆகாச் ம் நுண்ணியதாக இருப்பதால் எவ்வாறு எதனோடும் கலப்பதில்லையோ அவ்வாறே அத்மா இவ்வுடலில் வசித்தாலும், இந்த உடலோடு அது கலப்பதில்லை.
யதா ப்ரகாச'யத்யேக: க்ரு'த்ஸ்நம் லோகமிமம் ரவி: / கேஷத்ரம் கேஷத்ரீ ததாக்ரு'த்ஸ்நம் ப்ரகாச'யதி பாரத // 13.33
யதா - எப்படி; ப்ரகாச'யதி - பிரகாசிக்கச் செய்கிறானோ; ஏக: -ஒருவனே; க்ரு'த்ஸ்நம் லோகம் - பிரம்மாண்டம் முழுவதையும்; இமம் - இந்த; ரவி: - சூரியன்; கேஷத்ரம் - சரீரம்; கேஷத்ரீ - ஆத்மா ஒன்றே; ததா - அப்படியே; க்ரு'த்ஸ்நம் முழுவதையும்; ப்ரகாச'யதி -பிரகாசிக்கச் செய்கின்றான்; பாரத - பரத குலத்தில் உதித்தவனே
13.33 பரத குலத்தில் உதித்தவனே, எப்படிச் சூரியன் ஒருவனே இந்தப் பிரம்மாண்டம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்கிறானோ, அப்படியே ஆத்மா ஒன்றே இந்த கேஷத்ரம் முழுவதையும் பிரகாசி க்கச் செய்கிறது.
கேஷத்ரகேஷத்ரஜ்ஞயோரேவமந்தரம் ஜ்ஞாநசக்ஷுஷா / துதப்ரக்கு' திமோக்ஷம் ச யே விதுர்யாந்தி தே பரம் // 13.34
கேஷத்ரக்க்ஷத்ரஜ்ஞயோ: - கேஷத்ரம், கிஷத்ரக்குன் இவற்றின்; ஏவம் - இவ்விதம்; அந்தரம் - வேறுபாட்டையும்; ஜ்ஞாநசக்ஷஷா - ஞானக்கண்களால்; பத்த ப்ரக்ரு'தி மோக்ஷம் ச - ப்ரகி(ருதி, ப்ரகிருதியினுடைய செயல்கள் இவற்றிலிருந்து விடுபடுவதையும்; யே - எவர்கள்; விது; - தத்துவரீதியாக அறிகின்றார்களோ; யாந்தி -அடைகின்றார்கள்; தே - அந்த மஹாத்மாக்கள்; பரம் - பரமாத்மாவை
13.34 இவ்விதம் கேஷத்ரம் மற்றும் கிஷத்ரஜ்ஞன் இவற்றின் வேறுபாட்டையும் எவர்கள் ஞானக்கண்களால் தத்வ ரீதியாக அறிகிறார்களோ, அந்த மஹாத்மாக்கள் உலகியல் ரீதியான பந்தத்திலிருந்து விடுபட்டு, பரமாத்மாவை அடைகிறார்கள். ஒம் தத்ஸத் இதி ஸ்ரீமத்பகவத்திதாஸுபநிஷத்ஸூ ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே க்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே கேஷத்ரக்கூஷத்ரஜ்ஞ விபாக யோகோ நாம த்ரயோதசோ's த்யாய: //
ஒம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்தை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய 'கேஷத்ரகேஷத்ரக்ஞவிபாக யோகம்' எனப் பெயர் படைத்த பதின்மூன்றாவது அத்தியாயம்.
ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள்
| 1. | அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம் | 13.12 |
| 2. | அநாதித்வாந்நிர்குணத்வாத் | 13.32 |
| 3. | அந்யே த்வேவமஜாநந்த: | 13.26 |
| 4. | அமாநித்வமதம் பித்வமஹிம்ஸா | 13.8 |
| 5. | அவிபக்தம் ச பூதேஷு | 13.17 |
| 6. | அஸக்திரநபிஷ்வங்க: | 13.10 |
| 7. | இச்சா த்வேஷ: ஸுகம் து:கம் | 13.7 |
| 8. | இதி கேஷத்ரம் ததா ஜ்ஞாநம் | 13.19 |
| 9. | இதம் ச'ரீரம் கௌந்தேய | 13.2 |
| 10. | இந்த்ரியார்தேஷு வைராக்ய | 13.9 |
| 11. | உபத்ரஷ்டாநுமந்தா ச பர்தா | 13.23 |
| 12. | ரு'ஷிபிர்பஹுதா கீதம் | 13.5 |
| 13. | கார்யகரணகர்த்ரு'த்வே | 13.21 |
| 14. | கேஷத்ரகேஷத்ரஜ்ஞயோரேவ | 13.35 |
| 15. | கேஷத்ரஜ்ஞும் சாபி மாம் வித்தி | 13.3 |
| 16. | ஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி | 13.13 |
| 17. | ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதி | 13.18 |
| 18. | தத்கேஷத்ரம் யச்ச யாத்ரு, க்ச | 13.4 |
| 19. | த்யாநேநாத்மநி பச்'யந்தி | 13.25 |
| 20. | புருஷ: ப்ரக்ரு 'திஸ்தோ ஹி | 13.22 |
| 21. | ப்ரக்ரு'திம் புருஷம் சைவ | 13.20 |
| 22. | ப்ரக்ரு'திம்…… கேஷத்ரம் | 13.1 |
| 23. | ப்ரக்ரு'த்யைவ ச கா்மாணி | 13.30 |
| 24. | பஹிரந்தச்'ச பூதாநாமசரம் | 13.16 |
| 25. | மயி சாநந்யயோகேந | 13.11 |
| 26. | மஹாபூதாந்யஹங்காரோ | 13.6 |
| 27. | ய ஏவம் வேத்தி புருஷம் | 13.24 |
| 28. | யதா ப்ரகாச'யத்யேக: | 13:34 |
| 29. | யதா ஸர்வகதம் ஸௌக்ஷ்ம்யாதா | 13.33 |
| 30. | யாவத்ஸஞ்ஜாயதே கிஞ்சித் | 13.27 |
| 31. | யதா பூதப்ரு'தக்பாவ | 13.31 |
| 32. | ஸமம் பச்'யந்ஹி ஸா்வத்ர | 13.29 |
| 33. | ஸமம் ஸா்வேஷு பூதேஷு | 13.28 |
| 34. | ஸர்வத: பாணிபாதம் தத்ஸர்வதோ | 13.14 |
| 35. | ஸர்வேந்த்ரியகுணாபாஸம் | 13.15 |
பகவத்திதையின் முக்கிய கதாபாத்திரங்கள்
பாண்டவர் சேனை: -
| க்ரு'ஷ்ணர் | கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி), உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர் |
| த்ருபதன் | திரௌபதியின் தந்தை, சிறந்த போர்வீரர் |
| த்ரு'ஷ்டத்யும்னன் | அரசா் துருபதனின் மகன் |
| சி' கண்டி | சிறந்த வில்வீரர், திருநங்கை, பீஷ்மரைப் பழிவாங்குவதற்காகவே தோன்றியவர். |
| விராடன் | அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டரசர் |
| யுயுதானன் | கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர் |
| காசி' ராஜன் | அண்டை நாடான காசியின் அரசர் |
| சேகிதானன் | சிறந்த போர்வீரர் |
| குந்தி பேரூன் | முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை |
| புருஜித் | குந்தி போஜனின் சகோதரர் |
| சை' ப்யா | சிபி பழங்குடியினரின் தலைவர் |
| த்ரு'ஷ்டகேது | சேதி நாட்டின் அரசா் |
| உத்தமௌஜன் | சிறந்த போர்வீரர் |
| பஞ்ச பாண்டவர்கள் | யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின் மகன்கள். நகுலன், ஸ்ஹதேவன் - மாத்ரியின் மகன்கள் |
| யுதிஷ்டிரா் | தர்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர் |
| பிமன் | கதாயுத சண்டையில் வல்லவர் |
| அர்ஜுனன் | வில் வித்தையில் ஒப்பற்றவர் |
| நகுலன் | குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் தன்மைகளை அறிவதிலும் வல்லவர் |
| ஸஹதேவன் |
கௌரவர் சேனை: -
| ஸஞ்ஜயன் | அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருகேஷத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர் |
| பிஷ்மர் | கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர் |
| த்ரோணர் | கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில்வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன். |
| விகா்ணன் | கௌரவ சகோதரர்களில் மூன்றாமவர் |
| கர்ணன் | பாண்டவர்களின் மூத்த சகோதரர், குந்திக்கு திருமணத்திற்கு முன்பே பிறந்தவர். துரியோதனின் நண்பர், கொடை வள்ளல் |
| அச்'வத்தாமன் | துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர் |
| க்' ருபா் | கௌரவர், பாண்டவர்களுக்குப் போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆச்சாரியார் |
| ச'ல்லியன் | அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர். ) |
| ஸௌமாதத்தி | பகிகர்களின் அரசா் |
| துச்' சா'தனன் | கௌரவ சகோதரர்களில் இரண்டாமவர், திரௌபதியைத் துகிலுரித்தவர் |
| துரியோதனன் | கௌரவ சகோதரா்களில் மூத்தவர், கதாயுத சண்டையில் வல்லவர். |
கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:
| அச்யுதன் | தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர் |
| அரிஸூதனன் | பகைவர்களை அழிப்பவர் |
| க்ரு'ஷ்ணன் | கருப்பு நிறமுடையவர், மன அழுக்குகளை நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர், பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர் |
| கேச'வன் | அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில் வைத்திருப்பவர் |
| கேசி' நிஷூதனன் | கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர் |
| கோவிந்தன் | எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்திருப்பவர் |
| பகவான் | ஆறுவித குணங்களை உடையவர். அவை 1. பரிபூரண ஞானம். 2. பரிபூரண வைராக்கியம். 3. பரிபூரண பலம் 4. பரிபூரண கீர்த்தி 5. பரிபூரண தேஜஸ் 6. பரிபூரண ஐஸ்வாயம் (ஸ்ரீ) |
| புருஷோத்தமன் | மேலான புருஷன் |
| மதுஸூதனன் | மது என்ற அரக்கனை அழித்தவர் |
| மாதவன் | லக்ஷ்மிக்குத் தலைவர் |
| யாதவன் | 'யது' குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர் |
| யோகேச்'வரன் | யோகத்திற்குத் தலைவர் |
| வாஸு தேவன் | வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர் |
| வார்ஷ்ணேயன் | விருஷ்ணி குலத்தில் பிறந்தவர் |
| விஷ்ணு | |
| ஜகந்நிவாஸன் | ஜகத்திற்கு இருப்பிடமாகயிருப்பவர் |
| ஜநார்தன் | ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர் |
| ஹ்ரு'ஷீகேச'ன் | இந்திரியங்களுக்குத் தலைவர் |
| அனகன் | பாபம் அற்றவர் |
அர்ஜுனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:
| அர்ஜுனன் | நல்ல, தூய்மையான தன்மை உடையவர் |
| கபித்வஜன் | கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர் |
| கிரீட்டி | கிரீடம் தரித்தவர் |
| குடாகேசான் | தூக்கத்தை வென்றவர் |
| குருநந்தனன் | 'குரு' வம்சத்தில் பிறந்தவர் |
| கௌந்தேயன் | குந்தியின் மகன் |
| தனஞ்ஜயன் | செலவழிக்கப்படாமல் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ஒன்று திரட்டுபவர். |
| பரந்தபன் | எதிரிகளை வாட்டுபவர் |
| பாண்டவன் | பாண்டுவுக்கு மகன் |
| பார்கன் | பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன் |
| பாரதன் | பரத குலத்தில் பிறந்தவர் |
| ஸவ்யஸாசின் | இடது கையால் அம்பு எய்பவர் |
அருஞ்சொற் பொருள்
| அத்வைத | இருமையற்றது, தனிமனித இருப்பு, பிரபஞ்ச இருப்பு இவை இரண்டுமே ஒன்றுதான் என்று வலியுறுத்திச் சொல்கிறகொள்கை. |
| அநாஹத | உருவாக்கப்பட முடியாத ஒலி, இதய சக்திமையம் |
| அபரிக்ரஹ | மற்றவர்களின் பொருள்களின் மேல் ஆசைகொள்ளாமை |
| அப்யாஸ | தொடர்ந்த பயிற்சி |
| அம்ரு'த | அருந்தினால் சாகாத் தன்மையைக் கொடுக்கும் தெய்விக அமிர்தம் |
| அவ்தார் | உருவமற்ற ப்ரஹ்மம் உருத்தாங்கி பூமிக்கு வருதல் |
| அவ்யக்தம் | வெளிப்படாத, வெளிப்படுத்தப்படாத |
| அச்'வத்தம் | ஆலமரம் |
| அஹிம்ஸா | துன்புறுத்தாமை |
| அஷ்டவக்ர | அஷ்டவக்ர சம்ஹிதையை இயற்றிய ஞானகுரு |
| அஷ்டாங்கயோக | பதஞ்சலி யோகஸூத்ரத்தில் குறிப்பிட்டுள்ள ஞானமடைவதற்கான எட்டு வகை வழிகள். |
| ஆகாச' | வெற்றிடம், நுட்பமான ப்ரபஞ்ச ச ச'க்தி. |
| ஆசார்ய | ஆசிரியர், 'உடன் வருபவர்' |
| ஆத்ம, ஆத்மந் | தனிமனித இருப்பு நிலை, பிரபஞ்ச இருப்பு நிலையின் ஒரு பகுதி |
| ஆத்ம ச'க்தி | வாழ்வு சக்தி. (வளப்படுத்துதல் என்னும் தத்துவத்தால் விழிப்படைந்த வாக்கு சக்தி,சிந்தனை சக்தி மற்றும் உணர்வு சக்திகளை வாழவும் வெளிப்படுத்தவும்கூடிய வல்லமை |
| ஆத்ம ஜ்ஞாநம் | தன்னை உணர்தல் |
| ஆத்ம ஷட்கம் | ஞான குருவாகிய ஆதிசங்கரரால் இயற்றப்பெற்ற, அத்வைத கருத்தை விளக்கும் ஆறுபத்திகளைக்கொண்ட செய்யுள் |
| ஆதிச்ங்கர | கேரளாவின், காலடியைச் சேர்ந்த ஞானகுரு, அத்வைத வேதாந்தத்தின் விரிவுரையாளர். |
| ஆபஸ் | நீர் |
| ஆரதி | தீபங்களுடன் கடவுளை வணங்குதல் |
| ஆச்'ரய | உண்மை நிலையில் உறுதியாய் நிலைநாட்டப் பெற்றவர். |
| ஆச், ரய தேர்ஷ | உண்மை நிலையில் உள்ள குறைபாடு |
| ஆஹார | உணவு, மற்றம் நமது ஐம்புலன்கள் மூலம் பெறும் உணவு. |
| ஆஜ்ஞா | ஒழுநங்கு முறை, கட்டளை, மூன்றாவது கண் சக்தி மையம். |
| இடா | பிங்கள, ஸுஷும்னா இவற்றுடன் பிராண சக்தி பாயும் மெய்மையான சக்தி பாதை |
| ஈச்' வரன் | பிரபஞ்சத்தின் தலைவன். |
| ஈச்'வரத்வம் | 'பொறுப்பெடுத்தல்' என்னும் தத்துவத்தால் விழிப்படைந்த தமைப்பண்புணர்வு. |
| உத்தராயண | சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் |
| உபநிஷத் | ஞானகுருவுடன் அமர்ந்திருத்தல் |
| கபிலமுனி | ஸ்ரீமத் பாகவதத்தில், விஷ்ணுவின் அவதாரமாகக்கொண்டாடப்படும் கபிலமுனி ஸாங்க்ய யோகத் தத்துவத்தின் தந்தை. இந்தப் பூமிப்பந்தின் முதல் சிந்தனையாளர், பூர்ணத்வத்தை அனுபூதியாக உணர்ந்தவர், ஸ்நாதன தர்மத்தின் மூத்த அமைப்பான மஹா நிர்வாணி பீடத்தை நிறுவியவர். |
| கா்மா | மூலமனப்பாங்குகளால் ஆட்டுவிக்கப்படும் ஆன்மீக விதியின் காரண காரிய விளைவு |
| கா்மி | தாழ்நிலை சாத்தியக்கூறுகளால் ஆட்டுவிக்கப்பட்டு அதற்கேற்ப செயல்புரிபவர் |
| கர்மேந்த்ரியங்கள் | செயல்பாட்டுக்குரிய புலன்கள் |
| கல்ப | ஸ்த்யயுகம், த்ரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம் என்னும் நான்கு யுகங்கள் சேர்ந்தது 1 கல்பம். |
| காண்டீவ | அக்னி தேவனால் அர்ஜுனனுக்குப் பரிசாக வழங்கப்பட்ட தெய்விக வில் |
| குண்டலிநி | மூலச் சக்கரமான 'மூலாதாரத்தில்' உள்ள சக்தி |
| குண | சத்வ, ரஜஸ், தமஸ் மூன்று வகையான மனித நடவடிக்கையின் பண்புகள். |
| கும்ப்மேளா | நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்கு இடங்களில் நிகழும், மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டம். கும்பமேளா நிகழும் நான்கு இடங்கள் 1. கங்கை, யமுனை, பூமிக்கடியில் உள்ள சரஸ்வதி இவை மூன்றும் சேரும் இடமாகிய அலகாபாத்தில் உள்ள ப்ரயாக். |
| 2. ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில். | |
| 3. உஜ்ஜையில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில் | |
| 4. நாசிக்கில் உள்ள கோதாவரி நதிக்கரையில் | |
| குரு | கு (இருள்) ரு (வெளிச்சம்) இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச்செல்பவர், ஆசான் |
| குருகுல் | குருகுலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே, கல்வி கற்பதற்காக குருவிடம் ஒப்படைக்கும் இடம். குரு, அவர்களுக்குக் கல்வியைக் கற்றுக்கொடுத்து, அவர்களை உயர் விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறார். |
| தர்ப்ஹ | வேத பாரம்பரியத்தில் மத சடங்குகளுக்காக உபயோகப்படுத்திய புனித புல். இந்தப் புல்லால் அமைக்கப்பட்ட இருக்கையின்மேல் மான் தாலையும் ஆடையையும் விரித்து, அதில் அமர்ந்து தியானம் செய்வது நன்று என்று கருதப்பட்டது. |
| கைவல்ய | விடுதலை, மோக்ஷம், நிர்வாணம் |
| கோச' | நமது உடலில் 5 சக்தி அடுக்குகள் உள்ளன. 1. அன்னமய அல்லது உடல் அடுக்கு 2. பிராணமய அல்லது பிராண அடுக்கு 3. மனோமய அல்லது எண்ண அடுக்கு 4. விஞ்ஞானமய அல்லது உறக்க அடுக்கு |
| 5. ஆனந்தமய அல்லது ஆனந்த அடுக்கு | |
| க்ரியா | - குறிப்பிட்ட பலனையடைய யோகவிதிகளின்படி செய்யப்படும் செயல் |
| க்ரு'ஹஸ்த | - குடுத்பத்தலைவர், திருமணமானவர், க்ருஹா என்ற சொல் வீடு என்ற பொருள் கொண்டது |
| கடாகாச,ம் | - குடத்தால் வளைபட்ட வெளி. |
| ஜ்ஞாநேந்த்ரியங்கள் - அறியும் புலன்கள் | |
| சக்ரம் | - மன-உடல் அமைப்பில் உள்ள ச'க்தி மையங்கள் |
| சக்ஷு | - கண், நம் புலன்களுக்குப் பின்னால் உள்ள அறிவாற்றல் |
| சிதாகாச'ம் | - உடலால் வளைபட்ட வெளி. |
| சித்த | - மனம், மேலும் மனஸ், புத்தி |
| ஜ்யோதிஷ | - ஜோதிடம் |
| ஜநகராஜா | - மிதிலையை ஆண்ட ஈகை குணம் உள்ள அரசர். இராமரின் பத்தினி சீதாவின் தந்தை. |
| ஜப | - தொடர்ந்து இறைநாமத்தை அமைதியாகவோ, சப்தமாகவோ உச்சரித்துக்கொண்டே இருத்தல். |
| ஜாக்ரத் | - விழிப்பு நிலை |
| ஜீவன்முக்தி | - உடலில் வாழும்பொழுதே ஞானமடைந்து, சுதந்திரமான வாழ்வை வாழ்தல். |
| ஜீவன்முக்த விஜ்ஞாநம் | -ஜீவன்முக்திக்கான நுட்பம் |
| ஜீவஸ்மாதி | - ஞானகுருவை அடக்கம் செய்த இடம், அங்கு அவர் ஆத்மா வாழ்கிறது. |
| தந்த்ரா | - நுட்பங்கள், ஆன்மீக வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும் உத்திகள் |
| தபஸ் | - தீவிர ஆன்மீக முயற்சி. |
| தமஸ் | - மந்தத் தன்மை அல்லது செயலின்மை போன்ற குணம் |
| தீர்த | - தீர்த்தம், புண்ணிய ஆறு, யாத்திரை மையம் |
| துரீய, ஸ்மாதி | - சமாதி நிலை, மனமற்ற நிலை |
| தைத்ரேய உபநிஷத் - யஜுர் வேதத்தின் முக்கிய வேதாந்த பகுதி |
| த்ரி காலம் | - முக்காலங்களான கடந்த, நிகழ், எதிர்காலம். | த்ரிகால ஜ்ஞாநி | - இந்த மூன்று காலத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பவர், ஞானமடைந்தவர், காலம், இடம் இவற்றைக் கடந்தவர் | த்ரி குண ரஹித | - ஸத்வ, இரஜஸ், தமஸ் - இம்மூன்று குணங்களையும் கடந்தவர் | த்ரிபுடி | - அறிபவர், அறியப்படும்பொருள், அறிவு - இம்மூன்றும் இணைந்தது | தர்ச, ந் | - காட்சி, தெய்விகத்தைக் காண்பதைக் குறிக்கும் | தக்ஷிணாயன | - ஜுன் 21-ம் தேதியிலிருந்து தொடங்கும் சூரியனின் தெற்கு நோக்கிய பயணம் | தீகை ஆ | - தீட்சை சமயத்தில் குரு தமது சீடருக்கு அன்பு வழங்கி தமது சக்தியை மாற்றம் செய்தல். இது மந்திர உச்சாடனம், தொடுதல், பார்வை அல்லது எண்ணம் மூலமும் செய்யப்படும் | தேர்ஷ | - குறைபாடு | த்ரு'ஷ்டி | - பார்வை, மனக்கண்ணால் பார்ப்பது | த்வைத | - தனிமனித இருப்பும், பிரபஞ்ச இருப்பும் தனித்தனியானவை என்னும் கொள்கை. | தர்ம | - பிரபஞ்ச விதி | தாரணா | - மனத்தை ஒருமுகப்படுத்துதல் (பிராணாயாமத்துடன்) | த | - விவேகம் | நசிகேத | - கட உபநிஷத்தின் கதாநாயகன். மரணக் கடவுளாகிய யமனிடமிருந்து மரணத்தைப் பற்றிய இரகசியங்களைத் தெரிந்துகொண்டவன். | நாக ஸாது | - உடைகள் அணியாத ஒருவகை துறவியர்கள் | நாடி | - நரம்பு ஸ்தூலமாக இல்லாத ஒரு சக்தி பாதை | நிதித்யாஸநா | - ஸத்யத்தை ஆழமாக வாழ்ந்து, வெளிப்படுத்துவதைக் குறிக்கும் சொல் | நிமித்த | - காரணம் | நிமித்த தேர்ஷ | - காரணத்தை அடிப்படையாகக்கொண்ட குறைபாடு | நியம | - பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தின் எட்டுவகை பாதையின் இரண்டாவது பாதை. ஆன்மீகப் பாதையில் நாம் செல்வதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாட விதிகள். | நிர்குண | உருவமற்ற சக்தி | நிர்குண ப்ரஹ்மந் | - உருவ வரையறைகுட்படுத்த முடியாத சக்தி | நிர்வாண, ஸமாதி | - விடுதலை, மோக்ஷம், ஸமாதி போன்றது | பதஞ்ஜலி | - யோகத்தின் தந்தை, யோகத்தின் ஆய்வுக் கட்டுரையாகிய புகழ்பெற்ற பதஞ்சலி யோக ஸூத்ரத்தை எழுதியவர் | பகுத்தாராய்தல் | - ஸத்யங்களை மறுப்பதற்கல்லாமல், உள்வாங்கி நம்முடைய பாகமாக்கும்பொருட்டு அவற்றைட் பகுத்தாராய்தல். இது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கொடையாக வழங்கப்பட்ட வார்த்தை. | பரமஹம்ஸ | - மிக உன்னதமான அன்னப்பறவை, இங்கு ஞானமடைந்தவரைக் குறிக்கும் | பரிக்ரம | ஒரு மலை அல்லது நீர் நிலை போன்ற புனித இடங்களைச் சுற்றிவரும் ஒரு சடங்கு | பரிவ்ராஜகம் | - ஒரு கடுந்துறவியின் அலைந்து திரியும் வாழ்க்கை (நாடோடி வாழ்க்கை) | பல - பல ச்ருதி | - பழம், இறை வழிப்பாட்டின் பலன்கள் | பிங்கள | - இட,ஸுஷும்னா, இவற்றுடன் பிராண சக்தி பாயும் மென்மையான சக்தி பாதை | பிண்டாண்ட | - தனி ஜீவ வியக்தி | புண்ய | - சிறப்பு, நன்மை செய்தல் | புருஷ | - மேலான சக்தியின் வெளிப்பாடு | பூர்ண | - முழுமையான நிலை, அத்வைத கருத்தின்படி உண்மை நிலை. | பூர்ணத்வ | - முழுமையிலிருந்து முழுமுமை வெளிப்பட்டது என்ற ஸத்யத்தைப் புரிந்துணர்ந்த 'நிறைவுணர்வு' நிலை | பூர்ணாவதார் | - முழுமையான கடவுள் அவதாரம் | ப்ரத்யாஹார | - பொதுவாக 'உணவிலிருந்து விடுபட்டு இருத்தல்' என்று பொருள். இங்கு, அனைத்துப் புலன்களிலிருந்தும் விடுபட்டு இருத்தல் என்று பொருள். | ப்ரவ்ரு'த்தி | - வெளி உலகை நோக்கிய வாழ்க்கைமுறை. இது குறைவுணர்வுகளிலிருந்து மேலும் மேலும் அதிக குறைவுணர்வுகளுக்கு இட்டுச்செல்லும் பாதை. | ப்ராண | - உயிர் சக்தி, மூச்சுக்காற்றையும் குறிக்கும் | ப்ராணயாம | - மூச்சை நெறிப்படுத்துவதன் மூலம் வாழ்வுசக்தியை நீட்டித்துக்கொள்ள உதவுவது. அஷ்டாங்க யோகத்தின் நான்காவது பாதை | ப்ராரப்த | - இவ்வுடலை எடுக்கக் காரணமான கா்மம் | ப்ரு'த்வீ | - பூமி சக்தி | ப்ரேம ச'க்தி | - உணர்வு சக்தி | பகவாந் | - கடவுள், ஞானமடைந்த குருமார்களுக்கு உபயோகப்படுத்தும் அடைமொழி | பாகவதம் | - வேத வியாஸரால் தொகுக்கப்பட்ட பகவான் கிருஷ்ணரின் பக்தி கதைகள் | பாவந | – கற்பனை | | - விதை; பீஜ மந்த்ர- கடவுளை வழிபடுவதற்காக பயன்படுத்தும் ஓர் அசைகொண்ட வார்த்தை. | புத்தி | - அறிவாற்றல், மனம், மனஸ், சித்தா - என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. | ப்ரஹ்மந் | - தெய்விகத்தின் முடிவான அத்யும், பிரபஞ்சப் பேராற்றல் | ப்ரஹ்ம | - ஹிந்து மதத்தில் உருவாக்கும் கடவுளாகிய ப்ரஹ்மன் | ப்ரஹ்மசா்ய | - கற்பனைகள் இல்லாமல், நிகழ்காலத்தில் வாழ்பவர் | ப்ரஹ்மசாரீ | - இயல்பு நிலையான ஸத்யத்தில் வாழ்பவர் | ப்ரஹ்ம வித்யா | - பிரபஞ்சப் பேராற்றலைப் பற்றிய அறிவு | ப்ரஹ்மாண்டம் | - பிரபஞ்ச பேரண்டம் | ப்ராஹ்மணா | - உயர் ஆன்மிக அறிவையடைந்தவர், அறிவைப் பயில்வதிலும் பயிற்றுவிப்பதிலும் ஈடுபடுபவர் | மங்கல | - நன்னிமித்தமான | மந்த்ர | - ஒரு சப்தம், ஒரு ஸூத்ரம், ஒரு வார்த்தை அல்லது சில வார்த்தைகள். அவைகளின் சப்தங்கள் இயல்பிலேயே சக்தி பண்புகள் கொண்டது. மந்த்ரங்கள் ஓதி கடவுளை வழிபடுதல். மந்த்ர, தந்த்ர, யந்த்ர இம்மூன்றும் ஆன்மீக உயர்வுக்கான அணுகு முறை | மநந | - சிந்தித்தல், பகுத்தாராய்தல் | மநஸ் | - மனம், புத்தி, சித்தம் | மநோ ச'க்தி | - சிந்தனை சக்தி | மஹரிஷி | - மிகப்பெரிய ஞானி | மஹாவாக்ய | - மிகப்பெரிய வேத வாக்கியம் | மஹாகாச' | - அண்டவெளி | மாணிக்கவாசகர் | - நாயன்மார்களில் முக்கியமானவர், 'திருவாசகம்' இயற்றிய தமிழ்சைவக் கவிஞர். | மாயா | - அது எதுவாகவும் இல்லாதது; உண்மையற்ற, நிலையற்ற மாயத்தோற்றம், அத்வைதத்தின்படி வாழ்வே மாயம். | மீமாம்ஸா | - பழங்கால Hindu தத்துவத்தின் ஒழுங்கு முறை | முனி | - தன்னையுணர்ந்த, அக விழிப்படைந்த ஜீவன். | மூலவாஸநா | - மூலமனப்பாங்கு | மூலவிசாரதாரா | - மூலமனப்பாங்கு | மூலாதார் | - ஆதாரம்-முதல் சக்தி மையம், மூல-மூலமான | மோக்ஷ | - நிர்வாணம், ஸமாதி, விடுதலை, முக்தி, துரியம் இவையாவும் ஒன்றே | யம | - நீதி மற்றும் மரணத்தின் கடவுள் | யம | - ஒழுங்கு முறை மற்றும் மரணம். பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிட்ட எட்டு வகைப் பாதைகளில் ஒன்று. | யந்த்ர | - கருவி, ஆழ்ந்த உட்பொருள் உள்ள மற்றும் ஆற்றல்வாய்ந்த வரைபடம். உதாரணமாக தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டு, தெய்விக சாந்நித்தியத்தில் அல்லது ஞான குருவின் சாந்நித்தியத்தில் சடங்குகள் மூலம் தெய்வத் தன்மை ஊட்டப்பட்ட பூரீ சக்ரம் | யோக | இணைத்தல், தனிமனித இருப்பையும் ப்ரபஞ்ச இருப்பையும் இணைப்பதற்கான வழிமுறை. | யோகப்ரஷ்ட | - யோகப் பாதையிலிருந்து வழுவியவர் | யோகீ | - யோகப் பாதையைப் பயிற்சிசெய்பவர். | யிக | - Hindu சமய நூல்களில் விளக்கப்பட்டுள்ள காலங்களின் அளவு. நான்கு யுகங்கள் உள்ளன. 1. ஸத்ய யுகம் (நித்ய யுகம்) 2. த்ரேதா யுகம் 3. த்வாபர யுகம் 4. கலியுகம் | ரக்த | - இரத்தம் | ரஜ்ஸ் | - மனிதனின் மூன்று வகையான குணங்களில் இரண்டாவது வகை குணமாகிய தீவிர உணர்ச்சியின் செயல்பாடு. | ரமண மஹரிஷி | - திருவண்ணாமலையைச் சேர்ந்த ஞானகுரு. அருணாச்சல மலையை புகழ்ந்து பாடும் 'அக்ஷரமணமாலை'யை நமக்குத் தந்தவர். | இராமகிருஷ்ண பரமஹம்ஸ - Bharatத்தில், மேற்கு வங்கத்தில் உள்ள தக்ஷிணேச்வரத்தில் வாழ்ந்த ஞானகுரு. | ராமாயண | - Bharatத்தின் மிகச்சிறந்த இதிஹாஸம், வால்மீகி இதனை இயற்றினார். | ராவண | இலங்கையின் வல்லமை மிக்க பேரரசன், - ராமாயணத்தில் இளவரசி சீதாவை கவா்ந்து சென்ற பாதகன். | ராக | - பற்று | ரிஷி | - வேத சத்தியங்களை தங்கள் உள்ளுணர்வில் அனுபவமாக உணர்ந்தவர்கள். | லீலா | - தெய்வத்தின் செயல்கள் | லீலா த்யானம் | - தெய்வத்தின் அல்லது குருவின் செயல்களின்மீது தியானம்செய்தல். | வா்ண | - வண்ணம் மற்றும் Hindu பாரம்பரிய அமைப்பில் உள்ள ஜாதிக் குழுவையும் குறிக்கும். முதன்முதலில் இது திறமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பிற்காலத்தில், பிறப்பின் அடிப்படையிலான தனிச்சலுகையாக மாற்றப்பட்டு, களங்கப்படுத்தப்பட்டது. | வாக் ச'க்தி | - வார்த்தைகளின் சக்தி,வாக்கு சித்தி | வாநப்ரஸ்த | - ஒருவருடைய வாழ்வின் மூன்றாவது நிலை. முதல் நிலை மாணவப்பருவம், இரண்டாம் நிலை - குடும்பத் தலைவர் மூன்றாவது நிலை- குடும்பத் தலைவர்களான ஆணும் பெண்ணும் தங்களது உலகாயத வாழ்வை விட்டுவிட்டு ஆன்மீக இலக்ஷியத்தில் கவனம் செலுத்துதல். | வாஸ்ந | - நினைவுகள், ஆசைகள் இவற்றின் நுட்பமான சாரம். ஸம்ஸ்காரத்தினால் ஏற்படுவது. | வித்யா | - அறிவு, கல்வி | வால்மீகி | - புகழ் பெற்ற இதிஹாஸமாகிய இராமயணத்தை எழுதியவர் | வி தீ | - சட்டம், இயற்கையின் சட்டமாகிய ஊழ்வினை | வி பூதி | - Hindus தங்களின் நெற்றியில் அணியும் புனித சாம்பல். இது நம் வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது. பெருமை அல்லது மஹிமை என்ற மற்றொரு பொருளும் உண்டு | விவேகாநந்த | - Bharatத்தில் உள்ள மேற்குவங்காளத்தைச் சேர்ந்த ஞானத்துறவி. அவர் இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் முக்கிய சீடர். | | விராட்ரூப, விச் வரூப - எல்லாவற்றையும் உள்ளடக்கிய உருவம் | | விசி'ஷ்டாத்வைதம் - தனிமனித இருப்பு தனக்கே உரிய தனித்தன்மையுடன் பிரபஞ்ச இருப்பின் பகுதியாக விளங்குகிறது. | விஷ்ணு | - மும்மூர்த்திகளில் பாதுகாப்பவர். அவருடைய அவதாரங்களான கிருஷ்ணர், ராமர் போன்ற பத்து அவதாரங்களும் குழுப்பெற்ற நிலை என்றும், பத்து அவதாரங்களையும் உள்ளடக்கிய நிலை என்றும் பொருள் படும். | விஷாத | - மனச் சோர்வு, தடுமாற்றம் | வைராக்ய | - விருப்பு வெறுப்புக்களைக் கடந்தநிலை | வைச்'ய | - வணிகர்களின் சாதி அல்லது வா்ணம் | வேத | - ச்'ருதி - உபநிஷத் | | - அறிவு, பழங்கால Hindu சமய நூல்கள். ஞானமடைந்த ரிஷிகள் அவர்களது இருப்பு நிலையிலேயே அவற்றை பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. உபநிஷத்துடன் இதனை ச் ருதி என்பார்கள். | வேத வ்யாஸ | - வேதங்களைத் தொகுத்தவர். புராணங்கள், மஹாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், ப்ரஹ்ம ஸூத்ரம் போன்ற நூல்களை இயற்றியவர். பாண்டவர்களின் பாட்டனார். ஞானிகளுக்கெல்லாம் தலைவர். | வேதாந்த | - வேதங்களின் இறுதிப்பகுதி. வேதங்களின் சாரமான இப்பகுதி 'தன்னை உணர்த'லுக்கான தத்துவங்களின் தொகுதி. | வ்யக்தம் | - வெளிப்பட்ட, பார்க்கமுடிந்த | ஸ்க பாவம் | - இறைவனை அல்லது குருவை நண்பனாகப் பாவிப்பது | ஸ் குண | - உருவத்துடன்கூடிய | ஸ்குண ப்ரஹ்ம | - உருவமற்ற ஒன்று உருவத்துடன் தோன்றுவது | ஸங்கல்ப | - (முடிவு | ஸஞ்சித கா்மம் | - நம்முடைய மொத்த கா்ம வங்கி | ஸதோரி | - உயர் ஆன்மிக விழிப்புணர்வுநிலை | ஸத்ய | - ஆன்மீக ஒழுங்கு முறை | ஸத்வ | - ஆன்மீக அமைதி | ஸத்ஸங் | - ஸத்யங்களைத் தெளிவுபடுத்தும் ஆன்மிகக் கூட்டம் | ஸநாதன தர்மம் | - என்றென்றும் நிலைத்திருக்கும் தா்மப் பாதை, ஜீவன் உச்சநிலை வளர்ச்சியடைவதற்கான ஸத்யங்களை உள்ளடக்கியது. நாளடைவில் அதற்கு அந்நியர்களால் 'இந்துமதம்' என பெயா் வழங்கப்பெற்றது. | ஸந்ந்யாஸலீ | - துறவி | ஸம்ச,ய | – சந்தேகம் | ஸம்யம | - முழுமையான கவன ஒருமைப்பாடு | ஸ்ம்ஸ்கார | - கா்மச் சக்கரத்தில் சிக்கவைக்கும் எண்ணப்பதிவு | ஸம்ஸார ஸாகர | - ஜனன-மரணக் கடல் | ஸமாதி | - மனம் கடந்த நிலை, ஞான நிலை | ஸஹஸ்ரார | - ஆயிரம் இதழ்கொண்ட தாமரை, உச்சந்தலையிலுள்ள சக்ரம் | ஸஹஸ்ர நாமா | - கடவுளின் 1000 நாமங்கள் | ஸாங்க்ய | - ஆறு Hindu தத்துவ முறைகளில் ஒன்று | ஸாதநா | - பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி | ஸாது | - நல்ல மனிதர், கடுந்துறவி, ஸ்ந்யாஸி. | ஸித்தி | - ஆண்மீக பயிற்சியினால் அடையக்கூடிய வியக்கத்தக்க ஆற்றல். | ஸிம்ஹ | – சிங்கம் | ஸிம்ஹ ஸ்வப்நா | - பயங்கரக் கனவு | ஸுஷும்நா | - 'இருப்புத் தன்மை' நிலை கொண்டுள்ள இடம். மண்ணீரலின் கண் அமைந்துள்ள சக்தி மையம். | ஸூத்ர | - ஆன்மிக நுட்பங்களை மிக நேர்த்தியாக விளக்கும் சிறு ஸ்லோகங்கள். இதற்கு 'நூல் கயிறு' என்ற பொருளும் உண்டு. | ஸ்தோத்ர | - பக்திக் கவிதைகள், ஸ்லோகங்கள் | ஸ்ம்ரு'தி | - 'எது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டதோ அது' என்று பொருள். Hindusக்களின் புராணங்கள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள், ஒழுங்கு முறைகளைச் சொல்லும் மனு ஸ்ம்ரு'தி போன்ற நூல்களைக் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது. | ஸ்மரண | - நினைவுப்படுத்திக்கொள்ளல், இடைவிடாது தெய்விகத்தை நினைவுபடுத்திக் கொள்வது. | ஸ்ரு'ஷ்டி | - உருவாக்குதல் | ஸ்வதந்தர | - சுதந்திரமான | ஸ்வபூர்ணத்வ | - சுய-நிறைவுபெறுதல் | ஸ்வாதிஷ்டாந | - மூலாதாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலே இருக்கும் சக்தி மையம் | ச்'ரவண | - சிரத்தையுடன் கேட்டல் | ச்'ருதி | - 'கேட்டது எதுவோ அது' என்று பொருள். பழங்கால சமய நூல்களான வேதங்களும் உபநிடதங்களும், பகவத் கீதையும் ஒரேயொருமுறை கேட்கப்பட்டே மனத்தில் பதிவுசெய்யப்பட்டவை. | ச'க்தி | - சக்தி, அறிவு சக்தி | சாஸ்த்ர | - புனித நூல்கள் | சி'ஷ்ய | - சீடன். | கு, த்ர | - உடலால் உழைக்கும் தொழிலாளிகளின் ஜாதி அல்லது வா்ணம். | சூ, ந்ய | - பூஜ்யத்தைக் குறிக்கும். ஆனால் புத்தர் இந்த சொல்லை உண்மை நிலையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார். | ஹடயோக | - யோகாசனத்தின் ஒரு பகுதி, | ஹிரண்ய கா்ப | - தங்கம் அல்லது பூர்ணத்வத்தைத் தாங்கும் 'தங்க கா்ப்பம்'. உபநிடதங்கள் இதனை 'படைப்பின் மூலம்' என்று பகர்கின்றன. | ஹோம | - அக்னி கடவுளுக்குச் செய்யப்படும் சடங்கு. ஆகாச சக்தியை உருவகமாக வாயு (காற்று), அக்னி (தீ), ஆபஸ் (நீர்), ப்ருத்வீ (பூமி) இவற்றின் மூலம் மனிதருக்கு மாற்றுவது. | க்ஷத்ரிய | - படைவீரர்களின் ஜாதி அல்லது வா்ணம் | க்ஷண | - க்ஷண நேரம், இரண்டு எண்ணங்களுக்கு இடையே உள்ள நேரம்